Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17286 articles
Browse latest View live

வாழ்க்கை எனும் அமுதத்துளி

$
0
0

எனக்குப்பிடித்த இன்னொரு பாட்டு. லோகி எழுதிய செங்கோல் படத்தின் பாடல் இது. விதி வசத்தால் கேடியாக ஆகி சிறைசென்று வாழ்க்கை தடம்புரண்டு, அனைத்தையும் இழந்து, சொந்த சகோதரியை வேசியாகவும் தந்தையை கூட்டிக்கொடுப்பாளனாகவும் பார்க்க நேர்ந்து மனம் உடைந்து மேலே வாழ எண்ணமே இல்லாமல் சேதுமாதவன் [மோகன்லால்] தெருவுக்கு வருகிறான். நள்ளிரவில் தெருவிலே வாழும் ஒரு பிச்சைக்காரக்குடும்பம் இந்தப்பாட்டை பாடுகிறது.

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது. இதன் பல வரிகள் லோகியும்சேர்ந்து உருவாக்கியவை. மகத்தான விஷயங்கள் முன் கண்ணீருடன் நின்ற கலைஞனை இப்போது எண்ணிக்கொள்கிறேன்

படம் செங்கோல்
இசை ஜான்சன்
பாடல் கைதப்றம் தாமோதரன் நம்பூதிரி
பாடியது ஏசுதாஸ்

மதுரம் ஜீவாம்ருத பிந்து!
ஹ்ருதயம் பாடும் லயசிந்து!
மதுரம் ஜீவாம்ருத பிந்து

மதுரம் ஜீவாம்ருத பிந்து

சௌகந்திகங்ஙளே உணரூ வீண்டும் என்
மூகமாம் ராத்ரியில் பார்வணம் பெய்யுமீ
ஏகாந்த யாம வீதியில்!

தாந்தமாணெங்கிலும்..
தாந்தமாணெங்கிலும் பாதிராக்காற்றிலும்
வாடாதே நில்குமென் தீபகம்!
பாடுமீ ஸ்னேகரூபகம் போலே

[மதுரம் ஜீவாம்ருத பிந்து]

சேதோ விகாரமே நிறயூ வீண்டுமென்
லோலமாம் சந்தியயில் ஆதிரா தென்னலின்
நீஹார பிந்து சூடுவான்!

தாந்தமாணெங்கிலும்
தாந்தமாணெங்கிலும் ஸ்வப்னவேகங்களில்
வீழாதே நில்குமென் சேதன
நின் விரல் பூ தொடும்போள் என் நெஞ்சில்!

[மதுரம் ஜீவாம்ருத பிந்து!]

*

இனியது வாழ்க்கைஎனும் அமுதத்துளி
இதயம் பாடும் தாளத்தின் சிந்து

நறுமண மலர்களே விழியுங்கள் மீண்டும்
என் ஊமை இரவுகளில் பௌர்ணமி பெய்யும்
இந்த ஏகாந்த யாம வீதியில்!

கலங்கியதென்றாலும்,
ஆம் கலங்கியதென்றாலும்,
நள்ளிரவுக்காற்றிலும்
வாடாமல் நிற்கின்றது என் தீபம்!
நான் பாடும் இந்த அன்பின் உருவகத்தைப்போல.

இனிய உணர்வுகளே நிறையுங்கள் மீண்டும் என்
மெல்லிய அந்தியின் ஆதிராநாளின் தென்றலின்
மென்பனித்துளியை சூடுவதற்காக!

கலங்கியதென்றாலும்,
ஆம் கலங்கியதென்றாலும்
கனவு வேகங்களில்
வீழாமல் நிற்கின்றது என் பிரக்ஞை,
உன் விரல் பூ தீண்டும்போது என் நெஞ்சில்!

கலங்கும் தனிய கணங்களில் வாழ்க்கையின் சாராம்சமாகவே நம்முடன் வரும் பாடல் என்று எனக்கு படுவதுண்டு இது.

 

 

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் ஆகஸ்ட் 23, 2010

தொடர்புடைய பதிவுகள்


காலையில் துயில்பவனின் கடிதம்

$
0
0
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
என்னுடைய கடிதத்தை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி.
அயன் ராண்டின் மேல் எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமையை உங்களுக்கு எழுதுவதற்காக முயன்று கொண்டிருந்தேன். நீங்கள் எழுதிய அயன் ராண்ட் கட்டுரைகளை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருந்தேன். அதை முடிப்பதற்குள் இதை உங்களுக்கு அனுப்பி விடுகிறேன்.
நண்பர் சுவேக்கின் பதிலுக்கும் வழிகாட்டுதலுக்கும் மிகவும் நன்றி.
இதை(GENETICS) பற்றிய பேச்சு எனக்கும் அப்பாவுக்கும் முன்னரே எழுந்தது. எனக்கு தூக்கம் இவ்வாறாக தினமும் மாறுவதற்கு மரபணு தான் காரணம் என்று என் அப்பாவிற்கு புரிந்தவுடன் அந்த மரபணுவை கண்டுபிடித்து சரி செய்துவிடுவோம் வா என்று அழைத்தார்.  இது சரிசெய்து கொள்ளக்கூடியது அல்ல என்று விளக்கினேன்.
மேலும் குழந்தைகளுக்கு இந்த மரபணு கடத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்பது உண்மை. ஏற்கனவே ஆடிசத்தின் மரபணு என் குடும்பத்தில் பரவியிருப்பதை கவனித்திருக்கிறேன். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது   ” நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன். வேண்டும் என்றால் தத்தெடுத்து கொள்ளலாம்” என்று உணர்ச்சி கொந்தளிக்க பேசியிருக்கிறேன்.
“STILL ALICE” நாவல் இந்த சிக்கலை பற்றி பேசுகிறது(திரைப்படமாகவும் வந்திருக்கிறது). கதையின் படி  Alice Howland என்ற நடுவயது பெண்மணி Harvard ல் Linguistics Professor ஆக வேலை பார்க்கிறார்.  மேலும் உலகம் முழுவதும் Linguistics Expert ஆக அறியப்படுகிறார். அவருக்கு “Early Onset Alzheimer’s disease” இருப்பது கண்டறியப்படுகிறது. இதற்க்கு காரணமாக இருக்கும் மரபணுவும் கண்டறியப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே மூன்று வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த மரபணு சோதனையை மூன்று பிள்ளைகளுக்கும் செய்து விடுவது நன்று என்று பரிந்துரைக்கப்படுகிறது.
நாவலின் இந்த பகுதியை மிகவும் ஆர்வத்துடன் கவனித்தேன்.
மூன்று பிள்ளைகளில் முதலில் பிறந்த இருவரும் உலகியலில் திளைப்பவர்கள். கடைசி பெண்ணாக பிறந்தவர் நாடகக்கலையில் ஆர்வம் கொண்டு அதில் பெரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். Alice மூன்று பிள்ளைகளையும் அழைத்து ” எனக்கு Early Onset Alzheimer’s இருக்கிறது. உங்களுக்கும் இது இருக்க வாய்ப்பிருக்கிறது. என்னை மன்னித்து விடுங்கள்” என்று உருகி அழுகிறார்.  உலகியலில் திளைத்திருக்கும் இரு பிள்ளைகளும் உடனே அந்த மரபணு சோதனையை செய்து கொள்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் Test Positive ஆக வருகிறது.
நாடகக்கலையில் ஈடுபட்டிருப்பவர் “நான் இந்த மரபணு சோதனையை செய்து கொள்ளவிரும்பவில்லை. வருங்காலம் தானாகவே தன்னை அவிழ்த்து கொள்ளட்டும்” என்கிறார். மேலும் இவர் மட்டுமே நினைவுகளை இழந்து வரும் அம்மாவிற்கு துணையாக வீட்டிற்கே வந்து தங்கிவிடுகிறார்.
மேலும் நான் கவனித்த ஒன்று Non 24 மற்றும் DSPD கொண்ட பலர் இயற்கையின் மேல் பெரும்காதலுடனும் இருக்கிறார்கள். இயற்கையை தினமும் கட்டித்தழுவுகிறார்கள். சிலர் கலைகளிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள். உண்மையில் இந்த மரபணுவை அணைபோட்டு தடுத்து நிறுத்துவது  கலைகளையும் இயற்கையின் மேல் கொட்டப்படும் பேரன்பையும் தடுத்து நிறுத்துவதாகவே படுகிறது. இது ஆடிசதிற்க்கும் பொருந்தும். Albert Einstein, Alfred Kinsey, James joyce, Temple grandin, Emily Dickinson, Charles Darwin ஆகியவர்களை “AUTISM SPECTRUM” இன் கீழ் அடுக்குகிறது இன்றைய மருத்துவ உலகம். வளர்ந்த நாடுகளின் ஆடிசம் உள்ள குடும்பங்களில் திருமண வயதினருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்ற குழப்பம் ஏற்படுகிறது. பலர் பெற்றுகொள்வோம் என்ற முடிவுக்கு நகர்ந்துகொண்டிருக்கிரார்கள். மருத்துவ உலகமும் சமூகமும் ஏற்படுத்தும் பயத்தின் காரணமாக சிலர் வேண்டாம் என்றும் முடிவெடுக்கின்றனர். எந்த அளவுக்கு AUTISM SPECTRUM இல் ஒன்றும் தெரியாத குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறதோ அதே அளவுக்கு GENIUS களும் பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பதே உண்மை.
ஆனால் இன்றைய மருத்துவ உலகம் சென்று கொண்டிருக்கும் போக்கை பார்த்தால் வருங்காலத்தில் பல நல்ல மனிதர்கள் உருவாவது குறைந்துவிடும் என்றே தோன்றுகிறது. “POSITIVE EUGENICS” கொள்கை சில நோய்களுக்கு தீர்வை அளித்தாலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றே தோன்றுகிறது.
என் தம்பியையே எடுத்துக்கொள்வோம். அவனுக்கு ஆடிசம் இருக்கிறது தான். ஆனால் அவனை விட மகிழ்ச்சியான மனிதனை நான் இதுவரை பார்த்ததில்லை. அவனை சிரிக்க வைக்க எனக்கு பத்து வினாடிகள் போதும். மேலும் அவன் யாரைப் பார்த்தும் பொறாமைப் படுவதில்லை. அவனுக்கு தத்துவ சிக்கல்கள் இல்லை. நிறைவான வாழ்கையையே வாழ்கிறான்.
கடைசியாக ஒன்று,
நண்பர் சுவேக் “He must feel lucky that he is already in the track of reading and able to narrate.” என்று குறிப்பிடுகிறார். இதுவே என்னை பயமுறுத்துகிறது. நாம் இதை பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் பலர் தூக்கமின்மையால் தற்கொலையின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் தினமும் இரண்டு மூன்று பேர் “Non 24, DSPD” என்று diagnosis செய்யப்படுகிறார்கள். தற்கொலையில் இருந்து மீட்கப்படுகிறார்கள். இவ்வாறு diagnosis செய்யப்பட அணைத்து துயில்நிபுனர்களும், உளவியலாளர்களும், Neurologistகளும் Non 24,DSPD பற்றி அறிந்திருப்பது அவசியம். ஆனால் இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வேறு. பலர் அசால்ட்டாக “Insomnia, Sleep apnea, Depression, Generalised Anxiety Disorder” என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு வெவ்வேறு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு கடைசி வரை இதை பற்றி ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்து ஓய்கிறார்கள்.
உலகத்தில் DSPD, Non 24 என்று diagnosis செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாலாயிரத்தை தாண்டிவிட்டது. [ நாலாயிரத்திற்கு மேல் என்ற எண்ணிக்கை சீனாவை தவிர்த்து] தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அந்த நாலாயிரத்தில் நான் மட்டுமே இந்தியாவில் வாழும் இந்தியன். அதிலும் விந்தை என்னவென்றால் என்னை யாரும் diagnose செய்யவில்லை. நானே என்னை diagnose செய்து கொண்டேன். உலக மக்கள்தொகையில் இருபது சதவிதத்தை கொண்ட இந்தியாவில் இன்னும் பல ஆயிரம் பேர் Non 24,DSPD கொண்டிருப்பார்கள் என்பதே என் கணிப்பு. அவர் சொன்னதை போல நான் லக்கி. லக்கி அல்லாதவர்களின் வாழ்வு மருத்துவர்களின் கையில் தான் இருக்கிறது.
அன்புடன்,
காலையில் துயில்பவன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் –விளக்கம்

$
0
0

 

பொன்பரப்பியில் நிகழ்ந்த தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகச் சென்னையில் நிகழ்ந்த கண்டனக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அதையொட்டி வசைகள், ஏளனங்கள். பொதுவாக இணையத்தின் உளச்சிக்கல்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்கள் ஒரு தனியுலகில் வாழ்கிறார்கள். அன்றாடவாழ்க்கையின் சரிவுகள் தோல்விகளை இணையத்தில் கொட்டும் உச்சமான கசப்பு காழ்ப்புகளைக் கொண்டு நிகர்செய்யும் எளிய மனிதர்கள்.

 

ஆனால் நண்பர்கள் சிலர் சில வினாக்களை எழுப்பியிருந்தனர். நான் இவற்றை ‘முன்வைத்து’ விவாதிக்க இந்த தளத்தைப் பயன்படுத்தப்போவதில்லை. என் தரப்பை மட்டும் இங்கே சொல்லி இதை நிறுத்திவிடப்போகிறேன்

 

அ. தலித் பிரச்சினைகளில் என் ஈடுபாடு என்ன?

 

நான் குமரிமாவட்டத்தில். முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே இடதுசாரிக் கொள்கைகள் வேரூன்றிய கேரள எல்லையில் பிறந்தவன். இடதுசாரிப் பின்னணி கொண்டவர் என் அம்மா. குமரிமாவட்டத்தில் கல்விகற்றுநேரடியாகவே வடகேரளம் சென்று பணியாற்றி 1990 ல் தான் தமிழக மையநிலத்திற்கு வந்தேன். தர்மபுரியில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அன்று அங்கிருந்த கடும் வறுமை, கூடவே சாதிய ஒடுக்குமுறை.

 

வந்த முதல்நாளே ஒருவரை இன்னொருவர் முகத்தைப்பார்த்து சாதிசொல்லி வசைபாடியபடி சாதாரணமாக அழைத்துப்பேசமுடியும் என்பதையும், வசைபாடப்படுபவர் இயல்பாக அதை எடுத்துக்கொள்வார் என்பதையும் கண்டு திகைத்தேன். நகர்மையத்திலேயே தலித்துக்கள் டீ அருந்தமுடியாத கடைகள் இருந்தன. சிற்றூர்களில் நான் கதைகளில் மட்டும் கேட்டிருந்த நேரடியான ஒதுக்குதலை, ஒடுக்குமுறையைக் கண்டேன். தலித்சேரிகள் விலங்குப்பண்ணைகளை விட கீழ்நிலையில் இருப்பதை கண்டேன். விரிவாக இதையெல்லாம் பலமுறை பதிவுசெய்திருக்கிறேன்.

 

அன்று, தலித் மக்களை எவரும் நேரடியாக வசைபாடலாம். காவலர்கள் மாத இறுதியில் தலித் பகுதிக்குச் சென்று கண்ணுக்குப்பட்டவர்களை கைதுசெய்து வழக்குபோடுவார்கள். அன்று தர்மபுரி பகுதியில் தீவிர இடதுசாரிக் குழுக்கள் இருந்தன. பலருடன் எனக்கு அறிமுகத்தொடர்பு இருந்தது. தீவிரஇடதுசாரிக்குழுவினர் ஒருவகையில் அம்மக்களுக்கு காவலாக இருந்தனர். ஆனால் அவர்களைக் காரணம்காட்டி தலித் மக்களை போலீஸ் வேட்டையாட முடிந்தது. அவர்களின் குழுச்சண்டையும் தொடர்பற்ற அரசியலும் தலித் மக்களுக்கு பெரும் சுமையாகத் தெரிந்தது

 

அச்சூழலில்தான் பாட்டாளி மக்கள் கட்சி அங்கே தோன்றியது. அன்று இடதுசாரி இயக்கங்களில் இருந்து விலகியவர்கள் அதில்சென்று சேர்ந்தனர். தீரன், பு.தா.அருண்மொழி, பு.தா.இளங்கோவன், தலித் எழில்மலை போன்றவர்கள் அதன் தலைமை முகங்களாக அறியப்பட்டார்கள். நானறிந்த பல இடதுசாரிச் சமூகச்செயல்பாட்டாளர்கள் அதில் அன்று பணியாற்றினர். அவர்கள் வன்னியர் சங்க அரசியலில் இருந்து பாட்டாளிமக்கள் கட்சியை ஓர் இடதுசாரிக் கட்சியாக உருமாற்ற முயன்றனர். கிராமங்களில் சாதிய உளநிலைக்கு எதிராகப் பேசிய வலுவான குரல்கள் பாட்டாளிமக்கள் கட்சியிலிருந்து எழுந்தன.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அச்சூழலில் வலுப்பெறலாயிற்று. அதிலும் முன்னாள் இடதுசாரிகளே பெரும்பாலும் பங்கெடுத்தனர். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்குமான புரிந்துணர்வை உருவாக்கியவர்கள் இருகட்சியிலும் இருந்த இடதுசாரிகள். உண்மையான ஒரு சமூகமாற்றத்திற்கான வாய்ப்பாக அது தோன்றியது. பின்னர் அச்சூழல் மறைந்தது. பாட்டாளி மக்கள்கட்சியில் இருந்து அந்த இடதுசாரிகள் அனைவருமே வெளியேற நேர்ந்தது.

 

விடுதலைச் சிறுத்தைகள் தோன்றிய ஓராண்டுக்குள்ளேயே சிற்றூர்களில் நேரடியான தலித் ஒடுக்குமுறை இயலாதானதை நான் கண்கூடாகக் கண்டேன். காவல்நிலையங்களுக்குச் சென்று தலித் மக்களுக்காகப் பேசும் ஓர் அமைப்பு அவர்களுக்கு என உருவானது அப்போதுதான். அம்மக்கள் முதல்முறையாக அரசியல்சக்தியாக ஆனார்கள். அவர்களை எவர் வேண்டுமென்றாலும் என்னவேண்டுமென்றாலும் செய்யலாமென்னும் சூழல் மறைந்தது

 

அன்று விடுதலைச்சிறுத்தைகள் என்ற அமைப்பின் தேவையை உணர்ந்தேன். இன்றுவரை அந்த எண்ணம் வலுப்பெற்றபடியேதான் உள்ளது. இன்று எனக்குக் கடிதம் எழுதுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பற்றி, பெரும்பாலும் செவிச்செய்தியாக அறிந்த குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவை அனைத்துமே உண்மை என்றே கொள்வோம். அப்போதுகூட அக்கட்சி இன்றைய தமிழகத்தில் வலுவான சக்தியாக நிலைகொள்ளவேண்டிய தேவை அப்படியேதான் இருக்கிறது.

 

தலித் மக்களுக்கு இன்று தமிழகத்தில் வேறு எந்த ஆதரவு அமைப்பும் இல்லை. மற்ற அத்தனை கட்சிகளும் வேறுசாதியினரால் ஆக்ரமிக்கப்பட்டவை. ஜனநாயகம் பெரும்பான்மைக்குரியது என்பதனால் வேறுவழியே இல்லை. அவர்களுக்கான அரசியல்முகம், சட்டபூர்வ அமைப்பு விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமே. இதுதான் அப்பட்டமான நேரடியான உண்மை.

 

விடுதலைச்சிறுத்தைகள் என்னும் அமைப்பு இல்லாமலானால், ஏன் சற்று ஆற்றலிழந்தால்கூட, அம்மக்கள் மீண்டும் தன்மதிப்பிழந்து சிறுமைகொண்டு பொருளியல் ஒடுக்குமுறைக்கு ஆளாகத்தான் வேண்டும். இன்று விடுதலைச் சிறுத்தைகளை குறைசொல்லும் எவருக்கும் நம்மில் பதினைந்து சதவீதம் இருக்கும் இம்மக்கள் இவ்வளவு ஒடுக்குமுறைக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்படுவதைப் பற்றி எந்த எதிர்ப்பும் இல்லை. எவ்வகையிலும் அவர்களின் அகச்சான்றை அது தொடவில்லை. விடுதலைச்சிறுத்தைகளின் எதிர்ப்புக்குரல் எழுந்தபின்னரே குறைந்த அளவுக்கேனும் அவர்கள் தன்னம்பிக்கையை, தன்மதிப்பை அடைந்தார்கள் என்னும் உண்மையைக் காணும் கண்கூட இல்லை. உண்மையில் அம்மக்கள் என்னதான் செய்யவேண்டும் என்றுகேட்டால் முன்புபோல அடிமையாக இருக்கவேண்டும் என்ற சொல்லை மனதுக்குள் அடக்கிக்கொண்டுதான் இந்த குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

 

நான் அரசியல்செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. அதன் அணிசேரல்கள் போட்டிகள் பிரச்சாரங்கள் எதையும் முழுதாக நோக்கி அறியும் பொழுதும் மனமும் எனக்கு இல்லை. பொதுவாக அரசியலை விவாதிப்பதும் இல்லை. என் ஆர்வங்களும் தேடல்களும் வேறு. அதை என்னைவாசிக்கும் எவரும் அறியலாம். ஆனால் அன்றுமுதல் இன்றுவரை தலித் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல்முகம் கொண்டு திரளும் இந்த ஜனநாயக எழுச்சியின் திட்டவட்டமான தீவிரமான ஆதரவாளன் மட்டுமே. 1991ல் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து இத்தனை ஆண்டுகளில் திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் தேடினாலே ஐம்பது கட்டுரைகளையாவது எடுத்துவிடமுடியும்.

 

ஆ.விடுதலைச் சிறுத்தைகள் குறித்த என் மதிப்பீடுகள் என்ன?

 

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்புடன் எனக்கு மேலோட்டமான தொடர்பு 2009 முதல் உண்டு. அதை பதிவுசெய்துள்ளேன். நண்பர் வே.அலெக்ஸ் வழியாக அத்தொடர்பு மேலும் அணுக்கமாகியது. 2012 ல் வெள்ளையானை வெளியானதைத் தொடர்ந்து நண்பர் வே.அலெக்ஸுடன் தமிழகம் முழுக்க விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பதினெட்டுகூட்டங்களில் பேசியிருக்கிறேன். அப்போதுமுதல் திருமாவளவன் அவர்களை நேரில் தெரியும். இது ஒன்றும் புதியசெயல்பாடு அல்ல.

 

ஆனால் அவ்வமைப்பின் அரசியலில் நான் நேரடியாக ஈடுபடுவதாக இல்லை, ஏனென்றால் அதில் எனக்கு செய்ய ஒன்றுமில்லை. என் இயல்புக்கு அவ்வரசியலின் அன்றாடத்தை பெரிதாகக் கவனிப்பதும் இயல்வதல்ல. பொதுவாக திரளரசியல் என் இயல்புக்கு சரிவராது. ஓர் அரசியல்மேடையில் என்னால் தொடர்ச்சியாகப் பேசவே முடிந்ததில்லை.வெவ்வேறு தருணங்களில் பேச நிகழ்ந்தபோதெல்லாம் திகைப்பும் பதைப்பும்தான். ஓர் அடையாளமாக ஓரிரு சொற்கள் சொல்லமுடியும், அவ்வளவுதான். அரசியலுக்குத் தேவையான ஓங்கிய குரல் என்னிடமில்லை. ஆகவே என் ஆதரவு அறம்சார்ந்தது, அடையாளம் சார்ந்தது

 

நான் மேடைப்பேச்சாளன் அல்ல என்பதும், சிறியவட்டத்திற்குள் மட்டுமே செயல்பட இயல்பவன் என்பதும் என் வரையறையாகக்கூட இருக்கலாம். பொதுவாகவே என்னைக் கூர்ந்து கவனிக்கும் ஒரு அரங்கின்முன், ஏற்கனவே என்னை அறிந்த வாசகர்கள்முன் மட்டுமே என்னால் பேசமுடிகிறது. அவர்கள் நான் பேசுவதன் தொடர்ச்சியை அறிந்தவர்கள் என்பதனால்தான் நான் பேசுவது அவர்களுக்குப் புரிகிறது. இன்றும் படபடப்பும் மூச்சுத்திணறலும் இல்லாமல் மேடையில் பேச இயல்வதில்லை. இதனால்தான் நான் இலக்கியத்தில்கூட பெரிய அரங்குகளில் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை நோக்கம், இங்கே அது ஆற்றும் பணி மிகமிக முதன்மையானதும் தவிர்க்கமுடியாததுமாகும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு நான் காணும் காரணங்கள் இரண்டு.

 

ஒன்று, தமிழகத்தில் இன்று எவராயினும் நிலம் என்பது அரசியல் அதிகாரம் வழியாக மட்டுமே தக்கவைத்துக்கொள்ள இயல்வது. அரசியலதிகாரம் இல்லாதவர்களின் நிலம் கைவிட்டுச்செல்கிறது. பிராமணர்கள், வேளாளர்கள் விரைவாக நிலமிழந்தது வரலாறு. ஆனால் அவர்கள் வேறுவகையில் மேலெழுந்தார்கள். தலித் மக்களிடமிருக்கும் குறைவான நிலம் சென்றகாலங்களில் மதிப்பில்லாதது. இன்று அந்நிலம் மதிப்பிற்குரியதாகிவிட்டிருக்கிறது. அவர்கள் அதிகாரம் அற்றிருப்பார்கள் என்றால் அதை இழப்பார்கள்.

 

இரண்டு, தலித் மக்கள் அடைந்த ஓரளவு எழுச்சி காந்தியின் காங்கிரஸ் அவர்களுக்கு அளித்த இடஒதுக்கீட்டிலிருந்து வந்தது. இன்று அரசுவேலைகள் இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. ஆகவே அந்த இடஒதுக்கீட்டின் பயன் குறைந்து வருகிறது. அதேசமயம் தலித் மக்கள் படிப்பில் மேலேறுகிறார்கள். ஆகவே அவர்கள் வேறுதொழில்களில் வணிகங்களில் ஈடுபட்டாகவேண்டும். அது கடும்போட்டி நிலவும் சூழல். அங்கே அவர்கள் சற்றேனும் நிலைகொள்ள அரசியலதிகாரம் இன்றியமையாதது

 

இந்தப் பொருளியல் அறைகூவல்களைச் சந்திக்கத் தேவையான தன்னம்பிக்கையை அளிக்க, தன்மதிப்பை காக்க ஓர் அமைப்பு அவர்களுக்குத் தேவை. அது இன்றையசூழலில் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒன்றாகவே இருக்கமுடியும். ஏனென்றால் அது தன் பயனை, பணியை நிரூபித்திருக்கிறது.

 

இங்கே எந்த அரசியல் கட்சிக்கும் இருக்கும் எல்லா சிக்கல்களும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இருக்கும். அதுவும் பணம்திரட்டியாகவேண்டும். கூட்டணிச் சமரசங்கள் செய்துகொண்டாகவேண்டும். அதிலும் பலதரப்பட்டவர்கள் பங்கேற்பார்கள். தற்காலிக எதிரிகளை நோக்கி அறைகூவும் மொழியில் பேசியாகவேண்டும். ‘தூய இலட்சியவாத’ அமைப்பாக அது செயல்பட இயலாது. ‘நடைமுறைப் பயன்’ சார்ந்தே அது முடிவெடுக்க முடியும்.

 

விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல்கொள்கைகள் என்ன, அது முன்வைக்கும் செயல்பாடுகள் என்ன என்பதும் எனக்கு பொருட்டு அல்ல. நான் அதை ஆதரிப்பது அதன் சமூகத்தேவை இன்று தவிர்க்கவே முடியாதது, மாற்று இல்லாதது என்பதனால் மட்டுமே. என் ஆதரவு என்பது அறச்சார்பினால் மட்டுமே. அத்தகைய அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் அரசியல், எதிர்மறைப்பண்பில்லாத அரசியல், நமக்குத்தேவை என்பதையே சொல்லிவருகிறேன்.

 

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு பிழைகள் செய்யாதது என்றோ தூயது என்றோ நான் நினைக்கவில்லை. அப்படி எந்த அரசியல் கட்சியும் இன்று செயல்பட இயலாது. ஆனால் உறுதியாக ஒன்றைச் சொல்வேன், தமிழகத்தில் இன்றுள்ள அரசியல்கட்சிகளில் இடதுசாரிக் கட்சிகள் இரண்டு ஒழிய வேறு எவற்றைவிடவும் பண்பட்டதும் ஒருங்கிணைவுள்ளதுமான கட்சிதான் விடுதலைச் சிறுத்தைகள்.

இ.திருமாவளவன் பற்றி என்ன நினைக்கிறேன்?

 

நான் திருமாவளவன் அவர்களை பல ஆண்டுகளாக அறிவேன். அவருடைய உருவாக்கக் காலகட்டத்தில் உடனிருந்தவர்களையும் அறிவேன். நான் அறிந்தவரை, தனிப்பட்ட முறையில் பண்பாளர், மானுடரிடையே மேல்கீழ்நிலை நோக்காதவர், உண்மையான வாசிப்பும் அதிலிருந்து உருவாகும் அறிவார்ந்த தகுதியும் கொண்டவர், நல்லிணக்க அரசியலில் நம்பிக்கை கொண்டவர். எந்நிலையிலும் குடியாட்சிநெறிகளை மீற விழையாதவர், பொருளியல் சமூகவியல் பிரச்சினைகள் அனைத்திலுமே ஒட்டுமொத்தநோக்கும் நெடுங்காலப்பார்வையும் கொண்டவர். ஆகவே இன்றிருக்கும் தமிழக அரசியல்வாதிகளில் ஐயமின்றி அவரே தலையாயவர்.

 

அவர் மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்ட, இழிவுசெய்யப்பட்ட ஒரு மக்கள்திரளிலிருந்து சீற்றம்கொண்டு எழுந்து தலைவர் ஆனவர் என்பது அவரையும் பிற அரசியல்தலைவர்களையும் வேறுபடுத்துகிறது. தன் மக்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கான குரலை எழுப்பியபடித்தான் அவர் அரசியலுக்கு வந்தார். அம்மக்களின் சீற்றத்தின் முகம் அவர். அவரிடமிருந்த கோபமும் கொந்தளிப்பும்தான் அவரை அம்மக்கள் தலைவராக ஏற்கச்செய்தது.

 

அதிலிருந்து அவருடைய வளர்ச்சியை கண்கொண்ட எவரும் தெளிவாகக் காணமுடியும். தன் மக்களுக்காகப் பேசிய அவர் இன்று அனைத்துமக்களுக்கான பிரச்சினைகளையும் பேசுபவராக, பேசும் அறிவுத்தகுதி கொண்டவராக உருமாறியிருக்கிறார். அனைவரையும் அணைத்துப்போகும் இயல்புகொண்டவராக, எளிய மானுடருக்குமேல் எழுந்து நின்றிருக்கும் உயரம் கொண்டவராக, எப்போதும் பிறரை மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவராக ஆகியிருக்கிறார்.

 

பொன்பரப்பி நிகழ்வு எந்த ஒரு தலைவரையும் கொந்தளிக்கச் செய்வது. அவர் தலைமைதாங்கும் மக்கள் தாக்கப்பட்டு இழிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய மொழி எத்தனை தற்கட்டுப்பாடு கொண்டதாக, எத்தனை ஆய்வுத்தன்மை கொண்டதாக உள்ளது என எவரும் காணலாம். எண்ணிப்பாருங்கள், இதேபோல தன்னைச்சார்ந்த ஒரே ஒருவர் தாக்கப்பட்டிருந்தால் நம் பிற தலைவர்களின் மொழி எத்தகையதாக இருக்கும்? அவர்கள் எப்படிப் பேசியிருப்பார்கள், என்னென்ன தூண்டிவிட்டிருப்பார்கள்!

 

சென்றகாலங்களில் இங்கே நாம் வழிபடும் அரசியல்தலைவர்கள் திட்டமிட்டு உருவாக்கிய மாபெரும் வன்முறைகளை நாம் அறிவோம் அந்தக்குருதியில் கைநனைத்தபின் எந்த உளச்சான்றும் இல்லாமல் அவர்கள் சொன்ன அணிச்சொற்களையும் அறிவோம். அந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாக்களித்த எவருக்காவது திருமாவளவன் குறித்துப் பேசும் தகுதி உண்டா?

 

சென்ற காலங்களில் திருமாவளவனை தலைமையாகக் கொண்ட மக்களுக்கு எதிராக எத்தனை அப்பட்டமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. கொன்று வீசியிருக்கிறார்கள். குடிசைகளை எரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர் நம் சமூகமனசாட்சியை நோக்கியே பேசுகிறார். வன்முறையின் சொற்களைச் சொல்வதில்லை. நாம் இன்னும் மேம்பட்ட நாகரீக சமூகமாக இணைந்து வளரும் வாய்ப்பைப்பற்றி மட்டுமே பேசுகிறார். எதிரி என்னும் சொல்லைக்கூட பயன்படுத்துவதில்லை, மாற்றுத்தரப்பு என்கிறார். அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும், அவர்களை ஜனநாயகப்படுத்தவேண்டும் என்கிறார்.

 

திரும்பத்திரும்ப திருமாவளவன் ஒரு சிறு கண்டனக்கூட்டத்தில் பேசிய ஒரு காணொளித்துண்டு சுழற்சியில் விடப்படுகிறது. எனக்கு நூற்றுக்கும்மேற்பட்ட முறை அது அனுப்பப்பட்டுள்ளது. அதையொட்டிய கொந்தளிப்புகள். திருமாவளவன் தங்கள் சாதிப்பெண்களை தூக்கிக்கொண்டுசெல்ல திட்டமிடுகிறார், பிறபெண்களை இழிவுசெய்கிறார் என்னும் வகைக் கருத்துக்கள்

 

1991 ல் ராட்னி கிங் [Rodney Glen King] என்னும் கருப்பினத்தவரை அமெரிக்க வெள்ளையினப் போலீஸ் காரை நிறுத்தி கைதுசெய்யமுயன்றது. அவர் திமிறியபோது சுட்டுக்கொன்றது. அது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. ஆனால் கொன்றவர்கள் நீதிமன்றத்தில் விடுதலைசெய்யப்பட்டார்கள். ஏனென்றால் ராட்னி கிங் தாக்கப்பட்டபோது அவர் சீற்றத்துடன் திரும்ப எழும் ஒரு அரைநிமிடக் காட்சித்துளியை  மட்டும் வெட்டி நீதிமன்றத்திலும் தொலைக்காட்சியிலும் மதிரும்பத்திரும்ப காட்டினர். அவர்தான் காவலரை கொல்ல வந்தார் என ஜூரிகளை நம்பச்செய்தனர். அதுதான் இங்கும் நிகழ்கிறது.

 

திருமாவளவனின் மக்கள் எந்தக் காரணமும் இன்றி தாக்கப்பட்டிருக்கிறார்கள். கொன்று வீசப்பட்டிருக்கிறார்கள். அதைப்பற்றிய கொந்தளிப்பு எழுந்துள்ள சூழலில் அவர் அந்த இளைஞர்களிடையே பேசுகிறார். அவரும் கொந்தளிப்பு அடைந்திருக்கலாம். தங்களுக்கு எவருமில்லை என தலித் மக்கள் அவரிடையே மீண்டும் மீண்டும் கூறுவதை நான் கண்டிருக்கிறேன். அச்சூழலில் அம்மக்களின்  தன்னம்பிக்கையை, ஊக்கத்தை நிலைநிறுத்த அவர் சீற்றத்துடன் அறைகூவும் மொழியில் பேசவேண்டியிருக்கிறது. அது அத்தருணத்து உளநிலை, அவ்வரசியலின் ஒரு பகுதி. நெருக்கடிகளில் அவர் பொதுவாக என்ன சொன்னார், எவ்வண்ணம் செயல்பட்டார் என்பதையே ஓர் அரசியலாய்வாளன் நோக்கவேண்டும்.

 

உதிரிச் சொற்துண்டுகளைக் கொண்டு மதிப்பிட்டால் நீங்கள் எந்த தலைவரை தலைவரெனச் சொல்லமுடியும்? இன்றிருக்கும் ஏதேனும் ஒரு தலைவரைச் சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வாறு ஒருதுளிக்காட்சி வழியாக ஒரு முழு அடையாளத்தை அளிப்பது வெறும் சாதியக் காழ்ப்பு. அமெரிக்கக் கறுப்பர்களுக்கு வெள்ளையர் செய்வதும் இதையே. தங்கள் சாதிக்காழ்ப்பையே இத்தகைய புறச்சான்றுகளைக்கொண்டு தனக்குத்தானே நிறுவிக்கொள்கிறார்கள். உங்கள் அகச்சான்றை ஒருகணம் நோக்குக என்பதற்கு அப்பால் அவர்களிடம் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.

 

ஒரு தலைவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என நான் நினைப்பவை தமிழகமெங்கும் பல ஆண்டுகள் அலைந்து உண்மையான சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருத்தல், பலதரப்பட்டவர்களை இணைத்துக்கொண்டு ஓர் அமைப்பை கட்டியெழுப்பும் இயல்பு கொண்டிருத்தல், அடிப்படையான வாசிப்பும் அதிலிருந்து வரும் அறிவுத்தகுதியும் அதன் விளைவான தொலைநோக்கும். திருமாவளவன் அவருடைய சாதியின் தலைவராக தொடங்கியவர். தமிழகத்தைத் தலைமைதாங்கும் தகுதிகொண்டவராக வளர்ந்தவர்.இன்று தமிழகத்தின் முதன்மையான அரசியல்தலைவர் அவரே.

 

ஈ.இதில் நான் அடைவது என்ன?

 

கடிதங்கள் முகநூல் குறிப்புகள் வழியாக தொடர்ச்சியாக வரும் வெறுப்புமிழ்தல்களில் முக்கியமானது எனக்கு என்ன கிடைக்கிறது அல்லது கிடைக்கும் என்பது. இவர்கள் அடிப்படையில் உலகியலாளர்கள். எந்த ஒருசெயலுக்கும் உடனடியாக உலகியல் லாபம் ஒன்று வேண்டும் என நினைப்பவர்கள். இவர்களின் கட்சி, கொள்கை ஈடுபாடும் அதனடிப்படையிலேயே. ஆகவே இன்னொருவரும் அப்படித்தான் இருக்கமுடியும் என நினைப்பார்கள் – விதைப்பதும் உழுவதும் அறுவடைக்காகத்தானே என்னும் எளிய கணக்கு.

