Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16823 articles
Browse latest View live

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 6

$
0
0

IMG_8351

 

அன்பிற்கினிய ஜெ சார்

 

கிட்டத்தட்ட இந்த வருடத்தையே எனக்கு இனிப்பாக்கியுள்ளீர்கள். என்னால் முழுவதுமாக ஈடுபட முடியாவிட்டாலும் இன்று வரை வாசிக்கவும் எழுதவுமே எப்போதும் விரும்பியிருக்கிறேன். இந்த வருடத்தில் நான்கு நாட்களை தங்களுக்கு அருகில் வாழ்ந்திருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் இந்த நான்கு நாட்கள்தான் என் வாழ்வின் திசைகளை, இலக்குகளை தீர்மானிக்கும்.

 

பெரும்பாலும் ஆளுமைகள் பேசும்போது என்னை நான் ஊமையாக்கி கொள்வேன். படைப்பாளிகளிடம் பேச வாசகர்கள் போட்டி போட்டதை பார்த்து நான் மேலும் ஊமையாகிப்போனேன். இரா.முருகன், எஸ்.ஹெச். சிவப்பிரகாஷ், பாவண்ணன்  அவர்களிடமெல்லாம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருந்தன. கேட்கவே இல்லை. பதில் கண்டிப்பாக கிடைக்கும் கேட்காமல் போனாலும். அது போல் நிறைய பதில்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.

 

ஒரு நாவலிலோ, சிறுகதையிலோ வரும் கதா பாத்திரங்களை எழுதுகையில், எழுதுவோரின் மனதில் ஒரு உருவம் கண்டிப்பாக இருக்கும். எழுத்தில் நாம் அதை வாசிக்கும் போது அந்த கதா பாத்திரத்திற்கு ஒரு குறியீட்டு தன்மை வந்துவிடும். அந்த குறியீட்டுத்தன்மை வந்துவிடுகையில் அக்கதாபாத்திரம் ஒரு கோட்பாட்டுக்கே  பிரதிநிதியாகிவிடும்.    அதுதான் பெரும்பாலும் படைப்பாளிகளின் நோக்கம் என்பது என் எண்ணம்.

 

வாசகன், படைப்பாளியின் சித்தரிப்பு கொண்டு தனக்குள் ஒரு சித்திரத்தை வரைகையிலேயே அது சாத்தியம். வாசகன் ஒரு நாவலையோ, சிறுகதையையோ அந்த படைப்பாளியின் அனுபவம் மட்டுமே என்று கருதி அவ்வனுபவம் குறித்த கேள்விகளை கேட்பது அவ்வளவு சரியென்று தோன்றவில்லை. எழுதுபவருக்குத்தான் அது அவசியம். வாசிப்பனுக்கல்ல. நிறைய கேள்விகள் அவ்வாறிருந்தன.

 

எழுத்து என்பது எழுதுபவரின் அனுபவங்களை கிரகித்து கொண்டு தாளில் எழுதுவதல்ல. தன் கதாபாத்திரங்கள், சித்தரிப்புகள் வாயிலாக வாசிப்பவனின் மனதுள் எழுதுவதுதான் படைப்பாளியின் நோக்கம் என்பது என் கருத்து. தவறெனின் அறிவுறுத்தவும்.

 

திரு. அரங்கசாமி, ராஜகோபால்,விஜயசூரியன்,மீனாம்பிகை, செல்வேந்திரன், சுகா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் யாவருக்கும் என் இதயப்பூர்வ நன்றிகள்.

 

நாஞ்சில்நாடன்,எஸ்.ஹெச் சிவப்பிரகாஷ், பவா.செல்லத்துரை மற்றும் தங்களின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுகிறேன்.

 

அன்பன்

அ மலைச்சாமி

 

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விழா அற்புதமான ஒரு நிகழ்வாக அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் நுணுக்கமாக முன்னாடியே பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. உணவு இருப்பிட விஷயங்களில் உள்ளச் சிக்கல் என்னவென்று எனக்குத்தெரியும். நானும் நிகழ்ச்சிகளை அமைப்பவன். எத்தனைபேர் வருவார்கள் என்று தெரியாமல் ஒரு நிகழ்ச்சியை அமைப்பது மிகப்பெரிய சிக்கல். பணம் நிறைய வீணாகும். ஆனால் அனைத்தும் மிகச்சரியாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

 

சில விஷயங்களைச் சுட்டிக்காட்டலாம். 1 இன்னும் கொஞ்சம் கூடுதலாக டீ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். பலருக்கு டீ ரொம்ப முக்கியம். 2. கழிப்பறை அருகே இல்லை எழுந்துசென்று திரும்பிவந்தால் நாற்காலி பறிபோய்விட்டது 3. கேள்விகளை கேட்க கொஞ்சம் தயங்குபவர்களையும் கேட்டு கேள்விகேட்க வைத்திருக்கலாம். ஒருவரே அதிகமும் கேள்விகேட்க விட்டிருக்கவேண்டம்

 

மற்றபடி நினைத்து நினைத்து ஏங்கவைக்கும் அனுபவம்

 

அமர்நாத்

 

 

அன்புள்ள ஜெ,

 

 

விழா மிகச் சிறப்பாக நடந்தேறியதை புகைபடங்கள் மூலமும் நண்பர்கள் வழியாகவும் அறிய முடிகிறது.  பலமுறை திட்டமிட்டும் இந்த வருடம் கடைசிகட்ட வேலைபளுவினால், கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது. எனது இனிய ஆசிரியர்களில் ஒருவரான வண்ணதாசனுக்கு விருது வழங்கபடும்போது கலந்துகொள்ளமுடியாமல் போனது குறையாகவே உள்ளது.

 

 

இருப்பினும் நேற்றிரவே ஸ்ருதி தொலைகாட்சியின் வழியாக வண்ணதாசனின் உரை, மற்றும் உங்களது உரை என தொடர்ந்து பார்த்தேன். பத்து நிமிடத்தில் மிகச்சரியான உவமை மூலம் மையத்தை தொட்டுகாட்டி விடைபெறும் உங்களது விஷ்ணுபுரம் விழா உரைகள் ஒரு அற்புதம் ஜெ. மூங்கிலிருந்து கிளம்பும் மின்மினிபூச்சிகள், கொலைசோறு என தொடர்ந்து இது ஒவ்வொரு வருடமும் இது நிகழ்வதை கண்டு வியக்கிறேன்.

 

 

வண்ணதாசன் நெகிழ்ந்திருந்ததை காண முடிந்தது. விழா ஏற்பாடு துல்லியம் என நண்பர்கள் பலரும் வியப்பதை கண்டு மகிழ்கிறேன். மிகப்பெரிய இலக்கிய நிகழ்வாக, பெருமைபடும் வண்ணம் இது ஒவ்வொரு வருடமும் வளர்வதும், மேலும் மேலும் புதிய நண்பர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதும், இந்த நிகழ்ச்சிக்கான மிகப்பெரிய தேவை இங்கிருந்ததையே காட்டுகிறது.

 

 

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றி.

 

அன்புடன்

டோக்கியோ செந்தில்குமார்

அன்புள்ள ஜெ

 

விழா மிகச்சிறப்பு. பலருடைய பங்களிப்புடன் மிகச்சிறப்பான ஒத்திசைவுடன் நடந்து முடிந்தது. 13  மணிநேரம் உற்சாகமாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதெல்லாம் என் வயதினருக்கு இப்படியெல்லாம் சாத்தியமா என்றே நினைக்கவைத்தது

 

அதிலும் இலக்கியவினாடிவினா ஒரு பெரியநிகழ்ச்சி. எனக்கு திகிலாக இருந்தது. என் ஆதர்சமான லா.ச.ரா, ஜானகிராமன் பற்றியெல்லாம் இன்றுள்ள பையன்கள் சட் சட் என கேள்விக்க்குப்பதில் சொல்லி அசத்தியபோது வாயடைந்துபோனேன். இலக்கியம் வாழும் என நினைத்தேன்

 

ராஜசேகரன்

 

அன்புள்ள ஜெமோ

 

வாழ்த்துக்கள்.

மகத்தான விழா. மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு. உறுதியகாச் சொல்கிறேன். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் சொன்னதுபோல இதுபோல ஒரு வாசகர் திருவிழா இந்தியாவில் எங்கும் இல்லை. உலகளவில் வாசகர்களே எடுக்கும் விழா எங்கே உள்ளது என்று கேட்டுத்தான் அறியவேண்டும்

 

அடுத்தாண்டுமுதல் ஓர் இந்தியமொழி எழுத்தாளருக்கும் விருது என்று சொன்னார்கள். அது நிகழ்ந்தால் மேலும் சிறப்பு

 

எஸ்.செந்தில்

 

புகைப்படங்கள் இரண்டாம் நாள்

புகைப்படங்கள் இரண்டாம்நாள்

 

புகைப்படங்கள் முதல் நாள்

 

புகைப்படங்கள் முதல்நாள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7

$
0
0

uuu

அன்புள்ள ஜெ

 

மிகச்சிறப்பான விழா அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு விஷயமும் கச்சிதமாகப் பார்த்துப்பார்த்து செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன. விருந்தினரை உபசரித்துக்கூட்டிவர ஒரு குழு சென்றுகொண்டே இருந்தது. இன்னொரு குழு உள்ளூர வேலைகளைச் செய்துகொண்டே இருந்தது. அங்கே சாப்பாடு விஷயங்களைக் கவனித்துக்கொண்டவர் விஜயன் சூரியன் என்பவர். அவர்தான் முதல்பாராட்டுக்குரியவர். அவர்தான் இத்தனை கூட்டத்தையும் சாப்பிடவைத்தவர். அவர் செய்தபணி பெரியது. ஏனென்றால் நினைத்ததைவிட பலமடங்குக்கூட்டம் வந்துகொண்டே இருந்தது. அற்புதமான நிகழ்ச்சி

 

 

சிவக்குமார்

வணக்கம்.

சீரான திட்டமிடலில் தொடங்குகிறது இலக்கியப் பயணம். பலவேறுப்பட்ட ஆளுமைகளை சந்திக்கவும் உரையாடவுமான வாய்ப்பு.. இலக்கிய வயப்பட்ட பேச்சு.. சிரிப்பு.. உரையாடல்.. உறவாடல்.. எல்லாமே புத்தம்புது சூழலுக்குள். அனைவரிடமும் வெகு எளிமையாக பழகும் தங்களின்  இயல்பு.. விழாவை அர்த்தப்படுத்தும் அத்தனை நிகழ்வுகளும் வழுக்கி சென்று விழாவில் விழ.. இலக்கிய உலகம் தங்களுக்கு நிறைய கடமைப்பட்டுள்ளது. (நான் தவறவிட்டவைகளை தகவல்களாகவும்.. புகைப்படங்கள் மூலமாகவும் அறிந்துக் கொண்டேன்.)

அன்புடன்
கலைச்செல்வி.

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்.

நேற்றைய நிகழ்ச்சி வாழ்விலே மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக பதிந்துவிட்டது. எத்தனை எத்தனை வாசகர்கள். பார்த்துப்பார்த்து மனம் பூரித்தபடி இருந்தேன். மலரைத்தேடி வரும் தேனீக்களென எழுத்தை விரும்பி, எழுத்தை நுகர, எழுத்துக்கு அருகில் வட்டமிட, எழுத்தை நோக்க, எழுத்தில் அமர என எத்தனை எத்தனை உள்ளங்கள். வண்ணதாசனுடைய ஐம்பத்து சொச்ச ஆண்டு கால உழைப்பின் பலனாகவே அதைக் காண்கிறேன். அவருக்கு அணுக்கமான உள்ளங்களை ஒன்றிணைத்து அவருக்கே சுட்டிக் காட்டும் தருணமாகவும் அமைந்துவிட்டது. உங்களுக்கும் அமைப்பினர் அனைவருக்கும் தமிழ் இலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழா அற்புதமான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கணமும் வாழ்ந்த நாட்கள் அவை. சென்றவருடம் வரவேண்டுமென நினைத்தேன். ஏதோ ஒரு சோம்பலால் வராமலிருந்தேன். ஏன் வரவில்லை என்று எண்ணி எண்ணிச் சோர்வு அடைந்தேன். ஏன் வரவில்லை என்றால் இந்தமாதிரி விழாக்களில் இருக்கும் சம்பிரதாயமான பேச்சுக்கள் அர்த்தமில்லாத உபச்சாரங்கள் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை என்பதனால்தான். இந்த விழா தான் நான் உண்மையில் ஒரு விழா எப்படி இருக்கவெண்டும் நினைக்கிறோமோ அப்படி இருந்த விழா
முதல் விஷயம் யாரும் யாரையும் அர்த்தமில்லாமல் பாராட்டிக்கொண்டிருக்கவில்லை. மிகப்பெரிய படைப்பாளிகளை அறிமுகம் செய்யும்போதுகூட அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை மட்டுமே தொகுப்பாளர்கள் சுருக்கமாக முன்வைத்தார்கள். முன்னுரை வழங்கி தொகுப்புரை செய்தவர்கள் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசுவது நம் கூட்டங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் சாபக்கேடு அந்த விஷயம் நிகழவே இல்லை. இரண்டாவதாக கேள்விகேட்கிறோம் என்று மைக்கை வாங்கும் அற்பங்கள் பேசிப்பேசிக் கழுத்தறுப்பார்கள். அவர்களுக்கு பேசவும் தெரிந்திருக்காது. பேச விசயமும் இருக்காது. ஆனால் அமைப்பாளர்கள் அவர்களைக் கட்டுபப்டுத்த முடியாது. அந்த வகையறாக்கள் அறவே இல்லை. சம்பந்தமில்லாமல் மேடை ஏறிப் பேச ஆரம்பிப்பவர்களும் இல்லை. இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்.
பேசிய அத்தனைபேருமே மிகத்திறமையாகப்பேசினார்கள். பவா செல்லத்துரை, நாஞ்சில்நாடன் இருவரும் பேசியது உச்சகட்ட பேச்சு. எனக்கு எச் எஸ் சிவப்பிரகாஷ் ஆங்கிலத்தில் பேசியதுமுழுமையாகப்புரியவில்லை. ஆனால் நல்ல பேச்சு என்று சொன்னார்கள். முக்கியமாக நீங்கள் எங்குமே தென்படவில்லை. உங்களைப்பற்றிய பேச்சே இந்த விழாவிலே இல்லை. அதுதான் மிக ஆச்சரியமாக இருந்தது
செல்வக்குமார்

எழுத்தாளர் தூயன் வண்ணதாசனுடன் [தூயனின் முதற்சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது]

அன்புள்ள ஜெயமோகன்,

 

விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு வாழ்த்துகள். என் பிரிய எழுத்தாளருக்கு எனும்போது மனம் முழுதும் மகிழ்ச்சி. வாழ்வின் சிறிய விஷயங்களில்கூட மகிழ்வடையும் மனதும் அதை பிறர்க்கு சுவைபட கடத்தும் கலையும் வண்ணதாசனுக்கே வாய்த்த ஒரு அதிசயம்.

 

எப்போதும் போல் அவர் நினைவு வரும்போதும் மனதில் தோன்றும் வரி “கனியான பின்பும் நுனியில் பூ”. தினமும் காணக்கிடைக்கும், அண்டை வீட்டு வாசலில் பழுக்கும் அதே மாதுளை தான். ஆனால் அதையே இவ்வளவு சுவையாக கூற அவரால் தான் ஆகிறது.  கடையில் வாங்கும் போதும் நல்ல பழங்களை அவருக்கு தேர்ந்து கொடுத்தவர் தன பெரிய விழிகளுடைய மகளுடன் நிற்கிறாரா என்று அவ்வவ்போது தேடுவேன். விகடனில் வெளியான இந்த ஒரு சிறுகதையே அவருடனான என் அனுக்கதிற்கு போதுமானதாக இருக்கிறது.

 

2014 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அக்கதை பிரசுரமான தொகுப்பில் அது இடம்பெற்றிருந்த பக்கத்தில் கையெழுத்து கேட்டேன். காரணம் கேட்டால் என் மகளைப் பற்றி சொல்ல எண்ணியிருந்தேன். கண்களும் சேர்ந்து சிரிக்கும் ஒரு புன்னகையுடன் “உங்களுக்கும் மகள் இருக்காளா தம்பி?” என்றார். வேறென்ன சொல்வது, “ஆமா சார், அவளும் வளர்ந்தபின் தினகரி மாதிரி என் கையைப் பிடிச்சுக்கற மாதிரி வாழ்ந்துட்டேன்னா போதும் சார்” என்றேன்.  எழுந்து என்னை அவர் அனைத்துக் கொண்ட இதம் இன்றும் நினைவில் உறைந்து போயிருக்கிறது. அவர் தகுதிக்கும் என் வயதிற்கும் அவர் அவ்வாறு செய்ய வேண்டுமா என்ன? ஆம், அதுதான் அவர்.

 

என் பிரிய எழுத்தாளருக்கு வணக்கங்களும் முத்தங்களும். உங்களுக்கு நன்றி.

 

என்றென்றும் அன்புடன்,

மூர்த்திஜி

பெங்களூரு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிப்பதிவு -1

$
0
0

maxresdefault

 

விஷ்ணுபுரம் விருதுவிழாக் காணொளிகள்.

 

விஷ்ணுபுரம் விருது – 2016
நிகழ்வில்
எழுத்தாளர் வண்ணதாசன் உரை
விஷ்ணுபுரம் விருது – 2016 நிகழ்வில்
எழுத்தாளர் ஜெயமோகன் உரை
சுருதி டிவி சார்பில் இப்பதிவுகளை உருவாக்கிய நண்பர் கபிலன் அவர்களுக்கு நன்றி.
விஷ்ணுபுரம் நண்பர்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருது விழா பதிவுகள் 8- யோகேஸ்வரன்

$
0
0

24.12.2016 சனி அதிகாலை முதல் வடகோவைவிலுள்ள குஜராத்தி சமாஜ் நண்பர்களால் நிறைந்துகொண்டிருந்தது. “மக்களே” என்ற பெருவொலியோடு தங்குமிடத்தின்
கதவுகளை அகல திறந்தபடி உள்ளே நுழைந்தார் ஜெ. அறிமுகப்படலத்திற்க்குப்பின் நின்றவாக்கில் ஒரு சிறு உரையாட.ல்.

காலை உணவிற்க்குப்பின் முதல் அமர்வு. 9.55 மணியளவில் அரங்கம் நிறைந்து தயாராக, மிகச்சரியாக 10 மணிக்கு “இந்த ரெண்டுநாள் முடிஞ்சி நீங்க சோகமா கிளம்புனீங்கன்னா, அது எங்களுக்கு கிடைத்த
வெற்றி, அப்பாடா டார்ச்சர் முடிஞ்சிருச்சிடா அப்படீன்னு நினைச்சி கிளம்புனீங்கன்னா அது எங்களுக்கு கிடைத்த மிகபெரிய வெற்றி” என்ற கிருஷ்ணனின்
வரவேற்புரையோடு ஆரம்பித்தது முதல்நாள் முதல் அமர்வு.

நகைச்சுவைத்துணுக்கு ஒன்றோடு தன் உரையை ஆரம்பித்தார் நாஞ்சில்நாடன். அங்குமிங்கும் அலைபாய்ந்த கேள்விபதில் உரையாடல் சற்றைக்கெல்லாம் ஒரு ஒழுங்குபெற்று அழகாய் முன்னேறிக்கொண்டிருந்தது.
“நல்லா இருக்கியாடா” தோளில் வேகமாய் தட்டியபடி அருகில் வந்தமர்ந்தார் பாட்டையா பாரதிமணி.

சற்றைக்கெல்லாம் சுகாவுடன் உள்ளே நுழைந்தார் வண்ணதாசன், நாஞ்சிலின் அருகில் சென்றமர்ந்து கைபற்றி காதோரம் சேதி சொல்கிறார்.

 

RISK என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான தமிழ்சொல்லை கடந்த பத்துநாட்களாக தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார் நாஞ்சில்.

தமிழ் சொற்கள் மற்றும் சொல்லாடல்கள் குறித்த நீண்ட உரையாடல்கள், “கள்ள மவுனம்” என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியது பற்றி பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியா, ஜெ தனது சொல் (‘பரப்புரை’?) ஒன்று
தமிழ் பத்திரிக்கைகளில் கையாளப்படுவது பற்றி பேசினார்.அவ்வப்போது குறிக்கிடும் ஜோக்குகளால் அரங்கம் அதிர்ந்து அடங்கியது.

காலை தேனீர் இடைவேளை

333

அடுத்து பாரதிமணியின் நாடக அனுபவங்கள்.

பாட்டையாவின் நினைவலைகளை தூண்டி சுவாரஸ்ய பதில்களை பெற சில கேள்விகளை இடையிடையே வீசினார் ஜெ.

நாடக அனுபவத்தை பகிர்ந்துகொள்வதற்க்காக மேடையேறியவர் ஒரு கட்டத்தில் தனது வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

க.நா.சு தொடங்கி, அவரின் “புள்ளிகள்,கோடுகள்,கோலங்கள்” புத்தகத்தில் இடப்பெற்றுள்ள சுவாரஸ்ய சம்பவங்களை தொடர்ந்து ராயல் சல்யூட்டில் நின்றது.

மதிய உணவு இடைவேளை

இரா.முருகன் உடன் சந்திப்பு. தன்னுடைய படைப்புகள், அவற்றிற்க்கிடையேயான சங்கிலி தொடர்புகள் குறித்து முன்னுரைத்தார்.”என்னுடைய படைப்புகள் குறித்து நிறைய தகவல்களை நானே வியக்குமளவிற்க்கு இன்று
தெரிந்துகொண்டேன்” – இரா.முருகனே வியக்குமளவிற்க்கு அமைந்தது நண்பர்களின் சுவாரஸ்ய உரையாடல்கள்.

மாலை தேனீர் இடைவேளை

தான் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதை மீண்டும் மீண்டும் அழகாய் நிறுவும் பவா செல்லதுரை. மூன்றாம் அமர்வாய் அமைந்த இந்நிகழ்வு பங்கேற்ப்பாளர்கள் அனைவரையும் கூர்ந்து கவனிக்கவைத்து, புருவத்தை உயர்த்தவைத்து, மனம்விட்டு சிரிக்கவைத்தது என்றே சொல்லவேண்டும்.

”தேன்” என்ற மலையாள கதையில் ஆரம்பித்து “முற்றம்” நிகழ்வின் செயல்பாடுகளோடு முடிந்தது.

மாலை இரண்டாம் இடைவேளை

அனேகமாக இதுவே உலகத்தமிழிலக்கியவரலாற்றில் நிகழ்ந்த முறையாக வினாடிவினாவாக இருக்க வேண்டும். நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட பங்கேற்ப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள். சில கடினமான கேள்விகளை முடிக்கும்முன் பதில்வந்துவிழுந்தது ஆச்சரியம்தான்.

கல்லூரி மாணவர் பாரதியின் பங்களிப்பு அருமை. கேட்ஜெட்டுகளில் நத்தைபோல் தங்களை சுருக்கிக்கொள்ளும் இன்றைய தலைமுறைக்கிடையே புத்தகத்தை புதையலாய் பார்க்கும் பாரதியை போன்றவர்கள் அரிது.

இரவு உணவு இடைவேளை

மருத்துவர் கு.சிவராமனுடனான கலந்துரையாடல். கேன்சரின் காரணிகள்,பேலியோ டயட்டின் சாதக பாதகங்கள், essential drugsல் தங்க புஷ்ப்பம் நுழைக்கப்பட்ட நுண்ணரசியல் உள்ளிட்ட பல தகவல்கள்.

தூக்கம் கவ்வும் கண்களோடு முதல்நாள் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 

விழாவின் இரண்டாம் நாள்.

சு.வேணுகோபாலோடு தொடங்கிய இரண்டாம்நாள் அமர்வு, ஏதோ ஒரு புள்ளியில் பஷீரின் படைப்புகள் தொடப்பட, உரையாடல்கள் அனைத்தும் பஷீர், அவருடைய கடைசிகால வாழ்க்கை மற்றும், தி.ஜா, கி.ராவுடனான ஒப்பீடாகவே சுழல ஆரம்பிக்கவேணுகோபால் அவர்களுடன் படைப்புகள் குறித்து உரையாட மடைமாற்றப்பட்டது.

பலத்த கரவொலிக்கிடையே வந்தமர்ந்தார் வண்ணதாசன். வண்ணதாசனின் ஒரு சிறுகதை தொகுப்பு தான் முதல் நாவல் ஒன்றினை எழுதி அது போட்டிக்கான முதல்பரிசை வென்றதைப்பற்றி சிலாகித்து முடித்துக்கொண்டார்.

”ஓரமாய் அமர்ந்திருக்கும் என்னை நடு இருக்கைக்கு மாறச்சொல்கிறார் வேணுகோபால், எனக்கு ஓரமாக இருக்கவே பிடித்திருக்கிறது. ஓரமாய் அமர்ந்தபடி ஆர்ப்பரிக்கும் கடலை,கரையை,மனிதனை கவனிக்கவே எனக்கு விருப்பம்” என்று தொடங்கினார் வண்ணதாசன்.

இவ்விருநாட்களுக்கான மிகச்சிறந்த நிகழ்வாக நான் கருதுவது இதுவே. மாலை நடைபெற்ற விருதுவிழாவில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் செல்வேந்திரன்,சக்தி கிருஷ்ணன், மீனாம்பிகை எனது வீட்டிற்க்கு வந்தபோதே விஷ்ணுபுர விருதினை நான் பெற்றுவிட்டேன், இந்நிகழ்வு ஒரு மீள்நிகழ்வே என்று வண்ணதாசன் குறிப்பிட்டார். இந்த அமர்வையும் நான் அவ்வேறே கருதினேன்.

மலையப்பனில் தொடங்கி கோமு வரை வண்ணதாசனின் கதைமாந்தர்களும், கல்யாண்ஜியின் கவிதைமாந்தர்களும் அரங்கினுள் ஆர்ப்பாட்டமின்றி அரவம் செய்தார்கள்.
காசர்கோட்டு மலையப்பனை நினைவுபடுத்திய ஜெ.
பணிசுமை நிறைந்த ஒரு வேலைநாளில், வண்ணதாசனை வங்கியில் சந்திக்க சென்றதை தர்மபுரி வாசகியொருவர். ஜெயமோகனின் ஏழாம்அறிவு புத்தகத்தை தனது காதலிக்கு கொடுத்து அதனால் ஏற்ப்பட்ட பிரளயத்தை வண்ணதாசனின் கதைதொகுப்பின்மூலம் சரிசெய்த கடலூர் நண்பர் ஒருவர் (கடலூர் சீனு அல்ல).

முதல் நாள் முதல் தனது மகனோடு வந்தமர்ந்து, இத்தருணத்திற்க்காகவே காத்திருந்ததைப்போல, வண்ணதாசனின் கதைகளை வகைப்படுத்தி, கைகளை கட்டியபடி மிக நிதானமாய் பேசியமர்ந்த வாசகியொருவர், தலையுயர்த்தி தனது தாயின் நிதான பேச்சை ஒருவித திகைப்போடு உள்வாங்கியமர்ந்திருந்த அவ்வாசகியின் மகன்.

 

பரவசநிலையடைந்திருந்த அரங்கு. தரிசனம் முடித்த தேர் நிலைகொள்ளத்தானே வேண்டும், வண்ணதாசனின் “நிலை” பற்றிய கதையோடு நிறைவுபெற்றது.

கொடுக்கப்பட்ட பரிசுகளையும், போர்த்தப்பட்ட பொன்னாடைகளையும் சுகா வற்புறுத்திகேட்டும் கொடுக்கமறுத்து, கைகொள்ளாது தன் நெஞ்சில் அணைத்தபடி அரங்கைவிட்டு வெளியேறினார் வண்ணதாசன்.

காலை தேனீர் இடைவேளை

”எனக்கு தமிழ் புரியும் ஆனா பேச வராது,தேவைப்பட்டால் மொழிபெயர்த்துக்கொள்ளலாம்”, கன்னட எழுத்தாளர் H.S.சிவப்பிரகாஷ் முடிக்கும்வரை மொழிபெயர்ப்பாளர் தேவைப்படவே இல்லை. மிக நிதானமாக தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

தனது படைப்புகள் குறித்தான தடைகள் குறித்து பேசுகையிலும் அதே நிதானம். கடைசியாக பேசிய பாவண்ணன் இதை தொட்டு பேசினார், இருபது வருடங்களுக்கு முன் மொழிபெயர்ப்புக்காக தான் சந்தித்த அதே சிவப்பிரகாஷ் இன்றும் அதே ரெஸ்பான்ஸிபில் பர்சனாக உள்ளார் என்றுஉணர்வுப்பூர்வமாக பேசினார்.

முடிவுக்கு முன் கேள்வி கேட்க மைக் பிடித்த ஒரு இங்கிலீஷ் புரொபசர் தனது மேதாவிதனத்தை காட்ட முயற்ச்சித்து ஜெமோவிடம் நன்றாக வாங்கிக்கட்டிகொண்டார்.

மதிய உணவு இடைவேளை

பாக்குத்தோட்டம் பற்றிய பேச்சுக்களோடு பாவண்ணன்,நாஞ்சில்,பாட்டையாவுடன் முடிந்தது மதிய சாப்பாடு.

இறுதி அமர்விற்க்காக அரங்கில் காத்திருக்கையில் இரா.முருகன்,லா.சா.ராவின் மகன் சப்தரிஷி தனது தந்தையுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.முக்கியமான சிந்தனையோட்டத்தில் இருந்த லா.சா.ராவை “ஓரம்போ ருக்குமணிவண்டி வருது”என்று
அவரும் அவருடன்பிறந்தவர்களும் இம்சித்ததை, அவர் சொல்ல சொல்ல “துளசி” கதையை செப்பனிட்டதை சிலாகித்தபடி இருந்தார்..

திருப்பூர் சுப்ரமணியம்,நாஞ்சில்,இரா.முருகன்,தேவதேவன்,பாவண்ணன் ஆகியோருடன் இறுதி அமர்வு.

பெரும்பாலான கேள்விகளுக்கு நாஞ்சிலும் இரா.முருகனும் பதில்சொல்ல,சுப்ரமணியம் எழுதியெடுத்து வந்த தனதுரையை வாசித்தார். “எனக்கு பக்கத்துல ஒக்காந்திருக்கவன் நல்லவனா, நாதாரியான்ன்னு இப்ப என்னால தெரிந்துகொள்ளமுடியிதுன்னு” நாஞ்சில் சொல்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்தஇரா.முருகன் ஒரு கணம் ஆடித்தான் போனார். அரங்கத்தின் சிரிப்பலை சகஜமாக்கியது.

unconditional love பற்றிய பரிமாற்றங்களுடன் தனது பேச்சை தொடங்கி அதிலேயே முடித்தார் பாவண்ணன்.

ஒவ்வொரு முறை மைக் தன்பக்கம் வரும்போதெல்லாம் அதை கடத்தியபடி இருந்த தேவதேவன் கடைசியாக பேசி நிறைவுசெய்தார்.

மாலை விருது வழங்கும் விழா. மிகச்சரியாய் 5.55 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

வழக்கம்போல பின்வரிசையில் அமரச்சென்ற பாவண்ணனை கைபிடித்து பக்கத்து இருக்கையில் இருத்தினேன். முன்னால் ஒரு வரிசை சேர் போடப்பட்ட பிறகே ஆசுவாசமானார்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்தமறஆரம்பித்தார்கள். முன் வரிசையில் வந்தமர்ந்தார் நாசர்.மிகச்சமீபமாய் அவரது மூக்கு. கிள்ள நினைத்த ஆசையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினேன்.

“நதியின் பாடல்” ஆவணப்படத்தின் சில பகுதிகள் திரையிடப்பட்டபின் விருந்தினர்கள் மேடையேறினார்கள்.

பேசுபவரின் தாய்மொழியிலுமில்லாமல், கேட்பவரி தாய்மொழியிலுமில்லாமல் வேறொருமொழியில் பேசுவதற்க்கு மன்னிப்புக்கோறியபடி ஆரம்பித்த சிவப்பிரகாஷ் மழை பற்றிய வண்ணதாசனின் கவிதையொன்றோடு நிறைவுசெய்தார்.

தன் எழுத்துரையை வாசித்தமர்ந்தார் இரா.முருகன்.

”பாடாத பாட்டெல்லாம்” கதை தன்னை பாடாய் படுத்தியதை நினைவுகூர்ந்த நாசர், அவதாரம் படத்தில் அதை பயன்படுத்தியதற்க்கு வண்ணதாசனுக்கு நன்றி தெரிவித்தார் ( இப்பவாவது நன்றி சொன்னதுக்கு நாம சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்).

வழக்கம்போல கதைசொல்லியாய் பவா,அருமையான பேச்சில் தனக்கும் வண்ணதாசனுக்குமான உறவை மிக அழகாய் விவரித்தார்.

மருத்துவர். கு.சிவராமனின் எதார்த்த பேச்சு, எந்த குறிப்பும் இல்லாமல் இலகுவாக எல்லோரையும் கவர்ந்த பேச்சு.

இறுதி வாழ்த்துரை ஜெமோ…

H.S.சிவப்பிரகாஷை காலபைரவராக சித்தரித்து, பிற விருந்தினர்களை பற்றியும் குறிப்பிட்ட பிறகு வண்ணதாசனைத் தொட்டார். சுருக்கமான, ஆழமான பேச்சு. மின்மினி பூச்சுகள் மொத்தமாய் கிளம்பி உருவாக்கும் வெளிச்ச வெள்ளத்தில் விரியும் காட்டை விவரித்தபடி “மின்மினித்தீ” என முத்தாய்ப்பாய் வாழ்த்தியமர்ந்தார்.

இறுதியாக வண்ணதாசனின் ஏற்ப்புரை.

ஆர்ப்பாட்டமில்லாத, சற்றே சோகம்கவிழ்ந்த ஆரம்ம பேச்சு,சற்றே இலகுவாகிறார். சாகித்ய அகாடமி விருதின் தொடர்ச்சியாய் தன்மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சக்கூற்றுகளிலிருந்து தன்னை வெளியேற்றிக்கொள்ள விஷ்ணுபுர விருதுவிழா துணைநின்றதாய்

நெகிழ்சியோடு குறிப்பிட்டார் அவரது படைப்புகளைப்போலவே சட்டென்று முடிந்துவிட்டதாய் தோன்றவைத்த பேச்சு…..கரவொலிகள் அடங்க நீண்ட நேரமாயிற்று. விழிகளினோரம் கண்ணீருடன் இருகரம் கூப்பியபடி எழுந்தமர்கிறேன் நான்.

