Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16801 articles
Browse latest View live

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

$
0
0

17264269_275125586259347_8531652340821241348_n

வரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்சந்திப்புகளும் நிகழவிருக்கின்றது. பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது

 

இவ்விழாவில் தமிழகத்திலிருந்து கலந்துகொள்ளும் எழுத்தாளர்களின் நிரை இது. விழாவிற்கு நண்பர்கள் திரண்டுவரவேண்டும் என்றும் இப்படைப்பாளிகளின் படைப்புகளை படித்துவிட்டு அவர்களுடன் உரையாடலில் ஈடுபடவேண்டும் என்றும் கோருகிறேன்

devibharathi

தேவிபாரதி 

 

தேவிபாரதி இணையதளம்

தேவிபாரதி கடிதம்

சிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன்

 

sta

 

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் இணையதளம்

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

நம் நாயகர்களின் கதைகள்

எஸ்.செந்தில்குமார்

எஸ்.செந்தில்குமார் கதைகள்

 

saravanan

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்நூல்கள்

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

41520586_10216450570484352_5516240632437276672_n

சுனீல் கிருஷ்ணன்

சுனீல்கிருஷ்ணன் பக்கம்

காந்தி இன்று இணையதளம்

CSK

சி.சரவணக் கார்த்திகேயன்

சரவணக்கார்த்திகேயன்  இணையப்பக்கம்

காந்தியைப் பற்றி ஒரு நாவல்

முதல்தந்தையின் மீட்சி

கலைச்செல்வி

கலைச்செல்வி இணையப்பக்கம்

சிறுகதைகள் கடிதங்கள்16

சிறுகதைகள் என் மதிப்பீடு -6

naran

கவிஞர் நரன்

கவிஞர் நரன் இணையப்பக்கம்

sam

கவிஞர் சாம்ராஜ்

சாம்ராஜ் பற்றி இசை

வடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்

எத்தனை கைகள்! -சாம்ராஜ்

சமகாலத் தமிழ்க்கவிதை-சாம்ராஜ்

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்

 

*

 

சென்ற ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் விழா நிகழும் இருநாட்களும் தொடர்ச்சியாக இலக்கியவாதிகளை வாசகர்கள் எதிர்கொண்டு உரையாடும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வாசகர்கள் , நண்பர்கள் கலந்துகொள்ளவேண்டுமென விழைகிறேன்

 

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இழைபிரிக்கப்பட்ட வானவில்

$
0
0

 

Rhia Janta-Cooper

Rhia Janta-Cooper

 

இனிய ஜெயம்

 

இந்த மனிதர் எப்போதெல்லாம்  நீயூஸ் பேப்பரை விட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க துவங்குகிறாரோ ,அப்போதெல்லாம் அவருக்குள்ளிருக்கும் கவிஞன் , அவர் அப்போது மிதந்து கொண்டிருக்கும் காகித கப்பலை விட்டு ,அப்படியே உயர்த்தி மேகத்தில் ஏற்றி விடுகிறார் .

 

விமான ஜன்னல் வழியே ,இந்த புவிக்கு தொடர்பே அற்ற ஒரு விண் பறவை போல கீழ் நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் மனுஷ்ய புத்தரன் முகம் மீது இப்போது  எழும் பித்தை ,காதலை அவருக்கு எந்த சொல் வழியாகவும் என்னால் உணர்த்தி விட முடியாது .

 

வான வில்லின் வர்ணம் போர்த்திய மனிதர்கள் …அதை கனவு காணும் அக் கணம் ,அந்த வான வில் தான் வாழ வேண்டிய விண்ணில் இருந்து உடைந்து விழுந்த ஒன்று என்ற துயரும் அதனுடன் இணையும் போது ….என்ன சொல்ல கடவுளற்றவனின் பக்திக் கவிதை எனும் உங்களது கவித்துவமான வரையறை மிக மிக சரியானது .

 

உள்ளே எங்கோ துளி கசப்பு உறையாமல் ,வெளியே ததும்பும் கசப்பு எதையும் உணர முடியாது .என்னுள் நலுங்கும் துளி கசப்பை ,தித்திப்பாக இக் கணம் மாற்றி மாயம் காட்டுகிறது இக் கவிதை .

 

manushyaputhiran_5

 

நான் ஒரு வானவில்லிற்கு மேலே இருந்தேன்

 

 

நகரத்திற்கு மேலே

ஒரு வானவில் நீண்டு படர்ந்திருந்ததை

விமானத்தின் ஜன்னலோர இருக்கையிருந்து

கண்டேன்

பணிப்பெண்ணின் புன்முறுவலைவிடவும்

ஆயிரம் வண்ணங்கள் கூடியிருந்தது

அந்த வானவில்

 

நான் அப்போது

வானவில்லிற்கு

மிக உயரத்தில் இருந்தேன்

எனது நகரத்தில் மேல்

ஒரு கொடிபோல

எந்தப் பிடிமானமும் அற்றுப் படர்ந்திருந்தது

அந்த வானவில்

 

வானவில்லை

எப்போதும் அண்ணாந்து பார்த்தபடி

அதைப் பின்தொடர்ந்து சென்றவனுக்கு

ஒரு வானவில்லை குனிந்து பார்ப்பது

எல்லையற்ற திகைப்பைத் தருகிறது

 

எனது நகரத்தின்மேல்

அந்த வானவில்

முறிந்து விழுந்தால்

நாங்கள் அனைவரும் எத்தனை

வண்ணமுடையவர்களாகிவிடுவோம்

என்று ஒரு கணம் நினையாமல் இல்லை

 

இந்த விமானம் சற்று தாழப்பறந்தால்

அந்த வானவில்லை

ஒரே ஒருமுறை தொட்டுவிடலாம்

என்று அவ்வளவு நம்பினேன்

அவ்வளவு முழுமையாக

அவ்வளவு தன்னம்பிக்கையுடன்

அந்த வானவில்லைக் கண்டேன்

 

என் வாழ்வில் நான் அப்படிக் கண்ட

இதோ அண்மையில்தான் இருக்கிறது என்று நினைத்த

அன்பின் வேறு சில வானவில்களும் இருந்தன

இதோ இந்த விமானம் கடந்து செல்வதைவிட

வேகமாக அவற்றை நான் கடந்து சென்றேன்.

 

மனுஷ்ய புத்ரன்

 

 

*

அன்புள்ள சீனு

 

நல்ல கவிதைதான், கிட்டத்தட்ட. இக்கவிதையில் குறைவதென்ன என்று எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேனே. கவிஞர்கள் இருவகையான சிக்கல்களில் அகப்பட்டுக்கொள்வதுண்டு, விதிவிலக்கான நல்ல கவிஞர்களே இல்லை.

 

ஒன்று , ஒரு குறிப்பிட்ட காலம் முழுக்க ஒரே உணர்வுநிலையில் இருப்பது. இதை அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. நிலவுகண்டால் நரி ஊளையிடும், அதை நரியால் கட்டுப்படுத்தமுடியாது. ஒரே உளநிலை நாட்கணக்கில் சிலரில் ஆண்டுக்கணக்கில் நீடிக்கிறது. அது ஒரு மனநோய் போல அவர்களைப் பீடிக்கிறது. உண்மையில் அதை சில மாத்திரைகளால் எளிதில்  ‘குணப்படுத்தி’விடமுடியும்.  ஆனால் நாம் கவிதைக்காக சிலரை பலிகொடுத்தே ஆகவேண்டும்.

 

அது பெரும்பாலும் சோர்வு அல்லது காதலின் தவிப்பு. அவர்களின் புறவயமான உலகம் அந்த உணர்ச்சிக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது. அனைத்தும் அவ்வண்ணமே தோற்றமளிக்கின்றன. பொருட்களெல்லாம் அந்தப்பொருள் மட்டுமே கொண்டவையாகின்றன. அவற்றில் கூர்மையான வெளிப்பாடு கொண்ட கவிதைகளும் இருக்கும் திரும்பத்திரும்ப ஒரேவகையாக வெளிப்படும் கவிதைகளும் இருக்கும்.

 

இன்னொன்று, ஒரு கருவில் மாட்டிக்கொள்வது. இது பெரும்பாலும் தான் எழுதுவதை ஒட்டுமொத்தமாக தானே பார்த்தால் கவிஞருக்கே தெரியவருவதுதான். ஆனால் கவிஞர்கள் அதை பெரும்பாலும் செய்வதில்லை. அந்தக்கரு அவருக்குச் சொல்லித்தீராததாக இருக்கலாம். ஆனால் பலசமயம் புதிய திறப்புகளின் மேல் அது வந்து மூடிக்கொண்டு அமர்ந்துவிடும். இக்கவிதையில் நிகழ்ந்திருப்பது அதுவே.

 

உறவின் முறிவும் பிரிவும் மனுஷ்யபுத்திரனால் மீளமீள எழுதப்படும் கதைக்கருக்கள். அவருடைய சமகாலக் கவிதைகளில் கணிசமானவை அத்தகையவை. அவருடைய வாசகர்களில் பெருவாரியானவர்களுக்கு அந்தக் கரு பழக்கமானதாகவும், அவர்களின் சொந்தவாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. ஆகவே கவிதையை பற்றுவதற்கான ‘பிடி’ ஆக அது செயல்படுகிறது. அவை உடனடியான எதிர்வினையைப் பெறுகின்றன. ஆகவே அவர் உள்ளமும் அதை எளிதாக நாடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது

 

அந்த வானவில் அவரே சொல்வதுபோல ‘எந்தப்பிடிமானமும்’ அற்றது. எப்போதும் மேலே நின்றிருப்பது. அன்று கீழே நின்றுள்ளது. அந்த வானவில் பற்றிய ஒவ்வொரு வரியும் வெவ்வேறு நுண்ணிய வெளிப்பாடுகளை நோக்கித் திறக்கின்றன. நகரத்தின் அனைவரையும் வண்ணமயமாக்கிவிடும் வானவில். என்றும் மேலே நின்றிருப்பது, அன்று காலடியில் நின்றுள்ளது. ஆயினும் அது தொடுவதற்கரியது. அது அப்படி எந்தப்பிடிமானமும் அற்றதாக, தொடுவதற்கரியதாக கவிதைக்குள் நின்றிருக்கையிலேயே அது கவித்துவப்படிமம்

 

ஆனால் கவிஞர் கடைசி வரியில் வானவில்லை சுருட்டி தன் வழக்கமான பைக்குள் போட்டுவிடுகிறார்.

 

வானில்

என் வாழ்வில் நான் அப்படிக் கண்ட

இதோ அண்மையில்தான் இருக்கிறது என்று நினைத்த

அன்பின் வேறு சில வானவில்களும் இருந்தன

 

அது அன்பின் வானவில் என்கிறார். அவருடைய வழக்கமான கவிதைமுடிவு. வழக்கமான உணர்வு. அங்கே கவிதை அன்றாடத்தை வந்து தொடுகிறது. எந்த மர்மம் அதை கவிதையாக ஆக்குகிறதோ அதை இழக்கிறது.மனுஷ்யபுத்திரன் கண்ட வானவில்லை விட வாசகன் இக்கவிதையில் காணத்தக்க வானவில் மிகப்பிரம்மாண்டமானது

 

Unweaving the Rainbow என்ற பிரபலமான விவாதம் நினைவுக்கு வருகிறது. பதினெட்டாம்நூற்றாண்டின் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்கள் நடுவே நிகழ்ந்தது. இயற்கையின் மர்மங்களை அறிவியல் புரியவிழ்த்து இல்லாமலாக்கிவிடுகிறதா என்னும் விவாதம் அது. கவிதை வானவிற்களை அர்த்தப்படுத்திக்கொள்வது அல்ல, அர்த்தங்களிலிருந்து மேலும் அகற்றிச் செல்வது என்றுதான் நான் நினைக்கிறேன். நம் தலைக்குமேல் நாம் கொள்ளச் சாத்தியமான ஆயிரம் வண்ணங்கள் ஒரு நிகழா வாய்ப்பாக நின்றுகொண்டிருக்கட்டுமே.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54

$
0
0

பகுதி எட்டு கதிரோன்

bowசஞ்சயன் கஜபதத்தில் அமைந்த திருதராஷ்டிரரின் குடிலுக்குள் நுழைந்து உள்ளே மூங்கில் தட்டியாலான மஞ்சத்தில் துயில்கொண்டிருந்த திருதராஷ்டிரரை அணுகி “பேரரசே!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தான். சிற்றொலிகளையே அறிவது அவர் செவி என அவன் அறிந்திருந்தான். திருதராஷ்டிரர் முனகி “ஆம், கிளம்ப வேண்டியதுதான்” என்றார். “புலரி அணுகுகிறது, பேரரசே” என்று சஞ்சயன் சொன்னான். “பெரும்போர்!” என்று அவர் சொன்னார். “முற்றழிவு!” கைகளை அசைத்து தாடை நடுங்க “போரெனில் வெறும் குருதி! வேறொன்றுமல்ல!” என்றபடி விழித்துக்கொண்டார். “யார்?” என்றார். “நான் சஞ்சயன்… பொழுதணைகிறது, அரசே!”

அவர் கையூன்றி எழுந்தமர்ந்தார். “இனி இப்போரை என்னால் நோக்கி இருக்க இயலாது. திரும்பிச்சென்று குடிலில் ஒடுங்கி துயின்றாலொழிய என் சித்தம் நிலை மீளாது” என்றார். “போதும்… இன்றோடு போதும். நாளை நாம் இங்கே மீளவேண்டியதில்லை…” அவர் சொல்வதென்ன என்று சஞ்சயன் அறிந்திருந்தான். அவர் ஒவ்வொருநாளும் கனவில் பிறிதொரு போரை நோக்கிக்கொண்டிருந்தார். தெய்வங்களும் மாய்ந்தோரும் கனவுருக்களும் கலந்து போரிடும் போர் அது. ஒவ்வொருநாளும் அவனுடன் தேரில் காட்சிமாடம் நோக்கி செல்கையில் அவர் அந்தப் போரைப்பற்றியே சொன்னார். “விண்ணிலிருக்கும் வெள்ளங்களின் ஒரு திவலையே மண்ணில் மாமழை என பெய்கிறது என்பார்கள். இப்போரும் ஒரு துளித்தெறிப்பு மட்டுமே…”

அவர் சொல்வதென்ன என்று அவன் தன் முழுக் கற்பனையாலும் உய்த்துணர முயல்வதுண்டு. அவனால் விழிக்காட்சியாக அதை விரித்துக்கொள்ள இயலவில்லை. சொல்லில் இருந்து காட்சிகளை எழுப்பும் அவன் திறன் அவரிடம் தோற்றது. அவருடைய சொற்களுக்கும் காட்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கவில்லை. அவர் கண்ட காட்சிகளனைத்துமே சொற்களிலிருந்து உருவானவை. அவை மீண்டும் சொற்களாகும்போது எப்படி முற்றிலும் பிறிதொன்றாக அமைகின்றன? அவை அவருக்குள் சென்று எப்படி உருமாறுகின்றன? அவன் விந்தையான நிலமொன்றின் பொருளிலா வடிவம்கொண்ட கூழாங்கற்களை என அச்சொற்களை அளைந்துகொண்டே உடன்சென்றான்.

“நான் சொல்வது உனக்கு புரிகிறதா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “அது பெரும்போர். அங்கே அத்தனை தெய்வங்களும் உள்ளன. மானுடர்களின் தெய்வங்கள் மட்டுமல்ல. வல்லூறுகளின், பருந்துகளின், கழுகுகளின் தெய்வங்கள். யானைகளின், களிறுகளின், புரவிகளின் தெய்வங்கள். வாள்களின், விற்களின், வேல்களின், அம்புகளின் தெய்வங்கள். திசைத்தேவர்கள், புடவிக்காவலர்கள், மறைந்துறையும் இருளுருக்கள், மாநாகங்கள். கந்தர்வர்கள், யட்சர்கள், கிம்புருடர்கள். காலமென்றும் இறப்பென்றும் நோயென்றும் வலியென்றும் விழிநீர் என்றும் ஆன தெய்வங்கள். ஆணென்றும் பெண்ணென்றும் உருகொண்டவை. ஆணும்பெண்ணும் அல்லாதானவை. அனைத்து தெய்வங்களும். அவை உச்சநிலையில் போர் புரிந்துகொண்டிருந்தன. புரிகிறதா? ஈடில்லா பெரும்போர்.”

அவர் திணறித்திணறி கைகளை விரித்து தொண்டைமுழை அசைய கூச்சலிட்டார். “அவை ஒன்றை பிறிது நிகர்செய்தன. இறப்பை மறுபிறப்பு. நோயை மீட்பு. வலியை இன்பம். நாகங்களை இடியின் தெய்வம் ஆண்டது. இடியை மழை மூடியது. எவரையும் எவரும் வென்று அழிக்கவியலாது என்பதனால் அப்போர் கணந்தோறும் முடிவில்லாமல் நிகழ்ந்தது. கணுவிடை குன்றாமல் கூடாமல். நோக்குக, இறப்பில்லை. வெற்றிதோல்வியும் இல்லை. கொள்வதும் கொடுப்பதும் இல்லை. ஆகவே அது வஞ்சம் மட்டுமே. பிறிதொன்றென உருமாற்றப்பட்ட வஞ்சங்களையே மானுடர் அறிவர். வஞ்சம் வஞ்சமென்றே நின்றிருப்பது தெய்வங்களிடம் மட்டுமே. மிகமிகக் கூரிய ஊசிமுனைபோன்ற வஞ்சம். அந்த அச்சத்தை நான் எப்படி உனக்கு விளக்குவேன்… சஞ்சயா, அந்த வஞ்சத்தைக் கண்டவனுக்கு இவ்வுலகில் அனைத்துமே இனிதென்றாகிவிடும். இங்குள்ள அனைத்துமே பொருள்கொண்டவை என தோன்றிவிடும்… ஆம்!”

போர் நிகழ்ந்த ஒவ்வொருநாளும் அவன் அவரை காட்சிமாடத்துக்கு அழைத்துச்சென்றான். காலையில் குடிலில் கண் விழித்து எழுந்து தேரிலேறி வந்து குருக்ஷேத்ரப் பெருங்களத்தை நோக்கி காட்சிமேடையில் அமரும் வரை அவரில் இருப்பவர் அஸ்தினபுரியின் பேரரசர். அன்றைய படைசூழ்கை என்ன என்பதை பறவை கொண்டுவந்து சேர்த்திருக்கும். தேரிலேறி அமர்ந்ததும்தான் அதை சஞ்சயன் சொல்வான். புருவம் சுளிக்க தலையைச் சுழற்றி “பருந்துச் சூழ்கையா? அதை பீஷ்மர் வகுத்துள்ளார் போலும். பிதாமகர் கூரலகென இருப்பதனால் மட்டுமே இது நல்ல சூழ்கை. பருந்துக்கு அலகு மட்டுமே படைக்கலம். அதன் கால்கள் நல்ல படைக்கலங்கள் அல்ல. தான் பற்றியதை அதனால் எளிதில் விட இயலாது. தாக்குவதும் அதே விசையில் பின்னெடுக்கக் கூடுவதுமான ஒன்றே சிறந்த படைக்கலம்” என்றார். “படி, படி அதை, மூடா!”

அவன் அதை முழுமையாக மீண்டும் படித்தான். “இன்னொரு முறை படி. ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி நிறுத்தி படி.” ஒவ்வொரு எழுத்துமென அவருக்குள் ஓலை திறந்துகொண்டே சென்றது. அதிலிருந்து படைகளின் அமைப்பை விரிவாக தன்னுள் நிகழ்த்திக்கொண்டார். “பீஷ்மருக்கு இருபுறமும் பால்ஹிகர்களும் சைப்யர்களும் நிலைகொள்கிறார்கள். பருந்தின் கழுத்துச் சிறகுகள், மெய்யாக அவற்றால் பயனொன்றுமில்லை. ஆனால் சினங்கொள்கையில் பூடை விரித்து தலை பெருக்க அவை தேவை. பீஷ்மருக்கு முதுகெங்கும் விழிகள். அவருக்கு பின்காவலே தேவையில்லை. அவருடைய விசைக்கு நிகர்நின்று உடன்செல்லும் பின்படை தேவை. அங்குதான் நாம் தோற்கிறோம்… நாம் விசைமிக்க பருந்தால் இழுத்துச்செல்லப்படும் வெற்றுப்படை!”

கனைத்துக்கொண்டும் தன் தலையை தானே தட்டிக்கொண்டும் அவர் தொடர்ந்தார். “பருந்தின் கால்கள் என துரோணரும் கிருபரும்! நன்று! சிறகுகளென ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும். மறுபக்கம் என் மைந்தர்கள். இவ்வணி உண்மையில் நன்றல்ல. இருபுறமும் வில்லவர்கள் இணையாக இருக்கவேண்டும். என் மைந்தர்கள் வில்லவர்கள் அல்ல. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் எப்போதும் படைகளின் இரு பக்கங்களிலுமாக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்தால்தான் அபிமன்யூவையும் அர்ஜுனனையும் எதிர்கொள்ள முடிகிறது. ஆகவே நமக்கு வேறு வழியில்லை.” பெருமூச்சுவிட்டுக்கொண்டு “சூழ்கைகளால் உண்மையில் பெரும்பயனேதுமில்லை. படைவெற்றி வீரர்களால் அமைகிறது. அவர்கள் தனியர்கள்” என்றார்.

கைகளை மார்பில் கட்டிக்கொண்டு உடல் தழைத்து அமர்ந்து “நன்று, இந்தப் படைசூழ்கை என்ன செய்கிறது என்று பார்ப்போம். குறைந்த இழப்புகளுடன் அடைவதே மெய்யான வெற்றி. இழப்புகள் மிகுந்தோறும் வெற்றி பொருளிலாதாகிறது” என்றார். மேலும் பெருமூச்செறிந்து “இன்று இழப்பின்றி மீள்வதற்கான வழிகளை அவர்கள் காணவேண்டும். இழப்புகள் படைகளை உளச்சோர்வு அடையச்செய்கின்றன. எச்செயலும் அதன் பாதியில் பொருளற்றதாக தோன்றுமெனில் நம் ஊக்கம் குன்றிவிடுகிறது. போரின் பேரிடரே அது தொடங்கியதுமே பொருளற்றதென்று தோன்றத் தொடங்கிவிடும் என்பதுதான். எனினும் போர் தொடர்ந்து நிகழ்வது போரில் நாம் குருதிச்சுவை அறிவதனால். அதை வஞ்சத்தை கொண்டு பெருக்கிவிட்டிருப்பதனால். போரை மானுடர் நிகழ்த்துவதில்லை, தெய்வங்கள் தான் நிகழ்த்துகின்றன என்பார்கள். மானுடக்குருதியில் உறைகின்றன போருக்கான தெய்வங்கள்” என்றார்.

அவன் அவரை கைபற்றி அழைத்துச்சென்று மாடத்தின் மேல் ஏற்றினான். அங்கே பீதன் அவர்களுக்காக ஆடிகளை எடுத்து பொருத்திவிட்டு காத்திருந்தான். அவர்கள் வந்ததும் தலைவணங்கி விலகினான். அவர் தன் பீடத்தில் அமர்ந்து கைகளால் கைப்பிடியை தட்டிக்கொண்டு “அதே இடம்… அதே கோணம்” என்று தனக்குள் என சொல்லிக்கொண்டார். அவன் ஆடிகளை ஒன்றுடன் ஒன்று அமைத்து பொருத்திக்கொண்டிருக்க “என்ன செய்கிறாய், அறிவிலி? இன்னுமா அவ்வாடிகளை சீர்படுத்தவில்லை? ஒவ்வொரு நாளும் இதற்கென நீ எடுத்துக்கொள்ளும் பொழுது எவ்வளவு வீண் என்று அறிவாயா?” என்று நிலைகொள்ளாமல் கூச்சலிட்டார். “அரசே, இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் மீள மீள பொருத்திக்கொள்ளவேண்டிய ஆடி. ஒவ்வொரு காட்சிக்கும் இதை நான் மாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

“ஒவ்வொரு காட்சிக்கும் உன் கண்களை மாற்றிக்கொண்டா இருக்கிறாய்? என்னிடம் விளையாடுகிறாயா?” என்று திருதராஷ்டிரர் கூவினார். “ஆம் அரசே, ஒவ்வொரு காட்சிக்கும் கண்கள் மாறுகின்றன. ஒருமுறை நாம் கண்ணால் பார்ப்பதை பிறிதொரு முறை கண்ணால் பார்ப்பதே இல்லை என்பார்கள். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் எந்தத் தொடர்புமே இல்லை. அவற்றை ஒன்றிணைத்து தொடராக ஆக்கிக்கொள்வது நாம் அவற்றுக்கு அளிக்கும் பொருள்தான்” என்றான் சஞ்சயன். “நம் விழிகளை தெய்வங்கள் ஆள்கின்றன. அவை உருவாக்குகின்றன நாம் கொள்ளும் பொருட்களை.” அவர் சினம்கொள்வார் என அவன் அறிந்திருந்தான். எனவே புன்னகையுடன் அதை சொன்னான். அவன் கைகள் ஆடிகளை அணுவணுவாக விலக்கிக்கொண்டிருந்தன.

“தத்துவம் கேட்க நான் வரவில்லை. என்ன தெரிகிறதென்று மட்டும் சொல், அறிவிலி” என்று இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை அறைந்தபடி அவர் கூச்சலிட்டார். இரண்டு காட்சிகள் ஒன்றோடொன்று பொருந்துவதன் வழியாக உருவாகும் மேலும் தெளிவான இன்னொரு காட்சி. வலத்தையும் இடத்தையும் ஆளும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் அளித்துக்கொண்டவை. அவன் அவ்விந்தையில் ஆழ்ந்தவனாக ஆடிகளை மேலும் மேலும் பொருத்திக்கொண்டே இருந்தான். இரு நீர்த்துளிகள் தொலைவை அணுக்கமாக ஆக்குகின்றன. அணுக்கத்தை அள்ளி அகலே கொண்டுசெல்கின்றன. “நம் இரு விழிகளும் இரண்டு நீர்த்துளிகளே” என்றான் பீதன். “அவற்றை எப்போதேனும் தனியாக பார்த்திருக்கிறீர்களா?” நிலையற்றுத் ததும்பும் இரு நீர்த்துளிகள் தங்களுக்குள் இணைந்து இணைந்து உருவாக்கும் இப்பெருவெளி நிலையானதென்று தோன்றுவதன் விந்தை.

“அறிவிலி, என்ன செய்கிறாய்? கீழ்மகனே! எழுந்தால் உன் மண்டையை அறைந்து உடைப்பேன்!” என திருதராஷ்டிரர் கூச்சலிட்டார். காலையொளி எழுந்துகொண்டிருந்தது. முகில்களின் விளிம்புகள் செஞ்சுடர் கொண்டிருந்தன. அப்பால் தெரிந்த குருக்ஷேத்ரப் படைப்பெருக்கில் பல்லாயிரம் ஒளித்துளிகள் என கூர்கள் அசைந்தன. கூர் என்பதன் பொருளே அவன் களத்தை நோக்கத் தொடங்கியதும் மாறிவிட்டிருந்தது. ஒவ்வொன்றும் தங்களுக்குள் உறையும் அறியமுடியா விசையொன்றை குவிப்பதே கூர். கூர்வனவற்றில் திகழ்கின்றது தெய்வங்கள் கொள்ளும் வெறி. அவனால் கூர்களை நோக்கவே முடியாதாயிற்று. கூர்கள் காத்திருக்கின்றன. அவை சென்றடைந்து கொன்று கடப்பவை எங்கோ எழுந்து வந்துகொண்டிருக்கின்றன. கூர்கொள்வதற்கு நெடும்பொழுது முன்னரே, பொருளென்றாவதற்கும் முன்னரே அவ்விசை அவற்றில் குடியேறிவிட்டிருக்கிறது போலும்.

ஆனால் அவனால் கூர்களை நோக்காமலிருக்கவும் இயல்வதில்லை. அறியாமலேயே அவன் விழிகள் கூர்களை நோக்கி சென்றன. விலங்குகளின் கொம்புகளில், பறவைகளின் அலகுகளில், முட்களில், கற்களில், கருவிகளில் எங்கும் கூர் திகழ்கிறது. இத்தனை கூர்களுக்கு நடுவிலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? அவ்வெண்ணமே அவன் தோலை கூசி அதிரச்செய்யும். கூர்முனையை நோக்கால் தொடும்போது எழும் மெய்ப்புகொள்ளுதல். விழிநீர் சுரக்க முதுகெலும்பு சொடுக்கிக்கொள்ளுதல். காலையில் நீராடச் சென்றபோது ஓடைக்கரையருகே மலர்ந்திருந்த சிறு பூ ஒன்றை பறித்தெடுத்தான். தண்டில் அது பூமுள் கொண்டிருந்தது. மிக மெல்ல அதை தன் விரலால் தொட்டு அந்த உச்சத்தை உணர்ந்தான். குளிர்முனைகொண்ட வேல் ஒன்று அடிவயிற்றில் இறங்கிச் செல்வதும் அதுவும் நிகரே.

“என்ன செய்கிறாய்? கீழ்மகனே!” என்று கைகளை உரக்க அறைந்துகொண்டபடி திருதராஷ்டிரர் எழுந்தார். “பொறுங்கள் அரசே… நான் ஆடித்துளிகளை இணைக்கிறேன்!” என்றான் சஞ்சயன். “இன்னும் என்ன செய்கிறாய்? அறிவிலி!” என்று கூவியபடி அவர் கையை ஓங்கினார். “எதற்காக முந்துகிறீர்கள்? மைந்தர் களம்படுவதைக் காணவா?” என்று அவன் கேட்டான். அவருடைய கை வானிலென நின்றது. இடக்காலும் வாயும் இழுபட்டு அதிர்ந்தன. விழப்போகிறவர்போல ஆடினார். சஞ்சயன் அவரை பிடிக்க முயலவில்லை. வலக்கையை எடையுடன் பீடத்தில் ஊன்றி சரிந்து மெல்ல அமர்ந்து யானைபோல் மூச்செறிந்தார். “கீழ்மகனே! கீழ்மகனே!” என முனகினார். பின்னர் தன் பெரிய கைகளை விரித்து அதில் முகத்தை அமைத்து மூடிக்கொண்டு குனிந்தார். அவர் தோள்கள் அதிர்ந்து குலுங்கின.

அவன் ஒரு வேலின் முனையை தெரிவுசெய்தான். அதன் கூர் நோக்கி ஆடிகளை இணைத்து பொருத்திக்கொண்டுசென்றான். அதன் விளிம்பின் எழுவளைவுக் கோடும் அது சென்று மடிந்த புள்ளியும் தெளிவாகத் தெரிந்தன. பின்னர் இன்னொரு ஆடியை அகற்றி அகற்றி விரித்தான். குருக்ஷேத்ரவெளி வண்ணங்களின் அலைகளெனத் தெரிந்தது. “அரசே, நமது படைகள் பாண்டவப் படைகளுக்கு முகம் கொடுத்து களத்தில் நின்றுள்ளன” என தொடங்கினான். “நமது படையின் பருந்துச் சூழ்கை முழுமையடைந்துள்ளது. பருந்தின் கூரிய செவ்வலகென பீஷ்மர் நின்றிருக்கிறார்” என்று அவன் சொல்லத்தொடங்குகையில் மெல்ல உடற்தசைகள் தளர்ந்து பெரிய தலை எடை மிகுந்ததுபோல் உடல் தழைய துயில்பவர்போல் மூச்சு ஒலி பெருக கனவிலாழ்ந்து திருதராஷ்டிரர் அமர்ந்திருந்தார்.

அவனுடைய சொற்களை சில சமயங்களில் அவர் கேட்கிறாரா என்றே அவன் ஐயம் கொள்வதுண்டு. ஆழ்துயிலுக்குச் சென்றுவிட்டார் போலும் என்று எண்ணவைக்கும் குறட்டை ஒலியும் அரிதாக கேட்கும். முதல்நாள் அவன் களநிகழ்வை சொல்கையில் அவரது குறட்டை ஒலியைக் கேட்டு அவன் சொல்லொழுக்கை நிறுத்தினான். அரை நாழிகைக்கு மேல் அவன் எதையும் சொல்லவில்லை. வெறுமனே போரை விழியாகி அமைந்து நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் அவர் சப்புக்கொட்டி அசைந்து கால்களை நீட்டியபோது மீண்டும் சொல்லத்தொடங்கினான். ஆனால் அன்று மாலை அவர் கள நிகழ்வுகளை கொந்தளிப்புடன் திருப்பிச் சொன்னபோது தான் சொல்லாமல் விட்டுவிட்ட அரைநாழிகைப் பொழுதிலும் அவர் களத்தை பார்த்திருப்பதை உணர்ந்து அவன் திடுக்கிட்டான்.

தன் சொற்களினூடாக அவர் உருவாக்கிக்கொள்ளும் களம் அவரது கனவில் மேலும் பல மடங்கு விரிவாகிறது என அவன் உணர்ந்தான். சொற்கள் வெறும் விதைகள். அவர் காணும் போர் அவன் அறிய முடியாத பிறிதொரு வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்நிகழ்விலும் அவரே பங்கெடுப்பவர்போல் திருதராஷ்டிரர் கொந்தளித்தார். கைகளால் ஓங்கி அறைந்துகொண்டார். சீற்றத்துடன் பீடத்தை பின்னால் தட்டிவிட்டு எழுந்தார். தன்னைத்தானே சுற்றிவந்து தன் தொடையிலும் தோள்களிலும் ஓங்கி அறைந்து கூச்சலிட்டார். போரிடுபவர்கள் தனக்கு மிக அருகே நிற்பவர்போல் “என்ன செய்கிறான் மூடன்! அறிவிலி! வெட்டு, இடைவெட்டு… விலகு. விலகு, மூடா… அது பிறையம்பு. அதன் ஓசையே தெரிவிக்கவில்லையா உனக்கு!” என்று கூச்சலிட்டார். “வீழ்ந்தான்… வீழ்ந்தான். அறிவிலிக்கு இறப்பே பரிசு… ஆம்!” என்று கைகளை அறைந்துகொண்டார்.

ஒவ்வொரு போர்வீரனுடனும் அவர் இருப்பதைப்போலிருந்தது. அவனுடைய பார்வை அர்ஜுனனும் பூரிசிரவஸும் போரிட்டுக்கொள்ளும் இடத்திலிருந்து சாத்யகியுடன் ஜயத்ரதன் மோதும் தருணம் வழியாக பீஷ்மரை அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் எதிர்க்கும் இடம் சென்று மீளும்போது அவருள் அந்தக் களங்களனைத்தும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருப்பதை கண்டான். ஆனால் ஒட்டுமொத்த களத்தையும் அவர் பார்த்துக்கொண்டுமிருந்தார். “சகுனி என்றொருவன் அங்கிருக்கிறானா இல்லையா? இப்போதே பறவையை அனுப்பு. அவன் இங்கு வரவேண்டும், அவன் நெஞ்சக்கூழை எடுக்கிறேன்!” என்று கூச்சலிட்டார். “அறிவிலிகள்! அறிவிலிகள்!” என்று அலறியபடி தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டார்.

“விழியிலாதவர் மட்டுமே இத்தனை விரிந்த நோக்கு கொண்டிருக்க முடியும்” என்று அவன் சங்குலனிடம் சொன்னான். சங்குலன் நோக்குள்ள விழிகளிலேயே நோக்கிலாமையை பயின்றவன். “ஒவ்வொரு துளியையும் முடிவிலாது விரிக்கக் கற்றவர்கள் அவர்கள் மட்டும்தான்.” அவன் விழிகளை நோக்கி சஞ்சயன் சொன்னான் “நோக்குபவற்றிலிருந்து காட்சியை முற்றகற்றி நீரும் அங்கே சென்றுகொண்டிருக்கிறீர், பேருருவரே.” சங்குலன் ஒரு சொல்லுக்கும் மாற்றுரைப்பதில்லை. “இப்போர் நிகழ்ந்துகொண்டிருப்பது இவருடைய உள்ளத்திற்குள். சங்குலரே, இது அங்கே நிகழத்தொடங்கி நெடுநாட்களாகின்றது என்றும் ஐயுறுகிறேன்.”

திருதராஷ்டிரர் பேரரருவி அறைந்துவிழும் மரம் போலிருந்தார். “நூறு தெய்வங்கள் வந்தெழுந்த வெறியாட்டன்!” என்று அவன் சங்குலனிடம் சொன்னான். “இவர் வாழ்ந்தது இத்தருணத்துக்காகவே. இது அளிப்பது எதுவாயினும் வாழ்வில் இழந்தவை அனைத்தையும் பெற்றுவிட்டார். ஆயிரம் பல்லாயிரம் முறை உலகிருந்து நிறைந்துவிட்டார். சங்குலரே, உச்சங்களிலிருந்து உச்சங்களுக்கெனச் செல்லும் கணம்நிறை பெருங்காலம் அவருடையது.” சங்குலன் தன் பெருந்தோள்கள் தொய்ந்திருக்க எடைமிக்க தலை தாழ்ந்து முகவாய் மார்பில் படிய அமர்ந்திருந்தான்.