 

விடுதலைச்சிறுத்தைகளோ அல்லது திருமாவளவனோ எனக்கு ஏதும் அளிக்கும் இடத்தில் இல்லை. அனைத்துவகையிலும் போராடிக்கொண்டிருக்கும் கட்சி அது. உண்மையில் நான் அவர்களுக்கு அளிக்கும் இடத்தில் இருக்கிறேன் – பத்தாண்டுகளுக்கும் மேலாக பல தனிப்பட்ட நண்பர்களுக்காக தொடர்ச்சியாக அளித்துக்கொண்டும் இருக்கிறேன். அவ்வாறு என்னை வைத்திருக்கும் சினிமாவுக்கும் கேட்டபோதெல்லாம் அளிக்கும் நண்பர்களுக்கும்தான் நன்றிசொல்லவேண்டும். எனக்கு அள்ளியளிக்கும் கட்சிகள் இருக்கலாம், அங்கே நான் செல்லப்போவதுமில்லை.

 

நான் விடுதலைச்சிறுத்தைகளுக்கான ஆதரவால் என் மீது வைக்கப்படும் பலவகையான குற்றச்சாட்டுகளை நிகர்செய்ய முயல்கிறேன் என்பது இன்னொரு கருத்து. இங்கே கொஞ்சம் சுற்றிப்பார்ப்பவர்களுக்குத் தெரியும். இவ்வாறு குற்றம்சாட்டிக் கூச்சலிடுபவர்கள் எவரும் அரசியல்நம்பிக்கை அல்லது இலட்சியவாதம் கொண்டவர்கள் அல்ல. வெறும் தனிப்பட்ட காழ்ப்பாளர்கள். அவர்களை ஆழ்ந்த கருத்துநிலைபாடு கொண்டவர்கள் என்றெல்லாம் நம்பும் அளவுக்கு நான் மூடன் அல்ல. அந்த அளவுக்கெல்லாம் அரசியல்நம்பிக்கையும் இலட்சியவாதமும் இங்கிருக்குமென்றால் நாடு இப்படியா இருக்கும். காழ்ப்புக்கூச்சலுக்கு போடும் முகமூடிதான் இவர்களின் அரசியல்.

 

நான் இச்சூழலில் செயல்படத்தொடங்கி முப்பதாண்டுகள் கடந்துவிட்டன. பலரை நன்றாகவே அறிவேன். தனிப்பட்ட காழ்ப்புகளின் அடிப்படைகள் பல. முதன்மையானது நான்கொண்டிருக்கும் இலக்கிய அளவுகோல்.அதில் ஒருபோதும் தான் தேறமுடியாது என அவர்களுக்கே தெரியவருவதன் தன்னிழிவு. அதை காழ்ப்பாக வளர்த்துக்கொள்கிறார்கள். அரிதாக நானே கடுமையான கருத்துக்களைச் சொல்லி அவர்களின் பகைமையை ஈட்டிக்கொண்டுமிருப்பேன்.

 

ஆகவே நான் என்னதான் செய்தாலும், எதை எப்படி எழுதினாலும், அதை ஒடித்தும் திரித்தும் உள்நோக்கு கண்டுபிடித்தும் வசைபாடிக்கொண்டேதான் இருப்பார்கள். இது தொண்ணூறுகள் முதல் இப்படியேதான் நிகழ்கிறது. இதற்குள் இதற்குப் பழக்கமாகிவிட்டிருக்கமாட்டேனா என்ன?

 

ஈ.இதனால் இழப்பது என்ன?

 

எப்போதும் இத்தகைய ஒரு விவாதம் எழுகையில் ஒரு சிறுவாசகர் எண்ணிக்கையை இழக்கிறேன். அவர்களில் சிலர் ‘மனமுடைந்த’ கடிதங்களை எழுதுவார்கள். இருபதாண்டுகளுக்குமுன் அது கொஞ்சம் வருத்தம் அளிப்பதாக இருந்தது. இன்று இத்தகைய ‘நிபந்தனைகளுடன்’ வாசிக்க வருபவர்களைப்போல எழுத்தாளனுக்குப் பெரும்சுமை வேறில்லை என்ற எண்ணமே இருக்கிறது. இப்படி ஒரு நிபந்தனை அவனுக்கு உள்ளது என்று தெரிந்தால் நானே அவனை கழற்றிவிட்டுவிடவேண்டும் என்றே எண்ணுகிறேன்.

 

‘என் சாதி, என் மதம், என் இனம், என் அரசியல் என் கருத்தியலுடன் ஒத்துப்போகாவிட்டால் உன் எழுத்து எனக்கு முக்கியமில்லை’ என்று சொல்பவன் ஒருபோதும் வாசகன் அல்ல. அவன் இங்கே செலவழிக்கும் நேரம் வீண். நல்லவாசகர் என நாம் நினைப்பவரிலிருந்துகூட இந்த கெட்டவாடை திடீரென்று எழும் என்பது என் அறிதல். இன்று இதற்கும் பழகிவிட்டிருக்கிறேன். .இதற்கு அப்பால் சென்று மானுட ஆழத்தை நோக்கிய உரையாடலாக இலக்கியத்தை வாசிப்பவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள், ஒருபோதும் குறையமாட்டார்கள் என உறுதியை இன்று அடைந்துள்ளேன்.

 

நான் அவ்வளவு தெளிவான அரசியல்நிலைபாடு கொண்டவன் அல்ல. அவ்வளவு தெளியுமளவுக்கு கவனிப்பவனும் அல்ல. பொதுமக்களின் உளநிலையுடன் ஒத்துப்போகும் எளிய அரசியல் என்னுடையது. நான் கவனிப்பது என் அகச்சான்றை மட்டுமே. எனக்கு அறிவுரைகளுடன் எவரும் வரவேண்டாம், எழுத்தாளனுக்கு வழிகாட்டும் சொல் அவன் உள்ளிருந்தே எழவேண்டும். என் எழுத்து உங்களுக்கு எதையேனும் கற்பிக்கிறது என்றால் வாசிக்கலாம்.

 

இங்கிருந்து சென்றபின் நித்யசைதன்ய யதிக்கு அன்றி எவருக்கும் நான் பதில்சொல்லக் கடமைப்பட்டவன் அல்ல.

 

அலைகளில் இருந்து எழுந்த அறிதல்

நெல்லை தொல்.திருமாவளவன் நிகழ்ச்சி

தலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்

சென்னை கண்டனக்கூட்டத்தில்…

அலெக்ஸ் நினைவேந்தல்

அசோகமித்திரனும் திருமாவளவனும்

அரசியல் கடிதங்கள்

இன்றைய அரசியல்

திருமா

ஆணவக்கொலைகள் -கடிதங்கள்

சென்ற வாரம் முழுக்க…

கூடங்குளம் – ஒரு கடிதம்

கூடங்குளம் அனுபவப்பதிவு

ஒரு வரலாற்றுத்தருணம்

அண்ணா ஹசாரே- இரு தரப்புகள்

தலித் நூல் வெளியீடு

விளிம்புக்கும் கீழே சில குரல்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29

$
0
0

சுபாகு தன்னிலை உணர்ந்தபோது துச்சாதனனின் இறப்பு விண்ணில் முரசொலித் தொடராக பரவியிருந்தது. அவன் முன்விழிப்பு நிலையில் அந்த முரசொலியை வேறேதோ இறப்பறிவிப்பு என எண்ணினான். மெல்ல மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தபோது “இளைய கௌரவர் வீழ்ந்தார்!” என முரசுகள் இயம்புவதை உணர்ந்தான். அவனை நோக்கி ஓடிவந்த குண்டாசி “அறிந்தீர்களா? மூத்தவர் சுபாகு யானையால் கொல்லப்பட்டார்” என்றான்.

அவன் தானல்லவா சுபாகு என துணுக்குற்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான். “யானைமேல் அமர்ந்து கங்கையை நீந்திக்கடக்கும் விளையாட்டு. அனைவரும் இறங்கினர். அவர் தவிர பிறர் அனைவரும் மறுகரையை அடைந்தனர்.” சுபாகு “நன்று, அவனுடைய நூலறிதல் அவனுக்கு உதவவில்லைபோல” என்றான். குண்டாசி திகைப்புடன் பார்க்க “நீ செல்க! நான் வருகிறேன்” என்றான். “யானை மறுகரையை அடைந்துவிட்டது, மூத்தவரே, மூத்தவர் சுபாகு மட்டும் வரவில்லை” என்றான் குண்டாசி. சுபாகு “அவன் வருவான்… கங்கையின் ஆழமும் அவனுக்குரியதே. செல்க!” என்றான்.

குண்டாசி சென்றபின் கண்களை மூடிக்கொண்டான். மீண்டும் முரசுகள் ஒலித்துக்கொண்டிருந்தன. “கௌரவனாகிய சுபாகு மறைந்தார். சுபாகு களம்பட்டார்.” நான் அல்லவா சுபாகு? எனில் களம்பட்டது யார்? எங்கோ ஒரு பிழை நிகழ்ந்துள்ளது. என்ன பிழை அது? “பெருமல்லர் களம்பட்டார்! பெருந்தோளர் புகழுடல் அடைந்தார்!” சுபாகு துடித்து விழித்துக்கொண்டான். இறந்தது துரியோதனன் என்றா சொல்கின்றன முரசுகள்? துரியோதனன் களம்படக்கூடுமா? என்ன நிகழ்கிறது? முரசுகள் தெளிவாக ஒலித்தன. “மூதாதையர் அருகணைந்தார் துச்சாதனர்! வெல்க கௌரவக்குடி! வெல்க அஸ்தினபுரி! வெல்க அமுதகலக்கொடி!

முரசொலி மென்படலமாக படிந்த களத்தில் கௌரவப் படைகள் அலறலாக, சொல்லிலா அழுகையாக, அரற்றலாக, அச்செய்தியை அதே விசையில் பரப்பின. பலர் படைக்கலங்களை நிலத்தில் வீசி ஆங்காங்கே அமர்ந்து அழுதனர். நெஞ்சில் அறைந்து வீறிட்டனர். இறந்தவர்கள்போல் மண்ணில் கிடந்த குருதி வழியும் உடல்கள் மேல் மல்லாந்து விழுந்து வானை வெறித்து நோக்கினர். பின்னிருந்து சகுனியின் ஆணை எழுந்தது. “அங்கர் முன்னெழுகிறார்! அங்கர் வெற்றிமுகம் கொள்கிறார்! விரைக! விரைக! படைகள் தங்களை தொகுத்துக்கொள்க! நம் இளவரசரின் குருதிக்கு பழிநிகர் கொள்க!”

ஆனால் ஒவ்வொரு கணமுமென கௌரவப் படை உளவிசையை முற்றிழந்து பின்னகர்ந்து கொண்டிருந்தது. மறுபுறம் பாண்டவப் படை அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எழுந்து முன்வரவில்லை. அவ்வண்ணம் வந்திருந்தால் அப்போதே முடிந்திருக்கும் என்று தோன்றியது. இரு படைகளுமே ஒன்றையொன்று அஞ்சியவைபோல், அருவருத்தவைபோல் விலகிக்கொண்டிருந்தன. அல்லது இரு படைகளுக்கும் நடுவே தோன்றிய ஒன்றைக் கண்டு அவை விலக்கம் கொள்கின்றன.

சுபாகு எழுந்து புரவியை நோக்கி சென்றான். செல்லும்போதே “மூத்தவர் எங்கே?” என்று ஏவலரிடம் கேட்டான். “மருத்துவப்பணியாளர்களால் கொண்டுசெல்லப்பட்டார். நினைவழிந்திருக்கிறார் . அகிபீனா அளிக்கப்பட்டுள்ளது” என்றான் அவனுடன் ஓடிய ஏவலன். சுபாகு புரவியில் விசையுடன் சென்றபடி சகுனியின் ஆணையை செவிகொண்டான். “படைகள் ஒன்று சேர்க! அங்கரையும் அஸ்வத்தாமனையும் கிருபரையும் சல்யரையும் துணை செய்க! பிறை வளைந்து வேல் முனையை அழுத்துக! நாம் சூழ்ந்துவிட்டோம். இதோ கவ்வி நொறுக்கவிருக்கிறோம். இதோ வெற்றி அருகணைந்துள்ளது! இதோ வெற்றிகொள்கிறோம்!”

திரும்பி நோக்கியபோது அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் கிருபரும் சல்யரும் பாண்டவப் படையை முற்றிலும் வளைத்துக்கொள்வதற்காக நெடுந்தொலைவு சென்றுவிட்டனர் என்று தெரிந்தது. கர்ணன் மையத்தில் எழுந்து தன்னை எதிர்த்த அர்ஜுனனை அறைந்து பின்செலுத்தி முன்னால் சென்றுவிட்டமையால் முப்புரி வேலெனத் தோன்றியது கௌரவப் படை. நடுவே முழுமையாகவே மையத் தொடர்பிழந்து, உணர்வு குலைந்து வெறும் திரளென முட்டி மோதி கொப்பளித்துக்கொண்டிருந்தது பாண்டவப் படை. அவர்கள் இழந்ததென்னவென்று ஒருகணத்தில் சுபாகுவுக்கு புரிந்தது. தங்கள் அறவல்லமை மேல் இருந்த நம்பிக்கையை. தெய்வங்கள் உடனுண்டு என்னும் எண்ணத்தை. இத்தருணம்போல் பாண்டவர்கள் எப்போதும் ஆற்றல் குன்றி இருந்ததில்லை.

காவல்மாடத்தின்மேல் சகுனி நின்றுகொண்டிருப்பதை கண்டான். புரவியிலிருந்து இறங்கி அவரை நோக்கி ஓடினான். “மாதுலரே” என்றான். “செய்திகள் அனைத்தையும் அறிவேன். இத்தருணத்தில் நம்மால் சற்று எழ முடிந்தால் நாம் வென்றுவிட்டோம் என்றே பொருள்” என்றார். “நமது படைகள் உளம்சோர்ந்திருக்கின்றன” என்றான் சுபாகு. “ஆம், நாம் நம் தலைவர்களில் ஒருவனை இழந்தோம். நம் அரசரின் பாதி அவன். அவர்கள் இழந்தது மேலும் பெரிது. அவர்கள் இன்றுடன் மூதாதையரின் துணையை முற்றிழந்திருக்கிறார்கள். நம் உளச்சோர்வைவிட அவர்களின் உளச்சோர்வு சற்று மிகுதி. அந்த வேறுபாட்டை இங்கு நின்று இரு படைகளையும் நோக்குகையில் நான் உணர்கிறேன். அதை அவர்களுக்கு சொல்லிவிட முடிந்தால் நாம் வென்றோம்” என்றார் சகுனி.

சுபாகு அவரை வெறுமனே நோக்கியபடி நின்றான். அந்நம்பிக்கையை ஒரு பாதாளதேவனை பார்ப்பதுபோல அச்சத்துடன் பார்த்தான். சகுனியின் உடல் நோயுற்றதுபோல் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகள் வெளிறியிருந்தன. ஆனால் அவர் உள்ளம் நிலைகொண்டிருப்பது கண்களில் தெரிந்தது. “மூத்தவர் துச்சாதனர்…” என சுபாகு தொடங்க “அவன் இறப்பதை நான் எதிர்பார்த்திருந்தேன். ஒருவேளை அவன் இறந்ததனால் அவர்களின் வஞ்சத்தின் வெம்மை குளிர்ந்து அழியக்கூடும். அவர்களை இயக்கிய விசை மழுங்கி அழியவும்கூடும்” என்றார் சகுனி.

சீற்றத்துடன் மேலும் சொல்லெடுக்க சுபாகு முயல “நீ உணர்வதை நானும் உணர்கிறேன். ஆனால் இக்களத்தில் கௌரவர்களின் நிரை முழுமையாகவே மடிந்துவிட்டது. அவன் மடிந்தான் என்னும் செய்தி வந்தபோது முதலில் நான் எண்ணியது, இவன் முதல் நாளிலேயே மடிந்திருந்தால் எஞ்சிய மைந்தர்கள் பிழைத்திருக்கக் கூடுமோ என்றுதான்” என்றார். “அவரை கொன்றவர் நீங்கள்!” என்றான் சுபாகு. “ஆம். இங்குள்ள அனைவரையும் கொல்பவன் நானே” என்று சகுனி சொன்னார். உதடுகள் ஏளனச் சிரிப்பில் வளைய “என்னை துவாபரன் என்கிறார்கள்” என்றார். சுபாகு கண்களில் நீர் எழ செயலற்று நின்றான். “எழுந்துவிட்டோம். எண்ணமுடியாத இழப்பையும் அடைந்துவிட்டோம். இனி வெல்வதொன்றே வழி. அதுமட்டுமே இழப்புகளை சற்றேனும் பொருள் கொண்டதாக்கும்” என்று சகுனி சொன்னார்.

திரும்பி முரசுக்கழையர்களை நோக்கி “செல்க! செல்க! படைவீரர்கள் திரண்டு கொள்க! துயரொழிக! வெற்றி அணைகிறது” என்று அவர் ஆணையிட்டார். அவருடைய ஆணை முரசொலியாக வானில் எழுந்தது. நூறுமடங்கு பேருருக்கொண்டு அவர் வானிலிருந்து கூவிக்கொண்டிருந்தார். சுபாகு அந்த ஆணையை கண்களால் என கேட்டுக்கொண்டிருந்தான். சகுனி களைப்புடன் காவல்மாடத்தின் மூங்கில் கைப்பற்றில் அமர்ந்துகொள்ள மேலே தாவி வந்த ஏவலன் “அரசர் நனவழிந்திருக்கிறார். அவருக்கு அகிபீனாவும் பீதர்நாட்டு மயக்குமருந்தும் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர் இனி களம் வரவேண்டியதில்லை. அவரிடமிருந்து துயரையும் சலிப்பையும் படை பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை” என்ற சகுனி திரும்பி கௌரவப் படையை நோக்கி எரிச்சலுடன் தலையசைத்து “ஒரு தெய்வத்தருணம்! இது போலொன்று தெய்வங்களே இனி அருளா. இந்த அறிவிலிகள் சற்றே துணிவுகொண்டிருந்தால் இத்தருணத்திலேயே வெற்றி அமையும்” என்றார்.

துச்சாதனன் வீழ்ந்தான் எனும் செய்தி பாண்டவப் படைகளுக்குள் பரவிச் செல்லச் செல்ல மேலும் மேலும் பாண்டவர்கள் சோர்வடைந்துகொண்டிருந்தனர். அவன் வீழ்ந்ததை அவர்கள் எவரும் வெற்றியாக எண்ணவில்லை. அவன் அவ்விறப்பினூடாக ஒரு கொடுந்தெய்வமாக எழுந்து பேருருக்கொண்டு அவர்களை அச்சுறுத்தினான் என்று பட்டது. படைகளின் அளவு சிறுத்திருந்தமையால் ஒற்றை நோக்கிலேயே திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் சிகண்டியையும் அர்ஜுனனையும் காண முடிந்தது. அனைவருமே உளத்திட்பம் அழிந்து தளர்வதை அத்தனை தொலைவிலும் சுபாகு உணர்ந்தான். “அவர்கள் தளர்கிறார்கள்! பின்னடைகிறார்கள்! சூழ்ந்து கொள்க! சூழ்ந்து கொள்க!” என்று சகுனி எழுந்து மீண்டும் ஆணையிட்டார். இவர் சலிப்புறப்போவதே இல்லை. ஓநாய் கிடந்து சாகாது, சென்றுகொண்டிருக்கையிலேயே சாகும் என்ற பாலைவனச் சொல்லை அவன் நினைவுகூர்ந்தான்.

அர்ஜுனனுடன் பொருதிக்கொண்டிருந்த கர்ணன் துச்சாதனன் கொல்லப்பட்ட செய்தியை, அவன் குருதியை பீமன் அருந்தியதை அருகிருந்த வீரர்கள் சொல்லக்கேட்டு பெருஞ்சீற்றத்துடன் விஜயத்தை நாணொலி எழுப்பியபடி அம்புகளால் அறைந்து அறைந்து பாண்டவ வீரர்களை வீழ்த்தியபடி முன்எழுந்து சென்றான். அச்செய்தியால் உளம்சோர்வுற்ற அர்ஜுனனின் காண்டீபம் நாண்தளர்ந்து அழுகையொலியென விம்மியது. அவன் தேரின் தூண்களும் மகுடமும் கர்ணனின் அம்புகளால் சிதைந்தன. இளைய யாதவர் அவனை கர்ணனின் அம்புவட்டத்திலிருந்து மேலும் மேலும் பின்னகர்த்தி கொண்டுசென்றார். ஒருகணத்தில் காண்டீபத்தை தாழ்த்தி தேர்த்தட்டில் தலைகுனிந்து அமர்ந்த அர்ஜுனனின் நெஞ்சக்கவசத்தை கர்ணனின் நீளம்பு வந்து அறைந்து உடைத்தது. பாண்டவப் படையினர் அலறியபடி சிதறிப் பின்னடைந்தனர்.

“அர்ஜுனன் வீழ்ந்தார்!” என எழுந்த ஓசையைக் கேட்டு திருஷ்டத்யும்னன் திரும்பிப்பார்த்தான். தொலைவில் குரங்குக்கொடி தெரியவில்லை. அவன் தொழும்பனிடம் மேலேறிச் சென்று நோக்கி உரைக்க ஆணையிட்டான். தொழும்பன் இறங்கி “அவர் படைமுகத்திலேயே இருக்கிறார். தேரில் விழுந்துவிட்டிருக்கிறார். ஆனால் இளைய யாதவரின் கைமுத்திரை அவர் இறக்கவில்லை என்பதையே காட்டுகிறது!” என்றான். “ஆம், அவர் எவ்வாறு இறக்க முடியும்! அது அல்ல ஊழின் வழி” என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். ஆனால் அவ்வாறு சொல்லப்பட்டதுமே ஏன் தன் உள்ளம் அதை நம்பியது என அவன் அகம் வியந்தது. எந்த வீழ்ச்சியையும் நம்பும் நிலையில் நொய்வுற்றிருக்கிறது தன் உள்ளம் என அவன் உணர்ந்தான். முன்னரே அங்கே சென்றுவிட்டிருக்கிறது ஆழம். ஆகவே அனைத்தும் அங்கே வந்துசேர விழைகிறது. தோல்வியை முன்கண்டவர்கள் பின்னர் தோல்வியை அகம்விழைகிறார்கள். எண்ணி எண்ணி தோல்வியை இழுத்து ஏற்றுக்கொள்கிறார்கள். இறப்பின், வீழ்ச்சியின், நோயின் தேவியர் இறைஞ்சிக்கொண்டாலொழிய வருவதில்லை. வழிபட்டாலொழிய தங்குவதில்லை.

இளைய யாதவர் தேரைத் திருப்பி படைகளுக்குள் அதை கொண்டு சென்று மறைத்தார். “நில்… நில், இழிமகனே! உன் குருதியை நான் குடிக்கிறேன். ஆணிலியே, நில்!” என்று வெறிக்கூச்சலிட்டபடி அர்ஜுனனை அம்புகளால் தொடர்ந்து அறைந்து துரத்திச் சென்றான் கர்ணன். அர்ஜுனன் தேர் மேலும் மேலும் பின்னடைய கவசப்படைகள் வந்து இணைந்துகொண்டு அவனை காத்தன. அவன் தேர் நீரில் கல்லென மூழ்கி படையின் நடுப்பகுதிக்குள் சென்றது. கண்ணீருடனும் சீற்றத்துடனும் களிறுகள் சுமந்துகொண்டுவந்த எடைமிக்க கேடயப்பரப்புகளின்மீதே அம்புகளால் அறைந்தான் கர்ணன். அவை இரும்புலையில் பொறிகளென சிதறிச் சிதறி தெறிக்க ஊடே அவனுடைய சொற்களும் தெறித்தன.

பின்னர் எழுந்து கேடயங்களைச் சுமந்துவந்த யானைகளின் கால்களை நோக்கி குறிவைத்தான். யானையின் காலை குறிவைப்பது வில்லவர்க்கு விலக்கு என்பதனால் அதுவரை அவன் அதை செய்திருக்கவில்லை. அவன் தொடுத்த அம்புகளிலொன்று கவசமேந்திய யானையை நிலைதடுமாறச் செய்தது. கேடயம் சரிந்து அதன் செவி தெரிந்தது. செவியிடுக்கில் சென்று தைத்த கர்ணனின் நீளம்பு அந்த யானையை வீழ்த்த அவ்விடைவெளியினூடாக அவனுடைய தேர் உள்ளே புகுந்தது. அவ்விடைவெளியை தொடர்ந்து அம்புகளால் நிலைநிறுத்தியபடி அவன் மைந்தர்கள் உள்ளே நுழைந்தனர். “கேடய வாயிலை மூடுக… யானைகள் இணைந்து கொள்க!” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். ஆனால் இரண்டு யானைகளின் செவிகள் தெரிய இரண்டையும் அம்புகளால் அறைந்து வீழ்த்தினான் கர்ணன். அந்த யானைகளின் பெரிய உடல்களே தடையாக அதற்கப்பாலிருந்த யானைகள் வந்து வழியை மூட முடியாமலாயிற்று.

மறுபுறம் அஸ்வத்தாமனின் அம்புகளை எதிர்கொள்ள இயலாமல் சிகண்டி பின்னடைந்தார். அவர்களிருவரும் பின்னடைந்ததை ஓசைகளினூடாகவே உணர்ந்து சாத்யகியும் பின்னடைந்தான். கிருபரும் சல்யரும் இருபுறமும் பாண்டவப் படைகளை வளைத்து முன்னகர திருஷ்டத்யும்னன் “ஒருங்கிணைக! ஒருங்கிணைக! நம்மை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! ஒருங்கிணைக!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தான். அது ஆணையென்பதை மெல்ல மெல்ல இழந்து எச்சரிக்கையாக உருமாறியது. ஏதோ ஒரு கணத்தில் கதறல்போல ஒலிக்கத் தொடங்கியது. அந்த ஆணையாலேயே பாண்டவப் படை நம்பிக்கையிழந்தது. நம்பிக்கையிழப்பு உடனடியாக படையினரை தனி மானுடர்களாக ஆக்கிவிடுகிறது என்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். நம்பிக்கை என்பது பிறர்மேல் கொள்வது, திரள்மேல் எழுவது, திரளென்றாக்கித் தொகுத்து படையென நிறுத்துவது.

சகுனி “தாக்குங்கள்! ஒருங்கிணைந்து கொள்ளுங்கள்! படைத்தலைமைக்குப் பின் ஒருங்கிணைக!” என்றார். அவருடைய ஆணை தலைக்குமேல் அலையடித்துக்கொண்டிருக்க கீழே படையினர் இழுத்துக்கட்டப்பட்ட வலை கயிறுகள் அவிழ்ந்து தொய்வுறுவதுபோல தளர்வுற்றனர். நோக்கியிருக்கவே தங்கள் படைக்கலங்களை நிலத்தில் வீசிவிட்டு அலையலையாக மடிந்து பின்னால் வரத்தொடங்கினர். “முன்னேறுக! முன்னேறுக!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்த சகுனி ஒருகணத்தில் இனியொன்றும் செய்வதற்கில்லை என்றுணர்ந்தார். கைகள் சரிய மீண்டும் பின்னடைந்து காவல்மாடத்தின் மூங்கில் வரிமேல் அமர்ந்து வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். சுபாகு அவரையும் படைகளையும் மாறி மாறி திகைப்புடன் நோக்கினான்.

கௌரவர்களின் அனைத்துப் படைகளும் பின்னடைய கர்ணனும் கிருபரும் சல்யரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் மட்டும் படைமுகப்பில் எஞ்சினர். அவர்களின் புறத்துணைப் படையினர் திரும்பி நோக்கி தங்கள் படையினரும் விலகிச்சென்றுகொண்டிருப்பதை அறிவித்தனர். சல்யர் முதலில் முடிவெடுத்து திரும்பும்படி கைகாட்டி தன் படைத்துணைவருடன் பின்னடைந்தார். சூழ எழுந்த கௌரவப் படையின் இரு நண்டுக்கொடுக்குகளும் துண்டுகளாக உடைந்தன. கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் பாண்டவப் படைகளின் உள்ளே சிக்கிக்கொள்ளகூடும் என்று அஞ்சிய சகுனி உடல் துடிக்க எழுந்து கைகளை அசைத்து “ஒன்றாகப் பின்னடைக! சிதறாமல் பின்னடைக!” என்று கூவினார். அவருடைய ஆணை முரசொலியில் முழக்கமாகியது.

கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் மேலும் விசையுடன் பாண்டவப் படைகளை தாக்கிக்கொண்டிருந்தார்கள். “பின்னடைக! பின்னடைக! பாஞ்சாலரும் யாதவரும் பின்னடைக!” என்று சகுனி ஆணையிட்டார். அவ்வாணை சென்றுசேர்வதை படைகளின் அசைவாக நோக்க முடிந்தது. ஆணைகளை செவிகொள்ளும் யானையின் செவிகள் மடிந்து உடல் ஊசலாடுவதுபோல படைகள் ததும்பின. அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் போரை நிறுத்தி பின்னடைந்து, மேலும் மேலும் பின்வாங்கிக்கொண்டிருந்த கௌரவ மையப்படையை வந்தடைந்தார்கள். “ஒருங்கிணைக! ஒருங்கிணைக!” என சகுனி கூவினார். பின்னடையும் எந்தப் படையையும் எதிர்ப்படை துரத்துவது வழக்கம். ஆனால் பாண்டவப் படையும் பின்னடைந்து இணைந்துகொண்டிருந்தது.

பாண்டவப் படைகளுக்குள் புகுந்துவிட்டிருந்த கர்ணனை அப்படைச்சிதறல்கள் ஒன்றாக இணைந்து முழுமையாகவே சூழ்ந்துகொண்டன. திகைப்புடன் நோக்கியபின் “அங்கரை துணைசெய்க! சல்யரும் கிருபரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் இணைந்து கூரம்பு வடிவு கொள்க! பாண்டவப் படையின் முகப்பை உடைத்து அங்கரை மீட்டெடுத்து வருக!” என்று ஆணையிட்டார் சகுனி. அதுவரை கர்ணனைப் பற்றி எண்ணாதிருந்த அந்நால்வரும் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டு கையசைவால் தங்கள் புறப்படைக்கு ஆணையிட்டு ஒற்றைச்சரடென்றாகி மடிந்து அம்புவடிவம் கொண்டு பாண்டவப் படை நோக்கி சென்றனர்.

கௌரவப் படைகளுக்கு நிகராகவே அதே விசையில் பாண்டவப் படையும் ஒட்டுமொத்தமாக பின்னடைந்துகொண்டிருந்தது. அவர்களில் முதன்மை வீரர் எவரும் படைமுகப்பில் இருக்கவில்லை. கர்ணனை சூழ்ந்துகொண்ட பாஞ்சாலத்தின் வில்லவர் படையை கர்ணனின் மைந்தர் எதிர்த்தனர். அவர்கள் நின்றிருந்த இடத்தைச் சூழ்ந்து உருவான வெளி பெரிய வட்டமாக அகன்றது. கர்ணன் உள்ளே சிக்கிக்கொண்டதை உணர்ந்து திருஷ்டத்யும்னன் “சூழ்ந்துகொள்க! அங்கர் சிறைப்பட்டார். சூழ்ந்துகொள்க! முதன்மை வீரர்கள் எழுக!” என முரசாணை விடுத்தபடி பாய்ந்து அணுகினான்.

கர்ணன் ஓர் அம்பை எடுத்து தொடுக்க, பேரொலியுடன் மஞ்சள் நிற மலரென அது வெடித்து அகன்றது. யானைகள் சிதறி அப்பால் விழுந்தன. பல யானைகள் கவசங்களை கீழே போட்டுவிட்டு அலறியபடி அகன்று விலகின. அவ்விடைவெளியினூடாக கர்ணன் தன் மைந்தருடன் பாண்டவப் படைசூழ்கையிலிருந்து வெளியே வந்தான். புகை சூழ்கையிலிருந்து கர்ணனும் தொடர்ந்து மைந்தரும் ஒவ்வொருவராக தோன்றுவதை உடல் மெய்ப்புகொள்ள சுபாகு பார்த்தான். முகில்களிலிருந்து தேவர்கள் எழுவதுபோல என்று அவன் உள்ளம் எண்ணியது. கர்ணனைக் கண்டதும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் வாழ்த்தொலி எழுப்பியபடி ஓடிச்சென்று அவனை எதிர்கொண்டனர். கௌரவப் படை வாழ்த்தொலி எழுப்பியது.

பாண்டவக் கவசப்படை கேடயங்களை உதிர்த்து எஞ்சிய யானைகளுடன் அப்பால் சென்றது. நெளியும் உடல்களும் மானுடச் சிதைவுகளும் தேர்களின் உடைவுகளுமாக குருக்ஷேத்ரம் முற்றாக ஒழிந்தது. சுபாகு வானை பார்த்தான். அந்தி எழுவதற்கு இன்னும் நெடும்பொழுது உள்ளதென்று தோன்றியது. ஆனால் அதற்குள் இரு படைகளும் முற்றாகவே போரை நிறுத்திவிட்டிருந்தன. படைவீரர்கள் சிறு சிறு குழுக்களாக மாறி பின்னால் சென்று, செல்லுந்தோறும் விசைகொண்டார்கள். ஆணைகள் இல்லாமலேயே பலர் தங்கள் பாடிவீடுகளுக்கு சென்றனர். பலர் ஆங்காங்கே அமர்ந்துகொண்டனர். படைகளின் பின்முனை மண்ணில் படிந்தபடியே வர மெல்ல முழுப் படையுமே அமைவுகொண்டது.

பாண்டவப் படை மீண்டும் எழுந்து வந்து தாக்கினால் அரைநாழிகைப் பொழுதுக்குள் கௌரவப் படைகளை வென்றுவிடலாம். ஆனால் அங்கிருந்து பார்க்கையில் பாண்டவப் படையினரும் வெற்றுக்கைகளுடன் தங்கள் படைவீடுகளுக்கு மீண்டதையே காண முடிந்தது. சுபாகு சகுனி மீண்டும் அறைகூவக்கூடும் என எண்ணினான். ஆனால் கௌரவப் படைகளை நோக்கி நின்றிருந்த சகுனி பெருமூச்சுவிட்டு ஒழிந்த களத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் உடல் எடையை ஒரு காலில் அமைத்து மெல்ல எழுந்து நின்று மூங்கில் கழைகளைப் பற்றியபடி வலி முனகலுடன் படியிறங்கலானார்.

சுபாகு அவருக்குப் பின்னால் படிகளில் இறங்கும்போதுதான் துச்சாதனனை மீண்டும் நினைவுகூர்ந்தான். நெஞ்சை அடைப்பதுபோல் தோன்ற கைப்பிடியைப் பற்றியபடி கண்மூடி படிகளின் நடுவே நின்றான். பின்னர் வியர்வை குளிர நினைவுமீண்டு மெல்ல இறங்கி கீழே வந்தான். சகுனி தன் தேரை நோக்கி சென்றார். அவரிடம் அவன் பேச விழைந்தான். எவரிடமேனும் பேச வேண்டியிருந்தது. அவன் அருகணைந்து “நம் படைகள் இனி எழா என தோன்றுகிறது” என்றான். “ஆம், உளச்சோர்வு கொண்டுவிட்டார்கள்” என்றார் சகுனி.

“மூத்தவரின் சாவு அவர்களுக்கு நம்பிக்கை இழப்பை உருவாக்கிவிட்டது” என்று சுபாகு சொன்னான். “அவர்கள் பீஷ்மர் மறைந்த அன்றே மெய்யான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். துச்சாதனனை அவர்கள் பொருட்டெனக் கருதவில்லை” என்று சகுனி சொன்னார். சுபாகு உடலெங்கும் சினம் பரவ நின்றான். பின்னர் அவருடன் சென்றுசேர்ந்து “எனில் ஏன் அவர்கள் உளச்சோர்வு அடைகிறார்கள்?” என்றான். “அவர்கள் அவனுடன் சேர்ந்து தாங்களும் இறந்தார்கள்…” என்று சகுனி சொன்னார். தேரிலேறிக்கொண்டு “அவர்களின் நெஞ்சு பிளக்கப்பட்டது. குருதி அருந்தப்பட்டது” என்றார்.

சுபாகு விழித்து நிற்க சகுனி உதடுகள் வஞ்சமென நகைகாட்டி வளைய “போர்களில் வீரர்கள் தங்களை பெருவீரர்களுடன் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” என்றார். “அவர்கள் மீளமாட்டார்களா?” என்றான் சுபாகு. “நாளை மீண்டுவிடுவார்கள். ஒரு இரவு போதும் எல்லா பழியுணர்வையும் பிழையுணர்வையும் கடந்து நான் என்றும் எனக்கு என்றும் எழ…” என்றபின் சகுனி கையசைவால் ஆணையிட தேர் எழுவிசை கொண்டு ஓசையுடன் சாலைமேல் ஏறியது.

சுபாகு தேர் செல்வதை நோக்கியபடி நின்றான். அதை மறுக்கவேண்டும் என விழைந்தான். அவனே அல்ல. எவராவது. ஆழ்ந்த சொல்லுடன் அல்ல என வேண்டும். அவன் அப்பால் நின்ற படைத்தலைவனை நோக்க அவன் வந்து தலைவணங்கினான். “மூத்தவரின் களச்சாவு நம் படைகளை சோர்வுறச் செய்துள்ளது” என்றான். ஆம் என அவன் தலையசைத்தான். “அவர் கொல்லப்பட்ட முறை, அவர் அடைந்த இழிவு நம்மவர்களை அஞ்ச வைத்துள்ளது. அதை வஞ்சமென ஆக்கியாக வேண்டும்” என்றான் சுபாகு. படைத்தலைவன் ஒன்றும் சொல்லவில்லை.

