Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16875 articles
Browse latest View live

டால்ஸ்டாய் உரை

$
0
0

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

உங்களது தொடர்ந்த வாசகனாகவும் உங்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவன் என்ற முறையிலும்  டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலை படித்த எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

 

இந்த நாவலை படித்து முடித்தவுடன் நீங்கள் ருஷ்ய கலாச்சார மைய்யத்தில் பேசிய டால்ஸ்டாய் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.   நாவல்கள் மூலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களுக்கு மனித வாழ்க்கையின் மாண்பையும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்களை  அளிப்பவராகவும்டால்ஸ்டாய் இன்றும் தேவைப்படுகிறார்.  தங்கள் உரை டால்ஸ்டாயின் ஒட்டு மொத்த ஆளுமையை பதிவு செய்வதாக அமைந்திருந்தது.

 

அன்னாகரீனினா நாவலின் பல அத்தியாயங்கள் பல நெகிழ்ச்சியான தருணங்களையும் க்ரீன், அன்னா மற்றும் லெவின பாத்திரங்களின் மனவோட்டங்கள் படிப்பவர்களுக்கு மிகுந்த மனவெழுச்சியையும் அளித்தது.

 

அன்னா விரான்ஸ்கியின் பெண் குழந்தையை பிரசிவித்த சமயம்  காய்ச்சலும் ஜன்னியும் கண்டு உயிருக்கு போராடுகிறாள்.  விரான்ஸ்கியும் அச்சமயம் கரீனின் வீட்டில் அவளுடன் இருக்கிறான்.  அன்னா கரீனை தந்தி கொடுத்து வீட்டிற்கு வரவழைக்கிறாள்.  காய்ச்சலின் கடுமையில் தனது தவறுக்கு வருந்துபவளாக கரீனின்  நற்பண்புகளை உணர்ந்து மனதார அவனது மன்னிப்பை வேண்டுகிறாள்.  விரான்ஸியையும் க்ரீன் மன்னிக்க வேண்டும் என்று மன்றாடுகிறாள்.

 

ஆனால் அன்னா மரணமடைந்து விடுவாள் என்ற மகிழ்ச்சியுடன் வந்த க்ரீன் அவளைப் பார்த்த பிறகு மனம் மாறுகிறான்.  அவனிடம் உறைந்துள்ள மனித மாண்பும் அன்னாவின் மீதுள்ள அன்பும் மேலெழுகிறது.  அன்னா – விரான்ஸ்கி இருவரையும் மனதார மன்னித்து விடுகிறான்.  இந்த அத்தியாயம் திரும்ப திரும்ப படிக்க வைப்பதாகவும் வாழ்க்கையின் அளப்பரிய மாண்புகளை வியந்து நெகிழ்ச்சியளிப்பதாகவும்  இருக்கிறது.

 

விரான்ஸியோடு அன்னா சென்ற பிறகு ஓராண்டு கழித்து தனது மகன் செர்ஜாவைப் பார்க்க கரீனின் வீட்டிற்கு வருகிறாள்.  அன்னா – செர்விஜா சந்திப்பை விவரிக்கும் இந்த  அத்தியாயமும் மறக்க முடியாதது.  மகனைக் கண்ட தாயின் மனநெகிழ்ச்சியும் அச்சிறுவனின் அளவற்ற சந்தோஷமும் அப்போது க்ரீன் வரும்போது ஏற்படுகின்ற பிரிவுத் துயரமும் வாசகர்களுக்கு கொடுக்கும் அனுபவங்களை டால்ஸ்டாய் அற்புதமாக எழுதியுள்ளார் .

 

மூன்றாவதாக கடவுள் நம்பிக்கையற்ற லெவினுக்கு பரம்பொருளின் இருப்பையும் உலக இயக்கத்தின் ஆதாரமாக இயங்குகின்ற மனிதனின் மாறாத நம்பிக்கையையும் உணர்த்தும் அத்தியாயம்.  தனது தமையனின் மரணத்தை தனது மனைவி கிட்டியோடு எதிர்நோக்கும் தருணத்தையும் கிட்டியின் பிரசவித்தின்போது லெனினுக்கு ஏற்படும் அனுபவங்களையும் எண்ண எழுச்சிகளையும் டால்ஸ்டாய் விளக்கும் பகுதியாக இது வருகிறது.

 

விரான்ஸியிடம் தனக்கான காதல் மாறாமல் இருக்கிறதா என்ற தனது ஐய்யத்திற்கு விடை கிடைக்காமல் அன்னா அவனை சந்திக்க புறப்படுகிறாள்.  பயணத்தின்போது அவளுக்கு ஏற்படுகின்ற மனப்போராட்டங்களை டால்ஸ்டாய் மிகச்சிறப்பாக பதிவு செய்கிறார்.  அப்போது அன்னாவுக்கு தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வெறுமையாகவும் அவலமாகவும் இருப்பதாக உணர்கிறாள்.  இரயில் நிலையத்தில் முதன் முதலாக விரான்ஸ்கியை சந்தித்த போது ஒருவன்  இரயிலில் பாய்ந்து மரணித்த சம்பவம் நினைவிற்கு வருகிறது.  கணநேரத்தில் முடிவெடுக்கிறாள்.  பாய்ந்து வரும் இரெயிலில் விழுந்து இறப்பதோடு நாவலை டால்ஸ்டாய் முடிக்கிறார்.

 

1875-77 ஆண்டுகளில் ருஷ்யாவின் உயர்குடி பிரபுக்களின் வாழ்க்கையையும் நிலவுடமைச் சமூகத்தின் கிராமப்புற வாழ்க்கையையும் இந்த நாவல் படம்பிடிக்கிறது என்று நாம் இதைத் தள்ளி விடமுடியாது.  வாழ்க்கையின் மாறாத உண்மைகளை உரத்துபேசி எப்போதும் நமக்குத் தேவைப்படுகின்ற நம்பிக்கையை கொடுப்பதாக இந்த நாவலை நான் கருதுகிறேன் .

 

நன்றி.

 

அன்புள்ள,

 

பாபுஜி  .  ச

கரூர்

 

 

அன்புள்ள ஜெ

 

டால்ஸ்டாய் பற்றிய உங்கள் உரை ஒழுக்கநெறிகளைப் பற்றியதாக இருந்தாலும் இலக்கியம் பற்றிய தெளிவை அளித்தது. நாம் படிக்கும்போது ‘சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லுவதே நல்ல எழுத்து’ என்ற கருத்து நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே எதைப்படித்தாலும் இது சொல்லவருவது என்ன என்ற கோணத்திலேயே படிப்போம். வாசிப்பை கோணலாக்குவது இது. சொல்லவந்தது பிடிகிடைக்காவிட்டால் ஆசிரியர் சொதப்புகிறார் என்று சொல்வோம். ஆகவே பல நவீன ஆசிரியர்களைத் தவிர்த்துவிடுவோம். சிக்கலான வாழ்க்கையனுபவங்களைச் சொல்லும் படைப்பாளிகளை நாம் எரிச்சலுடன் பார்க்க ஆரம்பிப்போம். இலக்கியம் என்பது சொல்லிக்கேட்பது அல்ல வாழ்ந்து பார்ப்பது என்றீர்கள். கற்பனையில் ஒரு வாழ்க்கையை வாழ்வதுதான் அது. அந்தவாழ்க்கைதான் இலக்கியத்தின் அர்த்தம். அந்தவாழ்க்கையிலே நாம் பெறுவதுதான் இலக்கியத்தில் சொல்லப்படுவது. அந்தக்கோணம் தெளிவாகவே வெளிப்பட்டது

 

ஆர்.மகேஷ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நூல்களை அனுப்புதல் -கடிதம்

$
0
0

அறம் ஜெய்யமோகன்

 

 

நூல்களை அனுப்புதல்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலம்  அறிய ஆவல். உங்களுக்கு இருக்கும் எழுத்து வேலையில் இது நினைவில்இல்லாமல் இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், தங்களின் ‘அறம்’ நூலை வாங்கிபதினைந்து பேருக்கு அன்பளிப்பாக    கொடுத்ததாக கடிதம் எழுதினேன். நீங்களும் எனக்குப்பதில் எழுதியிருந்தீர்கள். எனக்கு நீண்ட நாட்களாக , யார் யார் எப்படி படித்தார்கள், என்னவிதமான விமர்சனம் செய்தார்கள் என்று எழுத வேண்டும் என்று நினைப்பேன். அப்படி இப்படிஎன்று நாட்கள் ஓடி விடுகிறது. இன்று, எழுத்தாளர்கள் நண்பர்களுக்கு நூல் அனுப்புதலைப்பற்றிய கட்டுரையை தங்கள் பக்கத்தில் வாசித்ததும், ஒரு  தூண்டுதலில்  இதை எழுதுகிறேன். அதுவும் உங்களின் இந்த வாக்கியம் என்னை மிகவும் ஆதர்சமாகத் தொட்டது. “அது ஒர்அன்புப்பரிசு, ஓர் அறிவுப்பரிமாற்றம். பல தருணங்களில் அதைவிடவும் மேல். அதை எவருக்குஎப்படி அளிக்கவேண்டும் என்பது உங்கள் அகத்தால் நீங்கள் முடிவுசெய்யவேண்டியது.”

 

நான், அறம் நூலை அன்பளிப்பாக  கொடுக்க தேர்வு செய்த அனைவருமே ஒருவகையில்வாசிப்பவர்கள் என்ற அனுமானத்தில்தான்  கொடுத்தேன். அறம் முழு புத்தகத்தையும்படித்தவர்கள் என்று பார்த்தால், எட்டு நபர்கள் தான். அறம் புத்தகத்தை என்னிடம்அன்பளிப்பாக பெற்ற சில நண்பர்களின் பெற்றோர்கள் அமெரிக்காவிற்கு வந்திருந்தபொழுது , அவர்களும் வாசித்தார்கள். ஆதலால், அறம், நான் நினைத்ததைவிட அதிக நபர்களால்  வாசிக்கப்பட்டது / வாசிக்கப்படுகிறது.  முழுப் புத்தகத்தை வாசிக்காத நண்பர்கள் கூட,  யானை டாகடர் கதையை   வாசித்தார்கள். படித்ததை பற்றி விஸ்தாரமாக பேசினார்கள்.  அதைபனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு , பாடமாக வைத்துள்ளார்கள் என்று கூடுதலாக ஒரு தகவல் சொல்லுவேன். அப்படியா, பரவாயில்லை பாடமாக வைக்க வேண்டிய கதைதான் என்றுசொல்வார்கள். அதில் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் சுற்றப்புற  சூழல்  விழிப்புணர்வுஎல்லோருக்கும் பிடித்திருந்தது. டாக்டரின் ஆளுமையும் அனைவரையும் கவர்ந்தது. எதையும் புல்லட் பாயிண்டில் படிக்கும் நண்பன் ஒருவன் , வர்ணனைகளையெல்லாம் எடுத்துவிட்டு , இன்னும் கொஞ்சம்  சுருக்குமாக, யானை டாக்டர்  இருந்திருக்கலாம்  என்றான். தனது வாழ்நாளில், பாட நூல் அல்லாது, அவன் முழுதாக வாசித்த நூல் இதுவே. அவனது இந்த விமர்சனத்தை கொஞ்சம் கண்டுகொள்ளாமல்  விட்டுவிட்டேன்.  டாலஸ் நகரில் வசிக்கும் குணமொழி என்னும் சகோதரி மட்டும், அவரது எண்ணங்களை  எனக்கு உடனுக்குடன்  டெக்ஸ்ட் மெசேஜ் செய்த வண்ணம் இருந்தார்.  நான் அவருக்கு , அறம் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்தது, நவம்பர் 4, 2017.  எங்கள் கருத்து பரிமாற்றம் நடந்தது, ஆங்கிலத்தில். தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கிறேன்.

செவ்வாய் , நவம்பர் 7, 2017 7:31 AM

குணா: அண்ணா, ஒரு நாளைக்கு ஒரு கதை வீதமாக , இதுவரை மூன்று கதைகள் படித்துவிட்டேன் – சோற்றுக்கணக்கு, அறம், வணங்கான். இதுவரை படித்ததில், எனக்குப் பிடித்தது என்று வகைப்படுத்தினால், வணங்கான் முதல், அப்புறம் அறம், அதற்கு அப்புறம் சோற்றுக்கணக்கு J

நான் :  நல்ல வாசிப்பு. கருத்துக்களை பரிமாறியதற்கு நன்றி.

புதன்  , நவம்பர் 8, 2017 11:39 PM

குணா: அண்ணா, நேற்றே தாயார் பாதம் படித்துவிட்டேன். இன்று, யானை டாக்டர். படித்து முடிக்கும்பொழுது நிரம்பவும் நேரமாகிவிட்டது. இது ஒரு நீண்ட கதை. ஆனால், படித்துமுடிக்காமல் , என்னால் தூங்க முடியவில்லை. எவ்வளவு விஷயங்கள். எவ்வளவு உணர்வுகள். இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன்.

மிகவும் அருமை!

இப்பொழுது , யானை டாக்டர்தான் எனக்குப் பிடித்த கதைகளில் முதல் இடம் வகிக்கிறது. தாயார் பாதம் கடைசி. மற்ற கதைகள் நேற்றுச் சொன்ன அதே வரிசைப்படி. J

வியாழன், நவம்பர் 9, 2017 9:24 AM

நான் : உன்னை , சிறிதே அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நான் நினைத்ததுபோல் உனது கருத்துக்களை சொல்கிறாய்.  யானை டாக்டர்-தான் நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது. ஆமாம், அது மற்ற கதைகளைவிட  மூன்று மடங்கு பெரியது.   உனது வாசிக்கும் ஆர்வத்தை பாராட்டுகிறேன்!

குணா: J

வியாழன், நவம்பர் 9, 2017 11:14 PM

குணா : அண்ணா, நூறு நாற்காலிகள் வாசித்தேன்.

இது  பழங்குடி இனத்தவரின் இன்னொரு பரிமாணம். நான்.  இதைப்போன்ற ஒரு அனுபவத்தை, IRS-ல் வேலை பார்த்த தோழியின் தந்தை மூலம் அறிந்திருக்கிறேன். ஜெமோ அவர்களின்  விரிவான எழுத்து , அந்த வலியை மேலும் புரியும்படியாக செய்துவிட்டது.

இப்பொழுது நூறு நாற்காலிகள் முதலிடம் வகிக்கிறது. அப்புறம் யானை டாக்டர், வணங்கான், அறம், சோற்று கணக்கு, தாயார் பாதம்.

 

வெள்ளி, நவம்பர் 10, 2017 9:56 AM

நான் :நல்ல எதிர்வினை. யார் அந்த IRS அப்பா? இங்கு இருப்பவர்களில் ஒருவரா ?

குணா : நான் கல்லூரியில் படிக்கும்பொழுது ஒரு தோழி இருந்தாள். அவளது அப்பாவருவாய்த்துறையில் (நம் ஊர் IRS) வேலை பார்த்தார். அவர்கள் குடும்பம் , திருச்சியில் இருந்த  எங்களது குடும்பத்திற்கு மிகவும் தெரிந்தவர்கள். அவர்கள், தலித் இனத்தைச் சார்ந்தவர்கள். எனக்கு அந்த வலி புரிந்திருந்தது. அந்த குழந்தைகள், அந்த வலியுடனேயே இருந்தார்கள். நான்அடுத்தமுறை போனில் பேசும்பொழுது சொல்கிறேன். கதையில் உள்ளதுபோல்தான்.

இன்று காலை , அடுத்த கதையான பெரும் வலி வாசிக்க நேரம்  ஒதுக்குகிறேன். வார இறுதிவந்துவிட்டது.  இன்னொரு விரிவான கதை.

என்னுடைய தரவரிசையில் மாற்றம் எதுவும் இல்லை.  இதுவும்   , தாயார் பாதமும்  ஒரே தரத்தில்.

வெள்ளி, நவம்பர் 10, 2017 8:54 PM

நான் : சந்தோசம். பெருவலி-யில் யாரைப்பற்றி சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறதா ?

ஞாயிறு, நவம்பர் 12, 2017 3:11  PM

குணா :  இப்பொழுதுதான் கொஞ்சம் தேடி கண்டுபிடித்து யார் என்று தெரிந்துகொண்டேன் – தண்ணீர் தண்ணீர் கோமல்.

அறம் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.

இப்பொழுது எனது தர வரிசையில்,  நூறு நாற்காலிகளுக்கு முதலிடம். மற்ற கதைகள் இந்தவரிசையில் – யானை டாக்டர், வணங்கான், கோட்டி, அறம், சோற்றுக்கணக்கு, உலகம்யாவையும், தாயார் பாதம், பெருவலி, ஓலைச் சிலுவை, மத்துறு தயிர், மயில் கழுத்து.

சகோதரி குணாவிற்கு அறம்  புத்தகம் கொடுத்த அதே நாள்தான் டாலஸ் மாநகரில் ஆனந்தசந்திரிகை எனும் பத்திரிகை நடத்தும் நண்பர் ராம்கி அவர்களுக்கும் கொடுத்தேன். ஜனவரி 29, 2018 அன்று அவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இது.

 

“தாங்கள் கொடுத்த ‘அறம்’ புத்தகம் படித்து முடித்து விட்டேன். மிகவும் ரசித்தேன். சிலகதைகள் (சம்பவங்கள்) மனதை கலங்க வைப்பவைகளாக இருந்தன.”

 

எழுத்தாளர்கள் நண்பர்களுக்கு  புத்தகங்கள் கொடுக்கலாமா  என்று கேள்விகேட்டு ஆராய்வதைவிட, யாருக்கு யார் வேண்டுமானாலும், அவர்கள்  வாசிப்பவர்கள் என்று தெரிந்தால் கொடுக்கலாம். நான் , புத்தகத்தை அன்பளிப்பாக கொடுப்பதை தொடர்ந்துகொண்டுதான் உள்ளேன்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஸ்டெல்லா புரூஸின் அப்பா

$
0
0

Stella Purus

 

அன்புள்ள ஜெ.,

 

சமீபத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் (இயற்பெயர் ராம் மோகன். ஜெயகாந்தனின் “ஞான ரதம்” பத்திரிகையில் வேலைசெய்யும் பொழுது கூட வேலைசெய்த பாலியல் பலாத்காரத்தால் இறந்த ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் நினைவாக ஸ்டெல்லா ப்ரூசானவர்.) எழுதிய ஒரு கட்டுரையில் அவருடைய அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய தாத்தா மிகப்பெரும் செல்வந்தர்.  தன்னுடைய மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து விடுதலைப்பத்திரம் வாங்கிக் கொள்கிறார் அடுத்த கல்யாணத்திற்காக. இவருடைய தந்தைக்கு நிறைய சொத்து வந்து சேர்கிறது. இவருடைய தந்தைக்கு முதலில் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை. அவரும் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். காமராஜருக்கு ஆரம்ப முதலே கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவருடைய அன்னை (ஸ்டெல்லா ப்ரூஸின் பாட்டி) காமராஜரிடம் தன் பையனைக் கல்யாணத்திற்கு வற்புறுத்தச் சொல்கிறார். அவரும் தொடர்ந்து வற்புறுத்த இவர் ஒரு வழியாக கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். இது காமராஜருடைய அன்னைக்குத் தெரிந்ததும் ஆச்சரியம் தாளவில்லை. அவர் இவரை அழைத்து எப்படியாவது காமராஜரை வற்புறுத்தி கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளச் சொல்கிறார். ஆனால் இவர் காமராஜரிடம் அதைப் பற்றி வாயைத்திறக்கவில்லை. இது ரொம்பப் பின்னால் காமராஜருக்குத் தெரிய வருகிறது. ஆனால் அவருக்கு அது குறித்து மகிழ்ச்சியே.

 

 

பிற்காலத்தில் ஸ்டெல்லா ப்ரூஸின் தங்கையின் திருமணத்திற்கு காமராஜரை அழைக்க ஸ்டெல்லா ப்ரூசையே அனுப்புகிறார். காமராஜரைத் தொலைபேசியில் அழைத்து தன் பையன் வருவான் என்றும் அவனை எப்படியாவது கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தவேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். காமராஜரும் சொல்லிப் பார்க்கிறார். இவர் வாயைத்திறக்காமல் உட்கார்ந்திருக்கிறார். “அது சரி…உனக்குப் பிடிக்கலேன்னா யார் என்ன செய்ய முடியும்..” என்று முடித்து விடுகிறார்.

 

காந்தியின் கொள்கைகளில் பெரிதும் பிடிப்புள்ளவர். புலாலை முற்றும் துறக்கிறார். ஆனால் மனைவி சாப்பிடத் தடை சொல்வதில்லை. பிறந்த இரண்டாவது வருடமே கறி வாசனையைக் காட்டி விடும் சமூகத்தில் தன் பையன் ராம் மோகனை – ரபீந்திரநாத் தாகூரின் பெயரைத்தான் முதலில் வைப்பதாக இருந்து தன் தந்தை ஒப்புக் கொள்ளாததால் ராஜா ராம் மோகன் ராயின் பெயரை வைக்கிறார் – முதலிலிருந்தே அந்த வாசனை படாது வளர்க்கிறார். தன்னுடைய வீட்டு நூலகத்திலிருந்து புத்தகங்களை வாசித்துக்காண்பித்து இவருக்கு இலக்கிய ரசனையை வளர்க்கிறார். இந்தக் கட்டுப்பாடுகள்(?) எல்லாம் இவருக்கு மட்டும்தான். மற்ற பிள்ளைகளுக்கல்ல. ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் கொள்கைகளில் பெரிதும் பிடிப்போடு இருக்கிறார் ராம் மோகன். பின்னாளில் தன் தந்தையை அவருடைய பிரசங்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். தலைக்கு மேல் கைகளைக் குவித்து கும்பிடுகிறார். அவர் கைகளைப் பற்றி சந்தோஷப்படுகிறார்(ஜெ.கே யோட கைகள் எவ்வளவு குளுர்ச்சியா இருக்கு… ) இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு நாள் இவருக்குப் போன் செய்து தான் திரும்ப அசைவம் சாப்பிடத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார். ஆனால் இவரைக் கடைசி வரை சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்துகிறார். இவரும் சாப்பிடுவதில்லை.

 

 

ரொம்ப பிற்பாடு இவர் தன்னுடைய நாற்பத்தெட்டாவது வயதில்(நிறைய வருடம் வாழவில்லை. நிறைய நிறைய வாழ்ந்தோம்… ) திருமணம் செய்து கொள்கிறார் தன்னுடைய வாசகியையே. அதுவும் பட்டாச்சார்யாரின் பெண், அசைவ வாசனை படாது வளர்ந்தவர் என்பதில் இவருடைய தந்தைக்கு மிக்க மகிழ்ச்சி.

 

 

ஊரில் பெரிய செல்வாக்கு. காங்கிரஸ் கட்சியில் நினைத்தால் போட்டியிட்டு பெரிய பதவிகளுக்கு வந்திருக்க முடியும். அவர் மனம் அதில் செல்வதில்லை. தி.மு.க அரசு மதுரை டி.வி.எஸ் நிறுவன பஸ்களை அரசுடைமையாக்கிய சமயத்தில் டி எஸ் கிருஷ்ணா வைப் போய் சந்திக்கிறார். ராம் மோகனையும் அழைத்துச் செல்கிறார். கிருஷ்ணா பஸ்கள் போனதைவிட அந்த தொழிலாளர்களுக்கு வேலை போனதை நினைத்து வருத்தப்படுகிறார். தன்னுடைய மகனுக்கு வியாபாரத்தில் ஈடுபட பம்பாயில் ஒரு வாய்ப்பை அமைத்துத் தருகிறார். அது இவருக்கு சரிப்பட்டு வரவில்லை. இரண்டே மாதத்தில் திரும்பி விடுகிறார். அதை நினைத்துக் கூட கவலையில்லை அவருக்கு. சென்னை “மேன்சன்” வாழ்க்கைக்கு இடம் பெயர்கிறார் ராம் மோகன். அவ்வப்போது விருதுநகர் சென்று தந்தையைப் பார்த்து வருகிறார். ஒவ்வொரு முறையும் நிறையப் பணம் கொடுக்கிறார். ஸ்டெல்லா ப்ரூஸின் சில கதைகளும் நாவல்களும் வெளிவருகின்றன. எழுத்தாளராக புகழ் சேர்கிறது. இவருக்கு மகிழ்ச்சியே. ஆனால் ஒரு கட்டத்தில் தங்களுடனேயே இருந்து விட கண்ணீர் விட்டுக் கெஞ்சுகிறார் தந்தை. இவர் கேட்பதில்லை.

 

 

ஒருமுறை சிறுவயதில் இவரை அழைத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று விசேட அர்ச்சனை செய்கிறார் எழுத்தாளர் தேவன் பெயருக்கு. அவருக்கு பிள்ளைக் குழந்தை பிறக்க வேண்டி. அதற்கு பின்னாளில்  இவர் தேவன் நாவல்களைப் படிக்கும் போதுதான் தெரிகிறது அவருக்குப் பிள்ளையில்லாக் குறையை சில நாவல்கள் பிரதிபலிப்பதை.

 

 

இவருக்கு மரணம் எளிதாக நேர்கிறது. எதோ மாதிரி இருப்பதாக படுத்துக்கொள்பவர் எழுந்திருப்பதில்லை. பின்னாளில் “மிஸ்டிக்க”லாக நிறைய பரிசோதனைகளில் ஈடுபடும் ராம் மோகன் “என் நெற்றிப் பொட்டு திறந்து கூறியது அப்பா திருவிடைமருதூரில் மறுபிறப்பு எடுத்திருப்பதாக ..” என்று எழுதுகிறார்.  சில நாட்கள் கழித்து திருவிடைமருதூர் வழியாகச் செல்கிறார்  ராம் மோகன்கலங்கிய கண்களோடு ஊர் பின்னால் விரைவதை கார் ஜன்னல் வழியாகப்  பார்த்துக்கொண்டே.

 

நான் சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரை.(என் நண்பர் ஆத்மாராம், விருட்சம் வெளியீடு)

 

அன்புள்ள,

 

கிருஷ்ணன் சங்கரன்

 

stellabruce

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

 

நான் ஸ்டெல்லா புரூசை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன்.  என் ரப்பர் ராவலுக்கு அவர் எழுதிய கடிதம் வழியாக அறிமுகம். நீண்ட கடிதங்கள் பல எழுதியிருக்கிறார். ஒரு தொடர் உரையாடலில் சில ஆண்டுகள் இருந்தோம். நேரில் சந்தித்த இரண்டுமுறையும் ஜே..கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ பற்றி பேசினோம்.

 

நான் அவரை முதல்முறை சந்தித்தபோது அவருடைய கதைகளை முதலில் குமுதத்தில் வாசித்தது பற்றிச் சொன்னேன். ‘நம் கதையின் இனம்புரியாத இனிமை இப்போது முடிகிறது’ என கடைசிவரியில் திருப்பம் வைத்த அந்தக்கதை அன்றைய ரசனைக்குப் புதியது. ஆனால் எங்கள் உரையாடல் சற்றுதான் நீடித்தது. உடனிருந்த நண்பர் ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி பொழிந்துதள்ள ஆரம்பித்துவிட்டார். மேலும் இருமுறை ஓர் ஓட்டலில் நானும் அவரும் மட்டும் அமர்ந்து நீண்ட நேரம் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டோம்

 

இரண்டாம் முறை சந்தித்தபோது ஸ்டெல்லா புரூஸ் தளர்ந்திருந்தார். உளஅமைதிக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். அவருடைய மனைவிக்கு சிறுநீரகத் தொற்று ஏதோ ஏற்பட்டிருந்த நாட்கள் அவை. அது சரியா என எனக்குத்தெரியவில்லை என்றேன். “எனக்கு வேறுவழி தெரியவில்லை. என்னை பிசாசுக்களும் தெய்வங்களும் இரண்டுபக்கமும் இழுக்கின்றன” என்றார்.

 

அடுத்த ஆண்டே அவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி வந்தது. அவர் காதலித்து மணந்த பெண்மணி நோயுற்று உயிர்துறக்க அந்தப் பிரிவாற்றாமை தாளாமல் உயிர்துறந்தார். அவருக்கான சிகிழ்ச்சைக்காக பெருந்தொகை செலவழித்து கடனாளி ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.தமிழ் எழுத்தாளர்களில் தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்த்தால் எவரேனும் நாவலாக எழுதத் தக்கது ஸ்டெல்லாபுரூசின் வாழ்க்கை. அவர் தன் சூழல் பற்றி நாவல்களில் எழுதியதில்லை. செயற்கையான ஒரு சென்னைச்சூழலில் நிகழ்பவை அவருடைய கதைகள். அவர் விகடனில் எழுதிய பனங்காட்டு அண்ணாச்சி என்ற நாவலில் ஓரளவு அச்சூழல் உள்ளது.

 

ஸ்டெல்லா புரூஸின் உணர்வுநிலைகளைப் பற்றியோ அவருடைய வாழ்க்கையைப்பற்றியோ நாவலாகவே எழுதிப்பார்க்கமுடியும், ஓரிருவரி எண்ணங்கள் பொருளற்றவை. ஆனால் இங்கே அப்படியெல்லாம் எழுதிவிடமுடியாது. இறந்தவர்களைப்பற்றி சம்பிரதாயமான வரிகளுக்கு மேல் ஏதேனும் எழுதினால் இங்கே லபோதிபோ என்று கத்திக்கொண்டு வருவார்கள். வருபவர்கள் இலக்கியம்பேசுபவர்களாகவும் இருப்பார்கள். அவர் இறந்தபோது நான் எழுதிய ஓரிருவரிகளுக்காக அன்று வந்த பூசலை கண்டு அப்படியே விட்டுவிட்டேன். இன்று மீண்டும் நினைவுகள் எழுகின்றன.

 

ஸ்டெல்லாபுரூஸின் வாழ்க்கைக்கும் க.நா.சுவின் வாழ்க்கைக்கும் பெரும் ஒற்றுமை உண்டு. இருவரின் தந்தையரும் வசதியானவர்கள். இருவருமே தங்கள் மைந்தர்களை அறிவுஜீவிகள் என்று நம்பினர். இருவருக்குமே தங்கள் மைந்தர் ஆங்கிலத்தில் எழுதி புகழ்பெறவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. தங்கள் மைந்தர்களை எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமாக ஆக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். க.நா.சு தமிழில் எழுத்தாளனாக வெற்றிபெற்றார். இன்றும் வரலாற்றில் நிலைகொள்கிறார். ஆனால் அதே சமயம் க.நா.சு எவ்வளவு எழுதியிருக்கமுடியுமோ அவ்வளவு எழுதியவர் அல்ல. எங்கு சென்றிருக்கலாகுமோ அங்கு சென்றவரும் அல்ல.  ஸ்டெல்லா புரூஸுக்கு தொடக்கத்திலேயே காலடிகள் பிழைபட்டன

 

ஏன்? முதல்சரிவு, ஸ்டெல்லா புரூஸ் அன்றைய  இலக்கியவணிகச் சூழலுடன் சமரசம் செய்துகொண்டது. அவ்விதழ்களில் எழுத ஆரம்பித்தது. ஆரம்பநாட்களில் அங்கே செல்வது இலக்கியத் தற்கொலை. நடையும் நோக்கும் நிலைபெற்றுவிட்டபின் செல்லலாம், லா.ச.ரா முதல் ஜானகிராமன் வரை அங்கே சென்றவர்கள்தான். ஆரம்பநிலையில் அங்கே சென்றால் நம்மை வாசகர்களின் ரசனை இழுத்துச்செல்லத் தொடங்குகிறது. அவர்களுக்காக எழுத ஆரம்பிக்கிறோம். நம் நடையும் உளநிலையும் அதற்கேற்ப வடிவம் கொள்கின்றன. அதன்பின் மீளமுடியாது. அது நடந்தது அவருக்கு

 

ஸ்டெல்லா புரூஸ் ‘இளமைதுள்ளும் எழுத்தாளர்’ என்ற படிமத்தில் சிக்கிக்கொண்டார். விந்தையான நடை, திருப்பங்கள் என எழுதலானார். நுண்ணிய ரசனையும் நல்ல வாசிப்பும் கொண்டவர். ஆனால் அவை அங்கே அவருக்கு உதவவில்லை. அங்கே அவர் சுஜாதாவை நகல்செய்தார். மெல்ல அதிலிருந்து தனக்கென ஒருநடையை உருவாக்கிக்கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால் பின்னர் சுஜாதாவே ஸ்டெல்லாபுரூஸ் பாணியில் ஒருசில நாவல்களை எழுதினார். அது ஒரு நிலாக்காலம் போன்ற ஸ்டெல்லா புரூஸ் நாவல்களின் பாணியை சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் போன்ற நாவல்களில் காணலாம்.

 

ராம் மோகன் சிற்றிதழ்களில் காளி-தாஸ் என்றபேரில் நவீனக் கவிதைகள் எழுதினார். அன்றைய சிற்றிதழ் இயக்கத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முதன்மை ஆர்வம் வணிக இதழ்களில் எழுதுவதிலேயே இருந்தது. அது அவருக்கு பல்லாயிரம் வாசகர்களைப் பெற்றுத்தந்தது. ஒருகாலகட்டத்தில் பாலகுமாரனுக்கு நிகராகவே பேசப்பட்டார். அந்த வாசகர்கள் அப்படியே மறைந்துவிட்டனர். அந்த மாயையை அவர் உணரவில்லை

 

இன்னொரு பெரிய வீழ்ச்சி, இலக்கியத்தை நம்பி வாழ்க்கையை அமைத்துக்கொண்டது. அவர் தன் தந்தை அளித்த செல்வத்தைச் செலவிட்டு வாழ்ந்தார். விரைவிலேயே அது கரைந்தது. வணிக எழுத்தில் உழன்றாலும் அது பொருளியல்ரீதியாக உதவவில்லை.  ஆகவே வேறுவழியில்லாமல் சினிமாவிவாதங்களில் கலந்துகொண்டார். நான் அவரை இறுதியாகச் சந்தித்ததும் ஒரு சினிமாவிவாதத்தில்தான். அது அவருக்கு ஒவ்வாததாகவே இருந்தது. சினிமாவில் அவர் ஏமாற்றப்பட்டார்

 

அவருடைய இறுதிக்காலச் சோர்வுக்கும் இறப்புக்கும் பணநெருக்கடி முக்கியமான காரணம். தமிழில் எழுத்தை வாழ்வெனக்கொண்ட எவரும் சிறப்பாக எழுத வாய்த்ததில்லை- விதிவிலக்கு அசோகமித்திரன் மட்டுமே. க.நா.சு அவருடைய தந்தையின் கனவை இலக்காகக் கொண்டு எழுதத் தொடங்கினார். ஆனால் எழுத்தையே வருவாய் வழியாகக்கொண்டமையால் ஒருகட்டத்தில் வாழ்க்கைக்காகவே அல்லாடினார். சம்பந்தமில்லாமல் ஆங்கிலத்தில் எழுதி திறனை வீணடித்தார்.

 

அனைத்தையும்விட வீழ்ச்சி என்பது ஸ்டெல்லா புரூஸ் சரியான ஆசிரியர்களைப் பெறவில்லை என்பது. இதை இன்று மிகப்பெரிதாகவே உணர்கிறேன். மிக இளமையிலேயே ஆன்மிகமான அறிதல்களுக்குள் சென்றவர். உண்மையிலேயே பல விழிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கொண்டவர். ஏனென்றால் மிகமென்மையானவர், மிகநுட்பமானவர், மிகக்கூரியவர்.ஆனால் அவர் பெற்ற ஆன்மிகம் என்பது வெறும் நூலறிவு. அந்த அறிவு அவருக்கு மிகையான தன்னிலையை அளித்தது ஆகவே எவரிடமும் சென்றமர இயலவில்லை. எங்கும் பணியவோ செவிகொடுக்கவோ அவரால் முடியவில்லை

 

அன்றிருந்த எந்த இலக்கியமுன்னோடியையும் அவர் அணுகவில்லை. ஒரு நல்ல இலக்கியவழிகாட்டி அவருடைய அகந்தைகளை உடைத்திருக்கக் கூடும். அவருடைய நுட்பமான பிழைகளைச் சுட்டிக்காட்டியிருக்கக்கூடும். ஒரு நல்ல ஆன்மிகவழிகாட்டி அவருடையது அறிவார்ந்த பாவனைமட்டுமே எனச் சுட்டிக்காட்டியிருக்கமுடியும்.  அவருக்கிருந்த அந்தரங்கமான வினாக்களை தொட்டு முன்னெடுத்திருக்கமுடியும். சரியான அகவையில் சரியான வழிகாட்டிகளின் பங்கென்ன என இன்று உணர்கிறேன். அவர்களைச் சென்றடையாமல் நம்மைத் தடுப்பது நம்மில் அகாலமாக உருவாகிவிடும் ஆணவமே.

 

ஸ்டெல்லா புரூஸுக்கு ஆசிரியர்கள் இல்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தி தன் மானசீக ஆசிரியர் என்றார். நூல்களில் இருப்பவர் ஆசிரியரல்ல, நேரடி ஆசிரியரைத் தேடுங்கள் என நான் சொன்னேன். நான் சொன்னதென்ன என அவருக்குப் புரியவில்லை. ஆசிரியரிடம் அகந்தை அடிபட்டு அழுதிருக்கிறீர்களா என்று கேட்டேன். அவர் “இல்லை” என்றார். “உங்கள் அகந்தையை நிறைவுசெய்யும் நூல்களாக வாசிக்கிறீர்கள். மனிதர்களாகச் சந்திக்கிறீர்கள்…” என்றேன். அவர் “செல்லவேண்டும்.குறைந்தது சுந்தர ராமசாமியையாவது சென்று சந்திக்கவேண்டும்” என்றார். அது நிகழவில்லை.

 

ராம் மோகன்  மிகச்சிறப்பாக கோவையாகப் பேசுபவர். ஓஷோ முதல் ஜேகே வரை.அதுவே அவரை தானே ஓர் ஆசிரியர் என எண்ணச்செய்தது. அப்படி எண்ணியவர்கள் பலர் அன்று அவருடன் இருந்தார்கள்.விளைவாக அவருடைய திறன்கள் வீணாயின. நல்ல ரசனையும் படிப்பும் கொண்டிருந்தும் இன்றைய இலக்கியவரலாற்றில் இடம்பெறும் ஒரு கதைகூட அவரால் எழுதப்படவில்லை.