நாற்காலிகள் நகரும் சத்தம்,கேமிராக்களின் பளிச் வெளிச்சம், புரட்டப்படும் புத்தகங்களின் சரசரப்பு….

திடீரென சூழும் வெறுமை, ஒரு தியான நிலையிலிருந்து சராசரி மாலை நேரத்துக்கு ராட்டின சுற்றலாய் கீழிறங்கும் மனோநிலை. IRCTC பிரிண்ட்அவுட்டுகளையும்,REDBUS மெசேஜ்களையும் வெறித்தபடி நிலைகொள்ளாமல்
இங்குமங்கும் அலைபாயும் நண்பர்கள்,.

”10 மணிக்கு பஸ்” என்றபடி விடைபெறுகிறார் பாவண்ணன். “போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாடா”. கைத்தடியை கவனமாய் ஊன்றியபடி கடந்துசெல்லும் பாட்டையாவை பார்த்து மௌனமாய் தலையசைக்கிறேன். மௌனத்தை கலைக்க விரும்பாமல் கை அசைத்து விடைபெறுகிறார் நண்பர் முரளி சுந்தரம்.

மேடைப்படிகளில் மெதுவாய் ஏறுகிறேன் நான்.

லாடம் போன்ற வரிசை வண்ணதாசனை நோக்கி மெதுவாய் நகர்கிறது. என்முறை வர அவரது கைகளை அழுந்த பற்றிக்கொள்கிறேன். கண்ணாடி வழியே கண்களை ஊடுருவுகிறார். காலை உரையாடலில் பேசியவற்றை நினைவுகூறுகிறார். கைகளை இன்னும் அழுந்தப்பற்றி விடைபெறுகிறேன்.

“சார், நம்ம நண்பர் ஒருத்தர் மலைவாழைப்பழம் கொண்டுவந்திருக்கிறார்” என்றபடியே பழங்கள் நிரம்பிய காதிதப்பையை வண்ணதாசனிடம் நீட்டுகிறார் பவா செல்லதுரை.

“என்ன, செம்பகப்பூ வாசமடிக்கி……”

அருகிலிருக்கும் அனைவரும் காதிதப்பையினுள் பார்வையை செலுத்துகிறோம்…..

“அது………………….. நா தலயில வச்சிருக்கேன் சார்………..” சற்றே வெக்கத்தோடு புன்னகைத்தபடி கையெழுத்துக்காக புத்தகத்தை நீட்டுகிறார் வாசகியொருவர்.

”நீங்கள் கல்யாணியை தொடுங்கள். நான் கல்யாணியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்”. இடதுகை விரல்களால் மைக்கின் அடிப்பகுதியை திருகியபடியே காலையமர்வில் வண்ணதாசன் பேசியது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த செம்பகப்பூவின் வாசனை திருநெல்வேலியின் பெருமாள்புரத்துக்கு இந்நேரம் சென்றடைந்து கல்யாணிக்காக காத்துக்கொண்டிருக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்

$
0
0

photo

விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றி நண்பர் சிவமணியன் என்னும் சிவக்குமார் எழுதும் பதிவு. முதல்நாள் நிகழ்வைப்பற்றி விரிவாக பதிவுசெய்திருக்கிறார். அனேககமாக பேசப்பட்ட அனைத்தையும்.

 

சிவமணியன் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வுகள் பதிவு. நாள் ஒன்று

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழா-பகடி குசும்பன்,

$
0
0

துபாயில் வசிக்கும் நண்பர் சரவணன் எனும் குசும்பனின் பகடிப்பதிவுகள்.

 

1234567891011

முந்தைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 8 யோகேஸ்வரன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 10 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு-11 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 12

உரைகள்

இரா.முருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

புகைப்படங்கள்

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

=============================================================

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

============================================================

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன்- கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

வண்ணதாசன்- குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

வண்ணதாசன்- வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

வண்ணதாசன்- சிவசக்தி நடனம் கடலூர் சீனு

==============================================================================

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 5

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71

$
0
0

[ 16 ]

காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சுபோட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே?” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை?” என்றான் பைலன்.

அரணிக்கட்டை தன் கையில் இல்லை என்பதை அப்போதுதான் உக்ரன் உணர்ந்தான். “என் அரணிக்கட்டை…… என் அரணிக்கட்டை…” என்று கைகளை உதறியபடி அழத்தொடங்கினான். “அஞ்சவேண்டாம், இதோ எடுத்துத்தருகிறேன்” என்றான் ஜைமினி. “என் அரணிக்கட்டை எங்கே?” என்று உக்ரன் அழுதபடி கால்களால் தரையை உதைத்தான். அரணிக்கட்டையை குடிலெங்கும் தேடினார்கள். “நாய் தோண்டி வெளியே போடுவதுபோல மூட்டையை குதறிவிட்டார்” என்றான் ஜைமினி. “இதென்ன புதியகுழப்பம்? எங்குவைத்தீர், சூதரே?” என்றான் சுமந்து.

“நீங்கள் என் அரணிக்கட்டையை திருடிவிட்டீர்கள்” என்று கண்ணீருடன் கைசுட்டி உக்ரன் சொன்னான். “நான் ஊர்த்தலைவரிடம் சொல்வேன்… அவர் உங்களை அடிப்பார்.” வைசம்பாயனன் “அவர் ஏதேனும் மூட்டைக்குள்தான் செருகியிருப்பார். அவிழ்த்துப்பாருங்கள்” என்றான். “மீண்டும் நான்கு மூட்டைகளையும் அவிழ்ப்பதா?” என சுமந்து சலித்துக்கொண்டான். “என் அரணிக்கட்டை!” என உக்ரன் வீரிட்டான். “செவி ரீங்கரிக்கிறது… ஏதாவது செய்யுங்கள். இனி இந்தக்குரலைக் கேட்டால் என் காது உடைந்துவிடும்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி ஒவ்வொரு மூட்டையாக பார்த்தபோது சுமந்துவின் மூட்டைக்குள் அது இருந்தது.

“நீ என் அரணிக்கட்டையை திருடினாய்… நீ கள்வன்” என்றான் உக்ரன். “சரி, இதோ வைத்துக்கொள்ளுங்கள்” என்றான் சுமந்து. அதை வாங்கி மார்போடணைத்தபடி இமைமயிர் ஒட்டியிருக்கும் கன்னங்களுடன் சுமந்துவை சீற்றத்துடன் நோக்கிய உக்ரன் அவன் கண்களை சந்தித்ததும் உதட்டைப்பிதுக்கி பழிப்பு காட்டினான். “அனைத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் அல்லவா?” என்றான் வைசம்பாயனன். அவன் போ என தலையசைத்தான். “அப்படியே விட்டுவிடுங்கள். அவரிடம் பேசவேண்டாம்…”

அவர்கள் மீண்டும் பணிகளில் விசைகொள்ள “வைதிகரே, இதை எங்கே வைப்பது?” என்று உக்ரன் மெல்லியகுரலில் கேட்டான். மறுமொழி சொல்லவேண்டாமென விழிகளால் பைலன் சொல்ல எவரும் அதை கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அங்குமிங்கும் செல்வதனூடாக நடந்த உக்ரன் “அந்தணரே, இதை எந்த மூட்டையில் வைப்பது?” என்றான். பைலனைத் தொட்டு “இதை உங்கள் மூட்டையில் வைக்கலாமே” என்றான். அவன் ஒன்றும் சொல்லாதது கண்டு வைசம்பாயனனிடம் “இதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள், அந்தணரே” என கெஞ்சும் குரலில் சொன்னான்.

வைசம்பாயனன் சிரித்துவிட்டான். “கொடுங்கள்… ஆனால் நான் கொடுக்கும்வரை இதை கேட்கக்கூடாது” என்றான். “இல்லை, நான் முழவை மட்டும்… ஆ என் முழவு! என் முழவு!” என உக்ரன் கூவினான். “என் முழவை காணவில்லை…” பைலன் “முழவு உங்கள் தந்தையிடமிருக்கும்… சென்று எடுத்துவாருங்கள்” என்றான். உக்ரன் “என் முழவு” என்றபடி வெளியே ஓடினான். அதை நோக்கிவிட்டு புன்னகையுடன் திரும்பி “இவரையும் கூட்டிச்செல்லப்போகிறோமா என்ன?” என்றான் பைலன். “அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. “அவர் நம்முடன் அவரது தந்தையும் தாயும் வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்…” என்று ஜைமினி சொன்னான்.

முழவுடன் பாய்ந்து உள்ளே வந்த உக்ரன் மூச்சிரைத்தபடி “என் முழவு… இதில் காற்று இருக்கிறது” என்றான். “அரணிக்கட்டையில் அனல். இருபெரும் பூதங்களையும் இரு கைகளாக கொண்டிருக்கிறார்” என்றான் பைலன். அதை வாங்கி தன் மூட்டையில் வைத்த ஜைமினி “இனிமேல் கேட்கக்கூடாது… இது இங்கேதான் இருக்கும்” என்றான். “நான் எப்படி பாடுவது?” என்று உக்ரன் கேட்டான். “பாட்டு வரும்போது கேளுங்கள் சூதரே, எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் கவலையுடன் “எனக்கு இப்போது பாட்டு வருகிறதே” என்றான். “இவருக்கு சிறுநீரும் பாட்டும் ஒன்று. வந்துகொண்டே இருக்கும்” என்றான் பைலன்.

“பேசாமல் இரும், சூதரே… எங்களுக்கு பணிகள் உள்ளன” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் பைலனைத் தொட்டு “அந்தணரே, என்னுடைய அரணிக்கட்டையை எடுத்துக்கொடுங்கள்” என்றான். “பிடித்து வெளியே போட்டுவிடுவேன், தெரிகிறதா?” என பைலன் அதட்ட அவனை விழித்துநோக்கியபின் “நீ பன்றி” என்றான் உக்ரன். “நீர் எலிக்குஞ்சு…” என்றான் பைலன். “பிடித்து எலிவளைக்குள் போட்டுவிடுவேன்.” உக்ரன் ஆர்வம் கொண்டு “எலிவளைக்குள்ளா?” என்றான். நெருங்கிவந்து “உள்ளே என்ன இருக்கும்?” என்றான். “அய்யோ, ஜைமின்யரே இவரை கொஞ்சம் அப்பால் கொண்டுசெல்லமுடியுமா?” என்றான் பைலன் தலையில் அடித்துக்கொண்டு.

“எலிவளைக்குள் பூனை நுழையுமா?” பைலன் “இதற்குமேல் என்னால் தாளமுடியாது” என்றான். “எலிவளைக்குள் நான் போவேன்.” ஜைமினி “நான் உங்களை எலிவளைக்குள் கொண்டுசெல்கிறேன் சூதரே, வருக!” என்று தூக்கிக்கொண்டுசென்றான். “அப்பாடா… இது என்ன வார்ப்பு என்று எனக்கு பிடிகிடைக்கவே இல்லை” என்றான் பைலன். “கல்வி ஞானம் அனைத்தையும் தெய்வங்கள் இப்படி அவ்வப்போது கேலிசெய்வதுண்டு” என்றான் சுமந்து. “இது கொடுமையான கேலி. ஞானம் என்பது குரங்குக்கு வால் என கூடவே பிறந்து தன்விருப்பப்படி செயல்படும் என்றால்…” என்றான் பைலன்.

சண்டன் குடில்வாயிலில் வந்து நின்று “ஒருங்கிவிட்டீர்களா?” என்றான். “ஆம், கிளம்பிக்கொண்டிருக்கிறோம்” என்றான் பைலன். “ஜைமினியர் எங்கே?” என்று சண்டன் கேட்டான். “அவர் சூதமைந்தரை கொண்டுவிட்டுவிட்டு வரச்சென்றிருக்கிறார். இங்கே அவரால் எதையுமே செய்யமுடியாத நிலைமை” என்று பைலன் சொன்னான். “அவரும் நம்முடன் வரவிருப்பதாக எண்ணுகிறார்” என்றான் சுமந்து. “அவனும் வரவேண்டியதுதானே? வேறெங்கே செல்வது?” என்றான் சண்டன்.

“அவரா?” என்று சுமந்து பைலனைப் பார்த்தான். “அவருடைய பெற்றோர் வருகிறார்களா?” சண்டன் “இல்லை, சுதைக்கு கருதாழ்ந்துவிட்டது. பத்துநாட்களுக்குள் குழவியிறங்கலாம். இங்கேயே தங்கி மகவுக்கு விழிதெளிந்தபின் கிளம்புவதுதான் அவர்களின் எண்ணம்” என்றான். சுமந்து “அப்படியென்றால்…?” என்றான். “நீங்கள் எண்ணுவது புரிகிறது, அந்தணர்களே உக்ரன் நம்முடன் மட்டுமே வரமுடியும். அவன் தேடியடையவேண்டியது ஆசிரியரை. தந்தையுடன் இருக்கும் அகவை முடிந்துவிட்டது.”

வைசம்பாயனன் “ஐந்தாண்டுகள் வரை தந்தையே ஆசிரியன் என்பார்கள்” என்றான். “அது பிறருக்கு. இவன் அனலென்றே எழுந்தவன்” என்றான் சண்டன். சுமந்து “அது உண்மை. ஆனால் எப்போது அனல் எப்போது பைதல் என்று சொல்லமுடியவில்லை. அதுதான் சிக்கலே” என்றான். “பார்ப்போம்” என்று சொன்னபின் சண்டன் “நீங்கள் சொன்னபின்னர்தான் நினைவுகூர்கிறேன். அவன் மட்டும் நம்முடன் வருகிறான் என்பதை அவனிடம் நாம் இன்னமும் சொல்லவில்லை. நேற்றுமுன்னாளே அவன் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன்.”

சுமந்து “அன்னைக்கு உவப்புதானா?” என்றான். “அன்னை அவன்மேல் கொண்டிருக்கும் விலக்கம் வியப்பூட்டுவது. சிம்மத்தைப்பெற்ற அன்னைமானின் மருட்சி அது. அவளால் அவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாத எதையும்போல அவளுக்கு அவன் அச்சமூட்டுகிறான். அச்சம் விலக்கமாகி விலக்கம் வெறுப்பாகிவிட்டது.” சுமந்து “நாம் விலகிச்செல்லும் ஒவ்வொன்றின்மேலும் நாம் கொள்ளும் வெறுப்பு வியப்பூட்டுவது” என்றான். “வெறுப்பை உருவாக்கியே விலகிச்செல்கிறோம்” என்றான் பைலன்.

“அவள் நாம் அவனை எவ்வளவு முந்தி அழைத்துச்செல்கிறோமோ அவ்வளவு நன்று என நினைக்கிறாள். அவர்களின் சீர்வாழ்வொழுக்கில் அவன் பெரிய இடர். அவன் விலகிச்சென்றபின் அவள் அறிந்த வாழ்க்கையின் இனிமைகளில் திளைக்க முடியும்” என்றான் சண்டன். ஜைமினி உள்ளே வந்து “ஒரே அழுகை… அவருடைய முழவு அங்குதான் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு நம்முடன் வருவேன் என்று சொல்கிறார்” என்றான். பின்னால் ஓடிவந்து குடிசைக்குள் புகுந்த உக்ரன் “நானும் வருவேன் நானும் வருவேன் நானும் வருவேன்” என உச்சகட்ட கீச்சுக்குரலில் கூவினான். “ஷுத்ரசிரவஸ் என்று பெயரிட்டிருக்கவேண்டும். என்ன ஒரு குரல்” என்றான் பைலன் செவிகளில் விரல் நுழைத்து.

உக்ரனிடம் கைசுட்டி “சத்தம் போடாதே! நீயும் வருகிறாய்” என்றான் சண்டன். “நானுமா?” என அவன் விழிவிரிய கேட்டான். “ஆம், உன் மூட்டையை எடுத்துக்கொள். நாம் கிளம்புகிறோம்.” அவன் மெல்ல ஐயம் கொண்டு “தந்தை?” என்றான். “அவர் வரவில்லை.” அவன் புருவம்சுருக்கி “அன்னை?” என்றான். “அவளும் வரமுடியாது.” அவன் தலைசரித்து சற்றுநேரம் சிந்தனைசெய்தபின் “அன்னையின் உள்ளே இருக்கும் குழவி?” என்றான். “அதை எப்படி கொண்டுசெல்லமுடியும்?”

உக்ரன் பெருமூச்சு விட்டான். பின்னர் பின்னகர்ந்து சுவருடன் முதுகைச்சேர்த்தபின் “நானும் வரமாட்டேன்” என்றான். “குருவைத்தேடி போகவேண்டாமா?” என்றான் ஜைமினி. “வேண்டாம்… நான் வரமாட்டேன்” என்று கூவியபடி அவன் திரும்பி வெளியே ஓடினான். “வருவான். தகுந்ததருணங்களில் அவனுள் இருந்து அந்த வரலாற்றுமானுடன் வெளியே எழுவான்… நாம் கிளம்புவோம்” என்றான் சண்டன்.

அவர்கள் மூட்டைகளுடன் வெளியே வந்தபோது ஊர்த்தலைவரும் குடிமூத்தவர்களும் பிறரும் வெளியே காத்து நின்றிருந்தனர். ஊர்த்தலைவர் “எங்கள் சிறுகுடியில் இனி சொல்பெருகும், அந்தணர்களே. மகாசூதர் காலடிபட்ட நிலம் இது என எங்கள் குலங்கள் பெருமிதம்கொள்ளும்” என்றான். குடிமூத்தார் ஒருவர் “உங்கள் எழுத்தாணி தொட்ட எங்கள் மைந்தர்நாவுகளில் கலைமகள் வாழ்வாள். இந்த மலைக்குடி உங்களால் வாழ்த்தப்பட்டது” என்றார். பைலன் “எங்கள் உடலில் இந்த நிலத்தின் உப்பு கலந்துவிட்டது, குடியினரே. அது எப்போதும் அங்கிருக்கும்” என்றான்.

குடிப்பெண்டிர் அன்னம், நீர், மலர், விளக்கு, ஆடி எனும் ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலங்களுடன் இருநிரைகளாக நின்றிருந்தனர். குலத்தலைவர் குடுவைகளிலிருந்து மஞ்சள்நீரை எடுத்து அவர்களின் கால்களை கழுவினார். மலர், கனி, ஆடை, நறுமணம், பொன் என்னும் ஐந்து மங்கலங்கள் பரப்பிய தாலங்களை எடுத்து அந்தணர் நால்வருக்கும் அளித்தார். சண்டனுக்கு ஆடையும் நறுமணமும் பொன்னும் கொண்ட தாலத்தை அளித்து வணங்கினார். பெண்களின் குரவையோசையும் ஆண்களின் வாழ்த்தொலிகளும் சூழ எழுந்தன.

அவர்கள் கிளம்பிச்செல்லும்போது பைலன் திரும்பிப்பார்த்து “எங்கே சூதர்?” என்றான். “அம்மாவின் ஆடைக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. கூட்டமாக அவர்களை குடியினர் ஊர்ச்சுற்றுக்கு அப்பால் கொண்டுசென்றனர். பைலன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளை சந்தித்ததும் சுதையின் சேலைக்குள் இருந்து நோக்கிக்கொண்டிருந்த உக்ரன் முகத்தை மூடிக்கொண்டான். அவன் புன்னகையுடன் “நாம் அழைக்கவேண்டுமென எதிர்பார்க்கிறாரோ?” என்றான். “சண்டர் அழைப்பார் என நினைக்கிறார் போலும்” என்றான் சுமந்து.

அவர்கள் சற்றுதொலைவுக்குச் சென்றதும் “பெரியதந்தையே” என்று அழைத்தபடி உக்ரன் ஓடி அவர்களுக்குப்பின்னால் வந்தான். அனைவரும் சிரித்தபடி திரும்பிப்பார்த்தனர். சண்டன் “வருக, மைந்தா!” என்றான். பாதி வழி வந்ததும் நின்று “என் முழவு…” என்றபடி திரும்ப ஓடினான். “முழவு இங்கே இருக்கிறது” என்றான் சண்டன். “அம்மா?” என்றான் உக்ரன். “நீ மட்டும்தான் வருகிறாய்” என்றான் சண்டன். “அம்மா வரவேண்டும்” என்றான் உக்ரன். சண்டன் “நீ மட்டும்தான் வருகிறாய்… வா!” என்றபடி திரும்ப நடந்தான்.

உக்ரன் விம்மி அழுதபடி “அம்மாவும் வரவேண்டும்” என்று முனகிக்கொண்டு வந்தான். அவர்களை நெருங்கியதும் ஜைமினி அவனை தோளில் தூக்கிக்கொண்டான். “அம்மா அம்மா” என உக்ரன் கைநீட்டி கூவி அழுதான். சுதை திரும்பி உள்ளே சென்றுவிட்டாள். “அம்மா அம்மா” என்று அவன் கைகளை உதறி அழுதான். “இறக்கிவிடுங்கள், ஜைமின்யரே” என்றான் சண்டன். ஜைமினி இறக்கிவிட்டதும் உக்ரன் சுதைசென்றவழியை நோக்கியபடி நின்றான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சிறியகரிய நெஞ்சு ஏறியமைந்தது.

“இளையவர். அவருக்கு இன்னமும் அன்னையைப்பிரியும் வயதாகவில்லை” என்றான் வைசம்பாயனன். “உறவுகளிலிருந்து வெட்டிக்கொள்ளாமல் அறிவுப்பயணம் இல்லை. அது எப்போதேனும் நிகழ்ந்தே ஆகவேண்டும்” என்றான் சண்டன். உக்ரன் அவர்களுக்குப் பின்னால் மெல்ல நடந்துவந்தான். புல்வெளியைக் கடந்து அவர்கள் மலைப்பாதையை அடைந்தனர். உக்ரன் “அந்தணரே, என்னை தூக்கிக்கொள்ளுங்கள்” என்றான். ஜைமினி அவனை தூக்கிக்கொண்டான். அவன் தோளில் முகம்புதைத்து கண்ணீர்விட்டபடி உக்ரன் வந்தான்.

“மகாசூதரே” என்று ஜைமினி மெல்ல அழைத்தான். “வருந்துகிறீரா?” உக்ரன் “ஆம்” என்றான். “அன்னையிடம் திரும்ப விரும்புகிறீர்களா?” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் உக்ரன். “நான் உங்களை நாளையே திரும்ப கொண்டுசென்று விட்டுவிடவா?” உக்ரன் மறுமொழி சொல்லவில்லை. “சொல்லுங்கள், செல்கிறீர்களா?” உக்ரன் பெருமூச்சுவிட்டான். “உங்கள் கண்ணீர் என்னை வருத்துகிறது, சூதரே.” உக்ரன் “நான் திரும்பிச் செல்லமுடியாது” என்றான். “ஏன்?” என்றான் ஜைமினி. “அன்னை என்னை வெறுக்கிறாள்” என்றான் உக்ரன்.

ஜைமினி சற்று அயர்ந்துபோனான். “ஏன் அப்படி சொல்கிறீர்கள்? அவர் உங்கள் அன்னையல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அன்னையானாலும் விருப்பும் வெறுப்பும் உண்டு.” இது யார் சொல்வது என ஜைமினி வியந்தான். திருப்பி குழந்தையின் முகத்தை பார்க்கவேண்டுமென விழைந்தான். “ஆனால் அவர் உங்கள் மேல் பெரும்பற்று கொண்டிருக்கவேண்டும் அல்லவா?” என்றான் ஜைமினி. மறுமொழிக்காக காத்தபோது அவன் நெஞ்சு அறைந்தது. “அறிவுடையோர் பாமரரை வெறுக்கிறார்கள்” என்று உக்ரன் சொன்னான். “ஆனால் பாமரர் அறிவுடையோரை மும்மடங்கு வெறுக்கிறார்கள்.”

ஜைமினி மெல்ல உடல்தளர்ந்தான். தோளிலிருந்த சிறுமைந்தனின் உடல் பலமடங்கு எடைகொண்டதுபோல் தோன்றியது. “ஏனென்றால், அறிவுடையோர் தங்கள் விருப்பப்படி பாமரர் வாழ்வை ஆட்டிவைக்கிறார்கள்” என்றான் உக்ரன். “அப்படியென்றால் ஏன் பாமரரை அறிவுடையோர் அஞ்சுகிறார்கள்?” என்றான் ஜைமினி. “பெருந்திரளாக ஆகும்போது பாமரர் மாபெரும் வல்லமை கொண்டவர்கள். ஒற்றைநிலைபாடு கொள்கையில் அவர்கள் அறிவுடையோரை பேரலை சிறுதுரும்பை என அள்ளி அடித்துச்செல்கிறார்கள்.”

ஜைமினி பெருமூச்சுவிட்டான். “இதை எங்கே அறிந்தீர்கள்?” என்றான். “குருகுலோதயம் என்னும் சிறுநூலில் அரசு சூழ்தல் பற்றி வரும் பகுதிகளை ஒரு முதுசூதர் பாடினார். நான் அதை கேட்டபோது இப்படி எண்ணிக்கொண்டேன்” என்றான் உக்ரன். “அதை யாத்தவர் யார்?” என்றான் ஜைமினி. “அவர் குருகுலத்து மூத்தவரான கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர்” என்றான் உக்ரன். ஜைமினி “அவர் மறைந்துவிட்டார் என்கிறார்களே?” என்றான். “அவர் மறையமுடியாது. அவருக்காகவே இங்கே அரசரும் முனிவரும் அந்தணரும் வீரரும் மக்களும் இணைந்து இவையனைத்தையும் நடிக்கிறார்கள். அவர் தெய்வங்களின் ஆடலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.”

ஜைமினி “அவர் பெயரில் வந்துகொண்டிருக்கும் பாடல்கள் சூதர்களே பாடுபவை என்கிறார்கள்” என்றான். “இல்லை, அவற்றை பிறர் பாடமுடியாது” என்றான் உக்ரன். “நீங்கள் கூடவா?” என்றான் ஜைமினி. சிலகணங்களுக்குப்பின் “நான் பாடலாம்” என்றான் உக்ரன். ஜைமினி மீண்டும் பெருமூச்சுவிட்டு அவன் முதுகை கையால் வருடி “ஆம் மகாசூதரே, தாங்கள் மட்டுமே பாடமுடியும்” என்றான்.

[ 17 ]

அன்று உச்சிப்பொழுதில் அவர்கள் சுகவாணி என்னும் சிறிய சோலையை சென்றடைந்தனர். நெடுந்தொலைவிலேயே அங்கே ஒலித்த பறவைக்குரல்களை கேட்டார்கள். களைத்துப்போயிருந்த சுமந்து “நாம் அங்கே ஒரு நல்ல சோலையை காணமுடியுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அங்கே முன்னர் தண்டக முனிவரின் குருநிலை இருந்தது. இன்றும் அவருடைய மாணவர்கள் அங்கே வாழ்கிறார்கள். இனிய சுனை ஒன்றும் சுற்றும் அழகிய மலர்மரங்களும் உள்ளன” என்றான் சண்டன்.

பைலனின் தோளில் இருந்த உக்ரன் துயில்கொண்டிருந்தான். அவன் எச்சில் பைலனின் தோளில் வழிந்தது. “தூங்கிவிட்டாரா?” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் பைலன். “நான் வைத்துக்கொள்ளவா?” என்றான் ஜைமினி. “வேண்டாம்… எடையே இல்லாமலிருக்கிறார்” என்றான் பைலன். சுமந்து “நாம் எவ்வளவு விரைவாக நீர் அருந்துகிறோமோ அவ்வளவு நன்று” என்றான். “ஏன்?” என்றான் வைசம்பாயனன். “எனக்கு நீர்விடாய் இருக்கிறது, அதனால்தான்” என்றான் சுமந்து. வைசம்பாயனன் சினந்துநோக்க பைலன் சிரித்தான்.

அவர்கள் சுகவாணிக்குள் நுழைந்தபோது சிறிய நீரோடை ஒன்று குறுக்காக கடக்கக் கண்டனர். தெளிந்த நீர் இன்மையின் ஒளி என அலைபாய ஓடிக்கொண்டிருந்தது. சுமந்து நீர் அள்ளி அருந்தினான். பிறரும் நீரிலிறங்க பைலன் மெல்ல உக்ரனை தரையில் படுக்கவைத்தான். விழித்துக்கொண்ட உக்ரன் “நான் நான்!” என்றான். “என்ன?” என்றான் பைலன். “நான்தான் தின்பேன்.” பைலன் சிரித்து “எதை?” என்றான். “பலாப்பழம்… மிகப்பெரியது.” பைலன் “சிறியவை கனவில்கூட வருவதே இல்லைபோலும்” என்றான்.

உக்ரன் எழுந்து இறங்கி நீரை அள்ளி தலைமேல் விட்டுக்கொண்டான். “குடுமியை நனைக்கவேண்டாம்” என்று சண்டன் கூரிய குரலில் சொல்ல அவன் “சரி” என கரையில் ஏறி நின்றுகொண்டான். அப்பால் முருங்கைமரங்களாலான ஒரு காட்டுச்செறிவு தெரிந்தது. விழுந்து விழுந்து முளைத்து பசுந்தளிர்க்கற்றைகளாக அசைந்துகொண்டிருந்தது அத்தழைப்பு. “முருங்கை” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “ஆனால் காய்களே இல்லை.” சுமந்து “காய்கள் அதோ மேலே நிற்கின்றன” என்றான். “இங்கே எவரோ அன்றாடம் வந்து கீரை கொய்து செல்கிறார்கள். சேற்றுக்குள் காலடிகள் தெரிகின்றன” என்று சுமந்து சுட்டிக்காட்டினான்.

உக்ரன் “முருங்கை” என்றான். குனிந்து ஒரு சிறிய முசுக்கட்டைப் புழுவை நோக்கினான். அது சிலிர்த்த உடலுடன் மெல்ல சென்றுகொண்டிருந்தது. “அது சிறிய குட்டி… முருங்கையின் குழவி” என்றான். திரும்பி ஜைமினியிடம் “முருங்கைக்குழவி” என்றான். அவன் கண்களில் மெல்ல பாலாடையென ஓர் மங்கல்நிகழ்வதைக் கண்ட ஜைமினி மெல்ல “யார்?” என்றான். அதற்குள் அவன் சொல்வதைக் கேட்க பிறரும் அருகணைந்தனர். “முருங்கைக்குட்டி என்று ஒரு சிறுகுழவி இருந்தது முன்பு” என்றான் உக்ரன். “அது அன்னையின் கையில் பிறந்தது. விரலிடுக்குகளுக்குள் வளைந்து ஒடுங்கி வாழ்ந்தது.” அவன் கைகளை இடுக்கி அதேபோல அமர்ந்துகாட்டினான். “மிகச்சிறிய குட்டி அது.”

“அன்னை அந்தக்குட்டிக்கு பாலும் சோறும் ஊட்டி அணைத்து வைத்துக்கொள்வாள். அது அன்னையிடம் பேசிக்கொண்டே இருக்கும்.” கைகளைவிரித்து “ஒருநாள் பெரிய வேடன் ஒருவன் வந்தான். அவன் கருமையாக இருந்தான். மிகப்பெரிய மீசை. அவன் கண்கள் களாப்பழம் போல சிவந்தவை. அவன் அந்த முருங்கையன்னையை ஓங்கி வெட்ட முருங்கையன்னை அப்படியே கீழே விழுந்தது. அதை அந்த வேடன் கூட்டிக்கொண்டுவந்த பெரிய எருமை மேய்ந்தது.” சண்டன் கூர்விழிகளுடன் அருகணைந்து “எருமையா?” என்றான். “ஆம், அது அந்த முருங்கையன்னையை மேய்ந்தது” என்றான்.

“அந்த வேடன் முருங்கையன்னையின் தடியை வெட்டி சிறுதுண்டுகளாக ஆக்கி கட்டி கையில் எடுத்துக்கொண்டு சென்றான். அதிலிருந்த முருங்கைக்குட்டி அப்படியே விதை போல மண்ணில் உதிர்ந்தது. அதற்கு எங்கே செல்வதென்றே தெரியவில்லை. அழுதுகொண்டே இருந்தது. அதன்பின்னர் காற்றுசெல்லும் திசையிலேயே அதுவும் செல்ல ஆரம்பித்தது. அதற்கு யாருமே இல்லை அல்லவா?” என்றான் உக்ரன். “ஆம்” என்றான் ஜைமினி. “அந்த முருங்கைக்குட்டி அழுதுகொண்டே சென்றது. செல்லும் வழியில் இலைகளைத் தின்றது. தின்னும்போதும் அது அழுதது.”

“அது என்ன ஆயிற்று?” என்றான் ஜைமினி. “அந்த முருங்கைக்குட்டி காட்டிலேயே வாழ்ந்தது. ஒவ்வொருநாளும் இரவில் அது அன்னையை நினைத்து அழுதுகொண்டே இருந்தது. ஒருநாள் அது மேய்வதற்காக செல்லும்போது அன்னையின் மணம் வருவதை அறிந்தது. அன்னை அன்னை என்று கூவியபடி அது முடியைச் சிலிர்த்தபடி ஓடியது. ஓடிஓடி…” அவன் கைகளை தரையில் ஊன்றி புழுபோல தவழ்ந்து காட்டினான். மூச்சிரைக்க எழுந்து “அது ஒரு பெரிய வயலை சென்றடைந்தது. அங்கே…” அவன் கைகளைத் தூக்கி சுட்டுவிரல் அசையாமலிருக்க கண்கள் செருக புன்னகைத்தான்.

ஜைமினி நெகிழ்ந்து அவனை அள்ளி தன் கையில் எடுத்துக்கொண்டான். “அங்கே அவன் என்ன கண்டான்?” என்றான் பைலன். “அந்த வேடன் முருங்கையன்னையை துண்டுதுண்டாக வெட்டி நட்டிருந்தான். அன்னை அத்தனை கணுக்களிலும் முளைத்து பல்லாயிரம் மரங்களாக வளர்ந்து ஒரு பெரிய காடாக ஆகிவிட்டிருந்தாள். முருங்கைக்குட்டி அந்தக்காட்டுக்குள் சென்று குடியேறியது.” அவன் கைகளை விரித்து “எங்கே பார்த்தாலும் அன்னை. நூறு ஆயிரம் இலக்கம் அன்னையர். அன்னைக்காடு… அது அன்னைக்காட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.”

