Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16806 articles
Browse latest View live

உரைகள்-கடிதங்கள்

$
0
0

தினமும் உங்களை படித்து வருபவனாயினும், உங்கள் உரைகள் ஒவ்வன்றிலும் புதிதாக 20 விஷயங்களாவது கற்று தேறுகிறேன்.  ஒரு மணி நேர காணொளி என்றால்  2 மணி நேர இலக்கிய போதையில் கிரங்கும் குதூகலம்.  நடுவில் நிறுத்தி, கேட்டவற்றை அசை  போட்டு, மீண்டெழுந்து  தொடர்வது தான்  என் வாடிக்கை .  உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியினையும் எங்களுக்கான அனுபவமாகியதற்கு  எப்போதும் கடமை பட்டுள்ளோம்.

நன்றி
ரமேஷ்

 

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் காணொளிகள் என்னைப்பொறுத்தவரை மிகச்சிறந்த வகுப்புகள். காலையில் வேலைசெய்துகொண்டிருக்கையில் தொடர்ச்சியாக அவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஓரிரு மாதங்களுக்குள் பல உரைகளை திரும்பத்திரும்பக் கேட்டும்கூட முடிந்துவிட்டன. மீண்டும் கேட்கவேண்டியிருக்கிறது. எனக்கு வாசிப்பதைவிட இது இன்னும்கூட அணுக்கமாக உள்ளது. என்னிடமே எவரோ நேராகப்பேசுவதுபோல உள்ளது. பேருந்தில் பயணம் போகும்போதுகூட கேட்டுக்கொண்டே செல்வேன்.

 

நீங்கள் யூடியூபில் தொடர்ச்சியாக உங்கள் பேச்சுக்களை வலையேற்றலாமே. ஒரு டிவி போலவோ அல்லது ரேடியோ போலவோ. அல்லது நண்பர்களுடனான உரையாடலை போடலாம். மரபிலக்கியம் நவீன இலக்கியம் சார்ந்து நிறையவே பேசியிருக்கிறீர்கள். அவற்றை எல்லாம் நீங்கள் வலையேற்றம் செய்வதென்பது மிகப்பெரிய ஒரு சேவையாக ஆகும் என நினைக்கிறேன்

 

ஆர்.வித்யா

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் உரைகளின் காணொளிகளை தொடர்ச்சியாக கவனித்துவருகிறேன். பொதுவாக எனக்கு சொற்பொழிவுகள் கேட்பதில் ஆர்வம் உண்டு. ஆனால் ஓங்கிய குரலில் பேசப்படும் சொற்பொழிவுகள் சீக்கிரமே காதுக்குச் சலிப்பை அளித்துவிடுகின்றன. நீங்கள் பேசுவதுபோல உணர்ச்சிகரமாக, அந்தரங்கமாகப்பேசும் பேச்சுக்களே மிகவும் நெருக்கமானவையாக உள்ளன. அவற்றை நான் பலமுறை திரும்பத்திரும்பக் கேட்கிறேன். காந்தியம் தோற்றுப்போகும் இடம் தான் மிகச்சிறந்ததாக என் எண்ணத்தில் உள்ளது. இன்றைக்குமேடைப்பேச்சில் தேவையானது இந்தவகையான ஆத்மார்ந்தமான பேச்சுக்கள்தான்

 

ஜனார்த்தனன்

 

என் உரைகள், காணொளிகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிற்பங்களை அறிவது…

$
0
0

Hoysala_Javagal_Lakshmi_Narashimha_temple-3104

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

 

மன்மதன் சிறுகதையிலும், இந்தியப் பயணங்கள் பயணக் குறிப்பிலும், மற்றும் பெயர் மறந்து போன உங்களது எழுத்துக்கள் சிலவற்றிலும் சிற்பங்கள் பற்றிய நுணுக்கமான தகவல்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்தியப் பயணங்களில், நீங்கள் முதலில் சென்ற தாரமங்கலம் தான் நான் பிறந்த ஊர். இங்குள்ள கைலாசநாதர் கோவில் சிற்பங்களைப் பலமுறைச் சென்று பார்த்துள்ளேன். இருந்தாலும் உங்களின் இ.ப படித்த பின்பு, சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றதும் முதல் வேலையாக கோவிலுக்குச் சென்று, நீங்கள் குறிப்பிட்டவையும் இன்ன பிறவும் கண்டேன். இருபது வருடங்கள் கண் முன்னே கிடந்த இன்பங்களை நுகராமல் வெறும் காட்சிப் பொருளாய் கண்டதை நினைத்த போது, பல பேர் ஒரு கருத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு சபையில் அதைப் பற்றி ஒன்றும் அறியாதவனின் இருப்பால் அவனுக்கு ஏற்படும் சூன்யமான மனநிலை எனக்கும் ஏற்பட்டது.

 

 

சிற்பங்களைப் பற்றியும், கோவில்களைப் பற்றியும் மேலும் அறிய ஆவல் ஏற்பட்டது. ஆனால் எங்கு சென்று அறிந்து கொள்வது?  மீண்டும் சூன்யம். அந்த ஆவல் ஏற்படக் காரணமாய் இருந்த உங்களிடமே கேட்டு விடலாம் என்று தோன்றியது. ஆனால் என்னுடைய மின்னஞ்சலுக்கெல்லாம் பதில் வருமா என்ற தாழ்வு மனப்பான்மையில் அன்று எதுவும் அனுப்பவில்லை. இரண்டு மாதங்கள் பலரிடம் கேட்டும் உருப்படியான தகவல்களைப் பெறவில்லை. உங்களிடமே கேட்டுவிடலாம் என்று மீண்டும் தோன்றியது.  சிற்பங்கள் பற்றி நுணுக்கமாக அறிந்து கொள்ள நூல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்கள். கிண்டிலில் இருந்தால் இன்னும் நல்லது

 

செ வேல்முருகன்

 

அன்புள்ள வேல்முருகன்

 

எப்போதும் இந்த வினா வந்தபடியே உள்ளது. சிற்பங்கள் என அடித்து என் இணையதளத்தில் தேடினாலே பல கட்டுரைகள் வரும். சிற்பங்களை முறையாக அறியவேண்டுமென ஆர்வம் கொண்டிருப்பதும் அதற்காக நீங்கள் முயல்வதும் மகிழ்வளிக்கிறது. நினைவில்கொள்க, எந்த நுண்கலையிலும் தொடர்ந்து அதில் ஈடுபடுவதன் வழியாகவே ஆழ்ந்துசெல்ல முடியும். குறைந்தது இரண்டு ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக சிற்பங்களை பார்த்துக்கொண்டே இருங்கள், கூடவே கொஞ்சம் தெரிந்துகொண்டுமிருங்கள். கண்களே கற்பிக்கும்

 

ஜெ

 

சிற்பக்கலை அறிய…

சிற்பங்களைப் பயில…

கலையறிதல்

கலையின்மை

சிற்பங்களுக்காக ஒரு பயணம்

வாழும் சிற்பங்கள்

நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்

கலை -கடிதங்கள் மேலும்…

அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்

இந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன?

இந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்

இந்தியக்கலை -கடிதங்கள்

 

ஆட்டம்

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

$
0
0
mukundjpg
இனிய ஜெயம்
வழமைபோல கவிதை தேடுதலில் கண்டடைந்தவை இவை .  முகுந்த் நாகராஜன் எழுதிய புதிய கவிதைகள் இவை
 முகுந்த் form ல இருக்கார் போல .
கடலூர் சீனு
வீட்டைப் பிரித்தல்
=================
பாத்ரூம் கதவென்று
தப்பாக நினைத்த பாப்பா
வீட்டுக்கதவைத்
திறந்த உடனேயே
போய் விட்டது.
ஹாலைக் கடந்து
படுக்கையறைக்குள் நுழைந்து
பாத்ரூம் கதவைத்
திறப்பதற்குள்
காலம் கடந்து விட்டது.
வழியெங்கும் சிந்திய
நீர்த்துளிகள்
வீட்டை இரண்டாகப்
பிரித்து விட்டிருந்தன,
குழந்தைக்கு முன்,
குழந்தைக்குப் பின் என.
அம்மா வழிச்சாலை
===================
ஒரு துண்டு தோசை கொடுத்தால்
‘அம்மா தரட்டும்’ என்று
கூவிக்கொண்டு ஓடுவாள் நேயமுகில்.
டம்ளரில் மென் சூடான பால் கொடுத்தாலும்
அப்படியே ஓடுவாள்.
பல் துலக்க ப்ரஷ்ஷைக் கொடுத்தாலும்
அப்படியே.
ஒருநாள் காலை
ஈரமான கையால்
அவள் முகம் துடைக்கப் போனேன்.
என் கையைப் பிடித்துக்கொண்டே
‘அம்மா தரட்டும்’ என்று ஓடி
என் கை ஈரத்தை
அம்மாவின் கைக்கு மாற்றி
முகம் துடைத்துக் கொண்டாள்.
அவளை அடைய
அம்மா வழிச்சாலை ஒன்றே இருக்கிறது.

 

*
எப்போதும்,
‘ஆஃபீஸ்-ல பூச்சி இருக்கு,
போகாதே’ என்று சொல்லும்
நேயமுகில்
அன்று ஒரு கோபத்தில்
‘அப்பா, நீ ஆஃபீஸ்-க்குப் போ’
என்றுவிட்டாள்.
‘சரி, நான் போறேன்’ என்று
திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
சுற்றிச் சுற்றி வந்தாள் கொஞ்ச நேரம்.
தன் சாரட்டு வண்டியைக் கொடுத்து
சமாதானம் செய்ய வந்தாள்.
நான் வாங்கிக்கொள்ளவில்லை.
திடீர் உற்சாகத்துடன்
‘அப்பா, உனக்கு லீவ் ஆச்சே’ என்றாள்.
அட, ஆமாம்.
‘எனக்கும் லீவு’ என்றாள்.
‘செக்கருக்கும் லீவு’ என்றாள்.
அது அவளுடைய கரடி பொம்மை.
தன் பொம்மைகளையெல்லாம்
ஒவ்வொன்றாக அழைத்து
விடுமுறை அறிவித்தாள்.
சமைக்க வைத்திருந்த காய்கள்,
தொலைக்காட்சி, சோபா, ஒயர் கூடை,
விளக்கு, மின்விசிறி, ஜன்னல்,
தண்ணீர் பாட்டில்,என்று
தன் பார்வையில் பட்ட எல்லாவற்றுக்கும்
விடுமுறையைக் கொடுத்தாள்.
ஒவ்வொரு அறையாக நுழைந்து
தன் பொற்பிரம்பால் தொட்டு
பொருட்களையெல்லாம் விடுவித்தாள்.
தண்ணீர் கேன் ‘அப்பாடா’ என்று
தன் பெருமூச்சை
ஒரு குமிழியாய் வெளியிட்டு
காலை நீட்டி உட்கார்ந்து கொண்டது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50

$
0
0

bowகோசல நாட்டரசன் பிருஹத்பலன் சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் தயங்கி நின்றான். அவனருகே வந்த தேர்வலன் “அரசே” என்றான். அவனிடம் “செல்க!” என கைகாட்டிவிட்டு அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வருவதற்காகக் காத்து நின்றிருந்தான். அவர்கள் ஒருவர் இருவராகும் விழிமயக்கு என அருகணைந்து தலைவணங்கியதும் “நாம் பேசவேண்டும்” என்றான். விந்தன் “தனியாகவா?” என்றான். “ஆம், இங்கே பேச இயலாத சில உள்ளன” என்றான் பிருஹத்பலன். “நம் குடிலுக்குச் செல்வோம்… கவசமணிய இன்னும் பொழுதுள்ளது” என்றான் விந்தன். விந்தன் பேசுகையில் அதே முகக்குறி அனுவிந்தனின் முகத்தில் உருவானது. அவனும் அச்சொற்களைச் சொல்லி நின்றதுபோல.

பிருஹத்பலன் “நான் அனைவரிடமும் பேசவிழைகிறேன். மாளவரும் வரட்டும்” என்றான். “கிருதவர்மர் வருகிறார்” என்றான் விந்தன். “நான் யாதவர்களைப் பற்றி பேசவில்லை” என்றான் பிருஹத்பலன். “ஆம், நாம் மட்டுமே பேசவேண்டிய சில உள்ளன” என்றான் விந்தன். அவர்கள் முற்றத்தை அடைந்தபோது உள்ளிருந்து உத்தர திரிகர்த்த நாட்டு அரசன் ஷேமங்கரனும் புளிந்த நாட்டு அரசன் சுகுமாரனும் பேசியபடி வந்தனர். பின்னால் தார்விக நாட்டரசன் சசாங்கனுடன் திரிகர்த்தத்தின் மூத்த அரசர் சத்யரதர் வந்தார். பிருஹத்பலன் விந்தனிடம் “அவர்கள் அனைவரையும் என் குடிலுக்கு வரச்சொல்லலாம்” என்றான்.

தட்சிண திரிகர்த்தத்தின் சுசர்மன் பின்னால் தனியாக வந்தான். விந்தன் அதை நோக்கியபின் திரும்பி புன்னகைத்து “தந்தையும் மைந்தரும் தனித்தனியாக வருகிறார்கள். ஓரவையில் அவர்கள் ஒற்றைச் சொல் எடுத்து நான் கண்டதில்லை” என்றான். அனுவிந்தன் “நானே சென்று சொல்கிறேன், அவர்களை ஒருங்குகூட்டவேண்டியது நம் தேவை” என்று அவர்களை நோக்கி சென்றான். அபிசார மன்னர் சுபத்ரரும் அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் சேர்ந்தே வந்தார்கள். அவர்களும் சோர்ந்திருந்தனர். எனவே சொற்களில்லாத எடைகொண்ட முகத்துடன் தளர்ந்த காலடிகளுடன் அணுகினர். அபிசாரர்களின் இளவரசர்கள் நிசந்திரன், மிருதபன், சுவிஷ்டன் ஆகியோர் களம்பட்டதை பிருஹத்பலன் நினைவுகூர்ந்தான். சுபத்ரரின் கைகள் எதையோ காற்றில் துழாவுவனபோல் அசைந்துகொண்டிருந்தன.

பிருஹத்பலன் “கலிங்கர்களின் களவீழ்ச்சிக்குப்பின் ஷத்ரியர்கள் தலைமையற்றவர்களாக ஆகிவிட்டனர். போர் இன்று நம் கையிலிருந்து முற்றாக நழுவிவிட்டது” என்றான். விந்தன் குரல் தாழ்த்தி “ஆனால் திரிகர்த்தர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொள்வதில்லை” என்றான். பிருஹத்பலன் சீற்றத்துடன் “நாம் இந்த குடிமேன்மைப் பேச்சை என்று தவிர்க்கிறோமோ அன்றுதான் வாழ்வோம். இங்கே களத்தில் உயிருடனிருப்பவர்கள் சிலரே. நாம் ஒருங்கிணைந்தாகவேண்டும்” என்றான். “ஆம், ஆனால் ஷத்ரியர் என்னும் அடையாளத்துடன் ஒருங்கிணைகிறோம். அப்போது எவர் ஷத்ரியர் என்று நோக்கவேண்டியிருக்கிறதல்லவா?” என்றான் விந்தன்.

பிருஹத்பலன் பெருமூச்சுவிட்டு தலையை அசைத்து “அக்கணக்கை எடுக்கப்போனால் எஞ்சுபவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவந்தியின் அரசர்களின் குடித்தெய்வங்கள் இன்றும் காட்டில் மலைவேடர்களுக்கும் தெய்வங்களே” என்றான். விந்தன் சீற்றத்துடன் ஏதோ சொல்ல நாவெடுக்க “இதை நாம் பேசவேண்டுமென்றால் போர் முடியட்டும். நாடு பகுக்கப்படுகையில் சொல்லாடுவோம். இப்போது இக்களத்திலிருந்து நம்மில் எவர் எவ்வண்ணம் எஞ்சி மீளப்போகிறோம் என்பதைப்பற்றி மட்டுமே பேசவிருக்கிறோம்” என்றான். விந்தன் பொருமலுடன் தன் மொழியில் ஏதோ சொல்லி தலையை திருப்பிக்கொண்டான்.

பிருஹத்பலன் “நான் என் குடிலுக்குச் செல்கிறேன். அரசர்கள் ஒவ்வொருவராக அங்கே வரட்டும்” என்றான். அவன் செல்வதற்கு திரும்ப அருகே வந்த காரூஷ நாட்டு அரசர் க்ஷேமதூர்த்தி “என்ன நிகழ்கிறது? இங்கே ஒரு ஷத்ரியர் சந்திப்பு என்று என்னிடம் அவந்தியின் இணையரசன் சொன்னான். அதற்கு ஏன் திரிகர்த்தர்களை அழைக்கவேண்டும்? அவர்களின் உடலில் இன்றும் மலையூனின் மணம் வீசுகிறது. எளிய வேடர்கள். அவர்களின் மணிமுடியிலிருக்கும் இறகு என்ன? நோக்குக, அது இறகல்ல, மலையணிலின் வால்!” என்றார். பிருஹத்பலன் சலிப்புடன் “விந்தர் விளக்குவார்” என்று சொன்னபின் தன் தேர்வலனை நோக்கி தலையசைத்தான். அவன் தேரை கொண்டுவந்து நிறுத்த அதில் ஏறி அமர்ந்துகொண்டான்.

தன் பாடிவீட்டுக்குச் சென்று முற்றத்தில் இறங்கியதும்தான் அங்கே அனைத்து அரசர்களும் வந்தால் அமர இடமில்லை என்பதை உணர்ந்தான். தேர்வலனிடம் “இங்கே அரசர்கள் அமர்வதற்கான பீடங்கள் போடமுடியுமா?” என்றான். அவன் “இருக்கைகள் போட இயலாது, அரசே. ஆனால் தேரிலேறுவதற்கான படிப்பெட்டிகள் உள்ளன. அவற்றை இருக்கைகள் என இந்த மரத்தடியில் போட முடியும்” என்றான். “சரி, அவையே போதும். ஒருநாழிகைப்பொழுதுதான்… இதோ முரசு முழங்கத் தொடங்கிவிடும்” என்றான்.

அவன் பெட்டிகளை போட்டுக்கொண்டிருக்கையிலேயே கேகய மன்னன் திருஷ்டகேதுவும் மாளவ மன்னர் இந்திரசேனரும் வந்தார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. பிருஹத்பலன் “இங்கே நாம் ஒரு முறையான அரசவையை கூட்டப்போவதில்லை. நாம் ஒரு சில சொற்களை பேசிக்கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான். “நாம் முறையாகவே இரவு கூடுவோமே” என்றான் திருஷ்டகேது. “மாலையில் நம்மில் எவர் எஞ்சுவோமென தெரியாது. மேலும் மாலையில் நம் உள்ளங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றான் பிருஹத்பலன்.

“நேற்று காலையில் நான் சுதக்ஷிணரிடம் இதைப் பற்றி பேசினேன். இன்று அவர் நம்முடனில்லை.” விந்தன் “எங்கள் மைந்தர்கள் புஷ்கரனும், புஷ்பதந்தனும், புஷ்பமித்திரனும் களம்பட்டனர். இந்தப் போர் காட்டெரியைப்போல் எங்கள் குலத்தை அழிக்கிறது” என்றான். பிருஹத்பலன் “என் குடியின் மைந்தர்கள் பன்னிருவர் களம்பட்டனர். நான் பேசத்தொடங்குவது அங்கிருந்தே” என்றான்.

இந்திரசேனர் “நாம் இழப்புகளைப்பற்றி பேசவேண்டியதில்லை. நிகழவேண்டியதென்ன என்று மட்டும் பேசுவோம்” என்றார். “ஆம், அதன்பொருட்டே கூடுகிறோம்” என்றான் பிருஹத்பலன். கூர்ஜர சக்ரதனுஸும் சைப்ய நாட்டு கோவாசனரும் சாரஸ்வதரான உலூகரும் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனரும் வந்தனர். அவர்களை அமரச்செய்துகொண்டிருக்கையிலேயே வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் வந்தனர். மாகிஷ்மதியின் நீலரின் தேரில் சௌராஷ்டிர நாட்டின் ருஷார்திகரும் வந்தார். மேழிக்கொடி பறக்கும் விதேகநாட்டு தேர் வந்து நிற்க அதிலிருந்து அரசர் நிமி இறங்கினார். சௌவீரர் சத்ருஞ்சயர் தன் மைந்தருடன் வந்தார்.

அவர்கள் அமர்வதற்கு இடம்போதாமலாக மேலும் பெட்டிகளுக்காக ஏவலர் ஓடினர். அவர்கள் அமர்ந்ததும் பிருஹத்பலன் இன்னீரும் வாய்மணமும் கொண்டுவர தன் ஏவலரை அனுப்பினான். “பகதத்தர் வரவில்லையா?” என்று நிமி கேட்டார். சமுத்ரசேனர் “அவர் ஓய்வெடுக்கிறார். நேற்றைய போரில் இரண்டு இடங்களில் கதையால் அறைபட்டிருக்கிறார்” என்றார். “இந்தப் போரில் அறைபட்டு வீழாத எவரேனும் இருக்கிறோமா என்ன?” என்றார் நீலர். “நான் என் மைந்தரை இழந்தேன்” என்றார் மாளவ மன்னர். “என் பட்டத்து இளவரசன் உலூகன் களம்பட்டான். இளையோர் எழுவர் இறந்தனர். என் மைந்தர்கள் அசீதனும் அஸ்மாதனும் அப்ரமாதனும் நேற்றும் என் கனவிலெழுந்தனர். இந்த வேள்வித்தீயில் இனி நான் என்னைத்தான் அவியாக்கவேண்டும்.”

கூர்ஜர மன்னர் சக்ரதனுஸ் “என் பட்டத்து இளவரசன் மகிபாலன் கொல்லப்பட்டான். இளைய மைந்தன் உத்ஃபுதனையும் இழந்துள்ளேன்” என்றார். “நாம் இறந்தவர்களைப்பற்றி பேசவேண்டாம்” என்றார் உக்ரதர்சனர். பிருஹத்பலன் “நான் பேசவிழைவது நம் எதிர்காலத்தைப்பற்றித்தான்” என்றான். “இந்தப் போர் எங்கே செல்கிறது? இது தொடங்கும்போது நாம் எண்ணியதல்ல இப்போது நடந்துகொண்டிருப்பது. நாம் அழிந்துகொண்டிருக்கிறோம்.” மன்னர்கள் கூட்டமாக “ஆம்” என்றனர். சமுத்ரசேனர் “நம் மைந்தர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்” என்றார். “அது பிதாமகர் பீஷ்மர் தொடங்கிவைத்தது. அவர் முதல்நாள் அவர்களின் இளவரசர்களை கொன்றார், அவர்கள் பழிநிகர் செய்கிறார்கள்” என்றார் க்ஷேமதூர்த்தி.

சுபத்ரர் “போர் எனில் அழிவு இருக்கும்” என்றார். “ஆம், ஆனால் முற்றழிவென்பது பொருளற்றது. நாம் எந்த வஞ்சத்துக்காகவும் போருக்கெழவில்லை. குலம்காக்கவோ குடிப்பெருமைக்கோ படைக்கலம் தூக்கவில்லை. நாம் வந்தது நிலத்துக்காக. நமக்குக் கிடைக்கவிருக்கும் நிலங்களுக்காக நாம் மைந்தரை இழக்கவேண்டுமா?” என்றான் பிருஹத்பலன். “போரில் பிறகென்ன நிகழுமென எண்ணுகிறீர்கள்?” என்று நிமி கேட்டார்.

“போரில் வீரர்கள் களம்படுவார்கள். அரிதாகவே அரசகுடியினர் வீழ்வார்கள். அரசகுடியினரை அரசகுடியினரே எதிர்க்கவேண்டும் என்று நெறி உள்ளது. அவ்வாறு வீழ்வது பெருமைக்குரியதும்கூட. சூதர்சொல்லில் வீழ்ந்தவர் வென்றவருக்கு நிகராகவே வாழ்வார். அவர்கள் விண்ணுலகில் தோள்தழுவிக்கொண்டு மகிழ்வார்கள். ஆனால் இங்கே அதுவா நிகழ்கிறது? என் மைந்தர்கள் லோகிதனையும் சியாமனையும் தீர்க்கபாகுவையும் கொன்றவன் கடோத்கஜன். அவ்வரக்கன் இங்குள்ள எத்தனை பேரின் மைந்தர்களை கொன்றான் என சொல்லுங்கள்…”

அவை அமைதியாக இருந்தது. “சொல்க, எத்தனை பேரை?” என்றான் பிருஹத்பலன். “சொல்லமாட்டீர்கள். இங்குள்ள அனைவர் குடியிலும் ஓர் இளவரசனையேனும் அவன் கொன்றிருக்கிறான். இந்தப் போரில் இப்படி வல்லரக்கன் கையில் உயிர்விடவா நாம் மைந்தரை ஈன்றோம்?” என்று பிருஹத்பலன் கேட்டான். அவையினர் ஆழ்ந்த அமைதியில் அசைவிழக்க நீலன் “நம் மைந்தர் இங்கே மழைக்கால நத்தைகளை தேர்கள் அரைத்தழிப்பதுபோல பீமனாலும் அவன் மைந்தர்களாலும் கொல்லப்படுகிறார்கள். என் உடன்பிறந்தார் மணிர்மன், குரோதவான், மகாக்குரோதன், சண்டன், சுருரோணிமான் ஆகியோர் மண்புகுந்த பின் வெற்றியும் தோல்வியும் எனக்கொரு பொருட்டாகத் தெரியவில்லை” என்றார்.

“நான் எண்ணிவந்தது இதை அல்ல. இப்படி ஒரு போரை எங்கள் நூல்கள் சொல்லவில்லை” என்றான் பிருஹத்பலன். “ஷத்ரியர் நிலம் நாடி போரிடுவதுண்டு. இந்தக் கீழரக்கர்களிடம் நாம் ஏன் பொருதவேண்டும்?” அவையிலிருந்த அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர். “ஆம், இது போரே அல்ல. இது வெறும் கொலைவெளி” என்றான் விந்தன். “இங்கே நாம் மைந்தரை இழந்து மீண்டு சென்று அடையப்போவது என்ன?” என்றார் உலூகர். “நாம் இங்கே போரிடுவது கீழ்மக்களிடம்… அசுரர்களும் அரக்கர்களும் நம் மைந்தரை கொல்கிறார்கள்.”

“கோசலரே, நாம் என்றாயினும் இந்த அரக்கர்களையும் அசுரர்களையும் நிஷாதர்களையும் கிராதர்களையும் அழித்தேயாகவேண்டும். உண்மையில் இவர்களை எதிர்கொண்டு அழிக்க நம்மால் இயலவில்லை என்பதனால்தான் வாளாவிருந்தோம். நாம் போருக்கெழுந்ததே இவர்கள் மீதுள்ள அச்சத்தால்தான். அவர்களுக்காக நாம் ஒருங்கிணைந்தால் அதுவே அவர்களை ஒருங்கிணைய வைத்துவிடுமென அஞ்சினோம். கீழ்மக்களுக்காக ஷத்ரியர் ஒருங்கிணைந்தனர் என்னும் பேச்சு வந்துவிடலாகாது என நாணினோம். கேளிக்கையாடி சோம்பியும் குடிப்பெருமை பேசி பூசலிட்டும் பொழுது கடத்தினோம். இது ஓர் வரலாற்று வாய்ப்பு என்று கருதியே இங்கே ஒருங்கிணைந்தோம்” என்றார் சக்ரதனுஸ்.

கேகயன் “இல்லை, அதன்பொருட்டு அல்ல. நாம் கூடியது வேதம் காக்கும்பொருட்டு” என்றான். “ஆம், அவ்வாறு எங்கும் சொல்லிக்கொள்ளவேண்டியது நமக்கு இன்றியமையாதது. ஆனால் அதை நமக்குநாமே சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. வேதங்களை ஜராசந்தர் கால்கீழிலிட்டு அரைத்தபோது நாம் என்ன செய்தோம்? அவர் அசுரவேதத்தை மகதத்தில் நிறுவியபோது அவர் நடாத்திய வேள்விகளில் ஒன்றிலேனும் நாம் பங்குகொள்ளாதொழிந்தோமா?” என்றார் சக்ரதனுஸ். அவையினர் அமைதியிழந்து உடலசைவுகொள்ள சக்ரதனுஸ் “நாம் இன்றுகூட திரிகர்த்தர்களையும் மல்லர்களையும் உடன்வைத்து அமர்ந்திருக்கிறோம். அவர்கள் உடலிலிருந்து வேடர்களின் குருதி அகன்றுள்ளது என்று எந்தத் தெய்வம் உரைத்தது?” என்றார்.

சத்யரதர் சீற்றத்துடன் எழுந்து “என் குடியை பேசியவன் வாளை எடுக்கட்டும்… இப்போதே” என்றார். “நாங்கள் வாளை எடுத்து ஆயிரமாண்டுகளாகின்றன” என்றார் சக்ரதனுஸ். இந்திரசேனர் “நாம் இங்கே பூசலிடுவதற்காகவா கூடினோம்? பூசலிடுவதென்றால் அங்கே களத்துக்கே செல்வோம்” என்றார். “மூடர்கள்” என்றபடி அவர் எழப்போக பிருஹத்பலன் “அமர்க, அமர்க… பேசுவோம்!” என்றான். அனைவரும் எழுந்து பிறரை அமரச்செய்ய அவை மெல்ல அடங்கியது. சற்றுநேரம் அமைதி நிலவியது. சக்ரதனுஸ் “நான் சொல்லவந்ததை சொல்லலாமா?” என்றார். “சொல்க!” என்றார் இந்திரசேனர்.

சக்ரதனுஸ் “நாம் எந்த மேற்பூச்சும் இன்றி பேசுவோம். நாம் இப்போருக்கு வந்தது நம் நிலங்களைச் சூழ்ந்து நெருக்கி நம்மை குறுக்கிக்கொண்டிருக்கும் அசுரர்களையும் அரக்கர்களையும் நிஷாதகிராதர்களையும் வெல்லும்பொருட்டே. அவர்கள் நேற்றுவரை காட்டில் கற்படைசூடி, ஊன்வேட்டையாடி, தோலாடை உடுத்தி, குகைகளிலும் மரங்களிலும் வாழ்ந்தனர். இன்று அவர்களுக்கு ஊர்களும் நகரங்களும் அமைகின்றன. சந்தைகள் உருவாகின்றன. வணிகப்பாதைகள் நீள்கின்றன. அவற்றினூடாகச் செல்லும் சகடங்களுக்கு இடும் தீர்வையே நம் செல்வம். அது அவர்களை சினமூட்டுகிறது. அதற்கு எதிராக அவர்கள் படை திரட்டுகிறார்கள். தங்களுக்கான தனிப் பாதைகளையும் படித்துறைகளையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். நாம் அவர்களை வெல்லாமல் ஓர் அடிகூட முன்னெடுக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம்” என்றார்.

“இந்தப் போர் வேதங்களின் பொருட்டு, குலநெறிகளின் பொருட்டு, ஷத்ரியக் குருதியின் பொருட்டு என்ற சொற்களுக்கு அடியில் நாம் கொண்டுள்ள மெய்யான நோக்கம் இதுவே. அதை இந்தக் களத்திலன்றி நம்மால் எங்கும் நிறைவேற்றிக்கொள்ள இயலாது. இங்கேயே நாம் அவர்களை அழிக்கவேண்டும். வேருடன் பிடுங்கவேண்டும்” என்றார் சக்ரதனுஸ். “ஆகவே நமக்கு வேறுவழியில்லை.” நிமி “அந்நோக்கம் நிறைவேறுகிறதா?” என்றார். “அது இத்தனை கடினம் என நாம் எண்ணியிருக்கவில்லை. மெய்தான்” என்றார் சக்ரதனுஸ். “அவர்கள் பெருந்திரளென இப்படி ஒருங்கிணைவார்கள் என நாம் கருதவில்லை. இவ்வளவு திறனுடன் போரிடுவார்கள் என நாம் எவருமே எண்ணியிருக்கமாட்டோம்” என்றார் நீலன்.

