Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16737 articles
Browse latest View live

அபி- அந்தியின் த்வனி

$
0
0

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

அபி கவிதைகள் நூல்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

தற்செயல் என்று எதுவுமில்லை என்று நானும் கருதுகிறேன் அல்லது அனைத்தும் ஓயாத தற்செயல்களின் மொத்தம்.  கவிஞர் அபி அவர்களின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  முதலில் மிக கொஞ்சம் வாசித்தபோது நிச்சயம் இவரை வாசித்தாக வேண்டும் என்று ஒரு எண்ணம் துளிர்த்து அது இனிமையாக உள்ளிருந்து மென்காற்றி்ல் அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்தது.  அவரது கவிதை நூல் எங்கு கிடைக்கும் நண்பர்களிடம் கேட்க எண்ண அவரது மாணவர்கள் இணையத்தில் ஏற்றியது தங்களுக்கு அவர்கள் எழுதிய கடித்தின் வாயிலாக தெரிய வந்தது.  எனக்கு புரியுமா? என்று கருத ”புரிய வேண்டியதில்லை” என்றது சூபி முனியின் அருள்.  ஒவ்வொரு கவிதை வாசகனும் கவிஞனே அவன் இக்கவிதையின் வாயிலாக தனக்கானதை சென்றடையட்டுமே.  புன்முறுவல்.  அமைக இது அருள் நின்று இயற்றுவது தர்க்கப்புரிதலின் நிபந்தனையைத் தள்ளிவிட்டு வாசிப்பில் புகுக.

 

விஞ்ஞானிக்கும் மெய்ஞானிக்கும் இடையில் இருப்பவர் கவிஞர்.  விஞ்ஞானி அப்பாலை அவ்வாறு அறிதவரல்ல.  மெய்ஞானி உற்றவர் எனினும் சொற்களின் வரம் பெற்றவர் அல்ல அல்லது ஒருவேளை பெற்றவர் என்றாலும் அது சொற்களுக்கு உரியது அன்று என்று சொற்களை ”அப்பால்” என பெயர் சுட்டும் பலகை அளவிற்கே கொள்பவர்.  இடையே கவிஞர் என்பவர் சொற்களை அப்பால் சேர் ஊர்தி எனக்கொண்டு இங்குமங்கும் சென்று வந்து கொண்டிருப்பவர்.  ”இது ஒன்றும் வெறும் சொற்கள் அல்ல இதைக்கொண்டு அப்பால் செல்வாய்” என்பவர் அவர்.  சொற்களால் சாத்தியமில்லை எனும் மெய்ஞானிக்கு மறுப்பாகிறார் அவர்.  தன் ஆன்மீக சாத்தியத்தை அவர் அறிகிறார்.  இருவேறு உலகத்து இயற்கை ஒருசேர கொண்டவர் அவர்.  உலகின் அன்பும் உலகிலியின் அருளும் கவிஞர்கள் பால் அமையுமென்றால் அக்காலமும் நாடும் மாந்தரும் நல்ல என்பது நியாயம்.

 

காலையை விட மாலையையே அபி அதிகம் தேர்கிறார்.  மாலை புலரியை விட ஆன்மீகமானது.  உடலினின்று உயிர் பால் நோக்கு படர்வது.  மனம் மௌனம் தேரும் பொழுது அது.  உடல் மனம் என தம் தனியிருப்பைக் களைந்து பேரிருள் ஒன்றென திறவோர் சென்றமையும் வெளியின் அருட்கதவம் அது.

 

 

மாலை – த்வனி

 

நான் வெட்டவெளியாகுமுன்பே

என் தீர்மானங்கள்

கசிந்து வெளியேறிப் போய்விட்டதை

உணர்ந்தேன்

ஆ! மிகவும் நல்லது

 

அவசரமில்லாத ஓடைகள் நடுவே

கூழாங்கற்களின் மீது

என் வாழ்வை

மெல்லத் தவழவிட்டேன்

 

வீட்டு முற்றத்தில்

கூழங்கற்களின் நடுவே

ஓடைகளின் சிரிப்போடு

வெளி-உள் அற்று

விரிந்துபோகும் என் வெட்டவெளி

 

 

விட்டுப்போன நண்பர்கள்

அர்த்தங்களைத் திரட்டி சுமந்து

வெற்றி உலா போகிறார்கள்

விளக்கு வரிசை மினுமினுக்க

 

உண்மையின்

அனைத்துச் சுற்றுவாசல்களிலும்

புகுந்து திரிந்து

திருப்தியில் திளைக்கும்

என் நண்பர்களுக்கு

 

கிடைக்கும் இடைவெளிகளை எல்லாம்

தம் கையிருப்புகள் கொண்டு நிரப்பும்

அவர்களுக்கு

 

என் வெட்டவெளியைக் காட்டமாட்டேன்

 

 

வெறுமைப் பாங்கான

எனது வெளியில்

ஒளியும் இருளும் முரண்படாத

என் அந்தியின் த்வனி

 

த்வனியின் மீதில்

அர்த்தம் எதுவும் சிந்திவிடவும்

விடமாட்டேன்

 

அனைத்து சுற்றுவாசல்களிலும் புகுந்து திரிந்தால் போதும் உண்மையுள் பிரவேசிக்க வேண்டியதில்லை எனும் நண்பர்கள் அத்துடன் நின்றால் பரவாயில்லையே கிடைக்கும் இடைவெளிகளையெல்லாம் தம் கையிருப்புகள் கொண்டு நிரப்ப அல்லவா செய்கிறார்கள்? வெட்டவெளியைக் காட்டவும் கூடாது, த்வனியின் மீது அர்த்தம் எதுவும் சிந்திவிடவும் கூடாது.  காக்கத்தான் வேண்டும்.

 

சொற்களை அர்த்தங்களிலிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது அது மெய்மையுடன் கவிஞர் செய்துகொண்ட ஒப்பந்தம் போலும்.

 

உறுதி கூறுகிறேன்.  என் அர்த்தங்களை, கையிருப்புகளை (மேலே கூறியவற்றில் சில உட்பட) கைவிடுகிறேன்.  வாசிக்க மட்டும் செய்கிறேன்.  வெட்டவெளி எனக்கும் வேண்டும்.

 

 

அன்புடன்

விக்ரம்

கோவை

 

 

 

அபியை அறிதல்- நந்தகுமார்

அபியின் லயம்

நாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன்

அபியின் கவியுலகு-

மந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி– ராதன்

ஆர் ராகவேந்திரன்

அபியின் தெருக்கள்

அபி கவிதைகளின் வெளியீடு – கடிதங்கள்

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி – கடிதங்கள்

அபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்

அபி,மிர்ஸா காலிப்- கடிதம்

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வேங்கடத்துக்கு அப்பால்…

$
0
0

நமது ஊற்றுக்கள்

வேங்கடத்துக்கு அப்பால் தமிழ் டிஜிட்டல் நூலகம்

வேங்கடத்துக்கு அப்பால் வாங்க…

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘’வேங்கடத்துக்கு அப்பால்’’ என்ற நூலை வாசித்தேன். நண்பர்கள் சிலருடன் கோவையிலிருந்து காரில் புறப்பட்டு ஒரு இந்தியப் பயணத்தை நிகழ்த்துகிறார். அப்பயணத்தில் அவர் சென்ற தலங்களைக் குறித்து எழுதுகிறார். அவர் பயணித்திருக்கும் பாதை இந்தியப் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்தியாவின் இந்தியக் கலையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்தக் கூடியது. மோட்டார்சைக்கிளிலோ அல்லது காரிலோ அல்லது ரயிலிலோ இந்தியப் பயணம் நிகழ்த்த விரும்புபவர்கள் அவர் சென்ற மார்க்கத்தின் வழியே செல்லலாம். அது ஒரு மிக நல்ல முக்கியமான துவக்கமாக நிகழும்.

‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலில் ஆலயங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. அத்தொடர் எழுதும் போது கம்பனும், இளங்கோவும் அவர் நடையில் வந்து விழுகின்றனர். தொன்மங்களிலிருந்து வரலாற்றுக்கு வந்து சேர்கிறார். இலக்கியமும் அதனுடன் இணையாக வருகிறது. ‘’வேங்கடத்துக்கு அப்பால்’’ நூலில் வரலாறு குறித்த தகவல்கள் அதிகம் இடம்பெறுகின்றன. தமிழ் நிலம் அன்னியத் தாக்குதலால் சிதைவுபடாமல் விஜயநகரப் பேரரசால் காக்கப்பட்டதும் வட இந்திய ஆலயங்கள் அவ்வாறு காக்கப்பட வாய்ப்பின்றி முற்றிலும் தகர்க்கப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டன என்பதுமே காரணம்.

 

இந்நூலில் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கவனித்தேன். இந்நூல் எழுதப்பட்ட போது இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான சாலைகள் சிறிய சாலைகளாகவே இருந்திருக்கின்றன. அன்று இந்திய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு ரயிலே பெரிதும் உதவியிருக்கிறது. தங்க நாற்கரச் சாலை மூலம் இந்தியாவின் நான்கு திசைகளும் இணைக்கப்பட வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்த முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை நினைத்துக் கொண்டேன். ‘’கிராமச் சாலைகள்’’ (கிராம் சதக்) திட்டமும் அவருடைய எண்ணமே.

 

ஆசிரியர் காஜுரஹோ சிற்பங்கள் குறித்து பேசும் போது ‘’அதை விகற்பமாக எண்ணுகிறவர்கள் மனத்தில் தான் கோளாறே தவிர சிற்ப வடிவங்களிலோ அதை வடித்த சிற்பிகளிடத்தோ கோளாறு இருக்கவில்லை’’  என்கிறார். வட இந்தியர்கள் ‘’ராதே ஷியாம்’’ என கை கூப்பும் போது அவர்கள் உணர்ச்சியைக் கண்டு உளம் கனிகிறார்.

 

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

போதையும் தமிழகமும்

$
0
0

 

அன்புள்ள ஜெமோ,

எழுத்தாளர். சரவணன் சந்திரன்  பேஸ்புக்கில் போட்டிருந்த பதிவு இது.

 

இது சார்ந்து மற்ற நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒவ்வொருவரும் சொன்ன செய்திகளை கேட்டபோது ஏனோ திடீரென எனக்கு வயதாகிவிட்ட ஒரு உணர்வு தோன்றியது … நான் பழைய ஆள் ஆகிவிட்டது போன்றும், நான் வாழ்ந்த ஒரு காலகடட வாழ்க்கை சூழ்நிலை எப்போதோ கடந்து போய்விடடது போலவும் இப்போது இருப்பது வேறு ஏதோ உலகம் போன்றும்…..

 

இதெல்லாம் அதிர்ச்சியாக எனக்கு இருப்பதை இன்றைய இளைஞர்களிடம் சொன்னால்  இதெல்லாம் ஒரு மேடட்டரே இல்லை என்று கடந்து போவார்களோ என்று தோன்றுகிறது. பொள்ளாச்சியில் நடந்த குற்ற நிகழ்வுகளின் போதே தமிழ்நாட்டில் இந்த போதை மாத்திரைகளின் பயன்பாடுசார்ந்து நிறைய செய்திகள் வந்தது, ஆனால் அது எந்தவிதத்திலும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

 

இருநாளைக்கு முன்பு பாண்டியில் கார்பார்க்கில் உட்க்கார்ந்து தண்ணியடித்தவர்களை கண்டித்த தத்துவ போதானந்த சரஸ்வதி  எனும் சாமியாரை கொன்றவர்கள் வயது 21, 22 என்கிறார்கள். இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு மிகவும் விருப்பமான மாநிலமாக வடஇந்திய பெற்றோர்களால் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மிக முக்கியகாரணமாக இங்கிருந்த மிகவும் கட்டுப்படுத்தப்படட போதைப்பொருள் புழக்கம் என்று சொல்வார்கள். இந்த போதை பொருட்களில் இதன் உடல்/மன அபாயத்தை தாண்டி இதை பெற்றோர்களால் கண்டுபிடிக்கவே முடியாது என்கிறார்கள். ஆல்கஹால், சிகரெட் அல்லது கஞ்சாவில் இருக்கும் மணம் சார்ந்த எந்த அடையாளங்களையும் இது வெளிப்படுத்துவதில்லை. தனது மகன் இதை பயன்படுத்துகிறான் என்ற எந்த சந்தேகமும் இல்லாமல் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் இருக்கலாம் என்றிருப்பது மிகுந்த அச்சத்தை கொடுக்கிறது.

அன்புடன்

சரவணன் விவேகானந்தன்

 

 

மாய மாத்திரைகள்

 

சரவணன் சந்திரன்

சமீபத்தில் தொலைக்காட்சிகள் துவங்கி பத்திரிகைகள், இணையம் வரை ஒரு முக்கியச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. கல்லூரி மாணவி ஒருத்தி அவளது காதலனுடன் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு மாட்டிக் கொண்ட செய்தியே அது. அந்தக் கண்காணிப்புக் காணொளியை நானும் பார்த்தேன். பையன் முகமூடியோடு இருந்தான். அந்தப் பெண் ஏதோ காய்க்கடைக்குப் போவதைப் போலப் பின்னால் சாதாரணமாக அமர்ந்திருந்தாள். அடுத்தமுறை செய்யும் போது அவளும்கூட முகமூடிக்கு மாறி விடலாம். முதல் குற்றத்திலிருந்து வெளியேறிய பின்னர், மீண்டும் செய்யப்படும் குற்றங்கள் நிறையத் தன்னம்பிக்கையைத் தந்துவிடும் என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை.

பலரும் மிகச் சாதாரணமாக செய்தியெனவே அதைக் கடந்து போனார்கள். எனக்கு ஏனோ ஒரு முள்ளெலி போலத் தோண்டி அதன் ஆழத்திற்குள் செல்லலாம் எனத் தோன்றியது. 2000 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ‘குற்றம் நடந்தது என்ன?’ என்கிற நிகழ்ச்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து தொன்று தொட்டு வந்த பழக்கமது. பத்திரிகையாளன் என்பவனது அடிப்படைக் குணமும் அதுவே.

அந்த நிகழ்ச்சியின் வழியாகப் பல குற்றச் செய்திகளின் பின்னணியை ஆராய்ந்தோம். கலப்பட பெட்ரோல் துவங்கி, பல்வேறு வகையான முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தோம். கலப்பட பெட்ரோல் பேக்டரி ஒன்றை மறைந்திருந்து படம்பிடிக்கையில், கத்தியோடு துரத்தி வந்தார்கள். குலசாமி புண்ணியத்தில் தப்பித்தோம். காவல்துறையின் கவனத்திற்கே வராத பல குற்றங்களின் நுனியைப் பிடித்து மேலேறி புதுக் கோணங்களை வெளியே கொண்டு வந்தோம்.

அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் குற்றம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. போரூர் ஆலமர பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் இருந்தது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தில் வைத்திருந்த பத்தொன்பது இலட்சம் ரூபாய் பணத்தைக் காணவில்லை. இப்போது போல, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத காலம் அதுவென்பதால், பல்வேறு வகையில் காவல்துறையினர் துப்புத் துலக்கினார்கள்.

அந்த விசாரணை முழுக்க காவலர்களோடு இருந்தோம். கடைசியில் அந்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றிய, தெக்கத்தி பக்கத்தில் இருந்து இங்கு வந்து செட்டிலான பத்தொன்பது வயது இளைஞன் ஒருத்தனைச் சந்தேகித்து அவனது வீட்டிற்குச் சென்ற போது, பின்னாலேயே ஒளிப்படக் கருவிகளோடு துரத்தினோம். காவலர்கள் வந்ததைப் பார்த்து விட்டு, அந்தச் சிறிய ஓட்டு வீட்டின் சுவரேறிக் குதித்து தப்பிக்க முயன்றவனை வளைத்துப் பிடித்தார்கள். ஒற்றையரை கொண்ட இருள் சூழ்ந்த அந்த வீட்டின் மூலையில் இருந்த அரிசிச் சாக்கொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது அப்பணம். காவலர்கள் சென்ற பிறகு அந்தப் பகுதியில் விசாரித்த போது, எல்லோருமே அந்தப் பையன் குறித்து நல்லவிதமாகவே சொன்னார்கள். “பீடி சிகரெட் பழக்கம்கூட அவனுக்கு இல்லைங்க. தண்ணியடிச்சிட்டு தள்ளாடி வந்ததை நாங்க இங்க இருந்த வரை பாத்ததே இல்லைங்க” என்றார்கள்.

வழக்கமாக எல்லா கதைகளிலும் வருவதைப் போலவே அந்தப் பையனுக்கு அப்பா இல்லை. அம்மாவும் வீட்டு வேலைகளுக்குச் செல்கிறவர். “என்னெண்ணே தெரியாதுங்க. நைட் முழுக்க கோட்டான் மாதிரி முழிச்சிக்கிட்டே இருப்பான். தீடீர்னு சாமி வந்த மாதிரி உடம்பெல்லாம் முறுக்கிக்கிடும் அவனுக்கு. வெறீல கண்டதையும் தூக்கி உடைப்பான். மறுநாள் காலையில எதுவுமே தெரியாத மாதிரி வேலைக்குக் கிளம்பிப் போயிடுவான்” என்று அவனுடைய அம்மா சொன்னது மட்டும் விசித்திரமாக இருந்தது. “பேய் கீய் பிடிச்சிருக்கும். கூப்டு போய் மருந்தெடுத்து விட்டா சரியாயிடும்” என்று உடனிருந்த அவனுடைய மாமா சொன்ன போது அவருடைய கண்களைப் பார்த்தேன். இயலாமை கையறு நிலையோடு கலந்து தெறித்தது.

மறுநாள் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்த போது, விலங்கு போட்டு அழைத்து வந்தார்கள். “நைட்டெல்லாம் இவனோட ஒரே ரோதனை. பய ரெம்ப மூர்க்கமா இருந்தான். எவ்ளோ அடிச்சும் ஒரு வார்த்தைகூட பேசலை. ஊசி போடற ஆளா இருக்கும் போல” என்றார் எனக்கு நன்றாகத் தெரிந்த கடைநிலைக் காவலர். பையனுடன் பேச்சுக் கொடுத்த போது, கல்லை எடுத்து எங்களை நோக்கி எறிய வந்தான். அதுவரை போதையென்றால் கஞ்சா அல்லது தண்ணியடிப்பது என்றளவிலேயே எல்லோருடைய புரிதலும் இருந்தது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு நகர்ந்து வந்த நாங்களும் அதில் விதிவிலக்கில்லை.

அதற்கடுத்து கஞ்சா மற்றும் ஆல்ஹகால் தவிர்த்த போதைகள் என்னென்ன என்பது குறித்து ஆராய சென்னையின் இருட்டு வீதிகளில் சுற்ற ஆரம்பித்தோம். நண்பனொருத்தன் ராயபுரம் க்ளேவ் பேட்டரி பகுதிக்கு அழைத்துப் போன போதுதான் மருத்துவ உபயோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கோர்ட்பின், கெனகரான் (வேண்டுமென்றே பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) போன்ற ஊசி மருந்துகளைப் போதைக்காகப் பயன்படுத்தும் கூட்டத்தை அருகிலிருந்து பார்த்தோம். இதுபற்றி ஏற்கனவே தனியாக எழுதியிருக்கிறேன் என்பதால் தவ்விச் செல்கிறேன். அதற்கடுத்து விதம்விதமான மாத்திரைகள் என அந்தப் போதை உலகம் விரிந்தது. அத்தனையையும் விரட்டிப் போய், கடைசியில் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு அவை விற்கப்படும் புள்ளியில் போய் நின்றோம். அப்போதெல்லாம் மருந்துக் கடைகளில் சிலர் மட்டும் மனசாட்சி இல்லாமல் அவற்றை விற்றுக் கொண்டிருந்தனர் என்பதன் வாழும் உண்மை நாங்கள்.

சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த மருந்துக்கடையொன்றில் அதிக விலை கொடுத்து அந்த மாத்திரைகளை வாங்கும் போது மறைந்திருந்து படம் பிடித்து அப்போது சென்னையின் காவல்துறை துணை ஆணையராக இருந்த ஒருத்தரிடம் கொண்டு போய்க் காட்டினோம். அவர் சிரித்துக் கொண்டே, “சென்னையின் இந்த மாதிரி போதைத் தேவைக்கு மருந்துக் கடைகளெல்லாம் எம்மாத்திரம். இவை ஆந்திரா கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் சென்னைக்குள் நுழைகின்றன. இருந்தாலும் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு அலட்சியமாக நாங்கள் கிடைக்கும் இடங்கள் என்று பட்டியிலிட்டு தந்த தாளை மேசையில் விட்டெறிந்தார். எதற்கு வேண்டாத வேலை உங்களுக்கு என்றர்த்தம் அதற்கு என்பது பின்னால்தான் எனக்குப் புரிந்தது.

இதேமாதிரி சம்பவமொன்றை இன்னொரு சந்தர்ப்பத்திலும் கேள்விப்பட்டேன். அசோக் நகரில் கிறிஸ்துமஸ் இரவொன்றில் நடந்த பிரபல கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிறுவர்களை சிறுவர் சீர்திருந்த பள்ளி நீதிமன்றத்தில் சந்தித்தேன். நான்கு பேர் சேர்ந்து அந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். அத்தனை பேருக்கும் பதினைந்து வயதிற்குள்ளேதான். ஒரே பையனின் அம்மா மட்டும் கழுத்தில், சங்கிலிக்குப் பதிலாக பச்சைக் கயிறு ஒன்றை மட்டும் கட்டியபடி அவன்களோடு நின்று அனத்திக் கொண்டிருந்தார். “என்ன கழுதைய திங்கறாண்ணே தெரியலை. நாய் மாதிரி அந்த நேரத்தில மூர்க்கமா திரியாருணுங்க” என்றார் என்னிடம். அந்தப் பையன்களை நெருங்கி என்னவென்று கேட்ட போது, ”ஹான்ஸ்ண்ணா” என்றார்கள் ஒருமித்த குரலில். அதுவில்லை என்பது தெரியாதா? ஆனாலும் அதற்குமேல் அங்கே பேச தோதில்லை என்பதால் விட்டுவிட்டேன்.

கடைசியாய் நடந்த இந்தக் கல்லூரி மாணவியோடு சேர்ந்த கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு, இந்தக் குறிப்பிட்ட குற்றத்திற்குப் பின்னால் செயல்பட்ட காரணியை நெருங்கிப் போய்ப் பார்க்கத் தீர்மானித்தேன். அந்தக் குழுவில் இருந்த பையனொருத்தனை தெரிந்த ஆட்கள் மூலம் கொக்கி போட்டுப் பிடித்த போது, அவன் தங்குதடையின்றி அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். சம்பவத்தில் ஈடுபட்ட பையனின் வீடு லயோலா கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் இருக்கிறது. சொல்லி வைத்த மாதிரி இவனுக்கும் அப்பா இல்லை. அம்மா ஏதோவொரு சாதாரண வேலைக்குப் போகிறார். பையன் டாட்டூ போடுவதில் விற்பன்னன். சமூக வலைத்தளங்களின் வழியாக டாட்டூ சம்பந்தமாக வருகிற பெண்களோடு வீட்டுக்கு அழைத்து வருகிறளவிற்குப் பழக்கம் அதிகமாகவே அவனுக்கு இருந்திருக்கிறது. அது அவனுடைய சுதந்திரம் என்பதால் அந்தக் கோணத்து விவரிப்புகளை விட்டு விடலாம். ஆனாலும் காரணமாகத்தான் இந்தயிடத்தில் சொல்கிறேன்.

