Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16840 articles
Browse latest View live

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’

$
0
0

index

 

வெண்முரசின் பதினைந்தாவது நாவல் எழுதழல். வழக்கமாக ஒரு நீண்ட இடைவேளையும் சலிப்பும் பின்னர் ஒருபயணமும் அதன் விளைவாக ஓர் எழுச்சியும் என்றுதான் முறையே அடுத்தநாவல் நிகழும். இம்முறை நீர்க்கோலம் முடிந்த மறுநாளே எழுதத் தொடங்கிவிட்டேன். எழுதிக்கொண்டிருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு ஓர் இடைவேளை வேண்டுமே என்பதற்காக வரும் செப்டெம்பர் 15 முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன்.

இது பாண்டவர்களின் உரிமைக்காக கிருஷ்ணன் நிகழ்த்தும் தூதையும் அதன் தோல்வியில் போர் எழுவதையும் சொல்லும் நாவல். முதற்கனல் இப்போது தழலாக எழுகிறது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மதுரையில்…

$
0
0

மதுரை புத்தகக் கண்காட்சியில் வரும் செப்டெம்பர் 3 அன்று உயிர்மை நிகழ்த்தும் புத்தகவெளியீட்டு விழாவில் சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகளை [இடப்பக்க மூக்குத்தி] வெளியிட்டு பேசுகிறேன்

 

uyirmai 5 books release at madurai on sep 3 -2017

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு

$
0
0

dines

பேரன்பிற்குரிய ஜெ,

இதுவரை நீங்கள் எழுதிய கிட்டத்தட்ட அனைத்து பயணக்கட்டுரைகளின் இணைப்புகளையும் இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளேன்.

ஒவ்வொரு கட்டுரையும் தொடர்புடைய பிற கட்டுரைகளின் இணைப்பை கொண்டிருப்பதால் முழு தொகுப்பையும் எளிதாக படித்து விட முடியும்.

வடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.

http://www.jeyamohan.in/16768#.WPeKsIh97IU

வாக்களிக்கும் பூமி – 1, நுழைவு

http://www.jeyamohan.in/3437#.WPeUwoh97IU

அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா

http://www.jeyamohan.in/23969#.WPeRgoh97IU

வளைகுடாவில்… 1

http://www.jeyamohan.in/26594#.WPeQ1Yh97IU

குகைகளின் வழியே – 1

http://www.jeyamohan.in/33589#.WPePHYh97IU

பருவமழைப் பயணம் 2012

http://www.jeyamohan.in/28956#.WPeP0Yh97IU

ஆகும்பே பயணம் – வேழவனம்

http://www.jeyamohan.in/28956#.WPeP0Yh97IU

கருநிலம் – 1 [நமீபியப் பயணம்]

http://www.jeyamohan.in/30618#.WPePnYh97IU

சூரியதிசைப் பயணம் – 1

http://www.jeyamohan.in/71520#.WPeNmoh97IU

அட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை

http://www.jeyamohan.in/81069#.WPeL2oh97IU

மாமங்கலையின் மலை – 1

http://www.jeyamohan.in/94925#.WPeLhoh97IU

கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1

http://www.jeyamohan.in/31454#.WPePPoh97IU

இமயச்சாரல் – 1

http://www.jeyamohan.in/58517#.WPeLWoh97IU

இந்தியப் பயணம் 1 – புறப்பாடு

http://www.jeyamohan.in/640#.WPeLAIh97IU

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1

http://www.jeyamohan.in/80456

சஹ்யமலை மலர்களைத்தேடி – 1

http://www.jeyamohan.in/79754#.WPeMooh97IU

ஹொய்ச்சாள கலைவெளியில் – 1

http://www.jeyamohan.in/78601#.WPeM8oh97IU

தேசம்

http://www.jeyamohan.in/386#.WPeNIYh97IU

வடகிழக்குப் பயணம்

http://www.jeyamohan.in/71300#.WPeN4oh97IU

மீண்டும் மலேசியா 1

http://www.jeyamohan.in/48297#.WPeOO4h97IU

குமரி உலா – 1

http://www.jeyamohan.in/37932#.WPeOWIh97IU

நூறு நிலங்களின் மலை – 1

http://www.jeyamohan.in/39511#.WPeOl4h97IU

பொன்முடி

http://www.jeyamohan.in/31823#.WPePLoh97IU

கோதையின் மடியில் 1

http://www.jeyamohan.in/9052#.WPeScIh97IU

தஞ்சை தரிசனம் – 1

http://www.jeyamohan.in/8901#.WPeSkIh97IU

பருவமழைப் பயணம்

http://www.jeyamohan.in/7319#.WPeS1Yh97IU

பருவமழைப் பயணம்-2010 – படங்களுடன்

http://www.jeyamohan.in/7349#.WPeS1oh97IU

கும்பமேளா – 1

http://www.jeyamohan.in/7149#.WPeTKIh97IU

கடற்கேரளம் – 1

http://www.jeyamohan.in/6587#.WPeTm4h97IU

மலை ஆசியா – 1

http://www.jeyamohan.in/6465#.WPeTgoh97IU

மேகமலை

http://www.jeyamohan.in/5378#.WPeTvYh97IU

புல்வெளிதேசம்.1,மெல்பர்ன்

http://www.jeyamohan.in/2574#.WPeUKoh97IU

இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்

http://www.jeyamohan.in/560#.WPeVtIh97IU

இந்தியப் பயணம் சில சுயவிதிகள்

http://www.jeyamohan.in/628#.WPeVrIh97IU

நன்றி,

தினேஷ் ராஜூ

***

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சீ.முத்துசாமி ‘அலையும்குரல்கள்’

$
0
0
c.mu2
இனிய ஜெ,
சீ. முத்துசாமி அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுதியை அவரது அனுமதி பெற்று உடுமலை பதிப்பகம் வாயிலாக மறுபிரசுரம் செய்துள்ளோம்.
நண்பர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.
இணைப்பு:
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இரவு –நாவல் குறித்து.

$
0
0

iravu-jayamohan-tamiini-14127

சார்

வணக்கம். தங்களின் “இரவு“ நாவலை நேற்று படித்தேன். அது குறித்து சில வரிகள் எழுத ஆசை.

இரவை விரும்பும் மனிதர்கள் ஒரு சமுதாயம் அல்லது குழுமமாக இணைகிறார்கள். அவர்களுக்கான இயற்கை சூழல்களே அலாதிதான். காயல். படகு. என மனதை கிறுக்காக்கும் புறச்சூழல்கள். இரவு விரும்பிகள் தங்களின் செயல்முரண்களை முரண்களாக்கி பார்க்காமல் அனுபவிக்கிறார்கள். (விரும்பிதானே இரவை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகென்ன முரண். என்று தோன்றினாலும் பொதுபுத்தி சற்று முரணாக்கி பார்ப்பதால் இந்த வரிகள்) அதற்கேற்ப பணத்தேவைகளுக்காக பகல்களில் ஆலாய் பறக்கும் தேவையற்றவர்களாக கதாபாத்திரங்களின் சித்தரிப்பு.

சரவணன் முதலில் ஆச்சர்யப்பட்டாலும். பிறகு தன்முனைப்பாகவே அதனுள் ஒண்டிக் கொள்கிறார். நீலிமாவுடனான அவரின் இரவுக் காதல் யட்சியின் காதலாகவே மனம் வரையறை செய்துக் கொள்கிறது. உள்ளே செல்ல செல்ல. ராத்திரி உணவகங்கள். கூடுகைகள். ஆசிரமங்கள். சர்ச்சுகள். என வித்யாசமான அனுபவம். மங்கிய விளக்கொளியில் மழைக் கொட்டும் இரவொன்றில் காயலுக்குள் படகொன்றில். இரு பக்கங்களையும் நிறைக்கும் வீடுகள் ஊடே கடப்பது போல வித்யாசமான அனுபவம். நாவல் நெடுக மனதை அந்த கட்டுக்குள்ளேயே வைத்திருப்பது ஆசிரியரின் சாமர்த்தியம்தான். சிக்கலற்ற நடை. ஆங்காங்கே தெளித்தது போல மலையாள உரையாடல்கள். “ஆடிட்டர் இங்கிலீஷ்.“ “போலீஸ் இங்கிலீஷ்.“ வளமையான தமிழ் என வழக்கம் போல களிநடனம்தான்.

கமலத்தை ஒல்லியாக. உயரமாக. மாநிறக்கூட்டுக்குள். தொளதொளப்பான பைஜாமா உடைக்குள் துறுதுறுப்பான செயற்பாடுகளுக்குள் மனது நிறைத்து வைத்திருக்க. திடீரென்று கொலையாகிறார். சரவணன் அந்த அதிர்வை எதிர்க்கொள்ளும் விதம் அச்சுஅசலாக மனம் செயல்படும் போக்கிலேயே நிகழ்கிறது.

பகல் என்பது இரவின் எச்சம். இரவை பழம் என்று வர்ணித்தால். பகல் என்பது அந்த பழத்தின் சப்பிப் போடப்பட்டு வெளிறி கிடக்கும் கொட்டை என்பதாக நாவல் முழுவதும் ஊடாடிக் கிடக்கும் கிறக்கமான சலசலப்புகள் வாசிப்பிற்கு புதிய அனுபவம். கவிதையாக படமெடுக்கலாம்.

நன்றி சார்.

அன்புடன்

கலைச்செல்வி.

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பணமதிப்பு நீக்கம், வரி, மோதி

$
0
0

modi

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

இன்று செய்தி ஊடகங்களில் வந்துள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பற்றிய நமது ரிசர்வ் வங்கியின் அறிக்கையை படித்திருப்பீர்கள் அதில் “பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களில் 99 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளது” என்ற செய்தியுள்ளது இது போதாதா  நமது அரசியல் தலைவர்களுக்கும்,அரைகுறை பொருளாதார மேதைகளுக்கும் மோதியின் இந்த திட்டம் பெரும் மோசடி, மக்களை ஏமாற்றி தேவையே இல்லாத இன்னல்களுக்கு ஆளாக்கிவிட்டார் என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இத்திட்டத்தினால் கிடைத்துள்ள/இனி கிடைக்கப்போகும்  பலன்களை பற்றி திருமலை மற்றும்   ஜகன்னாத் ஸ்ரீனிவாசன்  அவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள ஏற்கத்தகுந்த கருத்துக்களை “தமிழ் ஹிந்து” வலைத்தளம் வெளியிட்டுள்ளது.அதை தங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.மேலும் பொருளாதார மேதையும் முன்னாள் நிதிஅமைச்சருமான சிதம்பரம் அவர்கள் கூறியிருக்கும் கருத்திற்கான  சுட்டியையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

 

இந்த நடவடிக்கை தொடங்கும் போதே இது பற்றிய தங்களின் நல்லெண்ணத்தை அழுத்தமாக எழுதியுள்ளீர்கள் எனவே இப்போதும்   தங்களின் மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்

Demonetisation: Shame on RBI for recommending note ban says P Chidambaram

அன்புடன்,

 

அ .சேஷகிரி.

 

அன்புள்ள சேஷகிரி,

 

இன்றைய அரசியல் விவாதங்கள் மிகமிகத் தீவிரமாக துருவப்படுத்தப்பட்டு மிகையுணர்ச்சியின் உச்சத்தில் முன்வைக்கப்படுகின்றன. ஒருபக்கம் மோதி இந்தியாவை அழிப்பது தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத தீயசக்தி என்கிறார்கள். இன்னொருபக்கம் அவர் அவதாரபுருஷன் என்னும் நிலையில் பேசுகிறார்கள்.

 

மோதியின் பலம் எங்கிருக்கிறது என்றால் அவரை எதிர்த்து வெறுப்பைக் கக்குபவர்களில் கணிசமானவர்கள் அதே மூச்சில் இந்திய எதிர்ப்பையும், சிறுபான்மை மதவெறியையும், இந்து எதிர்ப்பையும் முன்வைப்பதில்தான். ஆகவே இந்தியதேசியத்தின். இந்துப்பண்பாட்டின் குரலாக மோடி தன்னை முன்வைக்கமுடிகிறது. மிக இயல்பாக அது அவருக்கு வாக்குகளாக ஆகிறது

 

இச்சூழலில் பொதுவாக நிதர்சனத்தை முன்வைப்பது எளிதல்ல. இருசாராரும் திரண்டுவந்து மட்டையடிபோடவே ஏதுவாகும். அதை முன்வைக்க அஞ்சவில்லை. ஆனால் அதைத்தொடரும் தெருச்சண்டை வேறெதிலும் சிந்தைகுவிக்கமுடியாதவனாக ஆக்கிவிடும். கடந்த பல ஆண்டுகளாக வேறெந்த சிந்தனையும் இல்லாமல் இந்தச் சண்டையையே மூர்க்கமாக போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இருசாராரும். அவர்களின் வாழ்க்கையின் ஏதேதோ உணர்வுத்தேவைகளை இது நிறைவேற்றுகிறதுபோல.

 

மேலும் சினிமா, அரசியல் குறித்த பேச்சுக்களையும் சமகால அரசியல் விவாதங்களையும் ஏன் தவிர்க்க நினைக்கிறேன் என்றால் நான் என் தளத்தில் எவ்வளவோ விஷயங்களைப் பேசியிருப்பேன். இலக்கிய அழகியல் குறித்து, இலக்கியவரலாறுகுறித்து, வரலாறு குறித்து, பண்பாடு குறித்து. எதற்கும் பரவலாக எதிர்வினைகள் வராது  நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் பேசிக்காயப்போட்ட விஷயங்கள் என்றால் உடனே நூறுபேர் பாய்ந்து எதிர்வினையாற்றுவார்கள். இங்கே பேசப்பட்ட பிற விஷயங்கள் அனைத்தும் மறைந்துபோகும்

 

நீங்கள் பெரும்பாலும் இந்த அன்றாட அரசியல் சார்ந்தே அதிகமும் கேட்கிறீர்கள். மேலே சொன்ன காரணத்தால் நான் பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்தே வருகிறேன். இந்தத் தளத்தில் பணமதிப்புநீக்க நடவடிக்கை குறித்து நான் ஏற்கனவே எழுதியிருந்தமையால் மட்டும் என் இன்றைய உளப்பதிவை எழுதவிழைகிறேன். என் தரப்பை மட்டும். இதன்மேல் ஒரு விவாதம் என் தளத்தில் நிகழ இடமளிப்பதாக இல்லை.

 

*

 

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது அவ்வறிவிப்பு வெளிவந்த பத்தாவது நிமிடம் முதல் அது இந்தியப்பொருளியலை அழிப்பதற்கென்று மட்டுமே திட்டமிடப்பட்டது என்று இங்கே மோதி எதிர்ப்பாளர்கள் கூச்சலிடத் தொடங்கினர். அவர்கள் ஏற்கனவே மோதியின் அத்தனைசெயல்பாடுகளையும் எதிர்த்தவர்கள். அதன்பொருட்டு தேசவிரோத வன்முறைகளைக்கூட ஆதரிக்கமுற்பட்டவர்கள்.

 

இவர்கள் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட முதல் நாட்களிலேயே அதைத் தோற்கடிப்பதற்கான அனைத்துவகைப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். அப்பட்டமான பொய்வதந்திகளைப் பரப்பினர். தேசப்பொருளியலே அழிந்துவிடும், வரும்நாட்களில் பொருளியல்பேரழிவு இருக்கும் என்றெல்லாம் பீதியைக் கிளப்பினர். இன்று இவற்றை எவரும் இணையத்தில் பின்னால் சென்று வாசிக்கலாம். உண்மையிலேயே ஆச்சரியமாகவும் எரிச்சலாகவும்தான் இருக்கும்

 

அவ்வெழுத்துக்களின் நோக்கம் என்ன? தேசநன்மையா? பொருளியல் மேம்பாடா? இல்லை. மக்களின் அச்சத்தை செயற்கையாக மிகைப்படுத்துவது, அதன்விளைவான அராஜகத்தை உருவாக்குவது, அதனூடாக அத்திட்டத்தைத் தோற்கடிக்க முயல்வது. தோற்றால் அதன் பழியை மோடிமேலேயே போட்டு அவரை அரசியல்ரீதியாக வெல்வது. கிடைத்தது ஒரு பிடி என்றவகையிலேயே அந்தப்பேச்சுக்கள் இருந்தன.

 

நான் அந்த மனநிலைக்கே எதிர்வினையாற்றினேன். அச்செயலில் இருந்த நன்னோக்கத்தை இன்றும் நம்புகிறேன். அதன்வழியாக இவர்கள் சொன்ன பேரழிவெல்லாம் இங்கே உருவாகவில்லை. அரசைப்பொறுத்தவரை அதன் வழியாக நன்மைகளே விளைந்தன. வரிவசூலில் ஏற்பட்ட வளர்ச்சி கண்கூடானது. நம்மைச்சுற்றி கள்ளப்பண வணிகம் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உண்மையில் அறியாத எவரும் இருக்கக்கூடும் என நான் நம்பவில்லை

 

ஆனால் பணமதிப்புநீக்க நடவடிக்கை தோல்வி என்றே நான் நினைக்கிறேன். அதை முன்னரே எழுதிவிட்டேன் அதைக்குறித்து இங்கே பொருளியலின் பல்வேறு தளங்களில் செயல்படுபவர்களிடம் விரிவாகப் பேசவாய்ப்பு கிடைத்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து நாம் வருத்தம் கொள்ளவேண்டும். அதற்கு மோதியோ பாரதிய ஜனதாவோ முதன்மைக் காரணம் அல்ல. நம் அமைப்பின் சீர்கேடுதான் முழுமுதற் காரணம். வங்கிகள், தணிக்கையாளர்கள், அரசதிகாரிகள்,வரிஏய்ப்பாளர்கள் அனைவரும் ஒருதரப்பாகச் சேர்ந்துகொண்டு அதை முழுமையாகத் தோற்கடித்தனர். குறிப்பாக இரண்டு அயல்நாட்டுமூலதன வங்கிகளுக்கு இதைத் தோற்கடித்ததில் மிகப்பெரிய பங்குள்ளது என்கிறார்கள்.

 

அவர்கள் மேல் ஒப்புக்குச் சில நடவடிக்கைகளே எடுக்கமுடிந்தது இந்த அரசால். பணமதிப்புநீக்க நடவடிக்கை தோல்வியடையவும் அரசுக்கு இழிபெயர் வரவும் காரணமாக அதிகாரிகளும் வங்கிகளும் இருந்தது அரசுக்கு தெரியும். ஒரு நூறுபேரைக்கூட கைதுசெய்து விசாரிக்கும் துணிவோ அமைப்புவல்லமையோ இல்லை என்றால் இந்த அரசு இந்நடவடிக்கையை எடுக்கத் துணிந்திருக்கக் கூடாது என்றே இன்று படுகிறது

 

இப்போதுள்ள ஜிஎஸ்டி வரிகுறித்தும் இதையே சொல்லத் தோன்றுகிறது. அது புதுவரி அல்ல, பழைய வரிகளின் தொகுப்புதான். உண்மையில் பல தளங்களில் விலைகள் குறையவேண்டும். ஆனால் எல்லா இடங்களிலும் விலைகள் ஏறின. ஒரு தொழிலதிபரிடம் இதைப்பற்றிக் கேட்டேன். ஜிஎஸ்டியால் பத்துசதவீதம் வரை விலைகள் குறையவேண்டும் என்பதே முறை என்றார். ஆனால் ஏன் குறையவில்லை? ஏனென்றால் இது எப்படி வசூலிக்கப்படும், எவருக்கு என்னென்ன அளிக்கப்படவேண்டும், வரிகட்டியவர்களின் கணக்குகள் உரியமுறையில் கைமாறப்பட்டு வரவேண்டிய வரிசிட்டைகள்  வருமா எதுவும் தெரியாது. ஆகவே  விலையை கூட்டிவைப்போம் என கூட்டாக முடிவெடுக்கிறார்கள். வரிகட்டிய சிட்டைகள் வந்து பணம் மிச்சமாகுமென்றால் அது லாபம்.

 

இதை எவர் கட்டுப்படுத்தவேண்டும்? அதிகாரிகள். அரசு. ஆனால் அரசால் எவ்வகையிலும் தன் அதிகார அமைப்பைக்கொண்டு இதைச் செய்யமுடியவில்லை. அமைப்பே ஒட்டுமொத்தமாகச் சீரழிந்து கிடக்கிறது. இவ்வாறு அரசமைப்பு முற்றாக ஊழலில் கிடக்கையில் அதை பயன்படுத்திச் சீர்திருத்தங்கள் செய்வதென்பது வெறும் துக்ளக் தர்பாராகவே சென்று முடிகிறது. மோதிக்கு துணிவும் நல்லெண்ணமும் இருந்தால் இந்த அதிகாரவர்க்கத்தை கட்டுப்படுத்தவேண்டும், திருத்தியிருக்கவேண்டும். மூன்றாண்டுகளில் அதைச்செய்யவில்லை என்பதுடன் செய்வதற்கான எண்ணத்தையும் வெளிப்படுத்தவில்லை. அங்கேதான் முழுமுதல்தோல்வி இருக்கிறது என நினைக்கிறேன்

 

மோதி அரசால் ஏன் நிர்வாகத்தைச் சீரமைக்க முடிவதில்லை என்றால்அதை தடாலடிகள் வழியாகச் செய்யமுடியாது, உறுதியாகவும் சீராகவும் செய்யவேண்டும் என்னும் யதார்த்தத்தால்தான் . வண்டி ஓடிக்கொண்டிருக்கையிலேயே அதைப் பழுதுபார்ப்பதுபோன்றது அது. அதைச்செய்ய நிபுணர்கள் தேவை. நீண்டகால உறுதியான முயற்சிகள் தேவை. கூடவே அதிகாரப் பரவலாக்கமும் தேவை. மோதி அரசு அதிகாரத்தை மையப்படுத்துகிறது. மையப்படுத்தப்படும் அதிகாரம் அதைச்செயல்படுத்த அரசு இயந்திரத்தையே நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. அவ்வியந்திரம் ஆள்வோர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்றால் அது ஊழல்செய்ய அனுமதிக்கவேண்டும்

 

இந்திராகாந்தி நெருக்கடி நிலைக்காலத்தில் பல பொருளியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். உபரிநிலம் மீட்பும் கொத்தடிமை ஒழிப்பும் பதுக்கல்வணிக ஒழிப்பும் உண்மையிலேயே நல்ல முயற்சிகள். ஆனால் அவருடைய அரசை தாங்கிநின்ற அதிகாரிகளின் அமைப்பால் அவை தோற்கடிக்கப்பட்டன. அந்நடவடிக்கைகள் வெறும் வன்முறையும்  ஊழலுமாகவே எஞ்சின. அவருடைய வீழ்ச்சிக்கும் அவையே காரணமாயின.ஆனால் அவரால் அந்த அமைப்பை எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அதன்மீதுதான் அவர் தன் சமையலறைநிர்வாகத்தை நிறுவியிருந்தார். அதுவே இன்றும் நிகழ்கிறது

 

இவ்வரசின் அடுத்த தோல்வி பெரிய கனவுகள் ஏதுமில்லாமல் வாய்ச்சவடாலிலேயே மூன்றாண்டுகள் சென்றன என்பது. நான் மோதி ஆட்சிக்கு வருவது குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் கொண்டிருக்கவில்லை. தேர்தலின்போதும் அதற்கு முன்னரும்கூட  ஒருவரிகூட அவருக்கு ஆதரவாக, ஏன் எதிர்பார்ப்பாகக்கூட எழுதவுமில்லை. வேறு அரசியல்கட்சிகள் பற்றியும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன்.  ஆனால் புதிய அரசொன்றை ஏற்பவர் ஏதேனும் செய்யவேண்டும் என்ற கனவைக்கொண்டிருக்கக்கூடும் என நினைத்தேன்.

