Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16875 articles
Browse latest View live

வருகையாளர்கள் -2 இரா முருகன்

$
0
0

index

நவீனக்கலை விதவிதமான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கிறது. அறமுரைக்கும் தோரணை கொண்ட  பழையபாணி எழுத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதே அதன் இலக்கு. அந்தப்பாவனை மேலோட்டமானது, வாசகனை சற்றே ஏமாற்றுவது. அதன் அடியில்தான் ஆசிரியனின் நோக்கும் விமர்சனமும் இருக்கும். \

 

அதில் முக்கியமானது விளையாட்டுத்தனம் என்னும் பாவனை. தமிழில் அந்த கலைப்பாவனையின் தொடக்கம் கல்கி.  மிகச்சிறந்த உதாரணம் சுஜாதா. நடை, கூறுமுறை அனைத்திலும் சரிதான் இப்ப என்ன என்னும் ஒரு வேடிக்கைநிலை அவருடையது. அந்த பாவனையின் நீட்சி என்று இரா முருகனைச் சொல்லலாம். சுஜாதா அவருடைய தாவுமேடை மட்டுமே. நுணுக்கமான மாய யதார்த்தம் வழியாக அவர் சுஜாதாவைக் கடந்துவந்தார். வரலாற்றை குறுக்கும் நெடுக்குமாக பிளந்து இஷ்டத்துக்கு அடுக்கி விளையாடும் அரசூர் வம்சம், விஸ்வரூபம் நாவல்கள் வழியாக அவர் தன் தனிமொழியையும் தனிநோக்கையும் தமிழிலக்கியத்தில் நிறுவிக்கொண்டார்

 

இவற்றிலுள்ள விளையாட்டுத்தனம் வாசகனை ஏமாற்றுவது. அதைக் கடப்பவனே இவ்வெழுத்தின் உண்மையான வாசகன்.. அந்த விளையாட்டுத்தனத்தை அகற்றி அடியிலிருக்கும் சமூகவிமர்சனத்தையும் வரலாற்று அணுகுமுறையையும் நோக்குவது ஒரு நுண்வாசிப்பு.   ஆனால் ஆசிரியனுடன் தானும் விளையாடியபடி அங்கே சென்றுசேர்வதென்பதுதான் உண்மையான வாசிப்பு. பொருளற்ற வாழ்க்கைப்பிரவாகமாக, எல்லா தருணங்களிலும் உரிய அபத்தங்களுடன் நிகழும் வரலாற்றை முருகன் அவருடைய கதைகளினூடாகச் சித்தரிக்கிறார். தமிழிலக்கியத்தின் தனிச்சுவைகளில் ஒன்று அது

 

வாழ்ந்து போதீரே என்னும் நாவலை தன் இணையதளத்தில் இரா முருகன் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்

 

========================================================

இரா முருகன் விக்கி பக்கம்

 

இரா முருகன் இணையதளம்

 

இரா முருகனின் சிறுகதைகள் சில  சிறுகதைகள் இணையதளம்

 

இரா முருகனின் விஸ்வரூபம் – சுரேஷ் கண்ணன்

 

இரா முருகனின் விஸ்வரூபம் அர்விந்த்

========================================

 

பஷீர்- இரா முருகன் கடிதம்

 

ஆற்றூர்- இரா முருகன் கடிதம்

 

=======================================

 

பிற அழைப்பாளர்கள்

index

 

 

 

 

 

 எச்.எஸ்.சிவப்பிரகாஷ்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மனிதமுகங்கள் -வளவ. துரையன்

$
0
0

 

[1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

 
வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்திருக்கும்.. அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய வழிகளைக் கண்டறிவதுதான் வாசகருக்குப் பெரிய சவால். அதில் வாசகன் வெற்றி அடையும் போது படைப்பாளருடன் அவனும் ஒன்றிப்போய் விடுகிறான். வண்ண நிலவனின் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் எஸ்தரில் இருக்கும் மௌனம் இவரின் தொடக்ககாலக் கதைகளிலேயே காணப்படுவதுதான் வியப்பான செய்தியாகும்.
இந்தத் தொகுப்பின் பெயரைத் தாங்கியுள்ள ”மனுஷா..மனுஷா” கதையில் கதைசொல்லி மட்டும்தான் வெளிப்படையாகப் பேசுகிறான். அவன் மனைவி கூட அதிகமாகப் பேசி வார்த்தைகளைக் கொட்ட வேண்டிய வேளையில் ’மனுஷா, மனுஷா’ என்று கூறிவிட்டுப் போய்விடுகிறாள். கதைசொல்லியை விசாரிக்கக் கூப்பிட்ட அவன் தந்தையும் “சின்னப் பிள்ளையா நீ? ஈஸ்வரா!” என்பதுடன் தன் பேச்சை முடித்துக் கொள்கிறார். அதிகம் பேசி இருக்க வேண்டிய பிரமு அண்ணாச்சியோ அதைத் தவிர்த்து வேறெல்லாம் பேசுகிறார்.
ஒரு எதிர்பாராத நேரத்தில் எந்தவித எண்ணமுமின்றி முப்பத்து நான்கு வயதான கதைசொல்லி அவன் வீட்டுக்குப் பின்னால் குடி இருந்த பிரமு அண்ணாச்சியின் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுள்ள மகளுக்கு முத்தம் கொடுத்து விடுகிறான். அதை அவன் மனைவியும் பார்த்து விடுகிறாள். அண்ணாச்சி உடனே வேறு வீடு மாற்றிப் போய்விடுகிறார். ஆனாலும் அவனுக்கும் அண்ணாச்சிக்கும் இடையில் இருந்த சிநேகம் குறையவில்லை. ஒரு நாள் இரவு அதிகமாகக் குடித்த அவனை அண்ணாச்சி தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் படுக்க வைத்துக் கொள்கிறார். காலையில் கண் விழித்ததும் அவனுக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது.
“இந்தப் பிரமு அண்ணாச்சி என்னைப் புரிந்து கொண்டது போல, என் மனைவி இந்தப் பெண் என்னையும் புரிந்து கொள்ளல் ஆகாதா?” என்று கதைசொல்லி மனத்துள் நினக்கிறன். அப்போது மனைவி பற்றிய நினைவு வந்தவுடன் அவள் சொன்ன மனுஷா மனுஷா என்பது அவன் நினைவுக்கு வருகிறது. “அதுவே என் பெயராக அழைக்கிறது போலக் கேட்டது இப்போது” என்று அவன் நினைப்பதாகக் கதை முடிகிறது
எல்லாரும் சாதாரண மனிதர்களே என்றுதான் இந்த உலகம் நினைக்கிறது. அறிவு ஜீவிகளையும் அப்படி நினைத்ததால்தான் அவர்கள் வாழ்வில் மனக் கசப்போடு வாழ நேர்ந்திருக்கிறது. ஆனால் அவன் மனத்தில் எந்தவிதத் தவறான எண்ணமும் இல்லை என அவனைத்தவிர வேறு யாரறிவார் என்ற எண்ணமும் நமக்குத் தோன்றுகிறது. பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாகத் தானே இந்த உலகம் சொல்லும்.
இந்தத் தொகுப்பில் இன்னுமொரு முக்கியமான கதை “சிறிது வெளிச்சம்”. இக்கதையில் கதைசொல்லியின் தாத்தா இறந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது சின்னம்மை யாருமே அழாத அளவிற்கு மிக அதிகமாக அடித்துக் கொண்டு அழுகிறாள். அதுதான் கதையின் முடிச்சு. உரக்க என்னைப் பெத்த ராசா’ என்று அவள் அடித்துக் கொண்டு அழுதாலும் அவளின் அழுகைக்குப் பின்னல் ஒரு மௌனம் புதைந்துள்ளது என்பதுதான் இறந்தவரின் மனைவியால் கூறப்படுகிறது.
திருமணம் ஆவதற்கு முன்னமே பிறந்த குழந்தையைப் புதைத்த சின்னம்மை தானும் தற்கொலை புரிந்து கொள்ளப் போக தாத்தாதான் அவளைத் தடுத்து எல்லாவற்றையும் மறைத்து வேற்றூருக்குக் கொண்டு போய் வைத்திருந்து நல்ல மாப்பிள்ளைக்கும் மணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்தக் கதை சொல்லியை அந்தச் சின்னம்மைக்கு கதை எழுதுபவராகத் தெரியும். கதையின் இறுதியில் கதை சொல்லி சின்னம்மையையும் அவளுக்குப் புதிதாகப் பிறந்த குழந்தையையும் பார்க்க மருத்துவ மனைக்கு எதிர்பாராதவிதமாகப் போக நேரிடுகிறது. அப்போது சின்னம்மை கேட்கிறாள். “கதை எழுத மாமா வந்திருக்கா? என் கதையை எழுதச் சொல்லவா? உன் கதையை எழுதச் சொல்லவா?”
ஆனால் இவனோ “எதை எழுத வேண்டும் என்கிறது போல எதை எழுதக் கூடாது என்கிறதும் எனக்குத் தெரியாதா சின்னம்மா?” என்று நினைத்துக் கொள்கிறான்.

 

கதையின் தொடக்கத்திலேயே வெண்ணெயைப் பூனையைத் திருடுவது சின்னம்மை வைத்துக் கொண்டு கூறப்படுவது ஒரு குறீயீடுதான். இத்தனை நாள்கள் மௌனமாக இருந்த விஷயம் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு கதைசொல்லிக்கு மட்டுமே வெளிச்சமாகத் தெரிந்தாலும் எப்படியோ சின்னம்மையின் வாழ்வில் சிறிது வெளிச்சம் வந்துள்ளது என்றுதான் நாம் ஊகிக்க வேண்டி உள்ளது.

p.txt

வளவதுரையன்

 

வளவ துரையன் திராவிட இயக்க ஈடுபாட்டால் அண்ணாத்துரையின் துரையையும் தன் சொந்த ஊரான வளவனூரின் முன்னொட்டையும் சேர்த்து தனக்குப் பெயர்சூட்டிக்கொண்டவர். பாண்டிச்சேரி மாநிலத்தில் வளவனூரைச் சேர்ந்தவர். கடலூரில் வசிக்கிறார். ஓய்வுபெற்றத் தமிழாசிரியர். இன்று திருபபவை, மகாபாரதச் சொற்ப்பொழிவுகளுக்காகப் புகழ்பெற்றவர். சங்கு என்னும் சிற்றிதழை நடத்தி வருகிறார். ஆச்சாரிய வைபவம் என்னும் வைணவ நூலை எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் வளவ துரையன் சிறுகதைகள் என்னும் பெயரில் முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளன

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62

$
0
0

பகுதி ஐந்து : பாசுபதம்

[ 1 ]

பைலனும் ஜைமினியும் சுமந்துவும் தொடர திருவிட நிலத்திற்குள் நுழைந்தபோது சண்டன் அர்ஜுனனின் இந்திரபுரிபுகுகை குறித்த ஏழு வெவ்வேறு காவியங்களின் கதைகளை சொல்லி முடித்திருந்தான். அவர்கள் கேட்ட ஐயங்கள் அனைத்திற்கும் பிறிதொரு கதையையே அவன் மறுமொழியாக சொன்னான். ஒரு கட்டத்தில் அவர்கள் முற்றிலும் வினாக்கள் அழிந்து கதைச்சுழலுக்குள் மூழ்கி செவியும் விழியும் மட்டுமேயென தொடர்ந்து வந்தனர்.

“விண்ணிலிருந்து மீண்டும் இந்திரகீலமலைக்கு வந்து விழுந்தான் இளையபாண்டவன் என்கின்றன கதைகள். அங்கிருந்து அடர்காடுகளின் வழியாக அவன் இமயமலையடுக்குகள் வரை சென்றான். இமயத்தின் இடுக்குகள் வழியாக கடல்தேடிவரும் பீதர்நாட்டு வணிகர்களுடன் சேர்ந்து சென்றான். அவர்களைப் பிரிந்து கின்னரகுடியினருடன் இணைந்துகொண்டு மேற்குநோக்கி சென்றான். பதினெட்டு மாதங்களில் அவன் கயிலைக்குச் செல்லும் மாவிரதர்களைக் கண்டு அவர்களுடன் இணைந்துகொண்டான். எங்கும் நில்லாதவன் என்பதனால் அவனை சலன் என அழைக்கின்றன நூல்கள்” என்றான் சண்டன்.

அவர்கள் பயோஷ்னி என்னும் சிற்றாற்றின் கரையை வந்தடைந்திருந்தனர். பாறைகள் செறிந்திருந்த மலைச்சரிவில் நுரைத்தும் சீறியும் சென்றுகொண்டிருந்தது நீர்ப்பெருக்கு. சண்டன் நாணல்களைப் பறித்து இணைத்துக்கட்டி நீள்கூம்புவடிவ மீன்கோரியை முடையத்தொடங்கினான். களைத்த கால்களுடன் இளையோர் அவனைச்சூழ்ந்து அமர்ந்தனர். ஜைமினி “அவன் அங்கே கற்ற வேதம் எது?” என்றான். “அவன் அங்கே கடந்தது இந்திரனை முதன்மையாக்கிய மகாவஜ்ரம்” என்றான் சண்டன்.

“அவ்வேதம் இன்றில்லையா?” என்றான் ஜைமினி. சண்டன் புன்னகைத்து “எந்தவேதமும் முற்றழிவதில்லை, அந்தணரே. அது மண்ணுக்குள் வேரென்று நீடிக்கும். ஒவ்வொரு சொல்லிலும் அதன் பொருளும் இணைந்திருக்கும்” என்றான். ஜைமினி பெருமூச்சுடன் “நான் கற்றதே வேறு” என்றான். “சொல்க!” என்றான் சண்டன். ஜைமினி தயங்க “சொல்க அந்தணரே, இக்காடே ஒரு கல்விநிலை அல்லவா?” என்றான் சண்டன். ஜைமினி “பிரம்மனின் நாவிலிருந்து எழுந்து ககனவெளியில் ஒலியலைகளாக நீடித்தவை வேதங்கள். மானுடரால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதனால் அவை ஔபௌருஷேயங்கள். மானுடனுக்கு சொல்லப்பட்டவை என்பதனால் சுருதிகள்” என்றான்.

“வேதம்பெற்ற அனைவருமே முனிவர் என்றும் வேதச்சொல்லைத் தொகுத்த அனைவருமே வியாசர்கள் என்றும் முன்னோரால் அழைக்கப்பட்டனர். சொல்தேர்ந்து வேதம்தொகுத்த முதல்வியாசர் நூறாயிரம் நூல்களாக வேதங்களை வகுத்தமைத்தார். அவற்றை ரிக், யஜூர், சாமம், அதர்வமெனப் பகுத்தார். ரிக்கால் ஹௌத்ரத்தையும் யஜுஸால் அத்வார்யவத்தையும் சாமத்தால் ஔல்காத்ரத்தையும் அதர்வத்தால் பிரம்மதத்துவத்தையும் அடையலாகுமென நிறுவினார். அழைப்பும் அளிப்பும் உசாவலும் பெறுதலுமாக வேதம் அமைந்தது.”

சண்டன் “எதனடிப்படையில் அந்த நூறாயிரம் நூல்கள் தொகுக்கப்பட்டன? எப்படி அவற்றில் இன்றிருப்பவை மட்டும் எஞ்சின?” என்றான். ஜைமினி “அது மானுடரின் வீழ்ச்சி. முன்பிருந்த மூதாதையர் வானென விரியும் உளம்கொண்டிருந்தனர். அவர்கள் வேதமன்றி பிறிதொன்றிலாது வாழ்ந்தனர். மானுடம் வளர்ந்ததும் விழைவுகள் பெருகின. வேதம் அறியமுடியாமைக்கு ஆற்றும் கடமைகளையே வேள்வியெனக் கொண்டது. விழைவுக்கு இலக்காகும் பொருளுக்கென ஆற்றப்படும் கடமைகளனைத்தும் வேதமறுப்பே. வேதமறுப்பு மானுட உள்ளத்தை குறுகச்செய்தது. அதற்கேற்ப வேதம் குறைந்துவந்தது. ஒவ்வொருநாளும் ஒரு பாடலென வேதம் மானுடரால் கைவிடப்படுகிறது” என்றான்.

சண்டன் “அந்தணரே, வேதமென இங்குவந்த மெய்ச்சொல் வடக்கே எழுந்த பனிமலையடுக்குகளைப்போன்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் ஒருபகுதி முதன்மைகொள்கிறது. சிலபகுதிகள் கண்டெடுக்கப்படுகின்றன. சிலபகுதிகள் கைவிடப்படுகின்றன. பெரும்பகுதி எவராலும் காணப்படாமல் அங்கிருக்கிறது. அறிந்தவேதமே நாம் பேசும் வேதம். அறியாவேதத்தின் நுனியே அது என்று அறிக!” என்றான். “இமயமலையடுக்குகளுக்குள் பயணம் செய்பவர்கள் அங்கு அசுரரும் அரக்கரும் கின்னரரும் கந்தர்வரும் வாழ்ந்து விட்டுச்சென்ற பெருநகர்கள் ஒழிந்து கிடப்பதை காண்பார்கள். அவர்கள் எதை வென்றார்கள்? எதை இழந்தார்கள்?” என்று சண்டன் கேட்டான்.

“வேதங்களுக்குள் விடப்பட்ட வேதங்கள் புதைந்திருக்கின்றன என்று அறியாதவன் வேதங்களை பொருள்கொள்ள இயலாது” என்று அவன் தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். பின்னர் கூடையை எடுத்தபடி மீன்கொள்ளும்பொருட்டு பாறைகளின் மேல் தாவிச்சென்றான். இருபாறைகளின் நடுவே பீரிட்டு வளைந்து விழுந்த நீர்ப்பெருக்கின் குறுக்காக அந்தக்கூடையை சற்றுநேரம் வைத்து நீர் வளைந்து தெறிக்கச் சுழற்றி வீசி எடுத்தான். அதில் வெள்ளியிலைகளென மீன்கள் துள்ளின. அவற்றை செவிள்கள்வழியாக நாணலில் கோத்து இடையிலணிந்துகொண்டான்.

“செல்வோம், நாமும் உணவு தேடி மீளவேண்டும். இருட்டிக்கொண்டிருக்கிறது” என்றான் சுமந்து. பைலன் “வெள்ளித் திறவுகோல்களை கொத்தாகக் கட்டி இடைசூடி நின்றிருக்கும் வாயிற்காவலன் போலிருக்கிறார்” என்று சண்டனை நோக்கி சொன்னான். “யார் அவர் என என் உள்ளம் வினவிக்கொண்டே இருக்கிறது. ஒரு வழிகாட்டி என உணர்கிறேன். எதன்பொருட்டு நம்மை அவரிடம் ஒப்படைத்துள்ளது ஊழ்? நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்?” என்றான் ஜைமினி. “நெடுந்தூரம் வந்துள்ளோம். இக்கொடும்பயணத்தை நமக்கு அமைத்த நெறி வீண்விளையாட்டை விரும்பாதென்றே கொள்வோம்” என்றான் பைலன்.

காட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் அமைதிகொண்டிருந்தனர்.  முட்காடுகள் வழியாக வந்திருந்த அவர்களுக்கு பேரிலைச் செடிகள் கொண்ட பசுங்காடு அறியாமலேயே உவகையை அளித்தது. சருகுமெத்தையில் அவர்கள் கால்கள் புதைந்தன. உடல்தொட்ட மரங்களிலிருந்து மலர்ப்பொடிகள் உதிர்ந்தன. புதர்களுக்குள் செம்போத்து ஊடுருவி ஓடியது. ஆர்வத்துடன் ஒரு குரங்கு இறங்கி வந்து அவர்களை நோக்கியது. அதன் தோழி கீழிறங்கி வர மேலே செல்லும்படி அதை எச்சரித்தது.

பைலன் அருகே நின்ற வாழையின் மடல்களைப் பிய்த்து வாயில் வைத்து தேனுண்ண உறிஞ்சினான். “இது அந்தி. வாழைத்தேன் காலையிலேயே இருக்கும்” என்றான் சுமந்து. “ஆசிரியரின் மெய்ச்சொற்களை புலரியிலேயே அடையவேண்டும், அவை மலர்த்தேனைப் போன்றவை என்று ஒரு நெறிநூல் உரைக்கிறது” என்றான் ஜைமினி. “இந்தக்காட்டில்கூட நாம் நூல்களிலிருந்து விடுதலை பெறமாட்டோமா என்ன?” என்றான் பைலன். “காடாகச் சூழ்ந்திருக்கின்றன நாம் கற்ற நூல்கள்” என்றான் சுமந்து. “இலக்கணமற்றது, ஏடென்றும் பாதமென்றும் பிரிக்கப்படாத நூல் இது.”

“நாம் கனிகொள்ள வந்தோம், அதைச்செய்வோம்” என்று ஜைமினி எரிச்சலுடன் சொன்னான். “எதையும் தத்துவமாக ஆக்கவில்லை என்றால் உங்களுக்கு சொல் திகட்டுகிறதுபோலும். இதோ இந்த மரங்களும் செடிகளும்கூட உவமைகளாக ஆகிவிடுவோமா என அஞ்சி நடுங்கி நிற்கின்றன.” சுமந்து வெடித்துச்சிரித்துவிட்டான். பைலன் சிரித்தபடி “ஜைமின்யரே, நீங்கள்கூட வேடிக்கை பேசமுடியும் என இன்று அறிந்தேன்” என்றான்.

ஜைமினி கொடிகளைப் பற்றி இழுத்து வேர்புதைந்த இடத்தைச் சுட்ட பைலன் சிறுகூர்கழியால் அகழ்ந்து கிழங்குகளை வெளியே எடுத்தான். உச்சிக்கிளைகளில் இருந்த காய்களை அக்கொடியிலேயே கவண் கட்டி வீசி எறிந்து பற்றி இழுத்து பறித்தனர். அக்கொடிகளைப்பின்னி கூடையாக்கி அவற்றில் காய்களையும் கிழங்குகளையும் சேர்த்து தூக்கிக்கொண்டனர். அச்செயலில் அவர்கள் மூழ்கியபோது சொல்லாடல் இயல்பாக நின்று அமைதி சூழ்ந்துகொண்டது.

“வேதம் பிரம்மனிலிருந்து பிறந்தது என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன” என்று எண்ணியிராத தருணத்தில் ஜைமினி தொடங்கினான். சுமந்துவும் பைலனும் அப்போது பிரம்மனைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்து சற்று திடுக்கிட்டனர். “ஆனால் ஒவ்வொரு நூலும் பிரம்மனின் தோற்றம் பற்றி ஒவ்வொரு கதையை சொல்கிறது.” அவன் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறான் என்பதை நுட்பமாகத் தொடர்ந்தன இருவரின் உள்ளங்களும். “அவ்வாறென்றால் ஒவ்வொரு பிரம்மனும் படைத்த வேதங்களும் வேறுவேறா?” என்று அவன் கேட்டபோது அம்புவிடுபட்ட வில்லென அவர்களின் அகங்கள் நிலைமீண்டன.

ஏனோ இத்தருணத்தில் முன்புகற்ற அன்னைநெறியின் கதையே என் நெஞ்சில் முதன்மையென எழுகிறது” என்றான் ஜைமினி “யுகத்தொடக்கத்தில் விஷ்ணு ஒரு கைமகவாக ஆலிலையில் கிடந்தார். அவரில் தன்னுணர்வு எழுந்தது. அது அச்சமென்றாகியது. அந்த மகவு வீரிட்டழுதது. அப்போது விண்ணிலிருந்து மெல்லிய மூச்சு அதன்மேல் பட்டது. “நான் யார்? எனையீன்றது எவர்? எதன்பொருட்டு?” என அவர் உள்ளம் வினவியது. விண்நிறையும் இடிமுழக்கமாக ஓர் ஒலியெழுந்தது. சர்வ கல்விதமாமேகம், நான்யாஸ்தி சனாதனம். இவையனைத்தும் நானே. நானன்றி தொடக்கமென ஏதுமில்லை.”

விஷ்ணு நிமிர்ந்து நோக்கினார். நான்கு கைகளில் சங்கும் சக்கரம் கதையும் மலரும் கொண்டு அன்னை அவர்முன் தோன்றினாள். அவள் நிழலும் வண்ணம் கொண்டிருந்தது. ரதி, ஃபூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதை, ஸ்வதை, ஸ்வாகை, க்ஷுதை, நித்ரை, தயை, கதி, துஷ்டி, புஷ்டி, க்ஷமை, லஜ்ஜை, ஜ்ரும்பை, தந்த்ரி என்னும் அன்னையாற்றல்களாக அந்நிழல் பெருகிச்சூழ்ந்தது. அறியாமகவு அலகிலா அன்னையரைக் கொண்டதாக ஆகியது.

தன் கனிந்த விழிகளால் நோக்கி அன்னை சொன்னாள் “மைந்தா, நீ என் காலத்தின் ஒரு கணம். முடிவிலாது பிறந்து அழிந்து மீள்கிறாய். நீ வளர்க!” அவள் அதை எடுத்து தன் முலைகள்மேல் சேர்த்தாள். அமுதை உண்டு இளமைந்தன் கண்மயங்கலானான். அவன் செவிகளில் அன்னையின் சொல் எழுந்தது. “நீ பெருகுக! நீ சத்வகுணத்தான். பெருநிலை கொண்டமைந்தவன். மெய்மைக்கடல்மேல் அறிதுயில்கொள்க! உன் தொப்புளிலில் இருந்து ரஜோகுணத்தான் எழுக! செயல்நிலை கொண்ட அவனை பிரம்மன் என்று அழைக்கட்டும் முனிவர். பிரம்மன் புடவிப்பெருக்கை படைப்பான். அது வளர்ந்து தன் விசையால் மையம் கொள்கையில் அதிலெழுக தமோகுணத்தானாகிய மகாருத்ரன்! எதிர்நிலை கொண்ட அவனை அழிவிலா நஞ்சென்றும் அனல்வண்ணனென்றும் அழிப்போன் என்றும் ஆடவல்லான் என்றும் அறியட்டும் மெய்யுணர்ந்தோர்.”

“அவ்வாறு பிறந்தனர் மூன்று தெய்வங்களும் முப்பத்துமுக்கோடி தேவர்களும் எண்ணிலாப்புடவிகளும் அவற்றை இணைத்தாடும் ஊழ்ப்பெருக்கும்” என்றான் ஜைமினி. “பிறிதொரு நூலில் உள்ள கதை சற்றே மாறுபடுகிறது. காலத்தொடக்கத்தில் இங்கிருந்தது விண்நீர் மட்டுமே. அதன் அலைகளென தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தவள் அன்னை. அவள் தானென்றும் தோழியரென்றும் உடல்கள் கொண்டு அதில் நீராடித்திளைத்தபோது அவள் அண்டத் துளி ஒன்று அந்நீர்ப்பரப்பில் விழுந்து பொற்துகளென சுடர்விட்டது. அன்னை அதைக்கண்டாள். நீ தவத்தான் படைப்பவனாகி எழுக என ஆணையிட்டாள். பின் தானே அதன் உயிரென புகுந்து எழுந்து வளர்ந்து புடவிகளை படைத்தெடுத்தாள்.”

“முடிவிலாக்கதைகள்” என்று பைலன் சொன்னான். “பிரம்மனின் பிறப்பு குறித்த கதைகளை நாம் இங்கு பேசுவோம் என்றால் நம் அகவை முதிர்ந்து சிதைசேர்வதுவரை ஒருகணமும் ஒழியாது பேசிக்கொண்டிருக்கலாம். இங்குள்ள குலங்கள் அனைத்தும் பிரம்மனைப்பற்றி ஒரு கதையை வைத்துள்ளன. குடிகளுக்கு ஒரு கதை அப்பெருங்கதைக்குள் இருக்கும். நூல்களில் அக்கதைகள் நூறுமுகங்கள் கொண்டு வளரும்.” ஜைமினி “அன்னையைப்பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். மூவரும் சிலகணங்கள் அமைதிகொண்டனர்.

“வாக்தேவி என்றும் அதிதி என்றும் அன்னையின் முகங்கள் உள்ளன. ராத்ரி, உஷை, சந்த்யை என அன்னை முகம் காட்டுகிறாள். ஆனால் வேள்விக்குரிய முதன்மைத்தெய்வமாகவோ தேவர்களை ஈன்ற பேரன்னையாகவோ அவளை வேதங்கள் உரைப்பதில்லை” என்றான் சுமந்து. ஜைமினி “உரைக்கும் வேதங்கள் எங்கேனும் உள்ளனவா?” என்றான். அவர்கள் மீண்டும் அமைதியானார்கள். “அறியாவேதங்கள் என சண்டர் சொல்வது அவற்றைத்தானா?” அவர்கள் தங்கள் தனித்த எண்ண ஓட்டங்களில் மூழ்கியவர்களாக நடந்தனர்.

நீண்டநேரம் கழித்து மீண்டும் ஜைமினி சொன்னான் “அப்படியென்றால் திசைநான்கையும் வென்று அர்ஜுனன் அடைந்த வேதமெய்மையின் பொருள்தான் என்ன? வேதங்களை அறிந்து கடப்பது ஒருவனுக்கு இயல்வதாகுமா?” பைலன் “ஒவ்வொரு வேதமும் பிறிதொன்றை முழுமைப்படுத்துகிறது என்கின்றன நூல்கள்” என்றான். அவன் சொன்னதென்ன என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் அவனை திரும்பிப்பார்த்தனர். அவனும் தான் சொன்னதன் பொருளென்ன என்று உணராதவன்போல திகைத்து அவர்களை நோக்கினான். பின்னர் புன்னகைத்து “கற்றவை அனைத்தையும் முற்றிலும் கலைத்துவிட்டார் சூதர்” என்றான். அச்சொல்லில் எளிதாகி அவர்கள் நகைத்தனர்.

சுமந்து “கிழங்குகளின் வேதம் விதைகளுக்கில்லை. காய்களுடன் இணைந்து வேதமும் கனிகிறது” என்றபின் “அரிய சொல்லாட்சி… எனக்கே இதை எங்கேனும் எழுதவேண்டும் போலிருக்கிறது” என்றான். “மானின் வேதத்தை மானை உண்ணும் புலி தானும் அடைகிறது” என்றான் பைலன். “பைலரே, வேண்டாம். வேதமறுப்பும் வேதநகையாட்டும் பழிசேர்க்கும்” என்றான் ஜைமினி. “வேதப்பழி பிறிதொரு வேதமாகிறது” என்றான் பைலன். சுமந்து “ஆ, மெய்யாகவே அது ஓர் அரிய எண்ணம். நம் மெய்யாடலின் வரலாற்றை அதனூடாகச் சென்று அணுகியறியமுடியுமென்று தோன்றுகிறது” என்றான்.

“வேடிக்கை வேண்டாம்” என்றான் ஜைமினி சினத்துடன். “வேதங்களை நாம் கிளிகளுக்கு கற்பிப்போம். பாரதவர்ஷமெங்கும் அவை சென்று அத்தனை கிளிகளையும் வேதமொழிசொல்லப் பயிற்றும். வேதமொலிக்கும் காடுகளில் வேதம் கனிந்த கனிகள் எழும். அவற்றை உண்ட மானுடர் அவியுண்ட தேவர்களென்றாவார்கள்” என்றான் பைலன். “அக்கனிகள் அழுகி நிலத்தில் விழுந்தால் பாதாளநாகங்களால் உண்ணப்படும். அவை பொன்னுடல்கொண்டு நெளியும். வேதம் கீழுலகங்களை முற்றழிக்கும்” என்றான் சுமந்து. “வேண்டாம், இங்கேயே நிறுத்திக்கொள்வோம்” என்று ஜைமினி குரல் உடையச் சொன்னான்.

“உண்ணப்படும் கனிகளைவிட உதிரும் கனிகளே மிகுதி. அவியுண்ட அடியுலகோர் விண்ணவராவர். ஆழம் விண்ணென்றாகும். மணல்கடிகை திரும்புவதுபோல ஏழுலகும் தலைகீழாகும்” என்று பைலன் சொன்னான். “விஷ்ணு ஆழுலகில் பாற்கடலில் படுத்திருப்பார். வானெங்கும் நாகங்கள் நெளியும்.” ஜைமினி நின்று அழுகை கலந்த உரத்த குரலில் “வேண்டாம்! வேண்டாம்! போதும்!” என்று கூவினான். “சரி போதும்” என்று பைலன் சிரித்துக்கொண்டே சொன்னான். சுமந்து “வேதங்களைப்பற்றிய மெய்யறிதலை இனிமேல் நாம் இவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்” என்றான். “வேதங்களை இவர் அன்னை சொன்ன தந்தையின் பெயர் என நம்புகிறார்” என்றான் பைலன். “பைலரே” என ஜைமினி கூவ “சரி, இனி இல்லை” என்றான் பைலன்.

அவர்கள் திரும்பி ஆற்றங்கரையை அடைந்தபோது காட்டுக்குள் இருள் பரவி பறவைகள் சேக்கேறும் ஒலிகள் எழுந்துகொண்டிருந்தன. ஜைமினி தலைகுனிந்தவனாக நடந்தான். ஆற்றங்கரை மணலில் அவர்களின் கால்கள் புதையும் ஒலி எழுந்தது. ஜைமினி “நகையாடலாயினும்…” என்றான். “என்ன?” என்றான் பைலன். “நகையாடலாயினும் எண்ணவேண்டிய சொற்களே” என்றான் அவன். பைலன் சிரித்து “நகையாட்டிலன்றி எவரும் கூரியவற்றை சொல்லமுடியாது ஜைமின்யரே” என்றான்.

[ 2 ]

பயோஷ்னியின் நீரில் ஒளி கலங்கி அலையடித்துக்கொண்டிருந்தது. ஈரப்பாறைகளில் சிந்தியகுங்குமம் போல செம்மை வழிந்தது. நாணல்களுக்கு அப்பால் பாறை ஒன்றின் பரப்பில் சண்டன் அனல்மூட்டி அதில் மீன்களை சுட்டுக்கொண்டிருந்தான். அவன் மீனைச் சுட்டு முடிப்பதற்காக அவர்கள் காத்திருந்தனர். சுட்ட மீன்களை இலையொன்றில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த அவன் அவர்கள் வருவதைக் கண்டும் விழிதிருப்பவில்லை. சரியான பதத்தில் மீன் வெந்து நீலச்சுடர் எழுவதற்காக அவன் விழிகள் கூர்ந்திருந்தன.

மீன்களைச் சுட்டு முடிந்ததும் அவன் எழுந்துகொண்டு “நீங்கள் உங்கள் உணவை சுடலாம்” என்றான். ஜைமினி தன் கிழங்குக்கூடையுடன் முன்னால் அடிவைக்க “அனல் ஊனுண்டு செழித்திருக்கிறது, அந்தணரே” என்றான் சண்டன். அறியாது ஜைமினி தயங்க நகைத்து “தூய அனலைத் தேடுகிறீர் போலும்” என்றான்.

ஜைமினி திரும்பி தன் தோழர்களை நோக்கிவிட்டு முன்னால் சென்று கிழங்குகளை சுடத்தொடங்கினான். கண்களில் புன்னகையுடன் பிற இருவரும் வந்து அருகமைந்து கிழங்குகளை சுட்டனர். சண்டன் அப்பால் அமர்ந்து மீனை உண்டு முட்களை அருகிருந்த இலைமேல் வைத்தான். ஜைமினி திரும்பிப்பார்க்க “முன்பு மீன்கள் வானில் பறந்திருந்தன என்று சொல்கிறார்கள், அந்தணரே” என்றான். “மெய்யாகவா?” என்றான் சுமந்து. “ஆம், நான் இமயமலையின் உச்சிப்பாறை ஒன்றில் மீன்கள் பதிந்து உருவான முள்வடிவை கண்டிருக்கிறேன்” என்றான்.