 

ஆன்மிகமான பயணத்தில் வழக்கமாக நிகழும் இரு பிழைகளுக்கு அவர் ஆளானார். ஒன்று, தொடக்கத்தில் ஆன்மிகத்தை வெறும் கருத்துக்களாக அறிந்து பேசிக்கொண்டிருப்பது. இரண்டு, அது சலிக்கும் எல்லையில் சட்டென்று மிகையான மறைஞானத்தை நோக்கிச் செல்வது. மெய்மைசார்ந்த பிரமைகளை அடைவது. அடைந்துவிட்டோம் எனும் கற்பனைகளில் உலவுவது. நூல்களிலிருந்து அந்த பிரமைகள் எழுந்து உண்மைகள் போலவே பேருருக்கொண்டு நிற்கும். அது மிகப்பெரிய இடர்

 

ராம் மோகன் நான் சந்திக்கும்போது ஆவிகள் பேய்கள் குறித்த நம்பிக்கைகள் கொண்டிருந்தார். நம்பிக்கை என்பதை விட அவருக்கு அவை நிகருண்மைகளாக இருந்தன. உண்மையிலேயே அவ்வாறு ஓர் உலகம் இருக்குமோ என்று நான் சற்றேனும் ஐயம்கொள்வது ராம் மோகன் அந்நம்பிக்கையை வலுவாக முன்வைத்தமையால்தான். நவீன எழுத்தாளர் ஒருவர் இத்தனை ஆணித்தரமாக ஆவியுலகு பற்றிப் பேசி நான் கேட்டதில்லை

 

அவருடைய துயரமுடிவு அவ்வாழ்க்கைக்கு ஒரு பெரிய ஒழுங்கை அளிக்கிறது என இன்று படுகிறது. ஸ்டெல்லா புரூஸ் எழுதியவற்றால் அல்ல, எழுத்தாளனாக வாழமுயன்றவர் என்னும் வகையில் மாபெரும் கதாபாத்திரம்.

 

ஜெ

ஸ்டெல்லா புரூஸ் அழகியசிங்கர்

ஸ்டெல்லா புரூஸ் என்கிற காளிதாஸ்

நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்

நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28

$
0
0

bowயுதிஷ்டிரரின் பாசறையில் வெள்ளிக்கு முன் படைத்தலைவர்கள் மட்டுமே கூடியிருந்த அவையில் வாயில்காவலனாக சுருதகீர்த்தி நின்றிருந்தான். பின்பக்க வாயிலில் சுருதசேனன் நின்றான். பிரதிவிந்தியன் மட்டுமே அவைக்குள் இருந்தான். யுதிஷ்டிரர் வந்து அமர்வதுவரை அவையினர் ஒருவருக்கொருவர் உதிரிச்சொற்களால் மெல்ல பேசியபடி அமர்ந்திருந்தனர். அந்த ஒலிகள் இணைந்த முழக்கம் தூங்கும் பூனையின் ஓசையென கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் அனைவருமே புண்பட்டிருந்தனர். கட்டுகளுக்குமேல் ஊற்றப்பட்டிருந்த களிம்பிலிருந்து எழுந்த கந்தகமணம் அறையை நிறைத்திருந்தது.

அந்த மணம் படையின் மணமாகவே ஆகிவிட்டிருந்தது. அது எரிமணம். விழிக்குத் தெரியாத நெருப்பு ஒன்று அங்கே எரிந்துகொண்டிருப்பதுபோல. கந்தகம் மண்ணில் உப்பென உறங்கும் நெருப்பு என்றார் மருத்துவரான குணதர். “புண்களில் வந்தமர்கின்றன ஊனும் குருதியும் உண்ணும் பாதாளதெய்வங்களான க்ஷதையும் வ்ரணையும் ஜீர்ணையும். குருதிவண்ணத்துடன், கொடுவாயுடன், கூர்விழிகளுடன், எட்டு கைகளிலும் வாளும் வேலும் ஏந்திய க்ஷதை செம்புண்களின் தெய்வம். கரிய உடல்கொண்ட வ்ரணை புண்களின் தெய்வம். நான்கு கைகளிலும் பாசமும் அங்குசமும் சவுக்கும் வேலும் கொண்டவள். ஜீர்ணை இரு கைகளிலும் கலமும் கோலும் கொண்டு நீள்நாக்கு நெஞ்சுதொட அமர்ந்திருப்பவள். வெண்நிறமானவள். சீழின் தெய்வம். அவர்கள் மிருத்யூதேவியின் மகளிர்” குணதர் சொன்னார்.

“நாம் ஊனில் ஓர் எரிகுளம் அமைக்கிறோம். அதில் கந்தக வடிவில் எரியேற்றுகிறோம். ஊனையும் குருதியையும் அவியென்றாக்கி அளிக்கிறோம். உண்டு நிறைவுற்று மீள்கின்றன மூன்று தெய்வங்களும். அவை சென்று அவ்வன்னையிடம் சொல்லி அவளை அகற்றிக்கொண்டு செல்கின்றன. அவியால் நிறைவடையாது சினந்தால் அவை உடலை முழுதுண்கின்றன. அவர்களின் அன்னை அவ்வுடல்மேல் எழுந்தருள்கிறாள்” என்றார் குணதர். “கந்தகம் உப்பென்றான அனல். படிகாரம் உப்பென்றான நீர். கழுவித் தூய்மையாக்குகிறது படிகாரம். எரித்துத் தூய்மையாக்குகிறது கந்தகம். நீர் ஒளிகொண்டு படிகாரமானது. அனல் தணிந்து கந்தகமென்றானது. தந்தையரின் உளக்கனிவே மகள்களாக உருக்கொள்கின்றன. உப்பென்று எழுந்த இரு தேவியரால் காக்கப்படுகின்றனர் மானுடர். அவர்களை ஸ்படிகை என்றும் சுபீதை என்றும் வழிபட்டனர் முன்னோர்.”

முழவொலி மட்டும் எழுந்து அடங்கியது. தளர்ந்த மயிலகவல் என கொம்போசை. கொடியுடன் முகவீரன் வர தொடர்ந்து யுதிஷ்டிரர் வந்தார். அம்மூன்று நாட்களுக்குள் மிகவும் கூன்விழுந்து உடல் தளர்ந்தவர் போலிருந்தார். நடந்துவந்தபோது அவரது உடல் குளிரிலென நடுங்கிக்கொண்டிருப்பதை சுருதகீர்த்தி பார்த்தான். பீடத்தில் அவர் அமர்ந்ததும் அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றனர். பீமன் சாளரத்தருகே கைகளைக் கட்டியபடி மூங்கில் தூணில் சற்றே சாய்ந்து நின்றான். ஒவ்வொருவராக அமரும் ஓசை. இருக்கைகளின் முனகல். ஒரு சிறுபறவை அந்தப் பாடிவீட்டின் மேலிருந்து எழுந்து இருளில் பறந்தகன்றது. சுருதகீர்த்தி வெளியே குளிர்காற்று மெல்ல அலையடிப்பதை உடலால் உணர்ந்தான். உள்ளே உடல்கள் உருவாக்கும் வெம்மை. ஊனை கந்தகம் உண்பதன் வெம்மையா அது?

அவைமுறைமைகள் முடிந்த பின்னரும் எவரும் எதுவும் பேசத்தொடங்கவில்லை. அவர்கள் இளைய யாதவருக்காக காத்திருக்கிறார்கள் என்பது அவனுக்கு தெரிந்தது. சற்று நேரத்தில் இளைய யாதவரின் அணுக்கன் நேமிதரன் விரைந்து வந்து சுருதகீர்த்தியிடம் “யாதவ அரசர் வருகை” என்று மெல்ல சொன்னான். உள்ளே செல்லலாம் என்று அவன் கைகாட்டினான். விரைந்த நடையில் வந்த இளைய யாதவர் படிகளிலேறி புன்னகையுடன் சுருதகீர்த்தியின் தோளில் கைவைத்து “நேற்று உன் களநிற்றல் நன்று” என்றபின் உள்ளே சென்றார். அப்புன்னகையும் தொடுகையும் சுருதகீர்த்தியை மெய்ப்பு கொள்ளச்செய்து விழிநீர் நிறைத்தன. அவர் அவையின் வணக்கங்களை ஏற்று அப்பீடத்தில் சென்று அமர்ந்துகொள்வது வரை அவன் எங்கு இருக்கிறான் என்றே அறியாதிருந்தான்.

யுதிஷ்டிரர் “இளையவன் வரவில்லையா, யாதவரே?” என்ற பின்புதான் தந்தை அவருடன் வரவில்லை என்பதை சுருதகீர்த்தி எண்ணிக்கொண்டான். “இல்லை” என்று மட்டும் இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டு தாடியை நீவியபடி பேசாமல் இருந்தார். ஒவ்வொருவரும் பிறர் ஏதேனும் பேசட்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவையின் அமைதி மேலும் மேலுமென நீண்டது. திருஷ்டத்யும்னன் எழுந்து “நாம் இன்றைய படைசூழ்கையைப்பற்றி எண்ணவேண்டியுள்ளது” என்றான். துருபதர் “ஆம்” என்றார். மேலும் பேச சொற்களற்றவர்கள்போல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

துருபதர் “நேற்றைய போரின் இழப்புகள் குறித்து அறிக்கைகள் அளிக்கப்பட்டுவிட்டனவா?” என்றார். “பின்னிரவிலேயே அரசருக்கு அனுப்பியிருந்தேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “சொல்லப்போனால் அதை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அனுப்பவேண்டியதே இல்லை. மேலும் மேலும் உளச்சோர்வூட்டக்கூடியது அது” என்று பீமன் சொன்னான். “உண்மையின் மீது நின்றுதான் போர்புரிய முடியும், இளைய பாண்டவரே” என்றான் திருஷ்டத்யும்னன். “உண்மையின்மீது நின்றா? அப்படி ஒரு போர் உண்டா?” என்றான் பீமன். “அகிபீனாவை உண்மையின் பீடம் என சொல்லமாட்டீர் என்று நினைக்கிறேன்.” அவை அமைதியின்மையுடன் அசைவதை சுருதகீர்த்தி கண்டான்.

“உண்மை எவரும் அறிந்ததே. நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம். கௌரவப் படையினரிடம் அல்ல, ஒற்றைத்தனிமனிதரிடம். அவரை எதிர்கொள்ளும் ஆற்றல் எம் ஐவருக்கும் இல்லை. பெரும்புகழ் கொண்ட பார்த்தனின் காண்டீபம் அவர் முன் நாண்தளர வளைகிறது. எரிதீயின் முன் தழை அள்ளிப்போட்டு அணைக்கமுயல்வது போலிருக்கிறோம். நாம் அள்ளி அள்ளி அணைகட்டுவது நம் இளமைந்தரைக் கொண்டு. இனியும் நமக்கிருக்கிறார்கள் சிலர். அவர்களும் கணக்கு முடிவது வரை இப்போர் நீளும். அதன் பின்னர் சென்று தலைகொடுப்போம். பிதாமகரை எத்தனை நாள் எதிர்த்து நின்றோம் என்னும் கணக்கையே வெற்றி என கொள்ளட்டும் நம் கொடிவழியினர்” என்றான்.

“மந்தா, படைசூழ்கைக்கான அவையில் நம்பிக்கையை அழிக்கும் சொற்களை பேசலாகாது” என்றார் யுதிஷ்டிரர். “வெற்றிவேல்! வீரவேல்! வெல்வோம்! கொல்வோம்! நம்பிக்கையூட்டுவதற்கு இந்தச் சொற்கள் அன்றி வேறில்லை, மூத்தவரே” என்றான் பீமன். எரிச்சலுடன் “மூத்தவரே, தாங்கள் சற்று பேசாமலிருங்கள். இதுவே தங்களுக்கு சொல்வதற்கு இருக்கிறதென்றால் நாளை முதல் தாங்கள் அவைச்சூழ்கைக்கு வரவேண்டியதில்லை” என்று சகதேவன் சொன்னான். “நன்று. இளையவன் ஏன் வரவில்லை என்று இப்போது தெரிகிறது. இங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. சென்று களத்தில் நிற்பதொன்றே நானும் அவனும் செய்யக்கூடியது. இங்குள்ள சொற்கள் எவற்றுக்கும் எப்பொருளுமில்லை” என்றான் பீமன்.

திருஷ்டத்யும்னன் “பொழுதில்லை, நாம் நமது படைசூழ்கையை அமைக்கவேண்டியுள்ளது” என்றான். “நேற்று அமைத்தீர்களே பிறைசூழ்கை. என்ன ஆயிற்று? சூதாடுபவன் தன் கையிலுள்ள அனைத்துப் பகடைகளையும் வெளிக்காட்டுவது போன்றது அது. நமது வில்லவர்கள் அனைவருமே முகப்பில் நின்ற சூழ்கை. ஆனால் நுரையை ஊதி பறக்கவிடுபவர்போல அதை அழித்தார் பீஷ்மர். அதன் பிறகென்ன படைசூழ்கை இங்கு அமைக்கவிருக்கிறோம்?” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “அப்படைசூழ்கையின் ஆற்றல் அனைவருமே முன்னிலையில் நின்றோம் என்பது. அதன் குறைபாடு எவருக்கும் பின்புலத்தில் எதுவுமே இல்லை என்பது. ஒற்றைப்புள்ளியில் குவிந்த பீஷ்மர் நம் சூழ்கையை உடைத்தார். இம்முறை குறைகளைக் களைந்து அடுத்த சூழ்கை அமைப்போம். இம்முறை வெல்வோம். இன்று நம்மால் பீஷ்மரை கொல்ல முடியும்” என்றான்.

திருஷ்டத்யும்னனை நோக்கி மெல்லிய சிரிப்புடன் “உன் வஞ்சம் துரோணரிடம் அல்லவா? எத்தனை முறை எதிர்கொண்டாய் அவரை?” என்றான் பீமன். “அவரை தனியனாக நான் எதிர்கொண்டு வெல்ல இயலாதென்பதை அறிவேன். பீஷ்மரை வீழ்த்திய பின்னரே அவரை வீழ்த்த இயலும். சூழ்ந்துகொள்ளவேண்டும். ஆற்றலை அழிக்க வேண்டும். அதற்குரிய கணக்குகள் என்னிடம் உள்ளன” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இன்று நம் இலக்கு கௌரவப் படையின் கூர்முனையான பிதாமகரை வெல்வது மட்டுமே. அதைப்பற்றி பேசுவோம்.”

துருபதர் “நான் மும்முறை துரோணரை எதிர்கொண்டேன். தன்னை எவரும் வெல்ல இயலாதென்ற எண்ணத்திலிருக்கிறார். அவ்வண்ணம் தருக்குபவர்கள் உண்மையில் வெல்ல இயலாதவர்களாகிறார்கள். ஏனென்றால் அந்நம்பிக்கை அவர்களை பதற்றமில்லாதவர்களாக ஆக்குகிறது. போரை ஓர் இனிய கலையென்று நடிக்கச் செய்கிறது. அந்த இறுமாப்பின் உச்சம்வரை அவர் செல்லவேண்டும். தெய்வங்கள் அவர்மீது எரிச்சல் கொள்ளவேண்டும். அந்த எல்லைக்குச் சென்று முட்டி நிலையழியும் கணம் வரை அவரை நாம் தொட இயலாது. ஆணவம் கொண்டோர் சரியும் கணம் வரை வெற்றிகளை மட்டுமே அடைவார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றார்.

“நூற்கல்விக்கு நம்மில் எந்தக் குறையும் இல்லை” என்றான் பீமன். “களத்தில் நூல்களை மேற்கோள் காட்டமுடிந்தால் நம் மூத்தவரே போதும் வெற்றிக்கு.” அனைவரும் திகைத்து யுதிஷ்டிரரை நோக்க அவர் இயல்பாக பீமனை தவிர்த்து “இன்று பீஷ்மரை வீழ்த்த என்ன சூழ்கை வகுத்துள்ளோம்?” என்று கேட்டார். திருஷ்டத்யும்னன் தோற்சுருளை எடுத்து விரித்து யுதிஷ்டிரரிடம் காட்டி “இது இன்றைய சூழ்கை. இது அவர்களை உடைக்கும். பிதாமகரை தனிமைப்படுத்தும். நாம் மூன்று நாட்கள் போரிட்டு அனைத்திலிருந்தும் பெற்ற பாடங்கள்தான் நமது முதன்மை படைக்கலங்கள். நமது காவல்தெய்வம் அறம். அதன் வடிவமாக நம் முன் அமர்ந்திருக்கும் இளைய யாதவரின் சொற்கள். நாம் வெல்வோம்” என்றான்.

துருபதர் மெல்ல அசைந்து “நேற்று இளைய பாண்டவர் அர்ஜுனர் அஞ்சி பின்னோடினார் என்ற செய்தி கௌரவர்களிடையே பரந்துள்ளது. நேற்றிரவு முழுக்க அங்கு கௌரவர் படைகளுக்குள் உண்டாட்டின் முழவுகள் முழங்கிக்கொண்டிருந்தன. வென்றுவிட்டோம் என்றே அவர்கள் உறுதி கொண்டுவிட்டார்கள்” என்றார். அனைவரும் இளைய யாதவரை பார்க்க அவர் கைகட்டி புன்னகையுடன் அமர்ந்திருந்தார். திருஷ்டத்யும்னன் “பின்னடைதல் தோல்வியல்ல” என்றான். மெல்ல நகைத்து “தோல்வி வீழ்ச்சியல்ல என்று இன்னொரு சொல் உண்டு” என்று சிகண்டி சொன்னார்.

அதுவரை அவர் அங்கு இருப்பதை எவரும் நோக்கவில்லை. அனைவரும் திரும்பிப்பார்த்தனர். சிகண்டி அந்நோக்குகளை உணர்ந்ததும் “நேற்று நிகழ்ந்ததென்ன என்பதும் அனைவருக்கும் தெரியும். எந்தப் படைக்கலம் அவரை வீழ்த்துமோ அதை எடுக்க அஞ்சி களம்நின்று தவித்து திரும்பிச்சென்றார் இளைய பாண்டவர்” என்றார். அனைவரும் ஒருகணம் அவர் சொல்லப்போவதென்ன என்பதைக் காத்து நின்றிருந்தனர். “மாறாக அனைத்துப் படைக்கலங்களையும் பிதாமகர் எடுக்கிறார். நேற்று பீஷ்மர் போர்நெறி மீறி பின்னின்று தாக்கியபோது இங்குள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நான் வியப்படையவில்லை. ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக அவராக மாறி நடித்துக்கொண்டிருப்பவன். பகை என்பது நம் எதிரியென்று நம்மை நாமே வைத்துக்கொண்டு நடிப்பது. அத்தருணத்தில் நானும் அதையே செய்திருப்பேன்” என்றார் சிகண்டி.

“பிதாமகரை இயக்கும் முதல் விசை என்பது அவருடைய ஆணவமே. பெருநோன்புகளை தான் ஏற்றுக்கொள்வது, தன் குலத்திற்கே பொறுப்பேற்றுக்கொள்வது, களம்முன் நின்று போரிடுவது அனைத்தும் அவ்வாணவத்தாலேயே. ஆணவம் சிதறும் எதையும் அவர் செய்யப்போவதில்லை. தன் ஆணவத்தை அவர் முற்றழிக்காதவரை அவரை நம்மால் வெல்லவும் இயலாது” என்று சிகண்டி தொடர்ந்தார். “அதற்கு நம்மால் இயலவில்லை. நம் அச்சமும் தயக்கமும் அவரை மேலும் ஆணவம் கொள்ளச்செய்கின்றன. ஆணவத்தாலேயே வானுருக்கொண்டு தேவன் என நின்றிருக்கிறார்.”

“நேற்று என்ன செய்திருக்கவேண்டும் இளைய பாண்டவர்?” என்று சேதிநாட்டு திருஷ்டகேது கேட்டான். “தன் ஆணவத்தை பெருக்கியிருக்க வேண்டும். மாறாக யானை மீதேறி வருபவரை மண்ணில் நின்று எதிர்கொண்டார்” என்றார் சிகண்டி. எரிச்சலுடன் “நெறிநின்றவனுக்குரியது ஆணவம்” என்றார் யுதிஷ்டிரர். சிகண்டி மேலும் விரிந்த கோணல் சிரிப்புடன் “அவர் நின்றது நெறியின் மீதல்ல அரசே, பிதாமகரின் முன் தானொரு மைந்தன் என்னும் எண்ணத்தை ஒருகணமும் அவரால் உதறமுடியவில்லை. களத்தில் மைந்தனில்லை, தந்தையுமில்லை. வேலுக்கும் வில்லுக்கும் மானுட உணர்வுகள் ஏதுமில்லை. கடந்து செல்லவேண்டிய எல்லையொன்றை கண்முன் கண்டு அஞ்சி திரும்பி ஓடினார் நேற்று. அதை எண்ணி எண்ணிச் சோர்ந்து இன்று எங்கோ வில்பயின்று உளமொழித்துக்கொண்டிருக்கிறார்” என்றார்.

அவர் சொல்வது உண்மை என்று ஒவ்வொருவரும் எண்ணினர். சிகண்டி “நான் சொல்வது பொய்யென்று இளைய யாதவர் சொல்லட்டும். ஏன் பொறுமையிழந்து அவர் படையாழி ஏந்தினார்? ஏன் அவர் பிதாமகருக்கு எதிராக சென்றார்?” என்றார். அனைவரும் இளைய யாதவரை நோக்க அவர் அதே புன்னகையுடன் அமர்ந்திருந்தார். “நான் சொல்கிறேன்” என்று சிகண்டி தொடர்ந்தார். “தன் முழுதுளத்தாலும் உந்தி இளைய பாண்டவரை எல்லை கடக்கச்செய்ய அவர் முயன்றார். அதில் மீண்டும் மீண்டும் தோற்று சினந்தார். இறுதியில் அது இயல்வதேயல்ல என்று உணர்ந்ததும் கரைகடந்தார்.”

“அவர் படைக்கலம் எடுத்ததைப்போல் நம்மை நாமே களத்தில் காட்டிக்கொடுக்கும் செயல் வேறெதுவுமில்லை” என்று சிகண்டி தொடர்ந்தார். “இளைய பாண்டவர் அர்ஜுனர் சோர்ந்திருக்கிறார், காண்டீபம் முழு விசையுடன் இல்லை என்பதை கௌரவர்களுக்கு அறிவிக்கும் செயல்தான் அது. இன்று அவர்கள் உண்டாடி கொண்டாடுவது அந்த வெற்றியைத்தான்.” இளைய யாதவரின் முகம் மாறுபடவில்லை. சுருதகீர்த்தி தன் உடல் பதற்றம் கொண்டிருப்பதை உணர்ந்தான். அவையில் இருந்திருந்தால் எழுந்து சொல்லெடுத்திருப்பேன் என்று எண்ணிக்கொண்டான். தன் குரலாக பிரதிவிந்தியன் எழுந்து பேசவேண்டுமென்று அவன் உள்ளம் திமிறியது.

உரத்த குரலில் சிகண்டி சொன்னார் “ஆனால் நேற்று களத்தில் இளைய யாதவர் காட்டியது ஒரு நற்குறி. தன் நோன்பையும் நெறியையும் எக்கணத்திலும் ஆடையென கழற்றி வீசிவிட சித்தமாக இருப்பதாக அறிவித்தார். அவையில் ஆடை களைவது சிறுமை, ஆனால் தீப்பற்றும் இல்லத்திலிருந்து எரியும் ஆடையுடன் தப்பி ஓடுபவன் அதை கிழித்தெறியாவிட்டால் அவன் அறிவிலி. நாம் ஒவ்வொருவரும் எரிந்துகொண்டு எண்ணி தயங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மில் எல்லை கடந்தவர் எவர்? சொல்க… எவரால் இயன்றது அது?”

இளைய யாதவர் மறுத்து ஏதேனும் சொல்வாரென்று சுருதகீர்த்தி எதிர்பார்த்தான். பீமன் “யாதவரும் கடக்கவில்லை. கடந்திருந்தாரெனில் நேற்று படையாழியால் அவர் பீஷ்மரை கொன்றிருக்க வேண்டும்” என்றான். “அறிவிலி! கை விரித்து படைக்கலமின்றி நின்றிருப்பவரை கொன்றிருக்கவேண்டுமா யாதவர்?” என்றார் யுதிஷ்டிரர். “அதுவும் ஓர் எல்லைமீறல்தானே? எல்லையை மீறுவதென்றால் ஒன்றில் கடந்து பிறிதொன்றில் ஏன் நிற்கவேண்டும்?” என்றான் பீமன்.

இளைய யாதவர் மெல்லிய குரலில் “கொன்றிருப்பேன்” என்றார். அவை மெய்ப்புகொள்வதைப்போல சுருதகீர்த்தி உணர்ந்தான். “அர்ஜுனனால் கொல்ல இயலாதென்று எனக்கு உறுதி இருந்தால் தயங்கியிருக்கமாட்டேன்.” அமர்ந்தவாறே மிக இனிய நற்சொல் ஒன்றை அவர்களிடம் சொல்வதுபோல அவர் பேசினார். முகத்தில் அப்புன்னகையும் கண்களில் இளமைந்தனுக்குரிய ஒளியும் இருந்தன. “என் பொருட்டு இங்கு நின்று போரிடும் ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன். உங்கள் எவராலும் நான் பேணப்படுவதில்லை, காக்கப்படுவதுமில்லை. என் சொற்களின் பொருட்டு நீங்கள் போரிடவில்லை, விதைத்த வயலைச் சூழ்ந்து வேலியிடுகிறீர்கள் என்று உணர்க!”

“அவியிட்டு தேவர்களை வளர்க்கும் வைதிகர் தங்களைத்தான் வளர்த்துக்கொள்கிறார்கள். மண்ணில் இருந்து ஒரு துளி நெய்யோ அன்னமோ செல்லாவிடினும் தேவர்கள் குறைபடுவதில்லை என்றுணர்க! நீங்கள் அறியும் தேவர் வளரும் பொருட்டே உங்கள் வேள்விகள் இயற்றப்படுகின்றன. இந்த அவையிலிருந்து இப்போதெழுந்து இன்று அந்தியில் கதிர் மேற்குமுகம் கொள்வதற்குள் இப்போர் முடித்து மீள என்னால் இயலும். ஐயுறுபவர் எழுக!” என்றார்.

சுருதகீர்த்தி உளக்கிளர்ச்சியால் நடுங்கியபடி வாயில்தூணாக அமைந்த மூங்கிலை பற்றிக்கொண்டான். இழுத்துக் கட்டப்பட்ட நாண் போலிருந்தது அவை. “இப்போர் என் சொல் வெல்வதில் மட்டுமே முடியும். பிறிதெவ்வகையிலும் இது முடியாது. உங்கள் பொருட்டு நீங்கள் இதை நிகழ்த்தவேண்டுமென்பது என் ஆணை. அது நிகழுமென்று அறிந்திருக்கிறேன். என் பொருட்டென்றால் நான் இமைப்பதுபோல் இதை ஆற்றுவேன். ஆற்றுதலும் ஒழிதலும் எனக்கு வேறுவேறல்ல என்றும் இருப்பேன்” என்றார் இளைய யாதவர்.

அவை மெல்ல மூச்செறிந்து தளர்ந்தது. ஒவ்வொருவரும் நிலைமீள்வதை காணமுடிந்தது. திருஷ்டத்யும்னன் கைகளில் இறுகப்பற்றி கசங்கிய தோற்சுருளை நீவினான். துருபதர் மேலாடையை இழுத்து அணிந்தார். யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் இளகியமைந்தார். சிகண்டி பீமனை நோக்கி “இளைய பாண்டவர் பார்த்தரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இளைய பாண்டவர் பீமசேனர் என்ன செய்கிறார்? அவரது கால்களும் அந்த எல்லையில் சென்று தயங்கி மீளத்தானே செய்கின்றன?” என்றார்.

பீமன் சினத்துடன் “எத்தயக்கமும் எனக்கு இல்லை. களத்தில் கொழுங்குருதி அள்ளிக்குடித்தவன் நான். உங்கள் ஷத்ரிய நெறிகளுக்கு கட்டுப்பட்டவன் அல்ல, நெறியிலாதவன், வெறும் காட்டாளன்!” என்றான். “எனில் இம்மூன்று நாட்களில் நீங்கள் கொன்ற உடன்பிறந்தார் எத்தனை பேர்?” என்றார் சிகண்டி. பீமனின் எழுந்த கை அசையாமல் நின்றது. சிகண்டியின் உடல் சற்றே வளைய முகம் கோணலாக “ஆம், மைந்தரை கொன்றீர்கள். உடன்பிறந்தார் எத்தனை பேரை கொன்றீர்கள்? நூற்றுவரும் அங்கு உயிருடன்தானே இருக்கிறார்கள்?” என்றார்.

அங்கே ஒரு அறியாத் தெய்வம் தோன்றியதென சுருதகீர்த்தி உணர்ந்தான். காற்றிலொரு கெடுமணம் வந்து சூழ்வதுபோல. சிகண்டி “இம்மூன்றுநாள் போரில் அவர்களில் பதின்மர் வீழ்ந்திருந்தால் அந்த அரியணையில் தன்னிறைவுடன் நிமிர்ந்து அமர்ந்திருப்பானா சுயோதனன்? வஞ்சம் உரைக்கும் சொல்லுக்கும் வீறுகாட்டும் விழிக்கும் அடியில் அவன் நெஞ்சுக்குருதி பெருகியிருக்காதா? ஆணவத்துடன் தேர் மேலேறி களம்புகுந்தான் இன்று. அவனது நூறு கைகளும் எழுந்து விரிந்திருந்தன. அதன்முன் நாம் தோற்றோம்” என்றார். சிரிப்பொலி எழ “நேற்றும் களத்தில் கண்டேன் எத்தனை முறை நீங்கள் அஞ்சி பின்னடைந்தீர்கள் என்று” என்றார்.

சினத்தால் கைநீட்டி “எவர் அஞ்சினார்கள்? எண்ணி சொல்லெடுங்கள். அவையில் எழுந்து என்ன சொல்கிறீர்கள் என கருதுக! எவர் அஞ்சினார்கள்?” என்று கேட்டபடி பீமன் முன்னால் வந்தான். இமையேனும் அசைக்காமல் நின்று “நீங்கள் அஞ்சினீர்கள். எதிரிகளை அல்ல, உங்களை” என்றார் சிகண்டி. பீமன் செயலற்று நின்றான். “இனியொரு சொல்லெடுக்கும் முன் இந்த வஞ்சினத்தை அவைமுன் வையுங்கள், இன்று அந்திக்குள் ஓர் உடன்பிறந்தோன் குருதியையேனும் உடல் பூசிக்கொண்டே மீள்வீர்கள் என்று. அதன்பின் பார்ப்போம்” என்றார் சிகண்டி.

தன் தொடையில் ஓங்கி அறைந்து பீமன் உரக்க குரல் கொடுத்தான் “அவை அறிக! இன்று தார்த்தராஷ்டிரர்கள் எண்மரைக் கொன்று அக்குருதியை என் உடலெங்கும் பூசிக்கொண்டு மட்டுமே பாசறை மீள்வேன். இன்றிரவு அவ்விழிமகன் தன் அரியணையிலிருந்து அவர் பொருட்டு விழிநீர் சிந்த வைப்பேன்! ஆணை!” புன்னகைத்தபடி சிகண்டி அவையைப் பார்த்து “போதும். இன்று இது நிகழுமென்றால் பீஷ்மர் நம்மில் எத்தனை பேரை கொன்று குவித்தாலும் நாம் வென்றவர்களாவோம். முதல் அடியை சுயோதனனுக்கு அளித்துவிட்டால் நாம் முன்னகரும் பாதை தொடங்குகிறது” என்றார்.

“வீழ்வார் பீஷ்மர், நான் அறிவேன் அவரை. கால்தளர்வார் பிதாமகர். அறிக! மைந்தரைவிட இனியோர் பெயர்மைந்தர்களே! மறுபெயர்மைந்தர்களோ வெறும் பெயர்கள்தான். பிதாமகர் பீஷ்மர் கௌரவ மைந்தர்கள் எவரையும் அறியார். கௌரவர்களோ அவர் தோளில் வளர்ந்த குழந்தைகள். நூற்றுவரைக் கொன்றபின் அவர் உயிர்வாழமாட்டார். ஒவ்வொருவர் இறப்பிலும் நூற்றிலொரு முறை அவர் இறக்கிறார்” என்றார் சிகண்டி. “பீஷ்மரை முற்றிலும் கொல்ல இன்று நம்மால் இயலாது போகலாம். ஒவ்வொரு துளியாக கொல்வோம். நூறுமுறை கொல்வோம்! ஆம், நூறுமுறை கொல்வோம்!”

அவ்வுரை அவையை கிளர்ந்தெழச் செய்வதை சுருதகீர்த்தி பார்த்தான். துருபதர் சிறுநடுக்குடன் எழுந்து “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவ அவையிலிருந்த அனைவரும் கைகளைத் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று முழங்கினர். ஆனால் அரியணை அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் வெளிப்படையாகவே நடுங்கிக்கொண்டிருந்தார். விரல்கள் அதிர்வதை தடுக்க கைகளை கோத்து அதன் மேல் தாடையை வைத்துக்கொண்டார். பேச முடியாதபடி அவர் உதடுகள் துடித்தன.

சகதேவன் “இன்று நமது சூழ்கை என்ன?” என்றான். நகுலன் “நாம் யானைத்திரள் சூழ்கை அமைத்துள்ளோம். காட்டு யானைகள் செல்வதுபோல் களம்புகுவோம். முதன்மை யானையென செல்லவிருப்பவர் மூத்தவர் பீமசேனர். முதல் யானையின் வால்சுழிப்பும் செவியசைவும் துதிக்கை நெளிவும் கண்டு பிற யானைகள் அணுகியும் விரிந்தும் களம்நிற்கவேண்டும்” என்றான். துருபதர் “கஜவியூகம் தொன்மையானது. பெருநகர்களை தாக்குவதற்கு அதை அமைப்பதுண்டு. மத்தகங்களால் கோட்டைகளை உடைத்து திறப்பதற்குரியது” என்றார். “பன்னிரண்டு மத்தகங்களால் ஆனது நம் சூழ்கை. ஒவ்வொன்றும் ஒரு சிகரம் எனப்படும். அவற்றை விரிவாக குறித்துள்ளேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.

“அவர்கள் அமைக்கவிருக்கும் சூழ்கை என்ன என்ற செய்தி ஏதேனும் உண்டா?” என்று சகதேவன் கேட்டான். திருஷ்டத்யும்னன் “நேற்று அது குறித்து என்ன எண்ணப்பட்டதென்று தெரியாது. அங்குள்ள நமது ஒற்றர்கள் அளித்த செய்தியின்படி பெரும்பாலும் அது யானைகளால் ஆன முகில்திரள் படையாக இருக்கும்” என்றான். சிகண்டி “வ்யாள வியூகம் பெரிய நிலப்பரப்பில் பரவிச்செல்வதற்குரியதல்லவா?” என்றார். “ஆம், வடிவிலா வடிவு அது. நோக்கிற்கு யானைகள்போல். ஆனால் ஒவ்வொரு கணமும் உருவழிந்து இணைந்தும் பிரிந்தும் அணுகும் அதில் மின்கொடிபோல் பீஷ்மர் இருப்பார். முகில்திரளில் எங்கிருந்தும் எங்கும் தாவ அவரால் இயலும். எந்த வடிவத்தையும் வழியையும் அவர் தக்க வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.”

எண்ணியிராத கணம் யுதிஷ்டிரர் எழுந்து “அவ்வாறே ஆகுக! நன்று நிகழ்க!” என்று சொல்லி கைகூப்பி வெளியே சென்றார். அவர் தன்னை கடந்து செல்ல சுருதகீர்த்தி தலைவணங்கினான். அவர் சென்ற அக்காற்றிலேயே அவர் உளம்கொண்ட வெம்மை இருப்பதாக அவனுக்கு தோன்றியது. நிமித்திகர் எழுந்து கொம்போசை எழுப்ப அவையினர் மெல்லிய சொற்களுடன் கலைந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக செல்வதை சுருதகீர்த்தி பார்த்துக்கொண்டிருந்தான். திருஷ்டத்யும்னன் அவனை அழைத்து “உங்கள் ஒவ்வொருவருக்குமான ஆணைகொண்ட ஓலைகள் பிரதிவிந்தியனிடம் அளிக்கப்பட்டுள்ளன. இன்று கடோத்கஜனுடன் இணைக! இரண்டாவது சிகரம் அவனே” என்றான்.

சுருதகீர்த்தி தலைவணங்கினான். திருஷ்டத்யும்னன் அப்பால் செல்ல பிரதிவிந்தியன் எழுந்து அருகே வந்து “உனக்கான ஆணையோலை, இளையோனே” என்றான். சுருதகீர்த்தி அதை வாங்கி படிக்காமலே தலைவணங்கி தன் இடையில் செருகிக்கொண்டு வெளியில் சென்றான். வெளிக்காற்றின் தண்மை அவனுக்கு ஆறுதல் அளித்தது. கந்தகம் இல்லாத காற்று. ஆனால் அதன் திசை சற்றே மாற கந்தகத்தின் எரிமணம் வரத்தொடங்கியது.

