Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16856 articles
Browse latest View live

துறத்தலென்பது…

$
0
0

அன்புள்ள ஜெ

வெண்முரசு முடிந்துவிட்டது என்ற செய்தி ஒர் ஆழ்ந்த சோர்வை அளித்தது. ஆனால் மலையேறி உச்சிக்குப் போனபிறகு வரும் நிறைவான சோர்வு அது. வெண்முரசு வெளிவரத் தொடங்கிய நாள் முதல் பெரும்பாலும் தினமும் அதை வாசித்து வருகிறேன். ஓரிருநாட்கள் தவறவிட்டிருப்பேன். நீண்ட பயணத்தின்போதும் வைரல் காய்ச்சலில் சிலநாட்கள் படுத்திருந்தபோதும்.

ஓர் இலக்கியப்படைப்பை இத்தனைகாலம் இத்தனைபேர் தொடர்ந்து வாசிப்பதென்பது ஓர் அரிய நிகழ்வுதான். இந்த பெரிய நூல் ஏதாவது வாசிப்புநிலையில் தேங்கிப்போனவர்களுக்கு உரியது இல்லை. இன்னும் இன்னும் என்று கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு உரியது. ஆகவே வரும்காலத்தில் இளையதலைமுறையினர்தான் இதை இன்னமும் வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் சொல்ல நான் ஆளல்ல. ஆனால் எனக்கு இத்தனை வாழ்க்கையை கண்டபிறகு ஒரு பெரிய விலக்கம் ஏற்படுகிறது. இந்நாவலில் இல்லாததே இல்லை. மனிதவாழ்க்கையின் எல்லா சாத்தியங்களும் எல்லா கீழ்மைகளும் இதிலுள்ளன. இத்தனை எழுதியபிறகு உங்களுக்கு ஒரு விலக்கம் அல்லது துறவுமனப்பான்மை ஏற்படவில்லையா என்ன?

மகாதேவன்

***

அன்புள்ள மகாதேவன்

இந்த நாவல்நிரை முடியும்போதே, களிற்றியானைநிரை நாவலின்போதே, ஒரு விலக்கமனநிலை வரத் தொடங்கிவிட்டது. சிறுகதைகளுக்குச் சென்று வெறிகொண்டு எழுதி, அதன்வழியாக வெவ்வேறு மனநிலைகளிலும் வெவ்வேறு வாழ்க்கைச்சூழலிலும் திகழ்ந்து, அதை ஈடுகட்டிக்கொண்டேன். ஆனாலும் ஒரு பெரும்சலிப்பு எஞ்சத்தான் செய்கிறது. நிறைவின் சலிப்பு மிக சிக்கலானது. அது இனியது, ஆனால் நிலைகொள்ள வைப்பது.

என்னைப்பொறுத்தவரை இந்தச் சலிப்பு அபாயமானது என்றும் தோன்றுகிறது. இப்போது உலகியலை அள்ளிப்பற்றிக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் அது என்னை விட்டுவிடும். உண்மையில் அந்தச் சலிப்பிலிருந்து வெல்லவே இந்த சின்னச்சின்ன பூசல்களைக்கூட கையாள்கிறேன்.கொரோனா காலமாக இல்லை என்றால் பயணங்கள் கிளம்பியிருக்கலாம்.

ஆனால் இது ஒருவகையான செயல்விலக்கம் மட்டுமே. துறவு அல்ல. அந்த மனநிலை எனக்கு இல்லை. நம்மில் பெரும்பாலானவர்களைப் போலவே துறந்து சென்றுவிடவேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது- கொஞ்சம் எஞ்சுகிறது. ஆனால் வெண்முரசு நாவலை எழுதி முடித்த அன்று நண்பர்கள் எவரையாவது பார்க்கவேண்டும் என்று தோன்றியது. லக்ஷ்மி மணிவண்ணனை அழைத்தேன். அழைக்கவில்லை, அழைப்பை உணர்த்தினேன்.

அவர் வந்து அவரைப் பார்த்ததுமே சரியாகிவிட்டது, பேசவேண்டும் என்றெல்லாம் இல்லை. பேசப்பேச அவரை அழைத்திருக்கக் கூடாது என்று தோன்ற ஆரம்பித்தது. உடல்நலமில்லாதவர், நுரையீரல்பிரச்சினையே உள்ளவர், நான் பார்க்கவேண்டும் என்பதற்காக அவரை வரச்சொல்லியிருக்கிறேன். நான் கிளம்பிச் சென்றிருக்கலாம். அத்தனை தொலைவு அவர் வந்து சென்றது நல்லது அல்ல.

அவர் சென்றபிறகு நினைத்துக்கொண்டேன். இப்படி மனிதர்கள் வேண்டும் என்று தோன்றுபவனிடம் என்ன துறவு இருக்கமுடியும்? இமையமலை அடிவாரத்தில் மலைகளை பார்த்தபடி தன்னந்தனிமையில் அமர்ந்திருப்பதைப் பற்றியெல்லாம் கனவு காணலாம். இனிய கனவு, அவ்வளவுதான்

ஜெ

***

நான் உங்கள் நெடுநாள் வாசகன் நீங்கள் வெண்முரசு ஆரம்பிக்கும் முனபே தினமும் உங்கள் இணையதளத்தை வாசிப்பது என் பழக்கம். வெண்முரசு தொடங்கிய பின்னர் அது இரவு 12 மணிக்கான காத்திருப்பாக மாறி விட்டது , இதோ வெண்முரசின் கடைசி நாவல் தொடங்கி விட்டது. அது ஒருவித அழுத்தத்தை அளிக்கிறது. ஒவ்வோர் நாவல் முடியும் போதும் அடுத்த நாவலுக்கான கற்பனைகளும் காத்திருப்புகளும் தொடங்கிவிடும். இனிமேல் இல்லை என்பது ஒரு வகையான இழப்புணர்வை தர தொடங்கிவிட்டது.

நான் இதுவரை இரண்டு கடிதங்கள் மட்டுமே உங்களுக்கு அனுப்பியுள்ளேன், ஒருவேளை அது என்னுடைய இயல்பான சோம்பேறித்தனத்தினால் இருக்கலாம். ஆனலும் தினமும் உங்கள் இணையதளம் வழியாக உங்களிடம் பேசிகொன்டே இருந்த உணர்வு இருந்தது அதனால் தான் நீங்கள் ஒரு முறை திடீரென காணாமல் போனபோது என் முதல் கடிதத்தை அனுப்பினேன்.

நான் ஒரே ஒருமுறை உங்களை ரயிலில் சந்தித்தேன் நீங்கள் வெண்முரசு எழுதி கொண்டு இருந்தீர்கள், முடிக்கும் வரை காத்திருந்து பின்னர் வந்து பேசினேன். அன்று உங்களிடம்சரியாக பேசாத ஒரு உணர்வு எப்போதும் இருக்கிறது. அன்று நான் என் பன்னிரண்டு வருட சென்னை வாழ்க்கையை முடித்து விட்டு மொத்தமாக கிளம்பிக்கொண்டு இருந்தேன் பன்னிரண்டு வருட நட்புகள் சுற்றங்கள் எல்லவற்றையும் விட்டு வரும் பொது வரும் அந்த வெறுமை உணர்வுடன் தான் நான் இருந்தேன். எப்போதும் கன்னியாகுமாரி எஸ்பிரஸில் சென்னைக்கு செல்லும்போதும்வரும்போதும் உங்களை சில கணங்கள் தேடிவிட்டே என் இருக்கைக்கு செல்வேன். அந்த நாள் அது ஏதும் மனதில் இல்லை உள்ளே ஏறிய உடனே உங்களை கண்டேன். அந்த கணத்தின் அழுத்தத்தை உங்கள் முகம் மாற்றியது. எனினும் அன்று உங்களிடம் சரியாக பேசாத உணர்வே எஞ்சுகிறது.

வெண்முரசு முடிவதும் அந்த பெரும் வெறுமையை தருகிறது. சென்னையை விட்டு வந்த வெறுமையை நண்பர்களிடமும் மனைவிடமும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இதை எவரும் புரிந்து கொள்வார்கள் என்று தோன்றவில்லை, என்னை சுற்றி இருக்கும் எவருக்கும் வாசிப்பு பழக்கம் இல்லை. இந்த வெறுமையை எப்படி கடந்து செல்வது? பிரியத்திற்குரிய ஓன்று முடிந்து போவது ஓரூ இறப்பு தான் என்று தோன்றுகிறது. இல்லை இது சின்ன விஷயம் தானா ? நான் தான் பெரிதுபடுத்துகிறேனா ? பின்தொடரும் ஓன்று முடிவது அளிக்கும் வெறுமையை விட உருவாக்கி முடிக்கும் போது வரும் பிரமாண்டமான வெறுமையை நீங்கள் எப்படி எதிர்கொளகீறீர்கள் ? இதை முடிக்கும்போது நிஜமாகவே உங்களுக்கு நிறைவு வருகிறதா இல்லை வெறுமையில் தான் சென்று முடிகிறீர்களா ?

என்னவோ கேட்கவந்து எதையோ கேட்டுவிட்டேன். பிழை இருந்தால் மன்னியுங்கள்.

அன்புடன்,

ஆல்வின் அமல்ராஜ்

***

அன்புள்ள அமல்

பின்னால் வந்து அடையும் வெறுமை, முன்னால் சென்று அடையும் வெறுமை என இரண்டு உண்டு. பெரிய படைப்புக்களை உருவாக்கும்போதும் அவற்றை வாசிக்கும்போதும் உருவாவது முன்னால் சென்று அடையும் வெறுமை.பெருஞ்செயல்களை முடிக்கும்போதும் முன்னால்சென்று அடையும் வெறுமை வருகிறது.

நாம் ஒன்றில் ஏமாற்றமடைந்து, இழந்து, கைவிட்டு திரும்பும்போது பின்னகர்ந்து வெறுமையை அடைகிறோம். எங்கு செல்வதென்று தெரியாத திகைப்பு அது. அது முதல்வகையான வெறுமை.

இன்னொருபக்கம், நாம் இருக்குமிடத்தில் இருந்து ஒரு பெரும்படைப்பு,பெருஞ்செயல் வழியாக முன்னால் செல்கையில் நாம் கைக்கொண்டுள்ள அனைத்தையும் இழந்துவிடுகிறோம். நின்றிருக்கும் இடம் கரைந்துவிட்டதாக உணர்கிறோம். அது இரண்டாம்வகையான வெறுமை

இரண்டாம்வகையான வெறுமை ஆக்கபூர்வமானது. சோர்வூட்டுவது அல்ல. அப்போது தம் அகம் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் அகத்தே முட்டிமோதுவோம். நம்மை, நம் தளத்தை மீண்டும் புதிதாக கட்டிக்கொள்வோம். மேலும் பெரிய ஒருபடைப்பை, ஒரு செயலை நோக்கிச் செல்வோம்.

இப்போதிருப்பது அந்த நிலைதான். மேலே செல்ல இடமில்லாமல் இருந்தால் அது நிறைவுநிலை. அதுவும் செயலின்மையே. ஆனால் ஓய்ந்து செயலின்மை கொள்வது அல்ல அது நிறைந்து செயலின்மை கொள்வது. அது இன்னும் வரவில்லை

ஜெ

***


இன்று குருபூர்ணிமா வெண்முரசு நாள் சந்திப்பு

$
0
0

வெண்முரசு 

தமிழில் மகாபாரதம் ஜெயமோகன் அவர்களால் எழுதி முடிக்கப்பட்டது.

7 வருடங்கள் ,26 நாவல்கள், 25000 பக்கங்கள்

இந்த பெரும் முயற்சி முழுமையடைந்து, இந்நாவல் எழுதி நிறைவு செய்யப்பட்டதை, இவ்வருடம் தொடங்கி, ஆண்டு தோறும் குருபூர்ணிமா   முழுநிலவு நாளில் வெண்முரசு வாசிப்பு, ஆசிரியருடனான உரையாடல் என கொண்டாடுவோம்.

இவ்வருடம், குரு பூர்ணிமா (ஜூலை 5, 2020) அன்று, ஆசிரியருடன் ஜூம் மீட்டிங் மற்றும் யூடியூப் லைவ் வழியாக உரையாட உங்களை அழைக்கிறோம். தங்கள் கேள்விகள், கருத்துக்களை லைவின் கமெண்டில் இடலாம், வருக.

ஜூலை 5, 2020 –

முதல் அமர்வு :காலை 9 மணி

இரண்டாம் அமர்வு :மாலை 6.30 மணி (அயலக வாசகர்களுக்காக ,பிறரும் வரலாம் )

யூட்யூப் லைவ்:

https://www.youtube.com/channel/UCGCV52HnkxPbTdLK298NKNw

ஜூம் மீட்டிங் : Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09

Meeting ID: 382 765 5072
Password: 8965317862
(முதல் 100 பேர் மட்டும்)

வெண்முரசு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம் ,

அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம் ,வருக

விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: solputhithu@gmail.com
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123

வெண்முரசின் எல்லா நாவல்களும் கிண்டில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன ,

வெண்முரசு நூல்கள் கிண்டிலில் வாங்க : https://amzn.in/dFTj7xN

வெண்முரசு  புத்தக வடிவில் வாங்க : https://www.jeyamohan.in/?p=82977

வெண்முரசு நாள் – குருபூர்ணிமா ஜூலை 5 நிகழ்வு

வெண்முரசு அனைத்தும் கிண்டிலில்

$
0
0

குருபூர்ணிமா வெண்முரசு உரையாடல் லைவ்

$
0
0

இன்றைய குருபூர்ணிமா வெண்முரசு உரையாடல் லைவ் இங்கே ,

அதிலேயே ரெக்கார்டும் ஆகிறது , எப்போது வேணுமானாலும் பார்க்க முடியும்

 

வெண்முரசு நிறைவு –குருபூர்ணிமா மாலை அமர்வு –லைவ்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6

$
0
0

அன்று முன்விடியலில்தான் இளவரசரை பலிநகருக்கு கொண்டுவந்தார்கள். அவரை கொண்டு வருவதற்கென்று விந்தையானதோர் தேர் அமைக்கப்பட்டிருந்தது. அகன்ற தேர்பீடத்தில் வெண்கலத்தாலான தொட்டி ஒன்றில் நீர் நிறைக்கப்பட்டு அதற்குள் மிதந்து கிடந்த பிறிதொரு கலம்மீது அவர் இருந்த பீடம் விடப்பட்டிருந்தது. அது அசைவில் நீர்க்கலத்தின் நான்கு மூலைகளிலும் முட்டிக்கொள்ளாமல் இருக்கும்பொருட்டு எல்லாத் திசைகளிலும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. தோற்பட்டையாலான தொட்டில்களில், மூங்கில்கள் தொங்கவிடப்படும் பட்டுத்துணி மஞ்சல்களில் முதியவர்களை உடல் அலுப்பின்றி கொண்டு செல்வதை அதற்கு முன் பார்த்திருக்கிறேன். நீரில் மிதக்கும் ஒரு கலத்தை தேரில் அமைப்பதைப்பற்றி அதற்கு முன் எண்ணிப்பார்த்ததுகூட இல்லை. அந்த எண்ணம் வந்த சிற்பி எவரென்றே எண்ணி வியக்கத்தோன்றியது.

அந்தத் தேர் வந்து அருகணைந்து நிற்கும் வரை அது ஏதோ பெரிய பொருள் ஒன்றை கொண்டு வரும் சுமைத்தேர் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதை வரவேற்க சுரேசரும் பிற அமைச்சர்களும் பலிநகரின் முகப்புவாயிலிலேயே நின்றனர். வாழ்த்தொலிகள் எதுவும் எழவில்லை. அந்தக் கலத்திலிருந்து மிக மெதுவாக மிதக்கும் கலத்தை வெளியே எடுத்தார்கள். அப்போதுதான் அதில் என் முழங்கையைவிட சற்றே பெரிய மெலிந்த சிற்றுடல்கொண்ட சிறுவன் ஒருவன் மிதப்பதுபோல தேனில் கிடப்பதைப் பார்த்தேன். அவர் உடலில் தோலே இல்லை. ஆங்காங்கே சில இடங்களில் தோல் முளைத்து கறைபோல பரவியிருப்பதையே காண முடிந்தது. விரல்கள் கைகால்கள் எல்லாமே வெண்ணிறமாக தளிர்போல சுருண்டு கூம்பியிருந்தன.

சிறுவன் ஒருவனின் கை நகங்கள் அத்தனை சூம்பி, பாளைக்குள் இருந்து எடுக்கப்பட்ட தளிர் போலிருப்பதை அப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். கால் நகங்கள் நீண்டு சுருண்டு வளர்ந்திருந்தன. அந்தக் கலம் மீது மெல்லிய பட்டொன்றைப் போர்த்தி தேரிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றார்கள். அவர் கொண்டுசெல்லப்பட்ட பிறகுதான் அவருக்கு ஆடை எதுவும் அணிவிக்கப்படவில்லை என்பதும், வெற்றுடலாகவே அத்தனை தொலைவு வந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. நான் திகைத்து நின்றிருக்க என் அருகே நின்றிருந்த முதிய படைவீரர் “கதைகளில் எஞ்சும் அந்த நாகச்சிறுவன் இளந்தட்சன் இவ்வண்ணம்தான் தோலுரிந்து சிறுகுழவியாக இருந்தான் என்பார்கள்” என்றார். நான் அவரை திரும்பிப்பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்றேன்.

எனக்குரிய சிறு குடிலை அடைந்து அன்றைய செய்திகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி ஓலைச்சுவடிகளில் எழுதி அடுக்கினேன். இயற்றவேண்டியவை, இயற்றியவை ஆக இரு சுவடிக்கட்டுகளையும் தனித்தனியாக இரு பெட்டிகளில் போட்டு மூடிவைத்தபோது மெல்ல உள்ளம் அடங்கிவிட்டிருந்தது. புலர்காற்றின் குளிரை உணர்ந்தபடி கைகளைக் கோத்து பீடத்தில் கண்மூடி அமர்ந்திருந்தேன். அப்போது முதற்புலரிக்கான சங்கொலி எழுந்தது. அதற்கெனக் காத்திருந்ததுபோல் பலிநகரெங்கும் ஓசைகள் முழங்கின. நான் எழுந்து என் மரவுரியையும் தாளிக்குழம்பு செப்பையும் எடுத்துக்கொண்டு விரைந்து சிற்றடிகளுடன் ஓடிச்சென்று கங்கையை அடைந்தேன்.

இருண்டு குளிர்ந்து மென்படலமாக ஆவி எழ இருளொளியுடன் ஓடிக்கொண்டிருந்த கங்கையின் கரை முழுக்க மக்கள் நீராடிக்கொண்டிருந்தனர். மரத்தாலான படிக்கட்டுகளினூடாக இறங்கிச் சென்று எண்ணாமல் முழுக்கிட்டு சிறுதாளிக் குழம்பை தேய்த்துக் குளித்து மரவுரியால் தலை துவட்டிகொண்டு வந்து ஆடைகளை அணிந்துகொண்டேன். தலைப்பாகையும் அணிகளும் அணிந்தபின் விரைந்த சிற்றடிகளுடன் அரசரின் அவைக்கு சென்றேன். தன் குடிலுக்கு வெளியே யுதிஷ்டிரன் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். சுரேசர் நின்று ஏதோ அவருக்கு உரைத்துக்கொண்டிருந்தார். நான் அணுகி ஓசையின்றி தலை தாழ்த்தி வணங்கி அதற்கு அப்பால் நின்றேன்.

சுரேசர் பலிச்சடங்குகளுக்கான அனைத்து முறைமைகளும் தொடங்கிவிட்டதை யுதிஷ்டிரனுக்கு உரைத்தார். யுதிஷ்டிரன் நிகழட்டும் என்பதுபோல் கைகாட்டினார். அந்த அவையில் அர்ஜுனன் இல்லை என்பதை கண்டேன். பீமன் சற்று அப்பால் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வேறெங்கோ நோக்கி நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும் மட்டுமே யுதிஷ்டிரனின் அருகே இருந்தனர். அவர்கள் எவரும் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. யுதிஷ்டிரன் இறுதியாக “மைந்தன் இறுதியாக வந்தால் போதும், மிகுதியாக அவனை விழிமுன் நிறுத்தவேண்டாம்” என்றார். “ஆம், வெயில் அளவாகவே படவேண்டும் என்பது மருத்துவர் கூற்று” என்றார் சுரேசர்.

நான் அங்கிருந்து விலகி கங்கைக்கரைக்கு சென்றேன். என் எண்ணங்கள் குழம்பியிருந்தன. ஈட்டுவது இதெல்லாமென்றால் எதன்பொருட்டு போரிடுகிறோம் என்ற எண்ணம் எழுந்தது. ஷத்ரியர்கள் அனைவரையும் போருக்குப் பின் அவ்வெண்ணம் பீடிக்கிறது. பசி கெட்டபின் வணிகன் அதை சென்றடைகிறான். மைந்தருக்கு நிலத்தை அளித்தபின் வேளான் அவ்வெண்ணத்தை கொள்கிறான். ஆனால் அவ்வெண்ணங்களால் எவரும் எதையும் துறப்பதில்லை. அது தன் பிடியை விட்டாலும் நாம் விட்டுவிடுவதில்லை. அடைதலுக்காக வாழ்நாளெல்லாம் போரிடுகிறோம். விடுதல் அதைவிட நூறுமடங்கு கடினமானது என அறிவதில்லை.

கங்கைக்கரையில் அந்தணர்கள் நிரைநிரையாக அமர்ந்து வேள்விக்குரிய சடங்குகளை தொடங்கிவிட்டிருந்தனர். இறந்தோருக்குரிய அன்னம் சமைப்பதற்குரிய சிற்றடுப்புகளும் மென்விறகுகளும் பசுங்கலங்களும் ஒருங்கியிருந்தன. ஏவலர்களும் காவலர்களும் சற்று தள்ளி அழைப்புக்கு அணுகும் ஆணையுடன் முனைப்புகொண்டு நின்றுகொண்டிருந்தனர். சுரேசர் ஒவ்வொன்றையும் முன்னரே உய்த்துணர்ந்து முழுமையாகவே ஒருக்கியிருந்தார். அன்று பலிச்சடங்கு என காகங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. சூழ்ந்திருந்த காட்டுக்குள் அவை துயிலெழுந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தன.

நான் திருதராஷ்டிரரை சந்திக்கும்பொருட்டு சென்றேன். அவருக்கு ஒருக்கப்பட்டிருந்த குடில் தெற்கு எல்லையில் அமைந்திருந்தது. அதன் முன் குருகுலத்தின் கொடியோ அவருக்கான அரசஅடையாளங்களோ எதுவும் இல்லை. வானப்பிரஸ்தம் சென்றவர்களுக்கு அடையாளங்கள் அளிக்கப்படுவதில்லை. நான் குடில்முன் சென்றபோது திருதராஷ்டிரர் வெளியே வந்து சிறு மூங்கில் பீடத்தில் அமர்ந்திருக்க அவருடைய ஏவலனாகிய சங்குலன் அவருடைய குழல்களை பின்னால் அள்ளி தோல்சரடொன்றால் கட்டிக்கொண்டிருந்தான். அவர் முகம் உணர்வற்றதுபோல இருந்தாலும் உதடுகள் ஏதோ சொற்களை மெல்வதுபோல் அசைந்துகொண்டிருந்தன. கைவிரல்களை முறுக்கி தளர்த்தி உடல் தசைகளை தளரவைத்து மெல்ல ததும்பிக்கொண்டிருந்தார்.

அவர் நிலையழிந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. நான் அருகே சென்று தலைவணங்கி “நான் உத்கலத்து சௌரிய குடியினனும் பெருவணிகர் மாகேசரின் மைந்தனும் அஸ்தினபுரியில் வணிகம் செய்பவனுமாகிய மிருத்திகன். பெருவணிகன். இங்கு அனைத்தையும் ஒருக்கும் பொறுப்பிலிருப்பவன். அடிபணிகிறேன்” என்று கூறினேன். திருதராஷ்டிரர் சொல்லின்றி கையால் என்னை வாழ்த்தினார். சங்குலன் என்னிடம் “அரசர் எப்போது செல்லவேண்டும் என்று ஆணை?” என்றான். “அவ்வண்ணம் ஆணை ஒன்றில்லை. அரசருக்கு ஆணையிட இங்கு எவர்? அனைவரும் சென்று அமரவேண்டும் என்பதே சுரேசரின் கோரிக்கை” என்றேன்.

“அங்கே அனைத்தும் ஒருங்கிக்கொண்டிருக்கின்றன. அனைவரும் வந்தமர்ந்த பின்னர் பலிநிகழ்வு தொடங்கும். ஏனெனில் இங்கு மூப்பிளமையோ முறைமையோ பார்க்கப்படுவதில்லை” என்றேன். அவன் அவருடைய சடைக்கற்றைகளை கட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். திருதராஷ்டிரரின் தாடியிலும் சடைத்திரிகள் கலந்திருந்தன. அவருடைய குழல் காகச்சிறகென பளபளப்பு கொண்டிருந்ததை ஒரு காலத்தில் எந்தையுடன் இளையோனாக இந்நகருக்கு வந்தபோது பார்த்திருக்கிறேன். எவ்வண்ணம் அப்படி உயிரிழந்து மட்கிய வேர்கள்போல் சடைபெற்றது என்று வியந்துகொண்டேன். கூந்தல் ஓர் அடையாளம் போலும்.

உள்ளிருந்து விழியின்மை நடையில் தெரிய காந்தாரி வெளியே வந்தார். அவருடைய நீள்கூந்தலும் அதேபோல சடைபுரிகளாக மாறிவிட்டிருந்தது. அவரது கைகளில் நகங்கள் வளர்ந்து குருவிகளின் அலகுகள்போல் உள்நோக்கி சுருண்டிருந்தன. காந்தாரி திருதராஷ்டிரரின் அருகே அமர்ந்து மூச்சிரைக்க “இங்கே இளைய யாதவர் வருகிறாரா?” என்றார். நான் “இல்லை, அவர் எங்குளார் என்று எவருக்கும் தெரியவில்லை” என்று சொன்னேன். “ஆம், அவ்வாறு அறிந்தேன். அவர் இங்கே பணிமுடித்துவிட்டார்” என்று காந்தாரி கூறினார். பின்னர் ஒருகணம் கழித்து “குந்தி வந்திருக்கிறாளா?” என்றார். “ஆம், விதுரரும் குந்தியும் வந்து பிறிதொரு குடிலில் தங்கியிருக்கிறார்கள்” என்றேன்.

திருதராஷ்டிரர் திரும்பி “விதுரனை நான் ஒருமுறை பார்க்கவேண்டும்” என்றார். “அவர் பலிக்களத்திற்கு வருவார். பலிநிகழ்வுக்குப் பின் தாங்கள் இருவரும் சந்திக்கும்படி ஒருங்கிணைக்கிறோம்” என்று நான் சொன்னேன். “அவனிடம் சென்று சொல், அவன் பொருட்டு நான் விழிநீர் சிந்தினேன் என்று” என்று திருதராஷ்டிரர் கூறினார். நான் “ஆணை” என்றேன். “அவனுக்கு நிறைவு அமையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். என் துயரை எண்ணியே அவன் வருந்துவான்” என்றார் திருதராஷ்டிரர்.

நான் எழுந்து தலைவணங்கி சங்குலனிடம் தாழ்ந்த குரலில் “முடிந்த விரைவில் அரசரையும் அரசியையும் நீர்முகப்புக்கு கொண்டு வருக!” என்றேன். ”பெண்டிர் நீர்முகப்புக்கு வரும் வழக்கமுண்டா?” என்று அவன் மெதுவான குரலில் கேட்டான். “ஆம், இது சமஸ்தபலி என்றார்கள். அவர்கள் பலியிடவேண்டியதில்லை, ஆனால் நீர்முகப்புக்கு வரலாம்” என்று நான் கூறினேன். அவன் “ஆம்” என்றான்.

பின்னர் மீண்டும் பலிமுகப்புக்கு வந்தபோது அங்கே அமைச்சர்களும் ஏவலர்களும் பிறரும் கூடிக்கொண்டிருப்பதை கண்டேன். திருதராஷ்டிரர் மைந்தர்களின் விதவைகள் தங்கள் சேடியருடன் நிரையாக வந்து கங்கையின் மணல் கரைகளில் அமர்ந்தனர். அவர்கள் வெண்ணிற ஆடையோ இளங்கறுப்பு நிற ஆடையோ அணிந்திருந்தனர். அவற்றை தலைக்குமேல் வளைத்து முகத்தை மூடிக்கொண்டு சிறு சிறு குவியல்களென தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.

ஒரு கணத்தில் அங்கு நின்று பார்க்கையில் என் நெஞ்சு விம்மி அடைத்தது. எத்தனை கைம்பெண்கள்! ஒவ்வொருவரும் வாழும் தனி நரகம். அவர்கள் வாழும் உலகம் எத்தகையது? அங்கே அன்பு என்பதும் பற்று என்பதும் எவ்வண்ணம் பொருள்படும்? அறமென்றும் கடமையென்றும் அவர்களுக்கு இவ்வுலகம் எதை உணர்த்தும்?

அப்போர் நெடுங்காலம் கடந்தது போலாகிவிட்டது. ஒன்றன்மேல் ஒன்றென காலம் அதன்மேல் நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டிருக்கிறது. காலம் ஒவ்வொன்றையும் நகர்த்தி பின்னால் கொண்டு செல்கிறது அது. ஒவ்வொன்றுக்கும் நடைமுறை சார்ந்த எளிய விளக்கங்களை அளித்து மேலும் மேலும் பொருளின்மை கொள்ளச் செய்கிறது. காலம் மழுங்கடிக்காத எதுவும் இப்புவியில் இல்லை. பெருமலைகள் கூட கரைந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அங்கு நின்று பார்க்கையில் அத்துயர் அவ்வண்ணமே இறுகி காலத்தை அறியாத வைரக் கல்லென மாறிவிட்டிருப்பதை கண்டேன்.

எந்த அறிவிப்புமில்லாமல் தொலைவில் குந்தியும் விதுரரும் வருவதை கண்டேன். அங்கே எவரும் எவரையும் வரவேற்கலாகாது என்பதனால் பெரும்பாலானவர்கள் அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு வணக்கம்போல் சற்றே உடலசைவு காட்டினர். விதுரர் எவரையும் பார்க்காமல் இரு கைகளையும் நெஞ்சோடு கூப்பி தலைகுனிந்து நடந்து வந்தார். குந்திதேவி வெண்ணிற ஆடை அணிந்து அதை முற்றாக முகத்தின் மேல் இழுத்துவிட்டுக்கொண்டு சிற்றடிகளுடன் உடல் குறுக்கி வந்தார்.

இருவருமே மெலிந்து சிறுத்து சிறு பறவைகள் போலாகிவிட்டிருந்தனர். சிறகிலாத சிறுகாலெடுத்து வைத்து நடக்கும் பறவைகள்போல். அவர்களின் காலடிகள் மண்ணில் படுகின்றனவா என்றே ஐயமாக இருந்தது. காற்று சருகுகளைப்போல் அவர்களை தள்ளிக்கொண்டு வருவதாக பட்டது. சுரேசர் அவர்களை அணுகி அவர்கள் அமரவேண்டிய இடத்தை காட்டினார். அவர்கள் அமர்ந்து கொண்டனர். விதுரர் கங்கையை நோக்க குந்தி நிலம்நோக்கி அமர்ந்தார்.

பின்னர் யுதிஷ்டிரனும் சகதேவனும் நகுலனும் நடந்து வந்தனர். யுதிஷ்டிரன் தோளில் புரண்ட குழலுடன், கைகூப்பி தோள் குறுக்கி தலைகுனிந்து நடந்துவந்தார். நகுலனும் சகதேவனும் கூட நிலம் நோக்கியே நடந்துவந்தனர். அவர்களுக்குப் பின்னால் யுயுத்ஸுவும் சம்வகையும் நடந்துவந்தனர். எவரும் அரசஉடையோ அணிகளோ முத்திரைகளோ அணிந்திருக்கவில்லை. அவர்கள் வந்து சுற்றி அனைவரையும் தொழுத பின்னர் தங்களுக்கு விரிக்கப்பட்டிருந்த தர்ப்பைப்புல் பாய்மேல் அமர்ந்தனர்.

திரௌபதி தன் அணுக்கச்சேடியுடன் வந்து தனியாக மணற்பரப்பின்மேல் அமர்ந்தார். அங்குள்ள எவரையுமே அவர் உணர்ந்ததுபோல தெரியவில்லை. என்னிடம் முதிய அந்தணர் ஒருவர் “காசிமன்னரின் மகள்கள் வரவில்லையா?” என்றார். “இல்லை, அவர்கள் அங்கேயே நீர்க்கடன்கள் செய்வதாக சொல்லிவிட்டார்கள்” என்று நான் சொன்னேன். “ஆம், துரியோதனனுக்கும் துச்சாதனனுக்கும் நீர்க்கடன் செய்ய அவர்கள் ஒரு மைந்தனை எடுத்து வளர்க்கிறார்கள் என்று அறிந்தேன்” என்றார். நான் “ஆம்” என்றேன்.

யுதிஷ்டிரன் குந்திதேவியைப் பார்த்து ஏதேனும் உணர்ச்சியை அடைவார் என்று நான் எண்ணினேன். ஆனால் இயல்பாக ஒருமுறை குந்தியை பார்த்தபின் அவர் வெற்றுவிழிகளுடன் திரும்பிக்கொண்டார். அவருடன் வந்த நகுலனும் சகதேவனும்கூட எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. அது ஒரு ஒவ்வாமையை உருவாக்கியது. ஆனால் மீண்டும் குந்தியை பார்த்தபோது மைந்தரை குந்தி பார்த்ததாகவே தெரியவில்லை என்று தோன்றியது. குந்தியில் அவர்கள் உணர்வெதையும் உருவாக்கவில்லை என்பதே அவர்களிலும் எதிரொலிக்கிறது போலும். விதுரரும் அவர்களை பொருட்டென எண்ணவில்லை. முற்றிலும் அயலவர்களாக அவர்கள் அங்கிருந்தார்கள்.

நான் அர்ஜுனனும் பீமனும் தனித்தனியாக நடந்துவருவதை பார்த்தேன். அவர்களை குந்தி பார்க்கிறாரா, குந்தியை அவர்கள் எவ்வண்ணம் எதிர்கொள்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தொலைவிலேயே அவர்கள் குந்தியை பார்த்துவிட்டாலும்கூட முகத்தில் எந்த உணர்வும் எழவில்லை. அருகணைந்து அமைச்சர்கள் காட்டிய இடங்களில் அமர்ந்தபோதுகூட முற்றிலும் அயலவர்கள், ஒருவரோடொருவர் எந்த உறவும் இல்லாதவர்கள் என்றே இருந்தனர்.

உண்மையிலே அவ்வண்ணம்தானா? மானுடருக்கிடையே உறவென்று ஏதுமில்லையா? தெய்வங்கள் அறிந்த உண்மை அது. உறவென அறிந்ததும், அதிலிருந்து கிளைத்த விழைவுகளும், வெறுப்புகளும், அலைக்கழிவுகளும் நடுவே வந்து அவ்வண்ணமே சென்றவைதானா? அந்த இடம் அவ்வாறு நடந்துகொள்ளச் செய்கிறதா? அங்கே தலைக்குமேல் இருந்த காற்று பெரும்பாறையாக மாறிவிட்டதைப்போல் சாவு நின்றிருந்தது. அதன்முன் எதுவும் எப்பொருளும் கொள்வதில்லை.

நான் திருதராஷ்டிரரும் காந்தாரியும் வரும்போது அவர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று பார்க்க விரும்பினேன். விதுரரை திருதராஷ்டிரர் உணர்வுடன் உசாவியதை எண்ணிக்கொண்டபோது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து நெகிழக்கூடும், தழுவிக்கொள்ளக்கூடும், ஓரிரு அன்புச்சொற்களேனும் கூறிக்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்த்தேன். சாவின் முனையிலும் கடந்தெழும் ஓர் உறவேனும் இப்புவியில் எஞ்சியிருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

திருதராஷ்டிரர் காந்தாரியின் கைபற்றி சங்குலனால் தோள்பற்றி நடத்தப்பட்டு எடைமிக்க காலடிகளை எடுத்து வைத்து மணலில் மெதுவாக வருவதை பார்த்தேன். தலையை சற்றே சரித்து வந்தவர் அருகணைந்ததும் அவரிடம் சங்குலன் விதுரர் பற்றி கூறுவதை கண்டேன். அவர் தலை திருப்பி செவிகளால் பார்ப்பதுபோல விதுரர் இருந்த திசையை அறிந்தார். பின்னர் இயல்பாக திரும்பிக்கொண்டார்.

