Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16748 articles
Browse latest View live

சங்கரர் உரை கடிதங்கள் 4

$
0
0

IMG_20160103_184042_1451829531525

 

 

ஜெ
வணக்கம். சங்கரர் உரை கேட்டேன். மிக சிறப்பானொதொரு அனுபவம். நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைக்காதது சற்று வருத்தமாக இருக்கின்றது.

அத்வைத அனுபவங்களில் தென்னிந்தியாவை தொகுக்க அத்வைதம் பயன்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். அத்வைதம் முன்வைத்த பெரும் இந்திய ஆளுமைகளை பற்றி பேசி இருந்தீர்கள். ஒரு நெடிய பாரம்பரியத்தின் தொடர் சங்கிலி தெரிந்தது.

மிஸ்டிக்கான அனுபவங்களான கைலாய பார்வை, விவசாயயியின் வயல் அனுபவம் போன்றவை ரொம்ப பர்சனலான அனுபவங்கள். உங்கள் யோகா பற்றிய பார்வைகளை சொல்லும் பொழுது இது போன்ற பர்சனல் அனுபவங்கள் பார்வையாளர்களில் உண்டாக்கும் விளைவுகளை அங்கதமாக சொல்லி இருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்த சந்தேகம் வருகிறது.

இந்த மிஸ்டிக் அனுபவங்கள் இது போன்ற மாற்று பார்வை முன் வைக்கும் உரைகளுக்குள் புரிதல் குழப்பத்தை உண்டாக்காதா? ஒரு சந்தேகமாகவே கேட்கிறேன். கோபப்பட வேண்டாம்.

நன்மை தீமை என பார்க்கக் கூடிய டிக்காடமி பார்வையை பற்றி சொல்லி இருந்தீர்கள். சமூகத்தின் தீமை அல்லது போதாமை அல்லது அறியாமை என்பதை மறுக்கும் தத்துவம் சமூகம் தன்னை மேம் படுத்தும் பார்வையை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

கர்ம வினை என்பதை திருவிதாங்கூரில் நடக்கும் உரையாடலில் காந்தியுடன் பேசும் கோவில் ஊழியர் பயன்படுத்தும் விதம் மாதவ் தேசாய் எழுதிய புத்தகத்தை படிக்கும் பொழுது பதட்டத்தை உண்டாக்குகின்றது.

ஏதேனும் தவறாக கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும். தெளிவு செய்து கொள்ளவே கேட்க நினைத்தேன.

கடிதத்தை தளத்தில் பிரசுரிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

என்

அன்புள்ள என்,

ஏன் நல்ல கடிதம் தானே? பெயரில்லாமல் பிரசுரிக்கிறேன் ,சரிதானே?

வயலைப்பார்த்தல், கைலாயம் நோக்குதல் ஆக்கியவை அரிய யோக அனுபவங்கள் அல்ல. அனைவருக்கும் அன்றாடவாழ்க்கையில் ஓரிரு முறையேனும் அனுபவமாகியிருக்கும் அனுபவங்கள். அங்கே அத்வைத அனுபவத்தின் எளிய தொடக்கம், அது ஒரு உண்மை அன்றி உருவகநிலை அல்ல என்பதற்கான சான்று, உள்ளது என்பது என் உரையில் இருந்தது.

யோக அனுபவங்களை அடைந்ததாக மிகையாகவும் எளிதாகவும் சொல்லிக்கொண்டிருப்பது ஒரு சமூகத்தை கூட்டாகவே ஒரு சுய ஏமாற்றுநிலைக்கு கொண்டு செல்கிறது. அதுவேறு இது வேறு

அத்வைதம் சாமான்யம் விஷேஷம் என்னும் இரு நிலைகளை உருவாக்கிக்கொள்கிறது. நன்று தீது, அறிவு அறியாமை போன்ற இருநிலை எல்லாம் சாமான்யநிலையில் தேவையானவை. நஞ்சும் அமுதும் ஒன்றாகிவிடுமா என்ன? அத்வைதத்தின் ஒற்றைப்பெருநிலை என்பது உயர்நிலையில்தான். அத்தகைய இருதளம் இன்று எந்த ஒரு அறிவுத்துறைக்கும் உண்டு

உண்மையில் எந்த ஒரு உயர்தத்துவமும் எளிய ஒழுக்கவியலை ஒரு பயன்பாடாகவோ முன்நிபந்தனையாகவோ கொண்டிருக்காது. அதன் நோக்கு உண்மை என்பது மட்டுமே. அது பயன்படு உண்மை அல்ல, எனவே சார்புண்மை அல்ல, உண்மை என்பதனாலேயே முக்கியத்துவம் கொண்ட உண்மை மட்டுமே

ஆகவே எந்த ஒரு மெய்யியல்கருதுகோளும் சாமானியர்களால் பிழையாகப்புரிந்துகொள்ளப்படும். அப்படி புரிந்துகொள்ளப்படாத ஒரே ஒரு உயர்தத்துவம்கூட இவ்வுலகில் இல்லை. ஆகவே உயர்தத்துவமே தேவையில்லை என்றாகிவிடாது. அதை மீண்டும் மீண்டும் சரியாக விளக்கவேண்டியதுதான்

ஜெ

பேரன்புமிக்க ஜெயமோகன்,

இன்று போல என்றும் உயர்பேராற்றல் உங்களில் நிறையட்டும்.

கோவையில் நீங்கள் பேசிய பகவத் கீதை பேருரையை கேட்டேன். என்னை போன்ற இளைஞர்கள் கீதையை எப்படி அணுகவேண்டும் என சுட்டி காட்டி இருந்தீர்கள். சங்கரர் உரையும் அறிவுக்கு மிக நெருக்கமாக இருந்தது.
கோவையில் வசிக்கும் எனக்கு, இரண்டு உரை சமயத்திலும் நான் கோவையில் இருக்கும் சூழல் அமையவில்லை.

பகவத்கீதை உரையை கேட்ட பின் சில கேள்விகளை முன்வைக்கலாம் என உங்களை தொடர்புகொள்கிறேன். 2009ஆம் ஆண்டுக்கு பிறகு உங்களுக்கு நான் எழுதும் கடிதம் இது.

பகவத் கீதை உரையின் முடிவில் “தற்காலத்தில் கோவில்களை கூட ஜோதிடர்கள் சொல்லி தான் கண்டடைகிறோம்” என குறிப்பிட்டீர்கள். கீதை உரையில் வேடிக்கைக்காக இதை நீங்கள் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்

உங்கள் எழுத்தில் பேச்சிலும் ஜோதிடம் சார்ந்த கருத்தை தொடுவதில்லை. ஜோதிடர்கள் அல்லது ஜோதிட சாஸ்திரம் மேல் ஏன் இந்த பாராமுகம் ?

வேதத்தின் வழி குரு மரபு என்பது உங்கள் வழியானால் கர்ம மீமாம்சையின் பகுதியான ஜோதிஷத்தை இன்றைய இளைஞர்களுக்கு சொல்வீர்களா? ஜெயமினி தன்னை சூத்திரமாக வார்த்த ஜெயமினி சூத்திரங்கள் கொண்ட ஜோதிஷத்தை புறந்தள்ளிவிட்டு இந்து ஞான மரபை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க முடியுமா?
கீதை உரையில் நீங்கள் குறிப்பிட்ட வரிகள் வழியே சிந்தித்தால் ஜோதிடர்கள் கோவிலுக்கு அனுப்புவது பரிகாரம் செய்ய சொல்வது என்ன தவறு அதுவும் நம் மரபுதானே? கர்ம மீமாம்சையின் தொடர்ச்சி அல்லது எச்சம் அல்லவா?உண்மையில் தற்காலத்தில் ஜோதிடர்கள், ஜோதிடம் மற்றும் அவர்கள் கூறும் பரிகாரங்கள் இவை தானே கோவிலை நிரப்புகிறது. திருவண்ணாமலை கோவில் மற்றும் கிரிவலம் பத்து வருடத்திற்கு முன் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது?

இந்து ஞான மரபு என்ற அரவைக்கல்லில் ஜோதிடர்கள் என்பவர்கள் அரிசியை உள்ளே தள்ளிவிடும் கைகளாக இருந்திருக்கிறார்கள்.

பல்வேறு தரிசனங்களையும் , கீதை போன்ற தத்துவங்களை அணுகவும் வழிகாட்டும் நீங்கள் இனிவரும் காலத்தில் கர்மமீமாம்சையின் கோட்பாடாகவும், வேத நேத்ரமாகவும் உள்ள ஜோதிஷத்தை உங்கள் உரை அல்லது எழுத்தில் தொடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். (உத்ரமீமாம்சை உங்கள் வழி என உங்கள் உரை மூலம் அறிந்தேன். ஞான மரபின் அனைத்து பகுதிகளிலும் சஞ்சரிப்பதால் அவ்வாறு கேட்கிறேன்)
அது ஆதரித்தோ அல்லது மறுதலித்தோ இருந்தால் சந்தோஷிப்பேன். தொடாமல் இருப்பது சரியா என தெரியவில்லை…

உங்கள் பணி தொடர இறையருளை ப்ரார்த்திக்கிறேன்.

நன்றி
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

வணக்கத்திற்குரிய சுவாமிஜி அவர்களுக்கு

சோதிடம் பற்றி நான் பெரியதாக ஏதும் அறியேன். அதிலுள்ள நாள் கோள் அமைப்பு பற்றி புனைவு எழுதும் தேவைக்காக அறிந்துகொண்டதுடன் சரி. என் வாழ்க்கையில் நான் சோதிடம் பார்த்ததில்லை. என் குடும்பத்திற்காகவும் பார்த்ததில்லை.
சோதிடம் வேதமெய்யியலில் கர்மகாண்டத்தின் ஒருபகுதியாக இருந்துகொண்டிருக்கிறது என்பதையும் அது சூரியதேவரின் பிரஹதாங்கப்பிரதீபம் என்னும் அழிந்துபட்ட தொல்நூலை முதனூலாகக் கொண்டது என்பதையும் அறிவேன். ஆனால் வேதங்களின் ஞானகாண்டம் என்பது கர்மகாண்ட நிராகரிப்பிலிருந்து எழுவதே. முக்குணங்களுடன் எழுந்த வேதங்களைக் கடந்துசெல்லும்படி கீதை சொல்வதும் அதையே.
வேதாந்தம் ஞானமரபு. அதற்கு வேள்விகளிலும் பக்தியிலும் நம்பிக்கை இல்லை. ஆகவே சோதிடத்திலும் இல்லை. சோதிடம்தனை இகழ் என்றவன் வேதாந்தி. என் ஆசிரியர்களும் சோதிடத்தை பொருட்படுத்தாதவர்களே. அது உண்மையோ பொய்யோ அதை ஒட்டி இங்கு வாழ்க்கையை அமைக்க விரும்பவில்லை. எங்குமுளதும் இங்குளதுமான ஒன்றை மையமாக்கியே அறிதலையும் ஆதலையும் அமைக்க விரும்புகிறேன்
சோதிடம் அல்லது சடங்குகளை நான் இகழ்வதோ நிராகரிப்பதோ இல்லை. அதிலுள்ளது முழுமையான சுயநல நோக்கு அல்லது உலகியல் நோக்கு மட்டுமே என்றால் அது மெய்யறிவை எப்படி மறுதலிக்கிறது என்று மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்
ஜெ

சங்கரர் உரை

 

தொடர்புடைய பதிவுகள்


கே.என்.செந்தில்

$
0
0
1

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்.

இந்த முறை விஷ்ணுபுரம் விழாவில் திரு சு வேணுகோபால் அவர்களை எதிர்பார்த்திருந்தேன் அவரின் சில கதைகள் குறித்து பேசவும் கேட்கவும் சில விஷயங்கள் இருந்தன.

சுரேஷ் அண்ணன் அவர்கள் திரு கே என் செந்தில் அவர்களை அறிமுகம் செய்து பேச அவர் அறிமுகம் செய்த விதத்திலே ஒரு சிறு பதற்றம் உள்ளே தொற்றிக் கொண்டது எதுவுமே வாசித்திருக்கவில்லை நான்?

இந்த புத்தாண்டை ஒட்டிய  விடுமுறையில் நடத்திய நூலக வேட்டையில் இரவுக் காட்சி என்னும் அவரின் சிறுகதை  தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது.  சுரேஷ் அவர்கள் அறிமுகப்படுத்தும் போதே ஒரு விமர்சனமாகவும்  குறையாகவும்  சுட்டியிருந்தது அவர் நிறைக்கும் காட்சிகளை திரு மோகன ரங்கன் அவர்களும் அதையே தன் முன்னுரையில் கூறியிருந்தார்.

தொகுப்பின் முதல் கதையான கதவு எண் 13/78 கிட்டத்தட்ட காட்சிகளை நிறைக்கும் முறையில் அமைந்திருந்தது, ஆனால் தொடர்ந்த கதைகளின் ஆழமும் அவற்றின் விரிந்த தளமும் அவரின் நுண்ணிய காட்சி சித்தரிப்பும் வாசகனும் பெரும் வாசிப்பின்பத்தை அளிக்கக் கூடியவை.

இரண்டாவது கதையான கிளைகளிலிருந்து என்னும் ஒரு சிறுகதை, சிறார்களில் உறையும் குரூரத்தை மிக நுட்பமாக காட்சிப்படுத்தி இருந்தார்.குறிப்பாக ஒரு சிறுவன் வண்ணத்து பூச்சியின் கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி அதன் மறுமுனையில்  ஒரு கல்லை கட்டி அது பறக்க எத்தனித்து அதன் கழுத்தோரத்தில் ரத்தம் படர அது சாகும் காட்சியை சொன்ன விதம் உறைய வைத்தது.

காத்திருத்தல் என ஒரு நீளமான சிறுகதை அது ஒரு நாவலுக்கான களமும் உள்ளடக்கமும் கொண்டது எதிர்காலத்தில் அதை அவர் விரித்தெடுக்க் கூடும்.கிட்டத்தட்ட எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கூறல் முறையை ஒத்திருந்தது, ஒட்டுதலோ தொடர்போ இன்றி தொடர்ந்து கதையை சொல்லி செல்லும் ஒரு தேர்ந்த  கதை சொல்லும் முறை . (கிளைகளிலிருந்து கதையின் மைய கதாபாத்திரத்தின் பெயர் சம்பத் அதுவும் ஒரு காரணமோ என சந்தேகிக்கிறேன்?)

இறுதிக் கதையான மேய்ப்பர்கள் மழையும் வெள்ளமும் கிட்டத்தட்ட ஒரு பாத்திரமாகவே கதையில் அமைத்திருக்கிறார் அதை அவர்  காட்சிப்படுத்தியிருக்கும் முறை அலாதியானது,விளிம்பு நிலை வாழ்கையின் துயரமும் கொண்டாட்டத்தையும் அவர் இணைக்கும் நேர்த்தியை இந்த கதையில் கவனிக்கலாம்,கதையின் மைய கதாபத்திரம் மனைவியை பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு மிகுந்த மன பதட்டம் கொள்கிறான் இந்த நிலையில் வீடு திரும்பி நண்பனின் மனைவியோடு உறவு கொள்வதும் மறு நாள் குழந்தை பிறந்த செய்தி அறிந்து அவனுக்கு ஒரு கை சர்க்கரையை அவளே அள்ளி போட்டு மகிழ்வதும் என கதை விரிகிறது.

தவிர்க்க முடியாமல் சு வேணுகோபால் அவர்களின் மீதமிருந்து கோதும் காற்று என்கிற சிறுகதை நினைவுக்கு வந்தது. இது வெறும் அதிர்ச்சியை கோரி பெறும் எழுத்து  அல்ல,அவர் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடையளிக்கையில் குரூரம் எனபது தான் இன்றைய வாழ்க்கையில் நிறைந்து கிடப்பதையும் அன்பு எனபது ஒரு சொல் என்பதை தாண்டி அதன் பெறுமதி இன்றைய உலகில் கேள்விக்குட்பட்டது என்றும் சொன்னதை நினைவு கூற முடிந்தது.

கிட்டத்தட்ட இருட்டை அள்ளி வைக்கிறார் ஆனால் பெரும் கலை அமைதியும் அழகும் கூடி வந்திருக்கிறது தொகுப்பு 2009 இல் வெளிவந்திருக்கிறது, 27 வயது இளைஞர் அன்றைய கணக்கின் படி.

மிக முக்கியமான ஒரு கதை சொல்லியை விஷ்ணுபுரம் விழா மூலமாக அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ஆனால் ஒரு இலக்கிய வாசகனாக புற வாழ்வின் அழுத்தம் கவனத்தை வெகுவாக கலைத்து போட்டிருப்பதையும் கவலையோடு அறிகிறேன்.

 

அன்புடன்

சந்தோஷ்

 

அன்புள்ள ஜெ

முன்பு விஷ்ணுபுரம் கூட்டத்தில்தான் சு வேணுகோபாலை அறிமுகம்செய்துகொண்டேன். இன்று அவர் என்னுடைய விருப்ப எழுத்தாளர். இந்தமுறை அப்படி அறிமுகமானவர் கே.என்.செந்தில். அவரது பெயரை நான் இணையத்தில் நிறையவே பார்த்திருக்கிறேன். புத்தகங்களையும் கடைகளில் கண்டிருக்கிறேன். கவனித்து வாசிக்கவில்லை.

அதற்குக் காரணம் ஒன்று உண்டு. இப்போது இணையம் வந்தபின்னர் நிறையபேர் எழுதுகிறார்கள். எல்லாருமே ஃபேஸ்புக்கில் ஒரு பெரிய தோரணையை காட்டுகிறார்கள். கனமான ஆங்கில நூல்களைப்பற்றிச் சொல்வதும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் குறிப்பிடுவதும் தடாலடிக் கருத்துக்களைச் சொல்வதும் அவர்களின் வழிமுறை. அதை சில மூத்த எழுத்தாளர்களிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து இலக்கியம் வாசிப்பவன் என்பதனால் இந்த தோரணைகள் எல்லாம் பொய் என்று வாசித்ததுமே கண்டுகொண்டு விலகிவிடுவேன். சொல்லப்போனால் எவராவது ஃபேஸ்புக்கில் பெரியபேச்சு பேசினாலே அவரை தவிர்க்கவேண்டும் என்பது என் கொள்கை.

அதோடு சிலசமயம் நிறைய பேசப்படுகிறதே என்று சில இளம் ஆசிரியர்களை வாங்கி வாசித்துப்பார்த்து கடுமையான ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். மிகச்சாதாரணமான ஃபேஸ்புக் எழுத்தையே நூல்களாகவும் எழுதிவைக்கிறார்கள். ஒரு கிரியேட்டிவிட்டி இல்லை. இந்த ஆசிரியர்களின் நண்பர்கள்தான் ஃபேஸ்புக்கில் அந்த நூல் வந்ததுமே கொஞ்சநாள் ஒரு சத்தத்தை உருவாக்குகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். ஒரு மூன்றுமாதம் அதிகபட்சம். அதன்பின் சத்தமே இருக்காது. ஆகவே நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். தரமான ஒரு சில வாசகர்கள் சுட்டிக்காட்டாமல் எந்த நூலையும் வாங்கவோ வாசிக்கவோ கூடாது.

அதனால்தான் கே.என்.செந்திலையும் நான் வாசிக்கவில்லை. ஆனால் அந்தச் சந்திப்பில் அவர் எந்த பாவனைகளும் இல்லாமல் இயல்பாகப்பேசியது பிடித்திருந்தது. மற்றவர்களைப்போல அல்ல இவர், உண்மையிலேயே தமிழிலக்கியமும் உலக இலக்கியமும் கொஞ்சம் தெரிந்தவர் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே ஊருக்கு வந்ததுமே அவருடைய நூல்களை வாங்கி வாசித்தேன். உண்மையில் இன்றைய எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவர் இவர் என நினைக்கிறேன்,

தமிழில் எப்போதுமே இருந்துவரும் objective writing வகையைச் சேர்ந்த எழுத்து இது. வாழ்க்கையை பெரியதாக வர்ணிக்காமல் சொல்லமுயல்வது. சிலசமயம் அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்பதற்காக  தேவைக்கும் அதிகமான செக்ஸும் வயலன்ஸும் இருந்தாலும் இக்கதைகள் தமிழ்வாழ்க்கையின் ஒரு பக்கத்தை கூர்மையாகச் சொல்கின்றன. இதற்குமேல் விரிவாக சர்ச்சை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. இலக்கியவிமர்சனம் இலக்கியத்திற்கு எதிரானது என்பது என் எண்ணம். இரவுக்காட்சி, அரூபநெருப்பு என்னும் இரண்டு தொகுப்புகளுமே முக்கியமானவை.

இவரைப்போன்றவர்களை உங்களைப்போன்ற மூத்த எழுத்தாளர்கள் மேலும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டவேண்டும் என நினைக்கிறேன். இவர்கள்மீது மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதுபோல நண்பர்களின் சம்பிரதாயமான பாராட்டும் பதிப்பகம் உருவாக்கும் சம்பிரதாயமான மதிப்புரைப்பாராட்டும் இருந்தால்போதாது. வாசகக் கவனம் வேண்டும். எதிர்பார்ப்பும் விமர்சனமும் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.

நீங்கள் அந்த அரங்கிலே ஒன்று சொன்னீர்கள். அதாவது குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளர்களை பரவலாக அறிமுகம் செய்யும் அரங்குகளை மட்டும் அமைக்கலாம் என்று. இன்றைக்கு அதை நீங்கள் செய்யமுடியும். பதிப்பகவிழாக்களெல்லாம் வெறும் பிரமோக்கள்தான். மேலும் அவர்கள் எல்லா குப்பைகளையும் ஒன்றாகச்சேர்த்து பாராட்டி முன்வைக்கிறார்கள். இரக்கமற்ற விமர்சகராகிய நீங்கள் செய்தால் அதற்கு பயன் அதிகம். வாசகர்கள் பின் தொடர ஒரு வழியாக அமையும்

கார்த்திக்

 

கே என் செந்தில் கதைகள்

தொடர்புடைய பதிவுகள்

வாசகசாலை நிகழ்ச்சி

$
0
0

1

அன்புள்ள ஜெமோ,

நலமா?

வாசகசாலை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்காக வீடியோ வழியாக பகிர்ந்து கொண்டதில் உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. அதற்காக வாசகசாலை சார்பாகவும், தனிப்பட்ட முறையில் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றி..!

உங்களது பேச்சின் you tube link இதோ:-

https://www.youtube.com/watch?v=trgczXWhLDY&feature=youtu.be

வாசகசாலை ஆண்டுவிழா மற்றும் தமிழ் இலக்கிய விருதுகள்

நிகழ்விற்கான முழுமையான அழைப்பிதழை இந்த மெயிலுடன் இணைத்துள்ளேன்.

உங்கள் பேச்சின் you tube link , நிகழ்விற்கான அழைப்பிதழ் ஆகிய இரண்டையும், வாசகசாலை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய கீழ்க்காணும் சிறிய  குறிப்புடன் சேர்த்து உங்கள் தளத்தில் பிரசுரிக்க முடிந்தால் அது எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

 

வாசகசாலை பற்றி…

வாசிப்பின் வழி ஒன்றிணைந்த நண்பர்கள் புத்தங்களை பற்றிப் பேச விவாதிக்க என 2012-ல் தொடங்கிய “வாசகசாலை”முகநூல் குழுமம், சென்ற வருடம் டிசம்பர் முதல் மாதம் ஒருமுறை ஒரு புத்தகம் பற்றிய கலந்துரையாலை ஏற்பாடு செய்து எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதோடு, படைப்பு பற்றிய நல்ல பல விவாதங்கள் நடப்பதற்கான களமாகவும் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு வகையான புத்தக வாசிப்பை பிரதான நோக்காக கொண்டு திரு.சுதாகர் கஸ்தூரி எழுதிய7.83 ஹெர்ட்ஸ் என்னும் அறிவியல் நாவலில் தொடங்கி சமகாலத்தன்மை கொண்ட, வெவ்வேறு தளங்களில் இயங்கும் அவ்வளவாக கவனிக்கப்படாத படைப்புகளுக்கும் கூட்டங்கள் நடத்தும் அதே வேளையில் “கிளாசிக் வரிசை” என்ற பெயரில் தமிழின் முன்னோடியான மூத்த படைப்பாளிகள் மற்றும் அவர்தம் படைப்புகளைப் போற்றும் வகையிலும் தனிப்பட்ட நிகழ்வுகளை  நடத்தி வரும்  “வாசகசாலை” கடந்த மே 2014-இல் நான்கு அமர்வுகளுடன் கூடிய “முழு நாள் இலக்கிய அரங்கு” ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வாசகசாலை அமைப்பின் முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாட உள்ள அதே வேளையில் 2015-ல் வெளியான படைப்புகளில் சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு,கவிதைத் தொகுப்பு என்ற மூன்று பிரிவுகளில் சிறந்த ஆக்கங்களை தேர்ந்தெடுத்து,வென்றவர்களுக்கு விருது தரும் விழாவையும், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா மெட்ரிகுலேஷன் பள்ளி கலையரங்கத்தில், வரும் ஜனவரி, 9 ம்தேதி சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை, வாசகசாலை அமைப்பு நடத்த இருக்கிறது.

வாய்ப்பும் நேரமும் உள்ள நண்பர்கள் தவறாது இந்த இலக்கிய விழாவில் பங்கு கொள்ளுமாறு உங்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்..

வாசகசாலையின் பேஸ்புக் பக்கம் –   https://www.facebook.com/vasakasalai/

 

என்றும் அன்புடன்,

கார்த்திகேயன்.V

வாசகசாலை

9942633833 / 9600075353

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆடல்

$
0
0

1

 

சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட நல்ல கட்டுரைகளில் ஒன்று. நாட்டார் கலை என்னும் வடிவம் எப்படி தொடர்ச்சியாக உருமாறியபடியே தன் உருவம் என ஒன்றை வைத்துக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லிக்காட்ட தர்மராஜ் முயற்சி செய்கிறார்

 

கண்ணகியின் கதையை நல்லம்ம தோற்றம் என்னும் பேரில் கேரளத்தில் ஆற்றிங்கல் போன்ற ஆலயங்களில் பச்சைப்பந்தலில் அமர்ந்து பலநாட்கள் தொடர்ச்சியாகப் பாடுவார்கள். எழுதிவைத்தால் பல ஆயிரம் பக்கம் வரும். அதற்கும் சிலப்பதிகாரம் என்னும் துளிக்காப்பியத்துக்கும் இடையே உள்ள முரண்பாடு வசீகரமானது. எப்போதும் கலையில் இருந்துகொண்டிருக்கும் அழியாக்கேள்வி இது.

 

http://tdharumaraj.blogspot.in/2016/01/blog-post_10.html

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 11

குறுங்காட்டில் அவர்கள் ஏற்கெனவே வந்த தடம் யானைவழிபோல தெரிந்தது. அதன் வழியாக வருவது எளிதாக இருந்ததை கர்ணன் உணர்ந்தான். மிகத்தொலைவில் கங்கையின் மேல் சென்ற படகு ஒன்று எழுப்பிய கொம்போசை பிளிறலென கேட்டது. சுப்ரியை நினைவழிந்து புரவியின் மேல் ஒட்டியபடி கிடக்க அவளுடைய கைகள் இருபக்கமும் ஆடிக்கொண்டிருந்தன. கைகளில் அணிந்திருந்த சங்குச்செதுக்கு வளைகள் உடைந்து உதிர்ந்து அவற்றின் கூர் பட்ட இடம் புண்ணாகி குருதிவடுக்களாக தெரிந்தது. கூந்தல் புரிகளாக விழுந்து காற்றில் உலைந்தது. “நெருங்கிவிட்டோம்” என்றான் கர்ணன். “ஆம், இன்னும் சற்றுதொலைவுதான்” என்று பின்னால் வந்த துரியோதனன் சொன்னான்.

துரியோதனனின் உடலில் தைத்திருந்த அம்பு ஒன்றை பிடுங்க சுதர்சனை முயல அவன் “வேண்டாம். அசைந்தால் மேலும் ஆழமாக அமையும். முனை உள்ளே தசைக்குள் திரும்பிவிடக்கூடும்” என்றான். “இதை என்னால் பார்க்கமுடியவில்லை” என்று அவள் சொன்னாள். “கண்களை மூடிக்கொள்” என்று துரியோதனன் சிரித்தான். “எத்தனை அம்புகள்!” என்றாள் சுதர்சனை. “எட்டு… உனக்காக எட்டு விழுப்புண்கள். நீ அவற்றில் முத்தமிடலாம்” என்றான் துரியோதனன் உரக்க நகைத்தபடி. அவள் அவன் மார்புக்குள் முகம் புதைத்தாள்.

கலிங்கத்தின் புரவிப்படையினர் பறவைகள் எழுந்து ஓசையிட்டதைக் கொண்டே அவர்கள் செல்லும் வழியை உய்த்துணர்ந்து இணையாகச் சென்ற ஊர்ச்சாலையில் துரத்தி வந்தனர். அவர்கள் வந்தது வண்டிகள் செல்வதற்காக புதர் நீக்கம் செய்யப்பட்ட சாலை என்பதனால் மேலும் விரைவு கொண்டிருந்தனர். கூச்சல்களும் குளம்படிகளும் வலுப்பதை துரியோதனன் உணர்ந்து கர்ணனிடம் “அணுகிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம், நமக்கு அரைநாழிகைநேரம் போதும்” என்றான் கர்ணன். “சிவதர் தப்பிவிட்டிருப்பாரா?” என்றான் துரியோதனன். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

அவர்கள் பெரும்பாய்ச்சலில் கூழாங்கற்கள் தெறிக்க குறுங்காட்டுக்கு அப்பால் தெரிந்த புல்வெளியை நோக்கி சென்றபோது பின்னால் முதல்படைவீரனின் வெண்ணிறப் புரவி தெரிந்தது. துரியோதனன் “பெரும்படை” என்றான். கர்ணன் “ஆம்” என்றபடி திரும்பி அவனை வீழ்த்தினான். அவன் வந்த புரவி துடித்து புல்வெளியில் உருள விரைவழியாமல் அதை வளைத்தபடி தொடர்ந்து பன்னிரு புரவிகளில் வீரர்கள் வில்லேந்தியபடி வந்தனர். அம்புகள் எழுந்து காற்றில் மிதந்து வளைந்து மண்ணிலும் மரங்களிலும் குத்தி நின்றன. வாத்துக்கூட்டம் போல ஒன்றுடன் ஒன்று ஒட்டிய புரவிப்படை ஒன்று அவர்களை தொடர்ந்து வந்தது. அவற்றின் கழுத்துக்கள் பலவாறாக திரும்பியசைய அலைநுரைபோல் மண்ணில் அறைபட்டு எழுந்தமைந்த விரையும் கால்கள் வளைந்து வளைந்து அணுகின.

23

கர்ணன் “நாம் போரிடுவது அறிவீனம். விரைந்து படகை அணுகுவதொன்றே நாம் செய்யக்கூடுவது” என்றான். “ஆம்” என்றபடி துரியோதனன் “மேலும் மேலும்” என்று கூவினான். குதிமுள்ளால் குத்தப்பட்ட அவன் புரவி வாயில் இருந்து நுரை வழிய தலை குலைத்தபடி முட்புதர்கள் மேல் தாவி ஓடியது. அவன் அவ்வப்போது இடையை வளைத்து அம்புகளை தொடுத்துக்கொண்டே சென்றான். கர்ணன் திரும்பிப் பாராமலேயே ஓசைகளைக் கொண்டு குறிநோக்கி விட்ட ஓர் அம்புகூட இலக்கை தவறவிடவில்லை.

இரு புரவிகளும் மிகவும் களைத்திருந்தன. சிவதர் கோட்டையைக் கடந்து பாய்ந்தது சீராக அமையாததால் அவர் புரவியின் முன் வலக்காலில் அடிபட்டிருந்தது. வலது பக்கமாக புரவியின் விசை இழுபடுவது போல் துரியோதனனுக்கு தோன்றியது. அவன் இடப்பக்கமாக அதன் கடிவாளத்தை இழுத்தபடி “இப்புரவியின் கால் முறிந்துள்ளது” என்று கூவினான். கர்ணன் திரும்பி “ஆம். அதன் குளம்படிகள் பதிந்த விதத்தில் அறிந்து கொண்டேன். ஆனால் இங்கு நிற்க நமக்கு நேரமில்லை” என்றான். “இது எங்கள் எடையை தாளாது” என்றான் துரியோதனன். “முடிந்தவரை… முடிந்தவரை” என்று கர்ணன் கூவியபடி சென்றான்.

புல்வெளியில் சரிந்து கலங்கியநீர் கல் அலைத்து ஓடிக்கொண்டிருந்த சிற்றோடைக்குள் இறங்கி மறுபக்கம் கூழாங்கற்கள் உருண்டு கிடந்த சேற்றுப்பாதையில் ஏறியபோது துரியோதனனின் புரவி அசைவிழந்து நின்றுவிட்டது. அவன் அதை “செல்க செல்க” என கூவியபடி குதிமுள்ளால் குத்தி ஊக்கினான். சவுக்கால் அதன் பின் தொடையை அறைந்தான். வலியுடன் கனைத்தபடி மேலும் சற்று ஏறி அது வலக்கால் தூக்கி நின்றது. அதன் உடல் விதிர்த்தது. வாயிலிருந்து நுரை குழாய்போல ஒழுகியது.

கர்ணன் சரிவின் மேலே ஏறி திரும்பி நாணதிரும் ஒலிமட்டும் கேட்க ஏழு அம்புகளை தொடுத்து முன்னால் வந்த படைவீரர்களை வீழ்த்தினான். சிதறி விழுந்த வீரர்களுக்கு மேல் தாவி வந்தன அடுத்த குதிரைகள். துரியோதனன் “செல் செல்” என்று கூவியபடி அம்பால் குதிரையின் கழுத்தை குத்தினான். குருதி வழிய கனைத்தபடி அது மேலும் சில அடிகள் வந்தபிறகு வலப்பக்கமாக தடுமாறிச் சரிந்து விழப்போயிற்று. “இறங்குகிறேன்” என்றான் துரியோதனன். “வேண்டாம்… மேலே வந்துவிடுங்கள்” என்று கர்ணன் கூவினான். “ஏற்றம் கடந்து மேலே வந்தால் அது செல்லக்கூடும்.”

மீண்டும் அம்பால் புரவியின் கழுத்தைக் குத்தி “செல் செல்” என்றான் துரியோதனன். புரவி இறுதி உயிரையும் திரட்டி முழுவீச்சுடன் பாய்ந்து உருளைக்கற்களை புரட்டி உருண்டு சரிய வைத்தபடி மேலே வந்துவிட்டது. “வந்துவிட்டது” என்று துரியோதனன் கூவினான். அம்புகளை விட்டபடியே “செல்வோம்” என்றபடி திரும்பி வேளிர் சிற்றூரை நோக்கி சென்றான் கர்ணன். அவனுக்குப் பின்னால் வந்த துரியோதனனின் புரவி வலப்பக்கமாக சரிந்து வழிதவறியது போல் சென்று சற்றே சுழன்று கால் மடித்து முகத்தை தாழ்த்தியபடி தரைசரிந்தது.