அவன் பால்பற்கள் தெரிய சிரித்தான். ஜைமினி உளம் எழ அவனைத் தழுவி புன்மயிர் குடுமியை முத்தமிட்டான். “என் அரணிக்கட்டை எங்கே?” என்றான் உக்ரன். “ஆரம்பித்துவிட்டார்” என்றான் பைலன். சுமந்து சிரித்தான். ஐயத்துடன் சுமந்துவை நோக்கி “இவர் என் அரணிக்கட்டையை எடுத்துவிட்டார்” என்றான் உக்ரன். “இல்லை இளஞ்சூதரே, உள்ளே இருக்கிறது” என்றான் ஜைமினி. “எங்கே?” என்றபடி அவன் சென்று இறக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை பிரிக்கத் தொடங்கினான்.

“இதென்ன தொடர்பே இல்லாமல் ஒரு குழந்தைக்கதை?” என்றான் வைசம்பாயனன். “அது இப்போது குழந்தையாக இருக்கிறது” என்றான் சண்டன். பைலன் “ஆனால் அக்கதையினூடாக வெளியே வந்துவிட்டார். இனிமேல் திரும்ப மாட்டார்” என்றான். “ஆம்” என்றான் சண்டன். “ஆனால்…” என்றபின் “சுதை, பாவம்” என்றான். “என்ன?” என்றான் ஜைமினி. “அவன் சொன்னதை கேட்டீர்கள் அல்லவா?” அவர்கள் அதை ஒரு குளிர்காற்றென ஒருங்கே உணர்ந்தனர். “ஈன்றுமீளமாட்டாளா?” என்றான் பைலன். “அறியேன். ஆனால் அவன் உணர்கொம்புகள் கொண்ட உயிர்” என்றான் சண்டன்.

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள்-10

$
0
0

கோவையில் 24,மற்றும் 25 சனி ஞாயிறு இரு நாள்களும் அந்த மழையில் நனைந்தேன். முதல்நாள் நாஞ்சில் நாடன், பாரதி மணி, இரா. முருகன், பவா. செல்லதுரை, கன்னட எழுத்தாளர் ஹெ.எச். சிவப்பிரகாஷ் ஆகியோர் நெறிப்படுத்திய அமர்வுகளும், மறுநாள் சு.வேணுகோபால், வண்ணதாசன், ஆகியோரின் அமர்வுகளும் நடைபெற்றன.

இரண்டாம் நாள் இறுதி அமர்வாக சுப்ரபாரதிமணியன், நாஞ்சில் நாடன், தேவதேவன், பாவண்ணன், ஆகியோரை முன்னிலைப்படுத்திய நிகழ்வில் எழுத்தாளன் ஏன் எழுதுகிறான் என்பதும் தற்கால இலக்கியப் போக்குகள் என்பதும் பேசுபொருள்களாக இருந்தன. 

ஓர் இலக்கிய வினாடிவினாவும் நடத்தப்பட்டு சுமார் 30000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வெற்றி பெற்றோர்க்கு வழங்கப்பட்டன. எல்லா அமர்வுகளும் காலத்தில் தொடங்கிக் காலத்தில் முடிக்கப்பட்டது குறுக்கப்பட்டது. ஒவ்வொரு அமர்விலும் சுமார் 300 சுவைஞர்கள் கலந்து கொண்டதோடு எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி ஆக்க பூர்வமாக விவாதித்தது அவர்களின் வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் அனைவருக்கும் தங்கும் இட வசதி, மற்றும் உணவு ஏற்பாடுகளை விஷ்ணுபுரம் வட்டமே செய்திருந்தது.

இரண்டாம் நாள் மாலை விழாவில் வண்ணதாசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் விஷ்ணுபுரம் விருதாக வழங்கப்பட்டது. அவரைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று செல்வேந்திரன் இயக்கியதில் ஒரு பகுதி காண்பிக்கப்பட்டது. வண்ணதாசனைப் பற்றிப் பலரும் எழுதிய ஒரு தொகுப்பு நூல் ஒன்றும் “தாமிராபரணம்” எனும் பெயரில் வெளியிடப்பட்டது. அதில் என் கட்டுரையும் உள்ளது.

விழாவை இரண்டு மணிநேரத்தில் நடத்தி முடித்தது சாதனையே! நடிகர் நாசர் உட்பட அனைத்து வாழ்த்துரையாளர்களும் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் உரையை முடித்துக் கொண்டனர். விழா அரங்கம் வந்திருந்த இலக்கிய விரும்பிகளால் நிரம்பியதால் அரங்கத்திற்க்குக் கீழேயும் காணொளி வசதி செய்யப்பட்டிருந்தது. சுமார் 2000 பேர்கள் வந்திருக்கலாம்.

ஓர் எழுத்தாளரை எப்படிப் பாராட்டவேண்டும் என்பதும், ஓர் இலக்கிய விருது அளிக்கும் விழாவை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் இந்த விழா மட்டுமே எடுத்துக் காட்டாகும். எந்தப் பலனையும் எதிர் நோக்காமல் 2010-லிருந்து தொடர்ந்து இவ்விருது விழாவை நடத்தும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், அது தொடங்கியதிலிருந்து வழி நடத்திச் செல்லும் ஜெயமோகனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். வளர்க அவர்தம் பணி!

வளவ துரையன்

அன்புள்ள ஜெ,

நலமுடன் பெங்களூரு வந்துவிட்டேன். தொடர் அலுவலக வேளைகளாலும், பயணங்களாலும் சற்று உடல்நல குறைவுடன் தான் சனிக்கிழமை இரவு கோவை வந்து சேர்ந்தேன். சுனில் அண்ணனின் உதவியால் தான் என்னால் அங்கு முழு நேரமும் இருக்க முடிந்தது. இந்த உடல்நல குறைவும் நல்லதிற்கு தான் என்னும் எண்ணம் கொள்ளும் அளவிற்கு நெகிழ்ச்சியான தருணம், அந்த பென்னாகரம் நண்பனின் வருகை. சனிக்கிழமை இரவு மருத்துவருடன் நடந்த கலந்துரையாடலில் பல அறியாத விஷயங்களை அறிந்து கொண்டேன்.

மறுநாள், சு.வேணுகோபால் தன் அண்ணனை பற்றி பேசிய நொடிகளிலும் சரி, வண்ணதாசன் பேசிய பல இடங்களிலும் என்னையும் மீறி ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தேன். அடுத்த அமர்வில் பாவண்ணன் பேசிய பொழுது கண்களில் நீர் திரண்டுவிட்டது. வாழ்வின் உன்னதமான நொடிகள் இவை. விருதுவிழாவில் வண்ணதாசன் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஞாபகபடுத்தி கொள்கிறேன். இன்னும் நான் கோவையிலே இருப்பதாய் உணர்கிறேன். பல அரங்குகளில் பங்கேற்காமல், விழா சிறப்பாக நடைபெறுவதற்காக செயலாற்றிய நம் நண்பர்கள் அனைவருக்கும் என் மரியாதையும், நன்றிகளும்.

ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா

 

888

அன்புள்ள ஜெ

வண்ணதாசன் ஆவணப்படத்தின் சிலகாட்சிகளை பார்த்தேன். வண்ணதாசன் என்ற ஆளுமையை அருகே இருந்து பார்க்கும்போது எனக்குத்தோன்றிய இரு விஷயங்கள் அவருடைய நெர்வஸ்நெஸும் அவருடைய அன்பான சிரிப்பும்தான். ஆவணப்படத்தில் அவருடைய கைகள் வழியாக அந்த நெர்வஸ்நெஸையும் சிரிப்பின் உற்சாகத்தையும் மாற்றி மாற்றிக் காட்டி அழகான ஒரு தொகுப்பைச் செய்திருந்தார் செல்வேந்திரன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்

செண்பகமூர்த்தி

அன்புள்ள ஜெயமோகன்

இந்தமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் [விருந்து விழாவும்கூட] என்னை மிகவும் கவர்ந்தது இளம் வாசகர்களின் பங்கேற்புதான். பலரை சிறுபையன்கள் என்றுதான் சொல்லத்தோன்றியது. அதிலும் பாரதி என்ற பையன் பங்கேற்றது மிக ஆச்சரியமானது. அற்புதமான வாசிப்பு. நல்ல மொழி. அவர்களைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கையில் இலக்கியத்தின்மீதே பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது

உணவு சுவையானதாக இருந்தது. எந்த ஓட்டல் என்று சொன்னால் நல்லது

செல்லப்பா

 

 

 

அன்புள்ள ஜெமோ ஸார்,

கவிதையை நம்ம அனுபத்தோட பொறுத்தி பாக்கணும்.. நம் அனுபவமாக இருக்கணும் என அவசியமில்லை. நாம் சந்தித்த பிற மனிதர்களின் அனுபவங்களாகக் கூட இருக்கலாம். அனுபத்தோட பொறுந்துரப்பதான் கவிதை வாசிப்பு முழுமை பெறும்” இது நீங்கள் ஊட்டி முகாமில் சொன்னது. இதிலிருந்துதான் கவிதை திறந்துகொண்டது. அன்று விஜயராகவன் ஸார், தேவதேவனின் சிறு கவிதைத் தொகுதிகளை கைபோன போக்கில் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் கிடைத்த கவிதைத் தொகுதியே நான் வாசிக்க நேர்ந்த முதல் கவிதைத் தொகுதி.

பல கவிதைகள் அர்த்தமாயின. அறிதலின் கணங்களை கடந்துகொண்டிருந்தேன். அதன் இன்பமே அலாதி. பின்பு மனுஷ்யபுத்திரனை நீராலானது தொகுதி வாசித்தேன். ரொம்பவும் ஈர்த்தது. “மனுஷ்யபுத்திரனின் ஆரம்ப காலக் கவிதைகள்” என நீங்கள் பலமுறை குறித்துச் சொல்வதுண்டு. ஆனாலும் அவரது நீராலானதும் அந்நிய நிலத்துப்பெண்ணும், கவிதை வழக்கமாய் செய்யும் காற்றில் மேலெழுப்புதலை செய்யத்தான் செய்தது. பின்பு சுகுமாரனின் கோடைக்காலக் குறிப்புகள் வாசித்தேன். பின்பு எதேச்சையாக கல்யாண்ஜி….

வண்ணதாசனும் கல்யாண்ஜியும் ஒருவரே என்பது நான்கைந்து வருடம் முன்பு நான் செவி வழி அறிந்து சேமித்துக் கொண்டது தகவல். தகுந்த நேரத்தில் இது போன்ற தகவல்களை நண்பர்கள் மத்தியில் சொல்வது மூலம் என்னை இலக்கிய லங்கோடு என நிறுவிக்கொள்ளலாம். அப்டியாப்பட்ட நண்பர்கள் எனக்கு. அவரது முகப்புத்தகக் கவிதைகளை வாசித்துவிட்டு, அவரது கவிதைத் தொகுதிகள் சில வாங்கினேன். இதில் முரண் என்னவெனில் சுகுமாரனுக்கு அடுத்த படியாக கல்யாண்ஜிக்கு தாவினதுதான்.

இருவருக்குமான வித்தியாசம் பெரியது. பாம்புகள் நிறைந்த அறையில் ஒரு கோப்பை விஷத்தை வெறித்திருந்த நான், சட்டென குளத்தங்கரையில் காதலி வரக் காத்திருக்கலானேன். மைனா இறந்து கிடப்பதாக நினைத்து வேலை மெனக்கெட்டு வந்து பார்த்துவிட்டு பிய்ந்த செருப்புதான் என தன் வழி செல்லும் மனிதர்கள், மரத்திற்கு வழிவிட்டு காம்பவுண்டு சுவற்றை இடித்தவர், காற்றினால் விசிறி சிரிக்கும் பூக்கள், மரத்திலிரங்கும் தலை கீழ் அணில், கதவு திறக்கையில் சரியும் வளையல்… எனக்கு இவ்விடத்திலேயே நிற்க வேண்டும்போலிருந்தது.

அழகு, அன்பு…இரண்டுமாக கல்யாண்ஜியின் கவிதைகள் தெரிந்தன. நேற்று பவா மேடையில் பேசிய போய்க்கொண்டிருப்பவளை முன்பு வாசித்திருக்கிறேன்… பவா ஸாரின் கோணம் புதியதாய் இருந்தது. அன்னம் ஜூடியின் வீட்டிற்கு முன் திரண்டு நிற்கும் சாக்கடை ஒன்றிருக்கும். அந்த சாக்கடைக்கு இப்பக்கமே ஆண்கள் நிற்பதாக எனக்குப் பட்டது. அன்னம் ஜூடியின் வீட்டை அடைய சாக்கடையைக் கடக்க வேண்டும். உடலளவில் கடக்கலாம், மனதளவில் ஆண் சாக்கடையில்தான் நிற்கிறான். சாக்கடையைக் கடக்காத வரை அன்னம் ஜூடியை அறிய முடியாது…இப்படியாக அக்கதையை அறிந்தேன்.

நவீன இலக்கியம் தோறும் கொட்டிக் கிடக்கும் வாழ்வின் மீதான வெறுப்பும் காழ்ப்பும் கல்யாண்ஜியிடம் இல்லை. தற்கொலைக்கு முயன்று தோற்றவன் இங்கில்லை, மாறாக ஒரு மரத்தடியில், மரமோடு மரமாய் நிற்கும் ஒருவன்தான் உள்ளான். பாம்பு ஊர்ந்து சென்ற தடமுள்ள ஒரு தகிக்கும் பாறையருகே நின்று அவனைப் பார்ப்பது எனக்கு ரொம்பவும் முக்கியமானதாகப் படுகிறது.

 

நண்பன் எனக்கு விளைவித்த ஒரு அவமானத்தின் அன்று காலை கல்யாஜியைத்தான் வாசித்திருந்தேன். அவமானத்தில் குறுகிய என்னால் துரோகத்தின் சிறு முள் உணடாக்கிய சிறு ரணத்தையும் பொறுக்க முடியவில்லை. இவர் காட்டும் மனிதர்கள் உண்மை இல்லை. அன்று அவேசமாகஅன்புள்ள கல்யாண்ஜி,” எனத் தொடங்கி கடிதம் எழுதினேன். இன்று வரை அது என் லாப்டாப்பில் உறங்குகிறது. பின் என் இலக்கிய நண்பன் ஒருவனை கல்யாண்ஜியை அவர் வீட்டுக்கே சென்று சந்திக்கலாம் என அழைத்தேன். ஆனால் அவர் எழுதிய கடைசி வார்த்தை வரை வாசித்துவிட்டுத் தான் செல்லவேண்டும். எண்ணற்ற முறை மானசீகமாக அவர் வீடு சென்று திரும்பினேன்மானசீகமாக மட்டும். கல்யாண்ஜி என்னை ஈர்த்துவிட்டிருந்தார். அவருக்கு வாசகனாகிவிட்டிருந்தேன்.

விழாவின் போது மொத்த அரங்கும் எழுந்து நின்று கைத்தட்டி, கல்யாண்ஜிக்கு விருது அளிக்கப்பட்ட போது, சுர்ர்ரென உடல் சிலிர்த்தடங்கியது. முதுகுத் தண்டிலிருந்து மேலேறிய இந்த சிலிர்ப்பலை, என் ன்னம் தொட்டேறி கீழிமைக் கடந்து கண்ணில் நீர்ப்படலமாக பரவி, கீழிமை மேல் தேங்கித் திரண்டது. நன்றியால் பொங்கினேன். மானசீகமாக பலருக்கு நன்றி சொன்னேன். தூய்மையான இக்கணத்தினூடே நவீன இலக்கியத்தால் வளர்த்தெடுக்கப் பட்ட குரூரமான ஒருவன் உள்ளிருந்து கொண்டுஅடங்குறியாமங்கல பிப்பீ டும் டும் போட்டதும்,, எல்லாரும் கைதட்டவும், கண்ல தண்ணி வருது, அவ்ளோதான்ரொம்ப அலட்டிக்காதஎன்றான். இந்த குரலை என்னதான் செய்வது. இந்த அவநம்பிக்கையின் குரல்இதோடேதான் பயணிக்க வேண்டியுள்ளது.

 

இந்த நவீன அவநம்பிக்கைக்கு எதிரான குரலாக பவா செல்லதுரையின் உரையை உள்வாங்கிக்கொண்டேன். பஷீரிடம் திருடிய திருடன்தான்…ஆனால் அவன் பெயர் அறம் அல்லது கருணை அல்லவா?? தூய்மையின் கணங்கள் தோன்றி மறைபவை. ஒவ்வொரு மனிதனும் அதனூடே பயணித்து மீள்கிறான். என்ன….அக்கணத்தில் நீடிக்கத்தான் முடியவில்லை. மனிதனிடம் தான் காண விரும்புவது அன்பையும் அறத்தையும்தான் என்று பவா சொன்ன போது அவரை இதுவரையில் வாசிக்காமல் போனதற்கு வருந்தினேன். ஊருக்கு திரும்புகையில்ஏழுமலை ஜமா” சிறுகதையை வாசித்துவிட்டுத்தான் உறங்கினேன். விரைவில் மற்றவை.

ஊட்டியிலும் சரி, கோயம்பத்தூரிலும் சரி…  ஒவ்வொரு விஷ்ணுபுரம் கூடலுக்குப் பின்னும், என் வாசிப்பெனும் செயல்பாட்டை மெருகேற்றுவதற்கான வழிகளை அறிந்து திரும்புகிறேன். படிக்கவேண்டிய எழுத்தாளர் பட்டியலுடன் திரும்புகிறேன். இம்முறையும் அப்படியே. ஒரு வாசகனாக கோடி நன்றிகள், விஷ்ணுபுரம் கூடல் நிகழ்ந்தேறக் காரணமாகும் ஒவ்வொருவருக்கும். இந்தப் பிரதான இலக்கியப் பெருக்கில் மிகச் சிறிய குமிழியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

அன்புடன்,
மோட்டார்ஸ்ரீநிவாஸ்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]

$
0
0

ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா அருமையாக இருந்தது. ஒவ்வொன்றும் பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. நான் ஏற்பாடுகளைச் செய்திருந்தீர்கள். ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் இருந்த கவனம் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. இதைப்போல துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு விழாவைச் சமீபத்தில் பார்த்ததில்லை.

எனக்குக் குறையாகத்தெரிந்த சிலவிஷயங்களை மட்டும் சொல்லவேண்டும். அதைச் சொல்வது குறைசொல்வதற்காக அல்ல. பெர்ஃபெக்‌ஷன் உங்கள் எண்ணம் என்றால் அதற்காக. இதெல்லாம் சின்ன விஷயங்கள்.

முதலில் விவாத அரங்கத்திற்கு வெளியே தெரியும்படியாகக் குடிநீர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதைக் கேட்டு பல பேர் அலைந்தார்கள். இரண்டு கழிப்பறை செல்வதற்கான இடம் அம்புக்குறி போட்டு பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டிக் காட்டியிருக்கலாம். அதையும் விசாரித்தபோது தெரியவில்லை

அரங்கிலே சிலர் சலசலத்துக்கொண்டிருந்தார்கள். தொடர்ந்து உள்ளே உட்கார்ந்து பேசிக்கொண்டே இருந்தவர்களை மட்டுறுத்துநர்கள் கட்டுப்படுத்தியிருக்கலாம். அவர்கள் சிலர்தான். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் மிகத்தீவிரமாக இருந்தன. ஆகவே அது மிகவும் தொந்தராவாக இருந்தது.

அதைப்போல அழையாவிருந்தாளிப் பேச்சாளர்கள். வண்ணதாசனின் அற்புதமான உரையின் உணர்ச்சித்தீவிரம் அடங்குவதற்குள் ஒருவர் எழுந்து கண்டபடி பத்துநிமிடம் பேசி அந்த மனநிலையையே சீரழிக்கமுற்பட்டார். நல்லவேளையாக அவரை தொகுப்பாளர் பத்து நிமிடத்தில் கட்டுப்படுத்திவிட்டார்.  .

 

அதேபோல படைப்பாளிகளிடம் கேள்விகள் கேட்கும்போது ஒருவரே நிறையகேள்விகள் கேட்பதை கட்டுப்படுத்தி கேட்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். பேசுபவர்களிடமும் கேள்விகளுக்கான பதில்களைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும்படி கேட்டுக்கொண்டால் நல்லது. பல எழுத்தாளர்கள் மிகநீண்டபதில்களைச் சொன்னார்கள். அது உரையாடலின் அழகைக் கொஞ்சம் குறைத்தது

விழாவில் பேச்சுக்களை வாசிக்கவே கூடாது. தொழில்முறைக் கருத்தரங்குகளிலே மட்டும்தான் கட்டுரை வாசிக்க வேண்டும்.  இரா முருகனின் உரையாடல் சிறப்பாக இருந்தது. மேடையில் அவர் பேசியிருக்கலாம்

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என்னைப் போன்றவர்கள் வெளியூரிலிருந்து வந்து இந்த விழாவிலே கலந்துகொள்கிறோம். இதிலுள்ள ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு முக்கியம். வெற்றுச் சம்பிரதாயங்களுக்கும் வழக்கமான மரியாதைப்பேச்சுகளுக்கும் எங்களுக்கு நேரமில்லை.

ஆனால் மிக அற்புதமான இருநாட்களாக இருந்தது. ஒவ்வொரு அரங்கும் ஒரு மின்னலடித்துபோல. சிவப்பிரகாஷின் அரங்குதான் உச்சகட்டம்

வாழ்த்துக்கள்

ரவீந்திரன் பி.எஸ்.என்.எல்

***

lllllll

ஜெ

செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம் அழகாக வண்ணதாசனைக் காட்டியது. அவருடைய கைகளை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என நினைத்தேன்

வண்ணதாசனிடம் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். நிறையக்கூட்டம். ஆகவே தவிர்த்துவிட்டேன். அவரை நேரில் சந்திக்கவும் போட்டோ எடுத்துக்கொள்ளவும் முன்னாடியே ஒரு மணிநேரம் ஒதுக்கியிருக்கலாம்

முருகேஷ்,

 

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக அமைந்தது. நேரக்கட்டுப்பாடும் வீண்சொற்கள் இல்லாத நிகழ்ச்சிகளும் பேச்சாளர்கள் அனைவரும் சுருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசியதும் மிகச்சிறப்பான அனுபவங்களாக அமைந்தன

ஆனால் ஒரு சின்னக்குறை. இப்படிப்பட்ட ஒரு விருதுக்கு விருதுச்சின்னம் கம்பீரமாக இருக்கவேண்டும். அவசரமாக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொம்மை போல இருந்தது பரிசு. வெண்கலச்சிலைதான் இலக்கியத்திற்கு உருவாக்கப்படும் நல்ல விருது. ஒரு நல்ல சிற்பியைக்கொண்டு வடிவமைக்கவேண்டும். அதில் பெரிய சிம்பல்கள் எல்லாம் தேவையில்லை. எளிமையாக வாக்தேவி சிலை போல ஒரு சிலைபோதும். இதை விமர்சனமாகச் சொல்லவில்லை

மகேஷ்

ஜெ

 

விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக அமைந்தது. குறை என்று சொல்லவேண்டும் என்றால் இடைவேளைகள் மிகக்குறைவாக இருந்ததனால் ஒருவருக்கொருவர் நிறையப்பேசமுடியாதபடி இருந்தது. அதோடு  நின்று பேசவும் அமர்ந்திருக்கவும் வராந்தா மாதிரி இல்லாமலிருந்தது. கிவிஸ் நிகழ்ச்சிதான் டாப். அதில் நான் பங்கெடுக்க ஆசைப்பட்டேன். அனைவரையும் அழைப்பார்கள் என நினைத்தேன். ஆனால் கேள்விகளை பார்த்ததும் பங்கெடுத்திருந்தால் மானம்போயிருக்கும் என்று தோன்றியது. செந்தில் இந்த நிகழ்ச்சியை டிவியில் நிகழ்த்தலாம். கல்லூரிகளில் நடத்தலாம். பொதுவாக நடத்துவதைவிட இப்படி குறிப்பாக நடத்துவது நல்லது

 

அடுத்த முறை கோவைக்கு வெளியே உள்ள புதிய எழுத்தாளர்களுடன் சந்திப்புகள் ஏற்பாடுசெய்தால் சிறப்பாக இருக்கும். இந்த முறை வந்தவர்கள் சிறப்பாகப் பேசினார்கள். ஆனால் அவர்களே மறுபடி பேசும்படி ஆகக்கூடாது

 

அருண்

 


தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்

$
0
0

unnamed

“ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்” கட்டுரையை வாசித்துவிட்டு விருதுவிழவுக்கு வர மனமில்லாமல் தான் இருந்தேன், (தங்களையும், எஸ் ரா மற்றும் சில சம கால எழுத்தாளர்களை தவிர்த்து அதிகம் வாசிக்க இயலாத சூழ்நிலையால்). ஆனால் தங்களின் தனிப்பட்ட விழா அழைப்பிதழை கண்டவுடன், பிரம்மத்தின் நுண்சொல் கண்ட சூதன் போல், மாற்று எண்ணமின்றி விழவில் பங்குபெற இடைப்பட்ட ஒருவார காலத்தில் விழவுகளில் பங்குபெரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொடர்ந்து வாசிக்க நேர்ந்தது இவ்வாழ்வின் நிகரற்ற அணுபவம்,. (ஜெய் உங்களின் சந்திப்பின் பின்பும் உங்கள் கடிதங்களின் ஒவ்வொறு முறையும் என் இத்துணை வருட வாசிப்பின்மின்மையின் எடை கூடி நிற்கிறது.)

சனிக்கிழமை காலை கோவை வந்தடைந்து நிகழ்வு அரங்கின் வரவேற்பில் என் கொல்லிமலை அமர்வின் நண்பர்கள் வரவேற்றது ஒர் ஊழின் கணம், அன்று நாஞ்சிலின் முதல் அமர்விலேயே தெரிந்துவிட்டது, இரு நாட்கள் சொற்களின் அறியா தெய்வங்களின் அளி சூழ இருப்பேன் என்று, நாஞ்சில் நாடனின் பேச்சை முதன் முதலில் கேட்டது பெரும் பரவசம் (அந்த தடாகை மலையடிவாரத்துகாரரிடம் சென்று கணிப்பொறியில் மாட்டியது என்ன சிடி என்று கேட்க மனம் குறுகுறுத்தது), தேனீர் இடைவெளியில் அவரின் ”சூடிய பூ சூடற்க” புத்தகத்தை பற்றிய தனி உரையாடலும், அதை என் அன்னைக்கு அவர் பெயரிலேய பரிசளிக்க வேண்டும் என்று அவரிடம்சொல்லி நாஞ்சிலின் கையெழுத்து வாங்கும் பொழுது அவர் திருமதியா என்று கேட்டதும், அதற்கு நான் அதனால் தானே அம்மா என்று பணிவான துடுக்குடனும் சொன்னது இனி என் நினைவின் அழிய பொற்கணங்கள்.

தொடர்ந்து பாரதி மணி அவர்களின் நாடக அனுபவங்களின் ஊடாக அவர் கூறிய ராயால் சல்யூட் அருந்திய அனுபவம், மது தவிர்ப்பாளனாகிய என்னையும் கற்பனையில் அருந்த செய்தது அவரின் பேச்சின் வல்லமை, மேலும் இரா. முருகன் அவரின் சில சிறுகதைகளை வாசித்த அனுபவத்தின் ஊடே, அங்கு வாசகர்கள் கூறிய அரசூர் வம்சம் நாவலை வாசிக்கும் ஆவல் அதிகமாகி உள்ளது.

ஜெய் என்வாழ்வில் மறக்க இயாலாத கதை சொல்லியை அறிந்த நாள் அது. பவா செல்லதுரை, உண்மையில் அன்று நான் மிகவும் மானசீகமாக வருந்த நேரிட்டது. அவர் கூறிய கரடி கதையை அதை மூலத்தில் எழுதிய பால் சக்கிரியா அவர்களே அவ்வாறு பேச்சில் கூறமுடியுமா என்பது சந்தேகமே .

தொடர்ந்து நிகழ்ந்த வினாடி வினா நிகழ்ச்சி கல்லாத உலகளவை கண்முன் காட்டியது. (வாசக மாணவர் பாரதி எங்கள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டார் என்பது மாற்றுக்கருத்தில்லாதது), அன்று இரவு மருத்துவர் சிவராமன் அவர்களுடனான உரையாடல் என் தனிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடாக நிகழ்ந்தது.

தங்களுடன் நடை செல்லும் ஆவலில் இரவு சரியாக தூங்காமல் காலை 5 மணிக்கு எழுந்து குளித்து தயாராகி வெளியே வந்து தாங்கள் முன்னமே சென்றுவிட்டதை கண்டு வருந்தி பின் தேனீர் கடையில் சந்தித்த நிகழ்வில் இருந்து தொடங்கிய இரண்டாம் நாள்

சு.வேணுகோபால் அவர்கூறிய விவசாய வாழ்வின் உன்மத்தங்கள் (காளையை அவர் அண்ணன் பராமரிக்கும் செயல்), தொடர்ந்து விழா நாயகர் வர அவரைபற்றிய அவரின் அனுபவம் மிகசிறப்பு.

ஜெய் உண்மையில் உங்கள் கடிதத்துக்கு பின்தான் வண்ணதாசனை வாசிக்க ஆரம்பித்தேன், என்ன ஒரு நெகிழ்வு மலையப்பனுக்காக அவரின் கைகளுக்கு முத்தம் வைக்க தூண்டிய உங்களுக்கு நன்றியின் சிறு சொல்லில் உரைக்க மனமில்லை.

 

 

அன்று இடைவெளியில் என் பாலிய காலத்து மாணவர் ஒருவரை காணக் கிடைத்து மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, நாங்கள் ஒன்றாக படித்த பள்ளி, நாங்கள் ஓடி விளையாடிய வீதிகள் என்று ஒருவருக்கு ஒருவர் இத்துணை நாள் தெரியாமல் இருந்து, இங்கு இந்நிகழ்ச்சியில் அறிந்துகொண்ட அந்நபர் சேலம் பிரசாத் என்பது ஒரு பெரும் நெகிழ்ச்சி, ஜெய் ஆசிரியராக நீங்கள் தந்தது இதையும் சேர்த்து ஈடில்லாதது.

சிவபிரகாஷ் அவர்களின் சமரசமற்ற உரை சற்று திகைப்பை ஏற்படுத்தியது, அன்றைய அனைவருடனான இறுதி அமர்வின் முடிவில் தமிழகத்தில் நாடகதுறையின் அடுத்த கட்ட எழுச்சி பற்றிய தெளிவின்மை சற்றே வருத்தம் கொள்ளச்செய்தது. இறுதியில் விழவானது அதன் தெய்வங்கள் வகுத்த அதற்கே உரிய முறையில் சிறப்பாக முடிந்தது. ஜெய் இவ்விழவின் பெரும் பணி எவ்வாறு என்று, இது போல் பல நிகழ்ச்சிகளை குழுவுடன் இணைந்து நடத்திய நான் நன்கு அறிவேன், இப்பெரும் நிகழ்ச்சியை குறைந்த நிகழ்ச்சியாளர்களை கொண்டு மிக சிறப்பாக செய்த செல்வேந்திரன், செந்தில், மீனாம்பிகை, ராஜகோபாலன், விஜய சூரியன், அரங்கசாமி, மற்றும் அனைத்து விஷ்ணுபுரம்  வாசகர் வட்ட நண்பர்களுக்கும் நன்றியோ வாழ்த்தோ​சொல்வதை விட அடுத்த இந்திய அளவிலான விஷ்ணுபுரம் விருதுவிழாவில் உடன் பங்காற்ற விழைகிறேன்.

நன்றி

சசிகுமார்

சேலம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்

$
0
0

unnamed

 

அன்புள்ள ஜெ,

 

ஒரு வருடமாவது விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இம்முறை நிகழ்ந்தது. எங்கள் ஊர் சீனு அண்ணாவுடன் உங்களிடம் அறிமுகம் செய்துகொண்டபோது இதுபோன்ற ஒரு விழாவை கடலூரில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 

முதல் அமர்வில் நாஞ்சில் நாடனுடன் அமைந்த உரையாடலில் நுணா மரம் வந்தபோது எங்கள் நிலத்தை உழும் ஏரில் நுவத்தடி பயன்படுத்தியதை நினைவு கூர்ந்தேன். நுணா மரத்தின் பழச்சுவை என்னை ஒரு காலத்தில் அதற்கு அடிமை ஆக்கியது. சிறு வயதில் காலை வேளையில் வயலுக்கு சென்று முதல் ஆளாக நுணா பழத்தை பொறுக்கி தின்பது எனக்கு கிடைத்த வெற்றி என்ற நினைத்த காலம் உண்டு. நாஞ்சில் சொன்ன வடநாட்டு மக்களின் அறத்தை நானும் ஒடிசா, மே.வங்கம் மற்றும் ஜார்கண்டில் பலமுறை அனுபவித்துள்ளேன்.

பாரதி மணியின் நக்கலும் நையாண்டியுமான பேச்சு அருமை. அவரது மது குறித்த பேச்சு அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மணி சொல்வது போன்று குடிப்பதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும் என நினைக்கிறேன். முருகனிடம் எனக்கு பிடித்தது அவரது வெளிப்படையான பேச்சுதான். பவா.செல்லதுரை சிறந்த கதை சொல்லி என்று சொன்னார்கள். அன்றுதான் முதல் முறை அனுபவித்தேன். என்னாமா கதை சொல்றார் அந்த மனுசன் என்ற எண்ணம் வந்தது.

மருத்துவர் கு.சிவராமன் சொல்லிய தகவல் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தது. அவரிடம் தனியாக ஹீலர் பாஸ்கரின் செவி வழி தொடு சிகிச்சை குறித்து தெரிந்துகொண்டேன்.

அடுத்த நாள் காலை டீ கடை மற்றும் நடைபயணத்தின்போது நீங்கள், விஜயராகவன் மற்றும் சீனு அண்ணாவுடன் அமைந்த உரையாடல் மறக்க முடியாதவை. அறிவியல் பூர்வமான கொலை முதல் கர்னாடக எழுத்தாளர்கள் அறிமுகம் வரை அனைத்தும் அருமை. அரங்கநாதன் அண்ணா சொன்னதுபோல் முதல் நாள் வினாடி வினாவில் அதிக புத்தகங்கள் பரிசு பெற்ற மாணவன் எனது தூக்கத்தையும் கெடுத்து இருந்தான்.

