Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16901 articles
Browse latest View live

வாசல்பூதம்

$
0
0

 “அதுமேலே ஏறி நிக்கணுமா?”

லக்ஷ்மி மணிவண்ணனின் குறிப்பை சிரிப்புடன் வாசித்தேன். [கீழே] அவர் குறிப்பிடும் இந்தக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன் என நினைக்கிறேன். கூட்டம் முடிந்த்துமே எனக்கும் சிலபல கண்டனங்கள், அன்பான எச்சரிக்கைகள். ஏனென்றால் நான் போதுமான அளவு கண்டிக்கவில்லையாம். முகநூலில்கூட பலர் எழுதியிருந்தார் என்றார்கள்

 

கண்டிப்பதற்கு என ஒரு மொழி இருக்கிறது. சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதையில் எழுதியதுபோல ‘லின்லித்கோவுக்குச் சவால். தைரியமிருந்தால் இங்கே வா. இங்கே நாகர்கோயில் மணிமேடையில் நின்று எனக்கு பதில்சொல். மோரையிலே குத்திருவேன்!” பாணியில் கண்டனம் தெரிவித்தாலொழிய அது கண்டனமாக ஆவதில்லை.

 

‘சைடு எடுக்கிறது’ என்று இதற்குப்பொருள். முழுமூச்சாக ஒரு பக்கம் சாய்ந்துவிடுவது. ஒரு தரப்பின் தற்கொலைப்போராளியாகவே மேடைகளில் தோற்றமளிப்பது. ஆனால் நிரந்தரமாகவெல்லாம் அப்படித் தோன்றவேண்டும் என்பதில்லை. இங்கே இரண்டே தரப்புதான். இடது வலது. இரண்டில் ஒன்றை பொதுவாக தழுவி நின்றால்போதும். இடது என்றால் திராவிட அம்பேத்காரிய மார்க்ஸிய தமிழ்த்தேசிய இஸ்லாமிய அடிப்படைவாத்த்  தரப்பு என்று அர்த்தம். மாறுவேடமிட்ட கிறித்தவ மதவெறி உள்ளே. அதற்குள் எங்கே வேண்டுமென்றாலும் செல்லலாம். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் கலக்கிக்கொள்ளலாம்

 

வலதுசாரி என்றால் இந்துத்துவம் மையமாக. கூடவே பிராமண,தேவர்,நாடார் சாதிவாதம். பிடிவாதப் பழைமைவாதம் முதல் சீர்திருத்த இந்துத்துவம் வரை அதில் பல நிறமாலை வண்ணவேறுபாடுகள். இதற்குள்ளும் பலநிலைகள் எடுக்கலாம். ஒன்றாக இருந்து கொண்டு இன்னொன்றாகவும் தோற்றம் அளிக்கலாம்

 

நிலைபாடு எடுத்துவிட்டால் பலவகை இன்பங்கள். முடிவெடுக்கும் பொறுப்பு இல்லை- முடிவுகளை கூட்டாகவே எடுக்கிறார்கள். சொல்லப்போனால் முடிவு எடுக்கப்பட்ட பின்னரே செய்திகள் தெரிந்துகொள்ளப்படுகின்றன. அன்றாடம் எடுக்கும் எல்லா முடிவுகளும் முதலில் எடுத்துவிட்ட ஒற்றை முடிவின் சொல்வேறுபாடுகள்தானே? அந்த முடிவை பெரியவர்கள் முன்னரே எடுத்துவிட்டிருக்கிறார்கள். என்ன வசதி.

 

முடிவெடுக்கவேண்டியதில்லை என்பதனால் எதையும் சிந்திக்கவேண்டியதில்லை. ஆகவே எதையும் தெரிந்துகொள்ளவும் வேண்டியதில்லை. எடுத்தமுடிவை ஆக்ரோஷமாக வலியுறுத்தி பூசலிடுவதற்கு மட்டும் தெரிந்துகொண்டால் போதும். அந்த அளவுக்கு தெரிந்துகொண்டால் வசதி.

 

எதிர்த்தரப்பை அவர்களே முடிவுசெய்ய விடக்கூடாது. எதிர்த்தரப்பின் இயல்பென்ன, அவர்கள் சொல்வது என்ன, அவர்கள் செய்யப்போவது என்ன எல்லாவற்றையும் நாமே முடிவுசெய்துவிடவேண்டும். அதை எக்காரணத்தாலும் மாற்றிக்கொள்ளக்கூடாது. இப்போது எதிரிக்கு நாம் சொல்லவேண்டிய பதிலும் தெள்ளத்தெளிவாக, மாற்றமில்லாததாக ஆகிவிடுகிறது.

 

எதிரி என்பவர் யார்? நம்முடன் சேர்ந்து, நாம் சொல்வதை அப்படியே சொல்மாறாமல் சொல்ல முன்வராத எல்லாருமே நம் எதிரிகள்தானே? அந்த எதிரிகளை வசைபாடலாம். அவதூறுசெய்யலாம். இழிவுசெய்யலாம். கொள்கையின்பொருட்டு இதையெல்லாம் செய்யும்போது எல்லாமே நியாயமாகிவிடுகின்றன.

 

அவர்கள் தங்கள் தரப்பை விதவிதமாக விளக்க முற்படுவார்கள்தான். கலை என்றும் இலக்கியம் என்றும் தத்துவம் என்றும் மெய்யியல் என்றும் சொல்வார்கள். புரிந்துகொள்ளச்செய்ய முயல்வார்கள். அந்தச் சிக்கலில் எல்லாம் சிக்கிக்கொள்ளவே கூடாது. நம் எதிரி என்பவர் நம்மால் நம் கோணத்தில் வரையறுக்கப்பட்டு வசைபாடப்படுபவர். அவர் அப்படி அல்ல என்றால் விட்டுவிட முடியுமா என்ன?

 

எதிரிகளே அரசியலை தீர்மானிக்கிறார்கள். எதிரிகளை நாம் தீர்மானிக்கிறோம். ஆகவே நம் அரசியல் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இலக்கியத்தையும் அப்படி நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு அதிலிருந்து முதலில் இலக்கியத்தை வெளியே தள்ளவேண்டும். இலக்கியம் என்பது அழகியல். அதை நீக்கினால் எஞ்சுவது ஒரு வெற்றிடம். அங்கே நாம் அரசியலை வைக்கலாம். அதைத்தான் அழகியலுக்குப் பதில் அரசியல் என்கிறோம். எனக்குத் தெரிந்ததைத்தான் நான் பேசுவேன் என்பதன் இன்னொரு வடிவம்தான் இந்த வழிமுறை

 

ஆகவே அனைத்தும் அரசியலே. அரசியல் அல்லாத எதுவும் இந்தப்பூமிக்குமேல் இல்லை. அதுவே அரசியல்வாதியின் இலக்கிய அணுகுமுறை.

 

ஆனால் அரசியல் இல்லாத ஓர் இடம் உண்டு. நாம் வீட்டுக்குத்திரும்பி சட்டையை கழட்டி கொண்டியில் மாட்டிவிட்டு ஃபேனை போட்டு ஹாயாக சாய்ந்து “ஏட்டி ஒரு காப்பி எடு’ என ஆணையிட்டுவிட்டு நம் நிலைக்கு திரும்புகிறோமே அதன்பிறகுள்ள அனைத்துமே அரசியல் அற்றவை. அங்கே சாதிசனம், சாமிபூதம் எல்லாம் உண்டு. அதெப்படி, விட்டுவிட முடியுமா?

 

மறுபடி சட்டையை எடுத்துப்போட்டு பித்தான்களைப் போடும்போது மீண்டும் அரசியல். வாசலில் நின்றிருக்கும் பூதம் அது. கொண்டுவிட்டுவிட்டு கூட்டிச்செல்வது. ஆனால் மரியாதை தெரிந்தது. அது வீட்டுக்குள் நுழைவதில்லை. நாம் அழைப்பதுமில்லை

அரசியல்வாதிகளின் இலக்கியப்பார்வை

லக்ஷ்மி மணிவண்ணன்

 

தீர்மானமாக ஒரு திடகாத்திரமான கட்சி நிலைப்பாடு எடுப்பவர்களோடு அறிவுரீதியாகவும் ,சிந்தனைரீதியாகவும் ஒதுங்கியிருப்பதே நல்லது.அவர்கள் சிந்திக்கும் திறனை இழப்பவர்களாக மட்டும் இருப்பதில்லை.பிறருடைய சிந்திக்கும் திறனையும் மழுங்கடித்து விடுகிறார்கள்.

 

அரசியல் நிலைப்பாடு என்பது விரைந்து தாங்கள் சார்ந்த தரப்பிற்கான அதிகாரத்தை நோக்கம் கொண்டது.அதிகாரம் உரிமையை ஸ்தாபிக்கிற முயற்சி.எந்த தரப்பினரின் அரசியல் என்பதனை முன்னிட்டு ஒருவர் அதற்கு ஆதரவாகவோ ,எதிராகவோ ,பிரச்சனைகள் சார்ந்த தற்காலிக நிலைப்பாடுகளோ எடுக்க முடியும் .அது வேறு விஷயம்.இலக்கியம் வேறு விஷயம்.கலை வேறு விஷயம்.கலையிலக்கியத்திற்கு; அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் நோக்கங்கள் எதுவும் கிடையாது.பிஜேபி ,காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட்கள் இப்படி எந்த வகையான அரசியல் உடையவர்களாவும் இருக்கட்டும்,இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் ஒத்த ஒருமித்த கருத்துடையவர்களே. வாசகனுக்கு அப்படி ஒருமித்த கருத்து இல்லை என்பது மட்டுமல்ல,அவனுக்கு எந்த நிறமும் இல்லை.

 

அரசியல்வாதிகளின் இலக்கிய ஆர்வமும் ,இலக்கிய வாசகனின் இலக்கிய ஆர்வமும் ஒன்று அல்ல.முற்றிலும் வேறானவை.ஒரு அரசியல்வாதி இலக்கியம் இதனை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிற எதனையுமே இலக்கிய வாசகன் எதிர்பார்ப்பதில்லை.அவனுடைய கோணம் முற்றிலும் வேறானது.இலக்கிய வாசகன் வாசிப்பிலிருந்து ; “பெறமுடியாத ஒன்றை” அடைகிறான்.அப்படி அடைந்தால் மட்டுமே ,அந்த வாசிப்பில் அவன் நிறைவெய்துகிறான்.அரசியல்வாதி தன்னுடைய தரப்பிற்கு குறிப்பிட்ட இலக்கியம் என்ன செய்திருக்கிறது என்று யோசிக்கிறான்.

 

இலக்கியத்தை எப்படி தவறாக வாசிக்க முடியும் என்பதற்கு அரசியல்வாதிகளின் வாசிப்பு முறையையே ,நிராகரிக்கும் முறையையே சிறந்த உதாரணங்களாகக் கொள்ளலாம்.எல்லாவகையான அரசியல்வாதிகளும் இலக்கிய படைப்புகளின் மேலேறி நின்ற வண்ணம் அதை பற்றி பேசுகிறார்கள்.ஆனால் எப்போதும் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரையில் வாசகனே பிதா மகன்

 

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அனைத்து கட்சியினரும் எப்படி ,எதனை , எவ்வாறு எழுத வேண்டும் என்று கற்றுத் தர முயற்சித்திருக்கிறார்கள்.நானும் தப்பித்து தப்பித்து வந்திருக்கிறேன்.

 

ஒருமுறை பேருந்து நடத்துனர் ஒருவரிடம் சிக்கிக் கொண்டேன்.அவருக்கு பயணச்சீட்டு கொடுக்க தேவையற்ற அனைத்து நேரத்தையும் பயன்படுத்தி எனக்கு இலக்கியம் பயிற்றுவித்தார் . எப்படி எழுத வேண்டும் ? எதை எழுத வேண்டும் ? எவ்வாறு எழுத வேண்டும் என்பதே பாடம்.நான் ஒன்றுமே சொல்லிக் கொள்ளவில்லை.நான் முற்றிலும் மனநலச்சீர்கேடு அடைந்திருந்த காலத்தில் ரயிலிலிருந்து குதிக்க முயன்றிருக்கிறேன்.இந்த பேருந்துப் பயணத்தில் முன்னனுபவத்தை செயல்படுத்த விரும்பவில்லை.ஆனால் பேருந்திலிருந்து குதித்துத் தப்பிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் அவர் வழங்கிக் கொண்டே இருந்தார்.தனிப்பட்ட முறையில் கவலை நிறைந்த ஒரு காரியத்தை முன்னிட்டு செய்து கொண்டிருந்த பயணம் அது.எப்படியாக இருப்பினும் ஜன்னலோரம் கிடைத்தால் பயணம் உற்சாகமானதாக எனக்கு மாறிவிடும்.அனைத்து ரத்தத்தையும் ஒருவர் உறிஞ்சி எடுத்த பின்னர் ஒருவாரம் டைபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டு மீண்டால் இருக்குமே அப்படி இறங்குமிடத்தில் பேருந்திலிருந்து இறங்கினேன்.நடத்துனரின் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர்.அவரின் பாடங்களின்படி நடந்து கொண்டால் அவருடைய அண்ணனிடம் நடத்துனர் என்னை அறிமுகம் செய்து வைப்பார்.

 

ஒருமுறை ஒரு கண்டனக் கூட்டம்.கண்டனக் கூட்டங்களுக்கென்றே தமிழ்நாட்டின் எல்லா சிறுநகரங்களிலும் சிலபல புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.நாற்பது பேர் வரையில் உண்டு.அவர்கள் தினந்தோறும் கண்டனம் கண்டனம் என்கிற வார்த்தையை பல முறை உச்சரித்து உடலே கண்டனமாக மாறிப் போயிருப்பார்கள்.அவர்கள் வராவிட்டால் எந்த கண்டனக் கூட்டமும் வெற்றி பெறுவதில்லை.அவர்கள் வந்தால் மட்டும்தான் பத்திரிக்கையாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நடப்பது கண்டனக் கூட்டம்தான் என்பது ஊர்ஜிதம் ஆகும்.

 

அவர்கள் இல்லாமல் ஒருமுறை ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்திய போது பத்திரிகையாளர்கள் சிரித்து விட்டு போய்விட்டார்கள்.உளவுத் துறையினர் சமபந்தி போஜனத்திற்கா வந்தீர்கள் என்று கேட்டு விட்டார்கள்.ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை கண்டனக் கூட்டத்திற்கு வாழ்த்து நல்க அழைத்திருந்தோம்.அவர் வந்து பார்த்து விட்டு இது கண்டனக் கூட்டம் போல இல்லையென்றாலும் கூட நல்ல இலக்கிய அனுபவமாக இருந்தது என்று வாழ்த்திவிட்டுச் சென்றார் .

 

மேற்படி கண்டனக் கூட்டம் ஒரு பெருநகரத்தில் நடந்தது.எழுத்தாளர்களின் கருத்து உரிமை பாதிப்படையக் கூடாது என்பது பொருள்.நடத்திய தோழர்களும் எனக்கும் பகை.என்னைப் பார்த்தாலே அவர்களுக்கு கர்ப்பம் தரித்தவளுக்கு வருவது போன்று வாந்தியும் தலைக்கிறக்கமும் வரும்.

 

கோணங்கித்தான் “அந்த பையன் அப்படியில்லப்பா;அவன் நம்ம பையந்தா …”என்று அவர்களுக்கு ஏத்திவிட்டு என்னைக் களத்தில் இறக்கிவிட்டிருந்தார்.கோணங்கிக்கு பொதுவாகவே கண்டனத்தில் விருப்பில்லையானாலும் கூட ,அவருக்கு அதுவொரு ஜாலி போல.அவருடைய கதைகளின் தலைப்புகளை தோழர்கள் குறிப்பிட்டால் சந்தோசப்பட்டுக் கொள்வார்.அது மட்டுமல்ல.கண்டனக் கூட்டங்களில் பேசுவதற்கென்றே அவரிடம் ஒரு மொழி உள்ளது.கண்டனத்தில் ஆரம்பித்து தனுஷ்கோடி பேய்களிடம் உரையை முடிப்பார்.சிறுநடனமும் உண்டு.தோழர்கள் புல்லரித்துப் போவார்கள்.இவ்வளவு விந்தையா ! என கண்கலங்குவார்கள்.எனக்கோ கொஞ்சம் தெளிவான மொழி.அன்று நிறைய கொதித்தவர்களுக்கு மத்தியில் நானும் பேசினேன்.

 

எல்லோருமே இங்கே எழுத்தாளன் தங்களுக்கு எதிராக எழுதிவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்,உண்மையில் அவர்கள் வேறு யாருக்கோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.அது நமக்கு தொடர்பற்ற விஷயம்.தொடர்பற்றப்பண்டம்.எல்லோரும் ஒதுங்கியிருந்தாலே அவர்கள் ;அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.என்று பேசினேன்.

 

கோணங்கி சொன்னது போல இவன் நம்ம பையன் இல்லபோலிருக்கே ! என்று சில இளம் தொண்டர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். மகாவிசுவாசி ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பெழுதி “ஒன்றில் இந்தப்பக்கமாகப் பேசுங்கள் இல்லை அந்த பக்கமாக பேசுங்கள்.இந்த அரை வேக்காட்டுத்தனம் வேண்டாம் ; உங்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கிறோம் கெடுத்துக் கொள்ளாதீர்கள் வேண்டாம்” என்று எச்சரிக்கையுடன் அனுப்பியிருந்தார்.நமக்குத்தான் இந்த எச்சரிக்கைகளைக் கண்டாலே அதிகம் பிடித்துப் போகுமே ! எழுத்தாளன் எப்படி எல்லாப்பக்கமாகவும் பேசக் கூடியவன் என்பதை சில கதைகளை முன்வைத்து பேசியமர்ந்தேன்.

 

பிராமணனைக் கூட பகைத்துக் கொள்ளலாம்.அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் அவ்வளவுதான் விஷயம்.யார்தான் இங்கே அங்கீகரிக்கிறார்கள் ? எனவே அவர்களை புறக்கணித்தும் விடலாம்.தோழர்களை பகைப்பது தெருவிற்குத் தெரு குடிநீர் குழாய்களை உடைப்பது போன்றது.குடிநீருக்கு வேட்டு வைத்து விடுவார்கள். பக்கத்துக்கு பக்கம் நின்று வழிமறிப்பார்கள்.தணிக்கையில் அவர்களுக்கு ஏழாம் அறிவும் உண்டு.உளவுத் துறையினர் வீட்டிற்கு அருகில் வந்து பெட்டிக்கடையில் இவன் ஆளு தீவிரவாதியாக்கும் என்று சொல்லிச் செல்வதை போன்றே ; இவர்கள் இவன் ஒரு சல்லிப்பயல் என்று சொல்லிச் செல்வார்கள்.எழுத்தில் ஆர்வம் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்களை உடனே அங்கீகரித்து குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாக்க முயல்வார்கள் .

 

இதில் பத்திரிகைகள்,ஊடகங்கள் என்று பலவற்றிலும் தமிழ்நாட்டில் பிராமணர்களும் ,திமுக ,கம்யூனிஸ்ட் கோணல்களுமே நிறைந்து இருக்கிறார்கள்.உங்களுக்கு போக்கிடம் இல்லாமல் செய்து விடுவார்கள்.இவர்களை பகைத்துக் கொள்வது என்பது தனது ஜாதகத்தை எடுத்து வைத்து தனக்கே செய்வினை செய்து கொள்வதற்கு நிகரானது.தேசிய அளவிலும் இதே கோணல்களே சாகித்யங்களில் நிறைந்திருக்கிறார்கள்.கொன்று புதைத்து விடுவார்கள். சர்வ அதிகாரம் கொண்ட அதிகாரிகள் கூட பயம் கொள்ளும் அளவிற்கு இவர்களுக்கு அத்தனை கோணல்களும் அத்துப்படி.

 

கூட்டம் முடிந்ததும் தோழர் ஒருவர் அருகில் என்னை அழைத்தார்.வளர்ந்த உயரம் கொண்டவர் அவர்.கட்சிப் பத்திரிக்கையில் பலகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.நான் அவருக்கு இடுப்பளவிற்கே இருப்பேன்.அவர் ஜிப்பாவுக்குள் புகுந்து கொண்டேன் என வைத்துக் கொள்ளுங்கள் யாருமே என்னை கண்டுபிடிக்க முடியாது.தோழர் நீங்கள் மிகச் சிறப்பாக பேசினீர்கள் என்று கூறினார்.உங்கள் எழுத்துக்களையும் ஆங்காங்கே படித்திருக்கிறேன்.”நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்,ஆனால் நீங்கள் கார்க்கி படிக்க வேண்டும்

 

.”அப்படி எழுத வேண்டும் .எனக்கு பேருந்து நடத்துனரின் ஞாபகம் வந்தது

 

“ஆசிர்வாதம் ஐயா”

“ஐயா அல்ல தோழர் என்று சொல்ல வேண்டும்”.

“உத்தரவு வாங்கிக்கறேன் தோழர்…

 

அவருக்கு காது கேளாமை நோய் உண்டு. ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் கட்சியில் சேர்ந்து ஓராண்டில் ஏற்பட்ட நோய் அது.அந்த நோய் தான் அவருக்கு பெரிய பெரிய பதவிகளை அளித்தது.அதனால் நான் முதலில் அவருடைய கூற்றுக்களைப் பொருட்படுத்தவில்லை,ஆனால் முடிந்து ஊருக்குத் திரும்புகையில் துண்டுச் சீட்டில் வந்த எச்சரிக்கைக்கும் ,தோழரின் பாராட்டிற்கும் ஒரே அர்த்தம் தான் என்பது விளங்கியதும் மனம் பதற்றமடையத் தொடங்கியது.எல்லாவற்றையும் எவ்வளவு தாமதமாக புரிந்து கொள்கிறோம் என்று மண்டையில் அடித்துக் கொண்டேன்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழா அறிவிப்பு

$
0
0

Vishnupuram Ilakkiya Vattam

 

2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நிகழ்கிறது. ராஜஸ்தானி அரங்கு கிடைப்பதில் இருந்த சிக்கலால் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நடத்துகிறோம். நண்பர்கள் விடுப்பு, முன்பதிவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என கோருகிறேன். வெள்ளி அன்றே காலையில் அனைவரும் வந்துவிடவேண்டும். இது ஒரு குடும்ப விழா. ஆகவே தனிப்பட்ட அழைப்பு.

 

இவ்வாண்டு கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ஆகியோரின் படைப்புக்களைப்பற்றிய விவாதங்கள் நிகழும்.அவர்கள் விருந்தினராகக் கலந்துகொள்கிறார்கள். கவிஞர் அபி குறித்த நூல் வெளியிடப்படுகிறது. அவரைப்பற்றிய ஆவணப்படத்தை கே.பி.வினோத் எடுக்கிறார். அதை ராஜா சந்திரசேகர் தயாரிக்கிறார்

 

நண்பர்கள் வழக்கம்போல நன்கொடை வழங்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன .இது இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch: ICICI Bank, Ramnagar Branch, Coimbatore
Account Name: VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI
Current Account No: 615205041358
IFSC Code: ICIC0006152

 

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நிதியை அளிக்கலாம். எங்கள் அறக்கட்டளை வெளிநாட்டு நிதியை வாங்க இயலாதென்பதனால் இந்த ஏற்பாடு

 

Account Holder First Name : Sultan
Account Holder Last Name : Shahul Hameed
Account Holder Mob No +91-8122502841
Account no NRE: 67005304451
Bank Name: State Bank of India
Branch Name: PSB Branch Nagercoil.(Personal Banking Branch)
Bank Address: 19 D North Car Street,
Near Head Post Office,
Nagercoil, India,
Pincode :-629001
IFSC Code: SBIN0070686
SWIFT CODE : SBININBB456
MICR CODE : 629002091

*** [CORRECTED]

நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31

$
0
0

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 12

யுயுத்ஸு அஸ்தினபுரியிலிருந்து திரும்பி வந்தபோது முக்தவனம் முற்றிலும் மாறிவிட்டிருப்பதை உணர்ந்தான். அவ்வுணர்வை கங்கையில் படகில் வந்துகொண்டிருந்தபோதே அறிய முடிந்தது. படகுமுனை நீண்டு துறைமேடையை நோக்கி சென்றபோது அங்கிருந்த உடல்களில் விரைவு கூடியிருப்பதை முதலில் விழிகள் அறிந்தன. எழுந்த ஓசைகளில் ஊக்கம் இருந்தது. படகு அணைந்தபோது துறைமேடை நோக்கி வந்த ஏவலர்களின் நடையில் நிமிர்வும் துள்ளலும் இருந்தது. அங்கிருந்து கைவீசி படகில் இருந்த குகர்களை நோக்கி உரக்க குரல்கொடுத்தனர். படகுகளிலிருந்த குகர்களுக்கு அக்குரல்களிலிருந்தே ஊக்கம் கிடைக்கப்பெற்றது. அவர்களும் உரக்க மறுகுரல் கொடுத்தனர்.

யுயுத்ஸு அமரமேடையில் நின்றபடி முகங்களை திகைப்புடன் மாறி மாறி பார்த்தான். அனைத்து முகங்களும் ஒளி கொண்டிருந்தன. பற்கள் மின்னி மின்னி தெரிந்தன. வடம் எழுந்து சுழன்று படகுமேடையில் சென்று விழுந்தது. அங்கு நின்றவர் அதை இழுத்து சுற்றிக் கட்டியபடி ஏதோ சொல்ல உடன் நின்றவர்கள் உரக்க நகைத்தனர். அது காமக் குறிப்புள்ள வேடிக்கை என்று அவன் உணர்ந்தான். அப்புன்னகை மாறாமலே அவனருகே வந்த குகன் “இளவரசே, பாதை ஒருங்கிவிட்டது” என்றான். அவன் பலகையில் ஏறி துறைமேடையை அடைந்து உடலிலிருந்த அசைவை நிகர்நிலைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு ஒருகணம் கண்மூடி நின்றான்.

கண்களை மூடியபோது அங்கிருந்த ஓசை தெளிவுற சூழ்ந்துகொண்டது. அங்கிருந்த அனைத்துச் சொற்களிலும் நகைப்பு கலந்திருந்தது. ஓசைகளிலும்கூட அந்நகைப்பே திகழ்வதை அவன் உணர்ந்தான். மானுட உள்ளங்களின் நகைப்பையும் அழுகையையும் அவர்கள் புழங்கும் பொருட்களும் கொள்கின்றன போலும். அவன் அந்நாள்வரை கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பொருட்களும் முனகின, விம்மின, அழுதன. ஆகவே அந்நகைப்பை அவன் செவி தனித்தே கேட்டது. என்ன நிகழ்ந்ததென்று வியந்தபடி அவன் சூழ நோக்கினான். அவனை அறியாமலேயே அவன் முகமும் மாறிவிட்டிருந்தது. உதடுகள் இழுபட்டு புன்னகை சூடியிருப்பதை அவனே உணர்ந்தான்.

அவனை நோக்கி வந்த துறைமேடைக்காவலன் புன்னகையுடன் “தங்களுக்கான தேர் ஒருங்கியிருக்கிறது, இளவரசே” என்றான். “ஆம்” என்றபடி அவன் தன் தேரை நோக்கி சென்றான். தேரிலிருந்து இறங்கிய பாகன் படிக்கட்டை நீட்டிவைத்து தலைவணங்கினான். அவன் முகத்திலும் புன்னகை இருந்தது. தேரில் ஏறி பீடத்தில் அமர்ந்து திரையை தாழ்த்தியபின் நுகமேடைமேல் ஏறி அமர்ந்த பாகனிடம் “என்ன நிகழ்கிறது இங்கே?” என்றான். “இளவரசே?” என்றான் அவன். “அனைவரும் ஊக்கம் கொண்டிருக்கிறார்கள். முகங்களில் சிரிப்பு திகழ்கிறது. என்ன நிகழ்கிறது இங்கே?” என்றான்.

“அறியேன். நாளை காலை நீர்க்கடனுக்கு நாள் குறித்திருக்கிறார்கள். அனைத்தும் ஒருங்கிக்கொண்டிருக்கின்றன. பணிகளை முடுக்கிவிட்டிருப்பதனால் அனைவரும் விசையுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அதுவல்ல. இங்கே ஓர் உவகை திகழ்கிறது. அனைவரும் இங்கிருந்த துயரில் இருந்து விடுபட்டவர்கள்போல் தெரிகிறார்கள்” என்றான் யுயுத்ஸு. பாகன் ஒருகணத்திற்குப் பின் “அரசர்களின் உணர்வையே பிறரும் அடைகிறார்கள், இளவரசே” என்றான். “அரசர் விடுபட்டுவிட்டாரா?” என்று யுயுத்ஸு கேட்டான்.

“ஆம், நேற்று மாலையிலிருந்தே இங்கு அனைத்தும் மாறிவிட்டன. அரசர் புன்னகையுடன் உலவுவதை நான் கண்டேன். இளையோரிடம் அவர் பேசும்போது சிரித்துக்கொண்டிருந்தார். இளையோரின் முகங்களும் மாறிவிட்டிருந்தன…” என்று பாகன் சொன்னான். ஒருகணத்துக்குப் பின் யுயுத்ஸு “பீமசேனன் எப்படி இருக்கிறார்?” என்றான். “ஆம், அவரும் மாறிவிட்டிருக்கிறார். அவரிடமும் புன்னகையை கண்டேன்” என்றான் பாகன். யுயுத்ஸு “பார்த்தன் மாறிவிட்டாரா?” என்று மீண்டும் கேட்டான். “அவர் நகைக்கவில்லை. ஆயினும் அவர் உள்ளம் மாறிவிட்டிருப்பதை முகத்தில் பார்க்கமுடிகிறது” என்று பாகன் சொன்னான்.

ஏன் என்ற கேள்வி யுயுத்ஸுவின் நா வரைக்கும் வந்தது. ஆயினும் அவன் கேட்கவில்லை. ஆனால் அவன் உள்ளம் அக்கேள்வியிலேயே சென்று முட்டிக்கொண்டிருந்தது. திரையை சற்றே விலக்கி குடில்நிரைகளின் முகப்பில் தெரிந்த ஒவ்வொரு முகத்தையாக அவன் பார்த்துக்கொண்டு வந்தான். அனைவருமே உளம் மலர்ந்திருந்தனர். விழிகளில் சிரிப்பும் நாவில் கூரொலிகளும் கைகளில் சுழற்சியும் கால்களில் விசையும் தெரிந்தன. இவர்கள் இதற்குத்தான் காத்திருந்தார்களா? துயர் அவர்களை அழுத்தி மேலும் அழுத்தி மேலும் மேலுமென எடைகொண்டு மண்ணோடு புதைத்த கணத்தில் உள்ளிருந்து திமிறிக்கொண்டிருந்தார்களா? இவர்களுக்குத் தேவையாக இருந்தது ஒரு தொடக்கம் மட்டும்தானா?

இங்கிருக்கும் மக்களில் எவரோ ஒருவர் புன்னகைத்தால் ஓர் ஒப்புதல் கிடைத்ததுபோல அனைவருமே புன்னகைக்க தொடங்கிவிட்டிருக்கிறார்கள் போலும். அவர்கள் எதிர்பார்த்திருந்த புன்னகை அரசருடையது. அத்தனை பேரும் அவர் முகத்தையே நோக்கிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அவரும் காத்துக்கொண்டிருந்தார். உரிய முறையில் புன்னகைக்கும் ஒரு தருணத்துக்காக. ஒப்புதலுக்காக. எவருடைய ஒப்புதல்? தெய்வங்களுடைய ஒப்புதலா? மூதாதையர் ஒப்புதலா? அகச்சான்றின் ஒப்புதலா? அல்லது பிறர் ஒட்டுமொத்தமாக அளிக்கும் ஏற்பா?

ஒரு கணத்தில் அவனுக்கு அனைத்தும் புரிந்தது. ஆம், மூதாதையரின் ஒப்புதல். தந்தை வடிவாக, அன்னை வடிவாக இங்கு வந்த அரசரின், அரசியின் ஒப்புதல். “நேற்று என்ன நிகழ்ந்தது?” என்று அவன் கேட்டான். பாகன் “நேற்று அவர்கள் பேரரசரையும் பேரரசியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அரசர்களை உளமுவந்து வாழ்த்தினார்கள், மடியில் வைத்து கொஞ்சினார்கள் என்று சொல்லப்பட்டது” என்றான். ஆம், அவர் இவர்களை வாழ்த்துவார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த முறைமை வாழ்த்து அல்ல, அதற்கு மேல் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

“அதன் பின்னரா இவ்வாறு?” என்று அவன் கேட்டான். பாகன் “அங்கிருந்து திரும்பி வருகையில் அவர்கள் துயின்றுகொண்டிருந்தார்கள். அனைவருமே துயின்றுகொண்டிருந்தார்கள். துயின்றெழுகையில் முற்றிலும் புதியவர்களாக பிறந்தெழுந்தார்கள்” என்றான். “அரசர் தனக்கு இனிய உணவு கொண்டுவரும்படி சொன்னார். இங்கு நோன்பு இருப்பதால் இனிய உணவு உண்ணலாகாதென்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. இனிப்பை உண்ண விரும்புவதாக அவர் மீண்டும் கூறினார். என்ன செய்யலாமென்று இங்கு அடுமனையாளர்கள் சொல் சூழ்ந்தனர். இனிப்பு உண்ணலாகாது, ஆனால் மூலிகைகளை உண்ணலாம். கடுகளவு அதிமதுரம் அவருக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.”

“மருத்துவர் சாவகர் அதிமதுரச்சாற்றை அவருக்கு கொண்டுசென்று கொடுத்தார். அதை நகமளவுக்கு எடுத்து அவர் நாவில் தடவினர். அவரது நா இனிக்கத் தொடங்கியது. முதற்துளியின் குமட்டும் கசப்புக்குப் பின் அதிமதுரம் குடலில் இறங்கி உடல் முழுக்க இனிப்பை நிரப்பும். என்ன இது என் வாயில் இனிப்பு ஊறிக்கொண்டே இருக்கிறது என்று அவர் சொன்னார். நான் உடனிருந்தேன். விழுங்கும் தோறும் இனிப்பு ஊறுகிறது, என் குருதி இனிப்பாக மாறிவிட்டதா என்ன என்றார். அதிமதுரம் அவ்வாறுதான் அரசே என்று சகதேவன் சொன்னார்.”

“அரசர் எஞ்சிய அதிமதுரத்தை சகதேவனின் நாவில் தடவினார். நகுலன் தனக்கு அது வேண்டாமென்று கைகாட்டி பின் நகர்ந்தபோது சகதேவன் அந்தச் சிமிழை எடுத்துக்கொண்டு நகுலனை துரத்திப்பிடித்து சுவரோடு ஒட்டிப் பற்றி நிறுத்தி அவர் நாவிலும் தடவினார். மூவரும் சிரித்தனர்” என்றான் பாகன். “தாங்கள் அறிவீர்கள், அதிமதுரத்தின் இனிப்பு அவ்வளவு எளிதாக நாவை விட்டு அகல்வதில்லை.” யுயுத்ஸு “ஆம், ஏழு நாழிகைப்பொழுது நீடிக்கும் என்பார்கள்” என்றான். “கசப்பு உண்டாலும் அதைக் கடந்து அது இனிக்கும். அதை கழுவி அகற்ற இயலாது. வாயில் அவ்வினிப்பு நிலைகொண்டுவிட்டால் பின்னர் சித்தம் இனிக்கத் தொடங்கிவிடும். வாயிலிருந்து அகன்ற பின்னரும் சித்தத்தில் இனிப்பு எஞ்சியிருக்கும்” என்றான் பாகன்.

“அதன்பின் இங்கு அனைவருமே அதிமதுரம் உண்டனர்” என்று பாகன் தொடர்ந்து கூறினான். “இங்கு அதிமதுரம் சுழன்றுவந்தது. அனைவரையும் தொட்டுத்தொட்டு வாழ்த்தும் தெய்வம்போல. இளைய அந்தணரும் அதிமதுரம் உண்டனர். அவர்கள் அதிமதுரம் உண்ட செய்தியைக் கூறியபோது படகோட்டிகளும் உண்டனர். ஒருவருக்கொருவர் அதிமதுரத்தை நாவில் தடவிக்கொண்டார்கள். சற்று நேரத்தில் இந்தக் காட்டில் ஏவலர் அனைவருமே வாயூற விழுங்கிக்கொண்டும் துப்பிக்கொண்டும் இருந்தனர். சிலர் இனிப்பு தாளாமல் குமட்டினர். குடங்குடமாக நீரை அருந்தினர். கசக்கும் காடியை அருந்திய பின்னரும் இனிக்கிறதென்று ஒருவர் கூறினார்.”

“நோன்பு கொள்ளும் முதிய அந்தணர்களுக்கும் அதிமதுரம் விலக்கல்ல என்பதனால் அவர்களும் அதை உண்டனர். பிறர் கொள்ளும் தவிப்பும் துள்ளலும் கூச்சலும் கொப்பளிப்பும் எவரையும் அதை தவிர்க்க விடவில்லை. நேற்று அந்தி முழுக்க அதிமதுரமே இங்கு கொண்டாட்டமாக இருந்தது. இரவிலும் நெடும்பொழுது இருளுக்குள் நகைப்பொலிகளும் கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. இன்று காலையில் எழுந்தபோது அதிமதுரம் நாவிலிருந்து மறைந்துவிட்டிருந்தது. ஆனால் அந்த உவகை மட்டும் முகங்களில் எஞ்சியிருக்கிறது” என்றான் பாகன்.

யுயுத்ஸு பெருமூச்சுவிட்டு “இதை நான் எவ்வாறோ எதிர்பார்த்திருந்தேன்” என்றான். பின்னர் “விதுரர் வந்துவிட்டாரா?” என்றான். “இன்று சற்று பொழுது கழித்தே அவர் வருகிறார். அவரது படகு விசை கொண்டதல்ல. எதிர்க்காற்றில் இறங்க வேண்டியிருக்கிறது இங்கு” என்று பாகன் சொன்னான். பின்னர் “அங்கிருந்து மூன்றுமுறை கனகரைப்பற்றிய உசாவல் வந்தது. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றோம். இங்கிருந்து திருவிடத்து மாலுமி ஒருவருடன் அவர் படகில் சென்றதாக சொல்கிறார்கள். அவரை துரத்திச் செல்லவேண்டாம் என்று அரசரின் ஆணை” என்றான்.

 

யுயுத்ஸு தொலைவில் யுதிஷ்டிரனின் குடிலை கண்டான். குடிலுக்கு முன் இரு இளம்புரவிகள் நின்றிருந்தன. நகுலன் அவற்றுக்கு சேணமிட்டு பழக்கிக்கொண்டிருந்தான். அவை சேணத்தை உதறி அவ்விசையில் ஓடி சுழன்று நின்றன. சேணத்தை உதறும் பொருட்டு துள்ளி தங்களைத் தாங்களே சுழற்றிக்கொண்டன. ஒன்று ஓடிச்சென்று நிலத்தில் படுத்து முதுகை தரையில் பரப்பி கால்களை உதைத்தபடி புரண்டு எழுந்து தும்மியது. நகுலன் உரக்க நகைக்க அப்பால் இடையில் கைவைத்து நின்றிருந்த யுதிஷ்டிரனும் நகைத்துக்கொண்டிருந்தார்.