புரவி விழுவதற்குள்ளாகவே இடப்பக்கமாக கால்சுழற்றித் தூக்கி பாய்ந்து தரையிறங்கி வலக்கையால் சுழற்றி சுதர்சனையை தரையில் நிற்க வைத்துவிட்டு துரியோதனன் விலக, விலா அறைந்து நிலத்தில் விழுந்து இருகால்களை காற்றில் உதைத்து உடலை வளைத்து முகத்தை நிலத்தில் ஊன்றி முன்கால்களை மடித்து உந்தி எழுந்து இரண்டடிகள் வைத்து மீண்டும் நிலத்தில் விழுந்தது அவன் புரவி. முன்னால் சென்று கொண்டிருந்த கர்ணன் புரவியின் கடிவாளத்தை இழுத்து திரும்பி வந்தான். “அரசே, விரைவு… அணுகிவிட்டார்கள்” என்றான். மறுபக்கம் புல்வெளிச் சரிவில் கலிங்கர்களின் பெரும்படை இறங்கி ஓடையை நோக்கி மடிந்தது. “என் புரவியை அளிக்கிறேன்… அகன்று செல்லுங்கள். இவர்களிடம் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது.” துரியோதனன் “சென்றால் இருவராகவே செல்வோம். அப்பேச்சை விடுக!” என்றான்.

வேளிர்குடியின் இருஇல்லங்களுக்கு நடுவே இருந்து இளையவர்கள் இருவர் கரிய புரவி ஒன்றை இழுத்துக்கொண்டு வந்தனர். அது மிரண்டு கால்களை ஊன்றி மூக்குவட்டங்களை விரித்து விழிகளை உருட்டி மாவிலைக் கூர்செவி வளைத்து மூச்சுவிட்டது. “அஸ்தினபுரியின் அரசே, இதில் ஏறிக்கொள்ளுங்கள்” என்று ஒருவன் கூவினான். “நன்கு பயிலாதது. எடையிழுப்பது. ஆயினும் சற்று நேரம் இதனால் ஓட முடியும்” என்றான் துணைவன். “ஏறுங்கள் அரசே” என்றான் கர்ணன். சேணமிடப்படாத அப்புரவியின் மேல் துரியோதனன் கையை ஊன்றி தாவி ஏறினான். அவனை தொடர்ந்து ஓடி வந்த சுதர்சனையை தோளைப்பற்றிப் பிடித்து தூக்கி மேலே ஏற்றிக் கொண்டான்.

முதுகில் எடைதாங்கி அறியாத புரவி சற்று தயங்கி பின்னால் சென்றது. குதி முள்ளால் குத்தப்பட்டு கழுத்து தட்டப்பட்டதும் அதன் உடலுக்குள் உள்ள தேவன் சினம்கொள்ள கனைத்தபடி பாய்ந்து முன்னால் சென்றது. வேளிர் இளைஞர்கள் “செல்லுங்கள்! விரைந்து செல்லுங்கள்!” என்று கூச்சலிட்டனர். ஒரு நடுவயது வேளான் “நாங்கள் அவர்களை சற்று நேரம் இங்கே நிறுத்தி வைக்க முடியும்” என்று கூவினான். தடித்த கரியபெண் கர்ணனை நோக்கி கைவீசி “கதிரவன் மைந்தே! எங்கள் வயல்களில் பொன் விளையவேண்டும்! தங்கள் கொடையால் எங்கள் களஞ்சியங்கள் பொலிய வேண்டும்” என்றாள். கர்ணன் புன்னகைத்தபடி கை நீட்டி “அவ்வண்ணமே ஆகுக!” என்றான்.

கர்ணனின் புரவி விரைந்ததைக் கண்டு துரியோதனனின் கரிய புரவியும் விரைவு கொண்டது. அவர்கள் மேய்ச்சல் நிலப்பரப்பை கடந்தோட இருநாய்கள் வால்களைச் சுழற்றியபடி மகிழ்ச்சியுடன் பின்னால் துரத்தி வந்தன. வேளிர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து படைக்கலங்களையும் உழுபடைக்கருவிகளையும் ஏந்தியபடி தெருக்களில் வந்து குழுமினர். பெண்களும் குழந்தைகளும் முதியவரும் வழிகளை அடைத்தனர். முன்னால் நின்ற முதுமகன் உரத்தகுரலில் “எங்கள் ஊருக்குள் படைகள் நுழையலாகாது. எங்கள் உடல்கள் மேல்தான் புரவிகள் செல்ல வேண்டும்” என்று கூவியபடி முன்னால் ஓடினான். முழு விரைவில் வந்த கலிங்கப் புரவிகள் அந்தத் தடையை எதிர்பாராததால் தயங்கி பிரிந்து விலக அவர்களுக்குப் பின்னால் வந்த புரவிகளால் முட்டுண்டு குழம்பி சிதறிப் பரவினர்.

“விலகுங்கள்… விலகுங்கள்” என்றான் தலைவன். “கதிர்மைந்தருக்காக இங்கே குருதி சிந்துவோம். எங்கள் குலங்களுக்கு அன்னமிட்ட வெய்யோன் அறிக நாம் அவனுக்கு அளிக்கும் கொடையை” என்றாள் ஒருத்தி. தலைவன் வாளைத் தூக்கி “இப்போது இவர்களை அகற்றிவிட்டு முன்செல்ல முடியாது. ஊரை வளைத்து செல்லுங்கள்” என்றான். “ஊரைச் சுற்றி இரு ஓடைகள் ஓடுகின்றன. இரண்டுமே ஆழமானவை” என்றான் இன்னொருவன். “ஓடைகளை பாய்ந்து கடந்து செல்லுங்கள். ஓடைகளை கடக்க முடியாதவர்கள் மறுபக்கம் புல்சரிவில் இறங்கிச் செல்லுங்கள்… அவர்களின் புரவிகளில் ஒன்று பயிலாதது” என்றபடி தலைவன் கைகளை வீசி தன் படையை மூன்றாக பகுத்தான்.

தனக்குப் பின்னால் நெடுந்தொலைவில் என கலிங்கப்படைகளின் ஓசையை கர்ணன் கேட்டான். “தப்பி விட்டோம்” என்றான் அவனுக்குப் பின்னால் வந்து அணைந்த துரியோதனன். “இன்னும் சற்றுநேரம்… அக்குறுங்காட்டின் எல்லைக்கு அப்பால் கங்கை கலிங்கத்துக்கு உரியதல்ல” என்றான் கர்ணன். குறுங்காட்டை அடைந்து புதர்களுக்குள் அவர்கள் மறைந்ததும் துரத்திவந்த நாய்கள் எல்லையில் நின்று துள்ளித்துள்ளி குரைத்தன. கரிய புரவி நாய்களை நோக்கி திரும்பி கனைத்தபடியே வந்து ஒரு மரத்தில் முட்டிக்கொண்டு திரும்பியது. “செல்க!” என்று அதை துரியோதனன் செலுத்தினான்.

தலைக்கு மேல் மந்திக்கூட்டம் ஒன்று பம்பை ஒலி எழுப்பியபடி சிதறிப் பறந்தது. பின்னால் வந்த துரியோதனன் “அங்கரே, நாம் வழிதவறிவிட்டோமா?” என்றான். “இல்லை, இதுவே வழி” என்றான் கர்ணன். தொலைவில் அவர்களின் குளம்படி ஓசையைக் கேட்டு ஒரு சங்கு ஒலித்தது. “அங்கு நிற்கிறது! அங்கு நிற்கிறது!” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் கர்ணன். குறுங்காட்டுக்கு அப்பால் கங்கையில் ஒளி இலைகளை சுடரவைத்தபடி தெரிந்தது. அணுகும் தோறும் ஒளி பெருகியது. இருளுக்குப் பழகிய கண்களைத் தாழ்த்தி நிலத்தைப் பார்த்தபடி விரைவு கொள்ள வேண்டியிருந்தது.

அவர்களுக்குப் பின்னால் தனிக் குளம்படியோசை கேட்டது. கர்ணன் “சிவதர் என எண்ணுகிறேன்” என்றான். துரியோதனன் “அவருக்கு வழி தெரியும்… வந்துவிடுவார்” என்றான். கங்கைக்கரையில் நின்றிருந்த வீரர்களில் ஒருவன் மரத்திலேறி அவர்களை பார்த்தான். அவன் ஆணையிட்டதும் அங்கிருந்த வீரர்கள் கரைமரங்களில் பிணைக்கப்பட்டிருந்த வடங்களை அவிழ்த்து கரைகளில் நின்று இழுத்து படகை அது ஒளிந்திருந்த நாணல்பரவிய சதுப்பிலிருந்து வெளியே எடுத்தனர். சேற்றில் பதிந்து தயங்கிய படகு மெல்ல மாபெரும் உதடு ஒன்று சொல்லெடுக்க முனைவதுபோல சேற்றுப்பரப்பிலிருந்து பிரிந்து ஒலியெழுப்பியது. மரம்பிளக்கும் முனகலுடன் எழுந்தது. அவ்விடைவெளியில் நீர் புகுந்தபோது எளிதாகி வழுக்கியது போல வெளிவந்து நீரலைகளை அடைந்ததும் அசையத்தொடங்கியது.

துரியோதனன் “கரையில் அணையுங்கள்! கரையில் அணையுங்கள்!” என்றான். “கரை சேறாக உள்ளது அரசே” என்றான் ஒரு வீரன். “சேற்றில் இறங்கி ஏறிக்கொள்க… கரையில் சிக்கிக்கொண்டால் மீட்பது கடினம்” என்றான் கர்ணன். தொலைவில் கேட்ட கலிங்கத்தின் படைவீரர்களின் ஓசை வலுக்கத் தொடங்கியது. கர்ணன் புரவியை நிறுத்தாமலேயே சுப்ரியையை இடைவளைத்துச் சுற்றியபடி பாய்ந்திறங்கி அள்ளிச்சுழற்றி தோளில் இட்டபடி ஒரு கையில் வில்லுடன் முழங்கால்வரை சேற்றில் புதைய நடந்து படகை அடைந்தான். அவளை படகின் அகல்பரப்புக்குள் போட்டபின் கையூன்றி ஏறி உள்ளே குதித்தான்.

துரியோதனனின் கைபற்றியபடி சுதர்சனை நீரில் இறங்கி ஓடி வந்தாள். துரியோதனன் படகின் விளிம்பிலிருந்த மூங்கில் கழியொன்றைப்பற்றி உள்ளே பாய்ந்திறங்கி அவளை இருகைகளாலும் தூக்கிச் சுழற்றி உள்ளே இழுத்துக் கொண்டான். கரையில் நின்ற இரு வீரர்கள் நீள் கழியை சேற்றுக்குள் ஊன்றி தவளையென கைகால் விரித்து காற்றில் பாய்ந்து படகின் அகல்களில் விழுந்து தொற்றிக் கொண்டனர். இரு மூங்கில்களால் கரைப்பரப்பை ஊன்றி தோள்புடைக்க உந்தி கரையிலிருந்து படகை ஆற்றின் ஒழுக்கில் எழுப்பினர்.

அசைந்தும் குலைந்தும் படகு ஒழுக்கை அடைந்தது. “சிவதர்…” என்று கர்ணன் கூவினான். புதருக்குள் இருந்து சற்றே நொண்டியபடி துரியோதனன் ஊர்ந்த காலுடைந்த குதிரை வெளியே வந்தது. “எப்படி வந்தது அது?” என்றான் துரியோதனன். “விலங்குகளுக்குரிய உணர்வால் எளிய வழியை கண்டுகொண்டிருக்கிறது” என்றான் கர்ணன்.

ஆற்றோட்டத்தில் அமரமூக்கு திரும்ப படகு வளைந்து அலைகளில் எழுந்து விரைவு கொண்டது. “அதை கூட்டிக்கொள்ளலாம்… நம்மை தொடர்ந்து வந்துள்ளது” என்றான் கர்ணன். “அரசே, படகை மீண்டும் திருப்ப முடியாது” என்றான் முதிய படகோட்டி. அப்பால் குளம்படிகளும் ஆணையோசையும் கேட்டன. “அணுகிவிட்டார்கள். நமக்கு நேரமில்லை” என்றான் இன்னொரு வீரன். “படகு கரையணையட்டும். அப்புரவியின்றி நாம் திரும்பப்போவதில்லை” என்றான் கர்ணன். வீரர்கள் துரியோதனனை நோக்க “இங்கு ஆணையிடுபவர் அவரே” என்றான்.

முதியவீரன் கழியை சேற்று அடிப்பரப்பில் ஆழ ஊன்றி படகை உந்தி திருப்பினான். முனைதிரும்ப படகு மெல்ல சுழன்றது. “மீண்டும் சுழன்றுவிடும்… திருப்புங்கள்” என்று முதியவீரன் கூவினான். கூச்சலிட்டபடி அவர்கள் கழிகளால் படகை உந்தினர். படகு முன்னால் சென்றபின் கரையிலிருந்து உள்ளே வந்த ஒழுக்கில் மீண்டும் மூக்கு திருப்பியது. “உந்துங்கள்….” என்று முதியவீரன் கூவினான். கர்ணன் தன் வில்லுடன் எழுந்து அமரமுனையில் நின்றான். கரையில் முதல் கலிங்கவீரன் தென்பட்ட கணமே அவனை வீழ்த்தினான். நாண் தெறித்து அதிர அவன் அம்புகள் கரைநோக்கி சென்றன. இலைகளுக்கு அப்பால் கலிங்கர்கள் விழுந்து கொண்டிருந்தனர்.

புரவி நீர்விளிம்பில் நின்று கால்களை உதைத்து தடுமாறியது. நீருக்கு இணையாக இருபக்கமும் ஓடி குனிந்து பிடரி சிலிர்க்க நீரை முகர்ந்து கனைத்தது. நீரில் இறங்க அதற்கு தோன்றவில்லை. அதன் பின்காலில் கலிங்கர்களின் அம்பு ஒன்று தைக்க கனைத்தபடி திரும்பியபின் பாய்ந்து நீரில் இறங்கி நீந்தத் தொடங்கியது. “வடங்களை வீசுங்கள்!” என்றான் கர்ணன். முதிய படகோட்டி சுருக்கிடப்பட்ட கயிற்றை சுழற்றி வீச குதிரையின் கழுத்தில் அது சிக்கியது. இருவர் அதை விரைவாக இழுத்தனர். படகை திருப்பி மீண்டும் ஆற்றின் ஒழுக்குடன் இணைத்தனர்.

இரு படகோட்டிகள் வடங்களை இழுத்து கொடிமரத்தை தூக்கி நிலைநாட்டினர். நான்குபக்கமும் வடங்களை இழுத்து கொக்கிகளில் சிக்க வைத்தனர். மூன்று பாய்கள் விரிந்ததும் அவ்விசையாலேயே வடங்கள் இழுபட கொடிமரம் இறுக்கமாகியது. முதல் பாய்மரம் விரிந்த விசையைக் கொண்டே மேலும் மேலும் வடங்களை மேலிழுத்து பாய்களை விரிக்கத் தொடங்கினர். படகு விரைவுகொள்ள இருவர் புரவியை இழுத்து படகை அணுகச்செய்தனர். புரவி படகின் விளிம்பை அடைந்ததும் அதன் முன்னங்காலில் பிறிதொரு கண்ணியைப் போட்டு இருவர் தூக்க அது அஞ்சி கனைத்தது. இருமுறை இழுத்ததுமே புரிந்துகொண்டு பாய்ந்து உள்ளே ஏறி நின்று நீர் சொட்ட உடலை சிலிர்த்தது.

ஐந்து பாய்கள் விரிந்ததும் படகு மெல்ல சுழன்று எதிர் திசை நோக்கி முகம் கொண்டது. குறுங்காட்டின் கரைகள் தோறும் புரவிகள் எழுந்து வருவதை கர்ணன் கண்டான். அங்கிருந்து அம்புகள் பறந்து வந்து நீரில் மீன்கொத்திகள் போல விழுந்தன. படகோட்டிகளில் ஒருவன் அலறியபடி நீரில் விழுந்தான். அனிச்சையாக அவனை நோக்கிச் சென்ற பிறிதொருவனும் விழுந்தான். “இழுங்கள்” என முதியவன் கூவ பிறர் பாய்களை இழுத்தனர். ஒன்றன்மேல் ஒன்றென பன்னிரு பாய்கள் எழுந்ததும் படகு முழுவிரைவில் ஒழுக்கை அரை வட்டமாக கிழித்து கடந்து சென்றது.

புரவி கர்ணனை அணுகி தன் முதுகை அவன் மேல் உரசியது. கர்ணன் அதன் கழுத்தைத் தட்டி முதுகில் மெல்ல அறைந்தான். அதன் விரிந்த மூக்கை விரல்களால் மூடித்திறக்க அது விழிகளை உருட்டியபடி பின்காலெடுத்து வைத்து நீள் மூச்சு விட்டது. “இதற்கு மருந்திடுங்கள்” என்றான் கர்ணன். “ஆணை அரசே” என்றான் வீரன். கர்ணன் தன் வில்லை தாழ்த்திவிட்டு கரையை பார்த்தான். அங்கே கலிங்க வீரர்கள் நீர்விளிம்பில் செறிந்து நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

துரியோதனன் தன் காலணிகளை கழற்றி வீசிவிட்டு பலகை மேல் அமர்ந்தான். அவன் மேல் அம்புகள் ஆழப் புதைந்திருந்தன. குருதி வழிந்து சற்று கருகி படிந்திருந்தது. முதியவீரன் “உள்ளே வந்து படுத்துக் கொள்ளுங்கள் அரசே. மருந்துக் கலவை உள்ளது” என்றான். அவன் எழப்போனபோது சுதர்சனை “நான் வந்து தங்களுக்கு உதவுகிறேன்” என்றாள். துரியோதனன் நகைத்தபடி “ஓர் அம்பை பிடுங்குவதைக்கூட உன்னால் பார்த்திருக்க முடியாது. உன் தங்கையை பார்த்துக் கொள்” என்றபடி எழுந்து அறைக்குள் சென்றான். கர்ணனின் தோளில் ஓர் அம்பு பாய்ந்திருந்தது. படகோட்டி “சிறிய அம்புதான் அரசே… ஆனால் ஆழமாக பதிந்துள்ளது” என்றான்.

படகின் தரைப்பரப்பில் உடல் சுருட்டி நினைவிழந்து கிடந்த சுப்ரியையை நோக்கி சென்று மண்டியிட்டு அமர்ந்த சுதர்சனை அவள் குழலை வருடி ஒதுக்கி தலையைப்பற்றி தூக்கி “சுப்ரியை! சுப்ரியை!” என்று அழைத்தாள். பின்பு “நீர்” என்று கர்ணனை நோக்கி அண்ணாந்து சொன்னாள். கர்ணன் கையை அசைக்க ஒருவன் குடிநீருடன் வந்தான். அதை அள்ளி அவள் முகத்தில் அறைந்தாள். அவள் இமைகள் அசைவதை, உதடுகள் ஏதோ சொல்லவிருப்பது போல் குவிந்து நீள்வதை நோக்கியபடி இடையில் கைவைத்து கர்ணன் குனிந்து நின்றான். பின்னர் திரும்பி தொலைவில் கலிங்கத்தின் படைவீரர்கள் நாணல் கரையெங்கும் பரவி நின்று நோக்குவதை பார்த்தான். ஆடல் முடிந்துவிட்டதென்று அவர்கள் உணர்ந்திருந்தனர். சிலர் கைவீசிக்காட்டினர்.

சுதர்சனை மரமொந்தையை சுப்ரியையின் வாயில் வைத்து நீரை புகட்டினாள். மூன்று முறை நீரை வாய்நிறைய பெற்று விழுங்கியபின் அவள் போதும் என்று கை சேர்த்து விலக்கி விட்டு எழுந்தமர்ந்து தன் மேலாடையை இழுத்து சீரமைத்தாள். காற்றில் பறந்த நனைந்த குழலை சுற்றி முடித்து அண்ணாந்தபோதுதான் தன் மேல் நிழல் விரிய ஓங்கி நின்றிருந்த கர்ணனின் உருவை பார்த்தாள். தீச்சுட்டதுபோல் “ஆ” என்று கூவியபடி கை ஊன்றி எழுந்து விலகி அங்கு இழுபட்டு நின்றிருந்த பாய்வடத்தின் முட்பரப்பில் உரசிக் கொண்டு “ஐயோ” என்றபடி பின் நகர்ந்து சென்றாள். அச்சத்தில் உடல் நடுங்க “எங்கே இருக்கிறேன்? தமக்கையே, நாம் எங்கு செல்கிறோம்?” என்றாள்.

சுதர்சனை “இவர்கள் அரசமுறைப்படி நம்மை கவர்ந்து செல்கிறார்கள். மூத்தவர் அஸ்தினபுரியின் அரசர். அவர் என்னை கவர்ந்திருக்கிறார். இவர் அங்க நாட்டரசர். நீ இவருக்கு அரசியாகிறாய்” என்றாள். புரியாதவள் போல வாய்திறந்து கேட்டிருந்த அவள் ஒரு கணத்தில் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு “இல்லை இல்லை” என்று கூவியபடி பாய்ந்து வந்து தமக்கையின் கையைப் பற்றினாள் “நான் செல்லப் போவதில்லை… நான் இவருடன் செல்லப் போவதில்லை” என்றாள்.

“என்ன இது? மணத்தன்னேற்பு என்பதே உகந்த ஆண்மகனை அடைவதற்காகத்தான். உன்னை இப்படைகளை வென்று கவர்ந்து செல்பவர் முற்றிலும் தகுதி கொண்ட ஆண்மகனே” என்றாள் சுதர்சனை. “அது உனக்கு. நீ அஸ்தினபுரியின் அரசருக்காக காத்திருந்தாய். நான் இந்த சூதன்மகனுக்காக காத்திருக்கவில்லை” என்றாள் சுப்ரியை. “நான் சிந்து நாட்டரசருக்காக காத்திருந்தேன்… நான் அவருக்காக மட்டும்தான் காத்திருந்தேன்.” அவள் “என்னை திரும்ப கொண்டுவிடச் சொல். நான் செல்கிறேன்… நான் செல்கிறேன்…” என்று கூச்சலிட்டாள்.

சுதர்சனை “என்ன பேச்சு பேசுகிறாய்? இப்போது நீ இவரது துணைவியாகிவிட்டாய்” என்றாள். “இல்லை. நான் சிந்து நாட்டரசருக்காக காத்திருந்தேன். நான் அவர் துணைவி” என்றாள் சுப்ரியை. “அவர் தோற்கடிக்கப்பட்டுவிட்டார். அவையில் இழிவடைந்து முழந்தாளிட்டு அமர்ந்திருந்தார்” என்றாள் சுதர்சனை. “ஆம், அதை நான் பார்த்தேன். ஆனால் அதன் பொருட்டு நான் இந்த சூதன்மகனின் மணமகளாவேனா என்ன? அதைவிட இந்நீரில் குதித்து உயிர் துறப்பேன்” என்றாள் சுப்ரியை. “வாயை மூடு” என்று கையை ஓங்கினாள் சுதர்சனை. “மாட்டேன். சூதன் மனைவியாகும் இழிவை ஒரு போதும் ஏற்கமாட்டேன்” என்றபின் அவள் நிமிர்ந்து கர்ணனை பார்த்தாள்.

கர்ணன் ஆழ்ந்த குரலில் “இளவரசி, இது ஷத்ரியர்களின் ஏற்கப்பட்ட வழி. நிகழ்ந்ததை இனி மாற்ற முடியாது. எஞ்சுவது ஒரு வழியே. தாங்கள் இப்படகிலிருந்து கங்கையில் குதிக்கலாம்…” என்றபின் எடைமிக்க காலடிகள் ஒலிக்க திரும்பி அறைக்குள் சென்றான். “குதிக்கிறேன்… சூதன்மகனுக்கு மணமகளாவதைவிட நீரில் இறந்து விண்ணுலகு ஏகுவது மேல்” என்றாள் சுப்ரியை. “என்னடி பேசுகிறாய்?” என்று சுதர்சனை கேட்டாள். “அறிந்துதான் சொல்லெடுக்கிறாயா? நீ கற்ற அரசுசூழ்தலும் நெறிநிற்றலும் இதுதானா?” அவள் கைகளைப் பற்றி “நீ சொல்லும் சொல்லெல்லாம் தெய்வங்களால் கேட்கப்படுகின்றன” என்றாள்.

திகைத்தவள் போல் அவளை நோக்கிய சுப்ரியை கண்ணீர் வழிந்த முகத்துடன் பற்களைக் கடித்து “ஆம், இக்கணம் நான் விழைவது அந்த சூதன்மகனைக் கொன்று குருதியுண்ணத்தான்” என்றபின் இரு கைகளால் தலையில் ஓங்கி அறைந்து கூவியபடி கால் மடித்து தரையில் அமர்ந்தாள். முழங்கையை முட்டின் மேல் அமைத்து தோள் குறுக்கி அழத்தொடங்கினாள்.

தொடர்புடைய பதிவுகள்

நட்பும் புதியவர்களும்…கடிதங்கள்

$
0
0

1

 

 


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சென்ற வருடம் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நடந்த பாராட்டுவிழாவிலிருந்து ஆரம்பித்து, தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை நடத்திய கூட்டத்தில் தொடர்ந்து, ஒருவழியாக “எப்ப வருவாரோ” நிகழ்ச்சியில் உங்களை சந்தித்தே விட்டேன். பூமணி அவர்களுக்கான பாராட்டு விழாவிலேயே உங்களை சந்தித்து பேசலாம் என்று வந்தேன். ஆர்வக்கோளாறில் ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கே வந்துவிட்டேன். வந்துசேர்ந்தபின்தான், என் காமிராவை எடுத்துக்கொண்டு வரவில்லை என்பதையே உணர்ந்து நொந்துகொண்டேன். ஒரு கிளர்ச்சியான மனநிலையுடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு நொடியும் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். சாலையின் எல்லா அசைவுகளும் ஒரு பதட்டத்தை கொடுத்துக்கொண்டே இருந்தன. இதோ இந்த நொடியில் நீங்கள் என் பார்வையில் பட்டுவிடுவீர்கள் என்று எண்ணி எல்லா பக்கமும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கடலூர் சீனு சில பேருடன் பேசிக்கொண்டே வந்தார். கொஞ்சம் ஆர்வமும் கூடவே ஒரு விலகலும் வந்தது. அதற்கு சில காலம் முன்புதான் குழுமத்தில் அவர் எழுதிய ஒரு அஞ்சலுக்கு நக்கலாக பதிலெழுதியிருந்தேன். அவர், ஏன், யாருமே அதை கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் எனக்கு அந்த நேரத்தில் மிகவும் சங்கடமாக இருந்தது. சரி அவராக பார்த்து பேசினால் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளியே நின்று கொண்டிருந்தேன். பின்னர்தான் வீட்டிலிருந்து வந்ததில் என் முகம் மிக சோர்வாக இருப்பதை உணர்ந்தேன். ஷேவ் கூட செய்து கொள்ளாமல் வந்திருந்தேன் என்று நினைக்கிறேன். பின்னர் அருகிலிருந்த ஒரு தேநீர் கடைக்கு சென்று தேநீர் குடிக்கும் சாக்கில் முகத்தை கழுவிக்கொண்டு வரலாம் என்று கிளம்பினேன். கிளம்பிவிட்டேனே தவிர அதே பதட்டம்தான். எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் “இதோ இந்த திருப்பத்தில் ஒரு குழுவாக நீங்களும் நமது குழுமத்திலுள்ளோரும் வரப்போகிறீர்கள்” என்ற எண்ணத்துடன் ஒரு தேநீர் கடையை கண்டடைந்தேன். அருகிலிருந்த ஒரு டாஸ்மாக் கடையை பார்த்துவிட்டு சற்று இலகுவானேன் :)

பின்னர் மீண்டும் படபடத்து வந்து பார்த்தால் அப்போதும் யாரும் வரவில்லை. சீனு இன்னும் சில பேருடன் பேசிக்கொண்டிருந்தார். நான் பலவித கற்பனைகளில் ஈடுபட்டுக்கொண்டே என் பதட்டத்தை தொடர்ந்துகொண்டிருந்தேன். ஒருவேளை உங்களை பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தால் என்ன பேசுவது என்ற ஒத்திகைகள், ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தினால் என் இரு சக்கர வாகனத்தில் உங்களை ரயில் நிலையத்திற்கோ அல்லது வேறு எங்குமோ அழைத்து செல்லும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வது என்பது போன்ற யோசனைகள். பின்னர் சா. கந்தசாமி அவர்கள் வந்தார்கள். அதன்பின் யுவன் சந்திரசேகர் அவர்களும், பூமணி அவர்களும் வந்தார்கள் என்று ஞாபகம்.

எனக்கு அருகில் வந்த ஒரு இளைஞர் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு “நேரமாகுதுல்ல” என்று பேச்சை ஆரம்பித்தார். நானும் சற்று இலகுவாகி “ஆமா” என்றேன். “இந்த, சாரு நிவேதிதாங்குறாங்களே? அவர் இவர்தானா?” என்று யுவனை சுட்டிக்காட்டி கேட்டார்! யுவனின் பெயரை மட்டும் உங்கள் இணையதளத்தில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்தான் யுவன் என்று தெரியவில்லை. சாரு அவர்களை புகைப்படத்திலும், தொலைக்காட்சியில் ஒரு முறையும் பார்த்திருந்ததால், “இல்லை இவர் வேறு யாரோ” என்று சொன்னேன். பிறகு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து “ஒரு வேளை இவர்தான் சாருவோ?” என்று யுவனையே சற்று நேரம் உற்று பார்த்தேன். குழப்பம்தான் வந்தது. அந்த இளைஞரிடம் “தெரியலைங்க” என்று சொல்லிவிட்டு பின் எதற்கும் இருக்கட்டும் என்று அவரிடமிருந்து கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டேன்.

அதன் பின்னர்தான் நீங்கள் வந்தீர்கள். நீங்கள் வந்திறங்கிய காரை பார்த்ததும் என் இருசக்கர வாகன கற்பனைகளை கலைத்துவிட்டு உங்களை கவனிக்க ஆரம்பித்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள், நேர்மையாக சொல்வதென்றால் ஒரு சிறு மனவிலகலும் பொறாமையும் வந்தது :) பின் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தீர்கள். சீனு உங்களை நெருங்க அவரை அன்புடன் முதுகில் தடவிக்கொடுத்துக்கொண்டே அவருடனும் மற்றவர்களுடனும் பேசிக்கொண்டிருந்தீர்கள். பின்னர் இந்த சம்பவத்தை என் நண்பரிடம் விவரிக்கும்போது அவர் “சீனு இடத்தில் எப்போது நீங்கள் இருப்பீர்கள் என்றுதானே அந்த சமயம் நினைத்துக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார். புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

பின்னர் யுவன் மற்றவர்கள் என ஒவ்வொருவரும் வந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்க, நான் மெதுவாக வாயிற்படியருகில் வந்து நின்றுகொண்டிருந்தேன். அப்போது நீங்கள் அனைவரும் உள்ளே செல்ல ஆரம்பிக்க, அரங்கசாமி என்னை கவனித்து புன்னகைத்தார். நானும் பதிலுக்கு சிரிக்க, “முதல் தடவை வர்றீங்களோ?” என்று கேட்டார். நான் “ஆமா. நான்…” என்று ஆரம்பிக்க, அவர் “ரொம்ப தயங்கி நிக்கிறீங்களே.. வாங்க வாங்க” என்று சொல்லி விட்டு உங்களை நோக்கி சென்றுவிட்டார். நான் சற்று ஏமாற்றத்துடன் ஆனால் ஒரு சிறு நம்பிக்கையுடன் பின்னால் வந்தேன். நீங்கள் அனைவரும் தேநீர் பருக ஆரம்பிக்க, நான் என்ன செய்வது என்று தெரியாமல் (விஷ்ணுபுரம் வட்ட உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தேநீரோ என்று ஒரு எண்ணம்) உள்ளே சென்று அமர்ந்தேன்.

பின்னர் நீங்கள் அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தீர்கள். பின்னர் நீங்கள் ஒருமுறை யாருடனோ பேசிக்கொண்டே என, மற்றொரு முறை அஜிதனை அழைத்துவர என இருமுறை வந்தீர்கள் என ஞாபகம். அதிலும் முதல்முறை நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்றுமுன்னே நின்றுகொண்டு யாருடனோ பேசிக்கொண்டிருந்தீர்கள். ஒரேயொரு நொடி உங்கள் பார்வை என்னை வந்து தொட்டு சென்றது. “அதை பயன்படுத்தி புன்னகைத்திருக்கலாமே” என்று பிறகு என்னை நானே நொந்துகொண்டேன். பொதுவாகவே நான் யாரையாவது அல்லது எதையாவது பார்த்துக்கொண்டிருக்கும்போது கோபமாக அல்லது தூக்கக் கலக்கமாகத்தான் என் பார்வை இருக்கும் என்று சொல்வார்கள். நீங்களும் அப்படித்தான் நினைத்திருப்பீர்களோ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. சிறிது நேரத்தில் கடலூர் சீனுவும், மற்றும் சிலரும் எனக்கு பின்வரிசையில் வந்து அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் அப்படியிப்படி நான் திரும்பவில்லையே! அசையாமல் உட்கார்ந்திருந்தேன். பின்னர் விழா நிகழ்ச்சியில் மனதை செலுத்தினாலும் பெரும்பாலும் உங்களின் அசைவுகளையே கவனித்துக் கொண்டிருந்தேன். விழா முடிந்ததும் வந்து உங்களிடம் பேசலாமா என்று தோன்றியது. என்னவோ தெரியவில்லை. மறுபடியும் ஒரு மனவிலகல்.

மற்றவர்கள் உங்களிடம் வந்து சகஜமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்தாலே எனக்கு அவ்வாறு தோன்றிக்கொண்டிருந்தது. ஆகவே உடனே கிளம்பி சென்றுவிட்டேன். வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் நாமிருக்கும் இந்த நகரத்தில் சில கிலோமீட்டர்கள் தொலைவில் ஜெயமோகனும் இருக்கிறார் என்ற கிளர்ச்சியோடு சென்றேன். ஆச்சரியம் என்னவென்றால், அன்று காலைதான் அஞ்ஞாடி நாவலை புத்தக கண்காட்சியில் வாங்கி என் அம்மாவிற்கு கொடுத்திருந்தேன். இவ்விழா திரு.பூமணிக்கானது என்பதை கவனித்திருந்தால், கையோடு எடுத்துவந்து அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கலாம். உங்களை பார்ப்பதை தவிர எதுவும் மண்டையில் ஏறவில்லை. மக்கு மாதிரி வந்து நின்றிருந்தேனோ என்று பின்னர் நொந்துகொண்டேன்.