 

சிவபிரகாஷ் உரையாடல் ஞானியுடன் இருந்தது போன்ற ஒரு தருணம். அவருக்கு எதிராக வந்த எதிர்வினையை கையாண்டது குறித்து அவர் சொன்னபோது காந்தியின் ஞாபகம் வந்தது. விழா முடிந்து ஊருக்கு திரும்பிய பயணம் முழுக்க YOUTUBE-இல் அவரது பேச்சுகளை கேட்டு வந்தேன். நிச்சயம் அவர் ஒரு மானுட அறிஞர்.

வண்ணதாசனுடனான உரையாடலில் அவரது நிலை என்ற சிறுகதையில் வரும் கோமதிக்கு நிகழும் அனுபவம் எனது உறவுகார பெண்ணுக்கு நிகழ்ந்ததை பகிர்ந்து கொண்டேன். கிராம குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள் அனைவரும் என்ன பாவம் செய்தார்கள் என்றுதான் தெரியவில்லை. எந்த திருவிழாவுக்கு சென்றாலும் பெண்கள்தான் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எழுத படாத விதி இன்னும் இருக்கிறது. உரையாடல் முடிந்து வண்ணதாசனை சந்தித்தபோது அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த அனுபவத்தை பகிர்ந்தற்கு நன்றி சொன்னது மிகவும் நெகிழ்வான ஒரு தருணம். ஆசிர்வதிக்கபட்டவன் போன்று இருந்தது.

 

நண்பர் எழுதிய (விழா பதிவு-8) அந்த ஏழாம் உலகம் அனுபவம் ஏற்பட்டது எனக்குதான். பின்னாளில் அறம் படித்த பின்னர் அவள் உங்கள் சிறந்த வாசகியானாள்

 

அனைத்து ஏற்பாடுகளும் மனநிறைவை அளித்தது. முக்கியமாக உணவு நன்றாகவே அமைந்தது. விழா ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றி.

 

 

-மா.பா.இராஜீவ்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 14

$
0
0

அன்புள்ள ஜெ

 

இந்தமுறை விழாவுக்கு வந்தவர்களில் நானும் ஒருவன். நன்கொடை அளிப்பதுபற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. ஆகவே நன்கொடை அளிக்காமல் வந்துவிட்டேன். நன்கொடைகளை எங்கே அளிப்பது என்றும் சொல்லப்படவில்லை. இதைப்பற்றி உங்களிடம் கேட்கலாமென நினைத்தோம். முடியவில்லை.

 

ரவீந்திரன்

அன்புள்ள ரவீந்திரன்,

 

இம்முறை நிறைய இளைஞர்கள். நன்கொடை பற்றி வெளிப்படையாக அறிவிப்பது அவர்களிடம் கோருவதுபோல ஆகி சங்கடத்தை அளிக்குமோ என்பதனால் அறிவிக்கவில்லை

 

இம்முறை நோட்டுப்பற்றாக்குறை இருந்தமையால் பெரும்பாலும் எவரும் நன்கொடை அளிக்கவுமில்லை. அதைப்புரிந்துகொள்ளமுடிகிறது

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

நீங்களே விஷ்ணுபுரம் விழாவில் பேசிக்கொண்டே இருப்பதாக இணையக்குசும்பன் எழுதிய பகடி வாசித்தேன். பகடி எல்லாம் சரி. ஆனால் இந்தவகையான ஒரு  விஷமப்பிரச்சாரத்தை தொடர்ந்து சிலர் இணையத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு நீங்களும் பெரும்பாலும் விஷ்ணுபுரம்நிகழ்வுகளில் பேசுவதே இல்லை. இந்த விழாவில் கடைசியாக மேடையில் அதுவும் சரியாக 9 நிமிடம் மட்டும் பேசினீர்கள். சந்திப்புமேடையில் யாரோ வரும் இடைவெளியில் 10 நிமிடம் பேசினீர்கள். அதோடு சரி. அரங்குகளிலும் மற்றவர்கள் பேச கேட்டுக்கொண்டிருந்திர்கள்

நான் உங்கள் வாசகன். திருச்சியிலிருந்து நான் வந்ததே உங்களை பார்க்கவும் பேச்சைக்கேட்கவும்தான். நான் ஒரே ஒருமுறை திருச்சியில் உங்கள் பேச்சைக்கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் பேசவே இல்லை என்பது ஏமாற்றம். பலரும் அதை அங்கேயே சொல்லிக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வமாக முடிந்தபின் நீங்கள் பேசுவீர்கள் என்றார்கள் உங்கள் நண்பர்கள். அப்போதும் பேசவில்லை. இந்த பகடிகளைக் கண்டுதான் நீங்கள் அஞ்சுகிறீர்கள் என நினைக்கிறேன். அப்படியென்றால் வெற்றிகரமாக அவர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்

 

குமார் முருகேசன்

அன்புள்ள குமார்

 

இந்த விழா வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உரியது. எழுத்தாளர்களை வாசகர்களுடன் விவாதிக்கச்செய்வதே இதன் இலக்கு. 2010 முதலே இப்படித்தான் நிகழ்ந்துவருகிறது

 

ஜெ

 

u

அன்புள்ள ஜெ

 

மிகச்சிறப்பான விழா. ஆவணப்படம் நூல் இரண்டுமே சிரத்தையான படைப்புக்களாக இருந்தான. விவாதங்களில் பவா செல்லத்துரை அசத்திவிட்டார். ஒரு அற்புதமான இலக்கிய நிகழ்வாக இதை அவரால் மாற்ற முடிந்தது. அவருக்குச் சமானமாகவே நாஞ்சிலும் நகைச்சுவையுடன் பேசினார்

 

வரும் காலங்களில் ஏதேனும் சிறிய கலைநிகழ்ச்சிகள், பாட்டு போன்றவற்றைச் சேர்க்கலாம்

 

நாகராஜ்

அன்புள்ள நாகராஜ்

 

கலைநிகழ்ச்சிகள் போன்றவை இத்தகைய நிகழ்ச்சிகளின் ஒருமையைச் சிதைத்துவிடும் என நினைக்கிறேன். ஆனாலும் பாடல்கள் ஒரு நல்ல மனநிலையை உருவாக்கலம். பார்ப்போம்

 

ஜெ

ஜெ

 

இந்தமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவின் ஹைலைட் இரண்டு. ஒன்று இலக்கிய வினாடிவிடை. இன்னொன்று பவா சொன்ன தேன் என்னும் கதை

 

இதை இரண்டையும் இரண்டு நிகழ்ச்சிகளாக ஆக்கலாமே. நல்ல சிறுகதைகளை நிகழ்த்திக்காட்ட சிலரைப் பயிற்சிகொடுக்கலாம். கேரளத்தில் கதைகளை சொல்ப்வர்கள் இருக்கிறார்கல். நல்ல நடிகர்களைக்கூட அழைத்து கதைநிகழ்வைச் செய்யலாம்

 

வினாடிவிடை இனிமேல் எல்லா நிகழ்ச்சிகளிலும் இருக்கலாம் என நினைக்கிறேன். சும்மா மாடல்களை நிப்பாட்டி உளறச்செய்வதற்கு இதெல்லாம் அருமையான மாற்றுக்கள்

 

ஜெகதீசன்

 

அன்புள்ள ஜெகதீசன்

 

செய்யலாம். கதை நிகழ்வு நல்ல ஐடியா. கதையை நிகழ்வடிவமாக எழுதி கொஞ்சம் பயிற்சிசெய்து சொல்லும் நடிகர்களைப்பயன்படுத்தலாம். ஜானகிராமன் எழுதிய பரதேசி வந்தான் போன்ற கதைகள் அற்புதமாக மேடையை நிறைப்பவை

 

சுவாரசியமாக நிகழ்ச்சிகளை நடத்தி அதிகமான பேரை உள்ளே கொண்டுவந்தாகவேண்டும்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15

$
0
0

 

இனிய ஜெயம்,

 

 

 

இந்த வருட விழாவை அதன் முழுமை நிலையில் நிறுத்தியவை  நான்கு.அலகுகள்.

 

 

முதல் அலகின் முதல்வர் பவா.   பாரத நிலம் எங்கும், தங்கள் வாழ்நாளை  வருவிருந்தோம்பி செல்விருந்துக்கு ஏங்கி நிற்கும் நிலைக்காக கரைத்துக் கொண்ட ஆளுமைகள் பலர். வள்ளலார் முதல் சோற்றுக் கணக்கு கெந்தேல் சாகிப் வரை.  அப் பண்பாட்டின் ஒரு துளியாக மேடையில் வீற்றிருந்த பவா.

 

 

 

அடுத்தவர் மருத்துவர் சிவராமன்.

 

 

வழிதவறச் செய்யாது சற்றே விலகி இரு வெளிச்சமே;

 

என்னை என் வீட்டில் சேர்க்க என் கால்களுக்குத் தெரியும்;

 

என்னை என் குழிக்குள் தள்ள ,என் விழிகளுக்குத் தெரியும்.

 

 

 

எனும்குஞ்சுண்ணியின் கவிதை ஒன்றுண்டு.இன்றைய பேலியோக்கர்கள்  பலர் இந்த நிலையில்தான் உள்ளனர்.   இரவு உரையாடலில் மருத்துவர் பேசிய அனைத்தும் முக்கியமானவை.

 

 

  1.  பேலியோ அறிவியல் பூர்வமான முறை எனில்,  அது அந்தத் தளத்தில் எழுந்த முக்கியமான அறிவியல் கேள்விகள் பலவற்றுக்கு மௌனம் சாதிக்கிறது.   காரணம் மிக எளிது. மொபைலில் இயங்கும் சாதாரண அப்ளிகேஷன் கூட  அதற்கான கேச்சீஸ்  உடன் இணைத்தே பொருள்கொள்ளப் படுகிறது. நூறு டிகிரியில் நீர் ஆவியாகும் என்பதை போன்றதல்ல இது, இன்னும் செஞ்சு பாப்பம் எல்லையில்தான் இது நிற்கிறது. பேலியோ செயல்பாட்டால் எஞ்சப்போகும் எதிர் நிலை அம்சம் என்ன என்று இதுவரை தெரியாது. அப்படி எஞ்சும் ஒரு எதிர்மறை அம்சம் பேலியோவால்தான் விளைந்தது  என அறிவியல் கண்டுணர, ஒரு பத்து வருடமும், அதை அதுவே ஒப்புக்கொள்ள மேலும் பத்து வருடமும் பிடிக்கும்.  அந்த எதிர் மறை அம்சத்துக்கான மருந்துகளின் விலை,அதன் வணிகம் இவை ஒரு பக்கம்.  இவை போக யதார்த்தத்தில் பேலியோக்கர்கள் அந்த முறையின் முதல் தலைமுறை பரிசோதனை ஆப்ஜட்டுக்கள் என்பதே மெய் .  எல்லாம் சரியாக நடந்தால் நன்று. யாரேனும் ஆஸ்காரோ நோபெலோ வெல்லுவர் . பிழைத்தது எனில் யாரும் பொறுப்பெடுக்க இறுக்கப் போவதில்லை.

 

 

 

ஆக அறிவியல் பூர்வமானது என்பதை முற்றிலும் விலக்கிவிட்டு, ஒவ்வொரு பேலியோக்கரும் இதை தங்களது சொந்த ரிஸ்க்கின் பேரில் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் பொறுப்பு முற்றிலும் நம்மை சேர்ந்ததே.

 

 

  1. இயற்க்கை உணவு எனும் ஆவலில், ஜிம்னாஸ்டிக் தாடிவாலாக்கள் ”சேவையில்” கிடைக்கும் மலிவு விலை பண்டங்களை  வாங்கித் துவைக்கும் ஆத்மாக்கள் நோக்கிய  மட்டுறுத்தல் அடுத்தது. உண்மையில் இந்தியாவில் இயற்க்கையாக நிகழும் தேன்  உற்பத்தி எவ்வளவு, அதை கொண்டு வரும் உழைப்பின் செலவீனம் என்ன, அதன் ஏற்றுமதி போக, உள்நாட்டின் புழக்கம் என்ன, பிற தேன் நிறுவனங்களின் சந்தை நிலவரம் என்ன ? அனைத்துக்கும் மேல் இவற்றின் தரம் என்ன? இத்தனையும் சீர் தூக்கிப் பார்த்தே  அவற்றை நுகர வேண்டும். விற்பவர் தாடி அழகாக இருக்கிறது என்பது போதுமான காரணம் அல்ல.

 

 

 

உண்மையில் மிக எளிய பனை தொழில், தொழிலாளிகள் இன்றி தமிழகம் எங்கும் அப் பொருட்களின் விலை நிர்ணயம் தாறுமாறாகவே காணக்கிடைக்கிறது.

 

 

 

இவை எல்லாம் சிவராமன் பேசுகையில் அவருடன் மானசீகமாக நான் உரையாடி , மானசீகமாக யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தவை.

 

 

 

உணவுக்கு அடுத்த நிலை உடல் ஆரோக்கியம் அந்தப் புள்ளியில் நின்றார் சிவராமன். [ அமுல் பேபி போன்ற அவரது கன்னத்தை செல்லமாக கிள்ளத் தோன்றியது]

 

 

 

அடுத்தவர் ஷிவப் பிரகாஷ்.

 

சிவம் என்ற செயலாற்றலின் நெருப்பு. பெயர் கூட அவருக்கு அத்தனை பொருத்தம்.  சொல்முதல் , தத்துவம், மடங்கள், மதங்கள்  என, உயிர் கொண்டு இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மீக நெருப்பின் மீது கவியும், மூடக் கரும்புகை அனைத்தையும் , தனது கருத்துக்கள் கொண்டு ஊதி அகற்றினார்.

 

 

 

போதம் என்றால் விழிப்புணர்வு. அங்கு செல்ல நீ பயன்படுத்தி விட்டு தூக்கி எரிய வேண்டிய கருவியே தத்துவங்கள்.   மாறாக புத்தர் என்ன சொல்றாருன்னா என்றபடி அந்த தத்துவங்களை  உன் மீது சுமையாக எறிந்து  உன் உள்ளே இலங்கும் சுயம்பிரகாசத்தை நீ அடைய  மட்டுறுத்துனர்களாக இலங்கும் இந்த மடங்களுக்கும் மதங்களுக்கும் பயன்மதிப்பு ஏதும் இல்லை.

 

 

 

பாரதப் பண்பாட்டின் சிகரத்தில் இருப்பது வேதங்கள். அதன் பின் மெய்மைத் தேட்டம் கொண்டு பல ஞானிகள் பாரதம் வந்த வரலாறு இருக்கிறது.  வேதத்தில் இருந்தோ, ஞானப் பரிமாற்றம் நடந்த இந்த உயிர் சூழலில் இருந்தோ எழுந்து வந்த சொல் அல்ல இந்து எனும் சொல்.

 

 

 

எந்த பாஸ்டர்டோ  இங்கே வந்தான், இந்த ஆத்துக்கு அந்தப் பக்கம் இருக்க கூட்டம் எல்லாம் இந்து அப்டின்னு பேர் போட்டான்.  ஆமாமா நாங்க எல்லாம் பாஸ்டட்டுங்கத்தான் என ஒப்புக் கொண்டு, அதிலிருந்து என்னென்ன குப்பைகளையோ உருவாக்கினோம்.

 

 

 

அவர் பேசப் பேச என்னுள் ஏதேதோ உடைந்து விழுந்தது, முற்றிலும் புதிதாக எதோ ஒன்றின் விதை விழுந்தது. என் மனம் இயல்பாக ரமணரை நினைத்துக் கொண்டது.  மடங்களும், மதங்களும், அரசியலும் கல்லறைகள். உள்ளே பிணம் பத்திரமாக இருக்கும். பல்லாண்டு கெடாத பிணங்கள் பல இங்குண்டு.   ஆனால் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ராமணத்துவம் இவற்றுக்கு வெளியே த்ராணியுள்ளோர் மட்டுமே வந்தடையும் சிகரமுனை ஒன்றினில் எரிந்துகொண்டு இருக்கிறது. அந்த மலைமேல் நெருப்பே என்றும் பாரத்தின் ஆன்மா.

 

 

இனிய ஜெயம்,  என் ஆசிரியர்களில் ஜெயகாந்தனை சந்த்தித்து உரையாடியதில்லை, உங்களை உரையாடி உரையாடி மிக மிகப் பிந்தியே சந்தித்தேன்.  ஷிவப் பிரகாஷ் அவர்களை அவரது மேடையில் அப்போதே அறிந்தேன். திராவிடம் கண்ட மகத்தான ஆசிரியர்களில் ஒருவர் அவர்.

 

 

மானசீகமாக அவரது கால்களில் விழுந்தேன் . [கேட் லாஸ்ட் யூ பாஸ்டர் என எட்டி உதைத்தார்].

 

 

சலவை உடை சார்வாகன்.

 

சிகரத்தில் நடிப்பு,கவிதை, எழுத்து  என கலைகளின் உச்ச ஆளுமைகள்.

 

அனைத்து எல்லைகளிலும் இணையற்ற மேடை.

 

இந்த விழாவின் சுவாரஸ்யம் இரண்டு,  சார்வாகன் முன் எழுந்து நின்ற பெருச்சாளி. நல்லவேளை அதை உறித்து  அவர் கோவணமாகத் தரிப்பதற்கு முன் அதை உயிர் பிழைக்க வைத்து விட்டர்கள்.

 

 

அடுத்தது  இலக்கிய சாம்ராட், கோவை புகழ் கவிஞ்சர் பொன் சிங்கம்.  விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு அவரது நூலை வெளியிட விண்ணப்பம் வைத்தார். தலைப்பை கேட்டேன்.  கெவுக்கென விக்கியதில் விதைகள் உள்ளிழுத்துக் கொண்டு விட்டன. ”உண்மை உறங்காது” தலைப்பு . மெய்யாகவே அரங்கா அவரது கவிதைகளை வாசித்துக் கொண்டு இருக்கிறார்.  சமூகம் ஏதேனும் பார்த்து செய்யும் என நினைக்கிறேன்.

 

 

உண்மையில் சாகித்ய சங்கத்தில்  பொன்சிங்கம் போன்ற அப்பாவிகள் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு இங்கே என்ன நிகழ்கிறது என்பதே பிடி கிடைக்கவில்லை.  ஆகவே பெருமக்கள் சாகித்யத்தை சாடினாலும் அதுவும் அவர்களுக்கு புரியாது. எந்த சிந்தனையாளனும் எதிர் கொள்ள இயலா, உரையாடி மாற்ற இயலா நிலை. சிக்கல்தான்.

 

கடந்த முறை லக்ஷ்மி  மணிவண்ணன் அவர்களுக்கு நூல் ஒன்று அளித்தேன், அவர் பதிலுக்கு எனக்கொரு நூல் அளித்தார். படிகம் எனும் நவீன கவிதைகளுக்கான இதழ்.

அது குறித்து நிசப்தம் தளத்தில் இருந்து

 

//

 

 

இதழ் நாகர்கோவிலிருந்து வருகிறது. ரோஸ் ஆன்றா ஆசிரியர்.

 

 

கவிதைகள், கவிதை சார்ந்த கட்டுரைகள், கவிஞர்களின் நேர்காணல், கவிதை விமர்சனங்கள் என்று முழுமையாக நவீன கவிதை பற்றி மட்டுமே பேசுகிறது. விரும்புபவர்கள் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு இதழ்களை வாங்கிக் கொள்ளலாம். வாசிக்க ஆரம்பிக்கும் வரைக்கும்தான் கவிதை என்பது புதிர். வாசிக்கத் தொடங்கிவிட்டால் அதுவொரு தனியின்பம். நவீன கவிதைகளுக்கென இதழ் என்பது போன்ற முயற்சிகள் மிக அவசியமானவை. அரிதானவையும் கூட. பொருளாதார அல்லது புகழ் உள்ளிட்ட எந்தவிதமான லெளகீக பிரதிபலன்களும் எதிர்பாராத இத்தகைய முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரோஸ் மன்றோவுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

 

 

கண்டராதித்தனின் ஒரு கவிதை –

 

நீண்டகாலம் நண்பனாக இருந்து

விரோதியானவனை வெளியூர்

வீதியில் சந்திக்க நேர்ந்தது

பதற்றத்தில் வணக்கம் என்றேன்

அவன் நடந்து கொண்டே

கால் மேல் காலைப்

போட்டுக் கொண்டே போனான்

தொடர்புக்கு:
படிகம்- கவிதைக்கான இதழ்

4/184 தெற்குத் தெரு

மாடத்தட்டுவிளை

வில்லுக்குறி – 629 180

 

அலைபேசி: 98408 48681

மின்னஞ்சல்: padigampublications@gmail.com //

 

விஷ்ணுபுரம் இலக்கிய விருது எனும் பண்பாட்டு அலையில், இந்தத் துளியும் கலந்திருக்கிறது என்பதில் எனக்கு கரையற்ற மகிழ்ச்சி.

 

 

இம்முறையும் லக்ஷ்மி மணிவண்ணன் விரும்பும் நண்பர்களுக்கு படிகம் இதழை விநியோகித்துக் கொண்டிருந்தார்.

 

 

ஜெயமோகன் அகத்தின் களித்தோழன் அரங்கசாமிக்கு என்றென்றும் என் அன்பு முத்தம்.

 

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

வணக்கம். விழாவில் கலந்து கொண்டுவிட ஆசை. ஆனால் முடியாமல் போனது.

 

அதிகம் வாசிக்கவில்லை ரகத்தில் என்னை வண்ணதாசனில் சேர்க்க முடியாது. கொஞ்சம் வாசித்திருந்தாலும் அவர் என்னை முழுமையாக உள்ளிழுத்து கொண்டார். சென்ற புத்தக கண்காட்சியில்தான் அவருடைய இரண்டு புத்தகங்கள் வாங்கி வந்தேன். ஒளியிலே தெரிவது, மீன்களை போலொரு மீன். இப்படி வாழ்வை, இயற்கையை இடையறாது இரசித்துக்கொண்டேயிருப்பது சாத்தியமாயென முயன்று முயன்று தோற்றிருக்கிறேன். அவரும் முயன்று முயன்று தோற்றதின் விளைவே நாம் வியக்கும் அவர் எழுத்துக்களோ என்றும் எண்ணியதுண்டு.

3

நேற்றுதான் இணையத்தில் அவரது விழா உரையை கேட்டேன். அவர் குரல் கேட்டதுமே ஏனோ கண்ணீர் முட்டிக்கொண்டது. அவர் பேச பேச அது கொட்டித்தீர்க்க துடித்தது. அலுவலகத்தில் இருந்ததால் அழுதுதீர்க்க முடியவில்லை. அவரது குரல் அன்பின் குரல். அதனை எதிர்கொள்வது அத்தனை சுலபமல்ல. யாருடைய குரலை கேட்டும் இப்படி ஒரு நிலை எனக்கு நேர்ந்ததில்லை. அந்த குறளை கேட்டுக் கொண்டேயிருந்தால்
என் அழுக்குகள் அனைத்தும் அடித்து செல்லப்படும் உணர்வு. அவர் சொன்ன அமைதியில் நான் அமர்கிறேன். அவர் ஆன்மாவிலிருந்து அழைத்த செல்வராஜோடு என்னையும் பொருத்திக்கொள்கிறேன்.

நன்றி
உமாரமணன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 
வணக்கம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது வழங்கும் விழாவில் முதன்முதலில் பங்கு பெற்ற மகிழ்வுச்சத்தில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை. மீன்கொத்தியின் அரை வட்டம், பசலைப்பழம், மின்மினிப்பூச்சிகள் இன்னும் பலப்பல காட்சி பிம்பங்கள் மனதில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. முதல் நாள் அமர்வில் இருக்க முடியவில்லை என்ற வெறுப்போடு இரண்டாம் நாளின் முதல் அமர்வில் நுழைந்தபோது என் வெறுப்பு எல்லாம் நீங்கியிருந்தது. வண்ணதாசன் உள்ளே இருந்தார். கண்கள் நாஞ்சில் நாடனையும், தேவதேவனையும் கண்டு கொண்டது. ராம்குமார் இரா.முருகனை அறிமுகப்படுத்தினார்.

 

 

வண்ணதாசன் மிகவும் ஜாலி மூடில் இருந்தது போல இருந்தது. மழையின் கவிதையை தன் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பேன் என்ற ஒரு ஆசிரியையிடம் மழையில் நனைய சொல்லி கொடுங்கள் என்ற பதிலும், மீன்கொத்தியின் பறந்த காலம் எது, இறந்த காலம் எது என்ற கேட்ட ஒரு வாசகரிடம், கடைசியாக எப்பொழுது மீன்கொத்தியை பார்த்தீர்கள் என்று கேட்டு, புத்தகத்தில் கவிதையை படித்து விட்டு புரியவில்லை என்பது எவ்வளவு முட்டாள்தனம் என புரிய வைத்தார். தட்டடியில் குவிந்து கிடக்கும் காய்ந்த சருகும், காகிதப்பூக்களும் படைப்பாளிக்கு அவசியம், குப்பையும் அவனுக்கு தேவை என்று வண்ணதாசன் அழகுணர்வினை அமர்வில் நிரப்பிகொண்டிருந்தார்.

 

எச்.எஸ்.சிவப்பிரகாஷ் அவர்களின் இரண்டாவது அமர்வு முதல் அமர்வுக்கு நேர் எதிராக வரலாறும், இலக்கியமும், சமகால அரசியலும் என பல திசைகளும் சென்று வாசகர்களை கட்டுக்குள் வைத்திருந்தது. இடையில் தாய்மொழிக்க்லவி ஆங்கிலக்கல்வி என கொஞ்சம் சுரம் குறைந்தாலும், சிவப்பிரகாசம் அவர்களின் பேச்சு அருமை. சைவம் சிவப்பு சிவமாகி, ருத்திரன், ரெட் என சைவ வரலாறு ஆகட்டும், சிலம்பில் பிருந்தாவனக்காட்சி முதல் முதல் வந்தது என தகவல் நிறைந்த அமர்வு. வெளியே வந்ததும் என் மனைவி மதுரைக்காண்டம் நாடகம் கிடைக்குமா என்று தேடிப்பார்க்கும் அளவுக்கு சிலம்பின் தாக்கம் இந்த அமர்வில் இருந்தது.  அருமையான மதிய உணவு. ஒழுக்கமான ஒரு சைவ சாப்பாடு என்று நாஞ்சில் நாடன் மூன்றாவது அமர்விற்கு வரும்போது சொல்லிகொண்டு மகிழ்வோடு அமர்ந்தார். அவரிடம் கொஞ்ச நேரம் அமர்ந்து சாப்பாடு பற்றி பேசலாமா என்று மனம் துடித்தது.

 

 

மூன்றாவது அமர்வு  வந்திருந்த முக்கிய படைப்பாளிகளிடம் உரையாடும் விதமாக அமைந்தது. இது போன்ற தலைப்பு இல்லாத அமர்வு முதல் கேள்வி எப்படி இருக்கிறதோ அதன் போக்கிலேயே செல்லும். ஏன் இலகியம் வீழ்ச்சியையையே பதிவு செய்கிறது என்ற கேள்வியில் ஆரம்பித்து அதன் போக்கிலேயே சென்றது. நாஞ்சில் நாடன் தனது நகைச்சுவை உணர்வு மூலம் அமர்வினை கலகலப்பாக வைத்திருந்தார் . பாவண்ணன் எதிர்பாராமல் அன்பினை காட்டக்கூடிய மனிதர்களை தேடி பதிவு செய்ய வேன்டியது இலக்கியத்தின் அவசியம் என்றார். அம்மா சின்னம்மா பற்றி நாவல் எழுத யாருக்கும் தைரியம் இருக்கிறதா என்று நேரடியாகவே நாஞ்சில் கேட்டு விட்டார்.
மாலை விருது வழங்கும் விழா மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

செல்வேந்திரனின் ஆவணப்படம் தாமிர பரணியின் நினைவுக்கு கூட்டிச்சென்றது. உங்களது பேச்சு ஒரு குறும்படம் போல இருந்தது. மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் ஒரு சுடாத நெருப்பு என்று காட்சியோடு முடித்தது எவ்வளவு அழகு? வண்ணதாசனை அறிமுகப்படுத்த மின்மினிப்பூச்சியின் ஒளிதானே உகந்ததாக இருக்கும். வண்ணதாசன் பேச ஆரம்பித்ததும் என்னை நெகிழ வைத்து விட்டார். நதியின் மீது கைவிரித்து பறக்கும் அவரது கனவு காணாமல் போய்விட்டது படைப்பாளிக்கு கனவு எவ்வளவு அவசியம் என்று நெகிழ்ந்தது கண்ணில் நிற்கிறது. ஈரம் என்ற சொல் இவ்வளவு ஈரத்தை மனதில் கொண்டு வர முடியும் என உணர்ந்தேன். ஈரம் உலகின் ஆதாரம். மண்ணில், மரத்தில், மனதில் எங்கும் ஈரம் இருக்கும் வரை வண்ணதாசன் இருப்பார்.

 

இவ்வளவு நிகழ்விலும் விஷ்ணுபுரம் ஞானசபையில் எல்லாவற்றையும்  மண்டப ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் சித்த்ர ்போல தேவ தேவன் அவர்கள் கவனித்து கொண்டிருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்தது மறக்க முடியாத அனுபவம். வீடு திரும்பிய பின் என் மனைவி கேட்டாள். இன்று ஜெயமோகன் அவர்களை முதன்முதல் சந்திதிருக்கிறாய். வாசிப்பு குறித்து எதுவுமே  பேசவில்லை?  அன்று முழுக்க பெரும் கடலின் ஒரு கரையில் இருக்கும் மௌனத்தோடு அலைந்தேனே எப்படி பேச..

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றி

கேசவன், காரைக்கால் ..

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

விஷ்ணுபுரம் விருது விழா இம்முறை இலக்கியத்தின் பெரும் கொண்டாட்டமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. தமிழகத்தின்  அநேக முக்கிய எழுத்தாளர்களும் பிற மொழி எழுத்தாளர் என ஒட்டுமொத்த இலக்கிய ஆளுமைகளுடன் உரையாடலை நிகழ்த்துவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

 

 

இம்முறையும் முதல் நாளை தவற விட்டதை எண்ணி வருத்தமடைந்தேன். ஞாயிறு அன்று எழுத்தாளர் சு.வேணுகோபாலோடு தொடங்கிய அமர்வில் பஷீர், தி.ஜா, கி.ரா என்று ஒவ்வொன்றாகத் தொட்டுச் சென்றது நிறைவாக இருந்தது. வண்ணதாசன் வாசகர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் ஒருவித ரசனையான புன்னகையில் அதைத் தொட்டு ஆரம்பித்தார்.. அதன்பிறகான அமர்வில் சிங்கம் போல H.S சிவப்ராகஷ் வந்தமர்ந்தார். அவரைப் பற்றி நீங்கள் வராண்டாவில் நினைவுகூர்வதற்கு முன்னே அவரின் கடந்த கால ஆளுமை பிம்பத்தை என்னால் உணர முடிந்தது.

நீங்கள் சொன்னதுபோல கருத்துத்தளத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேர உரையாடல் நிகழ்ந்தது எங்களுக்கு புதிதுதான்.  படைப்புகளைப் பற்றியோ, இலக்கியத்தைப் பற்றியோ இல்லாமல் தனது கருத்துக்களால் மட்டுமே எங்களுடன் உரையாடினார். மார்க்ஸியத்தை அவரின் பார்வையில் தெரிந்துகொண்டதும் அத்வைதத்தையும் வைனவத்தையும் இப்படியும் புரிந்துகொள்ள முடியும் என்று அறியச் செய்தது எனக்கு புது அனுபவம். எளிமையான ஆங்கிலம், நிதானமான பதில், இதுபோன்ற பிற மொழி ஆளுமைகளுடன் பேசுவது புதிய தரிசனத்தை ஏற்படுத்துகிறது.

 

 

மதியம் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பாவண்ணன், இரா.முருகன், தேவதேவன் என ஒவ்வொருவருடனும் தங்கள் அனுவங்கள் வழியே படைப்புகளைப் பார்க்கின்ற பார்வையைக் காடடினார்கள். நிபந்தனையற்ற அன்பு பற்றிய அனுபவத்துடன் தொடங்கிய பாவண்ணனை தமிழகத்தின் நாடகத்தின் போக்கைப் பற்றிய விவாதத்திற்கு திருப்பி விட்டதும் அரங்கம் சூடுபிடித்துவிட்டது.  எழுத்தாளர் பாவண்ணனுடனான உரையாடலில் நண்பர் அசோக்குமார் எழுப்பிய கேள்வியொன்று “கர்நாடகா மாநிலத்தில் நாடகக் கலைகளுக்கு இருக்கின்ற தீவிர ரசிகர்களோ பார்வையாளர்களோ இங்கு இல்லையே?” அதற்கு பாவண்ணன் இப்படி சொன்னார்: “இங்கு இப்போதே ஒரு நாடகம் போடப்படுகிறதென்றால் பார்ப்பதற்கு எத்தனை பேர் இருப்பார்கள்? ஐம்பது பேர் கூட தேறாது. காரணம் நம்மிடம் ரசனை சார்ந்த சிந்தனை குறைவு” இப்படித்தான் இந்த உரையாடல் தொடங்கி பின் விவாதமாகப் போய்க்கொண்டிருந்தது.

 

உண்மையில் நம்மிடம் அப்படியொரு ரசனை உணர்வு என்பது இல்லையா? நம்முடைய தொன்மங்களின் மீதும் மரபின் மீதும் நமக்கேற்பட்ட அவநம்பிக்கை காரணமா? பெரியாரிஸத்தின் தாக்கமா? பாரதியும் புதுமைப்பித்தனும் தொடங்கிய வைத்த நவீன அலை நம்மை முன்னோக்கி தள்ளிவிட்டதா? வெஸ்டர்ன் கல்ச்சரை நோக்கி ஓடுகிறோமா? என்று பல எண்ணங்களை அக்கேள்வி தூண்டிவிட்டது….

 

 

 

இன்னும் அதிகம் பேசலாமென்றிருந்தபோது ஈரோடு கிருஷ்ணன் வந்து ‘கேட்’ போட்டு கிளப்பிவிட்டார். ஆனால் நானும் அசோக்குமாரும் விழா அரங்கம் வரை பாவண்ணனுடனும் நிர்மால்யாவுடனும் எம். கோபாலகிருஷ்ணனுடனும் அவ்விதாதத்தைத் தொடர்ந்தபடியே தான் வந்தோம்.