“ஏன் அவர்கள் அவ்வாறு போரிடுகிறார்கள் என்பதை நாம் அறியோமா என்ன?” என்றார் உலூகர். “நம் தரப்பிலிருக்கும் மாபெரும் பிழை அது. அதைத் தவிர அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.” கோவாசனர் “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். உலூகர் “அவர்களை மட்டும் நாம் எதிர்த்திருந்தால் இதற்குள் வென்று அவர்களின் நிலங்களை எரியூட்டியிருப்போம். அவர்களிடம் படைக்கலங்கள் குறைவு. படைசூழ்கைகள் அவர்களுக்கு தெரியாது. ஒரு பெரும்படையெனத் திரள அவர்களின் குலமுறைகளும் மூப்பிளமைகளும் இடம்தரா. இப்போது நாமே அவர்களுக்கு அவையனைத்தையும் அளித்துவிட்டோம். அரசர்களே, கீழ்க்குடியினருக்காகப் போரிட பாரதவர்ஷத்தின் மாபெரும் போர்வீரர்கள் இருவரை அளித்தது நாமே. படைசூழ்கை அறிந்த ஷத்ரியத் தலைவர்களையும் நாமே அளித்தோம். நாம் இங்கே திரண்டமையால்தான் அவர்களை பாண்டவர்கள் திரட்டிக்கொண்டனர். இன்று மறுபக்கமிருப்பது ஷத்ரியத்தலைமையால் நடத்தப்படும் அசுரவிசை. அதை வெல்வது எளிதல்ல” என்றார்.

“அவர்களை நடத்துவது அர்ஜுனனோ பீமனோ திருஷ்டத்யும்னனோ அல்ல, இளைய யாதவன்” என்றான் பிருஹத்பலன். “எந்நிலையிலும் அவனை நாம் எதிர்த்தேயாகவேண்டும். நாம் வெற்றுச்சொற்கள் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை.” சுபத்ரர் “அவனைத்தான் எதிர்க்கவேண்டும் என்றால் அவன் பாண்டவர்களுடன் இணையாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். யாதவர்களிடமிருந்து அவனை பிரித்தோம், அவ்விசையிலேயே அவனை அழிக்க முயன்றிருக்கவேண்டும்” என்றார். பிருஹத்பலன் “அவனை சூழ்ச்சியில் வெல்ல நம்மால் இயலாது. பாண்டவர்கள் அவனை தெரிவுசெய்யவில்லை, அவன் அவர்களை தெரிவுசெய்திருக்கிறான்” என்றான்.

“என்றேனும் இப்போர் நிகழும் என அறிந்திருந்தேன்” என்றார் கோவாசனர். “நாளெண்ணி காத்திருந்தேன். உண்மையில் நமக்கு ஒரே வழிதான் இருந்தது. துவாரகையை ஷத்ரியநாடென ஏற்று இளைய யாதவனை நம் அவைகளில் அமரச்செய்வது. அதனூடாக நாம் வெல்லமுடியாதவர்களாக ஆகியிருப்போம். அவனையும் நம்முடன் சேர்த்துக்கொண்டு இழிசினரை வென்று பாரதவர்ஷத்தை முழுதடைந்திருக்கலாம். நம் அறிவின்மையால், ஆணவத்தால் அவனை இழிசினர் பக்கம் சேர்த்தோம்.” பிருஹத்பலன் “எவர் சேர்த்தது? என்ன சொல்கிறீர்கள்?” என்றான். கோவாசனர் “ஆம், சேர்த்தவர்கள் நாமே. எங்கெல்லாம் இளைய யாதவன் பெண்கொண்டானோ அந்த ஷத்ரியர்களெல்லாம் அதை குலச்சிறுமையாக எடுத்துக்கொண்டார்கள். அவர்களை அவையிழிவு செய்து நாமும் அதை நிலைநாட்டினோம். எந்நிலையிலும் இளைய யாதவனை ஷத்ரிய அவைகளுக்குள் அமரமுடியாதவனாக ஆக்கினோம்…” என்றார்.

கேகயன் “எங்களை பழி சொல்கிறீர்களா?” என்று சீறியபடி எழுந்தான். கோவாசனர் “ஆம், உங்களைத்தான் பழிசொல்கிறேன். உங்கள் வஞ்சங்களை ஷத்ரியர்களின் பொது உணர்வாக மாற்றினீர்கள்” என்றார். கேகயன் “உங்கள் அறிவு எங்கு சென்றது?” என்றான். நீலன் “நாம் பூசலிட வேண்டியதில்லை… அதனால் இனி எந்தப் பயனும் இல்லை” என்றார். விந்தன் “அரசர்களே, நான் கேட்பது ஒன்றே. நாம் இளைய யாதவனை நம்முடன் சேர்த்துக்கொண்டு ஷத்ரிய அவையில் இடமளித்தோம் என்றால் எந்த இடத்தை அளித்திருப்போம்?” என்றான்.

அவையினர் சலசலக்க விந்தன் “நாங்கள் ஷத்ரியர்களாகி வேள்விகளை செய்யத்தொடங்கி ஐநூறாண்டுகளாகின்றன. ஆயினும் இன்றும் காசியும் கேகயமும் விதேகமும் எங்களுக்கு மேல்தான். அவர்களுக்குக் கீழே அமைந்த கலிங்கமும் வங்கமும் பிரக்ஜ்யோதிஷமும்கூட எங்களுக்கு மேலே. இந்த அடுக்கில் இறுதியில் நாம் அளிக்கும் ஓர் துணையரசனுக்குரிய பீடத்தில் வந்தமர இளைய யாதவன் விரும்புவான் என நினைக்கிறீர்களா? அந்த இருக்கையின்பொருட்டு நம்முடன் சேர்ந்துகொண்டு இழிசினரை முற்றழிக்க அவன் உடன்படுவான் என எப்படி கருதுகிறீர்கள்?” என்றார்.

“அரசன் குடிகளின் கொடி மட்டுமே” என்றார் சக்ரதனுஸ். “யாதவர் ஷத்ரிய அடையாளத்தை விழைகிறார்கள். அதன்பொருட்டு அவனையே துறக்கவும் ஒருங்கிவந்துள்ளனர். அன்றே அந்த அடையாளத்தை நாம் அவர்களுக்கு அளித்திருந்தோமென்றால் குடிகளை மீறி அவன் ஒன்றும் செய்திருக்கவியலாது.” பிருஹத்பலன் “அவனை நீங்கள் அறிந்தது அவ்வளவுதான்” என்றான். “அவனுடைய எண்ணங்கள் ஏதும் இன்று இக்களத்தில் வைத்து நாம் அறிந்துகொள்ளத் தக்கன அல்ல.”

உக்ரதர்சனர் “நாம் இதையெல்லாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம்? இன்னும் சற்றுநேரத்தில் போர்முரசுகள் முழங்கும். நாம் இன்னும் கவசங்களையே அணியவில்லை” என்றார். “நான் சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன். இப்போர் இவ்வண்ணமே தொடர்ந்தால் முற்றழிவுதான் எஞ்சும். இன்று ஷத்ரியர்களைவிட பிற அரசர்களின் ஆற்றல் மிகுந்துள்ளது. இப்போது கலிங்கம் அழிந்துவிட்டது. வலுவான ஷத்ரிய அரசுகளில் ஒருசில களத்தில் அழியுமென்றால் ஷத்ரிய ஆற்றலே பாரதவர்ஷத்திலிருந்து அகன்றுவிடும்.”

அவர்கள் அச்சொற்களால் தாக்கப்பட்டவர்கள்போல விழிகள் நிலைக்க நோக்கினர். “அறிக, நம் ஆற்றல்மிக்க பட்டத்து இளவரசர்கள் மறைந்துகொண்டிருக்கிறார்கள். மறுபக்கமிருந்து கடோத்கஜன் உள்ளிட்ட கீழோர் நம் இளவரசர்களையே இலக்காக்கி அழிப்பது தொலைநோக்கு கொண்டது. இப்போரில் நாம் வென்றாலும்கூட ஆற்றல்மிக்க அடுத்த தலைமுறை அரசர்கள் நம் நாடுகளில் உருவாக மாட்டார்கள்.” கோவாசனர் “ஆம், அதை நானும் உணர்ந்தேன்” என்றார்.

பிருஹத்பலன் “நாம் இன்று செய்வதற்கொன்றே உள்ளது. இப்போரை இன்றோடு நிறுத்துவோம். இரு தரப்பினரும் ஓர் உடம்பாடுக்கு வரட்டும்” என்றான். “அதெப்படி? போர் இன்று உச்சத்திலுள்ளது… துரியோதனர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார் இந்திரசேனர். “அந்த வெறியை அவர் நம் இழப்பின் வழியாக தீர்த்துக்கொள்ளலாகாது. அவரே நேருக்குநேர் பீமசேனரிடம் போரிடட்டும்… அவர்கள் தங்களுக்குள் கொள்ளும் பூசலுக்கு ஷத்ரியர் பலியாக வேண்டாம்” என்றான் பிருஹத்பலன்.

“நாம் பின்வாங்குவதா? நம்மை கோழைகள் என்பார்கள்” என்று நிமி சொன்னார். “அதற்குரிய வழியை கண்டுபிடிப்போம்…” என்றான் பிருஹத்பலன். “நான் அதற்கொரு வழியை எண்ணினேன். அதையே இங்கு முன்வைக்க எண்ணினேன். விதர்ப்பராகிய ருக்மி தூய ஷத்ரியக்குருதி கொண்டவர். அவருடைய வஞ்சம் குலமிலியான இளைய யாதவனுக்கு எதிரானது. அது ஷத்ரியர்களாகிய நாமனைவருமே கொண்டிருக்கும் வஞ்சம். அவரை துரியோதனர் இழிவுசெய்து அனுப்பியதில் நமக்கு உடம்பாடில்லை. ருக்மியை நம் படைக்குள் சேர்த்துக்கொள்ளவேண்டும். துரியோதனர் அவரை அழைத்துவந்து பொறுத்தருளும்படி கோரவேண்டும்.”

சக்ரதனுஸ் “என்ன சொல்கிறீர்கள்? எவர் பணிவது, தார்த்தராஷ்டிரரா?” என்றார். “ஆம், அவர் பணிய மாட்டார். அவர் பணியாவிட்டால் நாம் போருக்கு ஒப்பவும் மாட்டோம். ஷத்ரியர்களாகிய நாம் ஷத்ரியர்களில் ஒருவரின் தன்மதிப்பின்பொருட்டு போரிலிருந்து விலகுவதில் பிழையே இல்லை.” அவையில் அமைதி நிலவியது. நீலன் “நல்ல திட்டம்தான்” என்றார். “இது ஒரு நல்வாய்ப்பு… ஆகவேதான் இதை உடனே செய்யவேண்டுமென நான் முடிவெடுத்தேன்” என்றான் பிருஹத்பலன்.

“இப்போதேவா?” என்றார் சக்ரதனுஸ். “நமக்கு பொழுதில்லை… நம் தரப்பில் மாளவர் செல்லட்டும். துரியோதனரிடம் பேசட்டும்.” இந்திரசேனர் “நானா?” என்றார். “நீங்களே எங்களில் மூத்தவர்… தார்த்தராஷ்டிரர்களுக்கு சற்று அணுக்கமானவர்” என்றான் பிருஹத்பலன். “நான் சொல்கிறேன், ஆனால்…” என்றார் இந்திரசேனர். “நீங்கள் சொல்லுங்கள், நிகழ்வதென்ன என்று பார்ப்போம்” என்றான் பிருஹத்பலன்.

“சரி, நாம் விலகிக்கொண்டால் போர் நின்றுவிடுமா என்ன?” என்று கோவாசனர் கேட்டார். “நிற்கவே வாய்ப்பு. இங்குள்ள படைகளில் பெரும்பகுதி நாமே. இருக்கும் படைகளைக்கொண்டே பாண்டவர்களை வெல்ல இயலவில்லை. நாம் விலகிக்கொண்டால் தோல்விதான். ஐயமே தேவையில்லை. ஒருவேளை போர் தொடர்ந்து நிகழுமென்றால் அதுவும் நன்றே. நம் எதிரிகள் இருவருமே ஆற்றல் குன்றி அழிவார்கள். நாம் நம் ஆற்றலுடன் விலகிக்கொண்டோமென்றால் இருவரையுமே வெல்லலாம்” என்று பிருஹத்பலன் சொன்னான்.

“இருவரையுமா?” என்று சக்ரதனுஸ் கேட்டார். “ஆம், இழிசினர் நம் உடனடி எதிரிகள். ஆனால் பாரதவர்ஷம் மீது முற்றாகக் குடைவிரித்தாள எண்ணும் தார்த்தராஷ்டிரர்களும் நம் எதிரிகளே…” என்றான் பிருஹத்பலன். “அத்துடன் ஒன்றுண்டு, அசுரர்களையும் அரக்கர்களையும் நாம் ஏன் போர்முறைமைப்படி எதிர்க்கவேண்டும்? நஞ்சும் தீயுமிட்டு அழிப்போம். வஞ்சமும் சூதும் வளர்த்து அவர்களே போரிடச்செய்து ஒழிப்போம். அனைத்துக்கும் நூல்கள் ஒப்புதலளிக்கின்றன. அவர்களை நாம் அரசர்களென்றல்ல, விலங்குகள், பூச்சிகள் என்றே கருதவேண்டும். இங்கு நாம் செய்யும் பிழை அவர்களை போர்நெறிப்படி களம்நின்று எதிர்த்துக்கொண்டிருப்பதுதான்.”

இந்திரசேனர் “எண்ணிப்பார்க்கையில் உகந்த முடிவென்றே தோன்றுகிறது” என்றார். “அவ்வண்ணமென்றால் நாம் இங்கே ஒரு முடிவெடுக்கவேண்டும். நாம் ஒற்றைத்திரளென நின்றிருக்கவேண்டும். எடுக்கப்படும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும். நாம் போர்முனையிலிருந்து கிளம்புகிறோம் என்று சொன்னால் தார்த்தராஷ்டிரர்கள் நம்மை அச்சுறுத்தலாம், விழைவும் காட்டலாம். எதற்கும் நாம் மயங்கிவிடலாகாது” என்றான் பிருஹத்பலன்.

“ஆம், உண்மை!” என்றார் உக்ரதர்சனர். அவையிலிருந்த அரசர்கள் அனைவரும் “ஆம், அவ்வாறே” என குரலெழுப்பினர். “இன்று பீஷ்மர் மண்டலவியூகத்தை அமைத்திருக்கிறார். சிறுசிறு குழுக்களாக படைகளை அமைத்து ஒன்றென மையச்சரடொன்றால் திரட்டும் இச்சூழ்கை மிக ஆற்றல்மிக்கது என்பார்கள். ஒவ்வொரு யானைக்கும் ஏழு தேர்கள். ஒவ்வொரு தேருக்கும் ஏழு புரவிவேலவர். ஒவ்வொரு புரவிக்கும் பத்து வில்லவர். ஒவ்வொரு வில்லவருக்கும் பத்து நடைவேலவர் என அமைந்திருக்கும் இந்தச் சூழ்கையை உடைத்து உள்ளே நுழைவது மிக எளிது, மீள்வது அரிது. இது எறும்புகளால் அமைக்கப்படும் சூழ்கை என்பார்கள். இன்று பாண்டவர்கள் போர்தொடரவேண்டாம் என முடிவெடுக்கக்கூடும்” என்றார் உக்ரதர்சனர்.

“பாண்டவர்களுடன் இருப்பவர் இளைய யாதவர்” என்று மட்டும் இந்திரசேனர் சொன்னார். “இன்றைய போர் இன்னும் அரைநாழிகைக்குள் தொடங்கும். இனி நாம் ஏதும் சொல்லமுடியாது, நம் படைகளையும் விலக்கிக்கொள்ள முடியாது. இப்போர் முடியட்டும். இதில் பாண்டவர்களுக்கு இழப்பு என்றால் துரியோதனரிடம் பாண்டவர்கள் சோர்ந்திருக்கும் தருணம் இது, அவர்களை பேச்சுக்கு அழைப்போம் என்று சொல்வோம். மாறாக நமக்கே பேரிழப்பு என்றால் இனிமேலும் போரிடுவதில் பொருளில்லை, மண்டலச்சூழ்கையையே அவர்கள் வென்றார்கள் என்றால் இனி எதைக்கொண்டு நம்பிக்கையை பேணுவது என்று கேட்கலாம்” என்று பிருஹத்பலன் சொன்னான்.

“ஆம், இன்று மாலை மாளவர் பேசட்டும்” என்றார் சக்ரதனுஸ். அவையினரும் “ஆம், மாலை பேசுக!” என்றனர். உக்ரதர்சனர் எழுந்துகொண்டு “நாம் கிளம்புவோம்… முரசுகள் முழங்கத்தொடங்கிவிட்டன” என்றார். “இன்றைய போரில் நாம் இழப்புகளின்றி மீள முயல்வோம். கூடுமானவரை படைகளையே முன்னணிக்கு அனுப்புவோம். இன்று போர்க்களத்திலேயே சகுனிக்கு நாம் போருக்கு உளம்கொள்ளவில்லை என்பது தெளிவாவது நன்று” என்றான் பிருஹத்பலன். “ஆம், அதுவே வழி” என்று குரல்கள் எழுந்தன.

அவர்கள் கிளம்பும்போது உக்ரதர்சனர் “அவர்களின் படைசூழ்கை என்ன?” என்று கேட்டார். “நமது படைசூழ்கையை அவர்கள் இதற்குள் அறிந்திருப்பார்கள். தங்கள் சூழ்கையை வகுத்துக்கொண்டிருப்பார்கள்” என்றார் இந்திரசேனர். பிருஹத்பலன் “அவர்கள் வஜ்ரவியூகத்தை அமைத்துள்ளார்கள். வைரம்போல பட்டைகள் கொண்டது. ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதபடி இணைந்த கூறுகளாலானது. நம் படைகளுக்குள் ஊடுருவினாலும் அவர்களின் படையில் ஒவ்வொரு பகுதியும் முழுப்படையுடன் இணைந்தே இருக்கும்” என்றான்.

அவர்கள் பெருமூச்சுடனும் தளர்ந்த உடல்களுடனும் எழுந்துகொண்டனர். கிளம்பும்போது உக்ரதர்சனர் மெல்லிய கசப்புடன் புன்னகைத்து “இந்தப் போரில் நான் கற்றது ஒன்றே, எந்தச் சூழ்கைக்கும் இணையான சூழ்கை உண்டு. ஆகவே எச்சூழ்கைக்கும் எப்பொருளும் இல்லை” என்றார். பிருஹத்பலன் என்ன பேசுவதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி “நாம் வெல்வோம்… நம்மை உருவாக்கிய வேதமே அதற்கு பொறுப்பு” என்றான். ஒருகணம் நோக்கிய பின் புன்னகைத்து உக்ரதர்சனர் திரும்பி நடந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

வெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்

$
0
0
வெயில்

வெயில்

 

வெயிலின் கவிதைகளுக்கு பிச்சமூர்த்தி முன்மொழிந்த மரபின் ஓர்மை உண்டு. அதன் சந்தங்களை நாட்டார்வழக்கின் சந்நதமாக அவர் கவிதையில் நிகழ்த்திக் காட்டுகிறார். நிகழ்வதற்கு வாய்ப்பற்ற ஒன்றைக் கவிதைக்குள் சிருஷ்டிப்பதன் மூலம் அவர் க.நா.சு.வின் விநோதத்தையும் கொண்டுவர முயல்கிறார். அவரது கவிதைகளுள் சில அலங்காரம், அசாதாரணம் ஆகிய இந்த இரு அம்சங்களையும் களைந்துவிட்டுப் பூரண சுதந்திரத்தையும் எய்திருக்கின்றன. வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் கொண்டுள்ள இந்த அம்சத்தால், அவை வரையறைக் கோட்பாட்டுக்குள்ளிருந்து திமிறுகின்றன.

வெயில் கவிதைகள் பற்றி மண்குதிரை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கட்டண உரை -கடிதங்கள்

$
0
0

je

கட்டண உரை –ஓர் எண்ணம்

 

கட்டண உரை-அறிவிப்பு

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு

 

கிழக்கிந்திய கம்பெனி (1600 – 1874)யை கேள்விப்பட்டிருப்போம். இதேபோல Dutch India Company, Danish India Company, French East India Company போன்றவை கிட்டத்தட்ட அன்றிருந்த உலக மக்கள் தொகையின் பாதியை பங்குபோட்டு ஆண்டு கொண்டிருந்ததைப் பற்றி Thomas Carlyle (1795 – 1881) என்பவர் யோசிக்கிறார். அதை இன்னும் ஒழுங்குபடுத்தி “On Heroes, Hero-Worship, and The Heroic in History” என்கிற தலைப்பில் முஹம்மத் (570 – 632); Dante Alighieri (1265 – 1321) ; Martin Luther (1483 – 1546); Napoleon Bonaparte (1769 – 1821) போன்ற மாபெரும் ஆளுமைகளின் தோற்றத்துக்கான காரணங்கள், வரலாற்றை அவர்கள் உருவாக்கிய விதம் குறித்து மக்களிடம் பேசுகிறார். இதுவும் கட்டண உரை. The Great Man theory என்று அவை பிற்பாடு நூலாக தொகுக்கப்பட்டது.

 

 

இதைப் பற்றி காந்தியடிகளின் “சத்திய சோதனை”யில்தான் முதன்முறையாக படித்தேன். அதைப் பின்தொடர்ந்து சென்று கார்லைலின் நூலும், அந்த நூலில் நபிகளாரைப் பற்றிய பகுதியை ஏம்பல் தஜம்மல் மொழிபெயர்த்திருக்கிறார் என அறிந்து அதையும் படித்திருக்கிறேன்.  கட்டணம் செலுத்தி இசையை இடையூறின்றி ரசிப்பதற்கும் திருவிழாக்களில் இலவசமாக கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது. ஆக கட்டண உரையென்பது மேலை நாடுகளில் இருநூறு ஆண்டுகளாக வழக்கிலுள்ள விஷயமே. இங்கும் முயற்சித்துப் பார்க்கலாம். வாழ்த்துக்கள்.

 

கொள்ளு நதீம்,

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம்

 

அன்புள்ள கொள்ளு நதீம்

 

கட்டண உரை உலகில் பல நாடுகளில் உள்ளதுதான். அரங்கினரின் தீவிரத்துக்கான சான்றாகவும் அது கொள்ளப்படும். எலியட்டின் பெரும்பாலான கட்டுரைகள் உரைகளாக, கட்டண அரங்குகளில் ஆற்றப்பட்டவைதான். நான் 2000 த்தில் கனடா சென்றிருந்தபோது ஆற்றிய உரை கட்டண உரை. ஒர் எழுத்தாளர் கட்டணம் கூடுதல் என புகார்சொல்லி வராமலும் இருந்தார்

 

ஜெ

 

 

அன்புநிறை ஜெ,

 

கட்டண உரை பற்றிய தங்களின் பதிவைக் கண்டேன். இலவசமாக இலக்கிய கூட்டத்தை நடத்தினாலே வருபவர்கள் குறைவு. இதில் கட்டணத்துடன் கூடிய இலக்கிய கூட்டம் எண்ணிக்கையை இன்னும் குறைக்கும், செறிவான வாசகர்களுடன் முழுமையடைந்த கூட்டமாக அது அமையக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.

 

இதில் எனக்கு ஒரு சின்ன சிக்கல் உள்ளது, தீபாவளி வரும் 6ம் தேதி, கட்டண உரை 10ம் தேதி, தீபாவளிக்கு தனியார் நிறுவனங்களில் விடுமுறை தருவது என்பது பெரிய விடயம். அதுவும் சேர்ந்தாற்போல் மூன்று நாட்கள் விடுமுறை என்பது மிகப்பெரிய விடயம். 8ம் தேதி மீண்டும் அலுவலகம் வரவேண்டும். ஆனால் 10ம் தேதி கூட்டம் இருக்கிறது. அதுவும் நெல்லையில், சென்னை என்றால் அடித்துபிடித்து மாலை வந்து சேர்ந்துவிடலாம். நெல்லை என்றால் ஒருநாள் விடுமுறை எடுக்கவேண்டும். அதுமட்டுமல்லாது கூட்டத்திற்கு அடுத்தநாள் குருப் 2 தேர்வு உள்ளது. கூட்டத்தில் பங்குக்கொள்ள விரும்பும் சிலருக்கு இந்த தேதி ஒரு தடையாக இருக்கக்கூடும். என்னைப்போன்று விடுமுறை இல்லாதவர்களும் தங்களுக்கு தெரியப்படுத்தியிருப்பார்கள் என்று நம்புகிறேன். கூட்டத்தில் கலந்துக்கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஆனால் தேதி மட்டும் சற்று சிக்கலாக உள்ளது. முடிந்தால் இந்த மாதமோ அல்லது அடுத்த மாதம் இறுதியில் வைத்தாலோ வந்து கலந்துக்கொள்ள அனைவருக்கும் ஏதுவாக இருக்கும் இதில் என் சுயநலமும் பெரிதாக உள்ளதுதான்.

 

என கோரிக்கையை செவிசாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

அன்புடன்

ரா. பாலசுந்தர்

 

அன்புள்ள பாலசுந்தர்

 

உங்கள் சிக்கல்கள் புரிகின்றன

 

ஆனால் இதை கிருஷ்ணன் ஏற்பாடு செய்கிறார். தேதி இடம் முடிவானபின் மாற்றுவது பொருளிழப்பு.

 

இன்னொருமுறை இன்னொரு கூட்டத்தில் பார்ப்போம்

 

ஜெ

 

கட்டண உரை- கடிதங்கள்

கட்டண உரை -கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடைத்தெருவை கதையாக்குதல்…

$
0
0

A.Madhavan

 

1962 நான் பிறந்த அதேவருடம் மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேகாட் ஒருநாவல் எழுதிவெளியிட்டார். ’ஒரு தெருவின் கதை’. கோழிக்கோடு நகரத்தின் முக்கியமான கடைவீதியான மிட்டாய்த்தெருவின் கதை அது. உண்மையில் தெருவின் கதை அல்ல, தெருவாழ் மக்களின் கதை. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள், தினக்கூலிகள், அனாதைப்பையன்கள், வேசிகள் ஆகியோரின் கதை. கூடவே கடைவணிகர்களின் கதை. அவர்கள் எழுச்சிகளின் வீழ்ச்சிகளின் சரித்திரம். கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நாவல் இன்றும் மலையாள இலக்கியத்தில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டு வருகிறது.

கேரளநிலத்தின் இரு தெருக்கள்தான் இலக்கியத்தில் அழியா இடம்பெற்றவை. மிட்டாய்த்தெருவும் சாலைத்தெருவும்.மிட்டாய்த்தெருவின் வரலாறும் நீளமானதே. கோழிக்கோடு அருகே உள்ள போப்பூர் சேரன்செங்குட்டுவன் காலம் முதலே முக்கியமான துறைமுகம். அது மணலால் மூடப்பட்டபோது கோழிக்கோடு ஒரு துறைமுகப்பட்டணமாக பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் உருவம் கொண்டது.

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனி மிட்டாய்கள் அக்காலத்தில் கேரளத்தில் மிக விரும்பப்பட்டிருந்தன. அரேபியாவில் இருந்து வந்த பேரீச்சைப்பழங்களும். அவற்றை விற்கும் இடமாக ஆரம்பித்த மிட்டாய்த்தெரு போப்பூர் செல்வாக்கிழந்தபோது பலமடங்கு வளர்ந்து இன்று கோழிக்கோட்டின் முக்கியமான வணிகமையமாக உள்ளது. இவ்விரு தெருக்களைத்தவிர கேரளநிலத்தின் தெருக்கள் ஏதும் இலக்கியப்பதிவுபெறவில்லை. தமிழ்நாட்டின் எந்த தெருவும் இவ்வாரு இலக்கியக்களமாக ஆனதில்லை.

கோழிக்கோடு மிட்டாய்த்தெரு

ஒரு தெரு என்பது என்ன? அது ஒரு நதி. மதுரைக்காஞ்சியில் மதுரையின் மாடத்தெருக்கள் மிகச்சரியாகவே நதியுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றன. அது ஓடிக்கொண்டே இருக்கிறது. எங்கெங்கெல்லாம் இருந்தோ துளித்துளியாக ஊறி வரும் மக்கள் ஒன்றாகச்சேர்ந்து தெருவழியாக பிரவகிக்கிறார்கள். அவர்களுக்கிடையேயான உறவு கூட ஒரு ஓட்டத்தில் மிதக்கும் இரு பொருட்களுக்கு இடையேயான தொட்டு தொட்டு விலகும் உறவுதான்.

ஆனால் அங்கேயே தங்கிவிடுபவர்களும் உண்டு. தெருவின்மக்களை நதியின் வண்டல்கள் எனலாம். அவர்கள் ஓட்டத்தில் செல்ல வலுவில்லாமல், சென்று சேரும் இடமில்லாமல் அந்த நதியின் அடியிலும் ஓரத்திலும் படிந்துவிட்டவர்கள். ஆ.மாதவனின் கதைகளில் இந்த தெருவின் மக்களை நாம் கூர்ந்து கவனித்தால் அனைவருமே ‘ஓட்டம் இழந்த’ மானுடர்கள் என்பதைக் காணலாம். அவர்களுக்கு வென்றெடுக்க ஏதும் இல்லை. கனவுகளே இல்லை. அவர்கள் தற்செயலாக ஒரு வாழ்க்கை ஒழுங்குக்குள் வந்து படிந்துவிடுகிறார்கள். பிறகு அதையே செய்கிறார்கள். சாதாரணமாகச் செத்துப்போகிறார்கள்.

ஜெயகாந்தன்

இந்த தெருவை உருவாக்கும் வணிகர்களை நதியின் கரைகள் எனலாம். உறுதியான வன்கரைகள் உண்டு. அவை எப்போதும் இருப்பவை. வண்டலாகப் படிந்து கரைகளானவை உண்டு. நதி என்றால் கரையும் சேர்த்துத்தான், ஆனாலும் நதியின் பகுதிகளல்ல கரைகள். அவை நதியை தீர்மானிக்கின்றன. நதியை வகுத்து கட்டுப்படுத்தி கொண்டுசெல்கின்றன. நதியை நுகர்ந்து வளர்கின்றன. நதியின் சாட்சிகளாக நின்றுகொண்டிருக்கின்றன. ஆம், அவற்றின் முக்கியமான உணவு என்பதுந் அதியின் வண்டலே

ஆ.மாதவனின் கதைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் அவை ஒரு கரையின் கோணத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நதியையே தீர்மானிக்கும் பெருங்கரை அல்ல. கரையின் ஒரு சிறுபகுதிமட்டுமே .ஆகவே பதற்றமில்லாத, கோபதாபங்கள் இல்லாத வெற்று சாட்சியாக நதியைப்பார்க்கிறது இந்தக் கரை. மாதவனின் கடைத்தெருக்கதைகள் அனைத்துமே ஒரு விசித்திரமான இரட்டைநிலையில் நின்று எழுதப்பட்டுள்ளன. எழுதுபவர் தன்னை தன் கதைமாந்தரின் உலகுக்குள்வைத்தே காண்கிறார். பிச்சைக்காரர்கள் பொறுக்கிகள் வேசிகள் தரகர்கள் சிறுவணிகர்கள் என்ற திரளில் ஒரு பகுதியாகவே அவரது இடம் அவரால் அறியப்படுகிறது. ஆனால் அவர் அவர்களில் ஒருவருமல்ல. ஆகவெதான் அவர்களை அவரால் பார்க்க முடிகிறது.