புரவி நகுலனை அணுகி அவனை முட்டி பின்னால் தள்ளியது. தடுமாறி பின்னால் விழச்சென்று நிலைகொண்டு அவன் அதை கடிவாளத்தைப் பற்றி கழுத்தைத் தடவி ஆறுதல்படுத்தினான். பின்னர் சேணத்தை அவிழ்த்து அப்பாலிட்டான். ஐயத்துடன் சேணத்தைப் பார்த்த பின் அருகே சென்று முகர்ந்து பார்த்து அது கனைத்தது. அருகே நின்று இன்னொரு புரவியும் கனைத்தது. இரு புரவிகளும் சேணத்திலிருந்து விலகி ஓட விழைபவைபோல வால் சுழற்றி கால்களை அறைந்து பாய்ந்து காட்டை நோக்கி ஓடின.

யுயுத்ஸுவின் தேர் சென்று நின்றதும் அவன் இறங்கி அவர்களை நோக்கி நடக்க நகுலன் “வருக, அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது?” என்றான். தலைவணங்கி “அங்கு அனைத்தும் முறையாகவே சென்றுகொண்டிருக்கிறது” என்ற பின் யுதிஷ்டிரனின் அருகணைந்து அவன் தலைவணங்கினான். யுதிஷ்டிரன் “அஸ்தினபுரியின் அரசுப் பொறுப்பை சுரேசர் சிறப்புற நிகழ்த்துகிறார் என்றே நினைக்கிறேன்” என்றார். “ஆம், தருணங்களுக்கேற்ப உயர்பவர் அவர். ஆட்சியில் மகிழ்பவரும்கூட” என்று யுயுத்ஸு சொன்னான். “அத்துடன் சம்வகை என்னும் மச்சர்குலத்துப் பெண்ணும் உடனிருக்கிறாள். அரசிக்குரிய ஆற்றல் கொண்டவள்” என்றான்.

“என்றும் அவர் உனக்கு துணையாக இருக்கக்கூடும்” என்றபின் யுதிஷ்டிரன் திரும்பி புரவிகளை பார்த்தார். காட்டுக்குள் புதர்கள் உலைய அவை ஓடும் ஓசைகள் கேட்டன. புதர்களின் சலசலப்பு காற்றின் அசைவென தெரிந்தது. “அஞ்சிவிட்டன” என்று அவர் நகுலனைப் பார்த்து சொன்னார். “இனி இச்சேணத்தை நோக்கி அவை வாரா. இவ்வாறு ஒன்று நிகழுமென்று அவை எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.” யுதிஷ்டிரனைப் பார்த்து யுயுத்ஸு “ஆம், புரவிகள் சேணத்தை விரும்புவதில்லை” என்றான்.

நகுலன் “அவ்வாறல்ல. அரிதினும் அரிதாக சில புரவிகளே அறுதி வரை சேணத்தை எதிர்க்கின்றன. இப்போது அவை சேணத்தை அறிந்துவிட்டன. தங்கள் உடலுக்கு அவை உகக்கவில்லை என்று உணர்கின்றன. மீண்டும் மீண்டும் அவற்றுக்கு சேணம் அணிவிக்கவேண்டும். சேணம் இல்லாதபோது ஒரு குறையிருப்பதை அவை உணரவேண்டும். அதன் பின் சேணத்தை ஓர் அணியாக, தங்களுக்கு மதிப்பை உருவாக்கும் அடையாளமாக அவை எண்ணிக்கொள்ளும். சேணத்தால் பிற புரவிகளிலிருந்து தாங்கள் மேம்படுகிறோம் என்று அவை கருதும்போது படைப்புரவிகளாகிவிடுகின்றன” என்றான்.

சிரித்தபடி “புரவிகளும் மானுடரைப்போலத்தான். சேணத்தை ஆற்றல் எனக் கொண்டபின் சேணமில்லாத புரவிகளை பின்னர் அவை அணுகவிடா” என்றான் நகுலன். காட்டை கூர்ந்து நோக்கினான். புரவிகள் எல்லைக்கு வந்து மூக்கு விடைத்து அவர்களை நோக்கியபின் மீண்டும் காட்டுக்குள் துள்ளி வால்சுழற்றிப் பாய்ந்து மறைந்தன. “அந்தப் புரவிகள் திரும்பி இங்கே வரும். காட்டுக்குள் துள்ளி ஓடி ஓய்ந்த பின்னர் அவற்றுக்கு இச்சேணத்தின் நினைவு வரும். இது என்ன என்பதை அறிய விரும்பும். அந்த ஆவல்தான் தூண்டில் முள். அதிலிருந்து விலங்குகள் எளிதில் தப்ப இயலாது” என்றான்.

யுயுத்ஸுவின் தோளில் கைவைத்து யுதிஷ்டிரன் சொன்னார் “உன்னிடம் நான் கேட்க வேண்டுமென்று எண்ணினேன், இளையோனே. முதியவர் எங்ஙனம் இருக்கிறார்?” அவர் எவரை கேட்கிறார் என்று புரியாமல் யுயுத்ஸு வெறுமனே பார்த்தான். “நான் கணிகரை சொன்னேன்” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு அக்கணம் ஒரு திகைப்பை அடைந்தான். கணிகரை அவன் முற்றிலும் மறந்துவிட்டிருந்தான். அங்கிருந்த அனைவருமே அவரை முழுமையாக மறந்துவிட்டிருந்தார்கள். ஒருமுறை கூட ஏதேனும் பேச்சில் அவர் பெயர் எழுந்ததில்லை.

அவன் அவரை எண்ணிப்பார்த்தது எப்போது என்று பின்னால் திரும்பி நோக்கினான். நெடுங்காலத்துக்கு முன்பு. குருக்ஷேத்ரத்தின் போர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு. அவன் அவரைப்பற்றி அதன்பின் எதையும் உசாவவில்லை. “மூத்தவரே, உண்மையில் அவரை மறந்தேவிட்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அவரை எப்படி மறந்தோம்? எவர் நினைவிலும் எழாமல் எப்படி அவர் அகன்றார்?” என்றான் நகுலன். “என்ன ஆனார் அவர்? மருத்துவநிலையில் இருந்தார் என்று அறிந்தேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

“அங்கிருந்து அவர் கிளம்பிச்சென்றதாக ஒற்றர்கள் சொன்னார்கள்” என்றான் யுயுத்ஸு. “அஸ்தினபுரியிலிருந்து அவர் சென்றதை எவருமே பார்க்கவில்லை. படைப்புறப்பாடு தொடங்கியபோதே அவர் நோயுற்று ஒடுங்கத் தொடங்கிவிட்டிருந்தார். அசைவிலாது தன் அறையிலேயே கிடந்தார். காற்று பட்டாலும்கூட வலி தாங்காது முனகினார் என்றார்கள். கதவை திறந்தால் அவ்வொளி அவர்மேல் படும்போது கைகளை நீட்டி கூச்சலிட்டு அழுதார். ஆகவே இருளிலேயே அவரை வைத்திருந்தார்கள். ஆதுரசாலைக்கு கொண்டுசென்று அங்கும் இருளிலேயே வைத்திருந்தார்கள். ஒருநாள் ஆதுரசாலையின் அறைக்கதவை திறந்தபோது அவர் அங்கில்லை.”

“தன்னந்தனியாக அவர் கிளம்பிச் சென்றிருக்க முடியாது. எவரோ அவரை கொண்டுபோயிருக்கலாம் என்றார்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆனால் அதைப்பற்றி எவரும் அங்கு கவலை கொள்ளவில்லை. பேரரசியின் நோக்கில் கணிகர் வெறுமனே எண்ணுவதற்கும் தகுதி கொண்டவர் அல்ல. அரசியருக்கும் உகந்தவரல்ல. அரசி பானுமதியும் அவரை வெறுத்தார். அவரை விரும்பிய ஒருவர் சகுனி மட்டுமே. அவரும் படைக்களம் சென்றுவிட்ட பின்னர் அஸ்தினபுரியில் அவருக்கு இடமிருக்கவில்லை. ஆகவே அவர் எங்கு சென்றார் என்று எவரும் எண்ணவில்லை.”

“எவரோ அவரை கொண்டுசென்றிருக்கக்கூடும். அல்லது ஒருவேளை கொன்றுவிட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதை மேலே சென்று உசாவி அறிய நானும் எண்ணவில்லை. உண்மையில் உசாவி அறியவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. நானும் விட்டுவிட்டிருக்ககூடாது” என யுயுத்ஸு தொடர்ந்தான். “துளி நஞ்சு எங்கேனும் எஞ்சக்கூடும். நஞ்சும் பகையும் எஞ்சலாகாது.” யுதிஷ்டிரன் “அவர் எஞ்சுவார். அவர் மறையும் ஒரு கணம் வரும். அதுவரை இருப்பார். அவ்வாறு அவர் அழிந்திருக்க வாய்ப்பே இல்லை” என்றார்.

“ஒற்றர்களை அனுப்புகிறேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “தேவையில்லை. அவர் மறைந்துவிட்டாரென்றால் அவ்வளவு எளிதாக அவரை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவர் தன் பணியை ஆற்றத்தொடங்கினால் எவராலும் அவரை மறைக்கமுடியாது” என்றார். யுயுத்ஸு “அவர் பேரரசர் திருதராஷ்டிரரை பார்க்க வரக்கூடுமோ?” என்றான். “வரமாட்டார். இனி அவர் அஸ்தினபுரிக்குள் நுழைய வாய்ப்பில்லை. அவர் செல்லக்கூடும் இடமென்ன என்று தெரியவில்லை” என்றான் நகுலன்.

“இவ்வெண்ணம் இப்போது உங்களுக்கு எப்படி வந்தது, மூத்தவரே?” என்றான் யுயுத்ஸு. “ஏன்?” என்று யுதிஷ்டிரன் அவனைப் பார்த்து திரும்பி கேட்டார். “ஏன் அவர் உங்களுக்கு இப்போது நினைவுக்கு வந்தார்? சென்ற நாட்களில் எப்போதும் நீங்கள் அவரை எண்ணிக்கொண்டதே இல்லையே?” யுதிஷ்டிரன் “ஆம், அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் அவரை நினைவுகூர்ந்தே நெடுநாட்களாகிறது. இப்போது அவர் இயல்பாக நினைவுக்கு வந்தார். இப்போதல்ல, இன்று காலை அவர் நினைவுக்கு வந்தார். கைமறதியாக எங்கோ வைத்த ஒரு பொருள் கிடைப்பதுபோல” என்றார்.

“ஏன் என்று நான் சொல்கிறேன்” என்று நகுலன் சொன்னான். “இன்று உவகையில் திளைக்கிறீர்கள். நாம் கொண்ட இழப்புணர்வையும் குற்றவுணர்வையும் கடந்துவிட்டிருக்கிறோம். விண்ணிலிருந்து பொழிந்த அமுதம்போல் தந்தையின் வாழ்த்து நம்மை மகிழ வைத்திருக்கிறது. இவ்வின்பத்தில் திளைக்க நம்மால் இயலவில்லை. இத்தனை பெரிய இன்பத்திற்கு தகுதியானவர்களா நாம் என்று எண்ணுகிறோம். இவ்வின்பத்தில் ஒரு பிழை இருப்பதாக உணர்கிறோம். அல்லது இன்பம் சலிக்கிறது.”

“இன்பத்திற்கு அப்பாலிருக்கும் துன்பமே இன்பத்தை பொருள் கொண்டதாக ஆக்கமுடியும் என்று நாம் எண்ணுகிறோம். அதற்காக தேடிக்கொண்டிருக்கிறோம். பொங்கும் பாலில் நீர் பட்டதுபோல் கணிகரின் எண்ணம் நம் அனைவரையும் அடங்க வைத்துவிட்டது. இனி முள்முனைக்கூரை தடவித்தடவி தினவு கொள்வதுபோல இதை துழாவிக்கொண்டிருப்போம். இதிலிருந்து நம்மால் மீள முடியாது. மூத்தவரே, இன்பத்தை கடந்துவிட்டோம். மீண்டும் கசப்பு. மீண்டும் தேடல்” என்றான் நகுலன்.

யுதிஷ்டிரன் “அவ்வாறல்ல. என் உள்ளம் இனிமையாகத்தான் இருக்கிறது. நீ சொல்வதுபோல அது பொங்கி கட்டற்று மேலெழுந்தது. இதோ கணிகர் எனும் துளியால் சற்று அமைந்தது. மெய்யாக அது ஈடுசெய்யப்பட்டுவிட்டது. இனி இன்பம் கொந்தளிப்பல்ல, நிலையழிவும் அல்ல. ஒரு நிகர்நிலை. அதுவும் நன்றுதான். வருக!” என்று யுயுத்ஸுவின் தோளைத்தட்டி குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.

யுயுத்ஸு அவருடன் நடக்கையில் “இன்று காலை அல்லது இன்று மாலை இளைய யாதவர் கணிகரைப்பற்றி ஏதேனும் சொன்னாரா?” என்றான். “இல்லையே” என்றபடி விழிசுருக்கி திரும்பி நோக்கினார் யுதிஷ்டிரன். “அவர் குறிப்புணர்த்தினாரா?” என்று மீண்டும் கேட்டான் யுயுத்ஸு. “நேற்று மாலை அவனை பார்த்தேன். நீர்க்கடன் இயற்றுவதைக் குறித்து மட்டும் பேசிக்கொண்டிருந்தோம். வேறொன்றும் நிகழவில்லை” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “எனில் நன்று” என்று யுயுத்ஸு கூறினான்.

நகுலன் “மூத்தவரே, நேற்று அவருடைய உரையிலிருந்துதான் வந்தது அது” என்றான். “அவன் கணிகர் பெயரை சொன்னானா?” என்று கேட்டபடி யுதிஷ்டிரன் திரும்பிப் பார்த்தார். “இல்லை. ஆனால் ஒரு சொல் உரைத்தார். வஞ்சமும் வலியும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை என்று. வஞ்சம் ஒரு வலியே என்றார்” என்றான் நகுலன். “ஆம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அப்போது நாம் கணிகரை நினைவுகூரவில்லை. ஆனால் நம் ஆழத்தில் கணிகரைப் பற்றிய எண்ணம் தொடங்கிவிட்டது. அது இப்போதுதான் தெரிகிறது” என்றான் நகுலன்.

“அதற்கு அவன் என்ன செய்வான்? அவன் கூறியது அதுவல்ல” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அல்ல. அவ்வாறு தற்செயலாக ஒரு சொல்லை உரைப்பவரல்ல இளைய யாதவர். அச்சொல்லுக்கு முன்னும் பின்னும் அவர் விட்ட இடைவெளியை நினைவுகூர்கிறேன். அச்சொல் நம்மில் முளைக்க வேண்டும் என்றே அவர் சொல்லியிருக்கிறார். மூத்தவரே, ஐயமே இல்லை. கணிகரை நம்மில் எழுப்பியவர் அவர்தான்” என்றான் நகுலன். “என்ன சொல்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் திகைப்புடன் கேட்டார். “அதனால் அவன் இயற்றுவதுதான் என்ன?”

“இவ்வண்ணம் கூர்ந்து செல்வது நல்லதல்ல. கூர்மை கொண்ட எதுவும் பலி வாங்காது அமைவதில்லை. நம் குருதி, பிறர் குருதி” என்றான் நகுலன். யுதிஷ்டிரன் “மெய்” என பெருமூச்சுவிட்டார். யுயுத்ஸு “அவரிலிருந்துதான் அது தொடங்கியிருக்கும் என்று எனக்கு தோன்றியது” என்றான். “ஏன்?” என்றார் யுதிஷ்டிரன். “அதை என்னால் கூற இயலாது. ஆனால் கணிகரைக் காணும்போது ஒவ்வொருமுறையும் நான் இளைய யாதவரை எண்ணியிருக்கிறேன். இளைய யாதவரைக் காணும்போதெல்லாம் கணிகரையும் எண்ணியிருக்கிறேன்.”

“ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அறியேன். என் உள்ளுணர்வு என எழும் எதையும் எப்போதும் நான் ஆய்ந்தறிவதில்லை. ஆனால் அவ்வாறு தோன்றுகிறது” என்றான் யுயுத்ஸு. “வீண் அச்சம். அதிலிருந்து நம்மை நாம் குழப்பிக்கொள்கிறோம்” என்றார் யுதிஷ்டிரன். “இளையோனே, என் ஆணைகளை கூறுகிறேன். எழுதிக்கொள். நாளை காலை நீர்க்கடன் தொடங்க வேண்டும். இன்று மாலைக்குள் விதுரர் இங்கு வந்துவிடுவார். அவரிடம் ஆணைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் முன்னிலையில் அனைத்தும் நிகழட்டும்.”

“ஆணை” என்றான் யுயுத்ஸு. பெருமூச்சுடன் “நாளை தொடங்குகிறது” என்றபின் “நான் இன்னும் அன்னையையும் அரசியையும் பார்க்கவில்லை. நேற்றுவரை அவர்களைப் பார்க்கும் உளஆற்றல் எனக்கு இல்லை என்று எண்ணியிருந்தேன். ஆனால் இன்று அவர்களை பார்க்க என்னால் இயலுமென்று தோன்றுகிறது. அவர்களிடம் சொல்வதற்கு சொற்கள் ஏதுமில்லை. சொற்கள் தேவையில்லை என்ற உணர்வை இன்று அடைந்திருக்கிறேன். மாலை விதுரர் வந்த பிறகு பேரரசியையும் அன்னையையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை இங்கு ஒருக்குக!” என்றார்.

யுயுத்ஸு தலைவணங்கினான். “முதற்புலரியில் நீர்க்கடன்கள் இங்கு தொடங்க வேண்டும். எத்தனை விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் இவற்றை முடிக்கவேண்டும். இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். நேற்று மாலையே இங்கிருந்து கிளம்பியாக வேண்டும் என்ற உணர்வை அடைந்துவிட்டேன். அவ்வுணர்வு வந்த பிறகு இங்கு ஒரு கணமும் தங்கியிருக்க முடியாதென்ற அளவுக்கு என் உள்ளம் விலகிவிட்டிருக்கிறது” என்றார் யுதிஷ்டிரன். “ஆணை” என்று யுயுத்ஸு சொன்னான்.

தொடர்புடைய பதிவுகள்

கடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்

$
0
0

கடலுக்கு அப்பால் வாங்க

 

அன்பின் ஜெ,

 

கல்லூரியில் படிக்கும்போது ஏதோ நாம் பெரிய புரட்சி செய்யபோகிறோம் என்னும் எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்… அதுவும் நான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில்தான் அஜய் தேவ்கன் நடித்த பகத் சிங் திரைப்படம் வந்து, காந்திக்கு எதிரான மனநிலையில் தூபம் போட்டது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு ரங்தே பசந்தி.. அதே உணர்ச்சி கொந்தளிப்பு, போராட்ட மனநிலை. அப்போதெல்லாம் பகத் சிங்கும், நேதாஜியும் சுதந்திரம் வாங்கித்தந்து நாட்டின் தலைவர்களாயிருந்தால் நாடு உருப்பட்டிருக்கும் என்னும் எண்ணம். இந்த காந்திதான் நாட்டை உருப்படாமல் ஆக்கிவிட்டார் என்னும் மனநிலை.

 

இந்த காந்தி வெறுப்பு மறைந்து, நிதரிசனம் என்னை அறைய சிலபல ஆண்டுகளும் புத்தகங்களும் தேவைப்பட்டன. அவற்றில் அண்ணா ஹசாரே அவர்களின் போராட்டமும் என் ஆசானாக நான் கருதும் உங்கள் பதிவுகளும், நூல்களும் முக்கிய பங்காற்றின. இந்த புரிதலை இன்னும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்தது ப.சிங்காரம் அவர்கள் எழுதிய கடலுக்கு அப்பால் என்னும் நாவல்.

 

இன்றைய இலக்கிய உலகில், ப.சிங்காரம் அவர்களுக்கு தனியாக அறிமுகம் எதுவும் தேவை இல்லை. என்றாலும், இரண்டே புத்தகங்கள் எழுதியிருந்தாலும் திருக்குறளின் இரண்டடி போல இரண்டும் பொக்கிஷங்கள். அவரின் வார்த்தைகளிலேயே, அந்த இரண்டு பொக்கிஷங்களை பதிப்பிக்க எவ்வளவு பாடுபட்டார் என்பதை சொல்லியிருக்கிறார். உயிருடனிருந்தபோது நாம் கொண்டாடாமல் விட்டு, நாமே அழித்த ஒரு சிறந்த  கதைசொல்லிதான் ப.சிங்காரம் அவர்கள். புலம்பெயர் எழுத்தாளர்களில் அவரே முன்னோடி.

 

புலம்பெயர் தமிழனான செல்லையாவின் சுதந்திர போராட்டமும், காதல் போராட்டமுமே இந்த கதை.

 

செல்லையா தன்னுடைய முதலாளியும் வட்டிக்கடைக்காரருமான வானாயீனாவின் மகள் மரகதத்தை விரும்புகிறான். அவளுக்கும் இவன்மேல் கொள்ளை பிரியம். வானாயீனாவுக்கு தொழில் தெரிந்த தன நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவன் மகளை மணப்பதில் ஒப்புதல்.  அவர் மனைவி காமாட்சிக்கோ செல்லையாபோல ஒரு நல்ல மனிதன் மகளை மணப்பதில் மகிழ்ச்சி. இந்த சூழலில் செல்லையா நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்கிறான். நேதாஜியின் மறைவுக்கு பிறகு இந்திய தேசிய ராணுவத்தினர் அனைவரும் தங்களின் பழைய வாழ்க்கைக்கு வருவதை இந்த புத்தகம் சித்தரிக்கிறது.

 

வானாயீனா செல்லையாவை தன்னுடைய வியாபாரத்தை பெருக்கும் ஒருவனாகவே பார்க்கிறார். அதனால் பழைய வாழ்க்கைக்கு திரும்பும்போது செல்லையாவும் மரகதமும் தங்கள் காதலை இழக்கின்றனர். அவருக்கு அனைத்தும் வியாபாரமாகவே தெரிகிறது. மகளுக்கு நாகலிங்கத்தை திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது அவரின் வாக்கியமாக “மரகதம் ஊர்ல அவுக ஆத்தாளோட இருந்திட்டு போகுது, அதுவும் இங்கின இருந்தாக்க நாகலிங்கம் பயலுக்கு தொழில்ல புத்தி போகாது”. இவருக்கு பணமும் தொழிலும்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே “இது பொட்டச்சி தொழிலு. ஒனக்கு இது ஒத்து வராது” என சொல்லும்போது செல்லையாவுடன் நாமும் இவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்றே மனம் சொல்கிறது.

 

காமாட்சி ஊரை சுற்றிப்பார்க்க வந்து போரின் காரணமாக அங்கே மாட்டிக்கொள்கிறாள். மகள் பக்கமும் நிற்கமுடியாமல் கணவரையும் எதிர்க்க முடியாமல் திணறும்போதும், மகளுக்காக கண்ணீர் விடும்போதும் செல்லையாவிடம் பாசம் காட்டும்போதும், மன்னிப்புக் கேட்கும்போதும் தாயின் மனதை மிகச்சிறப்பாக உணர்த்துகிறாள். தன மகன் உயிரோடு இருந்தால் அவனும் பட்டாளத்துக்குத்தான் போயிருப்பான் என கணவனிடம் கூறும்போதும், செல்லையா ஜப்பானியரை கொன்றது சரியே என வாதிடும்போதும் புதிய காமாட்சியாக வானாயீனா செட்டியாருக்கே தெரிகிறாள்.

 

இதில் மாணிக்கம் இரண்டு இராமாயண கதைகளை சொல்கிறான். ஒன்று கனகவல்லி ராமாயணம் மற்றொன்று மின்லிங் ராமாயணம். இரண்டிலும் ஜப்பானிய மேஜர் இச்சியாமா வருகிறான். போரின் பின்விளைவுகளில் ஒன்றான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை மிகவும் சாதாரணமாக கதையின் ஓட்டத்தில் மாணிக்கம் சொல்கிறான். இராமாயண சீதைக்கும் இந்த சீதைகளுக்குமான ஒப்பீடு நம்மை கலங்கடிக்கிறது. பெண்தெய்வங்களை நாம் வணங்கத்தான் முடியுமே தவிர திருமணம் செய்துகொள்ள முடியாதென்பதை செல்லையாவிற்கு அறிவுறுத்தும் இடம், இலக்கியத்தின்மூலம் மாணிக்கம் எவ்வாறு வாழ்க்கையை, வாழ்க்கையின் தரிசனத்தை புரிந்துகொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக காட்டுகிறது.

 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மரகதம் உண்டு. ஆனால் அவள் நேரில் வரும்போது கண்டுகொள்ளும் ஊழின் தருணம் வாய்ப்பதென்பது நம் எவரின் கையிலும் இல்லை. தன்னுடைய பெற்றோரை விடமுடியாமல், செல்லையாவை நினைத்து காதலில் உருகுவதும், பிரிவின்போது அவன் பெயரிட்ட கைக்குட்டையை பரிசாக கொடுப்பதும் பிறக்கும் பெண்ணிற்கு மரகதம் என்று பெயரிட்டு மடியில் அமர்த்தி கொஞ்ச சொல்வதும், எக்காலத்திலும் பெண்கள் காதலனை, மனதில் அமர்ந்தவனை மறக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக்குகிறது.

 

கதையின் நாயகனாகிய செல்லையாவிற்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள், தர்மசங்கடங்கள்!! பழைய வாழ்க்கைக்கு திரும்பமுயலும்போது, முதலாளியின் கோபம், அதனால் காதலியின் பிரிவு. போராட்டத்தின் தலைவர் மறைந்ததால் புதிய வழிகளனைத்தும் மூடிக்கொள்ள முதலாளியிடம் செல்ல தயக்கம். கர்னல் கரிமுடீனிடம் தளவாடங்களுக்காக பேரம் பேசும்போது அவன் காட்டும் நெஞ்சுரம் நம்மை மலைக்கவைக்கிறது. பிறகு சிம்பாங் திகா பாலத்தை கைப்பற்றும் தைரியம், போர்வெறி முதலியன நம்மை அப்படியே கதைக்குள் இழுத்துக்கொள்கின்றன. அவன் மரகதத்திடம் பேசும் பகுதியை எவ்வளவுமுறை படித்தேன் என்று எனக்கே  தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் கண்கள் கலங்கின.

 

இவற்றினூடாகத்தான்,கதையின் ஆசிரியர் இந்திய தேசிய ராணுவத்தினை, அதன் பற்றாக்குறைகளை, சீன-ஜப்பானிய உறவை, தமிழர்களை, பலகோணங்களில் பலருடைய பார்வையில் வெளிப்படுத்தப்படுகிறார். நேதாஜியின் மறைவு பல குழப்பங்களை உண்டாக்கி இந்திய தேசிய ராணுவத்தையே கலைத்துவிடுகிறது. போர் முடிந்தபின், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கின்றனர். ஒருபக்கம் பழிவாங்கும் ஆங்கிலேய பட்டாளம், , மறுபக்கம் உலக அளவில் துப்பாக்கியை தாழ்த்திவிட்டாலும் உரிய கட்டளைகள் வராமல் தடுமாறும் ஜப்பானிய படைகள்… இருவரிடமும் தப்பித்து “சட்டை மாற்றும்” இந்திய தேசிய ராணுவவீரர்கள், அவர்களில் பலரை ஏற்கும் தோட்டவேலையாட்கள் என பரவுகிறது.

 

இந்த கதையின் அடியில் ஓடும் மென்சோகம் அனைவரும் தமிழகம் திரும்ப எண்ணுவதே. இன்ஸ்பெக்டர் குப்புசாமியின் பாட்டியின் “ஆத்த கண்டியா, அழகர கண்டியா” என்னும் வசவின் மூலமாக அனைத்தையுமே உணர்த்துகிறார். வானாயீனா குடும்பம் தினமும் கப்பலுக்காக விசாரிப்பதும் காத்திருப்பவர்களின் எண்ண ஓட்டங்களும், மனதை பிசைந்து கலங்கடிக்கின்றன.

 

போராட்டம் நீர்த்துப்போனபின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பலரின் நிலைமையை சிறப்பாக உணர்த்துகிறது. ப.சிங்காரம் அவர்களின் வார்த்தைகள் மற்றொரு நாவலான புயலிலே ஒரு தோணியின் முன்னுரையில் உள்ளது. அதில் கூறுவதுபோல இந்த கதாபாத்திரங்கள் அவர் நேரில் பார்த்து வடித்தவை என உணரலாம். நெல்சன் ஆஸ்திரேலியா படிக்க செல்கிறான், மேஜர் சபுராவை சுடும் ராஜதுரை மதுவுக்கு அடிமையாகிறான், கே.கே.ரேசன் பாங்காக் நகரில் காலம்தள்ளுகிறான், இவர்களுடன் செல்லையா காதலை தொலைத்துவிட்டு நிற்கிறான்.

 

இறுதியாக நேதாஜியின்  அல்லது பகத் சிங்கின் தேசபக்தியினை கடுகளவுகூட விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாது. அவர்களைப்பற்றி குறைவான அல்லது தவறான மதிப்பீடுகளை கொண்டவனல்லை நான். ஆனால், அவர்களின் வழி இந்திய சுதந்திரத்திற்கானது அல்ல என்பது குறித்து எனக்கு வேறு கருத்து இல்லை. நேதாஜியோ பகத் சிங்கோ இந்தியாவின் சுதந்திரத்தை வாங்கியிருந்தால், பெரும்பாலும் ராணுவ ஆட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ மட்டுமே இந்தியாவில் இருந்திருக்கும். நேதாஜியின் வழியாக இந்தியா இங்கிலாந்துக்கு பதிலாக ஜப்பானுக்கு அடிமைசேவகம் புரிந்திருக்கும். ஆனால், இந்திய தேசிய ராணுவம் நேதாஜியின் மறைவுக்கு பின்னர் சிதறுவது போல நேதாஜி சுதந்திரம் வாங்கியிருந்தால் இந்திய தேசமே சிதறிப்போயிருக்கும். முதிரா இலட்சியவாதமே இவற்றில் தெள்ளென தெரிவது. ஆயுதம் மூலம் பெறும் எந்த உரிமையும் நிலைத்து நிற்க முடிவதில்லை.

 

காந்திய வழியாக பெற்ற சுதந்திரமே நமக்கு இப்போதுள்ள ஜனநாயக அரசாங்கத்தை அமைத்து, பல்வேறு உரிமைகளை அளித்து நாடு இப்போதுள்ள நிலையினை அடைய உதவியது.

 

இந்த வரலாற்று தரிசனமே எனக்கு இந்த புத்தகம் மூலமாக கிடைத்தது.

 

அன்புடன்,

கோ வீரராகவன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு புதுவை கூடுகை-31

$
0
0

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலாக ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது .

வெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான நீலம் நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டின் இனி வரும் மாதங்களில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கான தனியுரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முழு நூலுக்குமான தனியொரு சிறப்புரை என்பது கனவாகவே இருந்து வந்தது. கனவு மெய்ப்படும் காலம் வாய்த்துள்ளது.

அதன் முதல் நிகழ்வாக மழைப்பாடல் மீதான தனது உரையை அன்பு நண்பர் தாமரைக்கண்ணன் வரும் அக்டோபர் 19ம் தேதி ( 19-10-2019 )சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு நிகழ்த்தவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் சிறப்பு அழைப்பாளராக அன்பு நண்பர் லாஓசி பங்கு கொண்டு நிகழ்வை சிறப்பிக்க இருக்கிறார்.அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும், புதுவை வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு:-

9943951908 ;9843010306

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்

$
0
0

 

அன்புள்ள ஜெ,

நலமாக இருக்கிறீர்களா ?

நேற்று ஸ்ம்ரித்தி இரானியின் அறிக்கையில் இந்திய அரசு கல்விமுறையில் புராதன இந்திய நூல்களான வேதங்களையும் புராணங்களையும் கற்பிக்கவிருப்பதைப் பற்றி நானும் என் நண்பரும் விவாதித்தோம்.

என் நண்பரின் தரப்பு இது தான்.

1) இந்து கொள்கைகளை (values) எல்லோரிடம் (மற்ற மதத்தினரிடம் தினிப்பது தவறு தானே)

2) இது கிறுத்துவ மிஷ்னரிகள் செய்வது போலத்தானே உள்ளது

3) இது அரசாங்கத்தின் வேலையா ?

4) அரசாங்கம் எல்லா மதத்தினருக்கும் நடுநிலையாக(neutral) இருக்க வேண்டாமா ?

5) இதனை படிக்க நேரிடும் கிறுத்துவ முஸ்லிம் குழந்தகளுக்கு தேவையில்லாத குழப்பம் வராதா (எதை பின்பற்றுவது என்று) ?

6) அரசாங்கம் தன்னை (சிறுப்பான்மையர்) கைவிட்டதாக என்னக் கூடாது அல்லவா ?

7) எல்லோரும் நடுநிலையாக இருப்பது அரசின் கடமை 8) நாத்திகர்கள் கூட படிக்க நேரிடுமே.

எனது பதில், உபநிஷதிதிலும், வேதத்திலும் கடவுள் எங்கே இருக்கிறார். மனுஷன் தானே இருக்கிறார் என்றேன். அதில் நல்லவைத் தானே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அறிக்கையில் சொன்னதுப் போல் ‘ relevant material for teaching’ என்பதனால் க்ருஷ்ணர், சிவன் எல்லாம் வராமல் பாத்துப்பாங்கனு சொன்னேன்.

இன்றைய காலகட்டத்தில் பக்தி வழிபாடு முறைகளைத்தானே சொல்லிதருகிறார்கள் பெற்றோர்கள். கீதையும், ராமாயணமும் 60 வயசு பாட்டித் தாத்தா படிக்கும் நூலாக எண்ணவைத்துவிட்டார்களே. ஏன், திருக்குறள் படித்தாலும் பார்வை வேறு மாதிரி (அதெல்லாம் இந்த காலத்துக்கு உதவாது,அதுல சொல்ற மாதிரி நடப்பது மிக கடினம் என்கிறார்கள். இவுரு பெரிய “வாழும் வள்ளுவர்” என்று ஏளனம் வேறு).

அது மட்டுமின்றி ஒரு (பெரும்பாண்மையான) கிறுத்துவ நண்பரிடம் பைபில் பற்றி பேசினால் அவரால் அதில் இருந்து சில வற்றை குறியிட்டு சொல்ல முடியும். ஆனால் பெரும்பாண்மையான் இந்துக்களால் ஒரு நூலை குறியிட்டு சொல்ல முடியாது.

எனக்கு தெரிந்த ஒரு சிறந்த உதாரணம்: சபரிமலையில் 18 படிகள் ஏறியவுடன் கோயிலின் கோபுர மேட்டின் மேல் தத்வமஸி என்று எழுதி இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் 30-38 ஆண்டுகாலம் சபரிமலைக்கு சென்ற குருசாமிகளிடம், அப்படி என்றால் என்ன என்று கேட்டேன், தெரியாது என்றனர், சில 15+ ஆண்டு சென்றவர்களிடம் கேட்டேன், அப்படி ஏதாச்சும் எழுதி இருக்குமா’னு தான் கேட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால் (தமிழ் எழுத்துக்களில்) தத்வமஸி என்று பல கேசட்டுகளின் போஸ்டர்கள் சபரிமலை தோறும் உள்ள பல கேசட்/CD கடைகளில் வெளியே தோறனமாக இருக்கும். 20-30 ஆண்டுகாலம் ஆண்டுதோறும் சென்று வரும் கோயிலில் மைய கருத்தாக (ஒரு வார்த்தை தான்) என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றே பலருக்கு தெரியவில்லை. அது தான் இன்றைய நிலைமை.

ஆதலால் நமது ஆக்கங்களை மீட்டு எடுக்க இது ஒரு நல்ல துவக்கம். இளமையில் கற்க நல்ல நூல்கள் தான் என்பதற்கு இது நல்துவக்கமாகும்.

எல்லாம் கேட்டு விட்டு நண்பர் சொன்னார் – அதெல்லாம் கண் துடைப்பு. இவையாவும் மறைமுகமாக ஹிந்துத்துவா (BJP-RSS) தானே தினிக்கிறது என்றார். அரசாங்கம் மதத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். வளர்ச்சிக்கும் அமைதிக்கும் மட்டுமே பாடுப்பட வேண்டும்

அவர், அப்படி சொன்னப் பிறகு பேச்சை தொடர் விருப்பம் இல்லை. ஆதலால் நிறுத்திவிட்டேன். உண்மையில் பல சிறுபான்மையில் சேர்ந்து ஒரு 15%-20% இருக்கும் நாட்டில் பெரும்பாண்மையர் அவர்களின் நூல்களைக் கூட படிக்க முடியாதா ? எனக்கு தோன்றிய வழி : பள்ளிகளில் அவரவருக்கு விருப்பமான மொழியை பயிற்றுவிப்பதுப்போல் மத ரீதியான நூல்களை கற்று கொடுக்கலாம் (’திராவிட’ தமிழ்நாட்டில் ஒரு வேளை நாம் இதை அடைந்தாலே அது ஒரு பெரிய மையில் கல்). அதற்கு மேல் ஏதாவது வழி உண்டா ?

​அன்புடன்,
​ராஜேஷ்​

http://rajeshbalaa.blogspot.in/

அன்புள்ள ராஜேஷ்,

உங்கள் கிறித்தவ நண்பரின் கூற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் நம் கல்விக்கூடங்களில் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் திருக்குறளையும் நாலடியாரையும் கற்றுக்கொடுக்கக் கூடாது. அவையும் மத இலக்கியங்களே. கம்பராமாயணமும் பெரியபுராணமும் ஒதுக்கப்படவேண்டும். அவை இந்து புராணங்கள். காளிதாசனின் சாகுந்தலமும் பாரதியின் பாஞ்சாலி சபதமும் கூடாது. அவையெல்லாம் இதிகாசத்தை அடியொற்றியவை.

சரி, அவர் சொல்வதையே இந்துக்களும் சொல்லலாமே. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் இங்கே பாடமாக அமையக்கூடாது. அவை கிரேக்க மதம் சார்ந்தவை. தாந்தேயை கற்பிக்கக் கூடாது அவர் கிறித்தவ இலக்கியவாதி. இரண்டாயிரம் ஆண்டு மேலைநாட்டு தத்துவ சிந்தனைகளில் பெரும்பகுதியை தூக்கிவீசிவிடவேண்டும்.ஆக, கடைசியில் என்னதான் எஞ்சும்? வெறும் தொழில்நுட்பப் பயிற்சி. தகவல் மனப்பாடம். சிந்தனைக்கான மரபார்ந்த அடிப்படைகள் அனைத்தையும் நிராகரித்துவிடவேண்டும். அரிஸ்டாட்டில் முதல் தன் மரபின் அனைத்துச் சிந்தனைகளையும் கற்றுக்கொண்டிருக்கும் வெள்ளைக்காரனிடம் சிந்திக்கும் பொறுப்பை விட்டுவிடலாம். நாம் அவனுக்கு குமாஸ்தா வேலை செய்தால்போதும்.

மதச்சார்பின்மை என்ற பேரில் சென்ற ஐம்பதாண்டுகாலமாக ஒரு போலி அறிவுஜீவிக் கும்பல் இந்த தேசத்தை பணயக் கைதியாக வைத்திருந்தது என்பதற்கு இதைவிடச் சிறந்த ஆதாரம் வேறில்லை. நமது கல்வியமைப்பில், நமது கலாச்சார அமைப்புகளில் சென்றகாலத்தின் வண்டலாகப் படிந்திருக்கும் தேங்கிப்போன இடதுசாரிகள் உடனடியாகக் களையப்பட்டாகவேண்டும்.எதையுமே புரிந்துகொள்ளாத மூர்க்கமான பிடிவாதத்தையே கொள்கை என கொண்டிருப்பது, மாற்றுக்கருத்து எதையும் அறிவின்மை என சொல்லி எள்ளலும் நக்கலும் செய்வது அன்றி எதுவும் அறியாத குப்பைக்குவியல் என்றே இவர்களை மதிப்பிடுகிறேன்.

