Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16874 articles
Browse latest View live

எந்திரன் ,நான் ,இந்தத்தளம்…

$
0
0

Cxs-kXQVQAA108H

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

திரு.ஷங்கர் அவர்களின் ‘2.0’ திரைப்படத்திற்கான முதல்தோற்ற வெளியீட்டுவிழாவைப் பற்றிய தங்கள் அறிவிப்பையும், அதில் நீங்கள் கலந்துகொள்ள இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.நீங்களும் அதில் அடைந்த / அடையப்போகும் ‘பரவசத்தை’பற்றியும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.ஏற்கனவே நீங்கள் முன்பு எழுதியபடி – “இந்தத்தளம் சினிமாவுக்கானது அல்ல” – என்றாலும் இதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தேவைகள் குறைந்த காலத்தில் பூர்த்தி செய்யப்படுவதால் உங்களின் நேரமும்,உழைப்பும் ‘வெண்முரசு‘போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு வெகுவாக கிடைக்கிறது.எனவே இதில் மிகுந்த ஆதாயம் அடைவது என்னைப் போன்ற எளிய வாசகர்கள்தான் என நினைக்கிறேன்.அந்தவகையில் இது எங்களுக்கும் ஒரு கொண்டாட்டம்தான்!.

நன்றி.

அன்புடன்,

*

அ .சேஷகிரி.

 

அன்புள்ள சேஷகிரி

அந்தப்பதிவை என் பயணம் பற்றிய பொதுவான தகவலாகவே போட்டிருந்தேன். விரிவாக எழுதவில்லை.

எந்திரன் படம் ஒரு பெரும் வணிக முயற்சி. அதற்கு பெரும்பணத்தில் விளம்பரம் செய்வார்கள். தொடர் விவாதங்கள் உருவாகும். அதை நான் என் தளத்தில் செய்ய ஆரம்பித்தால் அதற்குமட்டுமே நேரமும் இடமும் இருக்கும்

ஆகவே நான் எழுதும் சினிமாக்களைப்பற்றி ஒரு சில வரிகளை மட்டும் எழுதி, நிகழ்ச்சிப்பதிவாகவே நிறுத்திக்கொள்வது வழக்கம். முன்னரும் அப்படித்தான். விவாதம் உரையாடல் எதையும் இங்கே அனுமதிப்பதில்லை. இனிமேலும் அப்படித்தான்

ஜெ

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று மதியம் ஜெயா தொலைக்காட்சியில் ஒளி பரப்பிய திரு.சங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 2.0 திரைப்படத்தின் ‘முதல் பார்வையை” பார்த்தேன்.போங்க சார்! இப்படியா அநியாயத்திற்கு மேடையில் கூச்சப்படுவது!!.படபடவென்று பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டீர்கள்.இதுவும் ஒருவகையில் நன்றாகத்தான் இருந்தது.

அன்புடன்,

அ .சேஷகிரி.

*

அன்புள்ள சேஷகிரி

கூச்சம் இல்லை. அது ஒரு செயலின்மை. ஆங்கிலத்தினாலும் இல்லை. இதைவிட மோசமாக காவியத்தலைவன் விழாவில் என்னை நீங்கள் காணலாம்

பொதுவிழாவில் தன்னை முன்வைப்பது ஒரு பெரிய நடிப்பு. அதற்கு நிறையவே பழகவேண்டும். அது எனக்கு கைவருவதில்லை. பழகவேண்டாம் என்றிருக்கிறேன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ –எம். ஏ. சுசீலா

$
0
0

[வண்ணதாசன் புனைவுலகில் பெண்களின் சித்திரங்கள் : எம் ஏ சுசீலா]

1IMG_3184

வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.. புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மகிழும் பாரதியைப்போல இவரது கதை வெளியிலும் கூடத் தாக்கத்தைச் செலுத்துவது கல்யாண்ஜி என்கிற கவிஞனின் மனமே . எதிர்ப்படும் சின்னச்சின்னப்பொருளும் மனிதர்களின் மிக இயல்பான தோற்றங்களும் பாவனைகளும் கூடப் படைப்பாளியைப் பெரும்பாலான தருணங்களில் அதீதமான பரவசக்கிளர்ச்சிக்கு உள்ளாக்கி விடுவதைக் காண முடிவது அது பற்றியே.. கலைத் தன்மையோடு கூடிய நுட்பமான சமூகவிமரிசனங்கள் அவரது எழுத்துக்களின் இடையே அரிதாகக் காணக்கிடைத்தாலும் மேற்குறித்த பொதுப் போக்கே அவரது படைப்புக்களின் தனித்துவமாக இருப்பதால் பெண்கள் சார்ந்த வண்ணதாசனின் பார்வையையும் அந்தச் சட்டகத்துக்குள் உட்படுத்திக் காண்பதே பொருத்தமாக அமையக்கூடும்.

வண்ணதாசனின் சிறுகதைகளைக் குறுக்கு வெட்டாகப்பார்த்து மதிப்பிடும்போது பெண்ணை அணுகும் அவரது பார்வையில் அழகுணர்வு சார்ந்ததும், பித்தாக்குவதுமான பரவச நிலையே மேலோங்கி இருப்பதையும், ’தனுமை’ போன்ற ஒரு சில ஆக்கங்கள் தவிர்த்த பெரும்பாலான தருணங்களில் காமஉணர்வோடு கலவாததாக அது இருப்பதையும் பார்க்க முடிகிறது.’’ஒரு புதிய பெண்ணை பெயர் தெரியாத அடையாளம் தெரியாத நிலையில் அவள் பெண்ணாயிருக்கிற ஒன்றுக்காகவே பார்த்தேன்’’என்று ‘புளிப்புக்கனிகள்’ சிறுகதையின் ஆண்பாத்திரம் கூறுவதைப் பெண்சார்ந்த படைப்பாளியின் பொது நோக்காகவே கொள்ளமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதாகவே அவரது பல கதைகளும் அமைந்திருக்கின்றன..

‘’தூக்கத்தில் உப்பி மேலும் அழகானகண்களுடன்’’…’’விடிகாலை மாதிரி அடங்கின வெளிச்சத்துடன்..’’ இருக்கும் பெண்குழந்தை [’காற்றின் அனுமதி’], முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் இரண்டு மகன்களுக்குத் தாயான சிநேகிதி அலமேலுநரசய்யாவின் ‘’அலட்டலில்லாத சிட்டுக்குருவி மாதிரி முகம்’’ [சிநேகிதியும் சிநேகிதர்களும்], தன் கைக்குழந்தையைக் கொஞ்சுவதற்காகப் போட்டி போட்டபடி ‘சின்னக்குட்டீ’ என்று ஓடி வரும் பெரிய சிறிய கொழுந்தியாள்களின் முக பாவனைகள் [தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்] , ஊரே ’ஒரு மாதிரி’ பேசும் அம்புஜத்தம்மாளின் ‘பவுன் மாதிரி நிறம்..அவளைச் சுற்றி இருக்கும் அழகான மர்மம்’’ [சொன்ன விதமும் கேட்டவிதமும்], எல்லோரும் தவறாகப் பேசும் பெண்ணின் ‘’மயிரிழையில் பாசி கோர்த்தாற்போலொரு நீர்முத்து..மஞ்சள் மினுமினுக்கிற உடல்…ஈரச்சேலை மோதுகிற நேர்த்தியான பாதங்கள்’’[புளிப்புக்கனிகள்], மணலிலிருந்து ஒற்றைக்கொலுசை எடுத்து..அதன் இரு முனைகளையும் பிடித்து ஆரமாக்கி சூரியனுக்குச் சூடி ..பரவசத்தால் அமிழ்ந்து கிறங்கும் கண்களுடன், புடவையை விலக்கிப் பாதத்தின் மேல் கொலுசைப்படியவிடும் ஜோதியைக் குறித்து ’’வானமெங்கும் பரிதியின் ஜோதி’’யெனக் கற்பனையில் விரியும் சித்திரம்[அந்தப் பையனும் ஜோதியும் நானும்], குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த அழகும் இல்லையென்றாலும் ’’அக்கறையற்ற இயல்புக்கு என்று ஒரு சிறு அழகு உண்டே’’அதைக் கொண்டிருக்கும் ராஜியின் ‘’குகைக்குள் விளக்கேற்றியது மாதிரி…மாயம் நிறைந்த வெளிச்சம்’’ [அப்பால் ஆன] என…இந்த எல்லாவற்றிலும் கிளர்ச்சியான மனநிலையோடு பெண்ணின் அழகை ரசிக்கிற ஆண் பாத்திரங்களையே முன் வைக்கிறார் படைப்பாளி.

குச்சிபோல் மெலிந்திருக்கும் மனைவியும், தாட்டியான மதமதப்புக்கொண்ட டெய்சி வாத்திச்சியும் அவர்களோடு ஊடாடும் ஆண்களுக்கு உகப்பானவர்களாக இருப்பதில்லை. ’’ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புக்களை மீறி….. பாரமான உடலும் பெருந்தொடையும் பிதுங்கச் செல்லும்’’ பெண் [தனுமை] ஆணின் அளவுகோலுக்கேற்ற அழகு வாய்க்கப்பெறாதவளாக அவனை அருவருப்படையச் செய்பவளாகவே காட்டப்படுகிறாள்.

வண்ணதாசனின் சிறுகதைகள் வீட்டு வாழ்வையே பெரிதும் மையப்படுத்துவதால் சாணி மெழுகிக் கோலமிட்டு…,அடுப்படியின் கரிப்புகையில் இருந்தபடி தோசை வார்த்துக் காப்பி போட்டு, துணி துவைத்து மடித்து, கீரை ஆய்ந்து குடும்ப வேலைகளுக்குள் தங்களை ஆழ்த்திக்கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையில் இருக்கும் பெண்களே அவரது ஆக்கங்களில் மிகுதியாகக் காணக் கிடைப்பவர்கள். அவர்கள் அன்பு செலுத்துவதற்கும் அன்பு செலுத்தப்படுவதற்கும் உரியவர்களாக மட்டுமே இருப்பவர்கள், அவ்வாறே சித்தரிக்கப்படுபவர்கள்.

m.a.susila1-300x225

’’விரித்துப்படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் கைலியையோ போர்த்திக்கொண்டு கணவன் தூங்குவதைப்பார்த்து மனம் கசிந்து எப்படியாவது இந்த மாதமாவது ஒரு போர்வை வாங்கி விட வேண்டும் என்று துடித்தபடி,கொசுக்களும் குளிரும் தொட முடியாத அவனது தூக்கத்துக்கான கற்பனையில் இருக்கும் மனைவி [போர்வை], மனைவியின் தலைவலிக்கு மருந்து வாங்கப்போய் விட்டு அதை முற்றாக மறந்து போய் நண்பனின் மகனுக்கு மருந்து வாங்கிக்கொடுத்து விட்டு வரும் கணவனிடம் தன் வலி குறித்தோ மருந்து குறித்தோ ஏதும் கேட்காமல் அவனை அன்போடு உணவுக்கு அழைக்கும் மனைவி [‘அன்பின் வழியது’], வீட்டின் வறுமையைக் குறை சொல்லாமல் பலசரக்குக்கடன் வசூலிக்கவரும் நபரிடம் கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசும் மனைவி [‘அந்தந்த தினங்கள்’] என இவ்வாறான வகைமாதிரிகளே வண்ணதாசனின் புனைவுலகில் மிகுதியும் தென்படுபவர்கள்.

நகைக்கடையில் மகளோடு பேசி மனைவியை அலட்சியம் செய்யும் ஒரு கணவனை ‘’’கணவனும் ஆண்பிள்ளைதானே, சரிதான் எல்லாம் தெரியும் என்பது போல அவளை அலட்சியம் செய்கிறான்’’என்று வரும் குறிப்பும்[‘அந்தப் பையனும் ஜோதியும் நானும்’],’’இந்தச்செல்லமான பிரியமானசிரிப்பு குழந்தை பிறந்த பிறகு அவளுக்கு நிறையவே வருகிறது, கிட்டத்தட்ட இதே பிரியமும் சந்தோஷமுமான முகம் அவளுக்கு அம்மாவீடு போகும்போதெல்லாம் வரும்’’என்று கணவன் நினைப்பதாக இடம் பெறும் வரிகளும்[’தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’] ஆணின் மரபார்ந்த பார்வையிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க வண்ணதாசன் முற்பட்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுபவை. ஆணிலிருந்து தாழ்ந்தவள் பெண் என்ற மரபு ரீதியான போக்கை முன் வைப்பதைப் படைப்பாளி தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பது இதன் வழி புரிந்தாலும் …‘’அவனுக்குத் தான் இல்லாமல் வேறு யாராவது வசதியான இடத்திலிருந்து வாழ்க்கைப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்’’ என்றும் [போர்வை], முன்னாளில் கணவன் நேசித்த பெண்ணோடு அவனுக்குத் திருமணம் ஆகாமல் போனதே என்றும் [விசாலம்] சிந்திக்கிற எல்லைவரை கணவன் மீதான அன்பை அதீதமான முறையில் அவர்கள் வெளிப்படுத்தும்போது –யதார்த்தச்சித்தரிப்பு என்ற நிலையையும் மீறி அவ்வாறான மரபார்ந்த தொனி அந்தக்கதைகளுக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது..

‘’அம்மாவைப்பற்றி நினைக்கும்போது முருகேசனுக்கு அப்பாவை நினைக்காமல் தீராது. அப்பாவின் அழகுக்கு அம்மா பொருத்தமே இல்லை, அழகுக்கு மாத்திரமில்லை, சுபாவத்துக்கும்..’படிப்புக்கும் கூட;;என்று எண்ணும் மகனின் பார்வையும் கூட [’பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக’] பெண் சார்ந்த பாலின வேறுபாட்டுச் சிந்தனையாகவே அமைந்து போகிறது..

இளம் வயதில் காதல் போன்ற எந்த உணர்வுகளும் இல்லாமல் அண்ணனாக பாவித்துக் கடிதம் எழுதிக்கொண்ட ஒருவனைத் திருமணமாகிப் பல ஆண்டுகள் சென்று சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் உள்ளறையிலிருந்து கூட வெளிப்படாத மனத்தடையோடு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பெண் [’தற்காத்தல்’], தான் சம்பாதிக்கும் வருவாயில் மட்டுமே குடும்பம் நடந்தாலும், கை கால் இழுத்துக்கொண்ட கணவனின் நெஞ்சளவு புகைப்படத்தைக்கொடுத்து அவனை முழுமையாக வரையச்சொல்லி ‘’என் கூட அது நிக்க நிக்கதான் பலம்’’ என்று அவனைத் தன்னோடு இணைத்துப் படம் போட்டுத் தரச்சொல்லும் கரகாட்டப்பெண்ணின் சார்பு நிலை [’போட்டோ’], அரட்டையடித்துக்கொண்டிருக்கும் அக்கம்பக்கத்துப் பெண்கள் அலுவலகத்திலிருந்து திரும்பும் தன் கணவனின் சைக்கிளுக்கு வழி விட்டு ஒதுங்கி நகர்வதைத் தன் கணவனுக்குத் தரப்படும் மரியாதையாக ஏற்றுப்பெருமை கொள்ளும் மனைவி [’அவனுடையநதி அவளுடைய ஓடை’] ஆகிய இயல்பான இந்த வாழ்க்கைச் சித்திரங்களுக்குள் உறைந்திருக்கும் மரபுசார் மதிப்பீடுகளையும், கருத்தியல்களையும் வண்ணதாசன் வலிந்து முன்னிறுத்த முயல்வதாகக் கூற முடியாதென்றபோதும் கதைப் போக்கில் ஓர் ஆண் முன்னிறுத்த விரும்பும் பெண்ணின் பிம்பங்களாக மட்டுமே அவை வெளிப்பட்டு விடுவதை மறுப்பதற்கில்லை.

திருமணம் ஆகாமலோ…திருமணம் தட்டிப்போகும் நிலையிலோ இருக்கும் பெண்ணை ’’.அக்கா வயதுக்கு வந்து ஆறு வருஷத்துக்கு மேல் ஆச்சே,அவளால்…வீட்டுக்குள்ளேயே எப்படிப் பூத்துக்கொண்டு வர முடிகிறது இவ்வளவு அருமையானவளுக்கு ஏன் கலியாணத்துக்கு வேளை வரவில்லை’’’ என்று இரக்கத்துக்குரியவளாகக் காட்டுவதும், பெண் காத்திருப்பது திருமணத்துக்காக,, ஆண் காத்திருப்பது அவன் பெறவிருக்கும் வேலையின் பொருட்டு என்னும் வேறுபாட்டைப் பாத்திரங்களின் வழி முன்னிறுத்துவதும் வண்ணதாசன் கதைகளில் பெண்சார்ந்த பார்வைகளாக [’விசாலம்’, ’பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக’] வெளிப்படும் மேலும் சில பழமைவாதக்கூறுகள்.

தனித்தன்மையும் தன்னியல்பும் கொண்டவர்களான ஒரு சில பெண்களும் வண்ணதாசனின் படைப்புக்களில் ஆங்காங்கே அரிதாக வெளிப்படத் தவறவில்லை.

பலநாள் இடைவெளிக்குப் பின் சந்திக்கும் நண்பனிடமோ, சிநேகிதியிடமோ,உறவினரிடமோ தன் வறுமை, துன்பம் ஆகியவற்றைப் புலம்பித் தள்ளிக் கழிவிரக்கம் தேடும் சராசரிப் பெண்களிலிருந்து மாறுபட்டுத் தம்மளவில் உறுதியாக அவற்றைப் பொறுத்துக்கொண்டோ , ஏற்கப்பழகிக்கொண்டோ அமைதியடைந்து விடும் பிடிவாத குணம் படைத்த பெண்களையும் அவரது கதை உலகில் எதிர்ப்பட முடிகிறது. ‘’அவளால் தன்னைப்பற்றிய நிர்ணயங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது…அத்துடன் ‘எதையும் கேட்காதே’என்று நிபந்தனையிடுகிற ஒரு முகம் சேர்ந்திருந்தது….ஒரு சந்தோஷத்தை உடனடியாகத் தரித்துக்கொண்டுவிட அவளுக்கு முடிந்தது…வெற்று விசாரிப்புக்கு உட்பட்டதல்ல இந்த வாழ்க்கை என்ற கடினம் அவள் அசைவுகளில் இருந்தது’ என்று ’அப்பாலான’ கதையில் விவரிக்கப்பெறும் ராஜி, தான் வரைந்த ஆதிவாசிப்பெண்ணின் அரை நிர்வாணப்படத்தை வீட்டில் மாட்ட விரும்பும் கணவனிடம் ’’நல்லாத்தான் இருக்கு ஆனா இதையெல்லாம் வீட்டிலே மாட்டக்கூடாது அசிங்கம்’’ என்று ஒற்றை வார்த்தையில் மறுதலித்து விட்டுப் பிறகு ’’தாக்கி விட்டு நடமாடுகிறவளின் காரியமாக’’ இல்லாமல் ‘’சுபாவப்படி நடமாடிக்கொண்டிருந்த’’ அவன் மனைவி [’சமவெளி’] என சில தன்னுறுதி கொண்ட மாறுதலான பாத்திரங்கள் பெண் இயல்பின் பிடிவாதத்தோடு கூடிய தனித்தன்மையை வெளிப்படுத்தக்கூடியவை.

பெண் சார்ந்த ஆணின் கவர்ச்சி அவளது உடலழகு சார்ந்ததாகவே இருந்தாலும் பெண்ணின் மனம் அவனது மன அண்மையை நாடுவதாகவே இருக்கிறது. புகைப்படநிபுணனான விருத்தாவை விரும்பி தேவநேசனை மணக்கும் நெருக்கடிக்கு ஆட்பட்டு அந்தப் பொருந்தா மணஉறவில் விருத்தாவுடனான உறவையும் ஒருபக்கம் தொடர்ந்தாலும் ஒரு கட்டத்தில் தன் உடலழகை வெளிப்படுத்தும் புகைப்படத்தைப் பத்திரிகையில் வெளியிட்டு அவன் பரிசு பெறும்போது அதைப்பொறுக்காமல் அவன் தன் உடம்பை மட்டும் நேசிப்பதான வருத்தத்துடன் ’’என்படத்தைப்போடணும்னு தோணினா இதையா போடணும்….பழகின பழக்கம்…… உசிரைப்பிடிச்சுக்கிட்டு இந்த ஜீவாப்பயலுக்காக நான் இருக்கிற இருப்பு இதெல்லாம் ஞாபகமில்லே. இந்த உடம்பு ஒண்ணுதான் ஞாபகம் இருக்குபோல’’என்று [’போய்க்கொண்டிருப்பவள்.’] அன்னம் ஜூடிக்கு ஏற்படும் வருத்தம் இந்தப் பின்னணியிலானதே.

அன்னம் ஜூடியைப் போலவே கணநேர சபலத்துக்கு ஆட்பட்டுப் பொருந்தா மண உறவுக்கு ஆட்படும் புஜ்ஜியின் மன மாற்றத்தையும்,அந்த உறவிலிருந்தான அவளது வெளிநடப்பையும் பெண்ணுக்கே உரிய தனித்துவ உணர்வான அவளது தாய்மை உணர்வே சாத்தியமாக்குகிறது என்பதைப் பதிவுசெய்கிறது ‘ஜன்னல்’ சிறுகதை. கணவனின் பல குறைபாடுகளை சகித்தபடி அவனோடு வாழப்பழகி விட்டிருந்தபோதும் நிறைமாதக்கருவோடு இருக்கும் ஆடு ஒன்று வேலி தாண்டித் தழை மேய்வதற்காகச் செல்லும்போது மிகச்சரியாக அதன் வயிற்றில் குறிவைத்து அவன் தாக்கும் குரூரச்செயல் கர்ப்பிணியான அவளுக்கு அருவருப்பையும் வெறுப்பையும் ஊட்ட அந்த வாழ்விலிருந்து வெளிநடப்பு செய்ய முடிவெடுத்து விடுகிறாள் அவள்; தனித்துவத்தோடு கூடிய துணிச்சலோடு அவள் எடுக்கும் முடிவைப் பாராட்ட முடிந்தாலும் அவள் நாடிச்செல்வது அச்சுத் தொழிலில் உடன் பணி புரிந்த சங்கரய்யா என்னும் இன்னொரு நல்ல நண்பனின் துணையையும் சார்பையும் தேடியே என்று கதை முற்றுப்பெறுவது ஏமாற்றத்தையே ஊட்டுகிறது..

வீட்டை உலகமெனக்கொண்டு வாழும் பெண்களாலும் அந்த எல்லையைத் தாண்டித் தங்கள் அன்பை விஸ்தரிக்கவும் …அதற்கான உரிமையை எடுத்துக்கொள்ளவும் முடியும் என்பதைக் காட்டும் ’வெள்ளம்’, பெண்சித்தரிப்பு சார்ந்த வண்ணதாசன் கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. ஆற்றில் கட்டற்று ஓடும் வெள்ளத்தை…, .ஊரே கூடி வேடிக்கை பார்த்து மகிழும் அந்தக்காட்சியை மகளோடு ரசிக்கிறான் ஒரு தந்தை அவளோ தன் தாயை அழைத்து வந்து அவன் அதைக்காட்டியாகவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ‘சதா வீட்டு வேலை என்று இருக்கிற பெண்களை இப்படிக் கொஞ்சநேரம் மழையிலும் பனியிலும் மலையடிவாரத்திலும் அருவிக்கரையிலும் நிறுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்’ என்று அந்தக்கணவனும் எண்ணாமலில்லை. அலுவலக வேலைப்பணிகளின் இடையே அது முற்றிலும் மறந்து போக அவன் வீடு திரும்பும்போது வெள்ளத்தால் வீடிழந்த ஒரு குடும்பத்துக்கு அடைக்கலம் தந்தபடி அவர்களின் குழந்தை நிம்மதியாய் உறங்குவதைத் தன் மகளின் தலையை வருடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அவன் மனைவி.

‘’பெரியதெரு நடுத்தெரு வேம்படித்தெரு பூரா வெள்ளக்காடாம்…வீட்டுக்குள்ளே தண்ணியாம்..தெரிஞ்சவங்களோ தெரியாதவங்களோ நம்மளால வேற என்ன செய்யமுடியும், அந்தப்பச்சப்பிள்ளையாவது படுத்துக்கிடட்டும்னு கூட்டியாந்தேன்’’என்று அவள் சொல்ல…..’’வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்க வேண்டுமா’’ என்ற கணவனின் மன ஓட்டத்தோடு கதை முற்றுப்பெறுகிறது. வரையறையற்ற அன்பு கொண்டவளாக மட்டுமன்றித் தன்னால் முடிந்ததைச் செயலாக்கும் திட்பம் கொண்டவளாகவும் பெண்ணை முன்னிலைப்படுத்தும் காட்சிச் சித்திரம் இது.

எழுத்தின் வழியாகவும் நேரடியாகவும் வண்ணதாசனை அறிந்திருக்கும் எவராலுமே அவர் மரபுகளைத் தூக்கிப்பிடிப்பவரென்றோ அவற்றை நியாயப்படுத்துபவரென்றோ சொல்லிவிட முடியாது. அந்த நிலையிலும் கூட அவ்வாறான பார்வையே அவரால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறதென்றால் அவர் எழுதத் தொடங்கிய ‘60களிலிருந்து இப்போது எழுதி வரும் இன்றைய காலகட்டம் வரை பெண் சார்ந்த ஆணின் பார்வையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே அவர் அறிந்ததும், அவர் சார்ந்ததுமான ஆண் உலகின் அடிப்படையில் அவர் பதிவு செய்திருக்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும். அவை பதிவுகள் மட்டுமேயன்றி எந்த ஒன்றையும் நியாயப்படுத்தவோ விமரிசிக்கவோ அவர் முயற்சிக்கவில்லை. அவர் காணவும் எதிர்ப்படவும் நேர்ந்த வாழ்க்கைமுறையின் துணையோடு பெண்சார்ந்த ஆண்களின் கண்ணோட்டத்தை முன் வைக்க மட்டுமே அவர் முயன்றிருக்கிறார். உள்ளார்ந்த மனச்சாட்சியோடு அந்தப்படைப்புக்களை அணுகும்போது பெண் சார்ந்த ஆணின் நோக்கிலும் அவனுக்காகவே தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பெண்ணின் மனப்போக்கிலும் இன்னும் மாற்றம் விளையவில்லை என்ற புரிதலுக்கும் அந்தநிலையிலிருந்து இரு பாலாரும் மேலெழுந்து செல்வதற்கும் அந்தக் கதைகள் உத்வேகமளிக்கக்கூடும். அதற்காகவே பெண்ணியச்சிந்தனையாளர்கள் வண்ணதாசனுக்கு நன்றி கூறவேண்டியிருக்கிறது.

 

 

தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57

$
0
0

[ 19 ]

மாளிகைகள் செறிந்த அமராவதியின் அகன்ற வீதிகளின் வலைப்பின்னலில் இளங்காற்றில் அலைவுறும் கருநீலக்குருவியின் மெல்லிறகென அர்ஜுனன் திரிந்தான். ஒவ்வொரு மாளிகையும் முதற்கணம் விழிவிரிய நெஞ்சு கிளர வியப்பூட்டியது. ஒவ்வொரு தூணாக, உப்பரிகையாக, வாயிலாக, சாளரமாக விழிகள் தொட்டுச்சென்றபோது முன்பே அறிந்திருந்த அது முகம் தெளிந்தது. எங்கு எங்கு என நெஞ்சு தவித்து அடையாளம் கண்டுகொண்டு அவன் அகம் துள்ளியெழுந்தது. அவனறிந்தவை அனைத்தும் முழுக்க மலர்ந்திருந்தன அங்கு. இங்கிருக்கும் ஒவ்வொன்றும் அங்கு தன்னில் ஒரு அணுவைத்தான் சொட்டிவைத்துள்ளன என்று ஒருமுறையும் அங்குள்ளவை எல்லாம்  இங்குள்ளவையென பெருகும் வாய்ப்புள்ளவை அல்லவா என்று மறுமுறையும் தோன்றிக்கொண்டிருந்தது.

அத்தனை மாளிகைகளும் அவனை அறிந்திருந்தன. புன்னகையுடன் இதழ் விரித்தவை, சொல்லெடுக்க சற்றே வாய் திறந்தவை, மகிழ்ந்து அழைக்கும்பொருட்டு வாய்குவிந்தவை, தன்னுள் ஆழ்ந்து கண்மயங்கியவை, கனவில் விழிமூடி புன்னகை கொண்டவை. பால்நுரையென வெண்மாளிகைகள், மலரிதழென இளஞ்சிவப்பு மாளிகைகள், மீன்கொத்தியின் இறகுப்பிசிறு என நீலமாளிகைகள், முகில்கீற்றென கருமை கொண்டவை, இளந்தளிரென பச்சை ஒளி கொண்டவை, காலைப்பனி என பொன்னிறம் கொண்டவை. அனைத்துவண்ணங்களும் ஒளியே என்று அங்கு உணர்ந்தான்.

மண்ணில் அவன் அறிந்த அனைத்து மாளிகைகளும் எடையென்றே தங்கள் இருப்பை காட்டியவை. அமராவதியின் மாளிகைகள் அனைத்தும் அறியமுடியாத கையொன்றால் தாங்கப்பட்டவை என மிதந்து நின்றன. மூச்சுக்காற்றில் அவை மெல்ல அலைவுறுமென்றும் கைநீட்டி தொடச்சென்றால் புகைக்காட்சியென உருவழியுமென்றும் மயல் காட்டின.

நகரில் அனைத்து முகங்களும் பேருவகையொன்றின் உச்சியில் திளைத்து நிறைந்தமைந்த பாவனை கொண்டிருந்தன. நாவே உடலாகித் திளைக்கும் இன்சுவை, நெஞ்சுகவிந்தெழும் இசைத்தருணம், சித்தம் திகைக்கும் கவிப்பொருளவிழ்வு, தான் கரைந்து ஊழ்கவெளியில் அமைதல். இவர்களை இம்முனையில் நிறுத்துவதேது? இருப்பே தவமென்றான நிலையில் எய்துவதுதான் என்ன?

தேவர் முகங்களை கூர்ந்து நோக்கியபடி சென்றான். அவையனைத்தும் அவன் முன்பறிந்த முகங்கள். இதோ இவர் முகம்! காமரூபத்தின் கடைத்தெரு ஒன்றில் உடலெங்கும் சொறியுடன் தன் கடைமுன் வந்து நின்று வாலாட்டிய நாய்க்கு குனிந்து ஒரு அப்பத்தைப் போட்டு புன்னகைத்த சுமைவணிகன். அக்கணத்தில் சூடியிருந்த முகம் இது. காசியில் வேள்விச்சாலைவிட்டு வெளிவந்து கையிலிருந்த அவிப்பொருளை அங்கு நின்றிருந்த கரிய உடலும் புழுதி படிந்த கூந்தலும் கொண்டிருந்த பிச்சிக்கு தாமரை இலைபரப்பி நீர்தெளித்து வலக்கையால் அள்ளிவைத்து அன்னம் ஸ்வாகா என உரைத்து கைகூப்பி அளிக்கையில் முதிய அந்தணர் கொண்டிருந்த முகம் அது.

இந்த முகத்தை எங்கோ ஓர் இசைநிகழ்வின் திரளில் பார்த்திருக்கிறேன். அந்த முகம் மிக அப்பால் ஒலித்த ஆலயமணி ஓசையைக் கேட்டு அசைவிழந்து நின்று கைகூப்பியவர் மேல் கனிந்திருந்தது. அது இல்லத்திலிருந்து நடை திருந்தா சிறுமகன் இரு கைகளை விரித்து ஓடிவரக்கண்டு குனிந்து கைவிரித்து கண்பனிக்க அணுகிய தந்தைக்குரியது. முலையூட்டி உடல் சிலிர்த்து இமை சரிந்து முற்றிலும் உளம் உருகிச் சொட்ட அமர்ந்திருந்த அன்னையல்லவா அது! இது நோயுற்றுக் கிடந்த இரவலன் அருகே துயிலாது விழித்திருந்து பணிவிடைசெய்த பிறிதொரு இரவலனின் முகம். மாளவத்துப் பெருஞ்சாலையில் அவன் முகம் சோர்ந்திருந்தது. இங்கு அவ்விழிகளின் அளிமட்டும் விரிந்து எழுந்திருக்கிறது.

அந்தக் கணங்களின் முகங்கள். அவை எழுந்து திரண்டு அலை கொண்டிருந்தது அப்பெருவெளி. நடப்பது களைப்பை உருவாக்கவில்லை. எண்ணினால் எழுந்து பறக்க முடிந்தது. எண்ணுமிடத்திற்கு அக்கணமே செல்ல முடிந்தது. எண்ணம் எண்ணியாங்கு சென்றடையுமென்றால் இடமென்பதே ஓர் எண்ணம் மட்டும்தான். இடமிலாதானால் காலமும் மறைகிறது. காலமில்லாதபோது எங்கு நிகழ்கின்றன எண்ணங்கள்? அவை எண்ணங்களே அல்ல, எண்ணமென எழாத கருக்கள். இவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் நிகழ்ந்து மறையும் ஒரு கனவு.

குளிர்ச்சுனைகளில் நோக்கிய அவன் முகம் எப்போதோ  ஊசிமுனையென கூர் கொண்டிருந்த இலக்கொன்றை தன் அம்பு சென்று அடைந்தபோது அவன் சூடியிருந்தது. அலை எழுந்த ஏரியில் அவனுடன் வந்த அவன் உருவம்  இளைய யாதவரின் கை தன் தோள் மேல் அமர்ந்திருக்கையில் அவன் கொண்டிருந்தது. மாளிகைப்பரப்பொன்றில் அவன் கண்ட முகம் அபிமன்யூவை கையிலெடுத்தபோது அவனில் பூத்தது.  அந்த முகம் எது? அவன் நின்று அதை நோக்கினான். கைகள் ஏதுமில்லை என விரிந்திருக்க அவன் ஒரு மலைப்பாதையில் விழுந்து இறந்துகொண்டிருந்தான். அருகே எவருமில்லை. அவன் விழிகளில் வானம் நிறைந்துகொண்டிருந்தது. புன்னகையில்லாத மலர்வுகொண்டிருந்தது அம்முகம்.

தளிர்களும் மலர்களும் மட்டுமேயான சோலைகள். வண்ணம் மட்டுமே கொண்ட மலர்களுக்கு பருவுடலென ஒன்று உண்டா என்றே ஐயுற்றான். நிழல்களும் மெல்லிய ஒளி கொண்டிருந்தன. இசை சூடிச்சுழன்று பறந்த கந்தர்வ வண்டுகள் பொன்னென வெள்ளியென அனலென நீர்த்துளியென தங்களை ஒளி மாற்றிக்கொண்டன. இவ்வுலகு ஒவ்வொன்றிலிருந்தும் எடுத்த உச்சங்களால் ஆனது. வேதம் ஒன்றே மொழியென்றானது. புன்னகை ஒன்றே முகங்கள் என்றானது. புன்னகையே கண்ணீராகவும் இங்கு சொட்டமுடியும்.

தனிமை எப்போதும் அத்தனை முழுமை கொண்டிருந்ததில்லை என்றுணர்ந்தான். தான் என்னும் உணர்தல் ஒருபோதும் அத்தனை நிறைவளித்ததில்லை. சென்று சேர இலக்கின்றி வந்த வழியின் நினைவின்றி ஒருபோதும் கணங்களில் அப்படி பொருந்தியதில்லை. ஏனெனில் இப்பேருலகு உணரும் அக்கணத்தால் மட்டுமே ஆனது. கணமொன்று மட்டுமே காலம் வெளிப்படும் வெளி. இதற்கு நீளமில்லை, அகலம் மட்டுமே என்று அவன் எண்ணிக் கொண்டான். உறைவிடமும் உணவும் உணவுக்கலமும் அன்னைமடியும் ஒன்றென்றே ஆன எளிய தேன்புழு. உலகென்று தேனன்றி பிறிதொன்றை உணராதது.

அலைகளில் தானும் உலைந்தாடும் நீர்ப்பாசியின் பொடி போல அப்பேருலகின் நிகழ்வுகளில் அவனுமிருந்தான். ஆனால் அவன் நீர் அல்லாதுமிருந்தான். நீர் சூழ்ந்த வெளியில் அணுவெனச் சிறுத்து, எவரும் நோக்காதிருந்தும் தானெனும் உணர்வுகொண்டு தனித்திருக்கும் உயிர்த்துளி.

அங்கு மிதந்தலைந்த முகங்கள் அவனை நோக்கி புன்னைகைத்தன. விழிகள் அவன் விழிதொட்டு அன்பு காட்டி கடந்து சென்றன. இதழ்கள் குவிந்து விரிந்து இன்சொல் உரைத்தன. உள்ளங்கள் அவன் உள்ளத்தைத் தழுவி அகன்றன. ஆயினும் அவனுள் இருந்து கூர்கொண்டிருந்த முள்ளின் முனை ஒன்று தினவு கொண்டிருந்தது. முள்முனை அளவிற்கே அணுவளவுத் தினவு. சிறியதென்பதனாலேயே முழுச்சித்தத்தையும் அறைகூவுவது. இன்பம் மட்டுமே பெருகி நிறைந்திருக்கும் இப்பெருவெளியில் அது துழாவிக்கொண்டே இருக்கிறது. கூர்முனையின் கூர்மையென ஒரு துளி.

எங்கேனும் தொட்டு குருதி உண்ணத் தவிக்கிறது போலும் அந்தமுள். ஏதேனும் விரல் வந்து தன்மேல் அமர விழைந்தது. வந்தமர்வது ஓர் அணுவென்றாலும். முள் அறியும் முள்முனை. முள் என்றுமிருந்தது. எப்பெருக்கிலும் தான் கரையாதிருந்தது. இங்கு அப்படியொன்று தன்னுள் இருப்பதை உணர்ந்த எவரேனும் இருக்கக்கூடுமா?. இப்பேருலகம் முற்றிலும் அதற்கு அப்பாற்பட்டது. ஒவ்வொன்றும் மலரும் இங்கு முள்ளென்று ஒன்று மலர்த்தண்டில்கூட இருக்க வழியில்லை. முள்ளை உணர்வதில் விழிகளுக்கு தனித்திறனுள்ளது. ஏனென்றால் நோக்கு என்பது ஒரு முள்.

முள்ளை உணர்ந்த ஒருவிழியும் அங்கு தென்படவில்லை. விழி பார்த்துக்கொண்டிருந்தபோதே அவன் சித்தம் சென்று தொட்டது. நின்று  ‘ஆம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. அவள் அம்முள்ளை முதல் நோக்கிலேயே தொட்டறிந்திருந்தாள் அவன் அவளை எண்ணியதுமே மெல்லிய சிரிப்பொலி அவன் காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்கையில் கடந்து சென்ற யானை ஒன்றின் மேல் முழுதணிக் கோலத்தில் ஊர்வசி அமர்ந்திருந்தாள் அவளைச் சூழ்ந்து வெண் புரவிகளில் அப்சர கன்னிகைகள் அணிகுலுங்க ஆடைநலுங்க அசைந்து சென்றனர்.