“அதற்கு என்ன செய்யலாம்? சொல்க!” என்றான் சுபாகு. படைத்தலைவன் “ஆணையிடுக!” என்றான். “உமது எண்ணம் என்ன?” என்று சுபாகு கேட்டான். “நம் படைகள் வஞ்சம் கொள்ள வாய்ப்பில்லை” என்றான் படைத்தலைவன். “ஏன்?” என்று சுபாகு கேட்டான். “அவர் தன் வினைப்பயனையே அறுவடை செய்தார் என அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் இக்களத்தில் கொல்லப்பட்டவரின் இடத்தில் இல்லை.” சுபாகு “ம்” என்றான். “அவர் கொல்லப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால் பழி நீங்கியது என்றும் நாளை ஆறுதல் கொள்ளக்கூடும். மீண்டெழுவதற்கான வழி அதுமட்டுமே” என்றான் படைத்தலைவன்.

“எதிலிருந்து மீள?” என்றான் சுபாகு. “பழியிலிருந்து. பெண்ணை அவைச்சிறுமை செய்தவர் அவர். அதை அவர் தன் இழிசாவால் நிகர்செய்தார்…” சுபாகு “அப்பழியில் இப்படைகளுக்கு பங்கில்லையா என்ன?” என்றான். “இல்லை, அதை கௌரவக்குடியின் பழி என்றே நம் படைகள் எண்ணுகின்றன.” சீற்றத்துடன் “உமக்கு எப்படி தெரியும் அவர்களின் அகம்?” என்று சுபாகு கேட்டான். “நான் அவர்களில் ஒருவன்” என்றபின் மீண்டும் தலைவணங்கி படைத்தலைவன் இரு பின்னடி எடுத்து வைத்தான். செல்க என கைகாட்டியபின் சுபாகு தன் புரவி நோக்கி சென்றான்.

தொடர்புடைய பதிவுகள்

இணையத்தின் குரல்கள் -கடிதங்கள்

$
0
0

மூடர்களின் நாக்கு

சென்னை கண்டனக்கூட்டத்தில்…

அன்புள்ள் ஜெ..

 

உங்கள் கட்டுரை ஒன்றில் இந்த வரியை கண்டேன்

’இந்துத்துவ வெறியன்,  இஸ்லாமை அழிக்க முயல்பவன் என்றெல்லாம் கூச்சலிட்டவர்கள் மிகப்பெரும்பாலும் இஸ்லாமியர் அல்ல. முற்போக்கினரும் திராவிட இயக்கத்தவரும்தான்””

 

இதில் திராவிட இயக்கம் என சுடடி இருப்பது மக்கள் ஆத்ரவு அற்ற சில லெட்டர்பேடு இயக்கங்களை என நினைக்கிறேன்..

 

திராவிட இயக்கம் என மக்கள் நினைப்பது எம் ஜி ஆர் இருந்த தி மு கவையும் அதன் பின் அவர் உருவாக்கிய அதிமுக- வையும்தான்..

 

அதனால்தான் அவர் இறந்து பல்லாண்டுகள் ஆகியும் ( பல குழப்பங்களுக்கும் , ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் ) அதிமுகவே தமிழகத்தின் பிராதான கட்சியாக உள்ளது

 

அதிமுக ஓட்டுகள் பிரிவதால் அவ்வப்போது பிற கட்சிகள் வெல்லலாம்.. ஆனால் எம் ஜி ஆருக்கு நிகராக  யாரையும் சொல்ல முடியாது

 

எனவே மக்கள் மத்தியிலில் அதிமுக திராவிட இயக்கமாக திகழ்ந்தாலும் அறிவு ( ??!! ) உலகில் சிறு குழுக்க்ளையே திராவிட இயக்கம் என குறிப்பிடுகிறார்கள்.. ( நீங்கள் உட்பட )

 

அதேபோல , முற்போக்கு வாதிகள் என குறிப்பிடுவது ,  அந்த காலத்திலேயே சாதி மறுப்பு மறு மணம் செய்து சமூக சேவை செய்த டி எஸ் சௌந்திரம் போன்றவர்களை அல்ல

 

http://www.pichaikaaran.com/2019/04/blog-post_13.html

 

ஊடகங்கள்தான் சில லாபங்களுக்காக இபப்டி செய்கின்றன என்றால் தனி நபர்களும் எதிர்கால ஊடக வாய்ப்புகளை கருத்தில்கொண்டு இதே பாணியை பின்பற்றுகின்றனர்

 

இந்த நச்சு சூழலில் . ஓரளவு விடுதலை அளிப்பது இணையம்தான்…

அதையும் நச்சு சக்திகள் ஆக்ரமித்தாலுமகூட காந்தியவாதிகளை எளிமையானவர்களை பற்றி   ஓரளவாவது பேசும் வாய்ப்பை இணையமே அளிக்கிறது

 

ஆனால் நீங்கள் எப்போதும் இணைய எழுத்தை எதிர்மறையாக குறிப்பிட்டு வருவது சற்றே வருத்தம் அளிக்கிறது

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள ஜெ

 

 

சமீபத்திய கட்டுரைகளில் நீங்கள் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தவர், முற்போக்கினர், இந்துத்துவர் இணையத்தில் இப்படிச் சொல்கிறார்கள் என எழுதுகிறீர்கள். இவர்களை திராவிட இயக்கத்தவர் முற்போக்கினர் இந்துத்துவர் என நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? இவர்கள் தங்களை அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள். அது ஒரு போஸ் மட்டும்தான். அவர்களுக்கும் அந்த ஐடியாலஜிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

 

இணையத்தில் எழுதப்படுவதை கவனித்து வருபவன் நான். இவர்களில் ஒருசாரார் சின்னச்சின்ன எழுத்தாளர்கள். இவர்கள் வெறிகொண்டு எழுதிக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கு எழுத்தால் எவரையும் கவரும் ஆற்றல் இல்லை. தன்னம்பிக்கையும் இல்லை. ஆகவே நிராகரிக்கப்படுகிறார்கள். அதிலிருந்து கடுமையான காழ்ப்பை சேகரித்துக்கொள்கிறார்கள். அந்தக் காழ்ப்புடன் காலையில் முகநூலுக்கு வருகிறார்கள். அந்தக்காழ்ப்புடன் பகல் முழுக்க அதில் இருக்கிறார்கள்

 

அதிலும் உங்கள் மேல் தனிப்பட்ட காழ்ப்பு கொண்ட ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் கண்டுகொள்ளப்படாதவர்களும்தான் மிகுதி.  ‘ஜெயமோகன்வெறுப்பு’தான் இவர்களின் ஒரே ஐடியாலஜி. அதற்கு முற்போக்கு திராவிட ஆதரவு இந்துத்துவம் என ஏதாவது ஒரு முகமூடி தேவை. அதுதான் ஆதரவாளர்களைக் கொண்டுவரும். நீங்கள் என்ன செய்தாலும் எதை எழுதினாலும் வசைதான்.

 

ஆனால் இந்த மனச்சிக்கல்காரர்கள் அந்த சம்பந்தப்பட்ட ஐடியாலஜிக்களுக்கு மிகப்பெரிய தீங்கை இழைக்கிறார்கள். நான் மார்க்ஸிய ஆதரவாளன். எனக்கு உங்கள் மேல் விமர்சனம் உண்டு. ஆனால் இந்த காழ்ப்புமனங்கள் காலையில் எழுந்த்துமே எடுக்கும் வாந்தியைக் கண்டால் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. இவர்களால் மார்க்ஸியம்தான் சிறுமைப்படுத்தப்படுகிறது.

 

முகநூல் பெரும்பாலும் தோற்றுப்போனவர்கள் வெட்டியாக இருப்பவர்கள் புலம்பிக்கொண்டிருக்கும் ஓர் இடம். அங்கே நிறைய வாசிப்பவர்களும் இல்லை. செயல்படுபவர்களும் இல்லை. பகல்முழுக்க அத்தனை முகநூல் பதிவுகளுக்கும் லைக் போட்டு கமெண்ட் எழுதுபவருக்கு வேறு உலகமே இல்லை. அவர்களை தமிழ்நாட்டின் எந்த ஒரு சிந்தனைக்கும் பிரதிநிதியாக கொள்ளமுடியாது

 

 

டி.எஸ்.செந்தில்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வானிலைப் புனைவு

$
0
0

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

லண்டனிலிருந்து வெளிவரும் எகானாமிஸ்ட் வார இதழ் பெரும்பாலும் வணிகத்துக்கும், அரசியலுக்கும் ஆனது. ஆனால் சில பக்கங்கள் இலக்கியத்திற்கும், கலைகளுக்கும் ஒதுக்குகிறார்கள். அண்மையில், The Tallest Story, Can the novel handle a subject as cataclysmic as climate change?  என்ற கட்டுரை படித்தேன். நான் உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருவதால் உங்கள் வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்று தோன்றியது. என்னுடைய மூலத்தை சற்று மாற்றிய சுமாரான தமிழ் வடிவம்:  

வைகுண்டம்

https://en.wikipedia.org/wiki/Climate_fiction

வானிலைப்புனைவு – [cli-fi The Tallest Story] 

இலக்கிய நாவலுக்கு பிரம்மாண்டத்துடன் ஓர் ஒவ்வாமை உள்ளது.  நாவல் அன்றாடத்தையே கொண்டாடுகிறது.  பேரதிர்வுகளையும், பேரழிவுகளையும் பேசுவதில்லை. ஹோமருடைய  Odyssey ஐயும் ஜேம்ஸ் ஜாய்ஸுடைய  Ulysses ஐயும் ஒப்பிட்டால், காவியத்தில் கடவுளர்களையும்,  படுகொலைகளையும், நாடுகளின் தலைவிதியையும் காணலாம்.  நாவலில், அந்நியோன்னியத்தையும்,  அன்றாடத்தையும் மட்டுமே.

 

நாவல் இலக்கியம் காலத்தையும் புரிந்து கொள்ளவில்லை.  நிகழ்காலத்தை அவதானிக்க கடந்த காலத்தின் கூறுகளை கையாள்கிறது. வருங்காலத்தை நோக்குவதில்லை. தொழில் மயமாகிக் கொண்டிருந்த, சமூக ஏற்றத் தாழ்வுகள் உருமாறிக் கொண்டிருந்த விக்டோரியன் காலகட்டத்தின் பெரும் படைப்புகள் அன்று சரித்திரமாகி விட்ட கால கட்டத்தை கதை களமாக கொண்டுள்ளன. (Middlemarch, A Tale of Two Cities)  தற்கால நாவலாசிரியர்களும் உலகப் போர்களிலோ, அதற்கும் பிந்தைய காலத்திலோ தங்கள் கதை பொருட்களை தேடுகிறார்கள்.

 

பருவநிலை மாறும் தறுவாயில்,  இந்த வரப் போகும் – வந்து விட்ட, நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டிய காலத்தில், இந்த போக்கு ஒரு குறையே.  நாவலாசிரியர் அமிதாவா கோஷ்  The Great Derangement என்ற கட்டுரைத் தொகுப்பில் (2016 ) இதை கவனத்திற்கு கொண்டு வருகிறார். சுற்றுச்சூழல் பேரழிவை எழுத வந்து, பண்பாட்டில் நாவலின் இடம் என்ன என்று ஆராய்கிறார்.  அறிய முடியாதவற்றை,  அநிச்சயமானவற்றை, சுருங்கச் சொன்னால் எதிர்காலத்தை கண்டு உள்ளூர அஞ்சும் கலை வடிவம் நாவல். பருவநிலை மாற்றத்தின் பேரளவையும், நிச்சயமின்மையையும், அருவ வடிவையும் நாவல் என்ற கருவியால் எதிர்கொள்ள முடியுமா என்று சந்தேகிக்கிறார்.  மனித இனம் எதிர் கொள்ளும் இந்த பெரும் பேரிடரை நாவல் வடிவத்தால் எடுத்தாள முடியாவிட்டால், நாவலால் தன்னுடைய அத்தியாவசியத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா?

 

காலம் ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணத்தில் காரணியாகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸும், வர்ஜீனியா வூல்ப்வூம் அன்றாடத்தை கூறிட்டு அலசத் தொடங்கிய நவீனத்துவ காலத்திலிருந்து நாவலில் காலத்தின் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது – அதாவது கதாபாத்திரத்தின் வாழ்நாள்.  நாவலில் காலம் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரித்து அடைக்கப்பட்டுள்ளது.  பருவநிலையின் போக்கை சொல்லுவதற்கு ஒரு தாவல் தேவை. அந்த தாவலுக்கு இன்னும் நெகிழ்வான கூறுகள் தேவை.

 

எல்லாப் புனைவுகளும் இவ்வாறு ஊனமுற்றிருப்பதாக சொல்ல முடியாது. அறிவியல் புனைவுகள் பருவநிலை மாற்றத்தை நேரடியாக எதிர் கொள்கின்றன. இலக்கியத்திற்கும்  அறிவியல்  புனைவுகளுக்குமிடையே பாகுபாடு உண்டா என்பது  தெளிவற்றது,  விவாதத்திற்குரியது).

 

1962 இல் ஜே ஜி பல்லார்ட் எழுதிய The  Drowned  World பருவநிலை மாற்றத்தின் அச்சங்களை கையாண்ட முதல் அறிவியல் புனைவு.

 

ஆசிரியரின்  புகழ்   கூடக்கூட  ஆக்கம்  மறு ஆய்வு  செய்யப்பட்டு  பாகுபாடு மாறி  இலக்கியம்  ஆனது. ஆனால், அடிப்படையில்  நாவல் மற்ற புனைவுகளிலிருந்து  வேறுபடுத்தியே  தன்னுடைய  இடத்தை  வரையறை செய்துள்ளது.  வருங்காலமும் , அதன்  பயங்களும், மாற்றுப்  புனைவுகளுடன் இணைத்து  நோக்கப்பட்டதால், அத்தகைய  புனைவுகள்  மேல்  உள்ள ஒவ்வாமை  வருங்காலத்தை கருப்பொருளாக்குவதன்  மேலும் உருவாகியது.  அண்மைக்காலம்  வரை  இவ்வாறு  இருந்தது  எனலாம்.

 

இலக்கியத்திற்கும், பிற புனைவுகளுக்கும் இடையேயான பாகுபாடு மேலும் மேலும் நீர்த்துப் போக, இலக்கியத்தளமும் பருவநிலைமாற்றத்தின் கற்பனை சாத்தியங்களை கவனிக்கத் தொடங்கியுள்ளது. கோர்மக் மெக்கார்த்தியின் The Road (2006) நாவலைஆரம்பமாகச் சொல்லலாம். நாவல் ஒரு பிரளய நிகழ்வுக்குப்பின் ஒரு தந்தையும், மகனும் சாம்பல் படிந்த பெரும் பரப்பை கடப்பதைசொல்லுகிறது. அணு ஆயுதங்களையும், உலகப்போர் அழிவுகளையும் எண்ணி அஞ்சிய தலைமுறைக்கும், உருகும் பனிப்பிரதேசத்தையும், பரவும் காட்டுத்தீக்களையும் எண்ணி அஞ்சும் அடுத்த தலைமுறைக்கும், நாவல் களம் பாலமாக அமைகிறது.

 

50 வயதிற்கு மேல் தந்தையான மெக்கார்த்தி, தன் காலத்திற்கு பிறகு தன் மகன் கருகிக் கருத்த குன்றுகளைத்தான் காணப்போகிறான் என்று அஞ்சுகிறார். தன் சந்ததிகளைத் தனியாகத் தவிக்க விட்டுப் போகிறோமோ என்ற பெற்றோருக்கே உரிய அச்சத்தை உருவகமாக நாவல் சொல்வதாகவும், மனித குலம் புவியை அழித்து விட்டதோ என்ற பெரும் அச்சத்தை புனைவாக்கியிருப்பதாகவும் சொல்லலாம். எல்லா நாவல்களும் ஒரு விதத்தில் வருங்காலத்தை பற்றியவையே. ஏனெனில், இன்றைய இலக்கியம் நாளைதான் படிக்கப்பட போகிறது என்ற உண்மையை படைப்பு சுட்டுகிறது.

 

இந்த நாவலின் வழியில் பிறகு பல எழுத்தாளர்களும் பருவ நிலையை மையப்படுத்தி எழுதத் தொடங்கியுள்ளனர். இந்த வடிவம் cli-fi என்றும் பெயர் பெற்றுள்ளது. The End We Start From என்ற நாவல் நீரில் மூழ்கிய பிரிட்டனில் தன் மகனுடன் குழந்தையின்தந்தையையும், பாதுகாப்பையும் தேடும் ஒரு தாயின் கதையை சொல்கிறது. பல கலாச்சாரங்களில் உயிர்களின் படைப்பு பெரும் பிரளயத்திலிருந்து தொடங்குவதாகச் சொல்லப்படும் படிமத்தையும், பருவநிலை மாற்றத்தில் எழும் அழிவு வெள்ளத்தையும், புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டி, ஒரு சுழற்சியில் இணைக்கிறது நாவல்.

 

‘Future Home of the Living God’ தன் பிறக்கப் போகும் குழந்தைக்கு அது வாழப்போகும் உலகத்தைப் பற்றி ஒரு தாய் எழுதுவதாக அமைகிறது. தாய் தன் இளமையின் பனிப்பொழிவை நினைவு கூர்கிறாள்: “அடுத்த பனிக்காலம் மழை பெய்தது. குளிர் இதமாக, புத்துணர்ச்சியுடன் இருந்தது. ஆனால், மழை மட்டுமே. அந்த வருடத்துடன் குளிர் காலத்தை இழந்தோம்.”பருவநிலை மாற்றத்தோடு பிற அச்சங்களையும் இணைத்த புனைவுகளும் உள்ளன, “The Wall” பிரிட்டனைச் சுற்றி அலைகளைத்தடுக்கவும், வேண்டாத வந்தேறிகளைத் தடுக்கவும், கடற்கரையை மறைத்து கட்டப்பட்ட உயரமான சுவரை சொல்லுகிறது.

 

இலக்கிய நாவலாசிரியர்கள் பருவநிலை மாற்றம், ஒரு பெரும் பேரிடர் மட்டுமல்ல, பல கதைக்கருக்களின் களஞ்சியம் என்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், விரைவிலேயே இது அறிவியல் புனைவு தளத்திலிருந்து யதார்த்த நிலை தளத்துக்கே வந்து விடலாம்.

*********************************************************************************

 

 

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள சுட்டியை அணுகலாம். சந்தா உள்ள பத்திரிகை  ஆனாலும்,  சில கட்டுரைகள் எவரும் படிக்கலாம்.

https://www.economist.com/books-and-arts/2019/04/04/can-the-novel-handle-a-subject-as-cataclysmic-as-climate-change

நன்றி

 

வைகுண்டம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கங்கைப்போர் முடிவு

$
0
0

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

நீர் நெருப்பு – ஒரு பயணம்

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

 

உயிர்வாழ்வதைவிட ஒரு உயரிய அறத்தைக் கடைபிடித்துச் சாவது சிறந்தது என மாறாத உளநேர்மையோடு பசித்தவம் புரிகிற, சாது ஆத்ம்போனந்த் அவர்களின் மன்றாடுதலுக்கு ஒரு சிறிய நல்விளைவு நிகழ்ந்திருக்கிறது. எளியவனின் குரலுக்கு அதிகாரம் செவிமடுத்திருக்கிறது.

கங்கையைக் காப்பாற்றக்கோரி, 194 நாட்களாகத் தொடர் உண்ணாநோன்பிருந்த ஆத்ம்போனந்த், தனது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். தூய்மை கங்கைத் திட்டத்தின் தேசியப் பணிக்குழுவின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா அளித்த எழுத்துப்பூர்வ உறுதிப்பாட்டின் அடிப்படையில் தன் நோன்பினைத் துறந்திருக்கிறார் அவர்.

மாத்ரிசதன் ஆசிரமத்தின் குருவான சிவானந்த்-க்கு எழுதிய கடிதத்தில், கங்கைக்கரையில் புதிதாக தொடங்கப்படவிருந்த நீர்மின்சார அணைக்கட்டுத் திட்டத்திற்கும், ஏற்கெனவே இயங்கிவரும் அனுமதிபெறாத சில சுரங்கப்பணிகளுக்கும் தடைவிதித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள் அதிகாரிகள்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தொடர்ந்து தனது தளத்தில் இந்த அறப்போர் குறித்து பதிவுசெய்ததும், அதன்வழி உரையாடப்பெற்ற வாசக கடிதங்களும், அது உருவாக்கிய நீர்சார் உரையாடல்களும் இந்நகர்வுக்கான உறுதுணையாக இருந்துள்ளன. வெவ்வேறு அதிகார மட்டங்களில் நீர்குறித்து உரையாடுவதற்கான சாத்தியத்தை அது இன்னும் பரவலாக்கியுள்ளது.

மேலும் எழுத்தாளர்கள் கடலூர் சீனு, அழகிய பெரியவன், சூழலியலாளர் ராகவன் சிவராமன் மற்றும் நிறைய மனிதர்களின் இடைவிடாத நெஞ்செண்ணமே… இச்சிறு நேர்மறை நகர்வை நிகழ்த்தியுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

தன்னைச்சிதைத்து தண்ணீரை மீட்க எண்ணும் ஆத்ம்போனந்த் போன்ற சாமானியர்களின் செயல்தவம், இறுகிப்போன அதிகார இருதயத்தை நிச்சயம் ஒருநாள் துடிக்கவைத்தே தீரும். நல்லவைகள் ஓங்கி, அல்லவைகள் நீங்கி, எல்லோருக்காகவும் ஆகும் பூமி.

 

குக்கூ மற்றும் தன்னறம் நண்பர்கள்

=========================================================================================================

கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…

கங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்

கங்கைப்போர்- கடிதங்கள்

கங்கைக்கான போர் -கடிதங்கள்

கங்கைக்கான போர் – ஓர் ஆவணப்படம்

அபிராமானந்தரின் கங்கை

வாழ்நீர் – கடலூர் சீனு

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜப்பான் பயணம்

$
0
0

 

இன்று [07-05-2019] மாலை நானும் அருண்மொழியும் ஜப்பான் கிளம்புகிறோம். அங்கே ஓர் இலக்கிய நிகழ்வு. கொஞ்சம் ஊர்சுற்றல். நண்பர் டோக்கியோ செந்தில் ஏற்பாடு. நேற்று காலையிலேயே ஊட்டியில் இருந்து நேரடியாக சென்னை வந்தோம். வளசரவாக்கத்தில் விடுதியில் தங்கினோம்.

பகல்முழுக்க வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். மாலையில் நண்பர்கள் வந்தனர். விமானநிலையத்திற்கு சௌந்தர், ராஜகோபாலன், காளிப்பிரசாத், சண்முகம், பழனி ஜோதி ஆகியோர் வந்து வழியனுப்பிவைத்தார்கள். கொலாலம்பூர் வழியாக டோக்கியோ..

 

ஜப்பானில் செர்ரிபிளாசம் பூக்கும் காலம் இது. நமக்கு பொன்கொன்றை போல அவர்களுக்கு செரிபிளாஸம். வசந்தத்தின் நிறம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-30

$
0
0

குருக்ஷேத்ரத்திலிருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் காட்டுப்பாதையில் புதர்களை ஊடுருவியபடி பீமன் புரவியில் சென்றான். அவனது தலைக்குமேல் அன்னைக் குரங்கு ஒன்று “நில்! நில்!” என்று கூவியபடி கிளைகளிலிருந்து கிளைகளுக்கு வால் விடைத்துத் தாவி, ஊசலாடி அமர்ந்து, மீண்டும் துள்ளி கிளை நுனி பற்றி ஊசலாடி அமர்ந்தெழுந்து கூவியபடி உடன் வந்தது. “நில், மைந்தா! நில்!” என்று மீண்டும் அது கூவியது. பீமன் அதன் குரலைக் கேட்டாலும் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. தன்னுள் ஆழ்ந்து தோள்கள் தளர்ந்து உடல் முன்னால் சாய்ந்து ஊசலாட புரவியில் அமர்ந்திருந்தான். அவன் உடலிலிருந்து எந்த ஆணையையும் பெறாவிட்டாலும்கூட அவன் உள்ளத்தை அறிந்ததுபோல் புரவி பாய்ந்தோடியது.

அதன் குரல் கேட்டு மேலும் மேலும் குரங்குகள் வந்து சேர்ந்துகொள்ள தலைக்கு மேல் சுழல்காற்று ஒன்று கிளையுலைத்து இலைஉதிர்த்துச் சுழன்று உடன்வருவதுபோல் தோன்றியது. “நிறுத்துங்கள் அவனை! மைந்தா, நில்!” என்று அன்னைக் குரங்கு கூவிக்கொண்டிருந்தது. பீமன் நடுவே வந்த பிலம் ஒன்றை புரவியில் தாவிக்கடந்தான். கூழாங்கற்கள் புரவியின் குளம்பில் பட்டு உதிர்ந்து பிலத்தின் ஆழத்திற்குள் இறங்கின. அங்கே முட்டையிட்டு குழவிகளை ஈன்று நிறைந்து நெளிந்துகொண்டிருந்த நாகங்கள் சீறி தலை தூக்கின. அவற்றின் குழவிகள் அஞ்சி உடல் நெளித்து தளிர்பத்தி விரித்தன.

பீமனின் புரவி சூழ்ந்திருந்த எதையும் உணராததுபோல், இலக்கொன்றையே அறிந்ததுபோல் சென்றது. பிறிதொரு குரங்கு தூமவர்ணி என்னும் அந்த அன்னைக் குரங்குடன் இணைவந்தபடி “அவர் எங்கு செல்கிறார் என்று தெரியுமா?” என்று கேட்டது. அன்னைக் குரங்கு “எங்கெனினும் இப்போது அவன் செல்வது தீய இலக்கிற்கே” என்றது. “ஏன்?” என்றது இன்னொரு குரங்கு. தூமவர்ணி பல்காட்டிச் சீறி “அறிவிலி, அவன் கைகளை பார். அந்தக் கலம் நிறைய குருதி இருக்கிறது. அது மானுடக் குருதி… உன் மூக்குமா அடைந்துவிட்டது?” என்றது. இன்னொரு குரங்கு தாவியபடி “ஆம். அது மானுடக் குருதி. அது உறையத்தொடங்கியிருக்கிறது. அதன் மேற்பரப்பில் கரிய படலம் உருவாகி அசைவில் நலுங்கிக்கொண்டிருக்கிறது” என்றது. “ஆம், வாடிய செம்மலரிதழ்போல சுருக்கம் கொண்டிருக்கிறது” என்றது இன்னொரு குரங்கு.

“அக்குருதியின் அனல் அணையத்தொடங்கியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் அது கரியென்றாகும்” என்றது ஒரு குரங்கு. பீதகர்ணி என்னும் தாட்டான் குரங்கு ஆழ்ந்த குரலில் “அவன் அக்குருதியுடன் எங்கு செல்கிறான் என்று எனக்கு தெரியும்” என்றது. “ஏதேனும் கொடுந்தெய்வத்திற்கு அதை பலியென அளிக்கப்போகிறான். கற்சிலை ஒன்றின் மேல் அதை ஊற்றி முழுக்காட்டு நிகழ்த்துவதே அவன் எண்ணம்.” தூமவர்ணி பெருமூச்சுடன் நின்று “இனி அவனை தொடர்வதில் பயனில்லை” என்றது. பீதகர்ணி “நாம் அவன் மேல் குதிப்போம். அவனை கைகால் பற்றி நிறுத்துவோம்” என்றது. சௌவர்ணன் என்னும் ஆண்குரங்கு “நம்மினும் பன்மடங்கு ஆற்றல் கொண்டவன் அவன். நம் போர்முறைகளை நம்மைவிட அறிந்தவன். அவனிடம் நாம் போரிட இயலாது” என்றது.

குரங்குகள் ஒவ்வொன்றாக கிளைகளில் நின்றுவிட பீமன் ஒற்றையடிப் பாதையில் குறையா விரைவில் சென்றுகொண்டிருந்தான். குரங்குகள் மரங்களின் எல்லை வரை வந்து கிளை நுனியில் எழுந்தமர்ந்து உரக்க கூச்சலிட்டன. தூமவர்ணி “மைந்தா, பேருருவம் கொண்டவனாயினும் இதுவரை வாழ்வின் பொருளறியாதவன் நீ” என்று கூவியது. “நில், அன்னை சொல் கேள்! நில்!” பின்னர் துயருடன் “அவன் செவிகள் மூடியிருக்கின்றன. தன்னை வெறுப்பவனும் தன்னை வழிபடுபவனும் செவிகளை மூடிக்கொள்கிறான்” என்றது.

பிற குரங்குகள் அதைச் சுற்றி அமர்ந்தன. “அவன் பெருந்துயர் நோக்கி செல்கிறான்” என்று தூமவர்ணி சொன்னது. “இறப்பா? சிறுமையா?” என்றது சௌவர்ணன். “மீள முடியாத உண்மையைப்போல் பெருந்துயர் அளிப்பது வேறு ஏது?” என்று தூமவர்ணி சொன்னது. “அது அவனை சிறைப்படுத்துமா?” என்றது பீதகர்ணி. “இல்லை, எல்லா உண்மைகளும் விடுதலை அளிப்பவையே” என்று அன்னை சொன்னது. “எனில் அதை அவன் அறிந்துகொள்வதல்லவா நன்று?” என்றது சௌவர்ணன்.

தூமவர்ணி சீற்றத்துடன் பற்களைக் காட்டி “எந்த அன்னையாவது தன் மைந்தன் பட்டு உலகறிந்து முதிரவேண்டுமென்று எண்ணுவாளா? தன் மைந்தனின் அலைக்கழிப்பும் துயரும் வாழ்வை அறியாததனால் அமைவதே என்று அறிந்தாலும் மைந்தர் முதிர்ந்து வாழ்வறியவேண்டுமென்று பெற்றோர் விரும்புவார்களா?” என்றது. பீதகர்ணி “ஆம், என்றும் உலகறியா சிறுமைந்தராக அவர்கள் இருக்கவேண்டும், இவ்வுலகே குவிந்து அவர்களை காக்கவேண்டும் என்றுதான் இவ்வுலகெங்கும் அன்னையர் எண்ணுகிறார்கள்” என்றது.

“ஏன்?” என்றது அப்பால் வந்து கிளையில் அமர்ந்த சிறுகுரங்கான மூர்த்தன். தூமவர்ணி சலிப்புடன் தலையசைத்து “அறியேன். மானுடர் எவ்வண்ணம் உணர்கிறார்கள் என்பதை அவர்கள்தான் கூறவேண்டும். மைந்தர் முதிர்கையில் தந்தையர் தங்கள் இறப்பை உணர்கிறார்கள். அன்னையர் பொருளின்மையை சென்றடைகிறார்கள். அதனாலாக இருக்கலாம். அன்றி முதிர்வென்பதே இறப்பை நோக்கிய செலவு என்று உணர்ந்ததனாலாக இருக்கலாம்” என்றது.

அனைத்துக் குரங்குகளுக்கும் பின்னால் மூச்சிரைக்க வந்த மிக முதிர்ந்த பெருங்குரங்கான கும்போதரன் கிளைக்கவரில் அமர்ந்து வாலை தொங்கவிட்டு சாய்ந்துகொண்டு “அவ்வாறல்ல. இளமையில் அறியாமையே களிப்பும் துயரும். வளர்தல் என்பது அறிதல். பின்னர் அறிதலே களிப்பும் துயரும். அறியாமையும் அறிவும் அறிபவனுடன் விளையாடுகின்றன. அறிதலும், அறியாமையை கண்டடைதலும், மீண்டும் அறிதலும், அறிதொறும் அறியாமை காண்டலும் என நிகழும் அந்த விளையாட்டே வாழ்வின் கொண்டாட்டம். வலியும் துயரும் கொண்டாட்டமே என்று அறிக! ஊசல் பின்னகராவிடில் முன்னெழ இயலாது” என்றது.

இளம்குரங்குகள் அதை நோக்கின. கும்போதரன் “முதிர்ந்தபின் அறிபவை அனைத்தும் மலைகளைப்போல் மாறாது நிலைகொள்ளும் மெய்மைகள். பெருமெய்மைகள் அனைத்தும் அறிபவனுக்கு வெறுமையை மட்டும் அளிக்கின்றன” என்றது. “ஏன்?” என்று சிறுவனாகிய புஷ்பகர்ணி அதை நோக்கி தாவிச் சென்று அருகே நின்று தலைசரித்து இமைமூடி விழிமின்னி கேட்டது. “ஏனெனில் இங்கு மகிழ்ச்சியென்று நாம் அறிவது அனைத்தும் ஆணவத்தின் பிறிதொரு வடிவையே. வெல்வது, நுகர்வது, ஈவது என நாம் இங்கு கொண்டாடும் அனைத்தும் ஆணவத்தின் தோற்றங்களைத்தான். மெய்யறிவு ஆணவத்தை அளிக்கிறது. மகிழ்வை மறைத்துவிடுகிறது” என்று கும்போதரன் சொன்னது.

“ஆணவ அழிவு என்பது பேருவகை என்றல்லவா கேட்டிருக்கிறேன்?” என்று மரங்களுக்கிடையிலிருந்து ஒரு பெண்குரங்கு சொன்னது. கும்போதரன் திரும்பி அந்த இளம் பெண்குரங்கை சற்று நேரம் பார்த்தது. அதுவரை பேசிய அனைத்தையும் மறந்து அரைத்துயிலில் ஆழ்ந்தது. புஷ்பகர்ணி பாய்ந்து அதன் அருகே வந்து அதன் காலைப்பற்றி அசைத்து “சொல்லுங்கள், தாதையே” என்றது. சற்றே இழுபட்ட வாயிலிருந்து எச்சில் கோழை வழிய அதை கையால் துடைத்துக்கொண்டு “என்ன? என்ன?” என்றது கும்போதரன். “சற்று முன் சொல்லிக்கொண்டிருந்தீர்களே…” என்றது இன்னொரு இளமைந்தனாகிய மூர்த்தன். “என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றது கும்போதரன்.

புஷ்பகர்ணி கிளைபற்றி மேலேறி அதன் தலையருகே வந்து சிறு கிளையில் அமர்ந்து “மெய்மையை அறிவது துயரென்றீர்கள். அது மகிழ்வென்றல்லவா சொல்லப்பட்டுள்ளது என்று அவர் கேட்டார்” என்றது. “ஆம், மெய்யறிந்து அதை சென்றடைந்தவர்கள் கூறிய சொற்கள் அவை. அது மகிழ்வென்றே உரைக்கின்றன நம் உடலில் எழும் மூதாதையர் குரல்களும். மானுடரின் நூல்களில் பதிந்துள்ள சொற்களும் மற்றொன்று கூறவில்லை. ஆயினும் நாம் அறியும் மெய்மையின் கணத்தோற்றங்கள் அனைத்தும் நாம் கொண்டுள்ள அனைத்தையும் பொருளற்றவையாக்கி சோர்வையும் சலிப்பையும் வெறுமையையும் மட்டுமே அளிக்கின்றன” என்றது கும்போதரன்.

சற்று நேரங்கழிந்து பீதகர்ணி “ஆம், நான் இவ்வாழ்வில் பொருட்படுத்தக்கூடிய எதையேனும் அறிந்திருக்கிறேன் என்றால் அதன்பின் நெடுநாட்கள் வெறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். அவ்வெறுமையிலிருந்து என்னை பிடுங்கி அகற்றிக்கொண்டு பொருளற்றவை என்று நன்கறிந்த சிறு செயல்களில் ஈடுபட்டு, சிறு பூசல்களில் ஊடாடி, சிறு விழைவுகளை துரத்திச்சென்று, அவ்வெறுமையிலிருந்து மீண்டு வந்தேன். இங்கு நான் வைத்திருப்பவை அனைத்தும் அதன் பின்னர் நான் திரட்டி என் மேல் அணிந்துகொண்டிருப்பவைதான்” என்றது.

மற்ற குரங்குகள் ஒன்றும் சொல்லவில்லை. சில குரங்குகள் எண்ணம்கூர சலிப்புற்றவை என தலையை சொறிந்துகொண்டன. பீதகர்ணி தொடர்ந்தது “அவ்வப்போது தனிமையில் அவ்வெறுமையை சென்று தொடுகையில் என் உள்ளம் திடுக்கிட்டு குளிர்ந்து உறைகிறது. அக்கணமே அதை உதறி மீண்டு வந்து இவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன்” என்றது. சௌவர்ணன் “ஏன் நீ அறிந்தவற்றில் சென்று நிலைகொள்ள முடியவில்லை?” என்றது. “அங்கு செல்ல நான் இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிடவேண்டும். நான் அறிந்து திளைத்து அறிதல்களாகவும் நினைவுகளாகவும் சேர்த்துக்கொண்டுள்ள ஒவ்வொன்றையும். எண்ணவே அச்சம் கொள்கிறேன்” என்றது பீதகர்ணி.

“ஒவ்வொரு அறிதலும் ஒரு சிறு இறப்பு” என்றது கும்போதரன் எங்கிருந்தோ என. அக்குரல் அதன் வாயிலிருந்துதான் எழுந்ததா என்னும் ஐயம் பிற குரங்குகளுக்கு ஏற்பட அவை மெய்ப்பு கொண்டன. “ஆனால் மெய்மை விடுதலை செய்கிறது என்கிறார்கள். நீ இப்போது கையில் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் உன்னை இங்கு கட்டிப்போடுவன. இவை உன்னால் தாள முடியாத துயரை எப்போதுமே அளிக்குமெனில் அக்கணமே அவற்றை உதறிவிட்டு நீ உள்ளே வைத்திருக்கும் அந்த மெய்மையை சென்று தொட்டுவிடுவாய். அதை பற்றிக்கொண்டு இவையனைத்தையும் துறக்க முயல்வாய்” என்றது தூமவர்ணி.