 

வாஜ்பாய் அரசுக்காவது தங்கநாற்கரச்சாலை போன்ற பெரிய கனவுகள் இருந்தன. அவற்றை செய்துமுடிக்கவும் முடிந்தது. இந்த அரசில் இந்த மூன்றாண்டுகளில் அப்படிப்பட்ட எந்தக்கனவும் வெளிப்படவில்லை. வரும் இரண்டாண்டுகளில் செய்துமுடிக்கப்படத்தக்க எந்த பெரிய திட்டமும் அறிவிக்கப் படவுமில்லை. அதைக்குறித்துக் கேட்டால் அன்றாட நடவடிக்கையாக ஓர் அரசு செய்துகொண்டிருக்கும் செயல்களின் புள்ளிவிவரங்களைத் தொகுத்து சாதனையாக அளிக்கிறார்கள். கண்கூடாக எதுவுமே தென்படவில்லை வரிவசூல் பலமடங்கு கூடியிருக்கிறது என்கிறார்கள், ஆனால் அதைக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதே கேள்வி. சாமானியனின் உளப்பதிவு அப்படி ஏதுமில்லை என்பதே.

 

ஒருவகையில் இன்றைய வரிவசூல்கெடுபிடிகள் நன்று என நினைக்கிறேன். முன்பெல்லாம் வரிவசூல் முதலாளிகளிடம் நடைபெறும், நாம் விலையாக அதைக் கட்டிக்கொண்டிருப்போம். வரி கண்ணுக்கே படாது. ஆகவே ஊழல் என்பது அரசுப்பணம் கொள்ளையடிக்கப்படுவது என்ற நம்பிக்கை இருந்தது. இன்றுதான் சாமானியர் வரிவசூல் குறித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள்.அரசு திரட்டுவது தங்கள் பணம் என உணர்கிறார்கள். கிட்டத்தட்ட தங்கள் வருமானத்தில் பாதியை அரசு வரியாக பெற்றுக்கொள்கிறது என பரவலாகவே பேச்சு இருக்கிறது. அதைக்கொண்டு தங்களுக்கு என்னதான் அளிக்கிறது இந்த அரசு என்ற கேள்வி ஓரளவு எழுகிறது. சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, ரயில்வசதி இல்லை. இலங்கை போன்ற ஓர் அரசின் அடிப்படைக் கட்டுமானத்தைக்கூட உருவாக்கித்தரமுடியாத அரசு இத்தனைகோடிகளை எந்த நியாயத்தின் அடிப்படையில் திரட்டுகிறது என்னும் வினா எழுகிறது

 

இன்று மோதி அரசு எதையும் பெரிதாகத் திட்டமிடவோ செய்யவோ வேண்டாம் என்ற எண்ணத்தை அடைந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குள் வரும் அடுத்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணையப்போவதில்லை, ஆகவே வெல்வது உறுதி என நினைக்கிறார்கள்.மோடியை தாறுமாறாக ஏசுபவர்கள்கூடவே இந்துமதத்தையும் இந்தியதேசியத்தையும் வசைபாடி அதனூடாக அவரை மீண்டும் வெல்லவும் செய்துவிடுவார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக எழுபதுகளின் இந்திரா அரசை நோக்கி நாம் செல்கிறோம். சமையல்கட்டு நிர்வாகம், வெற்றுக் கோஷ அரசியல், தனிமனிதசர்வாதிகாரம்

 

ஜெ

மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்
கருப்புப்பணம் -எதிர்வினைகள்
தாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள் 2

 

முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வயக்காட்டு இசக்கி

$
0
0

A.k.-Perumal-1

இனிய ஜெயம்

 

 

பேசிக்கொண்டிருக்கையில் ஒரு முறை கி ரா, ” வாய்மொழி மரபு  கொச்சயாத்தாம் இருக்கும். தாய்ப்பாலு கொச்சதாம். வேணாம்ன்னாக்க யாருக்கு நட்டம்?” என்றார். காலச்சுவடு வெளியீடாக அ.கா. பெருமாள் அவர்கள் எழுதி வெளியாகி இருக்கும் வயல்காட்டு இசக்கி நூலுக்கு , அத்ல் அ . கா. பெருமாள் எழுதி இருக்கும் முன்னுரையில் ஒரு நிகழ்வை வாசிக்கையில் ,மேற்கண்ட கி ரா அவர்களின் கூற்றை நினைத்துக் கொண்டேன்.

 

பேராசிரியர் மிகுந்த உழைப்பில் நாட்டார்வழக்காற்றியல் ஆய்வு நூல் ஒன்று கொண்டு வருகிறார்.  அதிலிலுள்ள சில உண்மைகள் தங்கள் ”சாதியை ” கொச்சை செய்வதாக உள்ளது என்று சொல்லி, அந்த சாதி குறிப்பிட்ட அந்த நூலை வெளியாக இயலாமலேயே செய்து விட்டனர்.  இதை மனதில் கொண்டு வயல்காட்டு இசக்கி என்ற இந்த நூலில் ”அடக்கியே வாசித்திருக்கிறேன் ” என்கிறார்.  பேராசிரியர்.

 

பேராசிரியர் அவர்களின் முந்தய நூலான சுண்ணாம்பு கேட்ட இசக்கி  ஒரு கதை சொல்லி வசம் கதை கேட்கும் உணர்வை நமக்கு அளிக்கும். இந்த நூல் அவ்வாறு அல்ல .சற்றே வேறுபட்ட வாசிப்பின்ம்பம் அளிக்கும் நூல் இது.  நெல்லை துவங்கி குமரி வரை பேராசிரியரின் கள ஆய்வில், கிடைத்த கள ஆய்வு  தரவுகள், அனுபவங்கள் , அவற்றின் மீதான மெல்லிய விமர்சனம் அடங்கியது பதினைந்து கட்டுரைகள் கொண்ட  முதல் பகுதி. ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியது இரண்டாம் பகுதி.  திருவட்டாறு சிந்துகுமார் தீராநதி இதழுக்காக பேராசிரியரை  கண்ட   முழுமையான  நேர்காணல்    மூன்றாம் பகுதி.

 

 

பேராசிரியர் தனது முன்னுரையில்  நாட்டார் வழக்காற்றியலில் நிகழ்ந்த முதல் பிழையை குறிப்பிடுகிறார். அதுஇங்கே மதம் பரப்பும் பொருட்டு ,   இந்த இயலை துவங்கி வைத்த, ஜெர்மன் , பிரான்ஸ், இங்க்லாந்து, பாதிரியார்கள் இங்கே வந்து ,  இங்குள்ள வழிபட்டு முறைகளுக்கு அவர்கள்  அளித்த பிழையான விளக்கங்கள் . தென்னாப்ரிக்கப் பழங்குடி ஒருவரின் வழிபாடு பற்றிய தகவல்களின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்ட கருத்தாக்கத்தை , இங்குள்ள புலைமாடனுக்கும் சுடலை மாடனுக்கும் போட்டு உருவாக்கிய பிழையான அடிப்படைகள். இன்றும் பல ஆய்வாளர்கள் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அபத்தங்களை விட்டு வெளி வந்து, நமதேயான அடிப்படை ஒன்றினில் நின்று நமது நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் துவங்க வேண்டும் என்கிறார்.

 

பேச்சிப்பாறை . காணிக்காரர் எனும் சமூகம், வயலை நாசம் செய்யும் மொசிறு எனும் எறும்புக்கூட்டத்தை கட்டுப்படுத்த,  அந்த மொசிறு   எறும்பை ஒடுக்கும், ஆனால் பயிர்களை பாதிக்காத செவினி  எனும் ஏறும்புக்கூட்டத்தை  அந்த வயலில் கொண்டு விடுகிறார்கள்.  இப்படி இன்னும் பதிவு பெறாத நுட்பங்கள், கலை வெளிப்பாடுகள் மீது கவனம் குவிக்கக் கோருகிறார்.

 

அனுபவம் பகுதியில் வயல்காட்டு இசக்கி எனும் கட்டுரையில்,  பெருங்கல்விளை கிராமத்தில் , பெருமழை காலம் ஒன்றனில், அந்த கிராமத்து கம்மாய் உடைந்து, ஊரும் ,வயலும் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க ,  ஒரு கர்ப்பிணிப்   பெண்  முயலுகிறாள். தனது உயிரைக் கொடுத்து கிராமத்தை வெள்ள அழிவில் இருந்து காப்பாற்றுகிறாள்.  அவள் அங்கே வயல்காட்டு இசக்கியாக கோவில் கொள்கிறாள். அந்தக் கோவிலில் இருந்து துவங்கி, அன்றைய விவசாயம், நெல்வகைகள், [உயர்ந்த சாதிக்கு மட்டுமேயான நெல் வகைகள் இருந்திருக்கிறது] , அதை உணவாக மாற்றும் பக்குவங்கள், அந்த விவசாய அமைப்பை அண்டி வாழ்ந்த ராப்பாடிகள் சமூகம்,அந்த சமூகத்தின், வாழ்க்கை முறை,  அதன் இன்றைய   நிலை போன்ற சித்திரங்களை அளிக்கிறார்.

 

அடுத்த இரு கட்டுரைகளில், தனது பெரியதாத்தாவின் வைப்பாட்டியின் மூன்றாவது மகளான சின்னக்குட்டி என்ற சுசீந்திரம் கோவிலை சார்ந்து வாழ்ந்த தேவதாசி  வழியே அவர் சொன்ன ,வாய்மொழி  தரவுகளை ஒப்பு நோக்கி, அன்றைய தேவதாசி சமூக நிலையை விரித்து உரைக்கிறார். ஆயிரத்து எண்ணூறுகளின் மத்தி வரை , கோவில் அதிகாரம் நம்பூதிரிகள் வசமும், நிலம் நாயர்கள், வேளாளர்கள் வசம் இருந்திருக்கிறது. அப்போது அவர்களை அனுசரித்து வாழவேண்டிய தேவை தேவதாசிகளுக்கு இருந்திருக்கிறது.  கோவில் நிர்வாகம்  அறங்காவல் துறைக்கு மாறிய பின் அவர்களை அனுசரித்து வாழ வேண்டிய நிலை, மருமக்கள் மான்மியம் ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு சட்டங்களுக்குப் பிறகு அந்த சமூகம் மெல்ல மெல்ல நாயர், வேளாளர், செங்குந்த முதலியார் சமூகங்களுடன் கலந்து மறைகிறது.  பூ வைத்துக் கொள்வது துவங்கி, ஜாக்கெட் ,உள்பாவாடை எனும் புது மோஸ்தர் வரை ஒவ்வொன்றும் எப்படி தேவதாசிகள் வழியே நடைமுறைக்கு வருகிறது எனும் சித்திரம் கட்டுரைக்குள் வருகிறது. ஒப்பு நோக்க தமிழ் நில தேவதாசிகளைக் காட்டிலும், அங்குள்ளோர் அனைத்து நிலையிலும் சற்றே மேம்பட்ட நிலையில்தான் இருந்திருக்கிறார்கள்  என்று சுட்டி நிறையும் கட்டுரை.

 

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் , கடுக்கரை தம்பிரான் கோவில் ஆயினூட்டு  என்ற, ஊரே கூடி நிகழ்த்தும் உண்டாட்டு விழா குறித்த விரிவான சித்திரத்தை ஒரு கட்டுரை அளிக்கிறது.  விழா நாளில், குறிப்பிட்ட உண்டாட்டு நாளில்  படையல் தயாராகும் முறை ,அந்த விவரணையே கனவுகளை விரிக்கிறது.  ஊர் மொத்ததுக்குமான உண்டாட்டுக்கு தேவையான அரிசி,  [எல்லா வகையும் கலந்த அரிசி]  நான்காக பகுக்கப் படுகிறது. ஒரே நேரம், பல கலங்கள், ஒரே நேரத்தில் சமையல், குறிப்பிட்ட சரியான நேரத்தில் துவங்குகிறது, முதல் பங்கு அரிசி காலபங்கு வெந்ததும் எடுத்து பாயில் பரப்பப் படுகிறது, அதன்மேல் அரை பங்கு வெந்த அடுத்த பகுதி ,அதன்மேல் முக்கால்பங்கு வெந்த மூன்றாம் பகுதி, அதன்மேல் முழுதாக வெந்த நான்காம் பங்கு அரசி கொட்டப் படுகிறது. அழகாக அது எல்லை கட்டப்பட்டு சுற்றிலும் , குழம்பு ,தொடுகறி, கலங்கள் கொண்டு அலங்கரிக்கப் படுகிறது. விழாவின் முக்கிய அம்சம். குறிப்பிட்ட சரியான நேரத்தில், கொட்டிவைக்கப்பட்ட அரிசி இரண்டு பாதியாக மெல்லிய வெடிப்பொலியுடன் பிளக்கிறது, மங்கல ஒலிகள் முழங்க உண்டாட்டு துவங்குகிறது.  ஊர் நாகர்கோவில் பக்கம்தான். கடந்த உண்டாட்டு தற்போதுதான் முடிந்திருக்கிறது. அடுத்த உண்டாட்டில் விஷ்ணுபுரம் கோஷ்டி மொத்தத்தையும் அழைத்து செல்ல வேண்டும்.

 

பிணமாலை சூடும் பெருமாள் எனும் தெய்வம் குறித்து ஒரு கட்டுரை.   திருவாங்கூர் இளவரசி .பயணம் ஒன்றினில் [நெல்லை சாம்பூர்] வழியில் இறந்து போகிறாள். ஆண்டாள் போலும் பெருமாள் பக்தி  கொண்டவள்.  அங்கேயே   அவள் புதைக்கப் படுகிறாள்.  புதைத்த இடத்துக்கு பெருமாளே வருகிறார். இளவரசிக்கு உயிர் அளிக்கிறார். அவளுக்கு மாலை சூடி வைகுந்தம் அழைத்து செல்கிறார். கோவிலின் இந்த கதையில் துவங்கி , தமிழகம் எங்கும் வெவ்வேறு வடிவில் உலாவரும் ,ஊர் விட்டு நீங்கிய அரங்கநாதன் கதையை, அதன் வடிவ பேதங்களை ஒரு கட்டுரையில் பேசுகிறார்.

 

இதே கதை. சிதம்பரம் நாடார் என்று ஒருவர் ,வைத்தியம் அறிந்தவர். ஒருமுறை சுடுகாட்டில் அரவம் தீண்டி  மரணம் அடைந்த பிராமணப்பெண் புதைக்கப்படுவதை பார்க்கிறார்.  உறவினர் அகன்றதும், அந்த இளம்பெண்ணுக்கு தனது வைத்தியம் கொண்டு உயிர் அளிக்கிறார், அவளை திருமணம் செய்து கொள்கிறார். நாடார் பிராமணத்தியை மணம் புரிந்த நிலை ஊரில் பரவுகிறது. பிராமணர்கள் மன்னர் வசம் முறை இட, மன்னன் சிதம்பரம் நாடாருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறான்,  அந்தப் பெண்  இறந்து போன தன்னை உயிர்ப்பித்த தனது கணவன் குறித்து மன்னன் வசம் சொல்கிறாள். மன்னன் தண்டனையை ரத்து செய்கிறான். ரத்து செய்யும் தகவல் தண்டனை களத்துக்கு வருமுன் நாடார் தூக்கிலிடப் படுகிறார்.[பிராமண சதி?] . அந்த நாடார் ஒரு கோவில் தெய்வம் ஆகிறார். அந்த கோவில் குறித்து ஒரு கட்டுரை பேசுகிறது.

 

ஆய்வுகள் பகுதியில்  புதுச்சேரி வீரநாயக்கர் நாட்குறிப்பு எனும் ஆய்வுக் கட்டுரை  மிக சுவாரஸ்யம் கூடியது.  1778 – 1792  வரை எழுதப்பட்ட நாட்குறிப்புகள்.  கடலூர் துவங்கி ,சிதம்பரம் வரை , அன்று நிலவிய சட்டமில்லா நிலை, யார் யாரோ வந்து கொள்ளை அடித்த நிலவரம் எல்லாம் பேசும் நாட்குறிப்புகள். இந்த நாயக்கரும் ஆனந்தரங்கம் பிள்ளை போல,முக்கிய அரசு பதவி ஒன்றினில் இருந்தவர்தான் .  திப்பு சுல்தானுக்கும் ,பிரெஞ்சு மன்னருக்கும் இருந்த நட்பு குறித்து நாட்குறிப்பு பேசுகிறது. ஊருக்கே பந்தல் போடும் வகையில் ,ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட பிரும்மாண்டமான  கம்பளத்தை, மன்னர்,  திப்பு சுல்தானுக்கு பரிசளிக்கிறார். அவர் திப்புவுக்கு அளித்த பரிசுப் பொருட்களில் ஒன்று , மூக்குப்பொடி டப்பி.  வைரம் இழைத்த தங்க டப்பி.  திப்புவின் மகன்கள் ,பிரிட்டன் நிர்வாகத்தால், பிணையாக எடுத்துக் கொள்ளப் படுகிறார்கள், [ குறிப்பிட்ட தொகையை திப்பு அளித்து அவர்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என ஒப்பந்தம்] .இது கேட்டு  திப்புவின் நண்பன் ஒருவர் [வரலாற்றில் அன்றி இந்த நாட்குறிப்பில் மட்டுமே இடம் பிடித்தவர்]  துயர் தாளாமல் ,துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.  புதுவையில் அன்று கடுமையான இடங்கை வலங்கை தகராறு நிலவி இருக்கிறது.  குடை பிடிப்பது துவங்கி, தேர் வடம் பிடிப்பது தொடர்ந்து, சாவுக்கு பாடை கட்டுவது வரை, ஒருவருக்கு மட்டுமே சொந்தமான உரிமையை மற்றவர்  கைக்கொண்டு  தீராத அடிதடி யில் காலம் தள்ளி இருக்கிறார்கள். சாவுக்கு பல்லக்கு கட்டும் உரிமை தகராறில், ஒரு பிணம் மூன்று நாள் சுடுகாடு போகாமலே இருந்திருக்கிறது. மன்னர் விருந்தில் தேவதாசிகள் கோலாகலமாக வரவேர்க்கப்பட்டிருக்கிரார்கள். வரவேற்க போட்ட வேட்டு ஒன்றில் நெஞ்சிடி கண்டு நட்டுவனார் ஒருவர் நட்டுக்கொண்டிருக்கிறார்.  பிரன்ச், பேச்சு வழக்கு தமிழ், பேசவே இயலாத ஆங்கிலம் [ உதா ஹாஸ்பிடல் – இசுபிதா]  எல்லாம் கலந்து கட்டி ,   மொத்தத்தில் ஏதோ பரிபாஷை போலும் எழுதப்பட்ட நூல் என்கிறார்  பேராசிரியர்.

 

தமிழகப் பழங்குடிகள்  மற்றொரு ஆய்வுக் கட்டுரை.  இனத்தொற்றம், பூர்வீகம், மொழி, வழிபாடு, வாழிடம், ஆடை அணிகலன்,உணவு, தொழில், வாய்மொழி மரபு, இசை நடனம், மருத்துவம், நீதி நிர்வாகம், திருமணம், பிறப்பு இறப்பு சடங்குகள்  என அத்தனை அலகுக்குள்ளும் வைத்து தமிழ் நிலத்தின்  கிட்டத்தட்ட அனைத்து பழங்குடி சமூகங்களை ,சுருக்கமாகவும் செறிவாகவும் முன்வைக்கிறது இக் கட்டுரை.

 

யானையை பழக்குவதில் வல்லவர் ஒரு சமூகம், யானையால் மட்டுமே அழியும் ஒரு சமூகம். அர்ஜுனனுடன் போரிட்ட வேட சிவனின் வியர்வையில் தோன்றியவர்கள் நாங்கள் என்கிறது ஒரு சமூகம்.  வைணவத்தை நாடுகிறது மற்றொரு சமூகம்.  இங்கே இந்த போக்கு இயல்பாக இருக்க,  வெர்ரியர்எல்வின்,  வடநாட்டில்  அவர் வாழ்ந்த கோண்டு சமூகத்தில் ”வந்து சேர்ந்த ”இந்து மதம்  குறித்து எழுதுகிறார். மார்வாரிகள்  இந்த பழங்குடிகளை ”இந்துவாக” உயர்த்த  அவர்களை பூணூல் அணிய சொன்னது, பன்றிகள் வளர்க்க வேண்டாம் என்றது  குறித்து எழுதுகிறார். தமிழக பழங்குடிகள் கட்டுரையை எல்வினை நினைக்காமல் என்னால் வாசிக்க இயலவில்லை.

 

கிருஷ்ணதேவராயர் எழுதிய அமுக்த மால்யதா எனும் நூல் குறித்தது மற்றொரு ஆய்வு.  நான் லீனியர் கதை கூறல் முறை. மன்னன் ஸ்ரீ வல்லபன் அவைக்கு பெரியாழ்வார் வருகிறார். அங்கு நிகழும் தர்க்க சபையில் , சாங்கியம், வைசேடிகம், மாயாவாதம், பௌத்தம் அனைத்தையும் வெல்கிறார். அடுத்தது கேசத்வஜன் புராணம் வருகிறது. அந்த புராணத்தை சொல்லி பெரியாழ்வார் மன்னன் காதில் நாராயான மந்திரத்தை ஓதுகிறார்.மன்னன் மனமும் மதமும் மாறுகிறார். அதிலிருந்து பின் புராணக் கதை, அதிலிருந்து ஆண்டாள் கதை,  பின் மணக்கால் நம்பி எனும் பக்தரின் கதை, இறுதியாக ஆண்டாள் கல்யாணம் என நூல் நிறைகிறது. தோசை போல நிலா, அதை சுடுகயில் எழும் புகை போல அலையும் பனி, என்றெல்லாம் ராயர் வர்ணனையை அள்ளி தெளித்திருக்கிறார் என கட்டுரை சொல்கிறது.  ஜகன்னாத ராஜா இந்த தெலுங்கு நூலை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்.   கிருஷ்ணதேவ ராயரின் தாய்மொழி கன்னடம் என்கிறார் பேராசிரியர்.

