Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16850 articles
Browse latest View live

ஒரு கவிதை

$
0
0

bogan

 

சென்ற இரண்டாண்டுகளில் தமிழில் நான் வாசிக்கநேர்ந்த மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று.

ஜெ

 

ஹரிணி திரும்பத் திரும்பத்
தனது சிறிய காயத்தை
என்னிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறாள்

தனது புண்களைக் காண்பிக்க
மனிதர்கள் பிரியமானவர்களைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்

கவி இவ்வுலகில்
காயங்களைத் தவிர வேறு ஏதாவது 
காண முடியாதா ?
என்று ஏங்குகிறான்

அவனை
மலையுச்சியில்
எல்லோரும் காணும் தீபமாய்
வைத்திருக்கிறது என்பார் அறிவுடையோர்

ஒளி எதில் ஒளிந்துகொள்ள முடியும்?

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விழா நிதியுதவி

$
0
0

vish

 

 

வரும் டிசம்பர் 16,17 தேதிகளில் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழவிருக்கிறது. மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். சென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே சென்ற ஆண்டுமுதல் விஷ்ணுபுரம் அறக்கட்டளையை நிறுவி அனைவரிடமும் நன்கொடை பெறத் தொடங்கினோம். இவ்வாண்டும் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் விழா நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்கவேண்டுமென கோருகிறேன்

நிதியளிக்கவேண்டிய முகவரி

 

ICICI BANK Ram Nagar Coimbatore
VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI
கணக்குஎண் 615205041358
IFSC Code ICIC0006152

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நிதியை அளிக்கலாம். எங்கள் அறக்கட்டளை வெளிநட்டு நிதியை வாங்க இயலாதென்பதனால் இந்த ஏற்பாடு

 

S shahul hameedhameed
State bank of india
19 d north car street
Near head post office
Nagercoil 
India 639001
Account no NRE 67005304451
SWIFT CODE SBTRINBBFRD

 

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52

$
0
0

ஏழு : துளியிருள் – 6

fire-iconஇளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே?” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்” என்றான். “சுதமர்…?” என்று கேட்டபடி இளைய யாதவர் வந்து பீடத்தில் அமர அவரைத்தொடர்ந்து வந்த ஏவலன் அவருடைய நீண்ட மேலாடையின் மடிப்புகளை அமர்வுக்குரிய முறையில் சீரமைத்தான். சத்யபாமை அவர் குழலில் கலைந்திருந்த ஒரு கீற்றை சீரமைத்தாள்.

“அவர் வெளியே கூடத்திலிருக்கிறார்” என்று அபிமன்யூ சொன்னான். “ஏன்? என்னிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறாரா? இவர்கள் இருப்பதனால் தயங்குகிறாரா?” என்றார் இளைய யாதவர். “இல்லை… ஆம், சொல்ல விரும்புகிறார்…” என்று தடுமாறிய அபிமன்யூ “ஆனால் அதை நானே சொல்லிவிடுகிறேன், மாதுலரே” என்றான். “சொல்க!” என்று அவர் கையை காட்டியபின் ருக்மிணியிடம் அவள் வளையல் ஒன்று இன்னொன்றுடன் சிக்கியிருப்பதை சுட்டிக்காட்டினார். அவள் அதை சீரமைத்துக்கொண்டு புன்னகைத்தாள். நக்னஜித்தி அவர் கழுத்தணியின் பின்முடிச்சை இழுத்து சீரமைத்தாள். அவர்கள் சொல் எட்டா பிறிதொரு தொலைவிலிருப்பதாகத் தோன்றியது.

“எவ்வகையிலேனும் இன்றைய அவைகூடல் நிகழ்வை ஒத்திப்போட முடியுமா என்று அவர் கேட்க விரும்புகிறார்” என்றான் அபிமன்யூ. “ஏன்? அவை ஒருக்கங்கள் முடிய அவ்வளவு பொழுதாகுமா?” என்று இளைய யாதவர் கேட்டார். கண்ணுக்குத்தெரியாத காற்றுபோல அப்புன்னகை அவனை அறைந்து அவரை அணுக முடியாமலாக்கியது. பல்லாயிரம்பேரை அவரை நோக்கி இழுப்பதும் அவருக்குரியவர்கள் தாங்கள் என்று எண்ணவைப்பதும் அப்புன்னகைதான். அணுகியோர் மேலும் அணுகாமல் பல்லாயிரம் காதம் அகலே எழுந்த தனிமைப்பெருமலையென அவரை உணர வைப்பதும் அதுவே என்று அபிமன்யூ எண்ணிக்கொண்டான்.

“மாதுலரே, துவாரகையின் ஆற்றலின்மையை இன்றைய அவை அதன் எதிரிகளுக்கு காட்டிவிடக்கூடுமென்று தங்கள் தோழர்கள் எண்ணுகிறார்கள். முன்னரே இங்கு விசைகொண்டிருக்கும் பிரிவுப்போக்கு அதனால் மேலும் தூண்டிவிடப்படக்கூடும். தாங்கள் தனிமைப்பட்டிருக்கிறீர்கள் என்ற பொய்யை உலகுக்கு அறிவிக்கும் நிகழ்வாகவும் அது அமையலாம்” என்றான் அபிமன்யூ. “நான் எப்போதும் முற்றிலும் தனிமையில்தான் இருக்கிறேன், மைந்தா” என்று இளைய யாதவர் சொன்னார்.

மீண்டும் அருவியின் அறைதலால் என அப்புன்னகையால் நெடுந்தொலைவுக்கு அபிமன்யூ தூக்கி வீசப்பட்டான். “நான் அதை சொல்லவில்லை, இங்குள்ள அரசியல் சூழலை குறிப்பிட்டேன்” என்றான். “அரசே, யாதவக்குடிகளிலிருந்து பெரும்பாலும் குடித்தலைவர் எவருமே இந்த அவையில் இன்று வந்தமரப்போவதில்லை. அவைகூடலை முரசறைவித்து பன்னிரு நாழிகை கடந்துவிட்டது. இதுவரை யாதவப்பெருங்குலங்களிலிருந்து எந்தக்குலத்தலைவரும் அரண்மனை வளாகத்திற்குள் நுழையவில்லை என்றார்கள்.”

ஒருவேளை எவரேனும் வந்துள்ளார்களா என அவன் உள்ளம் ஐயுறவே குரல் தயங்கியது. ஆயினும் தன்னை தொகுத்துக்கொண்டு “தங்கள் மைந்தர்களும் முழுமையாகவே இந்த அவையை புறக்கணிக்கவிருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களிடம் நேரில் பேசினேன். அவர்கள் உறுதிகொண்டிருக்கிறார்கள். ஏனென்று தாங்களே அறிவீர்கள்.” இளைய யாதவர் சத்யபாமையை நோக்கிவிட்டு “மைந்தர்களிடம் அன்னையரை தூதனுப்பலாமா?” என்றார். அவள் அவருடைய புன்னகையை புன்னகையால் எதிர்கொண்டு “நீங்கள் எவரை வேண்டுமானாலும் தூதனுப்பலாம். யார் சென்றாலும் அது நீங்களே. மறுமொழி சொல்வதும் நீங்களே” என்றாள்.

அவர் ருக்மிணியிடம் “உங்கள் சொற்களை உங்கள் மைந்தர்கள் கேட்பதில்லையா?” என்றார். “உங்கள் சொற்கள் ஒவ்வொருவரையும் சென்று அடைந்துகொண்டுதான் இருக்கின்றன. சிலர் அண்மையில் இருக்கிறார்கள், சிலர் சேய்மையில்” என்று ருக்மிணி அதே புன்னகையுடன் சொன்னாள். அறையிலிருந்த ஆறு அரசியருமே ஒரே புன்னகை முகம் கொண்டிருப்பதை அபிமன்யூ கண்டான். அவருடன் இருக்கையில் அவர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்கிறார்கள். அவருடைய விழிகளையும் புன்னகையையும் தாங்களும் சூடியிருக்கிறார்கள். பிறர் அங்கிருப்பதையே அறியாமல் இருக்கிறார்கள். தான் அங்கிருப்பதையேகூட அவர்கள் உணரவில்லை.

அபிமன்யூ தன் உள்ளத்தை மேலும் குவித்துக்கொண்டு “மாதுலரே, எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள். நான் சென்று பிரத்யும்னரை சந்தித்து இன்றைய அரசியல் சூழலை விளக்குகிறேன் அவர் வருவாரென்றால் பிறருக்கும் அதை தவிர்க்கமுடியாத நிலை ஏற்படும்” என்றான். “பிறரை சந்தித்துவிட்டாயல்லவா?” என்று இளைய யாதவர் கேட்டார். “ஆம், ஆனால் அவர்கள் அரசு சூழ்தல் அறியாதவர்கள். தங்கள் மைந்தர்களில் பிரத்யும்னர் மட்டுமே மெய்யாக இன்று பாரதவர்ஷத்தில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அறிந்தவர். இங்கு இன்றுவரை தங்களுக்கு அடுத்தபடியாக அரசராகத் திகழ்ந்தவரும் அவரே. நான் சொல்வதை புரிந்துகொள்ள முடியும்” என்றான்.

அவர் சிரித்து “நீ சொல்வதை அனைவருமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் நீ மறுமொழி சொல்லமுடியாத கூரிய தொகைக்கூற்றை அவர்கள் முன்வைக்கிறார்கள். பிரத்யும்னனிடனும் அவ்வாறொன்று இருக்கும்” என்றார். திரும்பி ஏவலனிடம் “பொழுதாகிவிட்டது அல்லவா?” என்றார். “ஆம், கிளம்ப வேண்டியதுதான், அரசே” என்று அவன் சொன்னான். “பிற இருவரும் எங்கே? காட்டுமலர்கள் இன்றி எந்தக் கோதையும் முழுமைகொள்வதில்லை என்பார்கள் கவிஞர்” என்றார். சத்யபாமை சிரித்துக்கொண்டு “சற்று பிந்தி விரிபவை… வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

இளைய யாதவர் திரும்பி அபிமன்யூவிடம் “இன்றைய அவைக்கு வருபவர் எவரையும் தடுக்க வேண்டியதில்லை என்பது மட்டும் எனது ஆணை” என்றார். “அவ்வாறே” என்று அபிமன்யூ தலைவணங்கினான். “நான் அவையை சென்று பார்க்கவிருக்கிறேன், மாதுலரே” என்று அவன் திரும்ப அவர் “என் மைந்தனாக அவையில் இன்று முரளி அமர்ந்திருக்கட்டும்” என்றார். அபிமன்யூ திரும்பிப்பார்த்து “அவர்…” என்றபின் தலைவணங்கி “ஆணை” என்றான்.

கதவு திறந்து ஏவலன் உள்ளே வந்து “நிஷாத அரசியர் வருகை” என்று அறிவித்தான். “வரச்சொல்க!” என்று இளைய யாதவர் சொல்ல அவன் வெளியே சென்று கதவைத் திறக்க ஜாம்பவதியும் காளிந்தியும் முழுதணிக்கோலத்தில் கைகளைக் கூப்பியபடி உள்ளே நுழைந்தனர். இளைய யாதவர் “வருக! பிடியானை பட்டமணிந்து எழுந்தபின்னரே நிரை அணிநிறைவு கொள்கிறது” என்றார். ஜாம்பவதி புன்னகையுடன் அருகே வந்து சத்யபாமையின் கைகளை மெல்ல தொட்டாள். காளிந்தியை தோள் தொட்டழைத்த ருக்மிணி “பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் முழுதணிக்கோலம் கொள்கிறாள்” என்றாள்.

இளைய யாதவர் திரும்பிப்பார்க்க “ஆம், பதினான்கு ஆண்டுகளும் இங்கு அஷ்டமி ரோகிணி நன்னாளில் மட்டும் அரசியரென நாங்கள் மன்றமர்வதுண்டு. ஒவ்வொரு முறையும் மூன்று அணிக்குறைகளை வேண்டுமென்றே வைப்போம். தாங்கள் இங்கில்லாதபோது அணிநிறைவு கொள்ளலாகாது என்று. ஆனால் இவள் மட்டும் ஏழு அணிக்குறைகள் பூணுவாள்” என்றாள் பத்ரை. “ஏன்?” என்று இளைய யாதவர் கேட்டார். காளிந்தி இளமங்கையின் நாணத்துடன் “அறியேன். குறை மிகுந்தோறும் தாங்கள் வந்தமையும் இடம் மிகுகிறதென்று எண்ணம்” என்றாள்.

நக்னஜித்தி “மாறாக பூணும் அணியனைத்தும் தங்கள் விழிகளே என்று நான் எண்ணுவேன். பூணாத அணியொன்றை எடுத்து வைத்து இது தாங்கள் இன்னும் என்னை நோக்காத விழி எனக் கருதுவேன்” என்றாள். அவர்கள் தன்னை முற்றாகவே மறந்துவிட்டார்கள் என அபிமன்யூ உணர்ந்தான். தலைவணங்கி அவன் வெளியே சென்றதை அவர்கள் எவரும் நோக்கவுமில்லை.

fire-iconஇடைநாழியில் நின்றிருந்த சுதமர் அபிமன்யூவை நோக்கி ஓடிவந்து “என்ன நிகழ்கிறது?” என்றார். “அரசியரிடமோ அரசரிடமோ நாம் சொல்வதற்கொன்றுமில்லை” என்று அபிமன்யூ சொன்னான். “ஏவலர்கள் வந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சற்று முன்னர் ஸ்ரீதமரே நேரில் வந்தார். அவை முற்றொழிந்து கிடக்கிறது” என்றார் சுதமர். அபிமன்யூ “இன்னும்கூட அவர்கள் வரக்கூடுமென்றே தோன்றுகிறது” என்றான். “ஏதோ ஒன்றுக்காக அவர்கள் காத்திருக்கலாம். நம்மிடமிருந்தல்ல, அவரிடமிருந்து.”

“துவாரகையின் அவையைபற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசப்பேரவை அது. ஆறாயிரம் இருக்கைகள். வணிகர்கள், மாலுமிகள், அயல்தூதர்கள், குடித்தலைவர்கள், அந்தணர், முனிவர் என்று ஆறு பெரும்பிரிவுகள். ஒன்றிலும் இன்னமும் ஒருவர்கூட வந்தமரவில்லை” என்றார் சுதமர். அபிமன்யூ அதன்பின்னரே அதை முழுதுணர்ந்து “குடிகள் கூடவா?” என்றான். “எவருமே” என்றார் சுதமர். அத்தனை இருக்கைகளும் ஒழிந்துள்ளன. அந்தணரும் வணிகரும்கூட அவைபுகவில்லை.”

“முற்றொழிந்த அவையை நோக்கியா கிளம்பவிருக்கிறார்?” என்றான் அபிமன்யூ. “ஆம் அதனால்தான் பதறிக்கொண்டிருக்கிறோம். என்ன நிகழ்கிறதென்று அறிந்துவர ஸ்ரீதமர் நகர் எங்கும் ஒற்றர்களை அனுப்பியிருக்கிறார்.” அபிமன்யூ “அவையில் முரளி அவர் மைந்தனாக வந்து அமரவேண்டுமென்று ஆணை” என்றான். சுதமர் “பட்டத்து இளவரசராகவா?” என்றார். “தெரியவில்லை. ஆனால் இன்று அவர் மட்டுமே அரசமைந்தரென அவையிலிருப்பார்.” சுதமர் “சொல்லமுடியாது. அவருக்கே முடிசூட்டவும்கூடும்” என்றார்.

“அவருக்கு அரசர் முடிசூட்டுவார் என்றால் அவரே துவாரகையை ஆள்வார். பாரதவர்ஷத்தில் அவருக்கெதிராக படைகொண்டுவரும் திறனுள்ள எவரும் இல்லை. எந்தையரும் நானும் இருபுறமும் நின்று அவரை காப்போம். எங்கள் கொடிவழிகள் ஏந்தும் வில்லும் வாளும் அவருடன் இருக்கும்” என்று அபிமன்யூ சொன்னான். “ஆனால்…” என்றபின் “நன்று! அதுவே ஆணை என்றால் அது நம் கடமை” என்று சுதமர் சொன்னார்.

“அவைக்கு வரும் எவரையும் தடுக்க வேண்டியதில்லை என்று அரசரின் ஆணை” என்று சொன்னபடி அபிமன்யூ நடந்தான். “குடிகளையா?” என்றார் சுதமர். “எவரையும்” என்றபின் “சுதமரே, தாங்களே இங்கு நின்று அரசரை அழைத்து வருக! நான் பேரவைக்குச் செல்கிறேன்” என்று அபிமன்யூ நடந்தான். அவன்ப்காலடிகள் ஓங்கி ஒலித்ததைக் கேட்டபோதுதான் அரண்மனை எத்தனை அமைதியாக இருக்கிறது என அவனுக்குத் தெரிந்தது.

அவனுடன் வந்த பிரலம்பன் “நான் சென்று பார்த்தேன். பேரவை ஒழிந்துகிடக்கிறது” என்றான். “இன்றல்ல, என்றும் அவருடைய அவை அவருக்குரியவர்களால் நிறைந்திருக்கும், பிரலம்பரே. இப்புவி உள்ளவரை அவரது அவை ஒழியாது” என்றான் அபிமன்யூ. “அங்கு அவரிடம் சொல்லாடிக் கொண்டிருக்கையில் அதை என்னால் உணரமுடியவில்லை. அறைவிட்டு வெளியே வந்ததுமே உள்ளே நான் கண்டதென்ன என்று என் உள்ளம் திடுக்கிட்டது. எட்டுமங்கலங்களுடன் கூடிய இறையுரு. பிறிதொன்றும் அல்ல.”

பிரலம்பன் “ஆம், நெஞ்சு திடுக்கிட அடிக்கடி நானும் எதையோ உணர்ந்து விலகுகிறேன்” என்றான். “இப்புவியில் மானுடநாடகம் ஒழியாது நடக்கிறதென்றால் மானுடம் இறையிலிருந்து ஒவ்வொரு அளவில் ஒவ்வொரு விசையில் விலக்கம் கொள்கிறது என்பதனாலேயே. ஆனால் முற்றிலும் இறையிலிருந்து விலக்கம்கொள்ள இங்கு எந்த அணுத்துளியாலும் இயலாது. ஒவ்வொன்றும் அதை நோக்கியே உள்ளன, அதனால் ஆட்டுவிக்கப்படுகின்றன. அண்மையும் ஈர்ப்பும் மட்டுமல்ல சேய்மையும் விலக்கும்கூட அதன் விளையாட்டு மட்டுமே” என்றான். அபிமன்யூ “வருக!” என்று அவன் தோளை தட்டிவிட்டு நடந்தான்.

அவர்கள் காலடிகள் விரைவொலிக்க துவாரகையின் அரண்மனையின் இடைநாழிகளினூடாகச் சென்றனர். மூச்சிரைக்க உடன் வந்த பிரலம்பன் “நெடுந்தொலைவு, அவை இருப்பது வேறுநகரில் என்றே தோன்றுகிறது” என்றான். “நம் உள்ளம் முன்னரே அங்கு சென்றுவிட்டிருப்பதனால் கால்கள் தொலைவை உணருகின்றன” என்று அபிமன்யூ சொன்னான். “இப்படி கருத்துகளாக மாற்றி எவராலும் தொலைவை சுருக்கிவிட முடியாது. அது பருவெளி, கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது” என்று பிரலம்பன் சொன்னான். அபிமன்யூ “மூத்ததந்தையின் நோய் என்னிடமும் சற்று உள்ளது. வேங்கை எதிர்பட்டாலும் நூல்களை மேற்கோளாக்கி அதை பூனை என ஆக்கிவிட முயல்பவர் அவர்” என்றான்.

அரண்மனைக்காவலர் அனைவரும் தங்களை கூர்ந்துநோக்கி விழிவிலக்கிக் கொள்வதை அபிமன்யூ கண்டான். பிரலம்பன் “அவைக்கூடம் ஒழிந்திருப்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள் போலும்” என்றான். “ஆம், யாதவநிலத்தின் பேரரசர் எழுந்தருளவிருக்கையில் துவாரகையின் பேரவை ஒழிந்திருக்குமென்றால் அதைவிட இவர்கள் பேசிக்கொள்ள பிறிது செய்தி ஏதுள்ளது?” என்று அபிமன்யூ சொன்னான். “அவர்களுக்குள் ஏதோ ஒன்று நிறைவு கொள்கிறது” என்றான் பிரலம்பன். “எது?” என்றான் அபிமன்யூ. “ஆணவம், கருவிலேயே உட்புகும் முதல்மலம்” என்றான் பிரலம்பன். “அதை எப்படி அறிந்தீர்?” என்றான் அபிமன்யூ. “நானும் மனிதனே என்பதனால்” என்று பிரலம்பன் சொன்னான். அபிமன்யூ வெறுமனே நோக்கிவிட்டு நடந்தான்.

பேரவையை நெருங்குவதற்குள்ளேயே அதன் இருபுறமும் சிறகுகள் போலமைந்த இணைக்கூடங்களில் வீரர்களும் ஏவலர்களும் குவிந்து பேசிக்கொண்டிருக்கும் ஓசையை அவர்கள் கேட்டனர். ஏவலன் வரவறிவிக்க வலப்பக்க இணைக்கூடத்திற்குள் அவர்கள் நுழைந்ததும் அங்கிருந்த வீரர்கள் அமைதியடைந்தனர். அவ்வமைதியைக்கண்டு அறிந்து திரும்பிப்பார்த்த ஸ்ரீதமர் அபிமன்யூவை நோக்கி விரைந்து வந்து “என்னாயிற்று?” என்றார். “அவையை நோக்கி வருபவர்களை தடுக்க வேண்டாம் என்பது ஆணை” என்று அபிமன்யூ சொன்னான்.

“என்ன நிகழ்கிறதென்று அரசர் முழுதறிந்திருக்கவில்லை” என்று ஸ்ரீதமர் சொன்னார். “யாதவக் குடித்தலைவர்கள் புறக்கணித்தாலும் குடிகள் வருவார்கள் என்றும் அவர்களில் ஒருசிலரையே குடித்தலைவர்கள் என அமைத்து பட்டம்கட்டி அவைநடத்தலாமென்றும் எண்ணுகிறார். ஆனால் யாதவர்களின் ஐந்து குலத்தலைவர்களின் ஆணை நேற்றிரவே அத்தனை குடிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த அவையில் வந்து அமரும் எந்த யாதவனும் அவர்களின் குலத்திலிருந்து விலக்கப்படுவான் என்கிறது அந்த ஆணை. இப்போதுதான் ஒற்றர்செய்திகள் அதை வந்து தெரிவித்தன.”

“இங்கு வரக்கூடும் என்று நாம் எண்ணிய அனைவரும் தயங்கத் தொடங்கிவிட்டனர். முதன்மைக்குடிகள் சில தயங்கின. அவர்களை நோக்கியிருந்த பிறர் அதையே முன்காட்டாகக் கொண்டு நின்றுவிட்டனர். பின்னர் அத்தயக்கம் பரவியது. கூட்டாக அது ஆனபோது பேசிப்பேசி அதற்குரிய சொற்களை உருவாக்கினர். உணர்வுகளை உருவாக்கி பெருக்கிக் கொண்டனர். எவரும் குலத்திற்கு மேல் அல்ல, தெய்வங்களை அவர்களின் படைக்கலங்கள் மீறலாகாது என்று ஒருவர் சொன்னார் என ஒற்றன் சொன்னான்” என்றார் ஸ்ரீதமர்.

“அரசுப்பொறுப்புள்ளவர்களை நேரில் அனுப்பி எவரெவர் வரக்கூடுமென்று உசாவி அவர்களிடம் பேசி சிலரையாவது கூட்டிவரச்சொன்னேன். ஓரிருவர் வரத்தொடங்கினால்கூட அந்த வேலி உடையக்கூடும். ஆனால் அரண்மனைக்கு அணுக்கமான யாதவர்கள்கூட வருவதாக இல்லை. கருவூலப் பொறுப்பாளராகிய கூர்மர் நம் சிற்றமைச்சரிடம் கைகூப்பி கண்ணீருடன் இக்குடியில் பிறந்தேன் என்பதனாலேயே நான் யாதவன். குடிவிலக்கு செய்யப்படுவேனெனில் என் குழந்தைகளுடன் அடையாளமில்லாதவனாவேன். எந்தையர் எனக்களித்த அனைத்தையும் துறப்பது அது. என் மேல் முனியவேண்டாமென்று அரசரிடம் சொல்லுங்கள். என்னைப்போன்ற எளியவருக்கு குடியன்றி இப்புவியில் பெரிதென்று ஏதுமில்லை என்றார். மறுசொல் இன்றி அமைச்சர் திரும்பி வந்தார்” என்று ஸ்ரீதமர் சொன்னார்.

“இனி எவரிடமும் எதையும் கேட்க வேண்டியதில்லை” என்றான் அபிமன்யூ. “ஆம், எங்கும் ஆழ்ந்த அமைதியே உள்ளது. மறுசொல்லாட எவரேனும் வந்தால்கூட பேசமுடியும். கண்டதுமே கைகூப்பிவிடுபவர்களிடம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் ஸ்ரீதமர். அபிமன்யூ களைப்புடன் பீடத்தில் அமர்ந்து பெருமூச்சு விட்டான். “இது இயல்பாக நிகழ்வதல்ல. பெரும் சூழ்ச்சி” என்றான். “ஆம், அவ்வாறே நான் எண்ணுகிறேன். இது பலநாட்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுள்ளது. துவாரகையின் முதன்மைக் குடித்தலைவர் அனைவரும் கிளம்பிச் சென்றனர். இரண்டாம் குடித்தலைவர்கள் அனைவரும் இங்கேயே இருந்தனர். அவர்கள் இங்கிருப்பது தயங்கியோ அஞ்சியோதான் என நினைத்தோம். இங்குள்ள எஞ்சிய யாதவர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் சென்றவர்களின் ஆணைகளை முறையாக கொண்டு சென்று சேர்ப்பதற்காகவும் என்று இப்போது தெரிகிறது” என்றார் ஸ்ரீதமர்.

“இது நிகழுமென நாம் எண்ணியிருக்கவேண்டும்” என்றான் அபிமன்யூ. “ஏனென்றால் இதில் ஒரு நெறி உள்ளது. இங்குதான் இது வந்தாகவேண்டும்.” ஸ்ரீதமர் “மதுராவில் கூடிய குலத்தலைவர்களின் அவையில் இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. கோல்தூக்கி அனைவரும் ஏற்பொலி எழுப்பியிருக்கிறார்கள். இளைய யாதவர் எவ்வகையிலும் யாதவக் குடிகளுக்கு தலைவரல்ல என்று அங்கே சொல்திரண்டிருக்கிறது. அதை அவருக்கு அறிவிக்கும் தருணமாக இதை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அத்தனை யாதவக் குடிகளும் அதற்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்.

அறைக்குள் இருந்த அத்தனை காவலர்களும் பணியாட்களும் தங்கள் சொற்களை செவி கொள்வதை உணர்ந்த அபிமன்யூ பேச்சை நிறுத்திக்கொண்டான். அதை உணர்ந்த ஸ்ரீதமர் “இதில் மந்தணம் ஏதுமில்லை. பேருருக்கொண்ட ஒரு பழிச்சொல்போல அதோ ஒழிந்துகிடக்கிறது துவாரகையின் குடிப்பேரவை” என்றார். அபிமன்யூ எழுந்து கால்கள் தயங்க மெல்ல நடந்து நெடுஞ்சாலை என விரிந்த இடைநாழியினூடாக பெருவாயிலை அடைந்து அப்பால் திறந்துகிடந்த துவாரகையின் பேரவையை சென்றடைந்தான்.

நீள்வட்ட வடிவிலான பேரவையின் வெறுமை எடைமிக்க அடியென அவன் மேல் விழுந்து ஒருகணம் கால்தடுமாற வைத்தது. குளிர்ந்து எழுந்து நின்ற பளிங்குத்தூணை கைகளால் பற்றிக்கொண்டு அதை நோக்கி நின்றான். வெண்பட்டு விரிக்கப்பட்ட அந்தணர் பீடநிரைகளும், மறுபக்கம் செம்பட்டு விரிக்கப்பட்ட ஷத்ரியர் பீடங்களின் வரிசையும், பச்சைப் பட்டு விரிக்கப்பட்ட யாதவர் அணியும், மஞ்சள் பட்டு விரிக்கப்பட்ட வணிகர் பகுதியுமென விரிந்த பீதர் நாட்டு விசிறிபோல பேரவை தெரிந்தது. அதன் ஒவ்வொரு பீடமும் எதையோ இரக்க ஏந்திய கைபோல காத்திருந்தது.

ஒரு சில கணங்களுக்குமேல் நோக்க முடியாமல் அவன் திரும்பிக்கொண்டான். அவைக்கு மறுபக்கம் வாயிலினூடாக வந்த ஏவலன் ஏதோ எவரிடமோ சொல்ல ஒழிந்த பேரவைக்கூடம் எதிரொலி பெருக்கி அதை முழங்கியது. குவிந்த மாடக்கூரை அதன் கார்வையை அவையின் வெறுமை மேல் பொழிந்தது. வெறுமையில் மட்டுமே குடியேறும் இருள்தெய்வமொன்றின் குரல். அத்தனை ஒளியிருந்தும் இருண்டதென அவை விழிக்குக் காட்டிய மாயம் என்ன? மானுடரில்லா இடங்களை நிறைப்பது என்ன? அவர்களின் கனவுகளும் விழைவுகளும் அச்சங்களும் நுண்ணுருக்கொண்டு வந்து பரவியிருக்கின்றனவா?

அபிமன்யூ திரும்பி மீண்டும் கூடத்திற்குள் வந்தான். ஸ்ரீதமர் “ஆம், நோக்க இயலவில்லை” என்றார். “இங்கிருந்து தப்பி ஓடிவிடவேண்டுமென்று தோன்றுகிறது” என்று அபிமன்யூ சொன்னான். மீண்டும் பீடத்தில் அமர்ந்து களைப்புடன் கால்களை நீட்டிக்கொண்டு “என்ன நிகழும், அமைச்சரே?” என்றான் அபிமன்யூ.  ”அறியேன். அவரே அறிவார்” என்றார் ஸ்ரீதமர் தானும் அமர்ந்தபடி. அபிமன்யூ கண்களை மூடிக்கொண்டான். உடலில் இருந்து அனைத்து நீர்களும் வழிந்தோடி ஒழிய வெற்றுக்கூடென எடையின்மைகொண்டான். ஒரு சொல் எஞ்சாமல் ஒழிந்தது அகம்.

பிரலம்பன் மறுபக்க வாயிலினூடாக வந்து “இளவரசே, அரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவன் எழுந்து தொலைவில் மங்கல இசையையும் வாழ்த்தொலிகளையும் கேட்டான். ஸ்ரீதமர் வாயில் வழியாக வெளியே நோக்கினார். “அவைநோக்கி வருகிறார். இங்கே அவை…” என்றபின் “என்ன செய்வது, இளவரசே?” என்று பிரலம்பன் கேட்டான். திரும்பாமல் “நாம் இயல்வதை இயற்றிவிட்டோம். இனி அவர் நடத்தட்டும்” என்று ஸ்ரீதமர் சொன்னார்.

அபிமன்யூ நெஞ்சை அழுத்திய எடையை மூச்சென மாற்றி வெளிவிட்டான். அது நிகழாதென அதுவரை தன் உள்ளம் எண்ணியிருந்ததை அறிந்தான். ஆனால் நிகழும், காலம்தோறும் இதுவே நிகழ்ந்துமிருக்கிறது போலும். ஆம், இதுவன்றி பிறிதேது நிகழக்கூடும்? மானுடம் என்று நிறையும் கலத்தை நீட்டியிருக்கிறது வான்கீழ்? அவன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டான். விழிநீர் மல்குமளவுக்கு உளம் நெகிழ்ந்தது. அங்கிருந்த ஏவலரும் காவலர்களும் அதே உணர்வை அடைந்தனர் என்று தோன்றியது. தங்கள் பணிகளை இறுதியாக ஒரு முறை சீரமைத்துவிட்டு ஆடைகளை இழுத்து ஒழுங்குபடுத்திக்கொண்டு சுவருடன் ஒன்றி அசையாமல் நின்றனர். அனைத்துமுகங்களிலும் கசப்பும் துயரமும் நிறைந்திருந்தது.

அபிமன்யூ எழுந்து கூடத்தைவிட்டு வெளியே செல்ல ஸ்ரீதமர் “எங்கு செல்கிறீர்கள்?” என்றார். அபிமன்யூ “இத்தருணத்தில் நான் செய்யக்கூடியதொன்றே. அவர் வரும் பாதையின் ஓரத்தில் நின்று என் முழு உயிரையும் அடிவயிற்றிலிருந்து குரலென எழுப்பி வாழ்த்துக்கூவுவது. புவிக்கிறைவர், பார்தவர்ஷத்தின் முதன்மை அரசர், யாதவர்குலத் தந்தை வெல்க என்று கூவப்போகிறேன். இக்குரல் இவ்வொலியுடன் முற்றொழிந்து மறையினும்கூட அதன் பணியை நிறைவேற்றிவிட்டது என்று எண்ணுவேன்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

மையநிலப்பயணம் கடிதங்கள்

$
0
0

download (2)

 

அன்புள்ள ஜெ

 

 

மைய நில பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்தபடியே இருக்கிறேன். இந்தியாவைச் சுற்றிப்பார்க்கும் வெறியைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்கள் பயணக்கட்டுரைகளுக்கு நன்றி கடமைப்பட்டவனாகிறேன். தங்கள் ஹொய்சாலக் கலைவெளிப்பயணங்களை வாசித்து அந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அருகர்களின் பாதை வாசித்து அதிலே விஜயமங்கலத்திற்கு அருகில் இருக்கக்கூடிய சமணத்தலங்களைப் பற்றி் குறிப்பிட்டிருந்தை வைத்து தேடித்தேடி விஜயமங்கலம் நெட்டைக்கோபுரக் கோயிலுக்கு (சந்திரப்பிரபா தீர்த்தங்கரர் கோவில்) சென்றேன்.கன்னடம் கலந்த தமிழில் பேசும் கோயிலைப் பராமரிக்கும் குடும்பத்தார் சொன்னவை கேட்டு மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளானேன்.  ஹொய்சாலப்பயணத்தில் கண்ட தலங்களில் ஒன்றான மெளரியகால காலத்து சரவணபெலகொலாவைக் கட்டிய சாமுண்டராயரின் தங்கையை இங்கே விஜயமங்கலத்து அரசருக்கு மணமுடித்துக்கொடுத்தார்களாம்.அப்போது  ஆயிரங்குடும்பங்கள் இடம்பெயர்ந்து வந்தார்களாம். அந்த குடும்பங்கள் இன்று இடம்பெயர்ந்து தொகை குறைந்து இப்போது அருகிவருகிறார்கள் என்றார். சமீபத்தில் இந்த நூற்றாண்டில் இக்கோயிலுக்கு அருகில் ஒரு குன்றிலிருக்கும் சமண ஆலயம் கைப்பற்றப்பட்டு அம்மன்கோயிலாக்கப்பட்ட கதையையும் சொன்னார்கள். இந்த மதப்பூசல்கள் எதோ வரலாற்றுப்புத்தகத்தில் வாசிக்கக்கிடைப்பவை என்றே நினைத்திருந்தேன். எத்தனை தூரங்கள் தாண்டி இருக்கும் தொடர்பு. நிச்சயம் எளிதாக கவனிக்கத்தவறியிருக்கக் கூடிய தகவல். யாரும் குறிப்பிட்டுச்சொன்னாலொழிய கவனிக்கமுடியாத தகவல்கள். இன்னும் இதுபோல எத்தனை கண்ணிகளால் நம் வரலாறு பிணைக்கப்பட்டிருக்கின்றதோ? நினைத்துப்பார்க்க கண்களில் கனவுகளாக நிரம்புகின்றன. நான் என் பயணங்களில் இன்னும் கூர்மையாக இருக்கவேண்டுமென்பதை உணர்த்துகிறது.

 

மையநிலப்பயணத்தின் கடைசிக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த கருடன் சிலையைப் பற்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன் என்று நினைத்தேன். போர்ஹேஸ் எழுதிய “The book of imaginery beings” புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அந்தபுத்தகம் உலக தொன்மங்களில் இருக்கக்கூடிய அசாதாரண விலங்குகளை உயிரினங்களைப்பற்றிய தகவல் தொகுப்பு புத்தகந்தானென்றாலும் ஒரு புனைவு நம் மனதிற்குள் நிகழ்த்தக்கூடிய அளவிற்கு மிகப் பெரிய கற்பனைக்காட்சிகளை வழங்கியபடியே இருக்கும் புத்தகம். புத்தரின் பிறப்பை அறிவித்த யானை, மூன்று கால்களைக்கொண்ட கழுதை, நூறுதலை மீன், சொர்க்கத்து சேவல், இன்னும் இன்னும் என அசாதாரண உயிரினங்களாக வந்தபடி இருக்கும். கருடனை பற்றியும் எழுதியிருக்கிறார். அந்த பத்தியில்  ஹோலியோடோரஸின் தூண் பற்றி வருகிறது. குவாலியருக்கு அருகில் என்று ஒரு குறிப்பு. அந்த தூணின் உச்சியில் கருடன் சிலை இருக்கின்றது என்று சொல்லியிருப்பார். என்னயிருந்தாலும் போர்ஹேஸ் மேல் ஒரு சந்தேகம் வந்து கிடைத்த குறிப்புகளைக்கொண்டு கூகுள், மேப்பில் தேடினேன். குவாலியருக்கு அருகில் விதிஷாவில் இந்த தூண் இருப்பதாக கண்டேன். போர்ஹேஸ்ஸின் துல்லியத்தின் மேல் மரியாதை ஏற்பட்டது. எவ்வளவு பெரிய உழைப்பு. இன்று இந்தப்பத்தியை வாசித்தபோது இதுதான் ஞாபகம் வந்தது.

 

நன்றி.

கே கே குமார்

IMG_5069

அன்புள்ள ஜெ.

வணக்கம். நலந்தானே.

 

உங்களின் வலைப்பதிவுகளை படிக்காமல் நாள் முடிவதில்லை.

 

அதுவும்  பயணக்கட்டுரைகள் வரும் நாட்களில் காலையில் முதல் வேலையாக படித்துவிடுவேன்.

 

உங்கள் பயணங்கள் எங்களுக்கு பெரும் திறப்பாக இருப்பவை.

 

ஒவ்வொரு பயண முடிவிலும்

 

1.சுருக்கமான பயணத்திட்டம் (Itinery) ,  இடங்களுக்கிடையேயான தூர விவரம் இணைத்தால் சிறப்பு.

 

2.பயணம் செய்த இடங்களை தேசப்படத்தில் ( Map) காட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

 

இவற்றால்  தொகுப்பாக வரும் பயண நூல்கள் மேலும் செம்மையாகும்.

 

இதனை உடன்வரும் சக நண்பர்களே கூட செய்யலாம்.