அப்படி வந்த பெண்தான், இப்போது அவனோடு சேர்ந்து மாட்டிக் கொண்ட பெண். கரூரில் இருந்து சென்னைக்கு காட்சி ஊடகவியல் படிக்க வந்த பெண். டாட்டூ பழக்கம் கடைசியில் மாத்திரை பழக்கம் வரை கொண்டு வந்திருக்கிறது. கைட்டோவின், கைட்டோசென் (வேண்டுமென்றேதான் பெயரை மாற்றி எழுதியிருக்கிறேன்) மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் தீவிர பழக்கம் இருவருக்குமே தொற்றிக் கொண்டிருக்கிறது. பையன் ஏற்கனவே பல பைக் திருட்டுகளிலும் ஈடுபட்டிருக்கிறான். “எந்த பைக்கையும் அசால்ட்டா தூக்கிருவான் அங்கிள். இப்ப மாட்டுனதுகூட திருட்டு பைக்தான். ரெண்டு பேரும் ரூம் போட்டு இருந்தப்பதான் போலீஸ் தூக்குனாங்க. யூட்யூப்லல்லாம் பயங்கர பேமஸா ஆயிட்டான்” என்றான் அவனோடு ஏற்கனவே தொழிலில் இருந்த பையன்.

எல்லோரும் சேர்ந்துதான் முதலில் பைக் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்குள் பணத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை வந்த பிறகு, அந்தப் பையன் மட்டும் தனித்துத் தொழிலில் இறங்கி விட்டான். அதற்காக எதற்கு அந்தப் பெண்? “இப்பல்லாம் போலீஸ் ரெண்டு பசங்க சந்தேகப்படற மாதிரி இருந்தா நிறுத்திர்றாங்க. பொண்ணு பின்னாடி இருந்துச்சுண்ணா டவுட் வராது. அதுக்குத்தான் பொண்ண கரெக்ட் பண்றது” என்றான் இந்தத் தொழிலில் இருந்த இன்னொருத்தன். இதை நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. காவல்துறையும்கூட இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இந்த நகர்வை மோப்பம் பிடித்து விட்டதாகவே தெரிகிறது. இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய இளைஞர்கள் சிலரைச் சந்தித்த போது, அவர்கள் அனைவருக்குமே ஆல்கஹால் சுத்தமாக ஒத்துக் கொள்ளவில்லை என்பது தெரிந்தது. வாங்கித் தருகிறேனென சொன்ன போதுகூட மறுத்து விட்டார்கள். எங்களூரில் குற்றச் சம்பவங்களுக்குப் போவதற்கு முன்பு அண்ணன்கள் கழுத்து வரை குடிக்கிற மாதிரியெல்லாம் இப்போதில்லை.

கஞ்சா, ஊசி என்பதையெல்லாம் தாண்டி அவர்களில் ஒருகூட்டம் பெரும்பாலும் மாத்திரைக்கு நகர்ந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சிலநேரங்களில் மாத்திரையோடு சேர்ந்து கஞ்சா. அந்த மாத்திரை அட்டைகள் எப்படிக் கிடைக்கின்றன? சென்னையில் இந்தக் குறிப்பிட்ட மாத்திரைகளை மருந்து அட்டை இல்லாமல் இளைஞர்கள் வந்து கேட்டால், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென காவல்துறை சமீபத்தில் மறைமுக வேண்டுகோள் விட்டதாகக் கேள்விப்பட்டேன். “பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் இந்த மாதிரி போதைகளைத்தான் அதிகமும் நாடுகிறார்கள்” என்றார் காவல்துறை அதிகாரி ஒருத்தர்.

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படும் பனிரெண்டு மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை இங்கே அறுநூறிலிருந்து தொள்ளாயிரம் ரூபாய் வரைக்கும் விலை வைத்து விற்கப்படுகின்றன. உண்மையில் அதனுடைய விலை ஐம்பது ரூபாய்க்கும் குறைவுதான். ஆளின் சத்தைப் பொறுத்து ஒருத்தர் அரை மாத்திரையிலிருந்து இரண்டு மாத்திரை வரை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படியே எடுத்து உதட்டுக்கடியில் வைத்து கரைகிற வரை காத்திருக்க வேண்டும். அதற்கடுத்து அது என்ன செய்யும் என அதை உபயோகிக்கும் தம்பியொருத்தனிடம் கேட்டேன். “எப்டீ சொல்றது அங்கிள். ஒருமாத்திரை போட்டீங்கண்ணா உங்கள யாருமே எதுவுமே செய்ய முடியாதுங்கற மாதிரி ஒரு போர்ஸ் வந்து ஒட்டிக்கும். ஆனா வெளீல யாருக்கும் போதையடிச்ச மாதிரியே தெரியாது. என்னக்கூட பப்ளிக் பத்து பேர் சேர்ந்து ஒரு பிள்ளையோட பின்னாடி தட்டினேங்கறதுக்காக அடிச்சாங்க. எனக்கு வலிக்கவே இல்லை. அழுகை வரவே இல்லை. எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கணும்ங்கற வெறீதான் வந்திச்சு” என்றான் அந்தப் பையன்.

அவனே இன்னொரு கதையையும் சொன்னான். பனிரெண்டு மாத்திரை கொண்ட அட்டையொன்றை வாங்குவதற்காக, கல்லூரியில் படிக்கும் பையனொருத்தன் இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை தந்திருக்கிறான் என்று சொல்லும் போதே இதற்குப் பின்னால் இருக்கிற விபரீதம் உறைத்தது. மாத்திரை இல்லாத சமயங்களில், உண்மையாகவே மிருகமாகி விடுவார்கள். அப்புறம் எதற்காக போதை மீட்பு மையங்கள் ஆட்களை போட்டு அடிக்கிறார்கள் எனச் செய்தி வருகிறது? ஆல்கஹால் போதைகளை விட இவை எவ்வளவு ஆபத்தானவை என்பதன் அடர்த்தியும் அந்தப் பையன்களின் உலகில் உலவி விட்டு வந்தபிறகு உறைத்தது. போதை அடிக்காத சமயங்களில் குழந்தையாய்க் கொஞ்சுகிறார்கள். சென்னையில் நடக்கும் இளம் சிறார்கள் சார்ந்த குற்றங்கள் அனைத்திற்குப் பின்னாலும் இந்த மாத்திரைகள் பெரும்பாலும் ரெட்டணங்கால் போட்டு அமர்ந்திருக்கின்றன என்று சொன்னால் அது அதிர்ச்சி மதிப்பீடாகத்தான் இருக்கும். ஆனால் தரையில் இறங்கி நோண்டித் தேடிப் பார்த்தால் இதற்குப் பின்னால் இருக்கிற உண்மை விளங்கும்.

எதற்குத் தேவையில்லாமல் இன்னொருத்தரை பயப்படுத்தப் போகிறோம்? கல்லூரிப் பையன்களுக்கு எதற்காக மிகையான பணம் தேவைப்படுகிறது? எதற்காக கொள்ளையடிப்பது என்கிற அச்சமூட்டுகிற செயலுக்கு நகர்கிறார்கள்? பெண்கள் சார்ந்த விஷயங்கள் இதற்குப் பின்னால் இருந்தாலும், இதுமாதிரியான போதை என்கிற அம்சமே உடனடியாக முன்னுக்கு வருகிறது. நான்கு பேர் சேர்ந்து சாயந்திரத்திற்குள் ஒரு அட்டை மாத்திரையை முடித்து விடுவோம் என்கிறார்கள் மிகச் சாதாரணமாக. அதிலும் அந்த மாத்திரையை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொருத்தன் வாயிலும் போடுகிறவனே அன்றைய கதாநாயகனாம். “அதில ஒரு ஸ்டைல் இருக்குதுங்க. சுண்டி விட்டு வாயில போட்டு விடறவந்தான் அன்னைக்கு கெத்து. மாஸ் காட்டுறதுன்னு அதுக்குப் பேரு” என்றான் ஒருபையன். அடுத்த முறை இன்னொருத்தன் மாஸ் காட்ட வேண்டும் என்பது இயல்பானதுதானே? காசில்லாதவன் எங்கே போவான்? இந்தப் பையன்களை விடுங்கள். தர்ஷினி என்கிற சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தர்ஷன்? “அவன் மாத்திரை போடற போதைக்காரன் அங்கிள். எண்ட்டயே வந்து ஒருதடவை வாங்கிட்டுப் போயிருக்கான்” என்றான் ஒருபையன்.

பெரும்பாலும் பெற்றோர்கள் பையன் தண்ணியடிக்கிறானா? அல்லது சிகரெட் குடிக்கிறானா? என்பதைத்தான் உற்று உற்றுப் பார்ப்பார்கள். “தண்ணீ பழக்கம் சிகரெட் பழக்கமெல்லாம் எம்பையனுக்கு ஒத்துக்காதுங்க. நான் சிகரெட் குடிச்சிட்டு போனாகூட மூஞ்சிய சுளிப்பான்” எனப் பெருமையாகச் சொன்ன அப்பா ஒருத்தனின் பையன் ஒரு அட்டையில் மூன்று மாத்திரைகளை ஒரேநாள் போடுகிறான் என்பதை எப்படி விளங்கிக் கொள்ள? உண்மையில் போதை சார்ந்த புரிதல்கள் இங்கு சுத்தமாக இல்லை என்பதே உண்மை.

இரவில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்றுதான் காவல்துறை சோதனை செய்கிறது. இப்படி மாத்திரையைப் போட்டுக் கொண்டு வருகிறவனை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இதுசம்பந்தமாகவும் காவல்துறைக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என நேர்மையான அதிகாரிகள் தங்களது கவலைகளை வெளியிடத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான கோணமொன்றும் இருக்கிறது. சென்னையில் மட்டுமே இதுமாதிரியான போதை வட்டம் இருக்கிறது என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கோவைக்குப் போன போது இதுகுறித்து விசாரித்தால், சென்னையில்கூட கிடைக்காத, எல்லாவித கெமிக்கல் போதைகளும் அங்கே சர்வசாதாரணமாகக் கிடைக்கும் என்றார்கள். அங்குள்ள கல்லூரி மாணவர்கள் மத்தியில் மாத்திரைகள் எல்லாம் மிகச் சாதாரணமானவை என்றார்கள். இப்போது இந்த போதை வலை தமிழகத்தின் சிறுநகரங்களுக்கும் பரவி விட்டது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் அக்குற்றம் சார்ந்த உணர்ச்சிகரமான ஒரு உரையாடல் நடந்தது. பத்தில் ஒன்பது பேர் அந்தப் பையன்கள் எல்லோரையும் தூக்கில் போட வேண்டுமெனக் கொதித்தார்கள். எல்லோரது பார்வையும் அந்த நேரத்தில் மட்டும் பொள்ளாச்சியிலேயே நிலை கொண்டிருந்தது. அதற்கப்புறம் எல்லோரும் வழக்கம் போல அதை மறந்தும் போனோம். அதற்கடுத்தும் அதுசம்பந்தமான செய்திகளைத் நாளிதழ்களில் தேடித்தேடிப் பார்த்தேன். பொள்ளாச்சி சம்பவத்தைப் போல கடந்த ஆறுமாதத்தில் மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டன. இருநூறு பெண்கள் என்று செய்தி வந்ததாலேயே பொள்ளாச்சி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்று விட்டது. ஒருபெண்ணை மிரட்டி படம் பிடித்தால் அது குற்றச் செய்தியில் வராதா? தமிழகத்தில் தினம்தோறும் ஏதோவொரு சிறுநகரத்தில் இதுமாதிரியான சம்பவங்கள் கண்ணும் காதும் வைத்த மாதிரி நடந்தபடியேதான் இருக்கின்றன.

இது ஒருவகையிலான தொழில்நுட்பம் சூழ்ந்த காலத்தின் சிக்கல். உலகத்தில் உள்ள எல்லா வளரும் நகரங்களும் இந்தச் சிக்கலைக் கடந்தே வந்திருக்கின்றன. இதுவொரு உலகளாவிய பிரச்சினை என்பதை தத்துவார்த்த ரீதியில் உணரத் துவங்க வேண்டும். வளர்கிற பொருளாதாரம் என்று சொல்லும் போது, அதற்குப் பின்னால் இதுபோன்ற விபரீத பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. போதை, பாலியல் குற்றங்கள், திருட்டு, கொள்ளை என எல்லா சங்கதிகளையும் இலண்டன் மாநகரமும் பார்க்கிறது. கலிபோர்னியா நகரமும் பார்க்கிறது. அதில் சென்னையும் பொள்ளாச்சியும் விதிவிலக்கில்லை.

ஆனால் வளர்ந்த நாடுகள் இவை செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டு, இதைத் தகர்க்கும் வேறுவேறு ஏற்பாடுகளில் இப்போது இறங்கத் துவங்கி விட்டன. ஒருகுற்றம் நடந்தால், வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வி நிலையங்கள், மனநல அமைப்புகள் என எல்லோரும் காவல் அமைப்புகளோடு ஒன்றிணைந்து அக்குற்றத்தை ஆராய்கிறார்கள். இங்கே மட்டும்தான் துப்பாக்கியை எடுத்து காவல்துறைக்குச் சுடச் சொல்லி, பொதுச் சமூகம் உத்தரவு கொடுக்கிறது.

நகரங்கள் வளர்கையில் போதையும் போதை சார்ந்த பாலியல் குற்றங்கள், கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றங்களும் வளர்வதென்பது யதார்த்தமே. தமிழக நகரங்கள் வளர வளர இதுபோன்ற எண்ணற்ற குற்றங்களைக் கடந்தே வந்திருக்கின்றன. அப்போது அவை எட்டாம் பக்கச் செய்தியாகப் பார்வைக்கு வந்ததிதில்லை. இப்போது இணையம், காட்சி ஊடகம் உள்ளிட்ட உடனடியான பார்வை வெளி கிடைத்திருப்பதால் அதிகமும் தட்டுப்படத் துவங்கியிருக்கின்றன. அவ்வளவே வித்தியாசம் என்பதை உணர வேண்டும். இது ஆரம்பம்தான்.

இந்தப் போக்கு எதிர்காலத்தில் இன்னமும் மூர்க்கமாகத் தலைவிரித்தாடும். ஆரம்பத்திலேயே இதன் அடிப்படையைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், பெருவிளைவுகளை ஓரளவிற்குத் தடுக்கவியலும். கலாசாரத் தடியெடுத்துக் கொண்டு, கொண்டாட்டங்களைப் பரிசளிக்கும் எல்லாவித மித போதைகளையும் எதிர்க்கிற முயற்சி அல்ல இது. ஆழமான, மூர்க்கமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிய விழைகிற முனைப்பிது என்பதை உணர்ந்தால் மகிழ்வேன். இதையெல்லாம் யாரை நோக்கிப் பேசுகிறோம்? ஏனெனில் இங்கே அரசாங்கமே போதையை கடைபரப்பிக் கூச்சமே இல்லாமல் விற்கிறது என்பதை நினைக்கையில் துக்கம் தொண்டையை அடைக்கிறது. “என்னது எண்ணூருவாக்கு விக்கறாங்களா. அப்ப நாம நானூறு ஓவாய்க்கு விக்கலாம். பசங்களுக்கு நல்லதுதானே பண்றோம்” என அரசு இந்த வியாபாரத்தில் இறங்கக்கூடச் செய்யலாம். அப்படியானால் எங்களுக்கு மீட்பே இல்லையா?

 

 

அன்புள்ள சரவணன்,

 

 

சமீபத்தில் இரு நிகழ்வுகள்.நாகர்கோயில் நண்பர் ஒருவர் [அவர் பெயர் வெளித்தெரிய விரும்பவில்லை] இரவில் பைக்கில் செல்லும்போது நடுச்சாலையில் இருவர் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். இருவருமே நல்ல மயக்கத்தில் இருந்தனர். நண்பர் பைக்கை நிறுத்தி ஒதுங்கிச் செல்லும்படிச் சொன்னார். அவரை கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். அருகிலிருந்த கல் கம்பு அனைத்தாலும் மிக மூர்க்கமாகத் தாக்கினர். மூக்கெலும்பு உடைந்தது. ஒருவாரம் மருத்துவமனையில். போலீஸ் வழக்கெடுத்து ஐந்துநிமிடங்களில் குற்றவாளிகளைப் பிடித்தது. ஏனென்றால் போலீஸுக்கு நன்கு தெரிந்த ‘டோப்’ கேஸ். ஆனால் மறுநாளே ஜாமீன். இனி வழக்கு என்றோ நடக்கும். நண்பர் அவ்வழியில் இனி பைக்கில் செல்லமுடியாது அவ்வளவுதான்.

 

 

நண்பர் அஞ்சியது இச்செய்தி சமூக ஊடகங்களில் வந்தால் அடித்தவர்களுக்கு ஆதரவாக ஒடுக்கப்பட்டோரின் வழக்கறிஞர்கள் குவிவார்கள், சாதிமதம் நோக்கி ஆதரவுகள் பெருகும், அவருடைய எதிரிகள் நக்கலும் நையாண்டியும் செய்வார்கள் என்றுதான். இந்துத்துவக் கிண்டல் புரட்சிகரக்கிண்டல் இரண்டையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஆகவே இச்செய்தியை மறைக்க அவர் சில ஆயிரம்ரூபாய் செலவழித்தார் என்று கேள்வி

 

 

இன்னொரு செய்தி, இது நண்பர் ஷாகுல் ஹமீது சொன்னது. கேரளத்திலிருந்து நாகர்கோயில் வரும் ரயிலில் பொதுப்பிரிவு பெட்டியில் ஒழிந்து கிடந்த ஒர் இருக்கையில் அவர் அமர்ந்தார். ஒருவர் வந்து அந்த இருக்கையில் அவர் அமர எண்ணியிருப்பதாகவும், படுக்கவேண்டும் என்றும் சொல்லி எழுந்து செல்லும்படி ஆணையிட்டார். ஷாகுல் மறுக்கவே இன்னொருவரையும் கூட்டிவந்தார். என்ன சொன்னாலும் ஏறாது. கலாட்டா, கூச்சல். “ஒண்ணும் செய்யமுடியாது. ரெண்டுபேருமே முழுப்போதை. நாம என்ன சொன்னாலும் அவனுகளுக்கும் ஆதரவா கொஞ்சபேர் வருவாங்க” என்றார்.

 

 

மூன்றாவது செய்தி. திருப்பூரில் கட்டுமானத்தொழில் செய்யும் ராஜமாணிக்கம் சொன்னது. திருப்பூரில் ஒரிசா பிகார் தொழிலாளர்களுக்கான பஞ்சம் தொடங்கிவிட்டது. ஊருக்குத் திரும்பிச்சென்ற தொழிலாளர்கள் திரும்பி வருவதில்லை. நேரில் சென்று விசாரித்தபோது ஒரு செய்தி தெரியவந்தது. தமிழகத்திற்கு தொழிலாளர்கள் செல்லக்கூடாது என்று பல ஊர்களில் ஊர்க்கட்டுப்பாடு உள்ளது. பல சாதிகளிடம் சாதிக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காரணம் இங்கே வருபவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஈட்டும்பணம் போதைக்கே சரியாகப்போகிறது. குற்றவழக்குகளிலும் சிக்கநேர்கிறது. போதை கட்டற்றுபெருகியிருக்கிறது இங்கே. ஒரிசாவிலும் பிகாரிலும் அவ்வாறல்ல. அதை அவர்கள் அஞ்சுகிறார்கள்.

 

இறுதியாக ஒரு செய்தி. எழுத்தாளர் அ.வெண்ணிலா ஒர் இரவுப்பேருந்தில் ஏறுகிறார். அப்பேருந்தில் இருக்கும் அத்தனை ஆண்களும் போதையில் இருக்கிறார்கள். அவர் ஒருவரே பெண். நடத்துனரும் போதையில். எந்த நம்பிக்கையில் இவர்களுடன் இரவுப்பயணம் மேற்கொள்வது? அ.வெண்ணிலா அதை பதிவுசெய்திருக்கிறார். ஏழு மணிக்குமேல் பெண்கள், குழந்தைகள் தனியாக வெளியே செல்வது நாகர்கோயில் போன்ற சிற்றூர்களில் மிகமிக அபாயகரமானதாக ஆகிவிட்டிருக்கிறது. தெருக்கள் தோறும் கூட்டம்கூட்டமாக அமர்ந்து குடிப்பவர்களைக் காணமுடியும். அவர்கள் பெரும்பாலானவர்கள் வன்முறையில் உடனே ஈடுபடுபவர்கள்

 

சென்ற ஜூனில் நான் அரசு மருத்துவமனையில் இரவு படுத்திருந்தேன். இரவெல்லாம் அடிதடி வழக்குகளில் குருதி வழிய, தசைகிழிந்து தொங்க பாதிக்கப்பட்டவர்களை உள்ளே கொண்டுவந்துகொண்டே இருந்தனர். பெரும்பாலானவர்கள் 20 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள். அத்தனைபேரும் போதையில் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மது அல்லாத போதையில் இருப்பதாக ஊழியர்கள் கூறினர். திகைப்பாக இருந்தது.

 

உண்மையில் இதுவே பிரச்சினை. அரசே போதையை ஊக்குவிக்கிறது. போதையால்தான் அரசுக்கு வருமானம். ஆகவே போதையால் நிகழும் குற்றங்களை போலீஸ் பெரிதுபடுத்தக்கூடாது என்று ஒரு புரிதல் அரசு – காவல் தரப்பில் உள்ளது. போதையுடன் அணுக்கம் உள்ளவர்கள் அனைவருமே போதைப்பழக்கம் கொண்டு குற்றம்செய்பவர்களுக்கு மானசீகமாக ஆதரவளிக்கிறார்கள். அதற்கான எல்லா காரணங்களையும் கண்டடைகிறார்கள்.  தமிழகத்தில் அவர்களே பெரும்பாலானவர்கள். ஆகவே எங்கும் போதைப்பழக்கம் அற்றவர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அவர்கள் தாக்கப்பட்டால் ‘நாம ரெண்டுபக்கமும் பாக்கணும்ல?” என்று உள்ளூர் நியாயவான்கள் கிளம்பி வருகிறார்கள்.

