Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16759 articles
Browse latest View live

காந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்பு

$
0
0

வணக்கம்

தகடூர் புத்தகப் பேரவை கலை இலக்கிய நிகழ்வுகளை இணைய வழியாக தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஞாயிறுதோறும்  காந்தியம் பேசுவோம் என்ற வரிசையில்  தொடர் நிகழ்வாக 6 வாரங்களுக்கு முக்கிய காந்திய நூல்களை அறிமுகப்படுத்த  திட்டமிட்டிருக்கிறோம்.

Zoom செயலி வழியாக நடைபெறும் இந்நிகழ்ச்சியினை தகடூர் புத்தகப் பேரவை யூடியூப் சேனலில் நேரலையாக காணலாம்.

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் காந்தியர்கள் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்.

15.11.20 [நவம்பர்] – இரவு 8:00

அன்புள்ள புல்புல்

அறிமுகப்படுத்துபவர்

S V வேணுகோபாலன்

சிறப்புரை

சுனில் கிருஷ்ணன்

zoom ID : 9805204425

Password தேவையில்லை.

Link :

https://us02web.zoom.us/j/9805204425

YouTube Live : தகடூர் புத்தகப் பேரவை

-இ. தங்கமணி

தகடூர் புத்தகப் பேரவை

தருமபுரி

 


மீண்டெழுவன

$
0
0

ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும். நானோ அன்று பழைய முறைப்படி ஆசிரியர் இல்லம்சென்று தமிழ்படித்தேன். அன்று அறிமுகமான சொல் களிற்றியானைநிரை. அதை பித்தன் என சொல்லி அலைந்தது உண்டு.

பின்னர் பத்மநாபபுரம் அரண்மனையை ஒட்டியிருந்த என் சிற்றப்பா வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. மிக அருகே ஒரு கோட்டையை அப்போதுதான் முழுவுணர்வுடன் பார்த்தேன். அதற்குமுன் ஐந்து வயதாக இருக்கையில் ஓராண்டு பத்மநாபபுரத்தில் நாங்கள் தங்கியிருந்தோம். அன்று பார்த்த கோட்டையின் நினைவும் உடன் இணைந்துகொண்டது

கன்னங்கரிய கோட்டை.மழைநீர் வழிந்து கருகிய கருங்கற்களுக்குமேல் கருகிய மென்மையான புல்பரவிய வெட்டுகற்கள் அடுக்கப்பட்டது.அருகே நின்றால் அதன் உடலை என் அகத்துள் எதுவோ உணர்ந்தது. அன்று அது கனவில் வந்தது.அதற்கு யானைவிழிகள் இருந்தன. மின்னும் கரிய நீர்க்குமிழிகள் போன்றவை.

களிற்றியானைநிரை என்பது கோட்டை என்ற எண்ணம் என்னுள் எப்போதுமிருந்தது. பின்னர் பத்மநாபபுரத்தில் குடியிருந்தபோது கோட்டையை யானைநிரையாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். பிற்பாடு சோழர்களும் ஹொய்ச்சாளர்களும் கட்டிய கோயில்களில் களிற்றியானைநிரையை ஆலயங்களில் செதுக்கி வைத்திருப்பதை கண்டேன்

இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள்.

எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?

எந்த அழிவுக்குப்பின்னரும் மீளமீள தன்னைக் கட்டிக்கொள்ளும் ஆற்றலை மானுடம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது? அந்த அடிப்படையான உயிர்விசைதான் அனைத்து அறங்களையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்கிறதா? போருக்கு பிந்தைய அனைத்தையும் ஒரே வீச்சுடன் தொகுத்துக்கொள்ளும் இந்நாவல் அந்த உசாவல்களை முன்வைக்கிறது

இந்நாவலை வெண்முரசுக்கான வாசகர்கூட்டங்களை நடத்தும் நண்பர்கள் சென்னை ராஜகோபாலன்,சௌந்தர்ராஜன்,காளிப்பிரசாத்; பாண்டிச்சேரி அரிகிருஷ்ணன், கடலூர் சீனு, மணிமாறன் ஆகியோருக்கும் வெண்முரசை கொண்டுசென்றுசேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளும் ஆஸ்டின் சௌந்தர்ராஜன், ராஜன்சோமசுந்தரம் ஆகியோருக்கும் சமர்ப்பிக்கிறேன். எந்த ஆக்கமும் அதற்கென்றே தங்களை அளித்துக்கொள்ளும் ஒரு சிறுவாசகர் வட்டத்தால்தான் காலத்தை கடக்கிறது. வெண்முரசின் வாசகர்கள் அனைவருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன்

ஜெ

கணப்பித்தம் கணச்சித்தம்- காளிப்பிரசாத்

$
0
0

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

நாம் அறிந்த உலகம் உண்டு. அறியாத ஒன்றும் உண்டு. அறியாதவை பல இருக்கின்றன என்கிற ஒரு புரிதல் அனைவருக்குமே இருக்கலாம். நாம் அறிந்த ஒன்றில் கிடைக்கும் நெம்புகோலை வைத்துதான் அறியாத ஒன்றைத் துழாவ வேண்டியிருக்கிறது. ஏதோ ஒரு தேசத்தில் நடக்கும் தாக்குதலைப் பற்றிக் கேள்விப்படுகையில் கூட ஒருவருக்கு அந்நாட்டைச் சேர்ந்த நண்பர்களின் உறவினர்களின் நினைவுகள் வருகிறது. அது அவர்கள் பிழைத்திருக்க என்ணியா தாக்குதலில் உள்ளாகியிருக்க எண்ணியா என்பது அவரவர் வழி.  ஆனால் அதன் மற்றொரு புறத்தை அறிய நமக்கு இருக்கும் தகவல்களைக் கொண்டே மனம் துழாவுகிறது. அந்தக் கணம் மனம் கொள்ளும் பாவனைகள் வியப்பானவை.

ஒன்றை தேடி அடையும் பொழுதில் அந்த இரு தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு என்பது இருப்பதில்லை. மலை உச்சியில் கல்லாய் சமைந்திருக்கும் ஒன்றை காண்பவனும்,  அந்த மலை உச்சியில் தானிருக்கும் இடத்திலிருந்து தன்னைக் காணவரும் அனைவரையும் காணும் அந்த சிற்பமும் மேலதிக வியப்பு ஏதும் கொள்வதில்லை. அந்த பயணமே அதை நோக்கித்தான். ஆனால் ஒரு மேஜையில் சுற்றிக் கொண்டிருக்கும் உலக உருண்டையின் மேல் விழுந்து விட்ட எறும்புக்கூட்டம் சிதறி ஓடுகையில் அது தன்னுடைய எந்த கூட்டாளியை எந்த தேசத்தில் எந்நிலையில் காணுமோ என்று ஆராய்வதில் ஒரு சுவாரசியம் உண்டு. அந்த ஒரு ஆர்வத்தை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் உண்டாக்கிய வண்ணமே இருக்கின்றன.

கிரிக்கெட் சூதாட்டம் என்கிற ஒன்றை நினைத்தும் பார்த்திராத காலம் அது. என் நண்பனின் உறவினர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ச்சியாகப் பார்ப்பார். விடாது பார்ப்பவர். டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச்களைக் காண்பது ஒருவித சலிப்புதான். ஐந்துநாட்கள் விளையாடி டிரா என்று சொல்வதெல்லாம் பார்வையாளனுக்கு இழைக்கப்படும் அநீதியே என்பது எனது கருத்து. ஆனால் அவர் அட்டையும் தாளும் கொண்டு அமர்ந்து அதை சங்கேத எழுத்துக்களில் குறித்தும் வைத்திருப்பார்.  அதை வைத்து அவர் கணிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் பலித்ததும் இல்லை. ஆனாலும் அவர் குறித்த ஒன்று நினைவிருக்கிறது. ஒருமுறை பந்து வீச்சாளர் பந்து வீச முற்படும் போது ’இதை வலதுபுறம் அடிப்பான்; கவரில் இருக்கும் தடுப்பாளர் பாய்ந்து பிடித்து  அவுட் ஆவான்’ என்றார். அவ்வாறே நிகழ்ந்தது. அது ஆடுகளத்தில் கூட ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. வீரர்களே எதிர்பாராத ஒன்று. ஆனால் தொடர்ச்சியாக ஆட்டத்தை வெளியிலிருந்து பார்த்து வரும் அவருக்கு அந்தக் கணத்தில் அவருக்குள் தோன்றிய ஏதோ ஒன்று அதை சொல்லியது என்றார். அனால் அதற்குப் பின் அவர் சொன்ன எதுவும் பலித்ததும் இல்லை.  உலகெனும் மாபெரும் சூதாட்டத்தில்  ஒருமுறை நாம் ஆட்டத்தை உணர்ந்து விட்டோம் என்று கருதுகிறோம். ஆனால் அதன் அடுத்த திருப்பம் நம்மை இன்னும் அதிர்ச்சி கொள்ள வைக்கிறது. நல்வாய்ப்பாக மற்றொருமுறை அந்தக் கணத்தை அந்த நபர் முயற்சிக்கவும் இல்லை.

ஆனால், எழுத்தாளர் என்பவர் வெறும் பார்வையாளர் மட்டும் அல்ல. அவர் உள்ளிருப்பவரும் அல்ல. அனைத்தும் கலந்து இருப்பவர். ஒருவருடன் உரையாடும்போதே அவரிடம் தான் உண்மையாகத்தான் உரையாடுகிறோமா அல்லது அவர் தன்னிடம் சொல்வது எந்தளவு உண்மை என்று மனம் கவனிக்கிறது.  எழுத்தாளர் அந்த மாபெரும் சூதாட்டத்தை தொடர்ந்து ஆடுபவர். அதற்காக சில கதாபாத்திரங்களை அவரே உருவாக்கி உலாவ விடவும் கூடும். ஒரு திரைப்படத்தில் அதன் இயக்குநரே நடிகராக இருந்து நடிக்கும் காட்சியின் போது தன் பாத்திரம் மட்டுமன்றி அடுத்தவரையும் கவனித்து ஒலி ஒளி உள்ளிட்ட அனைத்தும் கவனிப்பது போல தானும் இருந்து தள்ளியும் இருந்து அவர் ஆடுகிறார்.

இதோடு நான்கு உதாரணங்களை கொடுத்திருக்கிறேன். மேலும் கூட சில அளிக்கலாம். காரணம் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுகளுக்குள் செல்ல இவ்வாறு விளங்கிக் கொள்ளுதல் தேவையாக இருக்கிறது. சில இடங்களில் அவர் மாய யாதார்தத்தை ஒரு பின்புலமாக வைக்கிறார். ஆனால் யதார்த்தத்திலேயே வைக்கிறார். அதை அவரும் மறுக்கவும் இல்லை. மாயமும் யதார்த்தமும் சந்திப்பது அவரது புள்ளி. மார்க்கோஸை பில்கிளிண்டன் சந்தித்த நாளில் என்று சொல்லித்தான்  கதையை துவங்குகிறார். ஆனால்  மாய எதார்த்த கதை போல மானுடர்கள் வாலுடனோ அல்லது எட்டு தலைகளுடனோ வரவில்லை. பத்தடி உயர  பூச்சி என்று யாரும் காலத்தை பிளந்து வருவதில்லை.  காலமும் தூரமும் அவரது படைப்புகளுக்குள் வருகின்றன என்றாலும் அவை சாதாரண மனிதராக ஒரு பெயருடன் வருகின்றன. அவர் உருவாக்கிய ஒரு தனிப்பட்ட நடையாக அது உள்ளது.  அவரது அந்த தனிப்பட்ட கூறுமுறையே அவரை வாசிக்க தூண்டுகிறது

மதுரையில் டப்பிங் படம் பார்க்கப் போகும் ஒருவன் அங்கே வெளிநாட்டு யுவனை யுவதியை ( ஜாக்குலீன் ) சந்தித்து ஓரிரு நிமிடங்கள்  உரையாடுகிறான். அந்த ஜாக்குலீன் பாரீஸில் தன் பயண அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார் என்பதும்  அதில் அவர் தன்னை சந்தித்த தருணமும் உள்ளது என்பதையும் பிற்காலத்தில் தான் பாரீஸ் சென்ற தருணத்தில் அவன் வாசிக்கிறான். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகிறது;  ஆனால் அதற்குள் ஜாக்குலீன் கிளம்பிச் சென்றுவிடுகிறார்.  இடையே ஒரு சம்பவத்தை சொல்கிறார்.  அவர் பீஹார் போகும்போது அங்கு நிகழும் ஒரு கலவரத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் இறந்ததாக சொல்லப்பட அது தான் மதுரையில் கண்ட அந்த ஜாக்குலீனா என்று யோசிக்கிறார். அவர் ஜாக்குலீனிடம் கேட்க வந்ததே அந்த கேள்வியைத்தான். இந்த அபத்த விளையாட்டுதான் அவரது சூதாட்டக் களமாக இருக்கிறது. இதில் அறம், மனிதாபிமானம் கருணை ஆகியவற்றை தள்ளி வைத்துவிட்டு வெறும் ஆர்வத்துடன் மட்டுமே அதை அணுக முற்பட்டால் மனம் கொள்ளும் எண்ணங்கள் விந்தையானவை. அதற்கு இருப்பதும் வெறும் ஆர்வம்தானோ என்று எண்ண வைக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் இந்த மாயத்தையே தேடுபவராக இருக்கிறார்.

இதே பீஹாரும் ஜாக்குலீனும் பிறிதொரு கதையில் தகவலாக வருகிறார்கள். அங்கு கதைசொல்லி உயர் ரக மதுவிடுதி ஒன்றில் நடந்து கொள்ளும் விதம் கவனிக்கத் தக்கது. அங்கிருக்கும் இரு வெளிநாட்டவரிடம் பேச்சு கொடுத்து தன் அறிவை காட்டிக் கொள்கிறான். அவர்கள் ஒரு புத்தகம் எழுதினால் அதில் வருமே என்று நினைக்கும் ஒரு விளையாட்டு. ஆனால் அந்த அந்த அபத்தக் காட்சியை வர்ணிப்பது அல்ல அவர் கதை. முன்பே சொன்னது போல அந்த சம்பவமும் புனைவாக இருக்கலாம். அவன் ஜாக்குலீனை சந்திக்காமலேயே இருந்திருக்கலாம். ஒரு குறுக்கெழுத்துப் போட்டியை மேலிருந்து கீழ் வலமிருந்து இடம் கீழிருந்து மேல் என்று ரொப்பிக்கொண்டே வருகையில் இடமிருந்து வலமாக ஒரு புதிய வார்த்தை வந்து நிற்பது போல இவர் கதைகளில் ஒரு வித்தை காண்பிக்கிறார்.

நள்ளிரவு சூரியன் கட்டாயத்தின் பேரில் ஒரு நாவல் உருவாகும் தருணத்தை குறிப்பிடுகிறது. அதை ஒருவித பகடி என்று சொல்லலாம். தன் முதல் தமிழ் நாவல் பெரும் வெற்றியடைந்து  லட்சக் கணக்கில் செல்வமும் கோடிக் கணக்கில் வாசகர்களும் பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளன்.  (பகடி இங்கிருந்தே துவங்குகறது எனக் கருதுகிறேன் ). தன் அடுத்த நாவலுக்கான கருவை தேடி அலையும் அந்த எழுத்தாளன் கதைக்கான முக்கிய தருணங்களை கண்டடைந்து கிளம்புகிறான். தன் பால்ய காலத்தின் இடங்களைப் பார்த்து சம்பவங்களைக் நினைவுபடுத்திக் கொள்கிறான். பதிப்பகக் கட்டாயத்தில் எழுதப்படும் கதைகள் உருவாகும் அபத்தமும், எழுத்தாளர் ஏன் எழுதவேண்டும் என்கிற அபத்தமும் கலந்து உருவாகும் ஒருவித பகடிக்கதை. நள்ளிரவுச் சூரியன் பலூனாகி பறக்கிறது.  மக்களின் சினிமா ஆர்வம் பற்றி ஒரு கதை. அது மற்றோரு பகடிக்கதை. அதில் வில்லன் ஒருவர் கோபமாக பல்லைக் கடித்து முகத்தைக் கோணி லாரி ஓட்டுகிறார். சில அரசியல் கதைகளும் உண்டு. அதை புதிய தேசங்களை மொழிகளை சிருஷ்டித்து அங்கு நடப்பதாகச் சொல்கிறார். ஒரு இனத்துக்குத்தான் இவ்வாறு நடக்கும் அல்லது  நாட்டுக்குத்தான் நடக்கும் என்று எதையும் சொல்லிவிட முடியாது. அது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என்பதால், கண்ணுக்கெதிரே இருக்கும் நேரடி உதாரணங்களைக் கூட தவிர்க்கிறார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லும் கதைகள் இருக்கின்றன. ஒன்றிரண்டு கதைகள் நேரடி அறிவுறுத்தலாக / பிரசாரமாக இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையினையும் இவரது தனித்துவமான  எழுத்து நடையில் வாசிக்கும் போது, அவை தரும் பார்வை வேறு ஒன்றாக உள்ளது. ஒருவரிடம் கடன் கேட்டு பெற்று வரும் ஒருவன் கொள்ளும் அலைக்கழிப்பு. வெளியேயுள்ள மனிதன் உள்ளே இல்லை என்கிற  ஒரு சுய பரிசோதனைக் கதை ஆகியவை. யாரும் அறியாமல் இருக்கும் மனிதர்களை அவரது கதைகளில் தொடர்ந்து அறிமுகப் படுத்துகிறார். அவர்களின் இருப்பு / இன்மை எதுவும் மற்றவருக்கு ஒரு பொருட்டில்லை என்று வாழும் மனிதர்களை சொல்லும் கதைகளாக துவங்கி இவரது தனித்துவமான நடைக்கு வருகின்றன. அறிக்கை கதை, சினிமா மோகம் எவ்வாறு ஒரு முக்கியமான அறிக்கையை பார்க்காமல் விட்டு வைக்கிறது என்று சொல்கிறது. அந்தக் கதை வெளியாகி இருபத்தந்து ஆண்டுகள் கடந்து இன்று அந்த அறிக்கையில் சொல்லியிருக்கும் படியான நேரடி பாதிப்பு என்று எதுவும் இல்லை. ஆனால் அதே சினிமா மோகமும் அதே போன்ற அறிக்கைகளும் இன்றும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.

(2)

 

புத்தருக்கு இளம் வயதில் தான் ஒரு ராட்சத சிலந்தி வலையில் நிற்காமல் ஏறி கொண்டிருப்பது போன்ற கனவு தொடர்ச்சியாக வரும் என்று  சொல்வார்கள். எக்கணமும் குறுக்கு நெடுக்குமாக வளர்ந்து கொண்டே செல்லும் அந்த வலைப்பின்னல். அதை அறுத்தெறிந்து செல்லும் மனம் ஞானியருக்கானது. அதில் கடந்து உழலும் மனம் சாதாரணனுக்கானது. அதை எதிர்கொள்ளத் தயங்கி வாழ்வை முடித்துக் கொள்பவர் கூட உண்டு. ஆனால் அதை வியந்து எழுதிவைப்பவர் அரிது. அதுவே எழுத்தாளனின் இடம்.   அது அளிக்கும் வியப்பு ஒன்று உண்டு. சில நேரங்களில் அது வேறுவகையில் ஆசுவாசம் கொள்கிறது. கற்பனை அளிக்கும் ஒருவித ஆசுவாசம். ஒரு பார் டான்ஸரைக் காப்பாற்ற முடியாதவன் வேறொரு இடத்தில் பரதநாட்டிய நடன மங்கைக்கு ஏற்படும் எதிர்பாரா இடரில், தன் இயல்புக்கு  மீறி, கால்கள் கண்ணாடித் துண்டுகளில் கிழிபட அவளை கரங்களில் ஏந்திக்கொண்டு ஒரு கதாநாயகன் போலச் செயல்பட்டுக் காப்பாற்றுகிறான். அதில் அவன் செயலை அந்தக் கண தீர்மானித்து செலுத்தும் ஒன்று அந்த பழைய சம்பவம் அவனைச் செலுத்தியதில் உண்டான உணர்வு என்று புரிந்து கொள்ள முடிகிறது.  கற்பனையில் கொள்ளும் ஒரு வித ஆசுவாசம் அல்லது அது செலுத்தும் ஒரு வித அதிகாரம். காரைக்கால் அம்மையார் கதையைக் கேட்டதும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் நடிகை.. வைஜெயந்தி மாலா தன் அப்பத்தாவை நினைவு படுத்த, அதன்  தொடர்ச்சியாக அவள் தன் மீது செலுத்திய அன்பு நினைவுக்கு வந்து அதனூடாக பிள்ளைகளின் மீது தான் கொண்ட பிடிவாதம் தளர்வது மற்றொன்று.

தொடர்ச்சியாக மனம் ஒன்றை நினைத்து பிணைத்துக் கொள்வதையும் அது நிகழ் காலத்தில் உண்டாக்கிய மாற்றங்களை சித்தரிக்கிறார். ஆனால்  உள்ளே சென்று விளக்காமல் சம்பவங்களை மட்டும் சொல்லியவாறு வாசகர்களை இழுக்கும் நடை அவருடையது. ஆசிரியர் உரைக்கும் நீதி அல்லது கதையை எடுத்துச் சொல்லும் அசரீரிக் கூற்று பெரும்பாலும் இராது. ஆகவே எந்த ஒரு கதையிலும்,  கதைக்கு உள்ளிருக்கும் வாசகன்தான் அதை தொடுத்துக் கொள்ள  முடியும். ஒரு வித நினைவலைகளின் பின்னல். அடுத்த கதையே ஒரு திருடன் தன் ராஜவாழ்க்கையை கனவு காண்பதில் நிகழ்கிறது.  கதையின் முடிச்சு என்று இல்லாமல் ஒவ்வொரு வரிகளிலும் இவ்வாறூ சொல்லிச் செல்லும் நடையாகவும் இருக்கிறது.. ஒரு கர்ப்பிணிப் பெண் காலை அகட்டி நடக்கிறாள். அவளது சிசு தலைகீழாய் சுருண்டிருக்குமோ என அதை பார்ப்பவன் எண்ணுகிறான். அதுபோல ஒருவரியில்  பெரும் சிரிப்பையோ ஊசலாட்டத்தை, குழப்பத்தையோ சொல்லுகிற வரிகள் உண்டு. இந்த உத்தியை அனைத்திற்கும் பயன் படுத்துகிறார். குறிப்பிடத்தக்க இரு கதைகளாக மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனன் கதையையும் நடன மங்கை கதையையும் சொல்லலாம். ஒன்று வெடிச்சிரிப்பாகவும் மற்றொன்று மனத்தை கனமாக்குவதாகவும் உள்ளன. அதேநேரம் எக்கணமும் அடுத்த வரியில் கதைசொல்லி வந்து இவையனைத்தும் நான் சும்மா சொன்ன புனைவே என்று சொல்லும் அடுத்த வரியை கண்டாலும் அங்கு வியப்பதற்கில்லை

இது போன்ற கதைகளுக்கு மிக அண்மையாக இருப்பவை பெரும்பாலும் வணிக எழுத்துக்கள் தான். அல்லது சில அறிவியல் புனைவுகளும். விக்ரமாதித்தன் ஆயிரத்தோரு இரவு கதைகள் போன்றவையும் கூட. அவை தனக்குள் வாசகனுக்குத் தேவையான அதிரடி திருப்பங்கள் கொண்டிருக்கும் ஒருவித நேரடிக் கதைகள். சுரேஷ்குமார இந்திரஜித் தன் தொப்பின் பல கதைகளில் ஏதாவது ஒன்றில் மார்க்கோஸ், போர்ஹே, சுஜாதா ஆகியோரை கொண்டுவருகிறார். அவர்கள் கதை போன்று தோன்றும் சிலவற்றை எழுதியும் தருகிறார். ஆனால் அவருடன் நாமும் அந்த ஆட்டத்தில் இருக்கிறோம் என்கிற பிரக் வாசகருக்குத் தேவை. சீட்டாட்டத்தில் முன்பு   இருப்பவர் நமக்கு தேவையான சீட்டைப் போடுவதாக தோன்றும். அதற்கு நிகரானது இது. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை வாசிக்கும் போது நினைவுக்கு வந்த ’ ட்விஸ்ட்’  கதைகளை  கடக்க வேண்டியிருந்தது.

அவரது முந்தையை கதைகளின் தொடர்ச்சியாக அல்லது அவற்றின் மாறுபட்ட கோணமாக சில கதைகள் உள்ளன.  லலிதா கைம்பெண்ணாவது ஒன்று அவளது மறுமணம் நிகழ்வது மற்றொன்று. முடி மழிக்கப்பட்ட காபரே டான்சர் வேறொரு கதையில் பணக்கரப் பெண்மனியாக வருகிறார். இவர் பண உதவி செய்ய வந்த முன்னாள் கவர்ச்சி நடிகையை பாராமல் போவது ஒரு கதை பார்த்து உதவுவது மற்றொன்று. இதில் மிகவும் ரசிக்க வைப்பது அந்தக் கதாபாத்திரத்தின் மகள் ( நிகழ்காலமும் இறந்தகாலமும்) தன் தாயின் வாழ்க்கையை மாற்றி எழுதியதற்காக சண்டைக்கு வருவது. ’உண்மை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றாகத் தெரியும்’ என்று ஒரு கதையில் வாகன ஓட்டி சொல்கிறார். ஒரு சுயபரிசோதனை போல அதை தன் எழுத்துக்கள் மீதே பரீட்சை செய்து பார்க்கிறார்.