சஞ்சயன் சற்றே அகிபீனா கொண்டிருந்தான். சிவந்த விழிகளுடன், ஈரம்கனிந்த உதடுகளில் புன்னகையுடன் அவன் சொன்னான் “பெருந்துயர். உயிருடன் விலங்குகளை உண்ணும் சில சின்னஞ்சிறு மீன்களுண்டு கடலில் என அறிந்துள்ளேன். பல்லாயிரம் மீன்களால் அவர் கொத்திப்பிடுங்கி கிழித்து உண்ணப்படுகிறார். துளியும் எஞ்சமாட்டார். ஆனால் பெரும்பட்டறிதல்கள் அனைத்துமே அவ்வகைப்பட்டவை அல்லவா? சிற்றறிதல்கள் அனைத்தும் இன்பங்கள். பேரறிதல்களோ கொடும்வலிகள். ஆம், அதை நான் அறிவேன். தவமென்பவை தற்கரைத்து அடையத்தக்கவை.” குடிலுக்குள் கிடந்த அவருடைய பேருடலை அவன் எட்டிப்பார்த்தான். “பேருடல், விழியின்மை. அவர் கொண்டுவந்த அனைத்தும் இங்கு இவ்வண்ணம் ஆகி நின்றிருப்பதற்காகவே போலும்.”

அவன் விழித்துக்கொண்டபோது உடலெங்கும் சருகுகள் பரவியிருந்தன. எழுந்து அமர்ந்தபோது அதுவரை அவன் பார்த்துக்கொண்டிருந்த கனவை எண்ணி திடுக்கிட்டான். ஆனால் அந்த முதற்கணத்துடன் அக்கனவு முழுமையாகவே கலைந்து நினைவிலிருந்து அகன்றுவிட்டது. அதை மீண்டும் சென்று தொட முயன்றான். பலமுறை துழாவியும் அது உருத் திரளவில்லை. சலித்து விலகி எழுந்து ஆடையிலிருந்த புழுதியை உதறிக்கொண்டு மூச்சை இழுத்துவிட்டான். விடிவெள்ளியை சற்றுநேரம் நோக்கியபின் திரும்பி திருதராஷ்டிரரின் குடிலை பார்த்தான். அங்கே வாயிலில் சங்குலன் கைகளை மார்பில் கட்டியபடி விழித்த நோக்குடன் அமர்ந்திருந்தான். அவன் விழிகள் இரவில், இருளில் மட்டுமே ஒளிகொள்பவை என்று தோன்றியது. சஞ்சயன் மலைச்சரிவில் சென்ற ஒற்றையடிப்பாதையில் மெல்ல இறங்கிச் சென்று நிழலுருவான புதர்ச்செறிவுகளுக்கு நடுவே சலசலப்பாக ஓடிக்கொண்டிருந்த சிற்றோடையை அடைந்தான்.

ஒவ்வொருநாளும் அவன் விழித்தெழுவதற்கு முன்னரே அவன் விழித்தெழுந்து அவரைச் சென்று எழுப்புவதாக ஒரு கனவை அவன் அடைந்தான். அக்கனவினாலேயே அவன் எழுப்பப்பட்டான். அக்கனவை எப்போதும் அவன் எண்ணி வியப்பதுண்டு. அவன் தேரில் கிளம்பவேண்டும் என்றால், அவையில் அமரவேண்டும் என்றால் தேரில் கிளம்பிவிட்டதாகவும், அவையில் அமர்ந்துவிட்டதாகவும் கனவு வந்துதான் அவனை எழுப்பியது. அவன் தன் உடலுக்குள் ஒரு கணம் முன்னரே சென்றுகொண்டிருந்தான். ஒரு கணம் முன்னரே மீண்டு வந்துவிட்டிருந்தான். அவன் பெருமூச்செறிந்தபடி மீண்டும் விடிவெள்ளியை நோக்கினான். காட்டிலிருந்து வந்த காற்றில் இலைகளின் நீராவி வெம்மை இருந்தது.

ஒரு வேம்புக்குச்சியை உடைத்து பல் துலக்கியபின் மெல்ல கால்வைத்து ஓடைக்குள் இறங்கினான். காலில் பட்ட நீர் இளவெம்மை கொண்டிருந்தது. குனிந்து நீரை அள்ளி வாயில் விட்டபோது அக்கனவு தெளிவாக, அப்போது நிகழ்வதென, மீண்டது. அவன் கண்களை மூடி அமர்ந்திருக்க திருதராஷ்டிரர் அவர் கண்ட பெரும் போர்க்களத்தை அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

$
0
0

nu

 நூறுநாற்காலிகள் வாங்க

அன்புள்ள ஜெ,

 

நான் என்னோட வீட்டுக்கு போற வரைக்கும் அழக்கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா,வாசல் வரதுக்குள்ள அழுதிட்டேன். உங்களோட ரெண்டு மூணு சிறுகதை தொகுப்பு படிச்சு இருக்கேன். ஆனா, இந்த ‘அறம்’ தொகுப்புல மட்டும் ஒவ்வொரு கதை படிக்கும் போது எனக்கு ஒவ்வொரு திறப்புகள் கிடைக்குது. என்னால தாங்கவே முடியாத சந்தோசத்தை கொடுத்ததும் இந்தக் கதைகள் தான். என்னால சுமக்கவே முடியாத சோகத்தை கொடுத்ததும் இந்தக் கதைகள் தான்.

 

இன்னைக்கு ‘நூறு நாற்காலிகள்’ கதை படிச்சேன். படிக்க படிக்க ஒரு பாய்ண்டுக்கு மேல, இந்தக் கதையை யாருமே எழுதல தன்னால

உருவான சுயம்பு அப்படின்னு ஒரு யோசனை வர ஆரம்பிச்சுருச்சு. படிச்சு முடிச்சதும் ஒரு 102கிலோ கேள்விக்குறியா மட்டும் தான் என்னை உணர முடிஞ்சது.

 

‘வணங்கான்’ கதை படிச்சுட்டு சந்தோசத்துல மிதந்த நான், இன்னைக்கு இந்தக் கதை படிச்சிட்டு ஹேங் ஆயிட்டேன். அந்தப் போதையில தான் எழுதிட்டு இருக்கேன்.

 

அதுல வந்த நாடரும் அடக்கு முறைக்கு உள்ளானவர் தான். ஆனா, ‘கப்பா’வுக்கு தனக்கு நடக்கிறது கொடுமைன்னு கூட தெரியாத அளவுக்கு பழகிப்போய் இருக்காங்க. நாற்காலியே கொடுக்க மாட்டேனு சொல்லி இட ஒதுக்கீட்டை நிறுத்தனும்னு சொல்ற கூட்டம் இந்தக் கதையைப் படிக்கணும், அப்போ தான் அவங்களுக்கு தெரியும் இதுவரைக்கும் அந்தக் கூட்டம் ஒடுக்கப்பட்டவனுக்கு ஒன்னும் சிம்மாசனத்தைக் கொடுத்தரல, அதை கெட்டியா பிடிச்சுகிட்டு ஒரு பழைய மர நாற்காலியை கொடுத்து வைச்சுட்டு,” பாரு நாங்க நியாயமா நடந்துட்டோம்னு” பொய் சொல்றாங்க.

 

அந்த மர நாற்காலியில உக்கார்ந்துட்டு அவனால சிம்மாசனத்தைக் கேள்வி கேக்க முடியாது. அப்படி அவன் சண்டை போடணும்னு நினைச்சாலும் இன்னொரு மர நாற்காலியை மோத விட்டு வேடிக்கை பாக்குறாங்க.

 

கப்பாவோட அம்மா என் கண்ணுக்கு பைத்தியமாவோ தப்பவோ தெரியல.

எந்த மாயையிலயும் சிக்காத உயிரா தான் தெரியுது.

நல்லா காய்ச்சி அடிச்ச இரும்ப திடிர்னு தண்ணில வைச்சா, கொஞ்ச நேரத்துல உடைஞ்சு போற மாதிரி தான் அவளும்.

 

அந்த அம்மாவுக்கு அதிகாரங்கிறது பயத்தையும் தாண்டி ஒரு அருவருப்பா தான் தெரியுது. அவளுக்கு சட்டை அதிகாரம், வெள்ளை தோல் அதிகாரம், கூரை அதிகாரம், நாற்காலியும் அதிகாரம். எல்லாத்தையும் அவ அருவருக்கறா.

 

அந்தப் பையன் இன்னைக்கு படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போற முதல் தலைமுறை தலித்தோட பிரதிநிதி. ஒடுக்கப்பட்டவங்களுக்கு உள்ளேயே இருக்கிற உட்சாதி பிரிவுகள் அதோட அடக்கு முறை. இது எல்லாமே பேசப்பட வேண்டியது, சரி செய்யப் பட வேண்டியது.

 

தனக்கு மேல ஒருத்தன் தன்னை நசுக்கறான்னு நினைச்சா எப்பவோ ஒழிஞ்சுருக்கும். எல்லோரும் தான் நசுக்க ஒருத்தன் இருக்கானு நினைக்கிறதுனால தான் இன்னும் ஒழியாம இருக்கு.

 

மர நாற்காலிக்கு வந்தவன், தரையில இருக்கறவனோட குரலா இருக்கணும். அவன் சிம்மாசனத்துக்கு போகணும்.

 

இன்னும் நூறு நாற்காலிகள் தேவை.

 

இப்படிக்கு,

சபரி.

(கோவை)

 

 

அன்புள்ள ஜெ

 

நூறுநாற்காலிகள் கதையை ஒரு தனிவெளியீடாக இன்றுதான் வாசித்தேன். எனக்கு அதன் சமூகச் செய்தியைவிடவும் அதிலிருந்த தனிமனித துக்கம்தான் மிகப்பெரிதாகப் பட்டது. நாம் என்னதான் பெரிதாக வளர்ந்தாலும் நம் இளமைப்பருவ வடுக்களிலிருந்து எளிதில் வெளியே செல்ல முடிவதில்லை. அது நம்மை கொத்திப்பிடுங்கிக்கொண்டே இருக்கிறது. அந்நிலையில் எங்கே சென்றாலும் என்ன அடைவது என்ற கேள்விதான் எழுகிறது. நல்ல இளமைப்பருவம் அடைவது நல்ல முகமும் நல்ல செல்வமும் அடைவதுபோல ஒரு கொடுப்பினைதான். நான் இதையெல்லாம் என் வாழ்க்கையை வைத்தே எண்ணிக்கொள்கிறேன்

 

எஸ். மகேந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மீண்டு நிலைத்தவை

$
0
0

mendu

 

முன்னுரை: காற்றில் அலையும் ஓசை

 

 

யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’ நூலில் ஹோமோ சாபியன்ஸ் ஆகிய நாம் நம்மை விட பலசாலிகளான நியாண்டர்தல்களை எப்படி வெற்றி கொண்டு உலகை நிறைத்தோம் என்பதை விளக்குகிறார். சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான ஒரு நரசிம்ம வடிவை மத்திய ஐரோப்ப அகழ்வாராய்வில் கண்டெடுத்ததாக சொல்கிறார். நரசிம்மம் சர்வ நிச்சயமாக ஒரு புனைவு. ஆனால் அவனுக்கு அப்படியான புனைவு ஏன் தேவையாய் இருக்கிறது? புனைவுகள் வழியாகத்தான் அவன் மாபெரும் மக்கள் திரளை ஒருங்கிணைக்க முடிந்தது. கடவுளை, இம்மையை, மறுமையை என ஒவ்வொன்றையும் புனைந்தான். மனித வரலாற்றில் இருமுறை நியாண்டர்தல்களிடம் தோற்றவர்கள் தான் நாம். கலையை பற்றிய மிக முக்கியமான நம் நம்பிக்கைகளில் ஒன்று, மேலான கலை உருவாக உணவு உயிர் பாதுகாப்பு அவசியம். நிறைவு கொண்ட சமூகமே உணவிலிருந்து வாழ்க்கையின் பொருளை நோக்கித் திரும்பும். ஆனால் ஆதி மனிதர்கள் நேரெதிராக நெருக்கடிகளில் புனைவுகளை உருவாக்க முடியும் என்பதை உணர்த்துகிறார்கள். கலை சில சமயங்களில் உணவுக்கு பதிலியாகிவிடவும் கூடும். ஒரு பித்தாக எவரையும் ஆட்கொண்டுவிடும்.

 

சஞ்சிக் கூலிகளாக கோடிக்கணக்கான தமிழர் ஆங்கிலேய ஆட்சியில் மலாயா, மேற்கிந்திய தீவுகள், மொரிசியஸ், பசிபிக் தீவுகள், தென்னாபிரிக்கா என ஆங்கிலேய அரசின் அத்தனை நிலங்களுக்கும் பிழைப்பிற்காக சென்று சேர்ந்தார்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மா. ஜானகிராமனின் நேர்காணலில் வரும் ஒரு வரி என்னை வெகுவாக அலைகழித்தது- “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்வது சாவதற்காக அல்ல. இந்த நாட்டுக்கு வந்து மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு நாட்டை உருவாக்க வந்து உயிர்ப்பலி கொடுத்திருக்கிறார்கள்.” விண்ணை முட்டும் கட்டிடங்களின் அஸ்திவாரத்தில் உப்பாக தமிழர்கள் இருக்கிறார்கள்.

 

சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருது பெற்ற சீ. முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ நாவலைப் பற்றி எழுதிய கட்டுரையில் “பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டெல் வரலாற்று புனைவுகள் பற்றி ஆற்றிய ரெய்த் உரையில் முன்னோர்களை நினைவுகூர்வது எத்தனை முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார். “மனிதராக இருப்பதற்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்களின் சவக்குழி, நேசத்திற்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்கமுடியாத மாமிசப் பிண்டத் தொகுப்பாக மாறுதல் அது.” மண்புழுக்கள் கண்ணுக்கு தெரியாமல் மண்ணுக்கடியில் வாழ்கின்றன. வாழ்ந்து மண்ணை வளமாக்கி எவரும் அறியாமல் உரமாகிச் சாகின்றன. இந்த ரப்பர் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் என கண்காணா நாடுகளில் ஒப்பந்தக் கூலிகளாக பிழைக்கச் சென்ற மக்களுக்கு அந்நாடேகூட ஒரு பெரும் வெகுமக்கள் சவக்குழிதான் என எனக்குத் தோன்றியது. புழுக்களைப் போல் அடையாளமிழந்து மொத்தமாக மண்ணுக்கடியில் மரித்தவர்களின் சிலரின் நினைவுகளை, வாழ்வின் அடையாளங்களை காலத்துக்கு அப்பால் நிறுத்துவதற்கான முயற்சியே இந்நாவல்,.” என எழுதி இருந்தேன். இது அவருடைய நாவலுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. ஒட்டுமொத்த புலம் பெயர் இலக்கியத்தின் அடிநாதம் என கொள்ளலாம்.

 

 

புலம் பெயர் இலக்கியத்தின் படிநிலைகள் எவை? அன்னிய நிலத்திற்கு பிழைக்க வந்ததும் தங்கள் வேர்களை நோக்கி நினைவுகள் திரும்புவது இயல்பே. சீ. முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ நாவலில் முக்கிய கதாபாத்திரம் அப்படித்தான் தர்மபுரியில் வாழ்ந்த தன் தந்தையின் மூத்த தாரத்தை நினைவுகொள்வார். பல்வேறு படைப்பாளிகளிடம் நவீன் தமிழக சார்பு அல்லது தமிழக நகலெடுப்பு பற்றி திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. இவற்றில் ரெ. கார்த்திகேசுவின் பதில் முக்கியமானது “மலேசிய தமிழ் இலக்கியம் தமிழக இலக்கிய அடிவேரிலிருந்து வளர்ந்ததுதான். அதன் DNA தான் நம் இலக்கியத்துக்குள் இருக்கிறது.” தமிழ் இலக்கியத்தின் நீட்சியாகவும் அதே சமயம் தனித்தன்மை கொண்டதாகவும் திகழ வேண்டிய எதிர்பார்ப்பு மலேசிய இலக்கியத்தின் மீதுண்டு. முதற்கட்டத்தின் சொந்த ஊர் நினைவேக்கத்தில் இருந்து அடுத்தகட்ட பரிணாமம் நிகழ்கிறது. தான் வாழுமிடத்தை தன் சொந்த ஊராக ஆக்கிக்கொள்ளும் முயற்சிகள் அதற்கு அவசியமானவை. மாரியம்மனும், பத்துமலை முருகனும் அப்படித்தான் வந்து சேர்கிறார்கள். அடையாளமிழப்பிற்கு அஞ்சி பண்பாட்டை இறுகப் பற்றுகிறார்கள். முத்தம்மாள் பழனிசாமி புலம்பெயர் வாழ்விலும் சாதிகளாக பிரிந்திருந்த சித்திரத்தை அளிக்கிறார். டாக்டர் ஜெயக்குமார் தேவலாயங்களில்கூட சாதி இருந்தது என்கிறார்.

naveen

 

 

பின்னர் ஒரு நுனி தன் பண்பாட்டு தனி அடையாளத்தை துறந்து புதிய வசிப்பிடத்தின் அன்னிய பண்பாட்டில் தன்னை முற்றிலுமாக கரைத்துக்கொள்ள விழைகிறது. அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ நினைவுக்கு வருகிறது. இந்த நிலையில்தான் பிற பண்பாடுகளை உற்று நோக்கத் துவங்குகிறார்கள். அதீத சுயமிழப்பிற்குப் பின் சுதாரித்துக்கொண்டு பண்பாட்டு மீட்பை பேசுகிறார்கள். கோ. சாரங்கபாணியின் தமிழர் திருநாள் முன்னெடுப்பு முதல் வகையான அடையாளமிழப்புக்கான எதிர்வினை என்றால் ‘ஹிண்ட்ராப்’ இயக்கம் இரண்டாம் வகையான அடையாளமிழப்புக்கு எதிர்வினையாக உருவானது. பல சமூக/ வரலாற்று ஆய்வாளர்களும் ‘ஹிண்ட்ராப்’ எழுச்சியை அச்சத்துடன் பார்க்கிறார்கள். ஒரு பக்கம் அது நிகழ்த்திய அடையாள ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள் மறுபுறம் இனவாதமாக, அடையாளம் இறுகி இந்தியர்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துவதாக அது மாறிவிடும் என எச்சரிக்கிறார்கள். உலகளாவிய வலதுசாரி எழுச்சியுடன் சேர்ந்தே இதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

இந்த தொகுப்பை வாசிக்கும் போது மலேசிய தமிழ் இலக்கியம் இன்னும் போதுமான அளவிற்கு அங்கு வாழும் பிற சமூகத்தை அவதானிக்கவில்லை எனும் எண்ணம் ஏற்படுகிறது. விதிவிலக்கு ராம கண்ணபிரான், சிங்கை இளங்கோவன். மலாய், சீன இனங்கள் இருக்கட்டும், உண்மையில் வேறு இந்தியர்கள் பற்றிய பதிவும்கூட அரிது என்றொரு எண்ணம் ஏற்படுகிறது. மலேசிய – சிங்கப்பூர் ஆங்கில இலக்கியத்தின் வளர்ச்சி உலக இலக்கியத்தில் தனக்கான இடத்தை பெறுகிறது. கே. எஸ். மணியன் அப்படியான ஒரு முன்னோடி. இளங்கோவன், பாலபாஸ்கரன், முத்தம்மாள் பழனிசாமி, ஜானகிராமன் என பலரையும் கவனிக்கும்போது வருங்காலத்தில் மலேசியாவில் இருமொழி படைப்பாளுமைகள் அதிகமும் உருவாவார்கள் எனும் எண்ணம் ஏற்படுகிறது.

 

மொத்தம் இருபத்தி ஐந்து நேர்காணல்கள் கொண்ட தொகுப்பு. இதில் ஆறு சிங்கப்பூர் இலக்கியத்தை பிரதிநிதிப்படுத்துபவை. வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பதினோரு மலேசிய இலக்கியவாதிகளின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. மீதியிருக்கும் கட்டுரைகள் மலேசிய சமூக, அரசியல், வரலாறு, கல்வி மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்தவை. மொத்தமாக சுப. நாராயணன் மற்றும் பைரோஜி நாராயணன் ஆகியோர் நடத்திய ‘கதை வகுப்பு’, கு. அழகிரிசாமியின் ‘இலக்கிய வட்டம்’ கோ. சாரங்கபாணியின்   தமிழ் நேசன் முன்னெடுத்த ‘தமிழர் திருநாள்’ போட்டிகள், பவுன் பரிசு திட்டங்கள், மாணவர் மணி மன்றம், நவீன இலக்கிய சிந்தனை, வானம்பாடி புதுக்கவிதை இயக்கம் ஆகியவற்றின் தாக்கம் மற்றும் அவற்றின் வழியாக உருவாகி வந்த ஆளுமைகளை அடையாளம் காட்டுகிறது. இத்தொகுப்பில் சுட்டப்படும் முன்னோடிகளான கோ. சாரங்கபாணி, எஸ்.ஏ. கணபதி, ஆதி குமணன் ஆகியோரின் ஆளுமைகளின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது.

 

என் வாசிப்பில் திரைப்பட இயக்குனர் சஞ்சய் குமார் பெருமாள் மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர் / நாடகாசிரியர் இளங்கோவன் நேர்காணல்கள் கலைக்குறித்த தனித்த மற்றும் தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பவை. டாக்டர். மா. சண்முக சிவா நேர்காணலில் அவரளிக்கும் ஒரு பதில் கலைக்கும் நிலையாமைக்கும் இடையிலான தொடர்பை கோடிட்டு காட்டுகிறது. “நான் சௌகரியமாக இருக்கிறேன். சந்திக்கும் அனைவரும் என்னிடம் அன்பைக் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். வாழ்வில் பெரும் துயரங்கள் என்னிடம் இல்லை. இதுவே எனக்கு குற்ற உணர்வாகி விடுகின்றது. எனவேதான் நான் மீண்டும் மீண்டும் துன்பம் நிறைந்த முகங்களைத் தேடிச் செல்கிறேன்.” ஒரு மருத்துவனாகவும், எழுத்தாளனாகவும் சண்முக சிவாவை என் மனதிற்கு மிக நெருக்கமானவராக உணர்கிறேன்.

 

நல்ல நேர்காணல்கள் நேர்காணல் செய்யப்படுபவரின் மொழியின் தனித்தன்மையை வெளிக்கொணர வேண்டும். இணைய வழி நேர்காணல்களில் இத்தகைய சிக்கல் இருப்பதில்லை. ஆனால் பேச்சை நேர்காணலாக உருமாற்றும்போது தனித்தன்மை மறைந்து பொதுத்தன்மையை எட்டிவிடும். இத்தொகுப்பில் சீ. முத்துசாமி, சஞ்சய் குமார் பெருமாள் மற்றும் சிங்கப்பூர் இளங்கோவன் ஆகியோரின் நேர்காணல்களில் அவர்களுடைய தனித்துவம் வெளிப்படுகிறது. சஞ்சய்குமார் நேர்காணலில் அவருடைய ஜகாட் குறும்படத்திற்கு கிடைத்த எதிர்வினைகளைப் பற்றி சொல்லும்போது, ஒரு மலாய் நண்பர் திரைப்படத்தை பார்த்துவிட்டு சொன்னதாக சொல்கிறார் “தோட்டத்தை விட்டு வெளியேறியபோது ஃபெல்டா நிலத்திட்டம் போலவே உங்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைத்தது என்றே நினைத்தோம். ஆனால் உங்களை அப்படியே விட்டுவிட்டார்கள் என இப்போதுதான் தெரிந்துகொண்டோம்”. தமிழ் இலக்கியங்களில் பிற சமூகங்களைப் பற்றிய பதிவுகள் இல்லாதது போலவே பிற சமூகங்கள் தமிழர்களிடம் இருந்து வெகுவாக விலகி இருப்பதை உணர முடிகிறது. மலேசியா ஒரு பல்லின தேசம் என சொல்லிக்கொண்டாலும் சமூகம் துண்டாடிக் கிடப்பதை காட்டுவதாக இருக்கிறது.

 

தமிழ் மட்டுமின்றி அடுத்த கட்டமாக மலாய், சீன மொழிகளில் வெளிப்படும் தமிழர் வாழ்வு எத்தகையது என்பதை வல்லினம் ஆவணப்படுத்த வேண்டும். அப்போதுதான் இது முழுமையடையக்கூடும். அவர்களின் பார்வையில் நாம் தவறவிட்ட எத்தனையோ கோணங்கள் புலப்படக்கூடும். பாலபாஸ்கரனின் நேர்காணலில் ஆங்கில தரவுகளின் வழி தமிழர் வாழ்வைப் பற்றி தான் கண்டடைந்த பல சுவாரசியமான தகவல்களை சொல்கிறார். 19 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட சீன பத்திரிக்கை ஒன்றிற்கு தமிழர் ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது அப்படியான ஒரு தகவல். தம்புசாமி பிள்ளை பற்றிய பகுதிகள் எல்லாம் நல்ல எழுத்தாளர் கையில் கிடைத்து தேர்ந்த நாவலாக உருவாக்க முடியலாம். சி.வீ குப்புசாமியின் ‘ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள்’ கூட ஒரு நாவலுக்கான களம்தான். காட்டு பெருமாள், எஸ். ஏ. கணபதி பற்றிய நினைவுகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

41520586_10216450570484352_5516240632437276672_n

தமிழ் நவீன இலக்கியகர்த்தாக்களிடம் தங்கள் ஆதர்சம் யார் எனக் கேட்டால் பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரையே பெரும்பான்மையினர் அடையாளப்படுத்துவர். மு.வ., நா.பா., அகிலன் போன்றோரை தங்கள் ஆதர்சம் என பெரும்பான்மையான நவீன எழுத்தாளன் கருதுவதில்லை. அரிதாக அப்படி எவரும் சொன்னாலும்கூட அவர்களின் இலக்கிய தகுதி குறித்து சில ஐயங்கள் எழுப்பப்படும். வெகு மக்கள் எழுத்தாளர்கள் என்றே அவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். இந்த தொகுப்பில் உள்ள பெரும்பான்மை இலக்கியவாதிகளும் தங்கள் ஆதர்சமாக மு.வ., நா.பா., அகிலனைச் சொல்கிறார்கள். அதிலிருந்து மேலெழும்பி, விலகி சிலருக்கு ஜெயகாந்தன் ஆதர்சமாகிறார். வேறு சிலர் வண்ணதாசனையும் வண்ணநிலவனையும் வந்தடைகிறார்கள். பி. கிருஷ்ணன் மட்டுமே புதுமைப்பித்தனை தன் ஆதர்சமாக சொல்கிறார்.   ‘புதுமை தாசன்’ எனும் பெயரில் இயங்கினார். 1950 களில் கோ. சாரங்கபாணியால் உருவான இலக்கிய அலை என்பது திராவிட கருத்தியல் அடிப்படையில் உருவானது. ஒருவேளை புதுமைப்பித்தன் இன்னும் பலருக்கு ஆதர்சமாக இருந்திருந்தால் நவீன மலேசிய இலக்கியப் போக்கு வேறு திசையில் காத்திரமாக வளர்ந்திருக்குமோ எனும் எண்ணம் வந்தது. தன் நிலத்திலிருந்து வேறொரு நிலத்தில் வேர் பிடித்து வாழ முனைந்து அன்றாடம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறைக்கு மு.வவும், நாபாவும், அகிலனும் ஆசுவாசம் அளித்திருக்கக்கூடும். புதுமைப்பித்தன் ஒருபோதும் அந்த ஆசுவாசத்தை அளித்திருக்க மாட்டார். அவரைப் பற்றிக்கொண்டு வாழ்வில் எதையும் கடந்துவிட முடியாது. நவீன இலக்கியம் கூரையற்ற வெட்டவெளியில் நிற்கும் மனிதனின் காலடி மண்ணையும் சரிப்பது. இந்த நேர்காணல்கள் லட்சியவாத எழுத்துக்களின் மீதான மதிப்பீடுகளை என்னளவில் மறுபரிசீலனை செய்யத் தூண்டின.

 

நவீனின் நேர்காணல் தொகுப்பை வாசிக்கும்போது கிடைக்கும் சித்திரம் என்பது 50 களில் மலேசிய- சிங்கப்பூர் இலக்கிய களம் வளமாக துவங்கி அறுபதுகளில் வளர்ந்து எழுபதுகளில் உச்சம் பெறுகிறது. ஐம்பதுகளில் புதுமைப்பித்தனின் இலக்கிய இடம் குறித்து நாளிதழ்களில் ஏழெட்டு மாதங்கள் சர்ச்சைகள் நீடித்திருக்கின்றன. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஏழெட்டு இலக்கிய அமைப்புகள் உருவாயின. சிறுகதை எழுத்தாளர்களே எழுத்தாளர்களாக கருதப்பட்டனர். அவர்கள் நட்சத்திரங்களாக கொண்டாடப்பட்டனர். அங்கிருந்து இயல்பான அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. கனகலதா அவருடைய நேர்காணலில் “1990 களுக்குப் பிறகான காலகட்டத்தில், இந்நாட்டில் இலக்கியமே இல்லாமல் போய் விடுமோ, இளையவர்கள் எழுதாமலே விட்டு விடுவார்களோ என்ற பயத்தில் எழுதுபவர்களையெல்லாம் தட்டிக்கொடுக்கத் துவங்கினோம்” என்கிறார். சுமார் இருபத்து ஆண்டுகள் நீடித்த தொய்வு நிலையை கடந்து இணைய உலகில் மலேசிய இலக்கியம் விழித்து கொள்கிறது. சென்ற ஆண்டு விஷ்ணுபுர விருது பெற்ற எழுத்தாளர் சீ. முத்துசாமியும் கூட படைப்பூக்க உச்சத்திலிருந்த சூழலில் இருந்து ஒதுங்கி பின்னர் இடைவெளிக்கு பின் மீண்டும் எழுத வருகிறார். அரு.சு ஜீவானந்தம் அவருடைய நேர்காணலில் “சில சமயங்களில் எழுத்தை இழந்து விட்டேனோ என மிகுந்த துயரமாக இருக்கும். அதனால்தான் வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டதாக சொல்கிறேன். எனக்குள் இருக்கும் இலக்கியவாதியையும் அது சுருட்டி வாயில் போட்டுக்கொண்டது.” அக்கினி அவருடைய நேர்காணலை இப்படி முடிக்கிறார்- “வாழ்க்கையின் முடிவில் அந்தக் கடைசி காலகட்டத்தில், அந்த நேரத்தில் என் நினைவு சரியாக இருந்தால் நான் இழந்தது என்னவென்று நீங்கள் கேட்டால் கவிதை என்பேன்.” இவ்வரிகள் எனக்குள் அச்சத்தையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது. கலையைத் தொலைத்த கலைஞன் என்னவாக வாழ்வை கடப்பான்?

 

சை. பீர்முகமது உட்பட இன்னும் சிலரின் நேர்காணல்கள் வழியாக ஏறத்தாழ இதே போன்றவொரு சித்திரத்தை அடைகிறோம். எண்பதுகளில் பெரும்பாலானவர்களின் செயலூக்கம் ஒன்றுபோலவே குன்றியது. இது ஏன் நிகழ்ந்தது? எந்த எழுத்தாளரும் நேரடியாக அதைப் பற்றி பேசவில்லை. ஆனால் என்னை துரத்திய கேள்வி இதுதான். எழுத்து பொருளாதார உய்வுக்கு வழியல்ல என உணர்ந்த ஒரு தலைமுறையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தமிழில் இயங்கிய பெரும்பாலான மகத்தான இலக்கியவாதிகள் தங்கள் அடுத்த தலைமுறையை வாசிப்பிலிருந்தும் எழுத்திலிருந்தும் விலக்கியே வைத்தார்கள். ஆனால் இது மட்டும்தான் காரணமா? கோ. முனியாண்டி அவருடைய நேர்காணலில் ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகிறார் “1980 களுக்குப் பிறகு பொதுவாக எந்தப் பத்திரிக்கையும் தரமான இலக்கிய படைப்புகளை வெளியிடவில்லை. தமிழ் நேசன் அதற்கொரு விதிவிலக்கு” என்கிறார்.

 

நவீனின் இந்த நேர்காணல் தொகுதியை இரண்டாக வகுக்கலாம். இலக்கியவாதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள்/ ஆய்வாளர்கள். இவற்றை ஏன் ஒன்றாக தொகுத்தார் என்பதொரு கேள்வியாக இந்நூலை வாசிக்கத் துவங்கும்போது எழுந்தது. கறாரான வரலாற்றுப் பார்வையில் நினைவுகளுக்கான இடம் இரண்டாம்பட்சம்தான். ஏனெனில் நினைவுகள் மனச் சாய்வுகளுடன் ஊடாடுபவை, நம்பகமற்றவை. புறவயமான சட்டகங்களுடன் இசையும்போது மட்டுமே அவை பொருட்படுத்தத்தக்கவையாகின்றன. ஆனால் வரலாறு உண்மையை ஒற்றை பரிணாமத்தில் காட்டுவது. நினைவுகள் பல கோணங்களில் பல நிறங்களில் உண்மையை நோக்கி விரிபவை.

 

மா. ஜானகிராமனுடனான நேர்காணலில் போகிற போக்கில் ‘ஆனால், 80-85 ஆம் ஆண்டுகளில் இந்தத் தோட்டங்கள் துட்டாடப்பட்ட்ன. மறுநடவு என்ற பெயரில் ரப்பர் மரங்களை அழித்துவிட்டு செம்பனையை பயிரிட்டார்கள். தோட்டங்களுக்குள் இந்தோனேசியர்கள் நுழைந்தார்கள்.’ எனச் சொல்கிறார். இங்கிருந்து மலேசிய இலக்கியத்தின் தொய்வுக்கான காரணத்தை என்னால் ஊகிக்க முடிகிறது. மலேசிய தமிழர்களும் அவர்களின் இலக்கியமும் பெரும்பங்கு தோட்டப்புறத்தை சார்ந்ததே. இந்த இணைப்பை புரிந்துகொண்டதன் வழியாக நவீன் இந்த நூலை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். இலக்கியவாதிகளின், கள செயல்பாட்டாளர்களின் நேர்காணல்களை ஒன்றாக தொகுத்ததன் மூலம் அவர் மலேசிய இலக்கிய பரிணாமத்தை முழுமையாக கட்டமைக்க முயல்கிறார்.

 

நவீன் முன்னுரையில் எழுதியது போல் நூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல்களில் இருந்து 25 நேர்காணல்களை தேர்ந்தெடுத்து, அதன் வழி மலேசிய இலக்கியத்திற்கு ஒரு வரைபடத்தை உருவாக்கும் முயற்சி இந்நூல். நவீன் இலக்கிய வரைபடத்தை உருவாக்க முனைவதுடன் நிற்கவில்லை. இலக்கியத்திற்காக, தங்கள் இலட்சியத்திற்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மலேசிய ஆளுமைகளை இந்த தொகுப்பின் வழியாக அடையாளம் காட்டுகிறார். இதன் வழியாக மலேசிய இலக்கியத்தின் வருங்கால செல்திசையை நவீன் அடையாளப்படுத்துகிறார். முன்னோடியான கோ. சாரங்கபாணி அமைத்துக்கொடுத்த பண்பாட்டுச் சாலையை நீட்டிப்பதை இலக்காக கொண்டுள்ளார். பசுபதி சிதம்பரம், டாக்டர் ஜெயக்குமார், பி. எம் மூர்த்தி மற்றும் மா. ஜெயராமன் போன்றோர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.

 

சில நேர்காணல்கள் இன்னும் விரிவாக இருந்திருக்கலாம், படைப்பின் ஊற்றுமுகத்தைக் காட்டியிருக்கலாம் எனும் எண்ணம் ஏற்பட்டது. மேலும் பிற்சேர்க்கையாக இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் ஆளுமைகளின் பட்டியல் பக்க எண்ணுடன் சேர்த்து வெளியிட வேண்டும். இந்நூல் ஆய்வு நூலாக பரிணாமம் கொள்வதற்கான அத்தனை சாத்தியங்களும் கொண்டது. நேர்காணல் செய்த தேதிகளையும் சேர்க்க முடிந்தால் வசதியாக இருக்கும்.

 

நவீனும் வல்லினம் நண்பர்களும் அத்தனை இக்கட்டுக்களையும் கடந்து தொடர்ந்து தாங்கள் தேர்ந்த பாதையில் நம்பிக்கை இழக்காமல் முன்செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்.