 

போதைப்பழக்கம் கொண்டவர்களுக்காக ஆதரவளித்துப் பேசுவது இங்கே முற்போக்கு என்றும் அடித்தளமக்கள்சார்பு என்றும் கருதப்படுகிறது. அவர்களின் குற்றப்பின்னணி காரணமாக அவர்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் போலீஸ்நிலையம் வருகிறார்கள். அவர்களைச் சட்டபூர்வமாக தண்டிக்கவே முடியாத நிலை தமிழகம் முழுக்கவே உள்ளது. அவர்கள் ஒருவகையில் கட்டின்றி பெருகிவிட்டிருக்கிறார்கள். முன்பு உயர்குடிகளின் ரேவ் பார்ட்டிகளில் மட்டுமே போதை புழங்கிவந்தது. இன்று கீழ்மட்டம் வரை பரவிவிட்டதாக, இளைஞர்கள் நடுவே ஒரு அலைபோல நிறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். சினிமா அரங்குகளில் முதல்நாள் காட்சிக்குச் சென்றால் கணிசமானவர்கள் மது அல்லாத போதையில் இருப்பதைக் காணமுடிகிறது. பேருந்துகளில், பொது இடங்களில் ஒருவகை கொந்தளிப்பான நிலையில் இவர்களை சாதாரணமாக காணலாம். அவர்களிடமிருந்து பிறரிடம் எந்த பாதுகாப்பும் இல்லை. கூடுமானவரை ஒதுங்கிக்கொள்வது தவிர

 

போதைப்பொருள் பழக்கம் உலகமெங்கும் உள்ளது. அங்கெல்லாம் அதற்கு எதிரான கண்டனமும், கடுமையான நடவடிக்கைகளும் உள்ளன. ஆனால் இங்கே அதற்கு ஆதரவான மனநிலை நுட்பமாகப எல்லா நிலைகளிலும் தொடர்கிறது. அரசியல்வாதிகள் காவலர் முதல் அறிவுஜீவிகள் பொதுமக்கள் வரை. நேரடியாக எதிர்ப்பார்கள், நடைமுறையில் ஆதரிப்பார்கள். இதுவே மெய்யான சிக்கல்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விரல்- கடிதங்கள்

$
0
0

.

விரல்

தலைமறைவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

கடந்த மாதம் உங்களுக்கு உடல் காயம் ஏற்பட்ட போது ‘சீக்கிரம் நலம் பெறுங்கள்’ என்று கடிதம் எழுத நினைத்தேன். ரொம்ப சம்பிரதாயகமாக இருக்கும் என்று எழுதவில்லை. ‘விரல்’ கட்டுரையில், உங்களுக்கு வந்த வசை கடிதங்கள் பற்றி படித்த போது ‘யார் இவர்கள்.. எப்படிப்பட்ட மனோநிலை கொண்டவர்கள்..’ என்று திகைப்பு ஏற்படுகிறது. இந்த பரிதாபத்திற்குரியவர்களை கண்டு உங்களை போல் நகைப்புடன் நகர்ந்து சென்று விடுவதுதான்’ சரி. சமிபத்தில் you tubeல், ஓர் மேடை பேச்சில் ஜெயகாந்தன் குறிப்பிட்ட பாரதியாரின் வரிதான் மனதில் தோன்றியது – ‘பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!’. விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்!

 

இப்படிக்கு,

டி. சங்கர்

 

அன்புள்ள ஜெ,

 

இணையத்தில் இந்த புளிச்சமாவு வசைகளை எழுதுபவர்களை நானும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எந்த ஒருவிஷயத்திலும் அறிவார்ந்ததும் நாகரீகமானதுமான எதிர்வினைகளைப் பதிவுசெய்யாத ஒரு கூட்டம் அது. அவர்களுக்கு உங்கள் பெயர் மட்டும்தான் தெரியும். கூடவே மதக்காழ்ப்பு. கொஞ்சபேருக்கு அரசியல் காழ்ப்பு. அதை எப்படிக் கடந்துசெல்வது என நீங்கள் காட்டுகிறீர்கள்

நன்றி ஜெ

அரசு செல்வராஜ்

 

அன்புள்ள ஜெ,

 

காழ்ப்பை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வதைப்பற்றிய அந்த தாயளி கட்டுரையை பலமுறை வாசித்துச் சிரித்திருக்கிறேன். அதைப்போல இந்தக் குறிப்பை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. கைவலியை அவ்வாறு எடுத்துக்கொள்ள முடியாது. உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்

 

சரவணக்குமார்

இந்தநாளில்…

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அமேசான்

$
0
0

அமேசான் குப்பைகள்

 

அமேசான் ஒரு போட்டி – பென் டு பப்ளிஷ்- நடத்துகிறது. அச்செய்தியை என் இணையதளத்தில் பிரசுரித்து அதை ‘ஊக்குவிக்க’ வேண்டும் என்று ஒர் இளம் எழுத்தாளர் எழுதியிருந்தார். நான் அவருக்கு எழுதிய பதில் இது.

 

இந்த அமேசான் போட்டிகளை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளக்கூடாது என நினைக்கிறேன். அதை அவர்கள் நடத்துவதும் சிலர் வாசிப்பதும் பிரச்சினை இல்லை.ஆனால் இலக்கியச்சூழலில் அதை முன்வைப்பதும் கொண்டாடுவதும் பிழை. இலக்கியத்திற்கும் அழிவு கொண்டுவரும்

 

ஏனென்றால் அவர்கள் மிக மிக அற்பமான, நாலாந்தர எழுத்தையே தெரிவுசெய்து பரிசளிக்கவும் பாராட்டவும் செய்கிறார்கள். பொதுவாக அதற்குரிய  நடுவர்களையே தெரிவுசெய்கிறார்கள். ஏனென்றால் அதுவே விற்கும் என நினைக்கிறார்கள். அது உண்மையும்கூட. நாலாந்தரம் என்றால் இன்றைய முகநூல் வாசகர்களுக்கான எழுத்து. குமுதம் வகை எழுத்தைவிடவும் பலபடிகள் கீழே இருப்பது. வாசிப்பை ஒரு கீழ்த்தரக்கேளிக்கை, பூசலிடுதல் என்று மட்டுமே நினைப்பவர்களுக்குரியது.

 

அது விற்பதில்கூட பிரச்சினை இல்லை, எதையாவது நம் மக்கள் படித்தால் சரி. ஆனால் அந்தப்பரிசுத்தொகை பெரிது என்பதனால் நாம் அவ்வெழுத்தை, அவ்விருதைக் கொண்டாடுவோம் என்றால், அதை எழுதுபவரை எழுத்தாளர் என அடையாளம் காண்போம் அதுவே உகந்தஎழுத்து என ஏற்பதுபோல் ஆகிவிடும். அந்த எழுத்தை உருவாக்க இளம்தலைமுறையை ஊக்குவிப்பது போல் பொருள்படும்.

 

எழுதுபவர்கள் அந்த பரிசுத்தொகைக்கு அதற்கு கதைகள் அனுப்புவதாக இருந்தால்கூட அவர்கள் வழக்கமாக எழுதும் பெயரில் அனுப்பாமலிருப்பது நன்று. ஏனென்றால் அந்தப்பரிசு பெறுவதே தரமில்லாத எழுத்தாளர் என்னும் அடையாளத்தை ஈட்டிவரும். அதன்பின் பிறநூல்களுக்கும் நல்ல வாசகர் அமையமாட்டார்கள். என்னைப்பொறுத்தவரை இந்த அமேஸான் போட்டியில் ஒருவர் பரிசுபெற்றார் என்றால் அவருடைய எழுத்தை அதற்குமேல் பொருட்படுத்த மாட்டேன். அதை மீறி படித்துப்பார்க்கவேண்டும் என்றால் அது மிகச்சிறந்தாதாக இருப்பதாக நல்ல விமர்சகர் எவரேனும் சொல்லவேண்டும்.

 

இன்றைய நிலையில் இந்த அமேசான் போட்டி எழுத்துக்கள் ஒருவகை சூழியல்மலினங்கள், அறிவார்ந்தவர் ஒதுங்கி நின்றிருக்கவேண்டியவை என மட்டுமே சொல்லவிழைகிறேன்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

உன்னை அழைக்க மாட்டேன்…

$
0
0

என் உள்ளம் கவர்ந்த இந்தப்பாடலைப் பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது ஒரு விவாதத்தை கண்டடைந்தேன். 1964ல் வெளிவந்த தோஸ்தி என்ற படத்தில் இடம்பெற்றது இப்பாடல். மராத்தி நடிகர்களான சுஷீல்குமார் சுதீர்குமார் இருவரும் இதில் நடித்திருந்தனர். அவர்கள் அதன்பின் இந்திப்படவுலகில் நீடிக்கவில்லை. சுஷீல்குமார் மும்பையில் வாழ்கிறார். சுதீர்குமார் ஒரு விந்தையான முறையில் இறந்துவிட்டதாக செய்தி- வதந்தி பரவியிருக்கிறது

 

அதாவது 1993 மும்பைக் கலவரத்தின்போது சுதீர்குமாரின் தொண்டையில் ஒரு கோழியிறைச்சி முள் சிக்கிக்கொண்டதாகவும் அக்கலவரத்தின் காரணமாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லமுடியாமலாயிற்று என்றும் ,அவர் உயிர் துறந்தார் என்றும் சொல்லப்பட்டது. கொலை என்றும் பேசப்பட்டது. இணையத்தில் சுதீர்குமாரின் இளைய சகோதரியான சுசித்ரா கோப்கர் அதை மறுத்து சுதீர்குமார் உண்மையில் 1993ல் தொண்டைப்புற்றுநோயால் மறைந்தார் என்று விளக்கியிருக்கிறார்

 

உண்மையில் சினிமாவை மண்ணில் வைத்து விளங்கிக்கொள்ள மக்களால் முடியவில்லை. விரும்புவதுமில்லை. தோஸ்தியின் சோகத்திற்குச் சமானமான ஒரு கதையை அவர்களின் வாழ்க்கையிலும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தோஸ்தி போன்ற ஒரு கல்ட் கிளாஸிக்குக்குப் பின், இன்றும் வாழும் ஆவாஸ் மெய்ன் நா தூங்கா பாடலுக்குப்பின், தோற்று பின்வாங்கி எளிமையாக, எவரையும்போல வாழ்வதே மிகபெரிய துன்பியல்நாடகம்தான். சுதீர்குமார் சாதாரணமானவரான  சுதீர்சாவந்த் ஆக வாழ்ந்து மறைந்தார். அவருக்குள் இருந்து சுதீர்குமார் இப்பாடலை பாடிக்கொண்டிருப்பதாக நானும் எண்ணிக்கொள்கிறேன். “உன்னை நான் அழைக்க மாட்டேன்!”

https://www.quora.com/What-happened-to-Sushil-Kumar-and-Sudhir-Kumar-after-the-movie-Dosti-1964

 

ஆவாஸ் மே ந தூங்கா 

[உன்னை நான் அழைக்கமாட்டேன்

காலைமுதல் மாலைவரை உன்னை காதலித்துக்கொண்டிருப்பேன்]

பாடகர் முகம்மது ரஃபி

இசை லக்ஷ்மிகாந்த் பியாரேலால்

https://www.musixmatch.com/lyrics/Mohammed-Rafi/Chahoonga-Main-Tujhe/translation/english

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நாள்தோறும்…

$
0
0

 

நாள்தோறும் சென்று நோக்காதவனிடம் மனைவி கணவனிடம் என நிலம் சினம் கொள்ளும் என்று குறள் சொல்கிறது

 

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

 

பேராசிரியர் ஜேசுதாசன் சிரித்துக்கொண்டே சொன்னார். “எதிரி ஆயிடும்னு சொல்ல்லேல்ல. ஊடிவிடும்னுதான் சொல்லுதாரு. அதுவும் மனைவி மாதிரி. என்ன இருந்தாலும் நீ கணவன், நான் உனக்குச் சொந்தம், எப்டியும் நாந்தான் உனக்குச் சோறுபோடணும். அது நிலத்துக்கும் தெரியும்.கொஞ்சம் பாத்தாப்போரும் அப்டியே மலந்திரும். பாக்காம இருந்ததே மறந்துபோயிரும். மண்ணு மனுசனை கைவிட்டதில்லை”

 

நான் இந்தக்குறளை அடிக்கடி நினைவுகொள்வதுண்டு. செல்லான் கிழவன் என்னும் சொல் இருப்பதனாலும், உழவு என்னும் தலைப்பின்கீழ் வருவதனாலும் இக்குறள் வேளாண்மை தொடர்பானது என்று தோன்றுகிறது. ஏன் இதை ஒரு தனிக்கவிதையாக எடுத்துக்கொண்டு நாம் பொருள் கொள்ளலாகாது? நிலம் என்பது ஏன் வயலாக மட்டும் இருக்கவேண்டும்? பசுமையும் மலரும் முகிலும் மலைகளுமாகப் பெருகி நின்றிருக்கும் இயற்கையாக ஏன் அமையக்கூடாது?.

 

பரிமேலழகர் தன் உரையில் இக்குறளில் இரண்டு நுண்பொருள் எடுக்கிறார். எவ்வளவு நிலமிருந்தாலும் நிலக்கிழான் தானே சென்றாகவேண்டும். இன்னொருவரை அனுப்பலாகாது. தூதர்களை அல்ல தலைவனையே தலைவி எதிர்பார்க்கிறாள். அவ்வப்போது சென்றால் போதாது நாள்தோறும் சென்றாகவேண்டும்

 

நான் மேலும்பொருள்கொள்வது காலைநடை செல்லும்போதுதான். எங்கிருந்தாலும் பசுமைதிகழும் நிலம் நடுவே நடைசெல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். குமரிநிலம் என் கனவுகளிலும் நிறைந்திருப்பது.  எங்களூரின் ஆறும் மலையும் பசுமையும் என் இளமையை பொலிவூட்டியவை. நான் கல்லூரிக்கு வரத்தொடங்கியபோது வேளிமலையையும் அதன் காலடியில் விரிந்திருக்கும் பசுமையையும் பார்க்கத் தொடங்கினேன். இன்றுவரை நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

ஒரே நிலத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது, நாள்தோறும் பார்ப்பதே உண்மையான இயற்கையனுபவம். ஒரு புதியநிலம் பெரும் மனக்கிளர்ச்சியை அளிக்கிறது.நான் இமையமலையின் இதழடுக்குகளின்முன், ஆல்ஃப்ஸின் கண்நிறைக்கும் பசுமைக்கும் பனிக்கூரைக்கும்முன், அமெரிக்காவின் மாபெரும் கடல்விளிம்புகளைக்கண்டு, ஆப்ரிக்காவின் செந்நிறப்பாலையில் நின்று, ஆஸ்திரேலியப்புல்வெளிகளில் விழிமலைத்து உடல் திறந்துகொள்ளும் அளவுக்கு உள்ளிருந்து எழும் பேருணர்வை அடைந்திருக்கிறேன்.

 

அவை கிளர்ச்சிகள். நிகர்நிலை குலைவுகள், கொந்தளிப்புகள். புத்தம்புதிய நிலம் அளிப்பது முதற்கண மலைப்பை, பின்னர் உள்ளம் பெருகிவிரிகிறது.சொற்களாக உவகையாக. கைவீசி ஓடவிழைவோம். பாய்ந்து பறந்தலைய எண்ணுவோம். நிகரான நிலங்களை கற்பனையில் இருந்தும் நினைவிலிருந்தும் எடுத்து இணைத்து விரித்துக்கொள்வோம். நம் அகம் செயலூக்கம் கொள்ளும் நிலை அது. நாம் ஒருவரே பலராக ஆகும் தருணம்.

 

ஆனால் இயற்கை ஊழ்கமென ஆகவேண்டும் என்றால் அந்தக் கொந்தளிப்பு இருக்கக் கூடாது. இயற்கை நம் ஆழத்தை முற்றடங்கச்செய்யவேண்டும். அதற்கு நாம் பழகிய நிலமே உகந்தது. அங்கே நாம் உவகையடைவதையே உணர்வதில்லை. சொல்லப்போனால் சலிப்பு போன்ற ஒரு நிலை அது. உள்ளம் ஓய்ந்து கிடக்கிறது. பலசமயம் தொடர்பற்ற எண்ணங்கள். நாவில் ஏதேனும் பொருந்தாத வரிகள். நினைவு எங்கெங்கோ தொட்டுத்தொட்டுச் செல்லும். நாம் இயற்கையின் மடியில் இருப்பதையே உணர்வதில்லை

 

இயற்கையை நம் விழி காண மறுப்பதே இல்லை. அதற்கேற்ப நம் உள்ளம் அமையாமலிருப்பதும் இல்லை. அந்த சோம்பல்நிலையில் நம்முள் நம்மையறியாமலேயே வெளியே இருக்கும் பசுமை ஊறி நிறைந்துகொண்டிருக்கிறது. நாமடையும் ஆழ்ந்த அமைதி அவ்வாறு வருவதே. பின்னர் நினைவுகூர்கையில் நாம் ஓர் உச்சத்தில் இருந்ததை உணர்கிறோம். நம்முள் நாம் முழுமையாகவே புரண்டுவிட்டிருப்பதை, அழிந்து முளைத்தெழுந்துவிட்டிருப்பதை அறிகிறோம்.

பழகிய நிலம் மனைவிபோல. காதலியென அவள் அலைக்கழிப்பதில்லை. பொருந்தாத கூர்முனைகளுடன் குத்திக்கிழிப்பதில்லை. ஒவ்வாத ஒன்றும் அவளில் இல்லை. அவளுக்காக நாம் நம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கிறோம். நமக்காக அவள் நம்மை மெல்லமெல்ல வடிவமைத்துக் கொண்டிருக்கிறாள். நாம் மேலும் செய்வதொன்றும் இல்லை என்பதனால் எழும் மெல்லிய சலிப்புடனேயே அவளை உணர்கிறோம். வெல்வதற்கோ வீழ்வதற்கோ ஏதுமில்லை. கடத்தலுக்கோ ஆதலுக்கோ ஏதுமில்லை. அமைதல் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

 

பழகிய நிலம் தன் அழகை புதுமைக்கிளர்ச்சி எனக் காட்டுவதில்லை.அது கணம்தோறும் மாறுவது என்றாலும் என்றுமிருப்பது என்னும் மாயையை நமக்கு அளிக்கிறது. பழகிய நிலத்தின் முன் நாம் அயலார் அல்ல. நாம் பார்வையாளர் அல்ல. நாம் அதிலொரு பகுதி. நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. அங்கிருக்கும் மரமும் பாறையும்போலத்தான் நாமும். நாம் அதனுடன் சற்றேனும் முரண்கொள்கையிலேயே அதன் இருப்பை உணர்கிறோம். முற்றாக இசைவுகொள்கையில் அதுவுமில்லை நாமும் இல்லை. இருத்தலின் சலிப்பூட்டும் காலஒழுக்கு மட்டுமே. ஆனால் அதுதான் ஊழ்க நிலை. ஒன்றும் செய்யாதபோதுதான் உள்ளம் கண்டடைகிறது. அலையிலாதபோதே ஆழம் தெளிகிறது.

 

நாள்தோறும் நாம் சென்று நோக்கா நிலம் நம்முடன் ஊடிவிடுகிறது. மீண்டும் சென்று நோக்குகையில் அப்பால் முகம்திருப்பி நின்றிருக்கிறது. ஆனால் அதனால் அப்படி நிற்க இயலாது. அது உள்ளூர புன்னகைத்துக்கொண்டிருக்கிறது. நாம் ஒரு சொல் கூறுவதற்காகக் காத்திருக்கிறது

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அமெரிக்கா நோக்கி…

$
0
0

இன்று [9-9-2019] முற்காலை மூன்றரை மணிக்கு அமெரிக்கா கிளம்புகிறேன். 6-902019 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளமபி பெங்களூர் வந்தேன். இங்கே ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் நவீன், ஸ்வேதா, திருமூலநாதன், சங்கர், விஷால்ராஜா ஆகியோர் வந்தனர். 7,8 இருநாட்களும் இலக்கியப்பேச்சு. கொஞ்சம் எழுதலாமென திட்டமிட்டிருந்தேன். ஆனால் இளம் நண்பர்களுடனான உரையாடல் அதை ஒத்திப்போடச்செய்தது. 8-9-2019 அன்று அந்தியில் கிளம்பி விமானநிலையம் வந்தேன். இன்றிரவு இங்கேதான்.

 

நேராக ராலே செல்கிறேன். அங்கே ஊர்சுற்றல். ஒரு இசை நிகழ்ச்சி. 14 அன்று Wake Country Library யில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. 15 வாஷிங்டன்.அங்கே தமிழ்ச்சங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. 16 அன்று  Roanoke, 18 அன்று Charlote, 19 அன்று Atlanta, 22 அன்று New Hampshire 28 அன்று Newyork என்பது தோராயமான பயணத்திட்டம். நடுவே பார்க்குமிடங்கள் எல்லாம் நண்பர்கள் விரிவாக திட்டமிட்டிருக்கிறார்கள். 30 அன்று கிளம்பி மீண்டும் பெங்களூர்

 

இம்முறை தனியாக. ஆகவே கொஞ்சம் பதற்றம். அதோடு கைவிரல் வேறு சரியாகவில்லை. எலும்பு கொஞ்சம் பழுதாகி அப்படியே உறைந்துவிட்டது. ஆகவே சிம்பு வைத்து இன்னும் பெரிதாக கட்டிவிட்டிருக்கிறார் வைத்தியர். தைலங்கள் கொண்டுசெல்லவேண்டும். விமானத்தில் காயத்திருமேனி நாற்றம் வேண்டாமே என இரண்டுநாட்களாக தைலம் விடவில்லை. கார்ட்டூன்களில்தான் இவ்வளவு பெரிய கட்டுகளை பார்த்திருக்கிறேன். ஒரு படத்தில் ஜிம் கேரி அந்த மாவுக்கட்டுப் பொட்டலத்திற்குள் இருந்து ஊர்ந்து இறங்கி வெளியே வந்து கழிவறை சென்றுவிட்டு திரும்பச்சென்று புகுந்துகொள்வார்.

நம் உள்ளூர்தான் இந்தியா. விமானநிலையமெல்லாம் அமெரிக்காதான். எல்லாமே நாமேதான் செய்யவேண்டும். முந்தைய பயணங்களில் அருண்மொழி இந்த டிராலியை தள்ளுவாள். அதை மிக உற்சாகமாகச் செய்வாள். உலகப்பயணி என்னும் பாத்திரத்தை நடிப்பதற்கு இந்த டிராலிபோல உதவும் ‘செட் பிராப்பார்ட்டி’ வேறு இல்லை. ஆனால் இதை இரண்டு கையாலும்தான் தள்ள முடிகிறது. இதற்கு பிரேக்கும் இல்லை. பிடிவாதமாக பெரிய பின்புறம் கொண்ட பெண்களை எல்லாம் நோக்கி அதுவே செல்கிறது. பதறிப்போய் பற்றி நிறுத்தி ஓர் இடத்தில் அமர்ந்தால் விரல் வலிகாட்டி இருப்புணர்த்தத் தொடங்கிவிடுகிறது.

 

கொஞ்சம் பெரிய அடியாக இருந்தால் வீல்செயர் கேட்டுப்பெறலாம். சிறுவிரலில் வலி என்று கேட்டால் என்ன என்று எண்ணிப்பார்க்காமல் இல்லை. விமானநிலையங்களில் நான் பொதுவாக தட்டழிந்தபடித்தான் இருப்பேன். அறிவிப்புப் பலகைகளை வாசிக்க என்னால் முடியாது. மொத்தமும் வெறும் எழுத்துக்களாகத் தெரியும். அவற்றை செய்திகளாக மாற்ற அரைமணிநேரம் தேவைப்படும். சிங்கப்பூர் சென்றபோது ஒருமுறை எமிக்ரேஷன் வரிசையில் நின்றபின்னரே விசாத்தாளை எங்கோ தொலைத்துவிட்டது தெரிந்தது.