வெண்முரசின் கட்டமைப்பு

 

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ராஜ் கௌதமனும் தலித்தியமும்

$
0
0

15192773_223043628134210_4976266411304153020_n

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

 

ஜெமோ,

 

ஏற்கனவே அம்பேத்கருடைய ‘இந்தியாவில் சாதிகள்’ மற்றும் உங்களுடைய ‘இந்திய ஞானம் ‘ வழியாக சாதிகளின் தோற்றம் மற்றும் யாருக்கு அது தேவை என்பதை குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/ )  , ராஜ் கௌதமன் அவர்களின் ‘தலித்திய விமர்சனக் கட்டுரைகள்’ எனும் இந்நூல் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

 

இவற்றிலுள்ள சில கட்டுரைகள் பற்றிய என் அவதானிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

 

https://muthusitharal.com/2018/10/02/தலித்தியம்-ஒரு-புரிதல்/

அன்புடன்
முத்து

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நரசிம்மராவ்- கடிதங்கள்

$
0
0

download (2)

 

நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்

அன்புள்ள ஜெ

 

1996 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பழியை பலர் நரசிம்மராவ் மேல் போடுகின்றனர்

 

ஜெயலலிதா மீதான பல  சட்ட நடவடிக்கைகளுக்கு காரணம் நரசிம்மராவ் ஆட்சிதான்…   ஜெ அவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தார்…

 

ரஜினி உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியைக்கொண்டு வருவதே அவர் நோக்கமாக இருந்தது

அதற்கான சூழலும் அன்று இருந்தது,…

 

அப்போதெல்லாம் திமுக நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தது…

 

ஆனால் அப்போது தமிழகத்தில் வென்றால் நரசிம்மராவுக்கு கிடைக்கும் பலத்தை எண்ணி , அதிமுகவுடன் கூட்டணி வைக்க நிரப்பந்திக்கப்பட்டார்

 

தமிழகத்தைப்பொருத்தவரை அவரது ஐந்தாண்டுகள் உழைப்பு வீணானது.. சம்பந்தமே இல்லாமல் திமுக கைகளுக்கு ஆட்சி சென்றது…

 

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை… நரசிம்ம ராவுக்கு இரு கண்களும் போக வேண்டும் என்ற காங்கிரசின் முடிவு தமிழக அரசியலையும் தேசிய அரசியலையும் ஒரு வினோதமாக திசையில் தள்ளியது

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள பிச்சைக்காரன்

 

இன்று நான் சலிப்புடன் நினைவுகூர்வது இதுவே. எந்த ஊடகமும் அன்று நரசிம்மராவ் செய்த சீர்திருத்தங்கள், நாடு எதிர்கொண்ட நெருக்கடிகள் குறித்து எழுதவில்லை. அதைப்பற்றிய பேச்சு சில பொருளியல்நிபுணர்களின் விவாதங்களுக்குள் மட்டுமே இருந்தது. மொத்த விவாதமும் சிபுசோரன் கட்சிதாவியது, அர்ஜுன் சிங் நரசிம்மராவ் பூசல் என்று அன்றாட அதிகார அரசியல் மட்டத்திலேயே இருந்தது. ஊடகங்கள் அதை ஒருவகையான விளையாட்டாக ஆக்கி வாசகர்களைக் கட்சிசேர வைத்தன. நாம் அந்தப்போதையில் மூழ்கிக்கிடந்தோம். நம் வாழ்க்கையைத் தீர்மானித்தவை பற்றி அடிப்படை அறிதல்கூட இல்லாமலிருந்தோம். கூடவே எதிர்கட்சிகள் நரசிம்மராவ் செயிண்ட் கிட்ஸ் தீவில் கணக்குவைத்திருக்கிறார் என்பதுபோன்ற மலிவான அவதூறுகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என் கட்டுரையில் நான் பேசவிழைவதே இதுதான். நரசிம்மராவ் எங்கே கூட்டுவைத்தால் என்ன? என்ன அரசியலாடினால் என்ன? அதைப்பற்றி மட்டுமே பேசு என நம்மிடம் சொல்பவர்கள் யார்?

 

ஜெ

 

நரசிம்மராவ்- கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சேர்ந்து வாழ்தல்

$
0
0

Do you come here often, Painting of mannequins.

அன்புள்ள ஜெயமோகனுக்கு

 
வணக்கம்  ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்கலாம் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

 
ஓரினச்சேர்க்கை மாதிரியான சமூகத்தால் அருவருப்பாக பார்க்கப்பட்டதையே எழுதும் நீங்கள் லீவிங் டுகதர் அதாவது திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்தல் என்பதை பற்றி ஏதும் எழுதிய மாதிரி தெரியவில்லையே ஏன்?( நான் 2008 இருந்து இந்த தளத்தை படித்து வருகிறேன்) நீங்கள் உடனடி அரசியல் நிகழ்வுகளுக்கு பதில் சொல்வதில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் இது சமீப காலமாக இது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விசயமாக மாறி வருகிறதாக நான் நினைக்கிறேன். (சமீபத்தில் டீவி நடிகை விவகாரம்)

 

 

நீங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்கும்  ஒழுக்கவாதி என்பதால் வேண்டுமென்றே இதை பற்றி எழுதுவதை தவிர்கிறீர்களா? மேலை நாடுகளில் இது அதிக அளவில் இருப்பதாக நினைக்கிறேன். நம் நாட்டிலும் நகரங்களில் சிறு அளவில் வளர்ந்து வருவதாக இணைய செய்திகள் வழியாக ஊகிக்கிறேன் இது சரியா?

 
வெறும் காம இச்சை மட்டும் தான் லிவிங் டுகதருக்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறேன். அதுக்கு வேறு எத்தனையோ வழி இருக்கிறது. இந்த லிவீங் டுகதரை எதிர்ப்பவர்கள் வாழும் வாழ்க்கை எப்படிபட்டது? ஜாதி, மதம், பணம் மட்டுமே பார்த்து பெற்றோர் பார்ந்த கல்யாணம் செய்து அல்லது பணம், அழகு மட்டுமே பார்த்து காதல் திருமணம் செய்து காமத்தில் ஈடுபடுவர்களை என்னவென்று சொல்வது? மேலை நாடுகளில் பிரபலங்களில் பலர் லிவிங் டுகதரில் இருந்து ஒன்று அல்லது இரண்டு குழந்தை பிறந்த பிறகு கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இதை அங்குள்ள சமூகம் அங்கீகரித்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இங்கிலாந்து போல சில நாடுகளில் சட்டப்பூர்வ அங்கிகாரம் கூட தந்திருப்பதாக இணையத்தில் படித்த நியாபகம்.  கலாச்சாரம், பண்பாடு இந்தியாவுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் அது இருப்பதாகவே நினைக்கிறேன்.

 
நான் புரிந்து கொண்டது என்னவென்றால் சிந்தனை பின்புலம், ரசனை, கேரக்டர் எதுவுமே தெரியாமல் ஒருவரை திருமணம் செய்வது எப்படி என்ற தயக்கத்தில் இருந்து தான் இது தோன்றியதாக நினைக்கிறேன். பெற்றோர் பார்த்து நிச்சியக்கும் திருமணம் மட்டும் இதற்கு காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. காதல் திருமணமும் இதற்கு மிக முக்கிய காரணம் தான்.

 

 

ஏன் என்றால் காதலில் துணையை எளிதாக ஏமாற்றி விடலாம். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ நேரில் பார்க்கும் போது மட்டும் நமது உண்மையான முகத்தை மறைத்து வேறு மாதிரியாக நடித்து விடலாம். காதலிக்கும் போது நமது பாசிட்டீவை மட்டும் காட்டி ஏமாற்றி விடலாம். ஆனால் திருமணத்துக்கு பிறகு நமது நெகட்டீவ் மட்டும் தான் நமது துணைக்கு பெரிதாக தெரியும்.  ஆனால் லிவிங் டுகதரில் இருபத்து நான்கு மணிநேரமும் துணையின் கூடவே சில மாதங்களோ அல்லது வருடங்களோ இருக்கும் போது ஏமாற்ற முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில் நமது உண்மையான முகம் வெளிப்பட்டு விடும்.

 

அதுவும் இல்லாமல் யாரும் எடுத்த எடுப்பிலேயே லீவிங் டுகதர் போய்விட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எல்லா காதலரையும் போல சில மாதங்களோ அல்லது வருடங்களோ காதல் செய்து திருமணத்துக்கு முன்பாக என்னோட துணை இத்தனை நாள் என்னிடம் காட்டிய முகம் உண்மைதானா? எனக்கும் அவருக்கும் ஒத்து போகுமா என்று இரண்டு பேர் வாழ்ந்து பார்த்தால் என்ன தவறு? (கள எதார்த்தம் எனக்கு தெரியாது. நான் இருப்பது மதுரை பக்கம் ஒரு சிற்றூர்)
கலாச்சாரம் கெட்டுவிடும் என்று கலாச்சர காவலர்கள் சொல்ல கூடும். பெற்றோர் பார்த்த துணையை பற்றி எதுவுமே தெரியாமலோ அல்லது காதல் மூலம்  அரைகுறையாக தெரிந்து கொண்டோ திருமணம் செய்து திருமணத்துக்கு பிறகு துணைக்கு உண்மையாக இல்லாமல் கள்ள காதலில் ஈடுபட்டால் கலாச்சாரம் கெடாதா?

 

நான் பார்த்த வரை என்னை சுற்றி உள்ள சமுதாயத்தில் உள்ள தம்பதிகளில் நூற்றுக்கு தொண்ணூற்று ஜந்து சதவிகிதம் பேர் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை என்றே நினைக்கிறேன். குழந்தைகளுக்காக வேறு வழி இல்லாமல் சகித்து கொண்டு தங்கள் வாழ்வை தியாகம் தான் செய்கிறார்கள். நாளை இவர்களின் பிள்ளைகளும் அவர்களின் குழந்தைக்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்யவே வாய்ப்பு அதிகம். ஆக மொத்தம் நாடு முழுக்க தியாகிகள் தான் நிரம்பி வழிகிறார்கள். மிக பெரும்பான்மை மக்கள் இப்போது உள்ள திருமண அமைப்பில் மகிழ்ச்சியாக இருப்பது போல தெரியவில்லை.
 

என்னை பொறுத்தவரை தனிமனிதனுக்காக தான் கலாச்சாரம், மதம், ஒழுக்க நெறி அத்தனையும். ஆனால் இப்போ தலைகீழாக இருப்பதாக நினைக்கிறேன். கலாச்சாரம், மதம், ஒழுக்க நெறியின் பெயரால் தனிமனிதனின் மகிழ்ச்சி பாதிக்கப்படுகிறது. இதற்கு இந்த லிவிங் டுகதர் ஒரு தீர்வாக இருக்க வாய்ப்பு உள்ளதா? லிவிங் டுகதர்தான் முழு தீர்வு என்று நான் வாதிடவில்லை. இப்போது இருக்கும் திருமண அமைப்பை மேம்படுத்த இது உதவுமா? ஆக மொத்தம் ஒட்டு மொத்த குடும்ப அமைப்பையே இந்த லிவிங் டுகதர் கேள்விக்குறி ஆக்குகிறதா? இல்லை மேலை நாடுகளில் டைவர்ஸ் செய்தால்  பெண்களுக்கு மிக அதிக அளவில் இழப்பீடு தர வேண்டி இருக்கும். அதனால் தான் அங்கு உள்ள ஆண்கள் திருமணத்துக்கு பயந்து மாற்று வழியாக லிவிங் டுகதரை தேர்ந்தெடுக்கிறார்களா? இது இந்தியாவில் வளர்ந்தால் சமூக சீர்கேடு தான் உண்டாகுமா?

 
“மனவுறவு மீறல் குற்றமா?” என்ற தங்களின் சமீபத்திய கட்டுரை எனக்கு பல தெளிவுகளை கொடுத்தது. ஓரினச்சேர்க்கையாளர் விசயத்தில் கூட பல வருடங்களுக்கு முன்பே தைரியமாக அவர்கள் தரப்பு நியாயத்தையும், அறிவியல் பூர்வமாக அவர்களை மற்ற நாடுகள் அங்கீகரித்தையும் எழுதியிருந்தீர்கள். உங்கள் எழுத்தை படித்த பிறகு தான் எனக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது இருந்த வெறுப்பு போனது. அதற்கு முன்னால் பாமர மக்களை போலவே ஓரினச்சேர்க்கையாளர்களை கேவலமாகவே பார்த்தேன். (இப்போதும் ஓரினச்சேர்க்கையை முழுமையாக ஏற்பதில் எனக்கு மாற்று கருத்து உண்டு. ஆனாலும் முன்பு போல் அசிங்கமாக பார்ப்பதில்லை)

 
கடைசியாக நான் கேட்க வருவது இதுதான். எந்த ஒரு விசயமும் எந்த ஒரு சமுகத்திலும் ஒரு நேர்மறை காரணம் இன்றி வளராது என்றே நான் நினைக்கிறேன். லிவிங் டுகதர் மேலை நாடுகளில் வளர்ந்து வருவது கண்கூடு. நாளை இங்கும் வளர வாய்ப்பு அதிகம் என்றே நினைக்கிறேன்.

 

லிவிங் டுகதரின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் என்ன? லிவிங் டுகதரை சட்டம் எந்த விதத்தில் அதை முறைப்படுத்த முடியும். இதில் சட்டத்தின் பங்கு என்ன? நம் நாட்டு கலாச்சாரத்தில் லிவிங் டுகதரில்  இருப்பவர்கள் சந்திக்கும் சவால்களை பற்றி இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்று அறிவுடைய உங்களை போன்றவர்களால் தான் விளக்க முடியும் என்று நினைக்கிறேன்.
 

அன்புள்ள
கார்த்திகேயன்.J
 

(உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பிள்ளைகள் இருப்பதால் இதை பற்றி எழுத நீங்கள் தயங்கலாம். அப்படி இருந்தால் பதில் எழுத வேண்டாம். ஏன்னா உங்க இடத்துல நான் இருந்தாலும் இந்த கேள்விக்கு பதில் எழுதுவேன்னா என்பது சந்தேகம் தான்)

 

 

அன்புள்ள கார்த்திகேயன்

 

நான் என் வீட்டு உணவுமேஜையில் பேசாத எதையும் எழுதுவதில்லை. என் பிள்ளைகள் இருவருமே இந்தத் தளத்தின் வாசகர்கள்தான்

 

சேர்ந்துவாழ்வது என்பது இங்கே எப்போதும் இருந்துகொண்டுதான் இருந்தது. சேத்துக்கிட்டது என்ற வார்த்தையே புழக்கத்தில் இருந்தது. அது ஏன் தவிர்க்கப்பட்டது என்றால் அதன் வழியாக உருவாகும் சட்டச்சிக்கல்காரணமாக. அந்தக்குழந்தைக்கு இயல்பான சட்டப்பாதுகாப்பு இல்லை. தந்தை அதன் பொறுப்பை ஏற்கவேண்டியது இல்லை. நடைமுறையில் குழந்தையின் பொறுப்பை முழுமையாகப் பெண் தலையில் கட்டிவிடுவதே சேர்ந்துவாழ்வது என்று இங்கே உள்ளது

 

ஆகவேதான் மணவுறவு கட்டாயம் என்னும் பேச்சு எழுந்தது. சேர்த்துக்கொள்வது சட்டபூர்வமானது அல்ல என்றாலும் குழந்தைக்கு குருதித்தந்தையின் சொத்தில் உரிமை உண்டு, பேணும்செலவு கோர உரிமை உண்டு என்னும் தீர்ப்புகள் வந்தன

 

அந்த வாழ்க்கைமுறை இன்று இன்னொருவகையில் வருகிறது, இளையோர் நடுவே. இங்கும் பொறுப்பேற்கத் தயங்குவதிலிருந்தே இது ஆரம்பிக்கிறது. ஒருவருக்கொருவர் பொறுப்பேற்காமலிருத்தல். ஒருவருக்கொருவர் சாராமலிருத்தல். ஐரோப்பாவில் இன்று மிகச்சாதாரணமாக உள்ளது இந்த உறவு. இது தனிமனிதச் சுதந்திரத்தை பேணுவதாக அமைகிறது. எவரும் எவரையும் கட்டுப்படுத்துவதில்லை. சட்டக்கட்டுப்பாடும் இல்லை

 

ஆனால் இதற்குத்தேவை சில உளநிலைகள். அவை ஐரோப்பாவில் உள்ளன. ஒன்று,பாலுறவை சாதாரணமாக எடுத்துக்கொள்வது. எவருடன் எவர் உறவுகொண்டாலும் ஒன்றுமில்லை என்னும் போக்கு. சேர்ந்துவாழும் ஆணோ பெண்ணோ இன்னொரு உறவை கொண்டிருந்தால் அதனால் உளப்பாதிப்படையாமலிருத்தல். அதை நம்பிக்கைத்துரோகம் என்றெல்லாம் எண்ணாமலிருத்தல். இரண்டு, உறவையே பெரிதாக எடுத்துக்கொள்ளாமலிருத்தல். எளிதாகப் பிரிதல். அதில் உளப்பாதிப்பு கொள்ளாமலிருத்தல்.

 

அதோடு ஒரு சமூகநிலையும் தேவை. ஆணோ பெண்ணோ எந்நிலையிலும் பொருளியல்சார்ந்தோ பிறவகையிலோ சாராமலிருத்தல்.சமூகரீதியாக எதையும் எதிர்பாராமலிருத்தல்

 

இந்தநிலை இந்தியாவில் இன்றில்லை. இன்றும் நாம் ஆண்பெண்  ‘கற்புக்கு’ பெரிய இடம் அளிக்கிறோம். உணர்வுரீதியாகச் சார்ந்திருக்கிறோம். உடைமைநிலை கொண்டிருக்கிறோம். இந்த உணர்வுகள் எல்லாமே சேர்ந்திருத்தல் என்னும் நிலைக்கு முற்றிலும் எதிரானவை.

 

உதாரணமாக ஒருவன் ஒருத்தியுடன் சேர்ந்து வாழ்கிறான். ஆறுமாதம் கழித்து அவள் அவனிடம் நீ சரிப்படமாட்டாய் என்று சொல்லி சென்றுவிட்டால் அவன் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்துசெல்லவேண்டும். இல்லாவிட்டால் சேர்ந்துவாழ்தல் என்பதைபோல வதை வேறு இல்லை.

 

இந்தச்சோதனைகளைத் தனிவாழ்க்கையில் மேற்கொண்ட சிலரை எனக்குத்தெரியும். அத்தகைய சில உறவுகளில் இருந்த சுயநலமும் துரோகமும் ஈவிரக்கமற்ற கைவிடப்படலும் நினைக்கையில் நடுங்கச்செய்பவை. கணிசமானவர்களுக்கு அவ்வுறவு இன்னும் வதைமிக்கதாக இருந்தது. எக்கணமும் பிரிந்துவிடலாம் என ஓர் உறவை அமைத்துக்கொண்டாலே அந்த உறவில் எப்போதும் பிரிவுதான் பேசப்படும். பிரிந்துவிடுவார்கள் என்ற ஐயம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே அது ஜாக்ரதை உணர்வை உருவாக்கும். பிறர்மேல் ஐயத்தைப்பெருக்கும். மொத்த உறவும் அதனூடாகக் கசந்துபோகும். எப்போது வேண்டுமென்றாலும் அவ்வுறவு மெய்யாகவே பிரிவையும் சந்திக்கும்.

 

ஐரோப்பாவிலேயே கூட சேர்ந்துவாழும் வாழ்க்கையில் பாதிக்குமேல் திருமணம் செய்துகொள்கிறார்கள். மீறல், பிரிவு இரண்டும் அவர்களுக்கும் கடும் உளச்சிக்கலை அளிப்பவையாகவே உள்ளன. திருமண உறவில் என்னென்ன சிக்கல்கள் உள்ளனவோ எல்லாமே அந்த உறவிலும் உள்ளன. ஏனென்றால் திருமண உறவிலுள்ள சிக்கல்களில் பெரும்பகுதி அந்த உறவால் உருவானவை அல்ல, அவை ஆணுக்கும் பெண்ணுக்கும்நடுவே என்றுமுள்ள முடிவடையாத உறவுச்சிக்கல்கள்.சேர்ந்து வாழ்ந்து பழகி மணந்து பின்னர் உளம்கசந்து பிரிபவர்களும் ஏராளமானவர்கள். சொல்லப்போனால் சேர்ந்துவாழ்வது எவ்வகையிலும் மணவாழ்வை நீட்டிக்க வைப்பதில்லை.

 

மணவுறவின் வெற்றி என்பது ஓர் எல்லைவரை உகந்த மனிதரை தெரிவுசெய்வதில் உள்ளது. ஆனால் வாழ்க்கையை முடிந்தவரை அதற்கேற்ப மாற்றிக்கொள்வது அதன் அடுத்தபடி. மாற்றிக்கொள்ள இயலாதவர்களால் ஒருபோதும் வெற்றிபெற்ற வாழ்க்கையை அமைக்கமுடியாது. அந்த இலட்சிய துணையைத்தான் தெரிவுசெய்வேன் என எவரேனும் தேடிக்கொண்டிருந்தால் பிள்ளையார் வாழ்க்கைதான்.

 

மணவாழ்க்கை மட்டுமல்ல நட்புகளே கூட இந்நட்பு என்றென்று நீடிக்கும், எந்நிலையிலும் வளரும் என எண்ணிக்கொண்டாலொழிய அழமாக நீடிக்கமுடியாது. பிடித்தால் சேர்ந்திருப்போம், தேவையான அளவுக்குக் காட்டிக்கொள்வோம், பயன்படும்வரை நட்புடன் இருப்போம் என ஒரு நட்பைத் தொடங்கினாலே அது கசப்புடன் முறிவதைத் தடுக்கவியலாது.

 

சுருக்கமாகச் சொன்னால், உறவுகளை ஒருபொருட்டாக நினைக்காத உள்ளம் கொண்டவராக இருந்தால், எல்லா உறவுகளும் அதற்கான குறைந்தபட்சத் தேவைக்கு மட்டுமே உரியவை என உணர்ந்து உணர்வுரீதியாக ஈடுபடாதவராக இருந்தால் சேர்ந்துவாழ்தல் உகந்த வழிமுறையாக இருக்கும். ஆனால் அப்படி எவரேனும் இருக்க முடியுமா என்றே ஐயமாக இருக்கிறது. முடியலாம். மாபெரும் இலட்சியங்களை மட்டுமே வாழ்வெனக் கொண்டவர்கள். அதன்பொருட்டு பிற அனைத்தையும் பொருட்டாகக் கருதாதவர்கள். அவர்களுக்கு இம்முறை உகந்ததாக இருக்கலாம்

 

மற்றபடி இன்றையசூழலில்உலகியல்பொறுப்பை ஏற்கத் தயங்கி இதில்நுழைபவர்கள் உணர்ச்சிகள் புண்பட்டு துயரடைவதற்கே வாய்ப்பு என எனக்குப் படுகிறது.  இது இன்றைய சூழல். வருங்காலத்தில் மெய்யாகவே உறவுகள் அனைத்தும் உணர்வுச்சாரமின்றி, தற்காலிக சேர்வுகளாக மட்டுமே நிகழும் என்றால் இம்முறை உகந்ததாக ஆகமுடியும்

 

உறவுகளுக்குப் பொறுப்பேற்கவேண்டியதில்லை என்ற உளநிலையே உயிரியல்சார்ந்து பொருளற்றது. உலகிலுள்ள எல்லா உயிர்களும் உறவுகளுக்குப் பொறுப்பேற்பவை. குழந்தைகளுக்காக உயிர்கொடுப்பவை. தர்க்கரீதியாக அது அபத்தமாக இருக்கலாம்க . ஆனால் அதன் அடிப்படையிலேயே உயிர்ப்பரிணாமம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண்ணுடன் உணர்ச்சிகரமல்லாத உறவை வைத்துக்கொள்லலாம். குழந்தைகளிடம்? ஒருசிலர் அவ்வாறு இருக்கலாம். மானுடகுலமே அப்படி இருந்தால் என்ன ஆகும்?

 

ஆண்கள் சேர்ந்துவாழும் முறையை ஒரு வசதியாக எண்ணக்கூடும். பெண்ணை பாலியல்ரீதியாகப் பயன்படுத்திவிட்டு துறக்க இது உகந்தது என கருதலாம். அவர்கள் ஒன்று உணரவேண்டும், பெரும்பாலும் ஆண்கள்தான் உறவில் உணர்ச்சிகரமாக ஈடுபடுபவர்கள். பெண்களால் துறக்கப்பட்டால் உடைந்து நொறுங்குபவர்கள். பெண்களைச் சார்ந்திருப்பவர்கள் ஆண்களே. ஆணைச்சாராமல் பெண் இயல்பாக வாழமுடியும், ஆகவே இயல்பாகத் துறக்கவும் முடியும். மணமாகனல் சேர்ந்துவாழ்ந்த பலரை எனக்குத்தெரியும். குருதிவழிய அதிலிருந்து மீளமுடியாமலிருப்பவர்கள் ஆண்களே. பெண்கள் சென்றுவிட்டார்கள், திரும்பிப்பார்க்கவுமில்லை.

 

பெண்ணும் ஆணும் தங்கள் உரிமைகளை, இடங்களை வரையறைசெய்துகொண்டால் திருமண உறவில் இல்லாத எந்த வசதி சேர்ந்துவாழ்வதில் உள்ளது? சட்டபூர்வப் பதிவு என்னும் அம்சம் மட்டுமே கூடுதலாக உள்ளது. அதை எளிதில் ரத்து செய்துவிடமுடியும் என்றால் இது எதற்காக? வெறுமே இதுதான் மோஸ்தர் என்பதற்கு அப்பால் இதனால் எவருக்கு என்ன நன்மை? ஒன்றுமில்லை

 

எந்நிலையிலும் ஆண்பெண் உறவு என்பது சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டதாக, கண்ணீரும் சிரிப்பும் நிறைந்ததாகவே இருக்கும். அதுவே அதன் அழகு. அதில் வெற்றியும் தோல்வியும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதெல்லாம் இல்லாத நேர்த்தியான வணிக ஒப்பந்தம்போல உறவை அமைத்துக்கொண்டால் என்ன சுவாரசியம்? சரி, அந்த உடலுறவேதான் எவ்வளவுநாள் சுவாரசியமாக இருக்கும்?

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29

$
0
0

bowசுதசோமன் தன் புரவியில் அமர்ந்து ஆணைகள் இடுவதற்குள்ளாகவே புரவி கிளம்பிச்சென்றது. அவன் எண்ணத்தை உடலசைவிலிருந்தே அது உணர்ந்தது. சீர்நடையில் பாதையின் பலகை வழியாகச் சென்றான். குளிரலைகள் பரவியிருந்த முற்காலையில் பாண்டவப் படை போருக்கு ஒருங்கிக்கொண்டிருந்தது. மேலே விடிவெள்ளி விழுந்துவிடும் என நின்றிருந்தது. விளக்குகளின் நிழல்கள் ஆடின. வீரர்கள் கவசங்கள் அணிந்துகொண்டும், படைக்கலங்களைத் தேர்ந்துகொண்டும், உணவருந்திக்கொண்டும் இருந்தனர். போர் என்னும் கிளர்ச்சி அமைந்து அது நாள்கடன் என ஆகிவிட்டதுபோல மிக மெல்லவே ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

‘தோற்றுக்கொண்டிருக்கும் படை!’ என்ற எண்ணம் வந்ததுமே அதை அகற்றும் பொருட்டு அவன் தன்னைக் கலைத்துக்கொள்ள முயன்றான். ஆனால் அவ்வெண்ணத்திலிருந்து அவன் உள்ளம் விலகவே இல்லை. படைகளின் நடுவே புரவிக்குளம்புகள் ஒலிக்க சென்றுகொண்டிருந்தான். இருபுறமும் காவலர் தலைவணங்கினர். கடோத்கஜனின் பாடிவீட்டருகே சென்றபோது அங்கு காவல் நின்ற இடும்பனாகிய லம்போதரன் தலைவணங்கினான். “அரசர் இருக்கிறாரா? பார்க்க வந்துளேன்” என்றான். “அவர் பலிச்சடங்கு செய்துகொண்டிருக்கிறார்” என்றான் லம்போதரன். “இங்கில்லையா? காட்டிலா?” என்றான். “இங்குதான், அதோ” என்று அவன் சொன்னான்.

புரவியிலிருந்து இறங்கி கடிவாளத்தை ஒப்படைத்துவிட்டு சுதசோமன் முன்னால் சென்றான். தொலைவிலேயே கடோத்கஜன் முழந்தாளிட்டு அமர்ந்து தரையில் மண் ஒதுக்கி உருவாக்கிய வட்டத்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறு கற்களுக்கு முன் இலை விரித்து, அதில் அன்னமும் மலரும் படைத்து, நீர் தெளித்து பூசை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். அருகே ஓர் இடும்பன் சிறு முழவை விரல்களால் மீட்டி கருங்குரங்கு முழங்குவதுபோல் ஓசையெழுப்பிக்கொண்டிருந்தான். மேலும் இருவர் கைகட்டி நின்றிருந்தார்கள். மூன்று கற்கள் முகப்பில் மலர்சூடி இருந்தன. நூற்றுக்கணக்கான் சிறு கூழாங்கற்கள் அவற்றுக்குப் பின்னால் அடுக்கப்பட்டிருந்தன. வாழையிலையில் அன்னம் வெண்மையின் வெறுமையுடன் கிடந்தது.

ஏழு முறை நீர் தெளித்து பன்னிரு முறை மலர் அளித்துவிட்டு கைகூப்பி நெற்றி நிலந்தொட வணங்கி கடோத்கஜன் எழுந்தான். கனவிலிருந்து விழித்ததுபோல் அவனை பார்த்து “வருக, இளையோனே” என்றான். “இது என்ன சடங்கு?” என்று சுதசோமன் கேட்டான். “இது முதற்கல் நாட்டுதல். பின்னர் எங்கள் மலையில் நிலைக்கற்களாக இவை ஆகும்” என்றான். மீண்டும் அந்தக் களத்தை பார்த்த பின் “அக்கூழாங்கற்கள்?” என்றான் சுதசோமன். “நேற்று போரில் கொல்லப்பட்டவர்களில் இடும்பர்களும் அரக்கர்களும்” என்றான் கடோத்கஜன். முன்னாலிருந்த மூன்று பெரிய கற்களைச் சுட்டிக்காட்டி “இவை சகுண்டனும் உத்துங்கனும் அலம்புஷனும்” என்றான்.

சுதசோமன் “மூத்தவரே, அலம்புஷன் தங்களால் கொல்லப்பட்டவன்” என்றான். “அதனாலென்ன? நாங்கள் அரக்கர்கள். நானளிக்கும் அன்னத்தை அவன் மறுக்கப்போவதில்லை. இங்கு இவ்வண்ணம் இருக்கலாம். பிறிது வடிவில் நாங்கள் வாழும் மண்ணுக்கடியில் நாங்கள் ஒன்றென்றிருப்போம். இறப்புக்கு பின் நாங்கள் வேர்களின் உலகில் வாழ்வோம். தழுவிக்கொள்ளும் கலையறிந்தவை வேர்கள்” என்றான் கடோத்கஜன். சுதசோமன் அவன் அச்சடங்கை ஏழுமுறை கைகளை நொடித்துச் செய்து முடிக்கும்வரை காத்து நின்றான்.

கடோத்கஜன் எழுந்து “இன்று யானைச்சூழ்கை என அறிந்தேன்” என்றான். “ஆம், நீங்கள் யானையின் துதிக்கை” என்றான் சுதசோமன். திரும்பி அந்தச் சிறுகற்களை சிலகணங்கள் நோக்கிவிட்டு ஏளனச் சிரிப்புடன் “இக்களத்தில் மாண்டவர்கள் அனைவருக்கும் நாளை கல்நாட்டுவதைப்பற்றி எண்ணினேன்” என்றான். “மலைக்குடியினருக்கு மட்டும் கல்நாட்டினால் போதும். ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள், உங்கள் படைவீரர் ஒவ்வொருவரும் பிறிதொருவரைப் போன்றவர்கள். படைப்பயிற்சி என நீங்கள் எண்ணுவது அவ்வாறு அவர்களை ஆக்குவதைத்தான்” என்றான். “நானும் அதையே எண்ணினேன், மூத்தவரே. கங்கைமணற்பரப்பை ஒட்டுமொத்தமாக இன்றுவரை வாழ்ந்து களம்பட்ட அனைவருக்கும் உரியதாக உருவகித்து ஒரு கை நீரள்ளிவிட்டால் கடன் முடியும்” என்றான் சுதசோமன்.

கடோத்கஜன் அமர்ந்துகொள்ள இரு இடும்பர் கவசங்களை அணிவித்தனர். சுதசோமன் “சகுண்டன்…” எனச் சொல்லத் தொடங்க “அவர்கள் மண்ணுக்குள் சென்றுவிட்டனர். இனி சொல்லில் அவர்களுக்கு இடமில்லை. கனவில்மட்டுமே அவர்கள் தோன்றவேண்டும்” என்றான் கடோத்கஜன். “அவர்களை நீங்கள் நினைவுறவே போவதில்லையா?” என்றான் சுதசோமன். “இல்லை, பேச்சில் அவர்கள் எழலாகாது. கதையென நிலைகொள்ளுதலும் பிறழ்வு. நாம் இங்கே பேசுந்தோறும் அவர்களை இங்கே இழுக்கிறோம். நாம் மறந்தாலொழிய அவர்கள் இங்கிருந்து முற்றாகச் செல்வதில்லை.”
“விந்தைதான்” என்றான் சுதசோமன். “நாங்கள் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்துகிறோம்.” கடோத்கஜன் “அதுவும் நன்றே, அவர்களைக் கனவிலிருந்து துரத்துவதற்கான வழி அது” என்றான். “நீங்கள் பலிகொடுப்பதுண்டு அல்லவா?” என்றான் சுதசோமன். “ஆம், ஆண்டுக்கொருமுறை. நினைவுநாட்களில் அல்ல. அனைவருக்கும் ஒரேநாளில், ஒரே பலியாக. ஆடிமாதம் கருநிலவுநாளில்” என்றான் கடோத்கஜன். சுதசோமன் சில கணங்களுக்குப் பின் “இரண்டும் வெவ்வேறு என எண்ணினேன். அவ்வாறல்ல, இரண்டுமே நிகர்தான், மூத்தவரே” என்றான். “எவ்வாறு?” என்றபடி கடோத்கஜன் எழுந்தான். “அறுதியாக இரண்டுமே பொருளற்றவை” என்றான் சுதசோமன்.

கடோத்கஜன் பேருருளையை சங்கிலி பற்றி எடுத்தான். அதை கையில் சுழற்றிச்சுருட்டி அதன் தண்டில் பிடித்து தூக்கி தலைக்குமேல் சுழற்றினான். “தந்தை இன்று வஞ்சினம் உரைத்துள்ளார் என்று அறிந்தேன்” என்றான் சுதசோமன். கடோத்கஜன் கொக்கிச்சரடை சுழற்றிக்கொண்டிருந்தமையால் நோக்கவில்லை. “இன்று கௌரவ உடன்பிறந்தாரில் எண்மரைக் கொன்றுமீள்வேன் என்று” என்று அவன் சொன்னான். “அதிலென்ன?” என்றான் கடோத்கஜன். “நீங்கள் வஞ்சினம் உரைக்கவில்லையா? உங்கள் அணுக்கர்களைக் கொன்றவர்களை…” என்றான் சுதசோமன். “எனக்கு வஞ்சம் இல்லை” என்றான் கடோத்கஜன். “நான் கொல்லலாம் என்றால் அவர்கள் என்னைக் கொல்வதும் அறமே.”

சுதசோமன் “ஆனால் உங்கள் குருதியினர்…” என்று தொடங்க “குருதியினர் போரிடலாகாது. போரிடலாமென்றால் கொல்லலாம்” என்ற கடோத்கஜன் “இதை உளநாடகங்களாக, உணர்ச்சிப்பெருக்குகளாக ஆக்கிக்கொண்டாலொழிய உங்களால் போரிட இயலாது. நான் அவ்வாறல்ல, போரின்பொருட்டே போரிடுபவன்” என்றபின் பெரிய பற்கள் தெரிய புன்னகைத்து “செல்க… களத்தில் காண்போம்” என்றான். “நான் உங்களிடம் பிறிதொன்றைச் சொல்ல வந்தேன்” என்றான் சுதசோமன். “ஆனால் உங்கள் உணர்ச்சியின்மை அதைச் சொல்லவேண்டாமென என்னைத் தடுக்கிறது.” கடோத்கஜன் “சொல்லாது சென்றால் எஞ்சாது எனில் சொல்லவேண்டியதில்லை” என்றான்.

அந்தக் கூற்றிலிருந்த கூர்மையை வியந்தபடி “ஆம், சொல்லாமல் சென்றால் அது பெருகும், மூத்தவரே” என்றான் சுதசோமன். பெருமூச்சுடன் அணுகிவந்து “நான் தங்களிடம் கோர வந்தது இதுவே. இந்தப் போரில் என் உடன்பிறந்தார் களம்படக்கூடும்” என்றான். “ஆம்” என்றான் கடோத்கஜன். “மூத்தவர்கள் பிரதிவிந்தியனும் யௌதேயனும் போர்வல்லவர்கள் அல்ல. களத்தில் அவர்கள் திகைத்து நின்றிருப்பதைக் காண நெஞ்சு பதைக்கிறது. சுருதசேனனும் சதானீகனும்கூட போர்தேராதவர்களாகவே தெரிகிறார்கள் இக்களத்தில். நானும் சர்வதனும் சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் மட்டுமே போர்க்கலைதேர்ந்தவர்கள். நாங்கள் போரிடுவதும் இறப்பதும் இயல்பு. அவர்கள் இறந்தால் அது வெறும் கொலை…”

“ஆம், அவ்வண்ணம் பலர் இங்குள்ளனர். தோள்வளராச் சிறுவர்கள்கூட இங்கே பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். நான் இதைக் கோருவது பெரும்பிழை. அரசமைந்தன் என நின்று இப்படி எண்ணுவதே அறமீறல். ஆயினும் உடன்பிறந்தான் என இதையே என் உள்ளம் சொல்லிக்கொண்டிருக்கிறது. மூத்தவரே, அவர்கள் காக்கப்படவேண்டும்” என்று சுதசோமன் தொடர்ந்தான். “அளிகூர்க. தாங்கள் அவர்களைக் காத்துநிற்கவேண்டும்…” கடோத்கஜன் பேச நாவெடுப்பதற்குள் சுதசோமன் சொன்னான் “நான் இதை எந்தையர் எவரிடமும் சொல்ல இயலாது. முதல் நாள் முதல் இளவரசன் களம்பட்டதுமே எங்களுக்கு எந்தத் தனிக்காவலும் கூடாதென்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.”