 

நன்றி.

தங்கமணி மூக்கனூர்ப்பட்டி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்

$
0
0
Screenshot_20171030-123826-2

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

நவம்பர் மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் வெண்முரசில் மனவியல் என்ற தலைப்பில் முத்துகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுவார்.

முத்துகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் மனவியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கலந்துரையாடலுக்கு துவக்கம் முதல் வருபவர். அவரிடம் வாசகர்கள் வெண்முரசில் மனவியல் சார்ந்து விவாதிக்கலாம்.

வெண்முரசு படித்ததால் ஏற்பட்ட மனவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கொள்ளலாம் :-)))

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:- வரும் ஞாயிறு (05/11/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

 SOUNDAR.G
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil 1st Street
Vadapalani
Chennai- 26
தொடர்புக்கு:- 9043195217 / 9952965505

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்கடல் கடிதம்

$
0
0

 

venkadal-36183

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம். கடந்த  செப்டம்பர்  ஆறாம் தேதி  திருவண்ணாமலைக்கு  பவா  சாரை  பார்க்கச்  சென்ற  எனக்கு,  அவர்    தங்களிடம்   போனில்பேசும்   வாய்ப்பை   ஏற்படுத்திக் கொடுத்தார்.  நான்தான்,   அதிக  சந்தோசத்தில்   தங்களிடம்  சரிவர பே முடியவில்லை.  தங்கள்  நண்பர் அலெக்ஸ்  மரணம்  தந்த  சோகத்தில்  இருந்தீர்கள் .  நான்  தங்களிடம்  பேசும்   சந்தோசத்தில் ,  நண்பரின்  இழப்பிற்கு ஆழ்ந்த  அனுதாபம்  சொன்னேனா  என்று கூ ட  தெரியவில்லை.   அப்படி  கேட்காமல் விட்டிருந்தால்  மன்னிக்கவும்.  அதற்கு   அப்புறம்  அலெக்ஸ்   மற்றும்  உங்களுக்கான நட்பு ,   அவர்  பற்றிய  தங்களது  குறிப்புகளை  படித்து  அவரின்   சிறப்புகளை   அறிந்துகொண்டேன்.

 

நான்   பவா சாரை  பார்க்கச்சென்றது  இரண்டு குறிக்கோள்களுடன்.   ஒன்று  அவரையும்   அவர்  குடும்பத்தாரையும்   பார்ப்பது.   இன்னொன்று  தங்களின்  அறம்  தொகுப்பை   பதிப்பகத்தாரிடமே   எனக்கும்,  நான்   பரிசளிப்பதற்காக   நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்    வாங்குவது.   பதினைந்து  பிரதிகள்   வாங்கினேன் . ஐந்து   புத்தகங்கள் , இதுவரை  சேருவோரை சேர்ந்துவிட்டது.   மீதம்இருக்கும்  ஒன்பது  புத்தகங்களை  ,  அமெரிக்காவின்   வெவ்வேறு   நகரங்களில்  இருக்கும்   நண்பர்களை   பார்க்கும்  சமயம் கொடுக்கவுள்ளேன்.

 

புத்தகம் கொடுத்தாலும் ,  அதை படிப்பார்களா என்ற அச்சம் ஒரு புறம். அறம்’  கதைகள்  அவர்களை படிக்கவைத்துவிடும்  என்ற  நம்பிக்கை  ஒரு புறம்.   ஆங்கில  நாவல்களை  மட்டும் விரும்பி  படிக்கும் , எங்கள் வீட்டு  இரு குழந்தைகள் ,  என்ன செய்யப் போகிறார்கள்  என்று பார்ப்பதில்  மிக ஆர்வமாக இருந்தேன்.  எனது சகலையின் மகள் ,  புத்தகத்தை  ஒரே மூச்சில் படித்துவிட்டு , சோற்றுக்கணக்கையும் ,  யானை டாக்டரையும் , வணங்கான் கதையையும் மூன்று மணி நேரம்  சிலாகித்துப் பேசினாள்.  எனது அண்ணன் மகன்,  இரண்டாம் வருடம்  பொறியியல் படிப்பவன் ,  இரண்டு  தினங்களுக்கு  முன்னர்    போனில்  பேசிய சமயம் , தீபாவளி  விடுமுறையாதலால்  முக்கால்வாசி  படித்துவிட்டதாகவும் ,  இரவில் முடித்துவிடுவேன்  என்றும்  சொன்னான்.  தங்களின் வீர்யமான எழுத்தே,  வாசிப்பார்களா என்ற எனது    அச்சத்தை வென்றது  என்பதற்கு  இந்த இரு குழுந்தைகளின்  அதிவேகவாசிப்பே  சான்றுகள்.

 

வம்சி  பதிப்பகத்தில்  ‘அறம்’ அல்லாமல் ,  தங்களின்  ‘வெண்கடலும்’  வாங்கினேன். தங்களின்  வலைதளத்தில்,  இந்த தொகுப்புகளில் உள்ள  கதைகள்  யாவற்றையும்  ஒன்றுக்கு  மூன்றுமுறை  படித்திருக்கிறேன். அப்படிப்  படிக்கும்பொழுது ‘வெண்கடல்’  தொகுப்பில் உள்ள  கதைகளைப் பற்றி  பேஸ்புக்கிலும்,  சொல்புதிது  நண்பர்களுக்கும்  எழுதிய  எனது குறிப்புகள் , தங்களின்  பார்வைக்கு.

 

‘நிலம்’ கதையில்,  இந்தமுறையாவது குழந்தை வயிற்றில் நிற்காதா  என்று ஏங்கும் பெண்ணை வலிக்க வலிக்க பெண்ணின் வேதனையை சித்தரித்திருப்பார்.

 

நாட்கள் தாண்டத்தாண்ட நம்பிக்கை சோளக்கதிர் கனப்பதுபோல வளரும். பின்பு ஒருநாள்வாடிய செம்பருத்தி முற்றமெல்லாம் உதிர்ந்துகிடக்கும்”. அதை படித்து முடித்த மறுநாள் காலையில்,  இதுதான் ஞாபகம் வந்தது.பிள்ளை இல்லாட்டாலும் , வெட்டுக் குத்தில்  சொத்து சேர்த்து சாதிப்பதாய் நினைக்கும் கணவன் , அவர்களுக்குள்  இருக்கும் பாசம்,  காதல்.  அந்த  இம்சைகளிலிருந்து  தப்பிக்கும் முன்,  இன்னொரு  இரவு  வந்துவிட்டது.  ‘கைதிகள்’ படித்தேன்.  என்ன பொழப்புடா  சாமி என்ற அங்கலாய்ப்பில்  வேலை பார்க்கும் காவலாளிகள் (கைதிகள் ?). சப்பாத்திக்குள்  புளிய இலைகளை  வைத்துச் சாப்பிடும்   இரவுவாழ்க்கை,  அவர்கள் பிடுங்கிப்போட்ட  முயலின் குடலை உண்ணும்  பாம்பு,  உயிருடன் அந்த அப்பாவியை..  படபடப்புடன் நானும் அந்தகுருவியும். “நல்ல கதை  படித்தேனய்யா”   சாமி ஜெயமோகன்   என்று  நிம்மதியுடன் தூங்கப்போனேன்.  விடியலில்  முழிப்பு  வந்ததும்   ஞாபகம்  வந்தது  அந்தக்  குருவியும்,  தண்ணீர் கொடுத்த   காவலாளியைப் பார்த்து  நன்றிப் புன்னகை  சிந்திய   அவனது  வீங்கியமுகமும்.

 

மூன்றாம்நாள்   இரவு படுப்பதற்குமுன்   தீபம் படித்தேன்.  தீபம் ஏந்திய  அவனது  மாமன்  மகளும்,  தொடாமல்  காதலித்து மயங்கும் அவனும்.  நால்லதொரு  குறும்படம்  பார்த்த நிறைவு.

 

வெண்கடல்:

நெஞ்சுச்சளிதரும்   வேதனை மட்டும் அறிந்த  செல்லன்  இனம் நான்.  காளியின்  அடிவயிற்றிலிருந்து சுண்ணாம்பு  கரைசலை ஊற்றி  அட்டைகளை  பிரித்தெடுக்கும்பொழுதே அதன்  வைத்தியம்  புரிந்தது. ஆனால்  அட்டைகள்  குழந்தைகள் ஆன குறியீடு  தெரிந்தவுடன்,  நெஞ்சுச்சளி  வலியையும்  மீறிய  வெண்கடல்  கொடுத்த வலியில்  அடுத்த கதைக்குள்  செல்வதற்கு  திண்டாட்டமாக இருந்தது.

 

 

குருதி:  இரண்டு தலைகளை வெட்டி தனது வாரிசுகளுக்காக நிலத்தை பாதுகாத்தாலும், தனிக் குடிசையில் வாழ நேரிடும் வாழ்க்கையின் நிதர்சனம். அதை ஏற்றுக்கொள்ளும் சேத்துக்காட்டாரின் பக்குவம். சுடலையுடன் நானும் அவரது ரட்சகன் ஆனேன்.

 

அன்புடன்,

வ சௌந்தரராஜன்

ஆஸ்டின்

 

 

அன்புள்ள சௌந்தர ராஜன் அவர்களுக்கு

 

தங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. அந்த மனநிலைக்கு அப்பேச்சு இதமாகவே இருந்தது

 

பொதுவாக சிறுவர்களுக்கு நூல்களை கட்டாயப்படுத்தி அளிக்கலாம். வாசிக்க வைக்கலாம். அவர்கள் எப்பக்கம் திறந்துகொள்வார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் முதிர்ந்தவர்கள் ஓரளவு ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்களை விட்டுவிடுவதே நல்லது. அவர்களால் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியாது. அவர்கள் செய்யக்கூடும் பணிகள் வேறு.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நடைமீறுதல்

$
0
0

sura

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு.

 

வணக்கம். நான் வ.அதியமான். உங்களுக்கு கடிதமெழுதி நீணாளாகிவிட்டது. வெண்முரசிற்கு  இடையே இடையூராய் இருந்துவிடக்கூடாதென்பதன் பொருட்டே.  பார்த்திருக்கையிலேயே விழிமுன்னமே ஒரு தாஜ்மஹால் முளைத்தெழுந்து வருவதுபோல் இதோ எங்களிடை இன்று வெண்முரசு. தர்க்க உலகைத் தாண்டிய மாயலோகம்.

 

2014 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நாளிதுவரை வெண்முரசின்றி நகர்ந்ததில்லை ஓர்நாளும். சில ஆண்டுகளாய் மிகுந்த மன அழுத்தத்தின் விளைவாய் வாசிப்பென்பதே கூடுவதில்லை. ஆயினும் மனச்சோர்வென்னும் வன்திரையைக் கிழித்து உள்நுழைவது வெண்முரசொன்றே. அஃதொன்றே ஆறுதல் இப்போதைக்கு.

 

புதிதாய் எழுத வருபவர்களின் சிக்கல்களில் ஒன்றே நான் கேட்க வந்தது. எனக்கேற்படும் சிக்கல்களே பிறருக்கும் எழுகிறதென்பதை இப்போது எழுதவந்தோர் உங்களுக்கு எழுதும் கடிதங்களிலிருந்து அறிய வந்ததால் இதனைக் கேட்கிறேன்.

 

உங்களின் புனைவுலகிற்குள் நுழையும் ஒருவன் முதலில் புதைந்துபோவது உங்களின் மொழிநடையில்தான். பிறகு அவனின் நுண்ணர்வின் தீவிரம் சார்ந்து  உங்கள் மொழியின் அருகில்வரை வரத்துணிகிறான். அதனை உங்களின் நிழல்மொழி என்பேன். உங்களின் மொழியாளுமையால் ஆட்கொளளப்பட்ட யாவரின் விரல்களிலும் உங்களின் மொழியே குடியேறுகிறது என்பதை  உங்களின் அததனை வாசகர் கடிதங்களும் கூறுகின்றன.

 

சராசரியான ஒருவன் உங்களின் கலையுலகில் நுழைந்து உங்களின் நிழல்மொழிவரை எட்டுவதென்பதே ஒரு சாதனை தான் என்பேன். மற்ற சராசரியான ஒருவருடன் ஒப்பிட்டால் உங்களின் நிழல்மொழி கொண்டோர் பன்மடங்கு உயரத்தில் இருப்பவரே. இதுவே இம்மொழிக்கு நீங்களாற்றும் கொடைகளில் ஒன்றுதான்.

 

உங்களின் புனைவுலகத்திற்குள் வந்தபிறகு ஒருவன் ஈட்டும் சிந்தனைத்திறனும் மொழியாளுமையும்  நுண்ணுணர்வும். ரசனையின் கூர்மையும் நிச்சயம் ஈடிலாதவைதான்.

 

ஆயினும் இவையாவும் வாசகனாய் நின்றுவிட்டோர்க்கு.  ஆனால் உங்களின் வாசகர்களில் குறிப்பாய் இளைஞர்களில் முப்பது சதவீதம் பேருக்கு மேல் படைப்பாளியாய் மலரவே  பேரார்வம் கொண்டு முயல்கின்றனர். அவ்விதமாய் முயல்வோர்க்கு முதல் தடையாய் இருப்பதே உங்களின் மொழியாளுமைதான். அதன் வசீகரத்திற்கும்  ஆக்கரமிப்பிற்கும்  ஆட்பட்ட ஒருவன் எளிதில் மீளமுடிவதில்லை.

 

மிக ஆர்வமாய் எழுதி முடித்துவிட்டு மீண்டும் பொருமையாய் வாசித்தால் அதில் நீங்கள்தான் நிரம்பியிருக்கிறீர்கள்.  படைப்பு நுட்பத்திலும்  கற்பனை விரிவிலும் உங்களுடன் வரமுடியவில்லை ஆயினும் உங்களின் மொழிச்சாயலை தவிர்க்க முடியவில்லை. அதாவது எங்களின் விரல்களில் ஊறிவழிவது உங்களின் நிழல்மொழிதான்.

 

அது ஒரு படைப்பாளியாய் எனக்கு பெரும் மனச்சோர்வை அளிக்கிறது. உங்கள் மீது கொஞ்சம் மெல்லிய கோபம் கூட வருகிறது. ஒரு வாசகர் குறிப்பிட்டதைப் போல ‘நீ ஒரு ஜெராக்ஸ்!  நீ ஒரூ ஜெராக்ஸ்!’  என்று என் மனமே எனை பகடி செய்கிறது.

 

உண்மைதானே. உங்களைப்போல் எழுத நீங்கள் இருக்கும்பொழுது நாங்கள் ஏன் உங்களைப்போல் எழுத வேண்டும்?  என் சிந்தனைகளை, என் கற்பனைகளை, என் நுட்பங்களை, என் தரிசனங்களை எனக்கே எனக்கான ஒரு மொழியில் அள்ளிவந்தால்தானே நானொரு படைப்பாளி?

 

எனக்கே எனக்கான ஒரு தனிமொழியில் என் கலையினைச் செய்வதைத்தானே நீங்களும் ஒரு படைப்பாளியாய் விரும்புவீர்கள்?  இன்று எங்களின் ஆசிரியராய் உங்களின் மொழியாளுமையே  ஒரு தடையென, பெரும் சவாலென எங்கள் முன் நிற்பதைப்போலத்தானே உங்கள் ஆசிரியரின்  (சுந்தர ராமசாமி)  மொழியாளுமையும் நேற்று உங்கள் முன் நின்றிருக்கும்?  அதனை வென்று உங்களுக்கென்று ஒரு தனிமொழியினை எவ்விதம் திரட்டியெழுப்பினீர்கள்?

 

அவ்விதம் உங்களுக்கான தனிமொழி திரண்டபின் மொழிவசீகரம் மிக்க பிற பெரும் படைப்பாளிகளின் தாக்கங்களிலிருந்து எவ்விதம்  பாதிப்பின்றி தள்ளி நின்று  உங்களை தனித்துவமாய் நிறுவிக்கொண்டீர்கள்?

 

இன்று மொழியாளுமையில் நீங்கள் செய்யும் சாகசங்கள் அசாத்தியமானவை. ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழிநடையில் வெவ்வேறு புனைவுலகை எங்கள் விழிமுன் கொண்டுவந்து நிறுத்தி மாயம் காட்டுகின்றீர்கள்.  வெண்முரசின் உலகத்திற்கும்  நடுவே நீங்கள் எழுதும் சிறுகதைகளின் உலகத்திற்கும் ஒருத்தொடர்பும் இல்லை.  இவ்விரண்டையும் ளழுதிய விரல்கள் ஒன்றென்பதே  நம்பமுடியாததாய் இருக்கிறது.

 

இது முப்பதாண்டுகளுக்கும் மேலாய் இக்கலையில் உங்களின் தவத்தின் விளைவான வரமென்று நாங்கள் கொள்கிறோம்.

 

உங்களின் உயரத்திற்கு இல்லையென்றாலும் ஒரு எளிய தொடக்க படைப்பாளியாய் எனக்கும் என்னைப்போன்றோர்க்கும்  எங்களுக்கேயான ஒரு தனித்துவமான படைப்புமொழியை எவ்வாறு நாங்கள் திரட்டியெழுப்புவது?  நீங்கள் மற்றும்  உங்களைப்போன்ற பெரும் படைப்பாளிகளின் பாதிப்பிலிருந்து வெளியேறி,  எங்களுக்கான தனித்துவத்தை எங்கனம் தக்கவைத்துக்கொள்வது?

 

உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது விளக்கமும் ஆலோசனையும்  அளித்தால் மகிழ்வேன்.

 

தங்களின் வெண்முரசு சீக்கிரம் முடிந்துவிடக்கூடாது என்ற பேராசையோடு

 

தீரா அன்புடன்

 

வ. அதியமான்

aso

அன்புள்ள அதியமான்,

இலக்கியத்தில் எப்போதுமுள்ள சவால்களில் இதுவும் ஒன்று. நாம் நம் மொழிநடையை பெரும்பாலும் நம் முன்னோடிகளிடமிருந்து, அதுவரை இருந்த மரபிலிருந்து,தான் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அதில் நம் தனிமுத்திரை நிகழாவிட்டால் நம் இலக்கிய இடம் அமைவதில்லை

மொழியை இருவகை அமைப்பாக எண்ணலாம். ஒன்று, புறவயமான கட்டுமானம். இரண்டு அதில் ஓடும் அகவயமான இசையும் உணர்வுநிலையும். புறவயமான கட்டுமானமே வெளித்தெரிவது. நாம் சூழலில் இருந்து கொள்வது அது.  ஆகவே அதுதான் முன்னோடிகளிடமிருந்து கிடைக்கிறது

அகவயமான இசையும் உணர்வுநிலையும் நம்முடைய தனித்தன்மை சார்ந்தவை. நாம் உள்ளூர எத்தகையவர் என்பதை, எந்தெந்த உணர்வுநிலைகள் வழியாகச் செல்கிறோம் என்பதைப்பொறுத்தவை. நம் கைரேகைபோல. முதல் அமைப்புதான் பீடம். அதன் மேல் இரண்டாம் அமைப்பு அமையவேண்டும்

ஒரு சூழலின் படைப்புமொழி பல படைப்பாளிகளால் ஒருவரோடொருவர் முரண்கொண்டும் இசைந்தும் உருவாக்கப்படுகிறது. நாம் வாசகர்களாக இலக்கியத்திற்குள் நுழையும்போது அந்த ஒட்டுமொத்ததில்தான் வந்து சேர்கிறோம். அதில் நமக்குரிய படைப்பாளிகளை அடையாளம் கண்டுகொள்கிறோம். அவர்களை அணுகிவாசிக்கிறோம். அவர்களை ஒட்டி நம் மொழி உருவாக ஆரம்பிக்கிறது

அதிலிருந்து நமது மொழியை நாம் கண்டடையவேண்டியிருக்கிறது. அதுவே உண்மையில் இலக்கியத்தைக் கண்டடைதல் எனலாம். இலக்கியத்தில் நம்மைக் கண்டடைதல் அது. நான் எழுதவரும்போது சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா ஆகியோரின் மொழிநடையின் பாதிப்பு கொண்டிருந்தேன். என் முதல்தொகுதியான திசைகளின்நடுவே முன்னுரையிலேயே அதைச் சொல்லியிருந்தேன்

அதேசமயம் திடாமாக அதைக் கடந்துசென்றுகொண்டும் இருந்தேன். அதற்கு என் மலையாள, ஆங்கில வாசிப்பு உதவியது. என் எழுத்து தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கியை அணுகும்தோறும் மேலும்மேலும் நுண்ணிய சூழல்விவரிப்பை, உளப்பெருக்கை உரையாடல்மூலம் சொல்வதை கண்டடைந்தேன். அது என்னை விலக்கியது. என் மொழிநடையை உருவாக்கிக்கொண்டேன்/

கூடவே என் தனித்தன்மையை கண்டடைய தொடர்ச்சியாக பிரக்ஞைபூர்வமாக முயன்றேன். அதற்கான பயிற்சிகளாக எழுதப்பட்ட பல கதைகளை நான் பிரசுரித்ததில்லை. என்னிடமிருந்து சுஜாதா மிக எளிதில் வெளியேறினார். ஏனென்றால் சுஜாதாவின் மொழிநடை மேலோட்டமானது. கடைசியாக சுந்தர ராமசாமி.

 

sujatha

என்னென்ன செய்யலாம் என என் அனுபவம் சார்ந்து சொல்கிறேன்

அ. நாம் பின்பற்றும் முன்னோடிப்படைப்பாளிகளின் முத்திரை கொண்ட சொற்கள், சொற்றொடர்களை தேடிநோக்கி கவனமாகத் தவிர்த்துவிடுவது. அவர்கள் எழுதும்போது அது அவர்களின் நடை. நாம் அதை எழுதினால் அது தேய்வழக்கு

 

ஆ. ஆரம்பகட்டத்தில் நம் முன்னோடிகள் எழுதும் கதைக்களம், அவர்களின் கதைவடிவம் ஆகியவற்றைத் தவிர்த்துவிடுவது. படுகை, போதி போன்ற கதைகளைச் சுந்தர ராமசாமி எழுதமுடியாது அல்லவா?

 

இ. நம் எழுத்தை நாமே பலமுறை வாசித்து அதில் நம்முடைய முத்திரைகொண்ட, நாமே விரும்பும் பகுதிகளை அடையாளம் காண்பது. அடையாளம் கண்டால்மட்டும் போதும், எழுத முயலவேண்டாம். அதுவே இயல்பாக வரும்

 

ஈ. எது நமக்கு இடர்தருகிறதோ அதையே முட்டிப்பார்ப்பது. தொடக்கத்தில் எனக்கு உரையாடல் அமைவது கடினம். ஆகவே முழுக்க உரையாடலாகவே மாடன்மோட்சம் போன்ற கதைகளை எழுதினேன். அது நமக்கே உரிய நடையை நோக்கிக் கொண்டுசெல்லும்

 

முன்னோடிகளில் வலுவானவர்களே ஆழ்ந்த பாதிப்பை உருவாக்குகிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிடலாமே என சொல்வதுண்டு. அப்படித்தவிர்ப்பவர்கள் சூழலில் உள்ள பொதுவான நடைக்குள் சென்றே அமைவார்கள். இன்றிருப்பவை இரண்டு நடைகள். வாரஇதழ்நடை, முகநூல் நடை. அதிலேயே எழுதுபவர்களுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் ஏதும் இல்லை.

 

இன்றுவரை எழுதப்பட்டதன் உச்சத்தில் ஏறிநின்று மேலெழுவதே கலைஞனின் இலக்காக இருக்கமுடியும்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53

$
0
0

ஏழு : துளியிருள் – 7

fire-iconபிரலம்பன் அபிமன்யூவுடன் சேர்ந்துகொள்ள இருவரும் கூடத்திலிருந்து வெளியே சென்றனர். வளைந்த கூரைகொண்ட அகன்று நீண்ட இடைநாழியின் இருபுறமும் வீரர்கள் சுவரோடு சேர்ந்து அணிவகுத்து நின்றனர். அப்பால் கால்வாயில் நீர் அணைவதுபோல மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வந்தன. அபிமன்யூ முன்னால் சென்று அவர்களின் முகப்பில் நின்றுகொண்டான். அவர்கள் அவன் வருகையின் நோக்கத்தை உணர்ந்தவர்கள் என உயிர்ப்பசைவு கொண்டனர்.

வாழ்த்தொலியும் மங்கல இசையும் மெல்ல வலுத்து ஓங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையும் கூடங்களும் அவ்வோசையை ஏற்று கார்வை கொண்டன. அது பெருகி அணுகுந்தோறும் அபிமன்யூ உடல் மெய்ப்புகொண்டு கால்கள் நடுங்க நிற்க இயலாதவனானான். “இத்தருணத்தில் ஆடிப்பாவையென ஒன்று நூறாகப்பெருகி இப்பகுதியெங்கும் நிறைந்துவிடவேண்டும் என்று தோன்றுகிறது, பிரலம்பரே” என்றான். அந்நடுக்கை வெல்லவே பேசுகிறோம் என உணர்ந்தான்.

“நான் பிறிதொன்று எண்ணினேன், என் முழுதுளமும் என்ற சொல் என்னுள் எழுந்து அலையடிக்கிறது. இளவரசே, அவருக்கு அளிப்பதற்கு சில நம்மிடம் உள்ளதென்பதே எவ்வளவு பெரும்பேறு! கொள்க என அவர் காலடியில் படைப்பதற்கு நம் மூதாதையர் நமக்கு அளித்தது இந்தப் புன்தலை, நாம் அவருக்கெனத் திரட்டிய இவ்வுள்ளம்” என்றான் பிரலம்பன். அச்சொற்களால் அவ்வெழுச்சியை குறைத்துக்கொண்டார்கள் என அபிமன்யூ உணர்ந்தான். அதை அவ்வாறு குறைத்தாலொழிய அத்தருணத்தில் பொருத்தவியலாது. அந்த மதயானையின்மேல் பாகன் அமர்ந்தாகவேண்டும்.

இடைநாழியின் மறுமுனையில் கருடக்கொடியேந்திய தலைக்காவலன் பொன்மின்னிய தலையணியும் ஒளிரும் வெள்ளிக்கவசம் அணிந்த மார்பும் தோள்வளைகளும் கால்செறிகளும் பித்தளைப் பாதக்குறடும் அணிந்து நீட்டிவைத்த நடையுடன் தோன்றினான். அபிமன்யூ இரு கைகளையும் தூக்கி உடலே நாவென உயிர்கொள்ள “எந்தை எழுக! யாதவர் குலச்செம்மல் வாழ்க! புவியாளும் மாமன்னர் வாழ்க!” என்று வாழ்த்துரை கூவினான். “வெல்க கருடக்கொடி! ஓங்குக படையாழி! நிலைகொள்க இமையாப் பீலி!”

அங்கு கூடிநின்ற வீரர்களும் ஏவலரும் அமைச்சரும் அவனுடன் இணைந்துகொள்ள வாழ்த்தொலிகளால் இடைநாழியின் நீண்ட வளைமுகடு ஒலியழுத்தம் கொண்டு விம்மியது. செம்பட்டாடை அணிந்த மங்கல இசைச்சூதர் பதினெண்மர் மூன்று நிரைகளாக தொடர்ந்து வந்தனர். துவாரகைக்கே உரிய ஆமையோட்டு முழவும், வேய்குழலும், வெண்சங்கும், மகர யாழும், வெண்கல மணியும் என ஐந்திசை எழுந்து அலைகொண்டது. “இன்றும் எங்கும் இவ்வண்ணமே அமைக எந்தையின் கொடி! எழுக கடல்! எழுக வான்! எழுக நிலம்! எழுக எந்தை பெரும்புகழ்!”

மங்கலத் தாலமேந்திய அணிச்சேடியர் பதினெண்மர் மூன்று நிரைகளாக பொன்பட்டாடை மடிப்புகள் விரிந்து சுருங்கியமைய வண்ணப்பறவை வரிசையென வந்தனர். அவர்களுக்குப் பின்னால் இளைய யாதவர் கைகளைக் கூப்பியபடி காற்றில் வரும் மயிலிறகென மெல்ல வந்தார். அவருக்குமேல் துவாரகையின் முத்துச்சரவளைவு குலுங்கும் வெண்குடை எழுந்து கவிந்திருந்தது. மணிமுடியில் அமர்ந்த பீலி ஈதென்ன, இவர் யாவர் என விழிதிகைத்து நோக்கியது. மஞ்சள் பட்டாடையின் மடிப்புகள் விரிந்து மடிந்து அரிய நூலொன்றை எவரோ புரட்டிப் படிப்பதுபோல காட்டின.

வலப்பக்கம் சுதமர் நடந்துவந்தார். இடப்பக்கம் இளநீலப் பட்டாடையும் இளவரசியருக்குரிய கொடிமலர்வளைவு போன்ற மணிமுடியும் அணிந்து நடந்து மயூரி வந்தாள். இரு பக்கமும் விழியோட்டி நோக்கியும் திரும்பி பின்னால் வந்த அன்னையரைப் பார்த்தும் புன்னகையும் பதற்றமும் கிளர்ச்சியுமாக அவள் நடக்க அவள் ஆடையை அவ்வப்போது சீரமைத்தபடி முதுசெவிலி பின்னால் தொடர்ந்தாள். அரசருக்குப் பின்னால் வலப்பக்கம் துவாரகையின் படைத்தலைவர் பிரதீபர் உருவிய உடைவாள் ஏந்தி முழுக்கவச உடையணிந்து வந்தார்.

இரு நிரைகளாக எட்டு அரசியரும் வண்ணங்களின் அலைகள் என தொடர்ந்து வந்தனர். முதன்மை அமைச்சர் மனோகரரும் கருவூலத்தலைவர் சிபிரரும் அரண்மனைப்பேணுநராகிய பிரபவரும் வந்தனர். தொடர்ந்து ஒற்றர்படைத்தலைவர் கதனும் கோட்டைக்காவல்தலைவர் பத்ரசேனரும் வந்தனர். சிற்றமைச்சர்கள் அவர்களைத் தொடர்ந்து வந்தனர்.

இளைய யாதவர் இருபுறமும் எழுந்த வாழ்த்தொலிகள் நடுவே மலர்ந்த புன்னகையுடன் கடந்து சென்று துவாரகையின் பேரவைக்கூடத்தின் அணிவாயிலை அடைந்தார். ஸ்ரீதமரும் தமரும் அதன் இருபுறமும் நின்று தலைவணங்கி முகமன் உரைத்து அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். அவரைத் தொடர்ந்துசென்ற அணிநிரையை ஒவ்வொருவராக தோள்தொட்டுக் கடந்து அவர் அருகே சென்று தானும் உள்ளே நுழைந்து அவருக்குப் பின்னால் நின்றான் அபிமன்யூ. அவனைத் தொடர்ந்து பிரலம்பன் வந்தான்.

மீண்டும் ஒழிந்துகிடந்த பேரவையை நோக்கியபோது அதில் வெறுமை தெரியவில்லை. அங்கே மானுடரென எவர் அமரமுடியுமென்றே தோன்றியது. நாளை ஓர் அவையில் அங்கே மானுடர் அமர்ந்திருப்பார்களென்றால் உளம் சீற்றம் கொள்ளும் என எண்ணினான். அவர் முகத்தை ஓரவிழியால் நோக்கினான். ஒருகணமும் அது மாறுபடவில்லை. தெய்வத்தின் முன் அடியவன் என விழிமலர மாறா மென்னகையுடன் கைகூப்பி வணங்கி இளைய யாதவர் அரியணை மேடை நோக்கி சென்றார். அதே புன்னகையுடன் எட்டு அரசியரும் அவரைத் தொடர்ந்தனர்.

பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்டச் சாளரங்களுடன் வெண்குடைக்கூரைக்குக் கீழே விரிந்துகிடந்தது. அதன் மையத்தில் பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு தொங்கியது. மின்னும் நீர்ப்பரப்புபோன்ற வெண்பளிங்குத் தரையில் விளக்கொளி விழுந்துகிடந்தது. கடற்காற்றில் திரைச்சீலைகள் அலைந்தாட வண்ணம் நெளிந்தது. அரசமேடையில் ஆயிரத்துஎட்டு செவ்வைரங்கள் பதிக்கப்பட்ட பிரபாவலையம்கொண்ட அரியணை செம்பட்டு விரிக்கப்பட்டு காத்திருந்தது. அருகே எட்டு அரசியருக்கும் அவர்களின் குடிக்குறி பொறிக்கப்பட்ட அரியணைகள் இருந்தன.

அபிமன்யூ அவையின் ஓரத்தில் நின்றான். அதுவரை இருந்த பதற்றங்களும் துயர்களும் முற்றிலும் பொருளிழந்திருந்தன. பிரலம்பன் “அவை இப்போது முழுமங்கலம் கொண்டுள்ளது என்றே தோன்றுகிறது, இளவரசே” என்றான். இவன் என்னை எதிரொலிக்கிறான் என அபிமன்யூ எண்ணிக்கொண்டான். மறுபக்க வாயிலினூடாக சந்திரசூடர் உள்ளே வந்து மூச்சிரைக்க கைகாட்டினார். இரு ஏவலர் பட்டுத்துணியாலான மஞ்சலில் முரளியை தூக்கி வந்தனர். அவனை அவையின் வலது எல்லையில் இருந்த தொட்டில்போன்ற மெத்தைப் பீடத்தில் அமரச்செய்தனர்.

அமைச்சர்களும் படைத்தலைவர்களும் இருபுறமும் நிற்க இளைய யாதவர் அவைமேடையில் கைகூப்பியபடி நின்றார். எட்டு துணைவியரும் இடப்பக்கம் நிரையாக நின்றனர். மங்கலநீர் தெளித்து வேதம் ஓதி அவைமேல் நடத்திச்சென்று அரியணையில் அமர்த்தி மணிமுடியும் செங்கோலும் தொட்டு அளிக்க வேண்டிய அந்தணர் எவரும் அவையில் இல்லை என்பதை அதன் பின்னரே அபிமன்யூ உணர்ந்தான்.

பிரலம்பன் “அந்தணர்குலத் தலைவர் கார்க்யாயனர் நோயுற்றிருக்கிறார். அவர் மைந்தர் சுருதர் யாதவகுலத் தலைவர்களின் ஆணையை மீற தன்னால் இயலாதென்று சொல்லிவிட்டார் என்றார்கள்” என்றான். குலமூத்தார் ஒருவரேனும் இருந்தால் அச்சடங்கைச் செய்யலாம் என்று ஸ்ரீதமரும் சுதமரும் எண்ணுவதை அவர்கள் கொண்ட அலைமோதலிலேயே பார்க்க முடிந்தது.

இளைய யாதவர் மயூரியிடம் “இனியவளே, வெளியே சென்று இவ்வரண்மனையின் முகமுற்றத்தை அடைக! அங்கு கொம்புகள் முழங்குவதற்குரிய குவைக்கூடம் உள்ளது. அதன்மேல் ஏறி நின்று உன் குழலை மீட்டு. அந்தியில் ஆநிரைகளைத் திரட்டும் மெட்டு எழட்டும்” என்றார். மயூரி “ஆம், தந்தையே” என உவகையுடன் கூறி தன் ஆடைநுனியைப் பற்றியபடி வெளியே ஓடினாள்.

fire-icon“எவ்வண்ணம் நிகழவேண்டுமோ அவ்வண்ணம் நிகழ்ந்தது அவை” என்று அபிமன்யூ சொன்னான். “இளவரசி கொம்புமேடையில் ஏறிநின்று இசை மீட்டினாள். அங்கிருந்து எழும் ஒலி எட்டு மாடங்களில் அமைந்த ஒலிக்குவைகளால் அள்ளி வானில் விரிக்கப்படும். துவாரகையின்மேல் புல்லாங்குழலிசை எழுந்தது. அதைக் கேட்டு அந்நகரின் அத்தனை இல்லங்களும் திறந்தன. பெண்டிரும் குழந்தைகளும் நிரைநிரையாக தெருவிலிறங்கினர். அவர்களின் தந்தையரும் கணவரும் மைந்தரும் திகைத்து நோக்கி நின்றனர்.”

“கனவிலென நடந்து அரண்மனையை அடைந்தனர். அவைக்கூடத்தை நிரப்பினர். என் கண்ணெதிரே அவை விழிமலர்ந்து புன்னகை ஒளிரும் முகங்களால் நிறைந்ததை கண்டேன். அவர்களில் மூத்த அன்னையர் எழுவர் மேடையேறி அவரை கைபற்றி அழைத்துச்சென்று அவையமரச் செய்தனர். முடிதொட்டு எடுத்துச் சூட்டினர். செங்கோல் அளித்து அரிமலரிட்டு வாழ்த்தினர். வாழ்த்தொலிகள் எழுந்து அவை முழக்கமிட்டது. அரசர் அரியணை நிறைத்தார் என கொம்புகள் முழங்கின. துவாரகையின் ஆயிரம் பெருமுரசுகளும் அவைமங்கலத்தை வானுக்கும் மண்ணுக்கும் அறிவித்தன.”

அபிமன்யூவின் சொற்களை பிரத்யும்னன் விழிகளால் கேட்பவன்போல அமர்ந்திருந்தான். தசபுஜங்கத்தின் அரண்மனையின் சிற்றவைக் கூடத்தில் சிந்துவிலிருந்து வந்த காற்று சுழன்று சென்றுகொண்டிருந்தது. பீதர்நாட்டுப் பட்டுத் திரைச்சீலை எழுந்தமைந்தது. வெளியே உச்சிப்பொழுதில் காவல்மாறும் படையணிகளின் கொம்போசையும் ஆணைக்குரல்களும் கேட்டன.

அவனைச் சூழ்ந்து அவன் படைத்துணைவர்களான தாம்ரப்பிரதனும் தீப்திமானும் நின்றிருந்தனர். ஒற்றர்கள் அளித்த ஓலைகள் அவன் முன்னால் குறுபீடத்தில் போடப்பட்டிருந்தன. வந்த தருணம் முதல் அவன் அபிமன்யூவின் தோற்றத்தை விந்தையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். ஆசுர நிலத்திலும் உபப்பிலாவ்யத்திலும் அவன் கண்ட அபிமன்யூ முழுமையாகவே தன்னை உரித்து விலக்கி உள்ளிருந்து புதியவனாக எழுந்திருந்தான். கள்வெறிகொண்டவன்போல கண்கள் கலங்கியிருந்தன. முகம் பித்தர்களுக்கே உரிய கலையாப் புன்னகை கொண்டிருந்தது. சொற்கள் தெய்வமேறியவன் நாவிலிருந்து என ஒலித்தன.

நான்கு நாட்களாக அவன் துவாரகையிலிருந்து செய்தியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஸ்ரீதமரோ சுதமரோ தமரோ வருவார்கள் என எண்ணினான். செய்தி இல்லாதபோது அங்கே என்ன நிகழ்கிறதென்று அரண்மனையிலிருந்த ஒற்றர்களினூடாக அறிந்துகொண்டிருந்தான். அபிமன்யூ சாம்பனையும் பானுவையும் சந்தித்ததை அறிந்தான். அவை நிகழ்வுகளை பறவையோலைகள் தெரிவித்தன.