“அவை எப்படி நீர்வாழ்வில் அமைந்தன?” என்றான் ஜைமினி அறியாமல். “அவற்றின் வேதம் சொல்மாறியிருக்கும்” என்றான் சண்டன். பைலனும் சுமந்துவும் சிரிக்க சுட்ட கிழங்குகளை எடுத்துக்கொண்டு ஜைமினி அப்பால் சென்று திரும்பி அமர்ந்து உண்ணத்தொடங்கினான். “சினம் கொள்கிறார்” என்றான் பைலன். “சினப்பது அவருக்கு நன்று. சினத்தினூடாகவே அவர் கற்றுக்கொள்கிறார்” என்றான் சண்டன்.

புதர்களுக்குள் ஓர் அசைவு கேட்க சண்டன் எட்டி அனலில் இருந்த கொள்ளிவிறகொன்றை கையிலெடுத்துக்கொண்டான். “மானா?” என்றான் பைலன். “அல்ல” என்ற சண்டன் “யார்?” என்றான். அங்கிருந்து “நீங்கள் யார்?” என குரல் கேட்டது. “இளையவர்” என்றான் சண்டன். பின்னர் உரக்க “நான் சூதன். மூன்று அந்தண இளையோரும் என்னுடனிருக்கிறார்கள்” என்றான். அங்கிருந்த குரல் “நான் அந்தணச் சிறுவன். என் பெயர் வைசம்பாயனன்” என்றது.

சண்டன் எழுந்து அந்தக்கொள்ளியை காற்றில் சுழற்றி அனலூட்டி கொழுந்தாடச்செய்தான். அந்த ஒளியில் தொலைவில் நின்ற இளையவனை காணமுடிந்தது. “வருக, அந்தணரே! நீங்கள் உரிய குழுவுடன் இணைந்துள்ளீர்கள்” என்றான் சண்டன். வைசம்பாயனன் ஆற்றின் பாறைகளை மெல்லக்கடந்து அருகே வந்தான். “முதலில் உண்ணுங்கள்” என்றான் சண்டன். “ஆம், நான் பசிகொண்டிருக்கிறேன். என்னிடம் சற்று கிழங்குகள் உள்ளன” என்றபடி அவன் அனலருகே அமர்ந்தான். “அவற்றை பின்னர் சுடுவோம். இப்போது சுட்டவற்றை உண்ணுக!” என்றான் சண்டன்.

அவன் உண்பதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர். உண்டு முடித்து கமுகுப்பாளைத் தொன்னையிலிருந்து நீரை அருந்திவிட்டு அவன் நிமிர்ந்து “கடும்பசி. வரும் வழி அடர்காடு. ஏதேனும் நீர்க்கரையில் இரவு தங்கவேண்டுமென்பதற்காக கடுநடையிட்டு வந்தேன்” என்றான். “அன்னம் அன்னத்தை அறியும் தருணத்தை நோக்கியிருப்பதுபோல நிறைவளிப்பது பிறிதொன்றில்லை” என்றான் சண்டன். “ஆம், இந்த நெடும்பாதையில் நான் மெய்யென்று முதலில் அறிந்தது பசியையே” என்றான் வைசம்பாயனன்.

அவன் வாயிலிருந்து ஏப்பம் ஒன்று எழுந்தது. “வேதநாதங்களில் முதன்மையானது உயிர்கள் கொள்ளும் ஏப்பம் என்று ஒரு சூதனின் சொல்லை வைசாலியில் கேட்டேன்” என்றான் வைசம்பாயனன். “ஜடரவேதம் என அதை அவர் சொன்னார்.” பின்னர் பைலனை நோக்கி தலைவணங்கி “விசும்ப குலத்தில் வந்தவன். என் பெயர் என வைசம்பாயனன் என்பதை கொண்டிருக்கிறேன்” என்றான். பைலனும் சுமந்துவும் ஜைமினியும் குலமும் குருமுறையும் பெயரும் சொல்லி தங்களை அறிமுகம்செய்துகொண்டார்கள்.

அவர்கள் வாழ்த்துரைத்து முடித்ததும் சண்டன் “நான் சூதனாகிய சண்டன்” என சுருக்கமாக தன்னை சொன்னான். “எங்கு செல்கிறீர்கள்?” என்று பைலன் கேட்டான். வைசம்பாயனன் “நொதித்த கள் கலம்விட்டு எழுவதைப்போல மாணவர்கள் குருநிலைகளிலிருந்து வெளியே செல்கிறார்கள் என்று ஒரு சூதன் சிலநாட்களுக்கு முன் பாடக்கேட்டேன்” என்றான். “எனக்கு மெய்மையை அறிவிக்கும் ஆசிரியர் ஒருவரை தேடிச்செல்கிறேன்.” ஜைமினி “அந்த ஒப்புமை எனக்குப்புரியவில்லை” என்றான். வைசம்பாயனன் “அது ஒரு பகடி, ஜைமின்யரே. புளித்தெழும் நுரை ஆணவமே. வழிவதே நிகழ்கிறது, வெளியேற்றம் அல்ல.”

ஜைமினி “அப்படி சொல்லமுடியுமா என்ன?” என்றான். பைலன் “அது பகடி. அதை அவரே சொல்லியும் விட்டார். பகடியை ஆராய்வதென்பது உடையை பஞ்சாக்கிப்பார்ப்பது போல” என்றான். ஜைமினி “வெளியேறாதவர்கள் எதை கண்டடைய முடியும்?” என்றான். “முற்றிலும் வெளியேறுபவர்களே கண்டடையமுடியும் என்று அதற்குப்பொருள்” என்றான் வைசம்பாயனன். “வெளியேறும்போதே முழுமையாகத்தானே கிளம்புகிறோம்?” என்றான் ஜைமினி. சுமந்து “பகடியையே வேதமெய்ப்பொருள் என ஆய்பவர் அவர், வைசம்பாயனரே” என்றான். “ஆம், அதை அவரைப் பார்த்ததுமே அறிந்துகொண்டேன்” என்றான் வைசம்பாயனன்.

சண்டன் சிரித்து “நன்று, நால்வரும் நிகரானவர்களே” என்றான். வைசம்பாயனன் “நானும் அதையே உணர்ந்தேன், சண்டரே” என்றான். “திசையானைகளைப்போல கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் சண்டன் உரக்க நகைத்து “அல்லது திசையாமைகளா?” என்றான். வைசம்பாயனன் “அது இலக்கு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தது. செல்லுமிடம் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை என்றால் விரைவும் அமைவும் நிகர் அல்லவா?” என்றான்.

“வைசம்பாயனரே, உங்களிடம் ஒரு வினா. நாங்கள் சற்றுமுன் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் பைலன். “இவர் அன்னைநெறி வந்த நூல்களில் பிரம்மனை முதலாற்றலாகிய பேரன்னை படைத்தமை குறித்து சொன்னார். அன்னை படைத்த பிரம்மனின் சொல்லில் எழுந்த வேதங்கள் ஏன் அன்னையைப் பாடவில்லை?” என்றான். சுமந்து “அல்லது பாடும் வேதங்கள் எங்கேனும் உள்ளனவா? நீர் அறிவீரா?” என்றான்.

“இருக்க வாய்ப்பில்லை” என்றான் வைசம்பாயனன். “வேதமென்றால் வேர்நீர் செடியை என தேவர்களை வளர்க்கவேண்டும். குன்றாது குறையாது என்றுமிருப்பவளை வேதம் வழுத்தவும் பெருக்கவும் வேண்டியதில்லை.” சற்றே முன்னகர்ந்து “இங்குள அனைத்தும் அவள் வடிவே என்றால் வேதமும் அவளே. வாக்கென வந்து வேதமென அமைந்தவள் அன்னை” என்றான்.

சண்டன் முகம் மாறியது. அனலை உந்தி செம்பொறி பறக்க விறகமைத்தபோது அவன் முகமும் அனலொளி கொண்டது. “நீர் கற்றவர், அந்தணரே” என்றான். “தொன்மையான பாடல் ஒன்று அவளை வேதமே உடலென்றானவள் என்கின்றது. சிக்ஷை அவள் குரல். சந்தம் அவள் நடை. வியாகரணம் அவள் ஆடை, நிருக்தம் அவள் காலடி, கல்பம் அவள் அருட்கை, ஜ்யோதிஷம் அவள் அளிக்கை. வேதமென்று இங்கு ஓதப்படும் அனைத்தும் அவளென்று அறிகின்றனர் அன்னைநெறி அமைந்த படிவர்.”

அனல்மேல் எடைமிக்க காட்டுவிறகுகளை ஒன்றன்மேல் ஒன்றென சாய்த்து அமர்த்தினான் சண்டன். அனல் மெல்ல அவற்றில் பரவி எழலாயிற்று. “அகலாது அணுகாது அறிக, இகல்வென்று நின்றாடும் அனலை!” என்றபின் அவன் தன் உடலை சுருட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். பிறநால்வரும் செந்தழலின் ஆடலை, உடனாடும் நிழல்வெளியின் பெரும்பித்தை நோக்கி அமர்ந்திருந்தனர்.

தொடர்புடைய பதிவுகள்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்-3

$
0
0

1i

 

 

1.இரவு முழுதும்

இரவு முழுதும்

ஓவென்ற காற்றின் ஊளை

உடல்மீது பாய்வதுபோல இருந்தது

இந்நேரம்

சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம்

என் வாடகை வீடு

பகல் முழுதும்

பொழிந்தபடியே இருந்தது

மழைமழைமழை

இந்நேரம்

கரைந்துபோயிருக்கலாம்

என் வாடகை வீடு

இந்தக் கோடை முழுவதும்

எரிந்தபடியே இருந்தது

வானுயர்ந்த நீல அடுப்பு

இந்நேரம்

எரிந்து பொசுங்கியிருக்கலாம்

என் வாடகை வீடு

குளிர்காலம் முழுவதும்

கவிந்து மூடிக்கொண்டிருந்தது

கடுமையான குளிர்

உறைந்துபோயிருக்கலாம்

என் வாடகை வீடு

இன்னும் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது

என் வாடகை வீடு

காத்துக்கொண்டிருக்கிறது

என் வாடகை வீடு

என்னுடையதாக மாறாத என் சொந்த வீடு

 

index

2.அடுப்பு

திருமணம் திவசங்களெல்லாம்

முடிந்துவிட்டன.

பூமியகலமுள்ள அடுப்பு

இப்போது அணைந்திருக்கிறது.

கோடானுகோடி வயிறுகளுக்கு

உணவு கிடைக்கட்டுமென

சுட்டழித்த காடு.

வடதுருவத்திலிருந்து தென்துருவம் வரைக்கும்

பச்சைப்பசேலென நீண்டிருந்த காடு

இப்போது எரிந்து சாம்பலாகிவிட்டது.

நீங்களே தொட்டுப் பாருங்கள் !

எவ்வளவு குளிர்ச்சி.

காடு விழுங்கிய நெருப்பு

நாட்டிலும் எரிந்து

நாட்டினரின் கதைகளும் முடிந்துவிட்டன.

அந்த அழிவுகளின் விசித்திர அலங்கோலப் படங்களை

நான் தன்னந்தனியே தீட்டிக்கொண்டிருக்கும்போது

அந்தச் சாம்பலின் அகன்ற பரப்பில்

இதோ

சூரியன் !

அந்த மாபெரும் அடுப்பின் கருப்பையின் ஆழத்தில்

புதிய கரு.

 

HS_Shivaprakash

  1. கட்டிட வேலைக்காரர்கள்

சுடுகாட்டுச் சாம்பலுடன் கலந்த மண்

கல்குவியலையும் பாதி வெந்த விறகுகளையும்

தாண்டியும் தடுக்கியும் வெளியே வந்தேன்

ஒருமுறையாவது

இதமான காற்றால் நெஞ்சை நிரப்ப

மண்திமிங்கலம் எழுந்து நின்றதுபோல

வர்ணம் பூசாத மாளிகை

அதன் தோள்களை நிறைக்கும்

கூலியாட்களின் வரிசை

முதலில் செங்கல்லாக மாறும் மண்

அப்புறம் கட்டடமாகும்

மெல்ல மெல்ல உயரும் வாழ்க்கை எல்லை

கைக்குக் கைமாறும் மண்சட்டியொன்று

இறக்கை முளைக்காத உலோகப்பறவை

ஏறித் தாழும் தோளிடுக்கில்

நீல வானமே எரிந்தாலென்ன?

வேகமாய்ப் புகையுயர்ந்து அடர்ந்தாலும் என்ன?

மண்பிளந்து படிப்படியாய்

உயிரிறிந்து நெடிதுயர்ந்த

அழகான மாளிகை

சடசடக்கும் கிணற்றுராட்டினம்

கூவி விடுக்கும் அழைப்புக்கு நடுவில்

சுடுமணல் குவியல்களின்

சிறுசிறு நிழலடியில்

அரைவிழி திறந்த குழந்தைக்கு

அமுதூட்டும் அம்மா

உன் ரகசியக் கருவறையில் புரளும்

நகரங்கள் எத்தனை, நாடுகள் எத்தனை?

 

interview_shivaprakash

  1. அபூரண கதை

எனக்கு நீதான் காட்டினாய்

ஓர் உதிர்ந்த தலைமுடியை

அதன் கதையை முழுசாய்

அறிந்துகொள்ளும் முன்பு

மேலே பறந்து மறைந்தது

ஒரு கொக்கைப்போல

நான் உனக்குக் காட்டினேன்

உதிராத தளிர்களை

அதன் கதையை முழுசாய்

அறிந்துகொள்ளும் முன்பே

கீழே உதிர்ந்து மறைந்தது

மாரிக்காலம்போல

நீ காட்டியது – முழுமை பெறாத கதை

நான் காட்டியது – முழுமை கிட்டாத கதை

 

தமிழில்: பாவண்ணன்

 

மதுரைக்காண்டம்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ்

எச்.எஸ்.சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்

 

 

தொடர்புடைய பதிவுகள்

ஒண்ணுமே படிச்சதில்லை -கடிதங்கள்

$
0
0

pp

 

அன்புள்ள ஜெ.மோ அவர்களுக்கு,

”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை” என்னும் கட்டுரையைப் படித்தேன்…..நானும் இதே முட்டாள் தனத்தை செய்தேன். அதுவும் [ நீங்கள் இக்கட்டுரையில் பெயர்சொல்லாமல் குறிப்பிட்டிருக்கும் ] நாஞ்சிலிடமே!

அவர் வேலை செய்த Brady & Co  கம்பெனியில் என் தந்தையாரின் நண்பரும் வேலை செய்தார்….அவரை சந்திக்க சென்ற போது  “குரு, உனக்கு ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறேன் எனக்கூறி நாஞ்சிலை அழைத்து அறிமுகம் செய்தார்….நான் அவர் எழுத்தை வாரப்பத்திரிக்கைகளின் வாயிலாக மட்டுமே படித்திருந்தேன்.

என்ன பேசுவது என தடுமாறி ஒரு மாதிரி உளறிக்கொட்டி விட்டேன்….உங்கள் கட்டுரையில் அந்த வாசகி குறிப்பிட்டிருந்தாரே ….“நான் வாசிச்சிருக்கேன். கதைகள் ஞாபகமும் இருந்தது. ஆனால் அவரை மாதிரி இருக்கிறவங்ககிட்ட நுணுக்கமா அறிவாப் பேசணும், அது நமக்குத் தெரியாதேன்னு நினைச்சேன். தப்பா பேசுறதவிட வாசிக்கலைன்னு சொன்னா நல்லதுன்னு தோணிச்சு” கிட்டத்தட்ட அதே எண்ணங்களில் தான் நானும் அப்படி செய்தேன்! பின்னாளில் நண்பர் ஓவியர் ஜீவாவிடம் இதை சொல்லி திட்டு வாங்கிக் கட்டிக்கொண்டது தனிக்கதை!

 

குரு பிரசாத்

 

 

அன்பு ஜெமோ,

 

‘நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை’ கட்டுரையை வாசித்தேன். நீங்கள் அமெரிக்கா  வந்தபோது உங்களைப்பார்க்க வந்த அமெரிக்கப்  பேராசிரியர்களை நினைத்துக்கொண்டேன்.

உங்களை சந்திக்க வந்த அறுவரில் இருவர் உங்களுடைய படைப்புகளைப்பற்றி கேள்விப்பட்டவர்கள். அவர்களுடைய உயர் ஆராய்ச்சி  வட்டத்தில் ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். மற்ற நால்வரும் என் வழியாக மட்டுமே உங்கள் பெயரைக் கேட்டிருக்கிறார்கள். சந்திப்பு நாளுக்கு 3 வாரம் முன்பிருந்து ‘முன்னேற்பாடு’ செய்யத்தொடங்கினர். ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் நான் அதற்கு உதவ வேண்டும் என்பது எனக்கிடப்பட்ட கட்டளை (கரும்புதின்ன கூலி)!

அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாதென்பதால், முதலில் உங்களைப்பற்றி வந்த ஆங்கிலக்கட்டுரைகளை எல்லாம் தேடித்தேடி வாசித்தார்கள். வாரம் ஒருமுறை எல்லாவற்றையும் தொகுத்து என்னிடம் கொடுத்து கருத்தைக்கேட்பார்கள்!நானும் ‘இது உண்மையில்லை’, ‘இது எல்லாத் தரப்பையும் சொல்லவில்லை’ என்று செய்திக்கு தகுந்தாற்போல் பதில் சொல்வேன். மிக விரைவில் அவர்களுக்கு ஒரு வியப்பு வந்துவிட்டது- என்னவென்றால், எப்படி ஒருவர் இவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்து ‘அசராமல் தாம்பாட்டுக்கு’ எழுதிக்குவிக்கிறார் என்பதே! நீங்கள் சொன்ன “யானை Vs பூரான்” கதையை அவர்களுக்கு சொன்னேன், கண்ணில் நீர்வர சிரித்தார்கள்!

பிறகு உங்கள் ஆக்கங்களில் ஏதேனும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றனவா  என்று தேடி, காடு நாவலை படித்தனர். ஒரு 100 பக்கம் முடித்தவுடனே, நண்பர் ழாக் சொல்லிவிட்டார் “இவர் படிமங்களை வைத்துக்  கதை சொல்கிறார்; மொழிபெயர்ப்பெல்லாம் ஒத்து வராது ” என்று.

கடைசியாக சிறுகதைக்கு வந்தார்கள். உங்களது சிறுகதைகளில் எனக்குப்பிடித்த இரண்டு கதைகளை எடுத்து ‘பத்தி பத்தியாக’ சொல்லவேண்டும் என்று ஏற்பாடு. மாடன் மோட்சத்தையும், யானை டாக்டரையும் எடுத்துக்கொண்டேன்.

ஏசு கையில் என்ன ஆயுதம் வைத்திருந்தார் என்று மாடன் கேட்குமிடம் அனைவரையும் கவர்ந்த தருணம். அது மட்டுமே ஒரு மணிநேர விவாதமாய் நீண்டது. அப்படி எந்த ஆயுதமும் இல்லாத ஒருவர் மேய்ப்பராக ஆனதே அவரின் சிறப்பு என்று ஒருதரப்பும், மகாவீரரோ, புத்தரோ, கிருஷ்ணரோ சொல்லாத எதை அவர் சொல்லிவிட்டார் என்று இன்னொரு தரப்பும் விவாதித்தனர். யானை டாக்டர் கதை ஒரு ‘தரிசனம்’ என்பதே அனைவரின் கருத்தும்.

சந்திப்பு நாளன்று நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.  மாலை 5:30 மணிக்குத்தொடங்கி 2 மணி நேரம் சந்திப்பு என்று நிரல். ஆனால், விவாதம் சூடு பிடித்து தட தடவென ஓடி ஒரு வழியாய் முடிவுக்கு வந்தபோது இரவு 11:30 மணி! நடுவில் இரண்டு முறை மட்டும் அணைத்து வைத்திருந்த செல்பேசியை பயன்படுத்தினர்- குழந்தைகளை வீட்டில் பார்த்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த காப்பாளரை சிலமணி நேரங்கள் மேலும் நீட்டிக்கச்செய்ய.

 

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

 

 

 

அன்புள்ள ஜெ

நான் ஒண்ணுமே வாசிச்சதில்லே அனுபவம் எனக்கும் உண்டு. நான் பிரபஞ்சனைச் சந்தித்தபோது அவருடைய மானுடம் வெல்லும் வானம் வசப்படும் இருநாவல்களையும் வாசித்திருந்தேன். இரண்டையும் ஞாபகமும் வைத்திருந்தேன். ஆனால் அவரிடம் உளறக்கூடாது என்பதனால் வாசித்ததே இல்லை என்று சொல்லிவிட்டேன். அவர் பேசுவதைக் கேட்போம் என நினைத்தேன். ஆனால் வாசிக்கவில்லை என சொன்னதுமே பிரபஞ்சன் சர்வசாதாரணமான விஷயங்களைப்பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார் .பெரும்பாலும் ஓட்டல் உணவுகளைப்பற்றியும் சென்னை திரையரங்குகள் இடிப்பதைப்பற்றியும்

நான் பெரிய சோர்வுடன் திரும்பி வந்தேன். அதன்பின் உங்களை சந்தித்தேன். அப்போதும் இதேதான் நடந்தது. அங்கே வந்த நான்குபேரில் மூவருமே உங்களை வாசிக்கவில்லை என்றார்கள் நீங்கள் சினிமா பற்றிப் பேசினீர்கள். அன்றைக்குத்திரும்ப வரும்போது பெரிய சோர்வு. ஏன் இப்படி நிகழ்ந்தது என்றே நினைத்தேன். எழுத்தாளர்களைச் சந்திக்கச்செல்வது அவர்கள் முக்கியமான எதையாவது சொல்வார்கள் என்பதனால்தானே?

திடீரென்று ஒரு விஷயம் புரிந்தது. நாம் நம்மை, நம் தகுதியைக் காட்டிக்கொள்ளவேண்டும். நம்மை கொஞ்சமேனும் நிரூபிக்கவேண்டும். இல்லாவிட்டால் நம்மை அவர்கள் பாமரர் என்றே நினைத்துக்கொள்வார்கள். பாமரர்களுக்கு உரியவகையில் பேச ஆரம்பிப்பார்கள். மிக இன்ஸ்பைரிங் ஆகப் பேசக்கூடியவர் நீங்கள் என என் நண்பர்கள் பலர் சொல்லியிருக்கிறார்காள். ஆனால் பேசவைப்பது கேட்பவர்கள் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள், எந்த அளவுக்குத் தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதுதான்.

அன்றைக்கு உங்களிடம் பேசியபோதும் சரி பிரபஞ்சனிடம் பேசியபோதும் சரி வாசித்தவர்கள் சும்மா இருந்தோம். வாசிக்காத ஒரே ஒருவர் சாப்பாடு சினிமா என்று பேச்சைக்கொண்டுபோனார். எந்த நல்ல உரையாடலும் கேட்பவரை ஒட்டியே உருவாகிறது என்று அன்று புரிந்தது. அதெல்லாம் மிகப்பெரிய இழப்புகள்

உண்மையில் வாசகர்களிடம் சாதாரணமான விஷயங்களை ஓர் எழுத்தாளர் பேசுகிறார் என்றால் அவர் அவர்களை உள்ளூர மிகச்சாதாரணமாக எடைபோட்டுவிட்டார் என்றுதான் அர்த்தம். அதற்கு முழுக்கமுழுக்க அந்த வாசகர்கள்தான் காரணம்

 

முத்துராஜ் ஆறுமுகம்

 

*

 

வாசிச்சதில்லை…யை விட ஒருபடி மேல்:
இந்த வருடம் ஒரு இலக்கியக்கூட்டத்தில் ஒரு பெண்மருத்துவர் வந்திருந்தார். ஆங்கிலத்தில் ஒரு தொகுதி (யோ ஒரு கதையோ) எழுதி இருப்பார் போல.
கூட்டத்திற்கு வந்திருந்த இ.பா’வை, தமிழின் முக்கியமான எழுத்தாளர் என்று அவருக்கு யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள்.
நான் ஒரு (குருதிப்புனல், மழை தவிர) ‘ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்’ – category என்பதால், கொஞ்சம் அகலாது-அணுகாது அமர்ந்திருந்தேன்.
மருத்துவரோ நேராக வந்து, அடுத்த இருக்கையில் அமர்ந்து,  வாஞ்சையோட முறுவலித்து Sir, can you please give me some tips on how to write  என்றாரே பார்க்கலாம்.
கூட்டம் தொடங்கி இ.பா’வைக் காப்பாற்றியதாக எனக்கு நினைவு, அல்லது நம்பிக்கை.
பிரபு

 

 

சாரி சார் ஒண்ணுமே படிச்சதில்லை

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை

$
0
0

bava_2

 

 

பவா செல்லத்துரை எனக்கு சகஎழுத்தாளர் என்பதைவிட முப்பதாண்டுக்கால நண்பர் என்று சொல்வதே பொருத்தம். நான் 1987ல் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். இன்றுவரை நீடிக்கும் அணுக்கம் அவருடையது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணக்கமான முகமாக ஒரு காலகட்டத்தில் பவா அறியப்பட்டார். கட்சியின் துணையமைப்பாக, வெறும்பிரச்சாரக்குழுமமாக இருந்த அதை அனைத்து இலக்கியவாதிகளுடனும் தொடர்புள்ளதாகவும் அனைத்து இலக்கியவிவாதங்களிலும் பங்கெடுப்பதாகவும் மாற்ற அவரால் முடிந்தது. அவர் திருவண்ணாமலையில் நிகழ்த்திய கலையிலக்கிய இரவு என்னும் நிகழ்ச்சி பின்னர் தமிழகம் முழுக்கவே பரவியது. மார்க்ஸியத்தை ஏற்காதவர்கள் கூட வந்து அமர்ந்து விவாதிக்கும் மேடையாக அவருடைய நிகழ்ச்சிகள் மாறின

விளைவாகத் தமிழிலக்கியத்தின் அமைப்பிலேயே ஆழமான செல்வாக்கைச் செலுத்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் முடிந்த்தது. மாய யதார்த்தவாதம் முதலிய எழுத்துமுறைகளை இலக்கியத்திற்குள் கொண்டுவந்தது அந்த உரையாடலே. இனிய நட்புக்கூடல்களாக இருந்தவை அந்த நாட்களைப்பற்றி பவா தன் எல்லாநாளும் கார்த்திகை என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்

அந்நாட்களில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட ஸ்பானியச்சிறகும் வீரவாளும் நான், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்று இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும் ஒரு அடித்தளமாக அமைந்த தொகுப்பு. பலவகையான எழுத்துக்களின் கலவை அது. பவா செல்லத்துரையும் அந்த மேடையிலிருந்து உருவாகிவந்தவர்

நாட்டாரியலில் இருந்து உருக்கொண்ட மாயயதார்த்தத் தன்மையும் முற்போக்கு எழுத்தின் மனிதாபிமான நோக்கும் கலந்த கலைப்படைப்புக்கள் என பவா செல்லத்துரையின் எழுத்துக்களைச் சொல்லலாம். தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் உச்சகட்டச் சாதனைகளாக அமைந்தவை அவர் எழுதிய கதைகளில் சில.

 

பவா செல்லத்துரை இணையப்பக்கம்

பவா செல்லத்துரை சில சிறுகதைகள்

======================================

 

பவாவும் யோகியும் நானும்

பவா செல்லத்துரை கதைசொல்கிறார் சுரேஷ் கண்ணன்

=========================================

 

 

பிற அழைப்பாளர்கள்

index

 

 

 

 

 

 

 

 

ச் எஸ் சிவப்பிரகாஷ்

 

index

 

 

 

 

 

இரா முருகன் அறிமுகம்

 

 

bava_2

 

 

 

 

 

பவா செல்லத்துரை அறிமுகம்

dr-siva-raman

 

 

 

 

 

 

 

 

 

 

 

கு சிவராமன் அறிமுகம்

தொடர்புடைய பதிவுகள்

ஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி

$
0
0

 

CO2B0303

 

பிள்ளை பிறந்த வீட்டிற்குப் போவெதென்பதே கொஞ்சம் விசேஷம்தான்.கைக்குழந்தையை, வளர்ந்தவர் எடுத்து கொஞ்சுவதைப் பார்ப்பது அருமையாக இருக்கும். குழந்தையின் பின் தலையை தன் இடது கையால் பொத்தி மார்போடு எடுத்து பல்லி சப்தமிடுவது போல் ஒலி எழுப்பிக்கொண்டு வளர்ந்தவர் “யாரு வந்திருக்கா உன்ன பார்க்க?ஆரு… மாமாடா கண்ணு…ஆஆமா…மாமாதான்” என்று தன் உலகிலிருந்து பேச்சைத் தொடங்குவார்.

குழந்தையும் தன்னை தூக்கியவரை உற்று நோக்கும். அதன் உலகிலிருந்து அதன் பாஷையில் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும்.  இருவரும் தத்தம் உலகின் விளிம்பில் நின்று கொண்டு, தம்மைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகளை எல்லாம் மறந்துவிட்டு, தத்தம் மொழியின் வழியே அடுத்த உலகை நோக்கவும் அறியவும் முயற்சிக்கும் கணங்கள் பொற்கணங்கள்.எப்பேர்பட்ட “கடுமையான”, பட்டை ப்ரேம் கண்ணாடி போட்டிருக்கும் ஆசாமிகளும் குழந்தையின் உலகினுள் சட்டென போய்விடும் தருணங்கள்.

வண்ணதாசனின் படைப்புகளை வாசிக்கையில் கதை சொல்லியும் வாசகரும், வளர்ந்தவராகவோ அல்லது குழந்தையாக மாறிவிடுகிறார்கள். அவரது படைப்புகளை வாசிப்பு அனுபவத்தை இப்படித்தான், “இது மாதிரிதான் அது” என்றுதான் சொல்ல வருகிறது. அருமையாக இருப்பதை வேறு எப்படித்தான் சொல்வதாம்?

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் படைப்பாளியின் படைப்புலகத்தை எப்படி மதிப்பிடுவது? நிச்சயம் அவரது ஒரு சில படைப்புகளைக் கொண்டு அல்ல.ஆனால் நான் இந்த கட்டுரையில் அப்படித்தான் முயற்சித்திருக்கிறேன். தனுமை, போய்க்கொண்டிருப்பவள், நிலை போன்ற படைப்புகள் ஓரளவிற்கு அடையாளம் காணப்பட்டவை. ஆனால் இந்தக் கட்டுரைக்கு வேறு சில சிறுகதைகளை எடுத்துகொண்டிருக்கிறேன். அவை இன்னும் அதிகம் வாசிக்கப்படாத அல்லது பேசப்படாதது ஒரு காரணம். இன்னொன்று, இவை மற்ற எந்த முக்கிய படைப்புகளுக்கு சற்றும் குறைந்தவை அல்ல என்பதும் இன்னொன்று.

(“நடேச கம்பரின் மகனும் அகிலாண்டத்து அத்தானும்”)

நெல்லை போன்ற ஒரு நகரத்தில், டவுன் பஸ்ஸினுள் அத்தனை நெரிசல்களினூடும் காவித் துணி கவர் போட்ட தவில், நாதஸ்வர வித்துவான்களில் நாதஸ்வர வித்துவானை அடையாளம் தெரிந்துவிடுகிறது, கதை சொல்லிக்கு. இருபத்திரண்டு வருடங்கள் ஆனால்தான் என்ன? தன் திருமணத்திற்கு வாசித்தவரை, அதுவும் முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்கு காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை குளிர குளிர வாசித்தவரின் முகம் மறந்து போகுமா என்ன? ஒரு கை உயர்ந்து பஸ் கம்பியைப் பிடித்திருந்ததில் பக்கவாட்டு முகம்தான் தெரிகிறது அதனால் என்ன?கதை சொல்லிக்கு நாதஸ்வர வித்துவானின் சால்வையிலிருந்து ஓர் ஓடை போல் அவருடைய வாசிப்பு இறங்கி நகர்வது போல் உணர்கிறார்…தவில், நாதஸ்வர கருவிகள் இடைஞ்சலாக, எரிச்சல் பட்டவரின் முகம் கூட தளும்புவது போல்…

கதை சொல்லி திருமண நாளிற்கு போய்விடுகிறார். மாப்பிள்ளை பேசணும்ங்கறார் என்றதும் எழுந்து வந்த, கூடுதல் குறைவில்லாமல் பேசிய நடேச கம்பரின் மகனை சந்தித்த நாளிற்கு போய்விடுகிறார். இறங்கியதும் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார். வெறும் திருமண நாளை பற்றி மட்டுமல்ல, நாதஸ்வர வித்துவானை பற்றி மட்டுமல்ல, இன்னும் என்னென்னவோ சொல்ல வேண்டும் என்று அவர் உலகம் நிறைந்து தளும்பிக்கொண்டு இருக்கிறது. புற உலகில் நெரிசலான டவுன் பஸ் பிரயாணம் என்ன செய்துவிட முடியும்?

நிறுத்தத்தில் ஏற முண்டியடிக்கும் கூட்டத்தைப் பிளந்து வெளி வரும் மனைவியுடன் தன் நிறைந்த உலகின் மாந்தரைப் பற்றிச் சொல்ல காத்துக்கொண்டிருக்கிறார். சிரித்துக்கொண்டு, சிரித்து சிரித்து கண் கலங்கினமாதிரி, பளபளவென நீரில் புரண்டு கொண்டிருந்த பார்வையுடன், புடவை விசிறலும் வதங்கிய பூ வாடை எட்டுகிற தூரத்தில் வரும் மனைவியோ, ஒரே பாராவில் முற்றிலும் வேறு, இன்னொரு உலகை, அவரின் தளும்பிய உலகை முன் வைக்கிறார். அதில் அவரது அகிலாண்டத்து அத்தான்…வெகு காலம் கழித்து சந்தித்த அத்தானைப் பற்றி சொல்லிக்கொண்டே போகிறார்…முழுப்பரிட்சை லீவிற்கு மாமா வீட்டிற்கு போகிற போதெல்லாம் ஆற்றுக்கு வண்டியடித்துக்கொண்டு போகிற அகிலாண்டத்து அத்தான், மாங்காய், நொங்கு எல்லாம் பறித்துக்கொடுக்கும் அத்தான், தினசரி ரயிலில் பேட்டை காலேஜிற்கு வந்து படித்துவிட்டுப் போன அகிலாண்டத்து அத்தான், திடீரென யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு வடக்கே ஓடிப்போன அத்தான்…

“அவசரமா இறங்கிப் போயிட்டாங்க, நீங்க அவங்களைப் பார்க்கலையே” என்று கேட்கிறார் மனைவி. கதை  சொல்லிக்கும்  சரி, வாசகருக்கும் சரி, பார்த்துவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. நடேசர் கம்பரின் மகனைப் பார்த்தாலே போதுமே, ஒருத்தரைப் பார்த்தாலே இன்னொருத்தரைப் பார்த்தது போலத்தானே?நிறைந்திருக்கும் மனங்கள்/ உலகங்கள் வேறு வேறு இல்லை, எல்லாம் ஒன்றுதான் என்ற ஒன்று பளிச்சிடுகிறது, இறுதியில்.

மாசிலாமணி என்ற, மில்லில் வேலை பார்க்கும் நண்பரை, சைக்கிளை ஸ்டாண்ட்டிலிருந்து எடுத்தவுடன் பழக்க தோஷத்தில் மணி அடிப்பவரை, பொம்பளை புள்ளை பொறந்திருக்கு என்று மிட்டாய் கொடுப்பவர் நமக்கு புதிதில்லை. (“மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது”). நிச்சயம் நமது வாழ்வில் வேறு வேறு வடிவிலாவது சந்தித்திருப்போம்.அவருடைய பிரச்சனைகளை எல்லாம் சொல்லி அடுத்த முறை ஊருக்கு போகும் போது தனது குழந்தையை, ஊக்கம் குன்றிய மனைவியை எல்லாரையும் பார்த்து விட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறார், கதை சொல்லியை. சொல்லும் போதே மாசி அழ ஆரம்பிப்பது தெரிகிறது.