 

மீண்டு நிலைத்த நிழல்கள் – ம. நவீனின் மலேசிய- சிங்கப்பூர் ஆளுமைகளின் நேர்காணல் தொகுப்பு பற்றிய அறிமுக உரை- மதுரை, 21.10.18 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பிணறாயி

$
0
0

pinaray

 

கேரள முதல்வர் பிணறாயி விஜயனின் பெயரை வைத்து இங்கே சிலர் முகநூலில் களமாடிவருகிறார்கள் என்கிறார் ஆய்வாளர் நா.கணேசன். பிணறாயி என்பதை பிணத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். பிணறாயி என்பதன் பொருள்தேடி அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

 

கேரளத்தில் கண்ணூரிலிருந்து 20 கிமி தொலைவில் தலைசேரிக்கு அருகில் உள்ள சிறிய ஊர் பிணறாயி. கேரள முதல்வர் விஜயன் அங்கே பிறந்தார். ஆகவே பிணறாயி விஜயன் என அழைக்கப்படுகிறார். அவருடைய தந்தை முண்டயில் கோரன் ஒரு தென்னை ஏறும் தொழிலாளர். தாய் கல்யாணி. 1945 மேய் 24ல் பிணறாயி விஜயன் பிறந்தார். குமாரன் நாணு என இரண்டு உடன்பிறந்தவர்கள் விஜயனுக்கு உண்டு. தலைச்சேரி செயிண்ட் ஜோஸஃப்ஸ் பள்ளியின் ஆசிரியையான ஒஞ்சியம் கண்ணூக்கரை வீட்டில் கமலா அவருடைய மனைவி. விவேக், கிரண் என இரு மகன்கள். வீணா என ஒரு மகள்.

 

பிணறாயி என்ற பெயரின் அமைப்பைப் புரிந்துகொள்ள கண்ணூரின் ஊர்ப்பெயர்களைன் அமைப்பைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆயி என முடியும் ஏராளமான ஊர்பெயர்கள் அங்கே உண்டு. கல்லாயி, மாடாயி, நெல்லாயி போன்ற பல பெயர்கள். [வத்ஸன் கல்லாயி என்னும் விமர்சகரும் தாஹா மாடாயி என்னும் கவிஞரும் அங்குண்டு. இருவருமே மார்க்ஸியர்கள். கல்பற்றா நாராயணன் வேடிக்கையாகச் சொன்னதுபோல மார்க்ஸியத்தால் வத்ஸன் கல்லாய் மாறினார். தாஹா மாடாய் மாறினார்]

kallay

கல்லாயிப் புழ கண்ணூரின் அழகான சிற்றாறுகளில் ஒன்று. அழகிய சிலபாடல்கள் சினிமாவிலுண்டு. கல்லாயி புழையொரு மணவாட்டி  கடலின்றே புன்னார மணவாட்டி. பதினாறு திகஞ்ஞிட்டும் கல்யாணம் கழிஞ்ஞிட்டும் பாவாட மாறாத பெண்குட்டி    [ கல்லாயி ஆறு ஒரு மணப்பெண். கடலின் அருமை மனைவி. பதினாறு வயதானபின்னரும் திருமணம் ஆனபின்னரும் பாவாடை மாறாத பெண் ] , பதிநாலாம் நிலாவுதிச்சது மானத்தோ கல்லாயி கடவத்தோ? [பதினான்காம் நிலவு உதித்தது வானத்திலா கல்லாயி படித்துறையிலா?] அவை கண்ணூரின் பாடலாசிரியரான யூஸஃப் அலி கேச்சேரி எழுதியவை.

 

ஆயி என முடியும் பெயர்கள் பெரும்பாலானவை ஆற்றங்கரைப் படகுத்துறை அல்லது படித்துறைகளுக்குரியவை. அவையே பின்னர் ஊர்ப்பெயர்களாயின.பிணர் என்பது செந்தணக்கு என்றும் அழைக்கப்படும் ஒரு மரம். நீர்க்கரைகளில் வளர்வது. சிவந்த மலர்கள்கொண்டது.

piNar

 

 

ஆகவே பிணறாயி என்பது பிணர் மரத்தடியின் படகுத்துறை என்ற பொருள் கொண்டிருக்கவே வாய்ப்பு மிகுதி. நா. கணேசனின் ஊகம் சரியானதுதான்

 

நா. கணேசனின் கட்டுரை

 

 

பதிநாலாம் நிலாவுதிச்சது மானத்தோ கல்லாயி கடவத்தோ

பனிநீரின் பூ விரிஞ்ஞது முற்றத்தோ கண்ணாடி கவிளத்தோ?

 

 

கல்லாயி புழையொரு மணவாட்டி

கடலின்றே புன்னார மணவாட்டி.

பதினாறு திகஞ்ஞிட்டும் கல்யாணம் கழிஞ்ஞிட்டும்

பாவாட மாறாத பெண்குட்டி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-55

$
0
0

bowதிருதராஷ்டிரரின் குடிலுக்கு திரும்பும்போது சஞ்சயன் களைத்திருந்தான். அன்றைய நாள் நிகழ்ந்து ஓய இன்னும் நெடும்பொழுதிருக்கிறது என்ற எண்ணமே அப்போது அவன் மேல் பொதிந்து சூழ்ந்து அமைந்திருந்தது. அவரிடம் அவன் சொன்ன போர்க்களக் காட்சிகள் எவையும் அவனிடமிருந்து கடந்து சென்றிருக்கவில்லை. ஒவ்வொன்றும் அவ்வண்ணமே அவனில் எஞ்சி கரும்பாறையிலேயே கால்கள் புதைந்துவிடும் என்பதுபோல் உடல் எடைகொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான்.

அப்படியே திரும்பச் சென்றுவிட்டாலென்ன என்னும் எண்ணம் எழுந்தது. அஸ்தினபுரிக்கா என்ற மறு எண்ணம் எழுந்ததுமே அங்கிருந்து தன் சிற்றூருக்குச் செல்வதைப்பற்றி எண்ணினான். ஆனால் குருக்ஷேத்ரத்திலிருந்து தப்பவியலாது என்று உடனே தெளிவுறத் தெரிந்தது. நிகழ்ந்தவை காலஇடப்பொருத்தமற்று மீளமீள நிகழும் உள்ளத்துடன் எங்கிருக்கிறோமென்று அறியாமல் இந்த கொதிக்கும் அலைவெளியில் ஒழுகுவதொன்றே செய்வதற்குரியது. காலம் மெல்ல அனைத்தையும் படியச் செய்யக்கூடும். அத்தனை உடல்களும் மண்ணில் மட்கி அத்தனை உயிர்களும் மாற்றுலகுகளில் பொருந்திய பின். அத்தனை சொற்களும் ஒன்றுடனொன்று அறுதியாக இணைந்துகொண்ட பின்.

திருதராஷ்டிரர் கைகளை பீடத்தின் இருக்கைமேல் அறைந்து “சொல்!” என்றார். சஞ்சயன் தன் உள்ளத்தின் சொற்களை கோத்துக்கொண்டான். முதல்நாள் களத்தை சொல்லத் தொடங்கும்போது இருந்த அதே பதற்றமும் நிலைகொள்ளாமையும் ஒவ்வொருநாளும் அவனிடம் கூடின. கண்முன் விரிந்துகிடந்த களம் அத்தனை சொற்களுக்கும் அப்பாற்பட்டதெனத் தோன்றியது. அவன் எடுத்த எந்தச் சொல்லும் அக்காட்சியுடன் பொருந்தவில்லை. ஒவ்வொருமுறை சொல்கையிலும் இதுவல்ல என அகம் பதறியது. அந்தக் குறையை நிறைக்கவே அடுத்த சொற்றொடரை எடுத்தான். அதை நிறைக்க இன்னொன்றை.

பின்னர் ஒருகணத்தில் அவன் சொல்லிக்கொண்டிருப்பதை முற்றாகவே மறந்தான். சொல் அவனிடமிருந்து தடையிலாது வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. சொற்கள் முடிந்து அவன் வானிலிருந்து விழுவதுபோல் வந்து தன்னுணர்வை அடைந்தபோது அக்களத்தைவிடப் பெரியதொரு வெளியில் தான் இருப்பதை உணர்ந்தான். மண்ணிலுள்ள அனைத்தையும் தழுவியும் மேலும் பற்பல மடங்கென பெருகிக்கொண்டே இருக்கும் ஒன்று அந்த வானம் என அப்போது உணர்ந்தான். அது மிக அப்பால், எவ்வகையிலும் அடைவதற்கரியதாக, எங்கோ இருந்தது. அவன் தான் சொன்ன அச்சொற்களை தானே கேட்க விழைந்தான். எவ்வண்ணமேனும் எங்கேனும் அவை பதிவாகியிருக்கக்கூடுமென்றால் எத்தனை நன்று என எண்ணினான். ஆனால் அவை வீணாவதில்லை, அவை எழுந்தன என்பதனாலேயே எங்கோ இருக்கும்.

முதல்நாள் மாலையில் விந்தையானதோர் நுண்ணுணர்வை அவன் அடைந்தான். அவனுடைய சொற்களை எங்கோ எவரோ அறிந்துகொண்டிருப்பதாக. ஒவ்வொரு மாத்திரையையும், ஒவ்வொரு உணர்வுத்துளியையும். அவருடைய நினைவிலிருந்து அவை பதிவாகும். அவை அள்ள அள்ளக் குறையாத பெருங்காவியமாகும். இம்மானுடர் முற்றழிவார்கள். இந்த நதிகள் திசைமாறி பெயர் திரிந்து பிறிதாகும். இந்த மலைகள்கூட சற்றே கரைந்தழியக்கூடும். ஆனால் அச்சொற்கள் இருக்கும். அவற்றை தலைமுறைகள் பயில்வார்கள். ஒவ்வொரு சொல்லும் முளைத்துப்பெருகும். இச்சொற்களிலிருந்து இவையனைத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து விரிந்து அலையடிக்கும்.

சொல்வதற்கு முன் அவன் திரும்பி அந்த நோக்கிலா விழிகளை ஒருமுறை நோக்கினான். எப்போதும் எழும் திகைப்பையே அவ்விழியிலாமை உருவாக்கியது. ஆனால் எழுகாலம் விழியற்றதோ என்னும் எண்ணம் எழுந்தது. சொல்லில் இருந்து மட்டுமே இவையனைத்தையும் அறியவேண்டியதென்பதனாலேயே விழியின்மை கொண்டது. காட்சிகளை சொல்கையில் எழும் சிறு குறிப்புகள் அவருக்கு எவ்வளவு தேவையானவை என்று அவன் அறிந்திருந்தான். எவர் எவரை தாக்குகிறார்கள் என்பதல்ல, எவ்வண்ணம் தாக்குகிறார்கள், எப்படி எதிர்வினையாற்றினார்கள், என்னென்ன மெய்ப்பாடுகள் வெளிப்பட்டன என்பதெல்லாம்கூட அவருக்கு தேவையானவையாக இருந்தன.

“அதோ இளைய பாண்டவராகிய பீமசேனர் தன் தேரில் நிலைவில்லை ஏந்தி நின்றிருக்கிறார். அவருக்குப் பின்னால் இருபக்கமும் ஆவக்காவலர்கள் மாறி மாறி அம்புகளை எடுத்தளிக்கிறார்கள். கௌரவர்களின் அம்புகள் எழுந்து வந்து அவர்களை அறைகின்றன. அவர்களை எதிர்கொண்டு நின்றிருப்பவர்கள் காந்தாரராகிய சுபலரும் அவருடைய மைந்தர்களும். துணைநின்று பொருதுகின்றனர் கௌரவப் படைத்தலைவர்கள். பீமசேனர் அவர்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பது முகத்திலிருக்கும் இளிவரலிலிருந்து தெரிகிறது. கௌரவப் படைத்தலைவர் சுவிரதர் தன் நீண்ட வில்லின் அம்புகளால் பீமசேனரை அறைய சுபலரை நோக்கி அம்பெடுத்து அரைக்கணத்தில் அதை அவரை நோக்கி திருப்பி அவர் கழுத்தை அறுத்து தேர்த்தட்டில் தள்ளுகிறார் பீமசேனர்.”

“சுபலரை அது திகைக்க செய்கிறது. அருகே கழுத்தறுபட்டு குருதியுமிழும் உடலை ஓரவிழியால் நோக்காமல் அவரால் பீமசேனரை எதிர்க்க இயலவில்லை. ஏனெனில் முந்தைய கணம் வரை அவர் தொடர்ந்து சொல்லாடிக்கொண்டிருந்தது அவரிடம்தான். ஓரவிழி நேர்விழியைவிட கூரானது. களத்தில் ஓரவிழியை ஆள்பவனே வெல்பவன். அம்புகளால் அறையுண்டு சுபலர் தேர்த்தட்டில் விழுந்தார். அவருடைய வலக்கால் துடிக்கிறது. அவருடைய வில் நழுவி அப்பால் விழ கொக்கிச்சரடுகளால் அவரை இழுத்து அப்பாலெடுத்து உயிர்காத்தனர். ஆனால் கௌரவ வில்லவர் எழுவர் களத்தில் விழுந்தனர். அவர்களின் தேர்கள் முட்டித்தடுமாறுகின்றன. ஒருவன் கீழே விழுந்து தேர்தட்டை பிடித்துக்கொண்டு எழ முயல அது பிறையம்பு தலையை கொய்துசெல்லக் காட்டியது என அமைந்தது.”

அவன் கதையென, காட்சியென விரித்துரைத்துச் செல்கையில் அவர் அச்சொற்களால் காற்று அலைக்கழிக்கும் சுனை என உடல் கொந்தளிக்க அமர்ந்திருப்பார். பெயர்மைந்தரின் இறப்புகள் அவர்மேல் அம்புகளாக சென்று தைத்தன. மைந்தர்களின் இறப்பின்போது உடல் நடுங்க கால்கள் வலிப்புபோல் இழுத்துக்கொள்ள முகம் கோணலாகி வாயோரம் எச்சில் நுரைததும்ப அதிர்ந்துகொண்டிருந்தார். “அரசே!” என்று அவன் அழைத்தபோது “ம்!” என்றார். “அரசே!” என்று அவன் மீண்டும் அழைக்க “சொல்க, அறிவிலி! என்ன என்று சொல்!” என்று அவனை ஓங்கி அறைந்தார்.

உடலொழிந்து அவ்வறையை தவிர்த்து மீண்டும் சொல்லத்தொடங்கினான். “உங்கள் மைந்தர் பீமசேனரை எதிர்கொள்கிறார்கள், அரசே. திருதஹஸ்தரும் கண்டியும் பாசியும் அவர் முன் நின்றிருக்கிறார்கள்!” அவர் “ஆ! அறிவிலிகள்! எப்போதும் அவன் முன் தனித்தே சென்று நிற்கிறார்கள்” என்றார். “இறப்பு எளிய உயிர்களை கவர்கிறது. ஏனென்றால் அவர்களறிந்த பெருநிகழ்வு அது ஒன்றே என்கிறார் பராசரர்.” முனகியபடி நிலையழிந்து தலையை உருட்டியபடி “இவர்கள் ஓருடலென்றானவர்கள். ஒற்றைப்பேரிருப்பென நின்று பொருதும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் சாவு வந்து முன்னிற்கையில் சிதறிவிடுகிறார்கள்! ஏன்? சாவுக்குமுன் குருதிக்கோ குலத்துக்கோ பொருளில்லையா என்ன? அதை தனித்தனியாகவே எதிர்கொள்ளவேண்டுமா என்ன? ஆ! என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் இங்கே?” என்றார்.

ஒவ்வொரு கௌரவனின் சாவும் அவருக்கு நிகர்சாவாக இருந்தது. முதல் கௌரவனின் சாவை அவன் சொன்னபோது அவர் ஒருகணம் இறந்து முற்றிலும் இன்மையை அடைந்து மீள்வதை அவன் கண்டான். அன்றைய போரை அவன் சொல்லிக்கொண்டே சென்றான். “துரியோதனரிடமிருந்து முதல்முறையாக ஓர் உறுமல் எழுந்தது. மறுமொழி என பீமன் பிளிறலோசை எழுப்பினார். அவ்வொலி சூழ்ந்திருந்தோரை திகைக்க வைத்தது. அவர்கள் விழித்தெழுந்தவர்கள்போல் கூச்சலிட்டபடி தாக்கத் தொடங்கினர். சர்வதரை மகாபாகுவும் சித்ராங்கரும் சித்ரகுண்டலரும் பீமவேகரும் பீமபலரும் சூழ்ந்துகொண்டார்கள். தனுர்த்தரரும் அலோலுபரும் அபயரும் திருதகர்மரும் அப்ரமாதியும் தீர்க்கரோமரும் சுவீரியவானும் சுதசோமரை சூழ்ந்தனர். கதையால் அவர்களை அறைந்து பின்னடையச் செய்து பீமசேனரின் பின்பக்கத்தை காத்தார் சுதசோமர். மேலும் மேலும் கௌரவர்கள் வந்துகொண்டிருந்தனர். பெருகிச்சுழன்று நதிச்சுழல் என்றாயினர். நடுவே பீமசேனர் சுழிவிசையில் என சுழன்றபடி கதையால் அவர்களைத் தாக்கி தடுத்தார்.”

கைகளால் பெரிய கதையொன்றை சுழற்றுபவர்போல திருதராஷ்டிரர் தசையிளகினார். “எதிர்பாராக் கணமொன்றில் பீமசேனர் எழுந்து பாய்ந்து சேனானியின் தலையை அறைந்து உடைத்தார்” என்று அவன் சொன்னதும் நுண்ணுணர்வால் அருகே இன்மையை உணர்ந்து திரும்பி நோக்கினான். அங்கே இருந்த திருதராஷ்டிரர் மெய்யாகவே பாறையைப்போல வெற்றிருப்பாகத் தோன்றினார். அவன் “கௌரவர்கள் நடுவே அதிர்ச்சிக் கூச்சல்கள் எழுந்தன. துரியோதனர் என்ன நிகழ்ந்தது என உணராதவர்போல திகைத்து நின்றார்” என்று மெல்லிய குரலில் சொன்னான். அவர் ஓர் உலுக்கலுடன் மீண்டும் தன் உடலில் எழுந்தார். “யார்? யார்?” என்றார். “சேனானி” என்று அவன் சொன்னான். அக்கணம் அவரிடமிருந்து எழுந்த அலறலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுடைய கை அதிர்ந்து தெறிக்க விரல்பட்டு ஆடிகள் விழப்போயின. பீதன் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டான்.

அவர் அலறிக்கொண்டே இருந்தார். “அப்போது உருவான கணத்தேக்கத்தில் புகுந்து ஜலகந்தரை நெஞ்சிலறைந்து வீழ்த்தினார் பீமசேனர்” என்றான். “யார்? அறிவிலி, யார்?” என்றார் திருதராஷ்டிரர். “ஜலகந்தர்” என்றான் சஞ்சயன். மீண்டும் அதே நெஞ்சுகிழிபடும் அலறல். மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு சொல்லில்லாது வீறிட்டார் திருதராஷ்டிரர். “பீமசேனர் படைவீரன் ஒருவனின் இடையில் மிதித்து மேலேறி எழுந்து சுழற்றி அறைந்த கதையால் சுஷேணரை தலைசிதற குப்புறச் சரித்தார். கௌரவர்களின் சுழிவளையம் விரிந்து அகல அவரைச் சூழ்ந்து உருவான வெற்றிடத்தில் கௌரவர் மூவரும் வாயிலும் மூக்கிலும் குருதிக்குமிழிகள் கொப்பளிக்க கிடந்துநெளிந்தனர்“ என்று அவன் சொன்னதும் அவர் தலையை அசைத்துக்கொண்டு அலறியபடியே இருந்தார்.

“பீமசேனர் பீமபலரை அறைந்து வீழ்த்தினார். அருகே நின்றிருந்த பீமவேகரின் முகத்தில் குருதியும் வெண்தலைச்சேறும் தெறிக்க அவர் உள்ளமும் உடலும் செயலிழந்து அசைவற்று நின்றார். அவர் தலையை வாளால் வெட்டி நிலத்திலிட்டார் பீமசேனர். துரியோதனர் தீ பட்ட யானை என வீறிட்டபடி கதை சுழற்றி பாய்ந்தெழுந்தபோது கீழிருந்த பீமவேகரின் தலையை எடுத்து இடக்கையில் தூக்கிப் பிடித்தார்” என சஞ்சயன் சொன்னபோது திருதராஷ்டிரர் மயக்கமடைந்து இருக்கையில் சரிந்தார். சொற்களை நிறுத்திவிட்டு அவன் அவரை பார்த்தான். அவர் நெஞ்சு ஏறி இறங்கியது. கைவிரல்கள் அசைந்துகொண்டிருந்தன. கால் கட்டைவிரல் மட்டும் தூண்டில் விழுங்கிய மீன்போல் துடித்தது.

அவன் மெல்ல “அரசே!” என்றான். அவருடைய மூச்சு திணறுவது போலிருந்தது. அவன் எழுவதற்குள் அவர் விழித்துக்கொண்டு “சொல்!” என்று உறுமினார். அவன் மீண்டும் ஆடியில் நோக்கினான். சற்றுமுன் அவன் சொல்லி நிறுத்திய சொற்றொடரை நினைவுகூர்ந்தான். “கௌரவர்கள் அணிசிதைந்து ஒருவரோடொருவர் முட்டியபடி தத்தளித்து உடல்ததும்பினர். பீமசேனர் உறுமலோசையுடன் அவர்களை நோக்கி பாய “மூத்தவரே” என்று அலறியபடி அவர்கள் சிதறியோடினர். கால்தவறி கீழே விழுந்த சுவர்மர் “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவினார். பீமசேனர் அவர் நெஞ்சை உதைத்து மண்ணில் வீழ்த்தி தன் வாளால் அவர் தலையை வெட்டி குடுமியைப்பற்றித் தூக்கி காட்டியபடி வெறிநகையாடினார். கௌரவர்கள் முட்டி மோதி அகன்றுவிட அவரைச் சுற்றி எவருமிருக்கவில்லை. உடைந்த குடமென கொழுங்குருதி வழிந்த தலையைத் தூக்கி தன் முகத்தின்மேல் அதை ஊற்றினார். காலால் தரையை ஓங்கி அறைந்து “குலமகள் பழிசூடிய வீணர்கள்! இனி தொண்ணூற்றி இருவர்! எஞ்சியோர் வருக! வருக, கீழ்மக்களே! வருக, இழிசினரே! எவருள்ளனர் இங்கே? இக்களத்தில் ஒவ்வொருவரையும் நெஞ்சுபிளந்து குருதியுண்பேன்! அறிக தெய்வங்கள்! அறிக மூதாதையர்!” என்று கூச்சலிட்டார்.”

அவர் “உம்” என்றார். “பீமசேனரின் அறைபட்ட பீமபலரின் உடல் தேரின் அச்சுக் கூரில் தைத்தது. அந்தத் தேர் பின்னிருந்து வந்த தேர்களால் முட்டப்பட்டு மெல்ல நகர நடப்பவர்போல் தோன்றினார். அவ்வுடல் கோக்கப்பட்ட தேர் சற்றே கவிழ இரு கைகளும் விரிய அண்ணாந்து வானை பார்ப்பவர்போல் தெரிந்தார்.” அதை சொன்னதும் மீண்டும் திரும்பி அவன் திருதராஷ்டிரரை பார்த்தான். அவர் அச்சொற்களை வேறெங்கிருந்தோ கேட்டுக்கொண்டிருந்தார். அவனுக்கு விந்தையானதோர் உணர்வு ஏற்பட்டது. மைந்தர் களம்படும் காட்சியானாலும் அக்காட்சி கூர்மையுடன், விரிவுடன் தெரியவேண்டும் என்று விரும்புகிறதா அவ்வுடலில் அடைபட்டு இருளில் தவிக்கும் அது?

அதன்பின் அவன் அனைத்துக் காட்சிகளையும் மேலும் நுண்ணிய செய்திகளுடன் சொன்னான். களம்பட்ட கௌரவர்களின் இறுதித்துடிப்பை, எஞ்சும் மூச்சைவிட்டு அவர்கள் மண்ணில் அமைவதை, சூழ்ந்திருப்பவர்களின் உணர்ச்சிகளை, கொக்கிக் கயிற்றை வீசி கௌரவர்களை கோத்து இழுத்து எடுக்கும் காட்சியை. தூண்டிலில் சிக்கிய பெருமீன்களென உடல்கள் இழுபட்டு பிற உடல்களிலும் சரிந்த தேர்களிலும் முட்டி மோதி விலகிச் சென்றன. “அவற்றுக்கு மீண்டும் உயிர் வந்ததுபோல. பிறிதொரு உயிர். ஆமைகளின் உயிர், மீன்களின் உயிர், அல்லது நாகங்களின் உயிர்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரரை அவன் ஓரவிழி ஒருகணம் நோக்கி மீண்டது. ஓர் அக அதிர்வென அவர் அதில் மகிழ்கிறாரா என்ற எண்ணம் ஏற்பட்டது. அதெப்படி என்று மறுகணமே திடுக்கிட்டான். பின்னர் சொல்கூட்டுகையில் எல்லாம் அவ்வெண்ணம் உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. தார்த்தராஷ்டிரர் விழும் காட்சிகளில் அவரது முகத்தை நோக்காமல் அவனால் இருக்க இயலவில்லை.

பின்னர் அவன் அதை புரிந்துகொண்டான். ஒரே தருணத்தில் இரண்டாக பிரிந்திருந்தார் அவர். முதற்கணம் களக்காட்சி ஒன்றை காணும் இளஞ்சிறுவன் ஒருவனின் மெய்ப்பு. அதன்மேல் விழுந்து மூடி எழும் தந்தையின் துயரம். இது என் உளமயக்கா? ஆனால் உள மயக்குகள் வெறுமனே பாழிலிருந்து எழுவதில்லை. போர் முடிந்து அந்திமுரசுகள் ஒலிக்கையில் திருதராஷ்டிரர் பீடத்தில் தளர்ந்து விழுந்து உயிரிழந்தவைபோல் இரு கைகளும் நிலம்தொட தொங்க மார்பில் சரிந்து முகவாய் படிய முனகிக்கொண்டிருந்தார். ஆடிகளைக் கழற்றி பேழைக்குள் வைக்கும் பீதனைப் பார்த்தபடி அவன் அசையாமல் நின்றான். அவர் விழித்தெழுவதற்கென நெடுநேரம் காத்த பின் “அரசே!” என்றான். “ஆம்! கிளம்பலாம். கிளம்பவேண்டியதுதான். நீராட வேண்டும். இக்குருதி அனைத்தையும் உடலிலிருந்து கழுவிய பின்னரே சற்றேனும் துயில முடியும்” என்று அவர் சொன்னார்.

கைகளை நீட்டியபடி “என்னை பிடித்துக்கொள். என் உடல் நிலையழிந்திருக்கிறது. நான் விழுந்துவிடுவேன்” என்றார். அவரை கைபற்றி மேடையிலிருந்து இறக்குகையில் அவர் தன் திசையுணர்வையும் கால்களில் இருக்கும் இடவுணர்வையும் முற்றாக இழந்துவிட்டிருப்பதை அவன் பார்த்தான். படிகளிலும் கைப்பிடிகளிலும் தூண்களிலும் அவர் முட்டிக்கொண்டார். அவர் உடலில் இருக்கும் தன்னுணர்வை அவன் எப்போதும் வியப்புடனே பார்த்துவந்தான். ஒருமுறை சென்று வந்த இடத்திற்கு நன்கறிந்தவர்போல் மீண்டும் அவரால் செல்ல இயலும். எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த இடத்தை மிகச் சரியாக திசை நுட்பங்களுடன், பொருள் குறிப்புகளுடன் சொல்ல முடியும். அவர் தன் உடல்திகழ்ந்த விழிகளை இழந்துவிட்டிருந்தார்.

தேரில் ஏறி அமர்ந்ததும் அவர் “நாம் எங்கு செல்கிறோம்?” என்று கேட்டார். “ஓய்வெடுப்பதற்கு” என்று அவன் சொன்னான். “அஸ்தினபுரிக்கா?” என்று அவர் கேட்டார். “இல்லை, நம் குடிலுக்கு” என்று அவன் சொன்னான். “ஆம் ஆம், அங்கிருந்துதானே வந்தோம்” என்றார். தேரில் பீடத்தில் தளர்ந்து அமர்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டார். பின்னர் தலையை அசைத்து “மீண்டெழுகிறது” என்றார். “அரசே” என்றான். “நீ சொல்கையில் எழுவதல்ல, சொல்லி நிறுத்திய பின் பேருருக்கொண்டெழுகிறது போர். நீ சொல்லிக்கேட்கையில் என்னுள் எழும் களம் பிறிது. சற்றே உளம் மயங்குகையில் என் கனவில் எழுவது மேலும் பெரிது. இப்பொழுது விசைமீளும் ஊசல் என மறுதிசை கொண்டெழுவது அதைவிடவும் பெரிது” என்றார். “தெய்வங்களே! எத்தனை களங்களில் நிற்பேன்! எத்தனைமுறைதான் இறப்பேன்!” என உடைந்த குரலில் அழுதார்.

தலையை இரு கைகளால் தட்டியபடி “கொலைகள்! அருங்கொலைகள்!” என்றார். “நிறுத்து! புரவியை நிறுத்து!” என்றபடி எழுந்தார். அவர் உடல் வியர்வை கொண்டிருந்தது. தசைகள் அதிர்ந்துகொண்டிருப்பதை அவன் பார்த்தான். மீண்டும் அமர்ந்து “செல்க!” என்றார். “அவர்கள் அத்தனை எளிதாக இறக்கமாட்டார்கள்” என்றார். “சஞ்சயா, பறவைத்தூது சென்றுவிட்டதா? அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று உறுதி செய்தாயா?” என்றார். சஞ்சயன் “அவர்கள் விண்புகுந்துவிட்டதை முரசுகள் அறிவித்தன” என்றான். “முரசுகளா? சில தருணங்களில் எதிரிகளை குழப்பும் பொருட்டு பொய்யாகவேனும் முரசறிவிப்பை செய்வதுண்டு. அவர்களில் சிலர் உயிர் எஞ்சியிருக்ககூடும்” என்றார் திருதராஷ்டிரர்.

“ஆம்” என்று அவன் சொன்னான். “ஓரிருவராவது எஞ்சியிருக்கக்கூடும். அறிவிலி! சொல்க, அவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்றா முரசு அறையப்பட்டது?” என்றார். அவன் “ஆம், அரசே. அவர்கள் அனைவருமே மறைந்துவிட்டதாகத்தான் முரசு அறையப்பட்டது” என்றான். “இல்லை, அவ்வாறு இருக்க வழியில்லை. பொய் அது” என அவர் சொன்னார். உரக்க நகைத்து “அது சகுனியின் சூழ்ச்சி. கௌரவர்கள் இறந்துவிட்டார்கள் என்று பாண்டவர்களை நம்பச்செய்வது அது. நாளை பார்! இறந்துவிட்டவர்கள் இரும்புக்கவசங்கள் ஒளிவிட பெரிய புன்னகையுடன் தேர்த்தட்டில் நிற்பதை அவர்கள் பார்ப்பார்கள். அப்போது எழும் திகைப்பு இருக்கிறதே!” என்று உரக்க நகைத்து தொடைகளை தட்டிக்கொண்டு “அப்போது அறிவார்கள். கௌரவர்கள் யார் என்று. அத்தனை எளிதாக என் மைந்தர் இறக்கப்போவதில்லை. போர் என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியும்” என்றார்.

மேலும் மேலும் அவர் முகம் உவகைகொண்டபடியே வந்தது. “அவர்கள் பிறக்கும்போதே நான் அறிவேன், அவர்கள் ஒவ்வொருவரும் பத்து மானுடருக்கு நிகர் என்று. என் கைகளில் அக்குழவிகளை கொண்டுவந்து தருகையில் மூன்று அல்லது நான்கு சேடியர் ஒரு தாலத்தில் வைத்து சேர்த்து தூக்கிக்கொண்டு வருவார்கள். நான் மட்டுமே அவர்களை கைகளால் தூக்க இயலும். உனக்கு தெரியாது, ஒருமுறை துர்மதன் முதல் நிலை மாடத்திலிருந்து கூடத்திற்குள் விழுந்துவிட்டான். ஆறு ஆள் உயரம். அப்போது அவனுக்கு ஆறு மாதம்கூட ஆகவில்லை. என்ன ஆயிற்று? கீழே விழுந்தவன் கூடத்தின் தரையிலிருந்த மரப்பலகை நிரப்பை உடைத்துவிட்டான். ஆம், பலகையில் விரிசல் விழுந்துவிட்டது! மெய்யாகவே!” என்றபடி தொடையில் ஓங்கி அறைந்து “அவர்களை எமனும் அஞ்சுவான்! இறப்பு அவர்களை அணுகாது! ஐயமே இல்லை!” என்றபின் உரக்க நகைத்தார்.

“ஏன் இந்தத் தேர் இத்தனை மெதுவாக செல்கிறது? இதை விரைந்து செல்லும்படி ஆணையிடு. நீயே பார், அங்கே நம் குடிலில் பறவை வந்து அமர்ந்திருக்கும். கௌரவர்கள் இறக்கவில்லை என்ற செய்தியுடன் அது வந்திருக்கும். அதை பார்க்கையில் தெரியும் நான் ஏன் சொன்னேன் என்று. என் மைந்தர்களை மட்டுமல்ல, சகுனியையும் எனக்கு தெரியும். அவன் பாண்டவர்கள் எண்ணி சென்றடைய முடியாத சூழ்ச்சி கொண்டவன். அதை அவர்கள் இந்தப் போரில் காண்பார்கள்” என்றார் திருதராஷ்டிரர். தேர் சென்றுகொண்டே இருக்க “ஏன் இன்னும் நாம் சென்று சேரவில்லை? என்றார். “சென்றுகொண்டே இருக்கிறோம்” என்றான் சஞ்சயன். “விரைந்து செல்லச் சொல். இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறான்?” என்றார்.

“யார்?” என்றான் சஞ்சயன் குழப்பத்துடன். “படைக்கலங்கள் செய்பவன்” என்றார். “எங்கு?” என்று சஞ்சயன் கேட்டான். “இதோ, நீ பார்க்கிறாய் அல்லவா? அவர்கள் ஏழு பேர்! படைக்கலங்களை உருக்கி கூடத்தில் அறைந்துகொண்டிருக்கிறார்கள்.” சஞ்சயன் “எங்கு?” என்றான். “மூடா, இதோ நம் அருகில். பார்க்கவில்லையா?” சஞ்சயன் “ஆம்” என்றான். திருதராஷ்டிரர் எண்ணியிராக் கணத்தில் உடைந்து “என் மைந்தர்களே! என் மைந்தர்களே!” என்று நெஞ்சில் ஓங்கி அறைந்து கதறி அழத்தொடங்கினார். புண்பட்ட விலங்கின் ஓலம்போல சொல்லில்லாது எழுந்தது அவர் அழுகை. நெஞ்சிலும் தலையிலும் ஓங்கி அறைந்தார். தேர்த்தூணில் தலையை முட்டினார். எழுந்து தேரிலிருந்து பாய்ந்துவிடப்போகிறவர்போல அலைவுகொண்டு மீண்டும் அமர்ந்தார்.

இரு கைகளையும் விரித்து “தெய்வங்களே! மூதாதையரே! என் மைந்தர்! என் மைந்தர்!” என்றார். “விதுரா! விதுரா! எங்கிருக்கிறாய்? விதுரன் எங்கே? விதுரன் எங்கே?” என்றார். “அரசே, விதுரர் இங்கில்லை” என்றான் சஞ்சயன். “அவன் இங்கிருக்க வேண்டும். அவன் வேண்டும் என்னருகில். இத்துயரில் அவனன்றி வேறெவரும் என்னுடன் இருக்க இயலாது. விதுரனை அழைத்து வா!” என்றார். “ஆம்! ஆணை!” என்றான் சஞ்சயன். “இப்போதே அழைத்து வா. உடனே அழைத்து வா!” சஞ்சயன் “இதோ அழைத்து வருகிறேன்” என்றான். “விதுரன் சொன்னான். இவையனைத்தையும் விதுரன் சொன்னான். விதுரா! மூடா! விதுரா! எப்படி என்னை நீ தடுக்காமலிருந்தாய்? விதுரன் எங்கே? இங்கிருந்தானே! சற்று முன் இங்கிருந்தானே?” என்றார்.