துவாரகையிலிருந்து அவன் தம்பியர் சாருதேஷ்ணனும், சுதேஷ்ணனும், சீசாருவும், சாரகுப்தனும், பரதசாருவும், சாருசந்திரனும், விசாருவும், சாருவும் கிளம்பி சிந்துவினூடாக வந்துகொண்டிருப்பதாக செய்தி வந்தது. அன்னை அவர்களுக்கு வாழ்த்தும் வழிச்சொல்லும் அளிக்கவில்லை. அவர்களைச் சந்திக்கவே அவள் ஒப்பவில்லை. அன்னைசொல் இன்றி கிளம்புவதை எண்ணி இளையவர்கள் சுசாருவும் சாருவும் துயர்கொண்டிருந்தனர் என்று சாருதேஷ்ணனின் செய்திகள் கூறின. அவர்கள் அணுகிவிட்டார்கள் என்ற செய்தி வந்த சற்றுநேரத்தில்தான் அபிமன்யூ வந்திருப்பதை ஏவலர் வந்து சொன்னார்கள்.

அபிமன்யூ மூலம் தந்தையின் சொற்கள் வருமென எண்ணினான். அவ்வெதிர்பார்ப்பு மறைந்தபோது சுதமரோ ஸ்ரீதமரோ ஏதேனும் சொல்லியிருக்கலாம் என சொல்நோக்கினான். அபிமன்யூ கனவிலென சொல்லிக்கொண்டே சென்றான். அவனைக் கையமர்த்தி “இளையோனே, இக்கதைகளை நாளை சூதர் பாடுகையில் கேட்டுக்கொள்கிறேன். உன்னிடமிருந்து நான் அறியவிரும்புவது ஒன்றை மட்டுமே” என்று பிரத்யும்னன் சொன்னான். “அந்த அவையில் நிகழ்ந்தது என்ன? அங்கே அந்த முழுதிருண்டோன் பட்டத்து இளவரசன் என அமர்த்தப்பட்டானா? அவனே இளவரசன் என முறைப்படி அறிவிக்கப்பட்டதா?”

அபிமன்யூ “அங்கு நிகழ்ந்தது அரசுசூழ்தல் அல்ல” என்றான். “அது முற்றிலும் பிறிதொன்று. மாதுலர் அரியணையில் கால்மடித்து அமர்ந்து முரளியை தன் மடியில் வைத்துக்கொண்டார். அவனுக்காக அவர் குழலிசைக்க அவை விழிமயங்கி அசைவற்று சித்திரம்போல் அமைந்திருந்தது. ஒரு சொல்லும் உரைக்கப்படாத அவை அது” என்றான்.

“இரவெல்லாம் அவை நீண்டது. நான் எப்போதோ துயில்கொண்டு எங்கோ இருந்தேன். மீண்டு எழுந்தபோது அவையில் அனைவரும் துயின்றுகொண்டிருந்தார்கள். அவர் மடியில் தலைசாய்த்து இளவரசி துயின்றாள். அவைமேடையிலேயே அரசியர் துயின்றனர். படைக்கலம் ஏந்தி நின்றிருந்த காவலரும் துயின்று நின்றனர்.  நடுவே அவர் இசைத்துக்கொண்டிருக்க அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அது கனவு என்று எனக்குத் தோன்றியது. கனவுகளுக்கு மட்டுமே உரிய ஒவ்வொன்றும் முழுமைகொள்ளும் புலன்கூர்மை. வெளியே நிலவெழுந்திருப்பதைக் கண்டேன். அன்று முழுநிலவுநாள் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.”

“அவனை அவர் பட்டத்து இளவரசனாக ஆக்கினார் என்றால் அதுவே துவாரகைக்கு முழு அழிவு” என்று பிரத்யும்னன் சொன்னான். “இந்நகரின் இளவரசன் யார் என்று நகர் அறியும். நான் சால்வனை வென்ற கதையை பாடாமல் அங்கே ஒரு குழவிகூட இரவுறங்குவதில்லை.” அபிமன்யூ “மூத்தவரே, சாம்பரைப்பற்றியும் அதற்கிணையான கதைகள் உள்ளன” என்றான். பிரத்யும்னன் “விளையாடுகிறாயா?” என்று சினத்துடன் எழுந்தான்.

“அந்த இரவுக்குப்பின் அனைத்துமே விளையாட்டு என உணர்ந்துவிட்டேன், மூத்தவரே. இன்று நான் உங்களை சந்தித்துப் பேசவந்ததுகூட உங்களை கவர்ந்து வழிப்படுத்தவேண்டும் என்பதற்காக அல்ல. அவருக்கு நீங்களோ நானோ தேவையில்லை” என்றான் அபிமன்யூ. “இசைவு கொண்டதே இசை. இசைவுகொண்ட அனைத்திலும் இசையே திகழ்கிறது. இசையற்ற எதையும் அவரிடம் நான் கண்டதில்லை. இங்கிருந்து எதுவும் சென்று அவரை நிறைக்கவேண்டியதில்லை.”

பிரத்யும்னன் பெருமூச்சுடன் பீடத்தில் சாய்ந்து அமர்ந்தான். தாம்ரப்பிரதன் “அப்படியென்றால் எதன்பொருட்டு இங்கே வந்தீர்கள்?” என்றான். “நேற்றுமுன்நாள் நான் இங்கு வந்திருந்தால் மன்றாடவும் சொல்லடுக்கவும் முயன்றிருப்பேன். இன்று அந்த நோக்கம் ஏதுமில்லை. அங்கு நிகழ்ந்தது என்ன என்று உரைப்பதற்காக மட்டுமே வந்தேன்” என்றான் அபிமன்யூ. “மூத்தவரே, என்ன நிகழுமென்று உரைக்கவும்தான்.”

“என்ன நிகழும்?” என்றான் பிரத்யும்னன் சலிப்புடன். அபிமன்யூவை அனுப்பிவிட்டு எழுந்து செல்ல விரும்பினான். சாருதேஷ்ணன் துவாரகையின் யாதவப்படையில் எத்தனை பிரிவுகள் உடனெழும் என்ற செய்தியுடன் வருவான். விருஷ்ணிகளும் அந்தகர்களும் பானுவை ஆதரிப்பார்கள். ஹேகயர்கள் முடிவெடுக்கவில்லை. அவனுடன் உறுதியாக நின்றிருப்பவர்கள் போஜர்களே. போஜர்களின் பன்னிரு படைப்பிரிவுகள் துவாரகையில் இருந்தன. அவர்கள் உடனே கிளம்பவேண்டியதில்லை. அவன் ஓர் அழைப்பு விடுக்கையில் அவர்கள் எழுவார்கள் என்றால் மட்டும் போதும். ஹேகயர்கள் வேண்டுவதென்ன என்று அவர்களிடம் பேச சாருதேஷ்ணனை அனுப்பவேண்டும்.

“நான் அந்த இசையிரவில் கண்ட கனவுகளை வழியெல்லாம் தொகுத்துக்கொண்டு வந்தேன். இசை இனியதென்று சொல்கிறார்கள். அது மெய்யல்ல. பேரிசை பெருவெளியின் காட்சி போலவே எண்ணத்தை மலைக்கச்செய்து அச்சத்தை எஞ்ச வைப்பது. தனிமையின் துயரை நிறைப்பது. அனைத்தையும் பொருளற்றதாக்கி முழுமையின் வெறுமையை அளிப்பது. அன்றிரவு நான் தேன்புழு என இனிமையில் திளைத்தேன், அனலில் என வெந்துருகவும் செய்தேன்” என அபிமன்யூ சொன்னான்.

“மூத்தவரே, அப்போது நான் ஒன்றை தெளிவாக அறிந்தேன். துவாரகையும் அந்நகரை நிறைத்துள்ள எட்டுவகைச் செல்வங்களும் அவர் இங்கு திகழ்வதற்கான களங்கள் மட்டுமே. தெய்வம் ஒழிகையில் பீடமும் மறையும். நான் நோக்கிக்கொண்டிருந்தேன். என் கண்ணெதிரே கடலலைகள் எழுந்து வந்து துவாரகையை மூடின. துயிலும் குழந்தையை அன்னை நீலப்பட்டுப் போர்வையால் விழிக்காது போர்த்துவதுபோல. பின்னர் அலையிலாத கடல்வெளி. அதில் எழுந்த மெல்லிய சுழிப்பை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். புன்னகைக்கும் கன்னக்குழிபோல. இக்கணம்கூட நான் அதை காண்கிறேன்.”

“அவையில் அகிபீனா புகை இருந்திருக்கும்” என்றான் தீப்திமான். பொருளிலா விழிகளால் அவனை திரும்பிப்பார்த்த பின்னர் “அந்த ஊழ் மாறாது. அதை நாம் ஒன்றும் செய்யவும் இயலாது. நீங்கள் இப்போது எந்த முடிவை எடுத்தாலும் துவாரகை மறைவது உறுதி. நீங்கள் எடுக்கவேண்டிய முடிவு உங்கள் தந்தைக்காகவோ அந்நகருக்காகவோ அல்ல. மூத்தவரே, யாதவகுலத்தை காக்கவும் அல்ல. அதை எவரும் காக்க இயலாது. நீங்கள் காத்துக்கொள்ளவேண்டியது உங்கள் நற்பெயரை மட்டுமே” என்றான் அபிமன்யூ.

பிரத்யும்னன் எரிச்சலுடன் சொல்லெடுப்பதற்குள் அபிமன்யூ கைநீட்டி தடுத்து “நாளை நூல்களில் உங்கள் பெயர் எப்படி எஞ்சவேண்டும் என்று முடிவெடுங்கள். நம் கொடிவழிகள் எவ்வாறு உங்களை நினைவுகூரவேண்டும் என்று தலைப்படுங்கள். ஆழியின் விளிம்பின் அலைவு மட்டுமே என்றா? அவ்வாறெனில் முரண்படுங்கள். நான் சொல்லிச்செல்ல வந்தது இதை மட்டுமே” என்றான்.

பிரத்யும்னன் சினத்துடன் “நற்சொல்லுக்கு நன்றி சொல்கிறேன். ஒரே மாதத்தில் முதியவனாகிவிட்டாய். அறம்தெளிந்து நெறிகண்டிருக்கிறாய்” என்றான். அபிமன்யூ “ஒரு மாதத்தில் அல்ல, ஒரே இரவில், மூத்தவரே” என்றான். எழுந்துகொண்டு “நான் என்னை அந்த இசைக்கனவில் தெளிவாகக் கண்டேன். களம்பட்டு குருதிமூடி மல்லாந்து கிடக்கும் என் உடலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். என் முகத்தில் முழுநிறைவு இருந்தது. இலக்கை வென்று உதிர்ந்த அம்பு என என்னை உணர்ந்தேன். நீங்கள் இப்பிறவியில் அடையக்கூடிய முழுமையும் அது மட்டுமே” என்றான்.

பிரத்யும்னன் “ஏன், நானும் களம்படுவதைக் கண்டாயா?” என்றான். மேலும் ஏளனத்துடன் “எந்தை என்னை கொல்வார் என்று சொல்லவருகிறாய் அல்லவா?” என்று கேட்டான். “இல்லை” என்று அபிமன்யூ சொன்னான். “நான் உங்கள் முடிவை மட்டும் அல்ல, யாதவப் பெருங்குலத்தின் முடிவையே கண்முன் கண்டேன். பசிவெறியில் நிலையழிந்த செந்நாய்க்கூட்டம்போல சீறியும் உறுமியும் யாதவர் ஒருவரோடொருவர் போர் புரிந்தனர். கைக்குச் சிக்கிய அனைத்தையும் எடுத்து ஒருவரை ஒருவர் அறைந்தனர். ஒருவர் குருதியை இன்னொருவர் குடித்து களிவெறிகொண்டனர். தந்தை மைந்தரையும் உடன்பிறந்தார் தன்குருதியினரையும் அறியவில்லை.”

“அங்கே மானுடர் கருவிகளென்றானார்கள். அவர்கள் ஏந்தியிருந்த உழலைத்தடிகள் உயிர்கொண்டு உளம்கொண்டு வஞ்சமும் வெறியும் மூத்து நின்று களமாடின. குருதிகுடித்து விடாய் அடங்காமல் கூத்தாடின. உழலைத்தடிகளின் யுகம் பிறந்துவிட்டதெனத் தோன்றியது” என அவன் தொடர்ந்தான். “அந்தப் போரில் நீங்கள் போஜர்களின் கழிகளால் அறைந்து வீழ்த்தப்பட்டீர்கள்.” பிரத்யும்னன் உளம் அதிர்ந்தான். அதை விழிகூர்ந்து உளம் தெளிந்து சொல்லியிருந்தால் அந்த திடுக்கிடல் இருந்திருக்காது என தோன்றியது. பித்துவிழிகளுடன் சொல்லப்பட்டதனாலேயே அது மானுடம் கடந்த கூற்றென ஒலித்தது.

அபிமன்யூ தொடர்ந்தான். “அறைந்தவன் எட்டு வயதான இளையவன். அவன் கையில் அந்த விசை எவ்வாறு எழுந்தது என அவன் அறிந்திருக்கவில்லை. அவன் விழிகள் குருதிவெறியால் விரிந்திருந்தன. வாய் எதையோ அரற்றிக்கொண்டிருந்தது. நீங்கள் விழுந்ததும் ஓடிவந்து உங்கள் மண்டையோட்டை அவன் அடிக்க ஆரம்பித்தான். குருதி சிதற அது உடைந்து வெண்மூளை வெளியே தெறித்தது. அவன் உங்கள் தலையை தன் காலால் உதைத்தான். வெறிகொண்டு நகைத்தபடி மாறி மாறி உதைத்துக்கொண்டிருந்தான். அவன் தோழர்கள் இணைந்துகொண்டனர். உங்கள் உடல் துண்டுகளாகச் சிதறியது.”

பிரத்யும்னன் தன் உடல் மரத்துப்போயிருப்பதை உணர்ந்தான். பின்னர் திரும்பி தாம்ரப்பிரதனையும் தீப்திமானையும் பார்த்தான். அவர்கள் விழிகளிலும் அச்சம் தெரிவதைக் கண்டான். விடுவித்துக்கொள்ளமுடியாத பிசினில் ஒட்டியிருப்பதுபோல அவன் உள்ளமும் உடலும் அத்தருணத்தில் சிக்கியிருந்தன. கதவு திறந்த ஓசையில் அவன் திடுக்கிட்டான். ஆனால் அது அவனை அறுபட்டெழச் செய்தது. அவன் விழிதூக்க ஏவலன் தலைவணங்கி மெல்லிய குரலில் “இளையோர் வந்துவிட்டனர்” என்றான்.

பிரத்யும்னன் “நன்று இளையோனே, நீ சென்று ஓய்வெடுக்கலாம். உன் கனவுகள் கலைந்து நீ நிலைமீண்ட பின்னர் நாம் மீண்டும் சந்திப்போம்” என்றான். அபிமன்யூ “இவை மிகத் தெளிவான கனவுகள், மூத்தவரே. என்ன வேடிக்கை என்றால் கனவுகள்தான் எப்போதுமே தெளிவானவை, நனவுகளைவிட” என்றான். “உங்கள் தலையை உதைத்த இளம்போஜனை நான் அருகிலெனக் கண்டேன். அவன் முகத்தை பல்லாயிரம்பேர் கொண்ட கூட்டத்தில்கூட விழிதொட்டு எடுத்துவிடுவேன். அவன் பெயர் பூர்ஜன். அவனை அப்பால் ஒருவன் அவ்வாறு அழைப்பதை கேட்டேன்.”

அவனை அங்கிருந்து அகற்றவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரத்யும்னனிடம் இருந்தது. “ஒருவர்கூட எஞ்சாமல் துவாரகையின் யாதவக்குடிகள் இறந்து குருதிநிணக் குவியலாகக் கிடந்தனர். மைந்தர், தந்தையர், முதியவர். அவர்களுக்குமேல் கழுகுகள் சுழன்றுகொண்டிருந்தன. அந்நிழல்கள் பிணங்களின்மேல் சுற்றிவந்தன. தொலைவில் கடலோசை சங்குக்குள் முழக்கமெனக் கேட்டது. அது வலுத்து வந்தது” என்றான் அபிமன்யூ.

“நீ கிளம்பலாம்” என்றான் பிரத்யும்னன். “ஆம், நான் மீண்டும் துவாரகைக்கு செல்லவில்லை. இந்திரப்பிரஸ்தத்திற்கே செல்கிறேன். இனி நான் இங்கு வரப்போவதில்லை” என்றான் அபிமன்யூ. தலைவணங்கி வெளியே சென்றான். அவன் செல்வதை பார்த்துக்கொண்டு பிரத்யும்னன் அமர்ந்திருந்தான். தீப்திமான் “பித்தனென்றே ஆகிவிட்டார்” என்றான். “ஆம்” என்றான் பிரத்யும்னன். “அவரால் மானுடரை அப்படி ஆக்க முடியும். அவர் அருகிருப்பவர்கள் அவருக்கு அடிமைகளே. அவரிடமிருந்து விலகி ஓடுபவர்கள் மட்டுமே தான் என்று உணர்ந்து தனிவழி காணமுடியும்…”

“நானும் துவாரகைக்கு மீளப்போவதில்லை” என்று பிரத்யும்னன் சொன்னான். “மதுராவுக்குச் செல்கிறேன். மூத்த தந்தையிடம் சேர்ந்துகொள்கிறேன். யாதவர்கள் அங்கிருக்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் அவர்களே.” தனக்குள் என “தேவை என்றால் துவாரகைமேல் படைகொண்டு வருகிறேன். அதற்கு பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் உதவுவார்கள் என்றால் அவ்வாறு நிகழட்டும்” என்றான்.

“ஆனால் அது நிகழலாகாது” என்று அவன் மேலும் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவரை நான் எதிர்த்து களம் நிற்கக்கூடாது. அப்பழி என் கொடிவழியினருக்கு வரக்கூடாது.” தீப்திமான் “அது நிகழப்போவதில்லை. பெரும்போர் எழும், ஐயமில்லை. அதன்பின் முற்றாக தோற்கடிக்கப்பட்ட துவாரகை உங்களிடம் வந்துசேரும்” என்றான். பிரத்யும்னன் அவனை வெறுமனே நோக்கிவிட்டு விழிவிலக்கிக்கொண்டான். தலை மார்பில் சரிய அசைவிலாது அமர்ந்திருந்தான்.

பின்னர் பெருமூச்சுடன் விழித்து கைகளை கட்டிக்கொண்டு தொலைவில் தெரிந்த சிந்துவின் நீலப்பெருக்கை நோக்கிக்கொண்டிருந்தான். மீண்டும் விழித்துக்கொண்டு “அவன் என்ன பெயர் சொன்னான்?” என்றான். அவர்கள் இருவரும் வெறுமனே நோக்கினர். அவன் கேட்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. “பூர்ஜன், அல்லவா?” என்றான் பிரத்யும்னன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.

“நல்ல பெயர்… ஆனால் அவன் இன்னும் பிறக்கவில்லை” என்று அவன் சொன்னான். தீப்திமான் “போஜன் என்றார்” என்றான். “போஜர்கள் எவரும் மைந்தர்களுக்கு பூர்ஜன் என்று பெயரிடவேண்டாம் என ஆணையிடுவோம்” என்றபின் உரக்க சிரித்தான். நகையற்ற வெற்றோசை என அது ஒலித்தது. “அறிவின்மை… வெறும் பித்து” என்றபின் அவன் எழுந்துகொண்டான்.

தொடர்புடைய பதிவுகள்


ஆழமற்ற நதி -கடிதங்கள்

$
0
0

134569_thumb

ஆழமற்ற நதி [சிறுகதை]

 

 

அன்புள்ள  ஜெயமோகன்,
சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான, என்னை பாதித்த, ஒரு கதை ஆழமற்ற நதி.
அன்புடன்,
கேசவமணி

அன்புள்ள  ஜெயமோகன்  அவர்களுக்கு,

 

நலம். மிக்க நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

முதல் வாசிப்பில் ,ஆழமற்ற நதி கதையினை விவரிக்கும் சுந்தரேசனின் பாத்திர உருவாக்கம் ஆர்வமூட்டியது.  உயர் பதவியில் இருப்பவர்களிடம் தொடர்புகளை வழிந்து ஏற்படுத்தி பேணிக் கொள்பவர். அவர்களிடம் தவழ்ந்து பணிந்து, குற்றேவல் புரிந்து  அண்டி பிழைக்க தயங்காதவர்.  தான் பழகும் மனிதர்களின்  இயல்புகளையும், அவர்களுக்கிடையேயான உறவுகளையும், கூர்ந்து அவதானிக்கிறார்.  சிலந்தி போல வலை பின்னி, பேச்சு என்னும் கொக்கி போட்டு விவரங்களை கறக்கிறார். அந்த கிசு கிசு விவரங்களை வேறு ஒருவரிடம் போட்டு கொடுத்து , அதனால் பணம் அல்லது வேறு ஏதாவது பலன்களை அடைபவராக இருக்கலாம்.  அல்லது  கிசு கிசு ஏற்படுத்தும் மதமதப்பே அவர் அமிழ்ந்து மகிழும் பலனாக இருக்கலாம். எவ்வாறு  இருந்தாலும் ஒன்றன் பின் ஒன்றாக கதையின் சூழல் விரிவதற்கு அவரின் விலகி நிற்கும் மூன்றாவது கோணம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

 

கதையில்  நிளா நதியை ஒத்த பிறிதொரு நதியான  ஃபால்குனி நதி தொடர்பான குறிப்பு வருகிறது. அந்த நதியின் புராண கதையின்  படி,  பால்குனி நதிக்கு, ராமன் , சீதாதேவி, மற்றும் தன் தம்பிகளுடன் இறந்த தசரதருக்கு பித்ரு காரியம் செய்யும்  பொருட்டு வருகிறார்கள். காரியம்  துவங்கும் முன்  ராமன் , தம்பிகளுடன்,  நீரில் மூழ்கி குளிக்க செல்கிறார்.  அந்த நேரத்தில் ஆவியாக எழுந்த தசரதன், அந்த ஆற்றில் மணல் பிடித்து  விளையாடிக் கொண்டிருந்த சீதா தேவியிடம், கடும் பசி என்கிறார்.  ராமன் வரும் வரை பொறுக்க முடியாத, தசரதருக்கு, அரிசிக்கு பதிலாக,  மண்ணினால் ஆன பித்ரு பிண்டத்தை, அக்ஷய வடம் எனும் அத்தி மரம், பிராமணன், அந்த ஃபால்குனி நதி, ஒரு பசு,   துளசி செடி சாட்சியாக படைத்து தசரதனை ஆற்றுப்படுத்துகிறார்.

 

குளித்து திரும்பிய ராமன் , அரிசியினாலான பிண்டத்தை படைத்து, நீண்ட  நேரம் காத்திருந்து, அதை உண்ண தசரதன்  நேரில் வராததால் குழம்புகிறார். மண்ணினாலான பிண்டத்தை படைத்து அளித்து தசரதர் ஆன்மாவை தான் நிறைவு செய்தேன் என்னும் சீதையின் விளக்கத்தினை ஏற்காத ராமர் சாட்சிகளிடம் கேட்கிறார். இதில் அத்தி மரம் தவிர அனைத்தும் சீதை கூறியது பொய் என பிறழ்ந்து பேசுகிறது. கோபமடைந்த சீதை நதியை மணல்மேடாகவும், பசுவையும் துளசியையும், கயா பிராமணர்களையும் சேர்த்து சபிக்கிறார். . உண்மையின் சாட்சியாக நின்ற அக்ஷய மரமான அத்தி மரத்தை மட்டும் கயா வரும் பக்தர்கள் அனைவரும் வணங்குவார்கள் வரம் கொடுத்தார்.

 

என் வாசிப்பின்படி ஆழமற்ற நதி சங்கரன்தான். அவர் தன் தந்தை ஜஸ்டிஸ் காசிநாதன் பேராசையினால் செய்த வினைகளுக்கு பேசா சாட்சியாக, ஆனால் அதன் பலனை குடும்பத்தாருடன் சேர்ந்து  அனுபவித்தவராக இருந்திருக்கிறார். அறமின்மையின் சாபம், தன் கடைசி மகனான  கதிராக தான் பெற்றதை எண்ணி வாழ்நாள் முழுவதும் குடித்து மனம் புளுங்கியிருக்கிறார்.  இறந்து  பின்  மணல் மேடாகுகிறார்.  பித்ரு காரியம் செய்யும் போது முதல் முறையாக அந்த ஆழமற்ற நதியில் தலை மூழ்கி  மன்னிப்பு கேட்கிறார்கள் காசிநாதனுடன் அவரது குடும்பத்தாரும். அத்தி மரமாக அனைத்தையும்  அன்று வரை பார்த்து  வந்திருக்கும் கதிர், தன் அழுகை மூலம் அரையிருளிலிருக்கும் உண்மையின் மீது சாட்சியாக  ஒளியை பாய்ச்சுகிறார்.

 

இந்த கதை கண்ணதாசன் தன், அரசியல் வாழ்வினை, திராவிட அரசியலின் பிண்ணணியில் விவரித்த தன் வரலாறு நூலான வனவாசத்தை நினைவூட்டியது. இந்த நூல் எனக்களித்த துணுக்குறலும், பிம்பங்கள் உடைந்து தெரித்ததால் நான் அடைந்த சோர்வும் பெரிது. திராவிட இயக்கமே, எழுந்து வா தமிழினமே என மேடையிலேறி  பொய் கூவலிட்ட , அடுத்த மணிநேரத்தில், குடிசையின்  வாயிலுக்கு சென்று பெண்களை தேடிய கூட்டங்கள் நிறைந்தது என்கிறார், அவர்களில் ஒருவராகயிருந்த கண்ணதாசன். அவரின் முழு புலன்களும் கூர்மையாக விழிப்படைந்தது சில விவரிப்புகளில்,   டால்மியாபுரத்தை,  கல்லகுடி என பெயர் மாற்ற  இரயில் மறிப்பு போராட்டத்தில் தன்னை மூன்றாவது அணியாக பங்குபெற வைத்து, எந்த விதத்திலும் அந்த  போராட்டத்தின் வெற்றி மற்றவர்களுக்கு வந்து  சேர விடாமல் அரசியல் செய்த  கருணாநிதி பற்றிய விவரணை. கருணாநிதி தன் சொந்த  செலவில் வாங்கி கொடுத்த கணையாழியை, அண்ணாதுரை அன்பளிப்பாக தருவதாக மேடையில் பொய் கூறியதை மௌன சாட்சியாக கண்டு புளிங்கியதை விவரித்த போது, கண்ணதாசனிடம் கசந்த உமிழ்நீர் தெறித்து தேங்கிய ஓடையில்  கால் நனைக்க நான் நடந்தது போல இருந்தது. எழுத்தாளனின் மனசாட்சி,  உண்மையின் சாட்சியானதால்  அத்தி மரமாக  காலம் கடந்து நிற்கிறது.

 

ஆழமான வாசிப்பனுவமளித்ததற்கு நன்றி,

 

உங்கள் வாசகன்,

சிவமணியன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடைசி முகம் -கடிதங்கள்

$
0
0

yakshi2

கடைசி முகம் – சிறுகதை

அன்புள்ள ஜெ

கடைசி முகம் சிறுகதை படித்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களை எழுதியிருக்கிறேன்.

.

பெண்களால் சூழப்பட்டிருக்கிறது இந்த வாழ்வு. தாயென்றும் தமக்கையென்றும் மனைவியென்றும் மகளென்றும் பேத்தியென்றும் பெருகி நிறைகிறார்கள். ஒருத்தி கொடுத்து நிறையாத அன்பை மற்றவர் வந்து நிறைக்கிறார்கள். எந்தக்குறையுமின்றி பெருமழையென பெண்மை நம்மைச் சுற்றிப் பொழிந்துகொண்டே இருக்கிறது. ஆனாலும் ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதே இல்லை. நல்லூழ் கொண்டவன் மட்டுமே பெண்மையை அறிகிறான். அதன் பேருருவை  உணர்கிறான். அற்றவன் வெறும் ஆணாக எஞ்சுகிறான்.

 

யட்சிகளுக்கும் பகவதிகளுக்கும் மெல்லிய வித்தியாசமொன்று இருப்பதாக உணர்கிறேன். நீங்கள் சொல்வதைப்போல கருப்பசாமிகள் அருள்மிகு கருப்பசாமிகளாவதைப்போன்றது அது. மிகையுணர்வு வெளிப்படும் கண் கொண்டவள் யட்சியென்றால் அதை உள்ளடக்கிய மோன நிலைக் கண்கள் பகவதிக்கு. பெண்களின் உரத்த சிரிப்பொலி கேட்கும் வீடுகள் பேறு பெற்றவை. அங்கே வளரும் ஆண் குழந்தைகள் கடவுளின் ஆசி பெற்றவை. தனிப்பட்ட முறையில் நுண்ணுணர்வு கொண்ட ஒரு ஆணால் பெண்மையைக் கடந்து செல்லவே முடியாது, அது மரணத்தைக்கொடுப்பதாயினும் கூட. ஒரு ஆணைப் பொறுத்தவரையில் அவன் காணும் முதல் முகமும் கடைசி முகமும் பெண்மையே. விஷ்ணுவுக்கு யட்சி காட்டிய முகங்களில் கடைசி முகம் யாருடயதாயினும் அது உயிர் கொடுக்கத்தகுந்த முகமாகவே இருக்கக்கூடும்.

 

மாலையப்பன் சரவணன்

 

அன்புள்ள ஜெ

 

கடைசிமுகம் கதையை முன்னரே வாசித்திருக்கிறேன். இன்று மீண்டும் வாசித்தேன். இப்போதுதான் அது எழுப்பும் அலைக்கழிப்புதெரிகிறது. அந்த முகம் எது என கதை சொல்லவில்லை. சொல்ல முடியாது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. ஆனால் என்ன் என்று எண்ணும்போதுதான் இந்தக்கதை நம் உள்ளத்தில் விரிவுகொள்கிறது. அதைவிட ஒவ்வொன்றும் எத்தனை அருகருகே ஒன்றுடன் ஒன்ரு கலந்ததுபோல உள்ளது என்பது இன்னொரு பெரும் விந்தை

 

காசிநாதன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நாராயண குரு எனும் இயக்கம் -1

$
0
0

naraya

 

நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல எட்டடிக்கு மேலே விலகி நிற்கவில்லை என்றாலே தீட்டு ஆகிவிடும். ஈழவர் புலையருக்கு எட்டடி தள்ளி நிற்க வேண்டும். ஆகவே பொதுப்பாதைகளில் நடமாடுவது, பொது இடங்களுக்கு வருவது போன்ற சமூகச் செயல்பாடுகளெல்லாமே சமூகத்தில் ஏறத்தாழ அனைவருக்குமே மறுக்கப்பட்டன.

சாலைகளும் சந்தைகளும் இல்லாத நிலையில் உற்பத்தியும் வணிகமும் குன்றி கேரள சமூகம் வறுமையின் இருளில் மூழ்கிக் கிடந்தது. அக்கால கேரள சமூகத்தின் பிற்பட்ட சித்திரத்தை வார்ட் அன்ட் கானர், பிரான்சிஸ் புக்கானன், பர்போஸா ஆகியோரின் குறிப்புகளை ஆதாரமாகக் காட்டி தன்னுடைய சாதியமைப்பும் கேரள சமூகமும் என்ற நூலில் வரலாற்றாசிரியரான பி கெ பாலகிருஷ்ணன் விரிவாக நிறுவுகிறார். [1] இந்நூலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இவ்வாசிரியரால் காலச்சுவடு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் அக்கால கேரளச் சமூகத்தின் சித்திரத்தை அளிக்க உதவக்கூடிய இரு முக்கிய நூல்கள் நிர்மால்யா எழுதிய ‘கேரள தலித் போராளி அய்யன்காளி’ மற்றும் அ.கா.பெருமாள் எழுதிய ‘தென்குமரியின் கதை’.

தீண்டாமை உச்சத்தில் இருந்தாலும் கூட நேரடியான அப்பட்டமான சுரண்டல் தடையின்றி நிகழ்ந்தது. கேரளத்தில் அன்று இருவகையான அடிமை முறைகள் இருந்தன. ஒன்று ஒருமனிதன் முற்றாகவே பிறிதொருவனுக்கு அடிமையாக இருப்பது, அவனால் விற்று வாங்கப்படுவது. இன்னொன்று மற்ற காலங்களில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து தேவை ஏற்படும்போது மட்டும் நிலப்பிரபுக்களுக்கும் ஆலயங்களுக்கும் மன்னர்களுக்கும் இலவச உழைப்பு [ஊழியம்] அளிப்பது. உண்மையில் இரண்டாம் வகை அடிமைமுறையே மேலும் கொடுமையானது. இதில் அடிமை உழைப்பு உண்டு, அடிமைக்கு எந்த உரிமையாளரும் பொறுப்பேற்றுக் கொள்வது இல்லை. புலையர் பெரும்பாலும் முதல்வகை அடிமைகள். ஈழவர் இரண்டாம்வகை அடிமைகள்.

அத்தகைய சூழலில்தான் நாராயணகுரு பிறந்தார். அவரது பேரியக்கமே கேரளத்தை ஒரு நவீன சமூகமாக ஆக்கியது

நாராயணகுரு

 

நாராயணகுரு1854ல் திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பழஞ்ஞி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை மாடன் ஆசான், தாய் குட்டியம்மா. மிகச் சிறு வயதிலேயே வறுமையில் வாடினாலும் அவருக்கு கல்வி கற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரம் சாலைத் தெருவில் வாழ்ந்த தைக்காடு அய்யாவு என்ற தமிழரின் தொடர்பு கிடைத்தது. அவர் ஒரு அடிமுறை ஆசான், யோக ஆசிரியர் மற்றும் வேதாந்தி. பிரிட்டிஷ் ரெசிடென்சியில் சூப்பரிண்டண்டாக வேலை பார்த்தார். அவருக்கு சாலைத் தெருவில் ஒரு கடை இருந்தது. அங்கு அமர்ந்து தமிழை ஆழ்ந்து கற்கவும் திருமந்திரம் போன்ற நூல்களை அவரிடம் பாடம் கேட்கவும் குருவால் முடிந்தது.

தன் இருபத்து மூன்றாவது வயதில் துறவறம் பூண்ட குரு பிறகு முப்பது வயது வரை எங்கிருந்தார் என்பது தெரியவில்லை. குமரிமாவட்டத்தில் மருத்துவாழ் மலையில் அவர் சிலகாலம் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. அவரை ஒரு வாலிப யோகியாக பார்த்த சிலரது பதிவுகள் பிற்காலத்தில் கிடைத்துள்ளன. தீண்டப்படாத சாதியினருக்கு கல்வி மறுக்கப்பட்ட அக்காலத்தில் குரு வேதங்களையும் உபநிடதங்களையும் தரிசனங்களையும் ஆழ்ந்து கற்றது வியப்புக்குரிய செய்தியே. பாரதத்தில் சாதிக்கு அதீதமாக தடைகளற்ற ஞானம் புழங்கிய ஓர் உலகம், துறவு பூண்டு அலைந்த அன்னியர்களின் உலகம் அன்றிருந்தது என்பதற்கான ஆதாரம் அது. ரிஷிமூலம் கேட்கப்படாத ஒரு சமூக அமைப்பும் அன்றிருந்தது போலும்.

1888-ல் திருவனந்தபுரம் அருகேயுள்ள அருவிக்கரை என்ற சிற்றூருக்கு திரும்பி வந்த நாராயணகுரு அங்கே ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து சிவலிங்கமாக பதிட்டை [பிரதிஷ்டை] செய்தார். ஈழவனுக்கு பிரதிஷ்டை உரிமை உண்டா என்ற வினாவுக்கு ‘நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல ‘ என்று பதில் சொன்னார் [பாரதி உட்பட பலர் பதிவு செய்தது போல ‘நான் நிறுவியது ஈழவ சிவன் ‘ என்றல்ல] அந்த கோயில் வாசலில் ‘சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது ‘ என்று எழுதி வைத்தார்.

அன்றைய கேரளக் கலாச்சார உலகில் பெரும் புரட்சியாக அது கருதப்பட்டது. அவ்விபரத்தைக் கேள்விப்பட்டு மைசூரில் டாக்டராக வேலை பார்த்து வந்த டாக்டர் பல்பு குருவை காண வந்தார். அவரது உண்மைப்பெயர் பத்மநாபன். ஆனால் தீண்டப்படாத மக்கள் கடவுள் பெயர் சூட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கேற்ப அப்பெயர் ‘ஜன்மி’-யால் [நில உடைமையாளர்] மாற்றப்பட்டது. அவர் பி.ஏ. படிப்பை ஒரு பாதிரியாரின் உதவியுடன் முடித்தபோது கேரள மன்னர் அரசு அவருக்கு வேலை அளிக்க மறுத்தது. மைசூருக்கு சென்று அவர் மருத்துவப்பயிற்சி பெற்று உயர்பதவிக்கு வந்தார். கேரளத்தில் புழுக்களைவிட தாழ்ந்தவர்களாக வாழ்ந்த மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினார். அவ்வாறாக கேரள கலாசார வாழ்வை மாற்றியமைத்த பேரியக்கமான எஸ்.என்.டி.பி [ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா] 1903 ல் திருவனந்தபுரத்தை மையமாக்கி அருவிப்புறத்தில் நிறுவப்பட்டது. 1928-ல் குரு தனக்கு பின்பு தன் பணிகளை செய்யும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை உருவாக்கினார். தர்ம சங்கம் என்ற அவ்வமைப்பு வற்கலை என்ற ஊரில் சிவகிரி என்ற மலைமீது துவங்கப்பட்டது.

நாராயண குருவின் அணுகுமுறை மிக மிக நேரிடையானது. எதிர்மறை மனநிலைக்கு அதில் சற்றும் இடமில்லை. எண்பது வயது வரை வாழ்ந்த அவர், மிகக் கொந்தளிப்பான பல சூழல்களை சந்தித்த அவர், தன் வாழ்நாள் முழுக்க எதைப்பற்றியும் எதிர்மறையாக எதுவுமே சொன்னதில்லை. எவரையுமே கண்டித்ததில்லை. நாயர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களாக நடத்துகிறார்கள் என்று குமுறிய ஈழவ இளைஞர்களிடம் அதை தடுக்க ஒரே வழி புலையர்களை நாம் அணைத்து சேர்த்துக் கொள்வதே என்று அவர் உபதேசித்தார். இது குருவின் போக்கு என்ன என்பதை காட்டும் உதாரண சம்பவமாகும். அவர் பொதுவாக உபதேசம் செய்வதில்லை. பேருரைகள் ஆற்றும் வழக்கமே இல்லை. தனிப்பட்ட முறையில் பேசும்போது நகைச்சுவை மிக்க சில வரிகள் மட்டுமே சொல்வார். முக்கியமான சமயங்களில் அவர் சொல்ல சில வரிகளைப் பிறர் எழுதியெடுத்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

தீண்டாமை முதலிய கொடுமைகள் ஒழிய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை என்ன? அதை ‘தீண்டாமைக்கு அதீதமானவர்களாக தங்களை கல்வி செல்வம் ஆன்மீகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்ளுதல், ஆதிக்க சக்திகளை விட கல்வி, செல்வம், ஆன்மீக வல்லமை மிக்கவர்களாதல் ‘ – என சுருக்கமாக வகுத்துக் கூறலாம். எஸ்.என்.டி.பி யின் ஆரம்பகால செயல்பாடுகள் இரு தளங்களில் தீவிரம் கொண்டன.