விதுரர் அவரை பார்த்தபோதும் அவர் உடலில் எந்த மெய்ப்பாடும் நிகழவில்லை. என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. விதுரர் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லையா, எப்படி அவரிடம் தெரிவிப்பது? நான் அவர் அருகே அணுகி தலைவணங்கி “அரசே, நான் பெருவணிகன் மிருத்திகன். தங்கள் இளையவர் விதுரர் அங்குள்ளார். தாங்கள் விழைந்தால் அருகணையச் செய்கிறேன்” என்றேன். வேண்டியதில்லை என்பதுபோல் திருதராஷ்டிரர் கையை அசைத்தார். நான் அதை எதிர்பார்த்திருந்தேன் எனினும் ஏமாற்றம் அடைந்தேன். தலைவணங்கி பின்னகர்ந்தேன்.

சடங்குகளை நிகழ்த்தி வைக்கும் அந்தணர் எழுவர் வந்து அறிவிக்க பலியளிப்போர் ஒவ்வொருவராகச் சென்று மணல்மேடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிறு அடுப்புகள் முன் அமர்ந்தனர். ஏவலர்கள் உதவ அனைவருக்கும் அனல் அளிக்கப்பட்டது. அடுப்புகளை பற்றவைத்து அதில் பசுங்கலம் வைத்து எள்ளுடன் அன்னம் சமைத்தனர். திருதராஷ்டிரரும் பாண்டவர்களும் இளமைந்தர்கள் பலரும் அதை செய்வதை மணல்மேல் அமர்ந்து குந்தியும் பிற அன்னையரும் நோக்கியிருந்தனர்.

நான் மணல்மேட்டில் நின்று நோக்கியபோது நூற்றுக்கணக்கான அடுப்புகள் மணல்மேட்டில் எரிவதை பார்த்தேன். புகை எழுந்து மென்மையான பெரிய இறகுபோல காற்றில் அலைந்தது. பின்னர் அது ஒரு தூண் என ஆகி விண்ணை தொட்டது. கங்கைக்காற்றில் கரைந்து அப்பகுதியெங்கும் எரிமணத்தை நிரப்பியது. காகங்கள் கரைந்தபடி வந்து மணற்பரப்புகள் மேல் அமர்ந்தும் எழுந்தும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன. அந்த ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

அன்னம் சமைக்கப்பட்டதும் அவர்கள் அனைவரும் கைகூப்பியபடி எழுந்து சென்று கங்கைக்கரையில் அமர்ந்துகொண்டனர். சடங்குகளை செய்விப்போர் அவர்கள் முன் அமர்ந்து தொன்மையான நுண்சொற்களைச் சொல்லி அவர்களின் கைகளில் தர்ப்பைப்புல்லால் கணையாழி அணிவித்தனர். அன்னத்தை இலையில் பரப்பி ஏழு உருளைகளாகப் பிரித்து அவற்றில் அருகம்புல் வைத்து, நீத்தோர் பெயர்களை உரைத்து வணங்கி எழுந்து, பின்நோக்காமல் நீரிலிறங்கி, மூழ்கி ஒழுகும் பெருக்கிலிட்டனர். நீர்ப்பெருக்கில் பல்லாயிரம் மீன்கள் எழுந்து துள்ளி அவ்வன்னத்தை உண்டன. மேலிருந்து பல்லாயிரம் கூழாங்கற்கள் நீரில் விழுந்துகொண்டிருப்பதைப்போல தோன்றியது. நீர் கலங்கி கலங்கி துள்ளிய மீன்கள் வெள்ளிக் கீற்றுகளென தெரிந்து மெல்ல அடங்கின.

அதன் பின்னரே இளவரசர் பரீக்ஷித் கங்கைக்கரைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் வந்த அந்தக் கலத்துடன் அப்படியே சுமந்து அவரை கொண்டுவந்தனர். கங்கைக்கரையில் மணலில் அக்கலத்தை இறக்கி அவரை பட்டுத்துணியால் உறையிடப்பட்ட கைகளால் பற்றி மேலே எடுத்தனர். மணற்பரப்பில் விரிக்கப்பட்ட இலைக்கு முன் அவரை அமரச்செய்தனர். மும்முறை அன்னத்தை அவர் தொட்டு வணங்கச்செய்து அவ்விலையுடன் எடுத்து நீரிலிட்டனர். நீர்த்துளிகள் சிலவற்றை மும்முறை அவர் தலையில் தெளித்துவிட்டு மீண்டும் கலத்திற்கே கொண்டுசென்றார்கள்.

குந்தி எழுந்து வரக்கூடும் என்று எண்ணினேன். அல்லது அவர் மைந்தனை கொண்டுவரச் சொல்லக்கூடும். ஆனால் அவர் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவில்லை. திருதராஷ்டிரரும் காந்தாரியும் அவரை அறியவில்லை. விதுரரையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவரிடம் ஏதோ ஒன்று நிகழும் என்று. ஏன் அவரிடம் அதை எதிர்பார்த்தேன் என்று எனக்கு புரிந்ததே இல்லை.

ஈர உடைகளுடன் ஒவ்வொருவராக மேலே வந்தனர். அனைவரும் அந்தப் பெருமணலில் அமர்ந்தனர். யுதிஷ்டிரன் எழுந்து கைகூப்பி முகவுரைகள் இன்றி “பிறிதொரு பெரும் சடங்கினூடாக செய்யவேண்டிய கடமை இது. அதை என் இளமைந்தனுக்கு பதினெட்டு அகவை நிறைகையில் இங்கு முடிசூடி அமர்ந்திருப்பவர் இயற்றட்டும். இப்பொழுது அவன் இங்கு தன் மூத்தாருக்கு நீர்க்கடன் அளிக்கும் இத்தருணத்தில் அவையோர் முன் நின்றிருக்கவேண்டும் என்பதற்காக அழைத்து வந்தோம். அஸ்தினபுரியின் தொன்மையான குருதிவழியில் எஞ்சியிருக்கும் மைந்தன் அவன். இக்குடியினர் அனைவரின் வாழ்த்தும் தெய்வங்களின் அருளும் அவனை நீடுவாழச் செய்யட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அங்கிருந்தோர் வாழ்த்துரைத்தனர். நான் நெஞ்சு படபடக்க குந்தியை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று திருதராஷ்டிரர் உரக்க கனைத்தார். “என் மைந்தனை இங்கே கொண்டுவருக!” என்றார். கலத்துடன் மைந்தனை அவர் அருகே கொண்டுசென்றனர். அவர் கைநீட்ட சங்குலன் அக்கையைப் பிடித்து மைந்தன் மேல் வைத்தான். “நலம் பெறுக, மைந்தா! அன்னம் உன்னை வாழ்த்தட்டும். உன் உடல் பெருகுக! அரசு, மனையாட்டி, செல்வம், புகழ் என்னும் நான்கு சிறப்புகளும் அமைக! உன் குருதிவழி பெருகுக!” என்று அவர் எடைமிக்க குரலில் வாழ்த்தினார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்து சொட்டியது.

காந்தாரி “என் மடியில் படுக்க வையுங்கள்” என்றார். அவர் மடியில் ஒரு பட்டு விரிக்கப்பட்டு அதில் மைந்தனை படுக்கவைத்தனர். காந்தாரி தன் மெல்லிய கைகளால் மைந்தனை வருடினார். அவர் தலையில் கையை வைத்து வாழ்த்தினார். சுரேசர் குந்தியிடம் சென்று “மைந்தன் வந்துள்ளான்” என்றார். குந்தி தலைகுனிந்து நிலம் நோக்கி அமர்ந்திருந்தார். சுரேசர் சற்றுநேரம் காத்தபின் கொண்டு செல்க என்று கைகாட்டினார்.

பரீக்ஷித்தை மீண்டும் கலத்தில் இட்டு கொண்டுசென்றனர். “அஸ்தினபுரியின் இளவரசர் வெல்க! வெல்க குருகுலம்! வெல்க ஹஸ்தியின் குடி! வெல்க அமுதகலக்கொடி” என்று கூடியிருந்தவர்கள் வாழ்த்தினர்.

சிறகு,தூவக்காளி -கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

சிறகு கதை ஒருவகையில் என்னுடைய கதை. நான் பிறந்தது ஒரு சின்ன கிராமத்தில். சிறுவயதிலேயே என்னை தாய்மாமனுக்கு என்று சொல்லிவிட்டார்கள். அவர் குடிகாரர், முரடர், படிப்பும் இல்லை. என் குடும்பமும் வறுமையானது. நான் மறு எண்ணமே இல்லாமல் வளர்ந்தேன். நான் பள்ளிப்படிப்பு முடிந்ததும் காலேஜ் போகவேண்டும். என் ஊரிலிருந்து மதுரைவரை பஸ் இல்லை. பஸ் ஏறும் இடம் வரை வரவேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை. என் அப்பா எனக்கு சைக்கிள் சொல்லித்தந்தார். சைக்கிளில் வந்து அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு பஸ் ஏறி காலேஜ் போக ஆரம்பித்தேன்.

அது என் வாழ்க்கையில் மிகப்பெரிய மலர்ச்சி. எனக்கு உலகம் என்றால் என்ன என்று தெரிந்தது. சைக்கிளில் காடுகழனியெல்லாம் போக ஆரம்பித்தேன். உள்ளூரில் ஒரு எல்.ஐ.சி ஏஜெண்டாக ஆனேன். பெண்கள் நடுவே சீட்டும் நடத்தினேன். நானே சம்பாதித்து படித்து வேலைக்கு போனேன். அதற்குள் அந்த மாமனுக்கு வேறு திருமணம் ஆகிவிட்டது.எனக்கு பிடித்தவரை நானே திருமணம் செய்துகொண்டேன். இப்படி நினைத்ததில்லை. ஆனால் சிறகு படிக்கும்போதுதான் எனக்கு திருப்புமுனை அந்த சைக்கிள்தான் என்று தெரிந்தது. அந்த சைக்கிளை வைத்திருக்கலாம் என்று ஏக்கமாக இருந்தது

எல்.

 

அன்புள்ள ஜெயமோகன்,

வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திற்காக நம்மை அறியாமலியே நாம் காத்திருப்போம். அந்த தருணம் வரும் போது, அதன் ‘சிறகு’கள் கொண்டு நாம் பறந்து செல்ல முயல்வோம். ஆனந்தவல்லியின் அப்படிப்பட்ட தருணம் அவள் ‘சைக்கிள்’ கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்டது. அவள் அதை ஒரு சிறகாகப் பயன்படுத்தி தன்னை, வாழ்க்கையின் அடித்தள பகுதியிலிருந்து மீட்டெடுத்து பறந்து செல்கிறாள்.

சங்கு போன்ற பண்ணையார்களின் அடக்கும் அதிகாரமும், ஆனந்தவல்லி போன்ற எளிய மக்களின் அடங்கும் குணமும், இதில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறர்கள் என்பதே மிகவும் முக்கியம். பெரும்பாலான சமயங்களில் சங்கு போன்றவர்களே வெல்கிறார்கள். மிகவும் சொற்ப சமயங்களிலே ஆனந்தவல்லி போன்ற எளியோர் தங்களின் மன உறுதியாலும் தீராத கனவாலும், அனைத்து தடைகளையும் மீறி முன்னகர்ந்து செல்கிறார்கள்.

அப்படி அவர்கள் செல்லும்போது தங்கள் பாதையில் ஒரு சில சமரசங்களை செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. தன்  மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்களிலிருந்து எப்படியாவது மீள அவர்கள் செய்யும் எதிர்வினையின் ஒரு சாரமே ஆகும். அதனாலேயே  ‘சிறகு’ கதையின் கதை சொல்லியால், பெண்கள் செய்யும் சமரசத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேலுமொரு காரணம் நாம் வாழும் ‘patriarchal’ சமூகம். நாம் நம் பெண்களை  தெய்வமாக அல்லது கௌரவப் பொருளாக மட்டுமே நினைப்பது. அவளை ஒரு சக மனிதராக நினைப்பதையே ஒரு முற்போக்குச் செயலாகக்  கொண்டிருந்த காலம் நம்மில் உள்ளது.  ஆனந்தவல்லியின் ‘சிறகு’, சங்குவின் ‘சைக்கிள்’.

அன்புடன்,

பிரவின்

அன்புள்ள ஜெ

தூவக்காளி கதையை நினைப்பில் ஓட்டிக்கொண்டே இருக்கிறேன். பாற்கடலில் ஒரு நஞ்சு அலை அந்த நஞ்சு சுபத்ரையின் மனசில் ஊறிய ஒரு துளி நஞ்சுக்கு மருந்தாகிறது என்ற எண்ணத்தில் உள்ள அந்த முடிச்சை பலபடியாக நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது

புல் உலகையே உணவூட்டும் அம்மா. அது பாற்கடல்போல அலையடிக்கிறது. அந்தப் புல்லில் இருந்துதான் புல்பிள்ளை வந்து திரும்பவும் புல்பிள்ளையாகவே ஆகியது. தூவக்காளி என்ற தெய்யம் வடகேரளத்திலும் உள்ளது [https://ml.wikipedia.org/wiki/%E0%B4%A4%E0%B5%82%E0%B4%B5%E0%B4%95%E0%B5%8D%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B3%E0%B4%BF ]

கார்த்திக்ராஜ்

 

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.

தூவக்காளி படித்தேன். வாசகரின் ஊகங்களை மேம்படுத்தும் நல்ல கதை. நம்புகிறவனுக்கு மட்டும்தான் அது உண்மை என்பது கதையில் மையமாக ஓடுகிறது. முதலில் நம்பாமலிருந்தவன் பிறகு உளப்பூர்வமாக நம்பி மந்திரங்களை உச்சரித்துச் சடங்குகள் செய்யும்போது உண்மையாகவே தூவக்காளி வருகிறாள். அவள் இப்போது அவனுக்கு உண்மையாகிறாள்.

நம்பாமல் கேலி பேசுவோர் தண்டனை அடைகின்றனர். ஏனெனில் அப்போதுதான் சாமிகளை நம்புவோர் நம்பிக்கொண்டே இருப்பார்கள். இதைத்தான் “நமக்கு எப்படி சாமிகள் வேணுமோ அதுபோல சாமிகளுக்கு நம்மையும் வேணும் என்னும் வரி காட்டுகிறது. அதனால்தான் தொன்மங்களில் கடவுள்கள்தோன்றி பக்தர்களுக்கு வரங்கள் கொடுக்கிறார்கள்.

மற்றொரு சிந்தனையைத் தூண்டும் வரி: ” நெறியும் முறையும் இருந்தால் சாமி சாமியாக இருக்கும். சில நெறிகள் மீறப்படும்போது, ஒழுக்கக்குறைபாடுகள் நடக்கும்போது சாமி சாமியாக இல்லாமல் கொடுந்தண்டனைகள் கொடுப்பதை புராணங்களில் பார்க்கிறோம். இப்போது சுனாமியாகவும், கொரானாகவும் பார்க்கிறோம். ஆனால் ஒரு சிலரின் நடத்தைகளால் எல்லாருமே அவதிப்படுகிறார்கள். அவர்களின் நடத்தைகளை அமைப்புகளும் அரசுமே கட்டுப்படுத்த வேண்டும்.

சுபத்ராவின் கணவனும், மூதம்மையும், மற்றொரு பெண்ணும் புரியும் நெறிமீறல்களே கரு கலைதல்கள்.புல்லுக்கும் கடவுளுக்கும் நல்ல ஒப்புமை. அதனால்தான் மங்கலமோ அல்லது அமங்கலமோ தருப்பைபுல் சடங்குகளில் முக்கிய இடம் பெறுகிறதோ?

கடவுள் அருள் என எண்ணாமல் தனக்குக் கிடைத்தது தனக்கே என எண்ணும் மேட்டுக்குடி மனப்பான்மை உள்ளதால் தருப்பைப்புல் குழவியையும் சுபத்ரா அப்படியே நினைக்கிறாள். ஒருவேளை அவள் கணவன் எண்ணுவதன் தாக்கமோ? “நான் அப்படி நெனச்சது பெரும்பிழைதான் எனக்க ராஜான்னு” என அவள் கூறுவதை இப்படி ஊகிக்கலாமா?

இறுதியில் தூவக்காளி அசைவற்றுக் கிடந்தாள் என்பதால் அவள் அமைதி கொண்டு விட்டாள் இனி சுபத்ராவின் கருவிற்குத் தொல்லையில்லை என்றும். வெண்ணிற நுரைபோன்ற புல் தூவல்கள் என்பது தூவக்காளி புரியும் அருள் எனவும் நினக்கத் தோன்றுகிறது.

 

வளவ. துரையன்

 

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

 

மலைவிளிம்பில்,அமுதம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஏதோ ஒரு வரியில் உணர்வெழுச்சி உச்சமடைய படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வீசிவிட்டு எழுந்துபோனது அரிதாக நிகழ்ந்திருக்கிறது. அமுதம் படித்தபோது ‘உடலெங்கும் தீ எழுந்து சதை உருகும்போதுகூட குரலெழுப்பி ஒரு சொல் சாபமிடாமல் நின்றது’ என்ற வரியைக் கடக்க இயலாது கைப்பேசியை வீசிவிட்டு விம்மலுடன் வீட்டினுள் சுற்றி நிலை மீண்டேன். காலைதான் பொறையுடைமை அதிகாரத்தின் வாசிப்பை நிறைவு செய்திருந்தேன். 50 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் வழங்கப்பட்ட அமெரிக்க பால் பவுடர் பால், வெண்மைப் புரட்சி, மதிய உணவு, ஏசுவின் இறுதிச் சொற்கள் என எங்கெங்கொ அலைந்து கொண்டிருக்கிறது மனம். மேலும் அலையும். ஆனால், ‘அமிர்தலட்சுமி காய்ந்து நின்ற இஞ்சிப்புல் மேட்டில் புகையும் செஞ்சுடருமாக சூழ்ந்த தீயில் உடலெங்கும் தீ எழுந்து சதை உருகும்போதுகூட குரலெழுப்பி ஒரு சொல் சாபமிடாமல் நின்ற’ காட்சி நெஞ்சை விட்டு அகலாது.

 

பா ராஜேந்திரன்.

அன்புள்ள ஜெ

உலுக்கும் கதைகளில் ஒன்று அமுதம். இப்படி ஒரு தொன்மம் உண்மையில் இல்லை, நீங்களே உருவாக்கியது என்றால் இது ஒரு மகத்தான கற்பனையேதான். இதன் அர்த்தங்கள் விரிந்துகொண்டே செல்கின்றன. பெண்மை,தாய்மை என்பதைப்பற்றிய நம்முடைய சித்திரங்கள் எப்படி சிக்கலாக உள்ளன என்று காட்டும் கதை இது. ஒரு அசலான பெண்ணியப்பார்வையை முன்வைப்பது. ஆனால் ஏற்கனவே வெண்முரசு முதல் பல நாவல்களிலும் கதைகளிலும் வந்தது. கருத்தியல்ரீதியாக நீங்கள் அதிகம் பேசாதது

மைந்தராக நின்று அம்மச்சிப்பசுவை ஏற்கிறார்கள். தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆணாக நின்று அதை அடக்கி ஜெயிக்கவும் முடியாவிட்டால் அழிக்கவும் நினைக்கிறார்கள். இந்த மூன்றுபட்டை உறவுதான் இந்திய ஆண் கொண்டிருக்கும் சிக்கல். என் அம்மா என்று உருகுபவன் மனைவியை அடித்து ஒடுக்கவும் தயங்குவதில்லை. துர்க்கையை வழிபடவும் செய்கிறான். இந்தக்கதை அந்த மூன்றுதள உறவு சிக்கலாக கலந்திருப்பதையும் எது எப்போது எழுகிறது என்பதையும் அருமையாக காட்டுகிறது

ராஜசேகர்.

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

சுருக்கமான செறிவான ஒரு கதையாக இருந்தது மலைவிளிம்பில். அந்தத் தலைப்பே குறிப்பானது. பேலன்ஸ் செய்து நிற்கவேண்டிய இடம். மலைவிளிம்பில் இருப்பவன் கதைசொல்லிதான்

வாழ்க்கை என்பதே முடிவெடுப்பதன் சிக்கல்களால் ஆனது என்பது இருத்தலியல் கோட்பாடு. நம்மால் எதையும் அறுதியாக முடிவெடுக்க முடியாது. படிப்பு கல்யாணம் உட்பட எல்லாத்திலும் நான் எப்படி முடிவெடுத்திருக்கிறேன் என்று பார்த்தேன். பெரும்பாலும் நாணயம் சுண்டிப்போடுவது போல குத்துமதிப்பாகவே முடிவெடுத்திருக்கிறேன். ‘தெளிவாக’ யோசித்து முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லலாம். ஆனால் எதிர்காலத்தை முழுசாக உணர்ந்து எவரால் முடிவெடுக்க முடியும்? அதெல்லாம் எங்கோ அறியாத இடத்தில் அல்லவா இருக்கிறது?நம்பி முடிவெடுக்கவேண்டியதுதான்.

முடிவெடுப்பதன் அந்த ஒரு தருணத்தை மட்டும் freeze பண்ணியிருக்கிறது கதை. அதற்கு முன்னும் பின்னும் இருக்கும் முடிவில்லா வாய்ப்புகளைச் சொல்லியிருக்கிறது. அந்த தருணம் எப்படி ஒரு பல்லாயிரம் டன் எடைகொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது என்று காட்டுகிறது

எஸ்.ராகவேந்திரன்

 

அன்புள்ள ஜெ

இந்தக்கதையின் மையப்புள்ளி ஒன்றுதான், கதைசொல்லி கொலைசெய்யக்கூடாது என்று Moral Conviction அடிப்படையில் முடிவெடுத்திருந்தால் அவன் விடுதலை அடைந்துவிட்டான். அவனுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த முடிவை எடுக்காமல் கோழைத்தனத்தாலோ குழம்பிப்போயோ முடிவைக் கைவிட்டால் அவனுக்கு வாழ்க்கையே இல்லை.

இந்தப்புள்ளிதான் கதையின் சிக்கலே. அந்தப்புள்ளியில் எது morality என்று அவன் முடிவெடுத்தாக வேண்டும். முடிவெடுக்கவில்லை என்றால் அவனால் அங்கே தீர்மானமாக எதையும் செய்யமுடியாது. தீர்மானமாக எதுவும் அங்கே செய்யவில்லை என்றால் அவன் பின்பு தன்னைப்பற்றி ஒரு வரையறையை உருவாக்கிக்கொண்டு அதிஅற்குள் சிக்கிக்கொள்வான். பிரச்சினை எது சரி எது தப்பு என்று முடிவெடுப்பது இல்லை. நான் யார் என் இயல்பு என்ன என்று முடிவெடுப்பதுதான்

சாரங்கன்

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்


திராவிட மனு- இரு எதிர்வினைகள்

$
0
0

 

ராஜன் குறை என்பவர் யார்?

‘திராவிட மனு’

தலித் மக்களை ஒட்டுமொத்தமாக முத்திரைகுத்தி பொதுநீரோட்டத்தில் இருந்து அகற்றும் ஒட்டுமொத்தமான அறிவுச்சதித்திட்டத்தின் ஒருபகுதியாக ராஜன்குறை,ஜெயரஞ்சன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கூட்டணியால் உருவாக்கப்பட்ட நாஸி ஆவணமான கட்டுரைகுறித்த இரு எதிர்வினைகள் இவை

ஜெ

பேராசிரியர் டி.தர்மராஜ்

  1. அதுவொரு அருவருப்பானகட்டுரை.இதைப் போல நிறைய எழுதுகிற கூடாரம் அது.
  2. எம்.எஸ். எஸ். பாண்டியன் தொடங்கி இன்னும் நிறைய பேர் இப்படி எழுதியவர்களே!
  3. வாழ்நாளெல்லாம் சாதியம் பேசிய மறைமலை அடிகள் prominent Saivaite Intellectual ஆகும் பொழுது தமிழன் என்று பேசிய அயோத்திதாசர் எப்படி untouchable parayar intellectual என்று நான் பாண்டியனிடம் கேட்டதைத் தான் ‘முட்டாள்தனமான கேள்வி’ என்று நகையாடியக் கூட்டம் இது.
  4. ஆங்கிலத்தில் சமூக அறிவியல் எழுதுவது ஒரு பெரிய மாஃபியா போலச் செயல்படக்கூடியது. பெரும் பணமும், புகழும், வசதி வாய்ப்புகளும் புழங்கக்கூடியது. வெகுகாலம் இந்த ஏரியாவை மேற்சொன்ன ‘திராவிட அறிஞர்களே’ கைப்பற்றியிருந்தனர்.
  5. தமிழில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் திராவிடக் கூட்டத்திற்கு இதுவெல்லாம் தெரியாது என்பதால், இந்தக் குழுவை அண்ணாந்து பார்த்து வியக்க மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள்.
  6. ஆண் பெண் உறவு குறித்து எத்தனை தட்டையாக ஆங்கிலத்தில் யோசிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதற்கு இதுவொரு உதாரணம், அவ்வளவே!
  7. இது போன்ற அதிரடியான (தலித்துகளையும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் இணைத்த யோசனை போன்ற) கருத்துக்களை வெளியிட்டால் மட்டுமே ஆங்கில சமூக அறிவியல் ஆச்சரியமாகப் பார்க்கும் என்ற ஆசையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
  8. இந்தியா வினோதங்களின் தேசம் என்ற கற்பனையை இன்னமும் உயிரோடு வைத்திருப்பதற்கு இத்தகைய ‘தலித் ஆதரவுக் கட்டுரைகள்’ (இப்படித்தான் இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது) தான் தற்கால உதாரணம்.
  9. திராவிட இயக்கம் சித்தாந்தங்களின் இயக்கம், தலித் இயக்கங்கள் விடலை இளைஞர்களின் தாந்தோன்றி இயக்கம் என்று சொல்வதில் ஒரு கிளுகிளுப்பு இருக்கிறதே அது தான் இது போன்ற கட்டுரைகளின் நோக்கம்.

[முகநூல் பதிவு]

போகன் சங்கர்

ராஜன் குறையின் அந்த புகழ்பெறும் கட்டுரையை வாசித்தேன்.சுமார் பதினொரு பக்கக் கட்டுரை.நான் படித்த வரையில் எம் எஸ் எஸ் பாண்டியனின் பெயர் அதில் இல்லை.2002இல் எழுதியிருக்கிறார்.உடன் ஆனந்தி,ஜெய ரஞ்சன் என்ற இருவர்.

கட்டுரை செங்கல்பட்டு பக்கம் உள்ள திருன்னூர் என்ற கிராமத்தில் செய்த ஆய்வு பற்றிப் பேசுகிறது.கிராமத்தில் மேல் சாதிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் முதலியார்கள். இன்னொரு பக்கம் தலித்துக்கள்.பெரும்பாலும் பறையர்கள்.கட்டுரை இரு பிரிவினருக்கும் மாறி வருகின்ற உறவுமுறைகளைப் பற்றிப் பேசுகிறது.விவசாயம் முக்கியமாக இருந்தபோது முதலியார்கள் தலித்களை ஆள்வது எளிதாக இருந்தது.அவர்கள் செய்த கொடுமைகளை தலித்துகள் பொறுத்துக்கொண்டார்கள்.ஆனால் நகர மயமாக்கமும் தொழில் மயமாக்கமும் நிகழும்போது விவசாயம் விழும்போது முதலியார்களின் கை தளர்கிறது.

தலித் வாலிபர்கள் விவசாய வேலைக்குப் போக மறுக்கிறார்கள்.அதே சமயம் தொழிற்சாலைகளின் ஒழுங்குக்கும் அவர்களால் கட்டுப்படமுடியவில்லை.ஒரே வேலையில் அவர்களால் நிலையாக இருக்கமுடியவில்லை.பல நேரங்களில் குற்றச் செயல்களுக்கு எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள்.தலித் ஆண்களுக்கு வன்முறை தான் சரியான வாழ்க்கைமுறை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.அவர்கள் விவசாய வேலைகளுக்குப் போவதில்லை.பெற்றோர்களையும் போகவிடுவதில்லை.அதே சமயம் அவர்களும் சரியாக வேலைகளுக்குப் போவதில்லை.

அவர்கள் நன்றாக ஆடை உடுத்துக்கொண்டு முதலியார்களின் தெருக்களில் வேண்டுமென்றே திரிகிறார்கள்.அவர்கள் பெண்களை கேலி செய்கிறார்கள். பேருந்துகளில் வேன்களில் வேலைக்குப் போகும் ஏழை முதலியார்ப் பெண்கள் ஆடைகளைப் பிடித்து இழுக்கிறார்கள்.ஒரு முதலியார்ப் பெண்ணைக் கவர்வது பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.அதே நேரம் அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அடிக்கத் தயங்குவதில்லை.நிறைய தலித் வாலிபர்கள் குடி போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதே நேரம் உடலைப் பேண வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.

முதலியார்ப் பையன்கள் மங்காத்தா விளையாடி சோனியாகிக் கொண்டிருக்க வாலிபால் போன்ற கடும் விளையாட்டுகளில் ஈடுபட்டு கட்டாக உடலை வைத்திருக்கிறார்கள்.அதே நேரம் அதற்கான செலவுகளை அவர்கள் வீட்டுப் பெண்கள் தான் பாக்டரிகளுக்குப் போய்ச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பொதுவாகவே இந்த தலித் இளைஞர்கள் குறித்த அச்சம் மேல் சாதியினரிடம் மட்டுமில்லாமல் அவர்கள் குடும்பப் பெண்கள் மூத்தவர்களிடம் கூட இருக்கிறது.

இதுதான் கட்டுரையின் சுருக்கம்.பல இடங்களில் இது ஒரு பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கையோ என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும்.

[முகநூல் பதிவு]

கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]

$
0
0

டில்லி திரும்பிவந்தபோது அவன் காலடியோசை கேட்டு நைனா “ஒரேய்” என்று கூப்பிட்டார். “டில்லியாடா, டேய் டில்லியாடா? டேய், டில்லிதானே?”

“ஆமா நைனா” என்று அவன் சொன்னான்.

“கறிவாங்கினு வந்தியாடா?”

“இல்ல.”

“ஏன்டா?” என்றார். “கறி இல்லாம இங்க வந்து என்ன புளுத்தப்போறே?” அவருக்கு இருமல் வந்தது. தகரத்தில் தட்டுவதுபோன்ற ஓசை அது.

“துட்டு வாணாமா? எவன்கிட்ட இருக்கு துட்டு? நானே நாஷ்டா துண்ணாம வந்திருக்கேன்…”

“நீ எங்கியோ சாவு… போ. அந்தா உக்காந்திட்டிருக்கே. அதுக்கு என்ன சொல்லப்போறே? டேய், அதுக நம்மள நம்பி இருக்கிற சீவண்டா.”

“அதுக்கு நான் என்ன பண்ணணுமுன்னு சொல்றே?”

“என்ன பண்ணணுமா? என்னைய கொல்லுடா.. என்னைய கொன்னு சதையை வெட்டு அதுகளுக்கு போடு.”

டில்லிபாபு சட்டையை கழற்றி ஆணியில் மாட்டியபின் பெருமூச்சுடன் ஒட்டுத்திண்ணையில் அமர்ந்தான். நைனா இருமிக்கொண்டே இருந்தார். அவன் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான்.

“டேய், மெய்யாலுமே அதைத்தான்டா நினைச்சுக்கினு இருக்கேன். என்னைய வெட்டிப்போட்டா நான் நிறைவா செத்திருவேண்டா. இனி நான் செய்றதுக்கு அது ஒண்ணுதாண்டா மிச்சமிருக்கு”

அவர் இருமி ஓய்ந்தார். மல்லாந்து படுத்து மூச்சிளைப்புடன் முனகிக்கொண்டிருந்தார். அவன் குடிசைக்கு உள்ளே போய் பார்த்தான். இருட்டில் குறுக்காக வைக்கப்பட்ட மூங்கில் மேல் இரு கழுகுகளும் தலையில் மாட்டப்பட்ட தோல்தொப்பிகளுடன் அமர்ந்திருந்தன. அவற்றுக்கு அப்போது இரவு.

அவனுடைய காலடியோசையையும் மணத்தையும் அவற்றால் உணரமுடியும். ஆல்ஃபா கால்மாற்றி வைத்து சிறகைச் சரித்து மீண்டும் அடுக்கியது. பீட்டா தலையை உடலுக்குள் வளைத்து அழுக்கான துணிப்பொட்டலம் போல அமர்ந்திருந்தது. அவை ஓசையிடுவது குறைவு. கழுகுகள் அமைதியான பொறுமையான பறவைகள்.

அவன் கீழே அமர்ந்து மண்ணெண்ணை ஸ்டவ்வை எடுத்து காற்றடித்தான். அலுமினியப் பாத்திரத்தை அதன்மேல் வைத்து இரண்டு கோப்பை நீரை ஊற்றினான். டீத்தூள் கொஞ்சம் இருந்தது. சர்க்கரை இல்லை.

நைனா முனகிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு மூச்சிரைப்பிலும் அவர் உடல் ஏறி இறங்கியது. அவன் ராயப்பேட்டை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுபோனபோது வயதான டாக்டர் நேரடியாகவே சொல்லிவிட்டார். “இனிமே மீண்டு எந்திரிப்பார்னு நினைக்கவேண்டாம். இங்க படுக்க எடமில்லை. திண்ணையிலே பிச்சைக்காரங்க நடுவிலே போட்டிருக்கிறதுக்கு வீட்டிலேயே வச்சுக்கிடலாம்.”

வீடு என்பது கூவத்தின் சேற்றுச் சரிவிலிருக்கும் குடிசைதான். பழைய லாரி டார்ப்பாயால் கூரையிடப்பட்டு வினைல் தட்டிகளால் சுவர் அமைக்கப்பட்டது. படுப்பதற்கு ஒரு பிளைவுட் பலகையை கட்டிலாக ஆக்கியிருந்தான். ஆனாலும் அவன் அவரை கூட்டிவந்துவிட்டான்.

டீத்தூளை கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டியபின் ஒரு டம்ளர் டீயை மட்டும் சீனிப்பாத்திரத்திற்குள் விட்டு நன்றாக குலுக்கி மீண்டும் ஊற்றிக்கொண்டான். நைனாவை மெல்லத் தூக்கி சாய்வாக அமரவைத்து அவருக்கு ஊட்டினான். அவருடைய தொண்டை வரண்டிருக்கவேண்டும். நாக்கும் உதடுகளும் தவித்தன. குடித்து முடித்ததும் ஆசுவாசமாக பெருமூச்சுவிட்டார். உடலில் இருந்த நடுக்கமும் குறைந்தது.

“ஏண்டா, மெய்யாலுமே நம்ம உடம்போட இறைச்சிய போடமுடியாதா?”

“உனக்கென்ன பைத்தியமா? சும்மா கெட.”

“பார்ஸிகள்லாம் போடுறாங்கன்னு சொல்லுவாங்க…” என்றார். “அதுக்குன்னே கிணறை மாதிரி ஒண்ணு வச்சிருப்பாங்க. அதுக்கு அமைதிக்கிணறுன்னு பேரு.”

“ஆமா, அதெல்லாம் வேற…”

“நான் செத்துட்டா போட்டுடுரா.”

அவன் கீழே அமர்ந்து தன் டீயை எடுத்துக்கொண்டான்.

“மெய்யாலுமே சொல்றேன்… போட்டிடு.”

“சும்மாகெட, அதெல்லாம் பெரிய தப்பு.”

“என்ன தப்பு? என் உடம்போட அதுக ரெண்டையும் அப்டியே விட்டுட்டு ஒரு ரெண்டு நாள் வெலகி இரு… திரும்பி வந்தா என்னைய அதுக தின்னிருக்கும். மிஞ்சினதை வைச்சு வேண்டியதைச் செய்”

“சும்மா கெடப்பியா?”

“நான் செஞ்ச தப்புடா… முட்டையிலே இருந்து எடுத்து வளத்து. செறகைவெட்டி, நகத்தை வெட்டி, தீனிபோட்டு பழக்கி எரைபிடிக்கத் தெரியாம ஆக்கி… பட்சின்னா அது வானத்துக்கு சொந்தம். அதை இந்த அழுக்குச்சாக்கடை குடிசைக்குள்ள அடைச்சு வச்சிட்டேன்… பீடைங்க மாதிரி இந்தா உக்காந்திட்டிருக்கு”

அவர் திரும்பி தலைமாட்டில் அமர்ந்திருக்கும் கழுகுகளை பார்த்தார். முகத்தில் புன்னகை வந்தது.

“கௌபாயி சினிமாக்களிலே சாகப்போறவன் பக்கத்திலே உக்காந்திட்டிருக்கும்… என் தலைமேலே அறுபது எழுபது வருசமா கழுகு உக்காந்திட்டிருக்கு. எப்ப சாவான்னு மூணு தலைமுறையா எதிர்பார்த்திட்டிருக்கு… அதுகளை நான் ஏமாத்தக்கூடாது.”

“நைனா நீ கொஞ்சம் தூங்கு.”

“ஒரு வாய் ரம்மு கிடைக்குமாடா?” என்றார். “இல்லேன்னா எதாவது ஒண்ணு. எங்கியாம் எவனாம் கள்ளச்சாராயம் வித்தான்னா…”

“இப்ப நான் அதுக்கு பைசாவுக்கு எங்க போக? இந்தா இதுகளுக்கு கறிபோட்டு இன்னியோட எட்டு நாள் ஆகுது.”