 

கடல்சார் மக்களின் நாட்டார் வழக்காறுகள் எனும் ஆய்வுக் கட்டுரையும், அதற்க்கான ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் எதிர்வினையும் இந்த ஆய்வு எனும் பகுப்பில் உள்ள முக்கிய கட்டுரைகள்.   கத்தோலிக்க கிறிஸ்துவம்  இந்த கடல்சார் மக்களின் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை , அந்த ஆழத்துக்கு செல்ல இயலாத, ப்ரோடஸ்ட்டன்ட் கிறிஸ்துவத்தை அதற்க்கான காரணிகளை ஆ.சி .விரிவாக முன்வைக்கிறார்.  இங்கே கடலூர் பகுதி  கடல்சார் மக்களிடம்  கிறிஸ்துவத்தின் தாக்கம் அனேகமாக முற்றிலும் இல்லை என்றே சொல்லிவிடலாம். முத்துமாரி,சோறங்கிஅம்மன்  இவற்றுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள்.  சுனாமிக்குப் பின்னால் உருவான மெல்லிய சமூக மாறுதலை கவனித்து வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் மீன் பிடிக்கும் லாஞ்சில் ,பிகாரிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

 

அன்றொரு நாள்  கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.   கரையில்  சில கட்டுமரம். சில மீனவர்கள் வந்தார்கள். அலைகளை எண்ணி காத்திருந்தார்கள். சீரான இடைவெளியில்   ஒரே ஒரு குறிப்பிட்ட அலை மட்டும் நீண்டு வந்து கட்டுமரத்தை தொடுகிறது. ஒவ்வொரு முறையும் அலையெண்ணி காத்திர்ந்து அந்த அலை வருகையில் கட்டுமரத்தை தள்ளி ,தள்ளி, சரியாக பத்தாவது அலையின் முடிவில் அவர்கள் கடலுக்குள் மிதந்துகொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது.  அலைகளுக்கு பெயர் உண்டு எனில் அந்த அலைக்கும் பெயர் இருக்கும். அலைகளின் பெயரை மனிதர்களுக்கு இடுவார்களா நான் அறியேன்.  இங்கே  ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் இட்ட பெயர் சுனாமி.

 

மொத்த நூலிலும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த கட்டுரை, அனுபவங்கள் பகுப்பில் வரும் கோமரத்தாடி கட்டுரை.   சாமியாடிகள் குறித்த கட்டுரை.  மனித   உடலின் ஆற்றல் திறனையும் தாண்டி,  வெளிப்படும் சில மிகை  ஆற்றல்களை, அதை நேரில் அவதானித்த தருணங்களை எழுதி இருக்கிறார்.

 

இங்கே கடலூர் அருகே கிராமம் ஒன்றினில் சிறிய கோவில்.  தீபம் காட்டுகையில் பக்தர் ஒருவருக்கு சாமி வந்து விட்டது.

 

ஹூஊம் ஹோஊம்  நான்தாண்டா ராமலிங்கம் வந்திருக்கேன்.

 

பசிச்சுக் கிடக்கேன்.  குளுர வைங்கடா.  நீங்க கேட்டத்த குறை இல்லாம தரேன்…..

 

 

என்ன சாமி செய்யணும்..

 

எனக்கு கிடாவெட்டி பொங்க வைங்கடா….

 

கேட்ட பூசாரி  விட்டார் ஒரு அரை.   வாங்கிய அறையில் சாமி மலையேறியது.   அது வள்ளலார் கோவில்.

 

இது போன்ற ஒன்று பேராசிரியர் வாழ்விலும் நடந்திருக்கிறது.  அவருக்கு பதிமூன்று வயது , தனது வயது உள்ள சிறுவர்களுடன் கூடி ஒரு விளையாட்டு விளையாடுகிறார். அதாவது அங்குள்ள மாடனுக்கு ஊரை கூட்டி படையல் போடுவது என்பதே அந்த விளையாட்டு. ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் காசு வசூல் நடக்கிறது. அந்த ஊரில்; ஏர்வாடி  ஆச்சி என்றொரு கிழவி. உங்கள் நூஸ் கதை கிழவி போன்ற ஆளுமை.  ஆச்சி வழக்கம் போல இதை கிண்டல் செய்கிறாள். இடையூறு செய்கிறாள். எல்லாம் தாண்டி  மாடனுக்கு படையல் நாள் நெருங்குகிறது. சாமியாடி இல்லாத படையல் ஒரு படையலா?  சாமியாட  யாரேனும் கிடைப்பார்களா என தேட ,  ஒரு குப்பி சாராயத்துக்கு ,[சாமியாடி அல்ல அவர்]  ஒருவர் சாமியாட சம்மதிக்கிறார்.  அதிலிருந்து புதிய திட்டம் ஒன்று கிளைக்கிறது.

 

நாள் வருகிறது, சாமியாடி  சாமி வந்து ஆடுகிறார், அனைவருக்கும் அருள் வாக்கு சொல்கிறார்,  ஆடிக்கொண்டே ஏர்வாடி கிழவியை நெருங்குகிறார் ” இந்தா …. இந்தா ..கேட்டுக்கோ  இது மாடன் சொல்லு,  அடுத்த வருஷம் இதே நாலு, சிங்கக்குட்டி கணக்கா ஒரு ஆம்புளப்புள்ள பெத்துக்குவ போ…..”  ஊரே கூடி   ஒரே ஆரவாரம் செய்ய அன்றுடன் அடங்குகிறது கிழவி சேட்டை.

 

பொதுவாக  புனைவு அளிக்கும் பித்து ,போதும்  என தோன்றினால் அதிலிருந்து விலக ஏதேனும்  அ புனைவை வாசிப்பேன். காண்டீபம் அளித்த பித்தில் இருந்து வெளிவர வாசித்த நூல் இந்த வயல்காட்டு இசக்கி. ராப்பாடி ,பண்டாரம், தேவதாசி, குறவர்கள், நாட்டுப்புற தெய்வங்கள், சிற்ப்பங்கள், நாட்டார் கலைகள்,   நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்க்கை முறைகள், இவற்றில் நிகழும் மாற்றங்கள்  என   பலநூறு தகவல்கள்.கொண்டு   நமது வேர்களை நோக்கிய வித விதமான பாதைகள் ஊடான பயணம். அளித்த நூல்.  முதலில் நேர்காணல். அடுத்து ஆய்வுகள், மூன்றாவதாக அனுபவங்கள் என  நூலின் வைப்பு முறையை வாசிக்கையில் தலைகீழாக மாற்றிக்கொண்டால் , இணையற்ற வாசிப்பு இன்பம் கிடைக்கிறது.   சூழச் சூழ ஆசிரியர்கள் மத்தியில் ஒரு வாழ்வு.  ஆசிரியர் அ.கா. பெருமாள் அவர்களுக்கு என் வணக்கம்.

 

 

கடலூர் சீனு

 

பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்

அ.கா.பெருமாள், அசோகமித்திரன் -கடிதங்கள்

அ.கா.பெருமாள் காலச்சுவடு

அ.கா.பெருமாள்

சுசீந்திரம்

அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி

அ.கா.பெருமாள் விழா:கடிதங்கள்

அ.கா.பெருமாள் அறுபது

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடித உலகம்- கடிதங்கள்

$
0
0

vish

கடிதம் என்னும் இயக்கம்

அன்புள்ள ஜெ

வாசகர்கடிதம் என்பது வெறுமே ஒரு கடிதம் அல்ல. தீவிரவாசகர்கள் அந்த எழுத்தாளருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒரு சிறுபகுதியையே கடிதமாக எழுதுகிறார்கள். நான் உங்களிடம்பேசிக்கொண்டிருக்கிறேன் ஜெமோ என்பதுதான் கடிதங்களின் அடிப்படை. அதை நீங்கள் பதிலளிக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை

அதேபோல சிலசமயம் நாம் சொல்லவேண்டியதை தொகுத்து எழுதும்போது அது கடிதமாகிறது. நிறையசமையங்களில் நான் எழுதியதுமே எனக்கு தெளிவாகிவிடுகிறது. அதற்குப்பின்னால் நான் அதை அனுப்புவதில்லை. அதோடு அதையே வேறு எவரேனும் எழுதியிருப்பார்கள். அது நானே எழுதியதாக நிறைவு அடைவேன்

உங்கள் இணையதளம் ஒரு பெரிய விவாதக்களமாக உள்ளது. நான் நாளிதழ்களின் வாசகர்கடிதங்கள் உட்பட அனைத்து இடங்களையும் வாசிக்கிறேன். முகநூலையும் வாசிக்கிறேன். இவ்வளவுபெரிய விவாதம் தொடர்ச்சியாக பத்தாண்டுகளாக நடந்துவரும் தளம் வேறு எதுவுமே இல்லை. இதை நீங்கள் சொன்னதுபோல வெளியே இருப்பவர்களால் புரிந்துகொள்ளமுடியாதுதான்

ஆர் ராஜபாண்டியன்

***

அன்புள்ள ஜெ

கடிதங்கள் பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். என்ன ஒரு பொற்காலம் என்ற எண்ணம் வந்தது. எவ்வளவு பெரியவர்கள் ஏற்றதாழ்வில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அய்யனார் பௌத்தர் என்பவருக்கு சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களை பார்த்தேன். எவ்வளவு தீவிரமாக எழுதியிருக்கிறார். அவை அச்சில் வருமென்றே அவருக்குத்தெரிந்திருக்காது. அந்த அர்ப்பணிப்பையும் வெறியையும் இன்றுள்ளவர்களுக்கு புரிந்துகொள்ளமுடியாது. எதிலும் ஆர்வமில்லை. எங்குமே நிலைப்பதும் இல்லை. ஆகவே கேலியாக எதையாவது சொல்லிவிட்டுச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அந்த லட்சணம் அவர்களின் எழுத்திலும் வருகிறது. மிகச்சிலர் தவிர பெரும்பாலான இன்றைய எழுத்தும் முன்பு சாவி, குங்குமத்தில் வெளிவந்த சாஃப்ட் போர்ன் கதைகள்தான். தமிழில் ராஜேந்திரகுமார், புஷ்பாதங்கத்துரைக்குத்தான் வாரிசுகள் அதிகம். காரணம் அந்தச்சிற்றிதழ்சார்ந்த தீவிரம் அழிந்ததுதான்

மகேஷ்

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

கடிதங்கள் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் நான் மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டேன். அலைபேசி இல்லாத காலத்தில் நண்பர்களுக்கு வாழ்த்துமடல்களையும் உடல்நல விசாரணைக் கடிதங்களையும் மடித்து வைத்து அனுப்பும்போதும் எனக்கு வரும்போது ஆவலுடன் மடிப்பு பிரித்து பார்க்கும்போதும்  கொண்ட மனவெழுச்சியை அலைபேசி வந்தபிறகு இழந்துவிட்டேன் என நினைக்கிறேன்.

அப்போதெல்லாம் சிரத்தையெடுத்து பூவேலைப்பாடுகொண்ட ஓவியம் வரைந்து என் எல்லா பள்ளித்தோழிகளுக்கும் விழாக்காலங்களில் அனுப்புவேன். இப்போதோ அதெல்லாம் இல்லை. முகநூலில் இரண்டு வரிகளில் சம்பிரதாய வாழ்த்துக்களுடன் முடிவடைந்துவிடுகிறது. பொங்கல் தீபாவளி கிறிஸ்மஸ் நியூ இயர் என எந்த வாழ்த்துமடல்களையும் வாங்க இப்போது நான் கடைகளுக்கு செல்வதில்லை. தோழிகளுக்கு கடிதங்களே எழுதுவதில்லை. கடிதம் என்று நான் பல வருடங்களுக்கு பிறகு -அதாவது கல்லூரி முடித்து இருபது வருடங்களாகப் போகின்றது

எழுத ஆரம்பித்தது தங்களின் எழுத்தில் நான் மூழ்கியபோதுதான். சென்றவருடம் ஊமைச்செந்நாய் சிறுகதைத் தொகுப்பு வாசித்துவிட்டு எனக்கு தோன்றியதை எழுதியிருந்தேன். எனக்கு தாங்கள் பதில் கடிதம் இட்டதும் எனக்கு தலைகால் புரியவில்லை. பலவருடங்களுக்கு முன் அடைந்த அந்த மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு அதிகமானதொரு மகிழ்ச்சி. ஆனால் இது ஒரு வித்தியாசமான மகிழ்வுணர்வு. அறிவார்ந்த தளத்தில் இயங்கிவரும் ஒரு பேராளுமையின் கனிவான ஒரு ஓரவிழி என்னைத் தீண்டியதாக நினைத்து புல்லரித்துப் போனேன். ஊண் ஊக்கம் மறந்தேன். அறம், கொற்றவை, காடு, விஷ்ணுபுரம், ரப்பர் என ஆரம்பித்து வெண்முரசின் முதற்கனலுக்குள் நுழைந்து ஏழுமுரசங்கள் தாண்டி இப்போது காண்டீபம் வந்திருக்கிறேன்.

கிறிஸ்டி

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மன்மதன் -கடிதங்கள்

$
0
0

manma

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

மன்மதன் சிறுகதை அற்புதம். கிருஷ்ணன் பாத்திரத்துக்கு அந்த பெயரை வைத்தது தற்செயலா அல்லது நுட்பமா? மன்மத தகனம், அதாவது மன்மதனை சிவன் எரிப்பதற்கு முன்,  எரித்த பின் என்று, இரு நிலைகள். எரிப்பதற்கு முன்பு மன்மதன் காமத்தின் வடிவம். எரிந்த பின் தூய அன்பின் வடிவமாக (அரூபமாக) , கிருஷ்ணனின் மகனாக பிறக்கிறான்.

 

கிருஷ்ணன் பாத்திரம் கதையின் தொடக்கத்தில் காமத்தின் வடிவமாக வருகிறது. மல்லியும் ராஜுவும் தூய அன்பின் வடிவமாக வருகிறார்கள். அவர்களின் தூய அன்பை உணர்ந்த பின், கிருஷ்ணனின் புற  காமம் மெல்ல மெல்ல குறைந்து , எரிந்து தணிய , அக அன்பு வெளிப்படும் தருணத்தில் கதை முடிந்து விடுகிறது.  கிருஷ்ணனின் பாத்திரம் இந்த மாற்றங்களை காண்பிக்கும் பாலமாக மிளிர்கிறது.

 

கால நதியில் சன்னி லியோன் போன்ற காம ரூபிணிகள் தோன்றி கொண்டே இருக்கிறார்கள். மன்மதன்களும் விசிலடித்து அம்பு விட்டபடி துள்ளி திரிகிறார்கள். வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் , நமக்குள் இருக்கும் மன்மதனை தகனம் செய்ய வேண்டியிருக்கிறது . அதன் பிறகு தெரிவதெல்லாம் அன்பு அன்பு அன்பு மட்டுமே.

 

அன்புடன்,

ராஜா.

சென்னை.

 

அன்பு ஜெ,
வணக்கம்

.
நன்றிகள் பல தங்கள் “மன்மதன்” சிறுகதைக்கு.

என்ன அற்புதமான விவரணைகள்! பின்மதியப் பொழுதொன்றின் கூட்டமற்ற கோயிலை கண் முன்னே கொணர்ந்தது அற்புதம்.
“பொக்கணம்”  இக்கதையின் மூலம் மீண்டும் அறிந்த பழைய (!) வார்த்தை.   ஆண்டுகள் பல முன்னே, “தீட்சை ” பெற்ற உறவு தாத்தாக்களிடம் ஆசீர்வாதம் வாங்குகையில் காதில் விழுந்ததுண்டு.

கதையை படித்தபின் விவரணைகள் பல இருப்பினும்,  /தென்னை மரப்  பறவை காற்றில் சறுக்கி குளக்கரை மதிலில் அமர்வது/ மட்டும் மனதில் ஏனோ ரம்மியமாய்!    “சறுக்கி அமர்தல்” என்றுமே EFFORTLESS ஆக செய்யப்படுவது தானே!..கதையின் மையத்தை நீங்கள் கொணர்ந்தது போல..மல்லியே மன்மதனாகவும் ராஜூ ரதியாகவும்.கண்ணற்றவன் சிலையை விவரிப்பது உடலின்மையை உணர்த்தத்தானே..

இதை எழுதும் போதே, தங்கள் ஆந்திரப்  பயணக்கட்டுரை ஒன்று ஞாபகம் வந்தது, “ருத்ரம்மா” என்ற கோயில் மற்றும் சந்திக்க நேர்ந்த பெண்ணை பற்றியுமான கட்டுரை அது.கரிய அழகு தானே அங்கும்!

பயணக்கட்டுரைகளில் வரும் விவரணைகள் படிப்பவர்க்கு பயண நிகர் அனுபவம் தருபவை.ஆந்திர கோவில் பயண அனுபவத்தில், நிழலுக்கு தீபம் காட்டும் சாயா சோமேஸ்வர் கோவில் சிறு பையனை இன்றும் மறக்க முடியவில்லை.

அதே போல், சீனுவின் “வேல்நெடுங்கண்ணி”. மையம் வேறு எனினும் களம் ஒன்றானதால் ஞாபகம் வந்ததோ? காரணம்  தெரியவில்லை :)
ராஜாளி “சறுக்கி அமர்வதை”, என்றும் தாளப் பறப்பவை ஈடு செய்ய முடியாதல்லவே! (சீனு மன்னிக்க ..)

“எவ்வளவு முயலினும் புறத்தைக் கொண்டு அளக்க முடியாது.
புறத்தை விட அகப்பாய்ச்சல்  கொண்டவன் முழுமை நோக்கி  செல்லும் தூரம் அதிகம்” இதுவே நான் பெற்றது இக்கதையில்.

நன்றி தங்கள் நேரத்திற்கும் அன்புக்கும்

 

ரமணா சந்துரு

மன்மதன் [சிறுகதை]
மன்மதன் கடிதங்கள்
மன்மதன் – ஒரு கடிதம்
மன்மதனின் காமம்

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குருவாயூரும் யேசுதாஸும்

$
0
0

yesu

 

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?

 

அன்புள்ள ஜெ..

 

 

 

உரிய மாண்பை கடைபிடிப்பதாக உறுதியளித்தால் மாற்று மதத்தினருக்கும் ஆலய அனுமதியில் சிக்கல்வராது என சொல்லி இருந்தீர்கள்..  ஆனால் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பது நெருடல். என் கேள்வி அது அல்ல

 
சமீபத்தில் அவர் சபரிமலை சென்றதையும் அவருக்கு கிடைத்த பக்திபூர்வ உணர்வு ரீதியான மரியாதையையும் பலர் வாட்சப்பில் ஷேர் செய்து கொண்டாடினர்சங்கீத நிகழ்ச்சிகளில் எத்தனையோ பேர் வந்து போனாலும் ஜேசுதாஸ் பல வருடஙகளாகபெற்று வரும் மக்கள் ஆதரவு வேறு யாரும் பெற்றிராதது என இசை ஆர்வலர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.. தமிழகத்தில் அவருக்கு இருக்கும் இந்த செல்வாக்கால்தான் சில மலையாளிகள் அங்கு காழ்ப்புணர்ச்சியுடன் நடத்துகிறார்களா என அறிய விழைகிறேன்..

 
ஒரு கூட்டத்தில் விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைக்குமாறு சொன்னபோது அமைச்சர் ஒருவர் அது தன் மதத்துக்கு எதிரானது என சொல்லி மறுத்துவிட்டார்.. அதை எதிர்த்து வெளி நடப்பு செய்தவர் ஜேசுதாஸ். அதை தமிழ் நாட்டில் பிரமிப்பாக பார்த்தனர்…  கேரளாவின் எதிர்வினை தெரியவில்லைஅவரை சில கேரள ஆலயங்களில் அனுமதி மறுக்க காரணம் தனிப்பட்ட பிரச்சனைகள் என யூகிக்கிறேன்அவரை கேரளாவில்எப்படி பார்க்கிறார்ககள் என அறியவிழைகிறேன்

 

 

பேரன்புடன்
பிச்சை

 

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

 

யேசுதாஸ் குருவாயூர் செல்வதைப்பற்றிய சர்ச்சை எளிதானது அல்ல. அங்கே சட்டையைக் கழற்ற மறுத்தமைக்காக ஜனாதிபதியை உள்ளே செல்ல அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

 

கேரள ஆலயங்களுக்கும் தமிழக ஆலயங்களுக்குமுள்ள வழிபாட்டுமுறை வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும். தமிழக ஆலயங்கள் அர்ச்சனை முறை வழிபாடு கொண்டவை. நீராட்டுதல். மலர் அளித்தல், ஆடை அணிவித்தல், தூபம் காட்டுதல், சுடர்காட்டுதல் , விசிறுதல் உட்பட 16 வகை உபச்சாரங்கள் வழியாக இறைவனை வழிபடுகிறார்கள். இவை ஓர் அரசனுக்குச் செய்யும் பணிவிடைகள் போன்றவை.

 

இவை ஒருவகையான உளஉருவகங்கள். இவற்றை பாவபக்தி என்கிறார்கள். இவற்றுக்கான ஆகமநெறிகள் இங்குள்ளன. பொதுவாக கூடி வழிபடுதல் என்பதே இவற்றின் முறை.இவற்றைச் செய்வதனூடாக பக்தன் அடையும் உளநெகிழ்வும் நிறைவுமே முதன்மையானது என கொள்ளப்படுகிறது. பக்தியில் நெகிழ்ந்து கண்ணப்பன் எச்சிலை அளித்ததும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது பக்திமரபின் நம்பிக்கை.

 

கேரள ஆலயங்கள் முதன்மையாக தாந்திரீக வழிபாட்டுமுறை கொண்டவை. அவை முன்பு இருந்த தாந்த்ரீக மதங்களில் இருந்து வந்த சடங்குகள். அந்த தாந்த்ரீக மதங்கள் அவற்றுக்கும் முன்பிருந்த பழங்குடிச்சடங்குகளில் இருந்து அவற்றை கொண்டிருக்கலாம். பல்வேறுவகையான உருவக, குறியீட்டுச் செயல்கள் என இவற்றைச் சொல்லலாம். படையல், பலி, மந்திரம், சைகைகள் என பலவகையான செயல்பாடுகள் இவற்றில் உண்டு.

 

இவற்றின் உருவகமே வேறு. ஒரு மருந்து உடலில் எதிர்வினையாற்றுவதுபோல அவை புடவியின்பெருநெசவில் மறுவிளைவை உருவாக்குகின்றன என்பது அவற்றின் நம்பிக்கை. அங்கே பக்தனே இருக்கவேண்டிய அவசியமில்லை.ஆகவே சடங்குகளில் மிகச்சிறிய மாற்றமோ சமரசமோகூட செய்யமாட்டார்கள்

 

இந்தப்பிரிவினை முழுமுற்றானது அல்ல என்பதையும் சொல்லிவிடுகிறேன். இங்குள்ள பாவபக்தி சார்ந்த ஆலயங்களிலும் தாந்த்ரீகச் சடங்கு அம்சங்கள் உண்டு. அங்குள்ள தாந்த்ரீகச் சடங்குகள் சார்ந்த ஆலயங்களிலும் பாவபக்திக்கான இடம் உண்டு. நான் ஓங்கிநிற்கும் கூறுகளைப்பற்றிச் சொல்கிறேன் ராஜராஜசோழன் காலத்தில் கேரள ஆலயங்களில் தமிழகத்திலுள்ள ஆகமபூசனைமுறை கட்டாயமாக அமல் செய்யப்பட்டது. கேரளம் சோழர் ஆட்சியிலிருந்து மீண்டபோது தாந்த்ரீக முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால் பக்திமுறை ஓரளவு நீடித்தது.