இடப்பக்க மூக்குத்தி, விரித்த கூந்தல், பெயரற்ற நாய்க்குட்டி, உறையிட்ட கத்தி, புத்தக அடுக்கின் மீது விழுந்து கிடக்கும் உள்ளாடை என சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை வாசித்தபின்னர்  அவர்  கதைளிலிருந்தும் எழுந்து வரும் காட்சிகள்  நினைவில் நிற்கின்றன. ஒவ்வொன்றையும் கடக்கையில் அது சார்ந்த நினைவுகளை மனம் கொண்டு வந்து நிறுத்துகிறது. தான் அறிந்த அனைத்தும் நிதர்சனத்துடன் சூதாடி, கலைத்துப் போடுகிறது. ஒரு சிறுகதையில் மது அருந்திவிட்டு பணத்தின் மீது சிறுநீர் கழிக்கும் ஒருவனை சித்தரிக்கிறார். பணம் என்பது வெறும் தாள்தான் என்று சொல்லி இரண்டு ரூபாய் நோட்டின்  மீது சிறுநீர் கழிக்கும் அவனுக்கு ஏன் பத்து ரூபாயை விட்டுவிட்டு ரெண்டு ரூபாய் மேல சிறுநீர் பாய்ச்சி, தன் சிந்தனையின் கற்பை நிரூபிக்கிறோம் என்று அந்தக் கணம் தோன்றுகிறது.  அப்பொழுது  ஒரு கணத்தில் ஒரு தெளிவை அடைகிறான்.  ’இங்கு எல்லாமே கோணல் மாணலாதான் இருக்கு’ என்றபடியே ஒரு சிறுகல்லை தூக்கி தூரத்தில் இருக்கும் மரத்தின் மீது அடிக்க, அது ஆச்சரியமாக குறிதவறாமல் அடித்துவிடுகிறது. அடித்த கல் நேராக படுவதும்,  சொன்ன பந்தில் சின்ன விதத்தில் விக்கெட் விழுவதும் வாழ்வெனும் மாபெரும் சூதாட்டக் களத்தின் அபூர்வ தருணங்கள்.  அந்த அபூர்வ கணத்தை நோக்கிய தடம் இந்தக் கதைகள்

 

– காளிப்பிரசாத்

சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்

சுரேஷ்குமார இந்திரஜித்- கலையாகும் தருணங்கள்

சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்

கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்

 

 

 

நூற்பு -சிறுவெளிச்சம்

$
0
0
அன்பு நிறைந்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்,

ஒரு நல்ல செய்தி…

உள்ளுணர்வின் சொல்லுக்கு செவிமடுத்து தீவிரமாக செயல் நோக்கி பயணிக்கும்போது அது தரும் பாதை மிக கடினமனதாக இருக்கிறது. காரணம் நமக்கான பாதையை அது புதிதாக உருவாக்குகிறது. ஒவ்வொரு சவால்களையும் கடந்த பிறகு அடையும் மன நிறைவு பிரம்மாண்டமானது. அப்படியான  மன நிறைவின் சிறு வெளிச்சமாக கருதும் இச்செய்தியை உங்களிடத்தில் பகிர்வதில் பெரும்  மகிழ்வு.

முனைவர் திரு மனோஜ் குமார் தாஸ், இந்திய தகவல் தொழில்நுட்பக்கழகம் – குவாலியர்; முனைவர் திரு. ம.ச. பாலாஜி, நாட்டிங்ஹம் பல்கலைக்கழகம், நிங்போ – சீன வளாகம்; முனைவர் திரு. சந்தனா ஹெவேகே, ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – ஆஸ்திரேலியா; முனைவர் திரு. லிம்  வெங் மார்க், ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மலேசிய வளாகம்; ஆகிய பேராசிரியர்கள் இணைந்து தொகுக்கும்  புத்தகமான  “Social and Sustainability Marketing: A Casebook for Reaching Your Socially Responsible Consumers through Marketing Science” என்ற புத்தகத்திற்கான ஒரு பகுதியாக இடம் பெறும் நூற்பு பற்றிய கேஸ் ஸ்டடியினை, க்ரியா பல்கலைக்கழகத்தில் சந்தையியல் இணை பேராசிரியராக பணிபுரியும் திரு.சத்யநாராயணன் அவர்களின் பெரும் முயற்சியால் சமர்பிக்கப்பட்டு  அக்டோபர் 2ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்றவாரம்  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் கல்லூரி மாணவர்கள் படிக்கும் பாடப்புத்தகத்தில் நூற்பு பற்றியும் நூற்பின் பயணம் பற்றியும் இடம்பெறப்போகிறது. மாணவர்கள் கற்க்கும் கல்வியின் ஒரு அங்கமாக நூற்பும் பரிணமிக்கப்போகிறது என்பது இப்பயணத்திற்கான நோக்கத்தின் சிறு பகுதியை அடைந்ததுபோலவே இருக்கிறது.

நூற்பின் ஐந்தாம் ஆண்டின் தொடக்கம் பெரும் கனவுகளோடும் மனநிறைவுடனும் தொடங்கியுள்ளது. உண்மையிலேயே இது நூற்பின் பயணத்தில் ஒரு மைல்கல்தான். நூற்பு ஆரம்பிக்கும்போது குக்கூ காட்டுப்பள்ளியில் பிரார்த்தனை கூடத்தில் சிவராஜ் அண்ணன் சொன்ன “இன்னும் நாலு ஐந்து வருடம் கழித்து நூற்பு பற்றி ஆய்வு செய்வாங்க, நிறைய மாணவர்கள் நூற்பிற்கு வந்து அனுபவம் பெற்று போவாங்க, வேறொன்றாக மாறி நிற்கும்” என்று சொன்னது மெது மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறது.

ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு நீங்கள் வந்ததும்  அங்கு இருந்த நூற்பு அலுவலகத்தில் தீபம் ஏற்றி ஆசீர்வாதம் செய்ததும்,  உங்களுடைய அம்மா இராட்டை சுற்றியதை பற்றி சொன்ன அனுபவத்தையும் உங்களுடை சொல்லையும் அதில் ஆழ்ப்பொதிந்துள்ள நம்பிக்கையினையும் இத்தருணத்தில் இறுக பற்றிக்கொள்கிறேன்.

கடந்து வந்த தருணங்களும் அது தந்த வேதனைகளையும் நினைத்துப்பார்க்கிறேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் சொல்லும் “தொடர்ந்து நமக்கு விருப்பமான ஒன்றை நேர்த்தியாக செய்து கொண்டே இருப்பதுதான் ஒரே தீர்வு” என்பதை பரிபூரணமாக உணர்கிறேன். இந்த மனநிலையில் நிறைய எழுதலாம் என்றாலும் இயலவில்லை.

என் வாழ்வின் எல்லா வகையிலும் உடனிற்கும் எல்லோரையும் பாதம் பணிந்த நன்றியை வைக்கிறேன்.

எல்லோர்க்கும் எல்லா செயலும் கூடட்டும்…

வாழ்வின் என்றென்றைக்குமான நன்றிகளுடன்,

சிவகுருநாதன்.சி
fb: nurpuhandlooms

தண்ணீர் -மூன்று கவிதைகள்

$
0
0

vee

மலையாளக் கவிஞர்களில் படிமங்கள் வழியாக மட்டுமே பேசுபவர் வீரான்குட்டி. வழக்கமான அரசியல்களைப் பேசுவதில்லை. வழக்கமான உறவுக்கொந்தளிப்புகளைப் பேசுவதில்லை. தனிமையான மெல்லிய முணுமுணுப்பு போன்றவை அவருடைய கவிதைகள். ஆன்மிகமான கண்டடைதலை மிக எளிமையான புறநிகழ்வுகளில் நிகழ்த்துபவை

தண்ணீர்! தண்ணீர்!

 

சாவு

நெருங்கி வந்துவிட்ட ஒருவர்

தண்ணீர் தண்ணீர் என்று

தன் தாகத்தை

இறுதியாக வெளிப்படுத்தவில்லை

 

விட்டுப்போக

மிகத் துயரளிக்கும்

ஒன்றை

மெல்ல

வரிசையாக

நினைவுகூர்கிறார்

வெண்கொக்கின் படம்

 

மேகத்தில்

யானையின்

முயலின்

வடிவங்களை கற்பனைசெய்வேன்

சிலநேரங்களில் குருவியை

 

வீட்டுக்கு அருகிலுள்ள

வயல்வெளியின் அருகே

ஆழத்தை உற்றுநோக்கி

அமர்ந்திருக்கும் கொக்கின் படத்தை

பிடித்து வைத்திருந்தது குளம்

 

வேனிற்காலத்தில் குளம் வற்றியது

கொக்கை பிறகு அது பார்க்கவேயில்லை

அந்தப் படத்துக்கு என்ன ஆகியிருக்கும்?

 

இப்போது

சிலநேரங்களில்

மேகங்களில்

என்னால் பார்க்கமுடிகிறது

வெள்ளைக்கொக்கின் படம்

அழைப்பு

 

மலைக்குமெலிருந்து கடலோரத்துக்கு

மாலையிடப்பட்டு அழைத்துவரப்பட்டவள்

எத்தனைநாள் அங்கே வாழமுடியும்?

 

கடல்

அலைகளால்

சிறு குன்றுகள் சமைத்து

அவளுக்கு சிரிப்புமூட்டப்பார்க்கும்

 

மேகங்கள்

மலைகளாக உருமாறி

அவள்முன்

மிதந்துசெல்லும்

 

சூரியன் அவளுக்காக

மலைச்சரிவின் அதே வண்ணங்களால்

மணற்குன்றுகளை

ஒளிபெறச்செய்துகொண்டிருக்கும்

 

அப்போதும்

சமவெளிகள் திருப்பி அனுப்பும்

தன் அழைப்புகளுக்காக

அவள் செவிகூரலாம்

 

உறக்கத்தில் முலைகளைத் தடவி

இரு குன்றுகளுக்கு நடுவே

ஓடுவதாக கற்பனை செய்யலாம்

 

ஒருநாள்

திரும்பி ஓடி

அடிவாரத்தை அடைந்து அவள் நிற்பாள்

 

அப்போது

மகளை ஏற்றுக்கொள்ள

எங்கும் செல்லாமல்

அங்கேயே இருங்கள்

மலைகளே மலைகளே!

வீரான் குட்டி கவிதைகள்

வீரான் குட்டி கவிதைகள்

 

இதிகாசங்களின் களம்

$
0
0

வணக்கம் ஜெ

படக்கதைகள், திரைப்படங்கள் பின்னர் சிறு சிறு கதைகள் என ராமாயணமும் மகாபாரதமும் அறிந்தேன். சமீபத்தில் பல நாட்டினவரும் ராமாயணத்தை அவர்களின் பாணி இசை நடனத்துடன் நிகழ்த்திகாட்டிய இந்த காணொளியை பார்க்க நேர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக தாய் நாட்டின் ராமாயண வடிவமாகிய ramakien பற்றி படித்ததில் இவ்வோவியங்கள் என்னை ஈர்த்தன. கிட்டத்தட்ட 2km வரை நீளும் சுவர்களில் வரைந்த mural ஓவியங்கள். வ்வாட் ஃபிரா கே (Temple of Emerald Buddha) என்றழைக்கப்படும் கோவிலின் உள் சுற்றுச்சுவர்களில் 1783ம் ஆண்டு வரையப்பட்டவை.

https://www.photodharma.net/Thailand/Wat-Phra-Kaew/Wat-Phra-Kaew.htm

அனுமன் வாயு மைந்தன் என குறிக்க அவன் உடல் முழுதும் காற்றின் சுழல்களாக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த அனுமன்களின் இவ்வோவியத்திற்கு இரண்டாம் இடம். மூத்தவன் தமிழகத்தில் செய்து இப்போது met museum இல் இருக்கும் இந்த அற்புத சிலை.

இதை ஒட்டி சிந்திக்கையில் ராமாயணத்தில் இருந்து நான் சிறுவயதில் பெற்றது ஒரு idealized king/man, மற்ற கதை மாந்தர்களும் அவ்வாறே idealized versions. அவர்களுடன் என்னை இணைத்துக்கொள்ள இயலவில்லை, தொலைவில் வைத்து வணங்கமட்டுமே முடிந்தது. இன்றளவும் என்னுள் அது அவ்வாறே நீடிக்கின்றது. ஜடாயுவும் அனுமனும் மட்டும் எப்படியோ என்னுள் வந்துவிட்டிருக்கிறார்கள்.

075 Phra Ram and Nang Sida in Hanumans Mouth, Wat Phra Kaew, Bangkok

முதலில் நாம் அறிவது இப்பிம்பங்களை மட்டுமே. காந்தியை மகாத்மா என போற்றவேண்டும் என்ற பிம்பத்தையே முதலில் அறிந்தேன். அப்பிம்பத்தைகொண்டே அறியமுயன்றதால் அவரை வெறுக்கவும் துவங்கினேன். தந்தையின் நோய்ப்படுக்கை அருகே இல்லாமல் புதுமனைவியிடம் சென்றவர், மகனின் நோய்படுக்கையிலும் அசைவம் தரமாட்டேன் என விடாப்பிடியாக இருந்தவர் மஹாத்மாவா. வெறுப்பை சுலபமாக வளர்க்க இவ்வம்பு பேச்சுகள் என்னை சுற்றி நிறைய இருந்தன. என் ஆசிரியர் ஒருவரே தொடர்ந்து காந்தியை மட்டமாக பேசி வந்தார், That old man slept with girls, என்பார். பின்னர் காந்தியின் எழுத்து வழியாகவே அவரை கண்டடைந்தேன். உங்களின் உரைகள் உதவியாக இருந்தன. அந்த halo அவரின் தலைக்கு வெளியேஅல்ல உள்ளே உள்ளது என அறிந்தேன். காந்தி என்ற மனிதரை அறிந்தேன்.

அதேபோல் மகாபாரதத்தின் மாந்தர்களுடன் என்னை சுலபமாக பொருத்தி அறிந்துகொள்ள முடிந்தது. குருபூர்ணிமா உரையாடலில் சொன்னதுபோல பூரிசிரவஸ் என்னை கவர்ந்த பாத்திரம், எளிதில் நான் அணுக முடிந்தது. அவனுடன் நான் ஒரு பெரும்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அர்ஜுனனுடன் காண்டீபத்திலும் கிராதத்திலும் அகத்திலும் புறத்திலும் பயணித்திருக்கிறேன், அப்பயணங்களின் தேடல்களின் உச்சமாக அவனுக்கு கீதை உரைக்கப்பட்டது. கண்ணனை குழந்தையாக, தமயனாக, களித்தோழனாக, அரசனாக, சூழ்மதியாளனாக, ஞானியாக அணுகி அறிகிறேன்.

பாரதத்தை முழுதாக வாசித்த என் பாட்டிக்கு பூரிசிரவஸ் நினைவிலிருப்பானா என தெரியவில்லை. ஆனால் வெண்முரசு வாசித்த எனக்கு அவன் அணுக்க தோழன். இந்த கட்டுடைப்பும் மீளுருவாக்கமும் நடந்திராவிட்டால் எனக்கும் அவன் ஒற்றை வரியில் வந்து சென்ற ஒருவனாக இருந்திருப்பான். ராமாயணமும் காந்தியும் போல பாரதத்தையும் வணங்கியிருப்பேன் அறிந்திருக்கமாட்டேன்.

ஸ்ரீராம்

அன்புள்ள ஸ்ரீராம்

நான் கீழைநாட்டு சிற்பங்களில் எல்லாம் மகாபாரதமும் ராமாயணமும் அவர்களின் பெருமைமிக்கச் சின்னங்களாக முன்வைக்கப்பட்டிருப்பதை தொடர்ச்சியாக காண்கிறேன். அவை அவர்களின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கின. ராமாயணமும் மகாபாரதமும் இல்லாமல் இந்தோனேசியப் பண்பாடு இல்லை. தாய்லாந்துப் பண்பாடு இல்லை. கம்போடியப் பண்பாடு இல்லை.

ஆனால் அப்பண்பாடுகளை அவர்களின் நிலங்களிலிருந்து அகற்றும்பொருட்டு தொடர்ச்சியான பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. பெரும்பாலும் பொய்ப்பிரச்சாரங்கள். அவர்களின் இழிவுகளுக்கெல்லாம் அவையே காரணம் என்பதுபோல. அவை அங்கே வந்தடைந்தவை, அவர்களுக்கு அன்னியமானவை என்று சொல்லப்பட்டன.

ஆனால் அவை நீங்கிய இடங்களில் அம்மக்களுக்குத் தொடர்பே இல்லாத இஸ்லாம் மதமும் கிறிஸ்தவமும் கொண்டுவந்து நிறுவப்பட்டன. முன்பு அங்கிருந்த இதிகாசங்களுக்கு எதிராக பேசிய நவீன ‘பகுத்தறிவு’ அறிவுஜீவிகள் அதை ஆதரித்தனர் அல்லது அமைதியாயினர். அந்த மதங்கள் வேரூன்றிய பின் அவர்கள் முற்றிலும் விலக்கப்பட்டனர்

சென்ற ஐம்பதாண்டுகளாக இந்நாடுகளில் பௌத்தத்தை ’வில்லன்’ ஆக மாற்ற, அதை அகற்ற மிகப்பெரிய அளவில் முயற்சிகள் செய்யப்படுகின்றன. பணம் பெய்யப்படுகிறது. இலங்கை, மலேசியாவில் எல்லாம் சைவம் என்பது ஒரு தனிமதம் என்பதை பிரச்சாரம் செய்து அதை இதிகாச, புராணப்பின்னணியில் இருந்து பிரித்து அதன் பண்பாட்டு- குறியீட்டு அடையாளத்தை அழிக்க மிகப்பிரம்மாண்டமான முயற்சிகள் செய்யப்படுகின்றன

அப்பட்டமாகவே தெரிவது , இவையனைத்துக்கும் பின்னணியில் இருப்பவை சர்வதேச மதமாற்ற நிறுவனங்கள். இவற்றைச் சொல்பவர்களுக்கு பணத்துக்கு ஊடக ஆதரவுக்கு பஞ்சமே இல்லை. இவற்றை எதிர்ப்பவர்கள்தான் தரையில் நிற்கவேண்டியிருக்கிறது.

என்ன ஆச்சரியமென்றால் இவற்றைச் சொன்னதுமே தொடர்பே அற்ற, நம்பமுடியாத இடங்களில் இருந்தெல்லாம் தாக்குதல் வருகிறது. உதாரணமாக, கீழைநாட்டுப் பண்பாட்டின் அடித்தளமாக ராமாயணம் திகழ்வதை நாம் சொன்னால் ஒரு மரபான ராமாயண அறிஞர் கிளம்பிவந்து நம்மை வசைபாடி, நாம் சொல்வதில் சில பிழைகள் சொல்வார். அவர் ஏன் அதைச் சொல்கிறார் என்று கூர்ந்து பின்னால் சென்றுபார்த்தால் அவரும் அந்த மாபெரும் வலையில் அறிந்தோ அறியாமலோ உறுப்பினர்தான் என்பதை காண்போம்

வரலாற்றில் இதற்கிணையான கருத்தியல் வலை இதற்கு முன்னால் பின்னப்பட்டதில்லை. ஒருபக்கம் முற்போக்கினர், இன்னொரு பக்கம் ஆசாரவாதிகள் இருவரும் சேர்ந்தே ஒன்றைச் செய்கிறார்கள். இன்று சைவத்தை அழிக்க எவரெல்லாம் பேசுகிறார்கள்? ஒருபக்கம் பகுத்தறிவுநாத்திகர். மறுபக்கம் அதிதீவிர சைவம் பேசும் ஆசாரவாதிகள் நெற்றியில் விபூதியுடன் வந்து சைவத்தின் தொன்ம அடிப்படையை அழிக்க முயல்கிறார்கள்

நீங்கள் அனுப்பிய இந்த படங்கள் ஏக்கத்தை அளிக்கின்றன. அழிக்கப்பட்டு மறைந்த பண்பாட்டின் சிதறுகள் இவை

ஜெ

தீவிரவாதம், இலட்சியவாதம்- கடிதங்கள்

$
0
0

தீவிரவாதமும் இலட்சியவாதமும்

அன்பின் ஜெ,

‘லட்சியவாதமும் தீவிரவாதமும்’ கட்டுரை வாசித்தேன்.
கட்டுரையில் தான் முரண்படும் விஷயங்களை சரவணராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கட்டுரையில் இரண்டு முக்கியமான விஷயங்களை நான் கவனிக்கிறேன்.

1. இன்றைய, நவீன கல்வி கற்ற இளைஞர்களின் அடையாளச்சிக்கல் பிரசினைகள். இன்று நடக்கும் (‘நடத்தப்படும்’) பல போராட்டங்களின் ஊற்றுக்கண்ணாகவே பார்க்கவேண்டியது இந்த அடையாளச்சிக்கல் பிரசினை என்று நம்புகிறேன். நவீனகல்வி கற்ற இளைஞர்கள் தான் கற்பனை செய்து வைத்திருந்த அல்லது தான் எந்த வேலைக்கு தகுதியானவன் என்று நம்புகிறானோ அத்தகு வேலையில் அமர்ந்துவிட்டானென்றால் ஓரளவு அவனுக்கு திருப்தி வந்துவிடுகிறது. ஆனால் அப்படி அமையவில்லையென்றால் அது அவனது வாழ்க்கையை/அன்றாடத்தை சிடுக்காக்கி விடுகிறது. தன் அடையாளத்தை தன்னை விட பெரிய விஷயங்களில் தேடத்துவங்குகிறான். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களை தன் அடையாளமாக நம்புவதிலிருந்து, சினிமாவில் நுழைய முயல்வது, போராட்டங்களில் பங்கேற்பது என்று பலவிதங்களில் தன்னை சாதாரணர்களிலிருந்து வித்தியாசப்படுத்திக்கொள்ளத் தொடங்குகிறார்கள். தர்க்கபுத்தி கூர்மையாக இருக்கும் இன்றைய இளைஞனுக்கு இத்தகையச் சிக்கல்கள் ஏற்படுவது (ஒருவகையில்) இயல்பே. தன்னறம் புத்தக்த்தின் முன்னுரையில் நீங்கள் இதைத் தொட்டிருந்தீர்கள் – “இதற்கு முந்தைய தலைமுறை இளைஞர்களிடம் இத்தகையச் சிக்கல்கள் இருந்திருக்கும் வாய்ப்பு குறைவு; போலவே அடுத்த தலைமுறையில் இவ்வளவு அழுத்தங்களும் இருக்காது, ஆனால் இந்த தலைமுறை இளைஞர்கள் இதைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல” என்று முன்னுரையில் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இந்த அடையாளத்தைத் தேடும் முயற்சிகள் நேர்மறையான விளைவுகளை ஏற்பத்துவது பெரும்பாலும் குறைவாகவே உள்ளது. ஏதோ ஒருவகையில் தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்வதற்காக மரபை, மதத்தை, இன்னும் தங்களுக்கு வழிவழியாக வந்து சேர்ந்த பலவற்றை மூர்க்கமாக நிராகரித்து, அவற்றை ‘இறங்கி’ அடிக்கும் முயற்சியாகவே உள்ளது. இதனால், தனிவாழ்க்கையில் அந்தந்த பருவத்தில் அமையவேண்டிய முக்கியமான விஷயங்கள் (பெரும்பாலும் வேலை, திருமணம், குடும்பம், குழந்தை), ஒன்று தாமதப்படுகின்றன அல்லது விட்டுப்போய் விடுகின்றன; தங்கள் முயற்சிகளின் வியர்த்தம் அதன்பின் அவர்களுக்கு உறைத்தாலும் அவர்களால் தங்களைப் பின்னுக்கிழுத்துக்கொள்ள முடிவதில்லை. விளைவு, வாழ்க்கை ஒரு downward spiral-ஆக சுழன்று விடுகிறது. “தான் தன் இளமையின் வேகத்தில் தவறான திசையில் சென்றுவிட்டோம். தான் வெகுதூரம் சென்றிருந்தாலும் அதிலிருந்து விலகி வெளிவருவதே தனக்கான மீட்பு” என்பதை உணர்ந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்கு தன் அகங்காரம் இடமளிப்பதில்லை. அதன்பின் அன்றாடத்தில் ஒரு தத்தளிப்பு, சிடுசிடுப்பு, எதிலும் விட்டேற்றித்தனம்/விரக்தி வந்து விடுகிறது. இதிலிருந்து தானாக வெளிவரும் இளைஞர்களின் விகிதம் குறைவாகவே இருக்கும் என்பது என் அனுமானம்.