எந்த ஒரு பண்பாட்டுக்கும் அதற்கான சிந்தனை மரபென்று ஒன்று உண்டு. பல்லாயிரம்கால பரிணாம வரலாறுள்ளது அது. சிந்தனைக்கு அடிப்படையான மூலக்கருத்துக்கள், ஆழ்படிமங்கள் [archetypes,] உருவகங்கள் [metaphors] அந்த சிந்தனைமரபால்தான் உருவாக்கி அளிக்கப்படுகின்றன. அந்தப் பரிணாமத்தின் நுனியில் வந்து நின்று அதை தொடர்ந்து மேலே சிந்திப்பவனே புதிய சிந்தனைகளை உருவாக்குகிறான். அனைத்துத் தளத்திலும். ஏதேனும் காரணத்தால் அந்த மரபு அறுந்துபோகும்போது அப்பண்பாடு சிந்தனையில் பெருந்தேக்கத்தை அடைகிறது.

ஒரு பண்பாட்டில் பிறந்து அந்த மொழிப்பரப்பில், குறியீட்டுவெளியில், வாழ்க்கைச்சூழலில் வளர்ந்த ஒருவர் அந்த மரபில் இருந்து சிந்தனைக்குரிய கருவிகளைப் பெறுவதே இயல்பானதும் எளியதுமாகும். ஜப்பானோ இன்று சீனாவோ அவர்களின் தனிப்பண்பாட்டிலிருந்து அடைந்த தனித்தன்மைகளாலேயே சிந்தனைத்துறையில்  வெற்றி கொள்கிறார்கள். ஜென் இன்றி ஜப்பான் இல்லை என்பதையே ஜப்பான் முழுக்க கண்டேன். ஜென் மதசிந்தனை என அங்கே எந்த இடதுசாரியும் கூக்குரலிடவில்லை. கன்ஃபூஷியஸுக்கு இன்றைய சீனாவின் கல்வியில் என்ன இடம் என்பதை எவரேனும் சென்று பார்க்கட்டும்.

ஆனால் இந்தியாவில் நமக்கு ஆங்கில ஆட்சி காரணமாக அந்த பண்பாட்டுத் தொடர்பு ,வேர்ப்பற்று முற்றிலும் அறுந்து போயிற்று.ஏனென்றால் அன்றைய ஐரோப்பியரின் சிந்தனை முறை அது. அவர்கள் தங்கள் சிந்தனைமுறையே மெய்யானது, உலகளாவியது என நம்பினர். ஆகவே அதை உலகமெங்கும் கொண்டுசென்றனர். விளைவாக நமது மரபான சிந்தனையின் தொடர்ச்சியை நாம் இழந்தோம். நமக்கு அன்னியமான சிந்தனைக்கருவிகளைக் கையாண்டு சிந்திக்க கட்டாயப்படுத்தப்பட்டோம். அனைத்துத் தளங்களிலும் நாம் இரண்டாமிடத்தையே இலக்காக்க முடிவதற்கு இதுவே காரணம்.

இந்தியமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் இந்தியாவின் மாபெரும் சிந்தனைமரபை மீட்டெடுக்கும் பெருமுயற்சிகள் தொடங்கின. அதைத் தொடங்கியவர்கள் ஐரோப்பியப் பேரறிஞர்கள். அவர்கள் தங்கள் சிந்தனைமரபை வளர்த்து முழுமையாக்கிக் கொள்ளும் நோக்குடனேயே இந்தியச் சிந்தனை மரபை மீட்டனர். மோனியர் வில்லியம்ஸ், ரிச்சர்ட் கர்பே, ஷெர்பாட்ஸ்கி, மக்ஸ்முல்லர் போன்ற அறிஞர்களால் இந்திய ஞானமரபு ஐரோப்பிய மொழிகளை அடைந்தது.

அந்த ஐரோப்பிய மொழிகள் வழியாக நாம் அவற்றை கற்றுக்கொள்ளத் தொடங்கினோம். தயானந்த சரஸ்வதி, ராஜா ராம் மோகன் ராய், விவேகானந்தர், அரவிந்தர், தாஸ்குப்தா போன்ற அறிஞர்கள் உருவானார்கள். அதன் விளைவே காந்தி அம்பேத்கர், எம்.என்.ராய், ராம் மனோகர் லோகியா போன்றவர்களெல்லாம்.

ஆனால் சுதந்திரத்துக்குப்பின் நமக்கு ஒரு மாபெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதற்குக் காரணம் நேருவின் பண்பாட்டுக்கொள்கைகள்தான். முதிர்ச்சியற்ற ஓர் இடதுசாரிக்கும்பலால் நேரு சூழப்பட்டார். பி.என்.ஹக்ஸர் போன்றவர்களின் தலைமையில் நமது கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. அதில் இந்தியஞானமரபை முழுமையாகவே கல்வியில் இருந்து அகற்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்தியப் பண்பாட்டின் எந்த அம்சமும் கல்விக்குள் வரவேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. அதுவே மதச்சார்பின்மையாகும் என்று பிரச்சாரம் செய்தனர். ஐரோப்பியவரலாறுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட இந்திய வரலாறுக்கு அளிக்கப்படவில்லை.

இந்தியப்பண்பாட்டுக் கூறுகள் முஸ்லீம்களை அன்னியப்படுத்தும் என்றும் ஒட்டுமொத்தமாக பண்பாட்டுக்கல்வியே பயனற்றது, பயன்தரு கல்வியே உகந்தது என்றும் இரு அடிப்படை நம்பிக்கைகளின் அடிப்படையில் அந்தப் பாடத்திட்டம் அமைக்கப்பட்டது. அதன் விளைவாகவே நாம் இன்று கற்கும் மொண்ணையான கல்விமுறை உருவாகியது. ஐம்பதாண்டுகாலம் அசலாகச் சிந்திக்கும் எவரும் இக்கல்விமுறையை மீறிச்சென்றே எதையும் அடையமுடியுமென்ற நிலை வந்தது.

சியாமப்பிரசாத் முக்கர்ஜியின் காலம் முதல் பாரதிய ஜனசங்கமும் பாரதிய ஜனதாவும் இந்த அடிப்படையற்ற கல்வி முறைக்கு எதிராகப் போராடி வந்துள்ளன. அவர்களின் அரசியல் செயல்பாட்டின் இறுதிவெற்றியாக இந்திய மக்களால் வாக்களிக்கப்பட்டு அவர்கள் அதிகாரம் அடைந்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் எதை முன்வைத்து போராடினார்களோ அதை அவர்கள் நடைமுறைப்படுத்துவதே முறையானது. அதற்கான உரிமை மட்டுமல்ல கடமையும் அவர்களுக்குள்ளது. எப்படி நேரு தான் விரும்பிய ‘மதச்சார்பற்ற’ கல்வியை அமலாக்கும் உரிமையை ஜனநாயகபூர்வமாக பெற்றாரோ அதே ஜனநாயக உரிமையை இப்போது இவர்களும் பெற்றிருக்கிறார்கள்.

உங்கள் நண்பரின் புரிதலில் உள்ள குறைகள் என்னென்ன? ஒன்று, அவர் இந்து மரபு சார்ந்த சிந்தனைகள் என்பதை இந்துமதம் சார்ந்த நம்பிக்கை என்று புரிந்துகொண்டிருக்கிறார். இந்து மரபின் தத்துவக்கருவிகளை, சிந்தனைகளை பயிற்றுவிப்பதை இந்து மதப்பிரச்சாரம் என்று எடுத்துக்கொள்கிறார். ஆகவேதான் ’பின்பற்றுவது’ பற்றிப் பேசுகிறார். இது  ‘தெரிந்துகொள்வது’ ‘கற்றறிவது’ என்ற அடிபப்டையிலேயே கூறப்படுகிறது எர் அவர் புரிந்துகொள்ளவில்லை.

இந்துமத நம்பிக்கைகள் வேறு, இந்துமதத்தின் பொதுக்கட்டமைப்புக்குள் வரலாற்றுக்காலம் முதல் திரட்டப்பட்டுள்ள சிந்தனைகள் வேறு. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்துக்கு முன்பு இருந்த பெரும்பாலான உலக சிந்தனையாளர்கள் ஏதேனும் மதத்தைச் சார்ந்தவர்களே. அவர்களின் சிந்தனைகளை அந்த மதத்தைச் சார்ந்தவை என்று பார்ப்பதில்லை. அவற்றை தத்துவ, பண்பாட்டுச் சிந்தனைகளாகவே அணுகுகிறார்கள்.

இரண்டு, மதச்சார்பின்மை என்பதை மதம் சார்ந்த அனைத்தையும் முற்றாகத் தவிர்த்துவிடுதல் என்ற பொருளிலேயே இன்று போலி அறிவுஜீவிகள் பயன்படுத்துகின்றனர். அரசும் நீதிமுறையும் எந்த மதத்தையும் சாராதிருத்தல் என்றே அதன் பொருளாக இருக்கமுடியும். மதம் சார்ந்த அனைத்தையும் தவிர்த்துவிடுவதென்பது நேற்றைய சிந்தனைகளை முழுக்க நிராகரிக்கும் மொண்ணைத்தனத்துக்கே இட்டுச்செல்லும். நல்லவேளையாக நம் போலி இடதுசாரிகள் இந்துமதம் சார்ந்த அனைத்தையும் நிராகரிப்பதைப்பற்றி மட்டுமே பேசுகிறார்கள். மற்றமதங்கள், குறிப்பாக கிறித்தவமும் இஸ்லாமும் ‘மதச்சார்பற்ற மதங்கள்’ என்று நினைக்கிறார்கள்.

கண்டிப்பாக பாடத்திட்டத்தில் இந்து சிந்தனை மரபின் வரலாறும், அதன் முதன்மையான சிந்தனைக்கூறுகளும் கலைக்கூறுகளும் இடம்பெற்றாகவேண்டும். அவை உருவாகி வந்த விதமும் , அவை செயல்படும் தர்க்கமும் பயிற்றுவிக்கப்படவேண்டும். அதன் மூலம் சிந்தனையின் அடிப்படைகளை நம் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். சிந்திக்கும் பயிற்சியைப் பெற முடியும். கருதுகோள்களையே புரிந்துகொள்ளாமல் மொண்ணையாக படிப்பை முடிக்கும் நிலையை மாற்ற சில ஆண்டுகளில் முடியலாம்.

என் நோக்கில், இஸ்லாமியச் சிந்தனை மரபும் கிறித்தவச் சிந்தனை மரபும் கூட இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் நம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டாகவேண்டும். கடல் படம் வெளிவந்தபோது நான் அறிந்த உண்மை ஒன்றுண்டு. கிறித்தவ இறையியலின் ஆரம்ப அடிப்படைகள் கூட இங்குள்ள படித்தவர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் தெரியவில்லை. அவற்றை அறியாமல் ஃபிராய்டையோ யுங்கையோ ஏன் மார்க்ஸையோ கூட சரிவர அறிந்துகொள்ள முடியாதென்பதே உண்மை. நவீன தர்க்கவியலில் கிறித்தவ இறையியல் அடைந்த வெற்றிகள் ஐரோப்பிய நவீன சிந்தனைக்கு அடித்தளமிட்டன. அவற்றை நம் பாடத்திட்டத்தில் இன்னும் விரிவாகவே சேர்க்கலாம் .

கல்வியை காவிமயமாக்குதல் என்றெல்லாம் கூச்சலிட்டு இதை எதிர்ப்பவர்கள் செய்வது உண்மையில் என்ன? எத்தனை உயர்ந்தவை என்றாலும் எத்தனை மகத்தானவை என்றாலும் தன்னுடைய மதம் சாராத எதையும் எக்காரணம் கொண்டும் கற்றுக்கொள்ளமாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் இஸ்லாமிய, கிறித்தவ மதவெறியை ஆதரித்து வளர்ப்பதை மட்டுமே. அதற்கான கூலியைப்பெற்றுச் செயல்படும் ஐந்தாம்படையினர் இவர்கள்.

உண்மையான கிறித்தவர்கள் ஒருபோதும் இந்த மூளைச்சலவைக்கு ஆளாகமாட்டார்கள். இந்திய மெய்ஞான மரபின் பேரறிஞர்கள் பலர் கிறித்தவர்களே. வெட்டம் மாணி, ராவ் பகதூர் செறியான் முதல் பேராசிரியர் ஜேசுதாசன் வரை. இங்குள்ள மாபெரும் கிறித்தவ அறிஞர்களான வீரமாமுனிவர் முதல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை வரை இந்து ஞானமரபை கற்றறிந்தவர்களே. மதத்தையும் சிந்தனையையும் பிரித்தறிய அவர்களால் முடிந்தது.

ஆனால் இந்தச் சிந்தனைத்தெளிவு பாரதிய ஜனதாவிடமும் இருக்கவேண்டும். இந்திய சிந்தனை மரபைக் கற்றுக்கொடுப்பதென்பது இந்து மதநம்பிக்கைகளை கற்பிப்பதல்ல என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும். இந்து ஆசாரங்களையும் சிந்தனைகளையும் வேறுவேறென பிரித்தறியும் விவேகம் அவர்களுக்கிருக்கவேண்டும். இந்துசிந்தனையை முன்வைக்கையில் அது மதத்தை வலியுறுத்துதல் ஆக ஆகிவிடலாகாது என அவர்கள் உணரவேண்டும். அத்துடன் கடந்தகாலச் சிந்தனைகளைக் கற்பிக்கும்போது அவற்றை சமகால அறவுணர்வு சார்ந்த கூரிய விமர்சனத்துடன் கற்பிக்கும் நிலைப்பாடு அவர்களிடமிருக்கவேண்டும். மதநம்பிக்கையாகவும் மரபுவழிபாடாகவும் சிந்தனைகள் கொண்ட்செல்லப்படக்கூடாது. அதற்குத்தகுதியான ஆசிரியர்கள், அறிஞர்கள் கண்டடையப்படவேண்டும். தங்கள் அணியிலுள்ள கீழ்மட்டப்பிரச்சாரகர்களை அங்கே கொண்டு சென்று வைக்கக்கூடாது.

அத்துடன் இந்து சிந்தனை மரபு என்பது வெறும் ஆன்மீக, வைதிக, வேதாந்த மரபு மட்டும் அல்ல என்றும் சார்வாகர்கள் போன்ற நாத்திகர்களையும் சாங்கியர் வைசேடிகர் போன்ற உலகியலாளர்களையும் உள்ள்டக்கிய மாபெரும் விவாதக்களமாகவே அது இருந்தது என்றும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும். இந்து சிந்தனையின் மறுபக்கமாக திகழ்ந்த சமண, பௌத்த சிந்தனைகளையும் கற்காமல் அக்கல்வி முழுமையடையாதென்றும் அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.அப்படி இல்லை என்றால் அதைச் சுட்டிக்காட்டும்பொறுப்பு சிந்தனையாளர்களுக்கு உள்ளது.

உண்மையில் ஸ்மிரிதி இரானியின் அறிவிப்பு அதை உணர்ந்ததாகவே தோன்றுகிறது. [The ministry is planning to set up a committee to study the ancient Hindu texts, Vedas, Upanishads and other epics to select relevant material for teaching.] கல்வித்துறை சார்ந்த அறிஞர்களினாலான குழு தேவையான பகுதிகளை பாடமாக ஆக்குவதைப்பற்றி சிந்திக்குமென்றே அவர் சொல்லியிருக்கிறார்.

நம் கல்விமுறையில் உள்ள இந்தப் போதாமையையும், இந்திய ஞானமரபை உள்ளிட்டு அதை நீக்கும் வழிகளையும் பற்றி தொடர்ந்து நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் பேசிவந்திருக்கிறார்கள். நடராஜகுரு அதற்கென்றே ஈஸ்ட்வெஸ்ட் யூனிவர்சிட்டி என்னும் அமைப்பையும் உருவாக்கினார். ஆனால் தனியார் எவரும் செய்துவிடமுடியாத பெரும்பணி அது. அதுசார்ந்த விழிப்புணர்வு கல்விச்சூழலில் உருவாகுமெனில் நன்று.

ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு உடனடியாக பெரிய நம்பிக்கைகள் ஏதுமில்லை. இந்திய அறிவுச்சூழல் ஒருபக்கம் வறட்டு மார்க்ஸியம் மறுபக்கம் மூடத்தனமான மரபுவழிபாடு என்று பிளவுண்டுள்ளது. நடுவே இருக்கும் அறிவார்ந்த நடுநிலைத்தளம் மிகமிக வலுவற்றிருக்கிறது. அதற்கு கல்வித்துறையில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பே இன்றில்லை.  ஏனென்றால் இன்றிருப்பது ஒரு துருவப்படுத்தல். இந்திய மரபுசார் மெய்யியலையும் தத்துவத்தையும் கற்பிப்பதே வன்முறை என எதையுமே அறிந்துகொள்ள முயலாத ஒரு தரப்பு கூச்சலிடும். அப்படித்தான் கற்பிப்போம் என இன்னொரு தரப்பு தன் பழைமைவாதத்துடன் கிளம்பி வரும்.

 

அறுதியாக இன்றைய அரசியல் சூழலில் வெறும் சம்பிரதாய மதநூல்களை அப்படியே பாடத்தில் புகுத்தி சில பழம்பஞ்சாங்கங்களை அதற்கு காவலாக நியமிப்பது மட்டுமே நிகழுமென நான் எதிர்பார்க்கிறேன். என் எதிர்பார்ப்புகள் பொய்க்குமெனில் அதைவிட மகிழ்ச்சிக்குரியது ஏதுமில்லை.

ஜெ

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jun 10, 2014

 

பழைய கட்டுரைகள்

ஜோ சிலவினாக்கள்

இந்திய அறிவியல் எங்கே?

தொடர்புடைய பதிவுகள்

ஆசிரியர் தேர்வு முறை

$
0
0

 

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

தமிழகத்தின் கல்விச்சுழல் குறித்து, குறிப்பாக உயர்கல்வித்துறை குறித்து வருந்தாத சிந்தனையாளர்கள் இங்கு இல்லை. அதுகுறித்த கசப்புணர்வும், தூற்றல்களும் தமிழ் வாசிப்புச்சூழலில் புதிதும் அல்ல. இணையம், அச்சு என எவ்வூடகம் வழியேனும் மாதம் ஒருமுறையாவது அதைக் கடக்கிறோம். இப்போது கல்விச் சாதனைகள் என்று நாம் மார்தட்டிக் கொள்ள எதாவது இருக்குமென்றால், அது சென்ற தலைமுறை நமக்கு விட்டுச்சென்றவைகளில் ஒன்று. நிகழ்காலம் தேய்பிறை.

ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ அது குறித்த அக்கறை சிறிதும் இல்லை. சமீபத்திய உதாரணம், தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள உதவிப்பேராசிரியர் தேர்விற்கான அறிவிக்கை. இதுபோன்ற தேர்வுமுறைக்கென எனக்குத் தெரிந்து இந்திய அளவில் முன்னுதாரணங்கள் இல்லை. இது வேறேதாவது மாநிலத்தில் நிகழ்ந்திருந்தால் ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அப்படியொன்று நிகழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.

இத்தகைய அறிவிக்கை குறித்து ஒருவர் நீதிமன்றம் சென்றார் என்கிறது செய்திக்குறிப்பொன்று.  https://www.hindutamil.in/news/tamilnadu/515308-highcourt-ordered-to-issue-notice-to-teachers-recruitment-board.html  ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வழக்கில் வென்றிருக்கிறது, அதனால்தான் இப்போது விண்ணப்பங்களை வரவேற்றிருக்கிறது.

இம்மாத காலச்சுவடு இதழில், கேரளமும் மேற்கு வங்கமும் பேராசிரியர் தேர்விற்குப் பின்பற்றும் முறைகளுடன் தமிழகம் பின்பற்றும் தேர்வுமுறை குறித்த ஒப்பீட்டை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன். https://sannaloram.blogspot.com/2019/10/blog-post.html

மேற்சொன்ன செய்திக்குறிப்பிலும், கட்டுரையிலும் எல்லோருக்கும் புரியும் ஒரு எளிய நீதி இருப்பதாக நம்புகிறேன்.  நீதிமன்றத்தில் வென்றதாலேயே அம்முறை சரி என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். நான் தவறாகக்கூட இருக்கலாம்; இங்கு எது சரி என்பது தெரிவுபடுத்தப்பட வேண்டும். இது குறித்த ஒரு விவாதம் இங்கு நிகழவேண்டும் என எண்ணுகிறேன். எனவே, இந்தக்கட்டுரையைப் பொதுவில் வைக்கக் கேட்கிறேன்.

இங்கு நேர்மையான வழியில் ஒருவர் பேராசிரியர் பணி நியமனம் பெற விழைந்தால் அதற்கான சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா என்பதில் எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. இதற்கு நாம் என்னதான் செய்து விடமுடியும்? மனம் வெதும்பி பக்கங்களை நிரப்பிக்கொண்டிருப்பதைத்தவிர? கசப்பில் இதைக் கடந்து செல்வதைத்தவிர?

அதிகாரத்தில் இருப்பவரோ-இல்லாதவரோ, நம் எல்லோர் பிள்ளைகளும் இச்சூழலில்தானே வளர்ந்தாக வேண்டும்?!

 

நன்றி,
விஜயகுமார்.

 

 

அன்புள்ள விஜயகுமார்

 

கடந்த பத்தாண்டுகளாக நான் உறுதியாக அறிந்தவரை மிகமிகச் சில அரசு உதவிபெறும் கல்விநிறுவனங்கள் தவிர எங்குமே லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் ஆசிரியர் பணி , கல்லூரியிலோ உயர்நிலைப் பள்ளியிலோ, கிடைப்பதில்லை. அது பேரம்பேசி அடையும் தொகை அல்ல. தெளிவாக, பொதுவாக, வெளிப்படையாக நிறுவப்பட்டுவிட்ட விஷயம்.

 

தரம்பேணும் உறுதிகொண்ட சில நிறுவனங்கள் மட்டுமே முழுக்கமுழுக்க தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களைப் பணிக்கு எடுக்கின்றன. அவ்வாறு எடுப்பதாக நான் அறிந்த ஒரே நிறுவனம் சென்னை கிறித்தவக்கல்லூரி. கத்தோலிக்க நிறுவனங்கள் சமீபகாலம் வரை அவ்வாறு இருந்தன. இன்று அங்கே அந்நிலை இல்லை. சாதி அரசியலின் ஆட்டமும் உள்ளது. இந்து நிறுவனங்கள் அனைத்துமே சாதி அடிப்படையும், லஞ்சத்தின் அடிப்படையும் கொண்டுதான் ஆசிரியர்களை பணியமர்த்துகின்றன.

 

இந்த நிலைதான் நம் கல்வியில் இத்தனை பெரிய வீழ்ச்சி நிகழக் காரணம். இதை நேரடியாக அப்பட்டமாக பேசுவது மட்டுமே நாம் செய்யவேண்டியது. ஆசிரியர் பணிநியமனத்தில் லஞ்சம் பெற்றதற்காக எவருமே தண்டிக்கப்பட்டதில்லை. அதில் ஒரு முறையான விசாரணைக்குக்கூட இங்கே இடமில்லை. கொடுப்பவர் வாங்குபவர் கண்காணிப்பவர் அனைவரும் சேர்ந்து செய்யும் மாபெரும் ஊழல்

 

இது. நான் அறிந்தவரை சென்ற தலைமுறையில் என்றால் கல்விநிறுவனங்களில் தலைமைப்பொறுப்பில் இருக்கவேண்டிய அறிஞர்கள் தனியார் நிறுவனங்களில் தொகுப்பூதியத்தில் கூலிவேலை செய்துகொண்டிருக்கும் நிலை இன்றுள்ளது.  எனக்கு நன்குதெரிந்த ஒருவர், ஐயமில்லாமல் இத்தலைமுறையின் முதன்மையான அறிஞர்களில் ஒருவர். மூன்று தகுதித்தேர்வுகளை வென்றவர். முனைவர் பட்டம் பெற்றவர்- அதிலும் மிகச்சிறந்த முனைவர்பட்ட ஆய்வேடு அது. பயிற்றியலில் பத்தாண்டு அனுபவம் கொண்டவர். ஆனால் வேலைக்கு நாற்பது லட்சம் கேட்டனர். அவர் பணம் கொண்டவர்தான், ஆனால் கொஞ்சம் அறம்பேணுபவர். அந்தப்பணத்தை கொடுக்க மறுத்து தொகுப்பூதியத்திலேயே வாழ்கிறார். தமிழிலக்கியச் சூழலில் தடம் பதித்த பல இளம் அறிஞர்கள் , படைப்பாளிகள் இன்று அனைத்து தகுதிகள் இருந்தும் தொகுப்பூதியத்தில் வாழ்கிறார்கள் தெரியுமா?

 

இத்தகைய சூழல் தமிழகத்தின் கல்வி வரலாற்றில் அமைந்த்தே இல்லை. இதற்கு விதிவிலக்கான எந்த துணைவேந்தரும் இன்றில்லை. எந்த கல்வி அமைச்சரும் அதிகாரியும் இன்றில்லை. எந்தக் கட்சியும் இந்தச் சூழலுக்கு வெளியே இல்லை. ஆசிரியர் சங்கங்கள்கூட இதைப்பேசுவதில்லை.  இந்த இந்த அப்பட்டமான உண்மைக்குமேல்தான் இங்கே தமிழர்பெருமை, திராவிடப்பெருமை, கல்விசிறந்த தமிழ்நாடு, நீட் தேர்வின் அபாயங்கள், வடவரால் அழியும் தமிழ்ப்பண்பாடு என எல்லாமே பேசப்படுகின்றன

 

இதை உணர நீங்கள் எழுதியுள்ளது போன்ற  நீண்ட ஆய்வுகள் எதுவும் தேவை இல்லை. அதைக் காண மறுக்கும் நேர்மையின்மை இங்கே அனைவரிடமும் உள்ளது. அவரவருக்குத் தக்கபடி அதற்கு அரசியல்சாயம் பூசிக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்

 

 

ஜெ

அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்

வாசிப்பு, அறிவியல்கல்வி – கடிதங்கள்

கல்வியும் வாழ்வும் -கடிதம்

நமது கல்வி -கடிதங்கள்

கல்வி- கடிதங்கள்

கல்வி, தன்னிலை -கடிதம்

கல்வி- மேலுமொரு கேள்வி

கல்வியும் பதவியும்

கல்வியில் இந்திய மெய்யியல்-கடிதம்

 

கல்வியழித்தல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32

$
0
0

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 13

யுயுத்ஸு தனக்குரிய சிறுகுடிலுக்குள் சென்று ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது ஏவலன் வந்து சிற்றமைச்சர் பாஷ்பரின் வருகையை அறிவித்தான். ஓய்வெடுப்பதற்காக மஞ்சத்தை நோக்கியபடிதான் அவன் உள்ளே நுழைந்திருந்தான். பெருமூச்சுடன் ஆடையை சீரமைத்துவிட்டு “அனுப்புக!” என்று யுயுத்ஸு சொன்னான். பாஷ்பர் உள்ளே வந்து தலைவணங்க யுயுத்ஸு வணங்கி அவரை அமரும்படி சொன்னான். தரையில் விரிக்கப்பட்ட பாயில் அவன் அமர்ந்ததும் பாஷ்பர் எதிரில் அமர்ந்தார். இளையவரான பாஷ்பர் சற்று நிலைகொள்ளாதவர் போலிருந்தார். அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் மூத்த அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாகவே கானேகிவிட்டிருக்க இளைய அமைச்சர்களால் சிறு இடர்களைக்கூட நிலையழியாமல் எதிர்கொள்ள இயலவில்லை என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

முகத்தை இயல்பான புன்னகையுடன் வைத்துக்கொண்டு “கூறுக!” என்று யுயுத்ஸு சொன்னான். பாஷ்பர் மேலும் சில கணங்கள் சொற்களுக்கு தயங்கிவிட்டு “தாங்கள் பாஞ்சாலத்து அரசியை ஒருமுறை சென்று சந்திக்கவேண்டும், இளவரசே” என்று சொன்னார். “நானா?” என்று யுயுத்ஸு கேட்டான். இயல்பாக இருக்கவேண்டும் என்னும் எச்சரிக்கையை மீறி சற்றே முன்சாய்ந்து விழிகூர்ந்து “அவர் என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாரா?” என்றான். “இல்லை. அவரை இன்று மாலை அரசர் சந்திப்பதாக இருக்கிறார் என்று எனக்கு தகவல் சொல்லப்பட்டது. அதற்கு முன்னர் தாங்கள் அரசியை சந்திக்க முடியுமென்றால் நன்று” என்று பாஷ்பர் சொன்னார்.

“என்ன செய்தி?” என்று யுயுத்ஸு மேலும் விழிகளைச் சுருக்கி கேட்டான். “இங்கு வந்ததிலிருந்து அவர் தன்னிலையில் இல்லை என அறிந்திருப்பீர்கள். இருளுக்குள் அடைந்து கிடந்தார். உளம் குழம்பிப் போயிருப்பதாகவும், உதிரிச் சொற்களால் மட்டுமே பேசுவதாகவும், அவ்வப்போது எழுந்தமர்ந்து முனகுவதும் விம்மி அழுவதும் கூச்சலிடுவதும் உண்டென்றும் சொன்னார்கள். அவர் இருக்கும் நிலையை புரிந்துகொள்ள முடிந்தது. பல நாட்கள் அவர் இருட்டிலிருந்து வெளிவரவில்லை என்று இங்கே அனைவரும் அறிவார்கள். ஆனால் நேற்றிலிருந்து அவர் காட்டுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார். இப்போது பெரும்பகுதி காட்டில்தான் இருக்கிறார். அரசர் வருகையில் அவர் குடிலில் இருக்கவேண்டுமல்லவா?” என்றார் பாஷ்பர்.

யுயுத்ஸுவின் உள்ளம் மேலும் முன்னால் சென்று அவர் சொல்வதற்காகக் காத்திருந்தது. பாஷ்பர் “அதை கூறுவதற்காக சென்றேன். ஏவற்பெண்டு என்னை காட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பாஞ்சாலத்து அரசியிடம் நிறுத்தினாள். பாஞ்சாலத்து அரசி பிச்சியைப் போலிருந்தார். கலைந்த ஆடை. புழுதிபடிந்த குழல். கண்கள் அலைபாய்ந்துகொண்டிருந்தன. ஏவற்பெண்டு அப்பால் நின்றுவிட்டாள். நான் அரசியை அணுகினேன். எனக்கு மேலும் அணுக அச்சம். ஒரு கணம் அரசி அங்கிலாததுபோல் ஒரு உளமயக்கும் உருவாகியது. அருகே அணைந்து அரசியை வணங்கி அவர் முறைப்படி இன்று குடிலில் இருக்கவேண்டும், அரசர் வந்து அவரை சந்திப்பதாக இருக்கிறார் என்ற செய்தியை சொன்னேன்” என்று தொடர்ந்தார்.

“நெடுநேரம் அவர் என்னையோ என் சொற்களையோ உள்வாங்கியதுபோல் தெரியவில்லை. பிறகு திடீரென்று எழுந்து என்னை நோக்கி வந்து அரசரிடம் பேசுவதற்கொன்றுமில்லை என்றார். அரசி, நாளை இங்கு நீர்க்கடன் நிகழவிருக்கிறது. தாங்கள் அதில் நீர்தொட்டுக் கொடுக்கும் ஒரு சடங்கை செய்யவேண்டியிருக்கிறது. அதை முன்னரே அறிவிக்கும்பொருட்டுதான் அரசர் வருகிறார் என்றேன். இங்கு எந்தச் சடங்கும் இப்போது நடக்கப்போவதில்லை, போர் இன்னும் முடியவில்லை என்றார் அரசி. பிச்சியைப்போல் என்னை வெறித்தபடி சென்று சொல் உன் அரசரிடம் போர் இன்னும் முடியவில்லை என்றார்.”

யுயுத்ஸு உளம் திடுக்கிட்டான். “என்ன சொன்னார்? சரியாக அவர்கள் சொன்ன சொற்களை கூறுக!” என்றான். பாஷ்பர் “போர் இன்னும் முடியவில்லை என்றார். அதற்கு மேல் நான் எதுவும் கேட்கவில்லை. சென்று சொல் உன் அரசரிடம், போர் இன்னும் முடியவில்லை என்று மட்டுமே சொன்னார். நான் தலைவணங்கி பின்னகர்ந்துவிட்டேன். அதற்குமேல் கேட்க எனக்கு இடமில்லை என பட்டது. அரசரிடம் அதை சொல்ல வேண்டும். அது என் கடமை. ஆனால் எவ்வண்ணம் இதை அங்கு விளக்குவது என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

“நான் சற்றுமுன் அரசரை பார்க்கச் சென்றேன். அவர் அங்கு அமைச்சர்கள் சுஃப்ரருடனும் தௌம்யரின் மாணவர்கள் நால்வருடனும் அமர்ந்து நூலாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய முகத்திலிருந்த உவகையை பார்த்தபோது என்னால் இதை அவரிடம் சொல்ல முடியாதென்று தோன்றியது. ஆகவே தலைவணங்கி பேரமைச்சர் விதுரர் இன்று மாலை வந்து சேர்வார் என்று செய்தி வந்துள்ளதென்று மட்டும் தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன். அது முன்னரே வந்துவிட்ட செய்தி அறிவிலி என்று சொல்லி அரசர் நகைத்தார். நான் என்னை அறிவிலியாகவே காட்டிக்கொண்டு வெளியேறினேன். இளவரசே, இன்றைய நிலையில் முக்தவனத்தில் இருப்பவர்களில் தாங்கள் மட்டுமே அரசரிடம் இச்செய்தியை சொல்ல முடியும் என்று தோன்றியது. ஆகவேதான் இங்கு வந்தேன்” என்றார் பாஷ்பர்.

“இதை நான் எப்படி சொல்வது?” என்று யுயுத்ஸு சொன்னான். “இது அவர்களுக்குள் நிகழ்ந்தாகவேண்டிய ஓர் உரையாடல். இதில் உள்ளது நாம் முற்றறிய முடியாத ஒரு செய்தி.” பாஷ்பர் “ஆம், ஆனால் அரசர் இன்றிருக்கும் நிலையைக் கலைக்கும் உரிமை நமக்கு உண்டா? அதைவிட அவர் தன்னை கலைத்துக்கொள்ள விரும்புவாரா? இளவரசே, அவரது உலகே கலைக்கப்படுவது அது. ஒருவேளை அவர் எதிர்திசைக்குச் சென்று உச்ச சினத்தை அடையவும் கூடும். அச்சினம் நம்மேல் திரும்பலாம்” என்றார். “இங்கு நாளை தொடங்கவிருக்கும் நீர்க்கடனுக்காக அனைத்துப் பணிகளும் முடிவுற்றுவிட்டன. அந்தணர்கள் நாளை புலரியிலேயே வேள்வி அனல் எழுப்ப எண்ணியிருக்கிறார்கள். இந்நிலையில் இச்செய்தி…”

யுயுத்ஸு “இடர்தான்” என்றான். “இதற்கு என்ன செல்வழி என்று தாங்கள் எண்ணலாம். தேவையென்றால் தௌம்யரை அனுப்பி பாஞ்சாலத்து அரசியிடம் பேச வைக்கலாம்” என்றார் பாஷ்பர். “அவர் பேசுவது உகந்ததல்ல” என்றான் யுயுத்ஸு. “எனில் இன்று மாலை விதுரர் வருகிறார். அவரிடம் பேசச் சொல்லலாம். இறுதி முடிவெடுக்க வேண்டியவர் தாங்களே” என்றார் பாஷ்பர். யுயுத்ஸு சில கணங்கள் எண்ணிவிட்டு “இல்லை, இன்று விதுரர் இச்சூழலிலேயே உளம் நிலைகொண்டவர் அல்ல. அவர் எங்கிருந்தோ வருகிறார். உண்மையில் அவர் ஏன் இங்கு வருகிறார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. எதன்பொருட்டென்றாலும் அவரது வருகை நன்றென்று தோன்றுகிறது, அவ்வளவுதான். ஆனால் அவரால் இங்குள்ள எதிலும் உளம் செலுத்த இயலாது” என்றான்.

“தௌம்யர் நாளை வேள்விக்குரிய அனைத்தையும் செய்துவிட்டார். ஆகவே வேள்வி தொடங்க வேண்டுமென்ற பதற்றத்தில் இருப்பார். அவராலும் இச்சூழலை கையாள இயலாது” என்றபின் யுயுத்ஸு “போர் முடியவில்லை என்றா சொன்னார்? இன்னும் எஞ்சியிருக்கும் எதிரி யாரென்று சொன்னார்?” என்றான். குரல் தணிய “கணிகரைப் பற்றியா?” என்றான். “தெரியவில்லை. என்னால் அதை எவ்வண்ணமும் எண்ணித் தெளிய முடியவில்லை. மீண்டும் போர் என்னும் சொல் அளிக்கும் பதைப்பு என்னுள் சொல்லமைய வைக்கிறது. ஆனால் இனி ஒரு போர் எனில் எவருடன்? எவர் ஆற்றுவது அப்போரை?” என்றார் பாஷ்பர்.

யுயுத்ஸு மீண்டும் தன்னுள் ஆழ்ந்தபின் “கிருபரையும் கிருதவர்மனையும் அஸ்வத்தாமனையும் பற்றி குறிப்பிட்டிருப்பார் என எண்ணுகிறேன்” என்றான். தன்னுள் சொல்லோட்டிய பின் “ஆம், பெரும்பாலும் அவர்களைத்தான் குறிப்பிட்டிருப்பார் என்று தோன்றுகிறது. அவ்வகையில் போர் முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் நீர்க்கடனுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு சென்றுவிட்டிருக்கிறார்கள். கிருதவர்மன் தன் யாதவக் குடிகளுடன் சென்று சேர்ந்துவிட்டதாக ஒற்றுச்செய்தி வந்துள்ளது. கிருபர் தன் தந்தையின் தவக்குடிலுக்கே சென்றுவிட்டிருக்கிறார். அஸ்வத்தாமன் காடுகளுக்குள் புகுந்து மறைந்தார். பிருகு குலத்தின் தவச்சாலைகளுக்கு அவர் சென்றிருக்கக் கூடுமென்று ஒற்றர்கள் சொல்கிறார்கள்” என்றான்.

“அவர் சிவச்செல்வர். பாரதவர்ஷத்தின் அனல்குலத்து அரசர்கள் சிலர் அவரை ஆதரிக்கவும் கூடும். ஆனால் அவர் இருக்கும் உளநிலையில் மீண்டும் அரசுகொள்ளவோ படை திரட்டவோ வாய்ப்பில்லை” என்றான் யுயுத்ஸு. “அவர்கள் மூவரையும் தேடித்தேடிச் சென்று முற்றழிக்கலாம். அதற்கான தேவை இன்றில்லை எனினும்கூட அரசர்கள் அதை செய்வதுண்டு. வஞ்சத்தையும் அனலையும் நஞ்சையும் சற்றும் எஞ்சவிடலாகாது என்ற நெறியை பேணுவதற்காக. ஆனால் அதற்கு நம்மிடம் அரசு வேண்டும், படைகள் வேண்டும். தன்னந்தனியாக நாம் சென்று அவரிடம் போரிட முடியாது. அவர் இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதற்கே பெரிய ஒற்றர் வலை வேண்டும். எப்படியும் இந்நீர்க்கடன் முடியாமல் அஸ்தினபுரியையோ இந்திரப்பிரஸ்தத்தையோ சென்றடைய அரசரால் இயலாது.”