 

ஜெ, உண்மையில் முதல் முறையாக என்னுடைய அனுபவத்தில் ஒரு எழுத்தாளனுக்கு அரங்கம் நிறைந்த வாசகர்களை இங்குதான் பார்த்தேன். எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் கீழே அமர்;ந்திருந்தார்கள். பெண்கள் உட்பட நிறைய பேர் இரண்டு மணி நேரம் நின்றுகொண்டே பார்த்தார்கள். வண்ணதாசனின் ஏற்புரை வாசகர்களின் கண்களை நழுங்கத்தான் செய்தது. ஒருவித உணர்வெழுச்சி தூண்டப்பட்டு மனம் கொந்தளித்தது. உள்ளம் அடங்க சில கணங்கள்  தேவைப்பட்டன. என் அருகிலிருந்த நண்பர் அழுதே விட்டார்.

 

 

அடுத்த வருடம் இந்திய அளவில் இவ்விருது விழா இருக்கப் போகின்றதை எண்ணி பெருமை கொள்கிறேன்.  வெவ்வேறு மாநிலத்தில் இவ்விழாவைப் பற்றி பேசுவதும் இதைப் போன்று நடத்த முயற்சிப்பதற்கும் இது தொடக்கமாக அமையும். இலக்கியத்தின உச்சம் இதுதானே.

 

தூயன் வண்ணதாசனுடன்

 

விழா முடிந்ததும் வண்ணதாசனை நெருங்கவே சில நேரம் பிடித்தது. என்னைக் கண்டதும் நினைவுகூர்ந்தார். கைகளைப் பிடித்துக்கொண்டு ‘நிறைய எழுதனும்’ என்றவர் என் தொகுப்பைப் பற்றி கேட்டறிந்தார். விருது, விழா என இத்தனை வேலையிலும் அவரின் ஞாபகம் எனக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

 

 

ஜெ, இவ்விழாவில் எனக்கு மறக்கமுடியாத தருணம் என்றால் எழுத்தாளர் பாவண்ணனை சந்தித்தது.  கிட்டத்தட்ட ஒரு வருடமாக நட்பில் இருக்கிறேன். எத்தனையோ கேள்விகளையும் எண்ணங்களையும் அவரிடம் பரிமாறியிருக்கிறேன். எனக்கு ஒருவித மனசாட்சியாகவே மாறிவிட்டிருக்கிறார்.  கடிதங்களுடன் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த எங்களின் பேச்சு, இங்குதான் சந்திப்பைக் கொடுத்திருக்கிறது.     இந்நினைவுகளை ஏந்திக்கொண்டிருக்கிறேன்.

 

 

என்றும் அன்புடன்

  தூயன்

 

===================================

முந்தைய பதிவுகள்

 

விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

 

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

 

 

புகைப்படங்கள்

 

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

 

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

 

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

 

 

=============================================================

 

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

 

============================================================

 

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72

$
0
0

[ 18 ]

தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான சந்திரரும் சிகரரும் அங்கே தங்கள் மாணவர்களுடன் இருபது குடில்களிலாக தங்கியிருந்தனர். விருந்தினர்களுக்கான பெரிய குடில் நடுவே நின்றிருந்த பிரமோதம் என்னும் இலுப்பைமரத்தின் மேல் அமைந்திருந்தது. அதில் அந்தணர் நால்வரும் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்கள் சுகவாணிச் சோலைக்குள் நுழைந்ததுமே சந்திரரும் சிகரரும் நேரில் வந்து வரவேற்று அழைத்துச்சென்றனர். அவர்கள் அளவைநோக்கு கொண்ட வைதிகர்கள் என்பதனால் ஜைமினி மிக அணுக்கமாக உணர்ந்தான். அவர்களும் மிக விரைவிலேயே அவனை தங்களவர் என கண்டுகொண்டனர். சூதர்மைந்தனை ஜைமினி தோளிலேற்றிக்கொண்டு வந்தமையால் முதலில் சந்திரர் அவனை நேர்கொண்டு நோக்குவதை தவிர்த்திருந்தார். அவன் தன் குருமரபைச் சொன்னபோது அவர் விழிகள் வியப்பில் சுருங்கி உக்ரனை ஒரு கணம் நோக்கி அகன்றன.

ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் முறைச்சொல் உரைத்து அவர்களை அழைத்துச்சென்று குடில்களில் அமர்த்தினர். நீராடி வந்ததும் பால்கஞ்சியும் பழங்களும் அளித்து மன்று அமர்த்தினர். சூதர்கள் இருவருக்கும் மாணவர்களின் குடில்களுக்கு அப்பால் சிறிய குடிலொன்று அளிக்கப்பட்டது. நால்வரும் அவர்களின் அந்தி வேள்வியில் கலந்துகொண்டனர். வேள்விக்குப்பின் அங்குள்ள மாணவர்களின் வினாக்களுக்கு ஜைமினி அளித்த மறுமொழிகள் அவனை மகாவைதிகன் என அவர்கள் எண்ணும்படி செய்தன. அதுவரை இருந்த நோக்கும் நடப்பும் மாற அவர்கள் மூதாசிரியனிடமென அவனிடம் பேசலாயினர்.

இரவுணவுக்குப்பின் அந்தணர் நால்வரும் அமர்ந்திருந்த விருந்தினர் குடிலுக்கு நூலேணி வழியாக உக்ரன் ஏறிவந்தான். வாயிலில் நின்றபடி கைகளை விரித்து “எங்கள் குடில் சிறியது… அங்கே கரடி வந்து என்னை தூக்கிக்கொண்டு செல்லப்போகிறது… மூத்த தந்தையை கரடி சங்கைக்கடித்து கொல்லும்” என்றான். தன் கையை கடித்துக்காட்டி “கரடி குருதியைக் குடிக்கும். மூத்த தந்தை அழுவார்” என்றான். “ஏன் மூத்த தந்தைமேல் இத்தனை சினம்?” என்றான் சுமந்து. “வேறென்ன, ஆணைகளை இடுகிறார் அல்லவா?” என்றான் பைலன். “இவர் அவருடைய ஆணைகளுக்கு மட்டுமே கட்டுப்படுகிறார்” என்றான் சுமந்து. “விதையிலேயே மரத்தின் அனைத்து இயல்புகளும் இருக்கும் என்பார்கள். எத்தனை சரி என எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் வைசம்பாயனன்.

“எங்கள் குடிலில் இதேபோல மான்தோல் படுக்கை இல்லை” என்று உக்ரன் சொன்னான். “இதேபோல தொங்கும் விளக்கும் அங்கே இல்லை.” உள்ளே வந்து கொடியை சுட்டிக்காட்டி “இவ்வளவு பெரிய கொடி அங்கே இல்லை” என்றான். “நீங்கள் இங்கேயே இரவு தங்குங்கள், சூதரே” என்றான் ஜைமினி. “ஆம், நான் அவருடன் தங்கமாட்டேன். அவரை இருட்டில் கரடி பிடிக்கும்போது நான் அழவே மாட்டேன்” என்றான். உள்ளே வந்து மான்தோலிருக்கையில் அமர்ந்து பலமுறை எம்பி அந்த மென்மையை நுகர்ந்து மகிழ்ந்தபின் “ஆனால் அங்கே என்னிடம் நல்ல முழவு இருக்கிறது. பெரிய முழவு. அதை நீங்கள் கேட்டால் தரவே மாட்டேன்” என்றான்.

கீழே விளக்கொளி விழுந்துகிடந்த வட்டத்தில் சண்டன் வந்து நின்று “இங்கே இருக்கிறானா சுண்டெலி?” என்றான். “ஆம்” என்றான் ஜைமினி. “உங்களை கரடி பிடிக்கப்போவதாக சொல்கிறார்.” சண்டன் சிரித்தபடி “மேலே வரலாமா?” என்றான். “வருக… உங்கள் இடம் அல்லவா இது?” என்றான் ஜைமினி. சண்டன் நூலேணி வழியாக மேலே வந்து “மைந்தரை வளர்ப்பது எளிதல்ல. மைந்தனைப் பெற்றவர்களுக்கு மெய்யுசாவ நேரமிருப்பதில்லை என்பது ஏன் என்று புரிந்தது” என்றான். “காலைமுதல் இவன் பேச்சைக்கேட்டு என் தலைக்குள் எலிச்சத்தம் நிறைந்துவிட்டது. மைந்தன் என்ற சொல்லே உடலை நடுங்கச்செய்கிறது.”

ஜைமினி சிரித்து “அதிலும் இவர் மைந்தர்களாலான ஒரு படைக்கு நிகரானவர்” என்றான். சண்டன் களைப்புடன் அமர்ந்துகொண்டு “இனிய காடு…” என்று சுற்றிலும் பார்த்தான். “அழகாக இருக்கிறது. அனைத்தும் தளிர்விட்டிருக்கிறது” என்றான் சுமந்து. பைலன் “இக்காட்டின் அடியில் நீர் நிறைந்துள்ளது. எங்கெல்லாம் பள்ளங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் நீர் ஊறி எழுந்துள்ளது” என்றான். “ஆம், சுகவாணி என இதற்குப் பெயர் வந்ததே அதனால்தான். இங்கே கிளிகள் மிகுதி” என்று சண்டன் சொன்னான். உக்ரன் “அதில் ஒரு கிளியின் பெயர் சகனை. அது என்னிடம் இங்கே உள்ள வேதங்களை கேட்டுக்கேட்டு தங்கள் வேதங்களை மறந்துவிட்டதாக சொன்னது” என்றான்.

அவர்கள் அந்திப் பறவைகளின் ஒலியை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். “என்ன ஓசை! கூடணைந்தபின்னர்தான் அவை பேசிக்கொள்ளவே தொடங்குகின்றன போலும்” என்றான் பைலன். சண்டன் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்தான். “இரவு இத்தனை வெம்மையுடன் சூழ்ந்துகொள்ளுமென எண்ணியதே இல்லை… ஏதோ பெருவிலங்கின் ஆவிமூச்சுபோல இருக்கிறது காற்று” என்றான் பைலன் மீண்டும்.

ஜைமினி “நாகங்கள் மரங்களின்மேல் சுற்றி ஏறும் பொழுது. அவற்றைக் கண்டபின்னர்தான் பறவைகள் ஒலியெழுப்புகின்றன” என்றான். “நாகங்களுக்கான அச்சம் அவற்றின் ஆழத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு தெருவித்தையன் முட்டை ஒன்றை என் கையில் தந்தான். அதை படம்கொண்ட நாகத்தின் அருகே நீட்டும்படி சொன்னான். நாகம் மெல்ல அதைநோக்கி குனிந்தபோது என் கையிலிருந்த முட்டை மெல்ல அதிர்வதை உணர்ந்தேன்” என்றான் வைசம்பாயனன்.

பைலன் சண்டனை நோக்கி “தங்கள் உள்ளம் இங்கில்லைபோலும்” என்றான். சண்டன் விழித்து “என்ன?” என்றான். “எதை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றான் சுமந்து. சண்டன் “காலபீதி என்னும் முனிவரைப்பற்றி” என்றான்.

அவர்கள் நோக்கி அமர்ந்திருக்க சண்டன் “மகாருத்ரபுராணத்தில் இக்கதை உள்ளது. அந்த முட்டையைப்பற்றி சொன்னபோது நினைவிலெழுந்தது” என்றான். “சொல்லுங்கள்” என்றான் வைசம்பாயனன். “நான் அந்தக் கதையை கேட்டதே இல்லை” என்று எழுந்து வந்து இடையில் கைவைத்து நின்றான் உக்ரன். “சென்று அமர்ந்துகொள்ளுங்கள். சூதர் சொல்வார்” என்றான் பைலன். அவன் திரும்பி நோக்கியபின் சென்று ஜைமினியின் மடியில் அமர்ந்தான். அவனை மெல்ல தழுவிக்கொண்டான் ஜைமினி. ஜைமினியின் மார்பில் தன் தலையை சாய்த்து கால்களை நீட்டிக்கொண்டு உக்ரன் அமர்ந்தான். சண்டன் சொல்லத் தொடங்கினான்.

[ 19 ]

மாம்டி என்னும் அந்தணன் பத்தாண்டுகாலம் மைந்தரில்லாமையால் பதினாறு ருத்ரர்களை பதினாறு மாதம் நோற்று தன் மனையாட்டியாகிய காலகேயியின் கருவில் ஒரு குழவியை பெற்றான். கூரை கிழிய பொன்மழை விழுந்த கருமி என அவன் ஆனான். களஞ்சியம் நிறைந்த வேளாளன் என கைபெருகப்பெற்றான். அந்தணருக்கும் சூதருக்கும் அள்ளி வழங்கினான். அவன் தலைக்குமேல் கந்தர்வர்கள் இன்னிசையுடன் எப்போதுமிருந்தனர். அவன் செல்லுமிடமெல்லாம் கின்னரர்கள் நறுமணம் சூழச்செய்தனர். அவன் கேட்கும் சொல்லையெல்லாம் வித்யாதரர்கள் கவிதையென்றாக்கினர்.

ஒருநாள் விண்ணில் பறந்த இந்திரன் தன் நிழல் நீண்டு விழுவதை கண்டான். “என்ன இது, தேவர்களுக்கு நிழல் விழலாகாதே?” என்று அவன் மாதலியிடம் கேட்டான். “அரசே, தேவர்கள் தன்னொளி கொண்டவர்கள். ஆகவே அவர்களுக்கு நிழலில்லை. இன்று உங்களைவிட ஒளிகொண்ட ஒருவன் இதோ கீழே சென்றுகொண்டிருக்கிறான். அவன் உங்கள் உடலுக்கு நிழல் சமைக்கிறான்” என்றான் மாதலி. “யாரவன்?” என்றான் இந்திரன். “தவமிருந்து மைந்தனைப்பெற்ற மாம்டி என்னும் அந்தணன். அவன்மேல் விண்ணவர்கள் மலர்சொரிந்தபடியே உள்ளனர்” என்றான் மாதலி.

இந்திரன் அவனை கூர்ந்து நோக்கினான். “மாற்றிலாத இன்பத்தை மானுடர் உலகியலில் பெறமுடியாதே? எவ்வாறு இப்படி நிகழ்ந்தது?” என்றான். “அவன் தேவர்களை அறிந்தான். தேவருக்கும் தேவரான தென்றிசைத்தலைவனை இன்னும் அவன் அறியவில்லை” என்றான் மாதலி. இந்திரன் அன்றே சிறுகருவண்டாக மாறி பறந்துசென்று யமனை அடைந்தான். “மாம்டியின் மைந்தனின் ஊழ் என்ன? சொல்க, அறச்செல்வரே!” என்றான். “ஊழ்நெறியை முன்னால் அறியலாகாது, அரசே” என்றான் யமன். “அது புடவியை நெய்திருக்கும் ஊழின் ஓட்டத்தை அழிப்பதாகும். அதைச் சொல்ல எனக்கு ஆணையில்லை.” இந்திரன் “அவன் எவ்வண்ணம் இறப்பான் என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்றான். “எவ்வண்ணம் இறப்பான் என்பது எவ்வண்ணம் வாழ்வான் என்பதைத்தான் சுட்டுகிறது. அதை நான் சொல்லமுடியாது” என்றான் யமன்.

பலவாறாகக் கேட்டும் யமன் இரங்காததனால் இந்திரன் யமன் அறியாமல் சித்திரபுத்திரனிடம் சென்று “அந்தணரே, நான் வேள்விகாக்கும் தேவர்தலைவன். ஒன்றை மட்டும் சொல்லுங்கள், ஊழ்முதிர்கையில் அவனை அழைத்துவரும் யமபுரியின் காவலன் யார்?” என்றான். “அதைச் சொல்ல எனக்கு ஆணையில்லை, அரசே” என்றார் சித்திரபுத்திரன். “உம்மால் பிறிதொருவரை அனுப்ப முடியுமா?” என்றான் இந்திரன். “இல்லை, அம்மைந்தன் கருக்கொள்கையிலேயே இங்கே இவனும் இருட்துளியாக தோன்றிவிட்டிருப்பான். இருவரும் சேர்ந்தே பிறக்கிறார்கள். இங்குள்ள பெருங்கோட்டைவாயிலில் அவன் ஒரு சிறுபுள்ளியென தோன்றிவிட்டிருப்பான்” என்றார்.

இந்திரன் காலபுரியின் கோட்டைச்சுவர் வழியாக வண்டாகப் பறந்தான். கோடானுகோடி கொலைவிழிகளையே கருங்கற்சில்லுகள் என அடுக்கிக் கட்டப்பட்டிருந்தது அக்கோட்டை. “மாம்டியின் கருவை கொல்லப்போகும் காலதேவன் எழுக! இது அரசாணை!” என்று கூவிக்கொண்டே சென்றான். கோட்டைச்சுவரில் ஒரு கண் அசைந்தது. “மாம்டியின் மைந்தன் நூறாண்டு வாழ்ந்தபின்னர் அழைக்கவேண்டும் என்பதல்லவா ஆணை?” என்றது அக்கண்களின் வாய். “நீ அதை எப்படி அறிவாய்?” என்றான் இந்திரன். “என் பெயர் காலமார்க்கன். நானே அவனை அழைத்துவரவேண்டியவன். இங்கே கருத்தவத்தில் இருக்கிறேன்” என்றான் அவன்.

இந்திரன் “கரியவனே, நான் உன்னைத்தான் தேடிவந்தேன். எனக்கு ஓர் அருள் செய்க! மாம்டியின் மனைவி காலகேயியின் கருவிலிருக்கும் குழவிக்கு உன் முகத்தை மட்டும் காட்டி மீள்க!” என்றான். காலமார்க்கன் “அதற்கு எனக்கு ஆணையில்லை, அரசே” என்றான். “உன்னை அவன் அறிவானா என எப்போதேனும் எண்ணியிருக்கிறாயா?” என்றான் இந்திரன். “ஆம், அவ்வியப்பு எனக்கு உண்டு. நான் அவனை அறிவேன் என்பதனால் அவனும் என்னை அறிந்திருக்கவேண்டும்” என்றான் காலமார்க்கன். “அத்தனை குழவியரும் அவர்களின் காலனை கருவறைக்குள் அறிந்திருக்கின்றனர். அவனைநோக்கி கைகூப்பியபடியே மண்ணில் தோன்றுகின்றனர்” என்றான் இந்திரன்.

காலமார்க்கன் “ஆனால் அவனை கருவறைக்குள் சென்று நோக்க எனக்கு நெறியில்லையே?” என்றான். இந்திரன் “காலனே, அவனை நீ கொண்டுவருவதே ஊழ் என்றால் கருவில் விதையென இருக்கும் அவன் உன் முகத்தை நன்கறிந்திருப்பான்” என்றான். காலமார்க்கன் “ஆவல் என்னை அலைக்கழிக்கிறது. ஆனால் அவன் என்னை அறிந்துகொண்டால் பின்னர் என்னிடம் நெருங்கமாட்டான். இறப்பை மானுடன் தெரிவுசெய்து தேடிவந்து அணிகலன் என எடுத்து சூட்டிக்கொண்டாகவேண்டும். விரும்பாதவனை அணுகி உயிர்கவர எங்களுக்கு ஆணையில்லை” என்றான்.

“அவ்வாறு நிகழுமென்றால் அதுவே அவன் ஊழ் அல்லவா?” என்றான் இந்திரன். “அவன் ஊழ் அதுவென்றால் நாம் என்ன செய்தாலும் அது நிகழ்ந்தாகவேண்டும், காலமார்க்கனே” என மீண்டும் சொன்னான். “ஆம், அதை ஆராய்ந்துநோக்கவே விழைகிறேன். ஆனால் என் உள்ளம் தயங்குகிறது” என்றான் காலமார்க்கன். “ஆவல் எழுந்தபின் எவரும் அமைந்ததே இல்லை. நீ சென்று அவனை நோக்குவாய்” என்றபின் புன்னகையுடன் விழைவுக்கிறைவன் தன் அரியணைக்கு மீண்டான்.

இந்திராணி உளச்சோர்வுடன் “தேவர்க்கரசே, அந்த அந்தணனின் இன்பத்தை அழிப்பதனால் நீங்கள் அடைவதென்ன?” என்றாள். “நான் எனக்கு பெருநெறி இட்ட ஆணைகளை நிறைவேற்றுபவன் மட்டுமே. மானுடன் மண்ணில் காலூன்றி நின்று விண்ணவனுக்குரிய இன்பங்களை அடையக்கூடாது. மானுடனின் சித்தத்தில் முட்டைக்கருவுக்குள் சிறகுகள்போல அழியாத ஞானப்பேரார்வம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதுவன்றி பிறிதை அவன் அழியா இன்பமென உணரலாகாது” என்றான்.

கருவுக்குள் புகுந்து அங்கே துரியத்தில் இருந்து துளித்து உருக்கொண்டு சுஷுப்தியில் சொக்கிச் சுருண்டிருந்த குழவியின் நெற்றிப்பொட்டில் தொட்டு எழுப்பினான் காலமார்க்கன். உடல் அதிர்ந்து விழித்து அசுரவடிவில் வந்த அந்த முகத்தை நோக்கி அஞ்சி குழவி ஓசையிலாது அழுதது. கால்களை உந்தி உந்தி கருநீரில் நீந்தி விலகமுயன்றது. சிரித்தபடி அணுகி “நான் உன் காலன். உன்னை அழைத்துச்செல்லவிருப்பவன்” என்றான் காலமார்க்கன். “நான் வரமாட்டேன்” என்று குழவி அஞ்சி நடுங்கியபடி சொன்னது. அவன் சொற்கள் குமிழிகளாயின. “எவரும் மறுக்கமுடியாத அழைப்பு என்னுடையது” என்றான் காலமார்க்கன்.

கருக்குழவி அழுதுநடுங்கிக்கொண்டு கருவறைக்குழிக்குள் ஒடுங்கியது. அன்னை தன் வயிற்றில் கொப்புளங்களையும் நடுக்கங்களையும் உணர்ந்தாள். மருத்துவர்கள் அவளை ஆய்ந்துநோக்கி அவள் வயிறு அருவியருகே அமைந்த பாறைபோல உள்நடுக்குகொண்டிருப்பதை உணர்ந்தனர். ஒன்பது மாதங்களானபோது கருவறை சுருங்கி கருவழி வாய் திறந்து குழவியை உமிழ்ந்து வெளித்தள்ள முயன்றது. மைந்தன் தன் இரு கால்களாலும் கருவழியை அழுத்தி மூடிக்கொண்டான். வலி தாளாமல் அன்னை துடித்தாள். குழவி வெளிவரவில்லை. கைதுழாவி நோக்கிய வயற்றாட்டியர் உள்ளே குழவியின் கால்கள்தான் தொடுபடுகின்றன என்றனர்.

பன்னிருமுறை அவ்வண்ணம் குழவி வந்து முட்டி மீண்டது. மூன்று மாதம் குழவி உள்ளேயே இருந்தது. தன் மனையாட்டியின் துடிப்பை தாளமுடியாமல் மாம்டி ருத்ரர்களை வேண்டினான். அவர்கள் மறுமொழி உரைக்காமை கண்டு பதினாறு கைகளுடன் காட்டாலயத்தில் அமர்ந்திருந்த காளியன்னையின் திருநடையில் சென்று நின்றான். “அன்னையே, என் மைந்தனை காத்தருள்க!” என்று கூவினான். பூசகனில் சன்னதமாக எழுந்த அன்னை “அவன் அஞ்சுகிறான். அவன் அச்சமென்ன என்று கேள்” என்றாள். “என் அகல்விளக்கு எண்ணையில் அவன் எழுக!” என ஆணையிட்டாள்.

அகல்விளக்கின் கரியநெய்யில் அச்சம்நிறைந்த கண்களுடன் மைந்தன் தோன்றினான். “தந்தையே, நான் காலமார்க்கன் என்னும் அசுரனால் கொல்லப்படுவேன். ஆகவே நான் வெளிவரவே அஞ்சுகிறேன்” என்றான் மைந்தன். “நீ நிறைவாழ்வுடையவன் என நிமித்திகர் சொல்கிறார்கள், மைந்தா” என்றான் மாம்டி. “நூறாண்டு வாழ்ந்தாலும் இறுதியில் அந்த அசுரனால் கைப்பற்றப்படுவேன் அல்லவா? தந்தையே, நான் இங்கேயே இருந்துகொள்கிறேன்” என்றான் மைந்தன். “அது நீ வாழுமிடமல்ல, மைந்தா. அன்னையின் வயிற்றில் வாழ்வதற்கொரு காலமுள்ளது” என்றான் மாம்டி. “நான் வளராதொழிகிறேன். சிறுகருவாகிறேன். பார்த்திவப்பரமாணுவாக மாறுகிறேன். தந்தையே, இறப்பு என்னை அச்சுறுத்துகிறது” என்றான் மைந்தன்.

“மூடா, நீ அஞ்சுவது இறப்பை அல்ல, பிறப்பை” என்று மாம்டி சொன்னான். “நான் பிறக்கவே விரும்பவில்லை. மண்ணில் வரவேமாட்டேன்” என்று மைந்தன் கைகளால் தொப்புள்கொடியை பற்றிக்கொண்டான். “இங்கே அனைத்தும் இனிதாக உள்ளது. அன்னையின் குருதியால் சூழப்பட்டிருக்கிறேன். அதையே உண்டு உயிர்க்கிறேன். அவள் நெஞ்சத்தை கேட்டுக்கொண்டிருக்கிறேன். மேலும் இனிதாக அப்புவியில் என்ன இருக்கிறது?” என்றான். மாம்டி திகைத்து நோக்கிக்கொண்டு நின்றான். அக்கணம் உண்மையிலேயே புவியில் என்னதான் இருக்கிறதென்று அவனால் சொல்லமுடியவில்லை.

அக்கருக்குழவி காலபீதி என அழைக்கப்பட்டான். அவனைப்பற்றிய செய்திகளை அறிந்து முனிவரும் நூலறிந்த அந்தணரும் வந்து அவனை கண்டனர். “சொல்க, நான் புவிபிறப்பது ஏன்? அங்கிருப்பவற்றில் இங்கிருப்பவற்றைவிட இனியது எது?” என்றான் காலபீதி. “அங்குளோர் அனைவரும் தேடுவது அமுதை. நானோ அவ்வமுதில் திளைத்து இங்கே வாழ்பவன். நான் ஏன் மண்ணிறங்கவேண்டும்?”

அனைவரும் மறுமொழி இன்றி திரும்பிச்சென்றனர். மன்றுகளிலும் இல்லங்களிலும் அமர்ந்து சொல்லாடினர். இரவுகளில் தனித்திருந்து எண்ணி எண்ணி குழம்பினர். உண்பது, புணர்வது, விளையாடுவது, அடைவது, வெல்வது, கற்பது, எய்துவது என்னும் ஏழு மெய்யுவகைகளும் இருப்பது என்னும் ஒருநிலையின் மாற்றுருக்களே என்றும் இருத்தலென்பது இறத்தலுக்கெதிரானதென்னும் உவகையை மட்டுமே கொண்டது என்றும் உணர்ந்தனர். அவ்வறிதல் அவர்களை சோர்வுறச்செய்தது.

மாம்டி மீண்டும் பதினாறு ருத்ரர்களை எண்ணி தவம்செய்தான். ஒவ்வொருவரிடமாக அவன் கேட்டான் “என் மைந்தன் கேட்டதற்குரிய விடை என்ன?” அவர்கள் “பிறப்பு இறப்பால் நிகர்செய்யப்பட்டாகவேண்டும். பிறிதொரு விடையும் எங்களிடமில்லை” என்றனர். தாங்களும் குழம்பி “பிறப்பதனால் வாழ்வமைகிறது. வாழ்வமைவதனால் இறப்பு நிகழ்கிறது. பிறிதொரு விளக்கமும் இதற்கில்லை” என்றனர். பதினாறாவது ருத்ரன் “அந்தணனே, ஒரு மெய்வினாவுக்கு முழுமெய்மை மட்டுமே விடையென்றாகும். நீ கேட்கும் இவ்வினாவுக்கு பிரம்மஞானம் மட்டுமே விடை. அதை மகாருத்ரனிடம் கேள்” என்றார்.

மாம்டி மகாருத்ரனை எண்ணி தவம்செய்தான். அவன் ஏழு கருநிலவுக்காலம் தன்னை உதிர்த்து அருந்தவம் செய்து நிறைந்தபோது மின்னல்தொட்டு எரிந்தெழுந்த கரும்பனையாக மாருத்ரம் அவன் முன் எழுந்தது. “எனக்கு பிரம்மஞானம் அருள்க!” என்றான் மாம்டி. அவன் மேல் அனல் கவிந்தது. தலைமுடியும் இமைமயிர்களும் பொசுங்கின. எரிமணமென எழுந்தது மூச்சு. தன்னுள் அவன் “ஆம்” என்னும் ஒலியை கேட்டான். “சிவோகம்” என முழங்கியபடி அவன் எழுந்துகொண்டான்.

மாம்டி தன் மைந்தனிடம் மீண்டான். காளியின் அகலெண்ணையில் மைந்தனை வரவழைத்தான். கால்கட்டைவிரலை வாயிலிட்டு தன்னைத்தான் சுவைத்து மகிழ்ந்திருந்த காலபீதி “சொல்க தந்தையே, நான் ஏன் வெளிவரவேண்டும்?” என்றான். “ஏனென்றால் நீ சிவம். உருக்கொண்டு உருவழிந்து சிவம் ஆடும் நடனமே நீ கொள்ளும் வாழ்க்கை” என்றான் மாம்டி. “ஒவ்வொரு உயிர்த்துளியும் ஒவ்வொரு பருப்பொடியும் அவ்வாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இது அழியாத தாளமென்றறிக! எழுக காலரூபனாக! காலத்துடன் நின்றாடுக!”

மனையாட்டியின் வயிற்றில் வாயை வைத்து அவன் முதன்மைச்சொல்லை மூன்றுமுறை சொன்னான். “சிவமேயாம்! சிவமேயாம்! சிவமேயாம்!” குழவி அச்சொல்லை தான் முழங்கியது. அன்னையின் உள்ளத்தில் எரிதழல்தூண் ஒன்று கனவென எழுந்தது. எரிந்து எழுவதுபோல மைந்தன் வெளியே வந்தான். அரைவிழி திருப்பியபோது தன் நிழலென உடன் எழுந்த காலமார்க்கனைக் கண்டான். புன்னகையுடன் கைகளை வீசி உடல்நெளித்து அதனுடன் ஆடினான்.

காலநிழலுடன் ஆடி வளர்ந்தவனை மகாகாலர் என்று வழுத்தினர் நூலோர். சொல்தேர்ந்த அறிஞனாகி சொல்கரைந்து யோகியாகி அமர்ந்தார் மகாகாலர். ஒவ்வொருமுறை அவர் வளரும்போதும் அவரைவிட வளர்ந்தான் காலமார்க்கன். அவர் ஆற்றும் செயல்களில் விளைவுகுறித்த அச்சமாக இருந்தான். அவர் கற்ற நூல்களில் ஐயமானான். அவர் கொண்ட உறவுகளில் ஆணவத்தின் இறுதிக் கசப்பானான். அவர் செய்த பூசனைகளில் பழக்கமெனும் பொருளின்மையானான். அவர் அமைந்த ஊழ்கங்களில் எஞ்சும் தன்னிலையானான்.

நூறாண்டு முதிர்ந்தபோது ஒருநாள் அவனை நோக்கித் திரும்பி அவர் கேட்டார் “உன்னை வென்ற மானுடர் எவரேனும் உளரா?” காலமார்க்கன் சொன்னான் “வெல்லலாகாதென்பதே புடவியின் முதல்நெறி.” மகாகாலர் “தேவர்களில் உன்னை வென்றவர் எவர்?” என்றார். “தேவர்கள் என்னால் வாழ்த்தப்படுபவர்கள் மட்டுமே” என்றது நிழல். “தெய்வங்களில் உன்னை வென்றவர் எவர்?” என்றார் மகாகாலர். “முக்கண்முதல்வனின் காலடியில் அமைபவன் நான்” என்றான் காலமார்க்கன். “அவர் ஏந்திய பினாகமும் பாசுபதமும் என்னை ஆள்கின்றன.”

தன் இடையாடையை அவிழ்த்துவீசிவிட்டு தென்மேற்கு திசையில் வடக்கு நோக்கி அமர்ந்தார் மகாகாலர். ஊழ்கத்திலாழ்ந்து சென்றார். உடலுருகி சித்தம் அழிந்து தன்னிலையும் மறைந்தபோது அப்பால் எழுந்த அனல்துளியை கண்டார். “ஆம்” என்றபடி விழிதிறந்தார். அருகே நீண்டுகிடந்த கரிய நிழலைக்கண்டு புன்னகையுடன் கைகளை விரித்து “அருகே வா, காலமார்க்கனே!” என்று அழைத்தார்.

“விண்தொடும் பேருருவுடன் அவர் முன் எழுந்தது கருநிழல். அது மான்மழுவும் நீர்மலிச்சடையும் முக்கண்ணும் முப்புரிவேலும் கொண்டிருந்தது. அதைநோக்கி விழிதூக்கி “யாமேநீ!” என்றார் மகாகாலர். “ஆம் யாமேநீ” என்றது நிழல்.

சண்டன் சொல்லி முடித்தபோது வைதிகர் நால்ரும் இருளை நோக்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தனர். இலைத்தழைப்பு வழியாக காற்று ஓடிக்கொண்டிருந்தது. இடைவெளியில் தெரிந்த ஒற்றை மீன் நடுங்கியது. நீண்டநேரம் கடந்து பைலன் பெருமூச்சுடன் விழித்துக்கொண்டான். அவ்வொலியில் பிறரும் நனவுமீண்டனர். ஜைமினி எழுந்துசென்று கருந்திரி எரிந்த அகலை தூண்டினான். ஒவ்வொருவரும் நிழல்பெற்றனர்.

உக்ரன் “பெரிய தந்தையே” என மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்க!” என்றான் சண்டன். “மகாகாலர் பெற்ற அந்த மெய்மையின் பெயர் என்ன?” சண்டன் “அதை பாசுபதம் என்கின்றனர் அறுநெறிச் சைவர்” என்றான். அவன் எழுந்து அருகே வந்து நின்று “எப்படிப்பட்டது அது?” என்றான். “அறியேன். யோகநூல்கள் உரைப்பவற்றை சொல்கிறேன்” என்றான் சண்டன். “பிநாகம் பொன்னிறமான பெருநாகம். அது வடதிசையிலிருந்து தென்திசைவரை நிறைத்திருக்கும் முடிவிலா வளைவையே உடலெனக்கொண்டது.”

