Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17211 articles
Browse latest View live

கரு, ஆடகம்- கடிதங்கள்

$
0
0

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

அன்புள்ள ஜெ

69 கதைகளில் இப்போதுதான் கரு வரை வந்திருக்கிறேன். கருவை படித்து முடிக்கவே இத்தனை நாட்கள் ஆகிவிட்டன.அந்தக்கதை சுழற்றி அடிக்கிறது. அதிலுள்ள டீடெயில்கள் வழியாகச் சென்றேன். ஷம்பாலா என்பது வெள்ளைக்காரர்கள் திபெத் மேல் உருவாக்கிய கனவு. திபெத்தின் யதார்த்தம் வேறாக இருக்கலாம். இந்தக்கனவை ஒரு காலகட்டமே சேர்ந்து உருவாக்கியது என்று சொல்லலாம். இந்தக்கதை உண்மையான வரலாற்றை கற்பனையுடன் கலந்து கலந்து நெசவுசெய்து கொண்டே போகிறது

நம் கனவில் ஒரு ஒளிமிக்க உலகம் இருக்கிறது. அது சொர்க்கம். அல்லது மண்ணிலே எங்கோ இருக்கிறது. அதை நாம் ஒரு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் வளர்த்துக்கொள்கிறோம்.பிளேட்டோ கனவுகண்ட இத்தாக்காவும் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரு அற்புதமான கனவு. அது எந்தெந்த நோய்களுக்கு மருந்தாகிறது? சாவுக்கு அது மருந்து. நம்பிக்கையிழப்புக்கும் சோர்வுக்கும் மருந்து. எல்லாவற்றையும் விட அது வாழ்க்கையின் அர்த்தமின்மையை நாம் உணரும்போது அதற்கான மருந்து.

இந்தக்கதையில் ஒவ்வொருவருக்கும் ஷம்பாலா ஒவ்வொருவகையிலே நிறைவையோ விடுதலையையோ அளிக்கிறது. அது எப்படி என்று பார்த்தால் கதையை அழகாக தொகுத்துக்கொள்ள முடிகிறது

கே.ரவிக்குமார்

***

ஜெ,

கரு குறுநாவல் வாசித்தேன்,  மிக பிடித்தது,  இதில் வரும் ஆன்னி, சூசன்னா பாத்திரங்கள் நிஜ ஆளுமைகள் என்பது இன்னும் சுவாரசியத்தை அளித்தது. கதையை இரண்டாம் முறை வாசிக்க ஆடமின் தந்தையின் பெயரும் சார்லஸ் என்பது பார்த்த போது ஆச்சிரியமாக இருந்தது. அந்த வெள்ளை இளைஞன் பாத்திரம் யூகிக்க முடியாததாகவும் ஸ்வாரஸ்யமானதாகவும் இருந்தது.

மஞ்சுஸ்ரீ எனும் இயல்பை ஒட்டி அந்த குழந்தையின் உடலில் ஒளி இருந்ததை, பின் காணாமாலானதை வைத்து அக்குழந்தை ஷம்பாலாவில் சேர்ந்து விட்டான் என்று நினைத்தேன்,  ஆனால் எப்படி யூகித்தாலும் விளங்க முடியாதவனாக அவன் இருக்கிறான்.  போதாக்குறைக்கு கதையில் முடிவு இடத்தில் அவனுள் இருக்கும் அன்னையின் ஏக்கம் அவனை மறுபிறப்பு சுழலுக்குள் தள்ளி விட்டிருக்கும், அவன் அங்கிருந்து சென்றிருப்பான் என்று வேறு முக்தானந்தா சொல்வது மேலும் குழப்பி சுவாரஸ்யம் ஆக்குகிறது.

உண்மையில் அந்த இளைஞன் ஏசு என்று கூட நினைத்தேன்,  ஆனால் இது தவறான யூகம்தான்.  அவன் சுசானாவின் மைந்தன்தான்,  ஆனால் போ- சு ஆறு கரையில் இருக்கிறான்.  ஆனால் எல்லா சார்லசும் ஒரே இளைஞனா என்று கூட குழப்பம் எனக்கு உண்டு. ஏனெனில் சூசன்னா கூட சாகும் வரை வந்து பார்த்து கொண்டிருக்கும் சார்லஸ் வேறு என்று நினைத்தேன், அதாவது ஆன்னியின் முன்பு தோன்றிய இளைஞன் வேறு என்று,  அவன் அவளது பிறக்காத மகன் போல.

ஆனால் ஹெலனாவிற்கு அப்படியான பின்னனி எதுவும் இல்லையே,  அவர்க்கு தோன்றிய இளைஞன் யார்,  ஒருவேளை ஷம்பாலாவில் குடிகொண்ட சார்லஸ் ஆக இருக்கலாம், மூவர் முன்பு தோன்றிய இளைஞன் ஒருவன்தான், அது சார்லஸ்தான், அவனுள் இருக்கும் அன்னையின் ஏக்கம்தான் பெண்களுக்கு காட்சிதருபவனாக அவனை ஆக்குகிறது,  ஆனால் அங்கு ஆடம்க்கு அவனது தந்தை காட்சி தருகிறாரே/இதை மேலும் யோசித்தால் குழம்பும் என்பதால் இதோடு விட்டு விடுகிறேன், இன்னொரு முறை வாசித்து பார்த்தால் ஒருவேளை பிடிகிடைக்கலாம் :)

கரு என்பது எல்லாமே நம் ஆழத்திற்குள் உள்ளது என்பதை சொல்ல வருகிறதோ என்று தோன்றவைத்தது,  கதையின் துவக்கத்தில் முக்தானந்தா நோய்,  மெய்மை, மறுபிறப்பு எல்லாம் நுண்வடிவமாக விதையாக  நம்முள் இருக்கிறது என்று சொல்லும் வரிகள் இந்த கதையை புரிந்து கொள்ள உதவும் வரிகளோ என்று எண்ணினேன்

ஷம்பாலா என்பதை இந்த கதைக்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை,  இதை பற்றி கதையில் அறிய அறிய அதை பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உருவாகிறது,  உண்மையில் இந்த ஷம்பாலா வழியாக கதாசிரியர் இந்து மதம் சொல்லும் முக்தியை அதை அடையும் பாதையை அதில் செல்ல முடியாதபடிக்கு மனிதருக்குள் இருக்கும் செயலுக்கான விளைவுகள்  எனும் பிறப்பு உருவாக்க சங்கலியை பற்றி பேசுகிறது என்று எண்ணினேன்.

வந்து வழிசொல்லும் இளைஞன் பத்மசம்பவரோ என்று கூட என்ன தோன்றுகிறது.  உண்மையில் இந்த கதை சொல்லாமல் சொல்லும் விஷயங்கள்தான் அநேகம்.  அதை ஒரு பிரமாதமான கதைசூழலில் வைத்து சொல்கிறது. முன்னும் பின்னுமாக.  பெட்ரோஸ், சூசனா இருவரும் பயணம் செய்யும் பனி மலை பாதைகள் வரும் பகுதிகள் எல்லாம் மிக ஸ்வாரஸ்யமும் அழகும் கொண்டவை.  அந்த கொள்ளையன் குழந்தையை எடுத்து பார்க்கும் பகுதியும் பிரமாதமான இடம்.

உண்மையில் இந்த என் கடிதத்தில் எனக்கு  நிறைவு இல்லை, கதையின் ஆழத்தை இன்னும் நான் புரிந்து கொள்ளவில்லை,  சிலநாள் கழித்து வாசித்து பார்க்க வேண்டும்.

ராதாகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

இந்த கொரோனா காலகட்டத்தில் நாங்கள் கிராமத்துக்கு வந்துவிட்டோம். இங்கே இன்னொரு வாழ்க்கையை வாழ்கிறோம். மும்பைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இங்கே ஒரு முடிவு எடுத்தோம். உள்ளூர் சாப்பாடுகளை மட்டுமே சமைத்துச் சாப்பிடுவது என்று. என்னுடைய ஞாபகத்திலே இருக்கும் பழைய சாப்பாடு வகைகளை சமைக்கவைத்துச் சாப்பிட்டேன். ஆனால் என்பிள்ளைகள் அந்தச் சுவைகளிலிருந்து மிகவும் அன்னியமாக இருந்தார்கள். நான் சொன்ன எந்த சுவையையுமே அவர்களால் சுவைக்க முடியவில்லை.

எங்களூரில் சுருளப்பம் என்ற அப்பம் உண்டு. பனையோலைக்குருத்திலே வைத்து அவிப்பது. அதை தொட்டோ பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது ஒன்று தெரிந்தது. நாம் பழையகால ருசிகள் என்பதெல்லாம் லிமிட்டர் ஆன பொருட்களால் செய்யப்படும் ருசிகள். இவர்கள் இன்றைக்குச் சாப்பிடுவது அபண்டன்ஸ் உருவாக்கும் ருசி.

அப்போதுதான் உங்கள் கதையை புதிய கோணத்தில் புரிந்துகொண்டேன். அந்த விரிந்து ஏன் அப்படி கொண்டாடப்படுகிறது, ஏன் அந்தச் சமையல்காரர்கள் அப்படி புகழப்படுகிறார்கள்?: ஏனென்றால் அன்றைக்கு நல்ல உணவு என்பதே ஒரு வகையில் தேடிச்சென்று சாப்பிடவேண்டிய ஒரு அரிய அனுபவம் என்பதுதான். சூழ்திரு ஒரு அருமையான கதை

என். காளிமுத்து

***

அன்புள்ள ஜெ

இரண்டு கதைகள் என் மனதில் ஆழமான பதிவை உருவாக்கின. ஆடகம், மாயப்பொன். இரண்டுக்கும் தலைப்பை மாற்றிக்கூட வைத்துவிடலாம். பொன் என்பது ஒரு உருவகம்தான். தெய்வீகமானதும் அழகானதுமான ஒன்று. செல்வம் என்று அல்ல. பூ எப்படியோ அப்படி. அப்படி டிவைன் ஆன ஒன்றுதான் ராஜநாகமும் வேங்கையும். இரண்டும் இரண்டு வகையிலே வந்து அருள்புரிகின்றன. அந்த இரண்டு கதைகளிலும் உள்ல அழகுதான் மெய்மறக்கச் செய்கிறது. அர்த்தமெல்லாம் அப்புறம்தான் அவற்றை வர்ணித்திருக்கும் அழகு. அவற்றை கன்ணில் பார்ப்பதுபோல. அவை மனசிலே வளரும் அழகு. அந்த இரண்டு கதைகளில் இருந்து மீளவே முடியவில்லை

ராமச்சந்திரன் ஜி

***

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

 


வெண்முரசு என்னும் ராட்சசப் பிரதி- திரு.கார்த்திக்

$
0
0

நவீன தமிழ் வாசகனுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் வெண்முரசு. இருபத்தாறு நூல்கள் அவையெல்லாம் சேர்ந்து இருபத்தைந்தாயிரம் பக்கங்கள் என எண்ணிக்கை அளவிலான ஒரு சவால். தமிழ் இலக்கியச்சூழல் வெண்முரசை இன்னமும் நவீன இலக்கியமாக அணுகவில்லை. அதன் தாக்கத்தால் இது நாள் வரை வெண்முரசை திறப்பதில் எனக்கு ஒவ்வாமை இருந்தது உண்மை.

வெண்முரசு என்னும் ராட்சசப் பிரதி- திரு கார்த்திக்

 

வெண்முரசு விவாதங்கள் தளம்

நித்யமானவன் [சிறுகதை] –செந்தில் ஜெகன்னாதன்

$
0
0

புத்தகங்களையும் துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப்பெட்டிகளிலாக வைத்துக் கட்டிக்கொண்டேன்.வெவ்வேறு தருணங்களில் சேர்த்துவைத்திருந்த பலமொழிப்படங்களின் சி.டி, டிவிடி கேஸட்டுகளை ஒரு பையில் போட்டுக்கொண்டேன். இனி அவற்றை எடுத்துப் போவதற்கில்லை. வேறு எவருக்காவது பயன்படட்டும் என்று அறையிலேயே வைத்துவிட்டேன்

நித்யமானவன் செந்தில் ஜெகன்னாதன்

பின்தொடரும் நினைவுகளின் குரல்

$
0
0

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

பின்தொடரும் நிழலின் குரல் 1998ல் நான் பத்மநாபபுரத்தில் தங்கியிருந்த நாட்களில் எழுதப்பட்டது. நெடுநாள் திட்டம் ஒன்றுமில்லை. என் அம்மாவின் பழைய சேமிப்புகளில் இருந்த ஒரு நூல் ‘பனைபாடுமோ’ என்ற சிறுகதைத் தொகுதி. அந்நூலை சுந்தர ராமசாமியின் நூலகத்தில் கண்டடைந்தேன். அங்கிருந்து நினைவுகள் கே.கே.எம். கதாபாத்திரத்தில் மூலவடிவமான ஆளுமையைத் தொட்டு விரிந்தன. சட்டென்று எழுத ஆரம்பித்துவிட்டேன்

தமிழினி வசந்தகுமார் பத்மநாபபுரம் வந்து என்னுடன் தங்கியிருந்து அந்நாவலை மெய்ப்பு பார்த்தார். அது மகிழ்ச்சியால் நான் நிறைந்திருந்த காலகட்டம். விஷ்ணுபுரம் நாவல் வெளியாகி எதிர்பார்த்ததை விட பலமடங்கு வரவேற்பு பெற்றுக்கொண்டிருந்தது. ஒர் எழுத்தாளராக நான் தமிழில் முதன்மையான இடம்பெற அது வழிவகுத்தது.

என் பழைய சேமிப்பில் 1998ல் பின்தொடரும் நிழலின் குரல் முதல்பதிப்பை தமிழினி வெளியிட்டபோது புத்தகக் கண்காட்சியில் அளிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்  சிக்கியது. அதிலிருந்த கோட்டுப்படம் யூமாவாசுகி வரைந்தது என நினைக்கிறேன். அப்போது அவர் தமிழினி வசந்தகுமாருக்கு மிக அணுக்கமானவராக இருந்தார்

எண்ணியதுபோல பின்தொடரும் நிழலின் குரல் தமிழக மார்க்ஸிய வட்டாரங்களில் வெளிப்படையான எதிர்ப்பையும் மறைமுகமான ஆதரவையும் பெற்றது. முதன்மையாக ஆதரவாக இருந்தவர் தொ.மு.சி.ரகுநாதன். அவர் இந்நாவலின் கருவை ஒட்டி, ஆனால் இன்னும் கடுமையாக, தாமரையிலேயே சோவியத் ருஷ்யா மற்றும் ஸ்டாலினிசம் பற்றி எழுதினார்

இன்று இந்நாவல் பல பதிப்புகளை கடந்துவிட்டது. 12 ஆண்டுகளில் அதன் மொழியையே நான் கடந்துவந்துவிட்டேன். அந்நாவல் ஓர் அரிய நினைவாக என்னில் எஞ்சுகிறது.