[ 20 ]

புரவிகளை பின்னிருந்து காலவெளி உந்தி உந்தி முன்னோனாக்கி தத்திச்செல்லச் செய்தது. யானையை அது கையிலெடுத்து பக்கவாட்டில் ஊசலாட்டியது. புரவி ஒரு சொட்டுதல். யானை ஒரு ததும்புதல். அவன் நின்று அவர்களை நோக்கினான். முன்னால் வந்த களிறு அவனைக்கண்டதும் துதி நீட்டி மணம் கொண்டது. தன் உடலுக்குள் தானே அசைவொன்று உருண்டு அமைய கால்மாற்றி நின்று மூச்சு சீறியது. நின்றுகூர்ந்த செவிகள் மீண்டும் அசையத் தொடங்கின. சிறியவிழிகளை கம்பிமயிர்கொண்ட இமைகள் மூடித்திறந்தன.

மேலிருந்து குனிந்து “இளையபாண்டவரே, நகர் நோக்குகிறீர்கள் போலும்” என்றாள் ஊர்வசி. “ஆம்” என்று அவன் சொன்னான். வளையல்கள் அணிந்த கையை நீட்டி “வருக! யானை மேலிருந்து நோக்கலாமே?” என்று சொன்ன அவள் விழிகளில் இருந்த சிரிப்பை அவன் சந்தித்தான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “யானை மேலிருந்து நோக்கும் உலகம் பிறிதொன்று” என்று அவள் சொன்னாள்   ”கரியை காலாக்கியவன் என்று இந்திரனை ஏன் சொல்கிறார்கள் என்று அறிவீர்களா?’’

அவன் அருகே சென்று யானையின் கால்களைத் தொட்டபடி தலை தூக்கி நோக்கி “நீயே சொல்!” என்றான். “பதறாத கால்கள் கொண்டது யானை. ஏனென்றால் அது தன் கால்களை நோக்கமுடியாது. கரியூர்ந்தவன் பிறகொரு ஊர்தியிலும் தன்னை பெரிதென்று உணரமாட்டான்.” அர்ஜுனன் சிரித்தான். அவள் கைநீட்டி “ஏறிக்கொள்க! கரிகாலனின் யானை இது, அவர் மைந்தனை அது நன்கறியும்” என்றாள். “நன்று” என்றபடி அவன் யானையின் முன்கால் மடிப்பில் மெல்லத்தட்ட அது காலைத் தூக்கி படியென்றாக்கியது. அதில்மிதித்து கால் தூக்கிச் சுழற்றி ஏறி அவளுக்குப்பின் அமர்ந்துகொண்டான்.

“செல்க!” அவள் யானையின் மத்தகத்தை மெல்ல தட்டினாள். அது துதிநுனி நீட்டி மண்ணை முகர்ந்து அவ்வழியே காலெடுத்து வைத்து சென்றது. அலைபாயும் படகிலென அவளுடன் அவன் அமர்ந்திருந்தான். அவள் குழல்புரி ஒன்று பறந்து அவன் முகத்தின் மேல் பட்டது. அதை புன்னகையுடன் பற்றி காதருகே செருகிக்கொண்டாள். அது மீண்டும் பறந்து அவனை வருடியது. அவன் அதைப்பிடித்து சுட்டுவிரலில் சுழற்றி சுருளாக்கி கொண்டைக்குள் செருகினான். கழுத்தை நொடித்துத் திரும்பி நோக்கி அவள் புன்னகைசெய்தாள்.

சாலையின் இருபுறமும் மாளிகைகள் மிதந்தமிழ்ந்து அலைகொண்டு கடந்து சென்றன. “அமராவதியை நோக்கி நிறைந்தவர் எவரும் இல்லை” என்றாள் ஊர்வசி. “ஏனென்றால் நோக்குபவரின் கற்பனை இது. கற்பனை என்பது ஆணவம். தான் எவரென்று தான் கண்டு முடித்தவர் எவர்?” அர்ஜுனன் “நோக்குகிறேன் என்றுணர்ந்து நோக்கும் எவரும் நிறைவடைவதில்லை” என்றான். “இங்கிருப்பவர் எவரும் இதை நோக்குவதில்லை என்பதைக் கண்டேன். அவர்கள் இதற்குள் இருக்கிறார்கள்.”

“இதற்குள் அமைய உங்களைத் தடுப்பது எது?” என்று அவள் கேட்டாள் அவள் கொண்டை அவன் மார்பைத் தொட்டு அசைந்தது. அவன்  ”ஒரு முள்” என்றான். “எங்குள்ளது?” என்று அவள் கேட்டாள். “நீ அதை அறிந்ததில்லையா?” என்று அவன் கேட்டான். அவள் சிரித்து “ஆம் அறிவேன்” என்றாள். “முதல் நோக்கிலேயே அதைத்தான் கண்டேன்.” பின்னர் மீண்டும் சிரித்து  ”முள்ளை முள்ளால்தான் அகற்ற முடியும். அறிவீரல்லவா?” என்றாள்.

“எப்படி?” என்று அவன் கேட்டான். அவள் தலைதூக்கி அவனை நோக்கி “காமத்தை காமத்தால் வெல்வதுபோல” என்றாள், அவள் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. நோக்குணர்ந்ததும் மொட்டு விரிவதுபோல மிக மெல்லிய ஓசையுடன் அவள் இதழ்கள் பிரிந்தன. வெண்பற்களின் ஈரம் படிந்த ஒளிநிரை தெரிந்தது. மென் கழுத்து மலர்வரிகளுடன் விழிக்கு அண்மையில் இருந்தது. அப்பால் தோள்களின் தாமரைநூல் போன்ற வளையக்கோடுகள். பொற்சங்கிலி ஒன்றின் ஒளிமட்டும் விழுந்ததுபோல. கச்சின் வலுக்குள் இறுகிய இளமுலைகள் நடுவே மென்மையென்றும் இளமையென்றும் துடித்தது நெஞ்சு.

அவள் இடையை தன்கைகள் வளைத்திருப்பதை அவன் உணர்ந்தான். அதை பின்னிழுக்க விழைந்தான். ஆனால் உடனே அதைச்செய்தால் அவள் அவ்வச்சத்தை உணர்ந்துவிடக்கூடும் என எண்ணி தயங்கினான். அந்தத் தயக்கத்தை அவள் உணர்ந்துகொண்டு அவன் கைமேல் தன் கையை வைத்துக்கொண்டாள்.  விழிகளை திருப்பிக்கொண்டு  ”ஆம்” என்று அவன் சொன்னான்.  அவன் கையை அழுத்தியபடி  “இருக்கிறேன் என்று. பின் நான் என்று. நானே என்னும்போது ஒரு துளியேனும் குருதியின்றி அது அமைய முடியாது” என்று அவள் சொன்னாள்.

“நன்கு அறிந்திருக்கிறாய்” என்று அர்ஜுனன் மெல்லிய கசப்புடன் சொன்னான். “ஆண்களின் பொருட்டே உருவாகி வந்தவள் நான். என் உடல் ஆண்களின் காமத்தால் வடிவமைக்கப்பட்டது. என் உள்ளம் அவர்களின் ஆணவத்தால் சமைக்கப்பட்டது” என்றாள் ஊர்வசி. இடக்கு தெரியாத இயல்பான குரலில் “ஆணுக்கு முற்றிலும் இசைவதன் மூலம் அவனை மூடனாக்குவீர்கள். மூடனுடன் முற்றிலும் இசைய உங்களால் இயலும்” என்றான் அர்ஜுனன்.

அவள் அதைப்புரிந்துகொண்டு சிரித்து  ”ஆண்களிடம் குன்றா பெருவிழைவை உருவாக்கும் பெண் அவர்களுக்கு முற்றிலும் அடிபணியும் இயல்பு கொண்டவளல்ல. தன் அச்சை வாங்கி உருக்கொண்டு எதிர்நிற்கும் பெண்ணிடம் ஆண் முழுமையாக பொருந்தக்கூடும். ஆனால் அவளை அக்கணமே மறந்தும் விடுவான். அவனை ஒவ்வொரு கணமும் சீண்டி உயிர்ப்பிக்கும் ஆணவத்தின் துளியொன்றை தானும் கொண்டிருப்பவளே நீங்கா விருப்பை அவனில் உருவாக்குகிறாள் அவன் அவள் ஊரும் வன்புரவி. பசும்புல்வெளியென்றும் பின்தொடையில் எப்போதிருக்கும் சவுக்கின் தொடுகையென்றும் தன்னை உணரச்செய்பவள்” என்றாள்.

மறுகணமே விழிகளில் ஏளனம் வெளிப்பட முகவாய் தூக்கி உடல் குலுங்க நகைத்து “ஆனால் கொழுந்தாடுபவை விரைந்தணைய வேண்டுமென்பதே நெறி” என்றாள். “அனல் ஈரத்தை முற்றும் உண்டபின் விலகி வானில் எழுகிறது. பின்பு ஒருபோதும் எரிந்த கரியை அது திரும்பிப்பார்ப்பதில்லை.” அவளுடைய நேரடியான பேச்சால் சீண்டப்பட்ட அர்ஜுனனை அநத விளையாட்டுச்சிரிப்பு எளிதாக்கியது. அவள் இடையை அழுத்தி தன்னுடன் அவளை சேர்த்துக்கொண்டு  “நீ எரியென படர்பவளா?” என்றான். அவன் விழிகளை சிறுகுழந்தையின்  தெளிந்த நோக்குடன் ஏறிட்டு “ஆம், நான் அதற்கென்றே படைக்கப்பட்டவள்” என்றாள்.

அவன் நோக்கை விலக்காமல் “அதன் பொருட்டே என்னையும் அணுகுகிறாயா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “இங்கு நீங்கள் எழுந்தருளியபோது உங்கள் ஆழத்தில் கூர்ந்திருந்த அந்த முள்ளை உணர்ந்தவள் நான். முள்முனை உணரும் முள்முனை ஒன்றுண்டு.” அர்ஜுனன் முகத்திலிருந்த நகைப்பு அணைய “ஆம் உண்மை” என்றான். “இங்கு இப்பெருநகரின் வீதியில் மகிழ்ந்து திளைத்து நீங்கள் அலைந்து கொண்டிருப்பதாகவே இங்குள்ள பிறர் எண்ணக்கூடும். ஒவ்வொரு கணமும் அந்த முள் முனையில் நஞ்சு செறிவதை நான் உணர்கிறேன்” என்றாள்.

“நானும் அதை இப்போதுதான் உணர்ந்தேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “அந்நஞ்சு ஏன் என்றே என் உள்ளம் வியந்து கொள்கிறது.” அவள் “இவை அமுதென்பதனால் அது நஞ்சு, அவ்வளவுதான்” என்றாள். “இருக்கிறேன் என்றுணர்கையில் அது துளி, நானென்று எழுகையில் அது கூர்மை. எவர் என்று தேடுகையில் அது நஞ்சு. இளைய பாண்டவரென நீங்கள் இருக்கையில் ஆம் நீங்கள் இளையபாண்டவரென சூழ்ந்திருக்கும் அனைத்தும் திருப்பிச் சொல்லியாக வேண்டும்.” அவள் அவன் கையைப்பற்றி “அவ்வண்ணம் திருப்பிச் சொல்ல இங்கிருப்பவள் நானொருத்தியே” என்றாள்.

“அந்நஞ்சு உன்னை அச்சுறுத்தவில்லையா?” என்றான் அர்ஜுனன். “ஆண்களின் அந்நச்சு முனையே பெண்களைக் கவர்கிறது” என்று அவள் விழிகளில் சிரிப்புடன் சொன்னாள். “நச்சுப்பல் கொண்ட நாகங்களையே நல்ல பாம்பாட்டிகள் விரும்புவார்கள்.” அர்ஜுனன் அச்சொற்களைக் கேட்காதவன் போல தன்னுள் ஆழ்ந்திருந்தான். “பெண்ணுக்குள் உள்ள முள்முனையால் அம்முள்முனையை தொட்டறிவதைப்போல காதலை நுண்மையாக்கும் பிறிதொன்றில்லை” என்று அவள் மீண்டும் சொன்னாள்.

“இது மேலும் தனிமையையே அளிக்கிறது” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் நகைத்து “அத்தனிமையை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்” என்றாள். அர்ஜுனன் “வேட்டையாடி காமம் கொண்டாடிய நாட்களிலிருந்து நான் நெடுந்தொலைவு விலகி வந்துவிட்டேன்” என்றபின் “உன்னுடன் நான் காமம் கொண்டால் அது என் ஆடிப்பாவையைப் புணர்வது போல பொருளற்றது. நீ கொண்டுள்ள இத்தோற்றம் இந்நகைப்பு இந்தச் சீண்டல் அனைத்துமே என் விழைவுகளிலிருந்து எழுந்து வெளியே திரண்டு நிற்பவை என்று நானறிவேன். எதிரொலியுடன் உரையாடுவது போல் அறிவின்மை பிறிதொன்றில்லை” என்றான்.

“ஆணவத்தின் உச்சத்தில் நிற்பவர்கள் காமம் கொள்வது தன்னுடன் மட்டுமேதான்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் “எனது ஆணவம் அத்தனை முதிரவில்லை போலும்” என்று சொல்லி புன்னகைத்தான். இயல்பாகவே அவர்களுக்குள் சொல்லாடல் அடங்கியது. இருபுறமும் நிரைவகுத்த மாளிகைகளின் நடுவே அவர்களின் களிறு முகில் பொதியென சென்று கொண்டிருந்தது.

ஏன் உரையாடல் நிலைத்தது என அவன் எண்ணிக்கொண்டான். ஆணுக்கும்பெண்ணுக்கும் நடுவே உரையாடல் தேய்ந்திறுவது எதனால்? சொல்லித்தீர்வதல்ல காமம். காமத்தை முகமாக்கி அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் வகுத்துக்கொள்கிறார்கள். அவ்வரையறைமேல் ஐயம்கொண்டு அதன் எல்லைகளை சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கோ ஓரிடத்தில் உள்ளிருக்கும் உண்மையைச் சென்று தொட்டுவிடுகிறார்கள். அது இருவரும் சேர்ந்து தொடும் உண்மை. ஆகவே இருவரும் சொல்லிழந்துவிடுகிறார்கள்.

அவள் “தங்களை இன்று அவையில் அரசர் சந்திக்கக்கூடும்” என்றாள். அவ்வாறு முற்றிலும் புதிய இடத்தில் அவள் தொடங்கியது அவன் எண்ணியது உண்மை என உணரச்செய்தது. “ஆம், எனக்கு செய்தி வந்தது” என்று அர்ஜுனன் சொன்னான். “அதற்குள் உங்களிடம் அவர் உரைக்கவேண்டிய அனைத்தையும் அவர்பொருட்டு பிறர் உரைத்திருப்பார்கள்” என்றாள் ஊர்வசி. இயல்பாக சந்தித்த நான்கு மைந்தர்களும் கணாதரும் பேசியவை அவன் நினைவில் எழுந்தன. அவை ஒரு திட்டத்துடன் சொல்லப்பட்டவை என்பதை அப்போதுதான் உணர்ந்து “ஆம்” என்றான்.

“உங்களை சந்திப்பதற்கு முன் நீங்கள் சிலவற்றை உணர்ந்திருக்க வேண்டுமென்று அவர் விழைகிறார்” என்றாள் ஊர்வசி. “நீயும் அதற்கென அனுப்பப்பட்டாயா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆமென்றே கொள்ளுங்கள்” என்று அவள் சொன்னாள். “சொல்” என்று அர்ஜுனன் சற்று எரிச்சலுடன் சொன்னான். “உங்களை நேற்று தோளணைத்து அழைத்துச் சென்ற மூத்தவர் பிறந்ததெப்படி என்றொரு கதை உண்டு, அறிந்திருக்கிறீர்களா?” என்றாள் ஊர்வசி. அவ்வினாவின் பொருளென்ன என்று உணரமுடியாமல் விழிசுருக்கி அவன் நோக்கினான்.

“விண்ணவர்க்கரசர் ஒருமுறை கிழக்கே இந்திரகீலமலைமேல் தன் தேவமகளிருடன் சோலையாடச் சென்றிருந்தார். அவ்வழியாகச் சென்ற சூரியனின் மாற்றுருவான தேர்ப்பாகன் அருணன் அக்களியாடலைக் கண்டான். அவர்களுடன் சேர்ந்து கொள்ளும்பொருட்டு தன் மாயத்தால் பெண்ணுருவம்கொண்டு அருணி என்னும் பெயருடன் அம்மலையில் இறங்கினான்  கன்னியருடன் ஆடிய முதல்தேவர் அவர்களில் அருணியே அழகு நிறைந்தவள் என்று கண்டார். அவள் உளம்கவர்ந்தார். மின்படையோனின் மாயத்தால் காதல்நிறைந்தவளாக மாரிய அருணியும் அவருடன் காமத்திலாடினாள். அவ்வுறவில் பிறந்தவரே கிஷ்கிந்தையின் அரசனென வந்த பாலி” என்று ஊர்வசி சொன்னாள்.

“தொல்கவியின் காவியத்தில் அச்செய்தி உள்ளது” என்றான் அர்ஜுனன். “அக்கதை சுட்டும் செய்தி என்ன என்று பாருங்கள்” என்று ஊர்வசி சொன்னாள். “மாகேந்திரவேதம் திகழ்ந்த நாளில் கிழக்கின் தலைவனெனத் திகழ்ந்தவர் சூரியன். மகாவஜ்ரவேதம் எழுந்தபோது அவிகொள்ளும் உரிமைகளை பகிர்ந்தளித்த பிரம்மன் திசைகளை தேவர்களுக்குரியதாக்கினார். தெற்கு எமனுக்கும் வடக்கு குபேரனுக்கும் மேற்கு வருணனுக்கும் வடகிழக்கு ஈசானருக்கும் தென்கிழக்கு அனலவனுக்கும் வடமேற்கு வளிதேவனுக்கும் தென்மேற்கு நிருதிக்கும் அளிக்கப்பட்டது. கிழக்குத்திசை இந்திரனுக்குரியதாகியது.”

“கிழக்கின் தேவனாகிய சூரியனை அது சினம்கொள்ளச் செய்தது. இந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூசல் எழுந்தது. திசை தேவன் எவன் என்பதில் தேவர்களும் முனிவர்களும் குழம்பினர். இந்திரனுக்கு அளிக்கும் அவி தனக்குரியது என்று சூரியன் எண்ணினார். சூரியனுக்கு அவியளிக்கலாகாதென்று இந்திரன் ஆணையிட்டார். ஆயிரமாண்டுகாலம் அப்பூசல் நிகழ்ந்தது” என்றாள் ஊர்வசி.

“மகாநாராயண வேதம் எழுந்தபோது எட்டுத்திசைகளும் அதன் மையமும் விஷ்ணுவுக்குரியதே என்று அது கூறியது. அவியனைத்தும் முதலில் விஷ்ணுவுக்குச் சென்று அவர் அளிக்கும் முறைமையிலேயே பிறருக்கு அளிக்கவேண்டுமென அவ்வேதவேள்வியில் வகுக்கப்பட்டது. அது இந்திரனையும் சூரியனையும் சினம்கொள்ளச் செய்தது. அச்சினம் அவர்கள் இருவரையும் ஒன்றென இணைத்தது” என்றாள் ஊர்வசி. “அவ்விணைப்பின் விளைவாக இந்திரகுலத்திற்கும் சூரியகுலத்திற்கும் இடையே உருவான உறவே பாலியை உருவாக்கியது.”

அவள் சொல்லவருவதென்ன என அவன் எதிர்நோக்கி அமர்ந்திருந்தான். “இளையபாண்டவரே, இந்திரன் மைந்தர் நீங்கள். உங்கள் மூத்தவராகிய கர்ணன் சூரியனின் மைந்தர். நீங்கள் இருவரும் ஒன்றாகவேண்டும் என்று உங்கள் தந்தை விழைகிறார். அதுவே அவர் உங்களுக்கிடும் ஆணை என்றும் சொல்வேன்” என்றாள். அர்ஜுனன் பேசாமல் கூர்ந்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தான். “உங்கள் பொது எதிரி மகாநாராயணவேதமே. அதன் விழுப்பொருளாகத் திரண்டு வரும் மெய்மையையே இளைய யாதவர் முன்னிறுத்துகிறார்.”

அர்ஜுனன் மெல்லிய பொறுமையின்மையை உடலசைவில் காட்டினான். அவன் கைமேல் கையை வைத்து “ஆம், உங்களுக்கு அவருடன் இருக்கும் உறவை நான் அறிவேன். உங்கள் தந்தை மேலும் அறிவார்” என்றாள். “ஆனால் மைந்தருக்கு தந்தையுடனான கடன் என்பது ஊழால் வகுக்கப்பட்டது. பிரம்மத்தின் விழைவையே ஊழென்கிறோம். அக்கடனிலிருந்து நீங்கள் விலகமுடியாது.”

அர்ஜுனன் “களிறு நிற்கட்டும்” என்றான். “பொறுங்கள், நான் சொல்வதை கேளுங்கள்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் களிறின் பிடரியில் தட்ட அது நின்று முன்வலக்காலைத் தூக்கியது. “அங்கு நிகழ்வது வேதங்களின் போர். நீங்கள் நின்றிருக்கவேண்டிய இடம் உங்கள் தந்தையின் தரப்பே” என்று அவள் சொன்னாள். அவன் யானையின் கால்களினூடாக இறங்கி திரும்பி நோக்காமல் நடந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

மதுரைக்காண்டம் -கடிதம்

$
0
0

 

HSShivaprakash

 

இனிய ஜெயம்,

எச் .எஸ்.சிவப்பிரகாஷ்  எழுதிய மதுரைக்காண்டம்

மற்றும் ஒரு புதிய அனுபவம். சேர மண்ணின் மனோஜ் கரூர் போல, தமிழ்ப் பண்பாட்டின் சாரமான ஒன்றுடன் பிணைந்த கன்னட நாடக ஆசிரியர் சிவப்ரகாஷ் . மொழி வழி மாநிலம் என்ற இன்றைய அரசியல் பண்பாடு விதித்த எல்லைகளை கைப்பற்ற எத்தனை தியாகக் கதைகள்? நிலை நிறுத்த எத்தனை பாசிச அதிகார வெறிக் கூச்சல்கள்? பாரதப் பண்பாட்டு வரலாறே புலம் பெயர்தல் எனும் ஒற்றை சொல்லில் அடங்கி விடும். மொத்த புலம் பெயர் பாரதத்தினருக்கும் தமிழ்நாடுதான் முனம்பு. எனில் இது தமிழ் நாடு மட்டுமல்ல, தெலுங்கு,கன்னட, மலையாள, நாடும் கூடத்தான். இங்கே தமிழ்ப் பெரும்பான்மை நோக்கி எழும்,அதிகார கூச்சல் எல்லாம், நம்மில் ஒற்றுமை நீக்கி,அனைவருக்கும் சாவு கொண்டு வரும் நஞ்சே. இந்தகைய சூழலில் இத் தகு மூடப்பிரிவினைகளுக்கு எதிராக செயல்படும் எந்த இலக்கியப் பிரதியும், அதன் ஆசிரியர் மீது எனது மாளாத பிரியத்தை வெல்கிறது.

கொற்றவை நாவலின் சிலம்புடைப்பு நிகழ்வு, அதன் வழி அரசன் கொள்ளும் தரிசனம் முற்றிலும் தனித்துவமான ஒன்று. வெளியே மதுரையே பஞ்சத்தில் அழிகிறது. அரசன் அந்தப்புறத்தில் கிடக்கிறான். அவனது பட்டத்து அரசியின் சிலம்பு அவனுக்கு வெறும் சிலம்பல்ல, அவனது, வெற்றியின், குடிப் பெருமையின் அடையாளம் அது. கண்ணகியின் சிலம்பு உடையும் கணமே அவன் அறிகிறான்,  அங்கும் இங்குமென இருந்தது ஒரே சாரத்தின் இரு முகங்களே. அந்த தரிசனத்தில் இருந்து அரசன் என தனது அத்தனை பிழைகளையும் அறிகிறான். உயிர் துறக்கிறான்.

பாம்பும் கீரியும் கதையின் நாயக்கிக்கு கீறி இறந்த கணம் முதல் இட முலை நிற்காமல் பாலை உகிக்கிறது , அவள் கணவன் இறந்த பின்னோ, அது குருதி பெருக்குகிறது.

ஹளபேடு சிவம், இடக்கையின் மூவிரலால் உமையின் இடமுலை பாரம் ஏந்தி, அவளது முலைச் சுட்டை தொட்டு உறைந்திருக்கிறது சிவத்தின் இடக்கை சுட்டு விரல்.

இனி எந்நாளும் அன்னையாகி மகவுக்கு முலையளிக்க மாட்டேன். உண்ணாமுலையம்மை இடது முலை திருகி எறிந்து மதுரையை அழிக்கிறாள்.

கண்ணகி மறுத்து ஒதுக்கும் தாய்மையை அவள் முன் நிறுத்தி அவளை வினவுகிறது இக் கதை.

கோவலன் பேசும் முதல் உரையாடலே அவன் கவுந்தி வசம் கேட்கும் ஆசியுடன்தான் துவங்குகிறது . நிச்சயமின்மையின் வாசலில் நின்று அனு தினமும் அல்லாடும் தனக்கு நிலைத்த புத்தி அருளுமாறு வேண்டுகிறான்.தவ வாழ்வை தேர்ந்த கவுந்தியோ கோவலன் கண்ணகி வசம் பற்றில் விழுந்து விடுவோமோ எனும் நிலையின்மையில் இருக்கிறாள்.கோவலனுக்கு முன்பு இரண்டு பாதை ஒன்று மதுரைக்கு, ஒன்று இன்னும் அவன் எடுத்துக் கொஞ்சாத மணிமேகலை தவழும் மாதவியின் இல்லத்துக்கு.நிலைத்த புத்தி கொண்ட கண்ணகி இந்த இருமை இக்கட்டை ஒரு போதும் சந்தித்தவள் அல்ல? அப்படி ஒரு இருமை அவள் முன் நின்றிருந்தால்?

அவள் முன் நிற்கும் அவள் மகனும் பாண்டிய ராஜன்தான், கள்வன்தான். அவன் களவில் அவள் கொழுனனுடன் உண்டு உயிர்த்திருக்கிறாள். திருட்டு தவறெனில்,அங்கே வசதிக்கு திருட்டு,இங்கே வயிற்றுக்கு திருட்டு, என்ன செய்யப் போகிறாள்?

இவ புத்திசாலியா இருக்கா, பாக்க நல்லா இல்ல, பொண்டாட்டி பாக்க அழகா இருக்கா புத்தியே இல்ல என்ன செய்யலாம்? புலம்பும் பொற்க்கொல்லன் கூட இருமை முன் தான் நிற்கிறான்.

கல்லின் இதயத்தை உடைத்து, உள்ளிருக்கும் மனத்தை பார்ப்பவர்கள் நாங்கள்.கல் உடைப்பவர்கள் நாங்கள். நாடகத்தில் வரும் எல்லா பாடல்களுமே அழகு. முதற் கனல் நாவலில் அம்பைக்கு அல்லல்பட்டு அழியும் தட்சனின் மகள் கதை சொல்லப்படுவது போல, இங்கே கண்ணகிக்கு மும்முலை கொண்டு, நெருப்பிலிருந்து ஜனிக்கும் மீனாக்ஷி கதை சொல்லப் படும்போது , கண்ணகிக்கு கோவலனின் படுகொலை செய்தி வருகிறது.

மிக நல்ல நாடகம். முடிவை நோக்கி ஆசிரியர் விரைந்து ஓடுகிறார், தடுமாற்றங்களில் இன்னும் ஆழமாக நின்று நிலைத்திருக்கலாம்.

எல்லாக் குழந்தையும் மை பாதர் இஸ் தி ஒன்லி பெஸ்ட் என்றே மனதுக்குள் கூவும். எனக்கு ஜெயமோகனும் அதேதான்.  கோவலனின் வெட்டுண்ட தலையுடன் அரண்மனைக்குள் நுழையும் கண்ணகி எனும் படிமம் கொண்டு அந்த ஒரு நாடகீய எல்லையில் ஷிவப்ரகாஷ் அவர்கள் ஜெயமோகனை மிஞ்சுவதை சற்றே பொறாமையுடன் ஏற்றுக் கொண்டேன்.

சொல்புதிது சீனு

மதுரைக்காண்டம்

எச் எஸ் சிவப்பிரகாஷ்

எச் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இன்குலாபின் புரட்சி

$
0
0

600

ஜெ

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஓர் அஞ்சலிக்கட்டுரையை நீங்கள் எழுதுவதுண்டு. பல அறியப்படாத எழுத்தாளர்களை உங்கள் அஞ்சலிக்கட்டுரைகள் வழியாகவே அறிந்திருக்கிறேன். நீங்கள் இடதுசாரிக் கவிஞரான இன்குலாப் பற்றி ஒரு அஞ்சலிக்குறிப்பு கூட எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. ஏன் என அறியவிரும்புகிறேன்

முருகேசன்

*

அன்புள்ள முருகேசன்

இன்குலாப் அவர்களை நான் இருமுறை சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். ஒருகாலத்தில் அவரை நேர்மையான இலக்கியச்செயல்பாட்டாளர் என்றும் நம்பி அதை எழுதியுமிருக்கிறேன் – சுபமங்களாவிலென நினைக்கிறேன்

ஆனால் அவரைப்பற்றி இன்று என் எண்ணம் வேறு. நல்லமனிதர். மென்மையானவர். கொஞ்சம் அப்பாவி என்றும் தோன்றியது நேரில் சந்திக்கையில். கல்லூரி ஆசிரியர்களுக்கு எழுபதுகளில் மோஸ்தராக இருந்த பாதுகாப்பான புரட்சிகளில் ஈடுபட்டவர். புரட்சி என்றால் வசைபாடுதல் என அன்று ஒருமாதிரி குத்துமதிப்பாக புரிந்துகொண்டிருந்தார். இந்தியாவில் சில விஷயங்கள் முற்போக்கு என்றும் புரட்சிகரமானவை என்றும் சொல்லப்படும். அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெருந்தரப்பாக அது ஒருவகையில் முக்கியமானதே. அது இங்குள்ள உறைந்துபோன சனாதனத்தின் மீது ஆக்ரோஷமான தாக்குதல்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது. கருத்தியலின் முரணியக்கத்தில் அதற்கு ஒரு பங்குண்டு. அந்தத் தரப்பை உருவாக்கிய முன்னோடிகளுக்கு சிந்தனையாளர்கள் என்னும் இடமும் உண்டு. வெறுமே அதை பின்பற்றியவர்கள் கருத்துலகத் தொண்டர்கள் மட்டுமே, இன்குலாபும் அப்படித்தான்.

அத்துடன், பிறரது மதத்தை, பிறரது நம்பிக்கைகளை, பிறர் தனக்கெனக் கொண்ட பண்பாட்டை கிண்டல்செய்து வசைபாடி தன்னை புரட்சிக்காரன் என காட்டிக்கொள்வது இங்கே மிக எளிது. உண்மையான புரட்சிக்காரன் தன் மரபுமூலம் தனக்கு அளிக்கப்பட்டதும் தான் அன்றாட வாழ்க்கையில் சார்ந்திருப்பதுமான மதத்தையும், நம்பிக்கைகளையும், பண்பாட்டையும் நிராகரிப்பதிலும் விமர்சிப்பதிலும்தான் தொடங்குவான். இன்குலாப் மிக நுணுக்கமாக அந்த இடங்களை லௌகீகமான விவேகத்துடன் கடந்து வந்தார். . கிருஷ்ணனையும் ராமனையும் வசைபாடினார். ராஜராஜ சோழன் என்ன புடுங்கினான் என்று கேட்டார். அதே கேள்வியை தன் மதம் பற்றிக் கேட்டிருந்தால்தான் அவர் உண்மையில் புரட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்று அர்த்தம். புரட்சிகள் தன்னிலிருந்தே ஆரம்பிக்கும். அந்தக் கலகம் அளிக்கும் இழப்புகளைக் கடந்து வந்திருந்தால்தான் அவர் தியாகி என்று அர்த்தம்.

தியாகமில்லாமல் புரட்சி இல்லை. சௌகரியமான விஷயங்களைச் சொல்வது வெறும் பிழைப்பரசியல். இன்குலாப் மிகமிக நுட்பமான சமநிலையை அதில் வகித்தார். நான் அவரிடம் பேசிய ஒரு தருணத்தில் அதை அவரிடம் சொன்னேன். “சார் நீங்க ராமனையும் கிருஷ்ணனையும் கிழிச்சுத் தோரணம் கட்டுங்க. அதை என் மதம் அனுமதிக்குது. விமர்சனம் இல்லாம இந்துமதம் இல்ல. ஆனா நான் நபியை போற்ற மட்டும்தான் செய்வேன். ஏன்னா அவர் எனக்கு ஒரு இறைத்தூதர்தான். அவரிலே இருந்து வர்ர மெய்ஞானம் மட்டும்தான் எனக்கு முக்கியம்” என்றேன். அவர் கோபம் கொள்பவரல்ல. ”என் கருத்துக்களாலே புண்பட்டிருக்கீங்க” என்றார். “கண்டிப்பாக இல்லை. நீங்கள் அப்படிச் சொல்வதற்கு எதிராக எந்தக்குரல் எழுந்தாலும் நான் அதைக் கண்டிப்பேன்” என்றேன்.

கருத்தியல் போகட்டும். அவர் எழுதியவை நல்ல கவிதைகள் என்றால் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் கவிஞன் சான்றோன் ஆக இருக்கவேண்டியதில்லை. அவனுடைய தனியாளுமையின் நேர்வெளிப்பாடல்ல கவிதை. இன்குலாபுக்கு நவீனக் கவிதையின் ஆரம்பப் பாடமே புரியவில்லை. அவர் எழுதியவை வெறும் கூக்குரல்கள். பிரச்சார அறைகூவல்கள். பிரகடனங்கள். கவிதையின் அழகியல் உருவானதே நேரடியாகக் கூற உணர்த்த முடியாதனவற்றை கூறும் பொருட்டு. மொழியால் அறிய வைக்க முடியாதவற்றை மொழி கடந்த மொழி ஒன்றால் உணர்த்தும் பொருட்டு. ஒரு சாதாரண முற்போக்குத் துண்டுப் பிரசுரத்திற்கும் இன்குலாப் கவிதைக்கும் வேறுபாட்டை இன்குலாபாலேயே கண்டுபிடிக்கமுடியாது.

நல்லமனிதர். அடிப்படையில் பிரியமானவர். அவருக்கு அஞ்சலி.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58

$
0
0

[ 21 ]

மாதலியே தன்னை இந்திரமாளிகைக்கு அழைத்துப்போக வந்திருப்பதை ஏவலன் வந்து சொன்னபோது அர்ஜுனன் திகைப்புடன் எழுந்துவிட்டான். “அவர் காத்துநின்றிருக்கிறாரா?” என்று கேட்டபடி அவன் அறையைவிட்டு வெளியே செல்ல உடன் வந்த கந்தர்வ சமையப்பெண்கள் “இளையவரே, இன்னும் அணிகள் முடியவில்லை” என்றனர். “போதும்” என்று அவன் சொன்னான். “இந்த மணிகள் மட்டும்” என்றாள் ஒருத்தி. “கால்நகங்களில் ஒன்றில் ஒளி குறைந்துள்ளது, சற்றுநேரம்…” என்றாள் இன்னொருத்தி. “போதும்” என அவர்களை விலக்கியபின் அவன் வெளியே நடந்தான்.

படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தபோது அங்கே உச்சிக்கதிரொளிபட்ட சுனைபோல இந்திரனின் ஒளிபரவும் தேர் வந்து நின்றிருப்பதை கண்டான். கூப்பிய கைகளுடன் அதை நோக்கி சென்றான். மாதலி தேர்த்தட்டிலிருந்து இறங்கி “வருக மைந்தா, உனக்காக அரசர் காத்திருக்கிறார்” என்றான். “தாங்களே வரவேண்டுமா, எந்தையே?” என்றான் அர்ஜுனன். “நானே வரவேண்டுமென்பது அரசரின் ஆணை. அவருக்கு இருக்கும் இடம் உனக்கும் அளிக்கப்பட்டாகவேண்டுமென்று சொன்னார்” என்றபின் மாதலி ஏறிக்கொண்டான். அர்ஜுனன் தேர்த்தட்டில் ஏறி அமராமல் நின்றுகொண்டான்.

தேர் அமராவதியின் தெருக்களினூடாகச் சென்றது. அர்ஜுனன் அதன் விரைவின் வழியாக படிப்படியாக இயல்பானான். “என்னிடம் ஏதேனும் சொல்லச் சொன்னாரா அரசர்?” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நான் அதை சொல்லப்போவதில்லை” என்றான் மாதலி. “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “நான் உணர்வதை சொல்லவேண்டும், எனக்கு ஆணையிடப்பட்டதை அல்ல. அதற்கான தருணம் அமையட்டும்” என்றான் மாதலி சிரித்தபடி. அர்ஜுனனும் பணிவுடன் சிரித்து “சொல்லுங்கள், காத்திருக்கிறேன்” என்றான்.

தேர் இந்திரனின் அரண்மனையின் தேர்முற்றத்தில் சென்று நின்றது. கந்தர்வ ஏவலர் ஓடிவந்து புரவிகளை பற்றிக்கொண்டனர். அர்ஜுனன் இறங்கியதும் மாதலி அருகே வந்து அவன் தோளில் கைவைத்து “வருக மைந்தா” என்றபின் முன்னால் நடந்தான். படிகளில் ஏறி பெருந்தூண்கள் நிரைவகுத்த இடைநாழியினூடாக நடக்கையில் அர்ஜுனன் அது அரசவைக்கூடத்திற்குச் செல்லும் வழிபோல இல்லை என எண்ணிக்கொண்டான். அவன் எண்ணத்தை உணர்ந்தவன்போல அவன் “நாம் அரசரின் மஞ்சத்தறைக்கு செல்கிறோம்” என்றான் மாதலி. “ஏன்?” என்றான் அர்ஜுனன். “அவர் உன்னிடம் பேசவிழைகிறார். இருவரும் இணைந்து அவைநுழையவேண்டுமென எண்ணுகிறார்.”