 

பக்தி ஒரு பாவம் என்பதனால் சமரசங்களுக்கு இடமுள்ளது. தாந்த்ரீகமுறை என்பது ஒரு குறியீட்டுச்செய்ல். சமரசம் என்றால் அதன் குறியீட்டுத்தன்மையே இல்லாமலாகிவிடும்.   ஆகவே இங்குள்ள சமரசங்கள் கேரள ஆலயங்களில் கிடையாது. நெறிகள் பெரும்பாலும் மாற்றமில்லாமல் கறாராகவே பேணப்படுகின்றன. ஒரு பொருளுக்குப் பதில் இன்னொரு பொருள் ஏற்கப்படுவதில்லை. ஒரு நாளுக்குப்பதில் இன்னொரு நாள் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. ஏன், பெரும்பாலான ஆலயங்களில் பல நூற்றாண்டுகளாக ஒரு சில குடும்பங்களே அர்ச்சகர்கள். அவர்களுக்கு மிகக்கடுமையான நோன்புகளும் குலநெறிகளும் உண்டு. பிராமணர்களோ வைதிகர்களோ ஆயினும் இன்னொரு குடும்பத்தினர் பூசைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆலயங்களுக்கு அவற்றுக்கே உரிய பூசைமுறைகளும் தனிச்சடங்குகளும் உண்டு.

 

[குருவாயூர் அம்பல நடையில்

ஒருதிவசம் ஞான் போகும்

கோபுரவாதில் துறக்கும்

ஞான் கோபகுமாரனை காணும்]

 

யேசுதாஸ் 1960களில் குருவாயூருக்குள் நுழைந்து வழிபட விழைந்தபோது தன்னை இந்து வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை கொண்டவர் என்றும் ஆலயச்சடங்குகளுக்கு ஆட்படுவதாகவும் அறிவிக்க மறுத்தார். அதற்கான தேவை இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று அவர் சொன்னார். அதற்கு அன்று அவருக்கு அவருடைய திருச்சபை அளித்த அழுத்தம் ஒரு காரணம். அவர் தன் பிள்ளைகளை ஞானஸ்நானம் செய்விக்கவேண்டியிருந்தது. அதுவே அன்றைய விவாதம்.

 

குருவாயூர் ஆலயம் தன் சடங்குகளை விட்டுக்கொடுப்பதில்லை. திருச்சபையும் கறாராக இருந்தது. அதுசார்ந்த பல விவாதங்கள் அன்று நடந்துள்ளன. பொதுவாக கேரள மக்கள், அறிவுஜீவிகளின் ஆதரவு யேசுதாஸுக்கே இருந்தது

 

ஆனால் சில ஆண்டுகளுக்குப்பின் யேசுதாஸ்  இந்து வழிபாட்டுமுறைகளிலும் நம்பிக்கை கொண்டவராக அறிவித்தார். திருச்சபையின் இறுக்கமும் தளர்ந்தது. அவர் கத்தோலிக்கராக, யேசுதாஸாகவே , நீடிக்கிறார்.  ஆனால் ஆலயச்சடங்குகளுக்கு உடன்படுவதாக அறிவித்தபின் அவர் ஆலயத்தில் முதன்மைவிருந்தினராகவே வரவேற்கப்பட்டார். பலமுறை ஆலயத்திற்குள் சென்றிருக்கிறார் என்பது மட்டும் அல்ல, பாடவும் செய்திருக்கிறார்

 

கேரளத்தில் யேசுதாஸ் ஒரு பண்பாட்டு அடையாளம். மதங்களைக் கடந்த பொதுச்சின்னம். ஓணத்துக்கும் யேசுதாஸுக்கும் மதமில்லை என்று ஒரு பழைய சொற்றொடர் உண்டு. யேசுதாஸ் குருவாயூருக்குள் அனுமதிக்கப்படாதபோது கேரள மக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் யேசுதாசையே ஆதரித்தனர். ஆனால் கேரள ஆலயங்களைப் பொறுத்தவரை அவ்வாலயத்திலுள்ள தந்த்ரிகள் என்னும் குழுவினரின் சொல்லே இறுதியானது. நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுதான் அங்குள்ள வழிபாட்டுமுறையின் அடிப்படை.

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அஞ்சலி வெ.அலெக்ஸ்

$
0
0

IMG_2288

 

அலெக்ஸ் என் வீட்டில் தங்கியிருக்கையில் நள்ளிரவில் அருண்மொழி மேலே ஏறி வந்து எங்களிடம் “சத்தம் கம்மியா சிரிங்க… பக்கத்துவீட்டிலே என்ன நினைப்பாங்க?” என்று சொல்லிக்கொண்டிருப்பாள். எங்கள் வயதுகள் இணையானவை. உள்ளங்களும். அவருடைய இயல்பு எப்போதுமே உற்சாகமானது என்றாலும் ஒரு பெரியமனிதத் தோரணை உண்டு. அது அரசியலில், சமூகப்பணியில் அவர் கொண்டிருந்த அனுபவம் அளித்த குணம். அதை முழுமையாகக் கழற்றிவிட்டுத்தான் என்னுடன் இருப்பார்.அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு அவர் ‘அலெக்ஸண்ணன்’ ஆகவே மரியாதையான தூரம். என்னிடம் அந்த விலக்கம் இருக்கவில்லை. அனைத்திலும் நாங்கள் சமானமானவர்கள் என்பது காரணமாக இருக்கலாம். ஐம்பது வயதுக்குமேல் அப்படிச் சில நட்புகள் தேவைப்படுகின்றன- சேர்த்து கொண்டுசெல்வதற்கு

 

குறும்பாக ஏதாவது பேசும்போது புருவங்கள் நெளிய ஆரம்பிக்கும். சிரிக்கையில் இயல்பாகக் கண்களைச் சிமிட்டுவார். பேச்சில் மெல்லிய திக்கல் அவருக்குண்டு. அத்துடன் கணக்குவழக்குடன் பேசும் வழக்கமும். ‘இந்த விஷ்ணுபுரம் ஃபங்ஷன் எம்பத்தஞ்சு சதவீதம் வெற்றீண்ணு சொல்லலாம்” என்று ஆரம்பிப்பார். “பாஸிட்டிவா சொல்லணும்னா பதினெட்டு பாயிண்ட். நெகட்டிவா சொல்லணும்னா நாலு” என அடுக்குவார். மேடையில் குடிநீர் இல்லை. அமர்ந்திருந்தவர்களின் தலைகளால் பின்னாலிருந்த பேனர் மறைக்கப்பட்டது. பேசுபவர்கள் எழுந்துசெல்லும் வரிசைப்படி அமரவில்லை என பட்டியலிடுவார். செல்வேந்திரன் “ஜே, இந்தவாட்டி நம்ம நிகழ்ச்சி எழுவத்திமூணு புள்ளி எட்டுமூணுநாலு சதவீதம் வெற்றிண்ணு அலெக்ஸண்ணன் சொல்லிட்டார்” என்று ஒருமுறை சொன்னார்

 

அலெக்ஸுக்குள் ஒரு ’மல்லு’ உண்டு. அவர் பிறந்து வளர்ந்தது கோழிக்கோட்டில். அவர் அப்பா அங்கே ஆலைத்தொழிலாளியாக இருந்தார். ஆகவே காரசாரமில்லாத, எங்கும் எதிலும் தேங்காய் என்னும் கொள்கைகொண்ட, கேரளச்சமையல் அவருக்குப் பிடிக்கும். அருண்மொழியின் சமையல் கேரளபாணி. எனேன்றால் அவள் என்னை திருமணம் செய்தபின்னர்தான் சமைக்கக் கற்றுக்கொண்டாள். என்னுடன் தங்கியிருக்கையில் நாங்களே பலசமயம்  ‘கஞ்சி’ ‘சம்மந்தி’ என சமைத்துக்கொள்வோம். சிறந்த மல்லு உணவு மல்லு அல்லாதவர்களால் தொட்டுப்பார்த்தாலொழிய கண்டுபிடிக்கமுடியாதபடி நிறம் மணம் அற்றதாக சாத்வீகவடிவாக இருக்கும். மீன்குழம்பேகூட.

 

கேரளத்தின் அனைத்துமே அலெக்ஸை மலரும் நினைவுகளுக்குக் கொண்டு சென்றன. திருவனந்தபுரத்தில் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் மாபெரும் அரிவாள் சின்னங்கள், லட்டுலட்டான எழுத்துக்கள். வேட்டியை தூக்கிக்கட்டி குடையை சட்டைக்காலரில் தொங்கவிட்டு செல்லும் அம்மாவன்கள். அனைத்தையும் விட கூந்தல் விரித்திட்ட பெண்கள். திருவனந்தபுரம் திரைவிழாவில் நானும் அவரும் நகரில் திளைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அலெக்ஸ் லாலேட்டனை விரும்பவில்லை. அதில் எனக்கு வருத்தம். ஆனால் என்னைப்போலவே யேசுதாஸின் பக்தர். பழம்பொரியும் பிடிக்கும்

 

அசாதாரணமான பொறுமையும் கனிவும் கொண்டவர். அதை அவர் கால்நூற்றாண்டுக்கால சமூகப்பணியிலிருந்து ஈட்டிக்கொண்டார். இச்சமூகத்தின் சிறுமைகளிலிருந்து சினம் கொண்டு எழுந்தவர். எப்போதும் அந்த இலக்கு அவரிடமிருந்தது. ஆனால் தனிப்பட்டமுறையில் அந்த சினம் எழுவதேயில்லை என்பதை வியப்புடன் கண்டிருக்கிறேன். இரு தருணங்கள் நினைவிலெழுகின்றன.

 

ஒருமுறை மதுரையில் என் பழைய நண்பர் ஒருவர் எங்கள் அறைக்கு வந்தார். கீழவளவு பற்றி பேச்சு வந்ததும்  அரசியல் பேசத்தொடங்கி விரைவிலேயே சாதிப்பிரச்சினைக்குச் சென்றார். அவர் தமிழ்த்தேசியம், இயற்கைவேளாண்மை என கலவையான கடும்போக்குகள் கொண்டவர். கூடவே இடைநிலைச்சாதி மேட்டிமைநோக்கும். பேச்சில் விஷமுட்கள் எழுந்துவந்தபடியே இருந்தன எப்படி நிறுத்துவதெனத் தெரியவில்லை. அலெக்ஸ் அவரிடம் விவாதிக்காமல் தவிர்க்க ஆரம்பித்தார். கிருஷ்ணன் கண்கள் சிவக்க கிட்டத்தட்ட சண்டைபோடத் தயாரானார்.

 

ஒருவழியாக அவர் சென்றதும் கிருஷ்ணன் என்னிடம் கையை நீட்டி “நீங்க சொல்லியிருக்கணும் சார், அவர் உங்க கெஸ்ட்” என்றார். நான் அலெக்ஸிடம் மன்னிப்புகோரினேன். “அதெல்லாம் ஒண்ணுமில்லை ஜெ. இதுமாதிரி எவ்ளவோ பாத்தாச்சு. இது ஒரு நோய். பேஷண்ட் மேலே கோபமோ அருவருப்போ வர்ரதில என்ன அர்த்தம்? சின்னவயசுன்னா குணப்படுத்த முயற்சிபண்ணணும். வயசானவர்னா விட்டுடணும்… “ என்று இயல்பான சிரிப்புடன் சொன்னார்.

 

பிறிதொரு முறை மூணாறில் எங்கள் நிகழ்ச்சி ஒன்றில் கூட்டமாக நடைசெல்லும்போது  எங்கள் விருந்தினர் ஒருவர் திருமாவளவனை அவன் இவன் என பேசத்தொடங்கி பேச்சு கட்டுவிட்டுப்போக நேரடியாகவே  ‘நீங்கள்லாம்…” என ஆரம்பித்தபோதும் அலெக்ஸிடம் அதே  நிதானத்தைக் கண்டேன். அந்த விருந்தினர் பிராமணர்.  “என்ன இருந்தாலும் பெரிய ஸ்காலர். ஸ்காலர்களுக்கு சில விஷயங்கள் உறுதியா பதிஞ்சிரும். அவங்கள மாத்த முடியாது. நாம அறிவ மட்டும் எடுத்துக்கிடவேண்டியதுதான்” என்றார்.

 

வேறொரு தருணத்தில் அவரிடம் பேசிய ஒருவர் அலெக்ஸின் நண்பரான இளம் தலித் ஆய்வாளர் ஒருவரின் நூலில் “பிராமணர்” என்ற சொல் இருப்பதைச் சுட்டிக்காட்டி  அது “பார்ப்பனர்” என்றுதான் இருக்கவேண்டும், அது பெரியாரின் வழி என்று ஆவேசமாகப் பேசியபோது புருவம் நெளிய “அதை நீங்க சொல்லுங்க. உங்களால மேலயும் கீழயும் பாத்து காறித்துப்பமுடியும். நாங்க இழிவ பாத்தாச்சு. அதனால எந்த மக்களையும் இழிவாப் பேசமாட்டோம்” என கறாரான குரலில் சொன்னார். “நமக்கு எந்த தனிமனிதரும் எதிரி கிடையாது” என்று அவர் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன்.

 

அறிவுத்துறையில் ஒரு பதிப்பாளராகவே அலெக்ஸ் இன்று அறியப்படுகிறார். இனி அறிவுலக வரலாற்றில் அவருடைய இடம் தலித் ஆய்வுநூல்களை வெளியிட்டவர் என்பதே.அவர் பெயரில் நூல் ஏதும் இல்லை. ஆனால் உண்மையில் அவர் ஓர் ஆய்வாளர். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆவணங்களில் அலெக்ஸ் அளவுக்கு வாசிப்புள்ள சிலரையே சந்தித்திருக்கிறேன். மூல ஆவணங்களைத் தேடித்தேடி சேகரித்து முழுமையாகவே வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்கிக்கொள்வார்.சின்னச்சின்ன அட்டைகளாக சீராக அடுக்கிவைத்துக்கொள்வார்.சற்றும் சுவாரசியமில்லாத கணக்குகள், சர்வே விவரணைகளை எல்லாம் நாட்கணக்காக அமர்ந்து வாசிக்கும் அவருடைய பொறுமையையும் ஆர்வத்தையும் கண்டபின்னர்தான் நேரடி வரலாற்றாய்வெல்லாம் என்னைப்போன்றவர்களுக்குச் சரிவராது என்று உணர்ந்தேன்.

 

அலெக்ஸ் பஞ்சமி நிலம் உருவாக காரணமாக இருந்த பிரிட்டிஷ் நில ஆய்வாளரும் அதிகாரியுமான ட்ரெமென்ஹீர் [  J. H. A. Tremenheere ] குறித்தும்  1876ன் பஞ்சங்களில் தலித்துகளின் இடப்பெயர்வு குறித்தும் இரு நூல்களை அவரே எழுதவேண்டுமென எண்ணியிருந்தார். அவற்றை மொழியாக மாற்றுவதில் நான் உதவுவதாக எங்களுக்குள் ஒப்பந்தம் இருந்தது. கீழைநாடுகளின் சமூகஅரசியலில் தியோசஃபிக்கல் சொசைட்டியின்  பங்களிப்பு குறித்தும் விரிவான வாசிப்பும் பல முக்கியமான அவதானிப்புகளும் கொண்டிருந்தார். ஒரேசமயம் அடித்தள மக்களின் எழுச்சிக்கும் இனவாத அரசியலின் தொடக்கத்திற்கும் அவர்கள் எப்படிக் காரணமாக இருந்தார்கள் என அவர் விளக்குவதுண்டு

 

அலெக்ஸ் மேடையில் அல்லது நேர்ப்பேச்சில் அறிஞராக, ஆய்வாளராக தன்னை முன்வைக்கவே இல்லை. என்னுடன் தனிப்பட்ட பேச்சில் வெளிப்பட்ட அலெக்ஸை பொதுவாக அறிந்திருக்கமாட்டார்கள். தான் ஆய்வாளராக முதிரவில்லை என அவர் எண்ணினார் என நினைக்கிறேன். அரிதாக சில மேடைகளில் ஆழமான சிற்றுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

 

அலெக்ஸின் எழுத்து பிரசுரம் எம்.சி. ராஜா பற்றிய நூலை வெளியிட்டது தலித் ஆய்வுச்சூழலில் ஒரு பெரிய முன்னெடுப்பு.பொதுவான தலித் அரசியல்வரலாற்றில் மறைந்துபோன முன்னோடிகளான ஆல்காட், ராஜா போன்றவர்களை முன்னிலைப்படுத்தும்பொருட்டே அவர் பதிப்பாளராக ஆனார். [அதற்கிணையான முன்னெடுப்பு என்றால் சுவாமி சகஜானந்தரின்  நூல்களை ரவிக்குமார் தொகுத்ததைச் சொல்லவேண்டும்]. ஸ்டாலின் ராஜாங்கம் மறைந்துபோன தலித் செயல்பாட்டாளர்களை ஆய்வுசெய்து முன்னிலைப்படுத்தும் எழுத்துக்கள் அப்போக்கின் தொடர்ச்சியே

 

தமிழகத்தில் தலித் அரசியலுக்கும் சமூக எழுச்சிக்கும் பலர் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். முன்னோடிகளாகச் சென்று வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களில் தலித்துக்களும் அல்லாதவர்களும் உண்டு. ஆனால் அவர்களை சமகால அரசியல் கோணங்களைக்கொண்டே மதிப்பிடுவது நிகழ்ந்தது. உதாரணமாக, எம்.சி.ராஜா அவர்கள் அம்பேத்கருக்கு எதிரான அரசியல் கொண்டவர். ‘நான் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக இறப்பேன்’ என அறிவித்தவர். அறுபதுகள் முதல் அம்பேத்கரை முதன்மையாகக் கொண்ட தலித் அரசியல் உருவானபோது ராஜா மறக்கப்பட்டார்.எழுபதுகளில் அவ்வரசியல் தீவிரமடைந்தபோது ராஜா துரோகி என்றே பார்க்கப்பட்டார்

 

அலெக்ஸ் எம்.சி.ராஜாவை மீட்டுப் பதிப்பித்தபோது இந்த எதிர்ப்புகளும் கசப்புகளும் எழுந்து வந்தன. அவருடைய வரலாற்றுநோக்கின் முதிர்ச்சிதான் அதைக் கடந்துசெல்ல வைத்தது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிகழ்ந்த கூட்டத்தில் பேசும்போது “வரலாற்றில் தப்பு சரிகளை இங்கிருந்து நாம் சொல்லமுடியாது.  அன்றைய சூழல் முழுமையாக நமக்குத் தெரியாது. வரலாறு ஒரே போக்காக செல்வதும் இல்லை. அது முரண்பட்டும் முட்டிமோதியும்தான் போகும். வரலாற்று மனிதர்களை அவர்களின் தியாகம் ஆளுமை பங்களிப்பு ஆகியவற்றை வைத்து மட்டும்தான் மதிப்பிடவேண்டும். நம் அரசியலை வைத்து அல்ல. நாமெல்லாம் சிறிய மனிதர்கள். ராஜா சரித்திரபுருஷர்.  வரலாறு அவரை எங்கே வைக்கும் என்று நாம் சொல்லிவிடமுடியாது. நம் பணி வரலாற்றை ஆராய்ந்து பாகுபாடில்லாமல் பதிவுசெய்வது. நம் முன்னோடிகளை மறக்காமலிருப்பது” என்றார்

 

தமிழகத் தலித் அரசியலில் வெளியே இருந்து ஏற்றிவைக்கப்பட்ட திராவிட இயக்கப்பார்வையால் கணிசமான முன்னோடிகள் ஒதுக்கப்பட்டு மறைந்தனர். சகஜானந்தர், ஆனந்தத்தீர்த்தர், ஜான்ஜோசப் போன்றவர்கள் உதாரணம். அவர்கள் காங்கிரஸ்காரர்கள். வாழ்க்கையை தலித் பணிக்காக அர்ப்பணித்தவர்கள்.  அவர்களை மீட்டெடுத்து நிறுத்தும் பணி தலித் ஆய்வாளர்களுக்கு உண்டு என அலெக்ஸ் நினைத்தார். அ.மார்க்ஸ் ஒருமுறை அய்யன்காளி இந்து மதத்தை உதறவில்லை, ஆகவே அவரை தலித் தலைவராக ஏற்கமுடியாது என எழுதியிருந்தார். அலெக்ஸ் ஏளனச்சிரிப்புடன் “தலித் தலைவர் யார்னு இவர் தீர்மானிப்பார்னு நினைக்கிறார் பாருங்க, அதான் தலித்துக்கள் எதிர்கொள்ளவேண்டிய பெரிய சிக்கல். தலித்துக்களுக்கு தங்களுக்கு பணியாற்றியவர் யார்னு கண்டுபிடிக்கத்தெரியாதா என்ன?” என்றார்

 

அய்யன்காளியின் வரலாறு நிர்மால்யாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழினி வெளியீடாக வந்தபின் மறுபதிப்பு வரவில்லை. அலெக்ஸ் இறுதியாக முடித்த பணி என்பது அதை விரிவான மறுபதிப்புக்காகத் தயாரித்ததுதான். நீண்டபயணங்கள் செய்து ஏராளமான புகைப்படங்களையும் ஆதாரங்களையும் சேகரித்து பெரிய ஆய்வுப்பதிப்பாகக் கொண்டுவருவதாக இருந்தார். சென்ற ஆண்டே அச்சுக்குச் சென்றுவிடும் என்றார். நோய்ப்படுக்கையிலும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார்

 

இலங்கையின் மலையகம், மலேசியாவின் தோட்டக்காடு பகுதிகளிலிருந்து எழுதப்பட்ட தலித் இலக்கியங்களை ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பிக்க எண்ணியிருந்தார். மலையக இலக்கியம் சார்ந்து ஆண்டனி ஜீவா உள்ளிட்டோரின் ஆக்கங்களை ஆய்வுக்குறிப்புகளுடன் செம்மைசெய்துமிருந்தார். பனைகுறித்த ஒரு நூலும் வெளியிடுவதாக இருந்தது. என் வெள்ளையானை மறுபதிப்பும் ராய் மாக்சத்தின் உப்புவேலி மறுபதிப்பும் வெளிவரவிருந்தன

 

நான் அலெக்ஸை முதலில் சந்திப்பது மதுரைப்புத்தகக் கண்காட்சியில். ஒரு சம்பிரதாயமான அறிமுகம். அன்று அலெக்ஸ் என்னை ஒரு  ‘பிற்போக்கு’ ஆளாக அவர் நண்பர்களிடமிருந்து அறிந்திருந்தார்.அவர் வெளியிட்ட தலித் ஆய்வுநூல் வரிசைக்கு நான் எழுதிய மதிப்புரைகளை கண்டபின்னர் தொடர்பு கொண்டு மேலும் நூல்களை அனுப்பினார். அவ்வாறுதான் ஒரு நட்பு உருவாகியது. ஓரிரு மாதங்களிலேயே அணுக்கமானவர்கள் ஆனோம். தினமும் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் நெருக்கம் வந்தது. .