“இதை தாங்களே பாஞ்சாலத்து அரசியிடம் சொல்லலாமே?” என்றார் பாஷ்பர். “ஆம், அதுவே உகந்ததென்று எண்ணுகிறேன். பாஞ்சாலத்து அரசி இன்றிருக்கும் நிலையில் அனைத்துக் கோணங்களிலும் அதை எண்ணியிருக்கமாட்டார். இங்கு என்ன சூழ்நிலை திகழ்கிறதென்று பாஞ்சாலத்து அரசியிடம் நானே விளக்குகிறேன். அதன் பின்னர் அரசரைச் சென்று பார்த்து அவரை அழைத்து வந்து பாஞ்சாலத்து அரசியிடம் பேசச் சொல்கிறேன். அரசுகொண்ட பின் பகை முற்றழிக்கப்படும். அரசரிடமிருந்து அதற்கான ஓர் உறுதிப்பாட்டை பெற்றுக்கொண்டால் அரசி தெளிந்துவிடுவார்” என்றபின் யுயுத்ஸு எழுந்துகொண்டு “நன்று அமைச்சரே, தாங்கள் இச்செய்தியை எவரிடமும் இப்போது பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை” என்று சொன்னான். “ஆம்” என்று வணங்கி பாஷ்பர் வெளியேறினார்.

 

யுயுத்ஸு தன் குடிலிலிருந்து வெளியே வந்து திரௌபதியின் குடில் நோக்கி நடக்கத்தொடங்கினான். பகல் முழுக்க பெய்திருந்த வெயிலால் நிலம் செம்மண் வெந்து மேற்பரப்பு உலர்ந்து பொருக்காடியிருந்தாலும் கால்குறடுகள் அழுந்தியபோது உள்ளிருந்த ஈரமண் புதைந்து மென்தசையென காலுக்கு தன்னை காட்டியது. அது நடப்பதை கடுமையாக்கியது. அவன் நின்று திரும்பி தன்னுடைய காலடிகளை பார்த்தான். போரின் குருதிப்புண் வடுக்களைப்போல் தன் காலடிகள் மண்ணில் பதிந்திருப்பதை வெறித்து நோக்கி சில கணங்கள் நின்றான். பின்னர் எந்த எண்ணமும் எழாமலேயே திரும்பி யுதிஷ்டிரனின் குடில் நோக்கி சென்றான்.

செல்லச் செல்ல தான் செய்யவேண்டியதென்ன என்பதை வகுத்துக்கொண்டான். யுதிஷ்டிரனிடம் நேரடியாக திரௌபதியை அழைத்துச்செல்வதன்றி வேறு வழியில்லை. ஐவரில் திரௌபதியிடம் எப்போதும் பேச வேண்டியவர் அவர்தான். முடிவெடுக்க வேண்டியவரும் அவர் மட்டுமே. அதற்கு நடுவே பிறர் நின்று சொல்லாடுவதில் பொருளில்லை. சென்று சொல் உன் அரசரிடம் என்று திரௌபதி சொன்ன பின்னர் இன்னொரு குரலுக்கு இடமில்லை. இத்தெளிவை வேறெங்கோ தான் அடைந்த பின்னரே தன் கால் நின்றது என்பதையும் திரும்பிய பின்னரே அதை சித்தத்திற்குச் சொல்லி வகுத்துக்கொள்கிறேன் என்பதையும் அவன் உணர்ந்தான்.

யுதிஷ்டிரனின் குடிலில் அவர் குரல் நகைப்போசையுடன் உரக்க கேட்டது. ஊடே புகுந்த அந்தண இளைஞர்கள் சிலர் செம்மொழியில் ஏதோ சொன்னார்கள். வெளியே நின்றிருந்த ஏவலன் தலைவணங்க “அரசரிடம் ஒரு சொல்” என்றான் யுயுத்ஸு. அவன் உள்ளே சென்று வெளிவந்து “வரச்சொல்கிறார்” என்றான். யுயுத்ஸு குறடுகளை அகற்றிவிட்டு மேலாடையை சீர்செய்து உடலை வளைத்து உள்ளே சென்றான். தலைவணங்கி ஓரமாக நின்ற அவனைப் பார்த்து யுதிஷ்டிரன் “வா, நீ வந்த பொழுது நன்று. உன்னிடம் ஒரு கேள்வி. இங்கு சற்று நேரமாகவே அதைத்தான் உசாவிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “ஒருவர் தனக்கு மைந்தரில்லை என்பதற்காக பிற குலத்திலிருந்து ஒரு மைந்தனை ஏற்றுக்கொள்கிறார் அல்லது பிற குலத்தில் அவருக்கு ஒரு மைந்தர் இருக்கிறார் என்று கொள்க! அதன் பின்னர் அவர் தன் குலத்திலேயே மணந்து மைந்தன் ஒருவனை பெறுகிறார். இந்நிலையில் அவருடைய உரிமைகளுக்கும், பட்டங்களுக்கும், உடைமைகளுக்கும், குலக்கடமைகளுக்கும் எவர் வழித்தோன்றலாக முடியும்? நெறிநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை சொல்கின்றன” என்றார்.

யுயுத்ஸு “நானறிந்த நூல்களின்படியே சொல்லமுடியும்” என்றான். “குலஉரிமைகளுக்கும் கடமைகளுக்கும் குலத்தில் பிறந்தவரே தோன்றலாக இயலும். ஆனால் எந்நிலையிலும் குருதியால் மூத்தவரே உடைமைக்கும் பட்டங்களுக்கும் உரிமையாளர்.” யுதிஷ்டிரன் “அதற்கு நூல்களில் திட்டவட்டமான நெறிகள் இல்லை. குடிகள் தோறும் நெறிகள் மாறுகின்றன. அனைத்துக் குடிகளுக்கும் அளிக்கவேண்டிய ஒற்றை வரியாலான நூல்நெறி என்ன என்பதைத்தான் இத்தனை நேரம் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “அனைத்து நூல்களிலும் உள்ள ஒற்றை வரி ஒன்று உண்டு” என்றான் யுயுத்ஸு. “மானுட நெறிகளைவிட தெய்வநெறிகள் மேலானவை. எவர் மூத்தவர் என்பதை முடிவு செய்வது தெய்வநெறி. அதை மீறும் நெறிகள் எதுவும் மானுடரிடம் இருக்கலாகாது. அரசுரிமையும் குடியுரிமையும் உடைமைகளும் அவ்வாறே கைமாற்றப்படுகின்றன. உடைமை என ஒன்றிருக்கும்வரை, முறைமை என ஒன்றிருக்கும்வரை அவ்வாறே ஆகும்.”

யுதிஷ்டிரன் “நன்று, இது உரிய கோணம். இச்சொற்களுக்கு இவ்வாறு பொருள்கொள்ள முடியும் என்று நான் எண்ணியதில்லை. நன்று” என்றபின் “எனில் பிறிதொன்றையும் இங்கே பேசிக்கொண்டோம். நீத்தவர் தனக்கு முறையான குருதிவழி என்று தன் குடிப்பிறந்த இளையோரையே சுட்டிச் சொல்லிவிட்டு சென்றாரென்றால்கூட அதற்கும் அவ்வரியே மேற்கோளாகும். ஏனென்றால் அவரும் மானுடரே. மூத்த மைந்தர் என்பவர் தெய்வத்தால் வகுக்கப்பட்டவர். தெய்வத்தை மீற மானுடருக்கு உரிமையில்லை” என்றார். “நம் மைந்தர்கள் நமக்கு அளிக்கப்படுகிறார்கள், நம்மால் தெரிவுசெய்யப்படுவதில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “நாம் ஒருவனை நம் மைந்தன் என ஏற்கும் தருணமும் மைந்தன் பிறக்கும் தருணமும் ஒன்றே, இரண்டுமே நம்மால் முடிவெடுக்கப்படுவன அல்ல.”

அமைச்சர் சுஃப்ரர் “எந்நிலையில் எவ்வண்ணம் அவர் தன் மைந்தரை தெரிவுசெய்து மைந்தரென்றாக்கினார் என்பது நோக்கப்பட வேண்டும். அது குலநெறிப்படியோ வேத முறைமைப்படியோ அமைந்திருக்குமெனில் அதை மீறும் உரிமை அவருக்கில்லை” என்றார். “எந்நிலையில் அதை அவர் மீற முடியும்?” என்று அந்தண இளைஞன் கேட்டான். “ஏனென்றால் எந்நிலையில் அவன் மீற முடியும் என்றும் நாம் கூறவேண்டும். எந்நிலையிலும் மீற முடியாதென்று ஒரு நெறி இருக்கலாகாது. ஏனெனில் மானுடனின் இயல்புகள் என்பவை எல்லையிலாதவை” என்று இன்னொரு அந்தணர் சொன்னார்.

யுயுத்ஸு “ஐந்து பிறழ்வுநிலைகளை நெறிகள் வகுக்கின்றன. ஒருவர் உளநிலை பிறழ்ந்தவராக இருந்தால், வேதத்தைப் பழித்து புறம்செல்வாரெனில், தன் மைந்தருக்கு அல்லது தன் மூத்தாருக்கு உரிய கடமைகளை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து செய்யாதிருந்தால், அயல்நாட்டுக்குச் சென்று பன்னிரு ஆண்டுகள் திரும்பாமலிருந்தால், முனிவரால் அந்தணரால் முறைப்படி தீச்சொல்லிடப்பட்டு விலக்கப்பட்டால் என ஐந்து. குடிபழிக்கும் பெரும்பிழைகள் என்ன? அவற்றை ஐந்தாக வகுக்கின்றன நூல்கள். அரசனுக்குப் பிழை, அன்னையருக்குப் பிழை, குடிமூத்தாருக்குப் பிழை, சான்றோருக்குப்பிழை, பெண்பழி கொள்ளல்…” என்றான்.

அனைவரும் அமைதியாயினர். சிலகணங்களுக்குப் பின் பெருமூச்சுவிட்டு “பெண்பழி எனில்?” என்றார் யுதிஷ்டிரன். “நூல்களில் விந்தையாக இது வகுக்கப்பட்டுள்ளது. பெண்பழி எனில் என்ன என்பதை பெண்ணே முடிவு செய்யவேண்டும். அது எதுவாகவும் இருக்கலாம். அவையில் எழுந்து ஒரு பெண் தனக்கு பெருந்தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று கூறுவாளெனில் அது பெண்பழி என்றே கொள்ளப்படும். அது பொதுநோக்கில் எத்தனை சிறிதென்றாலும் அவள் அதை பெரும்பழி என உணர்ந்தால் பெரும்பழியேதான்.” யுதிஷ்டிரன் தலையை அசைத்தார். “அவள் பொய் சொன்னால்? வேண்டுமென்றே வஞ்சம் கொண்டு அவள் அவையில் எழுந்து வீண் பழி சுமத்தினால்?” என்று அந்தண இளைஞன் கேட்டான்.

“மூதாதையர் நெறிப்படி அப்படி பொய்ப்பழி சுமத்தப்பட்டாலும் அது பெண்பழியே. அறுதியாக அது பெண்ணின் சொல்லிலேயே நின்றிருக்கிறது” என்றான் யுயுத்ஸு. “இந்த அளவில்லா உரிமையை எவர் பெண்களுக்கு அளித்தார்கள்? இவ்வாறு பார்த்தால் ஒரு பெண் எவர் மேலாயினும் பழி சுமத்தலாம். எவரையும் முற்றழிக்கலாம்” என்றான் அந்தண இளைஞன். “ஆம், நம் பழம்மரபில், குடிமரபில், அரசமரபில் அவ்வாறுதான் உள்ளது. ஆயிரத்திலொன்று அவ்வாறு நிகழவும் கூடும். ஆயினும் நாம் பெண்ணின் அகச்சான்றை நம்பவே தந்தையரால் ஆணையிடப்பட்டிருக்கிறோம். அவையெழுந்து ஒரு பெண் பொய்ப்பழி கூறமாட்டாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அனைத்து நெறிநூல்களும் இங்கு வகுக்கப்பட்டுள்ளன” என்று யுயுத்ஸு சொன்னான்.

யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டு “விந்தையானது இது. ஆனால் இதை நான் இங்கு மட்டுமல்ல எங்குமே பார்க்கிறேன், இளையோனே” என்றார். “நெறிநூல்கள் அறிவார்ந்தவை. விழிமுன் மெய்மை என புறவயமானவை. அனைத்து சொல்லொழுங்குகளையும் தொட்டுத் தொட்டு முன்னெழுகின்றன அவை. ஆனால் அவற்றின் உச்சத்தில் உணர்வு சார்ந்த ஓர் அகஎழுச்சியைச் சென்று தொட்டு அனைத்து சொல்நெறிகளையும் ஒழுங்குகளையும் கைவிட்டுவிட்டு மேலெழுகின்றன” என்றார். “அத்தனை நெறிநூல்களுக்கும் ஆழத்தில் மானுட அகச்சான்றை நம்பும் ஓர் இயல்பே உள்ளது. மானுடன் எந்நிலையிலும் அறம் சார்ந்தே நின்றிருப்பான் என்னும் நம்பிக்கை அது. ஒரு குமுகத்தில் அனைவரும் அறத்தை கைவிடுவார்களெனில், அல்லது பெரும்பான்மையினர் அறத்தை கைவிடுவார்களெனில்கூட, அல்லது அவர்கள் குடியின் சான்றோர் மட்டும் அறத்தை கைவிடுவார்களெனினும்கூட நெறிநூல்களால் ஒன்றும் செய்ய இயலாது. முனிவரை, அந்தணரை, சான்றோரை நம்பியே அறம் நின்றிருக்க இயலும். வகுக்கப்பட்ட அனைத்தும் அவர்களின் மீதான நம்பிக்கையின் மீதே நிலைகொள்கின்றன.”

“ஆம், மெய்தான்” என்று யுயுத்ஸு சொன்னான். அனைத்துச் சொற்களும் அடங்க அவை அமைதியாயிற்று. அது தருணம் என்று உணர்ந்த யுயுத்ஸு தாழ்ந்த குரலில் “தங்களிடம் ஒரு தனிச்சொல், அரசே” என்றான். யுதிஷ்டிரன் நிமிர்ந்து அந்தணரைப் பார்த்து தலைவணங்க அவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். இறுதி அந்தணரும் வெளியே சென்ற பின்னர் யுயுத்ஸு மீண்டும் தலைவணங்கி “இது ஒரு சிறு செய்தி. தாங்கள் இன்றிருக்கும் உளநிலையை மாற்றக்கூடியதல்ல. எனினும்…” என்றான். “சொல்க!” என்று உரைக்கும்போதே யுதிஷ்டிரனின் உளநிலை மாறிவிட்டதை விழிகள் காட்டின. “தாங்கள் அரசியிடம் ஒரு சொல் சொல்லவேண்டும்” என்றான் யுயுத்ஸு. “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவளை நான் சந்திப்பதை நான் முன்னரே வகுத்திருக்கிறேனே?”

“ஆம், அச்சந்திப்பு முறையாக நிகழ்வதற்கு முன் ஒரு சந்திப்பு இது. அப்போது அரசி ஒருவேளை காட்டில் இருக்கலாம். அரசி இருக்கும் உளநிலையை தாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே தங்களைத் தேடி வந்தேன்” என்றான். “ஒரு சொல் கூறுக! அதுபோதும். அதாவது அரசியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் நாளை காலை நீர்க்கடன்கள் தொடங்குவதைப்பற்றி எண்ணலாம்.” யுதிஷ்டிரன் மேலும் விழிகள் கூர்கொள்ள “அவள் என்ன சொல்கிறாள்? நீர்க்கடன்களுக்கு அவள் வரமாட்டேன் என்கிறாளா? நீர்க்கடன்களை ஒத்திப்போடுகிறாளா?” என்றார்.

யுயுத்ஸு “அவ்வாறல்ல…” என்று சொல்ல யுதிஷ்டிரன் கைநீட்டித் தடுத்து “நீர்க்கடன்கள் முதன்மையாக செய்யப்படுவது அவளுடைய மைந்தர்களுக்காக. ஐந்து மைந்தர்கள் மூச்சுவெளியில் நம் கைநீரையும் அன்னத்தையும் காத்து நின்றிருக்கிறார்கள். என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாள் அவள்? நீர்க்கடன்களை நிகழ்த்தலாகாதென்று சொல்வதற்கு அவளுக்கு என்ன உரிமையிருக்கிறது?” என்று பதறும் குரலில் கூவினார். “இச்சடங்குகள் எதிலும் பெண்களுக்கு எப்பங்கும் இல்லை என்பதே தொல்நெறி. உண்மையில் அவர்கள் நீர்முனைக்கு வரவேண்டியதே இல்லை. நீர்க்கடன் ஆற்றுபவர்கள் இல்லத்திலிருந்து கிளம்புகையில் ஒரு சொல் அவர்களிடமிருந்து பெறவேண்டும் என்று மட்டும்தான் மரபுகள் சொல்லுகின்றன.”

“அச்சொல்லை பெறும்பொருட்டு மட்டுமே இன்று அவரிடம் பேசப்போகிறோம், அரசே” என்றான் யுயுத்ஸு. “நாளை நீர்க்கடன்கள் முடிக்கும் வரையில் அவர் நீரும் அன்னமும் அருந்தாது நோன்பிருக்கவேண்டும். அதற்கப்பால் அவர் மைந்தர்களுக்காக செய்ய ஏதும் இல்லை.” யுதிஷ்டிரன் “ஆம், அதற்கென்ன தடை அவளுக்கு?” என்றார். “தாங்கள் அதை அவரிடமே பேசலாம்” என்றான் யுயுத்ஸு. சீற்றத்துடன் “பேசுகிறேன்!” என்றபடி யுதிஷ்டிரன் எழுந்துகொண்டார். திரும்பிப் பார்த்து “யாரங்கே?” என்றார். ஏவலன் வந்தவுடன் “என் மேலாடையை எடு” என்றார்.

யுயுத்ஸு கணம் கணமாக யுதிஷ்டிரன் சினம்கொண்டு மேலே போவதை அந்த அசைவுகள் வழியாக பார்த்தான். அதை அவன் எதிர்பார்த்திருந்தான். அந்த உவகைத் தருணம் கலையும்போது எழும் சீற்றம் மட்டுமல்ல அது. உவகைக்கு அடியில் ஓர் ஐயம் இருந்திருக்கும். எதையோ எண்ணி ஒரு பதற்றம் இருந்திருக்கும். அந்த உவகை எவ்வண்ணமோ கலையும் என்றே எண்ணியிருந்திருப்பார்கள். அதை கலைக்கும் பொருட்டு எழும் முதல் துளி என்பது அவர்கள் அஞ்சுவதும், வெறுப்பதும், அகல முயல்வதுமான அனைத்திற்கும் அடையாளமாக எழுவது. அதன் வடிவென வருபவர் எவரென்றாலும் அவர் மீது பெருஞ்சினம் கொள்வது இயல்பு.

யுதிஷ்டிரன் “தேர் ஒருங்குக! இளையோரை அழைத்து நான்…” என்று சொல்ல யுயுத்ஸு உள்ளே புகுந்து “இளையோரை அவர் இப்போது பார்க்கவேண்டியதில்லை. தாங்கள் மட்டுமே பார்ப்பது உகந்தது” என்றான். “அதை நீ சொல்கிறாயா? நான் எவரை எப்போது சந்திக்கவேண்டும் என்பதை நீயா சொல்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் கூவினார். யுயுத்ஸு “ஆம், இத்தருணத்தில் நானேதான் சொல்கிறேன். இவ்வுணர்வுகளுக்கு வெளியே நின்று இவற்றை ஆள்கிறேன். தாங்கள் மட்டும் அரசியை சந்தித்தால் போதுமானது” என்றான். யுதிஷ்டிரன் விழி தாழ்த்தி உடல் தளர்ந்து “ஆம், அவ்வாறே” என்றபின் மேலாடையை ஏவலனிடம் வாங்கி தன் தோளிலிட்டபடி வெளியே கிளம்பினார்.

முற்றத்தில் தயங்கி நின்று தன் தலையைத் தொட்டு “எனது தலைப்பாகை” என்றார். யுயுத்ஸு “தலைப்பாகையின்றி தாங்கள் செல்லலாம்” என்றான். “இது அரசமுறை பயணம்… முறைமைச்சொல் கேட்கப் போகிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “அல்ல, தங்கள் துணைவியை பார்க்கச் செல்கிறீர்கள். மைந்தரை இழந்த ஓர் அன்னையை பார்க்கச் செல்கிறீர்கள்” என்று யுயுத்ஸு மீண்டும் சொன்னான். “இவை அனைத்தையும் நீ வகுக்கிறாயா?” என்றார் யுதிஷ்டிரன். “இவை நிகழ்கின்றன. நான் சற்றேனும் இவற்றை நடத்த முடியுமா என்று பார்க்கிறேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “நன்று! அவ்வாறே ஆகட்டும்” என்றபின் நீண்ட பெருமூச்சுடன் “தேர் ஒருங்குக!” என்றார் யுதிஷ்டிரன்.

தொடர்புடைய பதிவுகள்


வெக்கை பற்றி…

$
0
0

வெக்கை வாங்க

 

ஜெமோ,

 

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு கடிதம். அமெரிக்க பயணம், இடைவிடாத வெண்முரசு மற்றும் கிடைக்கும் இடைவெளியில் சினிமா வேலை என்று பரபரத்துக் கொண்டிருக்கும் உங்களுடைய செயலூக்கம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்.

 

சமீபத்தில் படித்த வெக்கை நாவல் பற்றிய என்னுடைய அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

 

https://muthusitharal.com/2019/10/12/வெக்கை-பற்றி/

 

அன்புடன்

முத்து

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் –காடு விமர்சனம்

$
0
0

 

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு வளரும் கிரி தன்னை குட்டப்பனாக நினைக்கிறான். அதுஒரு எல்லை, மற்றொரு எல்லையில் அய்யர் இருக்கிறார். அவரது இலக்கிய ரசனை, எப்போதும் அவரிடமிருக்கும் உச்சநிலை, வேலைமுடிந்ததும் இடங்கொள்ளும் வனப்பிரஸ்தம், என்று மற்றொரு எல்லையை நோக்கி செல்ல எத்தனித்துக் கொண்டேயிருக்கிறான். நீலியும், வேணியும், அவன் அம்மாவும் அவனை அலைக்கழிக்க விடுகிறார்கள். வாழ்வின் எந்தப்பக்கத்திற்கும் செல்ல அவனால் முடியவில்லை. மாறாக அவன் மாமா சதாசிவத்தின் வழிசென்று காணாமல் ஆகிறான்.

நீர்நிறைந்த ஆற்றின் மேல்லோட்டத்தில் சில சலனங்ககளும் சிறு கொந்தளிப்புகளும் மட்டுமே தெரியும். காற்றின் வேகத்தில் சில சமயம் மேலே அதன் சிலிர்ப்புகளை காணமுடியும். கீழே அகண்ட படித்துறைகள், பெரிய நடு மண்டபங்கள், புதர் செடிகள், மரங்கள், கோரைகள், பாறைகள் எல்லாம் மறைந்திருக்கும். வெளியிலிருந்து பார்க்கும் போது அதன் இருப்பை உணர்ந்துக் கொள்ள முடியாது. காடு நாவலில் கிரதரன் நாயரின் முழு வாழ்வை மட்டும் சொல்லவில்லை, அதில் ஒளிந்திருக்கும் குட்டப்பனின் வாழ்வும், இஞ்சினியர் அய்யரின் வாழ்வும், நீலியின் வாழ்வும், வேணியின் வாழ்வும் சொல்லப்படுகிறது. நமக்கு அதை புரிந்துக் கொள்வதற்கு சற்று காலம் தேவைப்படுகிறது.

அறிந்தே செய்யக்கூடிய கீழ்மையும் முற்றும் உணரா அதிசயம்போல ஈடேற்றமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது காலம். எதையும் அறியமுடியாத பரபரப்பில் அடித்துச் செல்லப்படுகிறோம். எழுபது வயது கிரிதரன் இளவயதிலிருந்து தன்னை முழுவதும் கண்டடையும் தருணங்களை அவன் விட்டுவிடாமல் நினைவில் வைத்திருக்கிறான். 42 வயதுவரை அவன் அடைந்த உச்சங்களை, ஜென்ம ஈடேற்றங்களை கட்வெட்டுகள் போல நினைவிலிருந்து எடுத்துவிடமுடிகிறது. அதற்குபின் 30 ஆண்டுகள் அவன் அடைந்த தோல்விகள், சோகங்கள், வீழ்ச்சிகள், அற்ப கீழ்மைகள் எல்லாம் புகைமண்டலங்களாக கடந்து சென்றுவிடுகின்றன. மீண்டும் அவன் பெட்டிக்கடை வைத்து பிழைக்கும்போது அடையும் சின்ன வெற்றிகள் நினைவில் இருக்கின்றன.

இயற்கை தன்னை என்றும் அழித்துக் கொள்ள நினைப்பதில்லை. மாறாக பெரும்உருவாக விரிந்து வளர்ந்து செல்லவே நினைக்கிறது. ஒவ்வொரு துளியிலும் வளர்ச்சி என்ன என்பதை காண துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் அழிவிலிருந்து தன்னை மறுஆக்கம் செய்து கொள்கிறது. அதன்முன் மண்டியிட்டு தன்னை காத்துக்கொள்ள துடிக்கிறான் மனிதன். இயற்கையாக மாறும் ஒருவனே இயற்கையின் ஒன்றான காட்டில் வாழமுடியும், சாகவும் முடியும். குட்டப்பன் தன்னை யானை தாக்கி சாகவேண்டும் என நினைக்கிறான். அதுவே ஜென்ம ஈடேற்றமாக இருக்கும் என நினைக்கிறான். அவ்வாறே இறக்கிறான். அவனுடன் வாழ்ந்த காலத்தை கிரியால் மறக்க முடிவதும் இல்லை. அவன் மகனை சில காலம் கழித்து சந்திக்கும்போது மகனுக்கு தந்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. கிரி அவனிடன் குட்டப்பனின் வாழ்வை கூறுகிறான். அவன் மகன் அடையும் சிறு மனஎழுச்சியின் தன் ஜென்மம் ஈடேறுவதாக மகிழ்கிறான். அதாவது நீ அவன் மகனில்லை, நான் தான் அவனை அறிந்த உண்மையான மகன் என்பதுபோல.

***

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் பிற நாவல்கள் இந்நாவலின் தாக்கம் தெரிகிறது. குறிப்பாக இரவு, கன்னிநிலம் போன்ற நாவல்கள் காடு நாவலின் சில பகுதிகள் தான் என்று சொல்லிவிடலாம். காடுவில் வரும் நீலியும், இரவில் வரும் நீலியும் ஒரே பெண்கள் தாம். புறத்தாலே போ சாத்தானே கட்டுரையும் இந்நாவலில் ‘இடம்பெறுகிறது’. மிக நெருக்கமாக உணர்ந்த முதல்வாசிப்பு இடங்களெல்லாம் இடம்வாசிப்பில் அவ்வளவாக கவரவில்லை, ஆனால் குட்டப்பனும், இஞ்சினியர் அய்யர், குரிசு, சினேகம்மை மிக நெருக்கமான நண்பர்களாக தோன்றுகிறார்கள். அதில் வரும் மிளாவும் தேவாங்கும் மிக நெருக்கமானவைகள் தாம். மிகச் சிறிய பாத்திரமான தேவசகாய நாடாரும், பார்க்கில் சந்திக்கும் ஒரு நாடாரும்கூட நெருக்கமாக உணர முடிகிறது.

மிக குறுகிய காலத்தில் எழுதிய நாவல் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெ. ஆனால் பலகாலம் எழுதியிருக்க வேண்டும் என்கிற பிரம்மை ஏற்படுகிறது நமக்கு? காரணம் அதன் உள்மடிப்புகள். சின்னச் சின்ன விஷயங்கள்கூட புனைவின் வேகத்தில் அழகாக அந்தந்த இடத்தில் அமர்ந்துவிடுகிறது. மிளாவை தொடர்ந்து கவனித்து அதன் வாழ்க்கையை புரிந்துக் கொள்ள நினைக்கும் கிரிக்கு, அதுவே உணவாக கடைசியில் (அவனுக்கு தெரியாமல்) அமையும் என நினைத்திருக்க மாட்டான்.

 

மிக நெருக்கமாக வாழும் சமவெளிகளில் மனிதர்கள் அப்பட்டமான சலிப்பை அடைகிறார்கள். பொருளைத் தேடி சுற்றும் சமயங்களிலெல்லாம் உறைக்காத ஒன்று தான், ஆன்மீகம், அரசியல், அதிகாரம் எல்லாவற்றையும் அடைய துடிப்பதில் இருக்கும் வேகமும், வெறுப்புமற்று, காட்டில் யாருமற்ற நிலையில் வாழும்போது அடைகிறான்.

ஒரே வாழ்வின் தொடர்பற்ற இருவேறு பக்கங்களை மீண்டும் மீண்டும் சொல்கிறது காடு. சினேகம்மையை அடைய நினைக்கும் கிரி, மாமி அருவருப்பூட்டுகிறாள். நீலி இருக்கும் உலகில்தான் வேணியும் வருகிறாள். குட்டப்பனும் அய்யரும் இருக்கும் இடத்தில் சதாசிவமும் மேனனும் வருகிறார்கள். யேசுவை தேடும் குரிசுவின் பக்கத்தில்தான் இந்திரியங்களில் திளைக்கும் இரட்டையர்கள் இருக்கிறார்கள். என்ன மாதிரியான வாழ்க்கை நமக்கு? எதைச் தேடிச் செல்கிறோமே அதன் எதிரிடைதானே கிடைக்கிறது.

வாழ்க்கைப் பயணத்தில் உச்சங்கள் மட்டுமே அமைவதில்லை, தோல்வியும் கீழ்மையும் கூடவே வருகிறது. எந்த இழிவும் அவன் கைகளிலேயே இல்லை. ஆனால் வாழ்க்கை வசீகரிக்கவே செய்கிறது. அதை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது, காடு போல.

 

கே.ஜே.அசோக்குமார்

காடு இரு கடிதங்கள்

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு- வாசிப்பனுபவம்

கன்யாகுமரியும் காடும்

காடு-முடிவிலாக் கற்பனை

காடு -கடிதம்

காடும் மழையும்

காடு- கடிதங்கள்

காடும் யானையும்

கன்யாகுமரியும் காடும்

காடும் குறிஞ்சியும்

காடு- ஒரு கடிதம்

காடு– ஒரு கடிதம்

காடு – பிரசன்னா

காடு -ஒரு பார்வை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கன்னிநிலம் பற்றி…

$
0
0

 

கன்னிநிலம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழில் நவீன இலக்கியத்தில் நான் வாசித்த முதல் காதல் கதை கன்னி நிலம்தான். நவீனம் கூரான கத்தியொன்றால் உறவை அறுத்து அறுத்து அதிலும் வலுவற்ற புண்ணாகிப்போன ஒரே இடத்தை அறுத்து அறுத்து ‘ஏதுமில்லை’ என கைவிரிக்கிறது. சோர்வின் பெருமழை பெய்துகொண்டே இருக்கிறது. கொஞ்ச நாள் முன்பு ஸ்ரீரங்க வின் முதலில்லாததும் முடிவில்லாததும் வாசித்தேன். மீண்டும் கூர் கத்திதான். காதலும் காமமும் திசையறியாது சுற்றி சுற்றி சோர்வதன் எழுவதன் காட்சி. எழுச்சியின் சித்திரத்தை மீறித் தொனிப்பது சோர்வின் சித்திரம்தான். கன்னிநிலத்தில் எழுச்சியின் சித்திரம்.

அந்த ஒரு கணத்தை யாரும் கண்டு சொல்ல முடியாது. ‘கவிதை சொல்லாக்கமுடியாத ஒன்றை சொல்ல முனைகையில் அது சொல்லின் நேரடி அர்த்தத்தைக் கடந்த நுன்மொழியொன்றை தனக்காக உருவாக்கிக்கொள்கிறது’ – ஊட்டியில் இதை நீங்கள் சொன்னபோது, சொல்லாக்க முடியாத உணர்வு என்றதுமே காதல் பித்தின் கணங்களைத்தான் சென்றடைந்தேன்.  தொடர்ந்து ஜென் பிரபஞ்ச விரிவைச் சொல்ல கவிதைக்குள்ளேயே வருவதாய் கூறிச்சென்றீர்கள். சொல்லாக்க முடியாத உணர்வின் வரிசையில் காதலுக்கு இடமுண்டு. இதையே நெல்லையப்பனும் பி த் து ப் பிடித்து கூப்பாடிட்டுச் சொல்வான். பூமியில் ஆன்மீகத்துக்கு நெருக்கமாய் வருவது காதலுணர்வுதான் என்பதாக.

காதலின் உச்சமான பொழுதுகள் காதலை சொல்லும்முன் அடுத்து பிரிந்தபின் அல்லது பிரிவின்போது. சொல்வதற்கு முன்னான பித்தெழும் காலம் (காடு நாவலில் உண்டு)

கன்னி நிலத்தில் இல்லை.

‘நீ வந்து சென்றதன் சுவடேயில்லை ஆனாலும் வந்துவிட்டிருக்கிறது ஒரு வெறுமை’ மனுஷின் வரிகள்.
எந்த சுவடுமுன்றி ஒரு இரவில் அவர்களுக்குள் வந்துவிடுகிறது காதல். அர்சுனன் சித்ராங்கதையின் நினைவாகக் கொண்டு சென்ற மதூகப் பூவும் அதன் மணமும் ஓயாத இருப்பாக நெல்லையப்பனை பின் தொடர்கிறது. மதூகப்பூவைத் தேடிசென்று காண்கையிலதான் அவர்களின் காதல் மலர்ந்துகொள்கிறது. அவ்வளவு எளிதல்ல!! ராணுவம் சூழ்ந்து கொள்கிறது. அடுத்து ஊஞ்சலின் மறு எல்லை.

தவித்துக்கொண்டு வாசித்தேன். ஆனால் உள்ளே ஒருவன் விழி த் து க் கொண்டான்… எங்கே கொண்டு செல்லப்போகிறார் கதையை… வழக்காமான பிரிவா? அதுதான் தெரியுமே.. ஒரே அங்கலாய்ப்பு. ராணுவம் சிதைக்கிறது நெல்லையப்பனை. நாயர் வந்து ‘அந்த ஒரு சாப்டர் முடிந்துவிட்டது. தாண்டிப் போயாகணும்’ என்பான். புயலிலே ஒரு தோனியின் கடைசி அத்யாயம் நினைவுக்கு வந்தது. அந்த வியாபாரி அவ்வளவு கராராய் காதல் கணக்கை முடித்து வைப்பார். அதேபோல் நாயர் பேச்சும்  மேஜரின் பேச்சும் ‘ப்ளட்டோனிக் லவ்…புல் ஷிட்’. ஆனால் நெல்லையப்பன் பாக்கெட்டில் மதூகப்பூ. நாயர் கடைசியாக ஜ்வாலமுகியை சந்திக்க வாய்ப்பளிப்பான் பேசவே கூடாது என்ற கட்டுப்பாடுடன். அந்த சந்திப்பும் நெல்லையப்பன் அவள் செல்வதை கண்களால் பார்க்க வேண்டும்

என்பதற்காக. நெல்லையப்பன் கண்ணாடிச்

சுவரின் ஒருபக்கமிருந்து பார் த் திரு ப் பா ன். சுடர் நீரில் மிதப்பது போல் இரங்கி காரை நோக்கிச் செல்லும் ஜ்வாலமுகி  கணத்தில் பித்துபோல் ஓடிவந்து கண்ணாடியில் மோதிக்கொள்வாள். நெற்றியில் இரத்தம் குங்குமம் போல் கசியும் ஏனோ ‘மலரினும் மெல்லிதே காமம்’ எனும் வரிகள் நினைவுக்கு வந்தது.

 

இந்தப்புள்ளியில் காதலின் உலகியல் சாத்தியங்களை கூறி முடித்துவிடுகிறது கதை. துவக்கம் சமூகம் மூக்கை நுழைத்தல் உக்கிரமான் பிரிவு. ஆனால் கதை நீள்கிறது உலகியல் தளமொன்றை கடந்த ஒன்றை நோக்கி. ராணுவம் துரத்தி வருகிறது காதலர்கள் இருவரும் உயிரை உந்திக்கொண்டு ஓடுகிறார்கள் இந்திய எல்லைக்கும் மியான்மர் எல்லைக்கும் நடுவிலிருக்கும் எந்த தேசத்துக்கும் சொந்தமில்லாத ஆதிநிலமான நோ மேன்ஸ் லேன்டிற்கு.
கனக்கசிதமான த்ரில்லரின் அம்சங்களோடு கடைசிப் பகுதியின் சேஸ் அமைந்துள்ளது. கடைசியில் அவர்கள் சென்றடைவது மனிதர்களின் குண்டுகள் நுழையமுடியாத மதூகவனத்திற்கு- நோ மேன்ஸ் லேன்ட். காதலர்கள் ஒட்டிக்கொண்டு வெகுதூரம் செல்கிறார்கள் மதூகவனத்தில். மதூகவனம் கவிதையின் நிலம் என்று தோன்றியது. கவிதை மட்டுமே நம்மை அங்கு இட்டுச் செல்ல முடியும் எனப்படுகிறது.

 

அவன் கேட்கிறான் ‘இன்று முழுநிலவு நாளா?’

”சரியான மக்கு இந்த நிலத்தில் என்றுமே பௌர்ணமிதான். இதுகூடத்தெரியாதா?”
என்கிறாள் அவள்.

நிலவு தேயாத மதூகப்பூக்கள் நிறைந்த ஒரு நிலம். அதை நோக்கியே அழைக்கிறது கவிதையும் கலையும் ஒரு சிறுகுருவியாய் மானுடத்தின் சங்கிலிகள் மீதமர்ந்து.மீண்டும் தேவதேவனின் இவ்வரிகளை சென்றடைகிறேன்.

 

மர்மமான துக்க இருள் நடுவே
ஒரு காட்டுச் செடி
தூய்மையின் வண்ணத்துடன்
பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர்
ஆக மெல்லிய அதன் மணக்கைகள்
தட்டுகின்றன எல்லோர் கதவையும்

 

அன்புடன்,

 

ஸ்ரீநிவாஸ்

திருவாரூர்

கன்னிநிலம் -கடிதம்

கன்னிநிலம் -கடிதம்
கன்னிநிலம் முடிவு – கடிதம்
கன்னிநிலம் கடிதங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெட்டீருவேன்!

$
0
0

!