நாராயணகுரு முதலில் உருவாக்கிய மாற்றம் அனைவரும் கூடும் பொது இடங்களாக கோயில்களை அமைத்தல் என்பதை கேரளச்சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மக்கள் அனைவரும் சாதாரணமாகக் கூடும் பொது இடம் என்பது கேரள சமூக அமைப்பில் அன்றுவரை இல்லாத ஒன்றாகும். ஈழவர்களும் பிற சாதியினரும் தங்கள் குலவழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தார்கள். கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்த குடும்பத்துக்கு சொந்தமானவை. நாராயணகுரு அவரே நேரில் சென்று அந்தச் சிறுதெய்வங்களை பிடுங்கி அகற்றினார். சிறுதெய்வ வழிபாட்டை முழுக்க ஒழித்துக்கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்து அங்கே சிவன் விஷ்ணு தேவி போன்ற பெருந்தெய்வங்களை நிறுவினார். தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி, பெரிங்கோட்டுகரை, வடக்கே தலைச்சேரி கண்ணனூர், கோழிக்கோடு, ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவிய முக்கியமான கோவில்கள் உள்ளன.

தற்காலப் பார்வையில் அவர் நாட்டார்க் கடவுள்களை அகற்றிவிட்டு பிராமணியப் பெருந்தெய்வங்களை நிறுவினார் என்பது வேறுமாதிரி படக்கூடும். ஆனால் அதற்கு அன்றிருந்த நோக்கங்களும் அதன் விளைவுகளும் மாறுபட்டவை. நாயர்கள் கூட கருவறைக்கு அருகே போக முடியாத சமூகச்சூழலில் குரு அந்தப் பதிட்டைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயப்பிரவேசம் மறுக்கப்பட்ட மக்களுக்கு, அதற்கு தங்களுக்கு தகுதியில்லை என்று நம்பிய மக்களுக்கு அது அளித்த தன்னம்பிக்கை சாதாரணமல்ல. அவ்வாலயங்களில் பூஜைகளையும் அன்றைய தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும் அழகிய சம்ஸ்கிருதத்திலும் குரு அக்கோவில்களுக்கு பூஜைமந்திரங்களை உருவாக்கி அளித்தார். அவற்றில் தெய்வ சதகம், சுப்ரமண்ய சதகம், காளீநாடகம், சாரதா தேவி துதி முதலியவை மிக உக்கிரமான கவித்துவம் கொண்டவை [காளீநாடகம் சமீபத்தில் சுவாமி வினய சைதன்யாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்டரேச்சர் இதழில் வெளிவந்து பாரத அறிவுஜீவிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது]. இவ்வாறாக அவ்வாலயங்கள் சமூகப்பொது இடங்களாக மாறின.

குலதெய்வங்களை இல்லாமல் செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கை முறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன. உதாரணமாக கள், மாமிசம் ஆகியவற்றை படைத்து உண்டு குடித்து களிப்பதே இவ்வழிபாட்டின் முக்கியமான கூறு. இதன்மூலம் உருவாகும் பூசல்கள் வழிபாட்டின் பகுதியாக கணிக்கப்பட்டன. இதனாலேயே பெண்களும் குழந்தைகளும் இவற்றில் பங்குகொள்வதுமில்லை. சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்தது வழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார். வன்முறை மேலோங்கிய பலிகொள்ளும் தெய்வங்களின் இடத்தில் கல்விக்கடவுள் சரஸ்வதி வருவது முக்கியமான மாற்றமே. குடிகளியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த்தனையும் அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை உருவானது. அதாவது வழிபாடு ஒரு நவீன சமூகக்கூட்டுச் செயல்பாடாக மாற்றப்பட்டது.

உண்மையில் ஈழவர்களின் மதம் பெளத்தமாகவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது. பெளத்தம் அழிந்த பிறகே அவர்கள் சிறுதெய்வ வழிபாட்டுக்கு மீண்டார்கள். நாராயணகுருவின் இயக்கம் பெளத்த வழிபாட்டுமுறையை மீண்டும் கொண்டுவந்தது என்று சொல்வதே சிறப்பு. நாராயண குரு தன்னை பெளத்தன் என்று சொல்லியதுண்டு. அவர் முன்வைத்த அத்வைதம் யோகாசார பெளத்தத்தின் பிறிதொரு வடிவமே. நாராயணகுருவை நவபுத்தன் என்று சொல்பவர்கள் உண்டு.

குலதெய்வ ஒழிப்பின் முக்கியமான இன்னொரு தளம் தமிழகத்தில் பரவலாக கவனிக்கப்படவில்லை, கேரளத்தில் பி.கெ.பாலகிருஷ்ணன் போன்றோர் இதைப் பேசியுள்ளனர். உலக அளவில் பார்த்தால் தெய்வ உருவகங்கள் மூன்று வகைப்படும்.

  1. செயல்தளத் தெய்வங்கள்
  2. முழுமுதல் தெய்வம்
  3. தத்துவார்த்த தெய்வம்.

செயல்தளத்தெய்வங்கள் தொல்பழங்காலப் பழங்குடி வாழ்க்கையிலிருந்து முளைத்து நாட்டார் பண்பாட்டில் வேரூன்றி வளர்பவை. பழங்குடிமனம் தன் செயல்பாடுகள் மூலம் கண்டடைந்த ஆழமான இறையனுபவங்களின் வெளிப்பாடுகள் அவை. ஆகவே இவை எண்ணற்றவை, ஒழுங்கற்றவை. இவை மிகக் குறுகிய எல்லைக்கு உட்பட்டவை. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு, ஒரு குறிப்பிட்ட குலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு என வரையறுக்கப்பட்டவை இவை. வரப்புக்கு ஒருதெய்வம் வாய்க்காலுக்கு வேறு தெய்வம் என்று இவை காணப்படுகின்றன.

செயல்தளத்தெய்வங்களில் சில காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து உருவானவையே பெருந்தெய்வங்கள் எனலாம். பெருமதங்களின் உருவாக்கங்கள் இவை. பெருமதங்கள் தெய்வங்களை ஒன்றோடொன்று இணைத்தும், சடங்குகளை மறுவிளக்கம் அளித்து தொகுத்தும், தெய்வங்களை முழுமைப்படுத்தியபடியே சென்று ‘முழுமுதல் தெய்வம் ‘ என்ற கருத்தை அடைகின்றன. இதன் போக்கில் தத்துவமும் புரானங்களும் உருவாகிப் பெருகுகின்றன. சிறுதெய்வம் மானுட வாழ்க்கைக்குள் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருக்கையில் முழுமுதல் தெய்வம் உலகுக்கு அப்பால் நின்று உலகை இயக்குவதாக உள்ளது. அது பிரபஞ்சத்தின் உறுப்பு அல்ல, பிரபஞ்சத்தின் மூல காரணமாகவும் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டு சக்தியாகவும் உள்ளது. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிறது அது.

மனித மத வரலாற்றில் சிறுதெய்வங்களில் இருந்து முழுமுதல்தெய்வம் நோக்கிய நகர்வு மிக முக்கியமான ஒரு பாய்ச்சல் ஆகும். இன்றும்கூட சமூகப் படிநிலைகளில் கீழ்த்தளத்தில் நிற்கும் இனக்குழுக்களே சிறுதெய்வ வழிபாட்டில் அதிகமாக ஈடுபட்டுள்ளன. படிநிலை மேலே செல்லச் செல்ல முழுமுதல் தெய்வ வழிபாடு காணப்படுகிறது. இது ஒரு முக்கியமான உண்மையைக் காட்டுகிறது. ஒரு சமூகம் முழுமுதல்தெய்வத்தை அடையும்போது அதன் வாழ்க்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் பல உருவாகின்றன. அவை அச்சமூகத்தை பொருளியல் சார்ந்தும் கலாச்சாரம் சார்ந்தும் முன்னகரச்செய்கின்றன. அவை என்ன என்பதை விரிவாகப் பேசமுடியும். குறிப்பாகச் சொல்லவேண்டியது இதுதான். சிறுதெய்வங்களை வழிபடும் சமூகங்கள் தங்கள் இனக்குழு அடையாளத்துக்குள் கட்டுப்பட்டு தங்களுக்குள் சுருண்டுகொள்ளும் தன்மை கொண்டுள்ளன. நம்பிக்கைகள் சார்ந்தே அவற்றின் வழிபாடு இருப்பதனால் அவை காலத்துக்கு ஏற்ப அவை மாறுவது இல்லை. முழுமுதல் தெய்வத்தை அடையும் சமூகங்கள் தத்துவார்த்தமாக வழிபாட்டை விளக்க ஆரம்பிப்பதனால் மாற்றங்களை உள்வாங்க ஆரம்பிக்கின்றன. முக்கியமாக சமானமான பிற இனக்குழுக்களுடன் அவை இணையவோ ஒருங்கிணைந்து செயல்படவோ முடிகிறது. அதாவது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பிரிவதற்குரிய மனநிலை விலகி ஒருங்கிணைவதற்கான மனநிலை உருவாகிறது.

இந்தியச் சூழலில் முழுமுதல் பெருந்தெய்வங்களை அளிக்கும் மதங்கள் ஐந்து. சைவம், வைணவம், சாக்தேயம், கிறித்தவம், இஸ்லாம். தென்தமிழ்நாட்டில் கிறித்தவ மதம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அளித்து அவர்களின் பொருளியல் சமூக வாழ்வில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்கியது என்பது சமீபகால வரலாறு. சைவமும், வைணவமும், சாக்தமும் அதற்கு முந்தைய காலகட்டங்களில், குறிப்பாக பக்தி இயக்க காலகட்டத்தில், அப்பணியைச் செய்தன. பக்தி இயக்கமே இந்தியக் கலாச்சாரம் என நாம் காணும் பொதுவான கூறுகளில் பெரும்பாலானவற்றை உருவாக்கியது. நம்மாழ்வார் தொடங்கி ராமானுஜர் வரை, நாயன்மார் காலம் தொடங்கி சித்தர்களின் காலம் வரை பக்தி இயக்கத்தின் பணி முழுமுதல்தெய்வம் என்ற கருத்தை உருவாக்கி எளிய மக்களிடையே கொண்டு செல்வதாகவே இருந்தது.

பக்தி இயக்கம் தேய்ந்து மறைந்தபோது அந்த பணியும் நின்றது. சாதி அமைப்பு மேலும் கெட்டிப்பட்டது. பக்தி இயக்க நாயகர்களான ராமானுஜர், மத்வர், பசவர் போன்றோரால் உருவாக்கப்பட்ட சாதிமறுப்புச் சமூகக் குழுக்கள் கூட புதிய சாதிகளாக மாறின. எளிய மக்களுக்கு முழுமுதல்தெய்வங்களை வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் சமூக அரசியல் சக்தியாக திரள்வதும் தடுக்கப்பட்டது. நாராயணகுரு ஒருவகையில் துஞ்சத்து எழுத்தச்சனின் அடுத்த கட்டம் ஆவார். பக்தி இயக்கத்தின் சமூக அரசியல் மாற்றத்தின் குரலை கேரளத்துக் கொண்டு வந்தவர் எழுத்தச்சன். எளிய நாட்டார் வாய்மொழி சந்தத்தில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எழுதி முழுமுதல்தெய்வத்தை கேரள மண்ணில் நிறுவியவர் அவர். மலையாளமொழி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி, கேரள தேசியத்தின் விதை, கேரள எளிய மக்களின் முதல் பிரதிநிதி, கேரள சமூகத்தின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர் எழுத்தச்சனே என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் குறிப்பிடுவது இதனாலேயே. [4]

எழுத்தச்சன் உருவாக்கிய மாற்றம் உறைந்து போய் மறைந்துவிட்ட நிலையில் அதை புத்துயிர் பெறச்செய்தவர் நாராயணகுரு. கேரள மறுமலர்ச்சியின் நாயகனாக அவரை இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் காண்பதன் காரணமும் இதுவே. ஒருவகையில் எழுத்தச்சன் தொடங்கி வைத்ததை நாராயணகுரு முழுமை செய்தார். எளியமக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அவர் அளித்தது அத்தகைய மாபெரும் சமூகப் புரட்சி ஒன்றின் தொடக்கம் ஆக அமைந்தது. நாராயண குருவைப் பொறுத்தவரை ஒரு தெய்வம் என்பது மனித சமத்துவநோக்கின் முதல்படியே. 1921 ல் ஆலுவாயில் சகோதரன் அய்யப்பனின் முயற்சியால் கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்ட ‘ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு ‘ என்ற வரி அவரது மையமான உபதேசமாக கொள்ளப்படுகிறது. அம்மாநாடே கேரளத்தில் மனித சமத்துவத்துக்கான செய்தியை மக்கள் மத்தியில் ஆழப்பதித்தது. மாப்பிளா கலவரங்கள் என்றபேரில் பெரும் மதக்கலவரங்கள் கேரளத்தில் எழுந்த காலகட்டம் இது என்பதை நாம் நினைவு கூரவேண்டும்.

தெய்வ உருவகங்களில் மூன்றாவது, உச்சமானது தத்துவார்த்த தெய்வம் ஆகும். ரிக்வேதத்தில் ‘பிரம்மம் ‘ என்ற கருத்துருவமாக நாம் தூய தத்துவார்த்த தெய்வ உருவகத்தைக் காண்கிறோம். பொதுவாக கீழை மதங்களிலேயே தத்துவார்த்த தெய்வ உருவகங்கள் உள்ளன. கன்பூஷியமதம், யோகாசார பெளத்தம், ஜென் பெளத்தம், அத்வைதம் ஆகியவற்றின் இறை உருவகம் தூய தத்துவக் கருத்துநிலையாக உள்ளது. முழுமுதல்தெய்வம் என்ற கருத்தே தத்துவார்த்த உருவகம்தான். ஆனால் அது திட்டவட்டமானதும் கூட. தத்துவார்த்தத் தெய்வ உருவகம் மிக அருவமானது. சாதாரணமான பார்வையில் அதை தெய்வம் என்றே சொல்ல முடியாது. பிரபஞ்சம் குறித்த ஒருவகை புரிதல் மட்டும்தான் அது. முழுமுதல்தெய்வம் என்ற உருவகத்தின் அடுத்தபடி, மேலும் நுண்மையான தளம், தத்துவார்த்த தெய்வம் அல்லது கருத்துருக் கடவுள் என்பதே.

நாராயணகுரு முழுமுதல் தெய்வத்தை அளித்து அடுத்தபடியாக தத்துவார்த்தமான தெய்வத்தை முன்வைத்தார். நீண்டகால அடிபப்டையில் மிக நுட்பமாக இதை குரு நிகழ்த்தினார் எனலாம். அவர் நிர்மாணித்த கோயில்கள் இதற்கு சிறந்த உதாரணமாகின்றன. முதலில் சிவலிங்கத்தையும் பிறகு சுப்ரமணியர், ஜகன்னாதர் போன்ற கடவுள்களையும் பதிட்டை செய்த குரு அடுத்த கட்டத்தில் விளக்கையும் பிறகு ‘சத்யம் தர்மம் தயை ‘ என்ற சொற்களையும் கருவறை தெய்வமாக பதிட்டை செய்தார். இறுதியில் சேர்த்தலை களவங்கோடு கோவிலில் மூலவராக நிலைக்கண்ணாடியை நிறுவியபிறகு மேலும் கோயில்கள் வேண்டாம் கல்விச்சாலைகளே போதும் என்று சொல்லிவிட்டார். அவர் அருவிக்கரையில் கோயிலை நிறுவியபோதே சொன்ன கருத்துதான் இது. ஆனால் அதன் பிறகு பல படிகளிறங்கி வந்து கோயில்கள் நிறுவி மீண்டும் அரை நூற்றாண்டுக்கு பிறகு துவங்கிய தளத்துக்கே வந்து சேர்ந்தார். மக்களை அங்கு கொண்டு சேர்ப்பதே அவரது நோக்கம் என்று ஊகிக்கலாம். தன் ‘நாராயணகுரு தொகைநூல்’-லில் பி.கெ.பாலகிருஷ்ணன் [5] இவற்றை விரிவாக விளக்கியுள்ளார்.

இந்தக் கோணத்தில் பார்த்தால் நாராயணகுருவின் முக்கியமான சிறப்புக் கூறான நடைமுறை விவேகம் தெரியும். இந்திய சமூகவிடுதலைக்காகப் போரிட்டவர்கள் அனைவருமே எளிய மக்களுக்கு அவர்களுடைய பழங்குடிக் குலதெய்வங்களை தவிர்த்து முழுமுதல் தெய்வங்களை நோக்கிச் செல்ல வழிகாட்டியுள்ளனர். அய்யா வைகுண்டர் போன்றவர்கள் சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்களை முன்வைத்தனர். சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண இயக்கம், டாக்டர் அம்பேத்காரின் புதிய பெளத்த இயக்கம், வள்ளலாரின் அருட்பெரும்ஜோதி இயக்கம் ஆகியவை தூய கருத்துருக் கடவுள்களை முன்வைத்தன. முந்தையது நவீனக் கல்வி பெற்ற ஒருசாராருக்கு உவப்பாக இருக்காது. பிந்தையதை எளிய மக்களால் எளிதாகப் பின்தொடர முடியாது. நாராயண குரு நடுவேயுள்ள பாதையை தெரிவு செய்து முதல் தளத்தில் தொடங்கி இரண்டாம் தளம் நோக்கி செல்கிறார்.

நாராயணகுருவின் அடுத்த முக்கியமான பணி கல்வித்துறையில்தான் என்று சொல்லலாம். தற்காலத்தில் கூட கேரளத்தில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்துவது நாராயணகுரு துவக்கிய பேரியக்கமே. பள்ளிகளும் கல்லூரிகளும் துவங்குவதும் படிக்கும் உரிமைக்காக போராடுவதும் அவ்வியக்கத்தின் ஆரம்பகால பணிகளில் முக்கியமானதாக இருந்தது. ஈழவ சமூகமே படிப்புமிக்க சமூகமாக மாறியது. பொதுவாக கேரளத்தின் கல்விநிலை புரட்சிகரமாக மாறியது. தற்காலத்தில் நமது தேசத்தில் முழு எழுத்தறிவுள்ள ஒரே மாநிலமாக அது உள்ளதற்கு காரணமும் நாராயணகுருவின் அறிவியக்கமே. மலையாளிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்வதும், அவர்கள் செல்வத்துக்கு முதலீடாக உள்ளதும் அவர்களுடைய கல்வியே.

நாராயணகுரு அறிவின் அதிகாரத்தை உய்த்துணர்ந்த சமூக சீர்திருத்தவாதி. மீண்டும் மீண்டும் ஆங்கிலக்கல்வியை குரு பெரிதும் வலியுறுத்தினார். தன் முக்கிய மாணவரான நடராஜ குருவை ஐரோப்பாவுக்கு அனுப்பி மேலை தத்துவத்தில் ஆழ்ந்த பயிற்சிபெற அவர் ஏற்பாடு செய்தது குறிப்பாகக் கவனிக்கத்தக்கது. ஆங்கிலம் அதிகாரத்தின் மொழியாக இருப்பது மேலும் பலகாலம் தொடரும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தை உலகை அறியும் ஊடகமாக அதன் மூலம் தாங்கள் வாழும் எல்லைகளை மீறிச்செல்லும் வாகனமாக குரு எண்ணினார். நவீனகாலகட்டத்தின் அறிவின் மொழி அது என்பது அவரது எண்ணமாக இருந்தது

ஆனால் சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவம் குறித்த தெளிவான புரிதல் அவருக்கு இருந்தது. நாராயணகுருவுக்கு சம்ஸ்கிருததுடன் இருந்த உறவு குறித்து விரிவாக விவாதிக்கவேண்டும். பொதுவாக ஈழவ சமூகத்தில் சிறிய எண்ணிக்கையிலான சிலருக்கு சம்ஸ்கிருத அறிவு இருந்தது. அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்கும் பொருட்டு குலவழக்கமாக அதைக் கற்றவர்கள். ஆனால் மதநூல்களிலோ தர்மநூல்களிலோ அவர்களுக்குப் பயிற்சி இருக்கவில்லை. நாராயணகுரு ஆங்கிலக் கல்வியை அனைவரும் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தாழ்த்தபப்ட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அறிவார்ந்த தளங்களில் செயல்படும் முக்கியமானவர்கள் சம்ஸ்கிருத ஞானம் அடையவேண்டும் என்று எண்ணினார். சம்ஸ்கிருத ஞானம் என்னும்போது குரு உத்தேசித்தது மதநூல்களிலும் தர்மநூல்களிலும் பெறும் ஆழமான பயிற்சியையையே.

காரணம் இந்திய சமூகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு உள்ள இடம் குறித்த தெளிவான ஒரு புரிதல் அவருக்கு இருந்தது. மதஞானமும் தர்மஞானமும் சம்ஸ்கிருதத்தில் அமைந்ததும் சம்ஸ்கிருதம் பாரதம் முழுமைக்குமான பொது ஊடகமாக அமைந்ததும் நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட நிகழ்வுகள். ஆகவே சம்ஸ்கிருதத்தை மறுப்பது வரலாற்றை மறுப்பதுதான். நாராயணகுருவின் வழிமுறை எதிர்ப்பதும் புறக்கணிப்பதும் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லவேண்டும். கற்பதும் வென்றெடுப்பதும் ஆதிக்கம் பெறுவதுமே அவரது வழிமுறைகள். புறக்கணிப்பதன் மூலம் மத அதிகாரம் அதை ஏற்கனவே கையில் வைத்திருப்பவர்களிடமே தங்கிவிடவே வழிவகுக்கிறோம் என்பதே அவரது கருத்து. சம்ஸ்கிருதத்திலும் வேதவேதாந்தங்களிலும் தர்மநூல்களிலும் ஈழவர்கள் முதன்மை பெறுமளவுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்பதே நாராயணகுருவின் எண்ணமாக இருந்தது.

நாராயணகுருவின் காலம் முதல் தொடங்கி இன்றுவரை சம்ஸ்கிருதக் கல்வி ஈழவ சமூகத்தின் முக்கியமான கூறாக இருந்து வந்துள்ளது. அதன் மூலம் குரு உத்தேசித்த மதஞானத்தையும் மத அதிகாரத்தையும் அச்சமூகம் அடையவும் செய்தது. பிற பகுதிகளில் பிற்பட்ட சமூகங்கள் பொருளியல் அடிப்படையில் ஆதிக்கம் பெற்றும் பெறமுடியாத மத, கலாச்சார அதிகாரத்தை ஈழவ சமூகம் அடைந்தது இதனாலேயே எனலாம். மேலும் சம்ஸ்கிருதக் கல்வி பொதுவாக இலக்கியதளச் செயல்பாடுகளிலும் ஈழவசமூகத்தில் முக்கியமான தூண்டுதலாகவும் வலிமையாகவும் அமைந்து வருவதும் கண்கூடு. நாராயணகுரு உருவாக்கிய இந்த சம்ஸ்கிருதக் கல்வி ஆர்வத்தை பாரதியார் [6] தன் கட்டுரைகளில் மிகுந்த ஆர்வத்துடன் எழுதியுள்ளார்.

சமூக அதிகாரத்தில் செல்வத்தின் இடம் குறித்து நாராயணகுருவுக்கு இருந்த புரிதல் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. தன் சேவைக்காலத்தில் முப்பதுவருடம் குரு தொழில் அபிவிருத்தி குறித்து மீண்டும் மீண்டும் பேசியுள்ளார். ஈழவ சமூகத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க சில குடும்பங்கள் பெருநில உடைமை காரணமாக செல்வ வளத்துடன் இருந்தன. ஐதீகம் சார்ந்த காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டன. இக்குடும்பங்கள் எல்லாமே பெளத்தமதப் பின்னணியும் கொண்டவை. பாலி மொழி ஏடுகள் பல இவர்கள் வீடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. ஈழவர்கள் பெளத்தர்களாக இருந்து பெளத்தம் வீழ்ச்சி அடைந்தபோது நிலம் இழந்து தீண்டப்படாதவர்களாக ஆகியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இவை. இக்குடும்பங்களை தொழில்துறையில் இறங்க நாராயணகுரு வற்புறுத்தினார். கேரளத்தின் கயிறு ஓடு தொழில்கள் உருவாக அவரே காரணம்.

ஆனால் நிகழ்காலத்தில் நின்று பார்க்கும்போது கேரள அறிவுத்துறையில் குரு உருவாக்கிய மாற்றமே மிக முக்கியமான பங்களிப்பு என்று படுகிறது. கேரள பொதுவுடைமை அரசியல் நாராயணகுருவில் துவங்குகிறது என ஈ.எம்.எஸ் எழுதினார். [‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி. கெ. பாலகிருஷ்ணன்] மூன்று தலைமுறைகளாக நாராயணகுருவை தொடர்ந்து அறிஞர்கள் பல துறைகளிலும் உருவானபடியேயிருந்தார்கள். நாராயணகுருவின் நேரடி சீடர்கள் என மூவரை முக்கியமாக சொல்லலாம். மகாகவி குமாரன் ஆசான் நாராயணகுருவின் முதல் சீடர். மிகச் சிறு வயதிலேயே எஸ்.என்.டி.பி இயக்கத்தின் செயலராகி நெடுங்காலம் பணியாற்றியவர். பாரதி தமிழுக்கு யாரோ அந்த நிலைதான் அவருக்கு மலையாளத்தில். நவீனக் கவிதை, இதழியல் இரண்டுமே ஆசானிலிருந்து தொடங்கியவை. அவரது ‘கருணை’, ‘சண்டால பிட்சுகி’, ‘துரவஸ்தை’ முதலிய குறுங்காவியங்கள் கேரள இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு களம் அமைத்தவை. ஆசானின் நடை நேரடியானதும் உணர்ச்சிகரமானதுமாகும். அது எழுப்பிய அலை மிகப்பெரியது. எழுதப்பட்ட காலம் முதல் இன்றுவரை நாலணா ஒரு ரூபாய் பிரசுரங்களாக அவரது கவிதைகள் லட்சக்கணக்கில் விற்கப்படுகின்றன என்பதை குறிப்பாகச் சொல்லவேண்டும்.

நாராயணகுருவின் அணுக்கத்தொண்டரும் அடிப்படைக் கருத்துக்களில் அவரை நிராகரித்தவருமான சகோதரன் அய்யப்பன் அடுத்த முக்கியச் சீடர். கேரளத்தில் நாத்திக சிந்தனையை நிறுவிய முன்னோடி அவரே. புலையர்களை அணிதிரட்டி ஆரம்பகட்ட கிளர்ச்சிகளை நடத்தியவர் அய்யப்பன். அக்காரணத்தாலேயே ‘புலையன்’ அய்யப்பன் என்று அறியப்பட்டவர். மூன்றாமவர் நடராஜ குரு.

கேரளத்தின் முக்கியமான மூன்று நாளிதழ்களின் ஸ்தாபகரும், வரலாற்றாசிரியருமான சி.வி.குஞ்ஞிராமன் நாராயணகுருவின் முக்கியமான சீடர்களில் ஒருவர் அவரது மகன்தான் மார்க்சிய தத்துவ வரலாற்றாசிரியரான கெ.தாமோதரன். கேரள சுதந்திரப்போராட்டத்தின் முதல்கட்ட தலைவர்களில் ஒருவரான டி.கெ.மாதவன் நாராயணகுருவின் நேரடி சீடர்தான். அவரால் நடத்தப்பட்டது தான் வைக்கம் போராட்டம். அப்போராட்டத்தில் ஈ.வே.ரா. பங்கேற்றார். [தமிழக வழக்கப்படி அது மிகைப்படுத்தப்பட்டு அவர் ‘வைக்கம் வீரராக’ ஆக்கப்பட்டதெல்லாம் மிகவும் பிற்பாடுதான்.] குறிப்பிட்ட பட்டியலில் கேரளத்தின் ஆன்மீக கலாச்சார அறிவுத்துறை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் பேரை சேர்த்துச் சொல்லிவிட முடியும்.

கேரள பண்பாட்டுவரலாற்றில் ஆழமான பங்களிப்பை ஆற்றிய கேரள கெளமுதி இதழ் குழுமம் நாராயணகுருவின் மாணவரான சி.வி.குஞ்சுராமனால் உருவாக்கப்பட்டதாகும். இதில் எழுதி உருவான படைப்பாளிகளின் ஒரு வரிசையையே இங்கே பட்டியலிட முடியும். இவ்விதழ் மூலம் கேரள சிந்தனையில் உருவான பொதுவான பாதிப்பும் முக்கியமானது. இவ்வரிசையில் முக்கியமாக சொல்லப்படவேண்டிய படைப்பாளி பி.கெ.பாலகிருஷ்ணன். வரலாற்றாசிரியர், இதழாசிரியர், நாவலாசிரியர், திறனாய்வாளர் ஆகிய தளங்களில் கேரள சிந்தனையின் அடிப்படைகளை செதுக்கிய மேதை அவர்.

காந்தி 1925-ல் நாராயண குருவை வந்து சந்தித்திருக்கிறார். சாமியார்கள் மீது நம்பிக்கை இல்லாதவரும் பொதுவாக எவரையுமே சந்திக்காதவருமான காந்தி நாராயண குருவை ஒரு அவதார புருஷர் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அச்சந்திப்புக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி [காஞ்சிபெரியவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்] காந்தியை கேரளத்தில் பாலக்காட்டில் வைத்து சந்தித்து தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஆலயப்பிரவேச போராட்டம் ஆகியவற்றிலிருந்து பின்வாங்குமாறு காந்தியிடம் கோரிக்கை வைத்தார். ஹிந்து சாஸ்திரங்கள் அவற்றை அனுமதிக்காது என்றும் அச்செயல்கள் ஹிந்துதர்மத்தை படிப்படியாக அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார். காந்திக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஹிந்து உயர்சாதி மக்களின் ஆதரவு தன் போராட்டங்களுக்கு கிடைக்காமலாகிவிட வாய்ப்புண்டு என்றும் அவர் உணர்ந்திருக்கலாம்.

நாராயணகுருவை அவர் அரைமனதாகவே சந்திக்க வந்தார். ஆனால் அச்சந்திப்பு அவரை நாராயணகுருவின் முன் பணிந்து கற்க வைத்தது. அவர்களுடைய பேச்சு விபரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் வெகுநாட்களாக தன் மனத்தில் இருந்த ஐயங்கள் பல அன்றுதான் முழுமையாக நீங்கின என்று காந்தி அன்று திருவனந்தபுரத்தில் நடந்த பிரார்த்தனை வகுப்பில் குறிப்பிட்டார். அச்சமயம் கூடவேயிருந்தவர்களில் ஒருவரான மூர்க்கோத்து குமாரன் என்பவரும் ஆசானும் சொன்ன குறிப்புகளின் படி காந்தி வர்ணாசிரம தர்மத்துக்கு சஸ்திர ஆதாரம் உண்டா என்று கேட்டதாகவும் ஹிந்து சாஸ்திரங்களில் மாறக்கூடிய நீதி சாஸ்திரங்கள் மட்டுமே அதை போதிக்கின்றன என்றும் அடிப்படை அறங்களை போதிக்கும் நூல்கள் எதிலுமே சாதிக்கு இடமில்லை என்று உறுதியாக கூறமுடியுமென்றும் நாராயணகுரு சொன்னதாக தெரிகிறது. காந்திக்கு வர்ணாசிரம தர்மம் ஏதோ ஒரு வகையில் தேவையானது என்று எண்ணம் இருந்தது. நாராயணகுரு அதை மறுத்தார். காந்தி அதை பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டார்.

காந்தியின் அரசியல் செயல்திட்டங்களில் முக்கியமான இரண்டு நாராயணகுருவின் இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்று அவர் ஏற்றுக் கொண்டவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஹரிஜன இயக்கம், மது ஒழிப்பு இயக்கம் ஆகியவையே அவை. 1923-ல் கன்யாகுமரி வந்த தாகூரும் நாராயணகுருவை சந்தித்து அவர் பாரத தேசத்தில் தோன்றிய மகாரிஷிக்களில் ஒருவர், ஒரு பரமஹம்சர் என்று கருத்து தெரிவித்தார். ஆனால் வாழ்ந்த காலத்தில் நாராயணகுருவின் புகழ் தென்னிந்தியாவில் கூட கேரளத்துக்கு வெளியே அதிகமாகப் பரவவில்லை.

நாராயணகுரு தன் 74 வது வயதில் 1928-ல் கேரளத்தில் வற்கலை என்ற ஊரில் அவர் உருவாக்கிய சிவகிரி மடத்தில் காலமானார். அங்கே அவரது சமாதி உள்ளது. அவர் இறக்கும்போது அவர் தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கம் ஏறத்தாழ அதன் சாதனைகளை முடித்துக் கொண்டு அரசியல் இயக்கமாக ஆகி பேரங்களில் இறங்க ஆரம்பித்திருந்தது. நாராயணகுரு கடைசிக்காலத்தில் எஸ்.என்.டி.பி இயக்கத்தை முழுக்கவே நிராகரிக்கும் மனநிலையில் இருந்தார். அமைப்புசார்ந்த செயல்பாடுகளின் எதிர்விளைவுகளை அவர் காண நேர்ந்தது. கடைசி பதினைந்து வருடங்களில் நாராயணகுரு தத்துவ முக்கியத்துவம் கொண்ட தன் நூல்களை இயற்றினார். ஏற்கனவே பொதுமக்களின் வழிபாட்டுக்காகவும் தன் தத்துவங்களை அவர்களுக்கு எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் நாராயணகுரு துதிக்கவிதைகள் மற்றும் வேண்டுதல் பாடல்களை எழுதியிருந்தாலும் இறுதிக் காலகட்டத்தில்தான் அவரது முக்கிய நூல்கள் உருவாயின. இவை நடராஜ குருவின் வேண்டுதலுக்கு இணங்கி உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. இறப்புக்குப் பின்னர் நாராயணகுருவின் இயக்கம் இந்த நூல்களில் இருந்து மீண்டும் புதிதாக முளைத்தெழுந்தது.

நாராயணகுரு மலையாளம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தர்சன மாலா, ஆத்மோபதேச சதகம் ஆகிய நூல்கள் தத்துவார்த்தமாக முக்கியமானவை. தமிழ்ப் பாடல்கள் பெரிதும் திருமந்திரம் சித்தர் பாடல்கள் ஆகியவற்றின் சாயல் கொண்டவை. குருவுக்கு வெண்பா மிகவும் கைவருகிறது. திருக்குறளை குரு மொழிபெயர்த்திருக்கிறார். நாராயணகுருவின் தத்துவ நோக்கு அவரது மாணவர்களால் பிற்பாடு இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது. அது இந்திய அறிவுத்தளத்தில் முக்கியமான ஓர் இயக்கமாக ஆயிற்று.

[தொடர்ச்சி ]

நூல்கள்

1. சாதியமைப்பும் கேரள வரலாறும். பி கெ பாலகிருஷ்ணன். சுருக்கமான தமிழாக்கம் ஜெயமோகன். காலச்சுவடு 13
2. கேரள தலித்போராளி அய்யன்காளி. நிர்மால்யா. தமிழினி சென்னை.
3. தென்குமரியின் கதை. டாக்டர் அ. கா. பெருமாள். தமிழினி சென்னை
4. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி – இ எம் எஸ் நம்பூதிரிப்பாட். [மலையாளம்]
5. ’நாராயணகுரு தொகைநூல் ‘ -பி. கெ. பாலகிருஷ்ணன் [மலையாளம்]
6. பாரதியார் கட்டுரைகள். தொகைநூல்

Copyright:Thinnai. com

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 25, 2004

தொடர்புடைய பதிவுகள்

ஏன் அது பறவை?

$
0
0

bogan

ஒரு கவிதை

அன்புள்ள ஜெ

போகனின் கவிதை சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை ஏன் அத்தனை சிறந்தது என்கிறீர்கள்? சீண்டுவதற்காகக் கேட்கவில்லை. நானெல்லாம் கவிதையை புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருப்பவன். அதற்கு உதவும் என்பதனால் கேட்கிறேன்

எஸ்.சேதுராமன்

அன்புள்ள சேதுராமன்,

கவிதை ரசனை மிக அகவயமானது. ஆகவே ஒருவர் உணர்வை ஒருவர் அறிவதும் பகிர்வதும் கடினம். ஆனால் ஆச்சரியமாக மதிப்பீடுகள் எப்படியோ மிகப்புறவயமானவையும் கூட. நல்ல கவிதை நல்ல கவிதையே. எல்லா இடத்துக்கும், காலத்திற்கும், மானுடருக்கும்

என் வரையறைகளைச் சொல்கிறேன்.

*
அ. கவிதைக்கு ஓர் ஆன்மிகம் உள்ளது. அது மதம்சார்ந்த, மரபார்ந்த ஆன்மிகம் அல்ல. அது ஒருவகை ‘இணை ஆன்மிகம்’ எனலாம். இங்கிருக்கும் உலகியல் அனைத்தையும் தனக்கே உரிய உலகியல்சாராத முழுமைநோக்கு ஒன்றைக்கொண்டு அது மதிப்பிடுகிறது. அந்த ஆன்மிகம் கருத்தாக அன்றி உணர்வாக   வெளிப்படுவது நல்ல கவிதை. இக்கவிதையின் பேசுபொருள் அதுவே.

ஆ. நல்லகவிதையின் வடிவம் கைதேர்ந்த வாள்வீச்சு போல மிக இயல்பாக, விரைவாக, குழந்தைவிளையாட்டுபோல, நிகழ்ந்திருக்கும். மிக இயல்பாக நிகழும் கவிதைவெளிப்பாடு பலசமயம் தேய்வழக்காக அமையும். அப்படி அமையாமல் வீச்சுகொண்டால் அது நல்ல கவிதை இக்கவிதையின் வடிவம் எளிமையானது, ஆனால் இயல்பான கூர்மைகொண்டது

இ நேற்றின் ஆழம் முதல் இன்றுவரை வந்துசேர்ந்திருக்கும் குறியீடுகளின், ஆழ்படிமங்களின், மொழிபுகளின் ஒரு ரகசியத்தொடர்ச்சி கவிதையில் இருக்கும். சட்டென்று ஏதோ வர்ம முடிச்சில் தொட்டு ஒரு வலியை, உவகையை விம்மி எழச்செய்யும் அது. இக்கவிதையில் உள்ள பைபிள் நினைவூட்டலைச் சொல்லலாம்

*
எந்த மாகவிஞனுக்கானாலும் கவிதை அதுவாக வாய்ப்பதே. பலதருணங்களில் பல நல்ல கவிதைகளின் தோள்மேல் ஏறித்தான் அடுத்த உச்சம் அடையப்படுகிறது. போகன் எழுதிய சமீபத்தைய ஆறு கவிதைகளை நண்பர் அனுப்பியிருந்தார். ஆறுமே நல்ல கவிதைகள்தான். இது அதன் உச்சம்

பறவைக்கு இலக்கணம் என்ன? அதற்குச் சிறகுகள் இருக்கும். முட்டை போடும். முக்கியமாக-  பறக்கும்.