2. மற்றுமொரு முக்கியமான விஷயம் இத்தகைய அமைப்புகள்/போராட்டங்களில் பங்கெடுக்கும் பெண்களின் பங்கு தொடர்ந்து அதிகரிப்பது. நீங்கள் கூறியிருந்தபடி பெண்களின் வாழ்க்கை ஆணின் வாழ்க்கையைவிட இன்னும் சிறிய வட்டம் எனும் பட்சத்தில் இந்த சிக்கல்கள் அவர்களுக்கு இன்னமும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பே மிகுதி. உண்மையில் இதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் அதிகமானவை என்றே நினைக்கிறேன். சிறிது கவனித்தால், பெண்களின் திருமணம் தள்ளிச்செல்லுதல் முதல் இத்தகைய மனோநிலையின் அறிகுறிகளை நாம்மால் எளிதில் காண முடிகிறது. ஆனால் இதற்கான தீர்வுகள் என்ன என்பதை தனிமனிதர்களாகத் தங்களை சுயபரிசோதனை செய்தே கண்டடையவேண்டியிருக்கும்; அவை நிச்சயம் வசதியான பதில்களாக இருக்கப்போவதில்லை, சங்கடப்படுத்தும், தங்களை மறுபரீசிலனை செய்ய வைக்கும் பதில்களாகவே அமையும் வாய்ப்பே மிகுதி. ஆனாலும் அது ஒன்றே வழி என்றே படுகிறது.

கட்டுரைக்கு நன்றி,

அன்புடன்
வெங்கட்ரமணன்

 

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரையை புரிந்துகொள்ள ஒரு முக்கியமான முன்கருத்து தேவை. இப்போது sustainable economy பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குச் சமானமாக sustainable revolution என்பதைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்.

நான் இன்றைய உலகில் நிகழும் பெரும்பாலான எதிர்ப்பு இயக்கங்களைப் பார்க்கையில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அவற்றின் பிரச்சினையே அவற்றை நீண்டகாலம் நீடிக்கச்செய்ய முடிவதில்லை என்பதுதான். வால்ஸ்ட்ரீட் புரட்சி முதல் டெல்லி ஜாமியா மிலியா புரட்சி வரை இதுதான். அவற்றை நீடிக்க வைக்க முடியாது. அதற்குள் கருத்துமுரண்பாடுகள் வருகின்றன. உள்மோதல்கள் வருகின்றன. அரசு காத்திருக்கிறது. பலவீனம் தோன்றியதுமே திருப்பி அடிக்கிறது

ஏன் நீடிக்கமுடியவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கான எதிர்ப்பு, ஒட்டுமொத்த எதிர்ப்பு என்று இவை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான். எதிர்ப்புநிலை ஆழமான நம்பிக்கைநிலைக்கு நேர் எதிரானது. இதுவே புரட்சிகர இயக்கங்களுக்கும் பொருந்தும் அவை நம்பிக்கையின்மையின் அடிப்படையில்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆகவே புரட்சிகர இயக்கங்களுக்குள் ஆணவமும் உள்மோதலும் இருந்துகொண்டே இருக்கிறது

இங்கே உள்ள புரட்சிகர இயக்கங்கள் இன்னமும்கூட ஆயுதம்தாங்கியவை அல்ல. யோசித்துப்பாருங்கள், ஆயுதமேந்திய குழுக்களில் இருந்து ஒருவர் வெளியேவந்து இப்படி ஒரு விமர்சனக்கட்டுரையை துணிவாக எழுதிவிடமுடியுமா?

எம்.ஜெயராஜ்

காலம் செல்வம்- பேட்டி

$
0
0

காலாகாலமாக இலக்கியத்தை அரசியலின் பணிப்பெண்ணாய் கருதும் மனோபாவம் இங்குண்டு. அந்தக் கோப்பையை இங்கே கொண்டு வா. இந்தச் சாப்பாட்டை அங்கே கொண்டுபோய் கொடு” என.. இலக்கியம் அரசியலின் பணிப்பெண்ணல்ல. சுயாதீனமானது. தன்னளவில் சுதந்திரமானது.

விதி சமைப்பவர்கள்தான் இலக்கியத்தில் இயங்க முடியும்: காலம் செல்வம் அருளானந்தம்

எழுத்தாளனின் பார்வை

$
0
0

அரசியலும் எழுத்தாளனும்

அன்பின் ஜெ..

நாஞ்சில் நாடன் சிலைகள் மீது வைத்த விமரிசனத்துக்கு எதிரான இந்து தமிழ் கட்டுரையைப் படித்தேன்.. அந்தக் கட்டுரையின் மீதான உங்கள் விமரிசனத்தையும் படித்தேன்.

”எல்லாவற்றிலும் இருக்கும் ஒவ்வாமையே எழுத்தாளனுக்கு அரசியலிலும் இருக்கிறது. மதம், பண்பாடு, அரசு, அரசியல் எதையும் ‘முழுமையாக’ ஏற்றுக்கொண்டு ஒழுகுவது எந்த எழுத்தாளனுடைய இயல்பும் அல்ல. இதற்கு உலக இலக்கியத்திலேயே விதிவிலக்கு கிடையாது. நாஞ்சில்நாடன் தன் ஊர், தன் சாதி, அரசு, சைவமதம் பற்றியெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்? ஒவ்வாமையும் எள்ளலும் மட்டுமே. ஏன் அவர் வழிபடும் கம்பனைப்பற்றிக்கூட ஒவ்வாமையின் மொழி அவ்வப்போது எழுவதுண்டு” – எனக்கு இந்த வழியில் சில சிக்கல்கள் இருப்பதாகத் தோன்றுகிறது

சென்ற முறை நமது ஜூம் இலக்கியக் கூட்டத்தில் ஒரு கேள்வியை எழுப்பினேன். ஏன் நாஞ்சில் அவர்களின் அணுகுமுறையில், எதிர்மறைத்தன்மை மேலோங்கியுள்ளது என. ஆனால், அதை அவர், நான் அரசுகளை, தலைவர்களை ஏன் நேர்மறையாகப் பேசுவதில்லை என்பதாக எடுத்துக் கொண்டார்..  கொரோனா காலத்தில் நடக்கும் அநியாயங்களைப் பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும் என்று பதிலிறுத்தார். அந்தக் கூட்டத்தின், நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக, நான் அங்கே விவாதிக்கவில்லை.

நாஞ்சில் சொன்னது போல, கொரோனாவை முன்வைத்துப் பல எதிர்மறை விஷயங்கள் நடக்கின்றன. அதே சமயத்தில், இந்தப் பெரும்தொற்றுக் காலத்தில் கேரள, தமிழக அரசு மருத்துவமனைகளில் பொது மருத்துவர்களின், செவிலியர்களின் தொடர் பணி  என்பதில் பெரும் நேர்மறை அம்சம் உள்ளது.  நமக்குத் தெரிந்த மருத்துவர் ராமானுஜம் கோவிந்தனும், அவர் மனைவியும் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்.. அவர்களுக்கு சிறு வயது மகள் இருக்கிறாள். வயதான தந்தையும் என நினைக்கிறேன்.. கொரோனாப் பணியில், வீட்டில் பெற்றோர் இருவரும் இருக்க இயலாது. தொடர்ந்து கடந்த 8 மாதங்களில் இது போலத்தான் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி புரிந்து வருகிறார்கள்.. மருத்துவத் துறை முழுக்க தனியார் மயமாக்கப் பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என நம் கண் முன்னே உணர்ந்தோம். இதை முன்னிறுத்துவதும் எழுத்தாளனின் கடமையில்லையா?  கண் முன்னே தெரியும் குறைகளை மட்டுமே பேசினால் எப்படி?

எனது மரியாதைக்குரிய மருத்துவர் அமலோற்பவ நாதன் அவர்கள் ஒரு முறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உருவான வரலாற்றைச் சொன்னார்.. உறுப்பு மாற்று என்பது ஒரு இழி வணிகமாக உருவெடுத்து, பெரும் பிரச்சினையான போது, தமிழக முதல்வர், 2007 ஆம் ஆண்டு, மருத்துவர்களை அழைத்து, ஒரு வலுவான சட்டத்தை உருவாக்கச் சொன்னார். முக்கியமாக, பணத்துக்காக ஏழைகள் உடல் உறுப்புகளை விற்பதை எப்படித் தடுப்பது என்பது அதன் முக்கிய நோக்கம். அதை உருவாக்குகையில், இந்தத் துறையில் தொடர்புள்ள நிறுவனங்கள், நோயாளிகள், பொது மக்கள் என அனைவரையும் கலந்து ஒரு சட்ட வரைவு உருவாக்கப்பட்டது.. ஒரு consultative approach..

அது ஒரு வெற்றிகரமான சட்டமாக உருவானதற்கு அந்த அணுகுமுறை முக்கியக் காரணம் எனச் சொன்னார்.  மிக முக்கியமாக இரண்டு கூறுகள் – 1. உறுப்பு தானம் மக்கள் முன் வந்து இலவசமாகக் கொடுப்பதாக இருக்க வேண்டும் 2. மரணித்த நபரின் உறுப்புகள் சமூகத்துக்குச் சொந்தம். அவை, ஏழை, உயர் வர்க்கம் என்னும் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.. இந்த இரண்டு அம்சங்களுமே பொதுமக்களுடனான ஆலோசனையில் வெளிவந்தவை என்றார். இந்த இரண்டு அம்சங்களும் தான், இந்தச் சட்டத்தை மக்கள் மத்தியில் ஒரு நம்பகமான சட்டமாக்க்கி, இன்று இந்தச் சிகிச்சை முறையில் தமிழகத்தை ஒரு முன் மாதிரி மாநிலமாக ஆக்கியுள்ளது

ஆனால், இதில் சில விலகல்கள் இருக்கலாம்.. அவற்றைப் பூதாகாரமாகப் பல புலனாய்வு இதழ்கள் எழுதியிருக்கலாம். ஆனால், குணம் நாடிக் குற்றமும் நாடும் நோக்கும், கொஞ்சம் சிரமும் எடுத்துக் கொண்டால், இதன் சாதனைகள் என்ன, பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் உண்மை நிலையை முன் வைக்க முடியும்..

அதை விடுத்து, ஒன்றிரண்டு குற்றங்களை முன் வைத்து, இந்த சட்டமே மோசம் என்னும் ஒரு பார்வையையும் முன் வைக்கலாம். ஆனால், அது  நமது சமூக அரசுக் கட்டமைப்புகளின் மீதான அடிப்படை நம்பிக்கையையே குலைக்கத்தான் துணை போகும்.

இன்னொரு உதாரணம் – தமிழக மருத்துவச் சேவைக் கழகம் உருவான கதை. 1994 ஆம் ஆண்டு, அன்றைய பொதுநலத்துறை அமைச்சர், அன்று வரை மாவட்ட அளவில் இருந்து வந்த மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்முதல் முறையை மாற்றி, அதை மாநில அளவில் கொண்டு சென்றார். இது பற்றிய 4 பக்க அரசுக் குறிப்பை, அமைச்சரே தன் கைப்பட எழுதியிருப்பதாக, நாராயணன் என்னும் தமிழகத்தின் மிக மூத்த ஐஏஎஸ் அதிகாரி தான் எழுதிய திராவிடியன் இயர்ஸ் என்னும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்..

அந்த நிறுவனம் மிகச் செயல் திறன் மிக்க வகையில் செயல்படும் நிறுவனமாக, பூர்ணலிங்கம் என்னும் ஐஏஎஸ் அதிகாரியின் மேலாண்மையில் உருவாகிறது. பொது மருத்துவக் கொள்முதலில் மூன்றாமுலக நாடுகளுக்கான உதாரணமாக இந்த நிறுவனம் விளங்கி வருகிறது..  ஆனால், ஏதோ ஒரு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு எதிர்மறை அனுபவத்தை வைத்து, நண்பர் ஒருவர் அந்தத் துறை ஊழல் மிக்கது என்னும் வகையில் முகநூலில் எழுதியிருந்தார்.

தன் அனுபவம் ( anecdote) ஒரு மிக முக்கியமான தேவை.. அது ஒரு விஷயத்தை நாமே நேரில் உணர உதவுகிறது.. ஆனால், அதற்கு எல்லைகள் உண்டு. அதுவும், நாம் அந்த விஷயத்தில் நிபுணராக இல்லை என்றால், அது முழுமையான ஒரு சித்திரத்தை நமக்கு அளிக்காது.  ஒரு இலையில் கானகத்தைப் புனைவெழுத்தாளரால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், பப்ளிக் பாலிசி அவ்வாறல்ல.. பல்வேறு தரவுகளையும், தேவைகளையும் உள்ளடக்கி, மொத்த சமூகத்துக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. அது ஒரு common minimum denomitaor ஐத்தான் பேசும்.

வணிக இலக்கியத்தைத் தாண்டி, சீரிய இலக்கியத்தை நோக்கி வர, வாசகருக்கு உழைப்பு தேவைப்படுகிறது. அதைச் செய்ய வேண்டியது ஒரு சமூகத்தின் அறம். அதே போல எழுத்தாளர்களும் மற்ற துறைகளைப் பற்றிய விமரிசனங்களை முன்வைக்கையில், இன்னும் சீரிய அளவில் தரவுகளை எடுத்துக் கொன்டு, ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் – நேர்மறை, எதிர்ம்றை இரண்டையும் முன்வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அப்படியான அணுகுமுறையில், இயல்பாகவே ஒரு மேலான பார்வையில், ஒரு எழுத்தாளர் தம் வாசகர்களுக்கு உண்மையான புரிதலை முன்வைக்க முடியும்.

ஏனெனில், எழுத்தாளர்களின் வாசகர்கள், எழுத்தாளர்கள் சொல்வதைப் பெரும்பாலும் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஒரு துறையில் ஊழல் என்பது பேச்சளவில் இருக்கையில், ஒரு எழுத்தாளர் அதையே எழுதுகையில், அது உறுதி செய்யப்பட்டு விடுகிறது. அந்த வகையில், எழுத்தாளருக்குப் பெரும் பொறுப்பும் இருக்கிறது.

அன்புடன்

பாலா

அன்புள்ள பாலா

உங்களை பற்றிய என் மதிப்பீடு இது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த மாணவர். நூல்களை நம்பி, படித்து, தேர்வுகளை எழுதி வெல்பவர். உயரிடங்களுக்குச் சென்று அமர்பவர். அந்த நம்பிக்கை உங்கள் ஆற்றல். இன்றும் உங்கள் உயர்நிலை நிர்வாகம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிகழ்வது.

துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள்

ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் சார்ந்தது அல்ல

நான் பலமுறை பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். நான் நேரில் அறிந்த, தெளிவுற உணர்ந்த தகவல்களைச் சொல்லும்போதுகூட அவர்கள் அரசு சார்பான செய்திகளை தரவுகளாக வைத்து ஆணித்தரமாக மறுப்பதை கண்டிருக்கிறேன். நீங்கள் ஓர் ஐ.ஏ.எஸ் ஆக இருக்கவேண்டியவர்.

இந்த தளத்திலேயே நான் நேரில் கண்டவற்றை சொன்னபோது நீங்கள் தரவுகளுடன் மறுத்தீர்கள். மறுதரவுகளை வெவ்வேறு செய்திகள், ஆவணங்கள் வழியாக பலர் முன்வைத்தபோதுகூட உங்கள் குரலில் இருந்தது நீங்களறிந்த தரவுகள் மீதான உறுதி மட்டுமே [உதாரணம் பால் பற்றிய கட்டுரைகள் போலிப்பால் – கடிதம் ]

உங்களை மட்டுமல்ல, இந்த மாதிரி தரவுகளுடன் பேசும் எவரிடமும் எந்த கருத்தையும் எவ்வகையிலும் நிரூபிக்கவே முடியாதென்பதே என் எண்ணம். நானும் இருந்த ஓரு பேச்சரங்கில் ஒருவர் தமிழகத்தில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனேகமாக ஊழலே செய்வதில்லை என்று பேசினார். அவர் ஓர் அரசதிகாரி.

நாஞ்சில்நாடன் அவருடைய ஊரிலேயே சென்ற நாற்பதாண்டுகளில் அவர் கண்ணெதிரில் மாபெரும் கோடீஸ்வரர்களாக மாறிய சில அரசியல்வாதிகளை பற்றிச் சொன்னார். அரசியலன்றி எந்த தொழிலும் இல்லாதவர்கள். ஆனால் அந்த அதிகாரி தமிழகத்தில் ஊழல் குறைவு என்றும் ஊழல் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் நாலைந்து அதிகாரிகள் எழுதிய நூல்களை திரும்பத்திரும்ப ஆதாரம் காட்டிக்கொண்டிருந்தார்.

நான் புன்னகையுடன் பேசாமலிருந்தேன். நாஞ்சில் சலித்துப்போய் “சூத்தும் ஒரு கண்ணுதான்னு ஒருத்தன் சொன்னா அதுக்கும் அவனுக்கு ஒரு நியாயம் இருக்கும்” என்றார்.

தரவுகளை வேண்டிய கோணத்தில் வேண்டியவகையில் தொகுத்துக்கொள்ளலாம். சொல்பவரின் தரப்பென்ன என்பது மட்டுமே அதில் வெளிப்படுகிறது. உலகிலெங்கும் தரவுகளுடன் விவாதிக்கும் எழுத்தாளர்கள் எவரும் இல்லை. எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் அல்ல. அவர்கள் எழுதுவது நிகரனுபவத்தை மட்டுமே

இலக்கியம் சான்றுகளை அளிப்பதில்லை. “இலக்கிய உண்மை என்பது நிரூபிக்கத்தேவையில்லாத உண்மை” என்பது மிகப்பழைய வாக்கியம். Anti empirical truth என்றே பின்நவீனத்துவக் கருதுகோள் ஒன்று உண்டு.

இலக்கியம் என்னும் செயல்பாடே அடிப்படையில்  ‘நிரூபிக்கப்படுவதே உண்மை’ என்னும் பொதுவான நம்பிக்கைக்கு எதிரான ஒன்றுதான். ஒரு பொதுத்தர்க்கச் சூழலில் நிரூபிக்கப்படுவதே உண்மை. ஆனால் இலக்கியத்தில் அப்படி அல்ல. அது எப்போதுமே நிரூபணத்துக்கு எதிரானது, நிரூபிக்கும் முறைமைகளை கடைப்பிடிக்காதது, தனக்கென வேறுவழிகளைக் கொண்டது.

அப்படியென்றால் இலக்கியப்படைப்பு ஒன்றை உண்மை என எப்படி நிறுவுகிறது?

இங்கே நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. நிரூபண உண்மைகள் சொல்லப்படும் களத்தில் அவற்றை ஏற்பவர்கள் யார்? அவர்கள் தரப்படுத்தப்பட்ட, வரையறைசெய்யப்பட்ட ஒரு திரள். அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. ஏனென்றால் நிரூபண உண்மைக்கு ஏற்பாளர்கள் எவ்வகையிலும் முக்கியமில்லை. ஏற்பாளர்கள் இல்லாமலேயே ஒன்று நிலைநிற்க முடியுமென்றால் அதுதான் நிரூபண உண்மை

இலக்கிய உண்மை அப்படிப்பட்டது அல்ல. அது வாசக ஏற்பால் மட்டுமே நிலைகொள்ளக்கூடியது. வாசக ஏற்பு இல்லையேல் அது மறைந்துவிடும். அதை உண்மை என வாசகன் ஏற்பதனூடாகவே அது உண்மை என்று ஆகிறது. அதாவது இலக்கிய உண்மை நிலைகொள்வது ஆசிரியனிலோ பிரதியிலோ அல்ல, வாசகனிடம்.

எழுத்தாளன் வாசகனை ‘ஏமாற்றிவிடுகிறான்’ என அடிக்கடி சோட்டா அறிவுஜீவிகள் சொல்வதுண்டு. எழுத்தாளன் மொழியை வைத்து, கதைபுனையும் திறனை வைத்து, வாசகனுக்குள் ‘தவறான’ கருத்தை திணிக்கிறான், கடத்திச்செல்கிறான் என்பார்கள். அரசியல் சார்ந்த நிலைபாடு கொண்டவர்கள் அடிக்கடி இதைச் சொல்கிறார்கள்.

இலக்கியவாசகனை அறியாக்குழந்தை என்றோ, முட்டாள் என்றோ இப்படிச் சொல்பவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். இது தாங்கள் ஏதோ அரசியல் மெய்ஞானம் அடைந்து முக்தி அடைந்தவர்கள் என்று கற்பனை செய்துகொள்வதுதான். அந்த வகையான ஒரு நம்பிக்கை இல்லாவிட்டால் இங்கே எவராவது ஏதாவது அரசியலமைப்பை தலைமேல் தூக்கிவைத்துப் பேசமுடியுமா என்ன?

எந்த ஒரு உச்சகட்ட அரசியல் அறிவுஜீவியைவிட, சமூக ஆய்வாளனை விட, இலக்கியவாசகன் கூர்மையானவன், மேலும் அறிவார்ந்தவன்  என்பதை மிகச்சாதாரணமாகப் பேசினாலே புரிந்துகொள்ள முடியும். தர்க்கத்தால் இவர்கள் இலக்கியவாசகனை அணுகினால் மிகமிக எளிதாக அவன் அவர்களை கடந்துசெல்வான் என்பதை இவர்களே அறிவார்கள்.

ஓர் எழுத்தாளன் படைப்பில் முன்வைப்பதை வாசகன் ஏற்றுக்கொள்வது எப்படி?  இலக்கியவாசகனுக்கு இலக்கியம் அளிப்பது ஒரு நிகர்வாழ்க்கையை. வாசகன் அந்த வாழ்க்கையை ‘தெரிந்துகொள்வதில்லை’ அதற்குள் சென்று தானும் வாழ்கிறான்.அவன் அடைவது அவனுக்கு ‘சொல்லப்பட்ட’ உண்மையை அல்ல .அவனே வாழ்ந்து ’அடைந்த’ அனுபவத்தை.

ஆகவேதான் நீங்கள் ஓர் இலக்கியவாசகனுடன் ஏதேனும் ஒன்றைப்பற்றிப் பேசினால் அவன் தன் அனுபவத்தை, தன் சிந்தனையை சொல்வானே ஒழிய இன்ன எழுத்தாளர் இப்படிச் சொல்கிறார் , அவரை நம்பி அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லுவதில்லை

அந்த ஏற்பு அகத்தூண்டல் [Evocation] என்ற சொல்லால் நவீன இலக்கிய உரையாடல்களில் குறிப்பிடப்படுகிறது. அது எழுத்தாளன் சொல்வதை வாசகன் ‘நம்பு’வதனால் உருவாவது அல்ல. எழுத்தாளனின் அனுபவச்சித்தரிப்பும் வாசகனின் சொந்த அனுபவமும் தொட்டுக்கொள்வதனால் உருவாவது அது.

வாசகன் எழுத்தாளனை தன் அறிவால் சந்திக்கவில்லை. எழுத்தாளன் எழுதுவதை தரவுகளின் அடிப்படையில் பரிசீலிப்பதில்லை, தர்க்கபூர்வமாக மதிப்பிடுவதில்லை. தன் அனுபவங்களின் அடிப்படையில், அதிலிருந்து பெற்ற நுண்ணுணர்வின் அடிப்படையில்தான் அறிகிறான்

ஒரு படைப்பை வாசித்த அனுபவமுள்ளவர், வாசிக்கையில் ஒரு கதைத்தருணத்தை, ஒரு கருத்தை, ஒரு கதைமாந்தரை சரியாக சொல்லியிருப்பதாக உணர்ந்தது எவ்வண்ணம் என்று பார்த்தால் நான் சொல்வது புரியும். வாசிக்கும்போதே, அக்கணமே ஏற்பு நிகழ்ந்துவிடுகிறது. அது பரிசீலித்து எடுக்கும் ஏற்பு அல்ல.

வாசிப்பின்போது என்ன நிகழ்கிறது? எழுத்தாளன் அனுபவங்களாக ஆக்கத்தக்க மொழிப்பதிவுகளை உருவாக்கிக்கொண்டே செல்கிறான். வாசகன் தன் சொந்த அனுபவங்களைக்கொண்டு அந்த மொழிப்பதிவுகளை தன் அனுபவங்களாக ஆக்கிக்கொள்கிறான். அந்த தன் அனுபவங்களில்தான் அவன் அனைத்தையும் அடைகிறான். அது எழுத்தாளனின் அனுபவம் அல்ல, வாசகனின் அனுபவம்

ஏற்புக்கொள்கை என்ற பெயரில் விமர்சனத்தில் விரிவாகப் பேசப்பட்டது இது. புனைகதை என்பது வாசகனின் சொந்த அனுபவங்கள் என்னும் விதைகளை எழுத்தாளன் நீரூற்றி வளர்ப்பதுதான்.