“அதற்கு ஏழு தலைகள். செந்நிறமான ஆணவம், அனல்நிறமான சினம், பொன்னிறமான விழைவு, பசும்நிறமான அறிவு, நீலநிறமான மொழி, கருநீலநிறமான ஊழ்கம் கருநீலச்செம்மைகொண்ட தன்னிலை என அதை வகுக்கின்றன நூல்கள். பாசுபதம் அதன் அம்பு. அது நீலநா பறக்கும் தழல்வடிவமான சிறுநாகம். நிழலற்றது அது” என்றான் சண்டன். “பாசுபதம் பெற்றவன் தானும் சிவமென்றாகிறான்.”

அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த சொல்லையே உக்ரன் கேட்டான் “பெரிய தந்தையே, அர்ஜுனன் பாசுபதம் பெற்றானா?” சண்டன் “பெற்றான் என்கின்றன சூதர்கதைகள். திசைவென்றவன் பின் வெல்வதற்கு எஞ்சுவது அதுவே. ஏனென்றால் அது திசைகளின் மையம்” என்றான்.

தன் உடலுறுப்பென தோளில் கிடந்த முழவை எடுத்து சண்டன் பாசுபதச் சொல்லை  பாடலானான். தாளம் உறும சொல் உடனிணைந்து ஆடியது.

ஓம்! நமோ பகவதே மகா பாசுபதாய!

அதுலபலவீர்ய பராக்ரமாய! திரிபஞ்சனயனாய!

நானா ரூபாய! நானாபிரஹரணோத்யதாய!

சர்வாங்கரக்தாய! ஃபின்னாக்ஞனசயபிரக்யாய!

ஸ்மஸானவேதாளப்ரியாய…

பைலன் ஒருசொல்லால் அறையப்பட்டான். அவன் விரல்கள் நடுங்கத் தொடங்கியபின்னரே அச்சொல்லை அவன் சித்தம் அறிந்தது. சர்வாங்க ரக்தாய! குருதியுடல். கருக்குழவியுடல். சர்வாங்க ரக்தாய! கொலைகளத்தில் குருதிசூடிக் கூத்தாடும் உடல். சர்வாங்க ரக்தாய! அனலுடல். அனலெனும் குருதிப்பேருடல்.  சர்வாங்க ரக்தாய!  சர்வாங்க ரக்தாய! குருதியுடல் கொண்டெழுக! சர்வாங்க ரக்தாய! சர்வாங்க ரக்தாய! சர்வாங்க ரக்தாய! சிவாய!

தொடர்புடைய பதிவுகள்


விஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்

$
0
0

பவா செல்லத்துரையின் உரை இணைப்பு

 

நாஸர் உரை

 

 

கு சிவராமன்

 

வண்ணதாசன் ஆவணப்படம்

எழுத்தாளர் வண்ணதாசன் உரை
விஷ்ணுபுரம் விருது – 2016 நிகழ்வில்
எழுத்தாளர் ஜெயமோகன் உரை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17

$
0
0

 

அன்புள்ள ஜெ வுக்கு ,

23 டிசம்பர் பொழுது கழியவேயில்லை. எப்போது 24 பகல் விடியும் ஆதர்ச எழுத்தாளர்களை எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற பரபரப்புடனேயே பொழுது விடிந்தது. காலையில் முதல் நிகழ்விலேயே நாஞ்சில் அய்யாவின் கம்பனின் தமிழாடல்களையும் பாரதியின் யுகத்தமிழையும் அவர்தம் சொல்லால் காது நிறைத்தேன். பாரதிமணி அய்யாவின் அனுபவங்கள் இயல்பான அவர்தம் உரையாடலால் அரங்கு களைகட்டியது. நான் மது உண்டவனில்லை. அவரின் ராயல் ஸ்காட்ச் டச்சில்! அது உண்ட மயக்கம் கொண்டேன்.

இனி விழா நாயகரின் கலந்துரையாடல் . அவரின் எழுத்தைப்போலவே உரையும் இவ்வளவு சுகமான வருடலாய் தென்றலாய் என்னை தீண்டும் என எதிர்பார்க்கவில்லை. விழாநாள் முடிந்தும் இன்றுவரை அந்த பேச்சிப்பாறையின் மின்மினிப்பூச்சி கண்ணில்! ஒளி விட்டுவிட்டுத் தெறித்துக் கொண்டேயிருக்கிறது. பவா அவர்களின் உரையை அன்றுதான் முதன்முதலாய் கேட்டேன். தேன்கிணற்றில் அவரே என்னை தள்ளிவிட்டுவிட்டார். கவிஞர் தேவதேவனின் எளிமை மனதை என்னவோ செய்தது சொல்லத் தெரியவில்லை. ஆக மொத்தம் எவ்விருது விழாவைத் தவற விட்டாலும் விடுவேன். விஷ்ணுபுரம் விருது விழாவைத் தவற விடேன். நன்றி இந்த ஒரு சொல் போதாது மீண்டும் நன்றி

கண்ணன்,

கோவை

புகைப்படங்கள் எடுத்த கணேஷ் பெரியசாமி

 

ஜெ

செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம் சிறப்பு. எழுத்தாளர்களின் ஆவணப்படங்களைப் பொருத்தவரை அவற்றை நாம் ஒருமுறை பார்த்துவிட்டால் அதன் பின்னர் அவற்றை எப்போதும் நினைப்போம். அந்த எழுத்தாளர் அவருடைய எழுத்துக்கள் வழியாக நமக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிந்தவராக இருப்பார். அவர் உடல்மொழி நமக்குத்தெரிந்ததும் காலகாலமாகப்பழகியவராக ஆகிவிடுவார். வண்ணதாசனின் சிரிப்பும் கைகளின் அசைவும் மறக்கவே முடியாதது

செந்தில்

 

அன்புள்ள ஜெமோ

இந்த விஷ்ணுபுரம் விருதுவிழா தான் நிகழ்ச்சிகள் அமைப்பு எல்லாவற்றிலும் டாப். ஒருகணம் கூடத் தொய்வில்லை. நீங்கள் எதிலும் பெரிதாகக் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டும்தான் குறை. மற்றபடி அதிகமாகப் பெண்கள் இல்லை என்பதையும் குறையாகச் சொல்லலாம். கூட்டங்கள் எல்லாமே சுருக்கமாக அடர்த்தியாக இருந்தன. தேவையில்லாத மாலைமரியாதைகள் வளவளப்புப் பேச்சுக்கள் இல்லை என்பதை பெரிய சிறப்பாகச் சொல்லவேண்டும். எழுத்தாளர்களை அவர்களின் உணர்ச்சிகளையும் நேரடியாகப்பார்ப்பது அவர்களின் எழுத்தை மிகநெருக்கமாக அறிவதற்கான வாய்ப்பு. சென்னையிலும் இதேபோல நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும். சென்னையில் வெறும் கூட்டங்கள்தான் நடக்கின்றன

நாராயண்

 

 

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா மிகச்சிறப்பாக நடந்து முடிந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் விழாவில் பங்குபெற்ற நண்பர்களின் பதிவுகளையும், விழா புகைப்படங்களையும் பின்தொடர்வதன் மூலம் மானசீகமாக நம் இலக்கிய விழாவில் பங்கெடுத்திருக்கும் திருப்தி கொண்டு மனஅமைதி கொள்கிறேன்.

எந்த பலனையும் துளியும் எதிர்பார்க்காமல் நாம் செய்ய விழைகின்ற செயல் மிகப்பெரும் வெற்றியை கட்டாயம் அடையும் என்பது தான் இவ்வுலக தர்மம். விவேகானந்தரின் வலிமையான எண்ணத்தில் உதித்த ராமகிருஷ்ணா மிஷனின் ஆன்மீக தொண்டு போல, ஜெயமோகனின் வலிமையான எண்ணத்தில் உதித்த “விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்” -ன் இலக்கிய தொண்டும் வருங்காலத்தில் பெரும்புகழ் பெற்று, தாங்கள் எண்ணியதை விடவும் இலக்கியத்திற்கு அதிகமாக தொண்டாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

விழாவில் வண்ணதாசன் வாசகர் எஸ். செல்வராஜ் அவர்களின் கடிதம் வாசிக்கப்பட்டதாகவும், வண்ணதாசன் செல்வராஜை காண விரும்புவதாக மேடையில் நெகிழ்ந்திருப்பதை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

 

நான் தமிழ் இலக்கிய உலகிற்கு ஜெயமோகன் மூலம் தான் அறிமுகம் ஆகி இருக்கிறேன். இவ்வாண்டிற்கான விஸ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு அளிக்க விருப்பதாக ஜெயமோகன் தளத்தில் வெளிவந்த பின்புதான், வண்ணதாசன் பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் வாசகர் கடிதங்களை படித்த பின்பு தான் எப்பேர்ப்பட்ட இலக்கிய ஆளுமை வண்ணதாசன் என்பதை உணர்ந்து கொண்டேன். அவ்வழியிலே எஸ்.செல்வராஜ் -ன் வாசகர் கடிதம் மிகவும் கூரியது. அதை படித்து சிறு கண்ணீர் துளி இல்லாமல் யாரும் கடந்து போயிருக்க முடியாது என்று படுகிறது. செல்வராஜின் கடிதத்தை படித்தவுடன் வண்ணதாசன் மேல் ஓர் சொல்லெண்ணா ஈர்ப்பு ஏற்பட்டது உண்மை, அதன் எழுச்சி யில் வண்ணதாசனின் பல புத்தகங்களை வாங்கி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்,செல்வராஜ் அவர் கடிதத்தில் குறிப்பிட்டது போல “நாங்களெல்லாம் வறண்ட நிலத்தில் இருந்து வந்தவர்கள்….” என்ற கருத்தையே மையமாக வைத்து “சுவையாகி வருவது” என்ற தலைப்பில் வண்ணதாசன் பற்றி எழுதிருந்தீர்கள். அதை படித்தவுடன் செல்வராஜின் கடிதம் உங்களையும் பாதித்திருக்கிறது என்று உணர்ந்தேன். அக்கட்டுரை செல்வராஜின் உணர்வுகளுக்கு நீங்கள் அளித்த மரியாதையாகவே எனக்கு பட்டது.

 

இரண்டாவது, விழாவில் அவர் கடிதம் அவர் (தந்தை) வண்ணதாசன் முன்பாகவே படிக்கப்பட்டது.  இதன் மூலம் விஷ்ணுபுரம் வாசகர் வட்டமும், தாங்களும் வாசகர் செல்வராஜின் உணர்வுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் என்று எண்ணி பேருவகை கொண்டேன். வண்ணதாசன் இதை எப்படி அழுகாமல் எதிர்கொண்டிருப்பார் என்று எண்ணும்போதே  அழுகை வருகிறது.

தங்களுடைய இணைய பக்கத்தில் “இலக்கியம் வாழ்க்கைக்கு பயன் படுமா?” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தை எண்ணி கொள்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் செல்வராஜ் மாதிரியான வாசகர்கள் கட்டாயம் இருப்பார்கள் என்று என் அகம் சொல்கிறது, அவர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை தாங்கள் மறுபடியும் தொடங்க வேண்டும். இலக்கியத்தின் பயன் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் வேரூன்றி நிற்கிறது என்பதை உணர்கிறேன்.

தன் கடிதத்தில் தனக்கு  வாழ கற்றுக்கொடுத்த தன் தந்தை வண்ணதாசனிடம் அறிமுகம் செய்து கொள்ளாமல், எஞ்சிய காலங்களிலும் அவர் நினைவுடனே வாழ்ந்து சாக விரும்புவதாக செல்வராஜ் எழுதி இருந்தார். தந்தையும் தன் மகனை பார்க்க விரும்புவதாக மேடையில் நெகிழ்திருக்கிறார். ஜெயமோகனின் வாசகர்களாகிய நாங்களும் அத்தந்தையும் மகனும் சந்திக்க போகும் அத்தருணத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம். நன்மையே விழைக…

இப்படிக்கு தங்கள் நலம் விரும்பும்

பாண்டியன் சதீஸ்குமார்

 

 

முந்தைய பதிவுகள்

 

விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10

விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 13 ராஜீவ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 14

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 15

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 16 தூயன்

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

 

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

 

 

புகைப்படங்கள்

 

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

 

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

 

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

 

 

=============================================================

 

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

 

============================================================

 

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்

$
0
0

சென்ற விஷ்ணுபுரம் விருதுகள் குறித்த நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தேன். இம்முறை விஷ்ணுபுரம் விருதுக்கு வண்ணதாசன் தேர்வு செய்யப்படுவது சென்ற மார்ச் மாதத்திலேயே நண்பர்கள் கூடி முடிவெடுத்த விஷயம். நான் ஐரோப்பியப் பயணம் முடிந்து வந்ததுமே வண்ணதாசனை அழைத்து அவருக்கு விருது அளிக்க இருப்பதாகவும் அதை ஏற்று அவர் எங்களை கௌரவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். வண்ணதாசன் அவருக்கே உரித்தான தயக்கத்துடனும் பணிவுடனும் ஏற்புத்தெரிவித்தார்.

விருது அறிவிப்பை செப்டம்பர்- அக்டோபர் வாக்கில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஏனெனில் ஒரு விருதை அறிவித்த பிறகு விருதுவிழா வரைக்குமான  தொடர்கவனத்தை நிலை நிறுத்துவது இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. விருது வழங்குவதல்ல, ஓர் எழுத்தாளர்மேல் சூழலின் கவனத்தை சிலமாதங்களுக்க்கு குவிப்பதே எங்கள் நோக்கம். விஷ்ணுபுரம் விருதுகள் அதைச் செய்வதனால்தான் இன்று தமிழின் முதன்மையான இலக்கியவிருதாக இது கருதப்படுகிறது.

சிங்கப்பூர்ப் பணி முடித்து அக்டோபரில் நான் திரும்பி வந்ததுமே விருது அறிவிக்கப்பட்டது. வேறு எந்தமுறையும் இல்லாதபடி இந்தமுறை அவ்விருதை ஏற்றும் கொண்டாடியும் வந்த வாசகர்க் கடிதங்கள் உண்மையிலேயே பிரமிக்க வைத்தன. ஏறத்தாழ இருபது தொகுதிகளாக அவ்வாசகர் கடிதங்கள் இணையத்தில் பிரசுரமாயின.

 

வண்ணதாசனின் வாசகர்கள் பலதரப்பட்டவர்கள். நகர்ப்புறம் சார்ந்த வாசகர்களுக்கு அவர் தென்தமிழ் நாட்டின் நதிக்கரைப் பண்பாடு ஒன்றின் நறுமணத்தை அளிக்கக்கூடியவராக இருக்கிறார். நவீன இளைஞர்களுக்கு மனித உறவின் நுட்பமான தருணங்களை சொல்லிக் காட்டக்கூடியவராக இருக்கிறார். வரண்ட தென்தமிழகத்து நிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கையளித்து வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் சந்திக்க வைக்கும் ஒரு மூத்த வழி காட்டியாக இருக்கிறார்.

கடிதங்களில் பலர் அவரைத் தங்கள் ஞானாசிரியனாகவே வரித்திருப்பதை ,சிலர் தந்தைக்கு நிகரான இடம் அவருக்கு அளித்ததையும் பார்த்த போது இலக்கியத்தில் இருந்து நம் பண்பாடை நோக்கி நீளும் அன்பின் கைக்கு எவ்வளவு எதிர்வினைகள் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டோம்.

விஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் இருபத்தைந்து என்று முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் இறுதிவாரம் என்பது எங்களது பொதுவான இலக்கு. அரங்கு கிடைக்கும் நாளை ஒட்டியே அது மேலதிகமாக முடிவு செய்யப்படும். இம்முறை கிறிஸ்துமஸ் அன்றே விழா நடந்தது ஒரு கூடுதலான மகிழ்ச்சி. வண்ணதாசனைப் பற்றி ஆவணப்படம் எடுக்கும் பொருட்டு நானும் மீனாம்பிகையும் சக்தி கிருஷ்ணனும் வண்ணதாசனை அவரது இல்லத்தில் சந்தித்து இரண்டு நாட்கள் உடனிருந்து பேசி பதிவு செய்தோம். அப்போதே விழாவுக்கான மனநிலைகள் தொடங்கிவிட்டன.

 

’குருஜி’ சௌந்தர் [சத்யானந்தா யோகமையம்] நாஸருக்கு பொன்னாடை

ஒவ்வொரு வருடமும் விஷ்ணுபுரம் விழா பெரிதாகிக் கொண்டே செல்கிறது. எந்த அளவுக்கு பங்கேற்பாளர்கள் வருவார்கள் என்பதை முன்னரே ஊகிக்க முடிவதில்லை. ஆகவே எவ்வளவு ஏற்பாடுகள் செய்தாலும் இறுதியில் நெருக்கடியை சந்திக்க நேர்கிறது. இம்முறை அப்படி நிகழலாகாது என்ற முன்னெச்சரிக்கை எங்களிடம் ஆரம்பத்திலேயே  இருந்தது.

எனவே ஆர்வமுடைய நண்பர்கள் அனைவரையும் முன்னரே கூப்பிட்டு பேசி அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை உறுதி செய்தோம். நண்பர் ’குவிஸ்’ செந்தில் விழாவை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றினார். நண்பர் டைனமிக் நடராஜன் தன்னுடைய நிர்வாகத் திறன்களுடன் உடனிருந்தார். நெடுங்காலம் நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட செந்தில் போன்றவர் உள்ளே வருவதன் பயனென்ன என்பது அதன்பிறகு தான் தெரிந்தது.

விழா மூன்று மாதங்களுக்கு முன்னரே தெளிவாகத் திட்டமிடப்பட்டது. பங்கேற்பாளர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. வரவேற்புக் குழு, தங்குமிட வசதிகளைக் கவனிப்பதற்கான குழு ,உணவு மற்றும் பின்னணி பணிகளைச் செய்வதற்கான குழு, அரங்க ஏற்பாடுகளை கவனிப்பதற்கான குழு என்று அமைக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை செய்ய முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. விஜயசூரியன், மீனாம்பிகை, ராதாகிருஷ்ணன், செல்வேந்திரன் என பல நண்பர்கள் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்தனர்.

 

’கவர்னர்’ சீனிவாசன் இரா முருகனுக்குப் பொன்னாடை

சென்றமுறை விழாமுடிந்தபோது முற்றிலும் பழகிய முகங்கள் வந்து கூடும் ஒர் அமைவாக ஆறு ஆண்டுகளில் இது மாறிவிட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆகவே சென்ற ஆண்டு நான்கு புதுவாசகர்சந்திப்புகளை அமைத்தேன். அவற்றில் அறிமுகமான வாசகர்கள் ஏறத்தாழ நூறுபேர் இம்முறை வந்திருந்தனர். விழாவை ஒரு பெரிய இளைஞர்சந்திப்பாக ஆக்கிய அம்சம் இதுவே.

இருபத்து மூன்றாம் தேதி கிளம்பி இருபத்து நான்காம் தேதி காலையில் தான் நான் விழாவுக்கு வந்தேன். வழக்கம்போல நேரடியாக விழாவுக்கு. வந்திறங்கும் போதே அனைத்து ஏற்பாடுகளும் முற்றிலும் சிறப்பாக முடிந்திருப்பதைக் கண்டேன் .எங்கு பார்த்தாலும் இளையமுகங்கள். நண்பர் கிருஷ்ணன்  என்னிடம் சொன்னார், வருடா வருடம் பங்கேற்பாளர்களின் வயது குறைந்து கொண்டே போகிறது. இப்படிப்போனால் எல்கேஜி,  யுகேஜி குழந்தைகளிடம் பேசவேண்டும் போல தோன்றுகிறது என்று. பழைய விஷ்ணுபுரம் நண்பர்கள் பலரும் தங்களை மூத்தவர்களாக உணரும் அளவுக்கு இளைஞர்கள்.

சென்ற முறை விழா நடந்த ராஜஸ்தானி பவனை விட சற்று பெரியதாக அரங்கு தேவை என்பதற்காக குஜராத்தி பவன் எடுத்தோம். இங்கு தனித்தனித் , தங்குமிடங்கள் விவாதத்திற்கான கூடம் ஆகியவை இருந்தன. விழா நெருங்கும்போது பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் உதவியுடன் குஜராத்தி பவன் அருகே டாக்டர் பங்களா என்னும் தங்குமிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது.

 

விஜய் சூரியன் பவா செல்லத்துரைக்கு பொன்னாடை

 

இருபத்து நான்காம் தேதி காலையிலே ஏறத்தாழ நூற்றிருபது பேர் வந்துவிட்டிருந்தனர். காலை உணவுக்கு முன்னரே திட்டமிட்டிருந்த நூறு தட்டுகளுக்கு மேலதிகமாக முப்பது தேவைப்பட்டது. அப்போதே தெரிந்துவிட்டது ஒவ்வொரு கணமும் இது பெருகிக் கொண்டே செல்லும் என்று அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய முடிந்தது.

பத்து மணிக்கு முதல் அமர்வு நாஞ்சில் நாடனுடையது. இந்த முறை விழாவை ஒரு கொண்டாட்டமாக மாற்றியதில் நாஞ்சில் நாடனின் பங்கு மிக முக்கியமானது. நாஞ்சில் முதல் அமர்விலேயே அவருக்கே உரித்தான வேடிக்கையும், நையாண்டியும், மரபிலக்கிய ஆராய்ச்சியும் நவீன இலக்கிய விவாதமுமாக ஒரு உற்சாக மனநிலையை உருவாக்கினார். வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாஞ்சில் பல கோணங்களில் பதில் சொன்னார். அரங்கு சிரித்துக்கொண்டே இருப்பதை இப்போது புகைப்படங்களில் காணமுடிகிறது

அடுத்து  பாரதி மணி அவர்களை வாசகர்கள் சந்தித்தனர். நெடுங்காலம் டெல்லியில் பணியாற்றிய பாரதி மணி தனது பணியனுபவங்கள் தனது சுயவாழ்க்கை அனுபவங்களுடன் ஐம்பதாண்டுகால நவீன நாடக இயக்கத்துடனான தனது உறவுகளையும் பகிர்ந்து கொண்டார். இப்ராஹிம் அல்காஷியின் மாணவராக அவர் தொடங்கியது, நவீன நாடகங்களை டெல்லியில் போட்டது, அதற்கு வந்த வரவேற்பும் ஏமாற்றங்களும் என விரிவாகப் பேசினார். அவருடைய நடிப்பு பற்றிய அனுபவங்களையும் வேடிக்கையுடன் பகிர்ந்துகொண்டார்

மீனாம்பிகை கு சிவராமனுக்குப் பொன்னாடை

 

மதிய உணவுக்குப்பின் இரா.முருகன் வாசகர்களை எதிர்கொண்டார். இரா.முருகனுடைய எழுத்து கூர்ந்து வாசிக்கும் சிறுபான்மை வாசர்களுக்கானதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. அதன் பகடிகள் பலவும் முன்னரே இலக்கிய அறிமுகம் உடையவர்கள், இசையில் ரசனை கொண்டவர்கள் ,கூடுதலாக பாலக்காட்டு கேரளப் பண்பாடு பற்றிய அறிமுகம் உடையவர்களுக்கே புரிவதாக அமைந்திருந்தது. இருப்பினும் அங்கு வந்திருந்த கணிசமான இளைஞர்கள் அவரை கூர்ந்து வாசித்திருந்தார்கள், அவருடைய படைப்புகள் சார்ந்து பலதரப்பட்ட வினாக்கள் வந்தன. அடங்கிய குரலில் பூடகமான நையாண்டியுடன் முருகன் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தார்.

மாலைத் தேநீருக்குப் பின் பவா செல்லத்துரையின் அரங்கு. பவா இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பலதரப்பட்ட இலக்கிய அரங்குகளில் பங்கு கொண்டு வருபவர். எனவே அரங்கு சார்ந்த தடுமாற்றமோ மொழி வெளிப்பாட்டில் தயக்கமோ அவரிடம் இல்லை. பால் சக்கரியாவின் தேன் என்னும் கதையை அரங்கே சிரிப்பில் அதிரும்படி மிகச் சிறப்பாக சொன்னார். நிகழ்த்தி காட்டினார் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்

தொடர்ந்து தனது புனைவுகளைப்பற்றி ,நாட்டார் பண்பாட்டுக்கும் தனக்குமான உறவுகளைப்பற்றி, தான் அறிந்த அடித்தள மக்களின் வாழ்க்கையிலிருந்து தன்னுடைய கதைகள் உருவான விதம் பற்றி பல கோணங்களில் வாசகர்களின் வினாக்களுக்குப் பதிலளித்தார். ஒவ்வொரு முறையும் அவர் சொற்களின் வழியாக வெவ்வேறு கதாபாத்திரங்கள் வந்து நின்று முகம் காட்டி செல்வது கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. ஒரு கிணறு வெட்டி அதில் நீர் வெளிப்படும் தருணத்தை உண்மையில் ஒரு சிறந்த இலக்கிய அனுபவமாக மேடையில் அவரால் நிகழ்த்தி காட்ட முடிந்தது.

 

கடலூர் சீனு

மாலையில் இரண்டு மணி நேரம் செந்தில் ஒருங்கிணைத்த இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. நண்பர் செந்தில் வினாடி வினா நிகழ்ச்சிகளை கோவை வட்டாரத்தில் நிகழ்த்துவதில் புகழ் பெற்றவர். கல்லூரிகளில் அவருக்கென்று ஒரு இடம் இன்று உண்டு அவர் திறமையை ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் வந்தது. அதுவும் சென்ற ஆந்திரப்பயணத்தின்போது கிருஷ்ணை ஆற்றின் கரையில் பேசிக்கொண்டிருந்தபோது எந்த எழுத்தாளர் தனது படைப்புகளில் கதாநாய்கனின் பாதங்களை அதிகமாக வர்ணிப்பவர் என்று நான் ஒரு வினா கேட்டேன். எவருக்கும் அது பதில் தெரிந்திருக்கவில்லை. நா.பார்த்தசாரதி என்று பதில் சொன்னவுடன் பலரும் வெவ்வேறு படைப்புகளை நினைவு கூர்ந்து ஆமென்றார்கள்.

வினாடி வினா என்பது வெறுமே தகவலை நினைவிலிருந்து மீட்டிக் கொள்ளும் அனுபவம் அல்ல, நாம் வாசித்து நினைவின் அடுக்குகளில் எங்கோ பின்னால் கிடக்கும் பல்வேறு படைப்புகளை இழுத்து முன்னால் கொண்டு வரும் ஒரு அரிய இலக்கிய அனுபவமாக ஆகமுடியும் என்ற எண்ணம் அன்றைக்கு ஏற்பட்டது. அதுவே இந்நிகழ்ச்சிக்கும் தொடக்கம்.

குவிஸ் செந்தில் நிகழ்த்திய வினாடி வினா நிகழ்ச்சியில் நான்கு அணிகளாக புதிய வாசகர்களும் பழைய வாசகர்களும் இணைந்து   கலந்து கொண்டனர். பிற வாசகர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. நினைத்ததை விட உற்சாகமான நிகழ்வாக அமைந்தது. வேடிக்கையும் சிரிப்பும் வெவ்வேறு இலக்கியப் படைப்புகளை நினைவுக்கூர்வதின் பரவசமும் அடங்கிய நிகழ்ச்சி . வினாக்கள் மூன்று அடுக்குகளாக உருவாக்கப்பட்டன. எளிய விடைகள் கொண்டவை, சற்றே கடினமான விடைகள் கொண்டவை, மிகக்கடினமான விடைகள் கொண்டவை. மிகக்கடினமான விடைகளுக்குக்கூட இளம் வாசகர்களிடமிருந்து வந்த உடனடியான பதில்கள் இனி ஒரு இலக்கிய வினாடி வினா என்றால் மிகக்கடினமான வினாக்களைக் கொண்டு மட்டுமே கேள்விகள் தயாரிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கின.

 

செல்வேந்திரன் தொகுப்புரை

உதாரணமாக நல்லசிவம் என்பது எந்த எழுத்தாளரின் ஆல்டர் ஈகோவாக அவரது புனைவுகளில் வருகிறது என்ற வினாவிற்கு மூன்று பேர் மு.தளையசிங்கத்தின் மெய்யுள் என்று பதில் சொன்னார்கள். ”சக்கு இப்போது எப்படி இருப்பாள்?” என்ற வரி எந்த கதையில் பயின்று வருகிறது என்ற வினாவிற்கு சற்றும் தயங்காமல் அபிதா லா.ச.ரா என்று பதில் வந்தது. கு.ப.ராஜகோபாலன் எழுதிய எந்தக் கதைக்குத் தந்தி மூலம் நா.பிச்சமூர்த்தியால் பெயர் சூட்டப்பட்டது என்ற வினாவிற்கு ஆற்றாமை என்று பலர் பதில் சொன்னார்கள்.

இரவு உணவுக்குப்பிறகு மருத்துவர் கு.சிவராமன் வாசகர்களைச் சந்தித்தார். இரவு பதினொன்று வரைக்கும் நீண்டது அவ்வுரையாடல் மாற்று மருத்துவத்தின் முகமாக இன்று தமிழகத்தில் அறியப்பட்டும் மருத்துவர் சிவராமன் ஆச்சரியமாக மாற்று மருத்துவத்தை பற்றி ஒரு மத நம்பிக்கையாளனின் தோரணையில் பேசவில்லை. எந்த இடத்திலும் அலோபதியின் சாதனைகளையும் இன்றைய முக்கியத்துவத்தையும் நவீன ஆரோக்கியத்தை உருவாக்குவதில் அதன் பங்களிப்பையும் அவர் நிராகரித்து பேசவில்லை என்பது ஆச்சரியமளித்தது.

அலோபதி வணிகமாகும்போது வரக்கூடிய இழப்புகளையும் அலோபதி நோயாளியின் தனித்தன்மைகளை கவனித்துக் கொள்ளாமல் பொதுவாக மருந்துகளை அளிப்பதில் எழும் மாற்று மருத்துவம் எப்படிசந்திக்க முடியும் என்பதையும் மாற்று மருத்துவம் என்பது ஒருங்கிணைந்த மருத்துவமாக பிற மருத்துவமுறைகளுடன் இணைந்து இருக்கும்போதே மேலதிக பயன்களை அளிக்கும் என்பதையும் அவர் சொன்னார்.

 

அரங்கசாமி அமைப்பாளர் அறிக்கை

அத்துடன் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளையும் அதன் தீய விளைவுகளையும் ஆயுர்வேதம் சித்தமருத்துவம் போன்றவை நிறுவனமாக்கப்பட்டு வருவதில் இப்போது இருக்கும் அபாயங்களையும்  மிகக்கடுமையான குரலில் கண்டிக்கவும் தவறவில்லை. பலவகையில் உதவிகரமான ஒரு சந்திப்பாக அமைந்தது அது.

இரவு பன்னிரண்டு மணிக்கு தூங்கச் சென்ற போது நான் எண்ணிக் கொண்டேன். காலை பத்து மணியிலிருந்து இரவு பதினொன்று மணி வரைக்கும் ஏறத்தாழ பதிமூன்று மணி நேரம் தொடர்ச்சியான, தரமான இலக்கிய விவாதம் நிகழ்ந்துள்ளது. எந்தவிதமான தொய்வோ சோர்வோ அளிக்காததன் காரணம் விழாமனநிலை..ஒருநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களை நம்மால் பார்க்க முடியாது. திரைப்பட விழாவில் ஒருநாளில் ஐந்து திரைப்படங்களை நம்மால் பார்க்க முடியும்.

அந்த கொண்டாட்ட மனநிலை கலைகளுக்கும் இலக்கியத்திற்கும் மிக அவசியமான ஒன்று. நாம் இழந்து கொண்டிருப்பது அதுதான் .தனிப்பட்ட உறவுச்சிக்கல்களாலும் இலக்கிய விவாதங்களை அகங்கார வெளிப்பாட்டுக்கோ அல்லது வெற்றுக் கேளிக்கை கொண்டாட்டத்திற்கோ தளமாக ஆக்குவதன் மூலமும் நாம் இந்தக் கூட்டு களியாட்டத்தை இழந்துவிட்டிருக்கிறோம். அதன்விளைவாக அந்தக் களியாட்டம் நமக்கு கற்பிக்கும் இலக்கிய விரிவை அறியாமலிருக்கிறோம்

 

ஆவணப்பட வெளியீடு. ராம்குமார் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொள்கிறார்

உலகமெங்கும் அரசுகள் பெரும் பொருட்செலவில் இலக்கிய விழாக்களை ஏற்பாடு செய்வது இந்த விழாமனநிலையை உருவாக்கும் பொருட்டே. ஆனால் அமைப்பு சார்ந்து இந்த விழாக்களை ஒருங்கிணைக்கும் போது அமைப்பு தன்னியல்பாக உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிகார மேல்கீழ் அடுக்குகள் காரணமாக ஒரு சம்பிரதாயத்தன்மையு அதில் கலந்துவிடுகிறது. அதன்பின் அங்கே உண்மையான இலக்கியவிவாதம் நிகழமுடியாது. அதுவும் சம்பிரதாயமாக ஆகிவிடும்

நான் கலந்து கொண்ட எந்த சர்வதேச இலக்கிய விழாவிலும் இங்கே இருந்தது போன்ற ஒரு உற்சாகமும் கொண்டாட்ட மனநிலையும் நீடித்ததில்லை. இத்தனை தீவிரமான விவாதம் இவ்வளவு மணிநேரம் தொடர்ந்து நீடித்ததும் இல்லை. இயல்பாக மேல் கீழ் அற்ற அடுக்கு நிலையும் நட்பார்ந்த சூழலும் உருவாகும் போது மட்டுமே இலக்கிய விவாதம் சாத்தியமாகும் என்ற எண்ணம் ஏற்பட்டது

தூங்கும் வரை தலைக்குள் அன்றுபேசப்பட்ட சொற்கள் சுழன்றுகொண்டே இருந்தன. ஒரு கருத்துடன் இன்னொன்று ஏறிக்கொண்டது. நான் கணிசமான அரங்குகளை அரங்குக்கு வெளியே நின்றுதான் கேட்டுக்கொண்டிருந்தேன். முன்பெல்லாம் விவாதம் தொய்வடையக்கூடாதென்பதற்காக நான் அமர்ந்து கேள்விகள் கேட்டு விருந்தினரைப் பேசவைப்பதுண்டு.