இன்று இதைப்படிக்கும் பல இளம் வாசகர்கள் ஸ்டாலினைப் மட்டுமல்ல லெனினைப் பற்றிக்கூட  விக்கிப்பீடியாவில்தான் வாசித்து அறிந்தேன் என்று எனக்கு எழுதுகிறார்கள். மொத்த ரஷ்ய வரலாறே விக்கிப்பீடியாவின் பதிவாகச் சுருங்கிவிட்டது. அன்று ஆக்ரோஷமாக விவாதிக்கப்பட்ட செய்திகளுக்கு இன்று எளிய தகவல்மதிப்பு மட்டுமே.

ஒட்டுமொத்தமாக கம்யூனிசம் என்னும் இலட்சியவாதமே மிகச்சில பழைய ஆட்களின் கடந்தகால நினைவும் சபலமும் என ஆகிவிட்டிருக்கிறது. அதைப்பேசுபவர்கள்கூட அதற்கு புதிய விளக்கங்கள் அளித்து வேறுவகை சாதிய- இனவாத அரசியல்களுடன் இணைத்துப் பேசவேண்டியிருக்கிறது

ஆனால் இன்று நாவல் வேறொரு வடிவை அடைந்துள்ளது. கருத்தியல், இலட்சியவாதம், அதிகாரம் ஆகியவற்றுக்கிடையேயான ஊடாட்டத்தைப் பேசும் நாவலாக இதை வாசிக்கிறார்கள். இலட்சியவாதத்திற்கும் தனிமனிதனின் குடும்பவாழ்க்கைக்கும் இடையேயான முரண்பாடாக விளக்குகிறார்கள். இலட்சியவாதங்களின் எல்லைகளைப்பற்றி பேசுவதாக புரிந்துகொள்கிறார்கள். இன்று வரும் கடிதங்களின் வாசிப்புக்கோணம் வியப்படையச் செய்கிறது

பேரரசுகள்கூட தற்காலிகமானவை, இலக்கிய ஆக்கங்கள் காலம்கடந்தவை என்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம்

பின் தொடரும் நிழலின் குரல்

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் நமது அரசியல் சிந்தனைகளை நிர்ணயித்துவந்த ஒரு பெரும் கனவின் சிதைவாகும். அது எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்குமுன் தர்மசங்கடம் நிரம்பிய உதாசீனத்தையே நமது சூழல் இதுவரை முன்வைத்து வந்துள்ளது.

ஒவ்வொரு பெருங்கனவும் கோடிக்கணக்கில் பலிகொள்கிறது, தியாகங்களை நிகழ்த்திக்கொள்கிறது. ஒவ்வொரு இழப்பும் அக்கனவு வாக்களிக்கும் வெற்றிகளை வைத்து நியாயப்படுத்தப்படுகிறது. அக்கனவு மீதமின்றிச் சரிந்து அழிகையில் அதுகுறித்துப் பேசப்பட்ட எல்லாச் சொற்களும் வற்றி உலர்ந்து மறைகின்றன. மிஞ்சுபவை அர்த்தமிழந்துபோன பலிகளும் தியாகங்களும் மட்டுமே. அவற்றுக்கு யார் பதில் சொல்வது? அக்கணக்கைத் தீர்ப்பது யார்?

பல்லாயிரம் வருட மானுடவரலாற்றின் நீட்சியில் எதனாலும் வகுபடாமல் இந்த எண்ணிக்கை பெருகியபடியே செல்கிறது. இதன் பாபச்சுமை ஒவ்வொரு மானுடனின் தோளிலும் கனத்தபடியே உள்ளது. அதை மறைத்துக்கொள்ளத்தான் புதிய பெருங்கனவுகளை நாம் உருவாக்கிக்கொள்கிறோமா?

கம்யூனிசப் பரிசோதனை கொண்ட உயிர்ப்பலி தோராயமாக ஐந்துகோடி. அப்பலிகளின் குற்றவுணர்ச்சி ஒரு கம்யூனிஸ்டின் அகமனதை அதிரவைத்தபடி கடந்துசெல்வதைச் சித்தரிக்கும் நாவல் இது. அதன் வழியாக மானுடஅறம் சம்பந்தமான முடிவில்லாத வினாக்கள் இதன் பக்கங்களில் எழுந்து வருகின்றன. இலட்சியவாதம், தியாகம், கருணை, நீதியுணர்வு இவற்றுக்கெல்லாம் வரலாற்றின் ரத்தவெளியில் உண்மையில் என்னதான் அர்த்தம்? நமது அரசியல் மனசாட்சியை நோக்கி தீவிரமாக உரையாடும் நாவல் இது.

சோவியத் ரஷ்யாவின் வரலாறு, நமது சமகால அரசியல்வரலாறு, நமது அன்றாட அரசியல்களம் ஆகிய பற்பல தளங்களில் இந்நாவல் நிகழ்கிறது. அதற்கேற்பச் சித்தரிப்பு, விவாதங்கள், கடிதங்கள், குறிப்புகள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் ஆகிய பற்பல மொழிவடிவங்கள் கலந்த கலவை வடிவில் இந்நாவல் அமைந்துள்ளது. பல்வேறுபட்ட புனைமொழிகளும் புனைகளங்களும் மாறிமாறி வருகின்றன. இதில் கூர்ந்த வாசகர் ஒருவர் ஒன்றை ஒன்றும் மறுத்தும் விளக்கியும் முழுமைசெய்தும் நகரும் எண்ணற்ற புனைகோடுகளினூடாக மிக விரிவான ஒரு படைப்பனுபவத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்

தீர்வுகளையோ முடிவுகளையோ நோக்கி நகரும் ஒற்றைப்படையான இலக்கியப்படைப்பல்ல இது. பல்வேறுபட்ட ஊடுபிரதிகளினூடாக அறிதலின் முடிவற்ற சாத்தியங்களை அடையமுயலும் ஓர் அதிநவீன இலக்கிய ஆக்கம், அவ்வகையில் முன்னோடியான ஒன்று

சரளமும் உத்வேகமும் கொண்ட நடையில் வாசகனை தன்னுள் முழுமையாக ஈர்த்துக்கொள்ளும் புனைவுத்தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது.

தமிழினி 342 டிடிகே சாலை, ராயப்பேட்டை  சென்னை-14

பின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்

பின் தொடரும் நிழலின் அறம்

மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் – அறம்

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்க

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குர

சிந்தே,வண்ணம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வண்ணம் கதையை ஒரு சிரிப்புடன் வாசித்தேன். அந்தச் சிரிப்பு அது ஒரு பகடிக்கதையோ என்று எண்ணச்செய்தது. அது ஒரு பாவனை, அதற்கு அடியிலிருப்பது வேறொரு கதை. அது மக்களுக்கு அரசுக்கும் இடையேயான உறவு. பருண்மையான ஆதிக்கமும் நுண்மையான ஆதிக்கமும் இரண்டு வகையில் மக்களை ஆட்டிவைக்கின்றன என்று காட்டுகிறது அந்தக்கதை. ஆயுதத்துடன் வரும் சர்வாதிக்காரர் தோற்கும் இடத்தில் கையில் ஒரு வண்ணத்துப்பூச்சியுடன் வரும் நம்பூதிரி ஜெயிக்கிறார்

எட்வின் ராஜன்

 

பெருமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் கதைத் திருவிழா கதைகளை கொஞ்சம் பிந்தி படித்துவருகிறேன். நீங்கள் எழுதும் வேகத்துக்கு என்னால் வாசிக்கக்கூட முடியவில்லை.

அதனுள் வண்ணம் சிறுகதையை இரண்டு நாட்களுக்கு முன்னால் வாசித்தேன். அதை ஒட்டிய தொடர் எண்ண ஓட்டங்கள்.

முதலில் அந்த கதை எழுதப்பட்ட நடை. கட்டுரையோ என்று தோன்றவைத்த அதன் தொடக்க பத்திகள். மெல்ல மெல்ல நகைச்சுவை இழையோட தொடங்குகிறது. அதன்பின் வரும் தொடர் பகடிகளை ரசித்துக்கொண்டே சிரித்து சிரித்து மேலே சென்றால், நம்மையறியாத ஒரு துயர சம்பவத்திற்குள் அழைத்துச்சென்று நெகிழ வைத்து, அதையும் தாண்டிய ஒரு பேருண்மையில் நிறுத்தி நின்றுவிடுகிறது. கதையின் நடையும், அமைப்பும் ஒரு பெரிய வசீகரம். கருவுக்குள் நுழையும் உயிர் போல எப்படி என்று அறியமுடியாத வேளைக்குள்  ஒரு பெரும் கதையை கூறி சென்றுவிட்டீர்கள்.

இந்த கதைக்கு ஒருவேளை வண்ணம் என்ற தலைப்பு வைக்காமல் போயிருந்தால், அல்லது இறுதியில் வரும் சங்கரன் பிள்ளையின் “நாலு சொட்டு  நிறம்” என்ற வியப்பு சொல்லப்படாமல் விடப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த கதையே வேறாக பொருள் கொண்டு கடந்து சென்றுவிடலாம் – அதிகார வர்கத்தின் அலட்சியப்போக்கு என்றோ, ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் போராட்ட வெற்றி என்றோ எடுத்துக்கொள்வது ஒரு நிலை. இன்னும் கொஞ்சம் அணுகிப்பார்த்தால் தாய்மையின் உன்னதம். குழந்தைக்கு இறங்கிய தாயின், அமுதூட்டும் அன்னையின, அது உருவாக்கிய நதியின், நதியைத் தாங்கும் நிலத்தின், நிலமெனும் “கனிஞ்ச அம்மையின் ” கருணையின் சித்தரிப்பு என்றும் கொள்ளலாம். இந்த கருணை அன்னையே பூமாதேவியாக அமுதகாலம் ஏந்தி படிமமாக மாற்றவும் பட்டுவிட்டாள், கதைக்குள்ளேயே.

ஆனால் எல்லாவற்றையும் மீறி அடிக்கோடிடப்பட்ட “வண்ணம்”. என்ன அது. என்ன செய்தது? என்ன செய்தொகொண்டு இருக்கிறது? என்னை என்ன செய்தொகொண்டு இருக்கிறது? எல்லோரையும் என்ன செய்தொகொண்டு இருக்கிறது?

வண்ணம் ஒருவகை ஆக்கசக்தி, கல்லாகிப்போன மக்களை துயிலெழுப்பி இயங்கவைத்த இயங்குசக்தி என சங்கரன்  பிள்ளையால் வியந்து நோக்கப்படுகிறது. விஷ்ணு நம்பூதிரி அதை உணர்ந்து பயன்படுத்தியும் காட்டிவிட்டார். மேலே சிந்தித்த்துப் பார்த்தால், ஆமாம்  வண்ணம் ஒரு ஆக்கசத்திதான். கதிரவனின் குழந்தை அது, உலகிற்கே உயிர் கொடுக்கும் கதிரவன்தான் பலவேறு வண்ணங்களாக கண்முன் தோன்றுகிறார். ஒவ்வொரு வண்ணமும் உயிரின் துளிதான். முழு கருமை அதன் எதிர் நிலை அதையே உள்ளம் அஞ்சுகிகிறது. துவண்ட நெஞ்சங்களுக்கு வண்ணம் போல் உடனடி உற்சாகம் தருவது வேறில்லை. அதனால்தான் மனிதன் தீபாவளி முதல் கிறிஸ்துமஸ் வரை எல்லா பண்டிகைகளையும் வண்ணமயமாக்கி மகிழ்கிறான்.

ஆனால் அதுமட்டும்தான் வண்ணமா ?

வண்ணம் ஒரு பெரும் மயக்க சக்தி. மாயா தேவியின் பருண்மை  வடிவம் கூட. அது மனித மனதுடன் விளையாடி அறிவை ஏமாற்றி மடை மாற்றிவிடும் ஆற்றல் பெற்றது. இந்த கதையில் கூட வண்ணங்களின் விளையாட்டு உள்ளது. கோரையும் நெற்பயிரும்  ஒரே நிறம், பச்சை. நிலமறியாத கண்டெழுத்து அதிகாரியை எளிதில் முடிவுக்கு வரவைத்து அந்த வண்ணமே. அதுதானே அத்தனை  குளறுபடிக்கும் மூல காரணம். இறுதியில் கூட, பூஜைகளும், அதிகாரவர்க்கத்தின் மன்றாட்டுகளுக்கும், தலைமுறை முழுக்க வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், ஏன் அரசனே காலில் விழுந்தும் இறங்காத கற்சிலைகள் – வெறும் வண்ணங்களின் விளையாட்டால் உயிர் கொண்டன. வண்ணங்களின் இந்த அறிவு மயக்கும் ஆற்றலை கட்சிகளும், மத குழுக்களும், பரப்பியக்கங்களும், மேற்கத்திய பரப்பிசை கச்சேரிகளிலும், மது விடுதிகளிலும்  பயன்படுத்தும் விதம் நாம் அறிந்ததே.