ஜி.நாகராஜன்

தமிழில் அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகள் என ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், வரிசையில் ஐயமின்றி ஆ.மாதவனும் வருவார். ஜெயகாந்தனின் உலகத்தைவிட, ஜி.நாகராஜனின் உலகத்தை விட , மௌனம் மிக்கது ஆ.மாதவனின் புனைவுலகம். அவர்கள் இருவரின் படைப்புக்களைவிட கலைநேர்த்தி கூடியது. ஆனால் தமிழில் அவர்கள் அடைந்த இலக்கிய இடம் ஆ.மாதவனுக்கு பொதுவாசகர்களால் அளிக்கப்படவில்லை.

அது போகட்டும். தமிழ்ச்சூழலில் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் எவரையுமே ஆ.மாதவன் அளவுக்கு அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதியவர் என்று சொல்லிவிடமுடியாது. ஓரளவு அவருடன் ஒப்பிட்டு விவாதிக்கத்தக்கவர் பூமணி மட்டுமே. ஆனால் நம்முடைய முற்போக்கு இலக்கியத்தளத்தில் ஆ.மாதவன் இன்று வரை கவனிக்கப்படவில்லை.

இந்த புறக்கணிப்புக்கான காரணம் என்ன என்பதை ஆ.மாதவனின் படைப்புகளிலேயே காணவேண்டும். ஏற்கனவே சொன்ன இரட்டைநிலையைத்தான் காரணமாகச் சொல்வேன். வழக்கமாக நம்முடைய இலக்கிய எழுத்துக்கள் எழுதப்படும் மக்களிடமிருந்து மிக விலகி நின்று உருவாக்கப்படுபவை. அந்த மக்களை ஆராயவும் மதிப்பிடவும்கூடிய பிரக்ஞை கைகூடியவை. அந்த மக்களின் வாழ்க்கையை குறியீடாகக் கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கையைப்பற்றிப் பேசும் தன்மை கொண்டவை.அதற்கு தோதாக அந்த வாழ்க்கையை கத்தரித்துச் சித்தரித்துக்கொண்டவை.

 

எஸ்.கெ..பொற்றேகாட்

எஸ்.கெ..பொற்றேகாட்

உதாரணம், ஜெயகாந்தன், ஜி நாகராஜன் இருவருமே. இருவகைகளில். ஜெயகாந்தன் அடித்தள மக்களை மார்க்ஸிய-மனிதாபிமான ஆய்வுக்கோணத்தில் ஆராய்பவர். அந்த மக்களின் வாழ்க்கை அவருக்கு அவரது கருத்துக்களுக்கான விளைநிலமும் உரைகல்லுமேயாகும். அக்கருத்துக்களுக்காக உருமாற்றம் செய்யப்பட்ட, சமையல் செய்யப்பட்ட, வாழ்க்கையையே அவரிடம் நாம் காண்கிறோம். அவரது கதைகளின் வழியாக நாம் அடித்தள மக்களின் வாழ்க்கைக்குள் செல்வதில்லை. அந்த வாழ்க்கையை ஒரு உதாரணமாக வைத்துக்கொண்டு ஜெயகாந்தனின் கருத்துக்களை விவாதிக்கவே முயல்கிறோம்.

ஜி.நாகராஜன் அடித்தள மக்களை முற்றிலும் வேறுநோக்கில் ஆராயும் அறிவுஜீவி. ஜெயகாந்தன் அரசியல் கற்பனாவாத எழுத்தாளர். நாகராஜன் நவீனத்துவர். ஜெயகாந்தன் நேரடி யதார்த்தவாதத்தை முன்வைத்தவர். நாகராஜன் நவீனத்துவத்தின் யதார்த்தவாதத்தை. இருவருக்குமே அடித்தள மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக நோக்கும் அக்கறை இல்லை. தங்கள் கோணத்துக்குள் சிக்க நேரும் அடித்தளமக்களின் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

உதாரணமாக, ஜி.நாகராஜன் அடித்தள மக்களின் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சமாகிய பசியைப்பற்றி பேசுவதேயில்லை. சேரிகளின் குழந்தைகளை, நோயுற்ற முதியவர்களை ஜி.நாகராஜன் பார்ப்பதேயில்லை. அவர் பார்ப்பது வேசிகளை மட்டுமே. அதுவும் இளம் வேசிகளை. கைவிடப்பட்டு நோயில் புழுத்த ஒரு வேசியை அவரது புனைவுலகில் நாம் காணமுடியாது. குறத்தி முடுக்கின் தங்கமும், நாளைமற்றுமொரு நாளே நாவலின் எல்லாம் அழகிகளும்கூட

ஏனென்றால் ஜி.நாகராஜனின் பிரச்சினை ஒழுக்கம் சார்ந்தது என்பதே. பாரம்பரியமான பாலியல் ஒழுக்க நோக்கை தாண்டி ஒரு நவீனத்துவ ஒழுக்கவியலை தேடிய கலைஞன் அவர். [வேறு ஒரு கோணத்தில் சுந்தர ராமசாமியின் பிரச்சினையும் அதுவே என்பதனால் ஒரு புள்ளியை இரு பக்கத்தில் இருந்து நெருங்கிய கலைஞர்களாக, ஒருவரை ஒருவர் நிரப்புபவர்களாக அவர்கள் இருந்தார்கள். தனிவாழ்க்கையிலும் அந்த நட்பும்புரிதலும் நீடித்தது] நாகராஜனை அலைக்கழித்த அந்த பிரச்சினையை சீண்டும் கதைமாந்தர்களை, வாழ்க்கைச்சூழலை மட்டுமே அவரது புனைவுலகம் கண்டுகொண்டது.

ஆ.மாதவனின் உலகம் அப்படிப்பட்டதல்ல. அவர் அந்த மக்களில் ஒருவராக தன்னை உணர்பவர். ஆகவே அவர் காட்டும் அடித்தள மக்களின் உலகம் அறிவார்ந்த மறு ஆக்கம் செய்யப்படாதது. நேரடியானது. குவிக்கப்படாதது, தன்னிச்சையாக விரிந்து பரந்துசெல்வது. ‘ஆழ்ந்தபொருள்’ தேடும் இலக்கியவாதிகளால் சிலசமயம் வெறும் சித்தரிப்பாக மட்டும் கொள்ளப்பட்டது. அவ்வாழ்க்கையின் இயல்பாகவெ உள்ளுறைந்த ஆழ்ந்த பொருள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

ஆரியசாலை, திருவனந்தபுரம்

ஆரியசாலை, திருவனந்தபுரம்

காமமும்,வன்முறையும், பசியும், அவநம்பிக்கையும், வெறுமையும், ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளும் தீவிரமான உறவுகளும் கொண்ட ஆ.மாதவனின் புனைவுலகமே அடித்தளமக்களின் வாழ்க்கையின் பெரும்பாலும் முழுமையான சித்திரத்தை அளிக்கக் கூடியது எனலாம். அதன்பொருட்டே அவர் இயல்புவாத [நாச்சுரலிசம்] அழகியலை மேற்கொண்டார். மேற்கொண்டது என்று சொல்லமுடியாது. அந்த தேவையின்பொருட்டு இயல்பாக அது அமைந்தது.

தமிழிலக்கியத்தில் இயல்புவாதம் என்றுமே பெரிதாக கவனிக்கப்பட்டதில்லை. அதை வாசிப்பதற்கான மனப்பயிற்சி நம் வாசகர்களிடம் இல்லை. பாரம்பரியமாக நாம் அறிந்தது கற்பனாவாதமும் புராண அழகியலுமே. நவீன இலக்கியம் வழியாக யதார்த்தவாதம் வந்து அதற்கு மெல்லமெல்ல பழகினோம். ஐமப்துகளிலேயே தமிழில் இயல்புவாதம் அறிமுகமாகிவிட்டது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் தமிழின் முதல் இயல்புவாத ஆக்கம். இயல்புவாதத்துக்காக வாதிட்ட க.நாசு அதை வலுவாக முன்னிறுத்தினார். அதன்பின் நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ முக்கியமான இயல்புவாத ஆக்கம்.

இவை எவையுமே பரவலான வாசிப்பைப் பெறவில்லை. பிற அழகியல்கள் மெல்லமெல்ல வணிக இலக்கியத்துக்குள் இடம்பெற்றபோதுகூட இயல்புவாதம் அங்கே செல்ல முடியவில்லை. தேர்ந்த இலக்கிய வாசகர்களுக்குக் கூட இயல்புவாதம் கவற்சியாக இருக்கவில்லை. ஆ.மாதவனும், பூமணியும் எல்லாம் இலக்கியகவனம்பெறாது போனது இதனாலேயே.

இயல்புவாதம் சாதாரண வாசகனுக்குரியதல்ல. ஏனென்றால் அது வாழ்க்கையை நாடகப்படுத்துவதில்லை. ஆசிரியர் நோக்கில் தொகுத்துக்காட்டுவதில்லை. ‘உள்ளது உள்ளபடி’ என்ற அதன் புனைவுப்பாவனை உத்வேகமான கதையோட்டத்தை உருவாக்கவும் தடையக அமையக்கூடியது. ஆகவே வாசகன் பற்றிக்கொண்டு முன்செல்ல அதில் மையச்சரடுகள் இருப்பதில்லை. அவன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள நாயகர்களும் இருப்பதில்லை. அப்பட்டமான யதார்த்தம்போலவே மையமற்ற குறிக்கோளற்ற ஒன்றாக அது விரிந்து கிடக்கிறது. வாழ்க்கையை உணர்ந்த, அதை இலக்கியத்துடன் ஒப்பிட்டுக்கொண்டு வாசிக்கும் பொறுமைகொண்ட நல்ல வாசகன் மட்டுமே இயல்புவாதத்தை ரசிக்க முடியும்

தமிழில் பின்னர் இயல்புவாதத்துக்கு ஒரு இரண்டாம் கட்டம் நிகழ்ந்தது. தலித் இலக்கியத்துக்கான அறைகூவல் இங்கே உருவானது. பின்நவீனத்துவ தலித்திலக்கியம் தேவை என்றார்கள் விமர்சகர்கள். ஆனால் தலித்துக்களும் அடித்தளவாழ்க்கையில் இருந்து வந்த பிற எழுத்தாளர்களும் எழுத வந்தபோது அவர்கள் தன்னிச்சையாக இயல்புவாதத்தையே நாடினர். பாமா, இமயம், சோ.தருமன் போன்றவர்களால் இயல்புவாதம் வலுவாக முன்வைக்கப்பட்டபோது அவை பேசிய தலித்வாழ்க்கைமேல் இருந்த ஆர்வம் காரணமாக அது கவனிக்கப்பட்டது.

இந்த அலையில்தான் எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் போன்ற முக்கியமான இயல்புவாத படைப்பாளிகள் உருவாகி வந்தனர். இன்றைய தமிழின் முக்கியமான அழகியல்போக்கு என்பது இயல்புவாதமே. சு.வேணுகோபாலை அதன் கடைசிப்பெரும்படைப்பாளி என்று சொல்லலாம். வெண்ணிலை என்ற சிறுகதைத்தொகுதியையும் மணல்கடிகை [எம்கோபாலகிருஷ்ணன்] அஞ்சலை [கண்மணி குணசேகரன்] என்ற நாவல்களையும் தமிழின் சமகால இயல்புவாதத்தின் சாதனைகள் என்பேன்.

மறுபக்கம் முற்போக்குவாதம். முற்போக்குவாதம் பொருட்படுத்திய ஆக்கங்களில் அவர்களின் கட்சிசார்ந்து மேலே இருந்து அடித்தள மக்களை பார்த்த ஆக்கங்கள் முதல்வகை. அடித்தள மக்களே எழுதிய நேரடியான எளிய ஆக்கங்கள் இரண்டாம் வகை. முதல்வகைக்கு டி.செல்வராஜ், கெ.முத்தையா வகைகளைச் சொல்லலாம். இரண்டாம் வகைக்கு தேனி சீருடையான் போன்றவர்களின் எழுத்தைச் சுட்டிக்காட்டலாம். அடித்தள மக்களில் ஒருவராக முழுமையாக இருந்து எழுதப்பட்டிருந்தால் ஆ.மாதவனின் எழுத்துக்களுக்கு முற்போக்கு கௌரவம் கிடைத்திருக்கும். ஆனால் அங்கே அவரது விலகல்,சாட்சியின் கண்கள் தடையாக அமைகின்றன.

ஆரியசாலை திருவனந்தபுரம் பழைய சித்திரம்

ஆரியசாலை திருவனந்தபுரம் பழைய சித்திரம்

ஆ.மாதவனின் ஆக்கங்கள் அடித்தள மக்களின் குமுறல்களையும் கொந்தளிப்புகளையும் சொல்லக்கூடியவை அல்ல. அவற்றில் முற்போக்கினர் எதிர்பார்க்கும் ‘அன; அல்லது ‘கண்ணீர்’ இல்லை. அவை பற்றற்ற சாட்சியால் சொல்லப்பட்டவை போலிருக்கின்றன. உக்கிரமான பசியின் சித்தரிப்புகூட ஒரு அமைதியுடன் உணர்வு வரட்சியுடன் நிதானமாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறாக இருதரப்புக்கும் எட்டாத தனி உலகில் ஆ.மாதவனின் இயக்கம் நிகழ்தது. மிகக்குறைவாகவே தமிழில் அவர் வாசிக்கப்பட்டிருக்கிறார். அதே சமயம் தமிழில் அவரது கலையின் முக்கியத்துவத்தை முக்கியமான விமர்சகர்கள் எப்போதும் குறிப்பிட்டபடியே இருந்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார் இருவருமே அவரை தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியராக சொல்லிவந்திருக்கிறார்கள்.

நவீனத்துவமும் முற்போக்கும் தங்கள் கொடிகளை தாழ்த்திவிட்ட இன்று அவற்றின் சமகாலத்தன்மை உருவாக்கிய தடைகள் இல்லாமல் தமிழ் வாசகன் ஆ.மாதவனின் உலகுக்குள் செல்ல முடியும். அது அடித்தள மக்களின் வாழ்க்கையையும் அதன் பண்பாட்டுச் சிக்கல்களையும் அறிவதற்கான முக்கியமான பயணமாக அமையும்.

அப்படி இன்றைய களத்தில் வைத்து ஆ.மாதவனை வாசிக்கையில் அவரது அந்த பிளவுண்ட தன்மை, அல்லது இரட்டைத்தன்மை மிக முக்கியமான ஒரு கலைச்சிறப்பு என்பதைக் காணலாம். நடுத்தர வற்கமும் அடித்தள வர்க்கமும் விளிம்புகள் உரசிக்கொள்ளும் ஒரு ரகசியமான புள்ளியில் நிகழ்கின்றது ஆ.மாதவனின் புனைவுலகம். அடித்தளமக்களை கூர்ந்து அவதானித்து மானசீகமாக அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, அடிக்கடி தான் நடுத்தர வர்க்கத்தவன் அல்லவா என்ற தன்னுணர்வு கொண்டு விலகி அலைபாயும் ஒரு மனதால் உருவாக்கப்பட்ட புனைவுலகம் இது.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 10, 2010

=================================================

ஆ.மாதவன் விக்கி

ஆ மாதவன் அழியாச்சுடர்கள்

தமிழ்நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

ஆ.மாதவனை வகைப்படுத்துவது எப்படி?


ஆ.மாதவனின் கதைகள்

கிருஷ்ணப்பருந்து பற்றி

ஆ.மாதவன் பற்றி பாவண்ணன்

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51

$
0
0

bowயுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன் அளித்த ஓலையை படைத்தலைவன் தீர்க்கபாகு படித்தான். யுதிஷ்டிரர் முகவாயை தடவியபடி அதை கேட்டிருந்தார். அவர் மிகவும் தளர்ந்திருந்தார். பீமனும் தளர்ந்தவன்போலிருந்தான். வழக்கமாக அவையில் நின்றுகொண்டிருக்கும் அவன் பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான்.

முந்தையநாள் போரிலும் பாண்டவப் படைகளுக்கு மிகப் பெரிய இழப்புகள் அமைந்திருந்தன. பிரியதர்சனும் உத்தமௌஜனும் சத்ருஞ்ஜயனும் சுமித்ரனும் பாஞ்சால்யனும் சுரதனும் களம்பட்டதை தீர்க்கபாகு வாசித்தபோது துருபதர் பெருமூச்சுவிட்டார். அந்த ஓசை அவை முழுக்க கேட்டது. உத்தரமல்லநாட்டு தீர்க்கதந்தன் பெயர் சொல்லப்பட்டபோது துருபதரின் இருமலோசை கேட்டது. அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தன் வசுதனனும் இளையோன் நீலனும் கொல்லப்பட்டதை படித்தபோது நடுவே துருபதரின் இருமலோசை மட்டும் உரக்க ஒலித்தது. படைத்தலைவன் சற்று நிறுத்தி அவரை நோக்கினான். திருஷ்டத்யும்னன் எழுந்து சென்று துருபதரை அணுகி ஏதோ சொல்ல அவர் கைநீட்டி மறுத்தார். “மாண்டவர்கள் விண்ணின் ஒளியில் நிறைவுகொள்க! வீரர் பொன்னுலகு அவர்களுக்கு அமைக!” என்று படைத்தலைவன் படித்தான். அவையினர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர்.

அரக்கர் குலத்தலைவர்கள் வக்ரசீர்ஷரும் காகரும் இறந்த செய்தியை சொன்னதும் அரக்கர் குடித்தலைவர்கள் தங்கள் கோல்களை மேலே தூக்கி “மண்ணுள் உறங்குக! மண்ணுள் உறங்குக!” என்றனர். நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் நிஷாதஅரசின் ஹிரண்யநாபனையும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவையும் படைத்தலைவன் நினைவுகூர்ந்தான். “மண்ணுள் உறங்குக! மண்ணுள் உறங்குக!” என நிஷாதர்களும் கிராதர்களும் வாழ்த்துரைத்தனர். மாண்டவர்களின் பெயர்கள் வந்துகொண்டே இருந்தன. துருபதர் இருமிக்கொண்டிருந்தார். திருஷ்டத்யும்னன் எழுந்து சென்று அவரிடம் அழுந்தப்பேசி அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். அவர் தொய்ந்த தோள்களும் நடுங்கும் கால்களுமாக செல்வதை அவை நோக்கி அமர்ந்திருந்தது.

யுதிஷ்டிரர் “நமக்கு பேரிழப்பு…” என்றார். சாத்யகி “நிகராகவே அவர்களுக்கும் இழப்புகள் உண்டு… நேற்று நம் இளையவர் பீமசேனர் கௌரவ மைந்தர்கள் இருநூற்றிமுப்பதேழுபேரை கொன்றார். அபிமன்யூ நாற்பத்துநான்கு பேரை கொன்றார். கௌரவர்கள் திருதசந்தனும் ஜராசந்தனும் துராதாரனும் விசாலாக்‌ஷனும் சுஹஸ்தனும் வாதவேகனும் பீமவிக்ரமனும் கொல்லப்பட்டார்கள். மகாபாகு, சித்ராங்கன், சித்ரகுண்டலன், பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன்…” என்று தொடர யுதிஷ்டிரர் “போதும்!” என்று தலையை பற்றிக்கொண்டு சொன்னார். சாத்யகி அமரப்போக சிகண்டி “அல்ல. இளையோனே, நீ சொல்க! இது போரவை. நம் களவெற்றியைச் சொல்ல நாம் ஏன் அஞ்சவேண்டும்? சொல்க!” என்றார். சாத்யகி யுதிஷ்டிரரை நோக்கியபின் “தீர்க்கபாகுவும் சுவீரியவானும் சுவர்ச்சஸும் ஆதித்யகேதுவும் துஷ்பராஜயனும் அபராஜிதனும் சாருசித்ரனும் சராசனனும் சத்யசந்தனும் சதாசுவாக்கும் நேற்று கொல்லப்பட்டார்கள்” என்றான். “இத்தனை கௌரவர்கள் இதற்கு முன் பலியானதில்லை. ஏற்கெனவே அவர்கள் உளம் தளர்ந்திருக்கிறார்கள். மீண்டெழுவார்கள் என்று தோன்றவில்லை.”

ஆனால் பீமன் எந்த உணர்வையும் காட்டவில்லை. அங்கே நிகழ்ந்த உரையாடல்களை அவன் செவிகொண்டதாகவே தெரியவில்லை. “நம் படைசூழ்கையை திருஷ்டத்யும்னன் விளக்கட்டும்” என்று குந்திபோஜர் சொன்னார். திருஷ்டத்யும்னன் மின்கதிர்சூழ்கையின் அமைப்பைப் பற்றி விளக்கினான். நெடுந்தொலைவுக்கு உச்சவிசையில் குறைந்த நேரத்தில் தொடர்ச்சி அறுபடாது செல்லும் தன்மைகொண்டது அது. அதற்குரிய எவ்வடிவையும் எடுக்கலாம். கிளை பிரியலாம், வளைந்து சவுக்குச்சுழற்சியாகலாம், அம்பென நீண்டும் பாயலாம். அவன் அதை விளக்கியபோது எவரும் மாற்று உரைக்கவில்லை. ஐயங்களும் எழவில்லை. ஒவ்வொருவரும் சோர்வுற்றிருந்தனர். வேறு எவரோ இருமத்தொடங்கினார்கள். படைசூழ்கையை அவை ஏற்று ஓலையில் யுதிஷ்டிரர் கைச்சாத்திட்டதும் மீண்டும் அமைதி நிலவியது.

யுதிஷ்டிரர் யுயுத்ஸுவை பார்த்தார். யுயுத்ஸு எழுந்து தலைவணங்கி “அவையோரே, நம்முடன் படையில் சேர்வதற்காக உத்தர விதர்ப்பத்தின் போஜகடகத்தை ஆளும் அரசர் ருக்மி இன்று காலை நம் படைகளுக்குள் வந்துள்ளார். அவர் இளைய யாதவரை சந்தித்து வணங்கி ஒப்புதல் பெற்றுள்ளார். அவர் அவைக்கு வர ஒப்புதல் கோருகிறேன்” என்றான். மூன்றே சொற்றொடர்களில் அனைத்தையும் சொல்லிவிடவேண்டுமென அவன் எண்ணியிருந்தான். ருக்மியின் பெயரைச் சொன்னதுமே எழுந்த எதிர்ப்பு இளைய யாதவரின் பெயரால் இல்லாமலாகியது. சிகண்டி “அவருடைய நோக்கத்தை நான் ஐயப்படுகிறேன்” என்றார். அந்த நேரடிக் கூற்று அவையை திகைக்கச் செய்தது. யுதிஷ்டிரர் சினத்துடன் “அதை முடிவு செய்யவேண்டியவர் இளைய யாதவர், நாமல்ல” என்றார். “படையில் சேர்த்துக்கொள்ள வேண்டியவர் தாங்கள்” என்றார் சிகண்டி. “இல்லை, அதுவும் இளைய யாதவரின் முடிவே” என்றார் யுதிஷ்டிரர்.

அவையின் நோக்கு முழுக்க விதர்ப்ப இளவரசர்களை நோக்கி திரும்பியது. ருக்மரதனும் ருக்மகேதுவும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். ருக்மபாகுவும் ருக்மநேத்ரனும் அவைக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் குழம்பிய முகத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். நகுலன் “விதர்ப்பர்கள் இதைப்பற்றி தங்கள் எண்ணத்தை சொல்லலாம்” என்றான். ருக்மரதன் “நாங்கள் சொல்வதற்கேதுமில்லை. முடிவை அரசரே எடுக்கட்டும். அதற்கு எனக்கு முழு ஒப்புதலே” என்றான். சிலகணங்கள் மீண்டும் அவை தயங்கியது. அந்தத் தயக்கம் ஏன் என்று யுயுத்ஸுவுக்கு புரியவில்லை. திருஷ்டத்யும்னன் “அவ்வாறெனில் விதர்ப்ப அரசரை அவைக்கு அழைக்கலாமல்லவா?” என்றான். யுதிஷ்டிரர் ஒப்புதலளித்து தலையசைக்க சகதேவன் எழுந்து வாயிலுக்குச் சென்று நின்றான்.

ருக்மி உள்ளே வந்ததும் சகதேவன் தலைவணங்கி “விதர்ப்பத்தின் அரசருக்கு நல்வரவு… இந்த அவை தங்கள் வருகையால் நிறைவுகொள்கிறது” என்றான். ருக்மி அவனை வலக்கை தூக்கி வாழ்த்தி “நன்று திகழ்க!” என்றபின் யுதிஷ்டிரரை வணங்கி “உத்தரவிதர்ப்பத்தின் போஜகடகத்தின் அரசனாகிய ருக்மியின் வணக்கம். வெற்றியும் சிறப்புகளும் திகழ்க!” என்றான். யுதிஷ்டிரர் தலைவணங்கினார். சகதேவன் அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தான். யுதிஷ்டிரர் “தாங்கள் இங்கே படையுடன் வந்திருப்பதாக சொல்லப்பட்டது. தங்கள் படைகளை நமது படைகளுடன் இணைந்துகொள்ள ஆணையிடும் ஓலை இப்போதே அளிக்கப்படும்” என்றார். ருக்மி கையசைத்து அதை ஏற்றுக்கொண்டான்.

யுதிஷ்டிரர் “விதர்ப்பப் படைகள் முன்னரே எங்குள்ளனவோ அவற்றுடன் போஜகடகத்தின் படைகளும் இணைந்துகொள்வதே நன்று. அவர்களுடைய குழூஉக்குறிகளும் போர்முறைகளும் ஒன்றே என்பதனால் இணைந்து போரிட இயலும்” என்றார். ருக்மரதன் எழுந்து “நாங்கள் சிறு படை என்பதனால் விராடப் படைப்பிரிவில்தான் இணைந்துகொண்டோம். விராடர்களின் மண்மறைவுக்குப் பின் விராடப் படைகள் ஏழாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு தலைமையின்கீழ் அமைக்கப்பட்டன. எங்களை இப்போது பாணாசுரரின் மைந்தர் சக்ரர் தலைமைதாங்கும் பதினேழாம் படைப்பிரிவுடன் இணைத்திருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் “நன்று, அவர் ஆற்றல்மிக்கவர். விதர்ப்பத்தின் படைகள் அவரால் ஒருங்கிணைக்கப்படட்டும்” என்றார்.

ருக்மி சினத்துடன் எழுந்து “என்ன சொல்கிறீர்கள்? விதர்ப்பப் படைகள் அசுரர்களால் நடத்தப்படுகின்றனவா?” என்றான். தன் இளையோனை நோக்கி திரும்பி “இதை அவையில் எழுந்து நின்று சொல்ல உனக்கு நாணமில்லையா? நீ பீஷ்மகரின் குருதியில் எழுந்தவன்தானா? கீழ்மகனே, அசுரருக்குக் கீழே படைக்கலமெடுத்து நிற்கிறாயென்றால் நீ அசுரனுக்கும் கீழோன்!” என்று கூவினான். “விதர்ப்பரே, இங்கே குலமல்ல திறனே நோக்கப்படுகிறது. சக்ரர் பாரதம்கண்ட பெருவீரர்களில் ஒருவர்” என்றார் யுதிஷ்டிரர். “அவனைவிட ஆற்றல்கொண்ட கரடிகளும் குரங்குகளும் காட்டில் இருக்கலாம். அவை நடத்துமா படையை? ஷத்ரியன் குலத்தால் உருவாக்கப்படுபவன், முறைமைகளால் நிலைகொள்பவன், குலமிழந்த ஷத்ரியன் வெறும் படைபயின்ற விலங்கே” என்றான் ருக்மி.

சகதேவன் “விதர்ப்பரே, உளம்கனியுங்கள். உங்கள் எண்ணத்தை புரிந்துகொள்கிறேன். இனி அப்படைகள் அனைத்துக்கும் நீங்களே தலைமைகொள்க! உங்கள் கீழ் சக்ரர் திகழ்வார்” என்றான். “அசுரர்களை நான் வழிநடத்தவியலாது” என்றான் ருக்மி. “ஒரு தனிப் படைப்பிரிவாக செயல்படும் அளவுக்கு உங்கள் படை பெரிதல்ல…” என்று சகதேவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் “ஒவ்வொரு குலமும் தனியாக செயல்படுவதற்கு படைத்தலைமையின் ஒப்புதல் இல்லை. அது படைகளின் ஒருமையை முற்றழிப்பது” என்றான். ருக்மி “இங்கே என்ன நிகழ்கிறது? அஸ்தினபுரியின் குலப்பூசல் என எண்ணினேன். அரக்கர்களையும் அசுரர்களையும் கொண்டா அதை நிகழ்த்துகிறீர்கள்? என்ன கீழ்மை!” என்றான்.

பீமன் “விதர்ப்பரே, எங்கள் தரப்பில் படைகொண்டு நிற்பவர்கள் பெரும்பாலும் அசுரரும் அரக்கரும் நிஷாதரும் கிராதருமே. நீங்கள் விரும்பும் தூய ஷத்ரியக் குடிகள் அங்குதான் உள்ளனர். அங்கேயே நீங்கள் செல்லலாம்” என்றான். சம்பராசுரரின் மைந்தன் கீர்த்திமான் “அங்கே சேர்த்துக்கொள்ளப்படாமல்தான் இங்கே வந்திருக்கிறார்!” என்றான். “யாரடா அவன்? இழிசொல் உரைத்தவன் எவன்?” என ருக்மி திரும்பினான். “நான்தான். என் பெயர் கீர்த்திமான், சம்பராசுரரின் மைந்தன்” என்றான். “விதர்ப்பரே, நீங்கள் போற்றும் பெருங்குலத்தார் உங்களை ஏற்கவியலாது என அனுப்பிவிட்டனர். ஆகவே நீங்கள் குலப்பெருமையை சற்றே இழக்கத்தானே வேண்டும்?” அவையிலிருந்து சிரிப்பொலி எழுந்தது.

“விதர்ப்பம் என்றும் தன் பெருமையை இழக்காது!” என்று ருக்மி கூவினான். “நாங்கள் பாரதவர்ஷத்தின் தொன்மையான அரசகுலம். தொல்புகழ் தமயந்தி பிறந்து மும்முடிசூடி அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுதாண்ட பெருமை கொண்டது. அப்பெருமையே எங்கள் பெருஞ்செல்வம். எந்நிலையிலும் அதை நாங்கள் விட்டுத்தரப் போவதில்லை.” முதிய கிராதமன்னர் கூர்மர் “அவ்வாறென்றால் நீங்கள் இந்தத் தரப்பில் நின்று போர்புரிய இயலாது, விதர்ப்பரே. இப்போரில் நாங்கள் வெல்வோம். அதன் பின் எங்கள் அனைவருக்குமே அவையமர்வில் நிகரிடம் அளிக்க பாண்டவப் பேரரசர் யுதிஷ்டிரர் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றார். ருக்மி சீற்றத்துடன் யுதிஷ்டிரரை நோக்கி “அது எவ்வாறு இயலும்? குடிகளை வகுத்து கடமைகளை அளிப்பது வேதம். வேதத்தை மறுக்கிறீர்களா?” என்றான். “இளைய யாதவர் வேதமுடிபை முன்வைக்கிறார் என்றே நான் அறிந்திருக்கிறேன். வேதமறுப்பை என்றால் அதற்கு என் வாள் எழாது!”

