Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16875 articles
Browse latest View live

ஷ்யாம்- கடிதம்

$
0
0

shyam-composer

 

அன்புள்ள ஜெ

 

ஷியாம் பற்றி ஒரு கட்டுரையை உங்களைப்போன்ற அறியப்பட்ட ஆளுமை எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் ஒரு மேதை. இன்றைக்கு தமிழ்நாட்டில் பலருக்கு அவரைத் தெரியாது.

 

பொதுவாகத் தமிழில் ஒரு வழக்கம் உண்டு. தனிநபர் வழிபாட்டின் ஒரு நிலை அது. எப்போதும் எவரேனும் ஒருவரை அவருக்கு எதிராக இன்னொருவரை தலைமேல் தூக்கி வைப்பார்கள். மற்றவர்களுக்கு இடமே இருக்காது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் வேறு நடிகர்களுக்கே இங்கே இடமிருக்கவில்லை. அதைப்போல எம்.எஸ்,விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் தவிர வேறு இசையமைப்பாளர்களைப்பற்றிப் பேசவே மாட்டார்கள். அதன்பின் கொஞ்சகாலம் இளையராஜா மட்டும்தான். பல இசையமைப்பாளர்கள் இங்கே வந்து கவனிக்கப்படாமல் சோர்ந்து சென்றிருக்கிறார்கள்.

 

ஒரே இசையமைப்பாளரின் ஒரு சிலபாடல்களை மட்டுமே கேட்பார்கள். அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். வேறு எதையும் செவிகொடுக்கவே மாட்டார்கள். வேறு பாட்டுகளில் கொஞ்சம்கூட ஆர்வமிருக்காது. இந்த மனநிலை உண்மையில் இசை சம்பந்தமானது இல்லை. இவர்கள் பாட்டே கேட்பதில்லை. வெறும் நஸ்டால்ஜியாவைத்தான் இசை என நினைத்துக்கொள்கிறார்கள்.

 

நல்ல படம் அமைந்து அது வெற்றியும் பெற்றால்தான் இசையமைப்பாளர்களுக்கு வாழ்க்கை. படம் ஓடாவிட்டால் நல்ல பாட்டும்கூட குப்பைக்குள் போய்விடும். சொல்லப்போனால் இன்றைக்கு இணையம் வந்ததனால் தான் இந்தப்பாட்டு உயிருடன் இருக்கிறது. அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது இந்தப்பாட்டை சிலசமயம் விரும்பி ஒலிபரப்புவார். மிக முக்கியமான பாட்டு இது.

 

ஷியாம் மேதமை நிறைந்த இசையமைப்பாளர். அவருடைய பாட்டுகளுக்கு சில தனித்தன்மை உண்டு. முழுமையாகவே மேலைநாட்டு இசைப்பாணி கொண்டவை. ராக், ப்ளூஸ் போன்ற பாணியிலும் இசையமைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் கிளாஸிக் பாணியில்தான். ஆனால் அதை மிகத்திறமையாக இந்திய இசை போல ஆக்கிவிடுவார். அந்தக் கதைச்சந்தர்ப்பத்துக்கு முழுமையாகவே ஒத்துவரும்படி அந்த இசை அமைந்திருக்கும்.

 

சலீல் சௌதுரிக்கு நிறைய சீடர்கள் உண்டு. ஆர்.கே.சேகர், அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள். ஆனால் மிகச்சிறந்த சீடர் ஷியாம்தான். அர்ப்பணிப்புள்ள சீடர் மட்டுமல்ல, அவரிடம் நெடுங்காலம் இருந்தவர். அவருடைய அந்த மரபை முன்னெடுத்தவர் சலீல் சௌதுரி பாடலில் எதிர்பாராத நோட்டுகள் விபரீதமான திருப்பம் போல வருவதுதான் அழகு.

 

மலையாளத்தில் அவருடைய சாதனைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. பல பாடல்களை இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் அடிப்படையில் வயலின் கலைஞர். வயலினில் ஒரு மேதை என்றுதான் சொல்வேன். அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே வயலின் நோட்டுகள் கொண்டவைதான். உதாரணமாக இந்த மாந்தளிரே பாடலில் மிகக் கவர்ச்சியான இடம் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை தென்றல் தீண்டியதோ என்ற வரியிலுள்ள தென்றல் என்ற சொல். அது ஒரு சரியான வயலின் நோட். கேட்கக்கேட்க புதுமையாக உள்ளது அது. என்னைப்போல் என்ற எதிர்நோட்டும் வயலினுக்கு உரியதுதான். நிறையப்பாடல்களை வயலினாகவே கேட்டு ரசிக்கலாம்.

 

ஷியாமை பற்றி ஒரு பேச்சைத் தொடங்கிவைத்தமைக்கு நன்றி.

 

சுந்தர்ராஜ்

 

காத்திரிப்பூ….எஸ்.ஜானகியின் குரல் அப்ப்டியே வயலின் ஓசையாக ஆகும் பாடல்

 

 

 

ஷ்யாம் பேட்டி

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஓநாயின் தனிமை

$
0
0

ste1

 

ஸ்டெப்பி ஓநாய் – ஹெர்மன் ஹெஸ்ஸே

 

இருத்தலியல் படைப்புகளை அதிகம் வாசித்ததில்லை. அதன் மேல் ஒரு சிறிய ஒவ்வாமையும் உண்டு.பல வருடங்களுக்கு முன் அந்நியன் வாசித்திருக்கிறேன். அந்த வகையான படைப்புகள் நமக்குள் இருக்கும் தாழ்வுத்தன்மையை குறித்தே அதிகம் கவனம் கொள்கிறது என நினைக்கிறேன். ஒருவகையில் அதைத் தக்கவைக்க அதற்கான நியாயங்களைச் சொல்கிறது. நம்மை சுற்றி நடக்கும் போலிப் பாவனைகளும், சுயநலங்களும் தான் நம்மை அப்படி உருவாக்கி வைத்திருக்கிறதென சொல்லி ஒருவகையில் நம்மை ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தி மனிதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை நோக்கி நகர்த்துகிறதென எனக்கு பட்டது.

 

 

ஆனால் இதற்கினையான மானுட சரிவை, இயலாமையைப் பேசும் யதார்த்தவாதப் படைப்புகளோ அவ்வெண்ணத்தை உருவாக்குவதில்லை. யோசிக்கும் போது இரண்டு காரணங்கள் தோன்றுகிறது. எப்படியோ அது புறச்சூழலில், இயற்கையில் கொள்ளும் லயிப்புகள் மூலமும் அல்லது அதன் முகங்களாக வரும் எளிய நேரடியான கதாப்பாத்திரங்களின் மூலமாகவும் அதை சமன் செய்கிறது. படைப்பை வாசித்து முடிக்கும் போது அத்தனை வெறுமைக்கு நடுவிலும் கனிவு துளிர்ப்பதை தவிர்க்க முடியாமல் செய்கிறது. அத்தனை சிறுமைகளுக்கு நடுவிலும் மானுடம் மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

 

 

ஹெர்மன் ஹெஸ்ஸே வின் ஸ்டெபி ஓநாய் நாவலை வாசிக்க ஆரம்பிக்கும் போது அதன் ஆரம்ப பக்கங்களிலிருந்து இது முழக்க முழுக்க ஒரு இருத்தலியல் படைப்போ என்ற ஆச்சிரியம் தோன்றியது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இவரது சித்தார்த்தா வை தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அதில் அவரது விடுதலை குறித்தான தேடல் மிக‌வும் உத்வேகமூட்டியது. ஆதனால் இது வெறும் இருத்தலியல் சிக்கலை மட்டும் பேசும் நாவலாக இருக்காதென எண்ணியே தொடர்ந்து வாசித்தேன்.

 

 

நினைத்தது போலவே இது வெறும் மனித மனத்தின் நெருக்கடியை மட்டும் இது பேசவில்லை. அங்கு ஆரம்பித்து அதிலிருந்து மேலெழுவதற்கான தேடலை முன்னெடுக்கிறது. நாவலின் மையக் கதாப்பாத்திரமான ஹாரி தான் இந்த பூர்ஷ்வா சமூகத்தில் ஒரு உதிரி என நினைக்கிறான்.

 

 

கலாச்சார சுரணைற்ற, பொருள்மைய்ய மனநிலை கொண்ட இந்த பெரும்பான்மையானவரின் உலகில் தனக்கு இடமில்லை என்ற உணர்வுடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் 48 வயதுக்காரன் ஹாரி. இசையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடுள்ளவன். அவ்வப்போது கவிதை எழுதுபவன். எதற்கும் சமரசமில்லா தன் ஆளுமையின் உருவாக்கத்தின் பொருட்டாக தனது தொழில் தோல்வி, அதன் விளைவால் தன்னுடைய மனைவி விவாகரத்து என பலிகொடுத்து இறுதியாக ஒரு வாடகைத் தனியறையில் இருந்து அவன் பொழுது கழிகிறது.

 

 

அவனுடய உலகம் பெரும்பான்மையிடமிருந்து விலகியிருப்பதுதான் அவன் முதற்பெரும் பிரச்சனை. இசையிலும் இலக்கியத்திலும் அவன் கொள்ளும் நுண்ணுவர்க்கு நேரெதிராக அவர்களின் நிலையுள்ளது. மொஸார்டின் தீவிர ரசனையாளனான அவனுக்கு கிடைப்பெதெல்லம் ஆழமற்ற அமெரிக்க இறக்குமதியான உள்ளோட்டமில்லாத என அவன் எண்ணும் ஜாஸ் இசையின் ரசிகர்கள் நிறைந்த‌ சுற்றம் தான். இந்த உரசல் அவன் ஆளுமையின் அனைத்து பக்கங்களிலும் வெளிப்படுகிறது. இந்த சராசரி உலகுடன் தான் உரையாடுவதற்கு ஏதுமில்லையென தன் வாசல்களை மூடிக்கொள்கிறான். அக்காலாட்டத்தின் அனைத்து கலைஞர்களைப் போல தனிமை அவனை சூழ்ந்து கொள்கிறது. அந்த புறவாசல் மூடல்களாலும், தனிமையாலும் தனக்கான ஈடுபாடுகளில் ஆழ்ந்து சென்று கூர்மையான பார்வையை உருவாக்கிக் கொண்டு தன் ஆழுமையை மேலும் வளர்தெடுக்கிறான்.

 

 

இதனுடைய மறு எல்லையாக சமூகத்தில் கூடி வாழ படைக்கப்பட்ட அந்த ஆதி விலங்கு அந்த நீண்ட தனிமையின் இருளால் துன்புறுகிறது. எப்போதாவது நிகழும் படைப்பூக்கத்தின் உச்சத் தருணங்களைத் தவிர தன் தினசரி வாழ்நாளின் பெரும்பகுதி சோர்வும் விரக்தியுமாக கழிகிறது. அந்த இருளுக்குஅதன் அழுத்தத்திற்கு அஞ்சி அதிலிருந்து அவ்வப்போது மீளவே அந்த இடத்தில் தங்குகிறான். ஒரு சராசரி மனிதனாக அவன் கடந்த காலத்தின் ஒளிக்கீற்று அவனது இளமைப் பருவம் தான். அதன் இளைப்பாரலில் இருக்கவே எந்த பூர்ஷ்வா சமூகத்திடமிருந்து விலகி தன்னை உருவாக்கிக் கொண்டானோ அதே சூழலில் போய் தங்குகிறான். அங்கு இருக்கும் தூய்மையும், கட்டுப்பாடும், அன்றாட வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிக்கும் சமூகத்தின் மத்தியில் தங்குகிறான். இருந்தும் அவனது அறை ஒழுங்கின்றியும், சிகரெட் நெடியுடனும், சுற்றிலும் சிதறிய புத்தங்களுமாகவே இருக்கிறது. அவ்வப்போது தனிமையின் அழுத்தம் தாளாமல் ஆறுதல் தேடி அந்த குடியிருயிருப்புக் கட்டடத்தின் முதல் தளத்தின் படிக்கட்டில் சில மணித்துளிகள் அமர்ந்திருப்பான்.

 

 

Helmut Ackermann.

Helmut Ackermann.

இந்த விரக்தியின் புகலிடமாக அவனுக்கு மதுவிடுதிகள் அமைகின்றன. ஒரு மாலை பொழுது அப்படியான மதுவிடுத்திக்கு செல்லும் வழியில் ஒரு பாழடைந்த சுவரைப் பார்க்கிறான். ஒரு பழைய கோதிக் பாணியான சர்ச்சின் பகுதியான அந்த சுவற்றின் உச்சியில் “மாயாஜால நாடக அரங்கு – பைத்தியக்காரர்களுக்கு மட்டும்” என எழுதியிருக்கிறது. அதிலிருந்த மர்ம ஈர்ப்பால் சில நிமிடங்கள் அங்கேயே உறைந்து நின்று பின்பு சலிப்புடன் தனது வழக்கமான மதுவிடுதிக்கு செல்கிறான். திரும்பவும் அங்கும் அதே வாதை. அங்கு இருக்கும் வெறும் புலனின்ப உள்ளீடற்ற களியாட்டங்களுக்கு தனக்குள் ஓயாமல் எதிர்வினையாற்றி வெறுமையுடன் திரும்புகையில் அதே சுவற்றுக்கு அருகில் வருகிறான். அப்போது அங்கு அவனிடம் வரும் விசித்திரமான மனிதன் ஒரு துண்டுப்பிரசுரம் வடிவில் ஒரு குறிப்புக் காகிதங்களை கொடுத்துவிட்டுப் போகிறான்.

 

 

வீட்டிற்கு வந்து படிக்கையில் கிட்டத்தட்ட தன்னைப் பற்றிய குறிப்பு போலவே இருப்பதைக் கண்டு வியப்படைகிறான். ஹாரி என்ற இரட்டை ஆளுமை கொண்டவனைப் பற்றி அது குறிப்பிடுகிறது. ஒன்று சராசரி மனிதன். தனக்கான விழுமியங்களையும், நெறிகளையும் பின்பற்றி சமூகத்துடன் வாழ நினைப்பவன். மற்றொன்று ஒரு ஸ்டெப்பி ஓநாய். கலாச்சாரம் கொடுத்த எதையும் ஏற்றுக் கொள்ளாத புலன் சார்ந்த தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பயமும் தனிமையும் நிறைந்த ஓநாய்.

 

 

குறிப்பை வாசிக்கும் ஹாரியும் தன்னை பற்றி அவ்வண்ணமே குறிப்பிடுகிறான். மேலும் வாசிக்குபோது அக்குறிப்பில் வரும் ஹாரியின் இந்த இரட்டை ஆளுமையால் அவன் கொள்ளும் சிக்கல்களும், அந்த நிலை மற்றும் அவன் வாழும் பூர்ஷ்வா சூழலைப் பற்றிய அவதானிப்பையும் அக்குறிப்பு விளக்குகிறது. கிட்டத்தட்ட நாவலில் மொத்த சிக்கல்களும் கருத்து வடிவில் இந்தப் பகுதியில் சொல்ப்படுகிறது. அதற்கு மேல் புனைவுத் தளத்தில் அது எவ்விதம் வளர்கிறது என்பதே அடுத்தடுத்த பகுதிகளில் ஆராயப்படுகிறது.

 

 

இந்த இரட்டை ஆளுமையால் ஹாரி மிகுந்த அல்லற்படுகிறான். எப்போதெல்லாம் அவன் உணர்ச்சிவசப்படுகிறானோ அல்லது விழுமியங்கள் பக்கம் நிற்கிறானோ அப்போதெல்லெம் அந்த தனிய ஓநாயின் பார்வை அவன் நிலைப்பாட்டின் மேல் ஐயம் கொள்ள வைக்கிறது. அதெல்லாம் வெறும் பாவனை மட்டும் தானா எனக் கேட்டு சஞ்சலப் படுத்துகிறது. அதே போல் அவன் கொள்ளும் புலனின்பங்களின் தருணங்களிலெல்லாம் எதிர் ப‌க்கமிருக்கும் அந்த கலாச்சார மனிதன் அவனை குற்றவுணர்வு கொள்ள வைக்கிறான்.

 

இந்த உழற்றல் அவனுக்குள் மட்டுமல்லாமல் அவனது சுற்றத்தோரிடமும் நீட்சி பெறுகிறது. அந்த கலாச்சார முகத்தைப் பார்த்து அவனுடன் பழகியவர்கள் அவனது ஓநாய்ப் பண்பைப் பார்த்து பயந்து வெளியேறி விடுகின்றனர். அவனது அப்பட்டமான புலனிச்சையால் கிடைத்த சுற்றத்தார் சட்டென எழும் அந்த விழுமியங்கள்சார் மனிதனைக் கண்டு விலக்கம் கொள்கின்றனர். இந்த இரண்டின் முரண்பாட்டால் அவனுள் அமைதியே இல்லை. ஆனால் அபூர்வமாக இந்த இரண்டும் சமரசம் கொள்ளும் அந்த அற்புதத் தருணங்களில் அமைபவையே அவனுடைய லட்சியப் பொழுதுகள். அவனுடைய படைபூக்கமும், இசையில் அவன் திளைக்கும் அபூர்வ நிமிடங்களும் அப்போது அவனுக்கு கிடைக்கும்.

 

 

ஹாரியின் சிக்கலை கூறும் அதே வேளையில் முரண்பட்டு அவனை ஆராயவும் செய்கிறது. உண்மையில் பூர்ஷ்வா மனநிலை என்பது வெறும் பொருள்சார் வாழ்க்கையும், கலாச்சார சுரணமின்மை மட்டுமல்ல. மனிதன் எடுக்கும் வசதியான நிலைப்பாட்டு அம்சமும் பூர்ஷ்வா தன்மைதான் என்கிறது. எந்த ஒரு அதீதமான தீவிரத்திற்கும் தன்னை முழுமையாக ஆட்படுத்தாமல் அன்றாட வறட்டு மனநிலையிலேயே தன்னை வைத்திருப்பதும் ஒருவகை பூர்ஷ்வாக் குணம் தான். ஒருவகையில் ஹாரியும் பூர்ஷ்வாதான். ஏனெனில் சராசரிகளின் தண்மைகளை விமர்சனம் செய்யும் அவன் அதற்கு நேரெதிரான விளிம்பு மக்களின் மத்தியிலில்லாமல் அவர்கள் நடுவே வாழ்ந்துகொண்டே அதனுடைய அனுகூலங்களையும் பெறுபவன் என்கிறது.

 

 

அடுத்ததாக அக்குறிப்பு ஹாரி கொள்ளும் இந்த இரட்டை ஆளுமை என்பது ஒருவித பொய்த்தோற்றம் என்கிறது. உண்மையில் அவன் கொள்ளும் அந்த ஸ்டெப்பி ஓநாய் உருவகம் என்பது அவன் நேர்கொண்டு சந்திக்கத் துணிவில்லாத அனைத்து ஆளுமைகளின் தொகுப்பு என்கிறது. யாருக்கும் ஒற்றை ‘ஆளுமை’ என்பது கிடையாது. பிறந்த குழந்தைக்குக்கும் மிருகத்துக்கும் கூட. ஏதாவது ஒரு பக்கம் அவன் உள்ளம் சாயுமென்றால் அதற்குள் அழுந்தியிருக்கும் எண்ணற்ற வெவ்வெறு ஆளுமைகள் மேலெழுந்து வரும். ஹாரியின் துயரென்பது அவனால் உருவகப்படுத்தப்பட்ட

 

ste3

இந்த இரட்டை ஆளுமைகளுக்கு மத்தியில் ஓயாமல் ஊசலாடிக்கொண்டிருப்பதே. அவனுடைய விடுதலை தன்னை சுருக்கி ஒற்றை ஆளுமையாக ஆக்கமுடிவதில் இருக்கிறது என நினைக்கிறான். பிறந்த குழந்தைப் போல். நம்முடைய ஆதிக்கு. அது இயற்கை அன்னையின் மடிக்கு மீண்டும் திரும்புவது என நினைக்கிறான். ஆனால் விடுதலை என்பது பின்னோக்கி செல்வதல்ல அது முன்னால் இருக்கிறது. அனைத்தையும் சுருக்கி அதை எய்துவதல்ல. அனைத்தையும் விரித்து விரித்து முன் சென்றடைவது. கிட்டத்தட்ட உலகம் அளவுக்கே. அது கடும் தியாகத்தாலும், துன்பங்களைக் கடந்தும் செல்வது. தன்னை உருக்கி மறுவார்ப்பு செய்வதது.

 

 

அது புத்தன் செய்தது. அந்த மீட்புக்கான வழியில் கொள்ளும் முக்கியப் பண்பாக நகைத்தலை சொல்கிறது. அமரத்துவத்தின் உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் அதை கைவரப்பெற்றவர்கள். வாழ்க்கையின் அனைத்து துன்பங்களிலும் உழன்று மீட்பற்ற நிலையில் எதுவும் செய்ய இயலாத நிலையில் எழும் அந்த சிரிப்பு நம்மை சூனியத்தில் கரைந்து போய்விடாமல் காக்கும்.

 

 

குறிப்பை படித்த ஹாரி மேலும் கடும் வேதனைக்கு உள்ளாகிறான். இதுவரை தான் கொண்டிருந்த குறைந்த பட்ச பிடிப்பையும் இது அடித்து நொறுக்கிவிட்டது. இப்போது அவன் முன்னால் உள்ளதது இரண்டு வழிகள். ஒன்று நீண்ட பயனத்தின் முடிவில் உள்ளது. அங்கு செல்ல இது வரை தான் பெற்ற துன்பங்களை விட பல மடங்கு கொடுத்து புடம் போட்டு மேழெல வேண்டும். அதற்கான மனதிடம் இந்த வயதில் தனக்கு இல்லையென நினைக்கிறான். மற்றொன்று வந்த வழியே திரும்ப்தல். மீண்டும் ஆதிக்கு செல்லுதல். முதற்சுழிக்குள் சென்று மறைதல். ஆனால் அதை செய்யவும் தனக்குள்ளிருக்கும் ஒன்று கூசுகிறது. ஒரு பரிசை காலில் போட்டு மிதிப்பதைப் போல அச்செயல் என நினைக்கிறான்.

 

 

விரக்தியில் வெளியே செல்லுமவன் ஒரு சாவு ஊர்வலத்தைக் காண்கிறான். அது இறுதியில் புதைக்கப்பட வேண்டிய இடத்திற்கு சென்று அங்கு இறுதி சடங்குகள் நிகழ்கின்றன. அதிலுள்ள அந்த பிடிப்பற்ற செயற்கைத் தன்மை அவனுக்கு கசப்பை உண்டாக்குகிறது. அவர்களின் உடல்களில் தெரியும் சலிப்பு, இறந்த உயிருக்கு கொடுக்கும் மதிப்புமற்ற தன்மை, அவர்கள் கொள்ளும் அவசரம் என‌ அனைத்தும் அவனை சோர்வுறச் செய்கிறது. அவன் அங்கிருந்து கிளம்புகையில் தன் கல்லூரி ஆசிரியரை காண்கிறான். அவரின் அழைப்பை மறுக்க தையிரியமில்லாமல் செயற்கையான புன்னகையை வரவழைத்துக் கொண்டு (அதை அவன் பூர்ஷ்வா மனநிலை என்கிறான்)அவரின் வீட்டிற்கு செல்கிறான்.

 

 

அங்கு காணும் கதேவின் உருவப்படம் அவனை கொதிக்க வைக்கிறது. தங்களை கலைரசிகர்களாக காட்ட விரும்புவர்களின் வரேவற்பறையில் அணிசெய்ய தந்திரமாக மாற்றப்பட்ட‌ கதேயின் போலிப்படம் அது. அதில் அவரின் ஆன்மா இல்லை. கலைந்த தலைமுடி நன்றாக திருத்தப்பட்டு ஒரு காட்சிப் பொருளாக மாற்றப்பட்டுள்ளதைக் கண்டும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பணிவுடன் நடந்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் போர் பற்றிய தன்னுடைய கட்டுரையை வெளியிட்ட நாளிதழ் தன்னுடைய ஆதரவை விலக்கி அதற்கான மறுப்புகளையும் வசைகளையும் அதிலேயே வெளியிட்டத்தைக் காட்டி ஆசிரியர் அவனை நுட்பமாக அவமதிப்பதைக் கண்டும் அமைதி கொள்கிறான்.இறுதியில் பொறுக்க முடியாமல் தன் மறுப்பை கண்டிப்புடன் கூறிவிட்டு வெளியேறும்போது சிறு ஆசுவாசம் பிறக்கிறது. தன் ஓநாய் முகத்தைக் காட்ட முடிந்ததில் மகிழ்சி கொள்கிறான்.

 

 

அங்கிருந்து வெளியேறும் போது திரும்பி வீட்டிற்கு சென்றால் தற்கொலை பற்றிய பயம் மேலெழும் என்பதால் ஒரு மதுவிடுதிக்கு செல்கிறான். வழக்கமான சூழ்நிலை. அவன் வெறுக்கும் ஜாஸ் இசை, அதற்கு நடன‌மாடும் மக்கள். அன்று நிகழ்ந்த தொடர் கசப்புகளால் சோர்வுற்று தலைசுழல நிற்க முடியாமல் அருகிலுள்ள மேசையில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் அனுமதி கேட்டு அங்கு அமர்ந்து கொள்கிறான். உள்நுழைந்ததிலிருந்து அங்கு வரும் வரை அவனையே பார்துக்கொண்டிருந்தவள் அங்கு அமர்ந்தவுடன் மெல்ல உரையாடலைத் துவக்குகிறாள்.

 

 

தன்னுடைய சிக்கலை சரியாக தொட்ட அவளின் கூர்மையைக் கண்டு வியக்கிறான். கேட்டதற்கு தானும் அவனைப் போலத்தான் எனக் கூறுகிறாள். பகடியாக அவனுடய சிக்கலை குறிப்பிட்டு அப்படி எவ்வளவு தூரம் வாழ்வின் ஆழத்தை பார்த்திருக்கிறாய் தற்கொலை செய்து கொள்ள என கிண்டலடித்து தன்னுடன் ஆட அழைக்கிறாள். அவன் தனக்கு ஆடத் தெரியாதெனக் கூறவே, சீண்டலாக அவன் ஆசிரியரின் மனைவிக்கு கதேவைப் பற்றி தெரியாத்தைப் போல எனக் கூறி அடிவாங்கிவிட்டு அம்மாவிடம் வந்து ஆறுதல் தேடும் சிறுவன் போல நீ தற்கொலை பக்கம் செல்கிறாய் என் செல்ல ஹாரி எனக் கொஞ்சுகிறாள். தனக்கு சிறு வயதில் யாரும் நடனம் பயில சொல்லித் தரவில்லை என அவன் கூற சிரித்துக் கொண்டே குடிக்க மட்டும் யார் சொல்லிக் கொடுத்தது என கேட்கிறாள்.

 

 

எவ்வளவு கூப்பிட்டும் ஹாரி மறுத்துவிட, அவனை அங்கேயே சிறிது நேரம் தூங்கச் சொல்லிவிட்டு அவள் ஆடச் செல்கிறாள். அமைதியான தன் வீட்டிலேயே உறக்கம் வராத ஹாரி அதிசயமாக அவ்வளவு இறைச்சல்களுக்கிடையிலும் தூங்குகிறான். அதில் வரும் கனவு இப்படைப்பில் வரும் மைய்யப் படிமங்களில் ஒன்று. கனவில் கதேவை சந்திக்கிறான், அவனில் இருக்கும் இயல்பான தன்முனைப்பு மேலெழ‌ கதேவின் கலையை விமர்சிக்கிறான். வாழ்வில் மனிதனை அனைத்து விசைகளும் அழுத்தி நசுக்க அவரோ மனித்னின் உயர் விழுமியங்களான நம்பிக்கை மற்றும் தியாகத்தை போற்றுவதால் அவரது படைப்புகள் அனைத்தும் சத்தியமற்ற போலி எழுத்துக்கள் என்கிறான். சக மேதாவிகளான மோஸார்ட் முதலிய‌வர்கள் சிறு வயதிலேயே மறைய 82 வயது வரை வாழ்ந்த சுயநலக்காரர் எனக் கொந்தளிக்கிறான். அவனைக் கனிவுடன் பார்த்து 82 வயது வரை வாழ்ந்தது தன் குற்றம் இல்லை எனக் கூறி அத்தனை வயது வரை வாழ்ந்ததை எந்த வகையிலாவது நியாயப்படுத்த் வேண்டுமானால் தன் 82 வயது வரை தன்னுளிருந்த் சிறுவனை தான் இழக்கவில்லை என்கிறார்.

 

 

மலர்ந்து சிரித்து ஒரு சிறுவனைப் போல் ஆடிக் களிக்கிறார். மூப்பின் அத்தனையும் பின்னகர ஆடிக்கொண்டே வந்து அவன் காதில் ‘நீ தேவையில்லாமல் இந்தக் கிழவனை தீவிரமாக எடுத்துக் கொள்கிறாய். அதுவும் இறந்தவர்களை. அமரத்துவதின் இந்த உலகில் விளையாட்டல்லாத எதற்கும் இடம் இல்லை’ எனக் கூறி தன் நடனத்தை தொடர்கிறார்.

 

 

கிட்டத்தட்ட அந்தப் பெண் சொன்ன இன்னொரு வடிவம் தான் கதே கூறியது. ஹாரியின் அத்தனை துன்பங்களையும் ஒரு சிறுவனின் கோள்சொல்லாக பார்க்கும் அன்னையின் பார்வை அது. நமக்குள்ளேயே அந்த அன்னையை நாம் வைத்திருந்தால் இவ்வள‌வு காயம் ஏற்பட்டிருக்காது போலும்.

 

st4

நடனம் முடிந்து திரும்பி வந்த அவள் தான் கிளம்புவதாகக் கூற ஹாரி தன்னை தனியே விடவேண்டாமென்றும் வீட்டிற்கு சென்றால் மீண்டும் தற்கொலை எண்ணம் தலைதூக்கும் எனக் கெஞ்சுகிறான். அந்த விடுதியின் அறைகளில் தங்க சொல்லிவிட்டு அவனுடைய‌ சுயமைய நோக்கை கிண்டலுடன் குறிப்பிடுகிறாள். அத்தனை நேரத்தில் தன் பெயரை கூட அறிந்து கொள்ள தேவையில்லையென நினைத்த அவனது சுயநலத்தை சொல்லிக் காண்பிக்க அவளிடம் மன்னிப்பு கூறி அவளது பெயரைக் கேட்கிறான். அடுத்த முறை சொல்வதாகக் கூறி அப்போது கண்டிப்பாக தன்னுடன் நடனம் ஆடவேண்டும் எனக் கூறி விடைபெறுகிறாள்.

 

 

அடுத்த சந்திப்பில் எதேச்சையாக அவன் ப‌த்திரிக்கைக்கு எழுதிய போர் எதிர்ப்பு குறித்தான கட்டுரையையும் அதற்கான எதிர்வினையையும் வாசிக்கிறாள். அதைப் பற்றி அவர்களுடைய உரையாடல் நீள்கிறது. ஹாரி உணர்ச்சி பொங்க வீராவேசமாக பேசுகிறான்.போரின் அவலங்கள் பற்றி உயர்தட்டிலிருப்பவர்களின் சுயநலங்கள் பற்றி எப்படி தேசப்பற்று என்னும் திரை வரவிருக்கும் பேரழிவை காணமுடியாமலாக்குகிறதென தொடர்ந்து குமுறுகிறான். அதற்கு அவளும் ஆம். மற்றொரு பெரும்போர் வரவிருப்பதை அனைவரும் உணர்ந்தும் தடுக்கமுடியாததன் ஆற்றாமையை சொல்கிறாள். யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிறாள். ஆனால் அதற்கு ஹாரி சீற்றம் கொண்டு உங்களைப் போல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என கோபப்படுகிறான்.

 

அவனை சமாதானம் செய்து உன்னுடைய பாதை அதன் இலக்கை அடையாவிட்டாலும் உன் வாழ்க்கை தோல்வி அல்ல. பெரியவற்றுக்காக வாழ்தலின் மனநிலையே வெற்றி தான். இறப்பு என்பது இந்த சிறிய வாழ்க்கைச் சுடரை மேலும் அழகாக்குகிறது எனக் கூறிவிட்டு அவனை இயல்புபடுத்துகிறாள். நம் வாழ்வின் இன்பத்தை விளைவிலல்லாமல் செயலில் நிறுத்தினால் அனைத்தையும் நேர்மறையாகவும் நிறைவாகவும் வாழ முடியுமென அவ்விடம் உணர்த்துகிறது. ஹாரியின் சிக்கலும் இது தான். அனைத்தையும் ஏதோ ஒரு வகையில் தன் வதைக்கான நிமித்தமாக மாற்றிக்கொள்கிறான். தன்னுள்ளிருக்கும் ஓநாய் தன் புண்ணையே கீறிக்கீறி ருசிக்கிறது.

 

 

 

சந்திப்பின் இறுதியில் அவளுடைய பேரைக் கேட்கிறான். அதற்கு அவள் நன்றாக யோசித்துப் பார். அது உனக்குள்ளே இருக்கிறது. சமயத்தில் நான் ஆணாக உனக்குத் தெரியவில்லையா என வினவிகிறாள். உடனே ஹாரி ஆம். உன்னை முதலில் பார்த்தலிருந்தே நீ யாரையோ நினைவுபடுத்தியபடியே இருந்தாய். இப்போது தான் அது தெளிந்தது. நீ என் சிறுவயது தோழன் ஹெர்மன் போலவே இருக்கிறாய். அப்படியானால் உன் பெயர் ஹெர்மோனி யா? எனக் கேட்கிறான். அவள் ஆம். நான் உன் முன் நிற்கும் ஒரு கண்ணாடி போல். ஆழத்தில் நீயும் நானும் ஒன்று தான் எனக் கூறி சிரிக்கிறாள். நம்முடைய முதல் சந்திப்பில் நான் கூறுவதனைத்தையும் நீ செய்வதாக சொல்லியிருக்கிறாய். ஒரு நாள் நீ எனைக் கொல்ல வேண்டும் என ஹெர்மோனி கூறிகிறாள். அதிலுள்ள விசித்திரத்தை உணராமல் சரியெனக் கூறி அந்தத் தருணத்தை கடந்து செல்கிறான்.

 

 

 

இந்நாவலின் வடிவம் மூன்று அடுக்குகள் கொண்டது. நாவல் ஆரம்பிப்பது ஹாரியின் வீட்டு உரிமையாளப் பெண்ணின் உறவினர் பார்வையில். அவரும் வீட்டு உரிமையாளருடன் தங்கியிருக்கிறார். ஓரிரு முறை ஹாரியை பார்த்திருக்கிறார். அவரே கதைசொல்லி. அவர் ஹாரியைப் பற்றி சொல்வது முதல் அடுக்கு. ஒரு ‘பூர்ஷ்வா’ பார்வையில் ஒரு அந்நியனின் சித்திரத்தை விவரிக்கிறது அப்பகுதி. ஹாரி வீட்டை காலி செய்கையில் அவன் விட்டுச்சென்ற குறிப்புத் தொகையை அவர் எடுத்து வாசித்துப் பார்க்கிறார். அதில் வரும் கதைசொல்லி ஹாரி. அது நாவலின் இரண்டாவது அடுக்கு. இதில் ஹாரி கைக்கு வரும் ஸ்டெப்பி ஓநாய் பற்றிய குறிப்புகள் மூன்றாவது அடுக்கு.

 

 

 

இம்மாதிரியான அடுக்குகள் வெறும் உத்திகளாக மேற்பார்வைக்கு ஒரு சிக்கலானப் பிரதியின் தோற்றத்திற்காக‌ பயன்படுத்தப்படாமல் நாவலில் வடிவ ஒருமைக்கும் தர்க்க ஒழுங்குக்கும் பயன்படுத்தப்படுகிறது. முதல் அடுக்கு முழுக்க முழுக்க யதார்த்தம் சார்ந்தது. இரண்டாம் அடுக்கு ஹாரியின் குறிப்புத்தொகை என்பதால் அனைத்தும் உண்மையாக நடந்திருக்கவேண்டுமென்பதில்லை. அதை ஒரு புனைவுப் பிரதியாகவும் எடுத்துக்கொண்டு அதன்மூலம் அதில் வரும் சம்பவங்களிலுள்ள விசித்திரத்தன்மையை நாவல் கடந்திருக்கிறது. மூன்றாவது அடுக்கு முற்றிலும் கட்டுரைக்கான நடை கொண்டது. நாவலில் மைய சிக்கல் மற்றும் அதற்கான சாத்தியாமான தீர்வுத் தேடல்களை இப்பகுதி கோடிட்டுக்காட்டுகிறது. நாவலின் முதல் பாதிக்குள் இப்பகுதி வருவதால் இதை கருத்தியல் அடிப்படையாகக் கொண்டு புனைவுச் சம்பவங்கள் மூலம் தன் தேடலை முன்னெடுக்கிறது.

 

 

 

ஹெர்மோனி அவனுக்கு நடனம் கற்றுத்தருகிறாள். அதன் மூலம் முற்றிலும் புதிய உலகத்திற்குள் ஹாரி வருகிறான். அது முற்றிலும் கொண்டாட்டமானது. அனைத்து சிக்கல்களையும் ஒருவகையான அங்கதத்தன்மையுடன் கடந்து செல்கிறது. அதன் போக்கில் தனக்குள் அழுந்தப்பட்டிருக்கும் பல்வேறு சிறு ஆளுமைகளை கண்டடைகிறான். அவைகளும் தன்னுள் இருப்பதாகவும் அதன் தேவைகளையும் இப்புதிய வாழ்க்கை பூர்த்தி செய்வ‌தைக் கண்டு கொள்கிறான்.

 

 

Illustration by Hermann Ackermann from the Heritage Collection edition

Illustration by Hermann Ackermann from the Heritage Collection edition

 

இந்த உலகத்தில் இரண்டு புதிய நண்பர்கள் அவனுக்கு கிடைக்கிறது. முதலாமவள் மேரி. பேரழகி. அவளுடன் நடனமாட விளைந்தும் தன் வயது காரணமாக அவளிடம் செல்ல சிறு தயக்கம் காட்டுகிறான். பின் ஹெர்மோனியின் வற்புறுத்தலால் அவளிடம் சென்று தன்னுடயை முதிர்ச்சியற்ற நடனத்தின் மேல் சந்தேககம் கொண்டபடி அவளுடன் ஆடுகிறாள். மிகச்சிறந்த நடனக்காரியான அவள் அவனுடய அத்தனை பிசிறுகளையும் தன் அசைவுகளால் ஈடுசெய்து அவனை பிரமிக்க வைக்கிறாள்.

 

 

ஒருநாள் தன் வருகைக்கு முன்பே தன் படுக்கையில் இருக்கும் மேரியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். ஹெர்மோனியின் விருப்பத்தின்பேரில் அவள் வந்திருப்பதை அவனால் உணரமுடிகிறது. மேரியுடன் அவன் உறவு நெருக்கம் கொள்கையில் அவர்களின் உலகம் அறியவருகிறது. இயல்பாகவே புலன்வேட்கைகள் அதிகமாக நாட்டம் இருக்கும் அவர்கள் தன் அன்றாடத்திற்காக ஏதோவொரு குமாஸ்தா வேலையை செய்து கொண்டு வறட்டு வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை. மாறாக அவர்கள் தீவிர உணர்ச்சிகளால் தங்களை சூழ்ந்துகொள்பவர்கள். சில காலங்களுக்கு சிலருடன் தொடர்ச்சியாக உச்சகட்ட உறவிலிருப்பவர்கள். சிலருக்கு வீட்டில் நிலையான கணவனும் இருப்பார்கள். அதன்மூலம் தங்க‌ள் பொருளியல் சிக்கல்களை தீர்த்துக் கொள்பவர்கள்.

 

 

அவ்வுறவுக்குப் பின் பொருட்கள் மீதான அவன் பார்வையே மாறி விடுகிறது. தங்களை அழகாக காட்டிகொள்வது முதல் அதற்காக அவர்கள் உபயோகிக்கும் ஆபரணங்கள், உடைகள், காலணிகளென அனைத்திற்கு பின்னும் ஈராஸின்(Eros) விருப்பம் இருப்பதாக நினைக்கிறான். மேரியின் வாழ்க்கைக்கு கட்டுபடியாகதவர்கள் சிறிய அளவும் இதன் மூலம் தங்களை திருப்திப் படுத்திக்கொள்கிறார்கள் என எண்ணி புன்னகைக்கிறான். எதை சிலகாலம் முன்பு பொருள்மைய்ய நோக்கு என நினைத்து அவர்களை வெறுத்தானோ இப்போது அதன் பின்னிருக்கும் மனித வேட்கையை அதன் சமரசத்தை எண்ணி புன்னகைக்கிறான். இந்த மாற்றம் மேரியின் உறவால் அவன் கிடைக்கப்பெற்றது.

 

 

மற்றொருவன் பாப்லோ. ஹெர்மோனியும் ஹாரியும் வழக்கமாக செல்லும் விடுதியில் ஸாக்ஸோபோன் வாசிப்பவன். அவனிடம் ஹெர்மோனி கொள்ளும் ஈர்ப்பு அவனை மெல்லிதாக சீண்டுகிறது. அவள் அவனை காதலிக்கூடுமோ என்பதாலல்ல அது. எதோவகையில் அவன் தன்னைவிட மேலானவன் எனத் தோன்றுவதால். அவனுடைய சிரிப்பும் மனிதர்களுடன் அவன் பழகுவதிலுள்ள எடையின்மைத் தன்மையும் அவனை சுற்றி ஒரு ஒளிவட்டமாக இருப்பதாக அவனுக்கு தோன்றுகிறது. அவன் மேடையில் இசைக்கும் போது முழுப் பற்றுடன் தன்னை முழுமையாக அதில் கரைத்துக் கொண்டு அந்த கொண்டாட்ட மனநிலைக்கு தன்னை முழுதளிக்கிறான். ஜாஸ் பற்றிய பேச்சு வரும் போது அதை மட்டம் தட்டும் விதமாக ஹாரி தன்னுடைய கூர்மையான விமர்சனத்தைக் கூறி அதைபற்றிய அவனுடைய எதிர்வினைக்காக் காத்திருக்கிறான். பாப்லோவோ அதை இயல்பான ஒரு பார்வையால் கடந்துவிட்டு மற்ற விஷய‌ங்களை பேசுகிறான். வேறொரு தருணத்தில் அவர்களிருவரும் தனியாக இருக்கும் போது அப்பேச்சு வரவே ஹாரி மேற்கு செவ்வியல் இசையை ஒப்பிட்டு ஜாஸின் உள்ளீடற்ற தன்மையை விமர்சனம் செய்கிறான். அது வெறும் கேளிக்கை மற்றும் தற்காலிகமானது என்கிறான்.

 

 

அதற்கு பாப்லோ காலம் கடந்து நிற்கும் தன்மையை எல்லாம் கடவுளிடம் விட்டுவிடலாம். அந்தத் தருணத்தில் தன்னால் முழுமையாக ‘செய்ய’ முடிவதில் அந்த கொன்டாட்டத்தின் முழுமைக்கு தன்னால் பங்காற்ற முடிவதிலேயே தான் நிறைவுறுவதாக கூறுகிறான். தன் இசையை தர்ப்படுத்துவது தன் வேலையல்ல தான் ஒரு இசைகலைஞன் மட்டுமே இசைப்பது மட்டுமே தன் வேலை என்கிறான்.

 

 

எந்த ஒரு கறாரான கொள்கை பக்கமும் நிற்காமல் மனிதர்களை மட்டுமே தன் முன் காண்பவன் அவன். எந்த கொள்கையும் அதற்குப் பிறகே. ஒரு நாள் அவசரத் தேவையாக ஹாரியிடம் பணம் கேட்கிறான் அதற்கு பதிலாக மேரியுடனான அன்றைய இரவை அவனுக்குத் தருவதாக பாப்லோ கூறுகிறான். உடனே ஹாரிக்குள் இருக்கும் கொள்கைத் திலகம் ‘காசுக்காக பெண்களை சிறுமை செய்யும் உன்னை போல் என்னையும் நினைக்கிறாயா?’ என சீறுகிறது. பாப்லோ எல்லாவற்றையும் ஏன் இப்படி கொள்கைக் கண் வழியே பார்க்கிறாய் எனக் கூறி அவசரமாக அப்பணத்தை எடுத்துக் கொண்டு உடல்நிலை சரியில்லாதை தன் நண்பனை பார்க்கப் போகிறான். அங்கு அவனுக்கு தேவையான உணவுகளும், மருந்தும் வாங்கி கொடுத்து அவன் இருப்பிடத்தையும் சுத்தப்படுத்தி வைக்கிறான்.

 

 

பாப்லோ எந்த கொள்கை சட்டகத்திற்குள்ளும் தன்னை நிறுத்திக் கொள்ளாதவன். போதை மருந்து பயன்படுத்துகிறான். இருபால் உறவு கொள்கிறான். தன் உள்ளுணர்வின் வழியே பெருகும் அனைத்தையும் தடையின்றி செய்கிறான். தன் வாழ்க்கையை முழுவதுமாக‌ மனிதர்களை நோக்கி திறந்து வைத்திருப்பவன்.

 

 

ஓரிடத்தில் ஹெர்மோனி பாப்லோவிடம் கேட்கிறான். ஏன் ஹாரியை பார்த்து ஒதுங்கி கொள்கிறாய் என. அதற்கு பாப்லோ ‘அவன் முதல்முறை பார்த்த போதே அதை உணர்ந்துவிட்டேன். அவன் கண்களில் சிரிப்பே இல்லை. அப்படி இருப்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். ஆகவே தன்னை சீண்டும் எந்த கேள்விக்கும் எதிர்வினை ஆற்றவில்லை’ என்கிறான்.

 

 

நாவலின் இறுதிப் பகுதி பெரும் நடன அரங்கில்(Ball Room) நடக்கிறது. பல நூறு மக்கள் கலந்து கொள்ளும் அரங்கு அது. ஹாரி தன்னுடைய இயல்பான வெறுமையுணர்ச்சியால் அங்கு செல்வதை தவிர்த்துக் கொண்டேயிருந்துவிட்டு இறுதியாக தாமதாமக நுழைகிறான். அங்கு முழு வீச்சில் நடனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அனைத்து அறைகளிலும் ஹெர்மோனியைத் தேடி சலித்து தனியாக அமர்ந்து வைன் அருந்துகிறான். அந்த மொத்த கொண்டாட்ட வெளியே அவனுக்கு கசப்பைத் தருகிறது. ஹெர்மோனி என்னும் ஒற்றை நபரால் தான் அந்த மொத்த உலகமும் அவனுக்கு பொருள் பட்டது. இப்போது அவளில்லாமல் அவனால் அமர்ந்திருக்க முடியாமல் கிளம்ப முடிவெடுத்து தன் கோட் வைப்பறைக்கு முன்னால்வருகையில் சட்டென ஒருவன் ஒரு சீட்டைக் கொடுத்துவிட்டு மறைகிறான். நாவலில் முதற்பகுதியில் வந்த அதேமாதிரியான ஒரு வாசகம் ‘Magic theatre- For Mad people only. opens at 4 am. Hermonie is in Hell’ என.

 

 

ஹாரி விரைந்த் ஹெல் என்ற அந்த நடன அரங்கிற்கு செல்கிறான். எங்கு தேடியும் அவளை கண்டடைய முடியவில்லை. ஒரு நபர் வெகுநேரமாக தன்னையே நோக்குவதை அறிந்து அதனருகில் செல்கிறான். நெருங்க நெருங்க உருவம் தெளிந்து வருகிறது. மிண்ணும் கண்களும் கேளிப்புன்னகையில் சுழித்த உதடுமாக காட்சியளிக்க குதூகலத்துடன் அவன் செல்ல அங்கு ஒரு ஆண் வேடமணிந்து ஹெர்மோனி நிற்கிறாள். முழுக்க பெண்களுடன் நடனமாட அவ்வாறு வந்திருக்கிறாள். இருன்டு கிடந்த அவ்வெளி மீண்டு அவனுக்கு பிராகசிக்க இருவரும் தனித்தனியாக சென்று பல மணிநேரம் ஆடித்திளைக்கிறார்கள். அவனுடைய விடுதலையைக் கண்டு மேடையில் இசைத்துக் கொண்டிருக்கும் பாப்லோ ஹாரியை உரக்க அழைத்து வணக்கம் சொல்கிறான். முழுவதுமாக தன்னை கரைத்துக் கொண்டு திளைத்த ஹாரி கடைசியாக தன் அசல்தோற்றத்தில் பெண்ணாக வரும் ஹெர்மோனியுடன் இறுதி நடனம் ஒன்று ஆடுகிறான்.