அர்ஜுனன் அணிச்சொற்களுக்காக நெஞ்சைத் துழாவி அவை அமையாமல் நேரடியாக “அவர் என்னிடம் ஏதேனும் வாக்குறுதியை பெறவிழைகிறாரா என்ன?” என்றான். மாதலி புன்னகைத்தான். “அவர் எனக்கு ஆணையிடலாம். ஆனால் என்னைக் கடந்தவற்றை ஆணையிட இயலாது” என்றான் அர்ஜுனன். மாதலி அதற்கும் புன்னகை புரிந்தான். படிகளில் ஏறி இடைநாழியினூடாகச் சென்று சிற்றவைக்கூடத்திற்குள் நுழைந்தனர். “இந்திரமைந்தனின் வரவை அறிவி” என்று அங்கிருந்த கந்தர்வனிடம் மாதலி ஆணையிட்டான். அவன் சென்று அறிவித்து மீண்டுவந்து கதவை மெல்லத்திறந்து “அவர் அறைநுழையலாம்” என்றான்.

அர்ஜுனன் கைகூப்பியபடி திறந்த கதவினூடாக உள்ளே சென்றான். ஒளிகொண்ட வெண்முகில்கள்போல பளிங்குச்சுவர்கள் மின்னிக்கொண்டிருந்த அறையில் இடப்பட்ட நான்கு பீடங்களில் ஒன்றில் இந்திரனும் அருகே பாலியும் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே இந்திராணி நின்றிருந்தாள். அர்ஜுனன் அருகணைந்து இந்திராணியின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவள் “வெற்றியும் புகழும் திகழ்க! மெய்மை கைவருக!” என வாழ்த்தினாள். “நீ நகர்சுற்றி வருவதை இருமுறை கண்டேன். உன் விழிகள் இளமைந்தர் விழிகள் போலிருந்தமை கண்டு நகைத்தேன்” என்றாள். அர்ஜுனன் “இங்கு இளமை மட்டுமே உள்ளது, அன்னையே” என்றான்.

இந்திரன் தலைகுனிந்து அவனை நோக்காமல் அமர்ந்திருந்தான். அவன் அருகே சென்று கால்தொட்டு வணங்க அவன் தலையை மட்டும் தொட்டான். அவன் பாலியை வணங்கியபோது அவன் வாழ்த்தென ஏதோ சில சொற்களை முனகியபடி அவனை தலைதொட்டு வாழ்த்தினான். அவன் கைகட்டி அருகே நின்றுகொண்டான். “அமர்க!” என்றான் இந்திரன். “இல்லை” என்று அர்ஜுனன் சொல்லப்போக “இது அவை. இங்கு அமரலாம்” என்றான் பாலி. அர்ஜுனன் அமர்ந்தான்.

அவர்கள் எதற்காகவோ காத்திருந்தனர். காற்றிலாது அசைவிழந்த சுடர்கள் போல இருவரும் தோன்றினர். அர்ஜுனன் அவர்கள் சொல்கொள்வதற்காக காத்திருந்தான். பாலியின் உடலில் மெல்லிய அசைவு தோன்றியதும் ஆடிப்பாவையென இந்திரனும் அசைவுகொண்டான். பாலி “தந்தை உன்னிடம் நேரடியாகவே பேசவிழைகிறார், இளையோனே” என்றான்.

“அவ்வாறே” என்றான் அர்ஜுனன். இந்திரன் விழிதூக்கி அர்ஜுனனை சிலகணங்கள் நோக்கியபின் “நீ என் மைந்தன் என்பதனால் இச்சொற்கள். நான் எவரிடமும் எதையும் வேண்டுவதில்லை” என்றான். “நீங்கள் ஆணையிடலாம், தந்தையே” என்றான் அர்ஜுனன். “நீ உன் தோழனை கைவிட்டாகவேண்டும். அதுவே என் ஆணை” என்றான் இந்திரன். சிலகணங்கள் அர்ஜுனன் சித்தமும் செயலற்றிருந்தது. பின்னர் கைகூப்பியபடி “அது என்னால் இயலாது, தந்தைப்பழிகொண்டவனின் நரகத்தில் முடிவிலாக்காலம் வரை உழன்றாலும்” என்றான்.

“நீ என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா, மூடா?” என்று கூவியபடி பாலி எழுந்தான். “மைந்தா, அமர்க! அவர் சொல்லவேண்டியதை சொல்லட்டும். நாம் பேசுவதற்காகவே இங்கே அவனை அழைத்தோம்” என்றாள் இந்திராணி. பாலி அச்சொல்லுக்கு அடங்கி அமர்ந்தான். “மைந்தா, அவன் அங்கிருப்பது ஓர் எளிய யாதவனாக அல்ல. முடிவில்லாத ஒரு மணிமாலையின் ஒரு அருமணி அவன். அவன் மண்ணில் வாழும் அனைவரையும் தன் காய்களாகக் கொண்டு பெரும் பன்னிருகளம் ஒன்றை ஆடிக்கொண்டிருக்கிறான். அதை உன்னிடம் சொல்லவே முனிவர்களை அனுப்பினேன்” என்றான் இந்திரன். “ஆம், அவர்கள் என்னிடம் சொன்னார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அதன்பின்னருமா இதை சொல்கிறாய்? நீ அறிவாயா மகாவஜ்ரமென்றால் என்னவென்று? போர்கொண்டெழுந்த இந்திரனின் வேதம். இந்திரன் எவருடன் கொண்ட போர் அது என அறிவாயா?” என்று பாலி கூவினான். தசைகள் நெளிய பெரிய கைகளை உரசியபடி “எதிர்நின்று அறைகூவுவது யார் தெரியுமா? அவர் பக்கம் நின்று நீ பேசுகிறாய். சொல், உன் தந்தையின் நெஞ்சுக்குநேராகவா எழப்போகிறது உன் வாளி?” இந்திராணி “மைந்தா, நீ அமர்க! உன் தந்தை அவர் சொற்களை சொல்லட்டும்” என்றாள். பாலி மீண்டும் அமர்ந்தான். இந்திரன் “அவன் சொல்வதைத்தான் நானும் சொல்லவிழைகிறேன், இளையவனே” என்றான். “நான் என் மின்படைக்கலத்தை ஏந்தியபடி போருக்கெழுந்து நின்றிருக்கும் தருணம் இது. எதிர்நிற்பவன் உன் தோழன்.”

பலமுறை கேட்டிருந்தபோதிலும் அவர் வாயால் அதை கேட்க அர்ஜுனன் உடல் சற்று சிலிர்த்தது “மண்ணில் மாகேந்திரம் தோற்கடிக்கப்பட்டது. எஞ்சி அங்கு தங்கும்பொருட்டு மகாவஜ்ரம் போராடிக்கொண்டிருக்கிறது. நீ அறியமாட்டாய், அங்கு எவ்வேள்வியிலும் இன்று எனக்கு முதல் அவி இல்லை. முதன்மை இடமும் இல்லை. அங்கிருந்து பெய்யும் அவியே இங்கு அமுதமென மழைக்கிறது என்று அறிந்திருப்பாய். இந்நகரம் சிறுத்துக்கொண்டிருக்கிறது. என் குடிகள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் ஒளிமங்குகின்றன இங்குள்ள அனைத்தும்” என்றான் இந்திரன். சினம் அனல்கொள்ளச்செய்த முகத்துடன் “ஆனால் போராடிக்கொண்டே இருப்பவனுக்குரியது இந்திரநிலை. இதையும் போராடி வெல்வேன் என்பதில் ஐயமில்லை” என்றான்.

அர்ஜுனன் இந்திரன் சொல்லிமுடிப்பதற்காக காத்திருந்தான். “வேதப்பாற்கடல் கடைந்து அமுதெடுக்கப்போகிறான் அவன் என்கின்றனர் அவனைப்போற்றும் முனிவர். நஞ்செழாது அமுதில்லை என்றும் அவர்கள் அறிந்திருப்பார்கள். மைந்தா, அங்கு நிகழவிருப்பது பெரும் குருதிக்கொந்தளிப்பு. அங்குதிகழும் சொல்லை வெல்ல தன் மெய்யறிதலே போதும் என அவன் அறிந்திருப்பான். களம் நின்று வெல்ல உன் கைவில் வேண்டும் என்று உணர்ந்திருப்பதனால்தான் உன்னை தன் நண்பன் என கொண்டிருக்கிறான். நீ அவனுடனிருக்கையில் அவனே வெல்வான். அவன் சொல் அங்கு நிற்கும். அது மகாநாராயண வேதமென்று அங்கே வாழும்.”

“அவன் செல்வது வேதத்திற்கும் அப்பால் உள்ள மெய்மையை.” என்றான் இந்திரன். அர்ஜுனன் அவன் விழிகளை நோக்காமல் “ஆம், வேண்டுவனவற்றை கெஞ்சியும் அடம்கொண்டும் தந்தையிடம் பெறுபவர் மைந்தர். அவர் சித்தம் முதிர்ந்து தந்தையை அறியமுயல்வதும் இயல்பே என்று என்னிடம் சொன்னார்” என்றான். இந்திரன் உரத்தகுரலில் “மூடா, ஒவ்வொரு கூழாங்கல்லிலும் உள்ளது முடிவின்மையே. முடிவிலியின் பாதையை திறப்பவனுக்கு இன்பங்களென்று ஏதுமில்லை. அவனுக்கு வாழ்வே இல்லை” என்றார். “ஆம், முடிவிலியை அறிந்தவன் தானே முடிவிலியென்றாகிறான்” என்றான் அர்ஜுனன்.

இந்திரன் தளர்ந்து கைகளை விரித்தான். பின்னர் நீள்மூச்சுடன் அசைந்தமர்ந்து “இளையவனே, வெயிலொளியை பளிங்குருளையால் குவிப்பதுபோல அவன் வேதவிரிவை ஒற்றைமெய்மையென்றாக்குகிறான். அது சுடர். எரித்தழிப்பதும் கூட. அவன் வென்றால் பாரதவர்ஷத்தில் ஊழிக்காலம் வரை அம்மெய்மையே நின்றிருக்கும். மைந்தா, அது கூர்வாள் என என் புகழை வெட்டிச்செல்லும்” என்றான் இந்திரன். “ஏனென்றால் மாகேந்திரம் விழைவுகொண்டோரின் வேதம். மகாவஜ்ரம் வென்று எழுபவன் வேதம். அவன் சென்றடையும் வேதமெய்ப்பொருளோ அடைவதற்கும் இழப்பதற்கும் நடுவே, வெல்வதற்கும் வீழ்வதற்கும் அப்பால் விழித்திருக்கும் ஒரு நோக்கு மட்டுமே.”

“அவன் சிப்பியில் முத்தெடுப்பதுபோல அவ்வேதமெய்ப்பொருளை எடுக்கிறான்” என்றான் பாலி. “ஆண்டாண்டுகாலம் வேதத்தின் உள்நின்று உறுத்தியது. வேத உயிர்சூடி ஒளிகொண்டது. இளையோனே, அதை எடுத்தபின் வேதம் வெறுங்கலமே.” அர்ஜுனன் “கதிர்முதிர்ந்தபின்னரும் நிலம் வளத்துடன் எஞ்சுவதே வழக்கம், மூத்தவரே” என்றான். பாலி உரக்க “வீண் சொல் வேண்டாம்!” என்று கூவினான். அர்ஜுனன் முகத்தருகே தன் முகம் வர அணுகி சினத்தால் சுளித்த முகம் அருகே அசைய, இரைக்கும் மூச்சு அவன் மேல் வெம்மையுடன் படர “திசைத்தேவர்களின் வேதமே மகாவஜ்ரம். நீ திசைத்தேவர்களை அணுகி படைக்கலம் கொண்டாய். அவர்கள் உன்னை எந்தையின் இளையமைந்தன் என்றெண்ணியே அருள்புரிந்தனர். இன்று அப்படைக்கலங்களுடன் நீ எந்தைக்கு எதிராக கிளம்புகிறாய்” என்றான்.

அவனை அடங்கும்படி கையசைத்து விலக்கியபின் இந்திரன் சொன்னான் “மைந்தா, சூரியன் எங்கள் தோழன். மகாநாராயணம் மண்நிகழத் தொடங்கியதுமே விண்ணகத்தேவர்கள் ஒருங்கிணைந்துவிட்டோம். என்குலத்தான் இவன். சூரியனின் மைந்தன் இவன் இளையோன் சுக்ரீவன். அந்த யுகத்தில் இவர்கள் பிரிந்து போரிட்டு அழிந்தனர், அவன் வென்றான். இந்த யுகத்திலும் அது நிகழலாகாது. இன்று மண்ணில் உன்னுடன் இருக்கும் அவன் மைந்தன் உன் உடன்பிறந்தான். அவனையே உன் முதல்வன் எனக் கொள்க! அவனும் நீயும் இணைந்தால் உன் தோழன் என வந்தவன் வெல்ல முடியாது. அவன் எண்ணும் வேதமுடிவும் மண்நிலைக்க முடியாது.”

இந்திரன் குரல் தழைந்தது. “மைந்தன் என்பதனால் உன்னிடம் நான் மன்றாடுவதும் பிழையல்ல. இத்தருணத்தில் இது ஒன்றே நான் உன்னிடம் கோருவது. இதை நீ ஏற்றால் மண்ணில் ஒரு பெரும்போர் தவிர்க்கப்படும். போரில் உனக்கு களமெதிர்நிற்கப் போகிறவர்கள் உன் உடன்பிறந்தார். உன் முதுதந்தையர், உன் ஆசிரியர்கள். நேற்றுவரை உன் சுற்றமென்றிருந்தவர். உன் கொடிசூடி உனக்குப்பின் படைநிரையென வந்தவர். அவர்களின் குருதிமேல் நடந்துசென்றே நீ வெல்ல முடியும்.” அர்ஜுனன் திகைத்து அமர்ந்திருந்தான். பாலி “பல்லாயிரம் கைம்பெண்கள், பல்லாயிரம் ஏதிலிமைந்தர், பல்லாண்டுகாலம் ஓயா விழிநீர். இளையவனே, அவை மட்டுமே எஞ்சும் உனக்கு” என்றான்.

அர்ஜுனன் தலைகுனிந்தான். அவன் உடல் மட்டும் விதிர்த்துக்கொண்டிருந்தது. “அழிவது அவர்கள் மட்டும் அல்ல. உன்குடியும்தான். இதோ சொல்கிறேன், உன் மைந்தர் களத்தில் நெஞ்சுபிளந்து விழுந்து துடித்து இறப்பார்கள். உன் நகரம் எரிஎழுந்து கரிமூடும்” என்று பாலி முழங்கும் குரலில் சொன்னான். “அனைத்துக்கும் அப்பால் உள்ளது ஒன்று. இளையோனே, போர்கொண்டு செல்லும் அரசனை தோல்விக்குப்பின் மூத்தவள் கையில் ஏந்திக்கொள்கிறாள். வென்றால் அவன் நெஞ்சில் இளையோள் குடிவருகிறாள். ஆனால் அவ்விளையோள் அறியாது உருமாறி மூத்தவளாக ஆவாள். நுனிக்கால் ஊன்றி நிற்க நிலமில்லாதாகும், வெறுமையே எஞ்சும்.”

கைசுட்டி பாலி சொன்னான் “உலராத உதிராத விழிநீருடன் நீ அந்நிலமெங்கும் அலைந்து திரிவாய். ஒவ்வொரு சொல்லும் பொருளழிந்து வெறும்கூடாகும். ஒவ்வொரு நம்பிக்கையும் பொய்யென்றாகும். ஒவ்வொரு உறவும் நடிப்பெனத் தெரியும். இளையவனே, அவ்வெறுமையில் இறந்தகாலம் எழுந்து வந்து நிறையும். இழப்புகள் பெருகும். துயர்கள் மேலும் இருளும். கணங்கள் எடைகொண்டபடியே செல்லும். மண்ணில் மானுடருக்கு அளிக்கப்படும் பெருநரகுகளில் அதுவே முதன்மையானது. உனக்கென அங்கே காத்திருப்பது அது.”

அர்ஜுனன் மீண்டும் உடல் விதிர்த்தான். பாலி இருகைகளையும் தட்டியபடி உரக்க “சொல், மூடா! விலகினேன் என்று சொல்! உன் கடன் மகாவஜ்ரத்துடன் மட்டுமே என்று சொல்!” என்றான். அர்ஜுனன் அசையா விழியிமைகளுடன் உடல் ஒடுக்கி அமர்ந்திருந்தான். “நோக்கு… விழிகொண்டே நோக்கு. இதோ!” என்று பாலி கூவினான். “மைந்தா, இது நெறியல்ல” என்று சொல்லி இந்திரன் எழுந்தான். அதற்குள் விழிதூக்கிய அர்ஜுனன் தன்முன் பெரும்போர்க்களம் ஒன்றை கண்டான்.

வெட்டுண்டு சிதறிக்கிடந்த உடல்களை உதறி உதறிப் பிரிந்து மேலெழுந்த உயிர்களை அவன் கண்டான். ஊனுடல்கள் பொருள்வயின் பிரியும் தந்தையரை அள்ளிப்பற்றிக் கதறும் இளம்பைதல்கள் என அவ்வொளித்தோற்றங்களை நோக்கி எம்பியும் தாவியும் துள்ளின. உதறப்பட்டதுமே பொருளிழந்து குருதிநனைந்த மண்ணில் விழுந்து தவித்து மெல்ல அமைந்தன. அவற்றுக்குமேல் துயர்நிறைந்த விழிகளுடன் நின்ற உயிர்வடிவங்கள் கைகள் தவிக்க கால்கள் பதற அவ்வுடல்களையே சுற்றிவந்தன. குனிந்து அவற்றுக்குள் மீண்டும் நுழைய முயன்றன சில. அவ்வுடல்கள் மெல்லிய உதைபட்டதுபோலவோ உள்நாண் ஒன்று அறுபட்டதுபோலவோ விலுக்கிட்டன.

அவை இனி தங்களை உள்நுழையவிடாத வெறும் தசைக்கூடுகள் என உணர்ந்த உயிர்கள் தவித்தபடி மேலே எழுந்தன. கைகளால் அவ்வுடல்களை தழுவித்தழுவி ஏங்கின. எழுந்து பிறிதொரு உடலருகே சென்று அங்கு அவ்வுடலைத் தழுவி அமர்ந்திருந்த இன்னொரு உயிர்வடிவை தழுவிக்கொண்டது அதன் தந்தை என்று அர்ஜுனன் உணர்ந்தான். மைந்தரைத்தேடிப் பதைத்து அலைந்தன உயிர்கள். இன்னும் இறக்காது துடித்துக்கொண்டிருந்த உடல்களுக்குள் மைந்தரைக் கண்டு அவர்களைப் பற்றி வெளியே இழுத்தன. தோழர்கள் இறந்துகொண்டிருக்க அருகே அமர்ந்து காத்திருந்தன சில உயிர்கள்.

காற்றை உதைத்து உதைத்து தளர்ந்த கால்கள் அசைவிழக்க உடல்களில் இருந்து விடுபட்டெழுந்த புரவிகள் கால்களை உதறி உதறி புதிய வெளியை புரிந்துகொண்டபின் சுழற்றப்படும் ஆடியின் ஒளியென ஓசையற்று சுழன்று விரைந்தன. களிறுகள் நீள்மூக்கின் நுனியைத் துழாவி மணம்பற்ற விழைந்தன. அவை அறிந்த புது மணத்தால் திகைத்து துதிக்கை சுருட்டி மத்தகம்மேல் அறைந்து ஓசையின்றிப் பிளிறின. ஓடி அமைந்த புரவிகள் இறகுக்கீற்றுகளாக காற்றில் மிதந்து உருப்பிரிந்தன. பெரிய துளிகளாக திரண்டு அசைவற்று நின்றன யானைகள்.

அந்தி அணைந்துகொண்டிருந்தது. பல்லாயிரம் பாடிவீடுகளில் வெட்டுண்டும் குத்துண்டும் புண்பட்டிருந்த வீரர்களை அள்ளி நிரையாக மண்ணில் கிடத்தியிருந்தனர். மாணவர்கள் மருந்துப்பேழைகளுடன் உடன் வர அவர்களைநோக்கிச் சென்ற மருத்துவர்களை நோக்கி கைகூப்பி கதறி மன்றாடினர். அவர்கள் சுண்ணக்குறியிட்ட வீரர்களை மட்டும் தூக்கி துணிமஞ்சலில் ஏற்றி ஆதுரசாலைகளுக்குள் கொண்டுசென்றனர் வீரர். எஞ்சியவர்கள் கதறினர். கண்ணீருடன் மன்றாடினர். இளமருத்துவர்கள் அவர்களின் புண்வாய்களைத் திறந்து நச்சுருளைகளை வைத்து மூடிக்கொண்டனர். நஞ்சு உடலில் பரவ அவர்களின் உடல் ஒளியிழந்தது. விழிகள் பிதுங்கித்தெறிக்க துடித்து அசைவழிந்தன.

இதழ்களில் எஞ்சிய சொற்களுடன் சிலைத்துக்கிடந்த அவர்களை இழுத்துக்கொண்டுசென்று அங்கிருந்த வண்டிகளில் முன்னரே அடுக்கப்பட்டிருந்த பிணங்களுடன் ஏற்றினர். எடைகொண்டு உடலழுந்த அப்போதும் இறக்காதிருந்த ஒருவன் முனகி அழுதான். பிணவண்டியில் ஏற்றப்படும்போது ஒருவன் ஏற்றும் வீரனொருவனின் ஆடையை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கிய உடலுடன் இறுதிச்சொல்லை ஊழ்கநுண்சொல் என மீண்டும் மீண்டும் வெறிகொண்டு சொல்லிக்கொண்டிருந்தான்.

பிணங்கள் செறிந்த வண்டிகள் ஓடிய களமெங்கும் உடல்கள் விரிந்துகிடந்தன. நீண்ட ஈட்டிகளுடன் களம்புகுந்த வீரர்கள் சாவுப்புண்கொண்டு துடித்துக்கொண்டிருந்தவர்களை நெஞ்சில் குத்திக் கொன்றனர். அவர்களிடமிருந்து எழுந்த உயிருடல்கள் குத்துபவர்களைச் சூழ்ந்துகொண்டு சினந்து கைநீட்டி துள்ளின. அவர்களை அறைந்தும் கடித்தும் தாக்கின. அந்தக்குளிரை உணர்ந்து அவர்கள் உடல் சிலிர்த்தனர். தங்கள் ஆடை பற்றி இழுப்பது காற்று என எண்ணி கைகளால் இழுத்து உடலுடன் செருகிக்கொண்டனர்.

அவன் துரோணரைக் கண்டான். வெட்டி அகற்றப்பட தலைகொண்ட வெற்றுடலுடன் தேருக்குக் கீழே கிடந்தார். அவர் மூச்சுக்குழாய் நீண்ட செந்நிறக்கொடி என கழுத்திலிருந்து நீண்டு மண்ணில் கிடந்தது. உடலெங்கும் அம்புகள் தைத்திருக்க வான்நோக்கிக் கிடந்த பீஷ்மரைக் கண்டான். புயல்கடந்த நிலத்தில் இளமரங்கள் என செத்துக்குவிந்திருந்த இளைய கௌரவர்களின் உடல்களைக் கண்டான். கௌரவ நூற்றுவரையும் கண்டுவிட்டான். நெஞ்சு பிளந்துகிடந்த துச்சாதனன் எழுந்து தன் உடலை நோக்கியபடி நின்றிருந்தான். தொடைசிதைந்துகிடந்த உடலைச்சுற்றி வந்து பெருஞ்சினத்துடன் கைகளை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான் துரியோதனன்.

அவன் கர்ணனைக் கண்டான். தேர்த்தட்டின் அடியில் புதைந்த சக்கரத்தில் சாய்ந்து இறந்து அமர்ந்திருந்த அவனுக்கு மேல் ஒளிகொண்ட உயிருடல் கைகளைக் கட்டியபடி நோக்கி நின்றது. அவனை திரும்பி நோக்கியபோது அதன் விழிகள் ஒளிகொண்டன. புன்னகையுடன் கைநீட்டி “இளையோனே” என்று அவன் அழைத்தான். “மூத்தவரே, நீங்கள் அறிவீர்களா? என்னை அறிந்திருந்தீர்களா?” என அவன் நெஞ்சுடையும் ஒலியுடன் கேட்டான். “ஆம், நன்கறிந்திருந்தேன். நீ என் உளம் கனியச்செய்யும் இளையோன். உன்னைக் கொல்லாதொழிந்த என் வாளியை எண்ணி எண்ணி எத்தனை முறை மகிழ்ந்தேன்.” அர்ஜுனன் “மூத்தவரே” என்று தேம்பினான். கர்ணன் கனிவுடன் நோக்கி “வருந்தாதே. இது வெறும் கனவு” என்றான்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் ஓர் உறுத்தலுணர்வை அடைந்து அது எண்ணமென்றானதும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தான். இருகைகளையும் விரித்துக்கொண்டு ஓடி வீழ்ந்துகிடந்த அபிமன்யூவை நோக்கினான். தலை ஒரு குருதிக்குமிழியாக வெடித்துச் சிதறியிருக்க இருகைகளையும் விரித்து மல்லாந்துகிடந்தான். அவன் இளங்கால்கள் இருபக்கமும் விரிந்திருந்தன. கவசம் அகன்ற மார்பில் சரிந்துகிடந்தது மணியாரம். கங்கணங்களில் ஒன்று உதிர்ந்திருந்தது. அர்ஜுனன் நடுங்கிக்கொண்டிருந்தான்.

அவனருகே குளிரென ஓர் இருப்பை உணர்ந்து திடுக்கிட்டு திரும்பி நோக்கினான். அபிமன்யூவின் மூச்சுடல். “அங்கே இளையவர்களும் மூத்தவர்களும் எரிந்துகொண்டிருக்கிறார்கள், தந்தையே.” அர்ஜுனன் இல்லை என்பதுபோல் தலையசைத்தான். “அழுதபடி அன்னையும் அரண்மனை மகளிரும் வந்துகொண்டிருக்கிறார்கள்…” அர்ஜுனன் “வேண்டாம்… நான் நோக்கமாட்டேன். நான் விழிதூக்கமாட்டேன்” என்றான். “முற்றழிவு… எஞ்சுவது அதுமட்டுமே” என்றான் அபிமன்யூ. “அரண்மனையில் உத்தரையின் கருவுக்குள்ளும் புகுந்துவிட்டது நஞ்சு. என் மைந்தன் துடித்தணைவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.” அர்ஜுனன் “வேண்டாம், பார்க்கமாட்டேன்” என்று கூவினான்.

“இதுதான் நிகழவிருப்பது” என்றான் இந்திரன் ஆழ்ந்த குரலில். கண்ணீருடன் கூப்பி நெஞ்சில்பதித்த கைகள் நடுங்கிக்கொண்டிருக்க நின்றிருந்த அர்ஜுனன் கால் தளர்ந்து பீடத்தில் விழுந்து அமர்ந்தான். “இதற்காகத்தான்…” என்றான் இந்திரன். அர்ஜுனன் அறியாது விம்மிவிட்டான். “மைந்தா, இதை நீ தவிர்க்கமுடியும்” என்று இந்திரன் சொன்னான். “இக்கணம் நீ எடுக்கும் முடிவு இக்குருதியை தடுக்கும், அதற்கு நான் உறுதியளிக்கிறேன்,” அர்ஜுனன் “இவை எங்கு நிகழ்கின்றன?” என்றான். “எதிர்காலத்தில். அது ஒவ்வொரு கணமும் அணுகிவருகிறது” என்றான் பாலி. “மூத்தவரே, அவர் இதை அறிவாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். இந்திரன் “நன்கறிவான். அவன் மைந்தரும் குலமும் நகரும் இதைப்போலவே அழியும் என்பதையும் அறிவான்” என்றான். வலிகொண்டவன் போல அர்ஜுனன் மெல்ல முனகினான்.

“அவன் அனைத்தையும் கண்முன்னிலென பார்த்துக்கொண்டிருக்கிறான். அதன் இருளால் சூழப்பட்டிருக்கிறான்” என்றான் இந்திரன். “இங்கிருந்து மாயம் நிகழ்த்தும் கந்தர்வர்களையும் வருவதுரைக்கும் முனிவர்களையும் அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கணமும் அச்சித்திரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். அவ்விருளை அவன் கடக்கலாகாதென்று விழைகிறோம். கடப்பான் என்றும் அதன்பொருட்டே எழுந்தருளியவன் அவன் என்றும் நன்கறிந்துமிருக்கிறோம்.”

அர்ஜுனன் அசைவில்லாது அமர்ந்திருந்தான். அவர்களும் அவன்மேலிருந்து விழிகளை விலக்கி தங்கள் அமைதிக்கு மீண்டனர். நெடுநேரத்திற்குப்பின் பாலி விழிதூக்கி அர்ஜுனனை நோக்கினான். அந்நோக்கை உணர்ந்து அவன் உடல் மெல்ல அசைந்ததும் இந்திரன் கலைந்தெழுந்தான். “மைந்தா, உன்னிடம் நான் கோருவது ஒன்றே. அவனிடம் செல், ஒற்றைச்சொற்றொடரில் சொல். உன் தந்தைக்கு நீ கொண்ட கடனுக்கு கட்டுப்பட்டவன் என்றுரை. அனைத்தும் அக்கணமே முடிவுக்கு வந்துவிடும்.”

பாலி “உன் தமையனாகிய கர்ணன் அஸ்தினபுரியை ஆள்வான். அவன் வலப்பக்கம் இளையவனாகிய துரியோதனன் வாளுடன் காவல் நிற்பான். வலப்பக்கம் இளவல் யுதிஷ்டிரன் துணைநிற்பான். நூற்றைந்து தம்பியர் கொண்ட பேரரசன் பாரதமண்ணை முழுதாள்வான். அவன் பேரறத்தான். அவன் கோல்கொண்டிருக்கையில் கதிர்முறை மாறாது. நாளவன் அருளிருந்தால் எட்டுத்திசையர்களின் அருளுமிருக்கும். வளமும் செல்வமும் குன்றாது. புகழும் நிறைவும் தேடிவரும்” என்றான். அர்ஜுனன் சொல்லில்லாது அமர்ந்திருந்தான். “சொல், உன் உறுதியை தந்தைக்கு அளி” என்றான் பாலி.

அர்ஜுனன் மெல்ல அசைந்தான். அவன் உதடுகள் வெறுமனே பிரிந்தமைந்தன. பாலி “உன் சொல் ஒன்றுபோதும், தந்தை இதுகாறும் கொண்ட அத்தனை துயர்களையும் நீக்க. சென்றயுகத்தில் நான் கொல்லப்பட்ட வஞ்சம் அவரை எரிக்கிறது, இளையோனே. ஒரு சொல்லால் அதை நீ அணைக்கமுடியும்” என்றான். அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு விழிகளை சாளரம் நோக்கி திருப்பிக்கொண்டான். “சொல்க!” என்றான் பாலி சற்றே தளர்வடைந்த குரலில். அர்ஜுனன் மெல்ல கனைத்தான். பின்னர் எழுந்து கைகூப்பி வணங்கினான்.

“என்னை நீங்கள் தீச்சொல்லிட்டு இழிநரகுக்குள் தள்ளினால் அதையும் என் நல்லூழ் என்றே எண்ணுவேன், தந்தையே. ஆனால் எதன்பொருட்டும் நான் என் தோழரிடமிருந்து விலகமுடியாது. அவருக்காக என்னையும் என் குடியையும் சுற்றத்தையும் அழிக்கவேண்டுமென்பதே அவர் ஆணை என்றால் அதையும் இனிதே தலைக்கொள்வேன். பெரும்பழிகளே எஞ்சுமென்றால் அதையும் என் கடன் என்றே சென்னிசூடுவேன். நான் அவரன்றி பிறிதல்ல” என்றான். பாலி சினத்துடன் கைநீட்டி எழமுயல அவன் தொடைமேல் கைவைத்து அமரச்செய்தான் இந்திரன். அர்ஜுனன் மீண்டும் மூவரையும் தொழுதபின் வெளியே சென்றான்.

தொடர்புடைய பதிவுகள்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2

$
0
0

HS_Shivaprakash

 

இத்தருணங்கள் அழியாமல்

இருக்க வேண்டும்….

 

அழியாமல் இருக்க வேண்டும்

இத்தருணங்கள்

குன்றின் உச்சியில்

மைல் நீளஇறக்கைபோல் மேகமிருந்தாலும்

சிலைபோல இருக்கும் பாறைகள்

நீலம் பச்சை நடுவில்

ஜோடி வானவில்கள்

ஜோடிக் குருவிகளே

வானைத் துளைத்து பாடிப்பறங்கள்

பறவை மொழியைக் கற்ற சாலமன்

இப்போது சக்ரவர்த்தி

அழியாமல் இருக்கட்டும் இத்தருணங்கள்

தாளமற்ற ஆட்டம்

மேளமற்ற பாட்டு

துடிக்கும் இதயம் சொல்கிறது

குன்றுக்கு காத்துள்ளது பிளக்கும் வெடிகள்

மேகத்துக்கு மின்னல் கத்தி

ஜோடி வானவில்களுக்கு மழையின் தாக்குதல்

வாட்டமறியாத வளத்தவறே

ஜோடிக்குருவிக் கூட்டங்களே

வானம் நோக்கித் தாவுங்கள்

தரையில் எங்கும் பரவுங்கள்

காற்றைப் போல

காலம் நிறம் கண்கள் இறகு

பொதிந்த காற்றைப் போல

அழியாமல் இருக்க வேண்டும்

தாளமற்ற ஆட்டம்

மேளமற்ற பாட்டு

ஒவ்வொரு நொடியும்

 

interview_shivaprakash

நீ இல்லையென்றால்

  1. எனக்குத் தெரியும்

    இத்தோட்டத்துப் பூக்கள் மலர்வது

    நீ இல்லையென்று நிற்பதில்லை

     

    ஒன்றன்பின் ஒன்றாக வண்ணத்துப் பூச்சிகள்

    கணநேரம் பூக்களில் அமர்ந்து பறப்பதும்

    நிற்பதில்லை

    நீ இல்லையென்று

     

    எனக்குத் தெரியும்

    சந்தைக்குப் போகும் இத்தோட்டத்துப்பூக்கள்

    நீ உள்ளாய் என மறுப்பதும் இல்லை

    அல்லது

    சாவென்னும் பூனை

    வண்ணத்துப் பூச்சிகளை

    தின்னவருவதும் தடைபடுவதில்லை

    நீ உள்ளாய் என.

     

    இதற்கு பின்னும்

    காற்றுக்கு நறுமனம் கொடுக்கும் பூக்கள்

    என் உயிராவதில்லை

    வெளிச்சத்தில் சிதறிய பூவின் வர்ணம்

    என் விழிகளை கவர்வதுமில்லை

    சந்தைக்கே கிட்டாத ஒரு பூ

    இவ்வுலகத்தில் எஞ்சுவதுமில்லை

     

    இவை எல்லாவற்றிற்கும்

    நீ இல்லையென்றால் அர்த்தமே இல்லை.

     

 index

    1. நினைவு

    முதலிரவுக்கு முன்பு ஐந்து ரோஜாக்களைப்

    பறித்துச் சூடியது நினைவிலுள்ளதா

    முதல் தழுவலில் உருகிய இன்பம்

    கூந்தல் கருமைபோல் கரைந்தது

    இப்பொழுது தலையை நிரைக்கும் நரை

    கணவன் இறந்த தினம்

    அழிந்தது குங்குமச் சந்திரன்

    அதற்கப்புறம் பற்பல முறைகள்

    வானத்தில் சந்திரன் வந்ததும் போனதும்

    உலர்ந்த நெற்றிக்கோ குங்குமத்தின் நினைவில்லை

    இறங்கி சரிந்த நரைமுடி போல

    சிற்சில சமயங்களில் அதிகாலைப் பனி

    அதிகாலைப் பனிபோல தெளிவற்ற நினைவு

    மறதியோ காலக் கொம்பு.

    ****

    தமிழில் : பாவண்ணன்

    மதுரைக்காண்டம்

    எச் எஸ் சிவப்பிரகாஷ்

    எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

    எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கன்யாகுமரி கடிதங்கள்

$
0
0

index

 

இனிய ஜெயம்,

கன்யாகுமரி குறித்து, தோழி சுசித்ராவின் கடித வரிசை பிரசுரம் ஆகத் துவங்கி இருக்கிறது. முழுதும் வாசித்து விட்டு வருகிறேன். இருப்பின்ம் அதில் சொல்ல ஒன்றுண்டு.

கதை நேரடியாக ரவி எங்கே உளத் திரிபடைகிறானோ அங்கே துவங்குகிறது. உண்மையில் இன்றைய யதார்த்தத்தில் புது மணத் தம்பதிகளில் எத்தனை மாப்பிள்ளை ”பரிசுத்தமாக” தனது மனைவியை சேர்கிறான்?

ரவியின் படைப்பாற்றலின் உரசலாக விளங்கும் கன்னிமையை ரவியும் கடை பிடிக்கிறான். விமலாவுக்கு முன் பெண் தொடர்புகள் ஏதும் அற்றவன். விமலாவுக்கு தன்னை தூய்மயானவனாகத்தான் தருகிறான்.  முதல் தொடர்பில் பழக்கமின்மையால் முத்தங்கள் கூட தவறுகிறது. பெண்ணுடல் அளிக்கும் பரவசம், சங்கமம் நிகழும் முன்பே அவனை ஆற்றல் இழக்க வைக்கிறது. விமலா மெல்ல நகைத்தபடி ”பரவா இல்ல” என்கிறாள். அங்குதான் ரவியின் முதல் திரிபு நிகழ்கிறது.

தூய்மையாக அவனை அணுகும் ரவியின் பரிசுத்தம் விமலாவுக்கான பரிசல்லவா? அந்தப் ”பரவா இல்லை” ரவிக்குள் ஏளனமாக விழும் என விமலா அறிய வில்லை.அவளும் சிறு பெண் தானே.

பரவா இல்லை என்பதற்கு பதில் , இதைப் புரிந்து கொள்கிறேன். உன் பரிசை ஏற்றுக் கொள்கிறேன் என அவள் அவனுக்கு உணர்த்தி இருந்தால் ரவி அடையும் அந்த இறுதி இழப்பு அவனுக்கு நேர்ந்திருக்காது.

யோசித்துப் பார்த்தால் உலகில் நிகழும் அத்தனை வன் புணர்வு குற்றவாளிகளையும் இந்த ”முதல் சரிவு” உளவியலுக்குள் கொண்டு வந்து விட முடியும். ஆம் இங்கே பெண்ணுக்கும் புரிதல் வேண்டும்.