கும்போதரன் “மெய்மை விடுதலை செய்கிறது” என்று தானிருந்த மாற்றுலகிலிருந்து தனக்கே என சொன்னது. “விடுதலை என்பது இழப்பும் கூடத்தான். இழப்பவற்றின் ஏக்கம் விடுதலை கொண்ட எவருக்கும் சற்று நாள் இருக்கும். பெருநோய் கொண்டு வலி சூடித் துடிப்பவர்கள்கூட அதிலிருந்து விடுதலை கொண்டதும் அவ்வலியை நினைத்து சற்று ஏங்குவதை பார்த்திருக்கிறேன். தன்னிடம் இருந்த நன்றோ தீதோ விலகிச்சென்றால் மானுடன் ஏக்கம் கொள்கிறான். ஏனெனில் அதை தன்னுடையதென்றே அவன் உணர்கிறான். எதுவாயினும் அது தன் ஆணவத்தின் ஒரு பகுதியே என ஆழத்தில் அறிந்திருக்கிறான்.”

“அந்த ஏக்கத்தையும் கடந்துவிட்டால்தான் மெய்மை அளிக்கும் விடுதலை உவகையை அளிக்கத்தொடங்கும். அது பிறிதொன்றால் மறுநிகர் செய்யப்படாத உவகை என்பதனால் கணந்தோறும் பெருகும். பெருகுந்தோறும் பெறுபவனையும் பெருகவைப்பதனால் திகட்டுவதில்லை. மூதாதையர் சொல்லைக்கொண்டு நோக்கினால் பெறுபவன் பெறுபொருளாகவே மாறுவதனால் பெறுவதென்பதே நிகழாமலாகி பெருவெளியென்று விரிந்து இருப்பும் இன்மையும் அகன்று பரம் என நின்றிருக்கும் நிலை அது.”

சீற்றத்துடன் பெண்குரங்கான விருக்ஷநந்தினி கேட்டது “பிரம்மம் மானுடனுடன் ஏன் அவ்வாறு விளையாட வேண்டும்?” பீதகர்ணி “எனக்கு புரியவில்லை. என்ன விளையாட்டு?” என்று கேட்டது. “இங்கு இத்தனை இனிய காட்டை, இன்கனிகளை, அழகிய சுனைகளை, காற்றை, ஒளியைப் படைத்து நம்மை சூழ வைத்திருக்கிறது. நாம் அதில் ஆடிக் களிக்கிறோம். உடன் நோயையும் இறப்பையும் பின்னி அனைத்தையும் மறுநிகர் செய்திருக்கிறது. மகிழ்கையில் துயரையும் நலம்கொள்கையில் நோயையும் வாழ்வில் சாவையும் எண்ணி எண்ணி நாம் நிலையழிகிறோம்.”

அதன் குரல் ஓங்கியது. “இவையனைத்திற்கும் அப்பால் இவையனைத்தும் பொருளற்றவை என்று காட்டும் ஒன்றை நிறுவி அதன் ஒரு துளி சுவை அனைவருக்கும் ஒருகணமேனும் அமையும்படி வகுத்துள்ளது. இங்கிருக்கும் நன்மை தீமைகளில் ஊசலாடி எங்கோ இருக்கும் இவைகடந்த ஒன்றை சற்றே அறிந்து முழுதடைய ஏங்கி எத்திசையும் தேடி இங்கிருந்து அங்கென முடிவிலா ஊசலாட்டத்தை அடைந்து ஒருகணமும் நிலைபெறாமல் அழியும் பொருட்டே உலகிலுள்ள உயிர்களனைத்தும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.”

“அறிவென்பது பிரம்மம் அளித்துள்ள ஒரு கொடை. அதனூடாக அறிவுகொண்டோர் தன்னை வந்தடையவேண்டுமென்று அது எண்ணுகிறது” என்றது கும்போதரன். “நீ அறியமாட்டாய், இங்குள உயிர்கள் ஒவ்வொன்றும் முற்பிறவியில் நன்மை செய்தவை. நலம் பேணி, வீரம் விளைவித்து, அறம் நின்று, தவமியற்றி, மேலும் மேலும் பிறவியெடுத்து அறிவடைந்து அகம் கூர்கொண்டு மெய்மையை சென்றடைகின்றன. பிரம்மம் பல்லாயிரம்கோடித் துளிகளாக தன்னை சிதறடித்து ஒவ்வொரு துளியையும் தன்னை நோக்கி ஈர்த்து தானென இணைத்து முடிவிலாது தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.”

“இச்சொற்கள் இங்கு நின்றுவிடுவதே நல்லது. இவற்றை நாம் மீளமீளப் பேசுவதனால் பொருளொன்றுமில்லை. முதியோர் எப்போதும் இவற்றை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இளையோர் அவற்றை முற்றறியக் கூடுவதுமில்லை. எங்கேனும் ஒரு தலைமுறையில் முதியோர் இவற்றைக் கூறுவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றால் நம்மைப்போன்ற மரமானுடர்களும் அவர்களைப் போன்ற நிலமானுடர்களும் விடுதலைபெறுவோம்” என்றது பீதகர்ணி.

கும்போதரன் “ஆம், நானும் அதை எண்ணுவதுண்டு. துள்ளித் திரியும் என் சிறார்களிடம் ஒருபோதும் இவற்றை கூறலாகாதென்று. ஆயினும் இங்கிருக்கும் ஒவ்வொன்றும் நான் உணர்ந்த ஒன்றுக்கு சான்று கூறுவனவாக தன்னை மாற்றிகொள்கையில், ஒவ்வொரு நிகழ்விலும் கூறுவதற்கு ஒன்று என்னிடம் எழுந்து நாகொண்டு துடிக்கையில் உளம் அடக்கி அமர்வது அத்தனை எளிதாக இல்லை” என்றது. நீள்மூச்சுடன் “நன்று. கூடுமானவரை கூறிவிட்டோம். இங்கு நிறுத்திகொள்வோம்” என்று சொல்லி விழிகளை மூடிக்கொண்டது.

எப்போதும் அச்சொற்கள் அவ்வண்ணம் திசைமுடிவில் முட்டி அறுபட்டு நிலைகொள்வதை அறிந்திருந்த குரங்குகள் ஆங்காங்கே சென்று அமர்ந்தன. சிறிய குரங்குகள் ஒன்றையொன்று துரத்தி கிளைகளில் தாவி விளையாடத் தொடங்கின. முலையருந்தும் மகவுகளை வயிற்றுடன் அணைத்தபடி அன்னைக் குரங்குகள் கவர்கிளையில் அமர்ந்து விழி மூடின. பெண்குரங்குகள் ஒன்றையொன்று பேன் துழாவத்தொடங்க நான்கைந்து முதிய ஆண் குரங்குகள் அப்பால் சென்று ஒரு கிளையில் அமர்ந்து விசைகொண்ட கையசைவுகளுடனும் உறுமல்களுடனும் தங்களுக்குள் பேசிக்கொண்டன.

கும்போதரன் கால்களை நீட்டி அமர்ந்தது. அதன் விழிகள் சரிந்தன. இளங்குரங்கான மூர்த்தன் அருகே வந்து அதன் தொடை மேல் கைவைத்து “தாதையே, எனக்கொரு கதை சொல்லுங்கள்” என்றது. “உன் நண்பர்கள் அங்கே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே சென்று விளையாடு” என்றது கும்போதரன். “நீங்கள் கதை சொன்னால் நான் அந்தக் கதைகளை அவர்களிடம் சொல்வேன்” என்றது மூர்த்தன். “அவர்களிடம் எல்லா கதைகளையும் சொல்லிவிட்டேன்.” கும்போதரன் சிரித்து “அவர்கள் உன் கதைகளை விரும்புகிறார்களா?” என்றது. “அவர்கள் நான் கதை சொன்னால் கேட்பார்கள். சற்று நேரத்திலேயே கதையிலிருந்து விலகிவிடுகிறார்கள்” என்றது மூர்த்தன்.

“ஏன் உனக்கு மட்டும் உள்ளம் விலகவில்லையா?” என்று கும்போதரன் கேட்டது. மூர்த்தன் மேலும் அதன் உடலுடன் ஒட்டிக்கொண்டு “இல்லை, எனக்கு இவர்களின் இந்த விளையாட்டுகளைவிட கதைகேட்பதுதான் உகந்ததாக உள்ளது. இங்கிருக்கும் இந்தக் காடு, காற்று, ஒளி அனைத்தையும்விட கதைகளில் உள்ள காடும் இருளும் ஒளியும்தான் என்னை கவர்கின்றன. கதைகளை கற்பனை செய்துகொள்ளும் பொருட்டே இவற்றையெல்லாம் பிரம்மம் படைத்திருக்கிறதென்று தோன்றுகிறது” என்றது. கும்போதரன் புன்னகையுடன் அச்சிறுகுரங்கின் புன்மயிர் பிசிறி நின்ற தலையைத்தொட்டு “ஆம், நீ பிறிதொருவன். இளமையில் உன்னைப்போலவே நானும் இருந்தேன்” என்றது.

“என்னுடன் பிறந்தவர்கள் கிளையிலிருந்து கிளை தாவி மகிழ்ந்துகொண்டிருக்கையில் உச்சிக்கிளை நோக்கி சென்று நுனியில் அமர்ந்து விரிந்த வானை நோக்கி எதையென்று தெரியாமல் எண்ணி ஏங்கி விழிநீர் விடுபவனாக இருந்தேன். கனிந்த பழத்தை பார்க்கையில் அச்செம்மையும் மணமும் நான் அறியாத எவரோ எனக்களிக்கும் பரிசென்று கருதினேன். நோயுற்று மறைந்துகொண்டிருக்கும் முதியவர்களைப் பார்க்கையில் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத நீர்ப்பரப்பொன்றில் மூழ்கிக்கொண்டிருப்பவர்களாக, அடியிலிருந்து ஒரு கை அவர்களை இழுத்து எடுத்து தங்கள் மடியில் வைத்துக்கொள்வதாக கற்பனை செய்தேன்” என தொடர்ந்தது.

“பிறருடைய உடலுரமும் கிளைதாவும் விசையும் எனக்கு கூடவில்லை. என்னை அவர்கள் ஏளனம் செய்தார்கள். ஆனால் உள்ளூர என் மேல் மதிப்பும் கொண்டிருந்தார்கள். என் தோழன் என்னைவிட மும்மடங்கு ஆற்றல் கொண்டவன். இருமடங்கு பெரிய உடல் கொண்டவன். என்னை எப்போதும் கேலிச்சொற்களால்தான் அழைத்து வந்தான். ஆனால் இவர்கள் அனைவரிடமிருந்தும் என்னை பாதுகாத்தான். இக்குடியின் தலைவன் என்று அவன் ஆனபோது அவனுடைய தோழனாக நானும் குடித்தலைமைக்கு பொறுப்பேற்றேன். சென்ற மழைக்காலத்தில் அவன் உயிர்துறப்பதுவரை நானும் இணைந்தே இக்குடியை நடத்தினேன்.”

“இதை இவ்வளவு பெருக வைத்தது அவன் தோள்வல்லமை. அவனுடைய கொடிவழியில் வந்தவன் நீ. நீ கதைவிழைவு கொண்டிருக்கிறாய். என் மைந்தர் தோளாற்றல் கொண்டுள்ளனர். எப்போதும் ஒருவர் நம் குடியில் இப்படி இருந்துகொண்டிருப்பார்கள்” என்றது கும்போதரன். உடனே சற்று உளம் சோர்ந்து “இவ்வாறு இருப்பது நன்றோ தீதோ என்று எனக்கு தெரியவில்லை. நான் கொண்ட அலைக்கழிப்புகள் எதையும் என் தோழன் அடையவில்லை. இங்கு உள்ள இன்பங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அடைந்தான். ஆற்றல் மிக்க அரசன் என்று மலைமானுடக்குடிகள் அனைவரும் அவனை புகழ்ந்து நினைவில் கொண்டிருக்கிறார்கள். இங்கு எதையும் அவன் இழக்கவில்லை. விண்புகுந்து அங்கும் எதுவும் அவனுக்கு குறையப்போவதில்லை” என்றது.

“ஆனால் நான் ஐயமின்றி இங்குள்ள எதையும் தொட்டதில்லை. அடைந்த எதிலும் நிறைவு கொண்டதில்லை. இங்கிருந்து அகன்றால் அங்கும் எனக்கு நிறைவுண்டா என்று தெரியவில்லை. நான் அறிவுள்ளவன் என இளமையில் தருக்கினேன். ஆனால் அவ்வப்போது அவனைப் போலிருந்தால் நன்றோ என்று நான் எண்ணுவதுண்டு. ஒருபோதும் அவனென்று நான் ஆகக்கூடும் என்று எண்ணியதில்லை. ஆக விழையாமலும் இருந்ததில்லை. ஆனால் ஒருகணமேனும் நானென்று இருக்க அவன் விழைந்திருப்பானா? அவ்வாறு உணர்ந்ததே இல்லை” என்றபின் “கதை சொல்லும் உளநிலையில் நான் இல்லை. உன் அன்னையிடம் சென்று கேள். அவள் சொல்வாள்” என்றது. மீண்டும் உடல் தளர்த்தி விழிமூடி கும்போதரன் துயிலத்தொடங்க மூர்த்தன் கிளைநுனிகளில் தொங்கி ஊசலாடி தன் அன்னையை நோக்கி சென்றது.

மூர்த்தன் தூமவர்ணியை அணுகி அதன் மென்மயிர்த் தோளைப் பிடித்து இழுத்து உலுக்கி சிட்டுக்குருவியின் கூர்குரலில் “அன்னையே, கதை சொல்” என்றது. தூமவர்ணி எரிச்சலுடன் “போ, கதை சொல்லும் நிலையில் நான் இல்லை. நான் கடந்து சென்ற அவனைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றது. “அன்னையே! கதை சொல்லுங்கள், அன்னையே!” என்று அதன் கைகளைப் பிடித்து உலுக்கியது மூர்த்தன். “நான் அவனைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன், மைந்தா” என்றது தூமவர்ணி. “கதை சொல்… கதை சொல்… கதை சொல்” என வெறிகொண்டு உலுக்கியது மூர்த்தன். “சரி சரி, உயிரை எடுக்காதே… அடங்கு… நிறுத்து… சொல்கிறேன்” என்று அன்னை சொல்ல “சரி” என அன்னையின் கைகளை விலக்கி மடியில் ஏறி அமர்ந்துகொண்டது மூர்த்தன்.

“நான் ஒரு மூதாதையின் கதையை சொல்கிறேன்” என்றது தூமவர்ணி. “நிறைய குரங்குகளின் கதையை சொல்லியிருக்கிறீர்கள்” என்று மூர்த்தன் சொல்லியது. அந்நினைவினால் ஊக்கம் கொண்டு அன்னையின் கைகளை விலக்கி பாய்ந்து குருவி போலவே துள்ளி கிளையிலிருந்து கிளை பாய்ந்து சுழன்று அமர்ந்து வால் நெளிய “நிறைய குரங்குகள்! ஒரு குரங்கு அங்கே கடலிலிருந்து கடல் தாவியது. அதன் வாலில் பத்துதலையுள்ள அரக்கன் ஒருவன் பற்றிக்கொண்டான். தன் வாலால் அந்த அரக்கனை சுற்றி எடுத்துக்கொண்டு தாவிச்சென்றது. எட்டுக் கடல்களும் தாவிய பின்னரே அந்த அரக்கனை பார்த்தது. புன்னகைத்து அடடா நீ இங்கிருக்கிறாயா, எனக்குத் தெரியவில்லையே நண்பா என்று சொன்னது.”

அதன் சிறு உடலால் உள்ளிருந்து எழுந்த துடிப்பை தாளமுடியவில்லை. துள்ளித்துள்ளித் தாவியபடி “அரக்கன் பத்து தலையிலும் புண்பட்டு இருபது கைகளும் தளர்ந்து மெய்யாகவே நீ என்னை பார்க்கவில்லையா என்று கேட்டான். பேருருவம் கொண்டெழுகையில் சிறியவை என் பார்வையிலிருந்து மறைந்துவிடுகின்றன. அந்த வடமலையே எனக்கு சிறு கூழாங்கல்லெனத் தெரிகையில் உன்னை நான் எவ்வண்ணம் உணரமுடியும் நண்பா என்று அக்குரங்கு கேட்டது” என்றது. உரக்க நகைத்து துள்ளிக்குதித்து அமர்ந்து கைகளை தலைக்குமேல் விரித்து “அவ்வளவு பேருருவம்… வான் வரை பெரிய உருவம்!” என்றது. மகிழ்ந்து சிரித்து “பெரியது… மிகப் பெரியது!” என்றது.

அன்னை தன் மைந்தனின் தலையிலிருந்த சிறிய சுழியில் சுட்டுவிரலை வைத்து சுழற்றிச் சிரித்து “ஆம், அது பாலியின் கதை. அவன் இந்திரனின் மைந்தன்” என்றது. மூர்த்தன் “அங்கே மரக்கிளைகளின் மேல் அமர்ந்து நாம் தொலைவில் இந்திரனின் மைந்தனை பார்த்தோமே! வில்லேந்தி பொருதிக்கொண்டிருந்தான்… வில்… பெரிய வில்!” என்றது. “ஆம், அவனும் இந்திரனின் மைந்தன் என்றுதான் சொல்கிறார்கள்” என்றது அன்னை. மூர்த்தன் “ஆனால் இவன் இவ்வளவு சிறியதாக இருக்கிறான். ஆற்றலற்றவனாக இருக்கிறான். நாமேகூட அவனை வென்றுவிடலாமென்று தோன்றுகிறது” என்றது.

தூமவர்ணி அன்புடன் நகைத்து “உன் அகவையில் அவ்வாறுதான் தோன்றும்” என்றது. மூர்த்தன் நினைவுகூர்ந்து “இன்னொரு குரங்கின் கதை! இது இன்னொரு குரங்கு!” என்று சொல்லி சிறிய சுட்டுவிரலை தலைக்குமேல் தூக்கி, பாசிமணி விழிகளை விரித்து உதடைக் குவித்தது. “முன்பொருநாள் தன் தமையனை ஒரு பெருங்குகைக்குள் பெரும்பாறையைப் புரட்டி வைத்து மூடியது. மிகப் பெரிய பாறை!” தூமவர்ணி “ஆம், அவன் தமையன் அரக்கன் ஒருவனுடன் பொருதியபடி அந்த குகைக்குள் நுழைந்தான். அரக்கன் தமையனை கொன்றிருப்பான் என்று எண்ணி அவ்வரக்கன் வெளியே வந்துவிடக்கூடாது என்று அக்குகையை மூடினான் இளையோன்” என்றது.

“ஒருவேளை தமையன் உயிரோடிருந்திருந்தால்?” என்று குட்டிக் குரங்கு கேட்டது. “அறிவிலி, தமையன் உயிரோடிருந்தால் ஒற்றைக்கையால் அந்தப் பாறையைத் தள்ளி வெளிவந்து விடமாட்டானா?” என்றது தூமவர்ணி. “அந்தப் பாறையை அரக்கன் தள்ளி விலக்க முடியாதா?” என்றது மூர்த்தன். “அரக்கனால் எப்படி அவ்வளவு பெரிய பாறையை தள்ளி விலக்க முடியும்?” என்றது அன்னை. “அன்னையே, அப்படியானால் அந்த அரக்கன் எப்படி தமையனை வெல்ல முடியும்?” என்று மூர்த்தன் கேட்டது. தூமவர்ணி உரக்க நகைத்து “நன்று, நீயே இனிமேல் கதைகளை புனையலாம்” என்றது.

குட்டிக் குரங்கு அருகே வந்து குரல் தாழ்த்தி “வேண்டுமென்றேதான் அந்தக் குகையை மூடினார் அல்லவா?” என்றது. “இருக்கலாம்” என்றது தூமவர்ணி. “வேண்டுமென்றேதான்” என்றது மூர்த்தன். “ஏன்?” என அன்னை கேட்டது. “அந்தக் குரங்கு தன் தமையனின் மனைவிமேல் மையல் கொண்டிருந்தது. அவள் பெயர் தாரை.” தூமவர்ணி திகைத்து “இதை யார் சொன்னது?” என்றது. “யாரும் சொல்லவில்லை, நானே யோசித்தேன்.” அன்னை மைந்தனை சற்று நேரம் நோக்கிக்கொண்டிருந்தபின் “உனக்கு எப்படி தோன்றியது?” என்றது. “அன்னையே, நான் அந்தப் பாறையை மூடிய குரங்காக நின்று அதை பார்த்தேன்” என்றது மூர்த்தன். தூமவர்ணி “நீ மாபெரும் கதையாளன். உன் சொல் வாழும்” என்றது.

மூர்த்தன் சிணுங்கலாக “கதை சொல், அன்னையே” என்றது. தூமவர்ணி “தமையன் வெளியே வந்தாரல்லவா?” என்றது. “ஆம், வந்தார்” என்றது மூர்த்தன். “தமையனும் இளையோனும் போரிட்டுக்கொண்டார்கள்” என்றது தூமவர்ணி. “ஆம், பெரும்போர்! அது பெரும்போர்!” என்று சொல்லி மீண்டும் கிளைகளில் எம்பிக் குதிக்கத்தொடங்கியது மூர்த்தன். “அந்தப் பெரிய போரை நான் பார்த்தேன். அப்போது நான் மிக அருகே ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தேன். அவர்கள் பாறைகளை எடுத்து வீசிக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அறைந்துகொண்ட ஒலியில் அருகிலிருந்த மரங்களெல்லாம் நடுங்கின.”

தூமவர்ணி உடல் வலிப்புபோல விதிர்க்க அதன் ஒரு விழி இழுத்துக்கொண்டது. “அதன்பின் இளையவனை மூத்தோன் அறைந்து கொல்லப்போகும்போது… கொல்லப்போகும்போது…” மூர்த்தன் கதையை அப்படியே விட்டுவிட்டு பாய்ந்து தாயின் அருகே வந்து அதன் தோளிலேறிச் சுழன்று மடியிலமர்ந்து “அன்னையே, நான் பிறிதொருவனை கண்டேன். செவ்வண்ணக் குரங்கு. அவன் ஒரு மலை மேல் ஏறி நின்றான். நான் நான் என எண்ணி எண்ணி எண்ணி வீங்கி பேருருக்கொண்டான். அவன் தலை கதிரவனை முட்டுவதுபோல் எழுந்தது. அவன் எழுந்து பறந்து சென்றபோது நின்றிருந்த மலை சற்றே பின்னடைந்தது” என்றது.

“ஆம், அவன் பெயர் அனுமன். அஞ்சனையின் மைந்தன். நம் குடிக்கு முதல் தெய்வம்” என்றது தூமவர்ணி. “ஆம், அனுமன்” என்றபோது குட்டிக் குரங்கு மிகவும் மலர்ந்தது. திரும்பி அப்பால் நின்ற தன் தோழனை நோக்கி “அனுமனின் கதை! அனுமனின் கதை!” என்று கூச்சலிட்டது. அங்கிருந்த அத்தனை குட்டிக் குரங்குகளும் பாய்ந்து ஓடி அருகணைந்தன. “அனுமனின் கதை! அனுமனின் கதை!” என்று எல்லாக் குரங்குகளும் கூச்சலிட்டன. “சொல்லுங்கள்! அனுமனின் கதை! அனுமனின் கதை சொல்லுங்கள்” என்று அவை கூவின.

“அனுமனின் கதையை பலமுறை சொல்லியிருக்கிறேன்” என்று தூமவர்ணி சொன்னது. “அனுமனின் கதையை அறியாத குரங்குகள் எவரும் இந்தக் காட்டில் இல்லை.” புஷ்பகர்ணி “மறுபடியும் சொல்லுங்கள். இன்னும் பெரிய அனுமனின் கதையாக சொல்லுங்கள்” என்றது. குட்டிப் பெண்குரங்கான சம்விதை “அந்த அனுமனின் கதையை எழுதிய மானுடர் ஒருவர் இருந்தார்” என்றது. “ஏன் எழுதினார்?” என்றது புஷ்பகர்ணி. “எழுதினால்தான் மானுடர் அதை மறக்காமல் இருப்பார்கள்.” புஷ்பகர்ணி ஐயத்துடன் தலையசைத்து “எழுதிய அந்தச் சுவடி தொலைந்துவிட்டால்?” என்றது. “தொலையாமல் இருக்க அதை மீண்டும் மீண்டும் எழுதி வைப்பார்கள். ஆயிரம்முறை எழுதி வைப்பார்கள்.” “ஆயிரம் முறை எழுதினாலும் அதை மறந்துவிடுவார்களா?” என்று மூர்த்தன் கேட்டது.

தூமவர்ணி நகைத்து “அந்த அளவுக்கெல்லாம் நாம் மானுடரை புரிந்துகொள்ள முடியாது” என்றது. “சரி, அஞ்சனை மைந்தனின் கதையை எழுதியவரின் கதையை சொல்லுங்கள்” என்றது மூர்த்தன்.

தொடர்புடைய பதிவுகள்

பயணம்- கடிதங்கள்

$
0
0

பிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது

அன்புள்ள ஜெயமோகன்,

 

நலம்தானே ?

 

நான் பிறந்து வாழ்ந்த ஊர் கும்பகோணம். கோவில்கள் சூழ்ந்த ஊர்.

எங்கள் ஊரில் நாங்கள் வெளியே செல்ல பெரிதாய் பொழுதுபோக்கு இடங்கள் எதுவும் கிடையாது. தடுக்கி விழுந்தால் கோவில் மட்டும்தான். அப்படியிருந்தும் நான் கோவில்களில் சிற்பங்களை இரசித்ததில்லை. விபூதி, குங்குமம் கொட்டும் ஒரு இடமாகத்தான் என் பால்யம் முழுதும் நான் அவற்றை கடந்து வந்திருக்கிறேன். இப்போது நினைக்கும் போது பெரும் வேதனையாக இருக்கிறது. எத்தனை கலை சாதனைகள் மிக்க கோவில்கள் அருகிலிருந்தும் நான் வீனாக்கியிருக்கிறேன்.

முதல் முதலாக சிற்பங்கள் மீது எனக்கு ஆர்வம் வந்தது உங்களின் விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கியபோதுதான். அதில் உள்ள முன்னுரை என்னுள் பல உணர்வெளிச்சிகளை உருவாக்கியது. ராமேஸ்வரம் கோவிலின் பிரகாரத்தில் மனிதரின் கண்கள் படாத இடத்தில் கூட சிற்பங்களின் நேர்த்தியை நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்.  செவ்வியலின் உதாரணமாக அதனை சொல்லியிருப்பீர்கள். அவை தன்னளவில் தன்னுயர்வை எட்டியிருப்பதாக உங்கள் அருகில் இருந்த மலையாள எழுத்தாளர் சொல்வார். அதனை படித்தபோதே அதன் பிரமாண்டமும், அதை உருவாக்கும் கலைஞனின் கனவும், படைப்பு மனமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

 

மேலும் தொடர்ந்து உங்கள் எழுத்தின் வழியேவே சிற்பங்களை இரசிக்கும் மனநிலை என்னுள் உருவாகி வந்துள்ளது. சென்ற வாரம் ஊருக்கு சென்றபோது இராமசாமி கோவில் சென்றேன்.  நீங்கள் சொல்லித்தான் அந்த கோவிலின் சிறப்பும் எனக்கு தெரிய வந்தது. அந்த ஊரிலேயே இருந்தும் நான் இதுவரை அங்கே சென்றதில்லை. ஒவ்வொரு சிற்பமாக பார்க்க பார்க்க ஒரு கனவின் வழியே தொன்மத்திற்குள் நுழைந்தது போலிருந்தது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக நான் சிற்பங்களை மட்டுமே பார்த்திருந்தேன். மேலும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பிரகாரத்தில் இருந்த இராமாயண ஒவியங்களை இரசித்து கொண்டிருந்தேன்.

 

இதுவரை நான் சிற்பங்கள் முன் இப்படி தவமிருந்ததில்லை. எல்லாம் உங்கள் எழுத்தினால்தான். உங்களால்தான் என் இரசனை உணர்வு மேம்பட்டுள்ளது. மிக்க நன்றி.

 

நன்றி

உமாரமணன்

 

அன்பின் ஜெ,

 

வணக்கம்!.

 

நண்பர் ஷாகுல் அமீதின் பிலடெல்பியா விசிட் படித்தேன். நானும் கூட அவ்வண்ணமே நெடுநாட்கள் இருந்திருக்கிறேன்.

 

பிலடெல்பியா நகரத்துக்கு பதினெட்டு

மைல் தூரத்தில் அலுவல் நிமித்தம் ஆறு வருடங்கள். எண்ணற்ற வார இறுதிகள் பிலடெல்பியா நகரத்தில் செலவிட்டிருந்தாலும், அவையனைத்தும் ஒரே ஒருங்கமைவுடன் வால்நட் ஸ்டீரிட்டில் உள்ள புகழ்பெற்ற மலேசியன் ஓட்டல் ஒன்றில் ரொட்டி கனாய் சாப்பிடுவதோடு

(புயல் வேக குளியல்,அதிவிரைவு முருக தரிசனம்,அடுத்த பஸ்ஸில் ஊர் திரும்பல் என்னும் பாலசங்கர் அண்ணாவின் திருச்செந்தூர் பயணம் போல…) நிறைவுபெறும். காரில் கடக்கையில் கண்ணில் படும் சிலைகளும் கூடுதல் கவனம் பெற்றதில்லை.

 

இலக்கிய வாசிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு, அலுவல் ரீதியான பரிச்சைக்கான பகல் நேரத்து பிலடெல்பியா விசிட் ஒன்றில் ஐந்துமணிநேரம் இடைவெளி கிடைக்க, முதல் முறையாக காரை தவிர்த்து கால் போன போக்கில் நகரம் முற்றிலும் சுற்றியலைந்த அன்று கேளிக்கை, கொண்டாட்டங்களை விடவும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நகரம் என்று உணர்ந்துகொண்டேன்.

 

//

இப்போதெல்லாம் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு பார்பதற்கு என்ன இருக்கிறது என முன்பே தெரிந்துகொண்டு அவற்றை தேடிச்செல்லவே விரும்புகிறேன்

//

 

ஷாகுலின் வரிகள் எனக்கும் பொருந்தும்.

 

பொதுப்பாதையிலிருந்து விலகி, “ஆமிஷ் வில்லேஜ்”  உள்ளிட்ட தனித்துவமிக்க இடங்களை நோக்கிய பயணங்களை துவக்கியது அதன்பிறகுதான்.

 

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெள்ளை யானை –சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்

$
0
0

வெள்ளையானை வாங்க

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?
வெள்ளையானை ஒலிவடிவம்
கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…

 

யார் அல்லது எது வெள்ளை யானை எனும் கேள்வியில் இருந்து இந்நாவலை வாசிக்கலாம். நேரடியாக சொல்வது போல் அந்த ஐஸ் கட்டி வெள்ளையானை என்பது ஆரம்பக்கட்ட வாசிப்பு. ஒரு வகையில் எடனும் கூட ஒரு வெள்ளையானை தான். மொத்த ஆங்கிலேய காலனிய அரசும் வெள்ளை யானை தான் என வாசிப்பை விரித்து கொள்ளலாம்.

 

வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின் சுனீல் கிருஷ்ணன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்

$
0
0

அன்பின் ஜெ,

 

இம்முறை ஊட்டி முகாமில் எனக்கு முக்கிய அறிமுகமாக இருந்தது அறிவியல் புனைவுதான். அதன் வரலாறு, இலக்கணம், எல்லைகள், சாத்தியங்கள் என சுசித்ரா மற்றும் கமலக்கண்ணன் அரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

அறிவியல் கதைகள் ஆங்கிலத்தில் இருப்பதாலும் அதன் அறிவியல் தகவல்சார்ந்த பின்னணி காரணமாகவும் வாசிப்பு சவால் கொண்டதாக இருப்பதாக சிலர் குறிப்பிட்டனர். நான் சுசித்ரா பகிர்ந்திருந்த கதைகளில் டெட் சியாங்கின் மூன்று கதைகளை வாசித்திருந்தேன். எனக்கு மூன்றுமே ஆர்வமூட்டும் வாசிப்பாகவே இருந்தது.  அவற்றுள் Great Silence கதை ஒப்புநோக்க சிறியது. எனவே வாசிக்கும்போதே அதை மொழிபெயர்க்க முயற்சித்தாலென்ன எனத் தோன்றியது. என்னளவில் Exhalation கதையே மூன்றில் முதன்மையானது. இருப்பினும் முதல் மொழியாக்க முயற்சி காரணமாக Great Silence கதையை எடுத்துக் கொண்டேன்.

 

Great Silence கதை ஒரு தவிர்க்க முடியாத சூழியல் கேள்வியை கேட்பதாகத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அது வெறும் உயிரின அழிவைப் பற்றி மட்டும் பேசவில்லை. அனைத்து உயிர்களுக்கும் இருக்க சாத்தியமுள்ள மரபை பற்றி பேசுகிறது. மனிதன் தன்னை குறித்தும் உலகை குறித்தும் கொண்டுள்ள மாயைகளை பற்றி பேசுகிறது. இக்கதையின் முக்கிய விமர்சனமாக இதில் ‘கதைத்தன்மை’ இல்லாததை ஊட்டியில் பேசிக் கொண்டிருக்கும்போது சுசித்ரா குறிப்பிட்டார். ஓர் அழகியல் விமர்சகனாக அது நிச்சயம் ஏற்கதக்கது. இருப்பினும் இக்கதை எழுப்பும் ஆதார கேள்விகளும் அதற்கு எடுத்துக்கொண்ட தத்துவார்த்த அனுகுமுறையும் முக்கியமானதென நினைக்கிறேன்.

 

கதைகளை அறிமுகப்படுத்திய சுசித்ராவுக்கு நன்றி.

 

குறிப்பு: ஊட்டி முகாமுக்கு முன்னரே இம்மொழியாக்கத்தை முடித்து பகிர்ந்திருக்க வேண்டும். முகாமுக்கு ஒருநாள் முன்னர்தான் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது முடிக்க இயலவில்லை. எனவே இப்போது முழுமை செய்து அனுப்புகிறேன்.

 

பாரி,

பெருந்துறை

பிரபஞ்ச மெளனம்

 

மனிதர்கள் புவிக்கப்பாலான உயிரினங்களின் இருப்பை கண்டறிய அரெசிபோவை1 பயன்படுத்துகின்றனர். தொடர்பு வைத்துக் கொள்வதற்கான அவர்களின் விழைவு மிகவும் வ்லுவானது. எனவே அண்டம் முழுக்க கேட்கும் திறனுள்ள செவியை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

ஆனால் நானும் எனது கிளிக் கூட்டமும் இங்கேயே இருக்கிறோம். எங்கள் குரல்களை கேட்பதற்கு அவர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்?

 

மனிதரல்லாத உயிரனமாகிய நாங்கள் அவர்களுடன் தொடர்புகொள்ளும் திறனுடையவர்கள். மிகச்சரியாக மனிதர்கள் தேடிக்கொண்டிருப்பது எங்களைத்தான் அல்லவா?

 

இந்த பிரபஞ்சம் மிக விரிந்தது. எனவே சிந்திக்கும் உயிரினம் நிச்சயம் இங்கு பலமுறை தோன்றியிருக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் மிக நீண்ட வயதுடையதும் கூட. எனவே தொழில்நுட்ப வசதி வாய்த்த ஒரு உயிரினத்துக்காவது அனைத்து விண்மீன் பேரடைகளுக்கும் (கேலக்ஸிகளுக்கும்) விரிவடையும் அளவுக்கு காலம் இருந்திருக்கும். இருப்பினும் பூமியைத் தவிர வேறெங்கும் உயிர்கள் இருப்பதற்கான குறிகள் இல்லை. மனிதர்கள் இதை ஃபெர்மி முரண்பாடு என்கின்றனர்.

 

ஃபெர்மி முரண்பாடுக்கு2 அளிக்கப்படும் ஒரு விளக்கம் என்னவென்றால், சிந்திக்கும் உயிரினங்கள் தாங்கள் பிற உயிரினங்களின் ஊடுறுவலுக்கு இலக்காகலாம் என அஞ்சி தங்கள் இருப்பை வெளித் தெரியாதவாறு அவர்களே மறைத்துக் கொண்டிருக்கலாம் என்பது.

 

மனிதர்களால் முற்றழிவின் விளிம்புவரை தள்ளப்பட்டுவிட்ட உயிர்னங்களின் ஒரு உறுப்பினராக நான் உறுதிகூறுவது என்னவென்றால் இது மிகவும் விவேகமான தந்திரமேயாகும்.

 

கவனம் ஈர்ப்பதை தவிர்த்து அமைதியாக இருப்பதே சரியான முடிவாகப் படுகிறது.

 

ஃபெர்மி முரண்பாடு சிலசமயம் ‘பெரும் மெளனம்’ என்று அறியப்படுகிறது. இந்த பிரபஞ்சம் பல்வேறு குரல்களின் கூச்சல் தொகுப்பாக இருந்திருக்க வேண்டும். மாறாக அது குழப்பமான அமைதியை மட்டுமே கொண்டுள்ளது.

 

சில மனிதர்கள் முன்வைக்கும் கோட்பாடு என்னவென்றால் சிந்திக்கும் உயிர்கள் வேற்றுக் கிரகத்திற்கு விரிவடையும் சாத்தியம் உருவாகும் முன்னரே அந்த உயிர்கள் முற்றழிந்திருக்கக் கூடும் என்பது. அவர்கள் சொல்வது சரியெனில், நாம் பார்க்கும் இந்த இரவு வானின் நிசப்தம் என்பது ஒரு கல்லறையின் அமைதி.

 

நூற்றாண்டுகளுக்கு முன்பு ரியோ அபஜோ3 வனம் முழுக்க எங்கள் குரல்களால் அதிரும் அளவுக்கு நாங்கள் மிகுதியாக இருந்தோம். நாங்கள் இப்போது கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்டோம். விரைவிலேயே இந்த மழைக்காடும் பிரபஞ்ச வெளியைப் போலவே அமைதி கொண்டுவிடக் கூடும்.

 

அலெக்ஸ் என்ற பெயரில் ஆப்ரிக்க சாம்பல்நிற கிளி ஒன்று முன்பிருந்தது. அவனது அறிவு சாத்தியங்களுக்காக அவன் புகழ் பெற்றிருந்தான். அதாவது, மனிதர்களிடயே.