 

 

அதைத் தொடர்ந்து நாவலில் வரும் காட்சிகள் முழுக்க சர்ரிலியசியத் தன்மை கொண்டது. அதுவரை வந்த சம்பவங்களிலிருந்து இன்னொரு பெரும் தாவலை நிகழ்த்துகிறது. முழுக்க முழுக்க அருவமான வெளியில் நாவல் தன் பயணத்தை முன்னெடுக்கிறது. பாப்லோ பக்கத்திற்கு ஒருவராக ஹாரியையும் ஹெர்மோனியையும் கூட்டிக் கொண்டு மாயாஜாலத் தியேட்டருக்குள் புகுகிறான். அங்கு அவர்கள் ஒருவிதமான திரவத்தை அருந்திவிட்டு பாப்லோ கொடுக்கும் சிகெரெட்டை புகைக்கிறார்கள். ஹாரி தன் யதார்த்த போதம் அழிய ஒரு அசரீரியின் அழைப்பால் செலுத்தப்பட்டு தியேட்டரின் முகப்பிற்கு செல்கிறான். அங்கு எண்ணற்ற அறைகள் முன்னால் பலகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

 

 

அங்கு நிகழும் அனைத்து சம்பவங்களும் ஒரு கவிதைக்குரிய குறியீட்டுத்தன்மையுடனும் படிமத்தன்மையுடனும் விவ‌ரிக்கப்படுபவை. அனைத்தும் மிக அந்தரங்கமாக பொருள்படுபவை. மொத்தம் ஐந்து அறைகளுக்குள் சென்று மீள்கிறான். ஒவ்வொன்றிற்கு செல்லும் முன்னும் கண்ணாடியில் தன்னைப் பார்க்கிறான். சில சமயம் முழு மனிதனாகத் தெரிகிறான். ஒரு சமயமோ முற்றிலும் ஓநாயாக. ஒரு சமயம் இரண்டும் உருகி கலந்த வடிவற்ற கலங்கலாக. இவை அனைத்திற்கும் அனைவரும் பொதுவான கறாரான அர்த்தம் அதன் மேல் படியமுடியாதபடி நிகழ்வுகள் அடுத்தடுத்து தாவுகின்றன. முற்றிலும் ஒரு கனவு வெளியில் அந்தந்த பொருள்கள், நிகழ்வுகள் நம்முள் எழுப்பும் உணர்வுகளுடன் மட்டும் பயணிக்குமாறு அக்காட்சிகள் நகர்கின்றன.

 

st6

 

ஒரு அறையில் வருங்காலத்தில் நடைபெறுவதாக ஒரு வெளி அவன் முன் விரிகிறது. இயந்திரங்களுக்கெதிரான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்த சூழலும் போரும் அதன் பட்டவர்த்தனமான வன்முறையும் அதில் எப்போதும் பலியாகும் அப்பாவிகளைக் குறித்தும் அச்சூழல் காட்சிப்படுத்துகிறது. அழிவிற்கு நேரெதிரான ஆக்கத்தின் ஒரு தருணத்தில் அங்கிருந்து வெளியேறுகிறான்.

 

 

மற்றொரு அறை நம் ஆளுமையை தருணத்திற்கேற்றபடி கலைத்து அடுக்கும் ஒரு சூதாட்டக்காரனை சந்திக்கிறான். அவன் காட்டும் கண்ணாடியில் பார்க்கும் அவன் பலநூற்றுக்கணக்கான தன் உருவங்களின் மொத்த வடிவமாக அவன் தெரிகிறான். சில உருவங்கள் தவழுகின்றன. தன்னுடைய பிம்பங்கள் அனைத்தயும் ஒரு சிறிய விளையாட்டுப் பொருளாக்கி சதுரங்கப் பலகையில் வைத்து விளையாடுகிறான். வாழ்க்கை என்னும் பிரவாகம் அந்த பொருட்கள் கொள்ளும் உறவால் பெருகி நுறைக்கிறது. இந்தப் பொருட்களை எப்படி வேண்டுமானாலும் நகர்த்தி அதன் உறவுகளின் பல்வேறு சாத்தியங்களால் உன் ஆளுமையை வடிவமைத்துக் கொள்ளலாம் என்கிறான். அந்த பொருட்களை தன் பையில் போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறான்.

 

 

இன்னொரு அறையின் முகப்பில் ‘காதலுக்காக கொலை செய்வ‌தெப்படி’ என எழுதப்பட்டிருக்கிறது. உள்ளே சென்று பார்த்தால் பாப்லோவும் ஹெர்மோனியும் நிர்வாணமாக படுத்திருக்கிறார்கள். ஆதாம் கடித்த ஆப்பிளின் தடயமென அவளுடைய முலையில் பற்தடம் பதிந்திருக்கிறது. தன் பையை தொட்டு பார்க்கையில் சூதாடியின் பொருட்கள் இருந்த இடத்தில் ஒரு கத்தி இருக்கிறது. முன்பு ஹெர்மோனி தன்னை கொல்லும்படி சொன்னது நினைவுக்கு வர அந்த பற்தடத்தில் தன் கத்தியை ஆழ இறக்குகிறான். உள்ளிருந்து அமுதவூற்றென ரத்தம் வெளிவர அவர் உடல் வெளிரி உதட்டில் மட்டும் செம்மை எஞ்சுகிறது. பாப்லோ விழித்துக் கொண்டு அவளை ஒரு போர்வையில் சுருட்டி வைத்து விட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது மோஸார்டின் ‘Don Giovanni’ என்ற பாடல் ஒலிக்கிறது. மோஸார்ட்டின் மகத்தான கலைசிருஷ்டியை எண்ணி அதிலாழ்ந்திருக்கும் போது அங்கு அவர் அவனைக் கடந்து சென்று இன்னொரு அறைக்குள் நுழைகிறார்.

 

 

முன்னால் செல்லும் அவரைத் தொடர்கிறான். அங்கு அவர் ஒரு வயர்லெஸ் ரேடியோவின் பாகங்களை பொருத்திக் கொண்டிருப்பதை பார்கிறான். அதை முழுவதுமாக ஒருங்கு படுத்தியவுடன் அதிலிருந்து சன்னமாக கீறிச்சிட்ட ஒலியுடன் மோஸார்ட்டின் சங்கீதம் வருகிறது. அதைக் கண்டு ஹாரி முகம் சுளித்து அதை நிறுத்தச் சொல்லும் அதே வேளையில் அதனுடைய சங்கீததின் உள்ளிருக்கும் மகத்துவமும் அவனை வந்தடைகிறது. அவர் அவனிடம் அந்த சங்கீதம் அத்தனை அழுக்கும் சேற்றுக்கும் மத்தியிலும் அதன் உன்னதத்தை உன்னால் உணர முடிகிறது. நம் வாழ்விலும் அன்றாடம் என்னும் கறைக்குப் பின்னால் பேரழகு மிக்க உன்னதம் தன்னில் எதையும் ஒட்ட விடாமல் அதிதூய்மையாக மின்னிக் கொண்டிருக்கிறது. அனைத்துக்கும் பின்னாலுள்ள அந்த ஒன்றை காணும் கண் பெற்றால் நீ விடுதலையடைவாய் என்கிறார்.

 

 

ஹெர்மோனியை ஏன் கொன்றாய் என வினவுகிறார். அதற்கு அவள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனக் கூறும் போதே அதிலுள்ள அபத்தம் அவனை அறைகிறது. அவள் முதன்முதலாக அதை சொல்லும் முன்னரே அவன் அதை அறிந்துகொண்டதை அப்போது அவன் உணர்கிறான். அழிவில் தான் கொண்டிருக்கும் விருப்பத்தையும் தன் கீழ்மையையும் எண்ணி கண்ணீர் வடிக்கிறான். தன் தண்டனைக்குரியவனாக வேண்டும் எனக் கூறுகிறான்.

 

 

அதை இந்த தியேட்டரின் நீதிபதியே தண்டனை வழங்க வேண்டும் என்கிறார். அவன் அந்த நீதிபதிக்கு முன்னால் பல்வேறு மக்கள் சூழ நிற்கிறான். மொத்த சூழலும் குழந்தைக்குரிய எளிய கள்ளமின்மையுடன் இருக்க இவன் மட்டும் படு சோகத்தில் கண்ணீர் வடிய நின்றுகொண்டு தனக்கு தண்டனை கொடுங்கள் என இறைஞ்சி மன்றாடுகிறான். நீதிபதி தியேட்டரிலிருக்கும் ஓவியத்தை நிஜமென நம்பி அதை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவன் இந்த தியேட்டரிலேயே இன்னும் சில தினங்கள் கழிக்க வேண்டுமென ஆணையிட்டு மேலுமொரு கடுந்தண்டனையாக அனைவரும் அவனை நோக்கி சிரிக்க சொல்கிறார். மொத்த அரங்கமே அவனை நோக்கி சிரிக்கிறது.

 

 

திரும்ப‌வரும் ஹாரியிடம் மோஸார்ட் பல சமயங்களில் ஓவியத்தை நிஜமென நம்பி எதிர்வினையாற்றுகிறாய். இன்னும் கொஞ்சம் நீ சிரிக்கலாம். ஒரு சிரிப்பின் கால அளவே எங்கள் உலகம். எங்களின் உலகம் விளையாட்டுத்தனங்களால் நிரம்பியது என்கிறார். மறுத்தால் என்ன செய்வீர்கள் என வினவிக் கொண்டிருக்கவே மோஸார்ட் உருவழிந்து பாப்லோ அவன் முன் தோன்ற மறுத்தால் வேறொரு சிகெரெட் தருவேன் என்க் கூறி சிரிக்கிறான். அந்த தியேட்டரின் கேளிக்கைக்கான பொருட்களை நிஜமென நம்பி சேதப்படுத்தியத்தற்காக செல்லமாக கடிந்து கொள்கிறான். ஹாரி மெல்ல சூழலைப் புரிந்து கொள்கிறான். தன் சட்டைப்பையைத் தொட்டு சூதாடி கொடுத்த அந்த பொருட்களை எண்ணி அடுத்த முறை தன் விளையாட்டை இன்னும் சிறப்பாக விளையாடுவேன், இன்னும் கொஞம் விளையட்டுத்தனத்துடன், களிப்புடன். அப்போது பாப்லொவின், மோஸார்ட்டின் உலகத்துடன் இணைவேன் என தனுக்குள் கூறிகொள்வதுடன் நாவல் முடிகிறது.

 

 

மொத்தமாக தொகுத்துத் பார்க்கையில் இந்நாவல் ஹாரி கொள்ளும் சிக்கலுக்கு சில பாதைகளை முன்வைக்கிறது. முதலாவதகாக சுயமழித்தல் (Dissolution of செல்ஃப்). இங்கு சுயம் என்பது ஆளுமை அல்லது அகங்காரம் என பொருள்படுகிறது. எதை கட்டி எழுப்பி நம்மை நாம் உணர்கிறாமோ அதை உடைக்காமல் அல்லது அழிக்காமல் அடுத்தகட்ட நகர்வு இல்லை. அழித்தல் என்றால் அதன் மேலோங்கியதன்மையை மற்றொன்றால் நிகர் செய்தல். உதாரணத்திற்கு தன்னுடைய நுண்ணுர்வுத் தன்மையால் தான் சராசரிகளிடமிருந்து அறிவுஜீவி அல்லது கலைஞன் வேறுபடுகிறான். அதை தன் ஆளுமையாக உணரும் போதே அதன் எதிர் விளைவாக சராசரிகளின் மீதான ஒவ்வாமையும் இணைந்து உருவாகிவிடுகிறது. இந்த சமமின்மையை உடைத்து முன்னகராமல் அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியல்லை என நாவல் சொல்கிறது.

 

 

Froggi-sama

அதற்கான ஒரு வழியாகத் தான் ஹாஸ்யத்தை, விளையாட்டுத்தனத்தை சொல்கிறது. கொண்டாட்டமாக செய்யப்படாதவை அது எவ்வளவு பெரிய மேன்மைக்காக செய்யப்படினும் அதை ஆற்றுபவன் விடுதலை அடைவதில்லை என்கிறது. எவ்வளவு தீவிரத்துடன் செய்யப்படினும் வாழ்க்கை ஒரு விளையாட்டு தான். அந்த தண்ணுணர்வு தான் அந்த தீவிரத்தை சமப்படுத்தும் தராசின் மறுபக்கமாக இருக்கிறது. தன் செயலின் விளைவை எண்ணி கலங்காமல் செயலை மட்டுமே நிறைவாக எண்ணச் செய்கிறது.

 

 

இந்த நிறைவுக்கான இன்னொரு முகமாக அன்றாடங்களுக்கும் சராசரித்தனத்துக்கும் பின்னாலுள்ள நித்தியத்துவத்தை அசாதாரணத்தைக் காணும் கண்ணை உருவாக்குதலைச் சொல்லுகிறது. நாவலில் ஹாரி ஓரிடத்தில் மனிதர்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களின் பின்னுள்ள ஈராஸ் கடவுளின் கள்ள முகத்தை அதன் துடுக்குச் சிரிப்பை காணும் இடம் இதற்கான உதாரணமாக சொல்லலாம். அந்த பார்வையைப் பெற்றவன் தன் வெறுப்புகளிலிருந்து வெளிவருகிறான். அவனுக்கு அன்றாடம் சலிப்பதில்லை. நித்தியத்தின் மற்றுமொரு முகத்தை பார்க்கும் களிப்பையே அடைவான். அதையே நாவலின் இறுதியில் மோஸார்டின் ரேடியோ நமக்கு காட்டுகிறது. அத்தனை கிறீச்சிடல்களுக்கு மத்தியிலும் நம்மால் அந்த சங்கீததின் உன்னத்தை அறிய முடிந்தால் நமக்கு பாப்லோவின் உலகில் இடமுண்டு.

 

 

இந்த நாவலின் முகமாக ஒற்றை வரியை சொல்லவேண்டுமென்றால் இப்படி சொல்வேன். நமக்குளிருக்கும் அந்த தனித்த வெறுமை கொண்ட ஓநாயின் முகத்தில் ஒரு சிறு சிரிப்பை களிப்பை உருவாக்குவதற்கான தேடலை முன்னெடுப்பதே இந்நாவல் என‌.

 

 

பாலாஜி பிருத்விராஜ்

 

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்

தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மணவுறவு மீறல் குற்றமா?

$
0
0

marriagexl_070517021244

ஆசிரியருக்கு,

 

 

உச்சநீதிமன்றம்  திருமணத்திற்கு  வெளியே உள்ள  உறவு ஒரு குற்றமல்ல,  அது  குற்றம்  எனக்  கூறுவது  அரசியல்  சாசனத்திற்கு விரோதமானது  என  இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

 

ரத்து  செய்யப்பட்ட  இ த ச பிரிவு  497  என்ன  சொல்கிறது  என்பதை இங்கே  காணலாம்.

 

Section 497 in The Indian Penal Code
497. Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

 

https://indiankanoon.org/doc/1833006/

 

 

செய்தித்தாள் விவாததங்களைப்  பார்க்கும் பொழுது, பெண்கள் மீது இ த ச  பிரிவு 497 ன் கீழ்  பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள்  நிலுவையில் உள்ளதாகவும்,  இப்போது  அது  முடிவுக்கு வந்து விட்டதகவும்  பெண்களின்  நலன்  காக்கப் பட்டதாகவும்  அறிவுஜீவிகள்  எண்ணுகிறார்கள்.

 

 

இப்பிரிவின் படி  ஒரு பெண்ணை  குற்றவாளியாக்க முடியாது, இவ்வழக்கை  தொடுக்கும்  அதிகாரம் அப்பெண்ணின் கணவருக்கு மட்டுமே  உண்டு  தனது  மனைவியுடன் கூடியவரை மட்டும் குற்றவாளியாக்க  முடியும்.  அதே சமயம்  ஒரு ஆண்   மீது ஒரு பெண் வழக்கு   தொடுக்க முடியாது  ( இங்கு மட்டும் சமநிலை சற்று குறைகிறது).  நடைமுறையில் எனது வழக்கறிஞர் அனுபவத்தில்  இது வரை இப்பிரிவில்   ஒரு வழக்கு  தொடுக்கப்பட்டதாகக்  கண்டதில்லை.

 

 

குற்றவியல்  நடைமுறை சட்டத்தில்  பிரிவு 125 ன்  கீழ் கைவிடப்பட்ட மனைவி  கணவரிடம்   ஜீவனாம்சம்  கோரலாம், தகாத உறவு வைத்துள்ளார்  எனக்  காரணம் கூறி  ஜீவனாம்சத்தை  கணவர் மறுக்கலாம்.  இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பதை கீழே காணலாம்.

 

https://indiankanoon.org/doc/1056396/

 

 

உச்ச நீதிமன்றம்  சில  பத்தாண்டுகளுக்கு  முன்பே  மனைவி ஓரிருமுறை  தகாத உறவு  வைத்திருப்பது  என்பது  ஜீவனாம்சத்தை  மறுக்க  காரணமாக அமையாது,   “living in adultery”  என இருக்க வேண்டும், அதாவது  மனைவி  ஒரு தொடர்  தகாத  உறவில் வாழ்ந்திருந்தால் மட்டுமே   கணவன்  ஜீவனாம்சத்தை  மறுக்க  இயலும் என தீர்ப்பளித்துள்ளது. எனவே  இப்போதைய  இ த ச பிரிவு 497 ரத்து என்பது  அதி  முற்போக்கான தீர்ப்பல்ல,  இந்த  வகை  மனப்பாங்கு உச்சநீதிமன்றத்திற்கு புதிதல்ல.

 

 

இந்த  விவாதத்தில் அறம் மற்றும் ஒழுக்கவியல் கேள்விகள் எழுவதை தவிர்க்க  முடியாது.  ஒரு  தரப்பினர்  திருமணத்திற்கு  முன்பே   உறவு கொண்டுள்ளாரா,  திருமணத்திற்கு  பின்  தனது  இணையுடன்  மட்டுமே உறவு கொள்வேன்  என  வாக்குறுதி  அளிக்கிறாரா  என்பதெல்லாம் இன்றைய  தேதியில்  திருமணத்திற்கு முன்  ஆண்  பெண்  இருபாலரும் இது  குறித்து  வெளிப்படையாகப்  பேசிக்கொள்வதில்லை  என கருதுகிறேன்.

 

 

ஒழுக்கவியல்  அளவீடு  மாறிக்கொண்டே  இருந்தாலும்  தற்காலத்தில் நிலவும்  ஒழுக்கத்தை  தற்காலத்தில்  கடைபிடிப்பது  சிபாரிசு செய்யத்தக்கது.

 

 

அவ்வாறு பார்த்தல்  திருமண இணை  இது குறித்து பேசிக் கொள்ளாவிட்டாலும்,  ஒரு தரப்பு  தனது   இணை திருமணத்திற்கு முன்பே  ஓரிருமுறை  உறவு  கொண்டிருந்தாலும்  அது சகஜமே  என்றும்  திருமணத்திற்கு பின்  ஓரிருமுறை  நிலை தடுமாறி ஒ ரு உறவில்  ஈடுபடும் பொழுது அது  சகிக்கத்தக்கது  அது  திருமண பந்தத்தை  முறிக்கும்  அளவுக்கு  அடிப்படை தவறல்ல என்பது சமூக பொது  ஒழுக்கவியல்  அளவுகோல் என  நான்  கருதுகிறேன். தமிழகத்தில்  கிட்டத்தட்ட  கால் வாசி பெண்கள் தனது  கணவர் பாங்காக்  சென்று  உறவு கொள்வதை  தெரிந்தே  அனுமதிக்கிறார்கள்  அல்லது கடுமையாக  எதிர்ப்பதில்லை, எனவே  இன்று  இங்கு  ஆண்களை பொறுத்தவரை  இது  பெரிய  விஷயமல்ல.

 

 

அதே சமயம்  முறைமீறிய  உறவுகொண்டுள்ள   ஒரு ஆணையும் பெண்ணையும்  சமூகம் சமமாக  நடத்துவதில்லை,  பெண்களுக்கு  கூடுதல்  காயம் ஏற்படும்.

 

 

ஆனாலும்   திருமணத்திற்கு  முன்  உறவு கொள்ளாதிருப்பதும்  திருமணத்திற்கு  பின்  தனது இணையுடன்  மட்டும்   உறவு வைத்துக்கொள்வதும்  அது  விக்ட்டோரிய  ஒழுக்கவியல்  என்றாலும் கூட   ஒரு  லட்சிய நடத்தை  என  கருதுகிறேன்.

 

 

இங்கு தான்  அறமீறல் மற்றும்  ஒழுக்க மீறல்  குறித்த  கேள்வி எழுகிறது

 

பொதுவாக  வாக்கு மீறல்  என்பது அறமீறல்  எனக் கருதுகிறேன். சில சமயங்களில்  ஒழுக்க  மீறல் அறமீறல்  என  கருதுவதற்கு  இடமுண்டு.    ஒரு  பொதுப் புரிதலின்படி  ஒரு நபர்  தனது  இணை திருமணத்திற்கு  வெளியே  ஒரு  தொடர் உறவு கொள்ளமாட்டார்  என எண்ணிக்கொண்டு  பின்னர் அவ்வாறு  நடந்தால் அது அறமீறல்  என எண்ணுகிறேன்.  அதே போலவே தான்  மறைக்கப்பட்ட திருமணத்திற்கு   முந்தைய  உறவும். இதற்கு தண்டனை அல்லது கண்டன  அளவுகளை  பற்றி பின்னர்  முடிவெடுக்கலாம்.  எந்த நிதானமான  ஒழுக்கவாதியும்  இதற்கு  தூக்கையெல்லாம்  சிபாரிசு செய்யப் போவதில்லை.

 

அதேபோல   திருமணத்திற்கு  முன் அந்த  இணை  வெளிப்படையாக பேசி  உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டடிருந்தால்  அதை  மீறுவது  வெறும்  ஒழுக்க மீறல்  அல்ல அது அற மீறல்.

 

 

உங்கள் பதில் என்ன ?

 

 

கிருஷ்ணன் ,

ஈரோடு.

 

அன்புள்ள கிருஷ்ணன்,

 

நான் இந்த சட்டவிஷயங்களை முழுக்க வாசிக்கவில்லை. அவை பொதுவாசகர்களுக்குரிய மொழியில் எழுதப்பட இன்னும் கொஞ்சகாலம் ஆகும். அதன்பின்னரே என்னால் வாசிக்கமுடியும். சட்டமொழியின் முறுக்குசுற்றல்களில் சிக்கிக்கொண்டால் நாட்கள் கடந்துசெல்லும். ஏற்கனவே சிலமுறை சில பஞ்சாயத்துக்களுக்காக இவற்றை பொதுவாக வாசித்ததுண்டு.

 

இத்தகைய வினாக்களை அதிநுட்பமாக்கி ஊகக்கேள்விகள் வழியாக அணுகும் வழக்கமும் எனக்கில்லை. நானறிந்த வாழ்க்கைச்சூழலில் இவை என்னபொருள் கொள்கின்றன என்றுதான் பார்க்க முயல்வேன்.ஒழுக்கமீறல், அறமீறல் எல்லாம் சட்டத்தின் எல்லைக்குள் வருமா என்ன? சட்டம் எவர் பாதிக்கப்படுகிறார், எவர் பாதிப்பை உருவாக்குகிறார் என்று மட்டும்தானே பார்க்கும்?

 

சட்டத்துறையில் சிலருடன் இத்தீர்ப்பைப்பற்றிப் பொதுவாகப் பேசினேன். இத்தீர்ப்பு அளிக்கும் மேலதிக விலக்கு என்ன என்று நான் புரிந்துகொண்டது இதுதான். பொதுவாக எந்தச் சட்டமும் அறநெறிபோல ஒழுக்கவிதி போல எப்போதைக்கும் எக்காலத்திற்கும் உரியதாக வகுக்கப்படுவதில்லை. சட்டம் ஒரு வழிகாட்டுநெறி மட்டுமே. அது நடைமுறையில் எப்படிச் செயல்படுகிறது, என்ன விளைவை உருவாக்குகிறது என்பதைக்கொண்டு அதை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள், சட்டத்திருத்தங்கள் வழியாக, தீர்ப்புவாசகங்கள் வழியாக.

 

இந்தச்சட்டம் ஏன் உருவானது என்பதற்கு ஒரு சமூகப்பின்னணியை வழக்கறிஞரான நண்பர் சொன்னார். 1860 இல் இந்தச் சட்டத்தின் முதல்வடிவம் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. அன்று நிலப்பிரபுத்துவம் ஓங்கியிருந்த சூழலில் பெரும்பாலான நிலவுடைமையாளர்கள் தங்கள் குடியானவர், ஏவலர்களின் மனைவிகளை தங்கள் உடைமையாகக் கருதி வன்பாலுறவு கொள்ளும் வழக்கமிருந்தது. அடித்தள மக்களின் தன்மானத்திற்கு அறைகூவலாக இருந்த இப்பிரச்னைக்கு எதிராக உருவான சட்டம் இது. ஒருவர் தன் மனைவியுடன் இன்னொருவர் உறவுகொண்டிருக்கிறார் என்று ஆதாரபூர்வமாகக் குற்றம்சாட்டினால் அவ்வுறவுகொண்டவர் தண்டிக்கப்படுவார், அந்தப்பெண் அதை ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்பது ஒரு கேள்வியே அல்ல. அந்தப்பெண் அதன்பொருட்டு தண்டிக்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அன்றைய சூழலில் பெண் உண்மையிலேயே ஆணின் உடைமைதான். அவளுக்கு எந்த சமூக உரிமையும் இல்லை, எந்த தன்னிலையும் இல்லை. அவள் எதையும் தெரிவுசெய்யவோ மறுக்கவோ முடியாது.

 

ஐந்தாண்டு சிறை என்பது மிகக்கடுமையான தண்டனை.ஏனென்றால் அந்தப் பாலுறவை அன்றைய சட்டவல்லுநர் ஓர் அத்துமீறலாக, வன்முறையாகக் கண்டனர். அந்த கணவனுக்கு எதிரான ஒரு நேரடியான சூறையாடல் அது. அவன் தன்மதிப்பை அழிப்பது, அவனுடைய சமூக இடத்தை இல்லாமலாக்குவது.அன்றையசூழலில் அந்த எளியவனைக் காக்கும்பொருட்டு, அந்தப்பெண்ணுக்கும் பாதுகாப்பாக அமையும்பொருட்டு உருவான கருணைமிக்க ஒரு சட்டம்தான் அது. இன்று அதன் பயன்பாடு மாறியிருக்கிறது. இன்று கணவர்கள் மனைவிகளை தன் உடைமையாகக் கருதவும் அந்த எல்லையை அவள் மீறிவிட்டாளென்று எண்ணினால் தண்டிக்கவும் இச்சட்டம் பயன்படுகிறது. ஆகவேதான் கணவனின் உரிமை அல்ல பெண் என தீர்ப்பு ஆணையிடுகிறது.

 

*

 

திருமணத்துக்கு வெளியே பாலுறவு என்பது ஐந்தாண்டு தண்டனைக்குரிய குற்றம் என்னும் சட்டம் நடைமுறையில் இங்கே எப்படி கையாளப்பட்டது? அது இதுவரை திருட்டு, வழிப்பறி போல ஒரு பொதுக்குற்றம். எவருக்கும் புகார் இல்லை என்றாலும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியும் என்றே கருதப்பட்டது. இதைப்பயன்படுத்தி காவல்துறை ஆண்பெண் இணைகளை விசாரிக்கவும், விசாரணைக்கு காவல்நிலையம் கொண்டுசெல்லவும் முடியும். சட்டவிரோதமாக மிரட்டவும் முடியும். இதை காவலர் எப்படிப் பயன்படுத்துவார்கள் என நாம் அறிவோம். கணவன்மனைவியாகச் சென்று தங்குபவர்களுக்கேகூட இங்கே காவலர்களின் தொந்தரவு உச்சத்தில் உள்ளது.

 

உதாரணமாக, என் நண்பரான இதழாளர் ப்ரியா தம்பி ஒருமுறை மகாபலிபுரத்தில் ஒரு விடுதியில் தன் கணவருடன் தங்கியிருந்தபோது ஒரு காவலர் அவர்களை கணவன் மனைவி அல்ல என ‘சந்தேகப்பட்டு’ ‘நள்ளிரவில் அவர்களின் அறையைத் தட்டி உள்ளே வந்து ஆவணங்களைக் கேட்டு மிரட்டி தொந்தரவுசெய்ததைப் பதிவுசெய்திருந்தார். அவர் இதழாளர் என்பதனால், அருகிலேயே சென்னையில் குடியிருந்தமையால் தப்பினார். இல்லையேல் பெரிய சிக்கல்தான். ஏனென்றால் சட்டம் அதை அனுமதிக்கிறது. ஒரு குற்றம் நிகழ்கிறது என்று சந்தேகம் வந்தால் கண்காணிக்கவும் விசாரிக்கவும் காவலருக்கு உரிமை உண்டு.ஐந்தாண்டுவரை தண்டனைக்குரிய குற்றம் என்னும் ஒற்றைவரியே அந்த அதிகாரத்தை அளிக்கிறது

 

இரண்டாவதாக, அரசூழியர் விஷயத்தில் இது எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படும் என நான் என் தொழிற்சங்கச்சூழலில்  கண்டிருக்கிறேன். ஒரு பெண் அரசூழியரான கணவரை மிரட்டவோ பழிவாங்கவோ விரும்பினால் முறைமீறிய பாலுறவில் ஈடுபட்டதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தால்போதும். அதில் சில சட்டச்சர்க்கஸ் எல்லாம் தேவைப்படும் என்றாலும் அதை குற்றவழக்காகப் பதிவுசெய்ய முடியும். விளைவு,  உடனடி வேலைநீக்கம்தான். அதன்பின் நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப்பின்னர் விடுதலையானால் மட்டுமே வேலையைத் திரும்பப்பெற முடியும்- எந்த இழப்பீடும், ஊதிய மிச்சமும் இல்லாமல்.  இதைப்பயன்படுத்தி எத்தனையோ ஆண்கள் பெண்களால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள், பெரும்பணம் பறிக்கப்பட்டுள்ளது என நான் அறிவேன்.

 

அதேபோல மறுபக்கம் ஜீவனாம்சம் கொடுக்க மனமில்லாத கணவன் பெண் முறைமீறிய உறவில் இருக்கிறார் என எவரையேனும் சேர்த்து ஒரு குற்றப்பதிவை காவல்நிலையத்தில் செய்தால்போதும், அப்பெண் தீராத சட்டச்சிக்கலில் மாட்டிக்கொள்வாள். ஏனென்றால் அது விவாகரத்துக்கு வெளியே ஒரு குற்றவழக்கு. பெரும்பாலும் பெண்கள் உடனடியாக அடிபணிந்துவிடுவார்கள்.

 

இன்று நம் சமூகச்சூழ்நிலை மாறிவிட்டிருக்கிறது. கணவன்மனைவி அல்லாத ஆணும்பெண்ணும் ஓர் இடத்தில் தங்குவதோ, சேர்ந்து பயணம் செய்வதோ ,பொதுஇடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதோ இன்றைய வாழ்க்கையில் மிகச்சாதாரணமான விஷயம். அவர்கள் எப்போது தேவைப்பட்டாலும் காவலர்களுக்கும் பிறருக்கும் தாங்கள் முறைதவறிய உறவில் இல்லை என நிரூபிக்கவேண்டும் என்பது போல அபத்தம் வேறில்லை. கணவன் மனைவியே கூட எங்குசென்றாலும் கணவன் மனைவி என்பதற்கான முழு ஆதாரங்களுடன் இருக்கவேண்டும் என்பதும் உச்சகட்ட அராஜகம்.

 

இச்சூழலில்தான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இது உருவாக்கும் மாற்றம் இதுதான். எந்த ஆண்பெண்ணைப் பார்த்தாலும் அவர்கள் கணவன்மனைவி அல்ல என்றால் ஒரு குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என காவல்துறையோ பிறரோ கருதுவதை இது தடைசெய்கிறது. அவர்களை காவலரோ பிறரோ விசாரிப்பதை அவர்களின் தனியுரிமைக்குள் தலையிடுவதாக ஆக்குகிறது. அவ்வாறு ஒருவரை விசாரிப்பது சட்டப்படி குற்றம் ஆகிறது. இது மிகப்பெரிய ஒரு விடுதலை. இது தவிர்க்கமுடியாத ஒரு மாற்றம், நடைமுறை சார்ந்தது.

 

திருமண உறவு ஒரு சமூகநிகழ்வு என்ற புரிதல் முன்பு இருந்தது. ஆகவே அதை மீறுதல் என்பது சமூகத்துக்கு எதிரான குற்றம். ஆகவே அது சமூகத்தின்பொருட்டு சட்டத்தால் தண்டிக்கப்பட்டது. இன்று அது இருவர் தங்களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தம் மட்டுமே என்ற புரிதல் உருவாகியிருக்கிறது. இது நீதிமன்றத்தில் உருவானது அல்ல, அதற்கு முன்னரே சமூகத்தில் உருவாகிவிட்டிருக்கிறது. முன்பு கணவன்மனைவிச் சண்டைகளில் உறவினர், ஊர் எல்லாம் தலையிடுவதுண்டு. இன்று அது இருவர் சார்ந்த தனிவிஷயம், அவர்கள் கோரினாலொழிய தாய்தந்தையரே தலையிடக்கூடாது என நம் வாழ்க்கைச்சூழல் மாறியிருக்கிறது. அந்தம்மாற்றத்தையே சட்டம் பிரதிபலிக்கிறது

 

இன்று திருமணம் இருவரிடையே நிகழும் ஒரு சட்டபூர்வ ஒப்பந்தம். அதை மீறுபவர் மறுதரப்பினருக்கு குற்றமிழைத்தவர். பாதிக்கப்பட்டவர் புகார்செய்யலாம், இழப்பீடு கோரலாம். இதுவே இத்தீர்ப்பு அளிக்கும் மாற்றம்.இங்கே பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல ஆணும்பெண்ணும் முறைமீறிய உறவுகளில் ஈடுபடுவது தவறே இல்லை என இந்தத் தீர்ப்பு  சொல்லவில்லை. அது அரசுக்கோ சமூகத்துக்கோ எதிரான குற்றம் அல்ல என்றுமட்டுமே சொல்கிறது. அது தனிநபர்களுக்குள் நிகழும் ஒப்பந்த மீறல் என்று சொல்கிறது.

 

இது பெண்களுக்கு எதிரானதா? நடைமுறையில் அப்படி இல்லை என்பதே உண்மை. திருமண ஒப்பந்தத்தை மீறும் கணவனை சட்டபூர்வமாகப் பிரிய பெண்ணுக்கு உரிமை உள்ளது. அந்த மீறலை அதற்கான வலுவான காரணமாகக் காட்டலாம். அவனிடமிருந்து இழப்பீடும் வாழ்வுச்செலவும் பெறலாம். நடைமுறையில் முன்னரும் அதுவே சாத்தியம். அதற்குமேல் அவனைச் சிறைக்கும் அனுப்பவேண்டும் என்பதெல்லாம் சரியானது அல்ல. சிறைக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி ஆணின் இறுதிப்பைசாவையும் பிடுங்குபவர்களுக்கு வேண்டுமென்றால் இத்தீர்ப்பு ஒரு தடையாகத் தெரியலாம்.

 

சரி, திருமணம் ஓர் ஒப்பந்தம் என்றால் அதன் ஷரத்துக்கள் என்னென்ன? ஒப்பந்தத்தில் அதெல்லாம் தெளிவாக முன்னரே பேசப்பட்டிருக்கவேண்டுமா? தேவையில்லை. இத்தகைய ஒப்பந்தங்களுக்கு சமூகம் சார்ந்த பொதுப்புரிதல் உள்ளது. சட்டம் சிலவற்றை வரையறுக்கிறது. அதுவே போதுமானது. நீதிமன்றம் அந்த நடைமுறைப் புரிதல்களையே ஒப்பந்தத்தின் பரஸ்பர ஏற்புகளாகக் கருதும். அதை இந்தத் தீர்ப்பு மாற்றி எழுதவில்லை. அதன்மேல் விவாதத்தையும் தொடங்கிவைக்கவில்லை, சரிதானே?

 

சட்டம் என்பது நீதிக்கான ஒரு தொடர்முயற்சி. நீதி என்பது ஒழுக்கத்தையும் நெறிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு. அதன் சாரம் என்பது மானுடநிகர்க்கொள்கை, அனைவருக்கும் வாழ்க்கையுரிமை போன்ற சில அறவிழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. அவ்விழுமியங்களை நோக்கிச் செல்லும் பொருட்டு அமையும் சட்டமாற்றங்கள் நீதியின்பார்பட்டவைதான். எனக்கு இந்தத் தீர்ப்பு தனிமனித வாழ்க்கையில் அரசும் சமூகமும் கைசெலுத்துவதை தடுக்கும் தீர்ப்பாக, தனிமனித உரிமையை காப்பதற்கு உதவுவதாகவே தோன்றுகிறது. திருமண உறவு என்பது இரு தனிநபர்களுக்கு நடுவே நிகழ்வது மட்டுமே என்ற புரிதலை நாம் சட்டத்திற்குள்ளும் இதன்வழியாகக் கொண்டுவந்திருக்கிறோம்.

 

ஜெ

 

பிகு

 

இணையத்தில் தேடியபோது இந்த வலைத்தளம் கண்ணுக்குப்பட்டது. யாரோ பாதிக்கப்பட்டவரின் உளக்குமுறல்கள் குவிந்துகிடக்கின்றன. சுவாரசியமாக இருந்தது

பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23

$
0
0

bowலட்சுமணன் பீஷ்மரை முதலில் பார்த்தபோது அவரும் விஸ்வசேனரும் உரையாடிக்கொண்டு வருவதை கண்டான். தன் அம்பையும் வில்லையும் எடுக்க குனிந்தபோதுதான் அதிர்ச்சிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். பீஷ்மர் தனக்குள் என தலைகுனிந்து கையசைத்து மெல்ல முணுமுணுத்தபடி வந்தார். அவருக்குப் பின்னால் அவன் பார்த்தது அவரது நிழலைத்தான். ஆனால் பார்த்தது அவருடைய நிழல் அல்ல என்று நினைவு வீறிட்டது. அது வண்ணமும் வடிவும் கொண்டிருந்தது என்று அது மீளமீள வலியுறுத்தியது. என்ன நிகழ்ந்தது என்று அவனுள் எழுந்த உளக்கூர் துழாவியது. அவையனத்துக்கும் அப்பால் உடல் சிலிர்ப்பு கொண்டு பின் அடங்கி வியர்வை பூத்து குளிர்ந்தது. மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு விழிவிலக்கிக்கொண்டான்.

குனிந்து தன் காலின் இரும்புக்குறடின் தோற்சரடை இன்னொரு முறை இறுக்கிவிட்டு தலைதூக்கி பார்த்தான். உடல் அதிர உள்ளம் படபடக்கத் தொடங்கிய பின்னரே முதலில் பார்த்ததையே மீண்டும் கண்டதை உணர்ந்தான். பீஷ்மருக்குப் பின்னால் அவரைவிடப் பெரிய ஓர் உடல் தெரிந்தது. ஒருவர் பின் ஒருவராக நால்வர். அவன் விழியிமைத்த பின்னரும் அக்காட்சி மறையவில்லை. எட்டு கைகளுடன் ஒருவர் என அது மேலும் தெளிந்தது. இரும்புக் கவசங்கள் அணிந்த பேருடலர். பீஷ்மரிடம் பேசிக்கொண்டு இணையாக, சற்று பின்னால் அவர் வந்துகொண்டிருந்தார்.

உள்ளம் அச்சத்தால் துடித்தபோது, அச்சத்தாலேயே விழி மேலும் கூர்கொள்ள அவன் பீஷ்மரைத் தொடர்ந்து வருபவரை நிலைவிழியால் நோக்கினான். அவர் ஏன் விஸ்வசேனர் என்று தோன்றினார் என்று புரிந்தது. அவர் பீஷ்மரின் அதே வடிவிலிருந்தார். விஸ்வசேனரை எப்போது நோக்கினாலும் பீஷ்மரோ என உள்ளம் திடுக்கிட்டு பின்னர் மெல்ல அமைவது அவன் வழக்கம். பலமுறை பீஷ்மர் என எண்ணி அவன் வணங்கியதும் உண்டு. இயல்பாக பீஷ்மரைப்போல வாழ்த்திவிட்டு கடந்துசெல்வது அவர் வழக்கம். தான் பீஷ்மரல்ல என்றுகூட அவர் அறிந்திருப்பதில்லை. பீஷ்மரிடம் சொல்லாடுவதுபோல, அவர்மேல் எரிச்சல் கொண்டவர்போல, அவருக்கு ஆணையிடுபவர்போல இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார்.

லட்சுமணன் திரும்பி தன் அருகே நின்ற இளையோனாகிய துருமசேனனை பார்த்தான். அவன் விழிகள் இயல்பாக இருப்பதைப் பார்த்து “இளையோனே, பிதாமகர் எவரிடம் பேசிக்கொண்டு வருகிறார்?” என்றான். “அது நெடுநாள் வழக்கம்தான் மூத்தவரே, அவர் தனக்குத்தானே சொல்லாடுவார். அரிதாக தன்னிடமே சினம்கொண்டு பற்களைக் கடித்து கைகளை முறுக்கி உறுமுவதும் உண்டு” என்றான். “அவருக்குப் பின்னால் எவரோ வருவதுபோல் எனக்கு தோன்றுகிறது” என்றான் லட்சுமணன். “அவர் நிழலல்லவா அது, மூத்தவரே” என்றான் துருமசேனன். “ஆம்” என்றபின் லட்சுமணன் பெருமூச்சுடன் தன் தேரிலேறிக்கொண்டான்.

பீஷ்மர் அவருடைய தேர் நோக்கி சென்றார். தேரோட்டுவதற்காக அவருடைய மாணவன் உக்ரசிம்மன் கையில் சவுக்கும் மறுகையில் தலைக்கவசமுமாக நின்றிருந்தான். அவன் சற்று இளமையான பீஷ்மரைப் போலிருப்பதாக லட்சுமணன் எண்ணினான். அவர்கள் அனைவரிலும் அவர் எப்படி அவ்வாறு பதிகிறார்? ஏனென்றால் அவர் மிகையாக வெளிப்படுவதில்லை. ஓரிரு சொற்களும் முகக்குறிகளும் கையசைவுகளும்தான் அவர் மொழி. அதை அறிய உளமும் விழியும் கூர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அவன் தன்னருகே வந்து கடந்துசென்ற பீஷ்மரை நோக்கி தலைவணங்கினான்.

பீஷ்மர் அவனைப் பார்த்து மெல்ல தலையை அசைத்தபின் தேர் அருகே போடப்பட்டிருந்த சிறுமரக்கூடைமேல் சென்று அமர்ந்தார். காத்து நின்றிருந்த ஏவலர்கள் அவருடைய பேழையிலிருந்து கவசங்களை எடுத்து அணிவிக்கத் தொடங்கினார்கள். அதன் ஆணிகளை திருகி, தோல்பட்டைகளை முறுக்கினர். அவர் இரு கைகளையும் முட்டில் ஊன்றி சற்றே தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர்களின் செயல்களுக்கேற்ப அவர் உடல் அசைந்தது. இறந்த எருதின் உடலை காக்கைகள் கொத்துவதுபோல. அவர் இறந்து உடல்மட்டும் அங்கிருப்பதுபோல ஒருகணம் தோன்ற அவன் அவ்வெண்ணங்களுக்காக உளம்கூசி, விழிதிருப்பிக்கொண்டான்.

துருமசேனன் “ஒவ்வொருநாளும் என நாமறியாத எவரோ ஆக மாறிவருகிறார் பிதாமகர்” என்றான். லட்சுமணனால் திரும்பி அவரை நோக்காமலிருக்க இயலவில்லை. அங்கிருந்த அனைவரும் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் கண்டான். புரவிகளும் தலைதிருப்பி அவரை நோக்கிக்கொண்டிருந்தன. இறுதியாக நின்ற புரவி நாக்கை நீட்டி தலையை குலைத்தது. அவர் கைகளை நீட்டியிருக்க ஏவலர் கைக்கவசத்தை பொருத்தினர். தோளிலைகளை இறுக்கியபின் அவர்கள் மெல்ல அவரை அழைக்க இருமுறை சொல்லெழுந்தபின் முனகியபடி அவர் எழுந்து நின்றார். இடைக்கச்சையையும் தொடைக்கவசங்களையும் ஏவலர் அணிவித்தனர்.

அவருடைய நரைத்த நீண்ட குழல் தோல்சரடால் கட்டுண்டு தோளில் சரிந்திருந்தது. முதியவர்களுக்குரிய வகையில் உதடுகளை மடித்து கவ்வியிருந்தமையால் முகம் மேலும் அழுந்தி தாடி முன் நீட்டி இருந்தது. மூக்கு தளர்ந்து வளைந்து மீசைமேல் படிந்ததுபோல் தெரிந்தது. அவருடைய தலை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. லட்சுமணன் அவருடன் அந்த உருவம் தெரிகிறதா என்று பார்த்தான். அந்த தேவன் யார்? அவர் எட்டு வசுக்களால் பேணப்படுபவர் என்கிறார்கள். அவன் துருமசேனனிடம் “இளையோனே, எட்டு வசுக்களில் எண்கையர் யார்?” என்றான். “மூத்தவரே, இரண்டாமவரான துருவர்” என்றான்.

லட்சுமணன் ஒன்றும் சொல்லாமல் தன் தேரை அடைந்து ஏறி அமர்ந்தான். அவனுடைய தேரோட்டி அவன் கால்வைத்து ஏறிய மரப்பீடத்தை அகற்றிய பின் கையூன்றித் தாவி அமரபீடத்தில் அமர்ந்து தன் தலைக்கவசத்தை அணிந்து அதன் தோல்பட்டைகளை இறுக்கிக்கொண்டான். ஆவக்காவலன் தேருக்குப் பின்பக்கம் ஏறிக்கொண்டு தன்னைச் சுற்றி அம்புக்கூடைகளை பொருத்தி தோல்நாடாக்களால் கட்டினான். அம்புகள் தங்களுக்குள் மென்குரலில் பேசிக்கொள்பவைபோல ஓசையிட்டன. துருமசேனன் தன் தேரிலேறிக்கொண்டான். அனைவரும் வானை நோக்கிக்கொண்டிருந்தார்கள். படைக்கலங்களில் சுடர் ஏறிவிட்டிருந்தது. துதிக்கவசங்கள் அணிந்த யானைகளின் காதுகள் காட்டுச்சேம்பின் இலைகளென திரும்பின. அவற்றின் உடல்கள் ஊசலாட மணியோசைகள் எழுந்தன. சகடங்கள் அசைவதும், படைக்கலங்கள் முட்டிக்கொள்வதும், மெல்லிய பேச்சொலிகளும், புரவிகளின் சினைப்போசைகளும் கலந்து சூழ்ந்திருந்தன.

லட்சுமணன் நிலைகொள்ளாமையுடன் தலைக்கவசத்தின்மேல் விரல்களால் தாளமிட்டான். முந்தையநாள் இரவில் அவன் கண்ட கனவில் பீமனால் தலையுடைந்து இறந்த இளையோர் அனைவருமே தங்கள் தலைகளை அதேபோல கைகளில் ஏந்தியபடி ஓசையின்றி அவனை நோக்கி வந்தனர். குளிர்ந்த நீரோடும் அறியா ஆறொன்றின் கரை. ஆற்றுநீர் அத்தனை கருமையாக இருந்து அவன் பார்த்ததே இல்லை. இருள் அலை ஒன்று சுழித்தோடுவதுபோல. அதன் இரு கரைகளிலுமிருந்த மரங்கள் கொத்துக் கொத்தென தழைத்து எடைகொண்ட இலைகளைத் தாழ்த்தி நீரை வருடிக்கொண்டிருந்தன.

அங்கே அவன் எதற்காக வந்தான் என தெரியவில்லை. நதிநீரை குனிந்து தொட்டு அது பனியின் குளுமை கொண்டிருப்பதை உணர்ந்தபோதுதான் முதல் இளையோனை பார்த்தான். தலையற்றிருந்த அவனுடல் விதிர்ப்பை உருவாக்க குனிந்து கையிலிருந்த முகத்தை பார்த்தான். ‘மூத்தவரே’ என்று ஒலியிலாது உதடுகள் உச்சரித்தன. ‘இளையோனே’ என்று அவன் அழைத்த குரல் அச்செவியைச் சென்று எட்டவில்லை. ‘மூத்தவரே! மூத்தவரே! மூத்தவரே!’ என்று அவன் அழைத்துக்கொண்டிருந்தான். பின்னர் அவனுடைய நிழலில் இருந்து எழுந்தவன்போல் இன்னொரு இளையவன் தோன்றினான். ஒவ்வொருவராக அவர்கள் ஓருடலிலிருந்து மீள மீள முளைத்தெழுபவர்கள்போல வந்துகொண்டிருந்தனர். லட்சுமணன் அவர்களில் ஒருவனை தொடுவதற்காக கைநீட்டினான். நிழலுரு என நெளிந்து அவன் விலக ‘இளையோனே!’ என்றபடி விழித்துக்கொண்டான்.

தாளவியலா உடற்களைப்பால் படுத்த சில நொடிகளிலேயே அவன் துயில்கொண்டிருந்தான். விழித்தபோது அரை நாழிகைப்பொழுது ஆகியிருக்குமென்று தோன்றியது. உடல் சற்று ஓய்வு கொண்டுவிட்டிருந்தமையால் உள்ளம் முற்றிலும் விழித்துக்கொண்டு நின்றது. அவனுக்கு மிக அருகிலென அவன் இறந்தவர்கள் அமர்ந்திருப்பதை கண்டான். குளிர்ந்த இரவுக்குள் அவர்கள் மேலும் செறிந்த குளிரென தோன்றினர். நீர்த்துளிகள்போல் கரவொளி கொண்ட விழிகளும் சருகசைவதுபோல எழுந்த மென்குரலும் கொண்டிருந்தார்கள்.