கடலூர் சீனு

*

அன்புள்ள ஜெ

கன்யாகுமரி நாவலைப்பற்றி சுசித்ராவின் வாசிப்பு அற்புதமாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து அந்நாவலுக்கு இப்படி ஒரு விரிவான வாசிப்பு நிகழுமென நீங்களே கூட எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள். 1998ல் வெளிவந்த நாவல் அது. விஷ்ணுபுரத்திற்குப்பின் ‘இளைப்பப்றுவதற்காக’ நீங்கள் எழுதிய நாவல் அது என்று சொன்னிர்கள். அதுவே அந்நாவலைக்கொஞ்சம் கீழே கொண்டுவந்துவிட்டது வாசகர்களின் பார்வையில் என நினைக்கிறேன். ஆனால் அன்றே நான் உங்களுக்கு அந்நாவல் முக்கியமான படைப்பு என்று கடிதம் எழுதியிருந்தேன். அது காமம் ஆணவம் இரண்டுக்கும் இடையே உள்ள ஊடாட்டத்தைப்பற்றிப்பேசும் முக்கியமான நூல். காமகுரோதமோகம் என்றுதான் நம் மரபு சொல்கிறது. மூன்று அழுக்குகளும் ஒன்றாகக் குடியிருக்கும் ஒரு உள்ளத்தின் சித்திரம். மூன்றும் சேர்ந்து எப்படி மனிதமனங்களை நெசவுசெய்திருக்கின்றன என்று காட்டுவது அந்நாவல்

சண்முகம்

***

அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நாளில் உங்கள் மற்ற ஆக்கங்கள் எல்லாமே கிட்டத்தட்ட மறைந்துபோய்விட்டன. நான் ஒருமுறை ஒரு சந்திப்பிலே சொன்னேன். ஜெமோ கன்யாகுமரி மட்டுமே எழுதியிருந்தால் அவரை அதைவைத்தே ஒரு பெரிய எழுத்தாளர் என்று சொல்லியிருப்பார்கள். இன்றுகூட கன்யாகுமரிக்குச் சமானமான  உளவியல் ஓட்டம் கொண்ட ஒரு படைப்பை ஓர் இளம்படைப்பாளி எழுதியிருந்தால் அவரை கொண்டாடியிருப்பார்கள் என்று. அத்தனை வாசிப்பு நுண்மைகள் கொண்டது அது.

சுசித்ரா அதை கொற்றவை உட்பட உங்கள் அனைத்துப்படைப்புகளையும் எடுத்துக்கொண்டு பேசியிருப்பது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது

சரவணன்

தொடர்புடைய பதிவுகள்


சாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்

$
0
0

CO2B0292

“கடந்து வந்த வாழ்க்கைமுறையின் கணக்கற்ற சிறு சிறு தகவல்கள்… பேரழிவுகளை சாமானிய வாழ்விற்குள் பொருத்தி கதை சொல்வதற்கு அது ஒன்றே வழி. சிறு சிறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அன்றாட வாழ்க்கை தான் எத்தனை சுவாரசியமானது. முடிவற்ற மனித உண்மைகள் அதில் புதைந்துள்ளன. ..நான் எப்போதும் இந்த சிறிய பிரபஞ்ச வெளியை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறேன், ஒரு மனிதன், ஒரு நபர். அங்கு தான் பிற எல்லாமும் நிகழ்கின்றன.” – 2015 இலக்கிய நோபல் பெற்ற ஸ்வெட்லான் அலேக்சிவிச்

ஜெயமோகன் தளத்தில் நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதத்தில், நண்பர்கள் சிலருக்கு வண்ணதாசன் அத்தனை உவப்பானவராக இல்லை என தனது வருத்தத்தை எழுதி இருந்தார். அப்படி அவரை வருந்த செய்த வெகு சில நண்பர்களில் நானும் ஒருவன். வண்ணதாசன் எனக்கு விகடன் வழியாகவே அறிமுகம். ஐந்தாறு கதைகள் அங்குமிங்குமாக உதிரியாக வாசித்திருப்பேன். அவர் எனக்கான எழுத்தாளர் இல்லை எனும் எண்ணம் ஏனோ ஏற்பட்டுவிட்டது. ஃபேஸ்புக்கில் போகன் – எம்டிஎம் இலக்கிய கோட்பாடு விவாதத்தில் எம்டிஎம் வண்ணதாசனை எல்லாவகையிலும் தமிழின் சிறந்த எழுத்தாளராக முன்வைத்தார். நாம் எதையோ தவறவிடுகிறோம் எனும் முதல் நெருடலை அது எனக்கு ஏற்படுத்தியது. விஷ்ணுபுரம் விருது அறிவிப்பை சாக்காக கொண்டு இணையத்தில் கிடைக்கும் அவரது கதைகள், ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’, ‘சமவெளி’, ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ ஆகிய சிறுகதை தொகுப்புக்களில் உள்ளவை என சுமார் ஐம்பது கதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்தேன். எனது முன்முடிவுகளும் அபிப்ராயங்களும் சாய்க்கப்பட்டுள்ளன.

சுந்தர ராமசாமி வண்ணதாசனின் சிறுகதைகளை பற்றி (அவரது இரண்டாம் தொகுப்பின் முன்னுரையில் எழுதியது) இரண்டு முக்கியமான விமர்சனங்களை வைக்கிறார்.

  1. இக்கதைகளில் வாழ்வு பற்றி ஒரு மயக்க நிலை ஊடாடி நிற்கிறது. விழிப்புடன் வாழ்வை கவனித்து, அதன் முழு வீச்சை கிரகித்துக் கொள்ளும் உன்னிப்பைத் தூண்டுவதற்கு பதிலாக, மயக்கத்தின் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.
  1. சித்திரங்களில் ஊடாடி கதையின் மையத்திற்குப் பிந்திப் போய் சேருகிறார் இவர். பகைப்புலங்களின் படைப்பில் மையம் அமுங்கிப் போகிறது. செய்திகள் வெளிறிப் போகின்றன.

முதலாம் கருத்தின் நீட்சியாக மற்றொன்றையும் சொல்லலாம், அவருடைய கதைகள் ஒற்றைப்படையான நெகிழ்ச்சியை மட்டுமே முன்வைப்பவை. இருளோ வாழ்வின் குரூர யதார்த்தமோ பதிவாகவில்லை.

இவ்விமர்சனங்களை வண்ணதாசனின் சில கதைகளைக் கொண்டு எதிர்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

‘நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும்’ கதை ஒருவகையில் வண்ணதாசன் பற்றிய எல்லா விமர்சனங்களையும் தகர்த்தெறியத்தக்க கதை. அவருடைய கதையில் வரும் காட்சிகள், விவரணைகள் கதையை வலுவாகக் கட்டி எழுப்புகின்றன. குறியீடுகள், உருவகங்கள் அற்ற நேரடியான கதை அவருடையது என பரவலாக சொல்லபடுவதுண்டு. ஆனால் தேர்ந்த கதை சொல்லி குறியீடுகளை மெனக்கெட்டு உருவாக்குவதில்லை. அவை கதையின் ஊடாக துலங்கி வருகின்றன. பிச்சு மற்றும் புட்டா என இரு கலைஞர்களின் வாழ்வை சொல்கிறது. பிச்சு தேசிய விருது வாங்கிய நடிகன். ஆனால் வாய்ப்புகள் ஏதும் அமையாமல் பழைய பேப்பர் வியாபாரம் செய்கிறான். புட்டா ஒரு சித்திரக்காரன். வெளியேறி சென்றவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. அவர்கள் சிகப்பி எனும் நொண்டிக் கிளியை வளர்க்கிறார்கள்.

பிச்சுவுக்கு எப்போதும் உத்திரத்தில் தென்படும் கோமாளியின் முகம் அன்று தெரியவில்லை என துவங்குகிறது கதை. கதை போக்கில் புட்டா அவனுடன் வந்து சேர்ந்து கொண்ட பினனர் தான் அந்த முகம் அவனுக்கு தெரிய துவங்கியதாக சொல்கிறான் பிச்சு. கதை முடிவில் கொஞ்ச நாட்களாக அவனால் கண்டடையப்படாத முகம் மீண்டும் தென்பட்டு அவனை பார்த்து சிரிக்கிறது. அருகே இருக்கும் சாயத் தொழிற்சாலை பற்றிய விவரணைகள் வருகின்றன. அதன் நெடியோடு பிச்சு வாழப் பழகிவிட்டான். காலைகளில் சிவப்பும் பச்சையுமாக சாக்கடையில் ஓடும். அதில் வெண்ணிற நுரைகளாக சோப்பு நுரை கலப்பதை தேர்ந்த ஓவியனாக புட்டா ரசிக்கிறான். அந்த நெடி அவனுக்கு பழகவில்லை. நிறம் வெளிறி சாயம் போவதை ஏற்க முடியாமல் தானோ வெளியேறி சென்ற புட்டா திரும்பவில்லை?

புட்டாவை முதன் முதலாக சந்தித்த நினைவுக்குப் பிறகு கதையில் சிகப்பி அறிமுகமாகிறது. அதற்கு வைக்க உணவில்லை என தேடும் போது சுவரோரம் செத்து கிடக்கும் பல்லியை எறும்புகள் இழுத்து போவதை பார்க்கிறான் பிச்சு. புட்டா ஒரு நாள் வெட்டப்படும் மரத்திலிருந்து தப்பி வந்த இந்த நொண்டிக்கிளியை தூக்கி வருகிறான். சிகப்பி என்று பெயரிட்டு வளர்க்கிறான். கிழிந்த ஜப்பான் விசிறி போலுள்ளது அதன் சிறகு. புட்டாவின் ஏற்பாட்டில் பிச்சு, தாள்கள் அதன் உட்பொருளால் அல்லாது வெறும் எடையாக கணக்கிடப்படும் பழைய பேப்பர் வியாபாரத்தில் ஈடுபடுகிறான். நொண்டிகிளியை அருகில் வைத்துக்கொண்டு குரூரமான நாய்களின் சித்திரங்களை வரைகிறான் புட்டா. மீண்டும் செத்துப்போன பல்லியின் சித்திரம் வருகிறது. அங்கிருந்து வெளியேறி செல்லும் புட்டா அவ்வப்போது கடிதங்கள் எழுதுகிறான், ஆனால் அவனை பற்றி வேறெந்த தகவலும் இல்லை. பிச்சு அவனாகவே நாடகம் எழுதி அரங்கேற்றி கவனம் பெறுகிறான். அப்போதும் கூட அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. எக்ஸ்ட்ரா சப்ளை செய்யும் கண்ணுசாமி ஒரு படத்தில் நடிக்க அவனிடம் இருக்கும் நொண்டி கிளியை கேட்கிறான். அவனை கிண்டல் செய்கிறான். மறுத்து அறைக்கு திரும்புகிறான். பழைய பேப்பர் கட்டுக்கள் சரிந்து அதன் அடியில் நசுங்கி கிடக்கிறது நொண்டிக்கிளி.

இந்தக் கதை கலைஞர்களின் சமரசத்தையும், கலையையும், நசிவையும் சொல்கிறது. நாடகம் எழுதியவன் பழைய பேப்பர் வியாபாரம் செய்கிறான். ஏற்கனவே அங்கீகாரமற்று நொண்டி கிடக்கும் அவனுடைய கலையை அவனுடைய வயிற்று பிழைப்புக்காக வேறு வழியின்றி அவன் தேர்ந்த  அன்றாட வாழ்வே கொன்றுவிடுகிறது. நொண்டியாக இருந்தாலும் அந்த கிளி அவனோடு உயிருடன் இருந்தது. புட்டா சுதாரித்து கொண்டவன். அவன் இந்த சுழலில் இருந்து தப்பித்து செல்கிறான். கிளிகள் வெறிநாய்களால் மீண்டும் மீண்டும் வேட்டையாட படுகின்றன. கலைஞன் கிளியை பலிகொடுத்து தான் நாய்களின் பசியாற்ற வேண்டும் என்பது எழுதபடாத விதி போலும். ஒரு கலைஞனின் நசிவை இத்தனை நுட்பமாகவும் இருண்மையோடும் சொன்ன கதைகள் வெகு சிலவே. நொண்டிக் கிளி, வெறி நாய், செத்து கிடக்கும் பல்லி, அந்தரத்தில் தெரியும் கோமாளி உருவம், சாயப் பட்டறையின் கழிவு நீர் சாக்கடை, பழைய பேப்பர் வியாபாரம் என கதையின் எல்லா விவரணைகளும் குறியீடுகளாகவும் உருவகங்களாகவும் கச்சிதமாக ஒத்திசைந்து உன்னதமான கதையை உயிர்ப்பிக்கின்றது. சித்திரங்களின் அளைதலில் அல்ல வண்ணதாசனின் உலகம் அவைகளின் ஒத்திசைவில் இருக்கிறது.

‘முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்’ கதை கலைஞனின் துயரை சொல்லும் மற்றொரு சிறந்த கதை. ‘புலிக் கலைஞனோடு’ ஒப்பிடத்தக்க களம் கொண்டது. சென்ற காலத்தில் கோலோச்சிய ஒரு மாயஜால வித்தைகாரனும் அவருடைய உதவியாளர் கதிரேசனும் கல்லூரி பேராசிரியர் சங்கரநாராயணிடம் ஒரு நிகழ்ச்சி செய்வதற்கு வாய்ப்பு கோரி வருகிறார்கள். அருகே வேடிக்கை பார்க்கும் அவருடைய மகன் சுந்தரை கவர்வதற்கு தாவி குதித்து தனக்கு தெரிந்த வித்தையை மூச்சு வாங்கி வியர்த்தபடி செய்து காட்டுகிறார். அவனுக்கு அவர்கள் யாரென்றே தெரியவில்லை. சங்கர நாராயணன் நாசூக்காக மறுக்கிறார். தற்காலத்து கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்  ரசனைகள் மாறிப்போய்விட்டது என்பதை பொறுமையாக உணர்த்த முயல்கிறார். காலனியில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு ஷோ ஏற்பாடு செய்தால் கூட போதுமென்கிறார். இருவரையும் நோக்கி சாப்பிட்டு செல்கிறீர்களா என கேட்கிறார் சங்கரநாராயணன். வீட்டுக்குள் நுழைந்த அதே தோரணையோடு அங்கிருந்து இருவரும் கிளம்பி செல்கிறார்கள்.

காலாவதியாதல் எனும் துயரம். அதுவும் ஒரு கலைஞன் காலத்தால் மிதித்து செல்லப்படும் வேதனை இக்கதையில் பதிவாகிறது. அந்த மாயஜாலக்காரரின் கிளியும் நொண்டி கொண்டிருக்கிறது ஆனால் உயிருடன் இருக்கிறது. ஒருவேளை அவன் அங்கே சாப்பிட்டு சென்றிருந்தால் அது இறந்திருக்க கூடும்.

நண்பர் சர்வோத்தமன் சடகோபன்  “காட்சி ஊடக கொந்தளிப்புக்குப் பின்பான காலகட்டத்தில் சிறுகதைகள் சவால் மிகுந்த புதிய எல்லையை தொட்டிருக்கிறது” என்றார். இன்றைய சிறுகதைகள் ‘துல்லியமான சித்தரிப்புகளில் அதிகமும் காட்சி ஊடகத்தின் தாக்கத்தால் செலவிடுகின்றன என்பதே அவருடைய வாதம். சிறுகதைகள் அனைத்தும் குறும்படத்தை மனதில் கொண்டு எழுதப் படுகின்றனவோ? எனும் ஐயத்தை எழுப்பினார். ஆகவே சிறுகதைகள் காட்சிகளை வெறுமே விவரிப்பதை காட்டிலும் மொழிரீதியாக படிமங்களால் செறிந்த கவிதையை நெருங்குவதே அதன் எதிர்கால பாதையாய் இருக்கும் என்றார். கல்பற்றா நாராயணனின் சுமித்ரா புதினத்தை முன்வைத்து ஜெயமோகனும் இதே கருத்தை வலியுறுத்தினார். நாவலும் சிறுகதைகளும் கவிஞனின் ஊடகமாக திகழும் காலமிது. காட்சி ஊடக புரட்சிக்கு முன்பான காலகட்டம் துவங்கி இன்று வரை வண்ணதாசன் எழுதி கொண்டிருக்கிறார். சித்தரிப்புகளை கவித்துவ எல்லைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய இன்றைய சவால்களை அன்றே எதிர்கொண்டு கணிசமாக நிகழ்த்தி காட்டிய வெகு சில எழுத்தாளர்களில் வண்ணதாசனும் ஒருவர். அவர் ஒரு ஓவியரும் கூட. அவருள் துலங்கும் ஓவியரும் கவிஞரும் முயங்கும் தளங்களில் அவருடைய புனைவுலகம் வலுவாக வெளிப்படுகின்றன.

வண்ணதாசன் பவுத்த அய்யனாருடனான நேர்காணலில் வாழ்க்கையை பற்றி சொன்னதை கவனிக்கலாம். “வாழ்க்கைக்கென்ன, அதுபாட்டுக்கு என்னென்னவோ சொல்கிறது. வாழ்க்கை மாதிரி அலுக்காத கதை சொல்லி கிடையவே கிடையாது. சில சமயம் மேகம் மாதிரி, மேக நிழல் மாதிரி, வெயில் மாதிரி கண்ணுக்கு முன்னால் அது நகர்ந்துக்கிட்டே இருக்கு. இலந்தம் புதர் வழியாக அது சரசரவென்று யாரையும் கொத்தாமல் யாரையும் பார்க்காமல் எங்கே போகும் என்று தெரியவில்லை. மீன் வியாபாரியைச் சுற்றிச் சுற்றி வருகிற சாம்பல் பூனை மாதிரி நம்முடைய கால் பக்கமே நின்று மீசை முடிகள் அசையாமல் மியாவுகிறது. குளிக்கவும், மீன் பிடிக்கவும் வந்த பையன்கள் ரெண்டு பேரையும் மிதக்கச் செய்யும் கல்வெட்டாங்குழி மாதிரி பால்கவர் அல்லது செய்தித்தாள் விநியோகிக்கிற நம் கண் முன்னே பள்ளத்தில் கிடக்கிறது. பாபநாசம் ஏகபொதிகை உச்சிக்குள் கற்சிலையாக கருத்த புன்னகையைப் புல்லுக்கும் பனிக்கும் விசிறுகிறது. தலைப்பிள்ளை பேறுகாலம் ஆன அம்மை மாதிரி முலைப்பால் வாசனையுடன் நம்மைப் பக்கத்தில் போட்டுத் தட்டிக் கொடுக்கிறது. லாடங் கட்டுவதற்குக் கயிறு கட்டிச் சாய்த்திருக்கிற காளையின் வெதுவெதுப்பான சாணி மாதிரி வட்டுவட்டாக அடுக்கு விட்டுக் குமிகிறது. தொடர் வண்டிகளின் அரக்குச் சிவப்புக் கூவலுடன் கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து சூடான தண்டவாளங்களில் வண்ணத்துப்பூச்சியாக ஆரஞ்சு முத்தமிடுகிறது. நரிக்குறவக் கிழவனைப் போலப் பரிசுத்தமாகச் சிரிக்கிறது. ஒரு கரும்பலகையின் உடல் முழுவதும் என் கேலிச் சித்திரத்தை வரைகிறது.”

வாழ்வை பற்றி சொல்வதற்கு கூட வண்ணத்துபூச்சி, காளைசாணி, ரயில் வண்டி போதுமானதாய் இருக்கிறது அவருக்கு.

வண்ணதாசனின் கதையில் வரும் பெண்கள் துயரங்களை சகிப்பவர்கள், மன்னிப்பவர்கள். வண்ணதாசனின் பெண்கள் தனித்த கட்டுரைக்கான பொருள். தாகமாய் இருப்பவர்கள் கதையில் வரும் பொன்னம்மை, சரசு, வேறு வேறு அணில்களில் வரும் நாச்சா, நிலை கதையின் கோமு என ஒவ்வொருவரும் ஆழமான மாந்தர்கள். தீராநதி நேர்காணலில் அவருடைய பெண்களின் துயர் பற்றிய கேள்விக்கு “பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போலவே ஆண்களும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அன்றாட நடப்பில், பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்தக் கரிசனம் காரணமாகவே அடைகிற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை.” என்கிறார்.

அவருடைய ‘போய்க்கொண்டிருப்பவள்’ ஒருவகையில் எல்லா பெண்களையும் பற்றிய கதை என கூறலாம். பெண்களின் துயர் கண்டு துயருறும் ஆண் இதிலும் வருகிறான். ‘போர்த்தி கொள்பவர்கள்’ மற்றொரு உதாரணம். துன்பத்திலும் சிறு சிறு இன்பங்களை சுவைக்கும் பெண்களாலும் பெண்களின் இடர்களை கண்டு கையறு நிலையில் தவிக்கும் ஆண்களாலும் ஆனது வண்ணதாசனின் உலகம்.

அவருடைய ‘ஒட்டுதல்’ கைம்பெண்ணின் துயரை சொல்லும் ஒரு எளிய கதை. கணவனை இழந்து மீண்டும் வேலைக்கு திரும்பும் மகேஸ்வரிக்கு அவளுடைய தோழி செஞ்சு லட்சுமி அரக்கு நிற ஸ்டிக்கர் போட்டை ஒட்டுகிறாள். அவ்வடையாளத்தை மீட்டு கொள்வதன் ஊடாக வாழ்வுடன் மீண்டும் இயைந்து கொள்கிறாள். இக்கதையில் ஆட்டோவில் செஞ்சு லட்சுமியும் மகேஸ்வரியும் அலுவலகம் விரையும்போது அவர்களை ஆட்டோவில் ஏற்றிவிடும் செஞ்சு லட்சுமியின் கணவர் அவர்கள் இருவரை காட்டிலும் வெகுவாக உணர்ச்சி வயபடுகிறார். இச்சிறு நிகழ்வு இக்கதையை வேறோர் தளத்திற்கு கொணர்கிறது. கணவன் ராம்பிரசாத் பற்றிய நினைவுகளில் அவன் தேன் உண்பதைப் பற்றி எண்ணுகிறாள். கடந்தகாலத்தின், இனிமையின் நினைவுகளாக பொருள்படுகிறது. வண்ணதாசன் அசிரத்தையாக கதைகளுக்குள் சித்திரங்களை உலாவ விடுவதில்லை.

வண்ணதாசனின் ‘சிநேகிதிகள்’ அவர் கடந்த பத்தாண்டுகளுக்குள் எழுதிய மிக முக்கியமான கதைகளில் ஒன்று. அறுபது வயதான சேது, அவருடைய இளம் சிநேகிதி அனுஷா. ஓடும் ஆற்றை காண்கிறான் சேது. நீர் பரப்பில் விழும் மழை வண்ணதாசனின் பல கதைகளில் திரும்ப திரும்ப வரும் உருவகம். நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் இணைக்கும் படியாக அவருடைய கதைகளில் இவ்வுருவகம் பயன்படுத்தபடுகிறது. ‘பெய்தலும் ஓய்தலும்’ மற்றொரு உதாரணம். பின்னர் அனுஷாவின் இயல்புகளை, அவள் எடுத்துகொள்ளும் உரிமைகளை  பற்றி கூறப்படுகிறது. சேதுவுக்கு இச்சிறு இச்சிறு இயல்பான செயல்கள் கூட ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆற்றில் குளித்து முறுக்கிய உடையுடன் எழுந்து வருகிறார்கள் நாச்சியாரும் கிரிஷ்ணம்மாவும். நாச்சியாரை அடையாளம் காண்கிறான் சேது. அவளை பற்றிய நினைவுகளில், குறிப்பாக அவள் அணியும் விதவிதமான ரவிக்கைகள் பற்றியும் உள்பாடியை பற்றியும் எண்ணுகிறான். நாச்சியாருக்கும் அத்தெருவாசிகளுக்குமான உறவு விவரிக்கபடுகிறது. சேதுவின் நண்பன் சுந்தரம், இயல்பாக பேசவும் பழக கூடியவன், அவன் அம்மாவுடன் நாச்சியார் இணக்கமாக இருப்பதாக சொல்லபடுகிறது. ‘முத்தையா சம்சாரம் தானே’ என்று சேது கேட்பதும் ‘நாச்சியாரு’ என அவள் சொல்வதும் இருவரும் ஒருவரையொருவர் எப்படி பார்க்கிறார்கள் என்பதை காட்டிவிடுகிறது.

கிருஷ்ணம்மாள் அறிமுகமாகிறாள். சேது ‘கிருஷ்ணம்மாளை’ பெயருடன் நினைவு கூர்கிறான். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக பேசியதற்காக மகிழ்கிறாள்.  நாச்சியார் கிருஷ்ணம்மாள் நட்பு கூறப்படுகிறது. கிருஷ்ணம்மாள் சுந்தரத்தின் மீது பசிலை பழம் வீசி எறிவது போல் விளையாட்டு காட்டி நசுக்குவதை நினைவு கூர்ந்தவுடன், சேது அனுஷாவை தேடுகிறான். அவள் அல்லவா இத்தனை ஆண்டுகளுக்கு பின் அவனுக்கு வாய்த்த சிநேகிதி.  ரவிக்கைக்காக நினைவு கூறப்பட்ட நாச்சியார் புகைபடத்திற்கு நிற்கும் போது அதை அணியவில்லை. பிழியப்பட்ட உள்பாவடையில் உள்ள மணல் துகளை தட்டிவிட்டுவிட்டு அது மினுங்குகிறது என்கிறாள் அனுஷா. நீண்டகால சிநேகிதிகள் என அறிமுகபடுத்துகிறார் சேது. நாச்சியார் தயங்கியபடியே சுந்தரத்தை பற்றி விசாரித்ததாக சொல்ல சொல்கிறாள். அவருக்கும் இவர் சிநேகிதி என்றதும் அவர்கள் விழி நீர் சொரிவதோடு கதை நிறைவுறுகிறது.

இத்தனை விரிவாக இந்த கதையை மீள சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. வண்ணதாசன் கதைகள் செவ்வியல் காப்பிய கவிஞர்களின் கவிதையை போன்று வைப்புமுறை பற்றிய கவனத்துடன் வாசிக்கப்பட வேண்டும். நினைவடுக்குகளின், நிகழ்வுகளின், சித்திரங்களின் வைப்புமுறை அவசியமான இடைவெளிகளை மவுனத்தால் நிரப்புகிறது. மவுனங்களின் வழியாகவே இக்கதை நமக்கு கடத்தபடுகிறது. அனுஷாவிற்கும் சேதுவிற்குமான உறவு, நாச்சியார் – கிருஷ்ணம்மாள் உறவு, அவர்களுக்கும் சுந்தரத்திற்குமான உறவு, சேதுவுக்கு இவர்களுடன் இருந்த உறவு, சேதுவுக்கும் சுந்தரத்திற்குமான உறவு என எல்லாமும் இக்கதையில் கூறப்பட்டுள்ளன.

ஒரு இளம் படைப்பாளியாக வண்ணதாசனை வாசிப்பது எனக்கு இருவகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் படுகிறது. முதலாவதாக வண்ணதாசனின் கதைகள் வாசிக்க வாசிக்க புலன்களும் மனமும் கூர்மையடைகின்றன. புறத்தையும் அகத்தையும் விழிப்புடன் அவதானிக்க சொல்கின்றன. எழுத்தாளனுக்கு தேவையான முதன்மை தகுதிகளில் இதுவும் ஒன்று. இரண்டாவதாக மொழியும் அதன் தொனியும். எங்கோ ஓர் வனாந்தரத்தில் ஓடும் குளிர்ந்த சுனை நீரில் கால் நனைத்தபடி, தனது அந்தரங்களை நம்பிக்கையுடனும் பரிவுடனும் பகிரும் தோழனின் குரல் அவருடைய புனைவுகளில் ஒலிப்பதாக தோன்றும். வண்ணதாசனை தொடர்ந்து வாசிக்கும்போது அவருடைய மொழி நம்மையும் தொற்றி ஏறிகொள்கிறது. இளம் எழுத்தாளன் பல்வேறு மொழிநடைகளை தனக்குள் உலாத்த அனுமதிக்கிறான். அவற்றின் கலவையிலிருந்து அவனுக்கே உரிய புதிய மொழிநடை அவன் குரலை தாங்கி எழுந்து வருகிறது.

கதைகளின் ஊடே அவரளிக்கும் சில கூர்மையான சித்திரங்கள் சில நேரங்களில் கதையை மீறி நம் கவனத்தில் நிறைந்து விடுகிறது. ‘எல்லாவற்றையும் நோட்டம் விடுகிறது போல தலையை திருப்பி திருப்பிச் சுற்றுகிற டேபிள் பேன்’, ‘கிழிக்கும்போது சன்னமாக மிருதுவாகச் சரசரவென்று தட்டுப்படுகிற தினசரிக் காலெண்டர் தாள் மாதிரி, இந்த சிரிப்பு இந்தக் குரல் பழசை எல்லாம் கிழித்து அப்புறப்படுத்துகிற மாதிரி இருந்தது’(ஒட்டுதல்).’ போன்ற பல சித்தரிப்புகளை உதாரணம் கொள்ளலாம்.

இருவகையான கதை போக்குகள் உண்டென நம்புகிறேன், ஆர்வெல் போல உலகபொதுமை அல்லது மானுட விழுமியங்களை விசாரணைக்கு உட்படுத்தும் எல்லோருக்குமான படைப்புகள் ஒரு எல்லை எனில் மறு எல்லையில் திருநெல்வேலி சன்னதி தெருவின் 21 ஆம் நம்பர் வீட்டில் வசிக்கும் ஒருவர் மட்டுமே எழுத சாத்தியமிக்க, அவர் காணும் உலகின் நிறங்களையும் அதன் சிறு சிறு தேசல்களையும், அடர்வுகளையும் புனைவது மறு எல்லை.  எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதத்தில் “ஆனால் மானுட உச்சங்களை காட்டுவதற்கு, “மனுசபயலை” உணர்த்துவதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென் தொடுகையே போதும் என்பதற்கு வண்ணதாசன் படைப்புகள் ஓர் சிறந்த உதாரணமாகவே நான் காண்கிறேன். ஆழமில்லாதது போன்று தோற்றமளிக்கும் ஏரிப்பரப்பில் முழு வானத்தையும் கண்டுகொள்ளமுடிகிறது அல்லவா?” என்றெழுதியது வண்ணதாசனின் படைப்புலகுக்கு கச்சிதமாக பொருந்தும்.

வண்ணதாசன் மனிதர்களின் இயல்புகளையும் அதன் மெல்லிய பிறழ்வுகளையும் மீண்டு வரும் இயல்புநிலையையும் எவ்வித புகாருமின்றி இயல்பான கரிசனத்தோடு கதையாக்குகிறார். வேறு வேறு அணில்கள் கதையில் பிணக்கில் வேலை செய்யும் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டு, அவளே மனமுவந்து ஒருநாள் மட்டும் வாடிக்கையாக வரவேண்டியவள் வராமல் போனதால் பெருக்கிவிட்டு போகிறாள்(வேறு வேறு அணில்கள்). பளு என்றொரு கதை. வலிப்பு நோய்காரனை கட்டிக்கொண்டு வீடு திரும்பியவளின் சகோதரனிடம் வேலையில்லாதவன் ஆசிரியர் வேலையை யாசிக்கிறான், அவளையும் ஏற்க தயாராக இருக்கிறான். சுமைகளின் இயல்பு வேறானவை எடையல்ல அதன் பிரச்சனை.

வண்ணதாசன் புனைவுகள் உருவாகும் தருணங்களை பற்றி சொல்கிறார். அவை அன்றாடத்தின் புதிர் தன்மையிலிருந்து கிளைக்கின்றன. வெவ்வேறு ஊர்களில் பலதரப்பட்ட மனிதர்களை கண்டிருக்கிறார்.

“நிலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, மதுரை, சென்னை, திருநெல்வேலி, செட்டிகுறிச்சி மீண்டும் அம்பாசமுத்திரம் என இருபத்தாறு வருடங்கள். எல்லா ஊர்களிலும் எங்களுக்கு மனிதர்கள் கிடைத்தார்கள். அப்படி மனிதனும், மனுஷியும் கிடைத்ததால் எனக்குக் கதைகளும், கவிதைகளும் கிடைத்தன. எல்லா ஊர் வரைபடத்திலும் ஒரு சுடலைமாடன் கோயில் தெரு உண்டாகிவிடும்படி நாங்களும் நடமாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு ஊரிலும் அதிகபட்சம் நான்கு, குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள். அடுத்த ஊரில் காலை வைக்கையில் முந்தின ஊர் மறக்க முடியாததாகி இருக்கும்.”

“அநேகமாக அனுபவங்களிலிருந்து, அனுபவங்கள் உண்டாக்குகிற நெகிழ்ச்சியிலிருந்து சில சமயம் காயங்களிலிருந்து இன்னும் சில, `அட… என்ன வெளிச்சம்’ என்றும், `எவ்வளவு இருட்டு’ என்றும் ஒரு மினுக்கட்டாம்பூச்சி பறக்கிற நிலையிலிருந்து எல்லாம் உருவாகத் துவங்குகிறது என்று சொல்லலாமோ. சமையல்கட்டில் தவறிவிடுகிற டம்ளரின் ஓசையிலிருந்து உங்களுக்குப் பாடத் தோன்றும் எனில், கரண்ட் போய் கரண்ட் வந்தவுடன், தன்னையறியாமல் விளையாட்டுக் குழந்தைகள் `ஹோ’ என்று கத்துகிற கத்தலிலிருந்து எனக்கு எழுதத் தோன்றும்.”

தாஸ்தாயேவ்ஸ்கி பற்றி சொல்லும்போது, அவர் இருளை அதிகமாக எழுதினாலும் அவர் காட்டியது ஒளியைத்தான் என்பார்கள். வண்ணதாசன் அதிகமாக ஒளியை எழுதினாலும் அவர் இருளில் இருந்து பதுங்கிகொள்வதில்லை. வண்ணதாசன் சின்ன விஷயங்களின் கடவுள் என நுணுக்கமான சித்திரங்களுக்காக போற்றபடுகிறார். இது முழு உண்மையல்ல. அன்றாடத்தின் வழியே அவர் பெரிய அசைவுகளை தோட முயல்கிறார் என்றே தோன்றுகிறது. மனித இயல்புகளின் வேடிக்கை விநோதங்களை, பூச்சுக்களை நோக்கியே அவருடைய கதைகள் விரிகின்றன.  சரவணன் ஜெயமோகன் தளத்தில் எழுதிய கடிதம் வண்ணதாசனின் படைப்புலகத்தின் அடிநாதத்தை தொட்டு காட்டுகிறது. “உலகம் முழுவதும் மனிதர்கள் வேறுபடலாம் அவர்களின் அகம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கின்றது.” வண்ணதாசன் அந்த பிரபஞ்ச மானுட அகத்தை தொடவே தன் படைப்புகள் மூலம் முயல்கிறார். வண்ணதாசன் சிறுகதைகள் வாழ்வின் சிக்கல்கள் பிணக்குகள் பினைந்ததன் ஊடாக வெட்டப்படும் ஒரு துண்டு. அவர் அந்த துண்டின் முனைகளை சமம் செய்வதில்லை. ஆகவே அவை பிற நவீனத்துவ ஆக்கங்கள் போல் கச்சிதமான செவ்வகங்களாகவோ சதுரங்களாகவோ இருப்பதில்லை. அதன் ஓரங்கள்  சில இடங்களில் பிசிரடித்து துருத்தி கொண்டிருக்கும். அதுவே இக்கதைகளின் அழகியல்.

“அந்த ரெட்டி இருக்கானே, செத்துப் போயிட்டான் பாவம், அவன் வந்து கதர் போட்டுண்டு வருவான் இருந்தாலும் அதெல்லாம் அந்த சூழல்ல இருக்கறத்தினாலே நாம சொல்றத்துலே, அது அவங்களுக்கு ஒரு பாராட்டு (tribute) மாதிரியும் ஆயிடும் மானசீகமா உண்மையா அவுங்களுக்கு நாம அஞ்சலி செலுத்தின மாதிரியும் ஆயுடுத்து. பாக்கப்போனா நான் எழுதுற கதையெல்லாம்..அதுல பெரிய திறமைசாலி கிடையாது..அவுங்களுக்கு ஒரு அஞ்சலி, ஏதோ ஒரு விதத்துல நம்ப வந்து ‘ஐ சே ஐ ரிமம்பர் யூ’ன்னு சொல்றது.’

அசோகமித்திரன் சொல்வனம் நேர்காணலில் கூறியது இது. வண்ணதாசன் தீராநதி நேர்காணலில் நூல்கள் சமர்ப்பணம் செய்யப்படுவதை பற்றி இவ்வாறு கூறுகிறார்   “இருபது, இருபத்தொன்று எல்லாம் போதாது. நூற்றுக்கணக்கில் `இன்னார்க்கு சமர்ப்பணம்’ என்று போடுவதற்காகவே புத்தகங்கள் எழுதவும் வெளியிடவும் வேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தாளன் தன்  மரியாதையை, பிரியத்தை, காதலை எல்லாம் வேறு எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும் கி.ராஜநாராயணன் மாமா கணவதி அத்தை, கணபதி அண்ணன், ராமச்சந்திரன், சமயவேல், நம்பிராஜன் இவர்களுக்கெல்லாம், சமர்ப்பணத்தைவிட, அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும்.”

ஒருவகையில் வண்ணதாசனும் தாமறிந்த மனிதர்களின், தான் கண்ட வாழ்க்கையின் கூற்றுகளை பதிவாக்கி அம்மனிதர்களின் நினைவுகளை கவுரவம் செய்கிறார் என்றே தோன்றுகிறது.

 

தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 59

$
0
0

[ 22 ]

அர்ஜுனன் வெளியே சென்றதுமே மாதலியை பார்த்தான். அவன் நடை தயங்கியது. மாதலி இயல்பாக அவனருகே வந்து “வருக!” என்றான். அவனிடம் தன் அறைக்கு மீள விரும்புவதாகச் சொல்ல எண்ணினான் அர்ஜுனன். ஆனால் அதை அவன் எப்படி புரிந்துகொள்வான் என்று தயங்கினான். அவன் “நீ சொன்னவற்றை நான் புரிந்துகொள்கிறேன். நீ பிறிதொன்றை சொல்லமுடியாது” என்றான். அவனை நோக்கி சொல்கொள்வதற்குள் சிரித்தபடி “இந்திரகீலத்திற்கு ஏறிவரும் வழியில் நீ சந்தித்த யட்சியும் நானே” என்றான் மாதலி.

அர்ஜுனன் திகைப்புடன் “நீங்கள்…” என்றதும் அவன் புன்னகைத்து “இங்குள்ளது ஒரே உள்ளம்” என்றான். அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “என் உள்ளத்தை எண்ணி நான் வியந்துகொண்டிருக்கிறேன், தந்தையே. என்னால் என் தோழரை விலக்கி எண்ணவே முடியவில்லை. அவர் என்னில் ஒரு பகுதி. அதை நானே ஒவ்வொரு தருணத்திலும் வியப்புடன் அறிந்துகொண்டிருக்கையில் பிறரிடம் சொல்லிப்புரியவைப்பது எளிதல்ல. முக்காலமும் பதினான்குலகமும் அறிந்த தேவர்தலைவரிடம்கூட” என்றான்.