பின்னர், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பாக நடந்த கூட்டதிற்கு வந்தேன். இம்முறை கவனமாக காமிராவோடு. என் இருசக்கர வண்டியை நிறுத்திவிட்டு திரும்பினால் அருகிலேயே பத்ரி சேஷாத்ரி அவரது வண்டியை நிறுத்திவிட்டு என்னை பார்த்தார். அவரை அவ்வளவு அருகில் எதிர்பார்க்காததால், கொஞ்சம் தடுமாறிவிட்டேன். முதல்முறை வந்த படபடப்பு மறுபடியும் வந்துவிட்டது. சமாளித்து உள்ளே வந்து அமர்ந்து யாரேனும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். செந்தில் குமார் தேவன் வந்தார் என்று நினைக்கிறேன். மற்ற யாரையும் தெரியவில்லை. இம்முறை அரங்கத்தில் கூட்டம் இருந்ததால் கொஞ்சம் சௌகரியமாக உணர்ந்தேன்.

அருகிலிருந்த ஒருவர் தனது கைபேசியில் வெண்முரசை படித்துக்கொண்டிருப்பதை பார்த்து “இவர் நம்மை எதுவும் கேட்டுவிடுவாரோ” என்று பயந்து அவர் பக்கம் திரும்பாமலே இருந்துவிட்டேன். சிறிது தாமதமாக கடலூர் சீனு மற்றும் சிலர் சூழ வந்து சேர்ந்தீர்கள். ஏற்கனவே காமிராவை தயார் நிலையில் வைத்திருந்தேன். நீங்கள் ஒருமுறை (அறம் அறக்கட்டளை நிகழ்ச்சி என்று நினைவு) ஒரு புகைப்படக்காரரை சற்று கடுமையாக “அப்புறம் எடுத்துக்கொள்ளலாம்” என்று சொன்னது நினைவு வந்து, ரொம்ப தயங்கி, கவனமாக ஃப்ளாஷ் இல்லாமல் சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு அமைதியாகிவிட்டேன். அப்போதுகூட ஒருமுறை புகைப்படம் எடுத்தவுடன் நீங்கள் கவனம் கலைந்து என் பக்கம் பார்த்தீர்கள். அந்த நிகழ்ச்சியிலும் உங்கள் அருகில் கூட வராமல் சென்றுவிட்டேன். அந்த புகைப்படங்களை இங்கு இணைத்திருக்கிறேன். ஜெயமோகன் எழுச்சியுரையாற்றினார் என்ற தலைப்புக்கு யாரேனும் புகைப்படங்கள் கேட்டால் இவற்றை தரலாம் :)

அதன் பின்னர்தான் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் கோவையில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கோவை என் மனைவியின் ஊர். சில காரணங்களுக்காக கோவை வரும் திட்டம் இருந்தபோது, உங்கள் கீதை பேருரை அறிவிப்பு வந்தது. சரி வரலாம் என்று பார்த்தால் முடியவில்லை. பின்னர் நாங்கள் திட்டமிட்ட அதே தேதியன்று விஷ்ணுபுரம் விருது விழா அறிவிக்கப்பட்டிருந்ததை கவனித்தேன். ஆனால் அதற்கு முந்தைய வாரத்தில் என் தந்தைக்கு உடல்நலமில்லாமல் போனதால், விழாவிற்கு முதல்நாள் இரவே சென்னை திரும்புமாறு ஆகிற்று. பின்னர் மனைவி குழந்தைகளை திரும்ப கூட்டிக்கொண்டுவர திட்டமிட்டபோது உங்களின் சங்கரர் உரை அறிவிப்பு வெளியானது. ஆனால் மறுபடியும் சிக்கல். நிகழ்ச்சிக்கு முந்தின நாள் இரவு நாங்கள் கோவையிலிருந்து திரும்புவதாக திட்டம். அட போங்கடா என்று நொந்திருந்தேன். முதல் நாள் மாலை என் இளைய மகளுக்கு உடல்நலமில்லாமல் போகவே பயணத்தை ரத்து செய்யவேண்டியதாயிற்று. ஆனால் நிகழ்ச்சிக்கும் வரமுடியுமென்று தோன்றவில்லை. ஆச்சரியகரமாக ஞாயிற்றுக்கிழமை மதியம் வாக்கில் என் மகள் இயல்பு நிலைக்கு ஓரளவு திரும்பியதால், அடித்து பிடித்துக்கொண்டு மாலை உங்கள் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டேன்.

வழக்கம்போல அரைமணி நேரம் முன்னால் வந்து காத்திருந்தேன். இம்முறை நிச்சயம் இயல்பாக இருப்பேன் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தபோது, திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் வந்து எனக்கு இரு வரிசைகள் முன்பு அமர்ந்தார். வழக்கம்போல் பதட்டம். இருந்தாலும் “இப்படி இருந்தால் சரிப்பட்டு வராது” என்று எண்ணி அவரிடம் பேசலாம் என்று எழப்போனேன். அதற்குள் சிலர் வந்து அவரிடம் பேச, அப்படியே அமர்ந்துவிட்டேன். பின்னர் பாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க நாஞ்சில் நாடன் மேல் ஒரு கண்ணும், வாசலில் ஒரு கண்ணுமாக கவனித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் கடலூர் சீனுவும் மற்றோரும் சூழ வந்தீர்கள். மேடையிலிருந்த ஆடம்பர ஆசனத்தை பார்த்து சற்று குழம்பி, நீங்கள் அதில் அமர மாட்டீர்களே என்று கணித்தேன். அதே சமயம் அமர்ந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும். நான் எண்ணியது போலவே அதை புறக்கணித்து நின்றபடி பேச ஆரம்பித்தீர்கள். ஒரு பெருமிதம் கலந்த சிரிப்புடன் (உங்களை கணிக்க முடிந்துவிட்டதே) பேச்சை கவனிக்க தயாரானேன். “குரு நித்ய சைதன்ய யதி இந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணி உரையை ஆரம்பிக்கிறேன்” என்றதும் என் பெருமிதங்கள் கரைந்து அதே சமயம் நெகிழ்ந்தும் போனேன்.

உரை மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் சொன்ன உவமைகளை மிகவும் ரசித்தேன். நிறைய இடங்களில் கண்கள் கலங்கி துடைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன். அறிபவர், அறிதல், அறிபடுபொருள் ஆகியவற்றை பற்றி நீங்கள் மாமர உவமையுடன் விளக்கியது ஆகியவை மிகவும் நன்றாக இருந்தது. இரு நாட்களுக்கு முன் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது உங்கள் உரையின் இந்த பகுதிகளை எளிதாக அவருக்கு சொல்லமுடிந்தபோது, உங்கள் உரை நன்றாகவே என் மனதில் இறங்கியிருப்பதை உணர்ந்தேன். என்னதான் நீங்கள் அந்த ஆசனத்தில் அமராவிட்டாலும், அதற்கு நேர் முன்னால் நின்று பேசியதை பக்கத்தில் வீடியோவில் பார்த்தபோது நீங்கள் அதில் அமர்ந்திருப்பதைப் போன்றே தோற்றமளித்தது. நன்றாகவும் இருந்தது! :)

அருகில் ஒரு இளைஞர், “பாரதம் அணுகுண்டுகளை அந்த காலத்திலேயே பயன்படுத்திக்கொண்டிருந்தது” என்ற ரீதியில் எழுதப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை நீங்கள் வருவதற்குமுன் ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தார். சௌந்தர்ய லஹரியும் பஜகோவிந்தமும் சங்கரர் எழுதியதல்ல என ஏற்கனவே உங்கள் தளத்தில் நீங்கள் எழுதியதை படித்திருந்ததால், உங்கள் உரை நிச்சயம் அவரை சீண்டப்போகிறது என்று அவரையும் அவ்வப்போது ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் அமைதியாக இருந்தவர், இக்கால இளைய சமுதாயம் வெறும் காலிச்சட்டியாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னபோது கனிவுடன் ஆமோதித்தார். இந்தப்பக்கம் இருந்தவர் ஒரு சுயமுன்னேற்ற நூலை நீங்கள் வரும்முன் படித்துக்கொண்டிருந்தார். அவரிடம் பெரிய மாறுதல்களில்லை. நடுவில் ஃபோன் பேசிக்கொண்டு நேர மேலாண்மையில் பிஸியாக இருந்தார். பின்னர் விழா முடிந்தவுடன், பேசவேண்டாம் ஆனால் உங்கள் அருகில் சற்று நின்றுவிட்டு போகலாம் என்று நெருங்கி நின்றுகொண்டிருந்தேன்.

நிறையபேர் உங்களை பாராட்டியது மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது. நடுவில் ஒருவர் உங்களிடம் வெள்ளையும் சொள்ளையுமாக வந்து அதிகாரமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்தபோது சற்று கோபத்துடன் நெருங்கிவந்தேன். அவர் கேட்டது எனக்கு சரியாக காதில் விழவில்லை. நீங்களோ பொறுமையாக “நான் அந்த அளவிற்கு யோசிக்கவில்லை” என்று சொன்னது மட்டும் காதில் விழுந்தது. பின்னர்தான் அவர் சங்கரரின் கூடுவிட்டு கூடுபாய்ந்த கதையை கேட்டார் என்று பிறர் சொல்லி தெரியவந்தது. பின்னால் வந்த ஒரு இளைஞனும் நானும் “பாண்டிச்சேரி மொண்ணை மாதிரி கோவை மொண்ணைன்னு ஒரு கட்டுரை எழுதப்போறார்” என்று சொல்லி சிரித்தோம்.

பின்னர் வெளியில் வந்து நீங்கள் பேசிக்கொண்டிருந்தபோது தயக்கத்துடன் வந்து நின்றேன். அப்போது சீனு யாரிடமோ பேசிவிட்டு ஒதுங்க, “முதலில் இவரிடம் பேசுவோம். நாம் நக்கலாக முன்னர் எழுதியற்கு இது ஒரு மன்னிப்பாக இருக்கட்டும்” என்று அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். அவர் “குழுமத்தில் இருக்கீங்களா” என்று கேட்க, “அப்பாடா. நாம் எழுதியது இவருக்கு நினைவில்லை” என்று தைரியமாக பேச ஆரம்பித்தேன். அடுத்தடுத்து ஷிமோகா ரவி, அரங்கசாமி, ஈரோடு கிருஷ்ணன் (இன்னும் சிலரின் பெயர் நினைவிலில்லை) என எல்லோரும் வந்து பேச ஆரம்பிக்க இயல்பாகிவிட்டேன். சீனுவே தானாக உங்களை காட்டி “சார்கிட்ட பேசிட்டீங்களா” என்றார். நான் “உங்ககிட்ட வந்து பேசுறதுக்கே எனக்கு படபடப்பா இருக்கு. இதுல நான் எங்க அவர்கிட்ட போய் பேச” என்றேன். “அதெல்லாம் ஒன்னும் இல்ல. போய் பேசுங்க” என்றார். அடுத்த நாள் நீங்கள் கோவையிலிருந்தாலும், பிஸியாக இருப்பீர்கள் என்று அவர் சொன்னதால், பின்னர் ஒருவழியாக காரில் ஏற இருந்த உங்களிடம் வந்து பேச ஆரம்பித்தேன்.

”நான் கணேஷ் பெரியசாமி. உங்களுக்கு முன்னாடி கடிதம்லாம் எழுதியிருக்கேன். துக்ளக் சோ தொடர்பா. இது மனைவியோட ஊர். வந்தப்போ உங்க பேச்சை கேட்க முடிஞ்சது” என்றெல்லாம் பேச தயார் பண்ணிக்கொண்டு வந்தால், நீங்கள் நான் என் பெயரை சொன்னவுடன் “நீங்கதானா அது? கடிதம்லாம் எழுதியிருக்கீங்களே” என்று சொல்ல, என் மூளை செயலிழந்துவிட்டது. :) திக்கி திணறி “நீங்க என்னைய ஞாபகம் வச்சுருக்கிறதே எனக்கு பெரிய கௌரவம் ஸார்” என்று மட்டும் சொல்ல முடிந்தது. தொடர்ந்து இயல்பாக நீங்களும் மற்றவர்களும் என்னிடம் பேசியபடியே செல்ல எனக்கு அது ஒரு கனவு போல் இருந்தது. பின்னர் உங்களிடம் விடைபெற்று திரும்பும்போது மிகவும் சந்தோஷம் நிரம்பியிருந்தது. என் மனைவியை உடனே தொடர்பு கொண்டு உங்களிடம் பேசியதை பகிர்ந்துகொண்டேன். பின்னர் பெற்றோரிடம், நண்பன் ஒருவனிடம் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டேயிருந்தேன். வீட்டிற்கு வரும் வழியில் ஒரு ஆட்டோ பின்னால் “நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்பதை படித்து சிரித்தேன். அந்த இரவில் சிரிப்பு நிறைந்த வாயுடன் சென்று பெட்ரோல் போட்டுக்கொண்டு நன்றி சொல்லிவிட்டு வந்த என்னை அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் குழப்பமாகத்தான் பார்த்திருக்க வேண்டும்.

பின் அடுத்த நாளும் உங்களை பார்க்க ஹோட்டலுக்கு வந்தபோதுதான் கொஞ்சம் இயல்பாக உங்களை எதிர்கொண்டேன் என்று சொல்லவேண்டும். பின்னர் நீங்கள் இருக்கும் அறைக்கு வந்தபோதும் உங்களிடம் எதுவும் பேச தோன்றவில்லை. நீங்கள் வெகுவேகமாக தட்டச்சு செய்வீர்கள் என்று ஒரு முறை உங்கள் தளத்தில் சொல்லியிருந்தீர்கள். மடிக்கணினியோடு உங்களை பார்த்தபோது, அதை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கபோகிறது என்று ஆர்வமாக பார்த்தேன். நான் பார்த்த நேரத்தில் எதையோ எடிட் செய்துகொண்டிருந்தீர்கள். சற்று ஏமாற்றமாகிவிட்டது. பின்னர், வெளியில் அந்த ஹாலுக்கு வந்து சீனு, கிருஷ்ணன், மீனாம்பிகை, ராஜமாணிக்கம் மற்றும் சிலரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். கிருஷ்ணன் இயல்பாக என்னையும் பேச்சில் உள்ளே கொண்டுவந்தார். ஆனால் நான்தான் அவர் கேட்ட எளிய கேள்விகளுக்குக்கூட திணறி திணறி பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். ஏன் என்று பின்னர் யோசித்தபோது, இம்மாதிரி வேறு யாரிடம் பேசியதேயில்லை என்று அறிந்தேன். ஒருபக்கம் கஷ்டமாக இருந்தாலும், இப்போதாவது இப்படி ஒரு நண்பர்கள் குழு கிடைத்ததே என்று சந்தோஷமாக இருக்கிறது.

பின் நீங்கள் வந்து அமர்ந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தது எனக்கு ரொம்பவே பெருமையாக இருந்தது. பல விஷயங்களை தொட்டு தொட்டு பேச்சு சென்றுகொண்டேயிருந்தது. இடையிடையே சிறு சிரிப்புகள் என்று லேசாக ஆகிக்கொண்டேயிருந்தேன். யோசித்து யோசித்து ஒரு கேள்வியும் கேட்டேன் (ஆத்மானந்தர் பற்றி). பின்னர் என் மகளை திரும்ப மருத்துவரிடம் காட்ட செல்லவேண்டியிருந்ததால், ஆறுமணியளவில் கிளம்ப வேண்டியதாயிற்று. உங்கள் பேச்சை கலைக்க விரும்பாமல், மெலிதாக கிருஷ்ணனிடம் மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டேன். வெளியில் வந்து வண்டியை எடுக்கும் முன், ஒலித்துக்கொண்டிருந்த உங்கள் குரலை சில விநாடிகள் நின்று காதில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஒருவரிடமும் கைபேசி எண் வாங்கிக்கொள்ளவில்லையே என்றும், சீனுவிடம் சொல்லிக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் பிறகு தோன்றியது. என் மனைவி “ஜெயமோகன்கிட்ட சொல்லாம வந்துட்டியே? அவர் என்ன நெனச்சுக்குவார்” என்று கடிந்துகொண்டாள். அதெல்லாம் அப்போதும் சரி இப்போதும் சரி ஒரு பொருட்டாகவே இல்லை.

இப்போது கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது. இனிமேல் சென்னையில் நடக்கும் வெண்முரசு கூடுகைக்கு செல்வேன் என நினைக்கிறேன். உங்களை ஏழு வருடங்களாக தெரியும் என்றாலும் கடந்த மூன்று வருடங்களாகத்தான் தீவிரமாக படித்துக்கொண்டு வருகிறேன். முதலில் உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகள், பின்னர் அறம் வரிசை கதைகள், ஊமைச்செந்நாய் என்று உள்ளே வந்துவிட்டேன். ஒரு ஆர்வத்தில் விஷ்ணுபுரம் வாங்கி படித்து உள்ளே செல்லமுடியாமல் வைத்திருக்கிறேன். வெண்முரசில் காண்டீபம் தவிர மற்றவற்றை படித்துக்கொண்டுவருகிறேன். மழைப்பாடலை மட்டுமே எனக்கு நெருக்கமாக என்னால் உணரமுடிகிறது. மற்றவை அனைத்துமே திரும்ப ஒருமுறை படிக்கவேண்டும் என்று வைத்திருக்கிறேன். காண்டீபம் ஒருபுறம், வெய்யோன் ஒருபுறம் என படித்துக்கொண்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் நீங்கள் எழுதும் அனைத்தையும் படித்து புரிந்துகொண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
கணேஷ் பெரியசாமி.

அன்புள்ள கணேஷ் பெரியசாமி

அன்று உங்களைச் சந்தித்தது நிறைவளித்தது. பொதுவாக நான் இவ்வகை நிகழ்ச்சிகளில் தொடர் உரையாடலில்தான் இருப்பேன். ஏதேனும் ஒரு தலைப்பில் பேசத்தொடங்கி பேச்சு அதுவே சென்றுகொண்டிருக்கும். அந்தத்தலைப்பு மட்டுமே முக்கியமே ஒழிய மனிதர்கள் அல்ல. ஆகவே பலசமயம் புதியவர்களைத் தவறவிட்டுவிடுகிறேன்.

மேலும் நிகழ்ச்சிகளில் சந்திப்பதற்கும் ஓர் எல்லை உள்ளது. அது தொடர்ச்சியாக என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் பதற்றத்தின் விளைவாக இருப்பதனால் ஆழமான பதிவாக இருக்காது

நாம் மேலும் சந்திப்போம்

ஜெ

ஜெ,

2015 பலவகையினில், எதிர்பாரா நிகழ்வுகளினூடாக செழுமையான அனுபவங்களை அளித்துள்ளது. குறிப்பிடத்தக்கவையாக, தங்களை ஏப்ரல் 12 அன்று முதல்முறையாக சந்தித்தது..அதைத் தொடர்ந்து ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் நட்பு…விஷ்ணுபுரம் விழா சங்கமம். ஒவ்வொரு முறையும் இணையத்தில் மட்டுமே பார்த்து மகிழும் (ஏக்கம் கொள்ளும்)இந்நிகழ்வினில், பங்கெடுக்கப்போகும் மனநிலை அனைத்து செயல்களிலும் வெளிப்படத் தொடங்கியது. நாமக்கல் நண்பர்கள் சனிக்கிழமை காலையே அங்கிருக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தோம். வெள்ளிக்கிழமை கோழிக்கோட்டிலிருந்து பாபு அவர்கள் நேராக கோவை வருவதாகக் கூறியது, ஓர் எதிர்பாரா மகிழ்ச்சி. இவர் தற்போது குர்திஸ்தானில் பணிபுரிகிறார். 2008 முதல் 2011 வரை காங்கோவில் ஒன்றாக பணிபுரிந்தோம்.

இவர் தான் தங்கள் எழுத்துக்களை எனக்கு அறிமுகப் படுத்தியவர். சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நாமக்கல்லிருந்து காரில் கிளம்பினோம். கிருஷ்ணன் பெருந்துறையில் நிற்பதாகச் சொன்னார். அவர் ஏறியதும் தொடங்கியது இலக்கிய விழா.உங்களின் பயண அனுபவங்கள், ஊட்டி காலை நடையின்போது நீங்கள் பேசியது என பகிர்ந்து கொண்டார். 11.30 மணியளவில் ராஜஸ்தானி நிவாஸிற்க்கு வந்து சேர்ந்தோம். மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள் அப்போது தான் வந்தார். உள்ளே நுழைந்தவுடன் அரங்கா அவர்கள் ஆரத்தழுவிக் கொண்டார். தொலைபேசியில் பேசும்போது கூறுவது போலவே “நண்பா” என்ற விளி. ஏகாந்தமாக இருந்தது. உள்ளே விழா நாயகருடனான விவாதங்கள் போய்க்கொண்டிருந்தது.

இது தான் நான் பங்கு கொள்ளும் முதல் இலக்கிய சந்திப்பு. எனவே செவி முதல் வாதமே உகந்ததாக இருந்தது.முகமறியா குழும உறுப்பினர்களை அடையாளம் கண்டது பரவசமாக இருந்தது. ஒவ்வொரு அமர்வும் ஓர் திறப்பென்றே சொல்வேன். புதிய கோணங்கள், சொல்லாட்சிகள்..நீங்கள் கூறிய மூன்று தளத்திலான கவிதை வாசிப்பு, கவிதையினை அணுக புதிய பாதையினை இட்டுத் தந்தது. எழுத்தாளர்கள் செந்தில், முருகவேல் ஆகியோருடனான விவாதங்களின் போது, நண்பர்கள் எழுப்பிய கேள்விகள், அவர்களது வாசிப்பின் ஆழத்தை பறைசாற்றியது. ஜோடி குரூஸ்….அவரது ஆகிருதி, உடல் மொழி, நிமிர்ந்த நோக்கு, வலியையும் புன்னகையுடன் வெளிப்படுத்திய பாங்கு…வியந்து போனேன்.

உச்சம்….Wedge Bank. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பெரும்பாலான நாட்கள் கடலிலே கழித்திருக்கிறேன். அவரின்பால் ஈர்ப்பிர்க்கு அதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். ஆனால் மீனவ வாழ்க்கையினைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளவில்லை என்று உரைத்தது. யுவன் அவர்களின் நிதானமான பேச்சு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. தேவதச்சன் அவர்களுடனான அனுபவங்களில் ஆசிரிய மாணவ உறவு அழகாய் வெளிப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து நாஞ்சில் நாடன் அவர்களுடன் உரையாடினோம். ஷண்முகவேலுடன் பேசிக்கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது.அவரது மறுவரவின் பரவசத்தை வாழ்த்துக்களுடன் தெரிவித்துக்கொண்டோம்.

சனிக்கிழமை மாலை உங்களுடனான மாலை நடை ஓர் கனவு அனுபவம்.தங்கும் விடுதிக்கருகில் தேநீர் கடைகள் இல்லாதது பெருஞ்சிறப்பு. கேளிக்கை பேச்சினூடாக…முடிவிலியினை நோக்கி நடக்கலாமே என்ற ப்ரேமை. விஜய்சூரியன் வட்டமடித்துக் கொண்டேயிருந்தார்.அவரது கவனம் முழுவதும் ஒருங்கிணைப்பிலேயே இருந்தது..அனைவருக்கும் ஓர் புன்னகை பரிசாக. அமைச்சர் சுரேஷர் நான் என்றேன்றும் உயரத்தில் வைக்கும் ஓர் ஆளுமையாக நெஞ்சில் நிறைந்து விட்டார். அவரது வாசிப்பு, ஒவ்வோர் அமர்விலும் அவர் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியது தனிச்சிறப்பு. அமர்வுகளின் இடைவெளிகளிலும் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு ஓர் நிற்பு…ஒர் குறு விவாதம். இரவு பாட்டுக் கச்சேரி…பார்வையாளனாக அல்லாமல் பங்கேற்பாளனாக உணர்ந்தேன். ஆனந்த் மற்றும் அமைச்சருக்கு சிறப்பு நன்றி.

கச்சேரி முடிந்தவுடன், கிருஷ்ணன் மற்றும் அஜிதனுடன் மீண்டும் ஓர் நடை.இரவு 11.45..நிலவு மற்றும் வெண்முரசு…உணர்ச்சிகரமான உரையாடல்கள்…12.30 திரும்பி..மண்டபத்தின் வெளியிலேயே அரட்டை தொடர்ச்சி. மாலை விருது விழாவில் உங்கள் பேச்சு ஓர் வினையூக்கி.ஆவணப்படத்தின் நோக்கம் தெளிவாக வெளிப்பட்டது. உங்கள் வரிகள் தான் பொருத்தமாக அமைகிறது. “வாழ்க்கையில் நாம் எதுவோ, அது மட்டுமாக நாம் இருக்கும் தருணங்களில் மட்டும் நம்மில் நிறையும் குதூகலம்..நாம் உணர முடியும்.அப்படி உணரும் பலர் கொண்ட சூழலில் இருக்கும் ஆனந்தம் எளிதில் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொள்கிறது.” இந்த இரு நாட்களிலும் ஒருவரிடமும் ஓர் முகச்சுளிப்பு இல்லை.அனைவருக்குள்ளும் ஒரே மனநிலை…அது இலக்கியம் மட்டுமேயென்று எண்ணியிருந்தேன்..மற்றொன்றும் உண்டென்று பின்னரே உணர்ந்தேன். அன்பு…அது மட்டுமே இவ்வாறான சூழலை உருவாக்க முடியும்.

அன்புடன்,

மகேஷ்.

 

அன்புள்ள மகேஷ்

நலமாகச்சென்றுசேர்ந்துவிட்டீர்கள் அல்லவா?

கோவைச் சந்திப்பு இத்தனைநாட்களுக்குப்பின்னரும் பெரும் எழுச்சியை அளித்துக்கொண்டே இருக்கிறது. ஆச்சரியம்தான். ஒவ்வொருமுறையும் இந்த விரிவு உருவாகிறது. அற்புதமான நாட்கள்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சங்கரர் உரை கடிதங்கள் 6

$
0
0

1

அன்புள்ள ஜெ

சங்கரர் உரையை இதற்குள் சவுண்ட் கிளவுடில் நாலைந்துதடவை கேட்டுவிட்டேன். முதலில் அதன் கட்டுக்கோப்பு எனக்குப்புரிபடவில்லை. சங்கரர் 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் உருவான ஒரு சரித்திரத்தேவைக்காக விஸ்வரூபம் எடுத்ததைப்பற்றிச் சொல்கிறீர்கள். அதற்குமுன் அவர் ஒரு துறவியர் அமைப்பாகவும் ஒரு தத்துவத்தரப்பாகவும்தான் இருந்தார் என்கிறீர்கள்.

விஸ்வரூபம் எடுத்தபோது உருவானதே அவரைப்பற்றிய கதைகள் என்கிறீர்கள். அந்தக்கதைகளில் எல்லாம் அவர் பின்னாளில் இந்துமதத்தின் மாபெரும் தொகுப்பாளராக உருவாகியபின்னர் உருவான பிம்பத்துக்காக அவரை பக்தியுடன் சேர்க்கும் தன்மை உள்ளது என்கிறீர்கள்

கவசம் கழற்றுவதுபோல சங்கரவேதாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தன்னுடைய எல்லா பக்தி, வேள்வி சார்புகளையும் களைந்து மீண்டும் உருவானது. அதுவே இன்றிருக்கும் ராமகிருஷ்ண மடம் போன்றவை. ஆகவே இரண்டுவகையான அத்வைதங்கள் இன்றுள்ளன. ஒன்று சங்கர மடங்களின் சடங்குடன் கலந்த அத்வைதம். நவீன மடங்களின் நவீன அத்வைதம்.
அந்த வரலாற்றுச்சித்திரத்துக்குப்பின்னர்தான் நீங்கள் அத்வைதம் வேதாந்தத்தில் இருந்து எதை மேலதிகமாகச் சேர்தது என்று சொல்கிறீர்கள். அப்படி மேலதிகமாகச் சேர்த்தது கவித்துவமாக உள்ளது என்று சொன்னீர்கள். அதன்பின் அத்வைத அனுபவத்தின் அன்றாடத்தன்மையை கொண்டுவந்துகாட்டி முடித்தீர்கள்

இப்படி நான் தொகுத்துக்கொண்டபின்னர் எனக்கு இந்த உரை மிகமிக முக்கியமான ஒரு தொகுப்பாக இன்றைக்கு உள்ளது. இதிலிருந்து நான் முன்னால் செல்லமுடியும் என நினைக்கிறேன்

சரவணன்

 

அன்புள்ள சரவணன்

நன்றாகவே தொகுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இது நம் சூழலுக்கு ஏற்ப அளிக்கப்பட்ட ஒரு முதல்வடிவ அறிமுகமே

ஜெ

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தாங்கள் கோவையில் ஆற்றிய கீதைப்பேருரை பற்றிய செய்தித்தாள் அறிவிப்பு தங்களின் பேசு பொருளை நேர்மையாக அறிவித்தது. இது ஒரு சீரிய செயல். நானும் இருபது வயதில் கீதையை (சித்பவானந்தர் உரை) வாங்கினேன். ஆனால் படிக்கவில்லை அல்லது படிக்க முயன்று தோற்றேன். அதன் சாரம் தெரிந்து கொள்ளவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.

தங்களது உரை ஒரு வாழ்நாள் கால பேராராய்ச்சியின் உச்சம் போல் தோன்றியது. தங்கள் மனதில் பல்லாண்டு காலம் தியானித்து, தேக்கி வைத்த ஆன்மிகப் புதையலை முன் வைத்தீர்கள். இந்து மதத்தைப் பற்றிய தங்கள் அறிவும் தெளிவும் அசாதாரணமானது. மீண்டும் ஒருமுறை நானும் என் கணவரும் கோவையில் இருந்து சாத்தூர் செல்லும் வரை காரில் CD யிலும் கேட்டுக்கொண்டே சென்றோம். வீடு நெருங்கும் போது உரையும் சரியாக நிறைவடைந்தது ஆச்சரியமாக இருந்தது.இன்னொரு முறை கேட்டாலும் நல்லது தான்.

எனக்கு ஒன்று சொல்ல வேண்டும். நான் ஆறாண்டு காலம் Nadine Gordimer என்ற தென் ஆப்பிரிக்க நாவலாசிரியர் பற்றி “The Dialectics of Apartheid” என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தேன். Apartheid rule என்பது thesis. நெல்சன் மண்டேலா போன்றோரின் போராட்டம் antithesis. போராட்டத்தில் வெற்றி பெற்று ANC ஆட்சியில் அமர்வது synthesis. எனினும் புது ஆட்சியின் corruption போன்ற issues புதிய thesis ஐ உருவாக்கி அதற்கு எதிர்ப்பு உருவாகி அப்படியே இது ஒரு தொடர் நிகழ்வாகி உலகம் betterment ஐ நோக்கி ஒரு spiral இல் செல்வதாக apply செய்திருந்தேன்.

கீதையில் இந்த தருக்க முறை இருப்பது எனக்குப் புதிய செய்தி. அதனால் இன்னும் ஆர்வமாகி விட்டேன். புரிந்துகொள்ள முடிந்தது. தமிழில் முதல் முறையாக historiography, binaries, dialectics போன்றtheoriesஐ கொண்டு இந்திய வரலாற்றுச் சூழலில் கீதையை முன்னிறுத்திப் பேசியது தங்களின் விரிவான ஆய்வுப் பின்புலத்தைத் தெளிவுபடுத்தியது.

கவிஞர் தேவதச்சனுக்கு விருது வழங்கும் விழா அவரைப்பற்றிய அறிமுகத்தையும் நெகிழ்ச்சியையும் அளித்தது. தீவிர தமிழ் எழுத்தாளர்களை அடையாளம் காட்டி அங்கீகாரம் செய்யும் இந்த நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடி அளவளாவும் புதிய ஒரு அர்த்தமுள்ள சடங்காக மாறிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. கோவையில் உள்ளோருக்கு இலக்கிய ஆர்வம் பொதுவாகக் குறைவு என்று நினைத்திருந்த எனக்கு அங்கிருந்த கூட்டம் வேறொரு பிம்பத்தை அளித்தது.

“சங்கரர்” உரையும் நல்ல structured ஆக இருந்தது. இந்து மதத்திற்கு சங்கரரின் பங்கைப் புரிந்து கொள்ள உதவியது. ஆனாலும் எனக்கு இன்னும் சில முறைகள் கேட்டால் தான் புரியும். Terminology கொஞ்சம் புதிதாக இருந்தது. வைணவம் எனக்கு நெருக்கமாக இருப்பதாலோ என்னவோ follow செய்யக் கடினமாக இருந்தது என்று நினைக்கிறன். தங்களின் cognitive powers மீண்டும்awe-inspiring.
ஆங்கில இலக்கியமும் பணியும் அதிக காலம் என்னைத் தமிழில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்து விட்டன. முன்பு தீவிர வாசகியாக இருந்த நான் இந்தக் கூட்டங்களுக்குப்பின் தமிழோடு, தமிழ் இலக்கியத்தோடிருந்த உறவை மீண்டும் புதுப்பித்துகொள்ள வேண்டும் என்று தீவிரமாக நினைக்கிறேன். நன்றி.
.
அன்புடன்
இந்திராணி
இணைப்பேராசிரியர் (ஆங்கிலம்)
அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி
கோவை

 

அன்புள்ள இந்திராணி அவர்களுக்கு,

தமிழிலக்கியத்திற்கு நீங்கள் திரும்பி வருவதற்கு நல்வரவு.

தத்துவக்கல்வியில் ஒரு பிரச்சினை உள்ளது. கவிதையை வாசிக்கும்போது அதன் ‘context’ ஐ நாம் கற்பனை செய்துகொள்ளவேண்டும். அதைப்போல தத்துவத்தில் ஒவ்வொரு கருத்தையும் ஒரு விவாதமையமாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்கு விவாதச்சூழலில் இருந்தாகவேண்டியிருக்கிறது. தத்துவ விவாதம் நிகழாத சூழலில் நின்றபடி அதை விவாதிக்கமுடியாது

ஜெ

 

http://www.jeyamohan.in/7712#.VjtNa7_e8f8

காலையிலிருந்து நீங்கள் தளத்தில் சங்கரரை பற்றி எழுதியிருந்தவைகளை தேடி படித்து கொண்டிருந்தேன் .

கீழிருக்கும் பதிவு எனக்கு பெருமளவில் உதவியது . அற்புதமாக விளக்குகிறீர்கள் . மாயை , பிரம்மம் பற்றியெல்லாம் ஓரளவு தெளிவான புரிதல் இப்போதுதான் எனக்கு உருவாகிறது .மிகுந்த நன்றி

இப்போது விவேகானந்தர் சங்கரரை பற்றி குறிப்பிட்டிருந்ததை தேடி கொண்டிருந்தேன்  . உங்கள் கருத்தின் ஆரம்ப நிலை என்ணத்தை நான் இவரில் படித்திருக்கிறேன் .