முழு இரவும் அவன் தன் இறந்த இளையோருடன் இருந்தான். அவர்களுக்குமேல் மூடா விழிகளென விண்மீன்கள் செறிந்த கருவெளி வளைந்திருந்தது. எங்கோ பெரும்போர் நடந்துகொண்டிருக்கும் ஓசையை அவன் கேட்டான். “என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்கிறது அங்கே?” என்று அவன் கேட்டான். இறந்த இளையோனாகிய கீர்த்திசிம்மன் “அங்கே போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மூத்தவரே” என்றான். “போரா? இவ்விரவிலா?” என்றான் லட்சுமணன். “ஆம், இப்போது போரிடுபவர்கள் மனிதர்கள் அல்ல, தெய்வங்கள். இருளும் ஒளியுமான பேருருக்கள்” என்றான் அவன்.

“அவர்களில் சிலர் மானுடரை ஊர்திகளாக கொண்டிருக்கிறார்கள். சிலர் காற்றை. சிலர் இடிமின்னலை” என்றான் இன்னொரு இளையோனாகிய ரேணுகன். லட்சுமணன் சோர்ந்து “இங்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது, இளையோனே?” என்றான். அவர்களில் இளையவனாகிய உலூகன் “போர்!” என்றான். “புவியில் தெய்வங்கள் போரிடாத ஒருகணமும் இருந்ததில்லை, மூத்தவரே. இது அவர்களின் போருக்கென உருவாக்கப்பட்ட களம்.” லட்சுமணன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். “போரினூடாகவே அவை வாழ்கின்றன. போர் அனலுக்கு அவியென அத்தெய்வங்களுக்கு இன்றியமையாதது. இது எரிகுளம்” என்றான் நிமோஷன்.

புலரியில் உலூகன் தன் மடியிலிருந்த தலையை கையிலெடுத்துக்கொண்டு “சென்று வருகிறேன், மூத்தவரே” என்றான். “நீங்கள் இவ்வாறு மீண்டும் வரமுடியுமென்பது எனக்கு உளநிறைவளிக்கிறது, இளையோனே” என்றான் லட்சுமணன். “ஆம், ஆனால் நாங்கள் உங்கள் உலகில் இருப்பவர்களை அணுக இயலாது. அங்கிருந்து எங்களை நோக்கி வரத்தொடங்கியவர்களையே நாங்கள் அணுகுகிறோம்” என்றான். “நான் வந்துகொண்டிருக்கிறேனா?” என்று லட்சுமணன் கேட்டான். ஆனால் அவனுள் துயர் இருக்கவில்லை. மெல்லிய ஆவலும் உவகையுமே எழுந்தது. “ஆம், நீங்கள் எங்களை அணுகி வந்துவிட்டீர்கள். இன்னும் சில நாட்கள்தான்.”

“எவ்வளவு நாட்கள்?” என்று லட்சுமணன் கேட்டான். “சில நாட்கள் மட்டுமே. எவ்வளவு நாட்கள் என்பதை தெய்வங்கள் மட்டுமே அறியும், அல்லது அவையும் அறியாது. இப்பெரும் பூசலில் எத்தருணத்தில் எது நிகழுமென்பதை அனைத்துமான பிரம்மமும் அறியாதிருக்கவே வாய்ப்பு” என்றான் புளினன். லட்சுமணன் துயருடன் “காத்திருப்பது சுமையானது” என்றான். அவர்கள் துயரால் வெளிறிய உதடுகளுடன் புன்னகைத்தனர். தலைகளை கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கிளம்பி முதலில் சென்றவன் நிழலுக்குள் தாங்களும் சென்று மறைந்தனர். எறும்புநிரை பொந்துக்குள் புகுந்து மறைவதுபோல.

அவன் எழுந்து அந்தச் சிறு வாயிலினூடாக தானும் நுழைந்துவிடவேண்டுமென்று விரும்பினான். விழித்துக்கொண்டபோது புலரியின் குளிர் உடலை மெய்ப்புகொள்ளச் செய்வதை உணர்ந்து நெடுந்தொலைவில் எழுந்த துருவ விண்மீனை பார்த்துக்கொண்டிருந்தான். நோக்க நோக்க விண்மீன்கள் ஒளிகொள்வதன் விந்தை அவனை நிறைத்தது. துருமசேனன் எழுந்து அவன் அருகே வந்து “துயிலவில்லையா, மூத்தவரே?” என்றான். “இல்லை” என்றான் லட்சுமணன். “நானும் துயிலவில்லை. சென்று மறைந்தவர்களை எண்ணிக்கொண்டிருந்தேன். அவர்களால் நம்மை விட்டுச்செல்லவே இயலவில்லை” என்றான் துருமசேனன்.

“ஆம்” என்று லட்சுமணன் சொன்னான். துருமசேனன் சற்றே உடைந்த குரலில் “இறந்தவர்கள் ஏன் இத்தனை இரக்கமிலாதிருக்கிறார்கள்!” என்றான். லட்சுமணன் காய்ச்சல் படிந்த கண்களால் நிமிர்ந்து நோக்கி “அவர்களுக்கு வேறு வழியில்லை, இளையோனே” என்றான். அவன் நோக்கிய துருவ விண்மீனை துருமசேனனும் நிமிர்ந்து நோக்கினான். “நிலைக்கோள்!” என்றான். “ஆம், நிலைக்கோள் அடைந்த ஒரே ஒருவன்” என்றான் லட்சுமணன். “மீதி அனைவரும் இங்கே இடம் அறியாது, இருப்பிலாது அலைக்கழிபவர்கள்தானா?” என்றான் துருமசேனன்.

லட்சுமணன் “நாம் இந்த எண்ணங்களை கடப்போம். இவற்றினூடாகச் சென்றால் நாம் வாழும் இவ்வுலகுக்கு எப்பொருளும் இல்லாத பிறிதெங்கோ சென்று சேர்கிறேன். வேண்டாம்” என்றான். “ஆம், இரவில் பலமுறை நான் அவ்வாறே எண்ணினேன். இது தேவையற்ற அல்லல். வான்வெளியில் சிதறுண்டு சித்தம் அழிகிறது” என்றபின் அவன் மேலே நோக்கி “நெடும்பொழுதாக நானும் துருவனையே பார்த்துக்கொண்டிருந்தேன், மூத்தவரே. விழிவிலக்காது துருவனை நோக்கிக்கொண்டிருப்பது ஓர் நிலைப்பேறை அளிக்கிறது. அலைக்கழியும் படகில் செல்கையில் அமரத்தில் சுக்கான் நிலையை மட்டுமே நோக்குக என்று முன்பொருமுறை தந்தை சொன்னார்” என்றான் துருமசேனன்.

லட்சுமணன் “நாளை படைநடத்தவிருப்பவர் பீஷ்மர். நமது தரப்பின் நிலைக்கோள் அவரே” என்றான். துருமசேனன் “ஆம், இம்முறையும் பிறழாது நிலைகொண்டாரெனில் ஒருவேளை நாளையே போர் முடியக்கூடும். எஞ்சியோருடன் நாம் நகர்மீள முடியும்” என்றான். “நம்மில் சிலரேனும் எஞ்சவேண்டும், மூத்தவரே.” லட்சுமணன் “அதில் உனக்கு ஐயமிருக்கிறதா?” என்றான். குரல் தாழ “ஐயமென்றில்லை…” என்றான் துருமசேனன். “சொல்” என்றான் லட்சுமணன். “ஐயமில்லை, மூத்தவரே, நான் மானுடனின் எல்லைகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான் துருமசேனன். லட்சுமணன் “என்ன?” என்றான்.

துருமசேனன் “ஒவ்வொரு பொருளும் எடைதாளாது உடையும் ஒரு புள்ளி உண்டு. மானுடர் உடையும் இறுதிப்புள்ளிகள் வெளிப்படுவது இத்தகைய போர்க்களத்திலேயே. இங்கு உடையாது எவரும் எஞ்சப்போவதில்லை” என்றான். “அதுவே எண்ணுதற்கு பொருத்தமாக உள்ளது. ஆயினும் ஒருவரேனும் உடையாது தன் முழுநிலையுடன் எஞ்சவேண்டுமென்று விழையாமலும் இருக்க இயலாது. இல்லை எனில் எதை நம்பி இப்புவியில் வாழ்வோம்? எதன் பொருட்டு உயிர் கொடுப்போம்?” என்று லட்சுமணன் சொன்னான்.

bowமிக அப்பால் இளையோர் ஒவ்வொருவராக தேரிலேறிவிட்டதை லட்சுமணன் பார்த்தான். அவர்கள் உவகையுடன் ஒருவருக்கொருவர் கைகளைக் காட்டி பேசிக்கொண்டார்கள். ஒருவன் கதையைத் தூக்கி இன்னொருவனை அச்சுறுத்துவதுபோல ஆட்டினான். குண்டாசியின் மைந்தர்களான தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும் தங்கள் தேர்களில் வெறித்த விழிகளுடன் நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் நிழல்கள் நீண்டு விழுந்திருந்தன. நிழல்களா, இன்னமும் ஒளியே எழவில்லையே? அவன் விழிகளை மூடித்திறந்தான். இந்தக் களத்தில் துயிலின்மையால் அகம் பேதலித்து மெய்மைக்கும் மாயைக்கும் நடுவே ஊசலாடும் உள்ளத்துடன் நின்று எப்போரை எடுக்கவிருக்கிறேன்? நான் கொல்லப்பட்டால் அதை நான் அறியவே சற்று பொழுதாகும்போலும் என்று எண்ணி லட்சுமணன் புன்னகைத்தான்.

புலரிமுரசுகள் முழங்கியதும் லட்சுமணனின் உடல் இயல்பாக போருக்கென எழுந்தது. நாணேற்றி வில்லை நிறுத்தி ஒற்றை அம்பில் கை தொட்டு காத்துநின்றான். திரும்பி பீஷ்மரை பார்த்தான். தேரில் அவருக்குப் பின்புறம் ஆவக்காவலனும் உதவியாளனும் அமர்ந்திருந்தனர். அவருடைய இடப்பக்கம் கைகளைக் கட்டியபடி அவ்வுருவம் நின்றிருந்தது. பீஷ்மர் கையை காற்றில் வீசும் எளிய அசைவால் வில்பூட்டி நாணோசை எழுப்பினார். எதிரில் பாண்டவப் படையிலிருந்து பாஞ்சஜன்யமும் தேவதத்தமும் ஒலித்தன. பீஷ்மர் தன் இடையிலிருந்து சசாங்கம் என்னும் பெருஞ்சங்கத்தை எடுத்து ஊதினார். அந்த ஒலி பாண்டவப் படைகளை அதிர்வென ஊடுருவுவதை காணமுடிந்தது

போர்முரசு முழங்கியபோது அவன் உள்ளம் எழுவதற்குள்ளேயே வில்லையும் அம்பையும் எடுத்து உடல் போரில் இறங்கிவிட்டிருந்தது. மெய்யாகவே அதை தான் அறியாத் தேவர்கள் ஆள்கிறார்களா என்று அவன் உளம் துணுக்குற்றது. இரு படைகளும் கொதித்தெழும் நுரையெனப் பொங்கி எழுந்து ஒன்றோடொன்று அறைந்துகொண்டன. அவனைச் சூழ்ந்து கடலென கொந்தளிக்கத் தொடங்கியது படைச்சூழ்கை. போர் தொடங்கி பலநூறு வீரர்கள் அம்புபட்டு சிதறி விழுந்த பின்னரும்கூட உள்ளம் போர் தொடங்கிவிட்டதென்பதை உணராததுபோல் பேதலித்திருந்தது. அர்ஜுனன் மிக அப்பால் இளம்பிறையின் மையவளைவில் தன் ஒளிரும் தேரில் நின்று போரிடுவதை அவன் கண்டான். பூரிசிரவஸும் சலனும் ஜயத்ரதனும் அவனை எதிர்கொண்டனர். அம்புகள் வானில் உரசிக்கொண்டு அனல்தெறிக்க சிதறின. அவனைச் சூழ்ந்து சென்ற அம்புகளில் சிலவற்றின் ஒளி தேர்த்தூணில் விழுந்துசென்றது. எதிர்சென்று உரசிக்கொள்ளும் அம்புகள் சிட்டுக்குருவிச் சிலம்புவதென ஓசையிட்டன.

பிறைநிலவு வீசப்பட்ட வலைபோல வளைந்து வளைந்து பருந்தின் கழுத்தில் சுற்றிக்கொள்ள முயன்றது. பீஷ்மரின் தேர் சவுக்கு முனையில் சொடுக்கப்பட்டு பறந்து தெறிக்கும் இரும்பு அங்குசம்போல் பாண்டவப் படைகளுக்குள் புகுந்து அந்த வலையை கிழித்தது. கிழிந்த பகுதிகள் கல் விழுந்த நீரென விலகி சுழித்து மீண்டும் குவிந்தன. தொலைவிலிருந்து பார்க்கையிலேயே பருந்தின் தலை சென்று கொத்துமிடம் சிதறி விரியவும் மீண்டும் இணையவும் பிறைசூழ்கையே உகந்தது என காண முடிந்தது. எந்தப் படைக்கும் பின்னால் படையினர் எவரும் முன்னுந்தி வரவில்லை. ஆனால் பிறையை பருந்து இரண்டாகப் பிளந்துவிட்டதென்றால் அச்சூழ்கை முற்றிலும் பொருளிழந்துவிடும்.

பீஷ்மரை சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் இருபுறமும் நின்று எதிர்த்தனர். பீஷ்மர் வாயை சுருக்கி, தாடி முன்னால் நீட்டியிருக்க, காற்றிலெனச் சுழலும் நீண்ட கைகளால் அம்புகளை செலுத்தினார். அவர் முன் அம்புபட்டு அலறிச்சரிந்த உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றெனக் குவிய சற்றே சரிந்து அவற்றை தவிர்த்து உருண்டது அவருடைய தேர். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் தங்கள் முன் உடைந்து சிதறிய தேர்களாலும் சிதறி விழுந்த உடல்களாலும் விரைவழிந்து புதுத்தடம் தேரும்பொருட்டு சற்று பின்னடைய பிறைசூழ்கை சற்று விரிந்தது. அந்த மையத்தில் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் தோன்றினார்கள்.

பீஷ்மர் நுண்ணிதின் கூர்ந்து செதுக்கிக்கொண்டிருக்கும் சிற்பியின் முகத்துடன் அம்புகளை தொடுத்தபடி அவர்களை நோக்கி சென்றார். அவருடைய அம்புகளால் சுருதகீர்த்தி திணறி பின்னடைய அபிமன்யூவின்மேல் அம்புகள் முட்புதர்போல மூடிக்கொண்டன. அவனுடைய கைகள் தேன்சிட்டின் சிறகென விழிதொடா விரைவுகொண்டிருந்தன. அவன் அங்கில்லை என்று தோன்றும்படி உடல் எழுந்து திரும்பி அம்புகளை தவிர்த்தது. அவன் தொடைக்கவசம் உடைந்தது. தலையிலணிந்திருந்த செம்பருந்தின் இறகுடன் ஓர் அம்பு அப்பால் சென்றது. சினம்கொண்டு கூச்சலிட்டபடி மேலும் மேலும் முன்னால் வந்தான்.

மேலும் சில கணங்களுக்குள் அவனை பீஷ்மரின் அம்புகள் அறைந்து வீழ்த்தும் என லட்சுமணன் எதிர்பார்த்தான். அவன் கை வில்லுடன் தாழ்ந்தது. அபிமன்யூவின் தலைக்கவசம் சிதறியது. நெஞ்சுக்கவசம் உடைந்ததும் தன் தேரிலிருந்து அவன் தேருக்குப் பாய்ந்த சாத்யகி அதை திருப்பி பிறைக்குள் கொண்டுசென்றான். வெறிகொண்டு தேரின் தூண்களை மாறிமாறி உதைத்து கூச்சலிட்டான். நெஞ்சிலறைந்து அலறினான். தேரிலிருந்து பாய்ந்திறங்க அவன் முயல அவனை இரு ஆவக்காவலரும் சேர்ந்து பற்றிக்கொண்டனர். அவனுக்கு முன்னால் திருஷ்டத்யும்னன் தோன்றி பீஷ்மரை எதிர்கொண்டான்.

தன்முன் தேரில் வந்த சர்வதனை அம்புகளால் அறைந்து நிலைகுலையச் செய்தான் லட்சுமணன். சர்வதனின் உதவிக்கு வந்த காரூஷ நாட்டு இளவரசர்கள் ஹஸ்திபதனையும் சுரவீரனையும் மூஷிகாதனையும் லட்சுமணன் தன் அம்புகளால் வீழ்த்தினான். சர்வதன் அவன் முன் விழுந்த அந்த உடல்களால் விசையழிந்த தருணத்தில் தன் தேரிலிருந்து கதையுடன் பாய்ந்தெழுந்து புரவிகள்மேல் கால்வைத்துத் தாவி கதையால் ஓங்கி அறைந்து சர்வதனின் தேர்ப்பாகனை கொன்றான். சர்வதன் கதையுடன் பாய்ந்திறங்க இருவரும் எண்ணுவதற்குள் கதைபொருதலாயினர். இரும்புருளைகள் அறைபட்டு எழுந்த ஓசை அப்பெருக்கில் மறைய அவற்றின் அதிர்வாலேயே நோக்கினோர் எடையையும் விசையையும் உணர்ந்தனர்.

சர்வதனுக்கு உதவியாக வந்த சுதசோமனை தன் சங்கை ஒலித்துக்கொண்டு பாய்ந்துசென்ற துருமசேனன் எதிர்கொண்டான். அம்புகளால் இருவரும் மாறிமாறி அடித்தனர். இருவருமே அம்புத்திறன் குன்றியவர்கள் என்பதனால் அவர்களின் உள்ளம் மேலும் மேலுமென எழ தேரிலிருந்து பாய்ந்திறங்கி கதைபொருதிக்கொண்டார்கள். உடன்பிறந்தார் கதைகளுடன் வந்து சூழ எதிர்ப்புறமிருந்து அஸ்மாக அரசர் சௌதாசனின் மைந்தர்கள் சம்வர்த்தகனும் பூர்ணபத்திரனும் நாணொலியுடன் வந்து அவர்களை தடுத்தனர். அஸ்மாக அரசரின் இளையோள் மைந்தனாகிய சங்கசிரஸ் கௌரவர்களின் தரப்பிலிருந்தான். அஸ்மாகர்கள் வருவதைக் கண்டு அவன் பின்னிருந்து “விலகுக, இது என் போர்!” என்று கூவியபடி வில்லை ஒலித்துக்கொண்டு ஊடுருவி வந்தான். அவன் அணுகுவதற்குள் சம்வர்த்தகனை நாகதத்தன் கொன்றான். சத்யசந்தனால் பூர்ணபத்திரன் கொல்லப்பட்டான். சங்கசிரஸ் வெறியுடன் கூவிச்சிரித்தபடி வந்து தேரில் தொங்கியபடி சென்று சம்வர்த்தகனின் தலையை ஓங்கி மிதித்துச் சுழன்று மீண்டும் ஏறிக்கொண்டான்.

குனிந்த மன்னர் அமோக்பூதியின் மைந்தர்கள் ஆர்யகனும் ஐராவதனும் துருமசேனனை சூழ்ந்துகொள்வதைக் கண்ட லட்சுமணன் “இளையோனை காக்க! அலம்புஷா, இளையோனை காக்க!” என்று கூவியபடியே சர்வதனின் அறையை தடுத்து தலையை குனிந்து அவன் தோளில் அறைய காற்றில் இலை என திரும்பி அதை சர்வதன் தடுத்தான். அலம்புஷன் தன் பாசத்தின் கொக்கியை வீசி ஆர்யகனின் தேரை இழுத்தான். தேர் தூண்டில் மீன் என எழுந்து அவனை நோக்கி செல்ல அவ்விசையில் அவன் எழுந்து பிறர் தலைக்குமேல் பறந்து வந்து தன் கதையால் ஆர்யகனின் தலையை உடைத்து சிதறடித்தான். திகைத்து வில்லை நழுவவிட்ட ஐராவதன் அக்கணமே சிதைந்தான். அவன் இளையோர் ததிமுகனும் கோடரகனும் அலம்புஷனின் துணைவரால் கொல்லப்பட்டனர்.

கௌண்டிவிசர்களின் ஏழு இளவரசர்களான ஹேமகுகனும், பாஹ்யகர்ணனும், பில்வகனும், பாண்டுரனும், அபராஜிதனும், ஸ்ரீவகனும், சுமுகனும் தேர்களில் வந்து அலம்புஷனை சூழ்ந்துகொண்டனர். அவன் அவர்களின் தேர்களை கொக்கிக்கயிற்றால் தொடுத்துக்கொண்டு சிலந்தி என காற்றில் சுழன்றெழுந்தான். அவர்களின் அம்புகள் அனைத்தும் குறி தவறின. ஏழு தேர்களும் அவன் கதையால் அதிலிருந்தவர்களுடன் சேர்த்து உடைத்து எறியப்பட்டன. சிதைந்த உடல்களுக்குள் நெஞ்சுக்குமிழ் கொப்புளம்போல துடித்துப் பதைத்தது. தலைவெண்கூழ் சிதறி தேர்த்தூண்களில் வழிந்தது. அலம்புஷனின் படையின் அரக்கர்கள் அக்குருதியை அள்ளி தங்கள் முகத்திலும் நெஞ்சிலும் பூசிக்கொண்டு வெறிக்கூச்சலிட்டனர்.

சர்வதனின் ஓர் அறை லட்சுமணன்மேல் பட்டது. நிலைதடுமாறி அவன் நிலத்தில் கையூன்றினான். அவன் எழுவதற்குள் கதையை ஓங்கியபடி சர்வதன் பாய்ந்து மேலெழுந்தான். அந்த வெறிமீதூறல் அவன் ஆற்றிய பிழையென்றாக அக்கணமே அவன் விலாவை அறைந்தது லட்சுமணனின் கதை. மூச்சொலியுடன் உடல் மடிந்து நிலத்தில் விழுந்தான் சர்வதன். அவன் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் குருதி குமிழிகளாக கொப்பளித்து மார்பில் வழிந்தது. அவனை அப்பாலிருந்து வந்த கொக்கி ஒன்று கவசத்தில் தொடுத்து இழுத்து அப்பாலெடுத்துக் கொண்டது. கேடயப் படை வந்து அவன் சென்றவழியை மூடி லட்சுமணனை விலக்க மறுபக்கம் துருமசேனனின் முன்னாலிருந்து சுதசோமன் பின்னகர்ந்தான்.

துருமசேனன் தன் சங்கை எடுத்து வெற்றிக்கூவலை எழுப்பினான். கௌரவ மைந்தர்கள் துர்தசன், சுப்ரஜன் ஆகியோர் தங்கள் சங்குகளை எடுத்து முழக்கினர். அப்பால் துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோரும் சங்கொலி எழுப்ப கௌரவப் படையின் முரசு வெற்றி வெற்றி வெற்றி என ஓசையிடத் தொடங்கியது.

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்

$
0
0

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

 

அன்புநிறை ஜெ,

இரண்டு வருடங்களுக்கு முந்தைய தினத்தை முகநூல் நினைவுறுத்தியது, தங்களை ஜுராங் இல்லத்தில் வந்து சந்தித்த தினம். இரண்டு வருடங்கள்தானா ஆயிற்று என வியப்பாகவே இருக்கிறது.

நேற்று மாலை முதல் பின் தொடரும் நிழலின் குரல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தங்களிடம் சொல்வதில் தயக்கமில்லை,
உங்களை சந்திப்பதற்கும் முன்னரே வாங்கிய நூல், எதனாலோ அறியாத ஒருவரை சந்திப்பது போன்ற தடுமாற்றத்தோடு வாசிப்பதை ஒத்திப் போட்டு வந்திருக்கிறேன். மார்க்ஸிசமும் கம்யூனிசமும் எனக்குப் புரியாது என்ற முன்முடிவுடனோ, அல்லது ஏதோ ஒரு அணுகமுடியாமையை நானாகக் கற்பனை செய்து கொண்டோ நாள் கடத்தி வந்தேன். குறள் உரையின் போது ஆற்றாது அழுத கண்ணீர் குறித்தும் புகாரின் குறித்தும் தாங்கள் பேசிய போது உடனே படிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு பின்னர் அதற்கு ஆயத்தமாக லெனின் குறித்தும் ஸ்டாலின் குறித்தும் இணையத்தில் சில பக்கங்கள் வாசித்து மீண்டும் கைவிட்டேன்.

நேற்று வாசிக்க ஆரம்பித்தது முதல் எனது முன்முடிவுகளை முற்றாகப் பொய்த்து விட்டிருக்கிறது பின்தொடரும் நிழலின் குரல். மானுடம் கண்ட எந்த ஒரு தரிசனமும் இன்னொரு மானுடனுக்கு புரிந்து விடக் கூடியதே, அல்லாத ஒன்று தரிசனமாயிருக்க இயலாதோ! இன்று வாசிப்பிலிருந்து எனை உந்திப் பிரித்தே அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது, வீரபத்ரபிள்ளை எழுத்துகளை வாசித்த அருணாசலம் போல உள்ளே பலத்த காற்று வீசி அடிமரம் வரை அதிரச் செய்கிறது எழுத்தின் விசை.

இதை வாசிக்கும்போது கூடவே வெண்முரசின் பெருங்களத்தில் மாந்தர்கள் காணும் மாபெரும் கனவுகள் இன்று உதிரப்பெருக்காக மாறிக் கொண்டிருக்கும் வியர்த்தத்தின் நிகர் சித்திரத்தையும் மனது கிளர்த்திக் கொண்டே இருக்கிறது.

தன்னைத் தொடரும் கேள்விகளுக்கு விடை தேடி அலைவது அருணாசலமாகவும் அர்ஜுனனாகவும் நானென்றும் மனம் மாறி மாறி உருவகித்து அலைகிறது.

மிக்க அன்புடன்,
சுபா

russ

 

அன்புள்ள ஜெ,
பின்தொடரும் நிழலின் குரலிலிருந்து..

 
வருகிறப் பக்கத்தில் பென்சிலால் வாசித்ததும் கோடிட்டதை அனுப்புகிறேன்.இந்தப் புத்தகத்தை உங்களிடம் கொடுத்து கையெழுத்து வாஙங்கவேண்டுமென்றிருக்கிறேன்.

 

-மெய்மை ஒரு பயந்த பறவை—–
-யத்திரங்களுக்கு ரத்தமில்லை. அவற்றின் சக்தி முடிவற்றது. ஆனால் ரத்தம் இல்லை.–பிளவற்றது மானுடப் பிரக்ஞையின் பிரவாகம்-

-நீதியின் சரடு. ஆனால் நீதி அல்ல. நீதி என்பது ஒரு மானுட ஏற்பாடு. இது மானுடத் தருக்கத்தால் விளக்க முடியாத உத்வேகம்.-

-கோவையாக சிந்திக்கப்படும் எதுவும் பாதிப்பங்கு உண்மையிலிருந்து விலகி நிற்கிறது.-

-எந்த விதியும் அதன் எதிர்விதியை உள்ளே விழுங்கி செரிக்க முடியாது நெளிந்தபடி உள்ளது.எந்த சித்தாந்தியும் தருவது தனிமையை. அது ராமசாமியாக இருந்தாலும் சரி, கதிராக இருந்தாலும் சரி, டால்ஸ்டாயாக இருந்தாலும் சரி. எண்ணங்கள் சிதறிப் போகும்பபோதுதான் இயல்பாக நகர்கின்றன. ஆனால் அவை அப்போது எதையும் மிச்சம் வைப்பதில்லை. அவற்றால் பயன் ஏதுமில்லை.-

பக்கம் 229,230

-சதையை ஆத்மாவால் வெல்ல முடியாது. அவை ஒன்றையொன்று சந்திக்க முடியாத இருவேறு உலகங்கள்.-

பக்கம்-307

இந்த அத்யாயமே உச்சக்கட்ட வலியில்தான் வாசித்தேன். நான் புத்தகத்தில் முதலில் அழுதது மூன்று இடங்களில் என நினைக்கிறேன். இதுமுதலில். குடிகாரனின் குறிப்புகள். அந்த இருபது கவிதைகள். அந்த கவிதை நிலையில் கிட்டத்தட்டப் பைத்தியமாகிவிட்டேன். தொடர்ந்து இடைவிடாது இவ்வளவு கவிதைகளை நான் வாசித்ததேயில்லை.

-இது விஷம். விஷங்களெல்லாமே பிரார்த்தனைகள்.-

பக்கம் 327

-இந்த உலகம் இப்படிப் புரிந்துகொள்ள முடியாதபடி இயங்க ஒரு நியாயமும் இல்லை.-

இந்தப்பத்தியின் வலப்புறம் கோடிட்டிருக்கிறேன். அப்படியென்றால் அந்த பகுதியில் எனக்கு ஒரு புரிதல் இருந்திருக்கிறது என்று அர்த்தம். இப்படி நிறைய இருக்கிறது.

 

தீவிரமான அனுபவத்திற்கு பிறகு வருகிற அவதானிப்பு கொடூரமாக இருக்கிறது.

லக்ஷ்மி

கத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழல்

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்

பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் பற்றி

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

பெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்

பின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து

பின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்

பின்தொடரும் நிழலின் குரல், காந்தி

 

பின்தொடரும்

பின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்

பின்தொடரும் நிழலின்குரல்- வாசிப்பு

பின்தொடரும் நிழலின் குரல்களைப்பற்றி…

பின்தொடரும் நிழலின் வினாக்கள்

நிழலின் குரல்களைப்பற்றி…

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

பின் தொடரும் நிழலின் அறம்

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்

 

பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்

$
0
0

jesus_

 

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

அன்புள்ள ஜெ,

 

பாலாஜி பிருதிவிராஜ் எழுதிய கிறிஸ்துவின் இறுதிச் சபலம் குறித்த கட்டுரை மிக நன்றாக இருந்தது. ஒரு விமர்சனக் கட்டுரை என்பது ஒரு படைப்பை அணுகி அறிய உதவுவதாக, வாசித்த ஒருவரின் கோணத்தை வாசித்தவர்களுக்கும், வாசிக்கப் போகிறவர்களுக்கும் கடத்துவதாக, படைப்பை முழுமையாகச் சுட்டிச் செல்வதாக அமைகையிலேயே அது பொருட்படுத்தக் கூடிய ஒன்றாகிறது. அவ்வகையில் இது முக்கியமான கட்டுரை. ஏசுவுக்கும், யூதாசுக்குமான உறவை நாவல் காட்டிய விதத்தைப் பகிர்ந்ததிலும், இயேசுவின் சிலுவையில் இருந்த மூன்று நாட்களின் வாதைகளைக் கனவுகளாக ஆசிரியர் உருவகித்திருந்ததை விவரித்த வகையிலும் அவரின் வாசிப்பு பாராட்டுக்குரியது. “அதே போல் உயர்ந்த லட்சியமெனும் யானையால் நசுக்கப்படும் எறும்புகளின் துயரத்தையும் அது காட்டுகிறது.” என்ற வரியை மிகவும் ரசித்தேன். எந்த மீமானுட அம்சமும் அதற்குரிய விலையைக் கோரிப் பெற்று, அம்மானுடனையும், அவனுடன் இருந்தவர்களையும் சக்கையாக உறிஞ்சி கைவிடுவது தானே!!!

 

 

வெண்முரசில் சொல்வளர்காட்டில் தனது தமையன் பிரிந்து சென்ற நிகழ்வுகளைச் சொல்லி வாடும் கிருஷ்ணன் “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன,நீ எதை ஈடுவைப்பாய்? எதையெல்லாம் இழப்பாய்? நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்” என்று கூறுவதோடு தன்னுள் எழுந்த விராட புருஷனுக்கு தானே ஒரு பொருட்டில்லை எனவும் கூறுவது தான் நினைவுக்கு வருகிறது. பெரும் மானுடர்கள் பெருந்துயரையும் சுமந்தாக வேண்டும் என்பது தான் இப்புடவியின் நெறி போலும். வாழ்த்துக்கள் பாலாஜி பிருதிவிராஜ்.

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்

$
0
0

images (5)

 

1992ல் நான் தருமபுரியில் பணியாற்றினேன். இடதுசாரித் தொழிற்சங்க உறுப்பினர். அன்று அத்தனை தொழிற்சங்கவாதிகளுக்கும் பொது எதிரி பி..வி.நரசிம்மராவ்தான். பொதுவாகவே அரசியல் செயல்பாடு என்றால் மக்களின் அதிருப்தி, அச்சம் ஆகியவற்றை ஊதிப்பெருக்குவதுதான். “எப்போதுமில்லாத நெருக்கடிச் சூழலில் நாம் இன்று இருந்துகொண்டிருக்கிறோம்” என்ற ஆப்தவாக்கியம் அன்றும் இன்றும் என்றும் அரசியல் மேடைகளில் முழங்கிக்கொண்டேதான் இருக்கும். தொழிற்சங்கம் ஊழியர்களின் அதிருப்தியைத்தான் தூண்டிக்கொண்டே இருக்கும். ராஜீவ்காந்தி பதவிக்கு வந்து தாராளமயமாதலை நோக்கி தேசம் திரும்பியதும் அச்சத்தைத் தூண்டத் தொடங்கியது. நரசிம்மராவ் பதவியேற்று சிலமாதங்களில் உண்மையாகவே அச்சத்தை அனைவருமே உணரத் தொடங்கினோம்

 

பொதுத்துறை தனியார்மயம் நோக்கிச் சென்றது. ஏற்கனவே இந்திய தபால் துறையும் தொலைதொடர்புத்துறையும் இரண்டாகப்பிரிக்கப்பட்டுவிட்டன. தொலைதொடர்புத்துறை வரைறைசெய்யப்பட்ட பொதுநிறுவனமாக ஆகும் என்றும் அதில் அயல்முதலீடு அனுமதிக்கப்படுமென்றும் பேச்சு இருந்தது. தனியார்மயம் பலதுறைகளிலும் வரக்கூடும். ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்தியாவில் நுழையும். கூடவே புதிய தொழில்நுட்பம் வரும். அன்று ‘கம்ப்யூட்டர்’ என்ற சொல் ஓர் அரக்கனின் பெயர் போல ஒலித்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலையிழப்பார்கள். “இப்ப நம்ம பில்லிங் செக்ஷனிலே வேலைபாக்கிறவங்க நாப்பது பேரு… இனி ஒரு கம்ப்யூட்டரும் ஒரு ஆளும் போதும். மிச்சபேர் வெளியே போகவேண்டியதுதான்”

download (1)

உச்சகட்ட திகில். நரசிம்மராவ் அயல்நாட்டு முதலீட்டாளர்களின் கையாள் என்றும் தரகுமுதலாளித்துவத்தின் கூட்டிக்கொடுப்பாளர் என்றும் எங்கள் தலைவர்கள் சொன்னார்கள். துண்டுப்பிரசுரங்கள் தரவுகளை அள்ளி இறைத்தன. புதிய பொருளியல்கொள்கையால் திவாலான நாடுகளின் கதைகள். இந்தியாவின் அத்தனை நிறுவனங்களையும் வந்து நுழையும் அயல்நாட்டு பெருநிறுவனங்கள் அப்பளம் போல நொறுக்கி விழுங்கும்,நேரு உணவிட்டு வளர்த்த பொதுநிறுவனங்கள் இறைச்சி விலைக்கு விற்கப்படுகின்றன.

 

பின்னர் உணர்ந்தேன், அவை அனைத்துமே பொய்யான அச்சங்கள் என்று. தொலைதொடர்புத்துறை பி.எஸ்.என்.எல் என்னும் நிறுவனமாக ஆகியது. முழுமூச்சாக நவீனமயமாக்கப்பட்டது. முன்பெல்லாம் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். பகிடி என்னும் மறைமுக லஞ்சமும் உண்டு. கண்ணெதிரில் கேட்டவர்களுக்கெல்லாம் தொலைபேசி அளிக்கப்படலாயிற்று. ஒவ்வொன்றும் மாறின. ஆனால் ஒருவருக்குக் கூட வேலை இல்லாமலாகவில்லை. மாறாக பல்லாயிரம்பேர் மேலும் மேலும் தேவைப்பட்டார்கள். தொலைக் கோபுரங்கள் நிறுவ. தொலைபேசி சேவைகளை வழங்க.

sonianarasimharaom

1981ல் நான் முதல்முறையாக இந்தியாவை ‘தரிசித்தேன்’ இந்தியா என்பது நெஞ்சு நடுங்கும் பட்டினியாலானது என கண்கூடாக அறிந்தேன். எண்பதுகள் தமிழகத்துக்கும் மிக மோசமான காலகட்டம். விவசாயத்தை நம்பி வாழமுடியாமலாகியது. பல லட்சம்பேர் கிராமங்களில் இருந்து வெளியேறி இந்தியநகரங்களில் சேரிகளில் குடியேறினர். கேரளம் அப்போது வளைகுடாப் பணத்தால் மேலெழத் தொடங்கியிருந்தது. ஆகவே கட்டுமானப் பணிக்காக கூலிகளாக கிட்டத்தட்ட எட்டுலட்சம்பேர் கேரளத்தில் குடியேறினர். பெங்களூரிலும் கர்நாடகத்தின் பிறநகர்களிலுமாக ஐந்து லட்சத்துக்கும் மேல் குடியேறினர். மும்பையில் பத்துலட்சத்துக்கும் மேல் தமிழர்கள் குடியேறிய காலம் அது.

 

அன்றெல்லாம் தமிழகத்திலிருந்து கிளம்பும் அத்தனை ரயில்களிலும் சட்டிபானை குழந்தைகளுடன் பஞ்சைப்பராரிகளான தமிழர்கள் இருப்பார்கள். என் புறப்பாடு தன்வரலாற்றில் அச்ச்சித்திரத்தை எழுதியிருக்கிறேன். வண்ணநிலவன் முதல் கோணங்கி வரை பலர் கரிசல்மண்ணிலிருந்து பஞ்சம்பிழைக்கப்போனவர்களின் கதைகளை எழுதியிருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சென்றவர்களின் கதையை கந்தர்வன் எழுதியிருக்கிறார். இன்று இலக்கியமன்றி அந்த துயர்நிலைக்குச் சான்றே இல்லை.

 

1997ல் நான் வடஇந்தியாவுக்குச் சென்றபோது முற்றிலும் மாறான காட்சியைக் கண்டேன். இந்தியாவில் பட்டினி மறைந்திருந்தது. எங்கும் உடலுழைப்புக்கு ஓர் அடிப்படைக்கூலி கிடைத்தது. அதில்பாதியைக்கொண்டு ஒரு குடும்பம் வாழத் தேவையான தானியங்களை வாங்க முடிந்தது. உண்மையாகவே கண்கூடான ஓர் அதிசயம் அது. அதைப்பற்றி நான் எழுதியபோது தாராளமயமாக்கலை எதிர்த்துக்கொண்டிருந்த என் தோழர்கள் ஏற்க மறுத்தனர். வறுமை மிகுந்திருக்கிறது என அவர்கள் நம்ப விழைந்தார்கள். தாராளமயமாதல், சுதந்திரப்பொருளியல் மீதான நம்பிக்கையை நான அடைந்தேன். இடதுசாரிகள் மேல் பெருமதிப்பிருந்தாலும் இடதுசாரிப்பொருளியல் அதிகாரிகளிடம் அதிகாரத்தை அளித்து ஊழலுக்கே வழிவகுக்கும் எனத் தெளிந்தேன்.

 

அந்த மாற்றத்தை உருவாக்கியவர் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் பிரதமாராகப் பணியாற்றிய பி.வி.நரசிம்மராவ். இன்றுவரை இந்தச் சாதனையின் புகழை அவரைத்தவிர பிற அனைவருக்குமே அளித்துவிட்டார்கள் நம் அரசியல்வாதிகள். தமிழகத்தின் பொருளியல் வெற்றியின் சிற்பி என எவரெவரோ சொல்லப்படுகிறார்கள். அவரை தலைவராகக் கொண்டு அன்று அந்த வளர்ச்சியைச் சாத்தியமாக்கிய காங்கிரஸ் கட்சியே நரசிம்மராவ் பெயரைச் சொல்வதில்லை.

images (6)

வரலாறு பெரும்பாலும் தர்க்கங்கள் அற்றது. பொதுமக்கள் இன்றில் வாழ்பவர்கள், ஆகவே நேற்றை அறியாதவர்கள். ஆயினும் நரசிம்மராவ் போல தீயூழ் கொண்ட இன்னொரு அரசியல்வாதி இல்லை. இந்தியா கண்ட மாபெரும் ஆட்சியாளர் அவரே, இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டுசென்றவர்களில் நேருவுக்குப்பின் அவரே முக்கியமானவர். ஆனால் அவர் பெயரே கிட்டத்தட்ட வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டிருந்தது. அதை மீட்டு எடுத்த நூல் வினய் சீதாபதி எழுதிய ‘நரசிம்மராவ்- இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி’ [மூலம் ] தமிழில் ஜே.ராம்கி.

 

அரசியல் வரலாற்றாசிரியரும் வழக்கறிஞருமான வினய் சீதாபதி டெல்லி அசோகா பல்கலை ஆசிரியர். தேசிய சட்டக்கல்லூரியிலும் ஹார்வார்ட் பல்கலையிலும் பயின்றவர். பிரின்ஸ்டனில் அரசியல்தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.நரசிம்மராவின் தனிப்பட்ட காகிதங்கள் உட்பட அரசு ஆவணங்களை வாசித்து தொகுத்து எழுதப்பட்ட இந்நூல் இந்திய அரசியலைப் புரிந்துகொள்வதில் மிகப்பெரிய திறப்பை உருவாக்குவது.

 

இந்தியப்பொருளியல் 1991 ல் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தது –அப்படி ஒன்று இந்தியவரலாற்றில் முன்பும் பின்பும் நிகழ்ந்ததில்லை. கிட்டத்தட்ட நாடே சிலமாதங்களில் திவால் ஆகும் நிலை. அதற்கான காரணங்கள் பல. இந்தியா ஏற்றுமதிக்கு சோவியத் ருஷ்யாவையே நம்பியிருந்த நாடு. சோவியத் ருஷ்யா 1985 முதல் தொடர்ச்சியான பொருளியல்நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்தது. கூடவே இந்தியாவும் வீழ்ச்சி அடைந்தது. அன்னியச்செலவாணி குறைந்தது. ஆகவே நாணயமதிப்பு சரிந்தது.

 

மறுபக்கம் அன்னிய முதலீடு முற்றிலுமே இல்லாமலிருந்தது. காரணம் அன்றிருந்த மையப்படுத்தப்பட்ட பொருளியல்நிர்வாகம், லைசன்ஸ்ராஜ் என்று அழைக்கப்பட்டது அது. பொருளியலை அரசு நேரடியாகக் கட்டுப்படுத்தியது. அதாவது பொருளியல் அரசதிகாரிகளால் ஆளப்பட்டது. ராஜீவ் காந்தி காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த அன்னியமுதலீடுகள் கூட தொடர்ச்சியான அரசியல் நிலையின்மை, முடிவெடுக்கமுடியாத அரசு ஆகியவற்றால் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டிருந்தன. கூடவே வளைகுடாப் போரினால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதிச் செலவு பலமடங்கானது.

singh_Rao

அச்சூழலில் நரசிம்மராவ் பதவிக்கு வந்தார். இந்தியா தன் பொருளியல் வழிமுறைகளை மாற்றியே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தது. நரசிம்மராவ் போன்ற அரசுநிர்வாகத்தில் நீண்டகால அனுபவமும், நிதானமும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத அடக்கமும், அனைத்துத் தளங்களிலும் பேரறிவும் கூடவே அரசியல்சூழ்ச்சித்திறனும் கொண்ட ஒருவர் அன்று ஆட்சிக்கு வந்தது இந்தியாவின் மாபெரும் பேறு. அனைத்தையும் விட இன்னொன்றும் இருந்தது அவரிடம், அவர் ‘மக்கள் அரசியல்வாதி’ அல்ல. ஆகவே மக்களிடம் வாக்கு பெறுவதை மட்டுமே எண்ணி பொருளியல்முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கவில்லை.

 

அந்தச் சித்திரத்தை மிக விரிவாக அளிக்கிறது வினய் சீதாபதியின் இந்நூல். பதவிக்கு வந்ததுமே நரசிம்மராவ் அனைத்து கட்சிகளையும் கூட்டி நிலைமையை விளக்கினார். அவர்கள் வாயடைந்து போனார்கள். நிலைமை மோசம் என அவர்களுக்கு தெரியும். ஏற்கனவே சந்திரசேகர் நாட்டின் தங்கக் கையிருப்பை அடகுவைத்து கடன் பெற்றிருந்தார். அந்நிலையிலிருந்து மீள நரசிம்மராவ் உருவாக்கிய திட்டத்தை அவர்களால் மறுக்கமுடியவில்லை. இடதுசாரிக் கட்சிகளுக்கும் உண்மை தெரியும் என்கிறது இந்நூல், அரசியல்வெளியில் அவர்கள் உருவாக்கிய எதிர்ப்பு ஒரு பாவனைதான்

 

இந்நூலின் ஏழாவது அத்தியாயமான பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் நரசிம்மராவ் எப்படி தன் இலக்கை நோக்கிச் சென்றார் என்பதை விளக்குகிறது. பழைய பொருளியல் பார்வை கொண்டிருந்தவரான பிரணாப் முக்கர்ஜி நிதியமைச்சராக விரும்பினார். அரசியல்சூழ்ச்சி வழியாக அதை _ முறியடித்தார். மன்மோகன் சிங்கை அழைத்து நிதியமைச்சராக்கினார். மாண்டேக்சிங் அலுவாலியா போன்று திறமைமிக்க பொருளியல் வல்லுநர்களை பதவிக்குக் கொண்டுவந்தார். சீரான தொடர்முயற்சிகள் வழியாக இந்தியப்பொருளியலை தலைகீழாக மாற்றியமைத்தார்

 

நரசிம்மராவ் பதவி நீங்கியபோது ஐந்தாண்டுகளில் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை பத்து மடங்காகியது. சாலைகளின் நீளம் இரண்டு மடங்காகியது. விமானப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காகியது. தொலைபேசி வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை இருபது மடங்காகியது வேலையில்லாமை பத்திலொருபங்காகச் சுருங்கியது. முக்கியமாக நாட்டிலிருந்து பட்டினி விலகியது

vajpayee-PVN

இதை ராவ் சாதித்தது எப்படி என விரிவாக விளக்குகிறது இந்நூல். இந்நூலை வாசிக்கவேண்டியது அதிலுள்ள நேரடியான அரசியல், நிர்வாகவியல் நுட்பங்களுக்காகவே. நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு ரட்சகன் வந்து அனைத்தையும் ஆணையிட்டே சீரமைத்துவிடுவான் என நம்புகிறோம். ’நாடோடி மன்னன்‘ முதல் ’முதல்வன்’ வரை நம் சினிமா இந்த ரகசியக் கனவையே பயன்படுத்திக்கொள்கிறது. ஆக்ரோஷமாக பேசி கனவுகளை விதைப்பவர்களை நாம் தலைவர்களாகத் தெரிவுசெய்கிறோம். அல்லது எதிர்ப்பலையை உருவாக்குபவர்களை.

 

ஆட்சிநிர்வாகம் என்பதும் பொருளியல் வளர்ச்சி என்பதும் முற்றிலும் வேறான ஒன்று என இந்நூலின் பக்கங்கள் வழியாகப் பார்த்துச் செல்கிறோம். நரசிம்மராவுக்கு இருந்த எதிர்விசைகள் என்னென்ன? நேருவின் நினைவை அப்போதும் கொண்டிருந்த காங்கிரஸ் சோஷலிசக் கோஷத்தை கைவிடத் தயாராக இல்லை, கைவிட்டால் வாக்கு கிடைக்காது. ஆகவே ராவ் தான் செய்வதெல்லாம் நேரு சொன்னவையே என மீண்டும் மீண்டும் சொன்னார்.