 

இங்கே இந்த விமானம் 120க்குக் கிளம்பவேண்டும். 330 என்கிறார்கள். அங்கே இணைப்பு விமானம் இருக்கும் என நம்புகிறேன். இல்லையேல் பாரீஸில் சுற்றிவரவேண்டியிருக்கும். ஆனால் இந்த மேலைநாடுகள் நம்மை அகதிகளாக எண்ணும்போதே நடுங்குகின்றன. ஆகவே நினைத்தால்கூட மூழ்க முடியாது. திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

 

அமெரிக்காவின் நிலம் என்னை கவர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்காகவே கௌபாய் காமிக்ஸ்களையும் படங்களையும் வெறிகொண்டு வாசிப்பவன் நான். விரிந்த நிலம். எல்லையின்மையை உணரச்செய்யும் நிலம். பசுமை முதல் பாலைவரை. இப்போதுகூட கண்களை மூடினால் அமெரிக்காவைப் பார்க்கமுடிகிறது.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…

$
0
0

 

“அந்த நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தில் 112 வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் கோட் சூட் அணிந்திருந்தனர். அவர்களைச் சுற்றிலும் அவர்களது உதவியாளர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் இளமையாக இருந்தனர். நீதிமன்ற வளாகத்தின் எஞ்சிய பகுதிகளில் இவர்களைப் பணிக்கு அமர்த்திக்கொண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். அந்தந்தநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

பிரச்சனையின் காரணகர்த்தாவான உலகவங்கிப் பிரதிநிதிகள், ‘எத்தனை கோர்ட் படிகள் நாங்கள் ஏறி இறங்கி இருப்போம்’ என்ற மிதப்பில், மவுனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வழக்கு கிட்டத்தட்ட இருபது நாட்கள் நடைபெற்றது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு முப்பது மணிவரை நடந்தது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான கோட்-சூட்களை அணிந்து அவர்கள் வந்தார்கள்.

வழக்காடு மன்றத்தின் இன்னொரு பக்கத்தில் நான்கே நான்கு பேர் அமர்ந்திருந்தனர். ஒரு வழக்கறிஞர், இரண்டு உதவியாளர்கள்… நான்காவது நபர் வழக்குத் தொடுத்தவர். எண்பத்தைந்து வயது இளைஞர்! சிறிதும் வளையாத அவரது நிமிர்ந்த முதுகினால் பார்ப்பதற்கு உயரமாகத் தெரிந்தார். சிரிக்கும்போது ஏற்படும் கன்னச் சுருக்கங்களைத் தவிர அவர் முகத்தில் ஒரு சுருக்கத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. தன் வலுவான கால்களை மிக நிதானமாக எடுத்துவைத்து நடந்து செல்கிறார். கண்களின் மேலே சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை செய்ததன் அடையாளமாக பச்சைத்துணி போடப்பட்டிருந்தது. அதற்கு மேலாக பெரிய கண்ணாடி அணிந்திருக்கிறார். யாராவது பேசினால் அந்த திசையில் காதை நகர்த்தி கையைக் குவித்துக் கேட்கிறார்.

அந்த நீதிமன்ற அறையில் சவுகரியமான ஆடையை அணிந்திருப்பது அவர் ஒருவர் மட்டுமே. ஒரு வெள்ளை நிற வேட்டி… கதர் சட்டை. கழுத்தில்லாத அந்தச் சட்டை தோளில் இருந்து மிகவும் தொளதொளவென தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சட்டையும் வேட்டியும் அவராலேயே நெய்யப்பட்டவை. கடந்த ஐம்பது வருடங்களாக, அவர் தன் கையால் நெய்த கதராடைகளை மட்டுமே அணிந்து வந்திருக்கிறார். ஒரு ரப்பர் செருப்பு அணிந்திருக்கிறார். அவர் பெயர் ஜெகந்நாதன்!

இந்த முதியவர் ஆணித்தரமான ஒன்றை முன்வைத்து வழக்குத் தொடுத்திருக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை ஒரேயடியாக மூடச்சொல்லி பத்து ரூபாய் ஸ்டாம்பு பேப்பரில் வழக்குத் தொடுத்துள்ளார். புவி முழுவதும் தன் கரங்களைப் பரப்பியுள்ள உலக வங்கியையும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத்துறையையும் தனி ஒரு நபராக எதிர்த்து நிற்கிறார். அவர் யாருக்காகப் பேணிரணிடுகிறாரோ அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம்கூட அவருக்கு எதிரணிகவே களத்தில் நின்று கொண்டிருக்கிறது.

ஃபிலிப்பைன்ஸ் முதல் ஈக்வடார் வரை பன்னாட்டு முதலாளித்துவம் பாழ்படுத்திய கடலோர வாழ்க்கைகளுக்கு பதில் சொல்லும்படிக் கேட்கிறார். வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்து வறுமையில் வாடும் லட்சக்கணக்கான விவசாய மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லும்படிக் கேட்கிறார். ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா முதலான நாடுகளின் சூப்பர் மார்கெட்களில் கூறுகட்டி விற்கப்படும் மூன்றாம் உலக நாட்டு மக்களின் துயரத்துக்கான நியாயம் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார்.

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது… ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்…? அவர் தன் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைத் திறக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் மூலம் சரித்திரத்தின் இன்னொரு பக்கத்தையும் அவர் எழுப்பும் எளிய கேள்விகளுக்கு அவரிடமே அற்புதமான பதில்கள் இருக்கின்றன.

யாராலும் செவிமடுக்கப்படாமல் போகும் அந்த பதில்களை அவர் தன் மெலிந்த, உறுதியான குரலில் எடுத்து வைக்கிறார். அவர் தன் தரப்பு வாதங்களை மெல்லமெல்ல முன்வைக்கும்போது கோட்-சூட்கள் இருக்கைகளில் நெளியத் தொடங்குகிறார்கள். ஃபைல்களால் விசிறிக் கொள்கிறார்கள். தங்கள் டைகளை தளர்த்திவிட்டுக் கொள்கிறார்கள். ‘எண்ணிக்கை அல்ல, தர்மமே வெல்லும்’ என்பது மெல்ல அவர்களுக்கு விளங்க ஆரம்பிக்கிறது.

 

– லாரா கோப்பா (‘சுதந்திரத்தின் நிறம்’ நூலிலிருந்து…)

 

காந்தியவழியில் தங்களை ஆற்றுப்படுத்தி, வினோபாவின் பூமிதான முன்னெடுப்பினை தமிழ்நிலம் முழுக்கப் பரவச்செய்து, லாப்டி அமைப்பை நிறுவி எளியோர்களுக்கான நலவாழ்வுக்காகவே தங்களுடைய வாழ்வினை அர்ப்பணித்த காந்தியவாதிகள் ‘கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ அவர்களின் வாழ்வுவரலாற்றை ‘சுதந்திரத்தின் நிறம்’ எனும் தலைப்போடு தன்னறம் நூல்வெளி வாயிலாகப் புத்தகமாக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளோம். லாரா கோப்பா ஆங்கிலத்தில் நேர்காணல்களாகப் பதிவுசெய்த நூலின் எளிய தமிழாக்கம் (மகாதேவன்) இந்நூல்.

‘கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்றோர்களைப் பற்றிய உருப்படியான வாழ்க்கை வரலாறுகூட தமிழில் இல்லை’ என்ற உங்களுடைய கட்டுரைவரிகளும், இருகாந்தியர்கள் கட்டுரையும் எங்கள் எண்ணத்தில் உண்டாக்கியச் சலனமே இப்புத்தகம். ‘மாற்று நோபல்பரிசு’ எனக் கருதப்படும் right livelihood award என்ற விருதைப் பெற்று, அதற்காக அவர்கள் தந்த பெரும் தொகையையும் எளியமக்கள் வசிப்பதற்கான வீடுகள் கட்டித்தர கொடுத்துவிட்டார் கிருஷ்ணம்மாள். இப்படியொருத்தரின் வாழ்வுப்பின்புலத்தையும் அதன் இயக்குவிசையையும், நம் தலைமுறையில் ஒவ்வொருத்தரும் அறிந்திருக்க வேண்டிய அகவரலாறாகவே கருதுகிறோம்.

காந்தி, வினோபா இவர்களின் ஒற்றை வார்த்தையை வாழ்வுச்சொல்லாக ஏந்தி, அதே ஆத்மபலத்துடன் இறுதிவரை தளராத நம்பிக்கையோடும் கருணையோடும் மக்களுக்காக சேவையாற்றுகிற இந்த இணையர்களின் தன்சரிதையான இந்நூல் அவரவர் கோணத்தில் சொல்வதாக உள்ளது. இமயமலைப் பிரதேசங்களில் ‘சிப்கோ’ இயக்கம் மூலமாக மரங்களைக் காத்த காந்தியர் சுந்தர்லால் பகுகுணா அவர்களின் சிறுகுறிப்போடு இப்புத்தகம் முழுமையடைகிறது.

தகுந்த நேர்த்தியோடும் தேர்ந்த தரத்தோடும் இப்புத்தகத்தை அச்சுப்பதிப்பதற்கு ஒரு ‘முன்வெளியீட்டுத் திட்டத்தை’ முன்னெடுக்க விழைகிறோம். நண்பர்களின் வாயிலாக குறைந்தது 300 புத்தகங்கள் முன்பதிவு செய்யப்படுகையில் மட்டுமே, புத்தகம் அச்சிடத் தேவையான தொகையைத் திரட்ட இயலும். தோழமைகளின் கூட்டிணைந்த உதவிக்குவியம் மட்டுமே, இந்நூலை நிறைவேற்றுவதற்கான சாத்தியத்தை எளிதாக்கும் என நம்புகிறோம். அறிந்த தோழமைகளுக்கு நண்பர்கள் பகிர்ந்தளித்தோ, பரிசளித்தோ உதவுங்கள். அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள் இப்புத்தகம் உரியவர்களின் கரங்களுக்கு, கிருஷ்ணம்மாள் ஜெகந்தானிடம் கையெழுத்துப் பெற்று அனுப்பி வைக்கப்படும்.

 

நெஞ்சின் நன்றிகள் அனைவருக்கும்!

 

சுதந்திரத்தின் நிறம்

 

(கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு)

 

புத்தக விலை:ரூ 500

 

முன்வெளியீட்டுத் திட்டத்தில்: ரூ 400

 

முன்பதிவு செய்ய : http://thannaram.in/product/suthathirathin-niram/

 

இப்படிக்கு,

தன்னறம் நூல்வெளி

9843870059

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தடம் –கடிதங்கள்

$
0
0

தடம் இதழ்


அச்சிதழ்கள், தடம்

 

 

அன்புள்ள ஜெ,

நலமா? தடம் இதழ் நிறுத்தப்படுவது குறித்த உங்கள் பதிவு. நான் தடம் இதழ் ஆரம்பித்த சில இதழ்களுக்கு அதை படிப்பதில்லை. முதன்மையான காரணம் உள்நோக்கம் கொண்ட காழ்ப்புணர்ச்சி அரசியல்- பொது பிரச்சினையிலும் இலக்கியத்திலும். திரும்ப திரும்ப மதவாத அரசியலின் ஆபத்து குறித்து மட்டுமே வெவ்வேறு வடிவங்களில் உள்நாட்டு – வெளிநாட்டு எழுத்தாளர்களின் புலம்பல்களை வெளியிடுவது ஆனால் இஸ்லாமிய மதவாதம் குறித்து பேசாமல் இருப்பது, தலித் அடக்குமுறை பற்றி பேசுவது ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாத வடநாட்டு பாஜக மீது பழியைப் போடுவது. இந்த டெம்ப்ளேட் விஷயங்களை வாசிக்க நாம் ஏன் பணம் செலவழிக்க வேண்டும்? அரசியல் தவிர்த்து மற்ற துறைகளைப் பற்றியும் பெரிதாக எதுவும் அவ்விதழில் வெளிவந்ததில்லை. வெறும் டெம்ப்ளேட் விஷயங்களை மட்டுமே வெளியிட்டால் யார் படிப்பது?

தமிழிலக்கியத்தில் தவிர்க்க முடியாத படைப்புகளான கொற்றவை , விஷ்ணுபுரம் , பின்தொடரும் நிழலின் குரல் குறித்து எதாவது ஒரு கட்டுரை, விமர்சனம் தடம் இதழில் வந்துள்ளதா? குறைந்தபட்சம் இரவு நாவல் குறித்து?

இதே விகடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தொப்பி திலகம் கட்டுரையை வைத்து சிண்டு முடிந்ததை யாரும் மறக்கவில்லை. தமிழ்நாட்டின் தீயசக்திகளுள் ஒன்று இந்த விகடன். மொத்த விகடன் இதழ்களையுமே இழுத்து மூடினால் தமிழ்நாட்டிற்கு மிக நல்லது என்றே சொல்வேன்.

சங்கரன்.இ.ஆர்

அன்புள்ள ஜெ

தடம் இதழ் நிறுத்தம் பற்றி எழுதியிருந்தீர்கள். தடம் இதழ் ஏன் நின்றது? ஏன் அதை வாசகர்கள் ஏற்கவில்லை? அதை விகடன் நிர்வாகம் இனியாவது உணரவேண்டும். இன்றைக்கு விகடன்மீதும் அந்தக்கசப்பு உள்ளது. அவர்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான , இந்துப் பண்பாட்டுக்கு எதிரான ஒரு சிறு குழுவால் அது நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக கசப்புகளே வெளிவந்தன. ஏன் தடம் நின்றுபோனது? ஏன் உண்மை இதழ் மிகக்குறைவான பிரதிகள் அச்சிடப்படுகிறதோ அதனால்தான். ஏன் வினவு இணையதளம் எவரும் படிக்காமல் ஆரம்பசூரத்தனத்தோடு அடங்கினதோ அதனால்தான். ஏனென்றால் மக்களுக்கு எதிர்மறை விஷயங்க்ளை பேச இஷ்டமில்லை. இவற்றைப்பேசுபவர்களும் ஏதோ சிந்தனையாளர்கள்போல ஒரே விஷயத்தையே திரும்பத்திரும்ப பேசினார்கள். அவ்வப்போது வரும் சில விஷயங்களைத் தவிர தடம் பெரும்பாலும் வினவின் அச்சுவடிவம் மாதிரியே இருந்தது. அதன் இடம் அவ்வளவுதான்.

ஆர்.ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

தடம் இதழில் நீங்கள் எழுதினீர்கள். அவர்கள் உங்களை அவர்களுடைய தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். பெரும்பாலும் அவர்கள் ஒரு பிளான் வைத்து கட்டுரை கேட்க நீங்கள் எழுதி அனுப்பினீர்கள் என்றுதான் படுகிறது. கேட்டதுமே எஸ்.ராமகிருஷ்ணன் அல்லது தோப்பில் மீரான் பற்றி எழுதுபவர் நீங்கள் மட்டும்தான். ஆனால் உங்கள் எந்த நாவலையாவது அவர்கள் பேசியிருக்கிறார்களா? சரி, தமிழில் ஒரு சாதனையாக வந்துகொண்டிருக்கும் வெண்முரசு பற்றி இந்த அச்சிதழகளில் ஒரு வரியாவது வந்திருக்கிறதா? தமிழ் இந்து நாளிதழோ தடமோ தீராநதியோ ஒரு வரி சொல்லியிருக்கிறதா?

உங்கள் இணையதளம் இவற்றைவிடவும் அதிகமாக இலக்கியவாசகர்களால் வாசிக்கப்படுகிறது. ஐம்பது ரூபாய் அதிகம் என நினைக்கிறார்கள் என்று சொன்னீர்கள். உங்களுக்கு எப்போதாவது பணம் கேட்டு கிடைக்காமலாகியிருக்கிறதா? உங்கள் பேச்சைக்கேட்க நான் 300 ரூபாய் கொடுத்து வந்தேன். பெங்களூரிலிருந்து சென்னைக்கு டிக்கெட் போட்டேன். ஓட்டலில் அறைபோட்டு தங்கினேன். மொத்தச்செலவு 4000 ரூபாய். இலக்கியத்துக்காகச் செலவழிக்கலாம். துண்டுப்பிரசுர அரசியலை நம் மேல் திணித்தால் எதற்குச் செலவழிக்கவேண்டும்? துண்டுப்பிரசுரங்கள் சும்மாதான் கொடுக்கபடவேண்டும்

கணேஷ்குமார்

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

 

நான் என் குறிப்பில் சொன்னதுபோல தடம் இதழ் அதற்கான பார்வை கொண்டிருந்தது, அதை முன்வைத்தது. அதற்கு இணைந்தபடி இலக்கியத்தை அணுகியது

 

உங்களுக்கு உவப்பில்லாத தரப்பை முன்வைக்கும் இதழ் நின்றுபோகவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறீர்கள்? அது நின்றால் ஏன் மகிழ்ச்சி அடைகிறீர்கள்? உங்கள் தரப்பு கொண்ட இதழ் மட்டுமே வரவேண்டும் என நினைக்கிறீர்களா என்ன?

 

நீங்கள் அதை எதிர்த்து இன்னொரு இதழ் நடத்தலாம். அவ்வாறு வரும் இதழை ஆதரிக்கலாம். எல்லா தரப்பும் ஒலிக்கும் சூழலை எதிர்பார்ப்பவனே அறிவியக்கவாதி

 

ஜெ

 

எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மங்கல இசை மன்னர்கள்

$
0
0

மங்கல இசை மன்னர்கள் வாங்க…

மங்கல இசை மன்னர்கள் நூல் பற்றி

 

காவிரிக்கரையோர கிராமம் ஒன்றிற்க்கு துக்கநிகழ்வுக்கான ஒரு பயணம். துக்கவீட்டில் சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருக்க, நேரம் கடத்த அருகாமை திண்ணையொன்றிற்க்கு அழைத்துப்போனார் உடன் வந்த தாய்மாமன். இடிபட காத்திருக்கும் சுத்துகட்டு ஓட்டுவீடு. சிரிதும் பெரிதுமாய் நீள்செவ்வக வடிவிலான பழங்கால திண்ணைகள். புழக்கம் காரணமாய் வலப்பக்க சிறுதிண்ணை மட்டும் பளபளப்பை பரிமளிக்க, இடது திண்ணை மென்தூசியால் மெழுகப்பட்டிருந்தது.

”இது யாரு வீடு தெரியுமா?…” காலஞ்சென்ற பிரபல நாதஸ்வர வித்வான் ஒருவரின் பெயரை சொல்லியபடி ஆரம்பித்தவர், அவரைப்பற்றிய கதைகள் ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தார்.

”அழைச்சிட்டு போறத்துக்கு வண்டி வந்து வீட்டு வாசல்ல நின்னதுக்கப்புறந்தான் குளிக்க கிளம்புவாரு. எல்லாம் முடிஞ்சி, வண்டியேறி கச்சேரிக்கு புறப்படுறதுக்கு நாளு மணி நேரம் ஆயிரும். அதுவரைக்கும் வண்டி அங்கயே நிக்கும்…”

அவர் குறிப்பிட்ட வண்டி போலீஸ் ஜீப். அருகாமை நகர் ஒன்றில் உள்ள கோவில் விழாவிற்க்கு போலீஸ் ஸ்டேசன் சார்பாக நடத்தப்படும் வருடாந்திர மண்டகப்படிக்கான கச்சேரிக்கு செல்வதற்க்கான மோஸ்தர்.

“இப்பவும் அந்த கோவில் விழா வருசா வருசம் நடக்குது. போலீஸ் ஸ்டேசன் சார்பா மண்டகப்படியும் நடக்குது.இவரோட பையன் வாசிச்சிக்கிட்டு இருக்கார்…”

இப்பவும் போலீஸ் ஜீப் வருதான்னு கிண்டல்தொனியில் கேட்க நினைத்த நான் மாமாவின் முகபாவனையை கண்டு நிறுத்திவிட்டேன்.

“இந்த மாதிரி பழய கதையெல்லாம் சொல்லுறதுக்கு இனிமே யாரு இருக்காங்க” என்று அங்கலாய்த்தபடியே புரண்டுபடுத்துவிட்டார்.

பிறகு படித்துக்கொள்ளலாம் என்று பட்டியலில் வைத்திருந்த புத்தகத்தை உடனே வாங்க தூண்டியது அந்த பயணம். சென்னை வந்தவுடன் கவிதா பதிப்பகம் சென்று வாங்கிவந்தேன். தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்ட என் மாமாவிற்க்கான பதிலாய் பல சம்வங்களை அவருக்கே திருப்பி சொல்ல வைக்கும், சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய புத்தகம்.

1787 முதல் 1975 வரையிலான 47 தவில் கலைஞர்கள், 1815 முதல் 1988 வரையிலான 81 நாதஸ்வர கலைஞர்கள் குறித்து பிறப்பிடம், பெற்றோர், உடன் பிறந்தோர்,குருநாதர்,மனைவி,பிள்ளைகள்,சிஷ்யர்கள்,முக்கிய நிகழ்வுகள்,சுவாரஸ்ய தகவல்கள் என்ற வடிவத்தில் தொகுத்தளித்திருக்கிறார் திரு பி.எம்.சுந்தரம்.

அறம் தொகுப்பிற்க்குப்பின் ஒரே அமர்வில் இடைவேளையின்றி எனது தந்தையார் படித்து முடித்த புத்தகம். புத்தத்திலிருக்கும் தகவல்கள் பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு “எனக்கே ஆச்சரியமா இருக்கு” என்றபடி யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி என்ற புகழ்வாய்ந்த தவில் கலைஞர் எங்கள் வீட்டு விருந்தினராய் இருநாட்கள் தங்கியிருந்ததையும், அணுக்க சேவகனாய் அவருடன் இருந்த அந்த இரு நாட்களை சிறுபிராயத்துக்கே போய்விட்ட குதூகலத்துடன் விவரிக்க ஆரம்பித்தார்.

புத்தகம் செய்யும் மாயமொன்றை கண்கூடாய் பார்த்த மற்றுமொரு தருணம்.

தன் வயதையொத்த வித்வான்களை போனில் அழைத்து “ஒம்பாட்டன் என்ன பண்ணீருக்கார்ன்னு தெரியுமா…? என்று ஆரம்பித்து புத்தகத்தின் பல சம்பவங்களை சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு விவரித்து குதூகலித்துக்கொண்டிருக்கிறார்.

“சாப்பிட்டபின் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி பழைய கதைகளை எல்லாம் அப்பா சொல்வார்.அவற்றை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது.அப்படித்தான் இந்த ஆவணப்படுத்தல் தொடங்கியது.”

நூலாசிரியர் சொன்னதுபோலவே நாமும் அந்த கயிற்றுக்கட்டிலுக்கு கீழே அமர்த்து கேட்டுக்கொண்டிருப்பதை போல விவரிக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள்.
இதுவரை கேள்விப்பட்டிறாத தகவல்களும். ”சிதம்பரம் நடராஜர் ஆலயத்து எட்டாந் திருநாளில் மட்டும் ஸ்வாமி வீதியுலாவின் போது மல்லாரி வாசிக்கப்படுவது கிடையாது. மாயாமாளவகெளளை ராகத்தில், மிச்ர சாபு தாளத்தில் அமைந்த ‘ஒடகூரு’ என்ற இசை வகை மட்டுமே வாசிக்கப்படவேண்டும்”.