 

ஐரீன் பெப்பர்பெர்க் எனும் மனித ஆராய்ச்சியாளர் அலெக்ஸை ஆராய  முப்பதாண்டுகள் செலவிட்டார். அவர் ஒன்றை கண்டுபிடித்தார்: அலெக்ஸ் உருவங்களுக்கும் வண்ணங்களுக்குமான சொற்களை மட்டும் தெரிந்து கொண்டிருக்கவில்லை, அவன் உண்மையில் உருவம் மற்றும் வண்ணம் எனும் கருத்துகளை புரிந்து கொண்டிருந்தான்.

 

பல அறிவியாலளர்கள் ஒரு பறவை இதுபோன்ற கருத்துகளை புரிந்து கொள்ள முடியுமா என சந்தேகித்தனர். மனிதர்கள் தாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என சிந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் அலெக்ஸ் வெறுமனே வார்த்தைகளை திருப்பி சொல்லவில்லை, அவன் தான் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்தே சொல்கிறான் என பெப்பர்பெர்க் அவர்களை ஒருவழியாக ஏற்றுக் கொள்ள வைத்தார்.

 

எனது உறவினர்களிலேயே அலெக்ஸ் மட்டும்தான் மனிதர்களின் பொருட்படுத்தும்படியான உரையாடல் துணையாக ஏற்றுக் கொள்வதற்கு மிக அருகில் வந்தவன்.

 

அலெக்ஸ் திடீரென இறந்த போனான், ஒப்புநோக்க அவன் ஓரளவு இளமையில் இருக்கும்போதே. இறப்பதற்கு முன்பு அன்று மாலை அலெக்ஸ் பெப்பர்பெர்கிடம் சொன்னது, “நீ நலமாக இரு. நான் உன்னை நேசிக்கிறேன்.”

 

மனிதர்கள் மனிதரல்லாத உயிரனத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக இருந்தால், இதற்குமேல் அவர்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

 

ஒவ்வொரு கிளியும் ஒரு தனித்தன்மையான சமிக்ஞை கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்; உயிரியலாளர்கள் இதை கிளியின் ‘தொடர்பு சமிக்ஞை’ எனக் கூறுகின்றனர்.

 

1974 இல், வானியலாலர்கள் அரெசிபோவை பயன்படுத்தி மனிதர்களின் இருப்பை உணர்த்தும் வகையில் விண்வெளி நோக்கி ஒரு செய்தியை ஒளிபரப்பினர். அது மனித குலத்தின் தொடர்பு சமிக்ஞை.

 

வனத்தில் கிளிகள் பெயரைக் கொண்டே ஒன்றையொன்று அழைத்துக் கொள்ளும். ஒரு பறவை பிற பறவையின் தொடர்பு சமிக்ஞையை போலி செய்வதன் மூலமே அதன் கவனத்தை ஈர்க்கும்.

 

என்றேனும் ஒருநாள் அரெசிபோ வழியாக செய்தி திரும்பி பூமிக்கு அனுப்பப்படுவதை மனிதர்கள் கண்டுபிடித்தால், பிற எவரோ மனிதர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள் என்பது உறுதியாகும்.

 

கிளிகள் குரல்வழி கற்பவர்கள்: நாங்கள் ஒரு ஒலியை கேட்ட பிறகு அதைக் கொண்டு புதிய ஒலியை எழுப்ப முடியும். இது சில விலங்குகளே கொண்டிருக்கும் திறன். ஒரு நாய் பத்திற்கும் மேற்பட்ட கட்டளைகளை புரிந்து கொண்டு செயலாற்றலாம். ஆனால் அது ஒருபோதும் குரைப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாது.

 

மனிதர்களும் குரல்வழி கற்பவர்கள் தான். நம்மிடையே அந்த ஒற்றுமை இருக்கிறது. எனவே மனிதர்களுக்கும் கிளிகளுக்கும் ஒலியுடன் ஒரு விசேஷ உறவு இருக்கிறது. நாம் வெறுமனே கத்துவதில்லை. நாம் உச்சரிக்கிறோம். நாம் தெளிவாக பேசுகிறோம்.

 

அதனால்தான் மனிதர்கள் அரெசிபோவை அதன் வடிவில் வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு ஒலிவாங்கி (ரிசீவர்) ஒலிகடத்தியாக (ட்ரான்ஸ்மிட்டர்) இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அரெசிபோ இரண்டாகவும் இருக்கிறது. அது கேட்பதற்கான காது, அதேசமயம் பேசுவதற்கான வாயும் கூட.

 

மனிதர்கள் கிளிகளுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வெகு சமீப காலமாகத்தான் எங்களுக்கும் அறிவுத்திறன் இருக்கக் கூடும் எனும் சாத்தியத்தை பொருட்படுத்துகிறார்கள்.

 

நான் இதற்காக அவர்களை குறை சொல்ல முடியாது என நினைக்கிறேன். கிளிகளாகிய நாங்களும் மனிதர்கள் அவ்வளவு அறிவானவர்கள் அல்ல என்றே எண்ணி வந்தோம். நம்மிலிருந்து பெரிதும் மாறுபட்டவர்களின் சுபாவங்களை புரிந்து கொள்வது கடினமானதுதான்.

 

ஆனால் கிளிகள் வேறெந்த வேற்றுக் கிரக உயிரினத்தை காட்டிலும் மனிதர்களின் இயல்புகளுடன் ஒத்துப் போவது, மனிதர்கள் இன்னும் அருகில் வந்து எங்களை கவனிக்கலாம்; அவர்கள் எங்கள் கண்களை நேருக்குநேர் நோக்கலாம். வேற்றுக் கிரக உயிர்களை பொறுத்தவரை நூறு ஒலியாண்டுகள் தொலைவுக்கு இப்பால் இருந்து கொண்டு ஒட்டுகேட்க மட்டுமே முடியும் எனும் போது அவர்களை தங்களால் புரிந்து கொள்ள முடியும் என மனிதர்கள் எப்படி நம்புகிறார்கள்?

 

ஆங்கிலத்தில் ”ஆஸ்பிரேசன்” (Aspiration) என்ற சொல்லுக்கு எதிர்பார்ப்பு என்றும் சுவாசிக்கும் செயல் என்றும் இரண்டு அர்த்தங்கள் இருப்பது தற்செயலானதல்ல.

 

நாம் பேசும் போது நமது நுரையீரலின் மூச்சுக் காற்றை பயன்படுத்தி நமது எண்ணங்களுக்கு புறவடிவம் கொடுக்கிறோம். நாம் எழுப்பும் ஒலிகள் ஒரே நேரத்தில் நமது நோக்கங்களாகவும் நமது உயிர்விசையாகவும் இருக்கிறது.

 

நான் பேசுகிறேன், எனவே நான் இருக்கிறேன். மனிதர்கள் மற்றும் கிளிகள் போன்ற குரல்வழி கற்பவர்களால் மட்டுமே அனேகமாக இந்த உண்மையை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

 

வாயைக் கொண்டு ஒலியை சமைப்பதில் ஒரு நிறைவு இருக்கிறது. இந்த செயல் மிக முதன்மையானதகவும் உள்ளார்ந்ததாகவும் மனித வரலாறு முழுக்க இருந்துள்ளது. எந்த அளவுக்கென்றால் மனிதர்கள் இந்த செயலை இறைவழி சேர்க்கும் பாதையாகக் கண்டுள்ளனர்.

 

பிதகோரியன் இறை உணர்வாளர்கள் உயிரெழுத்துகளை கோளத்தின் இசை வடிவம் என நம்பியதால் அவற்றை உச்சாடனம் செய்து அதிலிருந்து ஆற்றல் பெற்றனர்.

 

பெந்தகொஸ்தெ கிருஸ்தவர்கள் தாங்கள் நாவால் பேசும் போது, விண்ணில் உள்ள தேவதைகளின் மொழியை பேசுவதாக நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

 

இந்து பிராமணர்கள் தாங்கள் மந்திரங்கள் ஓதுவதன் மூலம் மெய்மையின் கட்டுமானத்தை பலப்படுத்துவதாக நம்புகிறார்கள்.

 

குரல்வழி கற்றல் திறன் கொண்ட ஒரு உயிரினம் மட்டுமே தங்கள் தொன்மங்களில் ஒலிக்கு இத்தனை முக்கியத்துவம் தர முடியும். கிளிகளாகிய நாங்கள் இதை வரவேற்கிறோம்.

 

இந்து தொன்மத்தின்படி பிரபஞ்சமானது ஒரு ஒலியால் உருவானது: “ஓம்”. இதுவரை இருந்ததும் இனி வரப்போவதுமான அனைத்தும் இந்த சொல்லில் அடங்கியுள்ளது.

 

அரெசிபோ தொலைநோக்கியை கொண்டு வானில் விண்மீன்களுக்கிடையே நோக்கும்போது மெல்லிய ஹம் ஒலியை அது கேட்கிறது.

 

வானியலாளர்கள் அதை “அண்டத்தின் நுண்ணலைப் பின்னனி” எனச் சொல்கின்றனர். பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட, பிரபஞ்சம் உருவாக காரணமான பெரு வெடிப்பின் போது உண்டான அதிர்வலைகளின் எச்சமே அது என்கின்றனர்.

 

ஆனால் நாம் அதை ஆதி “ஓம்” ஒலியின் மெலிதான ஒலித்தீற்றலாகக் கேட்கக்கூடிய எதிரொலியாகக் கூட யோசித்துப் பார்க்கலாம். அந்த ஆதி ஒலியானது இந்த பிரபஞ்சம் உள்ளவரை இரவு வானில் அதிர்ந்து கொண்டிருக்கும் அளவுக்கு ஒத்திசைவானது.

 

அரெசிபோ வேறெதையும் கேட்காதிருக்கும் போது படைப்பின் குரலை கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

பியூர்டோ ரிகான்4 கிளிகளாகிய எங்களுக்கென்று சொந்த புராணங்கள் உள்ளது. அவை மனித புராணங்களை காட்டிலும் எளிமையானதுதான், இருப்பினும் மனிதர்கள் அதிலிருந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்றே நினைக்கிறேன்.

 

ஐயோ, எங்கள் புராணங்கள் எங்கள் இறப்போடு இழக்கப்படுகின்றன! நாங்கள் அழிவதற்கு முன்னர் மனிதர்கள் எங்கள் மொழியை புரிந்து கொள்வார்கள் என நான் நம்பவில்லை.

 

எனவே எங்கள் இனத்தின் முற்றழிவென்பது வெறும் ஒரு பறவை கூட்டத்தின் அழிவல்ல. அது எங்கள் மொழியின், எங்கள் சடங்குகளின், எங்கள் மரபின் மறைவும் கூட. அது எங்கள் குரலை முற்றிலும் கேட்காமலாக்குவது.

 

மனித நடவடிக்கை எங்கள் இனத்தை முற்றழிவின் விளிம்புவரை கொண்டு வந்திருக்கிறது, ஆனால் அதற்காக நான் அவர்களை குறை சொல்லவில்லை. அவர்கள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இதை செய்யவில்லை. அவர்கள் எங்கள்மேல் கவனம் செலுத்தவில்லை, அவ்வளவுதான்.

 

மேலும் மனிதர்கள் எத்தனை அழகான புரணங்களை உருவாக்குகின்றனர்; அவர்களின் கற்பனை வளம்தான் என்ன! அவர்களின் விழைவுகள் இத்தனை தீவிரமாக இருப்பது அதனால்தான் போலும். அரெசிபோவை பாருங்கள். அப்படியொரு பொருளை கட்டமைக்கக் கூடிய எந்த உயிரினமும் தன்னுள் மேன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

 

அனேகமாக எங்கள் உயிரினம் இங்கு இன்னும் நீண்டநாள் இருக்காது; நாங்கள் பெரும்பாலும் எங்கள் காலத்துக்கு முன்னரே இறந்து பிரபஞ்சத்தின் மெளனத்தோடு இணைந்து விடுவோம். ஆனால் நாங்கள் செல்வதற்கு முன்னர், மனிதகுலத்திற்கு ஒரு செய்தி அனுப்புகிறோம். அரெசிபோவில் உள்ள தொலைநோக்கி மூலம் அவர்களால் இதை கேட்க முடியும் என்று மட்டும் நம்புகிறோம்.

 

அந்த செய்தி இதுதான்:

 

நீங்கள் நலமாக இருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்.

 

X

 

அரெசிபோவை1 – Arecibo – பியூர்டோ ரிகோவின் அரெசிபோ நகராட்சியில் அமைந்துள்ள ஒரு ரேடியோ தொலைநோக்கி ஆய்வுமையம்

 

ஃபெர்மி முரண்பாடு2 – Fermi Paradox

 

ரியோ அபஜோ3 – Rio Abajo – பனாமா நகரின் ஒரு உட்பிரிவு

 

பியூர்டோ ரிகான்4 – Puerto Rico – வடகிழக்கு கரீபியன் கடலில் அமைந்துள்ள ஒரு பகுதி. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 

மூலம்:

The great silence – Ted Chiang – https://electricliterature.com/the-great-silence-by-ted-chiang/ 

 

 

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-31

$
0
0

தூமவர்ணி தன் கால்களை அகற்றி வைத்து மரக்கிளையில் அமர்ந்து தன்னைச் சுற்றி குழுமிய குட்டிக் குரங்குகளை இரு கைகளாலும் அணைத்து உடலோடு சேர்த்து அவற்றின் மென்தலையை வருடியபடியும் சிறுசெவிகளை பற்றி இழுத்தபடியும் கொஞ்சியபடி கதை சொல்லத் தொடங்கியது. கதையின் ஆர்வத்தில் குழவிகளின் வால்கள் நாகக் குழவிகளென நெளிந்தன. அந்த ஒன்றுதலை அப்பாலிருந்து கண்ட பிற குரங்குகள் அருகணைந்து செவிகூர்ந்து மரக்கிளைகளில் அமர்ந்தன. சற்று நேரத்தில் கதை சொல்லும் குரங்கைச் சுற்றி கூடின.

மிக அப்பால் கும்போதரன் கிளையில் நன்கு சரிந்து விழி சரித்து துயின்றுகொண்டிருந்தது. “அந்தத் தாதை ஏன் கதை கேட்க வரவில்லை?” என்று புஷ்பகர்ணி கைசுட்டி கேட்டது. “சிலநாளில் அவரும் கதையாகிவிடுவார்” என்றது பீதகர்ணி. ஆவலுடன் “அப்போது அவர் எங்கிருப்பார்?” என்றது புஷ்பகர்ணி. “பேசாதே” என்று கதை சொல்லும் அன்னைக் குரங்கு அதை செல்லமாக அதட்டிவிட்டு “நடுவே பேசக்கூடாது. இது தொல்கதை. தொல்கதைகள் நடுவே நம் குரல் எழுந்தால் கதையை நிகழ்த்தும் தெய்வங்கள் விலகிச்சென்றுவிடும்” என்றது.

“நான் ஒன்றுமே சொல்லமாட்டேன்” என்று சொன்ன மூர்த்தன் “ஆனால் இவன் பேசுவான்” என்றது. “நீயும் பேசக்கூடாது” என்று அக்குரங்கின் வாயை சுட்டுவிரலால் சுண்டியபின் தூமவர்ணி கதை சொல்லத் தொடங்கியது. “மைந்தர்களே கேளுங்கள், இக்கதை நெடுங்காலத்துக்கு முன்பு சரயு நதியின் கரையில் இருந்த பிரம்மவர்த்தம் என்னும் காட்டில் நிகழ்ந்தது. அன்று அந்தக் காடு செறிந்த மரங்களால் ஆனதாகவும், நடுவே யானை நின்றால் மறையும் அளவுக்கு உயரம் கொண்ட பெரிய சிதல்புற்றுகள் நிறைந்ததாகவும் இருந்தது. அக்காட்டில் வாழ்ந்தார் நமது மூதாதையான கபீந்திரர்.”

“அவர் ஒருநாள் மரக்கிளையிலிருந்து கூர்ந்து கீழே நோக்கியபோது அங்கிருந்த பெரிய சிதல்புற்றுகளின் நடுவே ஒரு மனிதன் நின்றிருப்பதை கண்டார். மெல்ல மரக்கிளைகளினூடாக இறங்கி சற்று அப்பால் சென்று நின்று எச்சரிக்கையுடன் அந்த மனிதரை பார்த்தார். நெடுந்தொலைவிலிருந்து அவர் தனித்து நடந்து வந்திருப்பது தெரிந்தது. கால்கள் புழுதி படிந்து வேர்கள்போல் இருந்தன. இடையில் மான் தோலாடை அணிந்திருந்தார். விழிகள் கலங்கி நீர் உதிர்த்துக்கொண்டிருந்தன. கைகளைப் பார்த்தால் வில்லேந்திய தடங்கள் தெரிந்தன. ஆனால் அவர் ஷத்ரியர் அல்ல என்று நமது மூதாதை புரிந்துகொண்டார். ஷத்ரியர்கள் பொன்னோ வெள்ளியோ அணிந்திருப்பார்கள். எனில் வேடன். வேடர்கள் இக்காட்டிற்கு தனியாக வருவதற்கு தேவையெதுவும் இல்லையே என்று எண்ணினார்.”

“மலைவேடர்களை நமது மூதாதையர் அஞ்சுவதில்லை. ஏனெனில் அவர்கள் குரங்குகளை கொல்வதில்லை. இன்றும் வேடர்கள் நம்மை தேவர்கள் என்று எண்ணி வணங்குகிறார்கள். ஆயினும் அவர் உரிய எச்சரிக்கையுடன் மேலும் அருகணைந்து அந்த மனிதரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் தன் கையிலிருந்த சிறிய இரும்பு அம்பால் அச்சிதல்புற்றின் ஒருபக்கக் கூம்புச் சரிவை குத்திப் பொளித்து வாயில் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருந்தார். உள்ளே இருந்த சிதல்அறைகளை தூர்த்து வெளியாக்கினார். அவ்வாயிலில் நுழைந்து மேலும் மண்ணைப் பொளித்து வெளியே அகற்றி ஒரு சிறு இல்லமென ஆக்கிக்கொண்டார். அது சிதல்கள் கைவிட்டுவிட்ட கூம்பு. அது எப்படி அவருக்குத் தெரிந்தது என கபீந்திரர் வியந்தார்.”

“அந்த மானுடர் தழைகளை பறித்துச்சென்று உள்ளே பரப்பி அமர்விடம் உருவாக்கி அதில் கால் மடித்து அமர்ந்தார். அவரை நோக்கிக்கொண்டிருந்த கபீந்திரர் அவர் “மரம்! மரம்!” என்று சொல்வதை கேட்டார். கபீந்திரர் அவர் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தார். நம் குலத்திற்கே உரிய இயல்பால் அதைப்போலவே தானும் அமர்ந்து அவ்வாறே உதட்டை அசைத்தார். ஆனால் அம்மனிதர் தன்னை நோக்கவோ உணரவோ இல்லை என்று கண்டதும் மேலும் அருகணைந்து பலவகையான உடல்விளையாட்டுக்களை காட்டினார். இறந்தவர்போல் அருகே விழுந்து கிடந்தார். இளித்துக்காட்டி குர்ர் என்று ஓசையிட்டார். பற்களைக் காட்டி கடிப்பதுபோல நடித்தார். பலவகையாக புரண்டும் துள்ளி உருண்டும் வேடிக்கை காட்டினார். இறுதியாக அருகே சென்று கிள்ளிவிட்டு வால் விடைக்க தாவி விலகி ஓடினார்.”

“அவர் எதையுமே உணரவில்லை. அச்சொல் மட்டுமே அவர் நாவில் இருந்தது. ஆகவே கபீந்திரர் சில கணங்கள் உடல்குவித்து கூர்ந்துநோக்கி நின்றபின் அருகிருந்த மரத்தின் மேலேறி அங்கிருந்து கனிகளைப் பறித்து கொண்டுவந்து புற்றின் வாயிலில் வைத்தார். மிக அகன்று நின்று அந்த மனிதர் கனிகளையும் கிழங்குகளையும் எடுத்து உண்கிறாரா என்று பார்த்தார். நெடுநேரம் கழித்து விழித்துக்கொண்ட அவர் உணவு படைக்கப்பட்டிருப்பதை அறிந்து அதை எடுத்துப் பார்த்தார். சூழ விழியோட்டியபோது நோக்கிநின்ற கபீந்திரரை பார்த்தார். “நீயா?” என்றார். கபீந்திரர் புன்னகைத்து அருகணைந்து “நான் இங்கு கொண்டுவந்து வைத்தேன்” என்றார்.

அந்த மனிதர் திடுக்கிட்டு “நீ பேசுவது எனக்கு புரிகிறது” என்றார். “இன்று வரை விலங்குகள் பேசுவது எனக்கு புரிந்ததில்லை.” கபீந்திரர் “நீங்கள் அம்பை ஒழிந்துவிட்டீர்கள். படைக்கலமில்லாதவர்களுடன் மட்டுமே எங்களால் பேச முடியும்” என்றார். “இல்லையே, என் கையில் இப்போதும் அம்பிருக்கிறது” என்றார் அம்மனிதர். “ஆம், அதை இக்கூம்பை செதுக்கும்பொருட்டு எடுத்தீர்கள். ஆனால் உள்ளத்திலிருந்து அம்பை முற்றாக ஒழிந்துவிட்டீர்கள்” என்று கபீந்திரர் சொன்னார். “ஆம், இருக்கலாம்” என்று அவர் சொன்னார். “இங்கென்ன செய்யப்போகிறீர்கள்? புற்றுக்குள் இவ்வாறு மனிதர்கள் நுழைவதை நான் பார்த்ததே இல்லை” என்றார் கபீந்திரர்.

மலைவேடர் மீண்டும் துயருற்று விழி கலங்கி தலை குனிந்தார். “இங்கு ஏன் வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. என் கால் போன வழியில் இவ்விடத்தை அடைந்தேன். இந்தப் புற்றுகளைக் கண்டதும் இங்கு தங்கலாம் என்று முடிவெடுத்தேன்” என்றார். “புற்றுகளுக்குள் நாகங்களே தங்கும். ஆகவே மனிதர்கள் புற்றுகளை ஒழிகிறார்கள். நாங்களும் புற்றுகளுக்கு அருகே செல்வதில்லை” என்றார் கபீந்திரர். “இத்தகைய பெரிய புற்றுகளில் நாகங்கள் நுழைவதில்லை” என்று மலைவேடர் சொன்னார். “கிழக்குமலைச்சரிவில் வால்மீகம் என்றொரு காடு இருக்கிறது. அங்கே பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான மாபெரும் சிதல்புற்றுகள் உள்ளன. அவற்றை இவ்வாறு சற்றே செதுக்கி வாயில் அமைத்து உட்புறம் திருத்தி வீடுகளாக்கி வாழும் குலமொன்று உள்ளது. அவர்களை வால்மீகிகள் என்கிறார்கள். நான் அக்குலத்தைச் சார்ந்தவன்.”

“மெய்யாகவா?” என வியந்தபடி கபீந்திரர் அவர் அருகே சென்று அமர்ந்தார். “எங்கள் இல்லங்கள் இத்தகைய சிதல்புற்றுகளுக்குள் இறங்கி உள்ளே செல்லக்கூடியவையாக இருக்கும். மண்ணுக்குள் பலர் தங்கும் அளவுக்கு இடமுள்ள புற்றுகளும் கூட உண்டு” என்று மலைவேடர் சொன்னார். “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டபடி கபீந்திரர் அவர் முன் கால் நீட்டி அமர்ந்தார். “என்னை எந்தை ரத்னாகரன் என்று அழைத்தார். என் அன்னை வால்மீகி குலத்தை சார்ந்தவர். அவள் பெயர் பிருகதை. தந்தை தொல்முனிவராகிய பிரசேதஸ் என்று அவள் என்னிடம் சொன்னாள்” என்றார் மலைவேடர்.

இளமையில் ஒருமுறை அவள் காட்டிற்குள் கனி தேடச் சென்றிருந்தபோது அங்கு தவம் செய்து கொண்டிருந்த மாமுனிவரான பிரசேதஸை பார்த்தாள். அவர் உடலின் ஒளியால் கவரப்பட்டு காய் கனிகளுடன் சென்று அவரை பணிந்தாள். தனக்கு ஒரு மைந்தனை அளிக்கும்படி அவரிடம் கோரினாள். எங்கள் குடியில் பெண்ணின் மதிப்பென்பது நன்மைந்தனைப் பெறுவதிலேயே. காமத்தின்பொருட்டு எங்கள் குடிப்பெண்கள் உறவுகொள்வதில்லை. முனிவர் தன் தவத்திற்கு உதவி செய்யும்படியும் அவள் பணிவிடைகளில் மகிழ்ந்தால் அவளை மனைவியாக ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார்.

ஏழாண்டுகள் அவள் அவருக்கு பணிவிடை செய்தாள். ஒவ்வொரு நாளும் கனியும் தேனும் காய்களும் கொண்டுவந்து படைத்தாள். ஏழாம் ஆண்டு தன் நோன்பை முடித்து விழி திறந்த பிரசேதஸ் அவளைக் கண்டு புன்னகைத்து அருகணைந்து “என் கனவுக்குள் உன்னை நான் கண்டேன். முற்பிறவிகளில் நீ எனக்கு மனைவியாக இருந்திருக்கிறாய். இனியவளே, நமக்கு புகழ்மிக்க மைந்தன் ஒருவன் பிறப்பான்” என்றார். அவர்கள் அந்தக் காட்டிலேயே கூடினார்கள். சித்திரை மாதம் முழுக்க வேனிலைக் கொண்டாடியபடி அவர்கள் அக்காட்டில் மகிழ்ந்திருந்தார்கள்.

அவரை அவள் தன் குடிக்கு அழைத்து வந்தாள். அங்கே சிதல்புற்றுக்குள் அமைந்த வீட்டில் அவர் அவளுடன் ஓராண்டுகாலம் வாழ்ந்தார். அப்போது ஒருநாள் அவர் கனவில் என்னை கண்டார். நான் ஒளிமிக்க உடல்கொண்ட குழவியாக ஓர் ஆற்றங்கரையில் இலைப்பரப்பின் மீது கிடப்பதைக் கண்டு எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டார். கனவிலிருந்து விழித்துக்கொண்டு தன்னருகே படுத்திருந்த என் தாயை அழைத்து “சற்று முன் நான் ஒரு கனவு கண்டேன். ஒளி மிக்க உடல் கொண்ட ஒரு குழந்தையை நீ பிறப்பிப்பாய். அவனுக்கு நீ ரத்னாகரன் என்று பெயரிடு” என்று சொன்னார்.

அன்னை “நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டாள். “இக்கனவு எனக்கு வந்தது எனது பணி முடிந்துவிட்டது என்பதை காட்டுகிறது. இன்னும் அடுத்த நோன்புக்கு நான் செல்ல வேண்டியுள்ளது. வடமலை நாடிச் செல்கிறேன். என் வடிவென மைந்தன் உன்னுடன் இருப்பான். புகழ்மிக்கவனாவான். சொல் அவனை தொடரும், சொல்லை அவன் தொடர்வான். பெருந்துயரங்களிலிருந்து பேரழகை கண்டடைவான் . வடமலைகளைப்போல் இந்நிலத்தின் மேல் குளிர்முடி என எழுந்து என்றும் இங்கு நின்றிருப்பான். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவள் அவரை வணங்கினாள். அவள் செவியில் அவர் ஒரு ஊழ்கநுண்சொல்லை உரைத்தார். அவ்விரவிலேயே கிளம்பி வடதிசை நோக்கி சென்றார். என் அன்னை அவர் செல்லும் திசை நோக்கி கைகூப்பி நின்றிருந்தாள். அவரை தன் கணவனாக ஏற்றதனால் தன் குலத்தால் அவள் மதிப்புடன் நடத்தப்பட்டாள். ஆனால் அவள் மேல் பிறருக்கு விலக்கமும் இருந்தது. அவளுக்கு அவர்கள் தனி புற்றுக்குடிலொன்றை அமைத்துக் கொடுத்தனர். அவள் அங்கு தன்னந்தனியாக தங்கினாள். அந்த ஊழ்கநுண்சொல்லை விழிப்பிலும் துயிலிலும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

எட்டுமாதம் நிறைவுற்றபோது அவள் ஒரு கனவு கண்டாள். நடந்து செல்கையில் தரையிலிருந்து ஒளிரும் கல் ஒன்றை அவள் எடுத்தாள். அது விண்மீன் உதிர்ந்து கிடந்ததுபோல் தோன்றியது. கையில் எடுத்துப் பார்த்தபோது கனிபோல் அழுந்தியது. உதட்டில் வைத்துப் பார்த்தபோது இனிமையும் நறுமணமும் நாசியை வந்தடைந்தன. அந்த ஒளிரும் கனியை அவள் விழுங்கினாள். அந்த ஊழ்கநுண்சொல் அது என அக்கல் உள்ளே நுழைந்தபோது உணர்ந்தாள். விழித்துக்கொண்டபோது தன் வயிற்றைத் தொட்டு கணவர் தன் குழவிக்கு ரத்னாகரன் என்று பெயரிட வேண்டுமென்று சொன்னதை நினைவுற்று விழி நீர் உகுத்தாள். ரத்னாகரா ரத்னாகரா ரத்னாகரா என மும்முறை அழைத்தாள்.

மாதம் திகைந்து நான் பிறந்தபோது எங்கள் வால்மீகக் குடியினரின் வழக்கப்படி காட்டுவிலங்குகளின் பெயர்களைத்தான் இடவேண்டுமென்று மூத்தோர் சொன்னார்கள். ஆனால் எனக்கு ரத்னாகரன் என்று பெயரிடுவதில் அன்னை உறுதியாக இருந்தாள். ஆகவே அப்பெயரை நான் அடைந்தேன். ஆனால் என் குலத்தோர் எவரும் அப்பெயரில் என்னை அழைக்கவில்லை. தாங்கள் ஒருவருக்கொருவர் வால்மீகிகள் என்றே அழைத்துக்கொள்வது வழக்கம். ஆகவே நான் வால்மீகியாகவே வளர்ந்தேன்.

என் அன்னை எனக்கு எதையும் கற்றுத்தரவில்லை. எந்தையின் பெயரை மட்டுமே சொன்னாள். நான் வளர்ந்து வில்லவனும் வேட்டைத் திறன் கொண்டவனுமாக மாறினேன். எங்கள் குலத்தில் எவருக்கும் சொல்பயிலும் வாய்ப்பில்லை. மூத்தோர் சொல்லும் குலக்கதைகளும் வேட்டைக்கதைகளும் அன்றி பிறிதெதையும் செவிகொள்ளவும் கூடவில்லை. வேட்டையில் நான் என்னை கண்டுகொண்டேன். வேட்டையை பசிக்காகத்தான் நிகழ்த்துவதாக வேடர்கள் சொல்வதுண்டு. அது பொய். இங்கே எந்த உயிரும் பசிக்காக மட்டும் வேட்டையாடுவதில்லை. எல்லா செயல்பாடுகளும் விளையாட்டுகளும் கூடத்தான்.

எந்த இளைஞனும் பசிக்காகவோ சுவைக்காகவோ மட்டும் வேட்டையாடுவதில்லை. வெல்லும் பொருட்டும் தன்னை அதில் கண்டடையும் பொருட்டும் மட்டுமே அவன் வில்லேந்துகிறான். பிறரைவிட மேலானவனாக, தான் முன்பு அடைந்ததைவிட ஒருபடி மேலே சென்றவனாக, தன்னைப் பற்றி பிறர் எண்ணுவதை ஒவ்வொரு முறையும் கடந்து செல்பவனாக உணரும் பொருட்டே விற்தொழில் பயில்கிறான். நானும் அவ்வாறே. பறக்கும் பறவையை அறைந்து வீழ்த்தி அது நிலம் தொடுவதற்குள் மீண்டும் வில் எடுத்து அம்பால் அறைந்து வானில் எழுப்புவேன். அம்புகளாலேயே அதை வானில் பறக்க வைப்பேன். நீர்நிழல் பார்த்து பறவைகளை வீழ்த்துவேன். நீருக்குள்ளிருக்கும் மீனை எய்து பிடிப்பேன். பறக்கும்போதே பறவையின் விழிகளை அம்பால் துளைப்பேன்.

என் வில்லால் இயலாதது ஒன்றில்லை என்று தருக்கினேன். பின்னர் ஏதோ ஒரு கணத்தில் வில்லில் சலிப்புற்றேன். வில்லென்பது நம் உள்ளில் எழும் விசையில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெற்றுக்கொள்கிறது. வில்லேந்துவதற்கு முன் நம்மில் எழுவதில் ஒரு பகுதியே அம்பெடுக்கையில் கூடுகிறது. நாணில் அமைவது அதிலொரு பகுதி. அம்பென எழுவது இன்னும் ஒரு சிறு பகுதி. இலக்கடைவது பிறிதொரு துளி. ஒவ்வொரு முறை இலக்கடையும்போதும் ஏமாற்றம் கொள்ளத்தொடங்கினேன். பின்னர் நான் அம்பையும் வில்லையும் தொடுவதை வெறுத்தேன். வேட்டைக்கு மட்டுமே அம்புகளை தொட்டேன். என் வெளி சுருங்கி என் உடலுக்குள் மட்டுமானதாகியது.

பறவைகளை வேட்டையாடி கொண்டுசென்று வழியோரம் நின்று அவ்வழி செல்லும் வணிகர்களிடம் விற்று அவர்களிடமிருந்தே பொருட்களை வாங்கி குடிக்கு மீள்வது என் குலத்து ஆண்களின் வழக்கம். சாலைகளில் முழுக்க நாங்கள் இருபுறமும் நின்றுகொண்டிருப்போம். அவ்வழி செல்லும் வணிகர்களை கூவிக்கூவி அழைப்போம். ஆடைகளும் படைக்கலக் கருவிகளும் இனிப்புணவும் அவர்களிடம் இருந்தன. ஒரு நாள் முழுக்க காட்டில் உலாவி வேட்டையாடி கொண்டுவந்த மான்தோலோ புலித்தோலோ ஒரு முறை உண்ணும் அளவுக்கு இனிப்பாக மாறியது. ஒருமுறை தொடுக்கும் அம்பு அளவுக்கே மதிப்பு கொண்டது. ஆனால் வாழ்க்கை அவை இன்றி நிகழவும் இயலவில்லை. முன்பெல்லாம் எங்களுக்கு ஒருநாள் வேட்டை என்பது ஒரு வார காலம் ஓய்வும் களியாட்டும். மெல்ல மெல்ல ஒவ்வொருநாளும் இரவும் பகலும் வேட்டையாடியாகவேண்டும் என்றாயிற்று.

ஒவ்வொன்றிலும் நான் சலிப்புற்றுக்கொண்டிருந்தேன். இங்கல்ல, இவையல்ல என்றொரு விளி என்னில் எழுந்தது. என் குலத்திலிருந்து நான் அகன்றகன்று சென்றேன். அவர்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் பொருளற்றவையாக தோன்றலாயின. ஏதோ ஒரு கணத்தில் என் அன்னையே ஒரு பண்படா விலங்கெனத் தோன்ற திடுக்கிட்டு தன்னுணர்வு கொண்டு என்னை நானே வெறுத்துக்கொண்டேன். அன்று அன்னையிடம் சென்று எனக்கு ஒரு பெண் தேரும் படி ஆணையிட்டேன்.

அன்னை நான் என் குலத்தில் மணம்செய்வேன் என்பதையே எண்ணியிருக்கவில்லை . “என்ன சொல்கிறாய்? உணர்ந்துதான் சொல்லெடுக்கிறாயா?” என்று என்னிடம் கேட்டாள். “நம் குடிப்பெண் ஒருத்தியை மணந்துகொள்ள விழைகிறேன். இங்கே எனக்கொரு குடி உருவாகவேண்டும்” என்றேன். “உனக்கான பெண்ணை நீ தேடிக்கொள்” என்றாள் அன்னை. “எனக்கான பெண் இங்கேயே வரவேண்டும்… இப்போதே. ஒருநாள் பொறுக்க என்னால் இயலாது” என்றேன். “அறிவிலிபோல் பேசுகிறாய்” என்று அன்னை சொன்னாள். “இல்லையேல் நான் அம்பால் என் கழுத்தை அறுத்துக்கொள்வேன்” என்று கூவினேன்.

அன்னை திகைப்புடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கற்பனையில் நான் வில்லுடன் வால்மீகத்திலிருந்து கிளம்பி அறியா நிலங்களுக்குச் சென்று வீரர்களை வென்று நகரங்களுக்குள் புகுந்து இளவரசிகளை மணம்புரிந்துகொண்டு வருவேன் என வளர்த்திருந்தாள். என் வில்லிலிருந்து என் குடி புகழ்பெற்று எழும், வான்மீகத்தின் புற்றுவீடுகள் ஏழடுக்கு மாளிகைகளாகும், இரவும் பகலும் ஒளி நிறைந்திருக்கும் நகரமொன்று அக்காட்டிற்குள் எழும் என கனவு கண்டாள். அப்படி எத்தனையோ கதைகளை அவள் கேட்டிருந்தாள். அவள் முனிவரை சந்திப்பதற்கு முன்னரே அக்கனவுகள் அவளுக்குள் இருந்தன.

பல நாட்கள் அவளால் அந்த ஏமாற்றத்திலிருந்து வெளிவர இயலவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின் என்னிடம் மீண்டும் “நீ மெய்யாகவே இங்கு மணம்புரிந்து தங்க எண்ணுகிறாயா?” என்றாள். “ஆம், உடனே எனக்கு பெண் வேண்டும்” என்று சொன்னேன். “நீ இப்போதெல்லாம் வில்லை எடுப்பதே இல்லை. காட்டில் இருந்து கிழங்குகளை மட்டும் அகழ்ந்துகொண்டு வருகிறாய். உன் கண்ணெதிரில் மான்கூட்டம் கடக்கும்போது கை ஓய்ந்து அமர்ந்திருக்கிறாய் என்று உன் தோழர் சொன்னார்கள். நீ வேட்டையில் ஆர்வமிழக்கிறாய் என்பதுகூட எனக்கு ஒருவகையில் உவப்பாகவே இருந்தது. இங்குள்ள வாழ்க்கையை விட்டு விலகுகிறாய், பிறிதெங்கோ செல்லவிருக்கிறாய் என்று எண்ணினேன்” என்றாள்.