வண்ணம் என்பதை, அதன் மதி மயக்கும் தன்மையால், மாயையின் குறியீடு என்று விரிந்த பொருளில் வைத்துப்பார்த்தால் அதன் ஆற்றல் இன்னும் பெரிதாக கதைக்குள்ளே விளங்கும். மேலோட்டமாக பார்த்தால் அதிகார வற்கத்தின் அசிரத்தை என்று கூறலாம். அது உண்மைதான். ஆனால் கண்டெழுத்து அதிகாரி, சர்வாதிகார், வலிய சர்வாதிகார், காவலதிகாரி, மேலெழுத்துக்காரர், திவான், அரசன்  யாருமே கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அல்ல. இங்கே இரு பிழைகள் காணக்கிடைக்கின்றன – ஒன்று அரசின் செயல்முறையும், கொள்கைகளும் கொண்ட குறைபாடு (process and policies), இரண்டாவது அதை செயல்படுத்தும் அரசு ஊழியர்களின் அறியாமை மற்றும் அசிரத்தை (incompetence and lack of concentration). உலகில் உள்ள எல்லா நிர்வாக அமைப்புகளும் இந்த குறைபாடு கொண்டவையே. அரசுகள் மட்டுமல்ல, இவை தொழில் நிறுவனங்கள், அலுவலக நிர்வாகங்களுக்கும் பொருந்தும். இதில் முடியாட்சி, குடியாட்சி, சோசலிசம், கம்யூனிசம், வலதுசாரிகள், அரசுத்துறை, தனியார்துறை, சேவை அமைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும்.

முதலில் செயல்முறைகள், விதிகள், கொள்கைகளின் குறைப்பாடு பற்றி. இவை ஏன் ஏற்படுகின்றன? சிந்தித்து பார்த்தல் நிர்வாகவியலில் எல்லா நேரங்களுக்கும் பொருந்தும் ஒரு சரியான செயல்முறையை வகுக்கவே முடியாது என்று தோன்றுகிறது. எந்த ஒரு நிர்வாகமுமே பல மாறுபட்ட தேவைகளுக்கு இடையே ஆன ஒரு சமரச புள்ளியில் இயங்கவேண்டியது. பல நேரங்களில் ஒர்ன்றுபோல் தோன்றும் இருவேறு சிக்கல்கள் ஒரே செயல்முறையல் அணுகப்பட்டுவிடும். உதாரணம் கண்டெழுத்துக்காரர் நேர்மையாக கணக்கீடு செய்யவேண்டும் எனும் தேவை அரசனுக்கு உண்டு. அதனால் ஊர்மக்களோடு நட்போ பகையோ இல்லாத பரதேசத்தவரை அந்த பொறுப்பில் அமர்த்தும் செயல்முறை அமைந்தது. இதே தேவை மக்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் நேர்மையான கண்டெழுத்துக்கரரே வேண்டும் ஆனால் அது முக்கியமல்ல , அவர்களுக்கு அவர்  உழவை பற்றிய அறிவையும் கொண்டிருக்க வேண்டும். இந்த தேவை இரண்டும் ஒரே இதனால் செயல்முறையால் கட்டுப்படுத்தப்படும் போது பிழை நேர்கிறது. ஒரு நல்ல அரசு நிர்வாகம் இத்தகைய பிழைகளை கண்டுணர்ந்து சரிசெய்துகொண்டே இருக்கவேண்டும். ஆனால் ஏன் அப்படி?

இயற்கையிலேயே வண்ணங்கள் அத்தகையவை கோரைக்கும், நெல்லுக்கும் ஒரே நிறம், மண்ணும் நீரும் இரண்டுக்கும் தேவை. நெல்லுக்காக செய்யப்படும் செயல்முறை கோரையையும் பெருக்கும். ஒரே வண்ணம் ஆனால் அவற்றுள் பேதமும் உண்டு இதை உணர்ந்ததாலேயே அயக்கரை வேளாளர்கள், தங்கள் செயல்முறையை திருத்த்திக்கொண்டே  இருக்கிறார்கள். அவர்களே சிறந்த உதாரணம் அரசுக்கும். அரசும் இந்தவகை கோரை களைதலை செய்தொக்கொண்டே இருக்க வேண்டும் தன நிர்வாகத்திலும். இன்னொன்றும் கவனிக்கலாம், எங்கெல்லாம் வரையறுக்கப்பட்ட செயல்முறையில் தெளிவில்லையோ, அங்கெல்லாம் நிர்வாகம் தனக்கான ஒரு வாடிக்கையை தானே உருவாக்கிகொட்டிண்டு நிரப்பிக்கொள்ளும், இவையும் பல சமயங்களில் கோரைகளே. வண்ண வேறுபாடு கண்டு நீக்கப்படவேண்டியவை. உதாரணம் வரியில் கால் பங்கு குறைக்கும் வழக்கம், அரசனுக்கு அது கருணையின் வெளிப்பாடு. ஆனால் நிர்வாகத்துறை அதை எதிர்நோக்கி தானே வரியை சேர்த்து எழுதும் முறைமை. இத்தகைய போக்குகள், வழக்கங்கள் அலுவலக நிர்வாகங்களில் நிறைய உண்டு.

அடுத்து அரசு ஊழியர்களின் அறியாமை பற்றி. இதுவும் உண்மையில் செயல்முறையின் குளறுபடியே. “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்ற என்ற வள்ளுவன் சொல்கூட எந்நோக்கில் முழுமையானதல்ல. “இதனால்” என்ற ஒருமை காரணம் பல நேரங்களில் பரிசீலிக்கப்பட்டு பணியாளர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள் – அரசுத்துறை மட்டுமல்ல, தனியார் துறைகளுக்கும் இதேதான். ஆனால் காரணங்கள் எப்போதுமே ஒருமையானதல்ல – பலதேவைகள் கொண்டது ஒவ்வொரு பணியும்  – “இதனால்” அல்ல “இவைகளால் ” என்றாய வேண்டும். அதுவும் போதாது அதையும் மேம்படுத்திக்கொண்டே செல்லவேண்டும். கார்ப்பொரேட் துறையில் பெரும்பாலும் re – skilling, cross – skilling என்று இதை அழைப்பர். அரசுத்துறையில் குறைந்த அளவில் நிகழ்வதுண்டு பெரும்பாலும் ஊழியர்களுக்கு போதிய ஊக்கம் இல்லாததால் முடங்கிப்போகும் (இது ஆசிரத்தை பின்னல் பார்போப்போம் ). இந்த அறியாமை மாயைக்கு மிகவும் பிடித்தது. சரியான அறிவு அற்ற ஒருவர் ஒரு பணியைச்செய்யும்போது வண்ண வேறுபாடுகள், ஒற்றுமைகள் அவரை எளிதில் குழப்பி தவறிழைக்க வைத்துவிடுகின்றன.

அடுத்து மிக முக்கியமான அசிரத்தை – இங்கேதான் மாயை மனித அறிவை  முற்றாக மழுக்கடித்துவிடுகின்றது. ஒருவர் ஒரு செயலை தன்முனைப்பின்றி பிறிதொரு செயல்முரயையைக் நிறைவேற்ற செயகிறார் என்றால், அது எப்போதுமே சலிப்பூட்டும். தினமும் அதை செய்யும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றும், அதை கடக்க பெரும்பாலானோர் ஒருவகை அசிரத்தையை வளர்த்துக்கொள்கிறார்கள். இது அரசூழியர்களுக்கும் தனியார் துறையில்கூட நிர்வாக பணிகளில் அமரும் எல்லோருக்கும் பொருந்தும். அந்த பணியை உரியவாறு செய்துமுடித்தால் வரும் நிறைவு மிக மிக சொற்பமே. ஆனால் அதில் குறை கண்டோ, ஒதுக்கி வைத்தோ செய்யாமல் தள்ளிப்போட்டு  – பின்னர் அது முக்கிய தேவையாக (critical task) மாற்றம் கொண்ட பின், அதை கொஞ்சம் போலி வேகத்தோடு செய்து தரும்போது வரும் நிறைவும், அங்கீகாரமும் வேறானவை. இதுவே அசிரத்தையின் முதல் காரணம். வலிய சர்வதிகார் படையோடு அயக்கரை செல்லும்போது அடைந்த நிறைவை, அயக்கரை மக்கள் வரியை கட்டியிருந்தால் அடைந்திருக்க மாட்டார்.  சலிப்பை வெல்ல மனிதர்கள் எடுக்கும் இன்னொரு வழி ஆசைகளை மாயயைகளை பின்தொடர்தல் (வண்ணங்கள்). சிலருக்கு அது சினிமா, சிலருக்கு புகை, சிலருக்கு மது, திருமஞ்சணபுரம் சுப்பையருக்கு அது உணவு, கொச்சு கிருஷ்ணன் நாயருக்கு அது வேட்டை/அச்சி , கோவிந்தன் நாயருக்கு அதுவே பல அச்சிகள். மன்னனுக்கு ஓலைகளை படிக்காமல் வலக்கையால் தொட்டு “வேண்டது செய்க” என்று ஆணையிடும் பழக்கம் இந்த சலிப்பின் வெளிப்பாடே. சலிப்புற்ற நெஞ்சம் மாற்றத்தை தேடும்போது மாயையில், வண்ணங்களில் சிக்கிகொள்ள்கிறது.

வேறு விதமாகவும் சிந்தித்து பார்க்கலாம். செய்வதறியாது, முழு வழிகளும் அடைக்கப்பட்டு கல்லாகிப்போன மக்களை, கல்லின்று உயிராக்கி சில எழுப்ப பட்டம் பூச்சிகளின் வண்ணமே போதும். விஷ்ணு நம்பூத்ரியும் “அது போதுமே” என்று தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறார். பின்னர் ஏன் பூஜைகள், மன்னன் ஏன் வரவேண்டும், வரிகள் ஏன் விலக்கப்படவேண்டும்.முக்கியமாக மன்னன் ஏன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்? அது மக்களுக்காக, அவர்களை எழுப்ப அல்ல. மன்னனுக்காக. அரசு நிர்வாகத்துக்கான சிகிழ்ச்சை. விஷ்ணு நம்பூதிரி தெரிந்தே அதை பொறுப்போடு செய்து முடிக்கிறார். ஏதோ ஒருவகையில் திவானும் அதை உணர்ந்துகொள்கிறார்.

கதையில்  பார்த்த அரசு கொடுங்கோல் அரசு ஒன்றும் அல்ல, நடைமுறையில் நிகழ்த்த ஒரு குளறுபடி, அதை உணர்ந்து அரசு அதை திருத்தியும் கொள்கிறது. மக்களுக்குத்தான் அதை அரசுக்கு உரைக்க முழு ஆற்றலும் தேவைப்பட்டது. ஆனால் உண்மையில் மக்கள் போராட்டங்கள் பல நேரங்களில் அரசுகளால் வண்ணங்கள் மட்டுமே கொண்டு நீர்த்துப்போக செய்யவும் பட்டுள்ளன. மிகப்பெரும் மக்கள் போராட்டங்கள், உரிமை முழக்கங்கள் எழும் முன்னரே அடையாளம் காணப்பட்டு – சில சிறிய பாலியல் சர்ச்சைகள், திரையுலகம் சார்ந்த வதந்திகள் போன்றவை பரப்பப்பட்டு அவை மறக்கவைக்கப்பட்டவை மிகுதி. நாம அவற்றை மறந்துவிடுகிறோம், அதனால் பேசுவதில்லை. அதுவும் ஊடகமும் தகவல்தொடர்பும் பெருகிவிட்ட இந்தசூழலில், வண்ணங்களுக்கோ அது உருவாக்கக்கூடிய மயக்கங்களுக்கோ ஒருபஞ்சமும் இல்லை.

கதிரவன் தான் ஒளியைத்தருகிறான், அனைத்தையும் காண செயகிறான். ஆனால் அதே கதிரவனே அவன் பின்னல் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை நம் கண்களில் இருந்து மறைத்தும் வைக்கிறான். மாயை மயக்கம் தருபவள்தான் ஆனால் அவளே உயிர்வாழும் ஆசையையும் அதனால் அமுதையும் தருபவள்.

வண்ணங்கள் பற்றிய தொடர் சிந்தனைக்கான விதையை செம்பட்டு நூலால், பின் மஞ்சள் பட்டு நூலால் கட்டி தந்துவிட்டீர்கள் அய்யா. நன்றி நன்றி.

இதைத்தாண்டியும் வெடித்து சிரிக்க வைத்த தருணங்கள், “கிழங்குண்டு மலமிழகி வாழ்தல்”, “அந்த நாயை நான் செவியைப் பிடித்து இழுத்து வருகிறேன்” , “ஊத வைத்து அவர்கள் மது அருந்தியிருக்கவில்லை என்றும் , குனியவைத்து ….” – சிரித்த்து சிரித்து இன்னும் நிறுத்தவில்லை.

கணேஷ்

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

சிந்தே ஒரு அரிய கதை ஆனால் அதன் சூழல், நுணுக்கமான வர்ணனைகள் காரணமாக பலபேரை கடந்துபோய்விடும் என்றும் நினைக்கிறேன். சிந்தே என்ற அந்த சிங்கம் என்ன? அது ஒருபக்கம் உண்மையான சர்க்கஸ் மிருகம், இன்னொருபக்கம் யாளி. அந்த சிங்கம் எப்படி யாளியாக மாறுகிறது என்பதுதான் கதை.

கதை எவருடைய உணர்ச்சிகளுக்குள்ளும் செல்லவில்லை. விரிவான நுட்பமான காட்சியைத்தான் விவரிக்கிறது. அது ஏன் என்று பார்த்தேன். கதைசொல்லிக்கு ஐந்துவயதுக்குள்தான் இருக்கும். அப்படியானால் கண்ணால்பார்த்த வாழ்க்கையைத்தான் அவனால் சொல்லமுடியும். ஆகவேதான் அந்த பங்களா அத்தனை நுட்பமாகச் சொல்லப்படுகிறது. சிங்கமும் அதில் காட்சியாகவே பதிந்திருக்கிறது.

அந்த காட்சி அவன் மனதில் சாவது வரை இருக்கப்போவது. ஆகவேதான் அது அவ்வளவு ஆழமானதாக பதிவாகியிருக்கிறது. அந்த விரிவாக்கம் அதனால்தான். ஆச்சரியம் என்ன என்றால் குறியீட்டுத்தன்மை ஏதுமில்லாமல் வெறும் காட்சிவிவரிப்பாக வரும் அந்த பங்களாவின் இரண்டு காட்சிகளும் அப்படியே கனவுமாதிரி வாசகனின் மனதிலும் பதிந்துவிடுகின்றன என்பதுதான். அந்தக்கதையை வாசித்து நாலைந்து நாட்களுக்குப்பிறகும் அந்தக்கதை அப்படியே மனதிலே கனவு மாதிரி நீடிக்கிரது என்பதை எண்ணும்போதுதான் அந்த வர்ணனையின் ஆச்சரியம் புரியவந்தது.