 

 

”மல்லாரி வகைகள் மற்றும் வாசிப்பு” பற்றிய இவரது சிறப்புரைகள் பிரசித்தம். 2009ம் ஆண்டு அமெரிக்க கிளீவ்லேண்ட் நகரத்தில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று “மல்லாரி வாசிப்பு” நிகழ்வு. நூலாசிரியர் பி.எம்.சுந்தரம் விளக்கவுரையோடு எனது தந்தையார் தவில் வாசித்த நிகழ்வை அப்போது ஒளிப்பதிவு செய்து அதன் பகுதியொன்றை யூடியூபில்(https://youtu.be/mvBqO8LQJok)பகிர்ந்திருந்தேன்.

தனது தந்தையாருக்கு (தவில் கலைஞர், நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை) சமர்ப்பணமாக “மங்கள இசை மன்னர்களை” எழுதியவர் தனது தாயார் பரதநாட்டிய கலைஞர்,தஞ்சாவூர் பாலாம்பாள் நினைவாக பரதநாட்டிய கலைஞர்களை குறித்து “மரபு தந்த மாணிக்கங்கள்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

சிலாகிக்க தக்க சுவாரஸ்ய சம்பங்கள் பல இருந்தாலும் முத்தாய்ப்பாய் ஒன்றே ஒன்று மட்டும்.

செம்பொனார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை என்னும் நாதஸ்வர வித்வானிடம் நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை என்னும் தவில்கலைஞர் பலவருடங்களாக இணைந்து வாசித்துவருகிறார். ஒரு கச்சேரியின்போது சக்திவேல்பிள்ளை ஒருகணம் கவனக்குறைவாய் இருந்துவிட்டார் என்பதற்க்கான “நீயெல்லாம் தவில் வாசிக்க லாயக்கில்லை… குதிரை வண்டி ஓட்டத்தான் லாயக்கு…: என்று கடிந்துகொள்கிறார். இந்நிகழ்விற்க்குப்பின் அடுத்தடுத்த கச்சேரிகளுக்கு வாசிப்பதற்க்கு வரவில்லையெனெ தகவலனுப்பிவிடுகிறார் சக்திவேல் பிள்ளை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கச்சேரி ஒன்றிற்க்கான கும்பகோணம் செல்கிறார் ராமஸ்வாமி பிள்ளை. ரயில் நிலையதிலிருந்து தங்குமிடம் செல்கையில் உடன் வந்தவர் ராமஸ்வாமி பிள்ளையின் காதில் ரகசியமாய் ஏதோ சொல்கிறார். வண்டியோட்டுபவரை பார்த்து பதறுகிறார் ராமஸ்வாமிப்பிள்ளை……….

வண்டியோட்டுபவர் சக்திவேல் பிள்ளை.

“சக்திவேலு! எவ்ளோ பெரிய வித்வான் நீ? இப்படி செய்யலாமா? நான் அன்று எதோ கோவத்தில் சொல்லிவிட்டேன், திரும்பவும் சேர்ந்து வாசிக்கலாம் வா….” என்று வற்புறுத்தி அழைத்தும் மறுத்திவிடுகிறார் சக்திவேல் பிள்ளை.

“உங்களை குருவுக்கு சமானமாக மதிப்பவன். குதிரை ஓட்டத்தான் லாயக்கென்று நீங்கள் சொல்லியபின் எனக்கு அதுதான் சரி….” என்று சொல்லிவிட்டு தன் வாழ்நாளில் கடைசிவரை தவில் வாசிக்காமல் குதிரைவண்டி ஓட்டியிருக்கிறார் சத்திவேல் பிள்ளை.

புத்தகத்தின் உள்ளடக்க வடிவத்தின்படி சக்திவேல் பிள்ளையின் குடும்பம், வாரிசு பற்றிய தகவல்கள் அடுத்த இரண்டு வரிகளில் கொடுக்கப்பட்டிருந்தன.

அதன்படி,

அந்த சக்திவேல் பிள்ளை எனது அம்மாவின் கொள்ளு பாட்டனார்.
முதல்பாராவில் “இந்த மாதிரி பழய கதையெல்லாம் சொல்லுறதுக்கு இனிமே யாரு இருக்காங்க” என்று அங்கலாய்த்த என் தாய்மாமனின் பெயர் சக்திவேல். ஆமாம்,
குதிரைவண்டியோட்டிய சக்திவேல் பிள்ளையின் நினைவாக கொள்ளு பேரனுக்கு வைக்கப்பட்ட பெயர்.

-யோகேஸ்வரன் ராமநாதன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மோடி முதலை பாலா- கடிதம்

$
0
0

மோடி,முதலை -கடிதம்

 

வணக்கம் ஜெ.,

 

இந்தக் கடிதத்தில் https://www.jeyamohan.in/125145#.XW9Yro9S_b0 பாலா குறிப்பிட்டிருக்கும் இரண்டு விசங்கள் குறித்த செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன.

 

/* மிகப் பிரபலமான ஜிம் கார்பெட் தேசியப்பூங்காவின் ஊடே செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது. உலகில் மிக அதிகமான புலிகளைக் கொண்ட சரணாலயம் இது*/

 

இந்தச் சாலை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Road will imperil Corbett tiger population, Centre tells National Green Tribunal

இதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

 

/* இந்தி தெரியாத பியர் க்ரில்ஸிடம் இந்தியில் மட்டுமே பேசியது.*/

 

இதற்கு ஆகஸ்ட் மாத ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் பதிலளித்துள்ளார். தான் ஒரு மைக் பொருத்தியிருந்ததாகவும் அது இணைக்கப்பட்டுள்ள கருவி உடனுக்குடன் அதை மொழிமாற்றி ஆங்கிலத்தில் பியர் க்ரில்ஸ் காதில் மாட்டியிருந்த ரிசீவர் வழியாக உரைத்தது என்றும் கூறியுள்ளார். தற்போது இந்தக் கருவியின் விளம்பரம் வந்துகொண்டிருக்கிறது. 30+ மொழிகளில் இது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உடனடி மொழிமாற்றம் செய்கிறது. உதாரணத்திற்கு இதைப் பார்க்கலாம்

Vuffuw Handheld Portable Real-Time Instant 2-Way Voice Language Translation Machine Support 39 Language Freely Translation Smart Language Translator Device

 

நன்றி,

சாய் மகேஷ்.

மோடி, முதலை,முதலீடு

மோடியும் முதலையும் -கடிதங்கள்-3

மோடியும் முதலையும் -கடிதங்கள்

மோடியும் முதலையும் -கடிதங்கள்-2

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்துமத விவாதங்கள்

$
0
0

 

அன்புள்ள ஜெ

 

நான் இந்துமதம் பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். நான் இந்துமதம் பற்றித்தெரிந்துகொண்டதெல்லாம் என் அப்பாவிடமிருந்து. அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே மிகவும் எதிர்மறையான நாத்திகப்பார்வையே எனக்கு அளிக்கப்பட்டது. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எனக்கு உங்கள் தளம் வழியாகவே இந்துமதம் அறிமுகமாகியது. இதிலுள்ள கலை, தத்துவம், மெய்யியல் எல்லாமே தெரியவந்தது. உங்கள் நூல்களை வாசித்திருக்கிறேன். நாம் பாண்டிச்சேரியில் ஒருமுறை சந்தித்திருக்கிறோம்

 

ஆனால் இப்போது இந்துமதம் சார்ந்து நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. சமீபத்தைய விவாதங்களைச் சொல்கிறேன். இந்துமதம் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் என்பதனால் பழ கருப்பையா, சுகி சிவம் போன்றவர்களை மிகக்கேவலமாக வசைபாடுகிறார்கள். உள்ளே போய் பார்த்தால் அவர்களே ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்கிறார்கள். சிறு குழுக்களாக நின்று வெறுப்பை உமிழ்கிறார்கள். இவர்களை புரிந்துகொள்ள அடிப்படை என்ன? நான் இதை உங்களிடம் கேட்கக்கூடாது என எண்ணினேன். சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரையே இதை உங்களிடம் கேட்க வைத்தது

 

ஆர். ராஜ்குமார்

 

அன்புள்ள ராஜ்

 

இந்த வகையான விவாதங்களைப் புரிந்துகொள்ள முதலில் இங்குள்ள கருத்துத் தரப்புக்களைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்துமதம் என நாம் இன்று சொல்வது ஒருபோதும் ஒற்றைப்படையான ஒரு கருத்துத்தரப்பாக, அல்லது அமைப்பாக இருந்தது இல்லை. உள்ளூர முரண்பட்டு கடுமையாக விவாதித்துக்கொள்ளும் மாறுபட்ட தரப்புக்களின் பெருந்தொகையாக, ஒருவகை கருத்துவெளியாகவே இருந்துள்ளது. இந்தப் பன்மைத்தன்மையை புரிந்துகொண்டாலொழிய நாம் இந்துமதத்தையும் புரிந்துகொள்ளமுடியாது. அதன் உள்விவாதங்களையும் புரிந்துகொள்ளமுடியாது.

 

இந்துமதம் என நாம் சொல்வது இந்தியாவில் தொல்பழங்காலம் முதல் இருந்துவந்த வெவ்வேறு தொல்குடிவழிபாடுகள் மற்றும் அவை திரட்டியெடுத்த மெய்ஞானங்கள் ஒன்றுடன் ஒன்று விவாதித்தும் இணைந்தும் உருவான ஒரு அறிவுப்பரப்பு. அந்தத் தரப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக்கொண்ட பொதுக்கூறுகளால் ஆனவை. அதேபோலவே தங்கள் தனித்தன்மையைப் பேணிக்கொள்ளவும் முயல்பவை. இச்சித்திரத்தை நாம் வரலாற்றுரீதியாக உருவாக்கிக் கொள்ளமுடியும். அதற்கு சென்ற நூறாண்டுகளில் இந்துத் தொன்மங்களையும் வழிபாட்டுமுறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள்.

 

இந்த வரலாற்றுரீதியான அணுகுமுறைக்கே எதிர்த்தரப்புக்கள் உண்டு. முதன்மையாக இரண்டு. ஒன்று மரபார்ந்த மதநிறுவனங்களையும் மதநம்பிக்கைகளையும் சார்ந்தவர்களின் தரப்புக்கள். இன்னொன்று, இந்துத்துவ அரசியல்வாதிகளின் தரப்பு.

 

மரபார்ந்த மதநம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை அவர்களின் தெய்வங்களும் சரி, மரபுகளும் சரி சனாதனமானவை, அனாதியானவை, தெய்வங்களால் உருவாக்கப்பட்டவை, மெய்யாசிரியர்களால் விளக்கப்பட்டு வரையறைசெய்யப்பட்டவை. அவை காலத்தில் பரிணாமம்கொண்டு வந்தவை என்றோ வெவ்வேறு பண்பாட்டுக்கூறுகளின் முயங்கல்வழியாகத் திரண்டவை என்றோ அவர்களால் ஏற்கமுடியாது. அவர்கள் அதை மதநிந்தனை என்றே கருதுவார்கள். ‘பல்லும் நகமும்’ கொண்டு எதிர்ப்பார்கள். அது அவர்களின் நம்பிக்கை.

 

நம்பிக்கைகளுடன் விவாதிக்கக்கூடாது என்பது என் நிலைபாடு. ஏனென்றால் நம்பிக்கையும் ஆராய்ச்சியும் நேர் எதிரானவை. நம்பிக்கையாளர்கள் ஆராய்ச்சி என்னும் அணுகுமுறையையே எதிர்க்கையில் எதை விவாதிக்கமுடியும்? அவ்வாறு எதிர்க்காமல் அவர்களால் செயல்படவும் முடியாது.

 

அவர்களின் ஆராய்ச்சி என்பது அவர்களின் மதமரபுகளில் மூலநூல்களும் ஆசிரியர்களும் என்ன சொல்லியிருக்கிறார்கள், சடங்குகளும் ஆசாரங்களும் சரியான வடிவில் என்ன என்பதாகவே இருக்கமுடியும். இரண்டு தலைப்புக்களிலேயே அவர்களின் ஆராய்ச்சி இருக்கும். நடைமுறைகள்சார்ந்த நம்பிக்கைகள் [சம்பிரதாயங்கள்] அவற்றுக்குரிய தொல்சான்றுமுறைகள் [பிரமாணங்கள்] ஆகியவை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். அவற்றைப்பற்றி அறிய அவர்கள் உதவியானவர்கள்.

 

இந்துத்துவ தரப்பினர் இந்துமதத்தின் வேறுபாடுகள் முரண்பாடுகள் அனைத்தையும் மழுங்கடித்து இந்துமதம் என்னும் ஒற்றைப்பரப்பை உருவாக்கமுயல்பவர்கள். இவர்களுக்கு மதமோ ஆன்மிகமோ உண்மையில் முக்கியமே அல்ல. இவர்களுக்கு அரசியலும் அதனுடாக வரும் அதிகாரமுமே முக்கியமானவை. அதற்கான களமே மதமும் ஆன்மிகமும். அதற்கான கருவிகளைத் தேடியே அவர்கள் மத, ஆன்மிக தளங்களுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களின் பரப்பாகவே மதத்தைப் பார்க்கிறார்கள். அது எந்த அளவு சமப்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவு சிக்கலற்றது. ஆகவே இடைவெளியே இல்லாத ‘தரப்படுத்தல்’ மட்டுமே அவர்களின் பணியாக இருக்கும்.

 

இத்தரப்படுத்தலால் இந்துமதம் போன்ற பிரிந்துபிரிந்து வளர்ந்து செல்லும் தன்மைகொண்ட மதம் இறுக்கமாக அமைப்பாக ஆகிவிடுவதைப்பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. உள்விவாதங்கள் மறுக்கப்படும்போது காலப்போக்கில் ஒற்றை அதிகார மையமாக இது மாறிவிடும் என்றும் அவர்கள் அறிவார்கள், அதையே அவர்கள் விழைகிறார்கள். மூர்க்கமான விவாத மறுப்பு இந்துமதத்தின் ஞானம் செயல்படும் முறைமைக்கே எதிரானது என அறிவார்கள், ஞானம் செயல்படக்கூடாதென்றே எண்ணுகிறார்கள். அவர்கள் இந்துமெய்ஞான மரபின் எந்த ஞானியையும் எந்த பேரறிஞரையும் தங்கள் அரசியலுக்கு ஒத்துவராதவர்கள் என்றால் இழிவுசெய்ய, வசைபாட எந்தத் தயக்கமும் கொள்வதில்லை. அவர்களும் வரலாற்றுரீதியான அணுகுமுறையை அஞ்சுகிறார்கள். வசைபாடியே அதை ஒழிக்க நினைக்கிறார்கள்.

 

என்னைப்பொறுத்தவரை மதநிறுவனங்கள் சார்ந்த, ஆசாரத்தில் ஆழமான பிடிப்புள்ள பழைமைவாதிகளை மதிக்கிறேன். அவர்களே மெய்யான தூய்மைவாதிகள். அவர்களுக்கு எந்தக்கருத்துச்சூழலிலும் தவிர்க்கமுடியாத இடமுண்டு. அவர்கள் சென்றகாலத்தின் பிரதிநிதிகள். மரபின் தொடர்ச்சிகள்.நிலைச்சக்திகள். அவர்கள் இல்லையேல் எந்த மத- தத்துவ – ஆன்மிக அமைப்பும் அடித்தளமில்லாமல் காகிதவீடுபோல பறந்துசெல்லும். ஆனால் அரசியல்ரீதியாக மத – ஆன்மிக செயல்பாடுகளை தரப்படுத்த முயல்பவர்களை எதிர்க்கிறேன். அவர்கள் காலப்போக்கில் இந்துமெய்யியலின் அடிப்படையையே அழித்துவிடுவார்கள். இதையே எப்போதும் சொல்லிவருகிறேன்.

 

ஒட்டுமொத்தமாக மதம்சார்ந்த விவாதங்களில் நம் சூழலில் கேட்கும் குரல்கள் என்னென்ன? ஐந்து பெருந்தரப்புக்களாக இவற்றை ஒழுங்கமைத்துப் பார்க்கலாம்.

 

ஒன்று இந்துமதத்தின் ஏதேனும் ஒரு பிரிவின்மேல் ஆழ்ந்த பற்றுகொண்டு அதில் ஈடுபடுபவர்கள் பிறரை மறுத்து எழுப்பும் விவாதங்கள். உதாரணமாக, சைவ வைணவ பிரிவுகளின் குரல்கள்.. அவை நம்பிக்கை வெளிப்பாடுகள், ஆகவே பொதுவிவாதத்திற்குரியவை அல்ல என்பதே என் எண்ணம். ஆனால் அவ்விவாதம் எழுவதை தடுக்கவும் முடியாது. ஏனென்றால் அது நம்பிக்கையின் இயல்பு. அந்த விவாதம் நாகரீக எல்லையைக் கடக்காதவரை, இந்துமத எல்லைகளை இழிவுசெய்யாதவரை நன்று.

 

இரண்டாம்வகை விவாதம்  இந்துத்துவ அரசியலாளர்களுடையது. அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒற்றைப்படையான ஒரு இந்துமத உருவகத்திற்கு எதிரானது என அவர்கள் எண்ணும் அனைத்தையும் வசைபாடி மறுப்பார்கள். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அனைத்துக்குரல்களையும் எதிரிக்குரல்கள் என்று சித்தரிப்பது அவர்களின் பாணி. இவர்களுக்கு மதப்பிரிவுகளில் நம்பிக்கைகொண்டவர்களும் எதிரிகள்தான். மதத்தை ஆய்வுநோக்கில் அணுகுபவர்களும் எதிரிகள்தான்.

 

மூன்றாவது தரப்பு, இந்தியவியலாளர்களுடையது. இந்தியவியல் என்பது இந்தியவரலாறு, தத்துவம், மெய்யியல் ஆகியவற்றை புறவயமான ஓர் அறிவுத்துறையாகப் பயிலும்பொருட்டு ஐரோப்[ப்பிய அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. மோனியர் விலியம்ஸ் முதல் நார்மன் போலக்,வெண்டி டானிகர் வரை அதன் அறிஞர் நிரை மிகப்பெரியது. இந்துமெய்யியலை கண்டடைய, தொகுக்க அவர்கள் எடுத்த முயற்சி போற்றற்குரியது. அவர்கள் இல்லையேல் இந்தியமெய்ஞானம் அழிந்திருக்கும். இந்திய மெய்ஞானம் ஒற்றை கருத்தமைப்பாகத் தொகுக்கவும்பட்டிருக்காது.

 

அவர்களுக்குள் பலதரப்பினர் உண்டு. பலகருத்துநிலைகளை அவர்கள் முன்வைப்பதுண்டு. அது சார்ந்த விவாதங்களும் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரையும் பயின்று அவர்களின் கருத்துக்களை புறவயமாக பரிசீலித்து ஏற்றுக்கொள்ளுவதே நாம் செய்யவேண்டியது.

 

நான்காவது, மதத்தை அழிக்க எண்ணும் நாத்திக அரசியல் தரப்பு. இவர்களுக்கு மதம் என்பது மூடநம்பிக்கை. பழைமை. நிலப்பிரபுத்துவம். அதை அழிக்கும் அரசியலே விடுதலைக்குரியது. இவர்களில் பல உட்தரப்பினர் உண்டு. திராவிட இயக்கம்போல மதத்தை ஒட்டுமொத்தமாக வெறும்மூடநம்பிக்கை என எதிர்ப்பவர்கள். மதம்சார்ந்த அறிதல்களோ அதற்கான அறிவார்ந்த முயற்சியோ இவர்களுக்கு இருப்பதில்லை. இன்னொரு தரப்பினர் இடதுசாரிகள். இவர்களில் மதத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் ஒரு முரணியக்கப் பரிணாமத்தால் உருவாகி வந்தது என கருதும் பேரறிஞர்கள் முதல் எளிய தொண்டர்கள் வரை உண்டு. மூன்றாம் தரப்பு அயோத்திதாசர்- அம்பேத்கர் வழிவந்த தலித் ஆய்வாளர்கள். இவர்களுடையது சமூகவியல்கோணத்தில் மட்டுமே இந்துமதத்தை அணுகுவது.

 

திராவிட இயக்கத்தவருக்கு இந்துமதம் பற்றிய அறிதல்கள் பெரும்பாலும் முழுச்சூனியம். அவர்கள் தங்கள் கருவிகளை இடதுசாரிகளிடமிருந்தும் அயோத்திதாசர்- அம்பேத்கர் போன்றவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள். திராவிட இயக்கத்தினரின் மதம்சார்ந்த ஆய்வுகளும் கருத்துக்களும் எவ்வகையிலும் கவனத்திற்குரியன அல்ல. தலித் ஆய்வாளர்களின் மதம்சார்ந்த கருத்துக்கள் இந்துமதம் குறித்த சித்தரிப்பில் விடுபட்டுவிடும் சில முக்கியமான தளங்களை கருத்தில்கொள்வதற்கு மிகமிக இன்றியமையாதவை.

 

மார்க்ஸிய நோக்கில் மதத்தை ஆராய்பவர்களின் குரல்களை மதத்தை அறியவிரும்புபவன் ஒருபோதும் தவிர்க்க முடியாது. அவர்களின் ஆய்வுக்கருவிகள் புறவயமானவை. சான்றுகளை தொகுப்பதற்கு அவர்கள் கைக்கொள்ளும் முறைமைகள் இந்தியவியலாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவை. அவர்கள் ஒருவகையில் இந்தியவியலாளர்களின் நீட்சிகள். அவர்களின் பார்வைக்கோணத்தை மறுப்பதற்குக்கூட அவர்களைப் பயின்றாகவேண்டும். இந்துமெய்மரபின் உள்ளடுக்குகளை, அவை உருவாகிவந்த சமூகப்பொருளியல் சூழலை, அவற்றுக்கிடையேயான முரண்பாட்டையும் விவாதங்களையும் , அவற்றின் தத்துவார்த்தமான மதிப்பை புரிந்துகொள்ள இவர்கள் இன்றியமையாதவர்கள். எந்தத் தரப்பினருக்கானாலும்.

 

ஐந்தாவது தரப்பு, மாற்றுமதத்தினர். இவர்களுடையது பெரும்பாலும் மதவெறி.தன் மதமே உயர்ந்தது, அதை நிறுவுவது மதக்கடமை என்னும் எண்ணம். தமிழ்ச்சூழலில் இவர்கள் தங்களை திராவிட இயக்க ஆதரவாளர்களாகவோ தலித் இயக்க ஆதரவாளர்களாகவோ  மாற்றுருக்கொண்டு முன்வைப்பார்கள். சிலர் அரிதாக தங்களை இடதுசாரிகளாகச் சித்தரித்துக்கொள்வார்கள்.இவர்கள் அடையாளம்கண்டுகொள்ளப்படவேண்டியவர்கள்.