பதிவு நூலில் தேடி கிடைக்கவில்லை , இப்படி இருந்ததாக ஞாபகம் .
” புத்தருக்கு நடந்ததுதான் சங்கரருக்கும் நடந்திருக்கும் ….. ” என

ராதாகிருஷ்ணன்

 

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

சங்கரர் உரையில் விடுபட்ட ஒன்றுண்டு. பெலவாடியில் கருவறையில் உள்ள வீரநாராயணர் சிலையின் பிரபாவலையத்தில் பத்து அவதாரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது அவதாரம் புத்தர்! புத்தருக்கு எதிராக உருவான அத்வைத ஞானமரபின் மடத்தால் பேணப்படும் ஆலயம் அது.

ஜெ

 

சங்கரர் உரை

 

தொடர்புடைய பதிவுகள்

முகங்களின் தேசம்: குங்குமத்தில் தொடர்

$
0
0

 

Mugam_Desam

அண்ணா,

வணக்கம்,

இன்று வெளிவந்துள்ள குங்குமம் இதழில், தங்களின் புதிய தொடர்  ” முகங்களின்  தேசம்  ”  விரைவில் என்ற அறிவிப்பு (ஸ்கேன் இணைப்பு இம் மின் அஞ்சலோடு இணைத்துள்ளேன்.) கண்டு மகிழ்ச்சி.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வெகு ஜன வார இதழில் தங்கள் தொடர்.  உங்கள் இணைய தளத்தில் முன்பே இடம் பெற்ற கட்டுரைத் தொடர் ஏதேனும் தான், இத்தொடராக வெளி வருகிறதா? அல்லது, புதிய கட்டுரை / பயணத் தொடரா?  எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு வாரமும் குங்குமத்தை விலை கொடுத்து வாங்கி படிக்கலாம் என்றிருக்கிறேன்.

அன்புடன்,

ஹார்ட்டா.

 

அன்புள்ள ஹார்ட்டா

நண்பர் நா கதிர்வேலன், கெ.என்.சிவராமன் ஆகியோர் குங்குமத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக இது. வெண்முரசு எழுதும் பணியில் இது ஒரு சுமைதான்

நான் பயணங்களில் சந்தித்த முகங்களின் வழியாக ஒரு இந்தியதரிசனம்- இதுவே கட்டுரையின் பொதுக்கரு. எல்லாம் முன்னரே எழுதியவையாகவே இருக்கும். ஆனால் பயணத்தில் அன்றாடம் எழுதியமையால் சுருக்கமாக வெளிவந்திருக்கும்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள்1

மங்கல இசை தொடர வாழ்த்தொலிகள் வரிசை அறிவிக்க கர்ணன் அவை புகுந்ததும் முதுவைதிகர் எழுப்பிய எழுதாக்கிளவியின் இன்னிசையும் அவையோர் கிளத்திய வீங்கொலி வரிசையும் அவைமுழவின் விம்மலும் உடன் இணைந்த கொம்புகளின் அறைகூவலும் அவனை சூழ்ந்தன. கைகளை தலைக்கு மேல் கூப்பியபடி சீர் நடையிட்டு வந்து வைதிகரை மும்முறை தலைவணங்கியபின் திரும்பி மூன்று முதுவைதிகர் கங்கை நீர் தெளித்து தூய்மைப் படுத்திய அரியணையில் அமர்ந்தான். அவன் மேல் வெண்குடை எழுந்தது. சாமரத்துடன் சேடியர் இருபக்கமும் அமைந்தனர். அமைச்சர் அளித்த செங்கோலையும் உடைவாளையும் பெற்றுக்கொண்டு மீண்டும் ஒரு முறை தலைவணங்கினான்.

அவன் அளிக்க வேண்டிய அன்றைய முதல் ஆணைக்காக காத்து நின்றிருந்த மறையவர் குலத்து இளையோன் முன்னால் வந்து வணங்கினான். முன்னரே எழுதி மூங்கில் குழலில் இட்டு மூடப்பட்ட அரசாணையை சிறிய வெள்ளித் தட்டில் வைத்து சிவதர் அவனிடம் நீட்ட அதைப் பெற்று “நன்று சூழ்க அந்தணரே! இச்சிறு செல்வம் உங்கள் நெஞ்சில் முளைவிட்டு சொற்பெருக்காக எழுக! நானும் என் குலமும் இந்நாடும் இதன் எதிர்காலமும் அச்சொற்களைக் கொண்டு நலம்பெற்று பொலிவுறுக!” என்றான் கர்ணன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபடி இளையோன் அதை பெற்றுக் கொண்டான். திரும்பி அந்தணர் நிரையை வணங்கி அவையை வாழ்த்தியபின் அவன் தன் பீடத்தை நோக்கி சென்றான்.

நிமித்திகன் அறிவிப்புமேடையில் ஏறி தன் கைக்கொம்பை முழக்க அவை அமைதியடைந்தது. “அவையீரே, இன்று இவ்வவையில் அஸ்தினபுரியின் முதன்மைத் தூதராக வந்துள்ள அமைச்சரை வரவேற்கிறோம். குஜஸ்தலத்தின் சீர்ஷபானு குடியினரும் மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தரும் கோட்டைக் காவல் அமைச்சருமான கைடபர் இங்கு வந்து நம்மை வாழ்த்தியிருக்கிறார்” என்றதும் அவை “வாழ்க!” என்று குரல் எழுப்பியது. கைடபர் எழுந்து நின்று தலைவணங்கினார். “அஸ்தினபுரி அவையின் நெறியாணையை அவர் கொண்டு வந்துள்ளார். அதை அவர் அவைமுன் அளிப்பார்” என்று சொல்ல கைடபர் பொற்குழலில் அடைக்கப்பட்ட திருமுகத்தை அமைச்சர் ஹரிதரிடம் அளித்தார்.

“அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரரின் மைந்தரும் அரசர் துரியோதனரின் தம்பியுமான இளையகௌரவர் சுஜாதரும் வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தனிச்செய்தியை அரசருக்கு அளிப்பார்” என்று நிமித்திகன் சொல்ல சுஜாதன் எழுந்து அவையை வணங்கினான். “இச்செய்திகளின்மேல் அவையின் எதிரீடுகளை அமைச்சர் ஹரிதர் எதிர்நோக்குகிறார். அரசரின் முன்பு வைக்கப்படும் அச்செய்திக்குறிப்பு இங்கு மங்கலத்தை நிறைப்பதாக! அவற்றின்மேல் எழும் நமது எண்ணங்கள் நமது உவகையை பகிர்வதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் மீண்டும் கொம்பை ஊதிவிட்டு அறிவிப்புமேடையிலிருந்து இறங்கினான்.

கர்ணன் அவையின் வலப்பக்க நிரையில் அமர்ந்திருந்த சுஜாதனை அப்போதுதான் நன்றாக நோக்கினான். அஸ்தினபுரியிலிருந்து அவன் கிளம்பி வந்த ஒன்றறை வருடங்களுக்குள்ளாகவே சுஜாதன் ஓரடிக்கு மேல் உயரம் பெற்று கரியபெருந்தோள்களும் நீண்ட கைகளும் கொண்டு பிற கௌரவர்களைப் போலவே மாறிவிட்டிருந்தான். அவன் எழுந்து தலைவணங்கியபோது என்றோ கண்டு மறந்த இளம்துரியோதனனை அருகே கண்டது போல் கர்ணன் உளமகிழ்ந்தான். கைடபர் தாடியில் வெண் இழைகள் ஓட, விழிச்சாரலில் சுருக்கங்கள் படிந்து, நோக்கில் ஒரு கேலிச்சிரிப்பு கலந்து பிறிதொருவராக மாறியிருந்தார்.

ஹரிதர் இருகைகளையும் கூப்பி “அஸ்தினபுரியின் செய்தியுடன் வந்திருக்கும் தங்கள் இருவரையும் இந்த அவை வணங்கி வரவேற்கிறது. அஸ்தினபுரியின் பேரரசரின் முகமென இளையவர் சுஜாதரும் அவர் அமர்ந்திருக்கும் அரசுக்கட்டில் முகமென அமைச்சர் கைடபரும் இங்கு எழுந்தருளியுள்ளார்கள். அவர்களை வாழ்த்துவோம்” என்றார். அவையினர் கைகளைத் தூக்கி உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர்.

கைடபர் தன் சால்வையை மீண்டும் ஒருமுறை சீரமைத்தபடி முன்னால் வந்து வணங்கி “கதிரவன் மைந்தரை, நிகரில் வில்லவரை, அஸ்தினபுரியின் முதன்மைக்காவலரை, எங்கள் குடிச்செல்வத்தை, அங்க நாட்டரசரை அடியேன் வாழ்த்தும் பேறுகொண்டேன். இன்று அரண்மனையின் ஆட்சிநோக்கராகப் பணியாற்றும் நான் பேரமைச்சர் விதுரரின் வணக்கத்தையும் நூறுதலைமுறை முதிர்ந்த அஸ்தினபுரியின் அவையின் வாழ்த்தையும் இந்த அவைக்கு அறிவிக்கிறேன்” என்றார். அவர் திரும்பி கைகாட்ட சுஜாதன் முன்னால் வந்து தலைவணங்கி “அங்க நாட்டரசருக்கு அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரரின் வாழ்த்துக்கள். என் தமையனின் அன்புச்செய்தியுடன் இந்த அவை புகுந்துளேன்” என்றான்.

கர்ணன் புன்னகையுடன் தலைவணங்கி “நல்வரவு. என் நகரும் நாடும் பெருமை கொள்க!” என்றான். அவைநாயகத்திடம் “இத்தருணத்தின் நினைவுக்கென இங்குள அனைத்து ஆலயங்களிலும் மும்முறை மங்கல முழவு ஒலிக்கட்டும். இன்னுணவுப் படையலிட்டு நகர் மாந்தர் அனைவருக்கும் அளிப்பதற்கு ஆணை இடுகிறேன்” என்றான். அவைநாயகம் “அவ்வண்ணமே” என்றார். அவையினர் “வாழ்க!” என ஒலித்தனர்.

“தங்கள் செய்தியை அவைக்கு அறிவிக்கலாம் கைடபரே” என்றார் ஹரிதர். கைடபர் கைகூப்பியபின் திரும்பி அவைக்கும் கர்ணனுக்குமாக முகம் தெரிய நின்று “அங்கம் அஸ்தினபுரியின் முதன்மை நட்பு நாடுகளில் ஒன்று. அங்க நாட்டரசரோ அஸ்தினபுரியின் அரசரின் நெஞ்சு அமர்ந்த இளையவர். எனவே அஸ்தினபுரியில் உறுதி செய்யப்பட்ட மங்கல நிகழ்வொன்றை முதன்முதலில் இந்த அவைக்கு அறிவிக்க வேண்டுமென அவை விழைந்து அதைச் செய்ய நான் ஆணையிடப்பட்டிருக்கிறேன்” என்றார்.

அவை வாழ்த்தொலி கூவ கைதூக்கி கைடபர் தொடர்ந்தார் “மூத்தோரே, சான்றோரே, அஸ்தினபுரியின் அரசரின் தங்கையும் கௌரவ குலவிளக்குமான இளவரசி துச்சளையை சிந்து நாட்டரசர் ஜயத்ரதர் மணந்துள்ள செய்தி அறிவீர்கள். அவர்களுக்கு கொடிகொண்டு முடிசூடவென்று ஒரு மைந்தன் பிறந்துள்ளான். வைகாசிமாதம் வளர்நிலா ஏழாம் நாள் மண்நிகழ்ந்து நிமித்திகராலும் சைந்தவ மூத்தோராலும் சுரதர் என்று பெயரிடப்பட்டுள்ள அம்மைந்தர் வரும் ஆவணி முழுநிலவுநாளில் அஸ்தினபுரி நகர்புகுந்து அவையமர்ந்து கொடிவழியின் குலவரிசைகளை கொள்வதாக உள்ளார்.”

வாழ்த்தொலிகள் எழுந்து அவை விழவுக்கோலம் கொண்டது. கைடபர் “அஸ்வ வலயம் என்னும் காட்டில் குடில் அமைத்து தங்கியுள்ள பிதாமகர் பீஷ்மரிடம் சென்று இச்செய்தியை முறைப்படி அறிவித்து வாழ்த்துரை கொள்ளப்பட்டிருக்கிறது. அவையமர்ந்த ஆசிரியர்களான துரோணரும் கிருபரும் வாழ்த்துரை அளித்துள்ளனர். நகருக்கு இச்செய்தி முறைப்படி அறிவிக்கப்பட்டு விழவுக் களியாடல்கள் தொடங்கிவிட்டன” என்றார். “அஸ்தினபுரியின் முதல்மருகர் தொல்குலநெறிகளின்படி பேரரசி காந்தாரிக்கு நீர்க்கடன்கள் செய்யவும் நிலம்வாழும் நாளெல்லாம் நேர்க்குருதி முறையென நலம்கொள்ளவும் கடன்பட்டவர் என்பதை அறிந்திருப்பீர்.”

நிமித்திகன் கைகாட்ட அவை அமைதிகொண்டு அச்சொற்களை பெற்றுக்கொண்டது. “பாரதவர்ஷத்தை ஆளும் பேரரசான அஸ்தினபுரியின் ஒரே இளவரசியின் மைந்தர் குலமுறை கொள்ளும் தருணத்தில் அவர் தாய்மாமன் நிலையில் கோல்கொண்டு நின்று வாழ்த்தவும் அவர் முதல்குருதிப்புண் கொண்டு முதலணிபூண்டு முதல் அன்னச் சுவையறிகையில் மடியிருத்தி அருளவும் அரசர் துரியோதனன் அங்க நாட்டரசர் வசுஷேணரிடம் விண்ணப்பிக்கிறார். எங்கள் குலவிளக்கு மங்கலம் கொள்க! அவள் கைபிடித்தோன் வெற்றியும் சிறப்பும் பெறுக! அவர்களின் மைந்தன் எதிர்காலத்தை வெல்க! மாமன் என அமர்ந்து அவரை வாழ்த்தும் கதிர்பெற்ற கைகள் என்றும் வெல்க!”

செய்தி முடிவதற்குள்ளேயே அங்க நாட்டின் அவை முகட்டுவளைவு முழங்க பேரொலி எழுப்பி வாழ்த்தத் தொடங்கியது. பின் நிரையில் இருந்தவர்கள் எழுந்து நின்று கைகளைத் தூக்கி தொண்டை தெறிக்க “அஸ்தினபுரி வாழ்க! இளவரசி துச்சளை வாழ்க! இளவரசர் சுரதர் வாழ்க! துரியோதனன் வாழ்க! அங்க நாடு பொலிக!” என்று கூவினர். சற்றுநேரம் அங்கே ஒலிமட்டுமே இருந்தது. உடல்கள் காற்றில் பஞ்சுத்துகள்கள் என சுழன்று கொந்தளித்தன. காற்று சென்றபின் மெல்ல அவை படிவதுபோல அவை அமைதிகொள்ள நெடுநேரமாகியது.

கர்ணன் கைடபரின் சொற்கள் ஒலித்து முடிவதுவரை தன் உள்ளம் அவற்றை வெறுமனே நோக்கி மலைத்து அசைவற்றிருந்ததை உணர்ந்தான். வாழ்த்தொலிகள் எழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்த தன் அவையை விழிகளால் சுற்றிச் சுற்றி நோக்கியபோது ஓர் அதிர்வென அச்செய்தி அவன் உள்ளத்தை அடைந்தது. திரும்பி சிவதரை நோக்கினான். அவரது விழிகள் அவன் விழிகளை சந்தித்தன. சிவதரின் தோளில் இருந்த நீண்ட வடுவை நோக்கிவிட்டு கர்ணன் அவை நோக்கி திரும்பிக் கொண்டான். சிவதர் அமைச்சரை நோக்கி விழிகளால் ஏதோ சொன்னார். ஹரிதர் தலையசைத்தார்.

அமைச்சர் முன்னால் வந்து இரு கைகளையும் விரித்து அவையை அமைதி கொள்ளச் செய்தார். உரத்த குரலில் “இந்த அவை நுண்வடிவில் அங்க நாட்டின் நீத்தாரும் மண்வடிவில் மூத்தாரும் அமர்ந்திருக்கும் பெருமை கொண்டது. இச்செய்தி கேட்டு அவர்கள் அனைவரும் கொள்ளும் உவகையை இங்குள்ள சுவர்களை அதிரவைக்கும் இவ்வாழ்த்தொலிகள் காட்டுகின்றன. அஸ்தினபுரியால் நாம் சிறப்பிக்கப்பட்டிருக்கிறோம். பல்லாண்டுகளுக்கு முன்பு இளவரசியின் கைபற்றி மணநிகழ்வை நிகழ்த்தியவர் நம் அரசர். நீணாள் காத்திருப்புக்குப் பின் அவள் நெடுந்தவம் மைந்தனாகியிருக்கிறது. அவரை மடிநிறைக்கும் நல்லூழ் பெற்றமைக்காக அங்க நாட்டரசர் கொள்ளும் பெருமிதத்தையும் உவகையையும் பதிவு செய்கிறேன்” என்றார்.

கர்ணன் அதற்குள் தன்னை திரட்டிக்கொண்டு எழுந்து இரு கைகளையும் கூப்பி “இந்நாள் சிறக்கட்டும். இச்செய்தி இந்நகரை வந்தடைந்த இத்தருணத்தை சிறப்பிக்கும் பொருட்டு நகரின் தென்மேற்கு மூலையில் கொற்றவை அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்கப்படும். அது அஸ்தினபுரியின் செல்வமகள் இளவரசியின் பெயரால் துச்சலேஸ்வரம் என்று அழைக்கப்படும். என் தங்கையின் அழகு முகத்தின் தோற்றமே அங்கு கோயில் கொண்டருளும் அன்னையின் முகமாக அமையட்டும். வலமேற் கையில் வஜ்ராயுதமும் இடமேல் கையில் அமுதகலசமும் இருகீழ்க்கைகளில் அருளும் அடைக்கலமுமாக அன்னை அங்கு கோயில் கொள்வாள். இனி இந்நகருள்ள நாள் வரைக்கும் பொழுது எழுந்து அணைவது வரை ஐந்து முறை துச்சளையின் பெயர் அவ்வாலய மணி முழக்கமாக இந்நகர் தழுவி எழக்கடவதாக!” என்றான்.

கைடபர் மலர்ந்த முகத்துடன் தலைக்கு மேல் கைகூப்பினார். அவை வாழ்த்தொலி எழுப்பி அலையடித்தது. கர்ணன் மீண்டும் தன் அரியணையில் அமர்ந்ததும் அமைச்சர் நிமித்திகனை நோக்கி கைகாட்டினார். அவன் அறிவிப்புமேடையில் ஏறி தன் அறிவிப்புக் கொம்பொலியை முழக்கியதும் அவையினர் வாழ்த்தொலியை நிறுத்திவிட்டு தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். நிமித்திகன் “அவையில் சுஜாதர் தன் செய்தியை அறிவிக்கும்படி அங்க நாட்டரசரின் குரலாக நின்று இறைஞ்சுகிறேன்” என்றான்.

சுஜாதன் புன்னகையுடன் கர்ணனையும் அவையையும் நோக்கி கைகூப்பி “என் இரண்டாம் தமையன் இளவரசர் துச்சாதனர் தொடங்கி நான்வரை வந்த தொண்ணூற்றுவர் சார்பில் அங்கநாட்டரசரை அடிபணிந்து பாதப்புழுதியை சென்னி சூடுகிறேன். எங்கள் அரியணை அமர்ந்தருளிய அரசர் துரியோதனர் ஒரு செய்தியை அங்க நாட்டு அரசர் வசுஷேணருக்கு அனுப்பியிருக்கிறார். அதை அரசரிடமே சொல்ல வேண்டுமென்று எனக்கு ஆணை. ஆனால் இப்போது அங்கரே ஆணையிட்டபடியால் இவ்வவையில் அதை உரைக்க விழைகிறேன்” என்றான். சுஜாதனின் நிமிர்வைக்கண்டு மகிழ்ந்து சிரித்தபடி “சொல்” என்று கர்ணன் கைகாட்டினான்.

சுஜாதன் தலைவணங்கி குரலை மேலும் உயர்த்தி “வசுஷேணர் அனைத்துப் பொறுப்புகளையும் அமைச்சரிடம் அளித்துவிட்டு உடனே கிளம்பி அஸ்தினபுரிக்கு வரவேண்டும் என்று என் தமையன் ஆணையிட்டிருக்கிறார். ஏனெனில் யவன மது அங்க நாட்டரசர் துணையின்றி சுவை கொண்டதாக இல்லை என்று அவர் கருதுகிறார்” என்றான்.

அவையின் முன்வரிசையினர் சிரிக்கத் தொடங்கினர். “என்ன சொல்லப்பட்டது?” “சொன்னது என்ன?” என்று பின் வரிசையினர் கேட்டு அறிந்தனர். அவை மெல்ல அச்சொற்களின் அனைத்து உணர்வுகளையும் புரிந்துகொண்டு சிரிக்கத் தொடங்க அவை முழுக்க பற்களாக விரிந்ததை கர்ணன் கண்டான். சிவதர் அவனிடம் குனிந்து “அலைநுரைகளைப்போல் பற்கள்” என்றார். கர்ணன் ஆம் என தலையசைத்தபடி எழுந்து சிரித்தபடி “அஸ்தினபுரியின் அரசரின் ஆணை என் சென்னி மேல் கொள்ளப்பட்டது. அவருடைய யவன மது இனிதாகட்டும்” என்றான்.

முன்நிரையில் அமர்ந்திருந்த ஷத்ரிய குலத்தலைவராகிய சித்ரசேனர் “அரசே, தாங்கள் அஸ்தினபுரியில் இருக்கையிலேயே மகிழ்வுடன் இருப்பதாக இங்குளோர் எண்ணுகிறார்கள். இந்த அரியணை தங்களை அமைதியிழக்கச் செய்கிறது. அதை அங்குள்ள அரசரும் அறிந்திருக்கிறார்” என்றார். அவர் சொற்களுக்குள் ஏதேனும் குறைபொருள் உள்ளதா என்று கர்ணன் ஒரு கணம் எண்ணினாலும் முகத்தில் விரிந்த புன்னகையை மாற்றாமல் “ஆம், இப்புவியில் நான் எங்கேனும் முற்றுவகை கொண்டு அமர்ந்திருப்பேன் எனில் அது என் தோழனின் அரியணைக்கு வலப்பக்கத்தில்தான்” என்றான்.

அமைச்சர் “இரு செய்திகளும் இனியவை. அங்கத்திற்கு அஸ்தினபுரி எத்தனை அணுக்கமானது என்பது முதற்செய்தி. அங்க நாட்டரசருக்கு அஸ்தினபுரியின் அரசர் எத்தனை அணுக்கமானவர் என்பது அடுத்த செய்தி. இரு செய்திகளும் இந்நகரில் இன்று முதல் நீளும் மூன்று நாள் களியாட்டை தொடங்கி வைக்கட்டும்” என்றார். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவை வாழ்த்தொலி எழுப்பியது.

கைடபரும் சுஜாதனும் சென்று தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். அவையின் தூண்களை ஒட்டி நின்றிருந்த அவைப்பணியாளர்கள் தாலங்களில் இன்கடுநீரும் சுக்குமிளகுதிப்பிலிக் கலவையும் எண்வகை நறுமணப்பொருட்களும் தாம்பூலச்சுருள்களுமாக பரவினர். அவை மெல்ல இயல்பு நிலைக்கு வந்தது. ஒவ்வொருவர் உடலிலும் உவகை அசைந்தது. ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளும் குரல்கள் கலந்தெழுந்த முழக்கத்தால் நிறைந்திருந்தது காற்று.

ஹரிதர் கர்ணன் அருகே வந்து சற்றே குனிந்து “சற்று குன்றியிருந்த சிந்து நாட்டரசரின் உறவு இதன் வழியாக வலுவடைவது அஸ்தினபுரிக்கு நலம் பயப்பதே” என்றார். கர்ணன் “ஆம்” என்று தலையசைத்தான். சேடி நீட்டிய தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு ஹரிதர் “சிந்து நாடு காந்தாரத்தை ஒட்டியுள்ளது. இந்திரப்பிரஸ்தத்தின் உறவுநாடுகளான சிபி நாட்டுக்கும் மத்ரத்திற்கும் அருகே அஸ்தினபுரிக்கொரு வலுவான துணை நாடு தேவை. ஜயத்ரதர் நாளும் என படைத்திறன் கொண்டு, பொழுதும் என கருவூலம் பெருத்து பேருருக் கொண்டு வரும் அரசர்” என்றார். “உண்மையில் இச்சில மாதங்களாகவே ஜயத்ரதரை எவர் துணைவராக்கப் போகிறார்கள் என்பதே பேசுபொருளாக இருந்தது.”

கர்ணன் தலை அசைத்தான். வெற்றிலைச்சுருளை கையில் எடுத்து வாயிலிடாமல் வைத்தபடி “சிவதரின் தோளில் உள்ள அந்த நீள்வடுவை பார்த்தீர்களா?” என்றான். “ஆம், அதை நான் அறிவேன். கலிங்க இளவரசியை கவர்ந்த அன்று சிவதர் புரவி இல்லாமல் கலிங்கப் படைகளிடம் சிக்கிக் கொண்டார். அவரை அவர்கள் சிறைபிடித்துக் கொண்டு செல்லுகையில் எதிரே வந்த ஜயத்ரதர் அடங்காச்சினம் கொண்டு அவரை வாளால் வெட்டினார்” என்றார். “போரில் அல்ல” என்றான் கர்ணன். “கைவிலங்கிட்டு புரவியில் கட்டி இழுத்துச் செல்லும்போது வெட்டியவன் அவன். எந்த நெறிகளுக்கும் ஆட்பட்டவன் அல்ல. சினம் அவனை கீழ்மையின் எல்லைக்கே இட்டுச் செல்கிறது.”

ஹரிதர் “ஆம். அவரைப்பற்றி எப்போதும் அப்படித்தான் பேசப்படுகிறது” என்றார். கர்ணன் “பிடியானையென உளம் விரிந்த என் தங்கைக்கு அத்தகைய ஒருவன் கணவனாக அமைந்ததைப்பற்றி எண்ணும்போதெல்லாம் சினம் எழுந்து உடலை பதற வைக்கிறது” என்றான். “அன்று அவன் கலிங்கமகளை மணம்கொள்ள வந்ததை எண்ணி துரியோதனர் கொண்ட உட்சினத்தை நான் நன்கறிவேன். துச்சளையின் வயிறுதிறக்காமையால் சிந்துநாட்டரசர் பிறிதொரு அரசியை மணம்கொண்டு பட்டம்சூட்ட விழைவதாக சொல்லப்பட்டது. சேதிநாட்டுக்கும் வங்கநாட்டுக்கும் கோசலத்திற்கும் மணம்கோரி தூதனுப்பியிருந்தார். அவர்கள் அஸ்தினபுரியை அஞ்சி அதை தவிர்த்தனர். விதுரர் மறைமுக எச்சரிக்கையுடன் மருத்துவர்குழு ஒன்றை அனுப்பியபின் அத்தேடலை நிறுத்திக்கொண்டான்.”

“ஆனால் தொல்நெறிகளின்படி ஏற்புமணத்திற்குச் சென்று பெண்கொள்ள ஷத்ரியர் அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆகவேதான் கலிங்கத்திற்குச் சென்றான். உடன் மகதத்தின் பின்துணையும் இருந்தது. கலிங்கமும் மகதமும் தன்னை ஆதரித்தால் அஸ்தினபுரி அஞ்சுமென கணக்கிட்டான்” என்று கர்ணன் சொன்னான். “அன்று அவனை அவைநடுவே சிறுமைசெய்தது திட்டமிட்டேதான். அதன்பின் எந்த அவையிலும் ஒரு வீரன் என்று சென்று நிற்க அவன் கூசவேண்டுமென எண்ணினேன். அதுவே நிகழ்ந்தது. ஓராண்டுகாலம் அவன் தன் நாடுவிட்டு நீங்கவில்லை.”

“அது நன்று” என்றார் ஹரிதர். “துரியோதனர் பொருட்டு நான் அதைச் செய்தேன். விதுரர் என் செயலை பொறுத்தருளக்கோரி ஒரு முறைமைச்செய்தியை சிந்துநாட்டு அவைக்கு அனுப்பி அப்பூசலை அன்று முடித்து வைத்தார். ஆனால் ஜயத்ரதனின் நெஞ்சு எரியுமிக்குவையாக என்னை எண்ணி நீறிக்கொண்டிருக்கும் என நான் அறிவேன்” என்றான் கர்ணன். “தருணம் நோக்கியிருப்பான். ஒரு சொல்லையும் வீண்செய்யமாட்டான்.”

சிவதர் “ஆம். முதல் சிலகணங்களுக்குப் பிறகு நானும் அதையே எண்ணினேன்” என்றார். “ஆனால் ஜயத்ரதருக்கும் வேறுவழியில்லை. அவர் அஸ்தினபுரியைச் சார்ந்தே நின்றாகவேண்டும். அவருக்கும் மகதத்திற்குமிடையே இருந்த மெல்லிய உறவும் இன்று முற்றாக முறிந்துள்ளது. வில்லேந்திய கர்ணர் துணையுள்ள துரியோதனரை வெல்ல இயலாதென்று அறிந்த ஜராசந்தர் கலிங்கத்தின் ஏற்புமணப்பந்தலில் அமைதிகாத்தார். அவை நடுவே தான் கைவிடப்பட்டதாக உணர்ந்த ஜயத்ரதர் மகதரை நோக்கி கைநீட்டி அசுரக்குருதி அவைநட்பறியாதது என்று காட்டிவிட்டீர் மகதரே என்று கூவி சிறுமைசெய்தார். ஜராசந்தர் புயம் தூக்கி போருக்கெழ உபகலிங்கர் கைகூப்பி இருவரையும் அமைதிப்படுத்தினார்.”

“இழிவுசெய்யப்பட்டதாக உணர்ந்த ஜயத்ரதர் வாளையும் வில்லையும் எடுத்துக்கொண்டு நகர்விட்டு நீங்கும்போதுதான் சிறைபட்ட என்னைக் கண்டார். மறுகணம் எதையும் எண்ணாமல் என்னை நோக்கி வந்து வாளால் என்னை வெட்டினார்” என்றார் சிவதர். “அன்று கலிங்கப் படைத்தலைவன் என்னை பின்னால் இழுத்து காக்கவில்லை என்றால் உயிர் துறந்திருப்பேன்.” கர்ணன் ஹரிதரிடம் “மூன்று மாதங்கள் சிவதர் கலிங்கத்தில் நோய்ப்படுக்கையில் இருந்தார். இவருக்கு ஈட்டுச் செல்வமாக பத்தாயிரம் பொன் நாணயங்களை அளித்து மீட்டுக் கொண்டுவந்தோம்” என்றான்.

24

“இனி அதைப்பேசி எப்பயனும் இல்லை. மங்கலம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அது நிகழ்க! அதில் மாமனாக நின்று இளவரசருக்கு மண்சுவையும் மணிமுடியும் அளிக்கும்படி தாங்கள் கோரப்பட்டிருப்பது அனைத்து வகையிலும் அங்க நாட்டுக்கு பெருமையளிப்பது. அவ்வாய்ப்பைக் கோரி நிற்கும் முடிசூடிய மாமன்னர்கள் பலர் ஆரியவர்த்தத்தில் உள்ளனர்” என்றார் ஹரிதர். “ஆம். ஆனால் ஜயத்ரதனின் விழிகளை என்னால் எளிதில் எதிர்கொள்ளவும் இயலாது” என்றான் கர்ணன். குரல் இறங்க தலையசைத்தபடி “பின்னர் பலநாள் அதற்காக வருந்தியிருக்கிறேன். அந்த அவையிலும் அச்செயல் தவிர்க்கமுடியாத போர்முறையாகவே இருந்தது” என்றான்.

“களமறிந்தவர் என்பதனால் அவரும் அதை அறிந்திருப்பார்” என்றார் ஹரிதர். கர்ணன் “முதலில் படைக்கலமேந்தி என்னை எதிர்க்க வந்தவன் ஜயத்ரதன். அவனை இழிவுசெய்து அவையில் குன்றி அமரச்செய்ததனால்தான் பிறர் படைக்கலம் கொண்டு அன்று எழாமல் இருந்தனர். சிறுமை செய்வதென்பது போரின் உத்திகளில் ஒன்று. ஆனால் எப்போதும் பிறகு அது துயரளிப்பதாகவே உள்ளது” என்றான். “அது எல்லா களத்திலுமுள்ள நெறிதான் அரசே” என்றார் ஹரிதர். “சொல்லாடும் களத்திலும் சிறுமைசெய்யல் நிகழ்கிறது. அவையில் இறந்து அமைந்தவர்களும் உள்ளனர்.”

“கொல்லப்படுவதைவிட அவமதிப்பை அளிப்பது கொடியது. கொல்லப்பட்டவன் வீர சொர்க்கம் செல்கிறான். சிறுமைகண்டவன் ஒவ்வொரு கணமும் தழல் எரியும் நரகுக்கு சென்று சேர்கிறான்” என்றான் கர்ணன். “நான் ஜயத்ரதனை நேரில் சந்திக்கையில் அவன் கைகளைப் பற்றியபடி தலை தாழ்த்தி நான் செய்த பிழைக்காக பொறுத்தருளும்படி அவனிடம் கோரினால் என்ன?” ஹரிதர் “ஒருபோதும் அப்படி செய்யலாகாது. மைந்தன் பிறந்து அஸ்தினபுரியின் உறவு மேம்பட்டபின் அதைச் செய்வதென்பது நீங்கள் அஞ்சுவதாகவே பொருள்படும். அது அஸ்தினபுரியின் நட்பைப் பெறுவதற்கான ஒரு கீழ்மை நிறைந்த வழி என்றே விளக்கப்படும். இனி ஒருகணமும் உங்கள் தலை தாழக்கூடாது” என்றார்.

கர்ணன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க அவர் தணிந்த உறுதியான குரலில் “ஏனெனில் உங்கள் தலை தாழச்செய்வதொன்றே இனி ஜயத்ரதரின் அணுகுமுறையாக இருக்கும். தருக்கி நிமிரும்போது மட்டுமே உங்களால் வெல்ல முடியும்” என்றார். கர்ணன் சிலகணங்கள் மீசையை நீவியபடி பின் “உண்மை” என்றான். பெருமூச்சுடன் “எத்தனை கணக்குகள்! எத்தனை ஆடல்கள்! எல்லாம் எதற்கென்றே தெரியவில்லை” என்றான். “அவை நாம் ஆடுவன அல்ல” என்றார் ஹரிதர்.

தொடர்புடைய பதிவுகள்

சந்திப்புகள் : கடிதங்கள்

$
0
0

1-DSC_8011

 

வணக்கம்.