 

இந்திய அரசின் தூணாக இருந்த அதிகாரிவர்க்கமும் இந்தியப் பொருளியலின் அடித்தளமாக இருந்த பொத்துறையின் நிர்வாகிகளும் மாற்றங்களை விரும்பவில்லை. இந்தியாவின் லைசன்ஸ் ராஜை சார்ந்து தொழில்செய்த தொழிலதிபர்கள் அன்னிய முதலீட்டை அஞ்சினர். அவர்களே கட்சிக்கு நிதியளிப்பவர்கள். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு. அனைத்துக்கும் மேலாக ராவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

 

ராவ் அனைத்து எதிர்ப்புகளையும் சந்தித்து வெல்கிறார். பெருஞ்சூழ்ச்சியாளர் மட்டுமே இத்தளத்தில் வெல்லமுடியும். லட்சியவாதிகள் தோற்றுப்போய் அத்தோல்வியை பெருமைப்படுத்திக்கொள்வார்கள். ராவ் பெரும்பாலும் தன் திட்டங்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. செய்தபின்னரே செய்தவற்றைப்பற்றிச் சொன்னார். திறமையான அமைச்சர்களைப் பேசவிட்டார். வேறுபெயரில் தன்னை எதிர்த்து தானே கட்டுரை எழுதி அதன்மேல் எழும் எதிர்வினைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

 

ராவ் எதிலுமே அவரசப்படவில்லை. உள்ளூர உறுதிகொண்டிருந்தார், ஆனால் அந்த உறுதி என்பது இறுதிவெற்றியை அடைவதில்தானே ஒழிய அதைநோக்கிச் செல்லும் வழிகளில் அல்ல. சிறிய அளவில் செய்து பார்த்து விளைவுகளைக் கவனித்து மெல்லமெல்லத் திருத்திக்கொண்டு முன்னெடுத்தார். குறைகளைக் களைந்துகொண்டே இருந்தார். எங்கும் அதிரடியாக எதையும் செய்யவில்லை. ஆனால் முடிவெடுத்தபின் பின்வாங்கவுமில்லை

 

திறமையானவர்களை தெரிவுசெய்து அவர்களை சுதந்திரமாக வேலைசெய்ய விட்டது ராவின் வெற்றிக்குக் காரணம். அவர்கள் வேலைசெய்து வெற்றியடைந்தால் அப்புகழை அவர்களே அடைய அனுமதித்தார். மன்மோகன் சிங் மாற்றத்தின் வழிகாட்டியாக புகழ்பெற ராவ் அளித்த ஒப்புதலே காரணம் என மன்மோகன் சிங் சொல்கிறார். உதாரணமாக, இந்தியாவின் முதல் செல்பேசி சேவை 1995ல் அறிமுகமான போது அன்றைய தொலைதொடர்பு அமைச்சர் சுக்ராம் ராவ் அதில் முதல் பேச்சை நிகழ்த்தவேண்டும் என கோருகிறார். ஆனால் ராவ் தொலைதொடர்புத்துறை அமைச்சரான சுக்ராமே பேசவேண்டும் என ஆணையிடுகிறார். சுக்ராம் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜோதிபாசுவிடம் அப்பேச்சை நிகழ்த்தினார்.

pv2

ராவ் விளைவுகளிலேயே குறியாக இருந்தார். எல்லா தளத்திலும் எச்சரிக்கையுடனும் இருந்தார். தொலைதொடர்பு உட்பட பலதுறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை அவர் ஏற்கவில்லை. மாற்றங்களால் அழிவுகள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தனி சிரத்தை எடுத்துக்கொண்டார். ஏனென்றால் ஏற்கனவே வறுமையிலிருக்கும் இந்திய அடித்தள மக்களிடம் கடுமையான முடிவுகள் எடுக்கப்போவதாகச் சொல்லி மேலும் துயரை ஏற்றக்கூடாதென்னும் தெளிவு அவருக்கிருந்தது. தனியார்மயம், தாராளமயத்தால் ஒருவருக்குக்கூட வேலை போகலாது என்றும் உறுதிகொண்டிருந்தார்.

 

ராவ் கொள்கைவாதி அல்ல. இலட்சியவாதி என்று நாம் சாதாரணமாகச் சொல்லும் பொருளில் அவ்வகைப்பட்டவரும் அல்ல. அவருக்கு சில இலட்சியங்கள் இருந்தன. அவர் ஆந்திர முதல்வராக இருந்தபோதே நிலச்சீர்திருத்தம்,வறுமை ஒழிப்பு போன்றவற்றை இலக்காக்கி செயல்பட்டிருக்கிறார். அரசியல் எதிர்ப்புகளால் தோல்வியும் அடைந்தார். அவரை நடைமுறைவாதி என்று சொல்லவேண்டும். அரசியலில் இருந்து அவர் கற்றுக்கொண்ட நடைமுறைவாதம் அது. அந்த நேரடியான நடைமுறைவாதமே பயனளித்தது

 

இந்நூல் ராவின் புகழ்பாடும் நூல் அல்ல.  ராவின் நடைமுறையிலுள்ள சூழ்ச்சிகள், மோசடிகள் ஆகியவற்றையும் விரிவாகப்பேசுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களை காசுகொடுத்து வாங்கி பெரும்பான்மையை ஈட்டிக்கொண்டார். ஜார்கண்ட் பாராளுமன்ற உறுப்பினர் சிபு சோரனுக்கு அவர் லஞ்சம் கொடுத்தது வெளிப்பட்டு அவருக்குப் பெரிய கறையை உருவாக்கியது. வாழ்நாளின் இறுதிவரை அந்த வழக்கால் அவர் வேட்டையாடப்பட்டார். பிரணாப் முகர்ஜி உட்பட தன் அரசியல் எதிரிகளின் ரகசியங்களைச் சேகரித்துக்கொண்டு அவற்றைக்கொண்டு அவர்களை மிரட்டி ஓரங்கட்டினார். எதிர்ப்பவர்களை அவர்களின் எதிரிகளைச் சேர்த்துக்கொண்டு மௌனமாக ஒழித்துக்கட்டுவது ராவின் வழிமுறை

 

அவரை வீழ்த்தியது இரண்டு சூழ்ச்சிகளின் விளைவுகள். அவரை பிரதமராக்கியபோது சோனியாவின் எதிர்பார்ப்பு அவர் போஃபர்ஸ் வழக்கை முடித்துவைக்கவேண்டும் என்பது. ஆனால் அதுமுடிந்தால் நேரு குடும்பத்தின் அரசியல் நுழைவு உருவாகும் என அஞ்சிய ராவ் சோனியாவிடம் அதை முடித்துவிடுவதாகச் சொல்லிக்கொண்டே முடிக்காமல் வைத்திருந்தார். அது சோனியாவுக்குத் தெரியவந்தபோது கட்சியின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தார்

download (2)

நரசிம்மராவ் மிக உச்சகட்டமாக விமர்சிக்கப்பட்டது ராமஜன்மபூமி –பாபர் கும்மட்டம் பிரச்சினையின்போது அவர் எடுத்த நிலைபாட்டின் குளறுபடிகளுக்காக. அவர் பாரதிய ஜனதாவை ஆதரித்தவர் என்றும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் ஓட்டுவங்கி முழுமையாக அழிய அவரே காரணம் என்றும் காங்கிரஸ் இன்றும் நினைக்கிறது. இந்நூலில் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் அது உண்மையல்ல என்று வினய் சீதாபதி வாதிடுகிறார்

 

நரசிம்மராவின் வழிமுறை எதிர்க்கட்சிகளைக் கலந்தாலோசிப்பதும் அவர்களை நம்புவதும். அது பொருளியல் நடவடிக்கைகளில் கைகொடுத்தது. அவர் அதேபோல பாரதிய ஜனதாவை, குறிப்பாக எல்.கே.அத்வானியை நம்பினார். அவர்கள் அவரை ஏமாற்றினர். பாபர் கும்மட்டம் இடிக்கப்படுவதற்கு முன்பு அவரால் ஊக அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கமுடியாது. அவர் மரபுகளில் நம்பிக்கைகொண்ட , அதில் ஊறிய முதியவர். நடைபெற்றது அவரை மீறி. ஆனால் அவர் ஆட்சிக்காலத்தில் அது நிகழ்ந்தமை அவருக்குப் பழி சேர்த்தது. அதன்பொருட்டு அவர் அத்வானியை மன்னிக்கவேயில்லை. அத்வானியை சிக்கவைத்த ஹவாலா வழக்கின் பின்னணியில்கூட ராவின் வஞ்சம் இருந்தது.

 

ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் ஊழல்செய்வதவரல்ல என்றே இந்நூல் காட்டுகிறது. அவர்மேல் பலவகையான ஊழல் குற்றச்சாட்டுகள் அன்று கூறப்பட்டன, குறிப்பாக அவர் மகன் ராஜேஸ்வர ராவ் மீது. ஆனால் பதவி இழந்து கட்சியால் கைவிடப்பட்டு தனிமையான ராவ் வழக்குச் செலவுகளுக்காக தன் டெல்லி வீட்டை விலைபேசும் நிலைமையில் இருந்தார் என்கின்றன ராவின் தனிப்பட்ட குறிப்புகள்.

 

இந்நூல் ஒரு நாவல்போல ஆரம்பிக்கிறது. ராவின் இறுதி டெல்லியில்23 டிசம்பர் 2004ல் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் முறையான அஞ்சலியைச் செலுத்தவில்லை. அன்றைய காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் ராவின் இறுதிச்சடங்கு டெல்லியில் நிகழக்கூடாது, டெல்லியில் அவருக்கு நினைவுடம் அமையக்கூடாது என்று உறுதியாக இருந்தார். ஹைதராபாதுக்குச் சடலத்தை கொண்டுசெல்லும்படி அறிவுறுத்தினார்

download

வர் இறந்தது காலை 11 மணிக்கு. மாலை 6 30க்குத்தான் சோனியாவும் மன்மோகன்சிங்கும் பிரணாப் முகர்ஜியும் அஞ்சலி செலுத்த வந்தார்கள்.அவருடைய சடலம் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் அதன் முகப்பில் சாலையிலேயே சற்றுநேரம் அஞ்சலி செலுத்தும்பொருட்டு வைக்கப்பட்டிருந்தார்.. அவருடைய சடலம் உள்ளே வரக்கூடாது என்பதற்காக சோனியா முதலியோர் வாசலுக்கு வெளியே வந்து மரியாதை செலுத்தினார்கள். பலமுறை கோரியும் கதவு திறக்கப்பட முடியாது என்ற மறுமொழியே கிடைத்தது.. மன்மோகன் சிங்கிடம் ராஜேஸ்வர ராவ் டெல்லியில் இறுதிச்சடங்கு செய்ய அனுமதி கோரியபோது அவர் பார்க்கலாம் என்றார். ஆனால் அவரால் சோனியாவின் சினத்தை மீறமுடியவில்லை.

 

அவருடைய சடலம் ஹைதராபாதுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கே அவர் சிதையேற்றப்பட்டார். ஆனால் முறையாக எரியூட்டப்படவில்லை. அவருடைய பாதி எரிந்த சடலம் செய்தியாக ஆகியது. தெலுங்கானா மக்கள் பெருந்திரளாக வந்து ராவுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்கள் ராவ் அவமதிக்கப்பட்டதாகவே கருதினர். இன்று ராவ் தெலுங்கானாவின் பெருமைக்குரிய மண்ணின்மைந்தனாகவே எண்ணப்படுகிறார்.

 

நரசிம்மராவ் மனமுடைந்து இருந்த நாட்களில் முடிகிறது இந்நூல். “நான் என்ன தவறுசெய்தேன்? நான் செய்ததெல்லாமே நாட்டுக்காகத்தான்!” என்று அவர் சோனியாவிடமே குமுறுகிறார். ஆனால் இறப்புக்குப்பின்னரும் ராவ் பழிவாங்கப்பட்டார். அவருடைய சாதனை மறைக்கப்பட்டது. தாராளமயமாக்கம் ராஜீவ்காந்தியும் மன்மோகன்சிங்கும் செய்த சாதனையாக சொல்லப்பட்டது.

 

வினய் சீதாபதியின் நூல் நரசிம்மராவின் பிறப்பு முதல் அவருடைய அரசியல் வாழ்க்கையை விரிவாக ஆராய்கிறது. அதில் எந்த இரக்கமும் காட்டப்படவில்லை. அவருடைய இரு பெண் தொடர்புகளைக்கூட விரிவாகவே பேசுகிறது. ஆகவே மேலும் நம்பகமானதாக ஆகிறது. இப்படி நம் தலைவர்கள் எவரைப்பற்றியும் ஒரு நூல் எழுதப்பட்டதில்லை

 

நரசிம்ம ராவ் முதன்மையாக நிர்வாகி. அதற்கான அனைத்துத் திறமைகளும் கொண்டவர். மிக விரிவான படிப்பாளி. பலமொழிகள் அறிந்தவர். எழுத்தாளர். புனைபெயர்களில் பொருளியல், அரசியல் கட்டுரைகள் ஏராளமாக எழுதியவர்.. The Insider (1998) என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். எந்த புதுத் தொழில்நுட்பத்தையும் விரைவாகக் கற்றுக்கொள்ளக்கூடியவர்..அமைச்சராக அனைத்து துறைகளிலும் வெற்றிகண்டவர்

 

இந்நூல் காட்டும் _ எந்த வகையிலும் மக்களைக் கவர்பவர் அல்ல. பெரிய பேச்சாளரோ வசீகரமான ஆளுமையோ அல்ல. உம்மணாமுஞ்சி என்றே சொல்லவேண்டும். கட்சியின் உறுப்பினராக மட்டுமே அவர் தேர்தல்களில் வென்றார். கட்சியில் அவர் பதவிகளில் நீடித்ததே தலைமை மீதான ஆழமான விசுவாசத்தால்தான். எதையுமே மறுத்துப்பேசுபவரோ மான அவமானம் பார்ப்பவரோ அல்ல. கிட்டத்தட்ட அடிமை

images (5)

 

உதாரணமாக ஒரு சம்பவம். ராஜீவ் பிரதமராக இருந்தபோது ராவ் அவரைச் சந்திக்கச் சென்றார். அங்கே ராஜீவின் தோழரான ஒரு வெள்ளைக்கார விமான ஓட்டி இருந்தார். ராவ் முதியவருக்குரிய வகையில் காலைத்தூக்கி நாற்காலியில் வைத்து விரல்களை நெருடிக்கொண்டிருந்தார். அந்த வெள்ளையருக்கு அது அருவருப்பாக இருந்தது. ராஜீவிடம் அவர் அதைச் சொல்ல ராஜீவ் அன்று வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ராவை மிகக் கடுமையாக திட்டி வெளியே செல்லும்படிச் சொன்னார். ராவ் மனம் அந்த வெள்ளையரிடம் மன்னிப்பு கோரினார். நேரில் விடுதிக்குச் சென்றும் வருத்தம் தெரிவித்தார்

 

ராவ் பிரதமராக ஆனது ஒரு தற்செயல். அவர் உள்துறையிலும் வெளியுறவுத்துறையிலும் சாதனை படைத்தவர். பஞ்சாப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்தவர். காஷ்மீர் பிரச்சினையையும் ஓயவைத்தவர். சீனாவுடன் நட்பு அத்தியாயத்தை தொடங்கிவைத்தவர். தன் அரசியல்வாழ்க்கை முடிந்துவிட்டது என உணர்ந்திருந்த நிலையில்தான் பிரதமர் வாய்ப்பு வந்தது. அது வட இந்தியாவில் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு கொண்டிருந்த அர்ஜுன் சிங் போன்றவர்களை நம்பமுடியாது என்று சோனியா எண்ணியதனால் வந்த வாய்ப்பு. அதை ராவ் நன்கு பயன்படுத்திக்கொண்டார்

 

நரசிம்மராவ் மீதான நம் பிழையான மதிப்பீடுகளைக் களைந்து அவரை ஒரு தேசியத்தலைவராக, சாதனையாளராக நிலைநிறுத்தும் நூல் இது. ஆனால் அதைவிட முக்கியமாக சில அடிப்படை புரிதல்களை நமக்கு அளிக்கும். நாம் எப்போதுமே இலட்சியவாதிகளான அரசியல்வாதிகளையே போற்றுகிறோம். அவர்கள் சமகாலத்தை இருளாக்கிக் காட்டுகிறார்கள். எதிர்கால ஒளியை பெருக்கிக் காட்டுகிறார்கள். உணர்ச்சிகரமானவர்களாக, அலைபாய்பவர்களாக இருக்கிறார்கள்.

 

அவர்களில் பெரும்பாலானவர்கள் நடைமுறையில் தோல்வியே அடைகிறார்கள். நேரு வெற்றிபெற்றது நடைமுறைவாதியான படேலின் உதவியால். படேலுக்குப் பின் நேருவால் சமாளிக்கமுடியவில்லை. மாபெரும் இலட்சியவாதியான நெல்சன் மண்டேலா நிர்வாகியாக படுதோல்வி அடைந்தவர். நடைமுறைவாதிகளின் பங்களிப்பை நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். அவர்களை சுவாரசியமற்றவர்கள், சதிகாரர்கள் என எண்ணுகிறோம்

 

அதோடு ஊடகங்களுக்கும் லட்சியவாதிகளையே பிடிக்கிறது. ஆவேசமான பேச்சும் அரசியல்போராட்டங்களும் செய்திகளுக்கு மிக உகந்தவை. அவர்கள் மக்களின் உணர்வுகளை பெருக்குபவர்கள். ஆகவே லட்சியவாதிகளை மிகைப்படுத்தி நடைமுறைவாதிகளை சிறுமைப்படுத்தி நமக்குக் காட்டுகிறார்கள்

 

இந்தியா போன்ற பலநூறு இனங்களும் பற்பல மொழிகளும் கொண்ட அரசியல்வெளியில் எப்போதும் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆகவே போராட்டங்கள் வழியாகவே இங்கே தலைவர்கள் உருவாகிறார்கள். இவர்களில் சிலரே லட்சியவாதிகள். பெரும்பாலானவர்கள் எதிர்மறையான உணர்ச்சிகளை தூண்டிவிடும் போலி இலட்சியவாதிகள். பிரிவினைஉணர்ச்சிகளையும் கசப்புகளையுமே அவர்கள் உருவாக்குகிறார்கள். அவர்கள் நமக்கு தலைவர்களாகத் தெரிகிறார்கள்

 

ஒருவர் சிலநாட்கள் சிறையில் இருந்துவிட்டால் நமக்கு அவர் தலைவராகத் தெரிவது ஏன்? செய்துகாட்டும் ஒருவரை விட உணர்ச்சிக் கூச்சலிடும் ஒருவரை நாம் ஏன் ஏற்றுக்கொள்கிறோம்? உணர்ச்சிகள் எளிதில் தொற்றுபவை. எதிர்மறையான உணர்ச்சிகள் மேலும் எளிதாக பரவுபவை. நாம் நம் தலைவர்களை இவ்வாறு உணர்ச்சிகர முட்டாள்தனங்களால் உருவாக்கி எழுப்புகிறோம்

 

ஆனால் அவர்கள் சென்றமையும் அந்த ஆட்சிபீடம் என்பது முற்றிலும் வேறான ஒன்று. அது எந்த இலட்சியத்தாலும் புரிந்துகொள்ளப்பட இயலாதது. பல்லாயிரம் அன்றாடச்சிக்கல்கள் நிறைந்தது. ஒன்றுக்கொன்று முரண்படும் ஏராளமான விசைகளின் சமநிலையாக செயல்படுவது. அதைப்புரிந்துகொண்டு மெல்லமெல்ல கையகப்படுத்தி நினைப்பதைச் செய்யவைப்பதென்பது ஒரு தொழிற்சாலையின் இயந்திரங்களைக்கொண்டு சிம்ஃபனி இசையை எழுப்புவதுபோல.

photofeature17_121616101809

மிகச்சிறந்த உதாரணம் அசாம் கணபரிஷத்தின் தலைவர் பிரஃபுல்ல குமார் மகந்தா. அஸாம் மாணவர் இயக்கத்தை ஒருங்கிணைத்த போராளி. ஆவேசமான பேச்சாளர். அஸாமே அவர் தலைமையில் திரண்டது. அவர் 1985ல் அஸாம் முதல்வராக ஆனார். மிக இளம்வயதில் முதல்வராக ஆனவர் அவர். 33 வயதில் அஸ்ஸாமின் வரலாற்றிலேயே செயல்படாத , ஊழல்மிக்க அரசாக இருந்தது அவர் அமைத்தது. அரசை அவரால் ஆளவே முடியவில்லை. 1996 ல் மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தார். அப்போதும் திறனற்றவராகவே நீடித்தார்.

 

அஸ்ஸாம் போராட்டத்தின் இழப்புகள் அந்த வளம் மிக்க மாநிலத்தை இருபத்தைந்தாண்டுகாலம் பின்னால் கொண்டுசென்றன. அதன் விளைவாக ஆட்சிக்கு வந்த அவர் வாக்களித்த எதையுமே செய்யமுடியவில்லை. அஸ்ஸாம் கணபரிஷத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து 204ல் அவர் அஸ்ஸாம் கணபரிஷத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

 

நாம் நம் அரசியல் பார்வைகளை மாற்றிக்கொள்ளாத வரை இந்தியாவில் மெய்யான வளர்ச்சியும் நலமான வாழ்க்கையும் உருவாகப் போவதில்லை. நமக்குத்தேவை பொய்யான அதிருப்தியையும் வஞ்சத்தையும் உருவாக்கி நம்மை கொந்தளிக்கச்செய்யும் ‘போராளி’தலைவர்களோ ஒளிமிக்க எதிர்காலத்தை சுட்டிக்காட்டி பேசும் மிகையான இலட்சியவாதிகளோ அல்ல. செய்துகாட்டுபவர்கள்.. அவர்கள் செய்து காட்டியதைக்கொண்டே நாம் அவர்களை நம்பவேண்டும். மேலும் வாய்ப்பளிக்கவேண்டும். எதிர்மறை உணர்ச்சிகளும் காழ்ப்புகளும் அறுதியாக இழப்பை நோக்கியே கொண்டுசெல்லும்.

 

காந்தியைப் பற்றி பேசும்போது ஜே.சி.குமரப்பா சொன்னார். காந்தி இலட்சியவாதியும் நடைமுறைவாதியும் சரிபாதியாகக் கலந்தவர் என. அது அபூர்வமானதுதான். காந்தி வாழ்நாளெல்லாம் போராடியவர். மகத்தான கனவுகளை வைத்திருந்தவர். ஆனால் முற்றிலும் நடைமுறைவாதி. ஆகவேதான் பெரிய அமைப்புகளை அவரால் உருவாக்க முடிந்தது. அவருடைய செயல்பாடுகளில் நேர்பாதி  ‘நிர்மாணத்’ திட்டங்களே. ஒவ்வொரு போராட்டத்தையும் குறைந்தபட்ச இழப்புகளுடன் மிகமெல்ல முடிவுவரை கொண்டுசெல்ல முடிந்தது.

 

கணிசமான காந்தியர்களும் அவ்வாறுதான். அமைப்புகளை உருவாக்கி நிலைநிறுத்தியவர்கள், இறுதி எல்லை வரை சலிக்காமல் சென்றவர்கள் அவர்கள். மெய்யான லட்சியவாதியின் இலக்கு என்பது எங்கோ இருப்பது அல்ல. அதுவரை வெறும் சொல்லே என லட்சியவாதி சொல்லவும் மாட்டான். செயலே லட்சியத்தின் அடிப்படை. செயல்கள், வெற்றிகள் வழியாகவே அங்கே சென்றடைய முடியும்

.nana

நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி 

கிழக்கு பதிப்பகம்

 

Vinay Sitapati

வினய் சீதாபதி

 

தொடர்புள்ள கட்டுரைகள்

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24

$
0
0

bowகௌரவர்களின் வெற்றிச்சங்கொலி ஓர் அறைகூவலென எழ பாண்டவப் படை வளையும் வில்லின் நாண் என தளர்ந்தது. “தளருமிடத்தில் தாக்குக… விரிசல் விழுந்த இடத்தை உடைத்து உட்செல்க… அங்கே அனைவரும் வேல்முனை என குவிக!” என சகுனியின் முரசு பின்பக்கம் ஆணையிட்டது. லட்சுமணன் தன் தம்பியருக்கு கையசைவால் ஆணையிட்டுக்கொண்டு பாண்டவப் படைகளை தாக்கினான். தித்திரகுலத்து இளவரசர்களான சங்கபிண்டனையும் கர்க்கரனையும் அகர்க்கரனையும் வீழ்த்தினான். அவர்களின் தந்தை பகுமூலகன் அதை கண்டு உரக்கக் கூவியபடி வில்லுடன் வந்தான். அவனை துருமசேனன் கொன்றான்.

விந்தியமலைச்சரிவின் துந்துபக் குலத்து விரஜஸ் தன் மைந்தர்கள் சாலி, உபசாலி, பத்மசாலி ஆகியோருடன் லட்சுமணனை எதிர்கொண்டான். அவர்களை லட்சுமணன் தடுக்க அவனுக்கு வலப்பக்கமாக வந்த விதர்ப்பநிலத்தின் தண்டகத் தொல்குடியின் அரசர் கௌணபர் தன் மைந்தர்களான சரணனும் மானசனும் கோடிசனும் துணைவர அவனை பக்கவாட்டில் தாக்கினார். அவர்களை துருமசேனனும் இளையோர் சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோரும் எதிர்த்தனர். அந்த இடைவெளியில் அலம்புஷன் தன் சிறிய அரக்கர் படையுடன் பாண்டவர்களை கோடரியால் என வெட்டிப்பிளந்து உள்ளே சென்றான்.

லட்சுமணன் இடியோசைபோல் எழுந்த முரசுகளின் முழக்கத்தை கேட்டான். போர்க்களத்தில் அப்புதிய ஒலி அனைவரையும் திகைத்து திரும்பிப்பார்க்கச் செய்தது. எதிரே வந்துகொண்டிருந்த பாண்டவர்களின் தேர்கள் மீதாக கரிய பேருருவர்கள் விண்ணிலிருந்து தொங்கும் விழியறியா சரடில் தொங்கி பறந்து அணுகுபவர்கள்போல் பாய்ந்து வந்தனர். ஒரு தேர் முகடிலிருந்து பிறிதொன்றுக்குத் தாவுகையில் அவர்கள் மடிந்து உடலோடு ஒட்டிய தவளைக்கால்களும் நண்டுக்கொடுக்குபோல் இருபுறமும் விரிந்த பெருங்கைகளும் கொண்டு தெரிந்தனர். “மாபெரும் வௌவால்கள்போல!” என்று துருமசேனன் கூவினான். “கடோத்கஜர்!” என கௌரவப் படை கூச்சலிட்டது.

இடக்கையிலிருந்த இரும்புக்கொக்கி கொண்ட கயிற்றால் வீசி அறைந்து பற்றிய தேர்முகடை அவ்விசையாலேயே உந்தி மீண்டும் எழுந்தனர் இடும்பர். வலக்கையில் இரும்புக்கல்லாலான கதாயுதம் வானிலிருந்து பாறை விழுவதுபோல தேர்களையும் யானை முதுகுகளையும் புரவித்தலைகளையும் அறைந்து உடைத்தது. தேருடன் அவர்கள் அறைந்து உடைக்க தம்மை காக்கும் வழியேதுமின்றி சிம்புகள் நடுவே சிதைந்து அமைந்தனர் வில்வீரர். வாயால்தான் அம்முழவொலியை அவர்கள் எழுப்புகிறார்கள் என்று தெரிந்தது. அது அவர்களுக்கே உரிய ஒரு தனி மொழியாக ஒருவரோடொருவரென அவர்களை கோத்தது.

“சிலந்திகள்!” “வெறிகொண்ட வல்லூறுகள்!” என கௌரவப் படை கூச்சலிட்டது. கொக்கியால் பற்றப்பட்ட தேர்கள் எரிநோக்கி சருகுகள் என அவர்களை அணுகி உடைந்து தெறித்தன. அவர்களின் கதைகள் சுழன்றெழுந்தபோது குருதிச்சரடு வானில் வளைந்து பறந்தமைந்தது. அந்த வெறி கௌரவப் படைகளை அச்சுறுத்த தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி தயங்கின. அத்தயக்கமே அவர்களை எக்காவலுமில்லாமல் அவர்கள் முன் சென்று நிறுத்தியது. உடைந்து தெறிக்கும் தேர்களும் புரவியின் தலைகளும் குருதிக் குமிழிகளென சிதைந்து பறந்த தலைகளுமென அவர்கள் வந்த வழியின் தடம் நதிவற்றிய பரப்பென செஞ்சேற்றில் சருகுகளும் தடிகளும் படிந்து விழிக்கு புலப்பட்டது.

அவர்களில் எவர் கடோத்கஜன் என்று உய்த்துணரக் கூடவில்லை. அனைவரும் ஒன்றுபோலிருந்தனர். பின்னர் அவன் கடோத்கஜனை அடையாளம் கண்டான். அவனுடைய வாயிலிருந்து எழும் ஒலியே பிறரை ஆள்கிறதென்று அப்போது உணர்ந்தான். அவன் கையிலிருந்த கதாயுதம் மலையில் வெட்டி வெப்பத்தில் அறைந்துருட்டி எடுக்கப்பட்ட இரும்புக்கல்லால் ஆனது. பிறர் அதை அசைக்கவும் இயலாத எடை கொண்டது. இடக்கையில் நீண்ட சங்கிலியால் தொடுக்கப்பட்ட கொக்கி இருந்தது. சினம் கொண்ட நாகமென காற்றில் எழுந்து வளைந்து பறந்து அக்கொக்கி தேர்களின் குவடுகளிலும் தூண்களிலும் கவ்விக்கொண்டது.

பெருந்தோளால் தேர்களை சுண்டி இழுத்து அருகணையச்செய்து அவ்விசையாலேயே தானும் தேரை நோக்கி தாவி எழுந்து வலக்கையிலிருந்த கதாயுதத்தால் ஓங்கி அறைந்து தேருடன் வில்லவனையும் சிதறடித்துவிட்டு அவனுக்கு என்ன ஆயிற்று என்று அரைக்கணமும் திரும்பி நோக்காமல் மறுதிசை நோக்கி பாய்ந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அவனைப்போன்றே இருந்தனர். வெறும் கொலைவிலங்குகள். அல்லது மண் வெடித்துத் திறந்த வழியினூடாக பெருகி எழுந்து வந்த அதலத்து தெய்வங்கள்.

அவர்கள் களத்தில் போரிடும் முறை கௌரவ வீரர்கள் தேர்ந்து பயின்றதற்கு முற்றிலும் வேறாக இருந்தது. விண்ணிலிருந்து என வரும் அத்தாக்குதலை எதிர்கொள்ள அவர்களால் இயலவில்லை. அம்புகள் அவர்களை நோக்கி சென்றபோதுகூட பெரும்பாலும் இடைக்குக் கீழே தொடைக்கவசங்களில் பட்டு தெறித்தன. நிலத்தூன்றிய வில்லை தலைக்குமேல் தூக்கி குறிபார்க்க இளைய கௌரவர்களால் இயலவில்லை. அவர்கள் அம்புகள் விசையுடன் நெடுந்தொலைவுக்கு செல்வதற்காக தேர்த்தட்டில் ஊன்றி தலைக்குமேல் நிற்கும் பெரிய நிலைவிற்களுடன் வந்திருந்தனர். ஒற்றைக்கையால் அவற்றை தலைக்குமேல் தூக்கியபோது நிலை பிறழ அம்புகள் இலக்கு தவறின.

லட்சுமணன் தன் வில்லை தாழ்த்தி நீளம்புகளை குறிபார்த்து இடும்பர்களை நோக்கி எய்தான். பேருருவன் ஒருவனின் நெஞ்சக்கவசத்தை பிளந்து அடுத்த அம்பை அவ்விடைவெளியில் செலுத்துவதற்குள் வில் இருமுறை துடித்து அவன் கையிலிருந்து நழுவியது. அடுத்த அம்பை அவன் எடுத்தபோது உடைந்த கவசத்துடன் அவ்விடும்பன் அவன் தேருக்கு முன்னால் வந்திருந்தான். அவன் கதை சங்கிலி குலுங்கும் ஓசையுடன் மேலெழுவதை விழியாலோ செவியாலோ அன்றி வேறேதோ புலனால் லட்சுமணன் உணர்ந்தான். மறுகணம் அவன் தாவி அப்பால் வந்துகொண்டிருந்த யானை ஒன்றின் விலாவில் சுற்றப்பட்டிருந்த கயிற்றில் படுத்து தொங்கி விலகிக்கொள்ள அவன் இருந்த தேர் அறைபட்டு நூறாயிரம் சிம்புகளாக மாறி தெறித்தது.

லட்சுமணன் “தேர்! தேர் அளியுங்கள் எனக்கு!” என்று கூவுவதற்குள் அவ்விடும்பன் அவனுக்கு முன்னால் வந்த பிறிதொரு தேர்மேல் கால் ஊன்றி மேலெழுந்து அவன் தொங்கிக்கொண்டிருந்த யானையின்மேல் கதாயுதத்தால் ஓங்கி அறைந்தான். அலறியபடி உள்ளுடல் உடைய அது பக்கவாட்டில் சரிந்தது. அதனுடன் தானும் விழுந்த லட்சுமணன் அடுத்த கதாயுதம் தன்னை அறைவதற்குள் இரண்டாவது அறையில் சிதைந்து துதிக்கை குழாய் வழியினூடாக குருதி பீறிட செவியில் குருதிக்கொப்புளங்கள் வெடிக்க கால்கள் விலுக்கிட்டு துடித்துக்கொண்டிருந்த யானைமேல் கால் வைத்து அவன் முன் வந்து நின்றான் இடும்பன்.

லட்சுமணன் மேலும் மேலுமென பின்னகர்ந்தபடி அவனை எதிர்கொள்வதெப்படி என்று எண்ணினான். அடுத்த அறையை தாவி தவிர்த்து அங்கு நின்றுகொண்டிருந்த வில்லவன் ஒருவனின் தேரிலேறிக்கொண்டான். அவனிடம் “பின் செல்க! பிறிதொரு தேர் கண்டடைக!” என்று கூவியபடி அவன் வில்லை வாங்கிக்கொண்டான். இடும்பன் கொக்கியை அவன் தேர் நோக்கி வீச ஒற்றை அம்பால் அக்கொக்கியின் கண்ணியை உடைத்தான். அடுத்த அம்பு இடும்பனின் கால்மேல் பட்டது. எண்ணி அனுப்பியதல்ல அது. ஆனால் உள்ளுறையும் உயிர்விசை அதை கண்டுகொண்டிருந்தது. காலில் பட்ட அம்புடன் அலறியபடி இடும்பன் நிலத்தில் விழுந்தான். அவன் மறுமுறை எழும்போது பேருடலின் எடை தாங்காத கால் பிறழ லட்சுமணனின் அம்பு அவன் நெஞ்சக்கவசம் அகன்ற இடத்தில் ஆழத் தைத்தது. அவன் மல்லாந்து விழுந்தபோது முழு விசையுடன் அடுத்த அம்பை செலுத்தி அவன் நெஞ்சை பிளந்தான்.

தேரை திருப்பியபடி லட்சுமணன் உரக்க கூவினான். “அவர்களின் கால்களை மட்டும் நோக்குக! கால்களுக்கென மட்டும் அம்பு விடுக!” அவன் கூச்சலை சொல்நோக்கிகள் விழிகூர்ந்து அறிந்து முழவொலியாக்க “கால்களை நோக்குக! கால்களை நோக்குக!” என்று முரசுகள் விம்மின. இடும்பர்கள் பேரொலி எழுப்பி அவனை சூழ்ந்துகொண்டனர். தேரை மேலும் மேலும் பின்னுக்கு விலக்கியபடி லட்சுமணன் அவர்களின் கால்களை நோக்கி அம்புகளை செலுத்தினான்.

ஆனால் விரைவிலேயே இடும்பர்கள் அதை உணர்ந்துகொண்டனர். நிலத்துக்கு வராமல் தேர்முகடுகள் மீதும் யானைகள் மீதும் மட்டுமென தாவி போரிட்டனர். வானில் எழுகையில் அவர்கள் தலைக்குமேல் சென்றுவிட்டிருந்ததனால் அம்புகள் சென்றடையவில்லை. லட்சுமணன் இயல்பாக நிலத்தில் கால் மடித்தமர்ந்து அம்பொன்றை செலுத்த இடும்பன் ஒருவன் அலறியபடி அவன் தேர்மேலேயே விழுந்தான். தேர்க்குதிரைகள் கால் விலக்கி கனைத்தபடி சிதற அவன் தேர்நிலையழிந்தது. லட்சுமணன் ஒருக்களித்து படுத்தபடி வில்லை இழுத்து அம்பை அவன் கால் நடுவே மீண்டும் செலுத்தினான். இடும்பன் பேரம்பு தன் உடலில் தைக்க இரு கைகளையும் நிலத்தில் அறைந்தபடி எழுந்து நிலைகொள்ள முடியாது இருபுறமும் அசைந்து விழுந்தபோது அவன் தலையை துண்டித்தது அடுத்த அம்பு.

“படுத்துக்கொள்ளுங்கள்! தேரில் படுத்தபடி அம்பெய்யுங்கள்!” என அவன் கூவினான். “தேரில் படுத்துக்கொள்ளுங்கள்!” “படுத்துக்கொள்ளுங்கள்!” என்று முழவுகள் ஒலித்தன. கௌரவப் படையினர் அதற்குள் பல துகள்களாக சிதறியவர்கள்போல அகன்றுவிட்டிருந்தனர். இளைய கௌரவர்களின் தேர்கள் மட்டும் இடும்பர்களை சூழ்ந்துகொண்டிருந்தன. லட்சுமணன் அம்புகளைச் செலுத்தி அவர்களை தடுத்து விசையிழக்கச் செய்தபடி களத்தில் நின்று “சூழ்ந்து கொள்க! இடைவெளி விடாதீர்கள்! இடைவெளி விடாதீர்கள்!” என்று கூவினான். ஆனால் கௌரவப் படையினர் மீதூறும் அச்சத்தால் நெடுந்தொலைவுக்கு விலகிச் சென்றுவிட்டிருந்தனர். “அணுகுக! அணுகுக!” அவர்களுக்குப் பின்னால் சகுனியின் ஆணை முழவொலியாக எழுந்துகொண்டே இருந்தது.

லட்சுமணன் அருகே கணுமூங்கிலில் எழுந்தமைந்த தொழும்பன் நோக்கிக்கூற அப்பால் வலப்பக்கம் பீமனும் துச்சாதனனும் வெறிகொண்ட போரில் ஈடுபட்டிருப்பதை அறிந்தான். நெடுந்தொலைவில் சாத்யகியும் சுருதகீர்த்தியும் இணைந்து துரியோதனனை செறுத்துவிட்டிருந்தனர். இடும்பர்கள் கணந்தோறும் பெருகுபவர்கள் போலிருந்தனர். தன்னால் அவர்களை முழுமையாக எதிர்கொள்ள இயலாது என்று அவனுக்கு புலப்பட்டது. கதாயுதத்தால் மட்டுமே எதிர்கொள்ளத்தக்க தோள்வலர்கள் அவர்கள். அவர்களை எதிர்கொள்ளும் விசை பால்ஹிகரிடமும் துரியோதனனிடமும் துச்சாதனனிடமும் மட்டுமே உண்டு. “படை உதவி! படை உதவி வருக!” என்று லட்சுமணன் கூவினான். “இதோ வந்துகொண்டிருக்கிறது… செறுத்து நிற்கவும்” என்று சகுனியின் அறைகூவல் எழுந்தது.

லட்சுமணன் தன்னைச் சுற்றி கௌரவ மைந்தர்களின் தேர்கள் உடைந்து தெறிப்பதை உணர்ந்தான். இடும்பன் ஒருவனை நீள்வேல் கொண்டு குத்தி அவ்விசையாலேயே தேரிலிருந்து எழுந்து அதில் தொங்கிச் சுழன்று இறங்கி அவ்வேலை உருவ முயன்றபோது எதிரே முழக்கமிடும் கரிய முகில்போல் கடோத்கஜனை கண்டான். வேலை விட்டுவிட்டு தன் தேரை நோக்கி ஓடினான். கடோத்கஜன் அவனுக்கெதிர் வந்த இரண்டு வில்தேர்களை அறைந்து நொறுக்கிவிட்டு லட்சுமணனை நோக்கி வந்தான். லட்சுமணன் பாய்ந்து இளைய கௌரவன் படவாஸகனின் தேரிலேறிக்கொள்ள அத்தேரை அறைந்து உடைத்த கடோத்கஜன் பெருங்கூச்சலிட்டான்.

கதை சுழன்று மேலெழும் விம்மலோசையிலேயே தேரிலிருந்து தாவும் உணர்வை அடைந்துவிட்டிருந்த லட்சுமணன் அவ்வறையிலிருந்து தப்பினான். ஆனால் படவாஸகனின் கொழுங்குருதி அவன் மேல் வெஞ்சேறென தெறித்தது. மேலும் மேலுமென இடும்பர்கள் சூழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே வந்த இடும்பன் ஒருவனை இளையோனாகிய கூர்மன் தன் அம்பால் அறைந்தான். அவ்வம்பை கவசத்திலிருந்து பிடித்து அப்பால் இட்டபின் ஓங்கி அவனை அறைந்து கொன்றான் இடும்பன். அப்போர் வெறும் படுகொலையாக நிகழ்ந்துகொண்டிருந்தது.

சல்யரின் மைந்தர்கள் இருபுறமும் தேரில் வந்து சூழ்ந்தனர். “எங்களை அரசர் இங்கு வரச்சொன்னார். இடும்பர்களை தடுத்து நிறுத்தச்சொன்னார்” என்று கூவினான் ருக்மாங்கதன். “வில் ஒழியும் மட்டும் போர் புரிவோம், இளவரசே” என்றான் ருக்மரதன். “அதற்குள் அவர்கள் வந்துவிடுவார்கள்.” அவர்கள் இருவரும் தேரில் முட்டு மடக்கி படுத்தபடி இடும்பர்களின் கால்களை நோக்கி அம்பெய்தனர். இரு இடும்பர்கள் அலறியபடி நிலம்சரிய லட்சுமணன் அவர்களை அம்பெய்து கொன்றான். தேரின்மேல் தாவி வந்திறங்கிய கடோத்கஜன் ஒரே சுழற்றலில் ருக்மாங்கதனையும் ருக்மரதனையும் கொன்றான். ருக்மரதனின் தலை உடலில் இருந்து பறந்து நிலத்தில் எடையுடன் விழுந்தது. அதிலிருந்து உயிருள்ள சிப்பிகள்போல விழிகள் வெளியே தெறித்து குருதிக்குழாய்ச் சரடில் தொங்கின.

இடும்பர்கள் வெறியுடன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டனர். போர் மேலும் விசை கொண்டது. “அரசர் முன்னேறுக! இளையோரை துணை செய்க!” என்று சகுனியின் முழவொலி எழுந்துகொண்டிருந்தது. எவராலும் எதிர்க்கப்படாமல் இடும்பர்கள் மேலும் மேலுமென படைக்குள் புகுந்தனர். விந்தையான அவர்களின் குரல் அனைத்து செவிகளையும் மலைக்க வைத்தது. தோன்றும் இடத்திலிருந்து அக்கணமே எழுந்து மறையும் அவர்களின் விசை விழிகளை குழப்பியது. அவர்களை நோக்கி செலுத்தப்பட்ட அம்புகள் அனைத்தும் வீணாயின.

பீஷ்மர் தொலைவில் அவர்களை கண்டார். “செல்க! அவனை நோக்கி செல்க!” என்று அவர் தேரோட்டியிடம் தன் கைகளைக் காட்டுவதை காண முடிந்தது. ஆனால் அவரைச் சூழ்ந்திருந்த திருஷ்டத்யும்னனும் நகுலனும் சகதேவனும் சலிக்கா தொடர் அம்புகளால் அவரை சூழ்ந்து வேலியிட்டனர். மறுபக்கம் ஜயத்ரதன் சினந்து கடோத்கஜனை நோக்கி வர அர்ஜுனன் அவனை தடுத்து நிறுத்தினான். பூரிசிரவஸ் மிக அப்பால் துருபதனை எதிர்கொண்டான்.

உடைந்து புரண்டு மலையிறங்கி வரும் பாறைத்திரள்போல கடோத்கஜனின் படை கௌரவப் படையினரை சிதறடிப்பதை லட்சுமணன் கண்டான். “விரைக! விரைக! அவனை சூழ்ந்துகொள்க!” என்று தன் தம்பியருக்கு ஆணையிட்டு அவர்கள் அரைவட்டமென தன்னை சூழ்ந்து வர நாண் முழக்கியபடி கடோத்கஜனை நோக்கி சென்றான். அவன் முதலில் விட்ட அனைத்து அம்புகளும் வீணாயின. அம்பு தொடுக்கும் விரைவைவிட அவர்கள் எழுந்து தாவிச்செல்லும் விரைவு மிகுதியென அவன் அறிந்தான். அம்புகள் அவர்களை கரும்புகையை என கடந்துசெல்வதுபோல தோன்றியது. மானுடப் படைக்கலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள் என்று நெஞ்சு மலைத்தது.

கடோத்கஜன் லட்சுமணனை நோக்கி வரும் வழியிலேயே துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோரை தலையுடைத்துக் கொன்றான். ஒரு கணம் விழிமுனையால் தன் உடன்பிறந்தோர் சிதைந்து தேரின் உடைசல்களுக்கு நடுவே கிடப்பதைக் கண்டதும் லட்சுமணனின் தொடை துடிக்கத் தொடங்கியது. சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோர் வீழ்ந்தனர். ஹிரண்யபாகு, கக்ஷகன், பிரகாலனன், சுரபன், பங்கன், சலகரன், மூகன், முத்கரன், சுரோமன், மஹாஹனு, உச்சிகன், பிச்சாண்டகன், மண்டலகன் என கௌரவ மைந்தர் அறைபட்டு விழுந்தபடியே இருந்தனர். “நூறுக்குமேல் தம்பியர் கொல்லப்பட்டுவிட்டனர், மூத்தவரே” என கண்ணீருடன் துருமசேனன் கூவினான். லட்சுமணன் தன் நெஞ்சு ஒரு பெரும்பாறை என எடைகொண்டிருப்பதை உணர்ந்தான். “உளம் சலிக்கலாகாது. என் கை தளரலாகாது…” என அவனே தனக்கு ஆணையிட்டுக்கொண்டான். “தெய்வங்களே! மூதாதையரே! உடனிருங்கள்… தெய்வங்களே!”

காற்றில் உதிர்ந்த பல அம்புகளுக்குப் பின் பறக்கும் இடும்பர்களை அம்பால் தாக்கும் பிறிதொரு முறையை லட்சுமணன் கற்றுக்கொண்டான். அவர்கள் தாவி எழுகையில் கால்களால் உந்தப்பட்டு அசையும் தேரின் எதிர்த்திசையில் அவர்களின் நீள் நிழல்களுக்கு மேல் வான்நோக்கி அம்பால் அறைந்தான். நிழல் தலைக்கு மேல் தாவிச்சென்ற அவர்களை அடையாளம் காட்டியது. அவனுடைய அம்புகள் பட்டு முதல் இடும்பன் அலறியபடி தேர் மேல் விழுந்தான். துருமசேனன் “மூத்தவரே, கற்றுக்கொண்டேன்” என்று கூவினான்.

ஆனால் ஆள்நீளப் பேரம்புகூட அவர்களின் உயிர்பறிக்க இயலவில்லை. நெஞ்சில் பாய்ந்து இறங்கிய வேலம்பின் முனையை ஒடித்தெறிந்துவிட்டு பெரும்பற்கள் தெரிய முழவோசை எழுப்பி கைகளால் அருகிருந்த தேர்களையும் புரவிகளையும் அறைந்துடைத்தபடி அவன் அம்பு வந்த திசை நோக்கியே மீண்டும் வந்தான். லட்சுமணன் அவன் கால்களில் அம்பை செலுத்தினான். ஆனால் தோள்களே அவர்களின் கால்களும் என்று தெளிய தோள்கவசத்தையே குறிவைத்து அடித்தான். அது உடைந்து தெறித்த இடைவெளியில் அம்புகளால் அறைந்தபோது விசையிழந்து இடும்பன் நிலையழிந்தான். மீண்டும் மீண்டுமென அம்பு செலுத்தி அவன் இரும்புக்கவசங்களை உடைத்து உயிரை அணைக்க வேண்டியிருந்தது.

எழுவரை வீழ்த்தி முடிப்பதற்குள் அம்பறாத்தூணி ஒன்று முடிந்தது. துருமசேனன் இடும்பர் மூவரை வீழ்த்திவிட்டு “மூத்தவரே, பாறைகள்மேல் அம்பெய்வது போலிருக்கிறது” என்று கூவினான். “பறக்கும் யானைகள்போல் இருக்கிறார்கள்” என்றான் இளையோன் பிரவேபனன். மறுகணமே அவன் தலை கதையால் அறைபட்டு சிதறியது. “மூத்தவரே!” என அலறிய அமாகடன் கொக்கி ஒன்றால் பருந்தின் உகிரால் என கவ்வப்பட்டு வானிலெழுந்து சுழன்று தரைமேல் அறைபட்டான். அவன் தலையை ஒரு கதை அறைந்து சிதறடித்தது.

மழையில் மலை என கடோத்கஜனின் கவசங்களிலிருந்து குருதி வழிந்தது. அவன் கதை மாபெரும் ஊன்துண்டு என சிவந்திருந்தது. அது அதிர்வதுபோல் உளமயக்கு எழுந்தது. அவனை எதிர்கொள்ள முடியாமல் துருமசேனன் பின்னகர்ந்தான். கௌரவ மைந்தர்களான பூர்ணாங்கதன், குடாரமுகன், பூர்ணன், அவ்யகன், கோமலகன், வேகவான், ரக்தாங்கன் ஆகியோர் உடலுடைந்து விழுந்தனர். பைரவன், பிசங்கன், சம்ருத்தன், படாவாசகன், வராகன், தருணகன், துர்ப்பிரபன், துர்க்கிரமன் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஒருவனை ஒருகணத்திற்கு மேல் கடோத்கஜன் நோக்கவில்லை. ஓர் அறைக்குமேல் வீழ்த்தவில்லை. விழிகள் அசையும் விரைவில் கதை பறப்பதை லட்சுமணன் அன்றுதான் கண்டான்.

“மைந்தர் விலகுக… கடோத்கஜனிடமிருந்து மைந்தர் அகல்க… அரசரும் இளையோரும் அவனை சூழ்க!” என்று பின்னால் முரசுகள் ஓசையிட்டன. பாண்டவப் படையால் சூழப்பட்டிருந்த அலம்புஷனும் அவன் துணைவரும் அந்த வளையத்தை உடைத்துக்கொண்டு பேரோசையுடன் கடோத்கஜனை நோக்கி வந்தனர். இடும்பர்களும் ஊஷரர்களும் கதைமுட்டிக்கொண்டனர். கொக்கிக்கயிறுகளை வீசி ஒருவரை ஒருவர் இழுத்து கதையால் அறைந்தனர். ஏழு இடும்பர்களைக் கொன்று யானையொன்றின் மேல் கால்வைத்து ஏறிய அலம்புஷன் சகுண்டனுடன் கோத்துக்கொண்டான். உறுமியபடியும் கூச்சலிட்டபடியும் இருவரும் கொக்கியாலும் கதையாலும் போரிட்டனர்.