 

ஜெ

 

அனீஷ்கிருஷ்ணன் நாயர் போன்ற வைணவ அடிப்படைவாதிகள் வேதசகாயகுமார் போன்ற இலக்கிய தற்கொலைப்படைகள் ஆகியோருடன் சுற்றிக்கொண்டே ஒருவர் நல்லகவிதை எழுதுவது ஒருவகை சாதனைதான்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54

$
0
0

ஏழு : துளியிருள் – 8

fire-iconதொலைவிலேயே மதுராபுரியின் துறைமுகப்பு பந்தங்களின் செவ்வொளியில் காட்டெரியெனத் தெரிவதை யௌதேயன் பார்த்தான். பீதர் நாட்டின் பளிங்குக் குமிழ் விளக்கொளியில் படித்துக்கொண்டிருந்த பூர்ஜ மரப்பட்டைகளாலான ஏட்டை சீராக அடுக்கி பட்டுநூலால் கட்டி பேழைக்குள் வைத்தபின் அருகே மூங்கில் அழியில் தொங்கிய மேலாடையை எடுத்து அதன் மடிப்புகளை நீவி சீராக தோளிலிட்டபடி படகின் முகப்பிற்கு வந்தான்.

அவன் குழல்கற்றைகள் காற்றில் எழுந்து பறந்தன. இடையில் இருந்த பட்டு நூலை எடுத்து குழல்கற்றைகளைக் கட்டி முடிச்சிட்டுக்கொண்டான். படகு முகப்பிலிருந்த பீதர்நாட்டு தூக்குவிளக்கு உலைந்தாடி தூண்களின் நிழல்களையும் வடங்களின் நிழல்களையும் நாகங்களென பின்னி நடனமிடச் செய்தது. அவன் படகிற்குப் பின்னால் வந்துகொண்டிருந்த கலிங்கநாட்டு பொதிப்படகின் விளக்கொளி காற்றிலெழுந்து புடைத்திருந்த பாயை பெருந்தழலென வானில் நெளிந்தாடச் செய்தது.

படகோட்டி “மதுராபுரி அணுகுகிறது, இளவரசே” என்றான். படகறைச் சுவரில் சாய்ந்து கைகட்டி நின்றபடி யௌதேயன் துறைமேடை விரைவழிந்த பெருங்கலமென தன்னை நோக்கி வருவதை பார்த்துக்கொண்டிருந்தான். மதுராபுரியின் முகப்பிலிருந்த அறுபத்துநான்கு கல்தூண்களின்மேல் மீனெண்ணெய் விளக்குகள் தழல் சிதறி இருளுக்குள் எழத் துடிக்க செந்நிழல் பரப்பி நின்றிருந்தன. செவ்வொளியில் படிக்கட்டுகளும் துலாமேடைகளும், அவற்றை இழுக்கும் எருதுகளும் யானைகளும், பாய் சுருக்கி அணைந்த படகுகளின் தேன்மெழுகு பூசப்பட்ட கூரைவளைவுகளும் அனல் பூசிக்கொண்டு மின்னின.

யமுனையின் அலைப்பரப்புகளின்மேல் நெடுந்தொலைவுவரை நெளியும் செந்நிறச் சட்டங்கள்போல பந்தங்களின் ஒளி விழுந்து நீண்டுகிடந்தது. காலைப்பனிக்குள் பொதிஏற்றும் விலங்குகளை ஓட்டுபவர்களும் துலா பிடிப்பவர்களும் ஆயக்கணக்கர்களும் காவலர்களும் எழுப்பிய ஓசைகள் உரக்க கேட்டன. அவற்றுக்கு நிகராக படகுகளில் இருந்த நீரோடிகள் உரக்க கூச்சலிட்டனர். காற்று சுழன்றடிக்கும் நீர்வெளிகள்மேல் வாழ்பவர்கள் ஆதலால் அத்தனை சொற்களையும் அவர்களால் வெடித்தெழும் கூச்சலாகவே வெளிப்படுத்த முடிந்தது.

அவர்களின் ஆடைகள் செவ்வொளி பட்டு தழல் என காற்றில் துடித்தன. திரும்புகையில் படைக்கலங்களும் உலோகப் பொருட்களும் அனல் மின்னி அணைந்தன. ஆடும் படகுகளில் தொங்கிய சங்கிலிகளும் பலவகையான கலங்களும் மதஎருதின் கழுத்து மணிகளென குலுங்கின. கந்தில் பிணைந்த யானையென உடல் உலைந்தபடி கலிங்கத்துப் பெரும்படகொன்று அப்பால் நின்றது. அதன் சாளரங்கள் செந்நிற விளக்கொளிகள் விரிய நிரையாக தெரிந்தன. அதன் கொடிமர உச்சியில் சிம்மக்கொடி காற்றில் படபடத்தது.

துறைமேடையில் மூன்று பெரும்துலாக்கள் சீராக சுழன்றிறங்கி கலிங்கப் படகில் இருந்து பொதிகளைத் தூக்கி இரை கவ்விய பருந்துகளென காற்றில் வளைந்து அப்பால் இறக்கி வைத்தன. துறைமேடையிலிருந்து வளைந்தேறிச் சென்ற கல்பாவப்பட்ட சாலைகளில் பொதிவண்டிகளை இழுத்த மாடுகள் உச்சவிசையில் உடலிறுகி தசைகள் அசைய, சகடங்கள் உரசி முனக, சவுக்கோசைகளும் வசையொலிகளும் ஆணைகளுமாக ஏறிச்சென்றன. அப்பால் மதுராவின் வெளிக்கோட்டை அதன்மேல் நிரையாக காவல்மாடங்களில் மீன்நெய் விளக்குகள் எரிய கவச உடையணிந்த காவலர்கள் அனல் சூடிய வேல் முனைகளுடன் நின்றிருக்க இருண்ட பரப்பெனத் தெரிந்தது.

வானில் விடிவெள்ளி எழுந்திருந்ததை யௌதேயன் பார்த்தான். அவனுடைய படகு துறைமேடையில் தன் முறை வருவதற்காக நிரையில் இணைந்து ஆடியபடி காத்து நின்றது. இரு படகோட்டிகளும் துடுப்புகளை விட்டு எழுந்து வந்து அணைக்கயிறுகளை வளையங்களில் இருந்து அவிழ்த்து பாய்களை சுருக்கினர். புடைத்துப் பரந்து நின்றிருந்த பெருந்தழல்கள் நெய்குறைந்தவைபோல் சுருங்கி பின் இறங்கி சுருண்டன. அமரத்திலிருந்தவன் பெருந்துடுப்பை நீரில் ஆழ இறக்கி சுக்கானை இரும்புக் கொக்கிகளில் மாட்டினான். “தெய்வங்களே!” என கூவியபடி எழுந்து நின்று கைகளைத் தூக்கி உடலை வளைத்து சோம்பல் முறித்தான்.

அவன் இரும்பு நங்கூரத்தை அதன் வளையத்திலிருந்து அவிழ்த்து மரப்பட்டைச் சரிவினூடாக தள்ளிக்கொண்டுவந்து நீருக்குள் விட்டான். திமிங்கலம்போல வழுக்கி மெல்ல அது நீரில் இறங்கி ஓசையின்றி மூழ்க வளையங்களாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த அதன் வடம் உயிர்கொண்ட பாம்பெனச் சுருளவிழ்ந்து ஓடிக்கீழிறங்கிச் சென்றுநின்று பின் இறுகி விம்மி அசைந்தது. படகு ஊசலாட்டத்தை இழந்து சிற்றலைகள் மேல் மெல்ல ததும்பியது.

யௌதேயன் அறைக்குள் சென்று அங்கே மஞ்சத்தில் மல்லாந்து படுத்து துயின்றுகொண்டிருந்த சர்வதனை தோளில் தட்டி “இளையோனே இளையோனே” என்றழைத்தான். “சற்று பொறுத்து உண்கிறேன். இப்போது பசியில்லை” என்று அவன் சொன்னான். மேலும் உலுக்கி “எழுக மந்தா, மதுரா வந்துவிட்டது” என்றான் யௌதேயன். சர்வதன் விழித்துக்கொண்டு வாயைத் துடைத்து “ஏன்?” என்றான். சினத்தை அடக்கி “ஏனென்றால் நம் படகு இங்கு வந்துவிட்டது” என்றான். அவன் “நமது படகா?” என்றான். யௌதேயன் அவன் கன்னத்தில் அறைந்து “எழுக, மூடா!” என்றான்.

அதன் பின்னரே சித்தம் தெளிந்து சர்வதன் எழுந்தமர்ந்தான். கைகளை அவன் தூக்கியபோது பெருந்தோள்களில் தசைகள் புடைத்தெழுந்தன. இரு கைகளையும் பின்னால் கொண்டு சென்று சுழற்றி தலைக்குமேல் நீட்டி சோம்பல் முறித்து கோட்டுவாயிட்டபடி “விரைந்து வந்துவிட்டோம்” என்றான். “விரைந்து வரவில்லை. எதிர்ப்பெருக்கிருந்தமையால் மூன்று நாழிகை பிந்தி வந்துள்ளோம்” என்றான் யௌதேயன். “விடிவெள்ளி எழுந்துவிட்டதா?” என்றபடி சர்வதன் எழுந்து தலையைச் சுழற்றி எலும்புகள் சொடுக்கோசை எழுப்ப தன் உடலை சீர்படுத்தியபடி வெளியே சென்றான்.

படகுமுற்றத்தில் ஆடையும் குழலும் பறக்க நின்று கைகளை மீண்டும் தூக்கி விரல்களை விரித்து சொடுக்கோசைகளை எழுப்பியபடி “சிறிய நகரம்” என்றான். யௌதேயன் “இந்திரப்பிரஸ்தத்தை பார்த்தபின் எந்நகரும் சிறிதே. மதுரா தொல்புகழ் கொண்டது” என்றான். சர்வதன் “ஆம், நெய்வணிகர்களின் நகரம்” என்றான். “இல்லை, யாதவர்களின் நகர்” என்று எரிச்சலுடன் யௌதேயன் சொன்னான்.

முன்னால் நின்றிருந்த நான்கு படகுகளும் பொதித்துறைகளுக்குச் சென்று நிற்க அவர்களின் படகு பயணிகளுக்கான துறையை சென்றடைந்தது. அமர மேடையில் ஏறிய படகோட்டி தன் முழங்கையளவு தடிமனான கயிற்றைத் தூக்கி மும்முறை ஆயம் கூட்டிச் சுழற்றி கரை நோக்கி வீசினான். அங்கு நின்றிருந்த கரையன் அதைப்பற்றி இழுத்து தரையில் ஆழ அறையப்பட்டிருந்த தடித்த மரக்குற்றிகளில் சுற்றிக் கட்டினான். பின்பக்கம் இன்னொரு வடத்தை படகோட்டி வீச பிறிதொருவன் அதைப்பற்றி அங்குள்ள தரையில் கட்டியபோது நீர் நிறைந்த கலம் என படகு அமைதி கொண்டது.

சகடங்கள் அமைந்த நடைபாலத்தை இருவர் தள்ளிக்கொண்டு வந்து அவர்களின் படகின் விளிம்பை முட்டினர். படகோட்டி அதைப்பற்றி அதன் விளிம்புகளைப் பொருத்தி இறுக்கிக் கட்டினான். சர்வதன் திரும்பி “செல்லவேண்டியதுதானே, மூத்தவரே?” என்றான். “ஆம்” என்றபின் யௌதேயன் படகோட்டியிடம் “எங்கள் பெட்டிகளை எடுத்துவரும்படி அவர்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அரண்மனைக்குச் செல்கிறோம்” என்றான். சர்வதன் “நம்மை வரவேற்க இங்கு அரண்மனைப் பொறுப்பாளர் எவரேனும் வந்திருப்பார்கள் என்று எண்ணினேன்” என்றான்.

யௌதேயன் “நாம் இங்கு அரசமுறையாக வரவில்லை” என்றான். “ஆயினும் நாம் அரச குடிகள்” என்று சர்வதன் சொன்னான். யௌதேயன் மறுமொழி கூறாது மரப்பாலத்தின் மீதேறி மெல்ல அடிவைத்து கரையிலிறங்கி நின்றான். திரும்பி சர்வதனிடம் “எனது நூல்பேழைகளை மட்டும் கையிலெடுத்துக்கொள், மந்தா” என்றான். சர்வதன் அவன் மூடிவைத்திருந்த மூன்று நூல் பேழைகளை கையிலெடுத்துக்கொண்டு படகின் விளிம்பிலிருந்து தாவி கரைக்கு வந்தான். அவனை திரும்பிப்பார்த்த யௌதேயன் “ஏடுகள் நீரில் விழுந்திருந்தால் என்ன செய்வாய்?” என்றான்.

“இதுவரை என் கையிலிருந்து எதுவும் விழுந்ததில்லை” என்றபடி சர்வதன் அவனுக்குப் பின்னால் வந்தான். “இந்த நள்ளிரவிலும் இப்படி பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அத்தனை துறைமேடைகளிலும் நள்ளிரவில்தான் பொதிகளை இறக்குவார்கள், மந்தா. பகற்பொழுதின் வெம்மையில் உழைப்பதுதான் கடினம்” என்றான் யௌதேயன். “ஆம், அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்” என்று சர்வதன் சொன்னான். யௌதேயன் எரிச்சலுடன் அவனை திரும்பிப்பார்த்தபின் மறுமொழி சொல்லாமல் நடந்தான்.

சுங்கநிலையை அடைந்த யௌதேயன் அங்கிருந்த காவலனிடம் “நாங்கள் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். தேர்களோ வண்டிகளோ இருந்தால் ஒருங்கு செய்க!” என்றான். காவலன் “தாங்கள்…” என்று சொல்லி இருவரையும் மாறி மாறிப் பார்த்தபின் சர்வதனை அடையாளம் கண்டுகொண்டு “இளைய பாண்டர் பீமசேனரின் மைந்தர் அல்லவா?” என்றான். “ஆம், இவர் முதற்பாண்டவர் யுதிஷ்டிரரின் மைந்தர்” என்றான் சர்வதன். “தங்கள் உடலே தெரிவிக்கிறது” என்று காவலன் சொன்னான். “சற்று பொறுங்கள், இதோ வருகிறேன்” என்று தீர்வை அலுவலகத்துக்குள் சென்று அங்கிருந்த சுங்கநாயகத்துடன் வந்தான்.

முதியவராகிய சுங்கநாயகம் சர்வதனின் அருகே வந்து வணங்கி “உபபாண்டவர்களை மதுராபுரிக்கு வரவேற்கிறேன். தாங்கள் வரும் செய்தி எதுவும் இங்கு அறிவிக்கப்படவில்லை. ஆகவே அரண்மனைத் தேர் எதுவும் இங்கில்லை. என்னுடைய சிறிய ஒற்றைப்புரவித் தேர் உள்ளது. அதில் ஒருவர் மட்டுமே செல்ல இயலும். பிறிதொருவர் புரவியில் செல்வீர் என்றால் அதை ஒருங்கு செய்கிறேன்” என்றார். சர்வதன் “எடைதாங்கும் ஒரு புரவி இருந்தால் போதும். நான் அதில் சென்றுவிடுவேன். மூத்தவருக்கு அந்தத் தேர் உகந்ததென்றால் பழுதில்லை” என்றான்.

“புதிய தேர்தான். அத்துடன் இங்கிருந்து அரண்மனை நெடுந்தொலைவிலும் இல்லை. ஏழு தெருக்களுக்கு அப்பால் உள்ளது மையக்கோட்டை. இரவாதலால் அரைநாழிகைக்குள் சென்று சேர்ந்துவிட முடியும்” என்று சுங்கநாயகம் சொன்னார். “நன்று! தேர் வருக!” என்றான் யௌதேயன். புரவியும் தேரும் வந்து நின்றன. ஏட்டுப் பேழைகளை தேருக்குள் வைத்தபின் அருகிலிருந்த மரப்பெட்டி ஒன்றை ஒரு கையால் தூக்கி படியாக வைத்து “ஏறிக்கொள்ளுங்கள், மூத்தவரே” என்றான் சர்வதன்.

யௌதேயன் பெட்டியின் மேலேறி தேரிலேறிக்கொண்டான். பாகன் ஏறிக்கொண்டதும் தேர் கிளம்பியது. சர்வதன் சுங்கநாயகத்திடம் “அரண்மனையில் இவ்வேளையில் அடுமனையில் உணவு சித்தமாக இருக்குமல்லவா?” என்றான். அவர் “மதுராபுரியின் அரண்மனையில் அடுமனை விளக்கும் அடுப்பும் அணைவதேயில்லை. தாங்கள் நிறைவுறும் வரை உண்ணலாம்” என்றார். புன்னகையுடன் “அதையும் பார்ப்போம். நான் உண்டபின் அடுமனைகளில் பெரும்பாலும் உடனே மீண்டும் அடுப்புமூட்டுவது வழக்கம்” என்றபடி சர்வதன் புரவியை செலுத்தினான்.

துறைமேடையிலிருந்து கிளம்பிய பொதிவண்டிகள் கோட்டையை இருபுறமும் சுற்றிக்கொண்டு பின்னால் அமைந்த பண்டகசாலை நோக்கி சென்றன. பயண வண்டிகள் மட்டுமே கோட்டைக்குள் சென்றன. அவை மிகச் சிலவே. அவற்றில் இருந்த வணிகர்களும் துயிலில் அசைந்தனர். கோட்டைக் காவல்தலைவர் அவர்களின் தேரை நிறுத்தி உள்ளே பார்த்தார். யௌதேயன் தன் கணையாழியை காட்டியதும் தலைவணங்கி உள்ளே செல்லும்படி கைகாட்டினார்.

அவர் விழிகளில் தெரிந்த வியப்பைப் பார்த்தபின் சர்வதன் “நம்மை இங்கு எவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றுகிறது, மூத்தவரே” என்றான். “ஆம், இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக பெரும்படைக்கூட்டொன்று நிகழும் களம் இது என இன்று பாரதவர்ஷமே அறிந்திருக்கிறது. மூத்த யாதவர் யாதவக்குடிகள் அனைத்தையும் திரட்டி துரியோதனருக்குப் பின்னால் நிறுத்த முயன்றுகொண்டிருக்கிறார். மும்முறை யாதவப் பேரவைகள் இங்கு கூடிவிட்டன. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து பாண்டவர் மைந்தர் இருவர் இந்நகரில் நுழைவதைப்போல வியப்பூட்டும் செய்தி ஒன்றில்லை” என்றான் யௌதேயன்.

சர்வதன் “ஆம், நாளை இந்நகர் முழுக்க இதுவே பேச்சாக இருக்கும்” என்றான். “எப்படியோ நாமும் வரலாற்றுக்குள் நுழைந்துவிட்டோம். சற்று செலவேறியது என்றாலும் தாழ்வில்லை. சூதர்களைக்கொண்டு நமது வீரச் செயல்களை பாடச்செய்துவிட வேண்டும்” என்றான். யௌதேயன் புன்னகைத்து “என்ன வீரச் செயல் உன் கணக்கில் உள்ளது?” என்றான். “என்ன அப்படி கேட்டுவிட்டீர்கள், மூத்தவரே? ஒவ்வொரு ஊட்டறையிலும் அடுமனையிலும் எனது வீரச் செயல்கள் என பத்துபதினைந்து உள்ளன. அவற்றை சூதர்கள் அறியவில்லை. அவர்கள் மிகக் குறைவாக பொழுது கழிக்குமிடம் அடுமனையே. ஆகவே நானேதான் அவர்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது” என்றான் சர்வதன்.

fire-iconபுலர்காலையில் மதுராபுரியின் அங்காடித்தெரு அன்றி பிற அனைத்துப் பகுதிகளும் துயிலில் இருந்தன. பெருங்கைவீதியும் முதல்மாடவீதியும் அரசநடுவீதியும் தேர்த்தடங்கள் பதிந்த தரையுடன் இருபுறமும் நிரைவகுத்த கற்தூண்களில் எண்ணை விளக்குகள் தழலாட ஓய்ந்தவை எனக் கிடந்தன. அங்காடிவீதிகளில் அத்திரிகளிலிருந்து பொதிகளை சுமையர் இறக்கிக்கொண்டிருந்தனர். அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் ஒரு கால் தூக்கி தலைதாழ்த்தி நின்று துயில்கொண்டன.

மணிவண்ணன் கோட்டத்தில் புலரிமணியோசை எழுந்தது. தொடர்ந்து கொற்றவை ஆலயத்திலும் வேல்மயிலோன் ஆலயத்திலும் செம்பொன் மேனியன் ஆலயத்திலும் மணியோசைகள் எழுந்தன. நகரம் நீர்த்துளிக் கிளை உலுக்கப்பட்டு சொட்டுவதுபோல மணியோசைகளால் நிறைந்தது. மரங்களிலிருந்து பறவைகள் சிறகு கொண்டெழுந்தன. சங்கொலி “ஓம்” என வானை அழைத்து அமைந்தது. பிறிதொரு சங்கொலி “ஆம்” என முழங்கி தொடர்ந்து எழுந்தது. யௌதேயன் கைகூப்பி கண்மூடி வணங்கினான். “நற்பொழுது! நாம் எண்ணி வந்தது நிகழவேண்டும்” என்றான்.

தேரின் விளிம்பைப் பற்றியபடி வந்த சர்வதன் நகைத்து “நாம் அங்கிருந்து எண்ணி வந்ததில் பெரும்பகுதி இங்கு நிகழும் அரசியல் சூழ்ச்சிகளைப்பற்றித்தான். அவை முறைப்படி நிகழுமென்பதில் ஐயமில்லை. அதற்கு நமது தெய்வங்களின் உதவி அவர்களுக்கு தேவையும் இல்லை” என்றான். “உளறாதே! நாம் தந்தையரின் ஆணை பெற்று வந்துள்ளோம்” என்று யௌதேயன் சொன்னான். “அதற்கு நம்மை ஏன் அனுப்பினார்கள் என்பதுதான் அங்கிருந்தே என்னைத் தொடரும் வினா” என்றான் சர்வதன்.

“நம்முடையது முறையான அழைப்பு மட்டுமே. நாம் அழைக்கவில்லை என்றொரு சொல் எழக்கூடாது. போர்முகம் திரள்வதற்குள் அத்தனை அரசர்களையும் முறையாக துணைக்கழைப்பதென்பது ஒரு மரபு. செய்வனவற்றை முறையாகவே செய்யலாம் என்றுதான் நம்மிருவரையும் தந்தை தேர்வு செய்துள்ளார். வசுதேவருடன் பேசுவதற்கு நான் பலராமருடன் பேசுவதற்கு நீ. நான் சொல்லாலும் நீ தசையாலும் அவரிடம் உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் தந்தை” என்றான் யௌதேயன்.

மதுராவின் தெருக்கள் இடுங்கியவையாகவும் இருபுறமும் வந்த மாளிகைகள் இரண்டு அடுக்குக்கு மிகாதவையாகவும் இருந்தன. “தொன்மையான மரக்கட்டடங்கள் இவை. இவற்றில் பெரும்பகுதி முன்பு இளைய யாதவராலும் பின்னர் ஏகலவ்யவனாலும் எரியூட்டப்பட்டது. முன்பிருந்த அதே வடிவில் புதிய மரத்தால் மீண்டும் செய்துகொண்டார்கள்” என்று யௌதேயன் சொன்னான். “ஏனெனில் இவற்றின் அடித்தளங்கள் மண்ணாலானவை. எஞ்சிய அடித்தளங்களின்மேல் கட்டும்போது முந்தைய வடிவிலேயே கட்டுவதுதான் இயல்வது.”

“ஏன், புதிய வடிவிலேயே கட்டலாமே? அடித்தளத்தை இடித்துவிட்டு அமைப்பதற்கென்ன?” என்று சர்வதன் கேட்டான். “அடித்தளங்களை இடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் வீதிகள் அவற்றின் அடிப்படையில் அமைந்தவை” என்றான் யௌதேயன். “ஆம், ஆனால் அடித்தளங்களை இடிக்காமல் எதுவும் மாறுவதில்லை” என்று சர்வதன் சொன்னான். “வீதிகளை மாற்றாமல் நகரம் மாறுவதில்லை. மாறா நகர் அம்மக்களை மாறாமல் வைத்திருக்கிறது.”

அவர்களின் தேர் சென்று அரண்மனை உட்கோட்டை வாயிலில் நின்றது. பெரிய தலைப்பாகை அணிந்திருந்த பெருந்தோளரான காவலர்தலைவர் இறங்கி வந்து புரியாத விழிகளுடன் தேரைப் பார்த்தபின் அணுகி “சுங்க நாயகத்தின் தேரல்லவா?” என்றார். சர்வதன் “ஆம், நாங்கள் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வருகிறோம். பாண்டவரின் மைந்தர்கள்” என்று தன் கணையாழியை காட்டினான். அவர் முகம் மலர்ந்து “உண்மையில் நீங்கள் தொலைவில் வருகையில் இளைய பாண்டவர் பீமசேனர் வருவதுபோல் உணர்ந்தேன். நான் அவரை ஏழுமுறை பார்த்திருக்கிறேன். ஒருமுறை அவருடன் தோள்கோத்து களம் நின்றிருக்கிறேன்” என்றார்.

“ஆம், அவருடன் தோள்கோக்கும் தரமுடையவை உங்கள் புயங்கள்” என்றபின் “தந்தையே, தங்கள் பெயரென்ன?” என்றான் சர்வதன். “சவிதன், யாதவ போஜர்குடியினன். நான் இளைய பாண்டவர் பீமசேனரின் அதே அகவை கொண்டவன்” என்றார். “நாளை களத்திற்கு வாருங்கள். அவர் மைந்தனுடன் ஒருமுறை தோள் சேர்த்தோமெனும் பெருமை உங்களுக்கு அமையட்டும்” என்று சர்வதன் சொன்னான். “உறுதியாக வருகிறேன்” என்று அவர் மலர்ந்த முகத்துடன் சொன்னார். “பாரதவர்ஷத்தின் மல்லர்களில் மிகச் சிலருக்கே அமையும் வாய்ப்பல்லவா அது?”

திரும்பி இளைய காவலன் ஒருவனிடம் “இளவரசர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்க! அவர்கள் சிற்றமைச்சர் சூக்தரை சந்திக்கட்டும். அவர்களின் தங்குமிடத்திற்கும் இளைப்பாறலுக்கும் அவர் ஏற்பாடு செய்வார்” என்றார். இளங்காவலன் அருகே வந்து புரவியை பிடித்துக்கொண்டு “வருக, இளவரசர்களே! தங்கள் வருகையால் மதுரா நகர் மகிழ்கிறது. என் வாழ்வில் எஞ்சிய நாள் முழுக்க சொல்லி மகிழும் ஒரு தருணமும் வாய்த்தது” என்றான்.

சர்வதன் இறங்கி அணுகிவந்த புரவிக்காவலனிடம் புரவியை ஒப்படைத்தான். யௌதேயன் தேரிலிருந்து இறங்கி “மந்தா, என் சுவடிப்பேழைகளை எடுத்துக்கொள்!” என்றான். சர்வதன் அப்பெட்டிகளை கையிலெடுத்துக்கொண்டு “செல்வோம்” என்றான். இளைய காவலன் “என் பெயர் மூர்த்தன். நானும் ஒருமுறை தங்கள் தந்தையை பார்த்திருக்கிறேன். அவர் கானேகக் கிளம்புவதற்கு முந்தைய ஆண்டு இந்திரப்பிரஸ்தத்தில். அங்கு ஒரு மற்போர் நிகழ்ந்தது. இங்கிருந்து பதினெட்டு மல்லர்கள் அங்கு வந்திருந்தார்கள். அதில் என் தாய்மாமனும் ஒருவர். அவருடன் நானும் சென்றிருந்தேன்” என்றான்.

“எந்தையுடன் போர் புரிந்தாரா உமது மாமன்?” என்றான் சர்வதன். “அதை போரென்று சொல்ல முடியாது. தசை பெருக்கியவண்ணம் சென்று நின்றார். மறுகணமே அவரைத் தூக்கி நிலத்தில் அறைந்தார் இளைய பாண்டவர். என்ன ஆயிற்றென்றுகூட பார்க்காமல் பிறிதொரு மல்லரை நோக்கி திரும்பிவிட்டார். நான்கு ஏவலர்கள் என் தாய்மாமனை காலைப்பற்றி இழுத்து களத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அவருடைய வலத்தோளில் தசை கிழிந்து விலாவில் குருதி கொட்டியது. புண் ஆறுவதற்கு நெடுநாட்களாயிற்று” என்றான் மூர்த்தன்.

சர்வதன் சிரித்தான். மூர்த்தன் “இப்போதும் இருக்கிறார், வடக்குக்கோட்டை காவல் பொறுப்பில். மேலாடையை அவர் இடத்தோளிலேயே போடுவது வழக்கம். வலத்தோளின் பெரிய வடு இளைய பாண்டவருடன் அவர் போர்புரிந்து ஈட்டியது என்பதை எவரிடமும் கூறாமலிருக்கமாட்டார். பதினாறாண்டுகளுக்குப்பின் இப்போது அவரது குலத்தின் பெருமையாகவே அது அமைந்துள்ளது” என்றான். “அவரை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று சர்வதன் சொன்னான். “போர்புரிந்து அவர் மேலாடையணியாமல் ஆக்கவேண்டும்.”

மதுராவின் அரண்மனை உயரமற்றதாக, இரு கைகளையும் நீட்டிய நண்டு வடிவில் அமைந்திருந்தது. அதன் முற்றத்தில் ஒழுங்கற்று பல்லக்குகளும் புரவிகள் அவிழ்த்திடப்பட்ட தேர்களும் அத்திரிகளும் மஞ்சல்களும் முட்டி நிறைந்திருந்தன. அதனூடாக அவர்களை அழைத்துச்சென்ற இளங்காவலன் “அரண்மனையின் அனைத்து அறைகளிலும் யாதவ குலத்தலைவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். முப்பொழுதும் அங்கு உணவும் குடியும் நடக்கிறது. நாற்களம் ஆடுவது எவருக்கும் தெரியவில்லை. தாயம்தான் ஆட்டம். எஞ்சிய பொழுதுகளில் கூடி நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் பேச்சை முடித்து அவர்களை விருந்துக்கு அனுப்பாவிடில் இங்கேயே மீண்டுமொரு குல உட்பூசல் தொடங்கிவிடும். நேற்றுகூட போஜர் குடித்தலைவர் சுதீரரை குங்குர குடித்தலைவர்களில் ஒருவரான சம்புகர் அறைந்துவிட்டார் என்றார்கள்” என்றான்.

“நேராக மற்போர் களத்திற்குச் சென்று வஞ்சம் தீர்த்துக்கொள்வதுதானே?” என்றான் சர்வதன். “அவர்கள் மற்போர் களத்திற்கு பழகியவர்கள் அல்ல. ஆகவே இருவரும் எழுந்து நின்று கைநீட்டி உரத்த குரலில் சொற்போரிட்டனர். ஒவ்வொருவருக்கும் எத்தனை பசுக்களும் காளைகளும் உள்ளன என்பதன் அடிப்படையில் அது நிகழ்ந்தது. இருவரிடமும் ஏராளமான கால்நடைகள் இருந்தன. என்ன இடர் என்றால் பசுக்களைச் சொல்லும்போது அவை நாளை இடப்போகும் குட்டிகளையும் சேர்த்து சொல்லிவிட்டார்கள்” என்றான் மூர்த்தன்.

சர்வதன் உரக்க நகைத்து “நன்று! யாதவர்களின் இயல்பே அதுதான். ஒன்று மூன்றென பெருகும் என்பதில் அவர்கள் உளஉறுதி கொண்டிருக்கிறார்கள். ஆகவே எல்லா ஒன்றுகளையும் மூன்றென எண்ணி கணக்குகளை இடுவார்கள்” என்றான். அரண்மனையின் வலப்பக்க நீட்சியை நோக்கி அவர்களை கொண்டுசென்ற இளங்காவலன் எதிரே வந்த முதிய காவலரிடம் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வரும் இளவரசர்கள் இவர்கள். இவர் இளைய பாண்டவர் பீமசேனரின் மைந்தர்’ என்றான்.

அவர் “கூறவே வேண்டியதில்லை, நீங்கள் பீமசேனரின் மைந்தர் சுதசோமர் அல்லது சர்வதர்” என்றார். “நான் சர்வதன்” என்றான் சர்வதன். “இவர் பிரதிவிந்தியர் அல்லது யௌதேயர்” என்றபின் “நீங்கள் சர்வதர் என்பதனால் இவர் யௌதேயராகத்தான் இருக்கவேண்டும்” என்றார். “ஆம்” என்று யௌதேயன் சொன்னான். “வருக இளவரசர்களே, யாதவர்கள் உங்கள் வருகையால் பெருமைகொள்கிறார்கள். சிற்றமைச்சர் சூக்தர் தங்களை ஆற்றுப்படுத்துவார்” என்று அவர் அவர்களை அழைத்துச் சென்றார்.

இடைநாழிகளினூடாக நடக்கையில் “என் பெயர் சுசக்தன். நான் பலமுறை மூத்த பாண்டவர் யுதிஷ்டிரரை பார்த்திருக்கிறேன். ஒருமுறை அவருக்கு காவலிருக்கையில் என்னிடம் யாதவப்பிரகாசிகை என்ற நூலில் ஒரு பகுதியைப்பற்றிய ஐயத்தை கேட்டார். அக்கணமே நான் மறுமொழி சொன்னதும் எழுந்து வந்து என் தோளைத்தட்டி யாதவபுரியில் ஒவ்வொருவரும் நூல் கற்றிருக்கிறீர்கள். இது அறிவுமுளைக்கும் நிலம் என அறிந்தேன் என்றார். யாதவப்பிரகாசிகையைப் பற்றி இந்திரப்பிரஸ்தத்தில் அறிஞர்களுக்குக்கூட தெரியாது என்று மகிழ்ந்தார்” என்றார்.

“நான் யாதவன் என்பதனால் அதை தெரிந்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றபின் சுசக்தர் புன்னகைத்து “அதைவிட இன்னுமொன்று உண்டு. அந்நூலை எழுதிய பர்வதர் எங்கள் ஊரை சேர்ந்தவர். இளவயதில் அவர் இல்லத்தில்தான் நாங்கள் சென்று விளையாடுவோம். அவர் அந்நூலை இயற்றிக்கொண்டிருக்கையில் பலமுறை ஏடுகளை நான் அடுக்கிவைத்ததும் உண்டு. அதை நான் மூத்த பாண்டவரிடம் சொல்லவில்லை. மதுராவைப்பற்றி அப்படி ஒரு நல்லெண்ணம் தவறுதலாகவேனும் ஒருவருக்கு உருவாகுமென்றால் நாம் ஏன் அதை தடுக்க வேண்டும்?” என்றார்.

“எவரிலும் நன்மையை மட்டுமே பார்க்கும் விழிகொண்டவர் எந்தை” என்றான் யௌதேயன். சிற்றமைச்சரின் அறைவாயிலை அடைந்த சுசக்தர் “நான் அறிவிக்கிறேன் தங்களை” என்றபின் உள்ளே சென்றார். பின் வெளியே வந்து “தங்களை அழைக்கிறார் அமைச்சர்” என்றார். யௌதேயன் இளையவனை நோக்கிவிட்டு உள்ளே சென்றான். ஒருகணம் தயங்கி பின் சர்வதனும் தொடர்ந்தான்.

சிற்றமைச்சர் சூக்தர் தன் பீடத்தில் அமர்ந்தவாறே “வருக, இளவரசர்களே!” என்றார். முகமன் என ஏதும் சொல்லவில்லை. யௌதேயன் “நாங்கள் மதுராபுரியின் அரசரையும் மூத்த யாதவரையும் சந்திக்கும்பொருட்டு வந்துள்ளோம்” என்றான். அவர் அவர்களின் விழிகளை சந்திக்கவில்லை. பீடத்தின் மேலிருந்த ஏடுகளை எடுத்து அடுக்கியபடி “தங்கள் வருகை முறைப்படி இங்கு அறிவிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் தங்களை சந்திக்க சித்தமாக இருக்கிறார்களா என்பதை இப்போது சொல்லமுடியாது. தங்களுக்கு நான் தங்குமிடமும் நீராட்டும் உணவும் ஒருக்குகிறேன். புலர்ந்த பின்னர் அரசருக்கும் மூத்த யாதவருக்கும் முறைப்படி செய்திகளை தெரிவிக்கிறேன். அவர்கள் விழைவார்கள் என்றால் நீங்கள் சந்திக்கலாம்” என்றார்.

“ஆம், அதுவே முறை. அது போதும்” என்றான் யௌதேயன். அவர் அடுக்கிய சுவடிகளை மீண்டும் அடுக்கியபடி மேலே விழிதூக்காமல் “முறைப்படி அறிவிக்கப்பட்டு அரசப்பணியென தாங்கள் இங்கு வரவில்லை. ஆகவே இங்கு வரும் அயலவருக்கான சிற்றறைகளையே நான் அளிக்கமுடியும். அரச குலத்தோருக்கான அறைகள் அனைத்துமே இப்போது பிறரால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. தாங்கள் அறிந்திருப்பீர்கள், யாதவ குடித்தலைவர்கள் அனைவரும் இங்குதான் உள்ளனர்” என்றார்.

“ஆம், அறிவேன்” என்று யௌதேயன் சொன்னான். “வருக! தங்கள் அறைகளை காட்டுகிறேன்” என்று சிற்றமைச்சர் எழுந்துகொண்டார். யௌதேயன் சர்வதனின் கையை அவர் அறியாமல் பற்றி சற்று அழுத்தி அவனை அடக்கிவிட்டு அவரை தொடர்ந்தான். சர்வதன் தன் பெரிய உடலை அசைத்து உடன் சென்றான். அவன் காலடிகள் மரத்தரையில் எடையுடன் விழுந்தன. அந்த ஓசைகேட்டு திரும்பி நோக்கிய அமைச்சர் அறியாமல் அவன் விழிகளை ஏறிட்டு நோக்கிவிட்டு திடுக்கிட்டு விலகிக்கொண்டார்.