மாதலி நகைத்து “அவரும் அறிவார். ஆனாலும் அவர் சொல்லியாகவேண்டும் என விரும்புகிறார்” என்றான். மேலும் சிரித்து “மைந்தனுக்கு என ஓர் உள்ளமும் ஆளுமையும் இருக்கலாகும் என்பதைப்போல தந்தையரால் ஏற்கமுடியாதது பிறிதில்லை. வளர்ந்தெழும் மைந்தரைக் கண்டு தந்தையின் உள்ளம் தாவித்தழுவ முனைகிறது. மறுகணமே தயங்கி பின்னடைகிறது. ஏனென்றால் அவருக்குள் வாழும் அழியாத ஒன்று அவர் என்னும் அக்கூட்டை உதறி அக்கணமே புத்தம்புதிய கூண்டில் குடியேற விழைவதை அவர் அறிகிறார். அவரை அச்சுறுத்துவது அவ்விழைவுதான்” என்றான்.

அர்ஜுனன் “நான் என்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன், தந்தையே” என்றான். “ஏன் என்னால் இளைய யாதவரை விட்டு அகலமுடியவில்லை? அவருடைய ஆழம் எனக்கு தெரியும். ஒவ்வொருநாளும் கடலலைமேல் ஆடுபவர்கள் உள்ளூர ஆழியென்றால் என்னவென்றும் அறிந்திருப்பார்கள். முடிவிலியென அதை அறிந்திருப்பதே நுரைமட்டுமே என அலைகளை எண்ணி அவர்கள் மகிழ்வுகொண்டாடச்செய்கிறது. ஒவ்வொன்றிலும் முடிவிலியை அறிந்து அவ்வறிதலை ஒத்திப்போட்டு அன்றாடகணங்களில் திளைப்பது மானுட உள்ளத்தின் விந்தைகளில் ஒன்று.” அவன் அந்த ஒப்புமை வழியாக தன் சொற்களை கண்டுகொண்டான். அதையே விரித்து கருத்துக்களாக ஆக்கினான்.

“முழுக்க அறிந்தபின்னரே மீன்கொள்ளவும் கடலோடவும் ஆழியிலிறங்க வேண்டுமென்று எவரும் எண்ணுவதில்லை. அதை துடுப்புகளால் கிளறவும் பாய்விரித்து அதன்மேல் தாவவும் தயங்குவதில்லை. அதன் அச்சுறுத்தும் ஆழம் அறியப்பட முடியாதென்பதனாலேயே கணம் கோடிமடங்கெனப் பெருகிக்கொண்டிருப்பது. ஆனால் ஒருமுறை கைகூப்பி வணங்கிவிட்டு அதன்மேல் பாய்கின்றனர் மானுடர். ஏனென்றால் அத்தனை பெரிய ஒன்று அது பெரியதென்பதனாலேயே எளியவர்கள் மேல் அளிகொண்டிருக்கவேண்டும், காத்தருளவேண்டும். அவ்வாறு நம்புவதன்றி மானுடருக்கு வேறுவழியில்லை.”

“தந்தையே, சற்றுமுன் நான் வரவிருக்கும் பேரழிவை கண்முன் கண்டேன். என் உள்ளுறைந்த அனைத்தும் பதறி எழுந்தன. இறந்திறந்து எழுந்தேன். இனி நான் அடைவதற்கொன்றுமில்லை. ஆம், பேரழிவு. ஆராத்துயர். அழியாப்பழி. இறுதியில் மாற்றிலாத வெறுமை. பிறிதொன்றுமில்லை. ஆனால் மறுகணம் என் உள்ளம் எண்ணியது, அதை அவர் அறியமாட்டாரா? தான் ஓட்டும் பசு அடுத்தகணம் வைக்கப்போகும் காலடியை முன்பே அறிபவர் அவர் என்கிறார்கள். இதை அறிந்தே ஆற்றுகிறார் என்றால் அவருக்கு அதற்குரிய நோக்கங்கள் உள்ளன. அதை நான் எப்படி அறியமுடியும்?”

“அவரளவே ஆகாமல் அவர் அறிந்ததை நான் முற்றறிய இயலாது. எறும்பும் பருந்தும் உலகைப்பற்றி உரையாடிக்கொள்ள முடியுமா என்ன?” என்றான் அர்ஜுனன். “அவர் என் அரசன். அரசனின் எண்ணங்களை ஆராயும் பொறுப்பு படைவீரனுக்கில்லை. வில்லேந்தி செருகளம் சென்று கொன்று நின்று மடிவதொன்றே அவன் கடன். அதை மட்டுமே நான் செய்யவிருக்கிறேன்.”

சொல்லச்சொல்ல அவன் இயல்பானான். முகம் தெளிய குரல் நேர்பட “சென்று என் தந்தையிடம் சொல்லுங்கள். அவர் காலடிகளை என் சித்தத்தில் சூடியிருக்கிறேன். ஆனால் இளைய யாதவருக்குரியது இப்பிறவி. அதை இளைய யாதவரே மறுத்தால்கூட நான் மாறமுடியாது” என்றான். மாதலி புன்னகை புரிந்தான். அதைக்கண்டு அர்ஜுனனும் புன்னகைகொண்டான். “ஆம், முதுசெவிலியர் கூற்று ஒன்றுண்டு. ஆடை என்றால் அகலலாம். தோளில் எழுதிய தொய்யில் என்றால் அழியலாம். பச்சை குத்தப்பட்ட ஓவியம் சிதையில் தானும் எரியும்.”

மீண்டும் விழிகள் கூர்மை கொள்ள “தந்தையே, சற்று முன் ஒன்றை உணர்ந்தேன். ஒரு பொருந்தா எண்ணத்திவலையென வந்துசென்றது அது. உண்மைகள் அவ்வண்ணமே நம்மை எண்ணியிராப்பொழுதில் ஏதென அறியாது தொட்டுச்செல்லும் போலும். அவரை நான் ஒருநிலையிலும் பிரியமுடியாதென்று என் ஆழம் முதலில் உணர்ந்தது நான் அவருடன் போரிட்டபோது” என்றான் அர்ஜுனன். “அப்போரை நான் எனக்குள் நிகழ்த்துவது என்றே என் அகம் உணர்ந்தது. என்னருகே எழுந்த அவர் விழிகள் என் விழிகளென்று திடுக்கிட்டேன். அவர் எழுந்தகன்றபோது அர்ஜுனன் விழுந்துகிடப்பதை இளைய யாதவர் என நின்று நான் கண்டேன்.”

மாதலி “நீங்கள் ஒன்றே” என்றான். “உன் தந்தைக்கு நீ எதையும் உரைக்கவேண்டியதில்லை. அவர் அறியாத எதையும் நீ எப்போதுமே எண்ணியதில்லை.” அர்ஜுனன் அவனை நோக்கி “ஆனால் அவரிடமும் என் மூத்தவரிடமும் சொல்ல என்னிடம் ஒரு சொல்லும் இல்லை” என்றான். “நீ அவைபுகுந்து உணர்ந்ததை சொல்லலாம், மைந்தா” என்றான் மாதலி. “இல்லை, அவையில் நான் அவரை எதிர்த்தேன் என்றாகக்கூடாது” என்ற அர்ஜுனன் “என்னை என் அரண்மனைக்கே கொண்டுசெல்லுங்கள், தந்தையே” என்றான்.

மாதலி “இத்தருணத்தில் அவையை நீ மறுப்பதே மேலும் மீறலென பொருள் கொள்ளப்படும்” என்றான். “இல்லை, நான் அவையை சந்திக்க விழையவில்லை. என்னிடம் ஒரு சொல்லும் எஞ்சியிருக்கவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “என்னிடம் இப்போது சொன்ன இதே சொற்களை அவர் அவையில் சொல்வாரென்றால் நான் நேர்நின்று எதிர்ச்சொல் எடுக்க நேரும். நான் இப்படியே பழிகொண்ட மைந்தனாக புவிமீள்கிறேன். அதுவே என் ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக!”

மாதலி “மைந்தர் ஏதேனும் ஒரு தருணத்தில் தந்தையை எதிர்த்து நின்றாகவேண்டும். அக்கணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக கண்டடைகிறார்கள். அது இந்த அவையில் நிகழட்டும். நீ எடுக்கும் சொல்லென்ன என்பதும் அவர் வைக்கும் எதிர்ச்சொல் என்ன என்பதும் அத்தருணத்திலேயே இருவருக்குள் இருந்தும் உருவாகி எழுந்துவரும். அதற்கு முந்தைய கணம் வரை எத்தனை எண்ணினாலும் அவற்றை அறியமுடியாது. அது நிகழ்ந்தபின் இருவருமே விடுதலை அடைவீர்கள்” என்றான்.

ஒருகணம் அர்ஜுனன் உடல் தத்தளிக்க நின்றான். பின்னர் தேர்த்தட்டில் ஏறி அமர்ந்து “என்னை அழைத்துச்செல்லுங்கள், தந்தையே” என்றான். மாதலி மாறாபுன்னகையுடன் “நன்று” என்றபின் தேர்த்தட்டில் ஏறிக்கொண்டான். புரவிகள் உயிர்ப்படைந்து குளம்புகள் நீந்த அமராவதியின் தெருக்களினூடாக பாய்ந்தோடின. அவன் ஒழுகும் மாளிகைகளை நோக்கி விழிவிரித்து உடல் தளர்ந்து அமர்ந்திருந்தான். மாதலி அதன்மேல் ஒரு சொல்லும் சொல்லவில்லை.

மாளிகை வந்ததும் மாதலி கடிவாளங்களை இழுத்தான். புரவிகள் செருக்கடித்து உடல் நெளித்து நின்றன. அர்ஜுனன் இறங்கி “விடை, தந்தையே” என்றான். “நன்று” என்றான் மாதலி. “நான் உடனே கிளம்புகிறேன். இனி ஒருகணமும் இங்கிருக்க விழையவில்லை. தந்தையிடம் சொல்லிவிடுங்கள்” என்றபின் அவன் மாளிகைக்குள் நடந்தான்.

[ 23 ]

அர்ஜுனன் மாளிகையைவிட்டு வெளியே வந்ததும் முகமுற்றத்தில் மயிலிருக்கை கொண்ட பொற்தேர் வந்து நிற்பதைக் கண்டான். முதல்படியிலேயே தயங்கி நின்றான். பீடத்தில் அமர்ந்திருந்த ஊர்வசி எழுந்து அவனை நோக்கி புன்னகைசெய்தபடி ஆடையை கையால் பற்றி ஒதுக்கி படிகளில் கால்வைத்து இறங்கினாள். குழலைத் தள்ளி பின்னாலிட்ட அசைவில் மயில் எனச் சொடுக்கி நிமிர்ந்த தலையுடன் அவனை நோக்கி வந்தாள். விரித்திட்ட குழல்கற்றைகள் தோளில் அலையடித்தன.

பெருமூச்சுவிட்டபடி அவன் அவளை நோக்கி நின்றான். அவனை அணுகி “அவைக்களத்திற்கு செல்கிறீர்களா?” என்றபின் திரும்பி “தேர் எங்கே?” என்றாள். “வரச்சொன்னேன்” என்றான். அவன் கண்களைப்பார்த்ததுமே அவள் புரிந்துகொண்டாள். “கிளம்புகிறீர்களா?” என்றாள். அவன் “ஆம்” என்றான். “ஏன்?” என்றாள். முகம் ஏமாற்றத்தை காட்டியது. “இங்கு எந்தை அருள்கொள்ள வந்தேன். சந்தித்து வணங்கிவிட்டேன்.”

அவள் “இன்று உங்களுக்காக அவைகூடுவதாக அல்லவா அறிந்தேன்?” என்றாள். அவன் சீற்றத்துடன் “அறிந்தாய் அல்லவா? பிறகென்ன?” என்றான். அவள் அவன் கண்களை நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் நோக்கை விலக்கி “நான் கலந்துகொள்வதாக இல்லை. புவிமீள்கிறேன்” என்றான். அவள் “அது நன்றல்ல. உங்கள் தந்தையை நீங்கள் உதறக்கூடாது” என்றாள். “நீ அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றான் அர்ஜுனன்.

“நன்று, நான் ஒன்றும் சொல்லவில்லை” என்றாள். கனிந்த புன்னகை விரிய “சற்றுநேரம் நான் தங்களுடன் பேசமுடியும் அல்லவா?” என்றாள். அர்ஜுனன் அவளுடைய அந்தச்சிரிப்பால் உளமடங்கினான். ஒரே கணத்தில் சிறுமியாகவும் அன்னையாகவும் மூதன்னையாகவும் ஆகும் வல்லமைகொண்டவர்கள் பெண்கள் என நினைத்துக்கொண்டான். புன்னகையுடன் “சற்று நேரம்தான், நெடுநேரம் அல்ல” என்றான்.

அவள் சிறுமியென்றாகி “நான் உங்களிடம் ஒன்றை காட்டும் பொருட்டு வந்தேன்… அதை காட்டவேண்டும் என்று நேற்றுதான் தோன்றியது…” என்று சிரித்தாள். “காட்டட்டுமா?” என்று சொன்னபோது அவள் உடலில் எழுந்த துள்ளலைக் கண்டு மெல்லிய ஏளனத்துடன் “சரி” என்றான். “இங்கே காட்டமுடியாது. இது பிறர் பார்க்குமிடம். நாம் தனியறைக்கு செல்வோம்” என்றாள். அவன் கையைப்பற்றியபடி “வருக!” என்றாள். அவன் நடை தயங்க அவளே அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.

அவர்கள் இடைநாழிக்குச் சென்றதும் அவள் “நாம் அங்கே செல்வோம்” என்று அவன் கையைப்பற்றி கூடம் நோக்கி சென்றாள். பின்னர் நின்று “வேண்டாம்… இங்கும் கந்தர்வர்களின் நோக்கு இருக்கும்… வருக!” என இழுத்துக்கொண்டு சிறிய அறைக்குள் சென்றாள். “அமருங்கள், இளைய பாண்டவரே” என அவள் தோளில் கையை வைத்து அழுத்தி பீடத்தில் அமரச்செய்தாள். அவள் மேலாடை நழுவி வாழையிலைக் குருத்தின் நடுஓடைபோன்ற மென்மையுடன் இளமுலைகளின் இடைவெளி தெரிந்தது.

அவள் ஆடைதிருத்தவில்லை;. அவனருகே நெருங்கி அமர்ந்தபடி தன் உள்ளங்கையை விரித்தாள். அதில் ஒரு சிறிய கூழாங்கல் இருந்தது. “இது என்ன?” என்றாள். “கூழாங்கல்” என்றான். சிரித்து “இல்லை” என்றாள். அருகணையும்போது எப்போதும் பெண்ணின் தோல்மென்மைதான் ஆணின் சித்தத்தை நிறைக்கிறது. அகலே தெரியும் தோல் பட்டென தளிரென நீர்ப்பரப்பென மென்மையும் ஒளியும் கொண்ட ஒன்று. அருகணையும்போது மென்மயிர்ப்பரவலும் மெய்ப்புகொண்ட புள்ளிகளும் மச்சங்களும் தோல்வரிகளும் கொண்டு மங்கலடைகிறது. ஆனால் அதுவே உயிர்விழைவை கிளர்த்துகிறது. அதன் மென்மணம், ஈரம், அசைவுகள். அனைத்தையும்விட முதன்மையாக அது உணர்வுகளை சொல்லும் முறை. தோல் தன் வண்ணங்களாலேயே நாணுகிறது, தயங்குகிறது, காமம் கொண்டு நெகிழ்கிறது, சிரிக்கிறது, சினக்கிறது.

அவள் “சொல்லுங்கள்!” என்றாள். அவன் மூச்சு வெம்மைகொள்ள “பாம்பின் முட்டை” என்றான். இல்லை என்று அவள் கையை இழுத்து மூடி மீண்டும் திறந்து “நன்றாக பாருங்கள்!” என்றாள். உதடுகள் அண்மைநோக்கில் நுண்சுருக்கங்கள் கொண்டவை. நனைந்த மலர்போல. நீரிலூறிய செம்பட்டுபோல. வெண்பற்களின் கீழ்நுனிகளின் ஈரம். கண்கள் அணிந்த மை சற்றே கரைந்து கீழிமைகளில் படர்ந்திருந்தது. விழிவெண்குமிழில் செந்நிறக்கோடுகள். எந்த மலரின் இதழ் இது?

“சொல்லுங்கள்!” என அவள் அவனுக்கு மட்டுமே என சொன்னாள். கழுத்தில் நீல நரம்பு ஒன்று கிளைகொண்டு இறங்கியது. தோள் எலும்பின்மேல் நீரலை என ஒரு வளைவு. கழுத்தின் கோடுகள் ஏன் மென்மை மென்மை என்கின்றன? “தெரியவில்லை” என்று அவன் சொன்னான். “நீங்கள் நன்கறிந்ததுதான்” என்றாள் அவள். உடல் உடல் உடல். உடலைப்போல முற்றறியமுடியாத ஆழம் கொண்டது பிறிதில்லை. உடலென்றான வடிவுக்குள் இருந்து அந்த ஆழம் தன்னை வெளிப்படுத்த தவித்துக்கொண்டிருக்கிறது. உடல்போல ஈர்ப்பதும் உணர்த்துவதும் பிறிதொன்றில்லை. ஒவ்வொரு அணுவும் பொருள்கொண்டது உடல். மானுடமொழி சொல்லிச்சொல்லி கடந்து செல்லாது நின்றிருப்பவை இரண்டே. உடலும் இறையும்.

“என்ன பார்வை? இதைப்பார்த்து சொல்லுங்கள்!” என்றாள். சிணுங்கலாக உடலை உலைத்து “சொல்லுங்கள்!” என்றாள். மரங்களில் மலர் என உடல்களில் கன்னி. கன்னங்களில் மெல்ல இறங்கியிருக்கிறது பூனைமயிர். பின்கழுத்தில் பிசிறியிருக்கிறது. மேல்உதட்டில் நுரையென படர்ந்திருக்கிறது. புருவங்களென நிரைகொண்டிருக்கிறது. ஓவியங்களில் ஒருபோதும் பெண்ணுடலின் தன்னியல்பான கட்டிலாமை வெளிப்பட்டதில்லை. இந்த மயிர்ப்பரவலுக்கு என்ன ஒழுங்கு? இது இளங்கருமுகில். இது முதல்மழை மென்புல். ஓவியங்கள்தான் எத்தனை செயற்கையானவை. கட்டிலாமை. கட்டில்லாமையென்றால் எதன் கட்டு? விழிகளென்றாகி இவ்வுடல்தொட்டு பிறிதொன்றை வனைய நினைக்கும் என் எண்ணத்தின் ஓஎல்லை அது. ஏன் அது இத்தளிர்மையிலிருந்து ஒர் ஓவியத்தை அள்ளி எடுக்கிறது?

“இது ஒரு விழி” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றான். அவள் கையில் அந்தக்கூழாங்கல் விழியென மின்னத் தொடங்கியது. “எவர் விழி?” என்று அவள் மீண்டும் கேட்டாள். ஓசையின்றி உள்ளங்களே உரையாடிக் கொள்கின்றனவா? தோல்பரப்புகள் விழிகளென்றாகி ஒன்றையொன்று நோக்கி வியந்தமைந்துள்ளனவா? “ம்?” என்றான். “சொல்லுங்கள், எவர் விழி?” விரிந்து சுருங்கின உதடுகள். ஆண் எவனும் பெண் உதடுகளிலிருந்து தப்பியதில்லை. ஏனென்றால் உதடுகள் உடலுக்கு வெளியே தெரியும் உள்ளுடல். பசுங்குருதித் தசை. முத்தமிடும் உதடுகள் இணையும்போது உடல்கள் உருகி ஒன்றாகின்றன. தவித்துத் தேடி கண்டுகொண்டு தழுவிக்கொள்கின்றன நாக்குகள். உடலுக்குள் கரந்த ஒன்றின் ஆராத் தவிப்பாகிறது நா. நாவும் உதடும் அதன் விடாய் எரியும் மலர்கள். நாகக்குழவிகளாகின்றன விரல்கள். உடலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை உடலில் தேடுகின்றன. உடலில் அன்றி அதை எங்கும் தேடவும் இயலாது. உடலென்று தன்னை வெளிப்படுத்தி உடலென்ற அரண்சூடி அமர்ந்திருக்கிறது போலும் அது. அரண்களெல்லாம் வெளிப்பாடுகள் அல்லவா? வெளிப்பாடுகள் அனைத்தும் அரண்களும் அல்லவா?

அவனுள்ளிருந்து அவன் இறங்கி அப்பால் நின்று அக்காட்சியை நோக்கி நின்றிருந்தான். இரு உடல்கள் ஒன்றை ஒன்று அணுகிக்கொண்டிருந்தன. இரு நீரோடைகள் என. “இது ஒரு சிறுவனின் விழி” என்றாள். “ம்” என்று அவன் சொன்னான். “அவனுக்கு ஒரு வயது… அவன் சொல்தெளிந்துகொண்டிருந்தது, விழிக்கூர் மின்னத் தொடங்கியிருந்தது.” அவன் “யார்?” என்றான். “அஸ்தினபுரியின் பாண்டுவின் இளையமகன். விழிச்சுடரோன் என அவனை அழைத்தனர். நோக்கிலேயே வெல்லும் விஜயன்.” அவன் அக்கணமே அவ்விழியை அடையாளம் கண்டான். குனிந்து அவ்விழிகளை முன்பு நோக்கியிருக்கிறேன். அப்போது எவராக இருந்தேன்?

“அவன் நீராடச்சென்றான்” என்று அவள் சொன்னாள். “சேடியரில் ஒருத்தி அவனை தன் இடையில் வைத்திருந்தாள். பெண்டிர் அப்படித்தான், . இளமைந்தரை இடைசூடுவது அவர்களுக்கு உவகையளிப்பது. அது காட்டெரியின் கனல்துளி என அவர்களின் ஆழம் அறியும். காடுண்ணும் பெரும்பசியை கையிலெடுக்க முடிவதன் உளக்கிளர்ச்சியே அவர்களை இயக்குகிறது. குழவியென்றும் காமனென்றும் ஆகும் விழிகளின் முடிவின்மை உள்ளத்தை ஊசிமுனையாக்குகிறது.” அவன் அதை நோக்கிக்கொண்டிருந்தான். “ஆம், நான் அனைத்தையும் காண்கிறேன்” என்றான். அவ்விழிகளையும் அதைநோக்குபவனையும் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். எத்தருணம் இது? வாழ்தருணங்கள் ஓரிடத்தில் ஒருகாலத்தில்தான் நிகழ்கின்றன என்று எண்ணுவதுதான் மானுடனின் மாயையா?

சதசிருங்கத்தின் ஏரியின் நீர்மணம். அலையொளியை அணிந்த கரைமரங்கள் நடனமிட்டன. அவற்றின் நிழல்கள் சிதறிச்சிதறி கரைந்து உருவழிந்து மீண்டன. ஏவல் பெண்களும் முனிவர்மகளிரும் நீந்திச் சிரித்து களித்தாடிக்கொண்டிருந்தனர். உடலுடன் ஒட்டிய ஆடைகள் அவர்களின் அசைவுகளில் இழுபடும் ஒலி. நீர்க்கொப்புளங்கள் ஆடைகளுக்குள் எழுந்தன. வாழைத்தண்டுத் தோள்களில் வழிந்த நீர். முலையிடை மென்னோடைகளில் குவிந்திறங்கிய நீர். ஆடைக்குள் உந்திச்சுழி. “நான் உங்கள் அருகே வந்தேன்” என்றாள். “நீயா?” என்றான். “ஆம், அவளுடலை அப்போதுதான் சூடினேன்.” மென்மணம். தசைமணம். குருதிமணம். அந்த மணத்தை அறியும் ஆழ்விலங்கு. அதன் தனிமை.

“எப்போது?” என்றான். “உங்கள் நோக்கு வந்து அவளைத் தொட்ட அக்கணம்” என்றாள். “நான் உங்கள் அருகே வந்தேன். குனிந்து படிகளில் பித்தளைப்பேழையில் இருந்த ஈஞ்சைப்பட்டையை எடுத்து உடல்தேய்க்கலானேன். ஆடைநெகிழ அதை முலைகளுடன் அழுத்திப் பற்றிக்கொண்டேன். என் உடல் உங்கள் விழிகளால் தீட்டப்பட்ட ஓவியமாக விரிந்து ஒளிகொண்டது. அவ்வுடலை நானே தொட்டுத் தொட்டு அறிந்தேன். செங்குழம்பு பூசினேன். திரும்பி நீரில் பாய்வதற்கு முன் ஒருகணம் உங்கள் விழிகளை நோக்கினேன். கூர்மீசையும் மாறா ஏளனப்புன்னகையும் கொண்ட வில்விஜயனை கண்டுவிட்டேன். நீர்ப்படலம் பிளந்து உள்ளே அமிழ்ந்தபோது என் உடல் விம்மிக்கொண்டிருந்தது. முலைக்கண்கள் கதவுக்குமிழ்களென குளிர்ந்து இறுகியிருந்தன.”

“ஆம்” என்றான். “அவனை நான் இங்கிருந்தே காண்கிறேன். அவன் உடல் விதிர்ப்புகொள்கிறது. குளிர்கொண்டவன்போல ஒடுங்குகிறான். பின் விதும்பி அழத்தொடங்குகிறான். செவிலியன்னை மாலினி அருகே வந்து என்ன என்று கேட்கிறாள். நீர்ப்பரப்பைச் சுட்டிக்காட்டி அவன் அழுகிறான். மூழ்கிய அப்பெண்ணும் எழுந்து முகம் வழிந்த நீரை கூந்தலுடன் விலக்கி விந்தையாக நோக்குகிறாள். அன்னையால் அள்ளப்பட அவள் கொழுத்த தோள்களில் முகம்புதைத்து அவன் விம்மிக்கொண்டிருக்கிறான்.” அவள் “ஆம், நான் அதைப் பார்த்தபடி அருகிருந்த கற்சிலையின் புன்னகையாக இருந்தேன்.”

அவன் “நீரில்… நீரில்…” என்றான். செவிலியன்னை “நீரில் என்ன?” என்றாள். அவன் தோளைத் தட்டியபடி “நீரில் ஒன்றுமில்லை” என்றாள். அகில்சந்தனம் அரைத்த கையுடன் எழுந்து வந்த முதுசெவிலி ஒருத்தி “நீராடுமிடத்தில் கந்தர்வப்பெண்களும் அப்சரஸ்களும் வருவதுண்டு… எவரையாவது பார்த்திருப்பார்” என்றாள். “அதெல்லாமில்லை, யாரோ குதித்ததைக் கண்டு அஞ்சியிருப்பார் இளவரசர்” என்றாள் செவிலி. “கந்தர்வப்பெண்ணைக் காண்பது நன்று… விருந்து தொடங்கிவிட்டது” என்றாள் ஒரு பெண். “போடி” என அவளை செவிலி கண்டித்தாள்.

“நான் சூடியிருப்பது அவள் உடல்” என்றாள் ஊர்வசி. “இதுவா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “உங்கள் முதற்கணம். இதை வந்தடைந்தவர் மட்டுமே நிறைவுறுகிறார்.” அவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். “யாரவள்?” என்றான். “காற்று கங்கையில் பல்லாயிரம்கோடி குமிழிகளாகிறது. மீண்டும் காற்றாகிறது. அது எதுவானாலென்ன?” என்றாள் ஊர்வசி. “இது உங்கள் ஆழத்தில் பொத்தி வைக்கப்பட்டிருந்த உடல். இதுவே உச்சம். இங்கணைவதே முழுமை.” அவன் “ஆம்” என்றான். மூச்சால் விழியால் உடலசைவால் வெம்மையால் “ஆம்” என்றான்.

“நீ ஏன் அன்று என்னை வந்து நோக்கினாய்?” என்றான். அதை ஏன் கேட்கிறேன்? இப்பொருளற்ற வினா வழியாக அத்தருணத்தை நீட்டிக்கொள்கிறேன். வெம்மைமிக்க அடுமனைக்கலத்தில் நீர்விட்டு குளிர்விப்பதுபோல. அவள் “ஒவ்வொருவருக்கும் ஒருத்தி. உங்களுக்கு நான்” என்றாள். “ஏன்?” என்றான். “நான் தொடையிலிருந்து பிறந்தவள்” என்றாள். “மானுட உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் பொருளுண்டு. தலை அறிதல். முகம் மகிழ்தல். கைகள் ஆற்றுதல். நெஞ்சு எதிர்கொள்ளல். தோள்கள் சுமத்தல். வயிறு எரிதல். தொடைகள் தாங்குதல். விழைவு தலையென்றாகிறது. ஆற்றல் தோளென்றாகிறது. இளவரசே, ஆணவமே தொடையென்றாகிறது.” அவன் “எவருடைய ஆணவம்?” என்றான். “எவருடையதென்றிலாது எங்கும் நிறைந்திருப்பவை உணர்வுகள். மானுடர்கள் அவற்றை எதிரொளிக்கமட்டுமே செய்கிறார்கள்.”

“ஆணவமா?” என்றான். “ஆம்” என்றாள். “என்ன ஆணவம்?” அவள் புன்னகைத்து “ஆணவத்தில் முதன்மையானது. அனைத்து அறிவுதேடிகளுக்கும் உரியது.” அவன் “சொல்” என்றான். “அறிந்துவிடமுடியும் என்னும் ஆணவம்.” அவன் நீள்மூச்செறிந்து “ஆம்” என்றான். “அறிவின் முன் முற்றிலும் தோற்பவன் அறியக்கூடுவனவற்றை முழுதறிந்துவிடுகிறான்” என்றாள். அவன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “நீ அவ்வாணவத்தின் பெண்மையா?” என்றான். “ஏன், தேடலின் பெண்மையென்றாகக் கூடாதா?” என்றாள்.

அவன் கைமேல் அவள் தன் கையை வைத்தாள். முதன்முறையாக அவளைத் தொடுபவன் போல உணர்ந்து அவன் மெய்ப்பு கொண்டான். “நான் உங்களுக்குரியவள். இவ்வுருவும் இவ்வுளமும் முற்றிலும் உங்களுக்காக சமைக்கப்பட்டவை.” அவன் அவள் கைமேல் தன் கையை வைத்தான். அவை நடுங்கிக்கொண்டிருந்தன. “ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்றாள். “அச்சமில்லை” என்றான். “பின்?” என்றாள். “தெரியவில்லை. ஆனால் இந்த அனல் இன்பமளிக்கிறது.” அவன் தோள்மேல் அவள் மென்மையான கன்னம் படிந்தது. விழிதூக்கி அவன் விழிகளுக்குள் நோக்கி “என்னிடம் மட்டுமே நீங்கள் முழுமையான ஆண்” என்றாள்.

தொடர்புடைய பதிவுகள்

சுகுமாரனுக்கு இயல் விருது – 2016

$
0
0

SUKUMAR

 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  சுகுமாரன், 1957-ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்துக்காகப் பயின்றார். தமிழ் வார இதழ்களிலும், தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து தற்போது காலச்சுவடு இதழின்  பொறுப்பாசிரியராக பணியாற்றுகிறார். இவர், “கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர் , மொழிபெயர்ப்பாளர், என பன்முகத் திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். சுகுமாரன், இந்த விருதைப் பெறும் 18-வது தமிழ் ஆளுமை ஆவார். இதற்கு முன்னர் சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன்,  ஜெயமோகன், டொமினிக் ஜீவா, மற்றும் ஆர். மயூரநாதன் ஆகியோர் இயல் விருதைப் பெற்றுள்ளனர்.

 

சுகுமாரன், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், புதினங்கள், மற்றும் முன்னுரைகள் மூலமாக பங்களிப்புகள் செய்துள்ளார். இவரது கவிதைத் தொகுப்பான “கோடைக்காலக் குறிப்புகள்,” பிரமீள், ஆத்மாநாமிற்குப் பிறகு வந்த பல தலைமுறைகளை பாதித்த அரிய தொகுப்பாகும்.  அவரது புதினமான “வெல்லிங்டன்” காலனீய வரலாறு மட்டுமன்றி, அக்கா-தம்பி உறவை தமிழ்ச் சூழலின் பிரத்யேகத் தன்மைக்கேற்ப அலசுகின்ற ஒரு கலைப் படைப்பு.  மலையாள இலக்கிய உலகின் மிகப் பெரிய ஆளுமைகளான வைக்கம் முகம்மது பஷீர்,  சச்சிதானந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், சக்கரியா போன்றவர்களின் படைப்புகள், சுகுமாரனின்  உன்னத மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இருந்து இவர் மொழிபெயர்த்த படைப்புகளில் “பாப்லோ நெரூதா கவிதைகள், அஸீஸ் பே சம்பவம்,” போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும்,  சமீபத்தில் வெளிவந்த மார்கெஸின் “தனிமையின் நூறு ஆண்டுகள்,” மற்றும் “பட்டு”ஆகியன நிகரில்லாதவை.

 

தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, தனது இலக்கியப் பணிகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருக்கும் திரு. சுகுமாரனுக்கு, 2016-ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை கொள்கிறது. ‘இயல் விருது’ கேடயமும், 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில், 2017 ஜூன் மாதம் வழமை போல நடைபெறும்.

 

[இயல் அமைப்பின் அறிவிக்கை]

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கண்ணீருப்பின் கவிஞன்

$
0
0

Sukumaran 1

சில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள்.. எழுபதுகளின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வந்து எண்பதுகளில் வெளிப்பாடுகொண்ட சில படைப்பாளிகள் பலவகையிலும் பொதுக்கூறுகள் கொண்டவர்கள். தமிழில் சுகுமாரன், சேரன் மலையாளத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு, கன்னடத்தில் கே.வி.திருமலேஷ். .

 

எழுபதுகள் உலகவரலாற்றின் சோர்வுக் காலகட்டம். உலகமெங்கும் புரட்சி இயக்கங்கள் தோன்றி தோல்வியடைந்தன. பனிப்போர் உச்சநிலையில் இருந்தது. புதுயுகம்பிறப்பது குறித்த நம்பிக்கைகள் பொய்த்தன. அந்த விரக்தியின் சினத்தின் ஊடாடும் நம்பிக்கையின் குரல்கள் இவர்கள். இன்றுவரை இவர்களை ஒப்பிட்டு ஒரு விரிவான ஆய்வு எந்த மொழியிலும் நிகழ்ந்ததில்லை.

 

இவர்கள் அனைவருக்குமே தந்தை முக்கியமான படிமம். தங்கள் தந்தையிடம் கொண்ட கசப்பும் விலகலுமே இவர்களின் தொடக்கம். தந்தை என்றால் ஒரு மனிதன் மட்டும் அல்ல. மரபு, குடும்பம், வரலாறு மூன்றும்தான். அவர்களை உதறி எழுவதும் அவர்களுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்வதும் இவர்களின் கவிதைகளின் முதன்மைச்சரடு

 

அப்பா உன்னிடம் எனக்கு வெறுப்பில்லை

அன்பைபோலவே

 

என்னும் சுகுமாரனின் வரிகளை அக்காலத்தைய இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் சொல்லியிருப்பார்கள். பாலசந்திரன் சுள்ளிக்காடு நீண்ட இடைவெளிக்குப்பின் தந்தையின் தரப்புக்குச் சென்று எழுதிய தாதவாக்கியம் என்னும் புகழ்பெற்ற கவிதையில் மலநாற்றம் அடிக்கும் வைதரணி என்னும் நரகத்திலிருந்து எழுந்து வருகிறார் தந்தை

 

நீ என் மகன் என்று இனி நானும் கருதமாட்டேன்

தீவைத்துவிடு தந்தையின் நினைவுக்கு நீயும்

நீ வைத்த பலிச்சோற்றில்

பருக்கையும் வேண்டாம் எனக்கு

 

போகிறேன் இதோ

உதயம் என்னை சகிக்காது

 

என்று  சொல்கிறார். மைந்தனின் மீறல்கள் அனைத்தையும் கண்டு கசந்து இருளுக்குள் இறங்கி மறைந்த தந்தை.

 

ஒரு யுகமுடிவின் கசப்பு தங்கிய கவிதைகள் சுகுமாரன் எழுதியவை.. திமிறித்திமிறி சென்று வீணாகித் திரும்பி வருதலின் ஆற்றாமை நிறைந்தவை. சிறகுகளுடன் முட்டைக்குள் இருப்பதன் வலியையும் பிளந்து வெளிவந்தால் பறக்கக்கிடைக்கும் வெளி வலைக்குள் என அறிதலின் கசப்பையும்  முன்வைத்தவை.

 

கறை எல்லோர் கைகளிலும்

 என் கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்

 இன்று மனிதனாக இருப்பதே குற்றம்

 

என அவரது கவிதை எரிந்து உரைக்கிறது. பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதை

 

விரும்புவதொன்றே பெரும்பாவம் என்பதுதான் அந்த

இரும்புவிதியின் முதல் வாக்கியம்

 

என வாழ்க்கையை அறிகிறது. அன்பின் மெல்லிய தொடுகை ஒன்றே ஆறுதலென வாழ்க்கையில் எஞ்சுகிறது. பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய பிற்காலத்தைய நல்ல கவிதைகளில் ஒன்றில்

 

சென்றுவருகிறேன் இவையனைத்திலிருந்தும்

அங்கே துணைவி காத்திருக்கிறாள் என்னை

கடவுளின் படமில்லாத அறை

கண்ணீரின்உப்பும் வியர்வைப் பிசுக்கும்

கலந்து ஒட்டும் தலையணை

வெங்காயம் மணக்கும் ஓர் உடலின் வெப்பம்

 

என்று மீளுமிடம் ஒரு சிறிய இல்லம்தான் என்கிறார். ஒரு காலகட்டத்தின் பேரலை சுருண்டு பின்வாங்கிச் சென்றடையும் இடம் அது

 

எளிமையானது உன் அன்பு

நடு ஆற்றில் அள்ளிய நீர் போல

 

என சுகுமாரனும் சென்றடையும் இடம். அதுவே. நீள்மூச்சுடன், கனவிலிருந்து விழித்தெழுந்த ஆறுதலுடன் எத்தனை உமிழ்ந்தாலும் எஞ்சும் கசப்புடன் நினைத்துக் கொள்ளவேண்டிய ஒரு காலம்.

 

நவீனத்தமிழின் முதன்மைக்கவிஞர்களில் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருது இவ்வாண்டின் இயல். சுகுமாரனுக்கு அவர் விழிநீரை உடன்சிந்திய ஒருவனின் வணக்கம்

 

===============================================

வாழ்நிலம் சுகுமாரன் கவிப்பக்கங்கள்

 

முந்தைய கட்டுரைகள்

 

பிரிவின் விஷம்

கவிஞனின் கட்டுரைகள்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை”

$
0
0

11

 

 

ஓரு மூத்த எழுத்தாளர் உரையாடலில் சொன்னார். எங்களுக்குத் தெரிந்த பொதுவான வாசகி ஒருவர் அவரை முதலில் சந்தித்தபோது “மன்னிக்கணும் நான் நீங்க எழுதின ஒண்ணையுமே படிச்சதில்லை” என்று சொன்னார் என்று. உடனே “சரி , இப்ப படி” என அவரது ஒரு நூலை எடுத்து அவர் அளித்ததாகச் சொல்லிச் சிரித்தார்.