கோவையிலுள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நெல்லையில் இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். சரிதான். 2015இல் புத்தகத் திருவிழா நடக்காதததிலிருந்தே கண்டாயிற்று. விஷ்ணுபுரம் விருது அளிக்கும் விழாவும் நெல்லையில் நடக்க வாய்ப்பில்லையா? தேவதேவனுடன் திற்பரப்பில் நடந்த நிகழ்வில் பங்குபெறாததற்காக வருந்துகிறேன். மீண்டும் அப்படியொரு நிகழ்வில் தேவதேவனுடன் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

ஸ்ரீநிவாச கோபாலன்

அன்புள்ள ஸ்ரீநிவாச கோபாலன்

இன்றிருக்கும் நிலையில் நான் மேலதிகமாகச் சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் ஒருங்கமைக்க இயலாது

வேறு சில சந்திப்புகளை அமைக்கலாமென நினைக்கிறேன். மதுரை மேலூரில் ஒரு சந்திப்பு அமைக்கலாம் என விஜயா வேலாயுதம் சொல்கிறார்

பார்ப்போம்

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2016 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தாங்கள் வருகை தர எதாவது திட்டம் உண்டா ?

தங்களை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். தாங்கள் உட்பட பல இலக்கிய முன்னோடிகளை சந்திக்கக் காத்திருக்கிறேன். இந்தப் புத்தாண்டில் என்னை ஒரு நல்ல ரசனை உள்ள இலக்கிய வாசகனாக பக்குவப் படுத்திக்கொள்ள என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன்…

தங்களின் இலக்கியப் பணி மேலும் சிறப்புடன் தொடர என் வாழ்த்துக்கள்..
அன்புடன்

ப்ரவீன்.

 

அன்புள்ள பிரவீன்

புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியுமா எனத்தெரியவில்லை. அது ஏப்ரலில் வருகிறது என்றார்கள். ஏப்ரலில் ஊட்டி வருடாந்தர சந்திப்பான ‘குருநித்யா கருத்தரங்கு’ நிகழும்

அதற்கு முன் ஒரு புதியவர்களின் சந்திப்பு அமைத்தாலென்ன என்னும் எண்ணம் உள்ளது

ஜெ
அன்புள்ள அண்ணன்

5 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து உங்கள் எழுத்துகளை வாசித்து வருகிறேன் அவற்றால் விரிந்த என் உலகம் அதிகம்.
சென்னையில் 2 வருடங்களுக்கு முன் சிவகாமி இ ஆ ப புத்தக வெளியிட்டு விழாவில் உங்களை நேரில் சந்தித்து பேசினேன் , பிறகு ஓரிரு கடிதங்கள்

நேரில் அதிகம் பேசியது இல்லை, புதியவர்கள் சந்திப்பு அறிவிப்பு வெளியிடுவீர்கள் என்று ஆவலாக உள்ளேன், அதன் பிறகு பயணத்திலோ அல்லது ஊட்டி குருகுல சந்திப்பிலோ பங்கு கொள்ள விருப்பம்.

அன்புடன்

விஜய்
அன்புள்ள விஜய்,

பிப்ரவரி மாதம் ஊட்டியில் முற்றிலும் புதியவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு இரண்டுநாள் சந்திப்பை அமைத்தாலென்ன என்று எண்ணுகிறேன். ஊட்டி பலவகையிலும் வசதி. . சனி ஞாயிறுகளில் சந்தித்தால் ஒரு விடுபட்ட தனித்த மனநிலையில் நல்ல உரையாடல்கள் அமையும்.

பத்து புதியவர்கள் விரும்பினால் நிகழ்த்தலாம்

ஜெ

 

மதிற்பிற்குரிய ஜெயமோகன்,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.

தங்கள் எழுத்துக்களை சமீப காலமாக வாசித்து வருகிறேன். நான் சிங்கப்பூர் வாழ் தமிழன். தங்களின் சிங்கப்பூர் வருகையை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன். தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் பணி சுமை காரணங்களால் பார்க்க முடிய வில்லை. பிறகு தங்களின் இரு தீவுகள் பயணக்குறிப்புகளின் மூலம் உங்கள் அனுபவங்களை தெரிந்துகொண்டேன்.

தங்களின் வெண்முரசு நாவலை நானும் எனது நண்பரும் வாசித்து வருகின்றோம். ஆனால் தாங்கள் எழுதும் வேகத்திற்கு எங்களால் வாசிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல உங்கள் வலைத்தளத்தில் அனைத்து கட்டுரைகளும் ஓவொன்றும் வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு விடையளிக்க வல்லவை (மன்னிக்கவும் சரியாக சொல்ல தெரியவில்லை).  இது போன்ற பல படைப்புகள் எங்களை போன்ற நிறைய இளைஞர்களுக்கும் மற்றும் நம் சமூகத்திற்கும் தேவை.

பணிவான வாழ்த்துக்கள்….

அன்புடன்
சைலேந்திரன்

 

அன்புள்ள சைலேந்திரன்

தங்கள் கடிதத்துக்கு நன்றி.

ஒர் எழுத்துலகுக்குள் நுழையும்போது பரவசமும் குழப்பமும் மிக்க மனநிலை நிலவும். மெல்ல அதில் நமக்கான ஒரு வாசலைக் கண்டடைவோம். அது ஒரு அற்புதமான மனநிலை

வாழ்த்துக்கள். என் புனைவுலகு உங்களைச் சூழ்ந்துகொள்ளவேண்டுமென விரும்புகிறேன்

ஜெ

 

ஜெயமோகன் அவர்களுக்கு,

26.12.2015 அன்று கோவை ராஜஸ்தான் நிவாஸ், 27-ம் தேதி பரிசளிப்புவிழாவிலும் கலந்து கொண்டு உங்களுடைய சிந்தனையின் தேடுதல்களோடு பயணம்செய்யும் வாய்ப்பு திரு. சுரேஷ் வெங்கடாத்திரி மூலம் கிடைத்தது!

கார்ப்பொரேட் வாழ்க்கை, பொருளீட்டுதல் காரணமாக தாய் மொழி தமிழ், தமிழ்புத்தகங்கள், பேசும்,படிக்கும் வாய்ப்பை 25 வருடமாக இழந்து, இப்போதுதிடீரென்று வீடு விட்டால் வேலை, அலுவலகம் விட்டால் கிளப் என்று நிலையில்இருந்து விலகி தமிழ் புத்தகங்கள், தமிழ் சிந்தனைப் பரிமாற்றங்கள் என என்வேர்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன்!

உங்களுடைய (அறம்) “உண்மை மனிதர்களின் கதைகள்” படித்தபோது முதலில் நீங்கள்சந்தித்த நாயகன் குடந்தை MV. வெங்கடராமன், அவருடைய உதவியாளர் “கரிச்சான்குஞ்சு” என்பதையும் தெரிந்து கொள்ள நேர்ந்தது.வணங்கான், யானை டாக்டர்,கெத்தேல் சாகிப்,ஆகியோர் உங்களை நோக்கி என்னை திரும்பச் செய்தனர்!

09.12.2015 அன்று கிக்காணி பள்ளியில் உங்களுடைய கீதைப்  பேருரையின்கடைசிப் பகுதி கேட்க நேர்ந்தது! பெரியவர் ஆற்றூர் ரவிவர்மாஅவர்களுடன் நீங்கள் நடந்து கொண்டிருந்த போதுஉங்களை கடந்த வராகம் வலது காது மடித்து தன்னுடைய குட்டிகளை கூட்டிச்சென்றதும், வாலை சுழித்துக் கொண்டு ஒரு சிறிய குட்டி அட்டகாசம் செய்ததைநேர்த்தியாக நீங்கள் விவரித்ததும், உங்கள் அவதானிப்பும் என்னை உங்களை நோக்கி நகரச் செய்தது.

கீதைப்  பேருரையின் போது உங்களுடைய நிலவும், பாலைவன வர்ணணையும், இராஜஸ்தான் நிவாஸில் நீங்கள் உங்களுடைய வாசிப்பு அனுபவங்களை நினைவு கூர்ந்ததும் என்னை உங்களைத் தொடரச் செய்கிறது!

என்னுடைய மனைவியும், தமிழ் கற்றுக் கொண்ட எனது மகனும் இப்போது நிறையவாசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதை மகிழ்வோடு சொல்லிக் கொள்வேன்!தற்போது புல்வெளி தேசம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்! இந்த ஆங்கில புதுவருடத்திற்கு விஷ்ணுபுரம் வாங்கி இருக்கிறேன், குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good வரை படித்திருக்கும் எனக்கு உங்களுடைய வெண்முரசு படிக்க உங்களுடைய ஆசீர்வாதமும், எல்லாம் வல்ல இறைவனின் அருளும்கிடைக்கட்டும்!

  1. http://vengadapurathan.blogspot.in
    2.http://karanarajan.blogspot.in ஆகிய வலைத்தளங்களில் என்னுடைய நினைவுகளை
    பதிவு செய்து வருகிறேன்!

நன்றியுடன்
சுந்தர்

 

அன்புள்ள சுந்தர்

ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்

பொதுவாக ஒரு நல்ல கதையை நாமே எழுதும் நிறைவை ஒரு புதியவாசகர் அளிக்கிறார். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் மேலும் சந்திப்போம்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )

$
0
0

 

நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

நீலம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

 

இம்மாதத்திற்கான வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை ) வரும் ஞாயிறு ( 17-01-2016 ) அன்று நடைபெறும். நம் குழும நண்பர் திரு. ஜானகிராமன் வெண்முரசு குறித்து உரையாற்றுவார். அதைத்தொடர்ந்து நண்பர்களின் கலந்துரையாடலும் நடைபெறும்.

 

முகவரி மற்றும் நேரம்

Satyananda Yoga -Chennai

11/15, south perumal Koil 1st Street

Vadapalani – Chennai- 26

9952965505
மாலை 4-8வரை

 

வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

 

தொடர்புடைய பதிவுகள்

சங்கரர் உரை -கடிதங்கள் 7

$
0
0

271215_5

அன்புள்ள ஜெ,

வணக்கங்கள் பல.

எழுச்சியூட்டும் உரை.  பதிவு செய்து பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

சில வருடங்களுக்கு முன், அத்வைதம் எளிய மக்களுக்குக் கைகூடுவதை ஆந்திராவில் வரதையபாளையத்தில் பார்த்தேன். ஓரளவுக்கு இயற்கையோடு தொடர்பு உள்ளவர்களுக்கு  அது எளிதாகிறதோ என்று தோன்றுகிறது.

படித்த இளைஞர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி இருமையை வலியுறுத்துகிறது என்பது சரி.  அத்வைதம் ஏற்புடையதல்ல  என்பது சரியா? அத்வைதம் அனுபவித்து உணர்ந்து, அறியப்பட வேண்டிய ஒன்று.  மேற்கு முறை கல்வியுடன், அனுபவமும் சேர்ந்தால் சாத்தியமே.

ஸ்ரீதர் திருச்செந்துறை

 

அன்புள்ள ஸ்ரீதர் ,

அத்வைதம் ஏற்புடையதல்ல என்று நான் சொல்லவில்லை. அத்வைதம் ஒரு மெய்யியல்தரிசனம். அது அறிவார்ந்த தர்க்கத்துடன் விளக்கப்படும்போது தத்துவம்

அதை ஒரு மதம்போல ‘பரப்ப’ முடியாது. அதன் தேவையை எவ்வகையிலோ முன்னரே சற்றேனும் உணராதவர்களுக்கு அது புரியாது. அதை பாடமாகப் பயில்வது பயனற்றதும்கூட

இவ்வுலகில், இதன் லாபநஷ்டங்கள் இன்பதுன்பங்கள் நன்மைதீமைகள் பாவபுண்ணியங்கள் என்னும் இருமையில் முழுமையாக ஆழ்ந்து வாழ்க்கையை அறிபவர்களுக்கு அதனால் ஆவதொன்றுமில்லை. எங்கோ அதற்கப்பால் மனம் சென்றுவிட்டவர்களுக்குரியது அது.

அது எவராகவேண்டுமென்றாலும் இருக்கலாம். நான் கடும் துயரின் கணம் வழியாக அங்கே சென்றேன். அற்புதமான இயற்கையனுபவங்கள் வழியாகச்சென்றார் நித்ய சைதன்ய யதி

நோயற்றவர்கள் மருந்துண்பதுபோல வெறும் தர்க்கமாக அத்வைதத்தை அறிவது. நான் சொல்வது அதையே

 

ஜெ

 

ஜெ

தமிழில் அத்வைதம் :

http://davidgodman.org/gen2/p/books/godman.sorupa-saram.html

இந்த நூலை நான் படித்திருக்கிறேன் . இந்திய சிந்தனை மரபில் வந்த, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் – தமிழில் வந்த அருமையான அத்வைத நூல்.

கார்த்திகேயன்

 

அன்புள்ள கார்த்திகேயன்

இத்தகைய நூல்கள் பல தமிழில் உள்ளன

அத்வைதத்தை வரலாற்றுப்பார்வையுடன் அறிமுகம்செய்யும் நூல், மற்ற தத்துவங்களுடன் சமநிலையில் நின்று ஒத்துநோக்கி எழுதப்படும் நூல் நமக்குத்தேவை

அதன்பின் அத்வைதத்தை விளக்கும் பாடல்நூல் நமக்குவேண்டும். ஆனால் அத்வைதம் ஒருபோதும் நூல்கள் வழியாகக் கற்கப்படமுடியாது. எந்தத் தத்துவமும் நூல்கள் வழியாக பயிலப்படத்தக்கதல்ல. அதற்கு விவாதச்சூழல் கொண்ட கல்விமுறை, ஆசிரியரால் வழிகாட்டப்படும் கல்விமுறை தேவை

நம் மரபான குருகுலங்களில் அம்முறை இருந்தது. இன்று சில மேலைநாட்டுப்பல்கலைகளில் உள்ளது

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

கிறிஸ்மஸ் தவளை

$
0
0

1

 

‘இந்த தவளையை பாரும். தண்ணீருக்குள் தோலினால் மூச்சுவிடும். வெளியே இருக்கும்போது சுவாசப்பையினால் மூச்சு விடுகிறது. இது அழிவின் விளிம்பில் உள்ள அபூர்வமான. பிக்கர்கில்ஸ் ரீட்தவளை. இந்த இனம் பூமியிலிருந்து மறைந்தால் மனிதர்களுக்குத்தான் நட்டம். 10,000 ராண்டுகள் அந்த நட்டத்தை தீர்க்காது.

அ.முத்துலிங்கத்தின் நுணுக்கமான எழுத்தில் உயிர்கொள்ளும் ஓரு குட்டிக்கதை

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் - 2

அவை இன்நீர் அருந்தி முடித்த பிறகு மெல்லிய பேச்சொலி இணைந்து முழக்கமென்றாக, அசைவுகள் அமைந்து சீர் கொள்ளத்தொடங்கியது. அவர்கள் அச்செய்தியால் கிளர்ந்திருப்பதை அரசமேடை மேலிருந்து காணமுடிந்தது. ஷத்ரியர்களிடம் மட்டும் சற்று ஏளனமும் அமைதியின்மையும் தெரிந்தது. வைதிகர்கள் சிறிய குழுக்களாக ஆகி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

ஹரிதர் கைகாட்ட நிமித்திகன் மேடையேறி “அவையோரே, இன்று பிற ஆயத்து அலுவல்கள் ஒன்றுமில்லை. அஸ்தினபுரியின் நற்செய்தியுடன் இங்கு அவைக்கு வந்த அமைச்சரையும் இளவரசரையும் நமது வைதிகரும் ஷத்ரியக்குடியினரும் வணிகரும் உழைப்பாளர் குலங்களும் முறைப்படி கண்டு வணங்கி வரிசை முறை இயற்றுவார்கள். அதன்பின் இத்தருணத்தை நிறைவுறச் செய்யும்படி அங்க நாட்டின் கருவூலத்திலிருந்து அஸ்தினபுரியின் அமைச்சரும் இளவரசரும் தொட்டளிக்கும் செல்வம் முனிவருக்கும் வைதிகர்க்கும் ஆலயங்களின் அறநிலைகளுக்கும் அளிக்கப்படும்” என்றான்.

அஸ்தினபுரியின் அவை நிகழ்வுகள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் போன்று இருக்கும் என்பதை கர்ணன் பலமுறை கண்டிருக்கிறான். ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பர். பலமுறை அவற்றை நிகழ்த்தியிருப்பர். எனவே எந்த தடுமாற்றமும் இன்றி எழுந்து பலநூறு முறை பயிற்சி அளிக்கப்பட்டது போன்ற அசைவுகளுடன் தெளிவாக வகுக்கப்பட்ட பாதையில் வந்து அவைநின்று ஒவ்வொருவரும் முன்னரே அறிந்த சொற்றொடர்களை சொல்லி ஒவ்வொரு விழிக்கும் நன்கு பழகிய அசைவுகளை அளித்து மீள்வார்கள். தலைமுறைகளாக காடுகளுக்கு மேயச் செல்லும் மாடுகள் குளம்புகளில் வழி கொண்டிருப்பதைப் போல.

மாறாக அங்க நாட்டின் அரசவை ஓராண்டு அவைக்களப் பயிற்சிக்குப் பிறகும் பலமுறை அறிவுறுத்தப்பட்டபின்னரும் எப்போதும் ஒழுங்கற்ற ஒரு பெருந்திரள் ததும்பலாகவே இருந்தது. முன்நிரையில் இருந்த பெருவணிகர்களும் ஷத்ரியரும் எழுந்து அஸ்தினபுரியின் அமைச்சரை நோக்கி செல்வதற்குள்ளாகவே பின்நிரையிலிருந்து உரத்தகுரலில் கூவியபடி கிளர்ந்தெழுந்த சூத்திர குலங்களின் தலைவர்கள் தங்களுக்குள் கூவி அழைத்தபடியும் உரக்க பேசியபடியும் கைகளை வீசி வாழ்த்தொலி எழுப்பியபடியும் கைடபரை நோக்கி வந்தனர். அவர்கள் சற்று பிந்தி வரவேண்டும் என்று துணை அமைச்சர்கள் இருவர் ஊடே புகுந்து கையசைக்க ஒரு குலத்தலைவர் அவர்களில் ஒருவரை தூக்கி அப்பால் நகர்த்திவிட்டு முன்னால் வந்தார்.

வேதச்சொல்லெடுத்து முதலில் வாழ்த்த வேண்டிய வைதிகர்கள் கைடபரை அணுக சூத்திர குலத்தலைவர்கள் அந்நிரையை வெட்டி உட்புகுந்து அவரை சூழ்ந்து கொண்டனர். தோள்களால் உந்தப்பட்ட கைடபர் பின்னால் சரிந்து பீடத்தின்மீது விழப்போக அவரை சுஜாதன் பிடித்துக்கொண்டான். முதிய குடித்தலைவர் ஒருவர் கைடபரின் கைகளைப்பற்றி உலுக்கி அவரது தோளில் ஓங்கித் தட்டி பெருங்குரலில் “மிக மிக நல்ல செய்தி!” என்றார். “எங்கள் அரசர் அஸ்தினபுரியால் மதிப்புடன் நடத்தப்படுகிறார் என்பதை அறிந்தோம். அவர் அங்கு சூதன்மகனாகத்தான் அமர்ந்திருக்கிறார் என்று அலர்சொல்லும் வீணர்களுக்கு உரிய மறுமொழி இது.”

கைடபர் திகைத்தவராக திரும்பி ஹரிதரை நோக்க ஹரிதர் எதையும் காணாதவர் போல் திரும்பி கொண்டார். “ஆம், இங்குள்ள ஷத்ரியர்களுக்கு சரியான அடி இது” என்றார் ஒருவர். இன்னொருவர் கைடபரின் முகவாயைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பி “எங்கள் அரசர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரர். பீஷ்மரும் துரோணரும் அர்ஜுனனும் அவர் முன் வெறும் விளையாட்டுச் சிறுவர்கள். சூதர்கள் வில் பயின்றால் ஷத்ரியர் அஞ்சி ஒடுங்க வேண்டியிருக்கும் என்பதற்கான சான்று அவர்தான்…” என்றார். “இது சூதன்மகன் ஆளும் அரசு… எங்கள் மூதாதையர் ஆளும் நிலம் இது.”

பின்னால் நின்ற முதிய குலத்தலைவர் ஒருவர் தன் கோலை உயரத் தூக்கி “எங்கள் சூதன்மகன் அள்ளிக் கொடுக்க அஸ்தினபுரியின் இளவரசியின் மைந்தன் முதலுணவு கொள்வதை சிந்து நாட்டரசர் ஒப்புக்கொள்வாரா?” என்றார். கைடபர் என்ன சொல்வதென்றறியாமல் திகைத்தபின் பொதுவாக “இது அரசு முடிவு மூத்தவரே. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். “எங்கள் அரசர் அஸ்தினபுரியின் அச்சத்தை நீக்கும் பெருவீரர். அவரில்லாவிட்டல் அர்ஜுனரின் அம்பு அஸ்தினபுரியை அழிக்கும். அதனால்தான் துரியோதனர் அவரை தன் அருகே வைத்திருக்கிறார்” என்றார் ஒருவர்.

கர்ணன் முதலில் சற்று திகைத்து நின்றான். அவர்களை எப்படி தடுப்பது என்பது போல சிவதரைப் பார்த்து அவரது புன்னகையை பார்த்த பின்னர் தோள் தளர்ந்து மெல்ல புன்னகைக்க தொடங்கினான். சிவதர் அவனருகே தலைகுனிந்து “ஒவ்வொரு சொல்லையும் அறிவின்மையால் முழுக்க நிறைத்தே அவையில் பரிமாற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்” என்றார். “ஆம். அதில் அவர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சியும் உள்ளது” என்றான் கர்ணன். சிவதர் சிரித்தார்.

சம்பு குலத்தலைவர் “நாங்கள் சம்புகுலத்தவர். சம்புமரமே மரங்களில் பழமையானது என அறிந்திருப்பீர்கள். உண்மையில் சூதர்களைவிடவும் சற்று உயர்ந்த சூத்திரர்கள் நாங்கள். ஆயினும் மாமன்னரின் போர் வல்லமையையும் தோற்ற எழிலையும் கண்டு அவரை எங்கள் தலைவராக ஏற்றிருக்கிறோம். எங்கள் மூத்த பெண்கள் அவ்வப்போது அரசரின் குலத்தை சுட்டிக் காட்டுவதுண்டு. ஆனால் ஆண்களாகிய நாங்கள் சற்றும் அதை பாராட்டுவதில்லை” என்றார்.

காஜு குலத்தலைவர் “ஆனால் ஒன்றுண்டு. எங்களுக்கு மனக்குறை என்று சொல்ல வேண்டுமென்றால்…” என தொடங்க கைடபர் “அரசமுறைப்படி நான் வாழ்த்துரைகளையே இங்கு பெற்றுக்கொள்ள முடியும். பிற சொற்களை பின்னர் பேசலாம்” என்றார். “வாழ்த்துக்களைத்தான் சொல்ல வந்தோம். ஆனால் கூடவே இவையனைத்தும் நினைவுக்கு வருகின்றன. ஏனென்றால் நீங்கள் அஸ்தினபுரியின் அரசரின் தூதர். அஸ்தினபுரியிடமே பெரிய படை உள்ளது… மேலும் எங்கள் அரசர் மேல் சூதன் என்று பார்க்காமல் அஸ்தினபுரியின் அரசர் அன்பு பாராட்டுகிறார்.”

“வாழ்த்துக்களை சொல்லிவிட்டு ஒவ்வொருவராக பின்னால் செல்லுங்கள்” என்றார் கச்சகுடியின் மூத்தவர். அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி முண்டியடித்து முன்னால் முகம்காட்டி கைடபரின் முன்னால் தலைவணங்கி வாழ்த்துக்களை சொன்னார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குலத்தின் சிறப்பை சற்று மிகைப்படுத்தி சொன்னார்கள். “உண்மையில் நாங்கள் அயோத்தியில் ராகவ ராமனின் படையில் இருந்த ஷத்ரியர்கள். அங்கிருந்து ஏதோ அரசு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டு இங்கே வேளாண் குலங்களாக மாறிவிட்டோம். எங்கள் வாழ்த்துக்களை அஸ்தினபுரியின் அரசருக்கு தெரிவியுங்கள்” என்றார் ஒருவர்.

கைடபர் முகத்தை மாற்றமில்லாமல் வைத்துக் கொண்டு “ஆவன செய்கிறேன்” என்றார். சுஜாதனுக்கு முதலில் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை. பின்னர் அவன் சிரிக்கத் தொடங்கினான். அவன் சிரிக்கலாகாது என காலால் கைடபர் அவன் விரல்களை மிதித்தார். அவன் சிரிப்பை அடக்க கழுத்து விம்மி அதிர்ந்தது. ஆனால் அவன் சிரிப்பை குலத்தலைவர்கள் தங்களை நோக்கி காட்டிய மகிழ்ச்சி என்றே எடுத்துக்கொண்டார்கள்.

பெரிய மீசையுடன் இருந்த ஒருவர் “இதை கேளுங்கள், இங்குள்ள அத்தனை சூத்திர குடிகளும் முன்னர் தாங்கள் ஷத்ரியர்களாகவோ வைசியர்களாகவோ இருந்ததாகவே சொல்வார்கள். ஆனால் நாங்கள் உண்மையிலேயே கார்த்தவீரியனின் படையில் போர் புரிந்த அரசகுடி யாதவர்கள். எங்களிடம் நாங்கள் ஹேஹயர்கள் என்பதற்கான சான்று உள்ளது. குந்தர்கள் என எங்களை இங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள் என்றாலும் எங்களுக்கு ஹேஹர்கள் என்று ஒரு குலப்பெயருண்டு” என்றார்.

“அது காகர்கள் என்றல்லவா?” என்றார் ஒருவர் குரலாக. அவர் திரும்பி நோக்கி சொன்னவரை உய்த்தறியமுடியாமல் பற்களை கடித்தபின் திரும்பி “கேளுங்கள் அமைச்சரே, அங்கநாட்டுக்குள் நாங்கள் வந்ததே எங்களை பரசுராமர் தேடித்தேடி வேட்டையாடுவதை தவிர்க்கத்தான். இங்கு நாங்கள் வேளாண் குடியினராக ஆனோம்.” கைடபர் பொதுவான முகத்துடன் கைகூப்பி “நன்று. பிறர் வாழ்த்துக்களை சொல்லட்டுமே” என்றார். “தங்கள் சொற்களை நான் சென்னி சூடிக்கொண்டேன் ஹேஹரே… அப்பால் விலகி அங்கு நெரித்துக்கொண்டிருக்கும் அவருக்கு வழிவிடுங்கள்.”

“இச்செய்தியை தாங்கள் நினைவில் நிறுத்தவேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் தாங்கள் அஸ்தினபுரிக்கு சென்றபிறகு அங்கு எங்களைப் போன்று மாகிஷ்மதியிலிருந்து வந்து குடியேறியுள்ள ஹேஹய குலத்து யாதவர்கள் எவரேனும் உள்ளனரா என்று வினவி அறிந்து எங்களுக்கு செய்தி அறிவியுங்கள்” என்றார் ஹேஹர். பின்னால் அதே குரல் “அங்கும் காகங்கள் இருக்கும்” என்றது. “யாரவன்?” என்றார் ஹேஹர்குலத்தவர். எவரென்று தெரியாமல் தவித்து திரும்பி கைடபரிடம் “ஒளிந்து நின்று பேசும் மூடர்கள். கோழைகள்” என்றார். “தெளிந்து நின்று பொய் பேசுவதைவிட ஒளிந்து உண்மை பேசுவதுமேல்” என்றது பின்னால் அக்குரல். ஹேஹர் தவித்து “நான் மேலே சொல்ல விழையவில்லை. எங்களுக்கு இங்கே எதிரிகள் மிகுதி” என்றார்.

அங்கத்தின் சிற்றமைச்சர் சாலர் “விரைந்து வாழ்த்துரைத்து விலகுக குடித்தலைவர்களே! அவை முடிய இன்னும் ஒரு நாழிகையே உள்ளது” என்றார். அவைநாயகம் உரக்க “வாழ்த்துரைத்தவர்கள் பின்னால் செல்லுங்கள். புதியவர்கள் வரட்டும்” என்றார். ஹரிதர் கைகளை விரித்து “வாழ்த்துரைத்தபின் எந்த குடியும் அவைக்குள் இருக்க வேண்டியதில்லை. வாழ்த்தொலி எழுப்பியபடியே அவர்கள் வெளியே செல்லட்டும்” என்றார்.

“ஆம், அதுவே முறை” என்றார் சூரர் குலத்தலைவர். “ஆனால் நாங்கள் எங்களை முறையாக அஸ்தினபுரியின் அமைச்சருக்கு சொல்லியாகவேண்டும். நாங்கள் சூத்திரகுடியினர் என்றாலும் எங்கள் தெய்வங்கள் ஆற்றல் மிக்கவை.” அமைச்சர் ஏதோ சொல்வதற்குள் அவர் கையமர்த்தி “மக்கள் இருப்பார்கள் இறப்பார்கள். நாடு தெய்வங்களுக்குரியது. நான் இறந்தால் என் வயல் விளையாமலாகுமா என்ன?” என்றார். “ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் நன்றாக என் சொற்களை நோக்கவேண்டும்…”

அதை நோக்காமல் ஹரிதர் “வெளியே செல்லும்போது குடிமூப்புபடி செல்லவேண்டும் என்பது நெறி. எக்குடி பெருமையிலும் வலிமையிலும் மூத்ததோ அது முதலில் செல்லட்டும். அதற்கு அடுத்த குடி தொடரட்டும்” என்றார். கர்ணன் அறியாமலேயே சிரித்துவிட சிவதர் “அரசே” என்றார். கர்ணன் தாம்பூலம் பெறுவதைப்போல முகத்தை திருப்பிக்கொண்டான். அடைப்பக்காரன் சிரித்தபடி “ஊட்டுபந்திக்கு முந்துவதுபோல முந்துகிறார்கள்” என்றான்.

அறிவிப்பை ஒருவர் இன்னொருவருக்கு சொல்ல சிலகணங்களுக்குள் அங்கு நிலைமை மாறியது. ஒவ்வொரு குடியும் ஓரிரு சொற்களில் கைடபரை வாழ்த்திவிட்டு அவையை விட்டு வெளியேற முண்டியடித்தது.  “ஊட்டுபந்தியேதான் சுக்ரரே” என்று கர்ணன் அடைப்பக்காரனிடம் சொன்னான். கண்ணெதிரிலே அவையின் பெரும்பகுதி மடைதிறந்த ஏரிக்குள்ளிருந்து நீர் ஒழிவது போல வாயிலினூடாக வழிந்தோடி மறைந்தது.

கர்ணன் தொடையில் தட்டி சிரித்தபடி சிவதரிடம் “எவர் களம்நின்று புண்கொண்ட உண்மையான ஷத்ரியர்களோ அவர்களும் வெளியேறலாம் என்று சொல்லியிருந்தால் அத்தனை வைசியர்களும் கிளம்பி சென்றிருப்பார்கள்” என்றான். அவனருகே நின்றிருந்த சேடி துணிகிழிபடும் ஒலியில் சிரித்தாள். கர்ணன் அவளை நோக்க அவள் சாமரத்துடன் விலகிச் சென்று அவைமேடை மூலையில் நின்று உடல்குறுக்கி சிரிப்பை அடக்கினாள்.

ஹரிதர் “வேதமுணர்ந்தோர் முதலில் வெளியே செல்லலாம் என்றால் எந்த அந்தணரும் வெளியேறமாட்டார்” என்றார். சிவதர் சிரிப்பை அடக்க முயன்று புரைக்கேற இருமியபடி மறுபக்கம் திரும்பிக் கொண்டார். கைடபர் ஹரிதரை நோக்கி புன்னகை செய்தார். சூத்திரர் வாழ்த்துரைத்து வெளியேறியதும் வைதிகர்கள் கைடபரை அணுகி கங்கை நீர் அள்ளி அரிமலர் சேர்த்து வீசி வேதச்சொல்லெடுத்து வாழ்த்துரைத்தனர். அதன்பின் ஷத்ரியர்களும் வைசியர்களும் அவருக்கு வாழ்த்துரை அளித்தனர்.

ஷத்ரியர் குலத்தலைவர் கைடபரிடம் “நீர் ஷத்ரியர் என எண்ணுகிறேன்” என்றார். கைடபர் “ஆம்” என்றார். “நன்று. இந்த மூடர்களின் சொற்களின் உண்மையை உணர்ந்திருப்பீர்கள்” என்றார். “ஆம்…” என்றார் கைடபர். “அதற்கு அப்பால் நான் சொல்வதற்கேதுமில்லை. நாங்கள் அனைவரும் தீர்க்கதமஸின் குருதிவழிவந்த ஷத்ரியர்கள். ராகவராமனின் இக்‌ஷுவாகு குலத்துக்குப்பின் எங்கள் குடியே தொன்மையானது. தீர்க்கதமஸ் எங்கள் குடியில் ஏழு மைந்தரைப் பெற்றார் என்பதை அறிந்திருப்பீர்.”

“ஐந்து என்றுதானே சொன்னார்கள்?” என்றான் சுஜாதன். “ஆம், அது சூதர்களின் ஒரு கதை. உண்மையில் ஏழுபேர். அங்கன், வங்கன், கலிங்கன், குண்டிரன், புண்டரன், சுமன், அத்ரூபன் என்று பெயர். அவர்களில் சுமன், அத்ரூபன் ஆகிய இருவரில் இருந்து ஏழு ஷத்ரிய குலங்கள் பிறந்தன. சதர், தசமர், அஷ்டகர், சப்தகர், பஞ்சமர், ஷோடசர் என்பவை பெருங்குலங்கள். சஹஸ்ரர் சற்று குறைவானவர்கள்” என்றார் அவர். கைடபர் “இது புதியசெய்தி” என்றார்.

“ஆனால் உண்மையில் சஹஸ்ரரே இன்று குடிகளில் முதன்மையானவர்” என பின்னால் ஒரு குரல் எழுந்தது. குடித்தலைவர் அதைச் சொன்னது யாரென்று நோக்கிவிட்டு “தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த காக்‌ஷீவானின் குலமே அங்கநாட்டு அரசகுலம். அது சத்யகர்மருடன் முடிவுக்கு வந்தது” என்றார். கைடபர் “ஆம், அதை அறிவேன்” என்றார். குடித்தலைவரை எவரோ பின்னாலிருந்து இழுத்தனர். அவர் மேலே சொல்ல வந்ததை விடுத்து தலைவணங்கி “நன்று சூழ்க!” என்றார்.

அவைவரிசைகள் முடிவுற்றன. பெரும்பாலானவர்கள் கிளம்பிச் செல்ல ஒழிந்த பீடங்கள் எஞ்சின. அவற்றில் குடித்தலைவர்கள் மறந்துவிட்டுச் சென்ற மேலாடைகளையும் சிறுசெப்புகளையும் ஏவலர் சேர்த்து வெளியே கொண்டுசென்றார்கள். வைதிகரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் மட்டும் இருந்தனர். சிவதர் “முறைப்படி நாம் இன்னும் அவை கலையவில்லை” என்றார். “அங்கநாட்டில் கூடிய அவைகளில் இதோ தெரிவதே அமைதியானது. அரசமுடிவுகளை இப்போதே எடுப்பது நாட்டுக்கு நலம் பயக்கும்.”