 

தாமிராபரணம் நூல் வெளியீடு. ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொள்கிறார்

ஆனால் இம்முறை இத்தனைத் திரளான வாசகர்நடுவே அதற்கான தேவையில்லை என நினைத்தேன். அத்துடன் பேசும் என் நண்பர்கள் அவ்வப்போது என்னை பேச்சுக்குள் இழுப்பதைக் கண்டேன். நான்  விழாவின் பேசுபொருளாக ஆகாமல் முழுமையாகவே விலகி நின்றிருக்கவேண்டும், வருகைதரும் படைப்பாளர்களே பேசப்படவேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது.

இந்த பரிசளிப்பு விழா ஆரம்பித்தபோது இருந்த குற்றச்சாட்டு இது என்னை முன்னிறுத்தும்பொருட்டு அளிக்கப்படும் விருது என்பது. சில ஆண்டுகளில் அந்தக்குற்றச்சாட்டு முனைமழுங்கியது. ஏனென்றால் விருதுபெறும் படைப்பாளி மட்டுமே இவ்விழாவில் கொண்டாடப்பட்டார். வருகைதரும் முதன்மைவிருந்தினர்கள்கூட முன்னிறுத்தப்படவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் நான் முன்னிற்கவில்லை. என் படைப்புகள் பேசப்படவுமில்லை. ஆனால் இது விஷ்ணுபுரம் அமைப்பின் விருதாக இருப்பதற்கான காரணம் இது முழுக்கமுழுக்க வாசகர்- எழுத்தாளர் கூட்டு அளிக்கும் பரிசாக முதல்சொல்லிலேயே தெரியவேண்டும் என்பதற்காகவே. அது நம் அரசு, கல்வித்துறை அமைப்புகளுக்கு எதிரான ஒரு அறைகூவலும்கூட.

 

சுனீல் கிருஷ்ணன் நன்றியுரை

 

நான் இலக்கியக்கூடல்களை அமைக்க ஆரம்பித்து 25 ஆண்டுகளாகின்றன. என் முதல்நாவலுக்கு விஜயா வேலாயுதம் அமைத்த விழா எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. ஆனால் அப்போது நாஞ்சில்நாடன் என்னிடம் சொன்னார், அவருக்கு இருபத்தைந்தாண்டுக்கால எழுத்துவாழ்க்கைக்குப்பின்னரும்கூட ஒரு விழாகூட எடுக்கப்பட்டதில்லை என. அதன் விளைவாகவே நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் முயற்சியில் எழுத்தாளர்களுக்கான விழாக்களை ஒழுங்குசெய்ய ஆரம்பித்தேன். நாஞ்சில்நாடனுக்கு சென்னையில் மிகச்சிறிய அளவில் ஒரு கூட்டம் ஒருங்குசெய்யப்பட்டது

 

பின்னர் நண்பர் தங்கமணி ஆதரவுடன் தர்மபுரியிலும் வேதசகாயகுமார் உதவியுடன் நாகர்கோயிலிலும்  நிர்மால்யா உதவியுடன்  ஊட்டியிலும்  கலாப்ரியா உதவியுடத் குற்றாலத்திலுமாக இதுவரை 40 இலக்கியகூடுகைகளை நான் ஒழுங்குசெய்திருக்கிறேன். ஒன்றில்கூட என் படைப்புக்களைப்பற்றி பேசியதில்லை. எனக்காக விழா எடுக்கப்பட்டதுமில்லை. எனக்கான விழாக்கள் என் பதிப்பாளர்களும் நண்பர்களுமான வசந்தகுமார் [தமிழினி] மனுஷ்யபுத்திரன் [உயிர்மை] நண்பர் \கெவின்கேர்’ பாலா ஆகியோர் முயற்சியால்ல் அமைக்கப்பட்டவை. அவை பெரும்பாலும் பதிப்பக விழாக்கள்.

 

விஷ்ணுபுரம் விழாக்கள் ஒரு விருதுவிழாவில் படைப்பாளி எப்படி கௌரவிக்கப்படவேண்டும் என ஒரு அளவீட்டை தமிழ்ச்சூழலில் நிறுவிவிட்டன. கிட்டத்தட்ட இரண்டுமாதம் அந்தப்படைப்பாளிமேல் முழுக்கவனமும் உருவாக்கப்படுகிறது. அவரது படைப்புக்கள் வெவ்வேறு குழுக்களில் விவாதிக்கபபடுகின்றன. அப்படைப்பாளிக்கு பலநூறு புதுவாசகர்கள் உருவாகிவருகிறார்கள். விழா அவரை மையமாக்கி மட்டுமே நிகழ்கிறது.

மிகச்சாதாரணமாக நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா இன்று இவ்வளவு வளர்ந்துவிட்டது. இன்று இதில் என் பங்களிப்பு மிகக்குறைவு. முழுக்கமுழுக்க இலக்கியநண்பர்களின் அமைப்பு இது. புதியநண்பர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இன்று இது விருதுவழங்குபவர்களுடன் சேர்த்து அனைத்து எழுத்தாளர்களையும் கௌரவிக்கும் விழாவாக மாறிவிட்டது. இம்முறை ஒரு முழுமையான இலக்கியத்திருவிழாவாகவே அமைந்தது.

இரவு முழுக்கவே வெவ்வேறு குழுக்களாக நண்பர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அறிந்தேன். அவர்களுக்குத் தங்குமிடமாக அமைக்கப்பட்டிருந்த இரு அடுக்குப்படுக்கை கூடங்களிலும் விடிய விடிய விளக்குகள் எரிந்தன. இலக்கிய நண்பர்களைக் கண்டறிவதற்கான தருணமாகவே இத்தகைய விழாக்கள் அமைய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

[ராஜகோபாலன் அறிமுக உரை]

 

எண்பதுகளில் கலாப்ரியா குற்றாலத்தில் அமைத்த பதிவுகள் அமைப்பு இலக்கிய சந்திப்பு தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு இலக்கிய நட்புகளை உருவாக்கும் களமாக அமைந்திருந்தது. எனது  இலக்கிய நண்பர்கள் அனைவரையுமே அங்குதான் சந்தித்திருந்தேன். பலருடைய நட்புகள் இன்றும் அதே தீவிரத்துடன் தொடர்கின்றன.

இலக்கிய நட்புகள் உருவாவது அவ்வளவு எளிதல்ல. ஒத்த கருத்துடையவர்களை நாம் தேடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஒத்த கருத்துடையவர்கள் எனக் கண்டடைவதற்கான உரையாடல்த்தருணம் தற்செயலாகவே அமைகிறது. தமிழகம் முழுக்க இருந்து நண்பர்கள் வந்து கூடுவது போன்ற நிகழ்வுகள் அதற்கு மிக உதவியானவை. அவை இங்கே அபூர்வமாகவே நிகழ்கின்றன.

பொதுவாக இவ்விழாவின் கட்டுப்பாடுகள் பற்றிய புகார்கள் உண்டு. அவற்றை மீண்டும் மீண்டும் விளக்கிக்கொண்டே வருகிறேன். இவ்விழாவுக்கு வருபவர்கள் தங்கள் வேலைகளை விட்டு சொந்தச்செலவில் வருகிறார்கள். அவர்களுக்கு உண்மையான அறிவை, மகிழ்வை அளிக்கும்பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு.  மிகுந்த உழைப்பில் இவ்வமைப்பை நடத்துபவர்களுக்கு இலக்கியவாதிகள் செய்யும் மாற்றுச்சேவை அதுதான்

விஜயராகவன் அறிமுக உரை

உண்மையான இலக்கியத்தை அதன் தீவிரத்துடன் அறிமுகம் செய்ய நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் இவை. இவற்றை நாம் நம் அகந்தை, பூசல், குடிமுதலிய கேளிக்கைகள் ஆகியவற்றால் தவறவிட்டுவிடக்கூடாது. ஆகவேதான் இந்தக்கட்டுப்பாடுகள். திட்டமிட்டுச் சரியாக நடத்தப்படும் ஒரு நல்ல நிகழ்வை ஒரே ஒரு விஷமி சீரழித்துவிடமுடியும். அதை நாம் ஒப்புக்கொள்ளலாகாது. அதற்காகவே இக்கட்டுப்பாடுகள்.

நான் காலை ஐந்தரை மணிக்கு நண்பர் கடலூர் சீனுவால் எழுப்பப்பட்டேன். அப்போது உண்மையில் ரோமாபுரியில் இருப்பது போன்று ஒரு கனவு. நான் சென்ற ஜுன் மாதம் சென்று வந்த இன்றைய ரோம் அல்ல. பழைய ரோம். ஆனால் அதே செயிண்ட் பீட்டர்ஸ் கதீட்ரல். ஓவியங்களின் கனவுலகம். என்னுடன் இருந்து கொண்டிருப்பவர்கள் அனைவருமே சென்ற காலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பேச்சுக் குரல்கள் சிரிப்புகள். நிகழ்காலத்துக்கு வந்து இடத்தையும் காலத்தையும் உணர்ந்தபோது வண்ணங்களற்ற உலகத்துக்குள் வந்த சோர்வு தான் ஏற்பட்டது. அந்தக் கனவுக்குக் காரணம் முந்தையநாள் இரவு மறுநாள் கிறிஸ்துமஸ் என நினைத்துக்கொண்டதுதான் என்று தோன்றியது

இரண்டாவது விஷ்ணுபுரம் விருதுவிழாவை  நினைத்துக்கொண்டேன். அன்று போதிய அளவு படுக்கை ஏற்பாடுகள் செய்யமுடியவில்லை. வருகையாளர்கள் நினைத்ததை விட அதிகம். ஒரு கல்யாணமண்டபத்தில் தங்கினோம். தங்க இடமில்லை. ஆகவே நானும் கிருஷ்ணனும் பத்து நண்பர்களும் ஆடிட்டர் கோபி செலவில் டீ குடித்தபடி இரவெல்லாம் கோவையில் நடந்து விடியவைத்தோம்

 

விஜயராகவன் உள்ளிட்ட நண்பர்கள் சிலருடன் ஒரு காலை நடை சென்றேன். ஊட்டியில் ஒரு காலை நடை சென்றஅளவுக்கு குளிர்ந்தது. இரு வெவ்வேறு டீக்கடைகளில் டீ சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கு திரும்பி வந்தேன். அவசரமாக குளித்து உடை மாற்றி சந்திப்புகளை ஆரம்பித்தோம். முந்தைய நாள் சந்திப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட அரங்கு போதவில்லை என்று தெரிந்துவிட்டது. நூற்றிருபது பேர் அமர ஐம்பது பேர் சூழ நின்றுகொண்டிருக்க பகல் முழுக்க விவாதிப்பதென்பது எந்த இலக்கிய வாசகனுக்கும் கடினமானதுதான். ஆகவே அவசரமாக இன்னும் ஒரு பெரிய கூடத்தை ஏற்பாடு செய்தோம். அதில் இருநூறு பேர் அமர முடியும் சற்று நெருக்கி இருக்கைகளை போட்டு மேலும் இருபது பேர் அமர ஏற்பாடு செய்தோம்.

சு.வேணுகோபால் பேசத் தொடங்கும்போது அரங்கு நிறைந்திருந்தது. பதினொன்றரை மணிக்கு அந்த அரங்கிலும் முப்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள், நான் உட்பட. வேணுகோபால் இலக்கிய விவாத அரங்குக்கு முற்றிலும் புதிய ஒரு மணத்தைக் கொண்டு வந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு உளவியலாளர்களின் ஒர் அரங்கு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது. உளவியல் சார்ந்த ஒரு தத்துவ வினா எழுந்த போது நித்ய சைதன்ய யதி  வினய சைதன்யாவை அழைத்துவா என்றார். ஒருவர் ஓடிச்சென்று சொல்ல அருகே வயலில் கேரட்டுக்கு பாத்தி கட்டிக் கொண்டிருந்த வினயா அப்படியே கிளம்பி வந்தார்.

இரண்டு நாட்களாக அவரை வயலில் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்தான் வினய சைதன்யா என்னும் யோகி என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. விவசாய வேலைக்கு வந்த ஊழியர் என்றே நினைத்திருந்தேன். இருகைகளிலிருந்த மண்ணை லேசாக தட்டியபடி அவர் உள்ளே வந்தபோது புது மண்ணின் மணம் அறைக்குள் நுழைந்தது. ப்ரெஞ்சுக் காரர்களும் ஜெர்மானியர்களும் அமெரிக்கர்களும் அடங்கிய அந்த அவையில் முற்றிலும் புதிய ஒரு வாசனை .நாற்பது நிமிடம் மேலை உளவிய கொள்கைகளுக்கும் பதஞ்சலியோக சூத்திரத்துக்கும் நுட்பமான முரண்பாடைப்பற்றிப் பேசிவிட்டு அங்கிருந்து எழுந்து அவர் வெளியே சென்றார். அதைத்தான் நினைத்துக் கொண்டேன்.

 

வானவராயர்

எருவடிப்பதும் தொளிமிதிப்பதும் சாணி அள்ளுவதுமான ஒர் உலகத்திலிருந்து வந்து நவீன இலக்கிய மேடையில் வேணுகோபால் அமர்ந்திருக்கும்போது அது உருவாக்கும் அதிர்வே பிறிதொன்றாக அமைந்திருந்தது. அவர் கதைகளில் வரும் இயல்பான மக்கள் அவர்களின் வாழ்க்கைச்சூழல். அவர் ஒரு கருத்தைச் சொல்வதற்குக்கூட தன் உலகிலிருந்தே உதாரணங்களை எடுத்துக்கொண்டார்

வண்ணதாசன் பதினொரு மணிக்கு அரங்குக்கு வந்தார். வேணு அவரை அறிமுகம் செய்து வைத்து தனது வண்ணதாசன் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். வண்ணதாசன் மென்மையான கனிந்த குரலில் அரங்கு தனக்கு அளிக்கும் உணர்வு எழுச்சிகளை குறிப்பிட்டார். மெல்ல மெல்ல வெவ்வேறு தளங்களுக்குச் சென்று வாழ்க்கையிலிருந்து எவ்வாறு தனது புனைவுகளைத் துளித்துளியாகச் சேர்த்துக் கொள்கிறேன் என்பதை அவர் விளக்கினார்.

 

மீண்டும் மீண்டும் அன்பு என்ற ஒன்றையே எழுதுவதாகவும் அதன் வண்ணங்களை ஒவ்வொரு முறையும் புதிதாகக் கண்டடைவதாகவும் சொன்னார். அதுவரை இருந்த சிரிப்பும் கொண்டாட்டமான நிலையும் மாறி தீவிரமும் உணர்வெழுச்சியும் கொண்டதாக ஆகியது. பல வண்ணதாசன் வாசகர்கள் நெகிழ்ச்சியுடன் அந்த சந்திப்பு தம் வாழ்நாள் நிகழ்வுகளில் ஒன்று என்று சொன்னதைக் கேட்டேன்.

கிருஷ்ணாஸ்வீட்ஸ் கிருஷ்ணன்

மதிய உணவுக்குப்பின் எச் .எஸ். சிவப்பிரகாஷ் அரங்குக்கு வந்தார். அதுவே ஒரு தனி இலக்கிய நிகழ்ச்சி என்று தோன்றும்படி  அரங்கு நிறைந்து இடைவெளிகள் செறிந்து இருந்தது. நூற்றைம்பது வரிசையாக அமரக்கூடிய அவையில் முன்னூறு பேர் இருந்தனர்.  சிவப்பிரகாஷின் அமர்வு சென்ற பதினைந்தாண்டுகளில் நான் பங்கு கொண்ட மிகச்சிறந்த இலக்கிய தத்துவ அரங்குகளில் ஒன்று என்று சந்தேகமில்லாமல் சொல்வேன். அவருடைய தோரணையும் குரலும் மேதமையும் அரங்கை ஒரு உச்ச மனநிலையில் அமைத்தன.

தொல் வேதங்களிலிருந்து நவீன உளவியல் கோட்பாடுகள் வரை இந்திய வரலாற்றிலிருந்து சமகால அரசியல் வரை நாடகத்திலிருந்து கவிதை வரை எங்கு வேண்டுமானாலும் முழுமையான தன்னம்பிக்கையுடன் அசாதாரணமான நினைவாற்றலுடன் செல்லும் அவருடைய கல்வியும் அக்கல்வியின் வெளிப்பாடாக அல்லாமல் அசல் சிந்தனையாக மட்டுமே அந்தந்தக் கணங்களில் அவர் பேசிய விதமும் மேதை என்றால் யார்  என்பதை வாசகர்களுக்கு காட்டியது. ஜெயகாந்தனின் மிகச்சிறந்த அரங்குகளில் மட்டுமே அந்த மின்சூழ் நிலை அமைந்திருக்கிறது என்று தோன்றியது.

 

சிவப்பிரகாஷ் இந்த அமர்வில் பேசியவை பல திறப்புக்களை உருவாக்கும் தொடக்கப்புள்ளிகள். நம் மரபின் மீதான விமர்சனமும் ஆழ்ந்த ஞானமும் ஒன்றாக அவரிடம் குடிகொண்டன. தமிழில் ஒருசாராருக்கு மரபே தெரியாது, அதன்மீதான விமர்சனம் மட்டும் உண்டு. மரபை சற்று அறிந்திருப்பவர்களுக்கு தோத்திரம் மட்டுமே வாயில்வரும். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் உருவாக்கிய அலை அதன்பொருட்டு எழுந்ததே

 

ஜான் சுந்தர் கிறிஸ்துபிறப்புப் பாடல்

மதிய உணவுக்குப்பின் பாவண்ணன் சுப்ரபாரதி மணியன் இரா.முருகன் நாஞ்சில் நாடன் தேவதேவன் ஆகியோர் அமைந்த ஒரு பொது மேடையை வாசகர் வினாக்களால் சந்தித்தனர். பாவண்ணன் தனது புனைவுலகின் சாரமாக அமைந்த நிபந்தனையில்லாத அன்பு என்னும் தரிசனத்தை தனது சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து எப்படி கண்டு கொண்டேன் என்பதை சொன்னார். சமூக போராட்டங்களினூடாக தனது புனைவுலகை எப்படி உருவாக்குகிறேன் என்று சுப்ரபாரதிமணியன் விளக்கினார். நாலரை மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது.

இரு நாட்களும் ஒரு கணமும் தொய்வின்றி சென்ற இலக்கிய நிகழ்ச்சி உண்மையில் எண்ணிப்பார்க்கையில் பல்வேறு தற்செயல்களின் விளைவென்று தோன்றியது ஆனால்  அத்தகைய தற்செயல் நிகழ்வதற்கு மழையை பிடித்துக் கொள்ள கலம் வைத்திருப்பது போல மிகத் துல்லியமான ஒருங்கிணைப்பு தேவை என்று மறுகணம் எண்ணச்செய்தது.

 

செந்தில் வரவேற்புரை

ஐந்து நாற்பத்தைந்து மணிக்கு பாரதி வித்யாபவனில் திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்கியது. ஐந்தரை மணிக்கு நான் அங்கு சென்ற போதே பெரும்பாலும் அரங்கு நிறைந்திருந்தது. அரங்கு முற்றிலும் நிறைந்ததனால் மாற்று ஏற்பாடாக கீழே ஒளித்திரை வைத்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஒரு நூறு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

நாசர் அன்று மதியம் தான் வந்திருந்தார். முதலில் அவரே அரங்குக்கு வந்தார். அதன் பிறகு வண்ணதாசன், கு.சிவராமனும், பவா.செல்லத்துரையும், இரா.முருகனும் எச்.எஸ் சிவப்பிரகாஷும் அரங்குக்கு வந்தனர். கவிஞரும் சொந்தரயில்காரி என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியருமான ஜான் சுந்தர் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை துதித்து பாடிய இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது

 

வண்ணதாசனைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த நதியின் பாடல் எனும் ஆவணத்திரைப்படத்தின் பதினைந்து நிமிடக்காட்சிகளை அரங்கில் முதலில் திரையிட்டோம். இம்முறை மேடை நிகழ்ச்சிகளை அனைத்தையுமே மேகாலயா ஆட்சியரும் எனது நண்பருமான ராம்குமார் வடிவமைத்தார். நிகழ்ச்சி வடிவமைப்பில் அவருடைய திறமை மொத்த நிகழ்ச்சியும் மிகக் கச்சிதமாக நடைபெற வழிவகுத்தது. அனேகமாக விருந்தினர் அனைவருமே அதை பலமுறை சொன்னார்கள். ஆறு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி ஒன்பது மணிக்கு நிறைவுற்றது. ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்திற்குள் முடித்தனர்.

ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் விருதுகள் அமைப்புகளால் வழங்கப்படும் போது வரும் அவநம்பிக்கைக்கு பதிலாக சக எழுத்தாளர்களால் சேர்ந்து வழங்கப்படும் போது வரும் கொண்டாட்ட மனநிலையையும் , அந்த மனநிலை நிறைந்திருந்த விஷ்ணுபுரம் நிகழ்ச்சி இந்தியாவிற்கே ஒரு முன்னோடி முயற்சி என்றும் சொன்னார். வரும் வருடங்களில் இருந்து ஒரு இந்திய எழுத்தாளருக்கு இந்த விருதை அளித்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார்.

 

இந்தியா முழுக்க அரசியலில் ஒரு வகையான மக்கள் மொழி புழங்கும்போது கவிதைகளில் சொல்லடுக்கு கொண்ட மொழி பயின்று வருகிறது. மாறாகத் தமிழில் அரசியல் மேடை முழுக்க அணிச்சொற்களின் வரிசையாக இருக்கிறது. அதற்கு மாற்றாக தமிழ்க் கவிதை மிக நேரடியான குறைந்த பட்ச கூற்றுகளால் ஆன வெளிப்பாடாக இருக்கிறது என்றார். . ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் மொழி பெயர்த்த வண்ணதாசனின் கவிதை ஒன்றை வாசித்து அது எந்த அளவுக்கு சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது என்பதை குறிப்பிட்டார்.

 

டைனமிக் நடராஜன் வண்ணதாசனுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்

நாசர் பெருங்கனவுகளுடன் கலை உலகுக்குள் நுழைய துடித்துக் கொண்டிருந்த ஆரம்பகாலத்தில் எப்படி அவர் நண்பர் ஒருவர் வண்ணதாசனின் புனைகதைகளை அவருக்கு அறிமுகப்படுத்தினார் என்றும், அவற்றைப்படித்த போது ஏற்பட்ட புரிந்து கொள்ள முடியாமையின் பதற்றம் அவற்றை மானசீகமாக நடிக்க ஆரம்பித்த போது எப்படி விலகியதென்பதையும் விளக்கினார். பாடாத பாட்டெலாம் என்ற அவருடைய கதையில் கண்ட காட்சி எப்படி தன் கனவுகளில் நீடித்து பின்னாளில் அவதாரம் போன்ற ஒரு திரைப்படத்திற்கு  ஒரு காட்சியாகவே மாறியது என்றும் சொன்னார். தனி அனுபவங்களிலிருந்து ஒரு கலைஞன் வந்து இலக்கிய எழுத்தை சந்திக்கும் அந்தத் தருணம் ஆத்மார்த்தமானதாக நுட்பமான வெளிப்பாடாக அமைந்தது.

இரா.முருகன் வண்ணதாசனின் புனைகதைகளைப்பற்றிய முழுக் கட்டுரை ஒன்றை வாசித்தார். வண்ணதாசன் என்ற எழுத்தாளனுக்கும் வண்ணதாசன் என்னும் தனி மனிதனுக்குமான இரு முகங்கள் தன்னுடன் எப்படிதொடர்பு கொண்டிருக்கின்றன என்று சொல்லி வண்ணதாசன் என்னும் மனிதரின் இயல்பான வெளிப்பாடாக அவரது புனைகதைகள் அமைந்திருக்கிறது என்பதை மருத்துவர் சிவராமன் பேசினார்.

 

வண்ணதாசன் கதைகளில் அடிப்படையான மனிதாபிமான உள்ளடக்கம் பற்றி பவா செல்லத்துரை சொன்னார். அன்றாட வாழ்க்கையின் எளிய சித்திரங்களை எழுதுபவர் என்ற சித்திரத்திற்கு அப்பால் குரூரமும் வலியும் மிகுந்த அடித்தளத்து வாழ்க்கையை வண்ணதாசன் எவ்வளவு ஆழமாகச் சித்தரிப்பார் என்பதை இருகதைகளை சித்தரித்துக்காட்டி  விளக்கினார்.

வண்ணதாசனின் புனைவுலகு ஒரு மின்மினி காட்டும் வெளிச்சத்தில் தெரியும் ஒற்றை எழுத்து போல நுட்பமானது. கற்பனையில் குறுஞ்சித்திரங்களை எழுப்புவது. மின்மினிகள் இணைந்த ஒரு தீயை போல அவருடைய புனைவுலகம் அது எரிக்காது சுடாது ஆனால் தீ தான் என்று நான் பேசினேன்.

வண்ணதாசனின் ஏற்புரை உணர்ச்சிகரமாக இருந்தது. நேரடியாக வாசகர்களின் உள்ளத்துடன் பேசுவதாக இருந்தது. தன் அந்தரங்கத்திலிருந்து வாசகனை நோக்கி நீட்டும் ஒரு கைதான் தன் படைப்புலகம் என்று அவர் சொன்னார் ஒன்பது மணிக்கு மேலும் வாசகர்கள் சூழ்ந்து வண்ணதாசனை வாழ்த்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர்.

 

நிகழ்ச்சி முடியும்போது தோன்றியது. வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சி ஒரு சில நண்பர்களின் ஒத்துழைப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் அதில் கலந்து கொள்பவர்களின் ஒட்டுமொத்தமான உத்வேகத்தால் அது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு அவர்களே அதை தங்களுக்குரிய வெற்றியாக அமைத்துக் கொள்கிறார்கள்.

வண்ணதாசன் என்னும் ஒரு படைப்பாளிக்கு கௌரவம் செய்வதாக தொடங்கிய இந்த விழா பல்வேறு படைப்பாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய வாசக வட்டத்தை திரட்டி முன்வைத்து அவர்களே நேரடியாக அவர்களிடம் பேச வழிவகுத்தது. பாரதி மணியிலிருந்து சு.வேணுகோபால் வரை மூன்று தலைமுறை படைப்பாளிகளுக்கு களம் அமைத்தது. முழுக்க முழுக்க அப்படைப்பாளிகளை மட்டுமே அது முன்னிறுத்தியது. அதனூடாக இங்கு அறுபடாது நிகழ்ந்து கொண்டிருக்கும் இலக்கிய இயக்கம் ஒன்றை இருநாள் நிகழ்வாக நடத்திக் காட்டியது. இது அரசு ஆதரவின்றி அமைப்பு பலமின்றி நிகழ்ந்து கொண்டிருந்தாலும் நவீனத் தமிழிலக்கியம் என்பது  தமிழகத்தின் அடிப்படையான அனல் என்பதை மீண்டும் நிறுவியது.

 

 

முந்தைய பதிவுகள்

 

விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10

விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 13 ராஜீவ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 14

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 15

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 16 தூயன்

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

 

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

 

 

புகைப்படங்கள்

 

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

 

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

 

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

 

 

=============================================================

 

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

 

============================================================

 

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருது விழா –சுகா

$
0
0

7

 

// இன்றைய என்னை நான் வடிவமைத்துக் கொள்ள தானறியாமல் தன் எழுத்து மூலம் உதவிய மகத்தான படைப்பாளியுடன் மூன்று தினங்கள் இருந்த மனநிறைவுடன் கிளம்பினேன். அண்ணாச்சியை வணங்கி விடைபெற்றேன். விமான நிலையத்துக்கு தனது காரில் அனுப்பி வைத்தார் சகோதரர் முத்தையா. விமான நிலைய வாசலில் ஜான் சுந்தரிடம் விடைபெறும் போது இருவருமே ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. விமானம் கிளம்பும் போது வழக்கமாகச் சொல்லும் சண்முக கவசத்தைச் சொல்லவில்லை. மனம் அலைந்து கொண்டிருந்தது. கோல்டன் ரெட்ரைவர், பக் மற்றும் பீகிள் குட்டிகள், ‘முழுமதி அவளது முகமாகும்’ பாடிய ரோஜா பாப்பா, தகப்பனார் மரணப்படுக்கையில் இருக்கும் போது எங்களுடனே இருந்து உபசரித்த மரபின் மைந்தன், உங்களுக்குத்தாண்ணா நன்றி சொல்லணும் என்று ஃபோனில் ஒலித்த அரங்கசாமியின் குரல், ஏன்ணே அழுதீங்க? காபி சாப்பிடுங்க’ என்ற ஹெமிலா சாம்ஸன் என மனதுக்குள் குரல்களும், முகங்களுமாகச் சுழன்றன. கண்ணீர் பெருகியது.//

http://venuvanam.com/?p=348

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73

$
0
0

[ 20 ]

பீதர்நாட்டு வணிகர்களுடன் மகாநாகம் வந்து காமரூபம் வழியாக இமயமலையடுக்குகளுக்குமேல் ஏறிய அர்ஜுனன் அங்குதான்   வெண்சுடர் கின்னரர்களின் உச்சிநிலம் குறித்து கேட்டறிந்தான். பீதவணிகர் ஆண்டுதோறும் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே அத்திரிகள் சுமக்கும் வணிகப்பொருட்களுடன்  மலையடுக்குகள்மேல் ஏறிச்சென்று  இமயமலைச்சரிவுகளில் அமைந்த ஆயிரத்தெட்டு சிற்றூர்களில் வாழ்ந்த மலைமக்கள் வந்துகூடும் ஏழு அங்காடிகளை சென்றடைந்தனர். தவளம், சுஃப்ரம், பாண்டுரம், ஸ்வேதம், சுக்லம், அமலம், அனிலம் என்னும் ஏழு சந்தைகளும் ஆண்டுக்கொருமுறை கோடைப்பருவத்தின் இறுதி இரண்டு வாரங்களில் மட்டுமே கூடின. கோடை முழுதும் மலைக்குடிகளின் விழவுக்காலம்.

பீதவணிகர்  உலோகப்பொருட்களையும் ஆடைகளையும் அணிகலன்களையும் விற்று நறுமணப்பொருட்களையும் கவரிமான்மயிரையும் மலைக்காளைத்தோலையும் அருமணிக்கற்களையும் மாற்றாக வாங்கிக்கொண்டு மீண்டனர். அப்பொருட்களை காமரூபர்களுக்கும் நாகர்களுக்கும் விற்று பொன்னாக ஆக்கிக்கொண்டு கடலோரங்களில் அமைந்த தங்கள் வணிகச்சிற்றூர்களுக்கு மீண்டனர்.  கின்னரர்களிடமிருந்து மலைமக்கள் பெற்று வணிகர்களுக்கு விற்கும் அருமணிகளுக்கு பன்னிரண்டாயிரம் மடங்கு விலை அளித்தனர் யவனர். “தெய்வங்களின் கண்கள்” என அவற்றை யவன மணிநோக்கிகள் சொன்னார்கள். அச்செல்வத்தால் பீதர்களின் கடற்கரைச்சிற்றூர்கள் செழித்துக்கொண்டிருந்தன.

“மழையெனப் பெய்வது விண்ணில் பரந்த நீர்.  மழையுடன் வெயிலெழ விண்வில் வளையும் பொழுதுகளில் வான்நிறையும் தேவர்கள் அப்பல்லாயிரம்கோடித் துளிகளில் சிலவற்றை மட்டும் கைகளால் தொட்டு எடுக்கிறார்கள். உருவிலிகளாகிய அவர்கள் மண்ணின் களியாட்டை நோக்கி மகிழும்பொருட்டு அவற்றை விழிகளென்றாக்கி சூடிக்கொள்கிறார்கள். வெண்பற்களென்று அணிந்து சிரிக்கிறார்கள். மணிகளென அள்ளி வீசி விளையாடுகிறார்கள். அவை ஆலங்கட்டிகளாக மண்ணில் விழுகின்றன” என்றான் பீதர்களுடன் சென்ற காமரூபத்துப் பாணன்.   அவர்களுடன் பொதிக்காவலனாக வில்லேந்தி அர்ஜுனன் சென்றான். செல்லும் வழியெங்கும் வெண்சுடர் கின்னரர்களைப்பற்றிய பேச்சே வணிகர்களிடம் தொடர்ந்தது.

“அவற்றில் சில தேவர்களின் ஆடைகளில் தங்கிவிடுகின்றன. அவர்கள் ஏழாம் வானை அடையும்போது அங்கிருக்கும் ஒளியை தாம் சூடிக்கொண்டு அவை சுடர்கொள்கின்றன. விண்ணவர்நாட்டுக்குள் நுழைவதற்குமுன் தேவர்கள் அவற்றை உதறிவிடுகிறார்கள். அவை அருமணிகளாக  ஒளியுடன் உதிர்ந்து பனியிலும் பாறையிடுக்கிலும் மின்னிக்கிடக்கின்றன. அவற்றையே கின்னரர்கள் தொட்டு எடுத்து சேர்க்கிறார்கள். மலையிறங்கி வந்து இம்மலைமக்களுக்கு அளிக்கிறார்கள்” என்றான் பாணன்.  “மலையுச்சியில் வாழும் மானுடர் அறியவொண்ணா கின்னரர்களின் வழித்தோன்றல்கள் என இம்மலைமக்கள் தங்களை எண்ணுகின்றனர். கின்னரஜன்யர் என்பதே பதினெட்டு பெருங்குலங்களும் நூற்றெட்டு குடிகளுமாகப் பிரிந்து உச்சிமலைச்சரிவுகளில் வாழும் இவர்களுக்குரிய பொதுவான பெயர்.”

கின்னரர் அன்றி பிறருக்கு அம்மக்கள் வரியோ கப்பமோ கொடுப்பதில்லை. அவர்களின் சிற்றூர்மன்றுகளில் கின்னரமூத்தார்கள் வெண்புகைச் சிறகுகளுடன் பனிநுரைக் குஞ்சியுடன் முப்பிரிவேல் ஏந்தி வெள்ளெருதுமேல் ஏறி அருள்புரிந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களின் காலடியில் எட்டு கால்கைகளுடன் பெருவயிறழுந்த ஊர்ணநாபன் என்னும் அரக்கன் மல்லாந்து நோக்கி தொழுது கிடந்தான்.  முழுநிலவுநாட்களில் கின்னரர்கள் நிலவொளியில் பறக்கும் வெண்பஞ்சுத்துகள்கள்போல வந்திறங்கி அவர்களின் கன்னியரை கனவுக்குள் புகுந்து உளம் மயக்கி புணர்ந்து மீண்டனர் என்றனர் குலப்பாடகர்.