“மறுபடியும் தெறந்து விட்டுப்பாரு.”

“ஒவ்வொருநாளும் காலையிலே தெறந்துதான் விடுறேன். சுத்திட்டு ஒருமணிநேரத்திலே திரும்பி வந்திரும். அதுகளுக்கு ஏரியா தெரியல்ல. பறக்கவும் தெம்பு இல்லை. என்னத்தை செய்ய?” என்று டில்லி சொன்னான். “திரும்பி வராம போயிராதான்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன். எங்கியாம் கண்காணாம விளுந்து செத்திடிச்சின்னாக்கூட நாம மனசை தேத்திக்கிடலாம்.”

“சும்மா இருடா, வாயாலேகூட அப்டி சொல்லாதே” என்றார் நைனா. “அதுக குளந்தைங்க… கோழிக்குஞ்சு மாதிரி என் கையிலே ஒக்காந்திட்டிருந்ததுங்க.”

“அதான் ஒண்ணுமே தெரியாம இருக்கு…”

“நீ சபரி சாரை போயிப் பாருடா” என்று நைனா சொன்னார் “அவருக்குத்தான் இதுங்க மேலே அந்தக்காலத்திலே அவ்ளவு ஆசை. அவரோட எல்லா படத்திலயும் ஒரு சீன்ல வந்திரும்.”

“அவருதான் இப்ப படமே எடுக்கிறதில்லியே.”

“அது அப்டித்தான், ஒவ்வொருத்தருக்கும் ஒரு சீசன்தான். பத்துப்பதினைஞ்சு வருசம், அவ்வளவுதான். அதுக்குமேலே என்ன?” என்றார் நைனா “ஆனா அந்தக்காலத்திலேயே நல்லா சம்பாரிச்சார். அவர் எடுத்த எல்லா படமும் கௌபாயி படத்தை பாத்து சுருட்டினதுதான்.”

டில்லி அவரை ஏற்கனவே இரண்டுமுறை போய்ப் பார்த்திருந்தான். அதன்பின் வீடுமாறி மகன்களுடன் போய்விட்டதாக சொன்னார்கள். அவருடைய பங்களாவை இடித்து அது இருந்த இடத்தில் அடுக்குமாடி கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருந்தார்கள். எட்டு மாதம் முன் அவன் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டான்.

ஆனால் அப்போது அந்த கட்டுமானத்தில் இருப்பவர்களுக்கு அவருடைய அட்ரஸ் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. அந்த எண்ணம் வந்ததுமே உடம்பு பரபரப்படைந்தது.

“நைனா, நான் வெளியே போய்ட்டு வந்திடறேன்” என்றன்.

“இதுங்களை திறந்து விட்டுட்டுப் போடா” என்றார் நைனா.

“திரும்பி வந்திடுது… உறை இல்லேன்னா தூங்கவும் தூங்காது”

“ஆமா, ஆனா இப்ப ரெண்டும் பசியிலே எரிஞ்சிட்டிருக்கும்… இப்ப வெளியே போனா எதுனா எலியோ தவளையோ புடிச்சு திங்கலாம்.. இல்ல கசாப்புக்கடை வேஸ்டுக்கு போனாலும் போவும்…” என்றார் நைனா “அந்த பொட்டை செத்தாலும் செத்திரும்டா.”

“என்ன சொல்றே?” என்றான்.

“அதுக நல்லா தின்னா காலிலேயே கொஞ்சம் கழியும்… அதுக உடம்புச்சூடு குறையுறதுக்காக. அந்த வாடை இருக்கும்.. இங்கபாரு எந்த வாடையும் இல்ல…” என்றார் நைனா. “அதுக வயித்துக்குள்ள தீ இருக்கு. அதான் செத்ததையும் அழுகினதையும் தின்னாலும் அதுகளுக்கு ஒண்ணும் ஆகிறதில்லை. வெளிய வாற எச்சம் சாம்பல் வாடை அடிக்கும் பாத்திருக்கியா? இப்ப அந்த தீ அதுகளுக்க குடலை எரிச்சிட்டிருக்கும்.”

டில்லி இரு கழுகுகளையும் பார்த்தான். அவை தலையில்லாதவை போல் இருந்தன. சுதந்திரமான கழுகுகள் வானில்பறப்பதை அவன் நினைத்துக் கொண்டான். அவை அவ்வப்போதுதான் சிறகசைக்கும். அவற்றை வானமே கையில் எடுத்துக்கொண்டது போலிருக்கும். வானம் ஒரு கண்ணாடிப்பரப்பாகவும் அவை அதில் சறுக்கிக் கொண்டிருப்பதாகவும் தோன்றும்.

அவன் முழங்கையில் தோலுறைகளை மாட்டிக்கொண்டு அருகே சென்று ஆல்ஃபாவை வெளியே எடுத்தான். அது அவன் முழங்கையில் எடையுடன் அமர்ந்திருந்தது. வெளியே கொண்டுசென்று தலையுறையை நீக்கி கையை வீசி அதை பறக்கவைத்தான். சிறகடித்து சென்று தரையில் அமர்ந்தது. கழுத்தை நீட்ட க்ரேய்க் என்று கீறலோசை எழுப்பியது.

அவன் உள்ளே சென்று பீட்டாவை வெளியே எடுத்துவந்தான். அதையும் தலையுறையை கழற்றிவிட்டு பறக்கவைத்தான். அதுவும் சிறகடித்துச் சென்று தரையில் அமர்ந்தது.

அப்பால் கூவம் கருப்பாக நுரைக்குமிழிகளுடன் ஓடிக்கொண்டிருந்தது. ஒருமாதம் முன்பு அதில் ஒரு செத்த மாடு வந்தது. அவன் அதை  கொக்கி போட்டு இழுத்து கரைச்சேற்றில் போட்டான். அதனருகே கழுகுகளை கொண்டுசென்று வைத்தான். அவற்றால் அதை கிழித்து உண்ண முடியவில்லை. கிளர்ச்சியடைந்து சுற்றிச்சுற்றி குதித்துக்கொண்டிருந்தன. ஆனால் கொத்தி இழுக்கவோ கிழிக்கவோ கற்றுக்கொண்டிருக்கவில்லை. அவற்றுக்கு சிறிய துண்டுகளாக நறுக்கிய மாட்டிறைச்சிதான் உணவு. எலிகளைக்க்கூட அவை உண்பதில்லை.

அவன் கைவீசி “இந்தா போ… போ… இந்தா” என்று அவற்றை துரத்தினான். அவை எழுந்து எழுந்து அமர்ந்தன. துடைப்பத்தை எடுத்து வீசி அவற்றை பறக்க வைத்தான். ஆஃல்பா எழுந்து பறந்தது. பீட்டாவும் க்ரேய்க் என்ற ஓசையுடன் எழுந்து உடன் சென்றது. அவை வானில் மறைவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

டில்லி எரவாணத்தில் ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டான். செருப்பு நன்றாக தேய்ந்து கிழிந்திருந்தது. எங்கு சென்றாலும் அதை கண்மறைவாகவே கழற்றிப் போடவேண்டியிருந்தது. அவன் சட்டைகூட ஆங்காங்கே தையல் விட்டு அழுக்காக இருந்தது. கழுகுகளின் சிறகுகள் அழுக்கானவை. குளுமைக்காக அவை தங்கள் சிறுநீரில் மண்ணைக் கலந்து சேறாக்கி பூசிக்கொள்ளும். அவன் நைனாவின் காக்கிச்சட்டை எப்போதுமே சேறாகத்தான் இருக்கும்.

டில்லி சாலைக்கு வந்தபோது வெயில் ஏறியிருந்தது. அவனுக்கு பசி மந்தித்து தலைசுழன்றது. எலெக்ட்ரிக் டிரெயின் வரை நடந்துதான் போகவேண்டும். டிரெயினில் அவன் டிக்கெட் எடுப்பதில்லை.

அவன் வெயிலில் சட்டையை பின்னுக்குத்தள்ளி கழுத்தை உள்ளே தாழ்த்தி சிறிய கூனலுடன் நடந்தான். வியர்வையில் அவன் உடலில் இருந்து ஆவி கிளம்பியது. அவன் நிழல் கழுகின் நிழல்போலிருந்தது. அதை சினிமாவில் எல்லாருமே சொல்வதுண்டு, அவனும் அவன் நைனாவும் அவருடைய நைனாவும் எல்லாருமே கழுகுகளைப் போலிருப்பதாக.

வல்ச்சர் பாபு என்றுதான் அவனை அழைப்பார்கள். அவன் நைனா வல்ச்சர் ராமுடு. அவருடைய நைனா வல்ச்சர் ராஜுதான் சினிமாவுக்கே கழுகை அறிமுகம் செய்தவர். அதற்கு முன்பெல்லாம் பொம்மைதான் செய்து வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர் பதினைந்து கழுகுகள் வைத்திருந்தார். நூற்றுக்குமேல் கழுகுப்பொம்மைகள். அவற்றுக்குள் ஸ்பிரிங் வைத்தும் கறுப்பு ஒயர் கட்டியும் சிறகடிக்கவும் எழுந்து அமரவும் செய்யமுடியும். கழுகுகளும் கழுகுப்பொம்மைகளுமாக ஒரு ஃப்ரேம் முழுக்கவே அவரால் நிறைத்துவிடமுடியும். மாட்டுக்குடல் நிறைத்த துணியாலான டம்மி பிணங்களை அவை கொத்தி இழுக்கையில் உண்மையாகவே போர்க்களத்தை கண்ணில் பார்க்கலாம்.

1943-ல் வெளிவந்த கருட கர்வபங்கம் என்ற படத்திற்காக அவர்தான் உண்மையான கழுகுகளை பயன்படுத்தினார். அதன் டைரக்டர் கண்டசாலா பாலராமையா அவரைப்பற்றி எல்லாரிடமும் சொல்ல திடீரென்று பிரபலமானார். மேலும் இருபது பருந்துகளை வளர்த்தார். சென்னையில் அடையாறு ஓரமாக வீடு கட்டிக்கொண்டார். ஏழு துணைநடிகைகளை மணந்தார். ஒருகாலத்தில் அவரிடம் பதிமூன்றுபேர் வேலை பார்த்தார்கள்.

நைனாவும் எண்பதுகள் வரை புகழுடன் இருந்தார். அதன்பின் புராணப்படங்களும் போர்ப்படங்களும் குறைந்தன. கழுகுகளை அவ்வப்போது பாட்டுக்கு பின்னணியாக அமரவைத்தார்கள். சம்பளம் என்று எதையாவது பேசி எதையாவது கொடுத்தார்கள். நைனா சரசரவென்று சரிந்துகொண்டே வந்தார். அவரால் அதை உணர முடியவில்லை. எல்லாமே விட்டுப்போனபோதுகூட இன்னொன்றைச் செய்யவும் தெரியவில்லை.

இப்போது கழுகுகளை வளர்ப்பது குற்றம். அவன் வீட்டில் கழுகுகள் இருப்பது தெரிந்தால் காட்டிலாகா நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே அவன் மூன்றுமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறான். நைனா ஒருமுறை ஜெயிலுக்கு போயிருக்கிறார்.

அவன் மின்சார ரயிலில் ஒரு மூலையில் குந்தி அமர்ந்துகொண்டான். வீட்டில் எங்காவது பீடி இருந்திருக்கும், தேடி ஒன்றை கையில் எடுத்துக் கொண்டிருக்கலாம். அவன் நாவும் வாயும் பீடிக்காகத் தவித்தன. உடம்பெங்கும் பதற்றமாக இருந்தது. வாய் திறந்து கொட்டாவி விட்டுக்கொண்டே இருந்தான்.

எக்மூரில் இறங்கிக்கொண்டான். வெளியே வந்து சேத்துப்பட்டு வரை நடந்தான். வெயில் இப்போது மேலும் ஏறியிருந்தது. அவன் நிழல் காலடியில் குறுகி கறைபோல கிடந்தது. அவ்வப்போது நின்று நடந்தான். தண்ணீர் குடிக்கவேண்டும். எங்காவது தண்ணீர் வைத்திருக்கிறார்களா என்று பார்த்தான். ஒரு டீக்கடையில் சில்வர் டிரம்மில் தண்ணீர் இருந்தது. நீரில் குளோரின் நாறியது. சில்வர் கோப்பையில் சங்கிலி தொங்கியது. இரண்டு கோப்பை குடித்ததும் மீண்டும் கொஞ்சம் திடம் வந்தது.

அவன் சபரிகிரீசனின் வீடிருந்த இடத்தை அடைந்தான். அப்பார்ட்மெண்ட் முக்கால்வாசி எழுந்திருந்தது. அன்று வேலையேதும் நடக்கவில்லை. ஒரு வயதான வாட்ச்மேன் மெலிந்த உடலில் தொளதொளப்பான காக்கி சீருடையுடன் மடியில் கழியை வைத்துக்கொண்டு ஸ்டூலில் அமர்ந்திருந்தார். அவன் அருகே சென்று சலாம் வைத்தான்.

அவர் கண்களைச் சுருக்கி பார்த்தார். கிழவர் எதோ கிராமத்திலிருந்து வந்திருக்கலாம். கண்களில் நட்பு இருந்தது. அவன் புன்னகைத்தான்.

கிழவர் “சாப்புடலையோ?” என்றார்

“ஆமா.”

“அந்தாலே அந்த டீக்கடையிலே போயி டீயும் பொறையும் சாப்பிடு… என்னைய காட்டு.”

அவன் டீக்கடையில் சென்று டீயும் பொறையும் கேட்டான்.“அவரு கணக்கிலே” என்று வாட்ச்மேனை சுட்டிக்காட்டினான்.

டீக்கடைக்காரர் பார்க்க வாட்ச்மேன் கையை அசைத்தார். அவன் இரண்டு பொறை எடுத்துக்கொண்டான். இரண்டு இரண்டாகக் கிழித்து நான்கே வாயில் விழுங்கினான். டீயை சூடாக குடித்தான்.

டீ சாப்பிட்டுவிட்டு வந்தபோது மிகமிக தெம்பாக உணர்ந்தான். அவன் மீண்டும் அருகே வந்தபோது வாட்ச்மேன் ஒரு பீடியை நீட்டினார். தானும் ஒன்று பற்றவைத்துக்கொண்டார்.

“நம்ம பேரு டில்லிபாபு… சினிமாத்தொழில். இப்ப சினிமா இல்லை” என்று டில்லி சொன்னான். “கஷ்டதசைதான்… இங்க எங்க டைரக்டர் ஒருத்தரோட வீடு இருந்திச்சு.”

“இங்கயா?” என்றார்.

“ஆமா.”

“இந்த வீடு டாக்டருக்கு சொந்தமாக்குமே.”

“என்ன டாக்டர்?” என்றான் டில்லி.

‘கண்ணுடாக்டர்… அவரு கோட்டூர்புரத்திலே இருக்காரு…சாய்பாபா கோயிலாண்டை.”

“டாக்டருக்கு என்ன வயசு?”

“நாப்பது இருக்கும்…”

“அப்ப அவரு மகன்… நான் சொல்லுறது அவரோட நைனாவை…பழைய டைரக்டர்.”

“அது நமக்கு தெரியாதே தம்பி.”

“அவராத்தான் இருக்கணும்… நான் போய் பாக்கிறேன்” என்றான் டில்லி “நமக்கு எந்த ஊரு?”

“அது கெடக்கு மருதப்பக்கம். இங்கிட்டு வந்து ஏளெட்டு வருசமாச்சு. திரும்பி போகவே இல்லை.”

“ஏன்?”

“காஞ்சுப்போச்சுல்லா? அங்க என்ன இருக்கு?” என்றார் “அப்பன் பாட்டன் இருந்த ஊரு. அதைச் சொன்னா முடியுமா? கூழு ஊத்திக்கிடணும்ல?”

“புள்ளைங்க?”

“அவனுகளும் இங்கதான், மெட்ராஸிலே எங்கிட்டோ. நாம எங்கியும் போறதில்லை. இங்கியேதான் ராப்பகலா… இங்கேருந்தே கட்டை போயிரும்.”

“நாங்கள்லாம் கொல்லவார். ராஜ்முந்திரிப்பக்கம். ஆனா இங்க மூணுதலைமுறை முன்னாடியே வந்திட்டோம்” என்றான் டில்லிபாபு.

“நாங்க மறவர். எம்பேரு ஒச்சன்” என்று அவர் பீடியை பற்றவைத்தார். “இப்ப கஞ்சி சோறுக்கு பிரச்சினை இல்லை. ஆனா நாம இருந்த இருப்புக்கு ஒருத்தன் நம்மளை கையை சொடக்கு போட்டு கூப்பிடுறான். சரி, எல்லாம் அததுக்க கணக்கு… என்ன?”

“ஆமா… அதெல்லாம் நம்ம கையிலே இல்லை.”

அவர்கள் அமைதியாக பீடியை இழுத்தனர். டில்லி கன்னம் குழிய ஆழமாக இழுத்து விட்டான். அவர் கண்களைச் சுருக்கி சாலையை பார்த்தபடி பீடியை இழுத்தார்.

“வரேன்” என்று அவன் கிளம்பினான்.

“டீக்காசு இல்லேங்குறே… கோட்டூர் புரத்துக்கு எப்டி போவே?”

அவன் புன்னகைத்தான்.

“இந்தா இருபது ரூபா வச்சுக்கொ… இம்புட்டுதான் இருக்கு.”

அவன் கும்பிட்டு வாங்கிக்கொண்டான். “தேங்க்ஸ்” என்றான்.

“உங்கிட்ட ஒரு கொச்சை வாடை அடிக்கு… நீ என்ன பண்ணி வளக்கிறியா?”

“இல்லீங்க கழுகு.”

‘என்னது?” என்று வாய் திறந்திருக்க, கையில் பீடி புகைய திகைத்துப்போய் கேட்டார்.

“கழுகு… சினிமாவுக்கு கழுகு வாடகைக்கு உடுறது. இப்ப சான்ஸ் இல்லீங்க”

“அது உன் பேச்சை கேக்குமா?”

“ஆமா.”

“சிறகுவெட்டி வச்சிருப்பியோ?”

“ஆமாங்க. முன்னெல்லாம் சிறகுவெட்டி நகமும் வெட்டிருவோம். இப்ப எல்லாம் இருக்கு.”

“அதுகளை பத்திவிட்டுர வேண்டியதுதானே? தீனிபோட்டு கட்டுமா?”

“ஆமா, ஆனா அதுக கெளம்பணுமே” என்றான். “தொரத்தித் தொரத்தி விடுறேன். போறதில்லை.”

“நீ எங்கிட்டாவது போகவேண்டியதுதானே?”

“நைனா இருக்காரு. விட்டுட்டுப் போகமுடியாது. அதோட அதெல்லாம் வானத்திலே இருக்கிற உசிருங்க. நாம எங்கபோனாலும் வந்திரும்.”

அவர் “பாரு கதையை!” என்று வியந்தார்.

ஒருவர் பைக்கில் வந்து காலூன்றி நின்று “என்ன ஒச்சா, என்ன, இவரு யாரு?” என்றார்.

“டாக்டருக்க நைனாவை தேடி வந்திருக்காரு.”

“யாரு?” என்றார்.

“சினிமா டைரக்டரு?” என்றான் டில்லி.

“சபரிநாதனா அவரு பேரு?”

“ஆமா” என்றான்.

“அவரு ரெண்டுமாசம் முன்னாடியே போய்ட்டாரே.”

“எங்க?”

அவர் சிரித்து “எங்கன்னு யாருக்கு தெரியும்? ஹார்ட்டு அட்டாக்கு. வயசும் எம்பதாச்சுபோல…”

டில்லி பெருமூச்சு விட்டான்.

ஒச்சன் “என்ன செய்ய? நாம ஒண்ணு நினைக்கோம்” என்றார்

“வரேன்யா” என்றான் டில்லி. திரும்பி நடந்தபோது கோட்டூர்புரம் வரை போகவேண்டாமே என்ற ஆறுதலைத்தான் உணர்ந்தான். வெயிலில் நடந்துகொண்டிருந்தான். வழக்கம்போல ஸ்டுடியோக்களுக்கு போகலாம், அங்கேதான் தெரிந்த யாராவது இருப்பார்கள்.

அவனருகே வேன் நிற்கும் ஓசையை அவன் பொருட்படுத்தவில்லை. சட்டென்று பிடரியில் அடி விழுந்தது. “டேய், ஏறுடா வண்டியிலே ஏறுடா” என்று போலீஸ்காரர் அதட்டினார்.

“சார், சார்” என்று அவன் கையை ஏந்தி கெஞ்சினான். “சினிமாவிலே வேலைபாக்குறேன் சார்… சார்… நைனா உடம்புசரியில்லாம கெடக்கு சார்.”

“ஏறுடா.. வண்டியிலே ஏறு… ரோட்ல டிராமா போடாதே.. ஏறு.”

அவனை கழுத்தை உந்தி வேனில் ஏற்ற முயன்றார்கள். அவன் “சார், என்னா சார் இது?” என்று கொஞ்சம் கோபமாகச்சொன்னான். “நான் வேலைபாக்குறவன் சார்.”

போலீஸ்காரர் படார் படாரென்று அவனை அறைந்தார். அவன் அடி முகத்தில் படாமலிருக்க கையை வைத்து தடுத்தான்.

“படவா, பேசாம இரு… அடிச்சு பல்லை பேத்திருவேன்” என்றார் போலீஸ்காரர்.

“நான் வேலையா போறேன்சார்… நைனா சாககிடக்கார் சார்”.

“டேய் பொத்திட்டிருடா… ” என்று மீண்டும் அறைந்து உள்ளே பிடித்து தள்ளி கதவைச் சாத்தி தானும் ஏறிக்கொண்டார்.

அவன் அழத்தொடங்கினான். அருகே இருந்த ஒரு தாடிக்காரன் அவன் தோளில் தொட்டான். அவன் திரும்பி பார்த்ததும் அவன் வேண்டாம் என்று தலையசைத்தான். அந்த வேனில் ஏற்கனவே எட்டுபேர் இருந்தார்கள்.

அவன் உடலில் அடிபட்ட இடங்கள் வலிக்கத் தொடங்கின. அவன் விசும்பி அழுதுகொண்டே இருந்தான்.

“டேய் என்னடா சத்தம்?” என்றார் போலீஸ்காரர்.

அவன் கண்களை மூடிக்கொண்டான். உடம்பை குறுக்கி தலையை தாழ்த்தி அமர்ந்தான்.

ஜீப் சென்று நின்ற இடம் போலீஸ் ஸ்டேஷன் என்று தோன்றியது. ஆனால் அது நீதிமன்றம் என்று இறங்கிய போதுதான் தெரிந்தது. அவர்களை உந்தி இறக்கி மிகப்பெரிய சிவப்புக் கட்டிடத்தின் திண்ணையோரமாக நிறுத்தினார்கள். அங்கே ஏற்கனவே ஐந்துபேர் நின்றிருந்தார்கள். சுற்றி போலீஸ்காரர்கள் நாலைந்துபேர் நின்றனர். ஒருவர் காக்கி கால்சட்டையும் வெள்ளைச் சட்டையும் அணிந்து திண்ணையில் பெரிய செங்கல் தூணில் சாய்ந்து அமர்ந்து மடியில் பேட் வைத்து தாளில் எழுதிக்கொண்டிருந்தார்.

எஸ்.ஐ இறங்கி சிகரெட் பற்றவைத்துக்கொண்டார். போலீஸ்காரர் அவர்களிடம் “டேய் அழுகை டிராமாவெல்லாம் வேண்டாம். பேசாம சொன்னதை செய்யணும்… இல்லே பிறகு அவ்ளவுதான்” என்றார்.

டில்லி கைகூப்பி விசும்பியபடி “சார், பெரியமனசு பண்ணுங்க சார். சினிமாவிலே வேலை செய்றவன் சார்” என்றான்.

“வக்காளி, இவன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டானாடா?” என்றார் எஸ்.ஐ.

போலீஸ்காரர் “வாயை மூடுடா” என்று கூவியபடி அவனை லத்தியால் முழங்காலில் மாறிமாறி அறைந்தார். அவன் கையை தலைக்குமேல் கூப்பியபடி தரையில் அமர்ந்தான். அவன் தோளிலும் கைகளிலும் அடிகள் விழுந்தன. பூட்ஸ்காலால் ஓங்கி மிதித்து கீழே தள்ளினார்.

அவன் ”சார், சார், சார்” என்று சொல்லிக்கொண்டே அழுதான்.

“வாய தெறந்தா தாயளி இங்கேயே போட்டுத்தள்ளீருவேன்” என்றார் போலீஸ்காரர்.

அவன் வெறுந்தரையில் ஒருக்களித்து கிடந்தான். “எந்திச்சு உக்காருடா” என்றார் எஸ்.ஐ.

அவன் எழுந்து குந்தி அமர்ந்தான். மேலே எழுதிக்கொண்டிருந்தவர் ஒருவனிடம் “டேய் இதிலே கைநாட்டு வைடா” என்றார். ஒரு லுங்கிகட்டிய பரட்டைத்தலை ஆள் மையில் கட்டைவிரலை உருட்டி அந்தத் தாளில் ஒற்றினான்.

அவனை ஏற்கனவே தொட்டவன் குனிந்து கைநீட்டி “எந்திரிச்சு நில்லு… பேசாதே” என்றான்.

டில்லி அவன் கையை தொடாமலேயே எழுந்து நின்றான்.

“அடிப்பானுக… ஒண்ணையுமே காதிலே வாங்கிக்கிட மாட்டானுக” என்றான். “நியூசென்ஸ் கேசுதான் போடுவானுக… ஆயிரம்ரூபா ஃபைன் இல்லாட்டி ஜெயிலு… மூணுநாள் ஜெயிலுன்னாக்கூட ஒருநாளிலே விட்டிருவானுக… நாளைக்கேகூட கெளம்பி போயிட்டே இருக்கலாம்… சும்மா அனத்தாதே.”

அவன் “என் நைனா…” என்றான்.

“ஒருநாளுதானே. ஜெயிலிலே கெஞ்சினா டேட் போட்டுட்டு விட்டிருவானுக” என்றான்.

சுதைபெயர்ந்த பெரிய தூணில் சாய்ந்து நின்று டில்லி ஓசையின்றி கண்ணீர்விட்டான்.

மூன்றுநாட்கள் டில்லி சிறையில் இருக்கவேண்டியிருந்தது. நீதிபதியிடம் அவன் ஒரு வார்த்தைகூட சொல்ல வாய்ப்பிருக்கவில்லை. தோளைப்பிடித்து உந்தி உந்தி எங்கோ கொண்டுபோய் எங்கோ நிற்கவைத்து எங்கெங்கோ கைநாட்டு வைக்கச் செய்து வேனில் ஏற்றி ஓட்டலில் பிரியாணிப் பொட்டலம் வாங்கித்தந்து தின்னவைத்து சாயங்காலமே ஜெயிலுக்கு கொண்டுசென்றுவிட்டார்கள்.

அங்கே அதட்டி சுட்டிக்காட்டப்பட்ட இடங்களில் கைநாட்டுக்கள் போட்டதும் ஒரு வேனில் வந்த அனைவரையும் கொண்டுபோய் ஒரே அறையில் அடைத்தார்கள். அங்கே அவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு அமரவும் படுக்கவும்தான் இடமிருந்தது.

ஆனால் அவனுடன் வந்தவர்களில் ஒருவன் தவிர எல்லாருமே அதற்குப் பழகிவிட்டவர்கள். அறைக்குள் அமர்ந்ததும் அவர்கள் சளசளவேன்று பேசவும் சிரிக்கவும் ஆரம்பித்தார்கள். அவனுக்கு ஆலோசனை சொன்னவன் பெயர் கருப்பசாமி. அவனும் அவர்கள் ஒளித்து கொண்டுவந்த பீடியை வாங்கி இழுத்துக்கொண்டு பேசத் தொடங்கிவிட்டான்.

டில்லி ஒடுங்கி அமர்ந்திருந்தான். உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. கருப்பசாமி பீடி வேண்டுமா என்று கேட்டபோது மறுத்துவிட்டான். கண்ணீர் பெருகி சொட்டி அதுவாகவே ஓய்ந்தது. ஒரு எண்ணமும் இல்லாமல் வெறுமையாக இருந்தது மனம்.

எப்போதோ நன்றாக தூங்கிவிட்டிருந்தான். விழித்தபோது விடியற்காலை. அறைமுழுக்க உடலின் வெப்பம் நிறைந்திருந்தது. கொசுக்கள் அத்தனைபேர் மேலும் அப்பியிருந்தன. சற்று அசைந்தால்கூட ரீங்கரித்தபடி எழுந்து பறந்தன. அவன் குடிசை இருக்குமிடம்கூட கொசுக்கள் நிறைந்ததுதான். ஆனால் அத்தனை கொசுக்கள் இல்லை.

அவனுக்கு சிறுநீர் முட்டியது. நகர்ந்து நகர்ந்து கதவோரம் வந்து அமர்ந்திருந்தான். விடிந்த பின்புதான் கதவை திறந்தார்கள். சிறுநீர் கழித்து பல்தேய்த்துவிட்டு வந்தான். அவனை விட்டுவிடுவார்கள் என நினைத்தான். ஆனால் காலைச்சாப்பாட்டுக்கு கூட்டிச்சென்றார்கள். இட்லி வடை. ஒரே கூச்சலாகவும் தட்டுகளும் கோப்பைகளும் உரசும் ஒலிகளாகவும் அந்த பெரிய கொட்டகை முழக்கமிட்டது.

டில்லி அங்கிருந்த தொங்குமீசை வார்டனிடம் “அய்யா என்னோட நைனா வீட்டிலே தனியா இருக்காருங்கய்யா… விட்டுரச் சொல்லுங்கய்யா” என்று கெஞ்சினான்.

“டேய், பொத்திட்டு போ… வம்பா அடிதிங்காதே” என்று அவர் லத்தியை ஓங்கினார்.

அவன் கைகூப்பி கண்ணீருடன் பின்னடைந்தான். சுவர் ஓரமாக நின்று அழுதுகொண்டிருந்தான். கருப்பசாமி அவனுக்கு அலுமினியத் தட்டில் இட்லி வாங்கிக் கொண்டுவந்து தந்தான். “டேய், சாப்பிடு… சாயங்காலம் விட்டிருவானுக.”

அவன் அதை வாங்கினான். இட்லியின் மணம் வந்ததுமே பசி பொங்கி எழுந்தது வெறிகொண்டு அள்ளி அள்ளி தின்றான்.

“நல்லா சாப்பிடு… கவலைப்படாதே” என்றான் கருப்பசாமி “இவனுக நம்மளை என்ன செஞ்சிர முடியும்? சோத்த மட்டும் தின்னுட்டே இரு. அதான் நமக்கு முக்கியம்.”

அன்று மாலையும் அவனை விடவில்லை. பகல் முழுக்க அவன் தன்னை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். மாலையில் அவன் இன்னொரு வார்டனிடம் கைநீட்டி  “அய்யா நைனா பட்டினி கிடந்து செத்திருவாருய்யா… வாயில்லா ஜீவன் ரெண்டு இருக்குய்யா” என்று கெஞ்சினான்.

ஆனால் அவர்களுக்கு அந்தவகையான கெஞ்சல்களும் கண்ணீரும் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவன் கும்பிட்டு கூப்பிட்டுக்கொண்டே இருக்க அவர் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார்

“செரி, இன்னிக்கு வேலை லோடு ஜாஸ்திபோல… காலையிலே விட்டிருவாங்க… எப்டியும் விட்டாகணும். இங்க எடமில்லைல்ல?” என்றான் கருப்பசாமி “பேசாம சாப்பிட்டுட்டு தூங்கு… ஒண்ணியும் கவலைப்படாதே.”

மறுநாள் காலையிலும் அவனை விடாதபோது அவன் பொறுமையிழந்தான். வார்டனிடம் “அய்யா என்னைய விடச்சொல்லிட்டாங்களா? அய்யா” என்றான்.

“டேய், போடா” என்று அவர் லத்தியை ஓங்கினார்.

அவன் சட்டென்று வெறிகொண்டு கூச்சலிட்டான். “டேய் என்னாங்கடா செய்யுறீங்க? டேய் சங்கறுத்து செத்திருவேண்டா… இங்கயே சங்கை அறுத்துக்கிட்டு செத்திருவேண்டா” என்று கூவினான். கையில் கிடைத்த அலுமினிய தட்டை எடுத்து காலால் மிதித்து மடித்து கூராக்கி எடுத்துக்கொண்டு சென்று கழுத்தில் வைத்துக்கொண்டு வெறியுடன் அலறினான். “டேய், செத்திருவேண்டா… டேய்”

ஆனால் இருபக்கத்தில் இருந்தும் அவனை ஒரே சமயம் உதைத்து வீழ்த்தினார்கள். அவன் எழுவதற்குள் இருவரும் “சாவுடா சாவுடா” என்று உதைக்கத் தொடங்கினார்கள். மற்ற கைதிகள் அவனை அவர்கள் உதைப்பதை அமைதியாக நின்று பார்த்தனர்.

அவன் ஓசையில்லாமல் சுருண்டு கிடந்தான். அவர்கள் அவனை இழுத்துச்சென்று சிறிய அறை ஒன்றுக்குள் அடைத்தார்கள். கால்நீட்டி படுக்கக்கூட அதற்குள் இடமில்லை. அது ஒரு மாடிப்படியின் அடிப்பகுதி. முக்கோணவடிவமாக இருந்தது. எழுந்து நிற்கவும் முடியாது.

உடலெங்கும் வலியுடன் அவன் பகல்முழுக்க அதற்குள் கிடந்தான். வலி வெவ்வேறு இடங்களில் சுண்டிக் கொண்டும் துடித்துக் கொண்டும் அதிர்ந்து கொண்டும் இருந்தது. ஒரே சமயம் உடலெங்கும் பல கழுகுகள் கொத்திக்கொத்தி கிழிப்பதுபோல.

கதவை சற்றே திறந்து சாப்பாடு கொடுத்தார்கள். கெட்டியான சப்பாத்தியும் பருப்புக்கறியும். அவன் அவற்றை உண்டுவிட்டு படுத்துக்கொண்டான். அப்போது அந்தி ஆகிவிட்டிருந்தது. இரவில் கொசுக்கள் வந்து மூடிக்கொண்டன. வாயில் பட்ட கொசுக்களை துப்பிக்கொண்டே இருந்தான்.

அடிகளின் வலி அவனை நெடுநேரம் துன்புறுத்தியது. ஆனால் அடிவாங்கியபோது அழுது கொந்தளித்தமையால் ஏற்பட்ட களைப்பு அவனை ஆழ்ந்து உறங்கவைத்தது. விடியற்காலையில் அவன் ஒரு கனவு கண்டு விழித்துக்கொண்டான். அவன் அந்த சிறிய அறைக்குள் செத்து பாதிமட்கிய சடலமாக கிடந்தான். அவனை சூழ்ந்து கழுகுகள் அமர்ந்திருந்தன.

மறுநாள் அவன் வெளியே வந்தபோது கண்கள் மங்கலடைந்திருந்தன. வாய் உலர்ந்திருந்தது. அவன் விடியற்காலை கனவில் மனம் ஏங்கி நெடுநேரம் அழுது தூங்கி விழித்திருந்தான். வெயிலில் கண்கள் கூச முகத்தை கையால் மூடிக்கொண்டான். எதுவும் பேசாமல் தரையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு வார்டர் கொண்டுவந்த சாப்பாட்டை மட்டும் வாங்கி ஆவேசமாக சாப்பிட்டான்.

அன்று அவனை பொது அறையிலேயே வைத்தார்கள். எவரும் அவனிடம் பேசவில்லை. அவன் உடலெங்கும் புண்கள் பொருக்கோடியிருந்தன. கருப்பசாமி மட்டும் அவனிடம் “ரெத்தப்புண்ணுமேலே மூத்திரத்தை கையாலே புடிச்சு ஊத்திக்க… ஆறிரும்” என்றான். அவன் அதைச் செய்யவில்லை. அவர்கள் தரையில் கைவிரல்களை வைத்து எதையோ விளையாடினார்கள். டில்லி சுவர்மூலையில் சாய்ந்து அமர்ந்து உறங்கிவிட்டான்.

அதற்கு அடுத்தநாள்தான் அவனை விடுதலை செய்தார்கள். காலையில் டிபன் சாப்பிட்டபின் அவன் வராந்தாவில் வெயில் விழுந்த முற்றத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனை பெயர் சொல்லி அழைத்ததைக்கூட கேட்கவில்லை. கருப்பசாமிதான் அவனை உலுக்கி அழைத்து அவனை கூப்பிடுகிறார்கள் என்றான். “தைரியமா போ. விட்டிருவாங்க. பாக்கெட்டிலே பணம் கிணம் வச்சிருந்தா கேட்டு வாங்கிக்க.”