சஞ்சயன் ஒன்றும் சொல்லவில்லை. “அவன் அறிவான்! அவர்கள் பிறந்தபோதே அவன் சொன்னான்! அவன் அறிவான்! அவன் அறிந்துதான் என்னைவிட்டு சென்றான்! எங்கிருந்தாலும் அந்த இழிமகன் என் முன் வரவேண்டும். அவன் தலையை என் கைகளால் அறைந்து உடைப்பேன். அதன் பிறகு நானும் உயிர்மாய்த்துக்கொள்வேன். விதுரன் எங்கே? விதுரன் உடனே இங்கு வேண்டும்” என்று திருதராஷ்டிரர் கூவினார். சஞ்சயன் அக்கொந்தளிப்பை பார்த்தபடி ஓய்ந்த உடலுடன் அமர்ந்திருந்தான். மேலும் மேலுமென வெறிகொண்டு கூச்சலிட்டு அலறி அழுது மெல்ல அவர் ஓய்ந்தார். பெருந்துயர் என்பது சொல்லில்லாமல் எழுகையிலேயே முழுமை கொள்கிறது என்று அவனுக்கு தோன்றியது. சொல் எழுகையில் அத்துயர் மானுடனுக்குரியதாகிவிடுகிறது. சொல்லில்லாத் துயரங்கள் தெய்வங்களுக்குரியவை. மானுடரால் விளக்க முடியாதவை. எந்த மானுடராலும் ஆறுதல் உரைத்து ஆற்றிவிட முடியாதவை.

தேர் குடில் பகுதியை அடைந்தபோது திருதராஷ்டிரர் அரைத்துயிலில் இருந்தார். விசும்பல்கள் ஓய்ந்து துயிலுக்கான குறட்டை ஒலிகள் கேட்கத் தொடங்குவதை முன்னரே அவன் உணர்ந்திருந்தான். அவரை எழுப்ப வேண்டாமென்று அவன் எண்ணினான். தேர் நின்ற உலுக்கலில் அவர் விழித்துக்கொண்டு “எங்கிருக்கிறோம்?” என்றார். “குடில்கள் வந்துவிட்டன, அரசே” என்றான் சஞ்சயன். “வந்துவிட்டனவா? பறவைத்தூது இருக்கிறதா பார்! பறவைத்தூது வந்திருக்கும்! அவர்கள் இறக்கவில்லை என்ற செய்தி இருக்கும், பார்” என்றார். “ஆம், இருக்கும். பார்ப்போம், வருக!” என்று அவன் அவர் கைகளை பற்றினான்.

அவர் இறங்கி நடந்தபோது உடல் ததும்பிக்கொண்டிருந்தது. எப்போதும் பேரெடைகொண்ட இரும்புப் பதுமை ஒன்று தன்னருகே நடந்துவருவது போன்ற உணர்வை அவன் அடைவதுண்டு. அன்று காற்றில் பறக்கத் துடிக்கும் பட்டம் போலிருந்தது அவர் உடல். “பறவை வந்திருக்கிறதா பார்… சென்று பார்” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. குடிலை அடைந்து குறுபீடத்தில் மெல்ல அமர்ந்தபின் அவர் நீள்மூச்செறிந்தார். இரு கைகளால் தலையைப் பற்றியபடி குனிந்து மீண்டும் மீண்டும் மூச்செறிந்தார். பின்னர் “விதுரனுக்கு ஓலை அனுப்பினாயா?” என்றார். “இல்லை, அரசே” என்று அவன் சொன்னான். “வேண்டாம்” என்றார் திருதராஷ்டிரர்.

தொடர்புடைய பதிவுகள்

கலையரசனின் கட்டுரை- பாலா

$
0
0

kalai

 

அன்பின் ஜெ..

சென்னை வளர்ச்சியியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் அ.கலையரசன் அவர்களின்,  “ A Comparison of Developmental Outcomes in Gujarat and Tamilnadu” Economical and Political weekly, April, 2014” கட்டுரையின் தமிழாக்கத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

நான் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை என்னும் ஆதங்கத்துடன் தான் இதைச் செய்தேன்.

2013 ஆம் ஆண்டில், ஜக்திஷ் பகவதி/அர்விந்த் பனகாரியா, வளர்ச்சி ஏன் முக்கியம்? (Why Growth Matters?) என்னும் புத்தகத்தை வெளியிட்டார்கள். அதே ஆண்டில், அமர்த்தியா சென்னும், ஜீன் ட்ரீஸூம் – “நிச்சயமற்ற பெருமிதம் – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்” (An Uncertain Glory: India and its Contradictions) என்னும் புத்தகத்தை வெளியிட்டார்கள். இரண்டுமே, 1991 பொருளாதாரச் சீர்திருத்தங்களின் வெற்றியின் பிண்ணணியில் எழுதப்பட்டவை.

பகவதியும் பனகாரியாவும், பொருளாதார வளர்ச்சிதான் முக்கியம். அதுதான், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வறுமையை மிக வேகமாகக் குறைக்க வல்லது. அந்த வளர்ச்சியில் மூலம் வரும் அதிக வருவாய்தான், அரசுகள் சமூக முன்னேற்றக் கட்டமைப்புகளை உருவாக்க உதவும் என்னும் ஒரு கருதுகோளை முன்வைத்தார்கள். அதாவது வளர்ச்சி முதலில் நிகழ வேண்டும், அது மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி என்பது அவர்கள் கருதுகோளின் முதல் படி. இதற்கான உதாரணமாக, இவர்கள் குஜராத் மாநிலத்தை முன்வைத்தார்கள்

அமர்த்தியா சென்னும், ஜீன் ட்ரீஸும், பொருளாதார வளர்ச்சி என்பது தன்னளவில் ஒரு முடிவு பெற்ற கொள்கையல்ல. அது சமூக முன்னேற்றத்துக்கான வழிமுறை மட்டுமே என்னும் கருதுகோளை முன்வைத்து, சமூக முன்னேற்றக் கட்டமைப்பில், அரசு மிகப் பெரும் பங்கைச் செய்ய வேண்டும். 20 ஆண்டுகள் நிகழ்ந்த தொடர் பொருளாதார வளர்ச்சி, குஜராத்தில் சமூக முன்னேற்றத்தை உருவாக்கவில்லை. சமூக முன்னேற்றத்தில் குறிப்பாக கல்வி, சுகாதாரம் போன்ற கட்டமைப்புகளில் அரசின் பங்களிப்பே சமூக முன்னேற்றத்தை மேம்பட்ட வகையில் உருவாக்கியது  எனச் சொல்லி, உதாரணமாக கேரளத்தை முன்வைத்தார்கள். (தமிழகத்தின் சமூக முன்னேற்றமும் புத்தகத்தில் நேர்மறையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது).

இந்த விவாதங்களின் பிண்ணனியில், கலையரசன், குஜராத்தையும், தமிழகத்தையும் ஒப்பிடுகிறார்.  கல்வி, சுகாதாரம், வறுமை குறைப்பு என்னும் மூன்று சமூகத் தளங்களில், இரு மாநிலங்களும், பொருளாதாரச் சீர்திருத்தம் துவங்கிய 20 ஆண்டுகளில் எவ்வாறு மேம்பட்டிருக்கின்றன என்னும் ஒப்பீடு.

இந்தக் கட்டுரை தரும் தரவுகள், தமிழகத்தின் நிலை பற்றிய மேட்டிமை நோக்குகளை உடைத்தெறிகின்றன என்பது, கட்டுரை பேசும் பொருளைத் தாண்டிய ஒரு விஷயம்.

தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலம் என்னும் வாதம் வரும்போதெல்லாம், அதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுபவை இவை:

1.    ஆங்கிலேயர் காலத்திலேயே சென்னை மாகாணம், கல்வியில் முன்னேறிய மாநிலம்.

2.    மதிய உணவைக் காமராஜர்கொண்டு வந்தார்.

3.    தமிழக முன்னேற்றத்துக்கான தொழில் மற்றும் வேளாண் கட்டமைப்பை காங்கிரஸ் உருவாக்கியது

4.    காங்கிரஸ் ஆட்சியில் செயல்திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது

இவை சொல்லாமல் சொல்லும் விஷயம், 50 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட இயக்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை. அவை ஊழல் மலிந்த பரப்பியல் இயக்கங்கள் மட்டுமே என்பது. அப்படியே கொஞ்சம் பங்களிப்பு இருக்கின்றது என ஒத்துக் கொண்டாலும், அது எம்,ஜி.ஆர், நல்ல நிர்வாகிகள் சொல்பேச்சுக் கேட்டு ஆட்சி நடத்தினார் என்பதாக இருக்கும். அப்படியே ஒத்துக் கொண்டாலும், அது பிற்படுத்தப்பட்டவர்களின் நலனை மட்டுமே மேம்படுத்தியது என்பார்கள்.

சமீபத்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.நாரயண், “Dravidian Years – Politics and Welfare in Tamilnadu” என்னும் புத்தகத்தில், பல மேட்டிமை மோவாயிச நோக்குகளை உடைத்தெறிகிறார். இவர் 1965 முதல் 1997 வரை தமிழக அரசின் பல்வேறு நிர்வாகப்பதவிகளில் இருந்தவர். பின்னர், மத்திய அரசுப்பணிக்குச் சென்றார். இந்தப் புத்தகத்தை மதிப்பீடு செய்த பேராசிரியர் கலையரசன், புத்தகத்தின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிடுகிறார்:

1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் இரண்டு முக்கியக் கருதுகோள்களைக் கொண்டிருந்ததுஒன்று சமூக நீதிஇன்னொன்றுதமிழ் அடையாளம். 1967 முதல் 1977 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் அரசு திட்டங்களும்கொள்கைகளும்சுயமரியாதைஇயக்கத்தின் லட்சியங்களை ஒத்திருந்தன என்கிறார் ஆசிரியர்.  இந்தக் காலகட்டத்தில்அரசு நிர்வாகத்தின் மொத்த அமைப்பையே மாற்றியமைக்கும்அடிப்படை வேலையை திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கியது என்கிறார் நாராயண்இந்த மாற்றம்அரசுக் கொள்கைகளின் உருவாக்கம் மற்றும்நிறைவேற்றத்தில்அனைத்து மக்களையும் அணைத்துக் கொள்ளும் ஒரு வழிமுறையை உருவாக்கியதுதமிழர் என்னும் அடையாளத்தை கட்டியெழுப்பியது,மக்களை ஒன்றிணைத்துஅவர்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வை ஊட்டியது என்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம், 1975 ஆம் ஆண்டுபரம்பரையாக வந்தகிராம முன்சீஃப் அல்லது கர்ணம் என்னும் நிதித் துறைப் அமைப்பை ஒழித்ததுஇதுஊரகச் சமூக அமைப்பின் அடிப்படையையே மாற்றியதுபதிலாககிராம நிர்வாக அலுவலர்கள்தமிழக அரசு குடிமைப்பணிக் குழு (Tamilnadu Public Service Commission) மூலம் நியமிக்கப்பட்டதுபல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்ட சமூகத்தின் மீதிருந்த ஒடுக்குமுறையை அழித்ததுஅவர்களை உயர் ஜாதி பெரும்நிலச்சுவாந்தார்களின் அடக்குமுறையில் இருந்து விடுவித்ததுஇந்தக் கொள்கை மாற்றம்சமூகத்தின் எல்லா சாதியிலிருந்தும்குறிப்பாகதாழ்த்தப்பட்டமற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து கிராம நிர்வாக அதிகாரிகள் உருவாகி வரும் நிலையை ஏற்படுத்தியதுஇது பரம்பரையாக கிராமங்களில் இருந்தஉயர் சாதி மேலாதிக்கத்தை உடைத்தது.

இந்தப் புத்தகம், 1960 முதல் 1980 வரையிலான தமிழகஅரசு குடிமைப்பணி குழு (Tamilnadu Public Service Commission) வின் தரவுகளை முன்வைக்கிறது.இந்தக் காலகட்டத்தில்தமிழக அதிகார வர்க்கத்தின் சாதியக் கட்டமைப்பு அடியோடு மாறிபுதிய அதிகாரிகள் பெரும்பாலும்பிற்படுத்தப்பட்ட மற்றும்தாழ்த்தப்பட்ட சாதிகளில் அதிலும் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் இருந்து வந்ததையும்கிராமச் சூழ்நிலையை நன்கு அறிந்தவர்களாக இருந்ததையும்குறிப்பிடுகிறது.

தமிழகத்தில் இயங்கிவரும் பொது விநியோகக் கட்டமைப்பின் வரலாறு, 1967 ஆம் ஆண்டு தி.மு. அதிகாரத்தைக் கைப்பற்றிய நிகழ்வினோடு  மிக நெருங்கியதொடர்புடையது என்பதற்கு ஆதாரங்களை இந்தப் புத்தகம் தருகிறது.  ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் வாக்குறுதியோடு பதவிக்கு வந்த தி.மு.,அதை நிறைவேற்றபொது விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்தியது.  1976 ஆம் ஆண்டுக்குள்மொத்த தமிழகத்தையும்கிராமத்துக்கு ஒரு ரேஷன் கடைஎன்னும் அளவில்மிக வெற்றிகரமான பொது விநியோகக் கட்டமைப்பை நிறுவியதுதமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும்ரேஷன் கார்டுகள்கொடுத்ததுஅவர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படைப் பொருட்களின் அளவை அதிகரித்ததுவிலையைக் குறைத்தது. (பக்கம்:187).

இந்தக் கட்டமைப்பைதி.மு.தமிழ்நாடு பொது விநியோகக் கழகம் (Tamilnadu Civil Supplies Corporation) என்னும் அமைப்பின் கீழ்கூட்டுறவுநிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தியதுஇடதுசாரிகள் ஆண்டமேற்கு வங்க / கேரள மாநிலங்களில் கூட அவைதனியார் முகவர்கள் மூலம் தான் இயங்கினஇதனால்இந்தக் கட்டமைப்பில் இருந்துபொருட்கள்வெளியே செல்வது (leakage) மிகக் குறைவாக இருக்கிறதுஇதை ஆசிரியர்தமிழக பொது விநியோகமுறைபொதுச் சேவைகளுக்கான தேவைஅரசு மற்றும் அரசியல் கொள்கைநிர்வாகக் குறிக்கோள் மற்றும் திறன் ஆகியவற்றின் ஒன்றிணைந்த மாதிரிஎன்கிறார்இந்தப் பொது வினியோக முறையின் வெற்றி, “சமூகத்தின் தேவைஅரசியல் கொள்கை உறுதிமற்றும் நிர்வாகத் திறன்” ஆகியவற்றின்வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான நிர்வாக அமைப்பு மற்றும் அரசியல் நிலையை தி.மு. நிறுவியது என்றால்பின் வந்த .தி.மு.,அதை மேலும்மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வலுப்படுத்தியது.”

சுருக்கமாகச் சொன்னால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிர்வாகக்கட்டமைப்பின், மரபணுக்களை திராவிட இயக்கம் முற்றிலுமாக மாற்றியது எனச் சொல்லலாம்

அடுத்து, மதிய உணவுத் திட்டம். காமராஜர் திட்டம் என்பது ஊரக ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம். அதன் நிதி ஒதுக்கீடு 1981 ஆம் ஆண்டு 2 கோடி. ஆனால், 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் கொண்டு வந்த அனைத்துக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு 120 கோடி ரூபாய் எனில், காமராஜர் திட்டத்துக்கும் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த திட்டத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், இவர்கூட, 2000த்துக்குப் பின் வந்த இலவசத் திட்டங்களில், திராவிட சித்தாந்தமோ, அடித்தட்டு மக்கள் முன்னேற்றமோ இல்லை. வெறும் பரப்பியல் திட்டங்கள் என்னும் பார்வையை முன்வைக்கிறார்.

இங்குதான், பேராசிரியர் கலையரசனின் கட்டுரையின் தரவுகள், மிக முக்கியமான திறப்பை அளிக்கின்றன.

1993-94 ஆம் ஆண்டில் கூட, தமிழகத்தின் வறுமை நிலை, குஜராத்தோடு ஒப்பிடுகையில், மோசமாக இருந்திருக்கிறது.  மொத்தத் தமிழகத்தில் 51.2% (குஜராத்: 43.3%) வறுமை. தாழ்த்தப்பட்ட மக்களிடையே 65.8% (குஜராத் 54.4%). ஆனால், 2012 ல், தமிழகத்தின் மொத்த வறுமை நிலை 15.8%  (குஜராத்: 21.5%) ஆகவும், தாழ்த்தப்பட்ட மக்களிடையே 24% (குஜராத்: 33.8%) ஆகவும் குறைந்திருக்கிறது.

1993-94 ல் கல்வியில், மொத்த தமிழகம் (67%) குஜராத்தை (64.6%) விட மேம்பட்டிருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களிடையே குறைவாக (தமிழகம் 51.5%, குஜராத் 52.7%) இருந்திருக்கிறது. ஆனால், 2011 ல், எட்டே ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியறிவு, 23% உயர்ந்து, 74.8% (குஜராத்: 67.6%) ஆகியிருக்கிறது.

மக்கள் நலக் குறியீடுகளிலும், தாழ்த்தப்பட்ட மக்களிடையேயான, குழந்தை இறப்பு சதவீதம் போன்றவை, தமிழகத்தில் குஜராத்தை விட அதிகமாக, 1993-94 ல் இருந்திருக்கின்றன. ஆனால், 8 ஆண்டுகளில் இது,  90 (குஜராத்: 70) என்னும் குறியீட்டிலிருந்து 37 (குஜராத்: 65) ஆகக் குறைந்திருக்கிறது.  இன்று, குஜராத்தின் முன்னேறிய சாதிகளில் குழந்தை இறப்பு சதவீதம், தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மக்களிடையே இருப்பதை விட அதிகம்.

மேல் சொன்ன மூன்று பத்திகளின் புள்ளிவிவரங்கள், திராவிட அரசியல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்பவர்களுக்கு சமர்ப்பணம்.

மொத்தத்தில், 1990 களுக்குப் பின், தமிழகத்தின் மக்கள் நலத் திட்டங்கள் ஒப்பீட்டளவில் பெரும் வெற்றிகளைப் பெற்று, மக்கள் நலக் குறியீடுகளை, மற்ற முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெருமளவில் முன்னேற்றியுள்ளன. கலையரசனின் இந்தக் கட்டுரை, அதைத் தரவுகள் மூலம் தெளிவாகச் சொல்கிறது.

உலகின் மிகப் பெரும் பொருளியல் அறிஞர்களான ஜக்தீஷ் பகவதி மற்றும் அமர்த்தியா சென் போன்றவர்களுடன் இந்த விவாதத்தில், ஒரு ஆராய்ச்சி மாணவராக இருந்த காலத்திலேயே துணிவாக இறங்கி, ஒரு புதுப் பார்வையை வைத்திருக்கிறார் கலையரசன். மெச்சத் தக்கது.

பணி நிமித்தம் நான் இயங்கிய தொழில் முறை நிபுணர்கள், உடன் பணிபுரிபவர்கள், பொருளியல் அறிஞர்கள் அனைவரும் வயிரெறியும் விஷயம் ஒன்று. அது, “தமிழகத்தில் சும்மா சோறு போடுகிறார்கள்” என்பது தான்.  அவர்களுக்கு, நான் அமைதியாக, “தமிழகம், பொருளாதார அளவீட்டில், இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம்” என நினைவூட்டுவேன்.

’இலவசம், இலவசம்” என இழிவாகப் பேசும் திட்டக் கமிஷன் கமிசார்களை, மாவோ அனுப்பியது போல, தமிழக பால்வாடிகளில், சத்துணவு உதவியாளர்களுக்கு அடிப்பொடிகளாக ஒரு ஆறு மாதம் கட்டாயப் பணி செய்ய அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன்.  சோ, ஜெயா டி.வியில் பேசியது போல, கலைஞர் கருணாநிதி, உளியின் ஓசைக்கு வசனம் மட்டும் எழுதிக் கொண்டிருக்கவில்லை; வெற்றி கொண்டான்கள் ஏளனம் செய்தது போல புரட்சித் தலைவி ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு மட்டும் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செய்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, இலவசங்கள் என்பது மோசமான பொருளாதாரக் கொள்கை என்னும் தில்லிப் பொருளியல் மூட நம்பிக்கையை, ”வச்சி” செய்திருக்கிறார்கள்.

பொருளாதார அடித்தட்டில் வாழும் 70% தமிழ் மக்களுக்கு அவர்கள் உண்மையிலேயே தமிழினக் காவலர்கள்; புரட்சித்தலைவர்கள்; புரட்சித்தலைவிகள் தாம்!

கலையரசனின் கட்டுரையின் தமிழாக்கத்துக்கு, ஒரு சிறு அறிமுகக் கடிதம் என எழுதத் துவங்கினேன். குழு (குல) வழக்கப்படி அதுவும் ஒரு கட்டுரையாக நீண்டு விட்டது.

 

அன்புடன்

பாலா

 

http://www.mids.ac.in/kalai.htm

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.

$
0
0

(.கலையரசன், உதவிப்பேராசிரியர், சென்னை வளர்ச்சியியல் கழகம்) -தமிழில் பாலா

images (17)

பொருளியல் அறிஞர்கள், ஜக்தீஷ் பக்வதி மற்றும் அர்விந்த் பனகாரியா, “வளர்ச்சி ஏன் முக்கியம்? (Why Growth Matters?) என்னும் தங்களது புத்தகத்தை 2013 ஆம் ஆண்டு வெளியிட்டார்கள். அதில் அவர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்களை இரண்டு பாக வழிமுறை எனப் பிரிக்கிறாரகள். முதல் பாகத்தில்,   அதிக வளர்ச்சியைத் தூண்டும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இருக்கும். அதையடுத்த இரண்டாம் பாகத்தில், அந்த அதிக வளர்ச்சியினால் வரும் நிதியைக் கொண்டு செய்யப்படும் மக்கள் நலத் திட்டங்கள் இருக்கும். தெளிவாக, வளர்ச்சி முதலிலும், முன்னேற்றம் அதைத் தொடர்ந்தும் வரும் என்பதும், முன்னேற்றம், வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியை நம்பியிருக்கும் என்பதும் இதன் விளக்கம்.

அவர்கள் வார்த்தைகளிலேயே சொல்வதெனில்,

“Growth would create more jobs and opportunities for gainful employment in income, directly pulling more of the poor above poverty line and additionally would allow the government to pull in more revenues, which would enable the government to spend more on healthcare, education and other programs to further help the poor (Bhagwati and Panagariya, 2013:27)

1991 ஆம் ஆண்டு துவங்கி, 20 வருடங்களாக நிகழ்ந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள்,  இந்தியாவில், குறிப்பாக, குஜராத்தில் அதிக பொருளாதார வளர்ச்சியையும், மேலான சமூக முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளது என்பது அவர்கள் வாதம். அதிக பொருளாதார வளர்ச்சி, மிக வேகமாக வறுமையைக் குறைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இது, பொருளாதார வளர்ச்சியினால், மக்கள் தங்கள் வறுமை நிலையில் இருந்து மேல் இழுக்கப்படும் உத்தி; வழக்கமாக, அரசு மக்கள் நலனுக்காகச் செலவிடுவதால், மேலிருந்து (அரசு) கீழ் (மக்கள்) நோக்கிச் செல்லும் முன்னேற்றமல்ல என்கிறார்கள். இந்த மாதிரியினால், சமூகத்தின் கீழ்நிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்த முன்னேற்றம் காணப்பட்டது எனவும் வாதிடுகிறார்கள்.

அதே ஆண்டில், பொருளியல் அறிஞர்கள் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் ட்ரீஸ் வெளியிட்ட,  ”நிச்சயமற்ற பெருமிதம் – இந்தியாவும், அதன் முரண்பாடுகளும்” (An Uncertain Glory: India and its contradictions) என்னும் புத்தகம், பகவதி மற்றும் பனகாரியாவின் புத்தகத்தில் வைக்கப்படும் வாதங்களுக்கு எதிர்வாதங்களை முன்வைக்கிறது. அவர்கள், பொருளாதார வளர்ச்சி என்பது தன்னளவில் முற்றுப் பெரும் ஒரு குறிக்கோளல்ல; அது மக்கள் முன்னேற்றத்தை அடையும் ஒரு வழிதான் என்கிறார்கள். சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளான கல்வி மற்றும் சுகாதாரத்தில், அரசுக்குப் பெரும்பங்கை உருவகிக்கும் அவர்கள், இந்தத் துறைகளில், அரசின் வலுவான தலையீட்டையும் பரிந்துரைக்கிறார்கள். இருபது ஆண்டுகளாக இருந்த தொடர் பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக குஜராத்தில், அதே அளவில் சமூக முன்னேற்ற வளர்ச்சியைக் கொண்டு வரவில்லை என்பதை அவர்கள் முன்வைக்கிறார்கள். இந்தக் காரணங்களுக்காக குஜராத் மாதிரி என்பது ஒரு பலவீனமான ஒன்று என்பது அவர்கள் வாதம். இதே ரீதியில், ஹிர்வே (2013) மற்றும் சூத் (2012) போன்றவர்களும்,  1990 களில் குஜராத்தில் துவங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள், அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த ஒரு சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தியதா? என்னும் கேள்வியை முன்வைக்கிறார்கள்.

தங்களது வாதத்துக்கு, ஆதாரமாக அமர்த்திய சென், கேரள மாநிலத்தை முன்வைக்கிறார். ஆனால், பகவதியும்/பனகாரியாவும், கேரளம் வரலாற்று ரீதியாகவே, சமூக முன்னேற்றத்தில் பலபடிகள் முன்னின்ற மாநிலம். எனவே, கேரளத்தையும், குஜராத்தையும் ஒப்பிடுதல்  சரியல்ல என்கிறார்கள். முன்னேற்றக் குறியீடுகளை ஒப்பிடாமல், முன்னேற்ற வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடுதலே சரி என்பது அவர்கள் வாதம்.  அப்படி, முன்னேற்ற வளர்ச்சி விகிதத்தில், குஜராத், கேரளாவை விட சில முன்னேற்றக் குறியீடுகளில் வேகமாக வளர்ந்துள்ளது என்பது அவர்கள் தரப்பு.

மேற்சொன்ன விவாதத்தின் பிண்ணணியில், இந்தக் கட்டுரை, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களின் சாதனைகளை ஒப்பீடு செய்ய முயல்கிறது. இரண்டு மாநிலங்களுமே சந்தை மயப் பொருளாதாரக் கொள்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்தன.  (பகவதி / பனகாரியா சொன்ன முதல் பாக பொருளாதாரச் சீர்திருத்தங்கள்). இரண்டு மாநிலங்களுமே, இந்திய தேசிய சராசரிப் பொருளாதார வளர்ச்சியை விட வேகமாக வளர்ந்தவை. இரண்டு மாநிலங்களுமே அதிக நகர்மயமானவை.  வளர்ந்த தொழில் மாநிலங்கள். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாநிலங்கள்.

ஆனால், வறுமை குறைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக முன்னேற்றத் தளங்களில், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் துவங்கிய இருபது ஆண்டுகளில், தமிழகம், குஜராத்தை விட மிக நன்றாக செயல்புரிந்துள்ளது. வெறும் குறியீடுகளில் மட்டுமல்ல, குறியீட்டு வளர்ச்சி விகிதத்திலும், தமிழகம் குஜராத்தை விட சிறந்து விளங்குகிறது. (இவை பகவதி, பனகாரியா சொன்ன அதே அளவீட்டு அலகுகள்தாம்).  கேரளா போல, சமூக வளர்ச்சித் தளங்களில், தமிழகம், துவக்கத்தில் குஜராத்தை விட மேம்பட்டிருக்கவில்லை.  குஜராத், தமிழகம் இரண்டுமே கிட்டத்தட்ட சம அளவு வளர்ச்சியில் தான் துவங்கின. சொல்லப்போனால், சில குறியீடுகளில், குஜ்ராத், தமிழகத்தை விட முன்னே இருந்தது.

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி, இரண்டு மாநிலங்களுக்கிடையேயான துறை வாரியான பொருளாதார வளர்ச்சி விகிதம், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி முதலியவற்றைப் பேசுகிறது. இரண்டாவது பகுதி, சமூக வளர்ச்சி, வளர்ச்சி விகிதம் முதலியவற்றை பேசுகிறது. இறுதிப் பகுதி, தமிழகத்தின் இந்த சமூகப் பொருளாதார முன்னேற்றங்களுக்கான காரணங்களை ஆய்வு செய்கிறது.

  1. பொருளாதார வளர்ச்சியின் இயங்கியல் ( Dynamics of Economic Growth):

தமிழகம், குஜராத் –இரண்டும் மாநிலங்களுமே தொடர்ச்சியான அதி பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலங்கள். 1990 களில் துவங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களே இதன் காரணி எனச் சொல்லப்படுகிறது. இரண்டு மாநிலங்களுமே, மிகத் தெளிவாகப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளை முன்னெடுத்தவை. தனியார் துறைக்குப் பெரும் வரிச்சலுகைகளை அளித்தவை (தத்தா, 2009; விஜயபாஸ்கர் 2010; ஹிராவே 2013).

தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களின் துறைவாரியான பொருளாதார வளர்ச்சிப் புள்ளி விவரங்கள், கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

தமிழகம் குஜராத்
துறை 1991-2001 % % 2001-2012 % % 1991-2012 % % 1991-2001 % % 2001-2012 % % 1991-2012 % %
வேளாண்மை 2.4 8.1 5 4.8 2.6 5.5 1.4 4.7 5.5 9.9 4.7 10.5
உற்பத்தி 5.4 18.6 8.5 21 6.7 19.6 9.2 36 10.2 30.8 9.7 30.7
கட்டுமானம் 8 8.3 10 11.1 9.6 10.5 5.4 4.6 13.2 7.2 8.5 6.1
தொழில்துறை 6.2 30.7 8.1 31.6 7.1 29.8 8.6 47.2 9.9 40.8 9.3 40.7
சேவை 7.5 61.2 8.4 63.6 8.4 64.7 7.5 48.1 10 49.4 9.2 48.9
மாநில GSDP 6 100 7.9 100 7 100 6.5 100 9.2 100 8.3 100

 

  • ஆண்டுகளுக்கு கீழ் உள்ள எண்கள் சராசரி பொருளாதார வளர்ச்சி. எடுத்துக்காட்டாக, வேளாண்மைத் துறை, தமிழகத்தில் 1991-2001 வரை, சராசரியாக4 சதம் வளர்ந்துள்ளது.
  • % என்பது, மொத்த மாநிலப் பொருளாதாரத்தில், ஒரு துறையின் பங்கு எவ்வளவு சதவீதம் எனக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, வேளாண்மைத் துறை, 1991-2001 ஆண்டுகளில், தமிழக மொத்தப் பொருளாதாரத்தில்1% ஆகும்.
  • உற்பத்தி மற்றும் கட்டுமானம் இரண்டும் தொழில்துறையின் உப துறைகளாகும்.

மேற்கண்ட அட்டவணையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது, 1991 ஆம் ஆண்டு முதல் 2012 வரை, கட்டுமானத் துறை தவிர மற்ற எல்லாத் துறைகளிலும், குஜராத் மாநிலம், தமிழகத்தை விட வேகமாக வளர்ந்திருக்கிறது என்பதே. குறிப்பாக, வேளாண் வளர்ச்சி தமிழகத்தை விட குஜராத்தில் அதிகம்.

  1. வறுமை அளவுகள், 1994 முதல் 2012 வரை:

இரண்டு மாநிலங்களில், வறுமையின் அளவை நிர்ணயிக்க, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மாதிரிக் கணிப்பு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) நடத்தும் நுகர்வுச் செலவு கணிப்பு (Consumption Expenditure Survey (CES))  மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் அலசப்படுகின்றன.  இந்தக் கட்டுரை, வறுமைக்கோட்டை நிர்ணயிக்க, டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரைத்த வழிமுறைகளையும், திட்டக் கமிஷன் கொடுத்துள்ல வறுமைக்கோட்டு அலகுகளையும் உபயோகித்து, இரண்டு மாநிலங்களின் வறுமை அளவை மதிப்பீடு செய்ய முயல்கிறது.

  • ஊரக வறுமை:

1993-94 ஆம் ஆண்டுகளில், ஊரக ஏழைகள் தமிழகத்தில் 51.2% ஆகும். அதே ஆண்டில், குஜ்ராத்தில் 43.3%. குஜராத்தை விட, தமிழகத்தில் ஊரக ஏழ்மை அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், 2011-12 ஆண்டில், தமிழகத்தில் ஊரக ஏழைகள் 15.8% ஆகக் குறைந்துள்ளனர். ஆனால், குஜராத்திலோ 21.5%

 

 

ஊரக வறுமை சதவீதம்
வருடம் தமிழகம் குஜராத்
1993-94 51.2 43.3
2004-05 37.5 39.1
2011-12 15.8 21.5

 

மேற்கண்ட தகவல் சொல்வது யாதெனில், 1990 களில், ஊரக வறுமை அளவில் குஜராத் தமிழகத்தை விடக் குறைவாக இருந்தது. ஆனால், அடுத்த இருபதாண்டுகளில், தமிழகத்தில் வறுமை 34% குறைந்திருக்கிறது. குஜராத்தில் 22%. குஜராத்தை விட, வறுமைக் குறைப்பில் தமிழகம் 12% அதிகம் செயல்புரிந்திருக்கிறது.

2.1.1: ஊரக சமூக மற்றும் மதக் குழுக்கள் இடையே வறுமை அளவு:

 

 

 

1993-94 2004-05 20011-12 1993-2012 சராசரி குறைப்பு
வ.எண் சமூகக் குழு தமிழகம் குஜராத் தமிழகம் குஜராத் தமிழகம் குஜராத் தமிழகம் குஜராத்
1 தாழ்த்தப்பட்ட /பழங்குடியினர் 65.8 54.4 51.2 54.3 24.0 33.8 2.3 1.1
2 பிற்படுத்தப்பட்ட 32.6 41.7 13.0 18.9
3 பொது 45.6 37.4 22.2 13.7 1.0 6.1 2.5 1.7
4 இந்து 51.3 43.4 38.0 39.9 16.2 22.7 1.9 1.1
5 முஸ்லீம் 37.3 36.4 18.0 31.0 1.6 7.7 2.0 1.6
6 மற்ற சிறுபான்மை 57.0 59.1 36.1 22.1 13.9 15.2 2.4 2.4
7 மொத்தம் 51.2 43.3 37.5 39.1 15.8 21.5 2.0 1.2

 

  • அட்டவணையில் உள்ள புள்ளி விவரங்கள், வறுமை அளவு சதவீதமாகும்.

இந்த அட்டவணையில், 1993 முதல் 2012 வரையிலான சராசரி வறுமைக் குறைப்பு, தமிழகத்தில் 2% ஆகவும், குஜ்ராத்தில் 1.2% ஆகவும் இருக்கிறது. இந்த அட்டவணையை மேலும் ஆராய்ந்தால், வறுமை அளவுகள் மிக அதிகமாக 2004-5 ஆண்டு முதல் 2011-12 ஆண்டு காலகட்டத்தில் குறைந்திருக்கிறது என்பதையும் காணலாம். மிக முக்கியமாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினரிடையேயான வறுமை, தமிழகத்தில், மிக அதிகமாக 27.2% குறைந்திருக்கிறது. மொத்த இந்துக்களின் வறுமை அளவு 21.8% குறைந்திருக்கிறது.  இதே காலகட்டத்தில், குஜ்ராத்தில், தாழ்த்தப்பட்டவர்களிடையேயான வறுமை அளவு 20.5% ஆகவும், மொத்த இந்துக்களின் வறுமை அளவு 17.2% ஆகவும் குறைந்திருக்கிறது.

2.1.2 ஊரக வாழ்வியல் குழுக்கள் இடையே வறுமை:

1993-94 2004-05 20011-12 1993-2012 சராசரி குறைப்பு
வ.எண் வாழ்வியல் குழு தமிழகம் குஜராத் தமிழகம் குஜராத் தமிழகம் குஜராத் தமிழகம் குஜராத்
1 SENA 37.2 33.1 24.6 28.0 7.7 7.6 1.6 1.4
2 AGLA 69.5 61.1 54.3 57.8 25.5 31.0 2.4 1.7
3 OLAH 44.0 46.4 34.2 45.9 10.0 28.9 1.9 1.0
4 SEAG 42.7 34.1 23.8 27.3 17.5 22.5 1.4 0.6
5 OTHER 24.2 17.2 17.1 18.4 6.4 9.2 1.0 0.4
6 TOTAL 51.2 43.3 37.5 39.1 15.8 21.5 2.0 1.2

 

  • அட்டவணையில் உள்ள புள்ளி விவரங்கள் வறுமை அளவு சதவீதமாகும்.