சிந்தே என்ற யாளி அறத்தின் காவலன், அவன் எந்த எல்லையில் சிங்கத்தில் தோன்றினான், அந்த புள்ளி என்ன என்பதுதான் கதையிலுள்ள மர்மம்

சரவணன் எம்

 

அன்புள்ள ஜெ

சிந்தே கதையை ஏதோ ஒருவகையில் என் மனம் அனலுக்குமேல் என்ற கதையுடன் ஒப்பிடுக்கொண்டது. இந்தக் கதைவரிசையில் வந்த அரிய கதைகளில் ஒன்று. ரொம்ப வேறுபட்ட கதை என்று சொல்லலாம். நிலம், வாழ்க்கை, மையப்படிமம் எல்லாமே வேறுபட்டது

எனக்கு அந்த அப்பா கதாபாத்திரம் டிராக்குலாவுடன் மானசீகமாக தொடர்புபட்டது. டிராக்குலா பிரபுவும் இதேபோல ஸ்டைலான டெவில்தான். சாத்தானின் குணாதிசயங்களை பிராம் ஸ்டாக்கர் டிராக்குலா பிரபுவுக்கு அளித்திருப்பார். அறிவு, இசைநாட்டம், ஸ்டைல் எல்லாமே இருக்கும். ஒரு பிரபுவின் அழகும் ஒயிலும் உண்டு. ஆனால் டெவிலும்கூட. அப்பாவும் அப்படித்தான் இருக்கிறார். அந்த டெவிலாகத்தான் அவர் சிங்கத்தை கொண்டுவருகிறார். அது அவரை போட்டுத்தள்ளிவிடுகிறது. ஏனென்றால் அது சிந்தே

செந்தில்குமார்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

நலமே வாழ்க,மறைமுகம் -கடிதங்கள்

$
0
0

நலமே வாழ்க [சிறுகதை] மணி எம்.கே.மணி

அன்புள்ள ஜெ,

நான் வாசிக்கும் மணி எம் கே மணியின் இரண்டாவது கதை இது.அவருக்கென்று ஒரு கதைசொல்லும்  முறையை வைத்திருக்கிறார். இப்படி ஒரு தனித்தன்மை தமிழில் ஓர் எழுத்தாளருக்கு இருப்பது அபூர்வமானதுதான்.

அவருடைய கலையை மினிமலிசம் என்று சொல்லலாம். சென்றமுறை அவர் எழுதிய கவி என்றகதையை வாசித்தபோது தொட்டுத்தொட்டுச் செல்கிறதே என்று தோன்றியது. ஆனால் எல்லா வரிகளும் நினைவில் நிற்பதை பிறகு கண்டுபிடித்தேன். காமிராவை சுழற்றி ஒரு பத்துபேரை ஒரே ஷாட்டில் காட்டுவது மாதிரியான வடிவம். அவர்களுக்குள் உள்ள உறவும் சிக்கலும் எல்லாம் அதிலேயே தெளிவாகிவிடுகிறது.

தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் இல்லை. சிந்தனைகளும் இல்லை. உதிரிநிகழ்ச்சிகள்தான். ஆனால் கதை ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்லி முழுமையடைந்துவிடுகிறது.

எஸ்.பாஸ்கர்

அன்புள்ள ஜெ

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ‘எவருடையவோ ராஜகுமாரி’ என்று ஒரு கதையை எழுதினேன். இப்போது தெரிகிறது, நல்ல கதை அல்ல. ஆனால் உண்மையான அனுபவம் அந்தக்கதை. நான் உருகி உருகி காதலித்த பெண் கல்யாணமாகி இன்னொருவனின் மனைவியாகி வாழ்க்கையிலே கஷ்டப்படுவதைக் கண்டேன். அவள் ஒரு டெய்லர்கடை வைத்திருந்தாள். அதைப்பார்த்தபோது அவள் என்னுடைய ராஜகுமாரி என்று நினைத்தேன். ஒரு பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், எந்த வகையில் வாழ்ந்தாலும் அவள் எவரோ ஒருவருக்கு தேவதைதான். மணி எம் கே மணியின் நலமே வாழ்க அந்த விசித்திரமான யதார்த்தத்தைச் சொன்ன நல்ல கதை

மகேஷ் சிவராம்

மறைமுகம் [சிறுகதை] ஜா.தீபா

அன்புள்ள ஜெ,

நலம்தானே? நானும் நலமே. மீண்டும் புதிய எழுத்தாளர்களின் கதைகள். ஜா.தீபா இதுவரை கேள்விப்படாத ஆசிரியர். கதையும் அழுத்தமானது. வரலாற்றின் இன்னொருபக்கம் என்று சொல்லலாம். ஆனால் இன்னொன்றும் தோன்றுகிறது. வரலாற்றின் அறியப்பட்ட பக்கம் என்பது எப்போதுமே ஒரு பொதுவான உணர்ச்சியாலானது. வரலாற்றின் அறியப்படாத பக்கமே உண்மையான உணர்ச்சிகரமானது. வாஞ்சியின் செயல் பொதுவான தேசபக்தி என்ற உணர்ச்சியையே உருவாக்குகிறது. அதற்குப்பின்னாலுள்ள ஒரு பெண்ணின் துயரமும் அழிவும் மிகமிக ஆழமான தனியுணர்ச்சியை உருவாக்குகிறது. அதை ஒரு அருமையான பிரைவேட் லேங்குவேஜில் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஜா.தீபா. வாழ்த்துக்கள்

எஸ்.ராஜரத்தினம்

 

அன்புள்ள ஜெ

ஜா. தீபாவின் மறைமுகம் அழகான கதை. அவர் கையில நீ இருக்கும்போது தான் உன்னைப்பாக்கற மாதிரி அவரைப் பாக்கணும் என்ற வரிகளை வாசித்தபோதுதான் கதைசொல்லியின் ஆற்றல் தெரிந்தது. அந்தக்காலகட்டம், கணவனை மனைவி நேரில் பார்க்க உரிமையில்லாதிருந்த காலம். ஒரு பிள்ளை பிறந்து அதன் அம்மாவாகத்தான் அவளுக்கு எல்லா உரிமையும் சுதந்திரமும் வருகிறது. இரண்டுமே அவளுக்கு பறிபோய்விடுகிறது. அந்த இழப்பை கூர்மையாகச் சொல்லியிருக்கிறது இந்தக்கதை. இந்தக்காலப்பெண் ஒருத்தி அந்தக்காலப் பெண்ணின் நுட்பமான உளவியல் சிக்கலைச் சொல்லியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதைத்தான் கற்பனையின் ஆற்றல் என்று சொல்கிறோம். ஜா.தீபா நல்ல கதையாசிரியர் என்பதை நரம்பில் கைவைத்து தொட்டு அறியும் இடம் இது

ராமச்சந்திரன்

முடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு-சுனீல் கிருஷ்ணன்

$
0
0
ஓவியம்: ஷண்முகவேல்

வரலாறு மற்றும் தகவல்களை பயன்படுத்தும் விதம்- வெண் முரசுக்குள் யுங், ஃபிராய்டு,கிராம்ஷி, லாரி பேக்கர், காந்தி, ஜாரெட் டயமண்டு, கால் சாகன் என எல்லோரும் உண்டு என சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். இத்தனை நூற்றாண்டு கால வரலாறு மற்றும் அறிதலை கொண்டு ஒரு தொல்கதையை மீளுருவாக்கம் செய்யும் போது எவற்றை எல்லாம் எந்தெந்த கோணங்களில் பயன்படுத்தியுள்ளார் என ஆராய்வது எழுத்தாளராக மிக முக்கியம் என எண்ணுகிறேன். ஜெயமோகன் இதுவரை வாசித்த, கற்ற அத்தனை நூல்களின் பிரதிபலிப்பும் வெண் முரசில் நிகழ்ந்துள்ளது.

முடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு

வெண்முரசு விவாதங்கள் தளம்

 

கடைசிக் கண்ணீரின் குரல்

$
0
0
பாபுராஜ்

 

தனிமையின் முடிவில்லாத கரையில்…

சுரங்கப்பாதைக்கு அப்பால்…

குடைக்கீழே…

ஒரு மொழியின் சிறந்த பாடகர் இன்னொரு மொழியில் பாடும்போது ஓர் அரிய அழகு உருவாகிறது அவருடைய உச்சரிப்பு விசித்திரமானதாக ஒலிக்கிறது. ஆனால் அவர் உள்ளுணர்ந்து பாடுவார் என்றால் அது மிக வேறுபட்ட ஒரு அனுபவமாக அமைகிறது. மிகச்சிறந்த இரு உதாரணங்கள் மலையாளத்தில் உண்டு. ஒன்று, மன்னாடே பாடிய ‘மான்ச மைனே வரூ” அது தமிழிலும் பிரபலமான பாடல். ஆனால் தலத் மஹ்மூத் பாடிய கடலே நீலக்கடலே அந்த அளவுக்கே புகழ்பெற்றது. அது தமிழ்நாட்டில் பலர் அறியாதது

த்வீப் என்றபடம் 1978 ல் வெளிவந்தது.விசித்திரமான படம் அது. செம்மீன் இயக்குநரான ராமு காரியட் அவருடைய வாழ்க்கையின் கடைசிநாட்களில் பல சோதனைரீதியான படங்களை எடுத்தார். அதில் ஒன்று. சந்திரன் என்னும் இளைஞன் வாழ்க்கையால் துரத்தப்பட்டு லக்ஷத்தீவுக்கு ஆசிரியராகச் செல்கிறான். அவனுடைய வாழ்க்கை.

செம்மீனை மீண்டும் முயன்றதுபோலவும் இருக்கும் படம் இது. கடல், அபாரமான ஒளிப்பதிவு. ஆனால் கதை எளிமையானது. பாபுராஜின் இசையமைப்பில் இந்தப்பாடல் பெரும்புகழ்பெற்றது. ஆனால் படம் கவனிக்கப்படவில்லை. பாடல் கவனம்பெற்றது முழுக்க வானொலியில்தான் அப்போது பாபுராஜ் இல்லை. இந்த காட்சியமைப்பையே மலையாளிகள் அறிந்திருக்க மாட்டார்கள்

இந்தப்படம் இசையமைக்கப்படுகையில் பாபுராஜ் இறுதிநாட்களில் இருந்தார். குடிப்பழக்கம், நோய், வறுமை. வாழ்க்கையின் எல்லா இருள்களையும் கண்டார். படம் தாமதமாக திரைக்கு வந்தது- அதற்கு முன்னரே அவர் சென்னை பொதுமருத்துவமனையில் இலவச சிகிழ்ச்சைக்காகச் சேர்ந்து உடன் எவருமில்லாமல் உயிர்விட்டார்

பாபுராஜின் கடைசிப்பாடல். அவருடைய அலறல் போல கேட்கிறது. கடலே உன் ஆத்மாவிலும் எரியும் எண்ணங்கள் உண்டா?

 

இசை பாபுராஜ்

பாடல் யூசஃப்அலி கேச்சேரி

பாடியவர் தலத் மஹ்மூத்

படம் த்வீப் 1978

கடலே நீலக்கடலே

கடலே நீலக்கடலே

நின் ஆத்மாவிலும் நீறுந்ந சிந்தகள் உண்டோ?

கடலே நீலக்கடலே

ஒரு பெண்மணியுடே ஓர்மயில் முழுகி

உறங்ஙாத ராவுகள் உண்டோ

 

கடலே நீலக்கடலே

தார மனோஹர லிபியில்

வானம் பிரேம கவிதகள் எழுதுந்நு

ஆரோமலாளே ஆரோமலாளே

அருகில் இருந்நு அது

பாடித்தருவான் நீ வருமோ?

 

கடல் அல பாடி கரளும் பாடி

கதனம் நிறையும் கானங்ஙள்

ஆகாசம் அகலே ஆசயும் அகலே

ஆரோமலாளே நீ எவிடே?

ஆரோமலாளே நீ எவிடே?

 

கடலே நீலக்கடலே

நின் ஆத்மாவிலும் நீறுந்ந சிந்தகள் உண்டோ?

 

தலத் மஹ்மூத்

கடலே நீலக்கடலே

கடலே நீலக்கடலே

உன் ஆத்மாவிலும் எரியும் எண்ணங்கள் உண்டா?

கடலே நீலக்கடலே

ஒரு பெண்ணின் நினைவில் மூழ்கி

உறங்காதிருக்கும் இரவுகள் உண்டா?

 

கடலே நீலக்கடலே

நட்சத்திரங்கள் எனும் அழகிய எழுத்துக்களால்

வானம் காதல் கவிதை எழுதுகிறது

அன்புக்குரியவளே அன்புக்குரியவளே’

அருகிலிருந்து அவற்றை பாடித்தர வருவாயா?

 

கடல் அலை பாடுகிறது

நெஞ்சமும் பாடுகிறது

துயர் நிறைந்த பாடல்களை

வானம் தொலைவில் ஆசைகளும் தொலைவில்

அன்புக்குரியவளே நீ எங்கே?

 

கடலே நீலக்கடலே

உன் ஆத்மாவிலும் எரியும் எண்ணங்கள் உண்டா?

 

 


அஞ்சலி:கர்ணன்

$
0
0

 

மூத்த எழுத்தாளர் கர்ணன் மறைந்தார்.20-07-2020 அன்று மதுரை செல்லூரில் அவருடைய இல்லத்தில் காலமானார்.

தையற்கலைஞராக தொழில்புரிந்தவர். நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோரின் காலகட்டத்தைச் சேர்ந்தவர்.

அவருடைய சிறுகதைகளையும் உள்ளங்கள் ஊமை இரவு ஆகிய நாவல்களையும் வாசித்திருக்கிறேன். கர்ணனின் எழுத்து  அக்காலகட்டத்தில் பெருவாரியாக வந்த பிரபல எழுத்தின் மொழியிலும் அமைப்பிலும் முற்போக்குக் கருத்துக்களைச் சொல்வது. இலக்கியத்திற்கும் வணிக எழுத்துக்கும் நடுவே அமைவது. பூவை எஸ் ஆறுமுகம், எச்.ஆர்.சென்னகிருஷ்ணன் என ஒருவரிசை எழுத்தாளர்கள் அன்றிருந்தனர். அவர்களில் ஒருவர். இலக்கியத்தை ஒரு நேர்மையான சமூக – அறிவியக்கமாக முன்னெடுத்தவர்கள் அவர்கள்.