அவன் கைநாட்டு போட்டுவிட்டு அவர்கள் எடுத்து வைத்திருந்த இருபது ரூபாயையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது நல்ல வெயில். அவனால் தரையைப் பார்க்கவே முடியவில்லை. கண்கள் கூசி கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. கால்கள் தள்ளாடின. வானத்தில் சென்ற பறவைகளின் நிழல்கள் தரையை கடந்துகொண்டிருந்தன.

எக்மோர் வரை எலெக்ட்ரிக் டிரெயில் வந்து இறங்கியதும் டில்லி மிகவும் களைத்துப் போயிருந்தான். காலையில் ஜெயிலில் சாப்பிட்டிருந்தான். களிபோன்ற இட்லி நான்கு, ஒரு வடை. டீயில் பால் வழக்கம்போல கெட்டுப்போயிருந்தது. ஆனால் ஜெயிலில் அவனுக்கு பசித்ததுபோல எப்போதும் பசித்ததில்லை.

எக்மூரில் இறங்கும்வரை தன்னிடம் பணமிருப்பதை அவன் உணரவில்லை. தற்செயலாக கையால் பையை தொட்டபோதுதான் ரூபாய் தட்டுபட்டது. இரண்டு பொறையும் நூறுகிராம் சீனியும் வாங்கிக்கொண்டான். நான்கு பீடியும் வாங்குமளவுக்கு காசிருந்தது. நைனா பீடியை விரும்புவார். ஆனால் அதை அவரால் பிடிக்க முடியாது, விரல்கள் நடுங்கும்.

டில்லி வெயிலில் மிகமெல்ல கால்களை இழுத்து இழுத்து வைத்து நடந்தான். பாதங்கள் வீங்கியிருந்தன. பாதங்களின் மடிப்பில் வீக்கம் அழுத்தியதில் ஒருமாதிரி புறுபுறுவென்றது.

அவன் வழியில் ஒரு பஸ்ஸ்டாப்பில் நின்று சற்று இளைப்பாறிக்கொண்டான். குடிசையிலிருந்து கிளம்பியபோது போட்டிருந்த அதே சட்டை. அதன்பின் குளிக்கவில்லை. அந்தச்சட்டையை கழற்றவே இல்லை. மண்ணில் தூசியில் எங்கெல்லாமோ விழுந்து புரண்டு தூங்கிவிட்டிருந்தான். ரத்தம் உலர்ந்து கருப்புக் கறையாக மாறிவிட்டிருந்தது.

அவன் சாலையில் இருந்து தன் குடிலை நோக்கி திரும்பிய சந்தை அடைந்தபோது அந்த நினைப்பு வந்தது. நைனா உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை.

அந்தச் சந்து உண்மையில் ஒரு சாக்கடை. அதன்மேல் போடப்பட்டிருந்த உடைந்த கான்கிரீட் கற்களில் காலை வைத்து தாவி உள்ளே சென்றான். கழுகுகளின் ஓசை கேட்கத்தொடங்கியதும் அவன் உடல் பரபரப்படைந்தது. கைவிரல்கள் நடுங்கின. நின்று தன் பதற்றத்தை குறைத்துக்கொண்டு மேலே சென்றான்.

அவனுடைய வாசனை கழுகுகளுக்கு கிடைத்துவிட்டிருந்தது. அவன் முற்றத்தை அடைந்தபோது எதிர்பாராமல் ஒரு குளிர்ந்த காற்று வந்து முகத்தையும் நெஞ்சையும் மூடிச் சூழ்ந்துகொண்டதுபோல ஒரு நிம்மதியை உணர்ந்தான். கைகள் தளர தோள்கள் தொய்ந்துவிழ அப்படியே நின்றான்.

அவனுடைய எல்லா பதற்றங்களும் வடிந்தன. மிகமிக நிதானமானவனாக ஆனான். அப்போதுதான் தன் முகம் அப்படி தசை இறுகி இழுபட்டு இருந்திருக்கிறது என்பதை அவனே உணர்ந்தான். முகத்தசைகள் ஒவ்வொன்றாக விடுபட்டு தொய்வடைவதை அவனே அறிந்தான்.

குடிலுக்குள் இருந்து ஆல்பா பறந்து வந்தது. அவன் தலைக்குமேல் க்ராவ்க் என்ற ஓசையுடன் கடந்துசென்று சுழன்றும் திரும்பி வந்து மீண்டும் கடந்துசென்று வளைந்து மண்ணில் அமர்ந்தது. பீட்டா உள்ளிருந்து நடந்து வெளியே வந்து சிறகடித்து எழுந்து காற்றில் சுழன்றி இறங்கியது. இரு கழுகுகளும் அவனைச்சுற்றி பறந்த சிறகுக்காற்று அவன் முகத்தில் பட்டது.

அவன் “நைனா” என்று அழைத்தான். அதற்குள்ளாகவே அழுகிய சடலத்தின் நாற்றத்தை அவன் மூக்கு உணர்ந்துவிட்டது. குடிலுக்குள் தலைகுனிந்து உள்ளே சென்றான். உள்ளே கட்டிலில் நைனா படுத்திருந்தார். அவன் மிகமெல்ல அருகே சென்றான். “நைனா” என்றான்.

கழுகுகள் உள்ளே வந்து குடிலுக்குள் சிறகுகள் கூரையிலும் தட்டிகளிலும் உரச சுழன்று பறந்தன. ஆல்ஃபா சடலத்தின் தலைமாட்டில் அமர்ந்தது. பீட்டா அதன் மார்பின்மேல் அமர்ந்து தன் கால்களை அலகால் மெல்ல கொத்திக்கொண்டது.

நைனாவின்  மெலிந்த உடல் நன்றாக உப்பியிருந்தது. அவர் மிக குண்டாக ஆனதுபோல. ஒட்டிய கன்னங்கள் வீங்கி கண்களை இடுங்கவைத்திருந்தன. வெறித்து திறந்திருந்த கண்களில் எறும்புகளோ சிறிய பூச்சிகளோ நிறைந்திருந்தன. வாய் கருமையாக திறந்து உள்ளே நாக்கு வீங்கியிருந்தது. வயிறு உப்பி தொந்திபோலிருந்தது. அறைக்குள் நீலநிறமான பெரிய ஈக்கள் ம்ம்ம்ம் என்று ஓசையிட்டபடி பறந்தன. பீட்டா அமர்ந்தபோது ஓசையிட்டபடி எழுந்து பின் அமைந்தன.

அவர் அவன் கிளம்பியபோதே இறந்திருக்கவேண்டும். ஆல்ஃபாவும் பீட்டாவும் அங்கே இல்லை என்றால் பெருச்சாளிகள் அதை குதறிவிட்டிருக்கும். வேறுபறவைகளும் வந்திருக்கும்.

அவன் இரு கழுகுகளையும் பார்த்துக்கொண்டிருந்தான். பீட்டாவால் பறக்கவே முடியவில்லை. சற்றுதூரம் பறந்ததும் அது சிறகு ஓய்ந்து மீண்டும் அமர்ந்தது. சிறகை விசிறி போல விரித்து தரைவரை தாழ்த்தி கழுத்தை உள்ளிழுத்தது. அதன் கீழ்த்தாடை பதைத்துக்கொண்டே இருந்தது. அடிக்கடி தாகம்போல வாய்திறந்து ஏங்கியது. அதுவும் இன்னும் ஓரிருநாளில் செத்துவிடலாம். ஆல்ஃபா மேலும் சிலநாட்கள் உயிருடன் இருக்கலாம்.

டில்லி வெளியே சென்றான். சந்து வழியாக போய் அதன் முனையில் இருந்த டோபி கந்தசாமியின் குடிசை முன் நின்று “கந்தண்ணே, கந்தண்ணே” என்றான்.

கந்தசாமி உள்ளிருந்து வந்து “இன்னாடா? நீ அங்க இல்லியா என்ன? உன்னோட பெரியகாக்கா ரெண்டும் கலைஞ்சுகிட்டே இருந்துச்சே” என்றான்.

“நைனா செத்துட்டார்” என்றான்.

“எப்ப?”

“ரெண்டுநாள் ஆயிருக்கணும்”

“அதான் நாத்தமா? நான் கூவத்திலே எதாச்சும் வந்திருக்கும்னு நெனைச்சேன்” என்றான் கந்தசாமி “உன்னோட பெரியகாக்காய்ங்க கொத்தி தின்னிருக்குமே?”

“இல்லை” என்றான். “பாடி அப்டியே இருக்கு… முனிசிப்பாலிட்டிக்குச் சொல்லணும்”

“துட்டு வச்சிருக்கியா?”

“இல்ல.”

“இல்லேன்னா அவன் வருவானா? பைசா கேக்கமாட்டான்?”

டில்லி ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

“அப்ப ஒண்ணு பண்ணு… நீ அப்டியே எங்கியாம் காணாமப் போயிடு… நான் சொல்லிடறேன். அவனே கொண்டுபோவான்”

“செரிண்ணே” என்றான் டில்லி.

அவன் திரும்பிப் பார்த்தான். அங்கே ஏதாவது எடுப்பதற்கு உண்டா?

கந்தசாமி “டேய், அதுக ரெண்டையும் கூட்டிட்டுப்போ… அதுகளை கண்டா அவனுக வரமாட்டானுக” என்றான்.

“அதுகளை கூட்டிட்டு போகமுடியாதுண்ணே.. அதுவும் இப்ப பகல் நேரத்திலே” என்றான் டில்லி.

“என்னடா பேஜாரா கீது” என்றான் கந்தசாமி

டில்லி அந்த முனையில் சற்றுநேரம் நின்றான். திரும்ப குடிசைக்குச் சென்று அந்த பொறை ரொட்டிகளையும் பீடியையும் சீனியையும் பிரித்து நைனாவின் அருகே வைத்தான். அவர் கால்களை தொட்டு கும்பிட்டுவிட்டு வெளியே வந்தான்.

சாலை நீர்ப்பரப்பு போல நெளிந்துகொண்டிருந்தது. அவன் சற்றுதூரம் நடந்தபோது வலப்பக்கம் ஒரு பள்ளிக்கூட மைதானம் தெரிந்தது. அங்கே யாருமே இல்லை. சிறிய மதில்தான், அதை ஏறிக்கடந்து உள்ளே சென்றான். செம்மண் பரப்பு வெயிலில் வெறிச்சிட்டு கிடந்தது.

சிறிய புங்கமரத்தின் அடியில் அவன் மல்லாந்து படுத்துக்கொண்டான். ஒரு பீடியை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டான். பெருமூச்சுடன் கால்மேல் கால்போட்டு வானத்தை பார்த்தான். மிகமிக உயரத்தில் நான்கு கரிய புள்ளிகள் மிகமெல்ல வட்டமிட்டுக்கொண்டிருந்தன. வானத்தில் ஒட்டி நகர்பவைபோல. அவன் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தான்.

***

இந்நிலவு

$
0
0

இன்று குருபூர்ணிமை. வியாசன் முதல் நித்யா வரையிலான ஆசிரியர்களை நினைத்துக்கொள்ளும் நாள். வியாச பூர்ணிமை என மரபு சொல்கிறது. இன்று வியாசனின் காலடியில் அமர்ந்து தொடங்கிய ஒரு படைப்பை நிறைவுசெய்த உணர்வை அடைந்தேன்

காலையில் லக்ஷ்மி மணிவண்ணன், ஷாகுல் ஹமீது, சுசீல் குமார் மூவரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். மலர்களையும் முருகன் சிலை ஒன்றையும்  நண்பர் காட்சன் சாமுவேல் பனையோலையில் உருவாக்கிய புத்தர் ஓவியம் ஒன்றையும் பரிசாக அளித்தனர்.காலையுணவு அருந்தி பிரிந்தனர். இந்த தனிமைநாட்களில் நண்பர்களைச் சந்தித்தது நிறைவளிக்கும் அனுபவமாக இருந்தது

பின்பு இந்திய வாசகர்களுக்கான காணொளிச் சந்திப்பு. மூன்றுமணிநேரத்திற்கு மேல். மாலையில் வெளிநாட்டு வாசகர்களுடன் காணொளிச் சந்திப்பு நான்கு மணிநேரம். மொத்தநாளுமே சந்திப்புகளால் நிறைந்தது. மொத்தமாக தொள்ளாயிரம் பேர் பங்குபெற்றனர். அனைவரும் இங்கே என் அறைக்குள்ளேயே நிறைந்து அமர்ந்திருந்ததைப் போல உணர்ந்தேன்.

சந்திப்பை ஒருங்கிணைத்த சந்தோஷ் [லஓசி] அரங்கசாமி, ராஜகோபாலன் ஆகிய நண்பர்களுக்கும் பங்களித்த அனைவருக்கும் நன்றி. சந்திப்புகள் மொத்தம் ஏழரை மணிநேரத்திற்கும் மேல் நடைபெற்றன. நான் எவ்வகையிலும் களைப்பாக உணரவில்லை.

இந்நாளில் என் குருவின் இடத்தில் இருக்கும் இளையராஜா அவர்களின் வாழ்த்துக்கள் வந்தது நிறைவளிக்கிறது.

கேட்க மிகவும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தீர்கள் எல்லாம் நல்ல வண்ணம் நிறைவேற இறையருள் துணை நிற்குமாக.வாழ்த்தும்போது மனம் நிறைகிறது – இளையராஜா

இதை முடித்துவிட்டதை மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோருக்குச் சொன்னபோது அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றேன். பவா, சுகா, வசந்தபாலன் என என் நண்பர்களின் வாழ்த்தும் நிறைவூட்டுவது. அணுக்கமாக உணரும் நண்பர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தற்செயலாக இருக்கலாம் இன்று சுவாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளாரும் அழைத்து பொதுவாக வாழ்த்து தெரிவித்தார்.ஒவ்வொன்றும் ஒரு நிறைவூட்டும் பரிசு.

 

சந்திப்பு முடிந்தபின் சைதன்யா, அஜிதன்,அருண்மொழியுடன் மொட்டைமாடியில் அமர்ந்து நிலவைப்பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த நிலவு அரிதானது, நினைவில் நீடுவாழ்வது.

நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இந்நாளில் நித்ய சைதன்ய யதியின் ஆசிகள் அமையட்டும் என வாழ்த்துகிறேன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7

$
0
0

பலி நிகழ்வுகளுக்குப் பின்னர் கங்கையின் பெருமணல் பரப்பில் அனைவரும் உண்டாட்டுக்கு அமர்ந்தனர். நீத்தோரை வழுத்தி நிறையுணவு உண்டு செல்வது என்பது தொல்மரபு. உண்டாட்டுக்குரிய ஓசைகளோ முகமன்களோ இல்லாமல் அனைவரும் அமைதியாக தங்களுக்குரிய இடங்களில் அமர்ந்தனர். ஏழு வகை கலவைச் சோறுகள் அன்று சமைக்கப்பட்டிருந்தன. ஷத்ரியர்களுக்கும் தொழிற்குடியினருக்கும் உரிய உணவு தனியாகவும், அந்தணருக்குரிய உணவு அவர்களாலேயே தனியாகவும் சமைக்கப்பட்டது. கைம்பெண்களுக்குரிய நோன்புணவு தனியாக அவர்களின் ஏவலர்களால் பிறிதொரு இடத்தில் சமைக்கப்பட்டது. அவர்கள் உண்பதற்குரிய இடமும் மறைவாகவே அமைக்கப்பட்டிருந்தது.

ஷத்ரியர்களுக்கு மூன்று வகை ஊன்உணவுகளும், நான்கு வகை காய்உணவுகளும் இருந்தன. அடுமனைகளிலிருந்து பெரிய மூங்கில் கூடைகளில் அன்னத்தை நிறைத்து மூங்கில் வைத்து காவடிகளாக்கி கொண்டுவந்து இறக்கிவைத்து மரக்குடுவைகளில் அள்ளி ஒவ்வொருவருக்கும் பாளைத்தொன்னைகளிலும் இலைத்தட்டுகளிலும் பரிமாறினர். அன்று காலையிலிருந்தே எவரும் உணவு உண்ணவில்லை என்பதனால் பலரும் ஆவலுடன் அதை வாங்கி உண்டனர். அமர்ந்தபோதிருந்த அமைதி அன்னம் வந்ததும் கலைந்தது. உண்ணும்போது மகிழ்ச்சிக்குரல்கள் எழுந்தன.

நான் உணவு முறையாக பரிமாறப்படுகிறதா என்று பார்த்தபடி நடந்தேன். அந்தணர் பலரும் உரக்க பேசிக்கொண்டிருந்தனர். ஒரு அந்தணர் இன்னொரு அந்தணரை சந்திக்கும்போது இயல்பாகவே ஒரு பூசல் தொடங்கிவிடுகிறது. பெரும்பாலும் அது நூல்களில் ஓரிரு சொற்களைச் சுற்றி மட்டுமே அமைந்திருக்கும். எது சரியான சொல்வடிவம், எது பிழையற்ற நூல் என்பது அவர்களால் ஒவ்வொருமுறையும் பேசப்பட்டது. அப்பூசலை அவர்களால் முடிக்க இயலாது. ஏனெனில் அப்படி ஒரு மாறாத நூல் இல்லை. அவர்கள் தங்கள் ஆணவங்களையும் கசப்புகளையும் அந்த நூலைச் சார்ந்துள்ள பூசல்களினூடாகவே தீர்த்துக்கொண்டனர். உணவின் முன் நூலை மறந்து அவர்கள் முகம் மலர்ந்து பூசலின்றி ஒன்றாயினர்.

அரசகுடியினர் வெவ்வேறு இடங்களில் தனித்திருந்தனர். விதுரரும் குந்தியும் மணல்மேட்டில் முற்றிலும் தனிமையில் இருப்பதை கண்டேன். விதுரர் கைகளை மடியில் வைத்து கங்கை நோக்கி அமர்ந்திருந்தார். குந்தி அருகே அமர்ந்திருந்தாலும் நெடுந்தொலைவில் என்றும் தோன்றினார். அவர்கள் ஒரு சொல்லும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்பதை பிறரும் உணரத்தொடங்கியிருந்தனர். பெரும்பாலும் விதுரர் கையசைவுகளால், முகபாவனைகளால் குந்தியிடம் தேவையானவற்றை சொன்னார். விதுரருக்குரிய எளிய பணிவிடைகளையெல்லாம் குந்தியே செய்தார்.

நான் குந்தி பாண்டவர்களை பார்க்கிறாரா என்று பார்த்தேன். ஒருமுறைகூட அவர் மைந்தரை ஏறிட்டுப் பார்க்கவில்லை என்றே தோன்றியது. பார்க்காமல் இருக்கும் பொருட்டு உடலையும் முகத்தையும் இறுக்கிக்கொள்ளவும் இல்லை. பலமுறை பீமனும் அர்ஜுனனும் குந்தியின் கண்களுக்கு பட்டனர். அவர்கள் அவரிடம் எந்த விளைவையும் உருவாக்கவில்லை. அவர்கள் முற்றிலும் அயலவர் என்றே அவருக்கு தோன்றினார்கள் என்பது விந்தையாக இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அதற்கு நான் பழகிக்கொண்டுமிருந்தேன்.

நான் இடையில் கைவைத்து நின்று நெடுநேரம் குந்திதேவியை நோக்கிக்கொண்டிருந்தேன். அது தனக்குத்தானோ பிறருக்கோ காட்டிக்கொள்ளும் நடிப்பல்ல. மெய்யாகவே மைந்தர் அவருக்கு ஒருபொருட்டே அல்ல என்று ஆகிவிட்டிருக்கிறார்கள் என்று உணருந்தோறும் சீற்றம்கொண்டேன். பின்பு ஏக்கம். பின்பு கசப்பு. அதனூடாக வெறுமை ஒன்றுக்கு சென்றுசேர்ந்தேன். இன்றும் அவ்வெறுமையை ஒரு பருப்பொருள் என அருகே உணர்கிறேன்.

பாண்டவர்கள் அன்னையிடம் சென்று உரையாடவில்லை. யுதிஷ்டிரன்கூட தன் அன்னையை நோக்கி செல்லவில்லை. அவர்கள் அங்கு முற்றிலும் அயலவர்போல, அச்சடங்குக்கென வந்திருக்கும் வேற்று நிலத்தவர் போலிருந்தார்கள். அங்கிருக்கும் எவரையுமே அவர்களுக்கு தெரியவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. பலமுறை உணவுக் காவடிகளுடன் அவ்வழியாக பீமன் சென்றார். அர்ஜுனன் ஒருமுறை கங்கை நீர் விளிம்பினூடாக வந்து குனிந்து நீரள்ளி முகம் கழுவி கடந்துசென்றார். யுதிஷ்டிரன் தம்பியருடன் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து இயல்பாகத் திரும்பி அன்னையை பார்த்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எவரும் அவரை பார்க்கவில்லை.

நான் உணவுண்பவர்களை நோக்கி சென்றேன். அங்கே பலியிட வந்தவரும் பிறரும் உணவு உண்டுகொண்டிருப்பதை அகன்று நின்று பார்த்தபோது எழுந்த வியப்பு எளிதல்ல. அவர்கள் இரு வேளை உணவொழிந்திருந்தனர். ஆனால் உணவையே கண்டிராதவர்கள்போல, பிறிதொருமுறை உணவு கிடைக்காது என்பதுபோல, அவ்வுணவுக்காகவே பலநாட்கள் காத்திருந்தவர்கள்போல அள்ளி அள்ளி உண்டனர். பலருக்கு விக்கல் எடுத்தது. அருகிலிருந்தோர் நீர்க்குவளைகளை எடுத்துக்கொடுத்தனர். அன்னம் கொண்டுபோனவர்களை கைநீட்டி தட்டுகளில் போடக் கோரினார்கள். கைம்பெண்களும் துயருற்ற அனையரும்கூட உணவை வாரி வாரி உண்பதை பார்த்தேன்.

சற்று முன் எழுந்த கசப்பு எரிச்சலாக, சினமாக மாறியது. அவர்கள் மேல் அல்ல, என் மேல். உடலுருக்கொண்டு அங்கு நின்றிருப்பதன் மேலேயே கசப்பும் வெறுப்பும் கொண்டேன். ஆனால் கங்கைக்கரைக் காற்று என்னை உடலாறச் செய்தபோது உள்ளமும் ஆறியது. உண்மை, மானுடர் அப்படித்தான். நீர்க்கடனுக்குப் பின் கூட்டுணவு உண்ணவேண்டும் என்று ஏன் வகுத்தனர்? சாவின் முன் அமர்ந்து உண்பதில் ஒரு மீள்கை உள்ளது. ஓர் அறைகூவல் உள்ளது. மானுடர் இதை மட்டுமே செய்யமுடியும். இதைத்தான் செய்யவேண்டும். அங்கிருப்பவர்களில் பலர் அன்றிரவு உறுதியாக காமத்திலும் ஈடுபடுவார்கள். சாவுக்கு எதிராக நின்றிருப்பவை அவை இரண்டு மட்டுமே.

தனிமையில் நடந்து விலகிச்சென்றபோது காந்தாரியும் திருதராஷ்டிரரும் தனித்தமர்ந்திருப்பதை பார்த்தேன். அவர்கள் அருகே எவருமில்லை. காந்தாரி சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்ததிலிருந்து அவர்களை எவரும் அறியவில்லை என்று தோன்றியது. நான் ஓடி அருகே சென்றேன். விழி கட்டப்பட்டிருந்த காந்தாரி என் ஓசைகளுக்காகத் திரும்பி “யாரங்கே? யாரங்கே? பசித்திருக்கிறார், பசி பொறுக்காது ஓசையிட்டுக்கொண்டிருக்கிறார்” என்றார்.

திருதராஷ்டிரர் இரு கைகளாலும் மணலை ஓங்கி ஓங்கி அறைந்து தலையை சுழற்றியபடி உறுமிக்கொண்டிருந்தார். “இதோ! இதோ கொண்டுவருகிறேன்” என்று சொல்லி நான் ஓடினேன். அதற்குள் பீமன் பெரிய உணவுக்கூடை ஒன்றை இரு கைகளில் ஏந்தி ஓடிவருவதை கண்டேன். அக்கூடையிலிருந்த ஊனுணவை திருதராஷ்டிரர் அருகே வைத்து தன் பெரிய கையால் சோற்றை அள்ளி உருட்டி கவளத்தை அவர் கையில் அளித்தார். அவர் அதை வாங்கிய பின் “பீமா, நீயா?” என்றார். “ஆம் தந்தையே, தங்களுக்காக” என்றார் பீமன்.

“கொடு” என அவர் அதை வாங்கி பெரும்பசியுடன் உண்ணுவதை நான் பார்த்தேன். ஒருகணத்தில் அதுவரையில் இருந்த அனைத்து அலைக்கழிப்புகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்தும் விடுபட்டேன். என் உடலின் எல்லாத் தசைகளும் எளிதாயின. முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. தனித்து மெல்லடி வைத்து நடந்து பாண்டவர்கள் உணவுண்டுகொண்டிருந்த இடத்தை நோக்கி சென்றேன். என் அருகே வந்துகொண்டிருந்த ஏவலன் திரும்பி அவர்களை பார்த்த பின் “தன் நூறு மைந்தரைக் கொன்ற கையால்…” என்றான். “ஆம், பசி!” என்றேன்.

அவன் திரும்பிப் பார்த்துவிட்டு “பசிதான்!” என்றான். “வைஸ்வாநரன்! இப்புவியை ஆளும் மெய்யான தெய்வம்! இங்கு அறம், நெறி, அளி, அறிவு அனைத்தையும் ஆள்பவன்” என்று நான் சொன்னேன். அவன் மீண்டும் திரும்பிப் பார்த்துவிட்டு “ஆனால் இதில் வியப்பதற்கேதுமில்லை. அனைத்து இல்லங்களிலும் முதியவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்” என்றான். “அன்னத்திற்கு மேல் அனைத்தும் சூட்டப்படுகின்றன. காலத்தின் போக்கில் அன்னத்திலிருந்து அனைத்தும் உதிர்ந்துவிடுகின்றன. அன்னம் அன்னத்தை மட்டுமே அறியும்” என்று நான் சொன்னேன்.

உண்டாட்டு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. நான் கங்கைமணல்மேட்டை நோக்கி நடந்தேன். சுரேசர் என்னை அருகழைத்து “மகாவியாசர் இங்கு வருகிறார்” என்றார். அப்போதுதான் அவரை நான் நினைவுகூர்ந்தேன். “அவர் நீர்ப்பலி நோக்க வரவில்லையே?” என்றேன். “ஆம், அவர் மங்கலப்பணியில் இருப்பதனாலும் துறவு பூண்டிருப்பதனாலும் நீர்க்கடன் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ஆனால் தன் மைந்தரையும் குடியினரையும் பார்க்க விழைந்தார். ஆகவே இங்கு கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் சுரேசர்.

“இங்குள உளநிலை அவரை மகிழ்விக்குமா என்று தெரியவில்லை” என்று நான் சொன்னேன். “இன்று இங்கு பிதாமகர் என்று இருப்பவர் அவரே. அரசரும் அவர் மைந்தர்கள் அனைவரும் அவரிடம் நீடுவாழும் சொல் பெற்றால் இந்தச் சடங்கு இங்கு நிறைவுறும்” என்று சுரேசர் சொன்னார். “அவர் வந்தது இறையாணை என்றே தோன்றுகிறது. இனி இங்கல்லாது எங்கும் அவர் எவரையும் சந்திக்க இயலாது.”

“உணவுண்டு அனைவரும் ஒருங்கு கூடட்டும். கங்கைக்கரையில் உணவால் எச்சில்படாத பரப்பொன்றிருக்கிறது. அனைவரையும் அங்கு செல்லச் சொல்வோம்” என்று நான் சொன்னேன். “ஆம், அதுவே உகந்தது” என்றபின் சுரேசர் ஏவலரை அழைத்து அம்மணற்பரப்பில் இருக்கும் அனைத்து கற்களையும் முட்களையும் விலக்கி தூய்மைப்படுத்தும்படி ஆணையிட்டார். உண்டாட்டு நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே வீரர்கள் அப்பகுதியை சீரமைத்தனர்.

அதற்குள் இரவு எழத்தொடங்கிவிட்டது. அன்று கருநிலவுநாள். கரிய வானில் விண்மீன்கள் தோன்றத்தொடங்கின. கங்கையின் நீர்ப்பரப்பு விண்ணின் மெல்லிய ஒளியை ஏற்று கருமையாக கொப்பளித்தது. அலைகளில் இருந்து எழுந்த ஒளி நீருக்கு மேல் காற்றுப் பரப்பையும் ததும்ப வைத்தது. நுண்ணிய சிற்றுயிர்கள் நீர்ப்பரப்பின்மேல் சுழன்று பறந்தன. கங்கையை பார்த்தபடி நின்றபோது அது ஒழுக்கொழிந்து நிலைகொண்டுவிட்டதுபோல தோன்றியது.

உண்டாட்டு முடிவை அறிவிக்கும் விதமாக கொம்பொலி எழுந்தது. நிமித்திகர் ஒருவர் உண்டு முடித்தவர் அனைவரும் பெருங்களத்தில் கூடவேண்டும் என்றும் அங்கு வியாச மாமுனிவர் வந்து அனைவருக்கும் வாழ்த்துரைக்கப் போகிறார் என்றும் கூறினார். “சொல்நிறைவு கொண்ட முனிவரான குருகுலத்தின் பிதாமகரிடம் சொல்பெற்று மீளும் நற்பேறு இங்கு அமைந்துள்ளது. இறையருள் கூடுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவர் அறிவித்தார்.

ஆனால் எவரிடமும் அவ்வறிவிப்பு உளஎழுச்சி எதையும் உருவாக்கவில்லை. எவரும் ஆவல்கூட கொள்ளவில்லை. அவர்கள் வியாசரை ஒரு தொல்கதைமானுடர் என்றே அறிந்திருந்தார்கள். உண்மையில் அவர் முதியவர் என்பதே பலர் உள்ளத்தில் பதியவில்லை. வசிட்டர், விஸ்வாமித்ரர்போல அவரும் வழிவழியென தொடரும் முனிவர் நிரையில் இன்றிருக்கும் ஒருவர் என அவர்கள் எண்ணியிருக்கலாம்.

ஒவ்வொருவராக எழுந்து மணற்பரப்பை நோக்கி சென்று அமரத்தொடங்கினர். அனைவரும் தோளோடு தோள் முட்டும் அளவுக்கு நெருங்கி அமர்ந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அமர்ந்திருந்தார்கள் என்று தோன்றியது. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் இன்னொருவருக்கு இடம் காட்டவோ, அமர்க என்று இன்முகம் காட்டவோ, முகமன் உரைக்கவோ இல்லை. முடுக்கப்பட்ட பாவைகளென அமைந்திருந்தன அவர்களின் அசைவுகள். உணவுண்கையில் அவர்களிடமிருந்த உயிர்த்தன்மை மறைந்து மீண்டும் நிழலுருக்களாக மாறிவிட்டிருந்தனர்.

சுரேசர் ஆணையிட விளக்குகளைப் பொருத்தி அப்பகுதியெங்கும் வைத்தனர். கங்கைக்காற்றில் அவை அணையாமலிருக்க தொன்னைகளால் அணைவைத்தனர். கங்கைவிளிம்பினூடாக நான் செல்கையில் அக்கோணத்தில் சுடர்களே தெரியவில்லை. செவ்வொளியில் முகங்களும் தோள்களும் மட்டும் தெரிந்தன.

யுதிஷ்டிரனும் நகுலனும் சகதேவனும் சென்று மணல்மேல் அமர்ந்தனர். பீமனும் அர்ஜுனனும் வந்தனர். அர்ஜுனன் அங்கு வந்து ஒருகணம் நோக்கியபின் விலகி சென்றுவிட்டார். குந்தியும் விதுரரும் வந்து அமர்ந்தனர். திருதராஷ்டிரர் உண்டு முடித்த நிறைவுடன் சற்றே உடல் தளர்ந்திருந்தார். காந்தாரியிடம் மெல்லிய குரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவர் துயில்கொள்ள விரும்புகிறார் என்பது தெரிந்தது.

சற்று அப்பால் கொம்பொலி கேட்டது. வியாசர் அவருடைய மெலிந்த சிறு கால்களால் மணலை மிதித்து சுண்டுப்புழு போல மெல்லிய தாவல்களாக நடந்து வந்தார். அவருடைய மாணவர்கள் சிலர் உடன் வந்தனர். சம்வகையும் யுயுத்ஸுவும் எதிர்கொண்டு சென்று அவரை அழைத்துவந்தனர். வியாசர் வந்ததும் அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று தலைவணங்கி “மூதாதை வாழ்க! வெல்க குருகுலம்! வெல்க அழியாச் சொல்!” என்று அவரை வாழ்த்தினர். ஆனால் அவ்வாழ்த்தே ஒரு முறைமைச்சொல் என உணர்ச்சியேதும் இன்றி ஒலித்தது. யுதிஷ்டிரன் அவருடைய மேலாடையைக் கலைத்த காற்றை நோக்கி முகம் சுளித்தார்.

மணலை நீவி தர்ப்பைப்புல் பாய் விரிக்கப்பட்ட பீடத்தில் வியாசரை  வரவேற்று கொண்டுசென்று அமரவைத்தனர். சம்வகையும் யுயுத்ஸுவும் அவரை கால் தொட்டு வணங்க அவர் மிக மெல்லிய குரலில் வாழ்த்துரைத்தார். யுதிஷ்டிரனும் நகுலனும் சகதேவனும் வாழ்த்து பெற்றனர். ஒவ்வொருவருக்கும் அவர் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒரே போன்ற அசைவுகளால் வாழ்த்து கூறினார். மெய்யாகவே அவர் அவர்களை உணர்கிறாரா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.

பீமன் வாழ்த்து பெற்றபின் வியாசரின் அருகிலேயே நின்றிருந்தார். என்னிடம் முதிய காவலர் “பிதாமகரின் அருகே நின்றிருக்கிறார் பீமசேனன். அது நன்றல்ல, விலகச் சொல்லுங்கள்” என்றார். “ஏன்?” என்று நான் கேட்டேன். “அவர் மைந்தர் நூற்றுவரைக் கொன்ற மைந்தர் அல்லவா அவர்?” என்றார். நான் ”தந்தை அவர் கையால் உணவுண்டார்” என்றேன். “ஆம், ஆனால் அது பசி” என்று அவர் சொன்னார். “இது பிறிதொன்று… நாமறியாதது” என்று நான் சொன்னேன்.

யுயுத்ஸு சுரேசரிடம் அர்ஜுனன் எங்கே என்று கேட்பதை நான் வாயசைவாக பார்த்தேன். நான் அருகே சென்று “அவர் விலகிச்சென்றுவிட்டார்” என்றேன். “எங்கு சென்றான்? அழைத்து வாருங்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “பிதாமகரின் வாழ்த்துக்களைப் பெறாமல் எங்கே சென்றான், அறிவிலி?” நான் திரும்பி அர்ஜுனனை தேடிச் செல்லப் போனேன். என்னை மறித்து “வேண்டாம்” என்று வியாசர் சொன்னார். “அவன் இங்குதான் இருப்பான்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

வியாசரின் முகத்தில் எவ்வுணர்ச்சியும் இல்லை. “ஐவரும் இணைந்து அமரவேண்டியதில்லை. அரிய பயணம் ஒன்றுக்கு நீங்கள் ஐவரும் ஒன்றிணைந்தால் போதும்” என்று அவர் கூறினார்.  அவர் உணர்வது என்ன என்பதை புரிந்துகொள்ளமுடியாமல் பாண்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

குடிகள் அனைவரும் வரிசையாக வந்து அவரிடம் கால் தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றுச் சென்றனர். இளமைந்தரைக் கொண்டுவந்து அவரை வணங்கச்செய்தனர். அவர் கைகளைத் தூக்கி அவர்களின் தலையில் வைத்து வாழ்த்திக்கொண்டிருந்தார். ஊன்சிலை, மானுடத்தெய்வம். சொற்கள் இவ்வண்ணம் மானுடரை நெடுந்தொலைவுக்கு கொண்டுசெல்லமுடியுமா என்ன?

அனைவரும் சென்று அமர்ந்தபோது அதுவரை மெழுகென உயிரின்மை கொண்டிருருந்த அவருடைய முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று எழுந்தது. எதையோ எண்ணிக்கொள்பவர்போல. முதியவர் அப்போது சிறுகுழவியென ஆனார். “நான் இங்கு நிகழ்ந்த போர்வெற்றியைக் குறித்து ஒரு காவியம் எழுதியிருக்கிறேன். குடிமரபுகளில் தொடங்கி இப்போர்வெற்றி வரை வந்து நிறையும் பெருங்காவியம் அது. இங்கு நிகழ்ந்ததென்ன என்று வரும் தலைமுறைகள் அறியவேண்டும். பெற்றதும் இழந்ததும் பதிவென்று இருக்கவேண்டும்.”