SENA –  வேளாண்மை தவிர்த்த மற்ற சுயதொழில் செய்பவர்கள்

AGLA –  வேளாண்மைத் தொழிலாளர்கள்

OLAH –  வேளாண்மை தவிர்த்த மற்ற தொழிலாளர்கள்

SEAG –  வேளாண்மைத் துறையில் சுயதொழில் செய்பவர்கள்

இந்த வாழ்வியல் குழுக்கள் அனைத்திலுமே, தமிழகத்தில் 1993-94 முதல் 2011-12 வரையிலான காலகட்ட்த்தில்,  குஜராத்தை விட வேகமாக வறுமை குறைந்துள்ளதைக் காணலாம். குறிப்பாக, 1993-94 ல், குஜராத்தை விட தமிழகத்தில், வேளாண்மைத் தொழிலாளர்களிடையே வறுமை அதிகம் இருந்தது. ஆனால், அது கிட்டத்தட்ட 44% குறைந்து, 2011-12 ல் 25.5% ஆனது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில், குஜ்ராத்தில் வறுமை 30.1% ஆக மட்டுமே குறைந்துள்ளது.

அதே போல, வேளாண்மையில் சுய தொழில் செய்பவர்களின் குழுவில், 1993-94 ல், தமிழகத்தில் (42.7%), குஜராத்தை (34.1%) விட வறுமை அதிக இருந்தது. அது, 2011-12, தமிழகத்தில் 17.5% ஆகவும், குஜரத்தில் 22.5% ஆகவும் குறைந்துள்ளது.

1991 துவங்கி 2011-12 காலகட்டத்தில், தமிழக வேளாண்மைத் துறை 2.6% வளர்ந்தது; குஜராத், 4.7% வளர்ந்தது.  அந்த இருபதாண்டுகளில், குஜராத் வேளாண்மைத் துறை சராசரியாக 80% தமிழகத்தை விட அதிகம் வளர்ந்துள்ளது.  ஆனால் வேளாண்மையில் ஈடுபடும் தொழிலாளிகள் மற்றும் சுயதொழில் புரிவோரிடையே, வறுமை, தமிழகத்தில் தான் அதிகம் குறைந்துள்ளது.  இதன் காரணங்கள் என்ன என்பதை ஆராய்வது மிக முக்கியம்.

  1. கல்வியறிவு சதவீதம்

கல்வியறிவு விகிதம் என்பது, (6 வயதுக்கு மேலானவர்களில்),  கற்றலின் வெளிப்பாடு. கீழ்க்காணும் அட்டவணை, தமிழகம் மற்றும் குஜராத் மாநில மக்களிடையே நிலவும் கல்வியறிவு பற்றிய புள்ளிவிவரமாகும். 1993 ஆம் ஆண்டு 67% ஆக இருந்த கல்வியறிவு, 2011-12 ஆம் ஆண்டு 81.1% ஆக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், குஜராத்தின் கல்வியறிவு 64.6% லிருந்து 77.9% ஆக உயர்ந்துள்ளது. இங்கே கவனிக்கப் பட வேண்டிய விஷயம், 1993 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியறிவு சதவீதம் தமிழகத்தில், குஜராத்தை விடக் குறைவாக இருந்தது. இது 2011-12 ஆம் ஆண்டில், குஜராத்தை விட அதிகரித்து உள்ளது.  1993 லிருந்து 2011-12 காலகட்டத்தில், தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களிடையே கல்வியறிவு 23% உயர்ந்திருக்க, குஜ்ராத்தில் அது 15% ஆக உயர்ந்திருக்கிறது

 

  • உழைக்கும் வர்க்கத்தின் கல்வித் தகுதி:

கல்விபெற்ற உழைக்கும் வர்க்கம், பொருளாதாரத்தின் செயல்திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய காரணி.  இந்த்த் தளத்தில் தமிழகம், குஜராத்தை விட அதிக செயல்திறனை அடைந்துள்ளது.  1993-94 ஆம் ஆண்டு, கல்வியறிவற்ற உழைக்கும் சமூகம், 40% ஆக இருந்த்து. இது 2011-12 ல், 20.4% ஆக்க் குறைந்துவிட்டது. குஜரத்தில், இதே காலகட்ட்த்தில், 41.6% லிருந்து, 24% ஆக்க் குறைந்துள்ளது.  அதேபோல, உழைக்கும் சமூகத்தில் பட்டதாரிகள் 1993-94 ஆம் ஆண்டு 4.2% ஆக இருந்தார்கள்.  அந்த விகிதம், 2011-12 ஆம் ஆண்டு 14.3% ஆக உயர்ந்தது. குஜ்ராத்தில், பட்டதாரிகள் சதவீதம் 4.8% லிருந்து, 10 ஆக உயர்ந்தது. இந்தக் காலகட்ட்டத்தில், குஜராத்தை விட, தமிழகம் தன் உழைக்கும் சமூகத்தை அதிகம் படித்தவர்களாக மாற்றியிருக்கிறது. இந்த மாற்றத்தைத் தமிழகம், தாழ்த்தப்பட்ட மக்களிடையே மிக வேகமாக நிகழ்த்தியிருக்கிறது.

 

  1. அடிப்படை மக்கள் நலக் (சுகாதார) குறியீடுகள்:
    • சாதியும் மக்கள் நலக் குறியீடுகளும்:

மொத்தப் பொதுநலக் குறியீட்டில் மட்டுமல்ல, சாதி வாரியான குறியீடுகளிலும், தமிழகம், குஜராத்தை விட,  இருபதாண்டு காலத்தில் மேம்பட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, குழந்தை இறப்பு விகிதம், தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களிடையே 90 என்னும் அளவில் இருந்து 37 ஆகக் குறைந்திருக்கிறது. இது 53 அலகுகள் குறைவாகும். இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடையே, இறப்பு 70 லிருந்து 65 ஆக, வெறும் 5 அலகுகளே குறைந்திருக்கிறது. அதே போல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரண விகித்த்திலும்,  தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே, தமிழக முன்னேற்றம், குஜராத்தை விட மிக அதிகம். அதேபோல், ஊட்டச் சத்துக் குறைபாடு, தடுப்பூசி சதவீதம், பிரசவத்துக்குப் பின் மருத்துவ வசதி போன்ற அலகுகளில், தமிழகத்தில், இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த முன்னேற்றம் குஜராத்தை விட அதிகம். தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏற்பட்ட முன்னேற்றம், 2011 ஆண்டில், அவர்களை, குஜராத்தின் முற்படுத்தப் பட்ட சாதியினரை விட மேல்நிலையில் இருத்தியிருப்பதைத் தரவுகள் சொல்கின்றன.

  1. இந்த வளர்ச்சி முரண்பாடுகளுக்கான காரணங்கள் என்ன?

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நிகழ்ந்த 20 ஆண்டுகளில், குஜராத், தமிழகம் – இரண்டு மாநிலங்களுமே, பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்த மாநிலங்கள். ஆனால், மக்கள் நலக் குறியீடுகளில், தமிழகம் குஜராத்தை விட மேம்பட்ட முன்னேற்றத்தைத் தந்திருக்கிறது. இந்த நிகழ்வுக்கான சாத்தியமான காரணங்களை இந்தப் பகுதி ஆய்கிறது.

மக்களுக்கான அடிப்படைச் சேவையை அளிப்பதில், தமிழகத்தின் இந்த ஒப்பு நோக்கிய வெற்றிக்குப் பின்னால், இதை அளிப்பதில், அரசின் தலையீட்டின் தன்மைதான் இருக்கிறது என, பொருளியல் நிபுணர்கள் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் ட்ரீஸ் கணிக்கிறார்கள். அவர்கள் வார்த்தைகளில்,

“Less well known, but no less significant, is the gradual emergence and consolidation of universalistic social policies in Tamilnadu.. Tamilnadu, unlike most other states, also has an extensive network of lively and effective healthcare centres, where people from all social brackgrounds can get reasonably good healthcare, free of cost (2011)”

இதன் பிண்ணனியில், இலவச மதிய உணவுத் திட்டம், இலவச அரசு சுகாதார (மருத்துவ)க் கட்டமைப்பு, அனைவருக்குமான பொது வினியோக (ரேஷன்) அமைப்பு, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் என்பவை இருக்கின்றன.

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்கு ஒரு நெடிய வரலாறு உள்ளது. 1956 ஆம் ஆண்டு, “வகுப்பறையில் பசியை ஒழிப்போம்”  (ராஜீவன், 2006) எனத்துவங்கப்பட்டது இது.  இது ஏழைக் குழந்தைகள், குறிப்பாக கீழ்த்தட்ட்டு சாதிக் குழந்தைகள் பள்ளியை விட்டு நீங்குவதைக் குறைத்தது. இது, 1982 ஆம் ஆண்டு முதல், மாநிலமெங்கும், அனைத்துக் குழந்தைகளுக்கும் என விரிவாக்கப்பட்டது.

“ 1982 ஜூலை மாதம் முதல்,  கிராமப்புற பால்வாடிகள், மற்றும் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் 38 லட்சம் குழந்தைகளுக்கு, தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. பின்னர் இது, நகர்ப்புற குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு, கூடுதலாக 65 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றார்கள்.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இலவச பல்பொடி வழங்கப்பட்டது. 1983 ஜனவரி முதல், முதியோர் பென்ஷன் பெறுபவர்கள் (1.9 லட்சம்), அதற்கு அடுத்த ஆண்டு, ராணுவ வீர்ர்களின் விதவைகள் என இது மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது” (ஹாரிஸ், 1984:4)

பின் வந்த வருடங்களில், இந்தத் திட்டம், ஊட்டச் சத்துக் குறைபாட்டை நீக்கும் அரசின் மற்ற திட்டங்களோடு இணைக்கப்பட்டது. இத்துடன், அரசு, 8 வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகமும், மதிய உணவு பெறும் மாணவ்ர்களுக்கு இலவசச் சீருடையும் வழங்குகிறது. இவையனைத்தும் இணைந்து, ஆரம்ப / உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை / வருகையை அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலமும், மற்ற மாநிலங்களுக்கு முன்பாக பள்ளி மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், பயனாளிகளைச் சென்றடைதல், செயல்திறன் போன்ற அலகுகளில், தமிழகம் மேம்பட்டிருக்கிறது.  44% ஊரக ஏழைக்குடும்பங்களில் இருக்கும் மாணவ்ர்களுக்கு, தமிழகத்தில் சத்துணவு சென்று சேர்கிறது. குஜராத்தில் அது, வெறும் 7.3% மட்டுமே. நகர்ப்புரங்களில், தமிழகத்தில் இது 28% ஆக இருக்கிறது. குஜராத்தில் வெறும் 5% மட்டும்தான் (விஸ்வநாதன், 2006).

அதே போல, சுகாதார, மக்கள் நல அலகுகளில், தமிழகம் மேம்பட்டிருப்பதற்குக் காரணம், அரசு, சுகாதாரக் கட்டமைப்பு, மிக விரிவாக, மாநிலமெங்கும், அனைத்துச் சாதியினரும் எளிதில் அணுகும் வண்ணம் அமைத்திருப்பது மிக முக்கியமான காரணம். அது மட்டுமல்லாமல், தமிழக அரசு, ஒரு நபருக்குச் சராசரியாக, 2005-06 முதல் 2009-10 வரை, ஆண்டுக்கும் ரூபாய் 382 செலவு செய்திருக்கிறது. அதே காலகட்டத்தில், குஜராத் அரசு செலவு  செய்தது, ரூபாய் 265. இதைவிட முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், இந்த இலவசக் கட்டமைப்பு, எப்படி அனைத்து தரப்பு எளிதில் அணுகும் படி இருக்கிறது, அது எவ்வாறு பொதுமக்களால் உபயோகித்துக் கொள்ளப்படுகிறது என்பதே. எடுத்துக்காட்டாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக உள் நோயாளிகளாக (admitted patients) அனுமதிக்கப்படும் நோயாளிகள் செய்யும் செலவு, ஊரகங்களில் ரூ.934 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.1666 ஆகவும் இருக்கிறது தமிழகத்தில். ஆனால், குஜராத்தில், இது, ஊரகத்தில் ரூ.2253 ஆகவும், நகர்ப்புறத்தில்  ரூ 4185 ஆகவும் இருக்கிறது. (ஷர்மா, 2012). அரசு மருத்துவக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள மக்கள் செய்யும் தனிச் செலவு, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் மிக்க் குறைவு என்பதை அமர்த்தியா சென்னும், ட்ரீஸும் உறுதி செய்கிறார்கள். இதே மருத்துவக் கட்டமைப்பில், வெளிநோயாளிகளாக (outpatients), பயன் பெறும் ஊரகப் பொதுமக்கள், சேவையை முற்றிலும் இலவசமாகப் பெறுகிறார்கள்.  அதேபோல, அரசு மருத்துவக் கட்டமைப்பை, தமிழகப் பொதுமக்கள், குஜராத்திகளை விட அதிகம் உபயோகிக்கிறார்கள்.

தமிழக மருத்துவக் கட்டமைப்பின் இந்த மேம்பட்ட செயல்திறனுக்கு, கட்டமைப்பின் நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப்ப் பணியாளர்களிடையே நிலவும் ஒரு நல்லிணக்கமும், ஒன்றிணைந்து செயல்படுதலும் எனச் சொல்லப்படுகிறது. அது மிக முக்கிய காரணமெனினும், இன்னும் வேறு முக்கிய காரணங்களும் உள்ளன.  அது, கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் எழுந்த சமூக இயக்கங்களின் பங்களிப்பு என்கிறார் மெஹ்ரோத்ரா (2006).  இந்த வாதத்தை உறுதி செய்யும் வகையில், சின்ஹா (2012), தமிழகத்தில் உருவான சாதி வாரியான இட ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியை, கிராமப்புறங்களில் வாழும் இடைநிலைச் சாதிகளுக்கும், வகுப்புகளுக்கும் கொண்டு சேர்த்தது என்கிறார்.  இதன் விளைவாக, கிராமப்புறங்களிலும், சிறுநகரங்களிலும் இருந்து, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிய முன்வரும் மருத்துவர்கள் என ஒரு குழு உருவாகியது என்பது அவரது கருத்து.

மேற்சொன்ன காரணிகளுடன், தமிழகத்தில், வறுமை குறைவதில், மக்களுக்கான உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்வதில், தமிழகத்தின் பொது விநியோகக் கட்டமைப்பு (public distribution system) மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.  தமிழகத்தின் பொது விநியோக முறை, மிகச் செயல் திறன் மிக்கது. அது அனைத்து மக்களையும் அணைத்துச் செல்லும் கட்டமைப்பு (Universal) என, அமர்த்தியா சென்னும், ட்ரீஸூம் (2011) பதிவு செய்கிறார்கள்.

1997 ஆம் ஆண்டு முதல், குஜராத் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு மட்டும் (Targeted Public Distribution system) எனப் பொது விநியோக முறையைச் சுருக்கிக் கொள்ள, தமிழகம் தொடர்ந்து அனைத்து மக்களுக்கான பொது வினியோக முறை (Universal Public Distribution system) யைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

பயனாளிகளின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக, தமிழகத்தின் பொது விநியோக முறை அதிகச் செயல்திறனுடனும், வெளிப்படையாகவும் இயங்கி வருகிறது. இந்தக் கட்டமைப்பில், பொருள் திருட்டு (leakage) மற்றும் ஊழல் மிகக் குறைவாக இருக்கிறது. (Srinivasan, 2010). சமீபத்தில், கேரா (2011b) என்பவர், தமிழக பொது விநியோகத் துறை, “ நிர்வாக ஒழுங்கு, வினியோக்க்கப்படும் பொருட்களின் தரம், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே அமைந்திருத்தல், நம்பகத்தன்மை, பதிவேடுகள் பராமரிப்பு, அனைத்து மக்களுக்குமான சேவை” போன்ற அலகுகளில், தமிழகம், இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக, தன் ஆய்வில் கண்டறிந்து வெளியிட்டுள்ளார். பொது விநியோகத்துறை, “அந்த்யோதயா அன்ன யோஜனா” என்னும் மத்திய அரசுத் திட்ட்த்தின் கீழ் வருபவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசியும், மற்றவர்களுகு 20 கிலோ அரிசியும் இலவசமாக 2011 முதல் வழங்கிவருகிறது. (அலமு, 2011)

தமிழகம் போலில்லாமல், குஜராத் மாநில பொது விநியோக அமைப்பு, செயல் திறன் குறைந்தது; அனைத்து மக்களையும் அணைத்துச் செல்லாத முறை (exclusionary) என்கிறார் கேரா (2011 a) குஜராத்தில், தனி நபர் வாங்கும் தானிய அளவு குறைவு அதுவும், குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தனி நபர் வாங்கும் தானிய அளவு இந்தியாவிலேயே அதிகம். அதே சமயத்தில், தமிழகத்தில், பொது விநியோக முறையில் வழங்கப்படும் தானியம், பயனாளிகளுக்கு அல்லாமல், வெளியே செல்வது (Diversion), மிகக் குறைவு, (4.4%). இது குஜராத்தில் மிக அதிகம் (63%). சரியான விநியோக முறையில்லாததாலும், அதன் மக்களை அனைத்துச் செல்லும் முறையின்மையாலும்,  குஜரத்தின் ஏழைகளில் பாதிக்கு மேற்பட்டோர், இந்த அமைப்பிலிருந்து தானியங்களைப் பெறுவதில்லை. தமிழகத்தில் பொது விநியோக முறை அனைத்து மக்களுக்குமாக இருப்பதாலும் (universal), விநியோகக்கட்டமைப்பு மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் இருப்பதாலும், ஏழைகள், தங்களுக்கான உரிமைகளை, மிக எளிதாகப் பெற முடிகிறது. அரசியல் உறுதியும் மக்களின் ஒருங்கிணைந்த அழுத்தமும் இணைந்ததால், இந்தப் பொது விநியோகமுறை, தமிழகத்தில் மிக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

ஊரக வறுமை குறைந்ததில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் செயல்பாடு மிக முக்கியமானது.  இது ஊரக மக்களுக்கு, குறைந்த பட்ச வேலை வாய்ப்பை உறுதிசெய்கிறது. இதன் மூலம், ஊரகச் சமூகத்திற்கு தேவைப்படும் கட்டமைப்புகளை உருவாக்குகிறது. இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை, தமிழகம் மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளது.  ப்ரின்சிடன் பல்கலைக்கழகத்தின், உட்ரோ வில்சன் பள்ளியின் ஆய்வில் (2012), இந்தியாவிலேயே மிக அதிக அளவில், தமிழகத்தில் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றார்கள் எனத் தெரியவருகிறது. சமீபத்தில் நடந்த கள ஆய்வில், தமிழகத்தில், 40% ஊரக்க் குடும்பங்கள், சராசரியாக 60 நாட்களுக்கு மேல் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள் எனத் தெரியவருகிறது.  குஜராத்தில் இது19% மட்டுமே.

இந்தத் திட்டத்தில், தாழ்த்தப்பட்ட (46%) குடும்பங்கள் சராசரியாக 60 நாட்களுக்கு மேல் பயன்பெற்றிருக்கிறார்கள். குஜராத்தில் இது 26% மட்டுமே. பிற்படுத்தப்பட்ட மக்கள் 39% பயன் பெற்றிருக்கிறார்கள். குஜராத்தில் இது 10% மட்டுமே. எனவே, இந்த்த் திட்டம், தமிழக ஊரக மக்களுக்கு மிகப் பெரும் வாழ்வியல் ஆதாரமாக இருக்கிறது. இந்த வேலைவாய்ப்புத் திட்டமும், பொது விநியோக முறையின் இலவச உணவு தானியமும் இணைந்து, ஊரக நிலமில்லா வேளாண் கூலிகளுக்கு ஒரு புது விடுதலையை அளித்திருக்கிறது என்கிறார் விஜய்பாஸ்கர் (2011).

தமிழகத்தில், கிராம அளவில் செய்யப்பட்ட ஒரு விரிவான ஆராய்ச்சியில், கிராமப்புர தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சி, ஊரக அரசியல் சாதிக்கட்டமைப்பை மாற்றியிருக்கிறது. இது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாக, மக்கள் நலவாழ்வுத் திட்டங்கள், மக்களுக்குப் பயன்படும் வகையில் இயங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் ஸ்ரீனிவாசன் (2010).

  1. முடிவுகள்:

இந்தக்கட்டுரையின் தரவுகள் மூலம், வேகமான பொருளாதார வளர்ச்சியுடன்,  மக்கள் நலக் குறியீடுகள் – கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுத் துறைகளில், தமிழகத்தின் முன்னேற்றம், குஜராத்தை விட மேம்பட்டதாக இருப்பது தெளிவாகிறது.  கடந்த 20 ஆண்டுகளில், தமிழகத்தில் வறுமை நிலை, குஜராத்தை விடக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள், சாதி மத பேதமில்லாமல் அனைத்துத் தரப்பினர்களுடனும் பங்கிடப்பட்டிருக்கிறது.  மக்கள் நலக் குறியீடுகளில், தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர், தமிழகத்தில், குஜராத்தை விட அதிகம் பலனடைந்திருக்கிறார்கள்.

1990 களின் துவக்கத்தில், பெரும்பாலான மக்கள் நலக் குறியீடுகளில், குஜராத் தமிழகத்தை விட மேலான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில், அனைத்து மக்கள் நலக் குறியீடுகளிலும், தமிழகம், குஜராத்தை விட மேம்பட்டு வளர்ந்திருக்கிறது. கேரளாவைப் போல, தமிழகத்திற்கு வரலாற்று சாதகங்கள் இல்லை. தமிழகமும், குஜராத்தும் ஒரே அளவு பொருளாதார  வளர்ச்சி வேகத்தைக் கொண்டிருந்தாலும், தமிழகம் மக்கள் முன்னேற்றத்தில் மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தியிருக்கிறது.

குஜராத் மாநிலத்தோடு ஒப்பிடுகையில், தமிழகம், முன்னேற்றக் குறியீடுகளின் அளவில் மட்டுமல்லாமல், வளர்ச்சி வேகத்திலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இது பகவதி மற்றும் அர்விந்த் பனகாரியா பரிந்துரைத்த அதே அளவீட்டு முறையாகும்.

தமிழகம் அடைந்துள்ள இந்த ஒப்பீட்டு மேம்பாட்டிற்கு,  பொது விநியோகம், மதிய உணவு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு போன்ற, அனைத்து மக்களும் பயன் பெறுமாறு தமிழகம் அறிமுகம் செய்து இயக்கி வரும் மக்கள் நலத்திட்டங்கள்தான் முக்கியக் காரணம்.

ஜகதீஷ் பகவதி மற்றும் அர்விந்த பனகாரியா சொன்னது போல், முதலில் பொருளாதார  வளர்ச்சி, அதன் பின்னர் மக்கள் நலன் என்னும் இரண்டு பாக பொருளாதார வழி அல்ல, தமிழகம் செய்தது. பொருளாதார வளர்ச்சி வரட்டும் எனக் காத்திருக்காமல், மக்கள் நலக் கொள்கைகளை வடிவமைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியதுதான் தமிழகத்தின் மேம்பட்ட முன்னேற்றத்துக்குக் காரணம்.

இந்தத் தளத்தில் எழுதப்பட்ட பல புத்தகங்கள் சொல்லும் இன்னொரு விஷயம் உண்டு.  தமிழகத்தின் இந்த மேம்பாடு, வெறும் திட்டங்களால் மட்டும் வந்ததல்ல.  மக்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்த ஒரு சமூகமாகத் திரண்டெழுந்த்தும் மிக முக்கிய காரணம். அது இல்லாமல், திட்டங்கள் வெற்றி பெற்றிருக்கும் வாய்ப்புகள் குறைவு. எடுத்துக்காட்டாக, ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அது தமிழகத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம், ஊரக அளவில், பஞ்சாயத்துகளால் அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுதான்.

புதுமையான அரசு திட்டங்கள், மக்கள் நலன் உணர்ந்து செயல்படும் அரசு நிறுவனங்கள், மக்கள் ஒரு சமூகமாகத் திரண்டெழுதல், அவர்களின் அழுத்தம் இவை அனைத்தும் இணைகையில் திட்டங்கள் வெற்றியடைகின்றன. தமிழகத்தின், சமூக நலத்திட்டங்களின் வெற்றி நமக்குக் காட்டுவது இதுதான்.

 

தமிழில்: பாலா

 

பிற கட்டுரைகள்

இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதையும் தி.ஜானகிராமனும்

$
0
0

t_janakiraman_2

அன்புள்ள ஜெ.,
சொல்வனத்தில் உள்ள “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற இந்தக் கட்டுரையில் தி ஜானகிராமன் சிறுகதைக்கான இலக்கணங்களைச் சொல்லிச் செல்கிறார். கட்டுரை வரைந்த வருடம் 1969. அவருடைய முக்கியமான சிறுகதைகளெல்லாம் அநேகமாக அதற்கு முன்னாலேயே வந்து விட்டன. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முந்திய எழுத்தாளர் அவர். இந்த இலக்கணங்களுக்கான வயது ஐம்பது என்ற வகையிலே இன்றும் இதே இலக்கணங்கள் செல்லுபடியாகுமா? உங்கள் சிறுகதைகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவை. நீங்கள் இன்று இதே கட்டுரையை எழுதினால் எதைக் கொள்ளுவீர்கள், எதைத் தள்ளுவீர்கள்?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்

சிறுகதைபற்றி தி ஜானகிராமன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்
சிறுகதை போன்ற இலக்கியவடிவங்களைப் பற்றி இரண்டு வகையாகப் பேசலாம். ஒன்று புறவயமாக அதன் வடிவ ஒழுங்கு, மொழி, குறிப்புணர்த்தும் தன்மை ஆகிய அம்சங்களைப்பற்றிய விவரிப்பு. இவையே ஒரு பயிற்சி முகாமில் சொல்லப்படவேண்டியவை. பொதுவாக இளம் வாசகனுக்கு உதவியானவை, எழுத்தாளனுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவை. இவையே புறவயமானவை
ஓர் எழுத்தாளன் இதைப்பற்றிப் பேசுவான் என்றால் அந்த பொதுவான வடிவிலிருந்து தான் எப்படி வேறுபடுகிறான் அல்லது எவற்றை ஏற்றுக்கொள்கிறான் என்றும் சொல்லலாம். அந்த வடிவை ஒட்டியும் மீறியும் தான் எழுதிய கதைகள், அவற்றை எழுதத்தேவையாக இருந்த தருணங்கள் ஆகியவற்றை விவரிக்கலாம்.
ஆனால் இந்தக்கட்டுரையில் தி.ஜானகிராமன் அவருடைய சிறுகதை எழுதும் அனுபவங்களை மட்டும் பேசுகிறார். அரிதாக பயிற்சிவகுப்புகளிலேயே எழுத்தாளர்கள் ‘சிறுகதை என்பது ஆழமான உணர்ச்சியின் ஒருதுளி’ ‘அனுபவத்தின் துண்டு’ ‘;நல்ல சிறுகதை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும்’ என்பது போன்ற வரிகளைச் சொல்வதுண்டு. அது சிறுகதையை அவர்கள் புறவயமாக மதிப்பிட்டு யோசிக்கவில்லை என்பதற்கான சான்று மட்டுமே. கணிசமான எழுத்தாளர்கள் தங்கள் இலக்கியவடிவங்களை விமர்சன- இலக்கண நோக்கில் பார்த்திருப்பதில்லை. இத்தகைய கூற்றுகளால் பெரிய பயன் ஏதுமில்லை
சிறுகதையை எப்படி எழுதுகிறோம் என எந்தச் சிறுகதையாசிரியன் சொல்லிவிடமுடியும்? அவன் ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு வகையில் எழுதியிருப்பான். மிக எளிதாக எழுதியவை இருக்கும். சொல் சொல்லாக யோசித்து குழம்பியவையும் இருக்கும். உணர்ச்சிவேகத்துடனும் எழுதியிருப்பான். விலக்கத்துடனும் எழுதியிருப்பான். ஆகவே சிறுகதையின் அகவடிவை, அதை எழுதிய நிலையைப்பற்றிய பேச்சுக்களுக்கு வாசகர்களிடம் எந்தப்பொருளும் இல்லை. அதை ஓர் எழுத்தாளன் வேண்டுமென்றால் கொஞ்சம் புரிந்துகொள்வான்
மற்றபடி ஜானகிராமன் இதில் உத்தேசிப்பது சிறுகதையின் செவ்வியல்வடிவை. அதன் ஒருங்கமைவுள்ள உடல், இறுதிமுடிச்சு, இடமும்காலமும் எல்லைக்குட்பட்டிருக்கும் தன்மை ஆகியவற்றை. நான் அவற்றையே எப்போதும் வலியுறுத்துகிறேன். அந்தச் செவ்வியல்வடிவை மீறிச்செல்லவேண்டும் என்றால் சிறுகதையின் அந்தக்கருவு அதற்கான தேவையை உருவாக்கவேண்டும். அந்தச்சிறுகதை அந்த மீறல் வழியாக செவ்வியல் வடிவில் சாதிக்கமுடியாத எதையேனும் சாதித்திருக்கவேண்டும்
அதாவது சிறுகதையின் செவ்வியல்வடிவமே அது. மீறல்கள் படைப்பூக்கம் வழியாக மட்டுமே பொருள்கொள்பவை
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்

$
0
0

sarkara

 

ஜெ

 

விஜயலட்சுமி முகநூலில் எழுதிய குறிப்பு இது

 

நவீன்

 

 

சர்க்கார் + ஏ.ஆர். முருகதாஸ் எனச் சமூக வலைத்தளங்களில் நிறைய memes, trollsகள் உருவாவதையும் விரைந்து பகிரப்படுவதையும், இன்னொரு பக்கம் ஜெயமோகனை கிண்டலடித்துப் பதிவுகள் பரவுவதையும் பார்த்துக் கொன்டிருந்தேன். இன்று நவீனுடன் விழுதுகள் நிகழ்ச்சியில் பேசிய பின்னர் இதுகுறித்து சற்று விரிவாக உரையாடினேன். பின்னர், முருகதாஸ், கதை திருடப்பட்டதாக கூறிய நபர், பாக்கியராஜ், ஜெமோ இவ்விவகாரம் குறித்து பேசியவைகள், எழுதியவைகளை வாசித்தேன். மிக சுவாரசியமான அதே சமயம் copyright, Intellectual Property Rights குறித்து நீண்ட விவாதங்களையும் தெளிவையும் உருவாக்கக்கூடிய வாய்ப்பை இவ்விவகாரம் உருவாக்கித் தந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், எழுத்தாளர், வாசகர்கள், பிரபலங்கள், முகநூல் வீரர்கள் உள்ளிட்ட பலரும் ஜெயமோகனை கிண்டலடித்து, அவமதித்துக் கடந்து செல்வதை மட்டுமே முழுமூச்சாக செய்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனவருத்தமே மீந்தது. எனது இப்பதிவின்மூலம் உரையாடலுக்கான சூழல் உருவாகுமோ இல்லையோ ஜெயமோகனை போகிர போக்கில் தலைதட்ட நினைப்பவர்களுக்குக் கொஞ்சமேனும் உரைக்கவாவது செய்யட்டும்.

முதலில் தன்னுடைய கதை திருடப்பட்டுவிட்டது என்று கூறுபவர் (1)கரு-idea, (2)கதை, (3)திரைக்கதை இதில் எது திருடப்பட்டது என்று எதையும் தெளிவாகக் குறிப்பிட்டதற்கான சான்றுகள் இல்லை. (அப்படி இருந்தால் நண்பர்கள் குறிப்பிடலாம்). ஒருவேளை கரு திருடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தால் அது copyright சட்டப்படி செல்லாது. அதுவே கதை அல்லது திரைக்கதை திருடப்பட்டதாகக் குறிப்பிட்டு சான்று காட்டினால் ஏ.ஆர். முருகதாஸ் செய்தது சட்டப்படி குற்றமாகும்.

Copyright, Intellectual Property Rights ஆகியவற்றின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வது இவ்விவகாரத்தை அணுக உதவியாக இருக்கும். ஒரு படைப்பு அல்லது ஆக்கம் (1)idea + (2)expression ஆகிய இருகூறுகளின் இணைவின் அடிப்படையில்தான் copyright உரிமைப் பெறுகிறது. இதனை சர்க்கார் பட விவகாரத்துடன் விளக்கினால்:

• ஒருவன் ஓட்டுப்போட வருகிறான். அவன் பெயரில் ஏற்கனவே கள்ள ஓட்டு போடப்பட்டிருக்கிறது. இதையொட்டிய அவனது எதிர்வினை. – இது idea
• அவன் யார், அவன் பின்புலம் என்ன, இச்சம்பவம் நடக்கும் நிலம், அதன் அரசியல், அவன் நேரடியாக பலிவாங்குகிறானா, அரசியலில் குதித்து எதிர்வினையாற்றுகிறானா என்பது போன்றான விடயங்கள் – expression.

ஆக, வெறும் ideaவுக்கு எவ்வித காப்புரிமையும் சர்வ நிச்சயமாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவையனைத்தும் முழுக்க முழுக்க அந்நபர், ஏ.ஆர். முருகதாஸ் சார்ந்த விவகாரம்.

அடுத்து, ஜெயமோகன் இவ்விவகாரம் குறித்து தனது இணையப்பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவு இருவிடயங்களில் சாரம் கொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். (1)தனக்கு ஒற்றை வரி மட்டுமே கொடுக்கப்பட்டது; (2)அதைக்கொண்டு திரைக்கதை வளர்ந்த விதம்.
//தொடங்கும்போது வெறும் ஒரு மெல்லிய ஒற்றைவரிதான் கையிருப்பு// என ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பது idea மட்டுமே. இதைதான் முருகதாஸ் ஜெயமோகனிடம் கொடுத்தார் எனும்போது இதற்கு Copyright சட்டத்தில் இடமில்லை. நிலை இப்படியிருக்க ஜெயமோகனை ஏன் எல்லாரும் வசைபாடுகிறார்கள் என்பதுதான் இவ்விவகாரத்தில் வெளிபடும் முரண்நகை.

ஜெயமோகன் தன் தொடர் வாசிப்பாலும், படைப்புகளாலும், இலக்கிய விமர்சனங்களாலும் இவையனைத்தையும் சமரசமின்றி தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதாலும் தமிழ் இலக்கிய சூழலில் தன் வேரினை ஆழ ஊன்றியவர். அது அவரது இடம். இயல்பாகவே அவர் ஆளுமைமீது மற்றவர்களுக்கு மிரட்சியும், பயமும், பதட்டமும் தோன்றுவதைத் தடுக்கவியலாது.
அதில் அவருடன் சரிசமமாய் நின்று விவாதிக்க முடியாதவர்கள், அவரது படைப்புகளை தர்க்கரீதியாக விமர்சித்து மூக்குடைந்தவர்கள், ஒரு வரிகூட வாசிக்காதவர்கள் தங்களுக்குத் ‘தெரிந்த’ ஒரு விடயத்திற்குள் அவரை இழுத்து வந்து கல்லெறிவதுதான் சர்க்கார் பட விவகாரத்தில் நடந்துள்ளது. இவைதான் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுகள்.

 

விஜயலட்சுமி

https://www.facebook.com/viijay.mj/posts/1484180221684277

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்க்கார்- ஒரு கடிதம்

$
0
0

sar

 

ஜெ

 

கே.பாக்யராஜ் அவர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். திட்டவட்டமாகச் சிலவற்றைச் சொல்கிறார்.

 

1.சர்க்கார் படத்தின் கதைக்கும் வருண் ராஜேந்திரனின் கதைக்கும் நேரடியான தொடர்பு ஏதும் இல்லை. இரண்டும் வேறுவேறு கதை, வேறு டிரீட்மெண்ட். கரு மட்டும்தான் ஒன்று.

 

2 ஏ.ஆர்.முருகதாஸ் வருண் ராஜேந்திரன் கதையை முன்னரே அறிந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி அவர்[ கே.பாக்யராஜ் ]சொல்லவேஇல்லை. சர்க்கார் படத்தின் கதை முருகதாஸின் குழு உருவாக்கிய கதைதான்.

 

3 சர்க்கார் கதை திருடப்பட்டது என அவர்[ கே.பாக்யராஜ்] எங்கேயும் சொல்லவில்லை. அது மீடியா செய்த பிரச்சாரம்

 

உண்மையிலேயே கேட்கிறேன் அப்படியென்றால் என்னதான் பிரச்சினை? நீங்கள் சொன்னதும் இதையேதானே? இதைவைத்துக்கொண்டு ஏன் சென்ற ஐந்தாறுநாளாக உங்களை இணையத்தில் தூற்றினார்கள்? போகிறபோக்கில் நீங்கள் எழுதும் எல்லா கதையுமே திருட்டு என்றுகூட சொல்லிவிட்டார்கள்.

 

எவ்வளவு வன்மம். எத்தனை காழ்ப்பு. உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. நான் ஒன்றும் உங்கள்மேல் விமர்சனம் இல்லாதவன் அல்ல. ஆனால் இந்தக்காழ்ப்பு என்னை பயமுறுத்துகிறது. சில இணைய ஊடகங்களும் திமுக புள்ளிகளும் குறிப்பாக சில இஸ்லாமிய இணையவாதிகளும் இணைந்து உருவாக்கிய காழ்ப்பு இது.