கதை சொல்லி, இன்னொரு நாள், ஊருக்குப் போயிருக்கும் ஓர் நடுப்பகலில்,  குருக்களைய்யா காம்பவுண்ட்டில் விசாரித்துவிட்டு மச்சியிலிருக்கும் மாசி வீட்டிற்கு ஏறி (“சிமெண்ட்டில் மரக்கட்டை பதித்த, தொம் தொம்மென அதிர்ந்து”) குழந்தை பிறந்த வாசனையோடு இருக்கும் வீட்டிற்கு நுழையும் போது மாசியின் மனைவியும், அத்தையும் எல்லாரும் உறக்கம். சிணுங்கிய குழந்தைதான் எழுப்பி விடுகிறது.குழந்தையை கொஞ்சிக்கொண்டே  மாசியைப் பற்றி சொல்லலாம் என்கையில் “அவுங்க மில்லுக்கு வேலைக்குப் போனாங்களா அய்யா ?’ என்று துவங்கி, ‘தெருவுல நிறுத்திவிடுவான் போல இருக்கே எல்லாத்தையும்’ என்று சொல்லிக்கொண்டே மாசியின் அத்தை அழும்போது நாம் இன்னொரு உலகில் இறங்க வேண்டியதாகிறது, அபூர்வ களையுடன் சிரிக்க ஆரம்பிக்கும் குழந்தையுடன்தான்.

“வடிகால்” சிறுகதையில் கதை நாயகன் சுந்தரத்திற்குப் பொறுக்கவில்லை. அவன் தகப்பனார் ஒரு கடுமையான வீட்டு சொந்தக்காரர். குடித்தனக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம். வாசலில் யாராவது சொம்பை வைத்திருந்தால் எட்டி உதைக்கத் தெரியும். முருங்கை மரத்தின் காய்களை தினமும் எண்ணி எண்ணி வைக்கத்தெரியும். இது எல்லாவற்றையும் விட இன்னொரு குடுத்தன வீட்டின் குஞ்சு எனும் வாயில்லாத பெண்ணின் உறவுக்காரர்களிடம் நடந்துகொண்ட விதம் – யாருக்குமே ஆறாது.

குஞ்சுவின் பாட்டி இறந்துவிட்ட துக்கம் விசாரிக்க ஆறு மாதம் கழித்து பம்பாயிலிருந்து உறவினர் வந்து இறங்குகிறார். இறந்த போது வர முடியவில்லை. ஆறு மாதம் துக்கத்தை பொத்தி வைத்து இப்போது வீட்டிற்கு வந்து “என்னை பிள்ளை போல வளர்த்தியே பெரியம்மே, கடைசி காலத்தல உன்னை பார்க்க கொடுத்து வைக்கலையே” என்று கதறுபவரை யாருக்காவது அதட்டி “இந்த அழுகையெல்லாம் ஆத்து மேட்டுல வைச்சிகிடணும், இங்க நாலு குடித்தனம் இருக்கற இடத்துல கூடாது” என நிறுத்த யாருக்காவது  மனம் வருமா?

சுந்தரத்தின் தகப்பனாரால் முடிகிறது. அத்தனை கடுமையாக இருக்க முடிகிறது.மனம் வெம்பிப்போன சுந்தரம் குற்றால அருவியில் குளிக்கையில் மூச்சு திணறி இறந்த செய்தி சொல்ல வரும் பையனைப் போலவே வாசகர் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்கிறது. சேதி கேட்டு எல்லா குடித்தனக்காரர்களும் வீட்டு சொந்தக்காரர் வீட்டின் முன் குழுமிவிடுகிறார்கள்.வெளியே போயிருந்த வீட்டு சொந்தக்காரர், சுந்தரத்தின் தகப்பனார் திரும்ப வருகிறார். சேதி கேட்டு திகைத்து குடையும் கையுமாக “ஏ, அய்யா” என்று சுந்தரத்தின் உடலின் மேல் விழுந்து கதறுகிறார்.அதுவரை அமைதியாக இருந்த எல்லாரும் அனுமதி கிடைத்தது போல் வாய் விட்டு அழ ஆரம்பிக்கிறார்கள்.

முருங்கைமரத்துப் பக்கம் தனித்து நின்று வாயைப் பொத்தி பொறுமிக்கொண்டிருந்த,  வடக்கிலிருந்து வந்திருக்கும் குஞ்சுவின் மாமாவோ “ஏ பெரியம்மே, உன்னைப் பார்க்க கொடுத்து வைக்கலையே” என்று பெருஞ்சத்தத்தில் அழுகிறார்… சுந்தரத்தின் அப்பா அவனது கால் மாட்டிலிருந்து தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்துவிட்டு பின் தலையை புதைத்து கண்ணீர் பெருக்கும் போது…எல்லாருடைய கண்ணீரும் ஒன்றுதான், துயரத்தில் உன்னுடையது என்னுடையது என்ற பிரிவு உண்டா என்ன என்று தோன்றுகிறது.

வண்ணதாசனின் படைப்புலகம் முழுக்க முழுக்க மனிதர்களால், “உயிர் கொண்ட” மனிதர்களாலும், அருகம்புல், துளசி, அந்த வேப்பம் மரம், கோவைப்பழம், அணில், மஞ்சணத்தி பூ, “நடுகை” தாத்தா, அவரது கன்னுக்குட்டி இவர்களாலும் மற்றும்  தருணங்களாலும் நிரம்பியிருக்கிறது.\அத்தருணங்கள் நீங்களும் நானும் தினம் தினம் சந்திக்கின்ற தருணங்கள்தான். ஆனால் வண்ணதாசன் போன்ற ஒரு படைப்பாளியால்தான் நலுங்காமல், அடிக்கும் சாரலில் முற்றிலும் நனையாமல் பொத்தின உள்ளங்கையை மெல்ல விலக்கி புத்தம் புதிய குருவிக்குஞ்சைக் காட்டுவது போல் காட்ட முடிகிறது. அப்படிக்காட்டும் போது அத்தருணங்கள் நிச்சயம் புதிதாய் இருக்கின்றன. இதற்கு அவரது மொழியும் ஒரு முக்கிய காரணி.

சில வாக்கிய அமைப்புகள் சிறுகதைகளிலிருந்து கவிதை வரிகளாக மாறி மாறி வருவதை துல்லியமாக உணரமுடிகிறது. படைப்புகள் வெறுமன தருணங்கள்  மட்டும் ஆனவை அல்ல. கதையின் கூரிய மையப்புள்ளியை நோக்கி தருணங்கள் புடை சூழ செல்கின்றன.

“உப்பு கரிக்கின்ற சிறகுகள்” என்ற சிறுகதையில், அரசு எனப்படும் திருநாவுக்கரசின் பிடிவாத தகப்பனாரால் நிராகரிக்கப்பட்ட தோழி (“அவியலும் பொரியலும் வச்சு சாப்பாடு போட்டு ஊஞ்சல்ல உட்கார்த்தி வச்சு அழகு பார்த்துக்கிட்டா இருக்கே மூதேவி” என்று அரசின் அம்மாவை அறைகிறார், கல் பொறுக்கிக் கொண்டிருக்கின்ற மடிச்சுளகிலிருந்து பாசிப்பயறு பட்டாசல் முழுவதும் விசிறுகிறது. அரசின் அம்மா குனிந்து கூட்டுகையில், சிறு உள்ளங்கைக்குள் உருண்டு உருண்டு இளம்பச்சை குவிந்து கொண்டிருக்கையில் உதை விழுகிறது) திரும்ப அந்த வீட்டிற்கு அரசை பார்க்க வர சில காலம் ஆகிவிடுகிறது.

அதற்குள் அரசு அம்மா இல்லை; அப்பா துரும்பாக, நினைவு தவறி முதுமையின் ஆழத்திற்கு, மிக ஆழத்திற்கு போய்விடுகிறார். அரசுதான் குளுப்பாட்டி பவுடர் போடுதல், சவரம் செய்தல் எல்லாம். (“அப்பாவிற்கு சவரம் செய்வதுதான் என் இப்போதைய தியானம்…அப்பாவின் சவரக்கத்தி பிரசித்தமானது. அப்பாவின் தீட்டுக்கல் பிரசித்தமானது. நான் அப்பாவின் சவரக்கத்தி போல கூர்மையாக இருக்கிறேன். அந்த கத்தியை உபயோகிக்கிற போது உயர்ந்து நிற்கின்ற என் சுண்டு விரலை நீ பார்க்க வேண்டும்” அரசின் கடிதம்).

தோழி வந்து வாசல் மணியை அழுத்தும்போது வீட்டு வேலைக்காரிதான், இசக்கிதான் கதவைத் திறக்கிறார்; பேசுகிறார். அந்த நேரத்தில் அரசு கல்லூரியில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. தோழியும் இசக்கியும் சற்று நேரத்தில் இலகுவாகிவிடுகிறார்கள். புறவாசல் நடை சில சமயங்களில் தடுக்கிறது, சில சமயங்களில் தாண்டிப் போகச்சொல்கிறது. உட்காரச் சொல்கிறது. அன்று தோழியை உட்காரச் சொல்கிறது.  இசக்கி தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருக்க, தோழிக்கு இசக்கி அல்லது அரசு,  யாராவது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மத்தியானத்தை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போல இருக்கிறது.

“இப்படி வந்து உட்காரேன்” என்று இசக்கியை கையை பிடித்து உட்கார வைக்கும் போதுதான், “நீங்கள் யாருன்னு சொல்லவே இல்லையே?” என்று இசக்கி சிரித்துக்கொண்டு கேட்கையில்தான் வெளியில் மோட்டார் பைக் வந்து நிற்கும் சத்தம்.அழைப்பு மணி ஒலிப்பதற்கு சற்று தாமதமாகிறது. வாசலில் கிடக்கிற தோழியின் செருப்புகளை அரசு பார்த்திருக்க வேண்டும்…உண்மையில் அந்தth தாமதம் என்னவொரு ஒரு முடிவுறாத, நித்ய கணம்…

என் நண்பர் ப்ரபு கவிதையைப் பற்றி அவர் எங்கோ படித்ததை சொன்ன விதம் நினைவிற்கு வருகிறது. கவிதை என்பது அனுபவங்களில் இருந்து பழக்கத்தின் பாசியை அகற்றும் ஒரு செயல்.முதன் முறையாக ஒன்றை அனுபவிக்கும் போது நமது அகம் அதை முழுவதும் உள்வாங்கி கொள்கிறது. பின் வரும் ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கும் அதற்கும் நடுவில் ஞாபத்தின் திரை விழுகிறது. அதை விலக்கி மீண்டும் அந்த அனுபவத்தை புதிதாக அடைவது இயல்வதில்லை. ஆனால் முதன்முறை அடைந்த அந்த அனுபவத்தின் பரவசம் மனதில் தங்கி விடுகிறது.

ஆனால் வண்ணதாசனால் பழக்கத்தின் பாசியை அகற்றி ஒவ்வொரு முறையும் தருணங்களை புதிதாக வாசகரோடு பகிர முடிகிறது. இவரது படைப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு இது ஒரு முக்கிய காரணி என எண்ணுகிறேன்.உதாரணத்திற்கு “நடுகை”யில் ஒரு நெல்லையப்ப மாமா. இரவு முழுவதும் ரயிலில் பயணம் செய்து எழுந்திருந்து வந்தவர். வீட்டைச் சுற்றி மண்டியிருக்கிற செடி கொடிகளை வெட்டி துப்புரவு பண்ணினால்தான் நல்லது” – கையில் வெதுவெதுப்பான காப்பித் தம்ளரை வைத்துக்கொண்டு ஒரு வாய் குடிப்பதும், கொஞ்சம் நேரம் அந்த செடிகளின் அடர்த்திகளையே துளாவுவதுமாக இருந்து கொண்டு இப்படிச் சொல்கிறார்.

“அவர் விடியக்காலம் நாலரை அஞ்சு மணிக்கு வந்து சேர்கிற ரயிலில் இப்படி வருவதும், பல் தேய்த்த கையோடு இப்படி காப்பி தம்ளருடன், முன் வாசலிலோ, புற வாசலிலோ வந்து நின்றுகொண்டு பார்ப்பதும் எதையாவது சொல்வதும், வேறு யாரும் சொல்லாததாக இருக்கும். வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த என்னிடம் ஒரு தடவை “இங்க வா” என்று கூப்பிட்டு, விடிய ஆரம்பிக்கிற அந்த நேரத்தில் நீலக்குமிழ் போல ஜொலித்துக்கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைப் பற்றிச் சொன்னார்.  சொல்லச் சொல்ல நட்சத்திரம் மட்டுமே ஆயிற்று வானம். அப்போது வீசிய குளிர்ந்த காற்றை நட்சத்திரம் அனுப்பியது போல இருந்தது.”

 

 

download

சிவா கிருஷ்ணமூர்த்தி

 

*

 

ஒரு படைப்பாளியின் களம் எத்தனை முக்கியம் என்பது நாம் அறிந்த ஒன்று.நெல்லை நகரம், சரி, மாவட்டமே இருக்கட்டும், என்ன பெரியதாக இருந்துவிடப்போகிறது? ஆனால் இந்த சின்ன வட்டத்திலிருக்கும் மாந்தர்கள், உறவுகள் எத்தனை பெரியதாக வியாபித்து இருக்கிறார்கள்… ஆச்சி, மாமா, அத்தை, அக்கா…அத்தனை கோபங்களுடனும் எரிச்சல்களுடனும், பொறாமையுடனும், அக்கறையுடனும் மானிடத்தின் அத்தனை குணங்களும் சேர்ந்த உறவுகள்…கிட்டதட்ட உறவுகளின் ஓர் ஆவணம் போலவே ஆகியிருக்கின்றன, வண்ணதாசன் படைப்புகள். இன்னும் இருபது, முப்பது வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது இந்த உறவுகள் ஆவணத்தில் மட்டுமே எஞ்சியிருக்கும் என்றாலும் கூட…

பெரும்பாலும் நெல்லைதான் களம் எனினும் வண்ணதாசனின் பார்வையில், சென்னையை காண்பது என்பது இன்னொரு ஓர் அனுபவம். “நடுகை” தொகுப்பிற்கு ஆசிரியரின் முன்னுரை அவர் சென்னையில் வசித்த காலத்தில் எழுதப்பட்டது. சென்னை மின்சார ரயில் பயணங்கள் -ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தவாறே தற்செயலாக இடது புறம் திரும்பிப் பார்த்தால் யாரோ படுத்துக்கிடப்பது போலத்தான் தெரிகிறது.சரியாகப் பார்த்தால் பிணம், ரயிலில் அடிப்பட்டவரை மூடி மேலேயே ஒரு மஞ்சள் பையயும் வைத்து…பிணங்களோடு பயணம் செய்வது போலேயே பூக்களுடனும் பூக்கட்டுபவர்களோடும் பயணம்…வாய் பேச முடியாத பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளோடு பூக்கார சிநேகிதனோடு சைகைகளில் “பேசிக்” கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும்…

எல்லா ஊரையும் போலவே இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இசைக்கும் பாடல்களுக்கு சம்பந்தமே இல்லாமல் ரயில் அடையாறு சாக்கடை பாலத்தைத் தாண்டிக்கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டு புகையின் நிணம் பரவும். நிண வாடையில் வண்ணதாசனும் நீங்களும் நானும் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும் தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் நினைவில் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில் நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயதுச் சிறுவர்கள் தூக்ககலக்கத்துடன் மையவாடியுல் தாய் மாமா மடியில் உட்கார்ந்திருக்கும் காட்சிகள் என சென்னையில் ஆரம்பித்தாலும் திரும்ப அதிரும் நினைவுகளுக்கு போய்விடுகிறது. வண்ணதாசன் சொல்வது போல் இத்தனை மின்சார வண்டி தடங்களுக்கு மத்தியிலும் எங்கோ அவரது தாமிரபரணி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

சென்னை வாழ்க்கையில், ராஜு நாயக்கன் தெருவில், இரண்டாம் தளத்திலிருந்து எதிரில் இருக்கும் மாமரங்களோடு அவரது காலைகள் துவங்குகின்றன. முக்கியமாக, வீட்டுச் சொந்தக்காரரின் எண்பத்தி நான்கு வயது தாயாரான அந்த மனுஷி, ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த மாமரம் வரை போய் தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக உதிர்ந்து கிடக்கின்ற மாம்பிஞ்சுகளை பொறுக்குகின்ற தருணங்கள் முக்கியமானவை என்று அவர் சொல்லவே வேண்டியதில்லை. உணர்கிறோம்.

உடல் முழுவதும் ரத்தமும், தூசிகளும் பூசப்பட்ட, குண்டுகளால் தகர்க்கப்பட்ட கட்டிட இடிபாடுகளிலிருந்து எடுத்து வரப்படும் சிரிய அலப்போ நகர குழந்தைகளை காண நேரும் இன்றைய தினங்கள், சக மனிதர்களை, சக உயிர்களை, மதமோ, எல்லையோ, மொழியோ ஏதோ ஒரு சில அற்ப காரணங்களுக்காக அழிக்க சலிக்காமல் முயன்றுகொண்டிருக்கும் இந்த தினங்கள் மானிடத்தின் மேல் கடுமையாக அவ நம்பிக்கை கொள்ளும் தினங்கள்.

மானிடம் என்றுமே, வாழ்க்கை வரைப்படத்தில் ஒரே சீரான, நேர் கோடாக இருப்பதில்லை. வண்ணதாசன் படைப்புகள் அவற்றை மொத்தமாக, கீழ்ப்புள்ளிகளுடனும் மேல், உச்சப் புள்ளிகளுடனும், கீழ்மை மின்னும் தருணங்களோடும், மகத்தான தருணங்களோடுமேதான் வாசகர் முன் வைக்கின்றன. வைக்கப்படும் விதத்தில் மானிடத்தின் மேல் நிச்சயம் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அதையே வண்ணதாசன் படைப்புகளில் நான் கண்டு கொள்ளும் தரிசனம். இந்த நம்பிக்கை வேறு எப்போதுமில்லாது இன்றைய தினங்களில் ஒரு அத்தியாவசிய தேவை.

தேவாங்கு வளர்க்கும் நரிக்குறவ இளைஞன்; காலையில் பொக்லைன் இயந்திரத்தால் வீட்டை இழந்தாலும் ராத்திரி வந்து வளர்த்த செடியைப் பாதுகாக்கிற பையன்; மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ சாப்பிடலாமா?’ என்று கேட்கத் தோன்றும் ஒருவர்;பன்னீர்ப் பூ உதிர்ந்துகிடக்கிற இடத்தில் சிறுநீர் கழிக்க மனமில்லாத பள்ளிச்சிறுவன்; அத்தனை நெரிசல் நேரத்திலும், சுற்றி அத்தனை கூட்டமிருப்பினும்  பாலத்தின் உச்சி வளைவில் காற்றை உணர்ந்து ‘ஹா!’ என்று சொல்லும் கண்டக்டர் என நம்மைச்சுற்றி தினமும் நம்பிக்கைகள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பதை காட்டுவது என்பது எத்தனை முக்கியமான ஒன்று.

மானுட உச்சங்களைக் காட்டுவதற்கு, அவற்றின் மேல் நம்பிக்கை வைப்பதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, ஏரி நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென் தொடுகையே சாத்தியமாக்கும். சாத்தியமாக்கியிருக்கின்றன வண்ணதாசனின் படைப்புகள்.நெல்லையோ, சென்னையோ, சிரியாவோ, இங்கிலாந்தோ வேறு வேறு அல்ல, எல்லாமே ஒன்றுதான்.

 

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

ப் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==========================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63

$
0
0

[ 3 ]

திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறி நின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க  நிழல்வரைவாகவும் விழியொளிகளாகவும் மூச்சொலியாகவும் காலரவமாகவுமே மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் அங்கே அறியப்படலாயின. செம்புக்கலம் சிலம்பும் ஒலியாக வால்துடிக்கும் அணில்களும்  சிறுமுழவு மீட்டும் ஒலியாக குவிந்து துள்ளும்  குழிமுயல்களும்  இரும்புரசும் ஒலியாக காட்டு ஆடுகளும் இருள்மடிப்புகளுக்கு அப்பால் இருப்புணர்த்தின.

முதலைத் தோலென்றும் யானைக்கால் என்றும் ஆமை ஓடென்றும் தோற்றம் கொண்ட செதில்செறிந்த அடிமரங்களின் வேர்க்கிளைகள் உருகிவழிந்து மண்ணிலூன்றிய கொம்பரக்கின் விழுதுகளெனப் பரவிய மண்ணில் சிற்றிலைப்புற்களும் பச்சிலைப்பூசணங்களும் பரவி மூடியிருந்தன. விழுந்து மண்ணில் பாதி உடல்புதைந்த தொல்மரங்களின் மேல் எழுந்த வெண்ணிறக் காளான் குடைகள் அப்பச்சையலை எழுப்பிய நுரை எனத் தெரிந்தன.

கூரிலை பசலைக் கொடிகளும் ஒட்டிப் பற்றி மேலேறும் இத்திள்களும்  மட்டுமே அங்கு கை தொடும் இலைகளெனத் தெரிந்தன. இலைநுனிகள் அனைத்திலும் தளிர்ப்பச்சை உடல்கொண்ட சிறுதவளைகள் விழித்து அமர்ந்திருந்தன. காலடியோசையில் அவை தாவி எழுந்து இலைமாறி அமர்ந்து ஆடின. உடல்மேல் பட்ட சிறுதவளை நீர்த்துளியென்றே நடுக்கம் தோன்றச்செய்தது. காட்டுக்குள் மென்புகையென நீராவி நிறைந்திருந்தது. அடியிலைகளில் அது பனித்து நுனிக்கூம்புகளில் துளித்துச் சொட்டியது. சொட்டுமொலியில் காடு படிகமாலை உருட்டி ஊழ்கநுண்சொல் உரைத்து அமைந்திருப்பதெனத் தோன்றியது. துயிலும் மாடுகளின் காதுகள் போல்  கவிழ்ந்தும் இளையோர் கைவிரித்ததுபோல் விரிந்தும் சூழ்ந்திருந்தன இலைகள்.

அவற்றுக்கிடையே சிறு கால்கள் வைத்து  வாலை அசைத்து உடுக்குத்தோலை கையால் மீட்டும் ஒலியுடன் குழறியபடி செம்போத்துகள் ஊடுருவி ஓடி அலைந்தன. நுரைக்கொழுந்தென வால் சிலிர்த்த கீரிகள் தாவிச் சென்றன. மெல்ல இழுபட்டு வளைவால் ஒளியெழுப்பி நெளிவை விழியில் எஞ்சவிட்டுச் சென்றது நாகம். பெருமரங்கள் மேல் தொற்றி அமர்ந்து கொண்டை உலைத்து கொத்திய மரங்கொத்திகள் உளியோசை எழுப்பின. அது பல்லாயிரம் கற்தச்சர்களால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மாளிகையென அக்காட்டை எண்ணச்செய்தது.

அவ்வடர்காட்டிலும் கால்புழக்கம் பதித்த வழியொன்று சென்றிருப்பதை சற்று விழி தெளிந்த பின்னரே காணமுடிந்தது. அது பசுமைக்குள் வேறொரு பசுந்தடமென கண்ணறிகிறதா கருத்துணர்கிறதா என்னும் மயல்கூட்டி தெரிந்தது. பின்னர் அவ்வழிசென்ற உடல்களையும் அவ்வுடல்களை நாயின் நாக்கு நுனிகளென ஈரக்குளிருடன் நக்கி அசைந்த இலை நுனிகளையும் காண முடிந்தது. மொழியிலும் சித்தத்திலும் எவரெவரோ சென்ற தடங்கள் என பைலன் நினைத்துக்கொண்டான். அவ்வெண்ணம் எழுந்ததுமே கண்முன்விரியும் காட்டை அழுத்திச்சுருக்கி ஒரு ஒப்புமைமட்டுமே என்றாக்க விழைவதுதான் எது என அவன் சித்தம் வியந்தது.

அடர்காட்டின் முகப்பிலேயே நீண்ட கழிகளை வெட்டி முனை கூரச்செய்து அவர்களுக்கு அளித்திருந்தான் சண்டன். கூர்கழியுடன் வைசம்பாயனன் முன்னால் செல்ல ஜைமினியும் சுமந்துவும் பின்னால் சென்றனர். மூங்கில் வளைத்து காட்டுக் கொடி கட்டி இறுக்கிய வில்லை வலக்கையில் ஏந்தி மூங்கில் கூர் கொண்ட அம்புகளை தோள் தூளிகளில் நிறைத்து திசைகள் தோறும் விழி செலுத்தி இலைச்செறிவுகளுக்குள்ளும் மரங்களின் மறைவுக்கு அப்பாலும் கூர்நோக்கியபடி சண்டன் நடந்தான்.

அவர்களின் காலடியோசை பெருகி காட்டின் பசுமை வெளிக்கு உள்ளே எதிரொலித்து ஒரு படை நகர்வென செவிமயக்கு அளித்தது. கையெட்டும் தொலைவுக்கு அப்பால் விழியும் எட்டாதொரு பயணத்தை பைலன் முன்னர் எண்ணியிருக்கவே இல்லை. “இத்தனை தழைக்கக்கூடும் காடு என்று இதற்கு முன்னால் அறிந்ததே இல்லை, சண்டரே” என்றான். “இமயக்காடுகளை கண்டிருக்கிறேன். அவையும் இத்தனை தழைத்து பசுமை மட்டுமே என்றானதில்லை.” மூச்சிரைக்க அவன் நின்றான். மூச்சென நீராவி எழுவதை கண்டான். கொதிகலம் இவ்வுடல். ஆனால் வெளியே உருகுகையில் உள்ளே குளிர்ந்திருக்கிறது இது.

சுமந்து “ஆம், பசுமையை நீலமென்றும் கருமையென்றும் ஏன் சொல்கிறார்கள் என்று இன்றுதான் அறிந்தேன். இதுவே மலைநின்ற மாலின் வண்ணம்” என்றான். ஜைமினி “குளிர்நிறைந்த இமயக்காடு அஞ்சிய எருதின் உடலென சிலிர்த்திருக்கிறது. வறண்ட தண்டகாரண்யம் முட்பன்றியென சினந்திருக்கிறது. இக்காட்டின் ஒவ்வொரு இலையும் இளமைந்தர் கைகளைப்போல்  தொட்டு அழைக்கின்றன. கிளைமுனைகள் அன்னையர் வாழ்த்து என தலைதொட்டுத் தழுவுகின்றன” என்றான்.

சண்டன்  ”தென்னகமே பெருங்காடுகளின் நிலம். இங்கு ஆண்டுக்கு மூன்று மழைக்காலம். இது வாயுவும் வருணனும் புரக்கும் அரசு. இதோ அடி மரமென பெருத்து பசும்பெருக்கென இலை சூடி நிற்கும் இவை அனைத்தும் தென்கடலில் காற்று மொண்டு வந்த மழைநீரே” என்றான். “பாரதவர்ஷத்தை வேள்வியில் எழுந்த அனல் என்று உரைப்பதுண்டு நூலோர். அதன் கொழுந்து இமயம் என்றால் கரித்தழலே திருவிடம். பாரதம் அறத்தின் குளிர்ச்சுனை என்பர் கவிஞர். அதன் வெள்ளியலைகளே இமயம்,  குளிர்ந்திருண்ட ஆழமே திருவிடம்.”

“கரியதாகையால் இக்காடு காளிகவனம்  என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் காளிகர் எனப்படுகின்றனர். பாதாளத்தை ஆளும் வாசுகியின் வழிவந்த காளிகன் என்னும் கருநாகத்தின்  நச்சில் இருந்து முளைத்தெழுந்த காளர்கள் என்னும் தொல்பிரஜாபதிகள் நூற்றெண்மரால் உருவாக்கப்பட்ட குலம் என அவர்கள் தங்களைப்பற்றி சொல்கிறார்கள். தொல்நாகர்குலங்களுக்கும் இவர்களுக்கும் அணுக்கம் மிகுதி. இவர்களை கருநாகர்கள் என்றும் அப்பால் தாழ்வரைகளில் வாழ்பவர்களை பைநாகர்கள் என்றும் சொல்லும் மரபுண்டு.”

காட்டுப்பூனை ஒன்று மரக்கிளை ஒன்றின் தளிர்க்கொத்து சூடிய நுனி நோக்கி மெல்ல நடந்து வந்தது. அதன் மெல்லிய கால்வைப்புக்கேற்ப கிளை குரங்குவால் போல் வளைந்து தழைந்து இலைகள் குலுங்க அமைந்தது. இரு சுடர்மணிகளென விழிகொண்டு அவர்களை நோக்கி செவிமடித்து தலைதாழ்த்தி வால்தூக்கி அசைத்தது அனல்வரிகள் கொண்ட செம்பூனை. அனல்கொழுந்து  என அதன் நாக்கு நீண்டு வளைந்து செல்ல ஆழ்ந்த குரலில் அகவியபின்  அக்கிளையை உலைத்து மலர்பொழியத் தாவி எழுந்து பிறிதொரு கிளை பற்றி நிலைகொண்டு நீள்வாலைத்தூக்கியபடி நடந்து அப்பால் சென்று மறைந்தது.

“நிகரென எவருமில்லை என்றறிந்த நிமிர்வு” என்று ஜைமினி சொன்னான். “எளிய பூனை தன் எண்ணத்தால் புலியென்றாகி விட்டது.” பைலன் புன்னகைத்து  “முழவுநடனத்தின் தாளம்!” என்றான். அது குரங்குகளின் ஒலி. அலையலையென எழுந்தமைந்து கேட்டது அது. ஆனால் அவை இலைத்தழைப்புக்கு மேல் எங்கோ இருந்தன. அங்கு ஒற்றை ஓசைப்பரப்பென அலைகொண்டு நிறைந்திருந்த பறவைக்குரல்களுடன் அவையும் கலந்து ஒலித்தன.

“இக்காட்டின் முதன்மை விலங்கு யானையே” என்றான் சண்டன்.  ”இக்காடு போலவே கரியது. இதன் ஆழம்போல  ஓசையற்றது. கிளை முறிபடும் ஒலியில் மட்டுமே இங்கு யானையை அறிய முடியும். பெருங்களிறுக்கூட்டம் ஒன்று மிக அருகே கடந்து செல்லும்போதுகூட அச்சிறு ஒலிகளை அன்றி நாம் எதையும் கேட்க முடியாது. நம்மீது கருணை கொண்ட வழிகாட்டிப்பறவைகள் கூறும் மொழி கேட்க பழகிக்கொண்டால் ஒழிய இக்காட்டை எவரும் கடக்க இயலாது.”

“தென்னகத்தின் இப்பெருங்காடு கீழே கடல் சூழ்ந்திருக்கும் நீள்நிலம் சேர்த்து வைத்திருக்கும் செல்வக்குவைகளுக்கான காவலரண் என்கிறார்கள். செல்வம் உறையுமிடமென்பதனால் இது திருவிடம். இங்கு அமைந்துள்ளன நூற்றெட்டு அன்னையர் குடிகொள்ளும் ஆற்றல் மையங்கள். அதற்கப்பால் மும்முடியர்கள் ஆளும் தமிழ்த்தொல்நிலம்.    மாறாக்கன்னிமை கொண்ட முதல் தெய்வம் அமர்ந்திருக்கும் முக்கடல் முனம்பு. இப்பாரதவர்ஷம் அக்கன்னியின் தவத்தால் ஆளப்படுகிறது” என்றான் சண்டன்.

“சிற்றாடை கட்டி சிறுமியென அங்கிருப்பவள் பாரதவர்ஷமெங்கும் தேவியென, அன்னையென நூறாயிரம் முகம்கொண்டு நிறைந்திருக்கிறாள். பிடாரி என்றும் பேரருள் கொண்டவள் என்றும் உருக் காட்டுகிறாள்” என்று அவன் தொடர்ந்தான். “காளிகம் என்னும் இக்காடும் கன்னி அன்னையின் ஆலயம் என்கின்றன கதைகள். இதன் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது கருங்குமரித் தெய்வம் கௌசிகையின் ஆலயம். அவளை குமரிமுனை அமர்ந்த கன்னியின் பிறிது வடிவம் என்று வழிபடுகிறார்கள் நூற்றெட்டு தொல்குலத்தோர். ஆண்டிற்கு மும்முறை சூழ்ந்துள்ள ஊர்களிலிருந்து காடுகளுக்குள் புகுந்து அவள் ஆலயத்தை வந்தடைந்து படையலும் பூசெய்கையும் முடித்து திரும்புகிறார்கள். இங்குள பாதைகள் அனைத்தும் அன்னை ஆலயத்திற்குச் செல்லும் மானுடரின் கால் பட்டுப் பிறந்தவையே.”

[ 4 ]

காளிகக்காட்டின் காலடிப்பாதையில் சண்டன் நான்குபக்கமும் ஓடும் விழிகளுடன் காடெனச் சூழ்ந்துள்ள இலைகளையே செவிகளென எண்ணியவன்போல அன்னையின் கதையை சொல்லிக்கொண்டுவந்தான். இளையோர் நால்வரும் அவன் குரல் கேட்கும் பொருட்டு விரைவழிந்து சற்று உடல் நெருங்கிக்கொண்டார்கள். “மகபைரவர் இயற்றிய பிரசண்ட புராணத்தின் கதை இது” என்று சண்டன் சொன்னான். “இமயமலையில் தாட்சாயணியாகப் பிறந்தவள் முதற்சிவத்தின் இடம் அமைந்த சிவை. அவளே தெற்கே திருவிடத்தின் காளிகப்பெருங்காட்டில் அழகிய குறமகளென வந்தாள். அது முதலன்னையும் தந்தையும் கொள்ளும் ஆடல். மானுடரில் விலங்குகளில் பறவைகளில் பூச்சிகளில் புழுக்களில் நுண்ணுயிர்களில் அவர்கள் காதல்கனிந்த இணைகளென பிறந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் கூடலாலும் ஊடலாலும் இயக்கப்படுகின்றன உயிர்க்குலங்கள்.”

காளிககுலமே காராமணி நிறம் கொண்டது. அவர்கள் நடுவே கருமணி என அவள் ஒளிகொண்டிருந்தாள். அவளை காளி என்று அழைத்தனர் அவள் குலத்தோர். காளுதல் என்றால் இருளொளி கொள்ளல் என்று அவர்களின் மொழிப்பொருள். அவள் கன்னங்களின் வளைவில் வானொளி மின்னும் என்று  சொல்கின்றன தொல்கதைகள். இருளில் இருக்கையில் அவள் உடல்கொண்ட ஒளியே அச்சூழலைத் துலக்கும் என்கின்றன. அவள் கூந்தலொளியை மேனிக்கருமையின் ஒளி மிஞ்சும் என்றும் மேனிக்கருமையை விழிக்கருமை அஞ்சச்செய்யும் என்றும் கூறுகின்றனர் கவிஞர். அவள் நகங்களும் கருவண்ணம் கொண்டவை. அவை நோக்கு கொண்ட விழிகள் என ஒளிர்பவை.

தன் குலம் ஈன்ற அருமுத்தை நிகரற்ற ஒருவனுக்கே அளிக்க வேண்டுமென்று நோற்றிருந்தார் அவள் தந்தையாகிய கராளர். காளிகர் குடியின் தலைக்குடி அவருடையது. ஆயிரத்தெட்டு பேரன்னையர் பிறந்து பேற்றுத்தவமியற்றி நிறைந்து தெய்வமாகி நோன்பிருக்கும் மகளிரின் படையல்கொண்டு விண்ணமர்ந்திருக்கும் குருதிக்கொடிவழி அவருடையது. அவ்வன்னையரின் அருள் கொண்டு எழுந்த மகளை வேட்டு தன் இல்லம் வருபவர் எவராக இருப்பினும் காளிக குலத்தின் முதற்தெய்வமாக அமர்ந்திருக்கும் ஏழுதலைநாகமாகிய காளிகனின் ஆலயத்திற்குள் சென்று அவன்  அருளாணை பெற்று வரவேண்டும் என்று அறிவித்திருந்தார்.