“நீங்கள் இதை அவரிடமே கேட்கலாம், விதர்ப்பரே” என்றார் யுதிஷ்டிரர். “நான் இனி சொல்வதற்கொன்றுமில்லை. இந்தப் போர் ஏற்கெனவே முழுமையாக மூண்டுவிட்டது. இதில் எவருக்கும் எத்திசையிலும் பின்னகர்வு இனி இயல்வது அல்ல. நீங்கள் முடிவெடுக்கலாம்.” ருக்மி “முடிவெடுக்கிறேன்… அதற்கு முன் நான் அவரிடமே அதைப்பற்றி பேசவேண்டும்” என்றபின் திரும்பி தன் இளையவர்களை நோக்கி “கிளம்புங்கள் என்னுடன்… நீங்கள் பீஷ்மகரின் குருதியில் பிறந்தவர்கள் என்றால் இப்போதே கிளம்புக!” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். “கீழ்மக்களே, என்ன தயங்குகிறீர்கள்? நீங்கள் ஷத்ரியர்கள் என்றால் கிளம்புங்கள்!” என்றான் ருக்மி. “நாங்கள் எந்தையின் ஆணையை ஏற்று வந்தவர்கள். அவருடைய ஆணைக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று ருக்மரதன் சொன்னான்.

ருக்மி கையோங்கியபடி அவனை அடிப்பதுபோல் சென்று தயங்கி நின்று “இதன் விளைவு என்ன என்று அறிவீர்களா? ஏற்கெனவே அனைத்துப் பெருமைகளையும் இழந்து அவைச்சிறுமை கொண்டு நின்றிருக்கிறது நம் குடி… அசுரருக்கும் அரக்கருக்கும் அடிமைப்பணி செய்தீர்கள் என்றால் நீங்கள் ஷத்ரியர் முன் தலைநிமிர்ந்து நிற்க இயலாது” என்றான். “நம் குடிப்பெருமைக்காகவே நான் இத்தனைநாள் நோன்புகொண்டேன். இங்கே வந்ததும் அதற்காகவே. நான் கொண்ட அனைத்தையும் இழக்கும் கீழ்மையை இவர்கள் எனக்கு அளிப்பார்கள் என்றால் அதை ஏற்க இயலாது…” என்றான். பேசமுடியாமல் அவனுக்கு மூச்சிரைத்தது.

ருக்மரதன் “மூத்தவரே, நீங்கள் கொண்ட சினம் குடிப்பெருமையின் அழிவால் அல்ல. அது உங்கள் ஆணவத்தால் மட்டுமே. நீங்கள் உங்களை இளைய பாண்டவர் அர்ஜுனனுக்கு நிகரான வில்லவராக எண்ணிக்கொள்கிறீர்கள். இளைய யாதவரின் எதிரியாக உங்களை நிறுத்திக்கொள்வதன் வழியாக அவருக்கு நிகரான பெருமையை அடைய எண்ணுகிறீர்கள்” என்றான். ருக்மி அச்சொற்களை நம்பமுடியாமல் நோக்கி நின்றான். “உங்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றியையும் அடைந்தீர்கள். இளைய யாதவருடன் உங்களை இணைத்துக்கொண்டமையால் நீங்களும் அவைகளில் பேசப்படுகிறீர்கள். இளைய யாதவரின் எதிரிகளால் அவ்வப்போது புகழவும்படுகிறீர்கள். பெரிய எதிரிகளை ஈட்டிக்கொள்வது பெரியவர்களாக ஆவதற்கான குறுக்குவழிகளில் ஒன்று.”

ருக்மி கட்டற்ற வெறிகொண்டு உறுமியபடி ருக்மரதனை அடிப்பதற்காக பாய்ந்தான். அவனை சாத்யகி பிடித்துக்கொண்டான். “இது அரசவை. இங்கே அத்துமீறுதல் குற்றம்” என்று சாத்யகி சொன்னான். ருக்மி நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் குரலே மேலெழவில்லை. “ஒவ்வாமை கொண்டீர் என்றால் வெளியேறுக, விதர்ப்பரே!” என்றான் சாத்யகி. ருக்மியின் குரல் உடைந்து அழுகையோசை கலந்தது என ஒலித்தது. “இழிமகனே, இது என் வஞ்சினம். இது என் வஞ்சினம் என இந்த அவை அறிக! நீ என் எதிரி. உன் நெஞ்சுபிளப்பேன்… என்னைப் பழித்த உன் நாவை இழுத்துப் பறித்தெடுப்பேன்.” ருக்மரதன் “வஞ்சினங்களால் வாழ்பவர் நீங்கள்… உங்கள் முந்தைய வஞ்சினங்களுக்குப் பின் என்னிடம் வருக!” என்றான்.

ருக்மகேது “மூத்தவரே, எதன்பொருட்டு இந்த வெறி? நம் குடியின் பேரரசி தமயந்தியைப் பற்றி சொன்னீர்கள். அவள் மணந்துகொண்ட நளன் நிஷாதன் என்பதை ஏன் மறந்தீர்கள்? அவர்களிருவரின் குருதியே நம்மில் ஓடுவது. வேண்டாம்! இந்த வெற்றுச்சினங்களால் நீங்கள் வீணாகி அழிகிறீர்கள்” என்றான். ருக்மி “உங்கள் அனைவருக்கும் மேல் நின்றிருக்கும் என் வஞ்சினம்! ஆணை!” என்றபின் வெளியே சென்றான். அவையில் இருந்து சினக்குரல்களும் இளிவரல் ஓசைகளும் கலந்த முழக்கம் எழுந்தது. “அவர் இந்நாடகத்தை இங்கே நடத்தும்பொருட்டே வந்துள்ளார் போலும்!” என்றான் திருஷ்டத்யும்னன். “அல்ல, பாஞ்சாலரே. அவருடைய இயல்பு அது. எங்கேனும் பற்றி ஏறி எரிந்து தழலாடிக்கொண்டே இருப்பதே அவருடைய வாழ்க்கை” என்றான் ருக்மகேது. “அவர் தன்னைப்பற்றி மிகைமதிப்பீடு கொண்டிருக்கிறார். அத்தகையோர் புண்பட்டபடியே இருப்பார்கள், ஏனென்றால் அம்மதிப்பீட்டை உலகம் அவர்களுக்கு அளிப்பதில்லை” என்றான் சகதேவன்.

bowயுயுத்ஸு ருக்மியுடன் வெளியே சென்று “விதர்ப்பரே, நீங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு இங்கே வந்தீர்கள் என எண்ணினேன். நீங்கள் இந்தப் போர்த்திரட்சியின் எல்லா அரசவைகளிலும் கலந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், ஆனால் இங்கே நிகழ்வது இது என நான் எண்ணியிருக்கவில்லை. கீழ்மக்களை திரட்டுகிறீர்கள் என நான் அறிவேன். ஷத்ரியர்களை அவர்களுக்கு அடிமைப்பணி செய்ய அனுப்புவீர்கள் என எண்ணியிருக்கவில்லை” என்றான் ருக்மி. “நான் அவரை பார்க்க விரும்புகிறேன். அவரிடம் கேட்டுவிட்டே செல்வேன். இதனால் அவர் அடையவிழைவதென்ன என்று… ஆம். அதை கேட்காமல் சென்றால் என் நெஞ்சு அணையாது.”

அவன் சென்று தன் புரவியில் ஏறிக்கொள்ள யுயுத்ஸுவும் புரவியில் தொடர்ந்தான். ருக்மி வழியில் புரவியை இழுத்து நிறுத்தி “இந்த நிலத்தில் அரசுகள் அமைந்திருக்கும் அடித்தளத்தை அசைக்கிறார். இங்குள்ள அரசகுலங்கள் அனைத்தும் சரியும். இங்குள்ள நெறிகள் முற்றாக அழியும். வேதமும் நெறிகளும் புரப்போரின்றி மறையும். தெய்வங்கள் அவியிலாது விடப்படும். மூதாதையர் நீரிலாது அமைவர். அதைத்தான் விழைகிறாரா அவர்?” என்றான். யுயுத்ஸு “இங்கு அனைவரும் அறிந்தது ஒன்றுண்டு. குருதிக்கலப்பற்ற ஷத்ரியர் இங்கு எவர்? பாண்டவர்களும் கௌரவர்களும்கூட சர்மிஷ்டையின் கொடிவழியினரே” என்றான். “நீங்கள் அடிபணிந்த இளைய யாதவரின் மைந்தரும் பெயர்மைந்தரும் அசுரர்குடியில் மணம்கொண்டவர்கள்.”

ருக்மி தளர்ந்து “ஆம், நான் ஏன் அதை எண்ணாமல் இருந்தேன்? என் அறிவழிந்துவிட்டது. இது குருதிக்கலப்பாளர்களின் படை. இதில் எனக்கு இடமில்லை. சினத்தில் நான் அனைத்தையும் மறந்துவிட்டேன்” என்றான். கடிவாளத்தைப் பற்றிக் கசக்கியபடி புரவிமேல் அமர்ந்திருந்தான். தலையை அசைத்து “நான் அறிந்த யுகம் அழிகிறது போலும். கலியுகம் எழுகிறது என்றனர் நிமித்திகர். குலக்கலப்புகளின் யுகம். நெறிமயக்கங்களின் யுகம். அதில் எனக்கு இடமில்லை. நான் என் நெறிகள் திகழும் உலகிலேயே வாழ விழைகிறேன். அது சின்னஞ்சிறு வட்டமாக இருப்பினும்” என்றான்.

பின்னர் புரவியை திரும்பிக்கொண்டு “அவரிடம் சென்று அதை கேட்பதில் பொருளில்லை. அவர் எண்ணிச்செய்வதே இவையனைத்தும். அவருக்கு ஷத்ரியர் அவைகளில் இடமளிக்கப்படவில்லை. அதனால்தான் சிசுபாலனை கொன்றார். அந்த வஞ்சத்தை இழிசினரைத் திரட்டி ஷத்ரியக் குடிகளை அழித்து தீர்த்துக்கொள்கிறார்” என்றான். அவன் மீண்டும் சினம் கொண்டான். பற்களைக் கடித்து “ஆனால் அவர் எண்ணுவது நிகழாது. இப்போர் முடிந்ததும் அசுரரும் ஷத்ரியரும் இணைந்த அரசகுடிகள் உருவாகும் என்றும் அவர்களுக்கு தலைக்குடியாக தன் கொடிவழியினர் அமைவார்கள் என்றும் எண்ணுகிறார். ஆனால் வேதம் அதை ஒப்பாது. வேதம் நின்றுகொல்லும் வஞ்சம் கொண்டது” என்றான்.

யுயுத்ஸு “வேதமுடிபுதான் வேதத்தின் விதை. அது முளைத்தெழும் புதிய வேதமே நாராயணவேதம். அது மெய்மையை மட்டுமே தன்னியல்பெனக் கொண்டது” என்றான். “வீண்சொற்கள்…” என கைவீசித் தடுத்த ருக்மி “இனி இங்கே எனக்கு இடமில்லை. நான் கிளம்புகிறேன்” என்று புரவியைத் தட்டி விரைவுகொண்டு அகன்றுசென்றான். அப்புரவியின் வால் சுழல்வதை யுயுத்ஸு நோக்கி நின்றான். என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. அவன் சென்றுமறைந்த பின்னர் புரவியை திருப்பியபோது அதை இளைய யாதவரிடம் சொல்வதே முறை என்று தோன்றியது.

அவன் இளைய யாதவரின் குடில்முற்றத்தை அடைந்தபோது தொலைவிலேயே அவர் கவசங்களை அணிந்துகொண்டிருப்பதை கண்டான். நேமிதரன் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதுமே இளைய யாதவர் அருகே வரும்படி கையசைத்தார். அவன் புரவியிலிருந்து இறங்கி எவ்வண்ணம் அந்நிகழ்வுகளை தொகுத்துச் சொல்வது என எண்ணியபடி சென்றான். அவருடைய புன்னகையைக் கண்டதும் அவருக்கு முன்னரே தெரியுமா என்னும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கு வழியே இல்லையே என குழம்பினான்.

இளைய யாதவர் “எனக்கு செய்தி வரவில்லை. ஆனால் எச்செய்தி வரும் என அறிவேன், தார்த்தராஷ்டிரரே” என்றார். யுயுத்ஸு உள்ளம் எளிதாகி புன்னகை புரிந்து “குலப்பெருமை” என்றான். “நன்று” என்றார். “படைகளுடன் திரும்பச்செல்கிறார்” என்றான் யுயுத்ஸு. “அவர் இப்போரில் கலந்துகொள்ளாமலிருப்பதனால் அவரோ விதர்ப்பமோ காக்கப்படவில்லை” என்றார் இளைய யாதவர். “போருக்குப் பின் நாம் அவர்களை தாக்குவோமா?” என்றான் யுயுத்ஸு. “நான் அதை சொல்லவில்லை. அவருடைய அவ்வியல்பாலேயே அழிவை நோக்கி செல்லவேண்டியவர் என்றேன்” என்றார் இளைய யாதவர்.

யுயுத்ஸு “அரசே, நான் ஒன்றை மட்டுமே அறிய விழைகிறேன். இன்று காலை இளைய பாண்டவரின் குடிலில் நிகழ்ந்தது நாடகமா?” என்றான். “நாடகம் என்றால் அனைத்துமே அவ்வாறுதான். அவர் என்னைக் கண்டதும் அடைந்த உணர்வெழுச்சி மெய்யானது. மீண்டும் இங்கு வந்திருந்தால்கூட அதே உணர்ச்சி எழுந்திருக்க வாய்ப்புண்டு” என்றார் இளைய யாதவர். “தங்கள் உணர்ச்சி?” என்றான் யுயுத்ஸு. “அதுவும் மெய்யானதே. நான் விழிநீர்களுக்கு முன் அறிவிலாதோன்” என்றார் இளைய யாதவர்.

காவியம் – சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்


காடு- வாசிப்பனுபவம்

$
0
0

kadu2

 

 

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் கிண்டில் வாங்கி முதலில் வாசித்த நூல் காடு. வாசித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. வாசித்து முடித்த உடன் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் சொற்கள் கிட்டவில்லை. மனதில் முழுக்க காடு நிறைந்து இருந்தது. இன்று தெளிவாக கதை மனதில் இருக்கிறது, எதோ வகையில் நான் முதன் முதலாக சுயமாக எழுதுகிறேன். இதற்கு முன் சில கேள்விகளை உங்களிடம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறேன். பதில் வந்ததில்லை(முக்கியத்துவம் இல்லை என்னவோ நேரம் இல்லை என்னவோ கொள்கிறேன்). காடு நாவலில் நுழையும் போது சிறு தடை இருந்தது, காரணம் நான் காடு கண்டதில்லை. நான் காணாமல் அறிந்த காடு அபாயமானது. அனால் நாவலை வாசிக்க தொடங்கி 3 அத்தியங்களுக்குள் காட்டில் நுழைந்து விட்டேன். கிரிதரன் குடிலை விட்டு காட்டில் நுழையும் போது உடன் நானும் காட்டில் நுழைய முடிந்தது. காடு இன்னும் என்னுள் பசுமையாக இருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் உள்ளே சென்று விட முடியும். அதற்க்கு முக்கிய காரணம் காட்டின் சிறப்பான வர்ணனை, மற்றும் மலை தெய்வங்கள்.  நான் வாசிக்கும் முதல் ஜெயமோகன் நாவல் இது, இதற்க்கு முன் உங்கள் சிறுகதைகள் மட்டுமே வாசித்திருக்கிறேன். நான் வாசித்த பிற நாவல்கள் எதுவும் இப்படி என் மனதில் இத்தனை நாள் பசுமையாக இருந்ததில்லை. அந்த வகையில் காடு நாவல் எனக்கு முதல் இலக்கிய தரிசனம் என்று சொல்லலாம்.

கிரிதரன்:

கிரிதரன் தான் என்னை காட்டிற்குள் அழைத்து சென்றான் பிறகு பலர் வழியே பயணிதாலும் கிரிதரன் தான் எனக்கு காடு காண்பித்தவன். அவன் முதன் முதலில் காட்டில் நுழையும் போதே காடு அவனுக்கு பெரும்துயர் என்னும் பேரின்பத்தை அளிக்கிறது. காட்டின் வழியே உயிர்பயதுடன் ஓடும்போதே அவன் அடர் காட்டின் அழகை அனுபவிக்கிறான். பின்னர் அவன் காடு செல்லும் ஒவ்வொரு நாளும் காட்டை தரிசிக்கிறான். துர்நாற்றம், வாசனை, மலம், பூ, பழங்கள், பாம்புகள், பறவைகள், விலங்குகள்… என அவன் தரிசனம் நீள்கிறது. ஒவ்வொரு நாளும் காடு அவனுக்கு புதிய தரிசனத்தை அளிக்கிறது. அதன் உச்சம் நீலியின் தரிசனம். காதல் கொள்கிறான், அவள் மீது பயமும் அதை மீறிய காதலுடன் அவளை கண்டடைகிறான். நீலியை மீண்டும் காண அவன் நடந்து ரகிசிய விசாரணை மிக சுவாரஸ்யமானது. பின்பு நீலி இவன் காதலை புரிந்து கொள்வதும் காதல் கொள்வதும் கிரிதரன் வாழ்வின் உச்சகட்ட மகிழ்ச்சி. நீலியுடன் கிட்டத்தட்ட தினமும் சந்திக்கிறான், பெரும்பாலும் எதுவுமே பேசவில்லை அதிகமும் நான் போகணும், நான் மலயத்தி போன்ற சில சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்கிறாள். ஆனால் அத்தருணம் தரும் இன்பம் மட்டுமே அவனை மீண்டும் , மாமாவின் எச்சரிக்கையும் மீறி காட்டுக்குள் கொண்டு வருகிறது, நீலியே சிந்தையாகி வாழ்கிறான். இதனிடையே சாத்தன் அவனை காம ரூபத்தில்  சீண்டி கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் உடல் பொருள் எங்கும் நீலியே இருக்கிறாள். அதனால் சாத்தன் அவனை ஆட்கொள்ள முடியவில்லை. நாவல் முழுக்க சாத்தான் வெவ்வேறு உருவெடுக்கிறான், குறிப்பாக கிரிதரனின் மாமா சாத்தானின் கை பிடியில் மாட்டி இறக்கிறார். கிரிதரனை நீலி சாத்தனிடம் இருந்து காப்பாற்றுகிறாள். அனால் எங்கோ ஒரு தருணத்தில் சாத்தானின் பிடியில் சிக்கி விட்டான் என்பதை நாவல் முழுக்க அவன் பின்கால துன்பங்கள் இடையிடையே சொல்லப்படுவதால் புரிகிறது. நாவலில் கிரிதரனின் இன்ப கடல் சொல்லும் போதே ஊடே  அவன் துன்ப கடலும் காண்பிக்க படுகிறது. அதுவே நாவலின் சிறப்பு, நம் மனம் இன்பத்தில் திளைத்து கொண்டிருக்கும் போதே அதன் நேர் எதிர் காட்சியை தெளிவாக காட்டி கொண்டே நகர்கிறது. நாவல் முடிவில் கிரிதரன் சாத்தன் பிடியில் சிக்கும் காட்சி வருகிறது. மனது அங்கிருந்து மீண்டும் நாவல் ஊடக பயணிக்கிறது. மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என எத்தனை பயணித்தாலும் முடிவில்லா பாதை. முடிவில்லா அடர் காடு. ஒவ்வொரு பயணத்திலும் வெவேறு தரிசனம், நாவல் வாசித்து முடித்த பிறகே அதிக வாசிப்பு நிகழ்கிறது(நிகழ்ந்து கொண்டிருக்கிறது).

சற்று ஏறக்குறைய நடுவில் வெட்டப்பட்டு இரண்டு துண்டுகளையும் சேர்த்து கட்டி வைக்கப்பட்ட கரும்பு ஒன்றில் ஒரு கட்டெறும்பு அடிகரும்பு துண்டு, நுனிகரும்பு துண்டு என மாறி மாறி குழப்பத்துடன் கரும்பு தோல் மீது பயணித்து நடுவில் வெட்டப்பட்ட இடத்தில வந்து உண்மை அறிந்து உவகையில் பேருருவம் எடுத்து கரும்பு கட்டை உடைத்து நேராக பொருத்தி வைத்து மீண்டும் கட்டெறும்பு உருவம் எடுத்து கரும்பின் உள்நுழைந்து அடிகரும்பு நுனிகரும்பு என ஊடே அங்கும் இங்கும் பயணித்து சுவைக்கும் இன்பம், இந்நாவல் அளிக்கும் இன்பம்.

நீலி:

கறுப்பி, மலயத்தி, பேரழகி, தேவதை… நீலி. இந்நாவலில் கிடைக்கும் உச்சகட்ட தரிசனம் நீலி, காடே வீடாக வாழும் மலயத்தி. பெரும்பாலும் தனியே வாழ்கிறாள், தானே பாடுகிறாள், காட்டை மலை தெய்வங்களை தினமும் தரிசிக்கிறாள். உண்மையில் வாழ்கிறாள். தன் கூட்டில் இருக்கும் பொது தன்னை யாரோ கவினித்து கொண்டிருப்பதை உணர்கிறாள், கிரிதரனை சந்திக்கிறாள். துரத்துகிறாள்(வெறுப்பில்லை) அவன் போகமேட்டேன் என்கிறான், கொல்வதென்றால் கொல் என்று பயமும் காதலும் கலந்து கிரிதரன் சொல்கிறான். இரண்டும் நீலிக்கு புரிகிறது, அவனிடம் காதல் கொள்கிறாள். கிரித்ரனை சந்திக்கும் போதெல்லாம் தான் மலயத்தி என்னும் தன்னுணர்வு அவளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இவன் காடு விட்டு நாடு சென்று விடுவான் என்னும் எண்ணமும் இருந்து கொண்டே இருக்கிறது. அத்தனையும் மீறி காதல் கொண்டு காதல் தருகிறாள். கிரிதரனுக்கு அவன் கண்டடையாத சில காட்டின் தரிசனங்களை காண செய்கிறாள். கிரிதரனை வர சொல்லிவிட்டு ஒளிந்து இருந்து அவன் தன் இருப்பை உணர்ந்து அவளை காண முடியாமல் தவிப்பதன் மூலம் இருவர் காதலும் பல்கி பெருகுவதை காண்கிறாள். பொன் வேண்டாம் என்று மறுக்கும் போதும், நான் மலயத்தி, நான் போகணும் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் போதும் காடு தான் அவள் வீடு என உணர்த்துகிறாள். நீலியின் மரணம் ஒரு விடுதலை, அவள் மனித உடலில் இருந்து விடுதலை அடைகிறாள், சொர்க்கத்திற்கு செல்கிறாள். மலயத்திக்கு காடன்றி வேறெங்கு சொர்க்கம். ஆனால் இப்போது மனித உடலின் தடைகள் இல்லை. அவள் ஓடி களைத்த மலையை, செல்ல முடியாத மலையை தண்ணீராக உருவெடுத்து சென்றடைய முடியும். மலர்களின் நறுமணத்தை கையில் எடுத்து நுகரவேண்டியதில்லை, காற்றென மாறி நறுமணமே தன்னுடலாக கொண்டு சுற்றி வர முடியும், கீறக்காதன் தன் கூட்டத்தை விட்டு பிரிந்து துயரப்படும் போது நம்மால் என்ன செய்ய முடியும் என்று சொல்லி அதன் துயரத்தில் பங்கு கொள்ளாமல் தவிர்க்க வேண்டியதில்லை, கீறக்காதன் உடன் அலைந்து திரிந்து அதன் துயரத்தில் பங்கு கொள்ள முடியும். அவள் மரணம் மூலம் விடுதலை பெற்றாள். கிரிதரன் நீலி மரண செய்தி கேட்டு அவளை தேடி அலையும் பொது அவன் முன் தோன்றாமல் அவனை கவனிக்காமல் காட்டில் அவளுக்கான கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறாள். ஆனால் அவள் அவனை காதலிக்கிறாள், அதனால் அவன் சாத்தான் பிடியில் சிக்க நேரம் நெருங்கும்போது உள்ளுணர்வு கொள்கிறாள் அவனை தேடி வருகிறாள், பேயுரு கொண்டு அவனை விரட்ட(காப்பாற்ற) முயற்சிக்கிறாள். கிரிதரன் சாத்தன் பிடியில் விழும்போது ஆக்ரோஷத்துடன்  ஜன்னலை அறைகிறாள். சாத்தன் பிடியில் சிக்கி அவன் வாழ்க்கையில் பின் அனுபவிக்க போகும் துன்பத்தை முன்னரே காண்கிறாள், காப்பாற்ற முடியவில்லை என கவலை கொள்கிறாள். அவள் மலயத்தி நகர் வந்து அவன் படும் துன்பத்தை பார்த்திருக்க மாட்டாள், ஆனால் கடைசியில் கிரிதரன் அய்யரிடம் வந்து தன்  துயர் சொல்லும் பொது அருகில் இருந்து அவனுக்காக இரக்க பட்டிருப்பாள். நீலி ஒரு வனதேவதை, அற்ப மானுடன் கையில் சிக்கமாட்டாள் என்பதே விதி. நீலி காற்றென, நீரென, மண்ணென, மரமென, விதையென…. காடெங்கும் வாழ்வாள்.

நான் இந்த கடிதத்தை எழுதி முடிப்பேன் என நினைக்கவில்லை, இரண்டு அல்லது மூன்று வரிகள் மேல் தாண்டாது என்றே எண்ணினேன். மனதில் இருந்து கொஞ்சம் சொற்கள் வந்தன, சிறிதளவேனும் எழுத முடிந்தது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. காடேனும் வாழ்வனுபவத்தை அளித்ததற்கு நன்றி.

இப்படிக்கு,
அருள், எர்ணாகுளம்.

 

காடு-முடிவிலாக் கற்பனை

காடு -கடிதம்

காடும் மழையும்

காடு- கடிதங்கள்

காடும் யானையும்

கன்யாகுமரியும் காடும்

காடும் குறிஞ்சியும்

காடு- ஒரு கடிதம்

காடு– ஒரு கடிதம்

காடு – பிரசன்னா

காடு -ஒரு பார்வை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்

$
0
0

supi

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

 

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

 

 

சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்” நாவல் குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். இந்த நாவலை உடனே வாசிக்க வேண்டும் என்ற மனநிலையில், மின் புத்தகமாக வாங்கலாம் என்று எண்ணி கிண்டிலில் தேடினேன். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

 

இதைப்போன்று நீங்கள் முன்னரும் எழுதிய குறிப்புகளை வைத்து பல நாவல்களை படிக்க எண்ணி தேடியிருக்கிறேன். உதாரணம் சூல், ஆப்பிளுக்கு முன், ஒளிரும் நிழல், உப்பு வேலி, சுசிலாவின் அசடன், குற்றமும் தண்டனையும்,  போன வருடம் விஷ்ணுபுரம் விருது பெற்ற முத்துசாமியின் புத்தகங்கள் மற்றும் இந்த வருடம் விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் ராஜ் கவுதமனின் புத்தகங்கள் என்ற எதையும் என்னால் மின் புத்தகமாக வாங்க முடியவில்லையே! ஏன்?

 

 

எனக்கு சரியாக இணையத்தில் தேட தெரியவில்லை என்றால், நீங்கள் எழுதும் குறிப்புகளில் புத்தகமாக வாங்க என்பதுடன் புத்தகத்தின் கிண்டில் பக்கத்தையும் இணைக்க வேண்டி தங்களை வலியுறுத்தி வேண்டுகிறேன் அல்லது  கூகிளில் தேடினால் கிடைக்க கூடிய “குறி சொற்கள்” (keywords) வேண்டும் . தமிழில் புத்தகத்தின் தலைப்பை வைத்து கூகுளை அணுகினால் ஒன்றும் தேற மாட்டேன் என்கிறது. ஆங்கிலத்தில் தலைப்பை எழுதலாம் என்றால் ஸ்பெல்லிங் எப்படி எழுதலாம் என்பது ஒரே குழப்பமாக உள்ளது. உதாரணமாக சுபிட்ச முருகன் ஐ subitcha, subisa, subitsa, subitsha, subisha என்று பலவாறாக முயற்சி செய்து தோற்றுவிட்டேன்.

 

 

புத்தகம் வெளியாகும் போதே மின் புத்தகமும் வெளியாகும் என்றே வாசகனாக நம்புகிறேன். மின் புத்தகமாக வெளியாவதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ன?, இருந்தால் தெளிவு படுத்தவும்.

 

 

பாண்டியன் சதீஷ்குமார்

 

அன்புள்ள சதீஷ்குமார்

 

அ. நூல்வெளியாகும்போதே மின்னூலும் வெளியாகும் வழக்கம் அனேகமாக இல்லை. மிக அரிதாகவே நூல்கள் அவ்வாறு வெளியாகின்றன.

 

ஆ. கிழக்கு போன்ற பதிப்பகத்தின் நூல்களை உடனுக்குடன் மின்னூலாக வாங்கிவிடமுடியும்.

 

இ. நூல்களை தமிழிலேயே அடித்து தேடலாம். அல்லது வெட்டி ஒட்டியும் தேடலாம். அனேகமாக வந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் தேடும்போது எழுத்துப்பிரச்சினை உள்ளது

 

உ நான் பெரும்பாலும் நூலை வாங்குவதற்கான இணைப்புகளை அளித்துவிடுகிறேன். மின்னூல் கிடைக்குமென்றால் அச்செய்தியையும் அளிக்கிறேன்.

 

ஊ சுபிட்ச முருகன் இன்னும் மின்னூலாக வெளிவரவில்லை. நூல் வெளிவந்தே சிலநாட்கள்தான் ஆகின்றன. மின்னூல் ஓரிரு மாதங்களில் வெளிவரக்கூடும்.

 

எ. சுபிட்ச முருகன் என தேடினால் இணையத்தில் அச்சுநூல் வாங்கும் கடைகளின் இணைப்புகள் கிடைக்கின்றன

 

ஜெ

 

சுபிட்சமுருகன் டிஸ்கவரி

சுபிட்ச முருகன்  விக்கேன் ஷாப்பிங்க்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சேலத்தில் ஒரு நாள்

$
0
0

g

 

நாலைந்து நாட்களாகவே வீட்டில் ஒரு காய்ச்சல் சூழல். முதலில் அருண்மொழிக்குக் காய்ச்சல் வந்தது. உடுப்பி சென்று திரும்பிய கையோடு. உண்மையில் இந்த ‘வைரல் ஃபீவர்’ என்றும் ‘ஃப்ளு’ என்றும் இவர்கள் சொல்லும் நான்குநாள் காய்ச்சல் ஓர் இனிய அனுபவம். ஓய்வுநாட்கள் உள்ளவர்கள் தாங்களாகவே வலிய வரவழைத்து இன்புறலாம். இனிய உடல்தளர்வு, சுகமான கைகால்குடைச்சல், மாத்திரை போட்டுக்கொண்டு நாள்முழுக்க தூங்கலாம். இனிய ஆனால் விபரீதமான கனவுகள் காய்ச்சலின்போது மட்டுமே வரும்.