ஆகவேதான், எவர் எப்படி சான்றளித்தாலும் தன் அகம் ஏற்காத ஒன்றை இலக்கியவாசகன் ஏற்பதில்லை. கருத்துத் தளத்தில் ஓர் அறிஞன் சொல்வதை வாசகன் ஏற்பதற்கு அந்த அறிஞனின் கல்வித்தகுதி, அந்தக் கருத்து வெளிவந்த தளம், அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட பிற அறிஞர்கள் அனைவரும் உதவுகிறார்கள். இலக்கியத்தில் அப்படி எந்த புறமதிப்பும் படைப்பின்மேல் ஏற்றப்பட முடியாது. வாசகன் அதை அந்தரங்கமாக வாசிக்கிறான். அந்தரங்கமாக அடையாளம் காண்கிறான், ஏற்கவோ மறுக்கவோ செய்கிறான்.

வாசகனின் அகம் என நான் இங்கே சொல்வது தன் வாழ்வனுபவங்களாலும் நுண்ணுணர்வுகளாலும் அவனே உருவாக்கி கொண்டிருக்கும் ஆழத்தைத்தான். அதைத்தான் நனவிலி என்கிறோம். அதைத்தான் புனைவென்பது நனவிலிக்குள் ஓர் ஊடுருவல் [A raid into the unconscious] என்று இலக்கியவிமர்சனம் சொல்கிறது

ஒரு தலைமுறைக்காலத்தில் பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்படுகின்றன. பலநூறு ஆசிரியர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிகமிகச் சிலரே வாசகர்களிடம் அந்த ஏற்பை அடைகிறார்கள். இலக்கியப்படைப்பாளிகளிலும், இலக்கியங்களிலும் ஏற்கப்படுபவை மிகமிகக் கொஞ்சம்தான். பெரும்பாலானவை வாசகர்களால் நிராகரிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இந்த அந்தரங்கத்தன்மைதான். அதை புறவயமாக ஆராய்பவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

கருத்துக்கள் அப்படி அல்ல, அவை தர்க்கபூர்வமாக முன்வைக்கப்பட்டால்  ஒருசில வாசகர்களையாவது சென்றடைந்துவிடமுடியும். எல்லா கருத்தும் எப்படியோ இருந்துகொண்டிருக்கும்.

இவ்வாறு வாசகனுக்குள் தொடர்ச்சியான ஏற்பை உருவாக்கி, அவனுடைய அனுபவமண்டலத்தை உருவாக்குவதில் பங்களிப்பாற்றும் படைப்பாளிகளுக்கு காலப்போக்கில் ஓர் ஆளுமை உருவாகிறது. அவர்கள் படைப்புக்கு வெளியே சொல்வனவற்றையும் அந்தப் படைப்புலகின் உணர்வுகளைக்கொண்டு வாசகன் அணுகுகிறான்.

அவ்வண்ணம் ஆளுமைகள் என ஆகும் படைப்பாளிகள் ஒரு பண்பாட்டுக்கு தலைமுறைக்கு ஓரிருவரே. அவர்களின் சொற்கள் அவர்களின் வாசகர்களுக்கே முக்கியமானவை. அவர்கள் தாங்கள் வாசித்த அவர்களின் புனைவுலகின் நீட்சியாக அக்கருத்துக்களை கண்டு ஏற்பார்கள் அல்லது மறுப்பார்கள். அங்கும் தங்கள் சொந்த அனுபவத்தளத்தையே அளவீடுகளாகக் கொள்வார்கள்

அந்தப் புனைவிலக்கியவாதியின் உலகுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கு அவர்கள்மேல் எந்த மதிப்பும் இருப்பதில்லை. அவர்கள் தாங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதை அப்படைப்பாளியும் சொல்கிறானா என்று மட்டும்தான் பார்ப்பார்கள். இல்லையென்றால் முதலில் எழும் கேள்வியே “நீ யார்ரா இதை சொல்ல?”என்பதுதான். அதை எப்போதுமே சமூகவலைத்தளச் சூழலில் பார்க்கலாம்.

உண்மையிலேயே அந்தக் கும்பலுக்கு எழுத்தாளன் திகைப்பை அளிக்கிறான். ஒரு வட்டச்செயலாளராகக்கூட இல்லாதவன் எப்படி அரசியல் கருத்துச் சொல்லலாம் என்ற திகைப்பு அது. பெரும்பாலானவர்கள் எழுத்தாளனை தன்னைவிட தாழ்ந்தவர்களாக நினைத்து வசைபாடுவார்கள். கொஞ்சம் பண்பட்டவர்கள் என்றால் அறிவுரை சொல்வார்கள்.

கி.ராஜநாராயணனோ, நாஞ்சில்நாடனோ ஒரு பண்பாட்டுக்கு பெருஞ்செல்வங்கள். உலகின் எந்தப் பண்பாட்டுக்கும் அவர்களைப்போன்றவர்கள் அருங்கொடைகள் அவர்கள் அன்றாடம் டிவியில் வந்து புள்ளிவிபர அடிப்படையில் வாதிடுபவர்களில் ஒருவர் அல்ல.

அவர்கள் தங்கள் புனைவுகளால் அந்த இடத்தை அடைந்தவர்கள். அப்புனைவுலகை தன் அனுபவமண்டலத்தால் தான் புனைந்துகொண்ட வாசகர்களிடம் பேசுபவர்கள். மையஓட்ட நம்பிக்கைகளுக்கு, பொதுவான தர்க்கங்களுக்கு அப்பாலுள்ள ஓர் உலகம் அது. அங்கே நின்று அவர்கள் பேசுவது பண்பாட்டின் மற்றொரு குரல்.

அக்குரலை பண்பாட்டை அறிந்தவர்கள் மதிக்கவேண்டும். மதிக்காவிட்டால் புறக்கணிக்கலாம், அதைத்தான் தமிழ்ச்சமூகம் எப்போதும் செய்துவருகிறது.ஆனால் அவர்களும் நீங்கள் பேசுவதையே பேசவேண்டும் என எதிர்பார்க்கவேண்டாம். அவர்களை உங்கள் புள்ளிவிபரப்பேச்சாளர்களில் ஒருவராக ஆக்கி, உங்கள் அரசியல் சழக்குகளில் வைத்து மதிப்பிடவேண்டாம். அவர்களிடம் போய் உங்கள் பாணியிலான தர்க்கங்களை கோரவேண்டாம்

உங்கள் தர்க்கப்பார்வையில் உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இருக்குமென்றால், அதுவன்றி வேறெல்லாம் உங்களுக்கு பிழை என தெரியும் என்றால், அது உங்கள் தரப்பு. எழுத்தாளர்களிடம் உங்கள் ஆய்வுமுறைகளை எதிர்பார்க்காதீர்கள். அரசியல்சரிநிலைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். உலகின் நாகரீக சமூகங்களில் சமூகத்தின் அற, ஒழுக்க விழுமியங்களைக்கூட எழுத்தாளர்களுக்கு நிபந்தனையாக்குவதில்லை. அவர்கள் சொல்வதை ஓர் அதர்க்கநிலை உண்மை, அது பண்பாட்டின் ஒரு தரப்பு என்றே எடுத்துக்கொள்வார்கள். அதை மிகமிக முக்கியமான ஒரு குரலென எண்ணுகின்றன நாகரீக சமூகங்கள்.

உங்களை நான் அறிவேன். உங்களுக்கு இந்தக் கருத்துக்கும் இலக்கியத்துக்கு வெளியே நம்பகமான ஆதாரம் தேவைப்படும். நீதிமன்ற ஆதாரமே இருக்கிறது. எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக அணுகுவது எப்படி என்று உயர்நீதிமன்றமே தமிழ்ச்சமூகத்திற்குச் சொல்லியிருக்கிறது. சொல்லப்போனால் கைகூப்பி மன்றாடியிருக்கிறது. கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு

ஜெ

சிறுகுமிழியின் ஒளி

$
0
0

வெண்முரசின் நாவல் நிரையில் நான் எழுத எண்ணும்போதே தயங்கி சொல்பின்னெடுத்த நாவல் இதுதான், கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் கல்பொருசிறுநுரை. இந்த இருபத்தைந்தாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர்.

ஆனால் அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்மவடிவானவனும் அதற்கு கட்டுப்பட்டவனே என்பதனால்

மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு  துலாத்தட்டில் உள்ளன என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது, ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது

மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையை தான் கொடுப்பதன் சித்திரம் இது. கொடுக்கவேண்டுமென அவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் என முன்வைத்தவன். ஆகவே அவன் அதை அளித்தான்

அவன் கண்முன் மறைந்தன எல்லாம். அவன் துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா? இருந்திருக்கலாம், பெருந்தந்தையர் துயர்கொண்டவர்கள். ஆனால் அவன் அதற்கும் அப்பால். துளிகளை, அலையை கடலை மட்டுமல்ல புவியை ஒரு துளியெனக் காணும் தொலைவு திகழும் பார்வைகொண்டவன். அவனுக்கு கல்பொருசிறுநுரைக் குமிழிதான் அவனேகூட.

எழுத எண்ணியபோது வந்தமைந்த கல்பொருசிறுநுரை என்னும் சொல் என்னை ஊக்கியது. அச்சொல்லைப் பற்றிக்கொண்டே இதை எழுதிமுடித்தேன். இதன் முழுமை நிகழ்ந்தபோது வெண்முரசிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டேன்.

திருவண்ணாமலையில் ஒரு பிச்சைக்காரனாக அமர்ந்து இன்னொரு பிச்சைக்காரராக யோகி ராம்சுரத்குமாரைக் கண்டிருக்கிறேன்.பின்னர் அவருடன் உரையாடியிருக்கிறேன். அவர் ஒரு தொன்மம் என மறைந்தபின் நினைவுகூர்கையில் மேலும் அணுகியிருக்கிறேன்

யோகிக்கு இந்நூல் காணிக்கை

ஜெ

வழிப்போக்கர்கள்

யோகியும் மூடனும்

புதிய கவிஞர்கள்-கடிதம்

$
0
0

அன்பின் ஜெ,

தேன்மொழி தாஸின் கீழ்க்காணும் கவிதையை நண்பர் அமிர்தம் சூர்யா சென்ற வாரம் அறியத் தந்தார்.

மெய்வாசகம்

காண்பதில் என்ன இருக்கிறதோ காணாததில் அதன் உயிர் இருக்கிறது

உயிர் எங்கே இருக்கிறதோ அதன் உன்மத்தம் வேராக இருக்கிறது

எங்கே வேர் இருக்கிறதோ அதன் உச்சியில் ஒரு சுயம் இருக்கிறது

எங்கே சுயம் இருக்கிறதோ அது பெருகத் தவிக்கிறது

எது பெருகத் தவிக்கிறதோ அது இடங்களைத் தேடுகிறது

எது இடங்களைத் தேடுமோ அது வெல்கிறது

எது வெல்லுமோ அது தோற்றுவிக்கிறது

எது தோற்றுவிக்குமோ அது அதிகாரம் செலுத்துகிறது

எது அதிகாரம் செலுத்துகிறதோ அது அதிக மடமைகளைச் சூழவைக்கிறது

எங்கே மடமைகள் சூழ்கிறதோ அங்கே சமத்துவம் சீர்குலைகிறது

எங்கே சமத்துவம் சீர்குலையுமோ அங்கே

அங்கே அநீதி எழும்புகிறது

எங்கே அநீதி எழும்புகிறதோ அங்கே ஒடுக்குதல் உருவாக்கப்படுகிறது

எது ஒடுங்குகிறதோ அது அறிவை விட்டுவிடுகிறது

எது அறிவைக் கைவிடுகிறதோ அது மனோபலத்தை இழக்கிறது

எது மனோபலத்தை இழக்குமோ அது தன்னைத் தொலைக்கிறது

தன்னைத் தொலைப்பது அடிமையாகிறது

எது அடிமையாக்கியதோ அதுவே ஆள்கிறது

எது ஆள்கிறதோ அது பணியவைக்கிறது

எதற்குப் பணிகிறீர்களோ அதற்கு நிமிர்வீர்கள்

எதற்கு நிமிர்ந்தீர்களோ அதை வணங்குவீர்கள்

எதை வணங்குகிறீர்களோ அதை சந்தேகிப்பீர்கள்

எதைச் சந்தேகிக்கிறீர்களோ அதை ஆராய்வீர்கள்

எதை ஆராய்கிறீர்களோ அதில் குழம்புவீர்கள்

எதில் குழம்புகிறீர்களோ அதில் கரைவீர்கள்

எதில் கரைகிறீர்களோ அதில் தெளிவீர்கள்

எதில் தெளிகிறீர்களோ அதில் காதல் கொள்வீர்கள்

எதில் காதல் கொண்டீரோ அதில் ஞானம் பெறுவீர்கள்

எதில் ஞானம் அடைவீர்களோ அதை ஒளியாக்குவீர்கள்

எதை ஒளியாக்கினீர்களோ அங்கே இருப்பீர்கள்

எங்கே இருக்கிறீர்களோ அங்கே இதற்கு முன்பும் இருந்தீர்கள்

***

படித்து முடித்ததும் மிகுந்த பரவசமும், ஆனந்தமும் அடைந்தேன் ஜெ. எப்படி இத்தனை நாள் தேன்மொழி தாஸைத் தவறவிட்டேன் என்று விசனப்பட்டேன். எனக்குப் பிடித்தமான, என் ”உள்”-ளிற்கு நெருக்கமான இன்னொரு எழுத்தாளரைக் கண்டு கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்தக் கவிதையின் ஒளியையும், அந்தாதியையும் இன்னும் ரஸித்துக் கொண்டிருக்கிறேன்.

சென்ற சனி மாலை (31.10.2020), மும்பை இலக்கியக் கூடம் ஏற்பாடு செய்திருந்த இணைய வழி நிகழ்வில், “சமகாலக் கவிதைகள்” என்னும் தலைப்பில், ஒன்றிரண்டு தொகுப்புகளே வந்திருக்கின்ற, சமகாலத்தின் முக்கியமான, பல்வேறு வகைமைகளில், மலர்தலின் துவக்கத்தில் இருக்கின்ற எட்டு கவிஞர்களைப் பற்றி, அவர்களின் கவிதைகள் எடுத்துக்காட்டுகளோடு அறிமுகம் செய்தார் அமிர்தம் சூர்யா.

  1. பூவிதழ் உமேஷ்: “வட்டத்திலிருந்து சதுரமாகவெளிவருதல்” கவிதையினுள் தொல்காப்பியர்.
  1. தேன்மொழி தாஸ்: கருத்தியல் அந்தாதியில் அமைந்த“மெய் வாசகம்” கவிதை. புள்ளியிலிருந்து, “நான்” ஆகித்தொடங்கி, பயணங்களும், பல ஜென்மங்களும், தேடல்களுமாய் அலைந்து திரிந்து, கடைசியில் வந்தடையும் கூடும், அந்த துவக்க ஒளிப் புள்ளிதான் என்றது கவிதை. எனக்கு மிகவும் நெருக்கமான கவிதை. முக்கியமாய் அந்தக் கடைசி வரி – “இதற்கு முன்பும் அங்குதான் இருந்தீர்கள்” சிலிர்க்க வைத்தது.
  1. மௌனன்யாத்ரிகா: கவிதைகாட்டும் வாழ்வியலும் நிலப்பரப்பும். “வேட்டுவம்”. “காதல் கிழத்திகளின் கைமணம்” என் நாசியை வந்தடைந்தது.
  1. ஸ்டாலின் சரவணன்: “ரொட்டியை விளைவிப்பவன்” – கிராமத்தில் விவசாயம் விட்டு நகரத்தில்புரோட்டாமாஸ்டராக வேலைக்குச் சேரும் ஒரு விவசாயியின் வாழ்வுச் சித்திரம். நியான் விளக்கின் மேலிருந்து கிராமத்திற்கு சேதி சொல்லப்போகும் பறவை. அங்கு தலைவி பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்கிறாள். வெடித்துக் கிடக்கும் நிலம் மேலும் மேலும் கதறத் தொடங்குகிறது.
  2. கார்த்திக் திலகன்: சிறுமிகளுக்கு நிகழும்பாலியல்கொடுமை சொல்லும் மர உருவகக் கவிதை.
  1. தாமரை பாரதி: நம் அனைவரின் வீடுகளிலிருக்கும் “கண்ணாடி”க் கவிதை. கண்ணாடி சுட்டுவது வேறு. கண்ணாடியின் குணங்களாக அவர் வெளிப்படுத்துவதுவீட்டுப்பெண்களின் குணாதிசயங்களாயிருந்தாலும், கவனத்தில் கொள்ளுங்கள், அவர்கள் கண்ணாடிகள், அவர்களில் பிரதிபலிப்பது நீங்கள்தான் என்று சொன்னது.
  1. றாம் சந்தோஷ்: “சொல்வெளித் தவளைக”ளின் ”மெய்ப்பொருள் விளக்க”த்தில் ராமானந்த சித்தனின் வரிகள் பெரும் புன்னகையை உருவாக்கின.
  1. சுசிலா மூர்த்தி: “ஒரு முறையேனும் வருகுதியோ” – என் மனதுக்குப் பிடித்த மற்றொரு அருமையான கவிதை.

அமிர்தம் சூர்யாவின் உரை மிக நன்றாயிருந்தது ஜெ.

 

வெங்கடேஷ் சீனிவாசகம்

தீவிரம் வேடிக்கை வேறுபாடு- லக்ஷ்மி மணிவண்ணன்

 

எனக்கு, என் தேடலின் மொழியை, என் உள் பயணத்தை பிரதிபலித்த, அடையாளப்படுத்திய ஓர் எழுத்தை, தேன்மொழியை கண்டுகொண்ட சந்தோஷம் கொஞ்சம் கூடுதலாகவே.

 

 

வெங்கி

மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி

$
0
0

மனு இறுதியாக…

மனு இன்று

அன்புள்ள ஆசிரியருக்கு,

இன்றைய மனுவைப் படித்தேன்.மிகச்சரியாக உங்களின் நிலைப்பாட்டினைத் தெரிவித்திருக்கிறீர்கள். மனுநீதியின் தொடக்கம் முதல் அது கடந்து வந்த பாதை அது சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் அனைத்தையும் விளக்கி சமகாலச் சிக்கலையும் எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.இப்போதைய அரசியல் சூழ்நிலையை பற்றிய உங்களுடைய கருத்தையும் கூறியிருக்கிறீர்கள். இப்போதைய விவகாரத்தில் உங்கள் பார்வையோடு முழுமையாக உடன்படுகிறேன்.அதேசமயம் மனுநீதி பற்றிய உங்களுடைய  பார்வையில் சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன.உங்களுடைய கட்டுரை காலம் கடந்தும் இங்கு நிற்கும் என்பதால் அதற்கு மாற்றான கருத்தும் இங்கு தேவை என்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

மார்க்சிய வரலாற்றுப் பார்வை சார்ந்து மனுநீதியை இந்தக் கட்டுரைக்காக நீங்கள் பார்த்த பார்வை மார்க்சிய சட்டகத்தைச் சார்ந்தது. புறவயமான வரலாற்றைச் சொல்ல அதைத் தவிர வேறுவழியில்லை என்பதற்காகக்கூட நீங்கள் அதை எடுத்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அந்தச் சட்டகம் இந்தியாவைப் பற்றிய வரலாற்றுப் பார்வையில் சில இடங்களில் மட்டும் சரியாகவும் பெரும்பாலான இடங்களில் தவறானதாக மாறும் இயல்பு கொண்டது.காரணம் அதை உருவாக்கிய நபரின் இந்தியாவைப் பற்றிய அறிவின் போதாமை.

ஐரோப்பிய வரலாற்றுத் தரவுகளை மட்டும் வைத்து உருவான சிந்தனைகளை முரணியக்கம் மூலமாக தத்துவமாக மாற்றியதே மார்க்சியம். அதன் சிந்தனைகள் அனைத்தும் ஐரோப்பாவில் ஆட்சியில் இருந்த மன்னர்கள் மற்றும் கிறித்தவ சபைகளுக்கும் அவர்களால் ஆளப்பட்ட மக்களுக்குமான மோதலின் தரவுகளை கொண்டு உருவானவை.எனவே ஆள்பவர்கள் அவர்களால் ஆளப்படுபவர்கள் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவான தரவுகளின் தத்துவம் மார்க்சியம்.

மனுநீதி சொல்ல வருவது ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழும் பல தொழிற்குழுக்களின்  மக்களின் கடமைகளும் உரிமைகளும் அச்சமூகத்தின் பங்கில் என்ன  என்பதைக் குறித்து. அதிகாரம் பொறுப்புகளால்  கட்டுப்படுத்தப்பட்டதற்கான அத்தனை சான்றுகளும் அப்புத்தகத்திலேயே உள்ளன.அதிலும் அதிகாரம் அதிகமாகப் பெறும் தொழிற்குழு  கட்டுப்பாடுகளாலும்  பொறுப்புகளாலும் பிணைக்கப்பட்டிருந்தனர்.

அதாவது கிட்டத்தட்ட நான்கு புறமும் சற்றுத்தொய்வாகக் கட்டப்பட்டதால் குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நபரைப் போன்ற நிலை. ஒவ்வொரு குழுவுக்கும் இதே நிலை என்பதால் இணைந்தும் வெட்டியும் ஒட்டியும் வாழ்ந்த தொழிற்குழுக்களின் சமூக நிலை. எனவே அனைத்தையும் வர்க்கச் செயல்பாடாகப் பார்க்கும் மார்க்சியப்பார்வையால் இந்த மனுநீதி எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதோ அந்தச் சிந்தனை புரிந்திருக்குமா என்பது ஐயமே.

தொன்மையான தொழிற்குழுக்களின் அதிகாரம் பற்றிய தரவுகளோ, கொடுக்கப்பட்ட அதிகாரத்திற்கேற்ற கட்டுப்பாடுகள் என்ற சிந்தனையோ இல்லாமல் உருவாக்கப்பட்ட மார்க்சிய  தத்துவத்தின் வழிமுறை  இந்தக் கூடுதல் தரவுகள் மற்றும் சிந்தனை கொண்ட இங்கு பயன்படுத்தப்பட்டால் தவறான விடைகளையே கொடுக்கும் என்பது என் நிலைப்பாடு.எனவே மார்க்சியத்தின் அந்த வரலாற்றுப் பார்வை இங்கு தவறாகிறது.

மார்கசியத்தின் அந்த வரலாற்றுப் பார்வைக்குப்பதிலாக நான் இங்கு வைப்பது தொழிற்குழுக்களின் வரலாற்றை.நான்கு வர்ணங்களாக இந்தியச் சமூகம் பிரிக்கப்பட்டு தொழிற்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் அது காலம்தோறும் ஒரேமாதிரியான அமைப்போடு இருந்ததில்லை.அதற்கான காரணம் எந்தத் தொழிற்குழுவிடம் ஒற்றுமையும் வளமும் பிறருடனான ஒருங்கிணைப்பும் இருக்கிறதோ அக்குழு அதிகாரத்தை அடைந்தது என்பதை இந்திய வரலாற்றுத் தரவுகள் உறுதி செய்கின்றன.

இதனால்தான் தமிழகத்தின் வரலாற்றில்கூட ஓரிடத்தில் அடிமைகள் போல ஒடுக்கப்பட்டவர்கள் வேறிடத்தில் ஆட்சியாளர்களாக இருந்தநிலை நிலவியது.இந்த நிலை ஐரோப்பாவில் இல்லை என்பதை நாம் உணர்ந்தால் இந்தத்தரவே மார்க்சியத்தின் வரலாற்றுப் பார்வை இந்த இடத்தில் தவறாகும் என்பதை உறுதிப்படுத்தும்.

மனுநீதி சார்ந்த என் நிலைப்பாடு இந்த இடத்தில் மனுநீதிக்குச் சாதகமாக நான் பேசுவதால் நான் பெறப்போவதை விட இழப்பதே அதிகமாக இருக்கும்.மனுநீதியைப் பாராட்டுவதன் மூலமாக நான் கேவலமானவனாகவே இதைப் படிப்பவர்களுக்குத் தோன்றுவேன்.ஆனாலும் இதைச் செய்ய காரணம் இருக்கின்றது.அறிவுநேர்மை என நான் பின்பற்ற உத்தேசிக்கும் கருத்துக்காக இதை எழுத வேண்டியது என் கடமையாகிறது.

என் வாழ்வில் இதுவரை நான் படித்த புத்தகங்களில் என்னைச் சோதித்த புத்தகங்களில் மனுநீதிக்கே முதலிடம்.அவ்வளவு கடினமாக என்னைச் சோதித்த புத்தகத்தை கடின முயற்சிக்குப் பிறகே படிக்க முடிந்தது.படிக்கும் ஒவ்வொரு சுலோகத்திற்கான மொழிபெயர்ப்பும் எவ்வளவு கொடூரன் இந்த மனு என்றே அரசியல் சரிநிலையோடு கூறும்.ஏனெனில் மனு சொன்ன நெறிமுறைகளின்படி நான் சூத்திரனே.என் இனக்குழு வேறாக இருந்தாலும்.