“நான் இங்கே எந்தைக்கு துணைபுரியவே வந்தேன்” என்றான் கடோத்கஜன். “எவருக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள என்னால் இயலாது.” சுதசோமன் தளர்ந்து “ஆம், நீங்கள் இவ்வாறுதான் சொல்வீர்கள் என எண்ணினேன்” என்றான். “வருகிறேன், மூத்தவரே” என நடக்க உடன்வந்த கடோத்கஜன் தணிந்த குரலில் “நான் இருக்கும்வரை…” என்றான். சுதசோமன் நின்றான். கடோத்கஜன் அவனைப் பார்க்காமல் மறுதிசை நோக்கி திரும்பியிருந்தான். “தாங்கள் இருக்கும் வரை எவரும் அவர்களை அணுகமுடியாது… அதுபோதும்” என்றபின் சுதசோமன் சென்று தன் புரவிமேல் ஏறிக்கொண்டான்.

bowகாவல்மாடத்தின் மேலிருந்து பாண்டவப் படை திரண்டுகொண்டிருப்பதை சுதசோமன் வெற்றுவிழிகளுடன் நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். ஒவ்வொருவரும் தங்களுக்கான இடத்தை நோக்கிச் செல்ல மிக விரைவாக படை நிரையமைந்தது. மணல்துகள்களும் கற்களும் தானாகவே எழுந்து இணைந்து கோட்டையென்றாவதுபோல. பின்னர் ஒவ்வொரு கணமும் உடைந்து சிதறிப்பரந்து மீண்டும் மணல்வெளியாக ஆகிவிடத் துடிப்பதுபோல ததும்பிக்கொண்டே இருந்தது. படை எனத் திரளாவிட்டால் இத்தனை பெரிய நிகழ்வை இம்மானுடர் எதிர்கொள்ள முடியுமா? படையில் ஒரு துளிமட்டுமே என உணராவிட்டால் இயல்பாக இதில் அமைய முடியுமா?

அவன் ஒவ்வொரு முகங்களையாகப் பார்க்க விழைந்தான். உறுதியும் களைப்பும் இணையாகக் கலந்திருந்த முகங்கள். ஒவ்வொருவரும் இரவில் நன்கு துயிலப் பழகிவிட்டிருந்தனர். ஆயினும் கனவுகள் அவர்களை அலைக்கழித்தன. அவர்களுக்கு மேல் இரவில் இறந்தவர்களின் போர் ஓயாது நிகழ்ந்துகொண்டிருந்தது. முன்னிரவிலேயே படுத்து காலையில் எழுந்தாலும்கூட அவர்கள் துயிலிழந்தவர்கள்போல் இமை தடித்து, முகம் வீங்கி, வாய் உலர்ந்து, சொல்லிழந்திருந்தனர். அங்கிருந்து நோக்கியபோது ஒட்டுமொத்தமாகவே படை அனைத்து ஊக்கத்தையும் இழந்து வெளிறிய உடலென உயிரின்மை தெரிய நின்றிருப்பதைக் காணமுடிந்தது. இறந்தவர்கள் உயிருள்ளவர்களை வதைக்கிறார்கள். இரவில் கனவென வந்து குருதி உறிஞ்சுகிறார்கள்.

சுதசோமன் பெருமூச்சுவிட்டான். அங்கே படைக்கெழுந்து வந்தபோதிருந்த உணர்வுகளை மிகமிக அகலே, கனவென நினைவுகூர இயன்றது. எதன்பொருட்டு பிறந்தோமோ, எதற்காக நாள்நாளென கணம் கணமென காத்திருந்தோமோ அதற்காக எழுந்துள்ளோம் என்ற உணர்வு. வெற்றி அல்லது வீரன் எனும் புகழ். கற்பனையில் மாவீரர்களான மூதாதையர் வந்துகொண்டிருந்தனர். பாரதவர்ஷத்தின் அவைகளில், இல்லத் திண்ணைகளில், கல்விநிலைகளில் அகல்விளக்கில் நெய்ச்சுடர் எரிய அவன் கதையை சூதர்கள் பாடுவதை அவன் கண்டான். அவன் பெயரெழுந்த காவியத்தின் வரிகளை விழிகூர்ந்தால் படித்துவிடமுடியுமெனத் தோன்றியது.

குருக்ஷேத்ரம் முதன்முதலாகக் கண்முன் விரிந்தபோது மெய்ப்பு கொண்டு சிலிர்த்து புரவிமேல் அமர்ந்துவிட்டான். பின்னர் உடலை உணர்ந்தபோது காமத்தின் தசையிறுக்கத்தை அறிந்து சூழ நோக்கினான். அத்தனை படைவீரர்களும் சொல்லிழந்து நின்றிருந்தனர். எங்கோ ஓசை ஒன்று எழுந்தது. மழை பெருகிவருவதுபோல் அனைவரையும் சூழ்ந்து மூடியது. “குருநிலம் சிவக்கட்டும்! குருதி அவியாகட்டும்! தேவர்கள் மகிழ்க! மூதாதையர் உவகை கொள்க! வெற்றிதேவியே, அணுகுக! இனியவளே, தூயவளே, சாவுத்தேவியே அணுகுக! வெற்றிவேல்! வீரவேல்!” அவனும் உடல் திறந்தெழும் பேரொலியுடன் கைகளைத் தூக்கி எக்களித்தான்.

வெற்றியும் சாவும் இணைச்சரடுகளென முயங்கியே எப்போதும் சொல்லப்பட்டுள்ளன. சாவு சாவு என்று சொல்லிச்சொல்லி சாவின் பொருளை மழுங்க வைத்திருக்கின்றனர். வெற்றி, தோல்வி, போர், களம் என அத்தனை சொற்களும் பொருள் மழுங்கிய பின்னரே படைக்கு எழமுடிகிறது. “வேல்களும் அம்புகளும் கூர்கொள்கின்றன, சொற்கள் மழுங்குகின்றன, போர் அணுகும்போது” என்றான் சுருதகீர்த்தி. எப்போதுமே கூரிய சொற்கள் கொண்டவன். “சென்றுபழகி மென்மையாகின்றன பாதைகள். சாவும் அவ்வாறே ஆகியிருக்கக்கூடும்.”

ஆனால் முதல்நாள் போருக்குப் பின் பாடிவீட்டுக்கு மீள்கையில் அவன் உள்ளம் ஏமாற்றம் கொண்டிருந்தது. இதுவா போர்? இவ்வண்ணமா அது நிகழும்? அனைத்தும் இத்தனை எளிதானதா? மீளமீளச் சொல் ஓடிக்கொண்டிருந்தது. அந்தியில் உடலை மென்மரவுரியால் ஏவலன் துடைத்துக்கொண்டிருக்கையில் அருகே அமர்ந்திருந்த சுருதகீர்த்தியிடம் “நாம் கற்றவற்றுக்கெல்லாம் போரில் எப்பொருளும் இல்லை போலும்!” என்றான். “போரில் கற்றுக்கொள்வனவற்றுக்கு மட்டுமே இங்கே பொருள்” என்றான் சுருதகீர்த்தி. “கற்றுக்கொள்வதற்கு முதலில் தேவை சாகாமலிருப்பது.”

சுதசோமன் “நான் இவ்வாறு எண்ணவில்லை” என்றான். “வேறு எவ்வாறு எண்ணினீர்கள்?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “இது வெறும் கொலை… அருங்கொலை” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி வெடித்துச் சிரித்தான். “என்ன சிரிப்பு?” என்றான் சுதசோமன் எரிச்சலுடன். அவன் மறுமொழி சொல்லவில்லை.

சுதசோமனை வலப்பக்கம் இருந்து குறுமுழவு அழைத்து ஆணையிட்டது. தனக்கான ஆணை என்பதை களம்பழகிய செவி அக்கணமே உணர்ந்துகொண்டது. “சுதசோமன் எழுக! முகக்களிற்றை சென்று காண்க!” முழவோசையையும் கொம்போசையையும் அது எவருடைய தனிக்குரலும் அல்ல என்பதனால் அது படையென எழுந்த பேருருவின் ஆணை என்று கொள்வதே அவன் வழக்கம். களிறொன்று பேசத் தொடங்கியதுபோல அது ஒலித்தது. ஆனால் புரவியில் ஏறும்போது மீண்டும் அது ஒலிக்கக் கேட்டபோது தந்தையின் முகம் நினைவிலெழ அகம் சிலிர்த்துக்கொண்டான்.

புரவியில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வாணை மீண்டும் எழுந்தது. அப்போது அது பீமனின் குரலாகவே இருந்தது. புரவி நாற்கால்தாளம் துள்ளி தொடர்ந்தொலிக்க பலகைச்சரடுமேல் விரைகையில் தன் உள்ளம் ஆவலும் உவகையும் கொண்டு துடிப்பதை அவன் உணர்ந்தான். பீமன் அரிதாகவே அவனுடன் பேசுவது வழக்கம். மகவுடன் பேசும் அன்னை யானையின் உள்ளிருந்து உள்ளேயே ஒலித்தோயும் மெல்லிய உறுமல்போல அது ஒலிக்கும். அவன் தன்னிடம் அவர் பேசிய ஒவ்வொரு சொற்களையும் உள்ளே மிக ஆழத்தில் அவன் வைத்திருந்த சிறு பொற்செப்பு ஒன்றில் இட்டு வைத்திருந்தான். அருமணிகள்போல. நீர்தொட்டால் முளைத்தெழும் மலர் விதைகள்போல.

நினைவறிந்த நாள் முதல் கிடைத்த தந்தையின் அனைத்து தொடுகைகளும் அவன் உடலில் நினைவென வாழ்ந்தன. எப்போதுமே விடைபெறுவதற்கு சற்று முன்பு இயல்பாக வேறெதன் பொருட்டோ என தந்தை அவனை தொட்டார். எதையாவது சுட்டிக்காட்ட விரும்புபவர்போல, எதையேனும் நினைவுறுத்துபவர்போல, வேறெவரிடமோ பேசிக்கொண்டிருக்கையில் அறியாது கைவந்து படிந்ததுபோல. வேழத்துதிக்கையின் எடையுள்ள அப்பெருங்கை தன்மீது படிகையில் அதன் எடையும் அழுத்தமுமே கூட அத்தனை மென்மையையும் எப்படி உணர்த்துகிறது என்பது என்றும் அவன் எண்ணி வியப்பது.

படைமுகப்பில் இறங்கி அங்கு முழுக் கவசங்களணிந்து பிறிதொருவரிடம் பேசிக்கொண்டிருந்த பீமனை அணுகினான். மிகத் தொலைவிலேயே அது தந்தை என்று தெரிந்தது. அவர் உடலில் ஒரு துளிகூட வெளியே தெரியவில்லை. பேருருவத்தால் என்றால் அவர் அளவுக்கே உருவம் கொண்ட பலர் அரக்கர் குடியிலிருந்து போருக்கெழுந்திருக்கிறார்கள். களிற்றுச்சூழ்கையில் முகப்பில் மத்தகம் எனவும் துதிக்கை எனவும் அமைக்கப்பட்டிருந்த வீரர்கள் அனைவருமே பேருருவர்கள். அவரது அசைவே அவரென காட்டியது. முகம்போல, குரல்போல, அவற்றினும் நுண்ணிதாக மானுடரை அடையாளப்படுத்துவது அசைவு. முகத்திலும் குரலிலும் எழுவதை விட உள்ளமெழுவது அசைவில்தான். உள்ளமென தன்னை நிறுத்தியிருப்பதன் கண்சூழ் தோற்றம்.

சுதசோமன் தலைவணங்கியபோது தலைக்கவசத்துடன் திரும்பிப் பார்த்த பீமன் கைதூக்கி “நீ மத்தகத்தின் செவியென அமைக” என்றான். “ஆணை” என்றான் சுதசோமன். “இப்போரில் நாம் உடைத்து உட்புகவிருக்கிறோம். செல்லும் தொலைவு முதன்மையானதல்ல. செல்லும் இடமெங்கும் முற்றழிவு நிகழவேண்டும். இப்போர் முடிகையில் அவர்கள் தங்கள் இழப்புகளை எண்ணி ஏங்கவேண்டும். புரிகிறதென்று எண்ணுகின்றேன்” என்றான் பீமன். “அவ்வாறே” என்று சுதசோமன் தலைவணங்கினான். “உன் இளையோன் மறுபுறச் செவியென நிலைகொள்கிறான். துதிக்கை என அவன்” என்று பீமன் சொன்னான்.

சுதசோமன் உள்ளம் பொறாமையால் பொங்கி பின் மெல்ல அமைந்தது. பெயர் சுட்ட நாணுமளவுக்கு தந்தையின் உள்ளத்தில் ஆழ்ந்த அன்பை விளைவித்திருக்கிறாரா கடோத்கஜன்? அவர் அரக்கர்குலத்தவர் என்பதனால் நாணுகிறார் என்று எண்ணவியலாது. அவ்வாறு நாணுபவர் அல்ல தந்தை. ஒருமுறைகூட கடோத்கஜனை நேர் நின்று அவர் நோக்கியதில்லை. அவரைக் குறித்து ஒரு சொல்லும் உரைத்ததில்லை. தன் அன்பின் எடை தாளாதவர்போல் அப்பேரன்பின் உலகப்பொருளை, அல்லது பொருளின்மையை எண்ணி நாணுபவர்போல அத்தனை பின்னகர்ந்து தனக்குள் அமர்ந்துகொள்கிறார்.

சுதசோமன் மீண்டும் அவரது ஆணைக்காக காத்துநின்றான். பீமன் “செல்க!” என்று கையசைத்து திரும்பி அருகே நின்ற பேருருவ அரக்கர் குலத்தோனிடம் “கவசங்களணிந்த யானைகள் ஆயிரம் முகப்பில் நின்றாகவேண்டும். நெடுந்தூண்கள் ஏந்திய ஐநூறு யானைகள் இருநிரையென நிற்கட்டும். அவை இக்களிற்றின் தந்தங்கள்” என்றான். அரக்கன் சுதசோமனை திரும்பிப்பார்த்துவிட்டு தலையசைத்தான். படைசூழ்கை முற்றிலும் வகுக்கப்பட்டுவிட்ட பின் எழும் அந்த ஆணை பொருளற்றது என்று சுதசோமன் புரிந்துகொண்டான். அவனை தவிர்க்கும்பொருட்டு பேசப்படுவது. தான் அவனிடம் படைசூழ்கை அன்றி எதையும் பேச விழையவில்லை என தந்தை காட்டுகிறார்.

மீண்டும் தலைவணங்கி அவன் திரும்பி நடந்தபோது அவ்வழைப்பும் ஆணையும் எதற்காக என்று எண்ணிக்கொண்டான். இறுதியாக தன்னை பார்க்க விழைகிறாரா என்று எண்ணியபோது அவன் உதடுகளில் புன்னகை விரிந்தது. சர்வதனையும் அவ்வாறு அழைத்து ஒரு சொல் பேசியிருக்கக்கூடும். அவர் தன்னை தொடவில்லை என்பதை அவன் அதன் பின்னர் எண்ணிக்கொண்டான். தொடவில்லை என்றால் தொடுவதைப்பற்றியே அவர் எண்ணியிருக்கக்கூடும். அவ்வாறு மிகையாக எண்ணியமையாலேயே அதை இயற்றமுடியாமலாகும் அச்செயல் மேலும் மேலும் உணர்வுகள் செறிந்து எடை மிகுந்து உள்ளத்தால் அசைக்கவொண்ணாததாக மாறும். சுதசோமன் தன் படைப்பிரிவுக்கு திரும்பி வரும் வரை புன்னகைத்துக்கொண்டே இருந்தான்.

சுதசோமன் படைமுகப்பில் வந்து நின்று அருகே நின்ற ஏவலனிடம் “அனைத்தும் ஒருங்கிவிட்டனவா?” என்றான். மதங்க குலத்தை சேர்ந்த கூர்மிகன் எனும் பேருருவ கதைவீரன் அவன். “ஆம் இளவரசே, நமது களிறுகள் பொறுமையிழக்கத் தொடங்கிவிட்டன” என்று அவன் சொன்னான். புன்னகையுடன் கிழக்கை சுட்டிக்காட்டினான் சுதசோமன். பொறுமையிழப்பின் ஓசைகள் படைகளிலிருந்து வந்தன. யானைச்சங்கிலிகளின் குலுக்கம். புரவிகளின் செருக்கடிப்பு. வாழக்கிடைக்கும் இறுதிக்கணமாக இருக்கக்கூடும் இது. இதில் ஏன் திளைக்காமலிருக்கிறார்கள்? ஏனென்றால் உள்ளம் ஏற்கெனவே போரிலிறங்கிவிட்டது. உடல் தங்கி நின்றிருக்கிறது. உள்ளம் உடலை இழுக்கிறது.

முதல்முறையாக சுதசோமன் தன் உடலெங்கும் ஒரு பதற்றத்தை உணர்ந்தான். அது அவன் ஈடுபடும் நான்காம்நாள் போர். இம்மூன்று நாட்களிலும் ஒவ்வொரு கணமுமென அவன் களம்நின்று கதையும் வில்லும் ஏந்தி போராடி இருக்கிறான். மும்முறை லட்சுமணனிடமும், நான்கு முறை துருமசேனனிடமும், கௌரவ மைந்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டோரிடமும் நிகர்சமர் புரிந்திருந்தான். கௌதம குலத்து சுஷ்மிதன், ஊஷ்மளன், மதங்கசேனன் ஆகியோரையும், மாளவத்து இளவரசர்கள் அசீதன், அஸ்மாதன், அப்ரமாதன் ஆகியோரையும் தலை சிதற அடித்து கொன்றான். அவந்தியின் புஷ்கரனையும், புஷ்பதந்தனையும், புஷ்பமித்திரனையும் கொன்றான். ஆனால் ஒரு படைசூழ்கையில் முகப்பில் அவன் நிற்க நேர்ந்தது அதுவே முதல் முறை.

அவன் தந்தை தன் தோளில் தொட்ட இடத்தின்மேல் கைவைத்தான். அதன் பின்னரே அவர் தன்னைத் தொடவில்லை என நினைவுகூர்ந்தான். முதல்கணத் திகைப்புக்குப் பின் அவனுக்கு புன்னகையே மீண்டும் எழுந்தது. அவர் தொட எண்ணிய இடமா அது? உள்ளத்தால் விழிகளால் நூறுமுறை தொட்டிருப்பாரா? போர்முரசு எழுவதை அவன் அக்கணம் உயிர்பிரியும் கணத்தின் துடிப்புபோல் உணர்ந்தான். களம்புகுந்து கதைசுழற்றி வென்று செல்லவேண்டும். “சுதசோமன்! சுதசோமன்!” என எழும் குரல்கள் மெல்ல ஓய்ந்து “இளைய பைமி! இளைய பைமி!” என ஒலிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் மெய்ப்புகொண்டபடி விழிநீர் நிறைந்த கண்களுடன் அவன் காத்து நின்றிருந்தான்.

வெண்முரசின் கட்டமைப்பு

தொடர்புடைய பதிவுகள்


சிலுவைராஜ் சரித்திரம் பற்றி

$
0
0

13680734_107015609737013_1372278891558513257_n

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

மதத்தின் போதாமையைக் கண்டு அதனை விட்டுவிட்டவர்களின் உள்ளம் மீண்டும் எதையும் எழுதுவதற்கு தயாரான தூய பலகையைப் போல் ஆகிவிடுகின்றது. சிலுவைக்கு மேலதிகமாக எப்படி போனாலும் அவனது சாதியின் அடையாளம் விடாமல் தொக்கி நிற்கிறது. தொமினிக் சாவியோவின் மீது மிகுந்த பக்தி கொண்டு விரதங்களை கடுமையாக அனுசரிக்கும் சிலுவை தனக்கு விருப்பமான விளையாட்டைக் கூட துறக்கிறான். மதரீதியாக ஒருவன் போய்விடும் போது அதுவும் பதின்ம வயதில் அதன் எல்லைக்கே போய்விடுகிறார்கள். துணுக்குறும் சப் வார்டன் ஃபாதர் சிலுவையின் தீவிரத்தை உடைக்க எண்ணுகிறார் அவனை கிரவுண்டிற்கு இட்டுச் சென்று மீண்டும் விளையாட்டில் ஈடுபட வைக்கிறார். சிலுவைக்கு இதெல்லாம் சாத்தானின் வேலையாகவே தெரிகிறது. ஒரு மரபார்ந்த மனம் அதற்கு நேர் எதிர் திசையில் பாயும் ஒரு தருணம் தனிமையில் இருந்து ஸ்டேடியம் நோக்கி சிலுவைப் போவது. இது மிகுந்த அங்கதத்துடன் கூறப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கையில் ஏழு எழுபது சாத்தான்களை எதிர்த்து சிலுவை ஒத்தயில் என்ன செய்ய முடியும் காகம் மீன் அணில் இலை எல்லாம் அதனதன் இஷ்டம் போல் இருக்கையில் தன் சுய இருப்பின் அபத்தத்தை உணர்கிறான் சிலுவை.

அப்போது எழுந்து வரும் திராவிட இயக்கத்தின் மீது பற்று இருந்தாலும் தன் கிராமத்தில் நடக்கும் சாதிக் கலவரம் காரணமாக அந்த நம்பிக்கை தளர்வதும் எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கையாக கம்யூனிசம் நோக்கிப் போகிறான் சிலுவை.
தண்டிக்கும் தந்தைக் கடவுளையும் சொந்த தந்தையையும் ஒன்றே போல் வெறுக்கும் சிலுவை அதன் உச்சமாக வேலையில்லா போது கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்கு போய் வந்ததற்காக வீட்டிலிருந்து விரட்டப்படுகிறான். அடியாத மாடு படியாது என்பது தான் தந்தையின் குணம். ஆனால் இந்த சாதாரண மன நிலைக்கும் அப்பால் ஒரு மூர்கத்தனம் அவரிடம் தெளிவாகவே வெளிப்படுகிறது. வேலையில்லாதவனாக எதற்கும் உதவாதவனாக கைவிடப்பட்டவனாக கடவுள் மத நம்பிக்கையும் அற்றவனாக திரிகிறான் சிலுவை . பலருக்கும் இதில் ஒரு சில அனுபவங்களோ அல்லது மொத்தமாகவோ கூட இருக்கும் ஆனால் சிலுவை வேறுபடுவது அவன் சாதி சார்ந்த சுமையினாலும் இது ஒரு கூரிய முள் போல் தைத்துக் கொண்டே இருக்கிறது. குருசாமி டெய்லருடன் சக்கிலியர் வீட்டில் சாப்பிட போகும் காட்சி மேட்டுக்குடி சாதிய மனப்பான்மை கொண்டவர்கள் கூனிக் குறுக வேண்டிய ஒரு தருணம். குருசாமி டெய்லர் மாதிரி பிள்ளைமார் சாதிக்காரர் சக்கிலியர் போல் இருப்பது அவருக்கு புரட்சி மாதிரி தெரியலாம் ஆனால் சிலுவை அப்படி இருந்தால் அது அவனது இயற்கை என்றுதானே நினைப்பார்கள் அத்தகைய புரட்சியும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம் என்று நினைக்கிறான் சிலுவை.

நாவலில் வரும் பல பாத்திரங்களில் தற்போது அருகிவிட்ட உயிரினங்களான புரட்சிக்குமார் போன்றோர் முக்கியமானவர்கள். இந்த பெயரே   சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு குறுநகையுடன் தான் புரட்சிக்குமார் பற்றி படிக்க முடிகிறது. நாவலில் நம்மை மிகவும் ஆசுவாசப்படுத்தும் பகுதிகள் இவை.

சிலுவையின் தாய் தந்தை நம் பெற்றோரையும் நம்மில் பலரையுமே பிரதிபலிக்கிறார்கள். குறிப்பாகச் சொன்னால் குழந்தைகள் மீதான இந்திய மனதின் மனோபாவத்தை வன்முறையை. நாம் குழந்தைகளை நம் உடைமைகளாக மட்டுமே கருதுகிறோம் அன்பிற்கும் உடைமை மனப்பான்மைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் அல்லது தெரிந்தாலும் அப்படி இருக்கவே விரும்புகிறோம். சிலுவையை தூக்கி அடித்து உதைப்பது என்பது ஒரு வேண்டா பொருளை கடும் வெறுப்புடன் தூக்கி எறிவது போன்றது தானே.

// ம்‌… மார்க்சியத்தப்‌ படிச்சு எதையும்‌ சர்வ நிச்சயமா எதிர்கொள்ள
முடியும்னு நெனச்சோம்‌. அது எவ்வளவு பெரிய தப்புனு இப்பத்தாஞ்‌
தெரிஞ்சுகிட்டேன்‌. இல்ல. எங்கேயோ கோளாறு இருக்கு. எங்கன்னு
தெரியல. எல்லாத்தையும்‌ அறிஞ்சா மட்டும்‌ போதாது. மனுசங்க
அன்றாடம்‌ வாழ்கிற சாதாரணமான வாழ்க்கையில சந்திக்கிற
விவகாரங்கள்‌, உறவுகள்‌ , நம்பிக்கைகள்‌, உணர்ச்சிகள்பற்றி நம்மால
ஒரு நிச்சயத்துக்கு வரமுடியல. வெளியுலகத்தப்‌ புரிஞ்சுக்கிற மாதிரி
உள்‌ உலகத்தப்‌ புரிஞ்சுக்கிற முடியல. அதுல ஒரு தெளிவில்ல.
அறிவ வச்சு, வெறும்‌ தர்க்கத்த வச்சு மட்டும்‌ சரியா வாழ முடியும்னு
தோணல. நமக்குக்‌ கடவுள்‌ நம்பிக்கை கெடையாது. இருந்திருந்தா
அத்திகர்கள்‌ மாதிரி பாரத்த கடவுள்கிட்டப்‌ போடலாம்‌. கடவுள்‌
செத்துப்‌ போச்சுன்னு மேற்க ஒருத்தன்‌ சொல்லிட்டுப்‌ போய்ட்டாம்‌.
அந்த எடம்‌ காலியாவேயிருக்கு. அதப்பத்திப்‌ பழக்கப்பட்டுப்போன
நம்ம மனசும்‌ காலியாவேயிருக்கு. அந்த எடத்துல எத வைக்கிறது?
எப்பிடி மனம்‌ சம்பந்தப்பட்ட சிக்கல்களச்‌ சரிபண்றதுன்னு புரியல:
ஒன்னால அது முடியல… தற்கொலதாந்‌ தீர்வுன்னு நெனச்சுடட-
எனக்கு ஒண்ணும்‌ சொல்லத்‌ தெரியல. ஏதோ தத்துவம்‌ அது இதுனு
பேசுறோம்‌…” இப்பிடி என்னமோ சொல்லிக்கிட்டே வந்தவரு
அப்றம்‌ மெளனமாகிவிட்டார்‌. அவருக்குள்ளேயே இப்ப அநேகமா ர்‌்
தர்க்கம்‌ பண்ணிக்இட்டிருப்பார்‌. //

இருத்தலியல் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் எந்த ஒரு சித்தாந்தமும் தீர்க்காது என்னும் புரிதலை சிலுவை கண்டடையும் புள்ளி இது. கடும் தன்னிரக்கம் கொண்டு அவன் அழுது ஓய்ந்த நிலையில் அவனுக்கு பெங்களூரில் அடைக்கலம் தரும் பாட்டாளி வர்க்க புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காணும் பல்லாயிரத்தில் ஒருவரான சார்லஸ் உதவ முடியா ஒரு கையறு நிலையில் சிலுவையிடம் கூறுகிறார். சற்றும் எதிர்பாராத ஒரு உச்சத்திற்கு எடுத்துச் சென்று நாவலை முடிக்கிறார்… அந்த நிகழ்வை முடிந்தவரை கலாய்க்கிறார். ஐஞ்சு ரூபா பணம் கட்டி ஸ்ரீலஸ்ரீ யின் ஆராய்ச்சி முடிவின்படி ஏசுவை நிராகரித்து சைவ சமயத்தை தழுவுகிறான்.. இறுதியில் அந்த கடும் உளநிலையில் எஞ்சி நிற்பது பிழைப்புக்கான போராட்டம் மட்டும் தான். நான் மிக அணுக்கமாக உணர்ந்த நாவல்களில் ஒன்று இது

சிவக்குமார்

சென்னை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா

$
0
0

download (2)

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா

 

2004 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்னும் பெயரில் ஆட்சியமைத்தன. 1991 ஆம் ஆண்டு, நரசிம்மராவ் ஆட்சியில், பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் துவங்கி வைத்து, நிதியமைச்சராகவும், வர்த்தக அமைச்சராகவும் இருந்த மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், முறையே பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பதவியேற்றனர். இதே கூட்டணி, மீண்டும், 2009 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து பத்தாண்டுகள் (2004-2014), ஆட்சி நடத்தியது.  தங்கள் ஆட்சியை வழிநடத்த, கூட்டணிக் கட்சிகள் இணைந்து,  குறைந்தபட்சச் செயல் திட்டம் ஒன்றை வகுத்தார்கள்.

 

 

குறைந்தபட்சச் செயல்திட்டம்: (Common Minimum Program)

 

 

இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்:

 

 

  • சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் அடிப்படைவாத மற்றும் பிற்போக்குவாத சக்திகளுக்கு இடம் தராமல், சமூக நல்லிணக்கத்தைப் பேணுவது.

 

 

  • குறைந்த பட்சம் ஒரு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்னும் வகையில் பொருளாதார வளர்ச்சியை (7-8%) உருவாக்குவது.

 

 

  • உழவர்கள், தொழிலாளர்கள் (குறிப்பாக, முறைசாரா அமைப்புகளில் பணியாற்றுபவர்கள்) நலன்களை மேம்படுத்தி, அவர்கள் எதிர்காலத்தை பாதுகாப்பது

 

 

  • கல்வி, அரசியல், பொருளாதார சட்டத் தளங்களில், மகளிருக்கு அதிக அதிகாரம் அளிப்பது

 

 

  • பட்டியலினம், பட்டியலினப் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு, சமூகத்தில் சமத்துவப் பங்களிப்பை உறுதி செய்வது.

 

 

  • தொழில் முனைவோர், வணிகர், விஞ்ஞானிகள், பொறியியலர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் அனைவரையும் ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்குவித்தல்.

 

 

இந்த நோக்கங்களை நிறைவேற்றும் செயல்திட்டங்கள், 2004 ஆம் ஆண்டில், ஐ.மு கூட்டணியின் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.

 

இந்த குறைந்த பட்ச செயல்திட்டத்தை நிறைவேற்ற பிரதமருக்கு உதவியாக தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) ஒன்று அமைக்கப்பட்டது.  இதில் திட்டக் கமிஷன் உறுப்பினர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், வேளாண் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சூழியல் அறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட அறிஞர்கள் பங்குபெற்றார்கள். இந்தக் குழுவின் மிக முக்கியமான சாதனைகள் – மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புச் சட்டம், தகவலறியும் சட்டம், அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் முதலியன ஆகும்.

 

பாரத் நிர்மாண்:

 

 

தில்லியின் அதிகாரத் தாழ்வாரங்களில், “பாரத்” என்பது ஊரக இந்தியாவைக் குறிக்கும்.  வெற்றி பெற்றதும், பிரதமர் மன்மோகன் சிங், இந்த ஆட்சி, உழவர்களுக்கு, ஊரக இந்தியாவிற்கு ஒரு புதிய திட்டத்தைக் (New Deal) கொண்டுவரும் எனக் கூறியிருந்தார். அதன் படி, அரசுத் திட்டங்களில், உழவு, மக்கள் நலன் போன்றவற்றில் அதிக முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

பாரத் நிர்மான் என்னும் இந்தத் திட்டம், ஊரகக் கட்டமைப்பில், ஏற்கனவே இருந்த திட்டங்களை ஒன்றிணைத்து, முதலீட்டை அதிகம் செலுத்தி, விரைவில் மக்களுக்கு அதன் பலன்கள் சென்று சேர வழிவகுப்பதாகும்.

 

 

  • துரித நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டம்: 1996-97 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த்த் திட்டத்தை, மேலும் துரிதப்படுத்தி,  1 கோடி ஹெக்டர் நிலத்திற்கான பாசன வசதித் திட்டங்களில் ஐந்தாண்டுகளில் முதலீடு செய்து, உற்பத்தியைப் பெருக்குவது. 2004-5 ஆண்டிலிருந்து கூடுதலாக, 25% மத்திய அரசின் நிதி உதவி சேர்க்கப்பட்டது.

 

 

  • கிராமப்புறச் சாலைகள்: வாஜ்பேயி காலத்தில் துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தைத் துரிதமாக முடித்தல். 2004 துவக்கத்தில், 51511 கிலோ மீட்டர்களாக இருந்த இந்தக் கட்டமைப்பு, 10 ஆண்டுகளில், 3.89 லட்சம் கிலோ மீட்டர்களாக உயர்ந்தது.

 

 

  • இந்திரா ஊரக வீடுகள் திட்டம்: ஏழை மக்களுக்கான, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கட்டும் திட்டம். முதல் ஐந்தாண்டுகளில், 71 லட்சம் வீடுகளும், அடுத்த ஐந்தாண்டுகளில் 1.2 கோடி வீடுகளும் கட்டப்பட்டன. 2004 ஆம் ஆண்டு துவக்கத்தில் 2500 கோடி அளவில் இருந்த முதலீடு, 2014 ஆம் ஆண்டு 10000 கோடியாக உயர்ந்தது.

 

 

  • கிராமப்புறக் குடிநீர்த் திட்டம்: 74000 கிராமங்களுக்கு, பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டம்.

 

 

  • கிராமப்புற மின்சார இணைப்பு வழங்கும் திட்டம்: 25 லட்சம் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்.  இதில் கிட்டத்தட்ட  0.95 லட்சம் கிராமங்கள் 2014 ஆண்டு வரை மின் இணைப்புப் பெற்றுள்ளன.

 

 

  • கிராமப்புறத் தொலைபேசி இணைப்பு: 67 ஆயிரம் கிராமங்களுக்குத் தொலைபேசி இணைப்பு.

 

 

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்:

 

 

2005 ஆண்டு இந்தத் திட்டம், வருடத்துக்கு 100 நாட்கள் ஊரக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை ஒரு சட்ட பூர்வமான உரிமையாக்க, உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்:

 

 

  • இது கிராமப் பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றப்படவேண்டும்.

 

 

  • கட்டமைப்புகளை (ஏரி, குளம், கிணறு, மழை நீர் சேகரிப்பு போன்றவை) உருவாக்க இது பயன்படுத்தப் படவேண்டும்.

 

 

  • தனியார் ஒப்பந்ததாரர்கள் (காண்ட்ராக்டர்கள்) இதில் ஈடுபடுத்தப்பட மட்டார்கள்

 

 

  • குறைந்தது 30% வேலைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

 

 

  • 33% வேலைகள் தாழ்த்தப்பட்டவர்கள் / பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்

 

 

  • ஆண்/பெண் இருவருக்கும் ஒரே அளவு ஊதியம்.

 

 

2012 ஆம் ஆண்டு. இத்திட்டத்தை மீள் ஆய்வு செய்த, ஊரக முன்னேற்றத் துறை அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்து கொண்ட முக்கியச் சாதனைகள் பின்வருமாறு:

 

 

  • 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை, 1.10 லட்சம் கோடி நிதி, இத்திட்டத்திற்குச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 1200 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக வருடம் 5 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள்.

 

 

  • 80% பயனாளிகள் வங்கிக் (தபால் அலுவலகக்) கணக்கு மூலம் கூலி பெற்றிருக்கிறார்கள்.

 

 

  • இதில் 51% தாழ்த்தப்பட்ட/பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். 47% பெண்கள். (கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 70% க்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்றார்கள்)

 

 

  • 46 கோடி சிறு கட்டமைப்பு வேலைகள் துவங்கப்பட்டு, அவற்றுள் 60% முடிக்கப்பட்டு விட்டன.

 

 

  • 2011 ஆம் ஆண்டிலிருந்து, தகவல்கள் தினமும் திரட்டுப்பட்டு அமைச்சக வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

 

 

இந்தத் திட்ட உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர்கள் இருவர். ஜீன் ட்ரீஸ் (Jean Dreaze) என்னும் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர். இன்னொருவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும்,  மஜ்தூர் கிஸான் சக்தி சங்கடன் (MKSS) என்னும் மக்கள் நல இயக்கத்தை உருவாக்கியவருமான அருணா ராய்.

 

 

இது, 7-17% ஊரக ஏழைமக்களின் வருவாயை அதிகரித்திருக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இந்த கூடுதல் வருவாய், பெரும்பாலும் உணவுக்கு (50%), செலவிடப்படுகிறது. அதன் பின் உடை, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு உதவுகின்றன.  இன்னொரு மிக முக்கியமான விளைவாக, ஊரக வேளாண் கூலிகள் உயர்ந்தன.  1999-2005 ஆண்டுகளில், சராசரியாக வருடம், 2.7% உயர்ந்த வேளாண் கூலி, 2006-2009 ஆண்டுகளில், சராசரியாக 9.7% ஆக உயர்ந்தது.

vajpayee-PVN

வேளாண் பொருளாதார உதவித் திட்டங்கள்:

 

 

  • வேளாண்மைக்கான வங்கி நிதி உதவி 2003-4 ஆம் ஆண்டு 87000 கோடியாக இருந்த்து. இது, 2014-15 ஆம் ஆண்டு 8 லட்சம் கோடியாக உயர்ந்தது.

 

 

  • தேசிய தோட்டக்கலைத் துறைக்கான திட்டங்கள் (National Horticulture Mission)மற்றும் நிதி உதவிகள், 2004-5 ஆண்டு, 184 மில்லியன் ஹெக்டர் நிலப் பரப்பில் இருந்து, 2014-15 234 மில்லியன் ஹெக்டராக உயர்ந்தது. அதேபோல், உற்பத்தி, 166 மில்லியன் டன்னில் இருந்து, 281 மில்லியன் டன்னாக உயர்ந்தது. உற்பத்தித் திறன் 0.9 டன்னில் இருந்து 1.2 டன்னாக உயர்ந்தது.

 

 

  • உணவு உற்பத்திக்கான நில அளவு குறைந்தும், உணவு உற்பத்தி, 2003-4 ஆம் ஆண்டில் 213 மில்லியன் டன்னில் இருந்து, 2013-14 ஆம் ஆண்டு 255 மில்லியன் டன்னாக உயர்ந்தது.