லட்சுமணன் இரண்டு இடும்பர்களை வீழ்த்தியபின் கடோத்கஜனை அணுகினான். அம்பைச் செலுத்தி அவன் கவசத்தை உடைத்தபோதுதான் அது கடோத்கஜனின் துணைவனாகிய உத்துங்கன் என்று தெரிந்தது. அவன் வீசிய கொக்கிக்கயிறு லட்சுமணனின் தேர்த்தூணில் பற்றிக்கொள்ள இழுவிசையால் தேர் சரிந்து முன்னால் சென்றது. கதை வருவதற்குள் லட்சுமணன் பாய்ந்து அப்பால் குதித்தான். தன் கதையுடன் பாய்ந்து யானையொன்றின் மேலேறி நின்றபடி மேலேழுந்த உத்துங்கனின் விலாவை அறைந்தான். உடைந்த கவசத்துடன் கீழே விழுந்த உத்துங்கன்மேல் பாய்ந்து அவன் தலையை கவசத்துடன் அறைந்து உடைத்தான்.

இடும்பன் ஒருவனை கொன்றபின் துருமசேனன் “மூத்தவரே, நோக்குக!” என்று கூவினான். கடோத்கஜன் அவன் இளையோர் துர்த்தகன், ராதன், கிருசன், விகங்கன், ஹரிணன், பாராவதன், பாண்டகன் ஆகியோரை கொன்றபடியே அவனை நோக்கி வந்தான். லட்சுமணன் திரும்பி ஓடி பிறிதொரு தேரில் ஏறிக்கொள்ள தங்கள் தேர்களுடன் குண்டாசியின் மைந்தர் தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும் ஊடே புகுந்தனர். “இவர்கள் இங்கே எப்படி வந்தனர்?” என்று லட்சுமணன் கூச்சலிட்டான். “அவர்களை பின்னகரச் சொல்… பின்னகர்க! பின்னகர்க!”

அவன் தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தபடி முன்னே செல்ல மிக அருகே பெரும்பற்களுடன் அறைகூவல் எழுப்பிய இடும்பன் ஒருவனை நீள் வேலால் ஓங்கி நெஞ்சில் குத்தி அவ்வேல் நுனியில் பற்றி தாவிப் பறந்து பிறிதொரு தேரிலேறிக்கொண்டான். இடும்பன் அந்த வேலுடனே எழுந்து அவன் தேரை அறைந்து உடைத்து தேர்ப்பாகனுடன் அள்ளி அப்பாலிட்டான். நுகத்தில் இருந்து சரிந்த புரவிகளை வெறிகொண்டு கைகளால் அறைந்து உடைத்தான். இன்னொரு வேலால் அவன் கழுத்தை ஓங்கிக் குத்தி சரித்தான் லட்சுமணன். அதற்குள் கடோத்கஜன் தீர்க்கநேத்ரனையும் சுரகுண்டலனையும் அணுகினான். அவர்கள் செயலிழந்து வெறித்து நோக்கிநிற்க அரைக்கணமும் விழிநிலைக்காமல் இரண்டு அறைகளால் அவர்களை நசுக்கியபடி அவன் முன்னால் சென்றான்.

சகுண்டனைத் தூக்கி மண்ணில் அறைந்து அவன் தலையை உடைத்தபின் நிமிர்ந்த அலம்புஷனை நோக்கி வந்து கதையால் அவன் தோளை அறைந்தான் கடோத்கஜன். அலம்புஷன் தெறித்து அப்பால் விழுந்து அவ்விசையாலேயே உருண்டு எழுந்து கதையையும் கொக்கிக்கயிற்றையும் எடுத்துக்கொண்டு கடோத்கஜனை முகம்கொண்டான். இருவரும் கதாயுதங்களால் அறைந்தனர். பாய்ந்தெழுந்து வானில் முட்டிக்கொண்டு அப்பால் சென்றிறங்கி அங்கிருந்து கழுகென மீண்டும் காற்றில் எழுந்தனர்.

“இவர்களைத் தடுக்க நம்மால் இயலாது. தந்தையர் வரவேண்டும்” என்றான் லட்சுமணன். “தந்தையர் வரவேண்டும்! தந்தையர் வருக!” என முழவுகள் அவன் ஆணையை ஒலிக்கத் தொடங்கின. அலம்புஷனைத் தூக்கி அறைந்து வெறும் கைகளால் அவன் தலையைப்பற்றி திருப்பி விறகுடையும் ஒலி எழ உடைத்து மும்முறை திருகி பிடுங்கி எடுத்து வலக்கையில் தூக்கி வெறிமுழக்கம் எழுப்பினான் கடோத்கஜன். இடும்பர்கள் நெஞ்சில் அறைந்து முழவுக்குரல் எழுப்பி அவனை சூழ்ந்துகொண்டனர்.

லட்சுமணன் எடுத்த அம்பு காற்றில் திகைத்து நிற்க விழிநிலைத்து நோக்கிக்கொண்டிருந்தான். அக்களத்தில் இருக்கும் எவரையுமே கடோத்கஜன் முன்பு அறிந்திருக்கவில்லை. வஞ்சமோ பகையோ அவனுக்கில்லை. அக்கள வெற்றியால் அவன் அடைவதும் ஒன்றுமில்லை. அதனாலேயே விழைவும் வஞ்சமும் கொண்டவர்களைவிட கொடிய போர்வீரனாக அவன் இருந்தான். அவன் அறியாமல் மேலும் மேலுமென பின்னகர்ந்தான். கடோத்கஜன் கதையையும் கொக்கிக்கயிற்றையும் சுழற்றியபடி அணுகி வந்தான். அலம்புஷர்கள் முழுமையாகவே கொல்லப்பட்டுவிட்டிருந்தனர். “வருக! வருக, இளவரசே! இன்று என் கணக்கில் நீங்களும் உண்டு!” என்று கூவியபடி கடோத்கஜன் அவனை நோக்கி வந்தான். “ஆம், இது என் தம்பியருக்காக!” என்று கூவியபடி லட்சுமணன் அவனை நோக்கி கதையுடன் பாய்ந்தான். “வேண்டாம் மூத்தவரே, பின்னகர்க!” என துருமசேனன் அவனுக்குப் பின்னால் கூச்சலிட்டான்.

கடோத்கஜனின் கதையும் அவன் கதையும் முட்டிக்கொண்டன. இரண்டாம் அறையிலேயே அவன் கதை தெறித்தது. கடோத்கஜனின் கதை அறைய அவன் உருண்டு விலகினான். தரையிலிருந்து வெடித்தெழுந்த செம்மண்ணும் கற்களும் அவன்மேல் பெய்தன. கொக்கி அவன் கவசத்தை பற்ற அவன் அதை தலைவழியாக கழற்றிவிட்டு தப்பி தாவி எழுந்து அகன்றான். வாய் முழவென ஒலிக்க பெரிய பற்களைக் காட்டி சிரித்தபடி கடோத்கஜன் அவனை அணுகினான்.

அப்பால் முரசொலி எழுந்ததும் லட்சுமணன் உடல்தளர்ந்தான். பாண்டவர்களின் சூழ்கையை உடைத்துக்கொண்டு துரியோதனனும் துச்சாதனனும் தேர்களில் அணுகி வந்தனர். துரியோதனன் வந்த விசையிலேயே கடோத்கஜனை கதையால் சந்தித்தான். நான்குமுறை அறை விழுந்ததுமே நிலைதடுமாறி பின்னால் சரிந்த கடோத்கஜன் துரியோதனனின் ஆற்றலை புரிந்துகொண்டு பாய்ந்து தேர்களுக்குமேல் தாவினான். துரியோதனன் யானை ஒன்றின்மேல் ஏறிக்கொண்டு கதையால் அவனை அறைந்தான். துச்சாதனன் யானைபோல பிளிறியபடி துரியோதனனை தாக்க எழுந்த இரு இடும்பர்களை கதையால் அறைந்து கொன்றான்.

துரியோதனனின் அறை நெஞ்சுக்கவசத்தை உடைக்க, அடுத்த அறைக்குத் தப்பி எழுந்து பறந்த கடோத்கஜன் துரியோதனன் கையிலிருந்து நீண்ட சங்கிலியில் பறந்து வந்த கதையால் அறைபட்டு பேரோசையுடன் தேர்மகுடம்மேல் விழுந்து மண்ணை அறைந்தான். துச்சாதனன் வெறிக்கூச்சலுடன் அவன் தலையை அறையப்போக அவன் கையை ஊன்றி எழுந்து பின்னால் தாவி இருமுறை துள்ளி பாண்டவப் படைகளுக்குள் புகுந்துகொண்டான். “தொடர்ந்து செல்க… இன்றே அவ்வரக்கமகனை கொல்க!” என்று துரியோதனன் கூவினான். கௌரவப்படை முரசொலியும் கொம்போசையும் சூழ தொடர்ந்துசென்றது.

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்


பயணம்- கடிதங்கள்

$
0
0

IMG_20181001_092515597

 

குளிர்ப்பொழிவுகள்- 4

குளிர்ப்பொழிவுகள் – 3

குளிர்ப்பொழிவுகள் – 2

குளிர்ப் பொழிவுகள் -1

அன்புள்ள ஜெ,

 

இரு தனங்களாக ஒரு வித உள்ளத் துள்ளலில் மனம் குதித்து தாவிக் கொண்டிருக்கிறது. தங்களிடம் சொன்னது போல் ஹம்பி பயணம் ஆனால் தனியாக, உன்மையிலேயே ஊர் பெயரெல்லாம் மறந்து விஜய நகர வீதியிலே வலம் வந்தக் கொண்டிருக்கிறேன். சொல்லவியலாத கற்பனை உலகிற்குள் அமர்ந்து தங்களுக்கு இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இப்போது மத்தங்கா மலை உச்சியில் உள்ளேன். சுற்றி நான்கு திசையிலும் கோயில்களும் கோபுரங்களும் மற்றும் துங்கபத்திரா கண்ணை நிறைக்கிறது. நேற்று சென்ற ஹசாரா ராமா கோயிலும், கிருஷ்ணன் கோயிலும் இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை. அரண்மனை மகாலும், கோபுரங்களும் என்னை சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
இன்னும் விஜய வித்தாளா கோயில் மட்டும் பார்க்க வேண்டியுள்ளது.நீங்கள் சொன்னது போல் ஆனைகொன்டி நாளை பயணத்திற்கு திட்டமிட்டுள்ளேன். எதோ இதையெல்லாம் தங்களிடம் இப்போது சொல்ல வேண்டுமென்றிருந்தது எழுதிவிட்டேன்.
நன்றியுடன்,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
அன்புள்ள ஜெ
நீங்கள் சென்ற வழியே சென்றுகொண்டிருக்கிறேன். தனியாக. படித்த நாளே கிளம்பிவிட்டேன். இப்போது சிவசமுத்திரம் பார்த்துவிட்டு அப்படியே ஜோக் அருவிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். பேருந்திலேயே செல்வதனால் கொஞ்சம் தனியாக உணர்கிறேன். ஆனால் மழைபெய்து கர்நாடகம் அப்படியே பச்சைப்பசேலென்று குளிர்ந்து காணப்படுகிறது. கூடவே செல்போனில் உங்கள் தளம். இரவுநாவலை வாசித்துக்கொண்டுமிருக்கிறேன்
நன்றி
ஆனந்த்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தாகூரின் கோரா

$
0
0

gora

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

அன்பு வணக்கங்கள். ஜாதிமதபேதத்திற்கு எதிராக அன்பைக் கோரும் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் “கோரா” நாவல் வாசித்தேன். நாவலின் சாராம்சம் “மதச்சார்பற்ற அன்பு”. இரண்டு வருடங்களுக்கு முன்பு நவீன இலக்கியத்திற்குள் தங்கள் அறம், கொற்றவை, ரப்பர், காடு மூலம் நுழைந்து இப்போது வெண்முரசில் “வெய்யோன்” வரை வந்திருக்கிறேன். தினமும் தங்களின் இணைய எழுத்துக்கள் மேலும் மேலும் வாசிப்பின் இனிமையைத் தூண்டுகின்றன. தல்ஸ்தோயைப் போல தாகூரைப் போலத் தாங்களும் மனித இனத்தின்மேல் கருணைக்கண்கொண்டு எழுதுவதாகவே உணர்கிறேன்.

 

பாலாஜி பிருத்விராஜ் எழுதிய கிறிஸ்துவின் இறுதிச் சபலம் வாசித்து என் நிலைப்பாடு பின்வருமாறு மாறியது. உருவமில்லா மெய்மையே தெய்வம் என்றும் அதை நோக்கிய பயணத்தில் தன் சுகங்களைத் தியாகம் செய்து எத்தனை துயரங்கள் இடர்பாடுகள் வந்தாலும் உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்பவர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள் என்றும். அதனால் நான்  தெய்வமாக வழிபடும் இயேசு, புத்தர், மேரி இவர்களெல்லாம் தெய்வத்திற்கு நிகரானவர்களாகிவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் மெய்மை நோக்கிச் செல்லுகையில் தன் இன்ப துன்பங்களை சகித்துக்கொண்டவர்கள். இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்ற எளிய மனிதர்களின் விழைவினால் உருவமில்லா மெய்மைக்கு உருவமாகியிருக்கிறார்கள் என்ற புதிய எண்ணம் தோன்றியிருக்கிறது.

 

இயேசுவைப் போல் பகைவனிடத்திலும் அன்புகாட்டுவதோ புத்தரைப்போல் ஆசையை அடக்குவதோ  மேரியைப்போல் பொறுமையும் மனத்திடனும் கொண்டிருப்பதோ எளிய மனிதர்களால் இயலாது. இனிமேலும் அவர்கள் இடத்தை யாராலும் நிரப்பவும் இயலாது. ஆனால் இந்த உயர்ந்த எண்ணங்கள் கொண்டிருப்பவர்கள் இவ்வுலகில் பிறந்து அறிஞர்களாகவும் கலைஞர்களாகவும் தத்துவவாதிகளாகவும் தலைவர்களாகவும் இலக்கியவாதிகளாகவும் இலட்சியவாதிகளாகவும் புரட்சியாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் வாழ்ந்து மனித குலத்திற்குத்தாம் செய்ய வேண்டிய கடமையாக தர்மமாக எண்ணி செய்ய வேண்டியதைச் செய்திருக்கிறார்கள். சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இவர்கள் அனைவருமே தெய்வத்திற்கு நிகராகக் கொள்ளக்கூடியவர்கள்.

 

இவ்வுணர்வெழுச்சியில் தன் வாழ்வை அடிக்கடி சுயபரிசோதனை செய்துகொண்டு மெய்மையை அடையும் இலட்சியத்துக்காகப் போராடிய காந்தி அவ்விடத்துக்கு உயர்கிறார். அதேபோல் தன் இனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவேண்டும் என நினைத்த மண்டேலா போன்ற பெருந்தலைவர்கள் தெய்வத்துக்கு நிகராக மதிக்கத்தக்கவர்கள்.

 

இவர்கள் போல் களத்தில் இறங்கி செயல்படாமல் மொழியாக்கங்கள் மூலம் உலக இலக்கியங்கள் படைத்தவர்கள், “எழுத்தாளர்கள்”. களத்தில் இறங்கி பணியாற்றுவதைவிட எழுத்தில் மெய்மையைக் காணச்செய்வது மிகமிகக் கடினம். நான்கூட நினைப்பதுண்டு. நம்மால் முடிந்த உதவியை ஒருதொண்டாக சேவைபோல் நினைத்து ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து பணிபுரிவோம் என்று. ஆனால் கோராவை வாசித்தபிறகு அது அவ்வளவு எளிதல்ல எனப் புரிந்தது. அத்தனை சேவையுள்ளமும் அறிவுத்தெளிவும் கொண்ட கௌர்மோகனாலேயே மனிதர்களை சமாளிக்க முடியவில்லை. ஏன் வலிந்து பிராமணன்  போன்ற தோற்றமுள்ள ஒருவன் நம்மிடத்திற்கு வந்து நமக்கு தொண்டாற்றவேண்டும் என சந்தேகிக்கிறார்கள். அவன் மதரீதியான பல விளக்கங்கள் அளித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

களத்தில் இறங்கிப் பணிபுரிபவர்களிடத்தில் இம்மாதிரியான சிக்கல்கள். தொண்டு என்பது ஏற்றுக்கொள்வோருக்கு மட்டுமானதல்லவே. ஆனால் எழுத்து மூலம் மனித இனத்திற்கு மெய்மையை உணர்த்தவேண்டும் என வந்துவிட்டால் அது அனைவருக்குமானது அல்ல நிச்சயமாக. மனதளவில் இளமை முதற்கொண்டே அதற்கென தாகமும் தேடலும் கொண்டவர்களுக்காக மட்டுமே. அவர்கள் எவ்வாறு மனிதர்களில் சாதிமதம் பார்ப்பதில்லையோ அவ்வாறே தன்மொழி பிறமொழியென பிரித்துப் பார்ப்பதில்லை. அவனுடைய குறிக்கோள் மெய்மை மட்டுமே.

 

ஆரம்பத்தில் நான் வாசிக்க வருகையில்  என் தாய்மொழியைத் தாண்டி அடுத்த மாநிலத்து ஆக்கங்கள் பிற நாட்டு இலக்கியங்கள், அவை தமிழில் இருந்தாலும்  அவற்றை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஆனால் தங்கள் மெய்மை நோக்கிய எழுத்து என்னை தமிழ்நாட்டைத் தாண்டி கேரள, வங்காள இலக்கியத்திற்கும் நம் பாரத தேசத்தைத் தாண்டி ரஷ்ய இலக்கியத்திற்கும் அழைத்துச் சென்றது. தகழி சிவசங்கரப்பிள்ளை, ரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் பானர்ஜி, லியோ டால்ஸ்டாய், பியோதர் தஸ்தவ்யேஸ்கி இவர்களின் படைப்புகளுக்குள் நுழைந்தேன்.

 

பலநாட்களாக “கோரா” வை நூலகத்தில் அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டு செல்வதோடு சரி. ஏனோ அந்த வார்த்தை எனக்கு அணுக்கமாகவில்லை. ஆனால் மூன்று மாதங்களாக பொறுமையுடன் “போரும் அமைதியும்” வாசித்து  வாழ்வின் முழுமைத் தரிசனத்தை நான் கண்டடைந்தபோது எனக்குள் எழுந்த பேரானந்தமும் மனவெழுச்சியும் இன்னுமின்னும் வாழ்க்கைத் தத்துவங்களை அறிவதிலேயே நாட்டம் கொண்டது.

 

காண்டீபம் அவ்வாறு மெய்மை நோக்கிய நாவல். அடுத்து வெய்யோனிலும் கர்ணனி்ன் பாத்திரப்படைப்பு இறுதியில் மெய்மை நோக்கியே நிறைவுபெறுகிறது. அடுத்த வரிசை நாவல் “பன்னிரு படைக்களம்” கைக்கு வருவதற்குள் கோரா என்றால் என்ன எனத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆவலுடன் எடுத்து வந்து வாசிக்க ஆரம்பித்தேன். அது கல்கத்தாவில் வசிக்கும் கௌர்மோகனின் சுருக்கப்பெயர். அவன் ஒரு ஹிந்துவாக இருக்கும்போது  பாரததேசத்தைப் பற்றிய அவன் கொள்கைகளையும் தான் ஒரு ஐரிஷ்காரன் என்று தெரிந்ததும் மதத்தைப் பற்றி அவன் அடைந்த திறப்புக்களையும் வாசிக்கையில் உண்மையான விடுதலையின் அர்த்தம் புரிந்தது.

 

 

அவன் உயிர்நண்பனான வினயன் ஒரு பிராமணன். ஆனால் கோராவை மீறி, ஹிந்து சமூகத்தைச் சாராத பிரம்மசமாஜப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். இருவருக்குமிடையில் நிகழும் உரையாடல்கள் ஹிந்து சமூகத்திற்கும் பிரம்மசமாஜ சமூகத்திற்குமிடையே நடக்கும் உரையாடல்கள். ஹிந்து சமூகத்தில் ஆசாரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என கோராவின் கூற்றிலிருந்து புலப்படுகிறது. கோராவின் அண்ணன் மஹிம் பாத்திரமானது என் பெண்ணின் திருமணம் நல்லவிதமாக முடியட்டும். அதன்பிறகு யார்வேண்டுமானாலும் எந்த மதம் வேண்டுமானாலும் மாறிக்கொள்ளுங்கள், என்று கூறுவதிலிருந்து சடங்கு சம்பிரதாயங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தெரியவருகிறது.

 

 

பிரம்மசமாஜத்துத் தலைவராக இருக்கும் ஹாரான்பாபு தன் சமாஜத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்காக எத்தகைய இழிசெயலையும் செய்யத்துணிகிறார்.  ஆனால் பிரம்ம சமாஜத்துப் பெண்கள் லலிதாவும் ஸுசரிதாவும் பிரம்மசமாஜ சமூகத்திற்கு எதிராக ஹிந்து பிராமணனான வினயனையும் எந்தமதமுமில்லாதவனாக மாறிவிடும் கோராவையும் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளில், சமூகத்தைவிட ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் நம் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

tagore
இந்நாவலில் சமூகத்தைவிட சாதியைவிட மதத்தைவிட மனிதனே முக்கியம், அன்பே பிரதானம் என பிரம்மசமாஜத்துப் பெண்களின் குடும்பத்தலைவர் பரேசபாபுவும் அன்னையில்லா வினயனுக்கு அன்னை போன்றவளும்   பெற்றோர் இல்லாத கோராவை வளர்த்ததால் ஹிந்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவளுமான பெண்மணி அனந்தமயியும் வாழ்ந்துகாட்டுகிறார்கள். பரேசபாபுவை தன் குருவாகவும் அனந்தமயியை தான் காணத்துடித்த பாரத தேசத்தாயாகவும் கோரா கண்டுகொண்டு அவர்களை வணங்கி அவர்களின் பாதத்தூளிகளைக் கொண்டபோது என் கண்களும் கலங்கியது.

 

இந்நாவல் இந்தியாவின் முக்கிய மதங்களைப் பற்றியும் மதங்களின்மேல் மக்கள் கொண்டிருக்கும் மூர்க்கமான பற்றைப் பற்றியும் பெண்கல்வி பற்றியும் பேசுகிறது. பெண்களின் பங்கு இல்லாமல் எந்த நாட்டையும் சீர்திருத்தவியலாதென கோரா கண்டுகொள்கிறான். இயல்பாக அது இந்நாவலில் நிகழ்கிறது. கோரா, வினயன், லலிதா, ராதாராணி இவர்களின் சமூகத்துடனான போராட்டங்கள் ஒவ்வொருவரையும் எது பெரிது எது உயர்வானது என சிந்திக்க வைக்கும். பரேசபாபுவும் அனந்தமயியும் தாகூர் கண்டடைந்த மெய்மையாளர்கள். ஒரு இனிய தருணத்துடன் நாவல் முடிவுற்றாலும் பரேசபாபு லலிதாவுக்கு எழுதிய கடிதத்தில்,  “திருமணத்திற்கு பிறகுதான் துணிவுதேவை. வாழ்வு முழுவதிலும் இத்தகைய தீரமான செயல்களை நடத்த வேண்டும். ஏனென்றால் சாகசத்துடன் தம் வாழ்வை புதுவழியில் திருப்பிப் புதிய பிரச்சனைகளை ஆராய்பவராலேயே சமூகம் உயர்வடையும்” என்று சொல்வதிலிருந்து அவர்களின் பிற்கால வாழ்க்கையில் சமூக நெருக்கடி தொடராமல் இருக்காது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தவகையில் இது எக்காலத்திற்குமான நாவலாக நிலைகொள்கிறது. எந்த சமூகத்தினராயினும் நுண்ணோக்குடையோர் இந்நாவலை வாசிக்கையில் ஓர் அகப்போராட்டம் நிகழும். அவர்களுக்கானது இந்நாவல்.

 

அன்பை நோக்கி அப்போராட்டம் முன்னகர்கையில் அக்கணம் எழுத்தாளன் வாசகனால் தெய்வநிலைக்கு நிகராக  உயர்த்திவைக்கப்படுகிறான். நான் இந்நாவலை வாசித்து கண்கலங்கியபோது மானசீகமாக தாகூர் அவர்களின் பாதங்களில் பணிந்து வணங்கினேன்.

 

 

அன்பு

கிறிஸ்டி.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நூல்களை அனுப்புதல்…

$
0
0

sura

 

அன்புள்ள ஜெ

 

இணையச்சூழலில் ஒரு விவாதம். நண்பர்கள் நடுவே அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம். நூல்களை நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அனுப்புவது சரியா என்று. சிலர் நூல்களை சினிமாக்காரர்களுக்கு அனுப்புகிறார்கள், அதெல்லாம் இழிவு என்று பேசப்பட்டது. நூல்வெளியீட்டுவிழாக்களே தவறு என்று ஒரு பேச்சு ஓடியது. நானெல்லாம் நூல்களை எவருக்குமே அனுப்பியதில்லை என்று ஒருவர் சொன்னார். நான் என் கவிதைத் தொகுதியை உங்களுக்கு அனுப்பியிருந்தேன். நீங்கள் பதிலும் போட்டிருந்தீர்கள். ஆனால் அதை என்னை முன்னிறுத்தும் செல்ஃப் புரமோஷன் என நினைக்கிறீர்களோ என்று சந்தேகமாக இருந்தது. ஆகவே இந்தக்கடிதம்

 

செந்தில்குமார்

gnanani

அன்புள்ள செந்தில்குமார்,

 

1985 ல் நகுலன் எனக்கு அவருடைய நூல் ஒன்றை அனுப்பியிருந்தார். நான் சங்கடத்துடன் சுந்தர ராமசாமியிடம் அதைப்பற்றிச் சொன்னேன்.  புன்னகைத்து, “அவர் வேற என்ன செய்வார், அவரே அச்சடிச்சது, மட்கிப்போறதைவிட யாராவது படிச்சா நல்லதுதானே?” என்றார்.

 

அதுதான் அன்றைய நிலை. பெரும்பாலான நூல்கள் ஆசிரியரால் வெளியிடப்படுபவை. குறைந்தது 400 பிரதி அச்சிடவேண்டும். 100 பிரதிகளை கடைகளுக்குக் கொடுக்கலாம். எஞ்சியவை தெரிந்த வாசகர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும்தான்.

 

இலக்கியம் ஓர் அகங்கார அடையாளம் அல்ல. அது ஒரு அறிவுச்செயல்பாடு. அப்படி நம்பினீர்கள் என்றால் பிறருக்கு அளிக்க என்ன தடை? ஓர் இயக்கச்செயல்பாட்டில் நீங்கள் துண்டுப்பிரசுரத்தை அளிக்கமாட்டீர்களா என்ன? எத்தனை பேர் படிக்கிறார்களோ அத்தனை நன்று என்றுதானே நினைப்பீர்கள்? உங்கள் எழுத்தைப் பரவலாக்குவதென்பது உங்களுக்குப் புகழ்தேடுவது மட்டும்தானா? அது உங்கள் எண்ணத்தைப் பரப்புவது, உங்கள் செயல்பாட்டை விரிப்பதும்கூடத்தானே? முதன்மையாக அது ஒரு பண்பாட்டுச்செயல்தானே?

 

 நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடன்

இல்லை, நான் இலக்கியப்படைப்பை அளித்தால் என்னை குறைவாக நினைப்பார்கள் என்பதெல்லாம் தாழ்வுமனப்பான்மை. தன் படைப்பைப்பற்றி தன்னம்பிக்கை கொண்டவர்கள் எங்கும் தன் நூலுடன் சென்று நிற்க முடியும்.

 

மூத்த எழுத்தாளர்களுக்கு நூல்களை அனுப்புவது, கைப்பிரதியை அனுப்புவது, அவர்களின் கருத்துக்களைக் கேட்பது எல்லாம் உலகமெங்கும் இலக்கியச் சூழலில் நிகழ்ந்து வருபவை. இலக்கியம் என்பது ஓர் ஒட்டுமொத்தச் செயல்பாடு என அறிந்தவர்கள் முந்தையோரின் கருத்துக்களைச் செவிகொள்வார்கள். அதற்காக முயல்வார்கள்.

 

மலையாள எழுத்தாளர் ஆனந்த் தான் எழுதிய முதல்நாவலின் கைப்பிரதியுடன் எம்.கோவிந்தனைப் பார்க்கச்சென்ற கதை கேரளத்தில் புகழ்பெற்றது. ஆனந்த் அதுவரை எதுவுமே எழுதியதில்லை. அவருக்கு தென்னிந்தியாவில் எவரையுமே தெரியாது. கோவிந்தனைப் பற்றி கேள்விப்பட்டு பார்க்க வந்தார். வீட்டில் கோவிந்தன் இல்லை. கைப்பிரதியை சன்னல் வழியாக உள்ளே போட்டுவிட்டுச் சென்றார். அவரிடம் மாற்றுப்பிரதிகூட இல்லை. கோவிந்தன் அதை வாசித்து, பிரசுரிக்க முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனந்த் எழுத்தாளராக அறிமுகமானார்.

 

பாவண்ணன்

பாவண்ணன்

நான் எழுதவந்தபோதே பிரசுர நிறுவனங்களின் பின்புலம் அமைந்தது. ரப்பர் நாவலை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. 10 பிரதிகள் அளிப்பார்கள். அவற்றை ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, ஞானி, நாஞ்சில்நாடன், அசோகமித்திரன் என என் மதிப்புக்குரியவர்களுக்கு உடனே அனுப்பிவைப்பேன். பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர் என ஒரு எழுத்தாளச் சுற்றமும் அன்றிருந்தது. பிரதிகள் போதாது. எனவே மேலும் பிரதிகள் காசுகொடுத்து வாங்குவேன்.

 

ஆனால் நான் நூல்களை இதழ்களுக்கு மதிப்புரைக்கென அனுப்பியதே இல்லை. அது கூடாது என்று அல்ல. அதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன். எனக்கு அதைச்செய்ய அன்று தோன்றவில்லை. இன்று அவசியமில்லை.

 

நூல்களை முக்கியமான மனிதர்களுக்கு அனுப்பலாமா? அவர்கள் உங்களுக்கு எவ்வகையில் முக்கியம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. வாசகர் என எண்ணும் ஒருவருக்கு, அன்பின்பொருட்டு அளிப்பதில் பிழை ஒன்றுமில்லை. வாசிக்கும் வழக்கமில்லாத பெரியமனிதர்களை நயம்செய்யும்பொருட்டு அனுப்புவது பயனற்றது, சொல்லப்போனால் சிறுமையையே அளிக்கும். அவர்களுக்கு உங்கள் நூல்கள் எவ்வகையிலும் முக்கியமாகத் தோன்றாது.

nirmalyaa

நான் அவ்வாறு எந்தப் பெரியமனிதருக்கும், சினிமாக்காரருக்கும், அரசியல்வாதிக்கும் நூல்களை அனுப்பியதில்லை.  அவர்களில் வாசிக்கும் வழக்கம் கொண்டவர்கள் நூல்களைப் பணம்கொடுத்து வாங்கி வாசிப்பார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்.

 

மூன்று உதாரணங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் என்மேல் மதிப்பு கொண்டவர். என் நூல்களை உடனே வாங்கிப்படித்து கடிதங்களும் எழுதுவார். அவருக்கு நூல்களைச் சிபாரிசு செய்ய ஒரு குழுவே இருந்தது. மணிரத்னம் அவருக்குத்தேவையான நூல்களை உடனே வரவழைத்து தீவிரமாகப் படித்துவிடுவார், வாயே திறக்கமாட்டார். கருப்பையா மூப்பனாரும் நூல்களை வாங்கி வாசிப்பவர். அவருக்கும் நூல்களை பரிந்துரைக்க குழு உண்டு. பிறர் அனுப்புவதனால் அவர்கள் நூல்களை வாசிப்பதே இல்லை.

 

சென்ற இருபத்தைந்தாண்டுகளில் நாஞ்சில்நாடன் அவருடைய எல்லா நூல்களையும் எனக்கு அனுப்பித் தந்திருக்கிறார். என்னுடன் மனத்தாங்கலில் இருந்தபோதும் சுந்தர ராமசாமி எல்லா நூல்களையும் எம்.எஸ். வசம் கொடுத்தனுப்பியிருக்கிறார். தேவதேவனும் மனுஷ்யபுத்திரனும் அவர்களின் நூல்களை எனக்கு அனுப்புவதுண்டு. யுவன் சந்திரசேகர் அவன் நூலை எனக்கு அனுப்பாவிட்டால் கூப்பிட்டு நாஞ்சில்நாட்டுக் கெட்டவார்த்தையே சொல்வேன்.

 

என் நண்பர் நிர்மால்யா [மணி] என் நூல்களை அனுப்பிப் பெறுவது ஓர் உரிமை என்றே நினைப்பவர். அத்தனை நூல்களையும் அனுப்பியிருக்கிறேன். முறைப்படி வந்துசேராவிட்டால் மனத்தாங்கல் அடைவார். அவரளவுக்கே எனக்கு அணுக்கமானவரான நண்பர் அன்பு எல்லா நூல்களையும் வாங்கிப்படிப்பார். இன்றுவரை ஒருநூல்கூட அளித்ததில்லை

krishnan article vallavan oruvan

இன்று ஏகப்பட்ட நூல்கள் வந்துவிட்டன. ஆகவே பொதுவாக நூல்களை எவருக்கும் அனுப்புவதில்லை. நினைவு வைத்துக்கொள்வதும் கடினம். சிறில் அலெக்ஸ், எம்.ஏ.சுசீலா போன்றவர்கள் அவர்களுக்கு நான் சமர்ப்பணம் செய்த நூல்களை ஓராண்டுக்குப்பின்னரே அறியவந்து வாங்கி வாசித்தார்கள். ஈரோடு கிருஷ்ணனுக்கு புல்வெளிதேசம் நூலை நான் சமர்ப்பணம் செய்திருந்தேன். அதை காசுகொடுத்து வாங்கமாட்டேன் என அவர் நிலைபாடு எடுக்க, கொடுக்கமாட்டேன் என நான் நிலைபாடு எடுக்க இரண்டாம்பதிப்பு வந்தபோது நான் இறங்கிவந்து ஒருபிரதி அளித்தேன். படித்துப்பார்த்து  ‘நல்லாத்தான் இருக்கு’ என்றார்.

 

என் வீட்டுக்கு வரும் நண்பர்கள், வாசகர்களுக்கு அவர்களுக்கு நான் அளிக்கவிரும்பும் நூலை கொடுக்கும் வழக்கம் உண்டு. அது அத்தருணத்தை நினைவுகூர்வது மட்டும் அல்ல, அவர் வாசித்தாகவேண்டும் என நான் நினைக்கும்நூலாகவும் இருக்கும்

 

நூல் வணிகப்பொருள் அல்ல. வணிகப்பொருளுக்கு நுகர்வும் அதற்கேற்ற விலையும் மட்டும்தான் உண்டு. நூலுக்கு பல அர்த்தங்கள். அது ஒர் அன்புப்பரிசு, ஓர் அறிவுப்பரிமாற்றம். பல தருணங்களில் அதைவிடவும் மேல். அதை எவருக்கு எப்படி அளிக்கவேண்டும் என்பது உங்கள் அகத்தால் நீங்கள் முடிவுசெய்யவேண்டியது.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25

$
0
0

bowகொந்தளிக்கும் படை நடுவே அலையில் எழுந்தமைந்து சுழன்றுகொண்டிருந்த அபிமன்யூவின் வலப்பக்கம் பின்காப்போனாக தேரில் வில்பூண்டு நின்றிருந்தான் பிரலம்பன். சாத்யகி அபிமன்யூவின் தேரிலேறி அதை பின்னால் ஓட்டிச்சென்று படைகளில் ஆழ்த்தி நிறுத்தியபின் பாய்ந்திறங்கி மீண்டும் தன் தேரிலேறிக்கொண்டதும் அவன் தேரிலிருந்து இறங்கி அபிமன்யூவை நோக்கி ஓடினான். நேர் எதிராக திருப்பப்பட்டு புரவிகள் கால்விலக அசைவிழந்த தேரிலிருந்து பாய்ந்திறங்கிய அபிமன்யூ “இன்னொரு தேர்! இன்னொரு தேர் கொடுங்கள் எனக்கு!” என்று கூவினான்.

பிரலம்பன் அவன் அருகே சென்று கைகளைப்பற்றி “தாங்கள் புண்பட்டிருக்கிறீர்கள், இளவரசே” என்றான். “இல்லை, எனக்கொன்றும் ஆகவில்லை. என்னை போர்முனையிலிருந்து யாதவர் திருப்பிக்கொண்டுவந்துவிட்டார். இன்று அம்முதியவரின் குருதி கண்டு திரும்புவேன். என்னை எவரும் வெல்லவியலாது. இப்புவியில் எவராலும் இயலாது! இதோ கிளம்புகிறேன்” என்றான் அபிமன்யூ. காய்ச்சலில் பிதற்றுபவன் போலிருந்தான். பிரலம்பன் “பொறுங்கள் இளவரசே, இக்கவசங்களை கழற்றிப் பார்ப்போம். அம்புகள் ஏதேனும் தைத்திருந்தால் முதலில் அவற்றைப் பிடுங்கி ஊனைத் தைத்து இளகாமல் கட்டுப்போடுவோம்” என்றான்.

“நான் களம்புகுவேன்… களம்புகுவேன்… தேர் கொண்டுவருக!” என்ற அபிமன்யூ அவன் கையை உதறி “விடு, மூடா… என்னை என்ன நோயாளி என்று எண்ணினாயா? விடு!” என்று கூச்சலிட்டான். “ஆம், நாம் மீண்டும் களம்புகவே உறுதி கொண்டுள்ளோம். ஆனால் அதற்கு முன் புண்களை பார்ப்போம். புண்களை கட்டிக்கொண்டால் நாம் மேலும் உறுதிகொண்டு களம்நிற்போம்” என்றான் பிரலம்பன் மீண்டும் அவன் தோளைப்பற்றி நிறுத்தியபடி. “எனக்கு புண்ணில்லை. எங்கே என் தேர்? என் தேரை கொண்டுவருக!” என்று அபிமன்யூ கழுத்துத்தசைகள் இழுபட, நெற்றிநரம்புகள் புடைக்க கூவினான்.

“இளவரசே, போர்க்களத்தில் புண்ணின் வலி தெரியாது… குருதியிழப்போ நரம்பு வெட்டோ நிகழ்ந்திருந்தால் களத்தில் உங்கள் அம்புகள் குறிதவறும்” என்றபின் அபிமன்யூவின் ஒப்புதலின்றியே தோளில் கைவைத்து தோல்பட்டையை இழுத்து அவிழ்த்து மார்புக்கவசத்தை விலக்கினான் பிரலம்பன். அவற்றிலிருந்து குருதி சொட்டியது. தோள்கவசத்தையும் தொடைக்கவசத்தையும் அவிழ்த்தான். அபிமன்யூ குனிந்து பார்த்து “பார்… விரைவாகப் பார்” என்றான். அபிமன்யூவின் உடம்பெங்கும் சிறுபுண்கள் நிறைந்திருந்தன. அறைபட்ட கவசங்கள் உருவாக்கிய சிராய்ப்புகள். சிற்றம்புகளும் உடைந்த தேர்ச்சிம்புகளும் பாய்ந்த ஆழ்புண்கள். தோளுக்கருகே அம்பு ஒன்று ஆழ தறைத்திருந்தது.

“இது ஒன்றுமில்லை. ஒவ்வொருநாளும் இதைவிட அதிகமான புண்ணுடன்தான் பாடி மீள்கிறேன்” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “பொறுங்கள்” என்றான். அதற்குள் மருத்துவஏவலர் இரும்புக்கவசங்களை ஆமைஓடுபோல முதுகுக்குமேல் அமைத்து முற்றாக குனிந்து ஊர்ந்து வந்தனர். தலைக்குமேல் அம்புகள் சீழ்க்கை ஓசையுடன், சிறகதிர்வோசையுடன் சென்றுகொண்டிருந்தன. சில அம்புகள் அவர்களின் கவசங்களுக்குமேல் விழுந்து பொறியெழ உரசி அகன்றன. “இங்கே, இங்கே” என பிரலம்பன் கூவினான். அவர்கள் மருந்துப்பெட்டிகளுடன் அருகணைந்து அபிமன்யூவை சூழ்ந்தனர். “இந்தத் தேருக்கு அடியில் அமர்க, இளவரசே! தங்களுக்காக அல்ல, எங்களுக்காக” என்றான் மருத்துவன். அபிமன்யூ தேர்ச்சகடங்களுக்கு நடுவே அமர்ந்தான்.

பிரலம்பன் உடைந்த தேரொன்றின் தட்டை எழுப்பி அதை கொண்டு தன்னை மறைத்துக்கொண்டு அருகே நின்றான். அதன்மேல் அம்புகள் சீற்றம்கொண்ட வண்டுகள் என வந்து அறைந்துகொண்டிருந்தன. அவர்களுக்குப் பின்னால், பாண்டவப் படையின் பின்நிரையிலும்கூட அம்புபட்டு அலறி விழும் வீரர்களின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. உயரமான பீடத்தேர்களில் நின்று தொலையம்புகளை நீள்வளைவாக வானில் செலுத்தி முன்நிரைப்படைக்கு மேலாக அம்புகளை கௌரவப்படை நோக்கி ஏவிக்கொண்டிருந்தனர் பின்னணி வில்லவர். கௌரவர்களின் தொலையம்புகள் இரைதேடும் கழுகுகள்போல் தலைக்குமேல் பறந்து வந்து விரைந்திறங்கி படையினரை கொன்றன. களத்தில் எங்கு நின்றாலும் வானிலிருந்து சீற்றம்கொண்ட அம்புகள் வந்து உயிர்கொள்ளும் என்று தோன்றியது.

மருத்துவ ஏவலர் அபிமன்யூவை தோள்பற்றி அமரச்செய்து விரைந்த கைகளால் அவன்மேல் தைத்த அம்புகளை பிடுங்கி எடுத்து புண்வாயில் கந்தகமும் மெழுகும் கலந்த பஞ்சை வைத்து அழுத்தி மரவுரியால் கட்டினர். தோள்புண்னை ஒருவன் குதிரைவால் முடியால் தைத்தான். “விரைவு… பொழுதணைந்துகொண்டிருக்கிறது!” என்றான் அபிமன்யூ. “இதோ” என்றான் மருத்துவன். இடையிலிருந்த அம்பு உள்ளே சற்று திரும்பியிருந்தமையால் தசையை கவ்வியிருந்தது. பிடுங்கியபோது தசை கிழிய அவன் பற்களை இறுகக் கடித்தான். “ஒவ்வொரு புண்ணும் என்னை வெறிகொள்ளச் செய்கிறது. இன்று நூறு தலைகொள்ளாது திரும்புவதில்லை. முதல் தலை அம்முதியவருடையதே. பிரலம்பரே, ஒன்று தெளிந்துவிட்டது. அவரைக் கொன்று குருதியாடாது இப்போர் எவ்வகையிலும் முடிவுறாது” என்றான் அபிமன்யூ.

குதிரை வாலால் கிழிந்த தசையை மூன்று முடிச்சுகள் போட்டு இறுக்கி தேன்மெழுகும் அரக்கும் கலந்த மரவுரியால் இறுக்கிக் கட்டிவிட்டு “தசை மட்டுமே கிழிந்துள்ளது” என்றார் மருத்துவர். “அதை நானே அறிவேன். என் கவசங்களை எடு” என்றபடி அபிமன்யூ எழுந்தான். மருத்துவன் “தாங்கள் விரும்பினால்…” என்று சொல்லி சிறு தாலத்தை நீட்ட அதிலிருந்த இரண்டு அகிபீனா உருண்டைகளை எடுத்தான். “இரண்டு சற்று மிகுதி, இளவரசே” என்று அவன் சொல்வதற்குள் இரண்டையும் வாய்க்குள்ளிட்டு கடைவாயில் அதக்கிக்கொண்டான். அவன் கைகாட்ட ஏவலர் அவன் கவசங்களை இழுத்துக்கட்டினர். “கிளம்புக!” என்று சொல்லி அபிமன்யூ புண்பட்ட குதிரைகளை நீக்கி புண்படாத குதிரைகள் கட்டப்பட்டு ஒருங்கி நின்றிருந்த புதிய தேரில் ஏறிக்கொண்டான்.

தேர்ப்பாகன் நிமிர்ந்து நோக்க “பீஷ்மரின் இடம் நோக்கி” என்றான். தேர்ப்பாகன் தன் சவுக்கை வீச தேர் எழுந்து விசைகொண்டது. உடன்சென்றபடி பிரலம்பன் “நம் படையினர் அதோ தொடர்ந்து பின்வாங்கி வருகிறார்கள். அங்குதான் பீஷ்மர் இருக்கிறார்” என்றான். “பிறை ஏற்கெனவே இரண்டு துண்டுகளாக உடைந்துவிட்டது. அதை இணைக்கும்பொருட்டு திருஷ்டத்யும்னரும் சாத்யகியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.” அபிமன்யூ “செல்க! செல்க!” என்று கூவினான். தேர் விரைவுகூடியது. முன்னால் நின்றிருந்த தேர்கள் விலகி வழிவிட நீரிலிருந்து மீன் என எழுந்தது.

அபிமன்யூ தொழும்பனிடம் கைகாட்ட அவன் கணுமூங்கிலை ஊன்றி காற்றிலென மேலெழுந்து நோக்கி அதே விரைவில் கீழிறங்கி உரத்த குரலில் “போர் எட்டு முனைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, இளவரசே. கிருபரும் துரோணரும் ஒருங்கிணைந்து நமது படைகளை தாக்குமிடத்தில் துருபதரும் யுதிஷ்டிரரும் நகுல சகதேவர்களும் அவர்களை தடுத்திருக்கிறார்கள். பீமசேனருக்கும் பால்ஹிகருக்கும் நிகர்ப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கடோத்கஜர் மீண்டும் களம் புகுந்திருக்கிறார். அவரை கௌரவ நூற்றுவரில் பன்னிருவர் சேர்ந்து எதிர்கொள்கிறார்கள். துரியோதனரும் துச்சாதனரும் களமுகப்பில் நின்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக யுதாமன்யுவும் சிகண்டியும் குந்திபோஜரும் உத்தமௌஜரும் நின்றிருக்கிறார்கள்” என்றான்.

“இளவரசே, பூரிசிரவஸை சத்யஜித் எதிர்கொள்கிறார். சலனை பாஞ்சால இளவரசர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். கிருதவர்மருடன் சுருதகீர்த்தியும் சுருதசேனரும் போரிடுகிறார்கள். லட்சுமணரை சுதசோமரும் துருமசேனரை சர்வதரும் நேரிடுகிறார்கள். கௌரவ மைந்தர்களை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள் சதானீகரும் நிர்மித்ரரும். ஜயத்ரதருடன் அம்புக்கு அம்பு குறைவின்றி போரிட்டுக்கொண்டிருக்கிறார் அர்ஜுனர். நமக்கு வலப்பக்கம் சீற்றம்கொண்டு போரிடும் பிதாமகர் பீஷ்மரை சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் இருபுறங்களிலாக நின்று தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பீஷ்மருக்கு அரண் என கௌரவப் படையின் விந்தரும் அனுவிந்தரும் கௌரவ இளையோரும் போரிடுகிறார்கள்.”

“ஒவ்வொரு அணுவிலும் முழு விசையுடன் இரு படைகளும் மோதுவதனால் படைமுகப்பு சிதைந்து உடல்களும் உடைசல்களுமாக திரண்டு கொண்டிருக்கிறது. இளவரசே, கௌரவப் படைகள் நம்மை அழுத்தி பின்னகர்த்துகின்றன. பருந்தின் சிறகுகள் நம் படைகளால் தடுக்கப்பட்டுவிட்டன. ஆனால் பிறையை கொத்தி கிழித்துக்கொண்டிருக்கிறது கழுகின் தலை. இன்றும் நமக்கு பேரழிவே” என்றான் தொழும்பன். “இன்று அதை மாற்றுகிறேன். இதோ!” என்றான் அபிமன்யூ. “செல்க! செல்க!” என்று கூவி தேர்த்தட்டில் நின்று துள்ளினான். தேர் விரைவழிய போர்முனை தெரியலாயிற்று.

பிரலம்பன் தொலைவிலேயே அருவி வீழ்வதை துமிப் புகையிலிருந்து அறிவதுபோல் பீஷ்மரின் இடத்தை அம்புகள் வழியாக கண்டான். அங்கிருந்து ஓலங்களும் போர்க்கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. அவன் எண்ணியிரா விரைவில் மழைக்குள் நுழைவதைப்போல அந்த அம்புகளின் எல்லைக்குள் தேர் சென்றது. அதன் குடமுகடிலும் தூண்களிலும் தன் கவசங்களிலும் பெய்த அம்புகளால் உலோகமுழக்கம் சூழ்வதை கேட்டான். “மூதாதையரே! தெய்வங்களே!” என்று கூவியபடி பிரலம்பன் தன் வில்லை நாணிழுத்து பற்களை இறுகக் கடித்து முதல் அம்பை பீஷ்மரின் இருபுறமும் வந்துகொண்டிருந்த வில்லவர்களில் ஒருவனை நோக்கி செலுத்தினான். அவன் தலை திருப்பிய அக்கணம் அம்பு தலைக்கவசத்திற்கும் நெஞ்சிற்கும் நடுவே பாய்ந்தது.