அவள் அழகை காட்டுப்பாடலில் கேட்டு உளம் மயங்கி அங்கு வந்த இளையோரில் பலர் அவ்வாணையைக் கேட்டதுமே அஞ்சி விலகினர். துணிந்தவர் அனைவரும் பெருநாகங்கள் செறிந்த புற்றுக்குவை அமைந்த அக்கோயிலுக்குள் சென்று  அக்கணமே சீறிச் சொடுக்கும் இமைநோக்குள்ள நச்சு தீண்டி இறந்தனர். அந்நச்சு தொட்டதுமே அவர்களின் உடல்கள் காளிகர்போல் கருமைகொண்டன. முகத்தில் களியுவகை என சிரிப்பு ஒன்று எழுந்து உறைந்தது. கூப்பிய கைகளுடன் விரைத்துக்கிடந்த அவர்களின் உடல்களை மூங்கில் தெப்பத்தில் கட்டி பயோஷ்னியின் பெருக்கில் இட்டு திசைசேர்த்தனர் அக்குலத்தோர். ஒவ்வொரு நாளும் பயோஷ்னியில் ஒழுகும் ஒரு உடல் அவளை ஊருக்கு அறிவித்துச்சென்றது.

பின் அவள் வெல்லமுடியாதவள் என்றே அறியப்படலானாள். உச்சிப்பாறை முகட்டில் கனிந்த தேன்கூடு அவள் என்றனர் அயலூர்களின் அங்காடிப்பாடகர். அரியதேதும் இறைவனுக்கே என்றனர் காடுகளின் முதுகுலத்தோர். அவளையீன்ற அன்னை  தன் மகள் கன்னியென்று நின்றுவிடுவாள் என்று அஞ்சி துயர்கொண்டு ஏங்கலானாள். “கன்னியென்று நின்றிருப்பதே அவள் ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்று அவள் தந்தை சொன்னார். ஆனால் தன் ஆழுள்ளத்தில் அமைதியிழந்தமையால் அவளை நோக்குவதையே தவிர்த்தார். நாள்தோறும் ஒளிகொள்ளும் இவள் ஒருநாள் சுடரென்றாகி விண்புகுவாள் போலும் என்றனர் குடிப்பாணர். அவள் நோற்கும் கன்னிமை கனிந்து கணவன் வருவான் என்றார் குலப்பூசகர்.

அவளை மணப்பதற்கென்று அனல்வண்ணன் விந்தியஅடுக்கின் ஏழு மலையை படியென்றாக்கி இறங்கி வந்தான். செஞ்சடைச்சுருள் மகுடத்தில் அனலென காந்தள் மலர் சூடி, நெற்றியில் வெண் சாம்பல் பொடி பூசி, நாகக்குழை அணிந்து, வெள்விடை மேல் வந்தவன் காளிகக் குடிவாழும் ஊர்நடுவே மன்றுநின்று தன் உடுக்கை ஒலித்தான்.  எவெரெவெரெரெவரென ஒலித்தது குறுந்தோல் வட்டக் கொட்டு. குடில்களுக்குள் இருந்து எட்டிப்பார்த்தவர்கள் “யார் இவன்? எருக்குமாலை அணிந்திருக்கிறான். பன்றிப்பல்பிறை சூடிய செஞ்சடையன். முன்பு கண்டதில்லையே இவனை” என வியந்தனர். தன் மையக்குடில் விட்டு நாகபடம் செதுக்கிய மரக்கொந்தையும் கல்மணிமாலையும் அணிந்து வெளிவந்த கராளரை நோக்கி அவன்  முழங்கும் குரலில் “குறவர்க்கரசே, உன் மகளை மணம்கொள்ள வந்துள்ளேன்” என்று உரைத்தான்.

இளிவரல் புன்னகையுடன் கராளன் “மகட்கொடை மறுத்தல் எங்கள் அன்றாட நிகழ்வாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன, செஞ்சடையரே.  முடிகொண்ட மாமன்னர்கள் அனுப்பிய தூதர்கள் வந்து இங்கு நிரைகொண்டு நிற்காது ஒரு நாளும் கடந்து சென்றதில்லை. எங்கள் குலதெய்வமென அமர்ந்திருக்கும் கூர்நஞ்சின் தொடுகையேற்று இறந்தவர் நிரையோ அதனினும் பெரிது. மலைமகனெனத் தோன்றுகிறீர். விரைவிலா விடையேறி வந்திருக்கின்றீர். உமக்கும் அதுவே நெறி” என்றார்.

தன் முப்புரி வேலை தோள்சாய்த்து இனிய புன்னகையுடன் எரிவண்ணன் சொன்னான் “நஞ்சு எனக்குப் புதியதல்ல. நான் உண்ணும் அமுதே அது. காட்டுக, உங்கள் குல தெய்வம் உறையும் புற்றுக்கோயிலை!” அவன் புன்னகையின் தெளிவு அவர்களை குழப்பியது. கராளர் ஒருமுறை தன் துணைவியை திரும்பி நோக்கியபின் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். அவள் அவன் மேனிப்பொலிவை நோக்கி கைகூப்பி கண்ணீர்ப்படலம் ஒளிவிட நின்றிருந்தாள்.  “ஆனால் இது உன் தேர்வு என்றும் இவ்விறப்புப் பழிக்கு எங்கள் குடி பொறுப்பல்ல என்றும் நீரையோ நிலத்தையோ தொட்டு நீ ஆணையளிக்கவேண்டும்” என்றார் கராளர். அவன் நிலம் தொட்டு “ஆணை ஆணை ஆணை. இது என் முற்றுறுதி” என்றான்.

குறுமுழவு மீட்டி குலப்பூசகர் முன்னால் செல்ல குருத்தோலை முடிசூடி குடி மூத்தோர் எழுவர் அவனைச் சூழ்ந்து உடன் அழைத்துச்சென்றனர். விந்தை காண்பதற்காக இளையோரும் பெண்களுமென ஒரு பெருங்கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது. அவன் நடந்தபோது இடையணிந்திருந்த வெள்ளெலும்பு குடைந்து செய்த மணிமாலைகள் மெல்ல குலுங்கின. அவன் காலடிபட்ட புற்கள் வணங்கி எழுந்தன. நோக்கநோக்க கிராத வடிவம் நெஞ்சள்ளும் பேரழகுகொள்வதன் மாயமென்ன என்று பெண்டிர் அகத்தே வியந்தனர். பெருமூச்சுவிட்டபடி அவனையன்றி பிறிது நோக்காது உடன் சென்றனர்.

நூற்றெட்டு மூங்கில் கால் நாட்டி எழுப்பிய தன் குடிலின் தெற்குச் சாளரத்தினூடாக விழிகளில் இளநகையொளிர காளி அவன் செல்வதை நோக்கியிருந்தாள். இருபுறமும் நின்ற அவள் தோழிகள் ஜயையும் விஜயையும் ஜயந்தியும் அபராஜிதையும் அவள் நிலைமாற்றம் கண்டு  களியாடினர்.  ”முத்து வயலை அறுவடை செய்யும் பாண்டியன் தோற்றுத் திரும்பியது உன் வாயில். நெல்மலை கொண்ட சோழன் இளிவரலுக்குள்ளானான். பெருங்களிறுகளை கால்களாகக் கொண்ட சேரன் மகள் மறுக்கப்பட்டான். நூறுகாதுகளைக் கொண்ட திருவிட பெருமன்னன் இன்னமும் உன்னை நினைத்து ஏங்குகிறான். இவனோ நீற்றுப்பொடி பூசி புலித்தோல் ஆடையணிந்து வந்திருக்கும் மலைமகன். விழி கண்டால் பித்தனென்று தோன்றுகிறது” என்றாள் ஜயை.

“இவனுடன் சென்று நீ உச்சிமலைக்குகையில் பூதங்கள் ஏவல் செய்ய வாழப்போகிறாயா என்ன? அவனுக்கு புலித்தோல் எனில் உனக்கு மான்தோல். வெள்ளெலும்பில் அணிகள்.  உனக்கும் இருக்கும் முடிப்பிறைப் பல்லும் முப்புரிவேலும். உன்  இதழ்மேல் இதழ் பதித்து அவன் முத்தமிடுகையில் உன் நெற்றியிலும் எழும் ஒரு மூன்றாம் விழி. கரியவளே, காட்டிலிருந்து மேலும் அகக்காட்டுக்குச் செல்வதே உன் ஊழ் போலும்” என்றாள் விஜயை.

“பித்தன். அவனுக்கிணையாக நீயும் பிச்சியென்றாவாயா? அவன் ஆட்டும் உடுக்கொலிக்கு நீ ஆடிக்களிப்பாயா?” என்றாள் ஜயந்தி. “உடனாட அந்த உச்சிமலையில் பூதநிரைகளே எழும். நாதமென்று இந்தக் காளை திமிலசைக்கக்கூடும்” என்றாள் அபராஜிதை. “ஒருகையில் தழலும் மறுகையில் தாளமும் கொண்டிருப்பான். மான் தொடர மழுவேந்தி நின்ற மலைவேடன்.  அவன் துணைவியாகிய நீ கொள்ளும் ஊர்தி எது?” என்று ஜயை சிரித்தாள். “வெள்ளெருது அஞ்சும் சிம்மம்…” என்று விஜயை சொன்னாள்.

அவளோ அவ்விளிவரலை புகழ்மொழியாக ஏற்று மெய்சிலிர்த்துக் கொண்டிருந்தாள். தன் உடல் இனிய மயிர்ப்பு கொள்வது ஏன்? முலைக்குவைகள் குறுவியர்வையுடன் விம்மித்தணிவது ஏன்? தொண்டை வறள்கையில் இதழ் ஈரம் கொள்வது ஏன்? மூச்சு வெப்பம் கொள்கையில் கண்கள் பனிப்பது ஏன்? அதுவரை அறிந்திராத மெய்ப்பாடுகளால் தளர்ந்து சாளரக்கழிகளை இருகைகளாலும் பற்றிக்கொண்டு தலைசாய்த்து விழித்த கனவிலென அசைவிழந்திருந்தாள். பின் அறியா உள எழுச்சியால் அவள் கண்ணீர்விடலானாள்.

பெருநாகம் குடிகொண்ட ஆலய முகப்பை அடைந்து அதன் கதவென அமைந்த ஏழு மூங்கில்களை விலக்கி பூசகர் சொன்னார் “இதன் வாயிலுக்கு இப்பால் நின்று வழிபடுவதுதான் எங்கள் வழக்கம். நூற்றெட்டு முகடுகள் கொண்டதும் ஆயிரத்தொரு வாய்கள் கொண்டதுமான இந்தப் புற்றுக்குவை பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குள்ளது. இதன் பணிக்கென்று இக்காட்டில் பிறந்து வந்தவர்கள் நாங்கள். இங்கு இறப்பிலாது வாழும் எழுதலைப்பெருநாகமான காளிகன் நூற்றெட்டுமுறை கரிய மண்ணைக் கொத்தி எங்களை முளைத்தெழ வைத்தது என்பது தொல்கதை. படையலும் பூசைகளும் வெளியிலிருக்கும் இந்த மூன்று பலிபீடங்களில் மட்டுமே நிகழ்வது வழக்கம்.”

அவன் மேல் நீறிட்டு வாழ்த்தி பூசகர் சொன்னார் “நீ எங்கள் குல மகளை கைக்கொள்ள வேண்டுமென்றால் இவ்வெல்லை தாண்டி செல்ல வேண்டும். அப்புற்றுகளில் ஒன்றின் வாய்க்குள் கைவிட்டு மாநாகர்களே அருள்க, இக்குலக்கன்னியை எனக்கு நல்குக என்று கோர வேண்டும். அவர்கள் அருளினார்கள் என்றால் நீ உயிருடன் மீண்டு இப்படிக்கு இப்பால் வருவாய். எங்கள் குலம் உனக்குப்பணியும். எங்கள் குலமகள் உன் குடிக்குரியவளாவாள்.”

புன்னகையுடன் “நன்று, நான் அதை இயற்றுவேன்” என்றபின் தன் முப்பிரிவேலையும் அதில் கட்டிய உடுக்கையையும் அங்கே சாற்றிவைத்து எலும்புமணிக் கங்கணம் ஒலித்த கைகளை நீட்டி படிதொட்டு சென்னிசூடி வணங்கி அவன் வாயில் கடந்து உள்ளே சென்றான். அங்கிருந்த கன்னியர் அஞ்சி மூச்சிழுத்து நெஞ்சழுத்தி ஏங்கி “என்ன நிகழ்கிறது! தென்றிசையன்னையரே, நீங்களே சான்று” என்றனர். இளையோர் அவன் அசைவுகளை நோக்கி அவற்றுக்கேற்ப அறியாது அசையும் தசைகளுடன் இறுகிய நாணில் அம்பென நின்றனர்.

புற்றுக்குவையை அணுகி ஒருகணம் நோக்கிவிட்டு முதற்குவையில் கால் வைத்து இரண்டாம் முகடில் கைபற்றித் தொற்றி அவன் மேலேறினான்.  வெளியே நின்ற பூசகர் பதற்றத்துடன் “இளையோனே, அறியாது செய்கிறாய். நீ இதன் நூற்றெட்டு வாய்களில் பாதாளப் பெருநாகங்களின் புவிமீள்வழிகள் அமைந்துள்ளன. அது கார்க்கோடகனின் முகடு. அப்பால் அதோ அது திருதராஷ்டிரனுக்குரியது. இது மணிகர்ணனின் முகடு. அதனருகே உள்ளது அஜமுகனின் வழி. இப்பால் வியாஹ்ரன். மேலே உச்சி வாய்திறந்திருப்பது வாசுகியின் மைந்தனும் எங்கள் குலதெய்வமுமான காளிகனின் குகைவாய். ஒருமுறை உமிழ்ந்தால் இப்புவியை முற்றெரித்து சாம்பலாக்கி பறக்கவிடும் வல்லமைகொண்ட அருநஞ்சு அவன் நாவில் உள்ளது” என்று கூவினார்.

“நீ அங்கு செல்லவேண்டியதில்லை. இப்புற்றிலுள்ள அனைத்து நாகங்களும் அவனே. ஏதேனுமொரு புற்றுவாயை அணுகி அதற்குள் கைவிட்டு நாகத்தின் அருள் கொண்டால் போதும்” என்றார் முதுகுலத்தார் ஒருவர். இல்லத்துச் சாளரத்தில் நின்றிருந்த அவளிடம் ஓடிவந்த ஜயை “புற்றுமுகம் பற்றி ஏறுகிறான். பெருநாகங்களை அறைகூவுகிறான்” என்றாள். விஜயை “அவன் சற்றும் அஞ்சவில்லை. இளமைந்தன் மணல்மேட்டிலாடுவதுபோல ஏறிச் செல்கிறான்” என்றாள். அவள் அதை வேறொரு விழியால் அண்மையிலென கண்டுகொண்டிருப்பவள் போலிருந்தாள்.

கூடிநின்றவர்களில் ஒருத்தி தன் நிறையழிந்து “வேண்டாம்! நச்சுப்பெருக்கு அப்புற்று. விலகிவிடுங்கள். இளையோனே, வீண் முயற்சி வேண்டாம்” என கூவினாள். அதிலெழுந்து அலைகொண்ட பெண்டிர் அத்தனைபேரும் அவனைநோக்கி கைநீட்டி “வேண்டாம்… மீள்க!” என்று கூவி அழுதனர். அவன் அச்சொற்களை கேட்கவில்லை. முதன்மைப்புற்றுமேல் ஏறி காளிகனின் பாதைக்குள் தன் கையை விட்டான். புற்று ஒரு பெருஞ்சங்கமென்றாகி உள்ளே கார்வை எழுந்தது. அனைத்து வாயில்களிலிருந்தும் கரிய நாகத்தலைகள் சீறி எழுந்தன.

விறகுக்குவையிலிருந்து எழுந்தாடும் கரிய தழல் நாக்குகள்போல அனைத்து புற்றுவாய்களிலிருந்தும் எழுந்த நாகங்கள் சீறிநெளிந்தன. நீட்டிப் பறந்தன இருமுனை நாக்குகள். சிறுமணிக் கண்களில் அனற்துளி அசைந்தது. அணுகி நின்றிருந்த அனைவரும் அஞ்சி விலகி பின்னடைந்தனர். அலறல்களும் அழுகைகளும் கூக்குரல்களும் எழுந்து சூழ்ந்தன. அவற்றின் சீறல்கள் இணைந்து நீரலை ஒன்று எழுந்தணுகுவதுபோல ஒலித்தன. மையப்பெருவாயிலிலிருந்து ஏழு தலைகளும் பறக்கும் செந்நாவும் செம்மணி விழிகளுமாக அள்ள எழுந்த ஏழுவிரல் கைபோல எழுந்து நின்றாடியது கருநாகமாகிய காளிகன்.

அதன் கழுத்தைப்பற்றி உருவி எடுத்து கையில் சுழற்றித் தூக்கி தன் கழுத்தில் அணிந்துகொண்டு அவன் இறங்கினான். கரிய கடலலை என எழுந்து பேருருக்கொண்டு எழுந்த அதன் படம் அவன் தொட்டதுமே சுருங்கி எடுத்ததுமே மேலும் சிறுத்து  கழுத்தில் அணிந்ததும் கருமணிகோத்த ஆரமென ஆன விந்தையை அவர்கள் ஓசையடங்கி வாய்திறந்து விழிமலைத்த திகைப்புடன் பார்த்தனர். என்றும் அவன் நெஞ்சிலேயே அமைந்திருந்தது அது என்று அவர்களுக்குத் தோன்றியது.

புன்னகையுடன் வெளியே வந்து அவன் “நீங்கள் சொன்னதை செய்துவிட்டேன். குலத்தோரே, உங்கள் குலமகளை கைபிடிக்க விழைகிறேன்” என்றான். ஆயிரம் குரல்கள் ஒரே கணத்தில் வெடித்து எழுந்தன “அவ்வண்ணமே ஆகுக! இனி எங்கள் குலம்காக்கும் தெய்வமென  நீங்களே நின்றருள்க! இங்கு அளிக்கப்படும் படையல் அனைத்திலும் உங்கள் சுவைதேர் நா வந்து படுக!”

பூசகர் குரல்நடுங்க கைகூப்பி “எந்தையே, துயர்கொள்கையில் எங்கள் குரல் உங்கள் செவிகளை வந்தடையட்டும். அஞ்சுகையில் எங்கள் குரலின்மையை நீங்கள் கேட்குமாறாகட்டும். எங்கள் கொடிவழிகளுக்கு காப்பென்று உங்கள் பேரையே என்றும் உரைப்போம்” என்றார். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் அவன்.

ஜயையும் விஜயையும் ஓடிவந்து காளியின் இருதோள்களையும் பற்றிக்கொண்டு “வென்றானடி அப்பித்தன். இனி உன் கைபற்றுவான் அவன்” என்றனர். அவள் கண்ணீர் வழிய அசைவற்று தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். “வருந்துகிறாயா?” என்றாள் ஜயந்தி. “அவள் உடல் சொல்கிறது, அது உவகை” என்றாள் அபராஜிதை. அவள் அச்சொற்களுக்கெல்லாம் அப்பால் எங்கோ இருந்தாள்.

தொடர்புடைய பதிவுகள்


பல்லவ மல்லை –சொற்பொழிவு அழைப்பிதழ்

$
0
0
images
அன்பு ஜெமோ,
தமிழ் பாராம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி குறித்து அறிமுகம் தேவையில்லை. 2011ல் முதல்முறையாக பேச்சுக்கச்சேரி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் நிகழ்வாக ‘குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்னும் தலைப்பில் சங்க இலக்கியங்கள் குறித்த தங்களது சிறப்புரை இடம்பெற்றது. வெற்றிகரமாக ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறோம்.
இம்முறை ‘பல்லவ மல்லை’ என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரியாக, வரும் டிசம்பர் 24 & 25 ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில், மாமல்லபுரத்தின் வரலாறு, கலைச் சிறப்பு, பல்லவர் காலத்து கல்வெட்டுகள், மல்லையின் இலக்கியச் சிறப்புகள் குறித்து பல்வேறு ஆய்வாளர்களின்  உரைகள் இடம் பெறுகின்றன. 
 
விஷ்ணுபுரம் விருது விழாவுக்காக கோவையில் நீங்கள் கூடியிருக்கும்  நாளில், நடைபெறும் நிகழ்வு இது என்பதை நன்கறிவோம். விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொள்ள இயலாத சென்னை வாழ் வாசகர்களுக்கு இதுவொரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறோம். :-)
​அன்புடன்,
ஜெ. ரஜினி ராம்கி

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்

$
0
0

dr-siva-raman

மருத்துவர் கு சிவராமன் சித்தமருத்துவர். ஆனால் அம்மருத்துவமுறையை நவீன இயற்கைமருத்துவத்தின் கொள்கைகளுக்கு அணுக்கமாக ஆக்க முயல்பவர். இன்றைய வாழ்க்கையில் இருக்கும் உடல்நலச்சிக்கல்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைத்தொடர்கள் மூலம் பெரும்புகழ்பெற்றவர். உடல்நலம் என்பது ஒருங்கிணைந்த இயற்கைநோக்கு மூலம் அமைவது, மருந்துக்களால் அல்ல என்பதை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார்  என்று சொல்லலாம்

வண்ணதாசனின் அணுக்கமான வாசகர் என்றமுறையில் இவ்விழாவில் கு சிவராமன் பங்கெடுக்கிறார்

கு சிவராமன் பேட்டி – தி ஹிந்து

 

 

 

பிற அழைப்பாளர்கள்

index

 

 

 

 

 

 

 

 

எச் எஸ் சிவப்பிரகாஷ்

 

index

 

 

 

 

 

இரா முருகன் அறிமுகம்

 

 

bava_2

 

 

 

 

 

பவா செல்லத்துரை அறிமுகம்

dr-siva-raman

 

 

 

 

 

 

 

 

 

 

 

கு சிவராமன் அறிமுகம்

 

தொடர்புடைய பதிவுகள்

சுவையாகி வருவது -1

$
0
0

1

[  1  ]

 

சுவை என்றால் என்ன? மனித குலம் ஒட்டுமொத்தமாகவே சுவையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. எத்தனை தேடியிருந்தால் இத்தனை கனிகளை, இத்தனை வேர்களை அவன் கண்டடைந்திருப்பான். இத்தனை சமையல்முறைகளை உருவாக்கியிருப்பான். நாச்சுவை, விழிச்சுவை, செவிச்சுவை, மொழிச்சுவை என சுவை விரிந்து   கிடக்கிறது எங்கும். நாளில் பெரும்பகுதியை நாம் சுவைகுறித்து பேசும்பொருட்டே செலவழிக்கிறோம்

ஆனால் சுவையென்று ஒன்று உண்மையில் உண்டா என்றே சுவைகளின் அலகிலாத வேறுபாட்டைக் காண்கையில் எண்ணத்தோன்றுகிறது. இப்புவியில் உள்ள அனைத்தும் எவருக்கோ சுவையானவைதானா என்ற எண்ணம் ஏற்படுகிறது. மண்ணில்புதைக்கப்பட்டு சற்றே மட்கிய மீனின் சுவையை வடகிழக்கில் கொண்டாடுகிறார்கள். களிப்பாக்கின் கடும்துவர்ப்பை ஊனுடன் சேர்த்து உண்கிறார்கள் தென்கிழக்கில். உளுந்தமாவை சேம்பின் தளிரில் சுருட்டி வேகவைத்து உண்கிறார்கள் தென்கர்நாடகத்தில் எண்ணவும் நமக்கு குமட்டும் சுவைகள் இவை

சுவையை மானுடப்பொதுவான வரையறை எதற்குள்ளும் அடக்க முடியாது. சாத்தியமாவது ஒரு வரையறை மட்டுமே. சுவையென்பது தனித்தன்மை. ஒரு நிலத்தின், ஒரு காலகட்டத்தின், ஒரு இனக்குழுவின், ஒரு வகைச் சமையலின், ஒரு தருணத்தின் தனித்தன்மை. சுடலைமாடனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத ஊன்கஞ்சியை நள்ளிரவில் மகுடம் இசைக்க குளக்கரைக்காட்டில் பனையோலை கோட்டிய தொன்னையில்தான் சுவைக்க முடியும்

மறைந்த எனது தந்தை ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்தார். எங்கள் இல்லத்தில் இருந்து அரை கிலோ மீட்டரில் உள்ள யட்சிகோயிலொன்றின் தெற்கு மூலையில் இருக்கும் தொன்மையான மாமரம் ஒன்றிலிருந்து மட்டுமே ’கண்ணிமா’ என்று எங்கள் பகுதியில் அழைக்கப்படும் வடுமாங்காய் ஊறுகாய் செய்வதற்கான காய்களை அவர் தேர்வு செய்வார். நினைவறிந்த நாள்முதல் பிறிதொரு மாங்காயையும் ஊறுகாயையும் தொட்டு உண்டதில்லை. மீன் சமைப்பதற்கு ஒவ்வொரு வகை மீனுக்கும் ஒரு தென்னையை பார்த்து வைத்திருந்தார். சற்றே நொளுநொளுப்புள்ள வாளை திரச்சி போன்ற மீன்களுக்கு மேட்டு நிலத்தில் காய்க்கும் தேங்காய். இறுகிய ஊன்கொண்ட சாளைக்கும் சூரைக்கும் நீர் ஊறும் நிலத்தில் விளைந்த சற்றே இனிப்பு கலந்த தேங்காய்.

நெல்லுக்குத் தேர்ந்தெடுத்த தழைகளையே உரமாக போடுவார். எருக்கோ வேம்போ போட்டால் அரிசியில் எங்கோ ஒரு கசப்படிக்கும் என்று அவர் நினைத்தார். பூச்சிமருந்தும் ரசாயனங்களும் அவர் தொட்டதில்லை. கொல்லைப்பக்கத்தில் வெங்கலக்குட்டுவத்தில் ஏற்றிவைத்து வேகவைத்த நெல்லை மச்சின் சிமெண்டுப்பரப்பில் நிழலில் உலர்த்தி ரப்பர் உருளைகள் கொண்ட மில்லில் அரிசியாக்கி கொண்டுவருவார்கள். செவ்வெறும்பின் நிறத்தில் இருக்கும் அரிசி. சற்றே விரல் தொட்டால் அழுந்த வேண்டும் என்னும் பதம்.

அதைக் கஞ்சியாக்கி இரவில் உண்ணும்போது எட்டுவகை தொடுகறிகள் சுற்றி அமைந்திருக்கும். வலப்பக்கம் இலையில் அரிசி அப்பளம். அதை தேங்காய் எண்ணெயில் வறுத்திருக்க வேண்டும். இடது ஓரத்தில் ஒரு கிள்ளு உப்பு. வலப்பக்கத்தில் கூட்டு. அது அன்று அகழ்ந்தெடுத்த காய்ச்சில் கிழங்கு. பாலூற வெட்டிய பலாக்காயின் மூசு. இலை வாடும் முன்னரே கிழங்குகள் சமைக்கப்பட வேண்டும் என்பது அவரது கொள்கை. தண்டில் பால் சொட்டி முடிவதற்கு முன்பே காய்கறிகள் நறுக்கப்பட்டாக வேண்டும். அம்மியில் அரைக்கையிலேயே கூட்டின் மணம் எழுந்தாகவேண்டும்.

உண்ணும்போது முற்றிலும் தனிமையில் அமர்ந்திருப்பார். ஒவ்வொரு கறியையும் தொட்டு நாவில் வைக்கையில் இசை கேட்கும் ரசிகனைப்போல் தலை சற்று அசையும் .ஒவ்வாத ஒன்றை மெல்ல நகர்த்தி அப்பால் வைப்பார். ஒருபோதும் உணவைக்குறித்து எதிர்மறைச்சொல் சொல்வதில்லை. ஒரு உணவை நிராகரித்தால் அந்த எதிருணர்வு எழுந்து இன்னொரு நல்ல உணவின் சுவையைக்செய்யும் என்று அவர் எண்ணினார்.

உணவில் மட்டும் அல்ல ஒவ்வொன்றிலும் அந்த தனித் தன்மையை அவர் பேணி வந்தார். அவருக்குத் தெரிந்த செம்மான் தைத்த செருப்புகளையே வாழ்நாளெல்லாம் அணிந்திருந்தார். அவருடைய கை நுட்பம் தன் கால்களுக்குத் தெரியும் என்பார். திரைப்படங்கள் பார்த்ததில்லை. கதகளியில் விரல் அசையும் சிறு நுட்பத்தைக் கூட தவறவிடாத நுட்பமான கண்கள் கொண்டிருந்தார். ஒவ்வொரு கதகளிப்பதத்தின் இசைஅலைகளையும் அன்று வரை அந்த மேடையில் பாடப்பட்ட அத்தனை குரல்களையும் நினைவிலிருந்து எடுக்க முடிந்தது அவரால்

யானைகளின் காதலர். நூற்றைம்பது யானைகளின் ஜாதகத்தைச் சேர்த்துவைத்திருந்தார். காளைகளில் பெரும் பித்து கொண்டவர். வாழ்நாளெல்லாம் ஒருமுறை கூட தவறாமல் வெள்ளிக்கிழமை கூடும் மார்த்தாண்டம் காளைச்சந்தைக்கு செல்வார். திருவனந்தபுரத்திற்கோ நாகர்கோவிலுக்கோ ஒருநாள் தங்கும்பொருட்டு சென்றார் என்றால் அதற்கு தேவையான அரிசியையும் பருப்பையும் காய்கறிகளையும் பையில் போட்டு எடுத்துச் செல்லும் அவரை நினைவு கூர்கிறேன்.

ஆனால் அவருக்கு அவருடைய எல்லைக்கு அப்பாலுள்ள எதுவுமே தெரியாது. அவரால் தூத்துக்குடி வர்க்கியை ஒரு வாய்கூட சாப்பிட முடிந்ததில்லை. திருநெல்வேலி அல்வா கூட அவருக்குச் சுவைக்கவில்லை. ஏனென்றால் சுவை எல்லைகொண்டது. எல்லையே தனித்தன்மையை வகுக்கிறது. சுவையென்பது ஒர்இடம் ஒரு காலம் ஒரு வெளிப்பாடு. மண்ணில் நீரில் காற்றில் ஒளியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு வகை பிறிதொன்றிலாமை அது

ஆகவேதான் இலக்கியத்தில் உலகப்பொதுவான சுவை ஒன்றில்லை என்று சொல்லப்படுகிறது. தரிசனங்கள் உலகப்பொதுவானவை. தத்துவங்களும் உணர்வுகளும் உலகப்பொதுவானவை ஆனால் அழகு தனித்தன்மை வாய்ந்தது. தனக்கென்றொரு நிலம் கொண்டது. எனவேதான் பேரிலக்கியவாதிகள் பெரும்பாலும் நிலத்துடன் கட்டுப்பட்டவர்கள்.

விளாடிமிர் நபக்கோவால் டால்ஸ்டாய் மிகவும் ருஷ்யத் தன்மை கொண்டவர் என்று விமர்சிக்கப்பட்டார். அதைப்போல அவருக்குப்பிறிதொரு பாராட்டுரை வேறில்லை. இன்று நான் உணரும் நபக்கோவ் என ஒரு படைப்பாளி ஒரு சிறிய எதிரலையாக ரஷ்ய பேரிலக்கியவாதிகளின் மேல் விமர்சனத்தை முன்வைத்தவர் மட்டுமே. ஐரோப்பியச் சுவைக்கு ருஷ்யாவைச் சமைத்த நபக்கோவ் எனக்குரியவர் அல்ல. ஆனால் டால்ஸ்டாய் என்றுமுள ருஷ்ய நிலத்தின் மொழிப்பதிவென்று என்னுடன் இருக்கிறார்.

மலபாரிலிருந்து பஷீரையும் குட்டநாட்டிலிருலிந்து தகழியையும் சிவம்ப்கேயிலிருந்து காரந்த்தையும் பத்மா நதிக்கரையிலிருந்து அதீன் பந்தோபாத்யாயவையும் பிரிக்க முடியாது. அந்த மண்ணும் நீரும் ஒளியும் அத்தருணத்தில் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட தனித்தன்மையின் மொழி வெளிப்பாடுகள் அவர்களின் ஆக்கங்கள்

தமிழில் நாம் வழிபடும் முன்னோடிப் படைப்பாளிகள் அனைவருமே மண்ணுக்குரிய தனித்தன்மை கொண்டவர்களே. திருநெல்வேலியின் சிறிய பகுதியாகவே சென்னையில் நடமாடிவந்த சுப்பையா பிள்ளை புதுமைப்பித்தனேதான். காலை ஆட்டிக் கொண்டு ’அவன் போக்கொளிழிஞ்சே போனானே’ என்று கையை மலர்த்தும் குஞ்சுவை பிள்ளைவாளின் நெல்லை மொழிதான் சென்று தொட முடியும். ’பீப்பிளி பீச்சிண மிஷ்கீன் !” என்று முற்றத்தில் வந்து நிற்கும் சூஃபியை தானே உருவாக்கிக் கொண்ட மொழியில் சொன்ன ஷாகினாவை பஷீரால் மட்டுமே பார்க்க முடியும்

அழகிரிசாமியின் கரிசல் அல்ல கிராவின் கரிசல். அவர்களின் பூர்வீக வீடுகளுக்கு நடுவே நானூறு அடி இடைவெளி மட்டுமே உள்ளதென்றாலும் அவர்கள் நின்ற நிலம் ஒன்று, உயிர்த்த மூச்சு ஒன்று , நோக்கிய கோணமும்கூட ஒன்றே அவர்களுக்கு முன் தங்களைக் காட்டிய இயற்கையின் தனித்தன்மை வெவ்வேறு. சுந்தர ராமசாமியின் நாகர்கோயில், ஜானகிராமனின் கும்பகோணம், ஆ.மாதவனின் சாலைத் தெரு, ப.சிங்காரத்தின் மருதை, ஆர் ஷண்முகசுந்தரத்தின் கோவை – எழுத்தாளர்களினூடாக தங்கள் தனித்தன்மையை நிலம் வெளிப்படுத்துகிறது.

அந்நிலத்தில் நிகழும் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் அந்தத் தனித்தன்மையே விளைகிறது. அந்த வாழ்க்கையை மேலும் மேலும் அறியத்துடிக்கும் வாசகனின் ரசனை சென்று தொடுகையிலேயே சுவையென்ற ஒன்று அறியப்படுகிறது. ரசனா என்ற சொல்லுக்கே சமஸ்கிருதத்தில் நாக்கு என்று தான் அர்த்தம். புனைவுலகுகளின் மேல் இமையா விழிகளுடன் நாபறக்க மெல்ல ஊர்ந்து செல்லும் நாகங்கள் வாசகர்கள். ஒலியையும் நாவால் அறிவது. காற்றை நாவால் அளவிடுவது நாகம். ஓசையற்றது.

சுவையே இலக்கியத்தின் முதற் தகுதி. தரிசனமும் தத்துவமும் உணர்வுகளுமே கூட சுவையெனும் வடிவு கொண்டு வருகையிலேயே கலையாகின்றன. சுவையென உருமாறாத அனைத்தும் இலக்கியத்தில் பொருந்தாது மிதப்பவை மட்டுமே. சுவைத்தபின் எண்ணுவனவே பிற அனைத்தும். அழகென்றும் நுட்பமென்றும் நாம் அதைச் சொல்கிறோம்.

 

1

 

 

[   2  ]

வண்ணதாசனின் புனைவுலகை சுவை என்னும் சொல்லால் அடையாளப்படுத்தலாம். அவருடைய தீவிர வாசகர்கள் அனைவருமே அவர் தங்களுக்கு அளித்த தனிப்பட்ட சுவையனுபவத்தைப்பற்றியே பெரிதும் பேசுகிறார்கள். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர், நெல்லையின் பண்பாட்டுத் தனித்தன்மையை வெளிக்கொணர்ந்தவர், மனிதர்களின் நுண்ணிய முகங்களை வெளிப்படுத்தியவர், என்றெல்லாம் வாசகர்களால் பல்வேறு தருணங்களில் சொல்லப்படும் வரிகள் அனைத்துமே வண்ணதாசன் உருவாக்கும் தனிச்சுவையையே அடையாளப்படுத்துகின்றன.