 

 

  • உற்பத்திக்குச் சரியான ஆதரவு விலை (minimum support price) – எடுத்துக்காட்டாக, நெல்லுக்கு 2003-4 ல் குவிண்டாலுக்கு 550 ஆக இருந்த ஆதரவு விலை, 2008-9 ல் 900 ஆக உயர்த்தப்பட்டது. கோதுமைக்கு அதே போல், 630 லிருந்து, 1080 ஆக உயர்த்தப்பட்டது.

 

 

  • வேளாண் பொருளாதாரம், முதல் ஐந்தாண்டுகளில் 3.7% மும், அடுத்த ஐந்தாண்டுகளில் 4% மும் உயர்ந்தது.

 

 

இந்த அணுகுமுறையின் பத்தாண்டுகளில், ஊரக வறுமை வேகமாகக் குறைந்தது. 14 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்தார்கள்.

 

 

கல்வி மற்றும் சுகாதாரம்:

 

  • கல்விக்கான ஒதுக்கீடு, 10,145 கோடியில் இருந்து (2003-04), 79451 கோடியாக (2103-14) உயர்ந்தது.

 

 

  • உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு உயர்ந்தது. 15 மத்திய பல்கலைக் கழகங்கள், 8 இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institute of Technology) துவங்கப்பட்டன.

 

 

  • இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science) போல் அடிப்படை அறிவியல் கல்விக்கான, 5 புதிய இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன (Indian Institute of Science Education and Research (IISER)).

 

 

  • 6 புதிய இந்திய மேலாண் கழகங்கள் அமைக்கப்பட்டன.

 

 

  • 6 அகில இந்திய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

 

  • 2004 ஆம் ஆண்டு 4500 கோடியாக இருந்த கல்விக்கடன், (3.2 லட்சம் பயனாளிகள்), 2014 ஆம் ஆண்டு, 75000 கோடியாக உயர்ந்தது (30 லட்சம் பயனாளிகள்). (கேரளம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே நாட்டில் வழங்கப்பட்ட கடன்களில் 40% வாங்கியுள்ளன).

 

 

  • பொதுச்சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு, 2004 ல், 7248 கோடியில் இருந்து, 2014 ஆம் ஆண்டு, 36332 கோடியாக உயர்ந்தது.

 

நிர்வாக மற்றும் சமூகச் சீர்திருத்தச் சட்டங்கள்:

 

 

தகவலறியும் சட்டம்: (Right to Information Act)

 

 

1994 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில், அருணா ராய் தலைமையிலான மஜ்தூர் கிஸான் சக்தி சங்கடன் (உழைப்பாளர், உழவர் சக்தி), தகவலறியும் சட்டம் வேண்டும் என்பதை, மக்கள் போராட்டமாகத் துவங்கியது. இது ஊரக அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம்.

 

இந்தச் சட்டம் முதன்முதலாக, தமிழகத்தில் 1997 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் மற்ற மாநிலங்களில் வந்தது. இறுதியாக, இந்த ஆட்சியில், 2005 ஆம் ஆண்டு, இந்தச் சட்டம் மத்திய அரசிலும், நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது, அரசின் திட்டங்களை, அதற்கு ஆகும் செலவினங்களை, குடிமகன் அறிந்து கொள்ள உதவும்.

 

லோக்பால் சட்டம்:

 

இதன் சட்ட வரைவு, 2010 ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த வரைவை எதிர்த்து, அன்னா ஹசாரே தலைமையில், ஒரு பெரும் மக்களியக்கம் துவங்கியது. பின்னர், அரசின் சட்ட வரைவு, மக்களியக்கத்தின் பங்களிப்போடு மாற்றப்பட்டு, 2013 ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேறியது.

 

மத்திய அரசில், லோக்பால் எனவும், மாநில அரசில் லோக் ஆயுக்தா எனவும் அழைக்கப்படும் இந்த வடிவம், தேர்தல் கமிஷன் போல, அரசியல் சாசனத்தின் ஒரு அங்கமாக, அரசின் தலையீடுகள் இன்றி இயங்க வேண்டும். இதற்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையும் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஊழல்வாதிகளுக்குத் தண்டணை, ஊழலால் பாதிக்கப்படும் குடிமகன்களுக்கு நிவாரணம், ஊழல்களை வெளிக்கொணரும் குடிமகன்களுக்குப் (whistle Blowers) பாதுகாப்பு போன்றவை இதன் முக்கிய அம்சங்களாகும். இது இன்னும் மத்திய அரசிலும், பெரும்பாலான மாநில அரசுகளிலும் நடைமுறையில் இல்லை.

 

கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act):

 

இது, 2009 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டாய இலவசக் கல்வி என்பதும், தனியார் பள்ளிகள், 25% இடங்களை, இதற்காக ஒதுக்க வேண்டும் என்பதும் இதன் முக்கிய அம்சங்களாகும்.  இது நடைமுறையில் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது

 

நிலக் கொள்முதலில், வெளிப்படைத்தன்மை, சரியான விலை மற்றும் நிவாரணச் சட்டம் (Right to transparency, fairprice, relief and rehabilitation act)

 

அரசு திட்டங்களுக்காக, மக்களிடம் இருந்து நிலம் கொள்முதல் செய்யும் போது, அதன் தகவல்கள் வெளிப்படையாக இருப்பதில்லை. சரியான விலை கிடைப்பதில்லை. கொடுக்கப்படும் விலை, மக்களுக்கு உடனடியாகக் கிடைப்பதில்லை. மக்களுக்கான மறுவாழ்வு சரியான முறையில் அமைவதில்லை. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்தச் சட்டம் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், இன்று, இது நடைமுறையில் இல்லை

 

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்: (National Food security Act).

 

இது 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட்து. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும், மதிய சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றை, மக்களுக்கு சட்ட பூர்வமான உரிமையாக மாற்றியது இந்தச் சட்டம்.

 

தொழில்துறை:

 

தில்லி மும்பை தொழிற் தாழ்வாரம் (Delhi Mumbai Industrial Corridor – DMIC)

 

இந்தியத் தலைநகர் தில்லிக்கும், நிதித்தலைநகர் மும்பைக்கும் இடையே பெரும் தொழிற் கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டம். இவ்வழியில், 24 தொழிற்பிராந்தியங்கள், 8 நவீன நகரங்கள் (smart cities), 2 பன்னாட்டு விமான நிலையங்கள், 5 பெரும் மின் திட்டங்கள், 2 மெட்ரோ ரயில் திட்டங்கள், 2 போக்குவரத்து முனையங்கள் ஏற்படுத்தப்படும்.  இவையனைத்தும், தில்லி-மும்பை வழியில், இதற்கெனவே தனியாக அமைக்கப்படும் சரக்கு ரயில் (dedicated freight corridor) வழி (1504 கிலோமீட்டர்) மூலம், மும்பை துறைமுகத்துடன் இணைக்கப்படும். 7லட்சம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்தத் திட்டம் நிறைவேறுகையில், உலகின் மிகப் பெரும் தொழிற்கட்டமைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

 

இந்த்த் திட்டத்தினால், இந்தப் பிராந்தியத்தின் தொழில் உற்பத்தி மூன்று மடங்கும், ஏற்றுமதி நான்கு மடங்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவர்.

 

இந்தத் திட்டத்தினால் ராஜஸ்தான், குஜராத், மஹராஷ்ட்ரா மாநிலங்கள் பெரும்பயன் அடையும்.

 

கட்டமைப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள்:

 

  • மின் உற்பத்திக் கொள்திறன், 112700 மெகாவாட்டில் இருந்து (2004-5), 234600 மெகாவாட்டாக உயர்ந்த்து (2014-15).

 

 

  • நிலக்கரி உற்பத்தி 361 மில்லியன் டன்னில் (2004-5), 554 மில்லியன் டன்னாக உயர்ந்தது.

 

 

  • 1956 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டங்கள் சீர்திருத்தப்பட்டன.

 

 

இத்துடன், வாஜ்பேயி காலத்தில் துவங்கப் பட்ட தங்க நாற்கரம், 4 வழிப்பாதையில் இருந்து 6 வழியாக மாற்றப்பட்டது. தொலைபேசி, மருந்து உற்பத்தி, வான் வழித் தொழில், மின் உற்பத்தி மற்றும் வணிகம், சில்லறை வணிகம் போன்ற துறைகளில், அன்னிய முதலீட்டுக் கொள்கைகள் தளர்த்தப்பட்டன.

 

 

சிறு/குறு தொழில்களுக்கான வங்கி நிதி உதவி, 2004 ஆம் ஆண்டு, 83500 கோடியில் இருந்து, 2014 ஆம் ஆண்டு 5.27 லட்சம் கோடியாக உயர்ந்தது.

photofeature17_121616101809

 

2008 அமெரிக்க நிதிச்சிக்கலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும்:

 

 

2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவை பெரும் நிதிச் சிக்கல் உலுக்கியது. லெஹ்மான் ப்ரதர்ஸ் என்னும் பெரும் நிதி நிறுவனம் துவங்கி பல நிறுவனங்கள் திவாலாகின. இதன் விளைவாக, ஐரோப்பிய நாடுகளிலும் நிதி நெருக்கடி உருவாகி, சில ஆண்டுகளில், உலகப் பொருளாதார வளர்ச்சி குறையத் துவங்கியது.

 

இதே சமயத்தில், உலக எரிபொருள் விலைகளும் தாறுமாறாக ஏறத் துவங்கின. கச்சா எண்ணெய் பீப்பாய் 140 டாலருக்கும் அதிகமானது. 200 டாலரைத் தொடும் என வதந்திகள் பரவ, உலக ஏற்றுமதிச் சந்தை வீழ்ந்தது.

 

1990 களுக்கு முன்பு, பாரதம் எரிபொருளுக்கு மட்டும் தான் உலகோடு அதிகம் தொடர்பு வைத்திருந்த்து. ஆனால், 2008ல் அப்படியல்ல. பொருளாதாரத்தில் 35% வெளிநாட்டு வணிகம் (ஏற்றுமதி+இறக்குமதி). இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையும் என உணர்ந்த, இந்திய அரசு, பல பொருளாதாரக் கொள்கை ஊக்கிகளை அறிவித்தது. முக்கியமான துறைகளில் கலால் வரிகள் 50% குறைக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் அதிகம் துறை பொதுத்துறைத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கி, தனது நிதிக் கொள்கைகளைத் தளர்த்தி, சந்தையில் அதிக நிதி இருக்கும்படிப் பார்த்துக் கொண்டது.

 

2008-9 ல், 6.72% ஆகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி, 2009-10 ல், 8.59% ஆக மீண்டது. ஆனால், 2009-10 துவங்கி உலகப் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க நிதிச் சிக்கல்களில் இருந்து மீள முடியாமல்,  மீண்டும் குறைய, இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.

 

இறுதியாக..

 

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டுகளில், (2004-9), பொருளாதார வளர்ச்சி 8.4% ஆக இருந்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் (2009-14) 6.8% ஆகக் குறைந்தது.

 

மொத்தத்தில், 2004-2014 என்னும் பத்தாண்டுகளில், இந்தியப் பொருளாதாரத்தின், சராசரி வளர்ச்சி, 7.7% ஆகும்.

 

2004 ஆம் ஆண்டு 32 லட்சம் கோடியாக இருந்த இந்தியப் பொருளாதாரம், 2014 ஆம் ஆண்டு, 100 லட்சம் கோடியாக உயர்ந்தது.  இந்தக் காலகட்டத்தில், தனி நபர் வருமானம் சராசரியாக வருடம் 20% உயர்ந்தது.

 

பத்தாண்டுகளில், 14 கோடிக்கும் அதிகமான மக்கள், வறுமைக் கோட்டிற்கு மேலே வந்தார்கள்.  சுதந்திர இந்தியாவில், மிக அதிகமாக வறுமை குறைந்த காலகட்டம் இதுதான்.

 

2004 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகள், நவீன இந்தியப்பொருளாதார வரலாற்றில், மிக அதிகமான சராசரி வளர்ச்சிக்காலம்.

 

Reference:

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குடும்பத்தில் இருந்து விடுமுறை

$
0
0

arun

 

கணிப்பொறிப்பயிற்சி என்று அருண்மொழிக்கு ஒருவாரம் மதுரைக்குப் போகவேண்டியிருந்தது. வழக்கமாக தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்களில் தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். இருந்தாலும் பதற்றத்துடன் வந்து ‘என்ன செய்றது ஜெயன்?’ என்றாள்.’என்னமாம் செய்’ என்று பேரன்புடன் பதில் சொன்னேன். அவள் எதையும் திறம்படச்செய்பவள். அதற்கு முன் ஒரு ‘பேதை’ பாவனையை மேற்கொள்வது மிகவும் பிடிக்கும் அவ்வளவுதான்.

அரைமணிநேரம் கழித்து ‘டிராவல்ஸ் கூப்பிட்டு டிக்கெட் சொல்லிட்டேன்” என்றாள். மேலும் இருபது நிமிடம் கழித்து ”அங்க தங்கறதுக்கு ரூம் சொல்லியாச்சு. போஸ்டாபீஸ் ரெஸ்ட்ஹவுஸிலேயே சொல்லிட்டேன். மதுரையிலே ஒருத்தர் தெரிஞ்சவர் இருக்கார்” மேலும் அரைமணிநேரம் கழித்து ”துணைக்கு தக்கலையிலே இருந்து ஒருத்தவங்க வராங்க”. அங்கே எடுபிடிவேலைக்குக் கூட ஆள் தயார் செய்தபின்னர்தான் கிளம்பினாள்.

கிளம்பும்போது கண்ணில் அப்படி ஒரு சோகம் ”நீ இங்க என்ன செய்வே? தோசை மாவு நெறைய அரைச்சு வச்சிருக்கேன். சாம்பார் சட்டினி ரசம் எலலமே ப்ரிட்ஜ் நெறைய இருக்கு. மொளகாப்டிய தேடாதே, மேல் ஷெல்பிலே பாரு… பாத்திரங்களை அப்பப்ப கழுவி வச்சிரு…என்ன பண்ணபோறியோ என்னவோ” என்றெல்லாம் புலம்பல். ”நான் வேணுமானா அடுத்த மாசம் போறேன்னு சொல்லிடவா?” .நான் ”அடுத்த மாசம்னாலும் நீ போய்த்தானே ஆகணும்?” என்றேன். ”ஆமா…” என்றாள்.

போகும்போது ரயிலில் இருந்தே எஸ்.எம்.எஸ். ”பாப்பாவுக்கு திஙக்கிழமை வெள்ளை டிரெஸ். அவளை டைம்டேபிள் பாத்து எடுத்து வைக்கச்சொல்லு…அஜி கிட்ட கேண்டீன்ல சாப்பிடவேண்டாம்னு சொல்லு” ஆற்றாமல் மீண்டும் ·போன் ”துணியெல்லாம் ராத்திரியே அயர்ன் பண்ணி வைச்சிரு ஜெயன், காலையிலே கரெண்ட் இருக்காது” அதன்பின் உடனே அடுத்த ·போன் ”ராத்திரியே மோட்டார் போட்டிடு. காலையிலே கரெண்ட் போயிருது”

போய் சேர்ந்ததும் ”எப்படா திரும்புவோம்னு இருக்கு…இங்க பிடிக்கவேயில்லை” என்று ஒரு பெருமுச்சு ”ரூமெல்லாம் நல்லா இருக்கா?” ”அதெல்லாம் சூப்பரா தான் இருக்கு..ஆனா.. எனக்கு ஒண்ணுமே பிடிக்கலை எப்படா கெளம்புவோம்னு இருக்கு.. .” அதெல்லாம் ஒரு மென்மையான பாவனைகள் என எனக்குத்தெரியும். நான் அவளை நன்கு அறிவேன். ரயிலில் போகும்போதே துணைக்கு வரும் பெண்ணின் ஆருயிர் தோழியாக ஆகியிருப்பாள். அடுத்த முப்பது வருடம் அந்த நட்பு நீடிக்கும். போய் இறங்கியதுமே ஒட்டுமொத்த பெண்களுக்கும் பிடித்தமானவளாக ஆகி விதவிதமாக வேடிக்கைபேசி கிண்டல்செய்து சிரித்து குலாவ ஆரம்பித்திருப்பாள். சட்டென்று அங்கே அத்தனைபெண்களுக்கும் ஒரு கல்லுரி மனநிலை வந்துவிட்டிருக்கும்.

ஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போ, சரியான குடும்பத்தலைவிகள் அப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக அடிக்கடி ·போன் போட்டு ”ஒருமாதிரி இருக்கு. பிள்ளைங்கள்லாம் எப்டி இருக்காங்க?பாப்பா என்ன பண்றா?” என்று கேட்டுக்கொள்வாள்.

போனமுறை பயிற்சிக்குச் சென்றபோது பெண்களை கூட்டிக்கொண்டு  மீனாட்சியம்மனை நாள்தோறும் தரிசித்து, அழகர்கோயில் திருமோகூர் எல்லாம் சுற்றி, கடைசிநாள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் சென்று , விளக்குத்தூண் பகுதி கடைகளில் அலைந்து திரிந்து சுங்கிடி புடவை வாங்கி ,கடைசியில் ஆட்டோகிராப் புத்தகம் முழுக்க ‘என் உயிரினும் உயிரான அருண்மொழிக்கு’ என்று சகபெண்களின் கையெழுத்துக்கள் பெற்று வந்து சேர்ந்தாள். ஒருவாரம் அதே பேச்சு. தினசரி ·போன்கால்கள். ”ஆ…நாந்தான் அருண்மொழி.. கீதா எப்டிடீ இருக்கே? ஒருவாரமா உன் நெனைப்புதான்” என்றெல்லாம் சினேகக் கிரீச்சிடல்கள். ஒருவருடமாகியும் நட்புகள் நீடிக்கின்றன. இப்போதும் அதேதான் நடக்கும்.

கல்லூரிப்பெண்ணாக அருண்மொழி குதூகலமானவள். அவளை சந்திக்கவரும் பழைய தோழிகள் எல்லாருமே என்னிடம் ‘காலேஜ்லே அருண்மொழிய சுத்தித்தான் இருப்போம்… எப்பவும் பேசிட்டே இருப்பா…நெறைய புக்ஸ் படிப்பா’ என்றார்கள். திரும்பவும்  கல்லூரிநாட்கள் தேவைப்படுகின்றன போலும்.

திருமணமாகியதும் ஒரு வீடே பெண்களின் பொறுப்புக்கு வந்துவிடுகிறது. அருண்மொழிக்கு கூடுதலாக ஒரு அலுவலகம். அவள்கீழே எட்டுபேர் வேலைசெய்கிறார்கள். அதி உற்சாகத்தால் எதையும் எப்போதும் செய்யத்தயாரான இரண்டு பிள்ளைகள், கிறுக்குத்தனமான கணவன், சதா அன்புக்கு ஏங்கும் பூதாகரமான கைக்குழந்தைகள் போல இரு நாய்கள் என்று அவளது சுமைகள் மிக அதிகம்.  சட்டென்று எல்லாவற்றையும் கழற்றிப்போட்டுவிட்டு சுதந்திரமாக இருக்கிறாள்.

முக்கியமாக சமையல்பொறுப்பு இல்லை. தினமும் எதைச் சமைப்பது என்ற கேள்வி எதையாவது சமைத்தாகவேண்டுமென்ற கட்டாயம். அருண்மொழிக்கு எந்த ஓட்டல் சாப்பாடும் பிடிக்கும், அவள் சமைக்கவில்லை அல்லவா? மனமுவந்து டிப்ஸ் கொடுப்பாள். காலையில் எழுந்ததும்  இன்றைக்குச் சமைக்கவேண்டாம் என்பதே ஜிலுஜிலுப்பாக இருக்குமாம். சாயங்காலம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சுதந்திரம் பகல் முழுக்க கூடவே படபடத்து சிறகடிக்கும்.

எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் இதெல்லாம் தேவைப்படுகிறது. பலபெண்கள் விசித்திரமான கூச்சம் காரணமாக அதை அவர்களே ஒளித்துக்கொள்கிறார்கள். இப்படி ஓர் கட்டாயம் உருவாகாமல் அப்படி ஒரு ‘குடும்பப் பொறுப்பில் இருந்து விடுமுறை’யை பெண்கள் அடைய முடிவதில்லை. என்னைக்கேட்டால் வேலைபார்க்கும் பெண்களாவது ஏழெட்டுபேர் கூடி ஏதாவது பாதுகாப்பான சிறு பயணங்கள் ஏற்பாடு செய்துகொள்ளலாம். அங்கே கணவன் குழந்தைகள் வீடு எல்லாவற்றையும் மறந்து ஒருவாரம் கல்லூரிப்பெண்ணாக இருந்துவிட்டு வரலாம். அவர்களின் மனதுக்கு ஒரு புதுக்குளியல் போல அது புத்துணர்வளிக்கும்

[ மறுபிரசுரம். முதல்பிரசுரம் 2009 நவம்பர்]

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விழா நன்கொடை

$
0
0

 

vish

நண்பர்களே

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா வரும் டிசம்பர் 22, 23 தேதிகளில் நிகழவிருக்கிறது. இலக்கியக் கோட்பாட்டாளரும் நாவலாசிரியருமான பேரா.ராஜ் கௌதமன் அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். வாசகர்கள், நண்பர்கள் கூடி செய்யும் நிகழ்வாக இது இருக்கவேண்டும் என்னும் எண்ணம் எப்போதும் இருந்தது

சென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே சென்ற ஆண்டுமுதல் விஷ்ணுபுரம் அறக்கட்டளையை நிறுவி அனைவரிடமும் நன்கொடை பெறத் தொடங்கினோம். இவ்வாண்டும் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் விழா நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்கவேண்டுமென கோருகிறேன்.

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch: ICICI Bank, Ramnagar Branch, Coimbatore
Account Name: VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI
Current Account No: 615205041358
IFSC Code: ICIC0006152

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நிதியை அளிக்கலாம். எங்கள் அறக்கட்டளை வெளிநாட்டு நிதியை வாங்க இயலாதென்பதனால் இந்த ஏற்பாடு

 

Account Holder First Name : Sultan
Account Holder Last Name : Shahul Hameed
Account Holder Mob No +91-8122502841
Account no NRE: 67005304451
Bank Name: State Bank of India
Branch Name: PSB Branch Nagercoil.(Personal Banking Branch)
Bank Address: 19 D North Car Street,
Near Head Post Office,
Nagercoil, India,
Pincode :-629001
IFSC Code: SBIN0070686
SWIFT CODE : SBININBB456
MICR CODE : 629002091

*** [CORRECTED]

நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30

$
0
0

bowகிழக்கே புலரியை அறிவிக்கும் முரசொலி எழுந்ததும் சிலிர்த்து, செவி முன் குவித்து, முன்கால் தூக்கி பாய ஒருங்கும் படைப்புரவியென தன்னில் விசை கூட்டியது பாண்டவப் படை. கதையை வலக்கையால் பற்றியபடி சுதசோமன் மூச்சை இழுத்து மெல்ல விட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். “எழுக! எழுக! எழுக!” என முரசுகள் அதிரத்தொடங்கியதும் “வெற்றிவேல்! வீரவேல்!” எனும் பேரோசையுடன் பாண்டவப் படை எழுந்து கௌரவப் படையை நோக்கி சென்று விசை அழியாது முட்டி ஊடுகலந்தது.

எத்தனை பழகிய ஓசையாக அது உள்ளதென்று சுதசோமன் வியந்தான். ஒவ்வொரு நாளுமென பல்லாண்டுகள் கேட்ட ஓசைக்கு நிகர். நான்குமுறை மட்டுமே கேட்ட ஓசை, நாலாயிரம்முறை உள்ளத்தில் அதை மீட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டும். போர் எழுந்த பின் படையிலெழும் ஓசை பிறிதொன்று. படை நின்றிருக்கையில் எழுவது வேறு. படை எழுந்து எதிர்ப்படையை சந்திக்கும் தருணம் வரை அது முற்றிலும் தனித்த ஓசை. அறைகூவல் என முதலில் தோன்றும். வெறியெழுகை என எண்ண முடியும். அரிதாக துயரின் ஓலம் என்றும் தோன்றும். எண்ண எண்ண பொருளிலாதாகும் ஓசை அது. ஆனால் அறியமுடியாத பொருள் ஒன்றை கரந்தது என்றும் தோன்றச் செய்வது.

போர்நிகழ்வின் ஓசையில் எதிரியின் ஓசையும் கலந்துள்ளது. அதில் தன்னுணர்வென எதிரி எப்போதும் உள்ளான். எழும் படையின் ஓசையில் எதிரி இல்லை. அது ஒரு பெருந்திரள் தன்னை படையென உணரும் கணம் மட்டுமே. வியனுருக்கொண்டு கைவிரித்து நானென தருக்கும் தருணம். ஒவ்வொருவரும் தன்னை உதிர்த்து தன்னிலிருந்து வேறாகி எழும் கணங்களின் பெருந்தொகை. விண்வடிவம் கொண்டெழும் தெய்வங்கள் அவ்வோசை எழுப்பக்கூடும். சுதசோமன் கதையைச் சுழற்றி எதிர்வருபவர்களை அறைந்து தலையுடைத்து, குருதி சுழன்றுதெறிக்க கைசுழற்றி அவ்விசையாலேயே மீண்டும் மேலெடுத்து மீண்டும் பறக்கவிட்டு அடித்தான். அடியின் எதிர்விசையால் தசைகள் குலுங்கின. உள்ளே நெஞ்சக்குலை புல்நுனிப் பனித்துளிபோல் அதிர்ந்தது. உள்ளே ஓடிக்கொண்டிருந்த சொற்கள் நடுங்கி ஒன்றன்மேல் ஒன்றென ஏறிக்கொண்டன.

சங்கிலியில் கட்டப்பட்ட கதை அவனுடலிலிருந்து கிளைத்த பேருருவத்தெய்வமொன்றின் விரல்முறுக்கிய கைபோல் பாய்ந்து அறைந்து மீண்டது. தேர்களை உடைத்து, புரவிகளின் தலைகளை அறைந்து சிதறடித்து, யானை மத்தகங்கள் மேல் பிறிதொரு மத்தகமென முட்டி அதிர்ந்து எழுந்தது. அவை குருதி கொட்ட, துதிக்கை தளர்ந்து, கால் வளைந்தமைய, முன்னால் சரிந்தன. “செல்க! செல்க!” என்று அவன் தன் தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டுக்கொண்டே இருந்தான். அவன் உடல் குருதியால் நனைந்து குளிரத் தொடங்கியது. அவன் விழிகள் தொட்டுத்தொட்டு பறந்தலைந்தன.

பாண்டவப் படை எழுந்து முன்சென்று கலந்ததுமே கௌரவப் படை பல சிறுதுணுக்குகளாக விலகி மத்தகம் பாய்ச்சி வந்த களிற்றை தன் உடலுக்குள் சேறென, நீரென மாறி உள்ளிழுத்துக்கொண்டு அனைத்து திசைகளிலிருந்தும் சூழ்ந்தது. அம்புகளும் வேல்களும் மத்தகங்களின் மேல் பொழிந்தன. கவசங்களேந்திய யானைகளால் உருவான இரும்புக்கோட்டை இருபுறமும் சூழ்ந்து அரணமைக்க அதன் வாயில் திறப்பில் கதையுடன் நின்று சுதசோமன் போர் புரிந்தான். “முன்செல்க… கொன்று முன்செல்க!” என முரசொலி அறைகூவியது. “யானையின் வலக்கொம்பு முன்சென்றுள்ளது… இடக்கொம்பு தொடர்க… இடைவெளியை துதிக்கை சிதைக்கட்டும்!”

எதிரே அரைக்கணம் என எழுந்த தேர்திரும்பலில் துருமசேனனின் உருவை சுதசோமன் கண்டான். தன் பொருட்டே அவன் வந்திருப்பதை அக்கணத்தில் உணர்ந்தான். முன்நோக்கி என்று அவன் கைநீட்டி ஆணையிட தன் முன் நீண்டிருந்த தேர் நுகத்தில் தீட்டப்பட்ட இரும்புப்பரப்பில் அவ்வசைவைக் கண்டு பாகன் தேரை துருமசேனனை நோக்கி கொண்டுசென்றான். செல்லும் விசையிலேயே நாணொலி எழுப்பி, சங்கொலி முழக்கி பிறரை விலக்கி முதல் அம்பை துருமசேனனின் நெஞ்சை நோக்கி எய்து சுதசோமன் போருக்குள் தன்னை ஆழ தொடுத்துக்கொண்டான். ஆடிப்பாவை என நாணொலியும் சங்கொலியுமாக அவனை நோக்கி வந்த துருமசேனனின் வில்லதிர்ந்து எழுந்த அம்பு அவன் நாணின் அதிர்வு அடங்குவதற்குள்ளாகவே வந்து நெஞ்சை அறைந்து அவன் அணிந்திருந்த இரும்புக்கவசத்தை அதிரச் செய்தது. அவன் தன் சொல் ஒன்று இணைச்சொல்லுடன் இணைந்ததுபோல் உணர்ந்தான்.

சுதசோமன் அம்புகளை எய்தபடி துருமசேனனை அரைவட்ட வடிவில் சுற்றி வந்தான். அரைவட்டத்தில் மறுவளைவை நிரப்பியபடி துருமசேனன் சுற்றினான். துருமசேனனின் கை எடுக்கவிருக்கும் அம்பை முன்னரே சென்றடைந்தது சுதசோமனின் உள்ளம். அவ்வம்பு எழுந்த பின்னர் அதிரும் நாணை ஒருகணமும், அறையும் அம்பின் சிறகை மறுகணமும், அது தன்னை கடந்து போகவிட்டு சுழன்று எழுகையில் விம்மலோசையை பிறிதொரு கணமும் உணர்ந்தான். ஒற்றைக்கணத்தில் மூன்று பட்டைகள் என அவை அமைந்திருப்பதை அறிந்தான். பிறிதொரு முறையும் அவ்வாறு படைக்களத்தில் தன் முழுதுளமும் குவிந்ததில்லை என்று உணர்ந்தான்.

அம்புகள் விம்மி ஓங்கரித்து உறுமி கூச்சலிட்டுச் சென்றன. உரசி பொறிகளுடன் மண்ணில் பாய்ந்தன. ஒன்றையொன்று சிதறடித்து நிலைகுலைந்து துள்ளித் துடித்தபடி நிலத்தில் விழுந்தன. துருமசேனனின் தேர்ப்பாகன் தலைக்கவசம் உடைந்து இரு கைகளையும் விரித்து நுகத்தில் மல்லாந்து இன்னொரு கவசத்தை எடுப்பதற்குள் சுதசோமன் அவன் கழுத்தில் பிறையம்பை எய்தான். தலைதுண்டுபட்டு அவன் பக்கவாட்டில் சரிய நிலை தடுமாறி அழிந்த தேரில் நின்று “தேர்வலர் வருக! தேர்வலர் வருக!” என்று கூச்சலிட்டபடி துருமசேனன் சுதசோமனை அம்புகளால் இடைவிடாது அறைந்து காற்றில் வேலி ஒன்றை நிறுத்தினான்.

தன் தேரிலிருந்த நீள்மூங்கிலை எடுத்து ஓங்கி ஊன்றி காற்றில் தாவியெழுந்து எதிர்வந்த தேரின் புரவி மேல் காலூன்றி துருமசேனனின் தேரில் ஏற முயன்ற மாற்றுத் தேர்ப்பாகனின் தலையை கவசத்துடன் அறைந்துடைத்து அடுத்த சுழற்றலில் துருமசேனனின் தோளை அறைந்தான் சுதசோமன். தன் கதையுடன் தேரிலிருந்து பின்புறம் பாய்ந்திறங்கி மண்ணில் நின்ற துருமசேனன் அடுத்த அடியை ஒழிய, தேர்த்தூணில் பட்டு அதன் இரும்புக் கவசத்தை உடைத்தது கதை. தேரிலிருந்து தாவி எழுந்து துருமசேனனின் முன்னால் நின்று “பொருதுக, மூத்தவரே!” என்றான் சுதசோமன். “ஆம், இதற்காகவே அனைத்தும் பயின்றுள்ளோம்!” என்று கூவியபடி சுதசோமனை தன் கதையால் அறைந்தான் துருமசேனன்.

இரு கதைகளும் வெடிப்போசையுடன் முட்டிக்கொண்டன. இரும்புக்குண்டுகள் இரு வண்டுகளென ரீங்கரித்து ஒன்றையொன்று துரத்தின. விசையுடன் முட்டிக்கொண்டு அதிர்ந்து விலகி மீண்டும் சுழன்று விசைகொண்டன. ஒன்றை ஒன்று உடைக்க வெறிகொண்டவைபோல. உருகி உடல் பிணைத்து காற்றில் திளைக்க விழைபவைபோல. சுதசோமன் பிறகொருபோதும் ஒருவரை அத்தனை புலன் குவிந்து உளம்கூர்ந்து அணுகியதில்லை என்று உணர்ந்தான். துருமசேனனின் ஒவ்வொரு தசையசைவும் ஒவ்வொரு விழியோட்டலும் அவையென வெளிப்பட்ட உள்ளமும் அவனுக்கு எச்சமின்றி அவனுக்காக திறந்திருந்தன. மிகச்சில கணங்களிலேயே உள்ளங்கள் மட்டுமே மோதிக்கொள்ளும் போரென்று ஆகியது அது.

கால்வைக்கும் கணக்குகளாக முதலில் பயின்றது கதை. போருக்கெழும் நிலைமண்டிலம், விசைகொண்ட தாக்குதலை எதிர்கொள்கையில் அரைமண்டிலம், எழுந்தடிக்கையில் முன்நீள் அரை மண்டிலம். அடிஏற்று நிலைகொள்கையில் பின்நீள் அரைமண்டிலம். அடியொழிந்து விசைகூட்டுகையில் பின்குதிகால் ஊன்றிச்சுழலும் செக்குச்சுழல்கை. அறைவிசையை சிதறாது காத்து மற்றொரு அறையென்றாக்குகையில் முன்கட்டைவிரல் நின்றுசுழலும் தாழ்குடுமிச் சுழல்கை.

களரியில் கற்கையில் ஒவ்வொன்றும் தனித்தனியாக தொடர்பற்ற அறிதல்களாக இருந்தன. அவற்றை என்றேனும் போரில் நிகழ்த்தப்போகிறோம் என்றே எண்ணியதில்லை. கற்றவை அனைத்தும் முற்றாக மறந்து அமிழ்ந்து வேறெங்கிருந்தோ எழுந்து உடலில் கூடின. சுழன்றறைந்து வாங்கும் ஓதிரம். நின்று இருநிலைகளிலும் சுழற்றும் கடகம். நான்கு என திசைமடிந்து சூழ்ந்துசெல்லும் மண்டிலம், எண்ணியிராது எழுந்து அடிக்கும் சடுலம். நின்று எதிர்கொள்ளும் விஜயம். ஒவ்வொன்றும் உடலில் எழுவதன் உவகை. ஒவ்வொன்றுக்குமுரிய தெய்வங்கள் எடுத்துக்கொள்கின்றன என் உடலை. என் தசைகளில் ஊறுவது தேவர்க்கினிய அமுது.

சுதசோமன் அனைத்து சினங்களையும் பதற்றங்களையும் வெறிகளையும் இழந்து உவகையால் நிறைந்தான். அந்தத் தருணத்தின் விடுதலையில் திளைத்தான். அத்தனை ஆண்டுகளில் எவரிடமும் அந்த தன்னிலையழிந்த அணுக்கத்தை உணர்ந்ததில்லை என உணர்ந்தான். எவரையும் அத்தனை விரும்பியதில்லை. எவரையும் தானென்றே எண்ணிக்கொண்டதில்லை. தோள்தொடும் கணங்களில் தந்தையிடம் மட்டுமே உணர்ந்த அணுக்கம் அது. ஒரு வாயில் சற்றே திறந்து ஒளிக்கோடெனக் காட்டி மூடும் தருணம் அது. கண்கூச அனைத்து வாயில்களும் திறந்துகொண்டிருக்கின்றன இப்போது.

உருளைகளில் அறைவு கைகளுக்கும், தோள்தசைகளுக்கும், உள்ளங்கால் ஊன்றிய மண் வரைக்கும் அதிர்வென்றாகி சென்றது. ஒவ்வொரு அடிக்கும் உள்ளிருந்து புழுதி மூடிய அனைத்தும் நடுங்கி திரையுதிர்த்து உறைவிலிருந்து எழுந்தன. பிறிதொன்றாயின. ஒளி கொண்டன. அக்கதைப்போர் தொடங்கி சற்று நேரமே ஆகியிருந்த போதிலும்கூட அதில் நெடுநாள் அவன் வாழ்ந்திருந்தான் என்றுணர்ந்தான். அதுவரை வாழ்ந்த வாழ்வைவிட செறிந்து நீண்ட பிறிதொரு வாழ்வு.

அதுவரையிலான வாழ்வில் அருந்தருணங்கள் ஒவ்வொன்றும் மிகக் குறைவானவை. அவ்வருந்தருணங்களில்கூட அவன் உடலிலும் உள்ளத்திலும் ஒரு சிறு கூறு மட்டுமே வாழ்ந்தது. விழியோ செவியோ நாவோ தோளோ காலோ நெஞ்சோ… அதை நோக்கி பிற கூறுகள் உறைந்து இன்மையென்றே ஆகி சூழ்ந்திருந்தன. வாழ்ந்த உறுப்பு துடித்து தன்னிலை உணர்கையில் அவை வந்து சூழ்ந்துகொண்டன. அது அந்த தித்திப்பை நினைவு வைத்திருந்தது. தான் பிறிதென்றுணர்ந்தது. தன்னுடையதே என பொத்தி வைத்துக்கொண்டது. அந்த இனிமையை பிற அனைத்திற்கும் எதிராக நின்றே அது அடைந்தது.