உலுக்கிக்கொண்ட உடலுடன் தேர்த்தட்டில் அமர்வதுபோல் விழுந்து தன் இரு கால்களுக்கும் நடுவே தலை பதித்து அவன் விழ தேரோட்டி திரும்பிப் பார்த்தான். புரவியில் அருகே வந்துகொண்டிருந்த வில்லவர்களில் ஒருவன் அக்கணமே விட்டிலென தாவி அத்தேரிலேறி விழுந்த வில்வீரனை புரட்டி கீழே தள்ளி அவன் அம்புகளை தான் எடுத்துக்கொண்டான். அவனை நோக்கி இரண்டாவது அம்பை பிரலம்பன் செலுத்தினான். அது அவன் இரும்புக்கவசத்தை உரசி அப்பால் செல்ல அம்பு வந்த திசையை கணித்து அவன் நாணிழுத்து தன் அம்பை செலுத்தினான். தன் காதருகே விம்மி அப்பால் கடந்து சென்ற அம்பின் விசையை பிரலம்பன் உணர்ந்தான். அடுத்த அம்பால் அவனை வீழ்த்தி மீண்டும் அம்பெடுத்தபோதும் அவன் செவியில் கடந்துசென்ற அம்பின் உறுமல் எஞ்சியிருந்தது. ஓர் எச்சரிக்கை சொல் என.

இக்களத்தில் ஒவ்வொரு அம்புடனும் எத்தனை விசை இணைந்துள்ளது என்று அவன் அகம் திகைத்தது. மலையிறங்கும் பேராறொன்றின் விசையைவிட பல மடங்கு. பெருங்காடுகளை சூறையாடும் புயல் விசையைவிட பற்பல மடங்கு. திறலோர் தோள்களில் திரண்டு வயல்களென, சாலைகளென, மாளிகையென மாறுவது. கால்களில் குவிந்து தொலைவுகளை வெல்வது. சொற்களில் எழுந்து நூல்களும் நெறிகளுமாவது. இன்று கொலை மட்டுமேயாக இக்களத்தில் அலை ததும்புகிறது. ஆயிரத்தில் ஒன்றே உயிர்குடிக்கிறது. எஞ்சிய விசை எங்கு செல்கிறது? காற்றில் மண்ணில் சென்று பதிகிறது. அவை தெய்வங்களுக்கு திரும்ப அளிக்கப்படுகின்றன. போர் ஒரு பெரும் பலிக்கொடை. தெய்வங்கள் தாங்கள் அளித்த அனைத்தையும் இரக்கமின்றி திரும்பப் பெற்றுக்கொள்ளும் தருணம்.

இலக்கு நோக்கவும் அம்பெடுக்கவும் நாணெடுத்து செலுத்தவும் அதுவரை பல்வேறு பயிற்சிக்களங்களில் உடல் அடைந்த கல்வியே போதுமானதாக இருந்தது. அத்தனை பயிற்சிக்களங்களிலும் அவன் இரண்டாக பிளந்தே இருந்தான் என அன்று அறிந்தான். உடல் பயிற்சி கொள்கையில் உள்ளம் சொற்பெருக்கென ஓடிக்கொண்டிருந்தது. உன் உள்ளம் இங்கில்லை என பலமுறை அவன் கால்களிலும் தோள்களிலும் அவன் ஆசிரியர் அம்பால் அறைந்ததுண்டு. வெயிலில், வெறும் மண்ணில் முழந்தாளிட்டு நிற்கவைத்ததும் உண்டு. ஆனால் போர்க்களத்தில் அவ்வாறு இரண்டாகப் பிளந்தது அவனுக்கு பேராற்றலை அளித்தது. அவனுடைய பதற்றங்களும் கொந்தளிப்புகளும் முழுக்க வேறெங்கோ நிகழ்ந்துகொண்டிருந்தன. அவை எவ்வகையிலும் அக்களத்தில் அவன் நின்று போரிடுவதற்கு நடுவே ஊடுருவவில்லை.

bowஅபிமன்யூ சாத்யகிக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் நடுவே புகுந்து உரத்த குரலில் “பிதாமகரே, இதோ திரும்பி வந்துவிட்டேன். உங்கள் தலைகொண்டு திரும்பிச்செல்லப் போகிறேன்!” என்றபடி தன் முதல் அம்பை தொடுத்து பீஷ்மரின் தோள்கவசத்தை உடைத்தான். கணப்பொழுதில் திரும்பி அருகே நின்றிருந்த காவலனுக்கு தோள் காட்டி அதே விசையை அம்பு எடுக்கவும் அளித்து அபிமன்யூவின் தேரை தன் அம்பால் அறைந்தார் பீஷ்மர். போர் எத்தனை விரைவாக விழிதொடாக் கணம் ஒன்றில் தொடங்கிவிடுகிறது என்று பிரலம்பன் கண்டான்.

பீஷ்மரும் அபிமன்யூவும் அவர்கள் இருவரும் மட்டுமே இருந்த ஒரு வெளியில் ஒருவரோடொருவர் மட்டுமே நோக்கி ஒருவர் பிறிதொருவரென ஆகி போரிட்டனர். அது ஒரு ஊழ்கம். ஊழ்கங்களெல்லாம் போரேதான் போலும். அருள் எழும் தெய்வம் இறுதி எல்லை காணும் வரை எதிரி என்றே நின்றிருக்கிறது. சில கணங்களுக்குள் அங்கிருந்த பலரும் வில்தாழ்த்தி அப்போரை நோக்கத்தொடங்கினர். அம்புகள் காற்றில் முனையொடு முனை தொட்டு சிதறி வீழ்ந்தன. பறந்து வரும் அம்பின் முனையை பிறிதொரு அம்பு சென்று தொடமுடியுமென்பதை காவியங்களில் அவன் கற்றிருந்தான். அது ஒரு கனவுநிலையென்றே எண்ணியிருந்தான். போரிடும் இருவர் ஒருவரையொருவர் உச்சத்திலும் உச்சமென எழும் உளக்கூரொன்றில் சந்தித்துக்கொண்டால் அது இயல்வதே என்று அப்போது கண்டான்.

அவர்கள் இருவரின் விழிகளும் ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டிருந்தன. இருவர் விழிகளின் அசைவுகளும் ஒன்றென்றே ஆயின. இருவர் கைகளும் ஒரு நடனத்தின் இரு பகுதிகளென சுழன்றன. அம்புகள் ஒரு சொல்லுக்கு மறுசொல் வைத்தன. காற்றில் தெய்வச்சொல் ஒன்றை இரண்டாக பகிர்ந்துகொண்டன. பீஷ்மரின் கவசங்களை அபிமன்யூ உடைத்தான். அவருடைய இடையிலும் தோளிலும் உடைந்து தெறித்த கவசங்களைக் கண்டு கௌரவர்கள் வெறிக்கூச்சலிட்டனர். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் பீஷ்மரின் இருபுறமும் சூழ்ந்துகொண்டு அபிமன்யூவை தாக்க முயன்ற அரசர்களை செறுத்தனர்.

பிரலம்பன் அபிமன்யூவின் தேர்ப்பாகனை குறிவைத்த வில்லவன் ஒருவனை அம்பால் அறைந்து நிலையழியச் செய்தான். அவனுக்கு உதவிக்கு வந்த இன்னொருவனை வீழ்த்தினான். தடுமாறி எழுந்த அவன் பிரலம்பனின் தேர்த்தூணை உடைத்தான். இன்னொரு அம்பால் அவன் தலைக்கவசத்தை உடைத்தான். சீறி அணுகிய அம்புக்கு முழந்தாளிட்டு தலைகாத்து அதே விசையில் அம்பெய்து அவன் நெஞ்சை பேரம்பால் பிளந்தான் பிரலம்பன். அபிமன்யூ தன் விரைவம்புகளால் பீஷ்மரைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த அபிசாரநாட்டு இளவரசர்கள் நிசந்திரனையும் மிருதபனையும் சுவிஷ்டனையும் கொன்றான்.

இறப்புகள் பீஷ்மரை சற்றே கைதளரச் செய்ய அவருடைய தேரை பாகன் பின்னோட்டிச் சென்றான். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் அவரை உந்தி பின்செலுத்துபவர்கள்போல தொடர்ந்து செல்ல “நில்லுங்கள், பிதாமகரே… நில்லுங்கள்” என்று கூவியபடி அபிமன்யூ அவரை தொடர முயன்றான். மகதமன்னன் ஜயசேனன் “என்னை எதிர்கொள்க, சிறுவனே!” என்று நாணொலி எழுப்பியபடி ஊடே புகுந்தான். எள்ளலுடன் நகைத்தபடி அபிமன்யூ அவனை அம்புகளால் அடித்தான். ஜயசேனனின் அம்புகள் அபிமன்யூவைச் சூழ்ந்து பறந்தன.

ஜயசேனன் பித்துகொண்டிருந்தான். அத்தருணத்திற்கென்றே காத்திருந்தவன் என தெரிந்தான். களத்தில் போருக்கெழும் ஒவ்வொருவரிடமும் ஒரு வெற்றிக்கனவும் ஒரு வீழ்ச்சிக்கனவும் இருக்கிறது. புகழ்சூழ இறப்பதை எண்ணி தனிமையில் உளமுருகாத வீரன் இல்லை. ஜயசேனன் அதன்பொருட்டே வந்தவன் போலிருந்தான். “வில்தொட்டுத் தேறுவது குடிச்செல்வம் அல்ல மூடா, அது பெருந்தவம்!” என்று ஜயசேனன் கூவினான். “பெருஞ்செல்வம் மூதாதையர் ஆற்றிய தவத்தால் ஈட்டப்படுவது, அறிவிலி…” என்று அபிமன்யூ சொன்னான். “உன் குலமென்ன? காட்டில் வாழ்ந்த ஜரையின் குருதியில் அம்புத்தொழில் எப்படி அமைந்தது?” என்று சிரித்தான். “உன் அம்புகள் எவ்வளவு என்று பார்க்கிறேன். வா… வந்து என் முன் அரைநாழிகையேனும் நில் பார்ப்போம்!”

கட்டற்றுப் பெருகிய வெறி ஜயசேனனின் கைகளின் ஆற்றலை பெருக்க அவன் அம்புகள் அபிமன்யூவின் கவசங்களை உடைத்தன. ஒவ்வொரு முறை அவன் அம்புகள் அபிமன்யூவை தாக்கும்போதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் ஆர்ப்பரித்தனர். பிரலம்பன் ஜயசேனனின் அணுக்கவீரனை வீழ்த்தினான். அவ்விடத்தை நிரப்பிய பிறிதொருவனை அம்புகளால் தடுத்து பின்னடையச் செய்தான். அபிமன்யூவின் அம்புகளால் மேலுமிருவர் தேர்த்தட்டிலிருந்து கழுத்தறுபட்டு அப்பால் வீசப்பட்டனர். “உன் உடலும் உன் தந்தையைப்போல இரண்டாக கிழிபடவிருக்கிறது, கீழ்மகனே” என்று அபிமன்யூ நகைத்தான்.

அவன் ஜயசேனனின் சினத்தைக் கூட்டி அவன் உடல்தாளா விசையை எழச்செய்கிறான் என பிரலம்பனுக்கு புரிந்தது. போர்முனையில் வஞ்சினம் என்பது தன்சோர்வை அழிப்பது, எதிரிக்கு சோர்வை ஊட்டுவது. “நீ தலையற்று வீழ்வதற்கு முன் உன் ஆணவம் அழியும், சிறுவனே” என்றான் ஜயசேனன். “கன்றோட்டும் குடியினன் நீ. உனக்கெதற்கு சொல்வீரம்?” என்றபடி மேலும் அணுகி நீளம்புகளால் அபிமன்யூவை அறைந்தான். ஆனால் அவன் தோள் தளரத்தொடங்கியது. உள்ளத்தின் வெறியில் அவன் அதை உணரவில்லை.

கால் தளரும் மானை மேலும் விரைவுகொண்டு துரத்தும் சிறுத்தை என அபிமன்யூ விசைகொண்டான். அறியாது அபிமன்யூவின் பேரம்பின் வட்டத்திற்குள் ஜயசேனன் கால்வைத்தான். அக்கணமே அவன் தலையை பிறையம்பு கொய்தது. ஏழு அம்புகளால் அத்தலை வானில் தூக்கப்பட்டது. எழுந்துகொண்டே இருந்த அம்புகளால் வானில் பட்டம்போல் நிறுத்தப்பட்டது. மகதவீரர்கள் அலறியபடி பின்னடைந்தனர். முரசுகள் “மகதர் மகதர் மகதர்” என முழங்கத் தொடங்கின.

மகதப்படை விலகிய இடைவெளியினூடாக அபிமன்யூ பீஷ்மரை நோக்கி சென்றான். அவர் தேர்த்தட்டில் ஜயசேனனின் தலை வந்து விழுந்தது. பீஷ்மர் சீற்றத்துடன் உறுமியபடி தேர்த்தட்டில் ஓர் அடி பின்னெடுத்து வைத்தார். ஜயசேனனின் தோழனின் தலை அதன்மேல் வந்து விழுந்தது. பீஷ்மர் அவற்றை காலால் உதைத்து அகற்றிவிட்டு “கீழ்மகனே!” என்று கூவியபடி அபிமன்யூவை எதிர்கொண்டு முன்னெழுந்தார். மீண்டும் இருவரும் அம்புகளால் இணைந்துகொண்டனர். முதுமையும் இளமையும் அகன்றன. அறிவும் அறியாமையும் மறைந்தன. உடல் நிகழ்த்தியது போரை. பின்னர் உடலும் மறைய எஞ்சியிருந்தது காலத்தை கணமென, அணுவென ஆக்கி பிளந்து பிளந்து சென்ற ஒரு நிகழ்வு மட்டும்.

பீஷ்மர் கண்ணறியாது சித்தம் மட்டுமே அறியும் காலத்துணுக்கொன்றில் கை தளர்வதை பிரலம்பன் கண்டான். அவன் அனைத்து நரம்புகளும் முறுக்கேறின. இக்கணம், இதோ இக்கணம் என்று அவன் இறுகி இறுகி நெரிபட்டு உடையப்போகும் கணமொன்றில் நின்றான். அபிமன்யூவின் தேர்முகடு உடைந்து தெறித்தது. அவன் புரவிகளிலொன்று கழுத்தறுந்து விழுந்தது. ஒவ்வொரு அம்பிலும் தேவைக்கு மிஞ்சிய விசை இருந்தது. அது பீஷ்மரின் அகம் நிலையழிந்துவிட்டதென்பதை காட்டியது. அதை அபிமன்யூவும் உணர்ந்துவிட்டான் என்பதை விழிசுருங்க சற்றே உடல் வளைத்து நாணிழுத்த விசையில் தெரிந்தது.

பீஷ்மரின் தொடைக்கவசம் உடைந்தது. அவர் சற்றே வளைந்து தடுப்பதற்குள் அடுத்த அம்பு அவர் தொடைமேல் பாய்ந்தது. பீஷ்மர் தேர்த்தட்டில் கையூன்றி சரிந்தார். அவர் தலைக்கவசத்தை உடைத்து அடுத்த அம்பை கழுத்திற்கு ஏவுவதற்குள் தேர்ப்பாகன் கைகாட்ட இருபுறமுமிருந்து கேடயப்படை வந்து அவரை சூழ்ந்தது. கேடையநிரைக்கு அப்பால் எழுந்து வளைந்து சரியும் நீளம்புகளால் அப்படைவீரர்களை அபிமன்யூ வீழ்த்தினான். ஓரிடத்தில் கேடயச்சுவர் உடைய அங்கே தோன்றிய அஸ்வாக நாட்டு அரசன் உபநாகனை கொன்றான். கேடயச்சுவர் மீண்டும் இணைந்தது. மீண்டும் அதை உடைத்து அஜநேயநாட்டு இளவரசர்கள் இருவரை கொன்றான்.

சிதறிய கேடயப்படைக்கு அப்பால் கௌரவப் படையினர் ஒருங்குகூடி அபிமன்யூவை எதிர்கொண்டனர். அபிமன்யூ கைகளைத் தூக்கி பீஷ்மர் பின்வாங்கிவிட்டார் என அறிவித்தான். பாண்டவப் படையில் வெற்றி முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. கௌரவப் படையில் பதற்றமும் நிலையழிவும் எழுவதை பிரலம்பன் கண்டான். போர் நிலையில் ஒரு சிறு உளவீழ்ச்சிகூட அக்கணமே விழிக்குத் தெரியும் அசைவுகளென்றாவதை அவன் வியந்தான். அவ்வுள வீழ்ச்சி எதிரிக்கு விரியத்திறந்த வாயில்.

அபிமன்யூ உரக்க நகைத்து “இன்று ஐம்பது மணிமுடித் தலைகள் இன்றி பாடி மீள்வதில்லை” எனக் கூவியபடி பேரம்புகளைத் தொடுத்து கேடய நிரையை உடைத்தான். பிரலம்பன் அபிமன்யூவை நோக்கி அம்புகளைக் குவித்த வில்லவர்களை தன் அம்புகளால் தடுத்தபடியே உடன் சென்றான். பீஷ்மரின் படைகள் நீர் பட்டணையும் தழலென அணைந்து பின்வாங்கத் தொடங்கின. அபிமன்யூ அடுத்தடுத்த அம்புகளால் காம்போஜ நாட்டு சுதக்ஷிணரின் மைந்தர்கள் அபிஷந்தியனையும் அமத்யனையும் கொன்றான். மறுபுறம் முரசுகள் எச்சரிக்கை ஒலி எழுப்புவதை பிரலம்பன் கேட்டான். அவற்றின் மொழி அறியவொண்ணாததாக இருப்பினும் அவை ஆணையிடுவதென்ன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அபிமன்யூ உருவாக்கும் உடைவை சீர்செய்ய அவை வீரர்களை அறைகூவின.

பூரிசிரவஸும் ஜயத்ரதனும் இருபுறத்திலிருந்தும் அம்புகளுடன் வந்து கௌரவப் படைகளின் விரிசலை இணைத்தனர். இருவரும் ஒரே தருணத்தில் நாணிழுத்து அம்புகளால் அபிமன்யூவை தாக்கினர். அவன் தன் விசையாலேயே இரண்டாகப் பிளந்தவன் போலானான். இருபுறமும் அம்புகள் தொடுத்து இருவர் அம்புகளையுமே எதிர்கொண்டான். ஜயத்ரதன் அந்த வெறியைக்கண்டு விழிதிகைப்பதை மிக அருகிலென பிரலம்பன் அறிந்தான். பூரிசிரவஸ் சினமும் அதனால் எழுந்த சீற்றமும் கொண்டு மேலும் மேலுமென அம்புகளை தொடுத்தான்.

அபிமன்யூ அவன் கவசங்களை உடைத்தான். தேரில் முழந்தாளிட்டு அமர்ந்த அவன் தலைக்கவசத்தை உடைத்து அடுத்த அம்பை கழுத்தை நோக்கி அறைந்தான். அந்த அம்பை பிறிதொரு அம்பு தெறித்துச் சிதறவிட அபிமன்யூ திரும்புவதற்குள் எதிரில் வந்த இரு தேர்களுக்குப் பின்னிருந்து பீஷ்மர் தன் அம்பை இழுத்து அபிமன்யூவின் தொடைக்கவசத்தைத் தெறிக்க வைத்தார். “பிதாமகரே!” என்று திகைப்புடன் கூவியபடி அபிமன்யூ தேர்த்தட்டில் விழுந்தான். பீஷ்மரின் அம்பு அவன் தொடையை தைத்தது. அடுத்த அம்பு கழுத்துக்கு வர அதை பிரலம்பன் தன் அம்பால் வீழ்த்தினான்.

“இருவர் பொருதும் களத்திற்கு சங்கொலியிலாமல் நுழைவதா பிதாமகரின் நெறி?” என்று திருஷ்டத்யும்னன் உரத்த குரலில் கூவினான். தேர் அலைமேல் என எழுந்து வர அதன் மேல் அதுவரை கண்டிராத வஞ்சமும் வெறுப்பும் நிறைந்த முகத்துடன் நின்ற பீஷ்மர் குவிந்து சுருங்கிய வாயும் இறுகிய தாடையுமாக சொல்லின்றி நாணிழுத்து திருஷ்டத்யுமனின் நெஞ்சக்கவசத்தை உடைத்தார். அவன் புரள்வதற்குள் தோளில் அம்பை அறைந்து வீழ்த்தினார். சாத்யகி தன் தேரில் குப்புற விழுந்து அவன் மேல் விம்மிச் சென்ற மூன்று பிறையம்புகளை தவிர்த்தான்.

“அனைத்து நெறிகளையும் கடந்துவிட்டீர்கள், பிதாமகரே” என்று திருஷ்டத்யும்னன் தேர்த்தட்டில் குப்புற விழுந்தபடி கூவ அவன் தேரோட்டி தேரை மேலும் மேலும் பின்னுக்கிழுத்தான். கேடயப்படை ஒன்று அவர்களுக்கு எதிரே வந்தது. பாண்டவப் படை இருபுறமும் கிழிபட்டு விலக அந்த இடைவெளியில் மெழுகை உருக்கி இறங்கும் பழுக்கக் காய்ச்சிய வாளென பீஷ்மர் உள்ளே வந்துகொண்டிருந்தார். பிரலம்பன் அபிமன்யூவை பார்த்தான். அவன் புண்பட்ட தொடையுடன் தேர்த்தூணைப்பற்றி எழுந்து நின்றான். கையிலிருந்து வில் நழுவிவிட்டிருந்தது.

அரைக்கணம் என பீஷ்மரின் பார்வை அபிமன்யூவை தொட வந்தது. அதன் பொருளை உணர்ந்த பிரலம்பன் தன் தேரிலிருந்து எழுந்து அபிமன்யூவின் தேரை நோக்கி பாய்ந்து அந்தப் பேரம்பை தன் நெஞ்சில் வாங்கி அபிமன்யூவின் மேல் விழுந்தான். அபிமன்யூ குனிந்து அவனை தூக்க பிரலம்பன் நீருக்குள்ளென அவன் முகம் கலங்கித் தெரிவதை இறுதியாக பார்த்தான்.

 வெண்முரசின் கட்டமைப்பு

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வாசிப்பில் ஓர் அகழி- குறித்து…

$
0
0

book-stalls1

வாசிப்பில் ஓர் அகழி

ஜெ,

 

வணிக எழுத்து பற்றிய சீனுவின் கடிதம் கண்டேன். நானும் அதை யோசித்திருக்கிறேன்.

 

இன்று வணிகக் கலை வழியாக ஒருவர் தீவிரக் கலைக்கு வந்து சேர வழியில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு காரணங்கள். ஒன்று, வணிகக் கலை அலுத்துப் போகும் போதுதான் ஒருவர் தீவிரக் கலையை தேடத் துவங்குகிறார். இந்த அலுப்பு தோன்ற தொடர் வாசிப்பு நிகழ வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அல்லது ஒரு வகைப்பாட்டு [genre] நூல்களை தொடர்ந்து தீவிரமாக வாசிக்கும் போதே அதன் வடிவம் நமக்கு பிடி கிடைக்கும். அந்த பிடி கிடைத்த பிறகே நம் ஆர்வம் வடியும், நானே இதை எழுதி விடுவேன் என்ற எண்ணம் உருவாகும். அங்கிருந்தே நமக்கு சவால் விடக் கூடிய எழுத்தை தேடி நகர்கிறோம்.

 

இரண்டாவதாக, இதன் மறுமுனையாக சென்ற காலத்தில் வணிக எழுத்தாளர்களால் அதிகமும் எழுதப்படுதல் இருந்தது. என் பத்து வயதில் ஆரம்பித்து பதிமூன்று வயதுக்குள் நானூறு க்ரைம் நாவல்களை வாசித்து  இருந்தேன். அதன் வடிவம் ஒரளவு பிடி கிடைத்து விட்டது. அடுத்த அலையாக, பதினான்கு வயதில் ஆரம்பித்து பதினைந்து வயதுக்குள் நூறுக்கும் மேற்பட்ட பாலகுமாரன் நூல்களை வாசித்திருந்தேன். அத்தனை நூல்களை ஒன்றாக வாசிக்கும் போது எளிதில் ஒரு பொதுத்தன்மை, க்ராஃப்ட் சார்ந்து கிடைத்து விடுகிறது. அந்த பிடி கிடைத்த உடன் அடுத்த சவாலுக்கான தேடல் துவங்கி விட்டது. தஸ்தெயெவ்ஸ்கியை முதல் முறை பதினாறு வயதில் படித்த போது பிறப்பிலிருந்து முதுகு பக்கம் இருந்த தலையை ஒரே கணத்தில் என்றென்றைக்குமாக மார்பின் பக்கம் திருப்பி வைத்தது போலிருந்தது.

 

இதையே ஷிட்னி ஷெல்ட்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர் போல அதிகம் எழுதியவர்களை வாசித்து கடப்பவர்களுக்கும் சொல்லலாம். இத்தகைய சூழலில் கடைசி வரை பிடி கிடைக்காதவர்கள் குறைந்தது ஆரம்பித்த இடத்திலேயே இருந்து கொண்டிருப்பார்கள். எனக்கும் பட்டுக்கோட்டை பிரபாகரையும், பாலகுமாரனையும் அறிமுகப்படுத்திய என் உறவினர் இருவரும் இன்னமும் இவர்கள் இருவரையே வாசிக்கின்றனர். அவர்களுக்கு இருந்ததைப் போல வாசிப்பு மட்டுமே இன்று ஒருவருக்கான கேளிக்கை ஊடகமாக இருப்பதில்லை. இது நிகழ ஒருவர் தன் பொழுது போக்கு கலை என ‘ஒரு’ வடிவத்தை பற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்ற காலங்களில் காண்பியல் கலை அல்லது எழுத்து வடிவம் என இரண்டே பிரதானமாக இருந்தது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தன் பொழுது போக்கு வடிவமாகக் கொண்டிருக்கும் ஒருவருக்கு வேறு வாய்ப்புகளில்லை. அலுப்பூட்டும் வடிவத்தை உதறி சவாலை நோக்கி செல்ல வேண்டிய தேவை இருந்தது. இன்று ஒருவர் தன் தலையை முட்டிக் கொள்ள இணையம் ஆயிரம் கதவுகளைக் கொண்டிருக்கிறது.

 

இன்றைய வணிக எழுத்தாளர்கள் சேத்தன் பகத், அமிஷ் போன்றவர்கள் குறைவாக எழுதுகிறார்கள். அதை வாசிப்பவர்கள் அதை விட குறைவாக வாசிப்பவர்கள். ஆகவே வடிவம் குறித்த பிடி கிடைப்பதோ, ஈர்ப்பு எளிதில் இழக்கப்படுதோ இல்லை. வணிக எழுத்தை ஒரே அலையாக வாசித்துக் கடந்தால்தான் உண்டு.

 

கூடுதலாக, இளம் வயதில் வணிக எழுத்தை வாசிக்கத் துவங்கும் ஒருவர், ஒரிடத்தில் இதை நானே எழுதி விடுவேன் என்று சொல்லும் திமிர் இளமையினால், கனவுகளால் வருவது. இன்று சேத்தன் பகத்தை, அமித் திரிபாதியை வாசிப்பவர்கள், நான் பார்த்த வரை, படிப்பு முடிந்து வேலையில் அமர்ந்து, “செட்டில்” ஆகிய பிறகு வாசிக்கத் துவங்குபவர்கள் என்பதும் ஒரு காரணம்.

 

வேறொரு கோணமும் இருக்கிறது. வணிக எழுத்தின் வடிவம் பிடி கிடைப்பதற்கும், பொழுது போக்கு நோக்கில் சலிப்புறவும் ஒருவருக்கு அக மொழி உருவாகி வர வேண்டியிருக்கிறது. அது தாய் மொழியில்தான் சாத்தியம் அல்லது முதன்மை மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். இங்கு சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களுக்கு கூட அது அக மொழியாக ஆவதில்லை. நாம் வளரும் சூழலின் பன்மொழித் தன்மை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இனி வரும் தலைமுறைகளுக்கு ஒரு வேளை ஆங்கிலம் அக மொழியாக ஆகக் கூடும். அப்பொழுது அவர்களுக்கு சேத்தன் பகத்தும் அமிஷ் திரிபாதியும் கடந்து செல்லப்பட வேண்டியவர்களாகத் தெரியலாம்.

 

 

ஏ.வி.மணிகண்டன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நரசிம்மராவ்- கடிதங்கள்

$
0
0

download

 

நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்

ஜெ

 

இந்த புத்தகத்தை பற்றி உங்கள் எழுத்தும் விமர்சனமும் மிக சிறப்பாக இருந்தது.

பல திறவுகள். தலைவர்கள் , இலட்சியவாதிகள் என.நீங்கள் சொன்ன  இரைட்டை பட்டியலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் நீக்கினால் கலைஞர் கருணாநிதி யை சேர்த்து கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
நரசிம்மராவை காங்கிரசிஸ் தலைமை நடத்திய விதம் வருந்தத்தக்கது. அதேபோல் அவர் தான் தமிழ் நாட்டில் தவறான கூட்டணி அமைத்து  காங்கிரசின் அடுத்த முறைக்கான வாய்ப்பை  கணிசமாக கெடுத்தார் என்பது ஓரளவு உண்மை என நம்புகிறேன்
மிக முக்கியமான புத்தகம். மிக சிறப்பான கட்டுரை. நன்றி

 

 

நடராஜன்

 

அன்புள்ள நடராஜன்

 

நான் அவ்வாறு எண்ணவில்லை. மு.க அவர்களுக்கு அவ்வாறு தமிழகத்தின் நலம்நாடு திட்டங்களோ, முனைப்போ இருக்கவில்லை என்றே எண்ணுகிறேன். அவ்வாறு அவருக்கு ஒரு பொய்யான மணிமுடியைச் சூட்ட உச்சகட்ட தேர்தல்பிரச்சாரம் தொடங்கிவிட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் அவருடைய ஆதரவாளர்களுக்குக் காரணங்கள் இருக்கலாம். தர்க்கபூர்வமாகவும் அடிப்படைத்தகவல்களுடனும் சிந்திக்கும் எவருக்கும் எக்காரணமும் இல்லை

 

தமிழகத்தின் நலம்நாடிய முதன்மையான ஆட்சியாளர் காமராஜ் தான். அடுத்தபடியாக, ஓரளவு எம்.ஜி.ஆர். ஆனால் மற்றவர்களைப்பற்றித்தான் இங்கே டமாரங்கள் அடிக்கப்படுகின்றன. டமாரச்சத்தமே சொல்வதற்கு தர்க்கபூர்வமாக ஏதுமில்லை என்பதைக் காட்டுவது

 

மு.க. அவர்களின் திட்டங்கள் எனச் சொல்லப்படுவன அனைத்துமே மோடியின் திட்டங்களாகச் சொல்லப்படுவன போல வெறும் காகிதத்திட்டங்கள் அல்லது கவர்ச்சித்திட்டங்கள். பொருளியலை உருவாக்கும் திட்டங்கள் அனேகமாக ஏதுமில்லை. கூவம்சீரமைப்பு, இலவச சைக்கிள் ரிக்ஷா மழைக்கோட்டு, குடிசைமாற்று வாரியம் போல பத்தாண்டுகளுக்குப்பின் மோடி குறித்தும் இதுவே சொல்லப்படும். திட்டங்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே சென்று அதையே புள்ளிவிவரங்களாக சாதிப்பார்கள்.

 

நரசிம்மராவின் வெற்றி என்பது தன்னை ஆட்சியாளர் என்னும் எல்லைக்குள் நிறுத்திக்கொண்டு திறனாளர்களைப் பணியாற்ற அனுமதித்தது. அவ்வியல்பு காமராஜிடம் உண்டு. ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்ரமணியம் போன்ற அமைச்சர்கள் நெ.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகள் இணைந்து உருவாக்கியது காமராஜ் தமிழகத்துக்கு உருவாக்கி அளித்த மகத்தான அடித்தளம். பாசனம்,.தொழில், கல்வி, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் அடுத்த ஐம்பதாண்டுகளில் தமிழகம் பெற்ற வெற்றியின் சிற்பி காமராஜ். அதாவது அவர் ஒருங்கிணைத்த திறனாளர்கள்

 

எம்.ஜி.ஆர் அவருடைய கவற்சி அரசியலுக்கு அப்பால் திறனாளர்களை பணியமர்த்தி அவர்களைச் செயல்பட அனுமதிக்கும் பார்வை கொண்டிருந்தார். மால்கம் ஆதிசேஷையாவால் உருவாக்கப்பட்டது தமிழகத்தின் தொழிற்கல்வி மேம்பாடு. வ.அய்.சுப்ரமணியம் போன்ற கல்வியாளர்கள் அவர்கீழே செயல்பட்டனர்.

 

சத்துணவுத் திட்ட அமலாக்கம், கிராமங்களில் குடிநீர்வசதி மற்றும் மருத்துவ வசதிமேம்பாடு என எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தின் சாதனைகள் பல. அவை உண்மையில் சில முக்கியமான அதிகாரிகளின் சாதனைகள். அவற்றை அனுமதிக்கும் அளவுக்கு அரசியல்நோக்கு கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவற்றின் வெற்றி அவருடைய அரசியல்வெற்றியாக இறுதிக்கணம் வரை உடனிருந்தது. தமிழக வளர்ச்சிக்கும் உதவியது.

 

இப்பண்புகள் எவையும் மு.க்ருணாநிதியிடமோ ஜெயலலிதாவிடமோ இல்லை. அவர்கள் சமையலறைநிர்வாகம் மட்டுமே அறிந்தவர்கள். தன்மைய நோக்குகொண்டவர்கள். ஆகவே பெரும்பாலும் வெற்றுக்கோஷங்களுடன் நின்றுவிட்டவர்கள்

 

ஜெ

 

 

ஜெ,

 

வணக்கம். மிக்க நன்றி ஜெமோ. இன்றைய காலை, அழகான காலையாக ஆரம்பமாகிவிட்டது. உங்களது விமர்சனத்தை படித்தவுடன் கிடைத்த உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இனி 10 பக்கங்களாவது மொழிபெயர்த்தால் மட்டுமே இன்றிரவு உறங்க செல்ல முடியும். விரிவான விமர்சனத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி
ராம்கி
அன்புள்ள்ள ராம்கி
மிகச்சிறப்பான மொழியாக்கம். சரளமாக வாசிக்கமுடிகிறது. ஏற்கனவே நீங்கள் மொழியாக்கம் செய்த ஜேபி பற்றிய நூலைப்பற்றியும் எழுதியிருந்தேன். நீங்கள் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்யவேண்டும்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

$
0
0

mori1

நேற்று முன்நாள் இங்கே பேசிக்கொண்டிருந்தபோது காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சிறுகதை ஒன்றைப்பற்றிப் சொன்னேன். கொச்சுக்ரஹஸ்த. சின்ன குலமகள் என மொழியாக்கம் செய்யலாம். நான் அதை வாசித்து நாற்பதாண்டுகள் ஆகியிருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும்போது மலையாளம் எழுதப்படிக்கத் தெரிந்ததுமே வாசித்த கதை. அன்று என்னை ஒரு தெய்வம் வந்து ஆட்கொண்டதுபோல அக்கதை எடுத்துக்கொண்டது

மிக எளிய கதை. ஒருவன் வியாபார நிமித்தமாக அயலூர் ஒன்றுக்குச் செல்கிறான். தங்குமிட வசதிகள் இல்லாத காலம். மழை வேறு வருகிறது. பசியும் இருக்கிறது. அவன் ஒரு சிறு குடிசையின் கதவைத் தட்டி இரவு தங்க இடமிருக்குமா என்று கேட்கிறான். கதவைத்திறந்தவள் ஒர் ஏழுவயதுப்பெண். கையில் சிமினி விளக்கு.“உள்ளே வாருங்கள்” என்று அவள் அழைக்கிறாள்.

அந்த வீட்டில் அவளும் அவள் அம்மாவும் ஒரு தம்பியும் மட்டும்தான். அம்மா தேங்காய்நார் சதைக்கும் தொழில்செய்தவள். முதுகெலும்பில் நோய்வந்து தளர்வாதமாகி படுத்தபடுக்கையாக இருக்கிறாள். அப்பா முன்னரே கைவிட்டுவிட்டு போய்விட்டாள். உறவினர் எவரும் இல்லை. அந்த ஏழுவயதுப்பெண் அவரை உபசரிக்கிறாள். அவள் அப்போதுதான் சந்தையிலிருந்து அரிசியும் மரவள்ளிக்கிழங்கும் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாள். அவர்கள் வீட்டில் மாலையில் மட்டும்தான் சமையல். தம்பி பசியோடு காத்திருக்கிறான்

அவள் கஞ்சி காய்ச்சி அவருக்கு அளிக்கிறாள். அவர் குடிக்கும்போது அந்தக்குடும்பத்தைப்பற்றித் தெரிந்துகொள்கிறார். அந்த ஏழுவயதுப்பெண் விடியற்காலையில் சென்று தேங்காய்நார் சதைக்கிறாள். தேங்காய்நார் வாங்கி தலைச்சுமையாகக்கொண்டுசென்று சந்தையில் விற்கிறாள். அந்தப்பணத்தில் அரிசியும் கிழங்கும் வாங்கிக்கொண்டு வருகிறாள். அந்தக்குடும்பத்தை அவள்தான் நடத்துகிறாள்.

அவள் சமைப்பதை, வீட்டைத் தூய்மைசெய்தபின் படுப்பதை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு செயலிலும் முழுமையும் பொறுமையும். அந்தச் சிறுவனுக்கு மட்டுமல்லாமல் தன் அம்மாவுக்கும் அவள் அன்னையாக இருக்கிறாள். அவள் படுக்கும்போது களைப்புடன் பெருமூச்சுவிடுகிறாள். ஆயிரம் ஆண்டுக்கால முதுமைகொண்டவள்போல. மறுநாள் அவர் கிளம்பும்போது அவளுக்கு கையிலிருந்த ஒரு ரூபாயை வற்புறுத்திக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். நடக்கையில் கண்கலங்க “அம்மே பகவதீ ஈ லோகத்தே காத்துகொள்ளணே” என்று பிரார்த்திக்கிறார் [அம்மையே,பகவதி, இந்த உலகை காத்தருள்க]

அக்கதையை நான் மீண்டும் வாசிக்கவே இல்லை. சொல்லப்போனால் வாசிக்க அஞ்சுகிறேன். ஏனென்றால் வாசிக்கையில் கதை குறைந்துவிட்டால் என்ன செய்வது? என் நினைவில் அக்கதை வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கிறது. அங்கிருப்பது ஒரு சிறு தொடக்கமாக இருக்கலாம். அதைவிட பதினைந்து வயதுச்சிறுவன் இலக்கியத்தில் கடவுளைத் தரிசித்த அந்தக்கணம் இனி மீளுமா என்ன?

அந்தக்கதையைப் பற்றி அன்றுமாலை அழைத்த மலையாள விமர்சகரிடம் பேசினேன். அவர் ஒன்று சொன்னார். அந்தக் கடைசிவரி பின்னாளில் காரூரின் மறைவுக்குப்பின் வந்த முழுமைத்தொகுப்பில்  நீக்கம் செய்யப்பட்டது. அது எண்பதுகளில் நடந்தது. சிறுகதை என்பது பூடகமாக இருக்கவேண்டும், பூடகம் என்பதே அதன் நுட்பம், ஆகவே உணர்ச்சிவெளிப்பாடு என்பது கதையின் குறைபாடு என்றெல்லாம் இலக்கணங்கள் உருவாகி முப்பது ஆண்டுகள் மட்டும் நீடித்த காலகட்டம். தொகுப்பாளருக்கு அந்தக் கடைசிவரி என்பது ஓர் நேரடிக்கூற்று என்று பட்டிருக்கிறது

நான் திகைத்துப்போனேன். அதன்பின் பெருமூச்சுதான் விட்டேன். கதைகளை ‘வெட்டித்தொகுப்பு’ செய்வது பற்றி இன்று நிறையப் பேசுகிறார்கள். கறாராக வெட்டித்தொகுப்பு செய்யப்படும் படைப்புகள் பெரும்பாலும் வணிகக்கேளிக்கை எழுத்துக்களே. காரணம், வெட்டித்தொகுப்பதற்கு தெளிவான அளவுகோல்கள் வேண்டும். அவ்வாறான புறவய அளவுகோல்கள் இலக்கியத்துக்கு கிடையாது, வணிக இலக்கியத்துக்கே உண்டு. வணிக இலக்கியத்தை முடிவுசெய்யும் நிலையான கூறு ‘சமகாலவாசகரசனை’ என்பது. அதை சந்தையைக்கொண்டு புறவயமாக முடிவுசெய்யவும் முடியும்.

ஆனால் இலக்கிய ஆக்கங்களை எவர் முடிவுசெய்வது? தொகுப்பாளர் அதற்கு ஒரு வாசகர் மட்டுமே. அவர் சமகாலத்தவர். இலக்கியம் பலதலைமுறைகளுக்கு கடந்துசெல்லும் தன்மைகொண்டது. இந்தத்தலைமுறை ஒரு படைப்பில் விரும்பாதவை அடுத்த தலைமுறைக்கு முக்கியமானவையாகத் தோன்றலாம். அந்தப்பகுதிகளில் இலக்கியப்படைப்பைப் புரிந்துகொள்வதற்கான நுண்வாயில்கள் அமைந்திருக்கலாம். அவ்வாறு வெட்டிநீக்கப்பட்ட பகுதிகளுடன் மீண்டும் இலக்கியப்படைப்புகள் மீண்டும் வெளியாவதே எப்போதும் நிகழ்கிறது.

இலக்கியப்படைப்பை வெட்டித்தொகுப்பு செய்ய முடியாது என்ற எண்ணமே மிகுந்துவருகிறது எனக்கு. ஆசிரியனே கூட அதை திரும்பத்திரும்ப வெட்டித்தொகுப்பு செய்யக்கூடாது.கறாராக வெட்டித்தொகுப்பு செய்யப்பட்ட பிரதி என்பது பிரக்ஞையால் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டது. இலக்கியம் பிரக்ஞையால் எழுதப்படுவதோ பிரக்ஞையால் வாசிக்கப்படுவதோ அல்ல. அது ஆழுளம் ஆழுளத்துடன் தொடர்புகொள்ளும் ஒரு வழி.

மொழி, இலக்கியவடிவம், புறவயச் செய்திகள் என்னும் மூன்று கூறுகள் அதில் ஆழுளத்தின் ஊர்திகளாக அமைகின்றன. அவற்றை மட்டும் சீரமைக்கலாம். அப்போதுகூட ‘அறியாமல்’ நிகழ்வனவற்றை அப்படியே விட்டுவிடுவதே நல்லது என்று படுகிறது. அந்த வழூஊக்கள் வழியாகவே எழுத்தாளனே அறியாத எழுத்தாளனின் ஆழம் வெளிப்படுகிறது. நவீனத் திறனாய்வு இடைவெளி [gap] என்று சொல்லும் ஊடுபாதை அது.

கொச்சுகிரகஸ்த குறித்து நண்பரிடம் சொன்னேன். அந்தக் கடைசிவரி நேரடியான உணர்ச்சி வெளிப்பாடு. அப்பட்டமானது. அந்தக்கதையை முழுமையாகவே ஒற்றைப்புள்ளியில் கொண்டுசென்று நிறுத்துவது. ஆனால் அது கள்ளமற்றது. ஒரு தருணத்தில் மானுட உள்ளம் கொள்ளும் பேரெழுச்சியின் மொழிப்பதிவு . அது இலக்கியநுட்பங்களை விட,தத்துவத்தை விட மேலானது. இலக்கியத்தின் இலக்கே அந்த உளத்தருணத்தை அடைவதுதான்.

அந்த உளத்தருணத்தை நேரடியாகச் சென்றடைகையில் வாசகனின் அகம் அவநம்பிக்கை கொள்கிறது. ஆகவேதான் கலை அதை பூடகமாக்கி வாசகனே கண்டடையச் செய்கிறது. அவனே அதை உருவாக்கிக்கொள்ள விடுகிறது. ஆனால் சிலதருணங்களில் அனைத்து அறிவுத்தடைகளையும் மீறி அலைபோல அறைந்து மேலெழும் உயர்நிலை உணர்ச்சி கதையை மேலே கொண்டுசெல்லும். அங்கே அதை குறிப்புணர்த்தவேண்டியதில்லை. வடிவமோ மொழியோ எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை.

அதை poetic utterance என்கிறார்கள். கூற்று அல்ல. எண்ணம் அல்ல. கருத்து அல்ல. அரற்றலோ உளறலோதான் அது. அது நிகழ்கையில் எதுவுமே பொருட்டு அல்ல. அந்தக்கடைசி வரியை நேரடியாகத்தான் சொல்லமுடியும். அது அப்பட்டமாகவே நிலைகொள்ள முடியும். அது மலைகளைப்போன்று ஒளிந்துகொள்ள இயலாதது. அந்தக்கதையிலிருந்து எழுந்தாலும் அது அக்கதையின் ஒரு பகுதி அல்ல, விதையை மீறி எழுந்து முளைத்து விதையிலைகளாக விதையைச் சூடிநிற்கும் செடி அது

அதைப்புரிந்துகொள்ளமுடியாதவர்கள் பலர் உண்டு. அதன்முன் சிறிதென்றாகி தெய்வமெழுகையில் பக்தன் என நின்றிராதவர்கள் உண்டு. அவர்கள் உண்மையில் இலக்கியம்பக்கமே வரக்கூடாது. அவர்கள் இலக்கியத்துக்கு அளிக்கும் உழைப்பு என்பது மாபெரும்வீண். தங்கள் ஆணவத்தால் காலப்போக்கில் மெய்யாகவே இலக்கியம் நோக்கி வருபவர்களுக்கு மாபெரும் தடையாகவும் ஆவார்கள்.

இன்று காலை வாசித்த லக்ஷ்மி மணிவண்ணனின் இக்கவிதை இவ்வெண்ணங்களை மேலும் தொகுத்துக்கொள்ளச் செய்தது.

 

Drumstick-flowering-plant

என் பேரில் ஒருவன் என்னென்னவோ
செய்து கொண்டிருக்கிறான் பாருங்கள்

அதுவெல்லாம் அவனாகச் செய்கிறானா
வேறு யாரேனும்
உள்ளிருந்து
செய்கிறார்களா ?
சில நேரம் சந்தேகமாயிருக்கிறது .

அப்படியானால்
இவனுக்கு
என்ன பொருள் ?
அவற்றால் இவனுக்கென்ன ?

மழைச்சாரல்
முருங்கையில் தூவி
முதலில் தன் கைவைத்தெடுத்து
முதிய இலைகளையெல்லாம்
கீழே
ஒவ்வொன்றாய்
போடுகிறது
மஞ்சள் ஒளியாக கீழிறங்குகின்றன
மஞ்சள் இலைகள் .
எடுத்துப் போட்டவற்றை
மீண்டும் சாரல் கை கொண்டெடுத்து
பூமியில்
மூடுகிறது

மழையின் வேலையா இது
இப்படி எத்தனை எத்தனை வேலைகள் மழைக்கு

அப்படியானால்
மழையின்
உண்மைப் பொருள்தான் என்ன ?
மழை தானா அது ?

காலையில் பூவிட்டுத் தளிர்க்கும்
முருங்கையின் பிரகாசம்
யார் விட்டுச் சென்ற பொருள் ?

 

வழக்கமாகத் தமிழ்ப்புதுக்கவிதையில் உள்ள எந்த கரவுகளும் பூடகங்களும் இக்கவிதையில் இல்லை. மிகமிக நேரடியானது. இயற்கையின் தரிசனம் என்பதைப்போல் தொன்மையான கருப்பொருளும் வேறில்லை. பல்லாயிரம்பேர் சென்று தேய்ந்த பாதை. மழைகழுவிய செடியின் ஒளியையேக்கூட எத்தனையோ பேர் பாடியிருக்கிறார்கள். அதன்பின்னரும் ஒவ்வொருமழையும் ஒவ்வொரு தளிரும் புதிதுதான்.

“குழந்தைகள் விளையாடுவதுபோல முழுமையான தீவிரத்துடன் யோகப்பயிற்சிகள் செய்யப்படவேண்டும்” என்று நித்ய சைதன்ய யதி ஓர் உரையில் சொன்ன வரி என்னை திகைப்படையச் செய்திருக்கிறது. விளையாட்டின் பொருளில்லாத முழுமை. விளையாட்டில் எழும் ஒளி.

அறிவார்ந்ததன்மைக்கு இடமே இல்லாத ஒரு கண்டடைதலின் பேருவகையால் ஆன கணம் இக்கவிதை. மழையின் உண்மைப் பொருள்தான் என்ன ? மழை தானா அது ? என்றவரியிலிருந்து தொடங்கி அதற்காகத்தான் இத்தனை நடனமா என்று அரற்றியபின் என்பெயரில் என் பேரில் ஒருவன் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறான் பாருங்கள் என்று சென்றடையும் ஒரு வாசிப்பு என்னுடையது.