அவர் படைப்புலகில் தத்துவங்களோ தரிசனங்களோ இல்லையென்பவர்கள் கூட இந்த சுவையெனும் அம்சத்தை தவறவிட்டதில்லை. சொல்லப்போனால் சுவை என்பதே அவரது தரிசனமென்று சொல்லலாம். ஒரு கால-இடமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது இப்பிரபஞ்சம். அதனுடன் கொள்ளும் உறவு வழியாக மானுடனால் அடையப்படும் அனுபவமே சுவையெனச் சொல்லப்படுகிறது. அச்சுவையன்றி மானுடன் இப்பிறவியிலிருந்து பெறத்தக்கதேதும் இல்லை என்பது வண்ணதாசனின் தரிசனமோ என்று தோன்றுகிறது.

மீண்டும் மீண்டும் மாறாக் காதலுடன் தன் வாழ்நிலத்தின் மீது படிவது அவரது உள்ளம். பூக்களை முத்தமிட்டுச் செல்லும் வண்ணத்துப்பூச்சி போல .மகரந்தத்தால் ஒரு மலரை இன்னொரு மலருடன் இணைக்கும் அதன் மாபெரும் கோலம். சுவைப்புள்ளிகளை இணைத்து வண்ணதாசன் தன் புனைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். வைக்கம் முகமது பஷீர் பற்றிய தன் கட்டுரை ஒன்றில் கல்பற்றா நாராயணன் “அனைத்து இலைகளும் இனிக்கும் காட்டில் அலையும் பஷீரின் ஆடு” என்று சொல்கிறார். பாத்துமாவின் ஆட்டுக்கு அடங்காப்பசி. பசியே அதன் நாவில் சுவையாகவும் நாசியில் தேடலாகவும் திகழ்கிறது

சுவை என்று வண்ணதாசன் உணர்வது கனிவு என்றோ பிரியம் என்றோ பிறிதொரு சொல்லால் அவரால் சுட்டப்படுகிறது. சுவை என்பதற்கு அச்சொற்களும் சிறந்த மாற்றீடுதான். எனக்கு மட்டிப் பழம் பிடிக்கும் என்று சொல்லும்போது சுவையையே உத்தேசிக்கிறோம். சுவை என்பது ஒன்றின் மேல் நாம் கொண்ட விருப்பத்தின் பிறிதொரு வடிவுதான்.  ஒரு மனிதரில் ஒரு பொருளில் நாம் நினைத்திருப்பது நாமறிந்த அனுபவத்தைத்தான். அதையே சுவை என்கிறோம்.

வண்ணதாசன் அம்பாசமுத்திரத்திலும் சென்னையிலும் பணியாற்றியிருக்கிறார். வெவ்வேறு நிலக்காட்சிகளினூடாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் நெல்லையை அன்றி அவர் எதையும் எழுதவில்லை. ஒருகோணத்தில் நெல்லையை அல்ல அவர் எழுதியது என்றுகூட சொல்லலாம். அவர் வாழ்ந்த இல்லம் ,அவர் நடை பழகும் வீதிகள், கடைகள், குறைவாக அலுவலகம் என மிகக்குறுகிய எல்லைக்குள் அவர் கண்ட மனிதர்களைப்பற்றியே  எழுதியிருக்கிறார்.

உண்மையில் குறுகுந்தோறும் கூர்மை கொள்வது சுவை. எனவே உலகளாவிய சுவை என்று ஒன்று இல்லை. இந்தியச் சுவையென்று ஒன்று உண்டு. அதற்குள் தமிழகச்சுவை தனித்தது. அதற்குள்  நெல்லைச் சுவை மேலும் கூரியது. அதற்குள் வேளாளர் இல்லத்துச் சுவை மேலும் தனித்து நினைவுகூரத்தக்கது. எல்லைகளை குறுக்கிக் கொண்டு சென்று கூர்மைப்படுத்தும் ஒரு பயணமே சுவை நுட்பத்தைக் கண்டடையும். ஆகவேதான் மீண்டும் மீண்டும் வண்ணதாசன் ஒரே வகையான வாழ்க்கைச் சித்திரங்களுக்குள், ஒரே வகையான நிலக்காட்சிகளுக்குள் செல்கிறார்.

சொல்லப்போனால் சுவையிலன்றி பிறிதெதிலும் வாசகனின் கவனம் நிற்கக்கூடாதென்பதற்காகவே தன் கதைகளின் வடிவத்தையும் மாறாமல் வைத்துக் கொண்டிருக்கிறார். நுண்மை தேடும் ஒவ்வொரு கலைவடிவும் பொது வடிவை மாற்றாமல் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். குறைந்தது முன்னூறு ஆண்டுகளாக ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா? என்ற பாடல் இங்கே பாடப்படுகிறது. அதே ராகம், அதே தாளம். பாடகர் உருவாக்கும் நுண்மையான தனித்தன்மையே அதன் சுவையென அறியப்படுகிறது. கைவளை கழல்தல் சங்க இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஒவ்வொரு முறை கழல்வதும் வெவ்வேறு வளை, வெவ்வேறு துயர்.

இத்தெளிவை அடைந்த ஒரு வாசகன் புதிய வடிவம், புதிய நிலம், புதிய வாழ்க்கைச் சிக்கல் என்று வண்ணதாசனின் படைப்புகளுக்குள் செல்ல முயலமாட்டான். கூரிய ஊசி முனையால் மட்டுமே தொட்டு வேறுபடுத்தத்தக்க சுவை மாறுபாடுகளை மட்டுமே அங்கு அவன் தேடிச்செல்வான். வண்ணதாசனின் ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்குமான வேறுபாடென்பது ஓர் இசைப்பாடலின் ஒரு ஸ்வரத்திற்கும் அடுத்த ஸ்வரத்திற்குமான வேறுபாடு அளவுக்கே சேய்மை கொண்டது. அண்மை என்றால் அண்மை, சேய்மையை அறிந்தால் தொலைவு,

நாம் சென்று நோக்கி அறியும் நெல்லை வண்ணதாசனின் எழுத்துக்களில் இல்லை. இந்தச் சிறிய தேனுசாவி தொட்டுச்செல்லும் சில மலர்களின் வண்ணங்களும் வடிவங்களும் மட்டுமே உள்ளன. நெல்லையின் மையமாகிய நெல்லையப்பர் ஆலயம் பெரும்பாலும் அவர் கதைகளில் வருவதில்லை. தமிழிலக்கியத்துள்ள இந்தத் தனித்தன்மையை வாசகர் முன்னரே உணர்ந்திருக்கலாம். கும்பகோணத்தின் முகமென அறியப்படும் ஜானகிராமனின் கதைகளில்கூட கும்பகோணத்தின் ஆலயங்களே இல்லை. புழுதி படிந்த சாலைகளும் குளிர்ந்த கொட்டகை இடப்பட்ட இல்லங்களும் காவிரிக்கரையின் அந்தியும் புலரியும் மட்டுமே உள்ளன.

வண்ணதாசனின் புனைவுலகில் நெல்லையின் இறந்த காலமோ நெல்லையின் வரலாறோ, தொன்மங்களோ, பண்பாட்டு மரபுகளோ, நாட்டார் வாழ்க்கைக்கூறுகளோ இல்லை. சென்ற கால வாழ்க்கைத் தடங்களே காணப்படுவதில்லை. ஒரு வாசகன் இவர் வீட்டில் நூறாண்டுகாலம் பழைய ஒரு கட்டில் இருக்காதா என்ன, இருநூறாண்டுகாலம் பழமையான ஒரு மரப்பெட்டியை பாதுகாத்து  வைத்திருக்கமாட்டார்களா என்ன, மூன்று தலைமுறைக்கு முன் இறந்த ஒரு மூதாதையின் கதையை இவர் பாட்டி இவரிடம் சொல்ல மாட்டாளா என்ன  என்று கேட்கக்கூடும். ஆனால் சுவை என்பது நேற்றில் இல்லை. நேற்றென்பது ஒரு நினைவு. நேற்று என்பது மொழியில் கற்பனையில் மட்டுமே நிகழ்வது. புலன்கள் அறியும்  சுவை பருவடிவ உலகில், அவை அமைந்திருக்கும் நிகழ்காலத்தில் மட்டுமே உள்ளது. சுவையுசாவி இன்றிருக்கும் மலர்களிலேயே அமர முடியும். நேற்றிருந்த மலர்களின் ஓவியங்கள் அதற்கு பொருள்படுவதே இல்லை

ஆகவே வண்ணதாசன் எப்போதும் நிகழ் காலத்தை எழுதுகிறார். அவருடைய பெரும்பாலான கதைகள் வீட்டுவாசலைத் திறந்து அவர் வெளியில் செல்வதில் தொடங்குகின்றன, மானசீகமாக இந்தச் சித்திரம் அவர்கதைகளை வாசிக்கையில் நமக்கு வந்துவிடுகிறது. தன் சிறு கூட்டிலிருந்து வெளிவந்து ரீங்காரத்துடன் சிறகு விரிக்கும் தேனீ போல அந்தக் கதைசொல்லியின் முதல் எழுகையை அவர் கதைகளில் காணலாம்.  “சங்கர நாராயணன் வீடு இதுதானே ‘ என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது” — என மிக இயல்பான ஒரு சொற்றொடரில்தான் அவருடைய பெரும்பாலான கதைகள் ஆரம்பிக்கின்றன.   அந்தத் தேனீ  பின்னர் சென்று அமரும் மலர்கள் என்ன என்று அது அறியாது. அதன் சுவை நரம்பின் ஈர்ப்பொன்றே அதைத் தீர்மானிக்கும்.

வண்ணதாசனின் அனைத்து கதைகளுமே தன்னிலையிலிருந்து சொல்லப்படுபவை. இலக்கணப்படி படர்க்கை என்றாலும் அது ஒருவகைத் தன்னிலைதான், அந்த ’அவன்’ நமக்கு மிகத்தெரிந்த அக்கதைசொல்லியே.. மையக்கதாபாத்திரத்தின் பார்வையினூடாகவே விரியும் காட்சிகளாகவே உள்ளன அவர் கதைகள். இவ்வியல்பு அவரது  படைப்புலகின் எல்லையை மிகக் குறுகலாக்குகிறது. ஒட்டு மொத்தமாக அவரது சிறுகதையைப் படிக்கும்போது அவை திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரே கதைகள் தானோ என்றோ, ஒரே கதையின் பல்வேறு பகுதிகள் தானோ என்றோ வாசகனை மயங்க வைக்கிறது.

அதற்கும் விடையெனச் சொல்லப்படவேண்டியது. இந்த சுவையெனும் அம்சம்தான். சுவைப்பவனின்றி சுவையில்லை. எவருடையது புலன் அறிந்தது இந்தச் சுவை என்ற வினாவுக்கான விடையே அந்த மையக்கதாபாத்திரம். அவனறியும் துயரம், அவனறியும் மகிழ்வு ,அவனறியும் இனிமை ,அவனறியும் கசப்பு –அதனூடாக மட்டுமே இக்கதைகள் நிகழமுடியும். இக்கதைகள் சுவைப்பெருக்கென்றால், அந்த மையக்கதாபாத்திரம் ஒரு நாக்கு. இனிப்பும், துவர்ப்பும், கசப்பும், புளிப்பும் ஒரே நாவால்தான் அறியப்படுகின்றன. துழாவி சுவைத்து அறியும் அந்த நாக்கின் தவிப்பையும் நெளிவையுமே அவர் கதைகளில் வரும் அக்கதைசொல்லி பாத்திரத்தில் நாம் பார்க்கிறோம்.

வண்ணதாசனின் புனைவுலகில் உச்ச தருணங்கள் இல்லை. நாடகமுனைகள் இல்லை. பெரும்பாலான கதைகளில் எழுச்சியோ ஓட்டமோ அமைவதில்லை. ஒரு அன்றாடக் காலைநடையின் இயல்பான தனித்தன்மை கொண்டவை அவை. தன்னை தன்னுள் முற்றமைத்துக் கொண்டு விழிகளால் தொட்டுத் தொட்டுச் செல்லும் ஒரு சிறுவனின் நோக்கில் சொல்லப்படுபவை. ஏனெனில் சுவையை மறைப்பது கொந்தளிப்புகளும் அலைக்கழிப்புகளுமே. கொந்தளிப்பைச் சொல்லும் கதைகள் உண்டு. அவை கொந்தளிப்புகளினூடாக அலைக்கழிப்புகளினூடாக இப்புவியை, வாழ்க்கையை அறிகின்றன. முற்றாக அவற்றைத் தவிர்த்து தன் அன்றாட நிகழ்வுகளினூடாக சுவையைத் தொட்டெடுக்கும் வண்ணதாசனின் கதைகளுக்கு அவை பெருஞ்சுமை.

தன் மேல் வைக்கப்படும் எதையும் இலை வளைந்து கீழே விட்டுவிடுகிறது. வண்ணதாசனின் புனைவுலகு எடைமிக்க தருணங்கள் அனைத்தையும் இயல்பாக நழுவவிட்டுவிடுவதைக் காணலாம். பெரும்பாலான படைப்புகளில் கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் ஓரிரு வரிகளுக்குள் சொல்லி முடிக்கப்பட்டுவிடுகின்றன. ஒரு கூற்றாகவோ நினைவுக்கீற்றாகவோ அவை அறிவுறுத்தப்பட்டுக் கடந்து செல்கின்றன.  உதாரணம் அவருடைய மனுஷா மனுஷா என்னும் கதை. இன்னொரு கதைசொல்லி தீவிரமாக மொழிய முற்படும் பல தருணங்கள் கொண்டது அக்கதை. அவை சிட்டுக்குருவி அலகால் கொத்தி எடுப்பதுபோலச் சொல்லிச் செல்லப்படுகின்றன.

ஒரு நாடகத்தீவிரம் கொண்ட படைப்பில் எவை குறைவாகச் சொல்லப்பட்டிருக்குமோ அவை இவரது படைப்பில் விரித்து விரித்துச் சொல்லப்படுகின்றன, அதாவது புறக்காட்சிகள். நாடகத்தீவிரம் கொண்ட ஆக்கம் எளிதாகக் கடந்துசெல்பவை புறக்காட்சிகளே. அவற்றை கூரிய பென்சில்முனையால் தீற்றிச்செல்கிறது இவரது புனைவுலகு.  நாடகீய உச்சம் நோக்கிச் செல்லும் படைப்பு அதன் மையத்தின் அனலால் அதிலுள்ள அனைத்து பொருட்களையும் படிமங்களாக்கிவிடுகின்றது. ஒவ்வொரு பொருளையும் தொட்டு முடிவின்மை வரைக்கும் நீட்டும் வாய்ப்பை வாசகனுக்கு அளிக்கிறது. நாடகத்தன்மையை வெளியே நிறுத்திவிடுவதால் வண்ணதாசனின் படைப்புகளில் பொருட்கள் அனைத்தும் பொருட்களாகவே நிலைகொள்கின்றன. பொருட்களென அவை அளிக்கும் தன்னியல்பான அழகும் சுவையும் மட்டுமே அவர் படைப்புகளில் நிகழ்கிறது.  அப்பொருட்களை சென்று தீண்டி அறிவது நுண்சுவை தேரும் ஒரு புலன். அதுவே அவர் புனைவுலகை ஆக்குகிறது

 

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை

$
0
0

விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. 2008ல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்றபேரில் ஒரு எளிய நண்பர் கூட்டு ஆரம்பமானது. ஒரு விருது வழங்கினாலென்ன என்னும் எண்ணம் ஒருமுறை பேச்சில் எழுந்தது. முன்னோடிகள் அரசுத்துறைகளாலும் கல்வித்துறையாலும்  கௌரவிக்கப்படாது போவதற்கு எதிரான ஒரு செயல்பாடாக இது தொடங்கப்பட்டது. முழுக்கமுழுக்க வாசகர்கள் அளிப்பது, சக எழுத்தாளர் அளிப்பது என்று பெயரிலேயே தெரியவேண்டும் என்பதற்காகவே விஷ்ணுபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. முதல் விருது 2010ல் ஆ மாதவனுக்கு அளிக்கப்பட்டது

 

இன்று பழைய நினைவுகளை எடுத்துப்பார்க்கையில்  நிறைவும் ஓர் இனிய சோர்வும். ஆரம்பத்தில் இருந்த பல நண்பர்கள் இப்போது தீவிரமாக இல்லை. பலர் பணிநிமித்தம் வெளிநாடுகளில். பலர் விலகிச்சென்றிருக்கிறார்கள். புதியவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். புதியவேகம் வருடந்தோறும். இன்று தொடங்கியதைவிட மும்மடங்குபெரிய விழா. பெரிய நிதித்தேவையுடன்

 

ஞானக்கூத்தனை இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். நண்பர் சந்திரசேகரையும்

.

விஷ்ணுபுரம் விருது ஆ மாதவன் 2010 பதிவு

ஆ மாதவன் விழா பதிவு

ஆ மாதவன் விழா ப்பதிவு

ஆ மாதவன் விழா பதிவு கடிதம் 2

விஷ்ணுபுரம் விழா கோபிராமமூர்த்தி பதிவு

விழா பதிவுகள் ஆ மாதவன்

 அன்பின் வழியே இரண்டுநாட்கள் சுரேஷ்பாபு பூமணிவிழா பற்றி

பூமணி உரை

பூமணிவிழா மதி

விழா ஜெயமோகன்

விழா இளங்கோ

வடகரைவேலன் பதிவு

விஷ்ணுபுரம் விருது 2012 நினைவுகள் தேவதேவன்

தேவதேவன் விருது உரை ராஜகோபாலன்

விஷ்ணுபுரம் விழா அதிர்வுகள்

மோகனரங்கன் உரை

 விழா படங்கள்

விழா பதிவு 1

 

 

தெளிவத்தை ஜோசப்புக்கு விருது 2013 பதிவுகள்

செலேவ்ந்திரன் பதிவு 2013 தெளிவத்தை ஜோசப்

விருதுவிழா புகைப்படக்குறும்புகள்

விழா 2013

புகைப்படத்தொகுப்பு

விழா எதிர்வினைகள்

வாசிப்பின் நிழலில் ராஜகோபாலன்

 

ஞானக்கூத்தன் பற்றி இசை

ஞானக்கூத்தன் உரை

ஞானக்கூத்தன் விழா பற்றி அழகியசிங்கர்

உவக்கூடி உள்ள ப்பிரிதல் சுனீல் கிருஷ்ணன்

விழா பதிவுகள் 2

ஞானகூத்தன் ஆவணப்படம்

சந்திப்புக்கள் பற்றி

விழா காணொளிப்பதிவு

விழா நினைவுகள்

 படங்கள்

 

தேவதச்சன் விருதுவிழா 105 பதிவுகள்

தேவதச்சன் விழா பதிவு சுநீல் கிருஷ்ணன்

விழா சந்திப்பு மீட்பு

கோபி ராமமூர்த்தி பதிவு

இலக்கியமென்னும் கனவு

விருதுவிழா முதல்நாள்

கவிஞனின் சிறை ஜெயமோகன் உரை

விழா பதிவுகள் 3

விழா படங்கள்

மேலும் படங்கள்

விழா கடிதங்கள்

 

===============================

 

விருதுவிழா வழக்கமான வினாக்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்குச் சாகித்ய அக்காதமி

$
0
0

1

 

2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகத்தாமதமாக அளிக்கப்பட்ட விருது இது. தமிழின் ஒரு குறிப்பிட்ட எழுத்துமுறையின் முன்னோடி, தமிழிலக்கியத்தின் சாதனையாளர்களில் ஒருவர் வண்ணதாசன். இலக்கியத்தில் அவருடைய இடம் என்பது மறுசொல்லில்லாமல் வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. பல்லாண்டுக்காலமாக அவருடைய பெயர் சாகித்ய அக்காதமி விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டும் விருது மறுக்கப்பட்டுவந்தது.

இம்முறை விருது அவருக்கு வழங்கப்படுவதற்கு வாசகச்சூழலில் உருவாகி வந்த அழுத்தமே முதன்மையான காரணம். குறிப்பாக வாசகர்களின் எண்ணத்தை முதன்மைப்படுத்திய தமிழ் ஹிந்து நாளிதழ். ஆக இது தமிழ் வாசகர்களின் வெற்றி. அவர்களுக்குரிய எழுத்தாளருக்கு அவர்கள் விருதை அளித்திருக்கிறாகள். வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64

$
0
0

[ 5 ]

காளிகக் காட்டின் பசுந்தடப் பாதையில் நடந்தபடி சண்டன் சொன்னான் “காளிகக்குடியின் பொதுமுற்றத்தில் அமைந்த நூற்றெட்டு கால் கொண்ட குருத்தோலைப்பந்தலில் காளிகப்பெருங்குலத்தின் பன்னிரு குடிமூத்தார் அவை அமர்ந்திருக்க குடிகளனைவரும் அரிமலரிட்டு வாழ்த்த  தலைகுனிந்து அடியெண்ணி நடந்துவந்த  காளியை தாய்மாமன் கைபற்றி கொண்டுவந்து மன்றுநிறுத்தினார். தந்தையும் தாயும் வாழ்த்த அவள் மலர்மாலை சூடி மணை அமர்ந்தாள்.  குரவையிட்டு வாழ்த்தினர் இளமகளிர். வாழ்த்தொலி எழுப்பினர் இளைஞர். முழவுகளும் கொம்புகளும் முழங்கின. உச்சிமரத்தின் முகட்டிலேறி அமர்ந்து முழவிசைத்து காட்டுக்கு செய்தியறிவித்தனர்.”

குடிமூத்தார் கேட்டபோது தன் பெயரை காளையன் என்றும் பைநாகப் பெருங்குலத்தான் என்றும் அவன் சொன்னான்.  காளி அவனுக்கு உகந்த இணையே என்றனர் பெண்கள். அவளருகே அவன் நின்றபோது அந்தியும் இரவுமெனத் தெரிந்தனர். கருமையும் செம்மையும் கூடிய அழகிய குனிமுத்து அவர்களின் இணைவு என குழந்தைகள் எண்ணின. கரியிலெழும் கனல்  என்று எண்ணினர் குடி மூத்தோர்.

சிறுபறை அடித்து பாடி குலதெய்வங்களையும் நீத்தாரையும் வழுத்தி பூசகர் அவனை அக்குலத்திற்குள் எடுத்துக்கொண்டார்.  அவள் தந்தை கராளர் அவன் கையிலொரு கீறலிட்டு குருதிச்சொட்டு எடுத்து நீரில் கலந்து தங்கள் குடிகள்மேல் வீசினார். தான் அணிந்த எருக்குமாலையை அவளுக்கு அவன் அணிவித்தான். அவள் காந்தள்மாலையை அவனுக்கு சூட்டினாள்.

தாய்மாமன் அவள் கைபற்றி அவனுக்களிக்க அரிமலர் பொழிந்த திரையில் மறைந்தது அக்காட்சி. விம்மியழுதபடி அன்னை தன் கணவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவர்கள் கை தொட்டுக்கொண்டபோது தொலைவில் இடி முழங்கியது. மின் ஒன்று காட்டை ஒளிரச்செய்து கடந்து சென்றது. வானமொரு தூவலாக மாறி மெல்ல மண் படிந்தபோது இளமழை பெய்யலாயிற்று.

பன்னிரு நாட்கள் இல்லாள்குடியில் புதுமணம் ஆடிவிட்டு அவள் அன்னையும் தந்தையும் குடியும் சுற்றமும் கண்ணீருடன் சூழ்ந்து விடைகொடுக்க அவள் கைபற்றி அழைத்து காட்டுக்குச் சென்றான். அவள் கன்னம் தொட்டு வாழ்த்தி கைமுத்தினர் அன்னையர். அவள் கைதொட்டு நெஞ்சில் வைத்து ஏங்கினர் கன்னியர். தாள் பணிகையில் தலைதொட்டு வாழ்த்தினர் முதுதந்தையர்.

வலக்கால் எடுத்துவைத்து அவள் அக்குடியின் எல்லை கடந்தபோது அந்தி விழுந்ததுபோல் அங்கு இருள் சூழ்ந்தது. நெஞ்சுகலுழ்ந்தபடி அன்னை நிலத்தமைந்து விம்மி அழுதாள். அனைவரும் சோர்ந்து எடைகொண்ட உடல்சுமந்தவர்கள் போல் ஆங்காங்கே அமர்ந்தனர். அவர்கள் சென்றுமறைந்த சித்திரம் விழிகளில் எஞ்சியிருக்க அப்பாதையை நோக்கினர். அவன் அணிந்த எலும்புமணிமாலையும் அவள் சூடிய கல்மணிநகைகளும் ஒலிக்கும் கிலுக்கம் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அது எப்போதும் அக்காட்டில் இருந்தது.

நூறுவளைவுகொண்ட அலையென வடக்கே எழுந்த விந்தியமலையின் உச்சியில் அமைந்த மலைக்குகை முப்பிரிவேல்போல் மூன்றுவழிகளாக இறங்கி மண்ணுக்கடியில் சென்று பாதாள அனலை அள்ளிவந்தது. அவன் அக்குகையில் அவளுடன் வாழ்ந்தான். காலத்தை கணத்துளிகளாக்கி ஒவ்வொரு துளியையும் ஒரு முழுவாழ்வென்றாக்கி அவளுடன் அவன் காதலாடினான். பத்து விரல் நகங்களிலும் விழி கொண்டு அவள் உடலை அறிந்தான். முத்தங்களால் அவளை துளித்துளியாக உண்டு உண்டு மீட்டான். தேனில் பிறந்து தேனுண்டு தேன்திளைக்கும் தேன்புழுவென அவளில் இருந்தான்.

விழிகளை விழிகளுடன் கோத்து அவள் உள்ளத்தமைந்து சொற்களை எல்லாம் தான் உறிஞ்சிக்கொண்டான். சொல்லற்ற அமைதியில் இருவரும் ஒன்றென ஆனபோது சூழ்ந்திருந்த புவிப்பரப்பனைத்தும் செயல்கள் ஒருகணம் நிலைத்து இருண்டன. பின் ஆமென்று அவை நிலைமீண்டன. பறவைகள் எங்கோ வாழ் என்றும் ஈன்றவளே என்றும் கூவி உயிர்கொண்டன அவள் அவனை செவ்விழிகளால் நோக்கி நாணியபோது வான் சிவந்தது. அவள் நாணம் கண்டு அவன் நகைத்தபோது வெயிலொளி பரவியது. அவர்களின் காதல் சொல் பொருள்கொண்டதுபோல் நீர் ஒளிகொண்டதுபோல் அனல் வெம்மை கொண்டதுபோல் மண்நிகழ்ந்தது என்கின்றது மகாபைரவரின் சொல்திகைந்த பிரசண்ட புராணம்.

இனியகாதல் ஓர் உறவல்ல, விளையாட்டு. ஆணும் பெண்ணும் ஆடத்தகுந்த  விளையாட்டு ஒளிந்தாடலே. நாளும் இரவும் அவர்கள் ஆடியதும் அதுவே. ஒருவரை ஒருவர் ஒருகணமும் ஒழியாது நோக்குபவர் மட்டுமே ஒளிந்தாடலின் உச்ச உவகையை அறிய முடியும். இலைகளின் பசுமையில்,  நீரின் நீலத்தில் பாறைப்பிளவின் வாயிருளில் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள். அவளை அறிந்த அவன் புலன்கள் முட்பன்றியெனக் கூர அவள் கால்தடமும் ஒலித்தடமும் மென்மணமும் தேடி அவளை கண்டுகொண்டான்.  பறவைக்குரலும் நிழலாடலும் ஒளியசைவும் தேர்ந்து அவளை கண்டுபிடித்தான். அவளோ தன் அல்குலும் முலைகளும் இதழ்களும் அறிந்த நுண்மை ஒன்றால் நேராக அவன் ஒளிந்திருந்த இடம் நோக்கி வந்து தழுவிக்கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் புதிய ஒரு காளியை அவன் கண்டுபிடித்தான். ஒவ்வொரு முறையும் புத்தம் புது காளையனை அவள் பெற்றாள். கண்டடைதலின் தருணத்தில் புதிதெனப் பிறந்தெழுந்து கூவி நகைத்து நீர்வழிப்படுபவன் புணையை என அவள் கைகளாலும் கால்களாலும் தழுவிக்கொண்டாள். அவளை அள்ளி மலரென தன் தலையிலும் மார்பிலும் சூடிக்கொண்டான். ஒவ்வொரு கண்டடைதலுக்குப்பின்னரும் முதல் முறை என உறவுகொண்டனர். உருகி இழைந்து ஒன்றென்றாகி அப்பெருநிலையின் அசைவின்மை சலித்து பிரிந்து மீண்டும் ஒளிந்தாடினர்.

பனியின் திரையிலும் புகையின் செறிவிலும் அவன் ஒளிந்துகொண்டான். ஒளிந்திருக்கையில் கண்டடையப்பட வேண்டும் என்று அவன் விழைந்தான்.  கண்டடையப்பட்டு கை தழுவி கால் பிணைத்து உடல் இணைகையில் உள்ளே ஒரு பகுதி ஒளிந்தே இருந்தது. ஒருபோதும் தாங்கள் முற்றிலும்  கண்டடையப் போவதில்லை என்றும் ஒருதுளியும் எஞ்சாது கண்டடையப்படவும் இயலாது என்றும் இருவரும் உணர்ந்தனர். எப்போதும் எஞ்சும் அவ்விடைவெளியிலேயே இருவரென்றாகி அங்கு நடிக்கும் அது தன் ஆடலை நிகழ்த்துகிறதென்று அறிந்தனர்.

துயிலும் அவள் செவியில் குனிந்து “என்னை தேடுக, இளையவளே!” என்றுரைத்து எழுந்து காலைச் செவ்வொளியில் கரைந்து அவன் உடல் மறைத்துக்கொண்டான். கையூன்றி எழுந்து அவள் அவனைத் தேடினாள். நெளியும் செம்மை படர்ந்த நீரில் காட்டுநெருப்பின் திரையில் பூத்த செண்பகத்தின் மரச்செண்டில் அவனை அவள் தேடினாள். அவளைத் தொடர்ந்து வந்து அறியாது முத்தம் கொடுத்து திகைத்துத் திரும்புகையில் நகைத்து அவன் நகையாடினான். தேடிச் சலித்து முகம் சிவந்து  ”தோற்றேன், என் முன் வருக இறைவ!” என்றாள். “எங்கேனும் நீ மறைக! நான் உன்னை கண்டுகொள்வேன். அங்கு மட்டுமே என் உருக்காட்டுவேன்” என்றான்.

அவள் ஓடி காட்டுக்குள் சென்று இலைகளுக்குள் செறிந்த நிழலில் ஒளிந்தாள். பின்னர் அங்கிருந்து மேலும் இருண்ட குகைக்குள் சென்றாள். அங்கிருந்து இரவின் கூரிருளுக்குள் முற்றிலும் உடல் மறைத்தாள். இருளென்றாகி அருவமானாள். சிரித்தபடி தேடிய அவன் தன் புலன்கள் ஊமையானதை உணர்ந்தான். தன் உள்ளம் திகைத்தமைவதை பின்பு கண்டான். உள்ளமைந்த அறியா நுண்புலனும் கைவிட்டபோது அஞ்சினான். எனினும் கைகளிலும் கால்களிலும் அமைந்த அசைவின் அறியா நெறியால் தேடித் துழாவினான். சலித்து மெல்ல சினம் கொண்டான். “எங்கிருக்கிறாய்? என் முன் வருக!” என்றான்.

அவன் காதருகே சிரித்து  ”கண்டுபிடிக்கிறேன் என்றீர்கள், காத்திருக்கிறேன்” என்றாள். மேலும் பொறுமையிழந்து “எங்கிருக்கிறாய்? என்முன் வருக இப்போதே!” என்றான் முக்கண்ணன். “தோற்றேன் என சொல்லுங்கள், தோன்றுகிறேன்” என்றாள். “நான் எங்கும் தோற்பதில்லை” என்று அவன் சொன்னான். “தோற்றேன் என்று உரைக்காமல் உங்கள் முன் வரப்போவதில்லை” என்றாள். அக்கணத்தில் வந்து தைத்த கனலம்பு ஒன்று அவனை சீறச் செய்தது. “வரவேண்டியதில்லை. நீயிலாது முன்பு நானிருந்த நிலையே  முழுமையானது. செல்க!” என்று சொல்லி திரும்பி நடந்து தன் குகை மீண்டான்.

அங்கு அவளிலாத இன்மையே ஒவ்வொரு பொருளிலும் துலங்குவதைக் கண்டான்.  உளம் விம்மி நீள்மூச்செறிந்தான். அறியாது விழிகலங்க “காளி, நகையாடாதே. இங்கு எழுக!” என்றான். அவன் துயர் அவளுக்கு அறியா உவகை ஒன்றை அளித்தது. ஒளிந்துகொள்வதனூடாகவே பெண் ஆணை எப்போதும் வெல்கிறாள் என அவள் அறிந்தாள். எப்போதும் தணிபவள் ஒருமுறை வெற்றிச்சுவையை அறிந்தபின் எளிதில் மீளமுடியாதென்றும் உணர்ந்தாள். “வென்ற தருக்கனைத்தையும் நிலத்திட்டு கை தொழுங்கள்” என்றாள்.

தளர்ந்தகுரலில் “கைதொழுதேன், வா!” என்றுரைத்தான். அவள் மேலும் எழுந்து “என் கால் தொட்டு வருக என்றுரையுங்கள்” என்றாள்.  ”கால்தொடுகிறேன், வா!” என்றான். அவள் உடல் சிலிர்த்து விழிநீர் கோத்தது. அவளில் கூடினர் இருளுருவாக தென்திசையில் அமைந்த அவள் குடியின் மூதன்னையர். “உங்கள் முடித்தலை என் காலடியில் வளையவேண்டும்” என்றாள். எரிந்தெழுந்த சினத்துடன் “வேண்டாம். நீயில்லாது நான் நிறையிலாதோன். ஆனால் வளைந்திறுவதைவிட இக்குறையுடனே வாழ்வதே மேல்” என்றான். “நானென்று எஞ்சுவது அழிந்தபின் நான் கொள்வதும் வெல்வதும் எதை? விலகிச்செல்!” என்று கூவினான்.

அப்போதும் அவன் சினம் அவளுக்கு உறைக்கவில்லை. பின்னால் சென்று சிரித்து “தோற்பவர் கொள்ளும் சினம்தான் எத்தனை அழகு!” என்றாள். “விலகிச்செல்!” என்று அவன் கூவினான். முப்பிரி வேலை தலைமேல் தூக்கி “இக்கணம் என் முன் வந்தால் உன்னை கொன்றழிப்பேன். செல்… விலகு!” என்றான். “ஒளியில் மறைந்து என்னை ஆட்டிவைத்தீர்கள். இவ்விருளில் மறைந்து நான் ஆடுகிறேன். ஆணென்றால் வந்து என்னைத் தொடுங்கள் பார்ப்போம்” என்றாள். “இல்லை… இனி அந்த ஆடல் நம்மிடையே நிகழாது. இனி ஒருபோதும் உன்னை நான் தேடப்போவதும் இல்லை” என்றான்.