உவகையின் கணங்களில் உவகை கொள்ளும் கூர்முனை பிற அனைத்துடனும் முரண்கொண்டு நின்றிருப்பதனாலேயே பல்லாயிரம் கைகளால் அழுத்தி மண்ணுடன் பற்றப்பட்டது. திமிறித்திமிறி அது தான் தான் என்று தெறிக்கையில் மேலும் அழுத்தப்பட்டது. உவகை என்பது ஒரு திணறல். பெருந்திமிறல். பிறிதொருவகையில் அதை அவன் அறிந்ததில்லை. ஆனால் அப்போரில் அக்கணத்தில் ஒவ்வொரு உறுப்பும் முழுதுவகையில் தானழிந்து திளைத்தது. ஒவ்வொன்றும் ஓர் உலகை படைத்தது. கணங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றென அடுக்கி உருவாகும் காலம் அங்கில்லை. கணங்களுக்குள் கணங்களுக்குள் கணங்கள் எனச் செல்லும் காலத்தில் ஒரு கணமே ஆயிரம் ஆண்டுகளாக மாற முடியும்.

துருமசேனனின் கதை சுதசோமனின் தோளை அறைந்தது. அவன் நிலைகுலைந்த கணம் அடுத்த அறை வந்து அவன் நெஞ்சைத் தாக்கி தூக்கி வீசியது. அவன் எழுந்தபோது விழுந்த அறையில் இடைக்கவசம் உடைந்து கீழே தெறித்தது.  பின்னிருந்து அவன் தேர்ப்பாகன் “இளவரசே!” என்றான். மேலும் ஒரு அடி பின் வைத்து கவசத்தை கவர எண்ணி அவ்வெண்ணத்திற்கு செல்லாமல் முன் சென்ற உடலால் கதைசுழற்றி துருமசேனனை தாக்கினான் சுதசோமன். அவன் அறையை ஒழிந்து துருமசேனன் பின்னகர்ந்தான். மேலும் மேலும் வெறிகொண்டு தாக்கியபடி சுதசோமன் முன்னால் சென்றான்.

ஆனால் ஒவ்வொரு அடியும் இலக்கு பிழைத்தது. உடலில் பட்ட ஓர் அடி எண்ணத்தை விழிகளை எப்படி குலையச்செய்ய இயலும்? ஆனால் ஒவ்வொரு எண்ணத்தின் முனையும் கூரிழந்திருந்தது. கதை சென்றுசேருமிடம் அணுவிடை காலம் பிழைத்தது. அவன் மூச்சிரைக்கலானான். இதோ என் உடலை அறையவிருக்கிறது அந்தக் கதை. இங்கே உடன்பிறந்தான் கையால் உயிர்விடப்போகிறேன். அவன் விழிகளில் ஒன்று துளிக்கணத்தில் அந்த மண்ணை நோக்கியது. அங்கே மேலும் பலர் மண்தழுவிக் கிடந்தனர். இந்த இடமா? இதுதானா? இந்த  மண் இதை காத்திருந்ததா? என் கருவுறும் கணத்தில் இங்கும் ஒரு தேவன் வந்து காத்திருந்தானா?

அவன் கொண்ட அந்த துளித் தயக்கமே துருமசேனனை ஏமாற்றியது. அவன் பின்னடி வைக்கப்போகிறான் என்று எண்ணி எழுந்த துருமசேனனின் கை அரைக்கணம் தளர்ந்தபோது  சீறி முன்னெழுந்து அவனை அறைந்து பின்னால் வீழ்த்தியது சுதசோமனின் கதை. நெஞ்சுக்கவசம் உடைந்து தெறிக்க துருமசேனன்  மல்லாந்து விழுந்து துள்ளிச்சுழன்று கதையையே ஓங்கி ஊன்றி உடலைச் சுழற்றித் துள்ளி அப்பால் சென்றான். அவனை அறைந்த சுதசோமனின் கதையின் உருளை குருதி விழுந்து நனைந்த குருக்ஷேத்ர மண்ணை மும்முறை குழியாக்கியது. நான்காவது அறை தலைமேலெழ துருமசேனன் தன் கதையால் அதை தடுத்தான். தன் கதையைச்சுழற்றி சுதசோமனின் கதையை விலக்கியபடி எழுந்து ஓங்கி அறைந்து அது தன் விலாவை எட்டாமலிருக்க பின்னடி வைத்து உடல் வளைத்து விலகி மீண்டும் அறைந்தான்.

சுதசோமனின் கதை உரசி பொறிபறக்க நழுவியது. அதைச் சுழற்றி அறைந்தபோது “உம்” என்றான் துருமசேனன். அக்கணம் வரை அருகிலென, தானேயென நின்றிருந்த அவன் அகன்று நெடுந்தொலைவில் இருந்தான். பிறிதொருவன், பிறிதொன்று. அது மானுடனின் ஒலி அல்ல. உயிரின் உறுமல். அனைத்து விலங்குகளிலும் பசியென்றும் காமம் என்றும் குடிகொள்வது. கொன்று கிழித்துண்பது. அறமென்றும் அளியென்றும் நெறியென்றும் குருதியென்றும் அறியாதது. அந்த எண்ணம் சுதசோமனை களிகொள்ளச் செய்தது. இது விலங்கு. இது வெறுந்தசை. இது குருதிப்பை. பிறிதொன்றல்ல. இதற்கு உறவில்லை. இது அறியும் நெறியென்று ஏதுமில்லை. ஒருகணம் என் கைபிழைத்தால் என் குருதி அள்ளிக் குடிப்பது. என் கை ஓங்குமென்றால் என் கையில் வெஞ்செம்மைவிழுதென வழியும் வெற்றி. கொல்! கொல்! அறை! அறை! இக்கணம். இக்கணமே வெற்றி. இக்கணம் அவன் இறப்பது நீ வாழ்வதற்கென்று தெய்வங்கள் அளிக்கும் ஆணை. பிறிதொன்றல்ல. இது போரல்ல. வெற்றியும் தோல்வியும் அல்ல. இருத்தலும் மறைதலும் மட்டுமே. அறைக! அறைக! கொல்க! கொல்க!

அவன் சொல்லனைத்தும் அறைகளாக துருமசேனன் மேல் வீசி மண்ணில் அறைபட்டன. கையூன்றி புரண்டு எழுந்து தன் கதையால் அவனை அறைந்தான் துருமசேனன். அந்த அறை தளர்ந்திருந்தது. அத்தளர்வே சுதசோமனை விசைகொள்ளச் செய்தது. துருமசேனனின் விழிகளை அருகிலென கண்டான். அவை முற்றிலும் அறியாதவையாக இருந்தன. வெற்று ஒளிகொண்டவை. ஒரு சொல்லும் நில்லாதவை. கொல், கொல், கொல் என அவையும் கூறின. அவன் துருமசேனனின் கதையை அறைந்து அது தெறித்து விலகிய இடைவெளியில் மீண்டுமொருமுறை அறைந்து அவன் நெஞ்சக்கவசத்தை உடைத்தான். அடுத்த அறையை துருமசேனன் ஒழிய மீண்டுமொரு அறையால் அவன் உடலை விதிர்த்து செயலிழக்கச் செய்தான். அறைகாத்து மெய்ப்புகொண்டு காத்திருந்தது துருமசேனனின் உடல். கரிய தோலில் விலாவெலும்புகளின் அலை. தோல் மெய்ப்புகொண்டு மழைத்துளி விழுந்த மென்நிலப்பரப்பெனத் தெரிந்தது.

சுதசோமன் இறுதி அறைக்கென அவன் கதை தூக்கியபோது கொம்பொலி எழுந்தது. துருமசேனன் “தந்தை!” என்று கூவினான். அச்சொல் சுதசோமனை உளம்நிலைக்கச் செய்தது. அப்படியென்றால் என் உள்ளம் இதுவரை ஓடிக்கொண்டா இருந்தது? செயலே சொல்லென ஓடும் அந்தப் பெருக்கே என் உள்ளமா என்ன? மீண்டுமொரு கொம்பொலி எழுந்தது. “தந்தையர் இருவர்!” என்றபடி வெறிகொண்டெழுந்து முன்னால் வந்தான் துருமசேனன். எவருடைய தந்தை? அச்சொல். தந்தை! அச்சொல் ஏன் எழுந்தது? தந்தையர்! துருமசேனன் வெறிகொண்டு கூச்சலிட்டபடி கதையை வீசி முன்னெழுந்தான். அந்தப் புத்தூக்கத்தை எதிர்பாராத சுதசோமன் பின்காலடி எடுத்துவைத்தான். மேலும் மேலுமென அறை வந்து அவன் முன் காற்றொலியுடன் சுழன்று சென்றது. அதன்மேல் வந்து பட்ட அம்பொன்று உலோகக் கூரொலியுடன் சிதறியது. சுதசோமனின் காலடியில் யானைச்சடலம் ஒன்று தடுக்க அவன் இயல்பான அசைவுடன் பாய்ந்து பின்னால் சென்று அரைமண்டிலத்தில் அமைந்தான். யானையைக் கடந்து பாய்ந்து அவன் அருகே வந்து அமரும் பறவை என முன்கால்மண்டிலத்தில் நிலம் பதிந்த துருமசேனன் அதே விசையுடன் அவன் தலையை நோக்கி கதையை வீசினான்.

துருமசேனனின் அறைவந்து அவன்மேல் படுவதற்குள் பின்னிருந்து கொக்கியால் அவன் கதை கைப்பற்றப்பட்டது. பெருங்கதையைச் சுழற்றி ஓங்கியறைந்த கடோத்கஜனின் தாக்குதலை பின்னால் தாவிச்சென்று ஒழிந்தான் துருமசேனன். அந்த அறைசென்று பட்ட தேர் நொறுங்கி அதிலிருந்த வீரனின் குருதி உடைந்த குடத்து நீரெனத் தெறிக்க அப்பால் குவிந்தது. புரவிகள் கனைத்தபடி  நிலையழிந்தன. துருமசேனன் இன்னொரு  வீரனின் கதையை பெற்றுக்கொண்டு உறுமியபடி முன்னால் வந்து கடோத்கஜனை எதிர்கொண்டான். ஓரிரு அறைகளுக்குள்ளாகவே அவனால் கடோத்கஜனை தடுக்கவியலாதென்று சுதசோமன் உணர்ந்தான். அவனுக்குப் பின்னால் முரசுகள் ஒலிக்க இருபுறத்திலிருந்தும் கௌரவர்கள் வந்து சூழ்ந்துகொண்டனர். அவர்களை தனியொருவனாக கடோத்கஜன் எதிர்க்க அவனுக்குத் துணையாக இடும்பர்கள் முழவொலி எழுப்பியபடி சூழ்ந்தனர்.

சுதசோமன் தேரிலேறிக்கொண்டு கைகளை வீசினான். தேர் பின்னால் சென்றது. அவன் தேரிலிருந்து இறங்க அணுகிவந்த மருத்துவர்கள் அவன் கவசத்தை கழற்றினர். உள்ளே குருதி நிறைந்திருந்தது. உடைந்த இரும்புக்கவசம் தசையில் கிழித்திறங்கியிருந்தது. அவர்கள் அதை மருந்துவைத்து கட்ட “துணைசெல்க! பீமனுக்கு துணைசெல்க! அவர் சூழப்பட்டிருக்கிறார்!” என்று அறைகூவியது முரசு. அவன் மருத்துவர்களை விலக்கியபடி ஓடிச்சென்று தேரிலேறிக்கொண்டு “தந்தையை நோக்கி… தந்தையை நோக்கி!” என ஆணையிட்டான்.

தேரிலிருந்து பொறுமையிழந்து அவன் துடித்துக்கொண்டிருந்தான். அவன் செல்வதை முழவுகள் அறிவித்தன. “விரைக! விரைக!” என அவன் தேர்க்காலில் குறடால் ஓங்கி உதைத்தான். அப்பால் சர்வதன் வந்துகொண்டிருப்பதை கேட்டறிந்தான். தொலைவிலேயே அவன் பீமனின் தேரின் கொடியை பார்த்துவிட்டான். கௌரவப் படையின் மிக ஆழத்தில். வண்டுநுழைந்த தேனீக்கூடு என அங்கே கௌரவப் படை கொந்தளித்துக்கொண்டிருந்தது. முழவுகள் உறுமின. முரசுகள் வானிலிருந்தென ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. சுதசோமன் தன் கதையை எடுத்துச் சுழற்றி அறைந்து புரவிகளையும் தேர்களையும் உடைத்தபடி பீமனை நோக்கி சென்றான். அப்பால் கடோத்கஜனும் சூழப்பட்டிருப்பதை அறிவித்தன முரசுகள்.

“செய்தி சொல்க! செய்தி சொல்க!” என அவன் கழையனிடம் ஆணையிட்டான். அவன் மேலெழுந்து இறங்கி “அரசே, யானை முற்றிலும் சூழப்பட்டுள்ளது. அப்பால் இளைய பாண்டவர் அர்ஜுனரை பீஷ்மர் எதிர்கொள்கிறார். அபிமன்யூவை ஜயத்ரதர் நேரிடுகிறார். சுருதகீர்த்தியை அஸ்வத்தாமரின் படைகள் தடுத்துள்ளன. சாத்யகியும் பூரிசிரவஸும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் துரோணரும் திருஷ்டத்யும்னரும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்திலும் போர் விசையுச்சம் கொண்டு நிகழ்கிறது. மத்தகம் சூழப்பட்டுள்ளது. துதிக்கை வளைத்து பற்றப்பட்டுள்ளது. கால்கள் சேற்றில் புதையுண்டிருக்கின்றன. யானை அசைவிழந்துள்ளது” என்றான்.

சுதசோமன் அணுகியதும் பீமனைச் சூழ்ந்து நின்றிருந்த கௌரவர்களில் சலன், சத்வன், சித்ரன் ஆகியோர் அவனை நோக்கி திரும்பினர். அவர்களின் ஓசைகேட்டு ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன், துர்தர்ஷன் ஆகியோரும் அவனை நோக்கி கதைகளுடன் கூச்சலிட்டபடி பாய்ந்து வந்தனர். சுதசோமன் அவர்களை அம்புகளால் எதிர்த்தபடி அணுகி அதே விசையில் தேரிலிருந்து பாய்ந்தெழுந்து சமனின் தோளில் அறைந்தான். அலறியபடி அவன் தேர்த்தட்டிலிருந்து விழுந்தான். கதையுடன் பாய்ந்து தன்னை நோக்கி வந்த ஜலகந்தனை அறைந்து வீழ்த்தினான். தரையில் நின்ற அவனை விந்தனும் அனுவிந்தனும் துர்தர்ஷனும் சூழ்ந்துகொண்டனர். கதைமுழைகள் அவனைச் சூழ்ந்து பறந்தன. விழியில் உளம் முற்றிலும் கூட அவன் அவற்றின் சுழற்சியை அணுவணுவாக கண்டான். நெளிந்தும் அமர்ந்தும் பாய்ந்தெழுந்தும் அவற்றை ஒழிந்தான்.

பின்பக்கம் முரசொலி எழுந்தது. சுதசோமன் கதைச் சுழற்சியில் திரும்பியபோது துரியோதனன் கதையைச் சுழற்றியபடி யானையொன்றின்மேல் அமர்ந்து வருவதை கண்டான். யானையின் கழுத்துச்சரடை வலக்கையால் பற்றிக்கொண்டு இடக்கையால் கதையைச் சுழற்றியபடி காற்றில் பறந்தணைவதுபோல வந்த துரியோதனனின் கதையுடன் பீமனின் கதை வெடிப்பொலியுடன் முட்டிக்கொண்டது. ஒரு கணத்தில் இருவரும் நேருக்குநேர் என போரிலீடுபட்டிருந்தனர்.

வெண்முரசின் கட்டமைப்பு

தொடர்புடைய பதிவுகள்

மாந்தளிரே -கடிதங்கள்

$
0
0

shyam-philips-3

 

மாந்தளிரே!

அன்புள்ள ஜெ

 

நான் உங்களுடைய மாந்தளிரே என்ற கட்டுரையை வாசித்ததும் நினைத்துக்கொண்டது இது. இந்தப்படங்களை இப்போது பார்த்தால் தாளமுடியவில்லை. அவற்றின் காட்சியமைப்புகள் பழசாகிவிட்டன என்பது ஒரு காரணம். உண்மையில் நான் சின்னவயசில் வியந்து பார்த்த ஸ்பார்டகஸ், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களே இப்போது சின்னப்பிள்ளைவிளையாட்டுமாதிரி தெரிகின்றன. ஆனால் பாடல்கள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன

 

 

ஏன்? சினிமாவும் கலைதானே? சினிமா ஃபிலிமில் உள்ளது. ஃபிலிம் பழசாகிவிடுகிறது. ஆனால் அதுமட்டும் காரணம் இல்லை. சினிமாவில் கற்பனைக்கு கம்மியான இடம்தான். ஆனால் இசை முழுக்கமுழுக்க நம் கற்பனையில் இருக்கிறது. இசைகேட்டு நாம் அடையும் உணர்வுகள் நமக்கு மட்டுமே உள்ளவை ஆகவே மிகமிகப் பிரைவேட் ஆனவை. அவை நம்மைப்பொறுத்தவரை பெரிய பொக்கிஷம். நாமே இசை வழியாக நம்முடைய உலகத்தை உருவாக்கிக் கொள்கிறோம்

 

சமீபத்தில்  வேர் ஈகிள்ஸ் டேர் என்ற சினிமாவைப்பார்த்தேன். ஒருமாசம் முன்னாடி நாவலை வாசித்தேன். நாவல் அற்புதமாக இருந்தது. சினிமா சகிக்கமுடியவில்லை. நாவலில் இருந்து நான் உருவாக்கிக்கொண்ட உலகம் எனக்கே எனக்காக பிரைவேட்டான உலகம் என்பதே காரணம்

 

சந்திரகுமார்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

தங்களின் மாந்தளிரே கட்டுரையை வாசித்தேன். எவ்வளவு வாஸ்தவமான வார்த்தைகள். சில நேரங்களில் நானும் யோசிப்பதுண்டு. அயல் மொழி திரைப்படங்களில் இல்லாத முக்கியமான, அதே நேரத்தில் அவர்கள் தவற விட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான ஒன்று – திரையிசை. இசையால் மட்டுமே – உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல- நமது பால்ய பருவத்தின், இளமைப் பருவத்தின் மனிதர்களை, நிலங்களை, நிகழ்வுகளை கடத்தி கொண்டு வர முடிகிறது.  எண்பதுகளின் ஆரம்பத்தில் பிறந்த எனக்கெல்லாம் இளையராஜாவின் பாடல்களை கேட்கும் போதெல்லாம் எனது  பள்ளிப் பருவமும், அதனை சுற்றிய மனிதர்களும் தெளிவாக கண் முன்னே வந்து நிற்பார்கள். இன்னும் சொல்லப்போனால், பாடல்கள் மூலமே எனது கடந்த காலத்தை நான் வாழ்கிறேன். ஒவ்வொரு பாடலும் ஏதோவொரு நிகழ்வோடு தொடர்புபடுத்தி என் நினைவில் வருகிறது. உங்களது கட்டுரையும் அந்த இணைப்புகளும் அதனை சாஸ்வதப்படுத்துகின்றன.

 

 

நன்றி

சங்கர்

 

 

அன்புள்ள ஜெ

 

ஷியாம் பேட்டியை உங்கள் இணைப்பு வழியாகப் பார்த்தேன். அதிலிருக்கும் முதிர்ந்த மனிதருக்கும் அந்தப்பாடல்களில் உள்ள  ரொமாண்டிசிசத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவர் சாதாரணமாக டெக்னிக்கைப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் காத்திரிப்பூ பாடலில்தான் எவ்வளவு நுட்பமான ஏக்கம் உள்ளது. அந்த மெட்டு இவர் மனதில் இருந்துதானா வந்தது என்ற சந்தேகமே வந்துவிட்டது

 

ஒவ்வொருகாலகட்டத்தையும் இசை ஒருவகை அமைப்பாகவே விளங்குகிறது. ஷியாமின் இசையும் அன்றைய ராஜாவின் இசையும் ஆர்டி பர்மன் இசையும் ஒட்டுமொத்தமாக ஒரேவகையான ஓசையை கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. அதாவது ஒருகாலகட்டத்தில் இசைக்கருவிகள் ரெக்கார்டிங் ஆகியவற்றால் மட்டுமல்ல வேறுபலவற்றாலும் ஒரு வகையான ஓசை வந்துவிடுகிறது. அதுதான் நமக்கு நஸ்டால்ஜியாவாக ஆகிறது

 

ரவிச்சந்தர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பொருளியல் கட்டுரைகள் -கடிதம்

$
0
0

images (5)

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா

 

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா

 

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

 

பாலா அவர்களின் கட்டுரைகள் மிகுந்த மன எழுச்சியைத் தந்தன.  ஒரு பருந்துப் பார்வை என்று சொல்லி 1965, 75 மற்றும் 83-களில் நிகழ்ந்த ‘irreversible high growth’ என்று அவர் பட்டியலிட்டது மிகுந்த நம்பிக்கையை அளித்தது. முன்னேற்றத்தின் அடுத்த படி என்னவாக இருக்கும் என்று சிந்திக்க வைத்தது.

 

என் சிறிய மூளையில் தோன்றிய ஒரு தித்திப்பான கற்பனை – அது ’Unleashing of women power in its true sense’-ஆகத்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது.  ஜனத்திரளில் 50%-ஆக இருக்கும் பெண்களில் பெரும்பாலனவர்கள், low iq jobs செய்து கொண்டு, வெறுமனே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இரண்டு கை, இரண்டு கால், ஒரு மூளை ஆகியவற்றை கொண்ட  ஒரு full fledged human resource தான் என்பதை உணர்ந்து தன் மனதுக்குகந்த பணிகளை திறம்பட செய்ய ஆரம்பித்தால், நம் இந்தியா அதன் அடுத்த leap-க்கு தயாராகிவிடும்.  50% human resource  தன் காற்சங்கிலியைத் தானே தூக்கிக் கொண்டு நடக்கும் யானையைப் போல் பழகி பதவிசாக இருக்கிறார்கள்.

 

என் மகள் மகாரஷ்ட்ராவில் உள்ள நாகதானேயில் சில மாதங்கள் தங்கியிருந்து வேலை செய்தாள்.  அங்கு Boiler suit போட்டுக் கொண்டு, தலையில் பூ வைத்துக் கொண்டு , குழந்தையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு இரவுச் சமையலுக்கு மளிகை வாங்கிக் கொண்டு இருக்கும் பெண் engineer களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.  நவராத்திரி கொலுவுக்கு தாம்பூலம் வாங்க வரும் சுமங்கலிகளைப் போல் இருக்கும் ISRO scientist-களின் சித்திரமும் பிரபலமானதே. இவர்களுக்கு தாங்கள் வகிக்கும் professional and private role-களைப் பற்றி எந்த குழப்பங்களும் இல்லை.  தன்னை progressive nations என்று சொல்லிக் கொள்ளும் western nations-களில் கூட இத்தகைய cool காட்சிகளைக் காண முடியாது.  Middle east-ல் இதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அங்கும் பெண் engineer-கள் உள்ளனர்.  என் கணவர் வேலை செய்யும் இடத்தில், இப்பெண்கள் site visit-காக வரும் போது, மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர்களின் வருகை மிகுந்த கிளுகிளுப்புடன் அரேபியர்களால் எதிர்பார்க்கப் படும் என்று சொல்வார்.:). அதனோடு ஒப்பு நோக்கும் போது, இக்காட்சிகளைப் பற்றி பெருமையோடு பேசிக் கொள்வோம். ஒரளவு இந்தப் பாதையில் முனேறியிருக்கிறோம் என்று சொல்லத் தான் வேண்டும்.

 

ஆனால் இந்தியாவில்  இப்பொழுதும் உள்ள பிரச்சனை, ‘ஆண்களின் பொற்காலத்தை’ நினைவடுக்கில் சேமித்து வைத்திருக்கும் ஆண்கள் இன்னும் extinct ஆகாமல் இருப்பது தான். அவர்கள் இரகசியமாக அது போன்ற ஒரு காலத்தையே விழைந்து கொண்டிருக்கிறார்கள். பழம்பெருமையைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு தன் மகன்களை pamper செய்யும் அம்மாக்களும் இதில் சம பங்கு குற்றவாளிகள்.  என் மகள் சொல்வாள்- ’இந்திய ஆண்கள் ஒரு அம்மா வீட்டிலிருந்து திருமணம் செய்து கொண்டு இன்னொரு அம்மா வீட்டிற்கு செல்கிறார்கள்’- என்று :).  எந்த அரிசியும் ஆண் வேக வைப்பதால் வேக மாட்டேன் என்று சொல்வதில்லை.

 

Women empowerment, feminism இவையெல்லாம் புளித்துப் போன வார்த்தைகளாக உங்களுக்குத் தோன்றும்.  மகாபாரதம் எழுதப்பட்ட காலத்தில், வேத வேதாந்தங்களில் உள்ள ஞானம் தான் intellectual base என்றும், வெண்முரசுக்கு ‘marxism’ தான் ’intellectual base’ என்றும் சமீபத்திய உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். Marxism பெண்களுக்கும் apply செய்யப் பட வேண்டும்.

 

மற்றொன்றும் சொல்ல வேண்டும்.  சில பெண்கள், தன் பெண்பால் sexuality-ஐ மிகப் பெரிய அணிகலன் போல் பூட்டிக் கொண்டு,  கலவியைப் பற்றியும், மற்ற விஷயங்களைப் பற்றியும் கலைச்சொற்களை :) உபயோகித்து தங்களை brave, courageous and outspoken-ஆக காட்டிக் கொள்ள விழைகிறார்கள்.  இவர்களே facebook-ல் மிகப் பிரபலமானவர்கள். மகன்களை pamper செய்யும் அம்மாக்கள் அளவே இவர்களும் ஆபத்தானவர்கள். இவர்கள் hyper-oestrogen syndrome (இது என் சொந்த கண்டு பிடிப்பு:))-ல் அவதிப் படுபவர்கள்.:)

 

தன் பெண்தன்மை தன் ஆன்மாவுக்குக் கிடைத்த ஒரு external feature மட்டுமே; கலவியும், பாலியல் ஈர்ப்பும், தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அழகியல் உணர்வும், வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதி தான், இதுவே நம்மை define செய்ய வில்லை;-என்று உணரும்போது இந்த women empowerment என்ற கருது கோள் , புதுப்புது வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டு புளித்துப் போகாமல் தன்னையே rediscover செய்து கொள்ளும்.

 

இந்தியாவுக்காக நான் காணும் கனவுக் கோவிலின் மூலவர் ‘unleashing women power’ என்றால். உப தெய்வங்கள் லஞ்சமின்றி இருப்பது, ethics and values மீண்டும் fashionable ஆவது, இந்தியா முழுவதும் solar power-ல் இயங்குவது போன்றவை.

 

என் கனவுகளை சுமாராகவேனும் தொகுத்துக் கொள்ள உதவிய பாலாவின் கட்டுரைக்கு நன்றி. ‘Demonetization’-க்கு சப்பைக் கட்டு கட்டும் உங்கள் கட்டுரைக்கு எதிர்வினை அந்த கட்டுரை என்பதை உணர்ந்தே இருக்கிறேன்:).  இருந்தாலும் அதை என்னை தொகுத்துக் கொள்ள உபயோகப் படுத்திக் கொண்டேன்.  கேள்வி எதுவாக இருந்தாலும் ஒரே பதிலைச் சொல்லும் என் திறமையையும் வியந்து கொண்டிருக்கிறேன்:)

 

நன்றி,

கல்பனா ஜெயகாந்த்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

#me too-இயக்கம்

$
0
0

me

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

நான் ஊடகத்துறையில் வேலை பார்க்கிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் இந்த செய்தியை விவாதித்துக்கொண்டிருந்தோம் – https://www.thenewsminute.com/article/indian-medias-metoo-begins-women-journos-call-out-sexual-harassers-newsrooms-89548. இப்போது மேலைநாடுகளில் எல்லா துறைப்பெண்களும் பாலியல் தொந்தரவுகளை பற்றி ‘மீ டூ’ (#metoo) என்ற பெயரில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் அதன் அலை தொடங்கியுள்ளதாக இந்தச்செய்தி குறிப்பிடுகிறது.

 

 

இந்த செய்தியில் பல பெண்கள் பதிவுசெய்த இடர்களை என் வேலையிடத்தில் நானும் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் இப்படிப்பட்ட செய்திகள் வெளியாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விவகாரங்களை பற்றி பொதுவில் பேசமுடியாத சூழலில் பல பெண்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பாலியல் தொந்தரவு கொடுப்பது மேலதிகாரியாகவே இருந்தால் வேலை பறிபோகும் அபாயம் இருக்கிறது.

 

 

இன்னொன்று, இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பலர் கலை, இலக்கியம் போன்ற துறைகளில் செயல்படுபவர்கள். இவர்கள் உலகியல் அனுபவம் இல்லாத இளம்பெண்களை குறிவைத்து பொது நிகழ்வுகளில் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களில் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள். இந்தத்துறைகளில் பொதுவாக நிலைப்படுத்தப்பட்ட அமைப்புகள் ஏதும் இருப்பதில்லை. புகார் கொடுக்க அமைப்புகள் இல்லாததால் இதைப்பற்றி மற்ற பெண்களிடம் பேசுவதைத்தவிர இத்துறைகளில் இயங்குபவர்களால் வேறெதுவும் செய்யமுடிவதில்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் இவர்களின் பெயர்களை வெளியிடத்தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் ஊடகத்தில், சினிமாவில், கலை-இலக்கிய உலகில் இப்படி ஒரு அலை வர சாத்தியம் உள்ளதா என்று தெரியவில்லை.

 

 

ஆனாலும் பொதுவில் விவாதித்த போது சில கேள்விகள் எழுந்தன. இது ஒரு விதத்தில் பெண்களுக்கு தைரியம் அளிக்கும் செயல்பாடுதான் என்றாலும் இதன் மூலம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? நீதியா? இனிமேல் இபப்டிச்செய்தால் இது தான் கதி என்று பயம்காட்டலா? அல்லது பழிவாங்கலா? உடனடியாக புகார்கொடுத்து சட்டம் வழியான தீர்வுகளை பெண்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? அப்படியென்றால் பெண்களுக்கு சட்டம் மூலம் நீதி கிடைப்பது இங்கே அவ்வளவு கடினமானதா?

 

 

மேலும் மீ டூ போன்ற இயக்கங்களில் பெண்கள் தங்களை பலியாட்களாக சித்தரித்துக்கொள்ளும் போக்கு உள்ளது. அதுவே அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடும். அலுவலகத்தில் பல ஆண் நண்பர்கள் இந்த விவகாரங்களில் பொய்ப்புகாருக்கு பயப்படுவதாக சொன்னார்கள். இனி பெண் ஊழியர்களுடன் எந்த சந்தர்ப்பத்திலும் தனியே இருக்கப்போவதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். எங்கள் ஊடகத்துறையில் இது சாத்தியம் இல்லை. இதனால் நடைமுறையில் பெண்களின் வாய்ப்புகள் பறிபோகும். இப்படி எல்லா துறைகளிலும் பெண்களை வெளியேற்றும் மனப்பான்மை வளர்ந்தால் அது ஆற்றல் கொண்ட பெண்களையே பாதிக்கும்.

 

 

அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் ஏன் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் செய்கிறார்கள் என்ற பேச்சும் வந்தது. அவர்களுடைய பெற்றோர் அவர்களை சரியாக வளர்க்கவில்லை என்று நினைப்பதாக பல தோழிகள் சொல்கிறார்கள். சக மனிதர்களை துன்புறுத்தக்கூடாது என்பது ஓர் அடிப்படை விஷயம், இதைக்கூடவா சொல்லித்தரவேண்டும் என்கிறார்கள். சுற்றியிருக்கும் மற்ற ஆண்கள் இப்படி செய்பவர்களை கண்டிக்கவேண்டும் என்றார்கள். கூட வேலைசெய்யும் மூத்தவயது பெண்கள் சொல்வது வேறு. எல்லா ஆண்களும் அடிப்படையில் மிருக சுபாவம் கொண்டவர்கள், யாரையும் நம்ப முடியாது. ஆகவே பொதுவில் புழங்கும் பெண் தான் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.

 

 

இந்த விவகாரம் குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன? ஆண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்யாமல் இருக்க வழி என்ன? இந்த நிகழ்வுகளை பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வேலையிடத்தில் இருபாலரும் சுமூகமாக இயங்க வழி என்ன?

 

 

பா. ஜென்னிபர் பிரியா

 

 

அன்புள்ள ஜென்னிபர் பிரியா,

 

வழக்கம்போல என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே எழுதுகிறேன். கல்வித்துறையில் பெண்களிடம் பாலியல்தொல்லைகளில் ஈடுபட்டவர்களின் பெயர்களை பெண்கள் வெளிப்படுத்திய me-too இயக்கத்தின்போது தமிழகத்திலிருந்து அதிலிருந்த பெயர்களில் ஒன்று திராவிட அரசியல் பற்றி நிறைய எழுதிய டெல்லிவாழ் பேராசிரியர் ஒருவருடையது. [வேறு ஒருவர் பெயர் இடம்பெற்றிருக்குமென்றால் இங்கே தாண்டிக்குதித்து ரகளை செய்திருக்கும் வாய்ப்புள்ளவர்கள் அச்செய்தியைக் கேட்டபின் ஆழ்ந்த அமைதிக்குச் சென்றுவிட்டார்கள் ] ஆனால் அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னரே அவரைப்பற்றி பலர் அவ்வண்ணம் சொல்லி நான் கேள்விப்பட்டிருந்தேன்.

 

அன்று அது ஒரு கிசுகிசு அவ்வளவுதான். அதைப்பற்றிப் பேசுவதும் பரப்புவதும் ஒருவகை கீழ்மையாகவே தோன்றியது. தமிழகத்தின் புகழ்பெற்ற பல பேராசிரியர்களைப்பற்றி அவ்வண்ணம் இப்போதும் கிசுகிசுக்கப்படுகிறது. அவ்வியக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி அவர் பெயரைச் சொல்லும்போது அது கிசுகிசு அல்லாமலாகிறது. செய்தியாக மாறுகிறது. இதுதான் அவ்வியக்கத்தின் சாதனை.

 

தமிழகத்தின் புகழ்பெற்ற சமூகப்போராளி ஒருவரைப்பற்றி கிருபா முனுசாமி என்னும் வழக்கறிஞர் இணையத்தில் இதேவகையான குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்திருந்தார். நான் அந்த சமூகப்போராளி ஒருமுறை கைதுசெய்யப்பட்டபோது ஆதரித்து எழுதியிருந்தேன். பின்னர் கிருபா முனுசாமி கவிதா சொர்ணவல்லியுடன் வந்து என்னைச் சந்தித்தார். அச்சந்திப்பு நான் அந்த நபரைப்பற்றி எத்தனை தவறான புரிதலில் இருந்தேன் என தெளிவாக்கியது. அக்கட்டுரைகளுக்காக, அந்த மனிதரை ஆதரித்தமைக்காக, இன்னமும் வெட்குகிறேன். ஆனால் நான் எழுதிய கட்டுரைகள் என்பதனால் அவற்றை நீக்கவில்லை

 

ஊடகத்துறையில் இருந்த ஒரு பெண் கவிஞர் தமிழகத்தில் புகழுடன் இருந்த ஒரு சினிமா இயக்குநர் அவரிடம் நடந்துகொண்ட முறையை என்னிடம் சொன்னார்.நேரடியான அப்பட்டமான பாலியல் வன்முறை அது. துணிச்சலானவராக, கூடவே கையில் சிறுகத்தி ஒன்று வைத்திருந்தவராக இருந்தமையால் அவர் தப்பினார்.  உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது அதைக்கேட்டபோது.

 

ஒவ்வொருநாளும் இத்தகைய செய்திகள் காதில்விழுகின்றன. சட்டநடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்குக் கடுமையான போராட்டம் தேவை. முதலில் அதை குடும்பத்திலிருந்து தொடங்கவேண்டும். இந்திய நீதிமன்றங்கள், காவலர்கள், அலுவலகநிர்வாகிகள், அரசு பொதுவாக செல்வாக்குள்ளவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதில்லை. செல்வாக்குள்ளவர்களே இதில் பெரிதும் ஈடுபடுகிறார்கள். சட்டரீதியாக என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்றுகூட பொதுவாக நமக்குத் தெரிந்திருப்பதில்லை..

 

Me too இயக்கம் அவதூறு ஆக மாறிவிடும் அபாயம் உண்டு. மிரட்டுவதற்கும் உளவியல் தொல்லை கொடுத்து வீழ்த்துவதற்கும் அதைப் பயன்படுத்தலாம். அவ்வாறு சில வழக்குகள் சுட்டப்படுகின்றன என்பதும் உண்மை. ஆனால் நம் சமூகத்தில் இப்பிரச்சினை இத்தனை பெரிய அளவில் உள்ளது என்பதை இந்த இயக்கம்தான் வெளியே கொண்டுவந்தது. தங்கள் மனைவியை, மகளை வேலைக்கும் படிக்கவும் அனுப்பிக்கொண்டிருக்கும் நடுத்தரவர்க்கத்தின் உணர்ச்சிகளை அதுதான் அசைத்துப்பார்த்தது. இன்று அதுகுறித்து எழுந்துள்ள விழிப்புணர்ச்சியும் அதன் கொடையே

 

ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. சட்டநடவடிக்கை, அதற்கான உதவிஅமைப்புகள், கண்காணிப்புகள் ஆகியவையே நிரந்தரமான வழி. ஆனால் ஒரு எச்சரிக்கை மணி என்ற அளவில் அது முக்கியமான ஓர் இயக்கம் என்றே நினைக்கிறேன்

 

இதில் ஈடுபடுபவர்கள் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற இதழாளர் –நாவலாசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டபோது. இதில் ஈடுபடுபவர்கள் ‘கெட்டவர்கள்’ ‘மோசமான வளர்ப்புகொண்டவர்கள்’ அல்ல. அப்படி எண்ணினால் ‘நல்லவர்கள் என நம்பி’ ஏமாறவேண்டியிருக்கும். அவர்கள் ஆண்கள், அவ்வளவுதான்.