ரயில் பயணத்தில் நான் வெறும் செவிகள். இம்முறை செவிகளை அறைந்து ஈ பறக்கும் ஓசையெழ ஒரு கூச்சல் அருகே எழுந்த்து. “லே தாளி, வெட்டீருவேன். வெட்டிப் பொலிபோட்டிருவேன்…என்னங்கியே? எனக்க கிட்ட சோலிய காட்டுதியா? ஏல சரக்கு வருமா? வராதா? ஏல வருமா வராதா? அதைச்சொல்லு. என்னது? பின்ன என்ன மசுத்துக்குலே  செக்க பேங்கிலே போட்டே? ஏலே என்ன்ன்னுலே நெனைச்சே? வெட்டீருவேன்! வெட்டி சரிச்சிருவேன். ஆமா” மூச்சுவாங்க செல்பேசியை அமுக்கிவிட்டு “வெளையாடுதானுவ”

 

கருப்பான, குண்டான, முடியை ஒட்டவெட்டிய, மீசை இல்லாத அண்ணாச்சி தொப்பைமேல் சரிந்த வேட்டியைச் சீரமைத்துக்கொண்டார். எதிரில் ஆச்சிக்கு எந்த சலனமும் இல்ல. “சுருளுசப்பாத்திய எடுக்கட்டா? இல்ல ரயிலு எடுத்தபிறவு திங்குதியளா?” அவர் எரிச்சலுடன் “இருடி… இவ ஒருத்தி. அவன் நூறுமூட்டைய ஏத்திவிடுதேன்னு சொல்லிட்டு இப்பம் வெளையாடுதான். என்னை ஆளு யாருண்ணு தெரியல்ல அவனுக்கு..”

 

ஆச்சி நல்ல களையாக , இணைக்குண்டாக, பெரிய மூக்குத்தி ,எருமைவடச் சங்கிலி, காப்புகள் கைவளையல்களுடன் கம்பீரமாக இருந்தாள். வடகோடு வாழ்ந்தென்ன தென்கோடு சரிந்தென்ன என்னும் மட்டில் ஒரு வான்பிறை நிலை. ஏகப்பட்ட பைகள், பெட்டிகள் , பொட்டலங்கள். அவற்றைச் சீரமைத்தாள். வெள்ளித்தாளில் சுற்றப்பட்ட சப்பாத்திக் கோழிக்கறிகள். ஒவ்வொன்றையாக எடுத்து திரும்ப வைத்து நிமிர்ந்தபோது இளவியர்வையுடன் மூச்சு.

 

அண்ணாச்சி மீண்டும் செல்போனில் சீறினார். “எளவு என்னை தாலியறுக்கதுக்காகவே வந்திருக்கியளாலே? ஏலே சரக்கு இண்ணைக்கு வந்திரும்னு சொன்னேனே…. உனக்க அப்பனாலே வேர்ஹவுஸ தேடி தெறந்துவைப்பான்? லே, நாளைக்கு வாறேன். அந்தால ஒவ்வொருத்தனையா வெட்டி போட்டிருவேன். எனக்கு முன்னும் பின்னும் பாக்கிறதுக்கில்ல…வெறிவந்தா நான் மனுசனில்ல… லே வெட்டீருவேன்ல… வெட்டிப்போட்டுட்டு நான் போயி செயிலிலே இருந்துபோடுவேன்… வக்காளி, எனக்க சோத்த தின்னுட்டு எனக்கு ஆப்பு வைக்குதியளா?”

 

”இவனுகளை வெட்டாம தீராது… எளவெடுத்த தாயோளிய” என்றபடி மீண்டும் ஒரு அழைப்பு. “என்னண்ணாச்சி சொல்லுதியா? வருமா வராதா? வந்தாகணும். செக்கு குடுத்திருக்குல்லா? முளுச்செக்கு குடுக்கதுக்கு நான் என்ன சுப்பக்கூதியானா? ஆமா, வருவேன். வந்து கேப்பேன். செக்கு வாங்கின கையை வெட்டுவேன்.. வெட்டுவேன்னாக்க வெட்டுவேன்.. என்னான்னு நினைச்சிய? எனக்கு முன்னும்பின்னும் இல்ல… எரிதீயிலேயாக்கும் நான் நின்னிட்டிருக்கது.. . நான் வேற ஆளு, பாத்துக்கிடுங்க… ஏறி வெட்டிருவேன்…ஆமா வெட்டிப்போட்டிருவேன்…வெளையாடாதீக”

 

மூச்சுவாங்கலுடன் ஆச்சியிடம் “நாய்கள வெட்டாம விடப்பிடாது. பைசா வேங்குறப்ப தெரியுதுல்லா” ஆச்சி “சுருளு எடுக்கட்டா?” அண்ணாச்சி வெடித்தார். “இவ ஆருட்டி, எப்ப பாத்தாலும் சுருளு எடுக்கட்டா? சுருளு உனக்க அம்மைக்க…” அடக்கிக்கொண்டு மூச்சுவாங்கி “செரி எடு…பசிக்குதுல்லா?” சுருள் சப்பாத்தியை கடித்தபடி மீண்டும் அழைப்பு. “ஏலே நாராயணா? பேங்கிலே இருந்து கூப்பிடாகளா? என்னது, ஆறுமட்டம் கூப்பிட்டாகளா? நீ ஏன் சொல்லல்ல? ஏலே நீ ஏம்லே என்னைய விளிக்கல்ல? அதைச்சொல்லுலே. நான் இந்தால போனை களுத்திலே போட்டுட்டு பின்ன மசுத்துகதுக்காலே இருக்கே? வெட்டிப்பொலி போட்டாத்தான்லே நீயெல்லாம் உருப்படுவே”

 

மூச்சுவாங்கல். தனக்குத்தானே வசைகள். “இந்த நாயிகளை வச்சு ஓரியாடுத என்னையச் சொல்லணும்… ஒண்ணு சொன்னா ஒம்போது செய்வான். சொன்னதைச் செய்யமாட்டான்… எளவெடுத்தவனுக” மீண்டும் செல்பேசி, “ஏலே மாரிமுத்து,குமாரசாமி வந்தானாலே? ஏலே குமாரசாமிலே… அந்த நாயி வந்தா சொல்லு. அவன தேடிவந்து வெட்டுவேன்னுட்டு… என்னாண்ணு நினைக்கான்? அவன் ஏம்லே வரல்லே? திங்கக்கெளம கணக்கு தீக்குததா சொன்ன நாயில்லாலே அவன்? அவனையெல்லாம் வெட்டாம விடுகது தப்பு…. சவத்தெளவுக்கு தலை கொளுத்து களுத்துலே நிக்கல்லியோ?”

 

நான் படுக்கையை விரித்து படுத்துக்கொள்ளும்போதும் “வெட்டிப்போடுவேன்!” கேட்டுக்கொண்டிருந்தது. “வெட்டீருவேன்! வெட்டீருவேன்!” என்னது என்னையா சொல்கிறார்? இல்லை, போனில்தான். நான் தான் கொஞ்சம் கண்ணயர்ந்திருக்கிறேன். மீண்டும் என் கனவுக்குள் வந்து “வெட்டி நாறடிச்சிருவேன். ஏலே பாக்கி எங்கேலே?” வெண்முரசா? அதன் பாக்கியைத்தான் எழுதி வலையேற்றிவிட்டேனே. அழிந்துவிட்டதா? இல்லை இது வேறு. அண்ணாச்சி எங்கே வெண்முரசு வாசிக்கப்போகிறார்? “கொன்னிருவேன்… சொன்னா செய்யுதவனாக்கும் நான்…. பொளந்திருவேன். வெட்டிப்பொளந்திருவேன்!”

 

காலையில் அண்ணாச்சி கத்திக்கொண்டிருக்க நான் விழிப்படைந்தேன். “ஏலே நாங்குனேரியிலே வண்டி அஞ்சுநிமிட் நிக்கும்…நீ ரெசீதும் வவுச்சரும் கொண்டாந்து குடுக்கே… இல்லேண்ணா பின்னே நீ இல்ல பாத்துக்கோ…. உன்னாணை வந்து வெட்டுவேன். வெட்டிச்சாய்ச்சுப் போடுவேன்…. அருவாள தூக்குத கையாக்கும்…  ஆருட்டே வெளையாடுதே? நான்குநேரிலே நீ வராம இருந்து பாரு…ஆம்புளைன்னா வராம இருந்து பாருலே…. ஏலே ஆம்புளைன்னா வராம இருந்து பாருலே… ரெசீதும் வவுச்சருமா வந்து நிக்கலேண்ணா உன் தலை மண்ணிலே…. என்னாண்ணு நினைக்கே? இப்ப சொல்லுதேன், ஏலே இப்ப சொல்லுதேன், உனக்கு தைரியம் இருந்தாக்கா நீ நான்குநேரிக்கு வராம இருந்து பாரு. ஏலே நீ வரேல்லண்ணா உனக்க பிள்ளையளுக்கு அப்பன் இல்லேலே”

 

நான் செல்பேசி சார்ஜ் போடும்போது சிரித்தபடி “என்னண்ணாச்சி, தெனம் பத்து முப்பது தலை உருளும்போல…” என்றேன். ஆச்சி பக் என்று சிரித்துவிட்டாள். அவளை திரும்பி முறைத்துவிட்டு “அதை என்னத்துக்கு கேக்குதியோ? ஒரு தொளிலு செய்ய முடியுதா? என்ன சொன்னாலும் கேக்கமாட்டான். இங்க நாலு ஆளை வச்சு வேலைசெய்யுகது மாதிரி சீண்டிரம்புடிச்ச பொளைப்பு வேற இல்ல. வருவேன்னு சொல்லுவான், வரமாட்டான். தாறேன்னு சத்தியம் செய்வான், நான் சொன்னேனா அண்ணாச்சீம்பான். குடுத்த காச திரும்பி வாங்குததுக்கு பெருமாள்கிட்ட மோட்சத்த வாங்கிப்புடலாம்….” ஆச்சி “தொளிலு நடக்குதுல்லா?” என்றாள். “உனக்கு என்னட்டி தெரியும்? புருசன் செத்து சுண்ணாம்பாகி பணம் கொண்டு வந்தா வச்சு திம்பே…. வாய நீட்டாதே. தெச்சுப்புடுவேன் தெச்சு”

 

ஆச்சி “எனக்க அய்யாவுக்க கடையாக்கும் இவுக பாக்குதது” என்றாள். “ஆமா , அந்த மகராசனாக்கும் நமக்கு வெளக்கேத்தினது. அவரு இருந்த காலம் வேறேல்லா? அப்பம் வாக்குக்கு வெலையிருந்தது. இப்பம் வாக்குண்ணா பளைய சாக்குல்லா? நான் கெடந்து சாவணும்…ஒருத்தனையும் விடப்பிடாது. பத்தாள வெட்டிச்சாய்ச்சாத்தான் உருப்படுவானுக… என்னங்கிறீக?”

 

நான் புன்னகைத்தேன். “இப்பம் பாத்தேளா? நான் குடுத்த சரக்கு, அதுக்கு ரசீது கேட்டா ஞமஞமங்கியான் நான்குநேரிக்காரன். கோர்ட்டுக்கு  டாக்குமெண்டா கொண்டுபோகணும். அங்க வக்கீலு நாக்கூச நாறவர்த்தை சொல்லுதான்… அதான் கொண்டு வான்னு சொல்லுதேன். வரமாட்டான். கண்டீசனா வரமாட்டான்… பாருங்க.” நான் “அப்படியா?” என்றேன். “இவனுகளுக்க அப்பனை தெரியும்லா நமக்கு? நமக்கு நாலு தலைமுறையா கமீசன் ஏவாரமாக்கும்… ”

 

நான்குநேரி. அவர் வாசலில் கம்பியை பிடித்தபடி நின்றார். பின்னால் நான். அவர் கண்களால் ரயில்நிலையத்தை துழாவ நான் பதற்றமாக நகம் கடித்துக்கொண்டிருந்தேன். ரயில் ஊதிக்கிளம்ப, அண்ணாச்சி என்னிடம் வெற்றிப்பெருமிதத்துடன் திரும்பி “சொன்னேம்லா? பாருங்க, ஆளு இல்ல. வரமாட்டானுக” என்றார்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33

$
0
0

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 14

திரௌபதியின் குடில் அருகே சென்றபோது யுதிஷ்டிரனின் தேர் தயங்கத்தொடங்கியது. அவர் தேரை ஓட்டவில்லை என்றாலும் தேரில் அவருடைய நடைதளர்வு தெரிந்தது. ஊர்பவரின் உள்ளத்தை தேர் பிரதிபலிப்பதை யுயுத்ஸு முன்னரும் கண்டிருந்தான். குடில் முற்றத்தில் தேர் நின்று சற்று நேரமாகியும் யுதிஷ்டிரன் அதிலிருந்து இறங்கவில்லை. தேருக்குப் பின்னால் வந்து புரவியை நிறுத்தி இறங்கி அதன் கழுத்தைத் தட்டியபடி யுயுத்ஸு காத்து நின்றான். யுதிஷ்டிரன் திரை விலக்கி “இங்கு அரசி இருக்கிறாளா?” என்றார். “ஆம் அரசே, இங்குதான் இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு.

“அவள் எந்நிலையில் இருக்கிறாள் என்று சென்று பார்த்துவிட்டு வந்து கூறுக!” என்றார். யுயுத்ஸு “அரசே, அவர் இங்கு இருக்கிறார். தாங்கள் வருவீர்கள் என்றும் அறிந்திருக்கிறார். ஆகவேதான் வாயிலில் பணிப்பெண் நின்றிருக்கிறாள். தாங்கள் சென்று சந்தித்து கூறுவனவற்றைக் கூறி அவர் சொற்களையும் கேட்டு வரலாம்” என்றான். யுதிஷ்டிரன் அவன் முகத்தையே சில கணங்கள் நோக்கிய பின்னர் “சில தருணங்களில் உன்னுடைய உறுதி எனக்கு ஒவ்வாமையை அளிக்கிறது. நீ என்னை எவ்வாறு மதிப்பிடுகிறாய் என்ற ஐயம்கூட ஏற்படுகிறது” என்றார். யுயுத்ஸு அதற்கு மறுமொழி கூறவில்லை. யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “அவளை எண்ணி நான் அஞ்சுகிறேன் என்று எண்ணுகிறாயா? அல்லது அவளுக்கு முன் பணிந்துவிடுவேன் என்று கருதுகிறாயா?” என்றார்.

அவர் குரலில் ஒலித்த மிகை அவனை சலிப்புறச் செய்தாலும் யுயுத்ஸு அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “நான் அரசன்! என் வினாவுக்கு முன் மறுமொழி சொல்லாமலிருக்க எவருக்கும் உரிமையில்லை” என்றார் யுதிஷ்டிரன். “உங்களை இத்தருணத்தில் மூத்தவர் என்றே எண்ணுகிறேன், அரசர் என்று அல்ல” என்று யுயுத்ஸு சொன்னான். மேலும் சீற்றத்துடன் ஏதோ கூற வாயெடுத்த பின் யுதிஷ்டிரன் “உன்னிடமிருப்பது அதே ஆணவம். உனது தந்தையிடமிருந்து வந்தது அது. உன் மூத்தவனிடம் அது வேறுவகையில் சமைந்திருந்தது. நீ நூல்நவின்று சொல்தேர்ந்து பிறிதொன்றாக ஆக்கிக்கொண்டிருக்கிறாய்” என்றபின் தேரிலிருந்து இறங்கி அவனிடம் ஒரு சொல்லும் கூறாமல் குடில் நோக்கி சென்றார்.

அவர் வந்த விசையைக் கண்டு சற்றே அஞ்சிய பணிப்பெண் பதற்றத்துடன் தலைவணங்கினாள். அவளால் முகமன் உரைக்க முடியவில்லை. “அரசி இருக்கிறாரா?” என்று அவர் கேட்டபோது “ஆம் அரசே, உள்ளே இருக்கிறார்… உள்ளே காத்திருக்கிறார்” என்று பணிப்பெண் சொன்னாள். மேலும் தயங்கிய பின் யுதிஷ்டிரன் திரும்பிப் பார்த்து யுயுத்ஸுவிடம் “இளையோனே, நீயும் வா” என்றார். “நான் வருவது உகந்ததல்ல” என்று அவன் சொன்னான். “நீயும் உடனிரு. உரிய முறையில் சொல்லெடுக்க என்னால் இயலாமல் போகலாம். நீ உடனிருப்பது எனக்குத் தேவை இப்போது” என்றார்.

ஒருகணம் எண்ணிய பின் யுதிஷ்டிரன் அருகே சென்று யுயுத்ஸு “வருக!” என்றான். யுதிஷ்டிரன் தலைகுனிந்து குடிலுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து சென்ற யுயுத்ஸு அவருக்குப் பின்னால் வாயிலோரமாக நின்றுகொண்டான். குடிலுக்குள் மறுபக்கத்து சிறுசாளரம் ஒன்று திறந்திருக்க ஒளி சாய்வாக விழுந்து கிடந்தது. தரையிலிருந்து அதன் சுடர் எழுந்து சுவர்களையும் ஒளி கொள்ளச் செய்திருந்தது. திரௌபதி தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்திருந்தாள். யுதிஷ்டிரன் உள்ளே நுழைந்ததும் அவள் எழுந்து தலைவணங்கினாள். பின்னர் யுயுத்ஸுவை திரும்பிப் பார்த்துவிட்டு விழிவிலக்கிக்கொண்டாள்.

யுயுத்ஸு தலைவணங்கி “அரசிக்கு எளியேனுடைய வணக்கம். அஸ்தினபுரியின் அரசர் யுதிஷ்டிரன் தங்களைச் சந்திக்கும் பொருட்டு வந்திருக்கிறார். தங்களிடம் அரசருக்கு அரசமுறையான விண்ணப்பம் ஒன்று உள்ளது” என்றான். விழிசுருக்கி அவனைப் பார்த்தபின் திரௌபதி யுதிஷ்டிரனிடம் “அமர்க!” என்று கைகாட்டினாள். யுதிஷ்டிரன் அது ஒரு முறையான தொடக்கமாக அமைந்தமையால் இயல்புநிலை கொண்டார். அவருடைய உடல் தளர்வதை காணமுடிந்தது. அவர் பாயில் அமர்ந்துகொள்ள அவள் சற்று அப்பால் சென்று தூண் சாய்ந்து நின்றாள். மேலும் பேசும்படி கோரிக்கையுடன் யுதிஷ்டிரன் யுயுத்ஸுவை பார்த்தார்.

யுயுத்ஸு “அரசி, இங்கு நீத்தார்கடனுக்காக நாம் வந்து தங்கியிருப்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். நீர்க்கடன்கள் நாளை காலை தொடங்கவேண்டும் என்று அந்தண முதல்வரான தௌம்யரின் ஆணை. அனைத்து ஒருக்கங்களும் முடிந்துவிட்டிருக்கின்றன. நீர்க்கடன்கள் முற்றிலும் ஆண்களால் செய்யப்படுபவை என அறிந்திருப்பீர்கள். ஆயினும் நோன்பு கொண்டு சொல்லளித்து ஆண்களை இல்லத்திலிருந்து வழியனுப்பும் கடமை ஒன்று இல்ல மகளிருக்கு உள்ளது. அரசியாக தாங்கள் அவற்றை இயற்றுவது தங்கள் கடமை. எனினும் அரசரென தங்களிடம் அதை உரைப்பது முறை என்பதால் அரசர் வந்திருக்கிறார்” என்றான்.

“நீர்க்கடன்கள் முடிக்கையில் நாம் போரை முடித்துக்கொள்கிறோம் அல்லவா?” என்று திரௌபதி சொன்னாள். யுதிஷ்டிரன் பதறிய குரலில் “என்ன சொல்கிறாய்? இப்போது போர் முடியவில்லையா என்ன? நாம் அடைந்த இழப்பு போதாதா?” என்றார். அந்தச் சொல்முந்துதலால் யுயுத்ஸு உருவாக்கிய அனைத்து பேச்சுச்சூழலையும் கலைத்தவராக நடுங்கும் குரலில் “நாம் அடைந்த துயரை தெய்வங்களும் கண்டு அஞ்சும்… இதற்குமேல் என்ன?” என்றார். திரௌபதி “நாம் அடைந்த இழப்பினால்தான் போர் இன்னமும் முடியாமலிருக்கிறது. வெற்றி முழுமைப்படும் வரை போர் முடிய நான் ஒப்பமாட்டேன்” என்றாள்.

யுதிஷ்டிரன் முற்றிலும் நிலைமறந்தார். “இனி என்ன வெற்றி உனக்கு வேண்டியிருக்கிறது? படை கொண்டு பாரதவர்ஷத்தை வெல்ல நினைக்கிறாயா? அல்லது பாஞ்சாலத்திற்குச் சென்று அங்குள்ள உன் இளையோனையும் வென்று நாட்டை கொள்ளவிருக்கிறாயா?” என்றார். திரௌபதி “என் மைந்தரைக் கொன்றவர்கள் எஞ்சியிருக்கிறார்கள்” என்று சொன்னாள். யுதிஷ்டிரன் அதைக் கேட்டதும் அதை முன்னரே அறிந்திருந்தவர்போல் குன்றி நோக்கை விலக்கிக்கொண்டார். யுயுத்ஸு அவரே பேசட்டும் என்று காத்திருந்தான். “அவர்கள் இருக்கும்வரை போர் முடிவதில்லை. அவர்களின் குருதி வந்து சேரும் வரை இங்கு நீர்க்கடன் தொடங்கப்போவதும் இல்லை” என்றாள் திரௌபதி.

“அது இயலாது” என்று உரத்த குரலில் கூறியபடி யுதிஷ்டிரன் எழுந்தார். “இங்கு நின்று நீ அறைகூவலாம். அது அவ்வளவு எளிதல்ல என்று அறிக! கிருதவர்மன் யாதவர்களுடன் சென்று சேர்ந்திருக்கிறான். அவர்கள் இன்னும் பெரும் எண்ணிக்கையில் எஞ்சியிருக்கிறார்கள். நம்மிடம் அவர்களை எதிர்க்கும் அளவுக்கு படைகள் இன்று இல்லை. இன்னும் பல காலம் யாதவர்கள் பாரதவர்ஷத்தில் ஆற்றல் மிக்கவர்களாகவே நீடிப்பார்கள்… கிருபர் சென்றிருப்பது அவர் தந்தையின் குருநிலைக்கு. சரத்வானின் குருவழியினர் பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவர்கள். அவர்களை வெல்ல பார்த்தனாலும் இயலாது.”

“மேலும் அவர்கள் அங்கு அவர் தன் தந்தையுடன் இணைந்து ஊழ்கத்திலிருப்பார் எனில் அவரைச் சென்று வெல்வது நெறியே அல்ல. முனிவர்களுக்கு எதிரான போர் என்பது இன்னும் எந்த அரசகுடியாலும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல. அவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்த பின் நான் அந்தணர் வாழ்த்துபெற்று அரியணை அமரவே முடியாது” என்றார் யுதிஷ்டிரன். “அஸ்வத்தாமன் எங்கிருக்கிறான் என்றே தெரியாது. பிருகு குலத்தவர் அவனை தங்களவன் என்று எண்ணுகிறார்கள். முக்கண் முதல்வனின் அருள் கொண்டவனென்று அவனைப் பற்றி சூதர்கள் பாடுகிறார்கள். அனல்குலத்து ஷத்ரியர்களின் ஆதரவு அவனுக்கு இருக்கும் என்றால் அவனைத் தொடர்ந்து சென்று வென்று வருவது இப்போது இயல்வதல்ல.”

“ஒன்று அறிந்துகொள் கிருஷ்ணை, இப்போது நமக்கு படையென்று ஏதுமில்லை. நமக்கு உதவியாக பாஞ்சாலமும் துவாரகையும் இல்லை. எந்நிலையிலும் இன்று ஒரு சிறு போரைக்கூட எடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள் அல்ல நாம். உண்மையை உரைப்பதென்றால் பாரதவர்ஷத்தின் பிற அரசுகளும் நம்மைப்போல் சிதைந்திருப்பதனால் மட்டுமே நாம் ஒரு அரசு என்று நீடிக்க இயல்கிறது. தெற்கிலிருந்தோ எல்லைக்கு அப்பாலிருந்தோ யவனர்களோ திருவிடத்தவர்களோ நம் மீது படையெடுத்து வருவார்களெனில் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அவர்களுக்கு அடிமையாவதன்றி வேறு வழியில்லை. நீ அரசி. எளிய பெண்போல் பேசுவது முறையல்ல. உன் சொற்களுக்கு இருக்கும் மதிப்பென்ன என்று உணர்ந்துகொள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

“நான் அறிவேன்” என்று திரௌபதி கூறினாள். “அனைத்தையும் நான் நன்கறிவேன். ஆம், கிருபரையும் கிருதவர்மனையும் நம்மால் இப்போது வெல்ல இயலாது. கிருபர் நம்மிடமே வருவார், பிழையுணர்ந்து பணிவார். அன்று அவரிடம் சொல்வதற்கு சில சொற்களை நான் கருதியிருக்கிறேன். கிருதவர்மனை எவ்வாறு அழிப்பதென்று நான் அறிவேன். அவன் குருதியை நான் காண்பேன். நான் வெல்ல விரும்புவது அஸ்வத்தாமனை. என் மைந்தரைக் கொன்ற பின் அவன் தருக்கி நின்றிருப்பானெனில் இங்கு அரசியென நான் இருப்பதில் பொருளில்லை. என் மைந்தரின் குருதிக்கு பழிநிகர் செய்தாகவேண்டும்.”

யுதிஷ்டிரன் குரல் தழைய “ஒன்று புரிந்துகொள். அளிகூர்ந்து உளம்கொள். அவனை இப்போது நாம் தேடிச்சென்றால்கூட கண்டடைவதற்கு ஓராண்டாகலாம். அதற்கும் நாள் மீறலாம். அதற்கப்பால்தான் நீர்க்கடன் எனில் நீத்தார் அனைவரும் மூச்சுவெளியில் நின்றிருக்க வேண்டியிருக்கும். நம் மைந்தர்கள் அஸ்வத்தாமன் மேல் வஞ்சம் கொண்டிருப்பார்கள் எனில் ஒரு களம் அமைத்து அவர்களிடமே உசாவலாம். அவர்கள் உரைக்கட்டும், அவ்வஞ்சினம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று. அதன் பின்னரே விண்புகுவோம் என அவர்கள் சொன்னால் அவ்வாறே ஆகுக!” என்றார்.

“அவர்களிடம் வஞ்சினம் இருப்பதில்லை” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் விண்ணிலேறியதுமே மண்ணிலிருக்கும் அனைத்து வஞ்சங்களையும் கடந்து சென்றுவிட்டிருப்பார்கள். இங்கிருக்கையிலேயே வஞ்சமற்றவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இளமையின் உளத்தூய்மையை அவர்கள் கடக்கவே இல்லை. வஞ்சமிருப்பது என்னிடம். இங்கு அரசியென நான் நின்றிருக்க வேண்டும் என்பதற்காக நான் கொள்ளும் வஞ்சம் இது.” “அவ்வண்ணமெனினும்கூட எவ்வாறு அவனை வெல்ல இயலும்? சொல், அவன் நீடுவாழி என்று அறிந்திருப்பாய்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

“அவனை நாம் கொல்ல முடியாதென்று மட்டுமே அதற்குப் பொருள்” என்று திரௌபதி சொன்னாள். “அவனை வென்றாகவேண்டும். அவன் தருக்கி நின்றிருப்பது அவனுடைய நுதல்மணியால். அதை இழந்தால் அவன் விழியற்றவன். அந்த நுதல்மணி இங்கு வரட்டும். அதை கொண்டுவந்து என் மைந்தர்களுக்கு நீர்க்கடன் செய்யுமிடத்தில் வைப்பேன். அதன் பின்னரே இங்கு நீர்க்கடன் நிகழும்” என்றாள். மூச்சிரைக்க ஒரு அடி முன்னால் வந்து “அதன் பின் அஸ்வத்தாமனின் சாவின்மையே அவனுக்கான பெருந்தண்டனை ஆகும். ஆறாத புண்ணுடன் அழிவிலா வலியுடன் இங்கே காலமில்லாது வாழ்வான் அவன்…” என்றாள். யுயுத்ஸு நடுக்குற்றான். அவளிடமிருந்து நோக்கை விலக்கிக்கொண்டான்.

“அது அவ்வளவு எளிதல்ல. இன்றைய நிலையில் அஸ்வத்தாமனை வெல்ல அர்ஜுனனாலும் இயலாது. நீ அறிந்திருப்பாய், அவனுடைய காண்டீபம் நிலை தாழ்ந்திருக்கிறது. ஒரு சொல்லெடுப்பதற்கே அவன் தயங்குகிறான். இந்நிலையில் அவனிடம் சென்று போருக்கு அறைகூவுவதென்பது இறப்பை அழைப்பது. ஒருவேளை…” என்றபின் யுதிஷ்டிரன் பற்களைக் கடித்து “அதை என் நாவால் சொல்லவேண்டியிருக்கிறது. ஒருவேளை என் இளையோன் கொல்லப்படுவானென்றால்… எண்ணுக, மைந்தரை இழந்து, சுற்றத்தையும் இழந்து இருக்கும் எனக்கு எஞ்சிய ஒரே ஆறுதல் என் ஐந்து உடன் பிறந்தாரும் உடனிருக்கிறார்கள் என்பதுதான்” என்றார்.

அவர் குரல் உயர்ந்தது. “இல்லை, அர்ஜுனனை கொண்டுசென்று அஸ்வத்தாமன் வில்லுக்கு முன்னால் நிறுத்த நான் ஒப்பமாட்டேன்… இது நிகழாது” என்றார். “எனில் இங்கு நீர்க்கடன் நிகழாது. நீங்கள் உங்கள் குருதியினருக்கு நீர்க்கடன் நிகழ்த்தலாம். உங்கள் படைகளுக்கும் பிறருக்கும். என் ஐந்து மைந்தருக்கு மட்டும் நீர்க்கடன் எஞ்சியிருக்கட்டும்” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “அவர்கள் என் மைந்தர்… என்ன சொல்கிறாய்?” என்று கூவினார். “அவர்கள் முதலில் என் மைந்தர். இந்த நீரொப்புதலுக்கு என்ன பொருள் என்று அறிவீர்கள் அல்லவா? இறுதியாக நான் கூறுவது அது. ஆம், இவ்வைந்து மைந்தருக்கும் தந்தையர் நீங்களே என்று அதற்குப் பொருள். அதை நான் கூறமாட்டேன்” என்றாள் திரௌபதி.

“இழிவு செய்கிறாயா என்னை?” என்றார் யுதிஷ்டிரன். உடைந்த குரலில் “எங்கள் மைந்தர் அல்ல என்று சொல்லி அவர்களை இழிவுசெய்கிறாயா?” என்றார். திரௌபதி “இல்லை. தந்தையரெனில் நீங்கள் சென்று பழிநிகர் கொள்க! அதன் பொருட்டு எவர் இறப்பினும் எனக்கு பொருட்டில்லை. அஸ்வத்தாமன் தோற்கடிக்கப்பட்டாகவேண்டும். அவனுடைய நுதல்மணி இங்கு வந்தாகவேண்டும். அவன் மீளா நரகுக்குச் சென்றாகவேண்டும். அதன் பின்னரே என் மைந்தருக்கான நீர்க்கடன்கள் இங்கு நிகழும்” என்று சொன்னாள். நீர் பரவிய விழிகளால் நோக்கி “இனி ஒரு சொல்லும் என்னிடம் இதைப்பற்றி உரைக்கவேண்டியதில்லை” என்றாள்.

“எனில் இதை நீயே அர்ஜுனனிடம் கூறுக!” என்றார் யுதிஷ்டிரன். “அவனைக் கொன்ற பழியையும் நீயே சூடுக!” திரௌபதி “எவரிடமும் நான் கூறுவேன். ஆனால் அரசரென ஆணையிடவேண்டியவர் நீங்களே. உங்கள் இளையோனிடம் நீங்கள் ஆணையிடுங்கள். அவ்வாணையை அவர் மீறுவாரெனில் அது உங்களுக்கும் அவருக்குமான பூசல். என் சொற்களை உரைத்துவிட்டேன்” என்றபின் திரௌபதி தலைவணங்கினாள்.

யுதிஷ்டிரன் அவளை நோக்கியபடியே நின்றார். அவரது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகள் மேலும் மேலும் ஏதோ சொல்வதற்கென விரும்பின. யுயுத்ஸு ஒரு அடி முன்னால் வைத்து “அரசே, கிளம்புவோம்” என்றான். அவர் திரும்பி அவனைப் பார்த்த பின் “ஆம்” என்று தலைவணங்கி அவனுடன் வந்தார்.

 

யுயுத்ஸுவுடன் வெளியே வரும்போது யுதிஷ்டிரன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. தேரை அணுகி அதன் படியில் கைவைத்து நின்று சில எண்ணி திரும்பி யுயுத்ஸுவிடம் “இதை அறிந்துதான் நீ என்னை அழைத்து வந்தாயா?” என்றார். “ஆம் அரசே, இதை அவரே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் பல்லைக் கடித்து “ஒருநாள்… வாழ்வில் ஒரே ஒருநாள் உவகையுடன் இருந்தேன். எங்கோ தெய்வங்கள் என்னிடம் வஞ்சம் கொண்டிருக்கின்றன” என்றார். “அந்த ஒருநாளின் பொருட்டு தெய்வங்களிடம் நன்றியுடன் இருக்கலாம்” என்றான் யுயுத்ஸு.

“அது ஒருநாள் மாயை. எந்த நோய்க்கும் சிறிய இடைவெளிகள் அளித்து தெய்வங்கள் நம்மை ஆறுதல்படுத்துகின்றன” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு புன்னகை புரிந்து “மேலும் துயருக்கு ஒருக்குகின்றன என்கிறீர்களா?” என்றான். “தெய்வங்களிடம் நாம் பேரம் பேசமுடியாது. அளிப்பதை பெறுமிடத்தில் நாமிருக்கிறோம்” என்றபின் யுதிஷ்டிரன் “கிளம்புவோம்” என்று திரும்பிக்கொண்டார். இருக்கையில் அமர்ந்து திரையை மூடிய யுதிஷ்டிரன் பெருமூச்சுவிடுவதை யுயுத்ஸு கேட்டான். அவருடைய தலை உள்ளே அசைந்து தேர்க்கூண்டில் முட்டிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

தன் குடிலருகே அணுகி தேரிலிருந்து இறங்கி நின்றதும் மீண்டும் அவனைப் பார்த்து “இதை நீ ஏன் செய்தாய்? ஒரு வேளை இத்தருணத்தில் நான் சென்று அவளை பார்க்காமல் இருந்தால் இத்தனை அறுதியாக அவள் இதை சொல்லியிருக்க வாய்ப்பில்லை” என்றார் யுதிஷ்டிரன். “அவர் முன்னரே முடிவெடுத்துவிட்டார்” என்று யுயுத்ஸு சொன்னான். “எனில் நீ என்னை அழைத்துச் சென்றிருக்கக் கூடாது. இளையோனை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இப்போது ஆணையிடும் பணியை என் மேல் சுமத்திவிட்டாய்” என்றார் யுதிஷ்டிரன். “நீங்கள் அரசர். நீங்கள் ஆணையிட்டாகவேண்டும்” என்றான் யுயுத்ஸு.

ஒருகணம் விழி தழைய எண்ணம் ஓட்டிய பின் “நீ என்ன நினைக்கிறாய்? நான் அவனிடம் இதை ஆணையிட வேண்டுமா?” என்றார் யுதிஷ்டிரன். “ஆணையிட்டாக வேண்டும். வேறு வழியில்லை” என்றபின் யுயுத்ஸு “வருக!” என்றான். குடிலுக்குள் நுழைந்து தன் பீடத்தில் அமர்ந்துகொண்டு “சகதேவனை வரச்சொல்” என்றார் யுதிஷ்டிரன். “இதை நீங்கள் அவரிடம் கலந்து உசாவ வேண்டியதில்லை” என்றான் யுயுத்ஸு. “பிற அனைத்திலும் அவர் கூறுவது முறையாக இருக்கும். ஆனால் இதில் அல்ல. அவர்கள் அனைவரும் போரில் இருந்து உளம் விலகியிருக்கிறார்கள்.”

யுயுத்ஸுவை சில கணங்கள் நோக்கிய பின் “அர்ஜுனனிடம் இதை இப்போதே நான் கூறவேண்டுமா?” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், இப்போதே ஆணையிட வேண்டும். இன்றே அவர் கிளம்பிச்சென்றும் ஆகவேண்டும். எனில் மட்டுமே நாளை தௌம்யரிடம் கூற முடியும்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் “தௌம்யரிடம் எப்படி கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை” என்றார். “அவரிடம் நான் கூறிவிடுகிறேன். அனைவரிடமும் அவர் கூறட்டும். அதற்கு முன் உங்கள் இளையோனிடம் நீங்கள் ஆணையிடுங்கள்” என்றான் யுயுத்ஸு.

யுயுத்ஸுவை நோக்கி “இளையோனே, என் முகத்தை நோக்கி நீ சொல். இப்போரில் அர்ஜுனன் வெல்ல இயலுமா? அஸ்வத்தாமனின் நுதல்மணியுடன் அவன் திரும்பி வர முடியுமா?” என்றார் யுதிஷ்டிரன். “அவர் இதுவரை எங்கும் தோற்கவில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆகவே இனியும் வெல்வார்.” திகைப்புடன் “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “வெல்லற்கரியவனின் கருவி அவர். அவர் போருக்குச் செல்வதா வேண்டாமா என்பதை முடிவெடுக்க வேண்டியவர்கள் நாமல்ல, இளைய யாதவர் மட்டுமே. அவரிடம் நாம் உரைப்போம். இளைய யாதவரிடம் பார்த்தன் சொல்பெற்றுச் செல்வார் எனில் வெல்வார். அவருடைய படைக்கலம் அச்சொல் மட்டுமே. அது மட்டும் இருந்தால் போதும்” என்று யுயுத்ஸு சொன்னான்.

யுதிஷ்டிரன் எளிதாக உள்ளம் மீண்டார். “உனது உளம் ஓடும் திசை எனக்குப் புரியவில்லை. ஆனால் பிற எவரையும்விட உன்னைச் சார்ந்திருப்பது எனக்கு எளிதாக இருக்கிறது” என்றார். அவன் சற்று நகைத்தான். யுதிஷ்டிரன் “விந்தை இதுதான். இன்று அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் உனது ஆட்சியிலிருக்கிறது. கௌரவ நூற்றுவரையும் வென்று இளைய கௌரவனாகிய உன்னிடம் மண்ணை ஒப்படைத்திருக்கிறோம். இதோ என் ஊழையும் உன்னிடமே அளித்திருக்கிறேன்” என்றார். யுயுத்ஸு “அதுவும் நன்றே. மண்ணுக்கான அனைத்து போர்களும் மண்ணில் எப்பற்றும் இல்லாதவரிடமே அதை கொண்டுவந்து சேர்க்கின்றன” என்றான்.

“மெய்யாகவே உனக்கு மண்ணில் பற்றில்லையா?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இரு நகரங்களும் குடிகளும் உன் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்கின்றன இன்று. கோன்மையில் உனக்கு துளியும் உளமகிழ்வில்லையா?” அவன் விழிகளை நேர்நோக்கி “உன் தந்தை உனக்கு அளிக்க மறுத்த இளவரசுப் பட்டத்தைத் தாண்டி இன்று அரசருக்குரிய இடத்தில் இருக்கிறாய். உன் அன்னைக்கு அளிக்கப்படாத அரசி பட்டத்தை உனது மனைவி அடையக்கூடும். இவ்வளவும் உன்னை மகிழ்விக்கவில்லையா?” என்றார். “இல்லை” என்று அவன் சொன்னான். “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இயல்பாகவே அவ்வாறு தோன்றவில்லை. இது என்னுடையதல்ல என்று மட்டுமே தோன்றுகிறது. உண்மையில் உளமகிழ்வடைவதற்கும் தருக்குவதற்கும் நான் முயன்றதுகூட உண்டு.”