தொடர்புடைய பதிவுகள்

அயினிப்புளிக்கறி கடிதம்

$
0
0

download (1)

 

அன்புள்ள ஜெயமோகன்,

 
அயினிப்புளிக்கறி சிறுகதை மிக எளிமையான கதையாகத் தோன்றினாலும் உள்ளே விரிந்துகொண்டே செல்கிறது.

அயினி மரத்தின் பழம் காயாக இருக்கும்போது புளிப்பாக அல்லது கடுப்பாக இருக்கிறது. பழமாக முதிரும்போது நல்ல இனிப்பாக மாறிவருகிறது. யோசித்துப்பார்த்தல் ஆசானின் வாழ்க்கையும் அதுபோலவே என்றுதான் தோன்றுகிறது. அவரின் இளமைக் காலம்கொந்தளிப்பாக இருக்கிறது. திமிரும் பிடிவாதமும் நிறைந்ததாக இருக்கிறது. அதனால் முதலாவது சம்சாரத்தை இழக்க நேருகின்றது. ஆனால், அவர் வாழ்க்கை முதிர்ந்து கனிந்து ஒரு கட்டத்தை எட்டும்போது கனிந்த அயினிப் பழம் போல் இளகிவருகிறார். சாதாரணமாகவிட்ட இடத்திலிருந்து தொடர்வது போல “நேற்று அயினிப்புளிக்கறி வச்சேன்.. செரியா வரேல்ல கேட்டியா..” என்று உறவைத் தொடர்கிறார். செம்புமூட்டு ஆச்சியும் அவருடன் இசைந்து செல்கிறார்.
உண்மையில் அவர்கள் இருவர் வாழ்க்கையும் அயினிக்காயின் படிநிலை வளர்ச்சி போலவே முதிர்ந்து செல்கிறது.

ஆசானுக்கு இளமையில் பீடி புகைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது இல்லை. இப்படியே ஆசானுக்குள் நிறையவேமாற்றம். எங்கோ ஒரு புள்ளியில் பழைய ஆசானாகத் தன்னை எண்ணும்போது பீடி புகைத்து அந்த இடத்தில் தன்னை நிறுத்திப்பார்கிறார். ஆனால், அவருக்குள் இருந்த பழைய கசப்புகள் இப்போது இல்லை. முதிர்ந்துவிட்டார். அது வாழ்வின் முதிர்ச்சிக்கால் கனிந்து வருவது. இப்போதும் கோவம் வரும்போது “வெட்டி கொடல எடுத்திருவேன்… நாறப்பயலே” என்று கொந்தளிக்கத்தான் செய்கிறார். ஆனால் உள்ளடக்குகளில் இருக்கும் அதன் பலவீனம் அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. அதனாலேயே விலகி தனியே செல்ல முடிவெடுக்கிறார்.

ருசியறிஞவனுக்கு ரெண்டு குணமிருக்கும்சின்ன ருசிகள அவன் கண்டுகிடுவான்ஒவ்வொண்ணிலயும் ஒவ்வொருருசியுண்டுண்ணு தெரிஞ்சிருப்பான்அதனால அவனுக்கு கடவுள்படைச்ச இந்த மண்ணிலே எல்லாமே ருசியாட்டு தெரியும்… ஏலேகோடிக்கணக்கா ருசியிருக்குலே இந்தப்பூமியிலே..”என்று ஆசான் சொல்லும் இந்த வரிகள்தான் கதையின் குவிமையமாகத்தோன்றுகின்றது. கோடிக்கணக்கான ருசியிருக்கிறது உலகில். அனைத்தையும் ஒரே பருவத்தில் அறிய முடியாதுதான். ஆனால் மெல்லமெல்ல அறிய முடியும். அது வாழ்க்கையின் முதிர்ச்சியால் தரிசிக்கும் ஒன்று. இங்கே ருசி என்பது ஒரு படிமமே.

இந்தக்கதை உள்ளே விடுவிக்க முடியாத சிலந்தி வலைபோல் விரிந்துகொண்டே செல்கிறது. அற்புதம் ஜெ.

அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மையநிலப்பயணம் கடிதங்கள்

$
0
0

mayil

 

ஜெ வணக்கம்

படேஸவர் ஆலய தொகுதி பற்றிய குறிப்பு படித்தவுடன் பெறும் வருத்தம் ஏறபட்டது.
பெரு நாட்டில் மாச்சூ பிச்சு (15ஆம் நூற்றாண்டு) நகரத்தை விட பல நூற்றாண்டுகள் புராணமான இடம் கவனிப்பற்று இருக்கிறது.
ஃப்ரண்ட் லைன் பத்திரிக்கையில், திரு முகம்மது அவர்களின் பேட்டி (http://www.frontline.in/static/html/fl2702/stories/20100129270212200.htm) ஒன்று உள்ளது. நில நடுக்கத்தில் பெரும்பாலும் அனைத்து கோயில்களும் தகர்ந்து விட்டனவாம். அந்த இடமே கற்களின் குவியலாக இருந்ததாம். சுல்தான்களால் அழிக்க பட வில்லை என்கிறார்.
ஆச்சரியமான தகவல், இப்பொழுது இருக்கும் கட்டமைப்பு தொல்லியல் துறையினால் ஒவ்வொரு கற்களாக கொண்டு மீண்டும் கட்டி எழுப்ப பட்டது என்கிறார். அவர் மனஸர ஷில்ப சாஸத்ரா (4 நூற்றாண்டு), மாயமதா வாஸ்து சாஸ்த்ரா (7 நூற்றாண்டு)  என்ற சமஸ்கிருத நூல்களில் தேர்ச்சி பெற்றவராம். அந்த நூல்களின் அடிப்படையில் மீண்டும் இந்த கோயில்களை் கட்டினாராம். கட்டுவது என்றால் கற் குவியலில் இருந்து ஒவ்வொரு கற்களாக பொறுக்கி திரும்பவும் அடுக்கவது.
அந்த பேட்டியிலேயே முகம்மதுவின் முயற்சிக்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்தது என்று புகைபடம் உள்ளது.  அடையாளமே தெரியவில்லை.
வருத்தமாக இருந்தாலும், முகம்மது போன்ற கையளவு நபர்கள் இந்த மக்கள் கடலில் இருந்து வந்து கொண்டிருந்தாலே பல நல்ல மாற்றங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அன்புடன்
சதீஷ் கணேசன்

k

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.
அந்தக்கால கொடூர கொள்ளையர்களிடமிருந்து கூட அரும்பாடுபட்டு ஆலயங்களை மீட்டு பாதுகாக்க ‘கே.கே.முகம்மது’ அவர்களால் முடிந்தது.ஆனால் இந்த ‘கற்(தற்)கால கொள்ளையர்களிடமிருந்து’ மீளமுடியவில்லை!.இந்தப் பகுதியின் பலப்பல பாழ்படுத்தப்பட்ட  ஆலயங்களை மீட்டு பாதுகாத்தவர்
கே.கே.முகம்மது’என்பதில் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும்  காலத்தின் ‘நரன்முகையும்’ அப்பட்டமாகத் தெரிகிறது!.
அன்புடன்,
அ .சேஷகிரி.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நாராயண குரு எனும் இயக்கம்-2

$
0
0

natarajaguru

தொடர்ச்சி

நடராஜகுரு

 

நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது.

நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது.

நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது.

ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல ஆரம்பித்த காலகட்டத்தில் நடராஜ குரு செயல்பட்டார். ஏராளமான கல்வி, சமூக நிறுவனங்களைக் கொண்ட பெரும் அமைப்பாக அது ஆனபோது நிர்வாகச் சீர்கேடுகள் உருவாயின. அதற்குள் கேரள சமூகத்தில் பணமும் செல்வாக்கும் மிக்க சமூகமாக கிவிட்ட ஈழவர்கள் நாராயணகுருவின் அமைப்பை அரசியல் இயக்கமாக்கி அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயன்றனர். ஈழவ சமூகத்தில் பெரும் செல்வந்தர்கள் பலர் உருவாகி வந்தபோது மாற்றுச் சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கும் முதலாளித்துவ அணுகுமுறையும் சிலரிடம் உருவாயிற்று. மூன்றாவதாக குறிப்பிடவேண்டியது, சமூகப்படி நிலைகளில் மிக வேகமாக ஏறிய ஈழவர்களில் ஒருச்சாரார் உயர்சாதி மனநிலைகளை அடைந்து அவற்றை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர் என்பது.

நாராயணகுரு மெல்ல ஈழவ சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட ஒரு சமூகத்தலைவராக பொதுவாக அறியப்படலானார். ஈழவ சமூகமும் அப்படி அவரை அடையாளப்படுத்தி சொந்தம் கொண்டாட ஆர்வம் காட்டியது. நாராயணகுருவின் தத்துவ தரிசனங்கள் பொதுவாக மறக்கப்பட்டன. அவை நுட்பமான மொழியில் தத்துவ நூல்களாக அமைந்திருந்தன. ஆகவே அனைத்து மக்களுக்கும் சென்று சேரவில்லை.

இந்திய தத்துவ விவாதத்தளத்தில் அவற்றை முன்வைத்து பேச எஸ்.என்.டி.பி ஆர்வம் காட்டவும் இல்லை. இந்நிலையில்தான் நடராஜ குரு நாராயணகுருவின் தத்துவார்த்த தளத்தை ஆராயவும் இந்திய அளவிலும் உலக அளவிலும் எடுத்துச் செல்லவும் நாராயணகுருகுலம் என்ற அமைப்பை உருவாக்கி தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். அவரது உழைப்பின் விளைவாகவே நாராயணகுரு சிந்தனைத் தளத்தில் நாம் இன்று காணும் முக்கியத்துவத்தை அடைந்தார்.

 எஸ்.என்.டி.பி அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்புவின் சிறிய மகன் டாக்டர் நடராஜன். பிற்காலத்தில் அவர் நடராஜ குரு என அறியப்படலானார். 1895ல் பிறந்தார். அவரை தன் பணிக்கு அளிக்கும்படி நாராயண குருவே கோரியதாக கூறப்படுகிறது. செல்வந்த குடும்பத்தில் பிறந்த நடராஜ குரு நிலவியலில் பட்ட மேற்படிப்பினை முடித்தவர். மேற்கத்திய தத்துவம் கற்க ஃப்ரான்ஸ் போகும்படி அவரை நாராயணகுரு கேட்டுக் கொண்டார். சார்போன் பல்கலையில் உலகப்புகழ் பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக அவர் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார். கல்வியியல் குறித்த அவரது ஆய்வு யுனெஸ்கோ அமைப்பினால் உலக கல்வி முன்வரைவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1930-ல் ஜெனிவா தேசிய கல்லூரியில் உயர்பெளதிக ஆசிரியராக ஐந்து வருடம் பணியாற்றினார்.  [International Fellowship School in Geneva, Switzerland] ஊர் திரும்பிய குரு நாராயணகுருவின் சீடராக இருந்து கீழைத் தத்துவத்தை கற்றார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பலவும் நடராஜ குருவுக்கு கற்பிக்கும் பொருட்டு கூறப்பட்டு நடராஜ குருவால் எழுதியெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மூன்று வருடம் சென்னையில் அத்வைத ஆசிரமம் எனும் அமைப்பின் கீழ் தலித்துக்கள் மத்தியில் பணியாற்றினார். பின்பு பிச்சையேற்கும் வாழ்க்கை மேற்கொண்டு பாரதம் முழுக்க ஆறுவருடம் அலைந்து திரிந்தார். நாராயணகுரு ஸ்தாபித்த வற்கலை உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.  எஸ்.என்.டி.பி அமைப்பு ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து கடுமையாக குரல்கொடுத்து அவ்வமைப்பை விட்டு முழுமையாக வெளியேறினார்.

அதன் பிறகு பல வருடங்கள் பாரதம் முழுக்க அலைந்து திரிந்தார். அமைப்புகளில் நம்பிக்கை இருக்கவில்லை. தனியாக வாழ்வதற்காக 1923ல்  ஊட்டி ஃபெர்ன் ஹில் பகுதியில் ஒரு தேயிலை தொழிற்சாலை இருந்த பகுதியை தானமாக பெற்று அதில் தன் கையாலேயே மண்ணாலும் தகரத்தாலும் கட்டப்பட்ட குடிசையில் நாராயணகுருகுலத்தைத் துவங்கினார். நாராயணகுருவின் மரணம் வரை அங்கு தன்னந்தனிமையிலேயே படித்தும் தியானம் செய்தும் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த பகுதி பிறருக்கு தெரிந்திருக்கவில்லை.

1928ல் நாராயணகுரு சமாதியான போது அவரது பிரதானசீடர் குமாரனாசான் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார், சகோதரன் அய்யப்பன், டி.கெ.மாதவன் போன்ற பலர் எஸ்.என்.டி.பி அமைப்பை விட்டு விலகிவிட்டிருந்தார்கள். அவ்வமைப்பு அன்று ஈழவ சாதியினரான ஓடு, கயிறு தொழில் முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு சாதி அமைப்பாக மாற்றப்பட்டது. புலையர்கள் வெளியேற்றப்பட்டனர். சபா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது. ஆகவே நாராயணகுருவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவை என உணர்ந்த நடராஜ குரு தீவிரமற்ற நடைமுறை விதிகளுடன் கூடிய நாராயணகுருகுலம் எனும் அமைப்பை நிறுவினார். அதன் தலைமையகமும் வற்கலாவில்தான் அமைந்திருந்தது. சார்போனில் நடராஜ குருவின் சக மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் அவரது முக்கிய மாணவரானதும் நடவடிக்கைகள் விரிவடைந்தன. நடராஜ குரு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். நடராஜ குருவே நாராயணகுருவின் செய்தியை உலகம் முழுக்கக் கொண்டு சென்றவர்.

நடராஜ குரு ஆங்கிலத்திலும் குறைவாக ஃபிரெஞ்சிலும் மட்டும்தான் எழுதினார். அவருக்கு மலையாளம் ஆழமாகத் தெரிந்திருக்கவில்லை. The world of Guru, One Hundred Verses of the Self Instruction, Autobiography of an absolutist, Wisdom, Man Woman Dialectics முதலிய இருபது நூல்கள் அவரால் எழுதப்பட்டுள்ளன. நாராயணகுரு முன்வைத்த தூய வேதாந்தத்தை மேற்கத்திய தத்துவ மொழியில் விளக்கியவர் நடராஜகுரு. நடராஜ குருவின் பங்களிப்பை இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று நாராயணகுருவின் சிந்தனைகளை நவீன மேலைத்தத்துவ தர்க்கமுறைகளைப் பயன்படுத்தி விளக்கியதும் நாராயணகுருவின் நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும். இரண்டு நாராயணகுரு முன்வைத்த அத்வைத நோக்கை தூய முதல்முழுமைவாதமாக [Absolutism] வளர்த்தெடுத்தமை. இதற்காக நடராஜ குரு ஐரோப்பா முழுக்க பலமுறை பயணம் செய்தார். பற்பல நாடுகளில் நாராயண குருகுலத்தின் கிளைகளை அமைத்தார். அவரது மாணவர்களில் பிற்பாடு இந்திய சமூக ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமானவர்களாக கருதப்பட்ட பலர் உள்ளனர். 1973-ல் மரணமடைந்தார். அவரது சமாதி வற்கலாவில் உள்ளது.

நடராஜ குருவின் பங்களிப்பை விரிவான இந்திய தத்துவ விவாதப்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளவேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து மெய்ஞான மரபானது பற்பல அறிஞர்களால் மீட்டெடுக்கப்பட்டதன் மூலம் இந்து மறுமலர்ச்சி ஒன்று உருவானது என நாம் அறிவோம். ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், ராமகிருஷ்ண மடம், பிரம்மஞான சபை, அரவிந்த ஆசிரமம் போன்றவை இதன் விளைவாக உருவான அமைப்புகள். இவை எல்லாமே மதசீர்திருத்த, சமூக சீர்திருத்த நோக்கம் கொண்ட அமைப்புகள். இவற்றின் விளைவாகவே மெல்ல இந்திய தேசிய மறுமலர்ச்சி உருவாயிற்று.

இந்தியா முழுக்கப் பரவிக்கிடந்த விரிவான, உள்சிக்கல்கள் மிகுந்த ஞானமரபில் இருந்து முக்கியமான சில மையக் கூறுகளை அடையாளம் கண்டு மீட்டு, அவற்றை அடிப்படை ஓட்டமாக வைத்துக்கொண்டு, பிறவற்றை அம்மையத்தில் தொடுத்து இந்துமதத்தை மேலை மதங்களைப் போன்ற ஓரு நவீன அமைப்பாக ஆக்கிவிடுவதற்கான யத்தனம் இவற்றில் பொதுவாக காணப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் அன்றைய இந்திய சமூகத்தில் இருந்த ஒற்றுமையின்மையே. பொதுவான பண்பாட்டு அமைப்புகளின் அடிப்படையில் வலிமையான ஒரு சமூகமாக இந்தியாவை முன்வைக்கும் நோக்கம் இவற்றுக்கு இருந்தது.

ஆகவே இவ்வியக்கங்கள் பொதுவாக இந்து ஞான மரபின் இரு மையங்களை முக்கியப்படுத்தின. ஆரியசமாஜம், அரவிந்த சிரமம் போன்றவை வேதஞானத்தை அடிப்படையாகக் கொண்டன. பிரம்மசமாஜம், ராமகிருஷ்ண மடம் போன்றவை வேதாந்த மரபை அடிப்படையாகக் கொண்டன. இம்மையங்களில் வந்து இணையக்கூடியவையாக பிற இந்து ஞானக்கூறுகளை அவை உருவகம் செய்தன. சிறந்த உதாரணம் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது இந்து தத்துவ ஞானம் [7] என்ற உலகப்புகழ்பெற்ற நூல் இந்து ஞானமரபை ஆன்மீக மையம் கொண்டதாக உருவகித்து பிற தரிசனங்களையெல்லாம் அதில் கொண்டு சென்று சேர்க்கிறது. டாக்டர் ராதாகிருஷ்ணனில் மையம்கொண்ட இப்போக்கே இந்திய சிந்தனை அரங்கில் பொதுவாக இன்றுவரை மேலோங்கியுள்ளது. ‘நம் சிந்தனைமரபு ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது’ என்ற வரியை ஏறத்தாழ எல்லா ஆசிரியர்களிடமும் சாதாரணமாகக் காண முடியும்.

இத்தகைய ஒற்றைப்படை நோக்கை நடராஜ குரு ஏற்கவில்லை. சிந்தனையின் பலதள முரணியக்கம் குறித்து அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. பல்வேறு சிந்தனைப்போக்குகள் மோதி முயங்கி முன்செல்லும் ஒரு பேரொழுக்காக இந்திய ஞான மரபை அவர் உருவகித்தார். இக்காரணத்தால் அவர் சமகாலத்தைய இந்துஞானமரபுச் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்களிடம் மோத நேர்ந்தது. நடராஜ குரு இந்திய சிந்தனைமரபை தத்துவ விவாதப் பரப்பாகக் காண முயல்கிறார். மீபொருண்மை [Metaphysics] மரபை அத்தத்துவத்தின் ஒரு வெளிப்பாடாகக் கொள்கிறார். இந்துஞான மரபை ஆன்மீகமான உண்மைகள் அடங்கிய பாரம்பரியச் செல்வமாக காணும் நோக்கையும் மத மீட்பு நோக்கையும் அவர் நிராகரிக்கிறார்.

நடராஜ குருவின் மாணவரான நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் வரும் ஒரு நிகழ்ச்சி உதாரணமாகச் சுட்டத்தக்கது. இதை எனக்களித்த பேட்டியிலும் நித்யா சொல்கிறார். [8 ] கொல்லம் கல்லூரியில் தத்துவ ஆசிரியராக இருந்த நித்ய சைதன்ய யதி அக்கல்லூரிக்கு வருகை தந்த நடராஜகுருவுடன் காரில் ஏறும்போது அக்குளில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பகவத்கீதி உரைநூலை வைத்திருக்கிறார். அதை வாங்கி தலைப்பைப் பார்த்த நடராஜகுரு நூலை காரிலிருந்து தூக்கி வீசிவிட்டார். காரை நிறுத்தச்சொன்ன நித்யா இறங்கி ஓடி நூலை எடுத்துக் கொண்டு நடராஜ குருவிடம் சண்டை போடுகிறார். நடராஜ குரு அதன் முதல்வரியைப் படிக்கச் சொல்கிறார். அதில் பகவத் கீதை இந்துக்களின் முக்கியமான மதநூல் என்று சொல்லப்பட்டுள்ளது. ‘ ‘முத்தத்துவம் [பிரஸ்தானத்ரயம் என்றால் என்னென்ன?’ என்று நடராஜகுரு கேட்க ‘உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம்’ என்று நித்யா பதில் சொல்கிறார்.

”நீயே சொன்னாய் இவை தத்துவ நூல்கள் என. பல ஆயிரம் வருடங்களாக அவை தத்துவ நூல்களாகவே பயிலப்பட்டன. எப்போது யார் அவற்றை மதநூல்களாக ஆக்கினார்கள்? எந்த தைரியத்தில் இவர் இப்படி எழுதுகிறார்? தத்துவநூல் ஏற்றும் மறுத்தும் விளக்கியும் விவாதிக்கப்படவேண்டியது. ஆராயப்படவேண்டியது. மதநூல் நம்பிக்கையின் அடிப்படையில் நிலைநிற்பது, ஆராய்ச்சிக்கு உரியதல்ல. வேதங்கள் மதநூல்கள். பகவத் கீதையை மதநூலாக்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட விஷயம் கட்டியெழுப்பபடுகிறது. அது ஆபத்தனாது” என்கிறார் நடராஜ குரு. ”எனக்கு நூல்களை மதிக்கத் தெரியாமல் இல்லை. ஆனால் உள்நோக்கம் கொண்ட நூல்கள் மிக ஆபத்தானவை ‘ ‘ என்கிறார். குருவின் இக்கூற்றில் உள்ள கட்டளையை ஏற்று தான் தன் அறிவியக்கத்தை அமைத்துக் கொண்டதாக நித்யா எழுதுகிறார்.

நடராஜகுரு பகவத்கீதைக்கு எழுதிய உரை மிக முக்கியமான தத்துவநூலாக முக்கிய ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பகவத்கீதையை தத்துவக் கோணத்தில் விளக்கி எழுதப்பட்ட பெரும்பாலும் எல்லா நூல்களிலும் இந்நூலின் பாதிப்பு வெளிப்படையாக தெரிகிறது என்று நித்ய சைதன்ய யதி எழுதியிருக்கிறார். தத்துவ தளத்தில் நடராஜகுரு செய்தது என்ன என்ற வினாவுக்கு மூன்று தளங்களிலாக பதில் சொல்லலாம்.

1.      இந்திய ஞானமரபை ஒற்றைப்படையாகவும் மதம் சார்ந்தும் விளக்க முயன்ற முயற்சிகளை எதிர்த்து நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட உரையாடல் தன்மை கொண்ட தத்துவார்த்த அணுகுமுறையை வலியுறுத்தினார்.

2.      நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட செயலூக்கம் கொண்ட புதிய அத்வைத நோக்கை மேலைநாட்டு கருத்து முதல்வாத நோக்குகளுடன் இணைத்து விரிவாக விளக்கினார்.

3.      ஹெகல், காண்ட், குரோச்சே, ஹென்றிபெர்க்சன் ஆகிய மேல்நாட்டு சிந்தனையாளர்களின் கருத்துக்களுடன் நாராயண குருவின் சிந்தனைகளை இணைத்து உரையாடியதன் வழியாக தனக்குரிய முதல்முழுமைவாத தத்துவ நோக்கு ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் வலுவான ஒரு கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார். அனேகமாக இந்திய சிந்தனையில் அரவிந்தருக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட முக்கியமான சிந்தனைப் பாய்ச்சல் இதுவே. .

 

nitya

நித்ய சைதன்ய யதி

 

பந்தளம் பணிக்கர்கள் என புகழ் பெற்ற நிலப்பிரபுக்களின் குடும்பத்தில் 1923ல் பிறந்தவர் நித்யசைதன்ய யதி. கேரளத்தில் உள்ள ஒருசில ஈழவ நிலப்பிரபுக் குடும்பங்களில் ஒன்று அது. அவரது தந்தை பந்தளம் ராகவப்பணிக்கர் அக்காலத்தைய முக்கியமான கவிஞர். தாய்வழி தாத்தா பெரிய பாலிமொழி அறிஞர். பெளத்த மதம் சார்ந்த பல செப்பேடுகள் அவரது குடும்பத்திலிருந்து கிடைத்துள்ளன. முதல் பெயர் ஜெயச்சந்திரன். பள்ளி படிப்பை முடித்துவிட்டு நாடோடியாக அலைந்தார். பிறகு மீண்டுவந்து கொல்லம் கல்லூரியில் தத்துவம் எம்.ஏ. படித்து அங்கேயே ஆசிரியராக வேலைபார்த்தார். அப்போதுதான் நடராஜகுருவின் தொடர்பு ஏற்பட்டது.

துறவு பூண்ட குரு பிச்சை எடுத்தபடி பாரதம் முழுக்க அலைந்து திரிந்தார். காந்தியின் சபர்மதி சிரமத்திலும் ரமணரின் ஆசிரமத்திலும் தங்கி அவர்களை நெருங்கி அறிந்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப்பேராசிரியராக பணியாற்றினார். 1952ல் டாக்டர் ராதாகிருஷ்ணனுடனான ஒரு மோதலுக்கு பிறகு அப்பதவியை துறந்தார். நடராஜ குருவின் நேரடி சீடரானது அக்காலத்தில்தான். குருவும் சீடரும் கடும் வறுமையில் தனிமையில் பல வருடங்களை ஊட்டியில் செலவிட்டார்கள். 1956ல் நடராஜ குரு உலகப்பயணத்துக்கு போனபோது நித்ய சைதன்ய யதி பம்பாய் சென்று விழியிழந்தோர் உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவின் ஆணைப்படி மாற்று உளவியல் ஆய்வு மையம் துவக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக தலைவராக இருந்தார்.

1969ல் நித்ய சைதன்ய யதி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாலுமியால் அழைத்து செல்லப்பட்டு திட்டமிடப்படாத ஓர் உலகப் பயணத்தை துவங்கினார். அப்பயணத்தில் அமெரிக்கா வந்து அங்கு போர்ட்லண்ட், சிகாகோ உள்ளிட்ட பல பல்கலைகழகங்களில் கீழைத்தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராக பணியாற்றினார். இங்கிலாந்திலும் ஃப்ரான்ஸிலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். ரஸ்ஸல், கார்ல் பாப்பர், போன்றவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார். 1984ல் பாரதம் திரும்பி ஊட்டி ஃபெர்ன் ஹில் குருகுலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். 1999-ல் மரணமடைந்தார். அவரது சமாதி ஊட்டியிலேயே உள்ளது.

நித்ய சைதன்ய யதி மலையாளத்தின் மிகப் புகழ்பெற்ற, பரபரப்பாக விற்கப்படும் நூலாசிரியர். கேரளம் உலகை ஈ.எம்.எஸ் மற்றும் யதி கண்கள் வழியாகவே காண்கிறது என்று ஒருமுறை புகழ் பெற்றநூலாசிரியயையான கமலாதாஸ் குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் எண்பதும் மலையாளத்தில் கிட்டத்தட்ட நூற்று இருபது நூல்களை எழுதியுள்ளார். எண்ணற்ற எளிய அறிமுக நூல்களை எழுதி அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தை கேரளத்தில் வேரூன்றசெய்த பெரும் ஆசிரியர் அவர். அவரது நூல்களில் முக்கியமானவை நாராயணகுருவின் நூல்களுக்கு நவீன அறிவியல் தத்துவ நோக்கில் அவர் எழுதிய உரைகளாகும்.

தமிழில் அவரது விரிவான பேட்டி காலச்சுவடு சிற்றிதழில் வெளிவந்துள்ளது. சொல் புதிது சிற்றிதழ் அவரது கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ‘ஈசோவாஸ்ய உபநிடதம் ‘ என்ற நூல் வெளிவந்துள்ளது. தமிழினி வெளியீடாக மேலும் இருநூல்கள் வரவுள்ளன.

நடராஜகுருவின் பங்களிப்பிலிருந்து சற்று மாறுபட்டது நித்ய சைதன்ய யதியின் பங்களிப்பு. இப்படிச் சொல்லலாம். நாராயணகுருவின் சிந்தனை வெளியுலகம் நோக்கி நடராஜகுரு வழியாகச் சென்றது. அங்கே அது பலவிதங்களில் வளர்ந்த பிறகு நித்ய சைதன்ய யதி வழியாக மீண்டும் கேரளத்துகே திரும்பி வந்தது. நாராயணகுருவும் நடராஜகுருவும் உருவாக்கிய புதிய அத்வைத நோக்கையும் முதல் முழுமைவாத நோக்கையும் நவீன இலக்கியக் கோட்பாடுகளிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் செயல்படுத்திக் காட்டியவர் என்று நித்ய சைதன்ய யதியைச் சொல்லலாம். முதல் இரு ஆசிரியர்களிடம் ஒப்பிட்டால் நித்ய சைதன்ய யதி கலை இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கவிதை, ஓவியம், இசை மூன்றிலும் அவரது ஆர்வமும் பயிற்சியும் விரிவானது. ஆகவே அவரது எழுத்துக்களில் தத்துவ நோக்கைவிட கலைநோக்கு மேலெழுந்து காணப்பட்டது.

இந்தியச்சூழலில் இயல்பாக ஒரு எதிரெதிர் நிலைகள் உருவாகி வலுவாக இருப்பதை நாம் காணலாம். கலை இலக்கிய தளங்களில் இது மேலும் துல்லியமாக வெளிப்படுகிறது. பொதுவாக உள்ள நிலை மேலைச் சிந்தனைகளையும் அழகியல் நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல். இதற்கு எதிராக உள்ளது அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும் நம்புதல். இரு எல்லைகள், இருவகைத் தேக்க நிலைகள் இவை. தமிழிலும் இவற்றை நாம் தெளிவாகக் காணலாம். அறுபது எழுபதுகளில் கேரள சிந்தனைத் தளத்தில் இந்த இருமுனைகளும் மிக உச்சம் கொண்டு காணப்பட்டன. மார்க்ஸியமும், பிறகு புது மார்க்ஸியமும் [ஐரோப்பிய மார்க்ஸியம்], அதன் பின் இருத்தலியமும் மீள மீள பேசப்பட்டு எழுதப்பட்டு மிதமிஞ்சிப்போய் சட்டென்று ஒரு சலிப்பு உருவாகி பெருந்தேக்கம் ஏற்பட்டது.

அதைப்போல மறுபக்கம் மரபார்ந்த சிந்தனைத்தளத்தில் குட்டிகிருஷ்ண மாரார் போன்ற பெரும் பண்டிதர்கள் மறைந்து அவர்கள் உருவாக்கிய அலைகளும் ஓய்ந்து தொடர்ந்து ஒரு தேக்கம் உருவாகியது. இத்தேக்கத்தை இந்து தேசிய அரசியல் பயன்படுத்திக் கொண்டு வேரூன்ற ஆரம்பித்தது. மரபார்ந்த ஞானத்தை பயின்று ஆராய்ந்த குட்டிகிருஷ்ண மாராரின் இடத்தில் மரபை வழிபடக்கூடிய, மரபின் படிமங்களை அரசியல் நோக்குடன் தொகுப்பதையே நோக்கமாகக் கொண்ட பி.பரமேஸ்வரன் போன்றவர்கள் உருவானார்கள். இந்துஞானமரபு என்பது இந்துமதவாதமாக மாறியது. வகுப்புவாத வெறுப்பும் குடியேறியது. இத்தனைக்கும் கேரள வரலாற்றில் ஆகப்பெரிய இந்துஞானமரபுப் பேரறிஞர்கள் வெட்டம் மாணி [புராணக் கலைக்களஞ்சியம்] ராவ்பகதூர் செறியான் [இந்து தர்ம சர்வஸ்வம்] போன்ற சிரியன் கிறித்தவர்கள் ஆவர்.

இவ்விரு தேக்கநிலைகளுக்கும் எதிரான அலையாக எழுந்ததே நித்யா உருவாக்கிய அறிவியக்கம் எனலாம். மரபின் மீதான ஆழமான ஞானம் அதை மேலைநாட்டு நவீனச்சிந்தனைகள் மூலம் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யும் திறந்த மனம், அறிவியல் நோக்கு, எந்த தத்துவக் கோட்பாட்டு விவாதத்தையும் கவித்துவம் மூலமே நிகழ்த்தும் மொழிநடை, மூர்க்கமான நம்பிக்கைக்குப் பதிலாக தன்னைத் தானே திருப்பித் திருப்பிப் போட்டு எள்ளி நகையாடிச் செல்லும் ஆன்மீகமான அங்கதம் ஆகியவையே நித்ய சைதன்ய யதியின் சிறப்பியல்புகள். நித்யசைதன்ய யதி நாராயணகுருவின் தரிசனமாலாவுக்கு எழுதிய விரிவான உரை அவரது அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த உதாரணம். மேலை உளவியல் கோட்பாடுகளையும் இந்திய யோக மரபில் உள்ள உளவியல் அறிதல்களையும் இணைத்துக் கொண்டு தர்சனமாலாவை புரிந்துகொள்ள முயலும் நூல் அது.

பகவத்கீதை, பிரகதாரண்யக உபநிடதம், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றுக்கு நித்ய சைதன்ய யதி எழுதிய பெரிய ஆழமான உரைகள் மரபை வழிபடும் நோக்கு சற்றும் இல்லாத சமநிலை கொண்ட ஆய்வுகள். அரியபேருண்மைகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன அவற்றைக் கற்றுத் தேர்வது மட்டுமே நம் கடமை என்ற நோக்கு ஒருபோதும் அவரிடம் இல்லை. அவர் அவற்றை பரிசீலனையே செய்கிறார். அவற்றை ஒருசில அர்த்த தளங்கள் நோக்கி குறுக்கும் போக்குகளை நிராகரிக்கிறார். இந்து மெய்ஞானத்தை உயர்குடிகளுக்குள் நிறுத்திக் கொள்ள செய்யப்பட்ட விரிவான முயற்சியையும், அதை மதக் கோட்பாடுகளாக சுருக்க நிகழும் யத்தனங்களையும் பெரும் அறிவுச்சதியுடன் எதிர்கொண்டு முறியடிக்கும் ஆக்கங்கள் அவை. இந்திய மெய்ஞானம் சார்ந்து நிகழ்ந்துவரும் விவாதங்களை கவனிப்பவர்கள் அவற்றின் பெரும்பாதிப்பை காணலாம்.

நித்ய சைதன்ய யதியின் அணுகுமுறை சமநிலை கொண்ட நடுப்பாதை. கண்மூடித்தனமான மேலைச்சார்பு, மரபு எதிர்ப்பு ஆகியவற்றுக்கு அவர் எந்த அளவுக்கு எதிரானவரோ அதேயளவுக்கு மரபு வழிபாடு, மதவாத அரசியல் ஆகியவற்றுக்கும் எதிரானவர். ஆனால் நாராயணகுருவின் மரபை ஒட்டியவர் என்பதால் ஒருபோதும் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்லி விவாதங்களில் ஈடுபடும் இயல்பு அவரிடம் இல்லை-விதிவிலக்காக இந்திய அரசியலில் மதவாதம் தலையெடுத்தபோது மட்டும் ஒரு சிறு பிரசுரம் அளவுக்கு எதிராக எழுதியுள்ளார். ஆக்கபூர்வமான படைப்புகளை தொடர்ந்து முன்வைப்பதே அவரது வழிமுறையாகும். நூறு வருடம் முன்பு மனித சமத்துவம் மற்றும் முழுமையான ஆன்மிக விடுதலையின் குரலாக நாராயணகுருவின் தத்துவம் எழுந்தது. பின்பு உலகசிந்தனையை நோக்கி முழுமைவாதத்தை முன்வைப்பதாக அது நடராஜ குருவால் விரிவாக்கம் செய்யப்பட்டது. நித்ய சைதன்ய யதியின் காலத்தில் இந்திய மரபைச் சார்ந்து உலகசிந்தனையை எதிர்கொள்வதற்கான காய்தல் உவத்தல் அற்ற நோக்குநிலையாக அது வளர்ச்சி பெற்றது.

இந்திய சிந்தனையில் இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று தலைமுறை வளர்ச்சி பெற்ற சிந்தனைப்பள்ளி இதுவே. பலகோணங்களில் பல தளங்களில் செயல்படும் முக்கியமான பலர் இவ்வியக்கத்தின் மூலம் உருவாகி வந்துள்லனர். சமீபகாலமாக இயற்கைமருத்துவம் மூலிகை வேளாண்மை சார்ந்து நித்ய சைதன்ய யதியின் மாணவர்கள் பலர் முக்கியமான ஆய்வுகளைச் செய்துள்ளனர். நடராஜகுருவின் மாணவர்களான முனிநாராயணபிரசாத், சுவாமி வினய சைதன்யா இருவரும் இன்று இந்திய அளவில் கவனிக்கப்படுபவர்கள்.

சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] மாற்று மருத்துவத்தளத்தில் செயல்பட்டு வருகிறார். இவ்வியக்கத்தின் அறிவார்ந்த வல்லமை நூற்றாண்டுக்குப் பிறகும் வளர்ந்துதான் வருகிறது.

நாராயணகுருவின் தத்துவம்

=======================

தமிழ்ச் சூழலில் நாராயணகுருவின் செய்தியை புரிந்துகொள்ள சிரமங்கள் உள்ளன. இங்கே ஓர் எதிர்மறையான சிந்தனைப்போக்கு மிக வலுவாக வேரூன்றியுள்ளது. மரபையே நிராகரிக்கும் போக்காக அது மாறியுள்ளது. மேலும் மிக எளிமைப்படுத்தபட்ட ஒரு இரட்டை எதிர்மை [binary opposition] கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. ஆரிய X திராவிட வாதம், உயர் சாதி X கீழ்சாதி வாதம், ஆதிக்கப்போக்கு X அடிமைப்படுத்தப்பட்ட போக்கு என்றெல்லாம் அப்பிரிவினை தொடர்ந்து செய்யப்படுகிறது. அந்த இரட்டை எதிர்மைத்தன்மை தமிழ்ப் பண்பாட்டாய்வில் வெள்ளையர்களால் [உதாரணமாக கால்டுவெல்] அக்கால மேற்கத்திய சிந்தனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அது அன்றைய மேற்கத்திய சிந்தனையின் சாரமாக காணப்பட்டமையால் அவ்வாறு உருவாக்கப்பட்டமை இயல்பானதேயாகும். அப்போக்கு மார்க்ஸியத்துடனும் ஒத்துப்போனதனால் அது வலுவாக நம் சிந்தனையில் வேரூன்றி அதுவே ஒரே சிந்தனைமுறை என கருதப்படுகிறது. நாராயணகுருவை புரிந்துகொள்ள மிகுந்த தடையாக அமைவது அதுவே. உண்மையில் நாராயண குருவின் பிரதான சீடர்கள் சிலர் கூட அவ்வடிப்படையில் நாராயணகுருவை மறுத்தனர். முக்கியமாக சகோதரன் அய்யப்பன்.