ஆனால் எவரிடமும் எந்த ஆர்வமும் வெளிப்படவில்லை. எவரும் அந்த மாணவர் கூவிச்சொன்னவற்றை செவிகொள்வதாகவே காட்டிக்கொள்ளவில்லை. “நான் ஒவ்வொன்றையும் எழுதிக்கொண்டே இருந்தேன். என் கண்ணெதிரே நிகழும் ஒன்றை எதிர்காலத்தில் நின்று நோக்கிக்கொண்டிருந்தேன்” என்று வியாசர் சொன்னார்.

“கேட்ட கதைகளிலிருந்தும் உய்த்தறிந்ததில் இருந்தும் தெய்வங்கள் அளித்ததிலிருந்தும் அழியாப் பெருநூல்களிலிருந்தும் நான் எடுத்துக் கோத்து இதை ஆக்கினேன். இங்கு சில பகுதிகளை படிக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார். “எங்கள் நல்லூழ், பிதாமகரே” என்று யுதிஷ்டிரன் கூறினார். கூட்டமே மெல்ல பெருமூச்சுவிட்டதுபோல தோன்றியது.

வியாசர் கைகாட்ட அவருடைய மாணவர் ‘ஜய’ என்ற அப்பெருங்காப்பியத்தின் முதல் இரு பகுதிகளை படித்தார். காசியபப் பிரஜாபதியின் குருதியில் இருந்து பெருநாகங்கள் பெற்றெடுத்த தேவர்கள், அசுரர்கள், மானுடர்களின் குடிமரபைப் பற்றி. அவை ஒன்றுடன் ஒன்று ஊடியும் முயங்கியும் உருவாக்கிய ஆடலைப்பற்றி.

சலிப்பூட்டும் அந்தத் தொல்கதையை கேட்டுக்கொண்டிருந்தேன். இருள் சூழ்ந்து அப்பகுதியே வானில் மறைந்தது. அங்கே எரிந்த நெய்விளக்குகளின் சிறுசுடர்களில் முகங்கள் அனல்துண்டுகள்போல சிவப்பாகத் தெரிந்தன. அவை அனைத்திலும் ஒரே உணர்வே திகழ்ந்தது, சலிப்பு. காலம் உருவாக்கும் அறுதியான உணர்வு ஒன்றே, அச்சலிப்பு. அதை அகற்றத்தான் அத்தனை கதைகளும் உருவாக்கப்படுகின்றனவா?

அங்கிருந்து அகன்று சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. அக்காவியத்தின் ஒரு வரியையேனும் கேட்க நான் விழையவில்லை. ஆனால் என் செவிகள் அதை கேட்டுக்கொண்டிருந்தன. என் உள்ளம் அதை நோக்கி குவிந்திருந்தது.

“இந்திரன் முதலான தேவர்கள் மெய்யறிந்தவரும் படைப்புச் செயலாற்றுபவரும் இனியவருமான பிரம்மனின் சொற்களைக் கேட்டு அதை தலைமேற்கொண்டனர். அவர்கள் ஒன்றாக அழிப்பவரும், பாற்கடலில் துயில்பவருமாகிய விஷ்ணுவை நாடிச் சென்றார்கள். ஆழியும் சங்கும் ஏந்தியவரும், கதைப்படை கொண்டவரும், மஞ்சளாடை அணிந்த கரியமேனியரும், தாமரை மலரென உந்தி சுழித்தவரும், அசுரர்களை அழிப்பவரும், விரிந்து அகன்ற விழிகளை உடையவரும், பிரம்மனுக்கு தந்தையும், தேவர்களுக்கு அரசனும், அளவிலா ஆற்றல்கொண்டவரும், ஸ்ரீவத்ஸம் என்னும் மணிமார்பு உடையவரும், ஐம்புலன்களை ஆள்பவரும், முனிவர்களால் வணங்கப்படுபவருமான பரமபுருஷரை வணங்கினர். “புவியை தூய்மைசெய்ய தாங்கள் மண்நிகழவேண்டும், தலைவா” என்று இந்திரன் தொழுது வேண்டிக்கொண்டான். தேவர்களும் “ஆம், அடிபணிகிறோம்” என்றார்கள். கண் மலர்ந்து புன்னகைத்த விண்ணவன் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

சிறகு, வண்ணம் -கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நாஞ்சில்நாட்டு வரலாற்றில் நாஞ்சில்வேளாளர்கள் வரிகொடாமைப் போராட்டம் நடத்தியதும், மொத்தமாகவே நெல்லைப்பகுதிக்கு சென்றுவிடும் போராட்டம் நடத்தியதும் எல்லாம் பதிவாகியிருக்கிறது. விவசாயிகளுக்கும் அரசர்களுக்கும் இடையே எப்போதும் இந்த போராட்டம் நடந்துகொண்டுதான் இருந்தது. அரசர்கள் நாஞ்சில்நாட்டு வேளாளர்களை நயந்தும் மிரட்டியும் வைத்திருந்ததை நம்மால் முதலியார் ஆவணங்களில் பார்க்கமுடிகிறது.

நாஞ்சில்நாட்டுப் பிடாகைகளின் பிரச்சினை என்ன என்றால் அவர்களிடையே ஒற்றுமை கிடையாது. எப்போதுமே மூப்பிளமை தர்க்கம்தான். அதைப்பயன்படுத்தி அவர்களை ஆட்சி செய்தார்கள் அரசர்கள். அரசர்களை தாங்கிக்கொள்ளலாம், அரசர்களின் அடிப்பொடிகளைத்தான் தாளமுடியாது. சுதந்திரம் கிடைத்தபின்னரும் இதே நிலைதான்.

ஆனால் சுதந்திரம் கிடைப்பது வரை நாஞ்சில் நாட்டில் வேளாளர்கள் நடுவே ஒரு சுதந்திரமான கூட்டமைப்பு இருந்தது. பின்னாளில் பூமிப்பாதுகாப்பு சங்கம் என்று இது மாறியது. பிறகு வந்த அரசியலில் எல்லாம் சிதறிப்போய்விட்டது. இன்றைக்கு நாஞ்சில்நாட்டில் விவசாயிகள் என்ற அரசியல்தரப்பே இல்லை

வண்ணம் ஒரு பெரிய வரலாற்றை ஒரு அழகான கதையாக சொல்கிறது. அதிலுள்ளது வண்ணம்பூசப்பட்ட ஒரு அழகான வரலாறு

சிவசுப்ரமணியம். என்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

வேறொரு காலம் பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் //நகரமக்கள் நெல்லென்றே நினைக்கும் பசும்புல்// என்பதின் தொடர்ச்சியாகவேதான் நெல்லைப்போலவே இருந்து மனிதர்களை கல்லாக்கிய கோரையைப்பற்றிய வண்ணம் கதை என்று தோன்றியது.

களிமண் சேறும் சகதியுமாக தொழி அழுகிக்கிடக்கும் படுவநிலத்தில்  மூங்கில்களை வெட்டிப்போடுவது, சாம்பலும் சுண்ணமுமாய்   இட்டு மண்ணை வளமூட்டுவது, நிலத்தை வற்றச்செய்வது, கோரையின் வளர்ச்சியை மீள மீள நிலத்தை உழுது தீயிட்டு கட்டுப்படுத்த முயல்வது என்று வண்ணம் காட்டும் ஏராளமான  உழவியல் தகவல்கள் வியப்பளித்தது.

வரலாறு குறித்து அதிகம் தெரியாத எனக்கு, கண்டெழுதுபவரும், மேலெழுதுபவரும், அரசருமாக கணக்கிட்ட மெத்தனமும்,  அரசு இயந்திரம்  இயங்கிய அழகையும் வாசிக்கையில் உணவுப்பயிர் அறுவடையின் தொய்வு, பசி பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரொட்டி விலைஉயர்வு போன்ற நிலைகுலைவுகளால் சாதாரண மக்களும் வீதியில் இறங்கி போராடிய பிரஞ்சுப்புரட்சியிலும் இப்படித்தான் படிப்படியாக  சிறிய பிழைகள் தொடர்ந்து நடந்து அவை பெருகி பின்னர் புரட்சி வெடித்திருக்குமாயிருக்கும் என யூகிக்க முடிந்தது.

வெண்முரசு நாவல் நிரையிலும் உங்களின் பிற படைப்புக்கள் எல்லாவற்றிலுமே குறிப்பிடப்பட்டிருக்கும் தாவர வகைகளை, வேளாண்மை மற்றும் உழவியல் தகவல்களை எல்லாம் நான் தொகுத்து வைத்திருக்கிறேன். ’விலங்கு’ கதையில் வரும் ஆரோக்கியப்பச்சை போன்ற முக்கியமான மூலிகைகளை  மட்டுமல்லாது ’பிறசண்டு’ கதையில்  தரையெங்கும் சருகுகளை கொட்டியபடி நின்றுகொண்டிருக்கும் வேப்பமரங்களையும்  கூட குறித்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே தெரிந்த தாவரங்கள் என்றால் அவற்றைக்குறித்த மேலதிக தகவல்களையும் புதியவை என்றால் அவற்றைக் குறித்து முழுமையாகவும் விரிவாகவும் அறிந்துகொண்டு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளுகிறேன்.

மற்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கையிலும் ’’ அடடா, கார் ஷெட்டில் வண்டி இருக்குன்னு மட்டும் சொல்லியிருக்காரே, அங்கே  வேம்போ, நெட்டிலிங்கமோ நிழலுக்கு நிக்குதுன்னு சொல்லியிருக்கலாமே என்று  இருக்கும் தாவரங்களைக் குறித்துக்கொள்ளுவதோடு இல்லாதவற்றிற்காகவும் கூட ஆதங்கப்பட்டுக் கொள்ளுவதுமுண்டு.

வெண்முரசு காட்டும் மங்கல நிகழ்வுகளில், சிதையேற்றுதலில், மணத்தன்னேற்புகளில், தோள்மாலைகளில், பூசனைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலர்களை, தாவரங்களை, தாவரப்பொருட்களை, தொடர்வில் பயிற்சியால் சகுனியின் கைநரம்புகள் ஊமத்தை மலரின்  நரம்புகளைப்போல நீல நிறத்திலிருந்ததை, காந்தாரியின் திருமணத்திற்கு பெண்கள் தேடிச்செல்லும் பூத்த தாலிப்பனையை, பாஞ்சாலியின் கூந்தலுக்கு தடவும் தைலத்தின் கைதோநியை, யட்சிப்பாலையை என்று  தாவரவியல் குறிப்புகள் வரும்போதெல்லாம்   குறித்து வைத்துக்கொள்ளுவேன். எங்கும் எதிலும் எப்போதும் தாவரங்களைப்பற்றி சிந்தித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் கற்றுக்கொண்டுமிருப்பது ஒரு பித்தைப்போல் ஆகிவிட்டிருக்கிறது. புல்லைக்கண்டால் மாட்டுக்கு வரும் அதே பரவசம் எனக்கு வாசிப்பில் தாவரங்களைக் கண்டாலும் வருகின்றது.

வண்ணம் கதையில் கோரைகளைப்பற்றி சொல்லியிருக்கிறீர்கள். நெல்லைப்போலவே வயலை நிறைத்து வளரும், ஆழ உழுகையில் கிழங்குகள் துண்டாகி அத்தனை துண்டுகளிலிருந்தும் ரக்தபீஜனைப்போல முளைத்து வளர்ந்து வயல் முழுதும் நிறையும் தாவரவியலில் Cyperus rotundus எனப்படும் கோரை. 92 நாடுகளில் பரவி 52 மிக முக்கியமன உணவு மற்றும் உழவுப்பயிர்களுக்கு இடையூறு செய்யும் களைகளில் மிக முக்கியமானதும் ’one of the world’s worst weeds’. என்று குறிப்பிடப்படும் sedge எனப்படும்  மிகசுவாரஸ்யமான ஒரு களைச்செடி.

தாவரவியலாளர்களால் இக்கோரை ஹவாய் தீவுகளில் முதன் முறையாக 1850ல் கண்டறியப்பட்டு பதிவு செய்யபட்டதாக சொல்லப்படுகின்றது.

கோரையின் கிழங்குகள் மண்ணிற்கடியிலும் பக்கவாட்டிலும் எல்லா திசைகளிலுமாக வளர்ந்து ஒரு கிழங்குத்துண்டிலிருந்து சுமார் 600 செடிகள் வரை வளர்ந்து ஒரு குழுவாக அடர்ந்து காணப்படுவதால் Colonial  grass என்றே விவரிக்கப்படுகின்றன.. கிழங்குகளின் dormancy period அதிகமென்பதால் மண்ணிற்கடியிலேயே ஆழப் புதைந்திருந்தாலும்   7 வருடங்களுக்குப் பிறகும் முளைக்கும் திறனுள்ளவை. நல்ல வளமான மண்ணில் ஒரே வாரத்தில் 20 முதல் 30 லட்சம் கிழங்குகள் வரை வளர்ந்து விடும். கோரை 20 முதல் 90 சதமானம் பயிர்களின் விளைச்சலை குறைத்துவிடும்.

2000 வருடங்களாகவே இக்களை உலகெங்கும் மிக வேகமாக பரவியிருக்கிறது ஆப்பிரிகாவிலும் சீனாவிலும் உணவு மருந்து மற்றும் நறுமணத்தைலங்கள் தயாரிக்க இக்கோரை  பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மெலிதான கசக்கும் சுவையுடைய கிழங்குகள் பஞ்ச காலத்தில் உணவாகியிருக்கிறது.

கோரையைப்பற்றிய முதல்குறிப்புக்கள் சீன மருத்துவ நூலில் முதன்முதலில் கிறிஸ்துவுக்கு  500வருடங்களுக்கு முன்பே குறிப்பிடப்பட்டிருக்கிறது .

மருத்துவப் பயனுடைய இக்கிழங்குகள் முத்தக்காசு எனக் குறிக்கப்பெறுகின்றன. கோரையை முற்றிலுமாக அழிக்க முடியாது அவ்வபோது கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே பெரும் முயற்சிகளுக்கு பின்னர் சாத்தியம்.

பண்டைய இந்தியாவில் கோரையைக் கட்டுப்படுத்த பன்றிகளை வளர்த்திருக்கிறார்கள். ஒரு பன்றி 5 கிலா வரையிலும் கிழங்குகளை அகழ்ந்தெடுத்து விடுவதால் கோரைகளை இவற்றின் மூலம் பெரிதும் கட்டுக்குள் கொண்டு வரமுடிந்திருக்கின்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சாய்க்காட்டில் கோச்செங்கட்சோழன் கட்டிய குயிலினும் இனிமொழியம்மை உடனுறை சாயாவனேஸ்வரர் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகின்றது.

இதன் இலக்கியபெயர் எருவை, சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும் எருமைகளின் காலில் மிதிபட்டு கோரைகள் மடியும் என்கிறது பெரும்பாணாற்றூப்படை (கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செறுவில் தோன்றும் நாடன்).

ஐங்குறுநூறு இதனை பைஞ்சாய் என்கிறது. கோரைப்புல்லில் பாவைகளை செய்யும் வழக்கமும் முன்பு இருந்திருக்கின்றது.

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5 (நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்).

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன

நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/1,2 (பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்,)

தாவரவியலில் களை என்பது a right plant in a wrong place. இத்தனை செழித்து வளரும், மருத்துவபயன்களுள்ள இக்கோரையை கிழங்குகளின் மருத்துவ பயன்களுக்காக  இப்போது தனியே சாகுபடி செய்கிறார்கள் ஆயுர்வேதத்தில் பல முக்கியமான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது

சர்க்யூட்களை லூப்களை ஓலைபேசி எக்சேஞ்ச் தொழில்நுட்பங்களை, பத்தாமரி கட்டுமானத்தை, குற்றங்களை, விசாரணையை, உழவியலை உளவியலை, பறவைகளை, விலங்குகளை, மாடனைப்போல எழுந்து நிற்கும் டவர்களை, குருவி கூடுகட்டும் நுட்பத்தை, காதலை, களமெழுதுதலை, கதகளியாட்டத்தை, சமையலை, ஆன்மீகத்தை அன்னைமையை, இறைமையை, வரலாற்றை, தாவரவியலை, இசையின் நுட்பங்களை, என்று  பல்கழைக்கழகங்கள்  பல ஆண்டுகள் கற்றுத் தரவேண்டியவற்றை  உங்களின் தொடர் சிறுகதையிலும், கதைத்திருவிழாவிலுமாக குறுகிய காலத்தில்  கற்றுக்கொண்டிருக்கிறோம்.

நன்றிகளுடன்

லோகமாதேவி

***

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

சிறகு கதையை வாசிக்கும் இன்றைய இளைஞர்கள் தங்கள் நினைவுகளுடன் இணைத்துத்தான் வாசிக்கமுடியும். இந்தக்கதை நடப்பது எழுபதுகளில். தொண்ணூறுகளில்கூட கதை இப்படித்தான். சைக்கள் அல்ல, வேறுஏதோ ஒன்று. என்னுடைய தோழி ஒருத்தி பாப் கட்டிங்காக தலைமுடியை மாற்றிக்கொண்டதுமே அவளுடைய வாழ்க்கைப்பார்வையே மாறிவிட்டதைப்பற்றிச் சொன்னாள். அவள் முழுக்க விடுதலை அடைந்துவிட்டாள்.

சமீபத்தில் கௌசல்யா-[ சங்கர்] ஒரு பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கண்டேன். அதில் தெரிந்தது ’சிறகு’ தான்

எஸ்.ஆதவன்

***

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம். நலம்தானே?

சிறகு கதை படித்தேன். அற்புதமான கதை. அருமையான தலைப்பு.

ஒவ்வொருவருக்குமே ஒரு கட்டத்தில் குருவிக் குஞ்சிற்குச் சிறகு முளைப்பது போல் ஒன்று தோன்றுகிறது. அவருள் அது ஒளிந்து கொண்டே இருக்கிறது.  அதை நான் உடன்பாடாகவே எடுத்துக் கொள்கிறேன். வெறுப்பு பழிவாங்கல் துரோகம் போன்ற எதிர்மறைகளும் இருக்கலாம்.

அது தனிப்பட்ட திறமையாகவே  இருக்கிறது. அது எந்தக் கலையாகவும் இருக்கலாம். அதைக் கண்டு பிடித்துக்கொள்ளும் அந்த நொடிதான் அவரை மேம்படுத்துகிறது. எப்படிச் சிறகு இருக்கிறது என்பது தெரியாமலே குருவி பயந்துகொண்டே இருந்து பின் சிறகு தனக்கு இருக்கிறது என்றறிந்த அந்த நொடியில் பறந்து வெற்றி அடைகிறதே அதுபோல..

ஆனந்தவல்லி முதலில் பயப்படுகிறாள். சங்கு கைவிட்டுவிடுவான் என்று சொன்னபோதும் மீள இயலாமல் விதி விட்ட வழி என்றெண்ணுகிறாள்.

அப்படி இருந்தவள் சைக்கிள் தன்னால் விட முடியும் என்று நம்பியவுடன்தான் அவளுக்குத் துணிச்சல் எனும் சிறகு முளைக்கிறது. தனியாகவே குஞ்சு பறந்துவிடுவதுபோல தனியாகவே சங்குவின் அப்பாவிடம் புகார் செய்யப் போகிறாள்.

அந்தத்துணிவே, அப்பொழுது முளைத்த சிறகே அவளை உயர் அதிகாரியாக்கி கார் ஓட்டிக்கொண்டு வரும்படி செய்கிறது.  அத்துடன் அவளை அடித்துக் கைவைத்து ஆள நினைத்தவன் அவளிடமே வந்து தன் செயலை முடித்துக் கொள்ளவைக்கிறது.

சங்கு சொன்ன வார்த்தைகளைத் தம் வீட்டுப் பெண்களிடம் தொடர்புபடுத்திக் கொள்ளும்போது கதைசொல்லிக்கு மனம் வலிக்கிறது. அதனாலேயே அவன் ஆனந்தவல்லியிடம் அவன் சங்கு அவளை விட்டுவிடுவான் என்ற உண்மையைக் கூறுகிறான்.

அப்பொழுது சிறகு இருக்கிறது என்பது தெரியாததால் ஆனந்தவல்லி எனும் குருவிக் குஞ்சிற்குத் துணிவு வந்து பறக்கத் தெரியவில்லை.

போஸ்ட் ஆபீஸ் சீல், மற்றும் நாகத்தைச் சாரையென்று நெனச்சேன் என்னும் சங்குவின் வார்த்தைகள் கதைக்கு சுவாரசியம் ஊட்டுகின்றன.

வளவ. துரையன்

***

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

எரிமருள்,மலைவிளிம்பில்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

எரிமருள் இதுவரை வந்த கதைகளிலேயே வேறுபட்ட ஒன்று. வெறும் கவித்துவம் வழியாகவே முன்னகர்கிறது. எரிமருள் கதையின் மையம் என்பது ஒரு கணத்தை துண்டுபடுத்திக்கொள்வது. முன்பும் பின்பும் எதுவுமில்லை.அப்படி ஒரு தருணத்தை துண்டுபடுத்திக்கொண்டால் அது முடிவில்லாமல் வளர ஆரம்பிக்கிறது.

கொடியில் ஒரு புடவையை காணும் கணம். வேங்கை மரமாக, வேங்கைப்புலியாக, பெண்ணாக எல்லாம் அக்கணத்தில் அது மாயம் காட்டுகிறது. அதை எங்கும் பொருத்திக்கொள்ளவில்லை. ஆகவே அது இருந்துகொண்டே இருக்கிறது. விரிந்து விரிந்து வாழ்க்கையாகிறது.

ஆனால் வேங்கைப்புலி என மாறி வேங்கைமரம் வழியாக அது அருகணைகிறது. வாழ்க்கையே ஆன அந்த ஒரு கணம் சாவும் ஆகிறது

ராஜசேகர்

 

அன்பின் ஜெ

வணக்கம்.எரிமருள் மிக உள்ளார்ந்த நடை .அப்படியே அதற்குள் என்னை இழுத்துக்கொண்டது.வேங்கையும் காடும் கொன்றையும் இலைகளும் மரங்களும் ஏனவேறு உலகிற்கு சென்று விட்டேன். எனக்கு மிகவும் நெருக்கமான கவித்துவமான நடை .மிக அற்புதமான கதை.இக்கதை தரும் ஒளி அந்தரங்கமானது.

நீங்கள் தற்பொழுது எழுதும் கதை திருவிழா அத்தனை கதைகளையும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.    நேற்றைய குரு பூர்ணிமா  வெண்முரசு உரையாடல்கள் மிக நன்றாக இருந்தது. இத்தகைய மாபெரும் எழுத்து பணியை முடித்து முடித்துள்ளீர்கள்.

என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்.

அன்புடன்

மோனிகா மாறன்

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

மலைவிளிம்பில் கதையின் மாயம் என்பது அதை இருபக்கமும் சரி எனச் சொல்லமுடியாது என்று தோன்றுவதுதான். கதையை வாசித்துவந்தபோது அவன் கொல்லாமல் திரும்புவதைக் கண்டு ‘ஆமாம், இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று சொல்லத் தோன்றியது. ஆனால் அவன் திரும்பவில்லை என்று அறிந்தபோது ஆமாம் அங்கேதான் இருப்பான் என்றும் தோன்றியது. நம் மனமே இரு இடங்களிலும் இருந்து இரண்டையும் நடிக்கிறது.

முடிவெடுக்கமுடியாததுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய துயரம். நான் யோசித்துப்பார்க்கிறேன். என் வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் போகிறபோக்கில்தான் எடுத்திருக்கிறேன். யோசித்தால் முடிவெடுக்கவே முடியாது. ஆனால் நாம் எதையாவது யோசித்துக்கொண்டும்தான் இருக்கிறோம்

ஜெயக்குமார்

 

அன்புள்ள ஜெ

மலைவிளிம்பில் கதையின் அழகு என்பது படிப்படியாக விதி அந்த சுருக்கை உருவாக்கி உள்ளே கொண்டுசெல்வதன் சித்திரம்தான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் வாழ்க்கையின் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன். பெரிய இழப்பு. ஆனால் உண்மையில் அந்தச் சுருக்கை நோக்கி நானே சென்றேன். இப்போது யோசிக்கும்போது எல்லாம் சேர்ந்து மிகச்சரியாக அந்தச் சந்தர்ப்பத்தை நுணுக்கமாகத் திட்டமிட்டு அமைத்ததுபோலத் தெரிகிறது.

அந்த கொலை நோக்கி அவன் செல்லும் அந்த பயணம் அவனால் தவிர்க்கவேமுடியாது. கதை open ended ஆக உள்ளது. அந்த முடிவை நாம் கற்பனையில் விரிவாக்கிக்கொண்டால்தான் இந்தக்கதை விரிவாகும். அவன் கொல்வானா கொல்லமாட்டானா? இரண்டுக்கும் சாத்தியம் உண்டு. ஆனால் கண்டிப்பாக கொல்வான். கொன்றபின் ஏன் அதைச் செய்தோம் என்று எண்ணி எண்ணி நொந்துகொள்வான். அப்படி நன்றாகவே தெரிந்ததே, இருந்தும் ஏன் செய்தேன் என்று வியந்துகொள்வான். இதுதான் வாழ்க்கையில் எப்போதுமே நடக்கிறது

ஜி.பாண்டியராஜ்

கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]

கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்

விசாரணை.- போகன் சங்கர்

$
0
0

“சார் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. ஏன் அப்படி ஒரு கட்டுரையை எழுதினீங்க?”

“ஜெயமோகன் ரொம்ப மோசமான ஆளுங்க.”

“ஜெயமோகனை விட்டுருங்க. கட்டுரையைப் பத்தி மட்டும் பேசுவோம். அந்த கட்டுரைல உள்ள மாதிரிதான் கள யதார்த்தம் இருக்குன்னு சொல்றீங்களா?”

“ஜெயமோகன் ரொம்ப மோசமான ஆளுங்க.”

“அது பாமகவோட நிலைப்பாட்டை நியாயப் படுத்தற மாதிரி இருக்கே?”

“ஜெயமோகன் ரொம்ப மோசமான ஆளுங்க.”

“அப்போ இந்த ஆணவக் கொலை மேட்டர் பத்தில்லாம் நீங்க கண்டிச்சது?”

“ஜெயமோகன் ரொம்ப மோசமான ஆளுங்க.”

“சார் சப்ஜக்ட் ரொம்ப டிஸ்ட்ரெஸ்சா இருக்காரு. மயக்கம் போட்டு வுளுந்துடுவாரு போலிருக்கு. விசாரணையை நாளைக்கு வச்சிக்கலாம்.”

“யோவ் எனக்குதான் மயக்கம் வந்துடும் போலிருக்கு. ஒரே பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருக்காரு. கடைசியா ஒரே ஒரு கேள்வி மட்டும் நான் கேட்டுக்கறேன். நடுவில எப்பவாவது நீங்க மனம் திருந்திட்டேன். அந்தக் கட்டுரை சும்மா லுலுவாச்சிக்கு எழுதினதுன்னு சொல்லிருக்கீங்களா?”

“ஜெயமோகன் ரொம்ப மோசமான ஆளுங்க.”

***


‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்

$
0
0

ராஜன் குறை என்பவர் யார்?

‘திராவிட மனு’

திராவிட மனு- இரு எதிர்வினைகள்

முகநூலில் இருந்து என் பார்வைக்கு வந்த மூன்று குறிப்புகளை எடுத்து அளிக்கிறேன் இக்குறிப்புகளை நான் அளிப்பதற்குக் காரணம் ஒன்றே. இத்தகைய அப்பட்டமான நாஸி ஆவணம் வெளியாகி, தலித்மக்களின் எதிர்காலத்தின்மீதே நிழலாகக் கவிந்த பின்னரும்கூட, அது இத்தனை அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, இங்குள்ள கணிசமான ‘அறிவுஜீவிகள்’ தங்கள் இடைநிலைச்சாதி மனநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். இந்த ஆவணத்தை அப்படியே கடந்துசெல்கிறார்கள். ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. ஒரு சிறு வருத்தம்கூட இல்லை.

அதற்கு அவர்கள் சில பாவனைகளை மேற்கொள்கிறார்கள். ஒன்று, இது முழுக்கமுழுக்க நான் உருவாக்கும் ஒரு ‘வம்பு’ என்றும் ராஜன் குறைக்கும் எனக்கும் இடையேயான ஒரு சண்டை இது என்றும் நிலைபாடு எடுக்கிறார்கள். ‘இதற்கு ராஜன்குறை பதில்சொல்வார், ஆனால்…’  கடந்துசெல்கிறார்கள்.

இரண்டு, இருபதாண்டுக்காலம் முன்பு எழுதப்பட்ட கட்டுரை ஏன் இப்போது ஜெயமோகனால் சுட்டிக்காட்டப்படுகிறது, அதன் அரசியல் என்ன என்று ஒரு கேள்வியுடன் நிலைகொள்கிறார்கள்.

மூன்று, இந்தக்கட்டுரையில் தலித்துக்களின் அவலநிலை எப்படி உருவாகிறது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது, ஆய்வுக்கட்டுரையை வாசிக்க அறிவில்லாதவர்கள் சொல்வது இது என்கிறார்கள்.

நான்கு, அக்கட்டுரையை எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதவில்லை, அதில் மார்க்ஸிய ஆய்வுமுறை இருக்கிறது என்றெல்லாம் பல ஊடுவாதங்களை முன்வைக்கிறார்கள்.

ஆனால் மறந்தும்கூட இந்த கட்டுரையை அவர்கள் நிராகரிக்கவில்லை. அதிலிருந்து விலக்கிக்கொள்ளவில்லை. ராஜன் குறையை குற்றம் சாட்டவில்லை. அவரை பாதுகாக்க திரண்டு நிற்கிறார்கள்.

ஏனென்றால் இக்கட்டுரையின் உள்ளடக்கமான தலித்வெறுப்பே இவர்களின் உண்மையான நம்பிக்கை. தங்களுக்குள் இவர்கள் பேசிக்கொள்ளும் மதிப்பீடு அதுதான். அதை உருவாக்கி அளித்ததால்தான்  ராஜன் குறையையும் ஜெயரஞ்சனையும் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள்.

ராஜன் குறையை பொறுத்தவரை இக்கட்டுரையை ‘எப்படி வாசிக்கவேண்டும்’ என்று வகுப்பெடுப்பாரே ஒழிய இதை அவர் கடந்துவந்துவிட்டதாகக் கூட சொல்லமாட்டார். ஏனென்றால் இடைநிலைச் சாதியின் ஆதரவை இக்கட்டுரை வழியாகவே அவர் திரட்டிக்கொண்டிருக்கிறார்.

அ. இக்கட்டுரையை ‘திடீரென’ நான் கொண்டுவரவில்லை. ஏற்கனவே டி.தர்மராஜ், லட்சுமணன், ஏ.பி.ராஜசேகரன் என பலர் சுட்டிக்காட்டி கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள் என அறிகிறேன். தொடர்ச்சியாக அவர்களால் இக்கட்டுரையால் தலித்துக்களுக்கு உருவாக்கிய அழிவு சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அழிவு பெருகிக்கொண்டே செல்லச் செல்ல மேலும் மேலும் இக்கட்டுரையை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பின்போதுகூட இக்கட்டுரை உருவாக்கிய மனநிலை பற்றி தலித் ஆய்வாளர்கள் கொதிப்புடன் பேசியிருக்கிறார்கள். இக்கட்டுரை நம் சூழலில் நாடகக்காதல் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி நிறுவியது என்பது நான் சொல்வது அல்ல, முதன்மை ஆய்வாளர்களால் சொல்லப்பட்டது. ராஜன் குறை கூட்டணி அதை பொருட்படுத்தவேயில்லை.

ஆ.இக்கட்டுரையின் அழிவுத்தன்மையைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்கள் ராஜன் குறையை விட தகுதியான முதன்மையான ஆய்வாளர்கள். டி.தர்மராஜ் தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர். இவர்களைப்போல பல்கலைக் கழக தொடர்புகள், என்.ஜி.ஓ நிதிக்கொடைகள் ஆகியவற்றின் வழியாக ஊடகச் செல்வாக்கு கொண்டவர் அல்ல, அவ்வளவுதான்.

இ. எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மனைவி ஆனந்தி இதன் ஆசிரியை. எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மின்னஞ்சலில் வெளிவந்தது. அவருக்கு வழிகாட்டுறுத்தலுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, ராஜன் குறையே இதை அவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனுக்காக செய்தார் என என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஈ. ‘ஜெயமோகன் இதை முன்வைப்பதனால் நான் சந்தேகப்படுகிறேன்’ என்று சொல்பவர்கள் இதையே முதன்மை ஆய்வாளர்கள் ஏற்கனவே பத்தாண்டுகளாகச் சுட்டிக்காட்டியபோது என்ன செய்தீர்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

உ. இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை நீங்கள் ஏற்கிறீர்களா இல்லையா என்பது மட்டும்தான் கேள்வி. இத்தகைய இழிவான மனுநீதி ஒன்று வகுக்கப்பட்டு தலித்துக்கள் மேல் சுமத்தப்பட்டதை ஆதரித்தபின் நீங்கள் பேசும் சமூகநீதிக்கெல்லாம் என்ன அர்த்தம்? நண்பகளே எந்த சமாளிப்பும் செல்லாது, இந்த நாஸிஸ கட்டுரையை நீங்கள் உண்மையில் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்கள் நேர்மையும், மனசாட்சியும்.

ஊ. நான் இப்போது இதை முன்வைப்பது ஏன்? இந்த வாட்ஸப் குறிப்புகள் என் கைக்கு வந்தது எப்படி என்றால் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு வழக்கு குறித்த செய்திகளை தேடி நீதித்துறை சார்ந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீதிமன்றச் சூழலில் இக்குறிப்புகள், இக்கட்டுரையின் சாராம்சம், மறைமுகமாகச் செலுத்திய செல்வாக்கைப் பற்றிச் சொன்னார்கள். அவர்களிடமிருந்தே இதைப்பெற்றேன். விசாரித்தபோது ஆணவக்கொலை சார்ந்து நிகழும் ஒரு கேரள வழக்கிலும் இந்த கட்டுரை மறைமுகச் செல்வாக்காக செயல்படுகிறது என்றனர்.

என்னிடம் பேசியவர் இதை அறிஞர்கள் களஆய்வில் கண்டுபிடித்த  அப்பழுக்கற்ற ஆய்வுண்மை என நம்பி, தன் தரப்பை நிரூபிக்கும் ஆதாரமாகத்தான் அனுப்பினார். எனக்குத்தான் திகைப்பாக இருந்தது. இப்படி ஒரு நாஸி ஆவணம் உருவாக்கப்பட்டு, இப்படி பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கையில் அதை இத்தனை எளிதாக தமிழ்ச்சூழல் கடந்துசெல்கிறது என்பது திகைப்பூட்டியது.

இதை பதிவுசெய்வோம், இது தன் கவனத்திற்கு வரவில்லை என்று எவரும் சொல்லவேண்டியதில்லை என்று நினைத்தே இதை முன்வைத்தேன். இதை இங்கே தலித் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்கள், உடுமலை சங்கர் தீர்ப்பை ஒட்டிக்கூட இது பேசப்பட்டிருக்கிறது என்று அப்போது தெரியாது.

இக்குறிப்புகளை இங்கே அளிப்பது என்னவகையான எதிர்வினையை இங்கே அது உருவாக்கியிருக்கிறது என்பதை காட்டுவதற்காக.

முகநூலில் ஏ.பி.ராஜசேகரன் AB Rajasekaran

முகநூலில் முதன்முறையாக அக்.2018ல் ஆனந்தி, ராஜன் குறை, ஜெயரஞ்சன் கட்டுரையை பகிர்ந்திருந்தேன். அதற்கு பிறகு இரண்டு முறை பகிர்ந்தேன். நாமெல்லாம் ஒன்னு தெரியாதவன் வாயில மண்ணு போராளிகள் ஒருவர் கூட அந்த கட்டுரையை அன்று கண்டிக்கவில்லை. இன்று ஜெயமோகன் பகிர்ந்தவுடன் ஜெயமோகனை விளாசுகிறார்களே ஒழிய இப்போதும் அந்த கட்டுரை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

எவ்வளவு சப்பைக்கட்டுகள்? ஆச்சரியமாக இருக்கிறது நம் போலி முற்போக்காளர்களை நினைத்தால். அவ்வளவு creativity. 20 வருடம் கழித்து அந்த கட்டுரையை பற்றி பேச வேண்டிய அவசியமென்ன, அதில் எம்.எஸ்.எஸ். பாண்டியன் பெயர் இல்லையே, அவர்கள் சிறு வயதில் எழுதினார்கள் இப்போது திருந்திவிட்டார்கள், அந்த கட்டுரையை படித்து புரிந்துகொள்ளும் அளவிற்கு தலித்துகளுக்கு அறிவில்லை, ராஜன் குறை யார் தெரியுமா?, அவர் சினிமா பற்றி என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?, இந்த கட்டுரை பற்றி இப்போது பேசுவது ஒரு ப்ரோஜெக்ட், காசு வாங்கிகொண்டு எழுதுகிறார்கள்… இந்த லிஸ்ட்ட முடிக்கவே ஒரு டைப்பிஸ்ட்ட வேலைக்கு வைக்க வேண்டும். இப்படி முட்டுக்கொடுக்கும் ஒருவராவது அந்த கட்டுரையை பெயரளவிற்காவது கண்டித்திருக்கிறாரா என்று பார்த்தால் ஏமாற்றமே.