“அப்படியென்றால் நன்று. நான் செல்கிறேன்” என்று அவள் திரும்பிச்சென்றாள். அவன் தன் பின்னால் வருவான் என அவள் அப்போதும் எதிர்பார்த்தாள். கேட்கும் ஓசையெல்லாம் அவன் காலடி என்று மயங்கினாள். திரும்பிப்பார்க்காது சென்ற அவளுடலில் அமைந்து சித்தம் நொடிக்கொருமுறை திரும்பி நோக்கி ஏங்கியது. அவன் வரவில்லை என உணர்ந்ததும் முதலில் திகைத்து பின் சினந்தது. அது தன் பெண்மைக்கு அவமதிப்பென்று எண்ணினாள். எங்கு செல்லப்போகிறார் என்று இகழ்ச்சியுடன் எண்ணி அதை கடந்தாள். இருண்ட வேர்க்குவை ஒன்றுக்குள் சென்று உடலொடுக்கி அமைந்துகொண்டாள். அங்கிருக்கையில் முழுமையாக இன்மைகொள்ள இயல்வதை உணர்ந்தாள். அவ்விருளில் இருந்து அவன் விழிகளாலேயே தான் உருவென வரைந்தெடுக்கப்படுவதாக அறிந்தாள். களிமண்ணில் அவன் கைகள் தன்னை வனைந்தெடுத்து கலமென்றாக்கி அவன் கொண்ட அமுதை நிறைக்கின்றன. அதை அவன் உண்கிறான். அவன் கைவிட்டால் மீண்டும் களிமண் நிலமென்றாகி விரிந்து அவன் காலடிகளை நெஞ்சில் தாங்கி அமைவதன்றி பிறிதொரு வழியில்லை அவளுக்கு.

அவன் ஒரு சொல் எடுத்தால், ஒருநோக்கசைத்தால் தாவிச்சென்று அவன் காலடியில் விழும்பொருட்டு காத்திருந்தாள்.  அவனோ அவளை மீண்டும் விழியிலிருந்தும் சித்தத்திலிருந்தும் இழந்தான். மீண்டும் அவள் தன்னிடம் ஒளிந்தாடுவதாக எண்ணினான். எத்தனை ஒளிந்தாலும் ஆணை பெண் தன் நுண்மையின் ஒரு முனையால் பின்தொடர்ந்துவிடமுடியும். தன்னை முற்றொளித்துக்கொள்ளும் பெண்ணை தன் உச்சப் புலனொன்றின் கூரால் கூட ஆண் தொட்டறிந்துவிட முடியாது. அவள் செல்லும் ஆழங்கள் முடிவற்றவை. அங்கு அவளுடைய மூதன்னையர் புன்னகைக்கும் விழிகளுடன் அவளை இரு கைகள் விரித்து பெற்றுக் கொள்கிறார்கள்.

உண்மை சினம் கொள்ள வைக்கிறது. நம்மால் மாற்றமுடியாத உண்மையோ பெருஞ்சினம் கொள்ள வைக்கிறது. ஏனெனில் நாமும் ஒரு கண்ணியென்றிருக்கும் இப்புடவிநெசவின் இரக்கமற்ற விரிவை அவை நமக்கு காட்டுகின்றன. தெய்வங்களும் அதில் ஒரு கண்ணியே. சினம் நிலை அழியச்செய்கிறது. நிலையழிவோர் முதலில் பிறழ்வது சொல்லில். சொல்லென்பது சித்தம் ஒவ்வொரு கணமும் கொள்ளும் கயிற்று நடை. ஒருபக்கம் அகமெனும் முடிவிலியின் ஆழம். மறுபக்கம் புறமென்றாகி நின்றிருக்கும் தகவுகளின் வெளி. செவிகள் சொற்களை அள்ளி முடைந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் வானத்தில் வந்து விழுந்து திகைக்கின்றன சொற்பொருட்கள். ஒருமுறை  சித்தம் அடிபிழைத்தால் சொல் ஓராயிரம் முறை தவறுகிறது.

அவன் அவளை அழைத்தான் “காளி, எழுக! எழுக என் முன்! இது உன் கொண்டவனின் ஆணை!” அவள் அதை கேட்கவில்லை. சினத்தால் அல்ல, காதலாலேயே கருமையிலிருந்து திரட்டி எடுக்கப்படுபவள் அவள் என அவன் உணரவுமில்லை. “எழுக! இக்கணமே எழுக!” சினம் கொண்டு முப்பிரி வேலைச்சுழற்றி “இதோ ஆணையிடுகிறேன், நீ என்னை உளம் நிறுத்திய துணைவியென்றால் இத்தருணத்திலே வந்து என் முன் பணிக!” என்று முக்கண்ணன் கூவினான். அதிலிருந்த கரையற்ற பெருஞ்சினத்தைக்கூட காளி புரிந்துகொள்ளவில்லை. அவன் குரலைக்கேட்டதும் மீண்டும் அவள் முகம் புன்னகை சூடியது. அவன் ஒரு கனிந்த சொல்லை எடுக்கவேண்டுமென அவள் எண்ணினாள்.

“சினம் உங்களை மேலும் சிவக்க வைக்கிறது’’ என்று இருளாகி நின்று மெல்ல சிரித்தபடி சொன்னாள். அவள் குரலில் இருந்த காதலை அவன் இளிவரலென்று எண்ணினான். முப்பிரி வேலை நிலத்தறைந்து “இத்தருணத்தில் இங்கு வா! இல்லையெனில் நான் பூட்டிய மங்கல நாண் அறுத்து இங்கு இட்டுவிட்டு விலகிச் செல்!” என்றான். அப்போதுதான் அவள் அவன் கொண்ட சினம் என்ன என்று உணர்ந்தாள்.  உளம் நடுங்கி ஓடி வந்து அவன் முன் நின்று “என்ன இது? தாங்கள் சொல்வதென்ன?” என்றாள்.

“நீ என்னை வென்று செல்கிறாய். உன் இருளைப் பயன்படுத்தி என்னை சிறுமைப்படுத்துகிறாய். சிறுமகளே, என் ஒளியுடலின் ஒரு சிறு மரு என்று மட்டுமே அமையும் தகுதிகொண்டவள் நீ. கரியவளாகிய உன்னை ஒளியுடல் கொண்ட நான் ஏற்றது என் கருணையினால் மட்டுமே” என்றான். காளி கொழுநன் சினம் அறிந்த  மனையாட்டியரின் இயல்புக்கிணங்க மேலும் தாழ்ந்து “பொறுத்தருள்க! இது ஒரு களியாட்டென்றே கருதினேன். தாங்கள் சினம் கொண்டிருப்பதை உணரவில்லை” என்றாள்.

“இல்லை, நீ உணர்ந்தாய். என் சினத்துடன் நீ விளையாடினாய். இருளென என்னைச் சூழ்ந்து இளிவரல் தொடுத்தாய்” என்றான். “இல்லை, நான் விளையாடுகையில் என் கட்டற்ற கன்னிநாட்களுக்கு திரும்பிவிடுகிறேன். மங்கலநாண் சூடி பிறிதொருவருடன் இணைந்ததை மறந்துவிடுகிறேன். என் இளமை உள்ளத்தால் செய்த பிழை இது. பொறுத்தருள வேண்டும்” என்றாள் காளி.  அவன் பற்களைக் கடித்து நீர்மைகொண்ட விழிகளால் அவளை நோக்கி “நீ உன் மூதன்னையருடன் சென்று சேர்ந்தமைந்தாய். அவர்களின் பொருட்டே உன் காலடியில் என்னை விழும்படி கோரினாய். உன் குடிக்கு முன் நான் இழிவுசூடி நின்றிருந்தேன் என்றால் உன்னுள் வாழும் தொல்குடி அன்னை மகிழ்ந்திருப்பாள். அதை நான் அறிவேன்”  என்றான்.

அவள் ஒருகணம் திகைத்தாள். அது உண்மைதானோ என உளம் மயங்கினாள். மெல்லியகுரலில் “இல்லை, அது வெறும் காதல்விளையாட்டு…” என்றாள். அவள் குரலிறங்கியமை அவனை மேலும் எழச்செய்தது. வெறுப்புடன் நகைத்து “இல்லை, உன் உளமறியும் அதை. யார் உன் மூதன்னையர்? காட்டுக்கிழங்கும் தேனும் தேடியலைந்த மலைக்குறத்தியர்.  மொழிதிருந்தாத மூடர். கற்பெனும் நெறியிலாது மைந்தரை ஈன்றுப்பெருக்கிய வெறும் கருப்பைகள். அவர்கள் முன் நான் அடிபணியவேண்டுமா என்ன?” என்றான்.

அவள் அச்சொற்களால் அனைத்தையும் மறந்து சினந்தெழுந்தாள். “ஆம், நான் அவர்களில் ஒருத்தி. அவர்களைப்போன்ற அன்னையர் ஈன்று பெருக்கியமையால் உருவானதே மானுடப்பெருங்குலம். அன்னையரையும் நீரையும் நிலத்தையும் பழிப்பவன் தன்னை இழிவுபடுத்திக்கொள்ளும் வீணன்.” அவள் சொல்மீறியது அவனை மேலும் உவகையே கொள்ளச்செய்தது. “ஆம், இதோ உன் நாவிலிருந்து எழுந்துவிட்டது உன் உளம்கொண்ட எண்ணம். நான் வீணன். உனைநாடிவந்த அரசர் கொண்ட செல்வக்குவையும் அரியணையும் இல்லாத மலைமகன். பித்தன், வெறும்பேயன்… நீ என்னை உன் சிறுகுடிக்குமுன் பணியச்சொன்னது அதன்பொருட்டே.”

முற்றிலும் தளர்ந்து அவள் மெல்ல விம்மினாள். கண்ணீரை கைகளால் மூட விரல்மீறி வழிந்தன துளிகள். நெஞ்சுலைய விசும்பியபடி “நான் இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் சொல்லும் சொல் எதுவும் உங்கள் நெஞ்சில் நஞ்சென்றே பொருள்கொள்கிறது” என்றாள். “ஏனென்றால் நீ உளம்கொண்ட நஞ்சு அது” என்றான் அவன். அவள் சூழலையும் அவனையும் மறந்து அழத்தொடங்கினாள். அழும் பெண் ஆணை வென்றவனாக உணரச்செய்கிறாள். உளமுருகவும் செய்கிறாள். அவன் மேலும் ஒரு சொல்லிடை வெற்றியை விரும்பினான். அதை கைக்கொண்டபின் அவளை அணைத்து முத்தமிட்டு மீட்டெடுக்கலாமென எண்ணினான்.

“உன் கருமை என் கண்ணை இருளச்செய்கிறது” என்றான். “உன் கீழ்க்குடிப்பிறப்பை அறிவித்துக்கொண்டே இருக்கிறது அது.” அவள் கைவிலக்கி கண்ணீர் அனல்கொள்ள நோக்கியபோது வென்றுவிட்டேன் என அவன் உள்ளம் உவகையில் துள்ளியது. அங்கு நிறுத்துவதே நலம் என அவன் அறிந்திருந்தபோதிலும் ஆயனின் சீழ்க்கை கேட்டபின்னரும் மேலுமிரு காலடிகள் வைக்கும் கன்றுபோல சொல் முந்திச்சென்றது. “உலகை ஒளியூட்டும் செந்நிறம் நான். ஒளியனைத்தும் சென்று அமையும் முற்றிருள் நீ. நாமிருவரும் இணைதல் இயல்வதல்ல, செல்க!” என்றான்.

அவள் ஆழ்ந்த குரலில் “ஆம், நான் இருள் நிறம்கொண்டவள். அது புடவியின் நெறி. ஆதித்யர்களும் கோளங்களும் அவ்விருளின் சிறு மின்னல் துளிகள் மட்டுமே” என்றாள். அவள் குரலில் ஒலித்த அறைகூவலால் சினம்கொண்டு  அவள் விழிகளை நோக்கிய காளையன் அங்கு முழுமையான மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் கண்டு சற்றே அஞ்சினான். அதுவரை முற்றிலும் அடிபணிந்து நின்றிருந்த அவளுக்குள்ளிருந்து பெண்மையின் ஆணவம் பத்திவிரித்து எழுந்திருந்தது.

அதை உணர்ந்ததும் அவன் முழுமையாகவே பின்வாங்கிவிட்டான். அன்னையிடம் பாயும் அஞ்சிய மைந்தன் என அவளை நோக்கி கைவிரித்துச் செல்லவே உளமெழுந்தது. ஆயினும் அவன் நா “என் பொன்னிறம் உன்னில் ஒரு துளி மட்டுமே என்கிறாயா?” என்றது. “அனைத்து நிறங்களும் கருமையின் பரப்பில் அமைந்த சிற்றொளிகள் மட்டுமே” என்று அவள் சொன்னாள். இருவரும் சில கணங்கள் விழி கோத்தனர்.

இரு விசைகள் நிகர்கொண்ட உச்சதருணம். அது இருவரிலும் மானுடம்மீறிய உவகை ஒன்றை எழுப்பியது. போரிடும் உயிர்கள் கொலைத்தருணத்தில் அடையும் மெய்ப்பாடு அது. ஒவ்வொரு மயிர்க்காலும் உயிர்கொண்டு எழுந்து நின்றிருக்கும் கணம். அதையறிந்த உயிர் பின்வாங்குவதே இல்லை.

காளி “நான் என்றும் இருக்கும் நிலை. என்னில் நிகழும் அலையே நீங்கள். இத்தருணத்தில் அதை உணர்ந்தமையால் நீங்கள் அடையும் சினம் இது. இதைக்காட்ட வேண்டிய இடம் நானல்ல. இவையனைத்துமாகி நின்றிருக்கும் பிரம்மம். அங்கு சென்று சீறுக!” என்றாள். பெருங்காதலும் பெருஞ்சினமும் மிகச்சரியான தந்தியைத் தொட்டு மீட்ட வல்லவை. எந்தப் புள்ளியில் தன் வலியை மூவிழியன் உணர்ந்துகொண்டிருந்தானோ அங்கு பட்டன அவள் சொற்கள்.

இடிகொண்டு அனலான மரமென தழல்விட்டு கைநீட்டி அவன் சொன்னான் “நீ முழுமையென்றால் உன்னில் எழவேண்டும் அனைத்தும். செல்! எனக்குரிய அழகு வடிவம் கொண்டு இங்கு வா! உன்னை முகம் சுளிக்காமல் நோக்கி மகிழ என்னால் இயலுமென்றால் ஏற்றுக்கொள்கிறேன்.” அவள் ஏளனத்துடன் இதழ்வளைத்து “இவ்வழகு வடிவத்தை தேடித்தான் நீங்கள் வந்தீர்கள்” என்றாள். அவன் “ஆம், அது காணும் பெண்ணையெல்லாம் வென்று செல்லவேண்டுமென்ற ஆண்மையின் ஆணவம் மட்டுமே.  உன் தந்தை விடுத்த அறைகூவலின் பொருட்டே உன்னை வென்றேன். உன்னை உடனுறையச்செய்ய வேண்டுமென்று எண்ணவில்லை. உண்டு முடித்த கலம் நீ. இனி உனக்கு என் உள்ளத்தில் இடமில்லை. விலகு!” என்றான்.

அச்சொற்களில் அவள் ஒரு கணம் நடுங்கினாள். நலம் உண்டு துறக்கப்படுதல் என்பது பெண்மை என்றும் உள்ளூர அஞ்சும் கொடுநரகு, உலகாளும் அன்னை வடிவமே ஆயினும். தளர்ந்த குரலில் காளி “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “நான் மீண்டு வரவேண்டியதில்லையா? மெய்யாகவா சொல்கிறீர்கள்?” என்றாள். “செல்க, இனி ஒரு கணமும் உன்னை எண்ணிப்பார்க்க மாட்டேனென்று இதோ ஆணையிடுகிறேன். இப்புவியெங்கும் பிறந்திருக்கிறார்கள் எனக்குரிய பெண்டிர். நீ அதில் ஒரு துளி. அது உதிர்ந்துவிட்டது.”

அழுகையென ஒலித்த குரலில் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “இனி என் விழிகளுக்கு நீ அழகல்ல. உன் உள்ளம் இனியெனக்கு ஒரு பொருட்டும் அல்ல. அதை மட்டுமே சொன்னேன்” என்றான். “இத்தனை நாள் நீங்கள் கொண்ட காதல் பொய்யென்று உரைக்கிறீர்களா?” என்றாள். அதிலிருந்த மன்றாட்டைக் கண்டு அவள் அகமே கூசியது. அவன் அத்தணிவால் மேலேற்றப்பட்டு உச்சி ஒன்றில் நின்று சொன்னான் “பொய்யல்ல, அத்தருணத்திற்கு உரியவை அவை. அக்கணங்களைக் கடந்து இங்கு வந்து நின்றிருக்கிறேன். உன்னை அங்கு முற்றுதிர்த்துவிட்டிருக்கிறேன். காதலில் ஆண் சொல்லும் அத்தனை சொற்களும் மின்னல் போன்று மறுகணமற்றவை. செல்!”

அனைத்துப் படைக்கலங்களையும் இழந்து கைதளர்ந்து கண்ணீர் வழிய விம்மியழுதபடி தலைகுனிந்து அவள் நின்றாள். அவள் அழுகைக் குரல் கேட்டு வீம்புடன் அவன் திரும்பி நின்றான். அவளுடைய அழுகையொலி அவன் நெஞ்சை அறுத்தது. மறைமுக உவகையுடன் அவன் அவ்வலியில் திளைத்தாடினான்.  “நான் ஒரு சொல்லுக்கென்று கூட உங்களை மறுதலிக்க இயலாது. அதை நீங்கள் அறிவீர்கள்” என்றாள். அவன் உடலில் ஒரு சிறு அசைவு கடந்து சென்றது. “சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்? எங்கு பணிய வேண்டும்? எவ்வளவு சிறுக்க வேண்டும்?”

அவன் வலியில் திளைப்பதன் சுவையை அறிந்துவிட்டிருந்தான். தன் கோட்டைகள் ஒவ்வொன்றையும் அவனே இடித்துச் சரித்தான். தன் உடலை குருதிவழியக் கிழித்து வீசினான்.  ஏளனம் நிறைந்த முகத்துடன் “சென்று இவ்விழிந்த கரிய உடலை அகற்றி பொன்னுடல் சூடி இங்கு வா! உன்னை என் துணையெனக் கொள்கிறேன். இனி கருமையின் கீழ்மையைச் சூட என்னால் இயலாது” என்றான்.

KIRATHAM_EPI_64

அவள் உடல் தொய்ந்தபோது அணிகள் மெல்ல விழும் ஓசை எழுந்தது. முலைக்குவைகள் எழுந்தமைய நெடுமூச்சுவிட்டு “இதையே ஆணையெனக் கொள்கிறேன். பொன்னுடல் பூண்டு இங்கு மீள்கிறேன்” என்று சொல்லி திரும்பி நடந்தாள். அவன் அவள் செல்வதை முற்றிலும் தளர்ந்தவனாக நோக்கி நின்றான். ஒரு நாடகம் முடிந்துவிட்டதென அவன் அறிந்தான். ஆயிரம் முறை அவளை பின்னின்று அழைத்தான். அதை ஒலியாக்கும் ஆற்றல் அவன் உடலில் எஞ்சியிருக்கவில்லை.

தொடர்புடைய பதிவுகள்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

$
0
0

IMG_3209

 

ஜெ

வண்ணதாசன் படைப்புகளைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத்தொடர் பல வினாக்களுக்குப் பதில் சொல்கிறது. அவரைப்பற்றிய இரு குற்றச்சாட்டுக்களைப் போகிறபோக்கிலே இன்று சிலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று, ஒரே வட்டத்தில் சுற்றிவருகிறார். இரண்டு, அன்பு கனிவு என ஒரே விஷயத்தைச் சொல்கிறார். உக்கிரமான விஷயங்களைச் சொல்வதில்லை.

இவை ஒருவகை டெம்ப்ளேட் கருத்துக்கள். இவற்றைச் சொல்பவருக்கு ஒரு அறிவுஜீவிக்களை கிடைக்கின்றது. நல்ல வாசகன் நமுட்டுச்சிரிப்பு சிரிப்பான். ஆனால் இவர்களுக்கு ஒரு வகையான பொது அங்கீகாரம்தான் முக்கியம். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இப்படி டெம்ப்ளேட் அபிப்பிரயத்துக்குள் சென்றுவிடுவோம் என்பது உண்மை. ஆனால் அதையே ஒரு நிலைப்பாடாகச் சொல்லி வாதாட ஆரம்பித்தால் மேற்கொண்டு வளர்ச்சியே இல்லாமலாகிவிடும்.

இந்தக்கருத்து என்பது கர்நாடக சங்கீதக்கச்சேரி வாசலிலே போய் நின்று பொதுவாகக்கேட்டுவிட்டு, ‘அதேபாட்டு, அதே வரி சும்மா ஸா ஸா என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்வதுபோலத்தான். அந்த இசைக்குள் செல்லவேண்டுமென்றால் ஒரு பயிற்சியும் கவனமும் தேவை. அதற்கு நமக்கு கொஞ்சம் தெரியாமலும் இருக்கலாம் என்ற அடக்கம் தேவை. அந்த இசைமரபு இசையின் நுணுக்கத்தைமட்டுமே கவனப்படுத்துகிறது. மற்ற அனைத்தையும் freeze செய்துவிடுகிறது. நுணுக்கத்தைச் சொல்ல விஷயத்தை freeze செய்யாமல் முடியாது. அந்த விஷயத்தை மிகத் திருத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நுணுக்கத்தை அடைவதற்குச் சிறந்தவழி பேசுதளத்தை முடிந்தவரை குறுகலாக ஆக்குவதும் மேலுமேலும் நுணுகி ஒன்றையே சொல்வதும்தான். எல்லா கிளாஸிக் ஆர்ட்டும் இதைத்தான் சொல்கிறது

வண்ணதாசனின் forte என்பது ருசிதான். அந்த ருசியே அவருடைய தர்சனம். அதை அவர் வாழ்க்கையில் உள்ள எல்லா இருட்டுக்கும் அழிவுக்கும் மாற்றாகச் சொல்கிறார். அவர் அன்பையே சொல்கிறார் என்பது அஞ்சாறு கதைகளை வாசிப்பவர்களின் எண்ணம் . உண்மையில்  அவர் எழுதிய பல கதைகள் கொடூரமான வாழ்க்கைச்சித்திரங்களைச் சொல்கின்றன. ஆனால் அவற்றை அவர் விரித்துச்சொல்வதில்லை. நீங்கள் சொல்வதைப்போல அதையெல்லாம் ஒற்றைவரியில் கடந்துசெல்கிறார். குழந்தைசெத்துப்போன அன்னையின் துக்கம் ரெண்டே வரிதான். ஆனால் ஒரு பூ விழுந்துகிடப்பதற்கு ஒருபக்கம். இது ஒரு தரிசனம். இதை வாசிக்க இங்கே நல்ல வாசகர்கள் வரவேண்டும்

ஒருகாலகட்டத்துக்கு என்று ஒரு எழுத்து உண்டு. அதுதான் trend எல்லாரும் அதையே எழுதுவார்கள். ஒருகும்பல் அத்தனை எழுத்தாளரிடம்போய் அதையே கேட்டுக்கொண்டிருக்கும். அவர்களின் தனித்தன்மையை நோக்கிச் செல்வதே நல்ல வாசகனுக்குரிய விஷயம். இன்றைக்கு வன்முறை செக்ஸ்மீறலை எழுதுவதே trend .சின்ன எழுத்தாளர்கள் அதையே எழுதுவார்கள். ஆனால் நல்ல எழுத்தாளனுக்கு அவன் உலகம் இருக்கும். அதுக்கும் வெளியுலகுக்கும் சம்பந்தமே இருக்காது. லா.ச.ராவுக்கு சௌந்தர்யம் மட்டும்தான். உங்க எழுத்திலே எங்கே துக்கம் என்று அவரிடம் கேட்டால் அது ஆபாசமான கேள்வி. மௌனியிடம்போய் அவர் கதையிலே எங்கே அரசியல் என்றுகேட்டால் அது மடத்தனம். நம் அமெச்சூர் விமர்சகர்களிடமிருந்து இலக்கியத்தைக் காப்பாற்ற நீங்கள் எழுதியதுபோல ஆணித்தரமாக எழுதவேண்டும். நன்றி ஜெமோ

சாரங்கன்

***

சமீபத்தில் கோவையில் நடந்த புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றிக் கூற விரும்புகிறேன். விழா தொடங்கும்முன் என் பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞர் வந்து உட்கார்ந்தார். மலர்ச்சியும், தயக்கமும் கலந்திருந்த முகம். படப்படப்பாக இருந்தார். சிறு யோசனைக்குபின் தன் பையில் இருந்த ஒரு குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு மேடைக்கு சென்று திரும்பினார். எனக்கு ஆர்வமாக இருந்தது. நான் அவரிடம் ”யாரிடம் கையெழுத்து வாங்கச் சென்றீர்கள்” என்று கேட்டேன் (ஏனென்றால் மேடையில் இன்னும் சில பெரியவர்களும் இருந்தனர்).

அவர், தான், திரு. வண்ணதாசன் அவர்களின் தீவிர வாசகன் என்றும், இன்று அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டு சீக்கிரமே வந்திருப்பதாகவும் கூறினார். நான் மகிழ்ச்சியாக ‘நானும் அவரை காணத்தான் வந்தேன்’ என்றேன். அவ்வளவுதான். அவர் தயக்கமெல்லாம் காணாமல் போயிற்று. விழா தொடங்கும் வரையில் பேசிக்கொண்டே இருந்தார். அவர் சிறுவயது முதல் மிகுந்த கூச்சச் சுபாவம் உடையவராம். அந்த தனிமையே நூல்கள் படிக்கக் காரணமாயிருந்ததும், எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை வண்ணதாசன் நூல்களை பற்றி எழுதியதை தொடந்து இவர் வண்ணதாசன் அவர்களின் நூல்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு சமயத்தில் தன்னையே அக்கதைகளில் கண்டு நெகிழ்ந்திருக்கிறார். தன்னுடைய தயக்கம் ஒரு பெருங்குறை அல்ல என உணர்ந்திருக்கிறார். அவருக்கான ஒரு வெளி அக்கதைகளில் இருப்பதை கண்டிருக்கிறார். அன்றுமுதல் அவர் பையில் எப்போதும் வண்ணதாசன் அவர்களின் நூல் ஒன்றினை வைத்துக்கொள்வாராம். அன்றும் வைத்திருந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்புகளுக்கும், பொருளாதார சுமைகளுக்கும் இடையில், தான் எப்படியாவது நூல்கள் வாங்குவது குறித்தும் பெருமிதம் கொண்டார்.

எப்போதும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் நான் பேசமுடியாமல் நெகிழ்ந்து போயிருந்தேன். நாங்கள் இருவருமே பெயரை கேட்டுக்கொள்ளவில்லை. (அந்த பெயர் தெரியாமல் போன பறவைக்கு இவ்விழா அழைப்பிதழ் கிடைத்திருக்க வேண்டும் என இரண்டு நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.)

வண்ணதாசன் அவர்களின் நூல்களை படித்துவிட்டு தங்கள் சிறு கூட்டுக்குள் இருந்து சற்றே உயரப் பறந்து நீலத்தில் கலந்தவர்களை எனக்கு தெரியும். தன் சக பாலினத்தினரை சக பயணியாக பார்க்கும் விதமும், பெண்கள் மீதான மரியாதையும், ஒரு குடும்பத்தின் மையப் பகுதி பெண் எனும் அம்சங்களும் இவர் கதைகளில் எனக்கு மிகப்பிடித்தவை.

’மனதில் காரணமின்றி அச்சமும், தாழ்வுணர்ச்சியும் உள்ளது, மன அழுத்தம் போக்கும் நூல்கள் ஏதாவது சொல்’ என்று கேட்கும் நண்பர்களிடம் நான் வண்ணதாசன் கதைகளையே பரிந்துரைக்கிறேன். எனக்கு மேடை போட்டு அறிவுரை சொல்பவர்கள்மேல் பிடித்தம் இல்லை. என்றுமே கைப்பிடித்தோ, தோள் அணைத்தோ ஆறுதல் சொல்லும் அப்பாவாக வண்ணதாசன் இருந்திருக்கிறார்.

இலக்கியம் என்ற பெயரில் பயமுறுத்தாத மிக எளிய நடை. எளிமையான மனிதர்கள். ஒவ்வொரு கதையிலும் ஏதோவொரு கதாபாத்திரத்தின் வடிவில் நம்மையே காணமுடிகிற நெருக்கம். இவைதான் நான் புரிந்துகொண்ட வண்ணதாசன் அவர்களின் கதைக் களம். எவ்வளவு எழுதினாலும் தீராத அளவுக்கு அவருக்கு மனிதர்கள் வாய்த்திருக்கிறார்கள். மட்டுமல்ல அவரும் அவரின் கதைகள் மூலமாக நாள்தோறும் நிறைய மனிதர்களை அடைந்து கொண்டேயிருக்கிறார். கடல் நீர் மழையாகி மீண்டும் கடல் சேர்வதுபோல, அவரை சுற்றியுள்ள நாமும் அவரின் கதைகளாகி மீண்டும் அக்கடல் சேர்கிறோம். தீராத அன்பின் பெருங்கடல்.

வித்யா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சின்னஞ்சிறு சிட்டே -கடிதங்கள்

$
0
0

ksarangapani-175x250

 

அன்புள்ள ஜெயமோகன்,

பல நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

சின்னஞ்சிறு சிட்டே பாட்டைப் பற்றிய பதிவைப் பார்த்ததும் எழுதாமல் தீரவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுக்களில் ஒன்று. அந்தக் காலத்து திரைப்பட lowbrow பாட்டுக்களில் ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறதல்லவா? மந்திரிகுமாரியில் ‘அந்தி சாயுற நேரம்’, ஆரவல்லியில் ‘சின்னக்குட்டி நாத்தனா’, வண்ணக்கிளியில் ‘சித்தாடை கட்டிக்கிட்டு’, உத்தமபுத்திரனில் ‘புள்ளி வைக்குறான்’ என்று சொல்லிக் கொண்டே போகலாம். எஸ்.சி. கிருஷ்ணனுக்காகவே நேர்ந்துவிடப்பட்ட பாடல்கள், அவ்வப்போது திருச்சி லோகநாதனும் சேர்ந்து கொள்வார்.

சின்னத் தகவல் பிழை. எம்.என். ராஜத்துடன் கூட ஆடுவது சாரங்கபாணி, தங்கவேலு அல்ல. தங்கவேலுவும் இந்தப் படத்தில் உண்டு, அவருக்கு ஒரு பாட்டும் உண்டு – ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா!’. அப்புறம் ஒரு typo – அவர் எஸ்.சி. கிருஷ்ணன், எஸ்.ஜி. கிருஷ்ணன் அல்ல.

அருண்மொழிக்கு என் அன்பு.

மாறாத அன்புடன்

ஆர்வி.

*

அன்புள்ள ஆர்வி

பார்த்தேன், சாரங்கபாணிதான். எனக்கு தங்கவேலுவே சரியாக முகம் நினைவில்லை. நான் மிகக்குறைவாகவே தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறேன். என் 16 ஆம் வயதுவரை நான் பார்த்த படங்கள் மொத்தமே எட்டுதான்

இந்தப்பாடலின் மெட்டு அக்காலத்தைய இங்கிலீஷ் சோல்ஜர் சாங் என அழைக்கப்பட்ட ஐரோப்பிய நாட்டுப்புற இசையில் இருந்து எடுக்கப்பட்டது. போர்க்காலத்தில் இவ்விசை இந்தியா எங்கும் பிரபலமாகியது.

மாமா மாமா , சின்னக்குட்டி நாத்தனா போன்றவை தெம்மாங்கு மெட்டுக்கள். பின்னாளில் இவை இரண்டும் இணைந்து ஒன்றாயின.

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

ஜெ

***

எழுத்தாளர் அவர்களுக்கு,

ஸ்ரீநிவாசன் சாருக்கும் அனுப்புகிறேன் ,

http://www.jeyamohan.in/93384

“இந்தப்பாடலில் தங்கவேலு இயல்பாக நடிக்கிறார்.”

இந்த பதிவில் பாடலில் வருபவர் தங்கவேலு என்று வந்துள்ளது.

அவர் சாரங்கபாணி அல்லவா. அவரை பற்றிய விவரணைகள் எல்லாம் சரியாக தான் உள்ளன. ஆனால் பெயரிலும் மற்றும் விக்கி சுட்டியும் தங்கவேலுவை குறிக்கிறது.

சுட்டி இதுவாக இருக்க வேண்டும்

https://en.wikipedia.org/wiki/K._Sarangkapani

இந்த படத்தில் தங்கவேலுவும் உள்ளார். “உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ” — பாட்டில் கலக்கி இருப்பார்.

சாரங்கபாணி பற்றி பேசும்போது என் சிறுவயதில் என் அப்பா ஒன்று சொன்னது நியாபகம் வருகிறது.

அப்போது எல்லாம் நாடக நடிகர்களுக்கு வருட கணக்காக troupe-ல் ஒப்பந்த அடிப்படையில் இருப்பார்களாம். அப்படி சாரங்கபாணி மற்றும் அவர்கள்ளோடு குழுமத்தில் இருந்தவர்கள் ஒரு troupe-ல் மாட்டி கொண்டு இருதார்கள் என்பதாகவும். அவகளுக்கு வேண்டும் என்றே சுண்ணாம்பு கலந்த சோறு கொடுத்து ஒரு வீட்டில் அடைத்து தான் நடிக்க வைத்தார்கள் என்றும் சொன்னார் என் தந்தையார்.

ஓட்டை பிரித்து அவர்கள் வெளிவந்து பின்னர். என் தந்தையின் தாயார் வழி தாத்தா, அவர்களுக்காக வழக்கு ஆடி அவர்கள் சிக்கல்களில் இருந்து வெளிவந்தார்கள் என்றும் சொல்வார். சாரங்கபாணி அவர்கள் இந்தன் காரணம் என் கொள்ளு தாத்தா மீது மரியாதை உண்டு என்று என் தந்தையார் சொல்ல கேட்டு இருக்கின்றேன்.

சிறு வயதில் கேட்டது. பொதுவாக மறக்க மாட்டேன் — ஆனால் நான் சொன்னதில் தவறுகள் இருக்கலாம்.

பெயரையும் சுட்டியும் சரியா என்றும் பார்த்து விடுங்கள்.

நன்றி

வெ. ராகவ்

***

அன்புள்ள வே ராகவ் [நெல்லை மொழியில்]

நலமா?

இவ்வளவு தகவல்களை அனுப்புகிறவர்கள் இவற்றை எல்லாம் விக்கியில் தகவல்களாகப் பதிவுசெய்யலாமே. பொதுவான தகவல்களஞ்சியம் இணையம்தான். அது உடனே கிடைக்கவும் வேண்டும்.

சாரங்கபாணி தங்கவேல் பற்றி சாதாரணமான தகவல்களோ நல்ல படங்களோ கூட இணையத்தில் இல்லை

ஜெ

***

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் ஜில் ஜில் என ஆடிக்கொண்டி பதிவில்

அந்தப் பாடலில் எம்.என்.ராஜத்துடன் நடனமாடுபவர் பெயர் கே.சாரங்கபாணி என்று நினைவு.

இவரின் புகைப்படத்தினை இந்த இணைப்பினைக் கிளிக் செய்து பார்க்கவும்.

https://antrukandamugam.files.wordpress.com/2015/09/k-sarangapani-as-dowlath-marzianas-sidekick-and-a-dholak-player-alibabavum-40-thirudargalum-1956-1.jpg?w=593&h=311

பதிவில் தங்கவேல் என்பதற்குப் பதிலாக கே.சாரங்கபாணி என்று மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஆள் கூட டணால் தங்கவேல் போல அல்ல என்பதை சற்றே கவனித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

பெரும் பணியில் இருக்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.

http://spicyonion.com/tamil/actor/k–sarangapani-movies-list/

 

தொடர்புடைய பதிவுகள்

வருகையாளர்கள் 5, நாஸர்

$
0
0

Koottam

 

நடிகர் நாஸர் நான் பங்கேற்ற காவியத்தலைவனில் சங்கரதாஸ் சுவாமிகளின் சாயல்கொண்ட கதாபாத்திரமாக என் மனதில் நின்றிருப்பவர். நவீன நாடக இயக்கத்திலிருந்து சினிமாவுக்குச் சென்றவர். இன்று தெலுங்கு தமிழ் இருமொழிகளிலும் புகழ்மிக்க நடிகர். இலக்கியத்திலும் நாடகத்திலும் தொடர்ச்சியான ஈடுபாடுள்ளவர் நாஸர்.