 

இதிலிருந்து வெளிவந்துவிடுவீர்கள் என நினைக்கிறேன்

 

எம்.ராஜேந்திரன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்க்கார், அவதூறுகளின் ஊற்று

$
0
0

sarkar

 

இணையத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் பாக்யராஜின் அரை மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய பேட்டியை பார்த்தேன். கதை திருட்டு ஏதுமில்லை எனவும் அவ்வாறு யாரும் தன்னிடம் சொல்லவில்லை எனவும் இரண்டு கதைகளும் ஒரே போல உள்ளதால் அதற்கு அங்கீகாரம் வேண்டும் என தான் கேட்டதாகவும் சொல்கிறார்.

 

அதேபோல முருகதாஸ் இப்படி ஒரு கதை  முன்பே உள்ளது உள்ளது என்பதை தெரிந்துகொண்டு அதை பார்த்து படத்திற்கு திரைக்கதை அமைத்ததாக தான் சொல்ல வில்லை என்கிற தொனியிலும் பேசுகிறார்.

 

இணையவெளியில்  எப்பொழுது கீழே  விழுவார் என மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும்  நபர்களின் பட்டியல் உண்டென்றால் அந்த வரிசையில் முதலிடம் உங்களுக்குதான். இந்த எதிர்பார்ப்பு உங்களை கீழே தள்ளவும் செய்கிறது.

 

குறிப்பாக இந்த சமூக வலைதளங்கள் அதாவது முகநூல் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை வந்த பிறகு ஓரிரு நாள் காத்திருக்கலாமே என்கிற பொறுமையும் இல்லை,      அதேசமயம்  ஒன்றுக்கு மேற்பட்ட முகங்களை  சூடிக் கொள்பவர்களாகவும்  இந்த இணையம் அனைவரையும்     மாற்றிவிட்டது. மேலும் தன்னை நேர்மையாளன், நடுநிலையானவன் , அடிவருடி அல்ல  என காண்பிக்க வேண்டிய கண்ணுக்குத் தெரியாத கட்டாயம் ஒரு வாசகனின் முதுகில் வந்து அழுத்துகிறது. ஆகவே இந்த வசை.

 

உயர்ந்தவர்கள் சினிமா அரசியல்  என வரக்கூடாது,  வந்துவிட்டால் இதுபோன்ற அபாண்டங்களை சந்தித்தே தீர வேண்டும்.

கிருஷ்ணன்

https://tamil.news18.com/videos/shows/vellum-sol-interview-with-director-bhagyaraj-65527.html

அன்புள்ள கிருஷ்ணன்

 

உண்மைதான். இது நான் சினிமாவுக்குக் கொடுக்கும் விலை மட்டும் அல்ல.

 

வெளிப்படையான திட்டவட்டமான கருத்துக்கள் கொண்டிருப்பதற்காக, நேர்மைக்காக, உரிய தருணங்களில் துணிந்து தனித்து நிற்பதற்காக கொடுக்கும் விலை

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56

$
0
0

bowதிருதராஷ்டிரர் சங்குலனால் ஒரு துணிப்பாவையென கையாளப்படுவதை பார்த்தபடி சஞ்சயன் வாசலில் நின்றிருந்தான். நீராடி முடித்த அவன் உடல் காலைக்காற்றால் உலரத்தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் நாட்கணக்காக நன்கு துயிலாத அவன் உடல் தளர்வை உணர்ந்தது. வாயில் கசப்பு எஞ்சியிருக்க கைகளை நெஞ்சில் கட்டிக்கொண்டு காத்திருந்தான். அப்பால் திருதராஷ்டிரருக்கான தேர் ஒருங்கி நின்றிருந்தது. அவர் தாடை அசைய வெறும்வாயை மெல்வதுபோல் அசைத்தபடி தலையை உருட்டிக்கொண்டிருந்தார். அவ்வப்போது மெல்லிய முனகலோசை அவரிடமிருந்து எழுந்தது. அந்த ஓசை சஞ்சயனை உளமுருகச் செய்தது. அவர் அடிக்கடி முனகுவதுண்டு, ஆனால் அது ஆணையிடுவதுபோலவோ வினவுவதுபோலவோ அரிதாக எதையேனும் ஏற்பதுபோலவோ ஒலிக்கும். அப்போது துயிலின் கனவுகண்டு முனகும் குழவி என ஒலித்தது. அவ்வப்போது தாளமுடியா வலியில் நைந்த உடல்கொண்ட நோயாளனுடைய குரல் என கேட்டது.

சங்குலன் திருதராஷ்டிரரைத் தூக்கிநிறுத்தி கைபற்றி வெளியே கொண்டுவந்து தேரிலேற்றினான். சஞ்சயன் சங்குலனிடம் தலையசைத்துவிட்டு தேரிலேறிக்கொண்டான். திருதராஷ்டிரர் தேர்த்தட்டில் சாய்ந்து அமர்ந்து “ம்” என்றார். தேர் கிளம்பியதும் சஞ்சயன் பெருமூச்சுவிட்டான். தேரை வேறெங்காவது கொண்டுசெல்லலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அல்லது பிறிதொரு போரை சொல்லிவிடலாமா? அவ்வெண்ணத்திலிருந்த அறிவின்மையால் அவனே சலிப்புடன் புன்னகை செய்துகொண்டான். இக்கட்டுகளில் எப்போதும் குழந்தைபோல மீள்வழி நோக்குவதே அவன் வழக்கம். அத்தனை மானுடரும் அப்படித்தானா? இக்கட்டுகளில் இருந்து மீள்வதைப்பற்றி பெரிதும் எண்ணியதெல்லாம் இளமையில்தானே?

வழியெங்கும் திருதராஷ்டிரர் பேசாமல் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தார். வழக்கமாக அவருக்குள் கனவும் நனவுமென கலந்து பெருகியிருக்கும் ஒரு போரைப்பற்றி சொல்லிக்கொண்டே வருவார். சென்ற மூன்று நாட்களாகவே ஆழ்ந்த அமைதிக்குள் சென்றுகொண்டிருந்தார். நோக்குமாடத்தில் ஏற திருதராஷ்டிரர் பெரிதும் வருத்தமுற்றார். மூச்சிரைத்தபடி ஒவ்வொரு படியிலாக நின்று மெல்ல மெல்ல மேலேறினார். மேலும் படிகளிருப்பதை அவர் உணரவில்லை. படிகள் முடிந்ததையும் உணரவில்லை. இருக்கையிலமர்ந்ததும் “சொல்” என்றார். “அரசே, இன்னும் பொழுது விடியவில்லை” என்றான் சஞ்சயன். “ஆம்” என அவர் சொன்னார்.

“அரசே, இன்றைய படைசூழ்கையை பீஷ்மர் ஆமைவடிவில் அமைத்திருக்கிறார்” என்று சஞ்சயன் சொல்லத் தொடங்கினான். “ஆமையின் வலுவான ஓடு என நம் படைகளின் வெளிச்சூழ்கை அமைந்துள்ளது. வலுவான ஷத்ரியப் படையால் மூன்று அடுக்குகளாக ஆமையோடு அமைக்கப்பட்டுள்ளது. கோசலர், காம்போஜர், திரிகர்த்தர், மாளவர், சால்வர், சைந்தவர், சௌவீரர் என பெரிய அரசுகளின் படைகள் முதல்நிரை. ஆந்திரர், ஆபிசாரர், அம்பஸ்தர், அஸ்வாடகர், அஜநேயர், ஆபிரர், அரட்டர், ஆரிவேகர், கர்ணப்பிரவர்ணர், கிதவர், குந்தலர், குலூதர், கசுத்ரகர், காசர், கோவாசனர், சிச்சிலர், சீனர், சுச்சுபர், துஷாரர், துண்டிகேரர் என்னும் படையினர் அடுத்த அடுக்கு. தார்விகர், தசமேயர், நாராயர், பஞ்சநதர், பல்லவர், பானிபத்ரகர், பாரதகர், புளிந்தர், பிரஸ்தலர், மாகிஷ்மதர், முண்டர், மேகலர், லலித்தர், வங்கர், வனாயர், வசாதியர், வடாதனர், விக்ரமர், விகுஞ்சர், வேனிகர், சூரர், சுரசேனர், சம்ஸ்தானர், சிங்களர், சுரஸ்திரர், ஹம்சமார்கர் எனும் படையினர் மூன்றாம் அடுக்கு. ஆமையோட்டுக்குள் நின்றிருக்கின்றனர் நம் படையின் மாவீரர்கள்” என்றான் சஞ்சயன்.

“எதிரியின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கம் கொண்டது இச்சூழ்கை. எதிரிப்படையை ஊடுருவிக் கடந்து சென்று போரிடும் நோக்கம் இன்று இல்லை என எண்ணுகிறேன்” என்றான் சஞ்சயன். “ஆமையின் தலை என பீஷ்மபிதாமகர் நின்றிருக்கிறார். தேவையென்றால் மட்டுமே அவர் ஓட்டுக்குள் இருந்து வெளியே தலைநீட்டுவார். ஆமையின் கால்களென கிருபரும் துரோணரும் அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் நின்றிருக்கிறார்கள். ஆமையின் வயிற்றுக்குள் கௌரவர்கள் நிலைகொள்கிறார்கள். அவர்களுக்குத் துணையென சல்யர் நிற்கிறார். ஆமைச்சூழ்கை முற்றமைந்த பின்னர் அதை நோக்குகையில் எவ்வகையிலும் உட்புக வழியில்லாமல் வாயில்கள் மூடப்பட்ட கோட்டை என தோன்றுகிறது” என சஞ்சயன் தொடர்ந்தான்.

“எதிர்ப்பக்கம் பாண்டவர்கள் வகுத்திருப்பது சிருங்காடகம் என்னும் சூழ்கை. இது தொல்நூல்களில் கோட்டையை எதிரிப்படை தாக்குமென்றால் அவர்களை உள்ளே வரவிட்டு அழிப்பதற்குரியதென்று சொல்லப்படுகிறது. அதை அமைத்திருப்பது ஆமையை எதிர்கொள்வதற்கு அவர்கள் கொண்டுள்ள வழிமுறை. ஆமை அந்த நாற்கர வழிகளில் எதற்குள் புகுந்தாலும் சூழப்பட்டுவிடும். அதை வெளியேறவிடாமல் நெடுநேரம் நிறுத்திவைத்தார்கள் என்றால் போருக்கென நம்மவர் எழுந்தேயாகவேண்டும். அப்போது மீண்டும் இதுவரை நிகழ்ந்த போர்களே நிகழுமென்று தோன்றுகிறது.” திருதராஷ்டிரர் “ம்” என்றார். இருமுவதுபோல அது ஒலித்தது.

அரசே, இரு படைகளும் பொழுதெழுவதற்காக காத்திருக்கின்றன. நின்றிருக்கும் படைகளை பார்க்கையில் அவை ஒரு விழவுக்கே ஒருங்கியிருக்கின்றன என்று தோன்றுவது பெருவிந்தை. அவர்களனைவருக்கும் தெரியும், அப்போர்நாள் முடிகையில் பெரும்பாலானவர்கள் திரும்பப்போவதில்லை என்று. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அங்கு வந்துசேர விருப்பமும் இருந்திருக்காது. ஆனால் அங்கு வந்த பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் போர்தொடங்கும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். யானைகள் உடலை அசைத்து பொறுமையிழக்கின்றன. புரவிகளின் தலைகள் குலைக்கப்படுகையில் பிடரிமயிர் அலையெழுகிறது. அவர்களின் உள்ளங்களிலிருக்கும் பொறுமையின்மையை உடல்களும், உடலமைந்த படைக்கலங்களும், அவர்கள் ஊரும் தேர்களும் மெல்லிய அசைவுகளாக வெளிக்காட்டுகின்றன. அவ்வசைவுகள் இணைந்த சிற்றலைகள் அத்தனை பெரிய வெளியை நிறைக்கையில் நான் காண்பது நீரெனத் ததும்பும் பரப்பை.

பாண்டவப் படையின் மூன்றாவது சந்திப்புமுனையில் நின்றிருக்கிறார்கள் இளைய யாதவரும் பாரதரும். அந்தப் பெரும்படைநிரப்பில் அவர்கள் இருவர் மட்டிலுமே சலிப்பற்றவர்களாக தென்படுகிறார்கள். ஆம், நான் ஒவ்வொருவரையாக பார்க்கிறேன். யுதிஷ்டிரர் சலிப்புற்று தலைதொய்ந்து தாடியை நீவிக்கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து சலிப்பு நகுலருக்கும் சகதேவருக்கும் படர்ந்திருக்கிறது. பீமசேனர் அவரடைந்த சலிப்பை சினமென்று மாற்றி உடலெங்கும் பரவவிட்டிருக்கிறார். திருஷ்டத்யும்னரின் பதற்றத்திற்கு அடியிலும் சாத்யகியின் இறுக்கத்திற்குள்ளும் இருப்பது சலிப்பேதான். அது போர்மேல் கொண்ட சலிப்பல்ல, போரெனக் கூர்கொண்ட வாழ்க்கையின்மேல் கொண்ட சலிப்பு. இப்பால் பீஷ்மரிடம் எப்போதுமிருக்கும் கசப்பு நிறைந்த சலிப்பு இன்று கனிந்து காம்பு முதிர்ந்துவிட்டிருக்கிறது. துரோணரும் கிருபரும் சலிப்பு கொண்டிருப்பது தாங்கள் அதுகாறும் பயின்ற கலையின் மெய்யான பொருள் என்ன என்று அறிந்து. உங்கள் மைந்தர் துரியோதனர் கொண்ட சலிப்பு இறப்பின் பேருரு கண்டவர்களுக்குரியது. சலிப்பின் பெருவெளியில் சலிப்பேயற்ற இரு முகங்களை காண்கிறேன். விளையாட்டுப்பிள்ளைகளுக்குரிய விழிகள். ஒன்றில் இளநகை உள்ளது. இன்னொன்றில் இலக்கடைய எழுபவனுக்குரிய கூர் மின்னுகிறது. சலிப்பில்லாதவர்களே இறுதியில் வெல்கிறார்கள். ஐயம்கொள்ளவேண்டியதில்லை, இறுதிவெற்றி அவர்களுக்கே.

புலரிமுரசுகள் முழங்கத்தொடங்கிவிட்டன. ஓசையை விழியால் அறிவதெப்படி என இப்படையை நோக்கினால் புரிந்துகொள்ளலாம். இரு பக்கமிருந்தும் வீசும் இரு காற்றுகளில் இரு திரைச்சீலைகள் நெளிந்து புடைத்து முன்சென்று உரசித் தழுவிக்கொள்வதுபோல் படைகள் முயங்கிக்கொண்டன. போர் தொடங்கிவிட்டது. ஆமை தன் கால்களை ஓட்டுக்குள் எடுத்து வைத்து சீராக முன்னகர்கிறது. நால்வழிப் பாதை விரிந்து இருபுறமும் அரண் என அமைந்து அதை உள்ளே விடுகிறது. ஆமை தயங்காமல் உள்ளே சென்றுகொண்டிருக்கிறது. ஆமையின் இருபுறங்களையும் சூழ்ந்துகொண்டபின் பாண்டவப் படையின் அம்புகள் அதன்மேல் பொழியத்தொடங்குகின்றன.

நான் காண்பது ஆமையோட்டு வளையத்தை கடக்க முயலும் பேரம்புகளை. அவற்றை கேடயக்காப்பால் தடுக்கிறது ஆமை. நன்கு நுழைந்த பின்னர் ஆமை தன்னை வலமிடமாக திருப்பி நாற்கைச் சூழ்கையின் சுவர்களை உடைக்க முயல்கிறது. ஆமையோட்டின் அடிப்பகுதியே பாதுகாப்பற்றது. ஆமையை உப்பக்கம் காணச்செய்யவே எவ்வேட்டை விலங்கும் முயலும். ஆமையின் தலை வெளியே வருகிறது. ஆமையின் வலப்பக்க மூலையில் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் இணைந்து தாக்குகிறார்கள். ஆமையின் இடப்பக்கத்தை சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் தாக்குகிறார்கள். ஆமையின் முன்கால்களை பீமனும் சர்வதரும் சுதசோமரும் தாக்குகிறார்கள். ஆமையைச் சூழ்ந்து அதன் பின்னங்கால்களை தாக்குகிறார்கள் கிராதர்கள். ஆமை தன்னை தரையோடு பதியவைத்துக்கொண்டு அவர்களைச் சுழற்றி அகற்ற முயல்கிறது.

ஆமையின் தலை வெளியே வருகிறது. அக்கணமே எதிர்பார்த்து நின்றிருந்த இளைய யாதவர் தேரை பீஷ்மரை நோக்கி கொண்டுசென்றார். அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்குமான கூரோடு கூர் ஒக்கும் போர் தொடங்கிவிட்டது. ஆமையின் ஓட்டுவிளிம்பு உடைகிறது. அபிமன்யூ உள்ளே நுழைகிறார். அவர் நுழைந்த இடத்திலிருந்தவர்கள் கௌரவ மைந்தர். அவர்கள் ஏற்கெனவே அவரைக் கண்டு அஞ்சியிருந்தனர். அலறிக்கூவியபடி அவர்கள் பின்னடைய அபிமன்யூ வைக்கோலை எரித்தபடி நுழையும் அனல்துண்டு என உள்ளே செல்கிறார். கௌரவ மைந்தர்கள் பன்னிருவர் களம்பட்டனர். எஞ்சியவர்கள் அலறிக்கொண்டு தேர்களிலிருந்து பாய்ந்திறங்கினர். அவர்களை கிளையுலுக்கி கனியுதிரச் செய்வதுபோல் அவர் கொன்று வீழ்த்துகிறார். கொடிகளின் அசைவை நோக்குகிறேன். அரசே, நாற்பத்தெட்டு கௌரவ மைந்தர் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

ஒவ்வொருவரையாக நான் பார்க்கிறேன். இதோ ஒவ்வொருவரும் தங்கள் எதிரிகளுடன் கோத்துக்கொண்டிருக்கிறார்கள். போரில் அவர்கள் எப்படி இணையானவர்களை கண்டடைகிறார்கள் என்பது விந்தையே. அல்லது அதில் விந்தையென ஏதுமில்லை, அவர்கள் ஒருவரை ஒருவர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரை நோக்குபவர் மற்றவரை நினைவுகூர்கிறார். ஆகவே அவரை எதிர்க்க இவரையே அமைக்கிறார். இரு கையின் விரல்களும் ஒன்றையொன்று அறிந்திருப்பதுபோல. அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுவிட்டார்களென்றால் பாதியை இழப்பார்களா? அல்லது பாதியைப் பெறுவார்களா? இவ்வுலகில் ஒவ்வொருவரும் பாதியளவே என்று கொள்ளலாகுமா?

அரசே, துரியோதனர் பீமசேனருடனும் துச்சாதனர் கடோத்கஜனுடனும் கதைப்போர் செய்கிறார்கள். சாத்யகியும் பூரிசிரவஸும் மீண்டும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டார்கள். திருஷ்டத்யும்னரை துரோணர் சந்தித்துவிட்டார். சகுனியை யுதிஷ்டிரரும் சல்யரை நகுலசகதேவர்களும் எதிர்கொண்டுவிட்டார்கள். அங்கே அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மிகச் சிறந்த அசைவுகளால், மிகக் கூரிய எண்ணங்களால், மிகச் செறிந்த வஞ்சத்தால், பேருருக்கொண்டு சூழ்ந்துள்ள ஊழால் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நான் பீமசேனரின் மெய்ப்புகொள்ளச்செய்யும் பெருங்களமாடலை நோக்கிக்கொண்டிருக்கிறேன். பாலையில் சருகுகளை அள்ளிச்சுழற்றும் சுழலிபோல் கதை சுற்றிவரும் பிராந்தம், நிலம்நடுங்கி நான்கு சுவர்களும் இடிந்துவிழுவதுபோன்ற ஆவிந்தம், பாறையிலறைந்து அலைநுரை எழுவதுபோன்ற உத்ப்ராந்தம், துறைமேடைக்குள் பேரலை புகுந்ததுபோன்ற ஆப்லுதம், ஏரிமதகு திறந்தெழும் நீர் என பிரஸ்ருதம், சீற்றம்கொண்ட எருதுபோன்ற ப்லுதம், முட்டித்தெறித்து இலக்கடையும் ஸம்பாதம், களிற்றுமத்தகம் என குனிந்துவரும் சமபாதம் என்னும் எட்டு கதைச்சுழற்சிகள். உங்கள் மைந்தரும் அணுவிடை குறைவுபடவில்லை. அவர் அறையுமிடத்தை முன்னரே அறிந்திருக்கிறார். அவர் எழும் சுவடுமுறையை தானும் எடுக்கிறார். அரிய போர்த்தருணங்களை தெய்வங்கள் கொண்டாடுகின்றன. ஏனென்றால் மானுடனின் உடலும் உள்ளமும் உச்சம்கொள்வது அப்போதே.

ஒருகணத்தில் போர் முடிய துரியோதனர் தன் தேரிலேறிக்கொண்ட கணம் பாய்ந்து அம்பால் அறைந்து சுநாபனின் தலையை கொய்தெறிந்தார் பீமசேனர். துரியோதனர் தேரில் நின்று தன்னை மறந்து “இளையோனே!” என்று கூச்சலிட்டார். ஷுரப்ரம் என்னும் அந்த அம்பு தோதகத்திப் பெருமரத்தை துண்டுகளாக்குவது என சூதர்களால் பாடப்படுவது. அந்த அம்பு மீண்டும் எழுந்து தன் இளையவராகிய குண்டாசியை நோக்கி எழ கதையை வீசி அவர் தேரை அறைந்து விலகச்செய்து அதிலிருந்து அவரை காத்தார். சீற்றம்கொண்டு முழக்கமிட்டபடி சித்ராயுதர், குந்ததாரர், பலவர்தனர், மகாதரர், அயோபாகு, பகுயாசி ஆகியோர் பீமனை சூழ்ந்துகொண்டார்கள். அவர்களின் அம்புகளை தன் அம்புகளாலும் இடக்கையிலேந்திய இரும்புச்சரடாலும் தடுத்தபடி பீமசேனர் போர்புரிந்தார். துரியோதனர் “மேலும் படைகள் செல்க! தம்பியர் அனைவரும் சூழ்ந்துகொள்க!” என்று கூவியபடி தன் வில்லில் நாணோசை எழுப்பியபடி பீமசேனரை தாக்கினார்.

ஆனால் பீமசேனரின் மைந்தர்களான சர்வதரும் சுதசோமரும் இருபுறத்திலிருந்தும் துரியோதனரை தாக்கினார்கள். அவர் அவர்களை எதிர்கொண்டபடி “தம்பியரை சூழ்ந்துகொள்க… தனியாக எவரும் முன்னெழ வேண்டியதில்லை” என்று கூவினார். அதற்குள் பீமசேனர் சித்ராயுதரின் தலையை அறுத்து வீழ்த்தினார். அவருடைய கூரிய அம்பு உளியின் வாய்விரிவையும் பெருந்தோளர்கள் மட்டுமே ஏந்தி எய்யத்தக்க எடையையும் கொண்டிருந்தது. அந்த வில் அவருடைய தொடையளவு பருத்தது. இரும்பாலானது. அதன் நாண் யானையின் துதிக்கையின் தோலை முறுக்கி செய்யப்பட்டிருந்தது. அரசே, அந்த அம்புகளின் எடையே விசையாகியது. விசையே கூராகியது. குந்ததாரரின் தேரின் மகுடம் உடைந்தது. அவர் தலைதாழ்த்துவதற்குள் உடல் நின்றிருக்க தலை பின்னால் தெறித்து மண்ணில் கிடந்தது.

ஒவ்வொரு கௌரவராக விழத்தொடங்கினர். துரியோதனர் தன் மைந்தரிடமிருந்து விடுபடுவதற்குள் முடிந்தவரை கௌரவரைக் கொன்றுமீள்வதே பீமசேனரின் எண்ணமென தெரிந்தது. பலவர்தனரை அவர் ஜாதுகாங்கம் என்னும் அம்பால் அறைந்தார். வௌவால்போல் சிறகுவிரித்து ஓசையின்றி வந்த அந்த அம்பை அவர் காண்பதற்குள் அது தலைகொய்து சென்றிருந்தது. புலிபோல் உறுமியணைந்த வியாஹ்ரபாணி என்னும் அம்பை கண்டு நடுங்கி வில்லை நழுவவிட்ட மகாதரரின் மார்புக்கவசத்தைப் பிளந்து நெஞ்சுகூட்டை உடைத்து உட்புகுந்தது வாளி. அயோபாகுவும் பகுயாசியும் பின்னடைந்தனர். ஆனால் அவர்களால் பீமசேனருடைய அம்புவளையத்திலிருந்து எளிதில் பின்னடைய முடியவில்லை. அவர்களின் விலாக்கவசங்களை உடைத்தது கட்கபக்‌ஷம் என்னும் பேரம்பு. குண்டசாயி வில்லை விட்டுவிட்டு இரு கைகளையும் தூக்கி கண்மூடி நின்றார். தன் முகத்தில் வழிந்த குருதியை துப்பிவிட்டு நாணிழுத்து அம்புதொடுத்து அவரை நெஞ்சுபிளந்து தேர்த்தட்டில் வீழ்த்தினார் பீமசேனர்.

துரியோதனரின் அம்புகளிலிருந்து தப்பி சர்வதரும் சுதசோமரும் பின்னடைந்தபோது அவர் தன் தம்பியரை நோக்கி திரும்பினார். தன் குருதிதோய்ந்த வில்லைத் தூக்கி ஆட்டி பற்கள் காட்டி வெறியுடன் நகைத்து “அறத்திற்கு இனிது கொழுங்குருதி என்றுணர்க, தார்த்தராஷ்டிரனே!” என்று பீமசேனர் கூவினார். “நில்… ஆண்மையிருந்தால் நில், கீழ்மகனே!” என்று கூவியபடி துரியோதனர் நாணொலியுடன் பீமசேனரை தொடர முயன்றார். “இன்றைய கணக்கு இப்போது முடிகிறது… உன் குடியினர் நூற்றுவரையும் கொன்றொழித்தபின்னர் அக்கணக்கு முடியும்” என்று சொல்லி கூவிச்சிரித்தபடி பீமசேனர் தன் படைகளுக்குள் மறைந்தார்.

“விடாதீர்கள்… விடாதீர்கள் அந்தக் கீழ்மகனை!” என்று கூச்சலிட்டபடி அவரைத் தொடர துரியோதனர் முயன்றார். “அரசே, ஆமையோட்டுச்சூழ்கைக்கு அப்பால் செல்லவேண்டாம்… அங்கே தங்களுக்காக பொறி வைக்கப்பட்டுள்ளது” என்று துச்சாதனர் கூவினார். ஆனால் வெறிகொண்ட துரியோதனர் தன் வில்லில் நாணொலி எழுப்பியபடி மறுபக்கம் வெளிப்பட்டார். அங்கே காத்து நின்றிருந்த நிஷாத அரசர்கள் அவரை சூழ்ந்துகொண்டார்கள். கானனர்களாகிய சுக்ரனும் அவர் இளையோன் சூக்தனும் அவரை எதிர்த்தனர். தங்கள் குறிய ஆனால் விசைமிக்க அம்புகளால் அவர்கள் அவரை நிலையழியச் செய்தனர். விழிக்குச் சிக்கா விரைவுகொண்ட அந்த அம்புகளை எதிர்கொள்ள ஒரே வழி அவற்றை எய்பவரை மிக விரைவாக அணுகிச்சென்று கொல்வதுதான். துரியோதனர் எதிர்பாரா விரைவுடன் நீள்வேலை ஊன்றிப் பாய்ந்தெழுந்து சுக்ரரை அணுகி அவரை குத்தித் தூக்கி அப்பாலிட்டார். அந்தக் கணத்தின் விசைகண்டு திகைத்த சூக்தனை அதே வேலை உருவி எறிந்து வீழ்த்திவிட்டு தன் தேருக்கு மீண்டார்.

துரியோதனர் வெறிகொண்டிருந்தார். நிஷாத அரசர்கள் கொல்லப்பட்ட செய்தியை முரசுகள் அறிவிக்க திருஷ்டத்யும்னரும் சாத்யகியும் இருபுறங்களிலுமிருந்து அவரை நோக்கி வந்தனர். வீழ்ச்சிகாணும்போது வெறிகொள்ளும் இயல்புகொண்ட நிஷாதர்களும் கிராதர்களும் அவரை சூழ்ந்துகொண்டார்கள். அவர் உத்தரநிஷாத நாட்டு இளவரசர்களான தண்டகனையும் தாருகனையும் சுக்ரனையும் சுதீரனையும் வேலெய்து வீழ்த்தினார். அவர்களின் குருதியால் உடல் நனைந்தவராக களத்தில் நின்று வெறியாட்டமிட்டார்.

“அரசே, பின்னடைக! பின்னடைக!” என ஆமைக்குள்ளிருந்து முரசுகள் கோரிக்கொண்டிருந்தன. தமையனின் பின்நிலைக் காப்புக்காக துச்சலரும் துர்மதரும் துச்சாதனரும் வந்தனர். துர்மதர் கிராதகுலத்து சோமித்ரனையும் அக்ரனையும் கொன்றார். துச்சாதனரால் கிராத படைத்தலைவர்கள் உதகனும் சண்டனும் சக்ரனும் கொல்லப்பட்டார்கள். அரசே, அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன செய்கிறோமென்றறியாமல் போர்வெறி கொண்டிருக்கும் துரியோதனரின் கொலையாடல். ஒருவேளை இளைய யாதவரே அவ்வனலை அணைக்கும் நீரென்று அந்த நிஷாதரையும் கிராதரையும் அனுப்பிக்கொண்டிருக்கிறாரோ என்னும் ஐயமே எழுகிறது. அசுரகுலத்து அரசர் ஹிரண்யகட்கர் அதோ துரியோதனரின் அம்புபட்டு சரிகிறார். அவருடைய ஏழு மைந்தர்கள் நெஞ்சிலும் விலாவிலும் அம்புகள் தைத்து நிற்க அலறிச் சரிகிறார்கள். கதையுடன் எழுந்த மச்சர்குலத்து அரசர் மகாகதரை நெஞ்சில் அறைந்து வீழ்த்துகிறார். அவருடைய கொலைவெறி கொல்லுந்தோறும் பெருகிவருகிறது.

பாண்டவர் படையிலிருந்து “செறுத்து நில்லுங்கள்… கௌரவர்களை முன்னேறவிடாதீர்கள்!” என்று ஆணை எழுந்துகொண்டே இருந்தது. சர்வதரும் சுதசோமரும் இருபுறங்களில் இருந்தும் மீண்டும் தோன்றினர். அவர்களுடன் சுருதகீர்த்தியும் இணைந்துகொண்டார். கௌரவர்கள் அவர்களை எதிர்கொண்டனர். சர்வதரும் துச்சாதனரும் அம்புகளால் கோத்துக்கொண்டு விசையுடன் அணுகி கழைகளில் எழுந்து விண்ணில் கதைகளால் மோதிக்கொண்டார்கள். தேர்முகடுகள்மேல் பாய்ந்திறங்கி அங்கிருந்து வீழ்ந்த யானையொன்றின்மேல் நின்று அறைந்து சுழன்றெழுந்து அறைந்து பாய்ந்து எழுந்தமைந்து அறைந்து சுழன்றுவந்து அறைந்து போரிட்டனர். சுதசோமரும் துர்மதரும் மண்ணிலிறங்கி கதையால் பொருதினர்.

சுருதகீர்த்தியின் அம்புகள் துரியோதனரின் கவசங்களை பிளந்தன. அவர் அமையவோ கவசங்களை மாற்றிக்கொள்ளவோ முயலவில்லை. உயிரென்ற ஒன்றை மறந்துவிட்டவரென அவர் மேலும் மேலும் முன்னால் சென்றார். சுருதகீர்த்தி தன் அம்புகள் விசைகொள்ளும் தொலைவை ஈட்டும்பொருட்டு மேலும் பின்னடைந்து பின்னணி வீரர்களில் முட்டிக்கொண்டு நின்றிருக்க தேரிலிருந்து கழையிலெழுந்து வேலால் அவர் நெஞ்சை தாக்கினார். கவசம் உடைய அவர் அக்கணமே தேரிலிருந்து பாய்ந்து பின்னால் சென்று மறைந்தார். பெருங்குரல் எழுப்பியபடி அவர் திரும்பி சர்வதரை அறைந்தார். அவர் விலாக்கவசம் உடைந்தது. மூக்கில் குருதி வழிய அவர் தேர்த்தட்டில் விழ பாகன் தேரை பின்னெடுத்து கொண்டுசென்றான்.

கதையைச் சுழற்றியபடி தார்த்தராஷ்டிரர் போர்க்கூச்சலெழுப்பினார். சுதசோமர் தன் கதையை வீசிவிட்டு பாய்ந்து தேரொன்றிலேறி அதன் பின்பக்கம் பாய்ந்து அப்பால் செல்ல அந்தத் தேர் புரண்டது. அதன் புரவிகள் கனைத்தபடி நின்று சுழன்றன. அதற்குப் பின்னாலிருந்த தேரிலிருந்த பாகன் உரக்க கூச்சலிட்டு குதிரைகளை அறைந்தான். அத்தேரில் இருந்த சதானீகர் துரியோதனரை மிக அருகே கண்டதும் வில்லை கீழே போட்டுவிட்டு அச்சத்துடன் கூச்சலிட்டார். துச்சாதனர் பெருஞ்சினத்துடன் கூவியபடி கதைசுழற்றி சதானீகரை நோக்கி பாய பற்களைக் கடித்து “நில், மூடா!” என்றபடி தார்த்தராஷ்டிரர் துச்சாதனரின் விலாவில் அறைந்தார். நிலையழிந்து துச்சாதனர் தடுமாறி நிற்க சதானீகரை ஒருகணம் நோக்கியபின் தார்த்தராஷ்டிரர் திரும்பிச் சென்றார்.

தமையனின் எண்ணத்தை அறிந்தவர்களாக துச்சாதனரும் பிற கௌரவர்களும் அவரை விட்டுவிட்டு திரும்பிக்கொண்டார்கள். பாகன் சதானீகரின் தேரை இழுத்துத் திருப்பி தங்கள் படைக்குள் மூழ்கடித்துக்கொண்டான். கதையைச் சுழற்றியபடி நின்ற துரியோதனரை நோக்கி பீமசேனரும் சாத்யகியும் சங்குகளை ஊதியபடி வந்தனர். பின்னணிப்படை எழுந்துவந்து தார்த்தராஷ்டிரரையும் கௌரவர்களையும் உள்ளிழுத்துக்கொள்ள ஆமையின் ஓடு இறுக மூடிக்கொண்டது. மூடிய ஓட்டின்மேல் சாத்யகியும் பீமசேனரும் தொடுத்த அம்புகள் வந்து அறைந்தன. அப்பால் கொம்பூதியபடி ஆமையின் தலை அவர்களை நோக்கி திரும்பியது. ஆமை மெல்ல திரும்ப பீஷ்மர் அவர்களை நோக்கி வந்தார்.

ஆமை நாற்கை சூழ்கையின் நடுவே நின்று தன்னை தான் காத்து திரும்பிக் கொண்டிருந்தது. அரசே, இன்றைய ஆமைச்சூழ்கை எவ்வகையிலும் கௌரவர்களுக்கு துணைசெய்யவில்லை என்றே கொள்ளவேண்டும். இன்றும் கௌரவ மைந்தர் அறுபத்தெட்டுபேர் உயிர்துறந்துள்ளனர். கௌரவர்கள் எண்மர் கொல்லப்பட்டனர். பாண்டவர் தரப்பிலோ நிஷாதர்களுக்கும் கிராதர்களுக்கும் இன்று பேரிழப்பென தோன்றுகிறது. போர் தொடங்கி இன்னும் உச்சிப்பொழுதாகவில்லை. அந்திக்குள் எவரெவர் எங்கெங்கே கொல்லப்படுவார்கள் என்று சொல்ல இயலாது. அதை இப்போரை நின்று நடத்தும் தெய்வங்களே அறியும்.

சஞ்சயன் திருதராஷ்டிரரை நோக்கினான். அவருடைய இரு விழிகளிலிருந்தும் நீர்க்கோடுகள் வழிந்து முகத்திலிருந்து மார்பில் சொட்டிக்கொண்டிருந்தன. உதடுகள் பிதுங்கியிருக்க தொய்ந்த தோள்களுடன் அவர் அமர்ந்திருந்தார். மேலும் சொல்வதா என அவன் தயங்கினான். “ஜயத்ரதரை அர்ஜுனர் எதிர்க்கிறார். இளைய பாண்டவருக்கு எதிர்நிற்பதே தன் தகுதி என அவர் எண்ணுவதனால் நின்றிருக்கும் பொழுதை நீட்டிக்கவே முயல்கிறார். ஆகவே அம்புகளை ஒழிகிறார், அம்புகளால் அறைகிறார். ஆனால் அம்புகளின் விசைவட்டத்திற்குள் நுழைவதை முற்றாகத் தவிர்க்கிறார். போரென்றும் ஆட்டமென்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அப்போர்.”