கர்ணனின் நூல்களாக எழுத்தாளர் உஷாதீபன் குறிப்பிடுபவை

நாவல்கள்

1) உள்ளங்கள்   1980

2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978

3) மயங்காத மனசுகள் 2003

4) ஊமை இரவு 2009

5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008

6) மறுபடியும் விடியும் 2008

7) திவ்யதாரிணி 2011.

சிறுகதைகள்

1) கனவுப்பறவை 1964

2) கல்மனம் 1965

3) மோகமுக்தி 1967

4) மறுபடியும் விடியும் 1968

5) புலரும் முன்… 1974

6) வசந்தகால வைகறை 1977

7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994 (

) இந்த மண்ணின் உருவம் 1999

9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002

10) இசைக்க மறந்த பாடல் 2004

11) முகமற்ற மனிதர்கள் 2004

12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009

13) பொழுது புலர்ந்தது 2013

14) வாழ்ந்ததின் மிச்சம் 2015

கட்டுரைகள்

1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன்வரை 2011

2) அகம் பொதிந்தவர்கள் 2012

3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014

4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015

 

வரலாறு

1) அவர்கள் எங்கே போனார்கள் 2005

2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011

3) இன்று இவர்கள் 2013

4) இந்தியாவின் எரிமலை 1979

5) விடிவை நோக்கி 1980

6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981

7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981

 

ஆன்மீகம்

ஆத்ம நிவேதனம் 2008

கவிதை

நினைவின் திரைக்குள்ளே 2014

 

கர்ணன்

அ முத்துலிங்கம் –கலந்துரையாடல் நிகழ்வு

$
0
0

நண்பர்களுக்கு வணக்கம்,

மூத்த இலக்கிய ஆளுமை, எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனி மாலை (25 – 07 -2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். எழுத்தாளர் ஜெயமோகனும் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம்.

 

“எந்தப் பண்பாட்டுச் சூழலிலும் அரிதாகவே முதன்மைப் பெரும்படைப்பாளிகள் தோன்றுகிறார்கள். அரிதாகவே அவர்கள் சமகாலத்தில் உரிய மதிப்பைப் பெறவும் செய்கிறார்கள். ஐயமின்றி ஈழ இலக்கியச் சூழல் உருவாக்கிய முதன்மைப் பெரும்படைப்பாளி அ.முத்துலிங்கம்தான். தமிழிலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளின் நிரையில் அவருக்கு இடமுண்டு.
மெல்லிய நகைச்சுவையும் சொல்லாதவற்றால் ஆன படலமாக கண்டுகொண்டவற்றை அமைக்கும் கலைத்திறனும் கொண்ட படைப்புகள் அ.முத்துலிங்கம் எழுதுபவை. அனைத்துக்கும் மேலாக தமிழ்ப்படைப்பாளிகளில் அவர் ஒருவரே உலகமனிதன். எந்த நாகரீகத்தின் மேலும் இளக்காரம் சற்றும் அற்ற நோக்கு கொண்டவர். ஏனென்றால் தன் நாகரீகத்திற்குள் தன்னைக் குறுக்கிக் கொள்ளாதவர். எளிய பற்றுகளுக்கும் காழ்ப்புகளுக்கும் அப்பாற்பட்டவர். அவருக்கு முன் அப்பண்பின் தொடக்கநிலை தென்பட்டது தமிழ்ப்படைப்பாளிகளில் ப.சிங்காரத்திடம் மட்டுமே. நாளை உருவாகப்போகும் தமிழ்ப்படைப்பாளிகளின் மாதிரிவடிவம் அவர்.”

-அ முத்துலிங்கம் குறித்து ஜெயமோகன்

அ முத்துலிங்கம் – சந்திப்பு 

ஜூலை 25, 2020, மாலை 6.30 மணி

யூட்யூப் லைவ்: https://www.youtube.com/channel/UCGCV52HnkxPbTdLK298NKNw

ஜூம் மீட்டிங் : https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09

Meeting ID: 382 765 5072
Password: 8965317862
(முதல் 100 பேர் மட்டும்)

அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக.

விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: solputhithu@gmail.com
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து

அ.முத்துலிங்கம் நேர்காணல்

சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

அ.முத்துலிங்கமும் தாயகம் கடந்த தமிழும்

அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு

கணக்கு

செயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி

$
0
0

நோயச்சகாலத்தின் பெருந்தனிமைக்காலம் மனித மனங்களுக்குள் பலவித வெறுமையையும், எதிர்மையையும்,மெல்லமெல்ல சூழச்செய்வதை, நம்மைச்சுற்றி நிகழ்கிற வாழ்வனுபவங்களின் வாயிலாக அறிந்து அச்சமடைந்து வருகிறோம்.

தனிமனித காழ்ப்புகள் மற்றும் சமூகக்கருத்து மோதல்கள் ஆகியன முன்னினும் உக்கிரமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது. இவ்வாழ்வில் உண்டாகிற எத்தகு துயர்நொடியையும் உள்ளச்சமின்றி எதிர்கொள்வதற்கான அகத்துணிவை எக்காலத்தும் உண்டாக்க வல்லவையாக படைப்புகளும் கலைகளும் உள்ளன. மொழிவழியாக தன்னிலை வளர்க்கிற ஒரு சமூகத்தில் எழுத்துப்படைப்புகளின் பங்களிப்பென்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அவ்வகையில், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய முக்கியமான கட்டுரைகளைத் தொகுப்பு ‘தன்மீட்சி’ புத்தகம். புறத்தின் அழுத்தங்களால் நம் மனதுக்குள் அவநம்பிக்கை உண்டாகிற சூழலில், அதைமீறி நம் சுயத்தை அடைவதற்கான எழுத்தாதாரமாக இப்புத்தகம் முழுமைபெற்றுள்ளது.

குறிப்பாக, இளவயதோர்களிடம் இக்கட்டுரைகள் உருவாக்கிய அகத்தாக்கம் அளப்பரியது. நம்முள் உருவாகிற அகச்சோர்வையும், அகச்சலிப்பையும் இல்லாதாக்கி, செயலின்மைக்குள் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்கான ஒரு செயல் உத்வேகத்தை இப்புத்தகம் மனதிற்களிக்கிறது. தன்னறம் நூல்வெளி வாயிலாக உருவாக்கப்பட்ட இப்புத்தகத்தில், ஜெயமோகன் அவர்களின் ‘செயல்சார் முன்செல்லலை’ அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளின் வாயிலாக தங்களின் வாழ்வர்த்தத்தை வகுத்துக்கொண்ட சாட்சி இளைஞர்களின் செயல்பங்களிப்பின் ஆழம் குறித்து தெளிவுரைக்கிறது.

தன்மீட்சி புத்தகத்தை வாசிக்க விரும்புகிற 200 விருப்பமனங்களுக்கு, அப்புத்தகத்தை விலையில்லாமல் அனுப்பிவைக்கிற ஒரு சமகாலச்செயலை தன்னறம் நூல்வெளி முன்னடுக்கிறது. இதன்படி, முதலில் விருப்பந்தெரிவிக்கிற 200 தோழமைகளுக்கு தன்மீட்சி புத்தகங்களை விலையில்லாமல் அனுப்பிவைக்க உள்ளோம். இப்புத்தகத்தை வாசித்துவிட்டு, அதனுள் ஆழ்ந்துள்ள கருத்துக்களைப் பற்றியும் அதுதருகிற அகத்தெளிவுபற்றியும் சிறுசிறு கட்டுரைக் குறிப்புகளை எழுதும் ஒரு எளிய பதில்செய்கையை, புத்தகம்பெறுகிற தோழமைகளிடம் கோரிக்கை வைக்கிறோம். மேலும், புத்தகம் பெற்றுக்கொண்ட தோழமைகள் தாங்களிறந்த நட்புறவுகளுக்கு அப்புத்தகத்தை அடுத்தடுத்து பகிர்ந்தும் அதன் செயல்நீட்சியை தொடரவேண்டுகிறோம்.

எத்தனையோ இளையவர்கள் தங்கள் செயல்பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான சாட்சிக்கட்டுரைகள் இப்புத்தகம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நம்முடைய செயலுக்கு நாமே பொறுப்பேற்கிற ஒரு துணிச்சலை நமக்குள் வரவழைக்கிய ஒரு இலக்கியப்படைப்பு, எல்லாவகையிலும் நம் வாழ்வினை வழிநடத்தவல்லது.

செயலாற்றுதல் மூலமே நம்மால் செயலைக் கடந்துசெல்ல முடியும். தனிமைக்காலம் என்பது எவ்வகையிலும் ஓய்வுக்காலமல்ல. செயலிலக்குகள் என்றும் ஓய்வற்றவை. ‘நிற்காதே செல்!’ என்ற சொல் தருகிற அதிர்வினை தாண்டி எவ்வித எதிர்மையும் நம்மை தடுத்துவிடமுடியாது. செயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை.

புத்தகம்பெற விருப்புமுள்ள தோழமைகள் பின்வரும் எண்ணுக்கு, தங்களுடைய முழுஅஞ்சல் முகவரியை 7667040800 என்ற தொலைபேசி எண்ணுடன் வாட்சப் மட்டும் செய்யவும்.

நன்றியுடன்

தன்னறம் நூல்வெளி

நித்யமானவன்,மறைமுகம் –கடிதங்கள்

$
0
0

நித்யமானவன் [சிறுகதை] – செந்தில் ஜெகன்னாதன்

அன்புள்ள ஜெ

செந்தில் ஜெகன்னாதனின் நித்யமானவன் வழக்கமான டெம்ப்ளேட்டில் அமைந்த சிறுகதை. அவன் சென்னை வீட்டை விட்டு கிளம்பும்போதே கதைமுடிவு தெரிந்துவிடுகிறது. ஆனால் அந்த கதைக்குள் அவர் உருவாக்கும் ஒரு புத்தம்புதிய படிமம்தான் அதை அழகான கதையாக ஆக்குகிறது. அவன் ஒரு நாளில் செத்து மீண்டும் பிறக்கிறான். ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான். இந்த மாதிரி  ‘ஆயிரம்ஜென்மங்கள்’ எடுப்பது என்பது கலையில்தான் சாத்தியம். அந்த ஈர்ப்பு இருக்கும் வரை அவனால் கலையிலிருந்து விடுபடவே முடியாது. கலையின்  ‘கொல்லும் வசீகரம்’ வெளிப்பட்ட சிறுகதை. அதோடு கலை கலைஞனுக்கு அளிப்பது என்ன என்பதைக் காட்டிய கதை

மகாதேவன்

அன்புள்ள ஜெ

1990களில் ஓர் அறக்கட்டளைக்காக சில நாடகநடிகர்களை பேட்டி எடுக்கநேர்ந்தது. அதில் ஒருவர் கடுமையான வறுமையில் இருந்தார். அவருடைய சொந்தக்காரர்களெல்லாம் நல்ல நிலையில் இருந்தார்கள். அவர் சொன்னார். “ஆமாம், எல்லாமே கண்ணுமுன்னாடி மறைஞ்சுபோச்சு. ஒண்ணுமே மிச்சமில்லை. ஆனா நான் ராமனா கிருஷ்ணனா அர்ஜ்ஜுனனா வாழ்ந்திருக்கேன். அது போரும்” ஆச்சரியமாக இருந்தது. கலை என்றால் என்ன என்று அப்போது தெரிந்தது. பொருளாதாரத்தை ஈட்டிக்கொண்ட எவருக்கும் திரும்பிப்பார்க்கையில் அப்படி ஒரு வாழ்க்கையில் பலமுறை பலராக வாழ்ந்த அனுபவம் இருக்காது. அந்த அனுபவம் கலைஞர்களை ஆட்டிவைப்பதை செந்தில் ஜெகன்னாதனின் நித்யமானவன் கதை வழியாக அறிந்துகொண்டேன். நல்ல கதை. எழுதியவர் இளம்படைப்பாளி என நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்

எஸ்.ராஜன்

மறைமுகம் [சிறுகதை] ஜா.தீபா

அன்புள்ள ஜெ

ஜா.தீபாவின் கதை நுணுக்கமானது. அந்தக்கதை ஒரு பெண்ணின் துயரம் என்று பொதுவாக வாசிக்கலாம்தான். ஆனால் நுட்பமாகப்பார்த்தல் ஒரு பெண்ணின் பழிவாங்குதல்தானே அது? அவளால் அப்படித்தானே பழிவாங்க முடியும்?  தேடித் தேடிப் பாத்தேன் பாட்டி. அவரை எனக்குத் தெரியவேயில்ல…அவர் குழந்தை எதுன்னு அவருக்குத் தெரியாது…. என்று அவள் சொல்கிறாள்.என் குழந்தைக்கு அப்பனாக நீ இல்லாமலானால் நீ எனக்கு யார் என்று கேட்கிறாள் இல்லையா?

நீ ஒரு பொதுமனிதன், ஆனால் எனக்கு நீ யாருமில்லை. இந்தக்கதையை ஊருலகமும் புகழும் சரித்திரபுருஷனான வாஞ்சிநாதன் அவனுடைய சொந்த மனைவிக்கு யாரென்றே தெரியாத ஒருவன் என்றுதான் வாசிக்கவேண்டியிருக்கிறது. ஜா.தீபா சிறப்பாக எழுதியிருக்கிறார். வாழ்த்துக்கள்

சித்ரா

 

அன்புள்ள ஜெ

ஜா.தீபாவின் மறைமுகம் அழுத்தமான கதை. மறைமுகம் என்பது மறைக்கப்பட்ட முகம், மறைந்திருக்கும் முகம் என்று அர்த்தம் வரும் வார்த்தை. ஆழமாக அந்த உணர்ச்சிகளை எழுதியிருக்கிறார்.  அதன் கீழ் சுண்டுவிரலை மட்டுமே வைத்து தொடும் அளவுக்கான இடத்தில் மெதுவாக காமாட்சி அழுத்தினாள். நெற்றியைத் தடவினாள். புருவத்தை நீவினாள். என்ற வரி ஓர் உதாரணம்.