 

எனக்கு அந்த வாசகியைத்தெரியும். உண்மையில் நிறைய வாசிக்கக்கூடியவர். நாஞ்சில்நாடனை முன்னரும் சந்தித்திருக்கிறார். அந்தச்சந்திப்புக்கு முன்னரே சந்திக்கப்போவதைப்பற்றித் தெரியும். அப்படியும் ஏன் வாசிக்கவில்லை? குறைந்தது சந்திக்கச்செல்வதற்கு முன்பாவது ஓரிரு கதைகளை வாசித்திருக்கலாமே? அது ஒரு அடிப்படைப்பண்பு அல்லவா?

 

நான் அவரிடம் அதைப்பற்றிக்கேட்டேன். “நான் வாசிச்சிருக்கேன். கதைகள் ஞாபகமும் இருந்தது. ஆனால் அவரை மாதிரி இருக்கிறவங்ககிட்ட நுணுக்கமா அறிவாப் பேசணும், அது நமக்குத் தெரியாதேன்னு நினைச்சேன். தப்பா பேசுறதவிட வாசிக்கலைன்னு சொன்னா நல்லதுன்னு தோணிச்சு” என்றார்.

 

அந்த மூத்த எழுத்தாளர் உண்மையில் மிகவும் இயல்பான மனிதர். ஆனால் “உங்க ரைட்டிங் ஒண்ணையும் வாசிச்சதில்ல” என்று சொல்பவர்களை எழுத்தாளர்கள் எப்படி உள்ளூர எதிர்கொள்வார்கள்?

 

முன்பு ஒருமுறை ஒரு நண்பர் அவருடைய நண்பருடன் என்னைப்பார்க்க வந்திருந்தார். என் படைப்புகளை அவர் வாசித்ததில்லை. என்னைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தமையால் ஓர் உற்சாகத்துடன் வந்துவிட்டார்.  “நான் உங்கள கேள்விப்பட்டிருக்கேன், வாசிச்சதில்லை” என்றார்.

 

நான் அதற்குமுன்புவரை அன்புடன் அவரைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன். அதன்பின் என் கண்களில் ஆர்வம் முழுமையாக அணைந்துவிட்டது. அவரிடம் அதன்பின் ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. அவர் என்னிடம் சொன்னவற்றுக்குக்கூட என் கண்கள் எதிர்வினை ஆற்றவில்லை. சொல்லப்போனால் அவர் அங்கிருப்பதை நான் அறிந்ததாகவே காட்டவில்லை.

 

அவர் மேலும் மேலும் புத்திசாலித்தனமாகப் பேசி என்னை கவர முயன்றார். நான் அவர்பக்கம் திரும்பவே இல்லை. விடைபெறும்போது கூட சரி என தலையாட்டிவிட்டு செல்பேசியில் குறுஞ்செய்திகளைப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்

 

திரும்பிச்செல்லும்போது அவர் மிகமிக ஆழமாகப் புண்பட்டிருந்தார். எண்ணி எண்ணிக் கொதித்துக் கொந்தளித்தார். “திமிர், இவர் யாரு பெரிய புடுங்கியா?” என என்னை வசைபாடினார். என் படைப்புகள் எதையாவது வாசித்து நான் ஒரு முட்டாள் என ஒரு கடிதம்போடவேண்டும் என திட்டமிட்டார். கையில் கிடைத்தது காடு நாவல். அதை வன்மத்துடன் வாசிக்க ஆரம்பித்தார்.

 

மெல்ல அந்நாவல் அவரை உள்ளிழுத்தது. நான் அவருக்கு அணுக்கமானவனாக ஆனேன். என் படைப்புகளை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார். ஒருவருடம் கழித்து என்னை அவர் மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார். நான் அவரை அடையாளம் காணவே இல்லை. அவர் அறிமுகம்செய்துகொண்டபோதுகூட முகம் ஞாபகம் வரவில்லை. அவர் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்

 

மீண்டும் ஒருமுறை சந்திக்கநேர்ந்தது. அவர் ஏழாம் உலகம் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார். ஏழாம் உலகுக்கு அடியிலும் ஒரு எட்டாம் உலகம் இருப்பதை மெலிதாக அந்நாவல் தொட்டுச்சென்றிருப்பதைப்பற்றி. நான் அவரிடம் பேச ஆரம்பித்தேன். அடிக்கடி சந்திக்கலானோம். அணுக்கமான நண்பர்களாக ஆனோம்

 

உண்மை என்னவென்றால் இது எதுவுமே எனக்குத்தெரியாது. அவரை நான் வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை. அவர்  என்னை வாசிக்கவில்லை என்று சொன்ன மறுகணமே இயல்பாகவே என் மனம் அவரை விட்டு விலகிவிட்டது. என் உலகில் அவர் முழுமையாகவே இல்லாமலாகிவிட்டார். இது தப்பா சரியா என்பது விவாதமே அல்ல, எழுத்தாளர்கள் எங்கும் அப்படித்தான்.

 

அப்படி நிகழலாகாது என்றால் அவரே ஓர் எழுத்தாளராக, சிந்தனையாளராக, ஆய்வாளராக இருக்கவேண்டும். அல்லது மிக அசலாக எதையாவது சொல்லியிருக்கவேண்டும். எந்த மனிதருக்கும் எல்லாரும் நினைவிலிருப்பதில்லை. வட்டத்திற்குள் வட்டத்திற்குள் வட்டம் என அவர்கள் நெருக்கங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். அனைவரையும் நினைவில் வைத்திருக்கமுயல்பவர் சிந்திக்கமுடியாது.

 

என் வட்டம் சிந்தனையின் , கருத்துக்களின் வட்டம்தான். அதில் என் நினைவாற்றலைப்பற்றி இதுவரை பலர் பிரமிப்புடன் எழுதிவிட்டார்கள். ஒரு முக்கியமான கருத்தைச் சொன்னவரை நான் மறப்பதே இல்லை. அக்கருத்தாகவே அவரை நான் நினைவில் வைத்திருப்பேன். பல சமயம் நூல்களை மட்டும் அல்ல வரிகளைக்கூட. ஆனால் அன்றாடம் சந்திக்கும் ஒருவரை மறந்துவிட்டிருப்பேன்.

 

வாசிக்காமல் எழுத்தாளரைச் சந்திப்பதும், அவரிடம் ‘ உங்களை நான் வாசித்ததில்லை’ என்று சொல்வதும் நேரடியான அவமதிப்பு மட்டுமே. அதை தமிழ்நாட்டில் கூசாமல் செய்வார்கள். அது  இங்கே ‘கள்ளமற்ற தன்மையாக’ எண்ணப்படுகிறது. ஒரு பெருமையாகக்கூட பல பெரியவர்களால் மேடைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. நம்மை ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் அந்த மேடையிலேயே “நான் இவரைப் படித்ததில்லை” என்று சொல்வது அடிக்கடி நிகழ்கிறது. நம் கல்வியாளர்களில், அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் இத்தகைய சும்பன்கள்தான்.

 

ஒருமுறை திருவனந்தபுரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்குச்செல்ல சுந்தர ராமசாமிக்குக் கார் வந்தது. ஓட்டுநர் “சார் எழுதின ஒரு புளியமரத்தின்கதை வாசிச்சிருக்கேன்” என்றார். சுரா மலர்ந்துவிட்டார். அங்கு செல்வதுவரை அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். புளியமர ஜங்ஷன் போல நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் இருந்த பல சாலைச்சந்திப்புகளைப்பற்றி.

 

சுரா அரங்குக்கு உள்ளே நுழைந்ததும் நான் ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்தேன். முந்தையநாள் மாலைதான் சுராவை அழைத்துவருவதுபற்றி ஓட்டுநரிடம் நீல.பத்மநாபன் சொல்லியிருக்கிறார். அதற்குமுன் அவரைப்பற்றி ஓட்டுநர் கேள்விப்பட்டதே இல்லை. அன்றே வாடகைநூலகம் போய் அவரது புத்தகங்களுக்காகத் தேடி புளியமரத்தின் கதையை எடுத்து அறுபது பக்கம் மட்டும் படித்திருந்தார்

 

“படிக்காம போய் நின்னா அவருக்கு அது அவமானம் இல்ல சார்? நீ எழுது , ஆனா நான் படிக்கமாட்டேன்னு சொல்றது இல்லியா அது?” என்றார் ஓட்டுநர். “ஒருவாட்டி கதகளி ஆசான் கிருஷ்ணன்நாயரை கூட்டிட்டு போகணும். ஃபோன்போட்டு உள்ளூர் கதகளி ரசிகனிட்ட அவர் எப்டி யாருன்னு கேட்டுட்டுப்போனேன். ஒரு பெரியவர்கிட்ட அவரை சுத்தமா தெரியாதுன்னு சொல்லக்கூடாது”

 

இன்னொரு அனுபவம். மறைந்த கேரள அமைச்சர் நீலலோகிததாசன் நாடார் அன்று இருபத்தெட்டு வயதான என்னை அறிமுகம் செய்துகொண்டபோது “தெரியும், மலையாளத்திலே ஒரு கட்டுரை வாசிச்சிருக்கேன். தமிழிலே ஒரு கட்டுரை வாசிச்சிருக்கேன்” என்றார். முந்தையநாள் நிகழ்ச்சி நிரலைப்பார்த்ததுமே ஆ.மாதவனை அழைத்து எல்லாரையும் பற்றிக்கேட்டு அறிந்து அவரிடமிருந்தே சாம்பிளுக்கு சில எழுத்துக்களை வரவழைத்து வாசித்திருந்தார்

 

இது ஒரு அடிப்படை அறிவுலக நாகரீகம். ஓர் எழுத்தாளரைத் தெரியாமலிருக்கலாம். ஆனால் முன்னரே அவரைச் சந்திக்கப்போகிறீர்கள் என்றால் உறுதியாக கொஞ்சமேனும் வாசிக்கவேண்டும். முன்னரே வாசித்திருந்தால்கூடப்  புரட்டிப்பார்த்து பெயர்களை, கருக்களை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவரிடம் அவற்றைச் சொல்லியே பேசவேண்டும். “நெறைய வாசிச்சிருக்கேன் சார், ஒண்ணுமே ஞாபகமில்லை” என்பதைவிட அவர் மூஞ்சியில் துப்புவது மேலும் நாகரீகமானது

 

முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு, முன்னர் வாசித்ததும் இல்லை என்றால் நீங்கள் ஒரு வாசகராக அவரிடம் காட்டிக்கொள்ளவே வேண்டாம். எனக்கு அந்தச்சலுகை இல்லை, நான் அறியப்பட்ட வாசகன். அப்படி நிகழ்ந்தது என்றால் வாசிக்காமைக்கு மன்னிப்பு கோருவேன். ஒரே வாரத்தில் அவரது படைப்புக்களை வாசித்துவிட்டு கடிதம்போடுவேன்.

 

எழுத்தாளர்களிடம் புத்திசாலித்தனமாக, அறிவார்ந்த முறையில் பேசவேண்டுமென்பதில்லை. நீங்கள் யாரோ அதை இயல்பாக வெளிப்படுத்தினால்போதும். நல்ல எழுத்தாளனிடம் எவரும் தன் அளவைவிட மேலதிகமாக தன்னை காட்டிக்கொள்ளமுடியாது. ஐந்துநிமிடங்களில் தெரிந்துவிடும்.

 

வாசிக்காமல் எழுத்தாளரைச் சந்தித்து “வாசிச்சதே இல்லை சார்” என்று அறிமுகம் செய்யும்போது ஒருவர் தன்னை கீழ்மைப்படுத்திக்கொள்கிறார். அதன்பின் நான் இவ்வளவு பணம் வைத்திருக்கிறேன், இன்ன பதவியில் இருக்கிறேன் என என்ன சொன்னாலும் அங்கே அவரது மதிப்பு முழுமையாக அழிந்துவிட்டது. நாகரீகமான எழுத்தாளர்கள் அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். என்னைப்போன்றவர்களின் முகம் அப்போதே மாறிவிடும். அவரைப்பற்றி ஆழமான ஒரு ஏளனம் அல்லது அலட்சியம் உள்ளூரக் குடியேறிவிடும். அதை என்னால் மறைக்கவே முடியாது.

 

 

சரி, ஏன் வாசித்தே ஆகவேண்டும்? வாசிக்காமலிருந்தால் என்ன தப்பு? இயல்பாக வெள்ளந்தியாக ஏன் இருக்கக்கூடாது? இருக்கலாம், நீங்கள் ஒரு பிளம்பராக எழுத்தாளரை சந்திக்கிறீர்கள் என்றால் அந்தவேலையைச் செய்யலாம். பிளம்பராக அறிமுகம் செய்துகொள்ளலாம். அவர் வீட்டுக்கு காய்கறி விற்கப்போனால் அதை விற்கலாம். காய்கறியைப்பற்றிப் பேசலாம். அந்த எல்லையைக் கடந்து உங்களை அறிவுத்தளம் சார்ந்தவராக அறிமுகம்செய்துகொள்ளக்கூடாது. அந்தத்தகுதி வாசிக்காதவருக்கு இல்லை

 

முந்தைய கட்டுரைகள்

 

எழுத்தாளரைச் சந்தித்தல்


எழுத்தாளர்களை அணுகுதல்


எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்

$
0
0

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் இவ்வருடத்தைய இலக்கியவிருது மூத்த படைப்பாளி வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. 25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கு [ஆர் எஸ் புரம் கோவை]யில் விழா நிகழ்கிறது. கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

 

விழாவில் வண்ணதாசன் பற்றிய நூல் ஒன்றும் அவரைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த நதியின் பாடல் என்னும் ஆவணப்படமும் வெளியிடப்படும்

 

முந்தையநாள் , 24-1-2016 சனிக்கிழமை காலைமுதல் நண்பர்கள் வந்துகூடுவார்கள். கோவை குஜராத்திபவனில் வரும் அனைவருக்குமே தங்குமிடம், உணவு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. காலைமுதலே இலக்கியச்சந்திப்புகளும் படைப்பாளிகளுடன் உரையாடலும்  நிகழும். பல எழுத்தாளர்கள் என் தனிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வருகை தருகிறார்கள். முறைப்படுத்தப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிகமாக வாசகர்கள் விரும்பினால் படைப்பாளிகளுடன் தனியுரையாடலும் நிகழ்த்தலாம்

 

அனைத்துநண்பர்களையும் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் அழைக்கிறேன். வருகை தந்து கௌரவிக்கவேண்டுமென கோருகிறேன்

 

ஜெயமோகன்

vishnupuram elakiyavattam_AW02

 

 

vishnupuram elakiyavattam_AW02

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’– நூல் பன்னிரண்டு–‘கிராதம்’ –60

$
0
0

[ 24 ]

மலைப்பாறைகளை கட்டித்தூக்கும் வல்லமைகொண்ட மென்பட்டுநூல். மெல்லியது வல்லமைகொண்டதாகும்போது வாளெனக் கூர்கொள்கிறது. யாழ்நரம்பென இசை எழுப்புகிறது.  அவள் மூச்சு அவன் மார்பின்மேல் படர்ந்தது. “ஏன்?” என்று அவன் காதுக்குள் கேட்டாள். “என்ன?” என்றான். “அஞ்சுகிறீர்களா?” என்றாள். “ஏன் அச்சம்?” என்றான். “பின்?” என்றாள். அவன் பொருளில்லாமல் “ம்” என்றான். அவன் கைகள் ஓய்ந்துகிடந்தன.

“விழைவின் உச்சியிலும் ஆண்கள் செயலிழப்பதுண்டு” என்றாள் அவள். அவன் “ம்” என்றான். அவள் மெல்ல சிரித்து “அப்படி இல்லையென்று தெரிகிறது” என்றாள். அதற்கும் அவன் “ம்” என்றான். காமத்தில் சொற்கள் ஆற்றுவதென்ன? காமத்தை கூர்தீட்டுகின்றனவா? இல்லை அவை இவ்வெரிதழல் உமிழும் சருகுக்கரிகள் மட்டுமே. பொருளின்றி சுழன்று அலைபாய்கின்றன. பொருளென்பது அவ்வெரிதலின் பதற்றம் மட்டுமே. விழிகூர்ந்து நாபறக்க இரைநோக்கிச் செல்லும் நாகங்கள்போல அவள் கைகள் அவன் தோளை வளைத்தன. அவை விரல்நுனிகளில் வியர்வையீரத்தால் குளிர்ந்திருந்தன. கைகள் வெம்மைகொண்டிருந்தன. அவள் முகத்தை அவன் தோள்களில் புதைத்து “என்ன?” என்றாள்.

சொற்கள் பொருளிழக்கையில் அச்சம் அளிக்கின்றன. அயல்நிலத்தில் அறியா விலங்குபோல. பொருளை அள்ளி அச்சொற்கள் மேல் பூசத் தவிக்கிறது நெஞ்சு. “என் மேல் சினமா?” ஆனால் கொதிக்கும் கலம் மீது மெழுகும் அரக்கும் என உருகி வழிகின்றன பொருள்கள். சொல் நின்று அனல்கிறது. “ஏன் சினம்?” சொல்லையே ஒரு காமஉறுப்பென மெல்ல சுண்டிக்கொண்டிருக்கலாம். சுட்டுவிரல்தொட்டுச் சுழற்றலாம். தொட்டுத்தொடாமலென நீவலாம். காமத்தில் மட்டும் மெல்லத் தொடும்தோறும் எழுகிறது அனல். “பின் ஏன்?” காமம் உயிர்கொண்டபின் உடலுறுப்புகள் ஆடைகளை வெறுக்கின்றன. சொல் பொருளை தன்மீதிருந்து கிழித்துக்கிழித்து அகற்றுகிறது. “தெரியவில்லை.”

அவள் வாயிலிருந்து மென்மணம் எழுந்தது. வாய்நீரல்ல. அனல்கொண்ட குருதியின் மணம். உருகிச்சொட்டும் தசையின் மணம். உள்ளெங்கும் நொதிக்கிறதுபோலும் அமுது. கலத்தின் மூடி மெல்ல திறந்து ஆவி எழுகிறது. நுரையா இப்பற்கள்? நொதிப்பவற்றுள் குடியேறும் தெய்வம் என்ன? நொதிக்கும்பொருள் பிறிதொன்றாகிறது. குமிழியிட்டு நுரைத்துப் பொங்கி எல்லைகளை கடக்கிறது. இருக்கும் கலங்களில் அமையும் இயல்பே நீர்மை. பொங்கி கரைகடத்தலே நொதிப்பு. நொதிப்பவை அனைத்திலும் பித்து உறைகிறது. நெஞ்சறைந்து கூவி தலைவிரித்தாடும் வெறியாட்டுவேலனின் விசை. கள்ளிலெழுவது தலைசுழற்றிப் புயலாடும் தென்னையின் களி. களியுறையா உயிர்கள் உண்டா என்ன?

எண்ணங்கள் தொட்டுத்தொடர்ந்தோடும் இவ்வெளியின் தொடக்கத்திலும் இறுதியிலும் நின்றிருக்கும் வைரம் ஒளிரும் விழிகொண்ட தெய்வங்கள் எவை? “என் மேல் அன்பில்லையா?” தெய்வங்களுக்குப் பிரியமான செயல் பொருட்கள் நிலையழிவதுதான்போலும். மலைவிட்டு இறங்கும் பாறையுடன் பாய்கின்றன. அலையெழும் கடல்மேல் களியாடுகின்றன. மதம்கொண்ட களிறு அவற்றுக்கு உகந்தது. சீறும் நாகமே அவற்றுக்கு அண்மையானது. “ஏன்?” அவள் வியர்வையில் உப்புமணம் அகன்றது. ஊன்சாறென துளிக்கும் பிறிதொரு வியர்வை. கழுத்தில் அதன் ஈரக்கோடுகள். தோளில் அதன் மென்னொளி. “அன்பிருந்தால் இப்படியா?”

வேறொரு மணம். கருவறைக்குள் சுருண்டிருக்கையிலேயே அறிந்தது. கருக்குழவிகளின் புன்தலையில் வீசுவது. “என்ன?” ஊடுபவள் மேலும் அணுகலாகுமா என்ன? முலைக்கண்கள் விரல்களாகி தீண்டின. “அன்பா?” தொட்டு விலகுபவற்றை மேலும் தாவிப்பற்ற எழுவது எது? “அன்பென்றால் ஒன்றாவது.” மீண்டும் வந்து தொடுகையில் ஆயிரமாண்டுகாலம் அறிந்ததாக அது தெரிகிறது. “ஆம்.” தொட்டுத்தொட்டு விலகி விலகி இங்கு ஆடிக்கொண்டே இருக்கும் ஒரு விளையாட்டு. “ஒன்றாகத்தான்.”

அவள் முலைகள் அவன் மார்பில் பதிந்தன. கழுத்தைச்சுற்றிய கைகள் தலையைப்பற்றி இழுத்து குனியச்செய்தன. நாகச்சுருளில் படம் எழுவதுபோல அவள் மேலுடல் விழுத்தொடைகளில் இருந்து விம்மி எழுந்தது. பிறந்த நாய்க்குட்டிபோல விழிசொக்கியிருந்தாள். உதடுகள் அறியாச்சொல் ஒன்றை உச்சரிப்பதுபோல அசைந்தன. என்ன சொல் அது? சொல்லேதான். ஆனால் மானுடச்சொல்லா? சொல்லென்றால் அதுவே புடவிப்பின்னலில் பிறந்த முதற்சொல். அது குறிப்பதே பிரம்மம் கொண்ட முதற்பொருள். மூச்சில் மூக்குச்சிமிழ்கள் விரிந்தசைந்தன. மேலுதடு பனித்திருந்தது. கன்னக்கொழுமைகளின் சிறியபருக்கள் செவ்வரும்புகள் என துடித்தன.

“நான் எதிர்நோக்கியிருந்தேன்.” எங்கோ நீர்த்துளிகளென சொட்டிக்கொண்டிருந்தன அச்சொற்கள். அவள் உதடுகள் சொன்னது அதுவல்ல. மேலுமேதோ சொல்ல வந்தாள். ஊடேபுகுந்தது குழல்கற்றை ஒன்று. பல்லியென ஓசையிட்டு அதை அள்ளி பின்னாலிட்டாள். கையில் தொட்ட செவிக்குழையை சுழற்றி எடுத்து வீசினாள். நெற்றிக்குங்குமம் ஈரத்தில் கரைந்திருந்தது. புருவம் மழைநனைந்த மென்புல்நிரை. இமைகள் தேனருந்தும் வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் என சொக்கிச் சொக்கிச் சொக்கி அசைவழிந்தன. அவள் உடல்தளர்ந்ததுபோல பின்னால் வளைய தன் கைகள் அவள் இடையை பற்றியிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். குலைவாழை ஒன்றை கையில் தூக்கும் நிகரின்மையின் தடுமாற்றம். அதை தோளோடு சேர்த்து உடல்வளைவுடன் இணைப்பதொன்றே வழி. “மெல்ல” என்றாள். “என்ன?” மேலும் மேலுமென மூச்சு. நெகிழ்ந்த கச்சு இறங்கி தெரிந்த வெண்மை. நீர்விளிம்பு பின்வாங்கிய பொற்சேற்றுக்கரையின் மென்கதுப்பு. மயிர்க்கால்களனைத்தும் புள்ளிகளாக சிலிர்த்து நின்றிருந்தன.

இது கணம். எது கரையென தடுக்கிறது? ஏதோ பின்விசை. இது நுரைக்கோட்டை. இது பனித்திரை. ஆயினும் அப்பாலிருக்கிறது அக்கணம். மலைப்பாறைகளை கட்டித்தூக்கும் வல்லமைகொண்ட மென்பட்டுநூல். அவள் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டே இருந்தது. கூட்டிலிருந்து விழுந்த குருவிக்குஞ்சின் நெஞ்சென. மென்மை மென்மை என. அவன் அசைவற்ற விழிகளுடன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு கணமாக நழுவியது. அவள் இமைகள்மேல் ஒரு விதிர்ப்பு. கழுத்தில் ஒரு நரம்பின் மெல்லசைவு. விழிதிறந்து அவனைக் கண்டதுமே கூசியவள்போல மீண்டாள். அக்கணமே அவன் கைகளிலிருந்த அவள் உடலின் எடை மறைந்தது. காதோர மயிரை நீவி சீராக்கியபடி “நெடுநேரமாகிறது. நான் வந்த பணி ஒன்றுள்ளது” என்றாள்.

எதிர்பாராதபடி அந்த நாள்புழக்கச் சொற்கள் அவன் நாணைச் சுண்டி வில்லை உயிர்கொள்ளச் செய்தன. அவள் இடையை சுற்றி வளைத்து தன் உடலுடன் சேர்த்து இறுக்கி குனிந்து அவள் உதடுகளை தன் உதடுகளால் கவ்விக்கொண்டான். அவன் குழல்கற்றைகளை அவள் விரல்நுழைத்து அள்ளிப்பற்றி இறுக்கினாள். தசை தசையை தொட்டுத்துழாவி உயிர் பிறிதொன்றை அறிந்தது. ஒரு முட்டைக்குள் தழுவிப் பிரிந்து சீறி மீண்டும் தழுவும் நாகக்குழவிகள். விழியிலாதோன் விரல்கள். சிற்பத்தை, கனிகளை, பொற்கலங்களை, அணிச்செதுக்குகளை, அம்பின் கூர்முனையை அறிந்தன. “என்ன சீற்றம்?” காதருகே எள்ளி நகைப்பது பிறிதொரு கன்னி. “மெல்ல, மெல்ல…” கொஞ்சி முத்தமிடுவது அறியாத அன்னை. “அய்யோ” என கூசிச்சிரிப்பது அறியாமைகொண்ட சிறுமி. மெல்ல முனகுவது அக்கணம் பிறந்த பைதல்.

முத்தங்களென்று உண்ணத்தலைப்படுகின்றது உடல். உண்டு உண்டு எஞ்சுவது உடல். வால்விழுங்கிய நாகம் உண்டு முடிப்பதே இல்லை. விரல் தொட்டுத்தொட்டு மென்மைகொண்ட முழவுத் தோற்பரப்பு. அதிர்ந்ததிர்ந்து நின்றிருக்கும் யாழ்த்தந்தி. இது புரி. இது குமிழ். இது குடம். இது உள்ளிருந்து ஊறும் பேரிசையின் கார்வை. அவன் கை அசைவிழந்தது. “ஏன்?” அவன் அவளை விட்டுவிட்டு எழுந்தான். அவள் பின்னால் சரிந்து தன் அவிழ்ந்த குழல்பரப்புமேல் விழுந்தாள். “ஏன்?” என்றாள். கைகளை நீட்டி “ஏன்?” என்றாள். களிமயக்கிலெனக் குழைந்தது குரல். “வேண்டாம்.” அவள் சிணுங்கலாக “ஏன்?” என்றாள். அவன் “நான் செல்கிறேன்” என்றான். “விளையாடாதீர்கள்!” அவன் தன் ஆடையை சீரமைத்தான். அவ்வசைவிலேயே அவனிடமிருந்து அனல் அகன்றுவிட்டதை அவள் உணர்ந்துகொண்டாள். கையூன்றி எழுந்து “ஏன்?” என்றாள். பெருமூச்சுடன் “வேண்டாம்” என்றான்.

அவள் முகம் சிவந்து சீற்றம்கொண்டது. எழுந்து நின்றபோது கனல்கொண்ட பொற்கலங்களெனச் சிவந்திருந்த இரு முலைகளும் கருங்குவளை மொக்குகளுடன் எழுந்தமைந்தன. “என்ன ஆயிற்று, மூடா?” என்றாள். சினமும் உதடுகளை எரிந்துருகச் செய்யும். “நான் செல்கிறேன்” என்றான். “என்ன ஆயிற்று உனக்கு? அறிவிலியா நீ? இல்லை, உன் தந்தையைப்போல ஆணிலியா?” அவன் அச்சினச்சொற்களால் முழுமையாக நிலையமைந்தான். புன்னகையுடன் “அறியேன், ஆனால் இத்தருணத்தில் இது வேண்டியதில்லை என எண்ணுகிறேன்” என்றான். “சொல், ஏன்? அதை நான் அறிந்தாகவேண்டும்” என்றாள். “ஏனென்றால் இதற்குப்பின் எனக்கு எஞ்சுவதொன்றில்லை.”

அவள் விழிகள் சுருங்கின. அவன் “நீ என் காமத்தின் முழுமை. முழுமை என்பது இறப்பு” என்றான். அவள் புன்னகை செய்தாள். பல் தெரியாமல் இதழ்நீண்டு கன்னங்களில் குழிகள் எழ விழிகளில் கூர் ஒளிவிட. நஞ்சுமிழப் புன்னகைக்கும் கலையறியாத பெண்கள் உண்டா என்ன? “அஞ்சுகிறாயா?” அவன் அவள் விழிகளை நோக்கி “ஆம்” என்றான். “நீ மூடன். உன் உளம் அளிக்கும் மாயங்களை நம்புகிறாய் என்றால் எப்போதும் எதையும் நீ அறியப்போவதில்லை” என்றாள். “ஆம், ஆழுள்ளம் சொன்னதுதான்” என்றான். “என்ன?” அவன் அவளை விழிவிலக்காமல் நோக்கினான். நோக்கமுடியும்வரைதான் வெல்லமுடியுமென அவன் அறிந்திருந்தான். “இது அவருக்கு எதிரானது.”

அவள் அதை உணர்ந்திருந்தாள் என விழிகளில் வந்த வஞ்சம் காட்டியது. எனினும் “எவருக்கு?” என்றாள். “இளைய யாதவருக்கு.” அவள் இதழ்கள் மேலும் கேலியைக் காட்டி ஒருபக்கமாக வளைந்தன. “அப்படியா?” என்றாள். அதிலிருந்த நஞ்சின் கடலை முற்றறிந்தும் அவன் விழிகளை விலக்கவில்லை. “ஆம், காமத்திலாயினும் நான் தேடுவது ஒன்றையே. அதை இங்கே முற்றறிந்துவிட்டேன் என்றால் அவர்முன் நீட்ட ஓர் ஒழிந்த கலம் எனக்கு எஞ்சியிருக்காது.” அவள் கழுத்திலொரு நரம்பு துடித்தது. “வீணன்… நீ ஒரு அடிமை” என்றாள். “ஆம்” என்றான் அவன். “மேலும் மேலும் அதை உணர்கிறேன். முற்றடிமை. பிறிதொன்றுமில்லை.”

“மூடா, நீ அறியக்கூடுவன அனைத்தையும் இங்கு இதனூடாக அறியலாம். நீ தேடுவன அனைத்தும் உன்னுள் இருந்து ஊறி எழுந்து உருக்கொண்டு உன் நானென நின்றிருக்கின்றது இதோ!” அவன் தன் விழிகள் அதுவரை இருந்த முயற்சியின் சலிப்பை இழந்து இயல்பாக அவளை நோக்குவதை உணர்ந்தான். “ஆம், ஆனால் நான் அதை அவரிடமிருந்தே பெறவிழைகிறேன்.” அவள் கண்கள் மீண்டும் கனிவுகொண்டன. “நான் சொல்வதை கேள். அவரிடம் இருந்து நீ அதை அறியப்போவதில்லை. உனக்கு அது சொல்லப்படும். அதை கேட்கும்பொருட்டு நீ இழப்பவை பெருகி உன்னை நிறைப்பதனால் இறுதிக்கணம் வரை நீ அதை உணரமாட்டாய்.”

அவன் பெருமூச்சுடன் விழிகளை விலக்கிக்கொண்டான். “ஆம், அவ்வாறே நிகழலாம். இறுதிக்கணம் வரை அது எனக்கு திறக்காமலாகலாம்.” அவள் உரக்க “திறக்காது. அப்பொற்கதவத்தை பார்ப்பாய். அதன் தாழைத் தொடுவாய். விலக்கி நுழைய தோள்வல்லமை இல்லாது இப்பக்கமே நின்றிருப்பாய். அது நஞ்சினூடாக அறிதல். இதோ, இது இனித்தினித்து அறிந்து அதுவாதல். இதைத் துறந்து சென்றால் நீ அடைவதேதென்று அறிவாயா? இழப்புகள்… இழப்புகளுக்குப் பின் மானுடன் இயல்புநிலை மீளவே முடியாது. மூடா மூடா மூடா… எப்போது இந்த இருள்வான்போல்  வந்துசூழும் அறியாமையை அடைந்தாய்?” என்றாள்.

அவன் தலைதாழ்த்தியபடி “இழப்பின், துயரின் முற்றிருள்தான். அதை நான் முன்னரே கண்டுவிட்டேன்” என்றான். அவள் அருகே வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். “சொல், வேறென்ன? வேறென்ன உனக்கு?” அவன் தாழ்ந்த குரலில் “அறியாமைதான். நான் அவர் முன் பிறந்துவிழுந்த பைதலின் வெற்றுள்ளத்துடன் நிற்க விழைகிறேன். சீம்பாலின் குருதிச்சுவையுடன் அவர் சொற்கள் எனக்கு அருளப்படவேண்டுமென எண்ணுகிறேன். முற்றறியாமை கொண்டு ஆசிரியனை அணுகாதவன் எதையும் அறிவதில்லை. தன் ஆணவத்தையே அவருடைய சொற்களென எண்ணி மயங்குவான். தன் குருதியை சுவைத்துச் சுவைத்து இறக்கும் புண்பட்ட ஊனுண்ணியென அழிவான்” என்றான்.

“அவன் ஆசிரியன், ஒப்புகிறேன்” என்று அவள் அவன் கைகளை எடுத்து தன் தோள்கள் மேல் வைத்துக்கொண்டாள். “ஆம், அவன் மெய்மையைச் சூடி நின்றிருக்கும் ஞானி. ஞானமென்றேயாகி தன்னைக் காட்டும் யோகி. மெய்மையென்று தன்னுடல் ஒளிர நின்றிருக்கும்பொருட்டு மண்ணில் துளித்துச் சொட்டிய பிரம்மம்.” அவன் விழிகளை நோக்கி “ஆனால் இங்குள்ளது உன் மேல் கனிந்த தந்தை. உன்னை அழைத்துச்செல்லும் காதலி. உனக்காகவே கனிந்த மெய்மை. எண்ணிப்பார், தெய்வங்களை விடவா ஆசிரியன் அணுக்கமானவன்? பிரம்மத்தைவிடவா அவன் முழுமையானவன்?” என்றாள்.

“ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “தெய்வங்களென இவற்றைச் சமைப்பது என் தன்னிலைதான். பிரம்மமோ தன்னை பிற ஒன்றென்றே காட்டும் தன்மைகொண்டது. ஆசிரியன் மட்டுமே பிறிதொன்றென முழுமைகொண்டு நின்று நம்மை அவனிடம் இழுப்பவன். நானறிந்தது ஒன்றே, அனைத்தையும் உதறி ஆசிரியனை அணுகாதவனுக்கு சொல்திறப்பதில்லை.” அவள் மெல்ல தளர்ந்தாள். மென்தோள்களில் ஒன்று சரிய இடை ஒசிய தொடை ஒன்று மேலெழுந்தது. “என்ன சொல்கிறாய் என்றே தெரியவில்லை. மானுடர் இப்படி சொல்லக்கூடுமென்றே எண்ணமுடியவில்லை.” அவன் “நானும் இதை ஏன் சொல்கிறேன் என்று எண்ணி வியக்கிறேன். ஆனால் நான் பிறிதொன்றுமில்லை. நான் கலம். இதில் அமுது நிறையவேண்டுமென்றால் முற்றொழியவேண்டும். முழுத்தூய்மை கொள்ளவேண்டும். அதன்பொருட்டே இந்த அல்லல்களும் தேடல்களும். அது ஒன்றே தெளிந்து தெளிந்து வருகிறது” என்றான்.

அவன் கைகளின் எடையை அவள் உணர்ந்தாள். வலக்கையை எடுத்து தன் முலைமேல் வைத்தாள். அக்கணமே விசையெழுந்து முன்னால் பாய்ந்து அவனை முலைக்குவைகள் அழுந்த மூச்சு சீற கைவளைத்து பற்றிக்கொண்டாள். அவன் அவளை பிடித்துத்தள்ளினான். மல்லாந்து நிலத்தில் விழுந்தபோது அவள் இடைநெகிழச் சுற்றியிருந்த ஆடையும் விலகியது. இருகைகளையும் விரித்து “அளிகூர்க!” என்றாள். “பொறுத்தருள்க!” என்றபடி அவன் திரும்பினான். “செல்லாதே… விழைவறிவித்தபின் விலக்கப்பட்ட பெண்ணின் பெருந்துயரை நீ அறியமாட்டாய்” என்றாள். அவன் மேலும் ஓர் அடி எடுத்துவைத்தான். அவள் விசும்பும் ஒலி கேட்டது. எடைகொண்ட கால்களுடன் அவன் மேலும் நகர அவள் சீறலென ஒலி எழுப்பி அழுதாள்.

அவ்வழுகையை அவன் கேட்டுக்கொண்டே சென்றான். நெடுந்தூரம். ஐந்து காலடிகளால் ஆன முடிவிலி. அழுகையொலியைக் கடப்பது எளிதல்ல. மலைப்பாறைகளை கட்டித்தூக்கும் வல்லமைகொண்ட மென்பட்டுநூல். மேலுமொரு அடி. அவள் சீற்றத்துடன் எழும் ஒலியை கேட்கமுடிந்தது. நாகமொன்று படமெடுத்ததுபோல மூச்சு. “நில், மூடா நில்!” அவன் திரும்பாமல் நின்றான். அவள் அவனை நோக்கி வந்து அவன் தோளைப்பற்றி திருப்பினாள். நீர்மை அனலென எரிந்த விழிகளை கண்டான். வெறித்த முகத்தில் பற்கள் சினத்தின் ஒளிகொண்டிருந்தன. “நீ என்னை சிறுமைசெய்தாய்… திரிந்த காமம்போல் நஞ்சு பிறிதில்லை என நீ அறிவாய்.”

“தீச்சொல்லிடுகிறாய் என்றாலும் ஆகுக! நான் என் முழுமையை அவருக்கு படைத்துவிட்டேன்” என்றான். அச்சொற்களால் அவன் உள்ளம் உவகை கொண்டெழுந்தது. “அதை உணரும்தோறும் நான் மேலும் மேலும் விடுதலை கொள்கிறேன். அழகியே, நான் இன்னமும் பிறக்கவே இல்லை. கருவறைக்குள் தொப்புள்கொடியால் உணவும் உயிர்ப்பும் கொண்டு உள்ளே உறைகிறேன். என்னை அவர் சுமக்கிறார். அவருடைய குருதி. அவருடைய உயிர். அவரே என் உணர்வுகளும் எண்ணங்களும். நான் எதற்கும் பொறுப்பல்ல இனி.”