 

நாஸர் விக்கிப்பீடியா அறிமுகம்

 

பிற அழைப்பாளர்கள்

index

எச் எஸ் சிவப்பிரகாஷ் அறிமுகம்

மதுரைக்காண்டம்

எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 2

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 3

index

 இரா முருகன் அறிமுகம்

bava_2

 

 

பவா செல்லத்துரை அறிமுகம்

dr-siva-raman

 

 

கு சிவராமன் அறிமுகம்

 

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்

$
0
0

666

 

ஒரு முகத்தில் இன்னொரு முகத்தை பொருத்தி பார்ப்பது என்பதே வண்ணதாசனின் படைப்பு ரகசியம். அதை ஒரு அந்தரங்கமான உள்ளுணர்வாய் தன் எல்லா சிறுகதைகளிலும் உருவாக்கி விடுகிறார். அவரது கதை மாந்தர்கள் காலத்தின் குரலாய் ஓரிடத்தில் நின்று கொண்டு முன்னும் பின்னும் ஒலித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு அடிப்படைகளை அவரின் இரண்டு கதைகளில் நான் பொருத்தி பார்க்கிறேன்

கலைக்க முடியாத ஒப்பனைகள் தொகுப்பின் முதல் கதையில் ஒரு வேசியின் அலுவல் முடிந்த பின்னிரவையும், அதிகாலையையும் விரித்து சென்று, காலை தேநீருக்காக காத்திருக்கும் பொழுது உள்ளே வரும் தூப்புக்காரியின் துடைப்பத்தால் கதை கூட்டப்படுகிறது. கதையின் இறுதியில் குளிர்பானங்களின் மிச்சத்தை குடித்து கொண்டிருக்கும் போது விரட்டியதும், வலிப்பு காட்டி ஓடும் குட்டியப்பனை பார்த்து கொண்டிருக்கும் இருவரும் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் கூடி தீர்த்த இரவுகளின் சாட்சியாய் நிற்கிறார்கள் எதிர்காலத்தை பார்த்து கொண்டு. நிகழ்பவைகளின் வழியாக நடந்தவைகளையும், நடக்க இருப்பவைகளையும் சொல்லி கொண்டே இருக்கிறார்.

தனுமை கதை டெய்சி வாத்திச்சியின் பதின்பருவ வாழ்வை ஒரு நாடகம் போல் ஞானப்பனும், தனலட்சுமியும் நடித்து காட்டுவதே. ஆர்பனேஜை மையமாக வைத்து நிகழும் இந்த காதல் யாரும் பரிவு காட்டாமல் அனாதையாய் நிற்கிறது. எழுபதுகளில் கல்லூரியில் எல்லார் மனதிலும் இப்படி ஒரு அன்பு இருந்திருக்கலாம் கவனிக்கப்படாமல். தனக்காக வாசிக்கப்பட்டிருக்கும் சங்கீதத்தை அலட்சியம் செய்துவிட்டு அன்புக்கு ஏங்கி நிற்கும் டெய்சி , யாருக்காகவோ வாசிக்கப்பட்ட ” எல்லாம் யேசுவே எனக்கு எல்லாம் யேசுவே” பாடலில் கரைந்து, தேக்கி வைத்திருக்கும் மொத்த அன்பையும் ஒரு மழை நாளின் தனித்த அணைப்பின் மூலம் ஞானப்பனுக்கு கடத்தி விடுகிறாள். தனுமை பரிசுத்தமாக்கபடுகிறாள். மிக அழகாக ஒரு முகத்திற்குள் இருந்து இன்னொரு முகத்தை அகழ்ந்து எடுக்கிறார் வண்ணதாசன்.

 

 

66

சரவணன்

 

கதை சொல்லிகள் எப்போதும் ஒரு தளத்தை, மொழிநடையை தேர்ந்தெடுப்பார்கள், மாறாக வண்ணதாசன் மக்களை, மரங்களை, உயிர்களை தேர்ந்தெடுத்தார். சிந்தித்து கொண்டிருப்பவனை கடந்து செல்லும் அணிலை அதன் சரசரப்பை, நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலையும் மனித மனத்தோடு உருவகிக்கிறார் மீண்டும் மீண்டும் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மண் பரப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார், அவை பன்னீர்ப் பூக்களோ, வேப்பம் பூக்களோ, முருங்கைப் பூக்களோ எதுவாயினும் மனித மனம் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் பூக்கள் உதிர்த்த மொட்டை மரமாகிப் போவதை அவதானித்து கொண்டே இருக்கிறார். விட்டுச் சென்ற காலடித் தடத்தின் பின்னால் நடந்து வருவதை போல் அவரின் எல்லா கதைகளிலும் பெரும்பாலும் ஒரு மனிதனிலிருந்து இன்னொருவரை எடுத்து வந்து கொண்டே இருக்கிறார், அவரின் கதை மாந்தர்கள் சாதனையாளர்கள் அல்ல சாதாரணர்கள் அவரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நம்மை சுற்றி இருப்பவர்களே.

மொத்த வரலாற்றிலும நிறைந்து இருப்பது இந்த சாமான்யர்களே. இவர்கள் அனைவரும் அறம் கொண்ட மனிதர்களாக இருக்கிறார்கள் இந்த மனங்களே வரலாற்றின் மனசாட்சிகள். “பூரணத்தில்” லிங்கத்துக்கு கிடைக்கிற செங்குளம் பெரியம்மை போல, “எண்கள் தேவையற்ற உரையாடலில்” ஜான்சிக்கு அலுவலக நண்பராக வரும் சோமுவை போல், நிர்கதியாய் நிற்கிற தருணங்களில் வாழ்க்கை யாரோ ஒருவர் மூலம் நம்மை தாங்கி கொள்கிறது. இந்த ரகசியத்தின் அணுக்கத்தில் கொண்டு விடுவது தான் அவர் வரிகள்.

வண்ணதாசன் கதைகளில் காலி செய்து விட்டு போன அண்டை வீட்டுக்காரர்களை குடும்பத்துடன் மீண்டும் பார்க்க செல்லும் சித்திரம் வந்து கொண்டே இருக்கிறது. வளவுகளும், காம்பௌண்ட்களும், லைன் வீடுகளும் கொண்ட நெல்லை நகரின் ஆன்மாவே இந்த வாடகை குடித்தனகாரர்கள் தான். மதினியாக, அண்ணாச்சியாக, மாமாவாக, அத்தையாக, அக்காவாக, பெரியம்மாவாக ஒரு உறவாகத்தான் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். புறணி பேசுபவர்களாக, அறிவுரை சொல்பவர்களாக, பொறாமை கொள்பவர்களாக இவர்களே சுற்றி இருக்கிறார்கள். கசப்பும், இனிப்புமாய் இந்த உறவு தான் சக போட்டியாய், ஆதர்ச குடும்பாய் ஒருவருக்கொருவரின் சந்தோஷங்களிலும், சங்கடங்களிலும் பங்கு பெறுகிறார்கள். அதனால் தான் இவர்கள் தங்கள் முன்னேற்றத்தையும், சறுக்கல்களையும் அவர்களிடம் சென்று ஒப்புவிகிறார்கள். எந்த உறவையும் அலட்சியம் செய்துவிட்டு போகும் இன்றைய சூழ்நிலையில், அண்டை வீட்டாரின் நட்பை வலிந்து பேசுவதனாலே வண்ணதாசன் மேல் சட்டை போடாமல், கழுத்தை சுற்றி துண்டு அணிந்து வாதாம் மரத்தடியில் நின்று வீட்டின் சுற்று சுவரை பிடித்து பேசும் பக்கத்துக்கு வீடு மாமாவை போல் தெரிகிறார்

டவுனின் குறுகலான தெருக்களும், தெருக்களின் பேச்சொலிகளும், தெரிந்த மனிதர்களின் ஓங்கலான விசாரிப்பும், ரதவீதி தரும் உயிர்ப்பும் என பெரும் சத்தத்திற்குள் நுண்ணிய ஒலியென கிசுகிசுப்பாய், ரகசியமாய் உரையாடிக்கொள்ளும் மனித மனங்களை பேசும் ஆசிரியர், புறநகரின் அமைதியும், நிழற்சாலையின் மௌனமும், யாரென தெரியாத மனிதர்களும் உள்ள காலனிகளில் தனித்து சப்தமிட்டு பேசிக்கொள்ளும் உலகத்தை காட்டுகிறார். இந்த முரண்களின் வழியாகத்தான் சொல்லாதவைகளையும், சொல்ல கூடாதவைகளையும் பூடகமாக எல்லா கதைகளிலும் சொல்லி கொண்டே இருக்கிறார்.

வண்ணதாசனின் நுண் விவரணைகள் ஒரு வித ஏகாந்தம் அளிக்க கூடியவை, முற்பகலின் ஏறுவெயிலில் வாசல் நடையில் கை கட்டி நின்று கொண்டு வேப்பமரத்தின் மூட்டிலிருந்து இரண்டு அணில்கள் வளைந்து வளைந்து மரத்தில் ஏறுவதை பார்க்கும் கிளர்ச்சியை தருகிறது. சப்தங்கள் சாத்தப்பட்டு கதவுகள் மூடியிருக்கும் பிற்பகல் தெருவை நிராதரவாய் பார்க்கும் சோகத்தை ஒத்தது. நீர் உறிஞ்சிவிட்டு வெள்ளை வெள்ளையாய் தெருவில் பூ பூத்திருக்கும் மாலையின் மயக்கத்தை தருகிறது. குளிராய் காற்று தொட்டு செல்ல, திட்டு திட்டடாய் மஞ்சள் ஒளி விழும் தெருவில், சோடியம் விளக்கின் இருளுக்குள் நடந்து செல்லும் மௌனத்தை விளக்குவது.இந்த சித்திரங்கள் ஒரு நாடக மேடையின் திரைசீலை போல் அவரின் பெரும்பாலான கதைகளில் புறமாக பின்னால் இருக்கிறது. இந்த நேரத்திலும், இடத்திலும் நடக்கும் எல்லா சம்பவங்களையும் அவர் சிறுகதை மூலம் இலக்கியம் ஆக்கி விடுகிறார்.

வண்ணதாசன் வழங்கும் சிறுகதைகளின் தரிசனத்தை இரண்டு படிமங்கள் வழியாக புரிந்து கொள்ளலாம். பெரும் சப்தத்துடன் ஓங்கி விழும் குற்றால அருவி, சலனமில்லாமல் கிடையாய் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி நதி. மனிதர்கள் தங்கள் வாழ்வை தலை உயர்த்தி அண்ணாந்து, வானத்திலிருந்து கீழே விழும் ஒரு அருவியின் பிரம்மாண்டமாய் வேண்டுமென கற்பனை செய்து கொள்கிறார்கள், ஆனால் வாழ்க்கை என்னவோ தலை கவிழ்ந்து பார்க்கும்படி, பாறைகளில் முட்டி மோதி, வளைந்து நெளிந்து செல்லும் ஒரு நதியை போல் காலுக்கடியில் யதார்த்தமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சுவையாகி வருவது- 2

$
0
0

 CO2B0413[  3   ]

 

வண்ணதாசனின் கதைகள் வெளிப்படுத்தும் சுவை மூன்று தளங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். முதன்மையாக மனிதர்கள். அடுத்ததாக இடங்கள். மூன்றாவதாக பருவம். இவற்றில் மனிதர்களைத் தவிர்த்த பிற இரண்டும் பெரும்பாலும் மனிதர்களைக் குறித்த சித்தரிப்பின் பின்புலமாகவே அமைகின்றன. நிலம் மனிதர்களை ஏந்தி கண்ணருகே காட்டும் ஒரு உள்ளங்கை மட்டுமே அவருக்கு. பருவம் என்பது அத்தருணத்தின் உணர்வு நிலைக்கு அழகு கூட்டும் ஒரு சூழல்.

ஆகவே நிலச்சித்தரிப்பு அவருடைய புனைவுகளில் வெவ்வேறான வகைபேதங்களுடன் பெரும்பாலும் வருவதில்லை. மீண்டும் மீண்டும் சாலைகள்தான் அவரது கதைகளின் பின்புலக்காட்சிகளாக வருகின்றன. மெல்ல நடந்து போகும் ஒருவனின் அலையும் கண்களுக்கு முன் தன்னைக் காட்சியாக்கும் சாலையோரப் பொருட்களே வண்ணதாசனின் புனைவுலகில் நுழைகின்றன. கடையோரங்கள்,தலைச்சுமையர்கள், வழிப்போக்கர்கள். அபூர்வமாகவே ஓர் அருவியும் நான்கு சிரிப்பும் போன்ற கதைகளில் குற்றாலத்தின் நீர்க் கொப்பளிப்பும் மானுடச் சுழிப்பும் வெளிப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி நகரத்தின் ஒரு சில பகுதிகளின் காட்சிப் பதிவு என மேலோட்டமாக இவை தோற்றமளிக்கின்றன. ஆனால் அவரது பார்வை எவற்றைத் தொட்டெடுக்கிறது எவற்றை விட்டுவிடுகிறதென்பது எப்போதும் முக்கியமானது.வண்ணதாசனின் பார்வையில் படியும் நிலமென்பது அந்நிலத்துடன் பிணைந்த ஏதோ மனிதரால் அடையாளப்படுத்தப்பட்டதாக அவருக்குரியதாக மட்டுமே தன்னைக் காட்டிக் கொள்வதாக இருக்கும். கூடை முடையும் ஒருவர் அமர்ந்திருக்கும் இடம் அவரால் அர்த்தப்படும். செருப்பு தைக்கும் ஒருவரின் இடம் அவருக்குரியது. வண்ணதாசனின் காட்சிப்புலம் எப்போதும் அம்மனிதர்களின் இயல்பைத் தான் வாங்கிக் கொள்ளும்.

ஜுடி அன்னத்தை பார்க்கப்போகிறவன் [போய்க்கொண்டிருப்பவள்] சாக்கடையிலும் அபாரமாக மின்னும் ஒரு சரிகையை பார்த்துக் கொண்டு செல்கிறான் [கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜூடி வீடு வந்து விடும்] காட்சிகள் சித்தரிக்கப்படுவதில் வண்ணதாசன் என்னும் ஓவியரின் கண்ணும் கையும் தொழில்படுகின்றன. முதன்மையாக காட்சிகளில் உள்ள ஒளியையும் வண்ணத்தையும்தான் அவை குறிப்பிடுகின்றன. அதன் பிறகுதான் வடிவங்கள்.

இக்காட்சிகள் அனைத்தும் மிக ஆர்வமூட்டும் ஒரு தனித்தன்மை கொண்டுள்ளன. ஒரு பொருள் இரு பின்புலங்கள் கொண்டது. ஒன்று அதன் பயன்பாட்டுத்தளம். இன்னொன்று அது பிற பொருட்களுடன் கொண்டுள்ள உறவு. இது இரண்டிலிருந்தும் அப்பொருளைப் பிரித்தெடுத்து வண்ணமும் வடிவமும் மட்டுமாக நிறுத்தும் ஒரு தன்மை வண்ணதாசனின் சித்தரிப்புகளுக்கு உண்டு. இதை தான் ஓவியனின் கண் என்று சொன்னேன்.சாலையோரத்தின் கிடக்கும் ஒரு சிகரெட் அட்டை அதன் தோற்றத்தாலும் அழகாலும் மட்டுமே கதைக்குள் இடம் பெறுகிறது. ட்ராலியில் சீராக நகரும்ம் ஒளிப்பதிவுக் கருவியால் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் புறக்காட்சிகள் போல.

இவ்வாறு பொருளின் இரு பின்புலங்களையும் வெட்டிவிடுவதின் வழியாக தான் சித்தரிக்கும் மொழிப்புலத்திற்குள் தன்னுடைய காட்சி எல்லைக்குள் அப்பொருள் தன்னிச்சையாக இருந்து கொண்டிருக்க வண்ணாதாசன் அனுமதிக்கிறார். பொருளின் பல்வேறு அர்த்த சாத்தியங்கள் அகற்றப்படுவதால் தன் பொருள்தன்மையின் மூலமே அவை நம்மிடம் உரையாடியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்குகிறார். அது அளிக்கும் புதிய சாத்தியங்கள் தான் வண்ணதாசனின் காட்சி உலகம் என்று சொல்லலாம். வெவ்வேறு கதைகளிலிருந்து இதை உணரும் பத்திகளை வாசகன் தொட்டெடுக்க்கலாம்.

இவ்வாறு பொருள்வயப் பின்புலமாக மட்டுமே வண்ணதாசனின் நிலம் கதைகளுக்குள் காட்சியாகிறது. திரைமொழி அறிந்த ஒரு வாசகன் பெரும்பாலும் அண்மைக்காட்சிகளால் ஆன சித்தரிப்பு என்று இவரது கதைகளைச் சொல்லிவிடமுடியும். விரிந்த நிலக்காட்சி அனேகமாக இக்கதைகளில் இருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு தெருவையோ ஒரு கட்டிடத்தையோ கூட வண்ணதாசனின் கதை சென்று தொடுவதில்லை. ஏனெனில் விரிந்த காட்சிகள் என்பவை வெளியின் சித்திரங்கள். அவை பொருட்களின் பெருந்தொதொகுப்பு. வண்ணதாசனின் நிலம் தனிப்பொருட்களால் ஆனது காடென ஒன்று அவர் படைப்புகளில் எழுவதில்லை. மலர் சூடி நின்றிருக்கும் சிறிய செடிகளே முகம் கொள்கின்றன.

இத்தகைய அவதானிப்புகள் ஒரு கலைஞனென்ற வகையில் வண்ணதாசனின் உள்ளத்திற்குள் நாம் செல்வதற்கு பெரிதும் உதவக்கூடிய பாதைகளை அமைக்கின்றன. தேனுண்ணிகள் மலர்கள் கொண்டுள்ள வெவ்வேறு வகையான தோற்றங்களுக்கேற்ப உருமாறி உள்ளே செல்வதை பார்க்கிறோம். முற்றிலும் தலைகவிழ்ந்து நிற்கும் மலர்களும் உண்டு. தேனுண்ணி பறந்தபடியே கவிழ்ந்து அவற்றுக்குள் நுழைகிறது. புனைவுக்குள் நுழையும் வாசகன் கொள்ள வேண்டிய பாவனைகளை அவ்வெழுத்தின் கலைசார் பாவனைகள் தீர்மானிக்கின்றன. மிகச்சிறிய நுண்மைகள் வழியாக தன்னையே நுண்மையாக்கிக் கொண்டு மட்டுமே ஒரு வாசகன் வண்ணதாசனுக்குள் நுழைய முடிகிறது

என்ன காரணத்தினால் வண்னதாசனின் புனைவுகளுக்குள் கடந்த காலம் வரலாறோ இல்லையோ அதே காரணத்தினால்தான் அவரது படைப்புகளில் விரிந்த நிலக்காட்சிகளும் இல்லை. எல்லையை மேலும் மேலும் குறுக்குவதினூடாக நுண்மை நோக்கிச் செல்லும் சுவைசார்ந்த பயணம் அவருடைய படைப்புலகம். அவருடைய படைப்புகளில் நாம் காணும் மிக நுணுக்கமான ஓர் உள அசைவு அல்லது நிகழ்வுமாறுபாடு என்பது பிற அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு நம்மைக் கூர்மையாக்கிக்கொண்டு முன்செல்வதன் வழியாக நாம் அறியும் ஒன்று.

இதே காரணத்தினால்தான் பெரும்பாலும் சிறிய கவிதைகளும் கவிதைக்கு அருகே செல்லும் சிறுகதைகளும் மட்டுமே அவரால் எழுதப்பட்டுள்ளன. விரிந்த புலத்தில் காலம் மடிப்புகளாகவும் அலைகளாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு பெரிய படைப்பை எழுதுவதற்கான தூண்டுதலை அவர் பெற்றதில்லை. துண்டுபடுத்தப்பட்ட காலத்திற்குள் நிகழும் வாழ்க்கையே அவருடையது. பனித்துளிக்குள் தெரியும் பனை என்று சொல்லலாம்.

இவ்வியல்பால் தான் அவரது படைப்புகள் பெரும்பாலும் குறைத்துச் சொல்லி வாசகனை ஊகிக்க விட்டு நின்றிருக்கும் அமைதி கொண்டுள்ளன. அவர் சொல்ல விரும்பும் அனைத்தும் எதுவும் நிகழாத அன்றாட வாழ்க்கைக்குள் அமைந்தாகவேண்டும் எனும்போது அவை குறிப்புணர்த்தலாகவே நிகழ முடியும். எனவேதான் வண்ணதாசனின் பல கதைகள் கதைக்குள் மறைக்கப்பட்ட கதை கொண்டவையாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ”நீ இப்போது இறங்கும் ஆறு” என்னும் கதை குறித்து சுஜாதா ”மிகத்திறமையாக ஒரு கதை ஒளித்து வைக்கப்பட்டுள்ள கதை” என்று சொன்னார். கணிசமான கதைகளுக்குள் இந்த வரையறை பொருந்தும்.

எப்போதும் அவருடைய கூறப்பட்ட கதைகளுக்குள் உணர்த்தப்படும் வேறு கதை ஒளிந்திருக்கும். இந்த வகையான நுண்சித்தரிப்புக்குள் பெரிய கதைகள் அவ்வண்ணமே திகழ முடியும். பொற்கொல்லன் தன் நுண்கிடுக்கியால் தொட்டெடுத்து வைக்கும் ஒரு சிறு பொன்மணி போன்றவை அவருடைய கதைகள். அவை எங்கு சென்று அமையும் என்று ஊகிக்கும் ஒரு வாசகன் அந்த முழு நகையையும் தன் கற்பனையால் காண முடியும். இங்கிருந்து அங்கு செல்லும் வாசகனுக்குரியவை அக்கதைகள்.

அவரது கதைகள் அளிக்கும் அனுபவம் என்பதும் அந்த கணம் விரியும் தருணங்கள்தான்.அவ்வகையில் பார்த்தால் வண்ணதாசனின் நிலக்காட்சிகள் அனைத்தும் அகன்ற பெருநிலத்தை குறிப்புணர்த்தும் சிறிய நிலச்சித்தரிப்புகள்தான். சிறுமலர் சூடி நிற்கும் இச்செடி அது நின்றிருக்கும் பெருநகரத்தை தன் கற்பனையால் விரித்துக் கொள்ளும்படி வாசகனுக்கு சொல்கிறது.

வண்ணதாசனின் பருவ சித்தரிப்புகள் பெரும்பாலும் அவருடைய கற்பனையுலகிலிருந்து எழுபவை. மிக அரிதாகவே மழை பெய்யும் பாளையங்கோட்டை அவர் காட்டும் சித்தரிப்புகளில் ஒப்பு நோக்க அதிகமான மழையும் ஈரமும் கொண்டதாக இருப்பதை வண்ணதாசனின் கதைகளைப் படிப்பவர்கள் அறியலாம். அது வண்ணதாசன் தன் புனைவுலகின் மேல் பரப்ப விரும்பும் ஈரம் மட்டுமே. முன்பனிக்காலத்தின் குளிரும் முதல் மழைக்காலத்தின் ஈரமும் கொண்டவை அவரது சூழல்கல். அரிதாக தகிக்கும் கோடை சித்தரிக்கப்படும்போது கூட வீட்டுக்குள் நுழைவதன் குளிர்ச்சியும் இளங்காற்றின் தழுவல் அளிக்கும் சிலிர்ப்பையும் அவரது கதைகள் சித்தரிக்கின்றன.

பருவச் சித்தரிப்புகளின் ஊடாக வண்ணதாசன் அவர் உருவாக்கும் கதை மாந்தர்களின் உணர்வுகளுக்கு மெல்லிய அடிக்கோடொன்றை இடுகின்றார் அவருடைய கதைகள் அன்றாட வாழ்க்கையில் எளிய நகர்சார் சூழலில் மிகச்சாதாரணமான மானுடர்களுக்கு நிகழ்பவை. அவற்றில் கற்பனாவாத அம்சத்திற்கு இடமே இல்லை. வண்ணதாசன் புனைவுலகம் எப்போதுமே கறாரான இயல்புவாதச் சித்தரிப்பாலானது. ஆனால் அதன் மேல் பருவகாலத்தின் ஈரச்சம் படரவிடுவதன் வழியாகவே அவர் அதை நெகிழச் செய்கிறார். அச்சித்திரங்கள் அப்பருவத்தால் மேலதிக அர்த்தம் அளிக்கப்படுகின்றன. அவர் புனைவுலகில் குறைவாகவே சித்தரிக்கப்படும் கசப்புக்கு அவை இளைப்பாறலாக ஆகின்றன.

 

 

 

3333

 

[   4  ]

 

 

அடிப்படையில் சுவைஞனாகிய என் தந்தை ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான நில அடையாளத்தைக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மரவள்ளிக் கிழங்கு என்றால் அது கருங்கல் பகுதியின் செம்மண் நிலத்தில் இருந்து வரவேண்டும். வாழை என்றால் பேச்சிப்பாறையின் கரிய மண்ணிலிருந்து. மீனென்றால் தேங்காப்பட்டிணத்திற்கு கீழாக உள்ள கடற்கரைகளில் இருந்து.  ஒவ்வொன்றுக்கும்  நிலம்  அதற்கான தனிச்சுவையென அதற்குள் ஊடியிருக்கிறது. தேர்ந்த சுவைஞன் கீரையை கசக்கிப்பார்த்து எந்த நிலத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிட முடியும். வாழைப்பழத்தை முதல் வாயிலேயே அதன் மண்ணின் சுவையை அறிந்துவிடமுடியும். மண்ணில் ஒரு பகுதியாகவே தாவரங்கள் எழுகின்றன. உயிர்கள் பிறந்து வருகின்றன். மனிதர்களும் அப்படித்தான்.

 

 

வண்ணதாசனுக்கு விருது கொடுக்கும் செய்தி என் தளத்தில் வந்த போது வந்த கடிதங்களிலிருந்து அவரது வாசகர்களின் இயல்புகளைப் பற்றிய ஒரு பொதுப்புரிதலுக்கு நான் ஆளானேன்.  கணிசமான கடிதங்கள் ஒட்டப்பிடாரத்திலோ கோயில்பட்டியிலோ அருப்புக்கோட்டையிலோ வரண்ட நிலங்களைச் சார்ந்த மக்களால் எழுதப்பட்டவை. அவர்கள் தங்கள் பிறப்பியல்பால் வளர்ப்பால் மனிதர்களைப்பற்றிய ஐயமும் விலக்கமும் கொண்டவர்களாக இருந்தார்கள். வண்ணதாசனின் கதைகளினூடாக ஓர் ஈரத்தைப்பற்றிக் கொண்டதாகவும் அதனூடாக மனிதர்களை நேசிக்கவும் வெல்லவும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் நிலைத்ததாகவும் அவர்கள் எழுதியிருந்தார்கள்.

 

ஒருவகையில் பார்த்தால் எல்லா எழுத்துக்களும் அதற்கான வாச்கர்களுடனான உரையாடலில் இருந்தே உருவாகின்றன. இந்த உரையாடல் வண்ணதாசனுக்கும் அவரது வாசகர்களுக்கும் நடுவே கடந்த முப்பதாண்டுக்காலமாக மௌனமாக நடந்துவருகிறது. இதைப்புரிந்துகொள்வதில் நம் அறிவியக்கம் ஈடுபடவே இல்லை. அது எளிய முன்முடிவுகள், அடையாளங்களுடன் கடந்துசெல்லவே அது முயன்றிருக்கிறது

 

வண்ணதாசன் வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்த ஈரத்தைப்பற்றியே நான் மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்நிலத்தை என் கற்பனையில் விரிக்கும் போதெல்லாம் உடைமுள் தான் நினைவில் எழுகிறது. கல்பற்றா நாராயணன் கவிதை வரியை அடியொற்றி சொல்லப்போனால்

 

எத்தனை நொந்திருந்தால்

காஞ்சிரம் இத்தனை கசந்திருக்கும்.

எத்தனை அஞ்சியிருந்தால் முருக்கு

இத்தனை முள் சூடியிருக்கும்.

 

 

அரிதாக கிடைத்த வேர்நீரைக்கொண்டு முளைக்க வைத்துப்பரப்பிய இலைகளை ஆடுகளிடமிருந்தும் முயல்களிடமிருந்தும் காக்கும் பொருட்டு கசப்பு ஊறி,  கூரிய முட்களை ஆயுதமாகச் சூடி நின்றிருக்கும் உடைமுள் போன்றவர்கள் தான் அங்குள்ள மனிதர்களும் என்று பட்டது.

 

எனது நிலம் வேறு. இங்கு பசுமையே முதன்மையானது. பசுமையென்பது நீர். குமரி மாவட்டத்தின் எந்தக்காட்டுக்குள்ளும் இரண்டு கிலோ மீட்டர் ஓடி புகுந்து வரலாம். நாய்க்கூட்டத்தின் நாக்குகள் போல நக்கிச் செல்லும் ஈரம் மிக்க இலைகளையே நாம் உணர்வோம். ஆனால் அமைக்கப்பட்ட வழிகளன்றி சற்று காலெடுத்து வைத்தாலும் பாம்புக்கூட்டம் போல செடிகள் படமெடுத்து நஞ்சுடன் கொத்துவது பொட்டலின் இயல்பு.

 

அங்கு வளர்ந்த மனிதர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கவனமாக அணுகு என்று ஒவ்வொரு செடியும் எச்சரிக்கும் ஒரு நிலம். உறவுகள் வேறுவகையானவை. எனது நிலத்தின் மரமாகிய தென்னை தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு இலைநுனிகளால் மட்டுமே பிற மரங்களை தொட்டு தன்னில் நிறைந்து வானில் ஆடி நின்றிருக்கும் ஒன்று. அதன் வேர்கள் ஆழத்தில் ஒன்றெனப்பின்னியிருக்கலாம். வெளியே அதன் நிலத்தில் பிறிதொன்றுக்கு இடமில்லை. ஆனால் பொட்டலிலோ பின்னிப் பிணைந்து ஒற்றை பெருக்கென அன்றி அள்ள முடியாததாக நின்றிருக்கிறது உடைமுள்.

 

அந்நிலத்திலிருந்து வந்த மனிதர்களுக்குரியதா வண்ணதாசனின் கதை? அக்கதைகளில் ஓயாது பெய்து கொண்டிருக்கும் இளமழை என்பது அப்பாலை நிலம் கொண்டிருக்கும் கனவுதானா? மீண்டும் மீண்டும் அம்மக்கள் இக்கதைகளுக்குள் சென்று கண்டு கொண்டிருப்பது எதன்பொருட்டு? மனிதர்கள் கனிவு கொண்டிருக்கிறார்கள் என்று வண்ணதாசன் வெவ்வேறு வார்த்தைகளில் கதைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார். பேட்டிகளிலும் உரையாடல்களிலும் கூட அதைச் சொல்கிறார். கனிவை இவ்வேனில் வெளியின் ஆழத்திலிருந்து  அகழ்ந்தெடுத்து வைக்கிறாரா என்ன?

 

ஒரு கோணத்தில் அது இல்லையென்றும் தோன்றுகிறது. சுட்ட பனம்பழத்துக்கு நிகரான இனிமை கொண்ட பழத்தை எவரும் உண்டு விட முடியாது. கள்ளிப்பழத்துக்கு நிகரான மணம் எந்தக் கனிக்கும் இல்லை. பாலை தன் பிறிதொரு உச்சத்தில் இனிமையையும் நறுமணத்தையும் சூடத்தான் செய்கிறது. அத்தனை இனிமை இருந்தால் மட்டுமே அங்கு கேள் கொண்டு வாழ முடியும் என்பது போல அத்தனை நறுமணம் கொண்டால் மட்டுமே அங்கு விதையும் வேரும் கொண்டு பரக்க முடியும் என்பது போல. வரண்ட உயிர்வெளியிலிருந்து அதன் சாரமென எங்கோ கரந்திருக்கும் இனிமையையும் நறுமணத்தையும் மட்டும் எடுத்து வைக்கும் வண்ணதாசனின் கதைகளின் நோக்கம் ஒரு மாபெரும் சமன்படுத்தல்தானென்று தோன்றுகிறது.

 

வண்ணதாசனின் சுவையுணர்வு மீண்டும் மீண்டும் மனிதர்களை சித்தரிப்பதிலேயே முழுமை கொள்கிறது. எளிய மனிதர்கள், தங்கள் அன்பன்றி தனித்தன்மை ஏதுமில்லாதவர்கள் முகங்களென மின்னி மின்னி வந்துசெல்கிறார்கள். முன்பு திரிச்சூர் நாடகவிழாவில் நான் கண்ட நாடகத்தில் மேடைக்கு வந்த இயக்குநர் தன் கைகளில் இருந்த பீய்ச்சொளி விளக்குகளால் கரிய திரைமூடிய மேடையின் இருளில் சிலபகுதிகளைத் துலக்கி அங்கு நின்றிருந்த முகங்களைக் காட்டினார். அவ்வொளியில் அவை வந்து அழுது சிரித்து சினந்து உரைத்து இருளுக்கு மீண்டன. துலங்கித் துலங்கி முன்வரும் அத்தகைய முகங்களின் பரப்பு வண்ணதாசன் கதைகள். அவர் அவ்விளக்குகளுடன் மேடையில் எப்போதுமிருக்கிறார்

 

அவருடைய படைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் வரிகளைச் சொல்லும் மனிதர்கள் மிகக்குறைவு. தீவிரமான இக்கட்டுகளுக்கோ உணர்ச்சி உச்சங்களுக்கோ செல்லும் கதைமாந்தர் அரிது. ஏனென்றால் அவர்கள் கரிசல்செடிகள் போல இருத்தலுக்கான போரில் எப்போதுமிருப்பவர்கள். கிளைபின்னி வேரடர்ந்த வாழ்க்கை கொண்டவர்கள். அவ்வன்றாட வாழ்க்கைப் பரப்பில் முன் தோன்றி புன்ன்கைத்து பின் மறையும் இம்முகங்கள் அனைத்தும் எங்கோ எப்போதோ நாம் பார்த்தவை போல் உள்ளன. மிக எளிய கண்கள். கனிந்த புன்னகைகள். ஆற்றங்கரைக் கூழாங்கல் போல ஆயிரம் முறை சொல்லப்பட்டதால் மெருகேறிப்போன சொற்கள்.

 

தன் கதைகளில் வண்ணதாசன் இந்தக் கதாபாத்திரங்களின் உறவுகளைத் தான் எப்போதும் சொல்லிச் செல்கிறார். பெரும்பாலான கதைகளில் மனிதர்கள் தாங்கள் கொள்ளும் இன்றியமையாத உரசல்களுக்கு அப்பால் நேசத்திற்கென கை நீட்டுகிறார்கள்.  கசப்புகளைக் கடந்து வந்து தழுவிக் கொள்கிறார்கள். மிகச்சிறிய இடங்களுக்குள் முற்றிலும் ஒத்திசைந்து வாழக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு சாலையில் நடக்கும் போது ஒருவரை ஒருவர் மெய்களால் தழுவிக்கொள்கிறார்கள்.

 

முகங்களைச் சொல்வதில் வண்ணதாசனுக்கு இருக்கும் திறன் என்பது அவருள் வாழும் ஓவியனின் கைகளால் உருவாக்கப்பட்டது. பெரும்பாலான வண்ணதாசனின் கதாபாத்திரங்களை விரைவான கோட்டோவியங்கள் என்று சொல்லலாம். கணிசமான காட்சிகளை அவர் ஒற்றைச் சொற்றொடரிலேயே உருவாக்குகிறார் என்பதை வாசகர் அறியலாம். ”எங்கே பார்த்தாலும் மணல், எங்கே பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்று ‘சில்லாட்டான்’ ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமவானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சக்கணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கைவைத்த இடமெல்லாம் எலும்பு முள்ளும் முண்டுமாக அகப்படும்” என ஒரே வரியில் ஒரு பொட்டல்நிலத்தின் சித்திரம் வந்துசெல்கிறது.