மனு வேதத்தை பின்பற்றுவதை வைத்தே வர்ணங்களை முடிவு செய்கிறார்.பிறப்பின் அடிப்படையில் மட்டும் அமைந்ததே மனுதர்மம் என்ற பொதுவான பார்வையே தவறென்பதை அதைப் படித்த பின்னரே உணர முடிந்தது.எனவே வேதத்தை முன்னோரின் அறிவு என்பதாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் எனக்கு அதை அறிவதும் பின்பற்றுவதுமே அனைத்துமானது என்பதே காலத்துக்கு ஒவ்வாத கருத்தாகவே தோன்றுகிறது.

அதேசமயம் ஒருநூல் அதனுடைய பயனாளிகள் யார் என்பதனை இடம் பொருள் காலத்தோடு வெளிப்படுத்தி, அதன் பயனாளிகளுக்கு கொடுக்கும் அதிகாரத்துக்கு இணையாக கட்டுப்பாடுகளை விதித்து, கூடவே அந்தச் சமூகத்தில் காலமாற்றத்துக்கான மாறுதல்கள்  ஏற்பட்டால்  ஏற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை  அமைந்திருந்ததெனில் அது மானுட வளர்ச்சியில் பங்கு கொண்ட  நூலே.அந்த வகையில் மனுநீதியும் அத்தகைய நூலே.

கங்கைச் சமவெளியில் மனுவின் காலத்தில்  இருந்த வேதவழியான யாகங்களை ஒழுங்குடன் நடத்திய சமூகத்திற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.கால மாற்றத்தால் ஏதேனும் விதிகள் மாற்றவேண்டும் என்றால் வேத அறிஞர்கள் கூடி அதைச் செய்ய வழிமுறைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.எனவே மனுநீதியை முற்றாகப் புறக்கணிக்கவே முடியாது.

இன்று இருக்கும் சில மதச்சிந்தனைகளில் கூட இத்தகைய மனநிலை இல்லாத நெகிழ்வும் பொறுப்பும் இல்லாததைப் பார்க்கும்போது, மனுவின் இந்த நடைமுறை அன்றே இருந்தது என்பதைக் காணும்போது,   இந்தக் கட்டமைப்பு கட்டாயம் இன்றுகூட தேவையானது என்றே தோன்றுகிறது.

எந்த தொழிற்குழுவிற்கு அதிகப்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கே அதற்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன எனபதற்கு எடுத்துக்காட்டாக மனுவின் சமூகம் உயர் விழுமியமாகச் சொன்ன வேதவழி யாகங்களை நடத்துவதற்காக பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். வேள்வியைச் செய்யும் நோக்கத்திற்காக மற்றவர்களின் சொத்துக்களை கட்டாயமாக எடுத்துக் கொள்வதற்கான அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் மேற்கோளாகக் காட்டுவார்கள்

அதே சமயம் வேள்விக்காகப்பெறப்படும் சொத்து வேள்விக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று அது சொல்கிறது. உவப்புடன் கொடுக்கப்படாத  பொருளைக் கொண்டு வேள்வி ஆரம்பிககப்படவே கூடாது, வேள்விக்கான பொருள்களில் பாதிக்கும் மேல் கையிருப்பில் சேர்க்காமல் ஆரம்பமே செய்யப்படக்கூடாது என்பது தொடங்கி பிச்சை எடுத்தாவது வேள்விசெய் எனப் படிப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கடைசி வழிமுறையே மேல் சொன்ன வேள்விக்காக பொருளை கட்டாயமாகப் பெறலாம் விதி .

ஒருவிதி பல்வேறு துணைவிதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே எக்காலத்துக்குமான தேவையாக இருக்க முடியும். இன்று கட்டுப்பாடுகளற்ற அதிகாரத்தையே  இங்கு அனைவரும் வேண்டுகின்றனர்.இன்றிருக்கும் மனநிலையும் அன்று அதேபோலத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கின்றனர்.அது தவறானதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் அவரவர் வர்ணங்களுக்குரிய வேலையே செய்ய வேண்டும் என்று சொல்லும்  கண்டிக்காத நபர்களைப்  பற்றி சில வார்த்தைகள்.அவர்களில் சிலர் பிறப்பால் பிராமணராக இருக்கலாம். ஆனால் மனுவின் ஆணை என்பது அதிகாரம் மட்டுமல்ல பொறுப்பும் கூட. அவர்கள் பிறப்பதற்கு முன்பே வர்ணத்துக்கான சடங்குகள் ஆரம்பித்து விடவேண்டும். சரியானகாலத்தில் வேதத்தை முழுமையாகக் கற்று, மூன்றுநாட்களுக்கு ஒருமுறை தான் கற்ற வேதத்தை முழுமையாக ஓதி,  குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறை  பிறருக்காகவோ தனக்காகவோ அல்லாமல் வேதத்துக்காகவே செய்கின்ற வேள்வியைச் செய்யவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றக்கூடிய நபர்கள் மட்டுமே மனுநீதி ஆட்சியில் இருந்தால் பிராமணர்களுக்கான அதிகாரம் பெற்றவர்கள்.

ஆனால் இன்று ஆட்சியில் இருப்பதோ அரசியலமைப்புச் சட்டம். புறக்கணிக்கப்பட்ட மனுவின் சட்ட நடைமுறையின் அடிப்படையில் ஏற்கனவே தங்கள் முன்னோர் பெற்றிருந்த அதிகாரத்தை பழமையான சில நம்பிக்கைகளை மட்டும் ஏற்று சில சடங்குகளை மட்டும் பின்பற்றுவதன் மீட்டெடுக்க முயலும் காலமறியா நபர்களில் சிலர்தான் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். பிறப்பால் பிராமணர்களாக இருப்பதனால் மீண்டும் தங்கள் மேன்மையை மீட்க வேண்டும் என்பதனால்,மனுவின் வழிமுறைகளைக் கடைபிடித்துப் பார்ப்போம், ஒருவேளை மீண்டும் அந்தப் பொற்காலம் வரக்கூடும் என்று நினைக்கும் பிராமணர்களிலேல் சிறு குழு முயல்வதையே அந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

ஆனால் அந்தக்குழுவிலேயே  மனுவின் நெறிப்படி இன்று வாழமுடியுமா, இன்று வாழ்வதால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டவர்கள் இன்றைய சட்டங்களின் வழிமுறையில் தங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மனுவைப் பற்றிப் பேசும் நபர்களுக்கு பழமை கொடுக்கும் அதிகாரம்  வேண்டும். அதேசமயம் நவீனத்தின் அத்தனை வசதிகளையும் சேர்த்தே அடையவேண்டும். ஆனால் மனு ஆணையிடும் பொறுப்புகளையும் கடமைகளையும் செய்யக்கூடாது. இங்குதான் இவர்களின் சிக்கல் வருகிறது.

மனு காலத்தில் இருந்த  தொழிற்குழுக்களின் அதிகாரம் முழுமையாக இன்றும் அழிந்து போகாததால் அந்த அதிகாரத்தில் தனக்கான பங்கைப் பெற நினைப்பவர்கள் இதுபோன்று சற்று அதிகப்படியான சிந்தனையுடன் தங்கள் தரப்பைச் சார்ந்தவர்களிடம் பேசுகின்றனர்.இன்றிருக்கும் இணையச் சூழலில் சிறுகுழுவில் பேசுபவை பொதுவெளிக்கு வந்து அதனால் பொதுவெளியே கொந்தளிக்குமளவிற்கு தொழிட்நுட்பம் காரணமாவதைப் புரிந்து கொள்ளாமல்  பேசுகின்றனர்.

அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்கள் தரப்பில் உள்ளே பேசுபவை பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. அதனால் சிலமுறை பொதுவெளியும் கொந்தளித்திருக்கிறது .ஆனால் மற்ற மத இன சாதிக்குழுக்களின் பேச்சுக்கள் புத்தகத்தை முன்வைத்து பெரும்பாலும் நடப்பதில்லை. அதனால் மனுநீதியைப் போலச் சிக்கலாவதும் இல்லை. இப்படிப் பேசும் நபர்களில் எத்தனைபேர் மனுவின் நெறிமுறையின்படி இன்று நடக்கச் சித்தமாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே  குறைந்தபட்சம் இன்று இருக்கும் அந்தக் தொழிற்குழுவின் கருத்தியல் அதிகாரத்திற்கு தகுதியானவர்கள்.

இன்றைய அரசியலமைப்புச் சட்டம்  குற்றமென்று நீக்கியதை அவர்களும் தங்களிடமிருந்து நீக்குவதால்தான் நவீனத்தின் வசதிகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆகமுடியும். அவ்வண்ணம் நீக்காமல் அந்த தொழிற்குழுவுக்கு மனு ஆணையிட்ட  அம்சங்களைப் பின்பற்றுவதன் மூலம்தான்  பழைய தொழிற்குழுவின் அதிகாரத்தைப் பெறுபவர்களாக மாற்றமுடியும். ஆனால் அத்தகைய செயலைச் செய்வதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. இது முற்றிலும் கேவலமானது. இங்கு இருக்கும் முதன்மைப் பிரச்சனையே இதுதான்.அதிகாரம் வேண்டும் ஆனால் அதற்கான  கட்டுப்பாடுகளைப் பின்பற்ற மாட்டேன் என்பது.

பழைய தொழிற்குழுக்கான  நெறிமுறைகள் அழிக்கப்பட்டு, மேற்கிலிருந்து வந்த  ஐரோப்பா அறிஞர்கள் கொடுத்த உயர்தத்துவமான தனிமனிதவாதம் இங்கு இவர்களுக்கு தொழிற்குழுக்கள் கொடுக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவேண்டிய தேவையை நீக்கிவிட்டது .வர்ணம் கொடுக்கும் மரபு ரீதியான அதிகாரத்தை ஒருபுறம் தக்கவைத்துக்கொண்டு மறுபுறம் அதுகொடுக்கும் கட்டுப்பாடுகளை இங்கிருக்கும்  நவீனத்தால் ஒதுக்கிவிடும் நிலை இவர்களுடையது. இரண்டு தத்துவங்களின் நன்மைகளும் இவர்களுக்கு வேண்டும்.ஆனால் இரண்டும் கொடுக்கும் கட்டுப்பாடுகளும் பொறுப்புகளும் வேண்டாம். அவ்வளவுதான்.

மரபின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமலிருக்கும் அதிகாரத்தை   தனிமனிதவாதம் கொடுத்த உரிமை மூலம் தக்கவைத்தல் இவர்களின் வழிமுறை. தங்கள் செய்வது  எவ்வளவு கேவலமானது என்பதையே புரிந்து கொள்ளாத இயலாத அறிவற்ற நிலை. இங்கு இருக்கும் பெரும்பான்மை சமூகமே இப்படித்தான் இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் இது.இதைக் கணக்கில் எடுக்க இங்கு இருக்கும் அரசியல் சரிநிலைகள் தடுக்கின்றன. சிறிய குழுக்களின் முட்டாள்தனங்கள் பேசப்படுமளவு பெருங்குழுக்களின் அதிகார மிக்கவைகளின் முட்டாள்தனங்கள் பேசப்படவில்லை.அரசியல் சரிநிலை என்னும் உயர்விழுமியம் இன்று மிகக் கேவலமானதைப் போல மாறிவிட்டது.

குலங்களின் தொகுக்கப்பட்ட நீதியும், அதன் இரட்டைத்தன்மையும் அடுத்து வந்த காலகட்டத்தில் பொதுநெறியாக தொகுக்கப்பட்டு நிலப்பிரபுத்துவ பொதுநீதியாக மாற்றம் பெற்றன என்பது மார்க்சியத்தின் தவறான புரிதல்.காரணம். புறவயமாக இருக்கக்கூடிய சமூகங்களின் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு இருவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய நீதி உருவாகும் என்பது கருத்து முதல் வாதத்தின் தரப்பையே முற்றிலும் மறுக்கும்  மார்க்சியத்தின் பார்வை.பு றவயமான நிகழ்வுகளே அகத்திலும் நடக்கும் என்பது மோசமான பொருள் முதல்வாதப் பார்வை. மார்க்சியம் மோசமாக கருத்துமுதல்வாதத்திடம் தோற்கும் இடம் இது.

ஒரு விதையை ஊன்றி அது வளர்ந்து மரமாக பல்வேறு புறக்காரணிகள் கட்டுப்பாடுகளாக இருக்கின்றன.அந்தக் கட்டுப்பாடுகள் அந்த விதையின் வளர்ச்சிக்கு தடையாகின்றன.இது பொருள் முதல்வாதத்தின்   வளர்ச்சிநிலை பற்றிய கருத்து. ஆனால் மனித அகத்தின் சிந்தனைக்கு எல்லைகளே இல்லை.சிந்திப்பவனின் மனவிரிவொன்று போதும்.புறத்தில் எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் பிரபஞ்சத்தையும் தாண்டிச் சிந்திக்க மனிதனால் முடியும்.அதற்காக ஆகும்  காலம் சிலநொடிகளாகக்கூட இருக்க முடியும்.கருத்துமுதல்வாதத்தின் இப்பெரும் விரிவை என்றுமே மார்க்சியத்தால் எதிர்கொள்ளவே முடியாது என்பதால் வெகுலாவகமாக இதைக் கடந்து வரலாற்றுவாதத்தை மட்டுமே வைப்பார்கள்.

என் பார்வையில் மனு இலட்சியச் சமூகத்தை கனவு கண்ட கருத்துமுதல்வாதி. எனவே அவனுடைய நீதியானது குலங்களின் தொகுப்பு நீதியாக இல்லாமலும், தொழிற்குழுக்களின் தொகுப்பு நீதியாக அல்லாமலும் இருக்கிறது. ஏனெனில் எப்போதும் குலங்களின் தொகுப்பு நீதி ஆள்பவர்களுக்கே சாதகமானதாக இருக்கும்.ஆள்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை விதிக்காமல் பெரும்பாலும் பார்த்துக்கொள்ளும். ஆள்பவர்களின் நலமே பெரிதாக இருக்கக்கூடுமே தவிர அனைவருக்குமான நீதியாக அது மாறாது, மாறமுடியாது.மனுந்தி அவ்வாறான நூலல்ல.அதிகாரமிருப்பவனுக்கே அதிகப்படியான கட்டுப்பாடுகள் என்பதை அது உறுதிப்படுத்துகிறது.

இதற்கடுத்து பழைய நிலப்பிரபுத்துவ நூல்களின் இரட்டைத்தன்மை என்பது அவற்றின் வளர்ச்சிப்போக்கை உணர்த்துவது.நாம் அதை உணராமல் அந்த இரட்டைத்தன்மை என்பதை மோசமானதாகப் பார்க்கிறோம்.இன்றும் நீங்கள் ஒரு கட்டுரை எழுதினால் ஏன் இரண்டுதரப்பையும் சீர்தூக்கிப் பார்த்து இரண்டுதரப்புக்குமான நன்மை தீமைகளை ஏன்  எழுதுகிறீர்கள்.அதுதான் எப்போதும் சரியாக இருக்கும் என்பதால்தானே!.அதில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் உங்களை வசைபாடும் நிலையை நீங்களே உணர்ந்தும் நம்நிலையில் ஏன்  பழைய நூல்கள் இருக்காது என்று யோசிக்காமல் மார்க்சியம் சொன்ன கருத்தை ஏற்று எழுதியிருக்கிறீர்கள்.

இன்று நாம் அடிப்படையாகக் கொண்ட சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதெல்லாம் பழைய நீதி நூல்களுக்கு கிடையாது.ஏனென்றால் அவை உருவாகிய காலத்தில் அரசியல் சரிநிலையென்பதே கிடையாது.அது மட்டுமல்லாது தனிமனிதன் என்பதும் கிடையாது.மனிதன் கூட்டு விலங்காக இருந்ததால் அவனுக்கான கட்டுப்பாடுகளை மீறாமல் அவன் இனக்குழுவோ தொழிற்குழுவோ பார்த்துக்கொண்டன.அதிகாரம் கொடுக்கப்பட்டாலும் கட்டுப்பாடு என்பது உண்டு.

ஆனால் இன்றோ இந்த தனிமனிதவாதத்தில் தனிமனிதனுக்கென்று அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன.ஆனால் அந்த அதிகாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் எதுவும் தனிமனிதனுக்கு கிடையாது.அமைப்புகளுக்கே அத்தகைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு விட்டன.இத்தகைய சூழலில் தனிமனித வாதத்தின் அடிப்படையில் அமைந்த நீதியோடு மனுநீதியை ஒப்பீடு செய்வது எந்தவகையிலும் சரியல்ல.

மனுநீதியின் சில சட்டங்கள் இன்றைய அமைப்புகளின் நீதியோடு மட்டுமே ஒப்புமைப்படுத்தப்படவேண்டும். மனுநீதி போன்ற பழைய நூல்கள் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்பதை முன்வைப்பவை. இன்றைய நவீனமோ செயலால் அன்றி ஒருவனை மதிப்பிட முடியாது. ஆகவே மனதால் செய்வதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கிவிடுகின்றது.குற்றம் செய்பவன் முதலில் புறத்தில்  குற்றம் செய்யும் முன்னர் பலமுறை மனத்துள் செய்கிறான் என்பதை உணர்ந்த பழைய சமூகம் மனதால் செய்வதையும் குற்றமாகவே சொல்லும்.அதை இன்றைய அரசியல் சரிநிலையோடு பொருத்திப் பார்த்தால்  கொடூரமான சட்டம் என்றே தோன்றும்.

நாகரீகம் என்ற பெயரில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நமக்குத் தேவையான பலனைக் கொடுக்க்கூடிய திட்டமிட்ட வழிமுறைகளைப் பின்பற்றக்கூடியவர்களாக மாறிவிட்டோம். தனிமனிதவாதத்தால்  புண்ணை உள்ளே வைத்து வெளியே புனுகு பூசி மணமாகக் காட்சியளிக்கும் நிலை இன்று உருவாகியிருப்பதால் இது  இல்லாத பழைய நூல்கள் புண்ணின் நாற்றத்தோடு இருக்கும்போது அதன் நாற்றத்தால் முகம் சுளிக்கிறோம்.புண்ணின் நாற்றத்தோடு அவைகள் இருந்தாலும் பிளவுண்ட  சமூகங்களை ஒன்றிணைத்தவை அவை.இன்றோ புனுகின் மணத்தோடு புண்ணை மறைத்து சீழ்பிடித்து அழுகும் சமூகமாகவே இருக்கிறோம்.புனுகின் மணத்தைப் போற்றுபவர்களாகவும் மாறிவிட்டோம்.

உண்மையைச் சொன்னால் வரும் பாதிப்புக்கள் சீழ்பிடித்து அழுகுவதை உணர்ந்தும் வெளியில் சொல்லாமல் இருக்க வைக்கின்றன. ஆனால் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதை முன்வைப்பதால் பழையநெறிநூல்கள் மனதால்கூட தவறு செய்யதவனை வணங்கவும் அதைத் தவறுபவனை இகழவும் செய்யும். காரணம் தெளிவானது. எந்தச் சமூகமும்  உயர்விழுமியங்களை முன்  வைத்தே தன்  சமூகத்தைத் தான் விரும்பும் பாதையில் திருப்ப முடியும் என்பதற்காக அவைகள் வகுத்துக் கொண்ட பாதை.

அப்பாதை இன்று அமைப்புகளுக்கு மட்டுமே தேவை.அதனால்தான் இன்றும் நம் சமூகம் வாழ்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றாமல் அதற்கு எதிரான பார்வையுடையவனை கேவலமாகப் பார்க்கிறோம்.அவர்களைச் சிலநேரங்களில் அமைப்புகளால்  தண்டிக்கவும் செய்கிறோம் .நாம் தனிமனிதனையும் அமைப்புகளையும் இரண்டாகப் பிரித்து விட்டதால் வந்தவினை இப்பார்வை.அதனால் பழைய நூல்களின் இரட்டைத்தன்மை என்பது மார்க்சியப் பார்வையின்  தவறான புரிதலே தவிர பழைய நூல்களின் தவறல்ல.

அரசியல்சரிநிலையோடு சூத்திரனுக்கும் பெண்களுக்குமான மோசமான கருத்துக்களை கொண்டிருக்கிறது எனும் குற்றச்சாட்டு பற்றி சொல்லலாம். மேலே நான் குறிப்பிட்டதை வைத்தே அன்றைய தொழிற்குழுக்களுக்கான நீதிகள் இன்று எந்த தனிமனிதனுக்குமானதல்ல அமைப்புகளுக்கானது என்பதைப் பார்த்தோம். அறிவிற் சிறந்த தொழிற்குழுக்களான பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் இன்று அமைப்பு சார்ந்த விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரும் செல்வமும் மரியாதைகளும் அவர்களுக்குத் தரப்படுகின்றன.அவர்கள் கண்டறியும் பொருட்களால் வசதிகளும் அவதிகளும் சேர்ந்தே நமக்கு கிடைக்கின்றன. அறிவியலாளர்களுக்கு இன்று வரம்பில்லா அதிகாரம் உண்டு, பழைய பிராமணர்க்ளைப்போல. ஆனால் அக்கால பிராமணர்களுக்கு இருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை.

எடுத்துக்காட்டாக இன்றைய நோய்த்தொற்றுச் சூழலில் நோய்கான மருந்து  மக்களுக்கு கொடுக்ப்படும் விதம். மனுநீதியின் படி சொல்ல வேண்டும் என்றால்  ஆய்வறிஞர்களான பிராமணர்களால் கண்டறியப்பட்ட மருந்து, நோயொன்றைக் குணப்படுத்தும் என்ற குறைந்தபட்ச ஆய்வுகளின் அடிப்படையில் வைசியர்களாகிய மருந்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு,  அரசாகிய சத்திரியர்கள் மூலமாக, கட்டாயமாக சூத்திரர்களாகக் கருதப்படக்கூடிய மக்களுக்கு செலுத்தப்படுகிறது. அம்மருந்தால் பாதிப்பு ஏற்படுவது தெரிந்தால் அம்மருந்து நிறுத்திவைக்கப்படுகிறது. இன்று இருக்கும் இச்செயலை சிலர் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள்.பெரும்பான்மையோர் கேள்வி கேட்பதே இல்லை.ஆய்வு அமைப்பின் நோக்கமும் தொடர்ந்த செயல்பாடும் அதனால் மக்கள் அடைந்த நன்மையும்  நம் கண்முன் தெரிவதால் அந்த அமைப்புகளின் மேல் உள்ள நம்பிக்கையால் எதுவும் கூறுவதில்லை.

ஆனால் இதே போன்ற பழைய அமைப்பின் நன்மைகளை அறியாமல் அது கொடுத்த துயர்களை மட்டும்  பேசுவது இங்கிருக்கும் சிக்கல். அந்த அமைப்பு உடையும் போது கீழ்நிலையிலிருந்தவர்கள் காலம் முழுவதும் நாங்கள் ஒடுக்கப்பட்டோமென்று சொல்வதில் சிலதவறுகள் இருக்கின்றன என்பது அவர்களுக்கும் தெரியும். பல்வேறு காரணங்களால் அதை ஒப்புக்கொள்ளவும் மறுக்கிறார்கள்.

அறிவாளிகளின் துணை கொண்டு தங்களுக்கான அதிகாரத்தைப் பெற ,எண்ணிக்கையை வைத்து அதிகாரத்தைப் பெற, எப்போதும் பொதுமனநிலையிலிருக்கும் பலம் பொருந்தியவனை வீழ்த்தும் பலமற்றவன் எனும் மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த கடைசியாக இருந்த கட்டமைப்பின் மேல் தங்களுடைய பழியைத் தொடர்ந்து வைக்கின்றன.இன்று இருக்கும் சூழலில் சத்தமிடும் குழந்தைக்கே பால் கிடைப்பதால் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட நூல் என்னும் குற்றச்சாட்டு அந்த நூலை முழுமையாகப் புரிந்து கொள்ள முயலாமல் சில வரிகளையும் அத்தியாயத்தையும் மட்டும் புரிந்து கொள்வதால் வருவது.வெறும் அரசியல் சரிநிலைகளைத் தவிர இந்த இடத்தில் வேறு எதுவும் இல்லை. முன்னரே கூறியவாறு உயர்விழுமியத்தை நோக்கிச் செலுத்தப்பட இங்கு அதன்படி நடப்பவர்கள் உயர்த்தப்படவும் அதேசமயம் மானுடக்கீழ்மையால் எப்போது வேண்டுமானாலும் அந்நிலையிலிருந்து தவறக்கூடும் என்பதை உரத்துச் சொல்லவும் வேண்டும்.

பெண்களின் நிலை இன்று பெருமளவு மாறியிருக்கிறது என்பதற்கான காரணங்களில் இன்றைய நவீன அறிவியலுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.அது கொடுத்த வசதியால் அதிகப்படியான குழந்தைகளைப் பெறுவதன் மூலமே ஒன்றிரண்டு தப்பிக்கும் நிலையோ, அதிகப்படியான எண்ணிக்கைப் பலத்திற்கான சமூகங்களை உருவாக்க வேண்டிய தேவைகளோ இல்லாத நிலை இங்கு உருவாக்கப்பட்டாயிற்று. வீட்டின் தேவைகள் உறவுகளின் தேவைகள் அனைத்தையும் செய்யவே நேரம் போதாத நிலையும் இங்கு இல்லாமல் ஆயிற்று.