 

“நான்லாம் பிற்போக்குல்ல” என்று நான் அடிக்கடி கேலியாகச் சொல்வேன். “நீங்க அப்டியே இருங்க ஜெ. ஒடிக்கிட்டே இருங்க. உங்க கான்ஷியஸை மட்டும் கவனிச்சுக்கிடுங்க. நிலைபாடே வேண்டாம்….உள்ள இருந்து நீங்க எது சொன்னாலும் அதுக்கு மதிப்பிருக்கு. சரியா தப்பான்னு நூறு ஆண்டு தாண்டாம சொல்ல முடியாது. நீங்க ஆர்ட்டிஸ்ட்” என்பார்.

 

அலெக்ஸ் நல்ல இலக்கியவாசகர் அல்ல. சோவியத் நாவல்கள் சிலவற்றை வாசித்ததை விட்டால் பெரிதாக இலக்கியத்தை அணுகியதில்லை. தமிழில் எழுதப்பட்ட தலித் படைப்புக்களைக் கூர்ந்து வாசித்திருக்கிறார். அவருடையது தகவல் சார்ந்த ஆய்வுமுறை வாசிப்பு. ஆனால் வழக்கமான இடதுசாரிகளுடைய இலக்கிய அணுகுமுறை அல்ல அவருடையது. அவருடைய நோக்கு இலக்கியவாதியின் தனித்த தேடலை, அலைக்கழிப்புக்களை, அசட்டுத்தனங்களையும்கூட அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருந்தது

 

நான் நடத்திய பெரும்பாலான இலக்கியச் சந்திப்புகளில் அலெக்ஸ் பங்கெடுத்திருக்கிறார். காரைக்குடி விஷ்ணுபுரம் ஆய்வுக்கூட்டத்திற்குத்தான் முதன்முதலாக வந்தார். “நல்லா நுணுக்கமா ஆராயறாங்க” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். “ஆனா டிஸ்கஷனுக்கு ஒரு மெதடாலஜி இல்லை”  அதாவது எழுபத்தாறு மதிப்பெண். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் எல்லா நண்பர்களிடமும் அவருக்கு அணுக்கமிருந்தது.

 

அலெக்ஸ் சர்க்கரைநோய் கொண்டிருந்தார். அது அவருடைய பாரம்பரியம் என நினைக்கிறேன். அவருடைய தந்தைக்கும் அது இருந்தது, அவர் இளமையிலேயே மறைந்தார். உடல்நலத்தைக் கவனிக்கும் வழக்கம் இன்றி எப்போதும் தன் பணிகளுக்குப்பின்னால் ஓடுவது அலெக்ஸின் இயல்பு. சர்க்கரை நோய்க்கு நாட்டுப்புற மருத்துவம் நல்லது என்ற நம்பிக்கையும் இருந்தது.ஒருமுறை அவருடைய பார்வையில் சிக்கல் வந்தபோது சர்க்கரை இருக்குமோ என சந்தேகம் வந்து நான் திரும்பத்திரும்ப டாக்டரிடம் செல்லும்படி வற்புறுத்தினேன். அவ்வாறுதான் அலெக்ஸ் மருத்துவம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் பிந்திவிட்டது. சிலமாதங்களிலேயே சிறுநீரகம் பழுதானது

 

சென்ற ஆண்டு வேலூரில் அவர் சிகிழ்ச்சையில் இருக்கையில் சென்று பார்த்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதே உள்ளுணர்வு அவர் கடக்கமாட்டார் என்று சொல்லிவிட்டது. அந்த நோயுற்ற அலெக்ஸ் என் நெஞ்சில் இருப்பதை நான் விரும்பவில்லை. அந்த தோற்றத்தை என்னால் கடக்கவும் முடியவில்லை. இத்தனைக்கும் அன்று மிக உற்சாகமாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம்.என் வாசகரான ஒரு மருத்துவ ஆய்வாளர் வந்து முக்கியமான செய்திகளைச் சொன்னார்.

 

இறுதியாக பேசும்போது அலெக்ஸ் “ஜே எழுத்துக்கு ஒரு அலுவலகம் மதுரையிலே தொடங்கணும்னு நினைக்கிறேன். எடம் பாக்கணும். நீங்க வந்து திறந்து வைக்கணும்… புக்கெல்லாம் வைக்க எடம் பாக்கணும்” என்றார். அப்போது நினைவுத்தொடர்ச்சி இல்லாமலாகிவிட்டிருந்தது. டயாலிஸிஸ் செய்வதன் நோய்த்தொற்று உடலை வீழ்த்திக்கொண்டிருந்தது.உடல் சோர்ந்தாலும் உள்ளூர தன் பணியில் முன்னால்சென்றுகொண்டே இருந்தார் என நினைக்கிறேன்

 

ஒரு முறை மொழிசார்ந்து  விவாதம் ஒன்று எழுந்து நாலுபக்கமும் வசை சூழ்ந்தது. அவருடைய அரசியல்தரப்பிலிருந்தே என்னை வசைபாடினர். அலெக்ஸ் என்னிடம் ”ஜாலியா இருங்க… இது என்ன வசை? இதவிட நல்ல மொட்டைவசை எல்லாம் நமக்கு வந்திருக்கு” என்றார். ”அடி வந்தா?” என்றேன். “:சேந்து வாங்கிகிடுவோம் ஜெ. நாலஞ்சு அடிய நான் வாங்கிக்கறேன், கேரண்டி” என்றார்.

 

“நான் என்ன பண்ணினா என்னை நீங்க விட்டுட்டு போய்டுவீங்க?” என்று கேட்டேன். வேடிக்கைதான் என்றாலும் அன்று என் உள்ளத்தில் அந்தக் கேள்வி இருந்துகொண்டிருந்தது. ஏனென்றால் நெடுங்காலம் நண்பர்களாக, அணுக்கமான வாசகர்களாக இருந்தவர்கள் அவர்களின் அரசியல், சாதி இரண்டையும் நான் விமர்சிக்கிறேனோ என ஐயம் வந்ததுமே வெட்டிக்கொண்டு விலகுவதை, எதிரிகளாகி வெறுப்பும் ஏளனமும் செய்வவதை அன்று அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தேன். “என்னதான் செஞ்சாலும் அது இனிமே நடக்கும்னு தோணலை…” என்று அலெக்ஸ் சிரித்தபடிச் சொன்னார். உண்மையில் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். அவர் கைகளைப்பற்றிக்கொண்டேன்.

 

அலெக்ஸ் மறைந்துவிட்டார். விட்டுவிட்டுப் போகவில்லை.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்

$
0
0

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த எழுத்து பிரசுரம் வெ.அலெக்ஸ் (வெள்ளை யானை, அயோத்திதாசர் நூல்களின் பதிப்பாளர் ) இன்று காலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் .

 

அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 3.30 மணிக்கு மதுரை  பசுமலை சி எஸ் ஐ தேவாலய வளாகத்தில் நடைபெறும்.   வெ.அலெக்ஸ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆலய அனுமதி -கடிதங்கள்

$
0
0

index

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?(http://www.jeyamohan.in/101766#.WakeUrIjHIU) என்ற கேள்விக்கு உங்கள் பதிலைப் படித்தேன். இதை எந்த மனநிலையில் நீங்கள் எழுதினீர்கள் என்று தெரியவில்லை. உங்களிடம் இருந்து இவ்வளவு ஒரு தலை பட்சமான பதில் வந்தது வருத்தத்திற்குரியதுதான். ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அதற்கான காரணங்களை சப்பைக்கட்டு கட்டுவது போலத்தான் தெரிகிறது. நீங்கள் சொல்வது, கோவிலில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதுதானே. கோவிலுக்கு வரும் இந்துக்கள் நாகரீகமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? நான் நம்பவில்லை.

இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புப் பலகை அவசியம் தானா? நீங்கள் சொல்லும் வரலாற்று, நடைமுறை காரணங்களை ஒத்துக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம். உண்மையில் கோவிலில் அநாகரிகமான முறையில் நடந்து கொள்பவர்கள் இந்துக்களாகிய நாம் தான். நமக்கு கோவில் மேல் உள்ள உரிமையை பயன்படுத்தி முழுவதுமாக அநாகரீகமாக நடந்து கொள்கிறோம். இன்றைய எல்லா கோவில்களுமே இதற்கு உதாரணம். குப்பையாக நாற்றமடித்து காணப்படுகிறது. இதற்கு எந்த நாத்திகவாதியோ, இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ காரணம் இல்லை. நாம் தான் தீபாராதனை காட்டும் போது செல்பேசியில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்து கோவில்களுக்கு வருவதை நிறுத்தி வெகு காலமாகிறது. என்னதான் அவர்களுக்கு இந்து மதம் மேல் வெறுப்பு இருந்தாலும் கோவிலின் அவ்வளவு கூட்டத்தின் நடுவே சென்று இந்து ஆச்சாரத்தை அவமதிப்பார்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவராகத்தான் இருப்பார்கள் .(இதையே நான் மசூதிக்கு சென்று செய்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.)அதன் பின்விளைவுகளை நினைத்துப்பார்க்கமாட்டார்களா?

உண்மையில் அங்கு இருக்க வேண்டிய பலகை “கோவில் விதிமுறைகளை பின்பற்றுங்கள். இடையூறு விளைவிக்காதீர்கள். இல்லையேல் வெளியேற்றப்படுவீர்கள்”(யாராயினும்) என்பது தான்.

தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளின் சில புத்த கோவில்களில் குட்டைப் பாவாடை அணிந்த வெளிநாட்டுப் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். நான் நேரிடையாகக் கண்டது. ஆனால் வெளியே நீண்ட அங்கிகள் வைத்திருப்பார்கள். அதை அணிந்து கொண்டு உள்ளே சென்று வெளியே வந்தபின் அங்கேயே வைத்துவிட வேண்டும். இதைபோல், உண்மையில் எந்த காரணத்திற்காக உள்ளே அனுமதி மறுக்கப்படும் என்பதைத் தான் அறிவிப்பாக வைக்க வேண்டுமே தவிர பொத்தம் பொதுவாக “இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது” என்பது அவரவர்கள் அவர்களுக்கு விருப்பப் பட்ட காரணங்களை திரித்துக் கொள்ள வழிசெய்துவிடும். அந்தக் காரணம் நியாயமாக தெரிந்தால் அதன் படி உள்ளே வரட்டும். இல்லையேல் வேண்டாம்.

ஆரிய சமாஜத்தில் சான்றிதழ் வேறு வாங்கி வரச் சொல்கிறீர்கள். அடுத்து என்ன ஆதார் அட்டையா? விட்ட பத்மஸ்ரீயை வாங்கி விடுவீர்கள் போலத்தான் தெரிகிறது.

(பின் குறிப்பு: அந்த கட்டுரை படித்த முடித்த உடனே ஏற்பட்ட ஏமாற்றத்தில் எழுதியது இந்த கடிதம். அதனால் சீண்டல் தொனி இருக்கத்தான் செய்கிறது. மன்னிக்கவும். இப்போது அவ்வளவு இல்லை. )

நன்றி,

ஞானசேகர்.

https://naaneli.wordpress.com

***

அன்புள்ள ஞானசேகர்

நடுநிலைப்பதில் என ஒன்று இருக்கமுடியாது. நடைமுறைப்பதில்தான் இருக்க முடியும். அது நான் சொன்னது. அந்த பலகை அங்கே வைக்கப்படவேண்டுமா வேண்டாமா என்பதை அங்கே வழிபடுகிறவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அவர்கள் அவ்வறிப்பை வைப்பதற்கான நடைமுறைக் காரணமே நான் சொன்னது.

இந்து ஆலயங்கள் பெரும்பாலும் சுற்றுலாத்தலங்களும்கூட என்பதிலிருந்து வந்த நடைமுறை இது. மிக எளிய விஷயம். இதைவைத்துக்கொண்டு அரசியல்சரிகளைப் பேசி நம்மை முற்போக்காக கற்பனைசெய்து மகிழவேண்டியதில்லை என்பதே என் எண்ணம்

ஜெ

***

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

தங்கள் கட்டுரைகளை விடாமல் படிக்கும் ஒரு வாசகன்.

இந்த கட்டுரையில் தங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் ;

ஒரு கோவிலில் கருவறைக்குள் “;பக்தியுடன் வழிபட மட்டுமே செல்ல வேண்டும்”

or “Worship Area – not for sight-seeing or photograhy. Please enter only for prayers”

இப்படி எழுதலாமே .

நன்றியுடன்,

ஞானவீரன்

***

அன்புள்ள ஞானவீரன்,

ஆம் அவ்வாறு எழுதினால் அது விதண்டாவாதத்திற்கு இடம் அளிக்காமல் பயன் தருமென்றால் எந்தச் சிக்கலும் இல்லை

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

இன்று உங்கள் மேற்க்கண்ட பதிவை வாசித்தேன் மிகச்சிறந்த விளக்கம் மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது குறிப்பிட்ட பலகை வாசகங்கள் என்னை பலமுறை காயப்படுத்தியதுண்டு நான் இலங்கையை சேர்ந்தவன் இங்கே பௌத்த விஹாரைகளுக்குள்ளும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள்ளும் எந்தவிதமான தடைகளும் இன்றி பிரவேசித்து வழிபட்டுள்ளேன் அங்கெல்லாம் இவ்வாறான கட்டுப்பாட்டு வாசகங்களை கண்டதில்லை ஆனால் நீங்கள் கூறிய பின்தான் கூர்ந்து நோக்கினால் அவை ஓர் காரணத்துடனே வைக்கப்பட்டுள்ளன என்று புரிகிறது தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

பே.ஜதுர்ஸ்சனன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வங்கடையும் ஓர் அறிவுரையும்

$
0
0

vangkadai

வங்கடை

அன்புள்ள ஆசானுக்கு,

உங்கள் வங்கடை பதிவைப் படித்தேன், பேருந்தில் இருந்தவர்கள் எனக்கு ஏதேனும் மனநல பாதிப்பு இருக்கும் என்று நினைத்திருக்க வாய்ப்பு உண்டு.

பத்தினியின் பத்து முகங்கள் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் மிக பிரபலம்..

உங்கள் சுய எள்ளல் குறிப்பாக அசட்டு கணவன் அல்லது சமூகப் பெரும்பான்மையிலிருந்து விலகி நிற்கும் பாத்திரம் மிகச் சரியாக உங்களுக்கு பொருந்துவதாக தோன்றுகிறது. உங்களை ஒரு முறை நேரில் பார்த்ததுண்டு ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில்..

லே கண்ணாடிஎன்ற வரியில் ஆரம்பித்து உங்கள் அருகில் இருந்து மீன் வாங்கி முழு நாள் நிகழ்வை (போன் கால்கள் உட்பட) உங்கள் அருகில் இருந்து பார்த்த உணர்வு.. சிரித்து மாளவில்லை.. நன்றி ஒரு நாளை இலகுவாக்கியதற்கு..

அன்புடன்,

ஞானசேகர் வே

***

அன்புள்ள ஞானசேகர்

சுய எள்ளல் போல எளியது வேறில்லை, உண்மையை எழுதினால் போதும்

ஜெ

***

ஜெ,

உங்களின் வாசகன் நான்!!

வங்கடை அற்புதமாக இருந்தது.. உங்கள் குடும்பம் பற்றிய பதிவுகள் ஆர்வமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன!!

ஆனால் ஒரு செய்தி .. நீங்கள் உங்கள் சாதியயை குறிப்பிட்டிருக்கிறார்கள் !!

இதை தவிர்த்திருக்கலாம்!! நீங்கள் சாதியை வரலாற்று தொடர்புக்காக பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிவேன்!! ஆனால் நிச்சயம் நீங்கள் தாழ்த்தப்பட்டவராக (மலம் அள்ளுபவராக) இருந்திருந்தால் இப்படி குறிப்பிடுவீர்களா?

நேர்மையாக வழக்கம்போல் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன் !!

கக்கூஸ் படத்தில் பிள்ளைகள் தங்கள் சாதியை சொல்லும்போது அவர்களின் பின்புலமும் கூடவே வந்து அவர்களை பள்ளியில் இருந்து எப்படி வெளியேற்றுகிறது என்பதை பதிவு செய்கிறது !!

https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU

அன்புடன்

ரமேஷ்

***

அன்புள்ள ரமேஷ்

புதிதாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பொதுவெளியில் நிகழ்த்தப்படும் ஓர் உரையாடல் என இலக்கியத்தை, இலக்கியவாதிகளின் பேச்சை புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அல்ல, அது வாசகனுடனான அந்தரங்க வெளியில் நிகழ்வது. ஆகவே அதில் எல்லாமே இயல்பானது. இடக்கரடக்கல்களுக்கு இடமில்லை. அரசியல் சரிநிலைகளைப் பார்த்து, தப்புசரிகளைப் பார்த்து, நாலுபேருக்கு நல்லதாகத் தெரியும்படி, எவர்மனதையும் புண்படுத்தாமல் எழுதப்படுவதல்ல இலக்கியம். தன்னையும் பிறரையும் விமர்சிக்க, பகடி செய்ய, உட்புகுந்து ஆராய துணிவில்லையேல் அது இலக்கியமே அல்ல. தன் சாதியின், அல்லது குடும்பத்தின், அல்லது தன் இழிவையும் பிழைகளையும் எழுத்தாளன் எழுதமாட்டான் என்பது இலக்கியவாசிப்பு அற்ற ஒருவரின் நம்பிக்கை. தமிழில் இலக்கியம் படைத்த ஏறத்தாழ அனைவருமே சமரசமே இல்லாமல் அதைச் செய்திருக்கிறார்கள்.

எனக்கு இவ்வகை கடிதங்கள், அறிவுரைகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. செங்கல்பட்டில் ஒரு வாசகர் ஜெயகாந்தன் கஞ்சாபிடித்ததாக நான் சொன்னது குழந்தைகளைக் கெடுக்காதா என அங்கலாய்த்தார். அவருக்குச் சொல்லிப்புரியவைக்கவே என்னால் இயலவில்லை. இலக்கியம் நாகரீகமான பண்பான சௌகரியமான பொய்களைச் சொல்வது அல்ல. அநாகரீகமாக இருந்தாலும் கசடாக இருந்தாலும் சங்கடமானதாக இருந்தாலும் உண்மையைச் சொல்வது என அவருக்கு கூறினேன். திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது தோன்றியது ஒரே ஒருமுறை ஒரு படைப்பில் வாழ்க்கையின் உண்மையை பிடரியறை போல உணரும் அனுபவம் வாய்க்காத ஒருவரிடம் அதைச் சொல்லிப்புரியவைக்கவே முடியாது என

தயவுசெய்து இலக்கியவாதிகளிடம் ஒழுக்கமாக, அரசியல் சரிகளுடன் எழுதும்படி கோராதீர்கள். இலக்கியத்தின் பணியே எதையும் எழுதுவதுதான்

ஜெ

***

வங்கடை கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மதுரையில் ஒரு சந்திப்பு…

$
0
0

 

 

card side_01அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களது படைப்புகளை வாசிக்க தொடங்கிய நாட்களை திரும்ப திரும்ப நினைத்து பார்கின்றோம்.நேரில் சந்தித்து உங்களின் உரையாடலை கேட்ட பொழுதுகளை,வருடங்கள் கடந்து விட்ட போதிலும் “யானை டாக்டர்” கதையினையும் அதன் வழியே பெற்ற மன எழுச்சியயையும் அதை பலதரப்பட்ட நண்பர்களிடம் கொண்டு சேர்த்த்தின் மூலமாக பெற்ற நல்ல அனுவங்களின் வழியே உங்களுடன் இன்னும் மிக அனுக்கமாக நெருங்கினோம்.

கோவையில் நாஞ்சில் நாடன் அவர்களின் இல்லத்தில் உங்களுடனான முதல் சந்திப்பு,சாலை விபத்தில் கால்கள் சிதைந்து போன சிறுமி கீர்த்தனாவை அழைத்து வந்திருந்தோம்.அழகேஸ்வரி அக்கா,கெளதமி என பல நண்பர்களும் கலந்த கொண்ட அதே நாளில் வானதி மற்றும் ரேவதி அக்கா முதன் முதலாக உங்களை சந்தித்து அஜிதனுக்கு பிறந்த நாள் பரிசாக குட்டி இளவரசன் புத்தகத்தை அவர்கள் கைகளினால் கொடுத்தார்கள்.தற்பொழுது கீர்த்தனா பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த படியே படித்து இந்த வருடம் பத்தாவது தேர்வு எழுதுகிறாள்.

அறம் கதைத் தொகுப்பு மனிதர்களில் ஒருவரை கண்டது போலவே,திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முருகசாமி அய்யாவை நாங்கள் கண்டடைந்தோம்.அவரின் கைகளினாலேயே குக்கூவின் அந்த வருடத்திற்கான முகம் விருதினை உங்களுக்கு கொடுத்த அந்தக் குளிர் கால டிசம்பர் நாளும் அன்று அந்த ஒட்டு மொத்த குழந்தைகளும் எழுப்பிய சந்தோச மெளன கூச்சல் இன்றும் காதில் ஒலிக்கிறது.கடந்த மூன்று நான்கு மாதங்களாக.அந்த பள்ளியும் முருகசாமி அய்யாவும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடியினை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.உங்களின் கடிதங்கள் வழியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நீங்கள் அளிக்கும் தார்மீக ஆதரவும்,அக்கறையும் பெரும் நன்றிக்கடனுக்குரியது.

உங்களின் படைப்புகளும்,நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்கும் தளங்களும்,ஆளுமைகளும் என இணையத்தின் வழியே மிக நெருக்கமாக உங்களினை தொடர்கின்றோம்.

​நண்பர்கள் ஒவ்வொருவரும் இன்றைய காந்தி புத்தகம்,காந்தி டுடே இணையதளம்,காந்தி மற்றும் கல்வி,ஆன்மீகம் குறித்த கட்டுரைகள்,காணொளிகள்,பயணக் கட்டுரைகள்,வெண்முரசு கதைகள் என ஒவ்வொன்றின் வழியே உங்களின் படைப்புகளை வந்தடைந்தவர்கள்.உங்களின் இணையதளத்தைப் போலவே எங்கள் நண்பர்களுக்கு இடையேயும் படைப்புகள் குறித்த விமர்சனங்களும்,வாதங்களும்,எதிர்வினைகளும் காரசாரமாகவே அரங்கேரும்.எப்படியாயினும் சமகாலத்தில் பல முக்கிய தளங்களில் உரையாடல் வைத்துக்கொள்ள,தெளிவு படுத்திக் கொள்ள,மனிதத்தை கைக்கொண்டு பயணத்தை தொடர நல்ல ஒரு தகப்பனாக உங்களை உணர்கின்றோம்.