 

சைதன்யா டெல்லி மீளவேண்டும். ஆனால் விமானத்தை விட்டுவிட்டாள். நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் போக பற்பல கட்டப்படா பாலங்களைக் கடந்து மூன்று மணிநேரம் பயணம் செய்யவேண்டும். அன்று நான்குமணிநேரம் ஆகிவிட்டது, நடந்துபோகும் நேரம் கிட்டத்தட்ட அதுதான். மறுநாள் அவளுக்கும் காய்ச்சல். ஆகவே பயணத்தை நான்குநாள் ஒத்திப்போட்டாள். இன்னொரு மூலையில் அவளும் படுத்துவிட்டாள். கஞ்சி, தோசை என எளிய உணவு. இதை ஆரோக்கிய உணவு என்கிறார் கு.சிவராமன், வேறுவழியில்லையேல் சாப்பிடவேண்டியது

 

விடுதியில்

விடுதியில்

அதற்கு மறுநாள் எனக்கும் காய்ச்சல். உடலே ஒரு பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது. அவ்வப்போது எங்கிருக்கிறோம் என்றே தெரியாத ஒரு மயக்கம். ஆனாலும் எழுதிக்கொண்டிருந்தேன். வெண்முரசை விடமுடியாது. வியாசரே வைரல்ஃபீவர் கொண்டு எழுதியதாகச் செய்தி- இல்லாமலா இருக்கும், தேடிப்பார்க்கவேண்டும். மொத்தத்தில் ஒரு மோனநிலை. நடுவே அருண்மொழிக்கு அவளுக்கு பன்றிக்காய்ச்சலோ என ஐயம்.டாக்டருக்கு ஐயமில்லை, ஆனால் வற்புறுத்தி சோதனை செய்து ஏமாற்றமடைந்தாள், பன்றிக்காய்ச்சல் இல்லை.

 

காய்ச்சல் ஓய்ந்தபின்னரும் உள்ளம் ஓய்ந்தே கிடந்தது. அதனிடையேதான் சேலம் உரை. நான் மட்டும்தான் உரை என்பதனால் ரத்துசெய்ய முடியாது. ஆகவே [27 -10-2018] மாலை ரயிலில் கிளம்பினேன். நேராக ஈரோட்டுக்கு மறுநாள் காலை ஐந்தரை மணிக்குச் சென்று இறங்கினேன். சந்திரசேகரன், அந்தியூர் மணி ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணன் டீக்கடையில் காத்திருந்தார். அங்கிருந்து நேரடியாகவே சேலம் கிளம்பிவிட்டோம்.கதிர்முருகன் வழியில் ஏறிக்கொண்டார். மிச்சபேர் ரயிலில் சேலம் வருவதாக ஏற்பாடு

 

இதழாளர் சந்திப்பு

இதழாளர் சந்திப்பு

எல்.ஆர்.என்.எக்ஸெலென்ஸி என்னும் விடுதியில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள்.சேலம் தமிழ்ச்சங்கத்தின் அழைப்பு. எனக்கு அவ்வமைப்புடன் தொடர்பேதுமில்லை. அதன் தலைவர் சீனி.துரைசாமி அவர்கள் அழைத்தார்கள். அவருக்கு என் பாண்டிச்சேரி உரை பிடித்திருந்தது. பெரியவரின் அழைப்பு, ஆகவே ஒப்புக்கொண்டேன். ஓர் உரை என்றால் எனக்கு இரண்டுநாட்கள் இல்லாமலாகிவிடுகின்றன.

 

சேலம் எனக்கு ஒருகாலத்தில் அணுக்கமான ஊர். எண்பதுகளில் தருமபுரியில் வேலைபார்த்த நான் தென்தமிழகத்திற்குள் நுழையவேண்டுமென்றால் சேலம்தான் ஒரே வழி. சேலம் புதிய பேருந்துநிலையத்தை குளத்தை தூர்த்து உருவாக்கிய காலகட்டம்.அன்று சேலம் ஆர்.குப்புசாமி, கணபதி சுப்ரமணியன், குவளைக்கண்ணன் என ஓர் இலக்கியச்சிறுகுழு அங்கிருந்தது. க.மோகனரங்கன் அருகே வையப்பமலையில் வேலைபார்த்தார். அந்தச் சந்திப்புக்கு வந்திருக்கிறேன். இன்னொரு குழு உண்டு, சேலம் தமிழ்நாடன் சார்ந்தது. அவருடன் எனக்கு அணுக்கமில்லை.

e

சேலம் மிகவும் மாறிவிட்டிருந்தது, எல்லா ஊர்களையும்போல.எந்தத்தெருவும் அடையாளம் தெரியவில்லை. சேலம் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரே முறை சென்றிருக்கிறேன். ஆனால் அந்த இடமும் நினைவில் நிற்கவில்லை. ஒருநாள் கூடுதலாகத் தங்கியிருக்கலாம். ஆனால் அருண்மொழியை தனியாக விட்டு வந்தது கொஞ்சம் குற்றவுணர்ச்சியை அளித்தது. சேலம் ஆர்.கே அவர்களையாவது பார்த்திருக்கலாமென எண்ணினேன். வாய்ப்பிருக்கவில்லை.

 

நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் அறை நிறைந்தது. என்னால் நிறையநேரம் பேசமுடியவில்லை. தொண்டை அடைத்திருந்தது. நெஞ்சும் கனமாக இருந்தது. காய்ச்சலின் களைப்பு பேசிக்கொண்டிருக்கையிலேயே சலித்து அப்படியே விட்டுவிடச் செய்தது. சாப்பிட்டுவிட்டுச் சற்றுநேரம் ஓய்வெடுத்துக்கொண்டேன். ஆனால் எந்நிலையிலும் நண்பர்களைச் சந்திப்பது ஒரு கொண்டாட்டம்தான். நண்பர் மொரப்பூர் [மூக்கனூர்ப்பட்டி] தங்கமணி வந்திருந்தார். இருபத்தைந்து ஆண்டுக்கால நண்பர்.

d

சேலம் தமிழ்ச்சங்கத்தில் ஒரு இதழாளர்ச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பொதுவாக இது எனக்கு உடன்பாடில்லை, நான் ஒத்துக்கொள்வதுமில்லை. ஏனென்றால் எழுத்தாளன் அப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பில் சுருக்கமாகச் சொல்லும்படியான கருத்துக்கள் கொண்டவன் அல்ல என்பது என் எண்ணம். இதழாளர்களும் பொதுவான பண்பாட்டுச் சூழல்சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும்தான் கருத்துக்களை கேட்டார்கள். நான் என் தளத்தில் வழக்கமாகச் சொல்லும் கருத்துக்கள்தான்.

 

ஆறரை மணிக்கு என் உரை. சேலம் தமிழ்ச்சங்கத் தலைவர் சீனி துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார். செயலர் வரத ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரை. செயற்குழு உறுப்பினர் சி. பன்னீர்செல்வம், துணைச்செயலர் எஸ்.டி சங்கரன் அவர்கள் முன்னிலை. கி.ராஜமோகன் அவர்கள் நன்றியுரை சொன்னார்கள்.

c

நான் தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும் என்னும் தலைப்பில் பேசினேன். தொல்தமிழிலக்கியம் முதல் இன்றுவரை தமிழிலக்கியத்தை ஊடும்பாவுமாக ஓடி உருவாக்கிவரும் அடிப்படையான சில பண்பாட்டுக்கூறுகளை, அவற்றின் இலக்கிய வெளிப்பாடுகளைப் பற்றிப் பேசினேன். ஒன்று, செவ்வியல்கூறு. அது தொகுக்கும்தன்மைகொண்டது. இன்னொன்று நாட்டார்கூறு. அது துளிகளாக விரியும் தன்மைகொண்டது. ஒன்றையொன்று மறுப்பவையும் நிரப்புபவையும் என அவற்றை வரையறைசெய்யலாம்.

 

உரைமுடிந்ததும் நண்பர்களைச் சந்தித்தேன். பலர் பெங்களூரிலிருந்தெல்லாம்கூட வந்திருந்தார்கள். சேலம் வல்லபி வந்திருந்தார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். பத்து இருபதுக்கு எனக்கு ரயில். அறைக்குச் சென்று பையைத் தூக்கிக்கொண்டு காரில் ரயில்நிலையம் சென்றேன்.

a

[வல்லபியுடன்]

ஒரு நாள். இத்தகைய நாட்கள் மின்னல்போலக் கடந்துசென்றுவிடுகின்றன. இத்தகைய ஒரு குறிப்பினூடாக நாம் சில முகங்களை சில தருணங்களை காலத்தில் பதியவைக்கிறோம். மீண்டுமொருமுறை நோக்குகையில் இந்தப்புள்ளிகளால் இந்நாள் ஒளிகொண்டதாக ஆகிறது.

 

பொதுவாக இத்தகைய கூட்டங்கள் இலக்கியவாதிக்கு ஊக்கமளிப்பவை. அவன் தன் வாசகர்களை, நண்பர்களை நேருக்குநேர் சந்திக்கிறான். அவர்கள் எப்படி வெறியுடன் வாசிக்கிறார்கள் என நேரில் அறிகிறான். அந்த உணர்வு அளிக்கும் நம்பிக்கை சாதாரணமானது அல்ல. ஏனென்றால் இலக்கியச்சூழலில் இருந்து வரும் எதிர்வினைகள் பெரும்பாலும் பொய்யானவை. பலவகையான ஆணவச்சிக்கல்கள் போட்டிமனநிலைகளின் விளைவுகள். வாசகன் என்ற ஒருவன் கண்முன் நின்றிருப்பதே அவற்றை கடந்து செல்வதற்கான வழி

 

வல்லபியுடன்

 

[கூட்டத்துக்குப்பின்]

 

ஆனால் இதற்கு மறுபக்கமும் உள்ளது. ‘மேடைப்பேச்சில் விழுந்துவிட்டவர்கள்’ என சுந்தர ராமசாமி சிலரைச் சுட்டிக்காட்டுவார். அவர் காட்டிய மிகச்சிறந்த உதாரணம் பொன்னீலன். நான் ச.தமிழ்ச்செல்வனைச் சுட்டிக்காட்டுவேன். நாள்தோறும் மேடைப்பேச்சு, மாலைமரியாதைகள், வாழ்த்துரைகள், பாராட்டுகள் என்பது ஒருவகையான ‘நித்யகல்யாண’ நிலை. அதில் பழகிவிட்டால் அது இல்லாத நாள் வெறுமையாக, கைவிடப்பட்டதாக தோன்றும். அந்த போதைக்கு அடிமையாகும் எழுத்தாளன் எழுத்திலிருந்து அயன்மைப்படுவான். ஏனென்றால் இங்கே பேச்சு என்பது இரண்டு நீண்டபயணங்களால் ஆனது. இந்தியச்சூழலில் மிகமிகச் சலிப்பூட்டுவது அது எழுத்துக்குத் தேவையான ஓய்வான உளநிலைக்கு முற்றிலும் எதிரானது

 

ஆனால் உலகமெங்கும் எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. மேலைநாடுகளில் பதிப்பகங்கலே அதை ஏற்பாடு செய்கின்றன. இந்திய ஆங்கிலச்சூழலிலும் அது நடந்துகொண்டிருக்கிறது. அது ஒருவகையில் படைப்பாளி வாசகனுடனான உறவை உருவாக்கிக்கொள்ள தவிர்க்கமுடியாதது ஆகிறது. அதன் எல்லையை அவனேதான் முடிவுசெய்துகொள்ளவேண்டும், அவ்வளவுதான்.

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்கார்- இறுதியில்…

$
0
0

sa

சர்க்கார் அரசியல்

 

சர்க்கார் பற்றி ஏகப்பட்ட விசாரிப்புகள். பலர் நண்பர்கள் என்பதனால் என் விளக்கம். பொதுவாக நான் சம்பந்தப்பட்ட எதிலும் நான் அறிந்த உண்மையை சொல்வது என் வழக்கம். எப்போதுமே விளைவுகளைப்பற்றிக் கவலைகொள்வதில்லை. இதிலும் நான் சொன்னதே உண்மை.

 

பலகோடி முதலீடு செய்யப்பட்ட, வெளியீட்டுநாள் குறிக்கப்பட்ட சினிமாவின் கட்டாயங்களும் சமரசங்களும் நான் அறிந்தவையே. அதையும் என் முந்தைய கட்டுரையின் கடைசி பத்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன். [மற்றபடி இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள்,பேரங்கள்] இது இவ்வாறுதான் முடியுமென்பதே அதன்பொருள் என வாசித்தவர் அறிவார்கள்.

 

நான் நாவல் என்பது அதையெல்லாம் சேர்த்துத்தான். அதாவது கேரளத்தின் நோக்குகூலி போல. மண் சுமப்பவனுக்கும் கடைசியில் வந்து கைநீட்டுபவனும் சமம்!

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்க்கார், இறுதியாக…

$
0
0

sa

ஜெ

 

உடனே உங்கள் வழக்கமான எதிரிகள் தாண்டிக்குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே இதை எழுதுகிறேன். இப்போதுள்ள சூழலில் சர்க்கார் படத்தின் கதை, திரைக்கதை எவருடையது? உங்கள் பங்களிப்பு என்ன?

 

வெற்றிச்செல்வன்

 

அன்புள்ள வெற்றிச்செல்வன்,

 

நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் நேரில் அமர்ந்து பார்த்ததன் அடிப்படையில் அதன் கதை,திரைக்கதை ஏ.ஆர்.முருகதாஸுடையது. அது ஒற்றைவரியிலிருந்து திரைக்கதையானபோது நான் உடனிருந்தேன். ஆகவே அதைப் பதிவுசெய்வது என் கடமை என நினைத்தேன்

 

கதை உருவாக்கத்தில் அவருடன் நான்கு உதவியாளர்கள் உதவினார்கள், ஒருவர் ஏற்கனவே மான்கராத்தே படம் இயக்கிய திருக்குமரன்,  இன்னொருவர் என் நண்பரும்  வத்திக்குச்சி பட இயக்குநருமான கிங்க்ஸ்லின். என் பணி அது திரைக்கதைக்குரிய ஓட்டத்துடன் அமைகிறதா, சிதறிச்செல்கிறதா என்று பார்ப்பதும், காட்சிகளுக்கு அவற்றுக்குரிய வசன வடிவை அமைப்பதும் மட்டுமே. எல்லா படங்களிலும் என் பணி அவ்வளவுதான்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52

$
0
0

bowஅவந்தி நாட்டு அரசன் விந்தன் தன் தேரில் கௌரவப் படையின் எட்டாவது அக்ஷௌகிணியின் இரண்டாம் நிரையில் வில்லுடன் நின்றிருந்தான். சற்று அப்பால் அவனுடைய இரட்டையனும் அவந்தியின் இணையரசனுமாகிய அனுவிந்தன் அவனைப் போலவே கவசங்கள் அணிந்து, அவனுடையதே போன்ற தேரில் நின்றிருந்தான். விந்தன் அனுவிந்தனைவிட ஓரிரு நொடிகளே அகவையில் முந்தியவன். அந்த ஒரு நொடி அவன் அன்னையால் அவனுக்கு சொல்லப்பட்டது. உலகுக்கும் அவளால்தான் அது சொல்லப்பட்டது. தன் உள்ளத்தால் அவன் அதை பெருக்கிக்கொண்டான். நாழிகையும் நாளும் ஆண்டும் என்றாக்கி ஒரு முழு வாழ்நாள் என்றே வளர்த்துக்கொண்டான். தன்னை மூத்தவன் என்றும் இளையோனிடமிருந்து மதிப்பையும் வணக்கத்தையும் பெறவேண்டியவன் என்றும் கருதிக்கொண்டான்.

அந்த ஒரு கணமே அவனுக்கு மணிமுடியை அளித்தது. பட்டத்தரசியின் முதல் பேற்றில் ஆண் இரட்டையர் பிறந்துவிட்டால் அக்குழவிகளில் பிந்தி வருவதை கொன்றுவிடுவது அரசகுல வழக்கமாக இருந்தது. விந்தனும் அனுவிந்தனும் உடல்தழுவி ஒற்றையுடலென வெளிவந்தனர். அவ்வாறு நிகழுமென்றால், இரு குழவியும் சேர்ந்தே மண்ணிழியும் என்றால், இரு குழவிகளையும் அருகருகே போட்டு இரண்டுக்கும் பொதுவாக ஒரு பொற்கணையாழியை நூலில் கட்டி ஆடவிடுகையில் எந்தக் குழவியின் விழி முதலில் அந்தக் கணையாழியை பார்க்கிறதோ அதுவே அரசனென்று ஆகும் விழைவெனும் தகுதியைக் கொண்டது என்று முடிவெடுப்பது மரபு. அவர்களிருவரையும் அவ்வாறு படுக்கையில் படுக்க வைத்து பொன் மணி காட்டியபோது இருவருமே ஒரே தருணத்தில் அதை நோக்கி விழிசலித்தனர். வாயில் விரல் வைத்தபோது இருவரும் ஒரே விசையில் அதை நோக்கி தலையெழுப்பினர். உள்ளங்கால்களை கைகளால் வருடி நோக்கியபோது இருவருமே உடல் விதிர்க்க கால்களை விலக்கி தொட்ட கையை உதைத்தனர்.

சூழ நின்றிருந்த வயற்றாட்டிகள் திகைத்தனர். “அனைத்திலும் இணையானவர்கள், அரசி” என்று முதுவயற்றாட்டி காளிகை சொன்னாள். அன்னை இரு குழந்தைகளையும் மாறிமாறி நோக்கியபின் விந்தனைத் தொட்டு “இவன் ஒருகணம் மூத்தவன்” என்றாள். வயற்றாட்டி ஏதோ சொல்லவர உரத்த குரலில் “இவன் ஒருகணம் மூத்தவன்! ஆம், இவனே மூத்தவன்!” என்று அவள் சொன்னாள். வயற்றாட்டி “ஆம் அரசி, இவரே மூத்தவர்” என்றாள். வெளியே சென்று அங்கு காத்து நின்றிருந்த அரசரிடம் “இரட்டையர்! ஒருவர் ஒருகணம் மூத்தவர்!” என்று அறிவித்தாள். அரசரின் விழிகள் மாறுபட்டன. அருகே நின்றிருந்த அமைச்சர் “இரட்டையர் என்றால்…” என்று தொடங்க வயற்றாட்டி “ஒருவர் ஒருகணம் மூத்தவர்” என்று மீண்டும் சொன்னாள். அரசர் “ஆம்! ஒருகணம் எனினும் அது தெய்வங்களால் அளிக்கப்பட்ட பொழுது. அம்முடிவை எடுத்த நம் குடித்தெய்வங்களை வணங்குவோம்!” என்றார்.

அவந்தியின் எட்டு குடித்தலைவர்களுக்கும் பட்டத்து இளவரசர்கள் இரட்டையராக இருப்பது எதிர்காலத்தில் பெரும்பிழையென ஆகக்கூடும் என ஐயமிருந்தது. முன்வரலாறுகள் தீய விளைவுகளையே காட்டின என நூலறிந்தோர் கூறினர். நிமித்திகர்களும் நன்று சொல்லவில்லை. ஊரில் அதைப் பற்றிய பேச்சுகள் இருப்பதை ஒற்றர்கள் அவந்தியின் அரசரிடம் வந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆயினும் ஒருகணம் மூத்தவன் என்ற ஒற்றை வரியால் அரசி அவ்விருவரையும் காத்தாள். அவர்கள் இருவரும் ஆடிப்பாவைகளென வளர்ந்தனர். களிப்போரில், சொல்லவையில், கானாடலில் ஒருவரை ஒருவர் முற்றிலும் நிகர்த்தனர். ஒருவனை மற்றவன் என்று பெற்றஅன்னையும் எண்ணும் வண்ணம் ஒன்றுபோல் இருந்தனர்.

அன்னையே அவர்களிடம் ஆள்மாறி உரையாடினாள். ஒருமுறை விந்தனிடம் “இளையவனே, நீ ஒருகணம் இளையவன் என்பதை உன்னுள் வாழும் ஏதோ ஒன்று எதிர்க்கிறது என்று நான் அறிவேன். அதை வெல்க! ஒருகணமும் அது உன் எண்ணங்களையும் செயல்களையும் ஆட்டிவைக்கலாகாது. எவ்வகையிலோ உன் மூத்தவன் உன்னுள் வாழும் அவ்வெண்ணத்தை அறிந்துகொண்டிருப்பான் என்பதை உணர்ந்துகொள். அது அங்கிருக்கும் வரை நீ அவனுக்கு எதிரியாவாய். உடன்பிறந்தாரைப்போல சிறந்த எதிரி பிறிதெவருமில்லை. ஆகவே அவ்வெதிர்ப்பு நாளுமென பெருகும். அழியா வஞ்சமென்றாகும். உன் நீண்ட வாழ்நாளுக்காகவும் என் முதல் மைந்தன் பழி சூடலாகாது என்பதற்காகவும் இதை சொல்கிறேன்” என்றாள்.

சற்று துணுக்குற்றாலும் விந்தன் அத்தருணத்தில் தான் விந்தன் என்பதை அன்னைக்கு அறிவிக்காமல் “அவ்வண்ணமே, அன்னையே. என்றும் நான் இளையோன் என்றே இருப்பேன்” என்றான். ஆனால் அதன் பின் அனுவிந்தனில் உறையும் அந்த மீறலை ஒவ்வொரு கணமும் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். எந்த அவையிலும் அவன் ஒரு சொல்லெடுத்தால் மறுகணமே அதன் நீட்சியென்றோ மறுப்பென்றோ அனுவிந்தனின் சொல் எழுந்தது. அவன் செய்த எதையும் அனுவிந்தன் செய்யாமல் இருந்ததில்லை. ஒருமுறை காட்டில் எதிர்வந்த பன்றியொன்றின் மீது அம்பு தொடுத்து பன்றி வீழ்ந்ததும் ஏதோ ஒரு எண்ணம் தோன்ற விந்தன் தன் ஏவலனை அழைத்து அதில் எத்தனை அம்புகள் தைத்திருக்கின்றன என்று பார்க்கச்சொன்னான். “பன்னிரு அம்புகள், அரசே!” என்றான் ஏவலன். அவர்கள் இருவர் அம்புகளிலும் வெவ்வேறு அடையாளங்கள் உண்டு. “அவை எவருடையதென்று பார்” என்று அவன் சொன்னதும் ஏவலன் புன்னகைத்து “பார்க்கவேண்டியதே இல்லை. ஆறம்புகள் தங்களுடையவை ஆறம்புகள் தங்கள் இளையவருடையவை” என்றான். கைசுட்டி அவனை அகற்றிவிட்டு விந்தன் புரவியில் மேலே சென்றான்.

அன்று காட்டில் பாறை ஒன்றின் மீது அமர்ந்து வேட்டை உணவை உண்டு ஓய்வெடுக்கையில் விந்தன் அனுவிந்தனிடம் “இளையோனே, நான் இயற்றும் ஒவ்வொன்றையும் நீயும் இயற்றியாக வேண்டுமென்று ஏன் எண்ணுகிறாய்? என் சொல்லும் செயலும் ஒருமுறைகூட உன்னில் மீண்டும் நிகழாதிருந்ததில்லை” என்றான். அனுவிந்தன் நகைத்து “இதை மட்டுமே தாங்கள் நோக்கியிருக்கிறீர்கள். தாங்கள் சொன்ன இதையே நானும் சொல்ல இயலும். ஒரு சொல்லோ செயலோ என்னிலிருந்து வெளிப்பட்டால் அதன் தொடர்ச்சியும் மறுப்பும் உங்களிடமிருந்து உடனே வெளிப்படுகிறது. நான் சொன்ன ஒரு சொல்லையேனும் சொல்லாமல் நீங்கள் இதுநாள் வரை இருந்ததில்லை” என்றான். சீற்றத்துடன் விந்தன் “நான் மூத்தவன், என்னை நீதான் தொடர்கிறாய்” என்றான். “தங்களைவிட ஒரு மாத்திரை உடல்விசையும் உளவிசையும் மிகுந்தவன் நான். ஆகவேதான் தாங்கள் என்னை தொடர்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றான் அனுவிந்தன். எழும் சினத்தை அடக்கிக்கொண்டு விந்தன் மேலும் சொல்லெடுக்காமல் தவிர்த்தான்.

அதன் பிறகு அவன் அனுவிந்தனுடன் இணைந்து இருப்பதை பெரும்பாலும் தவிர்த்தான். அரசவையில் அவனுக்கும் அனுவிந்தனுக்கும் இரு வேறு இருக்கைகள் போடப்பட்டன. களரியில் வேறுவேறு பொழுதுகளில் முற்றிலும் வேறு ஆசிரியர்களிடம் பயின்றனர். ஆண்டுக்கு இருமுறை அவந்தியில் நடக்கும் அரச கொலுத்தோற்றத்தில் மட்டுமே அவர்களிருவரும் அருகருகே அமர்ந்தனர். அப்போதும் தான் பட்டத்து இளவரசன் என்பதனால் தன்னுடைய மணிமுடியில் சற்று பெரியதாக மேலும் ஒரு வைரம் பதித்தாகவேண்டுமென்றும் தோற்றத்தில் தான் தனித்துத் தெரிந்தாக வேண்டுமென்றும் அவன் அணிச்சேவகரிடம் ஆணையிட்டான் ஆயினும் அவனை அனுவிந்தன் என்று எண்ணி பேசுபவர்கள் ஒவ்வொரு நாளும் இருந்தனர். ஏவலரோ குடிகளோ அவ்வாறு பேசினால் அக்கணமே அவன் சினம்கொண்டு அவர்களை எதிர்கொண்டான். எளியோரை தண்டித்தான், பெரியவர்களை சிறுமைசெய்தான். ஆனால் தந்தையும் தாயும் ஒவ்வொரு நாளும் அப்பிழையை இயற்றுகையில் அவனால் அதற்கு மறுமொழி சொல்ல இயலவில்லை.

இருவரும் படைக்கலக்கல்வி முடித்து குண்டலம் அணிந்ததும் அவன் முதலமைச்சர் வில்வரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து தாங்கள் இருவரும் ஒரே நகரியில் இணையான அரசுநிலையில் இருப்பதை விரும்பவில்லை என்றும் இருவரும் எப்போதும் பிரிந்தே இருப்பதற்கான அமைப்பை உருவாக்குவதே அவந்தியின் எதிர்காலத்திற்கு நல்லதென்றும் சொன்னான். அவரே அதை முன்னரே உணர்ந்திருந்தார். “ஆம், நான் எண்ணியவைதான் இவை. அரசரிடம் நானே கூறுகிறேன்” என்றார். “ஒவ்வொருநாளும் உங்களுக்குள் உருவாகிவரும் அகல்வை உணர்கிறேன். விலகல் உருவானதுமே முற்றகல்வு நிகழ்ந்ததென்றால் இடரில்லை. விலகலை ஒவ்வொரு நாளும் இருவரும் எண்ணி வளர்க்கிறீர்கள். இனி கசப்புகளையும், பகைமையையும் உருவாக்கிக்கொள்வீர்கள். உளவிலகல் திறந்த புண், அது சீழ்பிடிப்பதற்கு காத்திருக்கிறது” என்றார் வில்வர்.

வில்வரின் சொல்லை அரசர் ஏற்றார். விந்தன் அவந்தியின் பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டான். அனுவிந்தனுக்கு உத்தர அவந்தியின் பிரபாவதி நகர் தலைநகராக அளிக்கப்பட்டு அங்கு அரசனின் ஆணைக்கோல் கொண்டவனாக ஆட்சி செய்ய அனுப்பப்பட்டான். அதன் பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை குடிமூத்தார் வணக்கத்தின்பொருட்டு மட்டுமே அனுவிந்தன் தலைநகருக்கு வந்தான். அன்று அந்தியில் கூடும் குடிசூழ் அவையில் மட்டுமே அவன் விந்தனின் அருகே அரசத்தோற்றம் கொண்டு அமர்ந்தான். அன்று மட்டுமே அவர்கள் ஒருவரோடொருவர் ஓரிரு சொற்கள் பேசிக்கொண்டனர். அப்போதும் ஒருவர் விழியை ஒருவர் நோக்கிக்கொள்ளவில்லை. அவர்களிடையே ஒரு வெறுப்புச் சொல்கூட பேசப்பட்டதில்லை. ஒருமுறைகூட முகம்கசந்த நோக்கு எழுந்ததில்லை. ஆகவே அவ்விலக்கம் மேலும் அழுத்தமானதாக இருந்தது. அவர்கள் அவ்விலக்கத்தையே நாணுபவர்கள்போல அத்தருணத்தை சில நொடிகளில் கடந்துசெல்ல விழைந்தார்கள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் அனுவிந்தனைப் பற்றிய செய்திகள் விந்தனின் செவியை வந்தடைந்தன. அவை எவ்வாறு தன்னை தேடி வருகின்றன என்று அவன் எண்ணி வியந்ததுண்டு. பின்னர் தெரிந்துகொண்டான், பல்லாயிரம் சொற்களில் அனுவிந்தனைப் பற்றிய சொற்களை மட்டும் தொட்டெடுக்கும் நுண்செவியொன்று தனக்கிருப்பதை. நகருலா செல்லும்போது சந்தையில் பலநூறுபேர் கலந்து பேசும் கலைந்த முழக்கத்தின் நடுவே அனுவிந்தர் என்ற சொல் ஒலிக்குமென்றால் அவன் உள்ளம் அங்கு நோக்கி சென்றது. அனுவிந்தனிடமிருந்து தனக்கு விடுதலையில்லை என்பதை அவன் உணர்ந்துகொண்டான். அமைச்சரிடம் “இதுநாள்வரை அவனிடமிருந்து உளம் விலக முயன்றேன். அது இயலாதென்று இப்போது தெரிகிறது. என் ஆற்றலனைத்தும் அம்முயற்சியிலேயே வீணாகின்றன. நான் முழுமைகொண்டு ஆற்றலுடன் எழ என்ன செய்யவேண்டும்?” என்றான்.

வில்வர் “அரசநெறியின்படி நீங்கள் அவரை அழிக்கவேண்டும். ஆனால் ஒருதுளியும் எஞ்சாது அழிக்கத்தக்க எதிரியையே அழிக்கவேண்டும் என்கின்றன நூல்கள். அவரை அழித்தால் ஒன்றுணர்வீர்கள், உங்கள் ஆற்றலில் பாதி அழிந்திருக்கும். ஏனென்றால் அவர் உங்களில் பாதி. உங்களில் எஞ்சும் பாதி அனைத்து இடங்களிலும் நிலைபிறழ்ந்திருக்கும்” என்றார். “ஆகவே ஒன்றே செய்யக்கூடுவது, அவரை விழுங்கி நீங்களாக ஆக்கிக்கொள்வது. ஒருவரை விழுங்கி நாமாக்கிக்கொள்வதற்குரிய சிறந்த வழி என்பது அன்புதான்” என்றார் வில்வர். “அன்பா? அவனிடமா?” என்று விந்தன் கேட்டான். “அன்பிலாத ஒன்றையே இருபத்திரண்டு ஆண்டுகளாக கணமும் எண்ணிக்கொண்டிருக்க இயலுமா என்ன? அவ்வாறு எண்ணிக்கொண்டிருப்பதனாலேயே அவர் மேல் நம்முள் அன்பு எழாதிருந்திருக்குமா என்ன? ஒரு தொழுவில் அருகருகே கட்டப்பட்டால் எந்தப் புரவியும் ஒரு வாரத்திற்குள் உடல் ஒருங்கிணைவும் உள இசைவும் கொள்வதை கொட்டில்காவலர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என்றார் வில்வர்.