அவர்களுக்கு கட்டுரை ஏன் எந்த அதிர்ச்சியும் ஏற்படுத்தவில்லை என்றால் அவர்கள் தலித்துகளை பற்றி நினைப்பதையே கட்டுரையாளர்கள் அழகாக எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள் போலும்.

முகநூலில் எழுத்தாளர் வாசுகி பாஸ்கர்

எழுத்தாளர் ஜெயமோகன் தனது பிளாக்கில் ராஜன்குறை குறித்த கேள்வியொன்றுக்கு நேற்று பதிலளித்திருந்தார், அதன் பிற்பாதியில் ராஜன்குறை 2002 ஆம் ஆண்டு EPW இதழுக்கு எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டியிருக்கிறார். இவ்விவகாரத்திற்குள் போகும் முன் சிலவற்றை தெளிவுப்படுத்த வேண்டிய அவசியமிருக்கிறது. ஜெயமோகன் குறிப்பிடுவதைப் போல அந்தக் கட்டுரையை ராஜன்குறையோடு MSS பாண்டியன் இணைந்து எழுதவில்லை, ராஜன்குறை, ஆனந்தி மற்றும் ஜெயரஞ்சன் எழுதிய கட்டுரை அது. MSS பாண்டியன் புரவலராக இருந்திருக்கலாம், உதவியிருக்கலாம், அவர் மனைவி S.ஆனந்தியும் எழுதியிருப்பதால் பாண்டியனின் இ-மெயிலில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி பாண்டியனுக்கும் கட்டுரைக்கும் எந்த தொடர்புமில்லை. ஜெயமோகன் பதிவில் இத்தகவல் பிழைகளோடு ராஜன்குறைக்கு பதிலடி கொடுப்பதற்கான அவசரமிருப்பதை உணர முடியும். அது அவர்களது தனிப்பட்ட பிரச்சனை விஷயம் அதுவல்ல.

2002 ஆம் ஆண்டு திராவிட அறிவுஜீவி ராஜன்குறை, S.ஆனந்தி, பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் ஆகிய மூவரும் இணைந்து எழுதிய அந்தக் கட்டுரை தற்போது பரவலாக படிக்கக் கிடைக்கிறது, இப்பதிவு அக்கட்டுரை குறித்ததல்ல என்பதால் அதன் சாராம்சத்தை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை ஆய்வுப்பகுதியாக கொண்டு Work , Caste and Competing Masculinities என்கிற கட்டுரையில் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பத்து வருடம் கழித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தலித் இளைஞர்களை நோக்கி நாடக காதல் உள்ளிட்ட என்னென்ன குற்றச்சாட்டை வைத்தாரோ அதே கருத்தை தான் மூன்று அறிவுஜீவிகளும் சேர்ந்து ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர்.

  1. இடைநிலைச் சமூகப் பெண்கள் படிக்காமலிருப்பதற்கும் படிப்பைத் தொடர முடியாமலிருப்பதற்கும் காரணம் தலித் இளைஞர்கள்.

2. தலித் இளைஞர்கள் எந்த வேலைக்கும் செல்வதில்லை காரணம் பணிபுரிகிற கம்பெனிகளில் திருடுகிறார்கள்.

3. மேல்சாதி பெண்களை நாகரீக உடை உடுத்தி காதலில் வீழுத்துவதை குறிக்கோளாகவும் போட்டியாகவும் கொண்டிருக்கின்றனர்.

இவையெல்லாம் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பவை, இது எழுதப்பட்ட காலத்திலிருந்து தலித் தரப்பில் வெவ்வேறு காலச் சூழல்களில் பதிலடி கொடுக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது, நேற்று ஜெயமோகன் தொட்டுக்காட்டிய பிறகு இக்கட்டுரைக்கான விளக்கத்தை பின்னொரு நாள் தருவதாக ஒரு வரியில் கடந்து இது ஜெயமோகனின் தனிப்பட்ட தாக்குதல் என்று முழுப்பதிவை அலங்கரித்திருக்கிறார் ராஜன்குறை. தலித் இளைஞர்களுக்கு எதிராக புனையப்பட்ட வன்மத்திற்கு அவர் கொடுக்கப்போகும் விளக்கம் ஒருபுறமிருக்க ஆச்சரியப்படத் தக்கவர்கள் தமிழக முற்போக்காளர்களும் இலக்கியவாதிகளும் தாம். ராஜன்குறையின் கட்டுரையை இலகுவாக கடந்து இதை ராஜன்குறை vs ஜெயமோகன் என்று நபர் பிரச்சனையாக குறுக்கி, ராஜன்குறை பக்கமிருப்பதை அறமாக கடந்து போகிறார்கள். கட்டுரையைப் பற்றி மூச்சு பேச்சில்லை. முற்போக்கு அரசியல் தளத்திலும் எண்ணற்ற இலக்கிய எதிரிகளையும் உருவாக்கி வைத்திருக்கும் ஜெயமோகனின் எதிரிகள் தங்களது பழைய பகையை தீர்த்துக் கொள்வதற்கான போட்டியில் கிடப்பில் போடப்பட்டது என்னவோ தலித் சமூகத்தை பற்றியான திராவிட அறிவுஜீவிகளின் சித்தரிப்பு தான்.

வெவ்வேறு காலச் சூழலில் தலித் தரப்பு இதை சுட்டிக்காட்டிய போதெல்லாம் மௌனத்தோடு கருத்தேதும் இல்லாமல் கடந்தவர்கள் ஜெயமோகன் சுட்டிக்காட்டியதும் அணித் திரள்வதை பார்க்கையில் இது நபர் சம்மந்தப்பட்டதாகவும், கருத்திற்கோ கோட்பாட்டிற்கோ இங்கே இடமில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. ராஜன்குறையை குற்றஞ்சொல்லவோ அல்லது தலித் தரப்புக்கு ஆதரவாகவோ எழுத ஜெயமோகன் தகுதி இழப்பவராகட்டும் ஆனால் எல்லா விதமான தகுதிகளுடையவர்கள் ஏன் இத்தனை ஆண்டுக் காலம் மௌனம் சாதித்தார்கள்? சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்? இந்தக் கட்டுரை குறித்த அவர்களது மதிப்பீடு என்ன? இப்போதும் கூட ஜெயமோகன் இதை குறிப்பிடாமல் ஒரு தலித் குறிப்பிட்டு எழுதியிருந்தால் அதே மௌனத்தோடு கடப்பார்கள், இம் மனநிலை நமக்குணர்த்துவது ஒன்று தான். ஜெயமோகனை இவர்களெல்லாம் வெளிப்பார்வைக்கு எதிர்த்து வந்தாலும் ஜெயமோகன் ஒரு விமர்சனத்தை முன் வைக்கும் போது அதற்கொரு பொது அடையாளம் கிடைக்குமென்கிற பதட்டமிருக்கிறது, ஜெயமோகனுக்கு அந்த திராவிட அந்தஸ்த்து அவரது எதிரிகளாலவே கொடுக்கப்படுகிறது. ஜெயமோகன் இவர்களுக்கு தேவைப்படுகிறார், ஜெயமோகனின் பின்னால் மொத்தத்தையும் ஒளித்துக் கொள்ள அந்த பிம்பம் பெருந்துணை புரிகிறது.

சமூக மற்றும் பொருளாதார விடுதலையை நோக்கிய வஞ்சிக்கப்பட்ட பெருஞ்சமூகத்தின் தலைமுறை இளைஞர்களை வன்மத்தின் உயரந்தொட்டு சித்தரித்து கட்டுரை எழுதியவர், அதற்கான விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது பழகியமைக்காக மொத்த விவாதத்திலிருந்து விலகிக் கடப்பதும் கூட ஒரு வகையில் ஆதரவு தான், ஆனால் இங்கு ஜெயமோகன் கேள்விக்குள்ளாவதிலிருந்து ராஜன்குறை தப்பிப்பதோடு அவரோடு அவரெழுதிய கட்டுரையும் தப்பிப் பிழைக்கிறது. ஜெயமோகனின் நோக்கத்தை விரல் நீட்டி அடையாளம் காட்டும் ஒருவர் கூட ராஜன்குறை, ஆனந்தி, ஜெயரஞ்சன் அவர்களது நோக்கத்தை கேள்வி கேட்பதற்கில்லை, எந்தச் சூழலிலும் கேட்கத் துணியாதவர்கள். சாதிச் சங்கத்தில் கலக்கலாம், நிர்மலா சீத்தாராமனுக்கு கவி பாடலாம், தலித் இளைஞர்களை ஆணாதிக்க குண்டர்கள் எனலாம், எல்லா விதமான சலுகைகளும் இங்குண்டு, ஆனால் அவர்கள் ஏதோவொரு வகையில் திராவிட அதிகாரத்திற்கு துணைப் போகிறவர்களாக இருக்க வேண்டும், முற்போக்கு முத்திரை நிரந்தரம்.

பசியும் பட்டினியும் வெவ்வேறு என்பதை போல தலித்தல்லாத ஒருவர் இக்கட்டுரையை படிக்கிற போது தம்மை அதிலிருந்து விலக்கிப் பார்ப்பதே யதார்த்தம், அந்த யதார்த்தத்திலிருந்து மீறி அதை உணர முயற்சிக்க திறந்த மனதோடு ஒரு உரையாடலுக்குத் தயாராக வேண்டும், உள்ளதை உள்ளபடி இரண்டு பக்கமும் படித்து நேர்மையான ஒரு முடிவுக்கு வர வேண்டும், அது ஜனநாயகத்தின் முதற்படி, ஆனால் முற்போக்குப் போர்வையில் தன் யதார்த்தத்தை மறைத்து ஏமாற்றிக்கொள்ளும் பாசாங்கு தமிழகத்தின் சமூகநீதி அம்சங்களில் ஒன்று.

ஒவ்வொரு தலித்தும் அரசியல் தெளிவு பிறக்கும் போது பல்வேறு கால சூழல்களில் விவாதத்திற்கு உள்ளானதைப்போல இக்கட்டுரை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகும், ராமதாஸ் பேசப்படுவார், திராவிட இயக்க போதாமைகள் அலசப்படும், இளவரசன் நினைவில் வருவான், போதாமைகளை ஒப்புக்கொண்டு எதிர்கால மாற்றத்திற்கான கை குலுக்கலில் இருக்கிறது நம்பிக்கை, ஆனால் அது என் தலைமுறையில் நடக்கப்போவதில்லை, அடுத்த தலைமுறைக்காவது ஒரு சிறு கண்டனத்தை பதிவு செய்து விட்டு உரையாடுவார்களா பார்ப்போம், ஜெயமோகன் விலகலாக ஒரே ஒரு விளக்கக்கட்டுரை, பொறுத்திருப்போம்.

முகநூலில் ராவணன் அம்பேத்கர்

கொண்ட காதலுக்காக கொல்லப்பட்ட இளவரசனின் நினைவுநாளில் அவன் ஏன் கொல்லப்பட்டான் என்பதையும் நாம் நினைவுகூற வேண்டியுள்ளது. ஆனந்தி, ராஜன்குறை, நமது மீடியாக்களின் டார்லிங் ஜெயரஞ்சன் ஆகியோர் கூடி வாசிங்கடன் சூத்திரர்களில் வழி பணம் பெற்று திராவிட அறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் ஈ.பீ.டபிள்யுவில் எழுதிய இந்த ஆய்வறிக்கைதான் முதன் முதலில் தமிழகச் சூழலில் நாடகக் காதல் எனும் கருத்தாக்கத்தை விதைத்தது.

மாறி வரும் சமூக பொருளாதாரச் சூழலில் தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு உயர் சாதிப் பெண்களை காதலித்து தம் ஆண்மையை நிரூபிக்க கிளம்பியுள்ளார்கள் எனும் நச்சுக் கருத்தை பரப்பியது. பின்னர் அது ராமதாஸ் போன்ற சூத்திர சாதியினரால் தமது சமூக அரசியல் பலத்தை பெருக்கிக் கொள்ளவும் தலித் மக்கள் மீது வன்முறையை கட்டவீழ்த்து விடவும் வழிகோலியது.

ஏதோ ஒர் கிராமத்துக்கு சென்று சிலரிடம் பேசி சரக்கடித்துவிட்டு விட்டு அவர்கள் அரசல் புரசலாக புறணி பேசும் பேச்சுகளையே ஏதோ சர்வதேச ஆய்வாக நிறுவியிருக்கார்கள். உதாரணத்துக்கு பக்கம் 4401ல் பாருங்கள். பஸ் ஸ்டாண்டில் நிற்கும் ஒரு தலித் இளைஞன் மற்றொருவனிடம் பஸ்சில் அமர்ந்திருக்கும் பெண்ணை ‘கலாய்ச்சு அனுப்பு’ என்கிறானாம். இது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் இதன் அர்த்தம் வட தமிழகத்தில் வாழும் சாதாரண சிறுவனுக்கு கூட ‘கிண்டல் செய்து அனுப்பு’ என்று தெரியும். ஆனால் இந்த தில்லி அறிஞர்கள் அதை கலைச்சு அனுப்பு என்பதாக திருத்தி வன்மமாக ‘send her dishelved’ என்று முழிப்பெயர்க்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட திரவுபதியை துகில் உரியும் துரியோதனன்/துச்சாதனன் அளவுக்கு தலித் இளைஞர்களை மட்டமாக்குகிறார்கள். இதுதான் இந்த திராவிட ஆய்வறிஞர்களின் அறிவு நாணயம்.

இப்படி இவர்கள் எழுதி தள்ளியதைத்தான் தமிழக சூத்திர பொதுமனம் உள்வாங்கி இன்றளவும் தலித் இளைஞர்களையும் மக்களையும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

அப்புறம் சில அப்ரசண்டிகள் இருக்கிறார்கள். இந்த திருட்டு திராவிடர்களை நாம் அம்பலப்படுத்தினால் அதை பெரியாருக்கு எதிராக திசை திருப்பி ஒப்பாரி வைப்பதற்கென்றே. அவர்களுக்கு மனசாட்சி அறிவு என்று ஏதாவது மிச்சம் இருந்தால் இந்த சோ கால்ட் ஆய்வறிக்கையை முழுதும் படித்து விட்டு தங்களை சீர் செய்து கொள்ளட்டும் இல்லையென்றால் சீக்கெடட்டும். நாம் நமது வேலையை செய்வோம்.

[முகநூலில்]

***

கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]

$
0
0

இடம் நினைத்ததுபோல அமையவில்லை. ஏகப்பட்ட புரோக்கர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்ததுமே நான் உள்வாங்கிவிட்டேன். என் ஆர்வம் வற்றிவிட்டதை என்னை அழைத்துச்சென்ற முகுந்தராஜ் உணர்ந்தார். என் கண்களை பார்த்தார். நான் “மறுபடி வருவோம்” என்றேன்.

“சரி சார்” என்று முகுந்தன் சொன்னார்.

நான் நடக்கத்தொடங்கியதும் புரோக்கர்களில் ஒருவர் “பேசிக்கலாம் சார். ஒண்ணும் பிரச்சினை இல்லை. எல்லாம் பேசிக்கலாம்” என்று ஆரம்பித்தார்.

“மறுபடி வரேன்” என்றபடி காரை நோக்கிச் சென்றேன்.

இடத்தின் உரிமையாளர் வீட்டு முகப்பிலேயே நின்றார். புரோக்கர்கள் அவரை நிற்கச் சொல்லிவிட்டு “சார் ஒரு நிமிஷம்! சார், சார், பேசிக்கலாம் சார்” என்றபடி என் காரைச் சூழ்ந்துகொண்டார்கள்.

“வண்டியை எடுப்பா” என்றேன்.

வண்டியை டிரைவர் ஸ்டார்ட் செய்தார். முகுந்தன் முன்னிருக்கையில் ஏறிக்கொண்டார். டவேரா வண்டி. இந்த சாலை மோசம் என்பதனால் அதை கொண்டு வந்திருந்தேன். வண்டி படகுபோல அசைந்தாடி சாலையை அடைந்தது.

”இவ்ளவுகூட்டம் எதிர்பார்க்கலை” என்றார் முகுந்தன்.

“நீர் சொல்லாம எப்டித் தெரியும்? நீர் சொல்லியிருக்கணும்” என்றேன். “இங்க யார்ட்டயும் சொல்லவேண்டாம்னு சொல்லியிருந்தேன்ல?”

“நான் சொல்லலை சார்”

“பொய்… நீர் சொல்லியிருக்கீர்… சொல்லல்லேன்னு சொல்லும் பாப்பம். விசாரிக்கச் சொல்றேன்.”

“சண்முகம் கிட்ட மட்டும் சொன்னேன்”

“சொன்னீர் இல்ல? அவன் புரோக்கர், அவன் வாயிலே நிக்குமா?”

“எதிர்பார்க்கலை” என்றார் முகுந்தன்.

“எதிர்ப்பார்க்கலை… ஆனா நீர் ஏன் சண்முகம்கிட்ட சொன்னீர்னு ஊகிக்கத் தெரியலைன்னா நான் தொழில் செய்ய லாயக்கில்லாதவன்” என்றேன்.

“இல்லை, அப்டி இல்லை… சத்தியமா அப்டி இல்லை.”

“நீர் இங்க என்ன திட்டம் போட்டீர்னு தெரிஞ்சாகணும்.. அதுக்கு பிறகுதான் இந்த டீலிங்.”

“இல்லை சார் சத்தியமா இல்லை.”

“நாம இதைப்பத்தி பேசவேண்டாம்.”

“சார் சத்தியமா.”

“நாம பேசவேண்டாம்” என்றேன். என் உரத்த குரல் அவரை பணியவைத்தது. ஆனால் முகத்தில் ஒரு கணம் குரோதம் வந்து மறைந்தது.

“சரி சார்.”

கார் மண்சாலையில் வளைந்து வளைந்து சென்றது.

“பக்கத்திலே ஓட்டல் இருந்தா நிப்பாட்டு கண்ணன்” என்றேன்.

“இங்க வளைவிலே ஒரு ஓட்டல் இருந்தது சார். கண்ட்ரி ஓட்டல்தான்.”

“பரவாயில்லை” என்றேன். இடத்துக்கு உரிமையாளன் அங்கே சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தான். அதை முன்னரே சொல்லியிருந்ததனால் நான் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. உண்மையில் அங்கே இன்றிரவு தங்கி காலையில் கிளம்புவதாகத்தான் நினைத்திருந்தேன்.

“இங்கயா ஓட்டல்?” என்றேன்.

“இந்த டர்னிங்குக்கு அப்பாலதான் சார்.”

நான் இன்சுலின் மாத்திரையை விழுங்கி தண்ணீர் குடித்தேன். கொஞ்சம் படபடப்பாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டு ஏஸி காற்றை வாங்கி கால்களை நீட்டிக்கொண்டேன். காரின் உலுக்கலில் தலை கொஞ்சம் சுழன்றது.

“சார் என்னை தப்பா நினைச்சுட்டீங்க” என்று முகுந்தன் தொடங்கினார்.

“ஸ்டாப் இட்” என்றேன்.

கொஞ்சம் உரக்கவே கத்திவிட்டேன். அவன் அமைதியானார். வண்டி உலுக்கிக்கொண்டு மேலே சென்றது.

“என்னாச்சு?” என்று நான் கேட்டேன், “என்ன லேட்?”

“சார் என்னமோ வழி தவறிட்டுது…”

“ஏன்?”

“இந்த மண்ணுரோடுதான் சார், இதே பட்டைபூசின பாறை… ஆனா…. ஓட்டல் காணும்”

“ஸ்பீடா வந்ததனாலே நீ பக்கத்திலேன்னு நினைச்சிருப்பே” என்றேன். “சீக்கிரம்போ… நான் மாத்திரை போட்டிருக்கேன்.”

அவன் அக்ஸிலேட்டரை மிதித்தான். வண்டி சீறிக்கொண்டு சென்றது. இருபக்கமும் செழித்த காடு உருகி பச்சைத்தீற்றலாக மாறியது. நான் சற்று கண்ணயர்ந்திருப்பேன் வண்டி நின்றுகொண்டிருப்பதைக் கண்டு விழித்தேன்.

“என்னப்பா?” என்றேன்.

“சார் வழி தவறிப்போச்சு, ரொம்ப வந்திட்டோம்.”

“ஜிபிஎஸ் பாரு.”

“சுத்தமா சிக்னலே இல்லை சார். இந்த ஏரியா சேவிங்லே காட்டவுமில்லை.”

“வந்தவழியே திரும்பு…வேறே என்ன பண்றது?” என்றேன். என் குரல் தளர்ந்திருந்தது. கைகளில் நடுக்கம் வந்துவிட்டது. “டாஷ்போர்டிலே சக்லேட் இருக்கான்னு பாரு.”

ஒருபார் சாக்லேட் இருந்தது. அதை வாங்கி தின்று மீண்டும் தண்ணீர் குடித்தேன். படபடப்பு குறைந்தது.

“நான் சாப்பிடணும்.. மாத்திரையை வேற அவசரப்பட்டு விழுங்கிட்டேன்.”

அவன் யூடர்ன் அடித்து வண்டியைத் திருப்பிக் கொண்டுசென்றான். கார் எம்பி எம்பி விழுந்தது.

“இது என்ன சஸ்பென்ஷன் போயிடுச்சா?” என்றேன்.

“ரோடு மோசம் சார் ”

“சீக்கிரம்போ… என்ன இது.”

கார் விரைவுகொள்ள சட்டென்று எனக்கு ஒரு மயக்கம் வந்தது. ஏதோ நினைத்தேன். அதற்குள் ஓசை மயங்கிவிட்டது. விழித்தபோது தலை தொய்ந்து தோளில் எச்சில் வழிந்திருந்தது. கார் நின்றிருந்தது. கைகளை ஸ்டீரிங்கில் ஊன்றி கண்ணன் அமர்ந்திருந்தான்.

“என்ன? என்ன?” என்றேன்

“ரொம்பதூரம் வழிதவறி வந்திட்டேன் சார். எல்லா பக்கமும் ஒரே மாதிரி ரப்பர்த்தோட்டமா இருக்கு. எல்லா ரோடும் ஒண்ணு மாதிரி இருக்கு… வழியே தெரியல்லை.”

“எதாவது ஒரு பக்கம் போ… யாராவது ஆள்தெரியுதான்னு பார். ஒரு வீடாவது இருக்கான்னு பார்.”

“இல்லசார், அப்டி நினைச்சுத்தான் ரொம்பதூரம் வந்தேன்… இந்த ஏரியாவிலேயே மனுஷநடமாட்டத்தைக் காணல்ல. வீடே இல்ல.”

“போடா… முன்னாலே போடா. வண்டிய இங்க நிப்பாட்டி என்னைய சாவடிக்கலாம்னு பாக்கிறியா?” என்று நான் கூவினேன்.

அவன் வண்டியை மெல்ல முன்னகர்த்தினான். “டேய், வேகமா போடா. சாவடிக்காதடா!” என்று நான் சீட்டில் கையால் தட்டிக்கொண்டே கூச்சலிட்டேன்.

”ப்ளீஸ் சார், இப்ப வழி கண்டுபிடிச்சிடறேன்…” என்று அவன் வண்டியை எடுத்தான்.

“பிஸ்கட் சாக்கலேட் ஏதாவது இருக்கா?” என்றேன்.

“சார்.”

“டேய் பிஸ்கட் சாக்கலேட் ஏதாவது இருக்காடா வெண்ணை?”

அவன் அமைதியாக வண்டியை ஓட்ட முகுந்தன் டாஷ்போர்டை திறந்து பார்த்து “இல்லை சார்” என்றார்.

வண்டி சுழன்று சுழன்று சென்றது. இருபக்கமும் ரப்பர்த்தோட்டங்கள் மறைந்து செறிந்த காடு வரத்தொடங்கியது. அவன் வண்டியை நிறுத்தினான்.

“என்ன?” என்றேன்.

“ரொம்ப காட்டுக்குள்ள வந்திட்டோம் சார்…”

“வண்டியோட்ட தெரியல்லைன்னா நீயெல்லாம் என்ன மசுத்துக்குடா வர்ரே நாயே?” என்று கூவினேன்.

“அப்டின்னா நீங்க ஓட்டுங்க” என்று அவன் கதவைதிறந்து இறங்கி வெளியே சென்றான்.

“சார், சார்” என்று முகுந்தன் பதறினார். “நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்று இறங்கி அவன் பின்னால் ஓடினார்.

அவன் வேகமாக நடந்து சென்றான். அவர் பின்னால் ஓடினார். நான் காரைவிட்டு இறங்கினேன். “செத்துடறேண்டா… அப்ப திருப்தியா? நீங்க ரெண்டுபேரும் பிளான்போட்டு என்னை கொல்லக் கொண்டுவந்திருக்கீங்க… கொல்லுங்கடா நாயிங்களா” என்று கூச்சலிட்டேன்.

“சார் சார்” என்று கண்ணன் கூச்சலிட்டான் “வண்டியிலே ஏறுங்க வண்டியிலே ஏறுங்க…”

“என்னடா?” என்றேன்.

“வண்டியிலே ஏறுங்க சார்.”

அவனுடைய பார்வையைக் கண்டு நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரிய பிடியானை ரோட்டின்மேல் நின்றிருந்தது.

முன்னால் ஓடி கண்ணனை நோக்கிப்போக அங்கே இன்னொரு யானை ஏறிவந்தது. இருபக்கமும் யானைகள் நின்றிருக்க நான் பாய்ந்து காருக்குள் நுழைந்தேன். கதவை மூடிக்கொண்டபோது என் கால்சட்டை சிறுநீரால் நனைந்திருந்தது. உடல் துள்ளித்துள்ளி விழுந்தது.

யானைகள் பிளிறியபடி காரைச் சூழ்ந்துகொண்டன. காரின் முகப்புக்கு வந்து ஒரு யானை உள்ளே பார்த்தது. மண்மூடி சிறிய குன்றுபோலிருந்தது. சாண்நீளமான தந்தங்களும் இருந்தன அதன் கண்களை மிக அருகே பார்த்தேன்.

அப்போது பின்பக்கம் கார் முட்டப்பட்டது. திரும்பிப் பார்த்தேன். இன்னொரு யானை குனிந்து டிக்கியை முட்டிக்கொண்டிருந்தது. கார் அலைமோதியது. சீட்டில் கையை ஊன்றி நான் சரிந்து விழாமலிருக்க முயன்றேன்.

முன்னால் நின்ற யானை பிளிறியது. கண்களை மூடிக்கொண்டேன். சிவப்பும் நீலமுமாக சுழல்கள் தெரிந்தன. வலத்தொடை துள்ளித் துள்ளி விழுந்தது. நெஞ்சு உடைந்துவிடுவதுபோல வலித்தது.

மேலும் யானைகள் வந்து காரைச் சூழ்ந்துகொண்டன. எல்லா திசைகளிலும் இருந்து அவை காரை முட்டின. காரின் கண்ணாடிகளை துதிக்கைகள் துழாவிப்பற்ற முயன்றன. முன்னால் நின்ற யானை காரை மேலே தூக்க நான் சீட்டில் மல்லாந்தேன். ஆனால் அது அலறியபடி காரை படீலென்று தரையில் விட்டுவிட்டு பின்னகர்ந்தது. எஞ்சின் சுட்டுவிட்டது என்று தெரிந்தது. அது வெறியுடன் கூச்சலிட்டுக்கொண்டு துதிக்கைச் சுழற்றியபடி பக்கவாட்டில் ஓட அத்தனை யானைகளும் கூட்டமாக பிளிறின.

கண்ணன் தன் சட்டையை கழற்றி தீவைத்து கையில் தூக்கி சுழற்றியபடி கூச்சலிட்டுக்கொண்டே ஓடிவந்தான். முகப்பில் நின்ற யானை தீயைப்பார்த்ததும் அலறியபடி பின்னால் ஓட அத்தனை யானைகளும் அதனுடன் சேர்ந்து பின்னால் சென்றன.

“சார் இறங்கி ஓடிவந்திருங்க… வந்திருங்க!” என்று கண்ணன் கூவினான்

நான் காரின் கதவை திறக்க முயன்றேன். அது சிக்குண்டிருந்தது.

யானைகள் பின்னால் கூடி நின்று பெருங்கூச்சலிட்டுக்கொண்டிருந்தன. ஒரு யானை துதிக்கை சுழற்றியபடி ஓடி கண்ணனை நோக்கி சென்றது. அவன் அலறலோசை எழுப்பியபடி அந்த எரியும் சட்டையை எடுத்து அதை நோக்கி எறிந்தான்

“சார் வந்திருங்க… வெளியே வந்திருங்க.”

நான் கதவை திறக்கமுயன்றேன். என் கையில் வலுவே இல்லை. யானைகளின் ஓசை மிக அருகே கேட்பது போலிருந்தது. சீட்டில் அமர்ந்து இரண்டு கால்களாலும் கதவை ஓங்கி மிதித்தேன். கதவு திறந்தது. அப்படியே சறுக்கி இறங்கி ஓடினேன். ஒரு ஷூ உதிர்ந்துவிட்டது. இன்னொன்றையும் உதறிவிட்டு மூச்சிரைக்க ஓடினேன். முழங்கால் அடிபட விழுந்துவிட்டேன்.

கண்ணன் என்னை கையைப் பிடித்து தூக்கி கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான். எங்கே என்ன என்று தெரியாமல் நான் உயிர்விசையாலேயே ஓடினேன். பின்னால் யானைகளி பிளிறல் முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

ஒரு பாறை சாலையோரமாக இருந்தது. அதன் இடுக்கின் வழியாக மேலேற இடமிருந்தது. முகுந்தன் ஏற்கனவே அதன்வழியாக மேலே ஏறி பாறை உச்சியில் நின்றிருந்தார். “ஏறி வாங்க. சீக்கிரம் வந்திடுங்க” என்றார்.

நான் புதர்களைப் பிடித்துக்கொண்டு தொற்றி ஏறி பாறைமேல் படுத்து தவழ்ந்து மேலே சென்றேன். என்னால் எழுந்து நிற்கவே முடியவில்லை. புரண்டு அமர்ந்தபோது கீழே யானைக் கூட்டம் காரைச் சூழ்ந்துகொண்டு துதிக்கையால் அறைந்து கொண்டிருப்பதைக் கண்டேன். கார் துள்ளி ஆடிக்கொண்டிருந்தது

பெரிய பிடியானை தன் தலையால் காரை தள்ளி அப்பால் பள்ளத்தில் இட்டது. கார் சரிந்து பின்னர் உருண்டு சற்று சறுக்கி ஒரு புதரில் தயங்கி முன்பக்கமாக கீழிறங்கி ஆழத்தில் விழுந்தது.

யானைகள் எல்லாமே கிளர்ச்சியடைந்து சிறியவால்களை முறுக்கி வைத்திருந்தன. செவிகளை முன்னால் கோட்டியபடி அவை பிளிறலோசை எழுப்பின.

“இங்க உக்காரவேண்டாம்… மேலே வர்ரதுக்கு வழி ஏதாவது இருந்தாலும் இருக்கும்” என்றான் கண்ணன்.

“கீழ எறங்கவா?” என்றார் முகுந்தன்.

“கீழயா? கீழே போனா துரத்தி வந்திரும்… ஒரு யானைக்கு துதிக்கை சுட்டிருக்கு” என்று கண்ணன் சின்னான். “இப்டியே மேலேறிப்போலாம்… இந்த ரோடு சுத்தி அங்கதான் வரும்”

“மேலேயா?” என்றேன்.

“ஆமாசார், வாங்க. வேற வழியில்லை. சாயங்காலம் ஆயிட்டே இருக்கு. நமக்கு ஏதாவது வண்டி கிடைச்சாகணும்”

“என் செல்போன் பர்ஸ் எல்லாமே கார்லதான் இருக்கு” என்றேன்.

“பரவாயில்லை சார், முதல்ல இங்கேருந்து போயிடுவோம். பிறகு ஆளனுப்புவோம்” என்றான் கண்ணன்.

நாங்கள் அந்த சரிவில் புல்பத்தைகளின் அடியில் கால்வைத்து மேலேறினோம். அவ்வப்போது நான் முட்செடிகலை பற்றிக்கொண்டேன்.

நெடுந்தொலைவு மேலேறுவதுபோலிருந்தது. “ரொம்ப போறமோ?” என்றேன்.

“ஹேர்பின் வளைவுன்னா மேலே வருமில்லை?” என்றான் கண்ணன்.

ஆனால் மேலே மீண்டும் மரங்கள் அடர்ந்த ஒரு சோலைதான் வந்தது. கண்ணன் சுற்றும் பார்த்துவிட்டு ஒரு புதரிலிருந்து சிவந்த உருண்ட பழங்களை பறித்துவந்தான். “கொஞ்சம் சாறு இருக்கும் சார். தவிட்டைப்பழங்கள்…சின்னவயசிலே சாப்பிடுவோம்”

நான் ஆவலுடன் அவற்றை வாயிலிட்டு சாற்றை உறிஞ்சி கொட்டைகளை துப்பினேன். ஒரு காயில் ஒருதுளிதான் சாறு. அவன் மேலும் பறித்துவந்தான். மொத்தமே ஒரு அவுன்ஸ் சாறு இருக்கலாம், ஆனால் அதுவே எனக்கு கொஞ்சம் புத்துணர்வை அளித்தது

“எப்டியாவது மேலே ஏறிடுவோம் சார்” என்று கண்ணன் சொன்னான். “இருட்டுறதுக்குள்ள ஏதாவது வண்டியையோ ஆளையோ கண்டுபிடிச்சாகணும்.”

“எந்த நேரத்திலே கெளம்பினேனோ” என்றார் முகுந்தன்.

“ஏன், உம்ம நேரத்துக்கு என்ன?” என்றேன்.

“ஏனா? அங்க சாப்பாடு வச்சிருந்தாங்க. வழிதெரிஞ்சவனுக இருந்தாங்க. பாய்ஞ்சு ஏறியாச்சு, என்னமோ பெரிய இவரு மாதிரி.”

“டேய்” என்றேன்.

“என்ன டேய்? மரியாதையா பேசு… இல்லேன்னா மரியாதை கெட்டுப்போயிரும்.”

“சார் வாயை மூடுங்க” என்று கண்ணன் உரக்கச் சொன்னான். “பேசாம வாங்க”

“இல்ல, சும்மா கடுப்பை கெளப்பிட்டு” என்றார் முகுந்தன்.

“பேசாம வாங்க” என்று கண்ணன் மீண்டும் சொன்னான்.

மேலும் நாங்கள் ஏறிச்சென்றது ஒரு குன்றின் உச்சிக்கு. அங்கிருந்து பார்த்தால் எந்த சாலையும் தெரியவில்லை. அடர்ந்த காடு பச்சைநுரைபோல மலைச்சரிவுகளை மூடியிருந்தது. அசைவில்லாமல் நிற்கும் பிரம்மாண்டமான பச்சை அலைகளைப்போல மலைகள் அடுக்கடுக்காக சூழ்ந்திருந்தன.

“சாயங்காலம் ஆயிடுச்சு…” என்றான் கண்ணன்  “சீக்கிரமே இருட்டிரும்.”

“என்னோட கிரிடிட் கார்டு எல்லாம் அங்க பர்ஸிலே இருக்கு” என்றேன்.

“நாம வந்த வழி அது…” என்று முகுந்தன் சொன்னார். “அந்த ரோடு இப்டி திரும்பலை. அப்டியே வளைஞ்சு எதிர்த்த குன்றுக்கு போகுது. நாம எதிர்த்திசையிலே போயிட்டோம்”

“எறங்கணுமா?” என்றேன்.

“ஆமா, வேற வழி இல்லை. இந்தக் குன்றுமேலே நிறைய யானைச்சாணம் கிடக்கு. இங்க புல்லுதிங்க வரும்னு நினைக்கிறேன்”

“இறங்குறதுதானே? போய்டலாம்” என்றார் முகுந்தன்.

நாங்கள் இறங்கிச் சென்றோம். பாதை என ஏதுமில்லை. வாள்போன்ற அரம்கொண்ட புல் வளர்ந்து இடுப்பு வரை நின்றது.

“சார் இந்தப்புல்லைப் பிடுங்கி அதோட கீழ்நுனியை மட்டும் மென்னு துப்புங்க. கொஞ்சம் சக்கரை உண்டு அதிலே” என்றான் கண்ணன்.

உண்மையில் அதில் மெல்லிய தித்திப்பு இருந்தது. என் நாக்குக்கு அதுவே தேவைப்பட்டது. புல்லின் நடுவிலூடாக இறங்கிச் சென்றோம். இரண்டு இடங்களில் நான் சறுக்கி விழுந்து எழுந்தேன்.

“சார்” என்றான் முகுந்தன்.