“நாள் செல்லச் செல்ல கை பழகும், உள்ளமும் பழகும்” என்றார் யுதிஷ்டிரன். “பழகாதென்றே உணர்கிறேன். நாளையும் அதன் மேல் பிறன் என்றே அமர்ந்திருப்பேன்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் சில கணங்கள் பார்த்துவிட்டு “செல்க, இளையோனை வரச்சொல்க!” என்றார். தலைவணங்கி யுயுத்ஸு வெளியே செல்ல திரும்பினான். யுதிஷ்டிரன் “இளையோனே, நீயே அர்ஜுனனிடம் என் சொல்லை கூறுக!” என்றார். “நானா? என் சொல்லில் அது எழலாகாது” என்றான் யுயுத்ஸு. “நீ சொல்வதே முறை என தோன்றுகிறது. இது என் ஆணை” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு தயக்கமாக “அரசே, உங்கள் ஆணையென எழவேண்டியது இளையோருக்குரிய கடமை” என்றான்.

“ஆம், அதைத்தான் எண்ணுகிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நான் ஆணையிட்டால் அதை அவன் தலைமேற்கொள்ளவேண்டும். இன்று அவன் இருக்கும் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. நான் நேரில் சொல்லாமல் என்னிடம் திரௌபதி கேட்ட சொல் இது என்று மட்டும் நீ அவனிடம் சொன்னால் அவனால் இதை மறுக்கமுடியும். அவன் மறுப்பான் என்றால் எனக்கும் அது உடன்பாடானதே” என்றார் யுதிஷ்டிரன். “அவர் மறுப்பார் என நினைக்கிறீர்களா?” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் வெறுமனே நோக்கினார். “அவர் உங்கள் சொல்லை கடக்கமாட்டார் என நன்கறிவீர்கள்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் சீற்றம்கொண்டு “எனில் ஏன் இதை உன்னிடம் சொல்கிறேன்? அவனை நான் அஞ்சுகிறேனா?” என்றார்.

“ஆம்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் திகைத்தார். “நான்கு இளையோரையும் அஞ்சுகிறீர்கள். அவர்கள் இழிசொல் கூறிவிடக்கூடும் என, கிளர்ந்தெழுந்து படைக்கலம் எடுக்கவும்கூடும் என அஞ்சுகிறீர்கள்.” யுதிஷ்டிரன் “நீ யார்? ஏன் என்னிடம் இந்த உரிமையை எடுத்துக்கொள்கிறாய்?” என்று கூவினார். “நான் உங்கள் இளையோன், உங்களால் அஞ்சப்படாத ஒருவன்” என்று யுயுத்ஸு புன்னகைத்தான். யுதிஷ்டிரன் தலைநடுங்க, உதடுகள் விதும்ப அவனை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் பெருமூச்சுடன் தளர்ந்து “செல்க! என் சூழலை அவனிடம் உரிய முறையில் விளக்குக!” என்றார். யுயுத்ஸு “ஆணை” என தலைவணங்கி வெளியேறினான்.

தொடர்புடைய பதிவுகள்

நிலம்- கடிதம்

$
0
0

நிலம்

அன்புள்ள ஜெ வணக்கம்.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வடமேற்கே பிராஞ்சேரி என்ற கிராமம் உள்ளது.  அங்கு ஒரு ஜமின்தார்.  அந்த ஜமின்தாரை ஆள்வைத்து வெட்ட பக்கத்து ஊர் மிராசால் கணக்குபோடப்பட்டது. எளிய மனிதர்களுக்கே கர்வ எதிரியோ கௌரவ எதிரியோ இருக்கும்போது ஜமின்தாருக்கு கொலைகார எதிரி இருப்பது  எப்படி அதிசயமாகும்.

ஆறு கொலைகாரர்கள். நால்வர் வீட்டுக்கு வெளியில் காவல். இரண்டுபேர் வீட்டு ஓட்டைப்பிரித்து உள்ளே போய்விட்டார்கள். தூங்கும்போதே தலைவேறு உடம்புவேறு என்று ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் திட்டம்.

உள்ளே போனவர்கள் வெளியே வரவில்லை. ஜமின்தார்தான் வெளியே வந்தார். வெட்டப்போனவர்கள் ஜமின்தார் பின்னால் மெய்காப்பாளன்போல வந்தார்கள். வெளியில்  இருந்தவர்களும் வேலையாள் கையில் மாட்டிக்கொண்டார்கள்.

கொலை செய்ய வந்தவர்களை கட்டிவைத்து அடித்துக்கொல்லவேண்டும் என்றது ஊர்.

“திருந்துனவனுவள ஏன்டா கொல்லனும் திருந்தாதவனுவள” என்றார் ஜமின்தார்.  ஆட்டம்போட்டதலைகள் கவிழ்ந்து அடங்கின.

ஜமின்தாரை வெட்டுவதற்கு உள்ளே சென்றவர்கள் அவரின் தோற்றத்தையும்  அவர் படுத்திருக்கும் அழகையும் பார்த்து, “ஸ்ரீரங்கநாதர்போல இருக்காருடா” என்று ஓங்கிய கொடுவாளை இறக்கிவிட்டு அவர்காலில் விழுந்துவிட்டார்கள்.

கண்ணுக்கு தெரியும் மனித உருவம் கண்ணுக்கு தெரியாத மனதில் ரசவாதம் செய்து மனிதனிடம் மனிதன் கட்டுண்டு கிடக்க செய்கிறது.

இராவணன் அன்னை சீதையால் துரும்புக்கும்  அப்பால் உள்ள துரும்பாக பார்க்கப்படும்போதுகூட அவன் கோபத்தையும் காமத்தையும் தனிக்க அவனை பிரியமாக அனைக்கிறாள் அவன் மனைவி தான்யமாலினி. இடம் பொருள் இல்லாமல் என்ன ஒரு மோகம் ராவணன்மேனிமீது.

உடம்பின் வழியாகத்தான் மனிதர்கள் மனிதர்களின் மனங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆகிறார்கள். மனதின் வழியாக நெருக்கமாகும் மனிதர்களும் உடம்புக்குதான் மிக நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். உடம்பு ஒரு மாயவலையை மற்றவர்கள்மீது வீசிக்கொண்டே இருக்கிறது.

காரைக்கால் அம்மையை பிரிந்துபோன கணவன், உண்மையில் யாரை பிரிந்துபோனான். அம்மையின் உடம்பையா? உள்ளத்தையா? உடம்புதான் அவனை வதைக்கிறது. உள்ளம் அவனைத்தானே எண்ணிக்கிடந்தது. உடம்பை பிரிந்ததால்தான் தான் பெற்ற பிள்ளைக்கு தன் மனைவியின் பெயர் வைக்கிறான். ஒரு உடலை பிரிந்து இன்னொரு உடல் பெற்று பயம் தெளிகிறான். அன்னையும் அந்த உடம்பைத்தான் உதறி வெளியேறுகிறார். தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளவறியா மனம் தரும் என்ற அபிராமி பட்டர் தெய்வ வடிவம் தரும் என்கிறார். தெய்வ வடிவம் பெறுதல் ஒரு கொடை.

உருவங்கள் எல்லாம் தெய்வ வடிவங்கள்தான். பலது அணுவாக இருக்கிறது அதனால் அதுகண்ணில் நிறைவதில்லை. சிலது கடலாக இருக்கிறது அதனால் அள்ளிக்கொள்ள கண்கள் போதவில்லை . ராமலட்சுமியின் கணவன் வடிவம் வெட்டுவேல் அய்யனார் உருவமாக இருக்கிறது. இருக்கிறது என்பதை விட அவளுக்கு அப்படி தெரிகிறது.  இருப்பதெல்லாம் தெரியும் என்பது இல்லை, தெரியவேண்டியவர்களுக்கு தெரியவேண்டிய நேரத்தில் தெரிகிறது. ராமலெட்சுமிக்கு தெரிகிறது. சிலநேரங்களில் சிலதுகள் தெரியாமல் இருந்துஇருக்லாம். தெரியவேண்டியது தெரிந்துவிடும்போது, நடக்கவேண்டியது நடக்காமல் போகிறது. நாடக்காது என்பதும் நடந்துவிடுகிறது.

ராமலெட்சுமி சேவுகப்பெருமாளுக்கு உடம்பால்தான் மனைவியாக இருக்கிறாள். மனதால் பக்தையாகிவிட்டாள். உயிருள்ள ஐயனார். இருபது வருடத்திற்கு முன்பு முதன் முதலில் ஐயனாரை வழிபட வந்தவளை ஏன் அந்த பொத்தைமுடி வெட்டுவேல் ஐயானார் கணவனுக்கு மனைவியை பக்தையாக்கினார்? அவள்தான் எல்லாம் என்று அவன் மனம் முழுவதும் நிறைவதற்காக.

குழந்தைகாக்க இல்லை, தனக்காக அவள் அவனுக்கு இன்னொரு கல்யாணம் கட்டிவைக்க நினைக்கிறாள், ஒரு பக்தையின் வழிபாட்டு மனம் அதை செய்கிறது. மனைவியாக அதை செய்ய முடியுமா? மண்ணுள்ளது, பிள்ளை இல்லை என்பது எல்லாம் இரண்டாம் பச்சம்.

அவன் தன்னை ஐயனாராக நினைக்கிவில்லை ஆனால் அவள் நினைக்கிறாள். அவளால் அவனும் ஐயனாராக சத்தியத்திற்கு கட்டுப்படுகிறான். அவன் அவளால் ராமனாக வாழ்கிறான்.

இந்த கதையில் ராவணனும் சுட்டப்படுகிறான். துரியோதனனும் சுட்டப்படுகிறார்கள். இருவமே அழிவின் சின்னம். அடங்கா ஆசையின் அடையாளம். ஆனால் இருவரின் மனைவிகளும் அவர்கள்மீது கொண்ட காதல் பெரியது. அவர்கள் மனைவிமீது அவர்கள் கொண்ட காதலும் பெரியது. துரியோதனன் மனைவிமீது கொண்ட அன்பில் மண்ணில் எந்த கணவனையும் அண்ணாந்துப் பார்க்க வைக்கிறான்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹைம்சர் பெண் ஆணின் முக்கால்பங்கு மனத்தை பிடித்துக்கொள்கிறாள். குழந்தைகள் வேறு பிறந்துவிட்டாள் அப்புறம் அதில் கடவுளுக்கு எங்கே இடம்? என்று கேட்கிறார். இத்தனை பெரிய சேனைகள் கொண்டு துரியோதனன் மண்ணைபிடிக்க மொத்த குலத்தையும் இழந்தது எல்லாம் அவன் பானுமதிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்த மனம்போக இருந்த தூசளவு மனத்தில் ஒட்டியிருந்த மண்ணாசையினால்தானா? அல்லது பானுமதி கணவன் பங்குபோட்டுக்கொள்ளாத மண்ணுக்கு சொந்தகாரன் என்று பானுமதி நினைக்கவேண்டும் என்பதற்காகவா?

மனித மனம் எத்தனை சிறிய புழுதிக்கு ஆசைப்பட்டு, தன்  இரத்தத்தையும், உடன் பிறந்தாரின் இரத்தத்தையம் புழுதியில்  சிந்தி உயிரை மாய்த்துக்கொள்கிறது.

சேவுகபெருமாள் அடங்காத மண்ணாசையை உடையவனாக இருப்பதுகூட அவன் மனதில் பெரும்பகுதியை தன் மனைவிக்கு கொடுத்ததால்தான் இருக்குமோ?. அவன் அரிவாள் தூக்கி மண் சேர்ப்பதெல்லாம் அவள் மகாராணியாக வாழத்தானா? எதன்மீது மனம் ஒட்டிக்கொள்கிறதோ அதை பெரிதாக்க மனம் எல்லாம் வழிகளையும் கடக்கிறது. பிரபஞ்சத்தில் எதுவுமே பெரிதில்லை. எல்லாம் சமம். ஒன்றை பெரிதாக்கினால் ஒன்றை சிறியதாக்குகிறோம். பெரியதாக்கியதின் பெருமைக்கு  பரிசு வாங்கினால் சிறியதாக்கியதின் சிறுமைக்கு விலைக்கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் பிரபஞ்சநீதி.

சேவுகபெருமாள்போல் பத்துமடங்கு நிலம் வைத்திருந்தவர்தான் இன்று பண்டாரமா கிடக்கிறார். அவர் பிரபஞ்சவிதிக்குள் வாழ்கிறார். சேவுகபெருமாள் பிரபஞ்சவிதிக்கோட்டுக்கு இப்பால் நின்று அப்படி ஒன்று இருந்தால் இருந்துவிட்டுபோகட்டுமே என்று நிற்கிறான்.

ராமலட்சுமி //‘பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச?’// என்று கேட்கும்போது //‘பிள்ளை இல்லாததனாலதான்…’ என்று சிரிக்கும்போது. சமன் செய்யப்படாத மனம் வீங்கிவிடுகின்றது என்பது தெரியாமல், அறியாத மனங்கள் அதை வளர்ச்சி என்று ஏமாறுகின்றன என்பதை உணர்த்துகிறார்.

நூறு ஏக்கர் வச்சிருக்கிற சேவுக பெருமாள் பண்டாரத்தை கூர்ந்து நோக்கிநின்றபோதே கண்டுகொண்டு இருப்பான். அவனைவிட பத்துமடங்கு நிலம்வைத்திருந்த ஒட்டபிடாரம் கிட்ணப்பநாயக்கருதான் பண்டாரமாக இருக்கிறார் என்பதை.  கண்கள் கவர்ச்சியை நம்பும் அளவு உண்மைகளை நம்புவது இல்லை. அவன் கண்கள் கண்ட உண்மையை நம்பி இருந்தால் தன்னைவிட பத்துமடங்கு வைத்திருந்தவன் பண்டாரமாகிவிட்டான் நாம் எம்மாத்திரம் என்று உணர்ந்துவிடுவான்.  உண்மையை பார்ப்பது உடற்கண்கள் இல்லையே. அறிவுக்கண். அறிவுக்கண்  அடிப்பட்டபின்புதான் விழிக்கும்.

சேவுகப்பெருமாள்போல் பத்துமடங்கு சொத்துவைத்திருந்த பண்டாரம் சேவுகப்பெருமாள் மனைவி பிச்சிபோடும் இரண்டு பழத்தை கேட்கும் இடத்தில் இருக்கிறார். சேவுகபெருமாள் இன்னும் பத்துமடங்கு சொத்து சேர்த்து கிட்ணப்பநாயக்கர் இடத்திற்கு செல்ல நினைக்கிறான். ராமலெட்சுமி இனி தாயாக முடியாது என்று என்ற இடத்திற்கு வந்து நின்று சாமிக்கு படைக்கும் தேங்காயை உடைத்துப்போட்டு குரங்குக்கும் தாயாகி நிற்கிறாள். மூவரும் ஒரு புள்ளியில் நிற்கிறார்கள் ஆனால் அவர்கள் வந்தபாதையும் போகும்பாதையும்   எத்தனை தூரமானது. எப்போதும் வாழ்க்கை மனிதர்கள் நிற்கு புள்ளிக்கு அப்பால் அப்பால் சென்று நின்று மனிதர்களை இழுத்துக்கொண்டே இருக்கிறது.

சௌதியில் கேம்புக்கு அருகில் ஒரு நாள் வாக்கிங் செல்கையில் ஒரு தாய்நாயையும் அதன் பத்திற்கும்மேல் பட்ட குட்டிகளையும் பார்த்தேன். “ஒரு நாய் இத்தனை குட்டிப்போடுமா!” அத்தனை குட்டிகளுடன் ஒரு தாய்நாயைப்பார்த்ததும் அந்த வீதியே மறைந்து ஒரு தேவதை உலகம் கண்முன் விரிந்து உணர்வலையில் ஆழ்த்தியது. எத்தனை குட்டிகள் என்று என்னத்தொடங்கியவன். சற்றென்று அந்த தாய்மையின் உச்சத்தை எண்ணிக்கையினால் அடக்கவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். கேம்பிற்கு அருகில் கடற்கரை மாங்க்ரோ குறுங்காடு. அது அங்கிருந்து வந்திருக்கலாம். அத்தனை குட்டிகளுடன் ஒரு தெருநாயைப்பார்ப்பது அதுதான் முதல்தடவை. அது அபூர்வமான தருணம்கூட. அருகில் இருந்த கடையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி பிஸ்கட்டைப்போட்டேன். அந்த தாய் அதே ராஜகம்பீரத்துடன் சலனமில்லா நோக்குடன் நோக்கிப்படுத்திருந்தது. குட்டிகள்தான் ஓடிவந்து தின்றன. மறுநாளும் அப்படிதான். அந்த தாயிடம் உணவுக்காக ஏங்கிஓடிவரும் வாளாட்டும் எந்த அறிகுறியும் இல்லை. “நான் தாயிடா” என்ற ராஜகம்பீரம். தெய்வங்கள் குழந்தையாகிவிடும் தருணம். தாயானால் அப்படி ஒரு கம்பீரம் வருமா?.

பெண் தாயாக நினைப்பது பிள்ளைகளை பெறுவதற்காக மட்டுமில்லை என்று நினைத்துக்கொண்டேன். அது மனிதகுலமாக இருந்தாலும், மற்ற உயிர் குலமாக இருந்தாலும்.   மண்ணை விண்ணை  அவள் அந்த அன்பின் கோபுரத்தால் இணைக்கிறாள். மண்ணை  உயிர்விப்பதற்கு அது அவள்வழி வரும் அமுதத்துளி.

பரமஹம்ச யோகனந்தர் துறவியாகிவிடக்கூடாது என்று காவல்காத்துக்கொண்டே இருக்கும் அவர் தந்தை, அவர் துறவியான பின்பு ஒரு நாள் ஆசிரமத்திற்கு வந்து  பார்க்கிறார், அவர் கல்விக்கொடுத்து காத்து வளர்க்கும் குழந்தைகள் அவரை சூழ்ந்து நின்று அவரை கருணைதந்தையாக்கி இருப்பதைக் கண்டு மகிழ்கின்றார்.

பண்டாரம் ராமலெட்சுமியை பார்த்துச்சொல்கிறார் ‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’

வாழ்க்கையில் இல்லை என்பதே இல்லை. மனிதன் மட்டும்தான் இல்லாமையில் இருக்கிறான். இல்லாமையை தாண்ட தெரிந்தவர்கள் இடத்தில் உலகமே இருக்கிறது.

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்.

குருதி [சிறுகதை]

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சுதந்திரத்தின் நிறம்

$
0
0

 

திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா, நாளை-18-10-2019

 

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

 

உங்களுடைய நற்சொல்லொன்று எண்ணத்தில் அதிர்வூட்ட, அதன்வழி எடுக்கப்பட்ட முயற்சியே, பேராளுமைகளான கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் (சுதந்திரத்தின் நிறம்). நிறைந்த தரத்தோடும் உழைப்போடும் இப்புத்தகம் வெளியிடப்பட வேண்டும் என்ற எங்களுடைய மனவிருப்பத்துக்கான முதல்நம்பிக்கையை, உங்களுடைய தளத்தில் நீங்கள் பதிந்த ‘ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு’ என்ற பகிர்வு கொடுத்தது. அதன்வழி நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகத்துக்கான முன்பதிவினை முதற்கட்டமாகப் பெற்றோம்.

 

நீங்கள், திரு.வாசு தேவன், காந்தியச்சிந்தனை முகநூல்பக்கம், பாலா, லட்சுமி மணிவண்ணன், ரதன் சந்திரசேகர் உள்ளிட்ட நிறைய நண்பர்கள் புத்தகத்துக்கான பதிவெழுதி அதற்குத் தனிக்கவனம் கிடைக்கச்செய்தீர்கள். முகமறியா தோழமைகள் நிறையபேர் இம்முயற்சிக்கான தங்களுடைய மகிழ்ச்சியை அவர்களே அழைத்துத் தெரியப்படுத்தினார்கள். எல்லா மனங்களுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

 

கடந்தவாரம், திண்டுக்கல் காந்திகிராமில் சமூகம்சார்ந்து இயங்கும் நண்பர்களுக்கான கூடுகையொன்று, அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முன்னிலையில் நிகழ்ந்தது. குக்கூ காட்டுப்பள்ளி நண்பர்களும் அக்கூடுகைக்கு அம்மாவால் அழைக்கப்பட்டிருந்தோம். அப்பொழுது, அடுத்தகட்டமாக எது குறித்து எல்லோரும் இயங்குவது என்பதற்கான உரையாடல் துவங்கியது. வந்திருந்தவர்களில் சிலர் அவரவர் சார்ந்திருக்கும் துறைகளில் செய்தாகவேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப்பேசி விவாதம் முற்றும் நிலையில், அம்மா எழுந்து ‘நீர்நிலைகள் எல்லாம் செத்துகிட்டிருக்குய்யா, எல்லாரும் சேர்ந்து அதுக்காக ஏதாச்சும் உருப்படியா செய்வோம். உடனடியா ஏரி, குளங்கள சீரமைக்கத் துவங்குவோம். மத்தத அடுத்தடுத்து பாக்கலாம்’ என உரத்த குரலில் சொன்னார். அவருள்ளத்தில் சுமந்திருக்கும் அந்த தூயநெருப்பு இப்பவரை அணைந்துவிடவில்லை.

 

உங்களுடைய தளத்தில் வெளியான பதிவை அம்மாவுக்குத் தெரியப்படுத்தினோம். முகமலர்ந்த ஒரு மகிழ்ச்சியோடு சிரித்தார். ‘எல்லாம் செயல் கூடும்’ எனச்சொல்லி வள்ளாலாரின் ஆசிவரிகளைக்கூறி வாழ்த்தியனுப்பினார். நீங்கள் சுட்டிக்காட்டியது போன்றே, ஒப்பற்ற சாட்சிமனிதர்களின் ஒளிவாழ்வு புத்தகப்படுதலுக்குப் பின்னார்ந்த நெருக்கடியை உணர்கிறோம். எல்லா நண்பர்களின் உதவியாலும், கருணையின் துணையிருப்பாலும் ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தை அச்சிடத் தேவையான அளவு புத்தகங்கள் முன்வெளியீட்டுத் திட்டத்தின் வழியாக பதியப்பட்டுவிட்டது. மனது அஞ்சிய ஒரு கடன்சுமையை, எல்லோரின் கரங்களும் பகிர்ந்துகொண்டு எளிதாக்கியுள்ளீர்கள். அனைவருக்கும் எங்கள் கைகூப்பிய நன்றிகள் சென்றடைக. இந்நன்றிக்கான நேர்மையை புத்தகம் தன்னகத்துள் கொண்டிருக்கிறோம் என நம்புகிறோம்.

 

காத்திருக்கும் கரங்களனைத்தையும், அக்டோபர் இருபதுக்குள் புத்தகம் அடையும். பொறுத்தருள்க.

 

அன்பின் நன்றிகளுடன்

தன்னறம் நூல்வெளி

ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…

 

சுதந்திரத்தின் நிறம் புத்தகம் அச்சடைந்து வந்திருக்கிறது. முதல் பிரதியை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனிடம் ஒப்படைத்து ஆசிபெறவும், சில புத்தகங்களில் கையெழுத்துப் பெறுவதற்காகவும் அம்மாவுடைய வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மாவும், சத்யா அக்காவும் வீட்டிலிருந்தார்கள். புத்தகம், அம்மாவுக்கு மனநிறைவைத் தந்துள்ளது என்பதை அருகிருந்து உணரமுடிந்தது. நிறைய கடந்தகால ஞாபகங்களை மீட்டெடுத்து ஒவ்வொன்றாக அம்மா சொல்லிக்கொண்டே இருந்தார். புத்தகத்தைப் கையில்பெற்று அம்மா சொன்ன வார்த்தைகள் தான் இன்னும் உள்ளத்தை நனைத்துக்கொண்டே இருக்கிறது…

 

“எங்களோட வரலாறு புத்தகமாகியிருக்கு. அதுல சந்தோசம்தான். ஆனா, இந்தப் புத்தகத்துக்குள்ள நூத்துக்கணக்கான சின்னச்சின்ன வரலாறுகள் ஒளிஞ்சிருக்கு. அந்த வரலாறெல்லாம் புத்தகங்களா மாறனும். அதெல்லாத்தையும் பேசனும். அதுதான்யா முக்கியம். ஏதோவொரு விதத்தில நாங்கெல்லாம் செய்திதாள்கள்ல, தொலைக்காட்சில வந்ததால வெளிய தெரிஞ்சிட்டோம். ஆனா அப்டி வெளிய தெரியாம நிறைய பேர் இருக்காங்கய்யா. அவங்க எல்லாருமே வெளிய வரனும். அந்த வரலாறுக்காகவும் நான் காத்திருக்கேன்ய்யா…”

 

‘புத்தகத்துக்காக ஒரு வெளியீட்டு நிகழ்வு ஒன்றினை ஏற்படுத்தி நாமெல்லாம் சந்தித்துக்கொள்வோம்’ என தனது விருப்பத்தை அம்மா தெரிவித்திருக்கிறார். நமக்கான பாக்கியம் அது. இரண்டொரு தினங்களில் நிகழ்வினைத் திட்டமிட்டு நண்பர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

 

புத்தகங்களில் அம்மா கையெழுத்திடத் துவங்கியிருக்கிறார்கள். ஓரிரு தினங்களிலிருந்து, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே பதிந்த தோமைகளுக்கு புத்தகங்கள் அஞ்சல்வழி வந்தடையும். ஒரு சொல்கூட எழுப்பாமல் மனம்பொறுத்து காத்திருக்கும் அத்தனைபேருக்கும் கைகூப்பி நன்றியுரைக்கிறோம். பேசப்படவேண்டிய வரலாறு வெளியடைந்திருப்பதில் நிறைமகிழ்வு கொள்கிறோம்.

 

பெருநன்றிகள்!

குக்கூ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் –அக்டோபர் 2019

$
0
0

 

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

 

இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (20/10/2019) மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

 

இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில்  பீஷ்மர் ” , என்கிற  தலைப்பில், நண்பர் சிவக்குமார்  பேசுகிறார் .

 

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

 

நேரம்:-  வரும் ஞாயிறு (20/10/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

தொடர்புக்கு 9952965505 / 9043195217

 

Satyam Traditional  Yoga -Chennai

11/15, south perumal Koil Lane

Near Murugan temple

Vadapalani       – Chennai- 26

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஹெரால்ட் ப்ளூம்- அஞ்சலி

$
0
0

 

ஐயமின்றி இந்நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கியவிமர்சகர் என்று ஹரால்ட் ப்ளூமைச் சொல்லமுடியும். பலதருணங்களில் நான் அவரை மேற்கோள் காட்டியிருக்கிறேன். என் சிந்தனைகள்மேல் முதன்மைச் செல்வாக்கு கொண்ட ஐரோப்பிய –அமெரிக்க இலக்கியவாதிகளில் ஒருவர். அவருடைய இலக்கிய மதிப்பீடுகளும் என் மதிப்பீடுகளும் ஏறத்தாழ சமானமானவை – ஐரோப்பிய இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை

 

இலக்கியத்தின்மேல் வெவ்வேறு ஆதிக்கங்கள் எப்போதும் செயல்பட்டுள்ளன. சென்றகாலகட்டத்தில் மதம். அதன்பின் அரசியல்கோட்பாடுகள். அவை இலக்கியத்தை வரையறுக்க, கட்டுப்படுத்த, மடைமாற்ற, தரப்படுத்த எப்போதுமே முயன்றுவந்தன.  ஏனென்றால் இலக்கியம் எப்போதுமே தன்னிச்சையான போக்கு கொண்டது, வரைமுறைப்படுத்த முடியாதது, அதேசமயம் வெளித்தெரியாத பேராற்றல் கொண்டது. பாமரர்களுக்கு அது பொதுவான அறிவியக்கத்துடன் தொடர்பற்ற ஒரு தனித்த போக்கு என தோன்றும், ஆனால் வரலாற்றையும் இலக்கியத்தையும் அறிந்தவர்கள் அது மகத்தான ஆக்கவிசை  என அறிந்திருப்பார்கள். ஆகவே அதை தங்கள் ஆட்சிசெய்ய எண்ணுவார்கள்.

 

இலக்கியம் மீதான மதத்தின் ஆட்சியை முறியடித்தவர்கள் என சாமுவேல் ஜான்ஸன், வால்டர் ஸ்காட் முதல் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் வரையிலான பிரிட்டிஷ் விமர்சகர்களைச் சொல்லமுடியும். இலக்கியம் மீதான அரசியல்கோட்பாட்டாளர்களின் ஆக்ரமிப்பை வென்றவர்கள் என எஸ்ரா பவுண்ட், எலியட் முதல் அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர்களான கிளிந்த் புரூக்ஸ் வரையிலானவர்களைச் சொல்லமுடியும். இலக்கியம் என்னும் கட்டற்ற, ஆழுளம் சார்ந்த, ஆகவே அறிவெதிர்ப்புத்தன்மையை அடிப்படையாகக்கொண்ட இயக்கத்தின் அறிவார்ந்த முகங்கள் அவர்கள். அறிவார்ந்த மொழியில் அறிவுச்சார்பின் எல்லைகளைப்பற்றிப் பேசியவர்கள்.

 

சென்ற ஐம்பதாண்டுகளில் கல்வித்துறையாளர்கள் இலக்கியத்தை கிட்டத்தட்ட ‘கைப்பற்றி’ விட்ட நிலை உள்ளது. அதற்கு முதன்மைக்காரணம் மேலைச்சூழலில் வாசிப்பு என்பது இரண்டாகப்பிரிந்துவிட்டது. பெருவாரியாக வாசிக்கப்படுவனவற்றை மிகப்பெரிய நிறுவனங்கள் உற்பத்திசெய்து விளம்பரம்செய்து வினியோகிக்கின்றன. நுகர்பொருள் போலவே அவை மிகப்பெரிய அளவில் விற்கப்படுகின்றன. விற்பனையே அவற்றை மதிப்பிடும் முதன்மை அளவுகோல். மிகப்பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க நூல்களின் பின்னட்டைக்குறிப்பு அவை எந்த அளவுக்கு விற்றன, அந்த ஆசிரியர் எந்த அளவுக்கு விற்பனை கொண்டவர் என்பதையே முதன்மையாகச் சுட்டுகின்றன. குறைவாக வாசிக்கப்படும் படைப்புக்களுக்கு எந்த மதிப்பும் பொதுத்தளத்தில் இன்றில்லை. இலக்கியப்படைப்புகள் விற்கப்படவேண்டும் என்றால் கல்வித்துறையால், ஊடகத்தால் அவை திட்டமிட்டு முன்னிறுத்தப்படவேண்டும். தன்னியல்பான வாசிப்பு – ஏற்பு என்ற நிலையே மறைந்துவிட்டது.

 

ஆகவே சீரியஇலக்கியம் இன்று பொதுமக்களுக்குத் தொடர்பற்ற ஒரு தளத்தில், பெரும்பாலும் கல்விச்சூழலிலேயே புழங்கும்நிலை  உருவாகியுள்ளது. முன்னர் நான் சந்தித்த ஒரு அமெரிக்கப் பேராசிரியர், அவரே கல்வித்துறை ஆய்வாளர்தான், இதைச் சுட்டினார். ‘முன்பெல்லாம் இலக்கியப்படைப்பு பற்றி கல்வித்துறையினரின் கருத்து என்பது ஒரு தரப்பு மட்டுமே. பொதுவாசிப்பின் தரப்பே மையமானது. ஏனென்றால் இலக்கியவாசகர் என ஒர் ஆளுமை அன்றிருந்தார். தன் மகிழ்ச்சிக்காகவும் அறிவார்ந்த தேடலுக்காகவும், தன் ஆன்மீகநிறைவுக்காகவும் வாசிப்பவர் அவர். அல்லது அப்படி ஒருவரை உருவகம்செய்துகொள்ளத்தக்க சூழல் அன்றிருந்தது. அது ஒரு நாணயம் போல. அதன் மதிப்பு என்பது அது புழக்கத்தில் உள்ளது என்பதனால் உருவாவது. சட்டென்று அது இல்லாமலாகிவிட்டிருக்கிறது. அப்படி ஒருவாசகர் இன்றில்லை என்றே தோன்றுகிறது. இச்சூழலில் கல்வித்துறை சார்ந்த தரப்பு மட்டுமே இலக்கியத்தை மதிப்பிடுவதாக மாறிவிட்டிருக்கிறது”

 

கல்வித்துறை பற்றியும் அவர் சொன்னார். “எழுபது எண்பதுகளில் மானுடவியலுக்கும் மொழியியலுக்கும் அமெரிக்கக் கல்வித்துறைக்கு தொழில்துறையின் நிதி குவிந்தது. அரசியல்கோட்ட்பாட்டாய்வுகளுக்கு எப்போதுமே அரசுத்துறை நிதியுதவி உண்டு. ஆகவே இத்துறைகள் பொருத்தமற்ற வளர்ச்சி அடைந்தன. அவை இலக்கியம் தத்துவம் போன்றவற்றை தேவைக்குமேல் ஊடுருவின. கல்வித்துறை இன்று பிரம்மாண்டமாக மாறிவிட்டது. அது தனக்குள் விவாதித்து தன்னுள்ளேயே சுழன்றுவருகிறது. மீறல், புரட்சி, கலகம், கிறுக்குத்தனம் எல்லாம்கூட கல்வித்துறையின் வரையறைக்குள் நிகழும் பேசுபொருட்களாக மாறிவிட்டன. இன்று எந்த எழுத்தாளராயினும் கல்வித்துறை ஆதரவைப் பெற்றாகவேண்டும். ஒரு கருத்தைச் சொல்பவரின் கல்வித்துறை சார்ந்த தகுதி முக்கியமானதாக ஆகிவிட்டிருக்கிறது. இதுதான் உண்மையான சிக்கலாக இன்று உள்ளது”

 

நான் அவரிடம் கேட்டேன், ‘ஏன் கல்வித்துறையாளரின் தகுதிக்குறைவு என்ன?” அவர் சிரித்து “தகுதி என சில அவருக்கு உண்டு. தகுதிக்குறைவு  என்பது இதுவே. அவர் முறைமைப்படுத்தப்பட்டவர், அதாவது தன் அகத்தைச் சார்ந்து அல்லாமல் அமைப்பாக்கம் செய்யப்பட்ட சிந்தனைகளைச் சார்ந்து புறவயமாகச் சிந்திக்க பயிற்றுவிக்கப்பட்டவர். அதாவது அவர் தன்வயப்பட்ட தனித்தேடலுக்குரிய சுதந்திரத்தை இழந்து கல்வியாளராக ஆனவர்” என்றார். என் கருத்தையும் அவ்வாறே உருவாக்கியிருந்தேன்.

 

அமெரிக்க- ஐரோப்பியச் சூழலில் இலக்கியத்தின்மேல் செலுத்தப்படும் கல்வித்துறையினரின் மேலாதிக்கத்திற்கு எதிரான பெருங்குரல் என ஹரால்ட் ப்ளூமை மதிப்பிடுவேன். ஹரால்ட் ப்ளூம் அவரே ஒரு கல்வியாளர்தான். 1955 முதல் 2019 வரை யேல் பல்கலையில் ஆங்கிலம் பயிற்றுவித்தார். ஒருவகையில் அவர் பழைய ‘தூய்மைவாத’ ஆங்கில ஆசிரியர். ஆகவே இலக்கியத்தில் பிற அறிவுத்துறைகளின் செல்வாக்கை எதிர்த்தார். இலக்கியத்தை இலக்கியத்துக்குள் இருந்து மதிப்பிட முயன்றார்.

 

ஆனால் இவ்வாறென்றால் அவருக்கு இன்றிருக்கும் முக்கியத்துவம் உருவாகியிருக்காது. அவர் இலக்கியப்படைப்பை அந்தரங்கமாக மதிப்பிட முயன்றார். தன் ரசனைசார்ந்து, தன் உணர்வுகள் சார்ந்து, தன் வாழ்வனுபவங்கள்சார்ந்து, தன் ஆன்மிகம் சார்ந்து புரிந்துகொள்ளவும் ஏற்பும் மறுப்பும் கொள்ளவும், எண்ணிமேலே செல்லவும் தொடர்ச்சியாக முயன்றார். ஆகவே தன் பயணத்திற்கான ஊர்திகளாக இலக்கியப்படைப்புக்களைக் கொண்டார். மிக இயல்பான, இலக்கியம் எப்படி வாசிக்கப்படவேண்டுமோ அப்படி வாசிக்கப்படுகிற அந்தச் செயலுக்கு என்னென்ன தடை சமகாலச் சூழலில் உள்ளது என பார்த்து அவற்றுக்கு எதிரான கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். அவ்வாறுதான் அவருடைய இலக்கியவிமர்சனச் செயல்பாடு அமைந்தது.

 

ஹரால்ட் ப்ளூம் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டுக்காலம் நீண்டது அவருடைய இலக்கிய விமர்சன வாழ்க்கை. அதை ஓரிரு மையக்கருத்துக்களில் சுருக்குவது கடினம், புதுமைப்பித்தனின் சொற்களில் சொல்லப்போனால் ‘வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுளை’ பற்றிப் பேசியவர் அவர். கல்வித்துறை நிபுணர்கள் பன்னிப்பன்னிப் பேசியும் சிக்காத இலக்கியத்தின் ஆழமே அவருடைய பேசுபொருள். அதை சுட்டவே வாழ்நாள் முழுக்க அவர் முயன்றார், விளக்கவோ வரையறுக்கவோ அல்ல.ஆகவே அவர் இலக்கியப்பிரதிகள்மேல் வல்லாதிக்கம் செலுத்தவில்லை. இலக்கியவாதிகளை அறுதியாக வரையறுக்கவில்லை. படைப்புக்களை திரிக்கவும் வளைக்கவும் அதனூடாக தன்னை முன்னிறுத்தவும் முயலவில்லை. அவரிடமிருந்த அந்த தற்புரிதலும் அடக்கமுமே அவரை முதன்மையான இலக்கிய விமர்சகர் ஆக நிலைநிறுத்தின.

 

ஹரால்ட் ப்ளூம் பேசியவற்றை இங்கே விவாதிப்பதற்கு பல தடைகள் உள்ளன. அவர் பேசிய பெரும்பாலான எழுத்துக்கள் ஐரோப்பியப் பேரிலக்கியங்கள். அவர் விவாதித்த களங்களும் தொடர்ச்சியாக மாறிவந்துள்ளன. அவற்றை தேடிச்சென்று வாசிக்கமுயலும் வாசகன் அவரை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர் முன்வைத்த மூன்று கருத்துருக்களை திறவுகோல்களாகக் கொள்ளலாம். இதை ஒரு தமிழ் வாசகனுக்கான வழிகாட்டிக்குறிப்பாகச் சொல்கிறேன். ஒன்று, வாசகனின் தனிமை. இரண்டு, இலக்கியத்தின் தனித்தன்மை. மூன்று, பேரிலக்கியங்கள் அல்லது இலக்கிய மூலநூல்கள்.