விந்தன் சோர்ந்து இருக்கையில் சாய்ந்தான். “அவர் மேல் நீங்கள் கொண்ட அன்பை மறைப்பவை இரண்டு கூறுகளே. ஒன்று உங்கள் முதன்மையை அவர் முழுதேற்கிறாரா எனும் ஐயம். பிறிதொன்று உங்கள் முடிக்கும் உங்கள் கொடிவழியின் உரிமைக்கும் எதிராக அவரோ அவர் குடியோ குருதியினரோ எழுவார்களோ எனும் அச்சம்.” விந்தன் “அவை மெய்யான அச்சங்கள்தானே? அதுதானே உலகத்தியற்கை?” என்றான். “ஆம், மீள மீள உடன்பிறந்தாரின் உரிமைப்போர் பாரதவர்ஷத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருபோதும் அது ஓயாது. இன்று அவர் உங்களுக்கு சொல்லளிக்கலாம், ஆனால் வரும் தலைமுறையினரை அவர் சொல் ஆளுமென சொல்லவியலாது. ஆயினும் அனைத்தையும் தெய்வங்களுக்கு ஒப்படைத்து உங்கள் இளையோனை ஆரத்தழுவிக்கொள்வதொன்றே இத்தருணத்தில் செய்யக்கூடுவது” என்றார் வில்வர்.

“நான் என்ன செய்ய வேண்டும் இப்போது?” என்றான் விந்தன். “அமைச்சனாக நான் சொல்வது படைகொண்டுசென்று அவரை வென்று உங்களை முழுதமைத்துக்கொள்ளுங்கள். அவரைக் கொன்று, அவர் இருந்த தடயங்களே இல்லாமல் செய்யுங்கள். ஒரு சொல்கூட அவருடையதென இப்புவியில் எஞ்சலாகாது. அவருக்கிருந்த அனைத்தையும் நீங்கள் அடையுங்கள். அவரை இழந்தமையால் உருவான குறைவுகளை ஈட்டி நிறையுங்கள்” என்றார் வில்வர். “அந்தணனாக நான் சொல்வது அவரை அள்ளி அணைத்து அருகமரச் செய்யுங்கள். அவர் உங்கள் மணிமுடிக்கும் கோலுக்கும் விழைவு கொண்டால் அதை அவருக்கே உளமுவந்து அளியுங்கள். அவர் உங்கள் தலையறுத்திடத் துணிந்தால் தலைகொடுக்கும் கனிவை அடையுங்கள். தமையன் என்பவன் அணுக்கம் கொண்ட தந்தையே” என்றார் வில்வர்.

விந்தன் சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.  வில்வர் “நீங்கள் தமையனென்றானால் அவர் உங்கள் தம்பி என்றாவார். கௌரவ நூற்றுவர் எப்படி ஓருடலும் ஓர் எண்ணமுமாக இருக்கிறார்கள் அறிவீர்களா? அந்நூற்றுவரில் ஒருவர் சென்று துரியோதனரிடம் மூத்தவரே அம்மணிமுடியையும் செங்கோலையும் எனக்கு அளியுங்கள் என்று கேட்பார் என்றால், ஏன் அவ்வாறு அவர் உள்ளாழத்தில் விழைகிறார் என்று தெரிந்தால், மறுஎண்ணமின்றி எழுந்து அவற்றை தம்பிக்கு அளிக்கும் தகைமை கொண்டவர் துரியோதனர். அதை நன்கறிவர் தம்பியர். ஆகவே அத்தம்பியர் அவருக்காக இந்நாநிலத்தை வெல்வார்கள். தேவையெனில் களத்தில் வீழ்வார்கள்” என்றார் வில்வர்.

“இது வீண் பேச்சு. மண்விழைவு கொள்ளாத ஷத்ரியன் எங்குளான்?” என்றபடி விந்தன் எழுந்தான். “மண்விழைவும் பொருள்விழைவும் ஷத்ரியர்களை ஆக்குகின்றன. ஆனால் பேரரசர்கள் உறவின் ஆற்றலால் தங்கள் அரியணையை உறுதி செய்துகொண்டவர்கள். ஒருவனுக்காக பல்லாயிரம் பேர் உயிர் கொடுக்கத் துணிகையிலேயே அவன் பேரரசனாகிறான். எவரும் வீணாக உயிர் கொடுப்பதில்லை. ஒருவனுக்காக அத்தனை பேர் உயிர் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கான தகுதியை எங்கோ அவன் ஈட்டிக்கொண்டிருக்கிறான் என்றே பொருள்” என்றார் வில்வர். “அவர்களுக்காக அவன் உயிர்கொடுப்பான் என்பதே அத்தகுதி.” “வீண்பேச்சு, எந்த விலங்கும் தன் தலையை தானே எதிரிக்கு கொடுப்பதில்லை” என்றபடி அவன் வெளியே சென்றான்.

ஆனால் அன்று இரவு முழுக்க விந்தன் அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். எண்ண எண்ண நம்பிக்கையின்மையும் கசப்பும்தான் பெருகின. ஆனால் அவன் துணைவி சுதமதி “அமைச்சர் சொல்வதே நன்று என நினைக்கிறேன்” என்றாள். “நீங்கள் உங்கள் தம்பியை உடனமர்த்தி இணைநிலை அளிக்கும்போது மட்டுமே ஆற்றல் கொண்டவர்களாகிறீர்கள். இப்போது இருவருக்குமிடையே இருக்கும் தொலைவு அச்சுறுத்துவது. இதை மாளவரோ விதர்ப்பரோ பயன்படுத்திக்கொள்வார்கள் என்றால் மிக எளிதாக நம் நாட்டை இரண்டாக உடைத்துவிட முடியும்” என்றாள். அவ்வெண்ணம் ஏற்கெனவே விந்தனிடம் இருந்தது என்பதனால் அவனை அச்சொற்கள் அறைந்தன. “அவ்வண்ணம் அவர் எதிரியானால் உங்களை நீங்களே எதிர்ப்பவராவீர்கள்” என்றாள் சுதமதி.

சினந்தெழுந்து “இது தொல்புகழ் அவந்தி! கார்த்தவீரியனின் குருதியில் ஜயத்வஜனின் குடியென எழுந்தது என் அரசகுடி. ஒருபோதும் இது வீழாது. நீ பிறந்தெழுந்த மச்சநாட்டு குடிப்போர்களை இங்கு எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை” என்று கைவீசி அவளை விலக்கி மேலாடையை எடுத்து அகத்தளத்திலிருந்து வெளியேறி தன் அறைக்கு வந்தான். மூக்குவழி வார மது அருந்தியபடி அரண்மனை மஞ்சத்தில் கிடக்கையில் அவள் சொற்களே அவன் உள்ளத்தை சூழ்ந்துகொண்டிருந்தன. அவை முற்றிலும் உண்மை என்று அவன் அறிந்தான். காலையில் எழுந்து சிப்ரையின் ஒழுக்கின்மேல் பெருகிய காற்றில் வெண்பறவைகள் மிதந்துசெல்வதை நோக்கி நின்றிருந்தபோது ஒரு முடிவுக்கு வந்தான். அந்தக் காலை அத்தனை இனிதாக, அமைதியாக இருந்ததனால் மட்டுமே அவன் அகம் சென்றடைந்தது அம்முடிவு.

அமைச்சரை தன் அறைக்கு அழைத்து “தங்கள் எண்ணத்தையே நானும் உளம்கொண்டிருக்கிறேன், அமைச்சரே. நாம் இப்போது என்ன செய்யலாம்?” என்று உசாவினான். “இங்கு குடிமூத்தாருக்கான ஒரு பலிபூசனை நிகழவிருக்கிறது. அதற்கு அனுவிந்தரை அழையுங்கள். அவருக்கு இணையாக அரசமருங்கள். இணையரசர் அவரென்று உங்கள் நாவால் நீங்களே அறிவியுங்கள். அனுவிந்தர் இனி தனிநகர் கொண்டு எல்லையில் அமரக்கூடாது. இங்கு உங்கள் உடனிருக்கட்டும். அரசப் பொறுப்புகளை, படைகளை, கருவூலத்தை அனைத்தையுமே அவருக்கும் உரிமையாக்குங்கள். எதுவும் எஞ்சவிடவேண்டியதில்லை. தயக்கமோ ஐயமோ இன்றி இதை செய்ய முடிந்தால் உங்கள் இணையாற்றல் என்று உடனிருக்கும் தம்பி ஒருவரை பெறுவீர்கள். அவரும் நீங்களேதான் என்பதனால் உங்கள் ஆற்றலனைத்தும் முழுமை பெறுவதை காண்பீர்கள்.” “அவனை நான் எவ்வாறு நம்புவது?” என்று விந்தன் கேட்டான். “உறவை நம்புவதும் தெய்வத்தை நம்புவதும் ஊழை நம்புவதும் ஒன்றே” என்றார் வில்வர்.

உஜ்ஜயினியிலிருந்து தமையனின் அழைப்பு வந்தபோது அனுவிந்தன் வியப்பும் ஐயமும் கொண்டதாகவும் தன் அணுக்கர்களை அழைத்து அரண்மனையில் அவையில் அமர்ந்து அவ்வழைப்பின் பின்னுள்ள நோக்கமென்ன என்று உசாவியதாகவும் ஒற்றர் செய்தி வந்தது. அவன் அணுக்கர்களில் நால்வர் அது அனுவிந்தனை கொல்லவோ சிறைப்படுத்தவோ செய்யப்பட்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என்றனர். ஒருபோதும் தலைநகரைவிட்டு செல்லக்கூடாதென்றும், தன் படைகளனைத்தையும் எல்லைகளிலிருந்து அழைத்து சூழ்ந்து நிறுத்தி உறுதியான காவலுக்குள்தான் அவன் என்றுமிருக்கவேண்டும் என்றும் இரு படைத்தலைவர்கள் கூறினார்கள்.

ஆனால் அங்கு அவனுடைய அமைச்சராக இருந்த சுதபஸ் “அரசே, ஐயம்கொள்ளத் தொடங்கினால் எஞ்சிய வாழ்நாள் முழுக்க ஐயத்தை பெருக்குவீர்கள். ஐயம் நஞ்சென அனைத்து எண்ணங்களிலும் ஊடாடும். உங்கள் செயல்கள் அனைத்திலும் ஊடாடும். நீங்கள் பார்ப்பவை அனைத்தும் திரிபடையும். உங்கள் மூத்தவருக்கும் உங்களுக்குமிடையே ஒருபோதும் உறவு சீரடையாது. இன்று ஒரு துளி ஐயம்கொண்டீர்கள் என்றால் அவந்தியை இரண்டாக உடைக்கும் பணியை தொடங்கிவிட்டீர்கள் என்று மட்டுமே பொருள். உடைந்த அவந்தி வாழ இயலாது. இரு துண்டுகளையும் மாளவமும் விதர்ப்பமும் எடுத்துக்கொள்ளும். நீங்கள் இருவருமே அண்டை அரசர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டுபவர்களாக மாறுவீர்கள். உங்கள் கொடிவழியினர் தொழும்பர்களாவார்கள். இவை அனைத்தும் தேவையெனில் இம்முடிவை எடுங்கள். இக்கணம் உங்களுடையது” என்றார்.

அனுவிந்தன் அரியணையில் தளர்ந்து அமைந்து உளம்தவித்தபின் நொய்ந்த குரலில் “நான் என்ன செய்யவேண்டும், அமைச்சரே? நீங்களே பொறுப்பேற்று சொல்லுங்கள்” என்றான். “அந்தணர் உலகியலுக்கு பொறுப்பேற்கலாகாது. தங்கள் சொல்லுக்கு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ஆயினும் இத்தருணத்தில் இவ்வரசியலுக்கு முழுப் பொறுப்பேற்று சொல்கிறேன், சென்று உங்கள் மூத்தவரின் காலடியில் அமர்க! அவர் உங்கள் தலைமேல் மணிமுடியை வைக்கலாம். கழுவேற்ற ஆணையிடவும் செய்யலாம். எதுவாயினும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தெய்வங்களிடம் நாம் கொண்டுள்ள உறவும் அத்தகையதல்லவா? அழிக்கும் ஆற்றலும் உரிமையும் கொண்டவரின் அன்பு பேராற்றல் கொண்டது” என்றார் சுதபஸ்.

மறுநாள் அனுவிந்தன் தன் படைகளுடன் கிளம்பி உஜ்ஜயினிக்கு வந்தான். அவனை அரண்மனை முகப்பில் எதிர்கொண்ட விந்தன் இரு கைகளையும் விரித்து நெஞ்சோடு தழுவி “இதுநாள்வரை அறியாத ஐயங்களாலும் அச்சங்களாலும் ஆட்டுவிக்கப்பட்டேன், இளையவனே. அவ்வெடையை எத்தனை நாள் சுமப்பதென்று என் உள்ளம் தவித்தது. என்னால் ஒருகணமும் நிறைவுற்று அமரவோ உறங்கவோ இயலவில்லை. கவலைகள் மிகுந்து தாள முடியாமல் ஆகும்போது ஒருகணத்தில் முழுக் கவலையையும் நம்மிலிருந்து இறக்கி விட்டுவிடுகிறோம். அதைத்தான் செய்யவேண்டுமென்று எண்ணினேன். ஆகவேதான் உன்னை அழைத்தேன்” என்றான். அவன் காய்ச்சல்கண்டவன்போல் நடுங்கிக்கொண்டிருந்தான்.

கண்ணீருடன் கைகூப்பி நின்ற அனுவிந்தனை தோள்பற்றி முகம் நோக்கி விந்தன் சொன்னான் “எந்தச் சுற்றுச்சொல்லும் இல்லாமல் நேரடியாகவே இதை உரைக்கிறேன். இன்றுவரை என் அரியணைக்கும் கோலுக்கும் நீ விழைவு கொள்வாய் என்றும் என் கொடிவழியினருக்கு குருதியினரின் எதிர்ப்பிருக்குமோ என்றும் நான் கொண்ட ஐயமே என்னை ஆட்டிவைத்தது. இன்று உன்னை என் இணையரசனாக அரியணையில் அமர்த்த முடிவு செய்திருக்கிறேன். நீயோ உன் கொடிவழியினரோ விரும்பினால் முழுதுரிமையையும்கூட பெறமுடியும். எனக்கு மாற்றுச் சொல்லில்லை.” அழுதபடி சரிந்து அமர்ந்து தலையை விந்தனின் பாதங்களில் வைத்து “மூத்தவரே, இணையரசன் என்றல்ல தங்கள் இளையோன் என்றும் அடிமையென்றும் இருப்பதே எனக்கு உகந்தது” என்றான் அனுவிந்தன். விழிநீருடன் அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டான் விந்தன்.

அந்தச் சொற்கள் அக்கணத்தில் தன் நாவில் ஏன் எழுந்தன என்று அவன் பின்னர் எண்ணி நோக்கியதுண்டு. முற்றத்திற்குச் சென்று நிற்கும்வரை ஐயமும் அலைக்கழிப்பும் கொண்டவனாகவே இருந்தான். பிழை நிகழ்ந்துவிடக்கூடும் என்ற எண்ணம் மேலும் மேலும் வலுத்துக்கொண்டிருந்தது. முற்றத்திலிருந்து மீண்டும் தன் அவை நோக்கி திரும்பி இளையோனை அங்கு வரச்சொல்லிவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டு அவ்வெண்ணத்துடன் போரிட்டுக் கொண்டிருக்கையிலேயே அனுவிந்தன் முற்றத்திற்குள் நுழைந்தான். கைவிரித்து அவனை நெஞ்சுதழுவ அழைத்ததுகூட அவன் எண்ணியதனால் அல்ல, அவன் உடலே அதை நிகழ்த்தியது என்று தோன்றியது. நெஞ்சோடு அவன் உடலை அழுத்திக்கொண்டபோது அவன் உள்ளிலிருந்து பிறிதொருவன் எழுந்ததுபோல சொற்கள் கூறப்பட்டன.

அமைச்சரிடம் அதைப்பற்றி கேட்டான். “நீங்கள் இருவரும் உடலால் இணைந்தவர்கள், அரசே. ஒவ்வொரு நாளும் உடல் தழுவிக்கொள்க! ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும் தொட்டுக்கொள்க! எங்கு அமர்ந்திருந்தாலும் உங்கள் உடல்கள் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். சொற்களால் உணராததை தொடுகையால் பகிர்வீர்கள். கருவறைக்குள் நீங்கள் ஒன்றென இருந்தீர்கள். அங்கு அவ்வாறு இருந்த பெருமகிழ்வையும் முழு விடுதலையையும் இங்கும் உணர்வீர்கள். இரட்டையர் என்று இருப்பது பெரும்பேறு. இருவரும் ஒன்றாக முடியுமெனில் அதுவே பெருங்களிப்பு” என்றார் வில்வர்.

ஓரிரு நாட்களில் விந்தன் கண்டுகொண்டான் அனுவிந்தன் அருகிருக்கையில் தன் உள்ளம் கொள்ளும் பெரும் விடுதலையை. உடற்தசைகள் அனைத்தையும் அழுத்தியிருந்த எடைகள் விலகின. களிப்பும் சிரிப்பும் கொண்டவனாக அவன் மாறினான். அரசி “உங்கள் முகத்தில் இப்புன்னகையை நான் என்றுமே பார்த்ததில்லை” என்றாள். ஏவலர்கள் அவனை அணுகுகையிலேயே முகத்தில் புன்னகை விரிய வணங்கினர். குடிகள் அவன் பெருங்கருணையுடன் மட்டுமே அவையமர்ந்து முடிவுகள் சொல்வதாக சொன்னார்கள். அறத்தின் தெய்வம் அவனுள்ளில் இருந்து எழுந்துவிட்டதென்று சூதர்கள் கூறினார்கள். இளையோன் வாள் என்றும் மூத்தவர் அதன் பொற்பிடி என்றும் கவிஞர் பாடினர். அவர்கள் இருவரின் ஆட்சியில் அவந்தி வெற்றியும் புகழும் அடைந்தது.

தொலைவில் போர் தொடங்கவிருப்பதற்கான முரசுகள் முழங்கின. அனுவிந்தன் திரும்பி அவனிடம் செல்வோம் என்று கைகாட்டினான். விந்தன் “இளையோனே, இப்போரில் நாம் எந்த இழப்புமின்றி திரும்ப உளம் கொண்டுள்ளோம். இன்று மாலை போர் நிறுத்தம் குறித்து தார்த்தராஷ்டிரரிடம் பேச விரும்புகிறோம். அதை எண்ணி உன் அம்புகள் எழட்டும்” என்றான். பேரோசையுடன் கௌரவப் படைகள் பாய்ந்து முன்னெழுந்து பாண்டவப் படையுடன் முட்டிக் கலந்தன.

காவியம்- சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சிலுவையின் கதை

$
0
0

raj gauthaman

 

அன்புள்ள ஐயா

சிலுவைராஜ் சரித்திரத்தின் மீது கவனம் ஈர்த்தமைக்கு நன்றி

ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞனின் தன் வரலாறு. 1950 இல் பிறந்த சுதந்திர இந்தியாவின் குழந்தை சாதிக்கொடுமைகளால் மதத்தில் ஆறுதல் தேடி, மதத்துக்குள்ளும் புகுந்துவிட்ட சாதியால் ஓட்டப் படும் கதை

 

உள்ளுறையாக வாழ்வு முழுவதும் ஒரு விளையாட்டுத் துடுக்குத் தனத்தால் தன்னைப் போர்த்துக் கொள்கிறான் சிலுவை. அவனது பாட்டி ராக்கம்மா  பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம் இழிவைக் கடந்து செல்கிறாள். பாறையைப் போன்ற பொறுமை (நமது சாதி அதுதானடா  சிலுவ? இதுக்குப் போயி குதிக்கிறயே?). சிலுவையின் தந்தை ராணுவப் பணிமூலம்  வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்து விடுகிறார். தாய் தெருச் சண்டை மூலமும் சிலுவையைத் தந்தையிடம் கோள்சொல்வதன் மூலமும் விடுதலை அடைகிறாள். சிலுவை சிற்றுயிர்களை வதைப்பதன் மூலம் அடிபட்ட ஆளுமையை சமன் செய்து கொள்கிறான். இதில் ஆக்கபூர்வமானவள் பாட்டி. தலைமுறைகளை வளர்த்தெடுப்பவள். இன்ங்களை அழியாமல் காப்பவள்

 

அவமானங்களைப் பகடி செய்து கொண்டே செல்லும் சிலுவை, இறுதியில் மாவோயிசத்தின் எல்லைக் கோட்டில் வந்து நிற்கிறான். பின் தனக்கே உரிய இயல்பால் அதையும் கடக்கிறான்.

 

அப்பாவின் பெயரில் (சாதி) வால் இல்லாமல், RC தெரு என்ற அடையாளமே சாதியைக் காட்டிக் கொடுக்க, தனது சாதியை உரத்த குரலில் முழங்கி , புதுப்பட்டியிலிருந்து  பிய்த்துக் கொண்டு உயர்படிப்பு முடிக்கும் சிலுவை, படிப்பு முடிந்து, அதே ஊருக்குள்  அமிழ்த்தப் படுகிறான். கடைசியில் இந்துவாக மீண்டும் மாறி, மதுரை ஆதினத்திடம் தன் பெயரை தெரிவுசெய்கையில் கணாத தத்துவத்தை அளித்தவர் பெயர் தான் வேண்டும் என்று ‘ஞானத்தை அவுத்து வுட்டு’ அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறார்

 

அறிவைத்தேடும் ஒரு மாணவனுக்கு நமது பள்ளி, கல்லூரிகளில் கிடைக்கும் சரக்கைப் பற்றிய கதை என்றும் கூறலாம். சிற்றுயிர்களை கொன்று, பிய்த்து, ஆய்ந்து தின்பதை பொழுதுபோக்காகக் கொண்ட சிலுவைக்கு விலங்கியல் எளிதாக வருகிறது.  எல்லாக் காலங்களிலும் கணக்கு வாத்தியார்களில் புரிய வைக்கும் திறன் அரிதாகவே இருந்திருக்கிறது அறிந்து கொள்ள முடியாமையால் வரும் துன்பம் வேறு உலகைச் சார்ந்தது. அறிவியல் பார்வையை இலக்கியத்தில் புகுத்தி, எந்த பெருநூலையும் வகை பிரித்து தொகுத்துக் கொண்டு தேர்வில் விளாசி விடும் சிலுவை கற்றல் முறையில் புதுமையைக் கொண்டு வருகிறார்

 

முழுக்கதையிலும் நையாண்டி அடிநீரோட்டமாக ஒழுகிவருகிறது. கிறிஸ்துமஸ் பாட்டில் சுயமாய் வரிகளைப் புகுத்தும் சிறுவன், MGR  போல வெள்ளைபாண்ட், சட்டை போட்டு செருப்பு போடவேண்டும் என்று தெரியாமல் வரும் இளைஞன், ஏழாம் வகுப்பில், நீளமான கரங்களுடன் (அடிப்பதற்குத் தான்) வரவேற்கும் கணக்கு வாத்தியார், போன்றவர்கள் ஒவ்வொரு தெருவிலும் சந்திக்கும் தவிர்க்கமுடியாத பாத்திரங்கள். Algebra is a cobra  என்ற பொது விதி கண்டடையப் படுகிறது. ஆங்கில எழுத்துக்களை திடீரென கணக்கில் கொண்டு வந்தால் மிரளாமல் என்ன செய்வது?

 

அல்ஜிப்ரா, கால்குலஸ் போன்ற பாடங்களில் அறிமுகம் செய்யும் நாள் மிக முக்கியம். ஆசிரியர் புரிதல் உள்ளவராகவும், அன்றாடவாழ்வின் நிகழ்வுகள் மூலம் எடுத்துச் சொல்பவராகவும் இருத்தல் வேண்டும். முதல் நிலையில் புரிதல் இன்றி மேலே செல்லும்போது மறுதுவக்கம் கேட்கும் உரிமை மாணவர்க்கு இருக்கவேண்டும். கணிதமும் கவிதையும் flash இல்லாமல் வராது என்றால் விலக்கம் அதிகமாகி விடும்.

 

பேராசிரியர்கள் செய்யக்கூடாதவை என்ற பட்டியல் ஆசிரியர்களுக்கான அடிப்படை வழிகாட்டியாகும்

 

அடித்து திருத்தும் தந்தையைப் புரிந்து கொள்ள முடிகிறது. மறத்திற்கும் அன்பு சால்பு. RC தெருவில் இருந்து ஒரு குடும்பமாயினும் மீள வேண்டும் என்ற கனவு தன் ராணுவ வேலை மூலமும் தன் மகன் மூலமும் மெய்யாக வேண்டும் அவருக்கு. ஆனால் சிறு வயதிலேயே விலகி விட்ட சிலுவை தந்தையுடன்  ஒட்டவே இல்லை.

மிகச்சிக்கலான முடிச்சு சிலுவையின் தாயுடன் அவன் கழிக்கும் நாட்கள். 600 ரூபாய் கடன் வாங்கி மதுரையில் கல்லூரியில் சேர அளிக்கும் தாய். கணவனின் தாக்குதலில்இருந்து தன்னைக் காத்துக்கொள்ள சிலுவையை சிலுவையேற்றுகிறாளோ என்ற ஐயம் எழுகிறது.  பல்கலையில் முதல் 12 பேர்களில் தேர்ச்சி பெறும்போது பெரிது உவந்திருப்பாள். தந்தையிடம் அடி வாங்கித்தந்தபோதும் அடித்த பின் அவள் எதிர்வினை நம் கற்பனைக்கு விடப்படுகிறது. அவள் நிலையில் எந்த தாயும் செய்திருக்கக் கூடியதே.

துயரங்கள் தொடர்ந்த போதும் சிலுவையின் எழுச்சி ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் அடையாளமாகிறது. இந்திய சமூகம் குற்ற உணர்வு, வெட்கத்துடன் தலைவணங்கி முன்னிற்க நிற்கவேண்டிய நூல்.

சரித்திரத்தின் அடுத்த பகுதி விளையாட்டுணர்வு குன்றாமல், வெம்பிப் பழுத்து முதிர்ச்சியடைந்த, புத்தமதத்தின் தத்துவத்தில் தோய்ந்த சிலுவையைக் காட்டலாம். அதுவே அவன் ஜகத்தை மன்னித்துவிட்டதன் அடையாளம்.

 

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இருந்தவர்கள் -கடிதங்கள்

$
0
0

ivarkal

 

இவர்கள் இருந்தார்கள்  

 

 

அன்புள்ள  ஜெ,

 

 

நலம்   தானே ,  தங்களின்  இவர்கள்  இருந்தார்கள் என்ற கட்டுரை  தொகுதியை  நேற்று வாசித்தேன்.அருமையான கட்டுரைகள்.சில கட்டுரைகளை  ஏற்கனவே  தங்கள்  தளத்தில்  வாசித்து  இருந்த போதிலும்  ஒரு கட்டுரை தொகுதியாக  வாசிப்பது

ஒரு தனி  அனுபவம்  தான். இப்புத்தகம்   அந்த மனிதர்களின் வாழ்வையும் அவர்களின் அளுமையையும் ஒரு புனைக்கதை போல  காட்சிப்படுத்தியது.  கலை , இலக்கியத்தில்  அவர்களின் பங்களிப்பையும்  ஆவணப்படுத்தி  இருக்கிறீர்கள்.நன்றி.

 

 

சுகதேவ்.

 

மேட்டூர்.

 

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் பெருநாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் பலவற்றை மறைத்துவிடுகின்றன. நீங்கள் எழுதிக்குவித்துள்ள பல நூல்களை உங்கள் தீவிர வாசகர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள். நான் உங்கள் படைப்புகளை நான்காண்டுகளாக வெறிகொண்டு வாசித்துவருபவன். இத்தனை வாசிப்புக்குப்பின்னாலும் நான் இவர்கள் இருந்தார்கள் நூலை இப்போதுதான் கண்டுபிடித்தேன்.

 

அதை வாசித்தபோது ஏற்பட்ட எண்ணம் இதுதான். தமிழில் ஓர் எழுத்தாளன் இந்த ஒரு நூலைமட்டுமே எழுதிவிட்டு மறைந்திருந்தால் இதைக்கொண்டே அவனை ஒரு பெரும்படைப்பாளியாகக் கொண்டாடியிருப்பார்கள். அத்தனை நுட்பமான அழகான நூல். உண்மையாக வாழ்ந்த மனிதர்களின் கதை. சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களை கண்முன் நிறுத்துகிறது. அவர்களின் ஒவ்வொரு இயல்பையும் நுணுக்கமாகச் சித்தரிப்பதில் தேர்ந்த புனைவெழுத்தாளனின் பேனாக்கூர்மை உள்ளது. அதேசமயம் அவர்களை கூர்மையாக மதிப்பிடுவதில் ஒரு சிறந்த ஆய்வாளனின் பார்வை உள்ளது.

 

மன எழுச்சி அளிக்கும் பதிவுகள். க.நா.சு பற்றிய கட்டுரையை வாசித்தபோது எந்த ஒரு இலக்கியப்படைப்பும் அளிக்கும் மன எழுச்சியை அடைந்தேன். உங்கள் இலக்கியநூல்களில் இது மிக முக்கியமான ஒன்று

 

எஸ்.ஆர். ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெமோ

 

இவர்கள் இருந்தார்கள் என்ற தொகுதியை நேற்றுத்தான் வாசித்து முடித்தேன். பெருமூச்சுடனும் நெகிழ்ச்சியுடனும் எண்ணிக்கொள்ளத்தக்க படைப்புக்கள். திருவிகவின் வாழ்க்கையும் பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கையும் மிகப்பெரிய புனைவிலக்கியம் போலிருந்தன. அற்புதமான ஆக்கங்கள் அவை. என்ன ஒரு வாழ்க்கை.

 

இலக்கியவாதிகள் சிந்தனையாளர்களின் வாழ்க்கைக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? அவர்களின் சிந்தனைகள் அவர்களின் ஆளுமையிலேயே உள்ளன. அவர்கள் வரலாற்றில் வாழ்பவர்கள். ஆகவேதான் உலகம் முழுக்கவே எழுத்தாளர்களின் ஆளுமைச்சித்திரங்கள் அவர்களின் எழுத்துக்கள் அளவுக்கே புகழ்பெற்றிருக்கின்றன

 

ஆழமான நூல் இது

 

சுரேஷ்குமார்

 

 

இவர்கள் இருந்தார்கள் -கடிதங்கள்

இலட்சிய முகங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு

$
0
0

c.muthusami

 

 

நியூயார்க் நகரத்திற்குச் சென்றிருந்தபோது ஒரே இடத்தில் இரண்டு மகத்தான நினைவுச்சின்னங்களைக் காணமுடிந்தது. எல்லிஸ் தீவில் அமைந்திருக்கும் குடியேற்ற அருங்காட்சியகம். அதன் தலைமேல் என எழுந்து நின்றிருக்கும் சுதந்திரதேவியின் சிலை. கிட்டத்தட்ட இருநூறாண்டுகளாக அமெரிக்காவின் மண்ணில் குடியேறிக்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் கப்பலில் வந்திறங்கும் முதல் காலடிநிலம் அது. மதநம்பிக்கையால் துரத்தப்பட்டவர்கள், வெவ்வேறு அரசுகளால் வேட்டையாடப்பட்டவர்கள், அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் போன்ற செயற்கை பஞ்சங்களால் பிழைப்புதேடி வந்தவர்கள், புதிய வாழ்க்கையைத்தேடி கப்பலேறியவர்கள்…

 

எல்லிஸ் தீவிலுள்ள புகைப்படங்கள் வழியாக ஒரு வாழ்க்கை கண்முன் விரிகிறது. துயருற்ற முகங்கள், நைந்த உடைகளை அணிந்த மெலிந்த உடல்கள். குழந்தைகளை அணைத்த அன்னையர். குழந்தைவிழிகளிலுள்ள திகைப்பு. அவர்கள் வைத்திருக்கும் வெவ்வேறுவகையான பெட்டிகள். அடையாளங்கள் அழிந்து வெறும் கும்பலாக ஆகிவிட்டவர்கள். வரிசையில் நின்று எண்களாக மாறுகிறார்கள். நம்பிக்கையுடன் கனவுடன் வெளியே விரிந்துள்ள அறியாநிலம் நோக்கிச் செல்கிறார்கள்.