கர்ணன் எழுந்து அவையினரை வணங்கி “அமைச்சரே, இளையோனே, இருவரும் இளைப்பாறி மாலை என் தனியறைக்கு வாருங்கள். அங்கு நாம் சில தனிச்சொற்கள் பரிமாறுவோம்” என்றான். அவை முடிந்தது என உணர்ந்ததும் மேடைமாற்றுருக் கலைத்த நடிகனைப்போல இயல்புநிலைக்கு வந்த சுஜாதன் பெரிய கைகளை விரித்து யானைபோல உடலை ஊசலாட்டியபடி கர்ணனை நோக்கி வந்தான். பெரிய பற்களைக் காட்டி சிரித்தபடி சுஜாதன் “மூத்தவரே, நான் சென்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் அங்கு நிகழ்ந்த அனைத்தையும் தங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. சில செய்திகளுக்கு தாங்கள் இன்றிரவு முழுக்க சிரிக்கும் அளவுக்கு நுட்பமுள்ளது” என்றான்.

கர்ணன் “என்ன?” என்று சொல்ல அவன் நகைத்தபடி “எல்லாம் உங்கள் இளையோரின் கதைகள்தான். அஸ்தினபுரியின் சூதர்களை இன்று பாரதவர்ஷமெங்கும் விரும்பி அழைக்கிறார்கள். எந்தச் சூதரும் சொல்லாத இளிவரல் கதைகளை இவர்கள்தான் சொல்கிறார்கள். மாலையுணவுக்குப்பின் அக்கதைகளை கேட்டுத்தான் ஜராசந்தரே சிரித்து உருண்டு பின் துயில்கிறார் என்கிறார்கள்” என்றான். “சான்றுக்கு ஒன்று, மூத்தவர் சித்ரகுண்டலர் பிண்டகர் என்னும் அசுரகுலத்து இளவரசி ஒருத்தியை சிறையெடுத்துவரச் சென்றார். ஆனால் அவள் அவரை சிறையெடுத்துச் சென்றுவிட்டாள். ஆயிரம் பொன் திறைநிகர் கொடுத்து மீட்டுவந்தோம்” என்றான்.

கர்ணன் வெடித்து நகைத்து “சித்ரனா? அவனுக்கென்ன அப்படி ஓர் எண்ணம்? அவனுக்கு அடுமனையே விண்ணுலகு என்றல்லவா எண்ணினேன்?” என்றான். “ஆம், ஆனால் அவரது மூத்தவர் பீமவிக்ரமர் தண்டகாரண்யத்தின் அரக்கர் குலத்துப்பெண் காளகியை கவர்ந்து வந்ததனால் இவர்  தூண்டப்பட்டிருக்கிறார். எவரிடமும் சொல்லாமல் போதிய உணவை மட்டும் எடுத்துக்கொண்டு படைக்கலமென ஏதுமின்றி அசுரநாட்டுக்கு சென்றிருக்கிறார்.”

கர்ணன் வியப்புடன் “பீமன் வென்றுவிட்டானா! அது எப்போது?” என்றான். “சிலமாதங்களுக்கு முன்பு. பீமர் இப்போது அவளை திரும்ப அனுப்ப நூல்களில் வழியுண்டா என்று துயருடன் வினவிக் கொண்டிருக்கிறார்” என்றான் சுஜாதன். “மூத்தவரே, இப்போது அஸ்தினபுரியில் எழுபது அசுரகுலத்து அரசிகளும் முப்பது அரக்கர்குலத்து அரசிகளும் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவுப்பழக்கம். ஒருத்தி ஒவ்வொருநாளும் தீயில் வாட்டிய பன்றிக்காது இன்றி உணவருந்துவதில்லை.”

சிவதர் முகம் சுளித்து “பன்றிக்காதா? அதை சுட்டுத் தின்கிறார்களா?” என்றார். கர்ணன் “ஏன் அப்படி கேட்கிறீர்கள் சிவதரே? அது மிகச்சிறந்த உணவல்லவா? நானே என் தென்னகப் பயணத்தில் நாள்தோறும் அதை உண்பதுண்டு” என்றபின் கண்களை சிமிட்டினான். சுஜாதன் உவகையுடன் கைவிரித்து முன்னால் வந்து “ஆம் மூத்தவரே. அவர்கள் எனக்கும் அளித்தார்கள். மிகச்சுவையானது. நான் நாள்தோறும் சென்று அவர்களுடன் அமர்ந்து அதை உண்கிறேன்” என்றான். சிவதர் வெடித்து நகைத்துவிட்டார்.

கர்ணன் கண்ணீர்வர சிரித்து திரும்பி சிவதரிடம் “அஸ்தினபுரியின் அழகே இந்த நூற்றுவரின் ஆடல்கள்தான்” என்றான். “நான் அங்கிருந்தபோது முதிய படைக்களிறு சுபரன் இவர்களில் நால்வரை மட்டும் எங்கு பார்த்தாலும் குத்த வந்தது. ஏனென்று உசாவியபோது தெரிந்தது, அதற்குப் பரிமாறப்பட்ட கவளங்களை நால்வரும் அமர்ந்து பேசியபடியே முற்றிலும் உண்டு முடித்திருக்கிறார்கள்.” ஹரிதர் கைகளை முட்டியபடி நகைத்து “இவரைப் பார்த்ததுமே எண்ணினேன் யானைக்கவளம் உண்ட உடல் என்று” என்றார்.

சுஜாதன் “குண்டசாயியும் மகோதரரும்தான் உண்மையில் யானைக்கவளத்தை அள்ளி உண்டவர்கள். வாலகியும் நிஷங்கியும் அருகே அமர்ந்திருந்த பிழையையே செய்தனர். ஆனால் சுபரன் இறுதியில் திடவர்மரைத்தான் பிடித்துக்கொண்டது. அவர் பார்க்க குண்டசாயி போலவே இருப்பார். இருவரும் ஆடைகளை மாற்றி அணிவதுமுண்டு” என்றான்.

சிவதர் “என்ன ஆயிற்று?” என்றார். “ஆடையை கழற்றிவிட்டு திடவர்மர் தப்பி விலகிவிட்டார். சபரன் அவரது ஆடையைப்பற்றிச் சுருட்டி அமலையாடியது. ஆனால் அதன்பின் கௌரவர்களைக் கண்டாலே நடுங்கத் தொடங்கிவிட்டது.” ஹரிதர் “ஏன்?” என்றார். “திடவர்மருக்கு அடுமனைப் பொறுப்பு. தென்னகத்து மிளகுத்தூள் இடிக்குமிடத்தில் இருந்து நேராகச் சென்றிருந்தார். யானையின் துதிக்கை அமைதி அடைய ஏழு நாட்களாயின.”

கர்ணன் சிரித்தபடி மீண்டும் சென்று அரியணையில் அமர்ந்துவிட்டான். அவனைச் சூழ்ந்து நின்ற அவைக்காவலரும் ஏவலரும் சாமரம் வீசிய சேடியரும் எஞ்சி நின்ற அந்தணரும் உரக்க நகைத்துக் கொண்டிருந்தனர். “எப்போதுமே யானைகளுக்கும் கௌரவர்களுக்கும்தான் ஊடலும் நட்பும் இருந்தது” என்றார் கைடபர். “அவர்களில் பலர் பிடியானையின் பாலருந்தி வளர்ந்தவர்கள்.”

சிவதர் கவலையுடன் “யானைப்பால் செரிக்குமா?” என்றார். “யானைக்குட்டிக்கு எளிதில் செரிக்காது. உடன் வாழைப்பழங்களும் அளிக்கவேண்டும். இவர்களுக்கு செரிக்கும். அரைநாழிகைக்குள் அடுத்த உணவு தேடி அலையத் தொடங்குவார்கள்” என்றார் கைடபர். “முழு எருமைக்கன்றை உண்டு குளம்புகளை மட்டும் எஞ்சவிடும் உயிர்கள் உலகில் மொத்தம் நூறுதான் என்று ஒரு சொல் அஸ்தினபுரியில் உண்டு.”

ஹரிதர் மெல்ல அருகே வந்து “கொடைநிகழ்வுக்கு பிந்துகிறது இளவரசே” என்றார். சுஜாதன் “நாங்கள் அங்கநாட்டுக்கு அரசகொடையாக பரிசில்கள் கொண்டுவந்தோம். அவற்றை கருவூலத்திற்கு அளித்துவிட்டோம்” என்றான். “ஆம், அவற்றை அரசர் இன்று மாலை பார்வையிடுவார்” என்றார் ஹரிதர். சிவதர் “அரசகொடைகளில் யானைப்பாலில் சமைக்கப்பட்ட இனிப்புகள் இல்லையா?” என்றார். “இருந்தன. அவற்றை நான் வழியிலேயே உண்டுவிட்டேன்” என்றான் சுஜாதன். அவை சிரிப்பில் அதிர்ந்தது.

கர்ணன் சிரிப்பு மாறாத முகத்துடன் எழுந்து “என் அறைக்கு வா இளையோனே. நாம் இன்றிரவெல்லாம் பேசவேண்டும்” என்றான். சுஜாதன் “அதற்குமுன் நான் பட்டத்தரசியை சந்தித்து வரிசை செய்யவேண்டும். அஸ்தினபுரியின் அரசி அளித்த பரிசில்கள் என்னிடம் உள்ளன. அவர்கள் அவையமர்வார்கள் என்று எண்ணினேன்” என்றான். “அவள் கருவுற்றிருக்கிறாள்” என்றான் கர்ணன்.

அதிலிருந்த சோர்வை சுஜாதன் அறியவில்லை. “ஆம், சொன்னார்கள். அஸ்தினபுரிக்கு மேலும் ஓர் இளவரசன் வரப்போகிறான். மூத்தவரே, அங்கே ஆமை முட்டை விரிந்ததுபோல அரண்மனையெல்லாம் இளவரசர்கள். விரைவாக ஓடமுடியாது. யாராவது ஒருவன் நம் கால்களில் சிக்கிக் கொள்வான்” என்றான். “பார்ப்பதற்கும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். மொத்தம் எண்ணூறுபேர். எப்படி பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது?”

சிவதர் “எண்கள் போடலாமே” என்றார். சுஜாதன் “போடலாம் என்று நானும் சொன்னேன். ஆனால் தெய்வங்கள் அவர்களை விண்ணுலகுக்கு கூட்டிச்செல்ல பெயர்கள் தேவைப்படும் என்றார்கள்” என்றான். “என்ன இடர் என்றால் ஒரேமுகத்துடன் இத்தனைபேர் பெருகிவிட்டதனால் அவர்களுக்கே அவர்களின் பெயர்கள் தெரியாது. கேட்டால் நினைவிலிருக்கும் பெயரை சொல்வார்கள். சிறியவர்கள் எப்போதும் வலிமையான பெரியவர்களின் பெயர்களைத்தான் சொல்கிறார்கள்.”

“அன்னையர் எப்படி அடையாளம் காண்கிறார்கள்?” என்றார் சிவதர் உண்மையான கவலையுடன். “அடையாளம் காண எவரும் முயல்வதே இல்லை. அருகே இருக்கும் மைந்தனை எடுத்து முலைகொடுத்து உணவூட்டுவதுடன் சரி… அவர்களை எவரும் வளர்க்க வேண்டியதில்லை. அவர்களே எங்கும் பரவி வளர்கிறார்கள்” சுஜாதன் சொன்னான். “நான் கிளம்புவதற்கு முந்தையநாள் ஐந்துபேர் மதவேழமான கீலனின் கால்சங்கிலியை அவிழ்த்து மேலேயும் ஏறிவிட்டார்கள். அவர்களை இறக்குவதற்கு எட்டு பாகன்கள் நான்கு நாழிகை போராடினர்.”

கர்ணன் சிரித்து “அத்தனைபேரையும் உடனே பார்க்க விழைகிறேன்” என்றான். “அதற்காகவே தமையன் தங்களை அழைக்கிறார்” என்றான் சுஜாதன். கைடபர் “அரசி கருவுற்றமைக்கான வரிசைகளை அஸ்தினபுரி பின்னர் தனியாக செய்யும் அரசே” என்றார். ஹரிதர் “அஸ்தினபுரியிலிருந்து ஏதேனும் ஒன்றைச் சொல்லி இங்கு பரிசில்கள் வந்தபடியேதான் உள்ளன” என்றார். “நன்று, மாலை சந்திப்போம்” என்றான் கர்ணன். சுஜாதனும் கைடபரும் தலைவணங்கி ஏவலர் சூழ அவை விட்டு நீங்கினர்.

அரசர் அவை நீங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு முழங்கத் தொடங்கியது முரசு. நிமித்திகன் மும்முறை கொம்பை முழக்கி “அங்க நாட்டரசர் சூரியனின் மைந்தர் வசுஷேணர் அவை நீங்குகிறார். அவர் நலம் வாழ்க!” என்றான். “வாழ்க! வாழ்க!” என்றனர் அவையோர். கர்ணன் திரும்ப அவனுடைய சால்வையை சேடி எடுத்து அவனிடம் அளித்தாள். வெண்கொற்றக்குடை ஏந்திய காவலன் முன்னால் சென்றான்.

அவையிலிருந்து கர்ணன் தலைகுனிந்து எண்ணத்தில் ஆழ்ந்து நடந்தான். சிவதர் அவன் பின்னால் வர ஹரிதர் துணை அமைச்சர்களுக்கு ஆணைகளை பிறப்பித்தபடி விலகிச் சென்றார். சிவதர் “இளைய யானைக்கன்று போலிருக்கிறார். வந்த ஒரு நாளிலேயே நம் அரண்மனை மலர் கொண்டுவிட்டது” என்றார். “ஆம், இளையோரின் சிரிப்பில் ஏழு மங்கலத் தெய்வங்கள் குடிகொள்கின்றன என்பார்கள்” என்றான் கர்ணன். “எதையும் அறியாத அகவை” என்றபின் முகம் மலர்ந்து நகைத்து “நூற்றுவர் எப்போதும் அதே அகவையில் தங்கி நின்றிருக்கிறார்கள்” என்றான்.

சிவதர் “அஸ்தினபுரியின் அந்த இனிய அழைப்பு இனி என்றென்றும் சூதர்களால் பாடப்படும்” என்றார். கர்ணன் “நான் மூன்று நாட்களுக்குள் கிளம்பிச் செல்லவேண்டும் சிவதரே” என்றான். “மூன்று நாட்களுக்குள்ளா? அரசே, இங்கு பல கடமைகள் எஞ்சியிருக்கின்றன. முறைப்படி அங்கநாட்டு இளவரசர் பிறப்புக்குத் தேவையான விழவுகளையும் கொடைகளையும் நாம் இன்னும் தொடங்கவேயில்லை” என்றார் சிவதர்.

“ஆம், ஆனால் நான் சலிப்புற்றிருக்கிறேன் சிவதரே. இங்குள்ள இந்த சூழ்ச்சிகள், களவுகள் எனக்கு சோர்வூட்டுகின்றன. கேட்டீர் அல்லவா கள்ளமில்லாத என் தம்பியரை? அவர்களுடன் மட்டுமே நான் உவகையுடன் இருக்கமுடியும்” என்றான் கர்ணன்.

“தாங்கள் இரு அரசியரையும் இன்னமும் சந்திக்கவில்லை” என்றார் சிவதர். “சந்திக்கிறேன். ஆணைகளை போட்டுவிட்டு கிளம்புகிறேன். மற்றபடி இங்கிருந்து நான் ஆற்றுவது ஏதுமில்லை” என்றான். சிவதர் மீண்டும் “மூன்று நாட்களுக்குள்ளாகவா?” என்றார். “இங்கு ஹரிதர் இருக்கிறார். இந்த நாடு அவருடைய திறமைக்கு மிகச்சிறிது” என்றான். “அவரால் மட்டுமே கலிங்க அரசியை கட்டுப்படுத்தவும் முடியும் என நினைக்கிறேன்.”

25

சிவதர் “தாங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்?” என்றார். கர்ணன் நின்று இடையில் கைவைத்து அவரை நோக்கி “உண்மையில் நான் திரும்பி வருவதற்கே விழையவில்லை சிவதரே” என்றான். சிவதர் “அல்ல…” என சொல்லத் தொடங்க “ஆம், நான் அறிவேன். அரசகடமைகள். குலக்கடமைகள். ஆனால் நான் இச்சிறிய அரசுக்குரியவன் அல்ல. என் அரசு என்பது என் தம்பியர் உள்ளம். அங்கு மட்டுமே நான் நிகரற்ற மணிமுடிசூடி அரியணையில் அமர்ந்திருக்கிறேன்” என்றான் கர்ணன்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்\

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

வெள்ளையானை -கடிதங்கள்

$
0
0

1

சென்னையில் மழை – வார்த்தைகளில் விவரிக்க முடியாத தளத்தில் எல்லோரையும் பாதித்த நிகழ்வு.. ஒரு தளத்தில் பெருங்கருணை. பெரும்செல்வம் – மழை . நாம் தயார் நிலையில் இல்லாததால், அந்த நிகழ்வே ஒரு இயற்கைப் பேரழிவு என்கிற உருக்கொண்டது.

வீட்டினுள் மழை நீர். மின்சாரம் இல்லாததால் – முகர்ந்து வெளியேற்ற வேண்டும். கடைசியில், துணியில் நனைத்து பிழிந்து என. மீண்டும் மீண்டும் இதனை செய்ய வேண்டும். ஈரத்தில் உலாவல்.வீட்டில் கீழே சமையல் செய்து விட்டு, மாடிக்கு சென்று விட்டோம். அருகில் இருந்த ஓரிரு குடும்பங்கள் எங்களுடன் தங்கின. எதோ ஒரு மானுட நெருக்கம் மெல்ல நிகழ்ந்தது.

நான்கு நாட்கள் ஆன பின்பு – ஒருபுறம் அச்சம். குழந்தைகள் கேள்விகள் – மழை எப்போது நிற்கும்? – தண்ணீர் வீட்டில் இன்னும் ஏறுமா? என்கிற கேள்விகளுக்கு சுமாரான பதில்கள் கூட இல்லாத நிலையில், மறுபுறம், இப்படியே வாழ கற்றுக் கொள்ள தாயராக வேண்டுமோ என்கிற எண்ணம் – ஜப்பானிய திரைப் படத்தை நினைவூட்டியது. மணல் குழியில் ஒரு பெண் – http://www.imdb.com/title/tt0058625/

சென்னை மக்கள் பலர் ஆழமாக பாதிக்கப் பட்ட நிலையினில், எங்கள் நிலை பரவாயில்லை என்பது, மன சோகத்தை அதிகமாக்கியது. எங்களில் சிலர் மணப்பாக்கம் அருகில் உள்ள கூவமருகே உள்ள குடி இருப்புகளுக்கு உணவு கொண்டு சென்றோம். முக்கிய சாலைகளுக்கு உள்ளே இருப்பன. எவரும் செல்லவில்லை என்று அறிந்தோம். சூழ்நிலையும் இருப்பும் மனதை உணர்வற செய்தன.

நாம் தயார் நிலைக்கு இருக்க வேண்டியதையும், நாம் செய்ய வேண்டியதையும் மிக அவசர நிலையில் உணர்த்தின.நேரம் நிறைய கிடைத்த தருணத்தில் புதுமை பித்தன் கதைகள். கடந்து செல்ல அரிய எழுத்தாளர் – புதுமை பித்தன். வெள்ளை யானை – மீண்டும் படித்தேன்.

வெள்ளை யானைக்குள் பல தளங்கள் இருப்பதை கண்டேன். அமெரிக்க வணிகமும் பிரிட்டனின் உலகமயமாதலின் கருவை கண்டது போல. நியூ இங்கிலாந்தின் பனிக் கட்டிகள் உலகமெங்கும் பிரயாணித்த கதை – வெள்ளை யானையை தொடர்ந்த போது கண்டு கொண்டேன். ஒரு சில துல்லியமான தகவல்கள் – ஆச்சரியமாக விரிந்தன. எப்படி அந்த பெரும் பனிக்கட்டிகளை உலகெங்கும் வியாபாரம் செய்தனர்? கொண்டு சென்றனர் – இவை அனைத்தும் நடந்தது – இங்கா? மைலாப்பூரிலா? ஐஸ் ஹௌசிலா? – என்பது ஒருபுறம். நமது நகரை போலவே – மற்ற உலக நகரங்களிலும் – கடுமையான உடல் பணி செய்தவர்களை மையாமாக கொண்ட நிறுவனங்கள் – அவர்களின் உழைப்பை ஒரு புறம் குறைத்து மதிப்பிட்டு – உழைப்பாளர்களுக்கு. மறு புறம் அதனை அதிக மதிப்பிட்டு – மற்ற நிறுவனங்களிடம். மெல்ல தற்போதுள்ள நிறுவனங்களின் அணுகு முறையின் கரு – பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடர்ச்சி. பிறகு திடீரென இந்த வியாபாரம் சரிந்தது. அதன் சரிவு முனை (tipping point) என்னவென்று ஆராயலாம்.

ஆனால் மனதை நிலை கொள்ளாமல் ஒரு துயரில் ஆழ்த்தியது. பஞ்சம். ‘தொர.. தொர ‘ என்ற குரல் கனவிலும் வந்தது.மீள முடியவில்லை :(. எல்லா கதா பாத்திரங்களும் ஆழ்ந்து சிந்திக்கின்றன. சூழலோடு இணைகின்றன. மெல்லிய எதிர்ப்பை ஆழமாக தெரிவிக்கின்றனர். இது அதிகம் படிக்கப் பட வேண்டிய நாவலோ என தோன்றுகிறது. ஊடகத்தில் (நான் கண்ட வரை), இது தலித் நாவலாக சித்தரிக்கப் படுகிறது. அது இந்த நாவலின் மதிப்பை சற்று குறைப்பது போல தோன்றுகிறது. இதில் நீங்கள் சொல்லாமல் விட்ட இடங்கள் பல. அவை அனைத்தும் விரியலாம். அந்த விதத்திலும் ஒரு நுண் கட்டமைப்பு கொண்ட நாவல் என்று கருதுகிறேன்.

முரளி

 

அன்புள்ள ஜெ

வெள்ளையானை நீண்ட இடைவேளைக்குப்பின் இப்போதுதான் வாசித்தேன். ‘பஞ்சமோ பஞ்சம் என்று சாகின்றனரே’ என்று பாரதி பதைபதைத்து எழுதிய வரிகளை நினைத்தேன். அத்தனை பெரிய பஞ்சத்திற்கு பொறுப்பான வெள்ளைய ஆட்சியை இன்றைக்கும்கூட விதந்தோதும் ஒரு கூட்டம் நம்மிடம் உள்ளது. அந்தப்பஞ்சத்தைக் கண்டு பாரதி ‘நம் மடாதிபதிகள் வயிறு வளர்க்கிறார்கள்’ என்று எழுதினார். விவேகானந்தர் குமுறி எழுதினார். அந்த நிலைமையும் நீடிக்கத்தான் செய்கிறது.

அந்த ஆட்சியின் குரூரம் நம்முடைய மொண்ணைத்தனம் மட்டுமல்லாமல் அதை எதிர்கொள்ளும் கதாநாயகனின் கையாலாகாத தனமும் நாவலில் உள்ளது. அதுவும் ஐரிஷ் விடுதலை இயக்கத்தின் கையாலாகத்தனமாகவே தெரிகிறது. வரலாற்றை இப்படிச் சுருக்கிப்பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்நாவலுக்கு இனிமேல்தான் ஒரு நல்ல வாசிப்போ விமர்சனக்கட்டுரையோ வரவேண்டும் என்று தோன்றுகிறது.

இதன் நுட்பங்களை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஷெல்லி பிரிட்டனில் நடந்த குதிரைத்தாக்குதலை கண்டு கொதித்து எழுதிய கவிதையை மிக நுட்பமாக கையாண்டிருக்கிறீர்கள். அந்தக்கவிதையைச் சொல்லும் கறுப்பன் வரும் காட்சி மெய்சிலிர்க்கவைப்பது. நாவல் முழுக்க வரும் பிரிட்டிஷ் கவிதைகள் ஒவ்வொன்றும் மிக உக்கிரமான மனநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்கு நினைவுக்கு வந்த வகையில் உள்ளன என நினைக்கிறேன். ஒருபக்கம் ஷெல்லியின் ஹ்யூமனிஸம் என்றால் மறுபக்கம் பைரனின் மனிதமறுப்புத்தத்துவம். இரண்டும் மாறிமாறி வருகிறது

பிரிட்டிஷ்கவிதை என்பது மனிதநாகரீகம் அடைந்த ஒரு பெரிய உச்சம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அந்த நாகரீகம்தான் இந்தியாவில் நாலில் ஒருபங்கினரைக் கொன்றது. இந்த முரன்பாட்டை அந்தக்கவிதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. எந்த பனிக்கட்டி வெள்ளையானையாக மக்களைக் கொல்கிறதோ அதே பனிக்கட்டிதான் சுதந்திரத்தின் கொடியடையாளமாகிய வால்டனில் இருந்து வந்தது. இந்த சிக்கலைச் சொல்லுவதுதான் வெள்ளையானையின் வெற்றி

கெ.ஆர்.செல்வராஜ்

வெள்ளையானை விமர்சனங்கள் அனைத்தும்

தொடர்புடைய பதிவுகள்


விவாதங்களைப் பதிவுசெய்தல்

$
0
0
1

 

அன்புள்ள ஜெ

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சொல்புதிது குழுமத்தில் இருக்கும் அனைவருக்கும் எனது வந்தனங்கள்.

தங்கள் தளத்தை இயன்ற அளவு நேரம் கிட்டும் பொழுதெல்லாம் வாசித்துவருகிறேன் மேற்படிப்பிற்கு இடையில். கம்பனும் குழந்தையும் பற்றிய பதிவு மிக முக்கியமானது. அதனை வாசித்தேன். கம்பராமாயணம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. எனது 80 வயது பாட்டியும் அதனை படித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரம் விருது விழாவில் நான் அடைந்த வாசிப்பு திறப்புகள், நண்பர்கள் அதிகம். இவ்வாண்டு விருது நடந்த பொழுதும் கடிதங்களை பார்க்கும் பொழுதும் மனம் விஷ்ணுபுரம் விருது விழா சந்திப்புகளுக்கு சென்று வருகிறது.

எனக்கு ஒரு கோரிக்கை. இதற்கு முன் ஒரு 1873 பேர் ஆவது உங்களிடம் மடல் எழுதி கோரியிருப்பார்கள். அதே தான். ஏன் இவ்விழா சந்திப்புகளின் ஒலி வடிவங்களையாவது இத்தளத்தில் ஏற்றக்கூடாது? இதற்கு நீங்கள் முன்னர் ஒப்புக்கொள்ளும் நியாயமான பதில்களை கூறியுள்ளீர்கள் 1) பதிவு செய்யப்பட்டால் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டே வரும். அது இயல்பான பேச்சு சுதந்திரத்தை பறித்துவிடும் 2) பதிவு செய்யப்படும் கருத்துக்களை தணிக்கை செய்யும் பொறுப்பும் கூடி விடும். இரண்டும் உண்மை.

இருப்பினும், இன்றைய காலங்களில் பல மென்பொருட்கள் (mute செய்ய) இதற்காக உள்ளன. ஒரு முறை இதனை சோதனையாக (வெண்முரசு விவாதங்கள், ஊட்டி விவாதங்கள், விஷ்ணுபுரம் விருது விழாக்கள்)செய்து பார்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. தங்களின் சமீபத்திய கீதை மற்றும் சங்கரர் உரைகளின் தரவிறக்கங்களும் கடிதங்களும் சான்று என நினைக்கிறேன். இது போன்ற தொழில்நுட்பப் பாலங்கள் அண்டை மாநிலங்களிலும் நாடுகளிலும் இருக்கும் ஆயிரக்கணக்கானோர்க்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

கோரிக்கை கருத்தில்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

 

அன்புடன்

ராஜேஷ்

 

அன்புள்ள ராஜேஷ் பாலசுப்ரமணியம்

தெளிவான பதில் இதுதான். பயனுள்ளதாக அமையாது))

விவாதம் என்பது விவாதிக்கப்படுகையிலேயே பொருள் கொண்டது. கடல் அலையை புகைப்படம் எடுத்தால் அது அலை அல்ல

விவாதம் எதற்காக என்றால் கருத்துக்களை தெரிந்துகொள்வதற்காக அல்ல. உடன் விவாதிப்பதற்காக. மௌனமாகவேனும்

விவாதங்களைப் பதிவுசெய்து கேட்பதனால் எந்தப்பயனும் இல்லை என்பதே என் எண்ணம். அதன் ஒலித்தரத்தை பேணுவதும் சரி, அதை சிக்கலில்லாமல் வெட்டித்தொகுப்பதும்சரி பெரிய வேலை

அந்நேரத்தில் அதைவிடத் தீவிரமாக பலவற்றை செய்யமுடியும் என நினைக்கிறேன். நீங்கள் மிக இளையவராகத் தெரிகிறீர்கள். விவாதங்களில் நேரில் கலந்துகொள்ளுங்கள்.

விவாதிக்க எழும்போதுதான் நாம் எந்த அளவுக்கு தெளிவில்லாமல் சிந்திக்கிறோம், எந்த அளவுக்குக் கருத்துக்களைப் புரிந்து தொகுத்துக்கொள்ளாமலிருக்கிறோம் என்று தெரியும்

ஆனால் கொஞ்சம் விவாதிக்க ஆரம்பித்தால் நாம் எந்த அளவுக்கு ஆழ்மனதில் சிந்தித்திருக்கிறோம், நம் வாய்ப்புகள் என்ன எல்லாம் தெரிய ஆரம்பிக்கும்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு –உதகை

$
0
0

nitya-smadhi

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

தொடர்ச்சியாக புதியவாசகர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். வழக்கமான சந்திப்பு நிகழ்ச்சிகளில் தெரிந்த நண்பர்கள் சூழ இருப்பதனாலும் முன்கூட்டியே ஒரு விவாதம் நடந்துகொண்டிருப்பதனாலும் புதியவாசகர்கள் என்னை வந்து இயல்பாகச் சந்திப்பது கடினமாக இருப்பதாகச் சொன்னார்கள்.

ஆகவே முற்றிலும் புதியவாசகர்களுக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடுசெய்தாலென்ன என்னும் எண்ணம் வந்தது. இதில் என் நண்பர்களான பழைய வாசகர்கள் கலந்துகொள்ளக்கூடாது. நிகழ்ச்சி அமைப்பாளர்களைத்தவிர. அவர்களும் சந்திப்புகளில் ஏதும் பேசக்கூடாது. அதிகபட்சம் ஓரிரு முறை வந்து முழுமையாக அறிமுகமாகாத வாசகர்களும் புதியவாசகர்களும் மட்டும் கலந்துகொள்ளலாம்.

ஜனவரி 30,31 பிப்ரவரி 6,7 பிப்ரவரி 13,14 ஆம் தேதிகளில் வைத்துக்கொண்டாலென்ன என்று எண்ணுகிறேன்.

சந்திப்பை ஊட்டி நித்யசைதன்ய யதி குருகுலத்தில் வைத்துக்கொள்வது பலவகையிலும் வசதி. அச்சூழல் இயல்பான உரையாடலுக்கும் அதனூடாகத் தனிப்பட்ட உறவுமலர்தலுக்கும் வழிவகுக்கும். ஒரு சனி காலைகூடி ஞாயிறு மாலை பிரிந்தோமென்றால் அணுக்கமாக உணர்வோம். அல்லது கோவையில் அல்லது சென்னையில் சந்திப்பை அமைக்கலாம். ஆனால் அது இயல்பான உரையாடலாக அமைவதில்லை.

குறைந்தது பத்துபேர் வருவதாக உறுதியளித்தால் மட்டுமே இதை அமைக்கலாமெனத் தோன்றுகிறது. வாசகர்கள் தங்கள் வருகையை அறிவிக்க எழுதலாம் [jeyamohan.writer@gmail.com]

ஊட்டியில் மே மாதம் நிகழும் சந்திப்பு வேறு. அது வழக்கமானது. இது ஒரு எளிய சிற்றுரையாடல். திட்டங்கள் ஏதும் இல்லை. அமர்வுகளும் இல்லை. சும்மா பேசிக்கொண்டிருத்தல் மட்டுமே.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 26

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 3

தன் தனியறைக்கு வந்ததும் வழக்கம் போல உடல் நீட்டி கைகளை விரித்து மரக்கிளை நுனியில் இருந்து வானில் எழப்போகும் பறவை போல் எளிதான கர்ணன் நீள்மூச்சுடன் திரும்பி பின்னால் அறைவாயிலில் நின்ற சிவதரை நோக்கி “அமைதியிழந்துள்ளேன் சிவதரே” என்றான். சிவதர் “அரசத் தருணங்கள்” என்று மட்டும் சொன்னார். “ஜயத்ரதனை எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியவில்லை” என்றபடி அவன் கைகளை இடையில் வைத்து தோள்களை சுழற்றி இடுப்பை வளைத்தான்.

“தங்கள் உள்ளம் வழக்கமாக இயங்கும் ஒரு பாதையை தவிர்த்தாலே போதும். அதைத்தான் ஹரிதரும் சொன்னார்” என்றார் சிவதர். “அன்று மணத்தன்னேற்புக் களத்தில் தன் எல்லையும் ஆற்றலும் அறியாது வில் கொண்டு எதிர்த்தது ஜயத்ரதரின் தவறு. அப்போது அவ்வாறு அவரை வென்று கடந்திருக்காவிட்டால் அவர் தங்களை இழிவு படுத்தியிருப்பார் என்பதே தங்கள் செயலை சரியென ஆக்கும். எனவே அவர் நிலையில் நின்று அந்நிகழ்வை நோக்கி இரக்கமோ பரிவோ அடைய வேண்டியதில்லை” என்றார் சிவதர்.

கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க சிவதர் அதை மீறி மேலும் இயல்பாக “தங்களிடம் எழும் பரிவும் அவரை மேலும் சினம் கொள்ளவே வைக்கும். உங்கள் முன் தான் சிறியவர் என்றாவதை அவர் எந்நிலையிலும் உணர்ந்தபடியே இருப்பார்” என்றார். கர்ணன் “ஆம், இதை நான் உணர்ந்திருக்கிறேன்” என்றபடி சென்று தன் பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். “உள்ளத்தை நேரடியாக திறந்து வைப்பது மானுடர் நடுவே உள்ள தடைகள் அனைத்தையும் அகற்றும் என்று நான் எப்போதும் நம்பி வந்திருக்கிறேன். ஆனால் அது ஒரு போதும் நிகழ்ந்ததில்லை” என்றான்.

“அதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினமல்ல” என்றபடி சிவதர் அருகே வந்தார். “மானுடரின் அனைத்து சொல் முறைமைகளும் உள்ளத்தை மறைக்கும் பொருட்டுதான். உண்மையை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் யோகிகள் மட்டுமே. அவர்களுக்கு மொழியே தேவையில்லாமல் ஆகிவிடுகிறது.” கர்ணன் அவரையே நோக்கினான். புன்னகையுடன் “மொழி ஓர் அழகிய பட்டுத்திரை என்று சூதர்கள் மீள மீள பாடுவதுண்டு. அது சொல்வதற்காக அல்ல மறைப்பதற்காக மட்டுமே” என்றார். “ஆயினும் இதை நம்பி ஏற்க என்னால் இயலவில்லை” என்றபின் கர்ணன் கைகளைத் தூக்கி உடலை நெளித்து அலுப்புடன் “நான் சற்று ஓய்வெடுக்க விழைகிறேன்” என்றான்.