 

ஆண்களின் இயல்பான உயிரியல்பழக்கம் பெண்கள் மீதான ஆக்ரமிப்பு. படிப்பு, குடும்பப் பண்பாடு, சூழலின் கண்காணிப்பு, சட்டத்தின் மீதான அச்சம் என பல்வேறு காரணிகளால் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த வேலிகள் உடையும் தருணங்கள் பல உண்டு. பெண் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என உணர்கையில். சட்டமோ சமூகமோ தன்னை தண்டிக்காது என்ற எண்ணம் எழுகையில், தற்கட்டுபாடுகள் இல்லாமலாகும் சூழல்கள் அமைகையில். மதுவருந்தும்போதும் தனியான இடங்களிலும்தான் இவை மிகுதியாக நிகழ்கின்றன. ஆண்களின் இயல்பு இது என்று கொள்வதே ஒப்புநோக்க தர்க்கபூர்வமானது

 

என் அவதானிப்பில் இருவகை ஆண்கள் இதில் ஈடுபடுகிறார்கள். Alpha male எனப்படும் முதன்மை ஆண்கள். குரங்குகள் உட்பட அனைத்து உயிர்களிலும் உள்ள வழக்கம் இது. பெண்ணை தன் உடைமை என நினைப்பது,வெல்லவிழைவது, அடக்கி ஆளமுயல்வது இவர்களின் இயல்பு. பெண்களை பணம் அதிகாரம் ஆகியவற்றைக்கொண்டு மிரட்டுவதும் அவர்களுக்கு காவலர்களாகத் தங்களை அமைத்துக்கொள்வதும் இவர்களின் இயல்பு.

 

இன்னொருவகையினர் பல்வேறு காரணங்களால் அடக்கப்பட்ட பாலுணர்வு கொண்டவர்கள். தோற்றம், சூழல் என பல காரணங்களால் பாலியல்வறுமை கொண்டு அதையே எண்ணிக்கொண்டிருப்பவர்கள். அதை உள்ளே அடக்கிக்கொண்டு வேறொரு தோற்றம்பூண்டவர்கள். சர்வசாதாரணமானவர்களாகவே இவர்கள் இருப்பார்கள். நம்பகமான தோற்றத்தையும் அளிப்பார்கள்.

 

முதல்வகையானவர்கள் வன்முறையாளர்களாகவும் இரண்டாம் வகையானவர்கள் கோழைகளாகவும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். இரண்டாம்வகையினரே ஒப்புநோக்க ஆபத்தானவர்கள். அவர்களை எளிதில் கணிக்கமுடிவதில்லை. அவர்கள் பெண்கள்மேல் அவதூறுபரப்புதல் முதலிய உளவியல்தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். தங்கள் சிறுமையால் பெண்கள்மேல் தாக்குதல் தொடுப்பார்கள்.

 

பொதுவெளிக்குச் செல்லும் பெண் ஆண்களை நம்பக்கூடாது என்றெல்லாம் சொல்லமாட்டேன். நம்பாமல் எச்சரிக்கையுடன் எப்போதும் இருந்துகொண்டிருப்பது ஆளுமைத்திரிபையே உருவாக்கும். ஆனால் ஓர் எச்சரிக்கைஎல்லை வகுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். எவருக்குமே வாய்ப்புகளை அளிக்கும் வகையில், எதிர்பார்ப்புகளையோ நம்பிக்கைகளையோ அளிக்கும் வகையில், ஈர்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்படலாகாது. அதற்குரிய தற்கண்காணிப்பும் தேவை

 

கேரளத்தில் நடிகைகள் உருவாக்கியிருப்பதுபோல ஒவ்வொரு துறையிலும் பெண்கள் மட்டுமே பங்குகொள்ளும் அமைப்புகளை உருவாக்குவதே இதற்கான மிகச்சிறந்த வழி. அமைப்பு ஒரு பெண் தன்னை தனித்தவளாக, பாதுகாப்பானவளாக உணராதபடிச் செய்கிறது. பாதிக்கப்படும் பெண்ணுக்கு இங்கே குடும்பம் உதவுவது மிக அரிது. அப்பெண்மேலேயே பழியும் விழும். சட்டநடவடிக்கை உட்பட அனைத்திற்கும் உடன்நிற்கும் ஓர் அமைப்பு போல ஆற்றலை அளிப்பது வேறில்லை. நிதி, சட்டபூர்வ அங்கீகாரம் உட்பட அதற்கு அதிகாரமும் இருந்தால் பெரும்பாலும் பிரச்சினைகள் தடுக்கப்பட்டுவிடும். முட்டபூர்வமான ஓர்அப்படி ஓர் அமைப்பு உண்டு என்பதே பெரும் பாதுகாப்பு.

 

ஆனால் இதற்கென்றே ஓர் அமைப்பை உருவாக்கினால் அது சங்கடமூட்டுவதாக, ஒருவகையான அறிவிப்பாக அமையக்கூடும். பொதுவாக பெண்இதழாளர்க் கூட்டமைப்பு போல ஒன்றாகத் தொடங்கலாம். அதை பிற பெண்கள் சார்ந்த கூட்டமைப்புகளுடன் இணைத்துக்கொண்டு பெரிய அமைப்பாக ஆக்கலாம். ஆனால் அங்கும் சிக்கல்கள் எழும். முதலில் அரசியல் உள்ளே நுழையும். அமைப்பை ‘பொதுப்பிரச்சினைகளுக்குக் குரல்கொடுப்பதாக’ ஆக்கவேண்டும் என ஒரு குழு கிளம்பும். எந்தப்பிரச்சினைக்குக் குரல்கொடுப்பது என்ற விவாதம் எழுகையில் அமைப்பு அரசியல்ரீதியாக உடையும். அரசியல்கட்சிகள் அவற்றைக் கையில் எடுத்துக்கொள்ளும். அதன்பின் அரசியல்கட்சிகளின் ஆதரவில் உள்ளவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது.

 

அரசியலற்ற, பெண்களின் பொதுப்பிரச்சினைகளுக்காக மட்டுமே செயல்படுகிற, கூடுமானவரை சட்ட உதவிகள் மற்றும் பின்னணி உதவிகளை மட்டுமே செய்கிற, குறைந்தபட்சச் செயல்பாடு மட்டுமே கொண்ட, குறிப்பிடத்தக்க பொதுநிதி கைவசம் வைத்திருக்கிற பொதுவான அமைப்பு ஒன்று உருவாவதுதான் உகந்தவழி

 

ஜெ

 

https://www.theguardian.com/commentisfree/2018/feb/04/metoophd-reveals-shocking-examples-of-academic-sexism

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31

$
0
0

bowபீமனும் துரியோதனனும் புரிந்த போரை மிக மெல்ல அனைவரும் அசைவிழந்து கதைகள் நிலம்தாழ நின்று நோக்கலாயினர். அவர்கள் ஓர் ஆற்றின் இரு கரைகளெனத் தோன்றினர். ஒருவர் பிறிதொருவர் என இடம் மாறினர். ஒருவர் உடலின் அசைவே பிறிதொன்றிலும் உருவாகியது. மிக மெல்ல பஞ்சென, மலரென காலடி எடுத்து வைத்து மூக்கு நீட்டி மயிர்சிலிர்த்து அணுகி நிலமறைந்து ஓசையெழுப்பியபடி பாய்ந்து ஒன்றோடொன்று அறைந்தும் தழுவியும் விழுந்து புரண்டு எழுந்து மீண்டும் அறைந்து போரிடும் வேங்கைகளின் போரென்றிருந்தது அது. பின்னர் செவி முன்மடித்து விரைந்து பின்னடைந்து துதிசுழற்றி வெள்ளம்போல் வருவதறியாமல் பாய்ந்து அணைந்து மத்தகம் முட்டி உடலதிர்ந்து பிளிறி துதிக்கைபற்றி முறுக்கிச் சுழற்றி சுற்றிவந்து உதறிவிலகி மீண்டும் ஆயம்கொள்ளும் களிற்றுப்போர் என ஆயிற்று.

சுதசோமன் தேரை நிறுத்தி அவர்களின் களமாடலை பார்த்துக்கொண்டிருந்த அத்தனை வீரர்களையும் விழியொடு விழிதொட்டு நோக்கினான். இரு இணைவீரர் தோள் கோத்துக்கொள்கையில் போர் பிறிதொன்றாகிவிடுகிறது. அதுவரை அத்தனை படைவீரர்களிலும் எழுந்து தங்கள் ஆற்றலை நிகர் நோக்கிக்கொண்டிருந்த தெய்வங்கள் இரு முனையிலென குவிந்துவிடுகின்றன. அங்கிருந்த அனைவரும் உள்ளத்தால் எழுந்து இருவருடனும் அமைந்துவிட்டிருந்தனர்.

தேர்ந்த மல்லர்களின் போர் என தோன்றியது அது. வஞ்சமற்ற, சினமற்ற, வெற்றிவிழைவுமற்ற மோதல். தசைகள் மட்டுமே ஈடுபடும் பூசல். தசைகள் மண்போல், நீர்போல், காற்றுபோல் இருப்பொன்றே இயல்வதென்றானவை. அப்பாலற்றவை. ஆழமில்லாதவை. முட்டிமோதி அதிர்ந்து விலகி மீண்டும் மோதித்தெறித்துக்கொண்டிருந்த கதை மீளமீள ஒற்றைச் சொல்லையே உரைத்தது. அச்சொல் பொருளற்றதாக, விண்ணிலிருந்து விழுந்துகிடக்கும் அறியாத் தெய்வம்போல தோன்றியது. ஆனால் நோக்க நோக்க அதன் முழுமைகூடிய அசைவுகளுக்குள் இருந்த வஞ்சத்தையும் சினத்தையும் உணரமுடிந்தது. அத்தனை அமிழ்ந்தமையால் அத்தனை அழுந்தியமையால், அத்தனை எரிகொண்டமையால் வைரமென்றாகிவிட்டவை அவை. அனைத்து அணுக்களும் கூர்கொண்டு எழுந்தவை.

நீக்கிலாப் பெருவஞ்சத்தின் விசையை ஒவ்வொரு அறையிலும் உணர்ந்து அவன் உடல் விதிர்த்தபடியே இருந்தது. மறு எல்லையில் அவனுடைய போர்க்கலை பயின்ற அகம் ஒவ்வொரு அசைவையும் அடையாளம் கண்டது. ஒவ்வொன்றும் உச்சமுழுமையில் அங்கே நிகழ்ந்தன. நின்று இருபுறமும் சீர்நிலைகொண்டு செம்மைக்காலடியில் முன்செல்லும் ஓதிரம். எதிரடியை இருபுறமும் தடுத்து நடுவில் நிலைநிறுத்தி எழுந்தமையும் கடகம். காற்றை உதைத்து விசைகொண்டெழும் பனந்தத்தையின் பாய்ச்சலென சடுலம். நிலைக்கால் ஊன்றி வரும் அடி காத்து அழுத்தி எழும் மண்டிலம். அரைவட்டமெனச் சுழலும் விருத்தசக்ரம். அலையலையென எழும் சுகங்காளம். அறைந்து சுழன்றெடுக்கும் விஜயம்.

மீண்டும் பின்னகர்ந்து நிலைகொண்டு நோக்கி உணர்ந்து சுவடுக்குச் சுவடும் தோள்விரிவுக்கு விரிவும் கண்ணுக்குக் கண்ணும் இமைப்புக்கு இமைப்புமென சுழலும் விஸ்வமோகனம். கதைகள் தழுவிக்கொண்டு நிற்க தொடுத்துச்சுழலும் அன்யோன்யம். அறைந்து துள்ளிப்பின்னெழுந்து பாய்ந்தமையும் சுரஞ்சயம். அமர்ந்து உடல்நீட்டி சிறுத்தையென மண்ணுடன் வயிறமைய முன்னகர்ந்து பாயும் சௌபத்ரம். கால்நடுவே கால்புகுத்தி வீழ்த்தும் பாடலம். விலாநோக்கி விலாவால் பாயும் புரஞ்சயம். உடலே விழியென உணர்ந்து கதையொழியும் காயவிருத்தி. கணமொழியாது அறைந்தறைந்து பின்னால் கொண்டுசெல்லும் சிலாகண்டம். எழுந்து காற்றில் காலுதைத்து மேலேறி நடுத்தலையில் அறையும் சிரோகதம். நெஞ்சைத் தாக்கும் அனுத்தமம். கதையால் சூழ்ந்துகொள்ளும் கதாயகட்டம்.

துரியோதனனிடமிருந்து முதல்முறையாக ஓர் உறுமல் எழுந்தது. மறுமொழி என பீமன் பிளிறலோசை எழுப்பினான். அவ்வொலி சூழ்ந்திருந்தோரை திகைக்கவைத்தது. அவர்கள் விழித்தெழுந்தவர்கள்போல் கூச்சலிட்டபடி தாக்கத் தொடங்கினர். சர்வதனை மகாபாகுவும் சித்ராங்கனும் சித்ரகுண்டலனும் பீமவேகனும் பீமபலனும் சூழ்ந்துகொண்டார்கள். தனுர்த்தரனும் அலோலுபனும் அபயனும் திருதகர்மனும் அப்ரமாதியும் தீர்க்கரோமனும் சுவீரியவானும் சுதசோமனை சூழ்ந்தனர். கதையால் அவர்களை அறைந்து பின்னடையச்செய்து பீமனின் பின்பக்கத்தை காத்தான் சுதசோமன். மேலும் மேலும் கௌரவர்கள் வந்துகொண்டிருந்தனர். பெருகிச்சுழன்று நதிச்சுழல் என்றாயினர். நடுவே பீமன் சுழிவிசையில் என சுழன்றபடி கதையால் அவர்களைத் தாக்கி தடுத்தான்.

எதிர்பாராக் கணமொன்றில் பீமன் எழுந்து பாய்ந்து சேனானியின் தலையை அறைந்து உடைத்தான். ஒருகணம் அனைத்தும் உறைந்து மீண்டதுபோல சுதசோமன் நெஞ்சு நடுங்கினான். கௌரவர்கள் நடுவே அதிர்ச்சிக்கூச்சல்கள் எழுந்தன. துரியோதனன் என்ன நிகழ்ந்தது என உணராதவன்போல திகைத்து நின்றான். அந்த கணத் தேக்கத்தில் புகுந்து ஜலகந்தனை நெஞ்சிலறைந்து வீழ்த்தினான். கௌரவர்கள் திரளென்று நின்று போர்புரிகையில் ஒற்றை உளம் கொண்டிருந்தார்கள். ஒருவரோடொருவர் நன்கு கோத்துக்கொள்ளும்படி அனைத்து உடல்களும் நிகரென்று அமையும் தன்மை கொண்டிருந்தன. ஆனால் முதல் கணங்களிலேயே அவர்களில் இருவரை பீமன் வீழ்த்தியது அனைவரையும் கால்தளரச் செய்திருந்தது. அந்தச் சிறு தளர்வின் ஒத்திசைவின்மையே அவர்களின் கதை சுழற்றலில் சிறு பிழையென எழ அதனூடாக நுழைந்து பீமன் அவர்களை அறைந்தான்.

ததும்பிய உடல்கள் நடுவே அலையில் நெற்றுகளென கௌரவர் தலைகள் எழுந்தமைந்தன. பீமன் ஒருவனின் இடையில் மிதித்து மேலேறி எழுந்து சுழற்றி அறைந்த கதையால் சுஷேணனை தலைசிதற குப்புறச் சரித்தான். கௌரவர்களின் சுழிவளையம் விரிந்து அகல அவனைச் சூழ்ந்து உருவான வெற்றிடத்தில் கௌரவர் மூவரும் வாயிலும் மூக்கிலும் குருதிக்குமிழிகள் கொப்பளிக்க கிடந்துநெளிந்தனர். துரியோதனனுக்கு காப்பெனக் கருதி பாய்ந்து அவனைச் சூழ்ந்திருந்த கௌரவர்கள் அவ்விசையால் அவனை கால்தடுமாறச் செய்து பின்னால் கொண்டுசென்றனர். வெறிக்கூச்சலுடன் அவர்களை கைகளால் அறைந்து விலக்கி பற்கள் நெரித்து உடல்தசைகள் இழுபட்டு அதிர துரியோதனன் பீமனை நோக்கி பாய்ந்தான். பீமன் பின்னடைந்து கதையால் அவனைத் தடுத்து மேலும் பின்னடைந்து பக்கவாட்டில் தாவி வீரபாகுவின் தலையை கவசத்துடன் அறைந்து உடைத்தான்.

திகைத்து ஒருகணம் செயலற்று நின்ற பின்னர் துரியோதனன் பீமன் மேல் பாய்ந்தான். துர்மதனும் துச்சலனும் துச்சகனும் அவனுடன் இணைந்தனர். பீமன் அவர்களை முற்றாகத் தவிர்த்து விட்டிலென பின்னால் தாவித்தாவி அகன்று விலகிச் சென்றுகொண்டிருந்த சுலோசனனின் தலையை அறைந்து வீழ்த்தினான். அவன் நெஞ்சில் மிதித்துக் குனிந்து இடைவாளை உருவி அவன் தலையைத் துணித்து குழல்கற்றையைப்பற்றித் தூக்கி அவனை நோக்கி கதையுடன் ஓடிவந்த துரியோதனன் மேல் வீசினான். தன் நெஞ்சிலறைந்து விழுந்த இளையோனின் தலையால் விதிர்ப்புற்று மெய் துள்ள துரியோதனன் கால்தளர்ந்து அமரப்போனான். பாய்ந்து அவன் தலையை அறைந்த பீமனின் கதையை துச்சலனின் கதை தடுத்தது. அவன் அதை எடுப்பதற்குள் பீமன் துச்சலனின் தலையை அறைந்தான். தலைகுனித்து தப்பிய துச்சலனின் தோளை அறைந்து கவசங்களை உடைத்து தூக்கி வீசியது கதை. துர்மதன் துரியோதனனை இழுத்து அப்பால் கொண்டுசெல்ல துச்சகன் வெறிகூவியபடி கதை சுழற்றி பீமனை அறைந்தான்.

தாவி பின்னகர்ந்த பீமன் விழுந்துகிடந்த தேர்ச்சகடம் ஒன்றின் மேல் ஏறி புரவி ஒன்றை தாவிக்கடந்து அப்பால் நின்றிருந்த கௌரவ இளையவன் பீமபலனை அறைந்து வீழ்த்தினான். அருகே நின்றிருந்த பீமவேகனின் முகத்தில் குருதியும் வெண் தலைச்சேறும் தெறிக்க அவன் உள்ளமும் உடலும் செயலிழந்து அசைவற்று நின்றான். அவன் தலையை வாளால் வெட்டி நிலத்திலிட்டான் பீமன். துரியோதனன் தீ பட்ட யானை என வீறிட்டபடி கதை சுழற்றி பாய்ந்தெழுந்தபோது கீழிருந்த பீமவேகனின் தலையை எடுத்து இடக்கையில் தூக்கி பிடித்தான் பீமன். கதையை நழுவவிட்டு அலறியழுதபடி துரியோதனன் மயங்கி விழுந்தான். அத்தலையை துச்சகன் மேல் வீசி அவன் நிலைகுலைந்த கணம் ஓங்கி அறைந்தான். தேர்ந்த பயிற்சியால் அவன் தலையொழிந்தான். அவன் புரள்வதற்குள் விலாவை அறைந்தது பீமனின் கதை.

கௌரவர்கள் அணிசிதைந்து ஒருவரோடொருவர் முட்டியபடி தத்தளித்து உடல்ததும்பினர். பீமன் உறுமலோசையுடன் அவர்களை நோக்கி பாய “மூத்தவரே” என்று அலறியபடி அவர்கள் சிதறியோடினர். கால்தவறி கீழே விழுந்த சுவர்மன் “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவினான். பீமன் அவன் நெஞ்சை உதைத்து மண்ணில் வீழ்த்தி தன் வாளால் அவன் தலையை வெட்டி குடுமியைப்பற்றித் தூக்கி காட்டியபடி வெறிநகையாடினான். கௌரவர்கள் முட்டி மோதி அகன்றுவிட அவனைச்சுற்றி எவருமிருக்கவில்லை. உடைந்த குடமென கொழுங்குருதி வழிந்த தலையைத் தூக்கி தன் முகத்தின்மேல் அதை ஊற்றினான். காலால் தரையை ஓங்கி அறைந்து “குலமகள் பழிசூடிய வீணர்கள்! இனி தொண்ணூற்றி இருவர்! எஞ்சியோர் வருக! வருக, கீழ்மக்களே! வருக, இழிசினரே! எவருள்ளனர் இங்கே? இக்களத்தில் ஒவ்வொருவரையும் நெஞ்சுபிளந்து குருதியுண்பேன்! அறிக தெய்வங்கள்! அறிக மூதாதையர்!” என்று கூச்சலிட்டான்.

அவன் விழிகளை அரைக்கணம் கண்ட சுதசோமன் நெஞ்சு நடுங்க பின்னடைந்தான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கௌரவர்கள். எண்மர் வீழ்ந்துவிட்டார்கள், இளவரசே! அவர்கள் எழுந்து படைசூழக்கூடும்!” என்று சுதசோமனின் தேர்ப்பாகன் கூவினான். கௌரவர்களின் படையிலிருந்து முரசுகள் வெறிகொண்டவைபோல முழங்கி ஆணையிட்டுக்கொண்டிருந்தன. புயல்காற்றில் மலர்க்கிளைகள் என கொடிகள் சுழன்றன. பிரக்ஜ்யோதிஷத்தின் கொடி எழுந்து அணுகுவதை சுதசோமன் கண்டான். சங்கொலி எழுப்பியபடி யானைமேல் அமர்ந்தவராக பகதத்தன் படைமுகப்பில் வந்தார். யானை விரைந்து வர அவ்விசை குறையாமலேயே கதையுடன் பாய்ந்திறங்கினார். பீமன் குருதி சொட்டும் உடலுடன் போர்க்கூச்சலெழுப்பியபடி பகதத்தனை எதிர்கொண்டான்.

பிரக்ஜ்யோதிஷத்தின் படைவீரர்கள் பீமனை சூழ்ந்துகொண்டார்கள். படைத்தலைவனாகிய பேருருவன் வியாஹ்ரஹஸ்தன் பீமனை அணுகாமல் சுதசோமன் தடுத்தான். மறுபக்கம் இன்னொரு அணுக்கவீரனாகிய உக்ரவிரதனை சர்வதன் செறுத்தான். ஒவ்வொரு அடியிலும் வியாஹ்ரஹஸ்தனின் பேராற்றலை உணரமுடிந்தது. ஒவ்வொரு அடிக்கும் அவன் கதை மோதித் தெறித்தது. அவ்விசையையே தோளுக்குப் பின் சுழற்றி தன் உடலுக்கு கொண்டுவந்து துள்ளி விலகுவதற்கான சிறகசைவாகவும் அவன் பயன்படுத்திக்கொண்டதனால் எதிர்நின்று போரிட இயன்றது. ஆனால் அந்தப் போர் நெடும்பொழுது நீளாது என அறிந்திருந்தான். “துணையெழுக!” என அவன் கையசைத்து ஆணையிட்டான். தேர்வீரனால் கொம்போசையாக அது மாற மிக அப்பால் “பீமசேனருக்கு துணையெழுக! பீமசேனருக்கு துணையெழுக!” என்று ஆணைமுரசு முழங்கியது.

பீமன் ஒரு கையில் கதையும் மறுகையில் அங்குசமும் கொண்டு உடலெல்லாம் குருதி வழிய செங்கதுப்புபோல தோள்தசைகளும் நெஞ்சுத்தசைகளும் இறுகி நெளிந்து அசைய “வருக! இன்று குருதியாடுகிறேன்… வருக!” என வஞ்சினம் கூவியபடி போரிட்டான். “வருக! இன்று உடன்பிறந்தோர் குருதியிலாடியே மீள்வேன் என்று எழுந்து வந்தேன்!” என்றான். பித்தன்போல நகைத்தபடியும் காலால் நிலத்தை மிதித்து பொருளிலாக் கூச்சலிட்டபடியும் போரிட்டான்.  தன் தலையை நோக்கி வந்த பகதத்தனின் கதையை பிறிதொரு அறையால் தடுத்து அவ்விசையடங்குவதற்குள் அப்பால் நின்ற கதைவீரனை அங்குசத்தால் இழுத்து தன் முன் இட்டு அவன் தலையை அறைந்துடைத்து முன் சென்றான். அவன் கதைவீச்சின் விசை மெல்ல மெல்ல பகதத்தனை பின்னால் தள்ளியது.

“பிதாமகர் பால்ஹிகர்! எழுக பிதாமகர்! பால்ஹிகர் எழுக!” என்று சகுனியின் முரசு அறைகூவுவதை சுதசோமன் கேட்டான். கௌரவர்கள் உக்ரசாயியும் கவசீயும் கிருதனனும் கண்டியும் பீமவிக்ரனும் தனுர்த்தரனும் அலோலுபனும் அபயனும் சூழ துச்சாதனன் போர்ச்சங்கூதியபடி தேரில் களமெழுந்து வந்தான். சுதசோமன் தன் தேரில் பாய்ந்தேறி அதை முன்செலுத்தி அவர்களை தடுத்தான். அவர்களைச் சூழ்ந்து கௌரவர்களின் தேர்வீரர்கள் வந்தனர். சுதசோமனின் அம்புபட்டு இருவர் தேர்த்தட்டில் விழுந்தனர். துச்சாதனனின் கதை தேரிலிருந்து பறந்தெழுவதை கண்டான். பாய்ந்து அவன் நிலத்தில் விழ கதையால் அறைபட்டு அவன் தேர் உடைந்து தெறித்தது. கதையுடன் பாய்ந்தணைந்த கிருதனனின் நெஞ்சில் ஓங்கி அறைந்து அவன் நிலைதடுமாறிய கணம் பிறிதொரு அறையால் அவனை வீழ்த்தினான் சுதசோமன். கையூன்றி புரண்டெழுந்து உடலை பின்னிழுத்து விலக்கி அப்பால் சென்ற கிருதனனின் தோளை அறைந்தது சுதசோமனின் கதை.

மறுபுறம் உக்ரசேனனையும் துஷ்பராஜயனையும் அபராஜிதனையும் எதிர்த்து பின்செலுத்திக்கொண்டிருந்த சர்வதன் “மூத்தவரே, இச்சூழ்கையை இரண்டாக உடைப்போம். எஞ்சியதை தந்தை பார்த்துக்கொள்வார்” என்றான். போர் செல்லும் திசை விழிக்கு தெரியத்தொடங்கியது. கௌரவர்களும் பிரக்ஜ்யோதிஷத்தவரும் பிதாமகர் பால்ஹிகர் களம்புகுவது வரை பீமனை தடுத்து நிறுத்த மட்டுமே விழைந்தனர். நெஞ்சில் அறைபட்டு மூக்கிலும் காதிலும் குருதி வழிய விழுந்து இருமுறை இருமி குருதிச்சேறை உமிழ்ந்து நிலத்தில் விழுந்து துடித்த கௌரவ மைந்தர்களான சுஜனனையும் கிரந்தனையும் கபந்தனையும் காலகனையும் உக்ரவேகனையும் உஜ்வலனையும் கடந்து தாவி வீழ்ந்த யானையொன்றின் நெஞ்சை மிதித்தேறி சக்ரனையும் சுதீரனையும் அறைந்து வீழ்த்தித் தாவி பின்னால் சென்று விழுந்த குர்மிதன் கையூன்றி எழுவதற்குள் ஓங்கி அறைந்து முதுகெலும்பை முறித்தான் பீமன்.

பின்புறம் கௌரவர்களின் மறைவை அறிவித்து முழங்கியது முரசு. கௌரவப் படையே உளம் தளர்வதை சுதசோமன் கண்டான். மீண்டுமொரு கௌரவ மைந்தன் அறைபட்டு ஓசையே இன்றி விழுந்தான். தழலை ஊதி அணைப்பதுபோல அத்தனை எளிதாக, அத்தனை அமைதியாக கௌரவ மைந்தர்கள் களம்பட்டனர். ஒருவரையொருவர் உடல் முட்டி ததும்பினர். ஒற்றை உடலென்றாகும் அவர்களின் இயல்பே சற்றே அணி சிதைந்தால் ஒன்றுடன் ஒன்று முட்டி வெற்றுத்திரளென்று மாறுவதை சுதசோமன் கண்டான். அவர்களின் கால்கள் பின்னிக்கொள்ள தோள்கள் ஒன்றையொன்று முட்ட ஒருவரையொருவர் நோக்கி நாய்கள்போல் பல்காட்டி சீறினர். “விலகு, மூடா!” என்று ஒருவன் கூவுவதற்குள் அவன் தலையுடைந்து குருதி பிறிதொருவன் முகத்திலறைந்தது. நால்வர் தோள் அறைபட்டு விழுந்தனர்.

மேலும் அஞ்சி கதையை தூக்கவும் உளம் துணியாது வெற்றுக்கூச்சலிட்டபடி அவர்கள் சிதறி விலக கௌரவப் படைக்கு அப்பால் முரசுகளும் கொம்புகளும் எழுந்தன. துச்சாதனன் தன் முன் நின்றிருந்த சுதசோமனின் கதையை அறைந்து தெறிக்கச்செய்து தன் கதையைச் சுழற்றி மேலே தூக்கி “பிதாமகர்! பிதாமகர் எழுந்துவிட்டார்! அணிதிரள்க! இக்குலாந்தகனை இங்கேயே கொன்றொழிப்போம்!” என்று கூவினான். பறந்து வருபவர்போல் பால்ஹிகர் படைகளுக்கு மேல் அசைவதை அவன் கண்டான். பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவி நெடுந்தொலைவு சென்றவர் அங்கிருந்து திரும்பி வளைந்து மீண்டு வந்துகொண்டிருந்தார். பெருங்கதை பறக்கும் களிறெனச் சுழன்று தேர்களை சிதறடித்தபடி வந்தது. மானுட உடல்கள் குருதித் துளிகள்போல் துமி சிதறிப்பரந்தன. தொடுத்த அம்பென அவர் நேராக பீமனை நோக்கி வந்தார்.

கௌரவர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து பீமனைச் சூழ்ந்து அவன் கதைவீச்சிலிருந்து விலகி பின்சென்றனர். பால்ஹிகருக்காக அவனை சிறைநிறுத்த அவர்கள் விழைந்தனர். பீமன் தன் தலையை சிலுப்பி முழுக்காட்டப்பட்டதுபோல் கூந்தலிலிருந்து வழிந்துகொண்டிருந்த குருதியை தெறிக்கவிட்டு மூச்சிழுத்து நெஞ்சை விடைத்தபடி பால்ஹிகரை நோக்கி சென்றான். பாண்டவத் தேர்வீரர்களை கொன்றபடி வந்த பால்ஹிகரைச் சூழ்ந்து நகரொன்றின் இடிபாடுபோல் உடல்களும் சிதைந்த தேர்களும் கிடந்தன. மத்தகம் உடைந்த யானைகள் ஏழு மண்ணில் கிடந்து கரிய உடல் கொப்பளித்துக்கொண்டிருந்தன.

பால்ஹிகர் வெண்சுண்ணத்தால் செய்த சிலை போலிருந்தார். அத்தனை பொழுது படைக்களத்தில் இருந்தபோதும்கூட அவர் உடலில் ஒரு துளி குருதியேனும் பட்டிருக்கவில்லை. அரிய உலோகமொன்றால் ஆன அவருடைய கதையும் குருதித்துளிகூட நில்லாமல் புதியதென தெரிந்தது. விண்ணிலிருந்து விளையாடும் தேவன். அந்தக் கதை ஒரு விழிமாயம். அது எவரையும் தொடுவதில்லை. சுதசோமன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் முகம் விளையாடும் மைந்தரை நோக்கும் தந்தைபோல் புன்னகை கொண்டிருந்தது.

தன்னுள் எழுந்த ஒன்று அவர் வருகையை விழைவதை உணர்ந்த அவன் திடுக்கிட்டான். அவர் என் தந்தையை கொல்ல வேண்டுமென்று விழைகிறேனா என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். அக்கணமே இல்லை இல்லையென அகம் மறுத்தது. அதற்கப்பால் ஒன்று ஆம் என்றது. அவ்வாறே அது நிகழவேண்டும். நிகழ்ந்தே தீரும். அதுவே மானுடரை மண்ணில் இணைத்து நிறுத்தியிருக்கும் நெறியொன்றின் விளக்கம். பீமன் பாய்ந்து சென்று அங்கு நின்றிருந்த யானை ஒன்றின் மேல் ஏறி அதன் பாகனை தள்ளிவிட்டு மத்தகத்தில் அமர்ந்தான். அவன் கால்கள் காதுகளை உதைத்து ஆணையிட யானை அடுக்குக்கவசம் அணிந்த தன் துதிக்கையைச் சுழற்றி வீறிட்டபடி பால்ஹிகரை நோக்கி சென்றது. தன் கையில் சுற்றியிருந்த சங்கிலியை சுழற்றி மீட்டி கதையை பறக்கவிட்டபடி பீமன் பால்ஹிகரை அணுகினான். இரு கதைகளும் வானில் சுழன்றெழுந்து பெருவிசையுடன் முட்டிக்கொண்டன.

சுதசோமன் பால்ஹிகரின் மாபெரும் கதையின் விம்மலோசையை கேட்பதுபோல் உணர்ந்தான். பீமன் அதன் வீச்சிலிருந்து தன் யானையின் மத்தகத்தை காக்கும்பொருட்டு அதை மேலும் மேலும் பின்னடையச்செய்து இருபுறமும் தலைதிருப்பி அடிகளை ஒழிந்துகொண்டு நகர்ந்தான். பிதாமகரின் கதையை தன் கதையால் தடுக்க இயலாதென்று முதல் சில அறைகளிலேயே கற்றுக்கொண்டிருந்தமையால் எவ்வகையிலும் அதை எதிர்கொள்ளவில்லை. பால்ஹிகர் கதைப்பயிற்சி அற்றவர் போலிருந்தார். எண்ணற்கரிய தோள்விசையால் அப்பெருங்கதையை வானில் பறக்கவும் விட்டார். ஆனால் அது பீமனால் திறமையாக உடலொழிந்து தவிர்க்கப் படுகையில் அந்த அசைவின் ஒழுங்கை உய்த்துணர்ந்து அதற்கேற்ப தன் வீச்சின் முறைமையை மாற்றிக்கொள்ளவில்லை.

மீண்டும் மீண்டும் ஒரே சுழற்சியுடன் குன்றாத ஒரே வீச்சுடன் வந்துகொண்டிருந்தது பிதாமகரின் கதை. அதன் சுழல் உருவாக்கிய இரும்புக்கோட்டையில் உருவாகும் சிறுவிரிசல் திறப்பொன்றுக்காக தந்தை விழிகொண்டிருந்தார். ஒருகணம் அதனூடாக உள்நுழைந்து அவருடைய யானையின் மத்தகத்தை அறைந்துவிட்டாரெனில் பிதாமகரை வீழ்த்திவிடுவார் என்று சுதசோமன் எண்ணினான். அவ்வாறு நிகழலாகாதென்று அவன் உளம் ஏங்கியது. அதன்பின் இப்புவியில் எஞ்சுவதொன்றில்லை. யானை மேல் முகிலூரும் விண்ணவனென அமர்ந்து சிரித்தும் நகைத்தும் களித்தும் விளையாடிய அம்மூதாதையால் இவர் கொல்லப்படுவதே முறை.

தெய்வங்களே! நான் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்! இத்தீயோன் எங்கிருந்து என்னுள் முளைத்தான்! ஏனிங்கு இவ்வண்ணம் தன்னை நடத்திக்கொள்கிறான்! தீயோர் மைந்தருள் எழும் தந்தையரே. அனைத்து விதைகளும் மரங்களே என்பதுபோல். நானும் அவரே. பிதாமகரே, இங்கு இதை நன்கு நிறைவுறச் செய்க! தங்கள் பெருங்கதையால் இதை முழுமை செய்க! அதன் பின் என் தலை சிதறடிக்கப்படட்டும். குருதிச் சேறென இக்களத்தில் கிடந்து நூறு கால்களால் மிதிபடுவேன் எனில் அனைத்தும் உரிய முழுமையை சென்றடைகிறது.

பின்னர் அவன் உணர்ந்தான். பால்ஹிகரின் அந்தப் பழுதற்ற கதைசுழற்றலில் ஒருபோதும் பிழை நிகழவில்லை என்று. அது மானுட உள்ளத்தால் ஏந்தி சுழற்றப்படும் கதையல்ல. விண்ணிலிருந்து சுழற்றப்படுவது. விண்ணென்பது மண்ணில் ஒருபோதும் நிகழாத முழுமைகளின் முடிவிலி. ஒவ்வொன்றும் தன் நிறைவை, அழகை, ஒழுங்கை எய்திவிட்ட இடம். பல்லாயிரம் யுகங்கள் இந்தப் பெருங்கதை இவ்வாறு சுழலக்கூடும். ஓர் அணுவிடைக்காலம்கூட அதில் பிழை நிகழப்போவதில்லை. அது ஒன்றென்றே முடிவிலி வரை நிகழும். மாற்றமில்லை என்பதனால் காலமில்லாதது. காலமின்மையில் எதுவும் வளர இயலாது. ஒரு கணம் கோடி யுகங்களாகும் இந்தப் பெருக்கில் இது இவ்வண்ணமே நின்றிருக்கும். வான்போல் அழிவிலாது.

அதை பீமன் உணர்ந்துகொண்டதுபோல் அவன் இடக்கையை தூக்க பின்புறம் முரசுகள் முழங்கின. கேடயங்களை ஏந்திய யானை நிரைகள் எழுந்து இருபுறமும் குவிந்து வந்து பீமனை பால்ஹிகரிடமிருந்து பிரித்தன. பால்ஹிகரின் பெருங்கதை அறைவால் கேடயமேந்திய யானைகள் பிளிறியபடி உடல் பின்னடைந்து நிலத்தில் விழுந்து கால்களை உதைத்துக்கொண்டு துதிக்கை சுழல துடித்தன. அவ்விடத்தை பிறிதொரு யானை நிரப்பிக்கொள்ள பால்ஹிகர் கேடயமேந்திய யானைகளின் கோட்டையால் முற்றிலும் சூழப்பட்டார். பீமன் மேலும் மேலுமென தன் தேரை பின் இழுத்து பாண்டவப் படைகளுக்குள் தன்னை உள்செலுத்திக்கொண்டான்.