 

எல்லிஸ் தீவின் நெஞ்சை அடைக்கும் அனுபவம் மீண்டும் வெளிவந்து கையில் ஒளிச்சுடருடன் எழுந்து நின்றிருக்கும் விடுதலையரசியின் பெருஞ்சிலையை பார்க்கையில் மறைகிறது. சற்றுநேரத்திலேயே உள்ளம் பறக்கத் தொடங்கிவிடும். உலக வரலாற்றில் அந்தச் சிலை ஓர் அருநிகழ்வு என எப்போதும் நான் உணர்ந்ததுண்டு. ஒருபோதும் வருபவர்களை நோக்கி “இது உங்கள் நிலமும்கூட” என அழைக்கும் அத்தனைபெரிய வரவேற்பு எந்நாட்டிலும் அளிக்கப்பட்டதில்லை. ஒரு நாட்டின் இலட்சியவாதமே சிலையென எழுந்து நின்றிருப்பதையும் கண்டதில்லை. நவீனக் காலகட்டம் உருவாக்கிய முதன்மையான தெய்வம் அந்த வெண்கலச்சிலைதான்

winston-churchill

[ 2 ]

 

முதல்முறையாக மலேசியாவின் பினாங்கு நகருக்குச் சென்றபோது அமெரிக்காவின் எல்லிஸ் தீவை எண்ணிக்கொண்டேன். என் இளமைக்காலம் முதலே ‘பெனாங்குக்குப் போவது’ என்னும் சொல்லாட்சியைக் கேள்விப்பட்டிருந்தேன். குமரிமாவட்டத்தையும் கேரளத்தையும் பொறுத்தவரை அது வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டோ, ஏதேனும் குற்றத்தை இழைத்து தண்டனைக்குத் தப்பியோ, பொருளீட்டுவதற்காகவோ செல்லும் ஓர் அறியாநிலம். சிங்கப்பூர் உட்பட அனைத்து வெளிநாடுகளையும் பெனாங்கு என்றே உள்ளூரில் சொல்லிவந்தார்கள். எழுபதுகளில் வளைகுடா நாட்டுக்குச் செல்லத் தொடங்கியபோதும் முதியவர்கள் அதை பெனாங்கு என்றே சொன்னார்கள்

 

பினாங்கு வாழ்க்கையின் சித்திரத்தை நான் முதலில் அடைந்தது மலையாள நாடக ஆசிரியரும் நடிகருமான என்.என்.பிள்ளை எழுதிய ஞான் என்னும் தன்வரலாற்றில்தான். 1940 களின் வாழ்க்கையின் நுண்ணிய சித்தரிப்பு ஒன்றை அதில் உருவாக்க அவரால் இயன்றது. அதன்பின் அகிலனின் பால்மரக்காட்டிலே, நெஞ்சின் அலைகள் என்னும் இரு நாவல்களில். அகிலனின் நாவல்கள் பாடப்புத்தகத்தன்மை கொண்ட சித்தரிப்புகள் வழியாகச் சோர்வூட்டும் வாசிப்பை அளித்தன. ஆனாலும் அந்த நிலம் மீதான ஈடுபாடு என் கனவில் அதை வளரச்செய்தது. மேலும் நெடுங்காலம் கழித்தே மலேசிய எழுத்துக்கள் அறிமுகமாயின. லங்காட்நதிக்கரை [அ.ரெங்கசாமி] சயாம் மரணரயில் [சண்முகம்] போன்ற நாவல்கள்.

 

ஆனால் பினாங்கில் நின்றிருந்தபோது என் மூதாதையர் அங்கே வந்தமைக்கான தடையமாக ஏதேனும் எஞ்சியிருக்கிறதா என்ற ஆவலும் இல்லை என அறிந்தபோது ஏமாற்றமும்தான் ஏற்பட்டது. புகைப்படங்களோ, அரசு ஆவணங்களோ இல்லை. நினைவுக்குறிப்புகளும் இல்லை. ஏனென்றால் அங்கே சென்றவர்கள் இங்குள்ள சமூகத்தால் குப்பையில் என தூக்கி வீசப்பட்டவர்கள். இந்தியாவை உலுக்கிய இரு பெரும்பஞ்சங்களிலிருந்து உயிர்தப்பியவர்கள். இங்கு அப்பஞ்சங்களின் வரலாறே எழுதப்படவில்லை. செத்துக்குவிந்த மக்களைப்பற்றிய நினைவே நம் பண்பாட்டில் இல்லை. குடிபெயர்ந்தோர் முற்றிலும் மறக்கப்பட்டவர்கள்.

 

சென்ற ஐநூறாண்டுகளாக இந்தியர்களே வரலாறற்றவர்கள் எனலாம். தற்செயலாகப் பதிவான வரலாறுகளும் வென்றவர்கள் எழுதிய வரலாறுகளுமன்றி நம்மைப்பற்றி நாம் பதிவுசெய்தவை மிகமிகக்குறைவு. வரலாறற்ற சமூகத்தின் அடித்தளம் வரலாற்றின் நிழல்கூட விழாதது. இருந்ததற்கும் மறைந்தமைக்கும் தடையமே இல்லாமல் காலத்தில் மறைந்தது.

 

உலகில் எந்த ஒரு மானுட இனத்திற்கும் நிகழ்ந்த கூட்டுப்பேரழிவுக்கு நிகரானது 1970களிலும் 1880 களிலும் தமிழகத்தில் நிகழ்ந்த பெரும்பஞ்சங்கள். அதன்பின் உலகப்போரில் சயாம் மரணரயில் உருவாக்கத்தில் நிகழ்ந்த பலிகள். ஆனால் இங்கே மொழிவழிப்பதிவுகள் மிகமிககுறைவு. உலகின் அத்தனை சமூகங்களும் தங்கள் அழிவுகளை மீள மீளப்பேசிப் பதிவுசெய்கின்றன. தங்கள் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள, தங்கள் பிழைகளை திருத்திக்கொள்ள. நாம் நம் பொற்காலங்களைத் தேடி நூல்களில் அலைகிறோம். உலகமே நம்மால் ஆளப்பட்டது என்னும் பகற்கனவில் திளைக்கிறோம்.

coolie-women

[ 3 ]

 

ஒருவகையில் இலக்கியம் என்பது வரலாறற்றவர்களின் வரலாறு. இலக்கிய ஆசிரியன் நாவற்றவர்களின் நா. வரலாற்றின் தத்துவத்தின் மெய்யியலின் இடைவெளிகளை நிரப்பிப் பரவும் நீரே இலக்கியம். அது நிகர்வாழ்க்கை, ஆகவே நிகர்வரலாறும்கூட. அவ்வகையில் சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாய மக்களின் வரலாறு. வரலாறுகளினூடாகக் கொடிபோலப் படர்ந்து அவற்றை ஒருங்கிணைப்பது. அவற்றை மெல்ல கவ்வி இறுக்கி தானெழுந்து நின்றிருப்பது. சமீபத்தில் கம்போடியா சென்றிருந்தபோது இடிந்த பேராலயங்களுக்குமேல் பெருமரங்கள் எழுந்து நின்றிருப்பதைக் கண்டேன். அவற்றின் வேர்களால் கல் ஆலயங்கள் கவ்விநெரிக்கப்பட்டிருந்தன. இந்நாவல் அத்தகைய பசுமரங்களில் ஒன்று.

 

அலெக்ஸ் ஹேலியின்  ‘ரூட்ஸ்’ என்னும் தன்வரலாற்று நூலை நினைவுறுத்தும் பயணச் சித்திரத்துடன் தொடங்குகிறது சீ.முத்துசாமியின் இந்நாவல். தமிழகத்தில் தருமபுரியிலிருந்து தன் மகன் உண்ணாமுலையுடன் பஞ்சம்பிழைக்கக் கிளம்பும் மாரியின் கதை. புழுத்த கஞ்சியை ஒருவேளை உண்டு கப்பலின் கொட்டடியில் மலம்கழித்து மலத்துக்குள்ளேயே அமர்ந்துகொண்டு இருட்டுக்குள் மூச்சுக்காற்றில்லாமல் திணறி பினாங்கு நோக்கிச் செல்கிறார்கள். வழியில் காலரா. பிணங்களைத் தூக்கி கடலில் வீசுகிறார்கள். நோய்கண்டவர்களையும் நோய் உண்டா என ஐயத்துக்கு ஆளாகிறவர்களையும் தூக்கி கடலில் போடுகிறார்கள்.

 

வரண்டு உலர்ந்த முட்புழுதிக் காட்டிலிருந்து மலாயாவின் வானளாவிய மலைக்காட்டுக்கு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வரண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு.

 

“சட்டெனத் திரும்பி அண்ணாந்து காட்டைப் பார்த்தார். மனம் பகீரென்றது. அவர் இதுவரை கண்டிராத பிரமாண்ட காடு. வான் நோக்கி எழுந்து போகும் ராட்சச மரங்கள். அதில் படர்ந்து ஏறும் பசுங்கொடிகள். சடைபின்னி இறங்கும் ஆலமர விழுதுகள் போன்ற பெரும் விழுதுகள். மனிதர்கள் கால் வைத்து நடக்கவோ, அரூபக் காற்றும் நுழைந்து நடமாடவோ இடைவெளியின்றி அடர்ந்து நிறையும் பசுமைச் செடிகொடிகள். பறவைகளின் ஆரவாரக் கூச்சல். சூழ்ந்து ஒலிக்கும் ஏதேதோ பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான மிருகங்களின் நடுங்குற வைக்கும் பெருங் கூச்சலுமாய், காடு பேருரு கொண்டெழுந்து அவரைப் பயமுறுத்தியது”

 

என்ற வர்ணனையில் இந்நாவலைச் சுருக்கிக் கொள்ளலாம். பாலைநிலத்து மக்கள் பசுநிலத்தில் வதைபட்டுச் சாவதிலுள்ள ஊழின் அங்கதமே இந்நாவலைக் கட்டமைக்கிறது. அவர்களின் உள்ளார்ந்த அனலின் உறுமலாக பறை உடனிருக்கிறது. அவர்கள் காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்கும் வெள்ளையர்களுக்குக் கீழே, அவர்களின் அடிமைகளாகவும் அடிமைகளின் ஆண்டைகளாகவும் இருமுகம் கொண்ட கங்காணிகளின் சவுக்கடி பட்டு, பொந்துபோன்ற லாயங்களில் தங்கள் தீயூழின் அடுத்தபகுதியை நோக்கிச் செல்கிறார்கள்.

 

அம்மக்களின் போராட்டத்தின் கதை இந்நாவல். இதன் முதன்மையான சிறப்பு என்பது எந்த அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டும் அந்தவாழ்க்கையைச் சொல்ல சீ.முத்துசாமி முயலவில்லை என்பதுதான். ஆகவே வாழ்க்கை ஒருவகையான அப்பட்டத்தன்மையுடன் விரிகிறது. ஆசிரியர் தன்னியல்பற்ற கதைசொல்லியாக நம்முடன் வருகிறார். இந்த நேரடித்தன்மையால் இக்கதையை அடுக்குகளற்றதாக வாசித்துவிடும் இடர் உண்டு. இத்தகைய ஆக்கங்களை உண்மையாகவே ஒருவாழ்க்கை விவரிப்பை எப்படி சமூகம் சார்ந்த, ஆழுளம் சார்ந்த குறிப்புகளைக் கருத்தில்கொண்டு வாசிப்போமோ அப்படி வாசிக்கையில் அடுக்குகள் பெருகும்

 

ஓர் எடுத்துக்காட்டு, இதில் தோட்ட உரிமையாளரான ஜேம்ஸ் கோனெல்லியின் புரவி. அவர் கன்னங்கருமையாக பளபளக்கும் புரவியை வைத்திருக்கிறார். அந்தப்புரவி அம்மக்கள் அனைவருக்குமே பேரழகு கொண்டதாகத் தெரிகிறது. பிளேக்பியூட்டி என்னும் அக்குதிரையுடன் ஆண்டைக்கும் அடிமைக்குமான உறவு ஒரு கீற்றென வந்துசென்றாலும் முக்கியமான ஒரு குறியீடு.

 

இன்னொரு எடுத்துக்காட்டு, அந்தத் தோட்டத்தில் எழும் முதல் எதிர்ப்புக்குரல். அது காட்டில் ஊறிவரும் கலங்கல் குடிநீரை தெளியவைத்து உண்ணும்நிலையில் இருக்கும் அம்மக்கள் துரைக்குக் குடிப்பதற்காகக் கொண்டுசெல்லப்படும் நீர்தொட்டி வண்டியை தடுத்து நிறுத்தி கடத்திக்கொண்டுசெல்வதில் தொடங்குகிறது. மிகமிக அடிப்படையான ஒன்றுக்கான போராட்டம். ஆகவேதான் அதற்கு பெண்களே முன்னின்று இறங்குகிறார்கள். வீரம்மா போன்ற ஒரு பெண்ணில் எழும் அறச்சீற்றம் அது எளிய குடிநீர் என்பதனால்தான். காந்தியின் உப்புசத்யாக்கிரகத்துடன் இதை இணைத்து நோக்கும்போது ஓரு வரலாற்றுநோக்கு உருவாகும். உப்புக்கும் நீருக்குமே முதல் எதிர்க்குரல் எழமுடியும். அந்த இடத்தில் இயல்பாக காந்தி பற்றிய ஒரு குறிப்பு எழுந்து வந்து அதை வரலாற்றில் பொருத்துகிறது. ‘அந்த வக்கீலை தென்னாப்ரிக்காவில் அவர் போராடத்தொடங்கியபோதே கிள்ளி எறிந்திருக்கவேண்டும்’ என்று துரை சொல்கிறார்.

 

மிக எளிமையான சித்திரங்கள் வழியாகவும் இந்நாவல் வாழ்க்கை நோக்கிய நுட்பமான திறப்புகளைக் கொண்டுள்ளது. இரு உதாரணங்கள்.   ‘தமிழர் கட்சி தலைவர் இங்கிலீஸ் மணியம்’ என்னும் சொல்லாட்சி இயல்பாக மின்னிச்செல்கிறது. அதற்குக் காரணமானது ஒரு சினிமாக்காட்சி. அதில் சிவாஜி ’போடா, யூ கண்ட்ரி ஃபூல்’ என்று சொல்லும் வசனத்தால் ஆழமாக பாதிக்கப்படுகிறார். அதை அவர் அதேபோலச் சிரித்தபடி பிறரிடம் சொல்ல்ல ஆரம்பிக்கிறார். அவருக்கு இங்கிலீஷ் என்னும் அடைமொழி அமைகிறது.

 

இந்த வேடிக்கைக் கதைக்குப்பின்னாலுள்ளது ஆங்கிலம் அவர்களை அடக்கி ஆளும் மொழி என்பதுதான். அவர்களை இழித்துரைக்கும் சொல்லாட்சி அது. எப்போதேனும் துரையோ கங்காணியோ அதைச் சொல்லியிருக்கவும்கூடும். அது எப்படி அவர்களைக் கவர்கிறது? அது ‘அதிகாரம்’ ஆக ’அறிவு’ ஆக ‘ஸ்டைல்’ ஆக எப்படி அவர்களின் உள்ளத்துக்குள் உருமாறுகிறது? புங்கிட் செம்பிலான் என்னும் அந்தத் தோட்டம் ஒரு நாட்டின், சமூகத்தின் அடையாளமாக விரிகிறது.

 

பிறிதொரு கதை வேட்டைக்காரர் தன் கண்முன் புலி ஒன்று வேட்டையாடி கொன்று தூக்கிச் செல்வதைக் காணும் கணம். வேட்டைக்காரர் ஓரு கணத்தில் வேட்டையாடப்படுபவராகத் தன்னை உணர்கிறார். அதன்பின் அவருடைய வாழ்கையே பிறிதொன்றாக ஆகிவிடுகிறது. இத்தகைய நுண்குறிப்புகளினூடாக இந்த நேரடியான வாழ்க்கைச் சித்தரிப்பை கீழ்கீழென பல அடுக்குகள் கொண்டதாக நாம் வாசிக்கமுடியும் என்பதனால்தான் இது ஓர் இலக்கியப்படைப்பாக ஆகிறது

1520498252019-Credit_-National-Archives-of-Malaysia

 

[ 4 ]

 

மலாயாவின் வரலாறு ஆங்காங்கே தொடுத்துக்கொள்ளப்பட புங்கிட் செம்பிலான் தோட்டத்தின் போராட்டத்தின் கதையைச் சொல்கிறது மலைக்காடு. வரலாறுநிகழும் களங்கள் எங்கோ உள்ளன. புங்கிட் செம்பிலான் மக்கள் அனைத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டவர்கள். வானளாவிய மரங்களாலான பச்சைச்சிறைச்சாலை ஒன்றுக்குள் அகப்பட்டுக் கொண்டவர்கள். ஆனால் வரலாற்றின் அதிர்வுகள் அந்த சிறு சமூகத்தை உருமாற்றிக்கொண்டே இருக்கின்றன.

 

தன்னிச்சையான கிளர்ச்சிகளாக எதிர்ப்புகள் நிகழ்ந்து அவை கடுமையாக ஒடுக்கப்படும் தோட்டச்சூழலில் உலகப்போரின்போது மலாயாவை ஆக்ரமிக்கும் ஜப்பானுக்கு எதிராக போராடியவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் போர் முடிந்து வந்துசேர்கிறார்கள். அவர்களின் ராணுவப்பயிற்சியும் உலக அறிவும் போராட்டத்தின் வடிவங்களை மாற்றுகின்றன. ஒவ்வொன்றும் மெல்லமெல்ல உருமாறிக்கொண்டே இருப்பதை சொல்லிச் செல்கிறது இந்நாவல்.

 

அந்த நேரடியான நடப்புண்மையுடன் அதன் தர்க்கம் மீறாதபடி ஒரு கனவை நெய்துசெல்கிறது. நாவலின் தொடக்கம் முதலே வந்துகொண்டிருக்கிறது ராஜநாகம். முதன்முதலாக மக்களிடம் எதிர்ப்பைக் கண்ட கங்காணி அதிலெழுந்த ராஜநாகத்தைத்தான் உண்மையில் காண்கிறார்.  “கித்தாக்காட்டு ஒத்தையடிப் பாதையில் ஒத்தையாய்ப் போக, சரசரயொலியுடன் புதருக்குள்ளிருந்து வெளிப்பட்டு எதிரில் ஆளுயரப் படமெடுத்து ஆடும் நாகத்தை முதல்முறை எதிர்கொண்டு மிரண்டு நிற்பவனின் கண்களில் தெறிக்கும் அதே அச்சத்தை அவரது கண்களிலும் கண்டார்” என்று நாவல் விவரிக்கிறது

 

பின்னர் கிருஷ்ணனை அழைத்துச்செல்லும் முனி அவனுக்கு அந்நாகத்தை காட்டிக்கொடுக்கிறது.  “ஆறடி உயரத்தில் வாலைத் தரையில் ஊன்றி நின்று படமெடுத்துச் சீற்றத்துடன் ஆடியது ராஜநாகம். இலை உதிர்த்து அம்மணமாய் நின்ற கித்தாமரங்களினூடாய் இறங்கிய சூரிய ஒளியில் மினுங்கும் உடலின் கருமை. நிலைகுத்திய பார்வையில் வைரக்கல் போன்ற அதன் கண்கள். நாவின் அச்சுறுத்தும் நடனம்” அதை ஆசிரியர் விளக்கவில்லை. அவர்களுடன் இந்தியாவிலிருந்து வந்து அந்த ரப்பர்காட்டில் குடிகொண்ட குடித்தெய்வம். அவர்களின் மூதாதையரின் வடிவம் அது

 

அவர்களைப்போலவே சீற்றம் கொண்டது. அவர்கள் நோக்கவியலாத மூன்றுகாலத்தையும் நோக்குவது. அவர்களைப்போலவே கையறுநிலையில் நின்றிருப்பது “அந்த நம்ம பூமிக்கு அடியில ஒரு அரக்கன் மொளச்சு… கொஞ்ச காலமா அத தின்ன நல்ல நேரம் பாத்து நாக்க சொழட்டி சப்புகொட்டி காத்திருக்காண்டா… அது அசுரனோட பசிடா … தின்ன தின்ன அடங்காம வளர்ற பசிடா அது கிருஷ்ணா… பேராச பசிடா… இங்க எல்லாமே தன்னோடங்கற ஆணவப் பசிடா…” என அது கதறுகிறது. தன் கையிலிருக்கும் வாளால் அந்த அரக்கனை வெல்லமுடியாது என்று கூறுகிறது.

 

போராட்டத்தின் சித்திரத்தினூடாகச் செல்கிறது நாவல். மீண்டும் மீண்டும் தோற்றும் மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொண்டும் செல்லும் பயணம். துரைக்கு பெண்பிடித்துக் கொண்டுபோக ஆணையிடப்பட்டு அறியாப்பெண்ணின் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சி அவளால் புறக்கணிக்கப்பட்டு, வேறுவழியில்லை தன் மனைவியையே கொண்டுசெல்லவேண்டியதுதான் என துவளும் கங்காணியிலிருந்து ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகள் வரை, சீனர்கள் இந்தோனேசியர்கள் என வெவ்வேறு முகங்களினூடாகச் செல்லும் கதையின் பரப்பில் வாசகன் சென்றடையும் முடிவுகளுக்கு பல வாயில்கள் உள்ளன

 

நான் முனி சொல்லும் இந்தப் படிமத்துக்கு மீண்டு இந்நாவலை முடித்தேன். “எதிரில் வானம் முட்ட எழுந்து நின்றிருந்தது காடு. அவன் தன் வாழ்நாளில் கண்டிராத காடு. வண்ணக்காடு. வானவில்லின் ஏழு வண்ணக்காடு. மரங்களும் செடிகளும் கொடிகளும் வண்ணங்கள் உருமாறியபடி ஒளிர்ந்தன. அவற்றின் தலைகளைத் தொட்டுத் தடவிக் கூவிச் சிறகடித்து வட்டமிட்டன ஏழு வண்ணப் பறவைகள்” அந்தக் காடு அவர்கள் தலைமுறைகளுக்கு முன்பு தேடிவந்தது. அவர்களின் கனவில் அழியாது வாழ்வது.

 

[கிழக்கு வெளியீடாக வெளிவரவிருக்கும் சீ முத்துசாமி அவர்களின் மலைக்காடு நாவலுக்கான முன்னுரை ]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அஞ்சலி வடகரை வேலன்

$
0
0

passport

 

விஷ்ணுபுரம் நண்பர்களில் ஒருவரும் ஆரம்பகாலம் முதல் விருதுவிழாக்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்றவருமான நண்பர் வடகரை வேலன் இன்று மதியம் காலமானார். சென்ற ஒருமாத காலமாகவே நோயுற்றிருந்தார். இதயம், நுரையீரல் சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துகொண்டிருந்தது. இரண்டுநாட்களுக்கு முன்னரே செந்தில் அவர் அபாயகட்டத்தில் இருக்கிறார் என்றார். ஆனால் சிகிழ்ச்சையில் பயன் தெரிகிறது என்றும் சொல்லப்பட்டது. இவ்வார இறுதியி;ல் கோவை செல்கையில் சந்திக்கலாமென்றிருந்தேன்.

 

இலக்கிய ஆர்வம் கொண்டவர். தமிழில் நெடுங்காலமாகவே வலைப்பூ எழுதி வந்தவர்களில் ஒருவர். அனைவருக்கும் நெருக்கமான இனிய நண்பர். இத்தருணத்தில் அவருடன் பேசி சிரித்திருந்த நல்ல தருணங்கள் நினைவில் நிறைந்திருக்கின்றன

 

நண்பருக்கு அஞ்சலி

வடகரைவேலன் இணையப்பக்கம்

விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-53

$
0
0

bowபோர் தொடங்கியதுமே அது செல்லும் திசை குறித்த உள்ளுணர்வொன்று உருவாவதை விந்தன் முன்னரே கண்டிருந்தான். முதல்நாள் முரசொலியுடன் கௌரவப் படைகள் எழுந்துசென்று பாண்டவப் படைகளை அறைந்தபோது அன்று அருங்கொலை நிகழப்போகிறது என்று அவன் அகம் படபடப்புடன் உணர்ந்தது. அன்று மற்றவர்கள் போரெனும் உணர்வே அற்றவர்கள்போல, ஒரு திருவிழாவின் தொடக்கமென்பதுபோல நகையாட்டும் களிச்சொற்களும் கூச்சல்களுமாக கிளர்ச்சி கொண்டிருந்தனர். போர் தொடங்கிய இரண்டு நாழிகைக்குள்ளாகவே பீஷ்மர் எதிரணியின் இளவரசர்களை கொன்றுகுவித்து முன்சென்ற செய்திகள் வரவரத்தான் ஒவ்வொருவரும் போரென்றால் என்னவென்ற உணர்வை அடைந்தனர்.

பாரதவர்ஷத்தில் அதுவரை அத்தகைய போர்கள் நிகழ்ந்ததில்லை. நெடுங்காலமாகவே உரிமைப்போர்கள் நாற்களத்திலோ சேவற்களத்திலோ சாவேற்றப்படையினர் பொருதும் களரியிலோ தீர்க்கப்பட்டன. நிலம்கொள் போர்கள் படைகள் எழுந்துவரும்போதே அளவும் விசையும் கணித்து அடியறவும் கப்பமுமாக முடிக்கப்பட்டன. கொலைக்களம் அரிதாகவே நிகழ்ந்தது. ஷத்ரியர்களுக்கும் மலைக்குடிகளுக்குமான போர்களில் அரசர்கள் களமிறங்குதல் வழக்கமில்லை. இளவரசர்களை போருக்கு அழைத்துவந்தவர்கள் அதனூடாக அவர்கள் புகழ்பெறுவார்கள் என்றும் போருக்குப் பின் நிகழும் நிலம்பகுப்பில் இளவரசர்களுக்கு குரலிருக்கும் என்றும் எண்ணினர். அவர்கள் தளிருதிரும் கொடுங்காற்றிலென போரில் களம்படுவார்கள் என்று எண்ணியிருக்கவில்லை. போர்க்களத்தில் அவன் கண்ட ஷத்ரிய முகங்களெல்லாம் அச்சத்தில் வெளுத்து சொல்லிழந்திருந்தன. அன்று மாலை பாடிவீடு திரும்பும்போது பெரும்பாலானவர்கள் தலைதாழ்த்தியிருந்தனர்.

அன்றும் அந்த முதல்நாளின் படபடப்பு அவனுக்கு ஏற்பட்டது. அது ஏன் என அவனுக்கு புரியவில்லை. அவன் கைதூக்கி அனுவிந்தனிடம் “முன்னணிக்கு செல்லவேண்டாம். நமது படைகள் முன்செல்லட்டும். இன்றுடன் நம்வரை இப்போர் முடிகிறது” என்றான். அவன் கையசைவில் எழுந்த சொற்களை அனுவிந்தன் விழி கொள்ளவில்லை. தன் புரவிவீரர்களை முன்னால் செலுத்தி அதற்குப் பின்னால் தேரில் படைமுகம் நோக்கி சென்றான். அவன் உவகையுடன் இருப்பதாகவும் அவன் உடல் உள்ளிருந்து எழும் கொப்பளிப்பால் நிலையழிந்திருப்பதாகவும் தோன்றியது. அவனிடம் மேலும் ஏதோ சொல்ல விந்தன் எண்ணினான். ஆனால் அவன் மேலும் அப்பால் சென்றுவிட்டிருந்தான். முழவொலியினூடாகவே இனிமேல் சொல்லாட முடியும்.

காதுவரை நாண் இழுத்து அம்புகளை செலுத்தியபடி விந்தன் படைமுகம் நோக்கி சென்றான். பல்லாயிரக்கணக்கான நாகங்கள் முத்தமிட்டு முத்தமிட்டு பின்னிப்பிணைந்து காதல்கொள்வதுபோல என்று ஓர் உளச்சித்திரம் உருவானது. இப்பரப்பு ஏன் நீர்போலிருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஏற்படும் ஐயம் எழுந்தது. மிகப் பெரியவை நீரென்றே நிலைகொள்ளவியலும் போலும். மலைமேல் நின்றிருக்கையில் சூழ விரியும் நிலமும் நீர்வெளியென்றே அலைகொள்கிறது. உயிர்களின் பெருவெளி. ஒவ்வொன்றும் பிறிதை கொல்லும் பொருட்டு வெறிகொண்டிருக்கிறது. இப்பொதுநோக்கில் தெரியும் இது கொள்ளும் இந்தக் கொந்தளிப்பு தன்னை தான் கொன்றுகொள்வதற்கு.

ஒருகணம் எதுவோ தோன்ற அவன் விழிதிருப்பிப் பார்த்தபோது விண்ணிலிருந்து பருந்துபோல் இறங்கிய நீள்அம்பொன்று அனுவிந்தனின் நெஞ்சில் பாய்ந்து கவசங்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மறுபுறம் முதுகில் நீண்டு அவனை தேர்த்தட்டுடன் அறைந்து நிறுத்துவதை கண்டான். கையிலிருந்து வில் கீழே விழ “இளையோனே!” என்று கதறினான். தன்னையறியாமலேயே தேரிலிருந்து இறங்கிவிட முயன்றான். தேர்ப்பாகன் “துயர் காட்டும் இடமல்ல இது, அரசே! அத்துயர் எஞ்சிய படைவீரர்களையும் உளம்தளரச் செய்து களத்தில் கொன்றழிக்கும்!” என்றான். “ஆம்” என தன்னை நிலைமீட்டு “செல்க!” என்றபின் முழந்தாளிட்டு தன் வில்லை எடுத்துக்கொண்டு தலைகுனிந்து தேர்த்தட்டிலேயே அமர்ந்திருந்தான்.

“இத்தனை எளிதா? இத்தனை பொருளற்றதா?” என்று அவன் உள்ளம் அரற்றிக்கொண்டிருந்தது. அனுவிந்தன் வீழ்ந்ததை அறிவிக்கும் முழவோசை எழுந்தது. அவந்தியின் வீரர்கள் தங்கள் படைக்கலங்களை தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்! அவந்தியின் அரசருக்கு விண்ணுலகு! அனுவிந்தருக்கு விண்ணுலகு! மாவீரருக்கு விண்ணுலகு! களம்பட்டவருக்கு விண்ணுலகு!” என்று கூவினர். விந்தன் திரும்பி இரு கைகளையும் வீசி “செல்க! நம் அரசரின் குருதிக்கு ஆயிரம் மடங்கு குருதி கொண்டு திரும்புவோம்! செல்க!” என்று கூவினான். தன் தொடையில் ஓங்கி அறைந்து “எழுக! குருதி கொண்டு மீள்க! வெல்க!” என்று கூவியபடி தேரை முன் செலுத்தினான். அவந்தியின் படைகள் இணைந்து கூர்வடிவு கொண்டு அலையாகி சென்று பாண்டவப் படைகளை மோதின.

அங்கிருந்து அர்ஜுனன் வில்சூடி தேரிலெழுந்தான். அவன் தோற்றத்தை தொலைவிலிருந்து நோக்கியதுமே ஒரு கணம் அவன் உள்ளம் நடுங்கியது. அனுவிந்தனை வீழ்த்திய அம்பு அவனுடையதுதான் என்பதை அவன் உணர்ந்தான். “செல்க! இளைய பாண்டவனை எதிர்கொள்க!” என்று தன் பாகனுக்கு ஆணையிட்டான். பாகன் ஒருகணம் தயங்கி “நாம் தனித்து நின்றிருக்க நேரும்!” என்றான். “செல்க!” என அவன் கூவினான். அவனுடைய தேர் பிற தேர்களை ஒதுக்கி அர்ஜுனனை நோக்கி சென்றது.