நாராயணகுருவின் சிந்தனைகளில் முற்றாக இல்லாதது இரட்டைஎதிர்மைப் பார்வை என்பதைக் காணலாம். அவர் எதிர்நிலை, எதிர்ப்புச் செயல்பாடு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவர். அமைதியான ஆக்கச் செயல்பாடுகளை மட்டுமே நம்பியவர். அவரது நெருங்கிய நண்பரும் ஆன்மீகத் துணைவருமான சட்டம்பி ஸ்வாமிகளுடன் ஒப்பிட்டு இதைப் பார்க்கலாம். சட்டம்பி ஸ்வாமிகள் நாயர் சாதியைச் சேர்ந்தவர். ஆனால் அவரது அணுகுமுறை சாதிமுறை, மதமூடநம்பிக்கைகள், பிராமணத்திரிபுகள் மற்றும் மோசடித்தனமான மதமாற்ற முயற்சிகள் ஆகியவற்றை கடுமையாகத் தாக்கிப் புடைப்பதாக இருந்தது. கேரளச்சூழலில் பிராமணர்Xபிராமணரல்லாதார் என்ற இரட்டை எதிர்மையை உருவாக்கியவர் அவரே. ஆனால் நாராயணகுரு அந்த தீவிரப் போக்குகள் எதையுமே கைக்கொள்ளவில்லை. அவரது அணுகுமுறை முற்றிலும் நேர்நிலை கொண்டதாக, முழுக்க முழுக்க சாத்விகமானதாக இருந்தது. சத்யாக்ரகம் போன்ற அகிம்சைப் போராட்டங்களைக்கூட நாராயணகுரு ஏற்கவில்லை. காரணம் அவை எதிர்நிலை எடுக்கின்றன, எதிர்தரப்புடன் மோதி அதை தார்மீகக் கட்டாயத்துக்கு உள்ளாக்குகின்றன என்று அவர் எண்ணினார்.

நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதே ஒரே செயல்பாடாக இருக்க முடியும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஓர் அமைப்பை அல்லது கோட்பாட்டை எதிர்ப்பது என்பது அதற்கு மாற்றாக நம்மை நாம் உருவாக்கிக் கொள்வதன் மூலமே நிகழமுடியும் என்று குரு எண்ணினார். நாம் எதிர்க்கும் அமைப்பில் அல்லது கோட்பாட்டில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தையும் நாம் உள்வாங்கிக் கொண்டு அதைத் தாண்டிச்செல்வதன் வழியாகவே அவ்வளர்ச்சி சாத்தியமாகும். இதுவே நாராயணகுருவின் வழிமுறை. ஆகவே நாராயணகுரு முன்வைத்ததை ‘ உள்வாங்கல் கோட்பாடு ‘ அல்லது ‘ஒருங்கிணைப்புக் கோட்பாடு ‘ என்று சொல்லலாம். அதை அவர் அரசியல் சமூகச்செயல்பாடுகளுக்காக நடைமுறை விவேகமாக மாற்றி முன்வைத்தார். கூடவே உயர்தத்துவ விவாதத்துக்கான முன்வரைவாகவும் சுட்டிக் காட்டினார். இவ்விரு தளங்களிலும் நாராயணகுருவை நாம் அறியவேண்டியுள்ளது.

நம்மிடையேயுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துஞான அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளினாலேயே நிராகரிக்கப்பட்டவர்கள், வரலாறு துவங்கும் காலம் முதலே அவர்கள் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்ற சித்திரத்தை கிறித்தவப் போதகர்களும் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட எந்த மக்களும் எவ்வகையிலும் சாதிக் கொடுமையில் இருந்து விடுபடவில்லை என்ற அப்பட்டமான உண்மை கண்முன் உள்ளபோதிலும் கூட அவர்கள் இதை இன்றும் உருவாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு சாதி அல்ல இலக்கு, இந்து மத அமைப்பு தான். பாரத மரபு முழுமையாகவே அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதுதான் என்று காட்டுவதில் அவர்களுக்கு உள்நோக்கம் இருந்தது. அதை ஏற்றுக்கொண்டவர் அல்ல நாராயணகுரு.

புலையர், ஈழவர் போன்ற சாதியினரை குரு ‘தோற்கடிக்கப்பட்ட’ மக்களாகவே கண்டார். பழைய காலத்தில் அவர்களுக்கு சிறப்பான கடந்தகாலம் ஒன்றிருந்தமைக்கான தடையங்கள் அப்போதும் எஞ்சியிருந்தன. நித்ய சைதன்ய யதியின் குடும்பம் மற்றும் மூர்க்கோத்து குடும்பம் முதலிய வரலாற்றுக்கு தப்பி பிழைத்த ஈழவ பிரபு குலங்கள் அதற்கு சான்றுகள். அக்குடும்பங்களில் பெளத்த மதம், பாலி மொழி முதலியவற்றை சார்ந்த புராதனமான செப்பேடுகள் மற்றும் குல அடையாளங்கள் இருந்தன. கேரள சாதியமைப்பில் பெளத்த மதம் வீழ்ந்த பிறகு ஒரு மறு அடுக்கு உருவானதாகவும் அதில் இன்றைய ஈழவ புலைய சாதியினர் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் ஆய்வாளர் இன்று விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியுள்ளார்கள்.

தமிழக தலித் சிந்தனையாளராகிய அயோத்தி தாச பண்டிதரும் நாராயண குருவின் கருத்தையே அப்படியே பிரதிபலிக்கிறார் என்பதைக் காணலாம். பெளத்த மதம் ஒழிக்கப்பட்டபோதுதான் பறையர் தாழ்த்தப்பட்ட மக்களாக ஆனார்கள் என்பது அவரது கருத்து. பறையர்களுக்கு உயர்ந்த கல்வி கலாச்சார மரபு ஒன்று இருந்தது. அதன் தடையங்கள் அயோத்தி தாசர் காலத்தில் கூட மிக வலுவாகவே இருந்தன. மார்க்கலிங்க பண்டாரம் போன்ற பல முக்கிய பறையர் குலப் பேரறிஞர்களை அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். அவர்களிடம் பண்டைய தமிழ் பேரிலக்கியங்களின் சுவடிகள் பல பேணப்பட்டிருந்தன. திருக்குறளை எல்லிஸ் துரைக்கு அச்சுக்கு கொடுத்ததே பண்டிதரின் தந்தை கந்தப்பர் தான். தாழ்த்தப்பட்டவர்கள் சூழ்நிலையால் தாழ்த்தப்பட்டவர்களல்ல, எப்போதுமே அப்படி இருந்தவர்கள் தான் என்று இன்று வாதிடுபவர்கள் பெரும்பாலும் கிறித்த போதகர்களின் குரலை சுயநல நோக்குடன் எதிரொலிப்பவர்களாக உள்ளனர். அசலான தலித் சிந்தனையாளர்கள் தங்கள் குலத்தின் பழைய வரலாற்று பின்புலம் குறித்த தெளிவான புரிதல்களும் தாரங்களும் கொண்டவர்களாக உள்ளனர். பிறிதொரு ஆதாரம் சமீபகாலமாக குருசாமி சித்தர் மள்ளர்களைப்பற்றி எழுதும் நூல்கள். விரிவான மேலும் விவாதத்துக்கு உரிய தலைப்பிது.

எக்காரணத்தால் சமூக அமைப்பில் தோற்கடிக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டார்களோ அக்காரணங்களை வென்று தோற்கடித்தவர்களுக்கு மேலாக ஆவதே நாராயணகுரு அளித்த செய்தி. வேதம் உனக்கு மறுக்கப்பட்டால் வேதத்தை பிராமணர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வேத விற்பன்னராக நீ ஆகு என்றார் அவர். நமது மரபுசெல்வங்கள் குறிப்பாக உபநிடதங்கள் எவருடைய தனிச்சொத்துமல்ல என்பது அவருடைய கருத்து. அவை விளக்கங்கள் மூலம் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டன. அவற்றை அனைவரும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டியுள்ளது. கறாரான விமரிசனங்கள் கொண்ட விரிவான ஆழமான உரைகள் மூலம் நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அப்பேரிலக்கியங்களை ‘விடுவிப்பதை’ காணலாம். மத அடையாளத்திலிருந்து முக்கிய நூல்களை அகற்றி அவற்றை தத்துவ, செவ்விலக்கிய ஆக்கங்களாக காண்பது இந்த குரு மரபின் பாணியாகும். இந்துஞானமரபின் அனைத்து சிறப்புக் கூறுகளையும் உள்வாங்கி செரித்துக் கொண்டு அதன் எதிர்மறை அம்சங்களை முற்றாக விலக்கி முன்செல்லும் ஒரு முறையை அவர் வகுத்தளித்தார். இதுவே குரு முன்வைத்த நடைமுறைத்தளமாகும்.

நாராயண குரு தூய அத்வைதி. இவ்வாறு சொல்லும்போது ஏற்படும் சிக்கல்கள் பல உண்டு. முக்கியமாக தமிழ்ச்சூழலில் இவற்றைப் பற்றி மிகக் கவனமாகவே பேசவேண்டியுள்ளது. இங்கே இந்துஞான மரபின் எந்த ஒரு கூறைப் பற்றியும் ஒருவரியாவது பேசுவதுகூட அப்பட்டமான பிற்போக்கு அல்லது மதநோக்கு என்று காட்டும்விதமாக பொதுவான சிந்தனைத்தளம் மோசமாகத் திருகப்பட்டுள்ளது. ஆகவே பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரியாது, தெரியாதவை குறித்த வெறுப்போ மிக அதிகம். அத்வைதம் என்றதுமே சரசரவென முடிவுகளை நோக்கி பாய ஆரம்பித்துவிடுவார்கள். இந்தியச் சூழலில் வேதாந்தம், அத்வைதம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிறவி எடுத்த அத்வைதம் ஆகியவற்றைத் தெளிவாகப் பிரித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் உள்ள பிரம்மதரிசனங்களில் இருந்து தொடங்கி உபநிடதங்களில் வளர்ச்சி பெற்று பாதராயணரால் பிரம்மசூத்திரம் மூலம் தொகுக்கப்பட்டதே வேதாந்தமாகும். இது பிரம்மத்தின் முதல்முழுமைத் தன்மையை முன்வைத்து பிரபஞ்சத்தை பிரம்மத்தின் அலகிலா ஆட்டமாகக் காண்கிறது. பிறகு பெளத்த தரிசனங்களுடன் வேதாந்தம் உரையாடியதன் மூலம் யோகாசார பெளத்ததில் வெற்றுவெளிவாதம் [சூன்யவாதம்] அறிவகவாதம் [விக்ஞானவாத] போன்ற கோட்பாடுகள் உருவாயின. இவற்றை உள்ளிழுத்துக் கொண்டு வேதாந்தம் மறுபிறப்பு கொண்டதே சங்கரரின் அத்வைதமாகும். வேதாந்தத்தில் இல்லாததும் சங்கரரில் இருப்பதுமான முக்கியமான கூறு முழுமையான மாயாவதம் எனலாம். இதைத் தொடர்ந்து உருவான ராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்வரின் த்வைதம் போன்றவை பிற்கால வேதாந்தங்கள் எனப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கியபோது இந்துஞானமரபை மறு ஆக்கம் செய்ய எழுந்த ஞானிகள் பலரும் அத்வைதத்தையே முக்கியமான கோட்பாடாகக் கொண்டார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயணகுரு ஆகியோர் நேரடியாகவே அத்வைதக் கோட்பாடாக தங்கள் ஞானத்தை அறிவித்துக் கொண்டவர்கள். ராஜாராம் மோகன் ராய், அரவிந்தர் ஆகியோரிடம் மேலோங்கியிருப்பது அத்வைதமே. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய அய்யா வைகுண்டர், சுபானந்தகுரு, பிரம்மானந்த சிவயோகி, சுவாமி சகஜானந்தா போன்றவர்கள் அத்வைதத்தையே தங்கள் கோட்பாடாகக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. . சங்கரரின் அத்வைதம் பெளத்தத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பது இதற்கு சமூகவியல் ரீதியான ஒரு காரணத்தை அளிக்கிறது. இவ்வாறு மறுமலர்ச்சி அடைந்த அத்வைதம் சங்கரரின் அத்வைதத்திலிருந்து பலவகையான முக்கியமான மாற்றங்கள் கொண்டது. இந்த அத்வைதங்களை பொதுவாக புதிய அத்வைதம் எனலாம்.

நாராயணகுரு முன்வைப்பது புதிய அத்வைதமாகும். உபநிடதங்களை உள்ளடக்கிக் கொண்ட பெளத்தமாகவே நாராயண குருவின் அத்வைதம் அமைந்தது. அத்வைதத்தை வைதிகச்சடங்குகள் பக்கமாக நகர்த்தி அதன் சாராம்சமான ஒருமைத் தரிசனத்தை அழித்த சங்கர மடங்களுடன் நாமிதை பிணைத்துக் கொள்ளக்கூடாது. ஏற்கனவே காஞ்சி சங்கராச்சாரியாரும் நாராயண குருவும் எடுத்த நிலைபாடுகளில் உள்ள வித்தியாசத்தை கண்டோம். அவ்விருவருமே சங்கரர் பெயரையே சொல்கிறார்கள். நாராயண குரு தன்னை பெளத்தர் என்று சொல்லிக் கொள்ள தயங்கியதுமில்லை. தூய அறிவே நாராயணகுரு முன்வைத்த அத்வைதம். எளிய மக்களுக்கு கடவுள் தேவை என்று கருதிய நாராயணகுரு தன் சீடர்களுக்கு அறிவார்த்தம் ஒன்றையே உபதேசித்தார். நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் கோவில்களுக்குச் சென்றவர்களோ ஏதேனும் இறைவழிபாட்டை எப்போதாவது நடத்தியவர்களும் அல்லர்.

நாராயணகுருவின் அத்வைத நோக்கு குறித்து மிகவிரிவான அளவில் பேசவேண்டியுள்ளது. அதற்கும் சங்கர அத்வைதத்துக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டை மட்டும் குறிப்பிடலாம். சங்கரரின் மாயாவாதத்தை நாராயணகுரு உயர்தளத்து தரிசனமாக மட்டுமே ஏற்கிறார். அதாவது பத்துவகையான மெய்மைத் தரிசனநிலைகளில் ஒன்றாக. நடைமுறையில் உலகியல் வாழ்க்கையை மாயை என்று அவர் நிராகரிக்கவில்லை. பரமார்த்திகம் போலவே அதுவும் முக்கியமே என்று எண்ணினார். மேலான ஆன்மீகம் சிறந்த உலகவாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறதோ அதைப்போலவே பரமார்த்திக வாழ்வுக்கு மேலான உலகியல் வாழ்வு வழியாக அமைகிறது என்று எண்ணியவர் அவர்.

சங்கரரின் கோட்பாடுகளிலிருந்து நாராயணகுரு பெற்றுக் கொண்டது இரண்டு அடிப்படைகளை. காண்பதும் அறிவதும் எல்லாம் ஒன்றே என்ற மகத்தான ஒருமைத்தரிசனம். இதை அவர் சமத்துவதரிசனமாக, பேதமின்மை நோக்காக விரித்துக் கொண்டார். இரண்டு அறிவதெல்லாம் அறிவையே, தூய அறிவொன்றே பிரம்மமும் பிரம்மத்தை நோக்கிய பாதையுமாகும் என்ற மெய்ஞானம். தூய அறிவு என்பது வாழ்க்கையை விலக்கி அடையும் மர்மமான ஒன்றல்ல என்றும் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் ஈடுபட்டு கடந்துசென்று அறிதலே என்றும் அவர் அதை விளக்கிக் கொண்டார். இதுவே நாராயண குருவின் தரிசனமாகும். அவர் கூறிய அத்வைதம் தர்க்கபுத்தியை, பேதமின்மையை, பிரபஞ்சத்துடன் முழுமையான லயத்தை, கருணை நிரம்பிய சமத்துவத்தை வலியுறுத்திய பெரும் தரிசனம் என்று மட்டும் சொல்லலாம்.

நாராயணகுருவின் தத்துவ ஆய்வுமுறையை குறிப்பாகச் சொல்லவேண்டியுள்ளது. தத்துவம் என்பது உலகை ஒரு குறிப்பிட்ட வகையாக விளக்கும் முறைமை. ஆகவே மாற்று விளக்கங்களுடன் அது மோதுவதை நாம் தவிர்க்க இயலாது. தத்துவம் என்பது வேர்ப்பரப்பு, அதிலிருந்தே அரசியல் சமூகவியல் அறவியல் ஒழுக்கவியல் அடிப்படைகள் உருவாகி வருகின்றன. ஆகவே தத்துவ மோதல் மிக்க விசையுடன் பலவிதமான உள்ளோட்டங்களுடன் நடப்பதையும் தவிர்க்க முடியாது. ஆனால் தத்துவ விவாதங்களை நடத்துவதில் நாராயண குரு காட்டிய வழி மாறுபட்டது. தத்துவத்தை முழுமுற்றான உண்மை ஒன்றுக்கான ஒருங்கிணைந்த தேடலாக அவர் காண்கிறார். ஆகவே தத்துவத்தின் மாறுபட்ட தரப்புகளை ஒன்றையொன்று நிரப்பும் தன்மை கொண்டவையாக அணுகுகிறார். ஒவ்வொரு தத்துவமும் அதுவரையான ஒட்டு மொத்த தத்துவ அமைப்பில் உள்ள ஒரு குறையை ஈடுகட்டும் பொருட்டு உருவானது என்ற நோக்கு அவருடையது. இதை அவர் ஒருங்கிணைப்பு நோக்கு [சமன்வயம்] என்ற சொல்லால் சுட்டினார். ஆதலால்தான் வாழ்ந்த காலகட்டத்தில் நாராயணகுரு எந்த தத்துவ மோதல்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் அதுவரையிலான தத்துவநோக்குகளை கூர்ந்து அவதானித்த பேரறிஞர் அவர். தமிழ் மலையாளம் சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த புலமையுடையவர். அன்று வரையிலான தத்துவ அமைப்பில் அவர் அவதானித்த போதாமைகளை நிரப்பும்பொருட்டு மட்டுமே அவர் தன் நூல்களை எழுதினார்.

இந்த ஒருங்கிணைப்புப் பார்வையை இன்று நாம் சாதாரணமாக தவறாகவோ குறைத்தோ மதிப்பிட்டுவிடுவோம். இன்று மத அரசியல் சார்ந்து எல்லா தரப்புகளையும் ஒற்றை அமைப்பாக மாற்றும் நோக்குடன் செய்யப்படும் சமரசம் போன்றதுதான் அது என்று சிலர் எண்ணக்கூடும். அப்படியல்ல, நாராயண குரு தத்துவ வேறுபாடுகளை மிக மிக முக்கியமாக கருதியவர். ‘அரியும் அரனும் ஒன்று’ என்பதுபோன்ற எளிய சமரசநோக்கு அல்ல அவருடையது. நவீன தத்துவ மொழியில் சொல்லவேண்டுமானால் நாராயணகுரு தத்துவத்தை ஒரு பெரும் உரையாடலாக, நவீனக் கலைச்சொல்லால் சுட்டவேண்டுமென்றால் சொற்களனாகக் [Discourse] கண்டார். உரையாடலின் எல்லா தரப்புமே முக்கியம்தான். உரையாடலின் இயக்கசக்தி அத்தரப்புகளின் மோதல் மூலம் உருவாவது. ஒவ்வொரு தத்துவமும் விரிவான சொற்களனில் எந்த இடத்தை நிரப்புகிறது என்று அவர் பார்த்தார். அது தத்துவ மொழியாடல் முறை எனலாம். [Dialogic Philosophy ]

கேரள அறிவியக்கத்தில் நாராயணகுருவின் பங்களிப்பு மிக விரிவானது. அவரது மாணவர்கள் வரலாறு தத்துவம் போன்ற பல தளங்களில் முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்கள். நாராயண குருவின் முக்கிய மாணவரான நாராயணகுருவின் வழிமுறை எதையும் நிராகரிப்பது அல்ல. அவர் அனைத்தையும் கற்று உள்ளடக்கி தனக்கென ஒரு நோக்கை உருவாக்கிக் கொள்வதை வலியுறுத்தியவர். பொதுவாக நிராகரிப்பது மிக எளிது. வெறுப்பு என்ற ஆயுதம் மட்டுமே அதற்குப் போதும். ஆனால் ஏற்பு மிக கடுமையான உழைப்பைக் கோரிநிற்பது. நாராயண குரு அனைத்தையுமே அறியும்படி அறைகூவினார். அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள சொன்னார். சுரண்டப்பட்ட மக்களுக்கு சுரண்டுபவர்களின் ஞானம் எதற்கு என்ற வினா அன்றும் சிலரால் எழுப்பபட்டது. ஞானம் மானுடகுலத்துக்கு உரியது என்றும் அதை நிராகரிப்பதன் மூலமல்ல வென்று மேலெடுப்பதன்மூலமே முன்னேற்றம் சாத்தியம் என்றும் நாராயண குரு சொன்னார். ஒரு சமூகத்தின் அறிவார்ந்த வெற்றியே அதன் சமூக அதிகாரம் என்றார். ‘அறிவுக்கு குறுக்குவழிகள் இல்லை ‘ என்ற அவரது உபதேசம் முக்கியமானது.

தன்னை பின்பற்றியவர்களிடம் வேதங்கள் உபநிடதங்கள் இந்திய தத்துவங்கள் சம்ஸ்கிருத மலையாள காவியங்கள் தமிழிலக்கிய மரபு அனைத்துமே அவர்கள் பாரம்பரியம் என்றுதான் நாராயணகுரு சொன்னார். அவற்றை கற்று தெரிவு செய்து மறு ஆக்கம் செய்து முன்னெடுத்துச் செல்லும் சவாலை விடுத்தார். அதை அவர்கள் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர். அவ்வகையில் பார்த்தால் நாராயணகுருவின் இயக்கம் நிரூபிக்கப்பட்ட வழிமுறை ஒன்றை இந்தியாவுக்கு அளிக்கிறது.

====

====

முக்கிய நூல்கள்

1. சாதியமைப்பும் கேரள வரலாறும். பி கெ பாலகிருஷ்ணன். சுருக்கமான தமிழாக்கம் ஜெயமோகன். காலச்சுவடு 13

2. கேரள தலித்போராளி அய்யன்காளி. நிர்மால்யா. தமிழினி சென்னை.

3. தென்குமரியின் கதை. டாக்டர் அ. கா. பெருமாள். தமிழினி சென்னை

4. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி – இ எம் எஸ் நம்பூதிரிப்பாட். [மலையாளம்]

5] ‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி. கெ. பாலகிருஷ்ணன் [மலையாளம்]

6] பாரதியார் கட்டுரைகள். தொகைநூல். தேசிய புத்தக நிறுவன வெளியீடு

7] இந்திய தத்துவ ஞானம். டாக்டர் ராதாகிருஷ்ணன். அண்ணமலைப் பல்கலைகழக வெளியீடு

8] மந்திரம் இசை மெளனம். நித்ய சைதன்ய யதியுடன் ஓர் உரையாடல். காலச்சுவடு17

[Presented at Refresher Training Course for Teachers at Tanjore]

Tamil University On 13-3 -04]

 மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 25, 2004

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55

$
0
0

ஏழு : துளியிருள் – 9

fire-iconஅறைக்குள் சென்றதுமே சர்வதன் “நாம் ஓய்வெடுக்க வேண்டியதில்லை, மூத்தவரே. நீராடிவிட்டு நேராக களத்திற்கு செல்வோம். மூத்த யாதவர் அங்குதான் இருப்பார். அவரை அங்கு சந்திப்பதும் எளிது” என்றான். யௌதேயன் “ஆனால் நாம் அங்கு எதையும் பேசமுடியாது” என்றான். “நாம் அரசமுறையாக வரவில்லை. ஆகவே அவையில் எழுந்து முறையாக அறிவிப்பதற்கும் ஏதுமில்லை. அவருடன் தனியறையில் சொல்லவே செய்தி உள்ளது. அதற்கு முன் அவரிடம் சற்றேனும் அணுக முடியுமென்றால் நம் பணி எளிதாகிறது” என்றான் சர்வதன்.

யௌதேயன் மஞ்சத்தில் அமர்ந்து கால்களை நீட்டி உடலை சோம்பல் முறித்தபடி “மெய்யாகவே நமது செய்தியால் எதுவும் நிகழுமென்று நான் எண்ணவில்லை. யாதவர்கள் இறுதி முடிவெடுத்துவிட்டார்கள். மூன்று முறை பேரவை கூடிவிட்டார்கள். கிருதவர்மன் இங்கு வந்து இளைய யாதவருக்கெதிராக யாதவக்குடிகளிடம் இருந்து சொல்லுறுதியை பெற்றுச் சென்றிருக்கிறார். கிருதவர்மன் அஸ்வத்தாமரின் இணைத்தோழர். மூத்த யாதவரோ துரியோதனரின் நல்லாசிரியர்” என்றான்.

“ஆம், சிறிய விரிசல்கூட இப்போது தெரியவில்லை. ஆனால் பயிற்சிக்களம் என்பது பிறிதொரு ஆடல்மேடை. அது ஒரு கலைக்கூடம் போல, அங்கு உடலும் உள்ளமும் மகிழ்கின்றன. மூத்தவரே, எங்கு அவையிரண்டும் நெகிழ்வு கொள்கின்றனவோ அங்கு அரசியல் விலகிவிடுகிறது. உடல் உடலையும் உள்ளம் உள்ளத்தையும் வெறும் மானுடராகவே அறிகிறது. அரசியல் என்பது மானுடரை விலக்குவதனூடாக வெல்வதனூடாக நிகழ்வது” என்றான் சர்வதன்.

யௌதேயன் “நீ களம் புகவிரும்புகிறாய் என்றால் அவ்வாறே ஆகட்டும். நான் வந்து என்ன செய்யப்போகிறேன்? இப்புவியில் நான் வெறுக்கும் ஓர் இடம் இருக்குமென்றால் அது பயிற்சிக்களம்தான். உடல் தன் இயல்பிலிருக்கையிலேயே நலமாக உள்ளது என்று நான் எண்ணுகிறேன். அதை வருத்தி பயிற்றி மலைபோல் ஆக்க வேண்டுமென்று தெய்வம் எண்ணியிருந்தால் அவ்வாறே அது மானுடரை படைத்திருக்குமல்லவா?” என்றான்.

சர்வதன் “ஏன் உள்ளத்தை வருத்தி பயிற்றுவிக்கிறீர்களே?” என்றான். யௌதேயன் “இது மெய்மை. மானுடனுக்கு தெய்வங்கள் விடுத்த அறைகூவல் அதை அடைவது” என்றான். “உடலினூடாகவும் மானுடர் தேடிச்செல்வது மெய்மையைத்தான். முழுதுடல் தெய்வங்களுக்கு அணுக்கமான ஒரு மெய்” என்று சர்வதன் சொல்லி “தாங்கள் வருகிறீர்கள், நெடுநாட்களுக்குப்பிறகு வாளை ஏந்துகிறீர்கள்” என்றான்.

யௌதேயன் “கேலிப்பொருள் என்று ஆவேன் என எண்ணுகிறேன்” என்றான். சர்வதன் “கவலைவேண்டாம். வாள் கையிலிருந்து தவறுமென்றால் அவ்வாறு தவறுவது ஒரு நல்லூழென்று ஏதேனும் நூலில் சொல்லப்பட்டிருக்கும் .அதை நினைவுகூர்ந்து சொன்னால் போயிற்று. கிளம்புங்கள்!” என்றான். “விடமாட்டாய்” என்றபடி யௌதேயன் எழுந்துகொண்டான். வாயிலில் வந்து நின்ற ஏவலன் “தாங்கள் ஓய்வெடுத்தபின்…” என்று தொடங்க “இல்லை நாங்கள் விரைவாக நீராடி களம் புகவிருக்கிறோம்” என்றான் சர்வதன். தலைவணங்கி “நன்று” என்று அவன் அவர்களைக் காத்து நின்றான்.

பொதியில் இருந்து நீராட்டுக்குரிய ஆடைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் அவனுடன் சென்றனர். சர்வதன் ஓசையெழ பெரிய கைகளை வீசி ஆட்டி நடந்தபடி “மிகச்சிறிய மாளிகை. என் உடல் அமையும் நீராட்டறை இங்கு இருக்குமெனத் தோன்றவில்லை” என்று சொன்னான். “அனைத்து மாளிகைகளிலும் யாதவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்றார்கள். துவாரகையிலிருந்து கிளம்பி வந்துகொண்டேயிருக்கிறார்கள்” என்று யௌதேயன் சொன்னான். “அவர்கள் ஒவ்வொருவரும் இங்கே மதிக்கப்பட்டாகவேண்டும். அதைவிட அவர்கள் மதிக்கப்படுவதாக நம்பவைக்கவேண்டும். ஒவ்வொருவரும் பிறரைத்தான் நோக்கிக்கொண்டிருப்பார்கள். அனைவருமே அரசகுடியினரென சொல்லிக்கொள்வார்கள்.”

சர்வதன் ஏவலனிடம் “இளைய யாதவரின் மைந்தர் பிரத்யுமன்ர் இங்கு வந்துள்ளார் என்றார்களே?” என்றான். “இல்லையே, இங்கு சாம்பரும் அவர் இளையோரும்தான் நேற்று முன்னாள் வந்தனர்” என்றான் ஏவலன். “ஆம், அவர் வந்ததாக கேள்விப்பட்டேன்” என்ற யௌதேயன் “பிறர் இங்கு வந்துகொண்டிருப்பார்கள். இன்று அவர்களைத்தான் அவையில் சந்திக்கவேண்டுமென்று வந்தோம்” என்றான். சர்வதன் “இவர் அனைத்தும் அறியும் இடத்தில் இருக்கிறார், மூத்தவரே” என்றான்.

“இளவரசே, நான் அறிந்தவரை பிரத்யும்னரும் அவரது உடன்பிறந்தோரும் மதுவனத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு சூரசேனரின் வாழ்த்துக்களை பெற்றபின்னரே இங்கு வருவார்கள். யாதவ அரசியின் மைந்தர் பானுவும் அவர் உடன்பிறந்தாரும் வந்துகொண்டிருக்கிறார்கள். பிற உபயாதவர் அனைவருமே ஒரிருநாட்களுக்குள் இங்கு வந்து சேர்வார்கள் என்று சொன்னார்கள்” என்றான் ஏவலன். யௌதேயன் “கிருதசேனர் ஊர் திரும்பி விட்டாரா?” என்றான். “ஆம், நேற்றுமுன்னாள் அவர் கிளம்பிச்சென்றுவிட்டார்” என்றான் ஏவலன். “இங்கு யாதவ இளையோர் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலானோருடைய பெயர்களையே நான் அறிந்ததில்லை.”

நீராட்டறை அவர்கள் எண்ணியது போலவே மிகச்சிறியதாக இருந்தது. உள்ளே நுழைந்ததுமே அது சுவர்கள் கைகளை முட்டுமளவுக்கு மேலும் சிறிதென மாறியது. “ஒரு பெரிய குளியல் தொட்டிபோல் உள்ளது” என்று சர்வதன் சொன்னான். நீராட்டறையின் அணியர் புன்னகையுடன் வந்து “இளைய பாண்டவரின் மைந்தருக்கு வணக்கம். இந்தச் சிறிய நீராட்டறையில் தாங்கள் நீராட வருவீர்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை” என்றார்.

அவர் உதவியாளன் “நீராட்டறை ஏவலர் எவருக்கும் வாழ்நாள் பேறென்பது தங்கள் தந்தையின் உடலை கையால் தொடுவதுதான் என்று எந்தை சொல்லியிருக்கிறார். அதற்கு நிகரான பேறுபெற்றேன்” என்றான். “எந்தை வெறுந்தரையில் பதினான்காண்டுகள் துயின்று பழகிவிட்டார். நான் நறுஞ்சுண்ணம் சற்று கடினமானதாக இருந்தாலே உடல்நோவு கொள்பவன்” என்றபடி சர்வதன் ஆடைகளைக் களைந்து உயரமற்ற வெண்கல முக்காலியில் அமர்ந்தான். நறுமணத்தழையிட்டு கொதிக்கவைத்த வெந்நீரை அவன் உடலில் ஊற்றி அவர்கள் நீராட்டத்தொடங்கினர்.

“அணியரே, தங்கள் பெயரென்ன?” என்று சர்வதன் கேட்டான். அவர் “கர்த்தப குலத்தவனாகிய என் பெயர் உக்ரன். இவன் துர்வீரன். இன்னமும் நாங்கள் நீராட்டறையில் நெறிகளை பயில்பவர்களாகவே இருக்கிறோம். ஒருமுறைகூட பேருடலர்களை தொட்டதில்லை. ஒருமுறை மூத்த யாதவரின் தசைகளை தொடும் வாய்ப்பு கிடைக்குமென்று எண்ணியிருந்தோம். எங்கள் குல தெய்வங்கள் அணுக்கத்திலுள்ளன” என்றார். சற்று முதிய அணியர் யௌதேயனை நீராட்டினார். அவன் சிறிய தொட்டிக்குள் தன் உடலை நன்றாக வளைத்துக்கொண்டான்.

சர்வதனின் பெருந்தசைகளை கையால் நீவி வெந்நீர் ஊற்றி அழுத்தியபடி உக்ரர் “ஒருமுறை இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரின் உடலை நீராட்டினால் மானுட உடலின் தசைகள் எங்கெங்கு எவ்வாறு முழுமை கொண்டிருக்குமென்று அறிந்துவிடலாம், பிறகு இப்புவியிலுள்ள அனைத்து மானுட உடல்களையும் எளிதில் கையாளலாம் என்பார்கள்” என்றார். “ஒவ்வொரு தசையும் ஒவ்வொரு கோணத்தில் இழுபடுகிறது. பிற தசையுடன் அவை இணையும் ஒரு முடிச்சு ஒவ்வொரு முறை. உடலசைவில் அவை கொள்ளும் திசைமாற்றம் பிறிதொன்று. ஓய்ந்திருக்கையில் கொள்ளும் பதிதல் தனி. அடிபட்டுச் சிதைகையில் அவை உடையும் முறையும் அதற்கென்றே உரியது. ஒருபோதும் கற்றுத் தீராக்கலை இது.”

“கற்ற அனைத்தையுமே தங்கள் உடலில் இப்போது காண்கிறோம், இளவரசே” என்றான் துர்வீரன். சர்வதன் கைநீட்டி “என் மூத்தார் சுதசோமர் என்னிலும் பேருடலர்” என்றான். “பிறிதொன்றாக அமைய வாய்ப்பில்லை. இப்புவியில் நீங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பீர்கள்” என்றார் உக்ரர். அவர்கள் வேள்விசெய்யும் அந்தணரின் உள ஒருமையுடன் அவனை நீராட்டினர். அவன் குழல்களைப் பிரித்து நீவி அலசினர். நகங்களின் அழுக்கை நீக்கினர். அவர்களின் கைகள் அவன் உடலை கனிந்த அன்னைப்பசுவின் நாக்கென வருடிக்கொண்டே இருந்தன.

நீராடி எழுந்து ஆடியில் தன்னுடலைப் பார்த்த சர்வதன் “எந்தை என்னைப் பார்த்ததும் முதலில் எங்கு தொட்டார் என்று எண்ணுகிறீர்கள்?” என்றான். உக்ரர் “தோளில்” என்றார். “இல்லை, அணுகியதுமே என் புறங்கழுத்து முடிச்சில் தன் கையை வைத்தார்” என்றான் சர்வதன். துர்வீரன் “மல்லர்களின் புறங்கழுத்தே அவர்களின் உடலில் மிகநொய்மையான பகுதி. அனைத்துடலும் தசைக்கோட்டையால் மூடப்பட உயிர்முடிச்சு மட்டும் திறந்திடப்பட்டுள்ளது. தேர்ந்த மல்லன் ஒருவனின் அடி அங்கு விழுமெனில் நரம்புகள் அனைத்தும் உடைந்து செயலற்றுவிடும்” என்றான்.

உக்ரர் “தங்களை தந்தையென அவர் எதிர்கொள்ளவில்லை. இணை மல்லரென்று பார்த்திருக்கிறார்” என்றார். யௌதேயனை நீராட்டிக்கொண்டிருந்த முதிய நீராட்டறையர் “அல்ல உக்ரரே, அத்தனை தந்தையருக்கும் மைந்தர்கள் ஆற்றலற்றோர், பாதுகாக்கப்பட வேண்டியோர் என்றே தெரிவர். இப்பேருடலரைக் கண்டதுமே தந்தையின் கை அவரது காப்பற்ற புறங்கழுத்துக்குச் செல்வதென்றால் அவர் அங்கு மல்லராக இல்லை. தலைநிலைக்காத குழவியை கையிலேந்திய அன்னைபோல் கனிந்திருக்கிறார்” என்றார்.

fire-iconஉடலெங்கும் நறுமணச்சுண்ணமிட்டு தோலாடை அணிந்து கழுத்தில் வெள்ளிச் சரடொன்று மட்டும் அணியென பூண்டு சர்வதன் கிளம்பினான். வெண்ணிறப் பட்டாடை உடுத்தி வெண்மேலாடை அணிந்து பொன்சரப்பொளி பூண்டு அவனுடன் வந்த யௌதேயன் “களத்தில் நம்மை முதலில் பார்க்கையில் மூத்த யாதவர் என்ன செய்வார் என்று எண்ணிப்பார்க்கிறேன். நாம் வருவது அவருக்கு உகந்ததல்ல. நாம் படைத்துணைகோரி வந்துள்ளோம்” என்றான். “இது முறைப்படி எழும் அழைப்புதானே?” என்றான் சர்வதன்.

“ஆம், ஆனால் இவ்வழைப்பிற்கு இன்னமும் இடமுள்ளது என்பதே யாதவர் மேல் பிறரை ஐயம் கொள்ள வைக்கலாம். நாம் எந்த வாக்குறுதியுடன் வந்தோம் என அவர் அறிய விரும்புவார்கள். அந்த வாக்குறுதியை பிறரிடம் நாம் சொல்லாது செல்வோமெனில் ஒருதுளி ஐயமென அது எப்போதும் அவர்கள் நடுவே எஞ்சும். என்னதான் தன்னை ஷத்ரிய அணியில் முற்றிலும் நிறுத்திக்கொண்டாலும் பலராமர் யாதவர் என்றே கருதப்படுவார். ஷத்ரிய குடிகள் அவரை முற்றிலும் நம்புவது நடவாது. சொல்லுறுதியுடன் வந்திருக்கும் நாமோ யாதவக்குருதி” என்றான் யௌதேயன்.