நான் இதை என் சர்வீஸில் பார்த்திருக்கிறேன். குழந்தை இறந்துவிட்டால் அம்மாக்கள் ஆஸ்பத்திரியில் அழாமல் அமர்ந்திருப்பார்கள். தொட்டுத்தொட்டுப்பார்ப்பார்கள். தொட்டுத்தொட்டு தன் உயிரின் வெப்பத்தை அதற்கு கொடுத்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள் என்று நினைப்பேன். பயிற்சிகாலகட்டத்தில் என் புரபசர் அது எல்லா மிருகமும் செய்வது. நாய் பசு எல்லாம் நக்கிக்கொண்டே இருக்கும் என்று சொன்னார். அந்த பழக்கத்தை வாசித்தபோது படபடப்பாக இருந்தது. நுட்பமாக எழுதப்பட்ட சிறந்த கதை. ஆனால் மரணித்தான் போன்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். அவை தப்பான சொல்லாட்சிகள். கிளீஷேக்களும்கூட

எம்.சந்திரகுமார்

மறைமுகம், மூங்கில் -கடிதங்கள்

மூங்கில்- கடிதங்கள்

மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்

ராஜன் சோமசுந்தரம் –கடிதங்கள்

$
0
0

அமேசான், ராஜன் சோமசுந்தரம்

அன்புள்ள ஜெ

இப்போது தான் ராஜன் சோமசுந்தரம் அவர்களின் சந்தம் ஆல்பம் அமேசானின் சர்வதேச  இசை  டாப்#10 பட்டியலில் 7வது இடம் பிடித்திருக்கும் செய்தியை தங்கள் தளத்தில் கண்டேன்.”ஞாயிறு காயாது மரநிழல் பட்டு” என்ற அண்மையில் வெளிவந்த சங்கப்பாடல் முதற்கொண்டு ராஜன் அவர்கள் இசையமைத்த அனைத்து சங்கப்பாடல்களை கேட்டிருக்கிறேன்.வழக்கமாக சினிமா பாடல்களை மட்டுமே ரசிக்கும் எனக்கு அவற்றில் எவ்வித ஒவ்வாமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் ரசித்த கேட்ட பாடல்கள் தான் இவையனைத்தும்.குறிப்பாக கலம் செய் கோவே மிகவும் ரசித்த பாடல். இந்த சிறிய வாசகனின் மகிழ்ச்சியை இச்செய்தியை நான் அறிய செய்த என் அன்பு ஜெ வுக்கும் ராஜன் சோமசுந்தரம் அவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

 

அன்புடன்

சக்திவேல்

 

அன்புள்ள ஜெ

ராஜன் சோமசுந்தரம் அவர்களின் இசைத்தொகுதியை நான் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். இந்த இசைமுயற்சியின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு ஒரு பின்னணி தேவை. எனக்கு வயது 62. என்னால் தூயகர்நாடக இசையை ரசிக்க முடியாது. நான் பலமுறை முயற்சி செய்திருக்கிறேன்.

ஏன் ரசிக்கமுடியவில்லை என்று யோசித்துப்பார்த்தேன். ஒரு பாட்டில் சரிகமபதநிச என்று பாட ஆரம்பித்தாலே என் மனம் ஒவ்வாமை கொள்கிறது. ஒரு நல்ல வரியின் நடுவே கமபதநி என்று ஒரு வார்த்தை வந்தாலே பாட்டிலிருந்து நான் வெளியே போய்விடுவேன்.

ஏனென்றால் அது இசையின் நோட்டு, இசை அல்ல. இங்கே எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் நோட்டையே இசையாக வாசிக்கிறார்கள். இது கவிதைக்குப் பதிலாக கவிதையின் இலக்கணத்தைப் பேசி ரசிப்பது போல.

ஒரு நல்ல பாட்டில் மூன்று இன்பங்கள் உண்டு. இசையின்பம் அதில் ஒன்று. உணர்ச்சிகளின் இன்பமும் மொழியின்பமும் அதிலுள்ளன. கர்நாடக இசை எப்போதுமே பாட்டிலிருக்கும் உணர்ச்சிகளையும் மொழியழகையும் வடிகட்டி அகற்றிவிட்டு அதை ஒரு தொழில்நுட்பமாகவோ தேர்ச்சியாகவோ ஆக்கித்தான் பாடிக்கொண்டிருக்கிறது.

இசையின் உணர்ச்சிகளை விரும்புபவர்கள் கர்நாடகசங்கீத கீர்த்தனைகளைக் கேட்டால் தன்னுடைய மெல்லுணர்ச்சிகளை ஒருவர் பிய்த்துப்பிய்த்துப் போட்டு தன் கைத்திறமையைக் காட்டுவதுபோல உணர்ந்து கடுமையான ஒவ்வாமையைத்தான் அடைவார்கள். கர்நாடக இசையை பாட ஒரே வகையான டெம்ப்ளேட் அமைப்பையும் டெம்ப்ளேட் குரலையும் வைத்திருக்கிறார்கள். அதில் எந்தவகையான புதுமையும் இருப்பதில்லை.

ஆகவே கர்நாடக இசைக்குள் சென்றுவிட்டவர்களால் அதன்பின் பாடலின் கவித்துவம், உணர்ச்சிகள் இரண்டையும் அறியவோ ரசிக்கவோ முடிவதில்லை என்பதையும் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு இசை என்பது ஒரு ஓசையின்பம் மட்டுமாக ஆகிவிடுகிறது. எனக்கு பாட்டில் பொருளின்பம் மிக முக்கியமானது.

இந்த அபத்தம் இந்தியாவில் இந்துஸ்தானி, கர்நாடக இசையில் மட்டும்தான் உள்ளது. கஸல் போன்றவை உணர்ச்சிகளும் பொருளின்பமும் இசையுடன் கலந்திருப்பவை.

என்னால் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்களை ஒருவகையான மூடர்களாகவே பார்க்கமுடிகிறது. அவர்கள் பாடும் அரிய பாடல்களின் அர்த்தமென்ன என்றே தெரியாதவர்கள். மொழியழகையோ உணர்ச்சியழகையோ உணராதவர்கள்.[உடனே சந்தேகம் வரும். நான் பிராமணன்தான். அதை இங்கே சொல்லவேண்டியிருக்கிறது இல்லையா?]

நெடுங்காலம் முன்பே நான் கர்நாடக இசையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். அதற்கு நான் வெளிநாட்டுப் பயணங்கள் செய்ததும் ஒரு காரணம்.இன்றைக்கு என் செவிக்கு மேலையிசையும் கலவை இசையும்தான் பிடித்தமானவை. என் குழந்தைகளுக்கும் அதைமட்டுமே கேட்கமுடிகிறது.

ஆனால் சுத்தமான ஐரோப்பிய இசையில் சங்கப்பாடல்களை அமைக்க முடியாது. அன்னியமாக இருக்கும். நம் கர்நாடகசங்கீதம் அவற்றை வெறும் ஓசைகளாக ஆக்கி மொழியழகை இல்லாமலாக்கிவிடும். சங்கப்பாடல்களின் மொழியழகும் உணர்ச்சியும் வெளிவரவேண்டுமென்றால் கலப்புசங்கீதம்தான் மிகச்சிறந்தது.

ராஜன் சோமசுந்தரத்தின் இந்த முயற்சி அவ்வகையில் மிகச்சிறப்பானது. இதில் சங்கப்பாடல்களின் மொழியழகும் உணர்ச்சியும் சிதறாமல் வெளிவந்துள்ளது. அவருக்கு கிடைக்கும் அங்கீகாரத்துக்கு என் வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாஸ்

ஆழி,சிறகு- கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெ,

ஆழி கதையை இப்போதுதான் வாசித்தேன். பிரிவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன, இணைந்திருப்பதற்கு ஒரே காரணம்தான். அந்தக்காரணம் என்னவென்றே தெரியாது, அது மனிதனை மீறியது- அதுதான் அந்தக்கதை. அது என் வாழ்க்கை. எண்ணி எண்ணி வியக்கும் ஒரு விஷயம் அது. அதைப்பற்றி இன்றுவரை பலகோணங்களில் வரையறை செய்ய முயல்கிறேன், முடியவில்லை

அந்தக்கதையைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசினேன். நேர்மாறாக இருந்தால் என்ன செய்வது என்று யோசித்துப்பார். சேர்ந்திருக்க எல்லா காரணங்களும் இருந்தன, ஆனால் பிரியவேண்டுமென்பதற்கு என்னவென்றே தெரியாத ஒரு பெரிய காரணம் மட்டும் இருந்தது என்றார். அது அவருடைய கதை. புன்னகைத்துக்கொண்டேன்

சி.விஜயகுமார்

 

அன்புள்ள ஜெயமோகன்,

நான் ஒரு கடிதமெழுத நினைத்து தள்ளிபோட்டிருந்தேன்.அதற்குள் அடுத்த கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.ஆழி சிறுகதை இன்று வாசித்தேன். அந்த கடல் அவர்களின் செயல்களை கட்டுபடுத்துகிறது.நெருங்க எண்ணுபவர்களை பிரிக்கிறது.தூக்கி வீசுகிறது.

வாழ்வில் ஒரு மாபெரும் கை நம்மை இழுத்தும் , தள்ளியும்,தூக்கி வீசவும் செய்கிறது.கை ஜோசியம் பார்ப்பதை விட நாம் அந்த கையால் தான் பல வேளைகளில் கட்டுபடுத்தப்படுகிறோம் என்ற அறிதலே பெரும் திறப்பு.கரையை அடைவதற்கான முதல் உந்துதல் அது தான்.

அந்த கை வரலாறாக,குடும்பமாக,பழக்கவழக்கமாக,உயரியல் உந்துதலாக,மரபாக,இதன் உள்ளங்கையில் தவழும் நாம் ஒவ்வொருவரும் சிறு துகள்.

அன்புடன்

பாலமுருகன்

85. சிறகு [சிறுகதை]

அன்பு ஜெ

கதை என்னை பால்ய ஆண்களின் உலகத்திற்கு இட்டுச் சென்றது. இரு பையன்களின் வழி அந்த உலகத்தைக் கண்டேன். சங்கு போன்ற பையன்களின் மனநிலையை அப்பட்டமாகச் சொல்லியிருந்தீர்கள். என்ன இவர்கள் பேசிக் கொள்வார்கள் என்று தெரியாதவாறு பெண்கள் மடப் பள்ளியில் படித்திருந்ததால் இந்த அனுபவம் புதிதாக இருந்தது எனக்கு. இருவரும் இரு வேறு துருவங்களாகக் கண்ணுக்குத் தெரிந்தார்கள். சங்கு பெண்களை அவன் கை கொள்வதைப் பற்றிய படி நிலையை சொல்லும் போது துடுக்குற்றேன். மூன்று, நான்கு முறை அவன் நினைத்தவை நடந்ததும் அவன் ஏழைப்பெண்களின் மனநிலையை பொதுமைப் படுத்தி பேசிய போது வருத்தம் இருந்தது. ஆனந்தவள்ளி என்ற பெண் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, அவளுக்கான முதல் சிறகு முளைப்பதற்கு காரணமாக சங்குவை மாற்றிக் கொண்டது கண்டு பெருமிதமடைந்தேன். கண்டிப்பாக நான் சந்திக்கும் பதின்மப் பெண்களுக்கு இக்கதையைக் கொடுப்பேன். அவர்கள் சிறகுகள் முளைவிட இது பெரிதும் உதவும் ஜெ.

பெண்களுக்கு சிறகுகள் மிகவும் முக்கியம் தான். இயக்க சுயாதீனம்(Movement Independence) தான் அவர்களின் முன்னேற்றத்திற்கான முதல் ஏணிப்படி. அதன் மூலம் தான் அவர்கள் கல்வியையோ, பொருளாதார சுதந்திரத்தையோ அடைய முடியும் என்பதை நான் தீர்க்கமாக நம்புகிறேன். சங்குவின் சிறகு என்னை பயமுறுத்தியிருந்தது. ஆனால் சங்கு கட்டமைத்திருந்த அத்தனை பெண் பிம்பங்களையும் உடைத்து, வேறோர் பெண்ணாய் அவனுக்கே அறிமுகம் செய்து கொண்ட ஆனந்தவள்ளியை மிகப் பிடித்திருந்தது எனக்கு.

அவளைத் தாண்டி எனக்கு சங்குவின் நண்பனை மிகவும் பிடித்திருந்தது. பால்யத்தை கேள்விகளோடே எதிர்கொண்டு அறப் பிறழ்வுக்காக வருந்தி, அது பிறழவில்லை எனும்போதான ஒரு மகிழ்ச்சியடைந்தானே அதற்காக அவனைப் பிடித்திருந்தது. காதல் என்றால் இதுமட்டுமில்லை என்று அவன் சாந்தியடையும்போது மகிழ்ந்தேன். இறுதி முடிபில் அவன் மேலும் மகிழ்வடைந்திருக்கக் கூடும். நானும் தான்.

அன்புடன்

இரம்யா.

 

அன்புள்ள ஜெ

வளர்ந்து மேலே எழும் மரங்கள் ஒன்றையொன்று விலக்கி விரிகின்றன. ஆனால் அவை அடியில் ஒன்றுடன் ஒன்று வேர்களால் தொடர்பு கொண்டிருக்கின்றன. நாம் நம்முடைய இளமைநண்பர்களைச் சந்திக்கும்போதுதான் நாமெல்லாம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.விரும்பியோ விரும்பாமலோ அந்த மாறுதல் நடைபெற்றுவிட்டது. அந்த நண்பர்களைச் சந்திக்கையில் அவர்களிடமிருந்து நாம் விலகாமலிருக்கவே முடியாதென்று தோன்றுகிறது

சங்குவும் ஆனந்தவல்லியும் விலகிச்சென்றுவிட்டார்கள். ஆனந்தவல்லி சங்குவின் பார்வையில் உயரமாக சென்றுவிட்டாள். சங்கு அங்கேயே நின்றிருக்கிறான். சிறகு முளைத்து எழும் அந்தக்கணம் ஒரு நல்ல கவிதை

ஆர்.பிரபுகுமார்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

வெண்முரசின் கட்டமைப்பு- நாகராஜன்

$
0
0
ஓவியம்: ஷண்முகவேல்

வெண்முரசின் எந்த அத்தியாயத்தை எடுத்துப்பார்த்தாலும், அதில் உள்ள மையக்கருத்து அந்த நாவல் முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. கண்ணாடிகளை ஒரு அறைக்குள் தேர்ந்த வகையில் வைக்கும் போது பிம்பங்களின் பிம்பங்களாக அடுத்தத்தளத்தில் ஒரு பிம்பம் உருவாக்குவது போல வெண்முரசின் கட்டமைப்பு இருக்கிறது

.