“இல்லை, நான் பிறிதெங்கும் செல்ல எண்ணவில்லை. செல்லும் தொலைவுகள் எனக்கு மேலும் சலிப்பை அளிக்கின்றன. இங்கு மீண்டும் அமிழ்ந்துகொள்ள விரும்புகிறேன். இதுவரை சென்ற தொலைவுகள் அனைத்தையும் கரைத்தழிக்க விரும்புகிறேன்” என்று அன்னையிடம் சொன்னேன். அவளால் என்னை புரிந்துகொள்ள இயலவில்லை. மீண்டும் மீண்டும் “மெய்யாகவா சொல்கிறாய்? இங்கேயே இருக்கத்தான் எண்ணுகிறாயா?” என்று கேட்கத்தான் முடிந்தது. பின்னர் அவள் வழக்கம்போல் ஊழை அடைக்கலம்கொண்டாள். சொல்லவிந்தாள். ஆனால் என் விழிநோக்குவதை தவிர்த்தாள். தன்னை மேலும் இறுக்கி உடையாத தனிமைக்குள் புகுந்துகொண்டாள்.

என் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டேன். என்னைவிட நான்காண்டு முதியவள். முன்னரே அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் பாம்பு கடித்து உயிர்துறந்திருந்தான். எங்கள் குலமுறைப்படி வரிசையில் அடுத்த ஆணேற்புக்கு உரியவள் அவளே என்பதனால் அவள் எனக்கு மனைவியானாள். அவள் பெயர் விரூபாக்ஷி. எனக்கு அவளில் மேலும் ஏழு குழந்தைகள் பிறந்தன. என் குடியின் மிகமிக அழகற்ற பெண் அவள்தான். அவளுக்கு அவள் அன்னை இட்ட பெயர் அது அல்ல. ஊரார் இளிவரலாக விளித்தது, அவ்வண்ணமே ஆகியது.

ஆனால் எனக்கு பெண் உடலே போதுமென்றிருந்தது. அவளிடம் நான் பேசியதுண்டா, நேராக விழிகொண்டு நோக்கியதுண்டா என்றே ஐயுறுகிறேன். அவள் வெறும் தசை. ஆனால் உடல் திரண்ட விலங்கு. காட்டுவிலங்கின் ஆற்றலும் விசையும் கொண்டவள். விலங்குகளுக்குரிய கெடுமணம். விலங்குகளுக்குரிய கட்டற்ற உணர்வுகள். என்னில் எழுந்த விலங்குக்கு உரிய இணை அவளே. விலங்குகள் கெடுமணத்தையே விரும்புகின்றன.

ஏழாண்டுகள் நான் வெறிகொண்ட காமத்தில் என்னை முற்றாக அழித்துக்கொள்ள இயலுமா என்று பார்த்தேன். காமம் கொள்ளுந்தோறும் பெருகுவது, விலக எண்ணுகையில் பேருருக்கொள்வது, ஒருபோதும் மானுடனை தன் பிடியிலிருந்து விட்டுவிடாதது என்று மூத்தோர் சொல்லி கேட்டிருந்தேன். அதன் ஆயிரம் கைகள் என்னைப் பற்றி நிறுத்துமெனில் நன்றென்றே எண்ணினேன். ஆனால் மிக விரைவிலேயே காமம் என்னை கைவிடத் தொடங்கியது. அச்செயலிலிருந்த விலங்கியல்பு என் கருத்தை அடைந்ததும் காமம்கொள்ளும் ஒவ்வொரு முறையும் என் நினைவில் எழுந்து அவள் உடல்மேல், என் உடல்மேல் ஒவ்வாமையை உருவாக்கியது. நான் மீண்டும் கசந்து தனியனானேன். என் உள் உலர்ந்து தக்கையாகி உடலோட்டுக்குள் பிரிந்து நின்றது.

மீண்டும் காடுகளில் இருளில் வழி தவறி அலைந்தேன். என் கால்களில் மூதாதையரின் வழிகள் இருக்கையில் ஒருபோதும் வழி தவற இயலாதென்று உணர்ந்து மேலும் கசப்பு கொண்டேன். காமத்தை சென்று பற்றிக்கொள்ள முயன்றபோது முலைகுடி மாறிய குழந்தையை அன்னை விலங்கு என சீறி உதைத்து விலக்கியது அது. ஆகவே வஞ்சத்தில் திளைக்க முயன்றேன். சினத்தை வளர்த்துக்கொண்டேன். அனைவரிடமும் பூசலிட்டேன். ஆகவே அனைவராலும் விலக்கப்பட்டேன். விலக்கப்பட்டமையால் வெறுக்கப்பட்டேன். வெறுக்கப்பட்டமை என்னில் வெறுப்பெழுவதற்கு வழியமைத்தது. ஆனால் சில நாட்களிலேயே அதுவும் சலித்தது. ஏனென்றால் என் வஞ்சம் வெறும் நடிப்பென நான் அறிந்திருந்தேன். காமத்தையும் வஞ்சத்தையும் எவரும் முடிவிலாது நடிக்க முடியாது. ஏனென்றால் அதில் வேறுவேறு வாய்ப்புகளும் வடிவங்களும் ஊடுவழிகளும் இல்லை.

ஆனால் என் காமத்தின் விளைவென ஒன்பது குழந்தைகள் என் இல்லத்தில் இருந்தனர். ஒன்பதின்மரும் வேட்டை விலங்குகளுக்குரிய வெறிகொண்ட பசியுடன் விளங்கினர். என் மனைவி நான் காமத்தை இழந்ததுமே என்மேல் கசப்பு கொண்டவளானாள். நான் அவள் குழந்தைகளுக்குரிய உணவுடன் மீளாமலானபோது அது வெறுப்பென வெளிப்பட்டது. எப்போதும் என்னை வேட்டைக்கும் உணவுக்கும் துரத்தினாள். “என்ன செய்கிறாய்? பித்தனா நீ? சென்று எங்களுக்கு உணவு கொண்டு வா. உணவின்றி நாங்கள் இறந்தால் மண்ணுக்கடியில் உறங்கும் மூதாதையருடன் நீ சென்றுசேர இயலாது. மண்ணை துளைத்துத் துளைத்து ஆழுலகுக்குச் செல்ல முயன்று சலித்து உயிர்விடும் மண்புழுவாக பிறப்பாய்” என்று அவள் என்னை முனிந்தாள்.

மண்புழுக்களை பார்க்கையில் எல்லாம் இளமையிலிருந்தே உடம்பில் ஒரு நடுக்கை உணர்வதுண்டு. மண்ணில் முட்டி முட்டி துளையிட்டு தோற்று அந்நெளிவையே வாழ்வெனக்கொண்ட பிறவி. எத்தனை பெரிய தீச்சொல் வாழ்நாளெல்லாம் மூடிய வாயில்களில் தலையால் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது! மண்ணில் நெளியும் கோடானுகோடி மண்புழுக்கள் அனைத்தும் மூதாதையரின் தீச்சொல் பெற்றவை. அவர்கள் அளித்த நெறிகளிலிருந்து வழுவியவை. அவர்களுக்கான கடனை இயற்றாமல் ஒழிந்தவை.

ஒரு நாள் சேற்றுக்கரையொன்றில் அமர்ந்திருந்தபோது முழு உடலையும் நெளித்து நெளித்து மண்ணில் புக முயன்றுகொண்டிருந்த மண்புழு ஒன்றை கண்டேன். கைநீட்டி அதை எடுத்து நோக்கினேன். விழியில்லை, செவியில்லை, மண்ணின் உள்ளே நுழையும் விழைவன்றி வேறெந்த எண்ணமும் அதிலிருப்பதாக தெரியவில்லை. அதை வீசிவிட்டு எழுந்து ஓடினேன். உடம்பெங்கும் முட்கள் கீறின. மூச்சிரைக்க வணிகச்சாலை ஓரமாக வந்து நின்றேன். வெறுங்கையுடன் அங்கு நின்றிருப்பதன் பொருளின்மை அப்போதுதான் தெரிந்தது. அப்போது நான் இறந்தேன். மறுகணம் மற்றொருவனாகப் பிறந்தேன்.

தொடர்புடைய பதிவுகள்

சிற்பங்கள் -வழிபாட்டுமுறைகள் -கடிதம்

$
0
0

வானோக்கி ஒரு கால் -1

வானோக்கி ஒரு கால் – 2

 

அன்புள்ள ஜெ

 

நீங்கள் உங்கள் வானோக்கி ஒரு கால் கட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்களை பலவாறாக நானும் சொல்லிவருகிறேன். தமிழகத்திற்கு வெளியே வாழ்வதனால் என்னைப்போன்றவர்களுக்கு இதெல்லாம் தெரிகிறது. தமிழகத்திலேயே ஆலயவழிபாட்டின் ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே சுழல்பவர்களுக்கு இது கண்ணுக்குப்படவில்லை. இங்கே இந்துமதம் பற்றிப்பேசுபவர்கள் சின்ன மாற்றம் என்றாலும் ஆகமம் மாறக்கூடாது, வழிவழியான மரபுகளை மீறக்கூடாது என்றுதான் சொல்வார்கள்.

 

சபரி மலை விவகாரத்தில் இப்படிப்பேசிய அத்தனைபேரிடமும் தமிழக ஆலயங்களில் ஆகம முறை மீறல்களைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். அவர்களுக்கு ஆகமமுறையே தெரியாது. அர்ச்சகர்களுக்குக் கூடத் தெரியாது. வழிவழியான முறைகளை மிகச்சின்ன லாபங்களுக்காக முழுக்கவே மாற்றிவிடுகிறார்கள். எந்த ஒழுங்கோ முறையோ அதில் கடைப்பிடிப்பதில்லை.

 

சிற்பங்களை வெறும் பொம்மைகளாகக் கருதக்கூடாது. அவை ஆவாஹனம் செய்யப்பட்ட திருவுருக்கள். அப்படி ஆவாஹனம் செய்யப்படாத திருவுருக்களில்கூட மூர்த்திசான்னித்தியம் உண்டு. அவை அந்த கணக்குகளின்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக காலபைரவர் போன்ற சிலைகள் போருக்குக் கிளம்பும் உடையில் இருக்கும். சுந்தர வஸ்திரதாரியாக பெருமாளின் வடிவங்கள் இருக்கும். சில துர்க்கைசிலைகளில் அக்னியையே ஆடையாக உருவகம் பண்ணியிருப்பார்கள். நடராஜசிற்பத்தின் ஆடை பறக்கும் தழல்போல் இருக்கும். அது வடவை அக்னி. அதையே ஆடையாக அணிந்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆகம சாஸ்திர முறை உண்டு.

 

இன்றைக்கு அத்தனைபேருக்கும் அழுக்குத்துணியை கோவணமாக கட்டிவிடுகிறார்கள். இந்தச்சிலைகளுக்கு வஸ்திரதாரணம் செய்யவேண்டும் என முன்னோர்கள் நினைத்திருந்தால் அதற்கான வடிவத்தை அளித்திருப்பார்கள். சில ஊர்களில் சிற்பங்களில் ஆணியால் ஓட்டை போட்டு ஆடையை ஒட்டிவைக்கிறார்கள். எந்த ஒழுங்கும் அழகும் இல்லை. இவர்களிடம் எதுவுமே சொல்லமுடியவில்லை. தமிழகத்தில் சென்ற ஐம்பதாண்டுகளில் மதக்கல்வி அறவே இல்லாமலாகிவிட்டது. ஆகவே மூடபக்தி பெருகிவிட்டது. கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஆளுமைகளும் இல்லை அமைப்புக்களும் இல்லை.

 

இங்கே ஆகமசம்பிரதாயம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் இதைப்பேசமாட்டார்கள். ஏனென்றால் இது வியாபாரம். அவர்களுக்கு வருமானம். இவர்கள் ஆகமசம்பிரதாயம் பேசுவதெல்லாம் சாதி விஷயமாக மட்டும்தான். [ இப்போது திருமாவளவனை தீட்சிதர்கள் வரவேற்றபோது ஒருகும்பல் அது ஆகமமுறை அல்ல என வசைபாடினார்கள். இதில் மட்டும்தான் ஆகமம் பார்க்கிறார்கள் மற்றபடி சிவலிங்கத்தை ஆட்டுக்கல் குழவியாக பயன்படுத்தினாலும் கவலை இல்லை]

ஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மை. இங்கே அர்ச்சகராக வருபவர்கள் வறுமையானவர்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை. ஒரு துணியை சிவன்கோயிலில் கொடுத்து அது சிவன் உடலில் ஒருவாரம் இருக்கவேண்டும், அதற்கு என்ன பணம் வேண்டும் என்று கேட்கும் ‘பக்தரை’ நான் கண்டேன். ஜோசியர் சொன்னாராம். அந்த அர்ச்சகர் ஆயிரம் ரூபாய் கேட்டார். ஐநூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். நம் ஆலயங்களில் சிற்பங்கள் அழிந்துகொண்டிருக்கிறன. சிற்பங்கள் பொறுப்பில்லாமல் அழிவதைப்பற்றி நீங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான்குநேரிக் காரரான ஒருவரிடம் இப்படிச் சிற்பங்கள் அழிவதைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு அது பெரிய விஷயமாகவே படவில்லை. அதைவிட முக்கியமாக வழிபாட்டு முறைகள் அழிந்துகொண்டிருக்கின்றன.

 

வட இந்தியாவின் கோயில்களைப் பற்றி நீங்கள் கும்பமேளா பயணக்கட்டுரையிலே எழுதியிருந்தீர்கள். அங்கே ஐநூறாண்டுக்கால அயல்மத ஆட்சியால் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. குடும்பவழிபாடு மட்டும் மிஞ்சியது. மீண்டும் கோயில்கள் கட்டப்பட்டபோது எவருக்கும் ஆகமமுறை தெரியவில்லை. வழிபாட்டுமுறை தெரியவில்லை. ஆகவே கோயில்கள் கும்மட்டங்கள் கூம்புகளுடன் அழகும் ஒழுங்கும் இல்லாமல் அமைந்தன. பூசை என்ற முறையே இல்லை. லேய்ஸ், மேரிபிஸ்கட் எல்லாம் நைவேத்யம் செய்யப்படுவதைக் காணலாம். தமிழகத்திலும் அந்த முறை வந்துகொண்டிருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்குப்பின் இங்கே ஆலயவழிபாடு எந்த நிலையில் இருக்கும் என்பதையே எண்ணிப்பார்க்கமுடியவில்லை

 

எஸ்.மகாதேவன்

நீர்க்கூடல்நகர் – 7

நீர்க்கூடல்நகர் – 6

நீர்க்கூடல்நகர் – 5

நீர்க்கூடல்நகர் – 4

நீர்க்கூடல்நகர் – 3

நீர்க்கூடல்நகர் – 2

நீர்க்கூடல்நகர் – 1

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அறம் -கடிதங்கள்

$
0
0

அறம் ஜெய்யமோகன்பள்ளி பருவத்தில் என்னுடைய வாசிப்பு தொடங்கிய காலத்தில் ராஜேஷ்குமார்களும் பட்டுக்கோட்டை பிரபாகர்களும் அவர்களுடைய கதைகள் மூலம் என்னை பல நாட்கள் என் பெற்றோர்களிடம் திட்டும் அடியும் வாங்கி தந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் உருப்படியாக பலமுறை வாசித்து மீள்வாசிப்பு செய்து கற்றுக்கொண்டது ராஜாஜியின் வியாசர் விருந்து.

 

கல்லூரியிலும் சரியான தேடுதலும் வழிகாட்டுதலும் இல்லாததால் சில வார இதழ்களும் துப்பறியும் கதைகளும் படித்து நேரத்தை வீணடித்தேன். பிறகு என் நண்பன் ராமசாமி மூலம் கல்கியும் சாண்டில்யனும் அறிமுகம் ஆயினர். பிறகு சுஜாதா. அப்போது எல்லாரையும் போல இலக்கியம் என்பது இவையே என கிடந்தேன். இவற்றினால் நடந்த ஒரே நன்மை, என்னுடைய வாசிப்பு வேகத்தை கூட்டியது மட்டுமே.

 

வேலைக்கு புனே சென்று பிறகு வாசிப்பு அறவே நின்றுபோனது. பிறகு மீண்டும் வாசிப்பை தொடங்க நான்கு  ஆண்டுகள் ஆனது. தொடங்கியபோது முற்றிலும் புதிய இடத்தில தொடங்கினேன். தொடங்கிய இடம் உங்கள் இணையத்தளம்.

 

சில கதைகள் மற்றும் பதிவுகள் படித்தபின் தொடங்கியதுதான் அறம் சிறுகதைகள். முதல்முறை படிக்க நான் எடுத்துக்கொண்டது 180 நிமிடங்கள். ஆனால் அவை ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.

 

செட்டியாரின் மனைவியும், கெத்தேல் சாஹிப்பும், வணங்கான் நாடாரும் என்னை முழுவதுமாக உள்ளிழுத்துக்கொண்டனர். கீதையின் சாராம்சமான கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதை யானை டாக்டர் தவிர யாரும் இவ்வளவு எளிதாக கூற முடியாது. இந்நாள்வரை மனம் நெகிழாமல், கண் கலங்காமல் நூறு நாற்காலிகள் கதையை நான் படித்தது கிடையாது.

 

எந்த ஒரு அறத்தையும் உணர்ச்சிகள் வழியாக கூறினால் அதன் நேர்மறை பாதிப்பு பல நாட்கள் இருக்கும். பாதிப்பு இருக்கும்வரை நம் மனது அதை பற்றி யோசித்து யோசித்து கருத்தை தொகுத்துக்கொள்ளும்.

எப்போதெல்லாம் மனோதைரியம் குன்றி, தன்னம்பிக்கையற்று இருந்திருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் வணங்கானையும், அதீத வெறுப்பு பெருகும் காலங்களில் நூறு நாற்காலிகளையும் படிக்க வைத்து மீள்வாசிப்பு செய்யவைத்தது. அலுவலகத்தில் ஏதோ ஒரு பெரிய காரியம் செய்து பிறர் அதை கவனிக்காமல் போனால் யானை டாக்டர் மனதில் வராமல் போனதில்லை.

 

இப்போது அதே கதைகளை என் எட்டு வயது  மகளுக்கு சொல்லும்போது அவைகளே முற்றிலும் வேறொரு தரிசனத்தை தந்தன. குழந்தையின் பார்வையில் அறம் என்பது சரி அல்லது தவறு என்னும் இருமைக்குள் அடங்கிவிடும். அதை மீறி பரந்த விசாலமான பார்வைக்கு அறம் சிறுகதைகள் மிகவும் தகுந்தவை. முதல்முறை செட்டியாரின் மனைவி தார்ச்சாலையில் அமர்ந்து அவளை தூக்கியபோது சேலையுடன் தோலும் கிழிந்தது என சொல்ல என்னுடைய மகள் கண் கலங்கி, அடுத்தவர்களை எப்போதும் நான் ஏமாற்றமாட்டேன் என சொன்னது என் தரிசனங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

 

உங்கள் கதைகளுள் அறம் சிறுகதை தொகுப்பு மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அன்புடன்,

கோ வீரராகவன்

 

 

அன்புள்ள ஜெ

 

நான் இதுவரை இலக்கியம் என எதையும் வாசித்ததில்லை. பள்ளிக்கூடப் பாடத்தில் யானை டாக்டரை வாசித்தேன். இப்போதுதான் இலக்கியநூல்களை வாசிக்க ஆரம்பிக்கிறேன். நான் வாசித்த முதல் நாவல் யானைடாக்டர். அதை விரிவாக ஒரு புக்கில்வாசித்தேன். அதன்பிறகு அறம் நூலை வாங்கி வாசித்தேன். சோற்றுக்கணக்கு வணங்கான் நூறுநாற்காலிகள் ஆகிய கதைகள் என்னை கண்ணீர்விடச்செய்தன. உயர்ந்த மனிதர்களின் கதைகள் அவை. அவற்றை வாசிப்பது மனதை விசாலமாக ஆக்கியது. நானும் கதைகட்டுரைகள் அவ்வப்போது எழுதுவேன். எதுவும் வெளிப்படவில்லை. ஆனால் எழுதினால் இதேபோல இலட்சியவாத தாகத்துடன் எழுதவேண்டும் என நினைக்கிறே

 

எஸ்.வேல்முருகன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

லகுலீச பாசுபதம் –கடலூர் சீனு உரை

$
0
0

[ கடலூர் சீனு 4-5-2019 ஊட்டி குரு நித்யா ஆய்வரங்கில் பேசிய உரை]

இவ்வெளிய உரை பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுக்கு  வணக்கத்துடன் 

 

ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்,

 

நண்பர்களே, மங்கை ராகவன் குழுவினர் எழுதிய இந்த தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலினை முகாந்திரமாகக் கொண்டு, நமது பண்பாட்டில் மதங்கள் பரிணாமம் பெற்று வளர்ந்த விதம், அதன் பின்னால் செயல்பட்ட முறைமை, இதில் இந்திய அளவில் லகுலீச பாசுபதம் அமைந்த விதம்,அது ஆற்றிய பணி, அந்தப் பணியின் ஒரு பகுதியாக தமிழகத்தில் லகுலீச பாசுபதம் வந்தமைந்து ஆற்றிய பணிகள் குறித்த ஒரு அடிப்படைக் கோட்டுச் சித்திரம் ஒன்றினை உங்கள் முன்பு வைக்க இந்த உரையில் முயல்கிறேன்.

 

இந்த நூலை அணுகுகையில் முதன்மையாக நான் எதிர்கொண்ட சிக்கல்கள் இரண்டு. முதலாவது இந்த நூல் சொன்னதையே வேறு வேறு விதங்களில் சொல்ல வரும் வழமையான நூல்களில் ஒன்றாக இல்லாமல் புதிதாக ஒன்றை சொல்கிறது. இயல்பாகவே புதிய ஒன்றை புரிந்து வகைப்படுத்திக் கொள்ள உருவாகும் இடர். இரண்டாவது முதன்மையாக இது தமிழகத்தில் லகுலீச பாசுபதம் சார்ந்த ஆய்வுகளை துவங்கி மேற்கொள்ள தயாராகும் ஆய்வாளர்களுக்கு, அவர்களின் ஆய்வுகளுக்குத் தேவையான தொடக்கப் புள்ளிகள் இந்த தலைப்பின் கீழ் எங்கெல்லாம் உண்டோ, தொன்மங்கள், சிற்பங்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் என இங்கிருந்தெல்லாம் திரட்டித் தொகுத்து ஒரு தொகுப்பாக்கி அளிக்கும் வகைமையை சேர்ந்த  நூல். இந்த நூலை கையில் எடுக்கும் ஒரு ஆய்வாளருக்கு அவர் கற்ற முறைமைகள் சார்ந்து இந்த நூலின் ஒவ்வொரு இயலும், அவருள் தன்னியல்பாக சென்றமைந்து அவருக்கு பொருள் கொடுக்கும்.  நான் ஆய்வாளன் அல்ல. ஆர்வம் கொண்ட வாசகன் மட்டுமே.

 

எனவே  இந்த நூலுக்குள் நுழைந்து புரிந்து கொள்ள இந்த நூலுக்குள்ளிருந்து முன்பின்னாக சிதறிக் கிடக்கும் தகவல்கள், இந்த நூலுக்கு வெளியே இது சார்த்து மேலதிகமாக புரிந்து கொள்ள கிடைத்த குறிப்புகள் இவற்றை ஒரு வரிசையில் அமைக்கவேண்டி இருந்தது. அந்த வரிசை நமது பண்பாட்டில் எந்த முறைமையின் அடிப்படையில் மதப் பரிமாணம் நிகழ்ந்ததோ, அந்த இயங்கு தளத்தின் மேல் பிறழ்வின்றி  அமையவேண்டிய ஒன்றாகவும் இருந்தது. அப்படி அமைந்த ஒரு பகைப்புலத்தில், இந்த நூலைக் கொண்டு வைத்ததில் அது அளித்த ஒரு அடிப்படைச்  சித்திரத்தை  இப்போது உரையாடலின் பொருட்டு  உங்கள் முன்பு வைக்கிறேன்.

 

நண்பர்களே நமது மூதாதையர்கள் வாழ்ந்து போன நிலமான சிந்து சமவெளிப் பண்பாடு நமக்கு சொல்வது என்ன? தொல்லியல் அடிப்படையில் அந்தப் பண்பாட்டின் திராவிட தாக்கம், பல்வேறு  தெய்வங்கள் வழிபடப்பட்டமை சான்றுகளாக கிடைக்கிறது. பல்வேறு தெய்வங்களை வழிபடும் குமுகங்கள், மேல் கீழ் பாகுபாடின்றி, ஒன்றிணைந்து வாழ்ந்திருந்த சமூகம் எனத் தெரிகிறது. இந்தப் பண்பாட்டுப் புள்ளியில் நின்றே இந்து மதப் பரிமாண வளர்ச்சி துவங்குகிறது.

 

மதப் பரிமாணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை வேதப்பண்பாடு முன்னெடுக்கிறது.பல்வேறு தெய்வங்களும் அதற்க்கான பல்வேறு வகையான சடங்குகளும் பலநூறு வருடங்களாக மனித ஆழ்மனத்தின் வழியே வளர்ந்தது வந்த ஒன்று. வேதப் பண்பாடு இந்த பல்வேறு தெய்வங்கள் எனும் தொன்மத்துக்குக் கீழே மானுடப் பொதுவாக அமைந்திருக்கும் ஆதித் தொல்படிமமான அக்னி என்பதை மையமாக வைத்து,அதனடிப்படையில் உருவான சடங்குகளின் வலை கொண்டு, இந்த பல்வேறு தெய்வங்களையும், அவர்களுக்கான வழிபாடுகளையும், வழிபடும் மக்களையும் இணைத்து,  மனிதர்களுக்கும் தெய்வங்களுக்கும் இடையே நேற்றும் இன்றும் நாளையும் எனத் தொடரும் செயல்பாடு கொண்ட, செயற்களம் ஒன்றினை தொகுத்தமைக்கிறது.

 

தொகுக்கும் தன்னுணர்வு தன்னியல்பாக கேள்விகள் கேட்கும் தன்னுணர்வை கிளர்த்துகிறது. தொகுக்கும் போக்கை நிலைநிறுத்தும் செயற்களம் ஒரு முனையில், அதைக் கேள்வி கொண்டு அணுகும் சிந்தனைக் களம் மறுமுனையில் என இருமுனையில் நின்று முதல் டைலடிக்ஸ் உருவாகிறது.  கர்மம் x ஞானம் . இந்த முரணியக்கத்தில் திரண்டு வந்ததே, வேதப் பண்பாடு பாரத நிலத்துக்கு அளித்த கொடையாகிய ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி எனும் தரிசனமும்,  உலகுத்துக்கு பாரத நிலத்தின் கொடையாகிய பிரம்மம் எனும் கருதுகோளும்.

 

வேதத்தின் பிரம்மம் எனும் கருதுகோள் வலுப்பெற்ற அக் கணமே அந்த தரிசனத்தின் முரணியக்க எதிர்முனையாக வேத மறுப்பு தரிசனமான சாங்கியம் போன்றவை எழுந்து வரக் காண்கிறோம். இந்த முரண் இயக்கத்தில் ஒன்றுடன் ஒன்று மறுத்தும் ஏற்றும் உரையாடி, வேதத்திருந்த்து தன்னை செழுமை செய்துக்கொள்ளும் விஷயங்களை சாங்கியமும்,சாங்கியத்திலிருந்து தனக்கானதை வேதங்களும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன. முரண் இயக்க  அடிப்படையிலான இந்த வளர்ச்சியை காலம்தோறும் பல்வேறு ஞானாசிரியர்கள் இந்த முரணியக்கத்தின் எதிர்முனைகளாக நின்று வளர்த்தெடுத்து இந்து மதப் பண்பாட்டின் வளர்ச்சியில் அடிப்படை அலகாக அமைந்து நிற்கிறார்கள்.

 

வேதகாலத்தில் துவங்கி,  உபநிஷத்துகள் காலத்தில் வனங்களில் ரிஷிகளை மையம் கொண்டு தழைத்த மதப் பண்பாடு, காவிய காலத்தில்,யுக சந்தி காலத்தில் பகவான் கிருஷ்ணன் போன்ற ஞானியராலும்,பேரரசு காலங்களில் புத்தர் மகாவீரர் உளிட்ட ஞானியர் உருவாக்கிய சங்கங்கள்,பள்ளிகளை , சைவ ஞானியரின் சைவ மடங்களை , சாக்த வைணவ  மார்கங்களை  முன்னெடுத்த ஞானியர்களைக் கொண்டும் முன்னகர்ந்தது. தொடர்ந்தது வந்த சங்கரர் ஷண்மதங்களை நெறிப்படுத்தி, அவற்றை இணைக்கும் வைதீக சடங்குகளின் வலையை உருவாக்கி, மறு எல்லையில் பௌத்தத்துடன் உரையாடி அத்வைத்த தத்துவத்தை வளப்படுத்தியும்,இந்து மதப் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கு செலுத்தினார். இந்தப் போக்கு அடுத்து உயர்ந்து வந்த கோவில் பண்பாட்டில் சென்றிணைந்து, கோவிலை மையம் கொண்ட ஒன்றாக மதத்தின் வளர்ச்சிப் போக்கு அமைந்தது. அடுத்து வந்த பக்திக் காலக்கட்டத்து ஞானியரால் வலுவடைந்த இந்தப் போக்கு, அன்னியப் படையெடுப்பின் காலத்தில் தளர்ந்தது.  தளர்ந்த அந்தப் போக்கில் மதக் கலாச்சாரத்தின் மையத்தை கோவில்களிலிருந்து,மீண்டும் மடங்களுக்கு மாற்றிய  ஞானியர் வழியே மத வளர்ச்சி புத்துயிர்ப்பு கண்டது. மீண்டும் அன்னியர் ஆட்சியில் தேங்கி இறுகி நின்ற மதத்தின் ஓட்டத்தை, நாராயண குரு,ராமகிருஷ்ண பரம ஹம்சர்,விவேகானந்தர் போன்ற ஞானியர் உடைத்து,உருக்கி,ஓட விட்டனர். ஜனநாயக யுகத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற ஞானியர் மதத்தின் தூய ஞானத்தின் தரப்பை முன்னெடுப்பவர்களாக அமைந்தனர். நான்காயிரம் ஆண்டுகளாக உலகின் அறுபடாத தனித்துவம் கொண்ட  ஒரே பண்பாடான இந்துப் பண்பாடு, தனது தொகுக்கும் போக்கு, முரணியக்கப் போக்கு, உன்னதமாக்கல் நிலை எனும் இந்த  முறைமை கொண்டு, பல்லாயிரம் ஞானியரின் மெய்த்தேட்டத்தின் சாரம் கொண்டு வளர்ந்தது. அந்த ஞானியர் நிறையில் ஒருவரே, கி மு முதல் நூற்றாண்டில், குஜராத்தின் காரோகன் எனும் இடத்தில், பாசுபத நெறிக்குள் பிராமணர் குலத்தில் ஜனித்த லகுலீசர்.

 

வேத மறுப்பு நெறியான பாசுபத மார்க்கத்தில் [பாசுபதம் சிவன் கைக்கொண்ட ஆயுதம்] காபாலிகர்கள்,காளாமுகர்கள், வாமதேவர்கள்,பைரவர்கள் எனும் அடுத்த நான்கு சைவ நெறியினர், பஞ்சார்த்தம் எனும் கடுமையான ஐந்து நெறிகளை கடைபிடிப்பவர்களாக, அதன் பயனாய் மகாவிரதர்கள் என அழைக்கப்படுபவர்களாக பாசுபத மார்க்கிகளுடன் இணைந்திருந்தார்கள். லகுலீசர் காலம் வரை ,வேதத்துக்கும் முன்பாக  எனும் பொருளில் ஆதி மார்க்கம் எனும் பெயரில் பாசுபத நெறி அழைக்கப்பட்டது .

 

வலுவான ஆதாரம் என கொள்ளத் தகாத குறிப்பு ஒன்றின் படி, லகுலீசர் சிலகாலம் ஆசீவக நெறியை கடுமையாக பின்பற்றுபவராக இருந்திருக்கிறார். விலகி பாசுபத நெறியை தேர்கிறார். தனது மெய்த் தேட்டத்தில் அடைந்தவற்றை தொகுத்து, உஜ்ஜைனி நகரில் அமைந்தது ஞானம் போதிக்கிறார்.கர்க்கர் உள்ளிட்ட முதன்மையான நான்கு சீடர்கள் வழியே பாசுபத நெறி பரவுகிறது.

 

லகுலீசர் அடிப்படையாக மூன்று அலகுகள் வழியே பாசுபத நெறியை மறு சீரமைப்பு செய்தார். ஒன்று பாசுபத சைவத்துக்கான ஆகம நெறிகளை உருவாக்கினார். பஞ்சார்த்தம் எனும் கடுமையான யோக நெறிக்குள் மந்திரங்களுக்கான இடத்தை உருவாக்கினார். தாம் அடைந்த மெய்மையை லகுலீச பாசுபத சூத்ரம் என எழுதினார்.

 

ஆகமம் என்பது முதன்மையாக நான்கு பகுதிகள் கொண்டது, நெறியின் பாற்பட்ட சமூகம் முழுமையும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான நெறிகள் சரியை எனும் பகுதியிலும், நெறி சார்ந்து வாழும் ஒவ்வொருவரும் தனித் தனியே கடைபிடிக்க வேண்டியவை கிரியை எனும் பகுதியிலும், இந்த நெறியின் ஆத்மீக சாதகனுக்கான நெறிகள் யோகம், ஞானம் எனும் இதர இரு பகுதிகளிலும் அடங்கி இருக்கும்.

 

உருவமான இந்த உடல், அருவமான ஆகாய வெளியாக அந்த சிவம், இருவருக்கும் இடையே தொடர்பாக விளங்கும், ஞானேந்திரியங்கள் எனும் அரு உரு. இந்த அரு உருவை செம்மை செய்யும் யோக நெறிக்குள் மந்திரங்களை நிறுவினார் லகுலீசர்.

 

இந்த நெறிகளைக் கொண்டு, ஒரு முனையில் சைவத்தின் சாக்தத்தின் தாந்த்ரீக மரபுகளின் உள்முரண்களுடன் உரையாடிய லகுலீச பாசுபதம், முரண் இயக்கத்தின் எதிர் முனையாக சமணத்துடனும், பௌத்தத்துடனும் எதிர் நின்றது. குறிப்பாக ஹீனயான பௌத்தம். ஹீனயானம் பரவி நிலைபெற்ற கம்போடியா முதல் இலங்கை வரை,லகுலீச பாசுபத மார்க்கத்தின் ஆசிரியர்கள் பரவி நின்றிருந்ததை குறிப்புகள் காட்டுகின்றன.  இந்த நிலையில், ஆதிமார்க்கம் என அறியப் பெற்றிருந்த பாசுபத மார்க்கம். லகுலீசரின் சீரமைப்புக்குப் பிறகு, மந்திர மார்க்கம் என வழங்கப் பட்டது.

 

இவ்வாறு பரவிய லகுலீச பாசுபதம் பௌத்தத்தைப் பின்பற்றி முற்காலப் பல்லவர்கள் காலத்தில் தமிழகம் வந்து, காரோகன[காய அவரோகணர்- உடல் கொண்டு இறங்கி வந்தவர்]  மடங்கள் வழியே நிலை கொண்டது. அக்கால குடைவரைகளில் காணப்படும் லகுலீசர் புடைப்பு சிற்பங்கள், பல்லவர் கால காபாலிகர்கள் பௌத்தர்கள் குறித்த நிலை இவற்றின் சான்றுகளை நூலுக்குள் காண்கிறோம். அவ்வாறு நிலை கொண்ட பாசுபதம், தமிழகம் வருகையில் இங்கு முன்பே நிலைபெற்றிருக்கும் பிற சைவ மரபுகளை எதிர் கொள்ள நேர்கிறது. தமிழக சித்தாந்த சைவம், இப்படி வந்து கலக்கும் சைவ மரபுகள்,சைவம் அல்லாத பிற மரபுகளை,நான்கு அட்டவணைகளின் கீழ் தொகுத்து அடையாளம் கண்டது. அகச் சமயம், அகப்புறச் சமயம்,புறச் சமயம், புறப் புறச் சமயம் எனும் நான்கு நிலை அது. பின்னது இரண்டும் நமது பேசுபொருளுக்கு வெளியே என்பதால் அதை விடுத்து, ஒரு புரிதலுக்காக முன் இரண்டை மட்டும் பார்ப்போம்.

 

பதி,பசு,பாசம். இது சைவத்தின் மூன்று அடிப்படை அலகுகள். பசுவாகிய ஆத்மன், பாசமாகிய தளையை அறுத்து, பதியாகிய ஈசனை அடைய சைவ ஆகமங்கள் வகுத்த நெறிகள் மட்டுமே முதன்மையானது, முழுமையானது ,போதுமானது என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் சைவ நெறிகள் அனைத்தும் அகச் சமயம் என அடையாளப்படுத்தப் பட்டது.

 

இந்த ஆகம நெறிகளை ஏற்றுக் கொண்டு, அவை போதுமானவை அல்ல, அதற்கும் மேலான சில உண்டு வேதம் போல , அவற்றையும் ஏற்றுக் கொள்வோம் எனும் கொள்கையின் கீழ் இணையும் சைவ நெறிகள் அகப் புறச் சமயம் என அடையாளம் காணப் பட்டன.  இந்த பதி பசு பாசம் இவற்றை ஏற்காத பௌத்தம் புறச் சமயம் என அடையாளம் காணப் பட்டது.  இவ்வாறு அடையாளம் காணப்பட்டு,தமிழ் நிலத்தில் மடங்களில் மையம் கொண்டு நிகழ்ந்த,லகுலீச பாசுபத மார்க்கத்தின் செயல்பாடுகள், அடுத்து வந்த சோழர்கள் காலத்தில், குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்தில், அவர் கட்டிய, ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்ட ,ஆகம நெறியின்பாற்பட்ட பெரிய கோவிலை மையம் கொண்ட ஒன்றாக மாறியது.