 

எப்படி காட்சிகளை அவற்றின் இருபெரும் விரிவுகளிலிருந்து வெட்டி எடுக்கிறாரோ அவ்வாறே மனிதர்களை அவர்களின் பகைப்புலத்தில் இருந்தும் இறந்த காலத்தில் இருந்தும் வெட்டி விடுகிறார். அவர்களின் தோற்றம் மட்டுமேயாக அக்கதைகளுக்குள் வந்து நிற்கிறார்கள். மிகச்சிறிய நுட்பங்கள் வழியாக வண்ணதாசன் முகங்களை நினைவில் நிறுத்துகிறார். இக்கட்டுரைக்காக அவருடைய எந்தக் கதையையும் தேடி எடுத்து படிக்கக்கூடாது என்று எண்ணினேன். இயல்பாகவே இந்தச் சித்திரங்கள் என் உள்ளத்தில் எழுகிறது என்று தோன்றுகிறது. வேறு வேறு அணில்கள் கதையில் கூடைக்காரக் கிழவி புன்னகைக்கும் போது இதழ்களுக்கு நடுவில் வந்து செல்லும் வெற்றிலைச்சாறின் சிறிய குமிழ் ஒன்று என் நினைவில் வந்தது. வீட்டுக்கு விருந்தாளியாக வந்து  ‘பரவாயில்லை கொஞ்சம்போல குடித்தோம்’ என்று வாய்பொத்திச் சொல்லி என்று திண்ணையிலேயே அமர்ந்திருக்கும் கிராமத்துப் பெரியவர்.

 

 

புகழ் பெற்ற கதைகளின் காட்சிகளுக்கு நிகராகவே அவரது பல  அதிகம் வாசிக்கப்படாத கதைகளிலிருந்து மனிதர்கள் தங்கள் அசைவுகளுடன் எழுந்து வருகிறார்கள். அவர்கள் ஒன்று திரண்டு ஒரு மக்கள்பரப்பென ஆகிறார்கள். ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பிரிக்க முடிவதில்லை, உடைமுள் குவை போல.  ஒருமுகம் இன்னொன்றை அறிமுகம் செய்கிறது. இன்னொன்றென உருமாறி தான் காட்டுகிறது.  ரயிலில் நம் அருகே அமர்ந்து அறிமுகம் செய்து கொண்டு தன் வாழ்க்கை முழுமையையும் சொல்லும் முகங்கள் அல்ல. ரயில்சாளரத்தினூடாக சாலையோரத்தில் கணம் ஒன்று எனமின்னி மறையும் முகங்கள். கணம்திறந்து காலமெனக் காட்டி அணைவதுபோன்றது வண்ணதாசனின் முகங்களைக் காணும் அனுபவம்

 

அந்த ஒற்றை படச்சட்டத்திலேயே நமக்கு அவர்களின் குணச்சித்திரத்தை வாழ்க்கையை உவகையை இழப்பை துயரை வெற்றியை அறிமுகம் செய்கின்றன. அவற்றினூடாகவே வண்ணதாசனை நாம் மேலும் அணுக்கமாக அறிந்து கொள்கிறோம். இம்முகங்களினூடாக கடந்து போகும் வாசகன் மேலும் மேலும் மனிதர்களை நேசிக்ககற்றுக்கொள்கிறான். வாழ்வதனூடாகவே வாழ்வின் சாட்சியென இருந்துகொள்வதன் இன்பத்தை அறிகிறான். இந்த முகச் சித்திரங்கள் வழியாக வண்ணதாசன் காட்டுவது நெல்லையின் சுவையை என்று சொல்லலாம். முகங்களுக்குப் பின்னணியாகவே  நிலமும் பருவகாலமும் அவரது படைப்புகளில் அமைந்துள்ளன.

 

வண்ணதாசனின் புனைவுலகில் மனிதர்கள் மெல்லத் தொட்டுக்கொள்ளும் நுண்தருணங்களே பெரும்பாலும் உச்சங்களாக அமைகின்றன. நீருக்குள் விழிமூடி நீந்திச் செல்லும்போது எவருடையவோ கால் ஒன்று நம்மைத் தொட்டுச் செல்வது போல, அத்தொடுகையிலேயே அவர் எவரென நாம் அறிந்து கொள்வது போல. அந்த தொடுகையின் மர்மக்கணம் நிகழும் தருணத்தை பல்வேறு காட்சி சித்தரிப்புகளை உணர்வுகளை சொற்சித்திரங்கள் வழியாக நிகழ்த்திச்சென்று கதைக்குள் நிறுவிவிடுகிறார் வண்ணதாசன். அத்தருணத்தை தன் வாழ்க்கையில்  எங்கோ முன்பு காண முடிந்த வாசகன் ஆம் இது மனிதகணம் என்று அடையாளம் கண்டு கொள்கிறான்.

 

வண்ணதாசனின் புனைவுலகு எனக்கு சுவையினூடாக அறியப்படுவதுதான்.  பொதுவான இல்லத்து அங்கணத்தில் இட்ட மெத்தையில் படுத்து எழுந்து செல்லும் ஒருவனின் உடல் வெம்மை பதிந்துள்ள மெல்லிய பள்ளததில் பிறிதொருவர் வந்து படுத்துக் கொண்டு அவரை தன் உடலினூடாகத் தான் அறியும் ஒரு சித்திரம் வண்ணதாசன் கதைகளில் இருக்கும். இம்மனிதர்கள் அனைவரும் எழுந்து சென்ற மெல்லிய வெம்மையான தடம் ஒன்று அவர் கதைகளில் இருக்கிறது. வாசகன் சென்று அமைவதற்கானது அது.

தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65

$
0
0

[ 6 ]

“காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிகவனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இருகைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று? சொல் மகளே, என்ன ஆயிற்று?” என்று அவர் கூவினார். அன்னையும் தோழியரும் தொடர்ந்தோடி வந்தனர். அவள் குலம் அவளை சூழ்ந்துகொண்டது. “தந்தையே எனக்கொரு தவக்குடில் அமையுங்கள். அங்கு கன்னிமை நோற்கிறேன்” என்று காளி சொன்னாள். தந்தை திகைப்புடன் “என்ன சொல்கிறாய்? உன் கொழுந்தன் எங்கே?” என்றார். அவள் அன்னை அதற்குள் புரிந்துகொண்டு அவளை அணைத்து “சின்னாள் நீ இங்கிரு” என்றாள். அவளை அணைத்து தன் இல்லத்திற்குள் கொண்டுசென்றாள்.

பெண்டிர் சூழ அவள் உள்ளறைக்குள் அமர்ந்தாள். அன்னை அளித்த நீரையும் உணவையும் உண்டாள். “என்னடி உன் எண்ணம்?” என்றாள் அன்னை. “கணவனிடம் பூசலிட்டாயா? நோக்கு, உன் கால்தடம் கலைவதற்குள் அவர் இங்கு வருவார்.” பெண்கள் சிரித்தனர். அவள் “இல்லை அன்னையே, அவர் வரப்போவதில்லை” என்றாள். அன்னை முகம் கூர “நான் உரைத்தேனே,  இங்கு கன்னியென திரும்பியிருக்கிறேன்” என்றாள். “என்னடி பேசுகிறாய்? மங்கலநாண் சூடி மறுகுடி சென்றவள் கன்னிமை நோன்பு ஏற்பது எப்படி?” என்று அன்னை கேட்டாள். “அன்னையே ஒவ்வொன்றாக உதிர்த்து என் கன்னி நாட்களுக்கு திரும்பிச் செல்கிறேன். கன்னியழகை எனக்கு அளித்த தெய்வங்களை வரவழைக்கிறேன். அவர்களிடம் இக்கருமையழகை உதறி பொன்னழகை எனக்களிக்கும்படி கோருகிறேன்” என்றாள் காளி.

அன்னை “நீ சொல்வது பொருளற்றது, மகளே.  கொழுநனை கைபிடிக்கும் கணத்திலேயே உன் கன்னியழகுகளை கடந்துவிட்டாய். அதன்பின் திதலையும் பசலையுமென உன்னுடல் உருமாறிக்கொண்டிருக்கிறது. அன்னை என்றானபின் கன்னிவாழ்க்கை ஒரு தொலைகனவு மட்டுமே. நீ அறிய மாட்டாய், இங்குள்ள அத்தனை பெண்டிரும் அவர்கள் கைவிட்டு வந்த அக்கன்னி வாழ்க்கையையே எண்ணி தங்கள் அறையிருளுக்குள் பிறரறியாமல் நீள்மூச்செறிகிறார்கள். முதற்புலரியில் விழிப்பு வருகையில் அக்கன்னி வாழ்க்கையின்  சில கணங்கள் கனவில் வந்து ஆடிச்சென்றதை எண்ணி கண்ணீர்விடாத பெண் இங்கெவரும் இல்லை.”

“தவம் என்பது நதி மலை மீளுவது போல, பறவை முட்டைக்குத் திரும்புதல் போல” என்றாள் காளி. “அரிதென்பதால்தான் அது தவம்.” அன்னை அதன்பின் சொல்சேர்க்கவில்லை. அவளை நோக்கி விழிநீருடன் அமர்ந்திருந்தாள். அவள் எழுந்து வெளியே சென்று குடிமூத்தார் சூழ மன்றமர்ந்திருந்த கராளரிடம் “தந்தையே, நான் கேட்டவற்றை அளியுங்கள்” என்றாள். அவள் குலம் கொந்தளித்தது. “இங்கு வந்து என் மகள் கைபற்றிச் சென்ற அவன் இவள் இங்கு வந்திருக்கும் நிலைக்கு பொறுப்பானவன். எழுக, நம் குலம்! அவனிடம் சென்று அறம் உரைப்போம். அது அவனுக்குப் புரியவில்லையென்றால் மறம் என்னவென்று அவனுக்கு தெரியவைப்போம்” என்றார் அவள் தாய்மாமன்.  கராளர் “என் குலமலரை விழிநீர் சிந்தவைத்துவிட்டான்” என்றார். “அவனை இழுத்துவந்து நம் குடிமன்றில் நிறுத்துவோம்” என்றனர் இளையோர்.

கைநீட்டி உரத்தகுரலில் கூவி காளி அவர்களை தடுத்தாள். “தந்தையே, இது அவருக்கும் எனக்குமான ஆடல் மட்டுமே. இங்கு நான் வந்தது எனக்கென அமைந்துள்ள பிடிநிலம் இங்குள்ளது என்பதனால்தான். அதிலுள்ளன என் இளமைநினைவுகள்.” கராளர் “நன்று மகளே! உனக்கு உரியது செய்ய ஆணையிடுகிறேன்” என்றார். அவர் ஆணைப்படி அக்காட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சோலை தெரிவுசெய்யப்பட்டது. கன்னியராக மண்மறைந்த பெண்களை மண்ணளிக்கும் இடம் அது. நூற்றெட்டு கன்னியரின் கல்பதுக்கைகள் அங்கு இருந்தன.

அச்சோலையில் அமைந்த குடிலுக்கு தன்மகளை கைபற்றி அழைத்துச் செல்கையில் அன்னை சொன்னாள் “நீ இன்னும் சிறுமியைப்போல் எண்ணிக்கொண்டிருக்கிறாய், மகளே. ஒன்றறிக! மணம் முடித்து இல்லம் விட்டு கிளம்பிச்சென்ற எந்தப்பெண்ணும் மீண்டும் அந்த அன்னை இல்லத்துக்கு வந்ததில்லை. இங்கு நீ காணும் இந்தத் தூண்களும் சுவர்களும் திண்ணையும் அடுமனையும் இங்குதான் உள்ளன. நீ வளர்ந்த இல்லம் இங்கில்லை. இப்புவியெங்கும் பெண்கள் தாங்கள் விட்டுவந்த இல்லம் நோக்கித் திரும்பி அது அங்கு இல்லையென்று அறிந்து விழிநீருடன் திரும்பிச்செல்கிறார்கள். நீ வந்திருக்கலாகாது.”

“நானும் ஓர் இல்லாளே. இல்லாடலென்றால் எப்பெண்ணையும்போல் நானும் அறிவேன். இவ்வாடலில் நானோ உந்தையோ இங்குள்ள உன் குலமோ ஒரு தரப்பே அல்ல. இது இருவாள்களின் கூர்கள் உரசி அறியும் ஒரு தருணம். பெருங்காதலின் களியாட்டுக்குப்பின் இது நிகழ்ந்தாகவேண்டும். உன்னை நீ அவருக்கு முற்றளிக்கப்போவதில்லை. அவரும் தன்னை  உனக்கு முற்றளிக்கப்போவதில்லை. நீங்கள் எதை எதுவரை அளித்துக் கொள்ளப்போகிறீர்கள் என்று முடிவாவதன்பொருட்டு நிகழும் பூசல் இது. நீ அங்கு அவர் கண்முன் இருந்திருக்கவேண்டும். இங்குவந்தாலும் நீ அங்குதான் குடியிருப்பாய்.”

“ஆம்” என்று அவள் சொன்னாள். “ஆனால் தவமென்று எண்ணியபோதே நான் உள்ளிய இடம் இதுவே. ஏனென்றால் கன்னியென்றும் சிறுமியென்றும் குழவியென்றும் இங்குதான் வளர்ந்திருக்கிறேன். அன்றிருந்த அந்நிலத்திற்கு நான் மீள முடியாது. ஆனால் அன்றிருந்த என்னைச் சூழ்ந்திருந்த நிலமும் காற்றும் நீரும் இங்குதான் உள்ளன. அவை என்னை அறியும். கன்னிமாடம் அங்கு அமையட்டும் என்று எண்ணியது அதனால்தான்.”

காளியின் தோழியர்களான ஜயையும் விஜயையும் ஜயந்தியும் அபராஜிதையும் அவளுடன் தங்கினர். ஆண்கள் எவரும் அவளை பார்க்கலாகாது என்று குலநெறி வகுக்கப்பட்டது. அவள் வாழ்ந்த சோலை எல்லை வகுக்கப்பட்டு வேலியிடப்பட்டது. தந்தையும் அவளை பார்க்கவில்லை. பின்னர் பிற பெண்டிரும் அவளை பார்க்காதொழிந்தனர். நாளடைவில் அன்னையும் அணுகாதானாள். தோழியர் நால்வரால் புரக்கப்பட்டு தன் முழுத்தனிமையில் அவள் அங்கே இருந்தாள். தன்னுள் கருப்பை வடிவில் குடியிருந்த பிரம்மனின் பீடத்தை எண்ணி தவமிருந்தாள். முதற்புலரியின்போது எழுந்து படைப்பு முதல்வனை வணங்கி நோன்புணவை அருந்தி நாள் கடந்தாள். இரவில் தன்னைச் சூழ்ந்த அனைத்தையும் முற்றுதிர்த்து உள்ளம் என்றே அங்கிருந்தாள்.

அவள் உடல் மாறிவந்ததை தோழியர் அறிந்தனர். மணம்கொண்டபின் கூடிய மங்கலங்கள் அனைத்தும் அகன்றன. தோளும் இடையும் கன்னிபோல் மெலிந்தன. பின் சிறுமியென்றாகி ஒடுங்கின. யாழின் கார்வை கொண்டிருந்த குரல் நீர்த்து குழலின் மென்மை கொண்டது. நடையில் அமைதி குலைந்து சிறுதுள்ளல் வந்து கூடியது. ஓரவிழிப்பார்வை அகன்றது. அச்சமற்ற நேர்விழி நோக்கமைந்தது. சொல்லெண்ணிப் பேசும் சித்தம் மறைந்து வெள்ளிமணிக் கொலுசென சிரித்தாள். அச்சிரிப்பில் கலந்த சொற்களாக உரையாடினாள். விழிகளில் மான்கருமை அகன்று சிறுநாய்க்குட்டியின் பேதைமை வந்து படிந்தது.

வான் நோக்கி நிலவில் விழிநட்டு அமர்ந்திருக்கும் தனிமை அவளிடமிருந்து விலகி அருகிருக்கும் பொருளெதுவோ அதனால்  விளையாடப்படுபவளானாள். கூழாங்கல் பொறுக்கி சோழியாடினாள். சிறுவிதைகளை தெரிந்து கொண்டுவந்து செப்புகளில் சேர்த்தாள். காலை எழுந்ததுமே முற்றத்து மலர்களை நோக்குவதற்காக சிற்றாடை பறக்க துள்ளி ஓடினாள். சாலையோரம் உதிர்ந்து கிடந்த ஒரு வண்ண இறகைக் கண்டதும் உவகை கொண்டு கூவி கைதட்டி ஆர்ப்பரித்து அதை எடுத்து கொண்டுவந்து தோழியரிடம் காட்டிச் சிரித்து துள்ளினாள். சுவைகளில் நாட்டம் கொண்டவளானாள். பின் அனைத்தும் சுவையே என்றாகியது. புளிக்காய்களும் துவர்க்கும் குருத்துகளும்கூட அவள் நாவுக்கு உகந்தன. கன்னம் கூர்கொண்டது. இதழ்கள் குமிழ் அகன்றன. கூந்தலிலும் கழுத்திலும் பளபளப்பு குறைந்து மென்வெளிறல் கூடியது.

சிறுமியென்றாகி சூழ்ந்திருந்த சோலை மட்டுமே அறியும் மந்தணங்கள் கொண்டு அவள் அங்கிருந்தாள். அவள் கருக்குருதி நின்றது. பலமாதங்களுக்குப்பின் ஒருநாள் அடிவயிற்றை கைகளால் பொத்தி முழந்தாள் மடித்து அமர்ந்து அழுதாள். மலர் கொய்து கொண்டிருந்தவள் எண்ணியிராது குடலையை வீசிவிட்டு  அழும் ஒலி கேட்டு தோழியர் ஓடிச்சென்று நோக்கினர். “என்னடி? என்னடி?” என்றாள் ஜயை. “முள் பட்டுவிட்டதா விரலில்?” என்றாள் விஜயை. “எதையேனும் மிதித்துவிட்டாயா? இங்கு சிறு நாகக்குஞ்சுகள் உண்டே” என்றாள் ஜயந்தி. அபராஜிதை அவள் முகம்பற்றி மேலேதூக்கி விழி நோக்கியதுமே அறிந்துகொண்ட புன்னகையுடன் “அதுதான்” என்றாள்.

அவர்கள் அதை எதிர்பார்த்திருந்தனர். அச்சொல்லிலேயே அனைத்தையும் உணர்ந்தனர். இரு கைகளாலும் அவளை அள்ளி மெல்ல கொண்டு சென்றனர். தென்கிழக்கு குடில் மூலையில் அவளை அமர்த்தினர். குறுக்கே உலக்கையை அரண்வைத்தனர். ஈச்சை ஓலை துடைப்பத்தை துணைக்கு அமைத்தனர். அருந்த நீரும் இன்மாவின் உருண்டைகளும் கொண்டு வந்து அளித்தனர். “ஐந்து நாள் இங்கிரு. மீண்டும் ஒரு பெண்ணாக எழவிருக்கிறாய்” என்றாள் ஜயை. “அலையெனச் சுருண்டு பின் வாங்கிவிட்டாய். வளைந்து மீண்டும் எழவிருக்கிறாய்” என்றாள் விஜயை. “ஆம், ஆறு மலையடைந்துவிட்டது” என்றாள் ஜயந்தி. “முட்டைக்குள்ளிருந்து ஓடுடைத்து வெளிவரும் நாள் இனி” என்றாள் அபராஜிதை.

அன்று இரவில் வெளியே ஓர் உறுமல் கேட்டு அபராஜிதை திகைத்தெழுந்தாள். மெல்ல சென்று சாளரத்தைத் திறந்து வெளியே நோக்கி வியப்பொலி எழுப்பினாள். அன்று வளர்நிலவு பத்தாம் நாள். முற்றத்திற்கு அப்பால் நின்ற முல்லைக்கொடி படர்ந்த மஞ்சணத்தி மரத்திற்கு அடியில் பிடரி மயிர் பறக்க ஆண் சிம்மமொன்று நின்றிருப்பதை ஜயை கண்டாள். அது ஓர் விழிமயக்கென்று முதலில் தோன்றியது. நாணல் எழுந்த சிறு மண் மேடு என எண்ணத்தலைப்பட்டது சித்தம். மீண்டும் ஒரு முறை உறுமி “நான் சிம்மம்” என்றது அது. அதற்குள் அவள் தோழிகள் எழுந்து ஓடி வந்தனர். “சிம்மமா? இங்கு இப்படி ஓர் விலங்கை பார்த்ததே இல்லை” என்றாள் விஜயை. “அனலெழுந்து விலங்கானதுபோல் தெரிகிறது” என்றாள் ஜயந்தி. உகிர்க்கால்கள் மண்பொத்தி மெல்ல ஒலிக்க அசைவு ததும்பும் உடலுடன் முற்றத்திற்கு இறங்கி வந்து வாயில் முன் நின்று மீண்டும் உறுமியது சடைசிலிர்த்த சீயம். பின்னர் அங்கேயே வாயிலில் விழிபதித்து படுத்துக்கொண்டது.

“அது நம் இளவரசிக்குக் காவல்” என்றாள் ஜயை. “ஊனுண்ணி விலங்கு. ஆனால் அதன் கண்களில் அருள் உள்ளது” என்றாள் விஜயை. அவளிடம் சென்று அங்கு சிம்மம் ஒன்று வந்து அவளுக்கு காவலமைத்திருப்பதை சொன்னார்கள். அவள் விழிகள் அறியாத்தெய்வத்தின் நோக்கு கொண்டிருந்தன. ஐந்து நாள் அஞ்சும் சிறுமியென அம்மூலையில் உடல் ஒடுக்கி அமர்ந்திருந்தாள். தோழியரால் மஞ்சள் நீராட்டப்பட்டாள். சந்தனமும் அகிலும் கொண்டு அவள் உடலையும் குழலையும் நறுமணமூட்டினர். இரவும் பகலும் துணையென முறைவைத்து விழித்திருந்தனர்.

ஐந்தாம்நாள் முழுநிலவு. மெல்லிய யாழிசை ஒன்றை தோழியர் நால்வரும் ஒருங்கே கேட்டனர். “வண்டு முரள்கிறது போலும்” என்றாள் ஜயை. “இரவில் முரளும் வண்டுகள் உண்டா?” என்றாள் விஜயை. ஜயந்தி “அது கந்தர்வர்களின் இசை” என்றாள். இசை மேலும்மேலும் வலுத்தது. “நூறு வண்டுகள்” என்றாள் ஜயை. “ஆயிரம் பல்லாயிரம் என அவை பெருகுகின்றன போலும்” என்றாள் விஜயை.

ஜயை ஓடிச்சென்று சாளரத்தினூடாக வெளியே பார்த்தாள். காவல் சிம்மம் எழுந்து தொலைவை நோக்கி மெல்ல உறுமி எச்சரிக்கையுடன் கால்களை மெல்ல எடுத்து வைத்து பாய்வதற்காக உடல் தாழ்த்தியது. பெருகிவந்த யாழிசையால் கொண்டு வரப்பட்டவர்கள் போல வெண்சிறகுகள் பறக்கும் ஏழு கந்தர்வப்பெண்கள் அவ்வில்லம் நோக்கி வந்தனர். நுரைச்சிறகை மடித்து சுருக்கி ஆடையின் முந்தானை என்றாக்கி மண்ணில் கால் வைத்து ஒளி வடிவென்றாகி இல்லத்திற்குள் நுழைந்தனர். கைகூப்பி நின்ற ஜயை “காளிகையின் கன்னிமாடத்திற்கு வருக!” என்றாள்.

முதலில் வந்தவள் “என் பெயர் தீக்ஷை. நான் இவளை கன்னியென்று ஆக்க வந்தேன். கொண்டவற்றில் முற்றுறுதியை அளிப்பவள் நான்” என்றாள். “நான் ஸ்வாதை. இவளை மூதன்னையரின் நெறியில் நிறுத்துவேன்”  என்றாள் இரண்டாவதாக வந்தவள். மூன்றாமவள் தன்னை த்ருதி என்றாள். “குன்றாத் துணிவை இவளுக்கு அளிப்பவள்” என்றாள். நான்காமவள் தன்னை தயை என்றாள். “கருணையால் இவளை அன்னையென்றாக்குவேன்” என்றாள். ஐந்தாம் தேவி தன்னை க்ரியை என்றாள். “செயலூக்கத்தின் தெய்வம் நான்” என்றாள். ஆறாம் தேவியாகிய புஷ்டி “நான் அவள் உடலை வளரச்செய்பவள்” என்றாள். ஏழாம் தேவியாகிய லஜ்ஜை “அவளில் நாணத்தை நிறைப்பதே என் பணி” என்றாள்.

காளி எழுந்து கைகூப்பி “நன்று கந்தர்வப் பெண்களே, இக்கன்னியழகனைத்தையும் நான் சூடுவதற்குமுன் என் உடல் பொன்னொளி கொள்ளவேண்டும். அதன்பொருட்டே தவம் மேற்கொண்டேன்” என்றாள். தீக்ஷை திகைத்து “அறியாது பேசுகிறாய், இளையவளே. உடல் போர்த்திய தோல்கொண்டது அல்ல நிறம்.  உன் உள்ளமைந்த ஆழத்தின் விழித்தோற்றம் அது. கடல் நீலமும் அனல் சிவப்பும் அவற்றின் உள்ளியல்பால் ஆனவை என்று அறிக!” என்றாள். “அவ்வண்ணமெனில் என் ஆழத்தை மாற்றுக!” என்றாள் காளி.

“நாங்கள் உன்னில் விழி அறியும் புறத்தோற்றத்தை மாற்றும் ஆற்றல் மட்டுமே கொண்டவர்கள். உன்னைப்படைத்த பிரம்மனே உன் ஆழத்தை அறிவார்” என்றாள் த்ருதி. “அவ்வண்ணமெனில் பிரம்மன் எழுக!” என்றாள் காளி. “எங்கள் பணி உன்னை கன்னியென்றாக்குதல் மட்டுமே. நாங்கள் படைப்பிறைவனின் பணியாட்கள். பல்லாயிரம் கோடியெனப் பெருகி நாங்கள் இப்புவியெங்கும் வாழும் மானுடரை விலங்குகளை பறவைகளை நாகங்களை பூச்சிகளை புழுக்களை கன்னி எழிலூட்டுகிறோம். இதுவன்றி பிறிதறியாதவர்கள்” என்றாள் லஜ்ஜை.

“பிரம்மன் இங்கு எழுக!” என்று சொல்லி கைகூப்பி விழிமூடி ஒற்றைக்காலில் நின்று காளி தவம் செய்தாள். பதினான்கு நாட்கள் பிறிதொன்றிலாத சித்தத்துடன் நின்றிருந்தாள். அவளை நோக்கி விழியசைக்காது வாயிலில் நின்றிருந்தது செந்நிறச்சீயம். அவளைச் சூழ்ந்து காவல் நின்றனர் தோழியர். பதைத்தும் பொருளறியாது சுழன்றும் அங்கிருந்தனர் கந்தர்வப்பெண்கள்.

பதினான்காவது நாள் முற்றிருள் மூடிய கருநிலவின் இரவில் அவர்கள் மட்டுமே காணும் ஒரு முழுநிலவு ஒன்று வானில் எழுந்தது. அதன் ஒளி செம்பட்டுப் பாதையென நீண்டு அவள் குடில்வரை வந்தது. அதனூடாக நடந்து பொன்னுடல் கொண்ட அந்தணர் வடிவில் பிரம்மன் அவள் குடிலுக்கு எழுந்தருளினார். அவர் உள்ளே நுழைந்தபோது விளக்குகளின்றி அக்குடில் சுடர்விட்டது. அங்கிருந்த உயிர்களனைத்தும் விழிகொண்டு “எந்தையே” என கைகூப்பின.  தன் சுட்டு விரலால் விழி மூடி தவத்தில் இருந்த காளியின் நெற்றிப்பொட்டில் தொட்டு “விழித்தெழுக, இளையவளே! உன் விழைவென்ன? சொல்க!” என்றார்.

தவம் பொலிந்து விழிதிறந்த காளி “என் உடல் பொன்மயமாகவேண்டும்” என்றாள். “உன் ஆழம் முடிவற்றது, அறிவாயா? அம்முடிவிலியின் நிறம் கொண்டவள் நீ. அதைத்துறந்து ஒளிரும் புறப்பூச்சை நீ அடைய விரும்புவது ஏன்?” என்றார். “என் கொழுநனின் விருப்பம் இது. அவர் முன் பொன்னுடல் கொண்டு சென்று நிற்க விழைகிறேன்” என்றாள் காளி. “நீ இழப்பது மீண்டும் அடையப்பட இயலாதது என்று அறிக!” என்றார் பிரம்மன். “ஆம், அதை நன்கு அறிவேன்” என்றாள் காளி. “நான் அவருக்குரியவளாகவேண்டும். பிறிதெதையும் அதன்பொருட்டு இழப்பேன்.”

“பொன்னொளி பெறுக! பிறிதொருத்தியாகுக!” என்று வாழ்த்தினார் பிரம்மன். காளி உலையில் உருகி உருவழிந்து அச்சில் நிறைந்து மீளுருக்கொண்டு  எழும் பொற்சிலை என மேனி கொண்டாள்.  திரும்பி நோக்கியபோது அருகே கரிய உடல்கொண்ட பிறிதொரு பெண் நிற்பதைக் கண்டாள். பிரம்மன் “உன் கரிய தோலிலிருந்து எழுந்தவள். அவள் கோசத்திலிருந்து பிறந்தமையால் அவள்  கௌசிகை” என்றார். கரிய அன்னை புன்னகை செய்தாள். “தேவி, உன் இருள்வடிவு கொண்ட அழகனைத்தும் அவளிடமே எஞ்சும்” என்றார் பிரம்மன்.

திரும்பி நோக்கி “நன்று, அது நானிருந்த பீடம்” என்றபின் அன்னை பிரம்மனை வணங்கினாள். “நன்று சூழ்க!” என்று அவளை வாழ்த்தினார் பிரம்மன். வெளியே சென்று படிகளிலிறங்கி செந்தழலென பிடரி சிலிர்க்க நின்ற சிம்மத்தின் மேலேறி வடதிசை நோக்கிச் சென்று அவள் மறைந்தாள். கௌசிகை பிரம்மனை வணங்கி தென்கிழக்கு மூலையில் சென்று பீடம் கொண்டாள்.

அனற்சிம்மம் மீதேறி பொன்னுடல்கொண்டு தன்னை வந்தடைந்த காளியை முதலில் செஞ்சடையன் அடையாளம் காணவில்லை. ஏனெனில் அவள் சென்ற மறுகணம் முதல் அக்கரிய எழிலுருவையே தன் அகவிழியில் நிறைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அவன் உளம் உருகிய சொற்கள் நாண் தளர்ந்த வில்லின் அம்புகளென எழுந்து  அவள் காலடியில் விழுந்துகொண்டே இருந்தன. தன் சொற்களேதும் அவளை சென்றடையவில்லை என்பதை உணரும்தோறும் மேலும் தளர்ந்தான். காதலுடன் கொஞ்சியும் கண்ணீருடன் இறைஞ்சியும் சிறுமைந்தனென ஆகி பணிந்தும் அவன் அழைத்ததை அவள் அறியவில்லை. துறக்கப்பட்டவன் சிறுமைகொள்கிறான். இழக்கப்பட்டது பேருருக்கொள்கிறது. அவன் கரும்பாறை எழுந்த மலையடிவாரத்தில் சிறுநெருப்பென ஆடிக்கொண்டிருந்தான்.

தன் தவம் முடிந்ததென்று உணர்ந்து அவன் விழிதூக்கியபோது எதிரில் தோன்றியவளைக் கண்டு திகைத்தெழுந்து நின்றான். பின்னரே அவள் முகமும் சிரிப்பும் உணர்ந்து கைவிரித்து அருகே ஓடி அணுகி “தேவி, நீயா?” என்றான். “இதோ நீங்கள் கோரிய பொன்னுடல்” என்று அவள் சொன்னாள். நெஞ்சுருக “என் ஆணவச்சொல் அது, தேவி. நான் விழைந்ததும் பெருங்காதல் கொண்டதும் உன் கரிய உடலை அல்லவா?” என்றான். “அதை நானும் அறிவேன். அது உங்கள் ஆழத்தால் நீங்கள் விழைந்தது, உங்கள் தகுதியால் நீங்கள் பெற்றது இது” என்று அவள் சொன்னாள்.

“இப்போது நீ பேரழகி. ஆனால் அக்கரியவளுக்கே  நான் என்னை முழுதளிக்க  முடியும். இங்கு அமர்ந்து தனிமையில் உணர்ந்தேன் அலகிலா கரிய நீர் வெளி நீ. அதில் சிற்றலை எழுப்பும் விசை மட்டுமே நான்” என்றான் சடையன்.  விழிநீருடன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். “என் அருகமர்க, தேவி! என்னைவிட்டு நீங்காதிரு. இன்றுமுதல் நீ என் தேவி. நீ கொண்ட அக்கரிய தோற்றம் என் அன்னை. அக்கடலைக் கடந்து இவ்வமுதத்தை எடுத்திருக்கிறாய்.” அவள் இடைசுற்றி தன் உடலுடன் சேர்த்து “என் இடமென ஆகுக! உடலென உடனிரு!” என்றான்.

புன்னகையுடன் அவள் அவனை தழுவிக்கொண்டாள். இருவரும் ஓருடல் ஆயினர். வெண் விடை வலமும் செஞ்சிங்கம் இடமும் நின்றிருக்க பொன்னிறமும் செந்நிறமும் கலந்த மாதொருபாகனாக மலைமுடி மேல் அங்கிருந்தனர்.

பின்னர் வெள்விடையும் உடுக்கும் வேலும் துறந்து அவன் காளிகம் என்னும் இக்காட்டுக்கு வந்தான். காளி தவம் செய்த அக்கன்னி மூலை கௌசிகவனம் என்னும் ஒரு சோலைக்கோயிலாக மாறியிருந்தது. அதில் பதினாறு கைகளும் வெறிவிழிகளும் கோரைப்பல் நகையும் கொண்டு கோயில் கொண்டிருந்தாள் கௌசிகை அன்னை. அவள் கரிய உடல் மிளிர அமர்ந்திருந்த கருவறைக்கு முன் செஞ்சடையும் நீரணிந்த மேனியும்கொண்டு மலை இறங்கி வந்த அயல் நிலத்துத் துறவியென நின்று அவன் கைகூப்பி வணங்கினான். “அன்னையே, உன் அடிபணிகிறேன். என் தலை மீது உன் கால் அமர்க! என் ஆணவம் பனித்து குளிர்ந்து சொட்டுக! இத்தென்னிலத்தை முற்றுரிமை கொண்டவள் நீ. உன் ஏவல் பணி செய்பவன் நான்” என்றான்.

KIRATHAM_EPI_65

“கௌசிகை அன்னையின் காலடிகளால் புரக்கப்படுவது திருவிடத்துப் பெருநிலம்” என்றான் சண்டன். “அன்னையும் கன்னியும் என்றன்றி இங்கு நிலம் வேறுமுகம் கொள்வதில்லை. பொன்றா பெருந்திருவென அன்னை கோயில்கொண்டிருப்பதனால்தான் இந்நிலம் திருவிடம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் மகாபைரவர் தன் காவியத்தில்.” ஜைமினி  “ஆம், பிடாரிக்கோலம் கொண்ட தாய்ப்பன்றியின் குட்டிகள் எனக் கொழுத்திருக்கின்றன இங்குள்ள அனைத்தும்” என்றான். சண்டன் நகைத்து “அதுவும் மகாபைரவரின் வரியே. வற்றாப்பெருமுலை சூடியிருப்பதனாலேயே அன்னை கொலைத்தேற்றையும் மதவிழிகளும் கொண்டிருக்கிறாள்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16875 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>