அதே பொழுதில் இருபுறத்திலிருந்தும் திரிகர்த்த நாட்டு அரசன் ஷேமங்கரனும் புளிந்த நாட்டு அரசன் சுகுமாரனும் அர்ஜுனனை எதிர்கொள்ள வந்தனர். “இணைந்து அம்புதொடுங்கள். இருபுறத்து அம்புகளும் ஒற்றைக்கணத்தில் சென்று தொடவேண்டும். அவனால் பகுக்கமுடியாத கணமென்று அது அமையவேண்டும். இவ்விழிமகன் நம் அம்புபட்டுத் தோற்று திரும்பவேண்டும். இன்றே இவன் ஆணவம் அழியவேண்டும்! இணைந்து நில்லுங்கள்!” என்றபடி அர்ஜுனனை நோக்கி அம்புகளை எய்துகொண்டே முன்னகர்ந்தான். தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்தத்தின் மூத்த அரசர் சத்யரதரும் களத்தில் வந்தார்கள். அவர்களின் முகங்களில் தெரிந்த திகைப்பைக் கண்டதும்தான் என்ன நிகழ்கிறதென விந்தன் புரிந்துகொண்டான். அவர்கள் அங்கே நேர்முன்னால் என அர்ஜுனனை எதிர்பார்க்கவில்லை. எதிர்கொண்டபின் உடனே களமொழியவும் விரும்பவில்லை.

அர்ஜுனன் முகம் கனவிலிருப்பதுபோல் இருந்தது. அதே கனவில் பிறிதொரு இடத்திலிருப்பதுபோல் இருந்தது அத்தேரை ஓட்டிய இளைய யாதவரின் முகம். இங்கு செத்துக்குவிபவர்களைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை என்று தோன்றியது. அம்புகளைத் தொடுத்தபடி விந்தன் மேலும் மேலும் அணுகிச்சென்றான். அவன் எய்த அம்புகளை அர்ஜுனனின் அணுக்கப்படையினரின் அம்புகளே தடுத்து தெறிக்கச் செய்தன. வெறிகொண்டு கூவியபடி அவன் தொடுத்த நூறு அம்புகளில் ஒன்றே அர்ஜுனனின் தேர்த்தூணில் அறைந்து உதிர்ந்தது. அக்கணம் விந்தனின் தோளில் அம்பொன்று தைத்து தேர்த்தட்டில் முழங்கால் மடித்து விழுந்தான். அம்புகள் வந்து அவனைச் சூழ்ந்து தேர்த்தட்டில் பதிந்தன. அவன் கவசங்களின் மேல் பட்டு உதிர்ந்தன. முதுகுக்கவசத்தை உடைத்து ஒன்று உதிர்ந்தது.

“புரண்டு பின்னால் வருக! அரசே புரள்க!” என்று ஆவக்காவலன் கூவினான். அவன் உருண்டு பின்னடைய ஆவக்காவலன் எழுந்து அவனை அள்ளி பின்னாலிழுத்தான். இரும்புக்கேடயத்தால் அவனை மறைத்துக்கொண்டு அந்த அம்பைப் பிழுது அப்பால் எறிந்து அரக்குநனைத்த மரவுரியால் கட்டிட்டான். பாகன் தேரை பின்னாலிழுத்துச் செல்ல அர்ஜுனன் முன் செல்லும் வீரர்கள் அலறியபடி விழும் கூச்சல் கேட்டது. விந்தன் மீண்டும் கவசமணிந்து எழுந்தபோது அவன் தேருக்கு முன்னால் தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்தத்தின் மூதரசர் சத்யரதரும் தலையறுபட்டு தேர்த்தட்டில் கிடப்பதை கண்டான். அவர்களின் தேர்ப்பாகர்கள் உதிர்ந்திருந்தனர். அவர்களின் கவிழ்ந்த தேர்களே அவன் தேருக்கு மறைவாக அமைந்திருந்தன.

“செல்க! போர்முகப்புக்கு!” என்று அவன் பாகனிடம் சொன்னான். “அரசே, இனி திரும்புதலே நன்று. இளைய பாண்டவரை எதிர்கொள்ள நம்மால் இயலாது. நின்றுவிட்டீர்கள், புண்பட்டு மீண்டீர்கள். எவ்வகையிலும் தாழ்வில்லை” என்றான் பாகன். “எதிர்கொள்வோம்! இன்று அவன் கையால் இறக்கிறேன்! செல்க!” என்று அவன் கூவி காலால் தேர்த்தட்டை அறைந்தான். பாகன் “ஆம்” என்று தேரை முன்னெடுத்துச் சென்றான். “இழிமகனே… இன்று என் வஞ்சத்தை உனக்கு தெரிவிக்காமல் செல்வதில்லை!” என்று கூவியபடி அர்ஜுனனை நோக்கி அம்புகளை எய்துகொண்டே அவன் முன்சென்று நின்றான் விந்தன். “கொல் என்னை! கீழ்மகனே, கொல் என்னை!” என்று வெறியுடன் அம்புகளை செலுத்தினான்.

அவனுக்குச் சுற்றும் அம்புகள் தெறித்து வந்து தேர்த்தூண்களிலும் தேர்த்தட்டிலும் பதிந்து நின்று அதிர்ந்தன. பிறையம்பால் தேர்முகடு உடைந்து தெறித்தது. இன்னும் சிறுபொழுது. என் வாழ்வின் தருணமே இதுவென்றிருக்கலாம். இந்தச் சில கணங்களின் பொருட்டே நான் நினைவுகூரப்படலாம். இவ்வளவுதான் அப்பொழுதிடை. இதை அம்புகளாக எண்ணிவிட முடியும். எண்ணங்களாக அளந்துவிட முடியாது. எண்ணங்கள் காலத்தால் அளக்க இயலாதவை. என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இங்கு இத்தருணத்தில் என் இதுவரையிலான விழைவுகளும் வஞ்சங்களும் கனவுகளும் முற்றிலும் பொருளிழந்துவிட்டதை உணர்கிறேன். இக்கணத்தில் அம்பெடுத்து விடுவதும் வரும் அம்புக்கு உடல் ஒழிவதும் தவிர எதுவுமே பொருளுடையதாக இல்லை.

இறப்பு காவியத்தலைவனை உருவாக்குகிறது என்கின்றன இலக்கணங்கள். பல தருணங்களில் அது அனைத்துப் பொருளையும் முற்றழித்துவிடுகிறது. தேனீக்கூட்டில் புகுந்த கருவண்டென சொற்களனைத்தையும் சிதறடித்துவிடுகிறது. அர்ஜுனனின் தேரில் ஏழு இடங்களில் அம்புகளால் அறைய அவனால் இயன்றது. எவரேனும் வருவார்களெனில் இன்னும் சில அம்புகளுக்கு உயிரோடிருப்பேன். எவரும் துணைவரவில்லையெனில் இக்களத்தில் வீழ்வேன். விண்ணுலகில் நின்று என் இளையோன் பதைக்கும் விழிகளுடன் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

எத்தனை நன்று அவனுடன் இத்தனை பிந்தியாவது உளம் கோத்துக்கொண்டது! அவ்வஞ்சத்துடன், ஐயங்களுடன், அச்சங்களுடன் இங்கு வந்து நின்றிருந்தேன் எனில் இத்தருணத்தில் நான் உணர்வதென்ன? என் வாழ்நாளில் இனிதென்றும், பொருளுடையதென்றும் நான் உணர்ந்தது அனுவிந்தனுடன் உளம் கோத்து வாழ்ந்த இறுதிச் சில ஆண்டுகள் மட்டுமே. இறுதி… ஆம், வேறென்ன! இக்களத்திலிருந்து நான் உயிருடன் மீள இயலாது. மீண்டால் வெற்றுடலாக, நிலையழிந்த ஊன்தடியாகவே எஞ்சவேண்டியிருக்கும். அனைத்து நெறிகளின்படியும் இக்களத்தில் நானும் வீழ்வதே முறை.

மேலும் மேலும் அம்புகளைத் தொடுத்தபடி அவன் அர்ஜுனனின் அம்பு வளையத்துக்குள் சென்றான். அவந்தியின் தேர் வீரர்கள் அனைவருமே கழுத்தறுபட்டு களத்தில் விழுந்து கிடந்தார்கள். நெஞ்சில் அறையப்பட்ட நீளம்புடன் அவனுக்கருகே தேரில் கிடந்த வில்லவன் வாயில் குருதிக்குமிழி கொப்பளிக்க உடல் இழுபட்டுக்கொண்டிருந்தான். வில்லவர் வீழ்ந்த தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி வழி தடுத்தன. அதுவே அர்ஜுனன் அவந்தியின் படைகளுக்குள் ஊடுருவுவதற்கும் தடையாக இருந்தது. “முன்செல்க! இவ்விடைவெளியினூடக முன்செல்க!” என்றான் விந்தன். “அரசே, இந்த தேர்களே நமக்கு காப்பு” என்றான் பாகன். “செல்க! செல்க!” என்று கூவினான் விந்தன்.

பாகன் இரு தேர்களின் இடைவெளியினூடாக தேரைச் செலுத்தி அர்ஜுனனை நோக்கி சென்றான். அர்ஜுனனை அவனுடைய ஏழு அம்புகள் சென்றடைந்தன. பின்னணியில் சகுனியின் முரசுகள் முழங்கின. “அர்ஜுனனை எதிர்கொள்க! ஷத்ரிய வீரர்கள் முன் வருக!” ஒருகணத்தில் அவன் விழிகள் திரும்பி விந்தனின் விழிகளை நோக்கின. விந்தனின் உடல் சிலிர்த்து காலம் அழிந்தது. இறப்பின் கணம்போலும் அது என அது கடந்த பின் உணர்ந்தான். வலப்புறத்திலிருந்து சங்கொலி எழுப்பியபடி ஜயத்ரதன் களத்திற்குள் புகுந்தான். அதே தருணத்தில் இடப்புறத்திலிருந்து அஸ்வத்தாமனும் அர்ஜுனன் முன் வந்தான். இருவரின் அம்புகளையும் அர்ஜுனன் எதிர்கொள்ள அதுநாள் வரை அக்களத்தில் இடைவிட்டு இடைவிட்டு நடந்துகொண்டிருந்த அப்போர் மீண்டும் தொடங்கியது. விந்தன் அவர்களின் வட்டத்திலிருந்து மெல்ல பின்னடைந்தான்.

எத்தனை முறை இவர்கள் தங்கள் அம்புகளின் ஆற்றலை நோக்கியபடி முற்றிலும் நிகர்நிலையில் நின்று இப்படி போரிட்டிருப்பார்கள் என்று விந்தன் வியந்தான். பாகன் அவன் எண்ணத்தை உணர்ந்தவன்போல் தேரை திருப்ப “வேண்டாம்!” என்றான். “இங்கே நில்… களத்திலேயே நில்!” பாகன் “அரசே!” என்றான். “இறப்பில்லாத வெறும்வெளியில் என்னால் நின்றிருக்கவியலாது!” என்றான் விந்தன். வெறிகொண்டவன்போல கூவி நகைத்து “எட்டு பக்கமும் கொல்ல வரும் அம்புகள் வேண்டும்… இல்லையேல் பித்தனாகிவிடுவேன்!” என்றான். பாகன் இரு கவிழ்ந்த தேர்களுக்குப் பின்னால் தேரை கொண்டுசென்றான்.

தேரில் நின்றபடி அவன் அர்ஜுனனை அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் எதிர்த்து நின்றதை மலைத்த விழிகளுடன் பார்த்தான். அம்புக்கு அம்பு நிற்கும் போர். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் உணரும் உச்ச தருணங்களை மட்டுமே தொடுத்து உருவாகிய காலம் என அத்தருணம். அவர்களின் போரை நோக்கிக்கொண்டிருந்தபோது அவன் ஒன்று உணர்ந்தான். அது வேறு விற்கலை. அவனும் பிற ஷத்ரியர்களும் இளமை முதலே கற்று கைகொள்வது வில்லெனும் தொழில். அங்கு நிகழ்ந்தது வில்லெனும் கலை. ஒரு துளியும் எஞ்சாது ஒரு துளியும் குறையா ஒத்திசைவே கலை. ஒருவரும் இறக்கவில்லையென்றால், ஓர் அம்பும் இலக்கடையவில்லை என்றால், போர் முற்றிலும் பொருளிழந்து கேலிக்குரியதாகிவிடும். அந்நிலையில் கலையோ மேலும் எழில் கொள்கிறது. அதன் உச்சமே அதுதான் என்பதுபோல.

அம்மூவர் உடலையும் எந்த அம்பும் சென்றடையவில்லை. ஒவ்வொரு அம்பையும் இணையான பிறிதொரு அம்பு விண்ணில் தெறித்து சிதறடித்தது. அவர்கள் வாழும் உலகம் வேறு. கந்தர்வர்களும் மானுடரும் ஒரே உலகில் ஒருவரை ஒருவர் அறியாதவர்களாக வாழ்கிறார்கள் என்று இளமையில் அவன் கேட்டிருந்தான். மணமும் ஒளியும் ஒரே காற்றில் திகழ்வதுபோல். அவர்கள் தங்களில் ஒருவரையே நோக்குகிறார்கள். பிறரை அறிவதே இல்லை. சிற்றுயிர்களை அரைத்து அழித்தபடி யானை நடந்து செல்வதைப்போல.

இங்கு கொல்லப்பட்டவர்களை விண்ணில் இவர்கள் சந்தித்தால் முகம் அறிந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இறந்து மீளும் அந்த விண் பிறிதொன்றாக இருக்கலாம். இவர்கள் செல்லும் விண்ணுலகல்ல அது. இவர்களின் உலகில் ராகவராமனும் கார்த்தவீரியனும் ராவண மகாபிரபுவும் விருத்திரனும் இருப்பார்கள். இந்திரனும் சூரியனும் அரியணை அமர்ந்திருப்பார்கள். இரு வேறு உலகங்களைப் படைத்து ஒன்று பிறிதிற்கு பலியென்று அமைத்து இவ்வுலகை யாத்திருக்கின்றன தெய்வங்கள்.

தேர் மிகவும் பின்னணிக்கு வந்துவிட்டிருந்தது. அவன் தேரை அணுகிய கூர்ஜர மன்னன் சக்ரதனுஸ் “ஷத்ரியர் நால்வர் கொல்லப்பட்டுவிட்டனர்” என்றான். “நால்வரா?” என்றான் விந்தன். “திரிகர்த்தன் ஷேமங்கரனும் புளிந்தன் சுகுமாரனும் கொல்லப்பட்டுவிட்டனர்!” அவன் பதற்றத்துடன் திரும்பி தன்னைச் சூழ்ந்திருந்த படைகளை நோக்கிவிட்டு “ஆயினும் இதுவரை ஷத்ரிய அரசர்கள் குறைவாகவே கொல்லப்பட்டிருக்கிறார்கள்!” என்றான். அதன் பொருள் புரியாத கூர்ஜர மன்னன் “ஆயினும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். படைமுகப்பிற்கு செல்லாமல் ஒழியவேண்டும். இன்று நாமனைவருமே எஞ்சி தார்த்தராஷ்டிரர்களிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றான்.

பொருளற்றதொரு சீற்றம் எழ “படைமுகம் செல்லாமல் போருக்கு வந்து நின்றிருப்பதைப்போன்ற இழிவு பிறிதொன்றில்லை. அவந்தியின் அரசர்களின் இயல்பு அதுவல்ல!” என்றான் விந்தன். கூர்ஜர சக்ரதனுஸ் திகைத்து “ஆம், செல்லவேண்டும். செல்லக்கூடாதென்றில்லை. அங்கே மறுபுறம் எளிய கிராதரும் நிஷாதரும் வந்து நின்றிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்வோம். அர்ஜுனனையும் பீமனையும் திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் எதிர்கொள்வது நாம் இறப்பை நோக்கி செல்வதுதான்” என்றான். “நான் இறப்பதற்கே வந்திருக்கிறேன், இறப்பதற்கே செல்கிறேன்!” என்று கூவிய விந்தன் “தேரைச் செலுத்து… படைமுகப்பு நோக்கி செலுத்து!” என்று பாகனிடம் கூவினான்.

தேர் மீண்டும் படைமுகப்பு நோக்கி சென்றது. விந்தன் தேர்த்தட்டில் எழுந்து நின்று சூழ நோக்கினான். எதிர்முனையில் துருபதரும் அவர் மைந்தர்களும் பூரிசிரவஸுடன் போரிட்டுகொண்டிருந்தனர். சிகண்டியை துரோணர் எதிர்த்துப் போரிட்டார். மிக அப்பால் துரியோதனனும் தம்பியரும் கடோத்கஜனை எதிர்ப்பதை முரசுகள் அறிவித்தன. சக்ரதனுஸ் “நமது படைகள் அர்ஜுனனை நோக்கி செல்லட்டும். அவரை சூழ்ந்துகொள்ளட்டும். நாம் சென்று பாஞ்சாலனை தனிமைப்படுத்தி வெல்வோம்” என்றான். “ஆம், பாஞ்சாலனை வெல்வோம்!” என்று அவனுக்கு அப்பால் நின்ற சைப்யநாட்டு கோவாசனர் கூவினார். அபிசார மன்னர் சுபத்ரரும் அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் அவர்களுடன் எழுந்துசென்றனர்.

அவர்கள் போர்க்கூச்சலிட்டபடி செல்வதைக் கண்டு இகழ்ச்சியுடன் துப்பிய விந்தன் “இழிமக்கள். களத்திலும் நடிப்பவர்கள்!” என்றான். “செல்க… பாண்டவ மைந்தரின் முன்னால் சென்று தேரை நிறுத்துக!” என்றான். மறுசொல்லின்றி தேர்ப்பாகன் அவன் தேரை அர்ஜுனன் அஸ்வத்தாமனையும் ஜயத்ரதனையும் எதிர்த்துக்கொண்டிருந்த முனைக்கு கொண்டுசென்றான். அம்புகள் உரசி செம்பொறிகள் நிறைந்திருந்த காற்றினூடாக தலையைத் தாழ்த்தி ஊடுருவிச்சென்று வில்லை எடுத்து அம்புகளை தொடுத்தான். “இதோ… இந்தக் களம்தான். இந்த மண்ணில்தான்” என உள்ளூர கூவிக்கொண்டான்.

அவன் அம்புகள் எதையும் அவர்கள் மூவரும் அறியவில்லை. அர்ஜுனனின் அணுக்கவில்லவன் ஒருவனை விந்தன் வீழ்த்தினான். இன்னொருவனின் அம்பு வந்து அவன் தோள்கவசத்தை உடைத்தது. அவன் என்னை நோக்கவேண்டும். அந்த விழிகள்! அவை மானுடர்க்குரியவை அல்ல. பல்லாயிரமாண்டுகள் குருதிபலி கொண்டு பழகிய தெய்வம் பசிகொண்டெழுந்து நோக்கும் சீற்றம். மேலும் மேலுமென அவன் அம்புவட்டத்திற்குள் நுழைந்தான். அக்கணம் என்ன நிகழ்ந்ததென்றறியாமல் அப்போர் முடிந்தது. அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் இரு பக்கங்களிலாக விலகியகல அர்ஜுனன் தன் பின்னணிப்படைக்குள் புதைந்து மறைந்தான். அவன் களத்தில் திகைத்து நின்று சூழ நோக்க அவனை சூழ்ந்துகொண்டது விராடர்களின் படை.

அம்புகளை தவிர்க்கும்பொருட்டு அம்புகளைத் தொடுத்தபடி அவன் பின்னடைந்தான். அஸ்வத்தாமன் அப்பால் சாத்யகியுடன் போரிலீடுபடுவதை முழவுகள் கூறின. ஜயத்ரதனும் திருஷ்டத்யும்னனும் வில்லிணை நிற்பதை அறிந்தான். அர்ஜுனன் எங்கே என அவன் செவிகள் துழாவின. மிக அப்பால் அர்ஜுனன் எழுந்ததை கூறின முழவுகள். “அங்கு செல்க… அங்கு செல்க… “ என்று அவன் கூவினான். அவன் சொல்வது புரியாமல் “அரசே!” என்றான் பாகன். “செல்க… அங்கே செல்க… இளைய பாண்டவரை தொடர்ந்து செல்க!” என்று அவன் கூவினான். “நான் துரத்திச் செல்கிறேன்! ஆம், நான் அவரை துரத்திச் செல்கிறேன். அதை முழவுகள் நமது படைகளுக்கு அறிவிக்கட்டும்!”

முழவுகள் முழங்கிக்கொண்டே இருந்தன. கௌரவப் படையின் முகப்பிலிருந்த கொப்பளிப்பே ஒரு பெரிய சுவரென்றாகி அப்பாலும் இப்பாலுமிருந்தவர்களை தடுத்தது. அங்கிருந்து எழுந்துகொண்டிருந்த கூச்சல்களே அர்ஜுனன் அங்கிருப்பதை காட்டியது. அவனுடைய தேர் அங்கே செல்வதற்குள்ளாகவே அர்ஜுனன் அங்கிருந்து தன் படைகளுக்கிடையே மூழ்கி மறைந்தான். கௌரவப் படை முழவொலிகளும் கொம்பொலிகளுமாக பின்னடைந்து குழம்பியது. ஆழத்தில் மடைத்திறப்பு இருக்கையில் மேலே தோன்றும் சுழி போலிருந்தது. அவன் அணுகியபோது காவலன் ஒருவன் “சாரஸ்வதரான உலூகரும் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் கொல்லப்பட்டார்கள்!” என்று கூவினான். தேரில் வந்த ஒருவன் “ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனர் களம்பட்டார்!” என்றான்.

அப்பால் அலறல்களுடன் முழவுகளும் கொம்புகளும் எழுந்தன. “அர்ஜுனர் அங்கே தோன்றியிருக்கிறார்… சுறா நீர் கிழித்தெழுந்து வருவதுபோல் வருகிறார்” என்று படைத்தலைவன் ஒருவன் கூவினான். “அங்கே செல்க! அங்கே செல்க!” என்று விந்தன் தேர்ப்பாகனிடம் ஆணையிட்டான். “அரசே, நாம் பக்கவாட்டில் நகரவியலாது… நமக்கு பொழுதிடையில்லை” என்றான் பாகன். “அவர் எப்படி செல்கிறார்? அதைப்போல செல்க…” என்று விந்தன் ஆணையிட்டான். அஞ்சிக்குழம்பி முட்டிக்கொந்தளித்த கௌரவப் படை அவர்களின் தேரை அலைக்கழியச் செய்தது. பாகன் சவுக்கால் புரவிகளை அறைந்துகொண்டே இருந்தான்.

வடக்கே கொம்புகள் அலறின. முழவுகள் பதற்றம் கொண்ட யானைகள்போல் ஓசையிட்டன. “அங்கே எழுந்திருக்கிறார்!” என்று ஒருவன் கூவினான். அவனருகே தேரில் விரைந்த விதேகநாட்டு நிமி “ஷத்ரியர்களை தேடித்தேடி கொல்கிறான். நம் திட்டம் அவனுக்கு தெரிந்திருக்கிறது” என்றார். “சௌராஷ்டிர ருஷார்திகரும் ஐந்து மைந்தர்களும் களம்பட்டனர்!” என்று அப்பால் ஒருவன் கூவினான். “செல்க! விரைந்து செல்க!” என்று விந்தன் பாகனை விசைகூட்ட நிமி “நாம் பின்னடைய வேண்டியதுதான்… பின்னடைவதொன்றே வழி!” என்றார். அவருடைய தேர் பின்னால் செல்ல விந்தனின் தேர் முன்னெழுந்தது.

கோசலமன்னன் பிருஹத்பலனை வழியில் விந்தன் கண்டான். “ஷத்ரிய அரசர்கள் பின்னடைக… ஒருங்குதிரண்டு பின்னடைக!” என அவன் ஆணையிட்டுக்கொண்டிருந்தான். “மாகிஷ்மதியின் நீலரும் எட்டு மைந்தரும் கொல்லப்பட்டனர்” என்று முழவுகள் கூவின. விந்தன் அர்ஜுனனால் கலங்கி சுழித்துக்கொண்டிருந்த போர்முகப்புக்கு செல்வதற்குள் அவன் மீண்டும் மறைந்திருந்தான். “தெய்வங்களே! என்னை வைத்து விளையாடுகிறீர்கள் போலும்!” என்று அவன் தேரில் ஓங்கி உதைத்து கண்ணீருடன் கூச்சலிட்டான். “செல்க… அவரை பின்தொடர்க!” என்று பாகனின் தோளை மிதித்து ஆணையிட்டான்.

பின்னணியில் சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டிருந்தது. “பிதாமகர் பீஷ்மர்! பிதாமகர் பீஷ்மர் அர்ஜுனனை தடைசெய்க! அர்ஜுனனை சூழ்ந்துகொள்ளட்டும் பிதாமகர்! ஷத்ரியர்கள் அவருக்கு பின்களமென அமைக!” அவனுடைய தேர் பின்னகர்ந்தபோது பீஷ்மரின் தேர் கொடிபறக்க பருந்துபோல் அணுகுவதை கண்டான். அதன் தட்டில் வில்லுடன் நின்ற பிதாமகர் கைகளை வீசி “என்னை தொடர்க! அர்ஜுனனைச் சூழ்ந்துகொள்ள வருக!” என ஆணையிட்டு அவனை கடந்துசென்றார். ஆனால் அவனை நோக்கி தேரில் வந்த பிருஹத்பலன் “ஷத்ரியகுலமே முற்றழிந்துகொண்டிருக்கிறது. இது இரு சாராரும் சேர்ந்து செய்யும் வஞ்சம்… நம்மை திட்டமிட்டு அழிக்கிறார்கள். பின்னடைவோம். நமது போர் முடிகிறது இதோ” என்று கூவினான்.

விந்தன் “பிதாமகரைத் தொடரும்படி ஆணை… அவர் அர்ஜுனனை வெல்லும்பொருட்டு செல்கிறார்!” என்றான். “அது அவர்களின் போர். நாம் இனியும் உயிர்கொடுக்க வேண்டியதில்லை” என்று பிருஹத்பலன் சொன்னான். “திரும்புக! ஷத்ரியர்கள் திரும்புக!” என கைவீசி ஆணையிட்டான். அவ்வோசை முழவுகளாக எழ வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் கேகயமன்னன் திருஷ்டகேதுவும் மாளவமன்னர் இந்திரசேனரும் தங்கள் தேர்களை திருப்பும்படி ஆணையிட்டார்கள்.

முன்னால் சென்ற பீஷ்மர் திரும்பி நோக்கியபோது தன் பின்படை ஒழிந்து கிடப்பதையும் ஷத்ரியர் பின்வாங்குவதையும் கண்டார். சீற்றத்துடன் வில்லை அவர்களுக்கு எதிராகத் தூக்கி அம்பெடுத்தார். பிருஹத்பலன் வில்லை கைவிட்டுவிட்டு தேர்த்தட்டில் கைதூக்கி நின்றான். பீஷ்மர் இழிசொல்லுடன் துப்பிவிட்டு தேரைத் திருப்பி அர்ஜுனனை துரத்திச்செல்லும்படி ஆணையிட்டார். அவருடைய தேர் மறைந்ததும் இந்திரசேனர் “செல்க… பின்னணிக்கு செல்க!” என ஆணையிட்டார். அவர்களின் தேர்கள் பின்னணிக்கு திரும்ப விந்தன் திகைத்து நின்றான். பின்னர் “பிதாமகரை தொடர்க!” என்று தன் பாகனுக்கு ஆணையிட்டான். ஆனால் அதற்குள் பூரிசிரவஸின் பால்ஹிகப் படையின் வில்லவர்கள் பீஷ்மருக்கு பின்காப்பென்றாகி அவரை முற்றாக மறைத்தனர்.

விந்தன் தன் தேரில் தளர்ந்தவனாக நின்றான். அவன் உள்ளம் வீண் சொற்களாக இருந்தது. “பின் திரும்புக” என பாகனுக்கு ஆணையிட்டான். “அரசே!” என்றான் பாகன். “பின்னணிக்கு செல்க… ஷத்ரிய அரசர்களுடன் சேர்ந்துகொள்க!” என்றான். அவனுடைய தேர் திரும்பியபோது இன்னொரு தேரில் முட்டி நின்றது. அக்கணம் விண்ணிலிருந்து செங்குத்தாக இறங்கிய நீளம்பு ஒன்று அவன் கழுத்தில் தைத்து மறுபக்கம் சென்று நின்றது. மூச்சு அறுபட்டு உடல் துள்ள அவன் தேர்த்தட்டில் விழுந்தான்.

காவியம்- சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கட்டண உரை -கடிதங்கள்

$
0
0

jemo

 

கட்டண உரை –ஓர் எண்ணம்

 

கட்டண உரை-அறிவிப்பு

அன்புள்ள ஜெ

 

 

கட்டணம் செலுத்தி நேரலையாக உரையை கேட்கும் வசதியை தரலாம் பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும் . இதற்க்கான சேவையை தரும் இணையதள சேவை நிறுவனங்கள் உள்ளன .

 

இத்தகைய உரைகளை தனி தொகுதியாக மாற்றி கட்டணம் செலுத்தி அவற்றை பார்க்கும் கேட்கும் வசதியை தரலாம் அதற்க்கான இணைப்பை உங்கள் இனைய தலத்தில் பார்வைக்கு வைக்கலாம் புத்தகங்களை போல

 

தக்ஷிணாமூர்த்தி

 

அன்புள்ள தக்ஷிணாமூர்த்தி அவர்களுக்கு

 

உரைகளை அப்படி இணையத்தில் கட்டணவடிவில் ஏற்றமுடியாது. பணம் பெறுவதற்கான இணைய அமைப்பை உருவாக்குவது எளிதல்ல. இந்தியச்சட்டங்கள் கோரும் பல்வேறு விதிகளை நிறைவேற்றுவது பெரும்பணி. இணையம் பெரும்பாலும் இன்றுவரை இலவசமாகவே செயல்படுவதன் முதன்மையான காரணம் இதுவே.

 

ஜெ

 

 

பால சுந்தர்
Mon, Oct 29, 1:19 PM (18 hours ago)
to me

அன்புநிறை ஜெ,

 

தங்கள் இயலாமை புரிகிறது. நான் முடிந்தவரை விடுமுறைக்கு முயற்சி செய்து வரப்பார்க்கிறேன்.  வர இயலவில்லை என்றால் கட்டண உரைக்கான பணம் செலுத்தி கானொலியை மட்டும் பெற்றுக்கொள்ள இயலுமா? அவ்வாறெனில் நான் கட்டணம் செலுத்தி கானொலி பெற சித்தமாகயிருக்கிறேன்.

 

நேற்றைய சேலம் கூட்டத்தில் தங்களின் உரை கானொலியாக கிடைக்குமென்றால் அதற்கான இணைப்பை தெரியப்படுத்த வேண்டுகிறேன். இல்லையெனில் தங்கள் உரையின் சாராம்சம் மற்றும் முக்கிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

 

அன்புடன்

ரா. பாலசுந்தர்

 

 

அன்புள்ள பாலசுந்தர்

 

எல்லா உரைகளும் இணையத்தில் வரும் என்று சொல்லிவிடமுடியாது. சேலம் உரை பதிவுசெய்யப்படவில்லை என நினைக்கிறேன்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16806 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>