 

பாசுபத சைவத்தின் முதன்மை மூர்த்தமான சதாசிவனின் லிங்க உருவே, சதாசிவ லிங்கமே இந்த பெரிய கோவிலின் விமானம். ராஜராஜ சோழன் பாசுபத மார்க்கி. அவர் காலத்தில் ஆகம நெறிக்குட்பட்ட இந்த பெரிய கோவிலிலை மையம் கொண்டதாக பாசுபத மார்க்க சைவத்தை மாற்ற மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டார். சோழ நிலக் கோவில்கள் ஆகம விதிக்கு மாற்றப்பட்டு ஈஸ்வரம் எனும் பின்னொட்டை அடைந்தன. ஆகம நெறிக்கு உட்படாத சாக்த கோவில்கள்,அரசின் கவனிப்பின்றி கைவிடப் பட்டன. அக் கோவிலின் ஊழியர்கள் , நேத்ர சிவம், அகோர சிவம், ருத்ர சிவம் என்றெல்லாம் பெயர் மாற்றம் அளிக்கப்பட்டு,பாசுபத நெறிக்குள் கொண்டுவரப்பட்டு, கோவிலுடன் இணைக்கப்பட்டனர்.

 

ராஜ ராஜன் காலத்தில்தான் சாதி அமைப்பில் இடங்கை வலங்கை பிரிவு வலுப்படுத்தப் பட்டது. அதன் காரணிகளில் ஒன்று இந்த கோவிலின் நிர்வாக அமைப்புடன் தொடர்பு கொண்டது. கோவிலின் முதன்மை பணிகளுக்காக நர்மதை நதிக்கரை அருகிலிருந்தது பிராமணர்கள் அழைத்து வந்து குடியமர்த்தப்படுகிறார்கள். வெளியில் இருந்தது ஒரு குலம்,உள்ளே வந்து அமைவது என்பது ராஜ ராஜன் காலத்தில் அவ்வளவு சுலபம் அல்ல. ஒவ்வொரு சமூக அடுக்கும், அந்த அடுக்கின் தொழில், அந்த தொழில் செய்யும் சாதி இவற்றுடன் பிணைந்த ஒன்று. இவ்வாறு இருக்கையில் வெளியே இருந்து உள்ளே வரும் ஒரு குடிக்கு முதன்மை இடம் அரசனால் அளிக்கப்படும் என்றால், அந்த குடிக்கு முன்பாக அந்த இடத்தில் இருந்த பூர்வ குடி இதை எவ்வாறு எதிர் கொள்ளும்? சமூக படியில் இறங்கு முகம் காண எந்தக் குலம்தான் ஒப்பும்?

 

இப்படி அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்ட பிராமணர்கள்,கவுணிய எனும் கோத்திரத்தை சேர்ந்தவர்கள். இந்த கவுணியர் லகுலீசர் எழுதிய பாசுபத சூத்ரத்துக்கு முதல் உரை எழுதியவர். இந்த கவுணிய கோத்ரத்தை சேர்ந்த காளாமுக மார்க்கியே சைவ பக்தி இயக்கத்தை வேகம் கொள்ளச் செய்த திருஞான சம்பந்தர்.  ஆசிரியர் நீலகண்ட சாஸ்த்ரி தனது தென்னிந்திய வரலாறு நூலில், சம்பந்தர் தீவிரமாக பணியாற்றிய காலத்தில், எந்த பொதுப் போக்கிலும் இணையாமல் கிட்ட தட்ட ஒரு பழங்குடி மரபு போலவே தனித்துத் திரிந்த காளாமுகர்கள்,காபாலிகர்கள் அதிக எண்ணிக்கையில், செங்கல்பட்டு வந்தவாசி பகுதிகளில் இருந்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் கொண்டு எழுதுகிறார். எனில் பக்தி மார்க்கம் கொண்டு சம்பந்தர் செய்தது எதுவோ அதையே ஆகம நெறிகள் கொண்டு ராஜ ராஜராஜன் சாதிக்க முயன்றார் என்பதை யூகிக்கலாம் .

 

இந்த கோவிலுக்குள் ராஜராஜனின் முதன்மை கவனம் இரண்டு படிமைகள் மீதானதாக இருக்கிறது. ஒருவர் சண்டேச நாயனார். மற்றவர் சண்டிகேஸ்வரர். சண்டிகேஸ்வரர் சண்டி எனும் தனித்த சாக்த தெய்வத்தை எதிர்கொண்டு எழுத்து வந்த சிவ வடிவம். சண்டேச நாயனார் கதை நாமறிந்ததே. லகுலீசர் வழிபாடு, நமது வண்ணமிகு வழிபாட்டு முறைமைகளின் மர்மமிகு புள்ளி ஒன்றில், சண்டேச நாயனாருக்கு மாறுகிறது. லகுலீசர் சண்டேச நாயனாருடன் இனம்காணப்பட்டு [ லகுலீசருக்கும் சண்டேச நாயனாருக்குமான பொது ஒற்றுமையில் ஏதேனும் ஒன்றில் இருந்து இது நிகழ்ந்திருக்கலாம்.] பரவி,தனி வழிபாடு அடையும் நிலைக்கு உயர்கிறார். இந்த சண்டேச நாயனார் லகுலீசர்தான், என்பதற்கு உள்ள வலுவான ஆதாரங்களில் ஒன்று, நாயன்மார்கள் கோவிலுக்குள் அமைய வேண்டிய ஆகம முறைகளில் காணக் கிடைக்கிறது. எல்லா நாயன்மார்களுக்கும் நின்ற திருக் கோலம் மட்டுமே [காரைக்கால் அம்மையார் தவிர்த்து] ஆகமம் அனுமதிக்கிறது.  மாறாக இந்த சண்டேச நாயனார் லீலாசனத்தில்  அமர்ந்த கோலத்தில்,உருவ அமைதியில் கையில் உள்ள லகுலீசம் [ஆயுதம்] உட்பட சிற்ப இலக்கணத்தில் லகுலீசருக்கு முற்றிலும்  இணையாக  காட்சி அளிக்கிறார்.

 

லகுலீசம் பரவிய இடங்கள்தோறும் அது பௌத்தத்தை எதிர் கொண்டதை பார்த்தோம். இது சோழர் காலத்தில் என்னவாக இருந்தது என்பதை, ராஜராஜனின் இலங்கை படையெடுப்பின் வழியே அறிகிறோம். அழித்தொழிப்பு. இரண்டாவது வணங்கி வழியனுப்புதல். ராஜராஜேஸ்வரம் கோவிலில், காமிக் பேனல் என்றழைக்கப்படும் கதைச் சிற்பங்கள் வரிசையில் முக்கியமான மூன்று சிற்பங்கள் இதை காட்டுகிறது. முதல் காட்சியில் அரசர் ஒருவர் [அனேகமாக ராஜராஜன்] புத்தரை வணங்குகிறார். இரண்டாம் காட்சியில் புத்தர் வெளியேறுகிறார். மூன்றாம் காட்சியில் புத்தர் வெளியேறிச் சென்ற இடத்தில், விண்ணவர்கள் வாழ்த்த பெரிய கோவில் விமானம் வானத்தில் இருந்து வந்து இறங்குகிறது. மூன்றாவது மிக முக்கியமானது அது உள்ளிழுக்கப்பட்டு கரையும் செயல்பாடு. எனது அவ்வாறே வந்தவர் பதிவில் ஆய்வாளர் கணேசன் அவர்களின் ஆய்வு ஒன்றின் சுட்டி இணைத்திருப்பேன். அதில் தமிழகத்தில் புத்தர் அவலோகிதேஸ்வரர் எனும் வடிவத்தில் எங்கெல்லாம் வழிபடப்பட்டார்,அவர் எவ்வாறு யோக குரு அல்லது தட்சிணா மூர்த்தி படிமைக்குள் உள்ளிழுக்கப்பட்டு கரைந்தார் என்பதன் இலக்கிய,சிற்ப சான்றுகளை அளித்திருக்கிறார்.  எனில் ஒரு கோவிலுக்குள் ஒரு புறம் சண்டேச நாயனாராக லகுலீசர் அமர்ந்திருக்கிறார் அவரது டைலடிக்ஸ் எதிர்முனயான புத்தர் யோக குரு,தட்சிணா மூர்த்தி இவர்களில் கரைந்தது அமர்ந்திருக்கிறார்.

 

இந்திய அளவில் சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றாக உன்னதமாக்கம் பெற்ற லகுலீசர், லகுலீசராக தமிழகம் வந்து, சண்டேச நாயனாராக அடையாளம் காணப்பட்டு,பரவி, சண்டேஸ்வரர் எனும் நிலைக்கு உயர்ந்து கரைந்து விடுகிறார். வேத காலத்தில் துவங்கிய  தொகுத்து, முரணியக்கத்தைக் கைக்கொண்டு முன்னகர்ந்து வளர்ந்து உன்னதமாக்கம் பெரும் மதச் செயல்பாட்டின் இழை, சோழர் காலத்தின் இறுதி வரை தொடரும் வகைமையை,அதில் லகுலீச பாசுபதத்தின் இடத்தை அதன் பணியின் அடிப்படை எளிய கோட்டுச் சித்திரம் இது. இந்தப் பகைப்புலத்தை அறிதல் சட்டகமாகக் கொண்டு, இதில் நிறுத்தி இந்த தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலை வாசிக்கப் புகுந்தால், இந்த நூல் திறந்து மேலதிக பொருளை அளிக்கும்.

 

ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

 

உரைக்கு இடையே,இந்த நூலுக்குள் இருக்கும் லகுலீசர் சிற்பங்களில்

 

[p120] கருத்து x ஆற்றல் எனும் முரண் இயக்கத்துக்கு சான்றான ,

 

[ p 223], சத்வ x ரஜோ குணங்களுக்கு சான்றான,

 

[p170] லகுலீசரில் இருந்தது சண்டேச நாயனாராக மாறிய,

 

[p 74] லகுலீசரில் இருந்தது சண்டேஸ்வரர் என மாறிய,

 

[p70] லகுலீசரில் இருந்தது யோக குருவாக உயர்ந்து, தயார் நிலையில் இருக்கும் லகுலீசர் கை ஆயுதம் ஓய்வு நிலைக்கு திரும்பும்,

 

[p90] சண்டேச நாயனாருக்கு அருளும் சண்டேச அனுக்ரஹ மூர்த்தி படங்கள்

 

காட்சிப் படுத்தப்பட்டு முரண் இயக்கம் உள்ளிழுத்து கரையும் உன்னதமாக்கும் போக்குகளின் சிற்ப சாட்சியங்கள் விளக்கப்பட்டன.

 

ஆதார அனுபந்தம் வேண்டுவோர்   ஆசிரியர் நீலகண்ட சாஸ்த்ரி முதல்,ஆசிரியர்  குடவாயில் பாலசுப்ரமண்யம் வரை அவர்கள் யாத்த நூல்களை நாடவும்

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32

$
0
0

“இறுதி வெறுமை என்பது சாவு. ஆனால் அது வாழ்வில் ஒருமுறைதான் நிகழவேண்டும் என்பதில்லை. அது நிகழ்ந்து மீள்பிறப்பெடுத்தோர் முன்னிலும் ஆற்றல்கொண்டவர்கள் ஆகிறார்கள். தெய்வங்களுக்கு நிகரானவர்களாக நிலைகொள்கிறார்கள். ஆழுலகத்து தெய்வம் அல்லது விண்ணொளிகொண்ட தேவன். நான் கொடுந்தெய்வமென அத்தருணத்தில் பிறந்தெழுந்தேன்” என்று வால்மீகி சொன்னார். அருகே கபீந்திரர் அதைக் கேட்டு அமர்ந்திருந்தார்.

“இனிய குழந்தைகளே, கேளுங்கள். இது வால்மீகியின் கதை. என் குலமூத்தவரான கும்போதரர் நான் சிறுமியாக இருக்கையில் எனக்குச் சொன்னது. அவர்களுக்கு அவர்களின் மூத்தவர்கள் சொன்னார்கள். முதல் மூதாதையான கபீந்திரர் இதை தன் மைந்தருக்குச் சொன்னார். என்னிடமிருந்து நீங்கள் இதை உங்கள் கொடிவழியினருக்கு சொல்க! என்றும் இக்கதை இங்கே திகழ்க!” என்று தூமவர்ணி தன்னைச் சூழ்ந்திருந்த குழந்தைக் குரங்குகளுக்கு சொன்னது. அவை விழிகள் கனவுநிறைந்து நோக்கு மங்கலடைந்திருக்க உடல் குறுக்கி வால் நிலைக்க அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன.

வால்மீகி சொன்னார்: நான் என் கையிலிருந்த அம்பை எடுத்து கழுத்து நரம்பை வெட்டிக்கொள்ளவேண்டுமென்று எண்ணினேன். எண்ணம் எழுந்தபோதே கையும் உடனெழுந்தது. நெடுநாட்களாக அதற்காகக் காத்திருந்ததுபோல. அப்போது பெருத்த உடலும், நெடுங்கால மதுப்பழக்கத்தால் களைத்து சரிந்த இமைகளும் கொண்ட வணிகனொருவன் அத்திரிமேல் ஊர்ந்து அவ்வழி வந்தான். என்னை நோக்கி “அடேய் நிஷாதா, இழிபிறப்பே, கீழ்மகனே, அங்கு என்ன செய்கிறாய்? தொலைவிலேயே உன் உடலின் கெடுநாற்றம் வீசுகிறதே” என்று கூவி “அறிவிலி என்பது உன் நோக்கில் தெரிகிறது. கீழ்விலங்கே, உண்பதற்கு ஊனேதும் வைத்திருக்கிறாயா?” என்றான்.

நான் “இல்லை” என்று தலையசைவால் சொன்னேன். “பிறகென்ன இரப்பதற்கா இங்கு நிற்கிறாய்? கைகால் உள்ளவன் இரக்கலாமா? சென்று காட்டுக்குள் ஏதேனும் திரட்டிக்கொண்டு வா. என் வயிறு நிறைந்தால் உனக்கு ஒரு செப்புக்காசு தருவேன். அதைக்கொண்டு பின்னால் வரும் வணிகர்களிடமிருந்து நீ எதையாவது வாங்கிக்கொள்ளலாம்” என்றான். நான் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என் அருகே நெருங்கி வந்து “நீ கொண்டுவரும் வேட்டைஊன் உன்னைப்போல் நாற்றமடிக்கும் உடல் கொண்டிருக்கலாகாது. மானோ முயலோ போல தூய விலங்காக இருக்கவேண்டும். இழிமகனே, இன்று உன்னை கண்களால் பார்க்கும் தீயூழ் பெற்றேன். செல்லும் தொழில் வெல்லுமா என்று ஐயமேற்படுகிறது” என்றான்.

அவன் உடலிலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருக்கிறது. தொங்கிய வாய்க்குள்ளிருந்து கறை படிந்த பெரிய பற்கள் நீண்டிருந்தன. இடையில் தோலாலான கச்சையை கட்டியிருந்தான். அவன் எடையால் ஏறி வந்த அத்திரி நீராவி உமிழ மூச்சிரைத்துக்கொண்டிருந்தது. அவன் வண்டுமேல் ஏறி அமர்ந்த பெரிய மஞ்சள்நிறப் புழுபோல தோன்றினான். நான் அவன் என்னைச் சொன்ன வசைச்சொற்கள் அனைத்தையும் என் அகத்தால் முழுதாக உள்வாங்கி அதுவாக ஆகிக்கொண்டிருந்தேன். வணிகர்கள் நிஷாதர்களை வசைகூவி அழைப்பதே வழக்கம். அது அவர்களின் அச்சத்தால்தான். அந்த அழைப்பு நிஷாதர்களை உடனே உளம்சுருங்கி ஆணவம் அழிந்து விலங்கென்றே ஆக்கும். அவ்வாறு மாறாத உளத்தளர்ச்சியில் அவர்களை வைத்திருக்கவேண்டியது அவ்வழியே அவர்கள் செல்வதற்கான தேவை.

எங்ஙனம் அது நிகழ்ந்ததென்று எனக்குத் தெரியவில்லை, தவளை நாக்கு என என் கை மின்னி நீண்டது. கூரம்பால் அவன் கழுத்தை அறுத்தேன். அதை எதிர்பாராமல் திகைத்த விழிகளுடன், வாய் திறந்து மூச்சுக்குத் தவித்து, உடல் துடிக்க அவன் அத்திரியிலிருந்து கீழே விழுந்தான். நீர்நிறைந்த தோல்பை மண்ணை அறையும் ஓசை எழுந்தது. அத்திரி எடை அகன்றதும் முன் கால் எடுத்துவைத்து அப்பால் சென்று நின்று பிடரி குலைத்து சினைப்பொலி எழுப்பியது. கால்களைத் தூக்கி நிலத்தை குளம்புகளால் தட்டியது. அவன் கீழே கிடந்து உடல் உலுக்கினான். குருதி கொப்பளித்து பூழியில் ஊறி நனைந்து பரவியது. கைகால்கள் இழுத்து அதிர்ந்தன. பசுங்குருதியின் மணம் எழுந்தது.

அம்பை மீண்டும் வீசி அவன் கச்சையை அறுத்து உள்ளிருந்து மூன்று வெள்ளி நாணயங்களை என் கையில் கவிழ்த்தேன். அவனை இழுத்து புதருக்குள் போட்டுவிட்டு காட்டுக்குள் புகுந்தேன். ஆலமரத்தடி ஒன்றில் அமர்ந்துகொண்டபோது என் உள்ளம் மிகத் தெளிந்திருந்தது. என் கையிலிருந்த வெள்ளி நாணயங்கள் என்னை சிலநாட்களுக்கு நலமாக வாழவைக்கும் என்று நான் அறிந்தேன். மூன்று வெள்ளி நாணயங்கள் நான்கு புலித்தோலுக்கு நிகரானவை. அந்த வணிகனைக் கொன்றது குறித்து கழிவிரக்கம் தோன்றவில்லை. பழியுணர்வும் உருவாகவில்லை. அவனைக் கொன்ற பிறகும் கூட அவன் தோற்றமளித்த அருவருப்பே என்னில் எஞ்சியிருந்தது. ஆகவே இருபுறமும் மாறி மாறி துப்பிக்கொண்டிருந்தேன். துப்ப வாய்க்குள் எச்சில் கோழை வற்றாமல் திரண்டுகொண்டிருந்தது.

அங்கேயே படுத்து இரவு துயின்றேன். மறுநாள் காலை எழுந்து அந்த நாணயங்களை ஆலமரத்துக்கடியில் புதைத்து வைத்தேன். அதிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்துக்கொண்டு சென்று வழிப்போக்கனாகிய வணிகனிடமிருந்து அரிசியும் இனிப்பும் ஆடைகளும் வாங்கிக்கொண்டேன். அவற்றை என் மைந்தருக்கு கொண்டுசென்று கொடுத்தேன். வேட்டை உணவின் மீது பாயும் ஓநாய்க்குட்டிகள்போல அவர்கள் அதன் மேல் பாய்ந்து பூசலிட்டு ஒவ்வொருவரும் தங்களுக்கென எடுத்துக்கொண்டதைக் கண்டபோது உளம் மகிழ்ந்தேன். நெடுநாட்களுக்குப் பின் அத்தகைய மகிழ்ச்சியை உணர்கிறேன் என்று தோன்றியது. அதனூடாக நான் மீண்டும் என் குலத்துடன் இணைந்துகொள்வேன் என்று எண்ணினேன்.

அகன்றிருப்பதன் சலிப்பும் கசப்பும் இனி இல்லை. ஒன்பது இனிய மைந்தரின் தந்தை. அவர்களால் வணங்கப்படுபவன். குடியினர் பதின்மராலும் வாழ்த்தி பணிவிடைகள் செய்யப்படுபவன். அவர்களின் நினைவில் என்றும் நின்றிருப்பவன். மண்நீங்கிச் சென்றபின் அவர்களால் நீரும் அன்னமும் அளிக்கப்பட்டு புரக்கப்படுபவன், அவர்களின் கொடிவழியினர் நினைவில் வாழ்பவன். அவ்வெண்ணம் எனக்கு நிறைவளித்தது. நான் அணிந்துகொள்ள ஒரு முகம் அமைந்தது. நெடுநாட்களுக்குப் பிறகு அன்று என் இல்லத்திலேயே ஊன்கறியும் வெதுப்புச்சோறும் இன்கனிக்கூழும் உண்டேன். வயிறு நிறைய கள்ளுண்டவன்போல் மயங்கி துயின்றேன்.

பின்னர் நான் வேட்டைக்குச் சென்றதில்லை. சில மாதங்களுக்கு ஒருமுறை சாலையோரம் பதுங்கி நின்று தனியாக வரும் வணிகன் ஒருவனை அம்பால் கொன்று வீழ்த்துவேன். அவன் இடையிலிருக்கும் நாணயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றுவிடுவேன். அவன் உடலை இழுத்து காட்டுக்குள் போடுவேன். அதை நாய்நரிகள் ஒருநாளுக்குள் வெள்ளெலும்புக்குவையாக ஆக்கிவிடும். ஒரு வாரத்தில் அதனை மண் எழுந்து மூடும். அவனைத் தேடுபவர்கள் கண்டடையவே இயலாது. அவன் ஓட்டிவரும் அத்திரியின் வாலில் ஒரு நெற்றுக்கொப்பரையை கட்டிவிடுவேன். அது எழுப்பும் ஒலி அதை துரத்த கொலை நடந்த இடத்தில் இருந்து பல காதம் அது சென்றுவிட்டிருக்கும்.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் சாலையோரமாக நின்று அவ்வழி செல்லும் வணிகர்களை வெறுமனே நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்களில் என்னிடம் எதுவும் பேசாமல் செல்பவர்களை தாக்குவதில்லை. வெறுப்பு நிறைந்த விழிகளால் அவர்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்களும் சாலையோரம் நின்றிருக்கும் காட்டு விலங்கொன்றை பார்க்கும் அகல்வும் விந்தையும் கொண்ட கண்களால் என்னை பார்த்துச் செல்வார்கள். ஒருவருக்கு மேலிருந்தால் என்னைப்பற்றி இளிவரலாக ஏதேனும் சொல்வார்கள். தன்னந்தனியாக வரும் வணிகர்களில் பசியும் விடாயும் கொண்டவர்கள் மட்டுமே என்னை பொருட்படுத்துவார்கள். என்னிடம் பேசுகையில் அவர்களின் விழிகளையே நோக்கிக்கொண்டிருப்பேன்.

நிஷாதரிடம் இனிது பேசினால் இழிகுலத்தோருடன் பேசிய பழியை சூடவேண்டியிருக்கும். அவர்களை வசைபாடுவதும் பழிப்பதும் உரையாடல் என்று கொள்ளப்படாது. ஆகவே இனிய இயல்புள்ள நல்லவர்கள்கூட அவ்வாறுதான் பேசுவார்கள். அந்த வசைச்சொற்கள் சொல்லிச்சொல்லி தேய்ந்து பொருளிழந்தவையாகையால் இருவருக்குமே அவை பொருட்டல்ல. எனக்கும் அவை நேர்ப்பொருள் அளிப்பதில்லை. ஆனால் நான் அவர்கள் விழிகளையே நோக்கிக்கொண்டிருப்பேன். அதில் மெய்யான சீற்றமோ அருவருப்போ ஒவ்வாமையோ உருவாகிறதா என்று பார்ப்பேன்.

அது சிறு மின் எனத் தோன்றிய அக்கணமே எவ்வுருக் கொண்டவனாயினும் அவ்வணிகன் நான் முதலில் கொன்ற அந்த பெரும்புழுவுக்கு நிகரானவன் ஆகிவிடுவதை கண்டேன். மெலிந்தவனோ கரியவனோ சிற்றுடல் கொண்டவனோ அவனில் அந்த புழு தோன்றியதும் அக்கணமே கால் வைத்து முன்னால் பாய்ந்து அம்பை வீசி அவனை கொல்வேன். கழுத்தறுபட்ட கணம் அம்முகத்திலெழும் திகைப்பும், மூச்சுக்குத் திறந்த வாயும், பிதுங்கிய விழிகளும் எப்போதும் ஒன்றே. ஒருவனே வெவ்வேறு உடல்களில் மீளமீள எழுவதுபோல். ஒரு தருணமே வெவ்வேறு வடிவில் மீண்டும் மீண்டும் நிகழ்வதுபோல்.

உடல் நிலத்திலறைய, கைகால்கள் துடித்து இழுத்துக்கொண்டிருக்க அவன் கைகால்கள் வெட்டி அதிர்கையிலேயே இடைவாரை அறுத்து நாணயங்களை எடுத்துக்கொள்வேன். அவர்களில் சிலர் அருமணிகள் அணிந்திருப்பார்கள். பொன் மாலைகள் போட்டவர்களுண்டு. சிலருடைய அத்திரிகளின் இருபுறமும் அரிய பொருட்கள் கொண்ட பைகள் தொங்கிக்கிடப்பதுண்டு. நான் இடையிலிருக்கும் வெள்ளி நாணயங்களன்றி வேறெதையும் எடுத்துக்கொள்வதில்லை. என்னால் அச்செயலை மாறாமல் ஒன்றுபோலவே நிகழ்த்த முடிந்தது. திட்டங்களும் செயல்களும் மட்டும் அல்ல அசைவுகளும் எண்ணங்களும்கூட ஒன்றேதான்.

ஒரு நூறு கொலைகளைக் கடந்தபோது நான் உணர்ந்தேன், வேறெவ்வகையில் அதை நிகழ்த்தினாலும் என்னால் முழுமை செய்ய இயலாதென்று. அது எனக்கு ஒற்றைக்கணம் மட்டுமே. நான் அறிந்த ஒன்றையே திரும்பச்செய்கையில் அதில் தேர்ச்சிகொண்டவனானேன். வணிகனைக் கொல்வதும் இழுத்து அருகிருக்கும் புதரில் போடுவதும் ஊர்விலங்கை ஓட்டுவதும் வெள்ளி நாணயங்களுடன் காட்டுப்புதர்களுக்குள் மறைவதும் மிகச் சில கணங்களுக்குள் நிகழும் ஒன்றாயிற்று. சிறுத்தை வந்து இரை கவ்விச்செல்லும் விரைவு. குளம்படி கேட்கும் தொலைவில் அவ்வணிகனுக்குப் பின்னால் வந்துகொண்டிருப்பவர்கள்கூட என்னை பார்க்க இயலாது.

ஒவ்வொரு முறையும் கைநிறைய பொருட்களுடன் இல்லம் திரும்பும் என்னை என் மைந்தர்கள் தொலைவிலேயே ஓடிவந்து வரவேற்றார்கள். என் தோளிலும் கைகளிலும் தொற்றி ஏறினார்கள். “தந்தையே! தந்தையே!” என்று என்னை கொஞ்சினார்கள். நாய்க்குட்டிகள்போல என் கைகளிலும் கால்களிலும் முத்தமிட்டு கூச்சலிட்டார்கள். நான் என் சுற்றத்திற்கும் உணவளிப்பவனாக ஆனேன். என் தங்கையரும் அவர்கள் மைந்தர்களும் அயலவரும்கூட என் கைப்பொருளை நம்பி வாழலாயினர். கிளை புரப்பவன் ஆனபோது மேலும் ஆணவ நிறைவு கொண்டேன். காட்டில் பலநூறு கிளைகளை விரித்து நின்றிருக்கும் ஆலமரம்போல் என்னை உணர்ந்தேன்.

ஆணவம் உடலில் கொழுப்பென சேர்கிறது. அசைவுகளை குறைக்கிறது. பயணங்களை இல்லாமலாக்குகிறது. அமைந்த இடத்தில் மேலும் ஆழப் பதிக்கிறது. அதுவே மெய்யென்றும் பிறிதொன்றில்லை என்றும் எண்ணச்செய்கிறது. புதுச் செல்வம் அளிக்கும் ஆணவம் நாளை என ஒன்றில்லை என மிதப்படைய வைக்கிறது. நேற்றின் வெற்றிகளை மட்டும் நினைவுகளாக சேர்க்கிறது. நான் அன்று எண்ணினேன், இறுதியாக என் வழியை கண்டடைந்துவிட்டேன் என. என் நிறைவை அடைந்துவிட்டேன் என.

இளமையில் நான் இங்கிருந்து வானிலெழும் புள்ளென்று எண்ணிக்கொண்டேன். அனைவரிலிருந்தும் முன்னால் ஓடும் விலங்கென்று ஆக முயன்றேன். பின்னர் இவையனைத்தும் அல்ல நான், பிறிதொருவன் என்னுள் உறைகிறான் என்று எண்ணினேன். பிறிதெங்கோ என் இலக்குகள் இருப்பதாக எண்ணிக்கொண்டேன். செல்ல வழியறியாது சலித்து, அச்சலிப்பை வெல்ல செலவொழிந்து, அங்கேயே கைவிரித்து பற்றிக்கொண்டு தங்க விழைந்தேன். அங்கே வேர் ஊன்றி விரிந்து நின்றுவிட்டேன். குலம் சமைக்கும் பெருந்தந்தையரைப்போல. அவர்கள் மரமென முளைத்து வேர்பரப்பி கிளைவிரித்து மெல்லமெல்ல பாறையாக, மலையாக ஆகிவிடுபவர்கள்.

பெருந்தந்தை ஆவதே ஆண் அடையும் முழு நிறைவு. பெருந்தந்தை எனும் கனவில்லாத ஆண் இல்லை. பெருந்தந்தையாக சிலகணங்களேனும் நடிக்காதவர்கள் எவருமில்லை. தெய்வங்கள் அதற்கென்றே அவனை படைத்துள்ளன. பெருந்தந்தையருக்குரிய மண் கீழ் அடுக்குகள் நூறு கொண்டது. அங்கே நம் குலத்து மூதாதையர் வாழ்கிறார்கள். நான் மண் திறந்து அவர்களைச் சென்றடையும்போது இரு கைகளையும் நீட்டி என்னை அணுகி அள்ளி நெஞ்சோடணைத்துக் கொள்வார்கள். “வருக, மைந்தா!” என்பார்கள். அவ்வெண்ணம் இனித்தது. அந்த நிறைவில் சில காலம் வாழ்ந்தேன்.

ஒருநாள் காட்டில் ஒரு பாறையின் மறைவில் வழக்கம்போல் நின்றிருந்தேன். என்னை வணிக நிரையினர் கடந்து சென்றார்கள். சிலர் என்னை பார்த்தனர். சிலர் இளிவரல் உரைத்தனர். ஒருவர் என் மண் படிந்த கரிய உடலைப் பார்த்து அருவருப்பு கொண்டு என்மேல் துப்பிவிட்டுச் சென்றார். நான் அந்தப் புழு தோன்றும் வணிகனுக்காக காத்திருந்தேன். அவ்வாறு காத்திருக்கத் தொடங்கி பதினாறு நாட்கள் கடந்துவிட்டிருந்தன. அந்தப் புழு எங்கோ ஒளிந்து எனக்காகக் காத்திருந்தது. அவ்வழியே அது வரக்கூடும். வந்தாகவேண்டும்.

அப்போது ஓர் எண்ணம் வந்தது. இனி அந்தப் புழு வரவில்லையெனில் நான் என்ன செய்வேன்? அது எச்சரிக்கை கொண்டிருக்கலாம். வேறு பாதை தேடியிருக்கலாம். எங்கோ ஒதுங்கி என்னை நோக்கிக்கொண்டிருந்திருக்கலாம். நூறுமுறை அது தோன்றி கொல்லப்பட்டுவிட்டது. இந்த வேட்டை வடிவை நான் மாற்றியாகவேண்டும். இவ்வண்ணம் இது முடிவிலாது நீள இயலாது. இன்று என்னை நம்பி நூறு வயிறுகள் காத்திருக்கின்றன. என் கையிலிருக்கும் வெள்ளி நாணயங்கள் மழைக்காலம் வரை போதுமானவை அல்ல. மானுட வேட்டையாடியே ஆகவேண்டும். எனக்கென நானிட்ட எல்லையை கடக்கவேண்டும். காட்டுவிலங்குகள் தெய்வங்களிட்ட எல்லையை ஒருபோதும் கடப்பதில்லை. எல்லை கடப்பவன் மானுடன். ஆகவேதான் அனைத்து விலங்குகளுக்கும் மேல் அவன் ஆற்றல் எழுந்துள்ளது என்று மூதாதை சொல்லி கேட்டிருக்கிறேன்.

எனது எல்லையை கடக்கவேண்டும். எனக்கு நானே ஆணையிட்டுக் கொண்டேன், தன்னந்தனியன் எவனாயினும் அவனை நான் தாக்கவேண்டும் என. என் பழகிய பாதையை மீறிச் செல்வேன். என்னுள் எழும் எச்சரிக்கைக் குரலை ஒழிவேன். ஒருமுறை ஒன்றை நிகழ்த்திவிட்டால் போதும், அந்த வழி எனக்கென திறந்து கொள்ளும். அது முடிவிலாதது. அதன் பின் தனித்து வரும் எந்த வணிகனையும் என்னால் கொல்ல முடியும். ஆகவே கண்ணை மூடி என் கையிலிருந்த அம்பை இறுகப்பற்றிக்கொண்டு அடுத்து வரும் வணிகன் எவனாயினும் அவனை கொல்வேன் என்று எனக்குள் வஞ்சம் உரைத்துக்கொண்டேன்.

தொலைவில் வருவது ஒற்றை அத்திரியின் குளம்படி ஓசையென்று அறிந்தேன். அதன் மேல் இருப்பவன் எனது இன்றைய இலக்கு. இவ்வுறுதியை எடுத்த உடனேயே ஒற்றைக்குளம்படி ஓசையை கேட்கச்செய்து தெய்வங்கள் எனக்கு ஆம் அவ்வாறே என்று ஒப்புதல் அளிக்கின்றன. வருபவனும் நானும் ஊழால் அவ்வாறு கோக்கப்பட்டிருக்கிறோம். இதில் பிழையென ஏதுமில்லை. வேட்டைவிலங்கும் ஊன்விலங்கும் ஒரே ஊழ்நெறியின் இருபுறங்கள் என்று என் மூதாதையர் சொல்வதுண்டு. வருபவன் தன் ஊழை நோக்கி வந்துகொண்டிருக்கிறான். என்னை இங்கு நிறுத்தியிருப்பது அதே ஊழ்தான்.

பாறைக்கப்பால் அவன் தோன்றியதும் நான் அம்பை வீசிக்கொண்டு முன்னால் பாய்ந்தேன். ஆனால் அதற்குள் அவன் தன் காலைத் தூக்கி என் நெஞ்சை உதைத்து பின்னால் தள்ளினான். பாய்ந்திறங்கி தன் இடையிலிருந்த வாளை உருவியபடி நின்றான். நான் அக்கணமே பின்னால் பாய்ந்து ஓடியிருக்கவேண்டும். திருடர்களின் வழி அதுவே. ஆனால் என்னுள் ஆழத்தில் இருந்தவன் நான் வீசியெறிந்துவிட்டேன் என நம்பிய அந்த வில்லவன். சீற்றமும் சினமும் எழ நான் ஓங்கி நிலத்தில் துப்பியபடி என் அம்புடன் அவனை நோக்கி எழுந்தேன்.

அவன் அஞ்சவில்லை. விழிகூர்ந்து நோக்கி “ உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டான். அவன் கைகளை நோக்கிய விழிகளைத் தூக்கி அவன் கண்களை பார்த்தேன். அவற்றில் அருவருப்பையோ கசப்பையோ சினத்தையோ காணவில்லை. இனிய நகைப்பொன்று இருப்பதுபோல் தோன்றியது. மறுகணமே அந்நகைப்பு ஓர் ஏளனமென்று என் ஆணவம் திரித்துக்காட்ட, நான் “உன் உயிர்! உன் உயிர் வேண்டும் எனக்கு” என்றேன். “என் உயிர்கொள்ளும் அளவுக்கு உனக்கு என் மேல் என்ன வஞ்சம்?” என்று அவன் கேட்டான். “ஏனெனில் உன் மடியில் வெள்ளி நாணயங்கள் உள்ளன. என் மைந்தரும் சுற்றமும் பசித்திருக்கிறார்கள்” என்று நான் சொன்னேன்.

அவன் மேலும் கனிந்து நகைத்து “நன்கு எண்ணிப் பார். மெய்யாகவே உன் குழவியருக்காகவா இக்கொலையை செய்கிறாய்? உன் ஆணவத்திற்காக அல்லவா?” என்றான். “இல்லை! இல்லை!” என்று நான் கூவினேன். “நான் பெருந்தந்தை. நூறு வாய்களுக்கு உணவூட்ட வேண்டியவன். அதன் பொருட்டு நான் செய்யும் அனைத்தையும் தெய்வங்கள் ஒப்புக்கொள்ளும்” என்று சொன்னேன். “நூறு வாய்களை ஒருவனிடம் ஒப்படைக்கும் அளவுக்கு தெய்வங்கள் அறிவில்லாதவை அல்ல. இக்காட்டில் அப்படி ஒரு விலங்கு உண்டா என்ன?” என்று அவன் கேட்டான். என்னால் மறுமொழி சொல்லக்கூடவில்லை.

அவன் என்னை நோக்கி மேலும் கூர்விழிகொண்டு “உனது குழந்தைகள் வேட்டையாடும் அகவை அடைந்துவிட்டனரா?” என்றான். “ஆம்” என்று நான் சொன்னேன். “எனில் ஏன் அவர்கள் உன்னை நம்பி இருக்கிறார்கள்? எந்த வேட்டைவிலங்கும் அவ்வாறு பல்லும் நகமும் எழுந்த மைந்தருக்கு உணவூட்டுவதில்லையே” என்றான். மறுமொழி சொல்ல இயலவில்லை என்பதனால் நான் சீற்றம்கொண்டு உறுமினேன். அவன் கைநீட்டி என்னை ஆறுதல்படுத்தி “எண்ணி நோக்கு, நீ இதை இயற்றுவது உன் ஆணவத்துக்காக மட்டும்தான் அல்லவா? சற்று முன் சொன்னாய், நீ பெருந்தந்தை என்று. அது உன் ஆணவ வெளிப்பாடல்லவா?” என்றான்.