வெண்முரசின் கட்டமைப்பு

 

வெண்முரசு விவாதங்கள்


அந்த அறை

$
0
0

பழைய புகைப்படங்களில் என்னுடைய வாசிப்பறையை பார்க்கிறேன். 2008ல் இந்த மாடியை கட்டி மேலே வருவதுவரை கீழே வலப்பக்கம் சிறிய அறைதான் என் படுக்கையறையும், எழுத்து அறையும். பொதுவாக அடைசலான அறை. நான் மேலும் புத்தகங்கள் துணிகள் என்று வைத்திருப்பேன். ஆனால் அருண்மொழி ஓயாமல் தூய்மை செய்து கொண்டிருப்பதனால் துல்லியமாகவும் இருக்கும்.

அங்கே இருந்துதான் காடு, ஏழாம் உலகம், கொற்றவை எழுதினேன். 2000த்தில் கணிப்பொறி வாங்கினேன். மேஜைக்கணினி. அதில் இணையத் தொடர்பு ஓராண்டுக்குப்பின் வாங்கினேன். தமிழில் தட்டச்சு செய்ய அடிப்படையான விரலொழுங்கை சொல்லித்தர எம்.எஸ் முன்வந்தார். ஆனால் அவரே பின்னர் “இதுக்கு ஃபிங்கர் ஆர்டர் தேவையில்லை. டைப்ரைட்டரிலே ஷிஃப்டை முழு பலத்தோட அடிச்சு மேலே தூக்கணும். அப்பதான் பல எழுத்துக்களை எழுதமுடியும். அந்த ஃபிங்கர் ஆர்டர் அதுக்குத்தான். இதிலே எல்லாமே ஃபெதர் டச் தான். ரெண்டுகையையும் பயன்படுத்தணும், அது போதும்” என்றார்.

முதலில் இணையத்தில் சில்லறை கடிதங்கள் எழுதினேன். அப்போது திண்ணை இணையதளம் பிரபலம். அதன் பின்னூட்டப்பெட்டியில் கொலைவெறிச்சண்டை நடக்கும். அதில் எழுதினேன். மெல்லமெல்ல கைகள் பழகின. கட்டுரைகள் எழுதினேன். கடைசியாக, தட்டச்சு செய்கிறோம் என்பதையே கைகளும் மனமும் மறந்தபின் கதைகள்.

கொற்றவை எழுதிய நாட்கள் மகத்தானவை. அந்நாவலுடன் இளையராஜாவின் கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம். என்ற பாடல் என் மனதில் அந்த கருவுடன் இணைந்துகொண்டது. அந்தப்பாடலை ஒருமுறை கேட்டுவிட்டுத்தான் எழுதவே ஆரம்பிப்பேன்- எல்லா பகுதிகளுக்கும் அந்தப்பாடல்தான். ஒவ்வொருநாளும், ஒவ்வொருமுறை அமரும்போதும்.

ஏற்கனவே எழுதுவதற்கான சூழல் வீட்டில் உண்டு. அன்று எட்டு வயதான அஜிதன் நான் எழுத ஆரம்பித்தாலே ஒதுங்கிவிடுவான். சத்தம் போடமாட்டான். ஆனால் சைதன்யா நேர்மாறு. தட்டச்சு செய்துகொண்டிருக்கும் இரு கைகளுக்கு நடுவே அவளுடைய குட்டித்தலை அவ்வப்போது முளைக்கும். அவளும் சேர்ந்து தட்டச்சு செய்ய முயல்வாள். “அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா” என ஒரே மூச்சில் அழைப்பாள். ஏகப்பட்ட சந்தேகங்கள் கையளவு மண்டைக்குள் இருந்து கிளம்பி வந்துகொண்டே இருக்கும்.

ஓர் அறை நம் மனமே ஆகிவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் அதற்குள் சென்றுவிடுகிறோம், அது நமக்குள் வந்தமைகிறது. அங்கே அமர்ந்தாலே ஏதாவது எழுதமுடியுமென்று தோன்றிவிடுகிறது. இன்னொரு அறைக்கு மாறிவிட்டால் அந்த முந்தைய அறை கனவுக்குள் சென்றுவிடுகிறது. இன்று அது சைதன்யாவின் அறை. எப்போதாவது அதற்குள் சென்றால் அது என் அறையாக இருந்த சுவடே இல்லை. அது வேறு அறை, அங்கிருந்த என் அறை இப்படி புகைப்படங்களில்தான் எஞ்சியிருக்கும்.

புதிய வாசிப்பறை 2009

இன்றைய வாசிப்பு 2020

அஞ்சலி: ஞானி

$
0
0

என் பெருமதிப்புக்குரிய ஆசிரியரும் மார்க்ஸிய அறிஞருமான கோவை ஞானி இன்று காலை காலமானார். ஞானியுடனான என் உறவு முப்பதாண்டுகள் நீண்டது. 1989 ல் அவரை நான் சந்தித்தேன். சந்தித்த முதல்நாள் முதல் என் அனைத்து படைப்புச்செயல்பாடுகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தார். என்னை ஒரு கதையாசிரியனாக தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகம் செய்த படுகை,போதி முதலிய கதைகள் ஞானி நடத்திய நிகழ் சிற்றிதழில் வெளியானவை.

ஆசிரியருக்கு அஞ்சலி

ஜப்பான் –கடிதம்

$
0
0

அன்பு எழுத்தாளருக்கு வணக்கம்,

தாங்கள் கடந்த வருடம் சென்று வந்த ஜப்பான் பயணக் கட்டுரைகளை படித்தேன். ஜப்பான், ஒரு கீற்றோவியம் – 15  வாழ்வின் ஒரு முக்கியமான அம்சத்தைப் பற்றி மிக ஆழமான பார்வையுடன் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஜப்பானியர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் உணவு, இருப்பிடம், கட்டுமானம், இசை, தோற்றம் போன்றவற்றில் எவ்வாறு அமெரிக்கர்களைப் போல மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதில் தொடங்கி அவர்களது உளச்சோர்வு, அவர்கள் வாழ்க்கை முறை, நுகர்வு அதன் விளைவாக உருவாகும் தன்னலம் மற்றும் குடும்பச் சிதைவு  என ஓர் தொடர் முடிச்சுகளுடன்  கட்டுரை செல்கிறது.

அடுத்து தாங்கள்  ஒரு கருத்தை பிறிதொரு பார்வையில் எடுத்துரைக்கிறீர்கள். “மனிதன் உழைப்பிற்காக படைக்கப்பட்டவன் அல்ல. குறைவாக உழைக்கும் மக்கள் தான் உலகெங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்”   உழைப்பை தன் இயல்பாகக் கொண்ட ஜப்பானியர்கள் அந்த உழைப்பின் பலனாக உளச்சோர்வு அடைகிறார்கள். “ஒருவரின் உழைப்பும், தனிப்பட்ட பொழுதும் இணையாக இருக்க வேண்டும். அந்த தனிப்பட்ட பொழுதுகளில் மட்டுமே ஆன்மீகத் தேடல் நிகழ முடியும். மனித வாழ்வின் உருவாகும் மாபெரும் வெற்றிடங்களை நிரப்புவது இதுவே.”  ஓர் தரிசனம்.

கட்டுரையின் முடிவில் தாங்கள், நவீன தொழில்நுட்பம்  ஓய்வைப் பெருக்கி வாழ்க்கையை இனிமை ஆக்குவதற்கு பதில் , அது மனிதனை மேலும் உழைப்பில் இறுக்கி உளச்சோர்வுக்கே கொண்டு செல்கிறது. ஜப்பான் அந்த நிலையில் உள்ளதையும், இந்தியா அதை நோக்கி சென்று கொண்டிருப்பதையும்  எடுத்து உரைத்துள்ளீர்கள். இது இன்று நம் முன் உள்ள காட்சி. ஒரு தனியார் பணியில் இருக்கும் இடைநிலை ஊழியன் உட்பட தன் வேலை நேரம் முடிந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் தன் பணி  சார்ந்த தகவல் பரிமாற்றங்களுடன் அவன் அன்றாட தனிமைப் பொழுதுகள் கடக்கின்றன. நிறுவனத்தின் மேல் மட்டத்தில் இருக்கும் மேலாளர்  தொடங்கி கடை நிலை ஊழியர் வரை தங்களுடைய பணி ஒன்று மட்டுமே  இந்த வாழ்வின் குறிக்கோள் என அவர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. முன்பு டார்கெட் என்பது மேல் மட்ட ஊழியர்கள் வார்த்தையாக இருந்தது. இன்று கடை நிலை ஊழியர் வரை அதன் பரபரப்பை இந்த கட்டமைப்பு எடுத்துச் சென்றுள்ளது. இதன் காரணமாய் தனிப்பொழுது என்பது மொபைலில் விடியோக்கள் பார்ப்பதும், டிக் டாக்கில் லைக்ஸ் போடுவதும், வாட்ஸ் ஆப் இல் forward மெஸ்சேஜ்களை forward செய்வதுமாய் பொழுது கழிகிறது. இந்த வேலை கட்டமைப்பு கொடுக்கும் பாதிப்பு அடுத்த தலைமுறையையும் பாதிக்கிறது. அதிகரித்து வரும்  மாணவர் தற்கொலை. “இதுக்கு எப்படி நம்ம வேலை காரணம், அவன் தற்கொலை பண்ணினா அவன் மடையன்”  என்று சொல்பவர்கள் பலர். பள்ளி கல்வி, கல்லூரி கல்வி, முடித்தவுடன் வேலை, என்ற நிரந்தர அமைப்புகள் மூலம் மறைமுகமாக பிள்ளைகளை ஒரு போருக்கு தயார் செய்கிறோம். வாழ்க்கை ஒரு தேர்வுடன் முடிவது அல்ல. வேலை வாழ்வின் ஓர் பகுதி என்று சொல்ல வேண்டிய கடமை உள்ளவர்களே, தாங்கள் சொல்லிய இந்த வேலை கட்டமைப்பு எனும் மாய சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மிக திறம்பட தங்கள் எழுத்துக்கள் சொல்கிறது.

என் அளவில் இக்கட்டுரை மிக முக்கியமானது. அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள்  சமூகத்தில் விவாதிக்கப்பட  வேண்டும், அதன் காரணமாக வேலை , தனிப் பொழுது, வாழ்க்கை பற்றிய ஒரு திறப்பு உருவாக வேண்டும்.

தங்கள் அனுபவங்கள் மூலம் ஜப்பானை அணுக்கமாக்கியமைக்கு நன்றி.

பிரசன்ன குமார் N

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -16

தங்கப்புத்தகம்,சிறகு- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் கதையை எங்கள் வகுப்புகளில் வாசித்து விவாதித்தோம். அந்தக்கதை அளிக்கும் அர்த்தங்கள் பெருகிக்கொண்டே இருந்தன. அந்த தங்கப்புத்தகம் இருக்கும் பாதாள அறைக்குள் போகும் பாதைகளில் இருக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் நம் மனதின் ஆழங்களுக்குச் செல்லும்போது உள்ள படிநிலைகளாக வாசிக்கலாம் என்று ஒருவர் சொன்னார்.

தங்கப்புத்தகம் ஒரு வசீகரமான விஷயத்தைச் சொல்கிறது. தியானம் செய்யும்போது இது முக்கியமானது. தியானம் செய்பவர்கள் ஒரு முதல்படியிலேயே ஒரு ஆழமான விஷயத்தை தொட்டுவிடுவார்கள். அதுதான் தங்கப்புத்தகம். அது மனசின் அடியாழம்தான். ஆனால் அதை துரியம் என்றெல்லாம் கற்பனைசெய்துகொள்வார்கள். அதை முடிவில்லாமல் வாசிக்கலாம். முடிவில்லாமல் அதிலேயே மூழ்கிக்கிடக்கலாம்.

ஆனால் அது ஒரு மாயம். நாம் விரும்புவதை அது நமக்குக் காட்டும். சாதாரணமாக அதை கண்டதுமே பரவசம் அடைகிறார்கள். ஆகவே அது பரவசமூட்டுவதாக அமையும். ஆனால் என்ன பிரச்சினை என்றால் நமக்கு எதன்காரணமகாவாவது டிப்ரஷன் வந்துவிட்டாம் அதுவும் கடுமையான சோர்வை மட்டுமே அளிக்கக்கூடியதாக ஆகிவிடும். வெளியே வருவது மிகமிக கஷ்டம், சங்கீதம்போலத்தான். மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் கேட்பது உற்சாகமான சங்கீதம். துக்கமாக இருக்கும்போது அதே ராகத்தில் சோகமான பாட்டை நாம் கேட்போம்.

அந்த தங்கப்புத்தகம் நம் மனம்தான் என்று தெரிந்து மனதை உருவாக்கும் ஆழமென்ன என்று கடந்துசெல்லவேண்டும். பலவகையில் நுட்பமான கதை

டிவி.மாதவன்

***

அன்புள்ள ஜெ

நேற்றிரவு விழிப்பிலிருந்து உறக்கத்துள் செல்லும்போது எழுந்த எண்ணத் தொடர் ஒன்று கொரானா காலகட்டத் தனிமையில் இருந்து தொடங்கி ‘தங்கப் புத்தகம்’ சிறுகதைக்குச் சென்றது. அங்கு இங்குமங்கும் உழன்று நம்மாழ்வாரை அடைந்தது.

“அவரவர் தமதமது அறிவறி வகைவகை

அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவரவர் விதிவழி அடைய நின்றனரே”

அந்தக் கதை இந்த பாசுரத்தின் மிகச் சிறந்த விளக்கம் என்ற எண்ணத்தோடு உறங்கிப் போனேன்.