 

இவற்றில் நீங்கள் எங்கே நின்றிருக்கிறீர்கள், உங்கள் அணுகுமுறை எதனுடன் ஒத்துப்போகிறது என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். அது இல்லாமல் இப்படி அவ்வப்போது எழும் பொதுவான விவாதங்களில் ஈடுபடுவதும் நிலைபாடு எடுப்பதும் குழப்பத்தையே உருவாக்கும். உங்கள் நிலைபாடும் எதிர்வினையும் தெளிவாகியது என்றால் அத்தனைபேரையும் ஒட்டுமொத்தமாக ‘இந்துமதம் பற்றி பேசுபவர்கள்’ என்னும் அடையாளத்திற்குள் அடைக்கமாட்டீர்கள்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்

$
0
0

காந்தி – வைகுண்டம் – பாலா

திரு பாலா அவர்களின் நீண்ட பதிலில் மேட்டிமை வாதம், மனச்சாய்வு போன்ற சொற்கள் சற்று வருத்தமளிக்கின்றன.

.

மக்கள் நலத்திட்டங்களும், ஏன் இலவசங்களும்,  தவறு என்று நான் சொல்லவேயில்லையே. தொழில் வளர்ச்சி காணும் சமூகத்தில் மட்டுமே இவை சாத்தியம் என்ற என் கருத்தை  சொன்னேன். தமிழ்நாட்டின் மக்கள் நலத்திட்டங்கள்  டாஸ்மாக்கினாலும், திருப்பூர், ஓரகடத்தினாலும் சாத்தியம் ஆகின்றன என்கிறேன்.

 

இதையும் தீர்வாகச் சொல்லவில்லை. ஐயமாகவே  .சொல்கிறேன். மாற்றுக்கருத்துக்கு தற்கால தரவு உண்டா என்றே கேட்கிறேன். பொருளாதாரத்தை மையப்படுத்தும்போதே  உபரி சேர்கிறது. உபரி சேரும்போதே  நலத்திட்டங்கள் உருவாகின்றன. ஆனால், காந்தியம் மையப்படுத்துதலை ஒவ்வாமையுடன் பார்க்கும் பொது இதில் அடிப்படை முரண் இல்லையா?

 

ஆகவே, இந்த முரணை விவாதிக்கும் தற்கால நூல்கள் உள்ளனவா என்று கேட்டேன். 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை விவாதிக்கும் கட்டுரைகள் பல. சுற்றுச்சூழல் மாசை விவாதிக்கும் கட்டுரைகள் பல. மக்கள் நலத்திட்டங்களின் அவசியத்தை விளக்கும் கட்டுரைகள் பல. இவற்றை ஒரு சேர விவாதிக்கும் கட்டுரைகள் எனக்கு கிடைக்கவில்லை.

 

How much should a person consume? – Ramachandra Guha, படிக்க தொடங்கியிருக்கிறேன். வேறு நூல்கள்/ கட்டுரைகள்  இருந்தால் சொல்லுங்கள். படித்துவிட்டு  பின்னும் சந்தேகம் இருந்தால் கேட்கிறேன் . நன்றி.

 

 

வைகுண்டம்

மதுரை

 

 

திரு.பாலா மற்றும் வைகுண்டம் ஆகிய இருவரின் உரையாடல்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அதில் திரு பாலா அவர்களின் கடிதம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஏனென்றால் வைகுண்டம் அவர்களின் கடிதத்தில் இருந்த கேள்விகள் எனக்குமுரியவை. இந்த காந்தியப்பார்வை, நுகர்வுக்கட்டுப்பாடு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நவீன முதலாளித்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் நடைமுறைத்தன்மை பற்றிய கேள்விகள் அவை.

 

உண்மையில் இதெல்லாம் பேசுவது எளிது. ஒரு நவீன அரசின் தேவைகளுக்கு இந்தவகையான பொருளியல் உதவுமா என்ற சந்தேகம் நம்மைப் போன்றவர்களுக்கு எழும். டிராக்டர் சாணிபோடுமா என்று குமரப்பா கேட்டார் என்பார்கள். போடாது, ஆனால் வைக்கோலும் தின்னாது என்பதே பதில். ஒரு டிராக்டர் அளவுக்கு வேலைசெய்ய பத்து காளைகள் வேண்டும். பத்து மனிதர்கள் வேண்டும். இவர்கள் பயன்படுத்தும் ஆற்றலில் ஐந்திலொருபங்குகூட டிராக்டருக்குத்தேவையில்லை. டிராக்டர் ஆற்றலை மிச்சப்படுத்துவது. இது ஒருபார்வை.

 

ஆகவே இத்தகைய விவாதங்களில் மறுப்புகளும் சந்தேகங்களும் முக்கியமானவை. திரு பாலா அதை எதிர்கொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பது. அவர் ஐயம் தெரிவிப்பவர்களை எதிரிகளாக்கி, சுரண்டுபவர்களாகவே உருவகித்துக்கொள்கிறார். நம்முடன் சேராத அனைவரையும் எதிரியாக்கி வசைபாடுவதே விவாதம் என்ற மனநிலையை முகநூல் போன்றவை உருவாக்கிவிட்டன. வருத்தமான விஷயம்.

 

 

ஜி.திருவாசகம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

16- 08-2019- கடிதங்கள்

$
0
0

போகன்

கவிஞனின் ஒருநாள்

அன்புள்ள ஜெ

 

கவிஞனின் ஒருநாள் ஒரு நல்ல குறிப்பு. அப்படி அடையாளம் காட்டியிராவிட்டால் அந்த ஒருநாள் எவராலும் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும். ஒருநாளில் இவ்வளவு அற்புதமான கவிதைகளை ஒரு கவிஞன் எழுதியிருக்கிறான் என்பதே மிகமுக்கியமான விஷயம்தான். இன்னும் சில ஆண்டுகளில் இந்த ஒருநாள் ஒருவேளை நிறையவே பேசப்படக்கூடியதாக ஆகிவிடலாம். ஆனால் இப்படி அடையாளம் காட்டினால்மட்டுமே முகநூலில் அந்த நாளுக்கு முக்கியத்துவம் வருகிறது. அதுதான் முகநூலின் பிரச்சினை

 

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

போகன் சங்கரின் அந்த ஒருநாள் கவிதைக்கொந்தளிப்பு அபாரமான அனுபவம் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு மாதிரி. ஆகவே பொதுவாக அந்த மனநிலை என்ன என்று கூறிவிடமுடியவில்லை. அனேகமாக ஒவ்வொரு கவிதையையும் ஒவ்வொரு எல்லையிலிருந்து தொடங்கியிருப்பார் என நினைக்கிறேன். அல்லது கவிதைகளை அவர் வெறுமே முந்தைய கவிதையின் சொல்லில் இருந்து தொடங்கியிருப்பார்.

 

எல்லா கவிதையுமே சிறப்பாக வந்த ஒரு வெளிப்பாடு இது. இது தமிழில் அபூர்வமாகவே நடந்திருக்கிறது

 

செல்வக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

போகன்சங்கரின் கவிதைத்திருநாள் அற்புதமானது .நீரில் அளைவதோர்
ஒளிப்பிறழ் கை.நிலத்தில் திரிவதோர் மாய உடல். எனக்குப்பிடித்த கவிதை எல்லா கவிதைகளுமே அழகானவை

 

ஆனால் மிகமுக்கியமான ஒன்று உண்டு. நம் கவிஞர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இப்படி கவிதைக்கொந்தளிப்பு அடையவேண்டும் என்றால் அது காமம்தான் காரணமாக இருக்கும். காமமே இல்லாமல் ஆன்மிகமான ஒரு எழுச்சியால் இந்த அளவுக்கு கவிதைகளை கண்டடைந்திருப்பது தமிழில் மிக அபூர்வமான நிகழ்வு

 

ராஜசேகர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திப்பு சுல்தான் யார் –பி.ஏ.கிருஷ்ணன்

$
0
0

 

திப்பு மறுபடியும் பேசப்படுகிறார்.சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது
பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய வரலாற்றின் மிகப் பெரிய கொடுங்கோலர்களில் ஒருவர்.

 

வரலாறு என்ன சொல்கிறது?இதை அறிய நாம் சில கேள்விகளக் கேட்க வேண்டும். பதில்களை வரலாற்றுப் புத்தகங்களில், வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளில் தேட வேண்டும்.

 

திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது?

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பழையமுகம் (சிறுகதை)

$
0
0

பதினொரு மணிக்கு மேலேதான் கூட்டி வருவதாகச் சொல்லியிருந்தான் கல்யாணம். அதுவரைக்கும் அவனுக்கு செய்யும்படியாக வேலை என ஏதும் இல்லை. அவன் சென்று பார்க்கவேண்டியிருந்தவரை மதியமே சந்தித்துவிட்டான். மாலைவரை, இரவு வரை கூட நீளும் என அவன் நினைத்திருந்த வேலை பத்து சொற்றொடர்கள் மற்றும் சில சங்கடமான புன்னகைகள், இறுக்கமான மௌனத்துடன் முடிந்து விட்டது.

அவன்கு மணிக்கு அவன் அந்தப் பெரிய மரக்குடோனில் இருந்து வெளியே கிளம்பியபோது விடுதலை உணர்வையே அடைந்தான். சில நிமிடங்கள் நீடித்த தளர்ச்சி சாலையில் நடக்க நடக்க கரைந்து இல்லாமலாகியது. சாலையின் வலப்பக்கம்  நல்ல நீலநிறமான ஆறு வந்துகொண்டே இருந்தது. அதில் சில சிறிய படகுகள் சென்றுகொண்டிருந்தன. ஆற்றின் மீதிருந்து குளிரான காற்று வந்து சட்டைக்குள் புகுந்து உடம்பை தழுவி சிலுசிலுவென ஓடியது. மழைவிட்டு வரும் வெயில் போல வெப்பமில்லாத வெளிச்சம்.

அவனுக்கு ஒரு டீ குடிக்க வேண்டும்போல் இருந்தது. சற்றுமுன்புதான் அவன் சந்திக்க வந்தவர் அவனுக்கு ஒரு டீ கொடுத்திருந்தார். கம்பிவளையங்களில் மாட்டப்பட்ட கண்ணாடி டம்ளரில் வந்த டீ ஆறிப்போய் ஆடைகட்டி இருந்தது. அவன் சில மடக்குகள் குடித்துவிட்டு அதை அப்படியே வைத்துவிட்டிருந்தான். இப்போது டீக்கடைக்காக தேடியபோது எங்கும் கண்ணில் படவில்லை. அந்தச்சாலையில் மக்கள் நடமாட்டமே மிகவும் குறைவாக இருந்தது. அவ்வப்போது சில டிம்பர் லாரிகள் மட்டும் இரைந்தபடிச் சென்றன. சில சைக்கிள்கள் நிழல்சரிய களைப்புடன் கடந்து சென்றன.

அவன் மேற்கொண்டு என்ன செய்வது என்று சிந்தித்தான். நகரத்தின் நடுவே இருந்த விடுதியறைக்குச் சென்று படுத்துவிடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் நேற்று மாலை அவன் அந்த அறைக்கு வந்தது முதல் அப்படியே படுத்துக்கொண்டுதான் இருந்தான். இன்று காலையில் கூட பதினொரு மணிவரைக்கும் அவன் எழவில்லை. பின்பு எழுந்து காபி வரச்சொல்லி குடித்து விட்டு அவர்கள் கதவுக்குக் கீழே போட்டிருந்த மலையாளத் தினசரியை எடுத்து தலைப்புகளை வாசித்து விட்டு மீண்டும் கட்டிலில் படுத்து மேலே பிளாஸ்டர் போடப்பட்ட கூரையையே பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு டிவியை போட்டு பழைய பாட்டுகளை மதியம் வரை பார்த்தான். பசித்தபோதுதான் கீழே வந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே கிளம்பினான். குளிக்கவில்லை.

அப்போது அவனுக்கு ஒன்று தோன்றியது, அந்தச் சந்திப்பு அப்படி முடியவேண்டும் என்றுதான் அவனே நினைத்தானா என்று. அதுதான் அவனுக்கு அதுவரை நிகழ்ந்த விஷயங்களுக்கு சரியான பொருத்தமான அடுத்த நிகழ்ச்சி என்று மனம் எண்ணிவிட்டிருந்தது. இல்லையேல் ஏன் அவன் குளிக்காமல், ஷேவ் செய்துகொள்ளாமல், நல்ல சட்டை கூட மாற்றாமல் கிளம்பி வரவேண்டும்? இளைமையில் என்றால் இப்படி ஒரு சந்திப்புக்கு அவன் எத்தனை உற்சாகமாக , எவ்வளவு எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் கிளம்பியிருப்பான். அந்த நம்பிக்கை உள்ளே இருந்து கழன்றுவிழ ஆரம்பித்ததும் எல்லாமே போய்விடுகின்றன.

சலிப்புடன் நின்று ஆற்றைப் பார்த்தான். ஆற்றில் ஒரு சிறிய படகில் செல்லவேண்டும் போலிருந்தது. ஒரு படகுக்காரனிடம் கேட்டுப்பார்த்தால் என்ன? ஆனால் அப்பகுதியில் படகுகள் ஏதும் ஒதுங்குவதாக தெரியவில்லை. சாலையோரம் நின்ற கொன்றை மற்றும் இலுப்பை மரங்களின்  கிளைகள் சரிந்து நீருக்கு மேல் தவழ முயல்வது போல நின்றன. அவை குனிந்து தண்ணீர் குடிப்பது போல அவனுக்கு தோன்றியது. ஆற்றின் விளிம்பில் மிகச்சரிவாக கருங்கற்களை அடுக்கியிருந்தார்கள். நீர் விளிம்பு கரடுமுரடான கற்பரப்பில் மெல்ல வருடி நெளிந்துகொண்டிருந்தது

சினிமாவுக்குச் செல்லலாம் என்று நினைத்தான். ஆனால் அந்த நினைப்பு வந்ததுமே மனம் எதிர்த்துவிட்டது. அவனால் ஒரு திரையரங்குக்குள் இரண்டரை மணிநேரம் உட்கார்ந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏற்கனவே பலமுறை சலிப்புற்ற வேளையில் சினிமா பார்க்கச் சென்று பத்து நிமிடங்களுக்குள் வெளியே வந்திருக்கிறான். சொல்லப்போனால் இந்த மூன்று வருடத்தில் அவன் ஒரு படத்தைக்கூட உட்கார்ந்து பார்த்ததில்லை. ஆனாலும் அலுப்பும் தனிமையும் அழுத்தும்போது சட்டென்று அவன் திரையரங்குகளுக்குள் நுழைந்துகொண்டுதான் இருந்தான்.

ஒருகாலத்தில் அவனுக்கு சினிமா உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அவனுடைய சிறிய நகரத்தின் பதிமூன்று திரையரங்குகளிலும் வரும் பெரும்பாலான படங்களை அவன் பார்த்துவிடுவான். அனேகமாக தினமும் மாலையில் இரண்டாவது ஆட்டம் பார்ப்பதுண்டு. மாலை ஏழுமணி வாக்கில் சண்முகம் டூவீலர் ரிப்பேர் கடையில் கூடி பேசி சிரித்து பரோட்டா சிக்கன் சாப்பிட்டுவிட்டு படம்பார்க்கக் கிளம்பும் ஏழெட்டுபேர் கொண்ட குழு இருந்தது. எவருக்குமே எதைப்பற்றியும் அக்கறை இருக்கவில்லை. பேச்சு முழுக்க சினிமாதான். சினிமாவை விட சினிமா வம்புகள். ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமாக அவர்கள் எடுக்கவிருந்த சினிமாக்கள் இருந்தன. கணேசன் ஒரே ஒரு பாட்டில் ஒரே ஒரு முறை தெரிந்த நடிகைக்குக் கூட பெயர் தெரிந்து வைத்திருந்தான். அவனை அதில் வெல்ல ஆளில்லை.

அப்போதுதான் அவன் கல்யாணத்தை நினைத்துக்கொண்டான். அந்த நகருக்கு அவன் இரண்டாம்முறையாக வந்தபோது அறிமுகமானவன். செல்போனில் எண் இருக்கிறதா என்று தேடினான். இருந்தது. அவன் குரலைக் கேட்டதுமே கல்யாணம் அடையாளம் கண்டு கொண்டான். சிலருக்கு அந்த மாதிரி அபாரமான குரல் சார்ந்த நினைவு உண்டு. அவனுக்கு சுத்தமாக அது கிடையாது. முகங்களையும் அவனால் நினைவில் வைத்திருக்க முடியாது. அவன் மனத்தில் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளைத்தான் அவனால் மீண்டும் நினைவுகூர முடியும்.

”என்னண்ணா எப்டி இருக்கீங்க? சொல்லவே இல்லையே” என்றான் கல்யாணம். ”என்ன, எங்க தங்கல்? ஆதிராவா? சூப்பர் எடமாச்சே…அண்ணாவை பாக்க வரலாமா” ”வாடா…எதுனா இருக்கா?” ”இருக்கு அண்ணா…நல்ல பலமான  கை ஒண்ணு இருக்கு. நெறம்னா–” ”டேய் நீ சும்மா வர்ணிச்சிட்டிருக்காதே… சொல்றதெல்லாம் கவிதை கவிதையா சொல்லுவே” ”என்னண்ணா இப்டிச் சொல்லிட்டீங்க? நான் என்னைக்கு அண்னனுக்கு— ” ”சரிடா..பாத்து செய்… நமக்கு கட்டுப்படியாற மாதிரி…”

கல்யாணம்தான் பதினொரு மணி தாண்டி வருவதாகச் சொன்னான். ஆதிரா அவனுக்கு தெரிந்த ஓட்டல்தான். பிரச்சினை இல்லை.  ஆனால் கீழே சைவ ஓட்டல் இருப்பதனால் பத்து மணி வரைக்கும்கூட நல்ல சந்தடி இருக்கும். பதினொரு மணிக்கு இன்னும் நெடுநேரம் இருக்கிறது. என்ன செய்வதென தெரியவில்லை. சாலையில் ஒரு ஆட்டோ வந்ததும் நிறுத்தி ஏறிக்கொண்டான். ஒரு நினைப்பும் இல்லாமல் கோயிலுக்குப் போகச் சொல்லிவிட்டான்.

அந்த ஊருக்கு அதுதான் மையமான கோயில். ஆனால் மிகச்சிறிய ஒரு பகவதி கோயில் அது. கோயில் வளைப்பு மிகப்பெரியது. மூன்று ஏக்கர் இருக்கும். குட்டையான சுற்றுமதிலுக்குள் கூம்புவடிவமான ஓட்டுக்கூரையுடன் வட்டமான சிறிய கருவறை மட்டும்தான். சிறிய ஒரு தேர்கூண்டு மாதிரி இருந்தது. கோயிடிலுக்கு முன்னால் தகரக்கூரை போட்டு நீளமான முகப்பு செய்திருந்தார்கள். வரிசையாக நின்று கும்பிடுவதற்கான ஸ்டீல் கம்பிகள் நடப்பட்டிருந்தன. நடுவே வெண்கலத்தில் பளபளவென்று உண்டியல்.ஓடுபோட்ட கூரையும் இருபக்கமும்திண்ணையும் கொண்ட வாசல்முகப்பில் மேலே ”அம்மே பகவதீ நாராயணீ’ என்ற எழுத்துக்கள் மீது நியான் விளக்கு ரத்தக்குழாய் மாதிரி ஓடியது.

அவன் ஆட்டோவை அனுப்பிவிட்டு கோயில் முகப்பில் சென்று சட்டையைக் கழட்டிவிட்டு உள்ளே சென்றான். கோயில் ஆறுமணிக்குமேலேதான் கூட்டம் வரும் போல. பூசாரி கண்ணில் படவில்லை. கருவறை திறந்திருக்க செம்பருத்தி மலரால் மாலை அணிந்து வெள்ளிக் கண்மலர்களுடன் பகவதி இருட்டுக்குள் தெரிந்தாள். ஒரே ஒரு சிறிய நெய்விளக்கு பூ மாதிரி தெரிந்தது. கேரளக்கோயில்களுக்கே உரிய களபமும் குங்குமமும் தேங்காய்நீரும் கர்ப்பூரமும் தேங்காயெண்ணையும் கலந்த வாசனை

அவன் பகவதியையே பார்த்துக்கொண்டிருந்தான். எதுவும் வேண்டிக்கொள்ள தோன்றவில்லை. சரஸ்வதி எல்லா கோயில்களிலும் நெக்குருக வேண்டிக்கொள்வாள். அப்போது அவள் முகம் அழுவது போலிருக்கும். சிலசமயம் அவள் மெலிதாக விசும்பி அழுவதுகூட உண்டு. அவன் ஆரம்பத்தில் என்ன என்ன என்று திரும்பத்திரும்ப கேட்டிருக்கிறான். ”ஒண்ணுமில்லை..மனசுக்கு தோணிச்சு” என்பாள். சிவந்த மூக்கை முந்தானையால் பிழிந்து கொள்வாள். பிறகு அவனுக்கு தெரிந்து போய்விட்டது. சரஸ்வதி தனிமையில் இருந்தாலே அழ ஆரம்பித்துவிடுவாள். அழுவது அவளுக்கு தேவைப்பட்டது. அழுது முடிந்ததும் வரக்கூடிய புத்துணர்ச்சியை அவள் விரும்பியிருக்கலாம்.

அவன் படிகளில் இருந்து கொஞ்சம் செந்தூரம் எடுத்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு மீண்டும் கைகூப்பிவிட்டு வெளியே வந்தான். அங்கே டீக்கடை இருந்தது. ஒரு டீக்குச் சொன்னான். ”சாரினு தமிழுநாடா?” ”ஆமா” ”கலெக்சனா?” அந்தப்பகுதியில் மதுரைப்பகுதி அண்ணாச்சிகள் வட்டிக்கு விட்டு வசூல் செய்துகொண்டிருந்தார்கள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. முரட்டு வட்டிக்காரர்களில் ஒருவனாக தன்னை நினைப்பது கஷ்டமாக இருந்தது.

ஆனால் அவனும் அப்படித்தான் இருந்தான்.ஐம்பதுக்கு இன்னும் ஒருவருடம். தொப்பை சரிந்துவிட்டது. கண்ணுக்கு கீழே கனமான தொங்கல். நீர் கோத்த கண்கள். உப்பிய கன்னங்கள். தவளைத்தாடை. முன்வழுக்கை. கருமையான நிறம். அவனை கண்ணாடியில் பார்க்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் அவன் தன்னை விஜயகாந்த் போலிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தான். முண்டா நன்றாக முறுக்கேறி இருந்தது. பிரபாவதிகூட  அவனை அடிக்கடி அப்படிச் சொல்வதுண்டு. ஒருவேளை அப்படிச் சொல்வது அவனுக்குப் பிடிக்கும் என்று நினைத்திருப்பாள். அவள் சரிதா போலிருப்பதாக அவன் அடிக்கடிச் சொல்வதற்கு கடன் தீர்த்ததாகவும் இருக்கலாம். அவனுக்கு  சிரிப்பு வந்தது.