இக்காலத்திலிருந்து அக்காலத்தை நோக்கும்போது மோசமானதாகவே தெரியும். நாளை நம்மையெல்லாம் எவ்வளவு கேவலமாக பலதலைமுறை தாண்டி வருபவன் யோசிக்கக்கூடும் என்பதை இப்போதேகூட இதை வைத்தே உணரமுடிகிறது.இது காலமாற்றத்தின் சிக்கல் விளையாடும் இடம்.

சாதியை உருவாக்கியது மனுநீதியா என்னும் வினா இங்கு எழுப்பப்படவேண்டும். மனுநீதிதான் சாதிகளை உருவாக்கியது என்பது பற்றிய சில ஐயங்கள் இருக்கின்றன.மனு தொழிலின் அடிப்படையில் தொழிற்குழுக்களை உருவாக்கி அதை பிறப்பின் அடிப்படையிலானதாக மாற்றினாரா அல்லது தான் பெற்ற அறிவை தன்னுடைய குழுவைத்தாண்டி பிறருக்கு கொடுக்கும் மனநிலை அன்றைய மக்களிடம் இல்லாமலிருந்த காரணத்தால் அன்றிருந்த தொழிற்குழுக்களின் அடிப்படையில் அமைத்தாரா என்பது இரண்டுக்குமான தரவுகளைக் கொண்ட முடிவேயில்லாத விவாதத்துக்கான கேள்வி.

அன்று இருந்த நிலையில் சிறப்பாகச் செயல்படும் வகையில் இருந்த இனக்குழுக்களின் சிறப்பை தொழிற்குழுக்களாக மாற்றியது மட்டுமே மனுவின் செயல், பின்வந்ததற்கு அவன் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும் என்பது ஒரு வாதமாக இருக்க முடியும். தொழிற் குழுக்களின் நீதியாக மனுநீதி இருப்பதால் காலந்தோறும் தொழில்களில் ஏற்பட்ட பல மாற்றங்கள் பல தொழிற்குழுக்களை வேறு தொழில் நோக்கிச் செலுத்தியிருக்கும்.

எடுத்துக்காட்டாக சமணம் மற்றும்  பௌத்தத்தின் எழுச்சி வேதவேள்விகளை ஒழித்து கட்டியது, அதனால் வேள்விகள் பாதிக்கப்பட்டன என்பது போலத்தான் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன நடந்திருக்கும் என்பதை நடுநிலையோடு யோசித்தால் அசைவ உணவோடு தொடர்புடைய தொடர்புடைய தொழிற்குழுக்கள் பாதிக்கப்பட்டு வேறுதொழிலில்லாமல் அந்தச் சமூகத்தில் இருந்த கீழான தொழிலுக்கு மாறியிருக்கும் என்று தெரியும் . அசைவ வழிபாடுடைய கோவிலின் பூசகர் அவருடைய இனக்குழு பௌத்தத்துக்கு மாறும்போது பௌத்தக்கோவிலின் வேலையாளாகப் போவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது.

எப்போதும் வேள்விகள் நீத்தார் சடங்குகளுக்கும் மன்னர்களின் தேவைகளுக்கும் நடத்தப்படுவதால் அத்தகைய சடங்குகளுக்கு அவ்விரு மதங்களில் வழியில்லாததால் பிராமணர் பாதிப்படைந்ததை விட எளிய அசைவ உணவோடு தொடர்புடைய தொழிற்குழுக்களே  பாதிப்படைந்து இருப்பார்கள். இதைப் போன்று காலத்தால் மாற்றம் பெற்ற தொழில்கள் எவை அதில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதெல்லாம் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை.

இன்று அனைவரும் இதுபோன்ற தங்களுடைய தரப்பை மறுக்கும் தரவுகளைச் சொல்லக்கூட மறுக்கின்றனர். காலம் முழுவதும் அனைத்து மக்களையும் அடக்கியாண்டதாகச் சொல்லப்படுபவர்கள்  சமண பௌத்த இஸ்லாமிய கிறித்தவ ஆட்சிக்காலங்களில் எப்படி அவர்களை அடக்கியாண்டிருக்க முடியும் என்பதை பேசமறுக்கிறார்கள்.

அதற்காக மனுநீதியில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது. அந்த நூலின் தரவுகளையும் இன்றைய நடைமுறையில் இருப்பதையும்  அடிப்படையாகவும் வைத்து உருவான சிந்தனைகளோடு அதன் குறையை அணுகினால் வரக்கூடிய அதன் குறைகள்

1, விரிவான எதிர்காலத் தரிசனம் ஏதுமில்லாமை .அனைத்து தொழிற்குழுக்களையும் கொண்ட சமூகத்திற்கான கட்டமைப்பை உருவாக்கினாலும் எதிர்காலத்தில் எவ்வாறு சமூகம் மாறும் என்பதை யோசிக்காமல் தன் கருத்துக்களை மூர்க்கமாக  வைத்திருக்கிறார் மனு. திருக்குறளுக்கும் மனுவுக்கும் இருக்கும் வித்தியாசமே இதுதான்.சொல்வதை செய் செய்யாதே எனக் கட்டளையிடுவதற்கும் இதையெல்லாம் செய்வது அறமாகாது என மென்மையாகச் சொல்லுவதற்குமான வித்தியாசம்  இரண்டு நூல்களுக்குமான வேறுபாடுகளில் ஒன்று . தன் கருத்தைத் தெளிவாக வைக்கும் நபர்கள் காலமாற்றத்தால் சிக்கிக் கொள்ளும் இடம் இது.

  1. தனிமனிதனின் உரிமையை மறுத்தல் தனிமனிதர்களான துறவிகளுக்கு பெரும் மரியாதை கொடுத்தாலும் தன் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத மக்களையும் தன் சமூகத்தை அழிக்கும் நிலைக்கு நாளை காரணமாக அமையக்கூடும் எனக் கருதியவர்களையும் புறனடையாளர் எனக்கூறி மக்களின் வாழ்விடங்களுக்கு வெளியே வாழவைத்த கொடூரத்தைச் செய்தது. இந்தப் புறனடையாளர்களாகவே பஞ்சமர்கள் இருந்தனர் என்பதே மனுநீதியை எதிர்ப்பவர்களின் வாதம்.
  1. கொள்கைவெறியுடன் கூடிய மேட்டிமைத்தனம். மனுநீதியைப் படிக்கும்போது தன் கொள்கையே உயர்ந்தது எனும் கொள்கைவெறி, அதைச் சரியாக தான் இருக்கும் இடத்தில்தான் பின்பற்றுகிறார்கள் பிறபகுதியில் இருப்பவர்கள் இதே வழிமுறையை பின்பற்றினாலும் ஒழுங்காகப் பின்பற்றவில்லை எனும் பிராந்திய மனநிலையும் உச்சமாக இருக்கின்றன. இன்றும் இருக்கும் அனைத்துக் கொள்கைவாதிகளும் இப்படியேதானே இருக்கின்றனர்.

4.அனைத்து உயிரையும் சமமாகப் பார்க்கும் இன்மை இதைத்தான் இங்கு இருக்கும் அனைவரும் அரசியல்சரிநிலைகளோடு விவாதிக்கின்றனர்.எந்தச் சமூகமாக இருந்தாலும் மேல் கீழ் என்று அடுக்குகளை அமைக்காமல் கட்டமைக்கவே முடியாது.அப்படி கட்டமைப்பது அகத்தில் சாத்தியமாக இருக்கலாம்.புறத்தில் எங்கும் எப்போதும் சாத்தியம் இல்லை. மனு இன்று சிக்கிச் சீரழிவது இதனால்தான்.

இங்கு மனுவைக் குறைகூறும் யாரும் மனுநீதியை முழுமையாகப் படித்தவர்கள் அல்ல.புகழும் நபர்களும் அப்படியே. மனுநீதி புத்தகத்தை எந்த வகைப்படுத்த முடியும் என்பதே சிக்கலாக இருக்கும்போது புத்தகத்தையே புரிந்து கொள்ளத்தெரியாத நபர்களிடம் சிக்கிச் சீரழிகிறது மனுநீதி.

மனுநீதி அடிப்படையில் உபநிஷதம் போல புராணக் கதைகள் போல குரு தன் சீடனுக்குச் சொல்லும் நூல். குருசீட வழிமுறையில் அரசியல் சரிநிலைகளுக்கு இடமேயில்லை. யார் வேதத்தைக் கற்றவனோ அவனைத் தவிர மற்றவர்கள் இதைப் படிக்கத் தடை இருந்திருக்கிறது. நம் தளத்திலேயே நடந்த நவீன மனு விலகாரத்தின் போது ஆய்வுக்கட்டுரை  ஒன்றைப் பார்த்தோம்.இன்றும் அறிவுஜீவிகள்கூட பார்க்க முடியாத கல்வியாளர்கள் மட்டுமே பார்க்க முடிந்த சமூகவியல்  கட்டுரைகள் இருக்கின்றன என்று அன்றுதான் நான் அறிந்தேன்.திராவிட மனு- கடைசியாக

ஏன் அந்தக் கட்டுரைகள் பொதுவெளிக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்வியை இங்கு எவராவது எழுப்புகிறோமா? அக்கட்டுரை பொதுவெளிக்கு வந்ததுமே அது ஆய்வாளர்களுக்கு மட்டுமாக எழுதப்பட்டது என்றுதானே பதில் சொல்லப்பட்டது. நாம் எதிர்த்தோமா?. இல்லை. ஏன்?.

இங்கு உண்மைநேரடியாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எவ்வளவு பேருக்கு இருக்கும் என்பதை வைத்து அவற்றைப் பொதுவெளியில் வைப்பது சிக்கலுக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்து கேள்வி எழுப்புவது இல்லை.  அரசியல் சரிநிலை பேசும் காலம்தானே இது. அனைத்துத் தரவுகளையும் பொதுவெளியில் வெளியிட எது தடையாக இருக்கிறது? அனைத்து உரிமைகளையும் பெற்ற தனிமனிதனுக்கு தன் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை அறிய உரிமையில்லையா?  சமூகவியல் ஆய்வு என்ன இரகசியம் காக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற அறிவியல் வகையைச் சேர்ந்ததாவையா என்ன?.

அனைத்து சமூகவியல் ஆய்வுகளின் தரவுகளையும் பொதுவெளியில் விட்டால் இன்று அந்த ஆய்வைத்துறையையே அழிக்குமளவு மக்கள் செல்வார்கள் என்பதே உண்மை.எனவே அதைப் பேசுவதைத் தவிர்க்கிறோம். நாகரீகம் வளர்ந்து தனிமனிதனுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட காலத்திலேகூட மக்கள் எவ்வளவு தெரிந்து கொண்டால் போதும் என்ற நிலையிருக்கும்போது நம் பேசுவது பழைய நூலை என்பதை கருத்தில்கொள்ளவேண்டும்.

அது மனிதனின் நிறைகுறைகளைப் புரிந்து கொண்டு நடந்த நூலா என்று பார்க்கும்போது அப்படித்தான் அது செயல்பட்டிருக்கிறது. இங்கு குலத்துக்கு ஒருநீதியாக மனுநீதி இருந்தது கொடூரமென்றொரு வாதம். நாகரீகமடைந்து சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் சிந்தனையைப் பெற்றும்  நம் முன்னோர்கள் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் ஒரேமாதிரியான நீதியையா கொண்டிருந்தது ?  இன்று அப்படிக் கொண்டிருக்கிறதா என்ன?

குற்றவியல் நடைமுறைச் சட்டம் போலச் சிலசட்டஙகள் மட்டுமே பொதுவானவை. ஏன் அனைவருக்குமான பொதுச் உரிமைச் சட்டங்கள் இல்லை? பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கும் நாடென்பதால்தானே? இதே சிக்கல் மனுவுக்கும் இருந்திருக்கலாம் என்று யாராவது யோசித்தார்களா ?

மனுநீதி தாக்கப்படுவதற்கான காரணம் ஆயிரம்  ஆண்டுகளாகத் தோற்றுப்போய் பிறரால் அடக்கியாளப்பட்டு சுதந்திரத்திற்காகப் போராடும்போது ஏன் இதுவரை தோல்விடைந்தோம் என்பதைக் கண்டறிய முயன்றபோது கிடைத்த காரணங்களில் ஒன்று அது என்பதே. இங்கு மக்கள் வர்ணங்களாகவும் சாதிகளாவும் பிரிந்து கிடந்தனர். அதற்கான காரணமாக இருந்ததைத் தேடினால் அது  மனுநீதி என்னும் நூலாக அப்போது கிடைத்து விட்டது. ஆகவே அதை ஒதுக்கி அனைவரும் ஒன்று சேருவோம் என்பதான வாதம் எழுந்தது.

அதுவே காரணமாக ஏற்கனவே பலரால்  ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதால், அந்நூலைக் குறித்துப் பேசுவதால் தன் தரப்புக்கான லாபங்கள் பெறப்படுவது உறுதியானதால்,  தொடர்ந்து இன்றுவரை அந்தக் காரணம் பயன்பாட்டில் இருக்கிறது. யாருக்கு தங்கள் நலனைக் காக்க வேண்டும் என்றாலும் வெற்றிகரமான விளைவைத் தரும் காரணியாக மனுநீதி இன்று மாறிவிட்டது.

திருமாவளவன் விவகாரத்தில் அவர் சார்ந்த சமூகம் மனுவின் காலத்திலிருந்து பஞ்சமராக இருந்தது என்பதை முன்வைக்கிறார். தமிழகத்தின் வரலாற்றில் அவரின் சமூகம் சோழர் காலத்தில் ஆதிக்க சாதியான வலங்கைப் பிரிவிலிருந்ததை அறிவோம்.அதன் பின்வந்த காலங்களில் கூட சில இடங்களில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைச் செலுத்தியதற்கான ஆதாரங்கள் உண்டு.அவர்களுக்கென்றே தனித்த மடங்கள் இருந்திருக்கின்றன. வெள்ளையரின் காலத்தில் தங்களிடம் தவறாக நடக்க நினைத்த வெள்ளையரை வெளுத்து அனுப்பிய தரவுகளும் உண்டு. இவைகளையெல்லாம் முற்றிலுமாக  மறுத்துவிட்டு காலம் முழுவதும் நாங்கள் ஒடுக்கப்பட்டோமென்று பேசுவது முழுமையான அரசியல். அது அறிவுசார் விவாதமல்ல ஆகவே நான் அதற்குள் போக விரும்பவில்லை.

மனுநீதி இங்கு ஏதேனும் வகையில் ஏற்கப்பட்ட நூலாக இருந்ததாலும், இங்கு தீண்டாமைக் கொடுமை இருந்ததாலும்தான் உலகில் அன்றிருந்த அனைத்து மக்கள் நலச் சட்டங்களின் சாயலுடன் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அமைக்கப்பட்ட போது  பாதித்கப்பட்டவர்களுக்கென்று நீதி வழங்கும் பொருட்டு அவர்களுக்கென்று சில சலுகைகளும் சில சிறப்புசட்டங்களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. கிடைத்ததைப் பெற்றுப் பலனடைந்து , போதுமான வளர்ச்சியைத் தாங்கள் அடையவில்லை அல்லது வேறு நலன்கள் தங்களுக்குத் தேவை எனும்போது கையில் எடுப்பது தொடர்ந்த இந்த வாதத்தையே.

ஒரே மாதிரியான செயல்பாடு ஓரிருமுறை பலனைக் கொடுக்கக்கூடும்.ஆனால் இங்கு மனுநீதி பற்றிய விவாதம் பலனைக் கொடுப்பதற்கான காலம் தாண்டிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. எனவே என்னைப் பொறுத்தவரை இன்று  இருக்கும் சட்டங்களை இன்னும் கூர்மைப்படுத்தியும் ஒடுக்கப்பட்டோருக்கு அவர்களின் உரிமைகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியும்  அவர்களுக்கான அமைப்புகளின் செயல்பாடுகளை இன்னும் மேம்படுத்துவதுமே மேன்மையடையச் செல்லும் சரியான வழியாக இருக்கும்.

அதைவிடுத்து ஏற்கெனவே செய்த தவறை ஒப்புக்கொண்டவனை மீண்டும் மீண்டும் அதைச் சொல்லியே குற்றவுணர்வுக்கு ஆளாக்க வேண்டும் என்பது எவ்வளவு காலம் பயனளிக்கும் என்று தெரியாது. எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிரான மனநிலைக்குக் கூட செல்லும் வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தப்படும்  ஆயுதங்கள் சிறப்பானவையாக இருந்தாலும் அதன் குறைகள் தொடர்ந்து பயன்படுவதாலேயே கண்டறியப்பட்டால் தேவையான போரின்போது செயலற்றதாக மாறும் என்பதை இங்கு சிலர் புரிந்து கொண்டால் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

இந்த விவகாரத்தில் நானறிந்து கொண்டது ஒன்றையே.வரலாற்றின் போக்கில் வளர்க்கிறோம் என்பதற்கான தரவுகளும் மனதளவில் இன்னும் ஒரடிகூட முன்செல்லாத சமூகமாக இருக்கிறோம் என்பதற்கான தரவுகளுமே எனக்குத் தோன்றின. வளர்ச்சியின் பாதையில் தொடர்வதும் மனதளவில் விரிந்து பல அடிகள் முன்செல்வதும் நலமென்றே எனக்குத் தோன்றுகிறது.ஆனால் அத்தகைய சூழலுக்கு இங்கு சாத்தியமே இல்லை என்பதுமே எனக்குத் தோன்றுகிறது.அதனால் இருக்கும்வரை நிகழ்வதை வேடிக்கை பார்ப்பதென்றே முடிவெடுத்து விட்டேன்.

இப்படிக்கு

அந்தியூர் மணி.

திசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி

சாக்ரட்டீஸ்,ராஜாஜி,ஈவெரா- பாடபேதங்கள்

மரபும் மாற்றமும்- இரு கவிதைகள், அந்தியூர் மணி

பழந்தமிழர்களின் அறிவியல்!

தட்டுபொளி

$
0
0

மலையாளத்தில் ‘தட்டுபொளிப்பன்’ என்று ஒரு சினிமாக்கலைச்சொல் உண்டு. ceiling fall அல்லது bringing the roof down என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொலவடையின் மொழியாக்கம். உச்ச ஓசையில் பேசி கூரையின் அடிப்பூச்சை உதிரச்செய்வது. இது ஆவேசமான வசனங்களுக்குரிய சொல்.

தமிழில் பராசக்தி படம் வருவது வரை தட்டுபொளி அவ்வளவு ஆழமாக இருக்கவில்லை. அதுவரை சினிமா பெரும்பாலும் பாட்டையே நம்பியிருந்தது. வசனத்துக்கு வந்தபோதுகூட அது ஒருவகையான பழைய தெருக்கூத்துத்தன்மை கொண்டிருந்தது. இன்று, முன்பு சந்திரலேகா போன்ற படங்களில் கி.ரா, கொத்தமங்கலம் சுப்பு போன்றவர்கள் எழுதிய வசனங்களை பார்க்கையில் அவை சுருக்கமாகவும் மெல்லிய நகைச்சுவையுடனும் இருப்பதையே காணமுடிகிறது.

வசனத்திற்காக புகழ்பெற்ற இளங்கோவனின் வரிகள்கூட இலக்கிய நெடி கொண்டிருந்தாலும் சுருக்கமானவைதான். முழக்கமிடும் வசனங்களை பராசக்திதான் அறிமுகம் செய்தது. அது ஒரு வசனயுகத்தை தொடங்கிவைத்தது. சிவாஜி கணேசன் அதன் முதன்மை முகம்.

தட்டுபொளி வசனங்களுக்கு நம் தெருக்கூத்துகளிலும் நாடகங்களிலும் இடமில்லையா? இல்லை. அவை நாடகமேடையிலிருந்து தமிழ்ச் சினிமாவுக்குள் வரவில்லை. அவை அரசியல் மேடைகளிலிருந்து நேரடியாக தமிழ்ச் சினிமாவுக்குள் வந்தவை.

இங்கே ஜனநாயகம் அறிமுகமானபோது கூடவே அறிமுகமான கலை மேடைப்பேச்சு. நம்மில் பலர் எண்ணுவது போல அது இங்கே முன்பே இருந்த ஒன்று அல்ல. அரசவையில் அலங்கார, முறைமைச்சொல் பேசும் மரபு நமக்கு இருந்தது. குடி அவை, குல அவைகளில் நெறிவிவாதம் செய்யும் பேச்சும் இருந்தது. ஆனால் திரளான மக்களை பார்த்து பேசுவதென்பது இருக்கவில்லை.

ஏனென்றால் இங்கே அப்படி ஒரு மக்கள் திரள் இருக்கவில்லை. மக்கள் என நாம் இன்று சொல்லும் திரள் என்பது நவீன ஜனநாயக யுகத்தின் உருவாக்கம். சாதிகள், குலங்கள், குடிகள் ஆகிய அடையாளங்களுக்கு அப்பால் மக்கள் தனிமனிதர்களாக தங்களை உணர்ந்து, அவ்வண்ணமே அனைவரும் ஒன்றாகத் திரண்டு ஓரிடத்தில் சேர்வது ஜனநாயகத்தின் ஆக்கம்.

அதற்குமுன் திருவிழாக்கள் இல்லையா என்று கேட்கலாம். திருவாரூர் தேர் போல இன்னமும் பழைய முறைமைகள் கடைப்பிடிக்கப்படும் விழாக்களுக்குச் சென்றால் காணலாம், அங்கே மக்கள் சாதிகளாகவும் ஊர்களாகவும் திரண்டு சிறுசிறு குழுக்களாகவே வந்து பங்கெடுக்கிறார்கள். கண்ணுக்கு முன் பெருந்திரள் நின்றிருக்கும். ஆனால் அவர்கள் பலநூறு குழுக்களின் திரளே ஒழிய தனிநபர்களின் திரள் அல்ல.

அது இயல்பு. சென்ற யுகம் நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படையிலானது. குலங்கள், குடிகள், ஊர்களென பிரிந்திருந்த பழங்குடி மக்களை அது மேல்கீழ் அடுக்காக திரட்டி இறுக்கி நிறுத்தி அந்தச் சமூக அமைப்பை உருவாக்கிக்கொண்டது. அதன்மேல் ஆலயங்கள், விழாக்கள், படைகள், அரசுகள் உருவாகி நீடித்தன.

ஜனநாயகம் மக்களை தனிமனிதர்களாக உணரச் செய்தது. அந்த தனிமனிதனை நோக்கி அது பேசியது. அவர்களை தொழிலாளர், விவசாயி, மாணவர் என்னும் புதிய அடையாளங்களின் அடிப்படையில் தொகுத்தது. கொள்கைகளின் கனவுகளின் அடிப்படையில் திரட்டியது. அவர்களிடம் பேச அது கண்டடைந்த முதற்பெரும் ஊடகம் மேடைப்பேச்சு.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மேடைப்பேச்சுக் கலை எப்படி இங்கே வந்து நிலைகொண்டது என்பதை தன்வரலாறுகளினூடாக அறியலாம். தமிழில் தி.செ.சௌ.ராஜன் [நினைவலைகள்], க.சந்தானம் [ எனது வாழ்க்கை], நாமக்கல் கவிஞர் [என் கதை], கோவை அய்யாமுத்து [எனது நினைவுகள்], திருவிக [வாழ்க்கைக் குறிப்புகள்] போன்றவை குறிப்பிடத்தக்கவை. கேளப்பன், கே.பி.கேசவமேனன், இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, ஏ.கே.கோபாலன், செறுகாடு போன்றவர்களின் தன்வரலாறுகளைச் சொல்லலாம்.

மேடைப்பேச்சு இங்கே மூன்று ஊற்றுமுகங்களைக் கொண்டிருந்தது. இங்கே அதற்கு முன்பே இருந்துவந்த கதாகாலக்ஷேப முறை இங்கிருந்த பொதுப்பேச்சில் ஆழமாக ஊடுருவியிருந்தது. நீதிமன்ற வழக்காடுதல் பின்னர் மேடைப்பேச்சாக மாறியது. கல்வித்துறையில் பேராசிரியர்களின் வகுப்புகள் மேடைப்பேச்சுக்கு பயிற்சிகளாக அமைந்தன. பிந்தைய இரண்டிலும் தகுதியான ஆங்கிலேயர் இருந்தனர். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியர் பயிற்சிபெற்றனர். தேவாலயத்தில் பாதிரியாரின் சொற்பொழிவுகள் இங்கே முன்னுதாரணமாக அமைந்தன என்றாலும் பெரிதாக அவை இந்துக்களை சென்றடையவில்லை.