 

இன்று, கல்வித்துறைசார்ந்த இலக்கிய அணுகுமுறை ஒரு கூட்டுவாசிப்பை பயிற்றுவித்து நிலைநிறுத்தியிருக்கிறது. பெரும்பாலும் அரசியல்நிலைபாடுகள் சார்ந்த, சமூகவியல் கருத்துக்கள் சார்ந்த, உளவியல் போன்ற பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்த வாசிப்புகள் இவை. அரசியல்சரிநிலைகளுக்கு இவற்றில் மிகப்பெரிய பங்கு உள்ளது. ஐயமிருந்தால் இன்று ஒரு நூல் வந்ததுமே வரும் மதிப்பீடுகளை ஒட்டுமொத்தமாகப் பாருங்கள். ஒரு வாசகனாக தன் மதிப்பீட்டை முன்வைப்பவை அரிது. பெரும்பாலும் தன்னை ஒரு பொது அடையாளமாக வரையறை செய்துகொண்டு பேசுபவையாகவே அவை இருக்கும்

 

உதாரணமாக, ஒரு கருப்பின எழுத்தாளரின் படைப்புக்களை ஒருவர் படிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் அதை மதிப்பிடுகையில்  அவ்வெழுத்தாளரின் கருப்பின அடையாளத்தை கருத்தில்கொண்டே ஆகவேண்டுமா என்ன? கருத்தில்கொள்வதும் கொள்ளாததும் ஒருவரின் விருப்பம். வாசகனுக்கு அவனுடைய இயல்புசார்ந்தும் தேடல்சார்ந்தும் அப்படைப்பை வாசிக்கவும் மதிப்பிடவும் உரிமை உள்ளது. ஆனால் அவ்வெழுத்தாளர் மீது ஒரு பொது அடையாளம் நிலைநிறுத்தப்பட்டு அந்த நோக்கினால ஒரு கூட்டுவாசிப்பு மட்டுமே மெய்யான வாசிப்பு என நிறுவப்படுகிறது. அவர்மீதான வாசிப்பை ஒருவர் முன்வைத்தால் அவரை கருப்பின எழுத்தாளர்’ என வரையறைசெய்திருக்கும் ஒரு பொதுவாசகக் கூட்டமே எழுந்து வந்து அவரைச் சூழ்ந்துகொள்கிறது.ப்ளூம் ஸ்டீபன் கிங்குக்கு விருது வழங்கப்பட்டபோது அப்படைப்பில் உள்ளவை வாசகரசனைக்காகச் சமைக்கப்பட்டவை என எதிர்த்தார். ஸ்டீபன்கிங் ‘யாரும் சொல்லாத’ குற்றவாழ்க்கையைச் சொல்கிறார், அதை மறுப்பது மேட்டிமைநோக்கு என அவருக்கு மறுமொழி சொல்லப்பட்டது.

 

இப்படி அத்தனை படைப்பாளிகளைப்பற்றியும் ஒருவகை கூட்டு அடையாளம் இன்று கல்வித்துறை மதிப்பீடுகளால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பெண்கள்,சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தவர், மூன்றாம்பாலினத்தோர் என. அந்தந்த அடையாளங்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்றும் ஒரு பொதுவரையறையை அறிவுச்சூழலில் பயிற்றுவித்து நிலைநாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு மூன்றாம்பாலினத்தவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார் எனக் கொள்வோம். அது மேலோட்டமான, மிகையுணர்ச்சி சார்ந்த, பழகிப்போன கருத்துநிலைகள் சார்ந்த ஒன்றாக இருந்தாலும்கூட அதை நீங்கள் சொல்லமுடியாது. ஏனென்றால் மூன்றாம்பாலினத்தை, அவர்கள் ‘மற்றவர்கள்’ என்பதனால் ‘பொதுப்போக்கினர்’ கரிசனத்துடன் பார்த்தே ஆகவேண்டும். அதிலிருந்தே கருத்துக்களை உருவாக்கவேண்டும். சமூக தளத்தில் இது தேவையானதாகவே இருக்கலாம். ஆனால் இலக்கியம் அந்தரங்கமானது. அங்கே இதை நிபந்தனையாக ஆக்கமுடியாது. நிபந்தனையாக ஆக்கினால் பொதுத்தளத்தில் பொதுவான பாவனைகளை முன்வைப்பதாகவே வாசிப்பு ஆகிவிடும்.

 

இத்தகைய அடையாளங்கள் அப்படைப்பை புரிந்துகொள்வதற்கான வழிகளாக ஆவது வேறு, அப்படைப்பாளிக்கும் அப்படைப்புக்குமான முழுமையான அடையாளங்களாக ஆவது வேறு. மிகமேலோட்டமானவை இந்த வரையறைகள். பெரும்பாலும் படைப்புக்கு அப்பாற்பட்டவை. இத்தகைய கூட்டுவாசிப்பு என்பது இலக்கியப்படைப்பு செயல்படும் அந்தரங்கத்தன்மைக்கு எதிரானது. இலக்கியவாசகனுக்கும் இலக்கியப்பிரதிக்குமான ஊடாட்டத்தின் முடிவிலா சாத்தியக்கூறுகளை மறுப்பது. ஒவ்வொரு வாசிப்பிலும் இலக்கியப்பிரதி மறுபிறப்பு எடுப்பதை தடுப்பது. இலக்கிய வாசிப்பு என்னும் கொண்டாட்டத்தை ஒருவகை சமூகச்செயல்பாடாக, அறிவுப்பயிற்சியாக மாற்றிவிடுவது. ப்ளூம் தன் எழுத்துக்களினூடாக  “Be alone!” என வாசகனிடம் சொல்கிறார். உன் சூழல் சொல்வது எதுவாகவேண்டுமென்றாலும் இருக்கட்டும், அறிஞர்கள் என்னவேண்டுமென்றாலும் சொல்லட்டும், நீ படைப்புடன் தனித்திரு. இந்த அறைகூவலையே அவருடைய இலக்கியவிமர்சனச் செயல்பாட்டின் அடிப்படை எனலாம்.

 

சென்ற ஐம்பதாண்டுகளில் இலக்கியவிவாதங்களில் நிகழ்ந்தவற்றை ஒரே மூச்சில் தொகுத்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும் இலக்கியமென்னும் செயல்பாட்டின் தனித்தன்மை மீது பிற அறிவுத்துறைகளின் தாக்குதல் உச்சத்தில் இருந்தது என. இலக்கியம் என்னும் செயல்பாட்டை மறுப்பதையே பெரும்பாலும் இலக்கியவிமர்சனம் என்று சொல்லிவந்திருக்கிறோம் என. இங்கும் அப்பேச்சு ஒலித்திருக்கிறது. “இனிமேல் இலக்கியம் என்பது இல்லை” என்னும் கொக்கரிப்புக்களை எவ்வளவு கேட்டிருக்கிறோம். “இருக்கட்டும், ஆனால் அந்தச் சாவில் உனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி?” என்று சுந்தர ராமசாமி கேட்டார்.

 

முதல்பெருந்தாக்குதல் உளப்பகுப்பியலில் இருந்து. பின்னர் சமூகவியலில் இருந்து. உச்சகட்ட தாக்குதல் மொழியியலில் இருந்து. பின்னர் குறியீட்டியலும் மானுடவியலும் வந்தன. கடைசியாக மூளைநரம்பியல். இவை ஒவ்வொன்றும் இலக்கியத்தின் பேசுபொருட்களை, இலக்கியம் செயல்படும் முறையை வகுக்க முயன்றன. எழுபதுகளில் எளிய உளவியல் கருத்தாக்கங்களின் அடிப்படையில் இலக்கியம் வரையறைசெய்யப்பட்டது, மறுக்கப்பட்டது. சமூகவியல் இலக்கியத்தின் பேசுபொருட்களை அது மேலும் புறவயமாகவும் தெளிவாகவும் பேசிவிட்டதாகச் சொல்லிக்கொண்டது. மொழியியல் இலக்கியத்தின் செயல்முறையையே விளக்கிவிட்டதாக கூறிக்கொண்டது. அழகியல் என்பது என்னவகையான மூளைநிகழ்வு என விளக்குகின்றனர் இன்றைய நரம்பியலாளர்கள்.

 

இவர்கள் அனைவரும் இலக்கியத்தை தங்கள் கோணத்தில் வரையறைசெய்து சடலமாக ஆக்கி அதன்பின் பிணஆய்வு செய்கிறார்கள். இலக்கியத்தின் உயிர்நிலையை இவர்கள் உணர்வதில்லை. இவர்களின் சிக்கலே இவர்கள் இலக்கியத்தின் வாசகர்கள் அல்ல, ஆய்வாளர்கள் என்பதுதான். இலக்கியம் மிகத்தொன்மையான ஒரு அறிவியக்கம், ஒரு கலைநிகழ்வு. அதன் பணி என்பது மொழியில் சிந்தனையையும் சிந்தனையைக் கடந்துசெல்லும் ஆழங்களையும் வெளிப்படுத்த முயல்வது. ஆனால் மொழி அகவயமானது. குறியீடுகள் மற்றும் ஆழ்படிமங்கள் வழியாகச் செயல்படுவது. ஆகவே இலக்கியம் மொழிக்குள் ஒரு தனிமொழியை உருவாக்கிக்கொள்கிறது.அந்தத் தனிமொழிக்குள் மேலும் மேலும் தனிமொழிகள் உருவாகின்றன. அதன் வட்டத்திற்குள் வருபவர்களுக்குள் மேலும் மேலும் தனிவட்டங்கள் அமைகின்றன.

 

அதாவது இலக்கியம் தன் தொடர்புறுத்தலுக்கான குறியீட்டுக் களத்தையும் தானே உருவாக்கிக் கொள்கிறது. அக்களத்தை பயன்படுத்தியே அக்களத்தை தொடர்ந்து உடைத்து விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இலக்கியத்தை ஒருவகையில் விளக்கினால் இலக்கியம் அதை நிராகரிப்பதில்லை. அதையும் உள்ளிழுத்துக்கொண்டு மேலும் விரிகிறது. சென்றகாலத்தில் இலக்கியத்தை வரையறுக்க முயன்ற அனைத்துச் சிந்தனைகளையும் இலக்கியம் தன்வழியில் விளக்கிக்கொண்டு மேலும் சென்றிருக்கிறது. இந்த தனித்தன்மையே இலக்கியத்தின் வழிமுறை. தன்னைத்தானே வென்று, கடந்துசெல்லுதல். ஒவ்வொரு செயல் வழியாகவும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளுதல்.

 

வெவ்வேறு சொற்களில், வெவ்வேறு விவாதங்களில் ப்ளூம் இலக்கியம் என்னும் தனித்த இயக்கத்தை விளக்கிவிட முயல்கிறார்.தன் ஆரம்பகால எழுத்துக்களிலேயே இலக்கிய ஆக்கம் என்பது எப்படி முந்தைய படைப்பாளிகளை பின்பற்றுவது, மறுப்பது, அப்படைப்புக்களை நகலெடுப்பது திரிப்பது, தன் சொந்த அனுபவங்களை முந்தைய புனைவுகளைக்கொண்டு விளக்குவது , புதிய அனுபவங்களை உருவாக்கிக்கொள்வது என்னும் தளங்களில் நுட்பமாக நிகழ்கிறது என்பதை அவர் தொட்டறிய முயல்கிறார். புனைவைவிட நுட்பமானவையான கவிதைகளை அதன் பேசுபொருளாக்குகிறார். பின்னாளைய எழுத்துக்களில் வாசகஏற்பு எவ்வண்ணம் படைப்பை மறுபடியும் நிகழ்த்துகிறது என விவரிக்கிறார்.

 

ப்ளூமின் எழுத்துக்களின் தொடக்க காலம் முழுக்க இலக்கியம் என்பது எப்படி தலைமுறைகளைத் தொட்டுக்கொண்டு நீளும் ஒற்றை உரையாடல் என்று காட்டுவதற்கான முயற்சியே. என்னை மிகக்கவர்ந்த இக்கருத்தை ஒட்டி மேலும் பலகோணங்களில் எழுதியிருக்கிறேன். மிக முக்கியமான ஒரு கருத்தாக்கத்தை தொடர்ந்து பேசியிருக்கிறார். அதாவது ஒரு படைப்பாளி தன் முந்தைய யுகத்தையப் படைப்புக்களுக்கு ஒரு தவறானவாசிப்பை அறிந்தோ அறியாமலோ அளித்து அதனூடாக தன்னைக் கட்டமைத்துக்கொள்கிறார் [தமிழில் மிகச்சிறந்த உதாரணம் புதுமைப்பித்தன் பாரதிக்கு அளித்த வாசிப்பு. குறிப்பாக பாரதியின் புதிய ஆத்திச்சூடி போலீஸ்காரர்களுக்கான கையேடு என அவர் அளிக்கும் விளக்கம்] இதைப்பற்றிய நம் கருத்து என்னவாக இருந்தாலும் எல்லா படைப்பாளிகளிலும் முந்தைய தலைமுறையின் பெரும்படைப்பாளி ஒருவரைப்பற்றிய கூர்ந்த அவதானிப்பு ஒன்று தொழில்படுகிறது என்பது உண்மை. அதுவே தொடர்ச்சியை கட்டமைக்கிறது.

 

ஐரோப்பியத் தத்துவ விவாதக் களத்தில் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர் ப்ளூம்  ஆனால் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதில் தன் தத்துவநோக்கு உள்ளே வரலாகாது என்பதில் கவனமாக இருக்கிறார். அவருடைய மதம்சார்ந்த ஆய்வுகளில் தெளிவாகவே தெரியும் ஐரோப்பியச் சாராம்சவாத நோக்கை இலக்கியவிவாதங்களில் காணமுடியாது. அவருடைய சாராம்சவாத நோக்குக்கு மிக அணுக்கமானவரான எமர்சனை அவர் ஆராயும்போதுகூட எமர்சனின் இலக்கியத்தன்மையையே முன்னிறுத்துகிறார். ஆகவேதான் சாராம்சநோக்கில் எமர்சனுக்கு நேர் எதிரானவரான ஷெல்லியையும் அவரால் நிகரெனக் கருதமுடிகிறது.கலைப்படைப்பு ‘கூறுவது என்ன?’ என்பதை அவர் கருத்தில்கொண்டதில்லை. கலைப்படைப்பு கூறுவதல்ல, நம்மிடம் அது நிகழ்த்தும் உரையாடலே அதன் செயல்பாடு என்பது அவருடைய நோக்கு. இலக்கியத்தின் தொடர்ச்சியான செயல்நிலையை அறியவே எப்போதும் அவர் முயல்கிறார். இலக்கியம் என்னும் இயக்கத்தின் தனித்தன்மையை முன்வைக்கவே அவருடைய இலக்கிய விமர்சனச்செயல்பாடு பெரும்பாலும் நிகழ்ந்தது

 

அப்படி ஒரு தனித்தன்மையைச் சற்றேனும் புறவயமாக வரையறை செய்யவேண்டும் என்றால் அதற்குரிய ஒரே அடிப்படை செவ்விலக்கியங்களே. செவ்விலக்கியங்கள் என்பவை காலத்தால் நிறுவப்பட்டவை. ஒரு பண்பாட்டால் ஏற்கப்பட்டவை. ஆகவே அவற்றுக்கு ஒரு புறவயத்தன்மை மறுக்கமுடியாமல் உருவாகிவிட்டிருக்கிறது. அவை எப்படி மொழிவடிவு கொண்டுள்ளன, வாசிப்பில் எப்படியெல்லாம் மறுகட்டமைவு கொள்கின்றன, அவற்றின்மீதான ஏற்பும் மறுப்பும் எப்படிப்பட்டது, அவை நிலைநிறுத்தும் படிமங்கள் என்னென்ன, அப்படிமங்களின் வரலாற்றுத் தொடர்ச்சி என்ன என்பனவற்றை ஓர் எல்லைவரை வரையறுக்க முடியும். அவற்றிலிருந்து இலக்கியம் என்னும் கலையின் செயல்முறைகளை புரிந்துகொள்ளமுடியும். ப்ளூமின் இலக்கியவிமர்சனக்கோணம் முழுக்கமுழுக்க அகவய வாசிப்பை முன்னிறுத்துவது. ஐரோப்பிய இலக்கியச்சூழலின் தலைசிறந்த ரசனைவிமர்சகர் அவர். ரசனை விமர்சனம் நோக்கி எப்போதும் கேட்கப்படும் கேள்வி, அதில் புறவயமாக உள்ளது என்ன, அதன் மாறா அளவுகோல் என்ன என்பது. அதற்கு ப்ளூம் செவ்விலக்கியங்களையே சுட்டிக்காட்டுகிறார்.

 

செவ்விலக்கியங்களே அடுத்தகட்ட இலக்கியத்திற்கான அளவுகோல்களை வழங்குகின்றன என்று ப்ளூம் விளக்குகிறார். ஏனென்றால் இலக்கியம் என்பது ஒரு தொடர் இயக்கம். செவ்விலக்கியம் என்பது ஒரு பெருஞ்சூழலை உருவாக்க அதன்மீதே அடுத்தகட்ட இலக்கியம் ஏற்பும் மறுப்புமாக நிகழ்கிறது. ஆகவே மேலைச்செவ்வியலை தொகுத்துநோக்க, அதன் இயல்புகளைப் புரிந்துகொள்ள ப்ளூம் முயல்கிறார். இதில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று உண்டு. மேலைச்செவ்விலக்கியம் [western canon ]என்பதை ப்ளூம் ஒரு புறவயமான கட்டுமானமாக நினைக்கவில்லை. அதன் ஏற்பியலையும் கருத்தில்கொள்கிறார். தாந்தே முதல்வால்ட் விட்மான் வரையிலான மேலைச்செவ்விலக்கியங்களைப் பற்றிப் பேசுகையில் அவற்றுக்கான ஏற்பு மேலைப்பண்பாட்டில் எவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை ஜான்ஸன் முதல் தொடரும் விமர்சகர்களின் ஆய்வுகளைக்கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறார். செவ்வியலை இந்த இருநிலைகளையும்கொண்டே வகுக்கவேண்டும். அதாவது திருக்குறள் செவ்வியல் என்றால் பரிமேலழகரும் நச்சினார்க்கினியரும் எல்லாம் சேர்ந்தே அது செவ்வியல் படைப்பாகிறது.

 

இவ்வாறு பார்க்கையில் ப்ளூம் இலக்கியத்தின் முரணியக்கத்தை இப்படி வகுத்துக்கொண்டார் என நான் புரிந்துகொள்கிறேன். செவ்வியல் X தனித்தன்மை. செவ்வியல் ஒரு பொதுச்சூழலாக, மேடையாக உள்ளது. அதன்மேல் நின்றுசெயல்படுகையில் ஆசிரியனின் தனித்தன்மை, படைப்பின் தனித்தன்மை, வாசகனின் தனித்தன்மை ஆகியவை அதை எதிர்த்து செயல்படும் விசைகளாக உள்ளன. ஒவ்வொரு படைப்பாளியும் தன் முன்னோடிகளிடமிருந்து விலகி பறந்தெழ, வேறொன்றாக வெளிப்படவே முயல்கிறான். அதுவரை இல்லாத ஒன்றை வாசிக்கவே வாசகன் விழைகிறான். ஆனால் அவர்கள் செவ்விலக்கியத்தின் மீதுதான் நிற்கிறார்கள். இந்த முரணியக்கம் படைப்பை, படைப்பாளியை, வாசிப்பை நிகழ்த்துகிறது. அந்தப்புள்ளி தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பது என்பதே ப்ளூம் காட்டுவது

 

ஹரால்ட் ப்ளூம் ஷேக்ஸ்பியரை மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார். படைப்பை வரையறைசெய்வது, படைப்பிலிருந்து நிலையான அர்த்தங்களை உருவாக்கிக்கொள்வது, படைப்பிலிருந்து கொள்கைகளைச் சமைப்பது ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர். படைப்பை வாசகன் அந்தரங்கமாகச் சந்திக்கும் விதத்தை மட்டுமே அவர் முன்னிறுத்துகிறார். அதற்கான சாத்தியங்கள் என்னென்ன ஒரு படைப்பில் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதே அவருடைய விமர்சனப் பாணி. படைப்பு சமூக மாற்றத்திற்கானது, மெய்மைகளை முன்னிறுத்துவது போன்ற நம்பிக்கைகளுக்கு அவர் எதிரானவர். படைப்பு என்பது ஓர் ஆழ்ந்த உரையாடல் மட்டுமே என்பதே அவருடைய  எண்ணம். அதில் திரள்வன அந்தந்த வாசகனுக்கு அவன் வாசிப்பின் தருணத்தில் மட்டுமே நிகழ்பவை.

 

ஹரால்ட் ப்ளூம் பற்றிய எதிர்விமர்சனங்கள் ஏராளம். இன்று வாசிக்கப் புகும் இளையவாசகன் அந்த எதிர்விமர்சனத்தையே உடனடியாகச் சென்றுசேர்வான். ஏனென்றால் இந்த எதிர்விமர்சனங்கள் பலவும் அரசியல் சார்ந்தவை. அரசியல்சரிநிலைகளின் அடிப்படையிலானவை. புகழ்பெற்ற சமூக – அரசியல் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்படுபவை. ஆகவே உடனடியாக அவை அவனிடம் ஏற்பையும் உருவாக்கும். அதோடு அவரை வாசித்துக் கரைகண்டுவிட்ட பாவனையில் எழுதப்படும் குறிப்புகளும் இனி தமிழில் வரக்கூடும். ப்ளூம் வெள்ளைமேலாதிக்கவாதி, ஆணாதிக்கவாதி, ஐரோப்பியமையநோக்கு கொண்டவர், அமெரிக்க மேலாண்மைநோக்கு கொண்டவர், யூத மரபுவாதி ஆகிய எல்லா குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன

 

ஏனென்றால் அவரை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் அரசியல்- சமூகவியல் கோட்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள். அவர்களுக்கு தங்கள் எதிர்த்தரப்பை ஒற்றைப்படையாகச் சுருக்கிக்கொள்ளாமல் பேசத்தெரியாது. எந்தக் கருத்தையும் தாங்கள் பேசிக்கொண்டிருப்பனவற்றின் ஒரு பகுதியாக  ஆக்காமல் அவர்களால் விவாதிக்கவே முடியாது. உதாரணமாக, பெண்ணிய நோக்குக்காக புகழப்பட்ட ஒரு எழுத்தாளரை ப்ளூம் நிராகரித்தால் அவர் ஒரு  ‘வெள்ளை ஆண்’ என வரையறைசெய்யாமல் அவர்களால் மேலே பேசமுடியாது. அவர்கள் வழியாக ப்ளூமை அணுகுவதென்பது இந்நூற்றாண்டின் முக்கியமான இலக்கியசிந்தனையாளனை நாம் இழப்பதுதான். அவர் இன்று நிகழும் இலக்கிய மறுப்பு, நுண்வாசிப்பு மறுப்பு, பொதுமையாக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எழுப்பிய வலுவான வினாக்களை காணாமல் தவிர்ப்பது அது.

 

ஹரால்ட் ப்ளூமிடம் மேட்டிமைநோக்கு இருக்கக்கூடுமா? இருக்கலாம். அவர் ஒரு மேலைச்செவ்வியலை தொகுத்துக்கொள்கிறார். அவருடைய மதிப்பீடுகள் அதன் அடிப்படையிலானவை. அவை அவருடைய தெரிவையும் மட்டுப்படுத்திவிடுகின்றன. ஓர் ஆப்ரிக்கக் கதையாடலில் இருந்து அவரை அது விலக்கிவிடும். இது மிக இயல்பான ஒன்று. இந்த அம்சம் அவரை சிலவகையான மேட்டிமைநோக்குகள் கொண்டவராகக் காட்டலாம்.

 

ஆனால் நம் முன் இரண்டு தெரிவுகளே உள்ளன. செயற்கையாக, அறிவார்ந்து நம்மை ‘உலகளாவிய பொதுரசனை’ கொண்டவராக கட்டமைத்துக்கொள்வது. அல்லது இயல்பாக நாம் வளர்ந்தெழுந்த பண்பாட்டுச்சூழலின் விளைவாக எழுந்த ஆழ்மனமும் ரசனையும் கொண்டிருப்பது. இதை ஏற்கனவே ப்ளூமைச் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறேன். சுவை என்பது எப்போதுமே பிறப்பு வளர்ப்பின் எல்லைக்குட்பட்டது, ஏனென்றால் அது தன்னிச்சையானது. அதை செயற்கையாக மாற்றியமைக்க முயல்கையில் நாம் இழப்பது சுவைசார்ந்த நுண்ணுணர்வை. இதைக்குறித்து அரசியல்சரிநிலை சார்ந்த ஒற்றைவரிகளுடன் மல்லிட வரும் கூட்டத்திடம் பேசவிரும்பமாட்டேன். ஆனால் இது ஓர் உண்மை, இன்றைய உலகளாவிய பண்பாட்டுச் சொல்லாடல்கள் உருவாகிவரும் சூழலில் ஒரு மெய்யான சிக்கல் என்பதை நோக்கினால் அறியலாம்.

 

இப்படிச் சொல்கிறேன், ஓர் ஐரோப்பிய இலக்கிய வாசகருக்கு இயல்பாகவே ஐரோப்பியச் செவ்வியல்சூழலில் விளைந்த ரசனை உள்ளது. அவரால் ஐரோப்பிய கலைப்படைப்புகளையே மெய்யாக ரசிக்க முடிகிறது. அவர் தன்னை வலிந்து விரிவாக்கிக்கொண்டு  ‘பிற’ படைப்புகளை ரசிக்க ஆரம்பித்தால் என்ன நிகழ்கிறது? தன் நுண்ணுணர்வுக்கு பதிலாக அவர் ஒரு அரசியல்சரிநிலையை முன்வைக்க ஆரம்பிக்கிறார். அந்த  ‘பிற ஏற்பு’ இருவகையில் நிகழும். அந்தப் பிறரில் செயல்படும் ஐரோப்பிய அம்சத்தை மட்டும் காண்பது ஒன்று – முரகாமி முதலிய ஜப்பானிய எழுத்தாளர்கள் ஐரோப்பாவில் அப்படித்தான் வாசிக்கப்படுகிறார்கள். அல்லது, ‘விந்தையான’ தன்மைக்காக பிற இலக்கியப்படைப்புகளை ரசிப்பது. அல்லது ‘முற்போக்கான’ ‘சீர்திருத்த நோக்கம் கொண்ட’ ‘கலகம்செய்யும்தன்மைகொண்ட’ படைப்புக்களை ரசிப்பது.

 

ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலிருந்து செல்லும் எழுத்துக்கள் அவற்றின் கலைநுட்பத்திற்காக அல்லாமல், அறிவார்ந்த தன்மைக்காகக்கூட அல்லாமல், வெறும் சமூகவியல் அரசியல் சார்ந்த காரணங்களால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முன்னிலைப்படுத்தப்படுவது இப்படித்தான். இந்த அவலத்தை திகைப்புடனேயே ஆசிய, ஆப்ரிக்கப் பண்பாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அங்கிருந்து சென்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கவனிக்கப்படும் படைப்பாளிகள் உள்ளூர் வாசகர்களுக்கு எவ்வகையிலும் முதன்மையானவர்களாக இருப்பதில்லை. ஐரோப்பிய அமெரிக்க இலக்கிய ‘நிபுணர்கள்’ அங்கிருக்கும் படைப்புக்களையும் வெளிப்படைப்புக்களையும் பார்க்கும் அணுகுமுறையில் இருக்கும் இந்த வேறுபாடு இந்நூற்றாண்டின் மிகப்பெரிய அவலம்.

 

இந்தச் செயற்கையான ‘உலகளாவிய’ நோக்கு ப்ளூமிடம் இல்லை என்பது ஒரு தகுதியே. அவர் ஐரோப்பிய ரசனைமரபில் ஆழ வேரூன்றியவர், ஆகவே உண்மையானவர். ஆனால் ப்ளூம் உலகளாவிய , மானுடம் அளாவிய கலை அளவுகோல்களைப் பற்றியே எப்போதும் பேசுகிறார். அவற்றை ஐரோப்பியப்பேரிலக்கியங்களில் இருந்து உருவாக்கிக்கொள்ள முடியுமா என்று பார்க்கிறார். உலகளாவிய மானுட மதிப்பீடுகளையே நாடுகிறார். அவருடைய எல்லைகள் இயல்பானவை, அவருடைய தேடல்கள் வழியாக அவர் சென்ற பாதை உலகளாவிய முன்னுதாரணம் என நினைக்கிறேன்.

 

எல்லா விமர்சகர்களையும்போல ஹரால்ட் ப்ளூம் எழுதிக்குவித்தவர். இலக்கியவிமர்சனத்தில் ஆய்வு செய்யும் ஒருவர் மட்டுமே அவரை முழுமையாக வாசிக்கமுடியும். இலக்கியப் பொதுவாசகர்கள் அவரை வாசிக்க How to Read and Why, The Anxiety of Influence போன்ற நூல்களும் அவருடைய தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுதிகளுமே போதுமானவை. வேண்டுமென்றால் பிற்காலத்தைய பெருநூலான The Western Canon ஐ வாசிக்கலாம். ஆனால் ஓர் இலக்கியவிமர்சகர் ஒரு குறிப்பிட்ட இலக்கியவிவாதச் சூழலில், பண்பாட்டுக் குறிப்புகளுடன் பேசிக்கொண்டிருப்பவர். முற்றிலும் வேறுபட்ட சூழலில் செயல்படும் இலக்கியவாசகன் அவரை முழுமையாக புரிந்துகொள்ள ஆண்டுகளைச் செலவழிப்பது வீண்முயற்சி. சுருக்கமான அறிமுகமே போதுமானது.

 

நான் ஹெரால்ட் ப்ளூமை அடிக்கடி மேற்கோள்காட்டியிருக்கிறேன். எமர்சன் வழியாகவே நான் அவரைச் சென்றடைந்தேன். என் சிந்தனைகளில் அவருடைய செல்வாக்கை இப்படி வகுத்துக்கொள்கிறேன். ஒன்று, தமிழ்ச்சூழலில் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகள் மற்றும் ஷேக்ஸ்பியர் போன்ற மரபுக்கவிஞர்கள் மேல் இருந்த ஒவ்வாமையை கடக்க எனக்கு உதவியவர். கற்பனாவாதம் என்பது ஒரு பண்பாட்டின் சாராம்சமான உணர்ச்சிகளின் வெளிப்பாடு, வெறும் உணர்வுப்பாவனை அல்ல என்பது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. நவீனத்துவம் மீதான என் ஒவ்வாமைகளை, விமர்சனங்களை அவரே உருவாக்கினார். என்னை செவ்வியல் நோக்கி ஆற்றுப்படுத்தினார். ஷெல்லி, பைரன் போன்றவர்களைப்பற்றிய என் கருத்துக்களில் அவருடைய செல்வாக்கு உண்டு என்பதை வாசிப்பவர்கள் அறிந்திருப்பார்கள்.  மரபிலக்கியம் சார்ந்த அளவுகோல்கள் இலக்கியவிமர்சனத்தின் அடிப்படைகளாக ஆவதை அவருடைய கருத்துக்களின் நீட்சியாகவே உருவாக்கிக்கொண்டேன்.  வாசிப்பின் தனிமை , இலக்கியத்தின் தனித்தன்மையையும் அவருடைய கருத்துக்கள் சார்ந்தவையே.அதை இலக்கியவாசகர் உணர்ந்திருப்பார்கள்

 

கூர்ந்து வாசிக்கும்பொருட்டு அவரை மொழியாக்கம் செய்திருக்கிறேன். ஆனால் நூல்வடிவாகவில்லை, என் மொழியாக்க நடை மிகத்திருகலாக இருந்தது. வேறுவழியும் இருக்கவில்லை. ப்ளூமின் விமர்சனமொழி ஆய்வாளர்களுக்குரியது அல்ல. கூரிய ஒற்றைவரிகள், தனித்த அவதானிப்புகள். சொல்விளையாட்டுக்கள் கலந்து இலக்கியப்படைப்பு போலவே தோன்றுவது. நான் ப்ளூமை அரிதாகவே நேரடியாக மேற்கோள்காட்டியிருக்கிறேன். ஏனென்றால் அவர் முன்வைக்கும் ஐரோப்பிய மைய நோக்கை நான் ஏற்பதில்லை. அவரை மேற்கோள்காட்டி விவாதத்தை அவரை நோக்கி கொண்டுசெல்ல மாட்டேன், வெறுமே உரிய இடங்களில் அவர் பெயரைச் சுட்டியிருப்பேன். மாற்றுபைபிள் குறித்த அவருடைய கருத்துக்களையும் நான் மேற்கொண்டு பேசியிருக்கிறேன்.

 

ப்ளூமுக்கு அஞ்சலி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34

$
0
0

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 4

யுயுத்ஸு யுதிஷ்டிரனின் குடிலில் இருந்து வெளிவந்தபோது அதை உணரவில்லை. ஆனால் சில அடிகள் முன்னெடுத்து வைத்த பின்னரே பெருங்களைப்பை உணர்ந்தான். உடலில் பெரிய எடை ஏறி அமர்ந்திருப்பதுபோல. கால்களை முன்னெடுத்துவைக்க இயலவில்லை. கண்களை மூடியபடி முற்றத்திலேயே சில கணங்கள் நின்றான். நோக்குணர்வு ஒன்று வந்து தொட திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். அருகே எவருமில்லை என்று கண்டான். உடனடியாகச் சென்று அர்ஜுனனை பார்க்கவேண்டும் என்று யுதிஷ்டிரனால் பணிக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் உள்ளம் அதை மறுத்தது. சுவரில் முட்டிக்கொண்டதுபோல முழுமையாக திசைகள் மூடியிருந்தன.

தன் குடிலுக்குச் சென்று மீண்டுமொருமுறை ஆடைமாற்றிக்கொண்டு கிளம்பலாம் என்னும் எண்ணம் வந்தது. அது அவன் வழக்கம். ஒருநாளில் நாலைந்துமுறை அவன் ஆடையையும் தலைப்பாகையையும் மாற்றிக்கொள்வதுண்டு. அஸ்தினபுரியில் அவனுக்கு எப்போதுமே பணிச்சுமை மிகுதி. அரசமகன் என்றும் சூதனென்றும் ஒரே தருணத்தில் இருக்கையில் அனைவருக்குமே எதிர்பார்ப்பளிப்பவனாக ஆகிவிட்டிருந்தான். இடைசென்றால் பொழுதே நசுங்கிவிடும் என்பதுபோன்ற நாள்விரைவு என அவனே ஒருமுறை சொன்னான். பணிச்சுமை மிகும்போதோ ஒவ்வாப் பணி எதிர்நிற்கும்போதோ கால்நாழிகை ஓய்வெடுத்து நீராடி அல்லது முகம் கழுவி மற்றொரு ஆடை அணிந்து புதியவனாக எழுந்து வருவது அவன் வழக்கம். அதுவரை அவன் செய்துகொண்டிருந்த செயல்களிலிருந்து அவ்வாறு தன்னை முற்றாக துண்டித்துக்கொள்வான். அவை அளித்த களைப்பு அனைத்தையும் உதிர்த்துக்கொள்ளவும் முடியும்.

அவன் தன் குடிலை அடைந்து உள்ளே சென்று கதவுப்படலை மூடிக்கொண்டதும் தனியறைகளில் மட்டுமே அவன் அடையும் தற்தொகுப்புணர்வை அடைந்தான். அங்கே அவனை அவனே வெவ்வேறு கோணங்களில் கண்கள் எழுந்து நோக்கிக்கொண்டிருந்தான். அந்நோக்குகளுக்கு முன் தன்னை அமைத்துக்கொண்டான். அவன் அந்தக் குடிலில் ஓரிரு நாட்கள்தான் அந்தியுறங்கியிருந்தான். அதற்குள்ளேயே அதை அவனுடையதாக எண்ணத் தலைப்பட்டான். அதற்குள் வந்ததுமே அதை இன்னொருவர் பயன்படுத்தியிருப்பதாகத் தோன்ற அறையை கூர்ந்து நோக்கினான். எந்த அடையாளமும் தென்படவில்லை. ஆனாலும் அந்த உணர்வு இருந்தது. அவன் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

அவன் தன் அறைக்குள் பிறர் நுழைய விடுவதில்லை. அவனுடைய துணைவியர் சாந்தையும் சுகிர்தையும் அஸ்தினபுரியில் அவனுடைய தனியறைக்குள் நுழைவதில்லை. அவர்களை அவன் மணமுடித்த நாளில் அதை தெளிவுறச் சொல்லிவிட்டிருந்தான். அவர்கள் அவனை அஞ்சினர். அவன் அவர்கள் இருவரையும் நினைவுகூர்ந்தான். அன்னையை உடனே நினைவிலிருந்து எடுத்தான். அன்னையை எண்ணாமல் அவர்களைப்பற்றி எண்ணமுடிவதில்லை. அன்னையுடன் இணைந்தே அவர்களை அவன் பெரும்பாலும் பார்த்திருக்கிறான். அவர்களை தனியறைகளில் சந்திக்கும்போதுகூட மிக அருகிலெங்கோ அன்னை இருப்பதாகவே உணர்ந்திருக்கிறான்.

அவர்கள் அஸ்தினபுரியிலிருந்து அகன்று அப்பாலுள்ள சித்ரபீடம் என்னும் சிற்றூருக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். அவன் அஸ்தினபுரியிலிருந்து அகன்றபின் அவர்கள் அங்கே தங்க முடியவில்லை. அஸ்தினபுரியில் அவர்கள்மேல் கடும் சினம் எழுந்துவிட்டிருந்தது. அவர்களை மூடுதேரில் காவலுடன் வெளியே அனுப்பவேண்டியிருந்தது. அன்னை செல்வதில் பேரரசருக்கு விருப்பமில்லை. ஆனால் அன்னை அவர்களுடன் செல்லவே விரும்பினாள். அவர்கள் அங்கே சென்றுவிட்டதை அவன் அறிந்தான். அவர்களைச் சென்றுபார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. அவ்வப்போது அவர்களின் நினைவெழுந்தாலும் உடனே மறைந்தது. அன்று யுதிஷ்டிரன் அன்னையைப்பற்றி கேட்டமையால் இந்நினைவுகள் எழுந்து நின்றுள்ளன போலும்.

சாந்தை எளிய சூதர்குலத்துப் பெண். அஸ்தினபுரியின் தொல்சூதர் குடியில் பிறந்தவள். அவள் தந்தை புஷ்பகோஷ்டத்தில் அடுமனையாளராக இருந்தார். அவள் அன்னை காந்தாரியின் ஏவல்பெண்டு. சாந்தை அரண்மனைக்கு ஒரு நோன்புநிகழ்வுக்காகச் சென்றபோது சத்யசேனை அவளைக் கண்டு “அழகிய பெண்” என வியந்தாள். சாந்தை வெண்ணிறமான பருத்த உடலும் சிவந்த பருக்கள் கொண்ட வட்ட முகமும் கொண்டவள். நீல விழிகள் அவளை காந்தாரத்தின் குருதி கொண்டவள் என்று காட்டின. காந்தாரி அவளை அருகணையச்செய்து கைகளால் வருடிநோக்கினாள். “இவள் என் மைந்தனுக்கு மணமகள் ஆகுக!” என்று உரைத்தாள்.

அது ஆணை என்றே கொள்ளப்பட்டது. சத்யசேனை அவனை அரண்மனைக்கு அழைத்து பேரரசியின் ஆணையை சொன்னாள். அவனுக்கு மாற்றுச்சொல் இருக்கவில்லை. சாந்தையின் தந்தை அஞ்சினார். அவன் எளிய சூதன் அல்ல என்று அவர் அறிந்திருந்தார். “நமக்குரிய இடமல்ல. சுட்டுப்பழுத்த அடுமனைக்கலம் அது. நாம் அறிந்தது எனத் தோன்றும், தொட இயலாது” என்றார். ஆனால் அவள் அன்னைக்கு அந்த உறவு பேருவகையை அளித்தது. ஒரே நாளில் அவள் அரண்மனையில் தனித்தன்மை கொண்டவளாக ஆனாள். பிற சேடியர் அவளை அஞ்சவும் பணியவும் முற்பட்டனர். “செல்லுமிடத்திற்கு உரியவள் ஆவது பெண்ணின் இயல்பு. அடுமனைக்கலத்தை கையாளத் தெரியாதவள் பெண்ணே அல்ல” என்றாள்.