மீண்டும் ஆட்டோ பிடித்து ஆதிராவுக்குச் சென்றான். அறைக்குள் போனதுமே சட்டையைக் கழற்றி லுங்கி மாட்டிவிட்டு தன் தொப்பையை கண்ணாடியில் பார்த்தான். தொடைகள் அத்தனை பெரிதாக இருப்பதே ஆபாசமாக அவனுக்குப் பட்டது. மீசையில் நிறம் பூசி பல நாட்கள் ஆகிவிட்டிருந்ததனால் மேலே வெள்ளையாக ஒரு மேல்விளிம்பு தெரிந்ந்தது. நுனியில் தவிட்டு நிறமாக இருந்தது. பெருமூச்சுடன் அவன் தன் பெட்டியை திறந்து உள்ளே இருந்து புதிய திரிப்பிள் எக்ஸ் ரம் புட்டியை எடுத்து உள்ளங்கையில் அறைந்து லுங்கிநுனியால் பற்றி மூடியை திறந்தான். டம்ளரில் நீர் விட்டு அதில் ரம்மை கொட்டி அப்படியே குடித்தான்.

குமட்டியபடி டீபாயில் தேடினான். காய்ந்த பொட்டலங்கள்தான் கிடந்தன. ஏதுமில்லை. சிகரெட் கூட இல்லை. ஆஷ்டிரேயில் கிடந்த சிகரெட் குச்சிகளை எடுத்து வாயில் போட்டு மென்றான் . புகையிலை வாசனை குமட்டலைக் குறைத்தது. மீண்டும் குடித்தான். முழுப்புட்டியையும் குடித்துவிட்டு ஜன்னல்கட்டை மேல் வைத்தபின்னர்தான் புழுக்கத்தை உணர்ந்தான். மின்விசிறியை போட்டுவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டு அதன் சுழற்சியையே பார்த்துக்கொண்டிருந்தான். தொண்டை கரித்தது. அவனுடைய இரு கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகி பக்கவாட்டில் வழிந்தது.

அவன் வாசலில் மணியோசை கேட்டுதான் விழித்தான். நல்ல இருட்டு. சத்தமே இல்லை. விளக்கை போட்டு விட்டு கதவைத் திறந்தான். கல்யாணம்தான். ”என்ன அண்னா, அதுக்குள்ளேயா? இப்பதானே நைட்டு ஆரம்பிச்சிருக்கு” என்றான். அவன் சிரிக்காமல் ”என்ன ஆச்சு?” ”கீழ இருக்கு. ஆட்டோவிலே. அண்ணன் செல்போனிலே ரிப்ளை இல்லை. அதான் வந்தேன்” ”தூங்கிட்டேன்” ”கூட்டிட்டு வரவா” ”ம்ம்”. ” அஞ்ஞூறு குடுங்க” ”என்னடா?” ”இல்லண்ணா… எல்லாத்துக்கும் ஒரு வெலவாசி இருக்குல்ல…தப்பா நெனைக்காதீங்க. ஆளைப்பார்த்தா ஆயிரம்கூட குடுப்பீங்க” ”அதான் மொத்தமா?” ”இல்லண்ணா. இது கன்வேயன்ஸ் நம்ம கமிஷன் அப்றம் கம்பெனிக்கு.. நீங்க அதுக்கு நீங்களா பாத்து முந்நூறோ அதுக்குமேலேயோ..” ”டேய்” ”அண்ணன் மனசு தெரியாதா எனக்கு…வாறேண்ணா”

கல்யாணம் பணத்தை வாங்க்கிக் கொண்டு கீழே சென்றதும் அவன் பாத்ரூமுக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டான். வாயையும் நன்றாக கொப்பளித்தான். மேஜைமேலும் டீபாயிலும் கிடந்த பொட்டலக்காகிதங்களை சேகரித்து சுருட்டி குப்பைக்கூடையில் போட்டு சட்டை போட்டுக்கொண்டான். காலடி ஓசை கேட்டது. சட்டென்று அவனுக்கு போகச்சொல்லிவிடலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணத்துடன் அவன் நிற்கும்போது கல்யாணம் கதவைத் திறந்து ”அண்ணா” என்றான்.

”வாடா”. கல்யாணம் உள்ளே வந்து புன்னகைத்து பின்னால் திரும்பி ”வாடி” என்றான். பூப்போட்ட சிவப்பு சேலையால் முக்காடுபோட்ட ஒரு பெண் உள்ளே வந்தாள். கல்யாணம் ”அண்ணா வேற என்னமாம் வேணுமா?” என்றான். ”ஒரு ஆ·ப் திரிப்பிள் எக்ஸ் வாங்கிட்டுவாடா” என்று பணத்தை எடுத்தான். ”சேத்து வாங்குங்க அண்ணா . சேச்சியும் குடிப்பாள்ல?” ”சரி புல்லா வாங்கிக்க…” என்றான். ”சிக்கன் பக்கடா இருந்தா வாங்குகிக்கோ” கல்யாணம் பணத்துடன் வெளியே சென்றான். அவன் கதவைச் சாத்தினான். அவள் கட்டிலில் அமர்ந்து முக்காட்டை விலக்கினாள். ”என்ன வெளிச்சம். செவத்த வெளக்கை போடு அண்ணாச்சி…” என்றாள்.

அவளை பார்த்ததும்  அவனுக்கு முதலில் ஏமாற்றமும் கசப்பும்தான் வந்தது. இம்மாதிரிப்பெண்கள் அளிக்கும் முதல் உணர்வே அப்படித்தான். பின்னர் மெல்லிய ஆசை எழுந்து மேலோங்கி மீண்டும் கசப்பாக மாறுகிறது. அவள் ஐம்பதைத் தாண்டியவளாக இருந்தாள். வலதுகன்னத்தில் பெரிய ஒரு சூட்டுத்தழும்பு பளபளவென்று இருந்தது. அது அவள் முகத்தையே பார்க்கமுடியாமல் செய்தது ”என்ன அது தழும்பு?” என்றான். ”குக்கர் வெடிச்சுப்போச்சு அண்ணாச்சி” அது குக்கர் வெடித்த தழும்பு அல்ல. அனேகமாக சூடான ஏதோ பொருளால் சுட்டது. அவள் பார்வையை விலக்கிக் கொண்ட மறுகணமே அவனுக்கு தெரிந்து விட்டது —

”நீ…நீங்க?” என்று  அதிர்ச்சியுடன் கேட்டான். அவளுடைய கண்கள் மாறின. குரூரம் தெரிந்து மறைவது போலிருந்தது. கடுமையாக ”என்னது?” என்றாள். ”இல்லே நீங்க..” ”என்ன அண்ணாச்சி, மப்பு மாறலியா? உண்டான ஜோலிகள பாருங்க” அவன் அதற்குள் உறுதியாக தெரிந்துகொண்டுவிட்டான் ”இல்ல நீங்க கல்பனாஸ்ரீதான். எனக்கு நல்லா தெரியும். எனக்கு உங்க முகம் மறக்கவே மறக்காது” அவள் அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு கண்களை விலக்கி ”என்ன அண்ணாச்சி சொல்லுறிய? வாங்க” என்றாள்.

”நீங்க கல்பனாஸ்ரீதான்…சத்தியமா” சட்டென்று கண்களில் ஒரு சுருக்கம் வந்தது. முகத்தில் துவேஷத்தை நிறைத்தது அது. ”சரி அதுக்கென்ன இப்ப? ஒரு அஞ்ஞூறு ரூபா கூட்டிக்குடு அண்ணாச்சி…வா வந்து உக்காரு” அவன் கால்கள் நடுங்க இரும்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டான். ”நம்பவே முடியலை…” என்றான். ”செரி கிடந்து திளைக்காதே…என்ன இப்ப?” என்றாள். அவன் ”இருந்தாலும்…” என்றான். ”இவனாலே பெரிய தொந்தரவா போச்சே…இப்பம் எதுக்கு கிடந்து ஓரியிடுதே. கல்பனாஸ்ரீன்னா அப்டி வெறும் ஸ்த்ரீன்னா அப்பிடி…இந்த அண்ணாச்சிமாருக்கு சினிமாவிலே ஒராளைக் கண்டா பின்ன அவங்க தெய்வமாக்குமே”

அவன் அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.  அவன் முன் அவளை அவன் பார்த்த சினிமாக்கள் பளபளத்து ஓடின. உயரமான கொண்டையுடன் லிப்ஸ்டிக் வரைந்த உதடுகளும் நுனி நீட்டி மையெழுதிய கண்களும் கொண்ட முகம். ”என்ன வா பொளந்து ஒரு பார்வை? எல்லாம் போச்சு. சம்பாரிச்ச சொத்தெல்லாம் அண்ணன்மார் கொண்டு போச்சு. பின்னே மிச்சம் மீதி இருந்தத கெட்டினவன் பிடுங்கினான். கன்னத்திலே அயர்ன்பாக்ஸை வச்சு சுட்டான். இப்ப ஆருமில்லை. மண்டவெளங்காத ஒரு மகன் மட்டும் உண்டு. வயத்துப்பிழைப்புக்காக இது..போருமா? செண்டிமெண்ட் கூட்டணுமா?”

நாலைந்து சொற்றொடர்களில் ஒரு வாழ்க்கை எரிந்து முடிந்து கண்முன் அமர்ந்திருந்தது. வெளியே சந்தடி செய்தபடி கல்யாணன் வந்தான். ”அண்ணா, சிக்கன் பக்கோடா இல்ல. நல்ல சிப்பிப் பக்கோடா இருக்கு. மெத்து மொருக்குன்னு இருக்கும். அரக்கிலோ வாங்கினேன். சேச்சிக்கும் சிப்பி பிடிக்கும்… என்ன காரியம்? சண்டையா? சரசச்சண்டை நல்லதாக்குமே” அவன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் ”வச்சிட்டு போடே” என்றாள் அவள். அவன் வைத்துவிட்டு ”வாறேன் அண்னா, பாத்து குடுங்க” சென்றான்.

அவன் எச்சில் விழுங்கினான். பெருமூச்சுகளாக விட்டான். ”என்ன அண்ணாச்சி, குடிக்கலியா?” அவன் ” எனக்கு காலேஜ் படிக்கிற நாளிலே நீங்கதான் பிடிச்ச நடிகை” ”செரி..” என்று அவள் ரம்புட்டியை எடுத்தாள். ”வீரசபதம் மட்டும் நூறுவாட்டி பாத்திருப்பேன்…” ”தமிழம்மாருக்கு வேறே ஜோலி என்ன?” என்று அவளே ரம் புட்டியை எடுத்து லாகவமாக திறந்து டம்ளரில் ஊற்றிக்கொண்டாள். சிப்பி பக்கோடாவை திறந்து ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டபின் டம்ளரை ஆவேசமாக குடித்து, உடலி உலுக்கி மீண்டும் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டாள்.

அவன் வேகமாக எழுந்து என் செல்போனை எடுத்தான். அதை இயக்கி ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். ”நேற்று நீ கண்ட நிலா, இன்று என் தடாகத்திலா” என்று கணீரென சுசீலா பாட ஆரம்பித்தாள். ”நான் எப்ப இந்த பாட்டை கேட்டாலும் அழுதிடுவேன்…என்ன ஒரு பாட்டு. என்ன ஒரு மியூசிக். தாயளி விஸ்வநாதனை ஜெயிக்க இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும் ” அவள் பேசாமல் பகோடாக்களை தின்று இன்னும் ஒரு டம்ளர் குடித்தாள்.

அவன் மீண்டும் அந்தப்பாட்டையே போட்டான் ”எளவு, அதை நிறுத்தப்பிடாதா?” என்று அவள் கோபமாக கத்தி செல்போனை பறிக்க வந்தாள். அவன் நிறுத்தினான். அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். எப்படி இந்த உடலில் இந்த முகத்தில் இறந்த காலத்தின் அழகான முகத்தைக் கண்டு பிடித்தான்! ஆச்சரியமாக இருந்தது. அது வேறு முகம்,வேறு கண்கள், வேறு சிரிப்பு. ஆனால் அவள்தான் இவள் என்பதும் உறுதியாக இருந்தது.

அவள் நெற்றி நன்றாகவே வேர்த்திருந்தது. ”எளவு அந்த ·பேனைப்போடுறது” என்று அண்ணாந்து பார்த்தவள் மின்விசிறி சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு அவனைப் பார்த்தாள். ”அப்ப என்ன, அண்ணாச்சிக்கு ஒண்ணும் வேண்டாமா? அப்ப என் பைசாவ குடு. நான் போறேன்” அவன் பெருமூச்சு விட்டேன். ”பாத்தா போருமா? கால்ஷீட் தீர்ந்திருமா” என்று சிரித்தாள். ” எனக்கு உடம்பு முடியல்லை…பணத்த குடு. நான் வெளுக்குறதுக்குள்ள வீடு போய்சேருறேன்”

அவன் ” அந்தப்பாட்டை கேட்டுட்டே பாத்தா போதும்” என்றான். ”போடா” என்று கடும் கோபத்துடன் கத்தினாள். மூக்கு சிவந்து கண்கள் நீரோடி அவள் முகம் கடிக்க வரும் நாய் போல தெரிந்தது. ”அதுக்கு வேற ஆளைப்பாரு…வந்திருக்கான், தாயளி” அவன் ”ஸாரி” என்றான். அவள் அபப்டியே கட்டிலில் படுத்துக்கொண்டாள். அடிவயிற்றில் ஏதோ ஆபரேஷன் செய்த பெரிய தழும்பு பூரான் போல தெரிந்தது.

அவளை பார்த்துக்கொண்டே இருந்தபோது அவன் மனதில் படங்கள் ஓடின. கம்பிக் கூண்டுக்குள் நெரிக்கும் கியூ. வேர்வை. கூச்சல்கள். உற்சாகக்கூவல்கள். நெரிசலில் பிதுங்கி டிக்கெட் வாங்கி பார்த்தால்தான் படமே ருசிக்கும் காலம் இருந்தது. நாகர்கோயில் தங்கத்தில் அடர்ந்த வரிசையில் பின்னால் இருந்து ஏறி தோள்கள் வழியாகவே ஓடி குதித்து முன்னால் சென்று டிக்கெட் எடுக்கும் வீரர்கள் உண்டு.

உள்ளே நெரிந்தோடி துண்டுச்சீட்டை கிழிக்கக் கொடுத்து வாங்கி வாகான இருக்கை பிடித்து அமர்ந்ததும் மின்விசிறிக்காற்றின் இதம். சட்டையை கழற்றி வியர்வை ஆற்றும் குதூகலம். அந்தப்போதை பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகை மறக்க வைத்திருந்தது.

திரை மேலே செல்லும் போது விசில்கள். பிள்ளையார் படம். அதன் மேல் ஒலிக்கும் ‘வினாயகனே வருவாய்’. கூடவே பயல்களின் கடலே கடலே கப்பலண்டிக்கடலே. சுக்குபாலைஸ். சென்ஸார் சர்ட்டிபிகெட் காட்டப்பட்டதும் ”மக்கா பதிமூணு ரீலுலே” என்ற கூச்சல். டைடில்களில் ‘வழங்கும்’ போட்டதும் கைதட்டல்கள், ஆனந்த நடனங்கள். எத்தனை மறக்கமுடியாத நாட்கள். கணேசன் இவளைப் பார்த்தால் என்ன செய்வான். அழுது கொண்டே காலில் விழுந்து விடுவான். பாவம், அவன் வருடம் முன்பு ஆசிட் குடித்து செத்துப்ப்போனான். அவன் பெருமூச்சுவிட்டான். பெருமூச்சுக்களால் அவன் உடம்பே நிறைந்திருந்தது போல உள்ளிருந்து பீரிட்டு வந்துகொண்டே இருந்தது

”அண்ணாச்சி” என்று அவள் அழைத்தாள் ”அந்தப் பாட்டை போடு” நல்ல போதை ஏறி விட்டிருந்தது அவளுக்கு. அவன் உற்சாகமாக எழுந்து சென்று பாட்டைப் போட்டான். ”உன் கண்கள் என் பாதையில் ஒளியல்லவா? உன் மூச்சு துணைவரும் காற்றல்லவா?” சுசீலாவின் குரல் பறவை சர்ரென்று இறங்குவது போல இறங்கி அப்படியே மேலே சென்றது. அவள் அதைக் கேட்டுக்கொண்டே தலையை மெல்ல அசைத்தாள். ”காலங்கள் மாறலாம் கனவுகள் மாறுமா? ராகங்கள் மாறலாம் பாடல்கள் மாறுமா?”

பாடல் முடிந்ததும் அவள் எழுந்து அமர்ந்துகொண்டு  ”தண்ணி” என்றாள். அவன் எழுந்து கூஜாவை அவளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கி அப்படியெ தண்ணீர் குடித்தாள். மடக் மடக் என்று அவள் குடித்துக்கொண்டே இருந்தாள். பின்பு ஈரம் சொட்டும் வாயுடன் கூஜாவை திருப்பிக் கொடுத்தபடி ஏப்பம் விட்டாள். அவன் கூஜாவை வைக்கும்போது அவள் வாய்க்குள் மெல்ல முனகுவது கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அவள்தான் பாடிக்கொண்டிருந்தாள். ”ஓஓ, நேற்று நீ கண்ட நிலா, இன்று என் தடாகத்திலா”

அவன் பிரமிப்புடன் அவளையே பார்த்தான். அவள் அப்படியே மாறி விட்டிருந்தாள். முகத்தில் பரவசமா துக்கமா என்று தெரியாத ஒரு பாவனை. அவள் குரல் சுசீலாவின் குரலின் கம்பீரத்துடன் இல்லை. பல இடங்களில் அது பிசிறடித்து கமறியது. ஆனாலும் அந்தப் பாடலின் பாவம் முழுக்க அவள் குரலில் இருந்தது. பாடி முடித்தபோது அவன் கண்களை அழுத்திக்கொண்டான். நெஞ்சு விம்மியது.

”என்ன அண்ணாச்சி ?” என்றாள். ”இல்ல ஒண்ணுமில்ல” அவனால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. விரல்களை தாண்டி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ”என்ன அண்ணாச்சி?” அவன் பெருமூச்சுடன் கண்களை துடைத்து ”பழைய ஞாபகங்க” என்றான். அவள் முகம் மலர்ந்திருந்தது. கண்களில் ஒளியுடன் ”இந்தப்பாட்டை விஜயாவாஹினியிலே  எடுத்தாங்க.சாம்ராஜ் அண்ணன்தான் காமரா. விஜி உன் முகம்தான் இந்தப்பாட்டுக்கு செட்டிங்னு சொன்னார். பாட்டுலே பாதி என் குலோஸப்தான். கழுத்தை பிடிச்சு இப்டி வச்சுக்கோன்னு சொல்லிட்டு போனா அசைக்கப்பிடாது. அப்பல்லாம் லைட்ட வாங்கி நடிக்கணுமே..”

”விஜி யாரு?” ”நாந்தான். என் பேரு விஜயா. சினிமாவுக்காகத்தான் கல்பனாஸ்ரீ. அது எடிட்டர் ராக்வேந்திர ராவ் சார் வச்ச பேரு, ராசியானவர்னு அவருக்கு பேரு. நமக்குத்தான் ராசியில்லை” ”ராசிக்கு என்ன குறை? சினிமாவிலே ஓகோன்னு இருந்தீங்களே” ”அது சரிதான். எல்லாம் கையிலே வந்து விழுந்தது. பொத்தி வச்சுக்கிட  அறிவில்லை” முகம் மங்கலடைந்தது. உடனே மீண்டு ”இந்தப்பாட்டு தெரியுமா? கனாக்காணும் கண்களிலே வினாக்கோலம் ஏனடி? சிவாஜி சார் பாடி நடிச்ச பாட்டு. நான் தான் தங்கச்சி. சாவித்ரியம்மா சிவாஜிசாருக்கு ஜோடி”

அவன் ”எங்கிட்டே இருக்கே” என்று செல்போனை துழாவ அவளே ”கனாக்காணும் கண்களிலே வினாக்கோலம் ஏனடி?” என்று பாட ஆரம்பித்தாள். அவன் செல்லை வைத்துவிட்டு அவளையே பார்த்தான். அவள் சட்டென்று நிறுத்தி ”பாடுவீங்களா?” என்றாள். அவன் வெட்கத்துடன் ”சுமாரா” என்றான். அவள் பாடும்படி சைகை காட்டிவிட்டு மேலே பாடினாள். அவன் ”உந்தன் பாதம் தழுவும் கொலுசு என் நெஞ்சின் ராகம் அல்லவா?” என்று டிஎம்எஸ் குரலில் சேர்ந்துகொண்டான். பாடிக்கொண்டிருக்கும்போது அந்த அறை அவள் அவன் எல்லாமே மறைந்துபோய் அந்த படம் மட்டுமே இருந்தது. சிவாஜி இருந்தார். சாவித்ரி இருந்தார். பண்டரிபாய் இருந்தார். யாருமே சாகவில்லை. சாகவே முடியாது.