எந்தக் கல்வியை நோக்கி இன்றைய சமூகம் வெகு விரைவாக செல்கிறதோ அந்தக் கல்வியினை முழு மூச்சாக கற்று அதன் வழியே பலதரப்பட்ட பணிகளையும் பெற்ற நாங்கள் ஒருவர் பின் ஒருவராக அந்தப் பணிகளை உதறிவிட்டு இன்று எங்களின் இயல்புக்கேற்ற அறம் சார்ந்த பணிகளை கைக்கொண்டுள்ளோம்.இந்த மாறுதலுக்கான பாதையில் கைவிளக்காக நாங்கள் ஏந்தியிருப்பது காந்தி,ஜே.சி.குமரப்பா,நம்மாழவார் என இவர்களைத்தான்/

இந்த்த பாதையில் பயணத்தை மேற்கொள்ளும் 30 நண்பர்கள் உங்களை சந்திக்கின்றோம் மற்றும் இந்த நிகழ்வில் எங்கள் முன்செல்லும் மூத்தவர்களான ஆக்கம் சங்கர் போன்றவர்களையும் கெளரவிக்க உள்ளோம்.

காந்தி தோற்குமிடம் என்ற தலைப்பில் நீங்கள் பேசிய காணொளி பல மாறுபட்ட அரசியல் தளங்களில் வேலை செய்யும் நண்பர்களிடையே கூட நல்ல ஒரு அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. அதன் நீட்சியாகவே மனதுக்கு மிக நெருக்கமான நவகாளி யாத்திரை புத்தகத்தினை .இயல்வாகை பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது .அதனை உங்கள் கைகளினால் வெளியிட விரும்புகின்றோம்.

இடம் : தென்பரங்குன்றம் சமண குகைக்கோயில்,மதுரை.

நாள்: 06.09.2017 காலை 7 மணி முதல்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சமணமும் பாகன் மதங்களும்

$
0
0

socters

அன்புள்ள ஜெ,

நலமா? கடந்த இரண்டு வாரங்களாக இத்தாலியில் குடும்பத்தோடு சுற்றுப் பயணம். கடந்த நான்கு நாட்களாக ரோமில். இத்தாலிக்கு கிளம்பும் முன்பே உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்கள் வாடிகனில் இருந்து எனக்கு எழுதிய ஈமெயிலும் நினைவுக்கு வந்தது.

வரலாறைப் படிப்பதற்கும் அது நிகழ்ந்த இடங்களைப் பார்ப்பதும் வெவ்வேறு அனுபவங்கள். படித்து விட்டு வந்தால் பல இடங்கள் நமக்கு கூடுதல் பொருளுடையதாகிறது. மேரி பியர்ட் எழுதிய SPQR படித்துக் கொண்டிருக்கிறேன். கூடவே வேறு சில நூல்களும்.

கலிலேயோ திருச்சபையோடு மோதியது வரலாறு. ஆனால் அந்த கலிலேயோ புதைக்கப்பட்டிருப்பது ப்ளோரன்ஸ் நகரின் மிக முக்கிய தேவாலயத்தின் பிரதான் பகுதியில். ஐசக் நியூட்டன் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில். திருச்சபையும் விஞ்ஞானமும் ஒரு சிக்கலான உறவைக் கொண்டன. இவ்விருவரும் தேவாலயங்களில் ஆஸ்தான இடத்தில் புதைக்கப்பட்டிருப்பது மிக ஆச்சர்யம்.

ப்ளோரன்ஸ் நகரில் ஞானஸ்நானம் செய்விக்கும் இடத்தின் (Baptistery) இரு கதவுகள் புத்துயிர்ப்பின் ஆரம்பமாக கருதப்படுகிறது. அக்கதவுகளின் புனரமைப்புக்கு உதவியோர் பட்டியலில் ஆச்சர்யமானப் பெயர். ஜம்நாலால் பஜாஜ்.

நீங்கள் அடிக்கடி ‘கிறித்தவம் பாகனியத்தை அழித்தொழிப்பு’ செய்தது என்பீர்கள். அது வேறு விவாதம். ரோமில் ஆச்சர்யப்படுத்துவது பாகனியம் திருச்சபையின் கலைகளில் பிரதானப் பங்கு வகிப்பது. போப்பின் தனியறையை அலங்கரிக்க ஓவியம் வரைந்த ரஃபேல் ஓர் அறையில் ஒரு பக்கத்தில் கிரேக்க அறிஞர்களான பிளேட்டோ (வான் நோக்கி விரல் நீட்டியவாறு), அரிஸ்டாட்டில் ( தரை நோக்கி கையை விரித்தவாறு), யூக்ளீட் இன்னொருப் பக்கம். இது ஒரு மிகப் பெரிய ஓவியம். அறிவுத் தேடலைச் சுட்டுவது. அதிலும் பிளேட்டோவின் தத்துவம் இவ்வுலக வாழ்வைக் கடந்ததை குறிக்கும் வண்ணம் மேல் நோக்கி சுட்டும் விரல். அரிஸ்டாட்டில் இவ்வுலக வாழ்க்கையை மையமாக கொண்ட தத்துவ ஞானி என்பதால் தரை நோக்கிய விரிந்த கை. இதன் எதிர் புறம் இயேசுவும் பக்தி மார்க்கமும். உங்கள் குறிப்பையும் இந்த அனுபவங்களையும் வைத்து பேஸ்புக்கில் ஒரு குறிப்பெழுதினேன். விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நண்பர்கள் பலரின் நினைவுகள் ஆங்காங்கே வந்தது. உங்கள் நினைவு பல இடங்களில்.

சிஸ்டின் சேப்பல் மனித சிருஷ்டித் திறமையின் உச்சம். அங்கே வரும் பல்லாயிர கணக்கானவர்கள் மைக்கேலேஞ்சலோவின் கை வண்ணத்தையும் மேதமையையும் தான் காண வருகிறார்கள். எத்தனையோ இடங்களுக்கு போயிருக்கிறேன் ஆனால் அந்த அறையினுள் நுழைவதற்கு உடல் சிலிர்த்தது. மனித ஆற்றலின் மகோன்னதத்தை காணும் படபடப்பு. ஒரு பாதிரியார் வந்து ஏதோ ஜெபம் செய்தார் என் மனம் உத்தரத்தில் இருக்கும் ஓவியத்தில் (பாகனிய பாரம்பர்யங்களை பிரதானமாகச் சித்தரித்த ஓவியங்கள்) லயித்திருந்தது.

அன்புடன்

அரவிந்தன் கண்ணையன்

***

socretes

அன்புள்ள அரவிந்தன் கண்ணையன்

ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பு நான் ரோம் சென்றிருந்தேன். பிரியத்திற்குரிய லண்டன் நண்பர்களுடன். அற்புதமான பயணம் அது. நினைவுகள் மேலும் மேலும் ஒளி கொள்கின்றன. நான் என்றும் புத்துணர்ச்சிகொள்ளும் ஐரோப்பியக் கலைமரபை கண்முன் காணும் அனுபவமாக இருந்தது அது. மீண்டும் ஒருமுறை செல்லமுடியும் என்றால் முதலில் தேர்வுசெய்யுமிடம் ரோம்தான்.

நீங்கள் சொன்ன பாகன் பண்பாட்டுச் சின்னங்களை நானும் ரோமின் புகழ்பெற்ற தேவாலயங்களில் பார்த்தேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல நேரடியாக அவை பதிவுபெற்றுள்ளன. கூடவே கலைநுட்பங்களாகவும் அவற்றைக் காணலாம். உதாரணமாக கிறித்தவப்புனிதர்களின் உடல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதத்திலும் தோற்றச்சாயலிலும் பாகன் மதங்களின் கலையும் அதில் உள்ளடங்கியிருக்கும் பண்பாடும் உள்ளது. உருண்டு திரண்ட தசைகள், வலுவான உடற்கட்டுகள், சுருள்தாடிகள்.

ரோமில் நான் பார்த்துக்கொண்டே சென்றபோது குத்துமதிப்பாக ஓர் எண்ணம் ஏற்பட்டது. பெரும்பாலான புனிதர்களும் தேவதைகளும் எழுத்துச்சுருள்களை விரித்துக் காட்டுகின்றனர்.நேரடியாகப் பார்த்தால் அவர்கள் தெய்வீக ஆணைகளை அறிவுறுத்துகின்றனர். குறியீட்டுரீதியாகப் பார்த்தால் அவை எழுத்து என்னும் செயலின் முதன்மையைக் காட்டுகின்றன. வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபுக்கான ஒரு மாறுதல் அது என்று தோன்றியது. சொல்லப்பட்டதை விட எழுதப்பட்டது மேலும் அழுத்தமானது, மாறாதது என்ற எண்ணத்தை அவை கொண்டுள்ளன.

பொதுவாக மதங்களின் போர் குறித்த கருத்துக்களை ஒருவர் எப்படிப்பார்க்கிறார் என்பது அவரது முன்முடிவுகளைச் சார்ந்தது. இந்தியாவின் மதச்சூழலை எழுதவந்த ஐரோப்பியரில் சிலரும், அவர்களை ஒட்டி எழுதுபவர்களும் ஓர் அழித்தொழிப்புப்பின் கதையை எழுத விழைகிறார்கள். ரொமீலா தாப்பர் ஒரு நூலில் இந்துமதம் ஒரு பூதம் போல பௌத்தமதத்தை தோளில் ஏறி அமர்ந்து கொன்று அழித்தது என எழுதுகிறார்.

இந்தியாவில் சமணத்தின் எழுச்சி வீழ்ச்சியை எழுதியவர்களில் பலர் அது வன்முறையால் ஒழிக்கப்பட்டது என திரும்பத்திரும்ப பதிவுசெய்கிறார்கள். அவர்கள் அதற்கு ஆதாரமாகக் காட்டுவது இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றிலேயே ஓரிரு வரலாற்று அடிப்படை ஏதுமில்லாத தொல்கதைகளை மட்டுமே – திருஞானசம்பந்தர் எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றினார் என்பதுபோல.

ஆனால் அதற்கு மாறான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. உதாரணமாக, சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இல்லறத்தார் இந்து தெய்வங்களையும் சமண பௌத்ததெய்வங்களையும் ஒரேசமயம் வழிபடும் சித்திரங்கள் உள்ளன. அத்தனை மதப்பிரிவுகளும் பங்கெடுத்து விவாதிக்கும் அறிவரங்குகளைப்பற்றியும் சந்தைகளில் நிகழும் பொது அரங்குகளைப்பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன.

அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் இன்றும் பல்லாயிரம் சமணத்தலங்கள் உள்ளன. சொல்லப்போனால் இங்கே கட்டப்பட்ட அனேகமாக எல்லா சமண ஆலயங்களும் இன்றும் வழிபாட்டுநிலையில் உள்ளன. அவற்றின் வரலாறுகள் சமணர்களால் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அவை அவ்வப்போது இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டன என்றும் அப்போது மட்டுமே அங்கே வழிபாடுகள் நிகழவில்லை என்றும் அவை பதிவுசெய்கின்றன.

தமிழகத்திலேயே முக்கியமான சமண ஆலயங்கள் என இருபதையாவது சுட்டிக்காட்டமுடியும். பெரும்பாலானவற்றைச் சென்று பார்த்திருக்கிறேன். அவற்றில் பல ஆலயங்கள் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்துக்களான நாயக்கமன்னர்களால் கட்டப்பட்டவை, அல்லது விரிவாக்கம் செய்யப்பட்டவை. இந்தியாவின் பெரும்பாலும் அத்தனை சமண ஆலயங்களிலும் இந்து அரசர்களின் கொடைகள், திருப்பணிகள் நிகழ்ந்ததன் கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. அவர்கள் அளித்த சிலைகளையும் பொருட்களையும் அவ்வாலயப் பதிவுகள் ஆவணப்படுத்தியிருக்கின்றன. சமணர்கள் பொதுவாக சீராக வரலாற்றுப்பதிவுகளைப் பேணும் வழக்கம் கொண்டவர்கள்.

பதினேழாம்நூற்றாண்டில் அச்சுதப்ப நாயக்கரின் காலகட்டம்வரைகூட பௌத்தப் பள்ளிகளுக்கு நிலம் அளிக்கப்பட்டதன் சான்றுகள் இங்குள்ளன. பக்தியார் கில்ஜியால் நாளந்தா அழிக்கப்படும்வரை வடஇந்தியாவில் பௌத்தம் ஒரு வலுவான மதமாகவே இருந்துள்ளது. ஔரங்கசீபின் கடும் தாக்குதல்களுக்குப்பின்னரும் சமணம் அழுத்தமாக நீடிக்கிறது. ஆனால் மேலே சொன்ன வரலாற்றாய்வாளர்கள் அவற்றை எல்லாம் கருத்தில்கொள்ள மறுப்பார்கள்.

இங்கே மதப்பூசல் நிகழவில்லை என்று சொல்லவில்லை. மதம் என்றாலே உறுதியான நம்பிக்கைதான். ஆகவே மதப்பூசல் நிகழ்ந்திருக்கும். இந்து மதத்திற்குள்ளேயே சைவ வைணவப்பூசல்கள் புகழ்பெற்றவை. தாந்த்ரீக மரபுகள் பக்திமரபால் அழித்தொழிக்கப்பட்டமையும் வரலாறே. பூசல்கள் வன்முறை நோக்கிச் செல்வதும், மதவழிபாட்டிடங்கள் அழிக்கப்படுவதும் கண்டிப்பாக ஆங்காங்கே நிகழ்ந்திருக்கும். அரசர்கள் மதநிலையங்களை சிதைத்த கதைகளும் சில உள்ளன. சோழர்கள் கர்நாடகத்தில் ஆலயங்களை இடித்துள்ளனர். கர்நாடக வீரசைவர்கள் குஜராத் வரைச்சென்று வைணவ ஆலயங்களை இடித்துள்ளனர். அவற்றை நானே விரிவாக எழுதியிருக்கிறேன்

ஆனால் இந்து மதத்தின் மூன்று அம்சங்கள் காரணமாக அது உலகின் பிற பகுதிகளில் காணப்படும் மதஒழிப்பைச் செய்ததில்லை. ஒன்று அதிலுள்ள மூன்றடுக்கு வழிபாட்டுமுறை. குலதெய்வ வழிபாடும் பெருந்தெய்வ வழிபாடும் தத்துவத்தெய்வ வழிபாடுமாக மூன்று முறைமைகளையும் ஒரேசமயம் கடைப்பிடிப்பவர்கள் இந்துக்கள். இங்கே சமணம் வந்தபோது அது முதன்மையாக தத்துவத்தெய்வவழிபாடாகவே இருந்தது. அதை ஏற்றுக்கொண்டபோதே கூடவே கிருஷ்ணன் போன்ற பெருந்தெய்வத்தையும் குலதெய்வங்களையும் மக்கள் வழிபட்டனர். ஒன்றைக் கைவிட்டு இன்னொன்றை தழுவும் முறை அன்று இருக்கவில்லை. ஆகவே ஒன்றுக்காக பிறிதொன்றை அழிக்கவேண்டிய தேவை இல்லை.

இரண்டாவதாக நாடுமுழுக்க பரவிய ஒற்றை நிறுவன அமைப்பு இந்துமதத்திற்கு இல்லை. கிளைகளாகப்பிரிந்து பரவும் அமைப்பு கொண்டது அது. ஆகவே ஒரு மதத்தையோ நம்பிக்கையையோ நெடுங்காலம் திட்டமிட்டு அழிப்பது அதற்குச் சாத்தியமில்லை.

மூன்றாவதாக அதன் அடிப்படைக்கொள்கையிலேயே ஏகம் சத்விப்ரா பஹுதாவதந்தி [ உண்மை ஒன்றே அணுகும்வழிகள்தான் மாறுபடுகின்றன] என்ற தரிசனமும் ஆறுகள் பல கடல் ஒன்றே போன்ற உவமைகளும் உள்ளன. அத்தனை மதஞானிகளும் வெவ்வேறு சொற்களில் அதைச் சொல்லியிருப்பார்கள். ஆகவேதான் பிறிதொரு மதத்தை உள்ளிழுக்கவே எப்போதும் இந்துமதம் முயல்கிறது. ஏசுவைக்கூட.

பெலவாடி என்ற ஆலயத்தின் கருவறையில் உள்ள வீரராகவப்பெருமாளின் மேல் உள்ள வளைவில் செதுக்கப்பட்டிருக்கும் பத்து அவதாரங்களில் பத்தாவதாக இருப்பவர் புத்தர். ஒவ்வொருநாளும் வழிபடப்படுபவர். கணிசமான இந்து ஆலயங்களில் அருகர்களின் சிலைகளைக் காணலாம். [அதைவைத்துக்கொண்டே அவை சமண ஆலயங்களை இடித்து கட்டப்பட்டவை என ஒரு கோஷ்டி எழுதுகிறது. அத்தனை சமண ஆலயங்களிலும் கிருஷ்ணனும் விஷ்ணுவும் இருக்கிறார்களே என்று கேட்டால் மறுமொழி இருக்காது.]

ஆனால் மொத்த ஐரோப்பாவிலும் இன்று பாகன் வழிபாட்டிடங்கள் ஏதுமில்லை. பாகன் வழிபாட்டிடங்களை கிறித்தவ மரபோ அரசர்களோ பேணியமைக்கோ கட்டியமைக்கோ ஒரு சான்றுகூட இல்லை. பாகன் மரபை தொடர்ச்சியாகப் பின்பற்றுபவர்களும் அங்கே இல்லை. இதைத்தான் மதஅழிப்பு என்கிறேன்

நடுக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த குரூரமான மதவிசாரணைகளின் வரலாற்றை எவரும் மறைத்துவிடமுடியாது. அவற்றை அவர்களே விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். இன்றும் ஐரோப்பாவின் மனசாட்சியை வேட்டையாடும் இருண்ட காலம் அது. ஏராளமான இலக்கிய ஆக்கங்கள் அதை ஒட்டி இன்றும் எழுதப்படுகின்றன.

அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று கிறிஸ்தவத்தின் ஒற்றைத்தரிசனம். பிறவற்றை பொய் என மறுக்கும் அதன் மைய உறுதி. அது இப்போதும்கூட அப்படித்தான். இரண்டு அது அதிகாரம்கொண்ட ஒற்றை அமைப்பாக உருவாகி வந்தமை.

பாகன் மதங்களுக்கு எதிராகவே கிறிஸ்தவம் ஐரோப்பாவில் பரவியது. பாகன் மதங்களை மறுத்தும் வென்றும் நிலைகொண்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் முந்நூறாண்டுக்காலம் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஐரோப்பிய மதவிசாரணைகளின் விளைவாகவே [Medieval Inquisition] பாகன் மதங்கள் சுவடில்லாமல் அழிக்கப்பட்டன.

அத்தகைய ஒரு மாபெரும் மதவிசாரணையும் ஒழிப்புச்செயல்பாடுகளும் இந்தியாவில் நிகழவில்லை. வரலாற்றை நோக்கினால் அப்படி நிகழவும் வாய்ப்பில்லை. இல்லை, ஐரோப்பாவில் மதவிசாரணைக்காலம் நிகழவேயில்லை, இந்தியாவில்தான் அது நிகழ்ந்தது என்று வாதிடமாட்டீர்கள் என நம்புகிறேன்.

உண்மையில் இந்தியாவில் பெரிய அளவில் மதஅழிப்பு நிகழ்ந்தது என்றால் பக்தி இயக்கத்தால் தாந்த்ரீக மதங்கள் அழிந்ததைத்தான் சொல்லவேண்டும். பக்தி மரபின் ஆசிரியர்களால் தாந்த்ரீகமரபுகள் கடுமையாக மறுக்கப்பட்டன. சமூகமாகவே மக்கள் அவற்றை புறக்கணித்தனர். அவை காலப்போக்கில் குறுங்குழுக்களாக மாறி அழிந்தன

ஆனால் அவ்வாறு அழிக்கப்படும்போதே உள்ளிழுத்தலும் நிகழ்ந்தது. பக்தி மரபால் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் சிற்பங்களாக, வழிபாட்டுச் சடங்குகளாக தாந்த்ரீகமரபு உருமாறி நீடிக்கிறது.

இந்தியாவில் பௌத்தம் உயர்நிலை மதமாகவே இருந்தது. அது போதிசத்வ வழிபாட்டை மட்டுமே மக்களுக்குரியதாக முன்வைத்தது. ஆகவே அது எளிதில் அழிந்தது. சமணம் மேலும் தீவிரமாக நீடித்தது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் பக்தி இயக்கத்தால் மெல்லமெல்ல அது வெல்லப்பட்டது. அவ்வாறு சமணம் வெல்லப்பட்டதன் சித்திரத்தை மிக விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். கலைகள், பெரிய திருவிழாக்கள், பேராலயங்கள், அத்தனை சாதிகளையும் உள்ளிழுத்து ஆலயவழிபாட்டின் பகுதிகளாக ஆக்கும் மண்டகப்படி முதலிய வழிமுறைகள் ஆகியவையும் ஆலயங்களை நம்பி நிலநீர் நிர்வாகம் உருவானதும் சமணம் பின்னகரக் காரணமாக அமைந்தது.

ஆனால் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில்கூட சமணம் இருந்திருக்கிறது. மிகமெல்ல சமண ஆலயங்கள் கைவிடப்படுவதை எச்.சி.பேட்ஸ் போன்ற வெள்ளை ஆட்சியாளர்கள்கூட பதிவுசெய்திருக்கிறார்கள். இன்றும்கூட தமிழகத்தில் சமணர்களின் ஊர்கள் பல உள்ளன.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதவிசாரணைகளின் கொடுங்காலம் முடிந்து ஐரோப்பாவில் பண்பாட்டு மறுமலர்ச்சி உருவானது. கிறிஸ்தவம் மெல்ல தன்னை மாற்றுருவாக்கம் செய்துகொண்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி மட்டும் அல்ல அது கிறிஸ்தவத்தின் மறுமலர்ச்சியும்கூட. நீங்கள் சொல்லும் அத்தனை ஏற்புகளும் அப்போது நிகழ்ந்தவை. மைக்கேலாஞ்சலோவும் ராஃபேலும் அந்த மறுமலர்ச்சியின் முகங்கள்.

அப்போது இருவகைகளில் பாகன் பண்பாடு மீட்டு எடுக்கப்பட்டது. ஒன்று கிறிஸ்தவத்திற்குள்ளேயே கலைமரபாக அது வந்தமைந்தது. ஓர் எல்லைக்குள் அறிவியலிலும் தத்துவத்திலும் பாகன் மரபு ஏற்கப்பட்டது.