திருதராஷ்டிரர் மெல்ல கலைந்து எழுந்து “என்ன ஆயிற்று பாண்டவ மைந்தனுக்கு?” என்றார். “அரசே, இதோ சுருதகீர்த்தியும் சுதசோமரும் சர்வதரும் அபிமன்யூவும் இணைந்து ஆமையின் வலப்பக்க மூலையின் காப்புச்சூழ்கையை உடைத்து உட்புக முயல்கிறார்கள். யௌதேயரும் பிரதிவிந்தியரும் சுபலரின் மைந்தர்களுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். “அவன், நகுலனின் மைந்தன்…” என்றார் திருதராஷ்டிரர். “அரசே, அவர் தப்பிவிட்டார்… பிரதிவிந்தியருக்குத் துணையாக நிர்மித்ரரும் சுருதசேனரும் நின்றிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். “மிக இளையோர்” என்றார் திருதராஷ்டிரர்.

சஞ்சயன் அவரை பார்த்தான். அவர் கையசைத்து மேலே சொல்லும்படி கைகாட்டினார். “அரசே, அதோ ஆமையின் ஓடு மீண்டும் உடைந்துவிட்டது. சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் அம்புகளைப் பொழிந்தபடி உள்ளே நுழைகிறார்கள். அங்கே காந்தாரத்தின் படைகள் சுபலரின் தலைமையில் நின்றிருக்கின்றன. அவர்கள் அச்சமும் வெறியுமாக கூச்சலிடுகிறார்கள்” என்று சஞ்சயன் சொல்லத் தொடங்கினான். திருதராஷ்டிரர் மீண்டும் விழிநீர் வழிய விசும்பத் தொடங்கினார். அவன் ஒருகணம் தயங்கி அவரை நோக்கிவிட்டு “சர்வதரும் சுதசோமரும் வந்து சேர்ந்துகொள்கிறார்கள். அவர்களை சுபலரின் மைந்தர் தலைமையில் காந்தாரப் படைகள் எதிர்க்கின்றன” என்று சொல்லத் தொடங்கினான்.

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தாளர் முகங்கள்

$
0
0

devi

அன்புள்ள ஜெ.
நலம் தானே. தங்களது இணையக் கட்டுரைகளில் படங்களின் அளவு கட்டுரை அளவிற்கு ஒவ்வாததாக, மிகவும் பெரிதாக இருக்கிறது. There is no symmetry.. எழுத்தாளர்களின் படங்கள் உங்கள் இணையக் கட்டுரைகளில் வருவது நல்ல விஷயம் தான். இது உங்களது இணைய பக்கம் தான். படங்கள் எந்த அளவில் போடுவதற்கும் உங்களுக்கு முழு  உரிமை இருக்கிறது தான். ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும், தீபாவளி விற்பனையை முன்னிட்டு, சரவணா ஸ்டோர்ஸ் தம்பியின் முகத்தை க்ளோசப்பில் மிகப் பிரம்மாண்டமாய், நாளிதழிலும், தொலைக்காட்சியிலும் தொடர்ந்து பார்த்து மிரண்டு போய் இருக்கும் எங்கள் மீது சிறிது அளி கூருங்கள்.
நன்றியுடன்,
சுந்தரம் செல்லப்பா
saravana
அன்புள்ள சுந்தரம் செல்லப்பா
எழுத்தாளர்களின் மிரண்ட தோற்றம் உங்களை ஏன் அச்சுறுத்துகிறது என்று புரியவில்லை. மாற்றிவிட்டேன், சரிதானே? பெரும்பாலான படங்கள் அந்தப்படங்களின் பிக்ஸெல் அளவுக்கு ஏற்ப வடிவம் கொண்டு தெரிந்தன. அவற்றைச் சரிசெய்ய தெரியவில்லை. ஆகவே படங்களையே சிறிதாக்கிவிட்டேன். ஆனால் நாளை இலக்கியப்பொன்னுலகம் அமைகையில் எழுத்தாளர்களுக்கு அண்ணாசாலையில் கட்அவுட் உருவாகுமே , அப்போது என்ன சொல்வீர்கள்?
நான் சொல்புதிது நடத்திய நாட்களில் எழுத்தாளர்களின் படங்களை அட்டையில்போட்டோம். சொல்புதிது பெரிய இதழ். ஆகவே அட்டை மிகப்பெரியது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அப்படி எழுத்தாளர்களின் படங்களைப் போடுவதில் ‘அடக்கமின்மை’ ஒன்று உள்ளது என்றார். ‘அமெரிக்காவில் போடுகிறார்களே” என்றேன். “அது அமெரிக்கா” என்று பதில் சொன்னார்
“ வணிக எழுத்தாளர்களுக்கு போஸ்டர் அடிக்கிறார்கள் என்றால் அது வணிகம். இங்கே எழுத்தாளன் அல்ல, எழுத்தே முன்வைக்கப்பட வேண்டும்’ என சுரா வாதிட்டார். “வாசகன் எழுத்தாளனின் முகத்தை கண்முன் பார்த்தபடித்தான் வாசிக்கிறான். அவனுக்குள் ஒரு முகம் இருந்தாகவேண்டும். ஆகவே படங்கள் தேவை. எழுத்தாளர்களுக்கு நூற்றுக்கணக்கில் படங்கள் வெளியாகவேண்டும். முன்னோடிகள் சிலையாக வடிக்கப்படவேண்டும். பால்ஸாக்குக்கும் ஜாய்ஸுக்கும் மேதைகளான சிற்பிகளால் சிலை வடிக்கப்படலாமென்றால் ஏன் புதுமைப்பித்தனுக்குச் சிலை வடிக்கப்படக்கூடாது ?” என்றேன்
கோணங்கியும் எழுத்தாளர்களின் அட்டைபற்றி கடுமையான கருத்து சொன்னார். ஆனால் மிக விரைவிலேயே அது சிற்றிதழ் ‘டிரெண்ட்’ ஆகியது  சுந்தர ராமசாமியே அட்டைகளில் தோன்றினார். கோணங்கியே படங்களுக்கு போஸ்’ கொடுத்தார்.
சும்மா நினைத்துக்கொண்டேன், அவ்வளவுதான்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வீணை தனம்மாள்

$
0
0

dhana

 

அன்புள்ள ஜெ.,

 

வீணை தனம்மாளைப் பற்றி கல்கி கூறுகிறார் “சங்கீத உலகில் எவ்வளவோ அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். சங்கீதப் பண்டிதர்கள் ரசிப்பதை நம் போன்ற பாமரர்கள் ரசிக்கமுடியாது. சிலருக்கு பல்லவி பிடிக்கும். சிலருக்கு ராக ஆலாபனம்தான் பிடிக்கும். வேறு சிலருக்கு துக்கடாக்களிலே ப்ரீதி. ஆனால், ஒரே ஓர் விஷயத்தில் மட்டும் சங்கீத உலகத்தில் கருத்து வேற்றுமை என்பதே கிடையாது. அது என்னவெனில் கர்நாடக இசையின் சிறப்பை பரிபூரணமாகக் காணவேண்டுமெனில் வீணை தனம்மாளிடம்தான் காணலாம் என்பதுதான். சங்கீதக் கருவிகளுள்ளே தலை சிறந்தது வீணை என்று சொல்லவேண்டியதில்லை.சங்கீத தேவதை பயிலக்கூடிய வாத்தியம் ஒன்று உண்டானால் அது வீணையாகத்தான் இருக்கவேண்டும். தனம்மாள் வீணை வசிக்கும்போதோ சங்கீத தேவதை நம் எதிரில் உட்கார்ந்து வாசிப்பது போலவே பிரமை கொள்கிறோம். ஆனால், தனம்மாள் பாடும்போது இந்தப் பிரமை நீங்கிவிடுகிறது எனலாம். வயது கொஞ்சமா? நஞ்சமா? அறுபதுக்கும் மேலல்லவா ஆகிறது. சாரீரத்தில் இனிமை போய் விட்டது. எனவே, வீணையின் இனிமையை மிகைப்படுத்திக்காட்ட அம்மாளின் சாரீரம் பகைப் புலனாகப் பயன்பட்டது என்றே சொல்லலாம். ஆனாலும், அவருடைய பாட்டு எத்தகைய பாட்டு! என்ன பிடிப்பு! என்ன அழுத்தம்! என்ன கமகம்! ஒருவருடைய இருதய உணர்ச்சி முழுவதும் பாட்டின் வழியாக வெளிப்படக் கூடுமானால், அது தனம்மாளின் பாட்டிலேதான். அம்மாளுக்கு இரண்டு கண்ணும் தெரியாது. ஆனால் அவர் பாடும்போது சிற்சில சமயம் அவர் கண்களிலிருந்து ஒரு அற்புத ஒளி வெளியாவதைக் காணலாம்”

 

இதே கருத்தை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் தன்னுடைய ‘சக்தி’ இதழ் கட்டுரையில்(இவர் பெயரில் வெளிவந்த ஒரே கட்டுரை) கூறுகிறார். அவருடைய புகழ்பெற்ற வானொலிப் பேட்டியிலும் இதே கருத்தைக் கூறிச் செல்கிறார்.

 

https://www.youtube.com/watch?v=T8H_GCH41sw

 

இந்த ஒலிப்பதிவில் பேட்டி எடுப்பவர் சற்றே ‘தொண தொண’ வென்று பேசுவதுபோல் இருந்தாலும் பேட்டியை  உயிருள்ளதாக்குகிறது. பேட்டி எடுக்கப்பட்ட காலம், வானொலிப்பேட்டி, கேட்பவர்கள் பாமரர்கள் என்பதை மனதில் கொண்டால் இவருடைய பங்களிப்பு வேறு பரிமாணத்தைக் கொடுக்கும்.

 

அவருடைய பாட்டி மற்றும் தாயார் அவரவர் காலங்களின் மிகச் சிறந்த விதவாம்சினிகள். ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் என்ற இரண்டு சங்கீத மூலவர்களின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களும் தனம்மாளுக்கு குருவாக அமைந்ததனால் அவருடைய பாடாந்தரம் யாரும் தொட முடியாத வேறு தளத்தில் இருந்ததில் ஆச்சரியமில்லை. காசிக்குப் பல முறை சென்று இதற்குச் சமமாக இந்துஸ்தானி இசையையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் காலத்தில் வாழ்ந்த திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்(வயலின்), சரப சாஸ்திரி(புல்லாங்குழல்), கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர்(வாய்ப்பாட்டு) போன்ற சக கலைஞர்களின் பேரபிமானத்தைப் பெற்றவராக இருந்தார். இவருடன் இசை சம்பந்தமான தொடர்ந்த  உரையாடலில் இருந்தவர்  எழுத்தாளர் மாதவையா.

 

இந்தக் காணொளியில் பேராசிரியை  ரித்தா ராஜன்  வீணை தனம்மாளைப் பற்றிய வரலாறு மற்றும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவருடைய சங்கீத பரம்பரை, குரு பரம்பரை மற்றும் சிஷ்ய பரம்பரையைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார். சிலருக்கு சில வார்த்தைகளின் ஒலி மனதுக்கு மிகவும் பிடித்தமானதாக ஆகி விடுவதால் திரும்பத் திரும்ப உபயோகிக்கிறார்களா தெரியவில்லை.’ரெபெர்டோயெர்’ (Repertoire – பாடாந்தரம் – Specialised Stock of Songs சரியான உச்சரிப்பு ‘ரெபெட்வா ‘) என்கிற வார்த்தையை எத்தனை தடவை உபயோகிக்கிறார் பாருங்கள்.

மிகச் சிறந்த பேட்டி.

 

https://www.youtube.com/watch?v=FvRXFQIeW8I

 

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நம் அச்சமும் அவர்களின் அச்சமும்

$
0
0
ste

ஸ்டீஃபன் கிங்

 

 

தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு

அன்புள்ள ஜெ,
“பேயை அஞ்சுவது ஏன்?” கட்டுரை படித்தேன். பல வருடங்களுக்கு முன், புகழ் பெற்ற திகில் கதை எழுத்தாளரான ஸ்டீபன் கிங்கின் புனைவல்லாத படைப்பான Danse Macabre  என்ற புத்தகத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது..

அதில் கிங் திகில் கதையமைப்புகளை வகைப்படுத்தி விரித்துரைக்கிறார். அருவருப்பால் வரும் பயம் (gross-out), புலப்படாத, பரிச்சயமில்லதன பற்றிய இயல்பான‌ எச்சரிக்கை உணர்வினால் வரும் அச்சம் (fear of the unknown),  சாவைப் பற்றிய பயம் எனப் பலவாறாகப் பிரித்து,ஒவ்வொன்றுக்கும் உதாரணமாக சில படைப்புகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

ஒவ்வொரு கால கட்டத்தில் புகழ் பெற்றிருந்த திகில் படைப்புக்கள் அந்தக் கால கட்டத்தின் சராசரி மக்களது மனதில் குடி கொண்டிருந்த பொதுவான அச்சங்களை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பனவாக இருக்கும் என்கிறார்.

 

உதாரணமாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர்  அணு ஆயுதப் போராக உருமாறும் அபாயம் அமெரிக்க மக்களின் மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரத்தில் வேற்றுக் கிரகவாசிகள் நம் பூமி மேல் படையெடுத்து வரும் கதைகளும் திரைப்படங்களும் அங்கு பிரபலமாயிருந்தன. சிறப்பான எடுத்துக்காட்டாக‌,Jack Finney எழுதிய  Invasion of the Body Snatchers என்ற குறுநாவலைக் குறிப்பிடுகிறார்.  (இந்தக் குறுநாவலைப் பற்றி ஆல்பிரட் ஹிச்காக்கும்  Stories that scared even me என்ற தனது கதைத் தொகுப்பில் சிறப்பித்து எழுதியிருக்கிறார்.)

were

வேர்வுல்ஃப்

 

இந்தப் புத்தகத்தில் கிங் தன்னுடைய சில நாவல்களின் திகில் அம்சம் பற்றியும் பேசுகிறார். சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படமாக‌ வெளிவந்த‌ It என்கிற கதையில் வரும் பேய், ஒருவரின் ஆழ்மனதில் பதிந்துள்ள பயத்துக்கு உருக்கொடுக்கும் சக்தியுடையது.

அதற்கு நேர்மாறாக,  Needful Things என்கிற கதையில் வரும் சில்லறைப் பொருள் கடைக்காரனான‌ சாத்தான், ஆசை வைத்து கைக்கெட்டாமல் போன சின்னப் பொருட்களை இருப்பதாக ஜாலம் காட்டி, அவற்றை அடைய‌ ஆசைப்படும் ஊர் மக்களை சக ஜனங்களிடம் கொடுஞ்செயல்கள் புரியத்  தூண்டுகிறான்.

திகிலூட்டும் படம் என்று தெரிந்தும் அதைத் தேடிப் போய் காசு கொடுத்து நடுங்கிக் கொண்டே பார்க்கும் உந்துதலுக்கான‌ காரணமும் இப்புத்தகத்தில் ஆராயப்படுகிறது. அந்த பயத்தை எதிர்கொண்டு வெல்லும் (confront) ஒரு வழியாகவே அதை கிங் கொள்கிறார்.

டிராகுலாவை நினைத்து நித்தமும் இரவில் பயப்படும் ஒரு குழந்தை உள்ளமே, காலப்போக்கில், அதன் இதயத்தில் ஒரு கூரிய கட்டையைக் குத்தி அதைக் கொல்லும் உபாயத்தைக் கற்பனையில் கண்டுபிடித்திருக்கும் என்கிறார்.
அன்புடன்,

சுப்பிரமணியன்

ly

லைகன்

 

அன்புள்ள சுப்ரமணியன்,

 

அச்சம் என்பது எப்போதும் ஒன்றல்ல. இங்கே வரும் பிரபல பாணி திகில்கதைகளில் வரும் ‘பேய்த்தெய்வங்களை’ ஹாலிவுட்டுடன் ஒப்பிட்டால் இதைக் காணலாம். இவை அச்சமூட்டும்படி சித்தரிக்கப்படுபவை தெய்வங்கள், அல்லது தெய்வகணங்கள். ஒரு பிழையைச் சீர்செய்யவே அவை எழுகின்றன. தண்டிப்பதற்காகவே அவை பலிகொள்கின்றன. உதாரணமாக மாரியம்மன் நோய் அளிப்பவள், நோயே வடிவானவள், ஆனால் நலம்தருபவளும் அவளே.

 

நாம் அச்சமூட்டும் அனைத்தையும் வணங்கி அணுக்கமானவையாக ஆக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை  கொண்டவர்கள் என்பதை இளமையில் நாம் கேட்ட பேய்க்கதைகளை நோக்கினால் புரிந்துகொள்ள முடியும். சமீபகாலமாக மேலைநாட்டு கதைகளை தழுவி உருவாக்கப்படும் பேய்க்கதைகளில்தான் தீங்கிழைக்கும் ‘கெட்ட’ ஆவிகள் பெருகியிருக்கின்றன. அவை மானுடர்களை அழிக்க முயல்கின்றன.

vam

வாம்பையர்

 

பேயை அல்லது கொடுந்தெய்வங்களை உலகமெங்கணும் ஒரே வகையில் பார்ப்பதில்லை. அதிலுள்ள அச்சம், ஒவ்வாமை கூட உலகமெங்கும் ஒன்று அல்ல.அவை வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை

 

ஹாலிவுட் சினிமாக்களில் வரும் ரத்தக்காட்டேரிகள் [vampire] , ஓநாய்தெய்வங்கள் [werewolf] போன்றவை அங்கே தோற்கடிக்கப்பட்ட பாகன் தெய்வங்கள்தான்.அந்த தோற்கடிக்கப்பட்ட தெய்வங்கள் மீதான ஒவ்வாமையும் அருவருப்பும் அச்சமும் அவற்றை பாதாளதேவர்களாக ஆக்கியது. நினைவின் ஆழத்திற்குத் தள்ளியது. அவை மண்ணின் ஆழத்திலிருந்து, நனவிலியில் இருந்து எழுந்து வந்தபடியே உள்ளன.  ஹாலிவுட் படங்களில் இவை எழும் காட்சிகள் எல்லாமே கனவுச்சாயையுடன் இருப்பதை, இவற்றின் உலகம் நனவிலியின் குறியீடாக தோன்றுவதைக் கவனிக்கலாம்.

 

இந்தியாவில் இந்துமதம் அழிந்து செமிட்டிக் மதம் நிலைகொண்டிருந்தால் அனுமன் குரங்குப்பேயாகவும் காளி ரத்தக்காட்டேரியாகவும் கதைகளில் இருந்திருப்பார்கள். சமீபத்தில் மோகன் சி லாசரஸ் பேசிய உரையைக் கேட்டிருப்பீர்கள். அதில் அவர் வெளிப்படையாகவே இந்து ஆலயங்கள் அனைத்தும் சாத்தானின் கோட்டைகள் என்பதைக் காணலாம். ஒவ்வொருநாளும் குமரிமாவட்டத்தில் எவரேனும் இதைச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.இன்றுகூட குமரிமாவட்ட கிறித்தவர்களுக்கு பிள்ளையார் அச்சமும் அருவருப்பும் ஊட்டும் ஒரு கொடுந்தெய்வமே.  என் நாலாம் வீட்டில் ஓராண்டுக்கு முன் பல பாதிரியார்கள் கூடி இரவெல்லாம் பிரார்த்தனை செய்தார்கள், அங்கே ஊடுருவியிருக்கும் பிள்ளையாரை ‘ஓட்டுவதற்காக’!

 

ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் கொடுந்தெய்வங்களே வழிபாட்டுத் தெய்வங்களுமாகவும் இருக்கின்றன. இவற்றை மேலைநாட்டு ஆய்வாளர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. மாயாண்டிசாமி அல்லது முனியசாமி கொடுந்தெய்வமா என்றால் ஆம். அருளும்தெய்வமா என்றால் அதுவும் ஆம்தான். வழிபாடுகளில் நாட்டார்த்தெய்வங்கள் நீடிக்கும் சூழலிலேயே இதை நம்மால் காணமுடியும்.

ganeshநாட்டார் வழிபாடு இந்து மதத்துக்குள் பிரிக்கமுடியாதபடி ஊடுருவியிருக்கிறது. ஆகவேதான் காலபைரவன், சண்டிகை போன்ற தெய்வங்கள் இந்துவழிபாட்டு முறைக்குள் உள்ளன. நாட்டார் வழிபாட்டுமுறை முழுக்கமுழுக்க இந்துமதமேதான். ஆகவேதான் மாயாண்டிச்சாமிக்கு அவதாரநோக்கமும், சிவனுடைய அருளும் உள்ளது. அவருக்கான வழிபாட்டுமுறைமைகள் முழுக்கமுழுக்க சைவ மரபு சார்ந்தவையாக உள்ளன. துதிப்பாடல்களில் எல்லா வரிகளும் சைவ மரபைச்சேர்ந்தவையாக ஒலிக்கின்றன.

 

ஆகவே மேலைநாட்டு பேயுருவகங்கள், கொடுந்தெய்வ உருவகங்கள் ஆகியவற்றை இயல்பாக கீழைநாட்டு பேயுருவகங்களுடனும் கொடுந்தெய்வங்களுடனும் ஒப்பிட்டுவிடக்கூடாது. மேலைநாட்டு உருவகங்கள் செமிட்டிக் மதமான கிறித்தவத்தால் மறு ஆக்கம் செய்யப்பட்டவை. கிறித்தவ உளவியலின் ஆழத்திலிருந்து எழுபவை. அது தீர்க்கதரிசன மதம். ஆகவே கருப்பு வெள்ளை என திட்டவட்டமாகப் பிரித்து வைத்திருக்கிறது.கடுமையான ஒறுப்பையும் அச்சத்தையும் விளையவைத்திருக்கிறது.

 

உதாரணமாக, கிறித்தவ உளவியலில் ஆவி என்றாலே தீயதுதான். ஆனால் இந்திய உளவியலில் அவ்வாறல்ல. மூதாதையர் ஆவியை தெய்வமாக வழிபடும் வழக்கமும் அதற்கான உளவியலும் இங்கு உண்டு. குடும்பத்தில் ஒருவர் மேல் இறந்தவர்கள் ஆவியாக எழுவதை ஒரு நற்பேறென நினைத்து வழிபடுவது பல குடும்பங்களில் வழக்கம். அனேகமாக எல்லா குடிகளிலும் ஆவிகளுக்கு இல்லத்தில் ஓர் அறையில் சோறுபடைத்து வணங்கும் வழக்கம் [புரையில்வைப்பு என குமரிமாவட்டத்தில் சொல்வார்கள்] உண்டு. இங்கே ஆவிகள் பெரும்பாலும் நம்முடன் இருக்கும் நம்முடைய முன்னோர்களே. அவர்களை இயல்பாக எடுத்துக்கொள்வதும் நலம்நாடுபவர்களாக எண்ணிக்கொள்வதுமே நமது வழக்கம்.

hanuman_by_molee-d16bwwr

ஹனுமான், மோலீ வரைந்த ஓவியம்

 

அதேபோல தெய்வங்களின் உருவகங்கள் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். யக்‌ஷி, யக்‌ஷர் என்னும் தெய்வங்கள் மகாபாரதக் காலகட்டத்தில் தேவர்களுக்கு ஒரு படிகுறைவான தேவர்கள். யக்ஷி ஒருவகை வனதேவதை. தீங்கிழைக்காதவள். இசையுடன் தொடர்புடையவள். மலர்களில் வாழ்பவள். அவர்களின் எல்லைக்குள் அத்துமீறினால் மட்டுமே தண்டிப்பவள். அருள்புரிபவள். சமண மதத்தில் யக்‌ஷி கிட்டத்தட்ட தெய்வம். தீர்த்தங்காரர்களுக்குக் காவலாக அமைபவள். பக்தர்களின் வேண்டுதல்களுக்கு அருள்புரிபவள். கூஷ்மாண்டினி, பத்மாவதி, அம்பிகை போன்ற யக்‌ஷிகளுக்கு தனிக்கோயில்களே உண்டு.

 

சமணத்தின் வீட்சிக்குப்பின் யக்ஷி இந்து நாட்டார் மரபுக்குள் புதுவடிவு கொண்டது. தீயூழ் இறப்பு கொண்ட பெண்கள் யக்ஷிகளானார்கள். பழிவாங்கியபின் சிவனிடம் வரம் வாங்கி தெய்வங்களாக அமைந்தார்கள். நாட்டார் மரபிலிருந்த பெண்தெய்வங்கள் பெரும்பாலானவை யக்‌ஷிகளாக மாறின. வைதிக, சமண மரபில் இருந்தபோது யக்‌ஷிகளிடம் இல்லாதிருந்த பயங்கர அம்சம் இவர்களில் குடியேறியது.

 

நாட்டார் தெய்வங்கள் தொடர்ந்து மையமரபால் உள்ளிழுக்கப்படுகின்றன. அவை இங்கே பிசாசுக்களோ பேய்களோ ஆக மாற்றப்படுவதில்லை. வழிபடுதெய்வங்களாக ஆக்கப்படுகின்றன. அவற்றின் அனைத்துப் பண்பாட்டுத்தனித்தன்மைகளும் அப்படியே நிலைநிறுத்தப்பட்டு அவை பெருந்தெய்வங்களுடன் இணைக்கப்படுகின்றன. பதினெட்டாம்படிக் கருப்பசாமி மையவழிபாட்டுக்குள் சென்று முந்நூறாண்டுகளாகின்றன, இன்றும் அவருடைய அனைத்துத் தனித்தன்மைகளும் அவ்வண்ணமே நீடிக்கின்றன

 

நரசிம்மம் மோலீ வரைந்தது

நரசிம்மம் மோலீ வரைந்தது

அய்யனார், முனியாண்டி, கருப்பசாமி என நம் மரபிலுள்ள அத்தனை தெய்வங்களையும் இப்படி விரிந்த வரலாற்றுப்புலத்தில் வைத்தே ஆராயவேண்டும். நமது அச்சம் வேறு அவர்களின் அச்சம் வேறு என்பதை நாம் அப்போது தெளிவுறக் காணலாம். நம் தீயூழ் என்னவென்றால் அப்படிப்பட்ட ஆய்வுகள் இங்கே நிகழ்வதே இல்லை என்பதுதான். இங்கே நிகழும் ஆய்வுகள் மேலைநாட்டு நாட்டாரியல் முன்மாதிரிகளை எந்தப்பரிசீலனையும் இல்லாமல் அப்படியே போட்டு செய்யப்படும் ஆய்வுகள். மேலைநாட்டு ஆய்வாளர்களின் முன்முடிவுகளை தங்கள் இறுதிமுடிவுகளாகச் சென்றடைபவை.அன்றாட அரசியலுக்கு ஏற்ப வரலாற்றையும் பண்பாட்டையும் முழுமையாகவே திரித்துச் சொல்பவை. கூலி எழுத்துக்கள்.

 

சமீபகாலமாக டிஜிட்டல் ஓவியங்களாக வரும் இந்து தெய்வங்களின் சித்தரிப்புகளில் கணிசமானவை அவற்றை கொடுந்தெய்வங்களாக, மேலைநாட்டு லைக்கன்கள் வாம்பயர்கள் போல சித்தரிப்பதைக் காணலாம். இவை பெரும்பாலும் மேலைநாட்டுக் காட்சியூடகங்களின் தேவைக்கேற்ப வரையப்படுபவை. இவற்றால் நம் மனம் மாறிவிடுவதில்லை, ஏனென்றால் நாம் பயங்கரத்தையும் அருளையும் ஒன்றின் இரு பகுதியாகப் பார்ப்பவர்கள். ஆனால் அவர்களின் நோக்கு என்ன என்று அவற்றில் தெரிகிறது.

 

இந்த உள்நோக்கம் கொண்ட ஆய்வுகளால் நம் மரபு முழுமையாகவே தவறாக விளக்கப்பட்டுவிடும் என்றால் எதிர்காலத்தில் நம் வழித்தோன்றல்கள் பெரும் மணற்குவியலை அகற்றியே தங்கள் பண்பாட்டை மீட்டெடுக்கவேண்டியிருக்கும். மீட்டெடுக்க முடியாமலேயேகூட போகலாம்.  மிகப்பெரிய அழிவு அது, அத்தகைய அழிவுக்குள்ளான பல சமூகங்கள் இன்று வரலாற்றில் வெறுமைகொண்டு நின்றுள்ளன.

 

மீண்டும் மீண்டும் இன்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டிய விஷயம் இது

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைக்கரு,கதை,திரைக்கதை-சர்க்கார் ஒரு கடிதம்

$
0
0

sa

சர்க்கார்- ஒரு கடிதம்

சர்க்கார், அவதூறுகளின் ஊற்று

சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்

 

அன்புள்ள ஜெ.,

 

சர்கார் விஷயத்தில் பேசப்பட்ட வம்புகள், அவதூறுகள், நக்கல்கள், உங்கள்மீது வேண்டுமென்றே வீசப்பட்ட வசைகள் எதுவும் வியப்பளிக்கவில்லை. இது இப்படித்தான் நடக்கும்.

 

ஆனால் இவ்விவகாரத்தில் எனக்கு உங்களிடம் கேட்க ஒன்று உள்ளது. பாக்கியராஜ், முருகதாஸ் மற்றும் உங்கள் பேட்டிகளின் படி, இந்தக் கதை திருடப்படவில்லை, ஒரே கதைக்கருவை இருவர் ஒரேபோன்று  எழுதிவிட்டனர்.

 

பாக்கியராஜ் தரப்பு கூறுவது,  இதேபோல 10 வருடங்கள் முன்பே வருண் எழுதிவிட்டதால், அவருக்கு சிறு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்பது. அனைத்து உதவி இயக்குனர்களையும், அவரகளது உழைப்பையும் மனதில் கொண்டு எடுக்கப்பட்ட emotionalஆன, இரக்கமான முடிவு.

 

அப்ப இதேபோல இன்னும் பலர் எழுதியிருந்தால் அவர்களுக்கும் credit கொடுக்கவேண்டுமா(எழுதுவதர்க்கு வாய்ப்பு உள்ள்து என்றே நினைக்கிறேன்) என முருகதாஸ் தரப்பு கூறுவது logicalஆனது.

 

நீங்கள் இதை எப்படிப் பார்க்கிரீர்கள்? சர்காரை முன்வைத்து கேட்கவில்லை. பொதுவாக நான்  ஒரு கதை எழுதி வெளியிடால் வைத்திருக்கிறேன். இன்னொருவர் அதேபோல ஆரம்பம், முடிவோடு எழுதி வெளியிட்டுவிட்டால், கதையின் உரிமையை வைத்து(வணிகத்தை தவிர்த்து), உங்களது தார்மீகமான கருத்து என்ன என நேரமிருப்பின் பதில் அளிக்கவும்.

 

கிரி.

 

அன்புள்ள கிரி

 

உங்கள் கேள்வியிலேயே பதிலையும் சொல்லிவிட்டிருக்கிறீர்கள். தனிவாழ்விலிருந்து வரும் கதைக்கருக்கள் தவிர்த்த பொதுக் கதைக்கருக்கள் அனைத்துமே பலவகைகளில் பல வடிவங்களில் சூழலில் உலவிக்கொண்டிருக்கும்.

 

எந்த ஒரு கதைக்கருவும் சில ஆண்டுகளுக்குள் பொதுவான பேசுபொருளாக ஆகிவிடும். சினிமா என்னும் சின்ன உலகில் இது மிகச்சாதாரணம். நான் எழுதிய பல கருக்கள் , பல காட்சிகள் வேறு இயக்குநர்களின் எழுத்தாளர்களின் சினிமாக்களாக வந்துவிட்டன பத்தாண்டுக்கு முன் நான் எழுதி இன்னமும் படமாக ஆகாத ஏழுகோட்டைவீடு என்னும் திரைக்கதையின் பலகாட்சிகள் சமீபப் படம் ஒன்றில் இருந்ததாக இதழியல் நண்பர் ஒருவர் கூப்பிட்டுச் சொன்னார்.

 

இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு காலச்சூழலில் அதற்கான கதைக்கருக்கள் திரும்பத்திரும்ப பேசப்படும். பின்னர் அக்கருக்கள் காலாவதியாகும். ஐம்பதுகள் வரை விதவைத்திருமணம் ஒரு முக்கியமான கதைக்கரு. சரத்சந்திரர் முதல் ஜெயகாந்தன் வரை அத்தனைபேரும் அதை எழுதியிருப்பார்கள். ஆனால் இன்று அது முக்கியமான கரு அல்ல.  இன்றைய கதைக்கருக்கள் வேறு.

 

கதைக்கருக்கள் ஒரு காலகட்டம் கூட்டாக எதைப்பற்றி அக்கறைகொள்கிறது, எதைப்பற்றி சிந்திக்கிறது என்பதைக் காட்டுகின்றன. சமூகம் கூட்டாகவே வாழ்க்கையைப்பற்றிப் பேசிக்கொள்கிறது. ஒரு படைப்பு உருவாக்கும் கேள்வியையும் பதிலையும் இன்னொன்று மேலும் முன்னெடுக்கிறது. ஒரு காலகட்டத்தின் பொதுவான கதைக்கருக்களை ஒன்றாகச் சேர்த்தால் அந்தக்காலகட்டம் எதைப்பற்றி முன்னுரிமை கொண்டிருக்கிறது என்று தெரியும்.

 

எனக்கு வந்த கடிதங்களைப்பார்த்தால் இந்தக் கருவை இதுவரை ஏழுபேர் எழுதிவைத்திருக்கிறார்கள். இருவர் அதை கதையாக முன்னரே வெளியிட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். வரும்காலத்தில் எல்லா சினிமாக்களுக்கும் இப்படி பலர் கிளம்பி வருவார்கள்

 

கதைக்கரு [theme] வேறு கதை வேறு [ story,plot] திரைக்கதை [screenplay] வேறு. பெரும்பாலான கதைக்கருகள் வெளியே இருந்து கிடைப்பவை, ஏற்கனவே இருப்பவை, ஆகவே பொதுவானவை. ஆகவே அதை சட்டம் தனியொருவருக்கு உரிமையானதாகக் கருதாது. கதையும் திரைக்கதையுமே படைப்பாளியால் உருவாக்கப்படுபவை.  இந்த வேறுபாட்டை  சினிமாஇதழாளர்களும் இணையவம்பர்களும் உடனடியாக உணரவாய்ப்பில்லை. சினிமா சம்பந்தப்பட்டவர்களாவது உணரவேண்டும்

 

ஜெ

 

சர்க்கார், இறுதியாக…

சர்கார்- இறுதியில்…

சர்க்கார் அரசியல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கட்டண உரை –புது அறிவிப்பு

$
0
0

 

77385_thumb

நண்பர்களே,
ஜெயமோகனின் கட்டண உரைக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட சற்று கூடுதலான  ஆட்கள்  பதிவு செய்திருந்தனர்.  இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் வருவதாக பதிவு செய்திருக்கிறார்கள். எனவே நிகழ் இடத்தை சற்று பெரிய கூடத்திற்கு மாற்ற வேண்டியதாக உள்ளது.

 

திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஆர்யாஸ் எதிரே உள்ள  ஆர் ஆர் இன் குளிரூட்டப்பட்ட கூடத்தில் இந்த நிகழ்வை நடத்துகிறோம். பெரிய கூடம் என்பதால் மேலும் வருகையாளர்கள்  அமர்ந்து இந்த உரையைக் கேட்கலாம். நுழைவுக்கான முன்பதிவை மீண்டும் இதோ திறக்கிறோம்.

 

நமது இன்றைய சிந்தனைமுறை உருவாகி வந்தது எவ்வாறு?’  என்கிற தலைப்பில்  ஜெயமோகன் கட்டண உரை  நிகழ்த்துகிறார்.

 

logo-og

பங்கேற்க விரும்புவார்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணில் ரூபாய் 150 ஐ செலுத்தி உங்கள்

 

பெயர்:

தற்போதைய ஊர் :

வயது :

தொழில் :

தொலைபேசி :

மின்னஞ்சல் :

விவரங்களை குறிப்பிட்டு எனக்கு ஒரு மின்னஞ்சல் செய்யவும்.
உரையின் கால அளவு  100 நிமிடங்கள். கூட்டம் சரியாக மாலை 5.30 க்கு துவங்கி  7.10  க்கு நிறைவுபெறும்.