அறிவும் உணர்ச்சிகளும் பூடகங்களை நாடுவன. மெய்மையும் குழந்தைமையும் தங்கள் அப்பட்டத்தால் அழகுகொள்பவை. இக்கவிதையின் தருணம் ஒரு குழந்தையிலும் மலரக்கூடியது.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26

$
0
0

bowஅர்ஜுனனது தேரின் பின்தட்டில் தாழ்ந்து அமைந்த பீடத்தில் யாதவ வீரனாகிய கதன் ஆவக்காவலனாக அமர்ந்திருந்தான். போர் தொடங்கிய மறுநாள் அந்தியில்தான் அவன் தன் ஊராகிய சுஷமத்திலிருந்து தன்னந்தனியனாகக் கிளம்பி இளைய யாதவரிடம் வந்துசேர்ந்தான். படைமுகப்பிலேயே அவனை காவலர் தடுத்து சிறைப்பிடித்தனர். விருஷ்ணிகுலத்தோன், இளைய யாதவரின் குருதியினன் என்று அவன் சொன்னமையால் அழைத்துவந்தனர்.

பாடிவீட்டில் அர்ஜுனனும் நகுலனும் உடனிருக்க சொல்லாடிக்கொண்டிருந்த இளைய யாதவர் எழுந்து வெளியே வந்து அவனை பார்த்ததும் வீரர்களிடம் கையசைக்க அவர்கள் அவனை விட்டு விலகிச்சென்றனர். அவர் தாழ்ந்த குரலில் “தனியாகவா வந்தாய்?” என்றார். “ஆம் அரசே, என் பணி தங்களுடன் இருப்பதே என தெளிந்தேன். வராமலிருக்க இயலவில்லை” என்றான் கதன். “எங்கிருந்து வந்தாய்?” என்றார். “சுஷமத்திலிருந்து நேராக வருகிறேன்…” இளைய யாதவர் “எவரிடம் ஒப்புதல் பெற்றாய்?” என்றார். “முதுதாதை உத்தவரிடம் சொன்னேன், என் உள்ளம் உங்களுடன் இருப்பதை. அவர் செல்க என ஒப்புதல் அளித்தார்.”

இளைய யாதவர் தலையசைத்து “ஆனால் உன் திறன்களுக்கு இங்கே இடமில்லை. இது நேர்ப்போர்” என்றார். “ஆம், அறிவேன். நான் எவ்வகையிலேனும் களத்தில் இருக்கவே விழைகிறேன். உங்கள் காலடியில் நான் பாதுகாப்பாக இருப்பேன். உங்கள்பொருட்டு உயிர்துறந்தால் விண்ணில் சிறப்பேன்” என்றான் கதன். இளைய யாதவர் தலையசைத்து “நீ வந்தது நன்று, உன்பொருட்டு மகிழ்கிறேன்” என்றார். “என்னைப்போல் இங்கு வர உளம்கொண்டோர் மேலும் இருக்கக்கூடும். குலத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அங்கிருக்கிறார்கள்.”

“எப்போது குலத்தின் ஆணை பொருளற்றதாகிறது?” என்று இளைய யாதவர் புன்னகையுடன் கேட்டார். “இறப்பு அணையக்கூடும் எனும்போது. அப்போது அறமும் புகழும் அன்றி வேறேதும் பொருட்டல்லாமலாகிவிடுகிறது. என் மைந்தரையும் மனையாட்டியையும் அஞ்சியே இதுநாள்வரை அங்கிருந்தேன்” என்றான் கதன். “இனி எனக்கு எதுவும் ஒரு பொருட்டல்ல. நான் களம்பட்டேன் என்றால் அதுவே நிறைவு… அதற்கு உளம் ஒருக்கிய பின்னரே வந்தேன்.”

பேச்சொலி கேட்டு எழுந்து வந்த அர்ஜுனன் “கதரே, நீங்களா? அறிந்த குரல் என எண்ணினேன்” என்றான். அவன் கைவிரிக்க கதன் அவனை சென்று தழுவிக்கொண்டான். “எப்படி இவ்வணுக்கம்?” என்றான் நகுலன். “இவனுடைய தூதால்தான் சுபத்திரையை உன் தமையன் மணக்கமுடிந்தது” என்றபடி இளைய யாதவர் புலித்தோல் மஞ்சத்தில் அமர்ந்தார். நகுலன் “ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான்.

அர்ஜுனன் கதனை மஞ்சத்தில் அமரச்செய்த பின் “இவர் இளைய யாதவரின் குலத்தோன்” என்றான். “மெய்யாகவா?” என்றான் நகுலன். “மதுவனத்தின் அரசரும் என் தாதையுமான சூரசேனருக்கு லவண குலத்து இளவரசி மரீஷைக்குப் பிறந்த மைந்தர்கள் பதின்மர். வசு, தேவபாகர், தேவசிரவஸ், ஆனகர், சிருஞ்சயர், காகனீகர், சியாமகர், வத்ஸகர், காவுகர், வசுதேவர். ஒரே மகள் பிருதை மார்த்திகாவதியின் குந்திபோஜருக்கு மகளாகிச் சென்று குந்திதேவியாகி உங்கள் அன்னையானார். என் பெரிய தந்தை வசு இப்போது மதுவனத்தை ஆள்கிறார்” என்றார் இளைய யாதவர்.

“எந்தை வசுதேவர் மணந்தவர்கள் எழுவர். ரோகிணி மூத்தவர். என் அன்னை தேவகி இளையவர். மதுராவின் அரசரான பின்னர் அனைத்து குலங்களிலிருந்தும் ஒரு மனைவியை ஏற்றார். அன்னை ரோகிணி எங்கள் விருஷ்ணி குலத்தை சேர்ந்தவர். பௌரவ குடியில் பிறந்தவர். சுஷமம் என்னும் யாதவர்பாடியை ஆளும் உத்தவரின் மகள். பௌரவியாகிய அவருக்கு சாரணர், துர்த்தரர், தாமர், பிண்டாரகர், மஹாஹனு என்னும் மைந்தர்கள் பிறந்தனர். அவர்களுக்குப் பின் பிறந்தவர் பெரும் தோள் கொண்டவரான பலராமர். முதல் ஐவரும் பௌரவ குடிக்கு உரியவர்கள் என்பதால் அவர்கள் ரோகிணியின் தந்தை உத்தவரின் பொறுப்பில் சுஷமத்திலேயே வளர்க்கப்பட்டார்கள்” என்றார் இளைய யாதவர். “இவன் விருஷ்ணிகுலத்தில் பௌரவகுடியினன். அன்னை ரோகிணியின் மருகன்.”

“எவரைப்பற்றியும் அறிந்ததே இல்லை. இந்திரப்பிரஸ்தக் கால்கோளின்போதுகூட எவரும் வந்ததில்லை” என்றான் நகுலன். “ஆம், அவர்களுக்கும் அரசவாழ்க்கைக்கும் தொடர்பில்லை. கன்றோட்டி காட்டில் வாழ்கிறார்கள். அதிலேயே நிறைவும் காண்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “நிறைவு காணாதவர்கள் கன்றோட்டாது அரசுவாழ்வுக்கு வந்த நானும் என் மூத்தவரும்தான்.” கதன் “நானும் கன்றோட்டும் வாழ்விலேயே இருந்தேன். ஆனால் இங்கு உங்கள் காலடியிலேயே நிறைவை காணமுடியும் என வந்தேன்” என்றான்.

“போரில் உம்மால் என்ன செய்யமுடியும்?” என்றான் அர்ஜுனன். “நான் அம்புகளை எடுத்துத் தருவேன். கைத்திறன் யாதவர்களுக்கு பழகியது” என்றான் கதன். “என்னால் வளைதடி ஏந்தி போரிடவும் முடியும்.” இளைய யாதவர் “சென்று மீளும் வளையம்புகளை அவனால் பிடித்து மீண்டும் ஆவநாழிக்குள் நிறைக்கமுடியும்” என்றார். “ஆம்… நான் காற்றில் பறக்கும் ஈயை சிறு நாணலால் குத்திக்கோக்கும் திறன்கொண்டவன்” என்றான் கதன். சுற்றிலும் நோக்கி கீழே கிடந்த சிறுகூழாங்கல் ஒன்றை எடுத்து விரலால் சுண்டி பறந்துகொண்டிருந்த கொசுவை அடித்து வீழ்த்தினான்.

“விந்தை!” என்றான் நகுலன். “ஒரு வளைதடியால் ஆயிரம் பசுக்களை தொட்டு திரும்ப அழைப்பதுண்டு நான்” என்றான் கதன். “நாங்கள் பயன்படுத்தும் அனைத்து அம்புகளும் திரும்பிவரும் தன்மைகொண்டவையே.” அர்ஜுனன் “நன்று, முடிவிலாது நிறையும் ஆவநாழி ஒன்று தேவைப்படும் எனக்கு” என்றான். “நான் பின்னிருக்கையில் உள்ளவரை உங்கள் கை நீளும்போது அம்பு அதிலிருக்கும், பாண்டவரே” என்றான் கதன்.

bowகதனின் தலை தேரில் நின்றிருந்த அர்ஜுனனின் இரும்பாலான முழங்கால் காப்புக்கு இணையாக அமைந்திருந்தது. அவனைச்சுற்றி பன்னிரு தூளிகளிலாக அம்புகள் நிறைந்திருந்தன. அர்ஜுனனின் விரல்கள் காட்டும் முத்திரைகளுக்கேற்ப உரிய அம்பை எடுத்து அவன் அளித்துக்கொண்டிருந்தான். போர் தொடங்கிய அன்றே பல தருணங்களில் அர்ஜுனனின் கை எழுவதற்குள்ளாகவே அவன் எண்ணிய அம்பு தன் கைகளில் வந்துவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். மெல்ல அவனே போரிடுபவனும் ஆனான். எவரை தாக்கவேண்டுமென்பதை அர்ஜுனனின் உள்ளம் முடிவெடுக்கும் அக்கணத்திலேயே அவனும் முடிவெடுத்தான்.

போரிலிறங்கிய முதல்நாள் இரவு அதை எண்ணி வியந்தபடி வான் நோக்கி கிடக்கையில் போர் என்பது ஓர் இசை நிகழ்வு என்று அவனுக்கு தோன்றியது. வெவ்வேறு இசைக்கருவிகள் வெவ்வேறு கலைஞர்களால் தனித்தனியாக இசைக்கப்படுகின்றன. இசை அவை அனைத்தையும் ஒன்றென இணைத்து பெருக்கெடுத்துச் செல்கிறது. அதன் ஒழுக்கில் விசையில் ஒழுங்கமைவில் ஒவ்வொருவரும் முற்றழிகிறார்கள். ஒற்றை உளம் கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன் பின் தங்களை ஒத்திசைத்துக்கொள்ள அவர்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை.

கதன் பிறிதொன்றும் ஆகி அங்கு நிகழும் போரை ஒவ்வொரு அசைவும் ஒலியும் வண்ணமுமென நோக்கிக்கொண்டிருந்தான். அர்ஜுனனின் முன்னால் அமரபீடத்தில் அமர்ந்து தேரை ஓட்டிக்கொண்டிருந்த இளைய யாதவர் தன்னை கடந்து சென்ற அம்புகளை முற்றிலும் உடலால் அறிந்து வளைந்தும் சரிந்தும் உடல் திருப்பியும் எளிதாக தவிர்த்து, வலக்கையால் ஏழு கடிவாளச் சரடுகளை சேர்த்துப்பற்றி, முதல் மூன்று விரல்களால் அவ்வேழையும் தனித்தனியான யாழ் நரம்புபோல் மீட்டி புரவிகளுக்கு ஆணையிட்டு தேரை செலுத்தினார்.

இடக்கையில் இருந்த சவுக்கு பறக்கும் பாம்பென எழுந்து சென்று புரவிகளின் முதுகை மெல்ல தொட்டு வளைந்தெழுந்தது. அதன் முனையில் அமைந்திருந்த சிறு படிகமணி ஒளிவிடும் வண்டுபோல் ஏழு புரவிகளுக்கும் மேல் பறந்து எழுந்து சுழன்றது. புரவிகளும் அவரும் முற்றிலும் ஓருளம் என்று ஆனதுபோல் அவர் எண்ணியதை அவற்றின் கால்களும் உடல்களும் இயற்றின. தேர் அவரை தன் உயிராக அகத்தே கொண்டதுபோல் விரைந்தது, தயங்கியது, திரும்பியது, சீறிஎழுந்தது, ஒசிந்தும் வளைந்தும் நிலைத்தும் களைத்தும் களத்தில் நின்றது. ஏழு கால்கள் கொண்ட சிறுத்தை என அதை முந்தைய நாள் சூதன் ஒருவன் பாடியதை அவன் கேட்டிருந்தான்.

இளைய யாதவரின் முகம் தேரில் முகப்புத்தூணின் வளைந்த இரும்புப்பரப்பில் இருபுறமும் தெரிந்தது. இரண்டு இணைத்தெய்வங்களாக அத்தூண்களில் எழுந்து அவர் அர்ஜுனனை நோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் குவிந்தும் விரிந்தும் அவனுடன் உரையாடின. விழிகள் அவ்வுரையாடலுக்கு அப்பால் கனவு நிறைந்த புன்னகையுடன் உற்று நோக்கி பிறிதெதையோ கூறிக்கொண்டிருந்தன. தேர்த்தட்டில் நின்று சுடரென, புகையென, ஒளிக்கதிரென மெல்ல நடமிட்டு அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அர்ஜுனன் அதற்கு அப்பால் பிறிதொருவனென்றாகி அவருடன் தனியுரையாடலில் ஈடுபட்டிருந்தான்.

கதன் தன் தாழ்ந்த பீடத்திலிருந்து நோக்கியபோது அந்தத் தூண்களில் அவர்கள் இருவரின் முகங்களும் ஒன்றெனக் கலந்து தெரிந்தன. தேர் திரும்புகையில் எழுந்த இளைய யாதவரின் முகம் மறுகணமே அர்ஜுனனின் முகமாகியது. இரு முகங்களும் உருகி கலந்து பிரிந்து மீண்டும் அணுகி முத்தமிட்டு ஒன்றாயின. எதிரி அம்பொன்று தொடுப்பதற்குள்ளாகவே இளைய யாதவரின் உதடுகள் அதை அர்ஜுனனுக்கு கூறிவிட்டனவா என்று அவன் ஐயம் கொண்டான். அதை நோக்குந்தோறும் சூழ அலையடித்த போரின் ஓசைக்கொந்தளிப்புக்கு நடுவே செவி முற்றழியும் பேரமைதி ஒன்று நீர்த்துளிபோல் நுனி நின்று ஒளிர்வதாகவும் அதற்குள் அத்தேர் மட்டும் முழுத்தனிமை கொண்டிருப்பதாகவும் அவனுக்கு தோன்றியது.

அர்ஜுனன் செல்லுமிடமெல்லாம் சிலந்திவலை வண்டை அறுத்து விடுவிப்பதுபோல கௌரவப் படை அவனை உள்ளே விட்டு சிதைந்து பின்னகர்ந்தது. அவனுடன் வில்லெதிர்கொண்ட கிருபர் மெல்ல தளர்ந்து பின்னடைந்தார். துரோணரின் எண்ணமுணர்ந்து கேடயப்படை வந்து அவரை உள்ளே இழுத்து மறைத்துக்கொண்டது. அவன் மாகிஷ்மதியின் நீலனின் ஐந்து உடன்பிறந்தார்களான மணிர்மன், குரோதவான், மகாக்குரோதன், சண்டன், சுருரோணிமான் ஆகியோரை கொன்றான். ஆரவாக அரசன் சுதர்மனையும் அவன் ஏழு மைந்தர்களையும் வீழ்த்தினான். கீடவ அரசன் பார்வதீயனையும் குந்தல அரசன் கீடகனையும் அவன் மைந்தர்களான அக்தர்தீர்த்தன், குஹரன், ஆஷாடன் ஆகியோரையும் கொன்றான்.

அரசர்கள் கொன்றுகுவிக்கப்பட்ட செய்தி சென்றதும் பின்னாலிருந்து சகுனியின் முரசுகள் “அர்ஜுனன் தடுக்கப்படவேண்டும். எழுக சைந்தவர்! எழுக உத்தர பாஞ்சாலர்!” என ஆணையிட்டன. இருபுறங்களிலிருந்தும் படைகள் கூர்கொண்டு முன்னெழ அவற்றின் முகப்பில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் வந்தனர். அவர்களின் சங்கொலியை கேட்டதுமே வாளால் தழலை வெட்டுவதுபோல் ஓர் அசைவு அர்ஜுனனில் உருவானது. அவன் இரண்டென்று ஆகி இருபுறமும் நின்று எதிர்த்த அவர்களை நேர்கொண்டான்.

ஜயத்ரதனைச் சூழ்ந்து தேர்ந்த வில்லவர்களாலான சைந்தவத் துணைப்படையினர் தேரில் வந்தனர். அஸ்வத்தாமனை அவன் மாணவர்களான மலைவில்லவர் புரவிகளில் குறுவில்லேந்தி சூழ்ந்திருந்தனர். அவர்களின் அம்புகள் இரு திசைகளிலிருந்தும் வந்து அர்ஜுனனை சூழ்ந்து கொப்பளித்தன. அர்ஜுனன் இருபுறமும் புன்னகையுடன் எழுந்த தன் தேரோட்டியிடம் விழியாடியபடி அவ்விருவரையும் தனித்தனியாக எதிர்கொண்டான். அர்ஜுனனை சூழ்ந்து வந்த பாண்டவ வில்லவர் எதிர்வந்த அம்புப்பெருக்கை தங்கள் அம்புகளால் காற்றுவெளியிலேயே எதிர்கொண்டனர். அம்புகள் மண்ணில் இருந்து தங்கள் விசைகளை பெற்றுக்கொண்டு காற்றில் தங்களுக்குரிய போர் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தன.

தலையை தேர்த்தட்டின் விளிம்புக்குக் கீழாக தழைத்து மேலே எழுந்த ஓசையாக கதன் அந்தப் போரை கேட்டுக்கொண்டிருந்தான். குழல் போலவும் யாழ் போலவும் முழவு போலவும் ஓசையிட்டு கடந்து செல்பவை. விம்முபவை, சீறிச்செல்பவை, அதிர்பவை, சுழலோசை எழுப்புபவை, கனைப்பவை, உறுமுபவை. ஒவ்வொரு அம்பும் தனக்குரிய குரல் கொண்டிருந்தது. வேறுபட்ட வடிவங்களில் சிறகும் அலகும் கொண்டிருந்தது. எழுந்து வளைந்து அமைபவை, காற்றைக் கிழித்து நேர்கோடென வருபவை, ஒளிக்கீற்றென நோக்கும் கணமே வந்து செல்பவை, நாரைபோல் எழுந்து மிதந்து அணுகுபவை, சிட்டுபோல் வானிலேயே துள்ளிச் சுழல்பவை, பனந்தத்தைபோல் காற்றில் எழுந்தபின் எண்ணி விசைகொண்டு பாய்பவை.

இத்தனை அம்புகளும் இதுகாறும் எங்கிருந்தன? பல்லாயிரம் கொல்லர் உலைகளில் இரும்புத்துண்டுகளாக எழுந்து நூறுநூறு முறை அறைகொண்டு சிவந்து கூர் பெற்று உடல் நீட்டி சிறகு கொண்டு பிறந்து வந்தவை. அதற்கு முன் அவை எங்கிருந்தன? மண்ணின் ஆழத்தில் கல்லுடனும் மண்ணுடனும் கலந்து இரும்பென்றிருந்தன. மண் முழுக்கவே கனியில் சாறென இரும்பு நிறைந்திருப்பதாக சூதர் பாடல் கூறுவதுண்டு. இரும்பின் மீது மானுடர் நடமாடுகிறார்கள். விளைநிலங்களொருக்கி அன்னம் சமைக்கிறார்கள். மாளிகைகளை எழுப்பிக்கொள்கிறார்கள். மறைந்து அவர்கள் மண்ணை அணுகுகையில் அனைத்து திசைகளிலிருந்தும் வஞ்சத்துடன், இன்னளியுடன் ஊறிப் பெருகி வந்து இரும்பு அவர்களை சூழ்ந்து கொள்கிறது. மென்மையாக அணைத்து தன் உப்பால் மூடுகிறது.

அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் அர்ஜுனனுக்கு பாதி நிகரானவர்கள் என்று அவனுக்கு தோன்றியது. அவர்கள் இருவரும் இணைந்தபோது முற்றிலும் நிகர் நின்று அர்ஜுனனை அணுவிடை முன்னகர ஒண்ணாமல் தடுக்க முடிந்தது. பலமுறை அர்ஜுனன் தன் கவசங்களை மாற்றினான். அவன் கவசக்கைவளைகள் உடைந்தன. செவிக்குழையொன்று தெறித்தது. தேர்த்தூண்கள் அம்பால் அறைபட்டு சிதைந்து தெறித்தன. ஒவ்வொரு கணமும் போர் நிகழ்ந்தும் ஓர் அணுவிடைகூட இருசாராரும் முன்னகரவில்லை என்று கதன் உணர்ந்தான். பின்னர் ஒரு கணத்தில் தன்னை சூழ்ந்திருந்தவர்களை பார்த்தபோது அர்ஜுனனின் தேர் நெடுந்தூரம் முன்னகர்ந்து வந்திருப்பதை கண்டான். நீர் வற்றுவதுபோல நோக்கி நிற்கவே விழியறியாது கௌரவப் படை பின்னகர்ந்துகொண்டிருந்தது.

அஸ்வத்தாமனின் அணுக்கவில்லவர்கள் ஒவ்வொருவராக களம்பட பின்னிருந்து அவனுடைய களரிவீரர்கள் வந்து அவ்விடத்தை நிரப்பி அப்படை உருவழியாது விசை குறையாது காத்தனர். ஆனால் அரைக்கணம் விழியோட்டி தன் முன் குவிந்து கிடந்த உத்தர பாஞ்சாலத்தின் படைகளை கண்டதுமே அஸ்வத்தாமன் அகம் தளர்ந்தான். தொலைவில் அப்போருக்கு அப்பால் இருந்து நோக்குகையில் அத்தளர்வை மிகச் சிறிய அசைவாக ஆனால் முற்றிலும் தனித்து காணமுடிந்தது. அஸ்வத்தாமனின் தளர்வு மறுகணமே இயல்பாக ஜயத்ரதனிடம் வெளிப்பட்டது. கழுகின் சிறகு காற்றில் பிசிறுவதுபோல் சிதையலாயிற்று.

மேலும் மேலுமென அர்ஜுனன் முன்னகரும் விரைவு மிகுந்தது. தொலைவில் முழவோசை “அர்ஜுனன் எழுக! அர்ஜுனன் வலம் எழுக!” என்று முழங்கியது. இளைய யாதவரின் புருவங்கள் சுருங்கி மீண்டன. முழவோசை “அபிமன்யூ புண்பட்டுள்ளான்! திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் பின்னகர்கின்றனர்! பிறை இரண்டாக உடையவிருக்கிறது! பீஷ்மரை எதிர்கொள்க! பீஷ்மரை நிறுத்துக!” என்று ஆணையிட்டது.

ஒருகணத்தில் அவர்களுக்குள் உரையாடல் முடிய இளைய யாதவர் தேர் திருப்பி பீஷ்மரின் படைகளை நோக்கி சென்றார். அர்ஜுனனின் அணுக்கப்படை திரளென அவனைத் தொடர அவ்விடைவெளியை பின்னிருந்து வந்த யானைப்படை முற்றாக மூடி இரும்புக்கோட்டையொன்றை அமைத்தது. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் அர்ஜுனனை தடுக்கும்பொருட்டு பின்னால் வர அர்ஜுனனுக்குப் பின்னாலிருந்து சேதிநாட்டு அரசன் திருஷ்டகேதுவும் குமார மன்னர் சிரேனிமாதரும் உல்லூகநாட்டரசர் பிருஹந்தனும் அவர்களை செறுத்தனர்.

ஜயத்ரதன் நகைத்தபடி “எத்தனை பொழுது உங்களால் எங்களை தடுக்க இயலும், அறிவிலிகளே?” என்றான். “எங்கள் இளைய பாண்டவரால் உங்கள் முதியவர் கொல்லப்படும் கணம்வரை!” என்றார் பிருஹந்தன். அஸ்வமாதன நாட்டரசர் ரோஜமானரும் நிஷாதராகிய மணிமானும் வந்து இணைந்துகொண்டபோது அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் முழுமையாக சூழப்பட்டனர். அவர்கள் சென்று சூழ்வதை செவிகளாலேயே அறிந்தபடி கதன் படைநடுவே பிளந்து சென்ற அர்ஜுனனின் தேரிலிருந்து அம்பு தேர்ந்தளித்தான்.

bowதேர் படைகளை ஊடுருவிச்சென்றபோது இளைய யாதவர் அர்ஜுனனிடம் “இத்தருணம் உன்னுடையது. இன்றே அவரை வெல்க!” என்றார். “ஆம், இன்று அவரை கொல்வேன்!” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆனால் அது எளிதல்ல. நெறி முழுமை கொண்டவர்களை வெல்வது இரு வழிகளில் மட்டுமே இயல்வது. ஒன்று அவர்கள் நெறி பிறழவேண்டும். அன்றி நாம் நெறி பிறழவேண்டும்” என்றார் இளைய யாதவர். “நெறிபிறழ்தல் வீரர்களுக்குரியதா?” என்று அர்ஜுனன் கேட்டான் . “வெற்றி ஒன்றே வீரர்களுக்குரியது” என்று இளைய யாதவர் சொன்னார்.

“மீறல்கள் அனைத்தும் தொடக்கங்களே. அவை முடிவிலாது பெருகும்” என்று அர்ஜுனன் சொன்னான். “மீறுவோர் மீறுக என அறைகூவுகின்றனர். மீறலை நிலைநிறுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை தெய்வங்கள் பொறுத்துக்கொள்வதில்லை.” இளைய யாதவர் சிரித்து “பாரதா, ஷத்ரியன் என்பதே ஒரு பிறழ்நிலைதான். போரென்பது மாபெரும் பிறழ்வு. அறம்நின்ற தோல்வியைவிட அறம்பிழைத்த வெற்றியே வீரனுக்குரியது. பேரறங்களை நிலைநிறுத்துபவை சிறுஅறமின்மைகளே. பெருநெறிகள் சிறுமீறல்களால் வாழ்கின்றன. கொற்றவை கொலைச்சிம்மம் மீதே எழுந்தருள்கிறாள்” என்றார்.

மிகத் தொலைவிலெங்கோ பீஷ்மர் இருப்பதாக கதன் எண்ணியிருந்தான். தேர் படைமுனை ஒன்றில் திரும்பியபோது எண்ணியிராது மிக அருகே பெருமலை ஒன்றை கண்டதுபோல் பீஷ்மரை எதிர்கொண்டு அவன் திடுக்கிட்டான். அந்த அதிர்ச்சி அர்ஜுனனுக்கும் இருப்பதை அவன் உணர்ந்தான். மீண்டும் ஒரு கணத்தில் எச்சொல்லுமில்லாமல் அவர்கள் ஒருவருக்கொருவர் அம்பு கோத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் முற்றிலும் இணையாக அப்போர் நிகழ்ந்துகொண்டிருந்தமையால் முன்பு முடிந்த அக்கணத்தின் முறிவிலிருந்து அதே விசையில் மீண்டும் தொடங்கியது.

ஒருவரையொருவர் முற்றறிந்தவர்களாக, ஒருவரோடொருவர் முழுமையாக இணைந்தவர்களாக, விழியும் செவியும் முனை தொடுத்து நிற்க, ஒற்றை அசைவின் இரு வடிவாக கைகளும் உடலும் நடமிட இருவரும் போரிட்டனர். முன்புபோல் அப்போர் முடிவிலா கணமொன்றில் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று கதன் எண்ணினான். ஆனால் அரைநாழிகைக்குள் பீஷ்மரின் அம்பு அர்ஜுனனின் தொடைக்கவசத்தை அறைந்து சிதறடித்தது. பிறிதொரு அம்பு அவன் தோள்கவசங்களை உடைத்தது. அம்பொன்று அவன் நெஞ்சை பொறியுடன் உரசிச்சென்றது.

பீஷ்மர் பேருருவம் கொண்டு அணுகி வருவதாக தோன்றியது. அவர் முகம் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. போர்க்களத்தில் ஊழ்கத்திலமர்ந்த முனிவரென இனிய மயக்கொன்றில் அரைவிழி சரிந்து துயில்கொண்டதுபோல் முகத்தசைகள் தளர்ந்து தெரியும் அந்த முகம் மறைந்து இரை நோக்கி பசியுடன் முகம் கூர்ந்து செல்லும் வேங்கையின் தோற்றம் வந்திருந்தது. இளைய யாதவர் “அவர் தனக்குத் தான் அமைத்துக்கொண்ட எல்லை ஒன்றை மீறிவிட்டார், பார்த்தா. இதுகாறும் அவர் கொண்ட அனைத்தையும் இழந்துவிட்டார். அது உனக்கு அளிக்கப்படும் ஒப்புதல் என கொள்க! இதுவே தருணம். உன் எல்லையை மீறி அவரை கொல்க!” என்றார்.

அர்ஜுனன் “ஆம், இதோ!” என்றான். ஆனால் அவனால் ஆளப்படாததுபோல் அவன் உடல் முற்றிலும் ஒத்திசைந்த முந்தைய அசைவுகளின் தொடராகவே இருந்தது. “மீறுக! கடந்து செல்க! நிலத்தமர்ந்து அவர் கால்களை நோக்கி அம்பை விடுக!” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம்!” என்று சொன்னான் அர்ஜுனன். ஆனால் மீண்டும் மீண்டும் பீஷ்மரின் தோள்களையும் நெஞ்சையும் தொடையையுமே அவனுடைய அம்புகள் குறிநோக்கின. “செல்க! செல்க!” என்று இளைய யாதவர் கூவினார்.

அர்ஜுனனின் தேரைத் தொடர்ந்து வந்த வில்லவர்கள் ஒவ்வொருவராக தேர்த்தட்டிலிருந்து சிதறி விழுந்தனர். தலையிழந்து பின்சரிந்து அமர்ந்து உடல் துடித்தனர். தேர்கள் சகடம் கவிழ்ந்து உருண்டன. குருதி நாளங்கள் வெட்டுபட்ட கவிழ்த்த குடம்போல் குருதி கொட்ட கால் குழைந்து விழுந்து விசை குறையாது நிலத்தில் இழுபட்டன. அர்ஜுனனின் தேர் மேலும் மேலும் தனிமைகொண்டு சென்றது. “செல்க! அவ்வெல்லையைக் கடந்து செல்க!” என்று இளைய யாதவர் மேலும் வெறிகொண்டு கூவினார்.

இரு தூண்களிலும் அவர் முகம் சினமும் சீற்றமும் கொண்டு கொந்தளித்தது. “என்னால் இயலவில்லை, யாதவரே! எந்தை முன் என் இயல்பு மீற இயலவில்லை!” என்று அர்ஜுனன் உடைந்த குரலில் சொன்னான். பீஷ்மரின் பேரம்பு ஒன்று அர்ஜுனனின் தேர்த்தட்டை உடைத்து சில்லுகளாக தெறிக்கவைத்தது. அதிலிருந்து தலைகாக்க முழங்கால் மடித்து குனிந்து அவன் எய்த அம்பு பீஷ்மரின் உடலை கடந்து செல்ல பிறிதொரு பேரம்பால் அவன் தேர் முகடை முற்றாக உடைத்து பறக்கவைத்தார். தலைக்குமேல் பறந்து சென்ற சிம்புகள் காற்றில் ஓசையிட்டன.

ஏழு அம்புகளால் அவன் தேரை முற்றாக உடைத்து தெறிக்கவைத்தார் பீஷ்மர். திறந்த தேர்த்தட்டில் நின்று விசை கூட்டி அவன் அனுப்பிய அம்புகள் எதுவும் அவரை தொடவில்லை. சிரிப்பதுபோல் பல் காட்டி முகம் நெரித்து “வருக! வருக!” என்று கூவியபடி பீஷ்மர் அம்புகளால் அர்ஜுனனை அறைந்தார். பிறிதொரு அம்பு வந்து அவன் தலைக்கவசத்தை மீண்டும் சிதறடித்தது. அடுத்த கவசத்தை எடுத்தளித்த கதனின் கை நடுங்க அதையும் சிதறடித்தது இன்னொரு அம்பு. அர்ஜுனன் மூன்றாவது கவசத்திற்கு கை நீட்டுவதற்குள் அவன் தோள்களில் தறைத்தது அடுத்த அம்பு.

அவர் வில்லில் நாணேறுவதை கதன் மிக அண்மையிலென கண்டான். அந்த அவன் நெஞ்சுத்துடிப்பு நிலைகொள்ள விழிமட்டுமே என்றானான். மறுகணம் இளைய யாதவர் தன் புரவிக் கடிவாளங்களையும் சவுக்கையும் வீசிவிட்டு தேர்முகப்பிலிருந்து பாய்ந்திறங்கி முன்னால் ஓடி வலக்கையை மேலே தூக்கினார். அதில் சுழல்ஒளியென படையாழி தோன்றியது.

பீஷ்மர் புன்னகையுடன் தன் வில்லை தேர்த்தட்டிலிட்டு இரு கைகளையும் விரித்து அசைவற்று நின்றார். இளைய யாதவரின் கையில் சுழன்ற படையாழி தயங்கியது. பின் அவர் கை தளர ஆழி தன் உடல் சுருக்கி அவர் உள்ளங்கைகளுக்குள் மறைந்தது. யாதவர் விழிதாழ்த்தி இரு கைகளையும் என் செய்வேன் என விரித்த பின் தன் தேர்த்தட்டு நோக்கித் திரும்பி வந்தார். உதடுகளில் புன்னகையுடன் விரித்த கைகள் அவ்வாறே காற்றில் நிலைக்க இளைய யாதவரை நோக்கிக்கொண்டு நின்றார் பீஷ்மர். உதடுகளில் இருந்த அப்புன்னகை அவர் விழிகளில் இருக்கவில்லை. இளைய யாதவர் தாவி அமரத்தில் அமர்ந்து ஒரு சொல் உரைக்காமல் தேரைத் திருப்பி கொண்டுசென்றார்.

வெண்முரசின் கட்டமைப்பு

தொடர்புடைய பதிவுகள்

பழியின் தனிமை

$
0
0

devibharathi

ஒரு அநீதிக்கு எதிராக நீதி கோருவதற்கும் பழி வாங்குவதற்கும் இடையில் என்ன வித்தியாசம் ?தேவி பாரதியின் ”நிழலின் தனிமை” படிக்கும்போது தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த கேள்வி.அதே போல மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தேவையான வலு இல்லாத ஆன்மாக்கள் அநீதி என்னும் சுழலில் மாட்டிக் கொள்ளும்போது என்ன ஆவார்கள் ?பழிவாங்குதலை வாழ்க்கை நமக்கு முன்வைக்கும் ஒரு சோதனையாக கணக்காக அல்லது புதிராக வைத்துக் கொள்ளலாமா ?இந்தப் புதிருக்கு இரண்டு வழிகள் உண்டு.நாம் எதன் மூலமாக அதிலிருந்து வெளியேறப் போகிறோம் ?

பழியின் தனிமை 1

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மணவுறவுமீறல் -கடிதம்

$
0
0

marriagexl_070517021244

 

மணவுறவு மீறல் குற்றமா?

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

மணஉறவு மீறல் குறித்த கிருஷ்ணன் அவர்களின் கேள்வியும் உங்களின் விரிவான பதிலும் வாசித்தேன். உண்மையில் உங்களிடம்  நான் இந்தக்கேள்வியைக் கேட்கனும் என்று நினைத்திருந்தேன்.  திரு.கிருஷ்ணன் கேட்டதுபோல  எனக்குச்சரியாக கேட்கத்தெரியவில்லை. நாளிதழ்களில் இந்த செய்தி வெளியான போதிலிருந்தே பரவலாக இது பலரின் கவனத்தை ஈர்த்தது.  பல்வேறு தளங்களிலிருந்தும் பலர் தேவைக்கும் அதிகமாக எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தார்கள்.

 

பட்டிமன்ற நடுவரிலிருந்து பேராசிரியர்கள் வரை, பிறழ் உறவை நீதிமன்றமே அங்கீகரிக்கின்றது என்னும்பொருளில் ஆதரித்தும் , இனி அடுத்த தலைமுறை அவ்வளவுதான் யாரும் யாருடனும் இருக்கலாம், முறை பிறழ்ந்த பாலுறவு இச்சையை  நீதிமன்றமே அங்கீகரித்துவிட்டது, இனி உறவுகளுக்கு எந்தப்பொருளும் இல்லை என்று எதிர்த்தும் பேசிக்கொண்டிருந்ததால் எனக்கு நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கு என்றே சந்தேகம் வந்துவிட்டது. எனவே உங்களிடம் இதைக்கேட்கவே இல்லை.

 

நீங்கள் அளித்திருந்த பதிலில் நான் தெளிவானது மட்டுமல்லாது, நூலகத்திலும் கல்லூரி கேண்டீனிலும் இனி பேராசிரியர்கள் ’’இனி பயப்பட ஒண்ணுமில்லை’’ என்று நமட்டுச்சிரிப்புடன் பேசுகையில் என்னால் இடைப்படமுடியும். அவர்களுக்கும் இத்தீர்ப்பினை புரியும்படி சொல்லமுடியும்

 

வழிப்பறி , திருட்டு போல மண உறவு மீறலை 5 ஆண்டு தண்டணைக்குரிய குற்றமென்று , புகாரின்றியே காவல்துறை இதை விசாரிக்கமுடியுமென்னும் நிலையிலேயே இத்தீர்ப்பு வந்திருக்கின்றது என்பதை இப்போதுதான் அறிகிறேன்

 

நீங்கள்   ’’அலைதல் அமர்தலில்‘’ காலம் மாறிக்கொண்டிருக்கிறது காலத்திற்கேற்றபடி வாழ்வுமுறையும் மாறிக்கொண்டிருக்கிறது, வாழ்வுகுறித்தான நம் கண்ணோட்டமும் அதற்கேற்ப மாறவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். தன்பால் திருமணங்களே பல நாடுகளில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட உறவாகிவிட்ட நிலையில் நம்மிடையே இன்னும் சாதீயப்பிரச்சனைகளும் கெளரவக்கொலைகளும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

இருபாலினத்தவரும் சேர்ந்து பணிபுரியும் சூழலில் பல இடங்களுக்கு இணைந்து சென்று வர வேண்டியிருக்கும்  சமயங்களில், பலர் இனி  கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்வார்களாயிருக்கும் இத்தீர்ப்பு அளித்திருக்கும்  தெளிவால் காவல்துறை தலையீட்டை, தொந்தரவை இனி எதிர்கொள்ள முடியும்.

 

திருமண உறவு என்பது இரு தனிநபர்களுக்கு நடுவே நிகழ்வது மட்டுமே  அதைத்தாண்டிய உறவு அரசுக்கோ சமூகத்திற்கோ எதிரானதில்லை என்று சொல்லும் இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதுதான். எனினும் ஒரு  சந்தேகமும் எனக்கு இருக்கின்றது.  இதை பலர் அவர்களுக்கு வசதியாகவும் பயன்படுத்திக்கொள்ளும் அபாயமும் இருகின்றதென்றே நான் நினைக்கிறேன்

 

அலுவலகங்களில் மேலதிகாரிகள் இத்தீர்ப்பை அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு  கூடுதல் சலுகையாக எண்ணிக்கொண்டு  கீழ்நிலையிலிருக்கும் பெண் பணியாளர்களை எந்தத்தடையுமின்றி மிரட்டிப்பணியவைக்க நினைக்கலாம். கல்வி நிறுவனங்களில்,  ஆராய்ச்சி மாணவிகளிடம், முனைவர் பட்டம் வேண்டுமென்றால்  பிறழுறவு கட்டாயம் என்று சொல்லும் திருமணமான பல கிழட்டுப் பேராசிரியர்களும் இனி சுதந்திரமாக செயல்படுவார்களல்லவா?

 

நீங்களே சொல்லியிருப்பது போல இந்தத்தீர்ப்பும்  நடைமுறையில்  எப்படிச்  செயல்படுகிறது, என்ன விளைவை  உருவாக்குகிறது  என்பதைப்பார்த்துவிட்டு  இதில்  திருத்தங்களும்  இனி வரும்  நாட்களில்   கொண்டுவரப்படலாம்

 

ஜீவனாம்சம்  என்றே   இதுநாள் வரையிலும் கேள்விப்பட்ட ஒரு சொல்லை, ’’வாழ்வுச்செலவு’’ என்று நீங்கள் சொல்லியிருப்பது நன்றாக இருக்கின்றது.

 

அன்புடன்

லோகமாதேவி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மோவாயிசம்

$
0
0

ru

 

பல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்’ என்று சான்றோர் சொன்னதை கூர்க. இன்று உலகமெங்கும் கற்றோர் மற்றும் காசுள்ளோரிடம் செல்வாக்குடன் இருக்கும் மோவாயிஸம் உலகின் மிகப்பிரபலமான இசங்களில் ஒன்று என்றால் மிகையல்ல.

பதினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நீளமான கழுத்தே அழகெனக் கொள்ளப்பட்டது. காரணம் ஆங்கிலோ சாக்ஸன்களுக்கு பொதுவாக நீளமான கழுத்து இருந்தது. ஆங்கிலோ சாக்ஸன்கள் இங்கிலாந்துக்கு குடியேறியவர்கள். ஒரு நாட்டில் குடியேறியவர்கள் அந்நாட்டு பூர்வகுடிகளை விட இனமேன்மை கொண்டவர்கள் என்ற உயிரியல் உண்மை ஆங்கிலோ சாக்சன்களால் நிறுவப்பட்டது. ஆகவே நீள்கழுத்து உயர்வானதாகவும் அழகானதாகவும் எண்ணப்பட்டது.

அக்கால இங்கிலாந்தில் மேல்சட்டைகளில் ரஃபிள் [ruffle] என்று அழைக்கப்பட்ட குட்டைத்துணியை கழுத்தைச்சுற்றி வரும்படி அமைக்கும் வழக்கம் இருந்தது. அந்த சட்டையானது பற்பல மடிப்புகளுடன் உடலோடு ஒட்டியதாக இருக்கும். இந்த ஆடை கெமீஸ் என்று அழைக்கப்பட்டது.அக்கால அகராதி ஒன்றில் அது ’கனவான்கள் படுக்கையில் கடைசியாக கழட்டும் ஆடை’ என்று அர்த்தம் அளிக்கப்பட்டிருந்தது. இது கெட்டஅர்த்தம் அளிக்கலாமென்பதனால் ’படுக்கையில் இருந்து எழுந்ததும் முதன்முதலாக அணிவது’ என்று திருத்திக்கொள்ளும்படி மேன்மைதங்கிய மகாராணியின் ஆணை இருந்திருக்கிறது.

கெமீஸ் என்ற சொல்லின் மூலத்தை தேடிச்சென்றால் கெமிசியா என்ற இத்தாலியச் சொல்லைச் சென்றடைகிறோம். அது அதே சொல்லால் ஆன லத்தீன் சொல்லில் இருந்து வந்தது. அந்த லத்தீன் சொல்லுக்கு குஆமிஸ் என்ற அராபிய சொல்லும், அதற்கு கமீஸ் என்ற பாரசீகச் சொல்லும், அதற்கு வேறு எழுத்துக்களில் கமீஸ் என்றே ஒலிக்கும் இந்தி சொல்லும், அதற்கு அந்த ஆடையும் மூலமாக இருந்துள்ளதை சரித்திரம் காட்டுகிறது.

மொகலாய ஆட்சிக்காலத்தில் சேடிப்பெண்கள் அணிய எளிதில் கழற்றும்படி ஒரு ஆடையை கண்டுபிடிக்கும்படி மாமன்னர் ஷாஜகான் ஆணையிட்டதாகவும் அரசவை ஆடைநிபுணர் மொகம்மது அல் மொகம்மது அதை வடிவமைத்ததாகவும் அவருக்கு டெல்லி அரண்மனையின் மாபெரும் தூண்களுக்கு சுற்றப்பட்டிருந்த பட்டுத்திரை தூண்டுதலாக இருந்ததாகவும் சரித்திரம் சொல்கிறது. அந்த ஆடையில் கழுத்தில் அணியப்பட்டிருந்த ஒரு பட்டியில் முகவாயருகே அமையும் ஒரு முடிச்சை மாமன்னர் இழுத்ததும் ஆடை ஒட்டுமொத்தமாக விலகும் பண்புநலன் கொண்டதாக இருந்தது. ஆட்சியாளர்கள் சிலைகளை திறந்து வைக்கும் மரபு இவ்வாறுதான் உருவாகியது.

அந்த பட்டியும் முடிச்சும் முறையே பாரசீகம் அரேபியா வழியாக இத்தாலி சென்று இங்கிலாந்துக்கு வந்தபோது அதற்கு இங்கிலாந்தில் பெருத்த வரவேற்பிருந்ததில் ஆச்சரியமில்லை – ஏனென்றால் இதற்கெல்லாம் யாரும் ஆச்சரியம் கொள்வதில்லை. இந்தபட்டியை அங்கிலேய ஆடைநிபுணர்கள் பலவாறாக ஆய்வுசெய்தபின் அதை ரஃப் [ ruff ]என்ற கழுத்தாடையாக மாற்றிக்கொண்டார்கள். தாடையாடை என்பதும் பொருத்தமே. இது மனிதர்களின் கழுத்தைசுற்றி வட்டமாகவோ அல்லது சாத்தியமான பிற வடிவங்களிலோ அமையும்.

ஆண்கள், பெண்கள் மற்றும் மதகுருக்கள் இந்த ஆடைத்துணுக்கை அணிந்தார்கள். மேலிருந்து பார்க்கும் தேவதூதர்களுக்கு மனித உடல் தெரியாமல் தலைமட்டும் ஒரு தாம்பாளத்தில் தெரிவது போல தோன்றவேண்டுமென்பதே இதன் இறையியல் விளக்கமாகும். போதையில் சிந்தும் மது ஆடையில் விழாமல் தடுக்கிறது என்பது நடைமுறை விளக்கம்

ரஃப்-ஐ முடிந்த வரை பெரிதாக அணிவதை பதினாறாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் குடிகள் குடிப்பெருமிதமாக கருதினார்கள். ஆங்கில அரசைக் கைப்பற்றிய ஆங்கிலோ சாக்ஸன்கள் இதை ஒரு போட்டியாக முன்னெடுத்தனர். நீளமான கழுத்து காரணமாக பிறர் அவர்களிடம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. அக்காலத்தில்தான் போர்ரிஜ் எனப்படும் ஓட்ஸ்கஞ்சியை போதையில் ரஃப் மீது கொட்டிக்கொண்ட விஞ்செஸ்டர் கோமகனின் சலவைக்காரர் ஒருவர் ஆடைகளுக்கு கஞ்சி போடுவதை கண்டுபிடித்தார். அதன் பின்னர் ரஃப்கள் மேன்மேலும் ஆண்மை கொள்ள ஆரம்பித்தன.

ஒரு தர்மசங்கடமான சந்தர்ப்பத்தில் தன் ஆசைக்கிழத்தி தன்னைப்பற்றிச் சொன்ன சொற்றொடர் ஒன்றில் இருந்து ரஃப்களுக்குள் ஏன் கம்பு அல்லது சிம்பு வைத்துக் கட்டக்கூடாது என்ற எண்ணத்தை அடைந்த கோமகன் ஒருவர் அதில் இறங்க ஒரு கட்டத்தில் ரஃப் இரண்டடி அகலத்தைக்கூட எட்டியது. இதில் வண்டிச்சக்கர ரஃப் என்ற ஒன்று பிரபலமாக இருந்தது. மழையில் நனைந்து சென்றால் உடலில் ஒரு துளி நீர் படாது என்பது இதன் சிறப்பியல்பு

பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ரஃப் காலராக உருவம் மாறியது. காலரை கஞ்சிபோட்டு விரைப்பாக்கி கழுத்தைச்சுற்றி நிறுத்திக்கொண்டார்கள். கம்பிகள் மூலம் அவை மோசமான வானிலையிலும் தாக்குப்பிடிக்கச் செய்தார்கள். இக்காலகட்டத்தில் ஆங்கிலோ சாக்ஸன்கள் மற்ற இனங்களில் பரவி ஊடுருவிவிட்டிருந்தமையால் நீள்கழுத்து இனமேன்மையாக அமையாது போய்விட்டதென்றாலும் உயரமான காலர் மேட்டிமைச்சின்னமாக நீடித்தது.

உயரமான காலர் அமைத்துக்கொண்ட மனிதர் கழுத்தை வளைக்க இயலாது. அவரது மோவாய் முடிந்தவரை மேலே தூக்கி இருந்தாக வேண்டியிருக்கிறது. பின்னர் காலர் இல்லாதபோதுகூட இவ்வாறு மோவாய் மேலே தூக்கி இருப்பது உயர்குடிப்பிறப்பாக கருதபட்டது. பிற்பாடு இது பெருமிதத்தின் உடல்மொழியாகியது. நாட்டுப்பற்றுக்கு அடையாளமாக மாறியது. முகவாயை உயரதூக்கியபடி போரில் சாவதே சிறந்த பிரிட்டிஷ் வீரனின் பிறவிப்பயன் என்று எண்ணப்பட்டது.