தொலைவில் புல்லுக்குமேல் யானைகளின் முதுகுகள் தெரிந்தன.

“இது அந்தக்கூட்டமா?” என்றேன்.

“தெரியல்லை.. அதுவ இருந்தா ஆபத்து. துரத்தி வந்திரும்” என்றான் கண்ணன்.

“எந்த யானையா இருந்தாலும் ஆபத்துதான். நாம அடிச்சிருக்கிற செண்டு பௌடர் வாசனைக்கு.”

அவர் என்னை சொல்கிறார் என்று எனக்குத் தெரிந்தது. ஆனால் கோபம் அடைவதற்குக்கூட என்னிடம் ஆற்றல் எஞ்சியிருக்கவில்லை.

“திரும்பிருவோம்…”

“அங்க போயி என்ன பண்ண? மொட்டைக்குன்று. மழைபெய்ஞ்சாக்கூட ஒதுங்க இடமில்லை.”

“நாம என்ன இங்க தங்கவா போறோம்?”

“வேறவழி?”

“என்னோட டாக்குமென்ட்ஸ் எல்லமே காரிலேதான் இருக்கு… உடைஞ்சு உள்ள தண்ணிகிண்ணி போயிடுச்சுன்னா பெரிய வம்பு” என்றேன்.

நாங்கள் திரும்ப அந்தக் குன்றுக்கு வந்தபோது வானத்தில் ஒளி நன்றாகவே அணைந்திருந்தது. மேகங்கள் நிறைந்த இருந்தமையால் சூரியனைப் பார்க்கமுடியவில்லை. சுற்றிலும் காட்டுக்குள் இருள் நிறைந்துவிட்டது. வானத்தின் விளிம்புகளில் மட்டும் மேகங்களில் சிவப்பு படர்ந்திருந்தது.

“இன்னும் அரை மணிநேரத்திலே இருட்டிரும்” என்றான் கண்ணன்

“எங்க போறதுக்கு இப்ப?” என்றார் முகுந்தன் “ஏதாவது ரோட்டிலே நின்னாக்கூட யாராவது வருவாங்கன்னு எதிர்பார்க்கலாம். இது அத்துவானக்காடு”

“சார், ஒரு நிமிஷம்” என்று கண்ணன் ஒரு பாறையின் இடுக்கைச் சென்று பார்த்தான். அது செம்மண் போன்ற பாறை. அதன் விரிசலில் கருமையாக பசைபோல ஏதோ தெரிந்தது. அவன் சுற்றிலும் பார்த்துவிட்டு ஒரு பெரிய கருங்கல்லை எடுத்து அந்த செம்மண் பாறையை அறைந்தான். அது உடைந்து விழுந்த விரிசலுக்குள் சிறிய தவளை போல ஏதோ இருந்தது

அவன் அதை பிடுங்கி எடுத்தபோதுதான் அது ஒரு சிறிய தேன்கூடு என்று தெரிந்தது. “சிறுதேன் சார்… ஒரு அவுன்ஸ் அளவுக்கு இருக்கும்… அப்டியே புழிஞ்சு வாயிலே விட்டுக்கிடுங்க”

“இதையா?”

“வேறவழியில்லை சார்”

நான் அதை வாங்கி வாயில் பிழிந்து விட்டுக்கொண்டேன். ஒரு அவுன்ஸுக்கும் மேலாகவே இருந்தது. ஒருவகையான புகைந்த அரக்கின் நாற்றம் அடித்தது. ஆனால் கெட்டியான நல்ல தேன். காய்ச்சிய தேன் போலன்றி கொஞ்சம் புளித்தது.

“வாங்க” என்று கண்ணன் சொன்னான். மீண்டும் குன்றின் உச்சியை அடைந்தோம்.

“ஒருவேளை இங்கே சிக்னல் கிடைக்கலாம்” என்று முகுந்தன் சொன்னார்.

“செல்போன் இருக்கா?” என்றான் கண்ணன்.

“உங்கிட்ட இல்லையா?”

கண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. மூவரிடமும் செல்போன் இல்லை. நான் பெருமூச்சுவிட்டேன். வினோதமான ஓர் அமைதி எனக்கு ஏற்பட்டது. களைப்பு என்னை மீறிச் சென்றுவிட்டதனாலேயே உருவான அமைதி அது. மனதில் எண்ணங்களே இல்லை. உதிரி உதிரியான சொற்கள் மட்டும் தயங்கித்தயங்கி நின்றன

குன்றின்மேல் நின்று சுற்றிலும் பார்த்தோம். பச்சைநிறம் இருண்டு இருண்டு கருமையாக மாறிக்கொண்டிருந்தது. எதிர்ப்பக்க குன்றின் விளிம்பில் நின்றிருந்த மரங்கள் வானத்தின் பகைப்புலத்தில் கரியமையால் வரையப்பட்ட ஓவியங்கள் போலத் தெரிந்தன.

ஓசைகள் மாறிக்கொண்டே இருந்தன. பறவைகளின் குரல்கள் சீரான முழக்கமாக இருந்து மெதுவாக அலையலையான பூசல் ஓசையாக மாறின. எங்கோ தீப்பிடித்து அவையெல்லாம் பறந்து பதறிக்கொண்டிருப்பதுபோல. மேலும் மேலும் கூச்சல்கள் வலுத்து காடே முழக்கமிட்டது பிறகு ஓசை அடங்கத்தொடங்கியது.

சூரிய ஒளி முழுமையாக மறைந்தபோது காடு அமைதியாகியது. சீவிடுகளின் ஒலி பலமடங்கு கூர்மையும் முழக்கமும் கொண்டு செவிகளை அறுப்பதுபோல ஒலித்தது. யானைகளின் பிளிறல் தொலைவில் கேட்டது. காட்டு ஆடுகளோ மான்களோ ஒருவகையான கனைப்பொலியுடன் மிக அருகே கடந்து சென்றன.

“என்ன செய்றது?” என்றேன்.

கண்ணன் “தெரியலை சார்” என்றான்.

“மழை வேற வரும்னு தோணுது” என்றார் முகுந்தன்

“நாம இங்கேருந்து மறுபடி கீழே போறது ஆபத்து. யானை நிக்குது. இங்க பாம்புகளும் நிறைய உண்டு.”

“எனக்கு குடிக்க தண்ணி வேணும்” என்றேன்.

“பாக்கிறேன் சார்”என்றான்.

“அதென்ன வெளிச்சம்?” என்றார் முகுந்தன்.

“எங்க?” என்றபோதே கண்ணனும் நானும் பார்த்துவிட்டோம். கீழே காட்டுக்குள் தீ தெரிந்தது.

“அங்க யாரோ இருக்காங்க…” என்று கண்ணன் சொன்னான்.

“அங்கபோயிடுவோம்” என்று நான் சொன்னேன். “தண்ணி இல்லேன்னா நான் செத்திடுவேன்.”

“போகமுடியாது சார், நமக்கு இந்த இருட்டிலே வழி தெரியாது”

அங்கிருந்து குரவையொலி போல ஏதோ கேட்டது. “சத்தம் கேக்குது… அப்ப நம்ம சத்தம் அங்கேயும் கேக்கும்… கூச்சல்போடுவோம்” என்றார் முகுந்தன்

“இருங்க…” என்று கண்ணன் சொன்னான். “இங்க சத்தத்தை வச்சு இடம் கண்டுபிடிக்கமுடியாது. எதிரொலிதான் ஜாஸ்தியா இருக்கும்.”

அவனிடம் தீப்பெட்டி இருந்தது. அதை எடுத்தபின் “சட்டையை கழற்றிக் குடுங்க” என்றான்.

முகுந்தன் “இங்க ஏதாவது சருகு கிடைக்காது?” என்றார்

“இங்க எல்லாமே நனைஞ்சிருக்கு… கழட்டுங்க சார்.”

முகுந்தன் சட்டையை கழற்றினார். அவன் அதை கொளுத்தினான். அது சிந்தெட்டிக் துணி. சட்டென்று பற்றிக்கொண்டது. அதை கையில் தூக்கி சுழற்றிக் காட்டி “கூ கூ கூ” என்று கூச்சலிட்டோம்.

முகுந்தன் “யாரு அங்கே? அய்யா!” என்று கூவினார்

“வார்த்தையெல்லாம் அங்க கேக்காது. தொண்டையும் வீணாகும். கூவினாத்தான் கேக்கும். சீழ்க்கை இன்னும் கொஞ்சம் கேக்கும்” என்றான் கண்ணன்.

அவர்கள் சீழ்க்கை அடித்தபடி கூவினார்கள். கண்ணன் தீயை அணைத்தான். பிறகு “கேட்டிருப்பானுகளா?” என்றான்.

செவிகூர்ந்தபோது எந்த எதிர்வினையும் எழவில்லை. “அவனுகளுக்கு கேக்கல்லை” என்றான் கண்ணன் மீண்டும் சட்டையை பற்றவைத்து சுழற்றிக்காட்டி கூவினார்கள்.

மூன்றாவது முறை கூவியபோது சட்டை எரிந்து கைவரை வந்துவிட்டது. அதை கீழே போட்டுவிட்டு “கேட்டிருக்க மாட்டானுக” என்றான்.

முகுந்தன் “என்ன செய்ய?” என்றார்.

“கொஞ்சநேரம் விட்டு மறுபடி சத்தம்போடுவோம்” என்றான் கண்ணன் “வேற என்ன செய்ய?”

“அவனுக சத்தம் நமக்கு எப்டி கேக்குது?” என்றார் முகுந்தன்.

“காத்து அங்கேருந்து அடிக்குதுபோல”

மீண்டும் கூச்சலிட்டார்கள். நான் களைப்புடன் ஈரம்பரவிய புல்மேல் அமர்ந்தேன். கூர்ந்து நோக்கியபோது கீழே குரவைச்சத்தம் நின்றிருப்பது தெரிந்தது.

“கீழெ குரவை நின்னுட்டுது” என்றேன்.

கண்ணன் செவிகூர்ந்து “ஆமா, அப்டீன்னா கேட்டுட்டானுக” என்றான்.

“அப்ப ஏன் மறுசத்தம் குடுக்கமாட்டேங்குதானுக?”

“யாரா இருக்கும்? கஞ்சா விவசாயம் செய்யுதவனா இருப்பானோ?”

“அவனுக குரவையிடுவானுகளா?”

மீண்டும் ஒருமுறை உரக்க கூவினார்கள்.

“இனி ஒண்ணும் செய்யுறதுக்கில்லை…” என்று கண்ணன் சொன்னான் “இனி ஒரு தீக்குச்சிதான் இருக்கு. ஆனை வந்தா வேணும்”

அவர்களும் அமர்ந்துகொண்டார்கள். அது அமாவாசை நாள் என்று தோன்றியது. வானத்தில் ஓரிரு நட்சத்திரங்கள் தெரிந்தன. நான் தலை எடைகொண்டு வருவதுபோல உணர்ந்தேன். வானம் கீழிறங்கி வந்தது. நட்சத்திரங்கள் மிக அருகே தெரிந்தன. விழுவதுபோல் ஓர் உணர்வு.

மீண்டும் நினைவுகொண்டபோது கண்ணன் என்னை உலுக்கிக்கொண்டிருந்தான். “சார், சார்.”

நான் வாயை துடைத்துக்கொண்டு “தண்ணி” என்றேன்.

“இருங்க சார், பாக்கிறேன்.”

முகுந்தன் “என்னமோ சத்தம்” என்றார்.

“என்னது?” என்றான் கண்ணன்.

“என்னமோ வந்திட்டிருக்கிற மாதிரி” என்றார் முகுந்தன் “புதருக்குள்ளே சத்தம் கேக்குது.”

நானும் கேட்டுவிட்டேன். ஆபத்துணர்வால் எனக்கு மெய்சிலிர்த்தது. எழுந்து அமர்ந்தேன். எதுவோ அணுகி வந்தது. நாங்கள் அதைக் கேட்டுவிட்டதை உணர்ந்ததும் ஓசை நின்றது.

என் மேல் பார்வையுணர்வை அறிந்தேன். எத்தனை நிராதரவாக இருக்கிறோம் என்று உணர்ந்தபோது மொத்த உடலையும் அப்படியே மண்ணில் உதிர்த்துவிடவேண்டும் போல் ஒரு களைப்பு தோன்றியது.

புதருக்குள் இருந்து ஒருவன் தோன்றினான். கையில் ஒரு மூங்கிலால் ஆன ஈட்டி வைத்திருந்தான். அவனுக்குப்பின்னால் இன்னொருவன் கையில் இழுத்த வில்லுடன் வந்து நின்றான்

“ஆரு?” என்றான் முதல் ஆள். அவன் காணிக்காரனாக இருக்கவேண்டும். அது  ‘ஆரி’ என்பது போல ஒலித்தது.

“நாங்க ஊரிலே இருந்து வழிதவறி வந்திட்டோம். எங்க காரை யானை மறிச்சுபோட்டுட்டுது… எங்களுக்கு இந்த எடம் தெரியாது. காப்பாத்துங்க” என்றான் கண்ணன்.

அவன் கூர்ந்து பார்த்தபின் அருகே வந்தான். தன் இடுப்பில் இருந்து சுரைக்காய் குடுவையை எடுத்து அதன் மரத்தாலான மூடியை திறந்து என்னிடம் நீட்டி “வெள்ளம்” என்றான்.

நான் அதை பாய்ந்து வாங்கி வாய்வைத்து குடித்தேன். என் உடலே தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். குடுவையை முகுந்தனுக்கு கொடுத்தேன். அவர் குடித்தபின் கண்ணன் குடித்தான்.

“அங்க உங்க ஊரு இருக்கா?”

“இல்ல தம்ப்ரானே, அங்க பூசையாக்கும்… பண்ணிமாடனுக்கு புழுக்கச்சோறு கொடை.”

“ஓ”என்று கண்ணன் சொன்னான். “அங்க போலாமா? நாங்க சாப்பிடலை. இவரு சாப்பிட்டாகணும்… இல்லேன்னா மயக்கமாயிடுவாரு”

“பண்ணிமாடனுக்கு புழுக்கச்சோறு தம்ப்ரானே” என்றான் காணிக்காரன்.

“பரவாயில்லை. எந்தச் சோறா இருந்தாலும் சரி.”

“வாங்க” என்று அவன் சொன்னான்.

அவர்கள் எங்களை அழைத்துச் சென்றார்கள். அதற்குமுன் கையை வாயில் வைத்து கூர்மையாக ஓர் விசிலோசையை எழுப்பினான். கீழிருந்து பதில் ஓசை வந்தது.

ஈட்டிவைத்திருந்தவன் முன்னால் செல்ல அம்பு வைத்திருந்தவன் பின்னால் வந்தான். அவர்களுக்கு கீழிறங்க குறுக்குவழி தெரிந்தது. ஊஞ்சல் ஆடுவதுபோல சரிந்து சரிந்து சென்ற பாதையில் சீக்கிரமே கீழே சென்றுவிட்டோம். அங்கே ஒரு நீரோடை ஒளியுடன் இருளுக்குள் ஓடியது. அதன் ஓசை மழைபெய்வது போல கேட்டது.

அதைக் கடந்து விழுந்து கிடந்த ஒரு மரத்தின்மேல் ஏறி அதன்வழியாக நடந்து அப்பால் சென்றபோது அந்த தீ அருகே தெரிந்தது. நெருப்பைச்சுற்றி நிறையபேர் நிற்பதை நிழலாட்டமாக காணமுடிந்தது. சட்டென்று குரவையோசைகளும் கூச்சல்களும் சேர்ந்து உரக்க எழுந்தன. மரங்களிலிருந்து பறவைகள் கலைந்தெழுந்து ஓசையிட்டன.

“என்ன அங்கே?” என்று நான் கேட்டேன்.

“தம்ப்றா, கொடை…சோரிகொடை.”

பலவகையான கூச்சல்களும் ஓலங்களும் குரவையோசையுடன் இணைந்து கேட்டுக்கொண்டே இருந்தன. பின்னர் மெல்ல அடங்கின. மேலிருந்து பார்த்தபோது அருகே என தெரிந்த தீயிருக்கும் இடம் சமதளத்தில் தூரத்தில் இருந்தது.

மூச்சிரைக்க அங்கே போய் சேர்ந்தபோது அனைவரும் சேர்ந்து ஏதோ செய்துகொண்டிருந்தார்கள். வாயால் கூரிய ஓசை ஒன்றை எழுப்பியபின் எங்களை அழைத்துச் சென்றவன் உள்ளே சென்றான். நாங்கள் தயங்கி நின்றோம். அவன் எங்களை உள்ளே அழைத்தான்.

வட்டமாக காட்டை வெட்டி முற்றம் ஒன்று அமைத்திருந்தனர். அங்கே ஐம்பது பேருக்குமேல் இருந்தனர். பலவயதான ஆண்கள் பெண்கள் குழந்தைகள். ஒரு பெரிய பன்றி தலைவெட்டி கொல்லப்பட்டிருந்தது. அதைச் சுற்றி அமர்ந்து அதை தோலைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்பால் ஒரு நாவல் மரத்தடியில் ஒரு முழம் உயரமான ஒரு செங்குத்துக்கல் நின்றது. அதன்மேல் மஞ்சள்விழுது பூசி செந்நிற மலர்களால் மாலையிட்டிருந்தனர். அதன் இருபுறமும் இரு எண்ணைப்பந்தங்கள் எரிந்தன. அதன் முன் கமுகுப்பாளையில் துண்டாக வெட்டப்பட்ட பன்றியின் தலை வைக்கப்பட்டிருந்தது. வளைந்த தேற்றைகளும் பற்களும் தெரியும்படி அதன் வாய் திறந்திருக்க, அதற்குள் ஒரு உருளைக்கல்லை வைத்திருந்தனர். இரு காதுகளும் விடைத்திருக்க விழித்த கண்களும் மீசைமுடிகளுமாக அது உறுத்து நோக்குவதுபோலிருந்தது

நான் சிலகணங்கள்தான் பன்றியின் தோல் செதுக்கப்படுவதைக் கண்டேன். ஒரு பெரிய அடிமரக்கட்டையை அவர்கள் கையாள்வதுபோலத்தான் தோன்றியது. என் தலை சுழன்றது. நான் மெல்லச் சென்று அங்கே ஒரு கல்மேல் அமர்ந்தேன். என்னருகே இருந்தவன் கரிய பற்களை காட்டிச் சிரித்து “தேற்றைப்பந்நி” என்றான்.

”ஆமாம்” என்று நான் தலையசைத்தேன்.

“வல்ய பந்நி…” என்று அவன் மகிழ்ச்சியுடன் சொல்லி தலையை அசைத்தான்.

தலையில் கமுகுப்பாளையாலான உயரமான கிரீடம் ஒன்றை அணிந்த கிழவன் ஒருவன் என்னருகே வந்தான். “பந்நிமாடனாக்கும்… காட்டுசாமி” என்றான். “என்பேரு காணன் மூப்பன்… நான் இங்கே பூசாரி.”

“இங்க எப்ப பூசை?” என்றேன்.

“சோரி கொடை கழிஞ்சுபோச்சு… இனி சோறுகொடை உண்டு… இப்ப சோறு வேவிக்கும்” என்றான்.

நான் சரி என்று தலையசைத்து கண்களை மூடிக்கொண்டேன். என் உடல் இரும்பாலானது போல எடைகொண்டிருந்தது. தரையில் அமர்ந்ததும் படுக்கத் தோன்றியது. படுத்ததுமே அமிழ்ந்து அமிழ்ந்து சென்றேன். அப்படியே எங்கோ சென்று மறைந்தேன்.

என் அருகே பேச்சொலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன. இனிய சோற்றின் மணம். ஒளிவிடும் நதிக்கரை ஒன்றின் மணற்பரப்பில் இருக்கிறேன். மணல் முழுக்க வெண்சோறாக மாறிவிட்டிருந்தது.

நான் விழித்துக்கொண்டபோது என் அருகே முகுந்தன் கண்ணன் இருவரும் இருந்தனர். கையை ஊன்றி முனகியபடி எழுந்து அமர்ந்தேன்.

முகுந்தன் “சோறு பொங்குதானுக… நெறைய சோறு” என்றார். “அக்கானி காய்ச்சுத ரெண்டு தகர அண்டாவை கொண்டு அடுப்பிலே வச்சு பெரிய காட்டு விறகுபோட்டு சமைக்கிறானுக. ஒண்ணுமே இல்லை, கொதிக்கிற தண்ணியிலே பச்சரிசியைப் போட்டு வெந்துவர்ரப்ப கூடவே பன்னிஇறைச்சியை துண்டுபண்ணி அள்ளிப்போட்டு அப்டியே வேகவைக்கிறானுக.”

“வெறும் அரிசியும் கறியுமா?” என்றேன். கொதிக்கும் சோற்று அண்டாக்களை நான் கண்ணால் பார்த்துவிட்டேன். அவை கொதிக்கும் களகள ஓசையை, சோறு வெந்து மலர்ந்துவரும் இனியமணத்தை அறிந்தேன்.

“அது அரிசி இல்லை, சாமை” என்று கண்ணன் சொன்னான் “இவங்களுக்க சாமி எதுக்குமே அரிசியோ கோதுமையோ படைக்கமாட்டாங்க”

“வெறும் கறி மட்டுமா?”

“ஆமா சார், இவங்க சாமிக்கு கொடை அப்டியாக்கும். தானியமும் கறியும் மட்டும். உப்புகூட போடமாட்டாங்க.”

“நம்ம ஊரிலேயும் சாமக்கொடைக்கெல்லாம் படைச்சோத்திலே உப்பு போடுறதில்லை. கறிப்பொங்கலிலே அரிசியும் கறியும் மட்டும்தான்.”

“நீங்க பன்னிக்கறி திம்பிகளா?” என்று முகுந்தன் கேட்டார்.

“இல்லை” என்று நான் சொன்னேன்.

“நான் ஒண்ணுரெண்டுதடவை தின்னதுண்டு” என்று கண்ணன் சொன்னான்.

“சோத்த மட்டும் சாப்பிடலாம்… வேற என்ன வழி” என்று முகுந்தன் சொன்னார்.

சோறு என்ற சொல்லே என் உடலை பதறச்செய்தது. என் நாக்கு உலர்ந்து ஒரு மெல்லிய படலமாக தொண்டைக்குள் இறங்கியிருந்தது. என் நெஞ்சு பதைத்துக்கொண்டே இருந்தது.

உடல்முழுக்க வேகும் சோற்றின் மணத்தை உணர்ந்தேன். உணவின் மணம் நாவூறச் செய்ததை உணர்ந்தது உண்டு. அப்போது நா ஈரமாகவே இல்லை. பசியும் இல்லை. உடலில் ஒரு தவிப்பு மட்டும்தான். மிக ஆழமான பள்ளத்தைப் பார்த்ததும் பாய்ந்துவிடவேண்டும் என்று ஒரு தவிப்பை உடல் அடையுமே அதைப்போல.

பின்னர் மிக விந்தையான ஒன்று நிகழ்ந்தது, என் உடலுக்கு ஓர் உச்சம் நிகழ்ந்தது. பாலுறவின் உச்சமேதான். அதே சிலிர்ப்பு நடுக்கம் கூச்சம். பின்னர் முற்றாக வியர்த்து தளர்ந்து நான் மீண்டும் மல்லாந்து படுத்தேன். எங்கோ காற்றில் சென்றுகொண்டே இருப்பதுபோல குளிரை உணர்ந்தேன். குரலோசைகள் எல்லாம் கலந்து ஒரு நீண்ட ரீங்காரமாக ஆயின.

கறிச்சோற்றை பெரிய தகரஅண்டாவோடு நான்கு நான்குபேராகச் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். தரையில் மண்ணை ஒதுக்கிய இடத்தில் ஏற்கனவே வாழையிலைகளை விரித்திருந்தார்கள். அதன்மேல் அந்தச் சோறு கொட்டப்பட்டது. முழங்காலுயரத்தில் வெண்ணிறமான குவியலாகச் சோறு. கட்டிடங்கள் கட்ட சுண்ணாம்பும் மணலுமாக சுதை கலக்கப்பட்டு குவிக்கப்படுவதுபோல. இருநூறு முந்நூறுபேர் சாப்பிடும் அளவுக்கு சோறு இருந்தது

பின்னர் மடல்வளைவுடன் கூடிய பனைமட்டையை நெடுக்காகப் பிளந்து உருவாக்கப்பட்ட ஹாக்கி மட்டைபோன்ற கோலால் அந்தச்சோற்றை தள்ளித்தள்ளி புரட்டி ஆறவைத்தனர். திரும்பத் திரும்ப கிண்டிக்கொண்டிருந்தார்கள். வெல்லம் காய்ச்சுபவர்கள் பாகைக்கிண்டுவதுபோல.

அது நன்றாக ஆறிவிட்டது என்று கைவைத்து பார்த்ததும் மீண்டும் அதை அள்ளி குவித்து ஒரு நீண்ட வேலிபோல ஆக்கினார்கள். பனைமட்டையின் பரந்த பகுதியால் அடித்து அடித்து அதை ஒரு வடிவத்திற்குக் கொண்டுவந்தனர். அந்த சோற்றுக்குவியலில் தலை உருவாகி வந்தது. மூக்கு குவிக்கப்பட்டு தலையும் வாயும் குழிகளாக ஆக்கப்பட்டன. விரிந்த நெஞ்சு, இடை. இரு கைகளும் இருபக்கமும் கிடந்தன. இருகால்கள் நீண்டிருந்தன. ஆனால் விரல்கள் செய்யப்படவில்லை

சோற்றுமனிதனின் நெற்றியில் ஒரு பூ வைக்கப்பட்டது. நெஞ்சில் ஒரு கலயத்தில் ஏதோ வைக்கப்பட்டது. தலையில் கமுகுப்பூக்குலைகள் முடிபோல பொருத்தப்பட்டன. கண்ணெதிரே சோற்றுக்குவியலாக இருந்த அது ஒரு மனிதனாக மல்லாந்து படுத்திருந்தது. மனித உடலைவிட மூன்றுமடங்கு பெரிய உடல்.

பணிமுடிந்தது என்று கண்டதும் முதிய காணி தலையை அசைத்தார். ஒருவன் எழுந்து சிறிய மூங்கில்குழல் ஒன்றிலிருந்து நீண்ட கூரிய ஓசையை எழுப்பினான். ஓரமாக அமர்ந்திருந்த நான்குபேர் எழுந்து வெவ்வேறு வாத்தியங்களை வாசிக்கத் தொடங்கினார்கள்

இரும்பாலான ஒரு வாத்தியம் ஒன்று செவிதுளைக்கும் ஓசையை எழுப்பியது. சொரசொரவென பல்லெழுந்து நின்ற ஒரு குழல். அது ஓர் இரும்புத்தண்டுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. அந்த இரும்புத்தண்டை தோளில் சாய்த்து சொரசொரவென்ற குழலை அதன்மேல் உரசி தாளத்துடன் ஒலியெழுப்பினான். ஏதோ பெரிய பறவையின் சிலம்பும் குரல் போலிருந்தது.

அதனுடன் இணைந்து ஒருவன் உடுக்கை மீட்டினான். இன்னொருவன் பானையின் வாயில் தோல் கட்டி உருவாக்கப்பட்ட முரசை இயக்கினான். உறுமலும் முரளலும் சிலம்பலுமாக ஓசைகள் கலந்து ஒருவகையான பதற்றமான சூழலை உருவாக்கின. அறியமுடியாத ஏதோ பறவைகளும் மிருகங்களும் பூசலிடுவதுபோல.

அது முதலில் வெறும் முழக்கமாக இருந்தது பிறகு அது தாளத்தில் அமைந்த ஒருவகை இசையாக தோன்ற ஆரம்பித்தது. அதற்குள் அந்த இசைவை நம் மனமும் அடைந்துவிட்டிருந்தது. ராரர ராரர ராரர என்ற தாளம். என்னஇது? என்னஇது? என்னஇது? என்ற சொல்லின் ஓட்டம். என்னுடேது என்னுடேது என்னுடேது என்று அது மாறியது.

கண்ணன் “ஒண்ணையே சொல்லுகது மாதிரி இருக்கு. வேண்டீலல்லோ வேண்டீலல்லோன்னு தோணுது” என்றான்.

முகுந்தன் “அந்த இரும்பு சங்கதி என்னவாக்கும்?” என்றார்.

“அதுக்கபேரு கொக்கறை. காணிக்காரனுங்க நம்ம ஊரிலே மந்திரவாதத்துக்கு கொண்டுவருவானுக. அகஸ்தியமுனிவர் அவங்க ஜாதிக்கு குடுத்ததாக்கும். வாதையும் சீக்கும் அதைக்கேட்டா மாறிநின்னிடும்” என்றான் கண்ணன்.

சட்டென்று ஓ என்ற அலறலுடன் கையை வீசியபடி மூப்பன் பாய்ந்து வந்தார். பாளையாலான பெரிய கிரீடம் அணிந்திருந்தார். குருத்தோலையை கீறிச்செய்த நீண்ட தலைமுடியும் தாடியும் கட்டியிருந்தார். இடையில் இலையாலான ஆடை. முகத்தில் கரியை பூசியிருந்தார். கிரீடத்திலும் ஒரு முகம் உருண்ட கண்களும் இளித்த வாயுமாக தெரிந்தது

கையிலிருந்த நீண்ட கழியை வீசியபடி அவர் சுழன்று ஆடினார். வெறிகொண்ட காலடிகளும் கைவீசல்களுமாக தாவி எழுந்து அமர்ந்து கூச்சலிட்டார். துள்ளித்துள்ளி எழுந்து எழுந்து விழுந்து ஒரு கட்டத்தில் மனிதனால் எழமுடியாத அளவு உயரத்திற்கு துள்ளி எழுந்து விழுந்தார். அவருடைய குரல் நாயின் ஊளைபோலவும் புலியின் உறுமல்போலவும் மாறிமாறி ஒலித்தது

இசை உச்சமடைய அவர் பாய்ந்து சென்று அந்த சோற்று மனிதனின் நெஞ்சை இரு கைகளாலும் அள்ளி தன்மேல் அறைந்துகொண்டார். சோற்றை அள்ளி அள்ளி அந்த பன்றிமாடன் சாமிமேல் மேல் வீசினார். நடனம்போல் ஆடியபடியே சோற்றை அள்ளி நான்கு திசைக்கும் வீசினார். தரையெல்லாம் சோறு பரவியது. பின்னர் அவர்வீசிய சோற்றின் மேலேயே குப்புற விழுந்தார்.

குழல் உச்சத்தில் ஒலித்து அமைய அத்தனை பேரும் கூச்சலிட்டபடி சோற்றுக்குவியல் மேல் பாய்ந்து அதை அள்ளி ஒருவர்மேல் ஒருவர் வீசி அறைந்தனர். அள்ளி உண்ணவும் செய்தனர்.

“என்ன செய்யுதானுக?” என்று முகுந்தன் கேட்டார்.

“இங்க இப்டித்தான்… சோறு அது. திங்கவேண்டியதுதான்” என்றான் கண்ணன் “சாவுத நேரத்திலே சோத்துக்குப் பாவமில்லை.”

“என்னடே இது” என்றார் முகுந்தன் தவிப்புடன்.

“நான் போறேன்” என்று கண்ணன் எழுந்து சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.

அவன் அள்ளி அள்ளி தின்பதை நான் பார்த்தேன். எனக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் “எனக்க அம்மா… எனக்க அம்மா…” என்று அழுது கூவியபடி எழுந்து ஓடிப்போய் அந்த சோற்றின் மேல் பாய்ந்தேன். என் கால்கள் நிலையிழந்திருந்தமையால் குப்புற சோற்றின்மேல் விழுந்தேன். இரு கைகளாலும் அள்ளி அள்ளி தின்றேன். என்மேல் யாரோ விழுந்தார்கள். சோற்றால் வழுவழுவென்றாகியிருந்த உடல். என் சட்டையை கழற்றி வீசினேன். கைவீசிக் கூச்சலிட்டபடி எக்களித்துச் சிரித்தபடி அலறி அழுதபடி நான் அந்த சோற்றை அள்ளித்தின்றேன்.

சுவையை என் முழு எண்ணத்தாலும் உணர்ந்தேன். என் முழு உடலுமே நாக்காக மாறி அறிந்த சுவை. தின்னத்தின்ன வெறி ஏறிக்கொண்டிருந்தது. புழுக்கள்போல சோற்றின்மேல் கிடந்து நெளிந்து துழாவி அளைந்து நீந்தி அள்ளி உண்டு உண்டு உண்டு உடலெங்கும் சோறு நிறைந்து உடலே ஒரு சோற்றுப்பொதியென்றாகி என்னையே நானே தின்று தின்று தின்று திளைத்தேன்.

அங்கிருந்த அனைவருமே அப்படி வெறிகொண்டு தின்றிருப்பார்கள். அவர்கள் வழக்கமாகத்  தின்பதைவிட மூன்றுமடங்கு நான்கு மடங்கு. உணவே போதையாகி களிவெறியாகி கூச்சலிட்டு நடனமிடச் செய்தது. நெஞ்சிலறைந்து வானோக்கி கூவ வைத்தது. எடையாகி மண்ணோடு மண்ணாக அழுந்தவைத்தது.

பிறகு நான் நினைவு மீண்டபோது பின்னிரவு. மரங்களிலிருந்து பனித்துளிகள் மழைபோல கொட்டிக் கொண்டிருந்தன. என் வெற்றுடல் ஈரத்தில் நடுங்கிச் சிலிர்த்தது. அங்கே முழுக்க ஆழ்ந்த இருட்டு. உடல்கள்மேல் உடலாக அனைவரும் மயங்கி தழுவி முயங்கி கிடந்தனர். நடுவே உறுமலோசைகளை கேட்டேன். காட்டுபன்றிகள் அந்த சோற்றுமலை சிதைந்து மண்ணோடு கலந்த களியை சுவையுடன் முட்டிமுட்டி தின்றுகொண்டிருந்தன. இருட்டே உருவங்களாக திரண்டு வந்து கொப்பளிப்பது போலிருந்தது. நூற்றுக்கும் மேல் பன்றிகள். என் அருகே சென்ற பன்றியின் மின்னும் கண்களைப் பார்த்தேன்.

என் மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டிருந்தது. எனக்கு நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை. அழுதுவிடுவேன் என்று தோன்றியது. அழுகையின் முந்தைய கணம். ஆனால் அழவில்லை. அந்தக்கணம் நீண்டு நீண்டு நீண்டு நீண்டு சென்றுகொண்டே இருந்தது. அதன்மேல் நீர்த்துளிகள் சொட்டிச் சொட்டிச் சென்றுகொண்டே இருந்தன.

***

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8

$
0
0

வியாசரின் மாணவர் ஓலையிலிருந்து படித்துச் சென்றார். “எப்போதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்துகொண்டிருந்த பிரதீபன் என்னும் அரசன் கங்கையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கே நெடுங்காலம் தவமியற்றிக்கொண்டிருந்தான். அந்த அரசமுனிவன் வேதம் உரைத்துக்கொண்டிருக்கையில் அழகிய முகமும் தேவதைக்குரிய எழிலுடலும் கொண்ட பெண்ணுருவை அடைந்த கங்காதேவி நீரிலிருந்து கரையேறி அவனுடைய வலத்தொடைமேல் வந்தமர்ந்தாள்.”

“தந்தையே!” என்று கரடு தட்டிய குரலில் அழைத்தபடி முன்னால் சரிந்த திருதராஷ்டிரர் “எனக்குப் புரியவில்லை, தந்தையே. என் அறிவின்மையை நீங்கள் பொறுத்தருள வேண்டும். நான் கல்லாதவன். அகமும் இருண்டவன். இந்தப் பேரழிவின் கதையை தாங்கள் ஏன் எழுதவேண்டும்? உங்கள் குருதியில் பிறந்த குழந்தைகள் விழைவு-பகை-வஞ்சங்களால் பூசலிட்டு அழிந்ததை எழுதுவதில் உங்களுக்கு என்ன பெருமை?” என்றார்.

அத்தனைபேர் உள்ளத்திலும் எழுந்த வினா அது என்பதை, முகங்களில் தெரிந்த உயிரசைவிலிருந்து நான் அறிந்தேன். வியாசர் பெருமூச்சுவிட்டார். “இந்தக் கேள்வியைத்தான் நான் என்னிடம் கடந்த பல மாதங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். என் மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. என்னால் எங்கும் அமரமுடியவில்லை. எங்கும் மக்கள் இந்தப் போரைப் பற்றியே பேசுவதை கண்டேன். சூதர்கள் பாடல் முழுக்க இப்போர் பரவி வளர்வதை அறிந்தேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் போர் மானுடகுலத்தின் நினைவில் என்றென்றும் இருக்கத்தான் போகிறது. ஏன்? இந்தப் போர் ஒவ்வொரு மானுடர் மனத்திலும் நிகழும் போர் அல்லவா?”