“பெண்ணென்றாகுக நீ!” என்று அவள் சொன்னாள். “பெண்ணாகி அறிக நான் இன்றறிந்த இழிவை. பெண்ணென்றாவதென்றால் என்னவென்றறிவாயா, பேடியே? நுரைத்துப் பெருகும் காமம்கொண்டாலும் தன்னிடம்கூட சொல்லமுடியாதவள். அளித்தாலன்றி அடையமுடியாதவள். இசைநிறைந்து ததும்பினாலும் விரல் நாடி காத்திருக்கவேண்டிய யாழின் தவிப்பென்ன என்று முற்றறியவேண்டும் நீயும். செல், உருகி நின்றிரு! சிறுமைகொண்டு அழல்கொள்! சிறுத்து நிழலென நிலம் படி! எஞ்சும் ஆணவத்தை எரித்து எழு! அன்றறிவாய் நான் இக்கணம் யாரென்று.”

அர்ஜுனன் கண்களை மூடி அசையாமல் நின்றான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டே இருந்தது. ஆடைகளை எடுத்துக்கொண்டு அவள் திரும்பிச்செல்வதன் ஓசை மட்டும் கேட்டது. அவன் விழிதிறந்து நோக்கியபோது பட்டுச்சேலையை தோளிலிட்டபடி அவள் குழல்அள்ளிச் சுழற்றி முடிவதை கண்டான். ஆடையை இடைசுற்றிவிட்டு திரும்பிநோக்காமல் சென்று மறைந்தாள். அவள் கழற்றி வீசிய குழை கீழே ஒரு துளிப் பொன் சொட்டியதென கிடந்தது. ஓர் உதிர்ந்த மலர். வான்பறவை ஒன்றின் இறகு.

அவன் குனிந்து அதை எடுக்கப்போனபோது தன் உடலை அள்ளிப்பற்றித் தொங்கிய முலைகளை உணர்ந்தான். கைவைத்தபோது அவற்றின் கரியமுனைகளை குழந்தையின் விரலென தொட்டான். இடை மெலிந்து பின்குவை பெருத்திருந்தது. கைகள் குழைந்தன. தொட்டபோது முகம் மென்மைகொண்டிருந்தது. நான் என ஒரு சொல். மறுகணம் பொருந்தா ஆடையை அணிந்திருப்பதுபோல அகம் கூசியது. அதைக் கழற்றி வீசிவிடவேண்டும். தசைகிழித்து நரம்புகளை உரித்து எறிந்துவிட்டு ஓடவேண்டும். ஒருமுறை விதிர்த்தான். வாயுமிழவேண்டுமெனத் தோன்றியது. குனிந்து தன் உடலை மீண்டும் நோக்கியதுமே நெஞ்சு அதிர்ந்து பின்னடைந்தது. கண்களை மூடி “இல்லை, இல்லை” என சொல்லிக்கொண்டான்.

பின்னர் மெல்ல தளர்வுடன் பின்னடைந்து மீண்டும் பீடத்தில் அமர்ந்துகொண்டான். அந்த அமர்கையிலேயே தன் உடலை பிறிதென்று உணர்ந்தான். ஒசிந்து அமைந்திருந்தது இடை. தோள் தழைந்து கைகள் மடியிலிருந்தன. இது என் உடல். இது நான் நிறைந்த கலம். இவ்வுடலல்ல நான். இது நான் சூடிய உருவம். மாற்றுருவம் கொண்டவன் உள்ளே மாறுவதில்லை. ஆனால் என்னை எதிர்கொள்ளும் விழிகளில் நான் பெண். அவர்கள் என்னை நோக்குகையில் எனக்குள் ஒளிந்திருந்து திகைப்பதே நான். நான் என நான் எண்ணுவது அவர்கள் அறிவதை அல்லவென்றால் நான் என சொல்லும் சொல்லுக்கு என்ன பொருள்? இருமுனைகளில் இருபொருள்கொண்ட சொல் எப்படி துடிதுடிக்கும்!

தலை நரம்புகள் முறிந்த யாழ்த்தந்திகளென துடித்தன. ஆடியை நோக்கவேண்டும் போலிருந்தது. விடாயை எண்ணத்தால் வெல்லமுயல்வதுபோல அதை அடக்கி பின் விடாயே வெல்ல எழுந்து சென்று அறைமூலையில் ஒரு குளிர்ச்சுனை என ஒளியலை அணிந்து நின்றிருந்த  சுவராடியில் தன்னை நோக்கினான். முதலில் அறியாப் பெண்ணொருத்தி திரைவிலக்கி வாயிலினூடாக அவனை நோக்கி திகைத்தபடி வருவதைப்போலவே தோன்றியது. யாரவள் என்று சித்தம் வினவியது. சரிந்த குழலைச் சீரமைத்த அசைவில்தான் அது தான் என உணர்ந்தான்.  திடுக்கிட்டு பின்னடைய அவள் அவனை நோக்கி திகைத்து தான் பின்னடைந்தாள். பின்னர் அச்சமும் ஐயமும் கொண்டு அவனை அணுகிவந்தாள். இருவரும் விழியொடு விழி தொட்டு அசைவிழந்து நின்றனர். பின் இருவருமே அஞ்சி விலகி ஓடினர்.

மூச்சிளைப்புடன் அவன் கண்களை மூடி பீடத்தில் அமர்ந்தான். அப்பால் நின்று அங்கே அமர்ந்திருக்கும் அவனை நோக்கினான். அவள் அழகி என தோன்றியது. அவள் எண்ணைக் கருங்கற்சிலையென ஒளிகொண்டிருந்தாள். நெளிவென்றும் ஒசிவென்றும் வளைவென்றும் குழைவென்றும் குவையென்றும் கரவென்றும் உடல்நிறைந்திருந்தாள். அவன் தன் முலைகளை தொட்டான். இடைவரை கையை ஓட்டினான். மீண்டும் எழுந்து ஆடியை நோக்க விழைந்தான். இம்முறை உடனே எழமுடிந்தது. கால்கள் பின்ன இடை வளைய மெல்ல நடந்தபோது விம்மியமைந்தன முலைமேடுகள்.

ஆடிக்குள் இருந்து அச்சமும் தயக்கமும் ஆர்வமும் கொண்ட ஒரு பெண் எழுந்து வந்து நீள்விழிகளால் அவனை நோக்கினாள். விழிதொட்டபோது அவள் நோக்கின் கூர் கண்டு அவன் உள்ளம் எழுந்தது. மேலும் அருகணைந்து அவளை அன்றி பிறிதிலாத விழிசூடி நின்றான். மலர்களால் அழகுறும்கொடி என விழிகளால் அழகுகொண்டிருந்தாள். அவள் எவள்? அர்ஜுனை? விஜயை? அவன் ஃபால்குனையை எண்ணினான். அது மாற்றுரு. இது தன்னுரு. உருவே அகமென்றால் இதோ என் உள்ளூர பெண் ஊறி எழுந்துகொண்டிருக்கிறாள். அச்சில் உருக்கி ஊற்றப்படுகிறேன். உறைந்து உருக்கொண்டெழுவேன். அழகி. இந்த முகம், இந்தக் கன்னங்கள், இவ்வுதடுகள், இந்தக் கழுத்து. அழகி. இது நான். அழகுபொலிந்தெழுந்தவள் நான். அவள் முலைகள் விம்மித்தணிந்தன. விழியோரம் ஈரம் கொண்டது.

புன்னகையுடன் நடந்து மீண்டும் வந்து தன் பீடத்தில் அமர்ந்தாள். அழகி என்னும் சொல்லாக இருந்தது உள்ளம். அப்போது பிறர் தன்னை நோக்குவதை விழைந்தாள். விண்வில்லென ஏறிடும் விழிகள் நடுவே ஒளிகொண்டு எழவேண்டும். மீன்கோடிகளை சூடிய கங்கையென அவ்விழிகளை அணிந்து நெளிகொள்ளவேண்டும். நெஞ்சு படபடத்தது. சுவர்களிலெல்லாம் விழிகள் திறந்தன. நிழல்களெல்லாம் அவளை நோக்கி நின்றன. நோக்குக நோக்குக நோக்குக! என்னை நோக்குக உலகே! என்னை நோக்குக காலமே!

அவள் அகக்குரல் கேட்டு வந்ததுபோல வாயில் திறந்து உள்ளே வந்து பணிந்த கந்தர்வன் விழிகளில் எதையும் காட்டவில்லை. அர்ஜுனன் இனிய பெண்குரலில் “நான் தேவர்க்கரசரின் அவைக்கு செல்லவேண்டும்” என்றான். கந்தர்வன் “தேர் காத்திருக்கிறது” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் அர்ஜுனன். “தேவபாகர் வந்தார். அவர் வந்து காத்து நிற்பதாக உங்களிடம் சொல்லும்படி சொன்னார்.” சிலகணங்கள் அவன் கந்தர்வனை நோக்கியபடி விழிநிலைத்தான். பின் இமைசலித்து தன்னை எண்ணினான். “ஆம்” என்றபடி எழுந்துகொண்டான்.

தொடர்புடைய பதிவுகள்


பூனையும் புலியும்

$
0
0

 

thirumal
நேருக்கு நேர் 
கே.வி.திருமலேஷ்
 

1

கொழுத்த பூனை ஒன்று என் வீட்டினுள் நுழைந்தது

என்னைப் பார்த்ததும் நின்றது.

அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை போலும்

அதுவும் ஒரு திங்கட்கிழமை காலையில்

எல்லோரும் வேலைக்கு போயிருக்கும் நேரத்தில்.

பூனை என்னை பொறுமையின்றி பார்த்தது.

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம்,

இருவருக்கும் பின்வாங்க மனமில்லை.

சொல்லப்படாத யுத்தம் போல ஒன்று.

எனக்குத் தெரிந்திருக்கவில்லை

பூனையின் கண்கள் அவ்வளவு சலனமற்றவை.

 

2

அதன் வால் காற்றில் விடைத்திருக்க

முடிகள் குத்திட்டு நிற்க

உகிர்களை தரையில் அழுந்தி

தெறி்த்துவிடும் வில் போல நின்றது.

என் பார்வையை அது முழுதும் மறைக்க

நான் எங்கோ பழங்காடுகளில் தொலைந்து கொண்டிருந்தேன்

பெயரறியா கடல்களில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.

நான் கண் இமைக்கவில்லை

அதுவும் கண் இமைக்கவில்லை .

அந்தப் பூனை என் முன்

தனக்குத் தானே சவால் விடுவது போல நின்றது

மனிதனும் மிருகமும் மட்டுமே இருக்கும் ஓர் தனிநிலை.

எனக்குத் தெரிந்திருக்கவில்லை

பூனையின் கண்கள் அவ்வளவு அநாதையானவை.

 

3

இறுதியில் மிருகம்தான் தோற்றது

அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டேன்.

பூனை தன் உடலை தளர்த்திக்கொண்டு பின்வாங்கியது

ஒரு பூனைநடையிலேயே நடந்து விலகியது.

அது என் எல்லையை விட்டு அகன்றபின் நான் நினைத்துக்கொண்டேன்

அதற்கு அதன் சுயமரியாதையை அளித்திருக்கலாம்.

போயும் போயும் எனக்கு என்ன கிடைத்துவிட்டது ?

வென்றே ஆக வேண்டும் என்றால் பாகுபலி போல

விட்டுக்கொடுத்து வெல்ல வேண்டும்.

எனக்குத் தெரிந்திருக்கவில்லை

பூனையின் கண்கள் தங்கள் தவறுக்காக அவ்வளவு வருந்துபவை.

 

[ஆங்கிலம் வழித் தமிழாக்கம் மதுசூதனன் சம்பத்]

 

Sukumaran 1

புலி ஆட்டம்

சுகுமாரன்

ன் செல்லப் பிராணி

பரம சாது என்றால்

நம்ப ஏனோ மறுக்கிறீர்கள்

 

சிரிக்கும்போதும் சினந்து எரியும் கண்கள்

அப்போதுதான்

திரித்து முறுக்கிய நார்வட வால்

கணக்காகப் பார்த்து

தாறுமாறாகக் கீறிய ரோமக் கோடுகள்

பாலை வெய்யிலின் உக்கிர சருமம்

நெளியும் உயிரைக் கவ்வும் வளைஎயிறுகள்

நிலம் கிழிக்கும் கொன்றை உகிர்ப் பாதங்கள்

 

எல்லாம் இருப்பதால்

அஞ்சி மிரண்டு நடக்கிறீர்கள்

 

என் செல்லப் பிராணி

சாகபட்சணி என்றால்

ஒப்புக்கொள்ள ஏனோ  தயங்குகிறீர்கள்

 

பசித்தால்

பசும் புல்லைத்தான் மேய்கிறது

தாகித்தால்

துளசி தீர்த்தமே அருந்துகிறது

 

பாருங்களேன்

புஜிபுஜி என்று அழைத்தால்

ஒரு பூனையைவிட

எவ்வளவு ஒய்யாரமாக

ஓடிவந்து காலடியில் ஒண்டிக்கொள்கிறது

 

உண்கலத்தில் பரிமாறிய வாதுமைக் கொட்டைகளை

ஒரு அணிலைவிட

எவ்வளவு பக்குவமாகப் பிளந்து கொறிக்கிறது

 

உண்ட களைப்பில்

ஒரு தியானியைவிட

எவ்வளவு சாந்தமாக சுகாசனத்தில் அமர்கிறது

 

பாருங்களேன்

அன்பு மீதூற அனிச்சையாக

சூச்சூ என்று ஒலி எழுப்பியதும்

முதல் மழைத்துளியில் சிலிர்க்கும் அரசந்தளிர்போல

எவ்வளவு பரவசத்துடன் முதுகைச் சிலிர்க்கிறது.

 

பரமசாது என் செல்லம் என்பதை

எவ்வளவு சொன்னாலும் ஏற்க மறுக்கிறீர்கள்.

 

என் அருமைப் பிராணி

வன் விலங்கு என்று

உங்களைப் போலவே எனக்கும் தெரியும்

எனக்குத் தெரியும் என்பது

என் செல்லத்துக்குத் தெரியாது.
நன்றி சுகுமாரன் இணையப்பக்கம்

இரு கவிதைகள். புலி பூனையென்றும் பூனை புலியென்றும் ஆகும் கணங்கள். நவீனத்துவ காலகட்டத்தின் உச்சகற்பனைகளில் ஒன்று விலங்கு என நம் முன் வந்து நின்றிருக்கும் ஒன்றை நோக்கிய திகைப்பு. பண்பாடென்றும் மொழியென்றும் நாமறிந்த அனைத்துக்கும் அப்பால் அது நின்றிருக்கிறது. படிமமாக்கியும் மொழியாக்கியும் அதைப் பொருள் கொள்ளச்செய்யும் முயற்சியே இக்கவிதைகள். சொல்லி முடிந்தபின் மெல்ல மென்மையான கால்களுக்குள் நகங்களை இழுத்துக் கொண்டு ஓசையில்லாமல் அவை கவிதையிலிருந்தும் அகன்று சென்றுவிடுகின்றன

சுகுமாரனுக்கு இயல் விருது\

கண்ணீருப்பின் கவிஞன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜில் ஜில் என ஆடிக்கொண்டு…

$
0
0

 

வண்ணதாசனை ஆவணப்படம் எடுக்க நெல்லை சென்றிருந்தபோது விடுதியில் இந்தப் பாடலை நெடுநாட்களுக்குப்பின் பார்த்தேன். இப்போது சினிமாவுக்குள் இருக்கிறேன் என்பதனால் அட என வியந்து எழுந்துவிட்டேன். அதன்பின் வெண்முரசு எழுதுவதன் இடைவெளிகளின் சோர்வை வெல்ல பலமுறை இதைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் அட என்றே சொல்லத் தோன்றுகிறது

சினிமா நடனத்தின் மிகப்பெரிய பிரச்சினை முகபாவனைகளுக்கும் நடன அசைவுகளுக்கும் இடையே இயல்பான ஒத்திசைவு நிகழ்வதுதான். சினிமாநடனம் சாதாரணமானது அல்ல. காமிராவின் கோணம், தளத்தின் ஒளியமைப்பு, உடன் ஆடுபவர்களின் அசைவு ஆகியவற்றுக்கு ஏற்ப நடன அசைவுகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நினைவில் கொண்டபடி ஆடவேண்டும், அந்த நினைவுகொள்ளல் முகத்தில் தெரியக்கூடாது. அக்காட்சியின் உணர்வில் ஒன்றி ஆடவேண்டும்.

இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் நடன இயக்குநர்கள் படாதபாடு படுவதைக் காண்கிறேன். இருந்தும் நடனத்திற்குரிய வாயைக் குவித்துத் திறந்து வைப்பது, நாக்கைக் கடிப்பது போன்ற பாவனைகளே ஆடுபவர்களின் முகங்களில் இருக்கும். அதைத் தவிர்க்க மகிழ்ச்சி எனத் தெரியும் ஒரே பாவனையை தக்கவைக்க அவர்களிடம் சொல்வார்கள். அவர்களும் வாயைத் திறந்து கொண்டு ஆடுவார்கள்.

இந்தப்பாடலில் தங்கவேலு இயல்பாக நடிக்கிறார். முகபாவனைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் உடலசைவுகளிலும் காலிலும் தாளம் தன்னியல்பாக நிகழ்கிறது. அவருக்கு அப்போது ஐம்பதை அடுத்த வயது என நினைக்கிறேன். எம்.என்.ராஜமும் மிகையின்றி நடித்து ஆடுகிறார். அக்கால நடிகர்களின் மேடைப் பயிற்சிதான் இந்த துல்லியத்திற்கான காரணம் என தோன்றுகிறது

ஒவ்வொரு அசைவிலும் எத்தனை திட்டமிடல்! ஆனால் இயல்பாக தெரிகிறது. சத்தியம் செய்யும்போது எம் என் ராஜம் கையை இழுத்துக்கொள்கிறார். தங்கவேலு பாய்ந்து வந்து குதிக்கும்போது பயந்து பின்வாங்கி ஃப்யூ என அறுதல்கொண்டு மூச்சுவிடுகிறார். கெஞ்சும்போது தங்கவேலுவின் கைவிரல்கள் பலவகையாக நெளிகின்றன.

அற்புதமான பாடல். எஸ்.ஜி.கிருஷ்ணனின் குரல் தங்கவேலுவே பாடுவதுபோல் ஒலிக்கிறது. ஜமுனாராணியின் குரலின் இனிமையும் அந்தக்காலத்தை தித்திப்பாக மீட்கிறது. ஆச்சரியமும் வருத்தமும் என்னவென்றால் இவர்களைப்பற்றி ஒரு நல்ல விக்கிபீடியா பதிவுகூட இணையத்தில் இல்லை என்பதுதான்.

பாடல் வரிகள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கேந்திப் பூவின் மணம் –ராஜகோபாலன்

$
0
0

CO2B0001

 

 

ஊர்பெருமை பேசுவதில் தமிழ்நாட்டில் யாரும் குறைந்தவர்கள் இல்லை. ஆனால் ஊர்கிறுக்கு பிடித்தவர்கள் குறைவு. அதுவும் இலக்கியத்தில் ஊர்க்கிறுக்கு பிடித்து அலைபவர்கள் எப்போதும் திருநெல்வேலி ஆட்கள்தான். பாவம், தஞ்சையும், கும்பகோணமும் கொஞ்சம் முட்டித்தான் பார்க்கும். ஆனால் இந்த நெல்லைக் கிறுக்குக்கு முன்னர் எந்த ஊர்க்கிறுக்கும்  இலக்கியத்தில் நிற்க முடியாது. பக்கத்து ஊர் என்பதால் வேண்டுமானால் நாரோயில் மக்களை மோருக்கு ஊறுகாய் அளவே சேர்த்துக் கொள்ளலாம்.

இலக்கியத்தில் இளந்தாரியாய் சுற்றிய காலத்தில் என் ஊரை சொல்லும் முன் மூன்று பெருமைகளை சொல்லாமல் ஊர் பேரை சொல்ல மாட்டேன். தமிழிலக்கியத்தில் சொல்லப்படும் ஐவகை நிலப்பகுதிகளும் அமைந்த ஒரே மாவட்டம் எது, பிரிக்கப்படாதிருக்கும் வரை ஒரே மாவட்டத்தில் உற்பத்தியாகி அதே மாவட்டத்தில் ஓடி அங்கேயே கடலில் கலக்கும் தமிழகத்தின் ஒரே ஜீவ நதியை சொந்தமாகக் கொண்ட உலகின் ஒரே மாவட்டம் எது, சாகித்ய அகாடமி பரிசினை வென்ற மூவர் ஒரே நகரத்தில் இருக்கும் சிறப்பு கொண்ட மாவட்டம் எது – திருநெல்வேலி என்ற பெயரை சொன்னாலே நாக்கை சப்புக் கொட்டிக் கொள்ளும் கோட்டிக்காரப் பயலாக நான்தான் இருப்பேன் என்று நினைத்தால் நூலக அலமாரிகளிலிருந்து மடிக்கு வந்த இலக்கிய கர்த்தாக்கள் பலரும் என்னிலும் கூடிய பெருங் கோட்டிகள் என்றறிய ஒரே குதூகலமாகத்தான் இருக்கிறது இப்போதும்.

இந்த ஊர் பெருமை என்பதை வட்டார இலக்கிய வகைக்குள் அடக்கி விட முடியுமா ? ஊர்பெருமை பேசாத இலக்கியவாதிகள்தாம் உண்டா ? என்றால் பதிலை சற்று விரிவாக்க வேண்டும்.

வட்டார இலக்கியத்தை என் வாசிப்பைப் பொறுத்து இரண்டாகப் பிரித்து கொள்கிறேன். முதல் வகை வட்டாரத்தின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல், ரசனைக் கூறுகளை படைப்பாக கொணர்வது. இரண்டாம் வகை வட்டார மொழி வழக்கை கையாண்டு பொதுப் படைப்பாக உருவாவது. சிறப்பான படைப்பாளிகள் இரண்டின் கலவையை சரிவிகிதத்தில் கொடுத்து, வட்டார வாழ்வியல் வழியே மானிடருக்குப் பொதுவான தளத்தில் சென்று சேரும் படைப்புகளைத் தந்து விடுகிறார்கள். புதுமைப் பித்தன், கி. ராஜநாராயணன், பூமணி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன், பவா செல்லதுரை, கண்மணி குணசேகரன் என்ற பெரும் பட்டியல் உண்டு. எல்லா இலக்கிய வாசகர்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் அந்தந்த ஊர்காரர்கள் வாசிக்கையில் ஒரு தனி வாசிப்பனுபவம் கிடைப்பது வட்டார வகை இலக்கியங்களுக்கே உரித்தான ஒரு சிறப்புதான். படைப்பை இன்னும் ஒரு அடி ஆழ்ந்து அனுபவிக்க முடிந்த கூடுதல் திருப்தி அது. அப்படி ஒரு கூடுதல் அனுபவிப்பைத் தந்த விதத்தில் வண்ணதாசன் என் அன்புக்குரிய எழுத்தாளர்.

வண்ணதாசன் எழுதுவதும், எழுதியதும் இலக்கியமாக ஆகுமா என்ற கேள்விக்கு நேரடி பதிலை தைரியமாக ஆமென்று சொல்லலாம். ஆனால் நெல்லை வட்டார வழக்கு இலக்கியமாக ஆகுமா என்ற கேள்விக்கு நேரடி பதில் கிடைக்காது. அவரது படைப்புலகை முழுவதுமாக ஒரு வட்டம் அடித்து வந்தால் பிடி கிடைக்கும். வண்ணதாசனின் படைப்புகளில் இருக்கும் திருநெல்வேலி அப்படிப்பட்டது, அது எங்கே இருக்கிறது என்று தொடரலாம்.

ஒரு பொதுப் புரிதலில் நெல்லை மண்ணின் படைப்பு என்பது மொழியால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது. நெல்லை மொழி பயின்று வரும் இடங்களை இன்று நெல்லை மக்களை விட பிற மாவட்டக்காரர்கள் சட்டென அடையாளம் கொள்கிறார்கள். திருநெல்வேலியின் பேச்சு மொழியாக திரைப்படங்களில் பயின்று வரும் மொழி நெல்லையின் பொது மொழிதான் என்றால் சிலர் வியப்படையக் கூடும். நெல்லையின் பொதுமொழிக்குள் பயின்று வரும் தனிமொழி ஒன்றுமுண்டு. ஊர்காரர்களுக்கே தெரிந்த இனவாரி, சாதிவாரி நெல்லைத் தமிழ் உண்டு. அது சாதியை, இனத்தை வட்டாரத்தை தெளிவுறக் காட்டி விடும். காயல்பட்டினம் பாயும், மேலப்பாளையம் பாயும் திருனவேலிக்காரங்க தான் பிறருக்கு. ஆனால் மூக்கு நீண்ட திருனவேலிக்காரனுக்கு இரண்டு பாய்மார்களின் ஊரை முப்பது வினாடி பேச்சில் கண்டுபிடித்துவிட முடியும். ஸ்ரீவைகுண்டம் பிள்ளைவாளுக்கும், செங்கோட்டை பிள்ளைவாளுக்கும் வேறுபாடு கண்டுபிடித்து விட முடியும். மொழியால் அடையாளம் காணப்படும் நெல்லை படைப்புகளில் வண்ணதாசனின் நெல்லை எங்கு வருகிறது ?

தனது படைப்புகளில் வண்ணதாசன் பயன்படுத்தும் நெல்லை மொழி நெல்லை வாழ் சைவப் பிள்ளைவாள்களின் மொழி. ஆண்டாண்டுகளாய் இந்த தாமிரபரணியின் கரையில் வாழ்ந்து தீர்த்த ஒரு இனத்தின் மொழி. அவரது படைப்புகளில் வரும் நெல்லைத் தமிழ் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பொன்னாக்குடி, தென்காசி, அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, பாபநாசம் பேட்டை பகுதிகளில் புழங்கும் சைவப் பிள்ளைமார்களின் மொழி. அந்த கூரிய மொழியின் திறம் வண்ணதாசனின் படைப்புகளில் சகஜமாக வரும்.

“அவாள்” என்ற சொல்லே அப்படியான “குழுஊக் குறி” சொல்தான். அவாள், அவுக, அவிய எனும் மூன்று சொற்களும் ஒரே பொருளையும், ஆனால் மூன்று சாதிகளின் மொழிப் பயன்பாட்டையும் உணர்த்தும் என்றால் நெல்லைக்காரரைத் தவிர பிறர் வியப்பார்.

தவணாப் புளி, பேந்தா ( ஒரு விளையாட்டு), அயத்து போவது, அழிரப்பர், என்று சொல்லிக் கொண்டே வரும் வண்ணதாசன் “ஜவ்வுத்தாள் பையை “ என்று சொல்லும் இடத்திலும், “சிதம்பரம் சார்வா (ள்)” என்று குறிக்கும் போதும், எருக்கம் பூவை “எருக்கலம்பூ, “எருக்கலம் புதர்” என்றே பிடிவாதமாய் சொல்லும் இடங்களிலும், “ஒக்கிட்டுக் கொண்டிருப்பது”, ”லாத்திட்டது”, ”முடுக்குதாக”, ”ரெண்டு பேரும் எசலிக்கிட்டே இருக்காக”, “போட்ஸா செய்யனுமில்லையா” என்று பேசும்போதும் 9௦ களில் மறைந்து போன திருநவேலி சட்டென மின்னி மறையும். வண்ணதாசனின் படைப்புகளைப் படித்து விட்டு இன்றைய நெல்லைக்கு சென்று இறங்குபவர் பார்க்க முடிந்தது பேர்பாதி நெல்லையைத்தான்.

வீட்டிற்கு வந்தவரை வாவென வரவேற்பதை “சித்தப்பாவை வான்னு கேட்டயாடே?” எனும்போதும், “இவ்வோ தரையில இருக்காக”, “அலையுதீளே ஆத்திக்கிட மாட்டாம“ எனும்போதும் சட்டென நெல்லை பிள்ளைவாள் வீட்டு கூடத்தில் நம்மை உட்காரவைத்து விடுவது வண்ணதாசனுக்கு இயல்பான விஷயம்.

 

அவரது கதை உலகம் பெரும்பாலும் வீடுதான். வீதி என்றால் நெல்லையின் ரத வீதிகள் நான்கும், அதன் குறுக்கு, நெடுக்கு சந்துகளும் தான். பயணம் என்பதே நெல்லையிலிருந்து தென்காசி , பாபநாசம் வரைதான். கொஞ்சம் பின்னால்தான் பயணம் நெல்லையிலிருந்து ரயிலில் சென்னைக்கு போனது. அது கூட கொஞ்ச நாட்கள்தான். அங்கும் பயணம் மின்சார ரயில்களில் மாம்பலம் நிலையத்தில் இறங்கி விட்டிருக்கும் அடிக்கடி. நெல்லை டவுண் பகுதிகளின் ரத வீதிகள், முடுக்குகள் வழியாகவே கதைகளை நகர்த்தும் வண்ணதாசன் அவரது கதைமாந்தர்களை , அவர்களுக்கான சூழலில் இயல்பாக்கி விடுகிறார். சுடலை மாடன் கோவில் தெரு, தென்னம் பிள்ளை தெரு, மாடத் தெரு, கழுவேத்தி முடுக்கு, தெக்கு புதுத் தெரு, காசுக் கடைத் தெரு என அவரது படைப்புகளில் காட்டப்படும் மொத்த தெருக்களின் நீளமும் கூட்டினால் ஐந்து கிலோ மீட்டர் கூட வராது.

அதே நேரம் அவர் காட்டும் வீடுகள் தெருக்களை விடப் பெரியவை. வாசல் படிக்கட்டில் ஆரம்பித்தால் திண்ணை ,முற்றம், தார்சா, பட்டாசல், இரண்டாம் கட்டு, அரங்கு வீடு, கூடம், அடுக்களை, மெத்து, சாய்ப்பு, கிணத்தடி என்று வளர்ந்து கொண்டே போகும் வர்ணிப்பு வீட்டு வாசலின் மரங்கள், செடிகள், பூக்கள், அதில் விளையாடும் அணில்கள், வண்ணத்து பூச்சிகள் வரை விவரிக்கும். இந்த அமைப்புக்குரிய வீடுகள் திருநெல்வேலி டவுணில் இருக்கும் சைவப் பிள்ளை வீடுகளுக்குரியவை. அவர் சொல்வதைப் போலவேதான் சிறிய சந்துகளில் ஒவ்வொரு வீடும் பெரிதாக இருக்கும். சின்ன வாசலில் நுழைந்து நீளமான பாதையில் நடந்தால் “பகார்” என்று திறந்த முற்றத்தில் நாலு வீடுகள் இரண்டிரண்டாய் ஒன்றையொன்று பார்த்த மாதிரி மாடியோடு வரும். வண்ணதாசனும் அப்படித்தான். சின்ன வாசல் திறந்து ஒடுக்குப் பாதையில் அழைத்துச் சென்று விரிந்த முற்றத்தில் நம்மை திகைத்து நிற்க வைத்து மறைந்து விடுவார். “கிருஷ்ணன் வைத்த வீடு” வாசித்தவர்கள் இந்த அனுபவத்தை துல்லியமாய் உணரலாம்.

சம்பவங்களின் நிகழிடமாக வண்ணதாசன் பயன்படுத்துவது பெரும்பாலும் வீடுகளே. சமயங்களில் பேருந்து பயணங்கள். அப்படியே வீட்டிற்கு வெளியே சம்பவங்கள் நடந்தாலும் கல்லணை வாய்க்கால், சிக்கலிங் கிராமம், குறுக்குத் துறை, கல்வெட்டாங்குழி , நெல்லையப்பர் கோவில் என்று பெரும்பாலும் ஊருக்குள்தான் நடப்புகள் எல்லாம். ஆனால் அதற்குள்ளேயே மனிதர்களின் வர்ண பேதங்கள் அனைத்தையும் காட்டிவிட முடிகிறது அவரால்.

நெல்லை மணத்தை வண்ணதாசன் கொண்டுவருவது அவரது படைப்புகளின்

கதைமாந்தர்கள் பெயர்களில் . அதிலும் சில பெயர்களுடன் சில உறவுமுறைகளையும் முன்னொட்டு, பின்னொட்டாக சேர்த்து அவர் சொல்வது திருநவேலி யை நம்முள் நிரப்பி விடும். பெயர்களிலேயே அவரது கதைமாந்தர்களின் உலகம் சொல்லப்பட்டு விடும். பிரமு அத்தான், சிதம்பரத்தாச்சி, மங்காயி அத்தை, மீசை பெரியப்பா, வைத்தி சித்தப்பா, கோமு அத்தான் – இப்படி போய்க்கொண்டேயிருக்கும் அவரது கதை மாந்தர்களும், உறவுமுறைகளும். இந்த உறவுமுறையால் முன்னொட்டு-பின்னொட்டு சமாச்சாரங்கள் நிரம்பிய அடையாள விளி திருநெல்வேலிக்கு உரிய சிறப்பு. பிள்ளைமார்களுக்குத்தான் அதன் காப்பி ரைட் உரிமையில் முதல் பங்கு. ஆள் பெயரை சில நேரம் ஊர்பெயர் வந்து மாற்றீடு செய்யலாம் – களக்காட்டு சித்தப்பா, பொன்னாக்குடி ஆச்சி, வல்லநாட்டு சின்னம்மை, செப்பரை அத்தான் என்ற வகைப்பாடுகள். கோமதிநாயகம் என்ற கோமு, பிரமநாயகம் என்ற பிரமு, உலகநாதன் என்ற ஒலகு, சங்கர நாராயணன் எனும் சங்கரு, நெல்லை நாயகம் என்ற நெல்லை, கல்யாண சுந்தரம் என்ற கல்யாணி, மயிலேறும் பெருமாள் என்ற மயிலு – இந்த வகையான பெயர்களும், ஊர்களும் அவரவர் அடையாளத்தை தெளிவாகக் காட்டிவிடும். செல்லம்மா எனும் பெயர் கொண்ட பெண்கள் செல்லா, செல்லத்தக்கா என்று சுருக்கப்படும்போது முறையே முதல் ஆளை கடையம் அக்கிரகாரத்திலும், அடுத்த ஆளை பாபநாசத்திலும் வைத்து யோசிப்பது “திருநவேலி” ஆட்களுக்கு அனிச்சை செயல்.

இப்படி “நெல்லை மாநகர்” விட்டு சுற்று வட்டாரத்திலிருந்து வரும் அத்தான்களும், அண்ணன்களும், மாமாக்களும், சின்னம்மைகளும், மதினிகளும்தான் வண்ணதாசன் படைப்பில் ஓயாமல் மண்ணை மணக்க வைப்பவர்கள். “எங்களையெல்லாம் மறந்து போட்டியேடே“ என்று சிநேக சிரிப்போடு வருபவர்கள். “ஒங்க அம்மையக் கொண்டிருக்கயேடே அப்டியே“ என்று கடந்தகாலத்தை இப்போது நிகழ்த்தும் ரசவாதிகள்.

அதிலும், மதினிமார்களின் செல்வாக்கு மேற்சொன்ன உலகில் அபாரமான செல்வாக்கு செலுத்துவது. நெல்லையில் நாற்பது வயதுக்கு மேற்பட்ட இருவர் பேசக் கேட்டு அதில் ஐந்து நிமிடங்களுக்குள் ரெண்டு மதினிகளின் நல விசாரிப்புகள் நிகழ்ந்தால் அதில் ஒருவர் பெயராவது கோமதியாகவோ , சங்கராகவோ இருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறை நம்பி என் சொத்தை பணயம் வைப்பேன். இந்த மதினிமார்கள் எனும் சொந்தம் நெல்லை சைவப் பிள்ளைமாரிடையே நிகழ்த்தும் ஊடுபாவுகளை சொல்லிச் செல்ல வண்ணதாசனுக்கு இன்னும் இருபது ஆண்டுகள் வேண்டும். அண்ணன் மனைவி, தன் வயதுக்கு மூத்த மாமன்/அத்தை மகள்கள் என்று நேரடியான உறவில் தொடங்கி நேசத்தின் காரணம் கொண்டு பிரிசில்லா மதினி வரை விரியக் கூடிய சொந்தம் இது. பொதுவாகவே “திருநவேலி” ஆட்களுக்கு மதினிமார்கள் மீது பெயரறியா நேசபாவம் உண்டு. அல்போன்ஸ் சாரையும், ஜப்பார் பாயையும் நலம் விசாரிப்பதன் இரண்டாம் வரி “வீட்ல மதினி சொகமாருக்காகள்ளா?”. வண்ணதாசனின் படைப்புகளில் சிறு சந்துகளில் நெருக்கியும் , நீண்டும் கிடக்கும் பெரும் வீடுகளுக்குள் ஒளி மிகு வண்ணங்களைக் கொண்டுவரும் தேவதைகள் இந்த மதினிமார்களும், அதற்கு சற்றும் குறைவிலா பெருமை உடைய அக்காமார்களும்.

இதற்கு அடுத்தபடியாய் வண்ணதாசன் எடுத்தாள்வது சிறு, சிறு வர்ணிப்புகள். பெரும்பாலும் ஒரு அறைக்குள் இருக்கும் சூழல், அறைக்குள் இருக்கையில் வெளியிலிருந்து கேட்கும் ஓசைகள், பேசும் இருவரின் அனிச்சை அசைவுகள், பெருமளவு மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களும் என ஒரு கட்டம் கட்டிய வர்ணிப்புகள். பேருந்தில் பயணித்தாலும் அவரது சித்தரிப்பு பெரும்பாலும் கதைசொல்லியை சுற்றியிருக்கும் பத்தடி விஸ்தீரணம்தான். அதற்குள்ளாகவே அவரது படைப்புலகம் கச்சிதமாக, முழுமையாகப் பொருந்தியிருக்கும். அதன் சித்தரிப்புகளிலும் சட்டென தலைதூக்கும் “திருநவேலி” வாசனை. ஆட்டுக்கல்லை ஒட்டிய பெஞ்சு, இருக்காஞ் சட்டி விளக்கு வெளிச்சத்தில் தூண்கள், படித்துறையில் சிந்திய அருணகிரி சீயக்காய் பவுடர் வாசம், சிணுக்கோரியால் ஈர் உருவும் ஓசை, பூ வரைந்த உயரமான கண்ணாடி டம்ளர் – இப்படி வெண்பொங்கலின் சீரக ருசி அவரிடம் அநேகம்.

ஒவ்வொரு ஓவியனுக்கும் ஒரு பாணி உண்டில்லையா? கோடுகளை மட்டுமே ஆங்காங்கே வரைந்து சற்று தள்ளி வைத்துப் பார்த்தால் சட்டென ஒரு ஓவியம் உருவாகும் கோட்டோவியம் வரைதல் போன்ற ஒரு எழுத்து முறை வண்ணதாசனுடையது. கோடுகளிடையே உள்ள இடைவெளி பார்ப்பவர் கண்களால் நிரப்பப்படுவதைப் போலவே அவரது வரிகளை வாசித்ததும் இடைவெளிகளை நம் மனம் நிரப்பத் தொடங்கும்.