மெல்ல நடந்தபடி அவன் “இப்போது எண்ணுகையில் இப்படி ஓர் ஐயத்தை இங்கு எழுப்பிவிட்டுச் செல்வதற்கென்றே நம்மை அனுப்பினார்களோ என்று ஐயுறுகிறேன்” என்றான். சர்வதன் “இந்தக்கணக்குகள் எனக்குப் புரிவதில்லை. நான் கருதுவதெல்லாம் என்னைப் பார்த்ததுமே இணை மல்லரென இருகைகளையும் விரித்து அவர் களம் அழைப்பார் என்று மட்டும்தான்” என்றான் சர்வதன். “மல்லர்கள் அன்னத்தின் உலகில் வாழ்கிறார்கள். அங்கு பருப்பொருட்களுக்கு மட்டுமே இடம்.”

மதுராவின் அரண்மனை உள்ளடுக்குகள் அனைத்தும் விழிப்புகொண்டிருந்தன. சிறு கைவிளக்குகளை ஏந்தியபடி சேடியரும் ஏவலரும் அங்குமிங்கும் உலவியதனால் தொலைவிலிருந்து பார்க்கையில் சிற்றகல்கள் மிதந்து சுழிக்கும் ஆற்று வளைவென தோன்றியது அரண்மனை. அகன்று செல்லும்தோறும் மின்மினிகள் மொய்க்கும் மரத்தடியென மாறியது. வெண்சுண்ணச் சுவர்கள் இளநீல ஒளி கொண்டிருக்கும் முன்புலர்காலை. இலைகளின் பசுமையும் மலர்களின் செம்மையும் காற்றுப்பரப்பிலிருந்து புடைத்தவைபோலத் தெரிந்தன. பறவைக்குரல்களால் சூழப்பட்டிருந்த மரங்கள் கன்றுகளின் கொம்புச்செண்டு என சிலம்பிக்கொண்டிருந்தன.

களத்தை அணுகுவதற்கு முன்னரே வாள்களும் வேல்களும் உரசும் ஒலியும் கேடயங்களில் வாள்படும் மணியோசையும் கால்வைப்பும் சுவடுமாற்றலும் கைப்பிடியும் பூட்டும் ஒழியலும் தாவலும் உழியலும் மண்டிலமும் எழுப்பிய வாய்த்தாரிகளுடன் இணைந்து கேட்கத்தொடங்கின. களத்துமுகப்பில் நின்றிருந்த காவலர் அவர்களைக் கண்டதும் வியந்து அருகிருந்த பிறிதொரு காவலனை பார்த்தபின் முன்னால் வந்து தலைவணங்கி “இளவரசர்களே, இளையவர் தாங்கள் இங்கு வந்ததை…?” என்று தொடங்கினார்.

“மூத்த யாதவர் இன்னும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சற்றுமுன்னர்தான் நகர் நுழைந்தோம்” என்றான் யௌதேயன். “களம் புக விரும்புகிறோம் என்று அவரிடம் சொல்க!” அவர் “ஆணைபெற வேண்டியதில்லை. தாங்களே உள்ளே செல்லலாம். இது அரசவையல்ல” என்று சொல்லி கைகாட்டினார். வாயிலினூடாக மறுபுறம் நுழைந்தபோது குளிர்காற்று வீசிச்சுழித்த வட்ட உள்முற்றத்தில் நின்றிருந்தவர்களின் ஆடைகள் காலையின் எழா ஒளியில் வெண்சுடர்கள்போல அணுக்கம் கொண்டன. இரு மல்லர்கள் இருகைகளையும் பற்ற கால்களை முன்னால் வைத்து நண்டுக் கொடுக்கென கைகளை மேலே தூக்கி அவர்களை சுழற்றிவீசி அவர்கள் மண்ணில் உடலறைந்து விழுகையில் அப்பால் சென்று சுழன்று திரும்பி தொடைதட்டி நிமிர்ந்த பலராமர் அவர்களை பார்த்தார்.

மறுகணம் “யார்? உபபாண்டவர்கள் அல்லவா?” என்று கூவியபடி கைகளை விரித்தார். சர்வதன் “நான் பைமசேனியாகிய சர்வதன். தங்களை சந்திக்கும் பேறு பெற்றேன், அரசே” என்று சொல்லி அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவன் தோளை வளைத்து தன்னுடலுடன் இறுக்கி அணைத்து மறுகையால் ஓங்கி புயத்தில் அறைந்து உரக்க நகைத்து “பேருடலன்! இளமையில் தந்தை இருந்ததைப் போலவே இருக்கிறாய். இன்று இக்களத்தில் மற்போர் பொலிகிறது! நன்று! நன்று!” என்றார் பலராமர்.

யௌதேயன் அருகே வந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். “நீ என்ன உணவுண்பதே இல்லையா?” என்று அவன் தோள்களை தன் பெரிய கைகளால் தட்டியபடி அவர் கேட்டார். “நூல்களை உண்கிறார்” என்றான் சர்வதன். உரக்க நகைத்த பலராமர் “ஆம், உன் தந்தையைப் போலவே இருக்கிறாய்” என்றபின் சர்வதனிடம் “ஓர் உடல் எத்தனை சொற்களுக்கு நிகர் என்பதை இவன் தந்தையைப் பார்த்தால் அறியலாம். சொல்லிச் சொல்லி அடையா உடலை அறுபதாண்டுகளாக நிரப்பிக்கொண்டிருக்கிறான்” என்றார்.

சர்வதன் சிரித்தான். அவர் கைகளால் யௌதேயனின் மெல்லிய தோள்களைப் பற்றி உலுக்கி “நீ என்ன படைக்கலப்பயிற்சி செய்கிறாய்?” என்று கேட்டார். அவன் “வாள்” என்றபின் “பொழுது அமைகையில் மட்டும்” என்றான். “அதாவது எப்பயிற்சியும் இல்லை. நன்று!” என்றபின் “அங்கு சென்று வாட்பயிற்சி செய். நான் இவனுடன் சற்று தோள்கோக்கிறேன்” என்றபின் திரும்பிப்பார்த்து அப்பால் நின்ற சாம்பனை கைகாட்டி அழைத்து “இவனை அறிந்திருப்பாய். இளைய யாதவன் மகன் சாம்பன். இங்கு வந்திருக்கிறான்” என்றார்.

“தந்தையிடம் பூசலிட்டு வந்தீர்கள் என அறிந்தேன்” என்றான் யௌதேயன். உரத்த குரலில் பலராமர் “அது பூசல் அல்ல. அவன் தந்தை எது குலத்திற்கு உகந்ததோ அதை செய்யாதொழிந்தபோது குலத்தின் தலைமைந்தன் என்ற முறையில் அவன் கொண்ட பொறுப்பு அது. தந்தை தன் குலத்து மூதாதையர் பல்லாயிரவரில் ஒருவனே என்றுணர்ந்த மெய்யறிவு” என்றார்.

சாம்பனைப் பார்த்து புன்னகைத்த யௌதேயன் “மெய்யறிதல் எந்நிலையிலும் மானுடருக்கு தேவைதான்” என்றான். அவன் சொற்களிலிருந்த மெல்லிய இளிவரலை சாம்பன் உணர்ந்தான். அவன் விழிகள் மாறின. ஆனால் பலராமர் “அதைத்தான் நானும் சொல்லிக்கொண்டிருந்தேன். தந்தையை மீறிவிட்டான் என்னும் பழி சில தரப்புகளிலிருந்து எழலாம். ஆனால் நெறி நின்றான் எனும் பெயர் காலத்தில் அதைக்கடந்து செல்லும். தந்தையர் எல்லை மீறுகையில் அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு மைந்தருக்குண்டு. அது என் மைந்தரேயானாலும்” என்றார்.

சாம்பன் “நாம் வாள் பயில்வோமே?” என்று யௌதேயனை அழைத்தான். யௌதேயன் “உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், சாம்பரே. பிரத்யும்னரும் நீங்களும்தான் இளைய யாதவரின் மைந்தரில் பெருவீரர்கள் என்று சூதர்கள் பாடுவதுண்டு. நான் முறைப்படி வாள் பயிலாதவன். ஆசிரியராக நின்று எனக்கு ஏதேனும் கற்பிப்பீர்கள் என்றால் வருகிறேன்” என்றான். “வருக!” என்று சாம்பன் அவன் தோளில் கைவைத்து அழைத்துச் சென்றான்.

பலராமர் இருகைகளையும் சர்வதனின் தோளில் வைத்து “என்னளவே இருக்கிறாய். கதை பயில்கிறாயா?” என்றார். “ஆம், கதையும் மற்போரும் பயில்கிறேன்” என்றான் சர்வதன். “திரும்பு” என்று சொல்லி அவனைப்பிடித்து திருப்பி விலாவுக்கு மேலிருக்கும் இருதசைகளையும் கைகளால் பற்றி “பயிற்சி போதாது. எடைமிக்க கதாயுதம் ஒன்றை எடுத்து தலைக்குமேல் சுழற்றுவாயென்றால் இந்தத் தசை இறுகிச் சுருண்டுகொள்ளும்” என்றார்.

சர்வதன் “நான் பேரெடைகளையும் தூக்குகிறேன்” என்று சொன்னான். “தூக்குவதல்ல. பேரெடைமிக்க கதாயுதத்தை சுழற்றவேண்டும். கதை எடை மட்டும் கொண்டதல்ல. அதை நெம்பித் தூக்குவதனால் மும்மடங்கு எடையை கைக்கு அளிக்கிறது” என்றார் பலராமர். சர்வதன் “ஆம்” என்றான். பலராமர் சர்வதனிடம் அங்கே கிடந்த பெரிய கதை ஒன்றை எடுத்து “இதைச் சுழற்று” என்றார். சர்வதன் குனிந்து அதை முழுவிசையையும் கூட்டித் தூக்கி ஒருமுறை சுழற்ற அதன் எடைமிக்க உருளை தரையில் அறைந்தது.

“மூடா! தரையுடனா போர் புரிகிறாய்?” என்றார் பலராமர். “முதல் விசை அனைத்தையும் செலுத்தி தூக்கிச் சுழற்றி கதையை மேலெடுக்கிறாய். கதை வந்து நிலம் தொட்டதும் அனைத்து விசையையும் மண் வாங்கிக்கொள்கிறது. மீண்டும் புதியவிசை திரட்டி அதை தூக்க வேண்டியிருக்கிறது. மூன்று முறைக்குமேல் உன்னால் விசை திரட்ட முடியாது. மண்ணில் அது பாய்ந்து பின் நீ மீண்டும் விசை திரட்டி அதை தூக்குவதற்கு முந்தைய சில கணங்களில் எதிரிக்கு முன் படைக்கலக் காப்பு இன்றி நிற்கிறாய். உன் தலையை உடைத்து கூழென ஆக்க அவனால் இயலும்.”

“நோக்குக! முதல்விசை திரட்டி கதையை தூக்கியபின் அவ்விசையைக் கொண்டே பன்னிருமுறைவரை இக்கதையை சுழற்ற முடியும். அதற்கு உன் கீழ் விலாத் தசைகள் பெருத்திருக்க வேண்டும். அதன் மேல் கொழுப்பு படிந்திருக்கலாகாது. வெறும் கைகளை வைக்கும்போதே தசைநாரின் முறுக்கம் தென்படவேண்டும்” என்றபின் “நோக்குக!” என்று அந்தக் கதையை அவனிடமிருந்து வாங்கி ஒரே மூச்சில் தூக்கி காற்றில் சுழற்றினார். அவரைச் சுற்றி அதன் எடைமிக்க உருளை விம்மியபடி சுழன்று வந்தது. எட்டு அடி முன்னால் எடுத்து வைத்து திரும்பி தரையிலிருந்த பிறிதொரு கதையை ஓங்கி அடித்தார். அதன் இரும்புருளை உடைந்து செதில்களாக தெறித்தது.

கதையை தரையில் ஊன்றியபின் “சரியான முறையில் சுழற்றினால் இதைக்கொண்டு தேர்களை உடைத்துத் தள்ள முடியும். யானைகளை கொன்று சரிக்கமுடியும்” என்றார் பலராமர். “இன்னும் எத்தனை நாள் இங்கிருப்பாய்?” சர்வதன் “சில நாட்கள். அதன் பிறகு ஊர் திரும்ப வேண்டியிருக்கும். உங்களிடம் எந்தை அனுப்பிய ஒரு செய்தியை சொல்லிச் செல்ல வேண்டும்” என்றான். “அரசியல் செய்தியென்றால் அதை அவையில் சொல். நான் களத்தில் அரசியல் பேசுவதில்லை” என்றார் பலராமர்.

“மெதுவாக மெதுவாக” என்று யௌதேயன் கூச்சலிடுவதைக் கேட்டு சர்வதன் திரும்பிப்பார்த்தான். சாம்பன் தன் வாளை சுழற்றிக்கொண்டு முன்னால் செல்ல அவ்வீச்சை அவ்வப்போது தன் வாளால் தடுத்தபடி காலடி வைத்து யௌதேயன் பின்னால் சென்றான். அவன் நெற்றிக்குழலை சீவிச் சென்றது சாம்பனின் வாள். காக்கையிறகென முடிக்கீற்று தரையிலுதிர சூழ்ந்திருந்த யாதவர்கள் குரலெழுப்பி நகைத்தனர். மீண்டும் ஒருமுறை வாள் எழுந்து அவன் இடைக்கச்சையை வெட்டிச்செல்ல இடுப்பிலிருந்து ஆடை நழுவியது. ஒருகையால் அதைப்பற்றியபடி “போதும்! எனக்கு பயிற்சியில்லை” என்று யௌதேயன் கூவினான். மீண்டுமொருமுறை வாள் மின்னிச் செல்ல அவன் தோளில் நீண்ட சிவந்த கோடு விழுந்து குருதி பீறிட்டது.

பலராமர் “என்ன செய்கிறாய்? மூடா, நிறுத்து!” என்று கூவினார். “கற்றுக்கொடுக்கிறேன்” என்றபடி மீண்டும் வாளைச் சுழற்ற ஓங்கிய சாம்பனின் கையை நோக்கி கீழிருந்து எடுத்த ஒரு கதாயுதத்தை வீசினான் சர்வதன். வாள் தெறித்துச் சுழன்று அப்பால் மண்ணில் விழ எடையுடன் கதை மண்ணை அறைந்தது. வலக்கையை இடக்கையால் பற்றி காலிடுக்கில் வைத்து அழுத்திகொண்டு வலிமுனகலுடன் உடலை ஒடுக்கிக்கொண்டு சுழன்றான் சாம்பன். நான்கு அடிகளில் அவனை அணுகி இடைபற்றி தலைக்குமேல் தூக்கி ஓங்கி தன் தொடைமேல் அவனை அறையப்போனான் சர்வதன்.

“மைந்தா, நிறுத்து!” என்று பலராமர் கூவ சர்வதன் தயங்கி பின்பு சாம்பனை நிலத்தில் வீசினான். அவன் மண்ணில் தோள் அறைய விழுந்து புரண்டு கால்களை மடித்து மார்புடன் அணைத்துச் சுருண்டபடி முனக அவன் தம்பியர் ஓடிவந்து அவன் அருகே குனிந்தனர். சுருதன் “விலகுக! விலகுக!” என்று கூவ விருஷனும் சுமித்ரனும் அவனைத் தூக்கி அமரச்செய்தனர். பலராமர் ஓடிவந்து சாம்பனை ஒருகையால் பற்றித் தூக்கி அவன் முகத்தை நோக்கி பற்களைக் கடித்தபடி “என்ன செய்தாய்? மூத்தவனுக்குக் காவலாக இவனை அனுப்பியிருக்கிறார்கள் என்றால் இவன் முன் வைத்து அவனை நீ சிறுமை செய்ய முடியுமா?” என்றார். “அவன் பைமசேனி என்று தெரியாதா உனக்கு? அறிவிலி! ஒருகணத்தில் உன் முதுகெலும்பை முறித்திருப்பான்.”

சர்வதன் பற்களைக் கடித்தபடி “களம் நிற்க வேண்டுமென்று விரும்பினால் ஒரு வாய்ப்பு தருகிறேன், சாம்பரே. இதோ இங்கு நின்றிருக்கும் உங்கள் இளையோர் அனைவரும் ஒரே தருணத்தில் தாங்கள் விரும்பிய படைக்கலங்களுடன் என்னை எதிர்கொள்ளலாம். ஒரு முறைக்குமேல் எவரையும் அடிக்க மாட்டேன் என்றும் நான் சொல்லிடுகிறேன்” என்றான். பலராமர் “வேண்டியதில்லை. உனது ஒரு அடியைத் தாங்கும் ஆற்றல் கொண்ட யாதவமைந்தர் எவருமில்லை. விடு!” என்றார்.

சாம்பன் எழுந்து தன் உடைந்த கையைத் தூக்கி அசைத்தபடி விழிகள் நீர்கொள்ள பற்கள் கிட்டித்திருக்க “எலும்பு உடைந்துவிட்டது, தந்தையே” என்றான். “தலை உடையவில்லை என்று ஆறுதல் கொள், கீழ்மகனே” என்று பலராமர் சொன்னார். திரும்பி ஏவலனிடம் யௌதேயனை சுட்டிக்காட்டி “இந்தக் குருதியை துடைக்கச் சொல்! அறச்செல்வனின் குருதி, யாதவமண்ணில் விழகாலாது அது” என்றபின் சுருதனிடம் “அழைத்துச் செல் இவர்களை! ஆதுரசாலைக்குச் சென்று எலும்புகளை சேர்த்துக்கட்டு” என்றார்.

ஏவலன் மரவுரியால் யௌதேயனின் தோளில் இருந்த காயத்தை அழுத்திக்கட்டினான். “எந்தையே, தாங்கள் இப்போது சொன்ன வார்த்தைகளை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இவர்கள் அறிவிலிகள், எண்ணாது துணிபவர்கள். இவர்களால் ஒருபோதும் யாதவ குலத்தை காத்து நிற்க இயலாது. இன்றல்ல, நாளையும் யாதவ குலத்திற்குக் காவலென நிற்கப்போகிறவர்கள் என் இளையோர் மட்டுமே” என்றான் யௌதேயன்.

“எந்தையர் இப்புவி கண்ட மாவீரர்கள். அவர்களில் இருவரும் ஆளுக்கிருவரென பெருகி இதோ நம் முன் நின்றிருக்கிறார்கள். இரண்டு பீமசேனர்கள் இரண்டு அர்ஜுனர்கள். அவர்களால் காக்கப்படும் உங்கள் குடி எளிய அரசியல் சூழ்தலுக்கு ஆட்பட்டு அவர்களை இழக்க வேண்டியதில்லை” என அவன் தொடர்ந்தான். “உண்மையில் இழக்கப்போவது மட்டுமல்ல, அவர்களை எதிர் தரப்பில் நிற்க வைக்கவும் போகிறீர்கள். எந்தையரையும் அவர்களின் நான்கு மைந்தர்களையும் எதிர்கொள்ள யாதவர்களால் இயலுமா என எண்ணிச்சூழ்க! இத்தருணத்தில் நான் உரைக்க வந்த செய்தி இது மட்டுமே. இதை இனி அவையில் நான் கூறவேண்டியதில்லை.”

பலராமர் அவர்கள் இருவரையும் பார்த்தபடி சில கணங்கள் நின்றார். பின்னர் “ஆம், இந்த மூடர்களை நம்பி துவாரகையோ யாதவப்பெருங்குடியோ இல்லை” என்றார். “ஆனால் அது வேதத்தை நம்பியிருக்கிறது. எந்த அழியாச்சொல்லால் மழைமுகில்களை இந்திரன் ஆள்கிறானோ, எந்த வானமுதால் புல்வெளிகளை வருணன் ஆள்கிறானோ, அனலோனும் மாருதர்களும் கதிரோனும் எந்த அன்னத்தை உண்கிறார்களோ அந்த வேதத்தால். அதுவே எங்கள் பொறுப்பு. எங்கள் கடன் அதற்கு மட்டுமே” என்றபின் திரும்பி நடந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

என் படைப்புகள் பற்றி…

$
0
0

 

 

81CJtL1EQoLஅன்புள்ள ஜெயமோகன்,

நான் இதுவரை தங்கள் படைப்புகளுக்கு எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து “ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும்” என்ற தலைப்பில் நூலாகப் பதிப்பித்திருக்கிறேன்.

இதில் வெண்முரசு வரிசை நாவல்கள் முதல் வேறு சில நாவல்களும் சிறுகதைகளும் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இது பேப்பர் பேக் நூலாகவும், கிண்டில் நூலாகவும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

https://www.amazon.in/Jeyamohan-Novelkalum-Sirukathaikalum-Kesavamani/dp/1976563755

அன்புடன்,
கேசவமணி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மையநிலப்பயணம் -கடிதங்கள்

$
0
0
IMG_5094
வணக்கம் ஐயா..

தங்களின் மைய நில பயண கட்டுரையில் வட இந்திய மாநிலங்களின் பின் தங்கிய கல்வி நிலை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்

தங்கள் கவனத்திற்கு…..

கீழே உள்ள இணைப்பு, இந்தியா முழுவதுமான மாநிலங்களில் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை பற்றி குறிப்பிடுகிறது.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/311017/of-8-lakh-tamil-nadu-state-board-students-only-20-enter-iits.html

அன்புடன் 

நாஞ்சில் சுரேஷ்.

IMG_5107

ஜெ அவர்களுக்கு
வணக்கம்..
மையநிலப் பயணம் தினசரி படிக்கிறேன். உங்கள் வாசகராய் இருப்பது எத்தனை சிறந்த அனுபவம்!!
வாழ்நாளில் நாங்களெல்லாம் போகவே முடியாத, அற்புதமான இடங்களையும், வரலாற்று சின்னங்களையும் என் கணினித்திரையில் காணவைக்கிறீர்கள்..
எத்தனை கோடி நன்றி சொல்வது!!
பயணங்கள் எதற்கு செல்ல வேண்டும் என்பதை உங்கள் வார்த்தைகளில் மிக அழகாகக் கூறினீர்கள்.
உலகம் என்பது நம் இல்லத்திற்கு வெளியே இருப்பது, நாம் அறியாதது. அதை அறிவதே பயணம் என்பது.
 “
சத்தியமான வார்த்தைகள்.. பல மைல் தூரம் கடக்க வேண்டும் என்பது இல்லை.. மிகச்சில கிமீ பயணம் கூட நம் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக அமையும்..
எத்தனை அழகு அச்சிற்பங்களில்.
“”காலையொளியில் தீர்த்தங்காரர்களைப் பார்ப்பது விழியையும் மனதையும் நிறைக்கும் அனுபவம். அணியற்ற மானுட உடல். மானுட உடலே ஓர் அணி என்பதுபோல ஆண்மையின் முழுமை கூடிய தோற்றம். வெளியை நோக்கி கனிந்த ஊழ்கநிலையில் நின்றிருந்தனர். இங்குள்ள அனைத்தையும் துறந்தவர்கள் கீழே நோக்க என்ன உள்ளது?””
உண்மை தான் ஜெயமோகன்…
என்னால் அதை மனதுக்குள் காண முடிகிறது..
நன்றி நன்றி  .. அருமையான அனுபவத்தைப் பகிர்வதற்கு… ஒரு வேளை நாங்கள் நேரில் போனால் கூட இவ்வாறு பார்ப்போமா என்று தெரியவில்லை..
பவித்ரா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குருவியின் வால்

$
0
0

vc1

நத்தையின் பாதை 6

 

1988ல் சுந்தர ராமசாமியைப் பார்க்க மலையாளக் கவிஞர் அய்யப்பப் பணிக்கர் வந்திருந்தார். அவர்கள் நெடுங்கால நண்பர்கள். அய்யப்பப் பணிக்கர் நெய்யாற்றங்கரையில் அப்போது வசித்துவந்த மூத்த காந்தியரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கச்செல்வதாகச் சொன்னார். சுந்தர ராமசாமியும் உடன்கிளம்பினார். நான் அப்போது அங்கிருந்தமையால் சம்பிரதாயமாக  வருகிறீர்களா என்று கேட்கப்பட்டது. பாய்ந்து ஏறிக்கொண்டேன்.

 

அவர்கள் பேசிக்கொண்டே சென்றதிலிருந்து ராமச்சந்திரன் அவர்களைப்பற்றி ஒரு சித்திரம் எனக்குக் கிடைத்தது. ஆனால் அன்று இலக்கியவெறி கொண்டிருந்தமையால் இலக்கியம் அல்லாத எதையும் போதுமான அளவு மூளையில் நிறுத்திக்கொள்ளவில்லை. ராமச்சந்திரன் சுதந்திரப்போராட்ட வீரர் , காந்தியை நேரில் அறிந்தவர், நெய்யாற்றங்கரையில் ஒர் அறக்கட்டளையை நிறுவியிருக்கிறார் என்று மட்டும் பதிந்தது.

 

அச்சந்திப்பிலும் அப்போது நான் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ராமச்சந்திரன் ஒர் உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அய்யப்பப் பணிக்கர் ஆரம்பத்தில் பேசினார். பின்னர் சுந்தர ராமசாமி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் ராமச்சந்திரன் திடமான குரலில் பேராசிரியர்களைப்போல கருத்துக்களை வகுத்துரைப்பவராகவும் பிறர் குரலை செவிகொடுத்து கேட்கும் வழக்கம் குறைந்தவராகவும் இருந்தார். மேடைப்பேச்சு போலவே அவருடைய உரையாடல்தோரணை இருந்தது. அவர்கள் பேசிய எதற்கும் எனக்கு முன் தொடர்ச்சி இருக்கவில்லை. ஆகவே தெளிவாக எதுவும் நினைவில் இருக்கவில்லை. ராமச்சந்திரன் தமிழக அரசியலைப்பற்றியும் சூழியல் அழிவுகளைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

 

அய்யப்பப் பணிக்கர் அப்படியே திருவனந்தபுரம் கிளம்பினார். நானும் சுந்தர ராமசாமியும் காரில் திரும்பி வந்தோம். எனக்கு ராமச்சந்திரனைப்பற்றி ஒன்றுமே தெரியாது என்பது சுந்தர ராமசாமிக்கு திகைப்பை உருவாக்கியது. “கேள்விப்பட்டதே இல்லியா? ஒண்ணுமே தெரியாதா? ஏன்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஏன் அந்த ஆச்சரியம் என்று எனக்கும் புரியவில்லை

saun

 

ராமச்சந்திரனைப்பற்றி சுந்தர ராமசாமி சொன்னார். மிகப்பெரிய நாவல்களில்தான் அத்தகைய மாபெரும் கதாபாத்திரங்கள் வரும். சாந்திநிகேதனில்  சி.எஃப்.ஆண்ட்ரூஸின் மாணவராக இருந்தபோது தன் 17 வயதில் ராமச்சந்திரன் காந்தியைச் சந்தித்தார். அதன்பின் தீவிரமான காந்தியப் பணியாளராக ஆனார். காந்தியப் பணிக்காக வந்த டாக்டர்  சௌந்தரம் அவர்களைச் சந்தித்துக் காதல்கொண்டார். சௌந்தரம் புகழ்பெற்ற டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளவயதிலேயே விதவையான பின் குடும்பத்தை மீறி மருத்துவம் கற்க வந்து காந்தியபணியில் ஈடுபட்டவர்.

 

அவர்களின் காதல் சௌந்தரம் குடும்பத்தினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அவர்கள் வெவ்வேறு சாதி. காந்தி அவர்களை ஒருவருடம் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பிரிந்திருக்கும்படிச் சொன்னார். அதன்பின்னரும் அவர்களால் ஒருவரை ஒருவர் காதலிக்கமுடிந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்றார். அவ்வாறு ஓராண்டு பிரிவுக்குப்பின் அவர்கள் மேலும் நெருங்கினர். காந்தியின் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்துகொண்டனர்.

 

சுதந்திரத்திற்குப்பின் ராமச்சந்திரன் கிராமநிர்மாணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவரும் சௌந்தரமும் இணைந்து காந்தியப் பொருளியல் கல்விக்காக உருவாக்கிய அமைப்புதான் திண்டுக்கல் காந்தி கிராமம் என்னும் பல்கலைக்கழகம். உலகமெங்கும் காந்தியப்பொருளியல் சார்ந்த உரைகள் ஆற்றியிருக்கிறார். நூல்கள் எழுதியிருக்கிறார்.

 

இந்திய அரசில் உயரிய பதவிகள் பலவற்றை ராமச்சந்திரன் வகித்திருக்கிறார். ஆனால் பிடிவாதமான எளிய காந்திய வாழ்க்கை கொண்டிருந்தார். அனைத்திலும் ஒழுங்கு, தன்னலமே இல்லாத தனிவாழ்க்கை. காந்திய யுகத்தின் மிகச்சரியான மாதிரி அவர்

 

ஆனால் எனக்கு அவரைப்பற்றி எவருமே சொல்லவில்லை. எந்த அரசியல், இலக்கிய, சமூகவியல் விவாதங்களிலும் அவர் பேசுபொருளாக இருக்கவில்லை. ஏனென்றால் என் தலைமுறையில் செய்தித்தாள்களில் இடம்பெறாதவர்கள் இல்லாதவர்கள் என்று கருதப்பட்டனர். சுந்தர ராமசாமி பெருமூச்சுவிட்டார். பின்பு தனக்குத்தானே என சொன்னார் “மிகப்பெரிய இதிகாசக் கதாநாயகர்களை மறந்திடறோம். சின்னச்சின்ன இலக்கியவாதிகளைக்கூட ஞாபகம் வச்சிருக்கோம்”

 

நான் அவர் உள்ளே ஓடுவதென்ன என்று புரிந்துகொண்டேன். அன்று அவர் உள்ளம் ஏதோ ஒருவகையில் அவர் இல்லாத காலத்தை எண்ணத் தொடங்கிவிட்டிருந்தது. “காலமே என்னை எங்கே கொண்டுசெல்கிறாய்? என் உணர்வுகளில் நான் குழம்பிச்சரிகிறேனே” என்பது போன்ற வரிகளை நிறைய எழுதிக்கொண்டிருந்தார்.

ayyappa

இன்று யோசிக்கையில் இரண்டுவகையான உணர்வுகளால் அவர் அலைக்கழிக்கப்பட்டார் என தோன்றுகிறது. சுவடின்றி மறைவதுதான் உயர்ந்தது, கவித்துவமானது என அவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தார். ஆனால் வருங்காலத்திலும் தன் குரல் ஒலிப்பதைப்பற்றி அவருள் வாழ்ந்த கலைஞன் கனவுகண்டான். சுவடின்றி மறைந்தவர் என்று வரலாறு அவரை நினைவுகூரவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் என ஒரு புன்னகையுடன் இன்று எண்ணிக்கொள்கிறேன்

 

“சிலையை உடை என் சிலையை உடை, கடலோரம் காலடிச்சுவடு’ என்னும் வரியை அவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியால் தீவிரமாக ஆட்கொள்ளப்பட்டிருந்தபோது எழுதியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப்பின் எழுத எழுந்தபோது “என் கொடிபறக்கிறது அடிவானத்திற்கும் அப்பால்” என எழுதினார். இரண்டுமே அவருடைய ஆசைகள்தான்.  “பிறருக்கு நினைவுச்சின்னங்களை சமூகம் உருவாக்கவேண்டும், கலைஞன் தன் வாழ்நாளெல்லாம் செய்துகொண்டிருப்பது தனக்கான நினைவுச்சின்னங்களை மட்டுமே” என்ற அவருடைய வரியை நான் சொன்னேன்.

 

அவருக்கு ஒரு சிறு துணுக்குறுதல் ஏற்பட்டது. “எழுத்தாளனை ஏன் சமூகம் ஞாபகம் வச்சுக்கிடணும்னு சொல்றோம்? ஏன் வச்சுக்கலைன்னா கொந்தளிக்கிறோம்?” என்று அவர் கேட்டார். “வெறும் அகங்காரம்தானா அது?”

 

அன்று அதைப்பற்றி ஏதும் பேசவில்லை. அவர் அது அகங்காரம்தான் என்ற முடிவில் அந்நாள் முழுக்க இருந்தார் என நினைக்கிறேன். மறுநாள் காலத்தை வெல்லும் படைப்பைப் பற்றி கனவுகாணத் தொடங்கிவிட்டிருப்பார். ஏனென்றால் அக்கனவுகள் இல்லை என்றால் இலக்கியவாதி செயல்பட முடியாது.

 

நான் என்னும் அகங்காரம் இல்லையேல் இலக்கியம் இல்லை. இந்தப்பூமியின் மக்கள்தொகை பிரம்மாண்டமானது. இதன் நிகழ்வுவலை எண்ணிப்பார்க்கக்கூட முடியாதது. அனைத்தையும் விட ஒருகணம் இருந்து மறுகணம் மறையும் இதன் தற்காலிகத்தன்மை பேதலிக்க வைப்பது. இதை நோக்கி ஒருவன் தன் எண்ணங்களை, கற்பனையை முன்வைக்க எழுகிறான் என்றால் அதுவே மிகப்பெரிய ஆணவம்தான்.

ayyappa

ஆகவே இலக்கியம் அரைஅறிதல்தான். ஆணவம் இருக்கும்வரை முழுமையறிதல் சாத்தியமும் அல்ல. மெய்யறிதலில் அழிவது ஆணவமும் கூடத்தான். அதன்பின் அறிவில் அறிவென அமைவது மட்டுமே அவன் செய்யக்கூடுவதாக இருக்கும். இலக்கியமேதைகள் ஆணவத்தால் அலைக்கழிக்கப்படும் ஞானிகள். தன்மைய நோக்கு என்னும் அடிப்படைப்பிழை கொண்ட மெய்ஞானமே இலக்கிய உண்மை என்பது. ஆகவே எந்த இலக்கிய உண்மையும் அதற்கு நிகரான பிறவற்றால் சமன்செய்யப்பட்டுத்தான் முழுமைநோக்கிச் செல்லமுடியும்.

 

இலக்கியவாதியின் நான் என்பது எளிய லௌகீக ஆணவக்காரர்களின் தன்னுருவகம் போல எளியதும் சிறியதும் அல்ல என்பதே வேறுபாடு. அதிகாரமும் புகழும் பணமும் அளிக்கும் தன்முனைப்பு அல்ல அது. தன்னை தன்னைச்சூழ்ந்த சமூகமாகவே உணரும்போது எழுத்தாளன் அடையும் தன்னுணர்வு அது. தனக்கு முன்னும்பின்னும் என ஒரு மாபெரும் வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகித்துக்கொள்வதன் பெருமிதம் அது

 

sundara ramasamy

 

ஜெயகாந்தனிடம் ஏராளமாகப் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு உரையாடலிலும், முழுப்போதையிலும்கூட, வள்ளுவன் முதல் வள்ளலார் வரை வந்துகொண்டே இருப்பார்கள். பாரதியும் புதுமைப்பித்தனும் ஆர்.கே.கண்ணனும் எழுவார்கள். அவருடைய தந்தை பெயர் தண்டபாணிப்பிள்ளை என்பதை அவருக்கு எழுதப்பட்ட அஞ்சலிக்குறிப்பில் இருந்துதான் தெரிந்துகொண்டேன்.

 

உண்மையில் இந்த தொடர்ச்சி என்பது எழுத்தாளன் உருவாக்குவதுதான். இந்த இல்லத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொன்றுக்குப் பாய்ந்து அவன் தன் வலையை நெய்துகொண்டே இருக்கிறான். தான் எந்த இலக்கிய, மெய்யியல் மரபின் தொடர்ச்சி என ஏதேனும் வகையில் அறிவிக்கை செய்யாத பெரும்படைப்பாளிகள் எவருமில்லை.

 

மானுட சிந்தனை என்பது கீழே விழுந்த நீர் போல சிதறிப்பரவும் ஒரு அராஜக வடிவமாகவே இருக்கமுடியும். அதில் ஒரு வடிவ ஒழுங்கை உருவாக்குபவன் எழுத்தாளன்தான். தொடர்ச்சியை, தர்க்கபூர்வமான பரிணாமத்தை அவன் கட்டமைக்கிறான் யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல் … என பட்டியலிடுபவன் ஒரு வரலாற்றை உருவாக்கி நவீனத்தமிழனுக்கு அளித்துவிட்டுச் சென்றுவிட்டான். அது என்றுமிருக்கவேண்டும் என அவன் விழைவான், அக்குரலாக தானும் நிலைகொள்ளவேண்டும் என்றும்.

 

ஆகவே காலத்தில் நிலைகொள்ளவேண்டும் என்பது எழுத்தாளனின் மிகைவிருப்பம் அல்ல, அவன் செய்யவந்த கடமையே அதுதான். காலத்தை கட்டி எழுப்புதல். வரலாறு பண்பாடு என அதை உருவாக்கி தலைமுறைகளுக்கு அளித்தல். இன்றுவரை வந்துசேர்ந்த படைப்பாளிகளே நம்முடைய பண்பாட்டின் நேற்று. அவர்களிடமிருந்து பெற்று தான் முன்னெடுப்பதை நாளையோர் கைகொள்ளவேண்டும் என விழைவதே இலக்கியவாதியை எழுதச்செய்யும் ஆற்றல். நாமறிந்த நேற்று என்பது கம்பனும் சேக்கிழாரும் உருவாக்கியது. நாளை நம் கொடிவழியினர் அறியப்போகும் வரலாறென்பது இன்று இலக்கியவாதிகளால், சிந்தனையாளர்களால் அமைக்கப்படுகிறது

 

ராமச்சந்திரன்கள் மறைவதுதான் இயல்பு. இப்புவியில் வேர்கொண்டு எழுந்து வான்சூடி நின்ற மாமரங்கள் அனைத்தும் ஆயுள்முடிந்து மண்ணில் மட்கி மறைந்துள்ளன. அவ்வியல்புக்கு எதிரான செயல்பாடே இலக்கியம். அது காலச்சமர். நான் என் சொல்லில் ராமச்சந்திரனை அடுத்த ஆயிரம் தலைமுறைகள் நினைக்கும்படிச் செய்தேன் என்றால் எழுத்தாளனாக என் கடமையில் வென்றவன் ஆவேன்.

 

இரட்டைவால்குருவி குறித்து ஒரு குழந்தைக் கதை உண்டு. அது கிளையில் அமர்ந்து தன் வாலை ஆட்டும்போது தலையும் ஆடும். காட்சியும் ஆடும். “நான் வாலை ஆட்டினால் இந்த உலகமே ஆடுமே” என்று அது எண்ணிக்கொள்ளுமாம். அந்த இரட்டைவால் குருவியைப்பார்த்து உலகியல் மட்டுமே அறிந்தவர்கள் சிரிக்கக்கூடும். ஆனால் கடவுள் குனிந்துபார்த்து அன்புடன் புன்னகைப்பார். அவர் அதை இங்கே அனுப்பியதே அப்படி உலகை ஆட்டுவிப்பதற்காகத்தான். இவ்வுலகை எவரேனும் எவ்வகையிலேனும் ஆட்டுவிக்கமுடியும் என்றால் அப்படித்தான் இயலும்.

 

விகடன் தடம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16850 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>