வியாசர் பெருமூச்சுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்தார். “கங்கையை நோக்குக! பெருங்காப்பியம் என்பது கங்கைபோல. அது இமையமலைமுடிகளில் ஏன் உருவாகிறது? அங்கே காலமில்லாது உறைந்த வெண்பனி அடுக்குகளில் எங்கோ ஒரு சிறு நிலைகுலைவு உருவாகிறது. ஒரு விரிசல் எழுகிறது. உடைவு என ஆகி சரிவென விழுந்து ஊற்றென உருகி வழிகிறது. துணையாறுகளும் சிற்றாறுகளும் பல்லாயிரம் ஓடைகளும் கலந்து பெரும்பெருக்காக மாறி கடலில் கலக்கிறது. கடலை மலை அறியும் வழி அது. கடல் மலையை பெற்றுக்கொள்வதும் கூட.”

வியாசர் தனக்குள் உலவத் தொடங்கிவிட்டிருந்தார். “நான் கங்கோத்ரியின் முதல் ஊற்று. பெயரில்லாத பல்லாயிரம் சூதர்கள் மழையின் துளிகள். இந்தக் காவியம் தன் பாதையை தானே கண்டடைந்தபடி முன்னகர்கிறது. அதை ஒருபோது வியப்புடனும், மறுபோது எக்களிப்புடனும், பிறிதொருபோது செயலற்ற வெறுமையுடனும் நான் பார்த்து நிற்கிறேன். கங்கை மீது காற்று பரவும்போது தோன்றும், அனைத்துமறிந்த கை ஒன்று நீர்ச்சுவடி மீது எழுதிச் செல்வதாக. புரியாத மொழியாலான எழுத்துக்களின் அலைவரிகள். மறுகணம் தோன்றும், காவியம் கங்கைபோல என்றும் மாறாத பொருளாழத்துடன் அப்படியே ஓடிக்கொண்டிருப்பதாக. அதன் மீது காலத்தின் விரல்கள் புதுப்புதுக் கற்பனைகளை கணம்தோறும் எழுதிக்கொண்டிருக்கின்றன. நீர்மேல் எழுத்து. ஆம் நீர்மேல் எழுத்து!”

“ஆனால் நீர் அறியும் தன் மீது எழுதப்பட்ட அனைத்தையும். நீரின் பெருவெளி அறியும் சொற்களின் முடிவிலியை.” வியாசர் மீண்டும் தன் மெளனத்திற்கு திரும்பினார். யுதிஷ்டிரன் அந்தச் சொல்லின்மையில் ஊடுருவி எழுந்து “பிதாமகரே, தங்கள் காவியத்தில் அறம் மறம் என்னும் பாகுபாட்டுக்கு என்ன அளவையை கொண்டுள்ளீர்கள்?” என்றார். வியாசர் சற்று எரிச்சல் அடைந்தவர்போல ஒரு கணம் தயங்கி “மானுடரின் வாழ்வறிவைத்தான்” என்றார்.

“என்ன அறமும் மறமும்!” என்று திருதராஷ்டிரர் தலையை அசைத்தார். “வெல்பவன் அறத்தோன், தோற்றவன் மறத்தோன். இதுதான் என்றும் உலகநெறி. இதுமட்டும்தான்.” சலிப்புடன் கையசைத்து “அத்தனை எளிதல்ல, மைந்தா” என்றார் வியாசர். திருதராஷ்டிரர் “போதும், தந்தையே. சொற்களால் என் செவி நிறைந்துவிட்டது. என் மைந்தன் தொடை உடைந்து கிடந்தான்… என் மைந்தர்கள் களம்பட்டனர். அது ஒன்றே மெய். நான் எத்தனை தவம் செய்தாலும், எத்தனை முதிர்ந்து ஒடுங்கினாலும் துளியும் குன்றாத மெய் அது.” என்று கூவினார்

பீமன் உடலில் ஓர் அசைவு எழுந்தது. யுதிஷ்டிரனின் கண்கள் அவரை தொட்டு மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை இருந்தது. பீமன் உரக்க “ஆம், தந்தையே! நான்தான் உமது மகனை கொன்றவன். தீச்சொல்லிடுக என்னை!” என்றார். திருதராஷ்டிரர் வாழ்த்துவதுபோல வலக்கையை தூக்கி காட்டினார்.

“நான் அறத்தின் முடிவிலா வழிச்சிக்கல்களையே இக்காவியத்தில் பேசுகிறேன்” என்றார் வியாசர். அப்பால் நின்ற அர்ஜுனன். “அறமா? இங்கு நடந்தது ஒரு தற்கொலை! ஆணவத்தாலும் பொறாமையாலும் ஒரு குலம் தன்னைத்தானே கொன்றுகொண்டது. பிணத்துக்கு அணி செய்ய முயலவேண்டாம், பிதாமகரே” என்றார்.

வியாசர் அதை கேளாதவர்போல “எனது காவியம் வெற்றியை பாடுகிறது என்பது உண்மை. அதற்குப் பின்னால் உள்ள தோல்விகளையும், சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள பெருமைகளை பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும் வஞ்சத்தின் ஊற்றுமுனையாகிய அன்பையும் சொல்கிறது. ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வையே என் காவியம் கூறுகிறது. மானுட வாழ்வு எனும், ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத பெருக்கைப் பற்றியே நான் எழுதியுள்ளேன். அந்தப் பெருக்கை வழிநடத்துவது விண்பேரறம். அப்பேரறத்தின் காட்சி இங்குள்ள வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் தெரியக்கூடும். என் காவியம் காட்டுவது அதையே” என்றார்.

“இனி என்ன பயன் அதனால்?” என்றார் அர்ஜுனன். “கைம்பெண்களுக்கும் தந்தையில்லா மைந்தருக்கும் எவருமில்லா பெற்றோர்களுக்கும் உங்கள் அறம் என்ன வழிகாட்டப் போகிறது?” வியாசர் “முடிந்தது குருக்ஷேத்ரப் போர் மட்டுமே. அறத்துக்கும் மறத்திற்குமான போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை. நாம் கற்றதை நம் வழித்தோன்றல்களுக்கு பயன்படும்படி நாம் அளிக்க வேண்டாமா?” என்றார்.

அர்ஜுனன் சிரித்தார். “பிதாமகரே, இந்த வயதிலும் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பது வியப்பு தருகிறது. நான் அறிந்த மெய்மை ஒன்றே ஒன்றுதான். மனிதவாழ்வு என்பது ஒரு பெரும் சரிவு. இழந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. அடையும் ஒவ்வொன்றிற்கும் நாம் ஆயிரம் மடங்கு விலை தருகிறோம். நாம் தரும் ஒவ்வொன்றுக்கும் இளமையில் ஆயிரம் பங்கு எடை. நாமோ இளமையைத் தந்து பட்டறிவுகளை பெற்றுக்கொள்கிறோம். காலம் முடுகி அணையத் தொடங்குகையில், தொலைவில், கனவுவெளியென இளமை ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது. ஏக்கம் மிகுந்த கண்ணீருடன் இந்தக் கரையில் நின்றபடி நாம் புண்களையும், உதவாத நாணயங்களையும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்…”

“பிதாமகரே” என்று யுதிஷ்டிரன் தணிந்த, உறுதியான குரலில் கூறினார். “தாங்கள் காவியத்தை படியுங்கள். என் வழியாக பேரறம் ஆடிய விளையாட்டு என்னவென்று கூறுங்கள்…” வியாசர் பெருமூச்சுடன் தொடரும்படி கைகாட்ட மாணவர் படிக்கத் தொடங்கினார். சூழ்ந்திருந்த அனைவரும் விழிகளில் ஈரப்படலம் தெரிய உணர்வுகளில் முகத்தசைகள் நெளிய அதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

சொல்லொழுக்கின் நடுவே மெல்லிய குரலில் ஒரு முதுமகள் “பிதாமகரே” என்றாள். வியாசர் “யார்?” என்றார். “என் மைந்தரை நான் பார்க்கவியலுமா?” என்றாள் அவள். “அவர்கள் விண்புகுந்துவிட்டனர், மகளே” என்றார் வியாசர். அக்கணம் ஒரு பெண் எழுந்து ஓடிவந்து தன் நெஞ்சில் அறைந்துகொண்டு வீறிட்டாள். “என் குழந்தைகள்! அவர்களை நான் பார்க்கவேண்டும். நான் இறந்த பிறகாவது அவர்களை பார்க்கவேண்டும்.” கதறியபடி அவள் தரையில் சரிந்தாள். மார்பில், வெறியுடன் ஓங்கி அறைந்துகொண்டு கதறியழுதாள்.

விரிந்த தலையுடன் பெண்கள் நாலாபக்கமிருந்தும் எழுந்து வியாசரை நோக்கி ஓடிவந்தனர். அவர்கள் அலறினார்கள். “என் மைந்தரை காட்டுக, பிதாமகரே! உங்கள் சொல்தவத்தால் என் மைந்தரை காட்டுக!” என்று அலறினார்கள். வியாசர் “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா?” என்றார். முதிய பெண் ஓடிவந்து வியாசரின் காலில் விழுந்தாள். காதுகளும் மார்புகளும் நீண்டு தொங்கின. வெண்ணிறத் தலைமயிர் விரிந்து, சுருக்கம் பரவிய வெற்று முதுகில் ஈரமாக ஒட்டியிருந்தது.

“மாமுனிவரே, ஒன்பது பிள்ளைகளையும் பதினேழு பெயரர்களையும் பறிகொடுத்த பெரும்பாவி நான்! என் மைந்தரை காணமுடியும் என்று சூதர் சொன்னதை நம்பியே வந்தேன். எவ்வண்ணமோ என் குழந்தைகள் மீண்டு வந்துவிடுவார்கள் என்று நம்பினேன். ஏதோ ஒரு மாயம் நடக்கும் என்று எண்ணியிருந்தேன். தந்தையே, என் கனவை வீணடித்துவிடாதீர்கள். என்னை கைவிட்டுவிடாதீர்கள்” என்று அவள் கதறி அழுதாள். “எங்கள் குழந்தைகளை நாங்கள் பார்க்கவேண்டும், உத்தமரே!” என்று குரல்கள் வீறிட்டன. அழுகைகளும் புலம்பல்களும் நான்கு திசைகளிலிருந்தும் வந்து பெருகின.

“நான் என்ன செய்யமுடியும்? நான் வெறும் கவிஞன், தாயே!” என்றார் வியாசர் தளர்ந்த குரலில். “பிதாமகரே, நீர் அறிவீர். எங்கள் குழந்தைகள் எங்கே?” ஒரு பெண் கூவினாள். “அவர்கள் வீரருக்குரிய விண்ணுலகில் இருக்கிறார்கள். வீரர்களுக்குரிய களியாட்டுகளுடன், வீரர்களுக்குரிய பெருமைகளுடன்” என்றார் வியாசர். “நீங்கள் எப்படி கண்டீர்கள்?” என்று அந்தப் பெண் கேட்டாள். “நான் கவிஞன். சொற்களை பருவடிவு விட்டு ஊழ்கவடிவம் கொள்ளவைக்கும் பேறு பெற்றவன். ஊழ்கவடிவாக அனைத்துலகங்களையும் தொட்டு விரியும் என் அகம். நான் கண்டேன், என்னை நம்புங்கள்.”

“பிதாமகரே!” என்று ஒரு கிழவி அலறினாள். “எங்கள் குழந்தைகளை எங்களுக்கு காட்டுங்கள். நீங்கள் கூறுவது உண்மையென்றால் காட்டுங்கள்! அறத்தின் மீது ஆணை!” வியாசர் அவளுக்கு மறுமொழி சொல்ல திரும்புவதற்குள் “காட்டுங்கள்! காட்டுங்கள்!” என்று ஓலமிட்டது நதிக்கரை. “ஒரு கணம் பிதாமகரே, கனிவு காட்டுங்கள். ஒரு கணம்” ஒரு பெண் கதறியழுதாள். வியாசர் மாறி மாறி பார்த்து பதைக்கும் கைகளால் ஏதோ சொல்ல முயல அவர்கள் நெஞ்சில் அறைந்து அலறிக்கூச்சலிட்டனர். மணலில் விழுந்து கைகளால் அறைந்துகொண்டு அழுதனர்.

கங்கையில் ஒரு மீன் துள்ளி விழுந்தது. அலைகள் கரிய வளையங்களாக பரவின. வியாசர் கைகளை தூக்கினார். “சரி, காட்டுகிறேன்! அவர்களைப் பார்ப்பது உங்களுக்கு உளஅமைதியைத் தருமா? தங்கள் புகழுலகில் அவர்கள் ஒளியுடன் இருப்பதைக் கண்டால் உங்கள் தீ அணையுமா?” என்றார். “ஒரு கணம் என் குழந்தையை பார்த்தால் போதும், பிதாமகரே! வேறு எதுவும் வேண்டாம்!” என்று ஒரு பெண் கதறினாள்.

நான் குந்தியை பார்த்தேன். அவர் அங்கிருப்பதாகத் தோன்றவில்லை. திரௌபதியும் எங்கோ அந்த உணர்வலைகளுக்கு அப்பாலெனத் திகழ்ந்தார். பாண்டவர்களின் முகங்களில் உணர்வுகள் கொந்தளித்தன. ஏக்கம், துயர், சீற்றம் என. யுதிஷ்டிரன் கைகளைக் கூப்பி நின்றார்.

வியாசர் கங்கையை நோக்கி திரும்பினார். அழுத்தமான குரலில் அவர் கூறிய சொற்களை நான் உதடசைவுகளைக்கொண்டே உணர்ந்தேன். “கங்கையே, நீ என் மூதாதை. என் சித்தம் உன் பெருக்கு. என் சொற்தவம் மெய்யானது எனில் நீ என் காவியமாகி விரிக! ஓம், அவ்வாறே ஆகுக!”

என் உள்ளம் கூர்கொண்டது. விழிகூர்ந்து கங்கையை பார்த்தேன். கங்கைமீது நிலவொளிபோல ஒரு துலக்கம் தோன்றியது. அது அலைகளாக விரிவடையத் தொடங்கியது. மெல்ல ஒளி கூடியபடியே வந்தது. ஒளிபெற்ற படிகவெளியாக அது ஆயிற்று. நீரின் பொன்னிற ஆழம் தெரிந்தது. அங்கு நெடுந்தொலைவில் நிலா ஒன்று சுடர்ந்தது. பளிங்கு மாளிகைகள் நிரம்பிய பெருநகரம் ஒன்று கனவுபோல தெரிந்தது. அது அஸ்தினபுரம் என்பதை நான் வியப்புடன் அறிந்தேன்.

தெருக்களில் பொற்பல்லக்குகள் நகர்ந்தன. புரவிகள் வெண்ணிற முகில்கள்போல ஓடின. அங்கிருந்து பொன்னொளி சுடரும் பாதை ஒன்று கிளம்பி மேலே வந்தது. அதன் வழியாக மெதுவாக நடந்து ஒருவர் வந்தார். ஒளிசிதறும் வைரமுடியும், மணிக்குண்டலங்களும் பொற்கவசமும் அணிந்திருந்தார். கையில் பொற்கதாயுதம். அது துரியோதனன் என்பதை நான் மார்பை அடைத்த வியப்புடன் அறிந்தேன்.

துரியோதனனின் முகம் பொலிவு நிரம்பியதாக இருந்தது. கண்களில் மகிழ்ச்சி சுடர அவர் நீர் மீது எழுந்து நின்றார். திருதராஷ்டிரர் உரத்த குரலில் “மகனே! துரியோதனா!” என்று வீறிட்டார். மதயானையின் பிளிறல் போலிருந்தது அது. அவருக்கு எப்படி தெரிகிறது அந்தக் காட்சி? இதெல்லாம் என் உளமயக்குதானா? காந்தாரி “மைந்தா! மைந்தா!” என்று கைகளை விரித்தார்.

கவசகுண்டலங்கள், செஞ்சூரியக்கதிர்கள் என ஒளிவிட கர்ணன் வந்து துரியோதனனின் அருகே நின்றார். துச்சாதனன் புன்னகை தவழும் இனிய முகத்துடன் எழுந்தார். சகுனியும், துரோணரும், பீஷ்மரும் வந்தனர். துர்முகனும் துர்மதனும் முகப்பில் வர இளைய கௌரவர்கள் வந்தனர். லட்சுமணனும் துருமசேனனும் அழைத்துவர கௌரவ மைந்தர்கள் வந்தனர். சாரிசாரியாக அவர்கள் வந்தபடியே இருந்தனர்.

கையில் பாசாயுதத்துடன் உயர்ந்த கரிய உடலை மெல்ல ஆட்டியவனாக யானைக்குட்டிபோல கடோத்கஜன் நடந்து வந்தான். அவன் மைந்தன் பார்பாரிகன் அருகே பிறிதொரு களிறு என நடந்துவந்தான். அபிமன்யுவும் பிரதிவிந்தியனும், சுதசோமனும், சதானீகனும், சுருதகீர்த்தியும், சுருதசேனனும் வந்தனர். நிர்மித்ரனும் யௌதேயனும் சர்வதனும் அரவானும் எழுந்து வந்தனர். கூட்டம் கூட்டமாக அலைகளில் இருந்து பாவைகள் என நெளிந்து நெளிந்து ஓருருவம் ஆயிரமெனப் பெருக அவர்கள் வந்தபடியே இருந்தனர்.

இமைத்தால்கூட அந்தக் காட்சி நழுவிவிடும் என்று பயந்தவன்போல பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த முதுமகள் திடீரென்று “மகனே!” என்று கூவியபடி நீரை நோக்கி ஓடினாள். எங்கும் வீறிட்ட அலறல்கள் வெடித்துப் பரவின. பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக நீரை நோக்கி ஓடினர். “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று வியாசர் கூவினார். கூட்டம் கூட்டமாக பெண்கள் நீரில் விழுந்தனர். கங்கை நீர் ஆயிரம் வாய்களைப் பிளந்து அவர்களை விழுங்கியது.

“அர்ஜுனா! நிறுத்து அவர்களை. அர்ஜுனா!” என்ற வியாசரின் குரல் அங்கிருந்த கூச்சல்களில் மறைந்தது. உடல் தவிக்க முன்னும் பின்னும் ஆடியபடி வியாச கூவினார். கையில் காண்டீபத்துடன் கண்ணீர் வழிய அர்ஜுனன் வெறுமனே நின்றார். “அர்ஜுனா… அர்ஜுனா” என்று கைநீட்டி அலறினார் வியாசர். “அவர்கள் போகட்டும், பிதாமகரே. அவர்களுக்கு இனிமேலாவது அமைதி கிடைக்கட்டும்” என்றார் அர்ஜுனன்.

“இது என்ன அறிவின்மை! நில்லுங்கள் நில்லுங்கள்! போகாதீர்கள்!” வியாசர் கண்ணீருடன் கூவினார். மறுகணம் காட்சி அணைந்து, கங்கை இருண்டது. “அர்ஜுனா, அவர்கள் உன் குடிமக்கள். அவர்களைக் காப்பது உன் கடமை” என்று வியாசர் சொன்னார். “இல்லை, பிதாமகரே! அவர்கள் சாவின் குடிமக்கள். தங்கள் மைந்தர்களுடனும் கணவர்களுடனும் அவர்கள் சென்று சேரட்டும். பிதாமகரே, அபிமன்யுவையும் அரவானையும் பார்த்தபோது ஒரு கணம் என் கால்கள் தவித்தன. ஏன் நான் ஓடவில்லை என வியந்துகொள்கிறேன். உயிர்விழைவா? அல்ல, ஆணவம். எளிய பாமர மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகள்கூட இல்லாதவன் நான்.”

“பார்த்தா! உனக்குத் தெரியாது” என்றபடி வியாசர் சொன்னார்.  “நான் அறிவிலி! நான் அறிவிலி! பெரும் பிழை செய்துவிட்டேன்.”  என்று விம்மினார்.இரையுண்ட பாம்புபோல கங்கை அமைதியாக விரிந்து கிடந்தது. அதன் கருமையை நோக்கியபடி நான் கைகூப்பி நின்றிருந்தேன்.

“தந்தையே!” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் அங்கு தங்கள் குழந்தைகளுடன் வாழ்வதைவிட மேலானதா இங்கு நடமாடும் பிணங்களாக வாழ்வது? என்னை யாராவது பிடித்து அங்கு இட்டுச் சென்றிருக்கலாகாதா?” வியாசர் திரும்பி அவரிடம் “எப்படி சொல்வேன், குழந்தைகளே? நீங்கள் பார்த்தது என் காவியத்தின் ஓர் உருவெளித்தோற்றம் மட்டுமே. கங்கை என் காவியமாக ஆயிற்று. காவியம் நாம் எண்ணுவதன் ஒரு பாவை மட்டுமே” என்றார்.

அர்ஜுனன் “அப்படியானால் இங்கே தெரிந்தவர்கள் எவர்?” என்றார். வியாசர் மெல்ல அடங்கினார். ”அவர்கள் என் காவியத்தில் வாழும் வடிவமே இங்கு தெரிந்தது. காவியத்துக்கு அப்பால் இவர்கள் எங்குள்ளனர் என நான் அறியேன்” அவர்கண்களில் கண்ணீர் ஒளிவிட்டது. பெருமூச்சுடன் கங்கையையே பார்த்தார்.

பெருமூச்சுடன் “காவியத்தில் நாம் பார்ப்பது வானை பிரதிபலிக்கும் மேற்பரப்புகளை மட்டுமே. ஆழத்தில் இருண்ட பேருருலகங்கள் விரிந்து கிடக்கின்றன. அங்கு கோடிகோடி மானுடர் உறைகின்றனர். அவர்களுடைய கூறப்படாத துயரங்கள், பகிரப்படாத கனவுகள். அங்கு எந்த ஒளியும் சென்று சேர்வதில்லை. காலத்தின் விரல்நுனி அங்கு துயில்பவர்களை ஒரு போதும் தீண்டப் போவதில்லை. காவிய ஆழம் ஓர் அணிச்சொல்லின் மின்மினிகூட வழிதவறிச் செல்லமுடியாத பேரிருள்…” என்றார் வியாசர்

பீமன் “பிதாமகரே, இக்கங்கையின் ஆழத்தில் இருந்துதான் இவையனைத்தையும் தொடங்கிய முதல்நஞ்சு எனக்கு அளிக்கப்பட்டது” என்றார். “அந்நஞ்சும் உங்கள் காவியத்தில் இருந்தா எனக்கு வந்தது?” வியாசர் ஒன்றும் சொல்லவில்லை. நடுங்கும் தலையுடன், கைகளை கூப்பியபடி கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தார். “கூறுக பிதாமகரே”என்றார் பீமன். வியாசர் கண்களை மூடி நடிங்கிக்கொண்டிருந்தார்.

என் மனம் நடுங்கி உறைந்தது. என்னால் கங்கையை பார்க்கமுடியவில்லை. கரிய வாள்போல அது கிடந்தது. அதன் ஆழத்தில் நிழல் நிழலாக கரைந்திறங்குவது என்ன? என்னுள் தேங்கிய வெறுமையை எல்லாம் பெருமூச்சாக மாற்றி வெளித்தள்ள முயன்றேன். மார்பு ஒழியவேயில்லை. நான் திரும்பி காட்டை நோக்கி நடந்தேன். இருளில் திமிறிப் புணர்ந்த மரங்கள் காற்றில் உறுமும் காடு. அங்கு நிழல்கள் ததும்பின. பெயரற்ற அடையாளமற்ற தவிப்பு மட்டுமேயான நிழல்கள்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

புழுக்கச்சோறு,நெடுந்தூரம் -கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

புழுக்கச் சோறு மறுபடி அன்ன வடிவான பிரம்மத்தின் கதை. அன்னமே தெய்வமென்று, தெய்வத்தின் முன் மனிதர்கள் விலங்குகள் அனைவரும் சமம் என்று, வேறேதும் எவ்வகையிலும் பொருட்டே அல்ல என்று உணர்ந்துகொள்வதற்கு எவ்வளவு தூரம் செல்லவேண்டியிருக்கிறது. முதலில் பசியின் உக்கிரத்தை அறியவேண்டியிருக்கிறது. பழகிய வழிகளிலிருந்து  தவறிச்செல்லவேண்டியிருக்கிறது. ஆதி இயற்கையான காட்டுக்குள் செல்லவேண்டியிருக்கிறது. இயற்கையின் வடிவமான யானையால் வேட்டையாடப்படவேண்டியிருக்கிறது. ஒருவாய் உணவுக்காக காட்டில் விலங்குகள்போல பொறுக்கி அலையவேண்டியிருக்கிறது.

காட்டுவாழ்க்கைக்குள் சென்று அங்கே காட்டின் இருள்வடிவமாக அமர்ந்திருக்கும் தெய்வத்தின் முன் சென்று நின்றிருக்கையில் சோறு என்பது அன்னம், தெய்வம் என்று புரியவருகிறது. கதைநாயகனின் எதிர்த்திசைப் பரிணாமம்தான் கதை. அவனுடைய அடையாள அட்டை, செல்போன் தொலைவதில் தொடங்கி எல்லாவற்றையும் இழந்து குரங்குகள் போல காட்டில் அலைந்து சோற்றின்முன் நிற்கிறான். அவன் இறுதியில் கண்ட தரிசனம் அன்னமே பிரம்மம் என்பதாகவே இருக்கும் இல்லையா?

ராஜசேகர்

அன்புள்ள ஜெ

புழுக்கச்சோறு எதிர்பார்க்கவே முடியாத கதை.நூறாம் கதையை நெருங்கப்போகிறீர்கள். இருந்தாலும் இதுவரை எழுதாத கரு, எழுதப்படாத கேள்வி கதையில் எழுந்துவருவது திகைப்பூட்டுகிறது.

கதையின் இறுதியில் அந்த வினோதமான சடங்கு ஆழமானது. பிரிமிட்டிவ் சடங்குகள் எல்லாமே அப்படித்தான். பன்றியை வெட்டி பன்றிமாடனுக்கு- அதாவது பன்றிக்கு கொடுக்கிறர்கள். மனித உடலான அன்னத்தை வெட்டி தாங்களே உண்கிறார்கள். பன்றிமாமிசத்தை உண்ண பன்றியே வருகிறது.

காட்டுக்குள் அழைத்துச்செல்ல வருபவர்கள் முதற்கொண்டு அனைவருமே ‘மிஸ்டிக்’ தன்மையுடனும் யதார்த்தமாகவும் இருக்கிறார்கள். அந்தச் சடங்கு பசிமயக்கத்தின் வழியாக மங்கலாகி மங்கலாகி தெரிவதும்கூட திகைப்பூட்டும்படி அமைந்திருக்கிறது.கடைசியில் காட்டின் தெய்வமான பன்றிமாடனின் கண்களை அருகே பார்த்துவிடுகிறான்

அருண்குமார்

கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நெடுந்தூரம் ஒரு அற்புதமான கதை. நூறுகதைகள் ஆகப்போகின்றது. சினிமாப்பின்னணியில் வந்த முதல்கதை. இந்தக்கதையை திருச்சியில் ஒரு சாதாரண சந்திப்பில் சொன்னீர்கள். இந்த அனுபவத்தை. அது இப்படி கதையாக மாறியது எதிர்பார்க்கமுடியாததாகவே உள்ளது.

அசோகமித்திரன் பாணிக் கதை. அசோகமித்திரன் பலசமயம் இந்த வகையான கதைகளை அந்த மனிதர்களின் துயரமான வாழ்க்கையைச் சித்தரிப்பதாக மட்டுமே அமைத்துவிடுவார். ‘வாழ்க்கையால் கைவிடப்பட்டவர்களின் கதை’ மட்டுமாக இது நின்றுவிட எல்லா வாய்ப்பும் இருந்தது. ஆனால் அந்த இரண்டு கழுகுகளும் கதையை மேலே கொண்டுசெல்கின்றன

அவை அந்த உடலை தின்றிருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவை தின்னவில்லை. அவற்றுக்கு அப்படி தின்ன தெரியாது. அவற்றால் பறக்கமுடியவில்லை. அவை அப்படியே செத்துவிடும்.

அவன் வானத்தில் பார்க்கும் அந்த இரண்டு புள்ளிகளும் சுதந்திரமான வேறுபறவைகள். அதுதான் பறவைகளின் இயல்பான உச்சம். இங்கே அவை மனிதனுடன் சேர்ந்து மண்ணிலேயே மாட்டிக்கொண்டிருக்கின்றன. விடுதலைக்கும் சிக்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான தூரம்தான் இந்தக்கதை

ஸ்ரீனிவாஸ்

அன்புள்ள ஜெ

என் ரசனைக்கு மிக உகந்த கதை நெடுந்தூரம். அந்த ambience கதையை பலதளங்களுக்கு நகர்த்துகிறது. அழுக்கு சாக்கடை குடிசை என சிக்கிக்கொண்டிருக்கும் ஓர் உலகம். மேலே வானில் சுழலும் ஒரு உலகம். அவன் சிறகுகள் வெட்டப்பட்ட கழுகுதான். வானை அவனால் பார்க்கமுடியும்தான். அந்த இரண்டு கழுகுகளும் மனிதர்களாக மாறின கழுகுகள். கழுகாக மாற மனிதன் கனவுகாணவும் செய்கிறான்

இந்த சிக்கிக்கொண்ட உலகில் சிறை, அடக்குமுறை, வறுமை, நிராதரவான நிலை எல்லாமே இருக்கிறது. ஆனால் அன்பும் நட்பும் இருந்துகொண்டே இருக்கிறது. டீயும்பொறையும் வாங்கித்தரும் வாட்ச்மேன், சிறையில் உதவிசெய்பவன், டோபி என ஒரு உலகம் சின்னச்சின்ன குறிப்புகள் வழியாக வந்துசெல்கிறது.

ராமச்சந்திரன்

கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]

கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]

கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்

ராஜன் குறையின் மறுப்பல்லாத மறுப்பு- அரவிந்தன் கண்ணையன்

$
0
0

ராஜன் குறை என்பவர் யார்?

‘திராவிட மனு’

திராவிட மனு- இரு எதிர்வினைகள்

‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்

‘ஜெயமோகனின் அரசியல்’ என்ற தலைப்பில் ராஜன்குறை உயிர்மையில் கட்டுரை எழுதியிருக்கிறார். ஜெயமோகன் தலித் தரப்பில் ராஜன்குறையின் கட்டுரையை முன் வைத்து கேட்கப்பட்ட கேள்விகளை ‘ராஜன்குறை யார்’ என்ற பதிவில் வெளியிட்டதற்கான எதிர்வினை இந்த உயிர்மை கட்டுரை.

நிற்க. ராஜனின் கட்டுரைக்கு ஆட்சேபம் தலித் தரப்பில் இருந்து வந்தது, முக்கியமாக ஏ.பி.ராஜசேகரனின் குறிப்பில் இருந்து ஆரம்பித்தது. ராஜன் பதில் சொல்ல கடமைப்பட்டது தலித் தரப்புக்குத் தான். ஆனால் மிக சவுகரியமாக அவரும் அவரது அடிப்பொடிகளும் ஜெயமோகனுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயமோகன் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதுவா பிரச்சினை? இல்லை. ராஜன், ஜெயரஞ்சன், ஆனந்தி ஆகியோரின் எழுத்து தான் விவாதப் பொருள்.

ஒன்றிரண்டு உதாரணங்களைப் பார்ப்போம். (ராஜசேகரன் சுட்டியதும் தான்). கட்டுரையில் ஓரிடத்தில் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் குறைந்தப் பின் விவசாயம் சாராத தொழில்களில் நிரந்தர்மின்மை தலித் ஆண்களின் வேல வாய்ப்புகளும் நிரந்தரமில்லாததாக்கி விட்டது எனப்படுகிறது. சரியே. அடுத்த பத்தியிலேயே தலித் ஆண்களின் வேலை நிரந்தரமின்மைக்கு அவர்களால் தொழில் நிறுவன வேலைக்கான கட்டுக் கோப்பில் வேலைச் செய்ய தெரியாமை (“inability to fit into the work discipline”). அந்த வரிகளில் சாதிய தடித்தனத்தை ஒரு நிமிடம் ஒதுக்குவோம். ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிற மகானுபவர்கள் ஏதேனும் புள்ளி விவரம் அளிக்கிறார்களா, கம்பெனிகளில் ஒழுங்கு நடவடிக்கையின் விவரங்கள் சொல்லப்பட்டனவா? எந்த சுக்கும் இல்லை. பாட்டி வடை சுட்ட மாதிரி கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்கள்.

சும்மா கண் முன்னே தென்பட்டவர்கள் சொன்னதெல்லாம் வேத வாக்காக எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு தலித் பெண் சொன்னாராம் தலித் ஆண்கள் எல்லாம் மேல் சாதிப் பெண்களையே குறி வைக்கிறார்கள் என்று. ஆய்வாளர் என்பவர் எதிர் தரப்பையும் கேட்டிருக்க வேண்டும், மேலும் கலப்புத் திருமணங்கள் பற்றி ஏதேனும் புள்ளி விவரம் இருக்க வேண்டும். இது எதுவும் இல்லை.

இன்னொரு இடத்தில் தலித் ஆண் ஒருவரின் நண்பன் பேருந்து நிலையத்தில் நிற்கும் உயர் ஜாதி பெண்ணை காண்பித்து ‘கலாய்ச்சு அனுப்பு’ என்கிறாராம், அந்த ஆணும் ‘கலாய்த்தாராம்’. இங்கே ‘கலாய்ச்சு அனுப்பு’ என்பதை ஆசிரியர்கள் ‘send her dishivelled’ என்று மொழி பெயர்க்கிறார்கள். அடக் கருமமே? இவர்களுக்கும் ஆங்கிலமும் தெரியவில்லை. ‘send her dishevled’ என்பது “அலங்கோலப்படுத்தி அனுப்பு’ என்பது. அதுவா கலாய்ப்பது? பெண்ணை கலாய்ப்பது எல்லா சமூகத்திலும் நடப்பது தானே என்றெல்லாம் கேட்கப்படாது.

கேள்விகள் பிறந்தது தலித் தரப்பில். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஜெயமோகனை வசைப்பாடி எதிர்வினை. “கல்விப்புல ஆய்வுகளில் இதுபோன்ற மறுப்புகளும், மாற்றுக் கோணங்களும் முக்கியமானவை” என்கிறார் ராஜன். மாற்றுக் கோணம் என்பது வேறு சாதியக் காழ்ப்பு என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. “என்னைப் பொறுத்தவரை ஆய்வுகளில் அறுதி உண்மைகளை காண்பது என்பது சாத்தியமல்ல” என்றும் சொல்கிறார் ராஜன். ‘அறுதி உண்மை’ இருக்க வேண்டாம் ஆனால் உண்மை இருக்க வேண்டுமே?

“மேலும் entice என்ற வார்த்தையை தவறான பொருளை குறிப்பதாகக் கூறுகிறார் (ஜெயமோகன்). கவர்வது, வசீகரிப்பது, மயக்குவது எல்லாம் காதலில் ஒரு அங்கம்தான” என்கிறார் ராஜன். உண்மையிலேயே இவருக்கு ஆங்கிலம் கொஞ்சம் வாங்கல் தான். ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் எதிர்மறை உணர்வுடன் கூடியது என்பார்கள். ‘Entice’ has a negative connotation. அதைத் தான் ஜெயமோகன் சுட்டுகிறார். ராஜன் சால்ஜாப்பு சொல்கிறார்.

ஆங்கிலத்தை வைத்து பயமுறுத்துவதை ஒரு டெக்னிக்காகவே வைத்திருக்கிறார்கள்,குறிப்பாக ஆய்வுக் கட்டுரை எழுதுபவர்கள். ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தில் ராஜன் வாசித்த கட்டுரையின் தலைப்பு இது, “Touching Untouchability: Dalit Situations and Theoretical Horizons” –என்ன எழவுய்யா அது?

“அந்த ஒரு EPW கட்டுரையை சுட்டிக்காட்டிவிட்டதால், அவர் எழுத்தைக் குறித்த என்னுடைய விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டதாக ஜெயமோகன் நினைக்கலாம். இது ஒரு திசைதிருப்பல் என்றுதான் நான் கருதுகிறேன்.” — இங்கே திசைத் திருப்பல் செய்திருப்பவர் ராஜன் தான். முதன்மையாக குற்றச்சாச்சு வைத்த தலித் தரப்பை மற்ரி மூச்சுக் கூட விடாமல் அர்ஜுனனை விட உக்கிரமாக குறி தப்பாமல் ஜெயமோகனை மட்டும் குறி வைக்கிறார்.

அன்னார் போதாக் குறைக்கு முடிக்கும் போது முத்தாய்ப்பாக தலித் இளைஞர்கள் போதாமைகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக கைக்கொள்ளும் ஆண்மைய வன்முறையை ஆப்பிரிக்க-அமெரிக்கர்களிடையே காணலாம் என்கிறார். இன்று அமெரிக்கா இருக்கும் நிலையில் இந்தக் கட்டுரையை ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்துக்கு (அவர் முன்பு கட்டுரை வாசித்த இடம்) அனுப்பினால் மிகச் சூடான எதிர்வினை கிடைக்கும்.

[முகநூலில் இருந்து]

Viewing all 16856 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>