 

 

இதன் காணொளியை யு டியூபில் காண இயலாது

சனிக்கிழமை இரவு சுமார் 40, 50 பேர் நெல்லையில் தங்குகிறோம். ஜெயமோகன் நவம்பர் 10 காலை நெல்லைக்கு வந்து   நவம்பர் 11  மதியத்திற்கு மேல்தான் ஊர் திரும்புகிறார். நவம்பர் 11 ஞாயிறு காலை ஜெயமோகனுடன் அருகே உள்ள சில கோயில்களுக்கு சென்று சிற்பங்களை காணும்  திட்டமும் உள்ளது. நவம்பர் 10 இரவு தங்க விரும்புபவர்கள்  மற்றும்  மறுநாள்  காணுலாவில்  கலந்துகொள்ள விரும்புபவர்கள் தகவல் கொடுக்கவும்.
முன் பதிவாளர்களின் விபரங்களை சரிபார்ப்பதற்காக  மாலை 5 மணிக்கே நிகழ்விடத்திற்கு வந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முன்பதிவு இல்லாமல் நேரடியாக  வருபவர்கள் இடம் இருக்கும் பட்சத்தில் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.

 

Account details :

A.S Krishnan,

Indian Overseas bank,

District Court, Erode.

Account no. : 182501000008406

IFSC: IOBA0001825

 

இடம் :    ஆர் ஆர் இன்,

ஜங்ஷன்  பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி.

நாள் & நேரம் : 10-11-2018, மாலை சரியாக 5.30.

 

கிருஷ்ணன்

98659 16970.

மின்னஞ்சல் : salyan.krishnan@gmail.com

 

நெல்லையில் தொடர்புகொள்ள

ஜான் பிரதாப் : 8098016596
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57

$
0
0

bowசஞ்யசனின் கைகள் ஆடிக்குமிழிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் பிரித்தும் காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தன. அவன் கண்விழிகள் அசைந்த விரைவிலேயே அவை நிகழ்ந்தன. அவன் உள்ளத்தின் விசையை கண்களும் அடைந்திருந்தன. எனவே எண்ணியதை அவன் நோக்கினான். எண்ணிய இடத்தில் இருந்தான். ஏதோ ஒரு தருணத்தில் அவன் தன் எண்ணத்துக்கேற்றவற்றை கண்டான். தன் அகப்போக்குக்கு இயைய அப்போரை தொடுத்துக்கொண்டான். இறுதியில் அவன் அறிந்த அப்போரை அவனே அங்கே அமைத்துக்கொண்டிருந்தான்.

“ஆம் அரசே, நான் இப்போது சொல்லிக்கொண்டிருப்பது அக்காட்சிவெளியில் நான் அமைத்து விளையாடும் போரைத்தான். ஆனால் எவர் அந்தப் போரை முழுதறியவியலும்? மானுடரால் இயல்வதாகுமா அது? அங்கே நின்றிருக்கும் ஒவ்வொருவரும் அவரவர் போரை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். இமையா விழியன் அர்ஜுனர். விழிக்கு மேல் விழித்திருக்கும் பீலிவிழி கொண்டவர் இளைய யாதவர். அவர்களும் மானுடரே. தேவர்கள் அறிவரா இப்போரை? விழைவோ வஞ்சமோ எண்ணமோ எதிர்நோக்குதலோ கொண்ட எவருக்கும் அவர்கள் அறிவதை அவ்வுணர்வுகளே சமைத்தளிக்கும். தேவர்கள் உணர்ச்சிகள் கொண்டவர்கள். ஆகவே அவர்களும் இப்போரிலாடுகிறார்கள்.

எண்ணுகில் முத்தெய்வங்களும் உணர்ச்சிகள் கொண்டவர்களே. அவ்வுணர்ச்சிகளால்தான் அவர்கள் முழுமுதல் பிரம்மத்திலிருந்து உருக்கொண்டு எழுந்தனர். அறிவது ஆகாய வடிவான அதுவே. அல்லது அதுவும் அறியாது. ஏனென்றால் அது இருக்கும் அம்முழுமையில் அறிவதும் அறிபடுவதும் அறிதலும் ஒன்றே. அங்கே நிகழ்வதும் நிகழாமையும் வேறல்ல. ஆகவே அறிதலும் அறியப்படாமையும் ஒன்றே.

அரசே, இன்று இப்போரிலிருந்து நான் அறிவதே மிகப் பெரிய மானுடக்காட்சி என்க! இன்னும் கருக்கொள்ளாத, இனிமேல் பிறந்து பிறந்தெழும் மானுடருக்கெல்லாம் என்னுடையதே விழி. நான் அங்கிருந்து இங்கு நோக்கிக்கொண்டிருக்கிறேன். எனில், நான் நோக்குவது எதை? இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் இப்போர் எல்லையற்றது, அலகிலாதது. இதில் நாளையோர் நோக்க விழைவதை இன்றென நோக்குகிறேனா? வருவோருக்கு தெய்வங்கள் அளிக்கவிழைவனவற்றை மட்டுமே அள்ளிக்கொள்கிறேனா? அரசே, நான் இதோ காண்பவை இன்றில் நிகழ்கின்றனவா, அன்றி நாளை உருவாகப்போகும் நேற்றில் நிகழ்கின்றனவா? இவை எவருடைய புனைவு? நான் புனைகின்றேன் எனில் நான் எவருடைய சொல்லின் கரு?

அதோ இளைய பாண்டவர்களால் ஆமையின் ஓடு உடைபடுகிறது. ஆமை அசைந்து திரும்புவதற்குள் அந்த இடைவெளியினூடாக அவர்கள் உள்ளிருக்கும் காந்தாரர்களை தாக்குகிறார்கள். காந்தாரரான சுபலர் தன் அரச மைந்தர்களான அசலரும் விருஷகரும் இருபுறமும் துணைவர குலமைந்தர்களான கஜன், கவாக்ஷன், சர்மவான், ஆர்ஜயன், சுகன் ஆகியோர் தொடர அவர்களை எதிர்கொண்டார். அசலனின் மைந்தர்களான தீர்க்கபலனும் பாகுபலனும் விருஷகரின் மைந்தர்களான விருஷதர்ப்பனும் விருஷகீர்த்தியும் அவர்களுக்கு பின்னணி அமைத்தனர். அம்புகளுடன் அம்புகள் இணைந்து அனலெழுகின்றது. வெறிகொண்ட வீரர்கள் அம்புகளில் தங்கள் விசை முழுதெழவில்லை என உணர்ந்தால் கூச்சலிட்டபடி பாய்ந்து நிலத்திலிறங்கி வாள்களாலும் வேல்களாலும் கதைகளாலும் மோதிக்கொண்டார்கள்.

சுபலருக்குத் துணையாக அஸ்வாடகர்களும் அஜநேயர்களும் துண்டிகேரர்களும் தசமேயர்களும் பாரதகர்களும் மேகலர்களும் வேனிகர்களும் அடங்கிய படை எழுந்தது. ஒருகணமும் கைசலிக்காது சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் நின்று பொருதினர். தசமேய இளவரசர்களான சுபர்ணன், சுபக்‌ஷன், சுகீர்த்திமான் ஆகியோரை சுருதகீர்த்தி கொன்றார். பாரதக இளவரசர்களான உத்கதன், உஜ்வலன், ஊர்ஜன் ஆகியோரை அபிமன்யூவின் அம்புகள் கொன்றன. வேனிக இளவரசர்களான சாமனும் சங்கசித்ரனும் சுதேவனும் சுமுகனும் அதோ இறந்துவீழ்கிறார்கள்.

சுபலருக்கு சகுனியின் ஆணை எழுகிறது. அது அவருக்கு மட்டுமே புரியும் முழவொலி என எண்ணுகிறேன். அவர் பிற அரசர்களை அபிமன்யூவின் முன்னால் செலுத்திவிட்டு தன் மைந்தர்கள் பெயர்மைந்தர்களுடன் பின்னடைகிறார். அபிமன்யூ கொலைவெறியிலிருந்தமையால் அதை அறியவில்லை. துண்டிகேரர்களின் இளவரசர்களான முக்தனையும் முகுந்தனையும் மூர்த்திமானையும் அவர் கொன்று சரித்தார். அஸ்வாடக இளவரசர்களான குண்டலனையும் சாருகேசனையும் சாருசித்ரனையும் குந்தளனையும் குமாரதேவனையும் அவருடைய அம்புகள் தேரோடு சேர்த்து அறைந்து நிறுத்தின.

சிறு அரசுகளில் சிறுகளரிகளில் படைக்கலப்பயிற்சி பெற்ற அந்த இளவரசர்கள் அத்தனை ஆற்றல் மிக்க அம்புகளை அறிந்ததில்லை. ஓர் இலக்கும் பிழைக்காத வில்லவனுடன் எதிர்நின்று பொருதுவதன் பயனில்லாமையை அவர்கள் உணர்ந்துவிட்டமையால் நிரைநிரையாக வந்து அபிமன்யூவின் முன் உயிர்கொடுத்தனர். மெல்லிய எதிர்ப்புகூட இல்லாமல் அஜநேயர்களின் இளவரசர்களான கலாதனும் சுஜாதனும் மேகரூபனும் விலாசனும் விதேகனும் அம்புகளால் துண்டாடப்பட்டனர். வேனிகர்களின் இளவரசர்களான சுமூர்த்தனும் சுபத்ரனும் பார்க்கவனும் பார்திபனும் பாவகனும் ஹரிதனும் ஹரனும் அம்புகளுக்கு தங்களை ஆட்கொடுத்து துடித்து வீழ்ந்தனர்.

சுபலரின் படைகள் பின்னடைந்தபோது ஆமையோட்டின் இன்னொரு வளைவை உடைத்தபடி சகதேவரும் நகுலரும் உள்ளே நுழைந்தனர். சுபலர் அந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. தன்னைச் சூழ்ந்து நின்றிருந்த கர்ணப்பிரவர்ணர், கிதவர், குந்தலர், குலூதர் ஆகிய சிற்றரசர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து அவர்களை எதிர்கொள்ளச் செய்தார். ஆனால் நகுலரும் சகதேவரும் உச்சவிசைகொண்டிருந்தார்கள். இருவரும் ஒருவரே எனத் தோன்றினர். ஒருவர் இரண்டு இடங்களிலென திகழ்ந்தனர்.

சகதேவர் குந்தலர்களின் அரசரான மகராக்ஷனையும் அவர் மைந்தர்களான சந்திராக்ஷனையும் மதனனையும் கொன்றார். நகுலர் கிதவர் குலத்து அரசர் வாயுவேகனையும் அவர் மைந்தன் வாதவேகனையும் கொன்றார். சகுனியின் ஆணை சுபலரும் மைந்தர்களும் பின்வாங்கும்படி எழுந்துகொண்டே இருந்தாலும் அவர்களால் பின்னடைய முடியவில்லை. அவர்கள் ஒருவரோடொருவர் முட்டிமோதினர். அவர்களை காக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட சிற்றரசர்களின் எண்ணிக்கையே அவர்களை சேறுபோல சிக்கவைத்தது.

சுபலரும் அசலரும் விருஷகரும் தங்களை மூன்று அணிகளாக பிரித்துக்கொண்டனர். சுபலருடன் கஜனும் கவாக்ஷனும் அசலரின் மைந்தர்களான தீர்க்கபலனும் பாகுபலனும் சென்றனர். விருஷகரின் மைந்தர்களான விருஷதர்ப்பனும் விருஷகீர்த்தியும் அசலருடன் சென்றனர். சர்மவானும் ஆர்ஜயனும் உடன் சென்றனர். விருஷகர் அரட்டர் குலத்து அரசர் ஆரியமானையும் அவர் மைந்தர்களான சாருசித்ரனையும் சாத்விகனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். சுகன் அவருடன் இருந்தார். ஆரிவேக நாட்டு அரசர் விசித்ரநேத்ரனும் அவர் மைந்தர்களான சுநேத்ரனும் சுவாக்கும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். படை அமைந்ததும் அவர்கள் துணிவுகொண்டு நகுலசகதேவர்களை எதிர்த்தனர். நகுலரை சுபலரும் சகதேவரை அசலரும் எதிர்கொள்ள விருஷகர் நடுவே நின்று இருவரையும் பிரித்து ஊடுருவிச்செல்ல முயன்றார்.

நகுலர் எடுத்த அதே அம்பையே சகதேவரும் எடுத்தார். இருவரும் ஒரேகணம் நாணிழுத்து ஒரே மின் என அம்பு தொடுத்தார்கள். இருவரின் இலக்குகள் மட்டுமே மாறுபட்டன. அல்லது அவர்கள் இருவரும் இணைந்தே இலக்குகளை தெரிவுசெய்தனர். ஆந்தைபோல முழங்கியபடி எழும் ஹிக்காஸ்திரத்தால் ஆரிவேகநாட்டு இளவரசன் சுநேத்ரனை நகுலர் கொன்றார். வெறியுடன் நெஞ்சிலறைந்தபடி நகுலரை நோக்கி பாய்ந்த அவர் தந்தை விசித்ரநேத்ரனை சகதேவரின் கதம்பாஸ்திரம் வீழ்த்தியது. சுவாக் கதறியபடி தந்தையை நோக்கி செல்ல அவர் தலையை வெட்டிவீசியது சகதேவரின் கட்கபாணம்.

சுழன்றுவரும் சக்ரபாணம் அரட்டர்குலத்து அரசர் ஆரியமானை கொன்றது. அவர் மைந்தர்களான சாருசித்ரனையும் சாத்விகனையும் தேடி மீண்டும் அந்த அம்பு சுழன்று வந்தது. சாருசித்ரன் தேரிலேயே அறுபட்டு சுழன்றுவிழுந்தார். சாத்விகனின் தலையை கொய்து சென்ற சகதேவரின் அம்பு பிறிதொரு படைத்தலைவன் நெஞ்சில் பாய்ந்து சுழன்று புகுந்து நிலைகொண்டது. சாத்விகனின் தலையும் உதிரும் விதைபோல் சுழன்று நிலத்தில் விழுந்து திரும்பி நின்றது. நகுலர் சுகனை கொன்றார். உடல் நிலமறைந்து விழ அதன்மேல் மேலும் பொழிந்து நின்றன அம்புகள். கவாக்ஷனை சகதேவர் கொன்றார். அவர் அம்புகளால் அறையப்பட்டு தேர்த்தூணில் ஒட்டியிருந்து தவித்து துடித்து கால்மடிந்து சரிந்தார்.

அக்கொலைகளாலேயே போர் செல்லும் திசையை காந்தாரர்கள் உய்த்தறிந்துவிட்டிருந்தனர். சுபலர் சகுனியின் பின்துணை வரும்வரை சகதேவரையும் நகுலரையும் தடுத்து படைகாக்கவே விழைந்தார். ஆனால் அசலரின் மைந்தர்களான தீர்க்கபலனும் பாகுபலனும் இளையோர். அவர்கள் போரிலிறங்கும் முன் அச்சமும் கிளர்ச்சியும் கொண்டவர்களாகவும் போர் தொடங்கியபின் தங்கள் உள்ளத்தின் கட்டிலா வெறிக்கு முற்றாக அளித்துவிட்டவர்களாகவும் இருந்தனர். அரசே, போரில் சற்றேனும் தன்னை எண்ணுவோர் மணந்து மைந்தரை ஈன்றவர்கள் மட்டுமே.

நகுலரால் தீர்க்கபலன் கொல்லப்பட்டார். அவருடைய உடல் தேர்த்தட்டை அறைந்து விழ உயிர்விசையில் அவர் கைகள் தேர்த்தூணை பற்றிக்கொண்டன. அதே கணம் பாகுபலனும் நெஞ்சில் அம்புபாய்ந்து விழுந்தார். இரு நிகழ்வுகளையும் ஒற்றைக் கண்ணசைவிலெனக் கண்டு சுபலர் வீறிட்டலறினார். அசலர் அவர்களை நோக்கி ஓடிவந்தார். அது அவர் செய்த பிழை. அவருடைய நெஞ்சில் சகதேவரின் பேரம்பு உடைத்துப்பாய்ந்து நின்றது. சுபலர் தேர்த்தட்டில் அமர்ந்து தலையிலறைந்து கதறினார். அவருடைய தேரை பின்னிழுத்தான் பாகன்.

தீர்க்கபலனின் உடல் தேர்த்தட்டிலிருந்து சரிந்தது. அவர் கைகள் தேர்த்தூணை இறுகப்பற்றியபடி இறந்துவிட்டிருந்தன. அவர் உடல் தேரிலிருந்து தொங்க தேர் சுற்றி அலைக்கழிந்தது. அதன் பாகனின் கழுத்தை சீவிச்சென்றது பிறைவாளி. தேர்க்குதிரைகள் நிலையழிந்து கனைத்தபடி ஓடின. தேர் கவிழ்ந்தது. அதற்கு அடியில் தீர்க்கபலன் சிக்கிக்கொண்டார். விருஷகர் கூச்சலிட்டபடி நகுலரை நோக்கி சென்றார். சுபலர் “பின்னடைக! பின்னடைக!” என்று கூவிக்கொண்டிருக்க விருஷகரும் நகுலரும் அம்புகோத்துக்கொண்டார்கள். விருஷகருக்கு துணைசென்ற சர்மவானும் ஆர்ஜயனும் நகுலரும் சகதேவரும் எய்த அம்புகள் பட்டு சிதறிவிழுந்தார்கள். அவர்களின் விழிகளை இருவர் ஒருவரென்று ஆகி நின்றமை மயக்கியது. தங்களைக் கொன்றது எவர் என்று அறியாதவர்களாகவே அவர்கள் விண்ணேகினர்.

விருஷகரின் அம்புகளில் ஒன்று நகுலரின் தோள்கவசத்தை உடைத்தது. பிறிதொன்று கையின் கங்கணத்தை சிதறடித்தது. சுபலர் கைநீட்டி “வேண்டாம்! பின்னடைக!” என்று கூவிக்கொண்டே இருக்க அவர் நோக்கில் சுபக்‌ஷம் என்னும் பேரம்பு எழுந்து வந்து விருஷகரின் கழுத்தை அரிந்து நிலத்திலிட்டது. அவர் நெஞ்சில் ஓங்கியறைந்தபடி தேரிலிருந்து பாய முயல ஆவக்காவலன் அவர் கால்களைப்பற்றி இழுத்து தேர்த்தட்டிலிட்டான். தேர் திரும்பி கௌரவப் படைக்குள் மூழ்கியது.

சகுனியின் ஆணைப்படி ஆர்ஸ்யகுலத்து அரக்கர்களின் படை ஒன்று தேர்நிரைகளை தாவிக் கடந்து வானிலிருந்து உதிர்பவர்கள்போல நகுலரையும் சகதேவரையும் எதிர்க்க களத்தில் வந்து இறங்கினர். எடைமிக்க இரும்புக்கவசங்களை அணிந்துகொண்டு பெரிய கதைகளையும் கொக்கிக் கயிறுகளையும் படைக்கலங்களாக்கி போரிடும் ஆர்ஸ்யர்களின் தலைவனான ஆர்ஸ்யசிருங்கி பீமசேனரால் கொல்லப்பட்ட அரக்கர்குலத்தவனாகிய ஜடாசுரனின் குலமைந்தன். தன் குடித்தெய்வத்தின் முன்னால் பாண்டவர்களை கொல்வதாக வஞ்சினம் உரைத்தவன். அவர்கள் ஒருவரைப்போல் பிறிதொருவர் தோன்றும் கலை அறிந்தவர்கள். ஒருவரின் பின் ஒருநூறுபேர் பிசிறின்றி நின்றிருக்கும் திறன் கொண்டவர்கள்.

ஆர்ஸ்யசிருங்கி தன் கதையை நிலத்திலறைந்து பேரோசை எழுப்பியபடி தன் முன் வந்து நின்றபோது அவன் ஒருவனே வந்துள்ளான் என்று நகுலர் எண்ணினார். ஆனால் அவனுக்குப் பின் முற்றிலும் அவனால் மறைந்து அவனைப்போலவே என நூற்றுவர் நின்றிருந்தனர். அம்புக்கு விசைகூட்டும்பொருட்டு தன் தேரை மேலும் மேலும் பின்னிழுத்தபடி நாணிழுத்து எடையும் விசையும் கொண்ட அம்புகளை அவன்மேல் தொடுத்தார். அவன் கவசங்களில் அம்புகள் கூழாங்கற்கள்போல பட்டு உதிர்ந்தன. அவன் தன் கதையைச் சுழற்றி தேர்களை அறைந்தான். கொக்கிகளால் வீரர்களை கவ்வி இழுத்து பெரிய காலால் உதைத்து கழுத்தையும் முதுகையும் முறித்தபடி முன்னால் சென்றான்.

நகுலரின் அம்பு அவன் கவசத்தை உடைக்க அக்கணம் சகதேவர் எய்த அம்பு அவன் நெஞ்சைப்பிளந்து உட்புகுந்தது. கதைவீசியபடி எழுந்த ஆர்ஸ்யசிருங்கி அலறியபடி மண்ணில் விலாவறைந்து எடையோசையுடன் விழ அவன் நின்றிருந்த இடத்தில் அவன் சற்றும் குறையாமல் நின்று கதைவீசி கொக்கரித்தான். சகதேவரின் தேர் உடைந்து சிதறியது. அவர் பாய்ந்து பின்னாலிறங்கி பரியொன்றில் தொற்றிக்கொண்டார். ஆர்ஸ்யசிருங்கி திரும்பி நகுலரை அறைந்தான். உடலெங்கும் உடைந்த தேர்ச்சிம்புகளுடன் நகுலர் மண்ணில் விழுந்து உருண்டு எழுந்தார். அருகே நின்றிருந்த யானையின் காதுக்குப் பின் அவர் தன் வேலால் குத்த அது துதிசுழற்றி வெறிப்பிளிறலுடன் எழுந்து சென்று ஆர்ஸ்யசிருங்கியை முட்டியது. அவன் கவசங்கள் உடைய சிதறி அப்பால் விழுந்தான். அவனுக்குப் பின்னாலிருந்து ஆர்ஸ்யசிருங்கிகள் மேலும் வெறியுடன் கூச்சலிட்டபடி கதைகள் சுழற்றி எழுந்தனர்.

நகுலர் புரவியொன்றின் மறைவில் ஓடி அப்பால் சென்றார். “இவன் மாயம் கற்றவன்… அரக்க மாயத்தை நம்மால் எதிர்கொள்ள இயலாது” என்று சகதேவர் கூவினார். “விலகுங்கள், தந்தையரே. நஞ்சுக்கு நஞ்சே முறிமருந்து!” என்று முழங்கியபடி அவர்களுக்குப் பின்னாலிருந்து கடோத்கஜன் கதைவீசிக்கொண்டு தோன்றினார். அவரை ஆர்ஸ்யசிருங்கிகள் சூழ்ந்துகொண்டனர். நூறு கதைகளால் சூழப்பட்டிருந்தார் கடோத்கஜன். அவர் கொக்கி எழுந்து பறந்து ஆர்ஸ்யசிருங்கிகளை இழுத்து தன்முன் இட்டது. அவர் கதை அவர்களின் நெஞ்சக்கூடுகளையும் தலைப்பேடகங்களையும் உடைத்தது.

பறந்து தன்னைச் சூழ்ந்து போரிட்ட ஆர்ஸ்யசிருங்கிகளை பறந்தெழுந்து வானில் தடுத்து அறைந்து வீழ்த்தி கடோத்கஜன் போரிட்டார். அவரை துணைக்க இடும்பர்களின் நிரை தேர்களுக்கு மேலாக பறந்து வந்தது. ஆர்ஸ்யர்களும் இடும்பர்களும் மோதிக்கொண்ட அந்தப் போர் பெரும்பாலும் வானிலேயே நிகழ்ந்தது. ஆர்ஸ்யர் ஒவ்வொருவராக கடோத்கஜனைச் சூழ்ந்து வீழ்ந்தனர். பின்னர் அவன் மூச்செறிந்து கதை சுழற்றி உறுமியபடி நோக்கியபோது அவனைச் சுற்றி ஆர்ஸ்யர்கள் சிதறிப்பரந்து கிடந்தனர். அவர்களின் சிதைந்த உடல்களிலிருந்து குருதி பெருகி கவசங்களின் இடுக்குகளினூடாக பாறைகளில் ஊற்றென வழிந்தது.

கடோத்கஜனை எதிர்கொள்ள பகதத்தனுக்கு சகுனியின் ஆணை சென்றது. ஆமையின் ஓடு அப்பகுதியில் உடைந்து பாண்டவப் படை உள்ளே நுழைந்துகொண்டிருந்தது. ஆமையின் தலையுடன் அர்ஜுனனும் அபிமன்யூவும் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆமை தன் கால்களை நீட்டி விரைவடி வைத்து சூழ்ந்துகொண்டிருந்த பாண்டவப் படைகளின் நடுவே மெல்ல உலைந்தாடியது. சுப்ரதீகம் என்னும் பெரிய யானையின் மேல் அமர்ந்திருந்த பகதத்தர் தன் வேலைத் தூக்கி வீசி பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளையும் வங்கப் படைகளையும் கடோத்கஜனை நோக்கி செல்ல ஆணையிட்டார். சிற்றரசர்களின் சிதறிய படைகளினூடாக அவருடைய படை திரண்டு கடோத்கஜனை நோக்கி சென்றது.

கடோத்கஜனுக்கு உதவும்பொருட்டு அவரருகே பீமசேனர் எழுந்தார். சர்வதனும் சுதசோமனும் அவருடன் வந்தனர். பகதத்தர் வந்த விசையிலேயே தன் யானைமேலிருந்து பாய்ந்து அதன் கழுத்துக்கயிற்றில் தொங்கி கீழிறங்கினார். அப்போது அந்த யானையின் காதில் அவர் ஓரிரு சொற்களை சொன்னார். அரசே, சுப்ரதீகம் என்னும் அந்த யானை திசையானைகளின் ஒன்றின் பெயர்கொண்டது. தென்கிழக்கின் இருண்ட காடுகளில் பிடிக்கப்பட்டது. ஏழாண்டுகள் பயிற்சியளிக்கப்பட்ட பின்னரும் அது பகதத்தரையும் இரண்டு பாகன்களையும் அன்றி எவரையுமே தன்னை அணுகவிட்டதில்லை.

அரசே, பாரதவர்ஷத்தின் மாபெரும் யானைகளில் ஒன்றாகிய அதைப்பற்றி கௌண்டின்ய ஹர்ஷர் எழுதிய மதங்கராஜவிலாசம் என்னும் காவியத்தை அறிஞர் பயின்றிருப்பார்கள். நூற்றெட்டு நற்குறிகள் கொண்டது. சுக்கான் நிலைநிறுத்தப்பட்ட பெருங்கலம்போல் முற்றிலும் நிகர்த்த அசைவுகள் கொண்டது. விசையில் உருளும் மலைப்பாறையையும், புயல்கால கடல் அலைகளையும் போன்றது. போர்புரியும் விழைவும் பெருஞ்சினமும் கொண்டது. பகதத்தர் பீமசேனரின் உருவை தோலிலும் இரும்பிலும் வடித்து அந்தப் பாவையை சுப்ரதீகத்திற்கு காட்டி நாளும் பயிற்சியளித்துவந்தார். அந்தப் பாவையின் உடலில் இருந்து சுப்ரதீகத்தின் மேல் காய்ச்சிய எண்ணையும் அரக்கும் வீசப்பட்டும் கூரிய அம்புகள் செலுத்தப்பட்டும் அதற்கு சினமூட்டப்பட்டபின் அது அதன் துதிக்கைக்கு சிக்கவைக்கப்படும். அப்பாவையை யானை மிதித்து அரைத்தும் கிழித்து நாராக்கியும் வெறிகொண்டாடும்.

பீமனை நோக்கிய சுப்ரதீகம் துதிசுழற்றி தலைகுலுக்கி காதுகள் முன்கோட்டி வால்முறுக்கி பிளிறியபடி அவரை நோக்கி ஓடியது. அதை எதிர்கொள்ள பீமசேனர் தன்னருகே நின்றிருந்த வஜ்ரதந்தம் என்னும் பெருங்களிறை ஏவினார். சுப்ரதீகமும் வஜ்ரதந்தமும் அக்களம் அதிரும் விசையுடன் மத்தகங்களால் முட்டிக்கொண்டன. துதிக்கைகளை சுற்றிப்பற்றியபடி ஒன்றையொன்று சுற்றிவந்தன. கடோத்கஜனை கொல்ல பகதத்தர் மேலும் மேலும் யானைகளை ஏவினார். அந்த யானைகளை தடுக்க பாண்டவர்களும் யானைகளை அனுப்பினர். யானைகள் ஒன்றையொன்று தடுத்து பிளிறி ஆர்ப்பரித்துப் போரிட்டுக்கொண்ட இடைவெளிகளில் அவற்றின் உடல்களில் மிதித்து ஏறிப்பாய்ந்து மத்தகங்களின் மீதும் முதுகின்மீதும் நின்றபடி கடோத்கஜனும் பகதத்தரும் போரிட்டனர்.

கடோத்கஜன் விசையும் எடையும் கொண்டவர். பகதத்தர் ஆணவத்தால் அமைந்த அமைதிகொண்டவர். அப்போரில் விசை முதலில் வென்றது. எட்டு அடிகள் பகதத்தர் மேல் விழுந்தன. ஆனால் பின்னர் கடோத்கஜன் பகதத்தரின் அடிகளை வாங்கி நிலையழிந்து யானைமேல் தள்ளாடினார். சுப்ரதீகம் வஜ்ரதந்தத்தை துதிசுழற்றிப்பற்றித் தூக்கி பக்கவாட்டில் அறைந்து காலால் மிதித்து அதன் கழுத்தை முறித்தது. வெற்றிக்குரலுடன் அது திரும்பிய கணம் பகதத்தரின் அடிபட்டு இடப்பாதி செயலற்ற நிலையில் கடோத்கஜன் அதன் முன் விழுந்தார். உடலால் அவரை பீமசேனர் என எண்ணிய சுப்ரதீகம் கொம்புதாழ்த்தி அவரை கொல்ல அணுகியது.

அக்கணம் பாய்ந்து வந்த பீமசேனர் கடோத்கஜனை அள்ளிச் சுழற்றி தோளில் இட்டுக்கொண்டு தீர்க்கநாசன் என்னும் பெருங்களிறின் கால்களுக்குக் கீழே புகுந்து அப்பால் சென்றுவிட்டார். தீர்க்கநாசன் படைகளில் பட்டறிவுகொண்ட முதுகளிறு. உடலெங்கும் கவசங்கள் அணிந்திருந்த அது தன்னை நோக்கி வந்த சுப்ரதீகத்தின் கால்களில் தன் துதிக்கையால் ஓங்கி அறைந்தது. விலாவறைய விழுந்து சுப்ரதீகம் ஓலமிட்டது. ஆனால் தீர்க்கநாசன் துதிக்கை சுழற்றி அதை கொல்ல வருவதற்குள் அதன் காதுக்குப் பின்னால் பகதத்தரின் வேல் பாய்ந்தது. அலறியபடி தீர்க்கநாசன் சுப்ரதீகத்தின் மேல் விழுந்தது.

தன்னை விடுவித்துக்கொண்டு எழுந்த சுப்ரதீகம் தீர்க்கநாசனின் காதுக்குப் பின் பாய்ந்திருந்த வேலில் மேலும் ஓங்கி அறைந்து அதை ஆழப்பதித்துவிட்டு துதிக்கை சுழற்றி வெற்றிக்கூச்சலிட்டது. அங்கிருந்த பிரக்ஜ்யோதிஷத்தின் களிறுகள் அனைத்தும் அவ்வோசையைக் கேட்டு துதிக்கைகளைச் சுழற்றித் தூக்கி பிளிறின. பிரக்ஜ்யோதிஷத்தின் படைகள் உடன் சேர்ந்து வெற்றிக்குரலெழுப்பின. அது கௌரவர்களை மேலும் ஊக்கம் கொள்ளச் செய்தது. பாண்டவப் படையினர் பீமசேனரின் உதவிக்கு பெருகிவந்தனர். போர் விசைமிகுந்து மேலும் நிகழ்ந்தது.

அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது யானைகளும் மானுடரும் இணைந்தாடிய போர். வங்கத்தினர் யானைப்போரில் வல்லவர்கள். யானைகளை ஏவியும் புண்படுத்தித் துரத்திவிட்டும் ஒருவரை ஒருவர் தாக்கினர். வில்லில் இருந்து எழுந்த அம்புகள்போல யானைகள் களத்தில் பிளிறியபடி பாய்ந்தன. அவற்றை யானைகளை ஏவி தடுத்தனர். யானைகளிலிருந்து ஒழிந்து யானைகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டார்கள். யானைகளின் கால்களுக்குக் கீழே பதுங்கி யானையையே கேடயமாக்கி எதிரிகளை நோக்கி சென்றனர். யானை உருவாக்கிய வழித்தடத்தில் நின்று போரிட்டு யானைகொண்டு மறைத்து பின்னகர்ந்தனர்.

யானைப்போர் கரிய நீரின் அலைச்சுழிப்புபோல் தெரிகிறது. யானைகள் யானைகளின் உடலை நன்கறிந்தவை. ஒன்றுடன் ஒன்று வெறிகொண்டு பொருதும் யானைகளின் துதிக்கையில் ஆணவம் நெளிகிறது. விடைத்த விரியிலைச் செவிகளில் அச்சம் தெரிகிறது. கொம்புகளில் வஞ்சம். விழிகளின் ஆழத்து மின்னிப்பில் திகைப்பு. அரசே, அவற்றின் பெருகிய உடலின் அலைகளுக்குள் அவை அள்ளியுண்ட உணவின் மதம். அவற்றிலெழுகிறது ஒவ்வொரு விலங்கிலும் மதமென எழும் காட்டின் வெறிக்களிப்பு.

ஆனால் இங்கிருந்து நோக்குகையில் அவற்றின் குறுவால்களில் நெளிகின்றன யானைக்குழவிகள். அவை சேற்றுவெளியில் முட்டி விளையாடுகின்றன என்று தோன்றும். இதோ போர்முடிந்ததும் அவை துதிக்கை தழுவியபடி நீராடச்செல்லவிருக்கின்றன என்று எண்ணுவோம். யானையில் வால் மட்டும் வளராது போனதென்ன? என்றென்றும் எவ்வளவு பெருத்தாலும் அதை மதலையென நிறுத்த விரும்பிய காட்டின் வாஞ்சையா அது? கானிருளின் குழவிகள் இக்களத்தில் ஏன் போரிட்டு மடியவேண்டும்? அப்பால் பசுமை இருண்டு நடுங்கிச் செயலற்று நின்றிருக்கும் மரங்களாலான காடு குறுங்காற்றால் நெடுமூச்செறிந்துகொள்கிறதா என்ன?

வெட்டுண்டும் அம்புபட்டும் கதையால் அறைபட்டு மத்தகம் பிளந்தும் யானைகள் சரிந்தன. சரிந்த யானைகள் மேல் மேலும் யானைகள் விழுந்து குன்றுகளென்றாயின. பகதத்தரும் பீமசேனரும் கதைகோத்தனர். கடோத்கஜனை கௌரவர்கள் துச்சலனும் துர்மதனும் தடுத்தனர். அக்கணம் சங்கொலியுடன் அங்கே எழுந்த துரியோதனர் அவரை தானே எதிர்கொண்டார். அவர்களிருவரும் பாய்ந்தும் எழுந்தகன்றும் அமர்ந்தெழுந்து பாய்ந்தும் அறைந்துவிழுந்து சுழன்றெழுந்து மீண்டும் அறைந்தும் போரிட்டனர்.

அரசே, சற்றுமுன் நிகழ்ந்தவை அனைத்தும் அவர்களிடமிருந்து மறைந்துவிட்டிருக்கின்றன. அடுத்த கணம் என்ன நிகழவிருக்கிறதென்றும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அக்கணத்தில் மட்டுமே வாழும் வாழ்க்கையின் மிகச் சிறந்த வடிவம் போர் மட்டுமே. முந்தைய கணமும் அடுத்த கணமும் இறப்பு என்கையில் வாழ்க்கை அணுவணுவாக விரிகிறது. அங்கே ஓர் உள்ளத்தில் நிகழும் எண்ணங்களை எவரேனும் அளந்து கூறிவிடமுடியுமா? அவை கணத்திற்கு கோடி. உள்ளம் எத்தனை வடிவங்களில் தன்னை மாற்றிக்கொள்ளும் வல்லமைகொண்டது! எவ்வளவு துண்டுகளாக பிரிந்து ஒன்றையொன்று அறியாமலும் ஒன்றையொன்று நோக்கியும் தனித்தனியாக இயங்கும் சூழ்ச்சி அறிந்தது! அங்கு களம் நின்றிருக்கும் பல்லாயிரம் உள்ளங்களில் நிகழும் பல்லாயிரம் கோடி எண்ணங்களாக பிரம்மம் தன் அலகின்மையை மீண்டும் நிகழ்த்தி நோக்கிக்கொள்கிறது போலும்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16801 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>