“ஆம். நான் அஸ்தினபுரியின் விருந்தினர்களுக்கு ஆவன செய்துவிட்டு மீள்கிறேன்” என்று திரும்பிய சிவதர் “தாங்கள் ஒரு கிண்ணத்திற்கு அப்பால் மது அருந்த வேண்டியதில்லை” என்றார். “ஆணை” என்று கர்ணன் சிரித்தான். சிவதர் நகைத்து “அச்சிரிப்பை நான் நம்பப் போவதில்லை. வெளி ஏவலருக்கு இறுதி ஆணைகளை இட்டுவிட்டுதான் செல்வேன்” என்றார். “ஆணை சிவதரே, நான் சொற்களை எதையும் மறைக்க பயன்படுத்துவதில்லை” என்றான் கர்ணன். சிவதர் சிரித்தபடி வெளியே சென்று தனக்குப்பின் கதவை மூடிக் கொண்டார்.

கர்ணன் கண்களை மூடி கைகளை தளரவிட்டு பீடத்தில் சாய்ந்து அமர்ந்தான். சற்று நேரம் கழித்து கதவு திறக்கும் ஒலி கேட்டபோதுதான் தான் எதை எண்ணிக்கொண்டிருந்தோம் என்று உணர்ந்தான். ஒவ்வொரு அறியா இடைவேளைகளிலும் அவளையே எண்ணிக் கொண்டிருக்கிறான். அவளை! அதை எவ்வண்ணமோ அவன் இரு துணைவியரும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது கொள்ளும் விலக்கமும் சினமும் ஈர்ப்பும் துயரும் அதனால்தான் போலும். வாயிலில் வந்து பணிந்த ஏவலனின் கையில் யவனமது இருந்தது. அப்போது அவனுக்கு அது விடாய் நீரென தேவைப்பட்டது. ஒரே மிடறில் அருந்தியபின் பிறிதொரு கோப்பைக்கு ஆணையிடலாமென்று எண்ணி உடனே சிவதரின் முகத்தை நினைவு கூர்ந்து தவிர்த்தான்.

“நான் சற்று நேரம் துயில விழைகிறேன்” என்றபடி எழுந்து மஞ்சத்தறை நோக்கி சென்றான். வெண்பட்டு விரிக்கப்பட்ட மஞ்சத்தில் காலையில் மலர்ந்த முல்லைப்பூக்கள் தூவப்பட்டிருந்தன. மேலாடையை கழற்றிவிட்டு அதில் அமர்ந்து கால்களை நீட்டி கைகளை ஊன்றி அமர்ந்தபடி அப்போது தன்னுள் எவ்வெண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது என்று நோக்கினான். முல்லையின் மணம் பெண்மைகொண்டது. மெல்ல நெளிவது. பெண். பெண் என்றால் வேறெவருமில்லை. “ஆம்” என்றபடி உடலை சரித்து தலையணையை சீரமைத்துக் கொண்டு கண்களை மூடினான். அவளைத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன் . ஆனால் நினைக்கவில்லை. நினைவுகூர்வதும் இல்லை. எண்ணம் எழுந்து நிறைந்து வழிந்து விழிதொட்டதும் மறைந்து மீண்டும் ஊறி கரவாடுகிறது.

எண்ணம் என்பது அவனுடையதல்ல. அது காற்று. விண்மூச்சு. தெய்வங்களின் ஊர்தி. நிலையழிந்தவனாக புரண்டு படுத்தான். புரண்டு புரண்டு படுக்காமல் எப்போதேனும் துயில் கொண்டிருக்கிறோமா என்று எண்ணிக் கொண்டான். இந்த யவனமது மிக மென்மையானது. ஆனால் எண்ணங்களின் புரியாழிகளுக்கு நடுவே உயவுப்பொருளாக மாறும் திறன் கொண்டது. ஓசையின்றி அவை சுழன்று கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவை விலகி ஒன்றையொன்று தொடாமல் ஆகும். அப்போது துயில முடியும். துயில்வதென்பது ஆழ்தல். எது அவனோ அங்கு சென்றுசேர்தல்.

மிக அண்மையிலென கரிய பெருமுகம். மலரிதழ் வரிகளென உதடுகள். மலர்ந்த விழிகளில் நீர்மையென்றாகிய ஒளி. மூக்கின் மெல்லிய பனிப்படலம். விழித்தடங்களின் பட்டுவரி. கருங்கல் தீட்டி ஒளியெழச் செய்த கன்னங்கள். குறுமயிர் மென்நிரை. குழைநிழலாடும் கதுப்புகள். அவன் மீண்டும் புரண்டு படுத்து தலையணையைத் தூக்கி தன் முகத்தின் மேல் வைத்து அழுத்திக் கொண்டான். இவ்வெண்ணங்களிலிருந்து எப்போது விடுபடுவேன்? அன்பென்றும் பகையென்றும் விழைவென்றும் வஞ்சமென்றும் ஆன ஒரு உறவு. தேனீ ஒருமுறை கொட்டிவிட்டால் கொடுக்கிழந்து உதிர்கிறது. அதை பறக்க வைத்த விசை அந்நஞ்சு. பின்பு அதற்கு வாழ்வில்லை.

இதை ஏன் இப்போது எண்ணுகிறேன்? மேடைநின்று பேசுபவனின் சொற்கள். இங்கு அனைவரும் எண்ணுவது ஒரே வகையில்தான். இளமை முதலே சூதர் பாடலை கேட்டு வருகிறான். அணிசெறிந்த மொழி. ஒப்புமைகள், உருவகங்கள், புராணங்கள் இன்றி எதையும் எவரும் உரைக்க முடியாது. இங்குள்ள சொற்களெல்லாம் நகைகள். ஆடைகள், மாளிகைகள், நகரங்கள் அனைத்தும் அணிநுணுக்கிய ஆயிழைகள். அவன் மீண்டும் புரண்டு படுத்தான். தலையணையில் முகத்தை அழுத்திக் கொண்டான். இன்று கொற்றவைக்கு ஓர் ஆலயம் எழுப்ப ஆணையிட்டேன். என் நகரில் நான் எழுப்பும் மூன்றாவது கொற்றவை. என் நெஞ்சின் மேல் கால் வைத்து எழுந்தோங்கி நின்று என் தலை கொய்யும் வாளை ஓங்கப்போகும் தலைமாலைத் தலைவி.

கன்னங்கரிய திருமுகம். செந்நுதல்விழி. மான்மழு பரிஎரி முப்பிரி படையணி உடுதுடி நீறணி ஓங்குரு அன்னை. பழுதற்ற பாய்கலை. பைநாகக் கச்சை. பறக்கும் அனலாடை. பூண்அணி பொற்கழல். மணியொளிர் மைநாக முடிசடை. இருளில் இருக்கும் கொற்றவைதான் முழுமை கொண்டவள். புலரியில் நடை திறக்கும் பூசகர் மட்டுமே பார்க்கும் தெய்வம். முதல்சுடர் ஏற்றப்படுகையில் அவள் இம்மண்ணுக்குரியவளாகிவிடுகிறாள். அவள் கொண்ட கொடுந்தோற்றம் அனைத்தும் கருணையின் மாற்றுருக்களாக மாறிவிடுகின்றன.

வீண் எண்ணங்கள். அவன் தன் தலையை நீவி அவ்வெண்ணங்களை அகற்ற விரும்பியவன் போல் உடலை நெளித்தான். என்ன செய்கிறது இந்த யவனமது? குருதியில் கலந்து உள்ளத்தை அடைவதற்கு இத்தனை காலம் எடுத்துக் கொள்கிறது! மீண்டும் உடலை நெளித்தபோது மெல்லிய குறுகுறுப்பென தொடையில் அவ்வலியை உணர்ந்தான். அது உள்ளத்தின் விழைவென்கிறார்கள் மருத்துவர்கள். வெறும் அகமயக்கு. ஆனால் தசை அறிகிறது அவ்வலியை. மாம்பழத்துக்குள் வண்டென அங்கு உள்ளது. விரல் நீட்டி அவ்வடுவை தொடப்போனான். அவன் விரல் அங்கு செல்வதற்குள்ளே உள்ளம் அதைத் தொட்டு சுண்டப்பட்ட வீணை நரம்பு என தசை அதிர்ந்தது.

சீரான தாளத்துடன் வலி அதிரத் தொடங்கியது. தொடையிலிருந்து அனலுருகி குருதியென ஆனதுபோல் மெல்ல வழிந்து முழங்காலுக்கும் கெண்டைக்காலுக்கும் பாதங்களுக்கும் விரல் நுனிகளுக்கும் செல்வதாக வலியை உணர்ந்தான். அரக்குருக அடுக்கு வெடிக்கப் பற்றி எரியும் விறகு போல் இடக்கால் வலியில் துடித்தது. பற்களை கிட்டித்து கைகளை நீட்டி விரல்களை சுருக்கி இறுக்கி அவ்வலியை எதிர்கொண்டான். இடை மேலேறி நெஞ்சில் படர்ந்து அனைத்து நரம்புகளையும் சுண்டி இழுத்து அவனை முறுக வைத்தது. அவ்வடுவில் ஒரு கொக்கியிட்டு வானில் அவனை தூக்குவது போல.

வலியின் அதிர்வு மேலும் உச்சம் கொண்டு ஒற்றைப்புள்ளியில் நின்று அசைவிழந்தது. அங்கு காலமில்லை என்பது அது அறுபட்டு குளிர் வியர்வையுடன் தன்னை உணர்ந்தபோது அறிந்தான். அவ்வடுவில் நாவெழுந்து ஆம் ஆம் என்ற சொல்லாக வலி ஒலித்துக் கொண்டிருந்தது. தொலைவில் எங்கோ ஒரு பறவை ஆம் ஆம் என்றது. வியர்த்த உடலை சாளரக்காற்று வருடிச் சென்றது. கட்டிலுக்கு அடியில் எங்கோ நிலம் ஆம் ஆம் என்றது. யாரோ எங்கோ முனகிக் கொண்டார்கள். ஒரு தனிப் பறவை துயரில் எடைகொண்டு வான்சரிவில் மிதந்து தொடுவான் நோக்கி இறங்கியது. நெடுந்தொலைவில் அறியாத நதியொன்று ஒளிப்பெருக்கென ஓடிக் கொண்டிருந்தது.

உஸ்ஸ் என்னும் ஒலியை அவன் கேட்டான். மிக மெல்லிய ஒலி. பட்டுத்திரைச்சீலை மடிந்து பறந்து உரசிக்கொள்வதுபோல. பின்னர் துருத்தி சீறுவதுபோல. அருகே துதிநீட்டிய பெருங்களிறு உயிர்ப்பதுபோல. அவன் உடல் விதிர்த்துக் கொண்டது. அவன் விழிதிறந்தபோது கட்டிலை அவன் உடலுடன் வளைத்துச் சுற்றியபடி அரசப்பெருநாகம் பத்திவிரித்து அவன் மேல் எழுந்து நின்றிருந்தது. அதன் அடிக்கழுத்தின் அடுக்குப்பொன்நாணயங்கள் அசைந்தன. அனல்விழுதென நா பறந்தது. விழிகள் காலமின்மையில் திறந்திருந்தன. “மிக எளிது” என்றது அது. அச்சொல்லை அது விழியால் அவனுக்குரைத்தது. “மிக மிக எளிது.”

அவன் உடல் வியர்த்து அதிர்ந்து கொண்டிருந்தது. “பெற்றுக்கொள்” என்றது பாய்வளைத்து நின்ற பாந்தள். அவன் உடலே விடாய்கொண்டு எரிந்தது. மேலிருந்து ஒரு குளிர்மழை பெய்து அணைக்காவிட்டால் உருகி வழிந்து மஞ்சத்திலிருந்து அறைக்குள் பரவிவிடும் உடல் என தோன்றியது. “வருக…” என்றது அரவம். அவன் நாக்கு உலர்ந்த மலர்ச்சருகுபோல தொண்டைக்குவைக்குள் ஒட்டிப்பதைத்தது. “வருக…” என்று அவன் நெஞ்சு உரைத்தது. “எப்போதும் நான் அண்மையில் இருந்துகொண்டிருக்கிறேன்.” அவன் உதடுகள் இரும்பாலானவை போலிருந்தன. “ஆம்” என்று அவன் சொன்னது உடலால் அல்ல. “நான் அறிவேன்” கட்செவி மெல்ல காற்றிலென அசைந்தது. “இத்தருணமும் உகந்ததே… “

“இல்லை” என்றான் அவன். “விழைவை அறியாதவன் வீணன் என்றே விண்ணவரால் எண்ணப்படுவான்.” அவன் “இல்லை” என்று பேரோலமிட்டான். “எதற்காக? நீ எய்துவதென்ன?” அவன் “இல்லை இல்லை இல்லை” என மன்றாடினான். “நீ அடைவதற்கு அனைத்தும் உள்ளது. உன் முலைப்பால் மணம் கொண்டு உன்னைத் தொடர்ந்தவன் நான்.” அவன் தன் கையை வீசினான். மதுக்கிண்ணம் தெறித்து உலோக அலறலுடன் தரையில் உருண்டது. மலையுச்சியில் இருந்து விழுந்தவன் போல மஞ்சத்தில் துடிக்கும் உடலாக தன்னை உணர்ந்தான்.

சிவதர் வந்து கதவை மெல்ல திறந்து “அரசே” என்றபோது அவன் முற்றிலும் விழித்துக் கொண்டான். கைகளை ஊன்றி எழுந்தமர்ந்து “உம்” என்றான். “தங்கள் தந்தை காட்சி விழைகிறார்” என்றார் சிவதர். “யார்?” என்றபடி கர்ணன் எழுந்து தன் சால்வையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான். “அதிரதர்” என்றார் சிவதர். “சற்று சினந்திருக்கிறார். இக்கணமே பார்க்கவேண்டுமென்று காவல் முகப்பில் நின்று கூவினார். தாங்கள் துயில்வதாகவும் எழுப்பி அமரவைத்துவிட்டு வந்து அழைத்துச் செல்வதாகவும் சொன்னேன்” என்றார்.

“அழைத்து வாருங்கள். இம்முறைமைகளை அவர் புரிந்துகொள்ள மாட்டார்” என்றான் கர்ணன். “அதற்குள் நான் முகம் கழுவிக்கொள்கிறேன்.” சிவதர் “ஆம். நீருடனும் மரவுரியுடனும் பணியாளை வரச்சொன்னேன். முகம் கழுவி நெற்றிக்குறியிட்டு அமர்ந்திருங்கள். நான் அவரை பேச்சு கொடுத்து சற்று திடுக்கமின்றி வரச்சொல்கிறேன்” என்றபடி வெளியே சென்றார். அவன் எழுந்தபோது உடல் மிக எடைகொண்டு கால்கள் அதை தாளாததுபோல் உணர்ந்தான். யவனமது துயிலில் நீர்விடாயை பெருக்குகிறது. அதுவே கனவுகளாக எழுந்து அனலென வருத்துகிறது.

உள்ளே வந்த ஏவலனிடமிருந்து குவைதாலத்தில் நறுமண வெந்நீரை பெற்று முக்கால் பீடத்தில் வைத்து குனிந்து நீரள்ளி வீசி முகத்தை கழுவினான். தலையிலும் சற்று தெளித்து கலைந்த கருவிழுதுக் குழலை நீவி பின்னால் இட்டான். ஏவலன் காட்டிய பொற்சிமிழில் இருந்த செஞ்சாந்துக்குழம்பில் கதிரவன்முத்திரை கொண்ட கணையாழியை அழுத்தி எடுத்து தன் நெற்றியில் குறி அணிந்தான். ஏவலனிடமிருந்து நறுமணப் பாக்கையும் மிளகையும் எடுத்து வாயிலிட்டு மென்று உடனே உமிழ்ந்துவிட்டு ஆடைதிருத்தி நின்றான்.

அப்பால் உரத்த குரலில அதிரதன் பேசிக்கொண்டு வருவது கேட்டது. “நானறிவேன் அனைத்தையும். இங்குள்ள திரக்கு எதை விழைகிறதென்றும் அறிவேன். அடிக்கடி இங்கு வரவில்லை என்பதனால் நான் அயலவன் என்று எண்ணவேண்டியதில்லை….” கர்ணன் “விலகுக” என்று சொல்லி ஏவலனை அனுப்பிவிட்டு கதவைத் திறந்து வெளியே சென்றான். இடைநாழியில் வந்து கொண்டிருந்த அதிரதன் அவனைக் கண்டதும் அங்கிருந்தே உரத்த குரலில் “பகல்பொழுதில் துயில்கிறாய்! கதிர்வாழும் பொழுதில் துயில்பவனால் உயிர்க்குலங்களை புரிந்துகொள்ள முடியாது. அவனை நோக்கி தெய்வங்கள் சலிப்புறும்” என்று கூவியபடி வந்தார்.

“மூடா, உன்னிடம் நூறு தடவை சொல்லியிருப்பேன் பகற்பொழுதில் துயிலாதே என்று” என்றபடி கையை நீட்டினார். “துயிலவில்லை, சற்று ஓய்வெடுத்தேன்” என்றான் கர்ணன். குனிந்து அவரது கால்களைத் தொட்டு சென்னியில் சூடி “வாழ்த்துங்கள் தந்தையே” என்றான். அவன் தலையில் கையை வைத்து “நன்று சூழ்க!” என்றபின் “உன்னிடம் சில சொற்களை சொல்வதற்காக வந்தேன். இந்த அணுக்கனை விலகிப்போகச் சொல்” என்றார். சிவதர் “தாங்கள் அறைக்குள் அமர்ந்து பேசலாம் மூத்தவரே. நான் கதவை மூடிவிட்டு வெளியேதான் நிற்பேன்” என்றார். “வெளியே நிற்காதே. நான் இவனிடம் சொல்வதை நீ ஏன் கேட்கவேண்டும்?” என்றார் அதிரதன்.

கண்கள் மட்டும் சிரிக்க “கதவை மூடினால் சொற்கள் எதுவும் வெளியே வாரா” என்றார் சிவதர். “ஆம், இவனுடன் அணுக்கச்சாலையில் அமர்ந்துதான் பேசுவேன். இது இவனது தனிப்பட்ட வாழ்வு குறித்து” என்றபின் “வா” என கர்ணனிடம் கையசைத்தபடி அதிரதன் அறைக்குள் சென்றார். சிவதர் கர்ணனை நோக்கி மெல்ல இதழ்விரித்து புன்னகை செய்தபடி நின்றார். கர்ணன் உள்ளே சென்றதும் கதவை இழுத்து மூடிக்கொண்டார்.

கர்ணன் “சொல்லுங்கள் தந்தையே, தாங்கள் சினங்கொண்டிருப்பதாக சிவதர் சொன்னார்” என்றான். “ஆம், சினம் கொண்டிருக்கிறேன். மூடா, நீ ஒரு அரசனாக இங்கு செயல்படுகிறாயா? இந்நாட்டை ஆள்வது நீயா? அல்லது அந்த குள்ள அந்தணனா? குதிரை வளர்ப்பைப் பற்றி ஐந்துமுறை அவனிடம் நான் பேசினேன். எதைச் சொன்னாலும் பணிவுடன் தலையாட்டுகிறான். ஒரு சொல்லேனும் அவனது ஒழிந்த உள்ளத்திற்குள் நுழைவதில்லை. மூடன், வெறும் மூடன்” என்று அதிரதன் கையசைத்தார்.

“யார் ஹரிதரா?” என்றான். “ஆம், அவனேதான். மூடா, முன்பு இங்கிருந்த முந்தைய அங்க மன்னனின் அணுக்கனாக இருந்த அந்தணன் அவன். இன்று உன் அணுக்கனாக மாறி அரசாள்கிறான். நீயும் உச்சிப்பொழுதில் மதுவருந்தி மஞ்சத்தில் மயங்குகிறாய்.” “மது அருந்தவில்லை” என்றான் கர்ணன் தாழ்ந்த குரலில். “பொய் சொல்லாதே. நீ அத்தனை தொலைவில் வந்து கொண்டிருந்தபோதே நீ அருந்திய மதுவை நான் மணம் அறிந்துவிட்டேன். மதுவுண்ட குதிரைபோலத்தான் மானுடனும். அவன் கண் விரிந்திருக்கும்” என்றார் அதிரதன். “குதிரை மேய்த்து குடிசையில் வாழ்ந்த சூதன் நீ. உனக்கு பொற்கிண்ணத்தில் யவனமது கைவந்தபோது அதுவே வாழ்க்கை என்று தோன்றுகிறது இல்லையா?”

கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. அதிரதன் மஞ்சத்தில் அமர்ந்து கால்மேல் கால்போட்டபடி “நேற்று என்ன நடந்தது?” என்றார். “தாங்கள் எதை கேட்கிறீர்கள்?” என்றான் கர்ணன். “மூடா, நேற்று என்ன நடந்தது என்று என்னிடம் கேட்கிறாயா? நேற்று நீ விருஷாலியை பார்க்கச் சென்றபோது அவள் உன்னிடம் என்ன சொன்னாள்?” கர்ணன் “நான் அவளை பார்க்க முடியவில்லை” என்றான். “ஏன் பார்க்க முடியவில்லை? அதைத்தான் கேட்டேன். நீ ஏன் அவளை பார்க்கமுடியவில்லை?” என்றார் அதிரதன். “அவள் பார்க்க விரும்பவில்லை” என்றான். “ஆமாம் அறிவிலியே, ஏன் பார்க்கவிரும்பவில்லை?” என்றார். “அறியேன். அவள் கருவுற்றிருப்பதாக மருத்துவச்சி சொன்னாள்.”

“ஆம், கருவுற்றிருக்கிறாள். நாணிலியே, அச்செய்தியை நீ முறைப்படி எவருக்கு அறிவித்திருக்க வேண்டும்?” கர்ணன் பேசாமல் நின்றான். “எனக்கு. அதற்குமுன் என் மனைவிக்கு. நாங்கள் இங்கு வந்து அவளுக்கு குலமுறைப்படி சீர்வரிசை செய்ய வேண்டும். அதுவே சூதர் மரபு. நீ நாட்டின் அரசனாக இருந்து ஈட்டிக் கொடுத்த செல்வம் எனக்குத் தேவையில்லை. நான் குதிரை பேணி ஈட்டிய செல்வமே என் கை பெருக உள்ளது. எவர் தயவுமின்றி அவளுக்கு முறைவரிசை செய்வதற்கு நாங்களும் தகுதி கொண்டிருக்கிறோம்.”

கர்ணன் “அவ்வாறு அறிவிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன” என்றான். அதிரதன் மேலும் உரக்க எழுந்த குரலில் “அந்த அந்தணன் உன்னிடம் சொல்லியிருப்பான், அறிவிக்க வேண்டியதில்லை என்று. அல்லவா?” என்றார். “இல்லை. அம்முடிவை எடுப்பதற்குள் இளையவள் கருவுற்று இருப்பதாக செய்தி வந்தது” என்றான் கர்ணன். “இளையவள் கருவுறவில்லை. அதை நான் நன்கு அறிவேன். இந்த அரண்மனையே அறியும். மூத்தவள் கருவுற்ற செய்தியை அறிந்த உடனேயே இளையவள் கருவுற்றதாக அறிவித்தாள். அதை நீ உன் அவையில் வெளிப்படுத்தவும் செய்தாய். இன்று என்ன நடக்கிறது தெரியுமா?” என்றார். கர்ணன் “சொல்லுங்கள்” என்றான்.

“நான் சொல்லி நீ அறிய வேண்டுமா? நீ அரசனா இல்லை நான் அரசனா? கலிங்கத்து அரசி சூதர்களுக்கும் அந்தணர்களுக்கும் உன் கருவூலப் பொன்னை அள்ளிக் கொடுக்கிறாள். அவர்கள் அவளை வாழ்த்தி நகரெங்கும் சென்று பிறக்கவிருக்கும் அவள் மைந்தனே இந்நாட்டை ஆளப்போவதாக சொல் முழக்குகிறார்கள்” என்றார் அதிரதன்.

“பட்டத்தரசி அவளல்லவா?” என்றான் கர்ணன். “ஆம், அது இன்று. இந்நகரின் ஷத்ரியர்கள் விருஷாலியை ஏற்கவில்லை என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் அது நாளை உன் மைந்தருக்கும் பொருந்தும் என்று எவர் சொன்னது? விருஷாலியின் கருவில் பிறக்கும் மைந்தன் பெருவீரனாக இருந்தால் அவனை இம்மக்கள் வெறுப்பார்களா? வில்லெடுத்து அவன் இவ்வரியணையை வென்றெடுக்க எண்ணினால் எவர் தடை சொல்ல முடியும்?” என்றார் அதிரதன்.

“இப்போது நாம் அதை எதற்கு எண்ணவேண்டும்?” என்றான் கர்ணன். “இப்போதே எண்ண வேண்டும் அறிவிலியே. இன்றே உன் மூத்த துணைவி கருவுற்றிருப்பதை அறிவி. இளையவள் கருவுறவில்லை என்ற அரசு செய்தியும் இன்றே வெளிவர வேண்டும். இது என் ஆணை” என்றார். கர்ணன் “தந்தையே, மூத்தவள் கருவுற்றிருக்கும் செய்தியை முறையாக அறிவிக்கச் செய்கிறேன். இளையவள் கருவுறவில்லை என்பதை எப்படி அரசு சொல்ல முடியும்? தான் கருவுற்றிருப்பதாக அரசி சொன்னது பொய் என்று அரசு முறைப்படி அறிவிக்க முடியுமா என்ன?” என்றான்.

“ஏன் அறிவிக்க முடியாது? நீ இந்நாட்டின் அரசன். நீ அறிவிப்பதே உண்மை. ஆண்மை இருந்தால் சென்று மக்களிடம் உண்மையை சொல்” என்றார் அதிரதன். “எந்த உண்மையை? அரசியும் அவர்களின் மருத்துவர்களும் சொல்வதல்லவா உண்மை? அதை அல்லவா அரசு ஏற்றாக வேண்டும்?” என்றான் கர்ணன். அதிரதன் கைகளைத் தட்டியபடி எழுந்து “ஏன்? வேறு இரு மருத்துவர்களைக் கொண்டு இளையவளை நோக்க இயலாதா?” என்றார். “அதைத்தான் நான் கேட்கிறேன். நானே மருத்துவர்களை அனுப்புகிறேன். அவர்கள் சொல்லட்டும்…”

கர்ணன் சட்டென்று சலிப்புற்று “இவை அரசுசூழ்தல்கள். தாங்கள் இவற்றை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது தந்தையே” என்றான். அதிரதன் புண்பட்டு “சீ, வாயைமூடு. நீ குதிரையைக்கூட அறியாத சூதன். நான் குதிரை வழியாக உலகை அறிந்த முதியவன். நான் அறியாத அரசுசூழ்தலா? அந்த மூட பிராமணன் என்னைவிட அறிந்திருக்கிறானா என்ன? எனக்குத் தெரியும். என்ன செய்வது என்று அறிந்தவன் நான். நான் சொல்லும் ஆணைகளை நீ இடு. ஐந்து நாட்களில் இங்குள்ள அனைத்து நிலைமைகளையும் மாற்றிக் காட்டுகிறேன். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது அறிவாயா நீ?” என்றார். கர்ணன் தாழ்ந்த குரலில் “இல்லை” என்றான்.

“அறியமாட்டாய். ஏனெனில் நீ மதுவருந்தி மஞ்சத்தில் புரண்டு கொண்டிருக்கிறாய். மூடன். அஸ்தினபுரியிலிருந்து வந்த அமைச்சரை இளவரசரை அந்த ஆணவம் எழுந்த அங்கநாட்டு பிராமணன் அழைத்துக்கொண்டு கலிங்க நாட்டரசியை பார்க்கச் சென்றிருக்கிறான். இன்று அங்கு அவர்களின் சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.” கர்ணன் “அது முறைமை. அரசவையில் என்னை சந்தித்தபின் முறைப்படி பட்டத்தரசியை சந்தித்தாக வேண்டும். அவள் கருவுற்றிருப்பதால் அவைக்கு வரவில்லை என்பதனால் அதுவே செய்யக்கூடுவது” என்றான். “என்ன முறைமை? மூத்தவள் விருஷாலி இங்கிருக்கிறாள். அவளை சந்தித்துவிட்டல்லவா கலிங்கத்து அரசியை சந்திக்கவேண்டும்?” என்றார் அதிரதன்.

“தந்தையே, இது தனிப்பட்ட சந்திப்பு அல்ல. இது அரச முறை சந்திப்பு. பட்டத்தரசியைத்தான் சந்தித்தாக வேண்டும்” என்றான். “யார் சொன்னது? மூடா, அஸ்தினபுரியின் அரசன் தன் தங்கையாக ஏற்றுக் கொண்டவள் விருஷாலி. அவளை முதலில் சந்திக்க வேண்டுமென்றுதான் அஸ்தினபுரியின் இளையவரும் அமைச்சரும் விரும்பியிருப்பார்கள். அங்க நாட்டை ஆளும் அந்த அந்தணன் செய்த சூழ்ச்சி இது. இதைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தலைக்கு மேல் எழுந்த தோள் கொண்டு தடித்த உடல் தூக்கி ஊன்தடி என நீ இங்கு இருப்பது எதற்காக? உன்னை எண்ணி நாணுகிறேன். உன்னை தந்தையென நின்று பேணி வளர்த்தமைக்காக இத்தருணத்தில் உளம் கூசுகிறேன்.”

“தாங்கள் சினம் கொள்வது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகலந்து அறிந்தபின் நான் தங்கள் ஆணையை நிறைவேற்ற சித்தமாக இருக்கிறேன்.” அதிரதன் “இங்கு அவை என்பது நானே. என் ஆணை ஒன்றே. இக்கணமே கிளம்பி விருஷாலியின் அரண்மனைக்கு செல். அங்கு அவளுடன் அமர்ந்து அவை ஒன்றை கூட்டு. உன் அணுக்கனை அனுப்பி அஸ்தினபுரியின் அமைச்சரையும் இளவரசரையும் அங்கு வரச்சொல். விருஷாலியின் முன் அவர்கள் தலை வணங்கி அஸ்தினபுரியிலிருந்து அவர்கள் கொண்டு வந்த பரிசில்களை அளிக்கட்டும். அப்போது அவர்களிடம் சொல் விருஷாலி கருவுற்றிருப்பதாக. அச்செய்தியை அவர்கள் முறைப்படி அஸ்தினபுரியின் அவைக்கு அறிவிக்கட்டும்” என்றார்.

கர்ணன் பேசாமல் நின்றான். அதிரதன் “அஸ்தினபுரியிலிருந்து அவளுக்கு பேரரசர் திருதராஷ்டிரரும் அரசர் துரியோதனரும் நீட்டும் பரிசிலும் அனுப்பட்டும். நூறு யானைகள் அவ்வரிசை சுமந்து இந்நகர் புகட்டும். அரசவீதியில் அவை அணிவகுத்து அரண்மனையை அடையட்டும். அப்போது தெரியும் சம்பாபுரியின் மக்களுக்கு இந்நகரத்தை ஆளும் உண்மை இளவரசி அவள்தான் என்று. மூடா, இந்நகர் எவரால் பாதுகாக்கப்படுகிறது? அஸ்தினபுரியின் பெரும்படைகளால். உன்னால் அல்ல. துரியோதனர் உன்னைவிட தனக்கு அணுக்கமென எண்ணுவது அவர் தங்கை விருஷாலியை. அதை மறவாதே” என்றார்.

“ஆம், நான் அதை அறிவேன்” என்றான் கர்ணன். “அந்தக் கலிங்கத்து சிறுமியிடம் சொல், அவள் இடம் என்ன என்று. இன்றே அரசுமுறை அறிவிப்பு வந்தாக வேண்டும். அவள் கருவுற்றிருப்பது உண்மையல்ல என்று. அது இயலாது என்றால் அக்கரு கலைந்துவிட்டது என்று சொல். நாளை அவ்வறிவிப்பு வரட்டும்.” கர்ணன் “இது என்ன அரசமுறை என்று எனக்கு புரியவில்லை. அரசன் என நான் அவைக்குக் கட்டுப்பட்டவன். எதையும் அமைச்சரிடம் சொல்சூழாது நான் அறிவிக்க முடியாது” என்றான்.

அதிரதன் கழுத்துநரம்புகள் புடைக்க உதடுகள் கோணலாக இழுபட “நான் இத்தனை சொல்லியும் கேளாது மீண்டும் அந்த வஞ்சம்சூழ் அந்தணனிடம் கேட்கப் போகிறாயா?” என்று கூவினார். “முதலில் அவனை காடேகும்படி ஆணையிடு. இல்லையேல் நீ வாழமாட்டாய். அடேய், நான் சொல்கிறேன், தகுதி வாய்ந்த அமைச்சர் எவரென்று. அவரை அமைச்சராக்கு. இல்லையேல் துளைவிழுந்த படகு போல் இந்த நாடு மூழ்கி அழியும். இது என் இறுதி ஆணை. நாளை இளையவளின் கரு கலைந்த செய்தியை அரசுமுறை அறிவிப்பாக வெளியிட வேண்டும். இன்றே இப்போதே நீ விருஷாலியின் அரண்மனைக்கு வரவேண்டும்” என்றபின் அதிரதன் வாயிலை நோக்கி சென்றார்.

“தந்தையே, தாங்கள் என் அரண்மனைக்கு வந்து ஏதும் அருந்தாமல் செல்கிறீர்கள்” என்றான் கர்ணன். “அருந்தலாகாது என்று முடிவெடுத்து வந்தேன். உன் யவனமதுவை அருந்துவதற்காக இங்கு வரவில்லை. எனக்கென்று சில எண்ணங்கள் உள்ளன. அவற்றை சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன். மூடா, என் மருமகள் விருஷாலி. அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தராலேயே நான் நீரும் உணவும் அளித்து விண்ணுக்கு ஏற்றப்படுவேன். என் கடப்பாடு அவளோடுதான். அதை உன் மூட நெஞ்சுக்கு உரைக்கும்படி சொல்லிவிட்டுச் செல்லத்தான் வந்தேன்” என்றபடி பேரோசையுடன் கதவைத் திறந்து வெளியே சென்றார் அதிரதன்.

அவருக்குப் பின்னால் சென்ற கர்ணன் வாயிலுக்கு அப்பால் நின்ற சிவதரை நோக்கினான். சிவதர் கண்களால் ஒன்றுமில்லை என்று காட்டி தலைவணங்கினார். “எவரும் எனக்கு அகம்படி வரவேண்டியதில்லை. என் குதிரை லாயத்துக்குச் செல்லும் வழி எனக்குத் தெரியும்” என்று கை தூக்கி உரக்கக் கூவியபடி அதிரதன் நடந்து சென்றார். கர்ணன் சிவதரை நோக்கி “ஆணைகளை பிறப்பித்துவிட்டுப் போகிறார்” என்று மெல்லிய குரலில் சொன்னான். “ஆம், அவ்வாணைகளை முன்னரே என்னிடமும் சொல்லிவிட்டார்” என்றார் சிவதர்.