அவள் பெருமூச்சுடன் அமைதியானாள். ”குடிக்கலியா?” என்றாள். ”வேண்டாம்” என்றான். ”அப்ப செரி” என்று அவளே மிச்சத்தையும் டம்ளரில் விட்டு நீர் ஊற்றி குடித்தாள். ”ரொம்ப குடிக்கிறீங்க” என்றான். ”பழகிப்போச்சு” என்றாள். ”இப்ப தினம் இது இல்லாம முடியாது” ”அப்பவே குடிப்பீங்களா?” ”அய்யோ..அப்ப ஒரு தடவை ஒருகிளாஸ் வைன் குடிச்சதுக்கே அம்மா அடிச்சாங்க. அம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். நாங்க ராஜமுந்திரிப்பக்கம். அம்மா அங்கே ஒரு ரெட்டியோட கீப்பா இருந்தாங்க. எங்க சொந்தத்திலே ஒரு மாமா மெட்ராஸிலே மேக்கப் மேனா இருந்தாங்க. அவர்தான் பாப்பாவுக்கு சினிமாவிலே நடிக்க சான்ஸ் இருக்கு வந்திடுன்னு கூட்டிட்டு வந்தார். எங்கம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு ரெண்டு பையன்க. ரெண்டுபேரும் படிக்கலை. ஒருத்தர் ராஜமுந்திரியிலே டிரைவரா இருந்தான். இன்னொருத்தர் சும்மா ரவுடியா ஊரைச்சுத்திட்டிருந்தார்”

”உங்க முதல்படம் ‘கன்னி காஞ்சனா’ தானே?” என்றான். ”ஆமா. அது தெலுங்கு ரீமேக். நாராயண் ரெட்டிசார்தான் புரடக்ஷன். ஈஸ்வர ராவ்சார் டைரக்ஷன். அம்மாவுக்கும் ராவ் சாருக்கும் கொஞ்சம் நெருக்கம். அதிலேதான் சான்ஸ் கெடைச்சுது.” ”சூப்பர் ஹிட் படம்ல அது” ”ஆமா…அப்றம் நெறைய படங்கள்….” அவள் பெருமூச்சு விட்டாள். பின்பு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு வந்தாள். அவன் அது வரை செல்போனில் பாடல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் வரும்போதே ”இப்ப எங்க அண்ணா ரெண்டுபேருமே இல்லை. அண்ணிகள் இருக்காங்க. அண்ணன் பிள்ளைகள் இருக்காங்க. எல்லாரும் நல்ல வசதியா ஐதராபாதிலெ இருக்காங்க. நான் இந்தாள்கூட வந்திட்டதிலே அவங்களுக்கு கோபம்.. போனா செருப்பாலே அடிபபங்க…இப்ப அவங்கள்லாம் நல்ல கௌரவமான ·பேமிலி. பையன் பொண்ணுகள்லாம் டாக்டர் எஞ்சீனியர்னு இருக்காங்க ”

அவன் ”யார் கூட வந்தீங்க?” என்றான் ”இவன் தான் எம்.கெ.தாமஸ். உதயா ஸ்டுடியோஸிலே புரடக்ஷன் மேனேஜரா இருந்தான். அவன் தான் சொன்னான் என் பேரிலே ஒரு பைசா சொத்து கிடையாதுன்னு. வயசு முப்பதாச்சு. தினம் நடிப்பு, டிராவல் இதான். அம்மா போனதுக்கு அப்றம் யாருமே இல்லாத மாதிரி இருந்தது. அண்ணன்களுக்கு பிஸினஸ். சின்ன அண்ணாதான் என் கால்ஷீட் பேமெண்ட் எல்லாத்தையும் பாத்துக்கிட்டது. அண்ணிகளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது. எல்லாருமே நல்ல ·பேமிலி பொண்ணுங்க. நடிகைன்னா எளக்காரம்… பணம் காசு எல்லாம் ஆயாச்சுல்ல. அப்பதான் நான் கணக்கு கேட்டேன். தாமஸ் சொல்லிக்குடுத்து கேட்டதுதான். சொன்னதுமாதிரி சொத்தெல்லமே அண்ணா அண்ணிங்க பேரிலே. உனக்கு ஒரு பைசா தரமாட்டோம் ஆகிறதை பாருன்னு சொல்லிட்டாங்க. அதை என்னாலே தாங்கிக்க முடியலை. அழுதுட்டே இவன் கிட்டே சொன்னேன். என்கூட வந்திரு கல்யாணம் பண்ணி ராணிமாதிரி வச்சுக்கிறேன்னான். வந்திட்டேன். வர்ரப்ப ஒருகிலோ நகை வைர நெக்லஸ் வைரத்தோடு வைரவளையல் எல்லாமே எடுத்திட்டுதான் வந்தேன்…”

பாட்டிலை எடுத்துப் பார்த்தாள். அதில் கொஞ்சம் மிச்சமிருந்தது. அதை அப்படியே வாயில் விட்டுக்கொண்டாள். ”வந்த கொஞ்சநாள் அன்பா இருந்தான். நடிக்க அனுப்பி காசெல்லாம் அவனே வச்சுகிட்டான்.நகைய வித்து அவன் பேரிலே எர்ணாகுளத்திலே ஓட்டல் கட்டினான். அப்பதான் பிரக்னண்ட் ஆனேன். கலைக்கச் சொன்னான். மாட்டேன்னு சொன்னதுக்கு அடி அடின்னு அடிச்சு கலைச்சான். நாலுமுறை கர்ப்பம் கலைச்சிருக்கேன். பிறகு பட சான்ஸ் இல்லை. அங்க இங்க போன்னான். அதுக்கு எனக்கு மனசில்லை. தினமும் அடி உதை. அப்பதான் இவனை கர்ப்பமானேன். கலைச்சிருன்னான். முடியாதுன்னு சொன்னப்ப கன்னத்திலே சூடுவச்சான். அடிச்சு தெருவிலே இறக்கி விட்டான். புண்ணோட ஆஸ்பத்ரியிலே அனாதையா கெடந்தேன், அங்கேருந்து டிரைவர் தாசப்பண்ணன் கூட வந்திட்டேன். இவன் இப்பிடி பிறந்துடான்.கர்ப்பம் கலைக்க குடிச்ச மருந்து செய்த வேலை… இப்ப பதிமூனு வருஷமா இங்கதான்…”

அவள் கண்களை மூடி கிடந்தபின் சட்டென்று முகம் மலர்ந்து ”அந்த பாட்டு உண்டா, ‘அழகர் மலைமேலே அழகான ஊர்வலமாம்” என்றாள். அவன் ”இருக்கே” என்றான். ”அந்தப்பாட்டிலே ஹம்மிங் நானே குடுத்தேன்” அவன் அந்தபபாட்டை போட்டான். ஹம்மிங்கில் அவள் குரல் சிறுமி பாடுவது போல் இருந்தது. ”சின்னப்பொண்ணு பாடுறதுமாதிரி இருக்கு” ”பின்ன நான் அப்ப சின்னப்பொண்ணுதானே…அப்ப எனக்கு வயசு இருபத்தொண்ணு. புத்தி மனசு எல்லாமே பதினாறுதான். சாக்லேட் குடுத்தாத்தான் நடிப்பேன்னு அடம் பண்ணுவேன். குண்டாயிடுவேன்னு குடுக்க மாட்டாங்க. டைரக்டர் ராமண்ணா ரகசியமா குடுப்பார்.”

”ஆயிரம் மலர்கள் மலர்ந்ததே !ஆனந்தம் எங்கும் நிறைந்ததே!  கண்ணும் கண்ணும் கனவு காணும் நாளல்லவா?” அவளும் அவனும் சேர்ந்தே அந்த வரிகளைப் பாடினார்கள். ”அந்தக்காலத்திலே என்னென்ன பாட்டு போட்டிருக்காங்க” என்றாள். ”பின்னே,  நான் தியேட்டரிலேயே அழுதிருக்கேன் சில பாட்டைக்கேட்டு..”என்றான். ”இந்த பாட்டு ஞாபகமிருக்கில்ல. செந்தூரப்பொட்டு படத்திலே உள்ளது. ஜெய்சங்கர்  உங்களுக்கு ஜோடி அதிலே…” என்று சொல்லி  ”பொன்மயில் ஒன்று பறந்து சென்றதே. என்னை தனிமையில் விட்டுச் சென்றதே’ போட்டான்.”பிபி ஸ்ரீனிவாஸ் தான் இந்த மாதிரி பாட்டுக்கு மன்னன்” என்றான். ”என்ன ஒரு இழுப்பு…”

பாட்டு முடிந்ததும் அவள் ”அண்ணாச்சிக்கு எத்தனை பிள்ளைங்க?” என்றாள். ”பிள்ளைங்க இல்லை” என்றான். ”அடாடா..டாக்டரிட்ட காட்டவேண்டியதுதானே?” ”இல்லை…என் வீட்டுக்காரி தவறிட்டா” ” அடாடா, எப்ப?” ”அது இருக்கும், ஒரு ஏழெட்டு வருஷம் முன்னாடி… சேலையிலே தீ வைச்சுகிட்டா” ”அய்யய்யோ…எதுக்கு?” ”எல்லாம் நம்ம தப்பு. அவ நல்ல வசதியா வளாந்தவ. நம்ம வியாபாரம் அப்டியே சரிஞ்சுபோயி அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டமாயிட்டுது. பணமில்லேன்னா யாரப்பாத்தாலும் கடுப்பா இருக்குமே. நமக்கும் வேற போக்கிடம் ஏது… அவளை போட்டு திட்டி நொறுக்கிறது. தண்ணி வேற போடுறது. ஒருக்கா ஜாஸ்தியா கைய நீட்டிட்டேன். விடிகாலையிலே பிள்ளையோட தீய வச்சுகிட்டா”

அவள் வாயில் கை வைத்தாள். ”ஸ்ஸோ’ கண்களில் இரக்கம்  தெரிந்தது. பின்பு ”என்ன பிள்ளை?” என்று மெதுவாகக் கேட்டாள். ”பொட்டப்பிள்ளை. ஒன்பது வயசு” ”அடாடா” என்றாள். அவன் செல்போனையே பார்த்தான். ”செரி விடுங்கண்ணாச்சி. எல்லாம் விதி. வேறே என்னத்தச் சொல்ல” ”அதான். அப்டித்தான் சொல்லணும். நல்லா போயிட்டிருந்த வியாபாரம். என்ன ஆச்சு ஏன் விழுந்ததுன்னு இன்னைக்கும் தெரியல்லை. விழ ஆரம்பிச்சா அப்டியே விழுந்திட்டே இருக்கும். ஒண்ணும் செய்ய முடியாது. விழப்போறேன்னு தெரிஞ்சா பின்ன எல்லாரும் விலகிருவாங்க. உதவிக்கு ஆளிருக்காது. அவ்ளவுதான்… ஆயிரம் பத்தாயிரம்னு புரட்டின கையாலே கடனுக்கு நகைய கொண்டுபோய் அடகு வைச்சேன்…எல்லாம் தலயெழுத்து…”

”இங்க எதுக்கு வந்திங்க?” ”இங்க பழைய சப்ளையர் ஒராள் இருக்கார். கொஞ்சம் சரக்கு கடனாக் குடுத்தா மறுபடி சின்னதா ஆரம்பிக்கலாமேன்னு பாத்தேன். குடுக்கமாட்டார், தெரியும். இருந்தாலும் ஒரு நம்பிக்கையிலே வந்தேன். வெத்துப்பயலை நம்பி ஆரு குடுப்பா?” போகட்டும் என்று கையை அசைத்து ”ஒரு வீடும் கொஞ்சம்  நெலமும் இருக்கு. அதுவும் தீந்தா பண்டாரமா கெளம்பிர வேண்டியதுதான். நமக்குன்னு யார் இருக்கா…” அவன் செல்போனை எடுத்து ”மத்தபாட்டுண்டே , சின்னச் சின்ன பூனைக்குட்டி செல்லச் செல்ல பூனைக்குட்டி.. அது நீங்க பாடினதா?” ”அய்யயோ அது ராஜேஸ்வரி பாடினதாக்குமே” ”நல்ல பாட்டு. அந்த டான்ஸ¤ம் நல்லா இருக்கும்…”

அவள் அதைப் பாடினாள். அவளது முதிர்ந்த குரல் அப்போது மழலை போல ஒலித்தது. அவன் அடுத்து ”பேசும் பொற்சித்திரமே வீசும் இளந்தென்றலே” பாடினான். அவளுடைய பாடல்கள் எல்லாமே செல்போனில் இருப்பது போலிருந்தது. ”இப்ப டெக்னாலஜி எப்டி வளந்திருக்கு இல்ல, எல்லா பாட்டும் கையிலேயே இருக்கு” ”எங்கிட்ட ஒண்ணுமே இல்ல. எப்பவாவது ரேடியோவிலே கேக்கிறதுதான். கேட்டா வயத்துக்குள்ள தீயா இருக்கும். அந்தால வெலகிப்போயிடுவேன்” என்றாள். ”எல்லாம் போச்சு. தெலுங்கே ஞாபகமில்லை. இந்த ஊரு தமிழும் மலையாளமும் வாயில வந்தாச்சு…ஆனா பாட்டு மறக்கலை. அது இப்பதான் தெரியுது”

”அதெப்டி மறக்கும். ஆத்மாவிலே இருக்கப்பட்டதில்லா?” அவன் ”சொல்லடி சொல்லடி செல்லக்கிளி” போட்டான். அவள் அதன் சிலவரிகளுடன் சேர்ந்து பாடினாள். ”ராமன் வில்லறியும் ஜானகி நெஞ்சத்தினை இருக்கா?” என்றாள். ”இருக்கே…”அவன் போடுவதற்குள் அவள் பாட ஆரம்பித்தாள். கூடவே அவன் சேர்ந்து பாடினான். மாறி மாறி பாடிக்கொண்டே இருந்து சட்டென்று ஒரு இடத்தில் இருவருமே தங்களை மறந்து நினைவுகளில் மூழ்கி நெடுநேரம் இருந்தார்கள்.

பெருமூச்சுடன் அவள் விழித்து ”கண்ணெல்லாம் பூத்திருக்கு கண்மணியே உனக்காக- அது போடுங்க” என்றாள்., அவன் போட்ட பாட்டு முடியும் வரை சுவரையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் பெருமூச்சுடன் ”என்னா மாதிரி டியூன் இல்ல?” என்றாள். ”இது கேவி மகாதேவன் போட்டபாட்டு. அவரு எங்க ஊருதான். பக்கத்து தெரு.ஆனால் சின்னவயசிலே மெட்ராஸ் போயிட்டார்” என்றான்

அவள்  ”எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுன்னா ‘காத்திருந்தநாள்’ படத்திலே நான் சாகிற பாட்டு உண்டே அதான்” என்றாள் ”அய்யோ சொல்லாதீங்க.  எனக்கு அந்த சீனே பிடிக்காது. அந்தப்பாட்டை கேட்டாலே ஆ·ப் பண்ணிடுவேன். அப்பல்லாம் என்னால அந்த மாதிரி நெனைச்சே பாக்க முடியலை” என்றான். ”அந்தபடம் அப்டி ஒரு ·ப்ளாப். எப்டிங்க நீங்க சாகுறத ஜனம் ரசிப்பாங்க?”

”கர்ப்பூரம் கரையும் காற்றிலே எப்போதும் இருக்கும் ராகமே” என்று அவள் பாட ஆரம்பித்தாள். அது ஜானகி பாடிய பாட்டு. விசித்திரமான கம்மல் ஒலிகளுடன் தொண்டை அடைப்பது போல அதைப் பாடியிருப்பார் ஜானகி. அவள் பாடும்போது அந்த எல்லா உணர்ச்சிகளும் வந்தன. அதில் டிஎம்எஸ் பாடும் ”இசையாக வந்ததெல்லாம் எப்போதும் இருக்குமே .காற்றிலே ஏறிய கானம் அழிவதே இல்லையே” என்ற வரிகளை அவன் பாடினான்.

பாடி முடித்ததும் அவள் அழ ஆரம்பித்தாள். அவன் அவள் அழுகையைப்பார்த்தான். சினிமாவில் அவள் அழுவதை பார்ப்பது போல இருந்தது. ஆனால் பின்பு தன் மடியில் கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்து அவனும் அழுவதை உணர்ந்தான். அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து ஜன்னலைதிறந்தான். வெளியே இருட்டுக்குள் தென்னைமரங்கள் நின்றன. இருட்டையே பார்த்தான். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவன் பலத்த கமறல் ஒலிகளுடன் கதறி அழ ஆரம்பித்தான். அழ அழ அழுகை நெஞ்சுக்குள் மிச்சமிருப்பது போலிருந்தது. மார்பில் ஓங்கி அறைந்து மார்புச்சதையை அழுத்திப் பிசைந்து கொண்டு அழுதான். கம்பிகளில் தலையை ஓங்கி ஓங்கி மோதினான்.

பின்பு மெல்ல மனம் விடிந்து அவன் ஜன்னல்கட்டையிலேயே அமர்ந்துகொண்டான். மின்விசிறி கறக் கறக் என்று சுழன்றது. ஜன்னல்வழியாக குளிர்ந்த காற்று உள்ளே வந்து சுழன்றது. அவள் கட்டிலில் கைக்குழந்தைகள் சுருண்டு கிடப்பதுபோல கிடந்து அப்போதும் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். சேலைவிலகிய வெண்ணிறமான கால்கள் முழுக்க தழும்புகள் நிறைந்திருந்தன. அவன் அவள் அழுவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு எழுந்து சென்று செல்போனை எடுத்ததும் அவள் ”வேண்டாம் அண்ணாச்சி” என்றாள். அவன் அதை மே¨ஜையில் போட்டான். அவள் எழுந்து அமர்ந்து கண்களை துடைத்துக்கொண்டு பாத்ரூம் போய்வந்தாள். அவன் நாற்காலியில் அமர்ந்து டீபாயில் கிடந்த மாலைமுரசு நாளிதழை வாசித்தான். அவள் கட்டிலில் மல்லாந்து படுத்து கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ”என்னமோ இண்ணைக்கு இப்டி ஒருநாளுன்னு எழுதியிருக்கு” என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை.

எத்தனை நேரம் என்று அவர்கள்  அறியவில்லை. கல்யாணம் வந்து கதவை தட்டினான். ”அண்ணா, என்ன சேச்சி ரெடியா? போலாமா?” அவள் எழுந்து ”அப்பம் நான் வாறேன்…” என்றபின் தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள். அவன் தன் பையை திறந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தான். பேசாமல் வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல்  அவன் கண்களைக்கூட சந்திக்காமல் வெளியே சென்றாள்

கல்யாணம் அவனைப்பார்த்து ”அண்ணன் முகத்திலே நல்ல தேஜஸ¤ண்டே…சேச்சி நல்ல சுயம்பு ஐட்டமாக்கும் இல்லியா? மெல்ல  ”தெலுங்கத்தியாக்கும். நமம் டிரைவர் தாசப்பன் நெல்லூரிலே இருந்து கூட்டிட்டு வந்தது” அவன் ஏதோ சொல்ல வாயெடுத்து அடக்கி ”’செரி பாப்பம்டே” என்றான். ”வரட்டா, சேச்சி முன்னாலே போயாச்சு” என்று கல்யாணம் இறங்கி ஓடினான். அவன் கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்

 

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Apr 3, 2010 @ 0:00

தொடர்புடைய பதிவுகள்

பகடி எழுத்து –காளிப்பிரசாத்

$
0
0

தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்

 

 

அன்புள்ள ஜெ,

 

சிறுகதை அரங்கில் சுனில் கட்டுரையைத் தொடர்ந்து  அவன் விட்டு விட்ட பல எழுதாளர்களைப் பற்றிய விவாதம் எழுந்த்து. அந்த அரங்கில் சாம்ராஜும் தன் உரையில்  ஒரு முக்கியமான பகடி எழுத்தாளரை விட்டுவிட்டார் என நான் கருதுகிறேன்.  தமிழின் முக்கியமான அந்த பகடி எழுத்தாளர் பற்றி நான் பேசிய உரையின் எழுத்து வடிவத்தை இணைத்திருக்கிறேன்

அன்றாடங்களின் அபத்தத்தை எழுதுதல்

அன்புடன்,
R.காளிப்ரஸாத்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நீலவானும் மண்ணும்

$
0
0

பனிமலையில்

பாடல்களைக் கேட்கையில் காட்சிவடிவத்தை நான் அரிதாகவே பார்க்கிறேன். அவை பெரும்பாலும் என்னுள் எழும் காட்சிகளை விடக்குறைவாக, மிகத்தொலைவாகவே இருக்கின்றன. ஆனால் ஹம்ராஸ் படத்தின் இமையமலைக் காட்சிகள் பல நினைவுகளை எழுப்புபவை. நான் கண்ட இமையமலைக்காட்சிகள். ஒளிரும் நீரோடைகள். பனிமலைகள்.

 

ஆனால் மகேந்திர கபூர் அவரே மேடையில் பாடும் இந்தப்பாடல் ‘ஹே நீல் ககன் கி தலே’ இன்னொருவகை அனுபவமாக இருந்தது. திரையில் ஒலிக்கும் வடிவின் பெரிய அளவிலான பின்னிசை ஏதுமில்லை. அவருடைய குரலை இன்னும் அணுக்கமாகக் கேட்க முடிகிறது. அதைவிட அவருடைய முகபாவனைகள். அதில் அந்த இசைக்கும் உணர்ச்சிகளுக்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுக்கும் விதம். எந்தப்பாவனையும் இல்லை. அந்த உணர்வுகள் என்னை ஆட்கொண்டன

 

2014ல் வலையேற்றியிருக்கிறார்கள். அவர் 2008ல் மறைந்தார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டிருக்கலாம். மூல வடிவம் மாடப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப்பின். அவர் குரல் அப்படியேதான் இருக்கிறது. அந்த உணர்ச்சிகளும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிவப்பயல் -கடிதங்கள்

$
0
0

 

சிவப்பயல்

அன்புள்ள ஜெ,

 

சீரியசாக எழுதப்பட்ட கட்டுரைகள் நடுவே அவ்வப்போது உங்கள் புன்னகை வந்துசெல்லும் அழகான சின்னக் கட்டுரைகள் உண்டு. ஒரு சித்திரம் அல்லது ஒரு நினைவு. அந்தக்கட்டுரைகள்தான் எனக்கு நெடுங்காலம் நினைவில் நின்றிருக்கின்றன. ஏன் என்று நான் யோசிப்பதுண்டு.

 

எனக்கு தோன்றுவது இதுதான். இங்கே கருத்தியல் அரசியல் எது சார்ந்து எழுதினாலும் ஒரு எதிர்மறைத்தன்மை அல்லது விமர்சனத்தன்மை வந்துவிடுகிறது. ஆனால் இந்தவகையான கட்டுரைகள் முழுக்கமுழுக்க நேர்நிலையானவை. காலையில் இவற்றை வாசிப்பது ஓர் இனிய தொடக்கமாக அமைகிறது. அன்றுமுழுக்க மனசிலே ஒரு விளக்கு கொளுத்தி வைத்ததுபோன்ற உணர்சி ஏற்படுகிறது.

 

அத்தகைய கட்டுரை சிவப்பயல். அதில் பலவரிகள் என்னை புன்னகைக்க வைத்தன. உதாரணமாக அந்த பாம்பை எப்போது கழுத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டார்? சூலம் சின்னவயசிலேயே கையில் இருந்ததா? குழந்தைப்பருவத்திலேயே புலித்தோலாடை தானா? சாம்பலை அள்ளிப்பூசும்போது அவ்வப்போது வாய்க்குள்ளும் போட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்ததா? என்றவரிகளை நினைத்து பஸ்ஸில் சிரித்துக்கொண்டே சென்றேன்

 

சாரதா

 

அன்புள்ள ஜெ

 

சிவப்பயல் ஒரு அழகான கவிதைபோன்ற கட்டுரை. இப்போது தமிழில் அழகுகொண்டு வெளிவரும் இலக்கியவடிவம் என்பது இதைப்போன்ற குறுங்கட்டுரைகள்தான். கவிதையும் சிறுகதையும் கலந்த ஒரு வடிவம். இதையே கொஞ்சம் மாற்றி சிறுகதையாக ஆக்கமுடியும். கொஞ்ச வரிகளை மடித்துப்போட்டால் கவிதையும் ஆகிவிடும்.

 

அனுபவக்குறிப்பு என்பது இதன் பாவனை மட்டுமே. இதன் மையம் கவிதையாகவே வெளிப்படுகிறது. சிவன் என்னும் தீவண்ண தெய்வம் கனிந்து குழந்தையாக ஆகிறது. அதேபோல அப்பா அந்த கெத்தை விட்டுவிடாமலேயே மனசுக்குள் கனிவதுதானே கதை? சிவப்பயல் அப்பாதானே?

 

மகேஷ் எம்

 

ஜெ

 

சிவன் உட்பட தெய்வங்களை குழந்தையாக ஆக்கிப்பார்க்கும் மனநிலை எங்கிருந்து வருகிறது? அது இந்து ஆன்மிகத்தில் ஒரு முக்கியமான அம்சம் இல்லையா? நாம் பெற்றோராகிவிடுகிறோம். ஃபாவபக்தியில் அது ஒரு நிலை. நம்மை சிவனுக்கு மகளாக நினைப்பது ஒரு நிலை. சிவனுக்கு அம்மாவாக நினைக்கமுடிவது இன்னொரு மனநிலை. அற்புதமான ஒரு நிலை அது.

 

எஸ்.மகாலட்சுமி

 

அன்புள்ள ஜெ

 

குழந்தைகளால் கண்ணைமூடி அமர முடியாது. அமர்ந்தால் தூங்கிவிடும். இல்லாவிட்டால் வெளியே கவனித்துக்கொண்டிருக்கும். அந்த சிவக்குழந்தை வெளியே கவனித்துக்கொண்டு அமர்ந்திருப்பது அற்புதமான சித்தரிப்பு

 

பாலகிருஷ்ணன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16737 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>