கிறிஸ்தவம் பாகன் மரபுகளை அழித்தது என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அது பிற்காலத்தில் பாகன் மரபுகளை உள்வாங்கிக்கொண்டது என்பது. நேரடியாகவும் மறைமுகமாகவும். தொன்மையான கிரேக்க கலை, தத்துவ மரபுகளை அது தன்னுள் வளர்த்தெடுத்தது. இறையியலின் தர்க்க அடிப்படைகள் கிரேக்க தத்துவமரபிலிருந்து பெறப்பட்டவை. கிறிஸ்தவத்தின் வளமான கலைமரபு பாகன் மரபின் மறு உருவாக்கம்.

நான் என் வரலாற்று உருவகத்தை உருவாக்கிக்கொள்ளவே இவற்றைப் பேசுகிறேன். நேற்றை திரும்பி நோக்கி இது தவறு, இது இதைவிட மேல் என்று சொல்வதற்காக அல்ல. இந்துமதத்தை நம்புகிறவன் என்பதனால் அதை ஒருபடி மேலே வைக்கும் நோக்கம் எனக்கில்லை என உண்மையிலேயே சொல்ல விரும்புகிறேன். அதை கறாராக அணுகவே விரும்புவேன். ஏனென்றால் அந்த கண்மூடித்தனமான பற்று காரணமாகவே அதில் தேவையற்றவை நீடிக்கவும் வளரவும் இடமளிப்பவர்களாக நாம் ஆகக்கூடாது என்பதே என் எண்ணம்.

அதேபோல நான் உலகப்பண்பாட்டுக்கு கிறிஸ்தவத்தின் கொடையை ஒருபோதும் மறுப்பவனும் அல்ல.அப்படியென்றால் ஏன் இதைச் சொல்கிறேன்? ஒரு சிந்தனை ஒற்றைப்படையாக, நிறுவனமாக ஆகும்போது அது பண்பாட்டின் இயல்பான பன்மைத்தன்மையை அழிக்கிறது என்றும் பன்மைத்தன்மையினூடாகவே பண்பாடு வளரமுடியும் என்றும் நம்புகிறேன். ஆகவே ஒற்றைமையமாக்கம், நிறுவனமாக்கம் ஆகியவற்றை நான் ஏற்பதில்லை. அதை வரலாற்றில் சுட்டவே மத்தியகால ஐரோப்பிய மதவிசாரணைகளைச் சுட்டிக்காட்டுகிறேன். இந்துமதத்தை மத்தியகால கிறித்தவம்போல ஆக்கவிரும்பும் குரல்களை நிராகரிக்கவே அதைச் காட்டுகிறேன். நாம் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டியது ஐரோப்பிய மறுமலர்ச்சியை என்றும் சொல்கிறேன். இவற்றை பலமுறை பல்வேறு சொற்களில் எழுதியிருப்பேன்.

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அலெக்ஸ் –கடிதங்கள்

$
0
0

IMG_2288

அஞ்சலி வெ.அலெக்ஸ்

அன்புடன் ஆசிரியருக்கு

 

வெள்ளையானைக்கு எழுதியிருந்த முன்னுரை வழியாகவே அலெக்ஸ் அவர்களைத் தெரியும். தலித் ஆய்வுகளில் மிக முக்கியமான முன்னெடுப்பினை நிகழ்த்தி இருக்கிறார். கொந்தளிப்பும் அவநம்பிக்கையும் கொண்ட முதல் தலைமுறையில் இருந்து அதனை செரித்துக் கொள்ளக்கூடிய மேலும் சமநிலை உடைய மனிதராக பரிணமித்திருக்கிறார் என்பதை உங்கள் சொற்கள் வழியே அறிகிறேன்.

 

அவருக்கு என் அஞ்சலி.

 

சுரேஷ் பிரதீப்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு,

 

வெ.அலெக்ஸ் அஞ்சலி பதிவை வாசித்தேன். திரு.அலெக்ஸ் அவா்களை பற்றி உங்கள் தளத்தின் வாயிலாகவே அறிந்து கொண்ட எனக்கு அவாின் ஆளுமை பற்றியோ அரசியல் செயல்பாடு பற்றியோ எதுவும் தொியாது. அந்த அளவிற்கு பரந்த வாசிப்பும் கிடையாது. என்னை பாதித்தது உங்கள் இருவருக்குமான நட்பு தான். மனத்துக்கு நெருக்கமான நண்பாின் மரணத்தை போல கலங்க செய்வது வேறு இல்லை. இப்போது மிக மிக தனிமையை மட்டுமே உணா்விா்கள் என்று நினைக்கிறேன். அதை தவிர பிறிதொன்று இருக்க இயலாது அல்லவா…கடைசி வாிகளை வாசித்த போது கண்களை நீா் மறைத்துவிட்டது.  நீங்கள் உணரும் கொடும் தனிமையிலிருந்து மீண்டு அல்ல கடந்து வரவே பிராத்தனை செய்கிறேன். ஏனென்றால் மீள்வது உங்கள் மனவலிமையிலேயே உள்ளது இல்லையா சாா்?

 

ஆழ்ந்த வருத்தங்களுடன்

உங்கள் வாசகி

தேவி. க

ஆவடி.

 

அன்புள்ள ஜெ,
நண்பர் அலெக்ஸின் மறைவு எதிர்பாராதது. உங்கள் பதிவு அலெக்ஸின் ஆளுமையை, அவரது பங்களிப்பை சிறப்பாக வெளிக்கொண்டுவந்திருந்தது. நண்பரைப் பிரிந்த துயரை உங்கள் முகத்தில், உயிர்மை புத்தக வெளியீட்டு விழா வீடியோவில் காண முடிந்தது. அலெக்ஸ் ஒரு அமைதியான மனிதர். தன் பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மிக ஆழமாக உணர்ந்த மனிதர். பொது வெளியில் இயங்குபவருக்கான எந்த பரபரப்பும் அற்றவர்.

 

நிறைய அகால மரணங்களை எதிர்கொண்டு வருகிறோம். அலெக்ஸ் இப்போதுதான் தனது பணியில் உறுதியாகக் கால்பதித்திருந்தார். அவரின் கனவுத் திட்டங்களை யாரும் செய்துமுடிக்காமல் போனால் அது பேரிழப்பு.

அலெக்ஸ் மறைந்த தகவலை ராய் மாக்ஸமுக்குச் மின்னஞ்சல் செய்தேன் அவர் அலெக்ஸின் உபசரிப்பை நினைவுகூர்ந்து தன் அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

 

ஒரு நல்ல நண்பரை, தமிழ் அறிவுலகுக்கு மிக முக்கியமான பங்காற்றிய செயல்பாட்டாளரை இழந்து வருந்தும் உங்களுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

அன்புடன்
சிறில் அலெக்ஸ்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நவகாளி யாத்திரை வெளியீடு

$
0
0

gandhi card copy

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

காந்தியம் தோற்கும் இடங்கள் என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரை எங்களின் மனதுக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடையாகவும் புதிய மடைதிறப்பாகவும் அமைந்தது.அதில் நீங்கள் குறிப்பிடும் நவகாளி யாத்திரை குறித்த சொற்கள் தான் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கான முக்கிய காரணம் .இயல்வாகை பதிப்பகத்தின் வழியே வெளியிடப்படும் இந்த புத்தகத்தினை யானை டாக்டர் புத்தகத்தை போலவே அனைவருக்கும் கொண்டு சேர்த்திட உறுதி கொண்டு உள்ளோம் .

காந்தி என்கிற கருத்தின் காலஅவசியம்…

கடந்தவருடம் வரை குளத்துக்கரை களிமண்ணை எடுத்து கைப்பட பிள்ளையார் செய்து கும்பிட்டுக்கொண்டிருந்த புளியானூர் கிராமத்துக் குழந்தைகள் இம்முறை மிதமிஞ்சிய விலைக்கு பாரிஸ் சாந்து விநாயகரை வாங்கிப் பூஜித்து ஊர்ப்பொது ஏரியில் கரைத்து வழிப்பட்டு மகிழ்ந்ததை நேர்காண்கிறோம். ஓராண்டு இடைவெளிக்குள் ஒரு மரபுத்தொடர்வு அறுந்து பழங்கதையாக மாறிவிட்டிருக்கிறது. பக்தி என்பது வெளிக்காட்டல் என்றளவில் சுருங்கித் தேய்கிறது. கடவுள் சாயம் கலந்த நீரில் செத்து மிதக்கின்றன மீன்கள் முதல் சிறு நீருயிரிகள் வரை எல்லாமும்.

அதிகார நிறுவலுக்குள்ளும், வணிக விழுங்களுக்குள்ளும் ஆன்மீகம் சரிந்து உள்விழுவதை சமகால நிகழ்சம்பவங்கள் வெளிச்சமிடுகிறது. வழிபடுதல் ஒரு விளம்பரநிலைக்கு கீழ்மைப்படுத்தப் பட்டிருக்கிறது. புண்ணியங்கள் தரப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. எளிய அறங்கள் கூட சந்தைபடுத்தப்பட்டு சீரழிவில் ஆழ்கிறது.

கூட்டுமனப்பான்மைக்கும் ஒற்றைப்படத்தன்மைக்கும் இடையில் ஊசலாடியே தரைப் பெயர்கிறது சமூகம். மதங்கள் உருவாக்கும் தனிப்படுத்தல்கள், தவிர்க்கமுடியாத ஒன்றை நியாயப்படுத்தும் தர்க்க உரையாடல்கள், அடையாளங்களைத் துறந்து கடந்துபோவதில் உள்ளெழும் சிக்கல்கள், நம்பிய ஒன்றின் மீதான கண்மூடித்தனங்கள் என இவ்வாழ்வில் நாம் அடையும் அத்தனை உணர்ச்சிகளையும் அதற்கான மீட்சிகளையும் ஒரு மையப்புள்ளியில் வைத்து நம்மால் உற்றுநோக்க முடிந்தால் இந்திய பண்பாட்டைப் பொறுத்தவரை அது ஒற்றை மனிதனாக உருத்திரளும். அது காந்தி.

நவகாளி யாத்திரை – இரத்தமும் சதையும் கொப்பளிக்க சக உயிர்கள் அழிதொழிக்கப்பட்டு மனிதப் பகைமையின் உச்சமாக இந்நிலத்தில் நிகழ்ந்த குரூரம் நவகாளி கலவரம்.

தன்னுடைய ஆன்மபலத்தை மட்டும் நம்பி அங்குசென்று அங்குள்ள மனங்களுக்குள் அமைதியை துளிர்ப்பித்த காந்தியின் கால் நடையாகப் பயணித்த யாத்திரையின் சிற்றறிமுகம் இந்நூல்.

சாவியின் எளிமையான உரைநடைக் கட்டுரைகளும், கோபுலுவின் ஓவியக் கோடுகளும் இப்புத்தகத்தை சிறிதும் உறுத்தாமல் உயிர்படுத்தியிருக்கிறது.  காந்தி மண்ணில் வீழ்ந்து உயிர்துறந்த காலகட்டத்தில் வெளியானது இந்நூலின் முதற்பதிப்பு.

கருத்தாக காந்தியை அகப்படுத்தும் சிற்செய்கையாக இயல்வாகை ‘நவகாளி யாத்திரையை’ பதிக்கிறது. பேரமைதிக்கான முதல் மெளனமாக மாறட்டும் இம்மலர்வு.

இடம் : தென்பரங்குன்றம் சமண குகைக்கோயில்,மதுரை.

நாள்: 06.09.2017 காலை 7 மணி முதல்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஈர்ப்பதும் நிலைப்பதும் பற்றி…

$
0
0

 

KJAgmail

[கே.ஜே.அசோக்குமார்]

 

ஈர்ப்பதும் நிலைப்பதும்

 

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு

ஈர்ப்பதும் நிலைப்பதும் கட்டுரையை வாசித்தேன். ஒரு கதை குறித்தும் அதன் கூறல் முறை/கோணம் குறித்தும், அதன் நேர்/எதிர்மறை அம்சங்கள் குறித்தும் எழுதுபவர் தமிழகத்தில் நீங்கள் ஒருவர் தான். எல்லா கட்டுரையாளர்களும் தங்கள் சாதக அம்சங்கள் அதில் உள்ளன‌வா என்பதை மட்டுமே மனதில் கொண்டு எழுதுகிறார்கள் என நினைக்கிறேன். கதைக்கு ஒரு சின்ன எதிர்மறை விமர்சனம் வந்தாலும் எழுதியவர் சூழலுக்கு எதிரானவராக பார்க்கப்படுகிறார். எதிர் கொள்ள தைரியமுள்ளவர்கள் மட்டுமே அதை எழுதமுடியும்.
மற்றொன்று சிறுகதையாசிரியன் எதை எழுதவேண்டும் என்கிற தீர்மானத்தை மற்றவர்கள் தான் செய்கிறார்கள் என்பது. அனுபவ கதைகளும், விளிம்புநிலை கதைகளும் மட்டுமே பத்திரிகைகளில் பிரசுரிக்கும் நிலை இன்று இருக்கிறது. அதையும் கதையில் பல்வேறு மாற்றங்களுக்கு அவர் உட்பட்டுதான் எழுத வேண்டியிருக்கிறது. தான் ‘கண்டு’பிடித்த உண்மைகளை அவர் எழுத பிரசுரிக்க முடியாத நிலை. ஆரம்பநிலை/முதல்நிலை எழுத்தாளர்களுக்கு பிரச்சனை இல்லை, அவர் கொஞ்சம் சாதாரணமாக எழுதினால் பிரசுரமாகிவிடுகிறது. பிரச்சனை அடுத்த கட்டத்தை கொஞ்சம் மேலதிகமாக/தத்துவார்த்தமாக அவர் யோசிக்கும்போது தான் ஆரம்பமாகிறது. இதழ்கள் எதிர்பார்க்கும் அதே ஆரம்பநிலை எழுத்துக்களை அவர் கொடுக்க முன் வராதபோது அவர் கதைகள் பிரசுரமாவதில்லை.
ஆகவே எழுத்தாளர்கள் குழப்பமடைகிறார்கள், மீண்டும் அதே மாதிரியான கதைகளை எழுதுகிறார்கள். எனக்கு தெரிந்த சிறுகதையாசிரியர்களை சிலரை அப்படி குறிப்பிடமுடியும். முகநூல் நிலைதகவல்கள் தெளிவாக எழுத்தாளர்களுக்கு ‘தேவையானவைகளை’ முன்பே அறிவுறுதிவிடுகின்றன.
தேவையான பொருட்கள் இருக்கும்போது பிரிதொன்றை நாடவேண்டிய அவசியமும் இல்லை தானே!. அத்தோடு, போட்டியில் வென்ற கதைகள் ஒன்றுபோல இருப்பதை காணலாம். அதன் பேசுபொருள்களும் ஒன்றே. பரிசுகளைப் பெற்ற நூல்களும் அதன் வடிவஅமைப்புகள் ஒன்றுதான். சிறுகதையாளர்கள் எதை தேர்வு செய்யமுடியும்.

நன்றி,
கே.ஜே.அசோக்குமார்

 

 

அன்புள்ள ஜெ

 

ஈர்ப்பதும் நிலைப்பதும் ஒரு கூரிய விமர்சனம். ஒர் வளரும் எழுத்தாளன் தன்னை வலிமையாக அடையாளம் காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆனால் இதிலுள்ள சிக்கல்கள் நிறைய. ஏராளமாக எழுதினால்மட்டும்தான் கைபழகி நடை வருகிறது. ஆனால் எழுதியவை பிரசுரமாகி எவரேனும் படிக்காமல் மேலும் எழுதவும் தோன்றுவதில்லை. இணையம் இருப்பதனால் உடனே பிரசுரமாகிவிடுகிறது. என்னதான் விமர்சனம் உதவியானது என்றாலும் ஒரு பாராட்டு இருந்தால்மட்டும்தான் தொடர்ந்து எழுதமுடிகிறது

 

அதோடு இன்றைய இதழ்களின் தேவையும் ஒரு சிக்கல். இன்றைக்கு எழுத்தை உடனடியாக விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்று இதழ்கள் நினைக்கின்றன. பாலுறவு பற்றியோ வன்முறை பற்றியோ அடித்தளவாழ்க்கையின் உள்ள குரூரங்கள் ஆபாசம் பற்றியோ எழுதினால்தான் அழுத்தமாக இருக்கிறது என நினைக்கிறார்கள். இன்றைக்கு இதழ்களுக்கு ஏற்பத்தான் இவையெல்லாம் எழுதப்படுகின்றன என்பதுதான் உண்மை.

 

ஆகவே வேறுவழியில்லை. ஒரு இளம் எழுத்தாளனின் முத்திரை உள்ள நல்ல கதைகள் வரும்போது அதை உங்களைப்போன்றவர்கள் சுட்டிக்காட்டி அதைப்பேசவைக்கவேண்டும். நீங்கள் போதி படுகை மாடன்மோட்சம் எழுதியபோது அசோகமித்திரன் சுஜாதா இந்திராபார்த்தசாரதி போன்றவர்கள் உங்களைப்பாராட்டி எழுதி கவனிக்கவைத்தார்கள். இன்றைக்கு பார்த்தால் நீங்கள் எழுதிய வெற்றி தான் பேசப்படுகிறது. இப்போது திடீரென்று எல்லாரும் நீங்கள் எழுதிய கெய்ஷா பற்றிப்பேசுகிறார்கள். நீங்கள் அதேபோல இளம் எழுத்தாளர்களைப்பற்றிப் பேசலாம் அல்லவா? சுரேஷ் பிரதீப் பற்றி பேசியது நல்ல விஷயம். இது தொடரட்டும்

 

அமர்நாத்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியத்தின் பல்லும் நகமும்

$
0
0
a.rengka

அ.ரெங்கசாமி

இரண்டயிரத்தோடு சிற்றிதழ்களுக்கான வரலாற்றுத்தேவை முடிந்துவிட்டது என்பது என்னுடைய மனப்பதிவு. சிற்றிதழ்கள் என்பவை ஊடகம் மறுக்கப்பட்ட தரப்புகள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் அச்சு ஊடகம். அச்சு என்பது செலவேறிய ஒன்று. விநியோகம் அதைவிடச் செலவானது .அந்த முதலீட்டை நிகழ்த்த வாய்ப்பு கொண்ட தரப்புகளுக்கே சிந்தனை, பண்பாட்டுச்சூழலில் குரல் இருந்தது. அது எப்போதும் அரசியல், வணிக அதிகாரத்திற்கு ஆதரவான குரல்தான்.அக்குரலுக்கு எதிராகச் செயல்படும் தரப்புகளுக்கு ஊடக உலகம் இடம் அளிப்பதில்லை. ஆகவே மாற்றுக்குரல்கள் தங்களுக்கான ஊடகத்தை நாடின. அவ்வாறு உருவானதே சிற்றிதழ்

ஊடகம் வணிகமாகும்போது ஏற்கனவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட் தரப்புகளும் அவர்களால் விரும்பி வாசிக்கப்படும் குரல்களூம் மட்டுமே ஊடகங்களில் இடம்பெறத் தொடங்கின. மக்களுக்கு இன்றியமையாதவற்றை சொல்லும் தரப்புகளும் எதிர்காலத்தை முன்வைத்து அவர்களுடன் பேசும் தரப்புகளும் அவர்களால் புரிந்துகொள்ளப்படாமலோ ஏற்றுக்கொள்ளப்படாமலோ புறக்கணிக்கப்பட்டன. அவற்றுக்கு ஊடகம் மறுக்கப்பட்டது. சிற்றிதழ் என்பது அத்தரப்பின் குரல்.

cmu3

சீ முத்துசாமி

சிற்றிதழ்கள் இரண்டு வகையானவை. சில சிந்தனைக்களங்கள் சிறிய வட்டங்களுக்குள் மட்டுமே புழங்க முடியும் உயர்கல்வி ஆய்வுகள், தொழில்நுட்ப ஆய்வுகள் போன்றவை. சில சிந்தனைக்களங்கள் எதிர்த்தரப்பாக உருவாகி வருபவையாக இருக்கும். மாற்றுத் தொழில் நுட்ப ஆய்வுகள், இயற்கை வேளாண்மை முதலியவை. கல்வெட்டு, அகழ்வாய்வு போன்ற சில குறிப்பிட்ட துறைகளுக்குள் செயல்படும் அறிவியக்கங்கள் பரவலாக வாசிக்கப்பட முடியாதவை. அவற்றுக்கு சிற்றிதழ் என்ற வடிவம் இயல்பாகவே வசதியாக அமைகிறது.

தமிழில் சிறிய இதழ்களின் இயக்கம் அச்சு தொடங்கிய உடனேயே ஆரம்பித்திருக்கிறது. இயல்பிலேயே சிறிய வட்டத்திற்குள் தான் புழங்கியாகவேண்டிய குரல்கள் அவை உதாரணமாக கரந்தை தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செந்தமிழ்செல்வி என்னும் சிற்றிதழ். அறிஞர்கள் மட்டுமே வாசிக்கும் தன்மை கொண்டிருந்தது அது. ஆனால் அதில்தான் பிற்காலத்தில் தமிழ் பண்பாட்டுச்சூழலில் பேசப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தனித்தமிழ் இயக்கத்தின் தமிழ்பதிப்பியக்கத்தின் ஒரு கருத்தியல் மையமாகவே செந்தமிழ்செல்வி இருந்தது. அப்பேர்ப்பட்ட பத்திரிகைகள் தமிழ் வரலாற்றில் இருபதையாவது சுட்டிக்காட்ட முடியும்.

தமிழில் இலக்கிய எழுத்து பாரதியிலிருந்து தொடங்குகிறது. பாரதி இந்தியா, விஜயா, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் எழுதினார். தொடர்ந்து ஆ.மாதவையா போன்றவர்கள் அவ்விலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தனர். மாதவையா பஞ்சாமிர்தம் போன்ற சிறிய பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். சுதந்திர போராட்ட காலத்தில் சமூக சீர்திருத்தம், தேசிய விடுதலை, பண்பாட்டு மீட்டெடுப்பு ஆகியவற்றை இலக்காகக்கொண்டு பல்வேறு சிறிய பத்திரிகைகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. இவை அன்றைய வாசிப்புச் சூழலையும் அச்சுச் சூழலையும் வைத்து பார்த்தால் ஓரளவுக்கு வாசிப்புவட்டம்  கொண்ட சிறிய இதழ்கள் என்று சொல்லலாம்.

shanmukasiva

ஷண்முகசிவா

ஆனால் 1930 களோடு தமிழில் வணிக எழுத்தும் வணிகப்பிரசுரமும் வீறு கொண்டன. ஒரு பெருந்தொழிலாக அச்சு ஊடகம் மாறியது. அப்போது மக்களால் வாசிக்கப்படும் படைப்பு, ஏற்றுக்கொள்ளப்படும் படைப்பு மட்டுமே பிரசுரத்துக்குரியது என்னும் விதி உருவாகியது. விளைவாக இலக்கியம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. தீவிர இலக்கியம் வணிக சூழலில் நீர்த்துப்போய்விடுவதையும் புதிய போக்குகள் மறுதலிக்கப்படுவதையும் கண்டு அவை அழியாமல் வாழ்வதற்கு சிறிய அளவிலேனும் களம் தேவை என்பதனால் சிறுபத்திரிகை என்னும் இயக்கம் உருவானது. தன் வட்டத்தை திட்டமிட்டு சிறிதாக அமைத்துக்கொண்டு, அதற்குள் மட்டுமே செயல்படுவது இது. ஆகவே முதலீடோ அமைப்போ தேவையற்றது. நட்புக்குழு ஒன்றோ தனிமனிதரோ வெளியிடக்கூடுவது.