அச்செய்தியை அவன் அன்னை அறிந்தபோது அவள் முகம் சுருங்கியது. நெடுநேரம் அவள் ஒன்றும் சொல்லவில்லை. “அப்பெண்ணில் உங்களுக்கு நிறைவில்லையா, அன்னையே?” என்று யுயுத்ஸு கேட்டான். “என் கருத்திற்கு இங்கே என்ன இடம் உள்ளது?” என்று அன்னை சொன்னாள். “உங்கள் கருத்தை கேட்க விழைகிறேன்” என்றான் யுயுத்ஸு. “சரி, நான் வேண்டாம் என்கிறேன். பேரரசியின் ஆணையை மீறுவாயா நீ?” என்று அன்னை கேட்டாள். யுயுத்ஸு “மீற இயலாது, அது நன்றும் அல்ல” என்றான். “பிறகென்ன?” என்றாள் அன்னை. அவன் மேலும் ஏதும் கேட்கவில்லை. அவள் மேலும் சொல்ல விழைந்தாள், அவன் கடந்துசென்றான்.

அரண்மனையிலேயே அவனுடைய மணவிழவு நிகழ்ந்தது. பேரரசரும் விதுரரும் விழவுக்கு வந்திருந்தார்கள். அரசரும் உடன்பிறந்தார் அனைவரும் தங்கள் துணைவியருடன் பங்குகொண்டனர். அவன் அன்னைக்கு முறைமையும் வரிசையும் செய்து அரண்மனைக்கு அழைத்துச்சென்றார்கள். ஆனால் அவன் சாந்தையை மணந்தபோது அன்னையின் இடத்தில் அமைந்து சாந்தையின் கைபற்றி முறைச்சடங்குகளைச் செய்தவள் காந்தாரிதான். அவன் பேரரசியின் காலிலும் பின்னர் பேரரசரின் காலிலும் விழுந்து வாழ்த்துபெற்ற பின்னரே அன்னையின் அடிபணிந்தான். அந்த விழவு நகரெங்கும் நிகழ்ந்தது. ஏழு ஊட்டுபுரைகளில் விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் பொறாமையும் கூடவே மெல்லிய கசப்பும் அதன் விளைவான இளிவரலும் இருந்தன. சூதர்களில் மிகச் சிலர் பெருமைகொள்ள பெரும்பான்மையினர் உளம்சுருங்கினர்.

அன்னை அரண்மனையில் எந்த முகமாறுதலையும் காட்டவில்லை. ஆனால் அவள் தன் மாளிகைக்கு மீண்டதும் “நான் உனக்காக ஒரு பெண்ணை பார்த்துள்ளேன். நீ அவளையும் மணந்தாகவேண்டும். அவள் அன்னையையும் தந்தையையும் இங்கே வரச்சொல்லியிருக்கிறேன். நாளை வருவார்கள்” என்றாள். “எப்போது அவளைப் பார்த்து முடிவெடுத்தீர்கள்?” என்று யுயுத்ஸு கேட்டான். அவள் மறுமொழி சொல்லவில்லை. “சொல்க அன்னையே, எப்போது?” என்றான். அன்னை “எப்போதாக இருந்தாலென்ன?” என்று சீற்றம்கொண்டாள். “சொல்க, அவள் பெயர் என்ன?” என்றான். “அவள் பெயர் சுகிர்தை. இசைச்சூதர் குடியை சேர்ந்தவள்” என்றாள். “இசைச்சூதர் என்றால்?” என்றான். “அவள் அன்னை விறலி. அவள் தன் அன்னையுடன் இங்கே வந்தாள். அவள் அன்னையின் துணைவர் வேறு” என்றாள்.

அவன் வெறுமனே அவளை நோக்கிக்கொண்டிருந்தான். “அதனாலென்ன? நீ சூதகுடியினன் அல்லவா?” என்றாள். “ஆம்” என்று யுயுத்ஸு சொன்னான். “நான் அவளை மணக்க அவள் அன்னை ஒப்புக்கொண்டாளா?” அன்னை அவனை நோக்கி “ஆம், ஒப்புக்கொண்டாள். இன்று அவளிடம் பேசினேன்” என்றாள். “இன்றா?” என்றான் யுயுத்ஸு. “ஆம், இன்று அரண்மனையில் அவள் ஆடினாள், அவள் அன்னை பாடினாள்.” அவளை உடனே யுயுத்ஸு நினைவுகூர்ந்தான். மெலிந்த கரிய இளம்பெண். பெரிய விழிகள் கொண்டவள். வெண்கற்களாலான மாலை அணிந்திருந்தாள். ஆடும்போது அவள் பற்களின் ஒளியுடன் அவை இணைந்துகொண்டன.

அவன் உள்ளம் மெல்லிய கிளர்ச்சியை அடைந்தது. ஆனால் அவன் அதை கடந்தான். “அவளை அவள் அன்னை எளிதில் கைவிடமாட்டாள்” என்றான். “நான் அவளுக்குரியதை அளித்தேன்” என்றாள் அன்னை. “அன்னையே, இதன் வழியாக நீங்கள் அடைவதென்ன?” என்றான். அவள் “நான் அடைவதென்ன? என் மைந்தனுக்குரிய பெண்ணை தேடினேன்” என்றாள். “எனக்குரிய பெண்ணா?” என்றான் யுயுத்ஸு. “அறிவிலி, அந்தப் பெண் சாந்தை என்ன கல்வி அடைந்திருப்பாள்? நீ நூல்நவின்றவன். நெறியும் காவியமும் தேர்ந்தவன். அவள் அடுமனைக்கலைக்கு அப்பால் எதை அறிந்திருப்பாள்? அவளிடம் நீ நான்கு சொல் சேர்ந்து பேச முடியுமா?”

அவன் விழிகளைத் தாழ்த்தி “ஆம்” என்றான். “வேண்டுமென்றே உன்னை இந்த மணத்தில் கட்டினார்கள். நீ அடுமனையாட்டியின் கணவன் என்று ஆக்கிவிட்டார்கள்” என்று அவள் சொன்னாள். “அங்கர் மணந்ததும் அடுமனையாட்டியைத்தான்” என்று யுயுத்ஸு சொன்னான். அவள் சொல்லிழந்தாள். அந்தச் சீற்றத்தில் குரல் உயர “ஆகவேதான் உனக்கு இவளைத் தேடினேன். இவள் விறலி. காவியம் கற்றவள். உன்னுடன் சொல்லாட இயல்பவள்” என்றாள். யுயுத்ஸு “விறலியை மணந்தவன் என்று பெயர் அமையும்” என்றான். “ஆம், சூதர்களுக்கு அது பிழையல்ல என்கிறேன்” என்றாள்.

அந்த மணவிழவு அவன் அன்னையின் மாளிகையிலேயே நிகழ்ந்தது. விறலி தன் மகளுடன் வந்திருந்தாள். அவளுக்கு அங்கே என்ன நிகழ்கிறதென்று தெரியவில்லை என்று தோன்றியது. அவளிடம் ஆர்வம் மட்டுமே தெரிந்தது. நாணமும் அச்சமும் தயக்கமும் வெளிப்படவில்லை. தன் பெரிய கருவிழிகளைச் சுழற்றி சுற்றிலும் நோக்கி அந்த மாளிகையை வியந்துகொண்டிருந்தாள். அவளை சேடியர் அழைத்துச்சென்று ஆடைகளும் அணிகளும் பூட்டியபோது மகிழ்ந்து சிரித்தாள். அதை ஒரு கூத்து என்றே எண்ணுகிறாள்போலும் என அவன் நினைத்துக்கொண்டான். அவனை நேருக்குநேர் நோக்கி பெரிய வெண்பற்களைக் காட்டி சிரித்தாள். அவன் அதனால் சிறுமைகொள்ளவில்லை, மகிழ்ச்சியே ஏற்பட்டது. ஆனால் அன்னை முகம் சிவந்தாள். விறலியிடம் “அவளுக்கு மணமகளாக நடிப்பது எப்படி என்று கூடவா தெரியவில்லை?” என்றாள்.

பேரரசர் வந்தபோதுதான் அங்கே அவர் வரவிருப்பதை யுயுத்ஸு அறிந்தான். “பேரரசரா? அன்னையே, நீங்கள் இதை சொல்லியிருக்கவேண்டும்” என்றான். “சொன்னால் நீ பதற்றம் கொள்வாய்” என்றாள் அன்னை. “பேரரசர் அறிவாரா, இங்கே என்ன நிகழவிருக்கிறது என்று?” என்று அவன் கேட்டான். “அறியமாட்டார். ஆனால் அவரும் நானும் நின்று உனது இந்த மணநிகழ்வை நடத்தவேண்டும் என விழைந்தேன்” என்றாள் அன்னை. பேரரசர் சீற்றம் கொள்ளக்கூடும் என அவன் நினைத்தான். ஆனால் அன்னைக்கு அதை எப்படி முன்வைப்பது என்று தெரிந்திருந்தது. “அரசே, நேற்று புஷ்பகோஷ்டத்தில் ஆடிய இளம்பெண்ணை நினைவுகூர்கிறீர்களா?” என்றாள். “ஆம், அன்னைக்கு இனிய குரல். துள்ளும் சொற்கள்” என்று அவர் முகம் மலர்ந்தார். “அவளையும் மைந்தன் மணப்பது நன்று என எண்ணினேன்… இங்கே அவர்கள் இருக்கிறார்கள். மணநிகழ்வை நீங்களே நின்று நடத்தியளிக்கவேண்டும்” என்றாள்.

அவன் சாந்தையிடம் பெரிய ஈடுபாட்டை காட்டவில்லை. அவள் தன் அன்னையின் இல்லத்திலிருந்து அரசி அளித்த சீர்வரிசைச் செல்வங்களுடன் அவன் இல்லத்திற்கு வருவதற்குள்ளேயே அவன் சுகிர்தையை மணந்த செய்தியை அறிந்துவிட்டிருந்தாள். அவள் தன் வலக்காலை எடுத்துவைத்து நுழையும்போது விழிப்பீலிகளில் நீர்த்துளிகள் இருப்பதை அவன் கண்டான். அவன் உள்ளம் நிலையின்மை கொண்டு புரண்டபடியே இருந்தது. அன்னையிடம் “இன்னொரு துணைவியென முடிவெடுப்பதற்கு முன் அவளிடம் பேசியிருக்கவேண்டும், அன்னையே” என்றான். “இப்போது என்ன நிகழ்ந்துவிட்டது? அரசகுடியினரும் சூதரும் பல மகளிரை மணப்பது இயல்பு. வைசியருக்கு மட்டுமே ஒரு மணம் கொள்ளும் வழக்கம் உள்ளது” என்று அன்னை சொன்னாள்.

முதல்நாளிலேயே அவனுக்கு அவள் வெறும் அடுமனைப்பெண் மட்டுமே எனத் தெரிந்துவிட்டது. அவளுக்கு அவன் தனக்குரியவன் அல்ல என்னும் எண்ணம் முன்னரே இருந்தது. அவன் எண்ணியதுபோல அரசமாளிகையும், அரசமைந்தனின் மனைவி என்னும் இடமும் அவளை மகிழ்விக்கவில்லை. அனைத்துமே அவளுக்கு அறியாதவையாக, திகைக்கவைப்பவையாக, ஆகவே எந்த உவகையையும் அளிக்காதவையாக இருந்தன. அவளால் ஏவலர்களிடம் குரலெழுப்பி பேச முடியவில்லை. பணிந்த குரலில் மன்றாட்டென்றே அவர்களிடம் தன் தேவைகளை சொன்னாள். அவர்கள் அவளை இளிவரல் தெரியும் விழிகளுடன் நோக்கி மிகையான பணிவை காட்டினர். ஆனால் அவள் கோரிய எதையுமே செய்யவில்லை.

அவளை ஒவ்வொரு செயலாலும் சிறுமைசெய்தனர். அவளை சிறுமைசெய்வது எது என்பதை அவர்கள் நுட்பமாக உணர்ந்திருந்தனர். அவள் உண்ண அமர்ந்தால் இன்னுணவை அள்ளி அள்ளி அவளுக்கு வைத்து “உண்ணுக… உண்ணுக!” என்றாள் விறலி. அவள் உணவை கையால் அளைந்தபின் விழிதாழ்த்தி பசியுடன் எழுந்துசென்றாள். அவள் வெளியே செல்ல விழைந்தால் மிகப் பெரிய பல்லக்கை அவளுக்காக ஒருக்கினர். அவள் அவர்களை நோக்காமல் அதை ஒழிந்தாள். அவர்கள் அவளுடன் விளையாடுவதை ஒருவரோடொருவர் சொல்லிச்சொல்லி பெருக்கிக்கொண்டார்கள். அவளை அஞ்சுவதுபோல நடித்தனர். அவள் அகன்று அப்பால் சென்றதும் ஒரு மெல்லிய சிரிப்பொலித்துணுக்கை அவள் செவிகளுக்கென போட்டனர். அவள் கேட்க ஒரு சொல் உரையாடலில் இருந்து எழுந்து ஒலிக்கும். அது அவளுக்கு கூரிய பொருள் அளிப்பதாக இருக்கும்.

அவர்கள் அவளை வாய்தவறி “அரசி” என அழைத்தனர். அவள் அஸ்தினபுரியின் அரசியருடன் நின்றிருக்கையில் வேண்டுமென்றே அருகணைந்து தலைவணங்கி “ஆணை, அரசி” என்றனர். அவர்களில் எவரிடமிருந்தோ எழும் மெல்லிய நகைப்பு நச்சுக்கத்தி என அவளை கிழிக்கும் என அறிந்திருந்தனர். அவள் பதறி முகம் சிவந்து மூச்சிரைப்பாள். ஆனால் அவர்களை அழைத்துக் கண்டிக்க அவளால் இயல்வதில்லை. தன் தனியறையில் அமர்ந்து விம்மி அழுதாள். நாட்கணக்கில் தன் அறையிலேயே முடங்கிக்கிடந்தாள். அணிகொள்வதும் ஆடைமாற்றுவதும் ஒழிந்தாள். அதை பிரகதி கண்டித்தாள். “நீ அரசமைந்தனின் துணைவி. இங்கே உனக்கு ஆடையும் அணியும் குவிந்துள்ளன… நீ அவற்றுக்கு உரியவள்” என்றாள். அவள் விழிதழைத்து விம்மினாள்.

“அவளால் இங்கே இசைய முடியவில்லை” என்று அவன் சொன்னான். “அதெல்லாம் சின்னாட்களுக்கே. விரைவிலேயே அவள் கற்றுக்கொள்வாள்… நோக்குக! பெண்ணுக்கு பிறர்மேல் சொல்செலுத்துவதில் பெரும் ஈடுபாடு இருக்கும்” என்றாள் அன்னை. ஆனால் அவ்வண்ணம் நிகழவே இல்லை. அவள் எப்போதும் மாளிகையில் சிறைப்பட்டவளாகவே இருந்தாள். அவன் அவளை மகிழ்விக்க முயன்றான். அவன் அளித்த பரிசுகள் அவளுக்கு பயனற்றவை எனத் தோன்றின. அவன் உரைத்த இன்சொற்கள் வேறு எவரிடமோ என அவளுக்குக் கேட்டன. அவன் தன்னிலையில் இருந்தபோது அவளிடமிருந்து அயலானான். அவளுக்காக இறங்கிச்சென்றபோது அவள் அவன் இறங்குவதை உணர்ந்து ஒவ்வாமைகொண்டாள்.

ஒருநாள்கூட அவள் அவனுடன் உளம் கரைந்து இருக்கவில்லை. குளிர்ந்த செயலற்ற உடலையே அவன் எப்போதும் அடைந்தான். எவ்வகையிலும் உள்நுழைய வாயில் அற்ற மாளிகை. அவளை இயல்பாக்க முயன்றான். அவள் உள்ளத்தை மலர்விக்கவும் அவளிடமிருந்து புன்னகையும் சொல்லும் எழச்செய்யவும் பலவற்றை இயற்றினான். அத்தோல்வி அவனை சீற்றம்கொள்ளச் செய்தது. அது தன் மீதான புறக்கணிப்பு என எடுத்துக்கொண்டான். அவள் அச்சமென நடிக்கிறாள், ஆழத்திலுள்ளது வெறுப்பு என எண்ணிக்கொண்டான். அவளை வெறுக்கவும் அகலவும் அந்நம்பிக்கை தேவைப்பட்டது. அவள் அவனுடைய குழவி ஒன்றை பெற்றாள். அவன் அவளை அதன்பின் அக்குழவியின் அன்னை என்று மட்டுமே அறிந்தான்.

சுகிர்தை முதற்சில நாட்கள் அவனை அலைக்கழிக்கும் சுழலாக இருந்தாள். அவளுடைய உடல்வலிமையும் துள்ளலும் கட்டற்ற காட்டுக்குதிரை போலிருந்தன. எவர் மேலும் அவளுக்கு அச்சமோ தனிமதிப்போ இருக்கவில்லை. அவன் அன்னையை “முரசு” என்று சொன்னாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஓசையிடுகிறார்கள்!” என்று சொல்லி வாழைப்பூ நிறமான ஈறுகள் தெரிய சிரித்தாள். “ஏன்? உன்னை அவர் கண்டிக்கிறாரா?” என்றான். “ஓசையிட்டு நகைக்கக் கூடாது என்கிறார். அதைச் சொல்ல அவர் ஓசையிடுகிறார். கிழவி பழைய முரசுபோலிருக்கிறார். தோல்கிழிந்த முரசு.” அவள் உரக்க நகைக்க அவன் திகைத்தான். “மெல்ல” என்றான். “மெல்லவா?” என்றபின் அவள் பேரோசையிட்டு நகைத்தாள்.

அவள் பேசும் காவியம் அவனுக்குப் புரியவில்லை. அவளுக்கு காவியம் என்றாலே சொல்லழகுதான். அதை இசையுடன் இணைத்துக்கொண்டாள். இன்சொற்கள் என்றே அவள் காவியத்தை சொன்னாள். அவன் காவியம் கற்றதெல்லாம் அதிலுள்ள நெறிகளுக்காகத்தான். காவியத்தில் நெறிகள் சொல்லப்பட்டுள்ளன என்பதே அவளுக்குத் தெரியவில்லை. “காவியத்தில் சொல்லப்பட்ட நெறிகளின்படி வாழ்ந்த காவியநாயகர்கள் எவர்?” என்று அவள் அவனிடம் கேட்டாள். அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை.

அவளுடனான காமம் அவனுக்கு பெருங்கொண்டாட்டமாக இருந்தது. குதிரையை அவனால் வெல்லவே முடியவில்லை. அது அவனை வைத்து விளையாடியது. பின்னர் தூக்கி வீசிவிட்டு அப்பால் சென்றது. அவள் மிகச் சிலநாட்களிலேயே அவனிடமிருந்து விலகினாள். அதன்பின் மாளிகையிலிருந்தும் அகன்றாள். மாளிகைக்கு வெளியே ஒரு சிறு கொட்டகை அவள் இடமாகியது. அங்கே அவளை நாடி விறலியரும் பாணரும் வந்தனர். அவர்களுடன் அவள் சொல்லாடினாள். இல்லம் அதிர வெடித்து நகைத்தாள். அங்கே அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்டான். அன்னை “அது காட்டுவிலங்கு. இல்லத்தில் அடங்காது” என்றாள். “ஆம், அதை நான் முன்னரே உணர்ந்திருந்தேன். நீங்கள் எவரையோ பழிவாங்க எண்ணினீர்கள். பழிவாங்கிவிட்டீர்கள்” என்றான். அன்னை அவனை கூர்ந்து நோக்கினாள். சொல்லிழந்து நின்றுவிட்டு திரும்பிச் சென்றாள்.

அவன் அவளிடம் நெருங்க எண்ணினான். தன் கல்வியை, அரண்மனைப் பொறுப்பை கடந்து அவளிடம் சென்றுவிட விழைந்தான். ஆனால் அவனால் தன் எல்லையை கடக்கவே இயலாதென்று அறிந்திருந்தான். அவள் தன் ஆட்டர்களுடன் கொண்டாடுவதை நோக்கி நின்றிருந்தபோது ஒருமுறை ஓர் ஆட்டன் அவளை பின்னிருந்து அணைத்து ஆடுவதைக் கண்டான். அந்தத் தொடுகையின் பொருள் அவனுக்குப் புரிந்தது. அதன்பின் அவளை நோக்குவதையே அவன் தவிர்த்தான். புரவிக்கு இணை புரவியேதான் என அன்னையிடம் சொல்ல விழைந்தான்.

அன்னை அவன் உணர்ச்சிகள் அனைத்துக்கும் அப்பால் என திகழ்ந்தாள். இரு துணைவியர் அமைந்த பின்னரும் ஏன் அவன் மாளிகைக்கு வராமல் அரண்மனையிலேயே தங்கிவிடுகிறான் என அவள் கேட்டதில்லை. அவளுக்கு பேரரசர் திருதராஷ்டிரர் அளித்த அந்த மாளிகை அரண்மனையை ஒட்டியே இருந்தது. இளமையில் திருதராஷ்டிரர் அங்கே நாள்தோறும் வரும் வழக்கமிருந்தது. பெரும்பாலான நாட்களில் அன்னை தன் ஏவற்பெண்டுகளுடன், இசைக்கருவிகளுடன் புஷ்பகோஷ்டத்திற்கு செல்வாள். பேரரசரின் மாளிகையிலேயே தனியறை அவளுக்கு அளிக்கப்பட்டிருந்தது. பேரரசருக்கு முன் இசைமீட்டி பரிசில்கொள்ளும்பொருட்டு வெவ்வேறு ஊர்களிலிருந்து வரும் சூதர்களையும் விறலியரையும் அவள்தான் முதலில் எதிர்கொள்வாள். அவர்களின் திறனை தான் மதிப்பிட்டு அறிந்து அவர்களை பேரரசர் முன் அமர்த்துவாள்.

அவர்களைப்பற்றி அவள் பேரரசரிடம் கூறும்போது அவர்களுக்குள் சுருக்கமான சொற்பரிமாற்றமே நிகழும். பெரும்பாலும் திருதராஷ்டிரர் முனகலாகவே மறுமொழி உரைப்பார். அன்னையின் முகமும் ஏவலர்களுக்குரிய பணிவையும் அச்சத்தையும் விலக்கத்தையுமே காட்டும். ஆனால் அவள் விழிகள் கனிந்திருக்கும். அவள் சொற்களில் தனியான ஒரு மென்மை அமைந்திருக்கும். அவர் அவளிடம் சொல்லும் சொற்களில் வேறெவரிடமும் இல்லாத கனிதல் இருக்கும். அது தன் உளமயக்கா என அவன் எண்ணியதுண்டு. பலமுறை அவன் அதை உற்றுநோக்கினான். பின்னர் அந்தக் கனிவு அதேபோல சங்குலனிடம் அவர் பேசும்போது வெளிப்படுவதை கண்டான்.

அதை உணர்ந்தபோது தன்னுள் பொறாமைக்கு மாற்றாக ஓர் உவகைதான் எழுந்தது என்பதை அவனே விந்தையாக எண்ணிக்கொண்டான். அன்னையை அவன் நோக்கும் கோணமே மாறுபட்டது. ‘வைசியர்குலத்து அரசி’ என்னும் சொல் முன்னர் அவனுக்கு சற்றே ஒவ்வாததாக இருந்தது. அச்சொல் அதன்பின் ஒரு அழகு கொண்டுவிட்டதாகப் பட்டது. அவள் ஷத்ரியப்பெண் அல்ல. அரசகுடிப் பெண்கள் சூடிக்கொள்ளவேண்டிய அனைத்தையும் கழற்றிவிட்டு அவரை மேலும் அணுக்கமாகச் சென்று அறிய வாய்ப்பு கொண்டவள். அவள் ஷத்ரியக் குருதிகொண்டமையால் அவன் சூதன். அவள் அவன் அன்னையென்பதால் சூதப்பெண். சூதர்களுக்கு இசையும் கவிதையுமே மொழி.

அவர்கள் இசைகேட்கும்போதும் அவன் உடன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பான். இசை நிகழ்ச்சி தொடங்கும்போது அன்னை பேரரசரையும் இசைக்கலைஞர்களையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருப்பாள். அவர்களின் இசையை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டுமே என அஞ்சுபவள்போல. திருதராஷ்டிரர் எல்லா இசையையும் முகம்சுளித்து விருப்பமில்லாதவர் போலத்தான் கேட்பார். மூக்கினூடாக அவர் மணம் முகர்வதுபோலத் தோன்றும். இசையறிவோரிடம் வெளிப்படும் முகமலர்வும் தலையசைப்பும் விரல்தாளமும் அவரிடம் வருவதில்லை. ஐயம்கொண்டவர் போலவோ உளவிலக்கம் அடைந்தவர் போலவோ தோன்றுவார். ஒரு தருணத்தில் அவரிடமிருந்து மெல்லிய முனகல் ஒன்று வெளிப்படும். அது அச்சூழலை ஒரே கணத்தில் மாற்றிவிடும். அன்னை முகம் மலர்வாள். இசைஞர்களும் அவ்வோசையை உணர்ந்துகொள்வது விந்தைதான். அனைவரும் இயல்பாகி, உடல் குழைய, முகம் மலர தங்கள் தன்னுணர்வுகளை இழந்து இசையில் ஆழ்வார்கள். பின்னர் அங்கே இசை மட்டுமே திகழும், பிறர் அதன் உறுப்புகளென்றிருப்பார்கள்.

அரிதாக திருதராஷ்டிரர் முனகலோசை எழுப்புவார். அது சில தருணங்களில் மெல்லிய கேவலோசையாகத் தோன்றும். வலிகொண்டவர் போலவோ எதையோ நினைவுகூர்ந்தவர் போலவோ எழமுயல்பவர் போலவோ. அத்தருணம் இசையின் உச்சமென அனைவருமே உணர்ந்திருப்பார்கள். இசை முடிந்தபின் திருதராஷ்டிரர் அசையாது அமர்ந்திருப்பார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்துகொண்டிருக்கும். அன்னை அனைவரையும் எழுந்துசெல்லும்படி கைகாட்டுவாள். அவர்கள் இசைக்கலங்களை அங்கேயே விட்டுவிட்டு விலகிச்செல்வார்கள். அன்னை மட்டுமே அவருடன் அப்போது இருப்பாள். அப்பால் சங்குலன் நின்றிருப்பான். வேறெவரும் அப்போது உடனிருக்க இயலாது. பேரரசி காந்தாரியோ, துரியோதனனோ, நூற்றுவர் மைந்தரோ, துச்சளையோ, அவனோ கூட. அத்தனை தனிமையான ஓர் இடம்.

தொடர்புடைய பதிவுகள்

இன்றைய காந்திகள்

$
0
0

திண்டுக்கல் காந்திகிராமத்தில் நூல்வெளியீட்டுவிழா இன்று

 

இந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னுமொரு 30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள். இன்றைய இந்தியா, வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கிய சாய்வில் உள்ளது. தனியார் துறை, தனது உற்பத்தித் திறனைப் பல மடங்கு மேம்படுத்தியுள்ளது. வருங்காலத்தில், உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கேற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்காது என்னும் நிலை இன்று உருவாகியுள்ளது.

மெல்ல மெல்ல அதிகரிக்கும் இயந்திரமயமாக்கம், அதிக உற்பத்தி, குறைந்த வேலை வாய்ப்பு என்னும் வழியில் செல்கிறது. மானியங்களால் செயற்கையாகக் குறைவாக மட்டுறுத்தப்படும் உலக வேளாண் பொருட்கள் விலைகளால், வேளாண்மை லாபமில்லாத தொழிலாக உள்ளது. கைத்தொழில்கள், நெசவு போன்றவை நசிந்துகொண்டேவருகின்றன. இங்கேதான் காந்தி மீண்டும் வருகிறார். ‘நான் அப்பவே சொன்னேனே’, என பொக்கை வாய்ச் சிரிப்புடன்.

சுதந்திரச்சந்தை வலுப்பெற்று ஒரு மதம் போலத் தன் பல்லாயிரக்கணக்கான கரங்களால் இந்தியச் சமூகத்தை இறுக்கிவருகிறது. பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு பெரும் சமூகம், இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வருமானத்துக்கேற்ப கௌரவமான, நீடித்து நிலைக்கும் வாழ்க்கையை, காந்திய வழிகளே உருவாக்கித் தர முடியும் என்பதே இந்தக் கட்டுரைகளின் வழி நான் அடைந்திருக்கும் மனநிலை.”

 

–         பாலசுப்ரமணியம் முத்துசாமி தனது முன்னுரையில்...

 

வெறுப்பரசியலின் குரல் உரக்க ஒலித்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்காலம், மனதுள் ஒருவித அச்சத்தை உண்டாக்குகிறது. ஒற்றைத்தரப்பு நியாயங்களால் உலகம் சூழப்பட்டுவருகிறது. தத்துவங்களை நிறுவுவதற்கான ஒவ்வொரு அதிகாரப்போட்டியிலும் தெரிகிறது மானுட வர்க்கத்தின் வெறியோட்டம். நுகர்வு அடிமையாக வாழ்ந்ததற்கான விளைப்பயனை இயற்கையின் ஒவ்வொரு அழிவிலிருந்தும் மனமறிகிறது. ஈவு இரக்கமற்ற அறிவியலை மனிதவளர்ச்சியாக ஒப்புக்கொள்ள போலிவெற்றிகள் வற்புறுத்துகின்றன.

 

ஆனால், இவையெல்லாவற்றையும் கடந்து மனிதரின் அனிச்சை குணமான அன்பையும் கருணையையும் விடாமல் பற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இவ்வாழ்க்கையில் நிகழத்தான் செய்கிறது. இளம்தலைமுறை உள்ளங்களுக்கு காந்தியைப்பற்றியான அறிமுகமும், அறிதலும் அப்படியானதொரு உளஎழுச்சியை நல்கக்கூடியவையே. காந்தியவழி என்பது மனிதர்களின் வாயிலாக இறையிருப்பைக் கண்டடைவது.

 

தோழமை பாலாவால் எழுதப்பட்டு, உங்களுடைய தளத்தில் தொடர்ந்து வெளியான நவகாந்தியர்களைப் பற்றிய கட்டுரைத்தொகுப்புகள், உரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டு, வாசகர்கள் தேர்ந்தெடுத்த தலைப்பான  ‘இன்றைய காந்திகள்’ என்னும் பெயரோடு புத்தகமாகியிருக்கிறது. இன்றைய நவீன காலத்திலும் காந்தியச்சிந்தனைகள் பொருந்தக்கூடிய சாத்தியக்கூறுகளையும் அதன் சாட்சிமனிதர்களையும் இந்நூல் விவரிக்கிறது.

 

எளிய வாசிப்பின் வழி, நம்முள் பெருங்கனவை உருவாக்கும் எழுத்துநடை இப்புத்தகத்தை மனதுக்கு மேலும் அண்மைப்படுத்துகிறது. தகவல்கள், தரவுகளைத் தாண்டி அனைத்து வார்த்தையிலும் ஒரு மானுட அரவணைப்பை உணரமுடிகிறது. இளம்தலைமுறை பிள்ளைகளுக்கு காந்தியத்தை, அதன் சாத்தியத்தை தகுந்தமுறையில் வழிகாட்டுவதில், தங்கள் கருத்துக்கொள்ளளவு ரீதியாக வலுப்பட்டு நிற்பவர்களில் பாலாவும் ஒருவராக வளர்ந்தெழுவார் என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம்.

 

சமூகத்தின் கூட்டுமனப்பான்மையை அதிகாரமோ, அரசியலோ எது சிதைத்தாலும், அதற்கான ஆழமானதொரு எதிர்வினையும் செயல்பதிலும் பாலாவிடமிருந்து புறப்பட்டெழுகிறது. பாவனைகளின்றி அவருடைய எழுத்துக்கள் நிஜம்பேசுகிறது.’எதன்வழி இம்மானுடம் ஆற்றுப்படவேண்டும் என்பதை நாம் மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும்’ என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் தெளிவுற மனப்படுத்துகிறது. காந்திய சாட்சிமனிதர்களின் வாழ்வுவரலாறு, செயல்வழிப்பாதை, மானுடக்கருணை உள்ளிட்ட கூட்டியல்புகளின் எழுத்துவெளிப்பாடே இந்நூல். இன்றைய காலகட்டத்தில், இச்சமூகம் நிச்சயம் பயணித்தே ஆகவேண்டிய கரைவெளிச்சம். ஜெயகாந்தன் சொல்வதைப் போல, ‘ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார்’ என்ற கூற்றினை உறுதிப்படுத்தும் படைப்பாக இதை உணரமுடிகிறது.

 

படைப்பூக்கத்தாலும் சேவைகளாலும், உலகளாவிய மானுட முகங்களாக அறியப்படுகிற பதினோரு காந்தியர்களின் வரலாற்றுக்கதையின் தெளிவான சித்தரிப்புக் கட்டுரைகளாக, பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் ஆசிக்குறிப்போடு,  தன்னறம் நூல்வெளியின் வாயிலாக வெளிவந்திருக்கிறது ‘இன்றைய காந்திகள்’ புத்தகம்.  அக்டோபர் 18ம் தேதி, திண்டுக்கல் காந்திகிராம் ஆசிரமத்தில் இந்நூலின் வெளியீடு நிகழவிருக்கிறது.

துவக்கம் முதல் புத்தகமாக உருப்பெறும் காலம்வரை எண்ணத்தால் துணையிருந்து வழிநடத்திய உங்களுக்கு எங்களுடைய நெஞ்சின் நன்றிகளை சொல்லிக் கொள்கிறோம். இச்சமகாலத்தில் நிகழும் ஒரு நம்பிக்கையாக இப்படைப்பை மனம் ஏந்துகிறோம்.

புத்தகத்தை  பெறுவற்கான இணைப்பையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

http://thannaram.in/product/indraya-gandhigal/

இன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி

புத்தக விலை:ரூ 320

கெட்டியான அட்டை (Hard Bound Wrapper)

 

இப்படிக்கு

தன்னறம் நூல்வெளி

 

சுதந்திரத்தின் நிறம்

பொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’விருது:

$
0
0

1950களிலேயே தனது குடும்ப வீட்டை இடித்து, ஒரு சிறுபள்ளிக்கூடத்தை துவக்கியவர் பொன்னுத்தாய் அம்மாள். ஒடுக்கப்பட்ட பெண்குலத்தில் பிறந்தபோதும், தனது தளராத நம்பிக்கையால் அக்காலத்திலேயே படித்துப் பட்டம் பெற்றவர். அதன்விளைவாக நிறைய துயருற்றவர். இருந்தும்கூட, வீதிவீதியாக அலைந்து, ஒடுக்கப்பட்ட சேரி மக்களிடமும், காடுமேடுகளில் ஆடுமாடுகள் மேய்ப்பவர்களிடம் பேசிப் புரியவைத்து அவர்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தவர். காந்தியின் அரிஜனசேவா சங்கத்தோடும், அம்பேத்கரிய மக்கள் இயக்கத்தோடும் இணைந்து பொன்னுத்தாய் அம்மாள் பள்ளிக்கூடம் பொட்டுலுப்பட்டி கிராமத்திலும் அதைச்சுற்றிய பகுதிகளிலும் கல்விப்புரட்சிகளை நிகழ்த்தியுள்ளது. தியாகி கக்கனால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட பள்ளி இது.

கட்டணத்தொகை ஏதும் பெறாத முற்றிலும் இலவசமான இப்பள்ளியை மிகுந்த நெருக்கடியில் நடத்தியவர் பொன்னுத்தாய் அம்மாள். தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டங்களில், சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு வீடுவீடாகச் சென்று ‘படிக்க வாங்க கண்ணுகளா!” என்று பின்தங்கிய குழந்தைகளின் மனதில் கல்வியை விதைத்த முதலாளுமை. கல்வியறிவு ஒன்றுதான் சாதியத்தளையிலிருந்து நம்மை விடுவிக்கும் என முழுமூச்சாக நம்பியவர்.

1980-ல், சாமி ஊர்வலத்தில் உண்டான கலவரத்தில், ஆதிக்கச் சாதியினரால் இவருடைய பள்ளி முழுவதுமாய் அடித்துச் சிதைக்கப்பட்டது. இத்தோடு பொன்னுத்தாயின் கதை முடிந்தது என்று எல்லோரும் நினைக்கையில், இடிந்துபோன பள்ளிக்குள் குழந்தைகளை உட்காரவைத்து பாடம் நடத்திய துணிவுள்ளம் அம்மாவுடையது. அதன்பின் பெருமரமென கிளைவிரித்து விழுதூன்றி வளர்ந்தெழுந்து இன்று, அப்பகுதியில் முக்கியமானதொரு கல்விச்சாலையாக நீடிக்கிறது அப்பள்ளி. தனது இறுதிமூச்சுவரை பள்ளியைப் புதுப்பிக்கப் போராடி 2002ல் பொன்னுத்தாய் அம்மா இயற்கையோடு கலந்தார். அவர் இறந்த அன்றைய தினம், உள்ளூர் கேபிள் சானல்கள் இறுதிஊர்வல நிகழ்வுகளை ஒளிபரப்பின.

வாடிப்பட்டியைச் சார்ந்த பொன்னுத்தாய் என்னும் தனிமனுஷி தனது கிராமத்தில், சமூகத்தில், கல்விப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தியாகத்துக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும், குக்கூ குழந்தைகள் வெளியின் ‘முகம் விருது’ இவ்வருடம் வழங்கப்படுகிறது. காலம் பிந்தைய கெளரவிப்புதான் என்றாலுங்கூட, முன்னுதாரணமான ஒரு வாழ்வு இச்சமகாலத்தில் ஒளிவெளிச்சம் அடைய வேண்டும் என்ற விருப்பத்தில் விதையாகிறது இவ்விருது.

வி.பி.குணசேகரன், நம்மாழ்வார், மரம்தாத்தா நாகராஜன், அறிவியலாளர் அரவிந்த் குப்தா, விதைக்காவலர் வெங்கடாசலம், எழுத்தாளர் ஜெயமோகன், காதுகேளாதோர் பள்ளி நிறுவனர் முருகசாமி உள்ளிட்ட, பெருந்தகைமை வாய்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இச்சிறு அடையாளம், இம்முறை பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் திருக்கரங்களால் அமரர் ‘பொன்னுத்தாய் அம்மாவுக்கு’ வழங்கப்படுகிறது. அம்மாவின் சார்பாக, அப்பள்ளிக்கூடத்தை இயக்கிவரும் சமகாலத் தோழமைகள் இக்கெளரவிப்பை நேரில்வந்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

அக்டோபர் 18, திண்டுக்கல் காந்திகிராம் ஊழியரகத்தில், காலை 10மணிக்கு இதற்கான நிகழ்வு அமைகிறது. அன்புத்தோழமைகள் அனைவரையும் வரவேற்கிறோம். நிறைநன்றிகள்!

இப்படிக்கு,
குக்கூ காட்டுப்பள்ளி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16901 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>