பா ராஜேந்திரன்

***

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

வயதடைதல் என்னும் கருவுக்குள் உலகமெங்கும் கதைகள் தொடர்ச்சியாக எழுதப்படுகின்றன. சிறகு வாசிக்கும்போது இவை ஏன் இந்த அளவுக்கு எழுதப்படுகின்றன என்று யோசித்தேன். ஏனென்றால் ஆசிரியருக்கு அது முக்கியமானது. ஆசிரியர் அப்போதுதான் தன்னை தன் எழுத்தைக் கண்டடைகிறார். இந்தக்கதையிலேயே கதைசொல்லி எதிர்கால கதாசிரியன் என்று காட்டும் ஓர் இடம் உள்ளது. ஆசிரியர் உலகைக் கண்டடைவது அந்த பருவதிலேயே நடைபெறுகிறது.

ஆனால் யோசித்துப்பார்த்தால் அத்தனைபேருமே அந்த வயதில் உலகை கண்டடைகிறார்கள். அதுதான் அவர்களின் எதிர்காலம். அவர்களின் உலகம். அவர்களின் இயல்பு, வாழ்க்கைச் சந்தர்ப்பம் இரண்டும் சேர்ந்து அதை முடிவெடுக்கின்றன. இதில் சங்கு ஆனந்தவல்லி கதைசொல்லி ஆகிய மூவர் வயதடைகிறார்கள். மூன்றுவகை வாழ்க்கைகளை அடைகிறார்கள்.

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ

சிறகு கதையை வாசித்தேன்.குடும்பத்தின் வளமும் அது கொடுக்கும் சுதந்திரமும் அங்கிருந்து ஊறிவரும் ஆகங்காரமுமாகவே பதின்வயது சங்கு நிற்கிறான். அதுவே பெண்கள் மீதான ஏளன பார்வையும், எவளையும் வளைக்கலாம் என்ற ஆணவ துணிச்சலையும் அவனுக்கு தருகிறது. ஆனந்தவல்லியை அடைய செல்லும் சங்கு துணைக்கு கதைச்சொல்லியை கூட்டி செல்கிறான்.அங்கு தான் காணும் காட்சிகள் முன் தான் நம்பிய விழுமியங்கள் காற்றில் பறக்கின்றன என்பதை அறியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறான் கதைச்சொல்லி. அது குறித்த அவன் அனுபவமே கதையாக விரிகிறது.

படித்த அன்றே நீர்க்குமிழி போல அவளுக்கு சிறகு முளைப்பது குறித்த உணர்வு பிடிபட்டு விட்டது.அது முதலில் கதைச்சொல்லி அவளிடம் சங்குவை பற்றிய உண்மையை சொல்வதில் தொடங்குகிறது.முதலில் வெளி பேச்சுக்கு மறுத்தாலும் அவன் தொட்டதனாலேயே தான் அல்லவா அவன் பின் செல்கிறாய் என கதைச்சொல்லி வினவுமிடத்தில் ஆனந்தவல்லி ஆம் என்று சொல்வதோடு தன் இயலாமையையும் சேர்த்தே அச்சொற்களில் வெளிப்படுத்துகிறாள். சைக்கிள் கற்றுக் கொடுக்கும் போது சங்கு உரைக்கும் குருவியின் சித்திரமே அவள் நினைக்கும் இயலாமை ஒரு மாயை என அவள் உணர வழிவகுத்து கொடுக்கிறது.

இந்த கதையில் வரும் சைக்கிள் குறித்த சித்திரம் அவள் சிறகு முளைத்து விண்ணில் எழுவதற்கான உத்வேகத்தை கொடுக்கின்றன.சைக்கிள் கற்றுக் கொள்வது எப்படி ஒரு பெண்ணுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன என்பதற்கான வரலாற்று பார்வையை நீங்கள் வெளியிட்ட வாசகர் கடிதங்கள் இரண்டில் (அவர்கள் பெயரை மறந்துவிட்டேன்)  இருந்து அறிந்து கொள்ள முடிந்தது ஜெ. இக்கதைக்கு சில நாட்களுக்கு முன்பாக தான் தங்கள் தளத்தில் இருந்த யார் அறிவுஜீவி? என்ற கட்டுரையை படித்தேன். அக்கட்டுரையை படிக்க தவறியிருந்தால் அவ்விரு வாசகர் கடிதங்களின் சாராம்சத்தை தவறவிட்டிருப்பேன். அக்கட்டுரையில் ஒரு அறிவுஜீவி என்பவன் தொடர்ந்து சிந்தித்து முன்னேறி கொண்டே இருப்பவர். ஆனால் பேச வரும் போது சில விஷயங்கள் திட்டவட்டமாக அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.அவற்றில் அவனுக்கு உலக வரலாற்றின் சித்திரம் அவன் மனதில் எழவேண்டும்.அதில் ஐரோப்பிய நவீன காலக்கட்டத்து வரலாறு முதல் சீனர்களின் மேல் மங்கோலியர்களின் ஆதிக்கம் வரை அவன் அறிந்திருக்க வேண்டும். அவ்வரைபடத்தில் இந்தியாவின் வரலாற்றை இன்னும் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும். தமிழர்களின் வரலாற்றில் இன்றும் பாதி பகுதி நிறைவடையாமலேயே உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். இவற்றை வெறும் தகவல்களாக அறிந்து பயனில்லை. சீரான காரணகாரியத்துடன் தர்க்க ரீதியாக தொடர்புப் படுத்தி ஒரு பண்பாட்டு வரைபடத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். அவனுக்கு கோதாவரி ஆற்றின் நீர்பெருக்கும் வண்டல் வளமும் எவ்வாறு சாதவாகனர்களின் பண்பாட்டை அமைத்தன என்பது தெரிந்திருக்க வேண்டும். தக்காண சுல்தான்கள் முகலாயர்களை எதிர்த்தது அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் என்று தெரிந்திருக்க வேண்டும். இப்படி ஒரு விரிவான வரலாற்று சித்திரத்தை ஒருவன் அறிந்திருப்பானெனில் இலக்கியத்தில் அதன் நுட்பமான வடிவத்தை கண்டு கொள்வான் என்ற பொருளில் விரிவாக விளக்கி கூறியிருந்தீர்கள். அதற்கு உதாரணமாக க.நா.சு, சுந்தர ராமசாமி அவர்களின் படைப்புகளில் மளிகை கடை வியாபாரிகள் திடிரென்று பெரும் பணக்காரர்கள் ஆவதை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நீங்கள் உதாரணம் காட்டிய எழுத்தாளர்களின் படைப்புகளையோ, வரலாற்று அறிவையோ அறிந்திராதவன் எனினும்

இச்சிறுகதையின் மூலம் அவ்வறிதலையும் நான் செல்ல வேண்டிய தொலைவு குறித்தும் அறிந்து கொண்டேன்.

கதையின் இறுதியில் வரும் ஆனந்தவல்லியின் செயல் மிக முக்கியமானது. அவள் லஞ்சம் இல்லாமல் சுளுவாக அவ்வேலையை முடித்து தருகிறாள். மேலும் தானே வலிய தான் யாரெனவும் அறிமுகப்படுத்தி கொள்கிறாள். அது அவளுக்கு சங்கு எவ்வித கசப்பும் இல்லை என்பதையும் சங்குவின் அச்செயல்கள் ஒரு காலக்கட்டத்து சமூக-பொருளியல் அடுக்கினால் விளைந்தவை என்பதையும் காட்டுகிறது.

அப்புறம் கதைச்சொல்லியின் ஆற்றாமை திருப்பம் வரை தொடர்கிறது. அவனே சொல்வது போல சங்குவின் சொற்களை தன் வீட்டு பெண்களோடு தொடர்புறுத்தி கொள்வது தான் எனினும் அவனால் ஏன் அக்கசப்பை முற்றாக உதற முடியவில்லை ? நாம் உலகை அறிவது முதன்மையாக நம் உறவுகளில் இருந்து தான் என்பதால் என நினைக்கிறேன். அவனது புன்னகை என்னில் மலரும் போதே ஆற்றாமை மறைந்தது.

இறுதியாக, யாயும் ஞாயும் யாரா கியரோ என காதல் கடிதம் எழுத தொடங்குவதிலிருந்து “நீ பிகாம் எடு மக்கா….” என சங்கு கதைச்சொல்லியிடம் சொல்வது வரை உங்களை இளம் ஜெவை பார்ப்பது போலவே இருந்தது. நீங்கள் என்றே நினைத்துக் கொண்டேன் ஜெ.

அன்புடன்

சக்திவேல்

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

ஞானி –அஞ்சலிகள்

$
0
0

ஜெ,

ஞானி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றேன். சமீபத்தில் சொல்முகத்திற்காக கொற்றவையை மீண்டும் வாசித்தேன். ஞானி கொற்றவைக்காக அடுத்தடுத்து கொண்டு வந்த இரு சிறப்பிதழ்களையும் சேர்த்து வாசித்தேன். கடைசியாக அவரை சந்தித்தது கூட ஒரு எம்பி3 ப்ளேயரில் வெண்முரசு ஒலி அத்யாயங்களையும், ஒலி வடிவில் கிடைக்கும் உங்களுடைய கதைகளை அவர் கேட்கும் பொருட்டுத்தான். அதற்காக நானும் நரேனும் இருமுறை அவரைச் சந்தித்தோம். கொடுத்த அனைத்து கதைகளையும் கேட்டிருந்தார். அத்தனைக் கதவுகளும் மூடப்பட்ட பின்னரும் எஞ்சிய சாத்தியங்களைக் கொண்டு இலக்கியத்திற்குள்ளும் சிந்தனைக்குள்ளுமே அவர் தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தார். பெருவாழ்வு

செல்வேந்திரன்

இனிய ஜெயம்

தளம் வழியே கோவை ஞானி இயற்கை எய்திய தகவல் அறிந்தேன். கோவை ஞானியை அவரது சில விமர்சன நூல்கள் வழியே நெருங்கி அறிய, கொற்றவை நாவலுக்கு பிறகு சந்தர்ப்பம் அமைந்தது. கொற்றவை நாவலை மறுவாசிப்பு செய்ய அதன் மெய்யியல் தளத்தின் உலகு தழுவிய பரிமாணம் குறித்து புரிந்து கொள்ள, ஞானி அவர்களின் சில கட்டுரைகள் உதவின.

நவீன விமரிசன மரபு தோன்றிய போதே உலகெங்கும் அதன் இயங்கியல் எதிர்முனையாக மார்க்சிய விமர்சனமே அமைந்தது. தமிழிலும் அதே சூழல்தான். ஆனால் தமிழுக்கு மட்டுமே சொந்தமான தனித்துவம் கொண்ட சிக்கல் என்னவென்றால், கன்னடம், மலையாளம், வங்கம் போல நவீனத்துவத்துக்கு முன்பான வளமான யதார்த்தவாத மரபு தமிழில் இல்லை.

நேரடியாக பாரதி புதுமைப்பித்தனில் துவங்கும் நவீன இலக்கியம், வ வே சு அய்யர் போன்ற  முன்னோடிகள் வழியே துவங்கி சி சு செல்லப்பா என நவீன விமர்சனம் வேகம் கொள்ள துவங்கியது. தொ மு சி ரகுநாதன்தான் பாரதி புதுமைப்பித்தன் வழியே அவர்களின் இயக்கம் வழியே மார்க்சிய விமர்சன மரபை துவங்கி வைத்தார் என்று சொல்லலாம்.

கலை இலக்கியங்களை மேற் கட்டுமானமாக கண்டு, வர்க்க பேத சமுக சூழலில், வரலாற்று பொருள்முதல்வாத இயங்கியலில், சோசியலிச லட்சியவாத இலக்கின் பின்னணியில் அமைந்த, பெரும்பாலும் கட்சி நிறுவனம் சார்ந்த எல்லைகளுக்குள் செயல்பட்ட இந்த விமர்சன மரபு, ரஷ்யாவின் உடைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் வழியே நிறுவதின் பிடிக்கு வெளியே சென்று மறுமலர்ச்சி கண்டது.

அந்த மறுமலர்ச்சியின் முக்கிய குரல்களில் ஒன்று கோவை ஞானி அவர்களுடையது. தனி மனித அகத்தை, அதன் வழியே கட்டப்படும் பண்பாட்டின் இழையை கவனத்தில் கொண்டவர். இந்த மண்ணின் கலைகளின் இலக்கியத்தின்வேர் தமிழ் மெய்யியல் தளத்தில் இருப்பதை கண்டு அதன் உலகு தழுவிய கிளைகளின் கனியின் சாரத்தை மார்க்சிய மெய்மையில் கண்டு இரண்டுக்கும் உள்ள தொடர்பை, தனது விமர்சன உரையாடல்கள் வழியே துலக்கியவர். கொற்றவையை அணுகி அறிய அவரது மெய்யியல் நோக்கு ஒரு எல்லை வரை எனக்கு துணை நின்றது.

மற்றபடி இவற்றுக்கு முன்பாகவே எனக்கு கோவை ஞானியை தெரியும். பின்தொடரும் நிழலின் குரல் வழியாக.

செம்பட்டாடைதனை இடை சேர்த்தாயே

செம்பருத்தி மலர்களயே குழல் சேர்த்தாயே

எங்கள் சோவியத் தாயே …

என்று  அந்த நாவலில்முழங்கும் முற்போக்கு  கவிஞருக்கு அவர் காட்டும் புன்னகை முகத்தை இப்போது எண்ணிக் கொள்கிறேன்.

ஜெயமோகனின் ஆசிரியர் கோவை ஞானி அவர்களுக்கு அஞ்சலி.

கடலூர் சீனு

கோவை ஞானி அவர்கள் திறந்து காட்டும் அறிவுலகம் இளம் வாசகனுக்குப் பிரமிப்பை கொடுக்கக் கூடியது. தெளிந்த எளிய மொழியில் அவர் பிழிந்து கொடுக்கும் சாரம், ஓர் அறிவுத்துறையில் அவரது ஆழமான புரிதலுக்குச் சான்று. எனது முதுகலை பட்டப்படிப்புக்காகச் சேமிப்பில் இருந்த அவரது நூல்களை மறுவாசிப்பு செய்யும்போது அவரது நிதானமான விளக்கிச் சொல்லும் முறை, இலக்கியச் சூழலிலும் அவர் ஓர் ஆசிரியராகவே தன் பணியைச் செய்துள்ளார் என்றே தோன்ற வைத்தது.

அஞ்சலி ஞானி- ம.நவீன்

 


கோவை ஞானியின் இணையதளம்

கோவை ஞானி பேட்டி

ஞானிக்கு இயல் விருது…

 

Viewing all 17211 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>