ஒவ்வொரு ஓவியனுக்கும் அதிகமாக பயன்படுத்திய , குறைவாகப் பயன்படுத்திய என இரண்டு வண்ணங்கள் இருக்கும். எழுத்தில் வண்ணதாசன் குறைவாகப் பயன்படுத்தும் சித்தரிப்புகள் அளவில் குறைவே தவிர ஆழத்தில் மிக தீவிரமானவை.

ஒரு பிரதேசத்தையும், ஒரு இனத்தவரையுமே பெரும்பாலும் தன் படைப்புக் களமாகக் கொள்ளும் வண்ணதாசன் மொத்த உலக அனுபவங்களையும் அதற்குள் கச்சிதமாக வரையறுத்துத் தருகிறார். ஒரு ஓவியம், ஒளிப்படம் போல ஒரு தருணத்தை , சிறு நிகழ்வை சட்டென உறைய வைத்துக் கொடுத்தது போன்ற படைப்புகள். அதை நிதானமாக கூர்ந்து பார்த்துதான் நாம் நமக்கான புரிதலை உணர முடியும். துளி கண்ணீரும், உள்ளே பொங்கி இதழில் மென்னகையாய் அமரும் நினைவுப் புன்னகையும் மாறி, மாறி வருவதைத் தவிர்க்க இயலாமல்தான் வண்ணதாசன் படைப்புகளை வாசிக்க முடிகிறது. ஓவியத்தின், ஒளிப்படத்தின் பின்னணியாக நெல்லையும், அதன் வீடுகளும் இருப்பதைப் பார்க்க ஒரு மகிழ்ச்சி.

சாமந்தி, செவ்வந்தி என பல பெயர்களில் அழைக்கப்படும் பூவுக்கு நெல்லையில் கேந்திப் பூ என்று பெயர் போட்டிருக்கிறது. ஒவ்வொரு இதழும் செங்காவி வண்ணத்தில், இதழ் இதழாக முழுதாக மலர நாட்கள் கொள்ளும் மலர். முதல் சுற்று இதழ் விரிந்த பின்னரும் அட்டுக்கடுக்காய் தினம் தினம் மலர்ந்து மலர்ந்து விரிந்து கொண்டே இருக்கும் மலர். அந்த செடிக்கு பூதான் விதை. ஒவ்வொரு இதழும் விதையால் தான் பூவின் அல்லித்தண்டோடு இணைக்கப்பட்டிருக்கும். பிய்த்து போட்டால் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு கேந்திப் பூ செடி.

வண்ணதாசன் என்றைக்குமே திருநவேலியின் கேந்திப் பூ……

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==========================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 

தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61

$
0
0

[ 25 ]

அர்ஜுனன் எழுந்து நின்று கிளம்பும்பொருட்டு இயல்பாக ஆடைதிருத்தியபோது திடுக்கிடலை உணர்ந்தான். ஆணின் ஆடையில் தானிருப்பதை உணர்ந்ததும் பதற்றத்துடன் ஓடிச்சென்று ஆடியில் நோக்கினான். பொருந்தா ஆடையுடன் அங்கு தெரிந்த உருவத்தை அவனால் அரைக்கணம்கூட நோக்கமுடியவில்லை. “யாரங்கே?” என்று கூவினான். அப்பால் சிற்றறைக்கதவு திறந்து உள்ளே வந்த கந்தர்வ ஏவலர் பணிந்தனர். “எனக்குரிய ஆடைகளை எடுங்கள்… உடனே” என்றான். அவர்கள் தலைதாழ்த்தினர்.

அவனை ஏழு கந்தர்வமகளிர் அழைத்துச்சென்று பெண்டிருக்கான அணியறையில் தீட்டப்பட்ட வெள்ளியாலான பேராடிமுன் அமரச்செய்தனர். மலர்மரத்தில் சிட்டுக்குருவிகள் மொய்ப்பதுபோல அவர்களின் விரல்கள் அவன் மேல் தொட்டும் விலகியும் குவிந்தும் விரிந்தும் அணிசெய்யலாயின. அவன் ஆடியில் தன் உருவை நோக்கிக்கொண்டிருந்தான். ஆணின் ஆடை அகன்றதும் பெருஞ்சுமை ஒன்று அகன்றதென அவன் உடல் எளிதாகியது. அவர்கள் எடுத்துக்காட்டிய ஆடைகள் எதுவும் அவனுக்கு உகக்கவில்லை. எங்கோ தன்னை நோக்கியிருக்கும் விழிகளுக்காகவே அவன் தன் உருவை புனைய விழைந்தான்.

ஆடைகளை மாறிமாறி நோக்கி தலையை ஆட்டிக்கொண்டிருந்தவனை நோக்கி குனிந்த கந்தர்வப்பெண் “அரசி, ஓர் ஆடையை நீங்கள் ஏற்றே ஆகவேண்டும். ஆடைகள் எவையும் உள்ளம் கொண்ட கனவை அணுகாதென்றறிக! காலம் சென்றுகொண்டிருக்கிறது” என்றாள். இளநீலப்பட்டாடையை கையில் எடுத்துக்கொண்டு “இது அவ்விழிகளுக்கு உகக்குமா?” என அவன் எண்ணினான். எவ்விழிகள்? அவை நூறு ஆயிரம் பல்லாயிரமெனப் பெருகிய ஓரிணைவிழிகள் என அப்போது உணர்ந்தான். யார் அவன்? அவன் பெண்ணுள்ளத்தின் ஆழ்கனவிலிருந்து தன் உருத்திரட்டி எழுபவன். இன்னமும் அவன் முழுதுருவாகவில்லை. விழியென்றே ஆகி எங்கோ நின்றிருப்பவன்.

நீள்மூச்சுடன் “இதுவே போதும்” என்றாள். ஆடையும் அணியும் புனைந்து முகச்சுண்ணமும் விழிக்கரியும் இதழ்ச்செம்மையும் தீட்டி கைகளிலும் கால்களிலும் செம்பஞ்சுக்குழம்பு பூசி மலர்ச்சாறும் கோரோசனையும் கஸ்தூரியும் என நறுமணம் கொண்டு எழுந்தபோது விழிகள் முழுமையாக மாறிவிட்டிருந்தன. தன் உருவை நோக்கியபடி நின்றபோது இளமூச்சில் முலைக்குவைகள் எழுந்தமைந்தன. கைகள் கழுத்தைத் தொட்டு விலகின. “கிளம்புக, அரசி!” என்றாள் கந்தர்வப்பெண். “ஆம்” என்றபடி அவள் ஆடிமுன்னால் அப்படியே நின்றாள். நூறு விழிகொண்டு தன்னை நோக்கிக்கொண்டிருந்தாள். நோக்கி நோக்கி தன்னை தீட்டினாள். அகன்றுநின்று ஆணென்றாகி மீண்டும் நோக்கினாள்.

“அரசி” என்றாள் கந்தர்வப்பெண். அவள் “செல்வோம்” என ஆடையை அள்ளிக்கொண்டு மெல்ல நடந்தாள். அணிகுலுங்கும் ஓசையும் ஆடைநலுங்கும் ஒலியும் மெல்லிய மந்தணச்சொற்களென அவளுடன் வந்தன. அவை அவள் ஒளிந்துகொள்ளும் மலர்க்காடு. அவள் அங்கிருந்தபடி நோக்கிக்கொண்டிருந்தாள். எவ்விழிகள் என் இறையே? எவர் முகத்தில் பூத்தவை? அவளைக் கண்ட அத்தனை ஆண்விழிகளும் மின் கொண்டு பின் அணைந்தன. அவள் படியிறங்கி கூடம் கடந்து வெளிமுற்றத்தை அடைந்தாள்.

மாதலி அவளைக் கண்டதும் எவ்வியப்பையும் காட்டவில்லை. “வருக!” என்றபின் தேர்ப்பீடம் மீது ஏறிக்கொண்டான். அவள் தேரிலேறி இந்திரபீடத்தில் அமர்ந்து தன் வலக்காலை இடக்கால் மேல் வைத்து ஆடையைத் திருத்தி குழல் சீர்படுத்தி “செல்க!” என்றாள். தேர் குலுங்கிக் கிளம்பியது. “என்னிடம் ஊர்வசி சொன்னாள்” என்றான் மாதலி அவளை நோக்காமல். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சினந்திருந்தாள். அவள் இட்ட தீச்சொல்லுக்காக வருந்தினாள்.” அவள் “அது நன்றே” என்றாள். மாதலி “எதுவும் நன்றே” என்றான். அவன் புன்னகைப்பது முதுகிலேயே தெரிந்தது.

“நான் இவ்வுருக்கொள்ளாமலிருந்தால் எந்தையை அவைநின்று எதிர்கொள்ளத் துணிந்திருக்க மாட்டேன்” என்றாள் விஜயை. “ஏன்?” என்று மாதலி கேட்டான். “அறியேன். இவ்வுடலில் இருக்கையில் இதுவரை அறியாத துணிவொன்றை அடைகிறேன்” என்றாள் விஜயை. “தந்தையை மீறும் துணிவா?” என்றான் மாதலி. “ஆம், உண்மை. நான் பிறந்த இடத்திற்குரியவள் அல்ல என்னும் உணர்வு. முற்றாக என்னை வெட்டிக்கொண்டு சென்றுவிடவேண்டுமென்னும் விழைவு” என்றாள். “நான் இங்குள்ள எவருக்கும் இதுவரையிலான எவற்றுக்கும் உரியவளல்ல என இயல்பாகவே என் அகம் உணர்கிறது, தந்தையே.”

மாதலி தோள்குலுங்க மெல்ல சிரித்து “அதை உணராத பெண் எவள்?” என்றான். “ஆம், நான் எவருக்குரியவளென அறியேன். ஆனால் எங்கோ எவரோ என்னை முற்றுரிமைகொள்ளவிருக்கிறார் என்பதை மட்டும் நன்குணர்ந்திருக்கிறேன்” என்றாள் விஜயை. மாதலி “நன்று மகளே, அவ்வண்ணமே ஆகுக! தன்னை முற்றளித்து முழுவுரிமைகொண்டு வெல்பவள் பெண் என்பது மூத்தோர் சொல்மரபு” என்றான். தேர் நகரின் தெருக்களினூடாகச் சென்றது. “எந்தை என் உருமாற்றத்தை அறிந்திருப்பாரா?” என்றாள் விஜயை. “ஆம், ஊர்வசி அவரிடம் சொல்லாமலிருக்க முடியாது.” அவள் “நன்று, நான் அறிந்த விழிகள் முன்பு சென்று நிற்கவேண்டுமென்பது சற்றே எளிது” என்றாள்.

“அவையில் இருப்பவர் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் மாதலி. “எவர் அறிந்தாலென்ன? நான் எந்தையையும் என் மூத்தவரையும் மட்டுமே எண்ணுகிறேன்” என்றாள் அவள். “விந்தைதான். இவ்வுருவில் என்னை எவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என உய்த்துணரவே இயலவில்லை.” மெல்ல சிரித்தபடி “எந்தை முன்னரே அறிந்து எதிர்நோக்கியிருந்தாலும் என் உருவம் கண்டதும் அதிர்ச்சியே கொள்வார் என நினைக்கிறேன். மூத்தவரும் என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பார்” என்றாள். மாதலி “உள்ளம் எவ்வண்ணம் செல்லுமென எவர் அறிவார்?” என்றான்.

“அன்னை அருவருப்பு கொள்வார். அருகணையவே மறுப்பார்” என்றாள் விஜயை. மாதலி ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் எவர்கொள்ளும் உணர்வும் எனக்கு ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது. நான் எனக்குரிய உடலில் இருக்கிறேன் என்று உணர்கிறேன்.” மாதலி அறியாமல் திரும்பி நோக்கினான். “உண்மை, தந்தையே. நான் இப்போதுதான் முற்றமைகிறேன். அவ்வுடலில் நான் அடைந்த தனிமை இதிலில்லை. அது கன்றுதேடும் தாய்முலைக்கண் போல எக்கணமும் உறுத்து தவித்துக்கொண்டிருந்தது. இது தன்னுள் நிறைந்துள்ளது.”

“அவ்வண்ணமென்றால் நன்று” என்றான் மாதலி. “ஆனால் இது தன்னை பிறிதொருவர் முன் படைக்க விழைகிறது. கோடிவிதைகள் புதைந்துகிடக்கும் நிலம்போல பெருக விழைகிறது” என்றாள் விஜயை. அவள் மேலும் சொல்ல வாயெடுத்ததுமே நாணம் கொண்டு தன்னை அடக்கிக்கொண்டாள். அவள் சொற்களுக்காகக் காத்த மாதலியின் தோளிறுக்கம் சிலகணங்களுக்குப்பின் மெல்ல தளர்ந்தது. “ஆம், இதுவும் முழுமைகொண்டது அல்ல. ஆனால் இதன் தனிமையும் தவிப்பும்கூட தன்னளவிலேயே நிறைவானவை. பிறிதொன்றில்லாமலேயே தன்னிலிருந்து அனைத்தையும் உருவாக்கி நிறைய இதனால் முடியும்.”

அச்சொற்கள் ஓடிக்கொண்டிருக்கையிலேயே அவள் முழுதறிந்துவிட்டாள். மெய்ப்புகொண்டு இருகைகளாலும் முலைகளை பற்றிக்கொண்டாள். “இறையே, முழுமுதலே!” என மெல்ல கூவினாள். மூச்சிரைக்க அவள் உடல் தவித்தது. எழுந்து நிற்கப்போகிறவள்போல ஓர் அசைவு அவளில் எழுந்து அடங்கியது. மாதலி என்ன என்று கேட்க எழுந்த வினாவை அடக்குவது தெரிந்தது. அவன் உள்ளத் தயக்கத்தை கடிவாளம் வழியாக அறிந்த புரவிகள் மென்னடையிட்டன. அந்த சீர்தாளத்தில் அமைந்தது அத்தருணம்.

“தந்தையே, அது அவர்தான்” என்றாள் விஜயை. “எப்படி இதை எண்ணாமலிருந்தேன்? பிறிதெவர்?” அதை உணர்ந்ததும் மாதலி “ஆம்” என்றான். “நான் அவரை எண்ணி என்னை அமைத்துக்கொள்ள வேண்டியவள். அவரால் முழுமையாக நிறைக்கப்பட வேண்டியவள்” என்றாள். மாதலி பெருமூச்சுவிட்டான். “என் நல்லூழ் இது. அவரை முழுதுணரவே இப்பெண்ணுடலில் அமைந்தேன் போலும். உருகி விழிநீர் சிந்தி அவரை அறிவேன். முழுதும் படைத்து முற்றழிந்து அவரென்றாவேன்.” அவள் குரல் நனைந்து ஊறிய பட்டுபோல் மென்மைகொண்டிருந்தது. எவரிடமென்றில்லாமல் அவள் அகம் வீரிட்டது. “காணும் கேட்கும் சுவைக்கும் முகரும் உணரும் எண்ணும் அனைத்தும் அவரென்றே ஆகுக! தெய்வங்களே, இனி அவர் முகம்சூடியே என்னை அணுகுக!”

பிச்சியைப்போல அவள் இரு கைகளையும் கோத்து இறுக்கி அதில் முகம் புதைத்து அதிர்ந்தாள். பீலியும் குழலும் விழியொளியும் நகையொளியும் அன்றி இவ்விழிகளுக்கு பிறிதேதும் உவப்பல்ல. கரியவன் தோளும் நெஞ்சும் அன்றி நான் அமையுமிடம் ஏதுமில்லை. உணர்வெழுச்சியால் அவள் தோள்களை குறுக்கினாள். மெல்லிய விம்மலொன்று அவளிலிருந்து எழ மாதலி திரும்பிப்பார்த்தான். அவள் உடல்குலுங்க அழுதுகொண்டிருப்பதை நோக்கியபின் புரவிகளின் முதுகில் சவுக்கால் மெல்ல தொட்டான். அவை விரைவுகொண்டன.

[ 26 ]

இந்திர அவைக்குள் அவள் நுழைந்தபோது அனைத்து விழிகளும் திரும்பி அவளை நோக்கி உடனே திடுக்கிட்டு விலகிக்கொண்டன. அந்நோக்கே ஓர் சேர்ந்தொலியென எழுந்தமைந்தது. பின் ஆழ்ந்த அமைதியில் அவள் தன் ஆடையும் அணிகளும் ஒலிக்க மெல்ல நடந்தாள். அவளை மீண்டும் நோக்கியபின் இந்திரன் பெருமூச்சுவிட்டான். பாலி இருகைகளையும் கோத்து இறுக்க பெரும்புயங்கள் எழுந்தமைந்தன. உடலுக்குள் இருந்து இன்னொரு உடல் எழுந்து வெளியேறத் துடிப்பதென ஓர் அசைவு நிகழ்ந்தது. சனகரும் சனந்தனரும் சனாதனரும் சனத்குமாரரும் மட்டும் விழிகளில் நிறைந்த மைந்தர்களுக்குரிய ஆர்வத்தின் இளநகையுடன் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர்.

இந்திராணி இரு கனிவூறிய விழிகளுடன் அருகணைந்து அவள் கைகளை வளையல்களுடன் சேர்த்து பற்றிக்கொண்டாள். “வாடி” என்றாள். அவள் “அன்னையே, நிகழ்ந்ததை அறிந்திருப்பீர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் அவள். “அதனாலென்ன? நீ என் மகள்” என்று சொல்லி “வருக, உனக்கான பீடத்திலமர்க!” என அழைத்துச்சென்று அமர்த்தினாள். “நான் எவ்வகையிலும் துயருறவில்லை, அன்னையே. மாறாக உவகைதான் கொள்கிறேன்” என்றாள். “ஆம், அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றாள் இந்திராணி.

அவள் ஊர்வசியின் கண்களை சந்திக்க அவள் பதறி விலக்கிக்கொண்டாள். ரம்பையும் திலோத்தமையும் கிருதாசியும் பூர்வசித்தியும் ஸ்வயம்பிரபையும் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர். அவள் மிஸ்ரகேசியின் விழிகளை சந்தித்ததும் புன்னகைத்தாள். அவள் திகைத்து விழிவிலக்கி மீண்டும் நோக்கினாள். மிகமெல்லிய புன்னகை இதழ்களில் எழ தண்டகௌரியின் கைகளை தொட்டாள். அவளருகே அமர்ந்திருந்த வரூதினியும் கோபாலியும் “என்ன?” என மெல்ல கேட்க அவள் இதழ்மட்டும் அசைய ஏதோ சொன்னாள். அவர்கள் அவள் விழிகளை சந்திக்க அனைத்து முகங்களும் புன்னகையின் ஒளி சூடின.

பின்னால் நின்ற ஸகஜன்யையும் கும்பயோனியும் பிரஜாகரையும் அப்புன்னகையை அவர்களின் உடல்களிலேயே அசைவெனக் கண்டனர். சித்ரலேகை “என்ன?” என்றாள். எவரும் சொல்லாமலேயே அனைவரும் அவள் விழிகளை அறிந்தனர். ரம்பை புன்னகையுடன் அவளுக்கு மட்டுமே தெரியும்படி மெல்ல தலையசைத்தாள். திலோத்தமை அதை நோக்கியபின் குறும்புச்சிரிப்புடன் அவள் ஆரம் நன்றாக உள்ளது என கைவிரல் செய்கையால் காட்டினாள். அவள் அதைத் தொட்டு நோக்கியபின் சரி என தலையசைத்தாள். விழியுணரா சரடொன்று சிலந்திவலையென விரிந்து பின்னி அவர்களை மட்டும் ஒரு தனியுலகில் ஒன்றாக்கியது. தேவமகளிர் ஒவ்வொருவராக அதில் வந்து இணைந்துகொண்டிருந்தனர்.

அவை நிகழ்வுகளை அவள் அறியவில்லை. முறைமைச்சொற்களும் வாழ்த்துகளும் அறிவிப்புகளும் முற்றிலும் பொருளிழந்து பிறிதொரு உலகிலென நிகழ்ந்துகொண்டிருந்தன. அங்கிருந்த அத்தனை பெண்களின் ஆடைகளையும் அவள் அறிந்துவிட்டிருந்தாள். அணிகளின் அத்தனை செதுக்குகளையும் நோக்கிவிட்டிருந்தாள். விழிகளும் இதழ்களும் விரல்நுனிகளும் உரைத்த ஒலியிலா மொழியில் அவர்கள் கருத்துக்களை சொன்னார்கள். பாராட்டுக்களை ஏற்றார்கள். கச்சபர் இந்திரனை வாழ்த்தி முழங்கும் சொற்களை எடுத்தபோது மேனகை மிகநுட்பமாக உதடுகளைச் சுழித்து பழிப்பு காட்டினாள். அத்தனைப் பெண்விழிகளும் சிரிப்புகளால் ஒளிவிட்டன.

நடுவே புகுந்த இந்திராணியின் விழி அவர்களை அதட்டியபோது அனைவரும் அதை அடக்கிக்கொண்டனர். லோமசர் தன் அழியா காமத்துறப்பு நோன்பைச் சொல்லி அவையை வாழ்த்தியபோது அப்படியா என பொய்வியப்பு காட்டினாள் விழிகளால் வியந்து கும்பயோனி. உண்மையாடி என்றாள் மேனகை. ஆம் எனக்குத்தெரியும் என்றாள் கிருதாசி. சீ என்றாள் மேனகை. என்ன அதில் என்றாள் பிரஜாகரை. போடி என மேனகை அதட்டினாள். சரிதான் என்று திலோத்தமை அவர்களை அடக்கினாள். மானுடர் நடுவே தேவர்களென அப்பாலெழுந்த வாய்ச்சொற்கள் நடுவே அவர்களின் நுண்மொழி உலவியது.

இந்திரனின் குரலை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை ஏதோ சொல்லப்பட்டது. பின்புதான் அத்தனை விழிகளும் தன்னை நோக்குவதை அவள் உணர்ந்தாள். இந்திராணி அவள் தொடையைத் தொட்டு “உன்னிடம்தான் சொல்லப்படுகிறது, இளையவளே” என்றாள். அவள் திடுக்கிட்டு விழித்து “என்ன?” என்றாள். “உன்னிடம் ஊர்வசியை அனுப்பியவன் நான். உன்மேல் விழுந்த தீச்சொல்லும் அவளுடையதே. மைந்தா, நீ அதை விட்டு விலகி எழமுடியும். அவளிடம் சொல்மீட்க ஆணையிடுகிறேன்” என்றான் இந்திரன். “தந்தையே, தாங்கள் என்னை மைந்தா என்றழைக்கும் சொல் என்னை கூசவைக்கிறது” என்றாள். இந்திரன் நாவெடுக்கும் முன் “நான் இவ்வுடலிலேயே இனிதமைந்துள்ளேன். பிறிதொன்றை வேண்டேன்” என்றாள்.

இந்திரன் சினம்கொண்டு கைநீட்டி ஏதோ சொல்லவந்தான். சுளித்த முகத்தில் பற்கள் இறுகியிருந்தன. பின் தன்னை எளிதாக்கிக்கொண்டு “நான் உன்னை புரிந்துகொள்கிறேன், மகளே. உள்ளம் என்பது நீர். கலத்தின் உருவே அதற்கும். ஆனால் இவ்வுடல் உன்னுடையதல்ல” என்றான். “இல்லை தந்தையே, பாறையென இறுகியிருந்தது நீர்பட்டு மென்சேறாகியிருக்கிறது, அவ்வளவே” என்றாள். “வீண் சொல் பேசாதே. இது அவளிட்ட தீச்சொல். அவள் இதை திருப்பி எடுக்கமுடியும்” என்றான் இந்திரன். “நான் அதை விழையவில்லை. சொல்மீட்சிக்கு நான் கோராமல் அவள் அருளமுடியாது” என்றாள் அவள். “என்னுள் இருந்த ஒரு முள்ளை இழந்து அமைந்திருக்கும் இதுவே என் பெருநிலை.”

“அதை பின்னர் பார்ப்போம்” என்றார் வசிட்டர். “இவ்வவை கூடியிருப்பது தேவர்க்கரசர் தன் மைந்தரை அவைநிறுத்தி வாழ்த்தும்பொருட்டு. அது நிகழட்டும்.” இந்திரன் சொல்லெடுப்பதற்குள் “மைந்தனென்றும் மகளென்றும் ஆனது ஒன்றே. அதன் தோற்றங்களை நாம் கருத்தில் கொள்ளவேண்டியதில்லை” என்றார். இந்திரன் பெருமூச்சுடன் கைகளைக் கோத்து அதில் முகத்தை பதித்துக்கொண்டான். பாலி உரக்க “இளையவனே, நான் உன்னை அவ்வண்ணமே அழைப்பேன். தந்தை உன்னிடம் விழைவதென்ன என்று நீ நன்கறிவாய். அதை அவர் இந்த அவைமேடையில் அரசகோல்சூடி நின்று மீண்டும் கோருகிறார்” என்றான். அவன் அவள் விழிகளை அப்போதுதான் நோக்கினான். “இல்லை, ஆணையிடுகிறார்” என்றான்.

அவள் அவனை நேர்விழிகளால் நோக்கி “பொறுத்தருள்க, மூத்தவரே! தந்தையும் அன்னையும் இவ்வவையும் என்னை முனியலாகாது. நான் இங்குள்ளவள் அல்ல. உங்கள் எவருக்கும் உரிமைப்பட்டவளும் அல்ல. எச்சொல்லும் எவ்வுணர்வும் எந்நெறியும் என்னை கட்டுப்படுத்தாது” என்றாள். பாலி திகைத்து அவளை நோக்கி நின்றான். இதழ்கள் சிலமுறை சொற்களுக்காக அசைந்தன. பின்னர் திரும்பி இந்திரனை நோக்கிவிட்டு “நீ உன் தந்தையின் அவையிலமர்ந்துள்ளாய்” என்றான். “ஆம், அவர் என் தந்தை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் அவருக்குரியவளல்ல.”

“பின் எவருக்குரியவள்?” என்று பாலி உரக்க கேட்டான். பெரிய கைகளை விரித்தபடி அவளை நோக்கி வந்தான். “அவருக்கு” என அவள் சொன்னாள். அக்கணமே அலையென அவளை அறைந்து மூழ்கடித்த நாணத்தால் தலைகவிழ்ந்து உடல் விதிர்த்து தோள்குறுக “அவர்தான்” என்றாள். அவள் இதழ்கள் நடுங்கின. இமைகள் அதிர்ந்தன. “யார்?” என்று அவன் கூவினான். “நீங்களனைவரும் அறிவீர்கள்” என்றாள் அவள். அவன் என்ன இது என்பதுபோல கைவிரித்தான். இந்திரன் தன் தலையை கையால் அறைந்துகொண்டான்.

“நீங்கள் ஆண்கள். உங்கள் உலகில் நின்றபடி இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நான் என்னை முற்றளித்துவிட்டவள்” என்றாள். “அப்படி முற்றளிக்க எவராலும் முடியாது. அறிவிலிபோல் சொல்லெடுக்காதே. உளம்கொண்டு உடல்கொண்ட எவரும் தனிமையின் ஒரு துளியேனும் உள்ளே எஞ்சவைத்தவர்களே” என்றான் இந்திரன். “இல்லை, காதல்கொண்ட பெண்ணின் இயல்பு அது. காதலின் பெருநிலையை வாழ்நாளெல்லாம் நீட்டித்துக்கொண்டவளுக்கு அது இயல்வதே” என்று அவள் சொன்னாள்.

இந்திரன் சலிப்புடன் தலையசைத்து “வீண் சொல்” என்றான். “தந்தையே, அவ்வண்ணம் கணம் முறியாது காதலில் வாழ்ந்தவள் ஒருத்தியேனும் இருந்தாள். அவள் பெயர் ராதை” என்றாள். அவை முழுக்க வியப்பின் கார்வை எழுந்தது. “நான் இக்கணம் எனக்கு அணுக்கமானவளாக உணர்வது அவளை மட்டுமே. என்னை அறியக்கூடுபவளும் அவள் ஒருத்தியே” என்றாள். பின்னர் எழுந்து “நன்று, இந்த அவையில் அதைச் சொல்லும்பொருட்டே இங்கு வந்தேன். முழுதுருக்கொண்டு பிரம்மம் எழுந்து வந்தாலும் என் உள்ளத்தை மாற்றமுடியாதென்று இனி நான் சொல்லவேண்டியதில்லை” என்றாள்.

அவை நோக்கி கைகூப்பி “என்னை வாழ்த்துக, முனிவர்களே! என்னுடன் இருங்கள், தேவர்களே. இனி நான் ராதை” என்றபின் அவைமேடை விட்டிறங்கினாள். அவள் படிகளில் கால்வைத்து கீழே சென்று அவைமுகப்பினூடாக நடக்கையில் இந்திரன் கை நீட்டி “விஜயை” என்றான். அவள் தயங்கிநின்றாள். “தந்தையைத் தேடிவந்து நீ வெறுங்கையுடன் மீளவேண்டியதில்லை. நீ விழைந்ததைக் கோருக!” என்றான். அவள் திரும்பி அவனை நோக்கி “தந்தையே, நான் படைக்கலம்கொள்ளவே வந்தேன். அப்படைக்கலம் அவருக்கு துணைநிற்பது. ஒருவேளை களத்தில் உங்களுக்கு எதிர்வருவது” என்றாள்.

“ஆம்” என்றபோது இந்திரனின் தோள்களில் தசைகள் மெல்ல தளர்ந்தன. “அவ்வாறென்றாலும் ஆகுக! நீ உன் படைக்கலத்தை கோரலாம்.” அவள் “உங்களாலும் வெல்லப்படமுடியாத படைக்கலம்” என்றாள். இந்திரன் விழிகள் அசைவற்றிருக்க நோக்கி அமர்ந்திருந்தான். பாலி “மகாவஜ்ரமா?” என்றான். “ஆம், அதுவன்றி வேறேதும் வேண்டியதில்லை” என்றாள். பாலி சினத்துடன் கையை தூக்கியபடி முன்னால் வர இந்திரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். எழுந்து “நன்று, ஈன்றோரில்லம் நீங்கும் எந்தப் பெண்ணும் விழைவது தந்தையை தன் கொழுநன் வெல்லவேண்டும் என்றே” என்றபோதே அவன் முகம் மலர்ந்தது. “ஆனால் அதை அவள் கேட்பதிலுள்ள தன்னலத்தின் கள்ளமில்லா அழகுக்கு முன் எந்தத் தந்தையும் தோற்றாகவேண்டும். கொள்க, மகளே!” என்றான்.

அவள் திரும்பிவந்து அவன் காலடியைத் தொட்டு சென்னிசூடினாள். அவள் தோள்பற்றி தன் மார்புடன் அணைத்து காதில் மகாவஜ்ர நுண்சொல்லை மும்முறை சொன்னான் இந்திரன். அவள் அதை மும்முறை திரும்பச் சொல்லி மீண்டும் வணங்கினாள். “சென்று வருக! உன்னுடன் என்றுமிருக்கட்டும் இப்படைக்கலம். இது உன்னை வெல்லமுடியாதவனாக நிலைநிறுத்தட்டும்” என்றான். “தங்கள் வாழ்த்துக்களால் நிறைநிலைகொண்டேன், தந்தையே” என அவள் சொன்னாள்.

“மகாவஜ்ரத்தின் முதன்மை இங்கு முடிந்தது” என பாலி கசப்புடன் சொன்னான். “தந்தையே, இனி மகாநாராயணமே வேதமெனத் திகழும். அதை நீங்களே தொடங்கிவைத்துவிட்டீர்கள்.” இந்திரன் “ஆம்” என்றான். “சென்று அவனிடம் அதை சொல்லச்சொல்லுங்கள் இவளிடம். அவன் நெய்யும் வேதப்பெருவலையில் ஒரு திசைக்காவலனாக அமைவீர்கள். அவன் வேள்விச்சாலையில் அவிகொள்ள நிரையிலொருவராக நின்றிருப்பீர்கள்.” இந்திரன் பெருமூச்சுடன் “அவ்வண்ணமென்றால் அதுவே ஆகுக! நான் இத்தருணத்தை பிறிதொருவகையில் கடக்கவியலாது” என்றான். வசிட்டர் “அது அவ்வண்ணமே ஆகவேண்டுமென்பதே ஊழ், அரசே” என்றார். “அறமே வேதமென உருக்கொள்கிறது. அறம் வளர்வதே இறைநெறி. வளர்தலென்பது உதிர்தலும் முளைத்தலுமென நிகழும் முடிவிலா மாற்றம்.”

“சென்றுவருகிறேன், தந்தையே. நான் வந்த பணி முடிந்தது” என்றாள். இந்திராணியை அணுகி கால்தொட்டு வணங்கிவிட்டு பாலியின் அருகே வந்தாள். “வாழ்த்துக, மூத்தவரே!” என அவன் கால்களை தொடக்குனிந்தாள். “வெற்றி கொள்க!” என்று பாலி அவள் தலையைத் தொட்டு நற்சொல் உரைத்தான். அவள் நிமிர்ந்ததும் பொய்க்கடுமையை முகத்தில் நிறுத்தி “உன்னை இவ்வண்ணம் காண அவன் விழையமாட்டான். நீ படைக்கலங்களுடன் வந்து வில்விஜயன் என தன் போர்க்களங்களில் நிற்கவேண்டுமென்றே எண்ணுவான்” என்றான். அவள் திகைத்து இந்திரனை நோக்க “ஆம், மகளே. அவன் உன்னை இங்கு அனுப்பியது அதன்பொருட்டே” என்றான்.

“அவர் என்னை அனுப்பவில்லை” என்றாள் அவள். “நீங்களிருவரும் கொண்ட அப்போர் நிகழ்ந்ததல்ல. நிகழ்த்தப்பட்டது” என்றான் பாலி. அவள் பெருமூச்சுவிட்டாள். “ஆனாலும்…” என சொல்லத் தொடங்கியதுமே இந்திரன் “நீ இவ்வுடலில் எழுந்தது ஆணென இருந்து அறியமுடியாத பெரும் பிரேமையை அடையும்பொருட்டே. அதை வென்று சூடி முழுமைகொண்டுவிட்டாய். இது உன்னுள் கனவின் விதையென என்றுமிருக்கும். உன் மெய்யறிதல்களை கனியவைக்கும்” என்றான். அவள் “ஆம்” என்றாள்.

“ஊர்வசியின் தீச்சொல் அழியவேண்டியதில்லை. அவள் ஆணையிடும் காலம் மட்டும் நீ பெண்ணென்று வாழ்ந்தால் போதும். அக்காலத்தை நீ விழையும்படி தெரிவுசெய்யலாம்” என்றான் இந்திரன். ஊர்வசி “ஆம் இளைய பாண்டவரே, அக்காலமொன்று வரும். அன்று என் தீச்சொல்லே நற்சொல்லென்று உங்களுக்கு துணையிருக்கும்” என்றாள். கைகூப்பி “அவ்வாறே ஆகுக!” என்றான் அர்ஜுனன். ஊர்வசி அருகே வந்து அவன் கைகளைப் பற்றியபடி “மீட்டு எடுத்த சொல் என் உடலில் ஒரு கரிய மச்சமென எப்போதும் இருக்கும். அக்குறையை ஓர் அருமணி என நான் சூடியிருப்பேன்” என்றாள்.

அவள் தொட்டதுமே அவன் முலைகரைந்து தோள்பெருத்து கைகள் இறுகி அர்ஜுனன் என்றானான். அவள் விழிகளை நோக்கியபடி “இன்று அறிகிறேன் உன் அகத்தை” என்றான். அவள் அவன் விழிகளை நோக்காமல் திரும்பிக்கொண்டு சிலம்புகள் ஒலிக்க வளையல்கள் குலுங்க ஆடை நெகிழ்ந்து நீண்டு தரையில் இழுபட்டுத் தொடர விரைந்தோடி உள்ளே சென்றாள். அர்ஜுனன் சுரமகளிர் விழிகளை நோக்கினான். அவை மீண்டும் அகன்று வேறொன்றாக விரிந்திருந்தன. அவையை கைகூப்பி வணங்கிவிட்டு அவன் வெளியே நடந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

வருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்

$
0
0

HS_Shivaprakash

எச் எஸ் சிவப்பிரகாஷ் கன்னடத்தின் நவீனத்துவ இயக்கமான நவ்யாவின் எதிர்வினையாக உருவாகி வந்த படைப்பாளி. மேலைநாட்டு வழிபாட்டு நோக்கு கொண்ட நவீனத்துவத்தை மூர்க்கமாக எதிர்த்து கன்னடத்தின் பண்பாட்டுத்தனித்தன்மைகளில் இருந்து தன்னை உருவாக்கிக்கொண்டவர். கன்னட வீரசைவ மரபின் ஆன்மீக சாரம் அவரது எழுத்துக்களில் உண்டு. அன்றாட யோகி என்னும் அவருடைய குறிப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. https://harpercollins.co.in/book/everyday-yogi/

ஆனால் ஆன்மிகம் மதமாக ஆவதற்கு முற்றிலும் எதிரானவர் எச்.எஸ் சிவப்பிரகாஷ். வீரசைவ மரபு வெறும் சடங்குகளில் சிக்குவதை கடுமையாக விமர்சித்த அவரது நாடகமான மகாசைத்ர மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவர் கன்னட வீரசைவ வெறியர்களால் தெருவில் இழுத்துச்செல்லப்பட்டு அந்த மடாதிபதிமுன் மண்டியிடவைக்கப்பட்டார் என அன்று செய்திகள் வெளியாகின. கீதா ஹரிஹரனின்  In Times of Siege (2003), என்னும் நாவல் இந்நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.

கன்னட இலக்கிய உலகில் ஆணவம் மிக்க கலகக்காரர் என்றும் தனிவழிச்செல்லும் மூர்க்கர் என்றும் துடுக்கான விமர்சகர் என்றும் சிவப்பிரகாஷ்  குற்றம்சாட்டப்படுகிறார். அவருடைய ஆளுமை அதற்கு அப்பால் இலக்கியத்திற்கென முழுமையான அர்ப்பணிப்பு கொண்டது.

சிவப்பிரகாஷ் நாடக வடிவம் மேல் காதல்கொண்டவர். தன் கவிதைகளை அவர் சிறப்பாக மேடையில் பாடுவதுமுண்டு. தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளை கன்னட இலக்கியத்தில் நிறுவியவர் சிவப்பிரகாஷ். கன்னட மரபின் அடியிலுள்ள தமிழ்ப்பண்பாட்டு அம்சத்தை எப்போதும் கவனப்படுத்தியவர். அவருடைய மதுரைக்காண்டம் சிலப்பதிகாரத்தை அடியொற்றிய நாடகம். அது ஏராளமானமுறை வெற்றிகரமாக நடிக்கப்பட்டிருக்கிறது

=================================================================================================

எச் எஸ் சிவப்பிரகாஷ் அறிமுகம் விக்கி

மதுரைக்காண்டம் நாடகம் முழுவடிவம்

எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 2

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 3

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16874 articles
Browse latest View live