“நீ யார்?” என்று நான் கேட்டேன். “என் தந்தை இவ்வழியில் நெடுநாட்களுக்கு முன் கொல்லப்பட்டார். நான் அவர் பன்னிரு மைந்தர்களில் இளையவன். பதினொருவரும் வணிகர்களானார்கள். நான் பொருள் துறந்து கானேகி நூல் பயின்றேன். துறவு பூணும் பொருட்டு தந்தையிடமும் அன்னையிடமும் வாழ்த்துச் சொல் பெற்று மீளும் எண்ணத்துடன் திரும்பி வந்தேன். எந்தை வணிக வழியில் கொல்லப்பட்டார் எனும் செய்தியை அறிந்தேன். என் உடன்பிறந்தார் அக்கொலையை உரிய சடங்குகளுக்குப் பின் மறந்துவிட்டனர். வணிகர்கள் வழியில் இறப்பது அன்றாட நிகழ்வு.”

“ஆனால் நான் அவர் சாவை மேலும் அறிய விழைந்தேன். ஏனென்றால் அதில் நான் கற்க ஏதோ உள்ளது என்று எனக்குப் பட்டது. இல்லையேல் நான் அவ்வண்ணம் திரும்பி வந்திருக்க மாட்டேன். உலகியலில் இருந்து பெறும் ஒரு மெய்யறிதலின் துளியே முழுமெய்மை நோக்கி மானுடரை செலுத்துகிறது. உலகியலை ஒறுக்க ஆணையிடுகிறது. அது இந்நிகழ்வில் உள்ளது என எண்ணினேன். ஏனென்றால் என் தந்தையின் மடியில் மூன்று வெள்ளிக் காசுகள் மட்டுமே இருந்தன. மூன்று வெள்ளிக் காசுகளுக்காக கொன்றவன் எவ்வண்ணம் வாழ்கிறான், அவன் இழந்ததும் பெற்றதும் என்ன என அறிய விழைந்தேன்.”

“ஆகவே இவ்வழியில் நான் பலமுறை சென்றேன். பல வடிவங்களில் பல வகைகளில். இன்றுதான் உன்னை கண்டுகொண்டேன்” என்றான். நான் அவனை நோக்கி புன்னகைத்து “வேட்டைவிலங்குக்காக வேடன் இரக்கம் கொள்வதில்லை. பழியுணர்வு அடைவதுமில்லை. ஏனென்றால் அவனை தெய்வங்கள் பிழை சாற்றுவதில்லை” என்றேன். “வேடனே ஆயினும் கொலைப்பழிக்கு நீ தப்ப முடியாதென்று அறிவாயா? நெறியிலாக் கொலையை ஒப்பும் மானுடக்குலங்கள் ஏதும் மண்ணில் இல்லை” என்று அவன் சொன்னான். என் உடல் நடுக்கு கொண்டது.

“அறிக, கொலைக்கு நெறி கொள்ளாத உயிர்க்குலங்களே இப்புவியில் இல்லை! பசிக்காது வேட்டையாடும் சிம்மத்தை கண்டுள்ளாயா? சிறிய எதிரியை யானை கொல்வதுண்டா? தன் மேல் மிதித்தவரை கடிக்கையில்கூட அந்த மிதியால் உருவாகும் வலிக்கு நிகராகவே நஞ்சு செலுத்தவேண்டுமென்று வகுக்கப்பட்டுள்ளது நாகங்களுக்கு. நூற்றில் ஒன்றே மெய்க்கடி, எஞ்சியவை பொய்க்கடி என கொடுநச்சுக் கருநாகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சொல், நீ அதன் எல்லையைக் கடக்காது உன் எல்லையைக் கடந்து வந்து தாக்கிய விலங்கை கண்டுள்ளாயா? கேட்டுள்ளாயா?” என்றான். நான் “உண்மை” என சொல்நின்ற விழிகளுடன் நோக்கினேன்.

“வேடனே, எண்ணம் சூழ்வாயெனில் கடந்து நோக்கு, நீ இயற்றிய பெரும்பழி என்னவென்று உனக்குத் தெரியும். இவ்வழி சென்றவர் உன்னை நம்பி மலையேறியவர். உன் குடியினர் வழிப்போக்கர்களை தாக்குவதில்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதனால்தான் இந்த வழியில் வணிகர்கள் வருகிறார்கள். அது உன் குடியினர் எம் மூதாதையருக்கு அளித்த சொல். உங்களுக்கு உங்கள் மூதாதையர் அளித்த ஆணை. அவர்களை நீ மீறியிருக்கிறாய். உன் முன் வந்த வணிகன் கையில் எப்படைக்கலமும் இல்லாதவன். வேட்டையனாகிய நீயே கூறுக! கொம்போ குளம்போ உகிரோ எயிரோ சிறகோ இல்லாத உயிர்களைக் கொல்ல உனது நெறி ஒப்புக்கொள்கிறதா?” என்றான் அவ்வணிகன்.

நான் மெய் தளர்ந்து குரல் தாழ்த்தி “கொன்று ஈட்டிய எதையும் நான் நுகர்ந்ததில்லை. என் குடியினருக்கு உணவாகவே அனைத்தையும் கொண்டு செல்கிறேன். கொலைப்பழி வேட்டைவிலங்கை அணுகுவதில்லை. ஏனெனில் தன் குருதியை அது மைந்தருக்கு அளிக்கிறது என்று எங்கள் குலத்திலொரு சொல் உண்டு” என்றேன். “ஆம் எனில் சென்று உன் குலத்தவரிடம் கேட்டு வா. நீ கூட்டி வைத்த இப்பழியை அவர்கள் பகிர்ந்துகொள்வார்களா என்று” என்றான். “அவர்களிடமா?” என அறிவிலிபோல் கேட்டேன். “ஆம், உன் கையின் செல்வத்தை அவர்கள் உண்டவர்களல்லவா?”

நான் ஆமென்று தலையசைத்தேன். “உன் பழியில் அவர்களுக்கும் பங்குள்ளது என அவர்கள் சொன்னால், அவர்களில் ஒருவரேனும் உன் பழியில் ஒருதுளியையேனும் ஏற்றுக்கொள்வார்கள் என்று முன்வந்தால், மீண்டு வா. என்னை நீ கொல்லலாம். இந்த வாள் உன் முன் தாழும். நீ வரும்வரை இங்கு காத்திருப்பேன். என் தந்தைமேல் ஆணை” என்று அவன் சொன்னான். புன்னகைத்து “இது நானும் கற்றுக்கொள்ளும் தருணம். இதைத்தான் தேடி வந்தேன்” என்றான்.

நான் அவன் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தகைய ஒருவனை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. “நன்று, வணிகரே. சென்று என் குலத்தை அழைத்து வருகிறேன். நான் செய்தது பழி எனில் அப்பொறுப்பைப் பகிர அவர்கள் ஒருபோதும் தவறப்போவதில்லை. எனக்கு அதில் ஐயமே இல்லை. ஏனென்றால் நிஷாதர்களாகிய நாங்கள் ஒரே குருதியின் ஆயிரம் முகங்கள். கிளைபிரிந்து வான் பரவினாலும் வேர்பின்னி ஒன்றென்று நிலைகொள்பவர்கள்” என்றபின் திரும்பி நடந்தேன்.

தொடர்புடைய பதிவுகள்

யூத்து -கடிதம்

$
0
0

யூத்து’

அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு

 

உங்களது யூத்து பற்றிய கட்டுரைக்கும் அதற்க்கு பதிலாக வந்த சில கடிதங்களையும் படித்தேன். எனது கருத்துக்கள். (நாம் இருவரும் சம காலத்தில் பிறந்தவர்கள்).

 

ஒவ்வொரு தலைமுறையினரும் அதற்கடுத்த தலைமுறையினர் வெட்டி என நினைக்கிறார்கள்.  எனது பெரியப்பா (நான் மிகவும் நேசித்த, மரியாதை வைத்திருந்த மனிதர் – தங்கமான குணமுடையவர்). 1980களில், நான் தலைமுடி அதிகமாக வைத்திருந்த ஒரே காரணத்திற்க்காக நான் உருப்பட போவதில்லை என்று நினைத்தவர். அதை பலமுறை எல்லோரிடமும் கூறியுள்ளார். இந்த ஐம்பதுகளில் தொடங்கி மனிதர்களுக்கு பொதுவாக ஒரு cynicism வந்துவிடுகிறது.

 

நீங்கள் சொன்ன பல கூற்றுகளை நான் அப்படியே ஒப்புக்கொள்கிறேன். சத்தமான music, மோசமான civic சென்ஸ் etc. ஆனால் எத்தனை பேர்கள் அப்படி இருக்கிறார்கள். ஒரு சிலர்? அனேகமாக எல்லோரும்? இதே யூத் மக்களில் பலர், வார விடுமுறையில் மலையேறுகிறார்கள். சைக்கிள் ஓட்டுகிறார்கள். பறவைகளை காணச் செல்கிறார்கள். மாரத்தான் ஓட்டத்திற்க்கு  பயிற்சி எடுக்கிறார்கள். என் சகோதரன் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணி புரிகிறான். அவனுடன் பணிபுரியும் ஆயிரக்கணக்கான சக ஊழியர்கள் (யூத்) ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கார்பொரேஷன் பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு beer குடிக்கிறார்களா என்பது தேவையற்ற விவாதம்.

 

இரண்டு விஷயங்களில் எனக்கு இன்றயை இளைய தலைமுறையினரோடு கருத்து வேற்றுமை இருக்கிறது. பொதுவாக யாருக்கும் அரசியலில் நாட்டமோ அக்கறையோ இருப்பதில்லை. நாட்டு நடப்பும் தெரிவதில்லை. ஒரு வேளை மோடியை பற்றி தெரிந்திருக்காது. Trump, May மற்றும் Angela Merkal பற்றி தெரிந்திருக்கலாம் – வெளிநாட்டில் குடியேறி பணிசெய்யும் ஆசையினால். ஆனால் சரித்திர அறிவு பூஜ்ஜியம். என்னுடன் பணிபுரியும் இருபது பேரிடம் (20 – 22 வயதினர்) வீர பாண்டிய கட்டபொம்மன் பற்றி ஐந்து வாக்கியங்கள் கூறும்படி சொன்னேன். ஒருத்தருக்கும் தெரியவில்லை – இத்தனைக்கும், எல்லோரும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் மீடியத்தில் பயின்றவர்கள். சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியே தெரியாவார்கள் இருப்பார்களா என்று எனக்கு கோபம் வருகிறது.

 

அடுத்தது யாருக்கும் அவர்களது தாய்மொழியின் சிறந்த இலக்கியங்களைப் பற்றி ஒன்றும் தெரிவதில்லை. நான் முதலில் எழுத ஆரம்பித்ததே, சிறந்த தமிழாசிரியர்களின் சில சிறுகதைகளை ஆங்கிலிலத்தில் மொழிபெயர்த்ததுதான், எனது குடும்பத்தினருக்காக.

 

அப்புறம் நமது இசை. அது கர்நாடக சங்கீதமாக இருக்கட்டும் அல்லது இந்துஸ்தானி இசையாக இருக்கட்டும். யூத்து அதைக் கேட்பதில்லை. அவர்கள் கேட்பது Hindi சினிமா பாட்டுக்கள் மற்றும் மேற்க்கத்திய இரைச்சல் மட்டும்  தான்

 

அதற்க்காக, யூத் அனைவரும் வேஸ்ட் என்பது, என் பெரியப்பா நினைத்தது போல் ஒரு தவறான கருத்தாகி விடும்.

 

https://kaveripak.com

 

 

 

ரமேஷ்
https://www.kaveripak.com

 

 

அன்புள்ள ரமேஷ்

 

இந்த இணையதளத்தின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் மிகமிக இளைய தலைமுறையினர். பலர் மாணவர்கள். அவர்கள் எவருமே வழக்கமான யூத்துகள் அல்ல. அவர்கள் வாசிப்பவர்கள், பயணம்செய்பவர்கள், பெரிய கனவுகளைக் கொண்டவர்கள், மாற்றுவாழ்க்கைகளைத் தெரிவுசெய்பவர்கள். அதை இந்தத்தளத்தை பொதுவாக வாசிப்பவர் புரிந்துகொள்ளமுடியும்.

 

நான் விமர்சிப்பது யூத்து என்னும் அந்த கருத்தை. அறிவுத்திறன், நுண்ணுணர்வு, கனவுகள் ஏதுமில்லாமல் மொண்ணையாக உலகியல்வெறியுடன் இருப்பதை இளைஞர்களுக்குரிய இயல்பான பண்பாக வரையறைசெய்யும் உளநிலையை மட்டுமே

 

ஜெ

யூத்து- கடிதம்

யூத்து- இரு கடிதங்கள்

யூத்து-சிரிப்பு-கடிதங்கள்

யூத்து-கடிதங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஊட்டி சந்திப்பு -சிவமணியன்

$
0
0
சுசித்ரா வாழ்த்துப்பாடலுடன் துவங்க அவருடன் திருமூலநாதனும், புதுக்குரல் பழனி ஜோதியும் இணைய சைவ, வைணவ, கௌமார கடவுளார்களின் ஆசி பெற்று நிகழ்வுகள் துவங்கியது. காலைமுதல் நிகழ்வாக பாலாஜி பிருத்விராஜின் நாவல் விவாதம். ஒரு உதாரண நாவல்,  வாசகனுடன் உணர்வுத் தொடர்பினை (Emotional connect) ஏற்படுத்தி அதன் போக்கில் அந்த தொடர்பினை இறுதி வரை தக்க வைக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும் எனவும். Metaphor என்னும் மையப்படிமம் நாவலுக்கு அவசியம் எனவும் . நாவலின் “பலகுரல்தன்மை” சிறுகதையிலிருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் எனவும் Thomas mann , The magic mountain நாவலின் எடுத்துக்காட்டுடன் விவாதிக்கப்பட்டது

ஊட்டி சந்திப்பு சிவமணியன் பதிவு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங்.

$
0
0

http://searchforhealth.ngo/

தாக்கூர் தாஸ் பங் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். பொருளாதார அறிஞர். நாக்பூரில், காந்திஜியின் தோழர்கள் துவங்கிய கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டாண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியான காலத்தில், இந்தியா சுதந்திரம் பெரும் அறிகுறிகள் தென்பட்டன. தாக்கூர் தாஸூக்கு பொருளாதாரத்தில் மேற்படிப்புப் படிக்க, அமெரிக்கா செல்லும் வாய்ப்பை அரசாங்கம் உதவித்தொகையுடன் வழங்க முன்வந்தது.

அமெரிக்கா செல்லும் முன்பு, காந்தியிடம் ஆசி வாங்கச் சென்றார் தாக்கூர்தாஸ். சேவாகிராமத்தில், பாபுவின் முன்பு தன் கல்லூரி அனுமதிச் சீட்டை வைத்து வணங்கினார்.  ’பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் படிக்க அமெரிக்கா போகிறேன். உங்கள் ஆசிகள் வேண்டும்’, என்றார்.  ’பொருளாதாரம் படிக்க வேண்டுமெனில், கிராமங்களுக்குச் சென்று, ஏழை மக்களுடன் வாழ்ந்து படி’, என்றார் பாபு. அவரின் பேச்சுக்கு மறுவார்த்தை ஏது. அனுமதிச்சீட்டை கிழித்தெறிந்து விட்டு,  சேவாக்ராம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழச் சென்றார். வினோபா பாவேயுடன் இணைந்து, பூதான், கிராம் தான் இயக்கங்களில் பணிபுரிந்தார். பின்னர் ஜெயப்ப்ரகாஷ் நாரயணின் சர்வோதய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருக்கு அஷோக் பங், அபய் பங் என இரு மகன்கள்.  அஷோக் பங் வேளாண்மையையும், அபய் சுகாதாரத்தையும் தங்கள் வாழ்வியலாகத் தேர்ந்தெடுத்தார்கள். அபய் சேவாகிராமத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்தார். 9 ஆம் வகுப்பு வரை, காந்திய வழி வாழ்க்கைக் கல்விமுறையான, ‘நயி தலீம்’, முறையில் பயின்றார்.

பின்னர் நாக்பூர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து முதுகலை மருத்துவம் வரையில் பயின்றார். அவருடன் பயின்ற ராணி சாரியைத் திருமணம் செய்துகொண்டார். அபய் முதுகலையைப் பொது மருத்துவத்திலும், ராணி, முதுகலையை மகப்பேறியல் மற்றும் பெண் நோயியலிலும் பயின்றார்கள். படித்து முடித்தவுடன், வார்தாவில் வாழத்துவங்கினார்கள். பொதுச் சுகாதாரத்துறையில் தங்களின் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் காரணமாக, அந்தத் துறையில் மேலே படிக்க முடிவெடுத்தார்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரியில், முதுகலை பொதுச் சுகாதாரம் பயின்றார்கள்.

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், தாங்கள் முன்பே முடிவு செய்திருந்தபடியே,  மஹாராஷ்ட்ராவின், மிகவும் பின் தங்கிய மாவட்டமான கட்சிரோலிக்குச் சென்று தங்கள் வாழ்க்கையைத் துவங்கினார்கள்.

கட்சிரோலி, இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தண்டகாரண்யம் என்னும் வனத்தின் ஒரு பகுதியாகும்.  தலைநகர் மும்பையில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில், கிழக்குக் கோடியில் அமைந்துள்ள மாவட்டம். 70% வனப்பகுதி. 50% மேல் மலைவாழ் பழங்குடிமக்கள் – கோண்ட் இனத்தவர்கள் வாழும் மாவட்டம். இந்தியாவின் மிகப் பின் தங்கிய மாவட்டம்.

இங்கே, Society for Education, Action and Research in Community Health (SEARCH) என்னும் ஒரு தன்னார்வ நிறுவனத்தைத் துவங்கினார்கள்.  துவக்கத்தில், பழங்குடியினர், மருத்துவம் பார்க்க வரத்தயங்கினர். அவர்களிடையே இருந்த மூட நம்பிக்கைகளும், பழக்க வழங்கங்களுமே காரணம். எனவே, தயக்கத்தைப் போக்கி, அவர்களுடன் உரையாட ஜாத்ரா என்று ஒரு திருவிழாவை ஒருங்கிணைத்தார்கள் அபய்யும், ராணியும்.

இதன் முடிவில், கோண்ட் பழங்குடியினருக்காக ஒரு மருத்துவமனையை கட்சிரோலியில் துவங்கும் எண்ணத்தை மக்கள் முன்வைத்தார்கள். அந்த மருத்துவமனையின் உருவாக்கத்தில், உள்ளூர் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.  கோண்ட் பழங்குடியினர், தங்களது மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக ஆர்வத்துடன் அபய் மற்றும் ராணி பங்கிடம் சொன்னார்கள்.

மருத்துவமனை வீடு போல வடிவமைக்கப்பட வேண்டும்.  பலமாடிக்கட்டிடங்களாக இருக்கக் கூடாது. நுழை வாயிலில் தண்டகாரண்யத்தின் பெரும் கடவுளான மா தந்தேஷ்வரியின் கோவில் இருக்க வேண்டும். இப்படி மக்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கு, மா தந்தேஷ்வரி மருத்துவமனை என்றே பெயரிட்டார்கள்.

 

அந்த நிகழ்வில், கட்சிரோலி மக்களின் முக்கியமான பிரச்சினைகள் என்ன என விவாதித்தார்கள்.  நீண்ட விவாதத்துக்குப் பின்னர் நான்கு பிரச்சினைகள் மிக முக்கியமானவையாக மக்களால் முடிவு செய்யப்பட்டது.

  1. மலேரியா
  2. குடிப்பழக்கம்
  3. குழந்தைகள் இறப்பு
  4. மகப்பேறு தொடர்பான உடல் உபாதைகள்

மேற்சொன்னவற்றில், குழந்தைகள் இறப்பு என்னும் பிரச்சினையை முதலில் எடுத்துக் கொண்டார்கள் அபய்யும், ராணியும். அந்த விகிதம் 1000த்துக்கு 121 (1988) ஆக இருந்தது. (இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலமான கேரளாவில் 11). முதலில், இந்தக் குழந்தை இறப்புக்கு என்ன காரணம் என ஆராயத்துவங்கினார்கள்.

கோண்ட் கிராமங்களில், பிரசவம் பார்க்க, குழந்தைப்பேற்றுக்கு உதவ என்றே பெண்கள் இருந்தார்கள். அவர்கள், ‘தாயி’ என கோண்ட் மொழியில் அழைக்கப்பட்டனர். அதிகம் படித்திராத, ஆனால், அனுபவம் பெற்ற உள்ளூர் மருத்துவச்சிகள். அவர்கள் மூலமாக, குழந்தைகள் இறப்பைப் பற்றிய தகவல்களை முதலில் திரட்டினார்கள்.  குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்களிடம் பேசி, குழந்தைகள் இறந்து போனதற்கான, முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்தார்கள். மருத்துவர் அபய், இதை verbal Autopsy என அழைக்கிறார். 100% மிகச் சரியான அறிக்கை அல்ல. ஆனால், ஒரு தகவலுமே இல்லாத இடத்தில், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ளவும், தீர்வுகளை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளவும், இதுவே முதல்படி.

அந்த அறிக்கையில், கீழ்க்கண்ட காரணங்கள் தெளிவாகின:

முதல் மாதத்தில் குழந்தை இறப்பு: 39%

நிமோனியா: 20%

வயிற்றுப்போக்கு: 19%

மலேரியா: 9%

தடுப்பூசி போடாத்தால் வரும் நோய்கள்:  15%

இத்துடன், தாய்மார்களிடம் நிலவிய ஊட்டசத்துக் குறைபாடுகள், இந்தப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கின.

கோண்ட் இனப் பெண்கள் பெரும்பாலும், வீடுகளிலேயே பிரசவித்தார்கள். அனைத்தும் மண் தரைக் குடிசைகள். இருப்பதிலேயே மிகவும் இருளான ஒரு அறையில் தான் பிரசவம் நிகழும். குழந்தை பிறந்த பின்பு, 30 நாட்கள் குழந்தையும் தாயும், அந்த இருட்டறையை விட்டு வெளியே வரக்கூடாது என்னும் மூட நம்பிக்கை (கண் பட்டு விடும் என்பதால்).

பிரசவித்த தாய், வேறு வழியின்றி, அந்த அறையிலேயே மல ஜலம் கழிக்க வேண்டியிருக்கும். அறையின் ஒரு ஓரத்தில் ஒரு குழிவெட்டி, அது கழிவறையாக உபயோகிக்கப்பட்டது.  முப்பது நாட்கள் ஒரு இருண்ட அறை அதுவும், பிறந்த குழந்தை இருக்கும் அறை, கழிவுகளை அகற்ற முடியாத கழிவறையாகவும் இருந்தால் எப்படி இருக்கும். உள்ளே யாரும் நுழையமுடியாத படி நாறும்.

பிறந்த முதல் மாதத்தில் இறந்த குழந்தைகளில், 52% நோய்த்தொற்றினால் இறந்தன.  20% குழந்தைகள் மூச்சுத் திணறலால் இறந்தன.  15%, குறைப் பிரசவத்தில் பிறந்தவை.

இதை, முதலில் தீர்க்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். ஒரு கிராமத்துக்கு ஒருவர் என்னும் கணக்கில், 39 கிராமங்களுக்கு, 39 பெண் நல ஊழியர்களை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் படிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் முன் அனுபவம், இந்த வேலையைச்செய்ய ஆர்வமுள்ள மனநிலை, நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் கரிசனம் போன்ற காரணிகளைக் கொண்டு தேர்வு செய்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே கிராமத்து மருத்துவச்சிகளாக இருந்ததால், தேர்ந்தெடுப்பதும் எளிதாயிற்று.  அவர்கள், ’ஆரோக்கிய தூத்’, – ஆரோக்கிய தூதர்கள் என அழைக்கப்பட்டார்கள்.

பிறந்த குழந்தை, ஒரு மாதம் உயிருடன் இருந்துவிட்டால், பின்னர், அது உயிர் வாழும் சாத்தியங்கள் பலமடங்கு அதிகரிக்கின்றன. எனவே, முதல் மாத இறப்புக்கான காரணிகளான, நோய்த்தொற்று, மூச்சுத் திணறல், குறைப்பிரசவம் –இந்த மூன்றையும் முதலில் நிவர்த்திக்க முடிவெடுத்தார்கள்.

சுகாதாரம், நோய்த் தொற்றை அடையாளம் கண்டு கொள்ளுதல், நோய்த்தொற்றைத் தடுத்தல் போன்றவற்றில் முதலில் ஆரோக்கிய தூதர்களுக்குப் பயிற்சியளித்தார்கள். இது, பிறந்த குழந்தைக்கு, வீட்டிலேயே அளிக்கப்படும் நலத்திட்டம் – Home based Neonatal Care  என ஒரு கருதுகோளாகப் பின்னர் பரிணமித்தது.

பெண்கள் கர்ப்பம் தரித்ததுமே, ஆரோக்கிய தூதர்கள் அவர்களை அணுகி, மிக எளிமையான படங்கள் கொண்ட கையேடுகளின் உதவியோடு,  உடல் நலம், சுகாதாரம், ஆரோக்கியமான உணவு, சத்துக்குறைபாடுகளுக்கான மருந்துகள் முதலியவற்றைப் பற்றி, ஆலோசனை வழங்குவார்கள். பிரசவத்துக்கு உதவுவார்கள். அதற்குப் பின் பேண வேண்டிய ஆரோக்கியக் குறிப்புகளைச் சொல்வார்கள். குழந்தைகளின் எடை, உடல் சூடு போன்ற பல சோதனைகளைச் செய்து தங்கள் கையேடுகளில் குறித்துக் கொள்வார்கள்.

நோய்த்தொற்றை அறிந்து கொள்ள மிக எளிதான பயிற்சி ஒன்றை அவர்கள் ஆரோக்கிய தூதர்களுக்கு அளித்தார்கள்.  மிகக் குறைந்த படிப்பறிவே உள்ள அந்தப் பெண்கள், உலகின் மிகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் மருத்துவமனையில பணிபுரியும் குழந்தை நலத் தொழில் நுட்பர்கள் (neo-natalogists) அளவுக்கு ஏன் அவர்களை மிஞ்சும் அளவுக்குத் திறமையானவர்கள் என்கிறார் மருத்துவர் அபய்.  இது வழக்கமான இந்திய மிகைக்கூற்றல்ல; இதற்கான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை, மிகவும் மதிக்கப்படும் லான்செட் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளோம் என்கிறார் அபய் பங்.

அதீத தொழில்நுட்ப மருத்துவச் சூழலில் உள்ள நுணுக்கங்களே பலவகை சாத்தியங்களை உண்டாக்கி, தொழில் நுட்பர்களைக் குழப்பி விடுகின்றன. கட்சிரோலியின் கிராமத்தில், இந்தப் பெண்கள், தங்களுக்குக் கிடைத்த எளிமையான, கடுமையான பயிற்சியின் மூலம், குழந்தையின் பிரச்சினையை,  பெரும் குழப்பமின்றி இவர்கள் மிக எளிதாகக் கண்டு பிடித்துவிடுகிறார்கள் என்பது அவரது கருத்து.

அடுத்த பெரும் பிரச்சினை – நோய்த் தொற்றைக் கண்டுபிடித்ததும், குழந்தைகளுக்குக் போட வேண்டிய ஊசி மருந்து. குழந்தையின் எடையைக் கணித்து, மிகச் சரியான அளவே மருந்து அளிக்கப்பட வேண்டும். தவறினால் விளைவுகள் விபரீதமாகிவிடும்.

ஜென்டாமைசின் என்னும் நோய்த் தொற்றுக்கான மருந்து,  ஒரு மில்லிக்கு 40 மில்லி கிராம் என்னும் அளவில் உள்ள மருந்து.  நீரிழிவு நோயாளிகளுக்குப் போடப்படும் இன்சுலின் மருந்தும் அதே அளவில் வந்தது. எனவே இன்சுலின் ஊசிகள் முன்பே கிருமிகளின்றிச் சுத்தம் செய்யப்பட்டு, சரியான அளவு காட்டும் ஊசியாக தயாரிக்கப்பட்டது பெரும் நல்லூழ்.  இன்சுலின் ஊசிகள், தினமும் உபயோகப்படுத்தப்படுவதால், மிகவும் சன்னமான ஊசியைக் கொண்டவை.  அவை, அன்று பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சரியானவை.  இதை வைத்துக் கொண்டு, குழந்தையின் எடையைப் பொறுத்து, எவ்வளவு ஜெண்டாமைசின் கொடுக்க வேண்டும் என்பதை, ஆரோக்கிய தூதர் மிக எளிதாகக் கணக்கிட்டு, இன்சுலின் ஊசிகளை உபயோகித்து, ஊசி வழியே மருந்து கொடுக்க முடிந்தது.  பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தாலும், அதில்  அறம் மற்றும் சட்டச் சிக்கல்கள் இருந்தன.

இந்திய மருத்துவச் சட்டங்களின் படியும், அலோபதி மருத்துவ முறைகளின் படியும்,  5-6 வகுப்பு மட்டுமே படித்த, கிராம மக்கள் நல ஊழியர், பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சையை மேற்கொள்வது, ஊசி மூலம் மருந்து செலுத்துவது போன்றவை அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.  இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அபய்யும் ராணியும், இந்தியாவின் மிகப் பெரும் குழந்தை மருத்துவ வல்லுநர்களை கட்சிரோலிக்கு அழைத்து வந்தார்கள்.  அதில், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (AIIMS) குழந்தைகள் நலப்பிரிவின் தலைவர் டாக்டர்.மெஹர்பான் சிங், ஆசிய குழந்தைகள் நலக் காங்கிரஸின் தலைவர் ரமேஷ் பொத்தார் உள்பட, பத்து குழந்தைகள் நல நிபுணர்கள் இருந்தார்கள்.  அவர்கள் முன்பு, அபய்யும், ராணியும், கட்சிரோலி மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பைத் தவிர்க்க, தாங்கள் மேற்கொள்ள இருக்கும் திட்டத்தை முன்வைத்தார்கள்.

நாங்கள் கட்சிரோலி கிராமங்களில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முன்பு, எங்கள் திட்டத்தைப் பற்றிய உங்கள் விமரிசனங்களைச் சொல்லுங்கள். எங்கள் திட்டத்தை நிறைவேற்றப் போகும் எங்கள் ஆரோக்கிய தூதர்களின் திறனைச் சோதித்து உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள். நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோமா எனச் சோதித்து எங்களை வழிநடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள் ராணியும், அபய்யும்.

அவர்களது திட்டத்தையும், அதை நிறைவேற்றப்போகும் ஆரோக்கிய தூதர்களையும் அவர்கள் மூன்று நாட்கள் ஆராய்ந்தார்கள்.  இறுதியில், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் குழந்தை நலத் துறையின் தலைவர் மெஹர்பான் சிங், ‘சாதாரணப் பெண்கள் போல நடமாடும், கட்சிரோலியின் இந்த ஆரோக்கிய தூதர்கள்,  எங்கள் கல்லூரியின் மருத்துவர்களை விட, குழந்தைகள் நலன் பற்றி அதிகம் அறிந்தவர்கள்’, என அனைவரின் முன்பும் மனம் விட்டுச் சொன்னார். (அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) மருத்துவம் பயில, இந்தியாவின் மிகக்கடினமான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது).

பத்து குழந்தைகள் நல வல்லுநர்களைக் கொண்ட அந்தக் குழு,  கட்சிரோலியின்  குழந்தைகள் நலத் திட்டத்தை முன்னெடுக்க அனுமதியளித்தது. திட்டம் உடனே 39 கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் பலன்களை ஒப்பீடு செய்துகொள்ள, அரசு மருத்துவ வசதிகள் இருந்த 47 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.  வசதிகள் எதுவுமில்லாமல், கிராம ஆரோக்கிய தூதர்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் கட்சிரோலி குழந்தை நலத் திட்டங்களின் பலன்களையும், அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்களும், வசதிகளும் உள்ள 47 கிராமங்களில் கிடைக்கும் அரசு திட்டங்களின் பலன்களுக்கும் இடையிலான ஒப்பீடு.

1995 ஆம் ஆண்டு துவங்கிய இந்தத் திட்டத்தின், பலன்கள் 2003 ஆம் ஆண்டில் எட்டிய புள்ளிவிவரங்கள் இதோ.  குறைந்த எடையின் காரணமாக மரித்த குழந்தைகளின் சதவீதம் 11.3% லிருந்து 4.9% ஆகக் குறைந்தது. குறைப்பிரசவ மரணங்கள் 33.3% லிருந்து 10.1% ஆகக் குறைந்தது. நோய்த் தொற்று மரணங்கள் 18.5% லிருந்து 6.9% ஆகக் குறைந்தது.  மூச்சுத் திணறல் மரணங்கள் 38.5 % லிருந்து 20.2%ஆகக் குறைந்தது.  ஒரு மாதத்துக்குள்ளான குழந்தைகள் இறப்பு சதவீதம்  60% லிருந்து 22% ஆகக் குறைந்தது. ஆனால், ஒப்பீட்டுக்காக, அதே காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள் என அரசின் கட்டமைப்பு இருந்த 47 கிராமங்களில், குழந்தைகள் இறப்பு 58 லிருந்து 62 ஆக அதிகரித்திருந்தது (எந்த முன்னேற்றமும் நிகழவில்லை). கட்சிரோலி மாவட்டத்தில், மொத்த குழந்தைகள் இறப்பு விதம் 120 லிருந்து  30 ஆகக் குறைந்தது. அப்போதைய அகில இந்திய சராசரி 70.  எட்டு ஆண்டுகளில்,  இந்திய சராசரிக்குக் கீழே இருந்த ஒரு பின் தங்கிய மாவட்டமான கட்சிரோலி, இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலமான கேரளாவை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது.

மருத்துவர்கள், மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் படைத்த அரசு கட்டமைப்பை விட, இரண்டு மருத்துவர்கள், 39 ஆரோக்கிய தூதர்கள், தலா 1500 ரூபாய் மதிப்புள்ள மருத்துவக் கருவிகள், 28 நாள் பயிற்சி எனக் கிளம்பிய சிறுபடை, பெரும் சாதனையைப் படைத்தது.

அறிவியலே மனிதப் பிரச்சினைகளுக்கெதிரான, ஆகச் சிறந்த தடுப்பூசி என்கிறார் அபய் பங்.  அறிவியலின் துணை கொண்டு, மிகக் குறைந்த செலவில், மனிதர்களை விடுதலை செய்வதே அவர் நோக்கம். அறிவியலின் துணை கொண்டு, பின் தங்கியப் பகுதி மக்களுக்குப் பயிற்சி அளித்து, தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் வகையில் தீர்வுகள் வடிவமைக்கப்பட வேண்டும். அதுவே ஆரோக்கிய ஸ்வ்ராஜ்யம் என்பது அவர் கருத்து.

இந்தத் திட்டத்தின் வெற்றியைக் கண்ட இந்திய அரசு,  தனது ஊரகப் பொதுநலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப் பொதுநல ஊழியரை, ‘ஆஷா’ என்னும் பெயரில் நியமித்து, அரசு சுகாதாரத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் திட்டமாக 2005 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடத்திவருகிறது.

குழந்தைநல மருத்துவம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, கோண்ட் இனப் பெண்கள்,  குடிப்பழக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தலைமை தாங்க ராணி பங்கை வலியுறுத்தினார்கள். கோண்ட் இன மக்கள் குறிப்பாகப் பெண்கள் முன்னெடுத்து நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தின் இறுதியில், கட்சிரோலியில் இருந்த அனைத்து (60) அரசு அனுமதி பெற்ற மதுக்கடைகளும் மூடப்பட்டன.

கட்சிரோலியின்,  குழந்தையின் வீட்டிற்கு சென்று அளிக்கப்படும் இந்த நலத்திட்டம், உலகச் சுகாதார நிறுவனத்தால், வளரும் நாடுகளின் மிகச் சிறந்த பொதுச் சுகாதாரத் திட்டம் என அடையாளப்படுத்தப்பட்டு,  நேபாளம், வங்காள தேசம் என அண்டை நாடுகளுக்கு முதலில் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் இந்த முறை ஆஃப்ரிக்க நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக இந்த முறை, தற்போது, எத்தியோப்பியாவின் தேசியச் சுகாதாரத் திட்டமாகச் செயல்பட்டு வருகிறது.

லான்செட் (LANCET) என்பது உலகின் மிகவும் புகழ்பெற்ற மருத்துவ வார இதழ். இங்கிலாந்து நாட்டில் துவங்கப்பட்ட இந்த இதழுக்கு இப்போது நியுயார்க் மற்றும் பெய்ஜிங்கிலும் ஆசிரிய அலுவலகங்கள் உள்ளன். தனது, 180 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, அதுவரை அந்த இதழில் வந்த, மனித உலகை மாற்றிய மருத்துவக் கட்டுரைகளை (கண்டுபிடிப்புகளை) வெளியிட்டுச் சிறப்பித்தது.  ரொனால்ட் ராஸ் மலேரியா, கொசுக்கள் வழியே பரவுவதைக் கண்டுபிடித்தது, காலரா பாக்டீரியா கண்டுபிடிப்பு, இன்சுலின், பெனிசிலின்  என மனித குலத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் தங்கள் இதழ்களில் வெளியானதை மீண்டும் வெளியிட்டு சிறப்பித்தது. அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளில், கட்சிரோலியின், குழந்தையின் வீட்டிற்கு சென்று அளிக்கப்படும் இந்த நலத்திட்டத்தின் (Home based neonatal care) வெற்றி பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.  காந்தியம் உலகப் பொதுநலத்துக்கு அளித்த கொடை, இந்த ‘ஆரோக்கிய ஸ்வராஜ்’.

TBI Blogs: This Gandhian Couple Has Provided Medical Help to Maharashtra’s Tribals for over 30 Years

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 17286 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>