தமிழிலக்கியத்தின் சிற்றிதழ் இயக்கம் சி.சு.செல்லப்பாவின்  ‘எழுத்து; விலிருந்து தொடங்குகிறது. அதற்கு நான்கு தலைமுறைக் காலகட்டங்கள் உண்டு. ’எழுத்து’, ‘சந்திரோதயம்’, ‘சூறாவளி’ போன்ற இதழ்கள் முதல் தலைமுறை. கணையாழி, தீபம், கசடதபற,நடை,ழ போன்ற இதழ்கள் இரண்டாவது காலகட்டத்தை சேர்ந்தவை. விருட்சம் ’சொல்புதிது’ ’சிலேட்’ போன்றவை மூன்றாவது காலகட்டம். ‘காலச்சுவடு’.’உயிர்மை’ உயிரெழுத்து போன்ற இதழ்கள் நான்காவது காலகட்டம்.

இந்நான்காவது காலகட்டத்தில் சிற்றிதழ்கள் தங்களை இடைநிலை இதழ்களாக மாற்றிக்கொண்டன. அரசியல் திரைப்படம் போன்றவற்றுக்கு பெருமளவு இடம் அளிக்க ஆரம்பித்தன.  1000 பிரதிகளிலிருந்து 5000 பிரதிகளாக இவற்றின் விற்பனை கூடியது இரண்டாயிரத்துக்குப் பின்னர்தான் இவ்வாறு சிற்றிதழ்கள் பேரிதழ்களாக உருமாற்றம் பெறத் தொடங்கின. இன்று ஏறத்தாழ பத்து இடைநிலை இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.

punniavan11

கோ புண்ணியவான்

இரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான இந்த மாற்றத்துக்கு அடிப்படைகள் இரண்டு. ஒன்று இணையம். இரண்டு புத்தகக் கண்காட்சிகள் இணையம் வழியாக புத்தகம் பற்றிய தகவல்கள் சென்று மக்களை சேரத்தொடங்கின. புத்தகக் கண்காட்சிகளின் வழியாக மக்களிடம் புத்தகங்கள் சென்று சேரத்தொடங்கின. ஆகவே முன்பிருந்த வாசகர் வட்டம் பத்து மடங்கு பெருகியதென்று சொல்லலாம். அதன் விளைவாகத்தான் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்கள் ஐந்தாயிரம் வரை அச்சிடப்படலாயின.

இணையம் இன்னொரு வாய்ப்பை அளித்தது. சிற்றிதழ்கள் என்று நேற்றுவரைக்கும் சொல்லிக்கொண்டிருந்த இதழ்களை அச்சில் கொண்டுவராமல் மின்வடிவிலேயே பரவலாகக்கொண்டு செல்ல முடியுமென்ற நிலை ஏற்பட்டது.சிற்றிதழ் உருவானதே மூதலீட்டையும் அமைப்பையும் தவிர்ப்பதற்காகத்தான். இணையத்தில் அவை தேவையில்லை. அதோடு அச்சிதழுக்குத் தேவையான சந்தா வசூலும், சந்தைவினியோகமும்கூட தேவையில்லை என்றாயிற்று

saipiir

சை பீர்முகம்மது

இன்று இலக்கியம் தமிழில் மிகப்பெரும்பாலாக மின் வடிவிலேயே படிக்கப்படுகிறது. இது அச்சு சிற்றிதழ்களின் தேவையை பெரும்பாலும் இல்லாமல் ஆக்கியது. அச்சுச் சிற்றிதழ்கள் என்பவை ஒரு கௌரவத்திற்காகவோ அழகிற்காகவோ பிடிவாதமாக அச்சிடப்படுபவை என்னும் நிலை இன்று உள்ளது. அவற்றை படிப்பவர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் சென்ற தலைமுறை வாசகர்கள். இன்று இணையத்தில் பத்தாயிரம் பேர் படிக்கும் ஒர் இணையச் சிற்றிதழை நிறுவி நடத்திவிட முடியும் என்றிருக்கையில் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகளை அச்சிட்டு தபாலில் அனுப்புவதில் பொருளேதும் இருப்பதாக தெரியவில்லை.

சிற்றிதழ் என்னும் மாற்று இயக்கத்தின் மேல் ஆர்வம் கொண்டு பிடிவாதமாக வெளியிடப்படும் சிற்றிதழ்களில்கூட பெரும்பாலும் இணையத்தில் அறிமுகமாகி இணையம் வழியாக எழுந்து வந்த எழுத்தாளர்களின் படைப்புகளே வெளியிடப்படுகின்றன. சிற்றிதழ்கள் வழியாக உருவாகிவந்த எழுத்தாளர்களோ வாசகர்களோ இன்று இருப்பது போல தெரியவில்லை.

*

naven

நவீன்

இச்சூழலில் தான் வல்லினத்துடன் எனக்கு அறிமுகம் உருவாகிறது. 2006-ல் வல்லினத்தின் நண்பர்குழுவை நான் கொலாலம்பூரில் சந்தித்தேன். என்னை சிங்கப்பூரில் இருந்து கொலாலம்பூருக்கு ஒரு வாசகர் சந்திப்புக்காக அழைத்திருந்தனர். நவீன் அன்று காதல் என்னும் சிற்றிதழை நடத்திவந்தார். வல்லினம் அதன்பின்னர்தான் உருவானது.

 ‘நாங்கள் வல்லினங்கள்’ என்று அறிவித்துக்கொண்டு வெளிவந்த சிற்றிதழ் சா.கந்தசாமி,ஞானக்கூத்தன்,ந.முத்துசாமி கூட்டில் வெளிவந்த கசடதபற. தமிழ்ப்புதுக்கவிதையின் ஒரு கூர்மையான வெளிப்பாட்டு ஊடகம் அவ்விதழ். [அதேசமயம் சிற்பி, தமிழ்நாடன்,ஞானி, அக்னிபுத்திரன் போன்றாரால் வெளியிடப்பட்டு வன்மையான முழக்கங்களை எழுப்பிய இதழ் ‘வானம்பாடி’ என்ற பெயரில் வெளிவந்தது என்பது வேடிக்கை]. மலேசியாவின் ‘வல்லினம்’ சிற்றிதழ் அப்பெயரிலேயே ஓர் அறைகூவலைக் கொண்டிருந்தது

வல்லினத்தின் பிரதிகளை நான் பார்க்கையில் அது இளைஞர்களின் தீவிரத்தின் வெளிப்பாடு என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அச்சில் படைப்புக்களை வெளியிடுவதென்றால் மலேசியாவில் ஏராளமான வாய்ப்புக்கள் இருந்தன. உண்மையில் அங்குள்ள இதழ்கள் எழுத ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருந்தன. ஆகவே அங்குள்ள சிற்றிதழுக்கான தேவை என்ன என்று புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்களிடம் பேசியபோது அச்சிற்றிதழைச் சேர்ந்தவர்கள் ஒரு தனி அடையாளத்தை நாடுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.

vijaya

விஜயலட்சுமி

மலேசியச்சூழலில் அச்சு ஊடகம் பெரும்பாலும் அதிகாரத்துடன் செய்துகொள்ளும் சமரசத்தின் முகமாக இருந்தது. அங்குள்ள அரசியலில் வேறுவழியும் இல்லை. உண்மையில் ஒரு முகம் சமரசம் என்றால் எல்லா முகங்களிலும் சமரசம் காலப்போக்கில் வந்துவிடுகிறது. இலக்கியரசனை, இலக்கியமதிப்பீடுகள், கருத்துவிவாதங்கள் அனைத்தும் சமரசத்திற்குள்ளாகி நுட்பம், தீவிரம், கூர்மை என்பதற்கே இடமில்லாமல் ஆகிவிட்டிருந்தது. இந்த மழுங்கியதன்மை மைய ஊடகத்தின் அடையாளமாக ஆனபின்னர் அதில் என்ன எழுதினாலும் அதுவும் மழுங்கியதாகவே வெளிப்படும்.

மலேசியாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் இந்தியநகரங்களிலும் சரி, தமிழ்ப்பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒருசில பொதுத்தன்மைகள் உண்டு. அவை அதிகார அமைப்புக்களுக்கு நயந்துசெல்லும் தன்மைகொண்டிருக்கும். காலப்போக்கில் வலுவான அமைப்பாக திரண்டு செல்வவளம் கொண்டிருப்பதனால் அதிகாரத்தையும் செல்வத்தையும் கையாள்பவர்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கும். அதன்பின் அத்தனை செயல்பாடுகளும் அந்த இலக்கை மட்டுமே கொண்டிருக்கும்.

விளைவாக உலக இலக்கியம், உலகசிந்தனைகளில் இருந்து முழுமையாகத் தன்னைத் துண்டித்துக்கொண்டு ஒருவகையான ‘பழங்குடி’ மனநிலையை அவர்கள் அடைந்திருப்பார்கள். உலகிலுள்ள அத்தனை பழங்குடியினரும் அவர்களின் பண்பாடுதான் தூய்மையானது அவர்களின் இனம்தான் தொன்மையான வரலாறுள்ளது என்னும் மூடநம்பிக்கை கொண்டிருப்பார்கள். வாசல்களை முழுமையாக மூடிக்கொண்ட தமிழ்வட்டங்களும் இந்நம்பிக்கையையே முதன்மையாகக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை திரும்பத்திரும்பச் சொல்லும் எளிமையான கேளிக்கைப்பிரச்சாரர்களே அவர்களுக்கு உகந்த சொற்பொழிவாளர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமாக இருப்பார்கள். பழங்குடிகள் அனைத்துமே சிந்தனைக்குப் பதிலாகக் கூட்டுக்கேளிக்கைகளில் திளைக்க விரும்புவார்கள். பழங்குடித்தன்மைகொண்ட நம் தமிழமைப்புக்களுக்கு அந்தத்தேவையை சினிமா நிறைவேற்றுகிறது.

pandi

அ.பாண்டியன்

ஆகவே அதிலிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள விரும்பினர் மலேசியாவின் இளையதலைமுறைப் படைப்பாளியினரில் சிலர். தங்கள் குரல் தனித்துக்கேட்கவேண்டும் என்றும் தீவிரமானவர்களாகவே தங்கள் எழுத்து தங்களை அடையாளம் காட்டவேண்டும் என்றும் எண்ணினர். அதன் விளைவே வல்லினம் என்னும் பெயர். வல்லினம் மைய ஓட்டத்தின் மீதான சமரசமில்லாத , முகம்பார்க்காத, விமர்சனம் மூலமே கவனம் பெற்றது. வாசகர்கள் இவர்கள் வேறுவகையினர் என்னும் எண்ணத்தை அடைந்தனர். சிற்றிதழ் என்னும் அடையாளமே அவர்களை வேகம் மிக்கவர்கள் என்று காட்டியது

நவீனத்துவம் என்பது மரபின் மீதான விமர்சனத்தில் இருந்து மட்டுமே உருவாக முடியும். தமிழ்நவீனத்துவம் பாரதியில் முனைகொண்ட கடுமையான மரபுவிமர்சனத்தில் தொடங்கி புதுமைப்பித்தனில் மேலும் தீவிரம் கொண்டது. நவீன இலக்கியத்தை பழைய இலக்கியத்தில் இருந்து வேறுபடுத்தும் அம்சம் என்பது ‘விமர்சனத்தன்மை’ என்று சொல்லலாம். அந்த விமர்சனத்தின் பொருட்டே நவீன இலக்கியம் ஒருவகை துடுக்குத்தன்மையை, அடங்காமையை அடைகிறது. எள்ளலும் பகுப்பாய்வும் அதன் வழிமுறையாக அமைகிறது. அதன் குரலில் தவிர்க்கமுடியாத ஒரு சீண்டும்தன்மை குடியேறுகிறது.

ஆகவே முன்னர் சொன்ன பழங்குடித்தன்மையை நிராகரிக்காமல், விமர்சனம் செய்து நிராகரிக்காமல் நவீன இலக்கியமும் நவீனசிந்தனையும் உருவாகவே முடியாது. அது அரசியல்நிலைபாடோ கருத்துமாறுபாடோ அல்ல. அது நவீன இலக்கியத்தின் அடிப்படை மனநிலை. புதுமைப்பித்தனைப்பற்றி ‘இவருக்கு இப்படியெல்லாம் எழுத என்ன உரிமை?’ என ராஜாஜி கோபம்கொண்டது அந்த மனநிலையைக் கண்ட மரபின் எரிச்சல்தான். ஜெயகாந்தன், சுந்தரராமசமை முதல் இன்றுவரை எழுத்தாளர்கள் அந்த விமர்சனத்தன்மை, அதிலுள்ள சீண்டும் தன்மை காரணமாகவே எதிர்க்கப்படுகிறார்கள்.

மலேசிய இலக்கியத்தில் நவீன இலக்கியத்தின் குரலாக வல்லினம் எழுந்ததனாலேயே அது விமர்சனத்தன்மையும் சீண்டும்தன்மையும் கொண்டு தனித்து விரிந்தது என நினைக்கிறேன். அங்கெ நவீன இலக்கியம் பிறந்ததே இவ்வியல்புகளால்தான். ஆனால் அதில் உருவான பெரிய தேக்கம் அங்கே இலக்கியத்தையும் ஒருவகை சடங்காக ஆக்கியது. அதிலிருந்து மீண்டும் விலகி எழுந்து பல்லும் நகமும் கொள்வதையே நான் வல்லினத்தில் காண்கிறேன். சமீகபாக தமிழிலக்கியத்தின் பல ஆழமனா படைபுகள் வல்லினத்தில் உருவாக முடிந்தது இவ்வியல்பால்தான்.

*

suyuva

சு யுவராஜன்

மிக எளிதாக மலேசியச் சூழலில் இணையத்தில் இதழ்களை வெளியிட முடியுமென்று இருக்கையில் அச்சிட்டு விநியோகிப்பதற்கான தேவை என்ன என்ற எண்ணம் எனக்கு அன்று எழுந்தது. ஆனால் தமிழ்ச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மலேசியச் சூழல். மலேசிய சூழலில் அச்சு ஊடகம் என்பது தமிழ்நாட்டைப் போல் பெருவணிகமாக ஆகவில்லை. ஏனெனில் மிகப்பெரிய அளவில் வணிக வாய்ப்புகள் அங்கில்லை ஆனால் மிகப்பெரிய அளவில் அதிகார மையப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் ஒத்துழைத்தும் கோரிக்கை வைத்தும்சில விஷயங்களைப்பெற்று தமிழர்கள் அங்கு வாழ்வதற்கான மொழி சார்ந்த முகமாகவே அச்சு ஊடகம் கருதப்படுகிறது. அதாவது அச்சில் வெளிவரும் நாளிதழ்களை சார்ந்து தான் தமிழர்கள் தங்கள் கருத்துக்களை அங்கு தொகுத்துக்கொள்கிறார்கள்.

அச்சூழலில் இணையத்தில் தனியாக இலக்கியம் எழுதிக்கொண்டிருப்பது என்பது அங்குள்ள சூழலில் எந்தவிதமான தலையீட்டையும் நிகழ்த்தாமல் தனிப்போக்காக ஒதுங்கிக் கொள்வதாக இருக்கும். அங்கே தேவையாக இருந்தது ஓர் இடையீடு. ஒரு மாற்றுக்குரல். அதற்கு சிறிதென்றாலும் இன்னொரு அச்சு ஊடகமே ஆயுதமாகமுடியும். அவ்வாறுதான் வல்லினம் போன்ற இதழின் அவசியம் உருவாகிறது. அது தன்னை அச்சில் கொண்டுவரும்போது அங்கு ஏற்கனவே இருக்கும் அச்சு ஊடக துறைக்குள் ஒரு மாற்றுக்குரலாக ஒலிக்க முயல்கிறது. அங்கு இருக்கும் அச்சு ஊடகத்துறையின் குறைபாடுகளை போதாமைகளை விமர்சனம் செய்கிறது. அதன் விளைவாக கடும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறது. அந்தப்போக்கால் முன்னிறுத்தப்படும் படைப்பாளிகளுக்கு மாற்றான படைப்பாளிகளை முன்னிறுத்துகிறது. வேறுவகையான சொல்லாடல்களை நிகழ்த்துகிறது.

bala

பாலமுருகன்

வல்லினம் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் மொழிசார் அதிகாரமையத்திற்கு எதிரான ஒரு குரல். தமிழர்கள் மேலும் தீவிரமானவர்கள் என்றும் மேலும் உண்மையானவர்கள் என்றும் மேலும் உலகப்பண்பாட்டுடன் நேரடித்தொடர்பு கொண்டவர்கள் என்று அது காட்ட விரும்புகிறது. சிறிய ஒரு நண்பர் வட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட வல்லினம் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நடந்து தனது இடத்தை இங்கு நிறுவிக்கொண்டிருக்கிறது. அங்குள்ள நெருக்கடிகளால் வல்லினம் சமீபகாலமாக அச்சில் இல்லை, இணைய இதழாகவே வெளிவருகிறது. ஆனால் அது அச்சிதழ் என்னும் அடையாளத்தைப் பெற்றுவிட்டது.

வல்லினம் முன்னெடுத்த சந்திப்புகளில் பங்கெடுப்பதற்காக பலமுறை நான் சென்றிருக்கிறேன் .வல்லினத்தின் மாநாடுகளில் கருத்தரங்குகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இலக்கிய பயிற்சி பட்டறைகளை இரண்டு முறை நடத்தியிருக்கிறேன். தேர்ந்த இலக்கியத்தை படிப்பதற்கும் அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கும் தரமான இலக்கியத்தைப் படைப்பதற்கும் மலேசிய இளம் தலைமுறைக்குப் பயிற்சி அளிப்பது இன்று வல்லினத்தின் முதன்மையான பணியாக உள்ளது. அதன்பொருட்டே ஏற்கனவே மலேசியாவில் விவாதிக்கப்படக்கூடிய விஷயங்களையும் குறைபாடுகளையும் சமரசங்களையும் வல்லினம் சுட்டிக்காட்டுகிறது. இது பண்பாட்டு இயக்கமாக இருந்தாலும் அங்குள்ள மொழி மையமாகிய அதிகாரத்திற்கு அறைகூவலாக இருப்பதனால் ஒருவகையான மாற்று அதிகாரச்செயல்பாடாகவே உள்ளது.

வல்லினத்தின் இணைய வடிவம் வெளிவருகிறது. உலகம் முழுவதிலும் வாசகர்கள் அதைப்படிக்கிறார்கள் ஆனால் அதன் அச்சு வடிவமே மலேசியாவில் மிக முக்கியமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். ஆகவே அது அச்சிலும் வந்தாகவேண்டும். அதற்கு காரணம் அதில் இருக்கும் குறியீட்டுத்தன்மை. மின்வடிவம் எண்ணத்திலிருந்து எண்ணத்திற்கு செல்வது போல, அதற்கு ஒரு பருவடிவம் இல்லாதது போல தோன்றுகிறது. அதுவே அச்சில் கையில் தொட்டுப்பார்க்கக்கூடிய இதழாக வரும்போது கண்கூடாக முன்னால் வந்து நிற்கும் ஒரு இயக்கமாக ஆகிவிடுகிறது. சிற்றிதழுக்கு இப்படி ஒரு தனித்தன்மை உண்டு என்பதை வல்லினம் மூலமாகவே நான் அறிந்தேன்.

dayaji

தயாஜி

*

இன்று தமிழ்நாட்டுக்கு வெளியே கனடா, ஃப்ரான்ஸ்,நார்வே,,அமெரிக்கா, இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழிலக்கிய வாசிப்பும் எழுத்தும் நிகழ்கிறது.. சில நாடுகளில் தமிழர் அனேகமாக எந்த பண்பாட்டு நடவடிக்கைகளும் இல்லாமல் காலத்தில் மிகப்பின்னடைந்து அடையாளம் இழந்து சிதறிப்போயிருக்கிறார்கள் இலங்கையில் உள்நாட்டுப்போராலும் அது உருவாக்கிய கடுமையான கசப்புணர்வுகளாலும் ஒற்றைப்படைக் கருத்துநிலைகளின் மூர்க்கத்தாலும் இலக்கிய இயக்கம் சிதறுண்டு பொருளிழந்துள்ளது. ஆனால் அங்கே வலுவான இளையதலைமுறைப் படைப்பாளிகள் எழுந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

தங்களை ஓரளவுக்கு தொகுத்துக்கொண்டு பண்பாட்டுச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் தமிழர்கள் கனடாவில் மட்டும்தான் இருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த அமெரிக்கா போன தமிழர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பக் கல்வி அடைந்தவர்கள் பண்பாட்டுப் பயிற்சி இல்லாதவர்கள். எளிய திரைப்பட ரசனை என்பதற்கு அப்பால் அவர்களுக்கு தமிழுடன் தொடர்பில்லை.

vallinam

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை பொறுத்தவரை அங்கு தரமான படைப்பாளிகள் சிலர் இருந்தாலும் படைப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் ஏறத்தாழ எல்லாமே இலக்கியப்படைப்புகள்தான் என்று முன்வைக்கப்படுகின்றன. கூரிய விமர்சனங்கள் அங்கு உருவாகவில்லை. முன்னரே உருவாகி நிலைபெற்றுள்ள அமைப்புகள் இலக்கியத்தின் மையப்போக்குகளை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. மாற்றுப்போக்குகளுக்கு அங்கு இடமில்லாமல் இருக்கிறது.

மலேசியாவில் அந்த நிலைதான் இருந்தது. வல்லினம் அச்சூழலை மிக விரைவாக மாற்றியது இன்று தமிழகத்திற்கு வெளியே தீவிரமும் ஆழமும் கொண்ட இலக்கியச் செயல்பாடு நடைபெறும் ஒரே களமாக மாறியிருக்கிறது மலேசியா .அதை உருவாக்கிய வல்லினம் நண்பர்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பங்களிப்பொன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த மகத்தான வரலாற்று பங்களிப்பும் அது நிகழும் போது சரியாக மதிப்பிடப்படாததாகவே இருக்கும். காலத்திற்கு அப்பால் நின்று பார்க்கும் எழுத்தாளர்களுக்கே அது கண்ணில் படும் அவ்வகையில் இங்கிருந்துகொண்டு ஒரு வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று வல்லினத்தைப்பற்றி என்னால் சொல்ல முடியும்.

[வல்லினம் நூறாவது இதழ் மலரில் எழுதப்பட்ட கட்டுரை]

வல்லினம் நூறாவது இதழ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16840 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>