கின்னரஜன்யரில் குழவி  பிறக்கையில் முதல்வினா விழிநிறமென்ன என்பதாகவே இருந்தது. பச்சைமணிவிழி என வயற்றாட்டி சொன்னால் அக்கணமே அதன் தந்தை கைகளை விரித்து வடக்குமலையுச்சிகளை நோக்கி “தேவர்களே, கின்னரரே” என்று கூவி அழுவான். பிறர் அவனைச் சூழ்ந்து கூச்சலிட்டு வாழ்த்தி கொண்டாடுவார்கள். அன்று அவன் ஒரு கொழுத்த கன்றை அறுத்தாகவேண்டும்.   பச்சைமணிவிழிகள் அமைந்தவர்கள் மட்டுமே அக்குலங்களில் உயர்ந்தோர் என்று கொள்ளப்பட்டனர். அவர்களுக்கே மன்றமைத்து சொல்லுசாவும் தகுதி இருந்தது. தாங்கள் கின்னரகுருதிகொண்டவர்கள் என்பதை காட்டும்பொருட்டு அவர்கள் அனைவரும் தங்கள் தலையணிக்குமேல் வெண்ணிற நாரையிறகொன்றை சூடியிருப்பார்கள். குடித்தலைவர்கள் கவரிமான்மயிர் குச்சத்தை அணிந்திருப்பார்கள்.

அவர்கள் அனைவரும் கடலோரத்தின் பறக்கும் மலைகளில்தான் முன்பு வாழ்ந்துவந்தனர் என்று அவர்களின் குலக்கதைகள் கூறின. ஊர்ணநாபன் என்னும் அரக்கனின் வழிவந்தவர்கள் அவர்கள்.  பெருவயிற்றிலிருந்து எழுந்த எட்டு கைகள் கொண்ட சிலந்தி வடிவன் அவன். வயிற்றில் விழிகொண்டவன்.  பறக்கும் மலைகளின் அரசியான மகாசிகையின் நடுவே இருந்த உக்ரஸ்தூபம் என்னும் குன்றின்மேல் அவன் வாழ்ந்தான். பறக்கும் மலைகளில் எங்கிருந்தாலும் அவனை காணமுடிந்தது. பறக்கும் மலைகளையும் அவற்றுக்குக் கீழே அலையடித்த கடலையும் அவன் தன் திசையறியும் பெருவிழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான்.   தன் உடலில் இருந்து பல்லாயிரம் வெள்ளிச் சரடுகளை நீட்டி மலைகள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்தான்.

அடங்காப்பெரும்பசி கொண்டிருந்த அவன் தன்னை ஊட்டிப்புரக்கும் குடியொன்றை அமைக்கும்பொருட்டு  மலைப்பாறைகளில் ஒட்டியிருந்த சிப்பிகளின் வாயைத்திறந்து அதற்குள் தன் விரல்நுனியில் எழுந்த எச்சில்பசையை துளித்தான். அவை கருவுற்றுப் பிறந்த மைந்தர்கள் பெருகி அவன் குடியென்றாயினர். அவர்களுக்கு சூக்தர் என்று பெயர் அமைந்தது. அவர்கள் அனைவரையும் அவன் தன் நுண்வலையால் பிணைத்திருந்தான். அவர்கள் எங்கு சென்றாலும் எவருடனிருந்தாலும் அவனுடைய வலைநுனியில்தான் இருந்தனர். அவர்களின் அசைவுகளை அவன் அறிந்தான். அவர்களின் எண்ணங்களையும் அச்சரடினூடாக அவன் உணர்ந்துகொண்டிருந்தான். வலைச்சரடு அவர்களுக்கு ஆணையிட்டது, கண்காணித்தது, எல்லையமைத்தது.

சூக்தர் கடற்பாறைகளில் தொற்றிச் சென்று மீனும் சிப்பியும் பொறுக்கியும் மலையுச்சிகளில் தேனும் ஊனும் திரட்டியும் உணவு கொண்டுவந்து தங்கள் குடிமூதாதையான ஊர்ணநாபனுக்கு படைத்தனர். அவன் உண்டதுபோக மிச்சிலை தாங்கள் உண்டனர். எட்டு கைகளில் இரண்டு கைகளால் இடைவெளியில்லாமல் அவன் உண்டான். உணவு போதாமலானால் அவன் அவர்களையே பிடித்து உண்டான். அவனை தெய்வமென்றும் மூதாதை என்றும் கொடியபகை என்றும் அக்குடி எண்ணியது. அவர்களின் குடிமன்றுகளில் அவன் உருவை பாறையில் பொறித்து வழிபட்டனர். மைந்தர் பிறந்ததும் கொண்டுசென்று அவன் காலடியில் வைத்து வணங்கி மீண்டனர். கனவுகளில் அவன் பசைச்சரடை இழுத்து அவர்களை அருகணையச்செய்து தூக்கி உண்பதைக் கண்டு அலறி விழித்து உடல்நடுங்கினர்.

ஒருமுறை விண்ணில் ஒளிவடிவாகச் சென்ற தேர் ஒன்றை ஊர்ணநாபன் கண்டான். பசிகொண்டிருந்த அவனுக்கு  ஏழு வெண்குதிரைகள் இழுக்க உருண்டு சென்ற அது ஒரு பெரும் பூச்சி என்று தோன்றியது. அவன் தன் வெள்ளிச்சரடை வீசி அத்தேரைப்பற்றி இழுத்தான். அதிலிருந்தவன் அனல்வடிவ உடல்கொண்டிருந்தான். தேர்ச்சகடங்கள் அசைவிழக்க அவன் திரும்பி நோக்கி “யாரது?” என்றான். “நான் ஊர்ணநாபன். எனக்கு நீ இன்று இரை.” அவன் புன்னகைத்து “அரக்கனே, நான் விண்ணாளும் தேவன். இடிமின்னல்களை ஆள்பவன். நீ சிறியவன், என்னை விடு” என்றான்.

“பசியே எனக்கு விழி” என்றபடி ஊர்ணநாபன் அவனைப் பிடித்து இழுக்க அவன் சினந்து தன் வாளை உருவினான். மலைகள் அதிரும்படி இடி முழங்கியது. எட்டுநாக்குகளுடன் மின்னல் சுழன்றெழுந்தது. மின்வாளால் விண்ணரசன் ஊர்ணநாபனின் எட்டு கைகளையும் வெட்டினான். நீலக்குருதி பீரிட்டு வழிய அவன் மகாசிகையின் உச்சிப்பீடத்தில் விழுந்தான். தன் வலைச்சரடுகளை வீசி  மலைமேல் தொற்றிக்கொண்டான். சினம் பெருக பெருங்குரலில் கூவியபடி அவன் பறக்கும் மலையை சிறகடித்தெழச்செய்து விண்ணரசன்மேல் போர்கொண்டு சென்றான்.  அவன் சரடால் பிணைக்கப்பட்ட அனைத்து மலைகளும் சிறகுவீசி அவனுக்குப் பின்னால் நிரைகொண்டு சென்றன.

“எதிரியை தாக்குங்கள்” என ஊர்ணநாபன் ஆணையிட்டான். அவன் வலைச்சரடுகளினூடாக அவ்வாணை அத்தனை சூக்தர்களையும் சென்றடைந்தது. அவர்கள் சிப்பிநஞ்சு பூசிய வாளிகளை எய்து விண்ணவனுடன் போரிட்டனர். ஊர்ணநாபன் தன் வயிற்றில் ஆறாப்பசியாகக் கொதித்த நஞ்சை விண்ணவன் மேல் உமிழ்ந்தான். விண்ணரசனின் ஏழு புரவிகளில் ஒன்று கருகி புகைந்து அலறிவிழுந்தது. அவன் தேர்ப்பாகனின் இடக்கரம் கரியாகியது. அதுவரை விளையாட்டு எண்ணம் கொண்டிருந்த விண்கோ இடியோசை எழுந்து முகில்கணங்கள் அதிர ஊர்ணநாபன் அமர்ந்திருந்த மலைகளின் சிறகுகளை வெட்டினான்.   அவை அதிர்வோசையுடன் கடலில் விழுந்தன. நீர்சிதற அலைவிரிய மூழ்கி மறைந்தன.

மலைகளிலிருந்த ஊர்ணநாபனை வானரசன் எட்டு துண்டுகளாக வெட்டினான். எட்டுதிசைகளிலாக அவன் உடல் சிதறி கடலில் விழுந்தது. ஊர்ணநாபனின் உடலுடன் தங்களைப் பிணைத்திருந்த சரடுகள் அறுந்து சூக்தர்கள் கடலில் விழுந்தனர். வாழ்நாளெல்லாம் அறுபடாச் சரடால் ஆட்டுவிக்கப்பட்ட அவர்களால் அதன் தொடர்பில்லாமல் தனித்துச்செயல்பட இயலவில்லை.  நீச்சலறிந்தவர்கள்கூட அலைகளில் மூழ்கித் தவித்தனர். அலைகளால் அள்ளி கரைகளில் ஒதுக்கப்பட்ட சூக்தர் ஒருவரை ஒருவர் நோக்கி  கதறினர். ஒரு முதுசூக்தர் தன் மைந்தனின் உடலில் அறுபட்டு நீண்டிருந்த சரடுடன் தன் சரடை பிணைத்தார். அதைக்கண்ட பிற சூக்தர்கள் தங்கள் உடலில் எஞ்சியிருந்த சரடுகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து மீண்டும் ஒரு வலையென்றாயினர். அவ்வலை அவர்களில் எவரும் தனியாக மூழ்காது செய்தது. கரையணைந்தவர்கள் பிறரை இழுத்து கரைசேர்த்தனர்.

தவளைமுட்டையென வெள்ளிச்சரடால் இணைக்கப்பட்ட சூக்தர்களின் திரள் எங்கு செல்வதென்றறியாமல் கரையில் நின்று ஒருவரோடொருவர் முட்டி தன்னுள் தானே ததும்பி அலைக்கழிந்தது.  வான் நோக்கி கைகளை விரித்து “எந்தையே! எங்கள் அரசே!” என ஊர்ணநாபனை எண்ணி அலறி அழுதது. “எண்கரத்தோய், வயிற்றுவிழியுடையோய்! எழுக, எங்கள் தேவனே! உங்கள் குடிகாக்க எழுக, வேந்தே!” என்று கூவி மன்றாடியது. அலைநக்கிய கரையிலும் பாறைகளிலும் நீலநிறப்பெருக்காக ஊர்ணநாபனின் நஞ்சு வழிந்துகிடப்பதைக் கண்டனர்.  மரங்களின் இலைகளில்இருந்து கொழுத்த துளிகளாக அது சொட்டியது. அவர்கள் அதை அள்ளி தங்கள் உடலெங்கும் பூசிக்கொண்டு கதறி அழுதனர். “எளியோருக்கு இனி எவர்? எங்கள் குடிகாக்கும் கோல் இனி எது?” என நெஞ்சிலறைந்து முறைகூட்டினர்.

அவர்கள் மேல் வானிறைவனின் சினம் இடியோசையாக இறங்கியது. மின்பட்டு பிளந்த பாறைகள் உருண்டுவந்து அவர்களை கொன்றன. இறந்தவர்களின் உடலில் இருந்து சரடுகளை அறுத்தெடுக்கையில் அவர்கள் துயர்மீதூற தலையில் அறைந்துகொண்டு விண்நோக்கி பழிகூவி அழுதனர். அறுபட்ட சரடின் நுனியை தங்கள் கைகளில் ஏந்தி அதை நோக்கி நோக்கி ஏங்கி கண்ணீர்விட்டபடி விலகிச்சென்றனர்.  பின்னர் அந்த அறுநுனிகளை பிற அறுநுனிகளுடன் பிணைத்துக்கொண்டு ஆறுதலடைந்தனர். அறுபடும்தோறும் பிணைக்கவே அவர்களின் சரடுகளின் முடிச்சுகள் மேலும் மேலும் பெருகின. ஆயிரம் கால்கள் கொண்ட ஒற்றைவிலங்கென அவர்கள் நடந்தனர்.

இந்திரனின் வஞ்சத்தை மீறி எஞ்சியவர்கள் வடக்கே சென்று புறக்குடிகள் வாழும் சிற்றூர்களை அடைந்தனர்.  சென்ற இடங்களில் எல்லாம் அவர்களின் உடலில் இருந்து சொட்டிய நஞ்சு ஊறி மக்களும் கால்நடைகளும் உயிர்துறந்தனர். அவர்களின் காலடிபட்ட செடிகள் கருகின. ஒற்றைத்திரளென வந்த அம்மக்களை கைகளும் கால்களும் தலைகளும் பெருகியிருக்க ஊர்ந்து வரும் கடல்வாழ்பெருவிலங்கு என்றே தொல்குடிகள் எண்ணின.  நாகர்களும் காடவரும் அவர்களை தங்கள் நிலங்களுக்குள் புகாமல் அம்புகளாலும் வேல்களாலும் கற்களாலும் துரத்தி அடித்தனர். அவர்கள் கடக்காதபடி ஆறுகளின் மேல் அமைந்த பாலங்களை அழித்தனர். அவர்கள் சென்ற காடுகளைச் சூழ்ந்து நெருப்பிட்டனர். அவர்கள் துயில்கையில் சூழ்ந்து வந்து அம்புகளால் வேட்டையாடினர்.

இறந்தவர்களை அறுத்திட்டுக்கொண்டு மேலும் முடிச்சிட்டு இறுகியவர்களாக சூக்தர்கள் தொடர்ந்து வடக்குமலை ஏறிச்சென்றனர். குளிரில் அவர்களின் முதியோரும் இளையோரும் இறந்தனர். மலைப்பாறை உருண்டும் காலிடறி ஆழத்தில் உதிர்ந்தும் ஒவ்வொருநாளும் இறப்பு நிகழ்ந்தது. ஆனால் வேறெங்கும் செல்ல திசை திறந்திருக்கவில்லை. சிப்பிகளையும் நத்தைகளையும் உண்ணும் வழக்கமிருந்தமையால் அவர்களுக்கு எப்போதும் உணவு கிடைத்தது. அவர்கள் மறைந்தும் மூழ்கியும் செல்ல சதுப்புநிலங்களும் மலைப்புதர்ச்சரிவுகளும் உதவின.

சூக்தர் ஒவ்வொருவரும் விழிகளை மூடி தங்கள் சரடின் மறுமுனையில் ஊர்ணநாபனே இருப்பதாக எண்ணிக்கொண்டனர். அவ்வெண்ணம் அவர்களின் அச்சத்தை அகற்றி ஊக்கமளித்தது. பின்னர் விழிதிறந்து அம்முனையில் தங்கள் குடித்தொகை இருப்பதைக் கண்டு ஏமாற்றம் கொண்டனர். நாளடைவில் அக்குடித்தொகையே ஊர்ணநாபன் எனத் தோன்றலாயிற்று. அச்சரடினூடாக அவர்கள் தங்கள் குடித்தொகையின் எண்ணங்களையும் உணர்வுகளையும் சொல்லின்றி அறிந்துகொண்டனர். எண்ணியிருக்கையில் எவரோ ஒருவர் “எந்தையே” என ஊர்ணநாபனை எண்ணி விழிநீர் சொட்டி அழுதபோது அக்குடியே விம்மலோசைத் தொகை எழ சேர்ந்து கலுழ்ந்தது.

பதினெட்டு மாதங்களுக்குப்பின்  மலைநாகர்களால் துரத்தப்பட்டு  தப்பிச்சென்று எஞ்சிய நாற்பத்தெட்டு ஆண்களும் முப்பத்தேழு பெண்களும் எழுபத்தொரு குழந்தைகளும் ஒரு பனிக்குகைக்குள் உடலோடு உடல் ஒட்டி ஒற்றைச்சரடால் பின்னப்பட்டு கூட்டுக்குள் பட்டுப்புழு என ஒண்டி படுத்திருந்தபோது கின்னரரை கண்டனர். அவர்கள் பலநாள் உணவுண்டிருக்கவில்லை. குளிரில் அவர்களின் உடல் நடுங்கி பின் அடங்கி அனல்போல் எரியலாயிற்று. உலர்ந்த உதடுகளும் ஒளிவறண்ட விழிகளுமாக  வெட்டிக்குவித்திட்டு மட்கும் வாழைத்தண்டுகள்போல ஒற்றைத்தசைக்குவியலாக அவர்கள் கிடந்தனர். அப்போது ஒரு சிறுவன் அக்குகைவாயிலை சுட்டிக்காட்டினான். இன்னொருவன் திரும்பிநோக்கினான். வெண்ணிற ஒளியாக ஏழு கின்னரர்கள் மெல்ல அவர்களை நோக்கி வந்தனர்.

உடல் விதிர்க்க அவர்கள் அசைந்து விலக முயன்றனர். பின்னர் அறியாது கைகூப்பி கண்மூடினர். “எந்தையே எந்தையே” என ஊர்ணநாபனை எண்ணி உளம் கரைந்தனர். அந்த அச்சத்தின் விசை தாளமுடியாமல் அவர்களின் எஞ்சிய உயிர்விசையும் அழிந்தது. பின்னர் அவர்கள் விழிதிறந்தபோது கின்னர உலகில் இருந்தனர். வெண்ணிற ஒளியாலான சிறகுகளுடன் அவர்களைச் சூழ்ந்து பறந்த கின்னரர்கள் அன்னைமுலைப்பாலென இனித்த அமுதை அளித்தனர். கருக்குழி என வெம்மைகொண்ட ஆடைகளை போர்த்தினர். நீர்த்துளி நீரிலுதிரும் இசையில் இன்சொல் கூறினர். அவர்களின் கனிந்த விழிகள் விண்மீன்கள்போல அவர்களுக்குமேல் மின்னின. புன்னகைகள் மூழ்கிச்செல்லும் கடலாழத்தில் வளைந்து ஒளிகாட்டிச் செல்லும் மீன்களைப்போல எழுந்தமைந்தன.

அங்கே பன்னிருநாட்கள் வாழ்ந்தபின்னர் அவர்கள் மலைச்சரிவில் இருந்த இனியசோலை ஒன்றில் விழித்தெழுந்தனர். அங்கே வெம்மை ஊறும் ஏழு ஊற்றுகள் இருந்தன. அதைச் சூழ்ந்திருந்த மரங்களில் கனிகள் செறிந்திருந்தன. விழித்தெழுந்ததும் அவர்கள் தங்களிடம் என்ன நிகழ்ந்திருக்கிறதென எண்ணி வியந்தனர். சற்று கழித்தே தங்கள் உடலைப் பின்னிய சரடு முற்றிலும் அறுபட்டிருப்பதை உணர்ந்தனர். கனவில் கின்னரர்கள் தங்கள் சரடுகளை வெள்ளிக்கத்திகளால் வெட்டுவதைக் கண்டதை நினைவுகூர்ந்தனர். அஞ்சி நடுங்கி ஒருவரை ஒருவர் கைகளாலும் கால்களாலும் தழுவிக்கொண்டனர். அழுது அரற்றியபடி ஒற்றை உடற்திரளாக அங்கே கிடந்தனர்.

ஆனால் நெடுநேரம் அப்படி இருக்கமுடியவில்லை. பசிக்கையில் கைகளை விடுத்து அவர்கள் பிரிந்தாக வேண்டியிருந்தது.  உணவுண்டபோது முதல்முறையாக ஓர் இளைஞன் அவ்வுணவும் தானும் மட்டுமே தனித்திருக்கும் உணர்வை அடைந்தான். அது அச்சமா திகைப்பா இன்பமா என்று அறியாமல் தவித்தான். அத்துடன் அந்த உணர்வையும் தான் மட்டுமே அடைவதை அறிந்தான். திரும்பி ஆங்காங்கே கனிகளைப் பறித்து உண்டுகொண்டிருந்த தன் குடியினரைக் கண்டபோது அவர்கள் எவருக்கும் அவ்வுணர்வுகள் தெரியவில்லை என்று அறிந்து ஒரு துடிப்பை அடைந்தான். இனி அந்த இன்பத்தை ஒருபோதும் தன்னால் விடமுடியாதென்று அப்போது உணர்ந்தான்.

அவர்கள் செய்யவேண்டியவை அனைத்தும் அவர்களின் குலமூத்தாரின் கனவில் சொல்லப்பட்டிருந்தன.  அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உற்றாருடன் தனித்தனியாக தங்கவும் தங்கள் உணவை தாங்களே தேடி உண்ணவும் விழைந்தனர். எனவே மென்பாறைகளைக் குடைந்து தனித்தனியாக சிறு இல்லங்களை அமைத்தனர். இல்லங்கள் இணைந்து அச்சுனைக்கரையில் சிற்றூர் ஒன்று எழுந்தது. அதுவே அவர்களின் முதற்குடி.   அச்சிற்றூர் சூடகம் என அழைக்கப்பட்டது. அக்குடியிலிருந்து மேலும் மேலுமெனப்பெருகி ஆயிரத்தெட்டு ஊர்களாயின.

அவர்களின் உள்ளிருந்து சுனையாழத்து தலைப்பிரட்டைகள் என சொற்கள் வால்துடிக்க விழிதெறிக்க எழுந்து வந்தபடியே இருந்தன. முன்பு சொல்லாமல் உணர்ந்தவை அனைத்தையும் சொல்லி தெரிவிக்கவேண்டியிருந்தது. ஒரு சொல்லின் போதாமை பிறிதொரு சொல்லை உருவாக்கியது. சொல்பெருகி அவர்களின் மொழி செறிந்தது. சொல்லிச்சொல்லி நிறையாதபோது சொல்லலில் திறம்கொண்ட பாணர்கள் பிறந்துவந்தனர். சொல்கடந்து சொல்லும் பூசகர்கள் உருவாயினர்.

அவர்களின் கருவில் கின்னரர்களின் பச்சைவிழிகளும் பளிங்குநிறமும் கொண்ட குழவிகள் பிறந்தன. அவர்கள் தங்களை கின்னரஜன்யர் என்று சொல்லிக்கொண்டனர்.  அவர்களைத் தேடி ஒவ்வொரு கோடையிலும் கின்னரர்கள் மலையிறங்கி வந்தனர். கின்னரர்களுக்கும் மானுடர்களுக்கும் நடுவே தொடர்பாளர்கள் அவர்களே. கின்னரர்களிடம் பேசும் மொழி அவர்களிடம் மட்டுமே இருந்தது. தங்களை பிறர் பார்ப்பதை கின்னரர் விரும்பியதுமில்லை. கின்னரர் என எவருமில்லை என்றும் அது அக்குடிகளின் பாணர்களின் கதைகளில் வாழும் தேவர்களே என்றும் பீதவணிகர்களில் சிலர் எண்ணினர். அருமணிகள் கிடைக்கும் நிலத்தை பிறர் அறியாது காப்பதற்கு உருவாக்கப்பட்ட கதைகள் அவை என்றனர்.

[ 21 ]

கின்னரஜன்யரின் மலைச்சிற்றூர்கள் அனைத்தும் உச்சிப்பாறைமேல் கழுகுகள் கட்டிய கூடுகள்போல முகில்சூழ அமைந்திருந்தன. மலைப்பாறைகளை உருட்டி தங்கள் ஊர்களைச் சுற்றி காவலமைத்திருந்தனர். விரும்பாதவர்கள் மலையேறி வரக்கண்டால் அவர்களில் பத்துவயதான சிறுவர்களேகூட அந்தப் பாறைகளை உருட்டி கீழே செலுத்திவிடமுடியும். பன்னிருநாட்கள் பெருமழை என நில்லாது பொழியுமளவுக்கு அவர்களிடம் பாறைகள் இருந்தன. கோடைகாலத்தில் மலையாறுகளை வழிதிருப்பி படையென்றாக்கி செலுத்தவும் குளிர்காலத்தில் பனிப்பாளங்களைப் பிளந்து இறக்கவும் அவர்களால் இயன்றது.

ஆகவே அங்கே தொல்பழங்காலத்திற்குப்பின் எதிரிகள் என எவரும் அணுகியதே இல்லை. ஆயினும் அவர்கள் தெய்வச்சடங்குபோல ஒவ்வொரு ஆண்டும் காவல்பாறைகளை அமைத்து பூசனை செய்துவந்தனர். கோடைமுடிவில் பாறைகளை அரணமைக்கும் நாளில் உயிர்ப்பலி கொடுத்து இறுதிப்பாறையாக அமைவதற்கு  குருதியாட்டு நிகழ்த்தி எடுத்துவைப்பார்கள். அப்போது குலப்பெண்டிர் குரவையிட வீரர்கள் தங்கள் வேல்களை வானுக்குத்தூக்கி போர்க்குரலெழுப்புவர். அதன்பின்னர் அடுத்தகோடைகாலம் வரை அவ்வரணுக்கு அப்பால் எவரும் செல்ல அவர்கள் ஒப்புவதில்லை. கோடையின் முதல் இரு நிலவுகள்வரை கின்னரர்கள் வந்திறங்கி மீளும் பொழுது. அப்போது அம்மலைச்சரிவை அணுகும் எவரையும் நோக்கியதுமே கொல்ல அவர்கள் சித்தமாக இருப்பார்கள்.

கோடையின் மூன்றாவது நிலவுப்பொழுது தொடங்கும் அன்று மீண்டும் குருதியாட்டு நிகழ்த்தி அந்த இறுதிப்பாறையை முதலில் பெயர்த்தெடுப்பார்கள். குரவையும் போர்க்குரல்களும் ஒலிக்க வழிதிறந்து வாயிலில் உயரமான மரத்தின்மேல் மூங்கில் கட்டப்பட்டு இளஞ்செந்நிறக் கொடி ஏற்றப்படும். அங்கே கொடி ஏறுவதை நோக்கிச் சொல்ல கீழே பாறைகளின் மேல் பீதவணிகர்கள் ஏவலரை நிறுத்தியிருப்பார்கள். கொடி ஏறிய செய்தி முழவுகள் வழியாக அடிநிலத்துச் சிற்றூர்களில் பரவும். அங்கே பலநாட்களுக்கு முன்னரே வந்து அத்திரிகளை அவிழ்த்துக்கட்டிவிட்டு மூங்கில்தட்டி கூட்டியமைத்த பொதிக்குடில்களில் பொருட்களை சேர்த்துவைத்து சிறுகுடில்களில் தங்கி உண்டும் குடித்தும் பாட்டுகேட்டும் காத்திருக்கும் வணிகர்கள் வாழ்த்துக்கூச்சல்களும் சிரிப்புகளுமாக கிளம்புவார்கள்.

அத்திரிகள் பொதிகளின் எடை திரண்டமைந்த குளம்புகள் ஓசையுடன் உருண்டு இறங்கும் உருளைக்கற்கள் பரவிய மலைப்பாதையில் மிதிபட்டு ஒலியெழுப்ப எறும்புநிரை என வளைந்து மேலேறிச்சென்று  அங்காடிகளை அடைந்தன. ஒவ்வொரு அங்காடிக்கும் வெவ்வேறு நிரைகள் சென்றன. கீழே சிற்றூர்களில் சிறுவர்கள் தங்கள் இல்லக்கூரைகளின் மேல் ஏறிநின்று அந்த நிரைகளை நோக்கி கூவி கைவீசினர். மலையேறுபவர்களுடன் சென்று கின்னரஜன்யரின் கதையைப் பாடிய சூதர்களின் முழவொலி அவ்வப்போது சரிவிறங்கிச் சுழலும் காற்றில் சிதர்களாக வந்து செவிதொட்டுச் சென்றது.

கின்னரஜன்யர்களின் ஏழு சிற்றூர்களின் நடுவே அமைந்திருந்தது தவளம் என்னும் சந்தை. அது குறும்பாறைகள் அமைந்த  மலைச்சரிவு. அங்கே வளர்ந்திருந்த முட்புதர்களை வெட்டி அகற்றியிருந்தனர். ஈரப்புதுமண்ணில் மண்புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன. அவர்கள் செல்லும்போதுகூட ஓர் எல்லையில் புதர்களை வெட்டி அகற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. சந்தைமுற்றத்தின் வடபுலத்தில் வட்டமாக அமைந்திருந்த சோலைக்குள் மரங்களில் கட்டி இழுத்து அறையப்பட்ட தோல்கூடாரங்களில் சந்தைக்கென வந்த கின்னரகுடியின் வணிகர்கள் வந்து தங்கியிருந்தனர். தென்வளைவில் பீதவணிகர்களுக்கான இடம் ஒருக்கப்பட்டிருந்தது.

முதல்பீதர்குழு உள்ளே நுழைந்தபோது கின்னரஜன்யர்களின் பெண்களும் குழந்தைகளும் வெண்பனித்துருவல் போன்ற ஆடைகளையும் தலையணிகளையும் அணிந்து கழிகளில் செந்நிற மலர்க்கொத்துகளைக் கட்டியபடி கூடிநின்று கைவீசி இன்குரலெழுப்பி வரவேற்றனர். பூசகர்கள் மூங்கில்குழாய்களையும் காட்டுமாட்டுக் கொம்புகளையும் ஊதி முழவுகளை முழக்கி இசையெழுப்பினர்.  பீதவணிகர்கள் குழந்தைகளுக்காக இனிப்புகளையும் பெண்களுக்காக அணிப்பொருட்களையும் கொண்டுவந்திருந்தனர். முதியபீதர்கள் அவற்றை நீட்டியபடி சிலந்திவலையென முகம் சுருங்க சிரித்துக்கொண்டு அணுகினர்.

மூத்தகுடித்தலைவர் கையசைப்பதுவரை காத்து நின்ற குழந்தைகள் பாய்ந்துவந்து அவற்றை வாங்கிக்கொண்டு கூச்சலிட்டனர். பெண்கள் சிறுமிகளை உந்தி முன்னால் அனுப்பி பனையோலையால்  செய்யப்பட்ட தலைமலர்களையும் சிப்பிகளாலான காதணிகளையும் சங்குவளையல்களையும் பெற்றுக்கொண்டனர். கிளர்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு ஓடி சூழ்ந்து நின்று வியப்பொலி எழுப்பி நோக்கி நோக்கி வியந்தனர். சிறுபூசல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. பனிக்காளையின் வெண்மயிரை முடியெனச் சூடிய  முதுகுடித்தலைவர் வந்து தன் கைக்கோலைத் தூக்கி அவர்களை வாழ்த்தி வணிக ஒப்புதல் அளித்ததும் அவர்களின் முதல் அத்திரி எல்லைகடந்து அங்காடிமுற்றத்திற்குள் நுழைந்தது.

அத்திரிகளை தறியறைந்து நிறுத்தி பொதியவிழ்த்து அடுக்கி கோல்நாட்டி கூடாரங்களை எழுப்பினர் வணிகர். அர்ஜுனன் தன் வில்லை அருகே வைத்துவிட்டு பணியாட்களுடன் இணைந்து கூடாரங்களைக் கட்டினான். கோடையென்றாலும் நிலமாந்தருக்கு அங்கே  கூதிர் காரென குளிர்ந்தது. விழிகூச வழிந்துகிடந்த வெயிலும்கூட குளிர்ந்து விரைத்திருந்தது. பாறைகள் குளிரில் உடல்சிலிர்ப்பவை போலிருந்தன. அருகே ஓடிய ஓடையிலிருந்து மரக்குடைவுக் கலத்தில் நீரள்ளிக் கொண்டுவந்து தொட்டியை நிறைத்தான். வணிகர்கள் நீர் அள்ளிக் குடித்துக்கொண்டிருந்தனர். ஏவலர் அத்திரிகளை நீர் அருந்த கொண்டுசென்றனர்.

அர்ஜுனன் அக்குடில்களில் ஒன்றை அணுகி அடுப்புமூட்ட அனல் கேட்டான். புதிய தலையணி அணிந்த இளம்பெண் ஒருத்தி உள்ளிருந்து சிறுகலத்தில் அனல்கொண்டுவந்து அவனிடம் தந்தாள். அவள் விழிகள் பச்சைமணிக்கல் போலிருந்தன. வெண்பனிபோன்ற நிறம். குருதிச்செம்மைகொண்ட இதழ்கள். அவனைக் கண்டதும் விழிகள் சுருங்க “உங்கள் உடலெங்கும் ஏன் இத்தனை வடுக்கள்?” என்றாள். “அவை போரிலடைந்த புண்கள். நான் ஒரு வில்லவன்” என்றான்.

“ஆம், கதைகளில் கீழ்நிலத்தின் போர்வில்லவர்களைப்பற்றி கேட்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். பின்னர் வாய்பொத்திச் சிரித்தாள். அவன் “என்ன?” என்றான். இல்லை என தலையசைத்தாள். “சொல்” என்றான் அர்ஜுனன். “இங்கே செல்குறி பதித்துச் செல்லும் சிலமரங்களுண்டு. அவைதான் இப்படி உடலெங்கும் வடுக்களுடன் இருக்கும்” என்றாள். “இவை செல்குறிகளே” என்றான் அர்ஜுனன் அனலுடன் திரும்பியபடி. “யார் பதித்த குறிகள்?” என்றாள். “பலர்…” என்றபின் அவன் புன்னகைத்து திரும்பி நடந்தான்.

அவன் கூடாரத்திற்குச் சென்று அடுமனைப் பீதனிடம் அனலை கொடுத்தான். அவனுக்குப் பின்னால் வந்த மூத்தபீதர் “வில்லவரே, பெண்களின் உள்ளம் எல்லைமீற விழைவது. ஏனென்றால் அது உயிரின் முதல்விழைவு. நீர்ப்பரப்பின் விளிம்பு போன்றது அவர்களின் காமம். விரிந்துபரவுவதே அதன் வழி. ஆனால் இம்மக்கள் நிலத்தோரை விரும்புவதில்லை. கின்னரர் அன்றி பிறர்குருதி இவர்களுக்குள் கலக்கலாகாதென்னும் நெறி கொண்டவர்கள்” என்றார்.

“நான் எல்லை மீறவில்லையே!” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் அதற்கான வாய்ப்பு உண்டு என அவர்களில் எவருக்குத் தோன்றினாலும் நாம் எவரும் மலையிறங்க முடியாது” என்றார் பீதர். அர்ஜுனன் “நான் எதையும் பிழையாகக் காணவில்லை. அவள் கேட்டது ஆர்வம்கொள்ளும் சிறுமியின் வினாக்களையே” என்றான். “ஆம், ஆர்வமாகவே அது தொடங்கும். ஒரு பெண் எதன்பொருட்டு ஆணின் உடலை நோக்கினாலும் அது ஒன்றின்பொருட்டென்றே ஆகும். அவளிடமிருந்து விலகிக்கொள்ளுங்கள். இது என் ஆணை!” என்றார் பீதர்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16823 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>