தொடக்க காலங்களில் மேடைப்பேச்சாளர்கள் பெரும்பாலும் வழக்கறிஞர்கள் அல்லது ஆசிரியர்களாகவே இருந்தனர். அவர்களே மெல்ல அரசியல்களத்துக்கு வந்தனர். தொடக்ககால அரசியல்கூட்டங்களெல்லாம் கூட பிரிட்டிஷ் முறைப்படி தலைவர் தேர்வு [அத்யக்ஷர் அல்லது அக்ராசனர் தேர்வு], முன்மொழிதல் [பிரேரணை], வழிமொழிதல் போன்றவற்றுடன் நடைபெற்றன. நீதிமன்றம் போலவே உபச்சாரச் சொற்கள் நிறைந்திருந்தன.

அன்று மேடையில் பேசுபவர்கள் மிக மிக மதிப்புக்குரியவர்களாக இருந்தனர். அவர்கள் இரண்டு பெரும்பிரிவுகளாக மாறினர். ஒருசாரார் மரபுசார்ந்த கருத்துக்களை மேடையில் பேசலாயினர். மதம், மரபிலக்கியம் ஆகியவற்றைப் பேசுபவர்களுக்கு மிகப்பெரும் மதிப்பு இருந்தது.

தமிழ்ச்சூழலில் சைவப்பேச்சாளர்கள் மிகப்பெரிய அலை என எழுந்தனர். அவர்களில் மறைமலை அடிகள் போன்றவர்கள் உச்ச ஆளுமைகளென பெருஞ்செல்வத்துடன் வாழ்ந்தனர். அவர்களின் தொடர்ச்சி இன்றுவரை தமிழ்ச்சூழலில் நீடிக்கிறது.

இன்னொரு பிரிவினர் புதியசிந்தனைகளை முன்வைத்தவர்கள். ஜனநாயகத்தின் அடிப்படைகளான தனிமனிதன் என்னும் கருத்துரு அவர்களால் முன்வைக்கப்பட்டது. தனிமனித உரிமை, மனித சமத்துவம், பொதுநீதி, மக்களுக்கு அரசில் பங்கு ஆகியவை அவர்களால் முன்வைக்கப்பட்டன.

மக்களை நோக்கி அத்தனை அறிஞர்கள் நேரடியாகப் பேசிய ஒரு காலகட்டம் வரலாற்றில் எங்குமே இருந்ததில்லை. மேடைப்பேச்சு ஒரு பேரியக்கமாக எழுந்தது. மக்கள் பேச்சுக்களை கேட்க ஆயிரக்கணக்கில் கூடினர். அவர்களை இன்புறுத்தும் கலையாகவும் கற்பிக்கும் ஊடகமாகவும் மேடைப்பேச்சு மாறியது.

ஜனநாயக விழுமியங்கள் அரசியல் கிளர்ச்சியை உருவாக்கின. அரசியல் கிளர்ச்சி மேடைப்பேச்சை மேலும் வளர்த்தது. மக்களை நோக்கி நிதானமான, பயின்ற மொழியில் பேசுபவர்களை விட மக்களை கிளர்ந்தெழச்செய்யும் பேச்சுக்களை பேசுபவர்கள் மிகுந்தனர். கோவை அய்யாமுத்துவின் வாழ்க்கை வரலாற்றில் அவர் எப்படி ஒரு கிளர்ச்சிப்பேச்சாளராக இருந்தார் என்பதைக் காண்கிறோம்.

அந்த கிளருணர்வு மேடைப்பேச்சு ஐம்பதுகளில் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் கொந்தளிப்பின்போது உச்சத்தை அடைந்தது. ஏனென்றால் நாற்பதுகளில், சுதந்திரப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில், அடித்தள மக்கள் அரசியலுக்கு வந்தனர். சுதந்திரத்திற்குப் பின்பு அவர்கள் மேலும் மேலும் கிளர்ந்து உரிமைகளுக்காக குரலெழுப்பினர். மதம், மொழி சார்ந்த பூசல்களும் பகைமைகளும் வலுவாயின.

காந்திய யுகத்தின் முடிவுக்குப்பின் நேர்நிலை அரசியல், நம்பிக்கை அரசியல் வலுவிழந்தது. எதிரியைச் சுட்டிக்காட்டி மக்களை கொந்தளிக்கவைக்கும் அரசியல் உருவாகி வலுவடைந்தது. மக்களை திரட்ட உணர்ச்சிகளை தூண்டும் பேச்சு தேவைப்பட்டது. மேடைப்பேச்சு உணர்ச்சி நாடகமாக, மொழிவிளையாட்டாக மாறியது.

அந்த மேடைப்பேச்சு பின்னாளைய நாடகங்களுக்குள் நுழைந்தது. பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா, எஸ்.டி.சுந்தரத்தின் கவியின் கனவு அதில் வரும் மேடைப்பேச்சுக்களுக்காகவே புகழ்பெற்றவை.

அந்த மேடைப்பேச்சு, நாடகம் வழியாக, சினிமாவுக்கு வந்ததுதான் பராசக்தியின் வசனவெடிப்பெருக்கு. சிவாஜி நீதிமன்றத்தில் நின்று பேசுவது மேடைப்பேச்சுதான். நீதிமன்றத்திலிருந்து பேச்சு மேடைக்கு வந்து திரும்ப நீதிமன்றத்துக்கே சென்றது. பிரிட்டிஷாரின் எந்த நீதிமன்றத்திலும் நீதிமன்ற நடைமுறை பயின்று முறைப்படி அங்கீகாரம் பெறாத எவரும் பேசுவதற்கு அனுமதி இருக்கவில்லை.  இன்றும் அதுவே நீதிமன்ற நெறிமுறை.

ஆனால் பராசக்தி அதை பொருட்டாகவே கருதவில்லை. அதை எழுதியவர்களுக்கு அது தெரிந்திருக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு. மக்களும் நீதிமன்றத்தில் குற்றவாளியோ சாட்சியோ பேசமுடியாது என்னும் உண்மையை அறிந்திருக்கவில்லை என்பதை அதன்பின் சென்ற எழுபதாண்டுகளில் தமிழில் வந்த சினிமாக்கள் காட்டுகின்றன. அவர்கள் விரும்பிய நீதிமன்றத்தை பராசக்தி காட்டியது.

தட்டுபொளி தமிழ் சினிமாவில் எப்போதும் இருந்தது, இன்று சற்றே குறைந்திருக்கிறது. சிவாஜிக்குப்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், அஜித், விஜய் எல்லாருமே அதை நிகழ்த்தியிருக்கிறார்கள். விசு வேறொருவகையில் உருவாக்கியிருக்கிறார்.

தட்டுபொளியை நாம் சினிமா என்று பார்த்தால்தான் சிக்கல். அதை சினிமாவுக்குள் ஒரு மேடைப்பேச்சு, ஒரு நாடகம் என்று பார்த்தால் ரசிக்கக்கூடியதுதான். நம் சினிமா என்பது தூயசினிமா என்ற வடிவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு பெரிய ஆறுபோல எல்லா ஓடைகளையும் இழுத்து இணைத்துக்கொண்டு பெருகிச்செல்கிறது அது. அதில் நாடகம், தெருக்கூத்து, சர்க்கஸ், இசை, இலக்கியம் எல்லாமே கலந்துள்ளன.

மலையாளத் தட்டுபொளி சினிமாக்கள் இன்றும் பெரும் ரசிகர்பட்டாளத்தைக் கொண்டவை. மலையாள அரசியல்மேடைப்பேச்சின் மிகைநாடக வடிவங்கள் அவை. நேரடியாகவே அவை அரசியல்பேசுகின்றன. பலசமயம் கொஞ்சம் பெயர்மாற்றி உண்மையான மனிதர்களையே கதாபாத்திரங்களாகக் காட்டுகின்றன. மம்மூட்டி, சுரேஷ்கோபி இருவருமே அத்தகைய கதாபாத்திரங்கள் வழியாக வென்றவர்கள்.

ஆனால் அதிலும் உச்சம் மோகன்லால். மற்ற இருவராலும் ஆவேசம், கோபம் கசப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த முடிந்ததே ஒழிய நையாண்டியும் ஏளனமும் ஊடே கலக்கவிட முடியவில்லை. மோகன்லால் மிகைநாடக காட்சியில்கூட அவருக்கான நம்பகமான உணர்வுநிலைகளை வெளிப்படுத்துகிறார்.

ஜோஷி இயக்கிய  படத்திலுள்ளது இக்காட்சி. இதில் அமைச்சராக நடித்திருப்பவர் எம்.எஃப்.வர்கீஸ் என்னும் நாடகநடிகர். ஆழ்ந்தகுரல் கொண்டவர். கிட்டத்தட்ட மோகன்லாலுக்கு இணையான காட்சிப்பங்களிப்பு அவருக்கும் அளிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது – தமிழில் நடிகர்கள் அதை இன்று ஏற்கமாட்டார்கள், அவர்களின் ரசிகர்களும் ஏற்பதில்லை. கேரள அரசியல்வாதி கே.எம்.மாணியின் சாயல்கொண்ட கதாபாத்திரம் அது.

இந்த தட்டுபொளி வசனத்தில் உள்ள ஒரு சிறப்பம்சம் தன்பெயரை தானே சொல்வது. எம்.டி.வாசுதேவன் நாயரின் பாணி அது. தட்டுபொளி வசனங்களை அவர் எழுதியதில்லை – ஆனால் கூர்மையான உணர்ச்சிகொண்ட வசனங்களை எழுதியிருக்கிறார். அதன்பின் ரஞ்சித் அந்த பாணி வசனத்தை முன்னெடுத்து வளர்த்தார். அதன் உச்சம் ரஞ்சி பணிக்கரில் வெளிப்படுகிறது. இது மிகைநாடகம் மிகைச்சொற்பெருக்கு ஆகியவற்றால் ஒரு தெருநாடகத்தின் தீவிரம் கொண்டிருக்கிறது. கொஞ்சம் மனம் விலகினால் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கிறது.

 

மழைப்பாடல் உரை  தண்டபாணி துரைவேல்

$
0
0
மழைப்பாடல்

மனிதன் தான் உருவாக்கும் எதுவும் காலம் காலமாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தோடே செய்கிறான்.   ஒரு எளிய வீட்டைக் கட்டுகையில்கூட இது தன் காலத்திற்கு பிறகும் நிலைத்து நிற்க வேண்டும் என நினைக்கிறோம். இப்படியே நம் குடும்பம் வாழையடி வாழையாக வாழவேண்டும் என நினைக்கிறோம்.  ஒரு அரசு என்றும் வீழாமல் நிலைத்து நிற்கும் எண்ணத்துடனே நெறியமைத்து கட்டமைக்கப்படுகின்றன.  ஆனால் மனிதனின் இந்தக் கட்டுமானங்களை எல்லாம் காலம் சிதலென பெருகி அரித்து அழிக்கிறது

மழைப்பாடல் உரை  தண்டபாணி துரைவேல்

 

தெய்வம்- கடிதம்

$
0
0

ஐயா (எ) 95 வயது குழந்தை!

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எனது வணக்கம்!

இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.

பலதடவை பல்வேறு விஷயங்கள் குறித்து கடிதம் எழுத நினைத்திருக்கிறேன். என்றபோதும் ஏதோவொரு தயக்கம், எழுதாமல் விட்டுவிடுவேன். இம்முறை அவ்வாறு கிடையாது. காரணம், கடிதத்தின் பொருள் அப்படி.

நான்காண்டுகளுக்கு முன்பு தங்களது ‘தெய்வமிருகம்’ கட்டுரை முதல்தடவை வாசித்ததாக நினைவு. ஏனோ நேற்றிரவு முதல் அக்கட்டுரை திரும்பத் திரும்ப நினைவுக்கு வர, காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அக்கட்டுரையை தேடியெடுத்து மீண்டும் வாசித்தேன்.

நான்காம் வகுப்பு படிக்கையில் தங்களுக்கு பாலவாதம் வந்தது, அதற்காக உங்கள் தந்தை மேற்கொண்ட சிகிச்சை நடவடிக்கைகள் யாவும் கண்முன் காட்சியாக விரிய அதிலிருந்து மீள நீண்டநேரம் ஆனது. கூடவே, என் தந்தை குறித்த நினைவுகளும் வரிசையாக எழுந்தது.

அதிலும் குறிப்பாக கடந்தாண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, என் தந்தையின் 95-வது பிறந்தநாளுக்குப் பரிசாக அவர் பற்றி எழுதி வெளியிட்ட ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் குறித்த நினைவும் (இந்நூலினை கடந்தாண்டே தங்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். கிடைத்திருக்கும் என நம்புகிறேன்), அதை புத்தகம் என்றால் என்ன என்று கூட அறியாத எங்கள் கிராமத்தின் மூத்த விவசாயியான என் தந்தையின் கரங்களில் பிறந்தநாள் பரிசாகத் தந்ததும், அப்படியோர் பரிசை சற்றும் எதிர்பாராதவர் வியப்பின் உச்சத்துக்குப் போய் மகிழ்வை வெளிப்படுத்தத் தெரியாமல் தவித்ததையும், அதனை புரிந்துகொண்டவனாய் பேச்சை வேறுபக்கம் திருப்பிவிட்டு, அங்கிருந்து புறப்படும்போது நூலின் முன்னுரையில் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயா குறிப்பிட்டிருந்த,

‘திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் தென்புறத்துக் கிராமமான திருவடத்தனூர், வடிவரசால் தமிழிலக்கிய வரைபடத்தில், இந்நூல் காரணமாகக் குறிக்கப் பெறுகிறது…’

எனும் வரிகளை சொன்னதும் மகிழ்வோடு கேட்டுவிட்டு,

‘புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது..’ என்றவர் கண் கலங்கியபடி சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது.

ஏனோ இதை உடனே தங்களிடம் பகிரவேண்டும் போலிருந்தது.

மிக்க அன்புடன்,

வடிவரசு

தெய்வ மிருகம்


குணங்குடியார்

$
0
0

இனிய ஜெயம்

ஜெயகாந்தனுக்கு பிடித்த குணங்குடியார் பாடலான மீசையுள்ள ஆண்பிள்ளை சிங்கங்காள் பாடல் பிரமாதமான பின்னணி இசையுடன் you tube இல் காணக் கிடைக்கிறது.

குமரி அபுபக்கர் அவர்கள் குரலில் இந்தப் பாடல்கள் மேலும் அர்த்தமும் ஆழமும் கொள்வதை போல மயக்கம் தருகிறது. மூன்றாவது பாடல் இருக்கும் தளம் ar ரஹ்மான் அவர்களின் அறக்கட்டளை உடையது என டிஸ்க்ரிப்ஷன் சொல்கிறது.

மீசையுள்ள பாடலின் வரிகள் மொத்தமும், ஜெயகாந்தன் தானே எழுதியதாகவே உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். தமிழ் தி இந்து பதிப்பகம் வழியே ஜெயகாந்தன் நினைவு மலர் ஒன்று வந்தது. அதில் ஒரு அரிய புகைப்படம் கண்டேன். மேல் சட்டை இன்றி, வேஷ்டியை மடித்துக் கட்டி, துண்டை வீசி நடனமாடிக் கொண்டிருக்கிறார் ஜெயகாந்தன்.

அவர் யார் முன், என்ன பாடல் பாடியபடி நடனமாடிக் காட்டி இருப்பார்? தெரியவில்லை. இன்று இந்த மீசையுள்ள ஆண்பிள்ளை பாடலை, பின்னணி இசையுடன்  கேட்ட பிறகு, இதை பாடியே ஜெயகாந்தன் ஆடி இருப்பார் என கற்பனை செய்து கொள்ள

தோன்றுகிறது. :)

இது சென்னையில் மூன்று சித்தர்கள் எனும் தலைப்பின் கீழ், ஆறுமுக தமிழன் அவர்கள், யார் சித்தர் என்பதை விளக்கி, பட்டினத்தார், வள்ளலார், குணங்குடி மஸ்தான் இந்த மூவரும் அவர்கள் தங்களை முன்வைத்த விதத்தை ஒப்பு நோக்கி, நிகழ்த்திய உரை.

கடலூர் சீனு

எழுத்தாளனும் வாசகனும்

$
0
0

மனு இறுதியாக…

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்

நான் சென்னையில் வசிக்கும் இதழாளன். இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் தனிப்பட்ட அஞ்சல். இதற்கு முன் இருமுறை தொழில்முறை சார்ந்து தங்களிடம் மின்னஞ்சலில் சுருக்கமாக உரையாடியிருக்கிறேன். மாதொருபாகன் சர்ச்சையின்போது இந்தியா டுடே தமிழ் இதழுக்காக தங்களுடைய கட்டுரையை கேட்டுப் பெற்றது அவற்றில் ஒன்று. 250 சொற்கள் நீளத்தில் கட்டுரை வேண்டும் என்று கேட்டனுப்பியதற்கான  பதில் மின்னஞ்சலிலேயே கச்சிதமான வார்த்தைக் கணக்கில் தங்கள் பார்வையை அழுத்தமாக வெளிப்படுத்தும் கட்டுரையை அனுப்பியது நன்கு நினைவிருக்கிறது. உண்மையில் நான் அதை ஊகித்திருந்தேன்.

தாங்கள்  எம்ஜிஆர். சிவாஜி ஆகியோர் பற்றி எழுதியிருந்தவை சர்ச்சையானபோதுதான் தங்களுடைய பெயர் எனக்கு அறிமுகமானது. பிறகு ‘நான் கடவுள்’ படத்தின் வசனகர்த்தவாக. அப்போது அது தொடர்பாக உங்களுடைய பேட்டி ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருந்தது. அதுதான் உங்கள் சொற்களை நான் நேரடியாகப் படித்த முதல் நிகழ்வு.

2011 வாக்கில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குச் செல்லத் தொடங்கியபோது தங்களுடைய நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். 2012,13இல் உங்களால் பெரிதும் கவரப்பட்டேன். தனிப்பேச்சுகளில்கூட உளப்பூர்வமான மரியாதையுடன் தங்களை ஆசான் என்றுதான் குறிப்பிடுவேன். சென்னையில் ‘வெள்ளை யானை’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று ஒரு பிரதியை வாங்கி  தங்களிடம் கையெழுத்துப் பெற்றபோது பேருவகை அடைந்தேன். அந்த நாவலை வாங்கிய கையோடு படித்தேன் அதே காலகட்டத்தில் ‘ஏழாம் உலகம்; நாவலையும் படித்தேன்.

‘விஷ்ணுபுரம்’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’ இரண்டையும் அண்ணா நூலகத்தில் கொஞ்சம், படித்து விட்டுவிட்டேன். பின் தொடரும் நிழலின் குரல் நூலை 2015இல் பனுவல் நூல் நிலையத்தில் வாங்கினேன் என்றாலும் அதைப் படித்து முடித்தது 2018இல் தான் (ஆம் வாசிப்பில் படி சோம்பேறி நான். உங்களுக்கு எழுத இத்தனை ஆண்டுகள் தயங்கியதற்கு அதுவே முதன்மைக் காரணம்). ஆனால் 2018இல் படிக்க எடுத்த ஒரு சில வாரங்களில் படித்துவிட்டேன். அந்த அளவு அந்த நாவல் என்னைக் கவர்ந்தது.

இது தவிர தங்கள் புனைவெழுத்தில் சில சிறுகதைகள், வெண்முரசு சில அத்தியாயங்கள் மட்டுமே படித்துள்ளேன். மறைந்த லோகிததாஸ் பற்றி எழுதிய நூலைப் படித்திருக்கிறேன். கணிசமான உரைகளைக் கேட்டிருக்கிறேன். ’எப்ப வருவாரோ; நிகழ்வில் வியாசர் , ஆதிசங்கரர் குறித்த தங்களின் உரைகள் என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தின.

ஆனால் அரசியல், கருத்தியல்ரீதியாக கடந்த 5-6 ஆண்டுகளாக தங்களுடன் பெரிதும் முரண்படத் தொடங்கியிருந்தேன்.  பெரியார், திராவிட இயக்கம் பற்றிய தங்கள் கருத்துகளுடன் எனக்கு கடும் முரண்பாடு உண்டு    ஃபேஸ்புக்கில் தங்களை கடுமையாக விமர்சித்து எழுதிவந்தேன். சில முறை மிகவும் உணர்ச்சிவயப்பட்டு வசைச் சொற்களைக்கூட பயன்படுத்தியிருக்கிறேன். அதற்காக மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  இரோம் ஷர்மிளா, டி.எம்.கிருஷ்ணா, சர்க்கார் கதை சர்ச்சை  ஆகியவை குறித்து நீங்கள் எழுதியவற்றுக்காக மிகவும் கொந்தளிப்படைந்தேன்.

ஆனாலும் தங்கள் மீதான வியப்பு எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. தங்கள் பிளாகைப் படிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று பலமுறை தோன்றியும் செயல்படுத்த முடியாமல் போனது நான் செய்த நற்பயன் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் வெறுக்க நினைத்தாலும் நிராகரிக்க முடியாதவை உங்கள் எழுத்தும் கருத்துகளும்.

உங்களுடன் கடுமையாக முரண்பட்டிருந்த போதிலும் மாவு விற்பனையாளரால் நீங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உங்கள் பக்கம்தான் நின்றேன். அந்த விவகாரத்தில் முன்முடிவுகளுடன் உங்களை எதிர்த்தவர்கள் அல்லது கேலி செய்து கொக்கரித்தவர்களிடமிருந்து மனவிலக்கம் கொண்டேன்.

உங்கள் மீதான எதிர்மறைப் பார்வை எனக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நீங்கியது என்று சொல்ல வேண்டும். பொதுவாகவே இங்கு முற்போக்கு என்று அடையாளப்படுத்தப்படும் தரப்பு இந்து மதம் குறித்து எதையும் வாசிக்காமல் அது தொடர்பான விமர்சனக் கருத்துகளை மட்டுமே படித்துவிட்டு அந்த மதத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து வசைபாடுவது,  பார்ப்பனீயத்தை எதிர்க்கும் பெயரில் மணி ரத்னம், கமல் ஹாசன் தொடங்கி பலரை பார்ப்பனராகப் பிறந்தவர்கள் என்கிற ஒரே காரணத்துக்காகவே வசைபாடி ஒதுக்குவது ஆகியவற்றால் அத்தரப்பின் மீது எனக்கு மனவிலக்கம் ஏற்படத் தொடங்கிவிட்டது. (இந்தத் தவறுகளைச் செய்பவர்களிலும் உளபூர்வமாக அடித்தட்டு மக்களுக்காக, சமூக நீதிக்காக சமத்துவம் மிக்க உலகைப் படைப்பதற்காக உளப்பூர்வமாக உழைப்பவர்கள் மீதான மரியாதை அப்படியேதான் இருக்கிறது).

இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்  ஓலைச்சுவடி இதழால் எடுக்கப்பட்டு ஸ்ருதி டிவியில் வெளியான தங்களுடைய நீண்ட நேர்காணல் ஒன்றைக் கண்டேன். அதில் நீங்கள் இந்து மதம் இந்து மத எதிர்ப்பாளர்கள் பற்றிக் கூறியவை மட்டும் வெட்டப்பட்டு ஃபேஸ்புக்கில் பலரால் பகிரப்பட்டு வசைபாடலுக்குள்ளானது. . அதில் இந்துமதம் குறித்தும் கண்மூடித்தனமான இந்து மத எதிர்ப்பு குறித்தும் கண்மூடித்தனமான இந்துமத எதிர்ப்பு எப்படி உண்மையிலேயே நிராகரிக்கப்பட வேண்டிய இந்துத்துவத்துகு ஆள் சேர்ப்பதாக அமைகிறது என்பதை விளக்கியும் நீங்கள் கூறியிருந்தவை அனைத்தும் எனக்கு மிகச் சரியான முக்கியமான கருத்துகளாகப் பட்டன என்பதோடு அந்த நேரத்தில் எனக்கிருந்த தனித்துவிடப்பட்டதால் சோர்வடைந்த உளநிலைக்கு பெரும் ஆறுதல் அளிப்பதாகவும் அமைந்தன. அன்றிலிருந்துதான் நான் இந்திய சமூகத்துக்கு தங்களைப் போன்ற ஒருவரின் இன்றியமையாமையை உணர்ந்துகொண்டேன். தங்கள் மீதான விமர்சனங்கள் மாற்றுக் கருத்துகளை வைத்து தங்களை  எதிர்மறை சக்தியாக பார்ப்பது எவ்வளவு பிழைபட்டது என்பதும் முழுமையாகப் புரிந்தது.

தற்போது மனுஸ்ம்ருதி விவகாரத்தில் ஒரு சமநிலைக் குரல் எழாதா என்று பெரிதும் ஏங்கிக்கிடந்த என் மனதுக்கு தங்கள் நீண்ட வரலாற்றுப் பார்வையும் அற நோக்கும் நிரம்பிய கட்டுரை மிகப் பெரும் நிம்மதி அளித்தது. இந்தச் சூழலில் என்ன மாதிரியான வசைகள் காழ்ப்புகள் வீசப்படும் என்று தெரிந்தும் அந்தக் குரலை சமரசமின்றி ஒலித்ததற்காக தங்களுக்கு பெரும் நன்றிக்குரியவனாகிறேன். (தங்களிடம் உள்ள  துணிச்சலில் நூறில் ஒரு பங்குகூட என்னிடம் இல்லை. முத்திரை குத்தப்படுவதை அஞ்சி உங்கள் கட்டுரையை ஃபேஸ்புக்கில் கூடப் பகிரவில்லை).