ஆனாலும் ஆங்கிலத்தில் இதை ஒரு சொலவடையாக ஆக்கியது பென்சில்வேனியா செய்தியிதழான த ஈவினிங் டெமகிராட் என்றும் 1900த்தில் அது வெளியிட்ட கட்டுரை ஒன்றில் Keep your chin up என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டிருந்ததாவும் கலைக்கலஞ்சியம் சொல்கிறது. ஆச்சரியகரமாக இங்கே அது ஒரு ஆரோக்கிய குறிப்பாகவே பயன்படுத்தப்பட்டது. அன்றைய அமெரிக்கச்சாலையில் ஒருவர் மோவாயை தூக்கியபடி தூரத்தை மட்டுமே பார்த்து நடந்தால் நாற்றமடிக்கும் தரையின் சேற்றை பாராமல் வந்து விடமுடியும். அவ்வாறு செல்பவரே மேல்குடி என்று கருதப்பட்டது.

இவ்வாறு மோவாயை மேலே தூக்குவதற்காக சின் அப் என்ற உடற்பயிற்சிமுறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கம்பியைப்பிடித்தபடி எம்பி உடலைதூக்கி மோவாயை அதற்கு மேலே எழுப்ப முயல்வது இது. பிரிட்டிஷ் ராணுவத்துக்கு அளிப்பப்பட்ட இப்பயிற்சி உலகமெங்கும் பரவலாகியது.

இவ்வாறுதான் மோவாயிசம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு சிந்தனைப்போக்காக உருவம் கொண்டது. ஒரு கோட்பாடாக இதை இவ்வாறு வகுக்கலாம் ‘சிறிய விஷயங்களை முழுமையாக உதறிவிட்டு தனக்குரிய பெரிய விஷயங்களில் மட்டுமே ஈடுபடும் பெரியமனிதப்போக்கு’ இதை ‘தொலைவை மட்டும் பார்த்து வழியில் தடுக்கிவிழும் போக்கு’ என்றும் சொல்வதுண்டு.

ruff

மோவாய் தமிழிலே நாடி என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடிவாதம் என்று தொல்தமிழர் இதை வழங்கினர். உலகில் உள்ள எல்லாவற்றைப்பற்றியும் பேசியிருக்கும் தொல்தமிழ் முதனூலான குறளில் இதைப்பற்றி சொல்லப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. தமிழெதிரிகளின் ஆச்சரியம் கணக்கில் கொள்ளப்படாது. ’நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்கிறார் செந்நாப்போதார்.

’நாடியை தூக்கி வைத்துக்கொள்ளுதல் என்பது ஒரு நோய். அந்த நோய்க்கு ஆதாரமாக இருப்பது மோவாயே. அந்த மோவாயை தாழ்த்திக்கொள்வதற்கு அவசியமாக இருப்பது மனிதனின் வாய். அந்த வாயை வாய்ப்புள்ள அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ இதுவே இக்குறள் கூறும் பொருளாகும். குறளாசிரியர் மோவாயிசத்தை ஒரு தீங்கெனவே எண்ணினார் என்பதும் அதற்கு வாயைப்பயன்படுத்தும்படி சொன்னார் என்பதும் தெளிவு. வாயை எப்படி பயன்படுத்துவதென்று அவர் சொல்லவில்லை. அதை நாம் சித்த மருத்துவத்திலேயே தேடவேண்டும்.

மோவாயிசம் இந்திய மரபில் பல வடிவங்களில் இருந்துள்ளது. சமூக வாழ்க்கையில் இதன் வண்ணங்கள் பல நடைமுறைகளாக நீடிக்கின்றன. தமிழ்நாட்டில் மோவாயை தூக்குவதற்காக மேல்துண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றிலைச்சாற்றை முன்வாயில் கீழுதட்டுக்கிண்ணத்தில் தேக்கிக்கொள்வதும் பண்ணையார்களிடம் வழக்கமாக இருந்திருக்கிறது. நள்ளிரவில் குடைபிடிப்பதும் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது.

அறிவுலகில் மோவாயிசத்தின் செல்வாக்கைப்பற்றியே நாம் மையமாக கருதவேண்டும். தமிழில் நெடுங்காலம் இலக்கணமே மோவாயிசத்தின் ஆயுதமாக இருந்தது. இலக்கியத்தின் எல்லா பாடுபொருட்களையும் திருணமாக கருதி காலெடுத்து வைத்து செல்வதுதான் அறிஞர்வழக்கம். இதற்கு தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் பயன்பட்டது. ஆகவே தொல்காப்பியருக்கு திருணதூமாக்கினி என்ற பெயர் அளிக்கப்பட்டிருந்தது. இந்நூல் அறிஞர்களுக்கு மட்டும் அவர்கள் விரும்பிய பொருளை அளிக்கத்தக்கதாக இருந்தது.

பின்னர் இந்நூலின் நடையை ஒட்டி ஒரு நடை உருவாக்கப்பட்டது. இதை மோவாயிச தமிழ்நடை என்று சொல்லலாம். ‘கொடிதாகிய புலியின் உருவொப்ப வேங்கை பூத்ததென்றதனை களவின்கட் பெறாநின்ற இன்பம் நீங்குதலிற் கொடிதுபோற் றோன்றி கற்பின்கண் இல்லறப் பயனொடு கூடிப் பேரின்ப நுகர்வுகிடமாகுந் தன்மையினாற்..’ என்று செல்லும் நூல்களை மோவாயை தூக்கி வைத்தாலொழிய வாசிக்க இயலாது. வாசிப்பவர் மோவாயும் மேலே செல்லும் என்பர்.

வடமொழியில் மோவாயிசம் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. வடமொழியே மோவாயிசமாக பின்னர் விளங்க ஆரம்பித்தது. இது மணிப்பிரவாளம் என்று தமிழில் சொல்லப்பட்டது. ‘அநாதிக்காலம் திறந்து கிடந்த வாசலெல்லாம் நுழைந்து எல்லாராலும் பரிபூதனான நான் தேவரீர் உகந்து தொட்டாலும் எதிர்த்தலைக்கு அகத்தியை விளைவிப்புக்கும் நிஹீதயை உடைய நான்…’ என்று இம்மொழி நீளும்.

பின்னர் தமிழில் நவீன இலக்கியங்கள் தோன்றலாயின. இவற்றில் நவீன மோவாயிசம் ஒன்று உருவாகி வந்தது. இதன் பிறப்பிடம் சென்னை பல்கலைகழகம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வதுண்டு. அங்கே வெள்ளைய ஆசிரியர்கள் உள்ளூர் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள். ஷேக்ஸ்பியரையும் கூல்ரிட்ஜையும் மோவாயை தூக்கியபடி சொன்னால் மட்டுமே அழகாக இருக்கும் என்பது பிரிட்டிஷ் அழகியல் கோட்பாடு. அவ்வாறு மோவாயிசத்தை பழகியவர்கள் தமிழையும் அவ்வண்ணமே கற்று எழுத ஆரம்பித்தபோது புதுவகை மோவாயிசம் உருவாகியது.

rug

இத்தகைய மோவாயிசம் இட்டிலித்தட்டில் இடியாப்பம் பிழிந்தது போன்ற மொழிநடை ஒன்றை உருவாக்கியது, ஆங்கிலத்தில் பிழிந்த தமிழ். சிக்கலை விடுவிக்காமல் அப்படியே சாப்பிடவேண்டும் என்று தெரியாத பாமரர்கள் இருட்டில் முட்டிமோதுகையில் மோவாயிசர்கள் மகிழ்ச்சியாக இதில் திளைத்தார்கள். ’ஒர் எழுத்து எந்த அளவுக்கு புரியாமல் போகிறதோ அந்த அளவுக்கு அது பன்முக அர்த்தங்களை அடையும்’ என்ற தேற்றம் செல்வாக்கு பெற்றது. படிமம், அழகியல் என்று இவர்களுக்கென தனியான கலைச்சொற்கள் உண்டு.

இவர்களைப்பற்றி ‘ஊருக்குநாலுபேர்’ என்ற பிரபல நவீனம் எழுதப்பட்டிருக்கிறது. ஊர் என்றால் இங்கே மாவட்டம் என்று பொருள்படுகிறது. ’அந்த நாலுபேருக்கு நன்றி’ என்ற உருக்கமான பாடல் இவர்களைப்பற்றியதே. இவர்கள் மூக்கருகே முலை போட்ட படம் அச்சடிக்கப்பட்ட சிற்றிதழ்களில் எழுதினார்கள். இந்த மொழியில் பற்பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவற்றின்மூலம் இருந்தபெரும் தமிழணங்கை பல்வேறு யோகாசன நிலைகளில் குந்தச்செய்தனர்.

மோவாயிசத்தில் பிற்போக்கு முற்போக்கு என்று இரு மரபுகள் உண்டு. முதலாளிகளை ஒழித்து தொழிலாளர்களின் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்காக உழைக்க முன்வந்த முதலாளிவீட்டு பிள்ளைகளால் இந்தியாவில் மார்க்ஸியம் அறிமுகம்செய்யப்பட்டது. இவர்கள் லண்டனில் பார் அட் லா படிக்கச்சென்றபோது பூங்காப்பிரசங்கங்கள் வழியாக அதை கற்றார்கள். இங்கே வந்து ரயிலை கவிழ்ப்பது, கறுப்பு டீ சாப்பிடுவது, தொழிற்சங்கம் நடத்துவது, ஆங்கிலநாளிதழ்களை நடத்துவது, பாராளுமன்றம் செல்வது, அரசுகளை ஆள்வது முதலியசெய்கைகள் வழியாக இவர்கள் அதை பரப்பினார்கள்

இந்த தரப்பு தங்களை முற்போக்கு என்று சொல்லிக்கொண்டது. முற்போக்காக இருக்கும்பொருட்டு இவர்கள் சிலரை பிற்போக்கு என்று திட்ட ஆரம்பித்தார்கள். இவ்வாறு மோவாயிசத்தில் உருவான பிரிவினை சிந்தனையில் பெரும் பிளவாக மாறியது. முற்போக்கு மோவாயிசம் கோட்பாட்டுமொழியை உருவாக்கியது. அதற்கு வர்க்கம், உபரி, பாட்டாளி, அடிக்கட்டுமானம் போன்ற பல புது கலைச்சொற்கள் உருவாகி வந்தன. அடிக்கட்டுமானத்தை கோவணம் என்று புரிந்துகொள்பவர்கள் பாட்டாளிகள். அது மேல்கட்டுமானத்துக்கு அடியில் இருப்பது என்று புரிந்துகொள்பவர்கள் கட்சித்தோழர்கள்.

ஆனால் மேல்கட்டுமானத்தை சொந்தமாக புரிதலுக்கு ஆளாக்குபவர்கள் தோழர்களால் லும்பன்கள் என்று வையப்பட்டார்கள். நாளடைவில் கலைச்சொற்கள் பிறருக்கு புரிய ஆரம்பிக்கும்போது அவற்றை மாற்றி விடுவது முற்போக்கு மோவாயிசத்திலும் வழக்கம்தான். பிற்போக்கு முற்போக்கு மோவாயிசங்கள் கலைச்சொற்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதுமுண்டு. சோஷலிச யதார்த்தவாதம் போன்று உலோகக்கலவைகள் இவ்வாறு உருவாகி வந்தன.

மோவாயிசத்தின் கடைசி நிலை என்று சொல்லப்படுவது முற்போக்குக்கும் முற்போக்கு. இவர்களின் வழி நேரடிப்புரட்சியாகும். இது காடுகளுக்குள் செய்யப்படுகிறது. காடுகளுக்குள் பழங்குடிகள் மட்டும் இருப்பதனால் அவர்களைக்கொண்டு இது நிகழ்த்தப்படுகிறது. அதற்கு முதலில் கோட்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கோட்பாட்டின் மையம் துப்பாக்கியின் விசை. அதை சுட்டுவிரலால் அழுத்துவதே கோட்பாட்டுச் செயல்பாடு. துப்பாக்கிமுன் எவர் நிற்கவேண்டும் என்பதை தலைமை முடிவுசெய்கிறது. தலைமையை கேள்விகேட்காமல் அங்கீகரிப்பது தொண்டர்கள் துரோகிகளாக ஆவதில் இருந்து பாதுகாக்கும்.

இந்த மோவாயிசத்தை இவர்கள் மாவோயிசம் என்று பிழையாக அழைக்கிறார்கள். இதன் தலைவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கட்டளையிடுபவர்கள் மட்டுமே அந்தத் தலைகளை பார்க்கமுடியும் என்ற நிலை நிலவுகிறது. தலைகள் மாறினாலும் தலைமை மாறாமலிருக்க இது ஒரு சிறந்த வழியாக அமைகிறது. மோவாய் தூக்கியிருப்பதனால் இவர்களின் கண் எப்போதும் டெல்லியை நோக்கியே இருக்கும். வழியே காலில் இடறும் சின்ன ஊர்களின் சின்ன பிரச்சினைகளைக் கவனிக்கமுடியாது.

டெல்லியை கைப்பற்றியதும் முதல் வேலையாக இவர்கள் வறுமையை ஒழிப்பார்கள். வறுமையால் அதுவரைக்கும் ஒழிந்தவர்கள் போக எஞ்சியிருப்பவர்களுக்கு மீட்பு கிடைக்கும் என இவர்கள் சொல்கிறார்கள். இவர்களின் தொண்டர்கள் மட்டுமே எஞ்சியிருபார்களாதலால் அது சாத்தியமும் கூட. இவர்களின் ஆதர்ச தலைவரான போல்பாட் நாட்டின் மக்கள்தொகையை பாதியாகக் குறைப்பதன் மூலம் உணவுப்பஞ்சத்தைப் பாதியாகக் குறைத்து அதற்கு வழிகாட்டியிருக்கிறார்.

மாவோயிசம் மோவாயிசமே என்பதற்கு அவர்களின் சீருடைகளும் மொழிகளுமே சான்றாக உள்ளன. இந்த மோவாயிசம் பிற மோவாயிசங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது உண்மையில் மற்ற மோவாயிசங்களை முழுமையாக ஒழித்துக்கட்ட எண்ணக்கூடியது. ஏனென்றால் இது மோவாயிசங்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழைமக்களுக்காக உருவான மோவாயிசமாகும்.

[மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009 ஜுன்]

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-27

$
0
0

பகுதி நான்கு : களியாட்டன்

bowமருத்துவநிலை நாளுக்குநாள் விரிந்து குறுங்காட்டுக்குள் புகுந்து பரவியிருந்தது. கைக்கு சிக்கிய அனைத்துப் பலகைகளாலும் ஏழடுக்காக படுக்கைகளை அமைத்திருந்தனர். உடைந்த தேர்தட்டுகளும் மூங்கில் துண்டுகளும் காட்டிலிருந்து வெட்டி கொண்டுவரப்பட்ட மரத்துண்டுகளும் சேர்த்து கட்டி அவை உருவாக்கப்பட்டன. ஆயினும் மருத்துவநிலையின் மையத்திலிருந்து மருத்துவர் நெடுந்தூரம் சென்று நோக்கவேண்டிய அளவிற்கு அது விரிந்தபோது தலைமை மருத்துவராகிய சுதேஷ்ணர் அதை மூன்று பகுதிகளாக பிரித்தார். மூன்றுக்கும் வெவ்வேறு மருந்துக்கருவூலத்தையும் மருத்துவர் நிரைகளையும் ஏவலர்த் தொகுதிகளையும் காவலர் அணியையும் உருவாக்கினார். அவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளும் பொருட்டு ஊடே செய்திகளுடன் விரையும் ஒரு தூதர் குழுவும் உருவாக்கப்பட்டது.

அந்தியில் புண்பட்டோர் தாழ்வான தளம் கொண்ட வண்டிகளில் வந்து இறங்குவதை நோக்கிக்கொண்டு நின்றபோது அவர் கசப்பு நிறைந்த சிரிப்புடன் அருகே நின்றிருந்த துணைமருத்துவர் சாக்ஷரிடம் “நமக்கு உதவியாக இயங்குபவர்கள் இருவர். இக்களத்தில் போருக்குரிய தெய்வங்களான ருத்ரர்கள், மருத்துவநிலையில் இறப்பின் தெய்வமான யமன். இல்லையேல் இந்த மருத்துவநிலை ஒரு நகரளவுக்கு விரிந்திருக்கும்” என்றார். சாக்ஷர் “மெய்தான், ஆசிரியரே. நேற்று காவல்மாடத்தில் ஏறி நின்று போர்க்களத்தை பார்த்தேன். சிறிய அம்புபட்டு விழுபவர்களைக்கூட தேர்ச்சகடங்களும் புரவிக்குளம்புகளும் படைவீரர்களின் குறடணிந்த கால்களும்தான் மிதித்துக் கொல்கின்றன. இங்கு இறந்தவர்களில் பெரும்பாலானோர் தன் படையால் மிதித்துக் கொல்லப்பட்டவர்கள்” என்றார்.

“குருதிகள் கலந்துவிடுகின்றன. நம் கைக்கு புண்பட்டோர் வரும்போது உடலிலிருந்து குருதியும் மூச்சும் பெருமளவுக்கு ஒழுகிச்சென்றுவிட்டிருக்கின்றன. வாழவேண்டுமென்ற விழைவையும் அவர்கள் இழந்துவிட்டிருக்கிறார்கள். இங்கு வந்தவர்களில் மிகச் சிலரே உயிருடன் எஞ்சுகிறார்கள். இங்கு நாம் செய்வது அவர்கள் மருத்துவம் பெறாமல் இறந்தார்கள் என்று மூச்சுலகில் நின்று எண்ணலாகாதே என்று கருதி அளிக்கும் ஒரு நுண்ணிய நடிப்பை மட்டுமே” என்றார் சுதேஷ்ணர். சாக்ஷர் தலையசைத்து “போரின் இறுதி நாழிகையில் புண்பட்டு விழுந்து வழியும் குருதியுடன் இங்கு வருபவர்கள் மட்டுமே பிழைத்துக்கொள்கிறார்கள். எஞ்சியவர்கள் நாம் மருந்து அளிக்காவிடிலும் புண் ஆறி உயிர் மீளும் நிலையிலிருப்பவர்கள்” என்றார்.

“நல்ல நடிப்புக்கு பழகிவிட்டிருக்கிறோம்” என்றார் சுதேஷ்ணர். “நடிப்பில்லை, புண்பட்டு கதறுபவர்களைக் கண்டதும் நம் மருத்துவர்களின் கைகள் பதறுகின்றன. உள்ளம் கனிகிறது. ஒருவேளை அவர்கள் விழைவதே இத்தகைய எளிய அன்பை மட்டும்தானோ என்னவோ?” என்றார் சாக்ஷர். “மருத்துவம் இத்தனை பொருளிழந்த செய்கையாக மாறி நிற்பதை நான் கண்டதே இல்லை. இங்கிருந்து திரும்பி மீண்டும் நகருக்குச் சென்றால் நோயுற்று வரும் மக்களை நம்பிக்கையுடன் உடல் தொட்டு மீட்க என்னால் இயலுமா என்று ஐயுறுகிறேன்” என்றபின் சுதேஷ்ணர் திரும்பி நடந்தார். சாக்ஷர் ஒன்றும் சொல்லாமல் உடன் நடந்தார்.

மருத்துவநிலைகளில் இளம் மருத்துவர்கள் வெறிகொண்டவர்கள்போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ஏவலர்களில் இரண்டாயிரம் பேரை தெரிவுசெய்து அவர்களுக்கு புண்களை கட்டுவதற்கும் மருந்துகளை அளிப்பதற்குமான பயிற்சியை முந்தையநாள் பகல் முழுக்க அவர்கள் அளித்திருந்தார்கள். அவர்கள் எப்போது துயில வேண்டுமென்று தெளிவான ஆணை இருந்தபோதிலும்கூட பகலில் அவர்கள் துயில்கொள்ளும் பொழுதில் படைமுகப்பில் எழுந்த பேரோசை ஆழ்துயில் கொள்ள அவர்களை இயலாதவர்களாக்கியது. துயிலின்மையால் விழி சிவந்து வாய் வறண்டு சித்தம் மயங்க அவர்கள் பித்துகொண்டவர்கள் போலிருந்தனர்.

அவர்களின் கண்களை நோக்கியபடி சென்ற சுதேஷ்ணர் திரும்பி புன்னகைத்து “மருத்துவர்களுக்குரிய தேவர்களில் அஸ்வினி தேவர்களைவிட சோமனே முதலாட்சி புரிகிறான்” என்றார். “சோமன் இன்றி போர் இல்லை” என்றார் சாக்ஷர். “இங்கு குடிக்கப்பட்ட மதுவும் உண்ணப்பட்ட அகிபீனாவும் அஸ்தினபுரியில் சென்ற நூறாண்டுகளில் உண்ணப்பட்டவற்றைவிட மிகுதி.” சுதேஷ்ணர் “சோமன் வாழ்க… அவன் களிவெறியின் தெய்வம். அழிக்கையில், கால்கீழிலிட்டு மிதிக்கையில் எழும் களிவெறிக்கு நிகர் வேறேது?” என்றார்.

சித்தம் அழிந்தமையால் காலமின்மையில் இருந்தனர் மருத்துவஏவலர். அவர்களுக்கு சொல்லப்பட்டதை மட்டும் செய்தனர். பூத வேள்விகளில் முதல் சில நாட்களுக்குப் பின் அவிபெய்வோர் வேத முழக்கத்தாலும் எரியிலெழும் புகையாலும் தங்களுக்குள் உருவான தாளத்தாலும் சித்தம் அழிந்து பிறிதொரு விழிகளுடன், வெறிகொண்ட கைகளுடன், தானாகவே முழங்கும் நாவுகளுடன் தெய்வமெழுந்தவர்கள்போல ஆடிக்கொண்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். அருவியைச் சூழ்ந்து நிற்கும் மரக்கிளைகள் என எரிகுளத்திலெழும் அனலோனை சூழ்ந்துகொண்டிருப்பவர்கள் அசைவு கொண்டிருப்பதாக தோன்றும்.

அப்போதுதான் புண்பட்டவர்கள் வண்டிகளில் வந்து முடிந்திருந்தனர். அந்தப் பொழுது ஒவ்வொருவரும் கைகளால் நிலத்தை அறைந்தும் தலையை முடிந்த அளவுக்கு தூக்கியும் “இங்கே! இங்கே பாருங்கள்! நான் இறந்துகொண்டிருக்கிறேன்! உத்தமரே, என்னை காப்பாற்றுங்கள்… உத்தமரே, ஏழு மைந்தரின் தந்தை… என்னை சாகவிடாதீர்கள்… என் குருதி ஒழுகிக்கொண்டிருக்கிறது!” என்று கூவினார்கள். “தெய்வங்களே! மூதாதையரே!” என்று அரற்றி அழுதனர். உதடுகள் கிழிந்தவர்கள், பற்களை இழந்தவர்கள், கழுத்தில் துளைவிழுந்து மூச்சு சிதைந்தவர்கள் வெற்றோசைகளை எழுப்பினர். ஓசைகள் உடலுக்குள்ளேயே சிக்கிக்கொண்டவர்கள் நெளிந்தனர்.

மெய்யாகவே இறக்கத் தொடங்கியிருப்பவர்களின் கண்களில் உலக நோக்கு மறைந்து பொருளின்மையெனத் தோன்றும் வெறிப்பு எழுந்துவிட்டிருந்தது. அவர்கள் தங்கள் அருகே மிருத்யூதேவியை பார்த்துவிட்டிருக்கிறார்கள் என்று மருத்துவர் சொல்வதுண்டு. அவர்களின் சித்தம் அவளை நோக்கி ஒழுகத் தொடங்கிவிட்டிருக்கும். மிக அருகில் சிம்மம் வந்துவிட்டதென்றால் செயலிழந்து தன்னை ஒப்படைக்கும் எளிய வேட்டை விலங்கென பணிவார்கள். கொழுந்தாடும் பெருந்தழலை நோக்கி இழுபட்டுச் செல்லும் எளிய சருகுகள் என அவளை நோக்கி செல்வார்கள்.

புண்பட்டு வந்தவர்களை படுக்கவைக்கும் பொருட்டு இடம் தேடி அலைந்த மருத்துவ ஏவலர் அடுக்குப் பலகைகளில் கிடந்திருந்த முந்தைய நாள் புண்பட்ட நோயாளிகளின் கால்களைப் பற்றி மெல்ல உலுக்கினர். அதன் பொருளென்னவென்று அறிந்திருந்த அவ்வீரர்களில் தன்னிலை கொண்டிருந்தவர்கள் “நான் இறக்கவில்லை! உத்தமரே, நான் இன்னும் இறக்கவில்லை!” என்று கூவினர். காய்ச்சலின் தடித்த போர்வைக்குள் இளவெம்மையில் உடல் சுருண்டு துயில்கொண்டிருந்தவர்கள் அவ்வாழத்திலிருந்து குரலெழுப்பினர். அது நெடுந்தொலைவு கடந்து வந்து மெல்லிய முனகலாக ஒலித்தது.

ஓசையற்றவர்களை இழுத்து கீழே போட்டு அவர்கள் நெஞ்சிலும் மூக்கிலும் கைவைத்து பார்த்தனர். உயிர் பிரிந்திருப்பதை உறுதி செய்தபின் மரவுரி விரிப்பில் புரட்டிப் போட்டு தூக்கிச்சென்று அப்பால் காத்திருந்த வண்டிகளில் ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கினர். மெல்லிய மணியோசையுடன், மீன்நெய் விளக்கின் ஒளியில் குருதியில் முட்டையிடும் பூச்சிகள் ஒளித்துகள்களாகச் சுழன்று பறக்க அவ்வண்டிகள் மருத்துவநிலையிலிருந்து கிளம்பிச்சென்றன. மருத்துவநிலைக்குள் வரும் வண்டிகளின் அளவுக்கே செல்பவையும் இருந்தன. வருபவை நின்றுவிட்ட பின்னரும் செல்பவை புலரி வரை தொடர்ந்தன.

சுதேஷ்ணர் அரசகுடியினருக்கென அமைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி சென்றார். மேலே விண்ணில் துயில் விழித்த சிம்மத்தின் வயிற்றுக்குள் ஒலிக்கும் உறுமல் என இடியோசை எழுந்தது. அவர் அண்ணாந்து நோக்கியபோது மிக அப்பால் முகில்களுக்குள் மின்னலொன்று அதிர்ந்து சென்றது. முகில்குவைகள் உருத்தெளிந்து மறைந்தன. தொடர்ந்து வந்துகொண்டிருந்த சாக்ஷரிடம் “மழை பெய்யுமென்றால் அதைவிட தீங்கு பிறிதில்லை. இங்கிருப்பவர்கள் மிகச் சிலர் தவிர பிறர் புண் பழுத்து உயிர்துறப்பார்கள்” என்றார்.

சாக்ஷர் மறுமொழி சொல்லவில்லை. “யானைத்தோல் கூடாரங்கள் அமைக்கலாம். மெழுகுத்தட்டிகளும் ஓரளவு உள்ளன” என்றார் சுதேஷ்ணர். “ஆனால் இங்கிருப்பவர்கள் ஆயிரத்தில் ஒருவருக்குக்கூட அவை போதுமானவை அல்ல. பெரும்பாலும் அரசகுடியினருக்கு மட்டுமே அவற்றை அளிக்க முடியும்” என்ற சுதேஷ்ணர் மீண்டும் புன்னகைத்து “எளிய வீரர்கள் இறப்பார்கள். அவர்கள் இருந்தாலென்ன இறந்தாலென்ன? வெட்டிச் சரிக்கப்படும் வாழைகள். புதிய கன்றுகள் சில ஆண்டுகளிலேயே தலையெடுக்கும்” என்றார்.

அவர் தனக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டிருப்பதை சாக்ஷர் உணர்ந்திருந்தார். “ஒரு தலைமுறைக்குள் இப்போர் வெறும் வீரச்செயல்களின் கதைகளாக மாறும். புகழ்கொண்டு விண்புகுந்தவர்களின் வரலாறுகள் பெருகும். அவற்றைக் கேட்டு மீண்டும் ஒரு பெரும்போரை கனவு காணத்தொடங்குவார்கள். மானுடர் உள்ள அளவும் போரும் இங்கிருக்கும்” என்றார் சுதேஷ்ணர். “இன்றுவரை பேசப்பட்ட எந்தப் போரிலாவது மானுடத்துயரின் கதை உள்ளதா? எவரேனும் மருத்துவநிலைகளைப்பற்றி, சுடுகாடுகளையும் இடுகாடுகளையும் பற்றி ஒரு வரியேனும் பாடியிருக்கிறார்களா?”

அவர்கள் மெழுகுத் தட்டிகளாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்ட உயரமற்ற விரிந்த கொட்டகைக்குள் நுழைந்தனர். அங்கே தரையில் வைக்கப்பட்டிருந்த பலகைகளில் அரசகுடியின் வீரர்கள் படுத்தும் அமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தனர். பலர் அகிபீனா மயக்கில் துயின்றனர். ஏழு திரியிட்ட நெய்விளக்கு அசைவிலாச் சுடர் சூடி நின்றது. சுதேஷ்ணரை பார்த்ததும் மருத்துவ உதவியாளர் நால்வர் அருகே வந்து வணங்கினார்கள். “எப்படி இருக்கிறார்கள்?” என்று அவர் கேட்டார். “கிராத குடியின் பன்னிரு இளவரசர்கள் சற்று முன் உயிர் துறந்தார்கள். பதினெண்மர் காய்ச்சல் கொண்டு பழுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓரிரு நாழிகை கடந்த பின்னர்தான் உறுதி சொல்ல இயலும்” என்றார் இளைய மருத்துவரான கண்டகர்.

“பாண்டவ இளையோர்?” என்று சுதேஷ்ணர் கேட்டார். “அவர்களில் எவருக்கும் உயிர்ப்புண் இல்லை” என்றார் கண்டகர். “அபிமன்யூ?” என்றார் சுதேஷ்ணர். “ஆழமான புண்தான். ஆயினும் அது உயிர் குடிக்க வல்லதல்ல” என்றார் இன்னொரு மருத்துவரான சுமுகர். சுதேஷ்ணர் “இறுதிக்கணத்தில் பிதாமகரின் கையைப்பற்றி தடுக்கிறார்கள் மண் மறைந்த மூதாதையர்கள்” என்றபின் கசப்புச் சிரிப்புடன் “அவர் தன் மூதாதையரின் கைகளையும் தட்டி விலக்கும் தருணமொன்று வரும்” என்றார்.

“நேற்று அவர் முதல்முறையாக போர்நெறியை மீறிவிட்டார் என்றனர்” என்றான் மருத்துவ உதவியாளனாகிய சபரன். “ஆம், தெரியும்படியான மீறல். அவருக்கும் பிறருக்கும். ஆனால் படைக்கலம் எடுத்து களம்நின்ற அனைவரும் முதற்கணம் முதல் ஒவ்வொரு அம்புக்கும் அணுஅணுவென நெறிகளை மீறிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள்” என்றார் சுதேஷ்ணர். “நேற்று மறைந்திருந்து அம்பு தொடுத்து அபிமன்யூவை வீழ்த்தியிருக்கிறார். அந்நெறி மீறலால் மேலும் சீற்றம் கொண்டு நெறிகளனைத்தையும் மீறி களத்தில் சுழன்று பல்லாயிரவரை கொன்றிருக்கிறார். நேற்று மட்டும் நாற்பத்தெட்டு இளவரசர்கள் அவரால் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றார் கண்டகர்.

“ஆசிரியரே, பிதாமகர் இவ்வண்ணமே போரிடுவாரெனில் இன்னும் ஓரிரு நாட்களில் நமது படைகள் முற்றாகவே அழியும்” என்றான் சபரன். சுதேஷ்ணர் “அதைப்பற்றி கவலை கொள்ளவேண்டியவர்கள் அரசர்கள். மருத்துவநிலையில் போர்வெற்றிகளோ தோல்விகளோ நமக்கு பொருட்டல்ல. நமது எதிரி அவள் மட்டுமே. அனல்வண்ணக் கூந்தலும் செங்குருதி இதழ்களும் சுடர்விழிகளும் கொண்டு களத்தில் எழுபவள். யாதனையையும் வியாதியையும் தன் இருபக்கமும் நிறுத்தி பேருருக்கொண்டு பரவும் மிருத்யூதேவி. நம் கணக்குகள் அவளுடன் மட்டுமே” என்றார்.

மீண்டும் மீண்டும் சொல்லப்படும் வரியாயினும்கூட சபரனின் விழிகள் மாறின. “ஆம்” என்று அவன் தலையை அசைத்தான். “வருக!” என்று சுதேஷ்ணர் முன்னால் சென்றார். அபிமன்யூ தனது மஞ்சத்தில் மலரமர்வில் கண்மூடி அமர்ந்திருந்தான். அவன் விரல்நுனிகளில் இருந்த அசைவின்மை அகம் அமைந்திருப்பதை காட்டியது. அருகில் சென்று “வணங்குகிறேன், இளவரசே” என்றார் சுதேஷ்ணர். “தங்கள் உடற்புண்கள் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.”

அபிமன்யூ விழிதிறந்து “அனைத்து திறப்புகளையும் சேர்த்துக் கட்டினர். ஒன்பது இயற்கை வாயில்களை மட்டும் விட்டுவிடுங்கள், இன்னும் ஒருமுறை எண்ணி சரி பாருங்கள் என்றேன்” என்று சொல்லி நகைத்தான். சுதேஷ்ணர் அவனருகே அமர்ந்து அவன் இடக்கையைப் பற்றி நாடி பார்த்தார். இளம் புரவிக்கன்றின் குளம்புகள்போல பிங்கலை கட்டின்றி துடித்தது. விரைவுக்காலத்தில் எழும் இசையில் அதிரும் யாழ் நரம்புகள்போல இடை இழுபட்டிருந்தது. ஆனால் ஒத்திசைவு இருந்தது. “தாழ்வில்லை. நீங்கள் இன்றிரவு இங்கு துயின்று காலையில் திரும்பிச் செல்லலாம்” என்றார்.

“நீங்கள் சொல்லவில்லையென்றாலும் காலை எழுந்து களம்செல்லத்தான் போகிறேன். நாளை பீஷ்மரைக் கொன்று மீள்வேன்” என்றான் அபிமன்யூ. உள்ளெழுந்த எரிச்சலால் விழிகள் சுருங்க “மேலும் ஒருநாள் நீங்கள் ஓய்வெடுத்தல் நன்று. இணைத்துக் கட்டப்பட்ட தசைகள் ஒன்றையொன்று புரிந்துகொள்ள நாம் பொழுதளிக்கவேண்டும்” என்றார் சுதேஷ்ணர். “படுத்துக்கிடப்பதா? முகப்பில் போர் நிகழ்கையில் இங்கே தன்னுணர்வுடன் இப்படுக்கையில் கிடப்பேன் என்று எண்ணுகிறீர்களா?” என்றான் அபிமன்யூ.

“இளவரசே, உங்கள் போர்வெறிகளையோ இலக்குகளையோ அறியவேண்டிய தேவை எனக்கில்லை. என் முன் இருப்பது வெறும் உடல். அதை அணிகளும் அடையாளங்களும் சூட்டி அரசென்றும் படைகளென்றும் ஆக்குவது உங்கள் நெறி. எனக்கும் எனையாளும் தெய்வங்களுக்கும் இது உயிர் தேங்கியிருக்கும் ஊன்கலம் மட்டுமே. நான் சொல்வது அதற்குரிய நெறிகளைத்தான்” என்றார் சுதேஷ்ணர். “நீங்கள் தேர் சீரமைக்கும் தச்சன். நான் அதிலேறி களம்புகும் வீரனைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன், அகல்க!” என்று அவன் கைவீசி காட்டினான்.

சுதேஷ்ணர் “நன்று” என்று தலைவணங்கி எழுந்தார். அப்பால் துயிலில் படுத்திருந்த சுருதகீர்த்தியின் அருகே சென்று அவன் விழிக்காமல் இடக்கையைப்பற்றி நாடி பார்த்தார். சீரான பெருநடையில் சென்று கொண்டிருந்தது இடை. சுஷும்னையில் விசை இருந்தது. “சிறிய புண்கள்தான்” என்று அவருடன் வந்த கண்டகர் சொன்னார். “பன்னிரு இடங்களில் அம்புகள் தைத்திருந்தன. பெரும்பாலும் அம்பு முழுவிசை குறைந்து மண்வளையும் தொலைவிலேயே இருந்து போரிட்டிருக்கிறார். ஆகவே முதல் தசையரணைக் கடந்து எந்த அம்பும் நுழையவில்லை. உள்ளுறுப்புகள் பாதுகாப்பாகவே இருக்கின்றன.”

“அது உயிரின் எச்சரிக்கை. உடலை அது ஆள்கிறது. இயல்பாக அவ்வெல்லையை எவ்வுயிரும் மீறுவதில்லை. வெறியூட்டி கனவுபெருக்கி சாவை விழைந்து அவ்வெல்லையை கடக்கிறார்கள். அவ்வெல்லையை கடப்பதொன்றிலேயே குறியாக இருக்கிறார் அவர்” என்று விழிகளால் அபிமன்யூவைக் காட்டி சாக்ஷர் சொன்னார். “ஆம், அவர் களம்படுவார். அதன் பொருட்டே இங்கு வந்துள்ளார்” என்றபடி சுதேஷ்ணர் எழுந்தார். சுதசோமனின் அருகே சென்றார். அவன் உடலில் தசைகள் சதைந்து நீலம்பாரித்தும் செந்நிறமாகக் கன்றியும் வீங்கி நரம்புகள் புடைத்தும் தெரிந்தன. சீரான மூச்சு எழுந்துகொண்டிருந்தது.

“களம்படுவதற்கு என்றே போருக்கெழுபவர்கள் உண்டோ?” என்றார் சாக்ஷர். “சிலர் உண்டு. களத்திற்கு வெளியே உள்ள வாழ்க்கை அவருக்கு பொருளற்றதாகத் தோன்றுகிறது. அங்கே அவர்கள் ஒருகணமும் நிறைவையோ மகிழ்வையோ உணர்வதில்லை” என்றபடி சுதேஷ்ணர் நாடியை பார்த்தார். இடையும் பிங்கலையும் முற்றிலும் இணையாக இருந்தன. “ஆனால் அவர் எப்போதும் நகையாட்டிலும் பெண்களியாட்டிலும் திளைப்பவரல்லவா?” என்றார் சாக்ஷர். “நகையாட்டிலும் களியாட்டிலும் தங்களை ஆழ்த்திக்கொள்பவர்கள் வாழ்க்கையை அதனூடாக புறக்கணிக்கிறார்கள். மதுவுண்டு மயங்கி காலத்தை கடப்பவர்களைப்போல” என்றபின் எழுந்த சுதேஷ்ணர் “அதற்கும் அப்பால் பிறிதொரு ஆழமான புண் அவருக்குள் உள்ளது” என்றார்.

“எப்படி அறிந்தீர்கள், ஆசிரியரே?” என்றார் சாக்ஷர். “அவருடைய விரல்களால். எட்டு விரல்களும் ஊழ்கத்திலென ஓய்ந்திருக்க கட்டைவிரல் நாணேற்றிய வில் என நின்றது. உள்ளே இழுபட்டு நின்றிருக்கிறது நாடி ஒன்று” என்றார் சுதேஷ்ணர். “ஆழ்ந்து புண்பட்ட உடல் தன்னை முடிச்சவிழ்த்துக்கொண்டு சிதறியழிய விரும்புகிறது. உள்ளமும் அவ்வாறே.” சாக்ஷர் திரும்பி நோக்கிவிட்டு “உள்ளப்புண் என்றால்?” என்று கேட்டு சுதேஷ்ணரை நோக்கி ஒருகணத்திற்குப் பின் விழிவிலக்கிக்கொண்டார்.

சுதேஷ்ணர் சுருதசேனனை நோக்கி சென்றார். அவனும் துயின்றுகொண்டிருந்தான். “இடை சற்று ஊடியுள்ளது. பிங்கலை ஆற்றல்கொண்டிருப்பதனால் தன் துணைவியை ஆற்றும். பழுதில்லை” என்றார். திரும்பி கண்டகரிடம் “மருந்துகளால் ஆவதொன்றுமில்லை. ஆனாலும் நோக்கிக்கொள்க! இவர்கள் நல்லுறக்கம் கொள்வார்களென்றாலே நலம்பெறுவர்” என்றார். கண்டகர் “அவரை துயிலவைக்க இயலவில்லை, ஆசிரியரே” என அபிமன்யூவை விழிகாட்டினார். “அவர் தந்தையும் துயில்வதில்லை” என்றார் சுதேஷ்ணர்.

ஒவ்வொரு பாண்டவர்களையாக நோக்கிக்கொண்டு சொல்லின்றி சுதேஷ்ணர் நடந்தார். அவருடன் நடந்தபடி சாக்ஷர் “மீள மீள அனைத்து அம்புகளும் இவர்களையே குறிநோக்குகின்றன. ஒவ்வொருநாளும் அந்திமுரசு ஒலித்ததும் படையினர் அனைவரும் இவர்களில் எவர் எஞ்சியிருக்கிறார் என்றே பார்க்கிறார்கள். மறுபக்கம் கௌரவ அரசமைந்தர் நாளுமென உயிர் துறக்கிறார்கள்” என்றார்.

“இன்னும் ஒரு கண்காணா எல்லையை இருதரப்பும் நடுவே வைத்து விளையாடிக்கொண்டிருக்கின்றன. அது கடக்கையில் எத்தனை மைந்தர் எஞ்சுவார்கள் என்பது தெய்வங்களுக்கே சொல்லற்குரியது” என்றார் சுதேஷ்ணர். அவர் கைகழுவ தாலத்தில் படிகாரமிட்ட நீரை நீட்டினர். அவர் கழுவி மரவுரியில் துடைத்த பின் “பிற இளவரசர்கள் எப்படி உள்ளனர் என்பதை நோக்கி என்னிடம் சொல்லுங்கள், சாக்ஷரே” என்றார்.

வெளியே பிரதிவிந்தியன் நின்றிருந்தான். யௌதேயன் சற்று அப்பால் நின்றான். யௌதேயனுடன் நின்ற சதானீகன் அருகே வந்து வணங்கி “மூத்தவர் தங்களிடம் பேச விழைகிறார், மருத்துவரே” என்றான். சுதேஷ்ணர் அருகே சென்று தலைவணங்கி நின்றார். “இளையோருக்கு உயிர்ப்புண் ஏதேனும் உண்டா?” என்றான் பிரதிவிந்தியன். “இல்லை. அவர்களில் கூடுதலாக புண்பட்டவர் அபிமன்யூதான். அவர் உயிர்விசையின் உச்சத்திலிருக்கிறார்” என்றார் சுதேஷ்ணர்.

“அவர்களில் எவரும் நாளை போருக்கெழ இயலாதல்லவா?” என்று சதானீகன் கேட்டான். “அவர்கள் போருக்கெழமாட்டார்கள் என்று என்னால் சொல்ல இயலவில்லை” என்றார் சுதேஷ்ணர். பிரதிவிந்தியன் “நாளைய போர் கடுமையானதாக இருக்குமென்று தோன்றுகிறது, மருத்துவரே. இன்று பிதாமகர் பீஷ்மர் பிறிதொருவராக ஆனார். தொலைவிலிருந்து நான் அதை பார்த்தேன். வெறிகொண்டு கைகள் பெருகி கொலைத்தெய்வம் என்றாகி நம் படைகளை சூறையாடினார்” என்றான். சுதேஷ்ணர் தலையசைத்தார்.

பிரதிவிந்தியன் “இன்று அமைத்த படைசூழ்கையே எங்களால் இயல்வதில் உச்சம். அனைத்துப் படைவீரர்களையும் தோளுக்குத் தோள் இணைநிறுத்தி சூழ்கை அமைத்தோம். இருந்தும் அவர்களின் முகப்பை எங்களால் வளைத்துக்கொள்ள இயலவில்லை. பிதாமகர் பீஷ்மர் கூர்வாளால் என எங்களை இரண்டாக உடைத்து சிதைத்தார். ஒவ்வொரு நாளும் அவர் எங்களுக்கு அளிக்கும் அழிவு பெருகிவருகிறது. இன்று சென்ற வெறியுடன் நாளை வருவார் எனில் என் இளையோர் எவரும் களத்திலிருந்து மீள இயலாது” என்றான்.

சுதேஷ்ணர் வெறும் விழிகளுடன் நின்றார். கண்டகர் “நாளை அவர் அவ்விசையுடன் வர வாய்ப்பில்லை. இன்றைய மீறலால் அவர் உளம் நைந்திருப்பார். களைத்தவராகவே களம்புகுவார்” என்றார். பிரதிவிந்தியன் “அதை எவ்வாறு சொல்லமுடியும்?” என்றபின் “சொல்க மருத்துவரே, அது அவ்வாறுதானா?” என்றான். “இல்லை” என்றார் சுதேஷ்ணர். “களியாட்டுக்குரிய தேவன் சோமன். நஞ்சுக்கும் அவனே தெய்வம். நஞ்சைப்போல் உடலை மதர்ப்பு கொள்ளச்செய்வது பிறிதேதும் இல்லை. நஞ்சூறி இறப்பவர்களின் இறுதிக் கணங்களில் நாடியை பார்த்திருக்கிறேன். சிவசக்தி நடனம் போலிருக்கும்” என்றார்.

அவர் சொல்வது புரியாமல் வெறுமனே நோக்கினான் பிரதிவிந்தியன். “அவருடைய ஆழம் மகிழ்வுகொண்டிருக்கும். துயில்நீப்பால் களைத்திருப்பார். களத்தில் வந்தால் களியாட்டின் தேவன் அவரை எடுத்துக்கொள்வான்” என்று சுதேஷ்ணர் சொன்னார். “தம்பியர் நாளை எழாமலிருக்க ஏதேனும் செய்ய இயலுமா? உங்களிடம் அதற்கான மருந்துகள் இருக்கும். அகிபீனா சற்று மிகுதியாக அளித்துவிடுங்கள். காலையில் அவர்கள் தன்னிலை மறந்து துயிலட்டும்” என்றான் பிரதிவிந்தியன்.

“ஓரிரு நாட்களில் எப்படியும் அவர்கள் களம் புகுந்துதான் ஆகவேண்டும்” என்று சுதேஷ்ணர் சொன்னார். “ஓரிரு நாட்களில் எப்படியும் பிதாமகர் பீஷ்மரை என் சிறிய தந்தை வீழ்த்திவிடுவார்” என்றான் பிரதிவிந்தியன். சுதேஷ்ணர் “இன்று களத்திலிருந்து அவர் உயிர் தப்பி ஓடினார், சினந்து யாதவர் தன் படையாழியை எடுத்து பின் ஒழிந்தார் என்று அறிந்தேன்” என்றார். சினத்துடன் யௌதேயன் “களத்தில் பின்வாங்குவது தப்பி ஓடுவதல்ல. அதுவும் போரின் ஒரு பகுதியே” என்றான்.

“நான் போரைப்பற்றி நுண்ணிதின் அறிந்தவனல்ல” என்றார் சுதேஷ்ணர். “இங்கு ஏவலர் சொல்வதை சொன்னேன்.” பிரதிவிந்தியன் “எங்கள் போரை நிகழ்த்துவது தந்தையர் அல்ல, இளைய யாதவர். ஒருபோதும் ஒரு நிலையிலும் இப்போரில் நாங்கள் தோற்கப்போவதில்லை. எங்கள் எல்லை என்ன, நாங்கள் அளிக்கும் உச்சக்கொடை என்ன என்று அவர் நோக்கிக்கொண்டிருக்கிறார். ஐயமே வேண்டியதில்லை, பீஷ்மரை களத்தில் இன்று அவர் வீழ்த்துவார்” என்றான். சுதேஷ்ணர் “நன்று, பிணங்கள் குறையும்” என்றார்.

“இன்று தன் படையாழியுடன் அவர் எழுந்தாரென்றால் அதுவும் ஒரு நாடகம்தான். எங்களுக்கோ வேறு எவருக்கோ எதையோ அவர் அறிவுறுத்துகிறார். இன்றிருக்கும் நிலையில் நாங்கள் அவரை புரிந்துகொள்ளவில்லை. ஒருவேளை அதை இளைய தந்தை புரிந்துகொண்டிருக்கக்கூடும்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “ஆனால் இனிமேலும் பிதாமகர் முன் என் இளையோரை கொண்டு நிறுத்துவது என்னால் இயலாது. எண்ணிநோக்கவே அச்சமூட்டுகிறது.”

“நான் ஒன்றும் செய்வதற்கில்லை, இளவரசே” என்றார் சுதேஷ்ணர். “அகிபீனாவை அளிப்பது மிக இடர்மிக்கது. அது சித்தத்தை அமிழ்த்தி வைக்கிறது, அழிப்பதில்லை. காலையிலெழும் போரின் பேரோசை அவர்களுக்குள் சென்றபடிதான் இருக்கும். அதை உள்ளுறையும் போராளி நன்கறிவான். மிதமிஞ்சிய அகிபீனாவுடன் அவர்கள் போருக்கெழுந்து களம்புகுவார்கள் என்றால் திறனழிந்து அம்புகளுக்குமுன் நின்றிருக்க வாய்ப்பாகும்.”

கெஞ்சும் குரலில் “நான் சொல்வதை சற்று புரிந்துகொள்ளுங்கள், மருத்துவரே” என்றான் பிரதிவிந்தியன். “மருத்துவத்தை மட்டுமே நான் செய்ய இயலும். போர்சூழ்கைகளில் எனக்கு பங்கில்லை” என்றபின் சுதேஷ்ணர் தலைவணங்கினார். சற்றுநேரம் நோக்கியபின் பிரதிவிந்தியன் திரும்பிச்சென்றான். அவன் தம்பியர் உடன்சென்றனர்.

 வெண்முரசின் கட்டமைப்பு

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16875 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>