“மத்தகம் தளர்கிறது! படைவீரர் அனைவரும் எழுக! அம்புகளால் பிதாமகரை சூழ்க! மத்தகம் தாழலாகாது!” என்று திருஷ்டத்யும்னனின் முரசுகள் அறைகூவின. சுதசோமன் தன் தேரை மேலும் பின்னிழுத்து பாண்டவப் படைகளுக்குள் செல்ல முயன்றான். கௌரவர்கள் நீர்த்துளிகள் ஒன்றிணைந்து பெருந்துளியாவதுபோல தங்களை தொகுத்துக்கொண்டு பின்னடைந்தனர். பால்ஹிகரின் வெற்றிக்கென முரசுகள் இயம்பியபோது அவர்கள் எவரும் கதைகளைத் தூக்கி வெற்றிக்கூச்சல் எழுப்பவில்லை. களத்திலிருந்து சிதைந்து விழுந்த கௌரவர்களின் உடல்களை கொக்கி வீசி கவ்வி இழுத்துத் திரட்டி தரையோடு தரையென கொண்டுசென்றனர் ஏவலர். கால்தளர்ந்து துச்சாதனன் போர்க்களத்தில் அமர்ந்தான். துர்விகாகன் கதைகளை நிலத்திலிட்டு இரு கைகளையும் விரித்து வான் நோக்கி கூச்சலிட்டு அழுதான்.

கௌரவப் படைகளின் மறுபுறம் முரசுகளும் கொம்புகளும் எழக்கேட்டு திரும்பியபோது சங்கின் பேரோசையுடன் பீஷ்மர் வருவதை பார்த்தான். நடுவிலிருந்த பாண்டவப் படை சிதறி அப்பால் சென்றது. பீஷ்மர் வில் அதிர அம்புவிட்டு படைவீரர்களை கொன்றுகொண்டே வந்தார். பால்ஹிகர் தன் கதையை நிலம்பதிய வைத்து யானை மேல் நிமிர்ந்து அமர்ந்து அவரை பார்த்தார். பீஷ்மர் பால்ஹிகரை சந்தித்த கணம் என்ன நிகழ்ந்ததென்று சுதசோமனால் உணரக்கூடவில்லை. அவரது வில் தழைந்தது. விழி திரும்ப தலை தாழ்த்தி ஒருகணம் நின்றபின் வில்லாலேயே பாகனை அறைந்து நேர் எதிர்த்திசைக்கு தன் தேரை திருப்பிக்கொண்டு செல்ல அவர் ஆணையிட்டார்.

தொடர்புடைய பதிவுகள்

’நானும்’ இயக்கம்-கடிதங்கள்

$
0
0

me

 

#me too-இயக்கம்

 

அன்புள்ள ஜெ

 

இந்தச் செய்தியை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்

https://tamil.samayam.com/latest-news/state-news/vairamuthu-faces-sexual-harassment-allegations/articleshow/66129555.cms

உண்மையா பொய்யா, நிரூபிக்கமுடியுமா என்பதெல்லாம் இன்றைக்கு பிரச்சினை அல்ல. இப்படிச் சொல்லப்படும்போது அப்படியெல்லாம் கண்டிப்பாக இருக்காது என்ற நம்பிக்கை எவருக்குமே வருவதில்லை என்பதைக் கவனியுங்கள். சொல்பவர் எவரென்று தெரியாமலேயே அது உண்மை என்று அத்தனைபேருக்கும் தெரிகிறது.

 

இந்தமாதிரி ஓர் இயக்கம் இப்போது வருவது தவிர்க்கவே முடியாது. பெண்கள் வேலைக்குச் சென்றது ஐம்பதாண்டுகளுக்கு முன்பு. அப்போது அது மிக பாதுகாப்பான வேலைகளுக்கு. ஆசிரியர்பணி மாதிரி. பிழைப்புக்காக வேறுவேலைக்குச் சென்றவர்களுக்கு பலவகையான சிக்கல்கள் இருந்தது

 

இன்றைக்கு தன்னம்பிக்கையுடன் பெண்கள் வெளியே வந்து இப்படி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதை ஓர் நிறுவனமாக அமைப்பாக ஆக்கவேண்டும். வெறும் முறையீடாக முடிந்துவிடக்கூடாது

 

ஜெயராணி

 

 

ஜெ,

 

தமிழகத்தின் அந்தப் புகழ் பெற்ற போராளி கைது செய்யப்பட்ட போது, அது பற்றி எழுத உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

அதன் காரணம், அவரது நடவடிக்கைகள், அரசு அதிகாரிகளை, குறிப்பாக ஆட்சியர் மற்றும் காவலரை நோக்கியவையாக இருந்தன. அவரைக் கைது செய்து, உள்ளே கவனித்துவிடுவார்கள் என்பதே பயம்.  அதிகம் பழகியிராத நண்பரான கண்ணன் தண்டபாணி, சேலம் சென்று நேரில் உதவச் சென்றிருந்தார். அவர் மூலம் விவரங்கள் கேட்டறிந்து, உங்களுக்கு எழுதினேன்.

 

அதற்கு முன்பேயே, கிருபா அவர்களின் சமூக ஊடக எழுத்துக்கள் மற்றும் நமக்கு மிகவும் அறிமுகமான, மேட்டூர் அருகில் வசிக்கும் நாட்டுப்புறக் கலை ஆர்வலர் நண்ப்ர் மூலமும், அந்தப் போராளியைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் உவப்பானவை அல்ல.

ஆனால், அவரைக் கைது செய்த்து மூர்க்கத்தனமான அரசு இயந்திரம் நடவடிக்கை. கண்டனம் அதற்கு  எனும் போது, அதில் வெட்கப்பட ஏதுமில்லை என்பது என் கருத்து.

 

நிற்க – நீங்கள் சொல்லியிருந்த லிஸ்ட்டில் தில்லி வாழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல, எல்லாத் தரப்பு இசங்களைத் தூக்கிப் பிடிக்கும் தரப்பில் இருந்தும் ஆண்களின் பெயர்கள் இருந்தன. எனது சீனியரும், நான் படித்த மேலாண் கழக இயக்குநராக இருந்தவரின் பெயரும் இருந்தது. அந்த விஷயத்தை நோண்டிய போது, அது நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டு எனப் பதில் வந்தது. ஆனால், ஒன்று, இந்த விஷயத்தில், நெருப்பில்லாமல் புகையாது என்னும் சொலவடை பெரும்பாலும் உண்மை. இது இன்று பெரிதாக வெடிக்கும் காலத்தில், ஆண்கள், சீஸரின் மனைவி போல தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

 

தேவாங்கர் கல்லூரி பேராசிரியை ஒருவரின் ஆடியோ டேப்பும், அவசரமாக அமைக்கப்பட்ட, “நமக்கு நாமே” விசாரணைக்கமிஷனும், இது எவ்வளவு பெரிதாக ஊடுருவியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  எனவே. இது கிசு கிசுவாக இருந்தாலும், பேசப்பட வேண்டியதே. சமூகப் போராட்டத்தில் இது பெண்கள் துவங்கியிருக்கும்  போர்.

 

நேற்று பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பரின் மீது பெண்களின் புகார்கள் எழுந்துள்ளன. இன்னும் பலர் மீதான புகார்கள் வரும் என எதிர்பார்க்கலாம்

 

பாலா

 

அன்புள்ள ஜெ

 

மிடூ இயக்கம் உருவானபின்னர் கொஞ்சமாவது ஆறுதல்பெருமூச்சு விடுபவர்கள் ஆய்வுமாணவிகளும் பெண்காவலர்களுமாகவே இருப்பார்கள். இவர்கள் இருவரும்தான் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் விடப்படுபவர்கள். கேள்விகேட்கவே முடியாத நிலை. சமூகக்காவலர்கள் பண்பாட்டுக்காவலர்கள் என்ரு நின்றிருக்கும் ஆண்களின் உண்மையான முகம் இப்படித்தான் உள்ளது. வலிமையான குடும்ப – சாதிப் பின்புலம் இல்லாமல் பொதுவெளிக்கு வரும் பெண்ணுக்கு இங்கே பாதுகாப்பே கிடையாது. வறுமையால் வந்தால் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். இந்தச் சூழலில் அந்தப்பெண்மட்டும் யோக்கியமா என்ற கேள்வியைக் கேட்கும் அத்தனைபேரும் சதைவெறியை உள்ளூர ஒளித்துவைத்திருப்பவர்கள், வாய்ப்புகிடைத்தால் பிராண்டும் அற்பர்கள் என்பதே என் எண்ணம். எந்தப்பெண்ணும் நூறுமுறை யோசிக்காமல் இவ்வாறு குற்றம்சொல்லமாட்டாள். இந்த இயக்கம் நம் ஆணாதிக்க உலகின் அடிப்படைகளை அசைக்கவேண்டும் என்றால் நம் ஆண்களில் மனசாட்சி உள்ளவர்கள் இதை ஆதரிக்கவேண்டும்

 

கே.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அரூ

$
0
0

aru-small-logo

 

வணக்கம்!

நாங்கள் சிங்கையிலிருந்து சுஜா, பாலா, ராம். சிங்கை காவிய முகாமில் உங்களைச் சந்தித்திருக்கிறோம்.

கனவுருப்புனைவை மையப்படுத்தி “அரூ” என்கிற தமிழ் மின்னிதழைத் துவங்கியுள்ளோம்.

அரூ ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற அரூபமான மனித மனம்தான் அத்தனை மொழிகளையும், கலைகளையும், தத்துவங்களையும், உருவங்களையும் நமக்குத் தருவித்துத் தந்திருக்கிறது. தெரிந்த வடிவங்களின் எல்லைகளுக்குள் பயணிப்பதன் ஊடாக, அரூபத்தின் தரிசனத்திற்கான தேடல்தான் இந்த அரூ. நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலகிற்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் போன்றதொரு முயற்சி.

இது, சிறுகதைகள், குறுங்கதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், காமிக்ஸ், நடனம், இசை என அத்தனை கலை வடிவங்களுக்குமான களமாக இருக்கும்.

முதல் இதழ் உங்கள் பார்வைக்கு – http://aroo.space/

இதழைக் குறித்து உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்தால் உதவியாக இருக்கும். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
சுஜா, பாலா, ராம்

 

 

 

அன்புள்ள அரு நண்பர்களுக்கு,

இந்நூற்றாண்டின் நவீனப் புராண உலகம் அறிவியலும் கற்பனையும் கனவுலகும் இணையும் மிகைபுனைவுவெளி. அது இலக்கியம், திரைப்படம், வரைகலை, காட்சிவிளையாட்டு என விரிந்துள்ளது. அவற்றை அறிமுகம் செய்வதற்கும் விவாதிப்பதற்கும் தமிழில் ஓர் இதழ் என்பது வரவேற்புக்குரியது.

வாசிப்பில் எனக்குத் தோன்றிய ஒன்றுண்டு. இத்தகைய முயற்சிகள் முன்னர் நிகழ்ந்தபோது ஏற்பட்ட பிழைகள். தமிழில் எதையும் புரிந்துகொள்ளாமல் அரைகுறையாக எழுதும் ஒரு கூட்டம் உண்டு. கோட்பாட்டாளர்கள் என்ற பாவனை கொண்டவர்கள். அடிப்படையில் மிக எளிய அரசியல்கருத்துக்களை எதன்மேலும் ஏற்றி சுற்றிச்சுற்றி செயற்கையான,சிக்கலான மொழியில் கட்டுரைகளை எழுதுவார்கள். முற்றிலும் பயனற்றவை, உள்ளீடற்றவை அவை. அவை தவிர்க்கப்படவேண்டும். எதுவானாலும் ஒரு குறைந்த அளவு வாசிப்புச்சுவை இருந்தாகவேண்டும்.

இன்னொன்று சொற்புதர்களை உருவாக்கி அதனூடாக வாசகனுக்குத் திகைப்பை உருவாக்கலாமென்னும் எண்ணத்தில் எழுதப்படுபம் புனைவுகள். சொற்களை எதிர்கொள்கையில் விலக்கம்கொள்ளும் ஆரம்பவாசகன் மட்டுமே அவற்றை பெரிதென நினைப்பான். நல்ல வாசகனால் அவற்றை சாரம்நோக்கிச் சுருக்கிக்கொள்ளமுடியும். அப்போது தெரியும் உள்ளீடின்மை அவனைச் சோர்வுறச் செய்யும். இத்தகைய புனைவுகளில் நிகழவேண்டியது கனவின் கட்டின்மை, குழந்தைமையின் களிப்பு. எளிய மொழியில் தேவதைக்கதைகளின் பாணியில்கூட அவை மேலைநாட்டுப் புனைவுகளில் நிகழ்ந்துள்ளன.சொற்புதர்கள் மூளையோட்டலால் கட்டமைக்கப்படுபவை. நீங்கள் உத்தேசிப்பது மிகுபுனைவு, அருவப்புனைவின் உலகு என்றால் அது மூளையைக் கடக்கும் ஒரு நிலையால் மட்டுமே நிகழமுடியும். அது கற்பனையால் மட்டுமே இயல்வது.

வெளிநாட்டு படைப்புகளை அறிமுகம் செய்யும்போது செயற்கையான விளையாட்டுத்தனம் இல்லாமல் நேர்த்தியாகவும் விரிவாகவும் எழுதப்படும் கட்டுரைகள் தேவை. அவை எழுதுபவரின் நன்னோக்கத்தை காட்டுவனவாக இருக்கவேண்டும். The Saragossa Manuscript: புனைவின் அடுக்குகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்க முயற்சி.

ஆனால் பெரும்பகுதி புனைவாகவும் காட்சிக்கலையாகவும் இருக்கையில்தான் இத்தகைய இதழ்கள் உண்மையான வாசகர்களை ஈர்க்கின்றன. அவை மொழியாக்கங்களாக இருக்கலாம். தமிழில் எழுதப்படுவனவாகவும் இருக்கலாம்.

அதன் அடுத்தகட்டமே மேலைநாட்டு மிகைபுனைவுகளை முன்னுதாரணமாகக் கொள்ளாமல் இங்கேயே உருவாகும் நமக்கான மிகைபுனைவுகள். அது ஓர் இலக்காக இருக்கவேண்டும்

இந்த இதழின் உள்ளடக்கத்தில் கற்பனையைச் சீண்டும்படி , மேலெழச்செய்யும்படி ஏதுமில்லை என்றே தோன்றுகிறது. முடிவிலியின் இழை மட்டுமே சற்று வேறுபட்டுள்ளது. வருமிதழ்களில் தொடர்ந்த ஒருங்கிணைப்பின் வழியாக மேலும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் வருமென நம்புகிறேன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒருதுளி இனிமையின் மீட்பு

$
0
0

anno

 

முதல்தொகுதியுடன் அறிமுகமாகும் எழுத்தாளர்களில் இருவகையினரைப் பார்க்கிறேன். முதல்வகையினர், இவர்களே பெரும்பான்மையினர், ஏற்கனவே வணிகஇதழ்களில் எழுதப்பட்டிருக்கும் படைப்புகளில் ஊறியவர்கள். அந்தச் சூழல் உருவாக்கும் புனைவுமொழிக்குள் அவர்களின் கதைகள் எழுதப்பட்டிருக்கும். இரண்டாம் வகையினர் தங்களுக்கென எழுதுவதற்கு மெலிதாகவேனும் ஓர் அனுபவமண்டலத்தைக் கொண்டவர்கள். அதைவெளிப்படுத்துவதற்கான மொழியையும் வடிவையும் தேடித் தத்தளிப்பவர்கள். இலக்கியமுன்னோடிகளில் சிலருடைய மொழியையும் வடிவையும் தங்களுக்கு அணுக்கமானதாக உணர்ந்து அவர்களைப் பின் தொடர்கிறார்கள்.

 

முதல்வகையினர் பெரும்பாலும் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைக்கருக்களை ஆர்வமூட்டும் கதைக்கட்டுமானத்துடன் சற்றே வேறான கோணத்தில் சொல்பவர்களாக இருப்பார்கள். ஒழுக்குள்ள நடையும் ஏறத்தாழ சரியான வடிவமும் அமைந்திருக்கும். ஆனால் அந்த வடிவம் சூழலில் ஏற்கனவே சொல்லிச்சொல்லி நிலைகொண்டதாக இருக்கும்.

 

இரண்டாமவர்களின் ஆக்கங்களில் மூன்றுவகைப் படைப்புகள் இடம்பெற்றிருக்கும். தனக்குரிய மொழியையும் வடிவையும் அடையாமையால் முதிராக்கதைசொல்லலாக நின்றுவிடும் ஆக்கங்கள். இலக்கியமுன்னோடி ஒருவரின் நடையையும் மொழியையும் அணுக்கமாகப் பின்பற்றி அதனூடாக வெற்றியடைந்த ஆக்கங்கள். தனக்கான தனித்துவத்தை சற்றே வெளிப்படுத்தி நின்றிருக்கும் ஆக்கங்கள்.

 

இரண்டாம்வகையினரே தமிழில் பின்னாளில் அழுத்தமான செல்வாக்கைச் செலுத்தும் முதன்மைப்படைப்பாளிகளாக ஆகிறார்கள். அவர்கள் தங்கள் முன்னோடியின் நடையை ஊர்தியாகக்கொண்டு மேலெழுகிறார்கள். ஏதோ ஒருகட்டத்தில் அவருக்கும் தனக்குமான வேறுபாட்டை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எழுதி எழுதி அதை விரிவாக்கி தனது நடையையும் வடிவையும் கண்டடைகிறார்கள். காலத்தில் நிலைகொள்கிறார்கள்.

 

மாறாக வணிகக்கேளிக்கை எழுத்துச்சூழலின் பொதுநடையிலிருந்து கிளைத்தவர்கள் அந்த எல்லையை மீறுவது மிகமிக அரிது. அவர்கள் எடுத்த எடுப்பிலேயே சுவாரசியங்களை உருவாக்குவார்கள். ஆனால் சுவாரசியம் எனும் எல்லையை கடக்கவேமுடியாதவர்களாக நீடிப்பார்கள். தமிழிலக்கியத்தில் எண்பதுகளில் அறிமுகமான சில எழுத்தாளர்களைக்கொண்டு இதை நான் அவதானித்திருக்கிறேன்.

 

ஆகவே முதல்கதைத்தொகுதியில் முதிரா ஆக்கங்கள் இருப்பது ஒரு நல்ல அடையாளம். தனக்குரிய பட்டறிவுமண்டலத்தை நம்பி அதை எழுத அவ்வெழுத்தாளர் முயல்வதன்  சான்று அது. ஏற்கனவே வணிகச்சூழலில் எழுதப்பட்ட கதைக்களத்தில், கதைக்கருக்களில், மொழியில் ஓர் அறிமுக எழுத்தாளர் படைப்புகள் எழுதியிருந்தால் மிக வலுவான அடிகள் வழியாக அவர் தன் ஆளுமையை உடைத்து மீண்டும் வார்த்தாலொழிய இலக்கியப்படைப்புச்சூழலுக்குள் நுழையவியலாது. இலக்கியவிமர்சகர்கள் புதுமை, தனித்தன்மை ஆகியவற்றை மட்டுமே அளவீடாகக் கொள்வார்கள். தேர்ச்சி என்பதை அல்ல, அது பின்னாளில் நிகழ்வது.

 

வணிக எழுத்துக்குள்ள ஒரு சிறப்பியல்பால் இந்த நிலை உருவாகிறது. வணிகச்சூழலில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களும் சேர்ந்து ஒரு பொதுவான புனைவுமொழியைத்தான் உருவாக்குகிறார்கள். உதாரணமாக, சுஜாதாவின் மொழி தனித்துவம் கொண்டது. ஆனால் அதை சற்றே உள்ளடங்கியவடிவில் பாலகுமாரனில் காணமுடியும். இந்துமதி, வாசந்தி, புஷ்பாதங்கத்துரை ஸ்டெல்லா புரூஸ் அனைவரிலும் காணமுடியும்.

 

ஏனென்றால் அதை வாசிக்கும் வாசகச்சூழல் பொதுவானது.   அவர்கள் எழுத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பவர்கள் அல்ல, எழுத்தை தன்னை நோக்கி இழுப்பவர்கள். வணிக எழுத்து உடனடியாக வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது. ஆகவே வாசகரசனைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருப்பது. இதனால் ஒருதலைமுறை வாசகர்களுக்கு பொதுவாக ஒரு புனைவுமொழி அமைகிறது. அனைத்து எழுத்துக்களும் அதன் ஒரு பகுதியில் சென்றமைகின்றன.

 

நான் என் வாசிப்பில் இன்று எழுதவரும் எழுத்தாளர் ஒருவரிடம் மிகமிக எதிர்ச்சுவையாகக் கருதுவது சமகால வணிக எழுத்தின் சாயல் இருப்பதைத்தான். பிற இயல்புகள் என்னென்ன இருந்தாலும் சரி, அது அப்படைப்பை கீழிறக்கிவிடுகிறது. எழுத்தாளனின் வாழ்க்கைநோக்கு மாறிக்கொண்டே இருக்கும். நடை என்பது கையசைவுகள், பேச்சுமுறைபோல. உருவானபின் மாற்றுவது மிகக்கடினம்

 

அனோஜன் பாலகிருஷ்ணனின் இரண்டாவது தொகுப்பான பச்சைநரம்புதான் என் வாசிப்பில் அவருடைய முதல் தொகுதி. இத்தொகுதியின் மிகச்சிறப்பான கூறு என நான் நினைப்பது தமிழ் வணிக எழுத்தின் சாயல் சற்றுமில்லாததாக இது உள்ளது என்பது. நடை, மொழி அனைத்துமே அந்தப் பொதுச்சூழலில் இருந்து முற்றிலும் அயலானதாக உள்ளது. மொத்தத் தொகுப்பிலும் வணிகஎழுத்திலிருந்து பெற்ற தேய்வழக்குகள் ஒன்றுகூட இல்லை. மீண்டும் மீண்டும் பக்கங்களைப்புரட்டி அதற்காகவே தேடினேன். ஒன்றையும் காணாதபோது ஓர் உவகை எழுந்தது. தனித்தன்மைகொண்ட நடையுடன் தமிழிலக்கியத்தில் ஓர் முதன்மை ஆளுமையாக வருங்காலத்தில் திகழவிருக்கும் படைப்பாளி ஒருவரை வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்னும் எண்ணத்தை அடைந்தேன்.

 

அனோஜன் பாலகிருஷ்ணன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர். அனைத்துக்கதைகளுமே இலங்கையைக் களமாகக்கொண்டவை. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தின் இறுதிநாட்களையும் அதன்பின்னான காலகட்டத்தையும் சித்தரிப்பவை. ஆனால் இவை போராட்டத்தின் கதைகள் அல்ல. போராட்டத்தைப்பற்றிய நாளிதழ்ச்செய்திகளை வைத்துக்கொண்டு மிகையுணர்ச்சி கொண்டு எகிறிக்குதிக்கும் ஆக்கங்களையே இங்கே வாசகரகள் பெரும்பாலும் வாசிக்கநேர்கிறது. பழைய முற்போக்குப் பிரச்சார எழுத்தின் மறுவடிவங்கள் அவை. இலக்கியவாசிப்பாளன், தனக்கு உவப்பான அரசியல்நிலைபாடுகள் கொண்டிருந்தாலும்கூட, அவற்றை கலை அல்ல என நிராகரிப்பான்.

 

அனோஜனின் இக்கதைகள் இலக்கியத்திற்குரிய அடிப்படைத் தகுதிகள் இரண்டைக் கொண்டிருக்கின்றன. ஒன்று, அனுபவநேர்மை. இன்னொன்று, உணர்வுச்சமநிலை. இவை பெரும்பாலும் போரால் பாதிக்கப்பட்டு அச்சமும் ஐயமும் கொந்தளிப்புமாக அந்தக் காலகட்டத்தைக் கடந்துவரும் எளிய நடுத்தரவர்க்கத்து இளைஞர்களின் உலகைச் சார்ந்தவையாக உள்ளன. அவர்களை அலைக்கழிப்பது அரசியலோ கொள்கைகளோ அல்ல. அன்றாட யதார்த்தமாக உள்ள வன்முறையும் கண்காணிப்பும்தான்.

pac

அனோஜனின் இத்தொகுதியிலுள்ள கதைகளின் பொதுத்தன்மையைக் கொண்டு ஒரு ‘வயதடைதல்’ [Coming of age ] நாவலின் தனி அத்தியாயங்களாக இவற்றை வாசிக்கமுடியும். பெரும்பாலான கதைகள் வளரிளம்பருவத்துச் சிறுவனொருவனின் வாழ்க்கைப்புலத்தையும் நோக்கையும் கொண்டுள்ளன. அவன் எதிர்கொள்வன இரண்டு உலகங்கள். அரசியல்வன்முறையின் சூழல் ஒன்று. காமம் இன்னொன்று.

 

இவ்விரண்டில் அரசியல்வன்முறையின் சூழலில் அனோஜனின் அவதானிப்புகளும் அவற்றை மிகையின்றி, நுட்பமாகச் சொல்லியிருக்கும் நேர்த்தியும் அக்கதைகளை முக்கியமான கலைப்படைப்புகளாக ஆக்குகின்றன. காமத்தை பெரும்பாலும் பகற்கனவுகளினூடாகவே கதைசொல்லி எதிர்கொள்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

 

காமத்தைப்பற்றி மரபான கதைச்சூழல்களில் சொல்லப்பட்டிருப்பதன் விரிவாக்கங்களாக, பொதுவான நம்பிக்கைகளின் நீட்சிகளாக அக்கதைகள் உள்ளன. அவை நுட்பமான ஒழுக்குள்ள கதைசொல்லலின் ஊடாக வாசிக்கத்தக்க கதைகளாக அமைந்திருந்தாலும் இலக்கியவாசகன் கதையில்தேடும் ‘பிறிதொன்றிலாததன்மை’ கொண்டவை அல்ல. முழுமைநோக்கோ, மாற்றுநோக்கோ வெளிப்படுவனவும் அல்ல. ஆகவே அவை ஆழமான ஊடுருவல் எதையும் நிகழ்த்தாமலேயே அக்கதைகள் கடந்துசென்றுவிடுகின்றன.

 

உதாரணமாக தலைப்புக்கதையாகிய பச்சைநரம்பு. தன் பாலியலின் நுண்ணிய தளம் ஒன்றைக் கண்டடையும் கதைசொல்லியின் தருணம் அக்கதையின் உச்சம். தன் வயதான ஒருத்தியிடமும் தன்னைவிட மூத்த ஒருத்தியிடமும் கண்டடையும் அந்தப் பச்சைநரம்பு. ஆனால் அக்கண்டடைதல் இலக்கியவாசகனுக்கு எவ்வகையிலும் புதியது அல்ல. இத்தகைய வளரிளம்பருவத்துக் காமத்தில் ஊடாடிச்செல்லும் இழைதான் அது என அவன் ஏற்கனவே அறிந்திருப்பான்.

 

இச்சை கதை இதேபோன்று காமத்தின் இன்னொரு பக்கம். அழுத்தப்பட்ட விழைவு அந்த விசையாலேயே பக்கவாட்டில் கண்டடையும் விரிசல்கள். அது அக்காலத்தை மிக இயல்பாகக் கடந்துசெல்வதிலுள்ள விந்தை. ஆயினும் அக்கதையும் புதியது அல்ல. வெளிதல் போன்ற கதைகளை ஜி.நாகராஜன், ராஜேந்திரசோழன் எழுபதுகளிலேயே எழுதிவிட்டார். ஜெயகாந்தன், வண்ணதாசன் கதைகளில்கூட இதே உலகு வெளிப்பட்டுள்ளது. பாலியல்தொழிலாளியின் உலகினூடாகச் செல்லும் இக்கதை நாம் நன்கறிந்த அதே பாலியல்தொழிலாளிதான். அவளுடைய அந்தக்காதலனும் வழக்கமானவன்தான். அவன் பேசும் தத்துவம்கூட ஏற்கனவே இலக்கியத்தில் கேட்டதுபோல் உள்ளது.

 

இக்கதைகளின் சிறப்பு என்னவென்றால் அனோஜனின் இக்கதைகள் முன்னோடிகள் எழுதிய கதைகளுக்குப்பின்னால் தேர்ச்சியின்றித் தொடர்வனபோல் இல்லை. அவர்கள் எழுதிய இடத்திற்கு மிக எளிதாக வந்து நின்றிருப்பவையாக உள்ளன. இதனாலேயே இவை தமிழ்ச்சூழலில் பெரிதும் ரசிக்கப்படுவனாக இருக்கலாம். ஆனால் இலக்கியவாசகனுக்கு அவை எந்த அளவுக்கு முன்னகர்ந்துள்ளன என்பதே முதல்வினாவாக இருக்கும்.

 

அனோஜனின் இத்தொகுதியிலுள்ள கதைகளில் முக்கியமானவை போரும் அடக்குமுறையும் கண்காணிப்பும் மிகுந்திருக்கும் சூழலில் வளரும் இளைஞனின் மெய்யான உணர்ச்சிகளை, அவன் அதற்குள் செயல்படும் விசைகளை கண்டடையும் தருணங்களைச் சொல்லும் படைப்புகள்தான். அவ்வகையில் தமிழுக்கு முக்கியமான தொகுதி இது.

 

தன்னை புரட்சியாளனாகவோ கலகக்காரனாகவோ எல்லாம் கற்பனை செய்துகொள்வதுதான் இந்த வயதில் எழுதவரும் படைப்பாளி சென்று சேரும் படுகுழி. அந்தப்பொய்மையை மேலும் மேலும் ஊக்கி அதை தொடர்ந்து நடிக்கும்படி அவனை உந்தும் அரசியல்வாதிகள் இலக்கியத்துள் புகுந்து கூச்சலிடுவது என்றுமே இங்கு மிகுதி. அக்கூச்சலால் அழிக்கப்பட்ட எழுத்தாளர்களின் ஒரு பட்டியலே என்னிடம் உள்ளது. அனோஜன் இயல்பாக, மிகச்சரியாக, தன்னை வரலாற்றுப்பெருக்கின் ஒரு துளியாக உருவகித்துக்கொள்கிறார். அந்த நேர்மையாலேயே கைகூடும் கலையமைதி இக்கதைகளில் மீளமீளக் காணக்கிடைக்கிறது.

 

போர்ச்சூழல் என்பது முதன்மையாக கருத்துக்கள் அனைத்துமே மிகையாக்கப்பட்டு பெருவிசையுடன் பிரச்சாரம் செய்யப்பட்டு தனிச்சிந்தனைகளுக்கு இடமே இல்லாமல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும் ஒரு களம். அங்கிருந்து இப்படி அனுபவங்களுக்கு உண்மையாக அமைந்து எழுத முழுச்சூழலையும் நெஞ்சுகொடுத்து எதிர்த்துநிற்கும் படைப்பாணவமும் அதிலிருந்து எழும் வற்றாத ஆற்றலும் தேவை. அது அனோஜனை இன்னும் நெடுங்காலம் கைவிடாதிருக்கட்டும்.

 

வெவ்வேறு களங்களின் நீள்கின்றன வன்முறையை எதிர்கொள்வதைக் குறித்த கதைகள். மனநிழல் கதையில் ‘வேந்தனைச் சுட்டுட்டாங்கடா’ என்னும் அலறலுடன் சூழல் விரிகிறது. தோழன் அரசுப்படைகளால் சுடப்படுகிறான். அதைத் தொடர்ந்த கண்காணிப்புகள், அதன் அச்சம் உறைந்து குளிரும் சூழல். அந்தப்பதற்றம் வழியாகச் செல்லும் கதையின் நுண்ணிய உச்சம் என்பது அங்கிருந்து கிளம்பி சுவிட்சர்லாந்தில் அகதியாக நுழையும்போது அந்தத் தோழன் சுடப்பட்ட செய்தியும் அவனுடன் இருக்கும் புகைப்படங்களுமே அகதிக்கோரிக்கைக்கான ஆவணமாக ஆவதுதான். தம்பி செத்ததும் மயங்கிவிழும் அக்காவுக்கும்கூட அதுவே முதலீடு. சுவிட்சர்லாந்தில் இருக்கும் வேந்தனின் அக்காவைச் சென்று பார்க்க அம்மா சொல்லும்போது அவன் சென்றமையும் அமைதியில் வரலாற்றின் அபத்தம் ஒன்று வெளிப்படுகிறது.

 

இணைகோடு போர்ச்சூழலில் சிங்களச் சிப்பாய் ஒருவனுடன் காதல்கொள்ளும் பெண்ணின் கதை. போர்முடிந்து ஒவ்வொன்றும் என்னவெல்லாமோ ஆக மாறியபின் அப்பெண்ணைச் சந்தித்து அவள் வழியாக அதிகாரவர்க்கத்துடன் ஒரு மெல்லிய தொடர்பை உருவாக்கிக் கொள்கையில் அவனுக்குப்புரிகிறது அப்பெண்ணைக் கவர்ந்து காதல்கொள்ளச் செய்த அந்த விசை என்ன என்று.

 

ஒவ்வொரு கதையும் இதுவரைச் சொல்லப்படாத ஒன்றைச் சொல்கின்றது. அவை புனைவிலக்கியத்தால் மட்டுமே சொல்லப்படத்தக்க, செய்தியாக எந்த மதிப்பும் அற்ற மிகச்சிறிய உண்மைகள், அதேசமயம் முழுமைநோக்கில் வாழ்க்கையையே முடிவுசெய்யும் ஆற்றல்கொண்டவை என்பதே இக்கதைகளை முக்கியமானவையாக ஆக்குகிறது.

 

இவற்றில் இருகதைகள் இரு எல்லையில் மானுடத்தின் இயல்புகளைச் சொல்வனவாக முக்கியமானவை. பலி கதையில் முதல் வெடிகுண்டுத் தாக்குதலில் ஏதுமறியாதவனும் தன் இனத்தைச் சேர்ந்தவனுமாகிய பத்துவயதுச் சிறுவன் ஒருவனைத் தவறாகக் கொல்கிறான் ஒர் இளைஞன். குண்டின் கந்தக மணம் ஆடையில் மாறாதிருக்க உளக்கொந்தளிப்பால் வதைபடுகிறான். அடுத்த முறை செல்பேசியை இயக்கி குண்டை வெடிக்கச்செய்ய ஆணையிடப்படுகையில் தவிக்கிறான். கட்டாயப்படுத்தப்பட்டமையால் அதைக் கடந்து அதைச் செய்கிறான். அது அவனை கொலைக்காரனாக்கிவிடுகிறது. பிறகு எந்த தயக்கமும் இல்லை.

 

மானுடனின் அறவுணர்ச்சி, இரக்கம் என்பதெல்லாம் எத்தனைமேலோட்டமான சூழல்சார்ந்த உளப்பழக்கங்கள், பழக்கம் மூலமே எத்தனை எளிதாக அவற்றைத் தாண்டமுடியும் எனச் சொல்லும் இக்கதை அனோஜனின் இயல்பை வெளிப்படுத்துவதும்கூட.பெரும்பாலான கதைகளில் மானுடமேன்மை எனச் சொல்லப்படும் அனைத்தையும் பொருளற்றவையாகவே காண்கிறான் கதைசொல்லி. காமத்தாலும் வன்முறையாலும் முடையப்பட்ட ஒன்றாகவே  மானுட அகம் மீளமீளச் சித்தரிக்கப்படுகிறது.

 

இப்படைப்புகளில் குரூரமானது என்று தோன்றுவது உறுப்பு. ஈழப்போரின்போது பல்வேறுவகைகளில் ஆண்கள் உறுப்புகள் சிதைக்கப்படுவது நிகழ்ந்தது. அது வதை மட்டுமல்ல ஒருவகை குறியீட்டுச்செயல்பாடும்கூட. ஆண்மை என்பது தன்னிலை, ஆணவம், தாக்கும்தன்மை என்றெல்லாம் பொருள்கொள்வது. ‘நலமடித்தல்’ என்ற விந்தையான சொல் ஈழ வழக்கில் இதைச் சுட்டுகிறது.

 

உணர்வால், உடலால் நலமடிக்கப்பட்ட ஒருவனின் நுட்பமான மீட்சியைச் சொல்லும் இக்கதை பழிவாங்கலினூடாகவோ மேலெழுதலினூடாகவோ அதை சித்தரிக்கவில்லை. முற்றிலும் எதிர்பாராத இடமொன்றில் முற்றிலும் சாதாரணமான ஒரு செயல்வழியாக அதைக் காட்டுகிறது. ஒற்றைப்பருக்கை சீனியை நாவில் வைத்துக்கொண்டதுபோல் துளியினும் துளியான இனிமை. அது அளிக்கும் புத்துயிர்.

 

ஈழச்சூழலில் சமீபகாலத்தில் எழுதப்பட்ட கதைகளில் முதன்மையானது இது என்பேன். மீளமீள அரசியல்பிரக்ஞையால் மட்டுமே ஈழக்கதைகள் எழுதப்படுகின்றன. எத்தனை முதிர்ச்சியானதாக, எத்தனை முழுமையானதாக இருந்தாலும் அரசியல்பிரக்ஞை என்பது இலக்கியத்தில் ஒருபடி குறைவானதே. அதனால் கவித்துவத்தை அடையவியலாது. அது எப்போதும் ஆசிரியனின் குரலுடன் இணைந்தே வெளிப்படும். ஆசிரியனின் கருத்துநிலை இன்றி அது நிலைகொள்ள இயலாது. அதுவே அதன் மையமான கலைக்குறையாக எப்போதும் உடனிருக்கும். உச்சநிலையில் அதனால் இயல்வது கூரிய அங்கதம் மட்டுமே.

 

ஆனால் இலக்கியக்கலை இலக்காக்கும் வெற்றி என்பது கவித்துவத்தில், தரிசனத்தில் உள்ளது. அதை கதைக்குள் நிகழ்த்துவதென்பது ஆசிரியன் தன்னை உதிர்த்துச் சென்றடையும் ஒரு தருணம். அது நிகழ்ந்திருக்கும் இக்கதையால் அனோஜன் இச்சிறுகதைத் தொகுதியில் இலக்கிய ஆசிரியனாக வெளிப்படுகிறார்.

பச்சை நரம்பு. சிறுகதைத் தொகுதி. அனோஜன் பாலகிருஷ்ணன். கிழக்கு பதிப்பகம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16875 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>