படியிறங்கி கீழே சென்றபடி அதிரதன் உரத்த குரலில் “உச்சிப்பொழுதில் துயில்பவனை யானையை நரிகள் சூழ்வது போல் இங்குள்ள வீணர்கள் நாற்புறமும் கவ்வி இழுக்கிறார்கள். அனைவரும் எண்ணிக் கொள்ளுங்கள், அவன் என் மைந்தன். நான் கற்ற கல்வியும் பெற்ற அறிதல்களும் அவனுக்கு என்றும் துணையிருக்கும். எவரும் அவனை மீறி இந்நகரத்தை ஆளலாம் என்று எண்ணவேண்டாம்” என்று கூவியபடியே சென்றார்.

கர்ணன் சிவதரிடம் புன்னகைத்து “தந்தை வளர்ந்துகொண்டே இருக்கிறார்” என்றான். “ஆம்” என்று சொன்னபின் மேலும் ஒரு சொல் எடுக்கலாகாது என்பதுபோல் தன் இதழ்களை சிவதர் இறுக்கிக் கொண்டார்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்\

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

விவாதம் என்னும் முரணியக்கம்

$
0
0

 

1

 

[கிளிந்த் ப்ரூக்ஸ்]

 

 

அன்புள்ள  ஜெயமோகன்,

தங்களுக்கு  வரும் பெரும் எண்ணிக்கையிலான கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போலவே நானும் உங்கள் வலைப்பூவைப்  படிப்பதை எனது தினசரித் தேவைகளில்  ஒன்றாக ஆகிப்போனதை உணர்கிறேன்.  அதற்காக என்னால் நீங்கள்  கூறும் எல்லாக் கருத்துக்களுடனும்  உடன்பட்டுப் போக முடிவதாக அர்த்தம் அல்ல. 

ஆனால் ஒன்றை நான் உண்மையுடன் ஒத்துக்கொள்கிறேன். என்னில் மாறுபாடான கருத்துக்களைக் காணும்போதும், தங்களின் நேர்மையான பார்வையும் இன்றைக்கு அரிதாகிப்போன அசலான சிந்தனை வெளிப்பாடுகளும் என்னில் மறுசிந்தனையைத் தோற்றுவிப்பதையும் புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவதையும் நான் உணர்கிறேன். என் தலைமுறையின் தவிர்க்கமுடியாத சமூக சிந்தனாவாதியாக தாங்கள் உருவெடுப்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.  ஆயினும் உங்கள் கருத்துக்களை நிறுவுவதில் காணப்படும் வேகமும், ஒற்றைப்போக்கும், அக்கருத்துக்களின் பன்முகத்தன்மைகளை நீங்கள் புறக்கணிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன என்பதையும் மெத்தப் பணிவுடன் சுட்டிட ஆசைப்படுகிறேன்.

,,ஜேயார்ஸி

 

பார்த்

 

அன்புள்ள  ரவிச்சந்திரன்,
என்னுடைய விவாதங்களைச் சார்ந்து இந்தக்கோணத்தில் பலரும் எழுதியிருக்கிறார்கள். நான் திட்டவட்டமாக பேசுகிறேன் என்றும் அதன் மூலம் மறுதரப்பை முற்றாக நிராகரித்துவிடுகிறேன் என்றும். அதை நான் ஒரு குறையாக எண்ணவில்லை. மாறாக அதுவே எந்த ஒரு விவாதத்துக்கும் இயல்பான முறை என்றே
எண்ணுகிறேன்.

சிந்தனை என்பது ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்வதில்தான்இருக்கிறது. தெளிவுபடுத்திக்கொள்வதென்பது அதை முறையாக பகுத்து வகுத்துக்கொள்வதே. அறிந்தவிஷயங்களை முறையாக வகுத்து வகுத்துக்கொண்டபின்னரே அறியாத விஷயங்களை நோக்கிச் செல்ல முடியும் என்பதுஎன் எண்ணம். தெளிவுபடுத்திக்கொள்வதன்மூலம் தெளிவு தேவையாகும் புதிய இடங்களை நோக்கி நாம்நகர்கிறோம்.

ஆகவே ஒரு நல்ல எழுத்தில் தெளிவும் திட்டவட்டமுமான ஒரு பகுதிஇருக்கும்போதே ஒருபகுதி குழப்பமான சிக்கலான பகுதியை நோக்கி நீண்டுமிருக்கும். என் எழுத்தில் அந்த அம்சம் இருப்பதை நான் எனக்கு வரக்கூடிய கடிதங்கள் வழியாகக் கண்டுகொண்டிருக்கிறேன். அந்த தெளிவற்றபகுதியை நோக்கியே அதிகமும் நல்ல விவாதங்கள் எழுகின்றன.

ஏனென்றால் அதுநான் புதிதாகச் சிந்திக்கும் பகுதி. நானே பல இடங்களில் முட்டிமோதி முன்னகரும்பகுதி. அப்பகுதி நோக்கி தன் கேள்விகளை தொடுப்பவர் என்னுடன் இணைந்து தானும் சிந்திக்கிறார். எங்களுக்குள் நிகழ்வது ஓர் உரையாடல்

அதேசமயம் எனக்கு தெளிவுள்ள பகுதி எப்போதும் திட்டவட்டமாகவே இருக்கும்.அது என் கல்வி மூலம் , என் அனுபவம் மூலம், என் படைப்பூக்கம் மூலம் நான்கண்டுகொண்டது, வகுத்துக்கொண்டது. இப்பகுதி நோக்கி தன் விமரிசனத்தைதொடுப்பவர் என் அஸ்திவாரத்தை மறுக்கிறார்.  ஆகவே அவர் என்னைஉடைத்தாகவேண்டும். அத்தகைய கடுமையான தர்க்கங்களுடன்தான் அவர் வந்தாகவேண்டும். அதை நான் எதிர்பார்ப்பது இயல்பானதே.

நான் எழுதும்போது என்னை மீண்டும் மீண்டும் தொகுத்துக்கொள்கிறேன். ஆகவே என் எழுத்து தெளிவாக இருப்பது எனக்கே அவசியமானது. அதாவது இப்படிச் சொல்கிறேன். தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருப்பது என்பதே ஓர் எழுத்தாளன் எப்போதும் முயன்றடையவேண்டிய நிலை. தெளிவின்மையும் மாறும்தன்மையும் அவன் சென்று தொடும் சிக்கல்கள் சார்ந்து இயல்பாகவேஉருவகக்கூடியவையாக இருக்க வேண்டும்.

அப்படி ஒரு தெளிவற்ற நுனி ஒரு நல்ல சிந்தனையாளனின் உலகில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் மொத்த சிந்தனையும் ஒருவருக்கு தெளிவற்றும் மாறிக்கொண்டிருக்கும் என்றால் அவர் சிந்திப்பதில்ஏதோ சிக்கல் இருக்கிறதென்றே பொருள்.

என்னுடைய சிந்தனையை நான் திரும்பிப்பார்த்துக்கொள்ளும் போது இவ்விரு கேள்விகளைத்தான் கேட்டுக்கொள்கிறேன். என் சிந்தனை உலகம் முன்னகரும்தெளிவின்மை இல்லாமல் நிலைத்த உறுதியுடன் இருக்கிரதா? இல்லை என்றேஎனக்குப் படுகிறது. தொடர்ச்சியாக நான் என்னால் வகுத்துச் சொல்லிவிடமுடியாத முனைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறேன்.

ஆகவேதான் ஒன்றை தீவிரமாக எழுதிச்செல்லும்போது அதைவிட பெரிதான இன்னொன்றைச் சென்றடைந்துநின்றுவிடுகிறேன். உதாரணமாக அயன் ராண்ட் பற்றிய என் விவாதம். அதைதெளிவுறச்சொல்லிச் செல்கிறேன். ஆனால் நடைமுறைவாதத்தின் எல்லைவரைசென்றபின் இனிமேல் புதிய கோணத்தில் விரிவாகவே அதைப்பற்றிப் பேசமுடியும்என்ற இடம் வந்து நின்றுவிடுகிறேன்\

மாற்றுத்தரப்புகளை இருவகையாக பார்க்கலாம். மாற்று நம்பிக்கை, மாற்று நிலைப்பாடு. மாற்று நம்பிக்கைகளுடன் விவாதிப்பதில்லை என்பதே என் வழி.உலகின் கடைசி ஞானி முகமதுதான், மேற்கொண்டு மனித சிந்தனையில் எந்தமுன்னேற்றமும் தேவையில்லை என்று ஒருவர் நம்பினால் அது அவரது நம்பிக்கை அதை நான் மறுக்கக் கூட போவதில்லை.

தன் சாதிமேன்மையால் தனக்கு இயல்பாகவே ஞானம் உருவாகும் என இன்னொருவர் நம்பினால் அது அவரது நம்பிக்கை. அந்த தோரணை கொண்ட ஒருவரை  நான் பொருட்டாக எண்ணப்போவதில்லை. நம்பிக்கைகளுடன் விவாதிப்பதில்லை என்பது என்வழி. அதை திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு விலகிவிடுவேன்.

மாற்று நிலைப்பாடு தரப்புகளைப் பொறுத்தவரை தன் நிலைப்பாடுகளைச் சொல்லிஎன்னுடைய வாதங்களை உடைக்கும் அல்லது மாற்றியமைப்பும் பொறுப்பை ஒருவர்ஏற்றுக்கொண்டாகவேண்டும். அது சிந்தனைத்தளத்தில் நான் முன்வைக்கும் சவால்.அந்தச் சவாலை நான் குறைத்து அளிக்க வேண்டும் என்று கோர ஒருவருக்கு உரிமைஉண்டா என்ன? என்னால் முடிந்தவரை தீவிரமாக அச்சவாலை அளிப்பதுதானே என் பணியாக இருக்க முடியும்?

நான் என் தரப்பில் தேங்கியிருக்கிறேனா என நானே அறிந்துகொள்ள முக்கியமான முறை ஒன்று உள்ளது. இத்தனை கால அறிவுலகச்செயல்பாட்டில் என் தரப்பை என்எதிர் தரப்பினர் மாற்றியமைக்க நான் அனுமதித்திருக்கிறேனா என்னும்கேள்விதான் அது.

பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அது பலமுறை நிகழ்ந்திருப்பது தெரியவருகிறது. அந்த மாற்றங்கள் வழியாக நான் வளர்ந்திருப்பதும் தெரியவருகிறது. சிந்தனையில்  வளர்ச்சி என்பது அவ்வாறுமட்டுமே அமைய முடியும். அது ஓர் முரணியக்கம்.

இரு உதாரணங்கள். நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் தமிழில்அமைப்புவாதம்  முன்வைக்கபப்ட்டது. [அமைப்பியல் என்பது அப்போதைய பெயர்.ஆனால் இயல் என்பது ஒரு தனி அறிவுத்துறையைச் சுட்டுவதற்கான சொல்லாட்சி.அமைப்புவாதம்  என்பது மொழியியலுக்குள் முன்வைக்கப்பட்ட ஒரு கோணம். ஆகவேஅமைப்புவாதம் என்பதே சரியான சொல்]

தமிழவன் எண்பதுகளில் ஸ்டக்சுரலிசம் என்ற நூலை எழுதினார். இந்நூலை ஒட்டி உருவான விவாதம் இலக்கியத்தில் ஓர்அலையை உருவாக்கியது. நாகார்ஜுனன், பிரேம்-ரமேஷ், க.பூரணசந்திரன்போன்றவர்கள் இந்த புதிய சிந்தனைமுறையை தமிழில் முன்வைத்தார்கள். அவர்கள்சொன்னதை தங்கள் போக்கில் புரிந்துகொண்டு பலர் தங்களையும் அமைப்புவாதிகளாகமுன்வைத்தார்கள்.

நான் இலக்கிய விவாத அரங்குகளிலும் சிற்றிதழ்களிலும் கேட்டதெல்லாம் இந்தஇரண்டாம்நிலைக் குரல்களைத்தான். சாரு நிவேதிதா, கௌதம சித்தார்த்தன்,எஸ்.சண்முகம் , முத்துக்குமார் போல. இவர்கள் ‘சுந்தர ராமசாமியின்எழுத்தும் சரோஜாதேவி எழுத்தும் ஒன்றுதான்’ ‘இலக்கியவாதி என்பவனுக்குஇனிமேல் முக்கியத்துவமே இல்லை– அவன் இறந்து விட்டான்’ ‘கலை என்பதுஒருவகை சமூக உற்பத்தி மட்டுமே’ என்றெல்லாம் சில எளிய கோஷங்களாகஅமைப்புவாதத்தை முன்வைத்தார்கள்.

இந்தச் சிந்தனைகளை எதிர்கொள்ளும்போது இவை ஒருவகை வெற்றோசைகள் என்ற எண்ணம்எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால்  எந்த ஆழமான சிந்தனைமரபும் இப்படிப்பட்டவரிகளைச் சொல்ல முடியாது என நான் நன்றாகவே அறிவேன்.

இதையொட்டிநாகார்ஜுனன், பிரேம் போன்றவர்களுடைய கட்டுரைகளுக்குள் சென்றபோது அவைமிகமிகச்சிக்கலான செயற்கையான நடையில் எழுதப்பட்டிருந்தன. மேலும்அக்காலத்தில் அவர்கள் இலக்கியக் கோட்பாடுகளை முன்வைத்து இலக்கியஆக்கங்களை எள்ளிநகையாடும் ஒரு தோரணையையும் கொண்டிருந்தார்கள். ஒருமொழியில் தன்னிச்சையாக எழும் இலக்கியப்படைப்பை ஒட்டுமொத்தமாகநிராகரிக்கும் ஒரு கோட்பாடு என்பது அபத்தமான ஒன்று என்று நான் எண்ணினேன்.

அத்துடன் இந்த விவாதங்களின் விளைவாக அறம், தரம், அழகியல், கலை போன்றவிழுமியங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் ஒரு போக்கு தமிழில் உருவானது.தமிழில் எப்போதுமே நுண்ணிய இலக்கிய ஆக்கங்களுக்கு எதிரான மேலோட்டமானஎழுத்தாளர்கள் எண்ணிக்கையில் அதிகம். இத்தகைய நிராகரிப்புகளை அவர்கள்உடனே தலைமேல் சுமக்க ஆரம்பிப்பார்கள். ஆக இந்தக்குரல்கள் சூழலை நிறைத்தன.

இந்த அலைக்கு எதிராக நான் கடுமையாக விவாதித்திருக்கிறேன். திட்டவட்டமாகஎன் தரப்புகளை முன்வைத்திருக்கிறேன். இந்நிலையில்தான் விஷ்ணுபுரம்எழுதிமுடிந்தபின் இந்தச் சிந்தனைகளை இவர்களை நம்பாமல் நானேகற்றுக்கொள்ளலாம் என முடிவுசெய்து முதலில் மதன் சரூப் என்பவர்ஆங்கிலத்தில் எழுதி ஆக்ஸ்போர்ட் பிரஸ் வெளியீடாக வந்த புகழ்பெற்ற அறிமுகநூலை வாசித்தேன். முதல் ஆச்சரியம் எனக்கு  அச்சிந்தனைகளில் இருந்தபடைப்பூக்கம்தான். அவை தமிழ்ச் சூழலில் முற்றிலும் மாறாக அபத்தமான புரிதல்களுடன் முன்வைக்கப்பட்டன என்ற எண்ணம் ஏற்பட்டது.

உதாரணமாக அமைப்புவாதம் சுந்தர ராமசாமி எழுதுவதையும் சரோஜாதேவிஎழுதுவதையும் பிரதி என்னும் மொழிக்கட்டுமானமாகவே பார்க்கும். அதைத்தான்இரண்டும் ஒன்றே என்ற கோஷமாக  சாரு நிவேதிதா புரிந்துகொண்டு முழங்கினார்.ஆனால் அமைப்புவாதம் நோக்கில் பிரதி உருவாக்கும் குறியீட்டு ஒழுங்கின் பன்முகத்தன்மை சார்ந்து அதன் முக்கியத்துவம் வேறுபடுகிறது. பழையவிமரிசனத்தில் ‘ஆழம்’ என்று சொல்லப்படுவதை பார்த் முன் வைத்தஅமைப்புவாதம் ‘குறியீட்டு ஒழுங்கின் முடிவற்ற பன்முகத்தன்மை’ என்ச்சொல்லும், அவ்வளவுதான் வேறுபாடு.

அதேபோல பார்த் ‘ஆசிரியனின் மரணம்’ என்று சொல்வது ஆசிரியனைநிராகரிப்பதல்ல. ஆசிரியனை வெறும் ஒரு தனிமனிதனாக மட்டுமே பார்க்கும்நோக்குக்கு எதிரான ஒன்று. அவனுடைய படைப்புமொழி என்பது ஒரு சூழலின்மொழியமைப்பின் ஒருபகுதியாக இருப்பது. ஆகவே அவன் அம்மொழிச்சூழலின் ஒருபகுதியாக இயங்குபவன். எழுத்தை உற்பத்தி என்று அமைப்புவாதம் சொன்னதுபடைப்பு என்ற சொல்லில் முன்பு இல்லாமலிருந்து புதிதாக உருவானது என்றபொருள் வருவதனாலேயே. பொருள் உற்பத்தியில் உள்ள இயந்திரத்தனத்தை பார்த்ஏற்றுக்கொண்டவரல்ல.

இதைத்தொடர்ந்து நான் என்னுடன் விவாதிப்பதற்கான எதிர்தரப்பைத் தேடி நானேசென்றேன். முதலில் டெல்லி சென்று சச்சிதானந்தனைச் சந்தித்து விரிவாகஉரையாடினேன். அதன்பின் பெங்களூருக்கு மூன்றுமுறை சென்று டி.ஆர்.நாகராஜுடன் உரையாடினேன். அவரக்ள் அப்போது இந்தியச்சூழலில்அமைப்புவாதத்தையும் பின் அமைப்புவாதத்தையும் முன்வைத்து பேசியவர்கள்.இவர்களுடனான என் உரையாடல்களை நான் காலச்சுவடு இதழில் பிரசுரித்தேன்.

அக்காலத்தில் சூழலில் இருந்த குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் சட்டென்று தெளிவுபடுத்திய பேட்டிகள் அவை. இன்றும் அவை மிக ஆர்வமூட்டும் பேட்டிகளாகஉள்ளன. காலச்சுவடில் பிறகெப்போதும் அத்தகைய தரமான பேட்டிகள் வந்ததில்லை.அவற்றுக்குப் பின் பலமாதகால உழைப்பு இருந்தது.

பின்னர்தான் பிரேமுடன் எனக்கு  நெருக்கமான உறவு உருவாகியது. அதுவும்குற்றாலத்தில் பதிவுகள் இலக்கியச் சர்ச்சையில் கடுமையான மோதலில் தொடங்கியஅந்த உறவு சட்டென்று நட்பாக மாறியது. இன்றும் பிரேமுடனான என் நட்புஎனக்கு கிடைத்த ஒரு நல் வாய்ப்பாகவே எண்ணுகிறேன். நாகார்ஜுனன் அப்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அவருடனும் ஒரு நல்ல நட்புஉருவாகியிருக்கும்.

பிரேம் என் வீட்டுக்கு வந்து பலநாள்தங்கியிருக்கிறார். நான் அவர் வீட்டுக்கு  சென்று தங்கியிருக்கிறேன்.தொடர்ச்சியாக விவாதித்திருக்கிறோம்.

விளைவாக அமைப்புவாதம்- பின் அமைப்புவாதம் சார்ந்த என் நோக்கு மாறியது.அதேபோல என் தரப்பைப்பறிய அவர்களின் எண்ணமும் மாறியது. நான் இந்தியசிந்தனை மரபை ஒரு பெரும் உரையாடலாக அதன் பன்மைத்தன்மையுடன் முன்வைப்பவன்என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். பின்னர் நான் கடுமையாக விவாதித்துவந்த பூரணசந்திரனுடனும்  அத்தகைய நட்பும் உறவும்சாத்தியமாகியது.

தமிழில்  அமைப்புமையவாதிகள்- பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் செய்தபிழை என்னவென்றால் வலுவான ஒரு தரப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக தங்களைஆதரித்தவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டதுதான்.பிரேம் பேசியதை எல்லாம்அரைகுறையாக உள்வாங்கிக்கொண்டு அவற்றை அபத்தமான கோஷங்களாக மாற்றிய சாருநிவேதிதா, கௌதம சித்தார்த்தன் போன்றவர்கள் ஆற்றிய தீங்கு மிகப்பெரிது.

பிரேம் சிக்கலாக முன்வைத்த சிந்தனைகளை சாரு மற்றும் கௌதம சித்தார்த்தனின்
அபத்தமான ஒற்றைவரிகளாக வாசகர்கள் புரிந்துகொண்டார்கள்.இரண்டாவதாக தமிழவன் நாகார்ஜுனன் பிரேம் போன்றவர்கள் அவர்களே பின்நவீனத்துவப் படைப்புகளை எழுதி அவற்றை பின் நவீனத்துவ எழுத்தின்உதாரணங்களாக முன்வைத்து வாதாடினார்கள். இந்த ஆக்கங்கள் பெரும்பாலும்உண்மையான படைப்பூக்கம் இல்லாத பரிசோதனை முயற்சிகளாக இருந்தன.

ஆகவே ஒருபலவீனமான இலக்கிய எழுத்துமுறைக்கான வாதங்களாக நம் சூழலில் அமைப்புவாதம்சிறுத்துப்போனது.அதைவிட முக்கியமாக ஒரு சிக்கல் இருந்தது. அது தவிர்க்கமுடியாததுஇச்சிந்தனைகளை தமிழில் புதிதாகச் சொல்ல வரும்போது கலைச்சொல்லாக்கம்,புதிய சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றில் பலவிதமான தடுமாற்றங்கள் உருவாயின.ஆகவே யார்  சரியான விஷயங்களைச் சொல்ல முயன்றார்களோ அவர்கள் சொல்வதுயாருக்கும் புரியவில்லை. நாகார்ஜுனன் புரியாமல் சொல்லிவிட்டு விலகினார்.

பிரேம் சொல்லிச் சொல்லி பழகி தெளிவானர்.இந்த தடைகளை மீறி இவர்களுடன் விவாதித்ததன் வழியாக மெல்லமெல்ல நான் என்தரப்பை அவர்களை நோக்கி நகர்த்தி விரிவாக்கிக் கொண்டேன். பக்தினின் ருஷ்யஉருவவாதம், அல்தூசர் போன்றவர்களின் மேலைமார்க்சிய அமைப்புவாதம் போன்றவைஇலக்கியம் சார்ந்த என் சிந்தனைகளின் கோணத்தையே மாற்றின.

கிளிந்த்புரூக்சின் அமெரிக்க புதுத்திறனாய்வுக்கோட்பாடுகளையும் [பிரதிமையவிமரிசனம்] ரஸ்சல், விட்கென்ஸ்டீன் போன்றவர்களின் மொழிசார்ந்தகோட்பாடுகளையும் இவறில் இருந்து பின்னால் சென்று புரிந்துகொள்ள அவைஎனக்கு வழியமைத்தன. வெறும் அனுபவ வாதத்தில் இருந்து நான் வெளியே வர அவைஉதவின.

இப்படித்தான் எதிர்தரப்ப்பு நம்மை மாற்றியமைக்க முடியும். நாம் அவற்றுடன்நம் முழுவீச்சாலும் போராடிப் போராடித்தான் அவற்றை நோக்கி நகரமுடியும்.இப்படிப்பட்ட மாற்றத்தையே ஒரு எதிரி என்னில் நிகழ்த்த முடியும். அவர்என்னை விட மேலான ஆயுதங்களுடன் என் தரப்பைவிட வலுவான தரப்புடன் என்னை சந்திக்க வேண்டும்.

இதேபோல சேலம் ஆர்..குப்புசாமி [ஆர்.கெ] அவர்களின் நீண்ட உரையாடல்கள்அதன்பின் சோதிப்பிரகாசம் அவர்களின் விவாதங்கள் மூலம் நான் மெல்ல மெல்லதமிழியம் நோக்கி நகர்ந்திருக்கிறேன்.  தமிழியம் என்பது ஒரு பண்பாட்டுத்தேடல். அதை திராவிட இனவாத அரசியல் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தாமல் யோசிக்க முடியும் என்று அவர்கள் மூலம் தெளிவடைந்தேன்.

அது பல வருடங்கள்நீடித்த விவாதம். அதுவே கொற்றவை போன்ற ஒரு நாவலுக்கு அடிப்படை அமைத்தது.இந்த மாற்றங்களை பரிணாமகதி என்றே எண்ணுகிறேன். இந்தப்பரிணாமமேஇயல்பானது. நான் என் தரப்பை இறுக்க்கமான மதநம்பிக்கையாக கொள்ளவில்லை,தொடர்ச்சியாக சீராக என் எதிர் தரப்புடன் உரையாடி வளர்கிறேன் என்பதற்கானஆதாரம்.  ஆனால் நான் எதிர்பார்ப்பது என்னளவே ஆற்றல் கொண்ட எதிர்த்தரப்பை

 

ஜெ

 

 

மறுபிரசுரம்

முதற்பிரசுரம்  Jul 29, 2009 @ 0:02

 

தொடர்புடைய பதிவுகள்

முரண்படும் தரப்புகள்

$
0
0

1

[அரவிந்தன் கண்ணையன்]

ஜெ

 

உங்கள் சங்கரர் உரை பற்றி உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் எழுதியதைப் பார்த்திருப்பீர்கள். அவர் உங்களை தொடர்ச்சியாகக் கடுமையாக வசைபாடி எழுதியவர். திடீரென்று அவருடன் நீங்கள் நட்புகொண்டது ஓர் ஆச்சரியம். இப்படிப்பட்ட நட்புகள் எப்படி உருவாகின்றன, அவரை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள் என அறிய ஆவல்

 

சாமிநாதன்

 

எம் டி முத்துக்குமாரசாமி

 

அன்புள்ள சாமிநாதன்,

அரவிந்தன் கண்ணையன் இன்று என் நண்பர்தான். அவர் என்னை கடுமையாக தாக்கியிருக்கிறார், ஆனால் வசைபாடியதில்லை, அவதூறு செய்ததும் இல்லை. அவரது விவாதமுறை என்பதே கடுமையான கருத்துக்களை சொல்வது. அது ஒரு ஃபேஸ்புக் வழிமுறை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை

 

அரவிந்தன் கண்ணையன் என் சிந்தனைகளுக்கு எதிராக வைக்கும் எதிர்தரப்புக்கள் மேல் எனக்கு மதிப்புண்டு. அவற்றில் சிலவற்றை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம். ஆனால் என்கருத்துக்களின் முரணியக்கத்தில் அவை முக்கியமான குரல்.

 

என்னை அவதூறு செய்து வசைபாடியவர்கள் பெரும்பாலும் நான் நண்பர்கள் என நினைத்த சிலர்தான். அணுக்கமாக இருந்தவர்கள் மிக எளிய காரணங்களுக்காக விலகிச்செல்லும்போது அதை செய்தார்கள், செய்கிறார்கள். சமீபமாக தீவிர இந்துத்துவர்கள்.

 

அவர்களையும் நான் என் கருத்துக்களின் முரணியக்கத்தின் ஒரு தரப்பாகவே எண்ணினேன். ஆனால் நான் அரவிந்தன் கண்ணையனிடம் ஒன்றரை கோடி ரூபாயை என் மகன் சினிமா எடுப்பதற்காக வாங்கினேன் என்றும் அமெரிக்க பல்கலை ஒன்றில் நான் வருகைதருபேராசிரியராகச் செல்ல அரவிந்தன் கண்ணையன் ஏற்பாடு செய்கிறார் என்றும் அவர்கள் எழுதினர்.

 

தனிப்பட்ட குழுமங்களில் கடும் அவதூறுமழை.அந்த ஸ்கிரீன் ஷாட்கள் ஆரம்பத்தில் ஒருபடபடப்பை அளித்தன. பின்னர் சிரிப்புதான். அரவிந்தன் கண்ணையன் ஒரு கணிப்பொறி நிபுணர். தனியார் நிறுவன ஊழியர் மட்டுமே. கோடியெல்லாம் அவரிடமிருந்து பேரும் என்று இவர்களே எண்ணிக்கொண்டு போய் சரணடைந்துவிடுவார்களோ என்னும் பயம் வந்துவிட்டது

 

பொதுவாக என்னை மறுப்பவர்களை நான் கவனிப்பதுண்டு. அவர்கள் நான் மதிக்குமளவுக்கு வாசிப்பவர்களாக, விஷயமறிந்தவர்களாக இருக்கவேண்டும். வெறும் காலிடப்பாச் சத்தம் என தோன்றும் கணம் முழுமையாகப் புறக்கணித்துவிடுவேன். எதையும் சாதிக்காதவர்களின்  வன்மம், வீண்நக்கல் போன்றவை இன்று எளிதில் இணையம் வழி நம்மை வந்தடைபவை.

 

தங்களை அசட்டுபீடங்களில் அமர்த்திக்கொள்ளுதல், பெயர் உதிர்த்தல், ஒற்றைவரிக்கருத்துக்கள்  எல்லாம் காலிடப்பாக்களின் இயல்பு. அதிலும் ஃபேஸ்புக்கில் பேனெல்லாம் காண்டாமிருகமாக உலாவருகின்றன. அவர்களைக் கடந்துசெல்லாமல் நாம் சிந்திக்கமுடியாது, எதையும் செய்யவும் முடியாது.

 

ஒருவர் நம் மீது அடிப்படை மரியாதை இல்லாமல் பேசுவார் என்றால் அவருடன் விவாதித்து நாம் அடையப்போவது ஏதுமில்லை. வெறும் மனச்சள்ளைதான். பொதுவாக இங்கே விவாதம் என்றாலே எதிர்தரப்பை எள்ளி நகையாடும் ஒரு பாவனையை மேற்கொள்வதுதான். அந்த பாவனைகளுடன் மோதுவது மயிர்சுட்டு கரி தேற்றுவது

 

ஆனாலும் கூட அவ்வாறு செய்பவர் முக்கியமானவர் என எனக்குத் தோன்றும் என்றால் அவரது குரலை கவனித்தேயாகவேண்டும் என எண்ணுவேன். அவர் என்ன சொல்கிறார் என்பதை பொருட்படுத்தியாகவேண்டும் என்று சொல்லிக்கொள்வேன், இது நானே வகுத்துக்கொண்ட நெறி. எனக்கிட்டுக்கொண்ட கட்டளை

 

இப்படி முக்கியமானவர் என நான் நினைப்பவர்கள் பலவகை. சிந்தனை அளவில் முக்கியமானவர்கள்அல்ல, ஆனால் தங்கள் களச்செயல்பாடுகளின்மூலம் ஒரு தரப்பாக முக்கியமானவர்கள் என நினைப்பவர்கள் சிலர் உண்டு. அ.மார்க்ஸ், ஞாநி போன்று. அவர்களை எப்போதும் கவனித்தும் கவனப்படுத்தியும் வருகிறேன். அவர்களின் தாக்குதல்கள் மட்டுமல்ல வசைகளும் எனக்கு ஒரு பொருட்டு அல்ல.

 

அரவிந்தன் நீலகண்டன்

நான் மதிக்கும் படைப்பாளிகள் சிலரும் நம்மைத்தாக்கக்கூடும். மனுஷ்யபுத்திரன் மிகக்கடுமையாக என்னையும் என் நண்பர்களையும் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அவர் நான் விரும்பும் கவிஞர். தமிழ்ச்செல்வன் நான் விரும்பும் சிறுகதையாசிரியர். ஆகவே அதை கடந்துசெல்லவேண்டியதுதான்

 

நாம் முக்கியமான படிப்பாளிகளாக,  நினைக்கும் சிலரும் அவ்வகையில் கடும் தாக்குதல்களை முன்வைக்கக்கூடும். காரணமற்ற காழ்ப்புகூட கொண்டிருக்கக்கூடும். நம் படைப்புலகை பொருட்படுத்தாமலிருப்பவர்களாக அல்லது அதற்குள் நுழையமுடியாதவர்களாக அவர்கள் இருக்கலாம். அது என் எதிர்பார்ப்பு அல்ல. ஒரு விரிந்த கருத்துவிவாதத்தளத்தில் அவர்களெல்லாம் முக்கியமானவர்கள் என்பதே என் எண்ணம்.

 

உதாரணமாக கல்வியாளராக  எம்.டி.முத்துக்குமாரசாமி மேல் எனக்கு ஆழமான மதிப்புண்டு. தருமராஜ், அ.ராமசாமி போன்றவர்கள் மேலும் அதே மதிப்புண்டு. அவர்களின் பல கருத்துக்கள் எனக்கு ஒவ்வாதவையே. ஆயினும் அவர்களை முன்வைப்பது என் பணி என நினைக்கிறேன்

 

அதைப்போல அரவிந்தன் நீலகண்டன் ஜடாயு போன்றவர்களுடனும் எனக்கு உடன்பாடில்லாத இடங்கள் பல உண்டு. ஆனாலும் அவர்கள் அறிஞர்கள் என்பதனால் எனக்கு முக்கியமானவர்கள். இவர்களின் கட்டுரைகளை நான் கவனப்படுத்துவதும் அதனாலேயே.

 

அரவிந்தன் கண்ணையன் என் எழுத்துக்களை அறியாத நிலையில் என்னை அறிமுகம்செய்துகொண்டவர். என் கருத்துக்களால் சீண்டப்பட்டு கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். நானும் அவற்றை கடுமையாக மறுத்தேன். ஆனால் நான் அவர் எழுத்தை தொடர்ந்து வாசித்துவந்தேன். அவர் விரிவாக வாசிப்பவர் என்னும் எண்ணம் உருவாகியது. ஆகவே அவர்மேல் மதிப்புகொள்ளத்தொடங்கினேன்.

 

என் எழுத்துக்களை அரவிந்தன் கண்ணையனும் அதன்பின்னர் தான் வாசித்தார். அது அவருக்கும் என் மேல் மதிப்பை உருவாக்கியது. நாங்கள் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டோம். நட்புகொண்டோம். நேரில் சந்தித்தோம். கண்டிப்பாக அவரது கருத்துக்களில் பல என் சிந்தனைக்கோணத்தை மாற்றியமைத்தன. அதற்காக நான் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

ஆனால் இன்றும் பலவிஷயங்களில் அவர் எனக்கு மறுதரப்பாகவே இருக்கிறார். ஒருபோதும் நானும் அவரும் ஒத்த கருத்து கொள்ளப்போவதில்லை. அவருடைய தளமே வேறு. ஆனால். என் மறுதரப்பு  தீவிரமும் ஆற்றலும் கொண்டதாக இருந்தால் என்னை மாற்றியமைக்க நான் அனுமதிக்கவேண்டும் என்பதே எனக்கு நான் இட்டிருக்கும் கட்டளை.

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16748 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>