அந்தக் கட்டுரையில் தொல்.திருமாவளவன் அவர்களின் விமர்சனக் குரலில் உள்ள நியாயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக நிறுவிய பிறகே நீங்கள் மனுஸ்ம்ருதிக்குள் சென்றீர்கள். குறிப்பாக சாதியுணர்வாளர்களை ‘மேல்சாதி கீழ்மக்கள்’ என்று சாடியிருந்ததைப் படித்தவுடன் உணர்வுவயப்பட்டு கைதட்டி ஆரவாரித்தேன். . சாதியுணர்வாளர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அறச்சீற்றத்தை அந்த ஒரு சொல்லில் மிகத் துல்லியமாக வெளிப்படுத்திவிட்டீர்கள்.

அதே நேரம் திருமாவளவன் மனு ஸ்ம்ருதியையே இந்து மதமாகப் புரிந்துகொண்டிருப்பது எவ்வளவு பிழையானது என்பதையும் விரிவாக விளக்கியுள்ளீர்கள். உண்மையில் இந்தச் சூழலில் ஒரு மனசாட்சியுள்ள தலித் அல்லாத இந்துவானவர் திருமாவளவனைப் போன்ற தலித் ஆளுமைகளிடம் பேச வேண்டிய குரல் அதுதான். அவர்களுடன் நாம் முரண்படலாம். ஆனால் அந்த முரண்களுக்காக நாம் அவர்களை ஒருக்காலும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. ஒருக்காலும் அவர்களை தாழ்த்தும் ஒரு சொல்லை உதிர்த்துவிடக் கூடாது. நீங்கள் இவை இரண்டையும் மிகக் கவனமாக தவிர்த்து திருமாவளவனின் குரலின் முக்கியத்துவத்தை அவர் மீதான மரியாதையை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டே அவருடைய கருத்தை விமர்சித்திருக்கிறீர்கள். இதற்கு முன்பும் பலமுறை திருமாவளவன் மீதான மரியாதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

உண்மையில் மனு ஸ்ம்ருதியை சமூக வரலாற்றுப் பார்வையுடன் அணுகி எழுதுவதற்கு  வேறு ஆட்களே இல்லை. இப்படி பேசக்கூடியவர்களும் எழுதக்கூடியவர்களும்கூட வசைக்கும் முத்திரைகுத்தலுக்கும் அஞ்சி இதைச் செய்யத் தயங்குவார்கள். ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்கள். அதற்கு சாதியத்தால் வெட்கித் தலைகுனியும் அதே வேளையில் சாதி ஒன்றுக்காகவே இந்து மதத்தை நிராகரிக்கத் துணியாத இந்துவாக உளமார்ந்த நன்றி.

அன்புடன்

ஜி.

 

அன்புள்ள ஜி,

எனக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் அடிக்கடி வருவதுண்டு. உங்கள்மேல் மதிப்பு இருந்தது, இந்தக்கருத்தைக் கண்டேன் மதிப்பை இழந்தேன் – இவ்வாறு. நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் மதிப்பை அடைந்தேன் என்றும் அவர்களில் மிகச்சிலர் எழுதுவதுண்டு.

ஓர் எழுத்தாளனுடன் நீங்கள் இருப்பது ஓர் உரையாடலில். ஏற்பும் மறுப்பும் அதிலிருக்கும். இரண்டுமே அறிவார்ந்தவை, நுண்ணுணர்வு சார்ந்தவை. நீங்கள் ஏற்கும் ஒரு கருத்தை எழுத்தாளர் ஏற்கவில்லை என்றால் எப்படி அவன்மீதான மதிப்பை ரத்துசெய்வீர்கள்? அப்படி அவன் உங்களிடம் எந்த ஒப்பந்தத்தையாவது செய்திருக்கிறானா என்ன? எழுத்தாளன் அப்படி எந்த வாசகனிடமாவது ஒப்பந்தமிடமுடியுமா?

எழுத்தாளன் வாசகனின் வாசிப்புசார்ந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டவனா என்ன? இதழாளன் என்றால் நீங்களும் ஒருவகையில் எழுத்தாளர். நீங்கள் அப்படிக் கட்டுப்படுவீர்களா? இல்லை, நீங்கள் முன்பு சொன்ன அத்தனை கருத்துக்களுக்கும் இப்போது கட்டுண்டவரா? இனிமேல் நீங்கள் செல்லும் அத்தனை பயணங்களையும் இதுவரை சொன்னவை கட்டுப்படுத்துமா? இனி உங்களுக்குக் கருத்துத் தேடலோ, கண்டடைதலோ இல்லையா?

எழுத்தாளன் சிந்தனையாளனாகச் செயல்படுபவன் அல்ல. சிந்தனைகளை எழுதினாலும் அவன் எழுத்தாளனே. எழுத்தாளனின் பணி உள்ளுணர்வு சார்ந்து செயல்படுவது. உள்ளுணர்வு முன்னூகிக்க முடியாதது. அவனிடம் மாறாமலிருப்பது அவனுடைய தேடல் மட்டுமே.

சிந்தனையாளர்கள் ஒரு தரப்பை உறுதியாக மாறாமல் கட்டி எழுப்புவதுபோல எழுத்தாளர்கள் செய்வதில்லை. ஏனென்றால் எழுத்தாளனின் முதன்மை ஆயுதம் தர்க்கம் அல்ல. தர்க்கம் புறவயமானது. உள்ளுணர்வு அகவயமானது

ஆகவே எழுத்தாளர்கள் எவராயினும் முரண்பாடுகள், உணர்வுச்சமநிலையின்மைகள் இருக்கும். குழப்பங்களும் தயக்கங்களும் இருக்கும். ஆகவே முரண்பட்ட நிலைகளும் இருக்கும்

ஆனால் சிந்தனையாளர்கள் அவர்களின் சீரான ஒற்றைப்படை போக்கு காரணமாக தவறவிடுவனவற்றைச் சுட்டிக்காட்ட எழுத்தாளர்களால் முடியும். அதுவே சிந்தனையில் அவர்களின் இடம். அத்துடன் அவர்களின் சிந்தனைகள் அவர்களின் படைப்புக்களால் அழுத்தம்பெறுகின்றன. எழுத்தாளர்களின் சிந்தனைகள் அவர்க்ளின் படைப்புக்களின் இன்னொரு வடிவம் மட்டுமே.

எழுத்தாளனை ஒரு வாசகன் அணுகும் முறைக்கும் தலைவனை ஒரு தொண்டன் அணுகும் முறைக்கும் உள்ள வேறுபாடுதான் இது. எழுத்தாளனை வாசகன் தன்னுடைய மறுதரப்பாகவே எண்ணவேண்டும். தன் அனுபவங்களை தொட்டு விரியச்செய்பவன். தன் சிந்தனையை சீண்டி முன்னகரச் செய்பவன். தன்னுடன் உரையாடலில் இருப்பவன்.

நேர் மாறாக தலைவனை தொண்டன் வழிகாட்டியாக, தனக்கும் சேர்த்து எல்லாவற்றிலும் முடிவெடுப்பவனாக நினைக்கிறான். ஆகவே தலைவனை நம்புகிறான். தலைவன் தவறான முடிவெடுக்கும்போது சோர்ந்துபோகிறான். ஓர் எல்லையில் விலகிக் கொள்கிறான். ஆகவேதான் தலைவான ஏற்றுக்கொண்டவனை தொண்டன் சிலசமயம் வசைபாடுகிறான், வெறுக்கிறான், புண்பட்டுவிலகிச் செல்கிறான்

எழுத்தாளனுடனான உறவில் அந்தவகையான உணர்வுகளுக்கே இடமில்லை. இந்தக்கருத்து ஏற்பில்லை, இந்த படைப்பு எனக்கு சிறப்பாகப் படவில்லை என்பதற்கு அப்பால் அதில் நிலைபாடுகள் இல்லை. எழுத்தாளனுடன் முரண்படலாம். அம்முரண்பாட்டை அவனுக்கு தெரிவிக்கலாம், தெரிவிக்காமல் நாமே பேசி வளர்த்தும்கொள்ளலாம். அதெல்லாமே எழுத்து- வாசிப்பு என்னும் இயக்கத்தின் பகுதிகள்தான். அவ்வாறுதான் நாம் அனைவருமே வளர்கிறோம்

சுந்தர ராமசாமியிடம் எனக்கு கடுமையான முரண்பாடுகள் இருந்தன. ஞானியிடம் இன்னும் கடுமையான முரண்பாடுகள் இருந்தன. ஆற்றூரிடம் முரண்பாடே இல்லை.நித்யா சொன்ன பலவற்றை நான் அன்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடம் விவாதித்திருக்கிறேன். முரண்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் மீதான மதிப்பை இழந்திருக்கிறேனா? இல்லை.

ஆனால் என் முதிர்ச்சியின்மையால் அன்று நான் எல்லைமீறியதுண்டு. கடுஞ்சொற்கள் பேசியதுண்டு. கடுமையாக எழுதிவிட்டதும் உண்டு. இன்றைக்கு யோசிக்கும்போது சுந்தர ராமசாமியுடனான உறவில் நான் உகந்தமுறையில் நடந்துகொள்ளவில்லை என்று உணர்கிறேன். அந்தக் குற்றவுணர்ச்சி நீடிக்கிறது. என் அப்பா, சுந்தர ராமசாமி இருவருக்கும் நான் நியாயம் செய்யவில்லை.

எழுத்தாளர்களை அல்ல எவரையுமே மாற்றுக் கருத்துக்களின் பொருட்டு விலக்குவதும் மதிப்பை ரத்துசெய்வதும் முதிர்ச்சியின்மை.அதன்பொருட்டு கடுஞ்சொல் உரைப்பது நம் தரப்பின்மேல் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. மதிப்பிற்குரியவரின் மாற்றுக்கருத்து வேறு. இயல்பிலேயே நம் மதிப்பிற்கு உரியவர்கள் அல்லாதவர்களின் தரப்பு வேறு. நான் இந்த வேறுபாட்டை எப்போதுமே அடிக்கோடிட்டுச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

நாம் மதிப்பவர் தன்னுடைய சில கொடைகளுக்காகவே அம்மதிப்பை அடைகிறார், அவர் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் அந்த கொடைகள் இல்லாமலாவதில்லை. நம் அகம் தொட்ட ஆசிரியன் எந்நிலையிலும் நம்முடைய ஒரு பகுதிதான். இளமையில் நாம் சாப்பிட்ட தாய்ப்பாலை இன்று மறுத்துவிடமுடியுமா என்ன? நம்மை ஆட்கொள்ளும் எழுத்தாளன் நம் அகமாக மாறிவிடுகிறான். அவனுடன் நாம் கொள்ளும் உரையாடல் நாமே நம்முடன் உரையாடுவதுதான்

அவ்வப்போது நாமே நம்மை நிராகரித்துக்கொள்ளவும் செய்கிறோம்.

ஜெ

நிறைவில்…

$
0
0

‘மூவாமுதலா உலகம்’ என  சீவகசிந்தாமணி தொடங்குகிறது.  வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண்.

பாண்டவர்களின் விண்புகுதலுடன் இந்நாவல் முடிகிறது. உண்மையில் இந்நாவல் இதுவரை வந்த பிறநாவல்களின் தொகுப்புக்கூற்று மட்டுமே. மூலமகாபாரதத்தில் இருந்து இது வேறுபடுவது ஒன்றிலேயே. அதிலுள்ளது புராணக்கதை. இதிலுள்ளது வேதாந்த மெய்மை.ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கைவல்யநிலை, முழுமுதல்தூய்மைநிலை, உண்டு என்பது அது

வெண்முரசின் நாவல்நிரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு படி. நான் ஒவ்வொன்றினூடாகவும் ஏறி ஏறி வந்துசேர்ந்திருக்கிறேன். பெரும் அலைக்கழிப்புகள் வழியாக, கசப்புகள் சோர்வுகள் வழியாக, கண்டடைதலின் பெருந்தருனங்கள் வழியாக. இது ஒரு ஊழ்கப்பயணம். இந்நாவல் அதன் நிறைவு.

இத்தருணத்தில் உணரும் சொல்லின்மையை கடந்துவந்தே இச்சில சொற்களைச் சொல்கிறேன். இது என் நிலத்தில் முடிவுற்றதில் ஓர் நிறைவுணர்வு எழுகிறது. எப்போதும் அவ்வண்ணமே நிகழ்கிறது எனக்கு. இனி இதிலிருந்து நான் மீண்டு வேறெங்கேனும் செல்லவேண்டும். விலகியபின்னரே இதை என்னால் பார்க்கமுடியும்.

இந்நாவலை என் பிரியத்துக்கும் மதிப்பிற்கும் உரிய ஸ்ரீனிவாசன்-  சுதா  இருவருக்கும் உரித்தாக்குகிறேன். இந்த நீண்ட அல்லல்மிக்க பயணத்தில் அவர்கள் என்னுடன் இருந்தனர். தங்களை முழுதளித்தனர். இதெல்லாம் ஒருபிறவியில் நிகழ்ந்து முடிவதல்ல

அனைவருக்கும் நன்றி, ஆசிரியர்களுக்கு வணக்கம்

ஜெ

வெண்முரசின் இணையாசிரியர்கள்

 

மதுரை- கடிதங்கள்

$
0
0

மதுரையில்…

அன்புள்ள ஜெ,

நான் மதுரை அறிந்திராதவன்.கட்டுரையை ஒரு பக்கம் வைப்போம்.முக கவசம் இல்லாத தங்கள் நிழற்படம் பாரத்தேன்.அதனால் தான் எழுதுகிறேன்.ஒரு எஸ்பிபி போனது போதும்.அருள்கூர்ந்து  கவசம் அணியுங்கள்.

அன்புடன்,

ஜெய்கணேஷ்.

 

அன்புள்ள ஜெய்கணேஷ்

உண்மைதான். முகக்கவசம் அணியவேண்டும். அது சட்டமும்கூட. ஆனால் எப்படியோ முகக்கவசத்தை கழற்றிவிடுகிறேன். மூச்சுவாங்குகிறது. முகக்கவசம் இல்லை என்பதை கழற்றி நீண்டநேரம் கழித்த பின்னரே உணர்கிறேன்

ஜெ

 

அன்புள்ள ஜெ,

மதுரை பயணம் குறித்தும்  அழகர் கோவில் சென்றது குறித்தும் நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன் .அதில் நீங்கள் எழுதியிருந்த ஒரு விஷயம் எனக்கு மிகுந்த உறுத்தலாக இருந்தது .மதியம் அஞ்சப்பரில் அசைவ உணவு உண்டு விட்டு மாலை அழகர் கோவிலிற்கு சென்றதாக எழுதியிருக்கிநீர் கள் . பொதுவாக நம் பக்கங்களில் அசைவ உணவை உண்டால் அன்றைய தினமும் அதற்கு அடுத்த தினமும் கோவிலிற்கு செல்லக் கூடாது என்பார்களே .(இப்போது அசைவ உணவு உண்ட நாள் மட்டுமாவது என்ற கணக்கு இருக்கிறது ) .

பொதுவாக நீங்கள் ஆகமம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அது முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் ; நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறவர் .இந்த கட்டுரையில் கூட அர்ச்சகர்களுக்கு காணிக்கை இட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தீர்கள் .அதனால் தான் இந்த விஷயம் என்னை துணுக்குற செய்து அமைதி இழக்க வைத்தது .ஒரு வேளை மறந்து விட்டீர்களோ ? இல்லை மறுபடியும் குளித்தால் போதும் என்று எண்ணிவிட்டீர்களா ?

பொதுவாக பயண திட்டங்களில் கோவில் தரிசனங்களும் உண்டு என்றால் சைவ உணவை உண்பது தான் சரியாக இருக்கும் .

நன்றி

அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

அன்புள்ள அனீஷ்கிருஷ்ணன்

நாங்கள் எங்கள் பயணங்களில் ஆலயங்களுக்குச் செல்வது வழிபாட்டுக்காக அல்ல, பண்பாட்டுப்பயணம்தான் அது. ஆயினும் அசைவ உணவை தவிர்ப்பதே வழக்கம். அதை ஒரு நிபந்தனையாகவே முன்வைப்பதுண்டு

அரிதாகச் சிலசமயம் திட்டமிடாதபடி ஒரு பயணம் அமையும். சட்டென்று தோன்றி கிளம்புவது. அப்படி தோன்றுவதும் கிளம்புவதும் எப்போதுமே ஒர் அரிய அனுபவம், அதை தவிர்க்கவேண்டியதில்லை என்பது என் எண்ணம். அப்போது நீராடிவிட்டுச் செல்வதுண்டு. அப்படிச் செல்லலாம் என்பதே வழக்கமாக உள்ளது. இவை ஆசாரங்களே ஒழிய ஆகமமுறையிலான நெறிகள் அல்ல என்பதே என் புரிதல். ஆசாரங்கள் எப்போதும் நடைமுறைக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் அசைவ உணவு உண்டபின் ஆலயம் செல்லாமலிருப்பதே நல்லது என்பதே என் எண்ணமும். பொதுவாக திரைப்படம் பார்ப்பது போன்ற கேளிக்கைகளுக்குப் பின்னரோ, வணிகச்சூது போன்ற தமோகுணம் மிக்கச் செயல்களுக்குப் பின்னரோ ஆலயம் செல்லக்கூடாது என்பதுதான் முறை.

ஜெ

அன்புள்ள ஜெ

மதுரையில் நீங்கள் வேட்டிகட்டி நடப்பது மதுரை ஃபைனான்சியர்களுக்கு உரிய நடை. சுற்றிலும் அடியார்[ட்]கள் வேறு

ஆனந்த்

 

அன்புள்ள ஆனந்த்

பலர் இப்படி கலாய்த்துவிட்டார்கள். நல்லவேளை நிஜமான மருரை பைனான்ஸ் ஆசாமிகள் உண்மை என நம்பி என்னை போட்டுத்தள்ளாமல் விட்டார்கள்

ஜெ

 

மனு- கடிதங்கள்

$
0
0

மனு இறுதியாக…

அன்பு நிறைந்த ஆசிரியருக்கு,

வணக்கம். இது உங்களுக்கு நான் எழுதும் முதல் மடல்.

நான் உங்கள் நீண்ட கால வாசகன். முதல் நிலையில் இருக்கும், வாழ்வியல் அனுபவங்களை நூல்கள் வாயிலாக வாசித்து மகிழும் வாசகன்.

என்றும் உங்கள் கட்டுரைகள் மிகத் தெளிவான வெளிச்சத்தை எனக்கு வழங்கியுள்ளன. மனு இன்று மற்றும் மனு இறுதியாக – ஆகிய இரண்டு கட்டுரைகளும் ஆகச் சிறந்த தெளிவை வழங்கியுள்ளன. என்னுடைய மனமுவந்த நன்றியை ஏற்க வேண்டுகிறேன்.

அன்புடன்

செ.சண்முகசுந்தரம்

 

அன்புள்ள சண்முகசுந்தரம்

நன்றி

இருதரப்பையும் சீர்நோக்கும் கட்டுரைகளுக்கு இங்கே வாசகர் சிலரே

உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது

ஜெ

 

அன்புள்ள ஜெ, அவர்களுக்கு வணக்கம்.

‘மனு இன்று’ பதிவு தொடங்கி, அதன் மீதான கடித உரையாடல்கள் வரை படித்தேன். தவறாக புரிந்துகொண்டவர்களுக்காக இறுதியாக நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கப்புறமும் இந்தக் கடிதம் எழுதப்படலாமா என்கிற ஐயப்பாட்டுடனேயே எழுதுகிறேன்.

தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, விசிக வன்னியரசுவைவிட நீங்கள் அவரின் ஆதரவாளர் என்பது உங்களை தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும் என்பதால், மனுவின் மீதான திருமாவளவனின் தீவிரமான கருத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் ஒன்றும் வியப்போ அதிர்ச்சியோ இல்லை.

என் கேள்வி, சொல்லப்படும் கருத்து எவ்வளவு நியாயமாக இருந்தாலும், சொல்பவரின் நோக்கம் வஞ்சகமாக இருந்தால், அதனை எப்படி எடுத்துக்கொள்வது என்பதுதான். மனுவை தடை செய்ய வேண்டும் என குன்றக்குடி அடிகளாரோ, பொள்ளாச்சி மகாலிங்கமோ, அ.ச.ஞானசம்மந்தமோ கூறியிருந்தால், அவர்களின் நோக்கம் -ந்து மதத்தை இன்னும் நவீனப்படுத்தி, காலத்திற்குகந்தவாறு கட்டமைத்தல் என்பதாகவே இருந்திருக்கும்.

ஆனால், இந்து கோயில்களின் சிற்பங்களில் ஆபாசத்தை மட்டுமே பார்த்தவர் – வலது பக்கம் கிறிஸ்துவ குருமார்களையும், இடது பக்கம் இஸ்லாமிய தீவிர செயற்பாட்டாளர்களையும் வைத்துக்கொண்டு, ‘சனாதன தர்மத்தை இந்த மண்ணிலிருந்து வேரோடு பூண்டறுப்போம்’ என்று முழங்கியவர் – காஞ்சி வரதராஜ பெருமாள் ஆலயத்தையும், திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்தையும் இடித்து விட்டு, புத்த விகாரங்கள் கட்டுவோம் என்றவர் – ஒப்புக்கூட இந்து பண்டிகைளுக்கு வாழ்த்துச் சொல்லாதவர் – சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்து சமயத்தை ‘மட்டுமே’ திட்டித்தீர்ப்பவர், மனு ஸ்மிரிதியை தடை செய்யவேண்டும் என்று சொன்னால், (அது நியாயமாகவே இருந்தாலும்) சொல்பவரின் நேர்மையை சந்தேகிக்கக் கூடாதா?

அல்லது எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும் அப்பொருளில், மெய்ப்பொருள் மட்டுமே காண வேண்டுமா?

அன்புடன், எம்.எஸ்.ராஜேந்திரன்.

திருவண்ணாமலை.

 

அன்புள்ள ராஜேந்திரன்,

சரி, அவர் இந்துமதத்தின் எதிரியாக நின்று சொல்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவ்வாறு எதிரியாக அவர் செல்வதற்குத் தேவையான அனைத்தையும் இங்குள்ளோர் சிலர் செய்கிறார்கள் என்பது உண்மை அல்லவா? அவர்களை முதலில் கண்டிக்காமல் அவருடைய எதிர்ப்பை குறைசொல்லும் உரிமை நமக்கு உண்டா?

எதிரியாக நின்று அவர் குற்றம்சாட்டினாலும்கூட அக்குற்றச்சாட்டுக்கு அறச்சார்புடன், நடுநிலையுடன் நின்று பதில்சொல்லவேண்டுமா அல்லது திரித்துச் சொல்லி வெறுப்பைக் கக்கவேண்டுமா?

ஜெ

 

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

மனு மீதான விவாதங்களை முகநூல் வழியாகவும் தளத்தின் வாயிலாகவும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். அதனூடாக எழும் கேள்விகளையும் பதில்களையும் கூட.

இன்று மழைப்பாடல் வாசித்துக் கொண்டிருந்தேன். பீஷ்மருடன் திருதராஷ்டிரன் மற்போர் புரியும் காட்சி. அதில் விதுரருக்கும் பாலஹாஸ்வருக்கும் நடுவே வரும் உரையாடலில்,

பலாஹாஸ்வர் சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “சூதரே, மண்ணிலுள்ள எல்லா நீதிகளும் மிருகங்களிடமிருந்தே வந்துள்ளன. வலிமை, குலவளர்ச்சி இரண்டை மட்டுமே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் மானுடநீதி என்பது அதிலிருந்து முன்னகர்ந்து உருவானதல்லவா? ஸ்மிருதிகளில் எது கடைசியானதோ அதுவே ஆதாரமாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுருதிகளின் நோக்கத்துக்கு மாறாகவோ இறைவனின் கருணைக்கு மாறாகவோ ஸ்மிருதிகள் அமையும் காலம் வருமென்றால் அவற்றை உடனடியாக எரித்துவிடவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.”

வெண்முரசு -ன் இந்த உரையாடலின் விளக்கவுரையாகக் கூட மனு குறித்த கட்டுரையை வாசிக்கலாம்.

நன்றி

பலராம கிருஷ்ணன்

அன்புள்ள பலராம கிருஷ்ணன்

வெண்முரசில் மனுநெறி- அதற்கு முந்தைய ஸ்மிருதிநெறிகளிலிருந்து அது உருவான முறை அனைத்தைப்பற்றிய விரிவான நோக்கு உள்ளது

மூலமகாபாரதத்தில் குந்திதேவி தன் கணவனாகிய பாண்டு நியோகமுறைப்படி குழந்தைபெறும்படிச் சொல்லும்போது மறுத்துப்பேசும் இடம் நெறிநூல்கள் மாறிவந்ததைச் சொல்லும் முக்கியமான பகுதி.

ஜெ

 

Viewing all 16759 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>